<<முந்திய பக்கம் பதினெண்கீழ்க்கணக்கு - தொடரடைவு

தி - முதல் சொற்கள்
திகழ் 3
திகழ்க 1
திகழ்தரும் 1
திகழ்வது 1
திகழ 1
திகழும் 3
திங்கட்கு 1
திங்கள் 7
திங்களில் 1
திங்களும் 2
திங்களுள் 1
திங்களை 3
திசை 2
திசைக்கு 2
திசைக்கும் 1
திசைகளும் 1
திசைதோறும் 1
திசையும் 8
திட்பத்தால் 1
திட்பம் 5
திட்பமே 1
திண் 10
திண்ணிதாம் 1
திண்ணிதின் 1
திண்ணிதே 1
திண்ணியர் 1
திண்ணியான் 1
திண்மை 3
திணை 2
திணைமாலை 1
தித்திப்ப 1
திப்பியம் 1
திமிசு 1
திமிர்ந்து 2
திமில் 3
திமிலா 1
திரங்கி 1
திரட்டல் 1
திரட்டினார் 1
திரண்ட 1
திரண்டு 1
திரள் 3
திரி 1
திரிகடுகம் 3
திரிதந்து 1
திரிதரும் 2
திரிதரூஉம் 1
திரிந்த 2
திரிந்து 9
திரிந்தும் 1
திரிபவர்க்கு 1
திரிபு 1
திரிய 1
திரியா 2
திரியாதாம் 1
திரியாது 1
திரியாமை 1
திரியார் 2
திரியான் 2
திரியின் 2
திரியினும் 1
திரியும் 1
திரிவார் 1
திரிவு 2
திரிவேனேல் 1
திரு 25
திருத்தலும் 1
திருத்துளார் 1
திருந்தாய் 1
திருந்திய 2
திருந்திழாய் 2
திருந்திழையார் 1
திருந்தின 1
திருந்து 1
திருந்துதல் 2
திருநுதல் 1
திருநுதற்கு 2
திருவத்தவர் 1
திருவில் 1
திருவின் 1
திருவினும் 1
திருவினை 2
திருவுடையாரை 1
திருவும் 3
திருவேஆயினும் 1
திருவொடும் 1
திரை 38
திரைய 1
திரையா 1
திரையின் 1
திரையின்மாட்டு 1
திரையுள் 1
தில்லை 1
திவள் 1
திளைக்கும் 2
திளையார் 1
திறக்கும் 1
திறத்த 1
திறத்தால் 2
திறத்தாள் 1
திறத்தானும் 1
திறத்தின் 1
திறத்து 5
திறத்தும் 1
திறத்துளி 1
திறந்த 2
திறந்து 4
திறப்பட்டார் 2
திறப்படு 1
திறம் 12
திறமால் 1
திறல் 4
திறலஆயினும் 1
திறலாரை 1
திறலான் 1
திறலானை 1
திறவதின் 1
திறவது 1
திறன் 17
தின்குறுவான் 1
தின்பது 1
தின்பர் 1
தின்பவர் 1
தின்பவர்க்கு 1
தின்பார் 1
தின்ற 1
தின்று 10
தின்னற்க 1
தின்னார் 1
தின்னினும் 3
தின்னுங்கால் 1
தின்னும் 7
தினப்பட்ட 1
தினல் 5
தினிய 1
தினை 13
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
  திகழ் (3)
கயம் திகழ் சோலை மலை நாடன் கேண்மை - ஐந்70:5/3
நீரால் தெளி திகழ் கான் நாடன் கேண்மையே - ஐந்70:13/2
திரிகடுகம் என்னும் திகழ் தமிழ்ச்சங்கம் - திரி:105/3

 TOP
 
  திகழ்க (1)
வந்தார் திகழ்க நின் தோள் - திணை50:21/4

 TOP
 
  திகழ்தரும் (1)
மணியுள் திகழ்தரும் நூல் போல் மடந்தை - குறள்:128 3/1

 TOP
 
  திகழ்வது (1)
அணியுள் திகழ்வது ஒன்று உண்டு - குறள்:128 3/2

 TOP
 
  திகழ (1)
திகழ கான்றிட்டன தேர்ந்து - திணை150:66/4

 TOP
 
  திகழும் (3)
சாய் பறிக்க நீர் திகழும் தண் வயல் ஊரன் மீது - நாலடி:39 9/1
நயம் திகழும் என்னும் என் நெஞ்சு - ஐந்70:5/4
திகழும் திரு அமர் மார்பு - திணை50:50/4

 TOP
 
  திங்கட்கு (1)
ஓவாதே திங்கட்கு உள - திரி:101/4

 TOP
 
  திங்கள் (7)
அம் கண் மா ஞாலம் விளக்குறூஉம் திங்கள் போல் - நாலடி:15 8/2
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் திங்கள்
  மறு ஆற்றும் சான்றோர் அஃது ஆற்றார் தெருமந்து - நாலடி:16 1/2,3
இகல் கருதி திங்கள் இருளை பகல் வர - திணை150:94/2
திங்கள் மு மாரிக்கு வித்து - திரி:98/4
எச்சிலார் நோக்கார் புலை திங்கள் நாய் நாயிறு - ஆசாரக்:6/1
ஐம் பூதம் பார்ப்பார் பசு திங்கள் நாயிறு - ஆசாரக்:15/1
உய்தல் ஒரு திங்கள் நாள் ஆகும் செய்தல் - சிறுபஞ்:28/2

