<<முந்திய பக்கம் பதினெண்கீழ்க்கணக்கு - தொடரடைவு

தீ - முதல் சொற்கள்
தீ 63
தீக்கு 2
தீங்கு 7
தீங்குறுதல் 1
தீண்டல் 2
தீண்டலான் 1
தீண்டா 4
தீண்டார் 3
தீண்டாவிடுதல் 1
தீண்டு 1
தீதா 1
தீதாய்விடும் 1
தீது 33
தீதுஆயின் 1
தீதுஉரையும் 1
தீதே 3
தீதோ 1
தீம் 16
தீமை 12
தீமைத்தே 2
தீமையால் 1
தீமையான் 1
தீமையும் 1
தீமையையும் 1
தீய 17
தீயரோ 1
தீயவும் 2
தீயவை 8
தீயன 3
தீயார் 2
தீயார்க்கு 1
தீயில் 1
தீயினால் 1
தீயினும் 1
தீயினுள் 1
தீயே 1
தீர் 15
தீர்க்க 1
தீர்க்குதும் 1
தீர்க்கும் 5
தீர்குவர் 1
தீர்த்தம் 4
தீர்த்தல் 7
தீர்த்தலான் 1
தீர்த்தார் 1
தீர்த்தாரே 1
தீர்த்துவிடல் 1
தீர்தல் 1
தீர்தலின் 1
தீர்ந்த 10
தீர்ந்தது 1
தீர்ந்தவர் 1
தீர்ந்தன்று 1
தீர்ந்தார் 2
தீர்ந்தார்மாட்டும் 1
தீர்ந்தாரா 1
தீர்ந்தாரின் 1
தீர்ந்தாரும் 1
தீர்ந்தால் 1
தீர்ந்து 3
தீர்ந்தேம் 1
தீர்ப்பர் 1
தீர்ப்பாரே 1
தீர்ப்பான் 1
தீர்ப்பேம் 1
தீர்வதற்கு 1
தீர்வாம் 1
தீர்விடத்து 1
தீர்வு 3
தீர 14
தீரவும் 1
தீரா 9
தீராது 1
தீராமை 2
தீவாய் 1
தீவினை 3
தீவினையார் 1
தீற்றாதோ 1
தீற்றிய 1
தீற்றினும் 1
தீற்றுபவர் 1
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
  தீ (63)
கொடுத்தார் உய போவர் கோடு இல் தீ கூற்றம் - நாலடி:1 5/3
முற்றி இருந்த கனி ஒழிய தீ வளியால் - நாலடி:2 9/3
மு காலை கொட்டினுள் மூடி தீ கொண்டு எழுவார் - நாலடி:3 4/3
தீ வளி சென்று சிதைத்த ஆங்கு சான்றாண்மை - நாலடி:18 9/3
தீ இனம் சேர கெடும் - நாலடி:18 9/4
எறி புனம் தீ பட்டக்கால் - நாலடி:18 10/4
சுடுதற்கு மூட்டிய தீ - நாலடி:23 4/4
நல் இல் சிதைத்த தீ நாள்தொறும் நாடி தம் - நாலடி:23 5/3
பெருகுவது போல தோன்றி வை தீ போல் - நாலடி:24 4/1
தெரிவு உடையார் தீ இனத்தர் ஆகுதல் நாகம் - நாலடி:24 10/3
கானம் தலைப்பட்ட தீ போல் கனலுமே - நாலடி:30 1/3
அறாஅர் சுடுவது ஓர் தீ - நாலடி:31 10/4
தீ புலவர் சேரார் செறிவுடையார் தீ புலவன் - நாலடி:32 2/2
தீ புலவர் சேரார் செறிவுடையார் தீ புலவன் - நாலடி:32 2/2
கொலைஞர் உலை ஏற்றி தீ மடுப்ப ஆமை - நாலடி:34 1/1
தீ தொழிலே கன்றி திரிதந்து எருவை போல் - நாலடி:36 1/3
ஈ பறக்க நொந்தேனும் யானேமன் தீ பறக்க - நாலடி:39 9/2
தீர்தலின் தீ புகுதல் நன்று - நான்மணி:13/4
பொச்சாப்பு இலாத புகழ் வேள்வி தீ போல - கார்40:7/3
மை ஆர் தடம் கண் மயில் அன்னாய் தீ தீண்டு - திணை150:5/3
தேன் இறுத்த வண்டோடு தீ தா என தேராது - திணை150:102/3
ஒன்றானும் தீ சொல் பொருள் பயன் உண்டாயின் - குறள்:13 8/1
நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம் - குறள்:14 8/1
தீ உழி உய்த்துவிடும் - குறள்:17 8/2
தீ பால தான் பிறர்கண் செய்யற்க நோய் பால - குறள்:21 6/1
தீ பிணி தீண்டல் அரிது - குறள்:23 7/2
செல்லா தீ வாழ்க்கையவர் - குறள்:33 10/2
நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின் - குறள்:46 10/1
தீ எச்சம் போல தெறும் - குறள்:68 4/2
அகலாது அணுகாது தீ காய்வார் போல்க - குறள்:70 1/1
குளித்தானை தீ துரீஇ அற்று - குறள்:93 9/2
தீ அளவு அன்றி தெரியான் பெரிது உண்ணின் - குறள்:95 7/1
தீ யாண்டு பெற்றாள் இவள் - குறள்:111 4/2
விடின் சுடல் ஆற்றுமோ தீ - குறள்:116 9/2
பழகினும் பார்ப்பாரை தீ போல் ஒழுகல் - திரி:42/2
செம் தீ முதல்வர் அறம் நினைந்து வாழ்தலும் - திரி:98/1
எச்சிலார் தீண்டார் பசு பார்ப்பார் தீ தேவர் - ஆசாரக்:5/1
தேவர் வழிபாடு தீ கனா வாலாமை - ஆசாரக்:10/1
இல்லம் பொலிய அடுப்பினுள் தீ பெய்க - ஆசாரக்:46/4
அடுப்பினுள் தீ நந்த கொள்ளார் அதனை - ஆசாரக்:59/2
தேர்ந்து கண்ணோடாது தீ வினையும் அஞ்சலராய் - பழ:27/1
தீ மாற்றத்தாலே பகைப்படுத்திட்டு ஏமாப்ப - பழ:28/2
தீ இல்லை ஊட்டும் திறம் - பழ:45/4
தீ நாள் திரு உடையார்க்கு இல் - பழ:84/4
உண்ட இல் தீ இடுமாறு - பழ:133/4
தீ நாய் எடுப்புமாம் எண்கு - பழ:139/4
தீ பால் வினையினை தீரவும் அஞ்சாராய் - பழ:193/1
மா வினை மாண பொதிகிற்பார் தீ வினை - பழ:238/2
மேய்ப்பு ஆட்டது என்று உண்ணாள்ஆயினாள் தீ புகை போல் - பழ:285/2
நல் யாண்டும் தீ யாண்டும் இல் - பழ:290/4
வெந்நீரும் ஆடாதார் தீ - பழ:293/4
நல் காப்பின் தீ சிறையே நன்று - பழ:336/4
பிறர் கருமம் ஆராய்தல் தீ பெண் கிளைமை - சிறுபஞ்:23/3
திறவது தீ பெண் தொழில் - சிறுபஞ்:23/4
தீ சொல்லே காமின் வரும் காலன் திண்ணிதே - சிறுபஞ்:24/3
வெம் தீ காண் வெண்ணெய் மெழுகு நீர் சேர் மண் உப்பு - சிறுபஞ்:63/1
குழி படல் தீ சொற்களோடு மொழிப்பட்ட - சிறுபஞ்:102/2
வாயா வழக்கின் தீ வழக்கு இல்லை - முது:6 4/1
மறையில் செவி இலன் தீ சொற்கண் மூங்கை - ஏலாதி:19/3
சேர்ந்தால் பகை பழி தீ சொல்லே சாக்காடே - ஏலாதி:25/3
வெஃகல் வெகுடலே தீ காட்சி வெஃகுமான் - ஏலாதி:27/2
கொலை களவு காம தீ வாழ்க்கை அலை அளவி - ஏலாதி:29/2
பொரு தீ என வெருளும் பொன் நேர் நிறத்தாய் - கைந்:26/3

