|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
கங்கணம் (1)
கணி எரி விசிறு கரம் துடி விட வாய் கங்கணம் செம் கை மற்று அபயம் - 1.திருமாளிகை:2 8/1
TOP
கங்குல் (1)
செழும் தென்றல் அன்றில் இ திங்கள் கங்குல் திரை வீரை தீம் குழல் சேவின் மணி - 1.திருமாளிகை:3 5/1
TOP
கங்குல்-வாய் (1)
காழ் அகில் கமழும் மாளிகை மகளிர் கங்குல்-வாய் அங்குலி கெழும - 3.கருவூர்:9 4/3
TOP
கங்கை (10)
காலமே கங்கை நாயகா எங்கள் காலகாலா காம நாசா - 1.திருமாளிகை:1 5/2
கங்கை நீர் அரிசில் கரை இரு மருங்கும் கமழ் பொழில் தழுவிய கழனி - 2.சேந்தனார்:1 7/1
பாய் இரும் கங்கை பனி நிலா கரந்த படர் சடை மின்னு பொன் முடியோன் - 2.சேந்தனார்:1 8/2
நினைக்கும் நிரந்தரனே என்னும் நிலா கோல செம் சடை கங்கை நீர் - 2.சேந்தனார்:2 3/1
குழையராய் வந்து என் குடி முழுது ஆளும் குழகரே ஒழுகு நீர் கங்கை
அழகரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே - 3.கருவூர்:2 4/3,4
தளிர் ஒளி மணி பூம் பதம் சிலம்பு அலம்ப சடை விரித்து அலை எறி கங்கை
தெளிர் ஒளி மணி நீர் திவலை முத்து அரும்பி திருமுகம் மலர்ந்து சொட்டு அட்ட - 3.கருவூர்:3 1/1,2
இன் நகை மழலை கங்கை கொங்கு இதழி இளம் பிறை குழை வளர் இள மான் - 3.கருவூர்:3 8/2
கங்கை கொண்டு இருந்த கடவுளே கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 10/4
தக்க சீர் கங்கை அளவும் அன்று என்னோ தம் ஒருப்பாடு உலகதன் மேல் - 4.பூந்துருத்தி:1 1/3
களி வான் உலகில் கங்கை நங்கை காதலனே அருள் என்று - 5.கண்டராதித்:1 5/1
TOP
கங்கை-தன் (1)
கண மணி பொரு நீர் கங்கை-தன் சிறுவன் கணபதி பின் இளங்கிளையே - 2.சேந்தனார்:3 5/4
TOP
கங்கைகொண்டசோளேச்சரத்தானே (10)
கன்னலே தேனே அமுதமே கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 1/4
கண்ணின்-நின்று அகலான் என்-கொலோ கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 2/4
கற்பக பொழிலும் முழுதும் ஆம் கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 3/4
கைகள் மொட்டிக்கும் என்-கொலோ கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 4/4
கருதுவார் கருதும் உருவமாம் கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 5/4
கண்டனே நீல கண்டனே கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 6/4
காதலில் பட்ட கருணையாய் கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 7/4
கைத்தலம் அடியேன் சென்னி மேல் வைத்த கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 8/4
கண்ணினுள் மணியின் கலந்தனை கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 9/4
கங்கை கொண்டு இருந்த கடவுளே கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 10/4
TOP
கங்கைகொண்டசோளேச்சரத்தானை (1)
கங்கையோடு அணியும் கடவுளை கங்கைகொண்டசோளேச்சரத்தானை
அங்கையோடு ஏந்தி பலி திரி கருவூர் அறைந்த சொல் மாலையால் ஆழி - 3.கருவூர்:6 11/2,3
TOP
கங்கையை (1)
திரளும் நீள் மணி கங்கையை திருச்சடை சேர்த்தி அ செய்யாளுக்கு - 7.திருவாலி:2 4/3
TOP
கங்கையோடு (1)
கங்கையோடு அணியும் கடவுளை கங்கைகொண்டசோளேச்சரத்தானை - 3.கருவூர்:6 11/2
TOP
கச்சது (1)
தாழ்ந்த கச்சது அன்றே தமியேனை தளர்வித்ததே - 7.திருவாலி:1 4/4
TOP
கச்சரை (1)
கச்சரை கல்லா பொல்லா கயவரை பசு நூல் கற்கும் - 1.திருமாளிகை:4 9/3
TOP
கச்சு (1)
பொறை அணி நிதம்ப புலி அதள் ஆடை கச்சு நூல் புகுந்தது என் புகலே - 1.திருமாளிகை:2 5/4
TOP
கசிந்து (1)
ஊழிதோறூழி உணர்ந்து உளம் கசிந்து நெக்கு நைந்து உளம் கரைந்து உருக்கும் - 3.கருவூர்:3 5/2
TOP
கசிவிலேன் (1)
கல் நகா உள்ள கள்வனேன் நின்-கண் கசிவிலேன் கண்ணின் நீர் சொரியேன் - 3.கருவூர்:4 3/1
TOP
கட்டி (2)
கரியும் நீறு ஆடும் கனலும் ஒத்து ஒளிரும் கழுத்தில் ஓர் தனி வடம் கட்டி
முரியுமாறு எல்லாம் முரிந்து அழகியையாய் முகத்தலை அகத்து அமர்ந்தாயை - 3.கருவூர்:4 7/2,3
கைக்கு வால் முத்தின் சரி வளை பெய்து கழுத்தில் ஓர் தனி வடம் கட்டி
முக்கண் நாயகராய் பவனி போந்து இங்ஙன் முரிவது ஓர் முரிவு உமை அளவும் - 4.பூந்துருத்தி:1 1/1,2
TOP
கட்டிய (1)
கரை கடல் ஒலியின் தமருகத்து அரையில் கையினில் கட்டிய கயிற்றால் - 3.கருவூர்:7 3/1
TOP
கட்டியர் (1)
கனியர் அ தரு தீம் கரும்பர் வெண் புரிநூல் கட்டியர் அட்ட ஆரமிர்தர் - 3.கருவூர்:9 10/2
TOP
கடந்த (1)
அண்டம் கடந்த பொருள் அளவில்லதோர் ஆனந்த வெள்ள பொருள் - 10.சேந்தனார்:1 2/3
TOP
கடந்ததோர் (1)
ஒளி வளர் விளக்கே உலப்பு இலா ஒன்றே உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே - 1.திருமாளிகை:1 1/1
TOP
கடந்தனள் (1)
என்று ஏங்கிஏங்கி அழைக்கின்றாள் இள_வல்லி எல்லை கடந்தனள்
அன்றே அலம்பு புனல் பொன்னி அணி ஆவடுதுறை ஆடினாள் - 2.சேந்தனார்:2 10/2,3
TOP
கடந்தானுக்கே (1)
பல்லாண்டு என்னும் பதம் கடந்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 4/4
TOP
கடந்து (1)
கடு வினை பாச கடல் கடந்து ஐவர் கள்ளரை மெள்ளவே துரந்து உன் - 3.கருவூர்:7 5/1
TOP
கடல் (8)
பேரொலி பரந்து கடல் ஒலி மலிய பொலிதரு பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 4/2
ஆர்த்து வந்து அமரித்து அமரரும் பிறரும் அலை கடல் இடு திரை புனித - 3.கருவூர்:1 8/3
அலை கடல் முழங்கும் அம் தண் நீர் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே - 3.கருவூர்:2 1/4
மோது அலைப்பட்ட கடல் வயிறு உதித்த முழு மணி திரள் அமுது ஆங்கே - 3.கருவூர்:6 7/1
கரை கடல் ஒலியின் தமருகத்து அரையில் கையினில் கட்டிய கயிற்றால் - 3.கருவூர்:7 3/1
கடு வினை பாச கடல் கடந்து ஐவர் கள்ளரை மெள்ளவே துரந்து உன் - 3.கருவூர்:7 5/1
ஒக்க ஓட்டந்த அந்தியும் மதியமும் அலை கடல் ஒலியோடு - 7.திருவாலி:2 2/1
கரந்தும் கரவாத கற்பகன் ஆகி கரை_இல் கருணை கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பு இலா பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 5/3,4
TOP
கடலின் (1)
உவரி மா கடலின் ஒலிசெய் மா மறுகில் உறு களிற்று அரசின தீட்டம் - 3.கருவூர்:9 5/3
TOP
கடலுள் (1)
மின் நெடும் கடலுள் வெள்ளத்தை வீழிமிழலையுள் விளங்கு வெண் பளிங்கின் - 2.சேந்தனார்:1 4/3
TOP
கடலே (1)
செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து திளைப்பதும் சிவன் அருள் கடலே - 3.கருவூர்:6 11/4
TOP
கடலை (1)
கற்றவர் விழுங்கும் கற்பக கனியை கரையிலா கருணை மா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையை மதிப்பவர் மன மணி விளக்கை - 2.சேந்தனார்:1 2/1,2
