|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
சிகண்டா (1)
தத் பரம் பொருளே சசி கண்ட சிகண்டா சாம கண்டா அண்டவாணா - 1.திருமாளிகை:1 3/1
TOP
சிகர (1)
ஆறு ஆர் சிகர மகேந்திரத்து உன் அடியார் பிழை பொறுப்பாய் அமுது ஓர் - 1.திருமாளிகை:3 12/3
TOP
சிகை-தன்னொடு (1)
முறுக்கு வார் சிகை-தன்னொடு முகிழ்த்த அவ் அகத்து மொட்டோடு மத்தமும் - 7.திருவாலி:1 10/3
TOP
சிட்டன் (1)
சிட்டன் சிவன் அடியாரை சீராட்டும் திறங்களுமே சிந்தித்து - 10.சேந்தனார்:1 3/2
TOP
சிட்டார் (1)
சிட்டார் மறை ஓவா தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 3/3
TOP
சிணுக்கரை (1)
சிணுக்கரை செத்தல் கொத்தை சிதம்பரை சீத்தை ஊத்தை - 1.திருமாளிகை:4 4/3
TOP
சித்தத்தினேற்கு (1)
இணங்கிலா ஈசன் நேசத்து இருந்த சித்தத்தினேற்கு
மணம்கொள் சீர் தில்லை_வாணன் மண அடியார்கள் வண்மை - 1.திருமாளிகை:4 1/1,2
TOP
சித்தத்துள் (1)
தெளி வளர் பளிங்கின் திரள் மணி குன்றே சித்தத்துள் தித்திக்கும் தேனே - 1.திருமாளிகை:1 1/2
TOP
சித்தம் (1)
தெருள் நேர்ந்த சித்தம் வலியவா திலக நுதலி திறத்திலே - 2.சேந்தனார்:2 4/4
TOP
சித்தமே (1)
தேனே அமுதே என் சித்தமே சிவலோக நாயக செல்வமே - 2.சேந்தனார்:2 9/2
TOP
சித்தர் (2)
சித்தர் தேவர் இயக்கர் முனிவர் தேன் ஆர் பொழில் தில்லை - 7.திருவாலி:3 7/1
சித்தர் கணம் பயிலும் தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 9/3
TOP
சித்தனே (1)
சித்தனே அருளாய் செங்கணா அருளாய் சிவபுர நகருள் வீற்றிருந்த - 3.கருவூர்:8 9/1
TOP
சிதம்பரை (1)
சிணுக்கரை செத்தல் கொத்தை சிதம்பரை சீத்தை ஊத்தை - 1.திருமாளிகை:4 4/3
TOP
சிதையும் (1)
சில் ஆண்டில் சிதையும் சில தேவர் சிறுநெறி சேராமே - 10.சேந்தனார்:1 4/2
TOP
சிந்தாமணி (1)
பொய் தெய்வ நெறி நான் புகா வகை புரிந்த புராண சிந்தாமணி வைத்த - 2.சேந்தனார்:1 5/2
TOP
சிந்தித்து (3)
அ கனா அனைய செல்வமே சிந்தித்து ஐவரோடு அழுந்தி யான் அவமே - 2.சேந்தனார்:1 6/1
அ கனா அனைய செல்வமே சிந்தித்து ஐவரோடு என்னொடும் விளைந்த - 3.கருவூர்:4 5/1
சிட்டன் சிவன் அடியாரை சீராட்டும் திறங்களுமே சிந்தித்து
அட்டமூர்த்திக்கு என் அகம் நெக ஊறும் அமிர்தினுக்கு ஆல நிழல் - 10.சேந்தனார்:1 3/2,3
TOP
சிந்திப்பு (1)
சிந்திப்பு அரிய தெய்வ பதியுள் சிற்றம்பலம்-தன்னுள் - 7.திருவாலி:3 4/3
TOP
சிந்துரமோ (1)
சொரிந்த சிந்துரமோ தூ மணி திரளோ சுந்தரத்து அரசு இது என்ன - 2.சேந்தனார்:3 7/2
TOP
சிந்தை (2)
மாட்டிய சிந்தை மைந்தருக்கு அன்றே வளர் ஒளி விளங்கு வானுலகே - 3.கருவூர்:8 10/4