 TOP
 
  தீக்கு (2)
ஊருள் எழுந்த உரு கெழு செம் தீக்கு
  நீருள் குளித்தும் உயல் ஆகும் நீருள் - நாலடி:9 10/1,2
முளி புல்லும் கானமும் சேரார் தீக்கு ஊட்டார் - ஆசாரக்:56/1

 TOP
 
  தீங்கு (7)
தாம் செய்வது அல்லால் தவற்றினால் தீங்கு ஊக்கல் - நாலடி:7 9/3
இல் இருந்து தீங்கு ஒழுகுவாள் - நான்மணி:82/4
தெற்றெனவு இன்றி தெளிந்தாரை தீங்கு ஊக்கா - இனிய40:32/3
தீங்கு குறித்தமையான் - குறள்:83 7/2
தேவர்க்கு மக்கட்கு என வேண்டா தீங்கு உரைக்கும் - பழ:152/3
தேவரேஆயினும் தீங்கு ஓர்ப்பர் பாவை - பழ:179/2
இழைத்த தீங்கு எண்ணி இருத்தல் பிழைத்த - சிறுபஞ்:14/2

 TOP
 
  தீங்குறுதல் (1)
திங்களும் தீங்குறுதல் காண்டுமால் பொங்கி - பழ:15/2

 TOP
 
  தீண்டல் (2)
மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர் - குறள்:7 5/1
தீ பிணி தீண்டல் அரிது - குறள்:23 7/2