TOP
கடவுளே (1)
கங்கை கொண்டு இருந்த கடவுளே கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 10/4
TOP
கடவுளை (1)
கங்கையோடு அணியும் கடவுளை கங்கைகொண்டசோளேச்சரத்தானை - 3.கருவூர்:6 11/2
TOP
கடா (1)
மை கடா அனைய என்னை ஆள் விரும்பி மற்றொரு பிறவியில் பிறந்து - 3.கருவூர்:2 7/2
TOP
கடி (4)
கண்டார் கவல வில் ஆடி வேடர் கடி நாயுடன் கை வளைந்தாய் என்னும் - 1.திருமாளிகை:3 6/2
கதி எலாம் அரங்கம் பிணையல் மூவுலகில் கடி இருள் திருநடம் புரியும் - 3.கருவூர்:8 4/2
கடி ஆர் கணம்புல்லர் கண்ணப்பர் என்று உன் - 4.பூந்துருத்தி:2 2/1
கடி ஆர் கொன்றை மாலையானை காண்பதும் என்று-கொலோ - 5.கண்டராதித்:1 9/4
TOP
கடு (2)
கடுப்பாய் பறை கறங்க கடு வெம் சிலையும் கணையும் கவணும் கைக்கொண்டு - 1.திருமாளிகை:3 7/1
கடு வினை பாச கடல் கடந்து ஐவர் கள்ளரை மெள்ளவே துரந்து உன் - 3.கருவூர்:7 5/1
TOP
கடுப்பாய் (1)
கடுப்பாய் பறை கறங்க கடு வெம் சிலையும் கணையும் கவணும் கைக்கொண்டு - 1.திருமாளிகை:3 7/1
TOP
கடும்பின் (1)
காடு ஆடு பல் கணம் சூழ கேழல் கடும்பின் நெடும் பகல் கான் நடந்த - 1.திருமாளிகை:3 2/1
TOP
கடைக்கணித்தவன் (1)
காமன் அ காலன் தக்கன் மிக்க எச்சன் பட கடைக்கணித்தவன் அல்லா - 1.திருமாளிகை:2 11/1
TOP
கடைசியர் (1)
கைவரும் பழனம் குழைத்த செம் சாலி கடைசியர் களை தரு நீலம் - 3.கருவூர்:1 2/3
TOP
கண் (37)
பண்டு ஆய மலர் அயன் தக்கன் எச்சன் பகலோன் தலை பல் பசும் கண்
கொண்டாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 6/3,4
பிணங்களை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 1/4
பிட்டரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 2/4
பிரட்டரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 3/4
பிணுக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 4/4
பிசுக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 5/4
பேடரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 6/4
பெருக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 7/4
பொக்கரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 8/4
பிச்சரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 9/4
பெண்ணரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 10/4
பிறப்பரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 11/4
கொற்றவன்-தன்னை கண்டுகண்டு உள்ளம் குளிர என் கண் குளிர்ந்தனவே - 2.சேந்தனார்:1 2/4
மை ஆர் தடம் கண் மடந்தைக்கு ஒன்று அருளாது ஒழிவது மாதிமையே - 2.சேந்தனார்:2 1/4
வேந்தன் வளைத்தது மேரு வில் அரவு நாண் வெம் கணை செம் கண் மால் - 2.சேந்தனார்:2 6/1
குவளை மா மலர் கண் நங்கையாள் நயக்கும் குழகன் நல் அழகன் நம் கோவே - 2.சேந்தனார்:3 2/4
கணம் விரி குடுமி செம் மணி கவை நா கறை அணல் கண் செவி பகு வாய் - 3.கருவூர்:1 1/1
கண் பனி அரும்ப கைகள் மொட்டித்து என் களைகணே ஓலம் என்று ஓலிட்டு - 3.கருவூர்:1 5/1
இரும் திரை தரள பரவை சூழ் அகலத்து எண்_இல் அம் கண் இல் புன் மாக்கள் - 3.கருவூர்:1 11/1
கண்டமும் குழையும் பவள வாய் இதழும் கண் நுதல் திலகமும் காட்டி - 3.கருவூர்:3 2/2
கை ஆர தொழுது அருவி கண் ஆர சொரிந்தாலும் - 3.கருவூர்:5 2/3
துஞ்சா கண் இவளுடைய துயர் தீரும் ஆறு உரையாய் - 3.கருவூர்:5 7/3
மொய் கொள் எண் திக்கும் கண்ட நின் தொண்டர் முகம் மலர்ந்து இரு கண் நீர் அரும்ப - 3.கருவூர்:6 4/3
இரு தலை ஒரு நா இயங்க வந்து ஒருநாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே - 3.கருவூர்:7 3/2
கண் இயல் மணியின் சூழல் புக்கு அங்கே கலந்து புக்கு ஒடுங்கினேற்கு அங்ஙன் - 3.கருவூர்:7 4/1
கல் நவில் மனத்து என் கண் வலை படும் இ கருணையில் பெரியது ஒன்று உளதே - 3.கருவூர்:7 7/2
வார்ந்த கண் அருவி மஞ்சனசாலை மலை_மகள் மகிழ் பெருந்தேவி - 3.கருவூர்:8 2/2
நெற்றியில் கண் என் கண்ணின்-நின்று அகலா நெஞ்சினில் அம் சிலம்பு அலைக்கும் - 3.கருவூர்:9 2/1
கரும் கண் நின்று இமைக்கும் செழும் சுடர் விளக்கம் கலந்து என கலந்து உணர் கருவூர் - 3.கருவூர்:10 10/2
ஆயாத சமயங்கள் அவரவர் கண் முன்பு என்னை - 6.வேணாட்டடிகள்:1 4/1
கண் ஆவாய் கண் ஆகாது ஒழிதலும் நான் மிக கலங்கி - 6.வேணாட்டடிகள்:1 7/2
கண் ஆவாய் கண் ஆகாது ஒழிதலும் நான் மிக கலங்கி - 6.வேணாட்டடிகள்:1 7/2
கோல மலர் நெடும் கண் கொவ்வை வாய் கொடி ஏர் இடையீர் - 7.திருவாலி:4 1/1
காய் சின மால் விடை ஊர் கண்_நுதலை காமரு சீர் - 7.திருவாலி:4 9/2
கண்_நுதலான்-தன்னை புருடோத்தமன் சொன்ன - 8.புருடோத்தம:2 11/2
சேவிக்க வந்து அயன் இந்திரன் செம் கண் மால் எங்கும் திசைதிசையன - 10.சேந்தனார்:1 6/1
சேலும் கயலும் திளைக்கும் கண் ஆர் இளம் கொங்கையில் செம் குங்குமம் - 10.சேந்தனார்:1 8/1
TOP
கண்_நுதலான்-தன்னை (1)
கண்_நுதலான்-தன்னை புருடோத்தமன் சொன்ன - 8.புருடோத்தம:2 11/2
TOP
கண்_நுதலை (1)
காய் சின மால் விடை ஊர் கண்_நுதலை காமரு சீர் - 7.திருவாலி:4 9/2
TOP
கண்கள் (4)
கனக நல் தூணே கற்பக கொழுந்தே கண்கள் மூன்று உடையதோர் கரும்பே - 1.திருமாளிகை:1 7/2
ஏர் கொள் கற்பகம் ஒத்து இரு சிலை புருவம் பெரும் தடம் கண்கள் மூன்று உடை உன் - 1.திருமாளிகை:2 10/1
மெள்ளவே அவன் பேர் விளம்பும் வாய் கண்கள் விமானமே நோக்கி வெவ் உயிர்க்கும் - 3.கருவூர்:3 4/2
செழும் தட மலர் புரை கண்கள் மூன்றும் செம் கனி வாயும் என் சிந்தை வௌவ - 8.புருடோத்தம:1 4/3
TOP
கண்ட (4)
தத் பரம் பொருளே சசி கண்ட சிகண்டா சாம கண்டா அண்டவாணா - 1.திருமாளிகை:1 3/1
மொய் கொள் எண் திக்கும் கண்ட நின் தொண்டர் முகம் மலர்ந்து இரு கண் நீர் அரும்ப - 3.கருவூர்:6 4/3
கள் அவிழ் தாமரை மேல் கண்ட அயனோடு மால் பணிய - 7.திருவாலி:4 3/1
கரும் தட மலர் புரை கண்ட வண் தார் காரிகையார் முன்பு என் பெண்மை தோற்றேன் - 8.புருடோத்தம:1 5/3
TOP
கண்டத்து (7)
விடம் கொள் கண்டத்து எம் விடங்கனே உன்னை தொண்டனேன் விரும்புமா விரும்பே - 1.திருமாளிகை:1 10/4
திணி மணி நீல கண்டத்து என் அமுதே சீர் கொள் சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 8/3
இருள் திரள் கண்டத்து எம்மான் இன்பருக்கு அன்புசெய்யா - 1.திருமாளிகை:4 3/2
கொண்டல் அம் கண்டத்து எம் குரு மணியை குறுக வல்வினை குறுகாவே - 2.சேந்தனார்:1 3/4
மைய செம் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 1/4
மை அவாம் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 8/4
