|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
கேஎள் (2)
விறல் நலன் இழப்பவும் வினை வேட்டாய் கேஎள் இனி - கலி 3/5
வருவர்-கொல் வயங்கு_இழாஅய் வலிப்பல் யான் கேஎள் இனி - கலி 11/5
TOP
கேட்க (3)
அம் மென் சேரி கேட்பினும் கேட்க
பிறிது ஒன்று இன்மை அறிய கூறி - அகம் 110/2,3
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க
வண்டு இறை கொண்ட எரி மருள் தோன்றியொடு - அகம் 218/19,20
பெரும் கோ கிள்ளி கேட்க இரும் பிசிர் - புறம் 67/11
TOP
கேட்கம் (1)
அம் தீம் கிளவி கேட்கம் நாமே - நற் 221/13
TOP
கேட்கின் (1)
மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதே - ஐங் 81/5
TOP
கேட்குநர் (3)
அகனுற தழீஇ கேட்குநர் பெறினே - குறு 29/7
பிறரும் கேட்குநர் உளர்-கொல் உறை சிறந்து - குறு 86/3
எல்லாம் தெரிய கேட்குநர் யார் அவை - பரி 12/38
TOP
கேட்குநள்-கொல் (1)
கேட்குநள்-கொல் என கலுழும் என் நெஞ்சே - அகம் 63/19
TOP
கேட்கும் (6)
கட்டின் கேட்கும் ஆயின் வெற்பில் - நற் 288/7
நள்ளென் கங்குலும் கேட்கும் நின் குரலே - குறு 163/5
தொழுது பிழை கேட்கும் தூயவனை காண்-மின் - பரி 12/61
வெண்ணெய் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி - கலி 108/35
தமர் விரைந்து உரைப்ப கேட்கும் ஞான்றே - அகம் 144/19
ஊண் ஒலி அரவம் தானும் கேட்கும்
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி - புறம் 173/4,5
TOP
கேட்குவன்-கொல் (1)
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்-கொல் என - புறம் 225/9
TOP
கேட்குவிர்-மாதோ (1)
பல திறம் பெயர்பவை கேட்குவிர்-மாதோ
கலை தொடு பெரும் பழம் புண் கூர்ந்து ஊறலின் - மலை 291,292
TOP
கேட்குவென்-கொல்லோ (1)
தமியேன் கேட்குவென்-கொல்லோ
பரியரை பெண்ணை அன்றில் குரலே - நற் 218/10,11
TOP
கேட்ட (11)
இன்னா இன் உரை கேட்ட சில் நாள் - நற் 143/8
மடி வாய் தண்ணுமை தழங்கு குரல் கேட்ட
எருவை சேவல் கிளை-வயின் பெயரும் - நற் 298/3,4
சென்று என கேட்ட நம் ஆர்வலர் பலரே - குறு 207/7
முதல்வ நின் யானை முழக்கம் கேட்ட
கதியிற்றே காரின் குரல் - பரி 8/17,18
குரல் கேட்ட கோழி குன்று அதிர கூவ - பரி 8/19
அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன் - கலி 41/8
மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது - கலி 143/10
இன்னா இன் உரை கேட்ட சான்றோர் - அகம் 55/13
மழை முழங்கு அரவம் கேட்ட கழை தின் - அகம் 232/2
விளங்க கேட்ட மாறு-கொல் - புறம் 50/16
இன் இசை கேட்ட துன் அரும் மறவர் - புறம் 270/9
TOP
கேட்டதன் (2)
கேட்டதன் கொண்டும் வேட்கை தண்டாது - புறம் 379/12
கேட்டதன் கொண்டும் வேட்கை தண்டாது - புறம் 400/9
TOP
கேட்டல் (2)
தே மொழி கேட்டல் இனிது மற்று இன்னாதே - கலி 80/15
கேட்டல் மாத்திரை அல்லது யாவதும் - புறம் 216/1
TOP
கேட்டலும் (1)
தெரி மணி கேட்டலும் அரிதே - நற் 323/10
TOP
கேட்டலோ (1)
நெடும் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே - நற் 311/11
TOP
கேட்டவை (1)
என்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு - அகம் 286/9
TOP
கேட்டற்கு (1)
கேட்டற்கு இனிது நின் செல்வம் கேள்-தொறும் - பதி 12/9
TOP
கேட்டன்றோ (1)
அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே முன்கை - நற் 239/9
TOP
கேட்டன (1)
கில்லா கேள்வி கேட்டன சிலசில - பரி 12/39
TOP
கேட்டன-மன் (1)
கேட்டன-மன் எம் செவியே மற்று அவன் - குறு 299/6
TOP
கேட்டனம் (1)
நன்னர் நன் மொழி கேட்டனம் அதனால் - முல் 17
TOP
கேட்டனமால் (1)
பல கேட்டனமால் தோழி நாமே - அகம் 210/14
TOP
கேட்டனள் (1)
கேட்டனள் என்பவோ யாய் - கலி 107/11
TOP
கேட்டனள்-கொல்லோ (1)
கேட்டனள்-கொல்லோ தானே தோள் தாழ்பு - அகம் 161/9
TOP
கேட்டனன் (2)
என்று யாம் பாட மறை நின்று கேட்டனன்
தாழ் இரும் கூந்தல் என் தோழியை கை கவியா - கலி 42/28,29
பாட மறை நின்று கேட்டனன் நீடிய - கலி 131/42
TOP
கேட்டனெம் (1)
கேளேம் அல்லேம் கேட்டனெம் பெரும - குறு 244/3
TOP
கேட்டனை (2)
யார் வாய் கேட்டனை காதலர் வரவே - குறு 75/5
சொல்ல கேட்டனை ஆயின் வல்லே - கலி 135/16
TOP
கேட்டனையோ (1)
நீ கண்டனையோ கண்டார் கேட்டனையோ
ஒன்று தெளிய நசையினம் மொழிமோ - குறு 75/1,2
TOP
கேட்டார் (1)
தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச - கலி 119/6
TOP
கேட்டால் (1)
கேட்டால் எவன் செய்ய வேண்டுமோ மற்று இகா - கலி 107/12
TOP
கேட்டி (1)
சிறப்பு உணா கேட்டி செவி - பரி 19/96
TOP
கேட்டிகும் (1)
மலர்பு அறியா என கேட்டிகும் இனியே - பதி 52/12
TOP
கேட்டிசின் (6)
கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம் - மது 208
கேட்டிசின் வாழி தோழி தெண் கழி - நற் 78/7
கேட்டிசின் அல்லெனோ விசும்பின் தகவே - நற் 115/11
கேட்டிசின் வாழி தோழி அல்கல் - குறு 30/1
கேட்டிசின் வாழியோ மகிழ்ந ஆற்று உற - ஐங் 59/1
இகுளை கேட்டிசின் காதல் அம் தோழி - அகம் 138/1
TOP
கேட்டிசினே (1)
பிறர்பிறர் கூற வழி கேட்டிசினே
