<<முந்திய பக்கம்

திருமுறை ஒன்பது - தொடரடைவு

ப - முதல் சொற்கள்
பக்கம் 1
பக்கல் 1
பகல் 2
பகலாய் 1
பகலோன் 1
பகலோன்-பால் 1
பகவனாம் 1
பகு 1
பகைத்தார் 1
பகையாட 1
பகையே 1
பங்கத்து 1
பங்கயம் 2
பங்கன் 1
பசு 2
பசுபதீ 1
பசும் 4
பசும்பொன் 1
பஞ்சமம் 1
பட்ட 2
பட்டவர்த்தனம் 1
பட்டனுக்கு 1
பட்டு 2
பட 3
படம் 1
படர் 7
படர்ந்து 1
படர 1
படலத்தின் 2
படலம் 1
படி 2
படு 5
படுக்கும் 1
படுகர் 2
படுத்தானுக்கே 1
படுப்பார் 1
படும் 2
படும்-தொறும் 1
படுவார் 1
படை 3
படைத்த 2
பண் 1
பண்டு 2
பண்டும் 1
பண்ணி 1
பண்ணிய 1
பண்ணினாய் 1
பண்ணுதலை 1
பண்பின் 1
பண்பினார் 1
பணம் 1
பணி 4
பணிகேட்டு 1
பணிகொள 1
பணிசெய்து 1
பணிசெய்வார்க்கு 1
பணிசெயேன் 1
பணிந்து 2
பணிய 3
பணியுமா 1
பணியே 1
பணிவாரே 1
பணிவித்து 1
பணை 4
பத்தர் 2
பத்தர்கள் 1
பத்தியாய் 1
பத்தியால் 1
பத்திவை 1
பத்தும் 4
பதஞ்சலிக்கு 1
பதஞ்சலிகள் 1
பதண 1
பதணத்து 1
பதத்துள் 1
பதம் 3
பதி 1
பதிகம் 1
பதித்த 1
பதியும் 1
பதியுள் 1
பதைபதைப்பு 1
பந்த 1
பந்தபாசம் 1
பந்தம் 1
பந்தமும் 1
பயப்பதும் 1
பயப்பிப்பது 1
பயலைமை 1
பயன் 1
பயில் 6
பயில்வதும் 1
பயில 1
பயிலும் 12
பயின்று 1
பரஞ்சுடரை 1
பரஞ்சோதி 1
பரந்த 1
பரந்து 3
பரந்தும் 1
பரப்பி 1
பரம் 4
பரம்பரமா 1
பரமர்-தம் 5
பரமன் 2
பரமனது 2
பரமனே 1
பரமாய 1
பரவ 1
பரவல் 1
பரவி 1
பரவும் 2
பரவை 1
பரிகலம் 1
பரிசில் 1
பரிசு 3
பரிதி 1
பரிதியோ 1
பரிந்த 1
பரிந்தவனே 1
பரிந்தே 1
பரிவொடு 1
பரு 2
பருகி 1
பருகு-தோறு 1
பருகும் 1
பருதி 1
பருவத்து 1
பல் 12
பல்லவம் 1
பல்லாண்டு 14
பல்லாயிரம் 1
பல்லை 1
பல 9
பலர் 3
பலவும் 1
பலி 5
பலிக்கு 1
பவள 15
பவளத்தின் 1
பவளம் 1
பவளமே 4
பவனி 1
பழ 1
பழன 1
பழனத்து 1
பழனம் 5
பழி 1
பழியாளர் 1
பழுத்த 1
பழுது 1
பழையராம் 1
பழையோர் 1
பளிங்கின் 5
பளிங்கு 2
பற்பத 1
பற்றாய் 1
பற்றார் 1
பற்று 1
பற்றுவரே 1
பறந்து 1
பறை 1
பறைந்து 1
பன்றி 3
பன்னகாபரணன் 1
பன்னகாபரணா 3
பன்னிரு 1
பன்னெடுங்காலம் 2
பனி 9
பனுவல் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    பக்கம் (1)
பக்கம் ஓட்டந்த மன்மதன் மலர் கணை படும்-தொறும் அலந்தேனே - 7.திருவாலி:2 2/4

 TOP
 
    பக்கல் (1)
பக்கல் ஆனந்தம் இடையறா வண்ணம் பண்ணினாய் பவள வாய் மொழிந்தே - 3.கருவூர்:4 5/4

 TOP
 
    பகல் (2)
காடு ஆடு பல் கணம் சூழ கேழல் கடும்பின் நெடும் பகல் கான் நடந்த - 1.திருமாளிகை:3 2/1
என் செய்கோம் தோழி தோழி நீ துணையா இரவு போம் பகல் வருமாகில் - 3.கருவூர்:3 6/1

 TOP
 
    பகலாய் (1)
அல்லாய் பகலாய் அருவாய் உருவாய் ஆரா அமுதமாய் - 7.திருவாலி:3 1/1

 TOP
 
    பகலோன் (1)
பண்டு ஆய மலர் அயன் தக்கன் எச்சன் பகலோன் தலை பல் பசும் கண் - 1.திருமாளிகை:3 6/3

 TOP
 
    பகலோன்-பால் (1)
அம் பளிங்கு பகலோன்-பால் அடை பற்றாய் இவள் மனத்தின் - 3.கருவூர்:5 3/1

 TOP
 
    பகவனாம் (1)
பருதி வானவனாம் படர் சடை முக்கண் பகவனாம் அக உயிர்க்கு அமுதாம் - 3.கருவூர்:6 5/2

 TOP
 
    பகு (1)
கணம் விரி குடுமி செம் மணி கவை நா கறை அணல் கண் செவி பகு வாய் - 3.கருவூர்:1 1/1

 TOP
 
    பகைத்தார் (1)
பிடியை என் செய்திட்டீர் பகைத்தார் புரம் - 9.சேதிராயர்:1 7/2

 TOP
 
    பகையாட (1)
எழுந்து இன்று என் மேல் பகையாட வாடும் எனை நீ நலிவது என் என்னே என்னும் - 1.திருமாளிகை:3 5/2

 TOP
 
    பகையே (1)
ஐவரும் பகையே யார் துணை என்றால் அஞ்சல் என்று அருள்செய்வான் கோயில் - 3.கருவூர்:1 2/2

 TOP
 
    பங்கத்து (1)
மங்கை ஓர் பங்கத்து என் அரு மருந்தை வருந்தி நான் மறப்பனோ இனியே - 2.சேந்தனார்:1 7/4

 TOP
 
    பங்கயம் (2)
என்னை உன் பாத பங்கயம் பணிவித்து என்பு எலாம் உருக நீ எளிவந்து - 3.கருவூர்:4 8/1
பங்கயம் புரை முகம் நோக்கிநோக்கி பனி மதி நிலவது என் மேல் படர - 8.புருடோத்தம:1 9/2

 TOP
 
    பங்கன் (1)
வார் ஆர் முலையாள் மங்கை_பங்கன் மா மறையோர் வணங்க - 5.கண்டராதித்:1 6/2

 TOP
 
    பசு (2)
கச்சரை கல்லா பொல்லா கயவரை பசு நூல் கற்கும் - 1.திருமாளிகை:4 9/3
பந்தபாசம் எலாம் அற பசு பாசம் நீக்கிய பல் முனிவரோடு - 7.திருவாலி:1 5/1

