திருமந்திரம்
0.பாயிரம் 1 - 112 |
1.முதல் தந்திரம் 113 - 336 |
2.இரண்டாம் தந்திரம் 337 - 548 |
3.மூன்றாம் தந்திரம் 549 - 883 |
4.நான்காம் தந்திரம் 884 - 1418 |
---|---|---|---|---|
5.ஐந்தாம் தந்திரம் 1419 - 1572 |
6.ஆறாம் தந்திரம் 1573 - 1703 |
7.ஏழாம் தந்திரம் 1704 - 2121 |
8.எட்டாம் தந்திரம் 2122 - 2648 |
9.ஒன்பதாம் தந்திரம் 2649 - 3047 |
@8 எட்டாம் தந்திரம் #2122 காய பை ஒன்று சரக்கு பல உள மாய பை ஒன்று உண்டு மற்றும் ஓர் பை உண்டு காய பைக்கு உள் நின்ற கள்வன் புறப்பட்டால் மாய பை மண்ணா மயங்கியவாறே மேல் #2123 அத்தன் அமைத்த உடல் இரு கூறினில் சுத்தம் அது ஆகிய சூக்குமம் சொல்லும்-கால் சத்த பரிச ரூப ரச கந்தம் புத்திமான் ஆங்காரம் புரியட்டகாயமே மேல் #2124 எட்டினில் ஐந்து ஆகும் இந்திரியங்களும் கட்டிய மூன்று கரணமும் ஆயிடும் ஒட்டிய பாசம் உணர்வு அது ஆகவே கட்டி அவிழ்த்திடும் கண்_நுதல் காணுமே மேல் #2125 இரதம் உதிரம் இறைச்சி தோல் மேதை மருவிய அத்தி வழும்பொடு மச்சை பரவிய சுக்கிலம் பாழாம் உபாதி உருவம் அலால் உடல் ஒன்று எனலாமே மேல் #2126 ஆரே அறிவார் அடியின் பெருமையை யாரே அறிவார் அங்கு அவர் நின்றது யாரே அறிவார் அறுபத்தெட்டு ஆக்கையை யாரே அறிவார் அடி காவல் ஆனதே மேல் #2127 எண் சாண் அளவால் எடுத்த உடம்புக்குள் கண் கால் உடலில் கரக்கின்ற கைகளில் புண் கால் அறுபத்தெட்டு ஆக்கை புணர்க்கின்ற நண்பால் உடம்பு தன்னால் உடம்பு ஆமே மேல் #2128 உடம்புக்கும் நாலுக்கும் உயிராய சீவன் ஒடுங்கும் பரனோடு ஒழியா பிரமம் கடம்-தொறு நின்ற கணக்கு அது காட்டி அடங்கியே அற்றது ஆர் அறிவாரே மேல் #2129 ஆறு அந்தம் ஆகி நடுவுடன் கூடினால் தேறிய மூவாறும் சிக்கென்று இருந்திடும் கூறும் கலைகள் பதினெட்டும் கூடியே ஊறும் உடம்பை உயிர் உடம்பு எண்ணுமே மேல் #2130 மெய்யினில் தூலம் மிகுத்த முகத்தையும் பொய்யினில் சூக்கம் பொருந்தும் உடலையும் கையினில் துல்லியம் காட்டும் உடலையும் ஐயன் அடிக்குள் அடங்கும் உடம்பே மேல் #2131 காயும் கடும் பரி கால் வைத்து வாங்கல் போல் சேய இடம் அண்மை செல்லவும் வல்லது காய துகிர் போர்வை ஒன்று விட்டு ஆங்கு ஒன்று இட்டு ஏயும் அவர் என்ன ஏய்ந்திடும் காயமே மேல் #2132 நாகம் உடலுரி போலும் நல் அண்டசம் ஆக நனாவில் கனா மறந்து அல்லது போகலும் ஆகும் அரன் அருளாலே சென்று ஏகும் இடம் சென்று இருபயன் உண்ணுமே மேல் #2133 உண்டு நரக சுவர்க்கத்தில் உள்ளன கண்டு விடும் சூக்கம் காரணமா செல பண்டு தொடர பரகாய யோகி போல் பிண்டம் எடுக்கும் பிறப்பு இறப்பு எய்தியே மேல் #2134 தான் அவன் ஆகிய தற்பரம் தாங்கினோன் ஆன அவை மாற்றி பரமத்து அடைந்திடும் ஏனை உயிர் வினைக்கு எய்தும் இடம் சென்றும் வானும் நிலனும் புகுந்தும் வருந்துமே மேல் #2135 ஞானிக்கு காயம் சிவமே தனுவாகும் ஞானிக்கு காயம் உடம்பே அதுவாகும் மேல் நிற்கும் யோகிக்கு விந்துவும் நாதமும் மோனிக்கு காயம் முப்பாழ் கெட்ட முத்தியே மேல் #2136 விஞ்ஞானத்தோர்க்கு ஆணவமே மிகு தனு எஞ்ஞானத்தோர்க்கு தனு மாயை தான் என்ப அஞ்ஞானத்தோர்க்கு கன்மம் தனு ஆகும் மெய்ஞ்ஞானத்தோர்க்கு சிவ தனு மேவுமே மேல் #2137 மலம் என்று உடம்பை மதியாத ஊமர் தலம் என்று வேறு தரித்தமை கண்டீர் நலம் என்று இதனையே நாடி இருக்கில் பலம் உள்ள காயத்தில் பற்றும் இ அண்டத்தே மேல் #2138 நல்ல வசனத்து வாக்கும் அனாதிகள் மெல்ல விளையாடும் விமலன் அகத்திலே அல்ல செவி சத்தம் ஆதி மனத்தையும் மெல்ல தரித்தார் முகத்தார் பசித்தே மேல் #2139 பண் ஆகும் காமம் பயிலும் வசனமும் விண்ணாம் பிராணன் விளங்கிய சத்தமும் புண்ணாம் உடலில் பொருந்து மனத்தையும் அண்ணாந்து பார்க்க அழியும் உடம்பே மேல் #2140 அழிகின்ற ஓர் உடம்பு ஆகும் செவி கண் கழிகின்ற கால் அ விரதங்கள் தானம் மொழிகின்ற வாக்கு முடிகின்ற நாடி ஒழிகின்ற ஊனுக்கு உறுதுணை இல்லையே மேல் #2141 இலை ஆம் இடையில் எழுகின்ற காம முலை வாய நெஞ்சத்து மூழ்கும் உளத்து தலையாய மின் உடல் தாங்கி திரியும் சிலையாய சித்தம் சிவ முன் இடைக்கே மேல் #2142 ஐயைந்து மத்திமை ஆனது சாக்கிரம் கைகண்ட பல் நான்கில் கண்டம் கனா என்பர் பொய் கண்டிலாத புருடன் இதயம் சுழுனை மெய் கண்டவன் உந்தி ஆகும் துரியமே மேல் #2143 முப்பதோடு ஆறின் முதல் நனா ஐந்து ஆக செப்பதில் நான்காய் திகழ்ந்து இரண்டு ஒன்று ஆகி அ பதி ஆகும் நியதி முதலாக செப்பும் சிவம் ஈறாய் தேர்ந்து கொள்ளீரே மேல் #2144 இந்தியம் ஈரைந்து ஈரைந்து மாத்திரை மந்திரமாய் நின்ற மாருதம் ஈரைந்தும் அந்த கரணம் ஒரு நான்கும் ஆன்மாவும் பந்த அ சக்கர பால் அது ஆகுமே மேல் #2145 பாரது பொன்மை பசுமை உடையது நீரது வெண்மை செம்மை நெருப்பது காரது மாருதம் கருப்பை உடையது வானகம் தூமம் மறைந்து நின்றாரே மேல் #2146 பூதங்கள் ஐந்தும் பொறி அவை ஐந்துளும் ஏதம் படம் செய்து இருந்த புறநிலை ஓது மலம் குணம் ஆகும் ஆதாரமோடு ஆதி அவத்தை கருவி தொண்ணூற்றாறே மேல் #2147 இட வகை சொல்லில் இருபத்தஞ்சு ஆனை படு பர சேனையும் பாய்பரி ஐந்தும் உடையவன் மத்திமை உள்ளுறு நால்வர் அடைய நெடும் கடை ஐந்தொடு நான்கே மேல் #2148 உடம்பும் உடம்பும் உடம்பை தழுவி உடம்பிடை நின்ற உயிரை அறியார் உடம்பொடு உயிரிடை நட்பு அறியாதார் மடம் புகு நாய் போல் மயங்குகின்றாரே மேல் #2149 இருக்கின்றவாறு ஒன்று அறிகிலர் ஏழைகள் முருக்கும் அசபையை மாற்றி முகந்து கருக்கொண்டு காமாரி சார முகம் தேர்ந்து உருக்கொண்டு தொக்க உடல் ஒழியாதே மேல் #2150 ஒளித்திட்டு இருக்கும் ஒரு பதினாலை அளித்தனன் என் உள்ளே ஆரியன் வந்து அளிக்கும் கலைகளின் நாலறுபத்து ஒளித்திட்டு வைத்தான் ஒடுங்கிய சித்தே மேல் #2151 மண்ணினில் ஒன்று மலர் நீரும் மருங்காகும் பொன்னினில் அங்கி புகழ் வளி ஆகாயம் மன்னு மனோ புத்தி ஆங்காரம் ஓர் ஒன்றாய் உன்னின் முடிந்த ஒரு பூத சயமே மேல் #2152 முன்னிக்கு ஒரு மகன் மூர்த்திக்கு இருவர் வன்னிக்கு மூவர் வதுவைக்கு நால்வர் கன்னிக்கு பிள்ளைகள் ஐவர் முனாள் இல்லை கன்னியை கன்னியே காதலித்தாளே மேல் #2153 கண்ட கனவு ஐந்தும் கலந்தன தான் ஐந்தும் சென்று உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்த பின் பண்டையது ஆகி பரந்த வியாக்கிரத்து அண்டமும் தானாய் அமர்ந்து நின்றானே மேல் #2154 நின்றவன் நிற்க பதினாலில் பத்து நீத்து ஒன்றிய அந்த கரணங்கள் நான்குடன் மன்று கலந்த மனைவாழ்க்கை வாதனை கன்றிய கண்டத்தில் கண்டான் கனவு அதே மேல் #2155 தானம் இழந்து தனி புக்கு இதயத்து மானம் அழிந்து மதி கெட்டு மால் ஆகி ஆன விரிவு அறியா அ வியத்தத்தின் மேனி அழிந்து சுழுத்தியது ஆமே மேல் #2156 சுழுனையை சேர்ந்து உள மூன்று உடன் காட்சி கெழுமிய சித்தம் பிராணன்-தன் காட்சி ஒழுக கமலத்தின் உள்ளே இருந்து விழும பொருளுடன் மேவி நின்றானே மேல் #2157 தானத்து எழுந்து தருக்கும் துரியத்தின் வானத்து எழுந்து போய் வையம் பிறகிட்டு கானத்து எழுந்த கருத்தின் தலையிலே ஊனத்து அவித்தை விட்டு ஊமன் நின்றானே மேல் #2158 ஊமை எழுத்தொடு பேசும் எழுத்துறில் ஆமை அகத்தினில் அஞ்சும் அடங்கிடும் ஓமயம் உற்றது உள்ளொளி பெற்றது நாமயம் அற்றது நாம் அறியோமே மேல் #2159 துரியம் இருப்பதும் சாக்கிரத்து உள்ளே நரிகள் பதினாலும் நஞ்சு உண்டு செத்தன பரிய புரவியும் பாறி பறந்தது துரியம் இறந்த இடம் சொல்ல ஒண்ணாதே மேல் #2160 மாறா மலம் ஐந்தால் மன்னும் அவத்தையின் வேறாய மாயா தநுகரணாதிக்கு இங்கு ஈறு ஆகாதே எ உயிரும் பிறந்து இறுந்து ஆறாத வல் வினையால் அடி உண்ணுமே மேல் #2161 உண்ணும் தன் ஊடாடாது ஊட்டிடும் மாயையும் அண்ணல் அருள்பெற்ற முத்தி அது ஆவது நண்ணல் இலா உயிர் ஞானத்தினால் பிறந்து எண்ணுறு ஞானத்தின் நேர் முத்தி எய்துமே மேல் #2162 அதி மூட நித்திரை ஆணவம் நந்த அதனால் உணர்வோன் அரும் கன்மம் உன்னி திதம் ஆன கேவலம் இ திறம் சென்று பரம் ஆகா வைய அவத்தைப்படுவானே மேல் #2163 ஆசான் முன்னே துயில் மாணவர்-தமை தேசாய தண்டால் எழுப்பும் செயல் போல் நேசாய ஈசனும் நீடு ஆணவத்தரை ஏசாத மாயாள்-தன்னாலே எழுப்புமே மேல் #2164 மஞ்சொடு மந்தாகினி குடமாம் என விஞ்சு அறிவில்லோன் விளம்பு மிகு மதி எஞ்சலில் ஒன்று எனுமாறு என இ உடல் அஞ்சு உணும் மன்னன் அன்றே போம் அளவே மேல் #2165 படியுடை மன்னவன் பாய்பரி ஏறி வடியுடை மாநகர் தான் வரும்-போது அடியுடை ஐவரும் அங்கு உறைவோரும் துடி இல்லம் பற்றி துயின்றனர் தாமே மேல் #2166 நேரா மலத்தை நீடு அடைந்து அவத்தையின் நேரானவாறு உன்னி நீடு நனவினில் நேரா மலம் ஐந்தும் நேரே தரிசித்து நேராம் பரத்துடன் நிற்பது நித்தமே மேல் #2167 சாக்கிர சாக்கிரம் தன்னில் திரோதாயி சாக்கிர சொப்பனம் தன்னிடை மா மாயை சாக்கிரம் தன்னில் சுழுத்தி தற்காமியம் சாக்கிரம் தன்னில் துரியத்து மாயையே மேல் #2168 மாயை எழுப்பும் கலாதியை மற்று அதின் நேய இராகாதி ஏய்ந்த துரியத்து தோயும் சுழுனை கனா நனாவும் துன்னி ஆயினன் அந்த சகலத்து உளானே மேல் #2169 மேவிய அந்தகன் விழி கண் குருடனாம் ஆவயின் முன் அடி காணும் அது கண்டு மேவும் தடி கொண்டு சொல்லும் விழி பெற மூவயின் ஆன்மா முயலும் கருமமே மேல் #2170 மத்திமம் ஒத்த சிலந்தி வலயத்துள் ஒத்து அங்கு இருந்து உயிர் உண்ணும் ஆறு போல் அத்தனும் ஐம்பொறி ஆடகத்து உள் நின்று சத்தம் முதல் ஐந்தும் தான் உண்ணுமாறே மேல் #2171 வைச்சன வச்சு வகை இருபத்தஞ்சு முச்சும் ஊடன் அணைவான் ஒருவன் உளன் பிச்சன் பெரியன் பிறப்பு_இலி என்று என்று நச்சி அவன் அருள் நான் உய்ந்தவாறே மேல் #2172 நாலாறு உடன் புருடன் நல் தத்துவமுடன் வேறான ஐயைந்து மெய் புருடன் பரம் கூறா வியோமம் பரம் என கொண்டனன் வேறான நாலேழு வேதாந்த தத்துவமே மேல் #2173 ஏலம் கொண்டு ஆங்கே இடையொடு பிங்கலை கோலம் கொண்டு ஆங்கே குணத்தின் உடன் புக்கு மூலம் கொண்டு ஆங்கே முறுக்கி முக்கோணிலும் காலம் கொண்டான் அடி காணலுமாமே மேல் #2174 நாடிகள் பத்தும் நலம் திகழ் வாயுவும் ஓடிய காலில் ஒடுங்கி இருந்திடும் கூடிய காமம் குளிக்கும் இரதமும் நாடிய நல்ல மனமும் உடலிலே மேல் #2175 ஆவன ஆவ அழிவ அழிவன போவன போவ புகுவ புகுவன காவலன் பேர் நந்தி காட்டித்து கண்டவன் ஏவன செய்யும் இளங்கிளையோனே மேல் #2176 பத்தொடு பத்தும் ஓர் மூன்றும் பகுதியும் உய்த்த துரியமும் உள்ளுணர் காலமும் மெய்த்த வியோமமும் மேலை துரியமும் தத்துவ நாலேழ் என உன்னத்தக்கதே மேல் #2177 விளங்கிடும் முந்நூற்றுமுப்பதோடு ஒருபான் தளம் கொள் இரட்டிய தாறு நடந்தால் வணங்கிடும் ஐம்மலம் வாயு எழுந்து விளங்கிடும் அ வழி தத்துவம் நின்றே மேல் #2178 நால் ஒரு கோடியே நாற்பத்தெண்ணாயிரம் மேலும் ஓர் ஐந்நூறு வேறாய் அடங்கிடும் பால் அவை தொண்ணூறோடு ஆறுள் படும் அவை கோலிய ஐயைந்துள் ஆகும் குறிக்கிலே மேல் #2179 ஆகின்ற தொண்ணூறோடு ஆறும் பொது என்பர் ஆகின்ற ஆறாறு அருஞ்சைவர் தத்துவம் ஆகின்ற நாலேழ் வேதாந்தி வயிணவர்க்கு ஆகின்ற நாலாறு ஐயைந்தும் மாயாவாதிக்கே மேல் #2180 தத்துவமானது தன்வழி நின்றிடில் வித்தகன் ஆகி விளங்கி இருக்கலாம் பொய்த்தவமாம் அவை போயிடும் அ வழி தத்துவமாவது அகார எழுத்தே மேல் #2181 அறிவு ஒன்று இலாதன ஐயேழும் ஒன்றும் அறிகின்ற என்னை அறியாது இருந்தேன் அறிகின்றாய் நீ என்று அருள்செய்தார் நந்தி அறிகின்ற நான் என்று அறிந்துகொண்டேனே மேல் #2182 சாக்கிர சாக்கிரம் ஆதி-தனில் ஐந்தும் ஆக்கும் மலாவத்தை ஐந்து நனவாதி போக்கி இவற்றொடும் பொய்யான ஆறாறும் நீக்கி நெறிநின்று ஒன்று ஆகியே நிற்குமே மேல் #2183 ஆணவம் ஆதி மலம் ஐந்து அலரோனுக்கு ஆணவம் ஆதி நான்காம் மாற்கு அரனுக்கு ஆணவம் ஆதி மூன்று