வரும் கரும் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 10/4
TOP
கண்டம் (3)
நீலமே கண்டம் பவளமே திருவாய் நித்திலம் நிரைத்து இலங்கினவே - 3.கருவூர்:2 6/1
சரியுமா சுழியம் குழை மிளிர்ந்து இரு பால் தாழ்ந்தவா காதுகள் கண்டம்
கரியவா தாமும் செய்ய வாய் முறுவல் காட்டுமா சாட்டியக்குடியார் - 3.கருவூர்:8 1/2,3
விடம் கொள் கண்டம் அன்றே வினையேனை மெலிவித்தவே - 7.திருவாலி:1 7/4
TOP
கண்டமும் (1)
கண்டமும் குழையும் பவள வாய் இதழும் கண் நுதல் திலகமும் காட்டி - 3.கருவூர்:3 2/2
TOP
கண்டராதித்தன் (1)
ஆரா இன் சொல் கண்டராதித்தன் அரும் தமிழ் மாலை வல்லார் - 5.கண்டராதித்:1 10/3
TOP
கண்டவர் (1)
கோலமே அச்சோ அழகிதே என்று குழைவரே கண்டவர் உண்ட - 3.கருவூர்:2 6/3
TOP
கண்டவன் (1)
போழ்ந்து யானை-தன்னை பொருப்பன் மகள் உமை அச்சம் கண்டவன்
தாழ்ந்த தண் புனல் சூழ் தடம் மல்கு சிற்றம்பலவன் - 7.திருவாலி:1 4/1,2
TOP
கண்டறிவார் (1)
முன்னம் தான் கண்டறிவார் ஒவ்வார் இ முத்தரே - 8.புருடோத்தம:2 8/4
TOP
கண்டன் (1)
கையன் கார் புரையும் கறை கண்டன் கனல் மழுவான் - 7.திருவாலி:1 1/2
TOP
கண்டனாரை (1)
கார் ஆர் மிடற்று எம் கண்டனாரை காண்பதும் என்று-கொலோ - 5.கண்டராதித்:1 6/4
TOP
கண்டனே (2)
கண்டனே நீல கண்டனே கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 6/4
கண்டனே நீல கண்டனே கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 6/4
TOP
கண்டா (1)
தத் பரம் பொருளே சசி கண்ட சிகண்டா சாம கண்டா அண்டவாணா - 1.திருமாளிகை:1 3/1
TOP
கண்டாயை (1)
புறம் சமண் புத்தர் பொய்கள் கண்டாயை தொண்டனேன் புணருமா புணரே - 1.திருமாளிகை:1 8/4
TOP
கண்டார் (1)
கண்டார் கவல வில் ஆடி வேடர் கடி நாயுடன் கை வளைந்தாய் என்னும் - 1.திருமாளிகை:3 6/2
TOP
கண்டிட (1)
பத்தியால் சென்று கண்டிட என் மனம் பதைபதைப்பு ஒழியாதே - 7.திருவாலி:2 5/4
TOP
கண்டு (7)
அறம் பல திறம் கண்டு அரும் தவர்க்கு அரசாய் ஆலின் கீழ் இருந்த அம்பலவா - 1.திருமாளிகை:1 8/3
பிணி கெட இவை கண்டு உன் பெரு நடத்தில் பிரிவிலார் பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 8/2
வரு திறல் மணி அம்பலவனை கண்டு என் மனத்தையும் கொண்டு போது-மினே - 3.கருவூர்:3 3/4
அஞ்சலோ என்னான் ஆழியும் திரையும் அலமருமாறு கண்டு அயர்வன் - 3.கருவூர்:3 6/2
இருந்த பரிசு ஒருநாள் கண்டு இரங்காய் எம்பெருமானே - 3.கருவூர்:5 10/2
இரு கை கூம்பின கண்டு அலர்ந்தவா முகம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே - 3.கருவூர்:8 1/4
மாசிலா மறை பல ஓது நாவன் வண் புருடோத்தமன் கண்டு உரைத்த - 8.புருடோத்தம:1 11/3
TOP
கண்டுகண்டு (1)
கொற்றவன்-தன்னை கண்டுகண்டு உள்ளம் குளிர என் கண் குளிர்ந்தனவே - 2.சேந்தனார்:1 2/4
TOP
கண்டும் (1)
ஆண் ஆடுகின்றவா கண்டும் அருளாரே - 8.புருடோத்தம:2 5/4
TOP
கண்டே (1)
பாய் இரும் புலி அதளின் உடையும் பைய மேல் எடுத்த பொன் பாதமும் கண்டே
இவள் இழந்தது சங்கம் ஆஆ எங்களை ஆளுடை ஈசனேயோ - 8.புருடோத்தம:1 8/3,4
TOP
கண்டேன் (1)
சூடி வருமா கண்டேன் தோள் வளைகள் தோற்றாலும் - 8.புருடோத்தம:2 2/2
TOP
கண்ணப்பர் (1)
கடி ஆர் கணம்புல்லர் கண்ணப்பர் என்று உன் - 4.பூந்துருத்தி:2 2/1
TOP
கண்ணாளும் (1)
அம்பு உந்து கண்ணாளும் தானும் அணி தில்லை - 4.பூந்துருத்தி:2 4/3
TOP
கண்ணிமார்கள் (1)
செங்கயல் புரை கண்ணிமார்கள் முன்னே திருச்சிற்றம்பலமுடனே புகுந்து - 8.புருடோத்தம:1 9/3
TOP
கண்ணியும் (1)
குவளை மா மலர் கண்ணியும் கொன்றையும் துன்று பொன் குழல் திரு சடையும் - 7.திருவாலி:2 1/2
TOP
கண்ணில் (1)
மலங்கல் அம் கண்ணில் கண்மணி_அனையான் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 9/4
TOP
கண்ணின் (2)
கல் நகா உள்ள கள்வனேன் நின்-கண் கசிவிலேன் கண்ணின் நீர் சொரியேன் - 3.கருவூர்:4 3/1
ஒருங்கு இரு கண்ணின் எண்_இல் புன் மாக்கள் உறங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் - 3.கருவூர்:10 10/1
TOP
கண்ணின்-நின்று (2)
கண்ணின்-நின்று அகலான் என்-கொலோ கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 2/4
நெற்றியில் கண் என் கண்ணின்-நின்று அகலா நெஞ்சினில் அம் சிலம்பு அலைக்கும் - 3.கருவூர்:9 2/1
TOP
கண்ணினுள் (1)
கண்ணினுள் மணியின் கலந்தனை கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 9/4
TOP
கண்ணுள் (1)
பாதுகை மழலை சிலம்பொடு புகுந்து என் பனி மலர் கண்ணுள் நின்று அகலான் - 3.கருவூர்:3 9/2
TOP
கண்மணி (1)
மலங்கல் அம் கண்ணில் கண்மணி_அனையான் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 9/4
TOP
கண்மணி_அனையான் (1)
மலங்கல் அம் கண்ணில் கண்மணி_அனையான் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 9/4
TOP
கண (1)
கண மணி பொரு நீர் கங்கை-தன் சிறுவன் கணபதி பின் இளங்கிளையே - 2.சேந்தனார்:3 5/4
TOP
கணங்களை (1)
வன் பல படை உடை பூதம் சூழ வானவர் கணங்களை மாற்றி ஆங்கே - 8.புருடோத்தம:1 3/3
TOP
கணபதி (1)
கண மணி பொரு நீர் கங்கை-தன் சிறுவன் கணபதி பின் இளங்கிளையே - 2.சேந்தனார்:3 5/4
TOP
கணம் (6)
காடு ஆடு பல் கணம் சூழ கேழல் கடும்பின் நெடும் பகல் கான் நடந்த - 1.திருமாளிகை:3 2/1
கணம் விரி குடுமி செம் மணி கவை நா கறை அணல் கண் செவி பகு வாய் - 3.கருவூர்:1 1/1
துந்துபி குழல் யாழ் மொந்தை வான் இயம்ப தொடர்ந்து இருடியர் கணம் துதிப்ப - 3.கருவூர்:1 4/1
ஆஆ என்று அருள் புரியாய் அமரர் கணம் தொழுது ஏத்தும் - 3.கருவூர்:5 5/3
துரு கழல் நெடும் பேய் கணம் எழுந்து ஆடும் தூங்கு இருள் நடு நல் யாமத்தே - 3.கருவூர்:10 6/2
சித்தர் கணம் பயிலும் தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 9/3
TOP
கணம்புல்லர் (1)
கடி ஆர் கணம்புல்லர் கண்ணப்பர் என்று உன் - 4.பூந்துருத்தி:2 2/1
TOP
கணவனை (2)
மருள்படு மழலை மென் மொழி உமையாள் கணவனை வல்வினையாட்டியேன் நான் - 8.புருடோத்தம:1 10/3
வாசக மலர்கள் கொண்டு ஏத்த வல்லார் மலை_மகள் கணவனை அணைவர் தாமே - 8.புருடோத்தம:1 11/4
TOP
கணாள் (1)
கருமையின் வெளியே கயல்_கணாள் இமவான் மகள் உமையவள் களைகண்ணே - 1.திருமாளிகை:1 4/2
TOP
கணி (1)
கணி எரி விசிறு கரம் துடி விட வாய் கங்கணம் செம் கை மற்று அபயம் - 1.திருமாளிகை:2 8/1
TOP
கணை (3)
நிரந்தரம் முனிவர் நினை திரு கணை கால் நினைந்து நின்று ஒழிந்தது என் நெஞ்சே - 1.திருமாளிகை:2 3/4
வேந்தன் வளைத்தது மேரு வில் அரவு நாண் வெம் கணை செம் கண் மால் - 2.சேந்தனார்:2 6/1
பக்கம் ஓட்டந்த மன்மதன் மலர் கணை படும்-தொறும் அலந்தேனே - 7.திருவாலி:2 2/4
