<<முந்திய பக்கம்

திருமுறை ஒன்பது - தொடரடைவு

ஒ - முதல் சொற்கள்
ஒக்க 2
ஒக்கின்றதே 1
ஒக்கின்றார் 1
ஒட்டா 1
ஒட்டாய் 1
ஒட்டாரே 1
ஒடுங்க 1
ஒடுங்கினேற்கு 1
ஒடுங்கு 1
ஒடுங்கும் 1
ஒண் 6
ஒத்து 6
ஒத்தே 1
ஒப்பாம் 1
ஒப்பு 1
ஒர் 1
ஒரு 3
ஒருகால் 2
ஒருங்கு 1
ஒருத்தி 1
ஒருநாள் 6
ஒருப்பாடு 1
ஒருபால் 3
ஒருமையில் 1
ஒருவர் 2
ஒருவனாம் 1
ஒருவனை 1
ஒலி 11
ஒலிசெய் 1
ஒலிசெயும் 1
ஒலிப்ப 2
ஒலியின் 1
ஒலியும் 2
ஒலியோடு 1
ஒவ்வார் 1
ஒழிதலும் 1
ஒழிந்தது 1
ஒழிந்தாய் 1
ஒழிந்தாலும் 1
ஒழிந்து 1
ஒழிந்தேன் 2
ஒழிய 1
ஒழியாதே 1
ஒழியேன் 1
ஒழியோமே 1
ஒழிவது 1
ஒழிவதே 1
ஒழிவற 6
ஒழிவாய் 1
ஒழிவிலா 1
ஒழிவு 1
ஒழுகு 1
ஒழுகும் 1
ஒள் 3
ஒள்_நுதலி 1
ஒள்_நுதலீர் 1
ஒளி 20
ஒளித்த 1
ஒளிப்பார் 1
ஒளியும் 3
ஒளியை 2
ஒளிர் 2
ஒளிரும் 2
ஒற்ற 1
ஒன்றாய 1
ஒன்றி 1
ஒன்றினுக்கு 1
ஒன்று 12
ஒன்றும் 2
ஒன்றே 1

  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
  
    ஒக்க (2)
ஒக்க விண்டு உருள ஒண் திரு புருவம் நெறித்து அருளிய உருத்திரனே - 1.திருமாளிகை:1 9/2
ஒக்க ஓட்டந்த அந்தியும் மதியமும் அலை கடல் ஒலியோடு - 7.திருவாலி:2 2/1

 TOP
 
    ஒக்கின்றதே (1)
தவள_வண்ணனை நினை-தொறும் என் மனம் தழல் மெழுகு ஒக்கின்றதே - 7.திருவாலி:2 1/4

 TOP
 
    ஒக்கின்றார் (1)
தீரா நோய் செய்வாரை ஒக்கின்றார் காணீரே - 8.புருடோத்தம:2 4/4

 TOP
 
    ஒட்டா (1)
ஒட்டா வகை அவுணர் முப்புரங்கள் ஓர் அம்பால் - 8.புருடோத்தம:2 3/1

 TOP
 
    ஒட்டாய் (1)
ஒன்றி ஒருகால் நினையாது இருந்தாலும் இருக்க ஒட்டாய்
  கன்று பிரி கற்றா போல் கதறுவித்தி வரவு நில்லாய் - 6.வேணாட்டடிகள்:1 5/2,3

 TOP
 
    ஒட்டாரே (1)
ஆடி வரும் போது அருகே நிற்கவுமே ஒட்டாரே - 8.புருடோத்தம:2 2/4

 TOP
 
    ஒடுங்க (1)
நுண்ணியை எனினும் நம்ப நின் பெருமை நுன்னிடை ஒடுங்க நீ வந்து என் - 3.கருவூர்:6 9/3

 TOP
 
    ஒடுங்கினேற்கு (1)
கண் இயல் மணியின் சூழல் புக்கு அங்கே கலந்து புக்கு ஒடுங்கினேற்கு அங்ஙன் - 3.கருவூர்:7 4/1

