<<முந்திய பக்கம் பதினெண்கீழ்க்கணக்கு - தொடரடைவு

பொ - முதல் சொற்கள்
பொங்க 1
பொங்கரும் 1
பொங்கி 3
பொங்கு 8
பொங்குபு 1
பொங்கென 1
பொச்சாந்தார் 1
பொச்சாந்து 3
பொச்சாந்தும் 2
பொச்சாப்பார்க்கு 1
பொச்சாப்பு 6
பொச்சாவா 1
பொச்சாவார் 1
பொடி 1
பொத்த 1
பொத்தி 1
பொத்து 3
பொத்துப்படும் 1
பொதிகிற்பார் 1
பொதித்த 1
பொதிந்த 1
பொதிந்து 1
பொதியாதவாறு 1
பொதியில் 1
பொதியுமாறு 1
பொதியொடு 1
பொதிவு 1
பொது 6
பொதும்பர் 1
பொதும்பில் 1
பொதுமக்கள் 1
பொய் 50
பொய்கை 9
பொய்கையுள் 1
பொய்த்த 2
பொய்த்தல் 3
பொய்த்தனர் 1
பொய்த்து 3
பொய்த்துரை 1
பொய்ந்நீரார் 1
பொய்ப்பின் 2
பொய்படும் 1
பொய்ம் 5
பொய்ம்மை 1
பொய்ம்மையும் 1
பொய்ம்மொழிக்கு 1
பொய்மை 1
பொய்யற்க 1
பொய்யா 5
பொய்யாக 1
பொய்யாது 1
பொய்யாமை 6
பொய்யான் 5
பொய்யே 1
பொய்யோடு 1
பொரி 7
பொரியும் 1
பொரியுமாறு 1
பொரீஇ 1
பொரு 14
பொருட்கண் 4
பொருட்கு 5
பொருட்டாக 1
பொருட்டால் 4
பொருட்டு 5
பொருத்தம் 1
பொருத்தலும் 1
பொருத்தின் 1
பொருத 6
பொருது 4
பொருந்த 1
பொருந்தா 2
பொருந்தாதவரை 1
பொருந்தாய் 1
பொருந்திய 2
பொருந்தினர் 1
பொருந்தினார்க்கு 1
பொருநர் 1
பொருநரை 1
பொரும் 1
பொருமாறு 1
பொருள் 190
பொருள்களை 1
பொருள்தான் 2
பொருள்திறத்து 1
பொருள்பெண்டிர் 2
பொருள்பொருளார் 1
பொருள்மாட்டு 1
பொருள 1
பொருளா 2
பொருளாக 2
பொருளால் 2
பொருளான் 3
பொருளில் 1
பொருளின் 2
பொருளினால் 1
பொருளினான் 1
பொருளினை 2
பொருளும் 16
பொருளே 1
பொருளை 15
பொருளையும் 1
பொருளொடு 1
பொருளோடு 1
பொல்லா 3
பொல்லாங்கு 1
பொல்லாத 2
பொல்லாதது 2
பொல்லாதனவும் 1
பொல்லார் 2
பொலந்தொடீஇ 2
பொலம் 2
பொலி 2
பொலிசை 1
பொலிந்த 1
பொலிந்து 1
பொலிய 2
பொலிவு 1
பொலிவுறல் 1
பொழிந்து 1
பொழிப்பு 1
பொழிய 3
பொழியவும் 1
பொழியும் 2
பொழில் 5
பொழிலும் 1
பொழிலுள் 3
பொழுதா 1
பொழுதால் 1
பொழுதில் 2
பொழுதின் 4
பொழுதின்கண் 3
பொழுது 12
பொழுதும் 2
பொழுதே 3
பொழென 1
பொள்ளென 1
பொற்கொல்லர் 1
பொற்ப 2
பொற்பவும் 1
பொற்பனை 1
பொற்றொடியும் 1
பொற்றொடீஇ 1
பொறான்ஆயின் 1
பொறாஅ 1
பொறாஅமை 1
பொறாஅர் 1
பொறாஅன் 1
பொறாஅஅன் 1
பொறி 10
பொறிக்கும் 1
பொறிய 1
பொறியறையும் 1
பொறியார் 1
பொறியின் 3
பொறியும் 2
பொறுக்க 3
பொறுக்கல் 1
பொறுக்கலா 1
பொறுக்கலாதாரை 1
பொறுக்கலாமோ 1
பொறுக்கும் 2
பொறுத்த 1
பொறுத்தல் 4
பொறுத்தார்க்கு 1
பொறுத்தாரை 1
பொறுத்தால் 1
பொறுத்தாற்றும் 1
பொறுத்தானொடு 1
பொறுத்து 3
பொறுப்ப 1
பொறுப்பது 1
பொறுப்பர் 3
பொறுப்பரே 1
பொறுப்பவர் 1
பொறுப்பவோ 1
பொறுப்பினும் 1
பொறுமின் 1
பொறேன் 1
பொறை 16
பொறையன் 1
பொறையுடைமை 1
பொறையும் 1
பொறையே 1
பொன் 53
பொன்றா 1
பொன்றாக்கால் 1
பொன்றாது 1
பொன்றாமை 1
பொன்றி 1
பொன்றில் 1
பொன்றினமை 1
பொன்றுங்கால் 2
பொன்றும் 1
பொன்னா 1
பொன்னாக 1
பொன்னின் 1
பொன்னினை 1
பொன்னும் 2
பொன்னுள் 1
பொன்னே 2
பொன்னோடு 1
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    பொங்க (1)
இனத்த அரும் கலை பொங்க புனத்த - ஐந்70:20/1

 TOP
 
    பொங்கரும் (1)
பொங்கரும் ஞாங்கர் மலர்ந்தன தங்கா - கார்40:29/1

 TOP
 
    பொங்கி (3)
வெம் சினம் பொங்கி இடித்து உரறி கார் வானம் - திணை50:24/3
பொடி வெந்து பொங்கி மேல் வான் சுடும் கீழால் - திணை150:92/3
திங்களும் தீங்குறுதல் காண்டுமால் பொங்கி
   அறை பாய் அருவி அணி மலை நாட - பழ:15/2,3

 TOP
 
    பொங்கு (8)
புகழ்மையா கொள்ளாது பொங்கு நீர் ஞாலம் - நாலடி:8 2/3
பொங்கு அருவி தாழும் புனல் வரை நல் நாட - நாலடி:24 1/3
புகை வித்தா பொங்கு அழல் தோன்றும் சிறந்த - நான்மணி:30/1
புலால் அகற்றும் பூம் புன்னை பொங்கு நீர் சேர்ப்ப - திணை150:35/1
பொங்கு திரை உதைப்ப போந்து ஒழிந்த சங்கு - திணை150:49/2
பொரி பூ இதழ் உறைக்கும் பொங்கு நீர் சேர்ப்ப - பழ:22/3
பொரு திரை வந்து உலாம் பொங்கு நீர் சேர்ப்ப - பழ:247/3
செங்கோலன் அல்லனேல் செய்வது என் பொங்கு
   படு திரை சேர்ப்ப மற்று இல்லையே யானை - பழ:391/2,3

 TOP
 
    பொங்குபு (1)
குஞ்சரம் பாய கொடி எழுந்து பொங்குபு
   வானம் துடைப்பன போன்ற புனல் நாடன் - கள40:25/2,3

 TOP
 
    பொங்கென (1)
பொருள் இலர்ஆயினும் பொங்கென போந்து எய்யும் - திணை150:84/3

 TOP
 
    பொச்சாந்தார் (1)
பொருள் நீங்கி பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி - குறள்:25 6/1

 TOP
 
    பொச்சாந்து (3)
பொச்சாந்து ஒழுகுவர் பேதையார் அ சார்வு - நாலடி:19 2/2
பெறுதிக்கண் பொச்சாந்து உரைத்தல் உயிரை - திரி:91/1
பொச்சாந்து தம்மை புகழ்ந்து உரைப்பர் தெற்ற - பழ:243/2

 TOP
 
    பொச்சாந்தும் (2)
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள் தீர்ந்த - குறள்:20 9/1
புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல் அவையுள் - குறள்:72 9/1

 TOP
 
    பொச்சாப்பார்க்கு (1)
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து - குறள்:54 3/1

 TOP
 
    பொச்சாப்பு (6)
பொச்சாப்பு இலாத புகழ் வேள்வி தீ போல - கார்40:7/3
பொச்சாப்பு பார்ப்பார்கண் இல் - குறள்:29 5/2
பொச்சாப்பு கொல்லும் புகழை அறிவினை - குறள்:54 2/1
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு - குறள்:54 4/2
மன்னிய செல்வத்து பொச்சாப்பு நீத்தானும் - திரி:30/2
பொச்சாப்பு கேடு பொருள் செருக்குத்தான் கேடு - சிறுபஞ்:48/1

 TOP
 
    பொச்சாவா (1)
அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவா
   கருவியான் போற்றி செயின் - குறள்:54 7/1,2

 TOP
 
    பொச்சாவார் (1)
கொடை அளிக்கண் பொச்சாவார் கோலம் நேர் செய்யார் - ஆசாரக்:66/2

 TOP
 
    பொடி (1)
பொடி வெந்து பொங்கி மேல் வான் சுடும் கீழால் - திணை150:92/3

 TOP
 
    பொத்த (1)
பொத்த நூல் கல்லும் புணர் பிரியா அன்றிலும் போல் - நாலடி:38 6/1

 TOP
 
    பொத்தி (1)
பொறாஅர் அவர் என்னின் பொத்தி தம் நெஞ்சத்து - நாலடி:31 10/3

 TOP
 
    பொத்து (3)
பொத்து இன்றி காழ்த்த மரம் - திரி:75/4
பொத்து இல் பொருள்திறத்து செவ்வியான் பொத்து இன்றி - சிறுபஞ்:101/2
பொத்து இல் பொருள்திறத்து செவ்வியான் பொத்து இன்றி - சிறுபஞ்:101/2