செழும் தட மலர் புரை கண்கள் மூன்றும் செம் கனி வாயும் என் சிந்தை வௌவ - 8.புருடோத்தம:1 4/3
TOP
சிந்தைசெய்யும் (2)
தில்லை அம்பலத்து எங்கள் தேவதேவை தேறிய அந்தணர் சிந்தைசெய்யும்
எல்லையது ஆகிய எழில் கொள் சோதி என் உயிர் காவல்கொண்டு இருந்த எந்தாய் - 8.புருடோத்தம:1 6/1,2
சிந்தைசெய்யும் சிவன் சீர் அடியார் அடி நாய் செப்பு உரை - 10.சேந்தனார்:1 13/2
TOP
சிந்தையரே (1)
ஏர் அணங்கு இருநான்கு இரண்டு இவை வல்லோர் இருள் கிழித்து எழுந்த சிந்தையரே - 3.கருவூர்:2 10/4
TOP
சிந்தையவர் (1)
பொருள் நேர்ந்த சிந்தையவர் தொழ புகழ் செல்வம் மல்கு பொன் கோயிலுள் - 2.சேந்தனார்:2 4/2
TOP
சிந்தையால் (1)
சிந்தையால் நினையில் சிந்தையும் காணேன் செய்வது என் தெளி புனல் அலங்கல் - 3.கருவூர்:3 10/2
TOP
சிந்தையில் (1)
சிந்தையில் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 4/4
TOP
சிந்தையும் (2)
சிந்தையால் நினையில் சிந்தையும் காணேன் செய்வது என் தெளி புனல் அலங்கல் - 3.கருவூர்:3 10/2
சிந்தையும் தானும் கலந்ததோர் கலவி தெரியினும் தெரிவுறா வண்ணம் - 3.கருவூர்:10 5/2
TOP
சிந்தையுள் (5)
நீர் கொள் செம் சடை வாழ் புது மதி மத்தம் நிகழ்ந்த என் சிந்தையுள் நிறைந்தே - 1.திருமாளிகை:2 10/4
நலம் கலந்து அடியேன் சிந்தையுள் புகுந்த நம்பனே வம்பனேனுடைய - 3.கருவூர்:10 9/2
செய்ய பாதம் வந்து என் சிந்தையுள் இடம்கொண்டனவே - 7.திருவாலி:1 1/4
சிலம்பு கிங்கிணி என் சிந்தையுள் இடம்கொண்டனவே - 7.திருவாலி:1 2/4
திரண்ட வான் குறங்கு என் சிந்தையுள் இடம்கொண்டனவே - 7.திருவாலி:1 3/4
TOP
சியர் (1)
சியர் ஒளி மணிகள் நிரந்து சேர் கனகம் நிறைந்த சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 1/3
TOP
சிரம் (2)
சிரம் புரை முடி வானவர் அடி முறையால் இறைஞ்சு சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 3/3
சேதித்தீர் சிரம் நான்முகனை தில்லை - 9.சேதிராயர்:1 6/3
TOP
சில் (1)
சில் ஆண்டில் சிதையும் சில தேவர் சிறுநெறி சேராமே - 10.சேந்தனார்:1 4/2
TOP
சில (2)
திறம்பிய பிறவி சில தெய்வ நெறிக்கே திகைக்கின்றேன்-தனை திகையாமே - 1.திருமாளிகை:1 8/1
சில் ஆண்டில் சிதையும் சில தேவர் சிறுநெறி சேராமே - 10.சேந்தனார்:1 4/2
TOP
சிலந்தியை (1)
சிலந்தியை அரசாள்க என்று அருள்செய்த தேவதேவீசனே - 7.திருவாலி:2 3/2
TOP
சிலம்ப (1)
மழலை யாழ் சிலம்ப வந்து அகம் புகுந்தோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 7/4
TOP
சிலம்பு (7)