TOP
கணையும் (1)
கடுப்பாய் பறை கறங்க கடு வெம் சிலையும் கணையும் கவணும் கைக்கொண்டு - 1.திருமாளிகை:3 7/1
TOP
கதறுவித்தி (1)
கன்று பிரி கற்றா போல் கதறுவித்தி வரவு நில்லாய் - 6.வேணாட்டடிகள்:1 5/3
TOP
கதி (2)
சாந்தை முதல் அயன் சாரதி கதி அருள் என்னும் இ தையலை - 2.சேந்தனார்:2 6/3
கதி எலாம் அரங்கம் பிணையல் மூவுலகில் கடி இருள் திருநடம் புரியும் - 3.கருவூர்:8 4/2
TOP
கதியை (1)
இறைவனை என் கதியை என் உளே உயிர்ப்பு ஆகி நின்ற - 7.திருவாலி:4 5/1
TOP
கதிர் (11)
உளம் கொள மதுர கதிர் விரித்து உயிர் மேல் அருள் சொரிதரும் உமாபதியை - 2.சேந்தனார்:1 11/1
எழும் கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார் இடர் கெடும் மால் உலா மனமே - 2.சேந்தனார்:3 11/4
பூ திரள் உருவம் செம் கதிர் விரியா புந்தியில் வந்த மால் விடையோன் - 3.கருவூர்:1 7/1
மேடு எலாம் செந்நெல் பசும் கதிர் விளைந்து மிக திகழ் முகத்தலை மூதூர் - 3.கருவூர்:4 4/3
உலகு எலாம் தொழ வந்து எழு கதிர் பரிதி ஒன்று நூறாயிர கோடி - 3.கருவூர்:9 1/1
அங்கு அழல் சுடராம் அவர்க்கு இளவேனல் அலர் கதிர்_அனையர் வாழியரோ - 3.கருவூர்:9 9/2
இலை ஆர் கதிர் வேல் இலங்கை வேந்தன் இருபது தோளும் இற - 5.கண்டராதித்:1 7/1
காய்ந்து வந்துவந்து என்றனை வலிசெய்து கதிர் நிலா எரி தூவும் - 7.திருவாலி:2 6/2
உதித்த போழ்தில் இரவி கதிர் போல் ஒளிர் மா மணி எங்கும் - 7.திருவாலி:3 8/3
காண்பது யான் என்று-கொல் கதிர் மா மணியை கனலை - 7.திருவாலி:4 2/1
கனைத்து இழியும் கழனி கனகம் கதிர் ஒண் பவளம் - 7.திருவாலி:4 6/3
TOP
கதிர்_அனையர் (1)
அங்கு அழல் சுடராம் அவர்க்கு இளவேனல் அலர் கதிர்_அனையர் வாழியரோ - 3.கருவூர்:9 9/2
TOP
கதிரோன் (1)
தக்கன் வெம் கதிரோன் சலந்தரன் பிரமன் சந்திரன் இந்திரன் எச்சன் - 2.சேந்தனார்:1 10/1
TOP
கபாலம் (1)
பாந்தள் பூண் ஆரம் பரிகலம் கபாலம் பட்டவர்த்தனம் எருது அன்பர் - 3.கருவூர்:8 2/1
TOP
கம்பலைசெய் (9)
கிளர் ஒளி மணி வண்டு அறை பொழில் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 1/3
கெண்டையும் கயலும் உகளும் நீர் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 2/3
கிரி தவழ் முகிலின் கீழ் தவழ் மாடம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 3/3
கிள்ளை பூம் பொதும்பில் கொஞ்சி மாம் பொழிற்கே கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 4/3
கேழலும் புள்ளும் ஆகி நின்று இருவர் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 5/3
கிஞ்சுக மணி வாய் அரிவையர் தெருவில் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 6/3
கிழை தவழ் கனகம் பொழியும் நீர் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 7/3
கின்னரம் முழவம் மழலை யாழ் வீணை கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 8/3
கித்தி நின்று ஆடும் அரிவையர் தெருவில் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 11/1
TOP
கமல (5)
புக்கு நிற்பவர்-தம் பொன் அடி கமல பொடி அணிந்து அடிமை பூண்டேனே - 2.சேந்தனார்:1 6/4
புக்கு இருந்தவர்-தம் பொன் அடி கமல பொடி அணிந்து அடிமை பூண்டேனே - 2.சேந்தனார்:1 10/4
இதயமாம் கமலம் கமல வர்த்தனை ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே - 3.கருவூர்:8 4/4
செய்ய கோடுடன் கமல மலர் சூழ்தரு தில்லை மா மறையோர்கள் தாம் தொழ - 7.திருவாலி:1 8/1
தொறுக்கள் வான் கமல மலர் உழக்க கரும்பு நல் சாறு பாய்தர - 7.திருவாலி:1 10/1
TOP
கமலத்தவரும் (1)
எவரும் மா மறைகள் எவையும் வானவர்கள் ஈட்டமும் தாள் திரு கமலத்தவரும்
மாலவனும் அறிவு அரும் பெருமை அடல் அழல் உமிழ் தழல் பிழம்பர் - 3.கருவூர்:9 5/1,2
TOP
கமலம் (6)
வரம்பு இரி வாளை மிளிர் மடு கமலம் கரும்பொடு மாந்திடும் மேதி - 1.திருமாளிகை:2 3/1
என்னிடை கமலம் மூன்றினுள் தோன்றி எழும் செழும் சுடரினை அருள் சேர் - 2.சேந்தனார்:1 4/2
ஆயிரம் கமலம் ஞாயிறு ஆயிர முக்கண் முக கர சரணத்தோன் - 2.சேந்தனார்:1 8/1
நீர் ஓங்கி வளர் கமலம் நீர் பொருந்தா தன்மை அன்றே - 3.கருவூர்:5 1/1
இதயமாம் கமலம் கமல வர்த்தனை ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே - 3.கருவூர்:8 4/4
செய்த்-தலை கமலம் மலர்ந்து ஓங்கிய தில்லை அம்பலத்தானை - 7.திருவாலி:2 5/3
TOP
கமலமே (2)
கமலமே வதனம் கமலமே நயனம் கனகமே திருவடி நிலை நீர் - 3.கருவூர்:2 9/3
கமலமே வதனம் கமலமே நயனம் கனகமே திருவடி நிலை நீர் - 3.கருவூர்:2 9/3
TOP
கமழ் (1)
கங்கை நீர் அரிசில் கரை இரு மருங்கும் கமழ் பொழில் தழுவிய கழனி - 2.சேந்தனார்:1 7/1
TOP
கமழ (1)
ஆரண தேன் பருகி அரும் தமிழ் மாலை கமழ வரும் - 3.கருவூர்:5 11/1
TOP
கமழும் (2)
மாதி மணம் கமழும் பொழில் மணி மாட மாளிகை வீதி சூழ் - 2.சேந்தனார்:2 2/1
காழ் அகில் கமழும் மாளிகை மகளிர் கங்குல்-வாய் அங்குலி கெழும - 3.கருவூர்:9 4/3
TOP
கமுகம் (1)
மணம் விரிதரு தேமாம் பொழில் மொழுப்பின் மழை தவழ் வளர் இளம் கமுகம்
திணர் நிரை அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 1/3,4
TOP
கமுகு (1)
நிறை தழை வாழை நிழல் கொடி நெடும் தெங்கு இளம் கமுகு உளம்கொள் நீள் பல மா - 1.திருமாளிகை:2 5/1
TOP
கயல் (1)
கருமையின் வெளியே கயல்_கணாள் இமவான் மகள் உமையவள் களைகண்ணே - 1.திருமாளிகை:1 4/2
TOP
கயல்_கணாள் (1)
கருமையின் வெளியே கயல்_கணாள் இமவான் மகள் உமையவள் களைகண்ணே - 1.திருமாளிகை:1 4/2
TOP
கயல்கள் (1)
மறுக்கமாய் கயல்கள் மடை பாய் தில்லை அம்பலவன் - 7.திருவாலி:1 10/2
TOP
கயலும் (3)
சேலும் கயலும் திளைக்கும் நீர் திருவாவடுதுறை வேந்தனோடு - 2.சேந்தனார்:2 11/3
கெண்டையும் கயலும் உகளும் நீர் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 2/3
சேலும் கயலும் திளைக்கும் கண் ஆர் இளம் கொங்கையில் செம் குங்குமம் - 10.சேந்தனார்:1 8/1
TOP
கயவரை (1)
கச்சரை கல்லா பொல்லா கயவரை பசு நூல் கற்கும் - 1.திருமாளிகை:4 9/3
TOP
கயிலை (1)
கல் ஆல் நிழலாய் கயிலை மலையாய் காண அருள் என்று - 7.திருவாலி:3 1/2
TOP
கயிற்றால் (1)
கரை கடல் ஒலியின் தமருகத்து அரையில் கையினில் கட்டிய கயிற்றால்
இரு தலை ஒரு நா இயங்க வந்து ஒருநாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே - 3.கருவூர்:7 3/1,2
TOP
கர (1)
ஆயிரம் கமலம் ஞாயிறு ஆயிர முக்கண் முக கர சரணத்தோன் - 2.சேந்தனார்:1 8/1
TOP
கரந்த (1)
பாய் இரும் கங்கை பனி நிலா கரந்த படர் சடை மின்னு பொன் முடியோன் - 2.சேந்தனார்:1 8/2