 TOP
 
  தீண்டலான் (1)
உறுதொறு உயிர் தளிர்ப்ப தீண்டலான் பேதைக்கு - குறள்:111 6/1

 TOP
 
  தீண்டா (4)
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா - குறள்:7 2/1
திட்பத்தால் தீண்டா பொருள் - ஆசாரக்:5/3
தீண்டா நாள் மு நாளும் நோக்கார் நீர் ஆடிய பின் - ஆசாரக்:42/1
தீண்டா விடுதல் அரிது - பழ:62/4

 TOP
 
  தீண்டார் (3)
எச்சிலார் தீண்டார் பசு பார்ப்பார் தீ தேவர் - ஆசாரக்:5/1
தலை உரைத்த எண்ணெயால் எ உறுப்பும் தீண்டார்
  பிறர் உடுத்த மாசுணியும் தீண்டார் செருப்பு - ஆசாரக்:12/1,2
பிறர் உடுத்த மாசுணியும் தீண்டார் செருப்பு - ஆசாரக்:12/2

 TOP
 
  தீண்டாவிடுதல் (1)
தீண்டாவிடுதல் அரிது - நாலடி:11 9/4

 TOP
 
  தீண்டு (1)
மை ஆர் தடம் கண் மயில் அன்னாய் தீ தீண்டு
  கையார் பிரிவித்தல் காண் - திணை150:5/3,4

 TOP
 
  தீதா (1)
தெரியாதார் சொல்லும் திறன் இன்மை தீதா
  பரியார் பயன் இன்மை செய்து பெரியார் சொல் - பழ:310/1,2

 TOP
 
  தீதாய்விடும் (1)
எழுநூறும் தீதாய்விடும் - நாலடி:36 7/4

 TOP
 
  தீது (33)
தீர்விடத்து நிற்குமாம் தீது - நாலடி:6 1/4
ஏதிலார் இன் சொலின் தீது ஆமோ போது எலாம் - நாலடி:8 3/2
ஏதிலார் செய்தது இறப்பவே தீது எனினும் - நாலடி:23 8/1
இனம் தீது எனினும் இயல்பு உடையார் கேண்மை - நாலடி:25 4/3
மனம் தீது ஆம் பக்கம் அரிது - நாலடி:25 4/4
திரிதரும் காலத்து தீது இலிரோ என்பர் - நாலடி:29 4/3
திரு ஒக்கும் தீது இல் ஒழுக்கம் பெரிய - நான்மணி:6/1
தாதினான் நந்தும் சுரும்பு எல்லாம் தீது இல் - நான்மணி:47/2
எல்லா இடத்தும் கொலை தீது மக்களை - நான்மணி:92/1
கல்லா வளரவிடல் தீது நல்லார் - நான்மணி:92/2
நலம் தீது நாண் அற்று நிற்பின் குலம் தீது - நான்மணி:92/3
நலம் தீது நாண் அற்று நிற்பின் குலம் தீது
  கொள்கை அழிந்தக்கடை - நான்மணி:92/3,4
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு - குறள்:19 10/2
நட்டார்கண் செய்தலின் தீது - குறள்:20 2/2
நல்லாறு எனினும் கொளல் தீது மேல் உலகம் - குறள்:23 2/1
செல்லா இடத்து சினம் தீது செல் இடத்தும் - குறள்:31 2/1
சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ - குறள்:43 2/1
தீது இன்றி வந்த பொருள் - குறள்:76 4/2
வேதம் கரைகண்ட பார்ப்பானும் தீது இகந்து - திரி:70/2
முது நெய் தீது ஆகலோ இல் - பழ:70/4
இது மன்னும் தீது என்று இயைந்ததூஉம் ஆவார்க்கு - பழ:84/1
தெற்ற ஒருவரை தீது உரை கண்டக்கால் - பழ:114/1
திருத்தலும் ஆகாது தீது ஆம் அதுவே - பழ:187/3
இரந்து ஊட்கு பன்மையோ தீது - பழ:240/4
கதம் நன்று சான்றாண்மை தீது கழிய - சிறுபஞ்:15/1
கொல்லாமை நன்று கொலை தீது எழுத்தினை - சிறுபஞ்:49/1
கல்லாமை தீது கதம் தீது நல்லார் - சிறுபஞ்:49/2
கல்லாமை தீது கதம் தீது நல்லார் - சிறுபஞ்:49/2
எண்ணாமை நன்று இகழின் தீது எளியார் எண்ணின் - சிறுபஞ்:50/2
ஏலாமை நன்று ஈதல் தீது பண்பு இல்லார்க்கு - சிறுபஞ்:59/1
நன்று தவம் நனி செய்தல் தீது என்பாரை - சிறுபஞ்:59/3
மை தக நீண்ட மலர் கண்ணாய் தீது அன்றே - சிறுபஞ்:97/3
ஈவது நன்று தீது ஈயாமை நல்லவர் - சிறுபஞ்:99/1