 TOP
 
  திங்களில் (1)
திங்களில் தோன்றும் முயல் போலும் செம்பியன் - கள40:42/3

 TOP
 
  திங்களும் (2)
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன் திங்கள் - நாலடி:16 1/2
திங்களும் தீங்குறுதல் காண்டுமால் பொங்கி - பழ:15/2

 TOP
 
  திங்களுள் (1)
திங்களுள் வில் எழுதி தேராது வேல் விலக்கி - திணை150:30/1

 TOP
 
  திங்களை (3)
இளம் பிறை ஆயக்கால் திங்களை சேராது - நாலடி:25 1/3
திங்களை பாம்பு கொண்டு அற்று - குறள்:115 6/2
திங்களை நாய் குரைத்து அற்று - பழ:149/4

 TOP
 
  திசை (2)
பெய்ய எழிலி முழங்கும் திசை எல்லாம் - நாலடி:40 2/3
உண்ணுங்கால் நோக்கும் திசை கிழக்குக்கண் அமர்ந்து - ஆசாரக்:20/1

 TOP
 
  திசைக்கு (2)
திசைக்கு பாழ் நட்டோரை இன்மை இருந்த - நான்மணி:20/2
தேரின் கோள் நட்பு திசைக்கு - இனிய40:3/4

 TOP
 
  திசைக்கும் (1)
ஐந்து உருவின் வில் எழுதி நால் திசைக்கும் முந்நீரை - திணை150:104/1

 TOP
 
  திசைகளும் (1)
எவ்வெவ் திசைகளும் வந்தன்று சேறும் நாம் - கார்40:29/3

 TOP
 
  திசைதோறும் (1)
திண் தோள் மறவர் எறிய திசைதோறும்
  பைம் தலை பாரில் புரள்பவை நன்கு எனைத்தும் - கள40:24/1,2

 TOP
 
  திசையும் (8)
தன்னால்தான் ஆகும் மறுமை வட திசையும்
  கொன்னாளர் சால பலர் - நாலடி:25 3/3,4
நால் நால் திசையும் பிணம் பிறங்க யானை - கள40:6/1
வீற்று வீற்று ஓடும் மயல் இனம் போல் நால் திசையும்
  கேளிர் இழந்தார் அலமருப செம் கண் - கள40:29/2,3
முத்து உடை கோட்ட களிறு ஈர்ப்ப எ திசையும்
  பெளவம் புணர் அம்பி போன்ற புனல் நாடன் - கள40:37/2,3
கண்டு இயைய மாந்தி கால்வீழ்த்து இருண்டு எண் திசையும்
  கார் தோன்ற காதலர் தேர் தோன்றாது ஆகவே - திணை150:100/2,3
ஒழிந்த திசையும் வழிமுறையான் நல்ல - ஆசாரக்:22/1
பத்து திசையும் மனத்தால் மறைத்த பின் - ஆசாரக்:34/1
நால் திசையும் செல்லாத நாடு இல்லை அ நாடு - பழ:55/2

 TOP
 
  திட்பத்தால் (1)
திட்பத்தால் தீண்டா பொருள் - ஆசாரக்:5/3

 TOP
 
  திட்பம் (5)
வினை திட்பம் என்பது ஒருவன் மன திட்பம் - குறள்:67 1/1
வினை திட்பம் என்பது ஒருவன் மன திட்பம்
  மற்றைய எல்லாம் பிற - குறள்:67 1/1,2
வீறு எய்தி மாண்டார் வினை திட்பம் வேந்தன்கண் - குறள்:67 5/1
எனை திட்பம் எய்தியக்கண்ணும் வினை திட்பம் - குறள்:67 10/1
எனை திட்பம் எய்தியக்கண்ணும் வினை திட்பம்
  வேண்டாரை வேண்டாது உலகு - குறள்:67 10/1,2

 TOP
 
  திட்பமே (1)
திருவினும் திட்பமே நன்று - பழ:136/4

 TOP
 
  திண் (10)
தீர்ப்பேம் யாம் என்று உணரும் திண் அறிவாளரை - நாலடி:3 7/3
தீமை எடுத்து உரைக்கும் திண் அறிவு இல்லாதார் - நாலடி:23 7/3
கரவாத திண் அன்பின் கண் அன்னார்கண்ணும் - நாலடி:31 5/1
பொறி மாண் புனை திண் தேர் போந்த வழியே - கார்40:21/1
ஏந்து எழில் மார்பின் இயல் திண் தேர் செம்பியன் - கள40:6/5
கொற்ற வேல் தானை கொடி திண் தேர் செம்பியன் - கள40:23/4
திண் தோள் மறவர் எறிய திசைதோறும் - கள40:24/1
கொய் சுவல் மாவின் கொடி திண் தேர் செம்பியன் - கள40:33/4
கொடி திண் தேர் மன்னரால் கூட்டுண்டு வாழ்வார் - பழ:331/1
தேவர்க்கும் கைகூடா திண் அன்பினார்க்கேயும் - பழ:335/3

 TOP
 
  திண்ணிதாம் (1)
ஐயம் தீர் காட்சி அவர் வருதல் திண்ணிதாம்
  நெய் அணி குஞ்சரம் போல இரும் கொண்மூ - கார்40:12/2,3

 TOP
 
  திண்ணிதின் (1)
விண் உயர் வானத்து உரும் உரற்ற திண்ணிதின்
  புல்லுநர் இல்லார் நடுங்க சிறு மாலை - ஐந்70:17/2,3

 TOP
 
  திண்ணிதே (1)
தீ சொல்லே காமின் வரும் காலன் திண்ணிதே
  வாய் சொல்லே அன்று வழக்கு - சிறுபஞ்:24/3,4