ஈசர்க்கு இரண்டு என்ப ஆணவம் ஒன்றே சதாசிவற்கு ஆவதே மேல் #2184 தத்துவம் ஆறாறு தன்மனு ஏழ் கோடி மெய்த்தகு அன்னம் ஐம்பான் ஒன்று மேதினி ஒத்து இருநூற்றிருபான் நான்கு எண்பான் ஒன்று வைத்த பதம் கலை ஓர் ஐந்தும் வந்தவே மேல் #2185 நாடிய மண்டலம் மூன்று நலம் தெரிந்து ஓடும் அவரோடு உள் இருபத்தைஞ்சும் கூடுவர் கூடி குறிவழியே சென்று தேடிய பின்னர் திகைத்து இருந்தார்களே மேல் #2186 சாக்கிர சாக்கிரம் ஆதி தலை ஆக்கி ஆக்கிய தூலம் அளவு ஆக்கி அதீதத்து தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்தது தேக்கும் சிவம் ஆதல் ஐந்தும் சிவாயமே மேல் #2187 நனவாதி தூலமே சூக்க பகுதி அனதான ஐயைந்தும் விந்துவின் சத்தி தனதாம் விந்து தான்-நின்று போந்து கனவா நனவில் கலந்தது இவ்வாறே மேல் #2188 நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார் நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார் நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார் நனவில் கனவோட நல் செய்தி ஆனதே மேல் #2189 செறியும் கிரியை சிவதத்துவமாம் பிறிவில் சுக யோகம் பேரருள் கல்வி குறிதல் திருமேனி குணம் பல ஆகும் அறிவில் சராசரம் அண்டத்து அளவே மேல் #2190 ஆதி பரஞ்சிவம் சத்தி சதாசிவம் ஏதம் இல் ஈசன் நல் வித்தியா தத்துவம் போதம் கலை காலம் நியதி மா மாயை நீதி ஈறு ஆக நிறுத்தினன் என்னே மேல் #2191 தேசு திகழ் சிவம் சத்தி சதாசிவம் ஈசன் நல் வித்தை இராகம் கலைகாலம் மாசு அகல் வித்தை நியதி மகா மாயை ஆசு இல் புருடாதி ஆன்மா ஈராறே மேல் #2192 ஆணவ மாயையும் கன்மமுமாம் மலம் காணும் முளைக்கு தவிடு உமி ஆன்மாவும் தாணுவை ஒவ்வாமல் தண்டுலமாய் நிற்கும் பேணுவாய் மற்று நின் பாசம் பிரித்தே மேல் #2193 பசுக்கள் பல வண்ணம் பால் ஒரு வண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒரு வண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன் கோல் போடில் பசுக்கள் தலைவனை பற்றி விடாவே மேல் #2194 உடல் இந்தியம் மனம் ஒண் புத்தி சித்தம் அடல் ஒன்று அகந்தை அறியாமை மன்னி கெடும் அ உயிர் மயல் மேலும் கிளைத்தால் அடைவது தான் ஏழ் நரகத்து உளாயே மேல் #2195 தன் தெரியாத அதீதம் தற்கு ஆணவம் சொல் தெரிகின்ற துரியம் சொல் காமியம் பெற்ற சுழுத்தி பின் பேசுறும் காதலால் மற்று அது உண்டி கன நனவு ஆதலே மேல் #2196 நனவில் கனவு இல்லை ஐந்து நனவில் கனவு இலா சூக்குமம் காணும் சுழுத்தி தனல் உண் பகுதியே தற்கூட்டு மாயை நனவில் துரியது அதீதம் தலைவந்தே மேல் #2197 ஆறாறில் ஐயைந்து அகல நனா நனா ஆறாம் அவை விட ஆகும் நனா கனா வேறு ஆன ஐந்தும் விடவே நனாவினில் ஈறு ஆம் சுழுத்தி இதில் மாயை தானே மேல் #2198 மாயையில் வந்த புருடன் துரியத்தில் ஆய முறை விட்டு அதுவும் தான் அன்றாகி சேய கேவல விந்துடன் செல்ல சென்ற-கால் ஆய தனுவின் பயன் இல்லை ஆமே மேல் #2199 அதீத துரியத்து அறிவனாம் ஆன்மா அதீத துரியம் அதனால் புரிந்தால் அதீதத்து எழுந்து அறிவு ஆகிய மானன் முதிய அனலில் துரியத்து முற்றுமே மேல் #2200 ஐயைந்து பத்துடன் ஆனது சாக்கிரம் கைகண்ட ஐயைந்தில் கண்டம் கனா என்பர் பொய் கண்ட மூவர் புருடர் சுழுனையின் மெய் கண்டவன் உந்தி மேவல் இருவரே மேல் #2201 புரியட்டகமே பொருந்தல் நனவு புரியட்டகம் தன்னின் மூன்று கனவு புரியட்டகத்தில் இரண்டு சுழுத்தி புரியட்டகத்து ஒன்று புக்கல் துரியமே மேல் #2202 நனவின் நனவு புலன் இல் வழக்கம் நனவில் கனவு நினைத்தல் மறத்தல் நனவில் சுழுத்தி உள் நாடல் இலாமை நனவில் துரியம் அதீதத்து நந்தியே மேல் #2203 கனவின் நனவு போல் காண்டல் நனவாம் கனவினில் கண்டு மறத்தல் கனவாம் கனவில் சுழுத்தியும் காணாமை காணல் அணு ஆதி செய்தலில் ஆன துரியமே மேல் #2204 சுழுத்தி நனவு ஒன்றும் தோன்றாமை தோன்றல் சுழுத்தி கனவு அதன் உண்மை சுழுத்தியில் சுழுத்தி அறிவு அறிவாலே அழிகை சுழுத்தி துரியமாம் சொல் அறும் பாழே மேல் #2205 துரிய நனவாம் இதம் உணர் போதம் துரிய கனவாம் அகம் உணர் போதம் துரிய சுழுத்தி வியோமம் துரியம் துரியம் பரம் என தோன்றிடும் தானே மேல் #2206 அறிவு அறிகின்ற அறிவு நனவாம் அறிவு அறியாமை அடைய கனவாம் அறிவு அறி அ அறியாமை சுழுத்தி அறிவு அறிவாகும் ஆன துரியமே மேல் #2207 தான் எங்கும் ஆயவன் ஐம்மலம் தான் விட்டு ஞானம் தனது உரு ஆகி நயந்த பின் தான் எங்குமாய் நெறிநின்றது தான் விட்டு மேல் நந்த சூக்கம் அவை வன்னம் மேலிட்டே மேல் #2208 ஐயைந்தும் ஆறும் ஓர் ஐந்தும் நனாவினில் எய்யும் நனவு கனவு சுழுத்தியாம் மெய்யும் பின் சூக்கமும் மெய் பகுதி மாயை ஐயமும் தான் அவன் அ துரியத்தனே மேல் #2209 ஈது என்று அறிந்திலன் இத்தனை காலமும் ஈது என்று அறிந்த பின் ஏதும் அறிந்திலேன் ஈது என்று அறியும் அறிவை அறிந்த பின் ஈது என்று அறியும் இயல்பு உடையோனே மேல் #2210 உயிர்க்கு உயிராகி உருவாய் அருவாய் அயல் புணர்வு ஆகி அறிவாய் செறிவாய் நயப்புறு சத்தியும் நாதன் உலகாதி இயற்பு இன்றி எல்லாம் இருள் மூடம் ஆமே மேல் #2211 சத்தி இராகத்தில் தான் நல் உயிர் ஆகி ஒத்துறு பாச மலம் ஐந்தோடு ஆறாறு தத்துவ பேதம் சமைத்து கருவியும் வைத்தனன் ஈசன் மலம் அறுமாறே மேல் #2212 சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன் உண்மை சாக்கிரா தீதம் துரியத்தில் தானுற சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான் விடா சாக்கிரா தீதம் பரன் உண்மை தங்குமே மேல் #2213 மல கலப்பாலே மறைந்தது சத்தி மல கலப்பாலே மறைந்தது ஞானம் மல கலப்பாலே மறைந்தனன் தாணு மல கலப்பு அற்றால் மதியொளி ஆமே மேல் #2214 திகைக்கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று நகைக்கின்ற நெஞ்சுள் நரிக்குட்டி நான்கு வகைக்கின்ற நெஞ்சினுள் ஆனைக்கன்று ஐந்து பகைக்கின்ற நெஞ்சுக்கு பால் இரண்டு ஆமே மேல் #2215 கதறு பதினெட்டு கண்களும் போக சிதறி எழுந்திடும் சிந்தையை நீரும் விதறு படாமுன்னம் மெய்வழி நின்றால் அதிர வருவது ஓர் ஆனையும் ஆமே மேல் #2216 நனவகத்தே ஒரு நாலைந்தும் வீட கனவகத்தே உள் கரணங்களோடு முனவகத்தே நின்று உதறி உள் புக்கு நினைவகத்து இன்றி சுழுத்தி நின்றானே மேல் #2217 நின்றவன் ஆசான் நிகழ் துரியத்தனாய் ஒன்றி உலகின் நியமாதிகளுற்று சென்று துரியாதீதத்தே சில காலம் நின்று பரனாய் நின்மலன் ஆமே மேல் #2218 ஆன அ ஈசன் அதீதத்தில் வித்தையா தான் உலகு உண்டு சதாசிவ மா சத்தி மேனிகள் ஐந்தும் போய் விட்டு சிவம் ஆகி மோனம் அடைந்து ஒளி மூலத்தன் ஆமே மேல் #2219 மண்டலம் மூன்றினுள் மாய நல் நாடனை கண்டு கொண்டு உள்ளே கருதி கழிகின்ற விண்டு அலர் தாமரை மேல் ஒன்றும் கீழ் ஆக தண்டமும் தான் ஆக அகத்தின் உள் ஆமே மேல் #2220 போது அறியாது புலம்பின புள் இனம் மாது அறியா வகை நின்று மயங்கின வேது அறியாவணம் நின்றான் எம் இறை சூது அறிவார் உச்சி சூடிநின்றாரே மேல் #2221 கருத்து அறிந்து ஒன்பது கண்டமும் ஆங்கே பொருத்து அறிந்தேன் புவனாபதி நாடி திருத்து அறிந்தேன் மிகு தேவர் பிரானை வருத்து அறிந்தேன் மனம் மன்னி நின்றானே மேல் #2222 ஆன விளக்கொளி தூண்டும் அவன் என்ன தான விளக்கொளியாம் மூல சாதனத்து ஆன விதி மூலத்தானத்தில் அ விளக்கு ஏனை மதி மண்டலம் கொண்டு எரியுமே மேல் #2223 உள் நாடும் ஐவர்க்கும் அண்டை ஒதுங்கிய விண் நாட நின்ற வெளியை வினவுறில் அண்ணாந்து பார்த்து ஐவர் கூடிய சந்தியில் கண்ணாடி காணும் கருத்தது என்றானே மேல் #2224 அறியாதவற்றை அறிவான் அறிவான் அறிவான் அறியாதான் தன் அறிவு ஆகான் அறியாது அவத்தை அறிவானை கூட்டி அறியாது அறிவானை யார் அறிவாரே மேல் #2225 துரிய தரிசனம் சொற்றோம் வியோமம் அரியன தூடணம் அ நனவு ஆதி பெரியன கால பரம்பின் துரியம் அரிய அதீதம் அதீதத்தம் ஆமே மேல் #2226 மாயையில் சேதனன் மன்னும் பகுதியோன் மாயையின் மற்று அது நீவு தன் மாயையாம் கேவலம் ஆகும் சகல மா யோனியுள் தோயும் மனிதர் துரியத்துள் சீவனே மேல் #2227 தன்னை அறி சுத்தன் தற்கேவலன் தானும் பின்னம் உற நின்ற பேத சகலனும் மன்னிய சத்து அசத்து சத சத்துடன் துன்னுவர் தத்தம் தொழிற்கு அளவு ஆகவே மேல் #2228 தானே தனக்கு பகைவனும் நட்டானும் தானே தனக்கு மறுமையும் இம்மையும் தானே தான் செய்த வினைப்பயன் துய்ப்பானும் தானே தனக்கு தலைவனும் ஆமே மேல் #2229 ஆம் உயிர் கேவலம் மா மாயையின் நடந்து ஆம் உயிர் மாயை எறிப்ப அறிவுற்று காமியம் மாயேயமும் கலவா நிற்ப தாமுறு பாசம் சகலத்தது ஆமே மேல் #2230 சகல அவத்தையில் சார்ந்தோர் சகலர் புகலும் மலம் மூ வகையும் புணர்ந்தோர் நிகர் இல் மலரோன் மால் நீடு பல் தேவர்கள் நிகழ் நரர் கீடம் அந்தமும் ஆமே மேல் #2231 தாவிய மாயையில் தங்கும் பிரளயம் மேவிய மற்று அது உடம்பாய் மிக்கு உள்ளன ஓவல் இலக்கணர் ஒன்றிய சீகண்டர் ஆவயின் நூற்றெட்டு உருத்திரர் ஆமே மேல் #2232 ஆகின்ற கேவலத்து ஆணவத்து ஆனவர் ஆகின்ற வித்தேசராம் அனந்தாதியர் ஆகின்ற எண்மர் எழு கோடி மந்திரர் ஆகின்ற ஈசர் அநேகரும் ஆமே மேல் #2233 ஆம் அவரில் சிவனார் அருள் பெற்றுளோர் போம் மலம் தன்னால் புகழ் விந்து நாதம் விட்டு ஓம் மயம் ஆகி ஒடுங்கலின் நின்மலம் தோம் அறு சுத்தா அவத்தை தொழிலே மேல் #2234 ஓரினும் மூ வகை நால் வகையும் உள தேரில் இவை கேவல மாயை சேர் இச்சை சாரியல் ஆயவை தாமே தணப்பவை வாரி வைத்து ஈசன் மலம் அறுத்தானே மேல் #2235 பொய்யான போதாந்தம் ஆறாறும் விட்டு அகன்று எய்யாமை நீங்கவே எய்தவன் தானாகி மெய்யாம் சராசரமாய் வெளி தன்னுள் புக்கு எய்தாமல் எய்தும் சுத்தாவத்தை என்பதே மேல் #2236 அனாதி பசு வியாத்தி ஆகும் இவனை அனாதியில் வந்த மலம் ஐந்தால் ஆட்டி அனாதியில் கேவலம் அச்ச கலத்து இட்டு அனாதி பிறப்பு அற சுத்தத்துள் ஆகுமே மேல் #2237 அந்தரம் சுத்தாவத்தை கேவலத்து ஆறு தந்தோர் தம் சுத்த கேவலத்து அற்ற தற்பரத் தின்-பால் துரியத்து இடையே அறிவுற தன்-பால் தனை அறி தத்துவம் தானே மேல் #2238 ஐயைந்து ஒடுங்கும் ஆன்மாவில் ஆன்மாவும் மெய் கண்டு சுத்த அவத்தையில் வீடாகும் துய்ய அ வித்தை முதல் மூன்றும் தொல் சத்தி ஐய சிவம் சித்தியாம் தோற்றம் அவ்வாறே மேல் #2239 ஐயைந்தும் ஆன்மாவில் ஆறோடு அடங்கிடும் மெய் கண்ட மேல் மூன்று மேவும் மெய் யோகத்தில் கைகண்ட சத்தி சிவபாகத்தே காண எய்யும்படி அடங்கும் நாலேழ் எய்தியே மேல் #2240 ஆணவத்தார் ஒன்று அறியாத கேவலர் பேணிய மாயை பிரளயாகலர் ஆகும் காணும் உருவினர் காணாமை காண்பவே பூணும் சகலர் முப்பாசமும் புக்கோரே மேல் #2241 ஆணவம் ஆகும் விஞ்ஞானகலருக்கு பேணிய மாயை பிரளயாகலருக்கே ஆணவ மாயையும் கன்மம் மூன்றுமே காணும் சகலர்க்கு காட்டு மலங்களே மேல் #2242 கேவலம்-தன்னில் கிளர்ந்த விஞ்ஞாகலர் கேவலம்-தன்னில் கிளர் விந்து சத்தியால் ஆவயின் கேவலத்து அ சகலத்தையும் மேவிய மந்திர மா மாயை மெய்ம்மையே மேல் #2243 மாயையின் மன்னும் பிரளயாகலர் வந்து மாயையும் தோன்றா வகை நிற்க ஆணவ மாய சகலத்து காமிய மா மாயை ஏய மன் நூற்றெட்டு உருத்திரர் என்பவே மேல் #2244 மும்மலம் கூடி முயங்கி மயங்குவோர் அம் மெய் சகலத்தர் தேவர் சுரர் நரர் மெய்ம்மையில் வேதா விரி மிகு கீடாந்தத்து அ முறை யோனி புக்கு ஆர்க்கும் சகலரே மேல் #2245 சுத்த அவத்தையில் தோய்ந்தவர் மும்மல சத்து அசத்து ஓட தனித்தனி பாசமும் மத்த இருள் சிவனான கதிராலே தொத்து அற விட்டிட சுத்தர் ஆவார்களே மேல் #2246 தற்கேவலம் முத்தி தானே தனிமையாம் பிற்பால் சகலம் கலாதி பிறிவது ஆம் சொற்பால் புரிசுத்த கேவலம் சாக்கிரம் தற்பால் புரிவது தற்சுத்தம் ஆமே மேல் #2247 அறிவு இன்றி முத்தன் அராகாதி சேரான் குறி ஒன்று இலா நித்தன் கூடான் கலாதி