குறுந்தொகை (251 - 300)
# 251 முல்லை மடவ வாழி மஞ்ஞை மா இனம் கால மாரி பெய்து என அதன்_எதிர் ஆலலும் ஆலின பிடவும் பூத்தன கார் அன்று இகுளை தீர்க நின் படரே கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர் புது நீர் கொளீஇய உகுத்தரும் நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே # இடைக்காடன் # 252 குறிஞ்சி நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த கொடியன் ஆகிய குன்று கெழு நாடன் வருவதோர் காலை இன்முகம் திரியாது கடவுள் கற்பின் அவன் எதிர் பேணி மடவை மன்ற நீ என கடவுபு துனியல் வாழி தோழி சான்றோர் புகழும் முன்னர் நாணுப பழி யாங்கு ஒல்பவோ காணும்_காலே # கிடங்கில் குலபதி நக்கண்ணன் # 253 பாலை கேளார் ஆகுவர் தோழி கேட்பின் விழுமிது கழிவது ஆயினும் நெகிழ் நூல் பூ சேர் அணையின் பெரும் கவின் தொலைந்த நின் நாள் துயர் கெட பின் நீடலர் மாதோ ஒலி கழை நிவந்த ஓங்கு மலை சாரல் புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை ஆறு செல் மாக்கள் சேக்கும் கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே # பூங்கண்ணன் # 254 பாலை இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர் வந்தன வாரா தோழி துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர் பயில் நறும் கதுப்பின் பாயலும் உள்ளார் செய்_பொருள் தரல் நசைஇ சென்றோர் எய்தினரால் என வரூஉம் தூதே # பார்காப்பான் # 255 பாலை பொத்து இல் காழ அத்த யாஅத்து பொரி அரை முழு_முதல் உருவ குத்தி மறம் கெழு தட கையின் வாங்கி உயங்கு நடை சிறு கண் பெரு நிரை உறு பசி தீர்க்கும் தட மருப்பு யானை கண்டனர் தோழி தம் கடன் இறீஇயர் எண்ணி இடம்-தொறும் காமர் பொருள்_பிணி போகிய நாம் வெம் காதலர் சென்ற ஆறே # கடுகு பெரும் தேவன் # 256 பாலை மணி வார்ந்து அன்ன மா கொடி அறுகை பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி மான் ஏறு உகளும் கானம் பிற்பட வினை நலம் படீஇ வருதும் அ வரை தாங்கல் ஒல்லுமோ பூ குழையோய் என சொல்லா முன்னர் நில்லா ஆகி நீர் விலங்கு அழுதல் ஆனா தேர் விலங்கினவால் தெரிவை கண்ணே # 257 குறிஞ்சி வேரும் முதலும் கோடும் ஓராங்கு தொடுத்த போல தூங்குபு தொடரி கீழ் தாழ்வு அன்ன வீழ் கோள் பலவின் ஆர் கலி வெற்பன் வரு-தொறும் வரூஉம் அகலினும் அகலாது ஆகி இகலும் தோழி நம் காமத்து பகையே # உறையூர் சிறுகந்தன் # 258 மருதம் வாரல் எம் சேரி தாரல் நின் தாரே அலர் ஆகின்றால் பெரும காவிரி பலர் ஆடு பெரும் துறை மருதொடு பிணித்த ஏந்து கோட்டு யானை சேந்தன் தந்தை அரியல் அம் புகவின் அம் கோட்டு வேட்டை நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன் அழிசி ஆர்க்காடு அன்ன இவள் பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டே # பரணர் # 259 குறிஞ்சி மழை சேர்ந்து எழுதரு மாரி குன்றத்து அருவி ஆர்ந்த