TOP
கரந்தும் (1)
கரந்தும் கரவாத கற்பகன் ஆகி கரை_இல் கருணை கடல் - 10.சேந்தனார்:1 5/3
TOP
கரம் (1)
கணி எரி விசிறு கரம் துடி விட வாய் கங்கணம் செம் கை மற்று அபயம் - 1.திருமாளிகை:2 8/1
TOP
கரவாத (1)
கரந்தும் கரவாத கற்பகன் ஆகி கரை_இல் கருணை கடல் - 10.சேந்தனார்:1 5/3
TOP
கரி (4)
மிக்க நெஞ்சு அரக்கன் புரம் கரி கருடன் மறலி வேள் இவர் மிகை செகுத்தோன் - 2.சேந்தனார்:1 10/2
கவள மா கரி மேல் கவரி சூழ் குடை கீழ் கனக குன்று என வரும் கள்வன் - 2.சேந்தனார்:3 2/2
கழுது உறு கரிகாடு உறைவிடம் போர்வை கவந்திகை கரி உரி திரிந்து ஊண் - 3.கருவூர்:8 3/2
காரிகைக்கு அருளீர் கரு மால் கரி
ஈர் உரித்து எழு போர்வையினீர் மிகு - 9.சேதிராயர்:1 3/1,2
TOP
கரிகாட்டு (1)
எரி தரு கரிகாட்டு இடு பிண நிணம் உண்டு ஏப்பமிட்டு இலங்கு எயிற்று அழல் வாய் - 3.கருவூர்:10 6/1
TOP
கரிகாடு (1)
கழுது உறு கரிகாடு உறைவிடம் போர்வை கவந்திகை கரி உரி திரிந்து ஊண் - 3.கருவூர்:8 3/2
TOP
கரியரே (1)
கரியரே இடம் தான் செய்யரே ஒருபால் கழுத்தில் ஓர் தனி வடம் சேர்த்தி - 3.கருவூர்:2 3/1
TOP
கரியவா (1)
கரியவா தாமும் செய்ய வாய் முறுவல் காட்டுமா சாட்டியக்குடியார் - 3.கருவூர்:8 1/3
TOP
கரியின் (1)
அரிவை ஓர் கூறு உகந்தான் அழகன் எழில் மால் கரியின்
உரிவை நல் உத்தரியம் உகந்தான் உம்பரார்-தம் பிரான் - 7.திருவாலி:4 4/1,2
TOP
கரியும் (1)
கரியும் நீறு ஆடும் கனலும் ஒத்து ஒளிரும் கழுத்தில் ஓர் தனி வடம் கட்டி - 3.கருவூர்:4 7/2
TOP
கரு (3)
கரு வளர் மேகத்து அகடு தோய் மகுட கனக மாளிகை கலந்து எங்கும் - 1.திருமாளிகை:2 2/1
கரு வடி குழை காது அமல செங்கமல மலர் முகம் கலந்தது என் கருத்தே - 1.திருமாளிகை:2 9/4
காரிகைக்கு அருளீர் கரு மால் கரி - 9.சேதிராயர்:1 3/1
TOP
கருடன் (1)
மிக்க நெஞ்சு அரக்கன் புரம் கரி கருடன் மறலி வேள் இவர் மிகை செகுத்தோன் - 2.சேந்தனார்:1 10/2
TOP
கருணா (1)
நிறைதரு கருணா நிலயமே உன்னை தொண்டனேன் நினையுமா நினையே - 1.திருமாளிகை:1 11/4
TOP
கருணாலயா (1)
கல் போல் மனம் கனிவித்த எம் கருணாலயா வந்திடாய் என்றால் - 2.சேந்தனார்:2 7/3
TOP
கருணை (4)
கற்றவர் விழுங்கும் கற்பக கனியை கரையிலா கருணை மா கடலை - 2.சேந்தனார்:1 2/1
பொருந்து அரும் கருணை பரமர்-தம் கோயில் பொழிலகம் குடைந்து வண்டு உறங்க - 3.கருவூர்:1 11/3
பெரியவா கருணை இள நிலா எறிக்கும் பிறை தவழ் சடை மொழுப்பு அவிழ்ந்து - 3.கருவூர்:8 1/1
கரந்தும் கரவாத கற்பகன் ஆகி கரை_இல் கருணை கடல் - 10.சேந்தனார்:1 5/3
TOP
கருணையாய் (1)
காதலில் பட்ட கருணையாய் கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 7/4
TOP
கருணையில் (1)
கல் நவில் மனத்து என் கண் வலை படும் இ கருணையில் பெரியது ஒன்று உளதே - 3.கருவூர்:7 7/2
TOP
கருணையும் (1)
பின்னு செம் சடையும் பிறை தவழ் மொழுப்பும் பெரிய தம் கருணையும் காட்டி - 3.கருவூர்:1 9/1
TOP
கருத்து (1)
காடன் தமிழ் மாலை பத்தும் கருத்து அறிந்து - 4.பூந்துருத்தி:2 10/3
TOP
கருத்தே (1)
கரு வடி குழை காது அமல செங்கமல மலர் முகம் கலந்தது என் கருத்தே - 1.திருமாளிகை:2 9/4
TOP
கருத்தை (1)
கோனே நின் மெய் அடியார் மன கருத்தை முடித்திடும் குன்றமே - 2.சேந்தனார்:2 9/4
TOP
கருத (1)
சொக்கர் அம்பலவர் என்னும் சுருதியை கருத மாட்டா - 1.திருமாளிகை:4 8/2
TOP
கருதும் (1)
கருதுவார் கருதும் உருவமாம் கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 5/4
TOP
கருதுமா (1)
கற்பமாய் உலகாய் அல்லை ஆனாயை தொண்டனேன் கருதுமா கருதே - 1.திருமாளிகை:1 3/4
TOP
கருதுவார் (1)
கருதுவார் கருதும் உருவமாம் கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 5/4
TOP
கருதே (1)
கற்பமாய் உலகாய் அல்லை ஆனாயை தொண்டனேன் கருதுமா கருதே - 1.திருமாளிகை:1 3/4
TOP
கரும் (3)
கரும் கண் நின்று இமைக்கும் செழும் சுடர் விளக்கம் கலந்து என கலந்து உணர் கருவூர் - 3.கருவூர்:10 10/2
வரும் கரும் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 10/4
கரும் தட மலர் புரை கண்ட வண் தார் காரிகையார் முன்பு என் பெண்மை தோற்றேன் - 8.புருடோத்தம:1 5/3
TOP
கரும்பர் (1)
கனியர் அ தரு தீம் கரும்பர் வெண் புரிநூல் கட்டியர் அட்ட ஆரமிர்தர் - 3.கருவூர்:9 10/2
TOP
கரும்பின் (1)
அறை செந்நெல் வான் கரும்பின் அணி ஆலைகள் சூழ் மயிலை - 7.திருவாலி:4 10/3
TOP
கரும்பு (2)
தரும் கரும்பு அனைய தீம் தமிழ் மாலை தடம் பொழில் மருதயாழ் உதிப்ப - 3.கருவூர்:10 10/3
தொறுக்கள் வான் கமல மலர் உழக்க கரும்பு நல் சாறு பாய்தர - 7.திருவாலி:1 10/1
TOP
கரும்பே (1)
கனக நல் தூணே கற்பக கொழுந்தே கண்கள் மூன்று உடையதோர் கரும்பே
அனகனே குமர விநாயக சனக அம்பலத்து அமரர் சேகரனே - 1.திருமாளிகை:1 7/2,3
TOP
கரும்பொடு (1)
வரம்பு இரி வாளை மிளிர் மடு கமலம் கரும்பொடு மாந்திடும் மேதி - 1.திருமாளிகை:2 3/1
TOP
கருமையின் (2)
கருமையின் வெளியே கயல்_கணாள் இமவான் மகள் உமையவள் களைகண்ணே - 1.திருமாளிகை:1 4/2
விரியும் நீர் ஆல கருமையின் சாந்தின் வெண்மையும் செந்நிறத்து ஒளியும் - 3.கருவூர்:4 7/1
TOP
கருவூர் (6)
திருந்து உயிர் பருவத்து அறிவுறு கருவூர் துறை வளர் தீம் தமிழ் மாலை - 3.கருவூர்:1 11/2
நாரணன் பரவும் திருவடி நிலை மேல் நலம் மலி கலை பயில் கருவூர்
ஆரணம் மொழிந்த பவள வாய் சுரந்த அமுதம் ஊறிய தமிழ் மாலை - 3.கருவூர்:2 10/2,3
ஆலை அம் பாகின் அனைய சொல் கருவூர் அமுது உறழ் தீம் தமிழ் மாலை - 3.கருவூர்:4 10/3
அங்கையோடு ஏந்தி பலி திரி கருவூர் அறைந்த சொல் மாலையால் ஆழி - 3.கருவூர்:6 11/3
அரு மருந்து அருந்தி அல்லல் தீர் கருவூர் அறைந்த சொல் மாலை ஈரைந்தின் - 3.கருவூர்:9 11/3
கரும் கண் நின்று இமைக்கும் செழும் சுடர் விளக்கம் கலந்து என கலந்து உணர் கருவூர்
தரும் கரும்பு அனைய தீம் தமிழ் மாலை தடம் பொழில் மருதயாழ் உதிப்ப - 3.கருவூர்:10 10/2,3
TOP
கருவூரன் (2)
காரணத்தின் நிலைபெற்ற கருவூரன் தமிழ் மாலை - 3.கருவூர்:5 11/2
காட்டிய பொருள் கலை பயில் கருவூரன் கழறு சொல் மாலை ஈரைந்தும் - 3.கருவூர்:8 10/3
TOP
கருவூரனேன் (1)
தீ_வணன்-தன்னை செழும் மறை தெரியும் திகழ் கருவூரனேன் உரைத்த - 3.கருவூர்:7 10/3
TOP
கரை (5)
கங்கை நீர் அரிசில் கரை இரு மருங்கும் கமழ் பொழில் தழுவிய கழனி - 2.சேந்தனார்:1 7/1
மெய்யே திருப்பணி செய் சீர் மிகு காவிரி கரை மேய - 2.சேந்தனார்:2 1/2
கரை கடல் ஒலியின் தமருகத்து அரையில் கையினில் கட்டிய கயிற்றால் - 3.கருவூர்:7 3/1