 TOP
 
    பொத்துப்படும் (1)
போற்றினும் பொத்துப்படும் - குறள்:47 8/2

 TOP
 
    பொதிகிற்பார் (1)
மா வினை மாண பொதிகிற்பார் தீ வினை - பழ:238/2

 TOP
 
    பொதித்த (1)
கனம் பொதித்த நூல் விரித்து காட்டினும் கீழ் தன் - நாலடி:35 1/3

 TOP
 
    பொதிந்த (1)
அகம் பொதிந்த தீமை மனம் உரைக்கும் முன்னம் - நான்மணி:45/3

 TOP
 
    பொதிந்து (1)
பொறுத்தாரை பொன் போல் பொதிந்து - குறள்:16 5/2

 TOP
 
    பொதியாதவாறு (1)
சோர பொதியாதவாறு - பழ:131/4

 TOP
 
    பொதியில் (1)
பாழ் ஊர் பொதியில் புகா பார்க்கும் ஆர் இடை - ஐந்70:31/2

 TOP
 
    பொதியுமாறு (1)
புழு பெய்து புண் பொதியுமாறு - பழ:142/4

 TOP
 
    பொதியொடு (1)
பொன் நிற செந்நெல் பொதியொடு பீள் வாட - நாலடி:27 9/1

 TOP
 
    பொதிவு (1)
கிழிந்தானை மூக்கு பொதிவு - பழ:347/4

 TOP
 
    பொது (6)
பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் - குறள்:53 8/1
பொது நலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின் - குறள்:92 5/1
ஏதிலார் போல பொது நோக்கு நோக்குதல் - குறள்:110 9/1
பெண் இயலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர் - குறள்:132 1/1
பூம் புனல் ஊர பொது மக்கட்கு ஆகாதே - பழ:5/3
போர் ஏற்றும் என்பார் பொது ஆக்கல் வேண்டுமோ - பழ:231/2

 TOP
 
    பொதும்பர் (1)
கான் யாறு கால் சீத்த காந்தள் அம் பூம் தண் பொதும்பர்
   தான் நாற தாழ்ந்த இடம் - திணை150:29/3,4

 TOP
 
    பொதும்பில் (1)
இலை அடர் தண் குளவி வேய்ந்த பொதும்பில்
   குலை உடை காந்தள் இன வண்டு இமிரும் - ஐந்70:3/1,2

 TOP
 
    பொதுமக்கள் (1)
பொதுமக்கள் பொல்லா ஒழுக்கம்அது மன்னும் - பழ:209/2

 TOP
 
    பொய் (50)
பொய் கோலம் செய்ய ஒழியுமே எக்காலும் - நாலடி:5 3/2
வாயின் பொய் கூறார் வடு அறு காட்சியார் - நாலடி:16 7/3
பெரும் பொய் உரையாதி பாண கரும்பின் - நாலடி:39 10/2
பொய் சிதைக்கும் பொன் போலும் மேனியை பெய்த - நான்மணி:21/2
தூர்ந்து ஒழியும் பொய் பிறந்த போழ்தே மருத்துவன் - நான்மணி:74/1
பகழி போல் உண்கண்ணாய் பொய் அன்மை ஈண்டை - கார்40:5/2
செய்யது போர்த்தாள் போல் செவ்வந்தாள் பொய் தீர்ந்த - கள40:32/2
பொய் சூள் என அறியாதேன் - ஐந்70:50/4
செய்த குறியும் பொய் ஆயின ஆயிழையாய் - திணை50:41/3
பூட்டுற்ற வில் ஏய்க்கும் பூம் பொய்கை ஊரன் பொய்
   கேட்டு உற்ற கீழ் நாள் கிளர்ந்து - திணை150:131/3,4
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க - குறள்:1 6/1
பொருள் கெடுத்து பொய் மேற்கொளீஇ அருள் கெடுத்து - குறள்:94 8/1
பொய் காய்வு காய்தி என் நெஞ்சு - குறள்:125 6/2
பொய் வழங்கி வாழும் பொறியறையும் கை திரிந்து - திரி:15/1
செய்கை அடங்குதல் திப்பியம் ஆம் பொய் இன்றி - திரி:43/2
வைது எள்ளி சொல்லும் தலைமகனும் பொய் தெள்ளி - திரி:49/2
நட்பின் கொழு முளை பொய் வழங்கின் இல் ஆகும் - திரி:83/2
எஞ்சாத நட்பினுள் பொய் வழக்கும் நெஞ்சு அமர்ந்த - திரி:97/2
பொய் குறளை வெளவல் அழுக்காறு இவை நான்கும் - ஆசாரக்:38/1
விரைந்து உரையார் மேன்மேல் உரையார் பொய் ஆய - ஆசாரக்:76/1
பொருள் அல்லார் கூறிய பொய் குறளை வேந்தன் - பழ:147/1
ஆடு மணை பொய் காலே போன்று - பழ:147/4
காப்பாரே போன்று உரைத்த பொய் குறளை ஏய்ப்பர் முன் - பழ:193/2
பொய் மேலேகொண்டு அ இறைவன் கொன்றார் குறைப்பர் - பழ:201/3
எல்லாம் பொய் அட்டு ஊணே வாய் - பழ:213/4
பொய் கொண்டு அறை போய் திரிபவர்க்கு என்கொலாம் - பழ:241/2
புன் சொல்லும் நன் சொல்லும் பொய் இன்று உணர்கிற்பார் - பழ:277/1
பொய் அற்ற ஐவரும் போயினார் இல்லையே - பழ:280/3
பொய் நீரர் ஆகி பொருளை முடிப்பார்க்கும் - பழ:395/2
துறவறம் பொய் இல்லறம் மெய் ஆம் - சிறுபஞ்:65/4
மறந்தேயும் பொய் உரைக்கும் வாய் - சிறுபஞ்:105/4
ஒத்த ஒழுக்கம் கொலை பொய் புலால் களவோடு - சிறுபஞ்:107/1
பொய் வேளாண்மை புலைமையின் துவ்வாது - முது:4 6/1
பேர் அறிவினோன் இனிது வாழாமை பொய் - முது:7 1/1
பெரும் சீரோன்தன் வெகுளி இன்மை பொய் - முது:7 2/1
கள் உண்போன் சோர்வு இன்மை பொய் - முது:7 3/1
காலம் அறியாதோன் கையுறல் பொய் - முது:7 4/1
மேல் வரவு அறியாதோன் தற்காத்தல் பொய் - முது:7 5/1
உறு வினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய் - முது:7 6/1
சிறுமை நோனாதோன் பெருமை வேண்டல் பொய் - முது:7 7/1
பெருமை நோனாதோன் சிறுமை வேண்டல் பொய் - முது:7 8/1
பொருள் நசை வேட்கையோன் முறை செயல் பொய் - முது:7 9/1
வாலியன் அல்லாதோன் தவம் செய்தல் பொய் - முது:7 10/1
புத்ரன் அபவித்தனொடு பொய் இல் உபகிருதன் - ஏலாதி:31/3
பொய் உரையான் வையான் புறங்கூறான் யாவரையும் - ஏலாதி:33/1
குறுகான் சிறியாரை கொள்ளான் புலால் பொய்
   மறுகான் பிறர் பொருள் வெளவான் இறுகானாய் - ஏலாதி:41/1,2
பொய்யான் பொய் மேவான் புலால் உண்ணான் யாவரையும் - ஏலாதி:44/1
பொய் தீர் புலவர் பொருள் புரிந்து ஆராய்ந்த - ஏலாதி:66/1
பொழென பொய் கூறாது ஒழி - கைந்:37/4
செருக்கு ஆர் வள வயல் ஊரன் பொய் பாண - கைந்:47/3

 TOP
 
    பொய்கை (9)
பொய்கை உடைந்து புனல் பாய்ந்த வாய் எல்லாம் - கள40:33/1
தேம் கமழ் பொய்கை அக வயல் ஊரனை - ஐந்70:47/1
உண் துறை பொய்கை வராஅல் இனம் இரியும் - ஐந்70:54/1
பொய்கை நல் ஊரன் திறம் கிளத்தல் என்னுடைய - ஐந்70:55/1
பூட்டுற்ற வில் ஏய்க்கும் பூம் பொய்கை ஊரன் பொய் - திணை150:131/3
புள் ஒலி பொய்கை புனல் ஊர அஃது அன்றோ - பழ:98/3
புனல் பொய்கை ஊர விளக்கு எலி கொண்டு - பழ:189/3
பூ மிதித்து புள் கலாம் பொய்கை புனல் ஊர - பழ:299/3
பொய்கை நல் ஊரன் திறம் கிளப்ப என் உடையை - கைந்:41/1

 TOP
 
    பொய்கையுள் (1)
செழும் பெரும் பொய்கையுள் வாழினும் என்றும் - நாலடி:36 2/1

 TOP
 
    பொய்த்த (2)
பொலந்தொடீஇ பொய்த்த குயில் - திணை50:13/4
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின் - குறள்:30 3/1

 TOP
 
    பொய்த்தல் (3)
நின்று ஓடி பொய்த்தல் நிறை தொடீஇ செய்ந்நன்றி - நாலடி:12 1/3
பொய்த்தல் இறுவாய நட்புக்கள் மெய்த்தாக - நான்மணி:17/1
பொய்த்தல் அறிந்து என் புலந்து - குறள்:129 7/2

 TOP
 
    பொய்த்தனர் (1)
பொருள் நீரார் காதலர் பொய்த்தனர் நீத்தார் - திணை50:11/2

 TOP
 
    பொய்த்து (3)
புறன் அழீஇ பொய்த்து நகை - குறள்:19 2/2
புறம் கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல் - குறள்:19 3/1
புன்னையம் கானல் இருந்தேமா பொய்த்து எம்மை - கைந்:54/2

 TOP
 
    பொய்த்துரை (1)
பொய்த்துரை என்னும் புகை இருளும் இ மூன்றும் - திரி:22/3

 TOP
 
    பொய்ந்நீரார் (1)
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும் - பழ:90/2

 TOP
 
    பொய்ப்பின் (2)
மாரி வளம் பொய்ப்பின் ஊர்க்கு இன்னா ஆங்கு இன்னா - இன்னா40:20/3
விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்து - குறள்:2 3/1

 TOP
 
    பொய்படும் (1)
பொய்படும் ஒன்றோ புனை பூணும் கை அறியா - குறள்:84 6/1

 TOP
 
    பொய்ம் (5)
தோல் போர்வை மேலும் துளை பலவாய் பொய்ம் மறைக்கும் - நாலடி:5 2/1
பொய்ம் மறையா காமம் புகலாது மற்று அதனை - நாலடி:5 2/3
பொய்ம் மருட்டு பெற்ற பொழுது - திணை150:130/4
பொய்ம் மயக்கம் சூதின்கண் தங்குதல் இ மூன்றும் - திரி:39/3
பொய்ம் மாறு நன்மை சிறு பயம் மெய்ம் மாறு - சிறுபஞ்:104/2

 TOP
 
    பொய்ம்மை (1)
பொறை உடைமை பொய்ம்மை புலால்கண் மறை உடைமை - ஏலாதி:6/2

 TOP
 
    பொய்ம்மையும் (1)
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த - குறள்:30 2/1

 TOP
 
    பொய்ம்மொழிக்கு (1)
செய்யும் இடம் அறியாய் சேர்ந்தாய் நின் பொய்ம்மொழிக்கு
   நையும் இடம் அறிந்து நாடு - திணை150:133/3,4

 TOP
 
    பொய்மை (1)
பொருள்பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டு அறையில் - குறள்:92 3/1

 TOP
 
    பொய்யற்க (1)
தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின் - குறள்:30 3/1