 TOP
 
    பசுபதீ (1)
பவள வாய் மணியே பணிசெய்வார்க்கு இரங்கும் பசுபதீ பன்னகாபரணா - 3.கருவூர்:4 1/2

 TOP
 
    பசும் (4)
பண்டு ஆய மலர் அயன் தக்கன் எச்சன் பகலோன் தலை பல் பசும் கண் - 1.திருமாளிகை:3 6/3
மேடு எலாம் செந்நெல் பசும் கதிர் விளைந்து மிக திகழ் முகத்தலை மூதூர் - 3.கருவூர்:4 4/3
எழிலை ஆழ்செய்கை பசும் கலன் விசும்பின் இன் துளி பட நனைந்து உருகி - 3.கருவூர்:10 7/1
பல்லை ஆர் பசும் தலையோடு இடறி பாத மென் மலர் அடி நோவ நீ போய் - 8.புருடோத்தம:1 6/3

 TOP
 
    பசும்பொன் (1)
பரிந்த செம் சுடரோ பரிதியோ மின்னோ பவளத்தின் குழவியோ பசும்பொன்
  சொரிந்த சிந்துரமோ தூ மணி திரளோ சுந்தரத்து அரசு இது என்ன - 2.சேந்தனார்:3 7/1,2

 TOP
 
    பஞ்சமம் (1)
வார் அணி நறு மலர் வண்டு கெண்டு பஞ்சமம் செண்பக மாலை மாலை - 8.புருடோத்தம:1 1/1

 TOP
 
    பட்ட (2)
காதலில் பட்ட கருணையாய் கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 7/4
வெய்யவாம் செம் தீ பட்ட இட்டிகை போல் விழுமியோன் முன்பு பின்பு என்கோ - 3.கருவூர்:10 8/2

 TOP
 
    பட்டவர்த்தனம் (1)
பாந்தள் பூண் ஆரம் பரிகலம் கபாலம் பட்டவர்த்தனம் எருது அன்பர் - 3.கருவூர்:8 2/1

 TOP
 
    பட்டனுக்கு (1)
பட்டனுக்கு என்னை தன்-பால் படுத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 3/4

 TOP
 
    பட்டு (2)
பட்டு ஆங்கு அழல் விழுங்க எய்து உகந்த பண்பினார் - 8.புருடோத்தம:2 3/2
எண்ணுதலை பட்டு அங்கு இனிதா இருப்பாரே - 8.புருடோத்தம:2 11/4

 TOP
 
    பட (3)
காமன் அ காலன் தக்கன் மிக்க எச்சன் பட கடைக்கணித்தவன் அல்லா - 1.திருமாளிகை:2 11/1
புனல் பட உருகி மண்டு அழல் வெதும்பி பூம் புனல் பொதிந்து உயிர் அளிக்கும் - 3.கருவூர்:4 6/1
எழிலை ஆழ்செய்கை பசும் கலன் விசும்பின் இன் துளி பட நனைந்து உருகி - 3.கருவூர்:10 7/1

 TOP
 
    படம் (1)
படம் கொள் பாம்பணையானொடு பிரமன் பரம்பரமா அருள் என்று - 7.திருவாலி:1 7/1

 TOP
 
    படர் (7)
படர் ஒளி பரப்பி பரந்து நின்றாயை தொண்டனேன் பணியுமா பணியே - 1.திருமாளிகை:1 2/4
பாய் இரும் கங்கை பனி நிலா கரந்த படர் சடை மின்னு பொன் முடியோன் - 2.சேந்தனார்:1 8/2
துண்ட வெண் பிறையும் படர் சடை மொழுப்பும் சுழியமும் சூலமும் நீல - 3.கருவூர்:3 2/1
பருதி வானவனாம் படர் சடை முக்கண் பகவனாம் அக உயிர்க்கு அமுதாம் - 3.கருவூர்:6 5/2
பணி மகிழ்ந்து அருளும் அரிவை_பாகத்தன் படர் சடை விட மிடற்று அடிகள் - 3.கருவூர்:10 4/2
பவள மால் வரையை பனி படர்ந்து அனையதோர் படர் ஒளி தரு திருநீறும் - 7.திருவாலி:2 1/1
பால் நெய் ஐந்துடன் ஆடிய படர் சடை பால்_வண்ணனே என்பன் - 7.திருவாலி:2 9/2

 TOP
 
    படர்ந்து (1)
பவள மால் வரையை பனி படர்ந்து அனையதோர் படர் ஒளி தரு திருநீறும் - 7.திருவாலி:2 1/1

 TOP
 
    படர (1)
பங்கயம் புரை முகம் நோக்கிநோக்கி பனி மதி நிலவது என் மேல் படர
  செங்கயல் புரை கண்ணிமார்கள் முன்னே திருச்சிற்றம்பலமுடனே புகுந்து - 8.புருடோத்தம:1 9/2,3

 TOP
 
    படலத்தின் (2)
உயர் கொடி ஆடை மிடை படலத்தின் ஓம தூம படலத்தின் - 1.திருமாளிகை:2 1/1
உயர் கொடி ஆடை மிடை படலத்தின் ஓம தூம படலத்தின்
  பியர் நெடு மாடத்து அகில் புகை படலம் பெருகிய பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 1/1,2

 TOP
 
    படலம் (1)
பியர் நெடு மாடத்து அகில் புகை படலம் பெருகிய பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 1/2

 TOP
 
    படி (2)
அம் சுடர் புரிசை ஆழி சூழ் வட்டத்து அகம் படி மணி நிரை பரந்த - 3.கருவூர்:1 6/3
பந்தமும் பிரிவும் தெரி பொருள் பனுவல் படி வழி சென்றுசென்று ஏறி - 3.கருவூர்:10 5/1

 TOP
 
    படு (5)
முனை படு மதில் மூன்று எரித்த நாயகனே முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன் - 3.கருவூர்:4 6/3
குடை கெழு நிருபர் முடியொடு முடி தேய்ந்து உக்க செம் சுடர் படு குவை ஓங்கு - 3.கருவூர்:9 3/3
பனி படு மதியம் பயில் கொழுந்து அன்ன பல்லவம் வல்லி என்று இங்ஙன் - 3.கருவூர்:10 3/1
படு மதமும் இட வயிறும் உடைய களிறு உடைய பிரான் - 6.வேணாட்டடிகள்:1 6/1
ஆர் இனி அமரர்கள் குறைவு_இலாதார் அவரவர் படு துயர் களைய நின்ற - 8.புருடோத்தம:1 7/3

 TOP
 
    படுக்கும் (1)
ஆத்-தனை தான் படுக்கும் அந்தணர் தில்லை அம்பலத்துள் - 7.திருவாலி:4 7/3

 TOP
 
    படுகர் (2)
தத்து நீர் படுகர் தண்டலை சூழல் சாட்டியக்குடியுள் ஏழ் இருக்கை - 3.கருவூர்:8 9/3
தாள் தரும் பழன பைம் பொழில் படுகர் தண்டலை சாட்டியக்குடியார் - 3.கருவூர்:8 10/1

 TOP
 
    படுத்தானுக்கே (1)
பட்டனுக்கு என்னை தன்-பால் படுத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 3/4

