<<முந்திய பக்கம்

திருமுறை ஒன்பது - தொடரடைவு

உ - முதல் சொற்கள்
உக்க 2
உகத்தி 1
உகந்த 2
உகந்தாயை 1
உகந்தான் 3
உகந்தீர் 1
உகந்து 2
உகப்பார் 1
உகளும் 4
உகு 1
உடம்பினராம் 1
உடல் 4
உடலம் 1
உடலோடு 1
உடன்பிறந்தவரோடும் 1
உடனே 1
உடுப்பு 1
உடை 12
உடைய 5
உடையது 1
உடையதுவும் 1
உடையதோர் 2
உடையரே 1
உடையவன் 1
உடையன் 1
உடையார் 1
உடையாள் 1
உடையும் 2
உடையேற்கே 1
உடையோர் 1
உடையோரே 1
உண்ட 2
உண்டார் 1
உண்டு 5
உண்டே 2
உண்பதும் 1
உண்மை 1
உணர் 1
உணர்கிலேன் 1
உணர்த்துவதும் 1
உணர்ந்து 2
உணர்ந்தே 1
உணர்வு 4
உணர்வுள் 1
உணர்வே 1
உணர்வோர் 1
உணரா 1
உணரேன் 1
உத்தரியம் 1
உதர 1
உதரபந்தனம் 1
உதித்த 2
உதிப்ப 1
உதிர்வு 1
உதைகொண்ட 1
உந்தி 3
உந்து 2
உம் 2
உம்பர் 2
உம்பர்கள் 1
உம்பரார்-தம் 1
உம்பரால் 1
உம்மையே 1
உமாபதியை 1
உமிழ் 6
உமிழ்ந்து 3
உமை 9
உமை_கோன் 1
உமையவள் 1
உமையாள் 3
உய்ய 2
உய்யக்கொண்டு 1
உய்யேன் 1
உய்வன் 1
உய 1
உயர் 2
உயர்ந்த 1
உயர்ந்து 1
உயர்வார் 1
உயிர் 8
உயிர்_ஆளீ 1
உயிர்க்கு 3
உயிர்க்கும் 1
உயிர்த்து 1
உயிர்ப்பு 1
உயிரே 2
உரி 1
உரித்து 1
உரிவை 1
உரு 6
உருக்கி 1
உருக்கும் 1
உருக 1
உருகி 5
உருகும் 2
உருகுவது 1
உருகேன் 1
உருத்திரனே 1
உருவத்து 1
உருவம் 5
உருவமாம் 1
உருவாய் 3
உருவி 1
உருவில் 1
உருவினாரை 1
உருவும் 1
உருள 1
உரை 3
உரைக்குமாறு 1
உரைத்த 2
உரைப்பார் 1
உரையாடாள் 1
உரையாய் 1
உரையே 1
உலகதன் 1
உலகம் 1
உலகர் 1
உலகாய் 1
உலகில் 5
உலகு 5
உலகும் 1
உலப்பிலள் 1
உலப்பு 1
உலர்ந்த 1
உலவு 1
உலவும் 1
உலா 3
உலாம் 6
உவகை 1
உவரி 1
உழக்க 1
உழறி 1
உழிஞை 1
உள் 9
உள்ள 3
உள்ளத்து 4
உள்ளத்துள் 2
உள்ளத்துள்ளே 1
உள்ளம் 6
உள்ளீர் 1
உள்ளுவது 1
உள்ளே 2
உளதே 3
உளம் 7
உளம்கொள் 1
உளீர் 6
உளே 1
உளைப்ப 1
உற்றாய் 1
உற 1
உறங்க 1
உறங்கு 1
உறவாகிய 1
உறவு 1
உறவும் 1
உறழ் 1
உறு 3
உறுவதும் 1
உறை 2
உறைப்பர் 1
உறைப்பு 1
உறையும் 4
உறைவிடம் 2
உன் 13
உன்-கண் 1
உன்-பாலே 1
உன்றன் 2
உன்னை 11
உன 1
உனக்காம் 1
உனக்கு 1
உனை 2

  
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    உக்க (2)
குடை கெழு நிருபர் முடியொடு முடி தேய்ந்து உக்க செம் சுடர் படு குவை ஓங்கு - 3.கருவூர்:9 3/3
முடியால் முடிகள் மோதி உக்க முழு மணியின் திரளை - 5.கண்டராதித்:1 9/2

 TOP
 
    உகத்தி (1)
வம்பானார் பணி உகத்தி வழி அடியேன் தொழில் இறையும் - 6.வேணாட்டடிகள்:1 2/3

 TOP
 
    உகந்த (2)
பட்டு ஆங்கு அழல் விழுங்க எய்து உகந்த பண்பினார் - 8.புருடோத்தம:2 3/2
மூவா உடல் அவிய கொன்று உகந்த முக்கண்ணர் - 8.புருடோத்தம:2 7/2

 TOP
 
    உகந்தாயை (1)
வெளி வளர் தெய்வ கூத்து உகந்தாயை தொண்டனேன் விளம்புமா விளம்பே - 1.திருமாளிகை:1 1/4

 TOP
 
    உகந்தான் (3)
பாரோர் முழுதும் வந்து இறைஞ்ச பதஞ்சலிக்கு ஆட்டு உகந்தான்
  வார் ஆர் முலையாள் மங்கை_பங்கன் மா மறையோர் வணங்க - 5.கண்டராதித்:1 6/1,2
அரிவை ஓர் கூறு உகந்தான் அழகன் எழில் மால் கரியின் - 7.திருவாலி:4 4/1
உரிவை நல் உத்தரியம் உகந்தான் உம்பரார்-தம் பிரான் - 7.திருவாலி:4 4/2

 TOP
 
    உகந்தீர் (1)
வேலை ஆர் விடம் உண்டு உகந்தீர் என்று - 9.சேதிராயர்:1 1/3

 TOP
 
    உகந்து (2)
திசைக்கு மிக்கு உலவு கீர்த்தி தில்லை கூத்து உகந்து தீய - 1.திருமாளிகை:4 5/1
அன்னை தேன் கலந்து இன் அமுது உகந்து அளித்தாங்கு அருள் புரி பரமர்-தம் கோயில் - 3.கருவூர்:1 9/2

 TOP
 
    உகப்பார் (1)
துச்சான செய்திடினும் பொறுப்பர் அன்றே ஆள் உகப்பார்
  கைச்சாலும் சிறுகதலி இலை வேம்பும் கறிகொள்வார் - 6.வேணாட்டடிகள்:1 1/1,2

 TOP
 
    உகளும் (4)
கெண்டையும் கயலும் உகளும் நீர் பழனம் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 2/3
கெந்தியா உகளும் கெண்டை புண்டரீகம் கிழிக்கும் தண் பணை செய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 10/3
முழங்கு தீம் புனல் பாய்ந்து இள வரால் உகளும் முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன் - 3.கருவூர்:4 2/3
சேல் உகளும் வயல் சூழ் தில்லை மா நகர் சிற்றம்பலத்து - 7.திருவாலி:4 1/3

 TOP
 
    உகு (1)
பெரு முடி மோதி உகு மணி முன்றில் பிறங்கிய பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 9/2

 TOP
 
    உடம்பினராம் (1)
முரிவரே முனிவர் தம்மொடு ஆல் நிழல் கீழ் முறை தெரிந்து ஓர் உடம்பினராம்
  இருவரே முக்கண் நால் பெரும் தடம் தோள் இறைவரே மறைகளும் தேட - 3.கருவூர்:2 3/2,3

 TOP
 
    உடல் (4)
தெள்ளு நீறவன் நீறு என் உடல் விரும்பும் செவி அவன் அறிவு நூல் கேட்கும் - 3.கருவூர்:3 4/1
வினைபடும் உடல் நீ புகுந்து நின்றமையால் விழுமிய விமானம் ஆயினதே - 3.கருவூர்:4 6/4
மூவா உடல் அவிய கொன்று உகந்த முக்கண்ணர் - 8.புருடோத்தம:2 7/2
நிட்டை இலா உடல் நீத்து என்னை ஆண்ட நிகரிலா வண்ணங்களும் - 10.சேந்தனார்:1 3/1

 TOP
 
    உடலம் (1)
உள் நெகிழ்ந்து உடலம் நெக்கு முக்கண்ணா ஓலம் என்று ஓலமிட்டு ஒருநாள் - 3.கருவூர்:6 2/1