இரும்பு புனைந்து இயற்றா பெரும் பெயர் தோட்டி - புறம் 150/24,25
TOP
கேட்டியோ (3)
கேட்டியோ வாழி வேண்டு அன்னை நம் படப்பை - அகம் 68/4
பின்னும் கேட்டியோ எனவும் அஃது அறியாள் - அகம் 68/8
கேட்டியோ வாழி பாண பாசறை - புறம் 289/8
TOP
கேட்டிரோ (1)
பெயர்க்கும் பண்ணன் கேட்டிரோ அவன் - புறம் 388/10
TOP
கேட்டீ (2)
சொல்லும் சொல் கேட்டீ சுடர்_இழாய் பல் மாணும் - கலி 47/8
கேட்டீ
பெரு மடல் பெண்ணை பிணர் தோட்டு பைம் குரும்பை - கலி 83/7,8
TOP
கேட்டீ-மின் (4)
இறத்திரால் ஐய மற்று இவள் நிலைமை கேட்டீ-மின்
மணக்குங்கால் மலர் அன்ன தகையவாய் சிறிது நீர் - கலி 25/12,13
எல்லீரும் கேட்டீ-மின் என்று - கலி 138/11
என் செய்தாள்-கொல் என்பீர் கேட்டீ-மின் பொன் செய்தேன் - கலி 143/9
கேட்டீ-மின் எல்லீரும் வந்து - கலி 146/13
TOP
கேட்டு (27)
வைகி கேட்டு பையாந்திசினே - நற் 114/4
பொய்யல் அந்தோ வாய்த்தனை அது கேட்டு
தலை இறைஞ்சினளே அன்னை - நற் 147/10,11
இனியது கேட்டு இன்புறுக இ ஊரே - குறு 34/3
அது கேட்டு அன்னாய் என்றனள் அன்னை - ஐங் 113/4
வரைந்தனை நீ என கேட்டு யான் - ஐங் 280/4
கேள்வி கேட்டு படிவம் ஒடியாது - பதி 74/1
அம் தண் புனல் வையை யாறு என கேட்டு
மின் அவிர் ஒளி இழை வேயுமோரும் - பரி 12/10,11
நின் உறு விழுமம் கூற கேட்டு
வருமே தோழி நல் மலை நாடன் - கலி 38/23,24
தன் மலை பாட நயவந்து கேட்டு அருளி - கலி 40/31
ஒன்றி நாம் பாட மறை நின்று கேட்டு அருளி - கலி 41/41
என்னையும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு
நின்னை யான் பிறர் முன்னர் பழி கூறல் தான் நாணி - கலி 44/9,10
சேரியும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு ஆங்கு - கலி 44/12
ஆயமும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு
மாய நின் பண்பின்மை பிறர் கூறல் தான் நாணி - கலி 44/15,16
தணந்தனை என கேட்டு தவறு ஓராது எமக்கு நின் - கலி 71/17
நிலை பாலுள் ஒத்த குறி என் வாய் கேட்டு ஒத்தி - கலி 86/12
நன்றும் தடைஇய மென்_தோளாய் கேட்டு ஈவாய் ஆயின் - கலி 93/5
கண்ணி தந்திட்டது என கேட்டு திண்ணிதா - கலி 107/31
மாலை நீ தையென கோவலர் தனி குழல் இசை கேட்டு
பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய் - கலி 118/13,14
என்று யான் பாட கேட்டு
அன்புறு கிளவியாள் அருளி வந்து அளித்தலின் - கலி 138/26,27
திருந்து_இழைக்கு ஒத்த கிளவி கேட்டு ஆங்கே - கலி 141/23
கழிய கதழ்வை என கேட்டு நின்னை - கலி 143/23
இன் பல் இமிழ் இசை கேட்டு கலி சிறந்து - அகம் 82/7
பாடு இன் தெண் கிணை பாடு கேட்டு அஞ்சி - அகம் 226/15
புத்தேள்_உலகத்து அற்று என கேட்டு வந்து - புறம் 22/35
இன்றும் செரு பறை கேட்டு விருப்புற்று மயங்கி - புறம் 279/7
கடவும் என்ப பெரிதே அது கேட்டு
வலம் படு முரசின் வெல் போர் வேந்தன் - புறம் 304/8,9
அகன் கண் தடாரி பாடு கேட்டு அருளி - புறம் 385/4
TOP
கேட்டுதும் (1)
கேட்டுதும் பாணி எழுதும் கிணை முருகன் - பரி 8/81
TOP
கேட்டும் (7)
கண்ண் தண்ண் என கண்டும் கேட்டும்
உண்டற்கு இனிய பல பாராட்டியும் - மலை 352,353
ஓரை ஆயம் கூற கேட்டும்
இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும் - குறு 48/3,4
தீம் குரல் அகவ கேட்டும் நீங்கிய - குறு 191/4
பூசல் கேட்டும் அருளாதோயே - ஐங் 480/5
நெஞ்சு நடுக்குற கேட்டும் கடுத்தும் தாம் - கலி 24/1
கேட்டும் அறிவேன்-மன் யான் - கலி 98/8
தொன்று இ உலகத்து கேட்டும் அறிதியோ - கலி 142/48
TOP
கேட்டே (7)
அழிவு வந்தன்றால் ஒழிதல் கேட்டே - நற் 43/12
நடுநாள் யாமத்தும் தமியம் கேட்டே - நற் 129/9
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே - குறு 138/5
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே - குறு 251/7
மாரி மாலையும் தமியள் கேட்டே - அகம் 214/15
வல் வாய் கடும் துடி பாணியும் கேட்டே - அகம் 261/15
நினையா மாக்கள் தீம் குழல் கேட்டே - அகம் 305/16
TOP
கேட்டேன் (4)
குறும்பூழ் போர் கண்டமை கேட்டேன் நீ என்றும் - கலி 95/8
அ யானை வனப்பு உடைத்து ஆகலும் கேட்டேன்
அ யானை தான் சுண்ண நீறு ஆடி நறு நறா நீர் உண்டு - கலி 97/9,10
ஓஒ புனல் ஆடினாய் எனவும் கேட்டேன் புனல் ஆங்கே - கலி 98/13
குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன் குளித்து ஆங்கே - கலி 98/22
TOP
கேட்டை (2)
எல்லா இஃது ஒத்தன் என் பெறான் கேட்டை காண் - கலி 61/1
கேட்டை விரையல் நீ மற்று வெகுள்வாய் உரை ஆண்டு - கலி 92/23
TOP
கேட்டோர் (1)
கேட்டோர் அனையர் ஆயினும் - நற் 216/10
TOP
கேட்டோன் (1)
கேட்டோன் எந்தை என் தெண் கிணை குரலே - புறம் 400/8
TOP
கேட்ப (13)
எய்யா தெவ்வர் ஏவல் கேட்ப
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப - பொரு 133,134
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
வெற்றமொடு வெறுத்து ஒழுகிய - மது 72,73
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
கால் என்ன கடிது உராஅய் - மது 124,125
இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்ப
பொலம் பூண் ஐவர் உட்பட புகழ்ந்த - மது 774,775
தொல் அருவாளர் தொழில் கேட்ப
வடவர் வாட குடவர் கூம்ப - பட் 275,276
மாடோர் உறையும் உலகமும் கேட்ப
இழுமென இழிதரும் பறை குரல் அருவி - பதி 70/23,24
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
அகல் வையத்து பகல் ஆற்றி - பதி 90/8,9
திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப
மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்று அற்றா - கலி 81/13,14
எல்லாரும் கேட்ப அறைந்துஅறைந்து எப்பொழுதும் - கலி 102/11
யாவரும் தண் குரல் கேட்ப நிரை வெண் பல் - கலி 142/9
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப
வருவேம் என்ற பருவம் ஆண்டை - அகம் 317/16,17
தமக்கு அமைந்த தொழில் கேட்ப
காடு என்றா நாடு என்று ஆங்கு - புறம் 166/18,19
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப
பொய்யா செம் நா நெளிய ஏத்தி - புறம் 168/18,19
TOP
கேட்பல் (1)
கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி - புறம் 27/10
TOP
கேட்பவும் (1)
வினை புனை நல் இல் இனைகூஉ கேட்பவும்
இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல் - புறம் 44/8,9
TOP
கேட்பின் (13)
இன்னும் தமியர் கேட்பின் பெயர்த்தும் - குறு 94/4
கேளார் ஆகுவர் தோழி கேட்பின்
விழுமிது கழிவது ஆயினும் நெகிழ் நூல் - குறு 253/1,2
கானம் கடத்திர் என கேட்பின் யான் ஒன்று - கலி 7/3
இடை கொண்டு பொருள்-வயின் இறத்தி நீ என கேட்பின்
உடைபு நெஞ்சு உக ஆங்கே ஒளி ஓடற்பாள்-மன்னோ - கலி 10/8,9
முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ என கேட்பின்
பனிய கண் படல் ஒல்லா படர் கூர்கிற்பாள்-மன்னோ - கலி 10/12,13
பொருள் நோக்கி பிரிந்து நீ போகுதி என கேட்பின்
மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள்-மன்னோ - கலி 10/16,17
விலங்கு மான் குரல் கேட்பின் வெருவுவை அல்லையோ - கலி 13/17
கை புனை கண்ணி முடித்தாள் என்று யாய் கேட்பின்
செய்வது இல ஆகுமோ மற்று - கலி 107/15,16
கான் கெழு நாடன் கேட்பின்
யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதே - அகம் 98/29,30
கடு_மான் தேர் ஒலி கேட்பின்
நடுநாள் கூட்டம் ஆகலும் உண்டே - அகம் 134/13,14
நாம் படர் கூரும் அரும் துயர் கேட்பின்
நந்தன் வெறுக்கை எய்தினும் மற்று அவண் - அகம் 251/4,5
வளி பொரு தெண் கண் கேட்பின்
அது போர் என்னும் என் ஐயும் உளனே - புறம் 89/9,10
கேட்பின் அல்லது காண்பு அறியலையே - புறம் 133/2
TOP
கேட்பினும் (3)
செவியின் கேட்பினும் சொல் இறந்து வெகுள்வோள் - ஐங் 84/1
அம் மென் சேரி கேட்பினும் கேட்க - அகம் 110/2
அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க - அகம் 218/19
TOP
கேட்புழி (1)
உரை கேட்புழி எல்லாம் செல்வேன் புரை தீர்ந்தான் - கலி 146/30
TOP
கேட்போர் (1)
கேட்போர் உளர்-கொல் இல்லை-கொல் போற்று என - நற் 50/6
TOP
கேட்போர்க்கே (1)
நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே - அகம் 97/23
TOP
கேடு (10)
கேளுடை கேடு அஞ்சுதுமே ஆயிடை - நற் 359/6
அவரே கேடு இல் விழு பொருள் தருமார் பாசிலை - குறு 216/1
கேடு எவன் உடைத்தோ தோழி நீடு மயிர் - குறு 373/4
கேடு இலவாக பெரும நின் புகழே - பதி 79/19
கேடு இல் விழு புகழ் நாள் தலைவந்து என - அகம் 86/7
கேள் கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும் - அகம் 93/1
கேளிர் கேடு பல ஊன்றலும் நாளும் - அகம் 173/2
கேடு இன்று ஆக பாடுநர் கடும்பு என - புறம் 160/10
கேடு இல் நல் இசை வய_மான் தோன்றலை - புறம் 165/8
கேடு இன்று நல்கு-மதி பெரும மாசு இல் - புறம் 393/19
TOP
கேடும் (1)
நீடு நிலை அரையத்து கேடும் கேள் இனி - புறம் 202/8
TOP
கேண்மை (34)
பெரிது ஆண்ட பெரும் கேண்மை
அறனொடு புணர்ந்த திறன் அறி செங்கோல் - பொரு 229,230
புரைய மன்ற புரையோர் கேண்மை
நீர் இன்று அமையா உலகம் போல - நற் 1/5,6
மலை கெழு நாடன் கேண்மை பலவின் - நற் 116/6
காமர் கொண்கன் நாம் வெம் கேண்மை
ஐது ஏய்ந்து இல்லா ஊங்கும் நம்மொடு - நற் 145/4,5
மணம் கமழ் கானல் இயைந்த நம் கேண்மை
ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது - நற் 203/7,8
கல் கெழு நாடன் கேண்மை
அறிந்தனள்-கொல் அஃது அறிகலென் யானே - நற் 206/10,11
பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி - நற் 259/7
குன்ற நாடன் கேண்மை நமக்கே - நற் 285/8
பெரு மலை நாடன் கேண்மை நமக்கே - நற் 309/6
விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின் - நற் 315/9
உயர் வரை நாட நீ நயந்தோள் கேண்மை
அன்னை அறிகுவள் ஆயின் பனி கலந்து - நற் 317/5,6
அளிய பெரிய கேண்மை நும் போல் - நற் 345/6
குன்ற நாடன் கேண்மை என்றும் - குறு 38/3
பொய்கை ஊரன் கேண்மை
செய்து இன்புற்றனெம் செறிந்தன வளையே - குறு 61/5,6
குன்ற நாடன் கேண்மை
மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே - குறு 90/6,7