 TOP
 
  திண்ணியர் (1)
திண்ணியர் ஆக பெறின் - குறள்:67 6/2

 TOP
 
  திண்ணியான் (1)
கடை மணி போல் திண்ணியான் காப்பும் இ மூன்றும் - திரி:33/3

 TOP
 
  திண்மை (3)
திண்மை உண்டாக பெறின் - குறள்:6 4/2
உயர்வு அகலம் திண்மை அருமை இ நான்கின் - குறள்:75 3/1
திண்மை உண்டாக பெறின் - குறள்:99 8/2

 TOP
 
  திணை (2)
திருவும் திணை வகையான் நில்லா பெரு வலி - நான்மணி:39/1
விழு திணை தோன்றாதவனும் எழுத்தினை - திரி:92/1

 TOP
 
  திணைமாலை (1)
திணைமாலை கைவர தேர்ந்து - திணை150:154/4

 TOP
 
  தித்திப்ப (1)
கைப்பன எல்லாம் கடை தலை தித்திப்ப
  மெச்சும் வகையால் ஒழிந்த இடை ஆக - ஆசாரக்:25/1,2

 TOP
 
  திப்பியம் (1)
செய்கை அடங்குதல் திப்பியம் ஆம் பொய் இன்றி - திரி:43/2

 TOP
 
  திமிசு (1)
மேகம் தோய் சாந்தம் விசை திமிசு காழ் அகில் - திணை150:28/1

 TOP
 
  திமிர்ந்து (2)
கோலம் செய் சாந்தம் திமிர்ந்து - நாலடி:40 7/4
மன்றத்து நின்று உஞற்றார் மாசு திமிர்ந்து இயங்கார் - ஆசாரக்:93/1

 TOP
 
  திமில் (3)
நளிந்த கடலுள் திமில் திரை போல் எங்கும் - கள40:18/1
திமில் களிறு ஆக திரை பறையா பல் புள் - திணை150:50/1
திரை பாகன் ஆக திமில் களிறு ஆக - திணை150:52/1

 TOP
 
  திமிலா (1)
பாறு புரவியா பல் களிறு நீள் திமிலா
  தேறு திரை பறையா புள் படையா தேறாத - திணை150:53/1,2

 TOP
 
  திரங்கி (1)
வலித்து திரங்கி கிடந்தேவிடினும் - பழ:278/3

 TOP
 
  திரட்டல் (1)
துன்னிய சொல்லால் இனம் திரட்டல் இ மூன்றும் - திரி:58/3

 TOP
 
  திரட்டினார் (1)
விளங்காய் திரட்டினார் இல்லை களம் கனியை - நாலடி:11 3/3

 TOP
 
  திரண்ட (1)
வேயின் திரண்ட தோள் வேல் கண்ணாய் விண் இயங்கும் - பழ:34/3

 TOP
 
  திரண்டு (1)
நன்கு திரண்டு பெரியவாம் ஆற்றவும் - பழ:267/3

 TOP
 
  திரள் (3)
தீம் கரும்பு ஈன்ற திரள் கால் உளை அலரி - நாலடி:20 9/1
கண் திரள் முத்தம் கடுப்ப புறவு எல்லாம் - கார்40:23/1
கண் திரள் முத்தம் பயக்கும் இரு முந்நீர் - ஐந்70:61/1

 TOP
 
  திரி (1)
திரி அழல் காணின் தொழுப விறகின் - நான்மணி:63/1

 TOP
 
  திரிகடுகம் (3)
திரிகடுகம் போலும் மருந்து - திரி:1/4
திரிகடுகம் என்னும் திகழ் தமிழ்ச்சங்கம் - திரி:105/3
திரிகடுகம் செய்த மகன் - திரி:106/4

 TOP
 
  திரிதந்து (1)
தீ தொழிலே கன்றி திரிதந்து எருவை போல் - நாலடி:36 1/3

 TOP
 
  திரிதரும் (2)
திரிதரும் காலத்து தீது இலிரோ என்பர் - நாலடி:29 4/3
தூதாய் திரிதரும் பாண்மகனே நீதான் - ஐந்50:22/2

 TOP
 
  திரிதரூஉம் (1)
கள்வர் திரிதரூஉம் கானம் கடந்தவர் - கைந்:22/1

 TOP
 
  திரிந்த (2)
நெறி திரிவார் இன்மையால் இல்லை முறி திரிந்த
  கண்டல் அம் தண் தில்லை கலந்து கழி சூழ்ந்த - திணை150:61/2,3
கலம் தீமையால் திரிந்த அற்று - குறள்:100 10/2

 TOP
 
  திரிந்து (9)
வெண் மரல் போல நிறம் திரிந்து வேறாய - ஐந்50:27/3
சிதடி கரையும் திரிந்து - திணை150:83/4
தேர் நின்றது என்னாய் திரிந்து - திணை150:115/4
மோப்ப குழையும் அனிச்சம் முகம் திரிந்து
  நோக்க குழையும் விருந்து - குறள்:9 10/1,2
நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு - குறள்:46 2/1
பொய் வழங்கி வாழும் பொறியறையும் கை திரிந்து
  தாழ்விடத்து நேர் கருதும் தட்டையும் ஊழினால் - திரி:15/1,2
திரிந்து ஆளும் நெஞ்சினான் கல்வியும் மூன்றும் - திரி:102/3
தேர்வார் போல் நிற்க திரிந்து - ஆசாரக்:78/3
இறை திரியான் நேர் ஒத்தல் வேண்டும் முறை திரிந்து
  நேர் ஒழுகான்ஆயின் அதுவாம் ஒரு பக்கம் - பழ:206/2,3