 TOP
 
    உடலோடு (1)
களையா உடலோடு சேரமான் ஆரூரன் - 4.பூந்துருத்தி:2 5/1

 TOP
 
    உடன்பிறந்தவரோடும் (1)
உறவும் பெற்ற நற்றாயொடு தந்தையும் உடன்பிறந்தவரோடும்
  பிரிய விட்டு உனை அடைந்தனன் ஏன்றுகொள் பெரும்பற்றப்புலியூரின் - 7.திருவாலி:2 8/2,3

 TOP
 
    உடனே (1)
தாதையை தாள் அற வீசிய சண்டிக்கு அவ் அண்டத்தொடும் உடனே
  பூதலத்தோரும் வணங்க பொன் கோயிலும் போனகமும் அருளி - 10.சேந்தனார்:1 10/1,2

 TOP
 
    உடுப்பு (1)
உடுப்பு ஆய தோல் செருப்பு சுரிகை வராகம் முன் ஓடு விளி உளைப்ப - 1.திருமாளிகை:3 7/2

 TOP
 
    உடை (12)
ஏர் கொள் கற்பகம் ஒத்து இரு சிலை புருவம் பெரும் தடம் கண்கள் மூன்று உடை உன் - 1.திருமாளிகை:2 10/1
சிறப்பு உடை அடியார் தில்லை செம்பொன் அம்பலவற்கு ஆள் ஆம் - 1.திருமாளிகை:4 11/1
உறைப்பு உடை அடியார் கீழ்க்கீழ் உறைப்பர் சேவடி நீறு ஆடார் - 1.திருமாளிகை:4 11/2
குருண்ட பூம் குஞ்சி பிறை சடை முடி முக்கண் உடை கோமள கொழுந்தே - 2.சேந்தனார்:3 10/4
போர்த்த தம் பெருமை சிறுமை புக்கு ஒடுங்கும் புணர்ப்பு உடை அடிகள்-தம் கோயில் - 3.கருவூர்:1 8/2
எம் மனம் குடிகொண்டு இருப்பதற்கு யான் ஆர் என் உடை அடிமைதான் யாதே - 3.கருவூர்:7 6/2
மருமகன் மதனன் மாமனேல் இமவான் மலை உடை அரையர்-தம் பாவை - 3.கருவூர்:8 5/2
வானநாடு உடை மைந்தனே ஓ என்பன் வந்து அருளாய் என்பன் - 7.திருவாலி:2 9/1
ஏல் உடை எம் இறையை என்று-கொல் காண்பதுவே - 7.திருவாலி:4 1/4
மாண்பு உடை மா நடம்செய் மறையோன் மலர் பாதங்களே - 7.திருவாலி:4 2/4
வன் பல படை உடை பூதம் சூழ வானவர் கணங்களை மாற்றி ஆங்கே - 8.புருடோத்தம:1 3/3
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணி உடை ஆதிரை நாள் - 10.சேந்தனார்:1 12/1

 TOP
 
    உடைய (5)
செம் தழல் உருவில் பொலிந்து நோக்கு உடைய திருநுதலவர்க்கு இடம் போலும் - 3.கருவூர்:2 2/2
படு மதமும் இட வயிறும் உடைய களிறு உடைய பிரான் - 6.வேணாட்டடிகள்:1 6/1
படு மதமும் இட வயிறும் உடைய களிறு உடைய பிரான் - 6.வேணாட்டடிகள்:1 6/1
உடைய கோவினை அன்றி மற்று ஆரையும் உள்ளுவது அறியேனே - 7.திருவாலி:2 7/4
கொடியும் விடையும் உடைய கோல குழகன் ஆடுமே - 7.திருவாலி:3 10/4

 TOP
 
    உடையது (1)
யாது நீ நினைவது எவரை யாம் உடையது எவர்களும் யாவையும் தானாய் - 3.கருவூர்:3 9/1

 TOP
 
    உடையதுவும் (1)
ஆளோ நீ உடையதுவும் அடியேன் உன் தாள் சேரும் - 6.வேணாட்டடிகள்:1 9/3

 TOP
 
    உடையதோர் (2)
நீறு அணி பவள குன்றமே நின்ற நெற்றிக்கண் உடையதோர் நெருப்பே - 1.திருமாளிகை:1 6/1
கனக நல் தூணே கற்பக கொழுந்தே கண்கள் மூன்று உடையதோர் கரும்பே - 1.திருமாளிகை:1 7/2

 TOP
 
    உடையரே (1)
விமலமே கலையும் உடையரே சடை மேல் மிளிருமே பொறி வரி நாகம் - 3.கருவூர்:2 9/2

 TOP
 
    உடையவன் (1)
திரு நுதல் விழியும் பவள வாய் இதழும் திலகமும் உடையவன் சடை மேல் - 3.கருவூர்:3 3/1

 TOP
 
    உடையன் (1)
இடம் கொள குறத்தி திறத்திலும் இறைவன் மற தொழில் வார்த்தையும் உடையன்
  திடம் கொள் வைதிகர் வாழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற - 2.சேந்தனார்:3 9/2,3

 TOP
 
    உடையார் (1)
வை அவாம் பெற்றம் பெற்று அம் ஏறு_உடையார் மாதவர் காதல்வைத்து என்னை - 3.கருவூர்:10 8/1

 TOP
 
    உடையாள் (1)
இசையானால் என் திறத்தும் எனை உடையாள் உரையாடாள் - 6.வேணாட்டடிகள்:1 3/3

 TOP
 
    உடையும் (2)
உடையும் பாய் புலித்தோலும் நல் அரவமும் உண்பதும் பலி தேர்ந்து - 7.திருவாலி:2 7/1
பாய் இரும் புலி அதளின் உடையும் பைய மேல் எடுத்த பொன் பாதமும் கண்டே - 8.புருடோத்தம:1 8/3

 TOP
 
    உடையேற்கே (1)
வாய்ந்த மா மலர் பாதங்கள் காண்பதோர் மனத்தினை உடையேற்கே - 7.திருவாலி:2 6/4

 TOP
 
    உடையோர் (1)
பொருள் மருந்து உடையோர் சிவபதம் என்னும் பொன் நெடும் குன்று உடையோரே - 3.கருவூர்:9 11/4

 TOP
 
    உடையோரே (1)
பொருள் மருந்து உடையோர் சிவபதம் என்னும் பொன் நெடும் குன்று உடையோரே - 3.கருவூர்:9 11/4

 TOP
 
    உண்ட (2)
கோலமே அச்சோ அழகிதே என்று குழைவரே கண்டவர் உண்ட
  தாலமே ஆகில் அவர் இடம் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே - 3.கருவூர்:2 6/3,4
உண்ட ஊண் உனக்காம் வகை எனது உள்ளம் உள் கலந்து எழு பரஞ்சோதி - 3.கருவூர்:6 6/2

 TOP
 
    உண்டார் (1)
வானவர்கள் வேண்ட வளர் நஞ்சை உண்டார் தாம் - 8.புருடோத்தம:2 1/1

 TOP
 
    உண்டு (5)
ஆலமே அமுது உண்டு அம்பலம் செம்பொன் கோயில் கொண்டு ஆட வல்லானே - 1.திருமாளிகை:1 5/3
யோக நாயகனை அன்றி மற்றொன்றும் உண்டு என உணர்கிலேன் யானே - 2.சேந்தனார்:1 1/4
எரி தரு கரிகாட்டு இடு பிண நிணம் உண்டு ஏப்பமிட்டு இலங்கு எயிற்று அழல் வாய் - 3.கருவூர்:10 6/1
புக லோகம் உண்டு என்று புகும் இடம் நீ தேடாதே - 4.பூந்துருத்தி:2 6/2
வேலை ஆர் விடம் உண்டு உகந்தீர் என்று - 9.சேதிராயர்:1 1/3

 TOP
 
    உண்டே (2)
மான் ஏர் கலை வளையும் கவர்ந்து உளம் கொள்ளைகொள்ள வழக்கு உண்டே
  தேனே அமுதே என் சித்தமே சிவலோக நாயக செல்வமே - 2.சேந்தனார்:2 9/1,2
அற்புத தெய்வம் இதனின் மற்று உண்டே அன்பொடு தன்னை அஞ்செழுத்தின் - 3.கருவூர்:6 3/1

 TOP
 
    உண்பதும் (1)
உடையும் பாய் புலித்தோலும் நல் அரவமும் உண்பதும் பலி தேர்ந்து - 7.திருவாலி:2 7/1

 TOP
 
    உண்மை (1)
ஒழிவு ஒன்று இலா உண்மை வண்ணமும் உலப்பிலள் ஊறு இன்ப வெள்ளமும் - 2.சேந்தனார்:2 8/1