 TOP
 
    படுப்பார் (1)
ஆவே படுப்பார் அந்தணாளர் ஆகுதி வேட்டு உயர்வார் - 5.கண்டராதித்:1 2/2

 TOP
 
    படும் (2)
குண மணி குருளை கொவ்வை வாய் மடந்தை படும் இடர் குறிக்கொளாது அழகோ - 2.சேந்தனார்:3 5/1
கல் நவில் மனத்து என் கண் வலை படும் இ கருணையில் பெரியது ஒன்று உளதே - 3.கருவூர்:7 7/2

 TOP
 
    படும்-தொறும் (1)
பக்கம் ஓட்டந்த மன்மதன் மலர் கணை படும்-தொறும் அலந்தேனே - 7.திருவாலி:2 2/4

 TOP
 
    படுவார் (1)
ஆரே இவை படுவார் ஐயம்கொள வந்து - 8.புருடோத்தம:2 4/1

 TOP
 
    படை (3)
பல குலாம் படை செய் நெடு நிலை மாடம் பரு வரை ஞாங்கர் வெண் திங்கள் - 3.கருவூர்:9 1/3
வன் பல படை உடை பூதம் சூழ வானவர் கணங்களை மாற்றி ஆங்கே - 8.புருடோத்தம:1 3/3
கூர் நுனை வேல் படை கூற்றம் சாய குரை கழல் பணிகொள மலைந்தது என்றால் - 8.புருடோத்தம:1 7/2

 TOP
 
    படைத்த (2)
சத்தியாய் சிவமாய் உலகு எலாம் படைத்த தனி முழுமுதலுமாய் அதற்கு ஓர் - 4.பூந்துருத்தி:1 2/3
புவலோக நெறி படைத்த புண்ணியங்கள் நண்ணிய சீர் - 4.பூந்துருத்தி:2 6/3

 TOP
 
    பண் (1)
பண் பல தெளி தேன் பாடி நின்று ஆட பனி மலர் சோலை சூழ் மொழுப்பில் - 3.கருவூர்:1 5/3

 TOP
 
    பண்டு (2)
பண்டு ஆய மலர் அயன் தக்கன் எச்சன் பகலோன் தலை பல் பசும் கண் - 1.திருமாளிகை:3 6/3
பண்டு அலர் அயன் மாற்கு அரிதுமாய் அடியார்க்கு எளியதோர் பவள மால் வரையை - 2.சேந்தனார்:1 3/2

 TOP
 
    பண்டும் (1)
பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 2/4

 TOP
 
    பண்ணி (1)
பண்ணி நின்று உருகேன் பணிசெயேன் எனினும் பாவியேன் ஆவியுள் புகுந்து என் - 3.கருவூர்:6 2/3

 TOP
 
    பண்ணிய (1)
பண்ணிய தழல் காய் பால் அளாம் நீர் போல் பாவம் முன் பறைந்து பால் அனைய - 3.கருவூர்:6 9/1

 TOP
 
    பண்ணினாய் (1)
பக்கல் ஆனந்தம் இடையறா வண்ணம் பண்ணினாய் பவள வாய் மொழிந்தே - 3.கருவூர்:4 5/4

 TOP
 
    பண்ணுதலை (1)
பண்ணுதலை பத்தும் பயின்று ஆடி பாடினார் - 8.புருடோத்தம:2 11/3

 TOP
 
    பண்பின் (1)
மெய் நின்ற தமர்க்கு எல்லாம் மெய் நிற்கும் பண்பின் உறு - 3.கருவூர்:5 4/3

 TOP
 
    பண்பினார் (1)
பட்டு ஆங்கு அழல் விழுங்க எய்து உகந்த பண்பினார்
  சிட்டார் மறை ஓவா தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 3/2,3

 TOP
 
    பணம் (1)
பணம் விரி துத்தி பொறி கொள் வெள் எயிற்று பாம்பு அணி பரமர்-தம் கோயில் - 3.கருவூர்:1 1/2

 TOP
 
    பணி (4)
பணி மகிழ்ந்து அருளும் அரிவை_பாகத்தன் படர் சடை விட மிடற்று அடிகள் - 3.கருவூர்:10 4/2
எச்சார்வும் இல்லாமை நீ அறிந்தும் எனது பணி
  நச்சாய் காண் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 1/3,4
வம்பானார் பணி உகத்தி வழி அடியேன் தொழில் இறையும் - 6.வேணாட்டடிகள்:1 2/3
அங்கு உன பணி பல செய்து நாளும் அருள் பெறின் அகலிடத்து இருக்கலாமே - 8.புருடோத்தம:1 9/4

 TOP
 
    பணிகேட்டு (1)
இந்திரலோகம் முழுவதும் பணிகேட்டு இணை அடி தொழுது எழ தாம் போய் - 3.கருவூர்:10 2/1

 TOP
 
    பணிகொள (1)
கூர் நுனை வேல் படை கூற்றம் சாய குரை கழல் பணிகொள மலைந்தது என்றால் - 8.புருடோத்தம:1 7/2

 TOP
 
    பணிசெய்து (1)
பன்னெடுங்காலம் பணிசெய்து பழையோர் தாம் பலர் ஏம்பலித்து இருக்க - 3.கருவூர்:9 8/1

 TOP
 
    பணிசெய்வார்க்கு (1)
பவள வாய் மணியே பணிசெய்வார்க்கு இரங்கும் பசுபதீ பன்னகாபரணா - 3.கருவூர்:4 1/2

 TOP
 
    பணிசெயேன் (1)
பண்ணி நின்று உருகேன் பணிசெயேன் எனினும் பாவியேன் ஆவியுள் புகுந்து என் - 3.கருவூர்:6 2/3

 TOP
 
    பணிந்து (2)
பரவி கிடந்து அயனும் மாலும் பணிந்து ஏத்த - 4.பூந்துருத்தி:2 9/2
அரும் புனல் அலமரும் சடையினானை அமரர்கள் அடி பணிந்து அரற்ற அ நாள் - 8.புருடோத்தம:1 5/1

 TOP
 
    பணிய (3)
வானோர் பணிய மண்ணோர் ஏத்த மன்னி நடம் ஆடும் - 7.திருவாலி:3 11/1
கள் அவிழ் தாமரை மேல் கண்ட அயனோடு மால் பணிய
  ஒள் எரியின் நடுவே உருவாய் பரந்து ஓங்கிய சீர் - 7.திருவாலி:4 3/1,2
ஆருயிர் காவல் இங்கு அருமையாலே அந்தணர் மதலை நின் அடி பணிய
  கூர் நுனை வேல் படை கூற்றம் சாய குரை கழல் பணிகொள மலைந்தது என்றால் - 8.புருடோத்தம:1 7/1,2

 TOP
 
    பணியுமா (1)
படர் ஒளி பரப்பி பரந்து நின்றாயை தொண்டனேன் பணியுமா பணியே - 1.திருமாளிகை:1 2/4

 TOP
 
    பணியே (1)
படர் ஒளி பரப்பி பரந்து நின்றாயை தொண்டனேன் பணியுமா பணியே - 1.திருமாளிகை:1 2/4

 TOP
 
    பணிவாரே (1)
பரவல் பத்திவை வல்லவர் பரமனது அடி இணை பணிவாரே - 7.திருவாலி:2 10/4

 TOP
 
    பணிவித்து (1)
என்னை உன் பாத பங்கயம் பணிவித்து என்பு எலாம் உருக நீ எளிவந்து - 3.கருவூர்:4 8/1