சூர் மலை நாடன் கேண்மை
நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே - குறு 105/5,6
மலை கெழு நாடன் கேண்மை
தலைபோகாமை நற்கு அறிந்தனென் யானே - குறு 170/4,5
நயந்தனன் கொண்ட கேண்மை
பயந்த காலும் பயப்பு ஒல்லாதே - குறு 264/4,5
மா மலை நாடன் கேண்மை
காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே - குறு 308/6,7
தண் துறை ஊரன் கேண்மை
வழிவழி சிறக்க என வேட்டேமே - ஐங் 2/5,6
தண் துறை ஊரன் கேண்மை
அம்பல் ஆகற்க என வேட்டேமே - ஐங் 9/5,6
சினை கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை
பிரிந்தும் வாழ்துமோ நாமே - ஐங் 111/3,4
போர்வில் பெறூஉம் துறைவன் கேண்மை
நல் நெடும் கூந்தல் நாடுமோ மற்றே - ஐங் 153/4,5
வெறி கமழ் நாடன் கேண்மை
அறியுமோ-தில்ல செறி எயிற்றோயே - ஐங் 241/3,4
உயிர் கலந்து ஒன்றிய செயிர் தீர் கேண்மை
பிரிந்துறல் அறியா விருந்து கவவி - ஐங் 419/1,2
செறுநர் விழையா செறிந்த நம் கேண்மை
மறுமுறை யானும் இயைக நெறி மாண்ட - பரி 25/2,3
பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழம் கேண்மை
கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்-மன்-கொலோ - கலி 39/40,41
கேண்மை விருப்புற்றவனை எதிர் நின்று - கலி 60/30
அறாஅலியரோ அவர் உடை கேண்மை
அளி இன்மையின் அவண் உறை முனைஇ - அகம் 40/10,11
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே - அகம் 70/5
புனல் ஆடு கேண்மை அனைத்தே அவனே - அகம் 186/9
பெரும் கல் நாடன் கேண்மை இனியே - அகம் 232/5
இயைந்த கேண்மை இல் ஆகியரோ - புறம் 190/5
ஆள்வினை மருங்கின் கேண்மை பாலே - புறம் 196/3
TOP
கேண்மைக்கு (1)
கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ என் - புறம் 236/4
TOP
கேண்மையின் (1)
பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து அ மறை - கலி 25/23
TOP
கேண்மையொடு (2)
கேண்மையொடு அளைஇ நீயே - நற் 400/9
உரன் உடையாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உள ஆகியரோ - புறம் 190/11,12
TOP
கேணி (7)
திறல் வேல் நுதியின் பூத்த கேணி
விறல் வேல் வென்றி வேலூர் எய்தின் - சிறு 172,173
தண் கேணி தகை முற்றத்து - பட் 51
வேட்ட சீறூர் அகன் கண் கேணி
பய நிரைக்கு எடுத்த மணி நீர் பத்தர் - நற் 92/5,6
ஊர் உண் கேணி உண்துறை தொக்க - குறு 399/1
சிறு பல் கேணி பிடி அடி நசைஇ - அகம் 137/2
பாணன் சென்னி கேணி பூவா - புறம் 364/2
ஊர் உண் கேணி பகட்டு இலை பாசி - புறம் 392/13
TOP
கேழ் (71)
நறும் குறடு உரிஞ்சிய பூம் கேழ் தேய்வை - திரு 33
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின் - திரு 193
வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு - சிறு 249
நீர்ப்பெயற்று எல்லை போகி பால் கேழ்
வால் உளை புரவியொடு வட வளம் தரூஉம் - பெரும் 319,320
நறும் பூ கொய்யும் பூசல் இரும் கேழ்
ஏறு அடு வய புலி பூசலொடு அனைத்தும் - மது 297,298
நறும் சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து - மது 493
வடவர் தந்த வான் கேழ் வட்டம் - நெடு 51
செம் கேழ் வட்டம் சுருக்கி கொடும் தறி - நெடு 58
புலி பொறி கொண்ட பூம் கேழ் தட்டத்து - நெடு 126
செ விரல் கொளீஇய செம் கேழ் விளக்கத்து - நெடு 144
ஒண் கேழ் வய புலி பாய்ந்து என கிளையொடு - மலை 309
நீத்தல் ஓம்பு-மதி பூ கேழ் ஊர - நற் 10/4
நறும் தாது ஆடிய தும்பி பசும் கேழ்
பொன் உரை கல்லின் நன் நிறம் பெறூஉம் - நற் 25/3,4
கொடும் கேழ் இரும் புறம் நடுங்க குத்தி - நற் 39/4
கோள் சுறா வழங்கும் வாள் கேழ் இரும் கழி - நற் 78/1
ஒண் கேழ் வய புலி படூஉம் நாடன் - நற் 119/3
கேழ் கிளர் உத்தி அரவு தலை பனிப்ப - நற் 129/7
செம் கேழ் ஆடிய செழும் குரல் சிறுதினை - நற் 213/9
இரும் கேழ் வய புலி வெரீஇ அயலது - நற் 217/3
நாள் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு - நற் 279/5
பசும் கேழ் இலைய நறும் கொடி தமாலம் - நற் 292/2
ஈன் பிணவு ஒடுக்கிய இரும் கேழ் வய புலி - நற் 332/6
மணி கேழ் அன்ன மா நீர் சேர்ப்ப - குறு 49/2
கேழ் இரும் துறுகல் கெழு மலை நாடன் - குறு 111/5
நலம் கேழ் அரிவை புலம்பு அசா விடவே - குறு 338/8
துறை கேழ் ஊரன் கொடுமை நாணி - ஐங் 11/2
துறை கேழ் ஊரன் கொடுமை நன்றும் - ஐங் 12/2
மறு இல் யாணர் மலி கேழ் ஊர நீ - ஐங் 85/3
இறை கேழ் எல் வளை நீங்கிய நிலையே - ஐங் 140/3
நலம் கேழ் ஆகம் நல்குவள் எனக்கே - ஐங் 197/4
ஒண் கேழ் வய புலி குழுமலின் விரைந்து உடன் - ஐங் 274/2
அயிர் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதே - ஐங் 341/3
கேழ் ஆரம் பொற்ப வருவானை தொழாஅ - பரி 9/29
கேழ் இலார் மாண் நலம் உண்கோ திரு உடையார் - பரி 9/31
கிளைக்கு உற்ற உழை சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஓர்-மின் - பரி 11/127
கடந்து அட்டான் கேழ் இருங்குன்று - பரி 15/45
இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின் - பரி 23/48
புலி என்று ஓர்க்கும் இ கலி கேழ் ஊரே - கலி 52/18
