|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
சே (1)
திங்கள் அணி செம் சடையாய் சே உடையாய் மங்கை ஒரு - தாயு:28 507/2
TOP
சேடத்தால் (1)
மடத்தை காத்து இட்ட சேடத்தால் விசேடமாய் வாழ - தாயு:24 348/3
TOP
சேடம் (2)
விரிவாய பூதங்கள் ஒன்றோடொன்றாய் அழியும் மேற்கொண்ட சேடம் அதுவே வெறு வெளி நிராலம்பம் நிறை சூன்யம் உபசாந்த வேத வேதாந்த ஞானம் - தாயு:2 5/2
கூறு அனைத்தும் கடந்த எல்லை சேடம் ஆகி குறைவு_அற நின்றிடும் நிறைவே குலவாநின்ற - தாயு:14 134/3
TOP
சேடன் (1)
துரிய அறிவு உடை சேடன் ஈற்றின் உண்மை சொல்லானோ சொல் என்பேன் சுருதியே நீ - தாயு:14 158/3
TOP
சேணும் (1)
சேணும் பாரும் திரிபவர் காண்பரோ - தாயு:18 198/2
TOP
சேதம் (1)
சேதம் உறின் யாது பின்னே செல்லும் பராபரமே - தாயு:43 817/2
TOP
சேதா (2)
கன்று ஆகி கதறினர்க்கு சேதா ஆகி கடிதினில் வந்து அருள்கூரும் கருணை விண்ணே - தாயு:14 137/4
கன்றினுக்கு சேதா கனிந்து இரங்கல் போல எனக்கு - தாயு:43 669/1
TOP
சேதிக்க (1)
சிங்கத்தை ஒத்து என்னை பாய வரு வினையினை சேதிக்க வரு சிம்புளே சிந்தாகுல திமிரம் அகல வரு பானுவே தீனனேன் கரையேறவே - தாயு:6 56/3
TOP
சேது (1)
சேது மேவிய ராம_நாயகன்-தனை சிந்தை செய் மட நெஞ்சே - தாயு:24 332/4
TOP
சேய் (10)
பொல்லாத சேய் எனில் தாய் தள்ளல் நீதமோ புகலிடம் பிறிதும் உண்டோ பொய் வார்த்தை சொல்லிலோ திரு_அருட்கு அயலுமாய் புன்மையேன் ஆவன் அந்தோ - தாயு:9 79/3
பின்னம் பிறக்காது சேய் என வளர்த்திட பேயேனை நல்கவேண்டும் பிறவாத நெறி எனக்கு உண்டு என்னின் இம்மையே பேசு கர்ப்பூர தீபம் - தாயு:11 108/2
சுற்றமுமாய் நல் அன்பர்-தமை சேய் ஆக தொழும்புகொளும் கனா கனமே சோதி_குன்றே - தாயு:16 181/4
பின்புற்று அழும் சேய் என விழி நீர் பெருக்கிப்பெருக்கி பித்தாகி - தாயு:20 285/3
தாய்_இலா சேய் போல் அலைந்து அலைப்பட்டேன் தாயினும் கருணையாய் மன்றுள் - தாயு:22 306/3
தாய் உண்டு சேய் என்ன என்னை புரக்க சதானந்தமாம் - தாயு:27 421/2
சேய் என காத்தனையே பரமே நின் திரு_அருளுக்கே - தாயு:27 458/3
அன்னை_இலா சேய் போல் அலக்கணுற்றேன் கண்ணார - தாயு:43 692/1
தொட்டிலுக்குள் சேய் போல் துயின்றார் பராபரமே - தாயு:43 713/2
சேய் ஆகி எந்தை நின்னை சேரவைத்தால் ஆகாதோ - தாயு:47 1365/2
TOP
சேய்-அதாம் (1)
சேய்-அதாம் இந்த சீவ திரள் அன்றோ - தாயு:18 236/3
TOP
சேர் (6)
வாதியாநின்றது அன்றியும் புலன் சேர் வாயிலோ தீயினும் கொடிதே - தாயு:22 305/4
ஞான நாயக நான்மறை நாயக நலம் சேர்
மோன நாயக நின் அடிக்கு அன்பு இன்றி முற்றும் - தாயு:25 381/2,3
பலி இரந்தும் எல்லாம் பரிப்பான் மலி புனல் சேர்