 TOP
 
    ஒடுங்கு (1)
நெஞ்சு இடர் அகல அகம் புகுந்து ஒடுங்கு நிலைமையோடு இருள் கிழித்து எழுந்த - 3.கருவூர்:1 6/1

 TOP
 
    ஒடுங்கும் (1)
போர்த்த தம் பெருமை சிறுமை புக்கு ஒடுங்கும் புணர்ப்பு உடை அடிகள்-தம் கோயில் - 3.கருவூர்:1 8/2

 TOP
 
    ஒண் (6)
ஒக்க விண்டு உருள ஒண் திரு புருவம் நெறித்து அருளிய உருத்திரனே - 1.திருமாளிகை:1 9/2
உன்னை என்-பால் வைத்து எங்கும் எஞ்ஞான்றும் ஒழிவற நிறைந்த ஒண் சுடரே - 3.கருவூர்:4 8/2
உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய் ஒழிவற நிறைந்த ஒண் சுடரே - 3.கருவூர்:4 9/2
உருவம் பாகமும் ஈந்து நல் அம் தியை ஒண் நுதல் வைத்தோனே - 7.திருவாலி:2 4/4
கனைத்து இழியும் கழனி கனகம் கதிர் ஒண் பவளம் - 7.திருவாலி:4 6/3
ஓதில் உய்வன் ஒண் பைங்கிளியே எனும் - 9.சேதிராயர்:1 6/2

 TOP
 
    ஒத்து (6)
ஏர் கொள் கற்பகம் ஒத்து இரு சிலை புருவம் பெரும் தடம் கண்கள் மூன்று உடை உன் - 1.திருமாளிகை:2 10/1
செக்கர் ஒத்து இரவி நூறாயிர திரள் ஒப்பாம் தில்லை - 1.திருமாளிகை:4 8/1
இந்தன விலங்கல் எறி புனம் தீப்பட்டு எரிவது ஒத்து எழு நிலை மாடம் - 3.கருவூர்:2 2/3
கரியும் நீறு ஆடும் கனலும் ஒத்து ஒளிரும் கழுத்தில் ஓர் தனி வடம் கட்டி - 3.கருவூர்:4 7/2
பத்தியாய் உணர்வோர் அருளை வாய்மடுத்து பருகு-தோறு அமுதம் ஒத்து அவர்க்கே - 4.பூந்துருத்தி:1 2/1
பாலும் அமுதமும் ஒத்து நின்றானுக்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 8/4

 TOP
 
    ஒத்தே (1)
ஒத்தே வாழும் தன்மையாளர் ஓதிய நான்மறையை - 5.கண்டராதித்:1 3/2

 TOP
 
    ஒப்பாம் (1)
செக்கர் ஒத்து இரவி நூறாயிர திரள் ஒப்பாம் தில்லை - 1.திருமாளிகை:4 8/1

 TOP
 
    ஒப்பு (1)
ஆவிக்கு அமுதை என் ஆர்வ தனத்தினை அப்பனை ஒப்பு அமரர் - 10.சேந்தனார்:1 6/3

 TOP
 
    ஒர் (1)
மாது_ஒர்_கூறன் வண்டு ஆர் கொன்றை மார்பன் என்று - 9.சேதிராயர்:1 6/1

 TOP
 
    ஒரு (3)
பழுது எனவே நினைந்து ஓராள் பயில்வதும் நின் ஒரு நாமம் - 3.கருவூர்:5 6/2
அத்தில் அங்கு ஒரு கூறு உன்-கண் வைத்தவருக்கு அமர் உலகு அளிக்கும் நின் பெருமை - 3.கருவூர்:6 8/2
இரு தலை ஒரு நா இயங்க வந்து ஒருநாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே - 3.கருவூர்:7 3/2