 TOP
 
    உணர் (1)
கரும் கண் நின்று இமைக்கும் செழும் சுடர் விளக்கம் கலந்து என கலந்து உணர் கருவூர் - 3.கருவூர்:10 10/2

 TOP
 
    உணர்கிலேன் (1)
யோக நாயகனை அன்றி மற்றொன்றும் உண்டு என உணர்கிலேன் யானே - 2.சேந்தனார்:1 1/4

 TOP
 
    உணர்த்துவதும் (1)
அடி அறிய உணர்த்துவதும் அகத்தியனுக்கு ஓத்து அன்றே - 6.வேணாட்டடிகள்:1 6/2

 TOP
 
    உணர்ந்து (2)
உரு மருவு உதர தனி வடம் தொடர்ந்து கிடந்தது என் உணர்வு உணர்ந்து உணர்ந்தே - 1.திருமாளிகை:2 7/4
ஊழிதோறூழி உணர்ந்து உளம் கசிந்து நெக்கு நைந்து உளம் கரைந்து உருக்கும் - 3.கருவூர்:3 5/2

 TOP
 
    உணர்ந்தே (1)
உரு மருவு உதர தனி வடம் தொடர்ந்து கிடந்தது என் உணர்வு உணர்ந்து உணர்ந்தே - 1.திருமாளிகை:2 7/4

 TOP
 
    உணர்வு (4)
ஒளி வளர் விளக்கே உலப்பு இலா ஒன்றே உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே - 1.திருமாளிகை:1 1/1
உரு மருவு உதர தனி வடம் தொடர்ந்து கிடந்தது என் உணர்வு உணர்ந்து உணர்ந்தே - 1.திருமாளிகை:2 7/4
புழுங்கு தீவினையேன் வினை கெட புகுந்து புணர் பொருள் உணர்வு நூல் வகையால் - 3.கருவூர்:4 2/1
எரி ஆடுகின்ற ஒருவனை உணர்வு அரிதே - 7.திருவாலி:4 3/4

 TOP
 
    உணர்வுள் (1)
உற்றாய் என்னும் உன்னை அன்றி மற்றொன்று உணரேன் என்னும் உணர்வுள் கலக்கப்பெற்று - 1.திருமாளிகை:3 11/1

 TOP
 
    உணர்வே (1)
ஒளி வளர் விளக்கே உலப்பு இலா ஒன்றே உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே
  தெளி வளர் பளிங்கின் திரள் மணி குன்றே சித்தத்துள் தித்திக்கும் தேனே - 1.திருமாளிகை:1 1/1,2

 TOP
 
    உணர்வோர் (1)
பத்தியாய் உணர்வோர் அருளை வாய்மடுத்து பருகு-தோறு அமுதம் ஒத்து அவர்க்கே - 4.பூந்துருத்தி:1 2/1

 TOP
 
    உணரா (1)
சொல் நவில் முறை நான் காரணம் உணரா சூழல் புக்கு ஒளித்த நீ இன்று - 3.கருவூர்:7 7/1

 TOP
 
    உணரேன் (1)
உற்றாய் என்னும் உன்னை அன்றி மற்றொன்று உணரேன் என்னும் உணர்வுள் கலக்கப்பெற்று - 1.திருமாளிகை:3 11/1

 TOP
 
    உத்தரியம் (1)
உரிவை நல் உத்தரியம் உகந்தான் உம்பரார்-தம் பிரான் - 7.திருவாலி:4 4/2

 TOP
 
    உதர (1)
உரு மருவு உதர தனி வடம் தொடர்ந்து கிடந்தது என் உணர்வு உணர்ந்து உணர்ந்தே - 1.திருமாளிகை:2 7/4

 TOP
 
    உதரபந்தனம் (1)
உதரபந்தனம் என் உள்ளத்துள் இடம்கொண்டனவே - 7.திருவாலி:1 6/4

 TOP
 
    உதித்த (2)
மோது அலைப்பட்ட கடல் வயிறு உதித்த முழு மணி திரள் அமுது ஆங்கே - 3.கருவூர்:6 7/1
உதித்த போழ்தில் இரவி கதிர் போல் ஒளிர் மா மணி எங்கும் - 7.திருவாலி:3 8/3

 TOP
 
    உதிப்ப (1)
தரும் கரும்பு அனைய தீம் தமிழ் மாலை தடம் பொழில் மருதயாழ் உதிப்ப
  வரும் கரும் கண்டத்து அண்ட வானவர்_கோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 10/3,4

 TOP
 
    உதிர்வு (1)
தனி பெரும் தாமே முழுது உற பிறப்பின் தளிர் இறப்பு இலை உதிர்வு என்றால் - 3.கருவூர்:9 7/1

 TOP
 
    உதைகொண்ட (1)
உலர்ந்த மார்க்கண்டிக்கு ஆகி அ காலனை உயிர் செக உதைகொண்ட
  மலர்ந்த பாதங்கள் வன முலை மேல் ஒற்ற வந்து அருள்செய்யாயே - 7.திருவாலி:2 3/3,4

 TOP
 
    உந்தி (3)
மது மதி வெள்ள திரு வயிற்று உந்தி வளைப்புண்டு என் உளம் மகிழ்ந்ததுவே - 1.திருமாளிகை:2 6/4
உந்தி வான் சுழி என் உள்ளத்துள் இடம்கொண்டனவே - 7.திருவாலி:1 5/4
உந்தி இழியும் நிவவின் கரை மேல் உயர்ந்த மதில் தில்லை - 7.திருவாலி:3 4/2

 TOP
 
    உந்து (2)
அம்பு உந்து கண்ணாளும் தானும் அணி தில்லை - 4.பூந்துருத்தி:2 4/3
செடி உந்து அவத்தோர் அடையா தில்லை சிற்றம்பலம்-தன்னுள் - 7.திருவாலி:3 10/2

 TOP
 
    உம் (2)
உம் கை கொண்டு அடியேன் சென்னி வைத்து என்னை உய்யக்கொண்டு அருளினை மருங்கில் - 3.கருவூர்:6 10/2
ஒன்றும் ஆகிலள் உம் பொருட்டே - 9.சேதிராயர்:1 9/4

 TOP
 
    உம்பர் (2)
உம்பர் நாடு இம்பர் விளங்கியாங்கு எங்கும் ஒளி வளர் திரு மணி சுடர் கான்று - 3.கருவூர்:1 10/1
ஒள்_நுதலி காரணமா உம்பர் தொழுது ஏத்தும் - 8.புருடோத்தம:2 11/1

 TOP
 
    உம்பர்கள் (1)
உம்பர்கள் வன் பழியாளர் முன்னே ஊட்டினர் நஞ்சை என்றேயும் உய்யேன் - 8.புருடோத்தம:1 3/2

 TOP
 
    உம்பரார்-தம் (1)
உரிவை நல் உத்தரியம் உகந்தான் உம்பரார்-தம் பிரான் - 7.திருவாலி:4 4/2

 TOP
 
    உம்பரால் (1)
உம்பரால் ஒன்றும் அறிவொணா அணுவாய் ஒழிவற நிறைந்த ஒண் சுடரே - 3.கருவூர்:4 9/2

 TOP
 
    உம்மையே (1)
உம்மையே நினைந்து ஏத்தும் ஒன்று ஆகிலள் - 9.சேதிராயர்:1 4/2

 TOP
 
    உமாபதியை (1)
உளம் கொள மதுர கதிர் விரித்து உயிர் மேல் அருள் சொரிதரும் உமாபதியை
  வளம் கிளர் நதியும் மதியமும் சூடி மழ விடை மேல் வருவானை - 2.சேந்தனார்:1 11/1,2

 TOP
 
    உமிழ் (6)
தழல் உமிழ் அரவம் கோவணம் பளிங்கு சப வடம் சாட்டியக்குடியார் - 3.கருவூர்:8 3/3
மாலவனும் அறிவு அரும் பெருமை அடல் அழல் உமிழ் தழல் பிழம்பர் - 3.கருவூர்:9 5/2
அணி உமிழ் சோதி மணியினுள் கலந்தாங்கு அடியனேன் உள் கலந்து அடியேன் - 3.கருவூர்:10 4/1
துணி உமிழ் ஆடை அரையில் ஓர் ஆடை சுடர் உமிழ் தர அதன் அருகே - 3.கருவூர்:10 4/3
துணி உமிழ் ஆடை அரையில் ஓர் ஆடை சுடர் உமிழ் தர அதன் அருகே - 3.கருவூர்:10 4/3
மணி உமிழ் நாக மணி உமிழ்ந்து இமைப்ப மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 4/4