பொன்_முடியான் முக்கண் புனிதன் சரண்புகுந்தோர்க்கு - தாயு:28 483/2,3
சிட்டருடன் சேர் அனந்த தெண்டன் பராபரமே - தாயு:43 701/2
பைம் பயிரை நாடும் உன் போல் பார் பூத்த பைங்கொடி சேர்
செம் பயிரை நாடி திகைத்தேன் நான் பைங்கிளியே - தாயு:44 1065/1,2
மன்று ஆடும் வாழ்வே மரகதம் சேர் மாணிக்க - தாயு:46 1327/1
TOP
சேர்க்க (1)
சேர்க்க அறியாமல் திகைப்பேனோ பைங்கிளியே - தாயு:44 1058/2
TOP
சேர்த்தனையேல் (1)
தே என்ற நீ கலந்து கலந்து முத்தி சேர்த்தனையேல் குறைவு ஆமோ செக விலாசம் - தாயு:40 592/2
TOP
சேர்த்தாய் (1)
தேடி எனை அடிமை சேர்த்தாய் பராபரமே - தாயு:43 683/2
TOP
சேர்த்து (4)
கரு மருவு காயத்தை நிர்மலமதாகவே கமலாசனாதி சேர்த்து காலை பிடித்து அனலை அம்மை குண்டலி அடி கலை மதியினூடு தாக்கி - தாயு:12 111/2
வாட்டம்_இல் நெஞ்சம் கிண்ணமா சேர்த்து வாய்மடுத்து அருந்தினன் ஆங்கே - தாயு:24 360/3
திடமுறவே நின் அருளை சேர்த்து என்னை காத்து ஆள - தாயு:33 559/1
செகத்தை எல்லாம் அணுவளவும் சிதறா வண்ணம் சேர்த்து அணுவில் வைப்பை அணு திரளை எல்லாம் - தாயு:40 593/1
TOP
சேர்ந்த (3)
வந்தது ஓர் வாழ்வும் ஓர் இந்த்ரஜால கோலம் வஞ்சனை பொறாமை லோபம் வைத்த மனமாம் கிருமி சேர்ந்த மல_பாண்டமோ வஞ்சனை இலாத கனவே - தாயு:12 113/2
தேடும் திரவியமும் சேர்ந்த மணி பெட்டகமும் - தாயு:43 868/1
தந்தை இரு தாள் துணித்து தம்பிரான் தாள் சேர்ந்த
எந்தை இரு தாள் இணைக்கே இன்புறுவது எந்நாளோ - தாயு:45 1093/1,2
TOP
சேர்ந்ததுவே (1)
சிறியேன் படும் துயர் கண்டு கல்_ஆல் நிழல் சேர்ந்ததுவே - தாயு:27 430/4
TOP
சேர்ந்தார் (3)
திண்ணிய நல் அறிவால் இ சமயத்து அன்றோ செப்பு அரிய சித்திமுத்தி சேர்ந்தார் என்றும் - தாயு:14 139/4
சித்த நிருவிகற்பம் சேர்ந்தார் உடல் தீபம் - தாயு:43 880/1
பாங்கியை சேர்ந்தார் இறைக்கு பண்போ சொல் பைங்கிளியே - தாயு:44 1051/2
TOP
சேர்ந்து (7)
தெருள் ஆகி மருள் ஆகி உழலும் மனமாய் மனம் சேர்ந்து வளர் சித்து ஆகி அ சித்து எலாம் சூழ்ந்த சிவ சித்தாய் விசித்ரமாய் திரம் ஆகி நானாவித - தாயு:8 68/1
தேனை தந்து எனை சேர்ந்து கலந்த மெய் - தாயு:18 216/2
தெருளின முன்னிலையாம் உன்னை சேர்ந்து யான் தெளிகின்றேனே - தாயு:24 357/4
நல் நெஞ்சத்து அன்பர் எல்லாம் நாதரை சேர்ந்து இன்பு அணைந்தார் - தாயு:44 1056/1
புன் மலத்தை சேர்ந்து மலபோதம் பொருந்துதல் போய் - தாயு:45 1158/1
நின்மலத்தை சேர்ந்து மலம் நீங்கும் நாள் எந்நாளோ - தாயு:45 1158/2
சேராமல் சேர்ந்து நின்று சின்மயனே நின் மயத்தை - தாயு:47 1368/1
TOP
சேர்ப்பேனோ (1)
சிந்தை மடலால் எழுதி சேர்ப்பேனோ பைங்கிளியே - தாயு:44 1035/2