 TOP
 
    ஒருகால் (2)
பித்தன் என்று ஒருகால் பேசுவரேனும் பிழைத்தவை பொறுத்து அருள்செய்யும் - 3.கருவூர்:6 8/3
ஒன்றி ஒருகால் நினையாது இருந்தாலும் இருக்க ஒட்டாய் - 6.வேணாட்டடிகள்:1 5/2

 TOP
 
    ஒருங்கு (1)
ஒருங்கு இரு கண்ணின் எண்_இல் புன் மாக்கள் உறங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் - 3.கருவூர்:10 10/1

 TOP
 
    ஒருத்தி (1)
துவளுமே கலையும் துகிலுமே ஒருபால் துடி இடை இட மருங்கு ஒருத்தி
  அவளுமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே - 3.கருவூர்:2 5/3,4

 TOP
 
    ஒருநாள் (6)
உறவாகிய யோகமும் போகமுமாய் உயிர்_ஆளீ என்னும் என் பொன் ஒருநாள்
  சிறவாதவர் புரம் செற்ற கொற்ற சிலை கொண்டு பன்றி பின் சென்று நின்ற - 1.திருமாளிகை:3 1/1,2
வெறி ஏறு பன்றி பின் சென்று ஒருநாள் விசயற்கு அருள்செய்த வேந்தே என்னும் - 1.திருமாளிகை:3 4/1
இருந்த பரிசு ஒருநாள் கண்டு இரங்காய் எம்பெருமானே - 3.கருவூர்:5 10/2
உள் நெகிழ்ந்து உடலம் நெக்கு முக்கண்ணா ஓலம் என்று ஓலமிட்டு ஒருநாள்
  மண்ணின் நின்று அலறேன் வழி மொழி மாலை மழலை அம் சிலம்பு அடி முடி மேல் - 3.கருவூர்:6 2/1,2
அங்கை கொண்டு அமரர் மலர் மழை பொழிய அடி சிலம்பு அலம்ப வந்து ஒருநாள்
  உம் கை கொண்டு அடியேன் சென்னி வைத்து என்னை உய்யக்கொண்டு அருளினை மருங்கில் - 3.கருவூர்:6 10/1,2
இரு தலை ஒரு நா இயங்க வந்து ஒருநாள் இருந்திடாய் எங்கள் கண் முகப்பே - 3.கருவூர்:7 3/2

 TOP
 
    ஒருப்பாடு (1)
தக்க சீர் கங்கை அளவும் அன்று என்னோ தம் ஒருப்பாடு உலகதன் மேல் - 4.பூந்துருத்தி:1 1/3

 TOP
 
    ஒருபால் (3)
கரியரே இடம் தான் செய்யரே ஒருபால் கழுத்தில் ஓர் தனி வடம் சேர்த்தி - 3.கருவூர்:2 3/1
துவளுமே கலையும் துகிலுமே ஒருபால் துடி இடை இட மருங்கு ஒருத்தி - 3.கருவூர்:2 5/3
குமுதமே திருவாய் குவளையே களமும் குழையதே இரு செவி ஒருபால்
  விமலமே கலையும் உடையரே சடை மேல் மிளிருமே பொறி வரி நாகம் - 3.கருவூர்:2 9/1,2

 TOP
 
    ஒருமையில் (1)
ஒருமையில் பல புக்கு உருவி நின்றாயை தொண்டனேன் உரைக்குமாறு உரையே - 1.திருமாளிகை:1 4/4

 TOP
 
    ஒருவர் (2)
போலுமே முறுவல் நிறைய ஆனந்தம் பொழியுமே திருமுகம் ஒருவர்
  கோலமே அச்சோ அழகிதே என்று குழைவரே கண்டவர் உண்ட - 3.கருவூர்:2 6/2,3
நீ தலைப்பட்டால் யானும் அவ் வகையே நிசிசரர் இருவரோடு ஒருவர்
  காதலில் பட்ட கருணையாய் கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 7/3,4