 TOP
 
  தீதுஆயின் (1)
எழுநூறு நன்றி செய்து ஒன்று தீதுஆயின்
  எழுநூறும் தீதாய்விடும் - நாலடி:36 7/3,4

 TOP
 
  தீதுஉரையும் (1)
நாடாதே தீதுஉரையும் நஞ்சு - சிறுபஞ்:11/4

 TOP
 
  தீதே (3)
அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே
  புறன் அழீஇ பொய்த்து நகை - குறள்:19 2/1,2
உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளை - குறள்:29 2/1
இறந்த வெகுளியின் தீதே சிறந்த - குறள்:54 1/1

 TOP
 
  தீதோ (1)
நரிமா உளம் கிழித்த அம்பினின் தீதோ
  அரிமா பிழைப்ப எய்த கோல் - நாலடி:16 2/3,4

 TOP
 
  தீம் (16)
தீம் கரும்பு ஈன்ற திரள் கால் உளை அலரி - நாலடி:20 9/1
தீம் சுவை யாதும் திரியாதாம் ஆங்கே - நாலடி:25 4/2
திருவில் விலங்கு ஊன்றி தீம் பெயல் தாழ - கார்40:1/2
இரு நிலம் தீம் பெயல் தாழ விரை நாற - கார்40:30/2
வல்லார் உளம் மகிழ தீம் தமிழை வார்க்குமே - கார்40:41/3
மன்ற பலவின் சுளை விளை தீம் பழம் - ஐந்70:4/1
பிரைசம் கொள வீழ்ந்த தீம் தேன் இறாஅல் - ஐந்70:10/1
தெரி ஆ இன நிரை தீம் பால் பிலிற்ற - திணை50:30/2
தீம் புனல் ஊரன் மகள் இவள் ஆய்ந்த நறும் - திணை50:40/2
வந்து ஆரம் தேம் கா வரு முல்லை சேர் தீம் தேன் - திணை150:106/3
தேரோன் மலை மறைய தீம் குழல் வெய்து ஆக - திணை150:112/1
பண் கொண்ட தீம் சொல் பணை தோளாய் யார் உளரோ - பழ:16/3
காய்ந்து எதிர் சொல்லுபவோ கற்று அறிந்தார் தீம் தேன் - பழ:268/2
தீம் சொல் மழலையாய் தேனார் பலா குறைத்து - பழ:371/3
தீம் கனி மாவின் முசு பாய் மலை நாடன் - கைந்:4/2
தெரிவிலர் தீம் குழல் ஊதும் பொழுதால் - கைந்:35/2

 TOP
 
  தீமை (12)
பெரு வரை நாட பெரியார்கண் தீமை
  கரு நரை மேல் சூடே போல் தோன்றும் கரு நரையை - நாலடி:19 6/1,2
தீமை எடுத்து உரைக்கும் திண் அறிவு இல்லாதார் - நாலடி:23 7/3
அகம் பொதிந்த தீமை மனம் உரைக்கும் முன்னம் - நான்மணி:45/3
தீமை உடையார் அயல் இருத்தல் நற்கு இன்னா - இன்னா40:24/2
தீமை புரிந்து ஒழுகுவார் - குறள்:15 3/2
தீமை இலாத சொலல் - குறள்:30 1/2
கொல்லா நலத்தது நோன்மை பிறர் தீமை
  சொல்லா நலத்தது சால்பு - குறள்:99 4/1,2
வாய்மை உடைமை வனப்பு ஆகும் தீமை
  மனத்தினும் வாயினும் சொல்லாமை மூன்றும் - திரி:78/2,3
திருந்தாய் நீ ஆர்வத்தை தீமை உடையார் - பழ:9/1
தாம் தீயார் தம் தீமை தேற்றாரால் ஆம்பல் - பழ:174/2
தம் தீமை இல்லவர் நட்டவர் தீமையையும் - பழ:247/1
எம் தீமை என்றே உணர்ப தாம் அம் தண் - பழ:247/2

 TOP
 
  தீமைத்தே (2)
தேரின் மா கால் ஆழும் தீமைத்தே ஓர் இலோர் - திணை150:54/2
பல்லார் பகை கொளலின் பத்து அடுத்த தீமைத்தே
  நல்லார் தொடர் கைவிடல் - குறள்:45 10/1,2

 TOP
 
  தீமையால் (1)
கலம் தீமையால் திரிந்த அற்று - குறள்:100 10/2

 TOP
 
  தீமையான் (1)
தாமே தமியர் புகல் வேண்டா தீமையான்
  ஊர் மிகின் இல்லை கரியே ஒலித்து உடன் - பழ:190/2,3

 TOP
 
  தீமையும் (1)
நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த - குறள்:52 1/1

 TOP
 
  தீமையையும் (1)
தம் தீமை இல்லவர் நட்டவர் தீமையையும்
  எம் தீமை என்றே உணர்ப தாம் அம் தண் - பழ:247/1,2