தண் நறும் காந்தள் முகை அவிழ்ந்து ஆனா நாறும் நறு நுதல் பல் இதழ் மழை கண் மாஅயோயே ஒல்வை ஆயினும் கொல்வை ஆயினும் நீ அளந்து அறிவை நின் புரைமை வாய் போல் பொய்ம்மொழி கூறல் அஃது எவனோ நெஞ்சம் நன்றே நின்_வயினானே # பரணர் # 260 பாலை குருகும் இரு விசும்பு இவரும் புதலும் வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே சுரி வளை பொலிந்த தோளும் செற்றும் வருவர்-கொல் வாழி தோழி பொருவார் மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை வண் தேர் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து கன்று இல் ஓர் ஆ விலங்கிய புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே # கல்லாடனார் # 261 குறிஞ்சி பழ மழை பொழிந்து என பதன் அழிந்து உருகிய சிதட்டு காய் எண்ணின் சில் பெயல் கடை நாள் சேற்று நிலை முனைஇய செம் கண் காரான் நள்ளென் யாமத்து ஐயென கரையும் அஞ்சுவரு பொழுதினானும் என் கண் துஞ்சா வாழி தோழி காவலர் கணக்கு ஆய் வகையின் வருந்தி என் நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே # கழார் கீரன் எயிற்றி # 262 பாலை ஊஉர் அலர் எழ சேரி கல்லென ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை தானே இருக்க தன் மனை யானே நெல்லி தின்ற முள் எயிறு தயங்க உணல் ஆய்ந்திசினால் அவரொடு சேய் நாட்டு விண் தொட நிவந்த விலங்கு மலை கவாஅன் கரும்பு நடு பாத்தி அன்ன பெரும் களிற்று அடி_வழி நிலைஇய நீரே # பாலை பாடிய பெருங்கடுங்கோ # 263 குறிஞ்சி மறி குரல் அறுத்து தினை பிரப்பு இரீஇ செல் ஆற்று கவலை பல் இயம் கறங்க தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா வேற்று பெரும் தெய்வம் பல் உடன் வாழ்த்தி பேஎய் கொளீஇயள் இவள் எனப்படுதல் நோ_தக்கன்றே தோழி மால் வரை மழை விளையாடும் நாடனை பிழையேம் ஆகிய நாம் இதன் படவே # பெருஞ்சாத்தன் # 264 குறிஞ்சி கலி மழை கெழீஇய கான்யாற்று இகு கரை ஒலி நெடும் பீலி துயல்வர இயலி ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு நயந்தனன் கொண்ட கேண்மை பயந்த_காலும் பயப்பு ஒல்லாதே # கபிலர் # 265 குறிஞ்சி காந்தள் அம் கொழு முகை காவல் செல்லாது வண்டு வாய் திறக்கும் பொழுதில் பண்டும் தாம் அறி செம்மை சான்றோர் கண்ட கடன் அறி மாக்கள் போல இடன் விட்டு இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன் நன்னர் நெஞ்சத்தன் தோழி நின் நிலை யான் தனக்கு உரைத்தனென் ஆக தான் நாணினன் இஃது ஆகா ஆறே # கருவூர் கதப்பிள்ளை # 266 பாலை நமக்கு ஒன்று உரையார் ஆயினும் தமக்கு ஒன்று இன்னா இரவின் இன் துணை ஆகிய படப்பை வேங்கைக்கு மறந்தனர்-கொல்லோ மறப்பு அரும் பணை தோள் மரீஇ துறத்தல் வல்லியோர் புள்_வாய் தூதே # நக்கீரர் # 267 பாலை இரும் கண் ஞாலத்து ஈண்டு பய பெரு வளம் ஒருங்கு உடன் இயைவது ஆயினும் கரும்பின் கால் எறி கடிகை கண் அயின்று