உந்தி இழியும் நிவவின் கரை மேல் உயர்ந்த மதில் தில்லை - 7.திருவாலி:3 4/2
கரந்தும் கரவாத கற்பகன் ஆகி கரை_இல் கருணை கடல் - 10.சேந்தனார்:1 5/3
TOP
கரை_இல் (1)
கரந்தும் கரவாத கற்பகன் ஆகி கரை_இல் கருணை கடல் - 10.சேந்தனார்:1 5/3
TOP
கரைகள் (1)
குரவம் கோங்கம் குளிர் புன்னை கைதை குவிந்த கரைகள் மேல் - 7.திருவாலி:3 6/1
TOP
கரைந்து (1)
ஊழிதோறூழி உணர்ந்து உளம் கசிந்து நெக்கு நைந்து உளம் கரைந்து உருக்கும் - 3.கருவூர்:3 5/2
TOP
கரையிலா (1)
கற்றவர் விழுங்கும் கற்பக கனியை கரையிலா கருணை மா கடலை - 2.சேந்தனார்:1 2/1
TOP
கல் (5)
தர வார் புனம் சுனை தாழ் அருவி தடம் கல் உறையும் மடங்கல் அமர் - 1.திருமாளிகை:3 9/1
கல் போல் மனம் கனிவித்த எம் கருணாலயா வந்திடாய் என்றால் - 2.சேந்தனார்:2 7/3
கல் நகா உள்ள கள்வனேன் நின்-கண் கசிவிலேன் கண்ணின் நீர் சொரியேன் - 3.கருவூர்:4 3/1
கல் நவில் மனத்து என் கண் வலை படும் இ கருணையில் பெரியது ஒன்று உளதே - 3.கருவூர்:7 7/2
கல் ஆல் நிழலாய் கயிலை மலையாய் காண அருள் என்று - 7.திருவாலி:3 1/2
TOP
கல்லா (1)
கச்சரை கல்லா பொல்லா கயவரை பசு நூல் கற்கும் - 1.திருமாளிகை:4 9/3
TOP
கலக்கப்பெற்று (1)
உற்றாய் என்னும் உன்னை அன்றி மற்றொன்று உணரேன் என்னும் உணர்வுள் கலக்கப்பெற்று
ஆய ஐந்தெழுத்தும் பிதற்றி பிணி தீர் வெண் நீறு இடப்பெற்றேன் என்னும் - 1.திருமாளிகை:3 11/1,2
TOP
கலங்கல் (2)
சுனை பெரும் கலங்கல் பொய்கை அம் கழுநீர் சூழல் மாளிகை சுடர் வீசும் - 3.கருவூர்:9 7/3
கலங்கல் அம் பொய்கை புனல் தெளிவிடத்து கலந்த மண்ணிடை கிடந்தாங்கு - 3.கருவூர்:10 9/1
TOP
கலங்கி (1)
கண் ஆவாய் கண் ஆகாது ஒழிதலும் நான் மிக கலங்கி
அண்ணாவோ என்று அண்ணாந்து அலமந்து விளித்தாலும் - 6.வேணாட்டடிகள்:1 7/2,3
TOP
கலந்த (3)
கலங்கல் அம் பொய்கை புனல் தெளிவிடத்து கலந்த மண்ணிடை கிடந்தாங்கு - 3.கருவூர்:10 9/1
கார் ஆர் சோலை கோழி வேந்தன் தஞ்சையர்_கோன் கலந்த
ஆரா இன் சொல் கண்டராதித்தன் அரும் தமிழ் மாலை வல்லார் - 5.கண்டராதித்:1 10/2,3
தென்னன் தமிழும் இசையும் கலந்த சிற்றம்பலம்-தன்னுள் - 7.திருவாலி:3 2/2
TOP
கலந்தது (1)
கரு வடி குழை காது அமல செங்கமல மலர் முகம் கலந்தது என் கருத்தே - 1.திருமாளிகை:2 9/4
TOP
கலந்ததோர் (1)
சிந்தையும் தானும் கலந்ததோர் கலவி தெரியினும் தெரிவுறா வண்ணம் - 3.கருவூர்:10 5/2
TOP
கலந்தவனே (1)
புலம் கலந்தவனே என்று நின்று உருகி புலம்புவார் அவம் புகார் அருவி - 3.கருவூர்:10 9/3
TOP
கலந்தனை (1)
கண்ணினுள் மணியின் கலந்தனை கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 9/4
TOP
கலந்தாங்கு (1)
அணி உமிழ் சோதி மணியினுள் கலந்தாங்கு அடியனேன் உள் கலந்து அடியேன் - 3.கருவூர்:10 4/1
TOP
கலந்தானே (2)
வளர் ஒளி மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் கலந்தானே - 3.கருவூர்:3 1/4
வண்டு அறை மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் கலந்தானே - 3.கருவூர்:3 2/4
TOP
கலந்திருந்தும் (1)
மையரே வையம் பலி திரிந்து உறையும் மயானரே உளம் கலந்திருந்தும்
பொய்யரே பொய்யர்க்கு அடுத்த வான் பளிங்கின் பொருள் வழி இருள் கிழித்து எழுந்த - 3.கருவூர்:2 8/2,3
TOP
கலந்து (11)
நல் பெரும் பொருளாய் உரை கலந்து உன்னை என்னுடை நாவினால் நவில்வான் - 1.திருமாளிகை:1 3/2
கரு வளர் மேகத்து அகடு தோய் மகுட கனக மாளிகை கலந்து எங்கும் - 1.திருமாளிகை:2 2/1
அன்னை தேன் கலந்து இன் அமுது உகந்து அளித்தாங்கு அருள் புரி பரமர்-தம் கோயில் - 3.கருவூர்:1 9/2
உண்ட ஊண் உனக்காம் வகை எனது உள்ளம் உள் கலந்து எழு பரஞ்சோதி - 3.கருவூர்:6 6/2
கண் இயல் மணியின் சூழல் புக்கு அங்கே கலந்து புக்கு ஒடுங்கினேற்கு அங்ஙன் - 3.கருவூர்:7 4/1
தந்திரி வீணை கீதம் முன் பாட சாதி கின்னரம் கலந்து ஒலிப்ப - 3.கருவூர்:10 2/3
அணி உமிழ் சோதி மணியினுள் கலந்தாங்கு அடியனேன் உள் கலந்து அடியேன் - 3.கருவூர்:10 4/1
நலம் கலந்து அடியேன் சிந்தையுள் புகுந்த நம்பனே வம்பனேனுடைய - 3.கருவூர்:10 9/2
கரும் கண் நின்று இமைக்கும் செழும் சுடர் விளக்கம் கலந்து என கலந்து உணர் கருவூர் - 3.கருவூர்:10 10/2
கரும் கண் நின்று இமைக்கும் செழும் சுடர் விளக்கம் கலந்து என கலந்து உணர் கருவூர் - 3.கருவூர்:10 10/2
வாச நல் மலர் அணி குழல் மடவார் வைகலும் கலந்து எழு மாலை பூசல் - 8.புருடோத்தம:1 11/2
TOP
கலந்தோன் (2)
மனனிடை அணுகி நுணுகி உள் கலந்தோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 3/4
வந்து அணுகாது நுணுகி உள் கலந்தோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 5/4
TOP
கலவி (3)
துனிபடு கலவி மலை_மகளுடனாய் தூங்கு இருள் நடு நல் யாமத்து என் - 3.கருவூர்:10 3/3
சிந்தையும் தானும் கலந்ததோர் கலவி தெரியினும் தெரிவுறா வண்ணம் - 3.கருவூர்:10 5/2
அழலை ஆழ்பு உருவம் புனலொடும் கிடந்தாங்கு ஆதனேன் மாதரார் கலவி
தொழிலை ஆழ் நெஞ்சம் இடர்படா வண்ணம் தூங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் - 3.கருவூர்:10 7/2,3
TOP
கலன் (1)
எழிலை ஆழ்செய்கை பசும் கலன் விசும்பின் இன் துளி பட நனைந்து உருகி - 3.கருவூர்:10 7/1
TOP
கலாம் (1)
இ கலாம் முழுதும் ஒழிய வந்து உள் புக்கு என்னை ஆள் ஆண்ட நாயகனே - 3.கருவூர்:4 5/2
TOP
கலை (4)
மான் ஏர் கலை வளையும் கவர்ந்து உளம் கொள்ளைகொள்ள வழக்கு உண்டே - 2.சேந்தனார்:2 9/1
நாரணன் பரவும் திருவடி நிலை மேல் நலம் மலி கலை பயில் கருவூர் - 3.கருவூர்:2 10/2
காட்டிய பொருள் கலை பயில் கருவூரன் கழறு சொல் மாலை ஈரைந்தும் - 3.கருவூர்:8 10/3
கலை ஆர் மறி பொன் கையினானை காண்பதும் என்று-கொலோ - 5.கண்டராதித்:1 7/4
TOP
கலைகள்-தம் (1)
கலைகள்-தம் பொருளும் அறிவுமாய் என்னை கற்பினில் பெற்றெடுத்து எனக்கே - 3.கருவூர்:2 1/1
TOP
கலையும் (2)
துவளுமே கலையும் துகிலுமே ஒருபால் துடி இடை இட மருங்கு ஒருத்தி - 3.கருவூர்:2 5/3
விமலமே கலையும் உடையரே சடை மேல் மிளிருமே பொறி வரி நாகம் - 3.கருவூர்:2 9/2
TOP
கவணும் (1)
கடுப்பாய் பறை கறங்க கடு வெம் சிலையும் கணையும் கவணும் கைக்கொண்டு - 1.திருமாளிகை:3 7/1
TOP
கவந்திகை (1)
கழுது உறு கரிகாடு உறைவிடம் போர்வை கவந்திகை கரி உரி திரிந்து ஊண் - 3.கருவூர்:8 3/2
TOP
கவர்ந்தான் (1)
இவளை வார் இள மென் கொங்கை பீர் பொங்க எழில் கவர்ந்தான் இளம் காளை - 2.சேந்தனார்:3 2/1
TOP
கவர்ந்து (3)
மான் ஏர் கலை வளையும் கவர்ந்து உளம் கொள்ளைகொள்ள வழக்கு உண்டே - 2.சேந்தனார்:2 9/1