 TOP
 
  தீய (17)
வேண்டார்மன் தீய விழைபமன் நல்லவை - நாலடி:11 9/2
ஏதிலார் இற்கண் குருடன் ஆய் தீய
  புறங்கூற்றின் மூங்கை ஆய் நிற்பானேல் யாதும் - நாலடி:16 8/2,3
நல்ல குலம் என்றும் தீய குலம் என்றும் - நாலடி:20 5/1
இறப்பவே தீய செயினும் தன் நட்டார் - நாலடி:23 3/1
சாயினும் தோன்றா கரப்பு சொல் தீய
  பரப்பு சொல் சான்றோர் வாய் தோன்றா கரப்பு சொல் - நான்மணி:95/2,3
பெரியார்க்கு தீய செயல் - இன்னா40:26/4
ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
  வழுக்கியும் வாயால் சொலல் - குறள்:14 9/1,2
தீயவை தீய பயத்தலான் தீயவை - குறள்:21 2/1
அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய
  செறுவார்க்கும் செய்யா விடல் - குறள்:21 3/1,2
இல் அதனின் தீய பிற - குறள்:31 2/2
மறத்தல் வெகுளியை யார் மாட்டும் தீய
  பிறத்தல் அதனான் வரும் - குறள்:31 3/1,2
நகையும் உவகையும் கொல்லும் சினத்தில் தீய
  பகையும் உளவோ பிற - குறள்:31 4/1,2
நல்லவை எல்லாஅம் தீய ஆம் தீயவும் - குறள்:38 5/1
சொல்லிய நல்லவும் தீய ஆம் எல்லாம் - பழ:3/2
யாம் தீய செய்த மலை மறைத்தது என்று எண்ணி - பழ:174/1
செயல் வேண்டா நல்லவை செய்விக்கும் தீய
  செயல் வேண்டி நிற்பின் விலக்கும் இகல் வேந்தன் - பழ:357/1,2
நல்ல வெளிப்படுத்து தீய மறந்து ஒழிந்து - சிறுபஞ்:55/1

 TOP
 
  தீயரோ (1)
செம்மை பகை கொண்டு சேராதார் தீயரோ
  மைம்மைப்பின் நன்று குருடு - பழ:188/3,4

 TOP
 
  தீயவும் (2)
நல்லவை எல்லாஅம் தீய ஆம் தீயவும்
  நல்ல ஆம் செல்வம் செயற்கு - குறள்:38 5/1,2
நல்லவும் தீயவும் நாடி பிறர் உரைக்கும் - பழ:104/1

 TOP
 
  தீயவை (8)
ஒருவுமின் தீயவை ஒல்லும் வகையால் - நாலடி:4 6/3
நல்லவை செய்யின் இயல்பு ஆகும் தீயவை
  பல்லவர் தூற்றும் பழி ஆகும் எல்லாம் - நாலடி:15 4/1,2
எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்கா - குறள்:7 2/1
தீயவை தீய பயத்தலான் தீயவை - குறள்:21 2/1
தீயவை தீய பயத்தலான் தீயவை
  தீயினும் அஞ்சப்படும் - குறள்:21 2/1,2
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின் - குறள்:21 5/1
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை - குறள்:21 8/1
விழைந்தார் போல் தீயவை பின்னரும் செய்தல் - பழ:211/2

 TOP
 
  தீயன (3)
பாய்வதே போலும் துறைவ கேள் தீயன
  ஆவதே போன்று கெடும் - பழ:173/3,4
தீயன அல்ல செயினும் திறல் வேந்தன் - பழ:234/1
பொய்யான் புலாலொடு கள் போக்கி தீயன
  செய்யான் சிறியார் இனம் சேரான் வையான் - ஏலாதி:14/1,2

 TOP
 
  தீயார் (2)
வெறுமின் வினை தீயார் கேண்மை எஞ்ஞான்றும் - நாலடி:18 2/3
தாம் தீயார் தம் தீமை தேற்றாரால் ஆம்பல் - பழ:174/2

 TOP
 
  தீயார்க்கு (1)
பெரும் சிரங்கு பேர் வயிற்று தீயார்க்கு அரும் சிரமம் - ஏலாதி:57/2

 TOP
 
  தீயில் (1)
நிணம் தீயில் இட்ட அன்ன நெஞ்சினார்க்கு உண்டோ - குறள்:126 10/1

 TOP
 
  தீயினால் (1)
தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே - குறள்:13 9/1