செறியும் செயல் இலான் தினம் கற்ற வல்லோன் கிறியன் மலவியாபி கேவலம் தானே மேல் #2248 விந்துவும் மாயையும் மேவும் கிரியையும் சந்தத ஞான பரையும் தனு சத்தி விந்துவின் மெய்ஞ்ஞானம் மேவும் பிரளயர் வந்த சகல சுத்தான்மாக்கள் வையத்தே மேல் #2249 கேவலம் ஆதியில் பேதம் கிளக்குறில் கேவலம் மூன்றும் கிளரும் சகலத்துள் ஆவயின் மூன்று மதி சுத்த மூடவே ஓவல் இல்லா ஒன்பான் உற்று உணர்வோர்கட்கே மேல் #2250 கேவலத்தில் கேவலம் அதீதாதீதம் கேவலத்தில் சகலங்கள் வயின் தவம் கேவலத்தில் சுத்தம் கேடு இல் விஞ்ஞாகலவர்க்கு ஆவயின் ஆதன் அருண் மூர்த்தி தானே மேல் #2251 சகலத்தில் கேவலம் சாக்கிராதீதம் சகல சகலமே சாக்கிர சாக்கிரம் சகலத்தின் சுத்தமே தற்பராவத்தை சகலத்தில் இ மூன்று தன்மையும் ஆமே மேல் #2252 சுத்தத்தில் சுத்தமே தொல் சிவம் ஆகுதல் சுத்தத்தில் கேவலம் தொல் உபசாந்தமாம் சுத்த சகலம் துரிய விலாசமாம் சுத்தத்தில் இ மூன்றும் சொல்லலும் ஆமே மேல் #2253 சாக்கிர சாக்கிரம் தன்னில் கனவொடும் சாக்கிரம் தன்னில் சுழுத்தி துரியமே சாக்கிராதீதம் தனில் சுக ஆனந்தமே ஆக்கு மறையாதி ஐம்மல பாசமே மேல் #2254 சாக்கிராதீதத்தில் தான் அறும் ஆணவம் சாக்கிராதீதம் பராவத்தை தங்காது ஆக்கு பரோபாதியாம் உபசாந்தத்தை நோக்கு மலம் குணம் நோக்குதல் ஆகுமே மேல் #2255 பெத்தமும் முத்தியும் பேணும் துரியமும் சுத்த அதீதமும் தோன்றாமல் தான் உணும் அத்தன் அருள் என்று அருளால் அறிந்த பின் சித்தமும் இல்லை செயல் இல்லை தானே மேல் #2256 எய்திய பெத்தமும் முத்தமும் என்பன எய்தும் அரன் அருளே விளையாட்டோடு எய்திடு உயிர் சுத்தத்து இடுநெறி என்னவே எய்தும் உயிர் இறை-பால் அறிவு ஆமே மேல் #2257 ஐம்மலத்தாரும் மதித்த சகலத்தர் ஐம்மலத்தாரும் அருவினை பாசத்தார் ஐம்மலத்தார் சுவர்க்க நெறி ஆள்பவர் ஐம்மலத்தார் அரனார்க்கு அறிவோரே மேல் #2258 கருவில் அதீதம் கலப்பிக்கும் மாயை அரிய துரியம் அதில் உண்ணும் ஆசையும் உரிய சுழுமுனை முதல் எட்டும் சூக்கத்து அரிய கனா தூலாம் அ நனவு ஆமே மேல் #2259 ஆணவம் ஆகும் அதீத மேல் மாயையும் பூணும் துரியம் சுழுத்தி பொய் காமியம் பேணும் கனவும் மா மாயை திரோதாயி காணும் நனவில் மல கலப்பு ஆகுமே மேல் #2260 அரன் முதலாக அறிவோன் அதீதத்தன் அரன் முதலாம் மாயை தங்கி சுழுனை கருமம் உணர்ந்து மா மாயை கைக்கொண்டோர் அருளும் அறைவர் சகலத்து உற்றாரே மேல் #2261 உருவுற்று போகமே போக்கியம் துற்று மருவுற்று பூதம் அனாதியான் மன்னி வரும் அ செயல் பற்றி சத்தாதி வைகி கருவுற்றிடும் சீவன் காணும் சகலத்தே மேல் #2262 இருவினை ஒத்திட இன்னருள் சத்தி மருவிட ஞானத்தில் ஆதனம் மன்னி குருவினை கொண்டு அருள் சத்தி முன் கூட்டி பெருமலம் நீங்கி பிறவாமை சுத்தமே மேல் #2263 ஆறாறும் ஆறதின் ஐயைந்து அவத்தையோடு ஈறாம் அதீத துரியத்து இவன் எய்த பேறு ஆன ஐவரும் போம் பிரகாசத்து நீறு ஆர் பரஞ்சிவம் ஆதேயம் ஆகுமே மேல் #2264 தன்னை அறியாது உடலை முன் தான் என்றான் தன்னை முன் கண்டான் துரியம்-தனை கண்டான் உன்னும் துரியமும் ஈசனோடு ஒன்றாக்கால் பின்னையும் வந்து பிறந்திடும் தானே மேல் #2265 சாக்கிரம் தன்னில் அதீதம் தலைப்படில் ஆக்கிய அந்த வயிந்தவ மால் நந்த நோக்கும் பிறப்பு அறு நோன் முத்தி சித்தி ஆம் வாக்கும் மனமும் மருவல் செய்யாவே மேல் #2266 அப்பும் அனலும் அகலத்துளே வரும் அப்பும் அனலும் அகலத்துளே வாரா அப்பும் அனலும் அகலத்துளே ஏது எனில் அப்பும் அனலும் கலந்தது அவ்வாறே மேல் #2267 அறுநான்கு அசுத்தம் அதி சுத்தா சுத்தம் உறும் ஏழு மாயை உடன் ஐந்தே சுத்தம் பெறுமாறு இவை மூன்றும் கண்டத்தால் பேதித்து உறும் மாயை மா மாயை ஆன்மாவினோடே மேல் #2268 மாயை கைத்தாயாக மா மாயை ஈன்றிட ஆய பரசிவன் தந்தையாய் நிற்கவே ஏயும் உயிர் கேவல சகலத்து எய்தி ஆய்தரு சுத்தமும் தான் வந்து அடையுமே மேல் #2269 அஞ்சும் கடந்த அனாதி பரம் தெய்வ நெஞ்சம் அது ஆய நிமலன் பிறப்பு இலி விஞ்சும் உடல் உயிர் வேறுபடுத்திட வஞ்சத்து இருந்த வகை அறிந்தேனே மேல் #2270 சத்தி பராபரம் சாந்தி-தனில் ஆன சத்தி பரானந்தம் தன்னில் சுடர் விந்து சத்திய மாயை தனு சத்தி ஐந்துடன் சத்தி பெறும் உயிர் தான் அங்கத்து ஆறுமே மேல் #2271 ஆறாறுக்கு அப்பால் அறிவார் அறிபவர் ஆறாறுக்கு அப்பால் அருளார் பெறுபவர் ஆறாறுக்கு அப்பால் அறிவாம் அவர்கட்கே ஆறாறுக்கு அப்பால் அரன் இனிது ஆமே மேல் #2272 அஞ்சொடு நான்கும் கடந்து அகமே புக்கு பஞ்சணி காலத்து பள்ளி துயில் நின்ற விஞ்சையர் வேந்தனும் மெல்லியலாளோடு நஞ்சுற நாதி நயம் செய்யுமாறே மேல் #2273 உரிய நனா துரியத்தில் இவன் ஆம் அரிய துரிய நனா ஆதி மூன்றில் பரிய பர துரியத்தில் பரனாம் திரிய வரும் துரியத்தில் சிவமே மேல் #2274 பரமாம் அதீதமே பற்று அற பற்ற பரமாம் அதீதம் பயிலப்பயில பரமாம் அதீதம் பயிலா தபோதனர் பரம் ஆகார் பாசமும் பற்று ஒன்று அறாதே மேல் #2275 ஆயும் பொய் மாயை அகம்புறமாய் நிற்கும் வாயும் மனமும் கடந்த மயக்கு அறின் தூய அறிவு சிவானந்தம் ஆகி போய் வேயும் பொருளாய் விளைந்தது தானே மேல் #2276 துரிய பரியில் இருந்த அ சீவனை பெரிய வியாக்கிரத்து உள்ளே புகவிட்டு நரிகளை ஓட துரத்திய நாதர்க்கு உரிய வினைகள் நின்று ஓலமிட்டு அன்றே மேல் #2277 நின்ற இ சாக்கிர நீள் துரியத்தினின் மன்றனும் அங்கே மணம்செய்ய நின்றிடும் மன்றன் மணம்செய்ய மாயை மறைந்திடும் அன்றே இவனும் அவன் வடிவு ஆமே மேல் #2278 விரிந்திடில் சாக்கிரம் மேவும் விளக்காய் இருந்த இடத்திடை ஈடான மாயை பொருந்தும் துரியம் புரியில் தான் ஆகும் தெரிந்த துரியத்தே தீது அகலாதே மேல் #2279 உன்னை அறியாது உடலை முன் நான் என்றாய் உன்னை அறிந்து துரியத்து உற நின்றாய் தன்னை அறிந்தும் பிறவி தணவாதால் அன்ன வியாத்தன் அமலன் என்று அறிதியே மேல் #2280 கரு வரம்பு ஆகிய காயம் துரியம் இருவரும் கண்டீர் பிறப்பு இறப்பு உற்றார் குருவரம் பெற்றவர் கூடிய பின்னை இருவரும் இன்றி ஒன்று ஆகி நின்றாரே மேல் #2281 அணுவின் துரியத்தில் ஆன நனவும் அணு அசைவின்-கண் ஆன கனவும் அணு அசைவில் பராதீதம் சுழுத்தி பணியில் பரதுரியம் பரம் ஆமே மேல் #2282 பர துரியத்து நனவும் பரந்து விரி சகம் உண்ட கனவு மெய் சாந்தி உரு உறுகின்ற சுழுத்தியும் ஓவ தெரியும் சிவ துரியத்தனும் ஆமே மேல் #2283 பரமாம் நனவின் பின் பாற்சகம் உண்ட திரமார் கனவும் சிறந்த சுழுத்தி உரமாம் உபசாந்தம் உற்றல் துறவே தரனாம் சிவ துரியத்தனும் ஆமே மேல் #2284 சீவன் துரியம் முதலாக சீரான ஆவ சிவன் துரியாந்தம் அவத்தை பத்து ஓவும் பரா நந்தி உண்மைக்குள் வைகியே மேவிய நாலேழ் விடுத்து நின்றானே மேல் #2285 பரம்சிவன் மேலாம் பரமம் பரத்தில் பரம்பரன் மேலாம் பர நனவு ஆக விரிந்த கனா இடர் வீட்டும் சுழுனை உரம்தகு மா நந்தியாம் உண்மை தானே மேல் #2286 சார்வாம் பரசிவம் சத்தி பரநாதம் மேலாய விந்து சதாசிவம் மிக்கு ஓங்கி பாலாய் பிரமன் அரி அமராபதி தேவாம் உருத்திரன் ஈசனாம் காணிலே மேல் #2287 கலப்பு அறியார் கடல் சூழ் உலகு ஏழும் உலப்பு அறியார் உடலோடு உயிர்-தன்னை அலப்பு அறிந்து இங்கு அரசாளகிலாதார் குறிப்பது கோலம் அடலது ஆமே மேல் #2288 பின்னை அறியும் பெருந்தவத்து உண்மைசெய் தன்னை அறியில் தயாபரன் எம் இறை முன்னை அறிவு முடிகின்ற காலமும் என்னை அறியலுற்று இன்புற்றவாறே மேல் #2289 பொன்னை மறைத்தது பொன் அணி பூடணம் பொன்னின் மறைந்தது பொன் அணி பூடணம் தன்னை மறைத்தது தன் கரணங்களாம் தன்னின் மறைந்தது தன் கரணங்களே மேல் #2290 மரத்தை மறைத்தது மா மத யானை மரத்தில் மறைந்தது மா மத யானை பரத்தை மறைத்தது பார் முதல் பூதம் பரத்தில் மறைந்தது பார் முதல் பூதமே மேல் #2291 ஆறாறு அகன்று நம விட்டு அறிவாகி வேறான தானே அகரமாய் மிக்கு ஓங்கி ஈறார் பரையின் இருள் அற்ற தற்பரன் பேறார் சிவாய அடங்கும் பின் முத்தியே மேல் #2292 துரியத்தில் ஓர் ஐந்தும் சொல் அகராதி விரிய பரையின் மிகுநாதம் அந்தம் புரிய பரையின் பராவத்தா போதம் திரிய பரமம் துரியம் தெரியவே மேல் #2293 ஐந்தும் சகலத்து அருளால் புரிவற்று பந்திடும் சுத்த அவத்தை பதைப்பினில் நந்தி பராவத்தை நாட சுடர் முனம் அந்தி இருள் போலும் ஐம்மலம் ஆறுமே மேல் #2294 ஐயைந்தும் எட்டு பகுதியும் மாயையும் பொய் கண்ட மா மாயை தானும் புருடன் கண்டு எய்யும் படியாய் எவற்றுமாய் அன்று ஆகி உய்யும் பராவத்தை உள்ளுதல் சுத்தமே மேல் #2295 நின்றான் அருளும் பரமும் முன் நேயமும் ஒன்றாய் மருவும் உருவும் உபாதியும் சென்றான் எனை விடுத்து ஆங்கில் செல்லாமையும் நன்றான ஞானத்தின் நாத பிரானே மேல் #2296 சாத்திகம் எய்து நனவு என சாற்றும்-கால் வாய்த்த இராசதம் மன்னும் கனவு என்ப ஓய்த்திடும் தாமதம் உற்ற சுழுத்தியாம் மாய்த்திடு நிர்க்குணம் மாசு இல் துரியமே மேல் #2297 பெறு பகிரண்டம் பேதித்த அண்டம் எறி கடல் ஏழின் மணல் அளவு ஆக பொறி ஒளி பொன் அணி என்ன விளங்கி செறியும் அண்டாசன தேவர் பிரானே மேல் #2298 ஆனந்த தத்துவம் அண்டாசனத்தின் மேல் மேனி ஐந்து ஆக வியாத்தம் முப்பத்தாறாய் தான் அந்தம் இல்லாத தத்துவம் ஆனவை ஈனம் இலா அண்டத்து எண் மடங்கு ஆமே மேல் #2299 அஞ்சில் அமுதும் ஓர் ஏழின்-கண் ஆனந்தம் முஞ்சில் ஓங்காரம் ஓர் ஒன்பான் பதினொன்றில் வஞ்சமே நின்று வைத்திடில் காயமாம் கிஞ்சுக செ வாய் கிளிமொழி கேளே மேல் #2300 புருடனுடனே பொருந்திய சித்தம் அருவமொடு ஆறும் அதீத துரியம் விரியும் சுழுத்தியின் மிக்கு உள எட்டும் அரிய பதினொன்றுமாம் அ அவத்தையே மேல் #2301 காட்டும் பதினொன்றும் கைகலந்தால் உடல் நாட்டி அழுத்திடின் நந்தி அல்லால் இல்லை ஆட்டம் செய்யாத அது விதியே நினை ஈட்டும் அது திடம் எண்ணலும் ஆமே மேல் #2302 கேவலம் தன்னின் கலவ சகலத்தின் மேவும் செலவு விட வரு நீக்கத்து பாவும் தனை காண்டல் மூன்றும் படர் அற்ற தீது அறு சாக்கிராதீதத்தில் சுத்தமே மேல் #2303 வெல்லும் அளவில் விடு-மின் வெகுளியை செல்லும் அளவும் செலுத்து-மின் சிந்தையை அல்லும் பகலும் அருளுடன் தூங்கினால் கல்லும் பிளந்து கடுவெளி ஆமே மேல் #2304 ஊமை கிணற்றகத்து உள்ளே உறைவது ஓர் ஆமையின் உள்ளே அழுவைகள் ஐந்து உள வாய்மையின் உள்ளே வழுவாது ஒடுங்குமேல் ஆமையின் மேலும் ஓர் ஆயிரத்து ஆண்டே மேல் #2305 கால் அங்கி நீர் பூ கலந்த ஆகாயம் மால் அங்கி ஈசன் பிரமன் சதாசிவன் மேல் அஞ்சும் ஓடி விரவ வல்லார்கட்கு காலனும் இல்லை கருத்து இல்லை தானே மேல் #2306 ஆன்மாவே மைந்தன் ஆயினான் என்பது தான் மா மறை அறை தன்மை அறிகிலர் ஆன்மாவே மைந்தன் அரனுக்கு இவன் என்றல் ஆன்மாவும் இல்லையா ஐயைந்தும் இல்லையே மேல் #2307 உதயம் அழுங்கல் ஒடுங்கல் இ மூன்றின் கதி சாக்கிரம் கனவு ஆதி சுழுத்தி பதிதரு சேதனன் பற்றாம் துரியத்து அதிசுபன் ஆவன் நந்தான் நந்தியாமே மேல் #2308 எல்லாம் தன்னுள் புக யாவுளும் தான் ஆகி நல்லாம் துரியம் புரிந்த-கால் நல் உயிர் பொல்லாத ஆறா உள் போகாது போதமாய் செல்லா சிவகதி சென்று எய்தும் அன்றே மேல் #2309 காய்ந்த இரும்பு கனலை அகன்றாலும் வாய்ந்த கனல் என வாதனை நின்றால் போல் ஏய்ந்த கரணம் இறந்த துரியத்து தோய்ந்த கரும துரிசு அகலாதே மேல் #2310 ஆன மறையாதியாம் உரு நந்தி வந்து ஏனை அருள்செய் தெரி நனாவத்தையில் ஆன வகையை விடும் அடைத்தாய் விட ஆன மலாதீதம் அ பரம் தானே மேல் #2311 சுத்த அதீதம் சகலத்தில் தோய்வுறில் அத்தன் அருள் நீங்கா ஆங்கணில் தானாக சித்த சுகத்தை தீண்டா சமாதி செய் அத்தனோடு ஒன்றற்கு அருள் முதல் ஆமே மேல் #2312 வேறு செய்தான் இருபாதியின் மெய்த்தொகை வேறு செய்தான் என்னை எங்கணும் விட்டு உய்த்தான் வேறு செய்யா