ஒடுங்கா வயத்தின் கொடும் கேழ் கடும் கண் - கலி 65/23
அம் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனை - அகம் 26/4
நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம் - அகம் 26/14
நாள் கயம் உழக்கும் பூ கேழ் ஊர - அகம் 36/8
ஒண் கேழ் வன முலை பொலிந்த - அகம் 61/17
செம் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப - அகம் 80/9
பெரும் பேர் அன்பினர் தோழி இரும் கேழ்
இரலை சேக்கும் பரல் உயர் பதுக்கை - அகம் 91/9,10
நலம் கேழ் ஆகம் பூண் வடு பொறிப்ப - அகம் 93/15
துறை கேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை - அகம் 106/5
பசும் கேழ் மெல் இலை அருகு நெறித்து அன்ன - அகம் 131/2
புலி கேழ் உற்ற பூ இடை பெரும் சினை - அகம் 141/25
ஊழுறு நறு வீ கடுப்ப கேழ் கொள - அகம் 174/11
நுண் கேழ் அடங்க வாரி பையுள் கெட - அகம் 223/13
புலி கேழ் வேங்கை பூம் சினை புலம்ப - அகம் 227/8
பண்பு தர வந்தமை அறியாள் நுண் கேழ்
முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு - அகம் 242/7,8
வாயுள் தப்பிய அரும் கேழ் வய புலி - அகம் 251/16
நலம் கேழ் மா குரல் குழையொடு துயல்வர - அகம் 269/16
சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு - அகம் 276/5
நுணங்கிய நுசுப்பின் நுண் கேழ் மாமை - அகம் 319/7
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை - அகம் 332/2
ஈண்டே காண கடவு-மதி பூம் கேழ்
பொலிவன அமர்த்த உண்கண் - அகம் 334/15,16
தீம் பெரும் பொய்கை துறை கேழ் ஊரன் - அகம் 336/10
சேப்பின் எவனோ பூ கேழ் புலம்ப - அகம் 340/13
வடவர் தந்த வான் கேழ் வட்டம் - அகம் 340/16
பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர - அகம் 346/11
ஒண் கேழ் வய புலி பாய்ந்து என குவவு அடி - அகம் 347/11
ஏழில் குன்றத்து கவாஅன் கேழ் கொள - அகம் 349/9
தாழியும் மலர் பல அணியா கேழ் கொள - அகம் 369/6
பெரும் களிறு தொலைச்சிய இரும் கேழ் ஏற்றை - அகம் 389/20
சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ்
நூற்று இதழ் அலரின் நிறை கண்டு அன்ன - புறம் 27/1,2
வான் கேழ் இரும் புடை கழாஅது ஏற்றி - புறம் 168/10
இரும் கேழ் வய புலி வரி அதள் குவைஇ - புறம் 374/14
யானும் ஏழ் மணி அம் கேழ் அணி உத்தி - புறம் 382/12
TOP
கேழ்த்து (1)
ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்து அன்ன இனம் - பரி 8/22
TOP
கேழல் (21)
பன் மயிர் பிணவொடு கேழல் உகள - மது 174
வீழ் முக கேழல் அட்ட பூசல் - மது 295
விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சி - மலை 193
தினை உண் கேழல் இரிய புனவன் - நற் 119/1
வாழை அம் சிலம்பில் கேழல் கெண்டிய - நற் 399/4
கட்டளை அன்ன கேழல் மாந்தும் - ஐங் 263/2
இளம்பிறை அன்ன கோட்ட கேழல்
களங்கனி அன்ன பெண்பால் புணரும் - ஐங் 264/1,2
வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும் - ஐங் 265/2
வரை ஓங்கு உயர் சிமை கேழல் உறங்கும் - ஐங் 268/3
கேழல் உழுது என கிளர்ந்த எருவை - ஐங் 269/1
கிழங்கு அகழ் கேழல் உழுத சிலம்பில் - ஐங் 270/1
கள்ளி அம் கடத்திடை கேழல் பார்க்கும் - ஐங் 323/2
கேழல் திகழ்வர கோலமொடு பெயரிய - பரி 2/16
கேழல் அட்ட பேழ் வாய் ஏற்றை - அகம் 8/6
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க - அகம் 21/18
அத்த கேழல் அட்ட நல் கோள் - அகம் 111/10
ஆழல் வாழி தோழி கேழல்
வளை மருப்பு உறழும் முளை நெடும் பெரும் காய் - அகம் 223/3,4
கேழல் பன்றி வீழ அயலது - புறம் 152/4
கடும் கண் கேழல் உழுத பூழி - புறம் 168/4
கேழல் உழுத இரும் சேறு கிளைப்பின் - புறம் 176/2
கடும் கண் கேழல் இடம் பட வீழ்ந்து என - புறம் 190/6
TOP
கேழலாய் (1)
கேழலாய் மருப்பின் உழுதோய் எனவும் - பரி 3/24
TOP
கேழலொடு (1)
கோழி வய பெடை இரிய கேழலொடு
இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன - திரு 311,312
TOP
கேள் (56)
கேளிர் போல கேள் கொளல் வேண்டி - பொரு 74
கேள் அவன் நிலையே கெடுக நின் அவலம் - பெரும் 38
கேள் இனி வேளை நீ முன்னிய திசையே - மலை 94
வினவல் ஆனா புனை_இழை கேள் இனி - நற் 109/4
தொல் கேள் ஆகலின் நல்குமால் இவட்கே - ஐங் 271/4
சேணன் ஆயினும் கேள் என மொழிந்து - பதி 44/11
கேள் அணங்கு உற மனை கிளந்துள சுணங்கறை - பரி 9/21
மழ ஈன்று மல்லல் கேள் மன்னுக என்மாரும் - பரி 11/121
நேர் இறை முன்கை நல்லவள் கேள் காண்-மின் - பரி 12/92
மாறா போர் மணி மிடற்று எண் கையாய் கேள் இனி - கலி 1/4
கேள் பெருந்தகையோடு எவன் பல மொழிகுவம் - கலி 5/8
இன் தீம் கிளவியாய் வாய்-மன்ற நின் கேள்
புதுவது பல் நாளும் பாராட்ட யானும் - கலி 24/3,4
கோடு புய்க்க அல்லாது உழக்கும் நாட கேள்
ஆர் இடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்தக்கால் - கலி 38/9,10
கல் உயர் நனம் சாரல் கலந்து இயலும் நாட கேள்
தாமரை கண்ணியை தண் நறும் சாந்தினை - கலி 52/6,7
நல்_நுதால் நினக்கு ஒன்று கூறுவாம் கேள் இனி - கலி 55/5
நல்லாய் கேள்