 TOP
 
    உமிழ்ந்து (3)
பாடிலா மணியே மணி உமிழ்ந்து ஒளிரும் பரமனே பன்னகாபரணா - 3.கருவூர்:4 4/2
பைய செம் பாந்தள் பரு மணி உமிழ்ந்து பாவியேன் காதல்செய் காதில் - 3.கருவூர்:10 1/2
மணி உமிழ் நாக மணி உமிழ்ந்து இமைப்ப மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 4/4

 TOP
 
    உமை (9)
வண்டு ஆர் குழல் உமை நங்கை முன்னே மகேந்திர சாரல் வராகத்தின் பின் - 1.திருமாளிகை:3 6/1
வேய் இரும் தோளி உமை மணவாளன் விரும்பிய மிழலை சூழ் பொழிலை - 2.சேந்தனார்:1 8/3
திலக நுதல் உமை நங்கைக்கும் திருவாவடுதுறை நம்பிக்கும் - 2.சேந்தனார்:2 5/1
முக்கண் நாயகராய் பவனி போந்து இங்ஙன் முரிவது ஓர் முரிவு உமை அளவும் - 4.பூந்துருத்தி:1 1/2
போழ்ந்து யானை-தன்னை பொருப்பன் மகள் உமை அச்சம் கண்டவன் - 7.திருவாலி:1 4/1
சேல் உலாம் வயல் தில்லை_உளீர் உமை
  சால நாள் அயல் சார்வதினால் இவள் - 9.சேதிராயர்:1 1/1,2
சேண் நுதல் பொலி தில்லை_உளீர் உமை
  காணில் எய்ப்பிலள் காரிகையே - 9.சேதிராயர்:1 2/3,4
அன்ன நடை மடவாள் உமை_கோன் அடியோமுக்கு அருள் புரிந்து - 10.சேந்தனார்:1 1/3
ஊரும் உலகும் கழற உழறி உமை மணவாளனுக்கு ஆள் - 10.சேந்தனார்:1 7/3

 TOP
 
    உமை_கோன் (1)
அன்ன நடை மடவாள் உமை_கோன் அடியோமுக்கு அருள் புரிந்து - 10.சேந்தனார்:1 1/3

 TOP
 
    உமையவள் (1)
கருமையின் வெளியே கயல்_கணாள் இமவான் மகள் உமையவள் களைகண்ணே - 1.திருமாளிகை:1 4/2

 TOP
 
    உமையாள் (3)
திருமகன் முருகன் தேவியேல் உமையாள் திருமகள் மருமகன் தாயாம் - 3.கருவூர்:8 5/1
மின்னின் இடையாள் உமையாள் காண விகிர்தன் ஆடுமே - 7.திருவாலி:3 2/4
மருள்படு மழலை மென் மொழி உமையாள் கணவனை வல்வினையாட்டியேன் நான் - 8.புருடோத்தம:1 10/3

 TOP
 
    உய்ய (2)
மணம் அணி மறையோர் வானவர் வையம் உய்ய மற்று அடியனேன் வாழ - 2.சேந்தனார்:3 5/2
வையம் உய்ய நின்று மகிழ்ந்து ஆடு சிற்றம்பலவன் - 7.திருவாலி:1 8/2

 TOP
 
    உய்யக்கொண்டு (1)
உம் கை கொண்டு அடியேன் சென்னி வைத்து என்னை உய்யக்கொண்டு அருளினை மருங்கில் - 3.கருவூர்:6 10/2

 TOP
 
    உய்யேன் (1)
உம்பர்கள் வன் பழியாளர் முன்னே ஊட்டினர் நஞ்சை என்றேயும் உய்யேன்
  வன் பல படை உடை பூதம் சூழ வானவர் கணங்களை மாற்றி ஆங்கே - 8.புருடோத்தம:1 3/2,3

 TOP
 
    உய்வன் (1)
ஓதில் உய்வன் ஒண் பைங்கிளியே எனும் - 9.சேதிராயர்:1 6/2

 TOP
 
    உய (1)
உய உன் கொன்றை அம் தார் அருளாய் எனும் - 9.சேதிராயர்:1 5/2

 TOP
 
    உயர் (2)
உயர் கொடி ஆடை மிடை படலத்தின் ஓம தூம படலத்தின் - 1.திருமாளிகை:2 1/1
திங்கள் நேர் தீண்ட நீண்ட மாளிகை சூழ் மாட நீடு உயர் திருவீழி - 2.சேந்தனார்:1 7/2

 TOP
 
    உயர்ந்த (1)
உந்தி இழியும் நிவவின் கரை மேல் உயர்ந்த மதில் தில்லை - 7.திருவாலி:3 4/2

 TOP
 
    உயர்ந்து (1)
ஓம புகையும் அகிலின் புகையும் உயர்ந்து முகில் தோய - 7.திருவாலி:3 5/1

 TOP
 
    உயர்வார் (1)
ஆவே படுப்பார் அந்தணாளர் ஆகுதி வேட்டு உயர்வார்
  மூவாயிரவர் தங்களோடு முன் அரங்கு ஏறி நின்ற - 5.கண்டராதித்:1 2/2,3

 TOP
 
    உயிர் (8)
உறவாகிய யோகமும் போகமுமாய் உயிர்_ஆளீ என்னும் என் பொன் ஒருநாள் - 1.திருமாளிகை:3 1/1
உளம் கொள மதுர கதிர் விரித்து உயிர் மேல் அருள் சொரிதரும் உமாபதியை - 2.சேந்தனார்:1 11/1
திருந்து உயிர் பருவத்து அறிவுறு கருவூர் துறை வளர் தீம் தமிழ் மாலை - 3.கருவூர்:1 11/2
புனல் பட உருகி மண்டு அழல் வெதும்பி பூம் புனல் பொதிந்து உயிர் அளிக்கும் - 3.கருவூர்:4 6/1
நரம்பாலும் உயிர் ஈர்ந்தாய் நளிர் புரிசை குளிர் வனம் பாதிரம் - 3.கருவூர்:5 8/3
உலர்ந்த மார்க்கண்டிக்கு ஆகி அ காலனை உயிர் செக உதைகொண்ட - 7.திருவாலி:2 3/3
எல்லையது ஆகிய எழில் கொள் சோதி என் உயிர் காவல்கொண்டு இருந்த எந்தாய் - 8.புருடோத்தம:1 6/2
இரந்திரந்து அழைப்ப என் உயிர் ஆண்ட கோவினுக்கு என் செய வல்லம் என்றும் - 10.சேந்தனார்:1 5/2

 TOP
 
    உயிர்_ஆளீ (1)
உறவாகிய யோகமும் போகமுமாய் உயிர்_ஆளீ என்னும் என் பொன் ஒருநாள் - 1.திருமாளிகை:3 1/1

 TOP
 
    உயிர்க்கு (3)
ஏக நாயகனை இமையவர்க்கு அரசை என் உயிர்க்கு அமுதினை எதிர்_இல் - 2.சேந்தனார்:1 1/1
புவன நாயகனே அக உயிர்க்கு அமுதே பூரணா ஆரணம் பொழியும் - 3.கருவூர்:4 1/1
பருதி வானவனாம் படர் சடை முக்கண் பகவனாம் அக உயிர்க்கு அமுதாம் - 3.கருவூர்:6 5/2

 TOP
 
    உயிர்க்கும் (1)
மெள்ளவே அவன் பேர் விளம்பும் வாய் கண்கள் விமானமே நோக்கி வெவ் உயிர்க்கும்
  கிள்ளை பூம் பொதும்பில் கொஞ்சி மாம் பொழிற்கே கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 4/2,3

 TOP
 
    உயிர்த்து (1)
விம்மி விம்மியே வெய்து உயிர்த்து ஆள் எனா - 9.சேதிராயர்:1 4/1

 TOP
 
    உயிர்ப்பு (1)
இறைவனை என் கதியை என் உளே உயிர்ப்பு ஆகி நின்ற - 7.திருவாலி:4 5/1

 TOP
 
    உயிரே (2)
உரு வளர் இன்ப சிலம்பு ஒலி அலம்பும் உன் அடி கீழது என் உயிரே - 1.திருமாளிகை:2 2/4
சீர் உயிரே எங்கள் தில்லை_வாணா சே_இழையார்க்கு இனி வாழ்வு அரிதே - 8.புருடோத்தம:1 7/4

 TOP
 
    உரி (1)
கழுது உறு கரிகாடு உறைவிடம் போர்வை கவந்திகை கரி உரி திரிந்து ஊண் - 3.கருவூர்:8 3/2