 TOP
 
    ஒருவனாம் (1)
முன்னம் மால் அறியா ஒருவனாம் இருவா முக்கணா நால் பெரும் தடம் தோள் - 3.கருவூர்:6 1/3

 TOP
 
    ஒருவனை (1)
எரி ஆடுகின்ற ஒருவனை உணர்வு அரிதே - 7.திருவாலி:4 3/4

 TOP
 
    ஒலி (11)
உரு வளர் இன்ப சிலம்பு ஒலி அலம்பும் உன் அடி கீழது என் உயிரே - 1.திருமாளிகை:2 2/4
தேர் மலி விழவில் குழல் ஒலி தெருவில் கூத்து ஒலி ஏத்து ஒலி ஓத்தின் - 1.திருமாளிகை:2 4/1
தேர் மலி விழவில் குழல் ஒலி தெருவில் கூத்து ஒலி ஏத்து ஒலி ஓத்தின் - 1.திருமாளிகை:2 4/1
தேர் மலி விழவில் குழல் ஒலி தெருவில் கூத்து ஒலி ஏத்து ஒலி ஓத்தின் - 1.திருமாளிகை:2 4/1
பேரொலி பரந்து கடல் ஒலி மலிய பொலிதரு பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 4/2
யாழ் ஒலி சிலம்பும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 4/4
குழல் ஒலி யாழ் ஒலி கூத்து ஒலி ஏத்து ஒலி எங்கும் குழாம் பெருகி - 10.சேந்தனார்:1 11/1
குழல் ஒலி யாழ் ஒலி கூத்து ஒலி ஏத்து ஒலி எங்கும் குழாம் பெருகி - 10.சேந்தனார்:1 11/1
குழல் ஒலி யாழ் ஒலி கூத்து ஒலி ஏத்து ஒலி எங்கும் குழாம் பெருகி - 10.சேந்தனார்:1 11/1
குழல் ஒலி யாழ் ஒலி கூத்து ஒலி ஏத்து ஒலி எங்கும் குழாம் பெருகி - 10.சேந்தனார்:1 11/1
விழவு ஒலி விண் அளவும் சென்று விம்மி மிகு திருவாரூரின் - 10.சேந்தனார்:1 11/2

 TOP
 
    ஒலிசெய் (1)
உவரி மா கடலின் ஒலிசெய் மா மறுகில் உறு களிற்று அரசின தீட்டம் - 3.கருவூர்:9 5/3

 TOP
 
    ஒலிசெயும் (1)
சதியில் ஆர்கலியில் ஒலிசெயும் கையில் தமருகம் சாட்டியக்குடியார் - 3.கருவூர்:8 4/3

 TOP
 
    ஒலிப்ப (2)
தந்திரி வீணை கீதம் முன் பாட சாதி கின்னரம் கலந்து ஒலிப்ப
  மந்திர கீதம் தீம் குழல் எங்கும் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 2/3,4
பாடகமும் நூபுரமும் பல் சிலம்பும் பேர்ந்து ஒலிப்ப
  சூடக கை நல்லார் தொழுது ஏத்த தொல் உலகில் - 4.பூந்துருத்தி:2 8/1,2

 TOP
 
    ஒலியின் (1)
கரை கடல் ஒலியின் தமருகத்து அரையில் கையினில் கட்டிய கயிற்றால் - 3.கருவூர்:7 3/1

 TOP
 
    ஒலியும் (2)
முரிந்த நடை மடந்தையர்-தம் முழங்கு ஒலியும் வழங்கு ஒலியும் - 3.கருவூர்:5 10/3
முரிந்த நடை மடந்தையர்-தம் முழங்கு ஒலியும் வழங்கு ஒலியும்
  திருந்து விழவு அணி கோடை திரைலோக்கிய சுந்தரனே - 3.கருவூர்:5 10/3,4