உரு வளர் இன்ப சிலம்பு ஒலி அலம்பும் உன் அடி கீழது என் உயிரே - 1.திருமாளிகை:2 2/4
தளிர் ஒளி மணி பூம் பதம் சிலம்பு அலம்ப சடை விரித்து அலை எறி கங்கை - 3.கருவூர்:3 1/1
மண்ணின் நின்று அலறேன் வழி மொழி மாலை மழலை அம் சிலம்பு அடி முடி மேல் - 3.கருவூர்:6 2/2
அங்கை கொண்டு அமரர் மலர் மழை பொழிய அடி சிலம்பு அலம்ப வந்து ஒருநாள் - 3.கருவூர்:6 10/1
நெற்றியில் கண் என் கண்ணின்-நின்று அகலா நெஞ்சினில் அம் சிலம்பு அலைக்கும் - 3.கருவூர்:9 2/1
சிலம்பு கிங்கிணி என் சிந்தையுள் இடம்கொண்டனவே - 7.திருவாலி:1 2/4
வாமத்து எழில் ஆர் எடுத்த பாதம் மழலை சிலம்பு ஆர்க்க - 7.திருவாலி:3 5/3
TOP
சிலம்பும் (3)
சைவம் விட்டிட்ட சடைகளும் சடை மேல் தரங்கமும் சதங்கையும் சிலம்பும்
மொய் கொள் எண் திக்கும் கண்ட நின் தொண்டர் முகம் மலர்ந்து இரு கண் நீர் அரும்ப - 3.கருவூர்:6 4/2,3
யாழ் ஒலி சிலம்பும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 4/4
பாடகமும் நூபுரமும் பல் சிலம்பும் பேர்ந்து ஒலிப்ப - 4.பூந்துருத்தி:2 8/1
TOP
சிலம்பொடு (2)
தன் அக மழலை சிலம்பொடு சதங்கை தமருகம் திருவடி திருநீறு - 3.கருவூர்:3 8/1
பாதுகை மழலை சிலம்பொடு புகுந்து என் பனி மலர் கண்ணுள் நின்று அகலான் - 3.கருவூர்:3 9/2
TOP
சிலை (5)
ஏர் கொள் கற்பகம் ஒத்து இரு சிலை புருவம் பெரும் தடம் கண்கள் மூன்று உடை உன் - 1.திருமாளிகை:2 10/1
சிறவாதவர் புரம் செற்ற கொற்ற சிலை கொண்டு பன்றி பின் சென்று நின்ற - 1.திருமாளிகை:3 1/2
வரிந்த வெம் சிலை கை மைந்தனை அம் சொல் மையல்கொண்டு ஐயுறும் வகையே - 2.சேந்தனார்:3 7/4
செற்று வன் புரம் தீ எழ சிலை கோலி ஆர் அழல் ஊட்டினான் அவன் - 7.திருவாலி:1 9/1
இடிய செம் சிலை கால் வளைத்தீர் என்று - 9.சேதிராயர்:1 7/3
TOP
சிலையால் (1)
சிலையால் புரம் மூன்று எய்த வில்லி செம்பொனின் அம்பலத்து - 5.கண்டராதித்:1 7/3
TOP
சிலையின் (1)
பெரும் புரம் எரிசெய்த சிலையின் வார்த்தை பேசவும் நையும் என் பேதை நெஞ்சம் - 8.புருடோத்தம:1 5/2
TOP
சிலையும் (1)
கடுப்பாய் பறை கறங்க கடு வெம் சிலையும் கணையும் கவணும் கைக்கொண்டு - 1.திருமாளிகை:3 7/1
TOP
சிவபதம் (2)
சீலமா பாடும் அடியவர் எல்லாம் சிவபதம் குறுகி நின்றாரே - 3.கருவூர்:4 10/4
பொருள் மருந்து உடையோர் சிவபதம் என்னும் பொன் நெடும் குன்று உடையோரே - 3.கருவூர்:9 11/4
TOP
சிவபுர (2)
செங்கணா போற்றி திசைமுகா போற்றி சிவபுர நகருள் வீற்றிருந்த - 3.கருவூர்:8 8/1
சித்தனே அருளாய் செங்கணா அருளாய் சிவபுர நகருள் வீற்றிருந்த - 3.கருவூர்:8 9/1
TOP
சிவபுரன் (1)