அருள் கேவலத்தே விட்டு வேறு செய்யா அத்தன் மேவி நின்றானே மேல் #2313 கறங்கு ஓலை கொள்ளிவட்டம் கடலில் திரை நிறம் சேர் ததிமத்தின் மலத்தே நின்று அங்கு அறம் காண் சுவர்க்க நரகம் புவி சேர்ந்து இறங்கா உயிர் அருளால் இவை நீங்குமே மேல் #2314 தானே சிவம் ஆன தன்மை தலைப்பட ஆன மலமும் அ பாச பேதமும் மான குணமும் பரான்மா உபாதியும் பானுவின் முன் மதி போல் படராவே மேல் #2315 நெருப்பு உண்டு நீர் உண்டு வாயுவும் உண்டு அங்கு அருக்கனும் சோமனும் அங்கே அமரும் திரு தக்க மாலும் திசைமுகன்-தானும் உருத்திர சோதியும் உள்ளத்து உளாரே மேல் #2316 ஆனைகள் ஐந்தும் அடக்கி அறிவு என்னும் ஞான திரியை கொளுவி அதன் உள்புக்கு கூனை இருள் அற நோக்கும் ஒருவற்கு வானகம் ஏற வழி எளிது ஆமே மேல் #2317 ஆடிய காலில் அசைக்கின்ற வாயுவும் தாடித்து எழுந்த தமருக ஓசையும் பாடி எழுகின்ற வேதாகமங்களும் நாடியின் உள் ஆக நான் கண்டவாறே மேல் #2318 முன்னை அறிவினில் செய்த முது தவம் பின்னை அறிவினை பெற்றால் அறியலாம் தன்னை அறிவது அறிவாம் அஃது அன்றி பின்னை அறிவது பேய் அறிவு ஆகுமே மேல் #2319 செயலற்று இருக்க சிவானந்தம் ஆகும் செயலற்று இருப்பார் சிவயோகம் தேடார் செயலற்று இருப்பார் செகத்தொடும் கூடார் செயலற்று இருப்பார்க்கே செய்தி உண்டாமே மேல் #2320 தான் அவன் ஆகும் சமாதி கைகூடினால் ஆன மலம் அறும் அ பசு தன்மை போம் ஈனம் இல் காயம் இருக்கும் இருநிலத்து ஊனங்கள் எட்டு ஒழித்து ஒன்றுவோர்கட்கே மேல் #2321 தொலையா அரன் அடி தோன்றும் அம் சத்தி தொலையா இருள் ஒளி தோற்ற அணுவும் தொலையா தொழில் ஞானம் தொன்மையில் நண்ணி தொலையாத பெத்த முத்திக்கு இடை தோயுமே மேல் #2322 தோன்றிய பெத்தமும் முத்தியும் சூழ் சத்தி மான்றும் தெருண்டு உயிர் பெறும் மற்று அவை தான் தரு ஞானம் தன் சத்திக்கு சாதனாம் ஊன்றல் இல்லா உள் ஒளிக்கு ஒளி ஆமே மேல் #2323 அறிகின்று இலாதன ஐயேழும் ஒன்றும் அறிகின்ற என்னை அறியாது இருந்தேன் அறிகின்றாய் நீ என்று அருள்செய்தான் நந்தி அறிகின்ற நான் என்று அறிந்து கொண்டேனே மேல் #2324 தான் அவன் ஆகிய ஞான தலைவனை வானவர் ஆதியை மா மணி சோதியை ஈனம் இல் ஞானத்தின் அருள் சத்தியை ஊனமிலாள்-தன்னை ஊனிடை கண்டதே மேல் #2325 ஒளியும் இருளும் பரையும் பரையுள் அளியது எனல் ஆகும் ஆன்மாவை அன்றி அளியும் அருளும் தெருளும் கடந்து தெளிய அருளே சிவானந்தம் ஆமே மேல் #2326 ஆனந்தம் ஆகும் அரன் அருள் சத்தியில் தான் அந்தமாம் உயிர் தானே சமாதி செய் ஊன் அந்தமாய் உணர்வாய் உள் உணர்வுறில் கோன் அந்தம் வாய்க்கும் மகாவாக்கியம் ஆமே மேல் #2327 அறிவிக்க வேண்டாம் அறிவற்று அயர்வோர்க்கும் அறிவிக்க வேண்டாம் அறிவில் செறிவோர்க்கும் அறிவு உற்று அறியாமை எய்தி நிற்போர்க்கே அறிவிக்க தம் அறிவார் அறிவோரே மேல் #2328 சத்தும் அசத்தும் சதசத்தும் தான் கூடி சித்தும் அசித்தும் சிவசித்தாய் நிற்கும் சுத்தம் அசுத்தம் தொடங்கா துரியத்து சுத்தராம் மூன்றுடன் சொல்லற்றவர்களே மேல் #2329 தானே அறியான் அறிவிலோன் தான் அல்லன் தானே அறிவான் அறிவு சதசத்து என்று ஆனால் இரண்டும் அரன் அருளாய் நிற்க தானே அறிந்து சிவத்துடன் தங்குமே மேல் #2330 தத்துவ ஞானம் தலைப்பட்டவர்கட்கே தத்துவ ஞானம் தலைப்படலாய் நிற்கும் தத்துவ ஞானத்து தான் அவன் ஆகவே தத்துவ ஞானம் தந்தான் தொடங்குமே மேல் #2331 தன்னை அறிந்து சிவனுடன் தான் ஆக மன்னும் மலம் குணம் மாளும் பிறப்பு அறும் பின்னது சன்முத்தி சன்மார்க்க பேரொளி நன்னது ஞானத்து முத்திரை நண்ணுமே மேல் #2332 ஞானம்-தன் மேனி கிரியை நடு அங்கம் தானுறும் இச்சை உயிர் ஆக தற்பரன் மேனி கொண்டு ஐங்கருமத்து வித்து ஆதலான் மோனிகள் ஞானத்து முத்திரை பெற்றார்களே மேல் #2333 உயிர்க்கு அறிவு உண்மை உயிர் இச்சை மானம் உயிர்க்கு கிரியை உயிர் மாயை சூக்கம் உயிர்க்கு இவை ஊட்டுவோன் ஊட்டும் அவனே உயிர் செயல் அன்றி அ உள்ளத்து உளானே மேல் #2334 தொழில் இச்சை ஞானங்கள் தொல் சிவ சீவர் கழிவு அற்ற மா மாயை மாயையின் ஆகும் பழி அற்ற காரண காரியம் பாழ்விட்டு அழிவு அற்ற சாந்தாதீதன் சிவன் ஆமே மேல் #2335 இல்லதும் உள்ளதும் யாவையும் தான் ஆகி இல்லதும் உள்ளதுமாய் அன்றாம் அண்ணலை சொல்லது சொல்லிடில் தூராதிதூரம் என்று ஒல்லை உணர்ந்தால் உயிர்க்குயிர் ஆகுமே மேல் #2336 உயிரிச்சை ஊட்டி உழி தரும் சத்தி உயிரிச்சை வாட்டி ஒழித்திடும் ஞானம் உயிரிச்சை ஊட்டி உடன் உறலாலே உயிரிச்சை வாட்டி உயர் பதம் சேருமே மேல் #2337 சேரும் சிவம் ஆனார் ஐம்மலம் தீர்ந்தவர் ஓர் ஒன்று இலார் ஐம்மல இருள் உற்றவர் பாரின் கண் விண்ணர் அகம்புகும் பான்மையர் ஆரும் கண்டு ஓரார் அவை அருள் என்றே மேல் #2338 எய்தினர் செய்யும் இரு மாயா சத்தியின் எய்தினர் செய்யும் இரு ஞான சத்தியின் எய்தினர் செய்யும் இரு ஞால சத்தியின் எய்தினர் செய்யும் இறை அருள் தானே மேல் #2339 திருந்தனர் விட்டார் திருவில் நரகம் திருந்தனர் விட்டார் திருவார் சுவர்க்கம் திருந்தனர் விட்டார் செறி மல கூட்டம் திருந்தனர் விட்டார் சிவமாய் அவமே மேல் #2340 அவமும் சிவமும் அறியார் அறியார் அவமும் சிவமும் அறிவார் அறிவார் அவமும் சிவமும் அருளால் அறிந்தால் அவமும் சிவமும் அவன் அருள் ஆமே மேல் #2341 அருளான சத்தி அனல் வெம்மை போல பொருள் அவனாகத்தான் போதம் புணரும் இருள் ஒளியாய் மீண்டும் மும்மலம் ஆகும் திருவருளால் நந்தி செம்பொருள் ஆமே மேல் #2342 ஆதித்தன் தோன்ற வரும் பதுமாதிகள் பேதித்த அ வினையால் செயல் சேதிப்ப ஆதித்தன்-தன் கதிரால் அவை சேட்டிப்ப பேதித்து பேதியாவாறு அருட்பேதமே மேல் #2343 பேதம் அபேதம் பிறழ் பேதா பேதமும் போதம் புணர் போதம் போதமும் நாதமும் நாதமுடன் நாத நாதாதி நாதமும் ஆதன் அருளின் அருள் இச்சை ஆமே மேல் #2344 மேவிய பொய்க்கரி ஆட்டும் வினை என பாவிய பூதம் கொண்டாட்டி படைப்பாதி பூ இயல் கூட்டத்தால் போதம் புரிந்து அருள் ஆவியை நாட்டும் அரன் அருள் ஆமே மேல் #2345 ஆறாது அகன்று தனையறிந்தான் அவன் ஈறு ஆகி யாவினும் யாவும் தனில் எய்த வேறாய் வெளிபுக்கு வீடுற்றான் அருள் தேறா தெளிவுற்று தீண்ட சிவம் ஆமே மேல் #2346 தீண்டற்கு அரிய திருவடி நேயத்தை மீண்டுற்று அருளால் விதிவழியே சென்று தூண்டி சிவஞான மா வினை தான் ஏறி தாண்டி சிவனுடன் சாரலும் ஆமே மேல் #2347 சார்ந்தவர் சாரணர் சித்தர் சமாதியர் சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர் சார்ந்தவர் நேயம் தலைப்பட்ட ஆனந்தர் சார்ந்தவர் சத்தி அருள் தன்மையாரே மேல் #2348 தான் என்று அவன் என்று இரண்டு என்பர் தத்துவம் தான் என்று அவன் என்று இரண்டு அற்ற தன்மையை தான் என்று இரண்டு உன்னார் கேவலத்து ஆனவர் தான் இன்றி தான் ஆக தத்துவ சுத்தமே மேல் #2349 தன்னினில் தன்னை அறியும் தலைமகன் தன்னினில் தன்னை அறிய தலைப்படும் தன்னினில் தன்னை சார்கிலனாகில் தன்னினில் தன்னையும் சார்தற்கு அரியவே மேல் #2350 அறியகிலேன் என்று அரற்றாதே நீயும் நெறிவழியே சென்று நேர்பட்ட பின்னை இரு சுடர் ஆகி இயற்ற வல்லானும் ஒரு சுடரா வந்து என் உள்ளத்துள் ஆமே மேல் #2351 மண் ஒன்றுதான் பல நல் கலம் ஆயிடும் உள் நின்ற யோனிகட்கு எல்லாம் ஒருவனே கண் ஒன்றுதான் பல காணும் தனை காணா அண்ணலும் இ வண்ணம் ஆகி நின்றானே மேல் #2352 ஓம்புகின்றான் உலகு ஏழையும் உள் நின்று கூம்புகின்றார் குணத்தினொடும் கூறுவர் தேம்புகின்றார் சிவம் சிந்தை செய்யாதவர் கூம்பகில்லார் வந்து கொள்ளலும் ஆமே மேல் #2353 குறி அறியார்கள் குறிகாணமாட்டார் குறி அறியார்கள் தம் கூடல் பெரிது குறி அறியா வகை கூடு-மின் கூடி அறிவு அறியா இருந்து அன்னமும் ஆமே மேல் #2354 ஊனோ உயிரோ உறுகின்றது ஏது இன்பம் வானோர் தலைவி மயக்கத்துற நிற்க தானோ பெரிது அறிவோம் என்னும் மானுடர் தானே பிறப்போடு இறப்பு அறியாரே மேல் #2355 தன்னை அறிய தனக்கு ஒரு கேடு இல்லை தன்னை அறியாமல் தானே கெடுகின்றான் தன்னை அறியும் அறிவை அறிந்த பின் தன்னையே அர்ச்சிக்க தான் இருந்தானே மேல் #2356 அங்கே அடல் பெரும் தேவர் எல்லாம் தொழ சிங்காசனத்தே சிவன் இருந்தான் என்று சங்கு ஆர் வளையும் சிலம்பும் சரேலென பொங்கார் குழலியும் போற்றி என்றாளே மேல் #2357 அறிவு வடிவு என்று அறியாத என்னை அறிவு வடிவு என்று அருள்செய்தான் நந்தி அறிவு வடிவு என்று அருளால் அறிந்தே அறிவு வடிவு என்று அறிந்திருந்தேனே மேல் #2358 அறிவுக்கு அழிவு இல்லை ஆக்கமும் இல்லை அறிவுக்கு அறிவல்லது ஆதாரம் இல்லை அறிவே அறிவை அறிகின்றது என்றிட்டு அறைகின்றன மறையீறுகள் தாமே மேல் #2359 ஆயும் மலரின் அணி மலர் மேல் அது ஆய இதழும் பதினாறும் அங்கு உள தூய அறிவு சிவானந்தம் ஆகி போய் மேய அறிவாய் விளைந்தது தானே மேல் #2360 மன்னி நின்றாரிடை வந்த அருள் மாயத்து முன்னி நின்றானை மொழிந்தேன் முதல்வனும் பொன்னின் வந்தான் ஓர் புகழ் திருமேனியை பின்னி நின்றேன் நீ பெரியை என்றானே மேல் #2361 அறிவு அறிவு ஆக அறிந்து அன்பு செய்-மின் அறிவு அறிவு ஆக அறியும் இ வண்ணம் அறிவு அறிவு ஆக அணிமாதி சித்தி அறிவு அறிவு ஆக அறிந்தனன் நந்தியே மேல் #2362 அறிவு அறிவு என்று அங்கு அரற்றும் உலகம் அறிவு அறியாமை யாரும் அறியார் அறிவு அறியாமை கடந்து அறிவானால் அறிவு அறியாமை அழகியவாறே மேல் #2363 அறிவு அறியாமையை நீவி அவனே பொறிவாய் ஒழிந்து எங்கும் தான் ஆன-போது அறிவாய் அவற்றினுள் தானாய் அறிவின் செறிவு ஆகி நின்றவன் சீவனும் ஆமே மேல் #2364 அறிவுடையார் நெஞ்சு அகல் இடம் ஆவது அறிவுடையார் நெஞ்சு அருந்தவம் ஆவது அறிவுடையார் நெஞ்சொடு ஆதி பிரானும் அறிவுடையார் நெஞ்சத்து அங்கு நின்றானே மேல் #2365 மாயனும் ஆகி மலரோன் இறையுமாய் காய நல் நாட்டு கருமுதல் ஆனவன் சேயன் அணியன் தித்திக்கும் தீம் கரும்பு ஆய அமுதாகி நின்று அண்ணிக்கின்றானே மேல் #2366 என்னை அறிந்திலேன் இத்தனை காலமும் என்னை அறிந்த பின் ஏதும் அறிந்திலேன் என்னை அறிந்திட்டு இருத்தலும் கைவிடாது என்னையிட்டு என்னை உசாவுகின்றானே மேல் #2367 மாய விளக்கு அது நின்று மறைந்திடும் தூய விளக்கு அது நின்று சுடர் விடும் காய விளக்கு அது நின்று கனன்றிடும் சேய விளக்கினை தேடுகின்றேனே மேல் #2368 தேடுகின்றேன் திசை எட்டோடு இரண்டையும் நாடுகின்றேன் நலமே உடையான் அடி பாடுகின்றேன் பரமே துணையாம் என கூடுகின்றேன் குறையா மனத்தாலே மேல் #2369 முன்னை முதல் விளையாட்டத்து முன்வந்து ஓர் பின்னை பெருமலம் வந்தவர் பேர்த்திட்டு தன்னை தெரிந்து தன் பண்டை தலைவன் தாள் மன்னி சிவமாக வாரா பிறப்பே மேல் #2370 வேதத்தின் அந்தமும் மிக்க சித்தாந்தமும் நாதத்தின் அந்தமும் நல் போத அந்தமும் ஓத தகும் எட்டு யோகாந்த அந்தமும் ஆதி கலாந்தமும் ஆறு அந்தம் ஆமே மேல் #2371 அந்தம் ஓர் ஆறும் அறிவார் அதி சுத்தர் அந்தம் ஓர் ஆறும் அறிவார் அமலத்தர் அந்தம் ஓர் ஆறும் அறியார் அவர்-தமக்கு அந்தமோடு ஆதி அறிய ஒண்ணாதே மேல் #2372 தான் ஆன வேதாந்தம் தான் என்னும் சித்தாந்தம் ஆனா துரியத்து அணுவன்-தனை கண்டு தேனார் பராபரம் சேர் சிவயோகமாய் ஆனா மலம் அற்று அரும் சித்தியாலே மேல் #2373 நித்தம் பரனோடு உயிருற்று நீள் மனம் சத்தம் முதல் ஐந்தும் தத்துவத்தால் நீங்கி சுத்தம் அசுத்தம் தொடரா வகை நினைந்து அத்தன் பரன்-பால் அடைதல் சித்தாந்தமே மேல் #2374 மேவும் பிரமனே விண்டு உருத்திரன் மேவும் செய் ஈசன் சதாசிவன் மிக்கு அப்பால் மேவும் பரவிந்து நாதம் விடா ஆறாறு ஓவும் பொழுது அணு ஒன்று உளதாமே மேல் #2375 உள்ள உயிர் ஆறாறு அது ஆகும் உபாதியை தெள்ளி அகன்று நாதாந்தத்தை செற்றுமேல் உள்ள இருள் நீங்க ஓர் உணர்வு ஆகுமேல் எள்ளலின் நாதாந்தத்து எய்திடும் போதமே