 TOP
 
  திரிந்தும் (1)
திரு உடையர்ஆயின் திரிந்தும் வருமால் - பழ:136/2

 TOP
 
  திரிபவர்க்கு (1)
பொய் கொண்டு அறை போய் திரிபவர்க்கு என்கொலாம் - பழ:241/2

 TOP
 
  திரிபு (1)
திரிபு இன்றி வாழ்தல் இனிது - இனிய40:22/4

 TOP
 
  திரிய (1)
திரிய பெறுபவோ சான்றோர் விரி திரை - பழ:101/2

 TOP
 
  திரியா (2)
சில பகல் ஆம் சிற்றினத்தார் கேண்மை நிலை திரியா
  நிற்கும் பெரியோர் நெறி அடைய நின்று அனைத்து ஆல் - நாலடி:21 4/2,3
திரை அலறி பேர தெழியா திரியா
  கரை அலவன் காலினால் காணா கரை அருகே - திணை150:60/1,2

 TOP
 
  திரியாதாம் (1)
தீம் சுவை யாதும் திரியாதாம் ஆங்கே - நாலடி:25 4/2

 TOP
 
  திரியாது (1)
நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம் - குறள்:13 4/1

 TOP
 
  திரியாமை (1)
அன்பின் திரியாமை ஆசாரம் நீங்காமை - ஆசாரக்:26/3

 TOP
 
  திரியார் (2)
இல் பிறப்பு எண்ணி இடை திரியார் என்பது ஓர் - நாலடி:22 2/1
கண்டுழி கண்டால் முகம் திரியார் புல்லரையும் - ஆசாரக்:86/2

 TOP
 
  திரியான் (2)
இறை திரியான் நேர் ஒத்தல் வேண்டும் முறை திரிந்து - பழ:206/2
அலைபுரியான் வஞ்சியான் யாதும் நிலை திரியான்
  மண்ணவர்க்கும் அன்றி மது மலி பூம் கோதாய் - ஏலாதி:2/2,3

 TOP
 
  திரியின் (2)
அச்சு இடையிட்டு திரியின் அது அன்றோ - பழ:291/3
மிக்கு ஓடி விட்டு திரியின் அது பெரிது - பழ:377/3

 TOP
 
  திரியினும் (1)
எண்ணி உயிர் கொள்வான் ஏன்று திரியினும்
  உண்ணும் துணை காக்கும் கூற்று - பழ:89/3,4

 TOP
 
  திரியும் (1)
திரியும் இடிஞ்சிலும் நெய்யும் சார்வு ஆக - பழ:219/1

 TOP
 
  திரிவார் (1)
நெறி திரிவார் இன்மையால் இல்லை முறி திரிந்த - திணை150:61/2

 TOP
 
  திரிவு (2)
திரிவு இன்றி தீர்ந்தார் போல் சொல்லி அவருள் - பழ:10/2
பிரிவு இன்றி போற்றப்படுவார் திரிவு இன்றி - பழ:25/2

 TOP
 
  திரிவேனேல் (1)
நட்ட பின் நாடி திரிவேனேல் நட்டான் - நாலடி:23 10/2

 TOP
 
  திரு (25)
திரு மதுகை ஆக திறன் இலார் செய்யும் - நாலடி:30 1/1
திரு தன்னை நீப்பினும் தெய்வம் செறினும் - நாலடி:31 4/1
திரு ஒக்கும் தீது இல் ஒழுக்கம் பெரிய - நான்மணி:6/1
முன்னிய செய்யும் திரு - நான்மணி:38/4
முளை குழாம் நீர் உண்டேல் உண்டாம் திரு குழாம் - நான்மணி:64/2
கரு அணி காலம் குறித்தார் திரு அணிந்த - கார்40:34/3
திரு ஒடுங்கும் மென் சாயல் தேம் கோதை மாதர் - ஐந்50:17/3
திகழும் திரு அமர் மார்பு - திணை50:50/4
அரு மலை மாய்க்குமவர் தங்கை திரு முலைக்கு - திணை150:23/2
அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று - குறள்:17 8/1
திறன் அறிந்து ஆங்கே திரு - குறள்:18 9/2
பேர் அறிவாளன் திரு - குறள்:22 5/2
இரு வேறு உலகத்து இயற்கை திரு வேறு - குறள்:38 4/1
கல்லார்கண் பட்ட திரு - குறள்:41 8/2
நினைப்பானை நீங்கும் திரு - குறள்:52 9/2
சீறின் சிறுகும் திரு - குறள்:57 8/2
திரு நீக்கப்பட்டார் தொடர்பு - குறள்:92 10/2
நன்று அறிவாரின் கயவர் திரு உடையர் - குறள்:108 2/1
திரு வாயில் ஆய திறல் வண் கயத்தூர் - ஆசாரக்:101/5
தீ நாள் திரு உடையார்க்கு இல் - பழ:84/4
உருவு திரு ஊட்டுமாறு - பழ:106/4
திரு உடையர்ஆயின் திரிந்தும் வருமால் - பழ:136/2
பொரு படை கண்ணாய் அதுவால் திரு உடையார் - பழ:269/3
ஈண்டின் இயையும் திரு - சிறுபஞ்:4/4
வெருவாமை வீழ் விருந்து ஓம்பி திரு ஆக்கும் - சிறுபஞ்:41/2

