|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
யாது (1)
யாது நீ நினைவது எவரை யாம் உடையது எவர்களும் யாவையும் தானாய் - 3.கருவூர்:3 9/1
TOP
யாது-கொல் (1)
அம்பலத்து அரு நடம் ஆடவேயும் யாது-கொல் விளைவது என்று அஞ்சி நெஞ்சம் - 8.புருடோத்தம:1 3/1
TOP
யாதே (1)
எம் மனம் குடிகொண்டு இருப்பதற்கு யான் ஆர் என் உடை அடிமைதான் யாதே
அ மனம் குளிர் நாள் பலிக்கு எழுந்தருள அரிவையர் அவிழ் குழல் சுரும்பு - 3.கருவூர்:7 6/2,3
TOP
யாம் (3)
தோழி யாம் செய்த தொழில் என் எம்பெருமான் துணை மலர் சேவடி காண்பான் - 3.கருவூர்:3 5/1
யாது நீ நினைவது எவரை யாம் உடையது எவர்களும் யாவையும் தானாய் - 3.கருவூர்:3 9/1
நோக்காத தன்மையால் நோக்கிலோம் யாம் என்று - 8.புருடோத்தம:2 10/1
TOP
யாமத்து (4)
வெய்ய செம் சோதி மண்டலம் பொலிய வீங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் - 3.கருவூர்:10 1/1
துனிபடு கலவி மலை_மகளுடனாய் தூங்கு இருள் நடு நல் யாமத்து என் - 3.கருவூர்:10 3/3
தொழிலை ஆழ் நெஞ்சம் இடர்படா வண்ணம் தூங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் - 3.கருவூர்:10 7/3
ஒருங்கு இரு கண்ணின் எண்_இல் புன் மாக்கள் உறங்கு இருள் நடு நல் யாமத்து ஓர் - 3.கருவூர்:10 10/1
TOP
யாமத்தே (1)
துரு கழல் நெடும் பேய் கணம் எழுந்து ஆடும் தூங்கு இருள் நடு நல் யாமத்தே
அருள் புரி முறுவல் முகிழ் நிலா எறிப்ப அந்தி போன்று ஒளிர் திருமேனி - 3.கருவூர்:10 6/2,3
TOP
யார் (3)
ஆம் தண் திருவாவடுதுறையான் செய்கை யார் அறிகிற்பரே - 2.சேந்தனார்:2 6/4
ஐவரும் பகையே யார் துணை என்றால் அஞ்சல் என்று அருள்செய்வான் கோயில் - 3.கருவூர்:1 2/2
இ நின்ற கோவணவன் இவன் செய்தது யார் செய்தார் - 3.கருவூர்:5 4/2
TOP
யாவையும் (1)
யாது நீ நினைவது எவரை யாம் உடையது எவர்களும் யாவையும் தானாய் - 3.கருவூர்:3 9/1
TOP
யாவையுமாய் (1)
வினைபடு கனகம் போல யாவையுமாய் வீங்கு உலகு ஒழிவற நிறைந்து - 3.கருவூர்:10 3/2
TOP
யாழ் (6)
துந்துபி குழல் யாழ் மொந்தை வான் இயம்ப தொடர்ந்து இருடியர் கணம் துதிப்ப - 3.கருவூர்:1 4/1
கின்னரம் முழவம் மழலை யாழ் வீணை கெழுவு கம்பலைசெய் கீழ்க்கோட்டூர் - 3.கருவூர்:3 8/3
நிரம்பாத பிறை தூவும் நெருப்பொடு நின் கையில் யாழ்
நரம்பாலும் உயிர் ஈர்ந்தாய் நளிர் புரிசை குளிர் வனம் பாதிரம் - 3.கருவூர்:5 8/2,3
யாழ் ஒலி சிலம்பும் இஞ்சி சூழ் தஞ்சை இராசராசேச்சரத்திவர்க்கே - 3.கருவூர்:9 4/4
மழலை யாழ் சிலம்ப வந்து அகம் புகுந்தோன் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 7/4
குழல் ஒலி யாழ் ஒலி கூத்து ஒலி ஏத்து ஒலி எங்கும் குழாம் பெருகி - 10.சேந்தனார்:1 11/1
TOP
யான் (7)
மண்டலத்து ஒளியை விலக்கி யான் நுகர்ந்த மருந்தை என் மாறிலா மணியை - 2.சேந்தனார்:1 3/1
அ கனா அனைய செல்வமே சிந்தித்து ஐவரோடு அழுந்தி யான் அவமே - 2.சேந்தனார்:1 6/1
விளங்கு ஒளி வீழிமிழலை வேந்தே என்று ஆம்தனை சேந்தன் தாதையை யான்
களம் கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன் கைக்கொண்ட கனக கற்பகமே - 2.சேந்தனார்:1 11/3,4
எம் மனம் குடிகொண்டு இருப்பதற்கு யான் ஆர் என் உடை அடிமைதான் யாதே - 3.கருவூர்:7 6/2
குருளும் வார் காதும் காட்டி யான் பெற்ற குயிலினை மயல் செய்வது அழகோ - 3.கருவூர்:9 6/2
கூடாமே கைவந்து குறுகுமாறு யான் உன்னை - 6.வேணாட்டடிகள்:1 8/3
காண்பது யான் என்று-கொல் கதிர் மா மணியை கனலை - 7.திருவாலி:4 2/1
TOP
யானும் (2)
நீ தலைப்பட்டால் யானும் அவ் வகையே நிசிசரர் இருவரோடு ஒருவர் - 3.கருவூர்:6 7/3
எந்தையும் தாயும் யானும் என்று இங்ஙன் எண்_இல் பல் ஊழிகளுடனாய் - 3.கருவூர்:10 5/3
TOP
யானே (1)
யோக நாயகனை அன்றி மற்றொன்றும் உண்டு என உணர்கிலேன் யானே - 2.சேந்தனார்:1 1/4
TOP
யானை-தன்னை (1)
போழ்ந்து யானை-தன்னை பொருப்பன் மகள் உமை அச்சம் கண்டவன் - 7.திருவாலி:1 4/1
TOP
| |
|