மேல் #2376 தேடும் இயம நியமாதி சென்று அகன்று ஊடும் சமாதியில் உற்று படர் சிவன் பாடுற சீவன் பரமாக பற்று அற கூடும் உபசாந்தம் யோகாந்த கொள்கையே மேல் #2377 கொள்கையில் ஆன கலாந்தம் குறிக்கொள்ளில் விள்கையில் ஆன நிவிர்த்தாதி மேதாதிக்கு உள்ளனவாம் விந்து உள்ளே ஒடுங்கலும் தெள்ளி அதனை தெளிதலும் ஆமே மேல் #2378 தெளியும் இவை அன்றி தேர் ஐங்கலை வேறு ஒளியுள் அமைத்து உள்ளது ஓர வல்லார்கட்கு அளியவன் ஆகிய மந்திரம் தந்திரம் தெளிவு உபதேச ஞானத்தொடு ஐந்தாமே மேல் #2379 ஆகும் அனாதி கலை ஆகம வேதம் ஆகும் அ தந்திரம் அ நூல் வழிநிற்றல் ஆகும் அனாதி உடல் அல்லா மந்திரம் ஆகும் சிவபோதகம் உபதேசமே மேல் #2380 தேசார் சிவம் ஆகும் தன் ஞானத்தின் கலை ஆசார நேயம் அறையும் கலாந்தத்து பேசா உரை உணர்வு அற்ற பெருந்தகை வாசா மகோசர மா நந்தி தானே மேல் #2381 தான் அவன் ஆகும் சமாதி தலைப்படில் ஆன கலாந்த நாதாந்த யோகாந்தமும் ஏனைய போதாந்தம் சித்தாந்தம் ஆனது ஞானம் என ஞேய ஞாதுரு ஆகுமே மேல் #2382 ஆறு அந்தமும் சென்று அடங்கும் அ நேயத்தே ஆறு அந்த ஞேயம் அடங்கிடு ஞாதுரு கூறிய ஞான குறியுடன் வீடவே தேறிய மோனம் சிவானந்த உண்மையே மேல் #2383 உண்மை கலை ஆறு ஓர் ஐந்தான் அடங்கிடும் உண்மை கலாந்தம் இரண்டு ஐந்தோடு ஏழ் அந்தம் உண்மை கலை ஒன்றில் ஈறு ஆய நாதாந்தத்து உண்மை கலை சொல்ல ஓர் அந்தம் ஆமே மேல் #2384 ஆவுடையாளை அரன் வந்து கொண்ட பின் தேவுடையான் எங்கள் சீர் நந்தி தாள் தந்து வீவு அற வேதாந்த சித்தாந்த மேன்மையை கூவி அருளிய கோனை கருதுமே மேல் #2385 கருதும் அவர்-தம் கருத்தினுக்கு ஒப்ப அரன் உரைசெய்து அருள் ஆகமம்-தன்னில் வரு சமய புற மாயை மா மாயை உருவிய வேதாந்த சித்தாந்த உண்மையே மேல் #2386 வேதாந்தம் சித்தாந்தம் வேறு இலா முத்திரை போதாந்தம் ஞானம் யோகாந்தம் பொது ஞேய நாதாந்தம் ஆனந்தம் சீரோதயம் ஆகும் மூதாந்த முத்திரை மோனத்து மூழ்கவே மேல் #2387 வேதாந்தம் தன்னில் உபாதி மேல் ஏழ் விட நாதாந்த பாசம் விடு நல்ல தொம்பதம் மீதாந்த காரணோபாதி ஏழ் மெய்ப்பரன் போதாந்த தற்பதம் போமசி என்பவே மேல் #2388 அண்டங்கள் ஏழும் கடந்து அகன்று அப்பாலும் உண்டு என்ற பேரொளிக்கு உள்ளாம் உள ஒளி பண்டுறு நின்ற பராசத்தி என்னவே கொண்டவன் அன்றி நின்றான் தங்கள் கோவே மேல் #2389 கோ உணர்த்தும் சத்தியாலே குறிவைத்து தே உணர்த்தும் கருமம் செய்தி செய்யவே பா அனைத்தும் படைத்து அர்ச்சனை பாரிப்ப ஓ அனைத்து உண்டு ஒழியாத ஒருவனே மேல் #2390 ஒருவனை உன்னார் உயிர்-தனை உன்னார் இருவினை உன்னார் இருமாயை உன்னார் ஒருவனுமே உள் உணர்த்தி நின்று ஊட்டி அருவனும் ஆகிய ஆதரத்தானே மேல் #2391 அரன் அன்பர் தானம் அது ஆகி சிவத்து வரும் அவை சத்திகள் முன்னா வகுத்திட்டு உரனுறு சந்நிதி சேட்டிப்ப என்றும் திரனுறு தோயா சிவாநந்தி ஆமே மேல் #2392 வேதாந்த தொம்பதம் மேவும் பசு என்ப நாதாந்த பாசம் விட நின்ற நன் பதி போதாந்த தற்பதம் போய் இரண்டு ஐக்கியம் சாதாரணம் சிவசாயுச்சியம் ஆமே மேல் #2393 சிவம் ஆதல் வேதாந்த சித்தாந்தம் ஆகும் அவம் அவம் ஆகும் அவ்வவ் இரண்டும் சிவம் ஆம் சதாசிவன் செய்து ஒன்றான் ஆனால் நவம் ஆன வேதாந்த ஞான சித்தாந்தமே மேல் #2394 சித்தாந்த தேசீவன் முத்தி சித்தித்தலால் சித்தாந்தத்தே நிற்போர் முத்தி சித்தித்தவர் சித்தாந்த வேதாந்தம் செம்பொருள் ஆதலால் சித்தாந்த வேதாந்தம் காட்டும் சிவனையே மேல் #2395 சிவனை பரமனுள் சீவனுள் காட்டும் அவம் அற்ற வேதாந்த சித்தாந்தம் ஆனான் நவம் உற்று அவத்தையில் ஞானம் சிவமாம் தவம் மிக்கு உணர்ந்தவர் தத்துவத்தாரே மேல் #2396 தத்துவம் ஆகும் சகள அகளங்கள் தத்துவம் ஆம் விந்து நாதம் சதாசிவம் தத்துவம் ஆகும் சீவன்-தன் தற்பரம் தத்துவம் ஆம் சிவசாயுச்சியமே மேல் #2397 வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல் ஓதும் பொதுவும் சிறப்பும் என்று உள்ளன நாதன் உரை அவை நாடில் இரண்டு அந்தம் பேதம் அது என்பர் பெரியோர்க்கு அபேதமே மேல் #2398 பரானந்தி மன்னும் சிவானந்தம் எல்லாம் பரானந்தம் மேல் மூன்றும் பாழுறு ஆனந்தம் விரா முத்திரானந்தம் மெய் நடன ஆனந்தம் பொராநின்ற உள்ளமே பூரிப்பி ஆமே மேல் #2399 ஆகும் கலாந்தம் இரண்டு அந்த நாதாந்தம் ஆகும் பொழுதில் கலை ஐந்தாம் ஆதலில் ஆகும் அரனே பஞ்சாந்தகன் ஆம் என்ன ஆகும் மறை ஆகமம் மொழிந்தான் அன்றே மேல் #2400 அன்று ஆகும் என்னாது ஐவகை அந்தம்-தன்னை ஒன்று ஆன வேதாந்த சித்தாந்தம் உள்ளிட்டு நின்றால் யோகாந்தம் நேர்படும் நேர்பட்டால் மன்று ஆடி பாதம் மருவலும் ஆமே மேல் #2401 அனாதி சீவன் ஐம்மலம் அற்ற பாலாய் அனாதி அடக்கி தனை கண்டு அரனாய் தனாதி மலம் கெட தத்துவாதீதம் வினாவு நீர் பால் ஆதல் வேதாந்த உண்மையே மேல் #2402 உயிரை பரனை உயர் சிவன்-தன்னை அயர்வு அற்று அறி தொந்த தசி அதனால் செயலற்று அறிவாகியும் சென்று அடங்கி அயர்வு அற்ற வேதாந்த சித்தாந்தம் ஆமே மேல் #2403 மன்னிய சோகமாம் மாமறையாளர்-தம் சென்னியது ஆன சிவயோகமாம் ஈது என்ன அன்னது சித்தாந்த மா மறையாய் பொருள் துன்னிய ஆகம நூல் என தோன்றுமே மேல் #2404 முதல் ஆகும் வேத முழுது ஆகமம் அ பதியான ஈசன் பகர்ந்த இரண்டு முதிது ஆன வேத முறை முறையால் அலமந்து அதிகாதி வேதாந்த சித்தாந்தம் ஆகவே மேல் #2405 அறிவு அறிவு என்ற அறிவும் அனாதி அறிவுக்கு அறிவாம் பதியும் அனாதி அறிவினை கட்டிய பாசம் அனாதி அறிவு பதியில் பிறப்பு அறும் தானே மேல் #2406 பசு பல கோடி பிரமன் முதலாய் பசுக்களை கட்டிய பாசம் மூன்று உண்டு பசு தன்மை நீக்கி அ பாசம் அறுத்தால் பசுக்கள் தலைவனை பற்றி விடாவே மேல் #2407 கிடக்கின்றவாறே கிளர் பயன் மூன்று நடக்கின்ற ஞானத்தை நாள்-தோறும் நோக்கி தொடக்கு ஒன்றும் இன்றி தொழு-மின் தொழுதால் குட குன்றில் இட்ட விளக்கு அதுவாமே மேல் #2408 பாசம் செய்தானை படர் சடை நந்தியை நேசம் செய்து ஆங்கே நினைப்பவர் நினைத்தலும் கூசம் செய்து உன்னி குறிக்கொள்வது எ வண்ணம் வாசம்செய் பாசத்துள் வைக்கின்றவாறே மேல் #2409 விட்ட விடம் ஏறாவாறு போல் வேறாகி விட்ட பசு பாச மெய் கண்டோன் மேவுறான் கட்டிய கேவலம் காணும் சகலத்தை சுட்டு நனவில் அதீதத்துள் தோன்றுமே மேல் #2410 நாடும் பதியுடன் நல் பசு பாசமும் நீடுமா நித்தன் நிலை அறிவார் இல்லை நீடிய நித்தம் பசு பாச நீக்கமும் நாடிய சைவர்க்கு நந்தி அளித்ததே மேல் #2411 ஆய பதிதான் அருள் சிவலிங்கமாம் ஆய பசுவும் அடலேறு என நிற்கும் ஆய பலிபீடம் ஆகும் நல் பாசம் ஆம் ஆய அரன் நிலை ஆய்ந்து கொள்வார்கட்கே மேல் #2412 பதி பசு பாசம் பயில்வியா நித்தம் பதி பசு பாசம் பகர்வோர்க்கு ஆறாக்கி பதி பசு பாசத்தை பற்று அற நீக்கும் பதி பசு பாசம் பயில நிலாவே மேல் #2413 பதியும் பசுவொடு பாசமும் மேலை கதியும் பசு பாச நீக்கமும் காட்டி மதி தந்த ஆனந்த மா நந்தி காணும் துதி தந்து வைத்தனன் சுத்த சைவத்திலே மேல் #2414 அறிந்த அணு மூன்றுமே யாங்கணும் ஆகும் அறிந்த அணு மூன்றுமே யாங்கணும் ஆக அறிந்த அனாதி வியாத்தனும் ஆவன் அறிந்த பதி படைப்பான் அங்கு அவற்றையே மேல் #2415 படைப்பு ஆதி ஆவது பரம்சிவம் சத்தி இடைப்பால் உயிர்கட்கு அடைத்து இவை தூங்கல் படைப்பாதி சூக்கத்தை தற்பரம் செய்ய படைப்பாதி தூய மலம் அ பரத்திலே மேல் #2416 ஆகிய சூக்கத்தை அ விந்து நாதமும் ஆகிய சத்தி சிவபர மேல் ஐந்தால் ஆகிய சூக்கத்தில் ஐங்கருமம் செய்வோன் ஆகிய தூய ஈசானனும் ஆமே மேல் #2417 மேவும் பரசிவம் மேல் சத்தி நாதமும் மேவும் பரவிந்து ஐம்முகன் வேறு ஈசன் மேவும் உருத்திரன் மால் வேதா மேதினி ஆகும்படி படைப்போன் அரன் ஆமே மேல் #2418 படைப்பும் அளிப்பும் பயில் இளைப்பாற்றும் துடைப்பு மறைப்பு முன் தோன்ற அருளும் சடத்தை விடுத்த அருளும் சகலத்து அடைத்த அனாதியை ஐந்து எனல் ஆமே மேல் #2419 ஆறாறு குண்டலி-தன்னின் அகத்து இட்டு வேறு ஆகும் மாயையின் முப்பான் மிகுத்திட்டு அங்கு ஈறு ஆம் கருவி இவற்றால் வகுத்திட்டு வேறு ஆம் பதி பசு பாசம் வீடு ஆகுமே மேல் #2420 வீட்கும் பதி பசு பாசமும் மீதுற ஆட்கும் இருவினை ஆங்கு அவற்றால் உணர்ந்து ஆட்கும் நரக சுவர்க்கத்தில் தானிட்டு நாட்குற நான் தங்கு நல் பாசம் நண்ணுமே மேல் #2421 நண்ணிய பாசத்தில் நான் எனல் ஆணவம் பண்ணிய மாயையில் ஊட்டல் பரிந்தனன் கண்ணிய சேதனன் கண்வந்த பேரருள் அண்ணல் அடி சேர் உபாயம் அது ஆகுமே மேல் #2422 ஆகும் உபாயமே அன்றி அழுக்கு அற்று மோகம் அற சுத்தன் ஆதற்கு மூலமே ஆகும் அறுவை அழுக்கு ஏற்றி ஏற்றல் போல் ஆகுவது எல்லாம் அருள் பாசம் ஆகுமே மேல் #2423 பாசம் பயில் உயிர் தானே பர முதல் பாசம் பயில் உயிர் தானே பசு என்ப பாசம் பயில பதி பரம் ஆதலால் பாசம் பயில பதி பசு ஆகுமே மேல் #2424 அத்தத்தில் உத்தரம் கேட்ட அருந்தவர் அத்தத்தில் உத்தரம் ஆகும் அருள் மேனி அத்தத்தினாலே அணைய பிடித்தலும் அத்தத்தில் தம்மை அடைந்து நின்றாரே மேல் #2425 காலும் தலையும் அறியார் கலதிகள் கால் அந்த சத்தி அருள் என்பர் காரணம் பால் ஒன்று ஞானமே பண்பார் தலை உயிர் கால் அந்த ஞானத்தை காட்ட வீடு ஆகுமே மேல் #2426 தலை அடி ஆவது அறியார் காயத்தில் தலை அடி உச்சியில் உள்ளது மூலம் தலை அடி ஆன அறிவை அறிந்தோர் தலை அடி ஆகவே தான் இருந்தாரே மேல் #2427 நின்றான் நிலம் முழுது அண்டமும் மேலுற வன் தாள் அசுரர் அமரரும் உய்ந்திட பின் தான் உலகம் படைத்தவன் பேர் நந்தி தன் தாள் இணை என் தலை மிசை ஆனதே மேல் #2428 சிந்தையின் உள்ளே எந்தை திருவடி சிந்தையும் எந்தை திருவடி கீழ் அது எந்தையும் என்னை அறியகிலான் ஆகில் எந்தையை யானும் அறியகிலேனே மேல் #2429 பன்னாத பார் ஒளிக்கு அப்புறத்து அப்பால் என் நாயகனார் இசைந்து அங்கு இருந்திடு இடம் உன்னா ஒளியும் உரைசெய்யா மந்திரம் சொன்னான் கழலிணை சூடி நின்றேனே மேல் #2430 பதியது தோற்றும் பதமது வைம்-மின் மதியது செய்து மலர் பதம் ஓதும் நதி பொதியும் சடை நாரி ஓர் பாகன் கதி செயும் காலங்கள் கண்டு கொளீரே மேல் #2431 தரித்து நின்றான் அடி தன்னிட நெஞ்சில் தரித்து நின்றான் அமராபதி நாதன் கரித்து நின்றான் கருதாதவர் சிந்தை பரித்து நின்றான் அ பரிபாகத்தானே மேல் #2432 ஒன்று உண்டு தாமரை ஒண் மலர் மூன்று உள தன் தாதை தாளும் இரண்டு உள காயத்துள் நன்றாக காய்ச்சி பதம் செய வல்லார்கட்கு இன்றே சென்று ஈசனை எய்தலும் ஆமே மேல் #2433 கால் கொண்டு என் சென்னியில் கட்டறக்கட்டற மால் கொண்ட நெஞ்சின் மயக்கு இற்று துயக்கு அற பால் கொண்ட என்னை பரன் கொள்ள நாடினான் மேல் கொண்டு என் செம்மை விளம்ப ஒண்ணாதே மேல் #2434 பெற்ற புதல்வர் போல் பேணிய நாற்றமும் குற்றமும் கண்டு குணம் குறை செய்ய ஓர் பற்றைய ஈசன் உயிரது பான்மைக்கு செற்றம் இலா செய்கைக்கு எய்தின செய்யுமே மேல் #2435 மூன்று உள குற்றம் முழுது நலிவன மான்று இருள் தூங்கி மயங்கி கிடந்தன மூன்றினை நீங்கினர் நீக்கினர் நீங்காதார் மூன்றினுள் பட்டு முடிகின்றவாறே மேல் #2436 காமம் வெகுளி மயக்கம் இவை கடிந்து ஏமம் பிடித்து இருந்தேனுக்கு எறி மணி ஓம் எனும் ஓசையின் உள்ளே உறைவது ஓர் தாமம் அதனை தலைப்பட்டவாறே மேல் #2437 தோன்றியது தொம்பதம் தற்பதம் சூழ்தர ஏன்ற அசிபதம் இ மூன்றோடு எய்தினோன் ஆன்ற பராபரம் ஆகும் பிறப்பு அற ஏன்றனன் மாள சிவமாய் இருக்குமே மேல் #2438 போதம்-தனை உன்னி பூதாதி பேதமும் ஓதும் கருவி தொண்ணூறு உடன் ஓர் ஆறு பேதமும் நாதாந்த பெற்றியில் கைவிட்டு வேதம் சொல் தொம்பதம் ஆகும் தன் மெய்ம்மையே மேல் #2439 தற்பதம் என்றும் தொம்பதம் தான் என்றும் நிற்ப தசியத்துள் நேரிழையாள் பதம் சொல் பதத்தாலும் தொடர ஒண்ணா சிவன் கற்பனை இன்றி கலந்து நின்றானே மேல் #2440 