 TOP
 
    பொய்யா (5)
புகழ் செய்யும் பொய்யா விளக்கம் இகழ்ந்து ஒருவன் - நான்மணி:22/1
ஐவரால் தானே வினை கெடும் பொய்யா
   நலம் கெடும் நீர் அற்ற பைம் கூழ் நலம் மாறின் - நான்மணி:43/2,3
பொய்யா வித்து ஆகிவிடும் - நான்மணி:72/4
பொய்யா விளக்கே விளக்கு - குறள்:30 9/2
பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும் - குறள்:76 3/1

 TOP
 
    பொய்யாக (1)
பொய்யாக தம்மை பொருள் அல்ல கூறுபவேல் - பழ:44/2

 TOP
 
    பொய்யாது (1)
உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார் - குறள்:30 4/1

 TOP
 
    பொய்யாமை (6)
பொய்யாமை அன்ன புகழ் இல்லை எய்யாமை - குறள்:30 6/1
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற - குறள்:30 7/1
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற - குறள்:30 7/1
பின் சார பொய்யாமை நன்று - குறள்:33 3/2
பொய்யாமை பொன் பெறினும் கள்ளாமை மெல்லியார் - சிறுபஞ்:17/1
பொய்யாமை நன்று பொருள் நன்று உயிர் நோவ - சிறுபஞ்:37/1

 TOP
 
    பொய்யான் (5)
பொய்யான் சுவர்க்கம் வாயான் நிரையம் பொருள்தான் - சிறுபஞ்:97/1
தனக்கு என்றும் ஓர் பாங்கன் பொய்யான் மெய் ஆக்கும் - ஏலாதி:5/1
பொய்யான் புலாலொடு கள் போக்கி தீயன - ஏலாதி:14/1
கொல்லான் கொலை புரியான் பொய்யான் பிறர் பொருள் மேல் - ஏலாதி:19/1
பொய்யான் பொய் மேவான் புலால் உண்ணான் யாவரையும் - ஏலாதி:44/1

 TOP
 
    பொய்யே (1)
மெய்யே உணர்ந்தார் மிக உரைப்பர் பொய்யே
   குறளை கடும் சொல் பயன் இல் சொல் நான்கும் - ஏலாதி:28/2,3

 TOP
 
    பொய்யோடு (1)
பொய்யோடு இடை மிடைந்த சொல் - நாலடி:8 10/4

 TOP
 
    பொரி (7)
பொரி தாள் விளவினை வாவல் குறுகா - நாலடி:27 1/2
கரும் கால் வரகின் பொரி போல் அரும்பு அவிழ்ந்து - கார்40:25/1
பொரி புற பல்லி சினை ஈன்ற புன்னை - ஐந்50:43/1
பொரி புற ஓமை புகர் படு நீழல் - ஐந்70:37/1
புன்கு பொரி மலரும் பூம் தண் பொழில் எல்லாம் - திணை50:14/1
பொரி சிதறி விட்டு அன்ன புன்கு - திணை150:64/4
பொரி பூ இதழ் உறைக்கும் பொங்கு நீர் சேர்ப்ப - பழ:22/3

 TOP
 
    பொரியும் (1)
நெஞ்சம் நினைப்பினும் நெல் பொரியும் நீள் அத்தம் - திணை150:76/1

 TOP
 
    பொரியுமாறு (1)
தம் நெய்யில் தாம் பொரியுமாறு - திரி:65/4

 TOP
 
    பொரீஇ (1)
பொரீஇ பொருள் தக்கார் கோடலே வேண்டும் - நாலடி:22 10/2

 TOP
 
    பொரு (14)
தெள் நீர் குவளை பொரு கயல் வேல் என்று - நாலடி:5 4/1
புன்னை கடியும் பொரு கடல் தண் சேர்ப்ப - நாலடி:10 7/3
பொரு முரண் ஆற்றுதல் இன்று - நாலடி:15 9/4
பொரு கடல் வண்ணன் புனை மார்பில் தார் போல் - கார்40:1/1
போர் கொடி தானை பொரு புனல் நீர் நாடன் - கள40:17/4
பூம் தார் முரசின் பொரு புனல் நீர் நாடன் - கள40:32/3
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர் - குறள்:49 6/1
பொரு அறு தன்மை கண்டு அஃது ஒழிந்தார் அஃதால் - பழ:106/3
பொரு கடல் தண் சேர்ப்ப பூம் தாமரை மேல் - பழ:123/3
பொரு திரை வந்து உலாம் பொங்கு நீர் சேர்ப்ப - பழ:247/3
பொரு படை கண்ணாய் அதுவால் திரு உடையார் - பழ:269/3
போக்கு இல் நீர் தூஉம் பொரு கழி தண் சேர்ப்ப - பழ:315/3
பொரு தீ என வெருளும் பொன் நேர் நிறத்தாய் - கைந்:26/3
பொரு கயற்கண்ணினாய் புல்லான் விடினே - கைந்:55/3

 TOP
 
    பொருட்கண் (4)
நை பொருட்கண் செல்லாமை நன்று - திணை150:82/4
கேட்பாரை நாடி கிளக்கப்படும் பொருட்கண்
   வேட்கை அறிந்து உரைப்பார் வித்தகர் வேட்கையால் - பழ:4/1,2
மாயம் பிறர் பொருட்கண் மாற்றி மா மானத்தான் - சிறுபஞ்:55/3
கடும் கதிர் வெம் கானம் பல் பொருட்கண் சென்றார் - கைந்:15/1

 TOP
 
    பொருட்கு (5)
மெல் இயல் கண்ணோட்டம் இன்றி பொருட்கு இவர்ந்து - ஐந்70:30/3
எரி பரந்த கானம் இயை பொருட்கு போவீர் - திணை50:12/2
செய் பொருட்கு செல்வரால் சின்மொழி நீ சிறிது - திணை150:82/3
கண் விழைந்து கையுறினும் காதல் பொருட்கு இன்மை - திரி:29/2
பரல் கானம் பல் பொருட்கு சென்றார் வருவர் - கைந்:19/3

 TOP
 
    பொருட்டாக (1)
கை ஆர உண்டமையால் காய்வார் பொருட்டாக
   பொய்யாக தம்மை பொருள் அல்ல கூறுபவேல் - பழ:44/1,2

 TOP
 
    பொருட்டால் (4)
வென்றி பொருட்டால் விலங்கு ஒத்து மெய் கொள்ளார் - நாலடி:32 5/1
தினல் பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும் - குறள்:26 6/1
விலை பொருட்டால் ஊன் தருவார் இல் - குறள்:26 6/2
நாணால் உயிரை துறப்பர் உயிர் பொருட்டால்
   நாண் துறவார் நாண் ஆள்பவர் - குறள்:102 7/1,2

 TOP
 
    பொருட்டு (5)
வேளாண்மை செய்தல் பொருட்டு - குறள்:9 1/2
வேளாண்மை செய்தல் பொருட்டு - குறள்:22 2/2
மாற்றம் கொடுத்தல் பொருட்டு - குறள்:73 5/2
நகுதல் பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்கண் - குறள்:79 4/1
மேற்சென்று இடித்தல் பொருட்டு - குறள்:79 4/2

 TOP
 
    பொருத்தம் (1)
பொருத்தம் அழியாத பூம் தண் தார் மன்னர் - பழ:242/1

 TOP
 
    பொருத்தலும் (1)
பொருத்தலும் வல்லது அமைச்சு - குறள்:64 3/2

 TOP
 
    பொருத்தின் (1)
விருத்தியா கொண்டன வேறா பொருத்தின்
   மடல் அன்றில் மாலை படு வசி ஆம்பல் - திணை150:121/2,3

 TOP
 
    பொருத (6)
தாக்கி முலை பொருத தண் சாந்து அணி அகலம் - நாலடி:39 9/3
சின மால் பொருத களத்து - கள40:15/4
சின மால் பொருத களத்து - கள40:21/5
சின மால் பொருத களத்து - கள40:29/4
அரம் பொருத பொன் போல தேயும் உரம் பொருது - குறள்:89 8/1
புலவு திரை பொருத போழ்து - கைந்:57/4

 TOP
 
    பொருது (4)
சேய் பொருது அட்ட களத்து - கள40:13/4
சேய் பொருது அட்ட களத்து - கள40:34/5
அரம் பொருத பொன் போல தேயும் உரம் பொருது
   உள் பகை உற்ற குடி - குறள்:89 8/1,2
பொருந்தாதவரை பொருது அட்டக்கண்ணும் - பழ:281/1

 TOP
 
    பொருந்த (1)
பொருந்த நமக்கு உரைத்த போழ்து - திணை50:26/4

 TOP
 
    பொருந்தா (2)
பொருந்தா மண் ஆகா சுவர் - பழ:9/4
பொருந்தா பழி என்னும் பொல்லா பிணிக்கு - பழ:355/1

 TOP
 
    பொருந்தாதவரை (1)
பொருந்தாதவரை பொருது அட்டக்கண்ணும் - பழ:281/1

 TOP
 
    பொருந்தாய் (1)
பொல்லாதது என்பது நீ பொருந்தாய் எல்லார்க்கும் - திணை150:88/2

 TOP
 
    பொருந்திய (2)
அவரை பொருந்திய பைம் குரல் ஏனல் - ஐந்70:1/1
பொருந்திய பூண் முலையார் சேரி கைத்து இல்லான் - சிறுபஞ்:93/3