 TOP
 
    பணை (4)
கெந்தியா உகளும் கெண்டை புண்டரீகம் கிழிக்கும் தண் பணை செய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 10/3
பற்பத குவையும் பைம்பொன் மாளிகையும் பவள வாயவர் பணை முலையும் - 3.கருவூர்:6 3/3
பூம் பணை சோலை ஆவண வீதி பூவணம் கோயில்கொண்டாயே - 3.கருவூர்:7 2/4
சேண் பணை மாளிகை சூழ் தில்லை மா நகர் சிற்றம்பலம் - 7.திருவாலி:4 2/3

 TOP
 
    பத்தர் (2)
பா ஆர்ந்த தமிழ் மாலை பத்தர் அடி தொண்டன் எடுத்து - 6.வேணாட்டடிகள்:1 10/1
பத்தர் பலி இடுக என்று எங்கும் பார்க்கின்றார் - 8.புருடோத்தம:2 9/2

 TOP
 
    பத்தர்கள் (1)
மன்னுக தில்லை வளர்க நம் பத்தர்கள் வஞ்சகர் போய் அகல - 10.சேந்தனார்:1 1/1

 TOP
 
    பத்தியாய் (1)
பத்தியாய் உணர்வோர் அருளை வாய்மடுத்து பருகு-தோறு அமுதம் ஒத்து அவர்க்கே - 4.பூந்துருத்தி:1 2/1

 TOP
 
    பத்தியால் (1)
பத்தியால் சென்று கண்டிட என் மனம் பதைபதைப்பு ஒழியாதே - 7.திருவாலி:2 5/4

 TOP
 
    பத்திவை (1)
பரவல் பத்திவை வல்லவர் பரமனது அடி இணை பணிவாரே - 7.திருவாலி:2 10/4

 TOP
 
    பத்தும் (4)
பா வண தமிழ்கள் பத்தும் வல்லார்கள் பரமனது உருவம் ஆகுவரே - 3.கருவூர்:7 10/4
காடன் தமிழ் மாலை பத்தும் கருத்து அறிந்து - 4.பூந்துருத்தி:2 10/3
பால் நேர் பாடல் பத்தும் பாட பாவம் நாசமே - 7.திருவாலி:3 11/4
பண்ணுதலை பத்தும் பயின்று ஆடி பாடினார் - 8.புருடோத்தம:2 11/3

 TOP
 
    பதஞ்சலிக்கு (1)
பாரோர் முழுதும் வந்து இறைஞ்ச பதஞ்சலிக்கு ஆட்டு உகந்தான் - 5.கண்டராதித்:1 6/1

 TOP
 
    பதஞ்சலிகள் (1)
பல்லாயிரம் பேர் பதஞ்சலிகள் பரவ வெளிப்பட்டு - 7.திருவாலி:3 1/3

 TOP
 
    பதண (1)
பிறை தவழ் பொழில் சூழ் கிடங்கிடை பதண முது மதில் பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 5/2

 TOP
 
    பதணத்து (1)
இலை குலாம் பதணத்து இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 1/4

 TOP
 
    பதத்துள் (1)
சொல் பதத்துள் வைத்து உள்ளம் அள்ளூறும் தொண்டருக்கு எண் திசை கனகம் - 3.கருவூர்:6 3/2

 TOP
 
    பதம் (3)
நடப்பாய் மகேந்திர நாத நாதாந்தத்து அரையா என்பார்க்கு நாதாந்த பதம்
  கொடுப்பாய் என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 7/3,4
தளிர் ஒளி மணி பூம் பதம் சிலம்பு அலம்ப சடை விரித்து அலை எறி கங்கை - 3.கருவூர்:3 1/1
பல்லாண்டு என்னும் பதம் கடந்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 4/4

 TOP
 
    பதி (1)
திரு வளர் தெய்வ பதி விதி நிதியம் திரண்ட சிற்றம்பல கூத்தா - 1.திருமாளிகை:2 2/3

 TOP
 
    பதிகம் (1)
பதிகம் நான்மறை தும்புருவும் நாரதரும் பரிவொடு பாடு காந்தர்ப்பர் - 3.கருவூர்:8 4/1

 TOP
 
    பதித்த (1)
பதித்த தலத்து பவள மேனி பரமன் ஆடுமே - 7.திருவாலி:3 8/4

 TOP
 
    பதியும் (1)
மாலோடு அயனும் அமரர்_பதியும் வந்து வணங்கி நின்று - 7.திருவாலி:3 9/1

 TOP
 
    பதியுள் (1)
சிந்திப்பு அரிய தெய்வ பதியுள் சிற்றம்பலம்-தன்னுள் - 7.திருவாலி:3 4/3

 TOP
 
    பதைபதைப்பு (1)
பத்தியால் சென்று கண்டிட என் மனம் பதைபதைப்பு ஒழியாதே - 7.திருவாலி:2 5/4

 TOP
 
    பந்த (1)
எம் பந்த வல்வினை நோய் தீர்த்திட்டு எமை ஆளும் - 4.பூந்துருத்தி:2 4/1

 TOP
 
    பந்தபாசம் (1)
பந்தபாசம் எலாம் அற பசு பாசம் நீக்கிய பல் முனிவரோடு - 7.திருவாலி:1 5/1

 TOP
 
    பந்தம் (1)
பந்தம் பிரிய பரிந்தவனே என்று பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 13/4

 TOP
 
    பந்தமும் (1)
பந்தமும் பிரிவும் தெரி பொருள் பனுவல் படி வழி சென்றுசென்று ஏறி - 3.கருவூர்:10 5/1

 TOP
 
    பயப்பதும் (1)
கோன் அமர் கூத்தன் குல இளம் களிறு என் கொடிக்கு இடர் பயப்பதும் குணமே - 2.சேந்தனார்:3 4/4

 TOP
 
    பயப்பிப்பது (1)
மருள்செய்து என்றனை வன முலை பொன் பயப்பிப்பது வழக்கு ஆமோ - 7.திருவாலி:2 4/2

 TOP
 
    பயலைமை (1)
என் பெரும் பயலைமை தீரும் வண்ணம் எழுந்தருளாய் எங்கள் வீதியூடே - 8.புருடோத்தம:1 3/4

 TOP
 
    பயன் (1)
சொல் போலும் மெய் பயன் பாவிகாள் என் சொல்லி சொல்லும் இ தூ_மொழி - 2.சேந்தனார்:2 7/2

 TOP
 
    பயில் (6)
நாரணன் பரவும் திருவடி நிலை மேல் நலம் மலி கலை பயில் கருவூர் - 3.கருவூர்:2 10/2
காட்டிய பொருள் கலை பயில் கருவூரன் கழறு சொல் மாலை ஈரைந்தும் - 3.கருவூர்:8 10/3
பனி படு மதியம் பயில் கொழுந்து அன்ன பல்லவம் வல்லி என்று இங்ஙன் - 3.கருவூர்:10 3/1
அதிர வார் கழல் வீசி நின்று அழகா நடம் பயில் கூத்தன் மேல் திகழ் - 7.திருவாலி:1 6/3
அன்ன_நடையார் அமுத மொழியார் அவர்கள் பயில் தில்லை - 7.திருவாலி:3 2/1
செம்மலோர் பயில் தில்லை_உளீர் எங்கள் - 9.சேதிராயர்:1 4/3