 TOP
 
    ஒலியோடு (1)
ஒக்க ஓட்டந்த அந்தியும் மதியமும் அலை கடல் ஒலியோடு
  நெக்கு வீழ்தரு நெஞ்சினை பாய்தலும் நிறை அழிந்திருப்பேனை - 7.திருவாலி:2 2/1,2

 TOP
 
    ஒவ்வார் (1)
முன்னம் தான் கண்டறிவார் ஒவ்வார் இ முத்தரே - 8.புருடோத்தம:2 8/4

 TOP
 
    ஒழிதலும் (1)
கண் ஆவாய் கண் ஆகாது ஒழிதலும் நான் மிக கலங்கி - 6.வேணாட்டடிகள்:1 7/2

 TOP
 
    ஒழிந்தது (1)
நிரந்தரம் முனிவர் நினை திரு கணை கால் நினைந்து நின்று ஒழிந்தது என் நெஞ்சே - 1.திருமாளிகை:2 3/4

 TOP
 
    ஒழிந்தாய் (1)
அரும் பேதைக்கு அருள் புரியாது ஒழிந்தாய் நின் அவிர் சடை மேல் - 3.கருவூர்:5 8/1

 TOP
 
    ஒழிந்தாலும் (1)
நீ வாராது ஒழிந்தாலும் நின்-பாலே விழுந்து ஏழை - 3.கருவூர்:5 5/1

 TOP
 
    ஒழிந்து (1)
அது மதி இது என்று அலந்து அலை நூல் கற்று அழைப்பு ஒழிந்து அரு மறை அறிந்து - 1.திருமாளிகை:2 6/1

 TOP
 
    ஒழிந்தேன் (2)
ஊர் ஓங்கும் பழி பாராது உன்-பாலே விழுந்து ஒழிந்தேன்
  சீர் ஓங்கும் பொழில் கோடை திரைலோக்கிய சுந்தரனே - 3.கருவூர்:5 1/3,4
எம்போல்வார்க்கு இல்லாமை என்னளவே அறிந்து ஒழிந்தேன்
  வம்பானார் பணி உகத்தி வழி அடியேன் தொழில் இறையும் - 6.வேணாட்டடிகள்:1 2/2,3

 TOP
 
    ஒழிய (1)
இ கலாம் முழுதும் ஒழிய வந்து உள் புக்கு என்னை ஆள் ஆண்ட நாயகனே - 3.கருவூர்:4 5/2

 TOP
 
    ஒழியாதே (1)
பத்தியால் சென்று கண்டிட என் மனம் பதைபதைப்பு ஒழியாதே - 7.திருவாலி:2 5/4

 TOP
 
    ஒழியேன் (1)
முன் நகா ஒழியேன் ஆயினும் செழு நீர் முகத்தலை அகத்து அமர்ந்து உறையும் - 3.கருவூர்:4 3/2

 TOP
 
    ஒழியோமே (1)
வாழிய மணி அம்பலவனை காண்பான் மயங்கவும் மால் ஒழியோமே - 3.கருவூர்:3 5/4

 TOP
 
    ஒழிவது (1)
மை ஆர் தடம் கண் மடந்தைக்கு ஒன்று அருளாது ஒழிவது மாதிமையே - 2.சேந்தனார்:2 1/4

 TOP
 
    ஒழிவதே (1)
பெற்போ பெரும் திருவாவடுதுறையாளி பேசாது ஒழிவதே - 2.சேந்தனார்:2 7/4

 TOP
 
    ஒழிவற (6)
உன்னை என்-பால் வைத்து எங்கும் எஞ்ஞான்றும் ஒழிவற நிறைந்த ஒண் சுடரே - 3.கருவூர்:4 8/2
உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய் ஒழிவற நிறைந்த ஒண் சுடரே - 3.கருவூர்:4 9/2
இனிய தீம் கனியாய் ஒழிவற நிறைந்து ஏழ் இருக்கையில் இருந்தவாறு இயம்பே - 3.கருவூர்:8 6/4
இன்பனே எங்கும் ஒழிவற நிறைந்து ஏழ் இருக்கையில் இருந்தவாறு இயம்பே - 3.கருவூர்:8 7/4
மங்குல் சூழ் போதின் ஒழிவற நிறைந்து வஞ்சகர் நெஞ்சகத்து ஒளிப்பார் - 3.கருவூர்:9 9/1
வினைபடு கனகம் போல யாவையுமாய் வீங்கு உலகு ஒழிவற நிறைந்து - 3.கருவூர்:10 3/2