ஆய் தூவி அனம் என அணி மயில் பெடை என - கலி 56/14,15
யாது ஒன்றும் வாய்வாளாது இறந்தீவாய் கேள் இனி - கலி 56/29
இளமையான் எறி பந்தொடு இகத்தந்தாய் கேள் இனி - கலி 57/7
ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய் கேள்
உளனா என் உயிரை உண்டு உயவு நோய் கைம்மிக - கலி 58/6,7
என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி - கலி 59/9
சுடர்_தொடீ போற்றாய் களை நின் முதுக்குறைமை போற்றி கேள்
வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது நீர்க்கு இனிது என்று - கலி 62/9,10
இஃதோ அடங்க கேள்
நின்னொடு சூழுங்கால் நீயும் நிலம் கிளையா - கலி 63/14,15
நல்லாய் இகுளை கேள்
ஈங்கே தலைப்படுவன் உண்டான் தலைப்பெயின் - கலி 64/23,24
கேள் அலன் நமக்கு அவன் குறுகன்-மின் என மற்று எம் - கலி 68/10
பல் மலரிடை புகூஉம் பழனம் சேர் ஊர கேள்
நலம் நீப்ப துறந்து எம்மை நல்காய் நீ விடுதலின் - கலி 70/6,7
என் பார்த்து உறுவோய் கேள் இனி தெற்றென - கலி 75/13
வினவுதி ஆயின் விளங்கு_இழாய் கேள் இனி - கலி 76/5
அக இதழ் தண் பனி உறைத்தரும் ஊர கேள்
தண் தளிர் தகை பூத்த தாது எழில் நலம் செல - கலி 77/7,8
தகைபெறு கழனி அம் தண் துறை ஊர கேள்
அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனை கொள்ளாதி - கலி 79/6,7
வாய் ஆக யாம் கூற வேட்டு ஈவாய் கேள் இனி - கலி 93/16
நல்லாய் கேள் உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய - கலி 94/17
யாங்கு சென்று ஈங்கு வந்தீத்தந்தாய் கேள் இனி - கலி 96/4
கேள் இனி - கலி 122/7
அன்பு இலை என வந்து கழறுவல் ஐய கேள்
மகிழ் செய் தே_மொழி தொய்யில் சூழ் இள முலை - கலி 125/7,8
கனவில் கண்டு யான் செய்தது கேள் இனி - கலி 128/9
பூ மலர்ந்தவை போல புள் அல்கும் துறைவ கேள்
ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் - கலி 133/5,6
பயில் திரை நடு நன்னாள் பாய்ந்து உறூஉம் துறைவ கேள்
கடி மலர் புன்னை கீழ் காரிகை தோற்றாளை - கலி 135/5,6
எம் கேள் இதன் அகத்து உள் வழி காட்டீமோ - கலி 144/19
அரைசு கால்கிளர்ந்து அன்ன உரவு நீர் சேர்ப்ப கேள்
கற்பித்தான் நெஞ்சு அழுங்க பகர்ந்து உண்ணான் விச்சைக்-கண் - கலி 149/3,4
வினவல் ஆனா புனை_இழை கேள் இனி - அகம் 29/14
கேள் கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும் - அகம் 93/1
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும் - அகம் 93/2
கேள் இனி வாழிய நெஞ்சே நாளும் - அகம் 353/2
தகுதி கேள் இனி மிகுதியாள - புறம் 18/17
கேள் அல் கேளிர் வேளாண் சிறு_பதம் - புறம் 74/4
கிளையை-மன் எம் கேள் வெய்யோற்கு என - புறம் 144/7
யாம் அவன் கிளைஞரேம் அல்லேம் கேள் இனி - புறம் 144/10
கிளக்கும் பாண கேள் இனி நயத்தின் - புறம் 155/3
கேள் இல் சேஎய் நாட்டின் எந்நாளும் - புறம் 198/24
நீடு நிலை அரையத்து கேடும் கேள் இனி - புறம் 202/8
ஆற்றல் என்பதன் தோற்றம் கேள் இனி - புறம் 225/6
யார் மகள்-கொல் என வினவுதி கேள் நீ - புறம் 340/4
யார் மகள் என்போய் கூற கேள் இனி - புறம் 353/7
சிலரே பெரும கேள் இனி நாளும் - புறம் 360/9
கேள் இலோர்க்கு கேள் ஆகுவன் - புறம் 396/11
கேள் இலோர்க்கு கேள் ஆகுவன் - புறம் 396/11
TOP
கேள்-தொறும் (10)
நும் இலள் புலம்ப கேள்-தொறும்
பொம்மல்_ஓதி பெரு விதுப்புறவே - நற் 71/10,11
கேள்-தொறும் கலுழுமால் பெரிதே காட்ட - நற் 157/7
கவவு கொள் இன் குரல் கேள்-தொறும்
அவவு கொள் மனத்தேம் ஆகிய நமக்கே - நற் 212/9,10
நள்ளென் கங்குல் புள் ஒலி கேள்-தொறும்
தேர் மணி தெள் இசை-கொல் என - நற் 287/9,10
துணை புணர் அன்றில் உயவு குரல் கேள்-தொறும்
துஞ்சா கண்ணள் துயர் அட சாஅய் - நற் 303/5,6
தண் கடல் படு திரை கேள்-தொறும்
துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே - ஐங் 107/3,4
கேட்டற்கு இனிது நின் செல்வம் கேள்-தொறும்
காண்டல் விருப்பொடு கமழும் குளவி - பதி 12/9,10
புலம்பு கொள் மாலை கேள்-தொறும்
கலங்கினள் உறைவோள் கையறு நிலையே - அகம் 64/16,17
நீ செலவு அயர கேள்-தொறும் பல நினைந்து - அகம் 107/1
கேள்-தொறும் நடுங்க ஏத்துவென் - புறம் 382/21
TOP
கேள்-மதி (9)
போற்றி கேள்-மதி புகழ் மேம்படுந - பொரு 60
கரும் கால் வெண்_குருகு எனவ கேள்-மதி
பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை - நற் 54/4,5
நினையினை ஆயின் எனவ கேள்-மதி
விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கை - அகம் 379/5,6
நினவ கூறுவல் எனவ கேள்-மதி
அறம் புரிந்து அன்ன செங்கோல் நாட்டத்து - புறம் 35/13,14
வண்மையின் தொடுத்த என் நயந்தினை கேள்-மதி
வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லே - புறம் 161/22,23
இன்னும் கேள்-மதி இசை வெய்யோயே - புறம் 213/13
பாண கேள்-மதி யாணரது நிலையே - புறம் 260/8
அதனால் நீயும் கேள்-மதி அத்தை வீயாது - புறம் 363/7
நின் ஒன்று உரைப்ப கேள்-மதி
நின் ஊற்றம் பிறர் அறியாது - புறம் 366/7,8
TOP
கேள்-மின் (8)
வாய்மொழி புலவீர் கேள்-மின் சிறந்தது - பரி 9/13