 TOP
 
    பயில்வதும் (1)
பழுது எனவே நினைந்து ஓராள் பயில்வதும் நின் ஒரு நாமம் - 3.கருவூர்:5 6/2

 TOP
 
    பயில (1)
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 9/4

 TOP
 
    பயிலும் (12)
இன் நடம் பயிலும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 8/4
நச்சாய் காண் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 1/4
நம்பாய் காண் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 2/4
நசையானேன் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 3/4
நாயேனை திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 4/4
நன்று இதுவோ திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 5/4
நடு இதுவோ திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 6/4
நண்ணாயால் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 7/4
நாடாயால் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 8/4
நாள் ஏதோ திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 9/4
தே ஆம் மறை பயிலும் தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 7/3
சித்தர் கணம் பயிலும் தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 9/3

 TOP
 
    பயின்று (1)
பண்ணுதலை பத்தும் பயின்று ஆடி பாடினார் - 8.புருடோத்தம:2 11/3

 TOP
 
    பரஞ்சுடரை (1)
பாலினை இன் அமுதை பரமாய பரஞ்சுடரை
  சேல் உகளும் வயல் சூழ் தில்லை மா நகர் சிற்றம்பலத்து - 7.திருவாலி:4 1/2,3

 TOP
 
    பரஞ்சோதி (1)
உண்ட ஊண் உனக்காம் வகை எனது உள்ளம் உள் கலந்து எழு பரஞ்சோதி
  கொண்ட நாண் பாம்பா பெரு வரை வில்லில் குறுகலர் புரங்கள் மூன்று எரித்த - 3.கருவூர்:6 6/2,3

 TOP
 
    பரந்த (1)
அம் சுடர் புரிசை ஆழி சூழ் வட்டத்து அகம் படி மணி நிரை பரந்த
  செம் சுடர் அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 6/3,4

 TOP
 
    பரந்து (3)
படர் ஒளி பரப்பி பரந்து நின்றாயை தொண்டனேன் பணியுமா பணியே - 1.திருமாளிகை:1 2/4
பேரொலி பரந்து கடல் ஒலி மலிய பொலிதரு பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 4/2
ஒள் எரியின் நடுவே உருவாய் பரந்து ஓங்கிய சீர் - 7.திருவாலி:4 3/2

 TOP
 
    பரந்தும் (1)
பரந்தும் நிரந்தும் வரம்பு இலா பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 5/4

 TOP
 
    பரப்பி (1)
படர் ஒளி பரப்பி பரந்து நின்றாயை தொண்டனேன் பணியுமா பணியே - 1.திருமாளிகை:1 2/4

 TOP
 
    பரம் (4)
தத் பரம் பொருளே சசி கண்ட சிகண்டா சாம கண்டா அண்டவாணா - 1.திருமாளிகை:1 3/1
நன்றே இவள் நம் பரம் அல்லள் நவலோக நாயகன் பாலளே - 2.சேந்தனார்:2 10/4
ஆர் எனை அருள் புரிந்து அஞ்சல் என்பார் ஆவியின் பரம் அன்று என்றன் ஆதரவே - 8.புருடோத்தம:1 1/4
ஆவியின் பரம் என்றன் ஆதரவும் அருவினையேனை விட்டு அம்மஅம்ம - 8.புருடோத்தம:1 2/1

 TOP
 
    பரம்பரமா (1)
படம் கொள் பாம்பணையானொடு பிரமன் பரம்பரமா அருள் என்று - 7.திருவாலி:1 7/1

 TOP
 
    பரமர்-தம் (5)
பணம் விரி துத்தி பொறி கொள் வெள் எயிற்று பாம்பு அணி பரமர்-தம் கோயில் - 3.கருவூர்:1 1/2
நாயினேன் இருந்து புலம்பினால் இரங்கி நலம் புரி பரமர்-தம் கோயில் - 3.கருவூர்:1 3/2
நந்தி கை முழவம் முகில் என முழங்க நடம் புரி பரமர்-தம் கோயில் - 3.கருவூர்:1 4/2
அன்னை தேன் கலந்து இன் அமுது உகந்து அளித்தாங்கு அருள் புரி பரமர்-தம் கோயில் - 3.கருவூர்:1 9/2
பொருந்து அரும் கருணை பரமர்-தம் கோயில் பொழிலகம் குடைந்து வண்டு உறங்க - 3.கருவூர்:1 11/3

 TOP
 
    பரமன் (2)
பதித்த தலத்து பவள மேனி பரமன் ஆடுமே - 7.திருவாலி:3 8/4
பால் ஆடும் முடி சடைகள் தாழ பரமன் ஆடுமே - 7.திருவாலி:3 9/4

 TOP
 
    பரமனது (2)
பா வண தமிழ்கள் பத்தும் வல்லார்கள் பரமனது உருவம் ஆகுவரே - 3.கருவூர்:7 10/4
பரவல் பத்திவை வல்லவர் பரமனது அடி இணை பணிவாரே - 7.திருவாலி:2 10/4

 TOP
 
    பரமனே (1)
பாடிலா மணியே மணி உமிழ்ந்து ஒளிரும் பரமனே பன்னகாபரணா - 3.கருவூர்:4 4/2

 TOP
 
    பரமாய (1)
பாலினை இன் அமுதை பரமாய பரஞ்சுடரை - 7.திருவாலி:4 1/2

 TOP
 
    பரவ (1)
பல்லாயிரம் பேர் பதஞ்சலிகள் பரவ வெளிப்பட்டு - 7.திருவாலி:3 1/3

 TOP
 
    பரவல் (1)
பரவல் பத்திவை வல்லவர் பரமனது அடி இணை பணிவாரே - 7.திருவாலி:2 10/4

 TOP
 
    பரவி (1)
பரவி கிடந்து அயனும் மாலும் பணிந்து ஏத்த - 4.பூந்துருத்தி:2 9/2

 TOP
 
    பரவும் (2)
நாரணன் பரவும் திருவடி நிலை மேல் நலம் மலி கலை பயில் கருவூர் - 3.கருவூர்:2 10/2
தேடி இமையோர் பரவும் தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 2/3

 TOP
 
    பரவை (1)
இரும் திரை தரள பரவை சூழ் அகலத்து எண்_இல் அம் கண் இல் புன் மாக்கள் - 3.கருவூர்:1 11/1

 TOP
 
    பரிகலம் (1)
பாந்தள் பூண் ஆரம் பரிகலம் கபாலம் பட்டவர்த்தனம் எருது அன்பர் - 3.கருவூர்:8 2/1

 TOP
 
    பரிசில் (1)
பாடு அலங்கார பரிசில் காசு அருளி பழுத்த செந்தமிழ் மலர் சூடி - 2.சேந்தனார்:1 12/1

 TOP
 
    பரிசு (3)
இருந்த பரிசு ஒருநாள் கண்டு இரங்காய் எம்பெருமானே - 3.கருவூர்:5 10/2
பாரும் விசும்பும் அறியும் பரிசு நாம் பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 7/4
பாதகத்துக்கு பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 10/4

 TOP
 
    பரிதி (1)
உலகு எலாம் தொழ வந்து எழு கதிர் பரிதி ஒன்று நூறாயிர கோடி - 3.கருவூர்:9 1/1