அணுவும் பரமும் அசிபதத்து ஏய்ந்து கணு ஒன்று இலாத சிவமும் கலந்தால் இணை அறு பால் தேன் அமுது என இன்ப துணை அதுவாய் உரை அற்றிட தோன்றுமே மேல் #2441 தொம்பதம் தற்பதம் தோன்றும் அசிபதம் நம்பிய சீவன் பரன் சிவனாய் நிற்கும் அம்பத மேலை சொரூபமா வாக்கியம் செம்பொருள் ஆண்டு அருள் சீர் நந்தி தானே மேல் #2442 ஐம்பது அறியாதவரும் அவர் சிலர் உம்பனை நாடி உரை முப்பதத்து இடை செம்பரம் ஆகிய வாசி செலுத்திட தம் பர யோகமாய் தானவன் ஆகுமே மேல் #2443 நந்தி அறிவும் நழுவில் அதீதமாம் இந்தியம் சத்து ஆதி விட வியன் ஆகும் நந்திய மூன்று இரண்டு ஒன்று நலம் ஐந்தும் நந்தி நனவாதி மூட்டும் அனாதியே மேல் #2444 பர துரியத்து நனவு படி உண்ட விரிவில் கனவும் இதன் உபசாந்தத்து உரிய சுழுனையும் ஓவும் சிவன்-பால் அரிய துரியம் அசி பதம் ஆமே மேல் #2445 தோன்றி என் உள்ளே சுழன்று எழுகின்றது ஓர் மூன்று படி மண்டலத்து முதல்வனை ஏன்று எய்தி இன்புற்று இருந்தே இளங்கொடி நான்று நலம் செய் நலம் தருமாறே மேல் #2446 மன்று நிறைந்தது மா பரம் ஆயது நின்று நிறைந்தது நேர்தரு நந்தியும் கன்று நினைந்து எழு தாய் என வந்த பின் குன்று நிறைந்த குணவிளக்கு ஆமே மேல் #2447 ஆறாறு தத்துவத்து அப்புறத்து அ பரம் கூறா உபதேசம் கூறில் சிவபரம் வேறாய் வெளிப்பட்ட வேத பகவனார் பேறாக ஆனந்தம் பேணும் பெருகவே மேல் #2448 பற்று அற பற்றில் பரம்பதி ஆவது பற்று அற பற்றில் பரன் அறிவே பரம் பற்று அற பற்றினில் பற்ற வல்லார்க்கே பற்று அற பற்றில் பரம்பரம் ஆமே மேல் #2449 பரம்பரம் ஆன பதி பாசம் பற்றா பரம்பரம் ஆகும் பரம்சிவம் மேவ பரம்பரம் ஆன பரசிவானந்தம் பரம்பரம் ஆக படைப்பது அறிவே மேல் #2450 நனவில் கலாதியாம் நால் ஒன்று அகன்று தனியுற்ற கேவலம் தன்னில் தான் ஆகி நினைவுற்று அகன்ற அதீதத்துள் நேயம் தனை உற்றிட தானே தற்பரம் ஆமே மேல் #2451 தன் கண்ட தூயமும் தன்னில் விலாசமும் பின் காணும் தூடணம் தானும் பிறழ்வுற்று தற்பரன் கால பரமும் கலந்து அற்ற நற்பராதீதமும் நாடு அகராதியே மேல் #2452 அதீதத்துள் ஆகி அகன்றவன் நந்தி அதீதத்துள் ஆகி அறிவிலோன் ஆன்மா மதி பெற்று இருள் விட்ட மன் உயிர் ஒன்றாம் பதியில் பதியும் பரவுயிர் தானே மேல் #2453 ஆதியும் அந்தமும் இல்லா அரும் பதி சோதி பரஞ்சுடர் தோன்ற தோன்றாமையின் நீதி அதாய் நிற்கும் நீடிய அ பர போதம் உணர்ந்தவர் புண்ணியத்தோரே மேல் #2454 துரியம் கடந்து துரியா தீதத்தே அரிய வியோகம் கொண்டு அம்பலத்து ஆடும் பெரிய பிரானை பிரணவ கூபத்தே துரிய வல்லார்க்கு துரிசு இல்லை தானே மேல் #2455 செம்மை முன் நிற்ப சுவேதம் திரிவ போல் அ மெய்ப்பரத்தோடு அணுவன் உள் ஆயிட பொய்ம்மை சகம் உண்ட போத வெறும் பாழில் செம்மை சிவமேரு சேர் கொடி ஆகுமே மேல் #2456 வைச்ச கலாதி வரு தத்துவம் கெட வெச்ச இரு மாயை வேறாக வேர் அறுத்து உச்ச பரசிவமாம் உண்மை ஒன்றவே அச்சம் அறுத்து என்னை ஆண்டனன் நந்தியே மேல் #2457 என்னை அறிய இசைவித்த என் நந்தி என்னை அறிந்து அறியாத இடத்து உய்த்து பின்னை ஒளியில் சொரூபம் புறப்பட்டு தன்னை அளித்தான் தற்பரம் ஆகவே மேல் #2458 பரந்தும் சுருங்கியும் பார் புனல் வாயு நிரந்த வளியொடு ஞாயிறு திங்கள் அரந்த அரன்நெறி ஆயது ஆகி தரந்த விசும்பு ஒன்று தாங்கி நின்றானே மேல் #2459 சத்தின் நிலையினில் தான் ஆன சத்தியும் தற்பரையாய் நிற்கும் தான் ஆம் பரற்கு உடல் உய்த்தகும் இச்சையில் ஞான ஆதி பேதமாய் நித்த நடத்தும் நடிக்கும் மா நேயத்தே மேல் #2460 மேலொடு கீழ்ப்பக்கம் மெய் வாய் கண் நாசிகள் பாலிய விந்து பரையுள் பரையாக கோலிய நான்கு அவை ஞானம் கொணர் விந்து சீலம் இலா அணு செய்தி அது ஆமே மேல் #2461 வேறாம் அதன் தன்மை போலும் இ காயத்தில் ஆறாம் உபாதி அனைத்து ஆகும் தத்துவம் பேறாம் பர ஒளி தூண்டும் பிரகாசமாய் ஊறா உயிர்த்து உண்டு உறங்கிடும் மாயையே மேல் #2462 தற்பரம் மன்னும் தனிமுதல் பேரொளி சிற்பரம் தானே செகம் உண்ணும் போதமும் தொல் பதம் தீர் பாழில் சுந்தர சோதி புக்கு அப்புறம் அற்றது இங்கு ஒப்பு இல்லை தானே மேல் #2463 பண்டை மறைகள் பரவான் உடல் என்னும் துண்ட மதியோன் துரியாதீதம் தன்னை கண்டு பரனும் அ காரணோபாதிக்கே மிண்டின் அவன் சுத்தன் ஆகான் வினவிலே மேல் #2464 வெளி கால் கனல் அப்பு மேவும் மண் நின்ற தளி ஆகிய தற்பரம் காண் அவன் தான் வெளி கால் கனல் அப்பு மேவும் மண் நின்ற வெளி ஆய சத்தி அவன் வடிவாமே மேல் #2465 மேருவினோடே விரிகதிர் மண்டலம் ஆர நினையும் அருந்தவ யோகிக்கு சீர் ஆர் தவம் செய்யில் சிவன் அருள் தான் ஆகும் பேரவும் வேண்டாம் பிறிது இல்லை தானே மேல் #2466 நனவாதி மூன்றினில் சீவ துரியம் தனதாதி மூன்றினில் பர துரியம் தான் நனவாதி மூன்றினில் சிவ துரியம் ஆம் இனதாகும் தொந்த தசி பதத்து ஈடே மேல் #2467 தானா நனவில் துரியம் தன் தொம்பதம் தான் ஆம் துரிய நனவாதி தான் மூன்றில் ஆனா பரபதம் மற்றது அருநனா வானான மேல் மூன்றும் துரியம் அணுகுமே மேல் #2468 அணுவின் துரியத்து நான்கும் அது ஆகி பணியும் பரதுரியம் பயில் நான்கும் தணிவில் பரம் ஆகி சார் மு துரிய கணுவில் இ நான்கும் கலந்த ஈரைந்தே மேல் #2469 ஈரைந்து அவத்தை இசை மு துரியத்துள் நேர் அந்தம் ஆக நெறிவழியே சென்று பார் அந்தமான பராபரத்து அயிக்கியத்து ஓர் அந்தமாம் இரு பாதியை சேர்த்திடே மேல் #2470 தொட்டே இரு-மின் துரிய நிலத்தினை எட்டாது எனின் நின்று எட்டும் இறைவனை பட்டாங்கு அறிந்திடில் பல் நா உதடுகள் தட்டாது ஒழிவது ஓர் தத்துவம் தானே மேல் #2471 அறிவாய் அசத்து என்னும் ஆறாறு அகன்று செறிவான மாயை சிதைத்து அருளாலே பிரியாத பேரருள் ஆயிடும் பெற்றி நெறியான அன்பர் நிலை அறிந்தாரே மேல் #2472 நனவின் நனவாதி நாலாம் துரியம் தனது உயிர் தொம்பதம் ஆமாறு போல வினை அறு சீவன் நனவாதி ஆகத்து அனைய பர துரியம் தற்பதமே மேல் #2473 தொம்பதம் தற்பதம் சொல் மு துரியம் போல் நம்பிய மூன்று ஆம் துரியத்து நல் தாமம் அம்புவி உன்னா அதி சூக்கம் அப்பாலை செம்பொருள் ஆண்டருள் சீர் நந்தி தானே மேல் #2474 சீவன் தன் முத்தி அதீதம் பரமுத்தி ஓ உபசாந்தம் சிவமுத்தி ஆனந்தம் மூவயின் முச்சொரூப முத்தி முப்பாலதாய் ஓவுறு தாரத்தில் உள்ளும் நாதாந்தமே மேல் #2475 ஆவது அறியார் உயிர் பிறப்பால் உறும் ஆவது அறியும் உயிர் அருள் பால் உறும் ஆவது ஒன்று இல்லை அகம் புறத்து என்று அகன்று ஓவு சிவனுடன் ஒன்று தன் முத்தியே மேல் #2476 சிவம் ஆகி மும்மல முக்குணம் செற்று தவம் ஆன மும்முத்தி தத்துவத்து அயிக்கியத் துவமாகிய நெறி சோகம் என்போர்க்கு சிவம் ஆம் அமலன் சிறந்தனன் தானே மேல் #2477 சித்தியும் முத்தியும் திண் சிவம் ஆகிய சுத்தியும் முத்தீ தொலைக்கும் சுகானந்த சத்தியும் மேலை சமாதியும் ஆயிடும் பெத்தம் அறுத்த பெரும் பெருமானே மேல் #2478 ஏறியவாறே மலம் ஐந்து இடை அடைத்து ஆறிய ஞான சிவோகம் அடைந்திட்டு வேறும் என முச்சொரூபத்து வீடுற்று அங்கு ஈறு அதில் பண்டை பரன் உண்மை செய்யுமே மேல் #2479 மூன்று உள மாளிகை மூவர் இருப்பிடம் மூன்றினில் முப்பத்தாறும் உதிப்பு உள மூன்றினின் உள்ளே முளைத்து எழும் சோதியை காண்டலும் காய கணக்கு அற்றவாறே மேல் #2480 உலகம் புடைபெயர்ந்து ஊழியும் போன நிலவு சுடர் ஒளி மூன்றும் ஒன்று ஆய பலவும் பரிசொடு பான்மையுள் ஈசன் அளவும் பெருமையும் ஆர் அறிவாரே மேல் #2481 பெருவாய் முதல் எண்ணும் பேதமே பேதித்து அருவாய் உருவாய் அருவுரு ஆகி குருவாய் வரும் சத்தி கோன் உயிர் பன்மை உருவாய் உடன் இருந்து ஒன்றாய் அன்று ஆமே மேல் #2482 மணி ஒளி சோபை இலக்கணம் வாய்த்து மணி எனலாய் நின்றவாறு அது போல தணி முச்சொருபாதி சத்தியாதி சார பணிவித்த பேர் நந்தி பாதம் பற்றாயே மேல் #2483 கல் ஒளி மா நிறம் சோபை கதிர் தட்ட நல்ல மணி ஒன்றின் ஆடி ஒண் முப்பதம் சொல் அறு முப்பாழில் சொல் அறு பேருரைத்து அல் அறு முத்திராந்தத்து அனுபூதியே மேல் #2484 உடந்த செந்தாமரை உள்ளுறு சோதி நடந்த செந்தாமரை நாதம் தகைந்தால் அடைந்த பயோதரி அட்டி அடைத்து அ இடம் தரு வாசலை மேல் திறவீரே மேல் #2485 இடன் ஒரு மூன்றில் இயைந்த ஒருவன் கடனுறும் அ உரு வேறு என காணும் திடம் அது போல சிவபர சீவர் உடன் உறை பேதமும் ஒன்று எனலாமே மேல் #2486 ஒளியை ஒளிசெய்து ஓம் என்று எழுப்பி வளியை வளிசெய்து வாய்த்திட வாங்கி வெளியை வெளிசெய்து மேல் எழவைத்து தெளிய தெளியும் சிவபதம் தானே மேல் #2487 முக்கரணங்களின் மூர்ச்சை தீர்த்து ஆவது அ கைக்காரணம் என்ன தந்தனன் காண் நந்தி மிக்க மனோன்மணி வேறே தனித்து ஏக ஒக்கும் அது உன்மனி ஓது உள் சமாதியே மேல் #2488 தற்பதம் தொம்பதம் தான் ஆம் அசிபதம் தொற்பதம் மூன்றும் துரியத்து தோற்றவே நிற்பது உயிர் பரன் நிகழ் சிவமும் மூன்றின் சொல் பதம் ஆகும் தொந்த தசியே மேல் #2489 தொந்த தசி மூன்றில் தொல் காமியம் ஆதி தொந்த தசி மூன்றில் தொல் தாமதம் ஆதி வந்த மலம் குணம் மாள சிவம் தோன்றின் இந்துவின் முன் இருள் ஏகுதல் ஒக்குமே மேல் #2490 தொந்த தசியை அ வாசியில் தோற்றியே அந்த முறை ஈரைந்தாக மதித்திட்டு அந்தம் இலாத அவத்தை அ வாக்கியத்து உந்து முறையில் சிவன் முன் வைத்து ஓதிடே மேல் #2491 வைத்து சிவத்தை மதி சொருபானந்தத்து உய்த்து பிரணவமாம் உபதேசத்தை மெய்த்த இதயத்து விட்டிடும் மெய் உணர்ந்து அத்தற்கு அடிமை அடைந்து நின்றானே மேல் #2492 தொம்பதம் மாயையுள் தோன்றிடும் தற்பதம் அம்பரை தன்னில் உதிக்கும் அசிபதம் நம்புறு சாந்தியில் நண்ணும் அ வாக்கியம் உம்பர் உரை தொந்த தசிவாசி ஆமே மேல் #2493 ஆகிய அச்சோயம் தேவதத்தன்-இடத்து ஆகியவை விட்டால் காயம் உபாதானம் ஏகிய தொந்த தசி என்ப மெய்யறிவு ஆகிய சீவன் பரசிவன் ஆமே மேல் #2494 தாமதம் காமியம் ஆகி தகுகுணம் மா மலம் மூன்றும் அகார உகாரத்தோடு ஆம் அறும் மவ்வும் அ வாய் உடல் மூன்றில் தாமாம் துரியமும் தொந்த தசியதே மேல் #2495 காரியம் ஏழ் கண்டு அறு மாய பாழ்விட காரணம் ஏழ் கண்டு அறும் போத பாழ்விட காரிய காரண வாதனை கண்டு அறும் சீரூப சாந்த முப்பாழ் விட தீருமே மேல் #2496 மாய பாழ் சீவன் வியோம பாழ் மன் பரன் சேய முப்பாழ் என சிவசத்தியில் சீவன் ஆய வியாப்தம் எனும் முப்பாழாம் அந்த தூய சொரூபத்தில் சொல் முடிவாகுமே மேல் #2497 எதிர் அற நாளும் எருது வந்து ஏறும் பதி எனும் நந்தி பதம் அது கூட கதி என பாழை கடந்த அந்த கற்பனை உதறிய பாழில் ஒடுங்குகின்றேனே மேல் #2498 துரியம் அடங்கிய சொல் அறும் பாழை அரிய பரம்பரம் என்பர்கள் ஆதர் அரிய பரம்பரம் என்றே துதிக்கும் அரு நிலம் என்பதை யார் அறிவாரே மேல் #2499 ஆறாறு நீங்க நம ஆதி அகன்றிட்டு வேறாகிய பரை யா என்று மெய்ப்பரன் ஈறான வாசியில் கூட்டும் அது அன்றோ தேறா சிவாயநம என தேறிலே மேல் #2500 உள்ளம் உரு என்றும் உருவம் உளம் என்றும் உள்ள பரிசு அறிந்து ஓரும் அவர்கட்கு பள்ளமும் இல்லை திடர் இல்லை பாழ் இல்லை உள்ளமும் இல்லை உரு இல்லை தானே மேல் #2501 செற்றிடும் சீவ உபாதி திறன் ஏழும் பற்றும் பரோபாதி ஏழும் பகர் உரை உற்றிடும் காரிய காரண தோடு அற அற்றிட அ சிவம் ஆகும் அணுவனே மேல் #2502 ஆறாறு காரியோ பாதி அகன்றிட்டு வேறாய் நனவு மிகுத்த கனா நனா ஆறாறு அகன்ற சுழுத்தி அதில் எய்தா பேறா நிலத்து உயிர் தொம்பதம் பேசிலே மேல் #2503 அகாரம் உயிரே உகாரம் பரமே மகாரம் சிவமாய் வரும் முப்பதத்து சிகாரம் சிவமே வகாரம் பரமே யகாரம் உயிர் என்று அறையலும் ஆமே மேல் #2504 உயிர்க்கு உயிர் ஆகி ஒழிவு அற்று அழிவு அற்று அயிர்ப்பு அறு காரணோபாதி விதிரேகத்து உயிர்ப்புறும் ஈசன் உபமிதத்தால் அன்றி வியர்ப்புறும் ஆணவம் வீடல் செய்யாவே மேல் #2505 காரியம் ஏழில் கலக்கும் கடும் பசு