 TOP
 
    பொருந்தினர் (1)
பொருந்தினர் மேனி போல் பொற்ப திருந்திழாய் - ஐந்50:8/2

 TOP
 
    பொருந்தினார்க்கு (1)
பொருந்தினார்க்கு ஏமாப்பு உடைத்து - ஐந்70:12/4

 TOP
 
    பொருநர் (1)
போர் அறின் வாடும் பொருநர் சீர் கீழ் வீழ்ந்த - நான்மணி:41/1

 TOP
 
    பொருநரை (1)
பொருநரை அட்ட களத்து - கள40:7/4

 TOP
 
    பொரும் (1)
ஒக்கும் வகையால் உடன் பொரும் சூதின்கண் - பழ:260/1

 TOP
 
    பொருமாறு (1)
என்னை இமை பொருமாறு - கைந்:10/4

 TOP
 
    பொருள் (190)
பெரும் பொருள் வைத்தீர் வழங்குமின் நாளை - நாலடி:1 6/3
வழங்கான் பொருள் காத்து இருப்பானேல் அஆ - நாலடி:1 9/3
இளையான் அடக்கம் அடக்கம் கிளை பொருள்
   இல்லான் கொடையே கொடை பயன் எல்லாம் - நாலடி:7 5/1,2
அச்சத்தோடு இ நால் பொருள் - நாலடி:9 2/4
இசையா ஒரு பொருள் இல் என்றல் யார்க்கும் - நாலடி:12 1/1
புல்லா எழுத்தின் பொருள் இல் வறும் கோட்டி - நாலடி:16 5/1
போவதே போலும் பொருள் - நாலடி:19 1/4
சொல் அளவு அல்லால் பொருள் இல்லை தொல் சிறப்பின் - நாலடி:20 5/2
ஒண் பொருள் ஒன்றோ தவம் கல்வி ஆள்வினை - நாலடி:20 5/3
பொரீஇ பொருள் தக்கார் கோடலே வேண்டும் - நாலடி:22 10/2
கடாஅயினும் சான்றவர் சொல்லார் பொருள் மேல் - நாலடி:26 5/3
உறை பதி மற்றை பொருள் - நாலடி:28 10/4
அறிதற்கு அரிய பொருள் - நாலடி:32 7/4
புத்தகமே சால தொகுத்தும் பொருள் தெரியார் - நாலடி:32 8/1
போற்றும் புலவரும் வேறே பொருள் தெரிந்து - நாலடி:32 8/3
பொருள் ஆக கொள்வர் புலவர் பொருள் அல்லா - நாலடி:33 1/2
பொருள் ஆக கொள்வர் புலவர் பொருள் அல்லா - நாலடி:33 1/2
புணராது என்று எண்ணி பொருள் நசையால் தம்மை - நாலடி:37 5/3
செக்கு ஊர்ந்து கொண்டானும் செய்த பொருள் உடையார் - நாலடி:38 4/3
ஆமா போல் நக்கி அவர் கை பொருள் கொண்டு - நாலடி:38 7/1
என்னை கெழீஇயினர்கொல்லோ பொருள் நசையால் - நாலடி:39 5/3
வள்ளண்மை பூண்டான்கண் ஒண் பொருள் தெள்ளிய - நாலடி:39 6/2
கோங்கு அரும்பு அன்ன முலையாய் பொருள் வயின் - நாலடி:40 10/3
உள்ளம் வைப்பார்க்கும் துயில் இல்லை ஒண் பொருள்
   செய்வம் என்பார்க்கும் துயில் இல்லை அ பொருள் - நான்மணி:7/2,3
செய்வம் என்பார்க்கும் துயில் இல்லை அ பொருள்
   காப்பார்க்கும் இல்லை துயில் - நான்மணி:7/3,4
கற்றான் அதிர்ப்பின் பொருள் அதிர்க்கும் பற்றிய - நான்மணி:19/2
கோடாமை கோடி பொருள் பெறினும் நாடாமை - நான்மணி:25/3
தேர்தற்பொருள பொருள் - நான்மணி:50/4
ஒண்மைய வாய் சான்ற பொருள் இல்லை ஈன்றாளின் - நான்மணி:54/3
போகம் உடைமை பொருள் ஆட்சி யார்கண்ணும் - நான்மணி:93/2
பொருள் உணர்வார் இல்வழி பாட்டு உரைத்தல் இன்னா - இன்னா40:10/1
பொருள் இல்லார் வண்மை புரிவு - இன்னா40:10/4
கல்லார் உரைக்கும் கரும பொருள் இன்னா - இன்னா40:15/2
உண்ணாது வைக்கும் பெரும் பொருள் வைப்பு இன்னா - இன்னா40:16/1
கள் உண்பான் கூறும் கரும பொருள் இன்னா - இன்னா40:33/1
பொருள் இலான் வேளாண்மை காமுறுதல் இன்னா - இன்னா40:36/1
கொடுக்கும் பொருள் இல்லான் வள்ளன்மை இன்னா - இன்னா40:39/1
ஊனம் ஒன்று இன்றி உயர்ந்த பொருள் உடைமை - இனிய40:13/3
முட்டு இல் பெரும் பொருள் ஆக்கியக்கால் மற்றுஅது - இனிய40:19/3
பிறன்கை பொருள் வெளவான் வாழ்தல் இனிதே - இனிய40:21/1
கைவாய் பொருள் பெறினும் கல்லார்கண் தீர்வு இனிதே - இனிய40:25/2
கற்று அறிந்தார் கூறும் கரும பொருள் இனிதே - இனிய40:32/1
புல்லி கொளினும் பொருள் அல்லார்தம் கேண்மை - இனிய40:34/3
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரிதல் மாண்பு இனிதே - இனிய40:35/1
பொருள் புரிந்தார் போய சுரம் - ஐந்50:35/4
எண்ணும் பொருள் இனிதே எல்லாம் முடித்து எமக்கு - ஐந்70:0/1
பெரும் தகு தாளாண்மைக்கு ஏற்க அரும் பொருள்
   ஆகும் அவர் காதல் அவா - ஐந்70:29/3,4
சூழா பொருள் நசைக்கண் சென்றோர் அருள் நினைந்து - ஐந்70:31/3
பொருள் நீரார் காதலர் பொய்த்தனர் நீத்தார் - திணை50:11/2
பொருள் நசை உள்ளம் துரப்ப துறந்தார் - திணை50:14/3
ஆர் பொருள் வேட்கையவர் - திணை50:15/4
எல் வளை மென் தோள் நெகிழ பொருள் நசைஇ - திணை50:17/3
புன் புறவே சேவலோடு ஊடல் பொருள் அன்றால் - திணை150:74/1
சிறந்து பொருள் தருவான் சேண் சென்றார் இன்றே - திணை150:80/3
பொருள் இலர்ஆயினும் பொங்கென போந்து எய்யும் - திணை150:84/3
பொருள் பொருள் என்றார் சொல் பொன் போல போற்றி - திணை150:85/1
பொருள் பொருள் என்றார் சொல் பொன் போல போற்றி - திணை150:85/1
அருள் பொருள் ஆகாமை ஆக அருளான் - திணை150:85/2
மருள் நடந்த மா பழனம் மாந்தி பொருள் நடந்த - திணை150:148/2
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - குறள்:1 5/2
தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள் - குறள்:7 3/1
தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள்
   தம்தம் வினையான் வரும் - குறள்:7 3/1,2
செம் பொருள் கண்டார் வாய் சொல் - குறள்:10 1/2
ஒன்றானும் தீ சொல் பொருள் பயன் உண்டாயின் - குறள்:13 8/1
அறம் பொருள் கண்டார்க்கண் இல் - குறள்:15 1/2
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி - குறள்:18 1/1
அருள் வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள் வெஃகி - குறள்:18 6/1
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள் தீர்ந்த - குறள்:20 9/1
தாள் ஆற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு - குறள்:22 2/1
பெற்றான் பொருள் வைப்பு உழி - குறள்:23 6/2
அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள் செல்வம் - குறள்:25 1/1
பொருள் நீங்கி பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி - குறள்:25 6/1
அருள் இல்லார்க்கு அ உலகம் இல்லை பொருள் இல்லார்க்கு - குறள்:25 7/1
பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார் - குறள்:25 8/1
தெருளாதான் மெய் பொருள் கண்டு அற்றால் தேரின் - குறள்:25 9/1
பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி - குறள்:26 2/1
பொருள் அல்லது அ ஊன் தினல் - குறள்:26 4/2
அருள் கருதி அன்புடையார் ஆதல் பொருள் கருதி - குறள்:29 5/1
சினத்தை பொருள் என்று கொண்டவன் கேடு - குறள்:31 7/1
பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும் - குறள்:36 1/1
பொருள் அல்லவற்றை பொருள் என்று உணரும் - குறள்:36 1/1
எ பொருள் எ தன்மைத்துஆயினும் அ பொருள் - குறள்:36 5/1
எ பொருள் எ தன்மைத்துஆயினும் அ பொருள்
   மெய் பொருள் காண்பது அறிவு - குறள்:36 5/1,2
மெய் பொருள் காண்பது அறிவு - குறள்:36 5/2
கற்று ஈண்டு மெய் பொருள் கண்டார் தலைப்படுவர் - குறள்:36 6/1
செம் பொருள் காண்பது அறிவு - குறள்:36 8/2
எ பொருள் யார் யார் வாய் கேட்பினும் அ பொருள் - குறள்:43 3/1
எ பொருள் யார் யார் வாய் கேட்பினும் அ பொருள்
   மெய் பொருள் காண்பது அறிவு - குறள்:43 3/1,2
மெய் பொருள் காண்பது அறிவு - குறள்:43 3/2
நுண் பொருள் காண்பது அறிவு - குறள்:43 4/2
அரும் பொருள் யாது ஒன்றும் இல் - குறள்:47 2/2
ஆற்றின் அளவு அறிந்து ஈக அது பொருள்
   போற்றி வழங்கும் நெறி - குறள்:48 7/1,2
அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின் - குறள்:51 1/1
தேறுக தேறும் பொருள் - குறள்:51 9/2
ஒற்றினான் ஒற்றி பொருள் தெரியா மன்னவன் - குறள்:59 3/1
உள்ளம் உடைமை உடைமை பொருள் உடைமை - குறள்:60 2/1
சலத்தால் பொருள் செய்து ஏமாக்கல் பசு மண் - குறள்:66 10/1
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும் - குறள்:68 5/1
ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் அஞ்சி தன் - குறள்:75 1/1
போற்றுபவர்க்கும் பொருள் - குறள்:75 1/2
பொருள் அல்லவரை பொருளாக செய்யும் - குறள்:76 1/1
பொருள் அல்லது இல்லை பொருள் - குறள்:76 1/2
பொருள் அல்லது இல்லை பொருள் - குறள்:76 1/2
பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும் - குறள்:76 3/1
தீது இன்றி வந்த பொருள் - குறள்:76 4/2
அருளொடும் அன்பொடும் வாரா பொருள் ஆக்கம் - குறள்:76 5/1
தெறு பொருளும் வேந்தன் பொருள் - குறள்:76 6/2
அருள் என்னும் அன்பு ஈன் குழவி பொருள் என்னும் - குறள்:76 7/1
ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண் பொருள் - குறள்:76 10/1
ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண் பொருள்
   ஏனை இரண்டும் ஒருங்கு - குறள்:76 10/1,2
மிகல் மேவல் மெய் பொருள் காணார் இகல் மேவல் - குறள்:86 7/1
கல்லான் வெகுளும் சிறு பொருள் எஞ்ஞான்றும் - குறள்:87 10/1
அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்தொடியார் - குறள்:92 1/1
பொருள்பொருளார் புன் நலம் தோயார் அருள் பொருள்
   ஆயும் அறிவினவர் - குறள்:92 4/1,2
கை அறியாமை உடைத்தே பொருள் கொடுத்து - குறள்:93 5/1
உருள் ஆயம் ஓவாது கூறின் பொருள் ஆயம் - குறள்:94 3/1
பொருள் கெடுத்து பொய் மேற்கொளீஇ அருள் கெடுத்து - குறள்:94 8/1
வைத்தான்வாய் சான்ற பெரும் பொருள் அஃது உண்ணான் - குறள்:101 1/1
ஒண் பொருள் கொள்வார் பிறர் - குறள்:101 9/2
நன் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார் - குறள்:105 6/1
சொல் பொருள் சோர்வு படும் - குறள்:105 6/2
பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை - குறள்:123 10/1
தாம் தம்மை கூறா பொருள் - திரி:8/4
பல் பொருள் நீங்கிய சிந்தையும் இ மூன்றும் - திரி:23/3
தாளின் ஒரு பொருள் ஆக்கலும் இ மூன்றும் - திரி:31/3
நுண் மொழி நோக்கி பொருள் கொளலும் நூற்கு ஏலா - திரி:32/1
பல் பொருள் வெஃகும் சிறுமையும் இ மூன்றும் - திரி:38/3
கழகத்தால் வந்த பொருள் காமுறாமை - திரி:42/1
வஞ்சத்தின் தீர்ந்த பொருள் - திரி:43/4
காப்பு இகழல் ஆகா பொருள் - திரி:47/4
மெய் பொருள் கண்டு வாழ்வார் - திரி:48/4
கொள் பொருள் வெஃகி குடி அலைக்கும் வேந்தனும் - திரி:50/1
உள் பொருள் சொல்லா சல மொழி மாந்தரும் - திரி:50/2
தேர்ந்தக்கால் தோன்றும் பொருள் - திரி:51/4
எண்ணின் தெரியா பொருள் - திரி:53/4
பெறுமாறு அரிய பொருள் - திரி:69/4
அறனை நினைப்பானை அல் பொருள் அஞ்சும் - திரி:72/2
திறவதின் தீர்ந்த பொருள் - திரி:72/4
இரந்துகொண்டு ஒண் பொருள் செய்வல் என்பானும் - திரி:73/1
வாசி கொண்டு ஒண் பொருள் செய்வானும் இ மூவர் - திரி:81/3
உள் பொருள் சொல்லும் உணர்ச்சியும் இ மூன்றும் - திரி:85/3
தெரியாது உரைக்கும் வெகுள்வும் பொருள் அல்ல - திரி:93/2
பொருள் இல் ஒருவற்கு இளமையும் போற்றும் - திரி:102/1
திட்பத்தால் தீண்டா பொருள் - ஆசாரக்:5/3
சில் எழுத்தினானே பொருள் அடங்க காலத்தால் - ஆசாரக்:76/3
நிலை பொருள் என்று அதனை நீட்டித்தல் வேண்டா - பழ:17/3
புலை பொருள் தங்கா வெளி - பழ:17/4
அருமையுடைய பொருள் உடையார் தங்கண் - பழ:23/1
பொருளால் அறுத்தல் பொருளே பொருள் கொடுப்ப - பழ:32/2
பொய்யாக தம்மை பொருள் அல்ல கூறுபவேல் - பழ:44/2
கைவிட்ட ஒண் பொருள் கைவரவு இல் என்பார் - பழ:57/1
எவ்வம் துணையா பொருள் முடிக்கும் தாளாண்மை - பழ:63/1
தொட்டாரை ஒட்டா பொருள் இல்லை இல்லையே - பழ:118/3
நன்மையின் மாண்ட பொருள் பெறுதல் இன் ஒலி நீர் - பழ:129/2
பொருள் அல்லார் கூறிய பொய் குறளை வேந்தன் - பழ:147/1
அல்லது செய்வார் அரும் பொருள் ஆக்கத்தை - பழ:173/1
பூண் தகு மார்ப பொருள் தக்கார் வேண்டாமை - பழ:178/3
யாவரேயானும் இழந்த பொருள் உடையார் - பழ:179/1
உரையும் பொருள் முடிவும் ஒன்றால் உரை பிறிது - பழ:196/2
தக்கம் இல் செய்கை பொருள் பெற்றால் அ பொருள் - பழ:199/1
தக்கம் இல் செய்கை பொருள் பெற்றால் அ பொருள்
   தொக்க வகையும் முதலும் அது ஆனால் - பழ:199/1,2
ஈட்டிய ஒண் பொருள் இல் எனினும் ஒப்புரவு - பழ:217/1
பொருள் உடையாரை புகழாதார் இல்லை - பழ:269/2
சிறிய பொருள் கொடுத்து செய்த வினையால் - பழ:302/1
பெரிய பொருள் கருதுவாரே விரி பூ - பழ:302/2
பொன்றினமை கண்டும் பொருள் பொருளா கொள்பவோ - பழ:303/2
இகலி பொருள் செய்ய எண்ணியக்கால் என் ஆம் - பழ:312/3
பொருள் கொடுத்து கொள்ளார் இருள் - பழ:334/4
அமையா இடத்து ஓர் அரும் பொருள் வைத்தால் - பழ:336/1
இழவு என்று ஒரு பொருள் ஈயாதான் செல்வம் - பழ:343/3
மறையாது இனிது உரைத்தல் மாண் பொருள் ஈதல் - பழ:387/1
அமைய பொருள் இல்லார் ஆற்றாதார் என்பது - பழ:402/1
பொருள் உடையான்கண்ணதே போகம் அறனும் - சிறுபஞ்:1/1
ஒல்லா பொருள் இலார்க்கு ஈத்து அறியான் என்றலும் - சிறுபஞ்:3/3
பூதரே முன் பொருள் செய்யாதார் ஆதரே - சிறுபஞ்:18/2
பெரும் குணத்தார் சேர்மின் பிறன் பொருள் வவ்வன்மின் - சிறுபஞ்:24/1
பொய்யாமை நன்று பொருள் நன்று உயிர் நோவ - சிறுபஞ்:37/1
பொச்சாப்பு கேடு பொருள் செருக்குத்தான் கேடு - சிறுபஞ்:48/1
பொன் பெறும் கற்றான் பொருள் பெறும் நல் கவி - சிறுபஞ்:54/1
பொருள் போகம் அஞ்சாமை பொன்றுங்கால் போர்த்த - சிறுபஞ்:57/1
காடு போல் கட்கு இனிய இல்லம் பிறர் பொருள்
   ஓடு போல் தாரம் பிறந்த தாய் ஊடு போய் - சிறுபஞ்:81/1,2
பொருள் கோடி எய்தல் புகன்று - சிறுபஞ்:104/4
பொருள் நசை வேட்கையோன் முறை செயல் பொய் - முது:7 9/1
போகம் பொருள் கேடு மான் வேட்டம் பொல்லா கள் - ஏலாதி:18/1
கொல்லான் கொலை புரியான் பொய்யான் பிறர் பொருள் மேல் - ஏலாதி:19/1
மறுகான் பிறர் பொருள் வெளவான் இறுகானாய் - ஏலாதி:41/2
வழுக்கான் மனை பொருள் வெளவான் ஒழுக்கத்தால் - ஏலாதி:45/2
பொய் தீர் புலவர் பொருள் புரிந்து ஆராய்ந்த - ஏலாதி:66/1
சாதல் பொருள் கொடுத்தல் இன் சொல் புணர்வு உவத்தல் - ஏலாதி:68/1
கைத்து ஊண் பொருள் இழந்தார் கண்ணிலவர்க்கு ஈய்ந்தார் - ஏலாதி:78/3