 TOP
 
    பரிதியோ (1)
பரிந்த செம் சுடரோ பரிதியோ மின்னோ பவளத்தின் குழவியோ பசும்பொன் - 2.சேந்தனார்:3 7/1

 TOP
 
    பரிந்த (1)
பரிந்த செம் சுடரோ பரிதியோ மின்னோ பவளத்தின் குழவியோ பசும்பொன் - 2.சேந்தனார்:3 7/1

 TOP
 
    பரிந்தவனே (1)
பந்தம் பிரிய பரிந்தவனே என்று பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 13/4

 TOP
 
    பரிந்தே (1)
முளை இளம் களிறு என் மொய் குழல் சிறுமிக்கு அருளும்-கொல் முருகவேள் பரிந்தே - 2.சேந்தனார்:3 6/4

 TOP
 
    பரிவொடு (1)
பதிகம் நான்மறை தும்புருவும் நாரதரும் பரிவொடு பாடு காந்தர்ப்பர் - 3.கருவூர்:8 4/1

 TOP
 
    பரு (2)
பல குலாம் படை செய் நெடு நிலை மாடம் பரு வரை ஞாங்கர் வெண் திங்கள் - 3.கருவூர்:9 1/3
பைய செம் பாந்தள் பரு மணி உமிழ்ந்து பாவியேன் காதல்செய் காதில் - 3.கருவூர்:10 1/2

 TOP
 
    பருகி (1)
ஆரண தேன் பருகி அரும் தமிழ் மாலை கமழ வரும் - 3.கருவூர்:5 11/1

 TOP
 
    பருகு-தோறு (1)
பத்தியாய் உணர்வோர் அருளை வாய்மடுத்து பருகு-தோறு அமுதம் ஒத்து அவர்க்கே - 4.பூந்துருத்தி:1 2/1

 TOP
 
    பருகும் (1)
அன்பர் ஆனவர்கள் பருகும் ஆரமுதே அத்தனே பித்தனேனுடைய - 3.கருவூர்:8 7/2

 TOP
 
    பருதி (1)
பருதி வானவனாம் படர் சடை முக்கண் பகவனாம் அக உயிர்க்கு அமுதாம் - 3.கருவூர்:6 5/2

 TOP
 
    பருவத்து (1)
திருந்து உயிர் பருவத்து அறிவுறு கருவூர் துறை வளர் தீம் தமிழ் மாலை - 3.கருவூர்:1 11/2

 TOP
 
    பல் (12)
காடு ஆடு பல் கணம் சூழ கேழல் கடும்பின் நெடும் பகல் கான் நடந்த - 1.திருமாளிகை:3 2/1
பண்டு ஆய மலர் அயன் தக்கன் எச்சன் பகலோன் தலை பல் பசும் கண் - 1.திருமாளிகை:3 6/3
எண்_இல் பல் கோடி சேவடி முடிகள் எண்_இல் பல் கோடி திண் தோள்கள் - 2.சேந்தனார்:1 9/1
எண்_இல் பல் கோடி சேவடி முடிகள் எண்_இல் பல் கோடி திண் தோள்கள் - 2.சேந்தனார்:1 9/1
எண்_இல் பல் கோடி திருவுரு நாமம் ஏர்கொள் முக்கண் முகம் இயல்பும் - 2.சேந்தனார்:1 9/2
எண்_இல் பல் கோடி எல்லைக்கு அப்பாலாய் நின்று ஐஞ்ஞூற்று அந்தணர் ஏத்தும் - 2.சேந்தனார்:1 9/3
எண்_இல் பல் கோடி குணத்தர் ஏர் வீழி இவர் நம்மை ஆளுடையாரே - 2.சேந்தனார்:1 9/4
எந்தையும் தாயும் யானும் என்று இங்ஙன் எண்_இல் பல் ஊழிகளுடனாய் - 3.கருவூர்:10 5/3
பாடகமும் நூபுரமும் பல் சிலம்பும் பேர்ந்து ஒலிப்ப - 4.பூந்துருத்தி:2 8/1
பந்தபாசம் எலாம் அற பசு பாசம் நீக்கிய பல் முனிவரோடு - 7.திருவாலி:1 5/1
நெடிய சமணும் மறை சாக்கியரும் நிரம்பா பல் கோடி - 7.திருவாலி:3 10/1
அன்று அருக்கனை பல் இறுத்து ஆனையை - 9.சேதிராயர்:1 9/1

 TOP
 
    பல்லவம் (1)
பனி படு மதியம் பயில் கொழுந்து அன்ன பல்லவம் வல்லி என்று இங்ஙன் - 3.கருவூர்:10 3/1

 TOP
 
    பல்லாண்டு (14)
பின்னை பிறவி அறுக்க நெறி தந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 1/4
பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 2/4
பட்டனுக்கு என்னை தன்-பால் படுத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 3/4
பல்லாண்டு என்னும் பதம் கடந்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 4/4
பல்லாண்டு என்னும் பதம் கடந்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 4/4
பரந்தும் நிரந்தும் வரம்பு இலா பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 5/4
பாவிக்கும் பாவகத்து அப்புறத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 6/4
பாரும் விசும்பும் அறியும் பரிசு நாம் பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 7/4
பாலும் அமுதமும் ஒத்து நின்றானுக்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 8/4
பாலித்து நட்டம் பயில வல்லானுக்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 9/4
பாதகத்துக்கு பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 10/4
பழ அடியாரொடும் கூடி எம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 11/4
பார் ஆர் தொல் புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 12/4
பந்தம் பிரிய பரிந்தவனே என்று பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 13/4

 TOP
 
    பல்லாயிரம் (1)
பல்லாயிரம் பேர் பதஞ்சலிகள் பரவ வெளிப்பட்டு - 7.திருவாலி:3 1/3

 TOP
 
    பல்லை (1)
பல்லை ஆர் பசும் தலையோடு இடறி பாத மென் மலர் அடி நோவ நீ போய் - 8.புருடோத்தம:1 6/3

 TOP
 
    பல (9)
ஒருமையில் பல புக்கு உருவி நின்றாயை தொண்டனேன் உரைக்குமாறு உரையே - 1.திருமாளிகை:1 4/4
அறம் பல திறம் கண்டு அரும் தவர்க்கு அரசாய் ஆலின் கீழ் இருந்த அம்பலவா - 1.திருமாளிகை:1 8/3
நிறை தழை வாழை நிழல் கொடி நெடும் தெங்கு இளம் கமுகு உளம்கொள் நீள் பல மா - 1.திருமாளிகை:2 5/1
பண் பல தெளி தேன் பாடி நின்று ஆட பனி மலர் சோலை சூழ் மொழுப்பில் - 3.கருவூர்:1 5/3
பல குலாம் படை செய் நெடு நிலை மாடம் பரு வரை ஞாங்கர் வெண் திங்கள் - 3.கருவூர்:9 1/3
குதிரை மாவொடு தேர் பல குவிந்து ஈண்டு தில்லையுள் கொம்பு_அனாரொடு - 7.திருவாலி:1 6/1
வன் பல படை உடை பூதம் சூழ வானவர் கணங்களை மாற்றி ஆங்கே - 8.புருடோத்தம:1 3/3
அங்கு உன பணி பல செய்து நாளும் அருள் பெறின் அகலிடத்து இருக்கலாமே - 8.புருடோத்தம:1 9/4
மாசிலா மறை பல ஓது நாவன் வண் புருடோத்தமன் கண்டு உரைத்த - 8.புருடோத்தம:1 11/3