 TOP
 
  தீயினும் (1)
தீயினும் அஞ்சப்படும் - குறள்:21 2/2

 TOP
 
  தீயினுள் (1)
பகல் பெய்யார் தீயினுள் நீர் - ஆசாரக்:33/2

 TOP
 
  தீயே (1)
உலை ஊதும் தீயே போல் உள் கனலும்கொல்லோ - நாலடி:30 8/3

 TOP
 
  தீர் (15)
துகள் தீர் பெரும் செல்வம் தோன்றியக்கால் தொட்டு - நாலடி:1 2/1
மை தீர் பசும் பொன் மேல் மாண்ட மணி அழுத்தி - நாலடி:35 7/1
ஐயம் தீர் காட்சி அவர் வருதல் திண்ணிதாம் - கார்40:12/2
நொந்த ஒருத்திக்கு நோய் தீர் மருந்து ஆகி - கார்40:40/2
செம் சுணங்கின் மென் முலையாய் சேர் பசலை தீர் இஃதோ - திணை50:24/1
பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க - குறள்:1 6/1
ஐயம் தீர் காட்சியார் சிந்தியார் சிந்திப்பின் - ஆசாரக்:38/2
இனியாரை உற்ற இடர் தீர் உபாயம் - பழ:236/1
வடு தீர் பகல்வாய் உறையே வடு தீரா - சிறுபஞ்:67/2
மறு பஞ்சம் தீர் மழைக்கை மா காரியாசான் - சிறுபஞ்:106/3
உறு பஞ்ச மூலம் தீர் மாரி போல் கூறீர் - சிறுபஞ்:107/3
பொய் தீர் புலவர் பொருள் புரிந்து ஆராய்ந்த - ஏலாதி:66/1
மை தீர் உயர் கதியின் மாண்பு உரைப்பின் மை தீர் - ஏலாதி:66/2
மை தீர் உயர் கதியின் மாண்பு உரைப்பின் மை தீர்
  சுடர் இன்று சொல் இன்று மாறு இன்று சோர்வு இன்று - ஏலாதி:66/2,3
புரை தீர் மலை நாடன் பூண் ஏந்து அகலம் - கைந்:6/3

 TOP
 
  தீர்க்க (1)
நனி நிற்ப செய்தவர் நண்பு எலாம் தீர்க்க
  தனி மரம் காடு ஆவது இல் - பழ:390/3,4

 TOP
 
  தீர்க்குதும் (1)
எண்ணார்க்கு கண்ணோட்டம் தீர்க்குதும் என்று எண்ணி - ஐந்70:53/2

 TOP
 
  தீர்க்கும் (5)
செயிர் தீர்க்கும் செம்மாப்பவரை செயிர் தீர்ந்தார் - நாலடி:5 10/2
எவ்வ நோய் தீர்க்கும் மருந்து - குறள்:125 1/2
தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து - குறள்:128 5/2
புன் புலால் தீர்க்கும் துறைவ மற்று அஞ்சாதே - பழ:262/3
தீர்க்கும் வாய் தேர்ந்து பசி உண்டி நீக்குவான் - ஏலாதி:40/3

 TOP
 
  தீர்குவர் (1)
திருந்திழாய் காதலர் தீர்குவர் அல்லர் - கார்40:15/1

 TOP
 
  தீர்த்தம் (4)
பேரும் பிறிது ஆகி தீர்த்தம் ஆம் ஓரும் - நாலடி:18 5/2
புல் பைங்கூழ் ஆப்பி சுடலை வழி தீர்த்தம்
  தேவகுலம் நிழல் ஆன் நிலை வெண்பலி என்று - ஆசாரக்:32/1,2
உள்ளத்தில் தீர்த்தம் இவை உளவாக பெற்றால் - பழ:401/3
வெள்ளத்தில் தீர்த்தம் மிகை - பழ:401/4

 TOP
 
  தீர்த்தல் (7)
அற்றார் அழி பசி தீர்த்தல் அஃது ஒருவன் - குறள்:23 6/1
கொடுத்து குறை தீர்த்தல் ஆற்றி விடுத்து இன் சொல் - பழ:167/2
இடர் தீர்த்தல் எள்ளாமை கீழினம் சேராமை - ஏலாதி:4/1
படர் தீர்த்தல் யார்க்கும் பழிப்பின் நடை தீர்த்தல் - ஏலாதி:4/2
படர் தீர்த்தல் யார்க்கும் பழிப்பின் நடை தீர்த்தல்
  கண்டவர் காமுறும் சொல் காணின் கல்வியின்கண் - ஏலாதி:4/2,3
இல்லார்க்கு இடர் தீர்த்தல் நன்று - ஏலாதி:15/4
நால் கதியும் துன்பம் நவை தீர்த்தல் வேண்டுவான் - ஏலாதி:77/1

 TOP
 
  தீர்த்தலான் (1)
ஞெண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான் விண் தோயும் - பழ:111/2