 TOP
 
    பொருள்களை (1)
தெற்ற உணரான் பொருள்களை எற்றே - பழ:138/2

 TOP
 
    பொருள்தான் (2)
பொய்யான் சுவர்க்கம் வாயான் நிரையம் பொருள்தான்
   மை ஆர் மடந்தையர் இல் வாழ்வு இனிது மெய் அன்றால் - சிறுபஞ்:97/1,2
ஆள் அஞ்சான் ஆய் பொருள்தான் அஞ்சான் நாள் எஞ்சா - ஏலாதி:22/2

 TOP
 
    பொருள்திறத்து (1)
பொத்து இல் பொருள்திறத்து செவ்வியான் பொத்து இன்றி - சிறுபஞ்:101/2

 TOP
 
    பொருள்பெண்டிர் (2)
பொருள்பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டு அறையில் - குறள்:92 3/1
புலை மயக்கம் வேண்டி பொருள்பெண்டிர் தோய்தல் - திரி:39/1

 TOP
 
    பொருள்பொருளார் (1)
பொருள்பொருளார் புன் நலம் தோயார் அருள் பொருள் - குறள்:92 4/1

 TOP
 
    பொருள்மாட்டு (1)
மடவைகாண் நல் நெஞ்சே மாண் பொருள்மாட்டு ஓட - ஐந்50:39/1

 TOP
 
    பொருள (1)
எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்வாய் - குறள்:43 4/1

 TOP
 
    பொருளா (2)
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் - குறள்:13 2/1
பொன்றினமை கண்டும் பொருள் பொருளா கொள்பவோ - பழ:303/2

 TOP
 
    பொருளாக (2)
குற்றமே காக்க பொருளாக குற்றமே - குறள்:44 4/1
பொருள் அல்லவரை பொருளாக செய்யும் - குறள்:76 1/1

 TOP
 
    பொருளால் (2)
பொருளால் அறுத்தல் பொருளே பொருள் கொடுப்ப - பழ:32/2
பகை கெட வாழ்வதும் பல் பொருளால் பல்லார் - சிறுபஞ்:14/3

 TOP
 
    பொருளான் (3)
பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து - குறள்:15 1/1
பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால் - குறள்:74 2/1
பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும் - குறள்:101 2/1

 TOP
 
    பொருளில் (1)
பொருளில் பிறந்துவிடும் - நான்மணி:5/4

 TOP
 
    பொருளின் (2)
நகை இனிது நட்டார் நடுவண் பொருளின்
   தொகை இனிது தொட்டு வழங்கின் தகை உடைய - நான்மணி:36/1,2
கெழி இன்மை கேட்டால் அறிக பொருளின்
   நிகழ்ச்சியான் ஆக்கம் அறிக புகழ்ச்சியான் - நான்மணி:61/2,3

 TOP
 
    பொருளினால் (1)
பொருளினால் ஆகுமாம் போகம் நெகிழ்ந்த - நான்மணி:103/3

 TOP
 
    பொருளினான் (1)
பொருளினான் ஆகும் ஆம் போகம் நெகிழ்ந்த - சிறுபஞ்:33/3

 TOP
 
    பொருளினை (2)
பொருளினை துவ்வான் புதைத்து வைப்பானும் - திரி:89/2
போற்றி புறந்தந்தக்கண்ணும் பொருளினை
   காப்பாரின் பார்ப்பார் மிகும் - பழ:259/3,4