பூ ஊது வண்டு இனம் யாழ் கொண்ட கொளை கேள்-மின்
கொளை பொருள் தெரிதர கொளுத்தாமல் குரல் கொண்ட - பரி 11/125,126
நினை-மின் மாந்தீர் கேள்-மின் கமழ் சீர் - பரி 15/29
இறப்ப துணிந்தனிர் கேள்-மின் மற்று ஐஇய - கலி 2/10
சொல்லுவது உடையேன் கேள்-மின் மற்று ஐஇய - கலி 8/8
வினவுவீர் தெற்றென கேள்-மின் ஒருவன் - கலி 144/11
இன்னும் கேள்-மின் நும் இசை வாழியவே - புறம் 58/19
ஆ குரல் கேள்-மின் அந்தணாளிர் - புறம் 362/8
TOP
கேள்வர் (2)
தாம் பிழையார் கேள்வர் தொழுது எழலால் தம் ஐயரும் - கலி 39/18
ஈண்டு நீர் ஞாலத்துள் எம் கேள்வர் இல் ஆயின் - கலி 143/44
TOP
கேள்வரை (1)
இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார் - பரி 20/89
TOP
கேள்வல் (1)
அணி மாலை கேள்வல் தரூஉமார் ஆயர் - கலி 101/34
TOP
கேள்வன் (9)
சீர்தகு கேள்வன் உருட்டும் துடி சீரான் - பரி 21/60
கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார் - கலி 106/43
செல்வம் எம் கேள்வன் தருமோ எம் கேளே - கலி 106/45
நல்கிய கேள்வன் இவன்-மன்ற மெல்ல - கலி 142/62
ஈரம் இல் கேள்வன் உறீஇய காம தீ - கலி 144/61
எனைத்தானும் எள்ளினும் எள்ளலன் கேள்வன்
நினைப்பினும் கண் உள்ளே தோன்றும் அனைத்தற்கே - கலி 145/52,53
யாவிரும் எம் கேள்வன் காணீரோ என்பவட்கு - கலி 145/61
ஆங்கு எதிர் நோக்குவன் ஞாயிறே எம் கேள்வன்
யாங்கு உளன் ஆயினும் காட்டீமோ காட்டாயேல் - கலி 147/27,28
எம் கேள்வன் தருதலும் தருகல்லாய் துணை அல்லை - கலி 148/17
TOP
கேள்வனை (3)
துணை அணை கேள்வனை துனிப்பவள் நிலையும் - பரி 21/22
மீ நீர் நிவந்த விறல்_இழை கேள்வனை
வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக என - பரி 21/40,41
நிரை தார் மார்பின் நின் கேள்வனை பிறரே - புறம் 294/9
TOP
கேள்வி (24)
ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி
நா இயல் மருங்கில் நவில பாடி - திரு 186,187
கேள்வி போகிய நீள் விசி தொடையல் - பொரு 18
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி
கூடு கொள் இன்னியம் குரல் குரல் ஆக - சிறு 228,229
தொடை அமை கேள்வி இட வயின் தழீஇ - பெரும் 16
கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த - பெரும் 315
பல் கேள்வி துறைபோகிய - பட் 169
கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா - மலை 22
சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று - பதி 21/1
உரை சால் வேள்வி முடித்த கேள்வி
அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு - பதி 64/4,5
வேள்வியில் கடவுள் அருத்தினை கேள்வி
உயர்_நிலை_உலகத்து ஐயர் இன்புறுத்தினை - பதி 70/18,19
கேள்வி கேட்டு படிவம் ஒடியாது - பதி 74/1
நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும் - பரி 3/48
கில்லா கேள்வி கேட்டன சிலசில - பரி 12/39
விறல் புகழ் நிற்ப விளங்கிய கேள்வி
திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி - பரி 23/19,20
நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப - பரி 30/8
கேள்வி அந்தணர் கடவும் - கலி 36/25
ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை - புறம் 26/12
வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன் - புறம் 53/12
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்துநொந்து - புறம் 68/3
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக - புறம் 72/13,14
துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில் - புறம் 221/6
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு - புறம் 361/4
கண் கேள்வி கவை நாவின் - புறம் 382/13
கேள்வி மலிந்த வேள்வி தூணத்து - புறம் 400/18
TOP
கேள்விக்கு (1)
கேள்விக்கு இனியை கட்கு இன்னாயே - புறம் 167/4
TOP
கேள்வியர் (1)
சில சொல்லால் பல கேள்வியர்
நுண் உணர்வினால் பெரும் கொடையர் - புறம் 360/2,3
TOP
கேள்வியன் (1)
முழுது உணர் கேள்வியன் ஆகலின் - புறம் 361/22
TOP
கேள்வியால் (1)
பொய் அற்ற கேள்வியால் புரையோரை படர்ந்து நீ - கலி 15/14
TOP
கேள்வியும் (1)
கேள்வியும் அறிவும் அறத்தொடு நுண்ணியை - பரி 13/56
TOP
கேள்வியுள் (2)
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும் - பரி 2/25
கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும் - பரி 2/61
TOP
கேளலம் (1)
இன்றின் ஊங்கோ கேளலம் திரள் அரை - புறம் 76/3
TOP
கேளன்மார் (1)
நெய்தல் கேளன்மார் நெடும் கடையானே - புறம் 389/17
TOP
கேளன்னே (1)
நல்கான் ஆயினும் தொல் கேளன்னே - ஐங் 167/4
TOP
கேளா (7)
கையது கேளா அளவை ஒய்யென - பொரு 152
கேளா மன்னர் கடி புலம் புக்கு - பெரும் 140
புறஞ்சொல் கேளா புரை தீர் ஒண்மை - பதி 70/13
ஆய்_இழை ஆர்க்கும் ஒலி கேளா அ எதிர் - கலி 90/13
சொல்லும் சொல் கேளா அளை மாறி யாம் வரும் - கலி 106/44
அரும் பொருள் மரபின் மால் யாழ் கேளா கிடந்தான் போல் - கலி 123/4
கார் வான் இன் உறை தமியள் கேளா
நெருநல் ஒரு சிறை புலம்பு கொண்டு உறையும் - புறம் 147/3,4