 TOP
 
    உரித்து (1)
ஈர் உரித்து எழு போர்வையினீர் மிகு - 9.சேதிராயர்:1 3/2

 TOP
 
    உரிவை (1)
உரிவை நல் உத்தரியம் உகந்தான் உம்பரார்-தம் பிரான் - 7.திருவாலி:4 4/2

 TOP
 
    உரு (6)
உரு வளர் இன்ப சிலம்பு ஒலி அலம்பும் உன் அடி கீழது என் உயிரே - 1.திருமாளிகை:2 2/4
உரு மருவு உதர தனி வடம் தொடர்ந்து கிடந்தது என் உணர்வு உணர்ந்து உணர்ந்தே - 1.திருமாளிகை:2 7/4
திருநீறு இடா உரு தீண்டேன் என்னும் திருநீறு மெய் திருமுண்டம் தீட்டி - 1.திருமாளிகை:3 10/1
எட்டு உரு விரவி என்னை ஆண்டவன் ஈண்டு சோதி - 1.திருமாளிகை:4 2/1
உன் சோதி எழில் காண்பான் ஓலிடவும் உரு காட்டாய் - 3.கருவூர்:5 7/2
ஆண் பெண் அரு உரு என்று அறிதற்கு அரிதாயவனை - 7.திருவாலி:4 2/2

 TOP
 
    உருக்கி (1)
உருக்கி என் உள்ளத்துள்ளே ஊறல் அம் தேறல் மாறா - 1.திருமாளிகை:4 7/1

 TOP
 
    உருக்கும் (1)
ஊழிதோறூழி உணர்ந்து உளம் கசிந்து நெக்கு நைந்து உளம் கரைந்து உருக்கும்
  கேழலும் புள்ளும் ஆகி நின்று இருவர் கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 5/2,3

 TOP
 
    உருக (1)
என்னை உன் பாத பங்கயம் பணிவித்து என்பு எலாம் உருக நீ எளிவந்து - 3.கருவூர்:4 8/1

 TOP
 
    உருகி (5)
புனல் பட உருகி மண்டு அழல் வெதும்பி பூம் புனல் பொதிந்து உயிர் அளிக்கும் - 3.கருவூர்:4 6/1
தாய் தலைப்பட்டு அங்கு உருகி ஒன்றாய தன்மையில் என்னை முன் ஈன்ற - 3.கருவூர்:6 7/2
எழிலை ஆழ்செய்கை பசும் கலன் விசும்பின் இன் துளி பட நனைந்து உருகி
  அழலை ஆழ்பு உருவம் புனலொடும் கிடந்தாங்கு ஆதனேன் மாதரார் கலவி - 3.கருவூர்:10 7/1,2
புலம் கலந்தவனே என்று நின்று உருகி புலம்புவார் அவம் புகார் அருவி - 3.கருவூர்:10 9/3
வாடா வாய் நா பிதற்றி உனை நினைந்து நெஞ்சு உருகி
  வீடாம் செய் குற்றேவல் எற்றே மற்று இது பொய்யில் - 6.வேணாட்டடிகள்:1 8/1,2

 TOP
 
    உருகும் (2)
என்பு எலாம் உருகும் அன்பர்-தம் கூட்டத்து என்னையும் புணர்ப்பவன் கோயில் - 3.கருவூர்:1 5/2
திக்கு அடா நினைந்து நெஞ்சு இடிந்து உருகும் திறத்தவர் புறத்து இருந்து அலச - 3.கருவூர்:2 7/1

 TOP
 
    உருகுவது (1)
நினைப்பு அரும் தம்-பால் சேறல் இன்றேனும் நெஞ்சு இடிந்து உருகுவது என்னோ - 3.கருவூர்:9 7/2

 TOP
 
    உருகேன் (1)
பண்ணி நின்று உருகேன் பணிசெயேன் எனினும் பாவியேன் ஆவியுள் புகுந்து என் - 3.கருவூர்:6 2/3

 TOP
 
    உருத்திரனே (1)
ஒக்க விண்டு உருள ஒண் திரு புருவம் நெறித்து அருளிய உருத்திரனே
  அக்கு அணி புலித்தோல் ஆடை மேல் ஆட ஆட பொன்னம்பலத்து ஆடும் - 1.திருமாளிகை:1 9/2,3

 TOP
 
    உருவத்து (1)
உருவத்து எரி உருவாய் ஊழி-தோறு எத்தனையும் - 4.பூந்துருத்தி:2 9/1

 TOP
 
    உருவம் (5)
பூ திரள் உருவம் செம் கதிர் விரியா புந்தியில் வந்த மால் விடையோன் - 3.கருவூர்:1 7/1
பா வண தமிழ்கள் பத்தும் வல்லார்கள் பரமனது உருவம் ஆகுவரே - 3.கருவூர்:7 10/4
அழலை ஆழ்பு உருவம் புனலொடும் கிடந்தாங்கு ஆதனேன் மாதரார் கலவி - 3.கருவூர்:10 7/2
மின்னார் உருவம் மேல் விளங்க வெண் கொடி மாளிகை சூழ - 5.கண்டராதித்:1 1/1
உருவம் பாகமும் ஈந்து நல் அம் தியை ஒண் நுதல் வைத்தோனே - 7.திருவாலி:2 4/4

 TOP
 
    உருவமாம் (1)
கருதுவார் கருதும் உருவமாம் கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 5/4

 TOP
 
    உருவாய் (3)
உருவத்து எரி உருவாய் ஊழி-தோறு எத்தனையும் - 4.பூந்துருத்தி:2 9/1
அல்லாய் பகலாய் அருவாய் உருவாய் ஆரா அமுதமாய் - 7.திருவாலி:3 1/1
ஒள் எரியின் நடுவே உருவாய் பரந்து ஓங்கிய சீர் - 7.திருவாலி:4 3/2

 TOP
 
    உருவி (1)
ஒருமையில் பல புக்கு உருவி நின்றாயை தொண்டனேன் உரைக்குமாறு உரையே - 1.திருமாளிகை:1 4/4

 TOP
 
    உருவில் (1)
செம் தழல் உருவில் பொலிந்து நோக்கு உடைய திருநுதலவர்க்கு இடம் போலும் - 3.கருவூர்:2 2/2

 TOP
 
    உருவினாரை (1)
சேடர் சேவடிகள் சூடா திரு இலா உருவினாரை
  சாடரை சாண் கை மோட சழக்கரை பிழைக்க பிட்க - 1.திருமாளிகை:4 6/2,3

 TOP
 
    உருவும் (1)
அந்தி போல் உருவும் அந்தியில் பிறை சேர் அழகிய சடையும் வெண் நீறும் - 3.கருவூர்:3 10/1

 TOP
 
    உருள (1)
ஒக்க விண்டு உருள ஒண் திரு புருவம் நெறித்து அருளிய உருத்திரனே - 1.திருமாளிகை:1 9/2

 TOP
 
    உரை (3)
நல் பெரும் பொருளாய் உரை கலந்து உன்னை என்னுடை நாவினால் நவில்வான் - 1.திருமாளிகை:1 3/2
நாயனாரை நயந்து உரை செய்தன - 9.சேதிராயர்:1 10/2
சிந்தைசெய்யும் சிவன் சீர் அடியார் அடி நாய் செப்பு உரை
  அந்தம்_இல் ஆனந்த சேந்தன் எனை புகுந்து ஆண்டுகொண்டு ஆருயிர் மேல் - 10.சேந்தனார்:1 13/2,3

 TOP
 
    உரைக்குமாறு (1)
ஒருமையில் பல புக்கு உருவி நின்றாயை தொண்டனேன் உரைக்குமாறு உரையே - 1.திருமாளிகை:1 4/4

 TOP
 
    உரைத்த (2)
தீ_வணன்-தன்னை செழும் மறை தெரியும் திகழ் கருவூரனேன் உரைத்த
  பா வண தமிழ்கள் பத்தும் வல்லார்கள் பரமனது உருவம் ஆகுவரே - 3.கருவூர்:7 10/3,4
மாசிலா மறை பல ஓது நாவன் வண் புருடோத்தமன் கண்டு உரைத்த
  வாசக மலர்கள் கொண்டு ஏத்த வல்லார் மலை_மகள் கணவனை அணைவர் தாமே - 8.புருடோத்தம:1 11/3,4

 TOP
 
    உரைப்பார் (1)
தூயவாறு உரைப்பார் துறக்கத்திடை - 9.சேதிராயர்:1 10/3

 TOP
 
    உரையாடாள் (1)
இசையானால் என் திறத்தும் எனை உடையாள் உரையாடாள்
  நசையானேன் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 3/3,4