 TOP
 
  திருத்தலும் (1)
திருத்தலும் ஆகாது தீது ஆம் அதுவே - பழ:187/3

 TOP
 
  திருத்துளார் (1)
செல்வ திருத்துளார் செம்மல் செரு அடு தோள் - திரி:106/1

 TOP
 
  திருந்தாய் (1)
திருந்தாய் நீ ஆர்வத்தை தீமை உடையார் - பழ:9/1

 TOP
 
  திருந்திய (2)
அருந்ததி கற்பினார் தோளும் திருந்திய
  தொல் குடியின் மாண்டார் தொடர்ச்சியும் சொல்லின் - திரி:1/1,2
அரும் தொழில் ஆற்றும் பகடும் திருந்திய
  மெய் நிறைந்து நீடு இருந்த கன்னியும் நொந்து - திரி:69/1,2

 TOP
 
  திருந்திழாய் (2)
திருந்திழாய் காதலர் தீர்குவர் அல்லர் - கார்40:15/1
பொருந்தினர் மேனி போல் பொற்ப திருந்திழாய்
  வானம் பொழியவும் வாரார்கொல் இன்னாத - ஐந்50:8/2,3

 TOP
 
  திருந்திழையார் (1)
விருந்து இன்றி உண்ட பகலும் திருந்திழையார்
  புல்ல புடை பெயரா கங்குலும் இல்லார்க்கு ஒன்று - திரி:44/1,2

 TOP
 
  திருந்தின (1)
பூம் கண் இடம் ஆடும் கனவும் திருந்தின
  ஓங்கிய குன்றம் இறந்தாரை யாம் நினைப்ப - ஐந்70:41/1,2

 TOP
 
  திருந்து (1)
திருந்து இன் இளி வண்டு பாட இரும் தும்பி - கார்40:15/3

 TOP
 
  திருந்துதல் (2)
திருந்துதல் என்றுமோ இல் - பழ:30/4
வாழ்க்கை திருந்துதல் இன்று - பழ:175/4

 TOP
 
  திருநுதல் (1)
கருமத்தான் நாணுதல் நாணு திருநுதல்
  நல்லவர் நாணு பிற - குறள்:102 1/1,2

 TOP
 
  திருநுதற்கு (2)
திருநுதற்கு யாம் செய் குறி - கார்40:31/4
திருநுதற்கு இல்லை இடம் - குறள்:113 3/2

 TOP
 
  திருவத்தவர் (1)
காக்கும் திருவத்தவர் - நாலடி:6 7/4

 TOP
 
  திருவில் (1)
திருவில் விலங்கு ஊன்றி தீம் பெயல் தாழ - கார்40:1/2

 TOP
 
  திருவின் (1)
திருவின் திறல் உடையது இல்லை ஒருவற்கு - நான்மணி:29/1

 TOP
 
  திருவினும் (1)
திருவினும் திட்பமே நன்று - பழ:136/4

 TOP
 
  திருவினை (2)
பருவத்தொடு ஒட்ட ஒழுகல் திருவினை
  தீராமை ஆர்க்கும் கயிறு - குறள்:49 2/1,2
முயற்சி திருவினை ஆக்கும் முயற்று இன்மை - குறள்:62 6/1

 TOP
 
  திருவுடையாரை (1)
திருவுடையாரை செறல் இன்னா இன்னா - இன்னா40:4/3

 TOP
 
  திருவும் (3)
மன்னர் திருவும் மகளிர் எழில் நலமும் - நாலடி:17 7/1
திருவும் திணை வகையான் நில்லா பெரு வலி - நான்மணி:39/1
திருவும் தீர்வு இன்றேல் இனிது - இனிய40:12/4

 TOP
 
  திருவேஆயினும் (1)
பொன் வரை கோங்கு ஏர் முலை பூம் திருவேஆயினும்
  தன் வரை தாழ்த்தல் அரிது - சிறுபஞ்:43/3,4