TOP
கேளாது (2)
கிழவிர் போல கேளாது கெழீஇ - மலை 166
அஞ்சுதக உரறும் ஓசை கேளாது
துஞ்சுதியோ இல தூ இலாட்டி - நற் 154/6,7
TOP
கேளாதோனே (1)
நாள் உறை மத்து ஒலி கேளாதோனே - புறம் 257/13
TOP
கேளாமை (1)
தூங்கும் குரவையுள் நின் பெண்டிர் கேளாமை
ஆம்பல் குழலால் பயிர்பயிர் எம் படப்பை - கலி 108/61,62
TOP
கேளாமோ (3)
கூறுப கேளாமோ சென்று - கலி 144/8
கூறுப கேளாமோ சென்று - கலி 146/10
ஒண்_நுதல் உற்றது உழை சென்று கேளாமோ
இவர் யாவர் ஏமுற்றார் கண்டீரோ ஓஒ - கலி 147/11,12
TOP
கேளாய் (12)
கேளாய் எல்ல தோழி அல்கல் - நற் 61/1
பெரு நகை கேளாய் தோழி காதலர் - நற் 129/1
எனவ கேளாய் நினையினை நீ நனி - நற் 253/4
புலவர் தோழ கேளாய் அத்தை - குறு 129/2
எல்லும் எல்லின்று பாடும் கேளாய்
செல்லாதீமோ சிறு பிடி துணையே - குறு 390/1,2
சுடர் தொடீஇ கேளாய் தெருவில் நாம் ஆடும் - கலி 51/1
திருந்து_இழாய் கேளாய் நம் ஊர்க்கு எல்லாம் சாலும் - கலி 65/1
நின்னொடு வினவல் கேளாய் பொன்னொடு - அகம் 7/17
கேளாய் வாழியோ மகளை நின் தோழி - அகம் 63/1
கேளாய் எல்ல தோழி வேலன் - அகம் 114/1
கேளாய் எல்ல தோழி வாலிய - அகம் 211/1
நகை நீ கேளாய் தோழி அல்கல் - அகம் 248/1
TOP
கேளார் (2)
கேளார் ஆகுவர் தோழி கேட்பின் - குறு 253/1
பூசல் கேளார் சேயர் என்ப - ஐங் 315/2
TOP
கேளார்-கொல்லோ (1)
கேளார்-கொல்லோ தோழி தோள - நற் 214/9
TOP
கேளாள் (1)
மணி ஒலி கேளாள் வாள்_நுதல் அதனால் - நற் 42/5
TOP
கேளாளன் (1)
கேளாளன் ஆகாமை இல்லை அவன் கண்டு - கலி 101/45
TOP
கேளான் (1)
கூறும் சொல் கேளான் நலிதரும் பண்டு நாம் - கலி 62/17
TOP
கேளியர் (1)
வைகறை அரவம் கேளியர் பல கோள் - புறம் 397/8
TOP
கேளிர் (21)
கேளிர் போல கேள் கொளல் வேண்டி - பொரு 74
செழும் கேளிர் நிழல் சேர - மது 168
எந்தையும் நுந்தையும் எம் முறை கேளிர்
யானும் நீயும் எ வழி அறிதும் - குறு 40/2,3
இடிக்கும் கேளிர் நும் குறை ஆக - குறு 58/1
கேளிர் வாழியோ கேளிர் நாளும் என் - குறு 280/1
கேளிர் வாழியோ கேளிர் நாளும் என் - குறு 280/1
கள்ளின் கேளிர் ஆர்த்திய உள்ளூர் - குறு 293/1
கேளிர் மணலின் கெழுவும் இதுவோ - பரி 8/63
தெரி கோதை நல்லார் தம் கேளிர் திளைக்கும் - பரி 11/58
கெழீஇ கேளிர் சுற்ற நின்னை - பரி 14/23
மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல் நீ செல்லும் - கலி 3/21
அல்லல் களை தக்க கேளிர் உழை சென்று - கலி 61/3
புல்லிய கேளிர் புணரும் பொழுது உணரேன் - கலி 144/51
வாழிய கேளிர்
பலவும் சூள் தேற்றி தெளித்தவன் என்னை - கலி 147/22,23
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும் - அகம் 93/2
அம்ம வாழி கேளிர் முன் நின்று - அகம் 130/1
கேளிர் கேடு பல ஊன்றலும் நாளும் - அகம் 173/2
நட்டோர் இன்மையும் கேளிர் துன்பமும் - அகம் 279/1
பெறல் அரும் கேளிர் பின் வந்து விடுப்ப - அகம் 351/2
கேள் அல் கேளிர் வேளாண் சிறு_பதம் - புறம் 74/4
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா - புறம் 192/1,2
TOP
கேளிர்க்கு (1)
வன்புல கேளிர்க்கு வரு_விருந்து அயரும் - புறம் 42/17
TOP
கேளிர்கள் (1)
கேளிர்கள் நெஞ்சு அழுங்க கெழுவுற்ற செல்வங்கள் - கலி 149/8
TOP
கேளிரும் (1)
மாற்றோரும் இலர் கேளிரும் இலர் எனும் - பரி 4/54
TOP
கேளிரொடு (2)
இன் அமர் கேளிரொடு ஏமுற கெழீஇ - அகம் 151/2
கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த - புறம் 71/15
TOP
கேளுடை (1)
கேளுடை கேடு அஞ்சுதுமே ஆயிடை - நற் 359/6
TOP
கேளும் (1)
தெரி_இழாய் நீயும் நின் கேளும் புணர - கலி 39/27
TOP
கேளே (12)
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
முண்டக கோதை நனைய - ஐங் 121/1,2
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
ஒள் இழை உயர் மணல் வீழ்ந்து என - ஐங் 122/1,2
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
ஒள் நுதல் ஆயம் ஆர்ப்ப - ஐங் 123/1,2
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
வண்டல் பாவை வௌவலின் - ஐங் 124/1,2
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
தெண் திரை பாவை வௌவ - ஐங் 125/1,2
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
உண்கண் வண்டு இனம் மொய்ப்ப - ஐங் 126/1,2
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
தும்பை மாலை இள முலை - ஐங் 127/1,2
கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே
உறாஅ வறு முலை மடாஅ - ஐங் 128/1,2
கொலை ஏறு சாடிய புண்ணை எம் கேளே
பல் ஊழ் தயிர் கடைய தாஅய புள்ளி மேல் - கலி 106/36,37
புல்லல் எம் தோளிற்கு அணியோ எம் கேளே
ஆங்கு போர் ஏற்று அரும் தலை அஞ்சலும் ஆய்ச்சியர் - கலி 106/39,40
ஓராங்கு சேறல் இலவோ எம் கேளே
கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார் - கலி 106/42,43
செல்வம் எம் கேள்வன் தருமோ எம் கேளே
ஆங்க - கலி 106/45,46
TOP
கேளேம் (1)
கேளேம் அல்லேம் கேட்டனெம் பெரும - குறு 244/3
TOP
|
|
|