 TOP
 
    ஒழிவாய் (1)
அடி இணை இரண்டும் அடையுமாறு அடைந்தேன் அருள்செய்வாய் அருள்செயாது ஒழிவாய்
  நெடு நிலை மாடத்து இரவு இருள் கிழிக்க நிலை விளக்கு அலகு_இல் சாலேக - 3.கருவூர்:7 5/2,3

 TOP
 
    ஒழிவிலா (1)
பிது மதி வழிநின்று ஒழிவிலா வேள்வி பெரியவர் பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 6/2

 TOP
 
    ஒழிவு (1)
ஒழிவு ஒன்று இலா உண்மை வண்ணமும் உலப்பிலள் ஊறு இன்ப வெள்ளமும் - 2.சேந்தனார்:2 8/1

 TOP
 
    ஒழுகு (1)
குழையராய் வந்து என் குடி முழுது ஆளும் குழகரே ஒழுகு நீர் கங்கை - 3.கருவூர்:2 4/3

 TOP
 
    ஒழுகும் (1)
தேம் புனல் பொய்கை வாளை வாய் மடுப்ப தெளிதரு தேறல் பாய்ந்து ஒழுகும்
  பூம் பணை சோலை ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 2/3,4

 TOP
 
    ஒள் (3)
ஒள் எரியின் நடுவே உருவாய் பரந்து ஓங்கிய சீர் - 7.திருவாலி:4 3/2
ஊர்க்கே வந்து என் வளைகள் கொள்வாரோ ஒள்_நுதலீர் - 8.புருடோத்தம:2 10/4
ஒள்_நுதலி காரணமா உம்பர் தொழுது ஏத்தும் - 8.புருடோத்தம:2 11/1

 TOP
 
    ஒள்_நுதலி (1)
ஒள்_நுதலி காரணமா உம்பர் தொழுது ஏத்தும் - 8.புருடோத்தம:2 11/1

 TOP
 
    ஒள்_நுதலீர் (1)
ஊர்க்கே வந்து என் வளைகள் கொள்வாரோ ஒள்_நுதலீர் - 8.புருடோத்தம:2 10/4