 TOP
 
  தீர்த்தார் (1)
ஆற்றி ஊண் ஈத்து அவை தீர்த்தார் அரசராய் - ஏலாதி:57/3

 TOP
 
  தீர்த்தாரே (1)
வரு நோய்கள் முன் நாளில் தீர்த்தாரே இ நாள் - சிறுபஞ்:74/3

 TOP
 
  தீர்த்துவிடல் (1)
அயல் வளி தீர்த்துவிடல் - பழ:124/4

 TOP
 
  தீர்தல் (1)
அறை ஆர் அணி வளையாய் தீர்தல் உறுவார் - பழ:88/3

 TOP
 
  தீர்தலின் (1)
தீர்தலின் தீ புகுதல் நன்று - நான்மணி:13/4

 TOP
 
  தீர்ந்த (10)
குருடரா செய்வது மம்மர் இருள் தீர்ந்த
  கண்ணரா செய்வது கற்பு - நான்மணி:22/3,4
செய்யது போர்த்தாள் போல் செவ்வந்தாள் பொய் தீர்ந்த
  பூம் தார் முரசின் பொரு புனல் நீர் நாடன் - கள40:32/2,3
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள் தீர்ந்த - குறள்:20 9/1
பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள் தீர்ந்த
  மாசு அறு காட்சியவர் - குறள்:20 9/1,2
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
  நன்மை பயக்கும் எனின் - குறள்:30 2/1,2
வஞ்சத்தின் தீர்ந்த பொருள் - திரி:43/4
திறவதின் தீர்ந்த பொருள் - திரி:72/4
தொல் வரவின் தீர்ந்த தொழில் - ஆசாரக்:56/5
சேர்ந்தாரை எல்லாம் சிறிது உடைத்து தீர்ந்த
  விரகர்கட்கு எல்லாம் வெறுப்பனவே செய்யும் - பழ:27/2,3
உகிர் வனப்பும் காதின் வனப்பும் செயிர் தீர்ந்த
  பல்லின் வனப்பும் வனப்பு அல்ல நூற்கு இயைந்த - சிறுபஞ்:35/2,3

 TOP
 
  தீர்ந்தது (1)
பொன் அம் பசலையும் தீர்ந்தது பூங்கொடி - கைந்:60/1

 TOP
 
  தீர்ந்தவர் (1)
ஊனமே தீர்ந்தவர் ஓத்து - ஏலாதி:61/4

 TOP
 
  தீர்ந்தன்று (1)
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு - குறள்:62 2/2

 TOP
 
  தீர்ந்தார் (2)
செயிர் தீர்க்கும் செம்மாப்பவரை செயிர் தீர்ந்தார்
  கண்டு இற்று இதன் வண்ணம் என்பதனால் தம்மை ஓர் - நாலடி:5 10/2,3
திரிவு இன்றி தீர்ந்தார் போல் சொல்லி அவருள் - பழ:10/2

 TOP
 
  தீர்ந்தார்மாட்டும் (1)
பொறுப்பர் என்று எண்ணி புரை தீர்ந்தார்மாட்டும்
  வெறுப்பன செய்யாமை வேண்டும் வெறுத்த பின் - நாலடி:17 1/1,2

 TOP
 
  தீர்ந்தாரா (1)
தீர்ந்தாரா கொண்டு தெளியினும் தேர்ந்தவர்க்கு - பழ:213/2

 TOP
 
  தீர்ந்தாரின் (1)
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு - குறள்:62 2/2

 TOP
 
  தீர்ந்தாரும் (1)
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல் - குறள்:17 10/2

 TOP
 
  தீர்ந்தால் (1)
தீர்ந்தால் போல் தீரா வரும் - ஏலாதி:25/4

 TOP
 
  தீர்ந்து (3)
புற்கம் தீர்ந்து இ உலகின் கோள் உணரும் கோள் உணர்ந்தால் - நான்மணி:27/2
பிணி நிறம் தீர்ந்து பெரும் பணை தோள் வீங்க - திணை50:9/1
உடன்படான் கொல்லான் உடன்றார் நோய் தீர்ந்து
  மடம் படான் மாண்டார் நூல் மாண்ட இடம் பட - ஏலாதி:8/1,2

 TOP
 
  தீர்ந்தேம் (1)
தீர்ந்தேம் என கருதி தேற்றாது ஒழுகி தாம் - பழ:386/1

 TOP
 
  தீர்ப்பர் (1)
தெற்ற பரிந்து ஒருவர் தீர்ப்பர் எனப்பட்டார்க்கு - பழ:88/1

 TOP
 
  தீர்ப்பாரே (1)
தொலை மக்கள் துன்பம் தீர்ப்பாரே யார்மாட்டும் - நாலடி:21 5/3

 TOP
 
  தீர்ப்பான் (1)
உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று - குறள்:95 10/1

 TOP
 
  தீர்ப்பேம் (1)
தீர்ப்பேம் யாம் என்று உணரும் திண் அறிவாளரை - நாலடி:3 7/3

 TOP
 
  தீர்வதற்கு (1)
தன்னையே தான் இரப்ப தீர்வதற்கு என்னைகொல் - நாலடி:31 6/2

 TOP
 
  தீர்வாம் (1)
இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும் - குறள்:107 3/1