 TOP
 
    பொருளும் (16)
உருவும் இளமையும் ஒண் பொருளும் உட்கும் - நாலடி:11 2/1
பொருளும் அவனை நகுமே உலகத்து - நாலடி:28 3/3
பொருளும் அதனின் ஊங்கு இல் - குறள்:65 4/2
எ பொருளும் ஓரார் தொடரார் மற்று அ பொருளை - குறள்:70 5/1
எல்லா பொருளும் உடைத்தாய் இடத்து உதவும் - குறள்:75 6/1
உறு பொருளும் உல்கு பொருளும் தன் ஒன்னார் - குறள்:76 6/1
உறு பொருளும் உல்கு பொருளும் தன் ஒன்னார் - குறள்:76 6/1
தெறு பொருளும் வேந்தன் பொருள் - குறள்:76 6/2
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம் - குறள்:90 7/1
வேண்டா பொருளும் அது - குறள்:91 1/2
அற வினையும் ஆன்ற பொருளும் பிற வினையும் - குறள்:91 9/1
நல் அறமும் ஒண் பொருளும் சிந்தித்து வாய்வதின் - ஆசாரக்:4/2
தத்தம் பொருளும் தமர்தம் வளமையும் - பழ:69/1
அரு விலை மாண் கலனும் ஆன்ற பொருளும்
   திரு உடையர்ஆயின் திரிந்தும் வருமால் - பழ:136/1,2
சிறந்த தம் சுற்றமும் செய் பொருளும் நீக்கி - பழ:342/1
பற்றினான் பற்று அற்றான் நூல் தவசி எ பொருளும்
   முற்றினான் ஆகும் முதல்வன் நூல் பற்றினால் - சிறுபஞ்:6/1,2

 TOP
 
    பொருளே (1)
பொருளால் அறுத்தல் பொருளே பொருள் கொடுப்ப - பழ:32/2

 TOP
 
    பொருளை (15)
எனது எனது என்று இருக்கும் ஏழை பொருளை
   எனது எனது என்று இருப்பன் யானும் தனதுஆயின் - நாலடி:28 6/1,2
ஈட்டலும் துன்பம் மற்று ஈட்டிய ஒண் பொருளை
   காத்தலும் ஆங்கே கடும் துன்பம் காத்த - நாலடி:28 10/1,2
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை
   கள்ளத்தால் கள்வேம் எனல் - குறள்:29 2/1,2
எ பொருளும் ஓரார் தொடரார் மற்று அ பொருளை
   விட்டக்கால் கேட்க மறை - குறள்:70 5/1,2
செய்க பொருளை செறுநர் செருக்கு அறுக்கும் - குறள்:76 9/1
எள்ளப்படும் மரபிற்று ஆகலும் உள் பொருளை
   கேட்டு மறவாத கூர்மையும் முட்டு இன்றி - திரி:85/1,2
ஈதற்கு செய்க பொருளை அற நெறி - திரி:90/1
உற்றான் உறாஅன் எனல் வேண்டா ஒண் பொருளை
   கற்றானை நோக்கியே கைவிடுக கற்றான் - பழ:38/1,2
பொய்ந்நீரார் போன்று பொருளை முடிப்பார்க்கும் - பழ:90/2
கடம் கொண்ட ஒண் பொருளை கைவிட்டு இருப்பார் - பழ:304/1
ஊக்கி உழந்து ஒருவர் ஈட்டிய ஒண் பொருளை
   நோக்குமின் என்று இகழ்ந்து நொவ்வியார்கை விடுதல் - பழ:315/1,2
படரும் பிறப்பிற்கு ஒன்று ஈயார் பொருளை
   தொடரும் தம் பற்றினால் வைத்து இறப்பாரே - பழ:379/1,2
பொய் நீரர் ஆகி பொருளை முடிப்பார்க்கும் - பழ:395/2
தொடி முன்கை நல்லாய் அ தொக்க பொருளை
   குடிமகன் அல்லான் கை வைத்தல் கடி நெய்தல் - பழ:396/1,2
வழீஇ பிறர் பொருளை வவ்வார் கெழீஇ - சிறுபஞ்:36/2

 TOP
 
    பொருளையும் (1)
ஒற்று ஒற்றி தந்த பொருளையும் மற்றும் ஓர் - குறள்:59 8/1

 TOP
 
    பொருளொடு (1)
உரையான் பொருளொடு வாழ்வு ஆயு உரையானாய் - ஏலாதி:32/2

 TOP
 
    பொருளோடு (1)
உன்னித்து வைத்த பொருளோடு இவை நான்கும் - ஆசாரக்:95/2

 TOP
 
    பொல்லா (3)
பொதுமக்கள் பொல்லா ஒழுக்கம்அது மன்னும் - பழ:209/2
பொருந்தா பழி என்னும் பொல்லா பிணிக்கு - பழ:355/1
போகம் பொருள் கேடு மான் வேட்டம் பொல்லா கள் - ஏலாதி:18/1

 TOP
 
    பொல்லாங்கு (1)
பொல்லாங்கு உரையாமை நன்கு - இனிய40:5/4

 TOP
 
    பொல்லாத (2)
பொல்லாத சூழ கெடும் - குறள்:18 6/2
பொல்லாத சொல்லி மறைந்து ஒழுகும் பேதை தன் - பழ:184/1

 TOP
 
    பொல்லாதது (2)
பொல்லாதது என்பது நீ பொருந்தாய் எல்லார்க்கும் - திணை150:88/2
பொல்லாதது இல்லை ஒருவற்கு நல்லாய் - பழ:64/2

 TOP
 
    பொல்லாதனவும் (1)
பொற்பவும் பொல்லாதனவும் புணர்ந்திருந்தார் - பழ:82/1

 TOP
 
    பொல்லார் (2)
தோற்றத்தால் பொல்லார் துணை இலார் நல்கூர்ந்தார் - பழ:166/1
வழங்கார் வலி இலார் வாய் சொல்லும் பொல்லார்
   உழந்து ஒருவர்க்கு உற்றால் உதவலும் இல்லார் - பழ:292/1,2

 TOP
 
    பொலந்தொடீஇ (2)
பொலந்தொடீஇ பொய்த்த குயில் - திணை50:13/4
புயல் அமை கூந்தல் பொலந்தொடீஇ சான்றோர் - பழ:229/3

 TOP
 
    பொலம் (2)
மறு இல் பொலம் தொடி வீசும் அலற்றும் - ஐந்70:55/3
பொலம் தார் இராமன் துணையாக போதந்து - பழ:92/1

 TOP
 
    பொலி (2)
பொலி கடன் என்னும் பெயர்த்து - நாலடி:10 8/4
தொடி பொலி முன் கையாள் தோள் துணையா வேண்டி - கார்40:19/3

 TOP
 
    பொலிசை (1)
உற்ற பொலிசை கருதி அறன் ஒரூஉம் - இனிய40:39/3

 TOP
 
    பொலிந்த (1)
குடை புறத்து துஞ்சும் இகலன் இடை பொலிந்த
   திங்களில் தோன்றும் முயல் போலும் செம்பியன் - கள40:42/2,3

 TOP
 
    பொலிந்து (1)
பூவின் பொலிந்து அகன்ற கண்ணாய் அது அன்றோ - பழ:45/3

 TOP
 
    பொலிய (2)
யானை எருத்தம் பொலிய குடை நிழல் கீழ் - நாலடி:1 3/1
இல்லம் பொலிய அடுப்பினுள் தீ பெய்க - ஆசாரக்:46/4

 TOP
 
    பொலிவு (1)
மிக்க வன முலை புல்லான் பொலிவு உடைத்தா - கைந்:48/2

 TOP
 
    பொலிவுறல் (1)
புறத்தால் பொலிவுறல் வேண்டும் எனைத்தும் - பழ:185/2

 TOP
 
    பொழிந்து (1)
பொழிந்து இனிது நாறினும் பூ மிசைதல் செல்லாது - நாலடி:26 9/1

 TOP
 
    பொழிப்பு (1)
பொழிப்பு அகலம் நுட்பம் நூல் எச்சம் இ நான்கின் - நாலடி:32 9/1

 TOP
 
    பொழிய (3)
இடம் பொழிய வேண்டுமேல் ஈகை மடம் பொழிய - சிறுபஞ்:4/2
இடம் பொழிய வேண்டுமேல் ஈகை மடம் பொழிய
   வேண்டின் அறிமடம் வேண்டேல் பிறர் மனை - சிறுபஞ்:4/2,3
கடல் முகந்து கார் பொழிய காதலர் வந்தார் - கைந்:34/3

 TOP
 
    பொழியவும் (1)
வானம் பொழியவும் வாரார்கொல் இன்னாத - ஐந்50:8/3

 TOP
 
    பொழியும் (2)
மெல்ல புனல் பொழியும் மின் எழில் கார் தொல்லை நூல் - கார்40:41/2
புகை கொடுக்க பெற்ற புலவோர் துகள் பொழியும்
   வான் உயர் வெற்ப இரவின் வரல் வேண்டா - திணை50:1/2,3

 TOP
 
    பொழில் (5)
கொண்கன் பிரிந்த குளிர் பூம் பொழில் நோக்கி - ஐந்50:44/1
கரும் கால் மராம் பொழில் பாசடை துஞ்சும் - ஐந்70:12/2
புன்கு பொரி மலரும் பூம் தண் பொழில் எல்லாம் - திணை50:14/1
கன்னி இள ஞாழல் பூம் பொழில் நோக்கிய - திணை50:49/3
தாழை மா ஞாழல் ததைந்து உயர்ந்த தாழ் பொழில்
   ஏழை மான் நோக்கி இடம் - திணை150:44/3,4

 TOP
 
    பொழிலும் (1)
பொழிலும் விலை ஆமோ போந்து - திணை150:15/4

 TOP
 
    பொழிலுள் (3)
பொன் இணர் வேங்கை கவினிய பூம் பொழிலுள்
   நன் மலை நாடன் நலம் புனைய மென்முலையாய் - ஐந்50:11/1,2
ஈர்ம் தண் பொழிலுள் இரும் கழி தண் சேர்ப்பன் - ஐந்50:45/1
பூம் தண் பொழிலுள் குருகு - ஐந்50:45/4

 TOP
 
    பொழுதா (1)
பயன் இல் பொழுதா கழிப்பரே நல்ல - நாலடி:17 2/3

 TOP
 
    பொழுதால் (1)
தெரிவிலர் தீம் குழல் ஊதும் பொழுதால்
   அரிது - கைந்:35/2,3

 TOP
 
    பொழுதில் (2)
மாலை பொழுதில் மணந்தார் பிரிவு உள்ளி - நாலடி:40 7/2
உடம்படின் தானே பெருகும் கெடும் பொழுதில்
   கண்டனவும் காணா கெடும் - நான்மணி:40/3,4

 TOP
 
    பொழுதின் (4)
ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனை - குறள்:7 9/1
வேட்ட பொழுதின் அவை அவை போலுமே - குறள்:111 5/1
நின்ற பொழுதின் முடிவித்து கொள்வதே - பழ:77/2
நோய் காண் பொழுதின் அறம் செய்வார் காணாமை - பழ:261/3

 TOP
 
    பொழுதின்கண் (3)
முட்டு இன்று ஒருவர் உடைய பொழுதின்கண்
   அட்டிற்று தின்பவர் ஆயிரவர் ஆபவே - பழ:59/1,2
உற்று இடர்ப்பட்ட பொழுதின்கண் தேற்றம் - பழ:228/2
அடரும் பொழுதின்கண் இட்டு குடர் ஒழிய - பழ:379/3