 TOP
 
    ஒளி (20)
ஒளி வளர் விளக்கே உலப்பு இலா ஒன்றே உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே - 1.திருமாளிகை:1 1/1
சுடர் மணி விளக்கினுள் ஒளி விளங்கும் தூய நல் சோதியுள் சோதீ - 1.திருமாளிகை:1 2/2
படர் ஒளி பரப்பி பரந்து நின்றாயை தொண்டனேன் பணியுமா பணியே - 1.திருமாளிகை:1 2/4
சியர் ஒளி மணிகள் நிரந்து சேர் கனகம் நிறைந்த சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 1/3
விண்ணவர் மகுட கோடி மிடைந்து ஒளி மணிகள் வீசும் - 1.திருமாளிகை:4 10/1
விளங்கு ஒளி வீழிமிழலை வேந்தே என்று ஆம்தனை சேந்தன் தாதையை யான் - 2.சேந்தனார்:1 11/3
வெம் சுடர் சுடர்வ போன்று ஒளி துளும்பும் விரி சடை அடிகள்-தம் கோயில் - 3.கருவூர்:1 6/2
உம்பர் நாடு இம்பர் விளங்கியாங்கு எங்கும் ஒளி வளர் திரு மணி சுடர் கான்று - 3.கருவூர்:1 10/1
தளிர் ஒளி மணி பூம் பதம் சிலம்பு அலம்ப சடை விரித்து அலை எறி கங்கை - 3.கருவூர்:3 1/1
தெளிர் ஒளி மணி நீர் திவலை முத்து அரும்பி திருமுகம் மலர்ந்து சொட்டு அட்ட - 3.கருவூர்:3 1/2
கிளர் ஒளி மணி வண்டு அறை பொழில் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 1/3
வளர் ஒளி மணி அம்பலத்துள் நின்று ஆடும் மைந்தன் என் மனம் கலந்தானே - 3.கருவூர்:3 1/4
வழங்கு தேன் பொழியும் பவள வாய் முக்கண் வளர் ஒளி மணி நெடும் குன்றே - 3.கருவூர்:4 2/2
இழுது நெய் சொரிந்து ஓம்பு அழல் ஒளி விளக்கு ஏழ் இருக்கையில் இருந்த ஈசனுக்கே - 3.கருவூர்:8 3/4
மாட்டிய சிந்தை மைந்தருக்கு அன்றே வளர் ஒளி விளங்கு வானுலகே - 3.கருவூர்:8 10/4
ஒளி கொண்ட மா மணிகள் ஓங்கு இருளை ஆங்கு அகற்றும் - 4.பூந்துருத்தி:2 7/3
ஒளி மால் முன்னே வரம் கிடக்க உன் அடியார்க்கு அருளும் - 5.கண்டராதித்:1 5/2
ஒளி வான் சுடரே உன்னை நாயேன் உறுவதும் என்று-கொலோ - 5.கண்டராதித்:1 5/4
பவள மால் வரையை பனி படர்ந்து அனையதோர் படர் ஒளி தரு திருநீறும் - 7.திருவாலி:2 1/1
ஊனம் இலா என் கை ஒளி வளைகள் கொள்வாரோ - 8.புருடோத்தம:2 1/2

 TOP
 
    ஒளித்த (1)
சொல் நவில் முறை நான் காரணம் உணரா சூழல் புக்கு ஒளித்த நீ இன்று - 3.கருவூர்:7 7/1

 TOP
 
    ஒளிப்பார் (1)
மங்குல் சூழ் போதின் ஒழிவற நிறைந்து வஞ்சகர் நெஞ்சகத்து ஒளிப்பார்
  அங்கு அழல் சுடராம் அவர்க்கு இளவேனல் அலர் கதிர்_அனையர் வாழியரோ - 3.கருவூர்:9 9/1,2

 TOP
 
    ஒளியும் (3)
தழை தவழ் மொழுப்பும் தவள நீற்று ஒளியும் சங்கமும் சகடையின் முழக்கும் - 3.கருவூர்:3 7/1
விரியும் நீர் ஆல கருமையின் சாந்தின் வெண்மையும் செந்நிறத்து ஒளியும்
  கரியும் நீறு ஆடும் கனலும் ஒத்து ஒளிரும் கழுத்தில் ஓர் தனி வடம் கட்டி - 3.கருவூர்:4 7/1,2
தரள வான் குன்றில் தண் நிலா ஒளியும் தரு குவால் பெருகு வான் தெருவில் - 3.கருவூர்:9 6/3

 TOP
 
    ஒளியை (2)
மண்டலத்து ஒளியை விலக்கி யான் நுகர்ந்த மருந்தை என் மாறிலா மணியை - 2.சேந்தனார்:1 3/1
எழும் கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார் இடர் கெடும் மால் உலா மனமே - 2.சேந்தனார்:3 11/4

 TOP
 
    ஒளிர் (2)
அருள் புரி முறுவல் முகிழ் நிலா எறிப்ப அந்தி போன்று ஒளிர் திருமேனி - 3.கருவூர்:10 6/3
உதித்த போழ்தில் இரவி கதிர் போல் ஒளிர் மா மணி எங்கும் - 7.திருவாலி:3 8/3