காரணம் ஏழில் கலக்கும் பரசிவன் காரிய காரணம் கற்பனை சொல் பதம் பார் அறும் பாழில் பராபரத்தானே மேல் #2506 முத்திக்கு வித்து முதல்வன்-தன் ஞானமே பத்திக்கு வித்து பணிந்துற்று பற்றலே சித்திக்கு வித்து சிவபரம் தான் ஆதல் சத்திக்கு வித்து தனது உபசாந்தமே மேல் #2507 காரியம் ஏழும் கரந்திடும் மாயையுள் காரணம் ஏழும் கரக்கும் கடுவெளி காரிய காரண வாதனை பற்று அற பாரணவும் உபசாந்த பரிசு இதே மேல் #2508 அன்ன துரியமே ஆத்தும சுத்தியும் முன்னிய சாக்கிராதீதத்து உறு புரி மன்னு பரங்காட்சியாவது உடனுற்று தன்னின் வியாத்தி தனின் உபசாந்தமே மேல் #2509 ஆறாறு அமைந்த ஆணவத்தை உள் நீங்குதற்கு பேறான தன்னை அறிந்து அதன் பின் தீர் சுத்தி கூறாத சாக்கிராதீதம் குருபரன் பேறாம் வியாத்தம் பிறழ் உபசாந்தமே மேல் #2510 வாய்ந்த உபசாந்த வாதனை உள்ளப்போய் ஏய்ந்த சிவம் ஆதலின் சிவானந்தத்து தோய்ந்து அறல் மோன சுகானுபவத்தோடே ஆய்ந்ததில் தீர்க்கை ஆனது ஈரைந்துமே மேல் #2511 பரையின் பரவ பரத்துடன் ஏகமாய் திரையின்-நின்று ஆகிய தெண்புனல் போலவுற்று உரை உணர்ந்தார் ஆரமும் தொக்க உணர்ந்துளோன் கரை கண்டான் உரை அற்ற கணக்கிலே மேல் #2512 பிறையுள் கிடந்த முயலை எறிவான் அறை மணி வாள் கொண்டவர்-தமை போல கறை மணிகண்டனை காண்குற மாட்டார் நிறை அறிவோம் என்பர் நெஞ்சிலர் தாமே மேல் #2513 கரும் தாள் கருடன் விசும்பூடு இறப்ப கரும் தாள் கயத்தில் கரும் பாம்பு நீங்க பெருந்தன்மை பேசுதி நீ ஒழி நெஞ்சே அருந்தா அலை கடல் ஆறு சென்றாலே மேல் #2514 கருதலர் மாள கருவாயில் நின்ற பொருதலை செய்வது புல்லறிவாண்மை மருவலர் செய்கின்ற மா தவம் ஒத்தால் தருவலர் கேட்ட தனி உம்பர் ஆமே மேல் #2515 பிணங்கவும் வேண்டாம் பெருநிலம் முற்றும் இணங்கி எம் ஈசனை ஈசன் என்று உன்னில் கணம் பதினெட்டும் கழல் அடி காண வணங்கு எழு நாடி அங்கு அன்புறல் ஆமே மேல் #2516 என்னிலும் என் உயிராய இறைவனை பொன்னிலும் மா மணியாய புனிதனை மின்னிய எ உயிராய விகிர்தனை உன்னிலும் உன்னும் உறுவகையாலே மேல் #2517 நின்றும் இருந்தும் கிடந்தும் நிமலனை ஒன்றும் பொருள்கள் உரைப்பவர்கள் ஆகிலும் வென்று ஐம்புலனும் விரைந்து பிணக்கு அறுத்து ஒன்றாய் உணரும் ஒருவனும் ஆமே மேல் #2518 நுண்ணறிவாய் உலகாய் உலகு ஏழுக்கும் எண் அறிவாய் நின்ற எந்தை பிரான்-தன்னை பண் அறிவாளனை பாவித்த மாந்தரை விண் அறிவாளர் விரும்புகின்றாரே மேல் #2519 விண்ணவராலும் அறிவறியான்-தன்னை கண்ணுற உள்ளே கருதிடில் காலையில் எண்ணுற ஆக முப்போதும் இயற்றி நீ பண்ணிடில் தன்மை பராபரன் ஆமே மேல் #2520 ஒன்றா உலகுடன் ஏழும் பரந்தவன் பின் தான் அருள்செய்த பேரருளாளவன் கன்றா மனத்தார்-தம் கல்வியுள் நல்லவன் பொன்றாத-போது புனை புகழானே மேல் #2521 போற்றி என்றேன் எந்தை பொன்னான சேவடி ஏற்றி ஏது என்றும் எறி மணி தான் அக காற்றின் விளக்கு அது காய மயக்குறும் ஆற்றலும் கேட்டதும் அன்று கண்டேனே மேல் #2522 நேடிக்கொண்டு என்னுள்ளே நேர்தரு நந்தியை ஊடு புக்கு ஆரும் உணர்ந்து அறிவார் இல்லை கூடு புக்கு ஏறலுற்றேன் அவன் கோலம் கண் மூடி கண்டேன் உலகு ஏழும் கண்டேனே மேல் #2523 ஆன புகழும் அமைந்தது ஓர் ஞானமும் தேனும் இருக்கும் சிறுவரை ஒன்று கண்டு ஊனம் ஒன்று இன்றி உணர்வு செய்வார்கட்கு வானகம் செய்யும் மறவனும் ஆமே மேல் #2524 மா மதியாம் மதியாய் நின்ற மாதவர் தூய் மதி ஆகும் சுடர் பரமானந்தம் தாம் மதி ஆக சகம் உண சாந்தி புக்கு ஆம் மலம் அற்றார் அமைவு பெற்றாரே மேல் #2525 பதமுத்தி மூன்றும் பழுது என்று கைவிட்டு இதமுற்ற பாச இருளை துரந்து மதம் அற்று எனது யான் மாற்றிவிட்டு ஆங்கே திதம் உற்றவர்கள் சிவசித்தர் தாமே மேல் #2526 சித்தர் சிவத்தை கண்டவர் சீருடன் சுத்தாசுத்தத்துடன் தோய்ந்து தோயாதவர் முத்தரம் முத்திக்கு மூலத்தர் மூலத்து சத்தர் சதாசிவ தன்மையர் தாமே மேல் #2527 உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும் துதிக்கும் நிருதி வருணன் நல் வாயு மதிக்கும் குபேரன் வட திசை ஈசன் நிதி தெண் திசையும் நிறைந்து நின்றாரே மேல் #2528 ஒருங்கிய பூவும் ஓர் எட்டு இதழ் ஆகும் மருங்கிய மாயாபுரி அதன் உள்ளே சுருங்கிய தண்டின் சுழுனையின் ஊடே ஒருங்கிய சோதியை ஓர்ந்து எழும் உய்ந்தே மேல் #2529 மொட்டு அலர் தாமரை மூன்று உள மூன்றினும் விட்டு அலர்கின்றனன் சோதி விரிசுடர் எட்டு அலர் உள்ளே இரண்டு அலர் உள்ளுறில் பட்டு அலர்கின்றது ஓர் பண்டு அம் கனாவே மேல் #2530 ஆறே அருவி அகம் குளம் ஒன்று உண்டு நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும் கூறே குவி முலை கொம்பு அனையாளொடும் வேறே இருக்கும் விழுப்பொருள் தானே மேல் #2531 திகை எட்டும் தேர் எட்டும் தேவதை எட்டும் வகை எட்டுமாய் நின்ற ஆதி பிரானை வகை எட்டு நான்கும் மற்று ஆங்கே நிறைந்து முகை எட்டும் உள் நின்று உதிக்கின்றவாறே மேல் #2532 ஏழும் சகளம் இயம்பும் கடந்து எட்டில் வாழும் பரம் என்றது கடந்து ஒன்பதில் ஊழி பராபரம் ஓங்கிய பத்தினில் தாழ்வு அது ஆன தனித்தன்மை தானே மேல் #2533 பல் ஊழி பண்பன் பகலோன் இறையவன் நல் ஊழி ஐந்தின் உள்ளே நின்ற ஊழிகள் செல் ஊழி அண்டத்து சென்ற அ ஊழியுள் அ ஊழி உச்சியுள் ஒன்றில் பகவனே மேல் #2534 புரியம் உலகினில் பூண்ட எட்டானை திரியும் களிற்றொடு தேவர் குழாமும் எரியும் மழையும் இயங்கும் வெளியும் பரியும் ஆகாசத்தில் பற்றது தானே மேல் #2535 ஊறும் அருவி உயர் வரை உச்சி மேல் ஆறு இன்றி பாயும் அருங்குளம் ஒன்று உண்டு சேறு இன்றி பூத்த செழும் கொடி தாமரை பூ இன்றி சூடான் புரிசடையோனே மேல் #2536 ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து நின்றும் இருந்தும் நிலம் பல பேசினும் வென்றும் இருந்தும் விகிர்தனை நாடுவர் சென்றும் இருந்தும் திரு உடையோரே மேல் #2537 தொல் பத விசுவன் தைசதன் பிராஞ்ஞன் நல் பத விராட்டன் பொன் கர்ப்பன் அ யாகிர்தன் பிற்பதம் சொலிதையன் பிரசாபத்தியன் பொன் புவி சாந்தன் பொருதபிமானியே மேல் #2538 நவமாம் அவத்தை நனவு ஆதி பற்றில் பவமாம் மலம் குணம் பற்று அற்று பற்றா தவமான சத்திய ஞான பொதுவில் துவம் ஆர் துரியம் சொரூபம் அது ஆமே மேல் #2539 சிவமான சிந்தையில் சீவன் சிதைய பவமான மும்மலம் பாறி பறிய நவமான அந்தத்தின் நல் சிவபோதம் தவமாம் அவை ஆகி தான் அல்ல ஆகுமே மேல் #2540 முன் சொன்ன ஒன்பானின் முன்னுறு தத்துவம் தன் சொல்லில் எண்ணத்தகா ஒன்பான் வேறு உள பின் சொல்ல ஆகும் இ ஈரொன்பான் பேர்த்திட்டு தன் செய்த ஆண்டவன் தான் சிறந்தானே மேல் #2541 உகந்தன ஒன்பதும் ஐந்தும் உலகம் பகர்ந்த பிரான் என்னும் பண்பினை நாடி அகந்து எம் பிரான் என்பான் அல்லும் பகலும் இகந்தன வல்வினையோடு அறுத்தானே மேல் #2542 நலம் பல காலம் தொகுத்தன நீளம் குலம் பல வண்ணம் குறிப்பொடும் கூடும் பலம் பல பன்னிரு கால நினையும் நிலம் பலவாறு இன நீர்மையன் தானே மேல் #2543 ஆதி பராபரம் ஆகும் பராபரை சோதி பரம் உயிர் சொல்லும் நல் தத்துவம் ஓதும் கலை மாயை ஓர் இரண்டு ஓர் முத்தி நீதியாம் பேதம் ஒன்பானுடன் ஆதியே மேல் #2544 தேறாத சிந்தை தெளிய தெளிவித்து வேறா நரக சுவர்க்கமும் மேதினி ஆறா பிறப்பும் உயிர்க்கு அருளால் வைத்தான் வேறா தெளியார் வினை உயிர் பெற்றதே மேல் #2545 ஒன்பான் அவத்தையுள் ஒன்பான் அபிமானி நன்பால் பயிலும் நவ தத்துவம் ஆதி ஒன்பானில் நிற்பது ஓர் மு துரியத்துற செம்பால் சிவம் ஆதல் சித்தாந்த சித்தியே மேல் #2546 நாசி நுனியினில் நான்கு மூவிரல் இடை ஈசன் இருப்பிடம் யாரும் அறிகிலர் பேசி இருக்கும் பெரு மறை அ மறை கூசி இருக்கும் குணம் அது ஆமே மேல் #2547 கருமங்கள் ஒன்று கருதும் கருமத்து உரிமையும் கன்மமும் முன்னும் பிறவிக்கு அருவினை ஆவது கண்டு அகன்ற பின் புரிவன கன்ம கயத்துள் புகுமே மேல் #2548 மாயை மறைக்க மறைந்த மறைப்பொருள் மாயை மறைய வெளிப்படும் அ பொருள் மாயை மறைய மறைய வல்லார்கட்கு காயமும் இல்லை கருத்து இல்லை தானே மேல் #2549 மோழை அடைந்து முழை திறந்து உள் புக்கு கோழை அடைகின்றது அண்ணல் குறிப்பினில் ஆழ அடைத்து அங்கு அனலில் புறம் செய்து தாழ அடைப்பது தன் வலி ஆமே மேல் #2550 காய குழப்பனை காய நல் நாடனை காயத்தின் உள்ளே கமழ்கின்ற நந்தியை தேயத்து உளே எங்கும் தேடி திரிவர்கள் காயத்துள் நின்ற கருத்து அறியாரே மேல் #2551 ஆசூசம் ஆசூசம் என்பார் அறிவிலார் ஆசூசம் ஆமிடம் ஆரும் அறிகிலார் ஆசூசம் ஆமிடம் ஆரும் அறிந்த பின் ஆசூசம் மானிடம் ஆசூசம் ஆமே மேல் #2552 ஆசூசம் இல்லை அருநியமத்தருக்கு ஆசூசம் இல்லை அரனை அர்ச்சிப்பவர்க்கு ஆசூசம் இல்லை ஆம் அங்கி வளர்ப்போர்க்கு ஆசூசம் இல்லை அருமறை ஞானிக்கே மேல் #2553 வழிபட்டு நின்று வணங்கும் அவர்க்கு சுழிபட்டு நின்றது ஓர் தூய்மை தொடங்கும் குழிபட்டு நின்றவர் கூடார் குறிகள் கழிபட்டவர்க்கு அன்றி காண ஒண்ணாதே மேல் #2554 தூய் மணி தூய் அனல் தூய ஒளிவிடும் தூய் மணி தூய் அனல் தூர் அறிவார் இல்லை தூய் மணி தூய் அனல் தூர் அறிவார்கட்கு தூய் மணி தூய் அனல் தூயவும் ஆமே மேல் #2555 தூயது வாளா வைத்தது தூ நெறி தூயது வாளா நாதன் திருநாமம் தூயது வாளா அட்டமாசித்தியும் தூயது வாளா தூய் அடி சொல்லே மேல் #2556 பொருளதுவாய் நின்ற புண்ணியன் எந்தை அருளது போற்றும் அடியவர் அன்றி சுருளதுவாய் நின்ற துன்ப சுழியின் மருளதுவா சிந்தை மயங்குகின்றாரே மேல் #2557 வினையாம் அசத்து விளைவது உணரார் வினை ஞானம் தன்னில் வீடலும் தேரார் வினை விட வீடு என்னும் வேதமும் ஓதார் வினையாளர் மிக்க விளைவு அறியாரே மேல் #2558 பரகதி உண்டு என இல்லை என்போர்கள் நரகதி செல்வது ஞாலம் அறியும் இரகதி செய்திடுவார் கடை-தோறும் துரகதி உண்ண தொடங்குவர் தாமே மேல் #2559 கூடகில்லார் குரு வைத்த குறி கண்டு நாடகில்லார் நயம் பேசி திரிவர்கள் பாடகில்லார் அவன் செய்த பரிசு அறிந்து ஆட வல்லார் அவர் பேறு எது ஆமே மேல் #2560 புறப்பட்டுப்போகும் புகுதும் என் நெஞ்சில் திறப்பட்ட சிந்தையை தெய்வம் என்று எண்ணி அறப்பட்ட மற்ற பதி என்று அழைத்தேன் இற பற்றினேன் இங்கு இது என் என்கின்றானே மேல் #2561 திடரிடை நில்லாத நீர் போல ஆங்கே உடலிடை நில்லா உறுபொருள் காட்டி கடலிடை நில்லா கலம் சேருமா போல் அடல் எரி வண்ணனும் அங்கு நின்றானே மேல் #2562 தாமரை நூல் போல் தடுப்பார் பரத்தொடும் போம் வழி வேண்டி புறமே உழிதர்வர் காண் வழி காட்ட கண் காணா கலதிகள் தீ நெறி செல்வான் திரிகின்றவாறே மேல் #2563 மூடுதல் இன்றி முடியும் மனிதர்கள் கூடுவர் நந்தி அவனை குறித்து உடன் காடும் மலையும் கழனி கடம்-தோறும் ஊடும் உருவினை உன்னகிலாரே மேல் #2564 ஆவது தெற்கும் வடக்கும் அமரர்கள் போவர் குடக்கும் குணக்கும் குறி வழி நாவின் இன் மந்திரம் என்று நடு அங்கி வேவது செய்து விளங்கிடுவீரே மேல் #2565 மயக்குற நோக்கினும் மா தவம் செய்யார் தமக்குற பேசின தாரணை கொள்ளார் சிணக்குற பேசின தீவினையாளர் தமக்குற வல்வினை தாங்கி நின்றாரே மேல் #2566 விட்ட இலக்கணை தான் போம் வியோமத்து தொட்டு விடாதது உபசாந்தத்தே தொகும் விட்டு விடாதது மேவும் சத்தாதியில் சுட்டும் இலக்கணாதீதம் சொரூபமே மேல் #2567 வில்லின் விசை நாணில் கோத்து இலக்கு எய்த பின் கொல்லும் களிறு ஐந்தும் கோலொடு சாய்ந்தன இல்லுள் இருந்து எறி கூரும் ஒருவற்கு கல் கலன் என்ன கதிர் எதிர் ஆமே மேல் #2568 சீவ துரியத்து தொம்பதம் சீவனார் தாவு பர துரியத்தினில் தற்பதம் மேவு சிவ துரிய தசி மெய்ப்பதம் ஓவி விடும் தத்துவ மசி உண்மையே மேல் #2569 ஆறாறு அகன்ற அணு தொம்பதம் சுத்தம் ஈறான தற்பதம் எய்துப சாந்தத்து பேறாகிய சீவன் நீங்கி பிரசாதத்து