அன்ன வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர் கோல் அமை குறும் தொடி குறு_மகள் ஒழிய ஆள்வினை மருங்கில் பிரியார் நாளும் உறல் முறை மரபின் கூற்றத்து அறன் இல் கோள் நன்கு அறிந்திசினோரே # காலெறி கடிகையார் # 268 நெய்தல் சேறிரோ என செப்பலும் ஆற்றாம் வருவிரோ என வினவலும் வினவாம் யாங்கு செய்வாம்-கொல் தோழி பாம்பின் பை உடை இரும் தலை துமிக்கும் ஏற்றொடு நடுநாள் என்னார் வந்து நெடு மென் பணை தோள் அடைந்திசினோரே # கருவூர் சேரமான் சாத்தன் # 269 நெய்தல் சேய் ஆறு சென்று துனை பரி அசாவாது உசாவுநர் பெறினே நன்று-மன் தில்ல வய சுறா எறிந்த புண் தணிந்து எந்தையும் நீல் நிற பெரும் கடல் புக்கனன் யாயும் உப்பை மாறி வெண்ணெல் தரீஇய உப்பு விளை கழனி சென்றனள் அதனால் பனி இரும் பரப்பின் சேர்ப்பற்கு இனி வரின் எளியள் என்னும் தூதே # கல்லாடனார் # 270 முல்லை தாழ் இருள் துமிய மின்னி தண்ணென வீழ் உறை இனிய சிதறி ஊழின் கடிப்பு இகு முரசின் முழங்கி இடித்து_இடித்து பெய்க இனி வாழியோ பெரு வான் யாமே செய்_வினை முடித்த செம்மல் உள்ளமொடு இவளின் மேவினம் ஆகி குவளை குறும் தாள் நாள்_மலர் நாறும் நறு மென் கூந்தல் மெல் அணையேமே # பாண்டியன் பன்னாடு தந்தான் # 271 மருதம் அருவி அன்ன பரு உறை சிதறி யாறு நிறை பகரும் நாடனை தேறி உற்றது மன்னும் ஒரு நாள் மற்று அது தவ பல் நாள் தோள் மயங்கி வௌவும் பண்பின் நோய் ஆகின்றே # அழிசி நாச்சாத்தனார் # 272 குறிஞ்சி தீண்டலும் இயைவது-கொல்லோ மாண்ட வில் உடை வீளையர் கல் இடுபு எடுத்த நனம் தலை கானத்து இனம் தலைப்பிரிந்த புன்கண் மட மான் நேர்பட தன் ஐயர் சிலை மாண் கடு விசை கலை நிறத்து அழுத்தி குருதியொடு பறித்த செம் கோல் வாளி மாறு கொண்டு அன்ன உண்கண் நாறு இரும் கூந்தல் கொடிச்சி தோளே # ஒருசிறைப்பெரியன் # 273 பாலை அல்கு_உறு பொழுதில் தாது முகை தயங்க பெரும் காடு உளரும் அசை வளி போல தண்ணிய கமழும் ஒண் நுதலோயே நொந்தன ஆயின் கண்டது மொழிவல் பெரும் தேன் கண்படு வரையில் முது மால்பு அறியாது ஏறிய மடவோன் போல ஏமாந்தன்று இ உலகம் நாம் உளேம் ஆக பிரியலன் தெளிமே # சிறைக்குடி ஆந்தையார் # 274 பாலை புறவு புறத்து அன்ன புன் கால் உகாஅத்து இறவு சினை அன்ன நளி கனி உதிர விடு கணை வில்லொடு பற்றி கோடு இவர்பு வருநர் பார்க்கும் வன்கண் ஆடவர் நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும் இன்னா கானமும் இனிய பொன்னொடு மணி மிடை அல்குல் மடந்தை அணி முலை ஆகம் முயங்கினம் செலினே # உருத்திரன் # 275 முல்லை முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறி கண்டனம் வருகம் சென்மோ தோழி எல் ஊர் சேர்தரும் ஏறு உடை இனத்து புல் ஆர் நல் ஆன் பூண் மணி-கொல்லோ செய்_வினை முடித்த செம்மல் உள்ளமொடு வல் வில் இளையர் பக்கம் போற்ற ஈர் மணல் காட்டாறு வரூஉம் தேர் மணி-கொல் ஆண்டு இயம்பிய உளவே # ஒக்கூர் மாசாத்தியார் # 276 குறிஞ்சி பணை தோள் குறு_மகள் பாவை தைஇயும் பஞ்சாய் பள்ளம் சூழ்ந்தும் மற்று இவள் உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய தொய்யில் காப்போர் அறிதலும் அறியார் முறை உடை அரசன் செங்கோல் அவையத்து யான் தன் கடவின் யாங்கு ஆவது-கொல் பெரிதும் பேதை மன்ற அளிதோ தானே இ அழுங்கல் ஊரே # கூழி கொற்றன் # 277 பாலை ஆசு இல் தெருவின் ஆசு இல் வியன் கடை செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது ஓர் இல் பிச்சை ஆர மாந்தி அற்சிர வெய்ய வெப்ப தண்ணீர் சேம_செப்பில் பெறீஇயரோ நீயே மின் இடை நடுங்கும் கடை பெயல் வாடை எ_கால் வருவது என்றி அ-கால் வருவர் எம் காதலோரே # ஓரில் பிச்சையார் # 278 பாலை உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து முறி கண்டு அன்ன மெல்லென் சீறடி சிறு பசும் பாவையும் எம்மும் உள்ளார் கொடியர் வாழி தோழி கடுவன் ஊழ்_உறு தீம் கனி உதிர்ப்ப கீழ் இருந்து ஓர்ப்பன ஓர்ப்பன உண்ணும் பார்ப்பு உடை மந்திய மலை இறந்தோரே # பேரிசாத்தன் # 279 முல்லை திரி மருப்பு எருமை இருள் நிற மை ஆன் வரும் இடறு யாத்த பகு வாய் தெண் மணி புலம்பு கொள் யாமத்து இயங்கு-தொறு இசைக்கும் இது பொழுது ஆகவும் வாரார்-கொல்லோ மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் துகள் சூழ் யானையின் பொலிய தோன்றும் இரும் பல் குன்றம் போகி திருந்து இறை பணை தோள் உள்ளாதோரே # மதுரை மருதன் இளநாகனார் # 280 குறிஞ்சி கேளிர் வாழியோ கேளிர் நாளும் என் நெஞ்சு பிணிக்கொண்ட அம் சில் ஓதி பெரும் தோள் குறு_மகள் சிறு மெல் ஆகம் ஒரு நாள் புணர புணரின் அரை நாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே # நக்கீரர் # 281 பாலை வெண் மணல் பொதுளிய பைம் கால் கருக்கின் கொம்மை போந்தை குடுமி வெண் தோட்டு அத்த வேம்பின் அமலை வான் பூ சுரி ஆர் உளை தலை பொலிய சூடி குன்று தலைமணந்த கானம் சென்றனர்-கொல்லோ சே_இழை நமரே # குடவாயில் கீரத்தன் # 282 பாலை செவ்வி கொள் வரகின் செம் சுவல் கலித்த கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை நவ்வி நாள் மறி கவ்வி கடன் கழிக்கும் கார் எதிர் தண் புனம் காணின் கை வளை நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த வெண்கூதாளத்து அம் தூம்பு புது மலர் ஆர் கழல்பு உகுவ போல சோர்குவ அல்ல என்பர்-கொல் நமரே # நாகம்போத்தன் # 283 பாலை உள்ளது சிதைப்போர் உளர் எனப்படாஅர் இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு என சொல்லிய வன்மை தெளிய காட்டி சென்றனர் வாழி தோழி என்றும் கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர் ஆற்று இருந்து அல்கி வழங்குநர் செகுத்த படு முடை பருந்து பார்த்து இருக்கும் நெடு மூது இடைய நீர் இல் ஆறே # பாலை பாடிய பெருங்கடுங்கோ # 284 குறிஞ்சி பொருத யானை