 TOP
 
    ஒளிரும் (2)
பாடிலா மணியே மணி உமிழ்ந்து ஒளிரும் பரமனே பன்னகாபரணா - 3.கருவூர்:4 4/2
கரியும் நீறு ஆடும் கனலும் ஒத்து ஒளிரும் கழுத்தில் ஓர் தனி வடம் கட்டி - 3.கருவூர்:4 7/2

 TOP
 
    ஒற்ற (1)
மலர்ந்த பாதங்கள் வன முலை மேல் ஒற்ற வந்து அருள்செய்யாயே - 7.திருவாலி:2 3/4

 TOP
 
    ஒன்றாய (1)
தாய் தலைப்பட்டு அங்கு உருகி ஒன்றாய தன்மையில் என்னை முன் ஈன்ற - 3.கருவூர்:6 7/2

 TOP
 
    ஒன்றி (1)
ஒன்றி ஒருகால் நினையாது இருந்தாலும் இருக்க ஒட்டாய் - 6.வேணாட்டடிகள்:1 5/2

 TOP
 
    ஒன்றினுக்கு (1)
இடுவது புல் ஓர் எருதுக்கு ஒன்றினுக்கு வை இடுதல் - 6.வேணாட்டடிகள்:1 6/3

 TOP
 
    ஒன்று (12)
மை ஆர் தடம் கண் மடந்தைக்கு ஒன்று அருளாது ஒழிவது மாதிமையே - 2.சேந்தனார்:2 1/4
அலது ஒன்று அறிகின்றிலேம் எனும் அணியும் வெண் நீறு அஞ்செழுத்து அலால் - 2.சேந்தனார்:2 5/3
வலது ஒன்று இலள் இதற்கு என் செய்கேன் வயல் அம் தண் சாந்தையர் வேந்தனே - 2.சேந்தனார்:2 5/4
ஒழிவு ஒன்று இலா உண்மை வண்ணமும் உலப்பிலள் ஊறு இன்ப வெள்ளமும் - 2.சேந்தனார்:2 8/1
மொழிவு ஒன்று இலா பொன்னி தீர்த்தமும் முனி கோடிகோடியா மூர்த்தியும் - 2.சேந்தனார்:2 8/2
அழிவு ஒன்று இலா செல்வ சாந்தையூர் அணி ஆவடுதுறை ஆடினாள் - 2.சேந்தனார்:2 8/3
இழிவு ஒன்று இலா வகை எய்தி நின்று இறுமாக்கும் என் இள_மான் அனே - 2.சேந்தனார்:2 8/4
பெரிது அருள் புரிந்து ஆனந்தமே தரும் நின் பெருமையில் பெரியது ஒன்று உளதே - 3.கருவூர்:7 1/2
கல் நவில் மனத்து என் கண் வலை படும் இ கருணையில் பெரியது ஒன்று உளதே - 3.கருவூர்:7 7/2
உலகு எலாம் தொழ வந்து எழு கதிர் பரிதி ஒன்று நூறாயிர கோடி - 3.கருவூர்:9 1/1
பொன் ஆர் குன்றம் ஒன்று வந்து நின்றது போலும் என்னா - 5.கண்டராதித்:1 1/2
உம்மையே நினைந்து ஏத்தும் ஒன்று ஆகிலள் - 9.சேதிராயர்:1 4/2

 TOP
 
    ஒன்றும் (2)
உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய் ஒழிவற நிறைந்த ஒண் சுடரே - 3.கருவூர்:4 9/2
ஒன்றும் ஆகிலள் உம் பொருட்டே - 9.சேதிராயர்:1 9/4

 TOP
 
    ஒன்றே (1)
ஒளி வளர் விளக்கே உலப்பு இலா ஒன்றே உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே - 1.திருமாளிகை:1 1/1

 TOP