 TOP
 
    பலர் (3)
வேறாக பலர் சூழ வீற்றிருத்தி அது கொண்டு - 3.கருவூர்:5 9/2
பன்னெடுங்காலம் பணிசெய்து பழையோர் தாம் பலர் ஏம்பலித்து இருக்க - 3.கருவூர்:9 8/1
புரியும் பொன் மதில் சூழ்தரு தில்லையுள் பூசுரர் பலர் போற்ற - 7.திருவாலி:2 10/1

 TOP
 
    பலவும் (1)
சந்தும் அகிலும் தழை பீலிகளும் சாதி பலவும் கொண்டு - 7.திருவாலி:3 4/1

 TOP
 
    பலி (5)
மையரே வையம் பலி திரிந்து உறையும் மயானரே உளம் கலந்திருந்தும் - 3.கருவூர்:2 8/2
அங்கையோடு ஏந்தி பலி திரி கருவூர் அறைந்த சொல் மாலையால் ஆழி - 3.கருவூர்:6 11/3
ஐந்தலை நாக மேகலை அரையா அகம்-தொறும் பலி திரி அடிகள் - 3.கருவூர்:10 2/2
உடையும் பாய் புலித்தோலும் நல் அரவமும் உண்பதும் பலி தேர்ந்து - 7.திருவாலி:2 7/1
பத்தர் பலி இடுக என்று எங்கும் பார்க்கின்றார் - 8.புருடோத்தம:2 9/2

 TOP
 
    பலிக்கு (1)
அ மனம் குளிர் நாள் பலிக்கு எழுந்தருள அரிவையர் அவிழ் குழல் சுரும்பு - 3.கருவூர்:7 6/3

 TOP
 
    பவள (15)
நீறு அணி பவள குன்றமே நின்ற நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே - 1.திருமாளிகை:1 6/1
அணி மணி முறுவல் பவள வாய் செய்ய சோதியுள் அடங்கிற்று என் அறிவே - 1.திருமாளிகை:2 8/4
பண்டு அலர் அயன் மாற்கு அரிதுமாய் அடியார்க்கு எளியதோர் பவள மால் வரையை - 2.சேந்தனார்:1 3/2
கோ வினை பவள குழ மணக்கோல குழாங்கள் சூழ் கோழி வெல் கொடியோன் - 2.சேந்தனார்:3 3/1
ஆரணம் மொழிந்த பவள வாய் சுரந்த அமுதம் ஊறிய தமிழ் மாலை - 3.கருவூர்:2 10/3
கண்டமும் குழையும் பவள வாய் இதழும் கண் நுதல் திலகமும் காட்டி - 3.கருவூர்:3 2/2
திரு நுதல் விழியும் பவள வாய் இதழும் திலகமும் உடையவன் சடை மேல் - 3.கருவூர்:3 3/1
பவள வாய் மணியே பணிசெய்வார்க்கு இரங்கும் பசுபதீ பன்னகாபரணா - 3.கருவூர்:4 1/2
வழங்கு தேன் பொழியும் பவள வாய் முக்கண் வளர் ஒளி மணி நெடும் குன்றே - 3.கருவூர்:4 2/2
பன்னகாபரணா பவள வாய் மணியே பாவியேன் ஆவியுள் புகுந்தது - 3.கருவூர்:4 3/3
பக்கல் ஆனந்தம் இடையறா வண்ணம் பண்ணினாய் பவள வாய் மொழிந்தே - 3.கருவூர்:4 5/4
பற்பத குவையும் பைம்பொன் மாளிகையும் பவள வாயவர் பணை முலையும் - 3.கருவூர்:6 3/3
செம்பொனே பவள குன்றமே நின்ற திசைமுகன் மால் முதல் கூட்டத்து - 3.கருவூர்:8 7/1
பவள மால் வரையை பனி படர்ந்து அனையதோர் படர் ஒளி தரு திருநீறும் - 7.திருவாலி:2 1/1
பதித்த தலத்து பவள மேனி பரமன் ஆடுமே - 7.திருவாலி:3 8/4

 TOP
 
    பவளத்தின் (1)
பரிந்த செம் சுடரோ பரிதியோ மின்னோ பவளத்தின் குழவியோ பசும்பொன் - 2.சேந்தனார்:3 7/1

 TOP
 
    பவளம் (1)
கனைத்து இழியும் கழனி கனகம் கதிர் ஒண் பவளம்
  சினத்தொடு வந்து எறியும் தில்லை மா நகர் கூத்தனையே - 7.திருவாலி:4 6/3,4

 TOP
 
    பவளமே (4)
பவளமே மகுடம் பவளமே திருவாய் பவளமே திருவுடம்பு அதனில் - 3.கருவூர்:2 5/1
பவளமே மகுடம் பவளமே திருவாய் பவளமே திருவுடம்பு அதனில் - 3.கருவூர்:2 5/1
பவளமே மகுடம் பவளமே திருவாய் பவளமே திருவுடம்பு அதனில் - 3.கருவூர்:2 5/1
நீலமே கண்டம் பவளமே திருவாய் நித்திலம் நிரைத்து இலங்கினவே - 3.கருவூர்:2 6/1

 TOP
 
    பவனி (1)
முக்கண் நாயகராய் பவனி போந்து இங்ஙன் முரிவது ஓர் முரிவு உமை அளவும் - 4.பூந்துருத்தி:1 1/2

 TOP
 
    பழ (1)
பழ அடியாரொடும் கூடி எம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 11/4

 TOP
 
    பழன (1)
தாள் தரும் பழன பைம் பொழில் படுகர் தண்டலை சாட்டியக்குடியார் - 3.கருவூர்:8 10/1

 TOP
 
    பழனத்து (1)
அல்லி அம் பூம் பழனத்து ஆமூர் நாவுக்கரசை - 4.பூந்துருத்தி:2 3/1

 TOP
 
    பழனம் (5)
பிரம்பிரி செந்நெல் கழனி செங்கழுநீர் பழனம் சூழ் பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 3/2
கைவரும் பழனம் குழைத்த செம் சாலி கடைசியர் களை தரு நீலம் - 3.கருவூர்:1 2/3
கிளர் ஒளி மணி வண்டு அறை பொழில் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 1/3
கெண்டையும் கயலும் உகளும் நீர் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 2/3
கிழை தவழ் கனகம் பொழியும் நீர் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 7/3

 TOP
 
    பழி (1)
ஊர் ஓங்கும் பழி பாராது உன்-பாலே விழுந்து ஒழிந்தேன் - 3.கருவூர்:5 1/3

 TOP
 
    பழியாளர் (1)
உம்பர்கள் வன் பழியாளர் முன்னே ஊட்டினர் நஞ்சை என்றேயும் உய்யேன் - 8.புருடோத்தம:1 3/2

 TOP
 
    பழுத்த (1)
பாடு அலங்கார பரிசில் காசு அருளி பழுத்த செந்தமிழ் மலர் சூடி - 2.சேந்தனார்:1 12/1