 TOP
 
    உரையாய் (1)
துஞ்சா கண் இவளுடைய துயர் தீரும் ஆறு உரையாய்
  செஞ்சாலி வயல் கோடை திரைலோக்கிய சுந்தரனே - 3.கருவூர்:5 7/3,4

 TOP
 
    உரையே (1)
ஒருமையில் பல புக்கு உருவி நின்றாயை தொண்டனேன் உரைக்குமாறு உரையே - 1.திருமாளிகை:1 4/4

 TOP
 
    உலகதன் (1)
தக்க சீர் கங்கை அளவும் அன்று என்னோ தம் ஒருப்பாடு உலகதன் மேல் - 4.பூந்துருத்தி:1 1/3

 TOP
 
    உலகம் (1)
அடியார் அமர் உலகம் ஆள நீ ஆளாதே - 4.பூந்துருத்தி:2 2/2

 TOP
 
    உலகர் (1)
முத்தியாம் என்றே உலகர் ஏத்துவரேல் முகம் மலர்ந்து எதிர்கொளும் திருவே - 3.கருவூர்:3 11/4

 TOP
 
    உலகாய் (1)
கற்பமாய் உலகாய் அல்லை ஆனாயை தொண்டனேன் கருதுமா கருதே - 1.திருமாளிகை:1 3/4

 TOP
 
    உலகில் (5)
செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து திளைப்பதும் சிவன் அருள் கடலே - 3.கருவூர்:6 11/4
சூடக கை நல்லார் தொழுது ஏத்த தொல் உலகில்
  நாடகத்தின் கூத்தை நவிற்றுமவர் நாள்-தோறும் - 4.பூந்துருத்தி:2 8/2,3
களி வான் உலகில் கங்கை நங்கை காதலனே அருள் என்று - 5.கண்டராதித்:1 5/1
பேரா உலகில் பெருமையோடும் பேரின்பம் எய்துவரே - 5.கண்டராதித்:1 10/4
ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றது ஆர் பெறுவார் உலகில்
  ஊரும் உலகும் கழற உழறி உமை மணவாளனுக்கு ஆள் - 10.சேந்தனார்:1 7/2,3

 TOP
 
    உலகு (5)
முக்கண் நாயகனே முழுது உலகு இறைஞ்ச முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன் - 3.கருவூர்:4 5/3
அத்தில் அங்கு ஒரு கூறு உன்-கண் வைத்தவருக்கு அமர் உலகு அளிக்கும் நின் பெருமை - 3.கருவூர்:6 8/2
உலகு எலாம் தொழ வந்து எழு கதிர் பரிதி ஒன்று நூறாயிர கோடி - 3.கருவூர்:9 1/1
வினைபடு கனகம் போல யாவையுமாய் வீங்கு உலகு ஒழிவற நிறைந்து - 3.கருவூர்:10 3/2
சத்தியாய் சிவமாய் உலகு எலாம் படைத்த தனி முழுமுதலுமாய் அதற்கு ஓர் - 4.பூந்துருத்தி:1 2/3

 TOP
 
    உலகும் (1)
ஊரும் உலகும் கழற உழறி உமை மணவாளனுக்கு ஆள் - 10.சேந்தனார்:1 7/3

 TOP
 
    உலப்பிலள் (1)
ஒழிவு ஒன்று இலா உண்மை வண்ணமும் உலப்பிலள் ஊறு இன்ப வெள்ளமும் - 2.சேந்தனார்:2 8/1

 TOP
 
    உலப்பு (1)
ஒளி வளர் விளக்கே உலப்பு இலா ஒன்றே உணர்வு சூழ் கடந்ததோர் உணர்வே - 1.திருமாளிகை:1 1/1

 TOP
 
    உலர்ந்த (1)
உலர்ந்த மார்க்கண்டிக்கு ஆகி அ காலனை உயிர் செக உதைகொண்ட - 7.திருவாலி:2 3/3

 TOP
 
    உலவு (1)
திசைக்கு மிக்கு உலவு கீர்த்தி தில்லை கூத்து உகந்து தீய - 1.திருமாளிகை:4 5/1

 TOP
 
    உலவும் (1)
திரை வந்து உலவும் தில்லை மல்கு சிற்றம்பலம்-தன்னுள் - 7.திருவாலி:3 6/2

 TOP
 
    உலா (3)
எழும் கதிர் ஒளியை ஏத்துவார் கேட்பார் இடர் கெடும் மால் உலா மனமே - 2.சேந்தனார்:3 11/4
ஐயா நீ உலா போந்த அன்று முதல் இன்று வரை - 3.கருவூர்:5 2/2
குடை நிழல் விடை மேல் கொண்டு உலா போதும் குறிப்பு எனோ கோங்கு இணர் அனைய - 3.கருவூர்:9 3/2

 TOP
 
    உலாம் (6)
மால் உலாம் மனம் தந்து என் கையில் சங்கம் வவ்வினான் மலை_மகள் மதலை - 2.சேந்தனார்:3 1/1
மேல் உலாம் தேவர் குலம் முழுது ஆளும் குமரவேள் வள்ளி-தன் மணாளன் - 2.சேந்தனார்:3 1/2
சேல் உலாம் கழனி திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற - 2.சேந்தனார்:3 1/3
வேல் உலாம் தட கை வேந்தன் என் சேந்தன் என்னும் என் மெல்_இயல் இவளே - 2.சேந்தனார்:3 1/4
வம்பு உலாம் கோயில் கோபுரம் கூடம் வளர் நிலை மாட மாளிகைகள் - 3.கருவூர்:1 10/3
சேல் உலாம் வயல் தில்லை_உளீர் உமை - 9.சேதிராயர்:1 1/1

 TOP
 
    உவகை (1)
வேறாக உள்ளத்து உவகை விளைத்து அவனி சிவலோக வேத வென்றி - 1.திருமாளிகை:3 12/1

 TOP
 
    உவரி (1)
உவரி மா கடலின் ஒலிசெய் மா மறுகில் உறு களிற்று அரசின தீட்டம் - 3.கருவூர்:9 5/3

 TOP
 
    உழக்க (1)
தொறுக்கள் வான் கமல மலர் உழக்க கரும்பு நல் சாறு பாய்தர - 7.திருவாலி:1 10/1

 TOP
 
    உழறி (1)
ஊரும் உலகும் கழற உழறி உமை மணவாளனுக்கு ஆள் - 10.சேந்தனார்:1 7/3

 TOP
 
    உழிஞை (1)
வகை மிகும் அசுரர் மாள வந்து உழிஞை வான் அமர் விளைத்த தாளாளன் - 2.சேந்தனார்:3 8/1

 TOP
 
    உள் (9)
நீடினாய் எனினும் உள் புகுந்து அடியேன் நெஞ்சு எலாம் நிறைந்து நின்றாயே - 3.கருவூர்:4 4/4
இ கலாம் முழுதும் ஒழிய வந்து உள் புக்கு என்னை ஆள் ஆண்ட நாயகனே - 3.கருவூர்:4 5/2
உள் நெகிழ்ந்து உடலம் நெக்கு முக்கண்ணா ஓலம் என்று ஓலமிட்டு ஒருநாள் - 3.கருவூர்:6 2/1
உண்ட ஊண் உனக்காம் வகை எனது உள்ளம் உள் கலந்து எழு பரஞ்சோதி - 3.கருவூர்:6 6/2
மனனிடை அணுகி நுணுகி உள் கலந்தோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 3/4
அணி உமிழ் சோதி மணியினுள் கலந்தாங்கு அடியனேன் உள் கலந்து அடியேன் - 3.கருவூர்:10 4/1
வந்து அணுகாது நுணுகி உள் கலந்தோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 5/4
நொய்ய ஆறு என்ன வந்து உள் வீற்றிருந்த நூறுநூறாயிர கோடி - 3.கருவூர்:10 8/3
ஆவி உள் நிறுத்தி அமர்ந்து ஊறிய அன்பினராய் - 7.திருவாலி:1 11/2

 TOP
 
    உள்ள (3)
கல் நகா உள்ள கள்வனேன் நின்-கண் கசிவிலேன் கண்ணின் நீர் சொரியேன் - 3.கருவூர்:4 3/1
அறிவும் மிக்க நல் நாணமும் நிறைமையும் ஆசையும் இங்கு உள்ள
  உறவும் பெற்ற நற்றாயொடு தந்தையும் உடன்பிறந்தவரோடும் - 7.திருவாலி:2 8/1,2
பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே - 10.சேந்தனார்:1 2/4