 TOP
 
  தீர்விடத்து (1)
தீர்விடத்து நிற்குமாம் தீது - நாலடி:6 1/4

 TOP
 
  தீர்வு (3)
கருமமே கல்லார்கண் தீர்வு - நாலடி:13 9/4
திருவும் தீர்வு இன்றேல் இனிது - இனிய40:12/4
கைவாய் பொருள் பெறினும் கல்லார்கண் தீர்வு இனிதே - இனிய40:25/2

 TOP
 
  தீர (14)
வசை தீர எண்ணுவர் சான்றோர் விசையின் - நாலடி:16 2/2
உலகு அறிய தீர கலப்பினும் நில்லா - நாலடி:21 4/1
வீங்கிய மென் தோள் கவினி பிணி தீர
  பாங்கத்து பல்லி படும் - ஐந்70:41/3,4
காதலின் தீர கழிய முயங்கன்மின் - ஐந்70:52/1
அல்லாத என்னையும் தீர மற்று ஐயன்மார் - திணை150:88/1
தலைப்பட்டார் தீர துறந்தார் மயங்கி - குறள்:35 8/1
இருள் தீர எண்ணி செயல் - குறள்:68 5/2
குருடன் மனையாள் அழகும் இருள் தீர
  கற்று அறிவில்லான் கதழ்ந்துரையும் பற்றிய - திரி:53/1,2
குறையுடையார் தீர மறவார் நிறை உவா - ஆசாரக்:17/2
கொண்ட வகையால் குறை தீர நோக்கியக்கால் - பழ:133/2
சுரத்திடை தீர பெயல் - பழ:169/4
தொடுத்த பெரும் புலவன் சொல் குறை தீர
  அடுத்தர என்றாற்கு வாழியரோ என்றான் - பழ:316/1,2
பேதுறவு தீர பெருக்க தலையளித்து - பழ:360/1
அருள் போகா ஆர் அறம் என்று ஐந்தும் இருள் தீர
  கூறப்படும் குணத்தான் கூர் வேல் வல் வேந்தனால் - சிறுபஞ்:57/2,3

 TOP
 
  தீரவும் (1)
தீ பால் வினையினை தீரவும் அஞ்சாராய் - பழ:193/1

 TOP
 
  தீரா (9)
குழவியிடத்தே துறந்தார் புரை தீரா
  மன்னா இளமை மகிழ்ந்தாரே கோல் ஊன்றி - நாலடி:2 1/2,3
தொல் வலியின் தீரா துளங்கினவாய் மெல்ல - கள40:21/3
தீரா இடும்பை தரும் - குறள்:51 8/2
தீரா இடும்பை தரும் - குறள்:51 10/2
உள்ளினும் தீரா பெரு மகிழ் செய்தலால் - குறள்:121 1/1
ஆசாரக்கோவை என தொகுத்தான் தீரா
  திரு வாயில் ஆய திறல் வண் கயத்தூர் - ஆசாரக்:101/4,5
ஒடி எறிய தீரா பகை - பழ:387/4
வடு தீர் பகல்வாய் உறையே வடு தீரா
  ஆகும் அ நான்கு ஒழித்து ஐந்து அடக்குவான்ஆகில் - சிறுபஞ்:67/2,3
தீர்ந்தால் போல் தீரா வரும் - ஏலாதி:25/4

 TOP
 
  தீராது (1)
வியன் உலகில் வெள்ளாடு தன் வளி தீராது
  அயல் வளி தீர்த்துவிடல் - பழ:124/3,4

 TOP
 
  தீராமை (2)
எண் ஒக்கும் சான்றோர் மரீஇயாரின் தீராமை
  புண் ஒக்கும் போற்றார் உடனுறைவு பண்ணிய - நான்மணி:98/1,2
தீராமை ஆர்க்கும் கயிறு - குறள்:49 2/2

 TOP
 
  தீவாய் (1)
தீவாய் குருதி இழிதலால் செம் தலை - கள40:12/2

 TOP
 
  தீவினை (3)
தீவினை என்னும் செருக்கு - குறள்:21 1/2
துன்னற்க தீவினை பால் - குறள்:21 9/2
தீவினை செய்யான் எனின் - குறள்:21 10/2

 TOP
 
  தீவினையார் (1)
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர் - குறள்:21 1/1

 TOP
 
  தீற்றாதோ (1)
கான் அட்டு நாறும் கதுப்பினாய் தீற்றாதோ
  நாய் நட்டால் நல்ல முயல் - பழ:14/3,4

 TOP
 
  தீற்றிய (1)
மூரியை தீற்றிய புல் - பழ:396/4

 TOP
 
  தீற்றினும் (1)
கொய் புல் கொடுத்து குறைத்து என்றும் தீற்றினும்
  வையம் பூண்கல்லா சிறு குண்டை ஐய கேள் - நாலடி:35 10/1,2

 TOP
 
  தீற்றுபவர் (1)
இட்டிகை தீற்றுபவர் - பழ:158/4

 TOP