தரு மனை வளனாம் சிவபுரன் தோழன் தனபதி சாட்டியக்குடியார் - 3.கருவூர்:8 5/3
TOP
சிவபெருமான் (1)
திசை நோக்கி பேழ்கணித்து சிவபெருமான் ஓ எனினும் - 6.வேணாட்டடிகள்:1 3/2
TOP
சிவம் (1)
அ தெய்வ நெறியில் சிவம் அலாது அவமும் அறிவரோ அறிவுடையோரே - 2.சேந்தனார்:1 5/4
TOP
சிவமாய் (1)
சத்தியாய் சிவமாய் உலகு எலாம் படைத்த தனி முழுமுதலுமாய் அதற்கு ஓர் - 4.பூந்துருத்தி:1 2/3
TOP
சிவலோக (3)
வேறாக உள்ளத்து உவகை விளைத்து அவனி சிவலோக வேத வென்றி - 1.திருமாளிகை:3 12/1
தேனே அமுதே என் சித்தமே சிவலோக நாயக செல்வமே - 2.சேந்தனார்:2 9/2
சீரும் திருவும் பொலிய சிவலோக நாயகன் சேவடி கீழ் - 10.சேந்தனார்:1 7/1
TOP
சிவலோகம் (1)
சிவலோகம் ஆவதுவும் தில்லை சிற்றம்பலமே - 4.பூந்துருத்தி:2 6/4
TOP
சிவன் (3)
செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து திளைப்பதும் சிவன் அருள் கடலே - 3.கருவூர்:6 11/4
சிட்டன் சிவன் அடியாரை சீராட்டும் திறங்களுமே சிந்தித்து - 10.சேந்தனார்:1 3/2
சிந்தைசெய்யும் சிவன் சீர் அடியார் அடி நாய் செப்பு உரை - 10.சேந்தனார்:1 13/2
TOP
சிவனே (4)
தனதன் நல் தோழா சங்கரா சூலபாணியே தாணுவே சிவனே
கனக நல் தூணே கற்பக கொழுந்தே கண்கள் மூன்று உடையதோர் கரும்பே - 1.திருமாளிகை:1 7/1,2
சே ஏந்து வெல் கொடியானே என்னும் சிவனே என் சேம துணையே என்னும் - 1.திருமாளிகை:3 8/1
சம்புவே அணுவே தாணுவே சிவனே சங்கரா சாட்டியக்குடியார்க்கு - 3.கருவூர்:8 7/3
சீர் இயல் தில்லையாய் சிவனே என்று - 9.சேதிராயர்:1 3/3
TOP
சிவனை (1)
செற்றவர் புரங்கள் செற்ற எம் சிவனை திருவீழிமிழலை வீற்றிருந்த - 2.சேந்தனார்:1 2/3
TOP
சிவிகையா (1)
போக நாயகனை புயல்_வணற்கு அருளி பொன் நெடும் சிவிகையா ஊர்ந்த - 2.சேந்தனார்:1 1/2
TOP
சிற்றம்பல (11)
சியர் ஒளி மணிகள் நிரந்து சேர் கனகம் நிறைந்த சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 1/3
திரு வளர் தெய்வ பதி விதி நிதியம் திரண்ட சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 2/3
சிரம் புரை முடி வானவர் அடி முறையால் இறைஞ்சு சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 3/3
சீர் நிலவு இலய திரு நடத்து இயல்பில் திகழ்ந்த சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 4/3
சிறைகொள் நீர் தரள திரள் கொள் நித்திலத்த செம்பொன் சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 5/3
செது மதி சமணும் தேரரும் சேரா செல்வ சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 6/3