 TOP
 
    உள்ளத்து (4)
அளி வளர் உள்ளத்து ஆனந்த கனியே அம்பலம் ஆடரங்காக - 1.திருமாளிகை:1 1/3
அற்பன் என் உள்ளத்து அளவிலா உன்னை தந்த பொன்னம்பலத்து அரசே - 1.திருமாளிகை:1 3/3
வேறாக உள்ளத்து உவகை விளைத்து அவனி சிவலோக வேத வென்றி - 1.திருமாளிகை:3 12/1
தெண்ணரை தெருளா உள்ளத்து இருளரை திட்டைமுட்டை - 1.திருமாளிகை:4 10/3

 TOP
 
    உள்ளத்துள் (2)
உந்தி வான் சுழி என் உள்ளத்துள் இடம்கொண்டனவே - 7.திருவாலி:1 5/4
உதரபந்தனம் என் உள்ளத்துள் இடம்கொண்டனவே - 7.திருவாலி:1 6/4

 TOP
 
    உள்ளத்துள்ளே (1)
உருக்கி என் உள்ளத்துள்ளே ஊறல் அம் தேறல் மாறா - 1.திருமாளிகை:4 7/1

 TOP
 
    உள்ளம் (6)
கொற்றவன்-தன்னை கண்டுகண்டு உள்ளம் குளிர என் கண் குளிர்ந்தனவே - 2.சேந்தனார்:1 2/4
விழுங்கு தீம் கனியாய் இனிய ஆனந்த வெள்ளமாய் உள்ளம் ஆயினையே - 3.கருவூர்:4 2/4
ஆறாத பேரன்பினவர் உள்ளம் குடிகொண்டு - 3.கருவூர்:5 9/1
சொல் பதத்துள் வைத்து உள்ளம் அள்ளூறும் தொண்டருக்கு எண் திசை கனகம் - 3.கருவூர்:6 3/2
உண்ட ஊண் உனக்காம் வகை எனது உள்ளம் உள் கலந்து எழு பரஞ்சோதி - 3.கருவூர்:6 6/2
தனியனேன் உள்ளம் கோயில்கொண்டு அருளும் சைவனே சாட்டியக்குடியார்க்கு - 3.கருவூர்:8 6/3

 TOP
 
    உள்ளீர் (1)
சொல் ஆண்ட சுருதி பொருள் சோதித்த தூய் மன தொண்டர்_உள்ளீர் - 10.சேந்தனார்:1 4/1

 TOP
 
    உள்ளுவது (1)
உடைய கோவினை அன்றி மற்று ஆரையும் உள்ளுவது அறியேனே - 7.திருவாலி:2 7/4

 TOP
 
    உள்ளே (2)
பாலும் அமுதமும் தேனுமாய் ஆனந்தம் தந்து உள்ளே பாலிப்பான் - 2.சேந்தனார்:2 11/1
பொன்னின் செய் மண்டபத்து உள்ளே புகுந்து புவனி எல்லாம் விளங்க - 10.சேந்தனார்:1 1/2

 TOP
 
    உளதே (3)
பிரியுமாறு உளதே பேய்களோம் செய்த பிழை பொறுத்து ஆண்ட பேரொளியே - 3.கருவூர்:4 7/4
பெரிது அருள் புரிந்து ஆனந்தமே தரும் நின் பெருமையில் பெரியது ஒன்று உளதே
  மருது அரசு இரும் கோங்கு அகில் மரம் சாடி வரை வளம் கவர்ந்து இழி வையை - 3.கருவூர்:7 1/2,3
கல் நவில் மனத்து என் கண் வலை படும் இ கருணையில் பெரியது ஒன்று உளதே
  மின் நவில் கனக மாளிகை வாய்தல் விளங்கு இளம் பிறை தவழ் மாடம் - 3.கருவூர்:7 7/2,3

 TOP
 
    உளம் (7)
மது மதி வெள்ள திரு வயிற்று உந்தி வளைப்புண்டு என் உளம் மகிழ்ந்ததுவே - 1.திருமாளிகை:2 6/4
உளம் கொள மதுர கதிர் விரித்து உயிர் மேல் அருள் சொரிதரும் உமாபதியை - 2.சேந்தனார்:1 11/1
மான் ஏர் கலை வளையும் கவர்ந்து உளம் கொள்ளைகொள்ள வழக்கு உண்டே - 2.சேந்தனார்:2 9/1
மையரே வையம் பலி திரிந்து உறையும் மயானரே உளம் கலந்திருந்தும் - 3.கருவூர்:2 8/2
ஊழிதோறூழி உணர்ந்து உளம் கசிந்து நெக்கு நைந்து உளம் கரைந்து உருக்கும் - 3.கருவூர்:3 5/2
ஊழிதோறூழி உணர்ந்து உளம் கசிந்து நெக்கு நைந்து உளம் கரைந்து உருக்கும் - 3.கருவூர்:3 5/2
ஏம்பலித்து இருக்க என் உளம் புகுந்த எளிமையை என்றும் நான் மறக்கேன் - 3.கருவூர்:7 2/2

 TOP
 
    உளம்கொள் (1)
நிறை தழை வாழை நிழல் கொடி நெடும் தெங்கு இளம் கமுகு உளம்கொள் நீள் பல மா - 1.திருமாளிகை:2 5/1

 TOP
 
    உளீர் (6)
சேல் உலாம் வயல் தில்லை_உளீர் உமை - 9.சேதிராயர்:1 1/1
சேண் நுதல் பொலி தில்லை_உளீர் உமை - 9.சேதிராயர்:1 2/3
செம்மலோர் பயில் தில்லை_உளீர் எங்கள் - 9.சேதிராயர்:1 4/3
செயலுற்று ஆர் மதில் தில்லை_உளீர் இவண் - 9.சேதிராயர்:1 5/3
சிறை வண்டு ஆர் பொழில் தில்லை_உளீர் எனும் - 9.சேதிராயர்:1 8/3
தென்றல் ஆர் பொழில் தில்லை_உளீர் இவள் - 9.சேதிராயர்:1 9/3

 TOP
 
    உளே (1)
இறைவனை என் கதியை என் உளே உயிர்ப்பு ஆகி நின்ற - 7.திருவாலி:4 5/1

 TOP
 
    உளைப்ப (1)
உடுப்பு ஆய தோல் செருப்பு சுரிகை வராகம் முன் ஓடு விளி உளைப்ப
  நடப்பாய் மகேந்திர நாத நாதாந்தத்து அரையா என்பார்க்கு நாதாந்த பதம் - 1.திருமாளிகை:3 7/2,3

 TOP
 
    உற்றாய் (1)
உற்றாய் என்னும் உன்னை அன்றி மற்றொன்று உணரேன் என்னும் உணர்வுள் கலக்கப்பெற்று - 1.திருமாளிகை:3 11/1

 TOP
 
    உற (1)
தனி பெரும் தாமே முழுது உற பிறப்பின் தளிர் இறப்பு இலை உதிர்வு என்றால் - 3.கருவூர்:9 7/1

 TOP
 
    உறங்க (1)
பொருந்து அரும் கருணை பரமர்-தம் கோயில் பொழிலகம் குடைந்து வண்டு உறங்க
  செருந்தி நின்று அரும்பும் பெரும்பற்றப்புலியூர் திரு வளர் திருச்சிற்றம்பலமே - 3.கருவூர்:1 11/3,4

 TOP
 
    உறங்கு (1)
ஒருங்கு இரு கண்ணின் எண்_இல் புன் மாக்கள் உறங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் - 3.கருவூர்:10 10/1

 TOP
 
    உறவாகிய (1)
உறவாகிய யோகமும் போகமுமாய் உயிர்_ஆளீ என்னும் என் பொன் ஒருநாள் - 1.திருமாளிகை:3 1/1

 TOP
 
    உறவு (1)
மற்று எனக்கு உறவு என் மறி திரை வடவாற்று இடு புனல் மதகில் வாழ் முதலை - 3.கருவூர்:9 2/3

 TOP
 
    உறவும் (1)
உறவும் பெற்ற நற்றாயொடு தந்தையும் உடன்பிறந்தவரோடும் - 7.திருவாலி:2 8/2

 TOP
 
    உறழ் (1)
ஆலை அம் பாகின் அனைய சொல் கருவூர் அமுது உறழ் தீம் தமிழ் மாலை - 3.கருவூர்:4 10/3

 TOP
 
    உறு (3)
மெய் நின்ற தமர்க்கு எல்லாம் மெய் நிற்கும் பண்பின் உறு
  செய்ஞ்ஞன்றி இலன் கோடை திரைலோக்கிய சுந்தரனே - 3.கருவூர்:5 4/3,4
கழுது உறு கரிகாடு உறைவிடம் போர்வை கவந்திகை கரி உரி திரிந்து ஊண் - 3.கருவூர்:8 3/2
உவரி மா கடலின் ஒலிசெய் மா மறுகில் உறு களிற்று அரசின தீட்டம் - 3.கருவூர்:9 5/3