 TOP
 
  திருவொடும் (1)
திருவொடும் இன்னாது துச்சு - பழ:123/4

 TOP
 
  திரை (38)
கண்டல் திரை அலைக்கும் கானல் அம் தண் சேர்ப்ப - நாலடி:20 4/3
மடி திரை தந்திட்ட வான் கதிர் முத்தம் - நாலடி:23 4/1
பாய் திரை சூழ் வையம் பயப்பினும் இன்னாதே - நாலடி:34 9/3
நில்லா திரை அலைக்கும் நீள் கழி தண் சேர்ப்ப - நாலடி:40 1/3
விரி திரை வெள்ளம் வெறுப்ப பருகி - கார்40:34/1
நளிந்த கடலுள் திமில் திரை போல் எங்கும் - கள40:18/1
ஒழுகு திரை கரை வான் குருகின் தூவி - ஐந்70:57/1
எறி திரை சேர்ப்பன் கொடுமை அறியாகொல் - ஐந்70:65/2
இவர் திரை நீக்கியிட்டு எக்கர் மணல் மேல் - ஐந்70:67/1
பாய் திரை சேர்ப்பன் பரி தேர் வர கண்டு - ஐந்70:71/3
தத்தும் திரை தயங்கும் தண் அம் கடல் சேர்ப்ப - திணை50:42/2
தவழ் திரை சேர்ப்பன் வருவான்கொல் தோழி - திணை50:50/3
மா கடல் சேர் வெண் மணல் தண் கானல் பாய் திரை சேர் - திணை150:38/1
திரை மேல் போந்து எஞ்சிய தெண் கழி கானல் - திணை150:48/1
பொங்கு திரை உதைப்ப போந்து ஒழிந்த சங்கு - திணை150:49/2
திமில் களிறு ஆக திரை பறையா பல் புள் - திணை150:50/1
திரை பாகன் ஆக திமில் களிறு ஆக - திணை150:52/1
தேறு திரை பறையா புள் படையா தேறாத - திணை150:53/2
வரு திரை தான் உலாம் வார் மணல் கானல் - திணை150:57/1
ஒரு திரை ஓடா அளவை இரு திரை - திணை150:57/2
ஒரு திரை ஓடா அளவை இரு திரை
  முன் வீழும் கானல் முழங்கு கடல் சேர்ப்ப - திணை150:57/2,3
திரை அலறி பேர தெழியா திரியா - திணை150:60/1
வீ நாறு கானல் விரி திரை தண் சேர்ப்ப - பழ:84/3
திரிய பெறுபவோ சான்றோர் விரி திரை
  பார் எறியும் முந்நீர் துறைவ கடன் அன்றோ - பழ:101/2,3
மண இல் கமழும் மலி திரை சேர்ப்ப - பழ:174/3
சிறியர் எனற்பாடும் செய்யும் எறி திரை
  சென்று உலாம் சேர்ப்ப குழுவத்தார் மேயிருந்த - பழ:207/2,3
மடல் அணி பெண்ணை மலி திரை சேர்ப்ப - பழ:225/3
துனியால் திரை உலாம் தூங்கு நீர் சேர்ப்ப - பழ:236/3
விரியா இமிழ் திரை வீங்கு நீர் சேர்ப்ப - பழ:244/3
பொரு திரை வந்து உலாம் பொங்கு நீர் சேர்ப்ப - பழ:247/3
என்றும் உறுதியே சூழ்க எறி திரை
  சென்று உலாம் சேர்ப்ப அது போல நீர் போயும் - பழ:275/2,3
நிகராக சென்றாரும் அல்லர் இவர் திரை
  நீத்த நீர் தண் சேர்ப்ப செய்தது உவவாதார்க்கு - பழ:307/2,3
திரை அவித்து ஆடார் கடல் - பழ:317/4
வளியால் திரை உலாம் வாங்கு நீர் சேர்ப்ப - பழ:385/3
படு திரை சேர்ப்ப மற்று இல்லையே யானை - பழ:391/3
வேரி கமழும் விரி திரை தண் சேர்ப்ப - பழ:396/3
நாவாய் வழங்கு நளி திரை தண் கடலுள் - கைந்:49/1
புலவு திரை பொருத போழ்து - கைந்:57/4

 TOP
 
  திரைய (1)
மல்கு திரைய கடல் கோட்டு இருப்பினும் - நாலடி:27 3/1

 TOP
 
  திரையா (1)
அடல் கோட்டு யானை திரையா உடற்றி - திணை150:43/2

 TOP
 
  திரையின் (1)
முந்நீர் திரையின் எழுந்து இயங்கா மேதையும் - திரி:35/1

 TOP
 
  திரையின்மாட்டு (1)
மங்குல் நீர் வெண் திரையின்மாட்டு - திணை150:35/4

 TOP
 
  திரையுள் (1)
மயில்கொல் மடவாள்கொல் மாநீர் திரையுள்
  பயில்வதோர் தெய்வம்கொல் கேளீர் குயில் பயிரும் - திணை50:49/1,2

 TOP
 
  தில்லை (1)
கண்டல் அம் தண் தில்லை கலந்து கழி சூழ்ந்த - திணை150:61/3

 TOP
 
  திவள் (1)
பவளம் சொரிதரு பை போல் திவள் ஒளிய - கள40:14/2

 TOP
 
  திளைக்கும் (2)
மழை திளைக்கும் மாடம் ஆய் மாண்பு அமைந்த காப்பு ஆய் - நாலடி:37 1/1
ஊர் கெழு சேவல் இதலொடு போர் திளைக்கும்
  தேரொடு கானம் தெருள் இலார் செல்வார்கொல் - ஐந்70:35/2,3

 TOP
 
  திளையார் (1)
நீந்தார் உமியார் திளையார் விளையாடார் - ஆசாரக்:14/2

 TOP
 
  திறக்கும் (1)
அரிநர் அணை திறக்கும் ஊர அறுமோ - பழ:177/3

 TOP
 
  திறத்த (1)
இ திறத்த எஞ்சினார் பேர் - ஏலாதி:31/4

 TOP
 
  திறத்தால் (2)
எய்தும் திறத்தால் இனிது என்ப யார்மாட்டும் - இனிய40:5/3
முடியும் திறத்தால் முயல்க தாம் கூர் அம்பு - பழ:49/3

 TOP
 
  திறத்தாள் (1)
எ திறத்தாள் ஈர்ம் கோதையாள் - நாலடி:5 6/4

 TOP
 
  திறத்தானும் (1)
எ திறத்தானும் இயைவ கரவாத - இனிய40:26/3

 TOP
 
  திறத்தின் (1)
திறத்தின் உரைப்பார்க்கு ஒன்று ஆகாதது இல்லை - பழ:295/2

 TOP
 
  திறத்து (5)
நெருநல் ஒருத்தி திறத்து - கார்40:3/4
ஒள் நுதல் மாதர் திறத்து - கார்40:34/4
பேணாய் இதன் திறத்து என்றாலும் பேணாதே - திணை150:64/1
பிறப்பினால் மாண்டார் வெகுளார் திறத்து உள்ளி - பழ:370/2
திறத்து ஆற்றின் நோலாதது நோன்பு அன்று - முது:5 9/1

 TOP
 
  திறத்தும் (1)
எல்லா திறத்தும் இறப்ப பெரியாரை - பழ:376/1

 TOP
 
  திறத்துளி (1)
திறத்துளி வாழ்தும் என்பார் - ஆசாரக்:88/3

 TOP
 
  திறந்த (2)
கரும் கொண்மூ வாய் திறந்த மின்னு போல் தோன்றி - நாலடி:1 8/3
தெரி கணை எஃகம் திறந்த வாய் எல்லாம் - கள40:5/1