திரு மருவு தரத்தார் திசை அடைப்ப நடம்செய் சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 7/3
திணி மணி நீல கண்டத்து என் அமுதே சீர் கொள் சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 8/3
செரு நெடு மேரு வில்லின் முப்புரம் தீ விரித்த சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 9/3
சீர் கொள் கொக்கிறகும் கொன்றையும் துன்று சென்னி சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 10/3
சேம நல் தில்லை வட்டம் கொண்டு ஆண்ட செல்வ சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 11/3
TOP
சிற்றம்பலத்தான்-தன் (1)
சேடர் உறை தில்லை சிற்றம்பலத்தான்-தன்
ஆடல் அதிசயத்தை ஆங்கு அறிந்து பூந்துருத்தி - 4.பூந்துருத்தி:2 10/1,2
TOP
சிற்றம்பலத்தானை (1)
தேன் ஆர் பொழில் சூழ் தில்லை மல்கு சிற்றம்பலத்தானை
தூ நான்மறையான் அமுத வாலி சொன்ன தமிழ் மாலை - 7.திருவாலி:3 11/2,3
TOP
சிற்றம்பலத்து (3)
சேல் உகளும் வயல் சூழ் தில்லை மா நகர் சிற்றம்பலத்து
ஏல் உடை எம் இறையை என்று-கொல் காண்பதுவே - 7.திருவாலி:4 1/3,4
சீர் வங்கம் வந்து அணவும் தில்லை மா நகர் சிற்றம்பலத்து
ஏர்வு அம் கை மான் மறியன் எம்பிரான் போல் நேசனையே - 7.திருவாலி:4 8/3,4
தேசம் மிகு புகழோர் தில்லை மா நகர் சிற்றம்பலத்து
ஈசனை எவ்வுயிர்க்கும் எம் இறைவன் என்று ஏத்துவனே - 7.திருவாலி:4 9/3,4
TOP
சிற்றம்பலத்துள் (1)
தெள்ளிய தண் பொழில் சூழ் தில்லை மா நகர் சிற்றம்பலத்துள்
எரி ஆடுகின்ற ஒருவனை உணர்வு அரிதே - 7.திருவாலி:4 3/3,4
TOP
சிற்றம்பலத்தை (1)
மறை வல நாவலர்கள் மகிழ்ந்து ஏத்து சிற்றம்பலத்தை
அறை செந்நெல் வான் கரும்பின் அணி ஆலைகள் சூழ் மயிலை - 7.திருவாலி:4 10/2,3
TOP
சிற்றம்பலம் (2)
சேண் பணை மாளிகை சூழ் தில்லை மா நகர் சிற்றம்பலம்
மாண்பு உடை மா நடம்செய் மறையோன் மலர் பாதங்களே - 7.திருவாலி:4 2/3,4
சிறை அணி வண்டு அறையும் தில்லை மா நகர் சிற்றம்பலம்
நிறை அணியாம் இறையை நினைத்தேன் இனி போக்குவனே - 7.திருவாலி:4 5/3,4
TOP
சிற்றம்பலம்-தன்னுள் (8)
தென்னன் தமிழும் இசையும் கலந்த சிற்றம்பலம்-தன்னுள்
பொன்னும் மணியும் நிரந்த தலத்து புலித்தோல் பியற்கு இட்டு - 7.திருவாலி:3 2/2,3
திளையும் மாட திரு ஆர் தில்லை சிற்றம்பலம்-தன்னுள்
வளர் பொன் மலையுள் வயிர மலை போல் வலக்கை கவித்து நின்று - 7.திருவாலி:3 3/2,3
சிந்திப்பு அரிய தெய்வ பதியுள் சிற்றம்பலம்-தன்னுள்
நந்தி முழவம் கொட்ட நட்டம் நாதன் ஆடுமே - 7.திருவாலி:3 4/3,4
தீ மெய் தொழில் ஆர் மறையோர் மல்கு சிற்றம்பலம்-தன்னுள்