மருது அரசு இரும் கோங்கு அகில் மரம் சாடி வரை வளம் கவர்ந்து இழி வையை - 3.கருவூர்:7 1/3
கூவி கவர்ந்து நெருங்கி குழாம்குழாமாய் நின்று கூத்து ஆடும் - 10.சேந்தனார்:1 6/2
TOP
கவர்வானே (1)
காவன் நல் சேனை என்ன காப்பவன் என் பொன்னை மேகலை கவர்வானே
தேவின் நல் தலைவன் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற - 2.சேந்தனார்:3 3/2,3
TOP
கவரி (1)
கவள மா கரி மேல் கவரி சூழ் குடை கீழ் கனக குன்று என வரும் கள்வன் - 2.சேந்தனார்:3 2/2
TOP
கவல (1)
கண்டார் கவல வில் ஆடி வேடர் கடி நாயுடன் கை வளைந்தாய் என்னும் - 1.திருமாளிகை:3 6/2
TOP
கவள (1)
கவள மா கரி மேல் கவரி சூழ் குடை கீழ் கனக குன்று என வரும் கள்வன் - 2.சேந்தனார்:3 2/2
TOP
கவித்து (1)
வளர் பொன் மலையுள் வயிர மலை போல் வலக்கை கவித்து நின்று - 7.திருவாலி:3 3/3
TOP
கவை (1)
கணம் விரி குடுமி செம் மணி கவை நா கறை அணல் கண் செவி பகு வாய் - 3.கருவூர்:1 1/1
TOP
கழல் (7)
நுன கழல் இணை என் நெஞ்சினுள் இனிதா தொண்டனேன் நுகருமா நுகரே - 1.திருமாளிகை:1 7/4
அறை கழல் அரன் சீர் அறிவிலா வெறுமை சிறுமையில் பொறுக்கும் அம்பலத்துள் - 1.திருமாளிகை:1 11/3
இரு முகம் கழல் மூன்று ஏழு கைத்தலம் ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே - 3.கருவூர்:8 5/4
துரு கழல் நெடும் பேய் கணம் எழுந்து ஆடும் தூங்கு இருள் நடு நல் யாமத்தே - 3.கருவூர்:10 6/2
புலம்பி வானவர் தானவர் புகழ்ந்து ஏத்த ஆடு பொன் கூத்தனார் கழல்
சிலம்பு கிங்கிணி என் சிந்தையுள் இடம்கொண்டனவே - 7.திருவாலி:1 2/3,4
அதிர வார் கழல் வீசி நின்று அழகா நடம் பயில் கூத்தன் மேல் திகழ் - 7.திருவாலி:1 6/3
கூர் நுனை வேல் படை கூற்றம் சாய குரை கழல் பணிகொள மலைந்தது என்றால் - 8.புருடோத்தம:1 7/2
TOP
கழல்கள் (1)
போய் இருந்தேயும் போற்றுவார் கழல்கள் போற்றுவார் புரந்தராதிகளே - 2.சேந்தனார்:1 8/4
TOP
கழலர் (1)
புனிதர் பொன் கழலர் புரி சடா மகுடர் புண்ணியர் பொய் இலா மெய்யர்க்கு - 3.கருவூர்:9 10/3
TOP
கழற (1)
ஊரும் உலகும் கழற உழறி உமை மணவாளனுக்கு ஆள் - 10.சேந்தனார்:1 7/3
TOP
கழறு (1)
காட்டிய பொருள் கலை பயில் கருவூரன் கழறு சொல் மாலை ஈரைந்தும் - 3.கருவூர்:8 10/3
TOP
கழனி (6)
பிரம்பிரி செந்நெல் கழனி செங்கழுநீர் பழனம் சூழ் பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 3/2
கங்கை நீர் அரிசில் கரை இரு மருங்கும் கமழ் பொழில் தழுவிய கழனி
திங்கள் நேர் தீண்ட நீண்ட மாளிகை சூழ் மாட நீடு உயர் திருவீழி - 2.சேந்தனார்:1 7/1,2
சேல் உலாம் கழனி திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற - 2.சேந்தனார்:3 1/3
நீர் அணங்கு அசும்பு கழனி சூழ் களந்தை நிறை புகழ் ஆதித்தேச்சரத்து - 3.கருவூர்:2 10/1
கனைத்து இழியும் கழனி கனகம் கதிர் ஒண் பவளம் - 7.திருவாலி:4 6/3
செந்நெல் விளை கழனி தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 8/3
TOP
கழியில் (1)
தெருண்டவை திகர் வாழ் திருவிடை கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற - 2.சேந்தனார்:3 10/3
TOP
கழுக்கள் (1)
அரட்டரை அரட்டு பேசும் அழுக்கரை கழுக்கள் ஆய - 1.திருமாளிகை:4 3/3
TOP
கழுத்தில் (3)
கரியரே இடம் தான் செய்யரே ஒருபால் கழுத்தில் ஓர் தனி வடம் சேர்த்தி - 3.கருவூர்:2 3/1
கரியும் நீறு ஆடும் கனலும் ஒத்து ஒளிரும் கழுத்தில் ஓர் தனி வடம் கட்டி - 3.கருவூர்:4 7/2
கைக்கு வால் முத்தின் சரி வளை பெய்து கழுத்தில் ஓர் தனி வடம் கட்டி - 4.பூந்துருத்தி:1 1/1
TOP
கழுது (1)
கழுது உறு கரிகாடு உறைவிடம் போர்வை கவந்திகை கரி உரி திரிந்து ஊண் - 3.கருவூர்:8 3/2
TOP
கழுநீர் (1)
சுனை பெரும் கலங்கல் பொய்கை அம் கழுநீர் சூழல் மாளிகை சுடர் வீசும் - 3.கருவூர்:9 7/3
TOP
கள் (1)
கள் அவிழ் தாமரை மேல் கண்ட அயனோடு மால் பணிய - 7.திருவாலி:4 3/1
TOP
கள்வன் (1)
கவள மா கரி மேல் கவரி சூழ் குடை கீழ் கனக குன்று என வரும் கள்வன்
திவள் அம் மாளிகை சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற - 2.சேந்தனார்:3 2/2,3
TOP
கள்வனேன் (1)
கல் நகா உள்ள கள்வனேன் நின்-கண் கசிவிலேன் கண்ணின் நீர் சொரியேன் - 3.கருவூர்:4 3/1
TOP
கள்ளரை (2)
அருக்கரை அள்ளல்-வாய கள்ளரை அவியா பாவ - 1.திருமாளிகை:4 7/3
கடு வினை பாச கடல் கடந்து ஐவர் கள்ளரை மெள்ளவே துரந்து உன் - 3.கருவூர்:7 5/1
TOP
களகமணி (1)
களகமணி மாடம் சூளிகை சூழ் மாளிகை மேல் - 4.பூந்துருத்தி:2 7/1
TOP
களந்தை (10)
அலை கடல் முழங்கும் அம் தண் நீர் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே - 3.கருவூர்:2 1/4
அந்தணர் அழல் ஓம்பு அலை புனல் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே - 3.கருவூர்:2 2/4
அரியரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே - 3.கருவூர்:2 3/4
அழகரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே - 3.கருவூர்:2 4/4
அவளுமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே - 3.கருவூர்:2 5/4
தாலமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே - 3.கருவூர்:2 6/4
அக்கடா ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே - 3.கருவூர்:2 7/4
ஐயரே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே - 3.கருவூர்:2 8/4
அமலமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே - 3.கருவூர்:2 9/4
நீர் அணங்கு அசும்பு கழனி சூழ் களந்தை நிறை புகழ் ஆதித்தேச்சரத்து - 3.கருவூர்:2 10/1
TOP
களபம் (2)
சந்தன களபம் துதைந்த நல் மேனி தவள வெண் பொடி முழுது ஆடும் - 3.கருவூர்:2 2/1
தவளமே களபம் தவளமே புரிநூல் தவளமே முறுவல் ஆடு அரவம் - 3.கருவூர்:2 5/2
TOP
களம் (1)
களம் கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன் கைக்கொண்ட கனக கற்பகமே - 2.சேந்தனார்:1 11/4
TOP
களமும் (1)
குமுதமே திருவாய் குவளையே களமும் குழையதே இரு செவி ஒருபால் - 3.கருவூர்:2 9/1
TOP
களி (2)
கானே வரு முரண் ஏனம் எய்த களி ஆர் புளின நல் காளாய் என்னும் - 1.திருமாளிகை:3 3/1
களி வான் உலகில் கங்கை நங்கை காதலனே அருள் என்று - 5.கண்டராதித்:1 5/1
TOP
களிற்று (1)
உவரி மா கடலின் ஒலிசெய் மா மறுகில் உறு களிற்று அரசின தீட்டம் - 3.கருவூர்:9 5/3
TOP
களிறு (3)
கோன் அமர் கூத்தன் குல இளம் களிறு என் கொடிக்கு இடர் பயப்பதும் குணமே - 2.சேந்தனார்:3 4/4
முளை இளம் களிறு என் மொய் குழல் சிறுமிக்கு அருளும்-கொல் முருகவேள் பரிந்தே - 2.சேந்தனார்:3 6/4
படு மதமும் இட வயிறும் உடைய களிறு உடைய பிரான் - 6.வேணாட்டடிகள்:1 6/1
