|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
தா (1)
செம் மன கிழவோர் அன்பு தா என்று உன் சேவடி பார்த்திருந்து அலச - 3.கருவூர்:7 6/1
TOP
தாணுவே (2)
தனதன் நல் தோழா சங்கரா சூலபாணியே தாணுவே சிவனே - 1.திருமாளிகை:1 7/1
சம்புவே அணுவே தாணுவே சிவனே சங்கரா சாட்டியக்குடியார்க்கு - 3.கருவூர்:8 7/3
TOP
தாது (1)
புரிதரு மலரின் தாது நின்று ஊத போய்வரும் தும்பிகாள் இங்கே - 3.கருவூர்:3 3/2
TOP
தாதையை (2)
விளங்கு ஒளி வீழிமிழலை வேந்தே என்று ஆம்தனை சேந்தன் தாதையை யான் - 2.சேந்தனார்:1 11/3
தாதையை தாள் அற வீசிய சண்டிக்கு அவ் அண்டத்தொடும் உடனே - 10.சேந்தனார்:1 10/1
TOP
தாம் (6)
பன்னெடுங்காலம் பணிசெய்து பழையோர் தாம் பலர் ஏம்பலித்து இருக்க - 3.கருவூர்:9 8/1
இந்திரலோகம் முழுவதும் பணிகேட்டு இணை அடி தொழுது எழ தாம் போய் - 3.கருவூர்:10 2/1
செய்ய கோடுடன் கமல மலர் சூழ்தரு தில்லை மா மறையோர்கள் தாம் தொழ - 7.திருவாலி:1 8/1
தேவர் தாம் தொழ ஆடிய தில்லை கூத்தனை திருவாலி சொல் இவை - 7.திருவாலி:1 11/3
வானவர்கள் வேண்ட வளர் நஞ்சை உண்டார் தாம்
ஊனம் இலா என் கை ஒளி வளைகள் கொள்வாரோ - 8.புருடோத்தம:2 1/1,2
காணீரே என்னுடைய கை வளைகள் கொண்டார் தாம்
சேண் ஆர் மணி மாட தில்லை சிற்றம்பலவர் - 8.புருடோத்தம:2 5/1,2
TOP
தாமமும் (1)
சோதி மணி முடி தாமமும் நாமமும் தொண்டர்க்கு நாயகமும் - 10.சேந்தனார்:1 10/3
TOP
தாமரை (3)
தக்கன் நல் தலையும் எச்சன் வன் தலையும் தாமரை நான்முகன் தலையும் - 1.திருமாளிகை:1 9/1
சலம் பொன் தாமரை தாழ்ந்து எழுந்த தடமும் தடம் புனல்-வாய் மலர் தழீஇ - 7.திருவாலி:1 2/1
கள் அவிழ் தாமரை மேல் கண்ட அயனோடு மால் பணிய - 7.திருவாலி:4 3/1
TOP
தாமும் (1)
கரியவா தாமும் செய்ய வாய் முறுவல் காட்டுமா சாட்டியக்குடியார் - 3.கருவூர்:8 1/3
TOP
தாமே (2)
தனி பெரும் தாமே முழுது உற பிறப்பின் தளிர் இறப்பு இலை உதிர்வு என்றால் - 3.கருவூர்:9 7/1
வாசக மலர்கள் கொண்டு ஏத்த வல்லார் மலை_மகள் கணவனை அணைவர் தாமே - 8.புருடோத்தம:1 11/4
TOP
தாய் (4)
கொழும் திரள் வாய் ஆர் தாய் மொழியாக தூ மொழி அமரர் கோமகனை - 2.சேந்தனார்:3 11/1
தாய் தலைப்பட்டு அங்கு உருகி ஒன்றாய தன்மையில் என்னை முன் ஈன்ற - 3.கருவூர்:6 7/2
தாய் இவரே எல்லார்க்கும் தந்தையுமாம் என்பாரால் - 8.புருடோத்தம:2 6/2
எந்தை எம் தாய் சுற்றம் முற்றும் எமக்கு அமுதாம் எம்பிரான் என்றென்று - 10.சேந்தனார்:1 13/1
TOP
தாயாம் (1)
திருமகன் முருகன் தேவியேல் உமையாள் திருமகள் மருமகன் தாயாம்
மருமகன் மதனன் மாமனேல் இமவான் மலை உடை அரையர்-தம் பாவை - 3.கருவூர்:8 5/1,2
TOP
தாயின் (1)
தாயின் நேர் இரங்கும் தலைவவோ என்றும் தமியனேன் துணைவவோ என்றும் - 3.கருவூர்:1 3/1
TOP
தாயினும் (2)
முலைகள் தந்து அருளும் தாயினும் நல்ல முக்கணான் உறைவிடம் போலும் - 3.கருவூர்:2 1/2
தாயினும் மிக நல்லை என்று அடைந்தேன் தனிமையை நினைகிலை சங்கரா உன் - 8.புருடோத்தம:1 8/2
TOP
தாயும் (2)
எம்பிரான் ஆகி ஆண்ட நீ மீண்டே எந்தையும் தாயும் ஆயினையே - 3.கருவூர்:4 9/4
எந்தையும் தாயும் யானும் என்று இங்ஙன் எண்_இல் பல் ஊழிகளுடனாய் - 3.கருவூர்:10 5/3
TOP
தார் (2)