வாமத்து எழில் ஆர் எடுத்த பாதம் மழலை சிலம்பு ஆர்க்க - 7.திருவாலி:3 5/2,3
திரை வந்து உலவும் தில்லை மல்கு சிற்றம்பலம்-தன்னுள்
வரை போல் மலிந்த மணி மண்டபத்து மறையோர் மகிழ்ந்து ஏத்த - 7.திருவாலி:3 6/2,3
துதித்து மறையோர் வணங்கும் தில்லை சிற்றம்பலம்-தன்னுள்
உதித்த போழ்தில் இரவி கதிர் போல் ஒளிர் மா மணி எங்கும் - 7.திருவாலி:3 8/2,3
சேல் ஆடும் வயல் தில்லை மல்கு சிற்றம்பலம்-தன்னுள்
பால் ஆடும் முடி சடைகள் தாழ பரமன் ஆடுமே - 7.திருவாலி:3 9/3,4
செடி உந்து அவத்தோர் அடையா தில்லை சிற்றம்பலம்-தன்னுள்
அடிகள் அவரை ஆரூர் நம்பி அவர்கள் இசை பாட - 7.திருவாலி:3 10/2,3
TOP
சிற்றம்பலமே (4)
செல்வம் நிறைந்த சிற்றம்பலமே சேர்ந்தனையே - 4.பூந்துருத்தி:2 3/4
சிவலோகம் ஆவதுவும் தில்லை சிற்றம்பலமே - 4.பூந்துருத்தி:2 6/4
தெளிகொண்ட தில்லை சிற்றம்பலமே சேர்ந்தனையே - 4.பூந்துருத்தி:2 7/4
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற சிற்றம்பலமே இடமாக - 10.சேந்தனார்:1 9/3
TOP
சிற்றம்பலவர் (10)
தேன் நல் வரி வண்டு அறையும் தில்லை சிற்றம்பலவர்
நான் நமரோ என்னாதே நாடகமே ஆடுவரே - 8.புருடோத்தம:2 1/3,4
தேடி இமையோர் பரவும் தில்லை சிற்றம்பலவர்
ஆடி வரும் போது அருகே நிற்கவுமே ஒட்டாரே - 8.புருடோத்தம:2 2/3,4
சிட்டார் மறை ஓவா தில்லை சிற்றம்பலவர்
கொட்டு ஆம் நடம் ஆட கோல் வளைகள் கொள்வாரே - 8.புருடோத்தம:2 3/3,4
தேர் ஆர் விழவு ஓவா தில்லை சிற்றம்பலவர்
தீரா நோய் செய்வாரை ஒக்கின்றார் காணீரே - 8.புருடோத்தம:2 4/3,4
சேண் ஆர் மணி மாட தில்லை சிற்றம்பலவர்
பூண் ஆர் வன முலை மேல் பூ அம்பால் காமவேள் - 8.புருடோத்தம:2 5/2,3
தேய் மதியம் சூடிய தில்லை சிற்றம்பலவர்
வாயின கேட்டு அறிவார் வையகத்தார் ஆவாரே - 8.புருடோத்தம:2 6/3,4
தே ஆம் மறை பயிலும் தில்லை சிற்றம்பலவர்
கோவாய் இன வளைகள் கொள்வாரோ என்னையே - 8.புருடோத்தம:2 7/3,4
செந்நெல் விளை கழனி தில்லை சிற்றம்பலவர்
முன்னம் தான் கண்டறிவார் ஒவ்வார் இ முத்தரே - 8.புருடோத்தம:2 8/3,4
சித்தர் கணம் பயிலும் தில்லை சிற்றம்பலவர்
கைத்தலங்கள் வீசி நின்று ஆடுங்கால் நோக்காரே - 8.புருடோத்தம:2 9/3,4
சே காதலித்து ஏறும் தில்லை சிற்றம்பலவர்
ஊர்க்கே வந்து என் வளைகள் கொள்வாரோ ஒள்_நுதலீர் - 8.புருடோத்தம:2 10/3,4
TOP
சிற்றம்பலவன் (5)
திரண்ட தில்லை-தன்னுள் திரு மல்கு சிற்றம்பலவன்
மருண்டு மா மலையான் மகள் தொழ ஆடும் கூத்தன் மணி புரைதரு - 7.திருவாலி:1 3/2,3
தாழ்ந்த தண் புனல் சூழ் தடம் மல்கு சிற்றம்பலவன்
சூழ்ந்த பாய் புலித்தோல் மிசை தொடுத்து வீக்கும் பொன் நூல்-தன்னினொடு - 7.திருவாலி:1 4/2,3