புகர் முகம் கடுப்ப மன்ற துறுகல் மீமிசை பல உடன் ஒண் செம்_காந்தள் அவிழும் நாடன் அறவன் ஆயினும் அல்லன் ஆயினும் நம் ஏசுவரோ தம் இலர்-கொல்லோ வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி கொன் நிலை குரம்பையின் இழிதரும் இன்னாது இருந்த இ சிறுகுடியோரே # மிளைவேள் தித்தன் # 285 பாலை வைகா வைகல் வைகவும் வாரார் எல்லா எல்லை எல்லவும் தோன்றார் யாண்டு உளர்-கொல்லோ தோழி ஈண்டு இவர் சொல்லிய பருவமோ இதுவே பல் ஊழ் புன் புற பெடையொடு பயிரி இன் புறவு இமை கண் ஏது ஆகின்றோ ஞெமை தலை ஊன் நசைஇ பருந்து இருந்து உகக்கும் வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே # பூத தேவன் # 286 குறிஞ்சி உள்ளி காண்பென் போல்வல் முள் எயிற்று அமிழ்தம் ஊறும் செம் வாய் கமழ் அகில் ஆரம் நாறும் அறல் போல் கூந்தல் பேர் அமர் மழை கண் கொடிச்சி மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே # எயிற்றியனார் # 287 முல்லை அம்ம வாழி தோழி காதலர் இன்னே கண்டும் துறக்குவர்-கொல்லோ முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ ஒதுங்கல் செல்லா பசும் புளி வேட்கை கடும் சூல் மகளிர் போல நீர் கொண்டு விசும்பு இவர்கல்லாது தாங்குபு புணரி செழும் பல் குன்றம் நோக்கி பெரும் கலி வானம் ஏர்தரும் பொழுதே # கச்சிப்பேட்டு நன்னாகையார் # 288 குறிஞ்சி கறி வளர் அடுக்கத்து ஆங்கண் முறி அருந்து குரங்கு ஒருங்கு இருக்கும் பெரும் கல் நாடன் இனியன் ஆகலின் இனத்தின் இயன்ற இன்னாமையினும் இனிதோ இனிது எனப்படூஉம் புத்தேள் நாடே # கபிலர் # 289 முல்லை வளர்பிறை போல வழிவழி பெருகி இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு குழை பிசைந்தனையேம் ஆகி சாஅய் உழையர் அன்மையின் உழப்பது அன்றியும் மழையும் தோழி மான்று பட்டன்றே பட்ட மாரி படாஅ_கண்ணும் அவர் திறத்து இரங்கும் நம்மினும் நம் திறத்து இரங்கும் இ அழுங்கல் ஊரே # பெரும் கண்ணனார் # 290 நெய்தல் காமம் தாங்கு-மதி என்போர் தாம் அஃது அறியலர்-கொல்லோ அனை மதுகையர்-கொல் யாம் எம் காதலர் காணேம் ஆயின் செறி துனி பெருகிய நெஞ்சமொடு பெரு_நீர் கல் பொரு சிறு நுரை போல மெல்ல_மெல்ல இல் ஆகுதுமே # கல்பொருசிறுநுரையார் # 291 குறிஞ்சி சுடு புன மருங்கில் கலித்த ஏனல் படு கிளி கடியும் கொடிச்சி கை குளிரே இசையின் இசையா இன் பாணித்தே கிளி அவள் விளி என விழல் ஒல்லாவே அது புலந்து அழுத கண்ணே சாரல் குண்டு நீர் பைம் சுனை பூத்த குவளை வண்டு பயில் பல் இதழ் கலைஇ தண் துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே # கபிலர் # 292 குறிஞ்சி மண்ணிய சென்ற ஒண் நுதல் அரிவை புனல் தரு பசும் காய் தின்றதன் தப்பற்கு ஒன்பதிற்று_ஒன்பது களிற்றொடு அவள் நிறை பொன் செய் பாவை கொடுப்பவும் கொள்ளான் பெண் கொலை புரிந்த நன்னன் போல வரையா நிரையத்து செலீஇயரோ அன்னை ஒரு நாள் நகை முக