கரும் தட மலர் புரை கண்ட வண் தார் காரிகையார் முன்பு என் பெண்மை தோற்றேன் - 8.புருடோத்தம:1 5/3
உய உன் கொன்றை அம் தார் அருளாய் எனும் - 9.சேதிராயர்:1 5/2
TOP
தாராது (1)
மை நின்ற குழலாள் தன் மனம் தரவும் வளை தாராது
இ நின்ற கோவணவன் இவன் செய்தது யார் செய்தார் - 3.கருவூர்:5 4/1,2
TOP
தாலமே (1)
தாலமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே - 3.கருவூர்:2 6/4
TOP
தாழ் (1)
தர வார் புனம் சுனை தாழ் அருவி தடம் கல் உறையும் மடங்கல் அமர் - 1.திருமாளிகை:3 9/1
TOP
தாழ்ந்த (2)
தாழ்ந்த தண் புனல் சூழ் தடம் மல்கு சிற்றம்பலவன் - 7.திருவாலி:1 4/2
தாழ்ந்த கச்சது அன்றே தமியேனை தளர்வித்ததே - 7.திருவாலி:1 4/4
TOP
தாழ்ந்தவா (1)
சரியுமா சுழியம் குழை மிளிர்ந்து இரு பால் தாழ்ந்தவா காதுகள் கண்டம் - 3.கருவூர்:8 1/2
TOP
தாழ்ந்து (1)
சலம் பொன் தாமரை தாழ்ந்து எழுந்த தடமும் தடம் புனல்-வாய் மலர் தழீஇ - 7.திருவாலி:1 2/1
TOP
தாழ (2)
கொத்து ஆர் சடைகள் தாழ நட்டம் குழகன் ஆடுமே - 7.திருவாலி:3 7/4
பால் ஆடும் முடி சடைகள் தாழ பரமன் ஆடுமே - 7.திருவாலி:3 9/4
TOP
தாள் (4)
தாள் தரும் பழன பைம் பொழில் படுகர் தண்டலை சாட்டியக்குடியார் - 3.கருவூர்:8 10/1
எவரும் மா மறைகள் எவையும் வானவர்கள் ஈட்டமும் தாள் திரு கமலத்தவரும் - 3.கருவூர்:9 5/1
ஆளோ நீ உடையதுவும் அடியேன் உன் தாள் சேரும் - 6.வேணாட்டடிகள்:1 9/3
தாதையை தாள் அற வீசிய சண்டிக்கு அவ் அண்டத்தொடும் உடனே - 10.சேந்தனார்:1 10/1
TOP
தாளாளன் (1)
வகை மிகும் அசுரர் மாள வந்து உழிஞை வான் அமர் விளைத்த தாளாளன்
புகை மிகும் அனலில் புரம் பொடிபடுத்த பொன்மலை வில்லி-தன் புதல்வன் - 2.சேந்தனார்:3 8/1,2
TOP
தான் (6)
தான் அமர் பொருது தானவர் சேனை மடிய சூர் மார்பினை தடிந்தோன் - 2.சேந்தனார்:3 4/1
கரியரே இடம் தான் செய்யரே ஒருபால் கழுத்தில் ஓர் தனி வடம் சேர்த்தி - 3.கருவூர்:2 3/1
மலை தான் எடுத்த மற்று அவற்கு வாளொடு நாள் கொடுத்தான் - 5.கண்டராதித்:1 7/2
தேய்ந்து மெய் வெளுத்து அகம் வளைந்து அரவினை அஞ்சி தான் இருந்தேயும் - 7.திருவாலி:2 6/1
ஆத்-தனை தான் படுக்கும் அந்தணர் தில்லை அம்பலத்துள் - 7.திருவாலி:4 7/3
முன்னம் தான் கண்டறிவார் ஒவ்வார் இ முத்தரே - 8.புருடோத்தம:2 8/4
TOP
தான்தோன்றி (1)
தங்கு சீர் செல்வ தெய்வ தான்தோன்றி நம்பியை தன் பெரும் சோதி - 2.சேந்தனார்:1 7/3
TOP
தானவர் (2)
தான் அமர் பொருது தானவர் சேனை மடிய சூர் மார்பினை தடிந்தோன் - 2.சேந்தனார்:3 4/1
புலம்பி வானவர் தானவர் புகழ்ந்து ஏத்த ஆடு பொன் கூத்தனார் கழல் - 7.திருவாலி:1 2/3
TOP
தானாய் (1)
யாது நீ நினைவது எவரை யாம் உடையது எவர்களும் யாவையும் தானாய்
பாதுகை மழலை சிலம்பொடு புகுந்து என் பனி மலர் கண்ணுள் நின்று அகலான் - 3.கருவூர்:3 9/1,2
TOP
தானும் (2)
சிந்தையும் தானும் கலந்ததோர் கலவி தெரியினும் தெரிவுறா வண்ணம் - 3.கருவூர்:10 5/2
அம்பு உந்து கண்ணாளும் தானும் அணி தில்லை - 4.பூந்துருத்தி:2 4/3
TOP
தானே (2)
தன் அடி நிழல் கீழ் என்னையும் தகைத்த சசி குலா மவுலியை தானே
என்னிடை கமலம் மூன்றினுள் தோன்றி எழும் செழும் சுடரினை அருள் சேர் - 2.சேந்தனார்:1 4/1,2
தூவி நல் பீலி மா மயில் ஊரும் சுப்பிரமண்ணியன் தானே - 2.சேந்தனார்:3 3/4
TOP
| |
|