மதுர வாய்மொழியார் மகிழ்ந்து ஏத்து சிற்றம்பலவன்
அதிர வார் கழல் வீசி நின்று அழகா நடம் பயில் கூத்தன் மேல் திகழ் - 7.திருவாலி:1 6/2,3
தடம் கையால் தொழவும் தழல் ஆடு சிற்றம்பலவன்
தடம் கை நான்கும் அ தோள்களும் தட மார்பினில் பூண்கள் மேற்று இசை - 7.திருவாலி:1 7/2,3
வையம் உய்ய நின்று மகிழ்ந்து ஆடு சிற்றம்பலவன்
செய்ய வாயின் முறுவலும் திகழும் திரு காதும் காதினின் மாத்திரைகளோடு - 7.திருவாலி:1 8/2,3
TOP
சிறப்பு (1)
சிறப்பு உடை அடியார் தில்லை செம்பொன் அம்பலவற்கு ஆள் ஆம் - 1.திருமாளிகை:4 11/1
TOP
சிறவாதவர் (1)
சிறவாதவர் புரம் செற்ற கொற்ற சிலை கொண்டு பன்றி பின் சென்று நின்ற - 1.திருமாளிகை:3 1/2
TOP
சிறிய (1)
அன்னமாய் விசும்பு பறந்து அயன் தேட அங்ஙனே பெரிய நீ சிறிய
என்னை ஆள் விரும்பி என் மனம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன் - 3.கருவூர்:6 1/1,2
TOP
சிறியனுக்கு (1)
திருவருள் புரிந்து ஆள் ஆண்டுகொண்டு இங்ஙன் சிறியனுக்கு இனியது காட்டி - 3.கருவூர்:7 1/1
TOP
சிறுகதலி (1)
கைச்சாலும் சிறுகதலி இலை வேம்பும் கறிகொள்வார் - 6.வேணாட்டடிகள்:1 1/2
TOP
சிறுநெறி (1)
சில் ஆண்டில் சிதையும் சில தேவர் சிறுநெறி சேராமே - 10.சேந்தனார்:1 4/2
TOP
சிறுமிக்கு (1)
முளை இளம் களிறு என் மொய் குழல் சிறுமிக்கு அருளும்-கொல் முருகவேள் பரிந்தே - 2.சேந்தனார்:3 6/4
TOP
சிறுமை (3)
பெருமையில் சிறுமை பெண்ணொடு ஆணாய் என் பிறப்பு இறப்பு அறுத்த பேரொளியே - 1.திருமாளிகை:1 4/1
போர்த்த தம் பெருமை சிறுமை புக்கு ஒடுங்கும் புணர்ப்பு உடை அடிகள்-தம் கோயில் - 3.கருவூர்:1 8/2
அண்டம் ஓர் அணுவாம் பெருமை கொண்டு அணு ஓர் அண்டமாம் சிறுமை கொண்டு அடியேன் - 3.கருவூர்:6 6/1
TOP
சிறுமையில் (1)
அறை கழல் அரன் சீர் அறிவிலா வெறுமை சிறுமையில் பொறுக்கும் அம்பலத்துள் - 1.திருமாளிகை:1 11/3
TOP
சிறுவன் (1)
கண மணி பொரு நீர் கங்கை-தன் சிறுவன் கணபதி பின் இளங்கிளையே - 2.சேந்தனார்:3 5/4
TOP
சிறை (2)
சிறை அணி வண்டு அறையும் தில்லை மா நகர் சிற்றம்பலம் - 7.திருவாலி:4 5/3
சிறை வண்டு ஆர் பொழில் தில்லை_உளீர் எனும் - 9.சேதிராயர்:1 8/3
TOP
சிறைகொள் (1)
சிறைகொள் நீர் தரள திரள் கொள் நித்திலத்த செம்பொன் சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 5/3
TOP
சின (1)
காய் சின மால் விடை ஊர் கண்_நுதலை காமரு சீர் - 7.திருவாலி:4 9/2
TOP
சினத்தொடு (1)
சினத்தொடு வந்து எறியும் தில்லை மா நகர் கூத்தனையே - 7.திருவாலி:4 6/4
TOP
| |
|