TOP
களை (1)
கைவரும் பழனம் குழைத்த செம் சாலி கடைசியர் களை தரு நீலம் - 3.கருவூர்:1 2/3
TOP
களைகண் (1)
கனகமே வெள்ளி குன்றமே என்றன் களைகணே களைகண் மற்று இல்லா - 3.கருவூர்:8 6/2
TOP
களைகண்ணே (1)
கருமையின் வெளியே கயல்_கணாள் இமவான் மகள் உமையவள் களைகண்ணே
அருமையின் மறை நான்கு ஓலமிட்டு அரற்றும் அப்பனே அம்பலத்து அமுதே - 1.திருமாளிகை:1 4/2,3
TOP
களைகணே (2)
கண் பனி அரும்ப கைகள் மொட்டித்து என் களைகணே ஓலம் என்று ஓலிட்டு - 3.கருவூர்:1 5/1
கனகமே வெள்ளி குன்றமே என்றன் களைகணே களைகண் மற்று இல்லா - 3.கருவூர்:8 6/2
TOP
களைய (1)
ஆர் இனி அமரர்கள் குறைவு_இலாதார் அவரவர் படு துயர் களைய நின்ற - 8.புருடோத்தம:1 7/3
TOP
களையா (1)
களையா உடலோடு சேரமான் ஆரூரன் - 4.பூந்துருத்தி:2 5/1
TOP
கற்கும் (1)
கச்சரை கல்லா பொல்லா கயவரை பசு நூல் கற்கும்
பிச்சரை காணா கண் வாய் பேசாது அ பேய்களோடே - 1.திருமாளிகை:4 9/3,4
TOP
கற்பக (3)
கனக நல் தூணே கற்பக கொழுந்தே கண்கள் மூன்று உடையதோர் கரும்பே - 1.திருமாளிகை:1 7/2
கற்றவர் விழுங்கும் கற்பக கனியை கரையிலா கருணை மா கடலை - 2.சேந்தனார்:1 2/1
கற்பக பொழிலும் முழுதும் ஆம் கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 3/4
TOP
கற்பகத்தை (1)
கேடு_இல் அம் கீர்த்தி கனக கற்பகத்தை கெழுமுதற்கு எவ்விடத்தேனே - 2.சேந்தனார்:1 12/4
TOP
கற்பகம் (1)
ஏர் கொள் கற்பகம் ஒத்து இரு சிலை புருவம் பெரும் தடம் கண்கள் மூன்று உடை உன் - 1.திருமாளிகை:2 10/1
TOP
கற்பகமே (1)
களம் கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன் கைக்கொண்ட கனக கற்பகமே - 2.சேந்தனார்:1 11/4
TOP
கற்பகன் (1)
கரந்தும் கரவாத கற்பகன் ஆகி கரை_இல் கருணை கடல் - 10.சேந்தனார்:1 5/3
TOP
கற்பமாய் (1)
கற்பமாய் உலகாய் அல்லை ஆனாயை தொண்டனேன் கருதுமா கருதே - 1.திருமாளிகை:1 3/4
TOP
கற்பினில் (1)
கலைகள்-தம் பொருளும் அறிவுமாய் என்னை கற்பினில் பெற்றெடுத்து எனக்கே - 3.கருவூர்:2 1/1
TOP
கற்றவர் (1)
கற்றவர் விழுங்கும் கற்பக கனியை கரையிலா கருணை மா கடலை - 2.சேந்தனார்:1 2/1
TOP
கற்றா (1)
கன்று பிரி கற்றா போல் கதறுவித்தி வரவு நில்லாய் - 6.வேணாட்டடிகள்:1 5/3
TOP
கற்று (1)
அது மதி இது என்று அலந்து அலை நூல் கற்று அழைப்பு ஒழிந்து அரு மறை அறிந்து - 1.திருமாளிகை:2 6/1
TOP
கற்றோர் (1)
தங்கள் நான்மறை நூல் சகலமும் கற்றோர் சாட்டியக்குடி இருந்து அருளும் - 3.கருவூர்:8 8/3
TOP
கறங்க (1)
கடுப்பாய் பறை கறங்க கடு வெம் சிலையும் கணையும் கவணும் கைக்கொண்டு - 1.திருமாளிகை:3 7/1
TOP
கறிகொள்வார் (1)
கைச்சாலும் சிறுகதலி இலை வேம்பும் கறிகொள்வார்
எச்சார்வும் இல்லாமை நீ அறிந்தும் எனது பணி - 6.வேணாட்டடிகள்:1 1/2,3
TOP
கறை (2)
கணம் விரி குடுமி செம் மணி கவை நா கறை அணல் கண் செவி பகு வாய் - 3.கருவூர்:1 1/1
கையன் கார் புரையும் கறை கண்டன் கனல் மழுவான் - 7.திருவாலி:1 1/2
TOP
கன்று (1)
கன்று பிரி கற்றா போல் கதறுவித்தி வரவு நில்லாய் - 6.வேணாட்டடிகள்:1 5/3
TOP
கன்னலும் (1)
கன்னலும் பாலும் தேனும் ஆரமுதும் கனியுமாய் இனியை ஆயினையே - 3.கருவூர்:4 8/4
TOP
கன்னலே (1)
கன்னலே தேனே அமுதமே கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 1/4
TOP
கனக (7)
கனக நல் தூணே கற்பக கொழுந்தே கண்கள் மூன்று உடையதோர் கரும்பே - 1.திருமாளிகை:1 7/2
கரு வளர் மேகத்து அகடு தோய் மகுட கனக மாளிகை கலந்து எங்கும் - 1.திருமாளிகை:2 2/1
களம் கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன் கைக்கொண்ட கனக கற்பகமே - 2.சேந்தனார்:1 11/4
கேடு_இல் அம் கீர்த்தி கனக கற்பகத்தை கெழுமுதற்கு எவ்விடத்தேனே - 2.சேந்தனார்:1 12/4
கவள மா கரி மேல் கவரி சூழ் குடை கீழ் கனக குன்று என வரும் கள்வன் - 2.சேந்தனார்:3 2/2
மின் நவில் கனக மாளிகை வாய்தல் விளங்கு இளம் பிறை தவழ் மாடம் - 3.கருவூர்:7 7/3
வில் ஆண்ட கனக திரள் மேரு விடங்கன் விடை பாகன் - 10.சேந்தனார்:1 4/3
TOP
கனகம் (5)
சியர் ஒளி மணிகள் நிரந்து சேர் கனகம் நிறைந்த சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 1/3
கிழை தவழ் கனகம் பொழியும் நீர் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 7/3
சொல் பதத்துள் வைத்து உள்ளம் அள்ளூறும் தொண்டருக்கு எண் திசை கனகம்
பற்பத குவையும் பைம்பொன் மாளிகையும் பவள வாயவர் பணை முலையும் - 3.கருவூர்:6 3/2,3
வினைபடு கனகம் போல யாவையுமாய் வீங்கு உலகு ஒழிவற நிறைந்து - 3.கருவூர்:10 3/2
கனைத்து இழியும் கழனி கனகம் கதிர் ஒண் பவளம் - 7.திருவாலி:4 6/3
TOP
கனகமே (2)
கமலமே வதனம் கமலமே நயனம் கனகமே திருவடி நிலை நீர் - 3.கருவூர்:2 9/3
கனகமே வெள்ளி குன்றமே என்றன் களைகணே களைகண் மற்று இல்லா - 3.கருவூர்:8 6/2
TOP
கனகன் (1)
மடங்கலாய் கனகன் மார்பு கீண்டானுக்கு அருள் புரி வள்ளலே மருள் ஆர் - 1.திருமாளிகை:1 10/1
TOP
கனல் (1)
கையன் கார் புரையும் கறை கண்டன் கனல் மழுவான் - 7.திருவாலி:1 1/2
TOP
கனலும் (1)
கரியும் நீறு ஆடும் கனலும் ஒத்து ஒளிரும் கழுத்தில் ஓர் தனி வடம் கட்டி - 3.கருவூர்:4 7/2
TOP
கனலை (1)
காண்பது யான் என்று-கொல் கதிர் மா மணியை கனலை
ஆண் பெண் அரு உரு என்று அறிதற்கு அரிதாயவனை - 7.திருவாலி:4 2/1,2
TOP
கனா (2)
அ கனா அனைய செல்வமே சிந்தித்து ஐவரோடு அழுந்தி யான் அவமே - 2.சேந்தனார்:1 6/1
அ கனா அனைய செல்வமே சிந்தித்து ஐவரோடு என்னொடும் விளைந்த - 3.கருவூர்:4 5/1
TOP
கனி (1)
செழும் தட மலர் புரை கண்கள் மூன்றும் செம் கனி வாயும் என் சிந்தை வௌவ - 8.புருடோத்தம:1 4/3
TOP
கனியர் (1)
கனியர் அ தரு தீம் கரும்பர் வெண் புரிநூல் கட்டியர் அட்ட ஆரமிர்தர் - 3.கருவூர்:9 10/2
TOP
கனியாய் (2)
விழுங்கு தீம் கனியாய் இனிய ஆனந்த வெள்ளமாய் உள்ளம் ஆயினையே - 3.கருவூர்:4 2/4
இனிய தீம் கனியாய் ஒழிவற நிறைந்து ஏழ் இருக்கையில் இருந்தவாறு இயம்பே - 3.கருவூர்:8 6/4
TOP
கனியுமாய் (1)
கன்னலும் பாலும் தேனும் ஆரமுதும் கனியுமாய் இனியை ஆயினையே - 3.கருவூர்:4 8/4
TOP
கனியே (2)
அளி வளர் உள்ளத்து ஆனந்த கனியே அம்பலம் ஆடரங்காக - 1.திருமாளிகை:1 1/3
வம்பு அளிந்த கனியே என் மருந்தே நல் வளர் முக்கண் - 3.கருவூர்:5 3/3
TOP
கனியை (1)
கற்றவர் விழுங்கும் கற்பக கனியை கரையிலா கருணை மா கடலை - 2.சேந்தனார்:1 2/1
TOP
கனிவித்த (1)
கல் போல் மனம் கனிவித்த எம் கருணாலயா வந்திடாய் என்றால் - 2.சேந்தனார்:2 7/3
TOP
கனைத்து (1)
கனைத்து இழியும் கழனி கனகம் கதிர் ஒண் பவளம் - 7.திருவாலி:4 6/3
TOP
| |
|