TOP
சேர்வதற்கே (1)
தீ உண்டிருந்த மெழுகு அலவோ கதி சேர்வதற்கே - தாயு:27 421/4
TOP
சேர்வது (1)
சித்தம் மிசை புக இருத்தி பிடித்துக்கொண்டு தியக்கம்_அற இன்ப சுகம் சேர்வது என்றோ - தாயு:41 599/2
TOP
சேர்வதுவே (1)
சேற்றை துணை என்ற நாய்க்கும் உண்டோ கதி சேர்வதுவே - தாயு:27 418/4
TOP
சேர்வாரோ (1)
திண்ணியரும் இன்னம் வந்து சேர்வாரோ பைங்கிளியே - தாயு:44 1036/2
TOP
சேர்வேனோ (1)
சின்முத்திரை அரசை சேர்வேனோ பைங்கிளியே - தாயு:44 1060/2
TOP
சேர (5)
சிந்தை குழைந்து சுகம் சேர குரு அருளால் - தாயு:28 514/3
தேடும் பருவம் இது கண்டீர் சேர வாரும் சகத்தீரே - தாயு:30 553/4
தெய்வ சபையை காண்பதற்கு சேர வாரும் சகத்தீரே - தாயு:30 554/4
தேகம் விழும் முன் புசிப்பதற்கு சேர வாரும் சகத்தீரே - தாயு:30 555/4
தேகமோ திடம் இல்லை ஞானமோ கனவிலும் சிந்தியேன் பேர்_இன்பமோ சேர என்றால் கள்ள மனதுமோ மெத்தவும் சிந்திக்குது என் செய்குவேன் - தாயு:37 583/2
TOP
சேரவும் (2)
செப்பு அரிய முத்தியாம் கரை சேரவும் கருணைசெய்வையோ சத்து ஆகி என் சித்தம் மிசை குடிகொண்ட அறிவான தெய்வமே தேசோமயானந்தமே - தாயு:12 112/4
தெய்வ நல் அருள் படைத்த அன்பரொடு சேரவும் கருணை கூர்வையோ தெரிவதற்கு அரிய பிரமமே அமல சிற்சுகோதய விலாசமே - தாயு:13 125/4
TOP
சேரவே (1)
சிந்தை அன்பு சேரவே நைந்து நின்னை நாடினேன் - தாயு:53 1418/1
TOP
சேரவைத்தால் (1)
சேய் ஆகி எந்தை நின்னை சேரவைத்தால் ஆகாதோ - தாயு:47 1365/2
TOP
சேரா (2)
சேராமல் சிற்றினத்தை பிரிந்து எந்நாளும் திரு_அடி பேர்_இனத்துடனே சேரா வண்ணம் - தாயு:41 600/1
சித்தர் ஒன்றும் சேரா செயல் அறிவது எந்நாளோ - தாயு:45 1250/2
TOP
சேராமல் (5)
திட்டமுடன் மெளனியாய் அருள்செய்து இருக்கவும் சேராமல் ஆர் ஆக நான் சிறுவீடு கட்டி அதில் அடு சோற்றை உண்டுண்டு தேக்கு சிறியார்கள் போல - தாயு:6 50/2
தேகமானதை மிகவும் வாட்டுதே துன்பங்கள் சேராமல் யோக மார்க்க சித்தியோ வரவில்லை சகச நிஷ்டைக்கும் என் சிந்தைக்கும் வெகு தூரம் நான் - தாயு:10 94/3
சேராமல் சிற்றினத்தை பிரிந்து எந்நாளும் திரு_அடி பேர்_இனத்துடனே சேரா வண்ணம் - தாயு:41 600/1
தீரத்தினால் துறவு சேராமல் இ உலகில் - தாயு:43 906/1
சேராமல் சேர்ந்து நின்று சின்மயனே நின் மயத்தை - தாயு:47 1368/1
TOP
சேராமலே (1)
சொந்தமாய் எழுத படித்தார் மெய்ஞ்ஞான சுக நிஷ்டை சேராமலே சோற்று துருத்தியை சதம் எனவும் உண்டு உண்டு தூங்கவைத்தவர் ஆர்-கொலொ - தாயு:2 10/2
TOP
சேரி (1)
பொய் உலக வாழ்க்கை புலை சேரி வாதனை நின் - தாயு:43 820/1
TOP
சேரீர் (1)
சேரீர் அதுவே திறம் - தாயு:28 469/4
TOP
சேரும் (7)