 TOP
 
  திறந்து (4)
காவாது ஒருவன் தன் வாய் திறந்து சொல்லும் சொல் - நாலடி:7 3/1
சாந்து அகத்து உண்டு என்று செப்பு திறந்து ஒருவன் - நாலடி:13 6/3
வழுத்த வரம் கொடுப்பர் நாகர் தொழு திறந்து
  கன்று ஊட்ட நந்தும் கறவை கலம் பரப்பி - நான்மணி:60/2,3
பொன் திறந்து கொண்டு புகாவாக நல்கினாள் - பழ:171/3

 TOP
 
  திறப்பட்டார் (2)
திறப்பட்டார் கண்ணே உள - ஆசாரக்:79/4
இறப்ப பெருகியக்கண்ணும் திறப்பட்டார்
  மன்னரின் மேம்பட செய்யற்க செய்பவேல் - ஆசாரக்:85/2,3

 TOP
 
  திறப்படு (1)
திறப்படு இலாஅதவர் - குறள்:64 10/2

 TOP
 
  திறம் (12)
திறம் தெரிந்து வாழ்தல் இனிது - இனிய40:21/4
உள்ளார்கொல் காதலர் ஒண்டொடி நம் திறம்
  வள் வார் முரசின் குரல் போல் இடித்து உரறி - ஐந்50:4/1,2
யாணர் நல் ஊரன் திறம் கிளப்பல் என்னுடைய - ஐந்70:49/1
பொய்கை நல் ஊரன் திறம் கிளத்தல் என்னுடைய - ஐந்70:55/1
திறம் தெரிந்து தேறப்படும் - குறள்:51 1/2
எள்ளின் இளிவாம் என்று எண்ணி அவர் திறம்
  உள்ளும் உயிர் காதல் நெஞ்சு - குறள்:130 8/1,2
திறம் கண்டார் கண்ட நெறி - ஆசாரக்:63/3
தீ இல்லை ஊட்டும் திறம் - பழ:45/4
தெருளும் திறம் தெரிதல் அல்லால் வெருள எழுந்து - பழ:147/2
திறம் தெரிந்து செய்தக்கால் செல்வுழி நன்று ஆம் - பழ:159/2
தேரும் திறம் அரிதால் தேமொழீஇ ஆரும் - பழ:340/2
பொய்கை நல் ஊரன் திறம் கிளப்ப என் உடையை - கைந்:41/1

 TOP
 
  திறமால் (1)
உள்ளுவன்மன் யான் உரைப்பது அவர் திறமால்
  கள்ளம் பிறவோ பசப்பு - குறள்:119 4/1,2

 TOP
 
  திறல் (4)
திருவின் திறல் உடையது இல்லை ஒருவற்கு - நான்மணி:29/1
திரு வாயில் ஆய திறல் வண் கயத்தூர் - ஆசாரக்:101/5
செரு கெழு மன்னர் திறல் உடையார் சேர்ந்தால் - பழ:76/1
தீயன அல்ல செயினும் திறல் வேந்தன் - பழ:234/1

 TOP
 
  திறலஆயினும் (1)
புலியின் பெரும் திறலஆயினும் பூசை - பழ:330/3

 TOP
 
  திறலாரை (1)
பரந்த திறலாரை பாசி மேல் இட்டு - பழ:34/1

 TOP
 
  திறலான் (1)
அடு திறலான் பின் சென்ற ஆறு - திணை150:75/4

 TOP
 
  திறலானை (1)
வாள் திறலானை வளைத்தார்கள் அஞ்ஞான்று - பழ:106/1

 TOP
 
  திறவதின் (1)
திறவதின் தீர்ந்த பொருள் - திரி:72/4

 TOP
 
  திறவது (1)
திறவது தீ பெண் தொழில் - சிறுபஞ்:23/4

 TOP
 
  திறன் (17)
பிறர் மறையின்கண் செவிடு ஆய் திறன் அறிந்து - நாலடி:16 8/1
திரு மதுகை ஆக திறன் இலார் செய்யும் - நாலடி:30 1/1
திறன் இலான் செய்யும் வினை - இன்னா40:38/4
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து - குறள்:16 7/1
திறன் அறிந்து ஆங்கே திரு - குறள்:18 9/2
திறன் தெரிந்து கூறப்படும் - குறள்:19 6/2
திறன் அறிந்து தேர்ந்து கொளல் - குறள்:45 1/2
திறன் அறிந்தான் தேர்ச்சி துணை - குறள்:64 5/2
திறன் அறிந்து சொல்லுக சொல்லை அறனும் - குறள்:65 4/1
அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து - குறள்:76 4/1
திறன் வேறு கூறின் பொறையும் அற வினையை - திரி:6/2
அறன் அறிந்தார் இ ஐந்தும் நோக்கார் திறன் இலர் என்று - ஆசாரக்:37/2
தெருளாது ஒழுகும் திறன் இலாதாரை - பழ:32/1
தெள்ளி உணரும் திறன் உடையார் தம் பகைக்கு - பழ:54/1
தெரியாதவர் தம் திறன் இல் சொல் கேட்டால் - பழ:135/1
தெரியாதார் சொல்லும் திறன் இன்மை தீதா - பழ:310/1
தெற்ற அறிவு உடையார்க்கு அல்லால் திறன் இல்லா - பழ:373/1

 TOP
 
  தின்குறுவான் (1)
முன் பிறர்க்கு ஓடி மொழியற்க தின்குறுவான்
  கொல்வாங்கு கொன்ற பின் அல்லது உய கொண்டு - பழ:257/2,3