 TOP
 
    பொழுது (12)
கூற்றம் கொண்டு ஓடும் பொழுது - நாலடி:12 10/4
எல்லி பொழுது வழங்காமை முன் இனிதே - இனிய40:34/1
இன் குழல் ஊதும் பொழுது - கார்40:15/4
மணி நிற மாலை பொழுது - திணை50:9/4
வருவர் வலிக்கும் பொழுது - திணை50:25/4
பொய்ம் மருட்டு பெற்ற பொழுது - திணை150:130/4
வேந்தர்க்கு வேண்டும் பொழுது - குறள்:49 1/2
வேலை நீ வாழி பொழுது - குறள்:123 1/2
உண் பொழுது நீராடி உண்டலும் என் பெறினும் - திரி:27/1
உண்டது கான்றல் மயிர் களைதல் ஊண் பொழுது
   வைகு துயிலோடு இணைவிழைச்சு கீழ் மக்கள் - ஆசாரக்:10/2,3
அந்தி பொழுது கிடவார் நடவாரே - ஆசாரக்:29/1
பஞ்ச பொழுது பாத்து உண்பான் கரவாதான் - சிறுபஞ்:77/1

 TOP
 
    பொழுதும் (2)
குட நீர் அட்டு உண்ணும் இடுக்கண் பொழுதும்
   கடல் நீர் அற உண்ணும் கேளிர் வரினும் - நாலடி:39 2/1,2
ஓவாதாள் கோலம் ஒரு பொழுதும் காவாதாள் - சிறுபஞ்:40/2

 TOP
 
    பொழுதே (3)
கண்ட பொழுதே இனிது - குறள்:122 5/2
கொள்ளும் பொழுதே கொடுக்க தாம் கொள்ளார் - பழ:17/2
துயிலும் பொழுதே தொடு ஊண் மேற்கொண்டு - பழ:353/1

 TOP
 
    பொழென (1)
பொழென பொய் கூறாது ஒழி - கைந்:37/4

 TOP
 
    பொள்ளென (1)
பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து - குறள்:49 7/1

 TOP
 
    பொற்கொல்லர் (1)
செல்வர் சிறார்க்கு பொற்கொல்லர் போல் நல்ல - திணை150:66/2

 TOP
 
    பொற்ப (2)
பொருந்தினர் மேனி போல் பொற்ப திருந்திழாய் - ஐந்50:8/2
பொற்ப உரைப்பான் புக வேண்டா கொற்சேரி - பழ:50/3

 TOP
 
    பொற்பவும் (1)
பொற்பவும் பொல்லாதனவும் புணர்ந்திருந்தார் - பழ:82/1

 TOP
 
    பொற்பனை (1)
பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா - இன்னா40:0/2

 TOP
 
    பொற்றொடியும் (1)
பொற்றொடியும் போர் தகர் கோடு ஆயினாள் நல் நெஞ்சே - நாலடி:38 6/3

 TOP
 
    பொற்றொடீஇ (1)
பூண் தாங்கு இள முலை பொற்றொடீஇ பூண்ட - பழ:112/3

 TOP
 
    பொறான்ஆயின் (1)
ஆற்றும் துணையும் பொறுக்க பொறான்ஆயின்
   தூற்றாதே தூர விடல் - நாலடி:8 5/3,4

 TOP
 
    பொறாஅ (1)
பொறாஅ என் முன்கை வளை - கைந்:58/4

 TOP
 
    பொறாஅமை (1)
பொறாஅஅன் போல பொறுத்தால் பொறாஅமை
   மேன்மேலும் செய்து விடுதல் அது அன்றோ - பழ:305/2,3

 TOP
 
    பொறாஅர் (1)
பொறாஅர் அவர் என்னின் பொத்தி தம் நெஞ்சத்து - நாலடி:31 10/3

 TOP
 
    பொறாஅன் (1)
பெறாஅஅன் பேதுறுதல் எண்ணி பொறாஅன்
   கரந்து உள்ளதூஉம் மறைக்கும் அதனால் - பழ:240/2,3

 TOP
 
    பொறாஅஅன் (1)
பொறாஅஅன் போல பொறுத்தால் பொறாஅமை - பழ:305/2

 TOP
 
    பொறி (10)
செல்லாவாம் செம் பொறி வண்டு இனம் கொல்லை - நாலடி:29 3/2
பொறி கெடும் நாண் அற்ற போழ்தே நெறிபட்ட - நான்மணி:43/1
பொறி மாண் புனை திண் தேர் போந்த வழியே - கார்40:21/1
பொறி கிளர் சேவல் வரி மரல் குத்த - ஐந்70:33/1
ஆற்றல் உடையன் அரும் பொறி நல் ஊரன் - ஐந்70:43/1
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க - குறள்:1 6/1
பொறி இன்மை யார்க்கும் பழி அன்று அறிவு அறிந்து - குறள்:62 8/1
சிறியார்க்கு செய்துவிடுதல் பொறி வண்டு - பழ:75/2
பொறி பட்டவாறு அல்லால் பூணாது என்று எண்ணி - பழ:220/3
பொறி கிளர் மஞ்ஞை புகன்று குடையும் - கைந்:11/2

 TOP
 
    பொறிக்கும் (1)
உயர் குடியுள் பிறப்பின் என்னாம் பெயர் பொறிக்கும்
   பேர் ஆண்மை இல்லாக்கடை - நாலடி:20 9/3,4

 TOP
 
    பொறிய (1)
ஆர்த்த பொறிய அணி கிளர் வண்டு இனம் - நாலடி:29 10/1

 TOP
 
    பொறியறையும் (1)
பொய் வழங்கி வாழும் பொறியறையும் கை திரிந்து - திரி:15/1

 TOP
 
    பொறியார் (1)
போகும் பொறியார் புரிவும் பயம் இன்றே - பழ:127/2

 TOP
 
    பொறியின் (3)
கோள்இல் பொறியின் குணம் இலவே எண்குணத்தான் - குறள்:1 9/1
பொறியின் வகைய கருமம் அதனால் - பழ:203/3
பிறிதினால் மாண்டது எவனாம் பொறியின்
   மணி பொன்னும் சாந்தமும் மாலையும் மற்று இன்ன - பழ:271/2,3

 TOP
 
    பொறியும் (2)
சிறு காலை பட்ட பொறியும் அதனால் - நாலடி:11 10/3
படற்பாலார்கண்ணே படுமே பொறியும்
   தொடற்பாலார்கண்ணே தொடும் - பழ:205/3,4

 TOP
 
    பொறுக்க (3)
ஆற்றும் துணையும் பொறுக்க பொறான்ஆயின் - நாலடி:8 5/3
பொறுக்க என்றால் பொறுக்கலாமோ ஒறுப்ப போல் - திணை150:67/2
அறம் அறமேல் சொல் பொறுக்க அன்றேல் கலிக்கண் - சிறுபஞ்:65/3

 TOP
 
    பொறுக்கல் (1)
நோவ உரைத்தாரை தாம் பொறுக்கல் ஆற்றாதார் - பழ:45/1

 TOP
 
    பொறுக்கலா (1)
தன் காய் பொறுக்கலா கொம்பு - நாலடி:21 3/4

 TOP
 
    பொறுக்கலாதாரை (1)
முகம் புறத்து கண்டால் பொறுக்கலாதாரை
   அகம் புகுதும் என்று இரக்கும் ஆசை இரும் கடத்து - பழ:46/1,2

 TOP
 
    பொறுக்கலாமோ (1)
பொறுக்க என்றால் பொறுக்கலாமோ ஒறுப்ப போல் - திணை150:67/2

 TOP
 
    பொறுக்கும் (2)
பொறுக்கும் பொறையே பொறை - நாலடி:7 5/4
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன் - குறள்:39 9/1

 TOP
 
    பொறுத்த (1)
யாக்கை பொறுத்த நிலம் - குறள்:24 9/2

 TOP
 
    பொறுத்தல் (4)
பொறுத்தல் தகுவது ஒன்று அன்றோ நிற கோங்கு - நாலடி:23 3/2
இகழ்வார் பொறுத்தல் தலை - குறள்:16 1/2
பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை - குறள்:16 2/1
பிழைத்த பொறுத்தல் பெருமை சிறுமை - சிறுபஞ்:14/1

 TOP
 
    பொறுத்தார்க்கு (1)
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்கு
   பொன்றும் துணையும் புகழ் - குறள்:16 6/1,2

 TOP
 
    பொறுத்தாரை (1)
பொறுத்தாரை பொன் போல் பொதிந்து - குறள்:16 5/2

 TOP
 
    பொறுத்தால் (1)
பொறாஅஅன் போல பொறுத்தால் பொறாஅமை - பழ:305/2

 TOP
 
    பொறுத்தாற்றும் (1)
பொறுத்தாற்றும் பண்பே தலை - குறள்:58 9/2

 TOP
 
    பொறுத்தானொடு (1)
பொறுத்தானொடு ஊர்ந்தானிடை - குறள்:4 7/2

 TOP
 
    பொறுத்து (3)
எல்லாரும் காண பொறுத்து உய்ப்பர் ஒல்லை - நாலடி:7 6/2
எழுவாரை எல்லாம் பொறுத்து - குறள்:104 2/2
பொறுத்து ஆற்றி சேறல் புகழால் ஒறுத்து ஆற்றின் - பழ:19/2

 TOP
 
    பொறுப்ப (1)
அரிய பொறுப்ப என்று அன்றோ அரியரோ - நாலடி:8 7/2

 TOP
 
    பொறுப்பது (1)
தம்மை இகழ்ந்தமை தாம் பொறுப்பது அன்றி மற்று - நாலடி:6 8/1

 TOP
 
    பொறுப்பர் (3)
பொறுப்பர் என்று எண்ணி புரை தீர்ந்தார்மாட்டும் - நாலடி:17 1/1
பிழை நூறும் சான்றோர் பொறுப்பர் கயவர்க்கு - நாலடி:36 7/2
பூ உட்கும் கண்ணாய் பொறுப்பர் என கருதி - பழ:335/1

 TOP
 
    பொறுப்பரே (1)
வெறுப்ப வெறுப்ப செயினும் பொறுப்பரே
   தாம் வேண்டி கொண்டார் தொடர்பு - நாலடி:23 2/3,4