 TOP
 
    பழுது (1)
பழுது எனவே நினைந்து ஓராள் பயில்வதும் நின் ஒரு நாமம் - 3.கருவூர்:5 6/2

 TOP
 
    பழையராம் (1)
பழையராம் தொண்டர்க்கு எளியரே மிண்டர்க்கு அரியரே பாவியேன் செய்யும் - 3.கருவூர்:2 4/1

 TOP
 
    பழையோர் (1)
பன்னெடுங்காலம் பணிசெய்து பழையோர் தாம் பலர் ஏம்பலித்து இருக்க - 3.கருவூர்:9 8/1

 TOP
 
    பளிங்கின் (5)
தெளி வளர் பளிங்கின் திரள் மணி குன்றே சித்தத்துள் தித்திக்கும் தேனே - 1.திருமாளிகை:1 1/2
மின் நெடும் கடலுள் வெள்ளத்தை வீழிமிழலையுள் விளங்கு வெண் பளிங்கின்
  பொன் அடிக்கு அடிமை புக்கு இனி போக விடுவனோ பூண்டுகொண்டேனே - 2.சேந்தனார்:1 4/3,4
தூ திரள் பளிங்கின் தோன்றிய தோற்றம் தோன்ற நின்றவன் வளர் கோயில் - 3.கருவூர்:1 7/2
பொய்யரே பொய்யர்க்கு அடுத்த வான் பளிங்கின் பொருள் வழி இருள் கிழித்து எழுந்த - 3.கருவூர்:2 8/3
சூழல் அம் பளிங்கின் பாசலர் ஆதி சுடர் விடு மண்டலம் பொலிய - 3.கருவூர்:9 4/2

 TOP
 
    பளிங்கு (2)
அம் பளிங்கு பகலோன்-பால் அடை பற்றாய் இவள் மனத்தின் - 3.கருவூர்:5 3/1
தழல் உமிழ் அரவம் கோவணம் பளிங்கு சப வடம் சாட்டியக்குடியார் - 3.கருவூர்:8 3/3

 TOP
 
    பற்பத (1)
பற்பத குவையும் பைம்பொன் மாளிகையும் பவள வாயவர் பணை முலையும் - 3.கருவூர்:6 3/3

 TOP
 
    பற்றாய் (1)
அம் பளிங்கு பகலோன்-பால் அடை பற்றாய் இவள் மனத்தின் - 3.கருவூர்:5 3/1

 TOP
 
    பற்றார் (1)
தம் பானை சாய் பற்றார் என்னும் முதுசொல்லும் - 6.வேணாட்டடிகள்:1 2/1

 TOP
 
    பற்று (1)
பாடும் இவை வல்லார் பற்று நிலை பற்றுவரே - 4.பூந்துருத்தி:2 10/4

 TOP
 
    பற்றுவரே (1)
பாடும் இவை வல்லார் பற்று நிலை பற்றுவரே
  &5 கண்டராதித்தர் - 5.கண்டராதித்:2 10/4,5

 TOP
 
    பறந்து (1)
அன்னமாய் விசும்பு பறந்து அயன் தேட அங்ஙனே பெரிய நீ சிறிய - 3.கருவூர்:6 1/1

 TOP
 
    பறை (1)
கடுப்பாய் பறை கறங்க கடு வெம் சிலையும் கணையும் கவணும் கைக்கொண்டு - 1.திருமாளிகை:3 7/1

 TOP
 
    பறைந்து (1)
பண்ணிய தழல் காய் பால் அளாம் நீர் போல் பாவம் முன் பறைந்து பால் அனைய - 3.கருவூர்:6 9/1

 TOP
 
    பன்றி (3)
சிறவாதவர் புரம் செற்ற கொற்ற சிலை கொண்டு பன்றி பின் சென்று நின்ற - 1.திருமாளிகை:3 1/2
வெறி ஏறு பன்றி பின் சென்று ஒருநாள் விசயற்கு அருள்செய்த வேந்தே என்னும் - 1.திருமாளிகை:3 4/1
அறவனே அன்று பன்றி பின் ஏகிய - 9.சேதிராயர்:1 8/1

 TOP
 
    பன்னகாபரணன் (1)
பாலுமாய் அமுதா பன்னகாபரணன் பனி மலர் திருவடி இணை மேல் - 3.கருவூர்:4 10/2

 TOP
 
    பன்னகாபரணா (3)
பவள வாய் மணியே பணிசெய்வார்க்கு இரங்கும் பசுபதீ பன்னகாபரணா
  அவனி ஞாயிறு போன்று அருள் புரிந்து அடியேன் அகத்திலும் முகத்தலை மூதூர் - 3.கருவூர்:4 1/2,3
பன்னகாபரணா பவள வாய் மணியே பாவியேன் ஆவியுள் புகுந்தது - 3.கருவூர்:4 3/3
பாடிலா மணியே மணி உமிழ்ந்து ஒளிரும் பரமனே பன்னகாபரணா
  மேடு எலாம் செந்நெல் பசும் கதிர் விளைந்து மிக திகழ் முகத்தலை மூதூர் - 3.கருவூர்:4 4/2,3

 TOP
 
    பன்னிரு (1)
மடங்கலை மலரும் பன்னிரு நயனத்து அறு முகத்து அமுதினை மருண்டே - 2.சேந்தனார்:3 9/4

 TOP
 
    பன்னெடுங்காலம் (2)
பாம்பணை துயின்றோன் அயன் முதல் தேவர் பன்னெடுங்காலம் நின் காண்பான் - 3.கருவூர்:7 2/1
பன்னெடுங்காலம் பணிசெய்து பழையோர் தாம் பலர் ஏம்பலித்து இருக்க - 3.கருவூர்:9 8/1

 TOP
 
    பனி (9)
பாய் இரும் கங்கை பனி நிலா கரந்த படர் சடை மின்னு பொன் முடியோன் - 2.சேந்தனார்:1 8/2
கண் பனி அரும்ப கைகள் மொட்டித்து என் களைகணே ஓலம் என்று ஓலிட்டு - 3.கருவூர்:1 5/1
பண் பல தெளி தேன் பாடி நின்று ஆட பனி மலர் சோலை சூழ் மொழுப்பில் - 3.கருவூர்:1 5/3
பாதுகை மழலை சிலம்பொடு புகுந்து என் பனி மலர் கண்ணுள் நின்று அகலான் - 3.கருவூர்:3 9/2
பாலுமாய் அமுதா பன்னகாபரணன் பனி மலர் திருவடி இணை மேல் - 3.கருவூர்:4 10/2
பனி படு மதியம் பயில் கொழுந்து அன்ன பல்லவம் வல்லி என்று இங்ஙன் - 3.கருவூர்:10 3/1
பவள மால் வரையை பனி படர்ந்து அனையதோர் படர் ஒளி தரு திருநீறும் - 7.திருவாலி:2 1/1
பாவி வன் மனம் இது பையவே போய் பனி மதி சடை அரன் பாலதாலோ - 8.புருடோத்தம:1 2/2
பங்கயம் புரை முகம் நோக்கிநோக்கி பனி மதி நிலவது என் மேல் படர - 8.புருடோத்தம:1 9/2

 TOP
 
    பனுவல் (1)
பந்தமும் பிரிவும் தெரி பொருள் பனுவல் படி வழி சென்றுசென்று ஏறி - 3.கருவூர்:10 5/1

 TOP