 TOP
 
    உறுவதும் (1)
ஒளி வான் சுடரே உன்னை நாயேன் உறுவதும் என்று-கொலோ - 5.கண்டராதித்:1 5/4

 TOP
 
    உறை (2)
மருண்டு உறை கோயில் மல்கு நல் குன்ற பொழில் வளர் மகிழ் திருப்பிடவூர் - 2.சேந்தனார்:3 10/1
சேடர் உறை தில்லை சிற்றம்பலத்தான்-தன் - 4.பூந்துருத்தி:2 10/1

 TOP
 
    உறைப்பர் (1)
உறைப்பு உடை அடியார் கீழ்க்கீழ் உறைப்பர் சேவடி நீறு ஆடார் - 1.திருமாளிகை:4 11/2

 TOP
 
    உறைப்பு (1)
உறைப்பு உடை அடியார் கீழ்க்கீழ் உறைப்பர் சேவடி நீறு ஆடார் - 1.திருமாளிகை:4 11/2

 TOP
 
    உறையும் (4)
மறவா என்னும் மணி நீர் அருவி மகேந்திர மா மலை மேல் உறையும்
  குறவா என்னும் குணக்குன்றே என்னும் குலா தில்லை அம்பல கூத்தனையே - 1.திருமாளிகை:3 1/3,4
தர வார் புனம் சுனை தாழ் அருவி தடம் கல் உறையும் மடங்கல் அமர் - 1.திருமாளிகை:3 9/1
மையரே வையம் பலி திரிந்து உறையும் மயானரே உளம் கலந்திருந்தும் - 3.கருவூர்:2 8/2
முன் நகா ஒழியேன் ஆயினும் செழு நீர் முகத்தலை அகத்து அமர்ந்து உறையும்
  பன்னகாபரணா பவள வாய் மணியே பாவியேன் ஆவியுள் புகுந்தது - 3.கருவூர்:4 3/2,3

 TOP
 
    உறைவிடம் (2)
முலைகள் தந்து அருளும் தாயினும் நல்ல முக்கணான் உறைவிடம் போலும் - 3.கருவூர்:2 1/2
கழுது உறு கரிகாடு உறைவிடம் போர்வை கவந்திகை கரி உரி திரிந்து ஊண் - 3.கருவூர்:8 3/2

 TOP
 
    உன் (13)
உரு வளர் இன்ப சிலம்பு ஒலி அலம்பும் உன் அடி கீழது என் உயிரே - 1.திருமாளிகை:2 2/4
பிணி கெட இவை கண்டு உன் பெரு நடத்தில் பிரிவிலார் பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 8/2
ஏர் கொள் கற்பகம் ஒத்து இரு சிலை புருவம் பெரும் தடம் கண்கள் மூன்று உடை உன்
  பேர்கள் ஆயிரம் நூறாயிரம் பிதற்றும் பெற்றியோர் பெரும்பற்றப்புலியூர் - 1.திருமாளிகை:2 10/1,2
ஆறு ஆர் சிகர மகேந்திரத்து உன் அடியார் பிழை பொறுப்பாய் அமுது ஓர் - 1.திருமாளிகை:3 12/3
என்னை உன் பாத பங்கயம் பணிவித்து என்பு எலாம் உருக நீ எளிவந்து - 3.கருவூர்:4 8/1
உன் சோதி எழில் காண்பான் ஓலிடவும் உரு காட்டாய் - 3.கருவூர்:5 7/2
கடு வினை பாச கடல் கடந்து ஐவர் கள்ளரை மெள்ளவே துரந்து உன்
  அடி இணை இரண்டும் அடையுமாறு அடைந்தேன் அருள்செய்வாய் அருள்செயாது ஒழிவாய் - 3.கருவூர்:7 5/1,2
செம் மன கிழவோர் அன்பு தா என்று உன் சேவடி பார்த்திருந்து அலச - 3.கருவூர்:7 6/1
கடி ஆர் கணம்புல்லர் கண்ணப்பர் என்று உன்
  அடியார் அமர் உலகம் ஆள நீ ஆளாதே - 4.பூந்துருத்தி:2 2/1,2
ஒளி மால் முன்னே வரம் கிடக்க உன் அடியார்க்கு அருளும் - 5.கண்டராதித்:1 5/2
ஆளோ நீ உடையதுவும் அடியேன் உன் தாள் சேரும் - 6.வேணாட்டடிகள்:1 9/3
தாயினும் மிக நல்லை என்று அடைந்தேன் தனிமையை நினைகிலை சங்கரா உன்
  பாய் இரும் புலி அதளின் உடையும் பைய மேல் எடுத்த பொன் பாதமும் கண்டே - 8.புருடோத்தம:1 8/2,3
உய உன் கொன்றை அம் தார் அருளாய் எனும் - 9.சேதிராயர்:1 5/2

 TOP
 
    உன்-கண் (1)
அத்தில் அங்கு ஒரு கூறு உன்-கண் வைத்தவருக்கு அமர் உலகு அளிக்கும் நின் பெருமை - 3.கருவூர்:6 8/2

 TOP
 
    உன்-பாலே (1)
ஊர் ஓங்கும் பழி பாராது உன்-பாலே விழுந்து ஒழிந்தேன் - 3.கருவூர்:5 1/3

 TOP
 
    உன்றன் (2)
கோவே உன்றன் கூத்து காண கூடுவது என்று-கொலோ - 5.கண்டராதித்:1 2/4
அத்தா உன்றன் ஆடல் காண அணைவதும் என்று-கொலோ - 5.கண்டராதித்:1 3/4

 TOP
 
    உன்னை (11)
நல் பெரும் பொருளாய் உரை கலந்து உன்னை என்னுடை நாவினால் நவில்வான் - 1.திருமாளிகை:1 3/2
அற்பன் என் உள்ளத்து அளவிலா உன்னை தந்த பொன்னம்பலத்து அரசே - 1.திருமாளிகை:1 3/3
ஏறு அணி கொடி எம் ஈசனே உன்னை தொண்டனேன் இசையுமாறு இசையே - 1.திருமாளிகை:1 6/4
விடம் கொள் கண்டத்து எம் விடங்கனே உன்னை தொண்டனேன் விரும்புமா விரும்பே - 1.திருமாளிகை:1 10/4
நிறைதரு கருணா நிலயமே உன்னை தொண்டனேன் நினையுமா நினையே - 1.திருமாளிகை:1 11/4
உற்றாய் என்னும் உன்னை அன்றி மற்றொன்று உணரேன் என்னும் உணர்வுள் கலக்கப்பெற்று - 1.திருமாளிகை:3 11/1
ஐயா திருவாவடுதுறை அமுதே என்று உன்னை அழைத்தக்கால் - 2.சேந்தனார்:2 1/3
உன்னை என்-பால் வைத்து எங்கும் எஞ்ஞான்றும் ஒழிவற நிறைந்த ஒண் சுடரே - 3.கருவூர்:4 8/2
வீறாடி இவள் உன்னை பொதுநீப்பான் விரைந்து இன்னம் - 3.கருவூர்:5 9/3
ஒளி வான் சுடரே உன்னை நாயேன் உறுவதும் என்று-கொலோ - 5.கண்டராதித்:1 5/4
கூடாமே கைவந்து குறுகுமாறு யான் உன்னை
  நாடாயால் திரு தில்லை நடம் பயிலும் நம்பானே - 6.வேணாட்டடிகள்:1 8/3,4

 TOP
 
    உன (1)
அங்கு உன பணி பல செய்து நாளும் அருள் பெறின் அகலிடத்து இருக்கலாமே - 8.புருடோத்தம:1 9/4

 TOP
 
    உனக்காம் (1)
உண்ட ஊண் உனக்காம் வகை எனது உள்ளம் உள் கலந்து எழு பரஞ்சோதி - 3.கருவூர்:6 6/2

 TOP
 
    உனக்கு (1)
சா வாயும் நினை காண்டல் இனி உனக்கு தடுப்பு அரிதே - 6.வேணாட்டடிகள்:1 10/4

 TOP
 
    உனை (2)
வாடா வாய் நா பிதற்றி உனை நினைந்து நெஞ்சு உருகி - 6.வேணாட்டடிகள்:1 8/1
பிரிய விட்டு உனை அடைந்தனன் ஏன்றுகொள் பெரும்பற்றப்புலியூரின் - 7.திருவாலி:2 8/3

 TOP