 TOP
 
    பொறுப்பவர் (1)
வைதாரின் நல்லர் பொறுப்பவர் செய்தாரின் - நான்மணி:67/3

 TOP
 
    பொறுப்பவோ (1)
பின்னும் பிழைப்ப பொறுப்பவோ இன் இசை - பழ:221/2

 TOP
 
    பொறுப்பினும் (1)
பருமம் பொறுப்பினும் பாய் பரிமா போல் - நாலடி:15 9/3

 TOP
 
    பொறுமின் (1)
பொறுமின் பிறர் கடும் சொல் போற்றுமின் வஞ்சம் - நாலடி:18 2/2

 TOP
 
    பொறேன் (1)
யானோ பொறேன் இ இரண்டு - குறள்:125 7/2

 TOP
 
    பொறை (16)
பொறுக்கும் பொறையே பொறை - நாலடி:7 5/4
ஒருவர் பொறை இருவர் நட்பு - நாலடி:23 3/4
ஒல்லும் துணையும் ஒன்று உய்ப்பான் பொறை இனிதே - இனிய40:24/2
வசை உரைப்ப சால வழுத்தீர் பசை பொறை
   மெய்ம் மருட்டு ஒல்லா மிகு புனல் ஊரன்தன் - திணை150:130/2,3
வன்மை மடவார் பொறை - குறள்:16 3/2
நிறை உடைமை நீங்காமை வேண்டின் பொறை உடைமை - குறள்:16 4/1
புன் சொல் உரைப்பான் பொறை - குறள்:19 9/2
இல்லை நிலக்கு பொறை - குறள்:57 10/2
உண்மை நிலைக்கு பொறை - குறள்:58 2/2
பொறை ஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு - குறள்:74 3/1
தாங்காது மன்னோ பொறை - குறள்:99 10/2
தோற்றம் நிலக்கு பொறை - குறள்:101 3/2
ஆற்றுவார் மேற்றே பொறை - குறள்:103 7/2
ஒருவர் பொறை இருவர் நட்பு - பழ:247/4
பொறை உடைமை பொய்ம்மை புலால்கண் மறை உடைமை - ஏலாதி:6/2
நடப்பார்க்கு ஊண் நல்ல பொறை தாங்கினார்க்கு ஊண் - ஏலாதி:71/1

 TOP
 
    பொறையன் (1)
வண் புள்ளி மாறன் பொறையன் புணர்த்து யாத்த - ஐந்50:51/2

 TOP
 
    பொறையுடைமை (1)
நன்றி அறிதல் பொறையுடைமை இன் சொல்லோடு - ஆசாரக்:1/1

 TOP
 
    பொறையும் (1)
திறன் வேறு கூறின் பொறையும் அற வினையை - திரி:6/2

 TOP
 
    பொறையே (1)
பொறுக்கும் பொறையே பொறை - நாலடி:7 5/4

 TOP
 
    பொன் (53)
பொன் கலத்து பெய்த புலி உகிர் வான் புழுக்கல் - நாலடி:21 6/1
நல் புடை கொண்டமை அல்லது பொன் கேழ் - நாலடி:22 2/2
நாறா தகடே போல் நல் மலர் மேல் பொன் பாவாய் - நாலடி:27 6/1
புன்மக்கள் பக்கம் புகுவாய் நீ பொன் போலும் - நாலடி:27 6/3
பொன் நிற செந்நெல் பொதியொடு பீள் வாட - நாலடி:27 9/1
பரப்பு எலாம் பொன் ஒழுகும் பாய் அருவி நாட - நாலடி:31 7/3
பொன் கலத்து ஊட்டி புறந்தரினும் நாய் பிறர் - நாலடி:35 5/1
மை தீர் பசும் பொன் மேல் மாண்ட மணி அழுத்தி - நாலடி:35 7/1
என் ஈன்ற யாயும் பிழைத்தது என் பொன் ஈன்ற - நாலடி:40 10/2
பொய் சிதைக்கும் பொன் போலும் மேனியை பெய்த - நான்மணி:21/2
ஆவோடு பொன் ஈதல் அந்தணர்க்கு முன் இனிதே - இனிய40:23/2
பொன் செய் குழையின் துணர் தூங்க தண் பதம் - கார்40:28/2
பொன் ஆர மார்பின் புனை கழல் கால் செம்பியன் - கள40:38/3
பொன் இணர் வேங்கை கவினிய பூம் பொழிலுள் - ஐந்50:11/1
பூ கண் கழூஉம் புறவிற்றாய் பொன் விளையும் - ஐந்50:12/3
புனை பூம் தழை அல்குல் பொன் அன்னாய் சாரல் - ஐந்50:14/1
பொன் இணர் வேங்கை கமழும் நளிர் சோலை - ஐந்70:6/1
பூ ஆர் குழல் கூந்தல் பொன் அன்னார் சேரியுள் - ஐந்70:48/3
அன்னை முகனும் அது ஆகும் பொன் அலர் - ஐந்70:58/2
முலையொடு சோர்கின்ற பொன் வண்ணம் அன்னோ - திணை50:19/3
பொன் ஆம் போர் வேலவர்தாம் புரிந்தது என்னே - திணை150:18/2
நாள் வேங்கை பொன் விளையும் நல் மலை நல் நாட - திணை150:20/1
பொன் மெலியும் மேனியாள் பூம் சுணங்கு மென் முலைகள் - திணை150:21/1
நின் குறை என்னும் நினைப்பினனாய் பொன் குறையும் - திணை150:31/2
பொன் அணிந்த கோங்கம் புணர் முலையாய் பூந்தொடி தோள் - திணை150:63/3
பவள கொழுந்தின் மேல் பொன் தாலி பாஅய் - திணை150:66/3
பொன் நோக்கம் கொண்ட பூம் கோங்கம் காண் பொன் நோக்கம் - திணை150:70/2
பொன் நோக்கம் கொண்ட பூம் கோங்கம் காண் பொன் நோக்கம் - திணை150:70/2
காண் அகன்ற வழி நோக்கி பொன் போர்த்து - திணை150:74/3
பொருள் பொருள் என்றார் சொல் பொன் போல போற்றி - திணை150:85/1
கழல் ஆகி பொன் வட்டு ஆய் தார் ஆய் மடல் ஆய் - திணை150:98/3
பொன் வாளால் காடு இல் கரு வரை போர்த்தாலும் - திணை150:99/1
பொன் போல் தார் கொன்றை புரிந்தன பொன் போல் - திணை150:109/2
பொன் போல் தார் கொன்றை புரிந்தன பொன் போல் - திணை150:109/2
பொன் பயந்த வெள்ளி புறமாக பூங்கோதாய் - திணை150:117/3
கோடு எலாம் பொன் ஆய் கொழும் கடுக்கை காடு எலாம் - திணை150:120/2
சேறு ஆடும் கிண்கிணி கால் செம் பொன் செய் பட்டத்து - திணை150:151/1
பொறுத்தாரை பொன் போல் பொதிந்து - குறள்:16 5/2
சுட சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம் - குறள்:27 7/1
அரம் பொருத பொன் போல தேயும் உரம் பொருது - குறள்:89 8/1
தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று - குறள்:94 1/2
பொன் திறந்து கொண்டு புகாவாக நல்கினாள் - பழ:171/3
புன பொன் அவிர் சுணங்கின் பூம் கொம்பர் அன்னாய் - பழ:266/3
பொன் யாத்து கொண்டு புகுதல் குவளையை - பழ:365/3
இமைத்து அருவி பொன் வரன்றும் ஈர்ம் குன்ற நாட - பழ:368/3
பொய்யாமை பொன் பெறினும் கள்ளாமை மெல்லியார் - சிறுபஞ்:17/1
பொன் வரை கோங்கு ஏர் முலை பூம் திருவேஆயினும் - சிறுபஞ்:43/3
பொன் பெறும் பூம் சுணங்கின் மென் முலையாய் நன்கு உணர்ந்தார் - சிறுபஞ்:46/3
பொன் பெறும் கற்றான் பொருள் பெறும் நல் கவி - சிறுபஞ்:54/1
யானை குதிரை பொன் கன்னியே ஆனிரையோடு - ஏலாதி:49/1
பொன் இணர் வேங்கை புனம் சூழ் மலை நாடன் - கைந்:10/1
பொரு தீ என வெருளும் பொன் நேர் நிறத்தாய் - கைந்:26/3
பொன் அம் பசலையும் தீர்ந்தது பூங்கொடி - கைந்:60/1

 TOP
 
    பொன்றா (1)
பொன்றுங்கால் பொன்றா துணை - குறள்:4 6/2

 TOP
 
    பொன்றாக்கால் (1)
பொன்றில் என் பொன்றாக்கால் என் - நாலடி:33 3/4

 TOP
 
    பொன்றாது (1)
பொன்றாது நிற்பது ஒன்று இல் - குறள்:24 3/2

 TOP
 
    பொன்றாமை (1)
பொன்றாமை ஒன்றல் அரிது - குறள்:89 6/2

 TOP
 
    பொன்றி (1)
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி
   குற்றமும் ஆங்கே தரும் - குறள்:18 1/1,2

 TOP
 
    பொன்றில் (1)
பொன்றில் என் பொன்றாக்கால் என் - நாலடி:33 3/4

 TOP
 
    பொன்றினமை (1)
பொன்றினமை கண்டும் பொருள் பொருளா கொள்பவோ - பழ:303/2

 TOP
 
    பொன்றுங்கால் (2)
பொன்றுங்கால் பொன்றா துணை - குறள்:4 6/2
பொருள் போகம் அஞ்சாமை பொன்றுங்கால் போர்த்த - சிறுபஞ்:57/1

 TOP
 
    பொன்றும் (1)
பொன்றும் துணையும் புகழ் - குறள்:16 6/2

 TOP
 
    பொன்னா (1)
பொன்னா செயினும் புகாஅர் புனல் ஊர - பழ:66/3

 TOP
 
    பொன்னாக (1)
பொன்னாக போற்றி கொளல்வேண்டும் பொன்னோடு - நாலடி:23 5/2

 TOP
 
    பொன்னின் (1)
சுட்டு அறிப பொன்னின் நலம் காண்பார் கெட்டு அறிப - நான்மணி:3/3

 TOP
 
    பொன்னினை (1)
பொன்னினை போல் போற்றி காத்து உய்க்க உய்க்காக்கால் - ஆசாரக்:95/3

 TOP
 
    பொன்னும் (2)
பொன்னும் புளி விளங்காய் ஆம் - நாலடி:33 8/4
மணி பொன்னும் சாந்தமும் மாலையும் மற்று இன்ன - பழ:271/3

 TOP
 
    பொன்னுள் (1)
பொன்னுள் உறு பவளம் போன்ற புணர் முருக்கம் - திணை150:67/3

 TOP
 
    பொன்னே (2)
பொன்னே கொடுத்தும் புணர்தற்கு அரியாரை - நாலடி:17 2/1
கொன்னே வெகுளான் கொலை புரியான் பொன்னே
   உறுப்பு அறுத்து அன்ன கொடை உவப்பான் தன்னின் - ஏலாதி:20/2,3

 TOP
 
    பொன்னோடு (1)
பொன்னாக போற்றி கொளல்வேண்டும் பொன்னோடு
   நல் இல் சிதைத்த தீ நாள்தொறும் நாடி தம் - நாலடி:23 5/2,3

 TOP