விருந்தினன் வந்து என பகை முக ஊரின் துஞ்சலோ இலளே # பரணர் # 293 மருதம் கள்ளின் கேளிர் ஆர்த்திய உள்ளூர் பாளை தந்த பஞ்சி அம் குறும் காய் ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும் ஆதி அருமன் மூதூர் அன்ன அய வெள்ளாம்பல் அம் பகை நெறி தழை தித்தி குறங்கின் ஊழ் மாறு அலைப்ப வருமே சே_இழை அந்தில் கொழுநன் காணிய அளியேன் யானே # கள்ளில் ஆத்திரையன் # 294 நெய்தல் கடல் உடன் ஆடியும் கானல் அல்கியும் தொடலை ஆயமொடு தழூஉ_அணி அயர்ந்தும் நொதுமலர் போல கதுமென வந்து முயங்கினன் செலினே அலர்ந்தன்று-மன்னே துத்தி பாந்தள் பைத்து அகல் அல்குல் திருந்து இழை துயல்வு கோட்டு அசைத்த பசும் குழை தழையினும் உழையின் போகான் தான் தந்தனன் யாய் காத்து ஓம்பல்லே # அஞ்சில் ஆந்தையார் # 295 நெய்தல் உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும் தழை அணி பொலிந்த ஆயமொடு துவன்றி விழவொடு வருதி நீயே இஃதோ ஓர் ஆன் வல்சி சீர் இல் வாழ்க்கை பெரு நல குறு_மகள் வந்து என இனி விழவு ஆயிற்று என்னும் இ ஊரே # தூங்கலோரி # 296 நெய்தல் அம்ம வாழி தோழி புன்னை அலங்கு சினை இருந்த அம் சிறை நாரை உறு கழி சிறு மீன் முனையின் செறுவில் கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும் தண்ணம் துறைவன் காணின் முன் நின்று கடிய கழறல் ஓம்பு-மதி தொடியோள் இன்னள் ஆக துறத்தல் நும்மின் தகுமோ என்றனை துணிந்தே # பெரும்பாக்கன் # 297 குறிஞ்சி அம் விளிம்பு உரீஇய கொடும் சிலை மறவர் வை வார் வாளி விறல் பகை பேணார் மாறு நின்று எதிர்ந்த ஆறு செல் வம்பலர் உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும் கல் உயர் நனம் தலை நல்ல கூறி புணர்ந்து உடன் போதல் பொருள் என உணர்ந்தேன் மன்ற அவர் உணரா ஊங்கே # காவிரிப்பூம் பட்டினத்து காரி கண்ணன் # 298 குறிஞ்சி சேரி சேர மெல்ல வந்து_வந்து அரிது வாய்விட்டு இனிய கூறி வைகல்-தோறும் நிலம் பெயர்ந்து உறையும் அவன் பைதல் நோக்கம் நினையாய் தோழி இன் கடும் கள்ளின் அகுதை தந்தை வெண் கடை சிறு கோல் அகவன்_மகளிர் மட பிடி பரிசில் மான பிறிது ஒன்று குறித்தது அவன் நெடும் புறநிலையே # பரணர் # 299 நெய்தல் இது மற்று எவனோ தோழி முதுநீர் புணரி திளைக்கும் புள் இமிழ் கானல் இணர் அவிழ் புன்னை எக்கர் நீழல் புணர் குறி வாய்த்த ஞான்றை கொண்கன் கண்டன-மன் எம் கண்ணே அவன் சொல் கேட்டன-மன் எம் செவியே மற்று அவன் மணப்பின் மாண் நலம் எய்தி தணப்பின் ஞெகிழ்ப எம் தட மென் தோளே # வெண்மணி பூதி # 300 குறிஞ்சி குவளை நாறும் குவை இரும் கூந்தல் ஆம்பல் நாறும் தேம் பொதி துவர் வாய் குண்டு நீர் தாமரை கொங்கின் அன்ன நுண் பல் தித்தி மாஅயோயே நீயே அஞ்சல் என்ற என் சொல் அஞ்சலையே யானே குறும் கால் அன்னம் குவவு மணல் சேக்கும் கடல் சூழ் மண்டிலம் பெறினும் விடல் சூழலன் யான் நின் உடை நட்பே # சிறைக்குடி ஆந்தையார் |
---|