 TOP
 
  தின்பது (1)
தின்பது அழுவதன்கண் - பழ:262/4

 TOP
 
  தின்பர் (1)
பார்ப்பாரும் தின்பர் உடும்பு - பழ:87/4

 TOP
 
  தின்பவர் (1)
அட்டிற்று தின்பவர் ஆயிரவர் ஆபவே - பழ:59/2

 TOP
 
  தின்பவர்க்கு (1)
ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு - குறள்:26 2/2

 TOP
 
  தின்பார் (1)
தொளை எண்ணார் அப்பம் தின்பார் - பழ:253/4

 TOP
 
  தின்ற (1)
அலவனை காதலித்து கால் முரித்து தின்ற
  பழவினை வந்து அடைந்தக்கால் - நாலடி:13 3/3,4

 TOP
 
  தின்று (10)
தக்கோலம் தின்று தலை நிறைய பூ சூடி - நாலடி:5 3/1
நுனியின் கரும்பு தின்று அற்றே நுனி நீக்கி - நாலடி:14 8/2
தூரின் தின்று அன்ன தகத்துஅரோ பண்பு இலா - நாலடி:14 8/3
குருத்தின் கரும்பு தின்று அற்றே குருத்திற்கு - நாலடி:22 1/2
எதிர் செல தின்று அன்ன தகைத்துஅரோ என்றும் - நாலடி:22 1/3
உப்பு இலி வெந்தை தின்று உள் அற்று வாழ்பவே - நாலடி:29 9/3
ஊனை தின்று ஊனை பெருக்குதல் முன் இன்னா - இன்னா40:22/2
ஊனை தின்று ஊனை பெருக்காமை முன் இனிதே - இனிய40:4/2
கொலைநின்று தின்று ஒழுகுவானும் பெரியவர் - திரி:74/1
நாள் அந்தி கோல் தின்று கண் கழீஇ தெய்வத்தை - ஆசாரக்:9/1

 TOP
 
  தின்னற்க (1)
இறந்து ஒன்றும் தின்னற்க நின்று - ஆசாரக்:23/3

 TOP
 
  தின்னார் (1)
மெல் கோலும் தின்னார் மரம் குறையார் என்பதே - ஆசாரக்:17/3

 TOP
 
  தின்னினும் (3)
யாவரே தின்னினும் கையாதாம் கைக்குமாம் - நாலடி:12 2/3
தேவரே தின்னினும் வேம்பு - நாலடி:12 2/4
தேவரே தின்னினும் வேம்பு - பழ:114/4

 TOP
 
  தின்னுங்கால் (1)
பிணி தன்னை தின்னுங்கால் தான் வருந்துமாறும் - திரி:88/1

 TOP
 
  தின்னும் (7)
சிறு தேரை பற்றியும் தின்னும் அறிவினால் - நாலடி:20 3/2
கவ்வி தோல் தின்னும் குணுங்கர் நாய் பால் சோற்றின் - நாலடி:33 2/3
நா தின்னும் நல்ல சுனைத்து - நாலடி:34 5/4
தின்னும் அவர் காணல் உற்று - குறள்:125 4/2
உள் உருக்கி தின்னும் பெரும் பிணியும் இ மூன்றும் - திரி:18/3
முந்தை பழ வினையாய் தின்னும் இவை மூன்றும் - திரி:67/3
அறிவு அழுங்க தின்னும் பசி நோயும் மாந்தர் - திரி:95/1

 TOP
 
  தினப்பட்ட (1)
சிதலை தினப்பட்ட ஆல மரத்தை - நாலடி:20 7/1

 TOP
 
  தினல் (5)
பொருள் அல்லது அ ஊன் தினல் - குறள்:26 4/2
தினல் பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும் - குறள்:26 6/1
கொக்கு ஆர் வள வயல் ஊர தினல் ஆமோ - பழ:18/3
முயல் விட்டு காக்கை தினல் - பழ:141/4
எருத்திடை வைக்கோல் தினல் - பழ:187/4

 TOP
 
  தினிய (1)
தினிய இருந்தது என் நெஞ்சு - குறள்:130 6/2

 TOP
 
  தினை (13)
தினை துணையர் ஆகி தம் தேசு உள் அடக்கி - நாலடி:11 5/1
எனைத்தானும் தாம் கண்டு இருந்தும் தினை துணையும் - நாலடி:33 3/2
தினை அனைத்தேஆயினும் செய்த நன்று உண்டால் - நாலடி:35 4/1
தினை காத்து இருந்தேம் யாம் ஆக வினை வாய்த்து - ஐந்50:14/2
சாந்தம் எறிந்து உழுத சாரல் சிறு தினை
  சாந்தம் எறிந்த இதண் மிசை சாந்தம் - திணை150:3/1,2
பனை விளைவு நாம் எண்ண பாத்தி தினை விளைய - திணை150:5/2
இவட்குஆயின் செம் தினை கார் ஏனல் இவட்குஆயின் - திணை150:8/2
செம் தினை வித்துவார் தங்கை பிறர் நோய்க்கு - திணை150:24/3
தினை துணை நன்றி செயினும் பனை துணையா - குறள்:11 4/1
எனை துணையர்ஆயினும் என்னாம் தினை துணையும் - குறள்:15 4/1
தினை துணையாம் குற்றம் வரினும் பனை துணையா - குறள்:44 3/1
தினை துணையும் ஊடாமை வேண்டும் பனை துணையும் - குறள்:129 2/1
தினை துணையேயானும் அணி கொண்டல் நன்றே - பழ:68/2

 TOP