சிந்தை இதம் அகிதம் சேரும் பராபரமே - தாயு:43 808/2
செல்லாமல் நல் நெறியில் சேரும் நாள் எந்நாளோ - தாயு:45 1154/2
தீது_இல் அருள்_கடலை சேரும் நாள் எந்நாளோ - தாயு:45 1179/2
தென்றல் வந்து வீசு வெளி சேரும் நாள் எந்நாளோ - தாயு:45 1184/2
தேட்டாலே தேடு பொருள் சேரும் நாள் எந்நாளோ - தாயு:45 1247/2
ஆருடனே சேரும் அறிவு என்ற அ உரையை - தாயு:45 1261/1
தேரும்படிக்கு அருள்-தான் சேரும் நாள் எந்நாளோ - தாயு:45 1261/2
TOP
சேரும்படி (1)
சேரும்படி இறைக்கு செப்பி வா பைங்கிளியே - தாயு:44 1028/2
TOP
சேரும்படிக்கு (1)
கரை சேரும்படிக்கு உன் அருள் புணையை கூட்டும் கைப்பிடியே கடைப்பிடியா கருத்துள் கண்டேன் - தாயு:40 590/2
TOP
சேருமோ (1)
திரு_உருவாளர் அநுபவ நிலையும் சேருமோ ஆவலோ மெத்த - தாயு:19 280/3
TOP
சேல் (2)
தெட்டிலே வலிய மட மாதர் வாய் வெட்டிலே சிற்றிடையிலே நடையிலே சேல் ஒத்த விழியிலே பால் ஒத்த மொழியிலே சிறுபிறை நுதல் கீற்றிலே - தாயு:37 579/1
வெம் சேல் எனும் விழியார் வேட்கை நஞ்சுக்கு அஞ்சினரை - தாயு:45 1087/1
TOP
சேலை (1)
தட்டுவைத்த சேலை கொய்சகத்தில் சிந்தை எல்லாம் - தாயு:45 1136/1
TOP
சேவடி (1)
தே எனும் மெளனி செம்பொன் சேவடி சிந்தைசெய்வாம் - தாயு:24 336/4
TOP
சேவடிக்கே (1)
சித்தான மோன சிவனே நின் சேவடிக்கே
பித்து ஆனால் உண்டோ பிறப்பு - தாயு:28 505/3,4
TOP
சேவடியை (1)
செம் சரண சேவடியை சிந்தை வைப்பது எந்நாளோ - தாயு:45 1092/2
TOP
சேவிப்பது (1)
சிந்தை திறை கொடுத்து சேவிப்பது எந்நாளோ - தாயு:45 1232/2
TOP
சேவியேன் (2)
சேவியேன் கள சிந்தை திறை கொடேன் - தாயு:18 196/2
சேவியேன் விழி நீர் மல்க சிவசிவ என்று தேம்பி - தாயு:22 303/2
TOP
சேவை (1)
ஐவரொடும் கூடாமல் அந்தரங்க சேவை தந்த - தாயு:43 887/1
TOP
சேவையும் (1)
ஆன நெறியாம் சரியை ஆதி சோபானம் உற்று அணுபக்ஷ சம்புபக்ஷம் ஆம் இரு விகற்பமும் மாயாதி சேவையும் அறிந்து இரண்டு ஒன்று என்னும் ஓர் - தாயு:5 41/3
TOP
சேற்றிலே (1)
சேற்றிலே இன்னம் வீழ்ந்து திளைக்கவோ சிறியனேனே - தாயு:24 337/4
TOP
சேற்றை (1)
சேற்றை துணை என்ற நாய்க்கும் உண்டோ கதி சேர்வதுவே - தாயு:27 418/4
TOP
சேறு (1)
மு_மல சேறு ஆன முழு கும்பிபாகம் எனும் - தாயு:45 1124/1
TOP
சேறும் (1)
சஞ்சிதமே ஆதி சரக்கான மு_சேறும் - தாயு:45 1162/1
TOP
சேனையுடனே (1)
தந்தை தாய் தமர் தாரம் மகவு என்னும் இவை எலாம் சந்தையில் கூட்டம் இதிலோ சந்தேகம் இல்லை மணி மாட மாளிகை மேடை சதுரங்க சேனையுடனே
வந்தது ஓர் வாழ்வும் ஓர் இந்த்ரஜால கோலம் வஞ்சனை பொறாமை லோபம் வைத்த மனமாம் கிருமி சேர்ந்த மல_பாண்டமோ வஞ்சனை இலாத கனவே - தாயு:12 113/1,2
TOP
|
|
|