வீறான தொந்த தசி தத்துவ மசியே மேல் #2570 ஆகிய அச்சோயம் தேவக தன்னிடத்து ஆகிய விட்டு விடாத இலக்கணைத்து ஆருப சாந்தமே தொந்த தசி என்ப ஆகிய சீவன் பரன் சிவனாமே மேல் #2571 துவந்த தசியே தொந்த தசியும் அவை மன்னா வந்து வய தேகம் ஆன தவமுறு தத்துவ மசி வேதாந்த சிவமாம் அதும் சித்தாந்த வேதாந்தமே மேல் #2572 துரியம் அடங்கிய சொல்லறும் பாழை அரிய பரமென்பர் ஆகார் இது அன்று என்னார் உரிய பரம்பரமாம் ஒன்று உதிக்கும் அருநிலம் என்பதை ஆர் அறிவாரே மேல் #2573 தொம்பதம் தற்பதம் சொல்லும் அசிபதம் நம்பிய மு துரியத்து மேல் நாடவே உம் பதமும் பதம் ஆகும் உயிர் பரன் செம்பொருள் ஆன சிவம் எனல் ஆமே மேல் #2574 வைத்த துரியம் அதில் சொருபானந்தத்து உய்த்த பிரணவமாம் உபதேசத்தை மெய்த்த இதயத்து விட்டிடும் மெய் உணர் வைத்தபடியே அடைந்து நின்றானே மேல் #2575 நனவாதி ஐந்தையும் நாதாதியில் வைத்து பினமாம் மலத்தை பின் வைத்து பின் சுத்த தனதாம் சிவகதி சத்தாதி சாந்தி மனவாசகம் கெட்ட மன்னனை நாடே மேல் #2576 பூரணி யாது புறம்பு ஒன்று இலாமையின் பேர் அணியாதது பேச்சு ஒன்று இலாமையில் ஓர் அணையாதது ஒன்றும் இலாமையில் காரணம் இன்றியே காட்டும் தகைமைத்தே மேல் #2577 நீ அது ஆனாய் என நின்ற பேருரை ஆயது நான் ஆனேன் என்ன சமைந்து அற சேய சிவம் ஆக்கும் சீர் நந்தி பேரருள் ஆயதுவாய் அனந்தானந்தி ஆகுமே மேல் #2578 உயிர் பரம் ஆக உயர் பர சீவன் அரிய சிவமாக அ சிவ வேத திரியிலும் சீராம் பராபரன் என்ன உரிய உரை அற்ற ஓம் மயம் ஆமே மேல் #2579 வாய் நாசியே புரு மத்தகம் உச்சியில் ஆய் நாசி உச்சி முதல் அவையாய் நிற்கும் தாய் நாடி ஆதிவாக்கு ஆதி சகலாதி சேய் நாடு ஒளி என சிவகதி ஐந்துமே மேல் #2580 அறிவு அறியாமை இருண்டும் அகற்றி செறிவு அறிவாய் எங்கும் நின்ற சிவனை பிறிவு அறியாது பிரான் என்று பேணும் குறி அறியாதவர் கொள் அறியாரே மேல் #2581 அறிவார் அறிவன அப்பும் அனலும் அறிவார் அறிவன அப்பும் கலப்பும் அறிவான் இருந்து அங்கு அறிவிக்கின் அல்லால் அறிவான் அறிந்த அறிவு அறியோமே மேல் #2582 அதீதத்துள் ஆகி அகன்றவன் நந்தி அதீதத்துள் ஆகி அறிவிலோன் ஆன்மா மதி பெற்று இருள் விட்ட மன் உயிர் ஒன்றாம் பதியில் பதியும் பரவுயிர் தானே மேல் #2583 அடிதொழ முன் நின்று அமரர்கள் அத்தன் முடி தொழ ஈசனும் முன் நின்று அருளி படி தொழ நீ பண்டு பாவித்தது எல்லாம் கடி தொழ காண் என்னும் கண்_நுதலானே மேல் #2584 நின்மல மேனி நிமலன் பிறப்பு_இலி என் உளம் வந்து இவன் என் அடியான் என்று பொன் வளர் மேனி புகழ்கின்ற வானவன் நின்மலம் ஆகென்று நீக்க வல்லானே மேல் #2585 துறந்து புக்கு ஒள் ஒளி சோதியை கண்டு பறந்தது என் உள்ளம் பணிந்து கிடந்தே மறந்து அறியா என்னை வானவர் கோனும் இறந்து பிறவாமல் ஈங்கு வைத்தானே மேல் #2586 மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் மெய்த்தோற்றத்து அவ்வாய அந்த கரணம் அகிலமும் எவ்வாய் உயிரும் இறை ஆட்ட ஆடலால் கை வாய் இலா நிறை எங்கும் மெய் கண்டதே மேல் #2587 அழிகின்ற சாயா புருடனை போல கழிகின்ற நீரில் குமிழியை காணில் எழுகின்ற தீயில் கற்பூரத்தை ஒக்க பொழிகின்ற இ உடல் போம் அ பரத்தே மேல் #2588 உடலும் உயிரும் ஒழிவற ஒன்றில் படரும் சிவசத்தி தாமே பரமாம் உடலை விட்டு இந்த உயிர் எங்கும் ஆகி கடையும் தலையும் கரக்கும் சிவத்தே மேல் #2589 செவி மெய் வாய் கண் மூக்கு சேர் இந்திரியம் அவி இன்றிய மனமாதிகள் ஐந்தும் குவி ஒன்று இலாமல் விரிந்து குவிந்து தவிர் ஒன்று இலாத சராசரம் தானே மேல் #2590 பரன் எங்கும் ஆர பரந்துற்று நிற்கும் திரன் எங்கும் ஆகி செறிவு எங்கும் எய்தும் உரன் எங்குமாய் உலகு உண்டு உமிழ்க்கும் வரம் இங்ஙன் கண்டு யான் வாழ்ந்துற்றவாறே மேல் #2591 அளந்து துரியத்து அறிவினை வாங்கி உளம் கொள் பரம்சகம் உண்டது ஒழித்து கிளர்ந்த பரம்சிவம் சேர கிடைத்தால் விளங்கிய வெட்ட வெளியனும் ஆமே மேல் #2592 இரும்பிடை நீர் என என்னை உள்வாங்கி பரம்பரம் ஆன பரம் அது விட்டே உரம் பெற முப்பாழ் ஒளியை விழுங்கி இருந்த என் நந்தி இதயத்து உளானே மேல் #2593 கரி உண் விளவின் கனி போல் உயிரும் உரிய பரமும் முன் ஓதும் சிவமும் அரிய துரிய மேல் அகிலமும் எல்லாம் திரிய விழுங்கும் சிவபெருமானே மேல் #2594 அந்தமும் ஆதியும் ஆகும் பராபரன் தந்தம் பரம்பரன் தன்னில் பரமுடன் நம்தமை உண்டு மெய்ஞ்ஞான நேயாந்தத்தே நந்தி இருந்தனன் நாம் அறியோமே மேல் #2595 அற்றது உரைக்கில் அருள் உபதேசங்கள் குற்றம் அறுத்த பொன் போலும் கனலிடை அற்று அற வைத்து இறை மாற்று அற ஆற்றிடில் செற்றம் அறுத்த செழும் சுடர் ஆகுமே மேல் #2596 எல்லாம் அறியும் அறிவு-தனை விட்டு எல்லாம் அறிந்தும் இலாபம் அங்கு இல்லை எல்லாம் அறிந்த அறிவினை நான் என்னில் எல்லாம் அறிந்த இறை எனலாமே மேல் #2597 தலைநின்ற தாழ்வரை மீது தவம்செய்து முலைநின்ற மாதறி மூர்த்தியை யானும் புலைநின்ற பொல்லா பிறவி கடந்து கலைநின்ற கள்வனை கண்டுகொண்டேனே மேல் #2598 தானே உலகில் தலைவன் என தகும் தானே உலகுக்கு ஓர் தத்துவமாய் நிற்கும் வானே மழை பொழி மா மறை கூர்ந்திடும் ஊனே உருகிய உள்ளம் ஒன்று ஆமே மேல் #2599 அருள் பெற்ற காரணம் என்-கொல் அமரில் இருள் அற்ற சிந்தை இறைவனை நாடி மருளுற்ற சிந்தையை மாற்றி அருமை பொருளுற்ற சேவடி போற்றுவர் தாமே மேல் #2600 மெய்கலந்தாரொடு மெய்கலந்தான்-தன்னை பொய்கலந்தார் முன் புகுதா ஒருவனை உய் கலந்து ஊழி தலைவனுமாய் நிற்கும் மெய்கலந்து இன்பம் விளைந்திடும் மெய்யர்க்கே மேல் #2601 மெய்கலந்தாரொடு மெய்கலந்தான் மிக பொய்கலந்தார் உள் புகுதா புனிதனை கைகலந்து ஆவி எழும் பொழுது அண்ணலை கைகலந்தார்க்கே கருத்துறல் ஆமே மேல் #2602 எய்திய காலத்து இருபொழுதும் சிவன் மெய் செயின் மேலை விதி அதுவாய் நிற்கும் பொய்யும் புலனும் புகல் ஒன்று நீத்திடில் ஐயனும் அ வழி ஆகி நின்றானே மேல் #2603 எய்துவது எய்தாது ஒழிவது இது அருள் உய்ய அருள்செய்தான் உத்தமன் சீர் நந்தி பொய்செய் புலனெறி ஒன்பதும் ஆட்கொளின் மெய் என் புரவியை மேற்கொள்ளல் ஆமே மேல் #2604 கைகலந்தானை கருத்தினுள் நந்தியை மெய்கலந்தான்-தன்னை வேதமுதல்வனை பொய்கலந்தார் முன் புகுதா புனிதனை பொய் ஒழிந்தார்க்கே புகலிடம் ஆமே மேல் #2605 மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியை கைத்தாள் கொண்டாரும் திறந்து அறிவார் இல்லை பொய்த்தாள் இடும்பையை பொய் அற நீ விட்டு அங்கு அ தாள் திறக்கில் அரும் பேறு அது ஆமே மேல் #2606 உய்யும் வகையால் உணர்வினால் ஏத்து-மின் மெய்யன் அரன்நெறி மேல் உண்டு திண் என பொய் ஒன்றும் இன்றி புறம் பொலிவார் நடு ஐயனும் அங்கே அமர்ந்து நின்றானே மேல் #2607 வம்பு பழுத்த மலர் பழம் ஒன்று உண்டு தம்-பால் பறவை புகுந்து உண தானொட்டாது அம்பு கொண்டு எய்திட்டு அகல துரத்திடில் செம்பொன் சிவகதி சென்று எய்தலாமே மேல் #2608 மயக்கிய ஐம்புல பாசம் அறுத்து துயக்கு அறுத்தானை தொடர்-மின் தொடர்ந்தால் தியக்கம் செய்யாதே சிவன் எம் பெருமான் உயப்போ என மனம் ஒன்றுவித்தானே மேல் #2609 மனம் அது தானே நினைய வல்லார்க்கு இனம் என கூறும் இரும் காயம் ஏவல் தனிவு இனி நாதன்-பால் தக்கன செய்யில் புனிதன் செயல் ஆகும்-போது அ புவிக்கே மேல் #2610 முன்னை வினைவரின் முன் உண்டே நீங்குவர் பின்னை வினைக்கணார் பேர்ந்து அற பார்ப்பார்கள் தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள் நன்மை இல் ஐம்புலன் நாடலினாலே மேல் #2611 தன்னை அறிந்திடும் தத்துவ ஞானிகள் முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள் பின்னை வினையை பிடித்து பிசைவர்கள் சென்னியில் வைத்த சிவன் அருளாலே மேல் #2612 மனம் வாக்கு காயத்தால் வல்வினை மூளும் மனம் வாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னா மனம் வாக்கு கெட்டவர் வாதனை தன்னால் தனை மாற்றி ஆற்ற தகு ஞானி தானே மேல் #2613 வாசியும் மூசியும் பேசி வகையினால் பேசி இருந்து பிதற்றி பயன் இல்லை ஆசையும் அன்பும் அறு-மின் அறுத்த பின் ஈசன் இருந்த இடம் எளிதாமே மேல் #2614 மாடத்து உளான் அலன் மண்டபத்தான் அலன் கூடத்து உளான் அலன் கோயில் உள்ளான் அலன் வேடத்து உளான் அலன் வேட்கை விட்டார் நெஞ்சில் மூடத்து உளே நின்று முத்தி தந்தானே மேல் #2615 ஆசை அறு-மின் கள் ஆசை அறு-மின் கள் ஈசனோடு ஆயினும் ஆசை அறு-மின்கள் ஆசைப்படப்பட ஆய்வரும் துன்பங்கள் ஆசை விடவிட ஆனந்தம் ஆமே மேல் #2616 அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே படு வழி செய்கின்ற பற்று அற வீசி விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம் தொடுவது தம்மை தொடர்தலும் ஆமே மேல் #2617 உவா கடல் ஒக்கின்ற ஊழியும் போன துவா கடல் உட்பட்டு துஞ்சினர் வானோர் அவா கடல் உட்பட்டு அழுந்தினர் மண்ணோர் தவா கடல் ஈசன் தரித்து நின்றானே மேல் #2618 நின்ற வினையும் பிணியும் நெடும் செயல் துன்தொழில் அற்று சுத்தம் அது ஆகலும் பின்றை அம் கருமமும் பேர்த்து அருள் நேர்பெற்று துன்ற அழுத்தலும் ஞானிகள் தூய்மையே மேல் #2619 உண்மை உணர்ந்துற ஒண் சித்தி முத்தியாம் பெண் மயல் கெட்டு அற பேறு அட்ட சித்தியாம் திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால் வண்மை அருள்தான் அடைந்து அன்பில் ஆறுமே மேல் #2620 அவன் இவன் ஈசன் என்று அன்புற நாடி சிவன் இவன் ஈசன் என்று உண்மையை ஓரார் பவன் இவன் பல் வகையாம் இ பிறவி புவன் இவன் போவது பொய் கண்ட-போதே மேல் #2621 கொதிக்கின்றவாறும் குளிர்கின்றவாறும் பதிக்கின்றவாறு இந்த பார் அகம் முற்றும் விதிக்கின்ற ஐவரை வேண்டாது உலகம் நொதிக்கின்ற காயத்து நூல் ஒன்றும் ஆமே மேல் #2622 உய்ந்தனம் என்பீர் உறுபொருள் காண்கிலீர் கந்த மலரில் கலக்கின்ற நந்தியை சிந்தையுறவே தெளிந்து இருள் நீங்கினால் முந்தை பிறவிக்கு மூல வித்து ஆமே மேல் #2623 முத்தி செய் ஞானமும் கேள்வியுமாய் நிற்கும் அத்தனை மாயா அமரர் பிரான்-தன்னை சுத்தனை தூய் நெறியாய் நின்ற சோதியை பத்தர் பரசும் பசுபதி தான் என்றே மேல் #2624 அடியார் அடியார் அடியார்க்கு அடிமைக்கு அடியனாய் நல்கிட்டு அடிமையும் பூண்டேன் அடியார் அருளால் அவன் அடி கூட அடியான் இவன் என்று அடிமை கொண்டானே மேல் #2625 நீரில் குளிரும் நெருப்பினில் சுட்டிடும் ஆரி கடன் நந்தி ஆமார் அறிபவர் பாரில் பயனாரை பார்க்கிலும் நேரியர் ஊரில் உமாபதி ஆகி நின்றானே மேல் #2626 ஒத்து உலகு ஏழும் அறியா ஒருவன் என்று அத்தன் இருந்திடம் ஆர் அறிவார் சொல்ல பத்தர்-தம் பத்தியில் பால் படில் அல்லது முத்தினை யார் சொல்ல முந்துகின்றாரே மேல் #2627 ஆன் கன்று தேடி அழைக்கும் அது போல் நான் கன்றாய் நாடி அழைத்தேன் என் நாதனை வான் கன்றுக்கு அப்பாலாய் நின்ற மறைப்பொருள் ஊன் கன்றாய் நாடி வந்து உள் புகுந்தானே மேல் #2628 பெத்தத்தும் தன் பணி இல்லை பிறத்தலான் முத்தத்தும் தன் பணி இல்லை முறைமையால் அத்தற்கு இரண்டும் அருளால் அளித்தலால் பத்தி பட்டோர்க்கு பணி ஒன்றும் இல்லையே மேல் #2629 பறவையில் கற்பமும் பாம்பு மெய் ஆக குறவம் சிலம்ப குளிர் வரை ஏறி நறவு ஆர் மலர் கொண்டு நந்தியை அல்லால் இறைவன் என்று என் மனம் ஏத்தகிலாவே மேல் #2630 உறுதுணை நந்தியை உம்பர் பிரானை பெறு துணை செய்து பிறப்பு அறுத்து உய்-மின் செறி துணை செய்து சிவன் அடி சிந்தித்து உறுதுணையாய் அங்கி ஆகி நின்றானே மேல் #2631 வானவர்-தம்மை வலிசெய்து இருக்கின்ற தானவர் முப்புரம் செற்ற தலைவனை கானவன் என்றும் கருவரையான் என்றும் ஊனதன் உள் நினைந்து ஒன்றுபட்டாரே மேல் #2632 நிலை பெறு கேடு என்று முன்னே படைத்த தலைவனை நாடி தயங்கும் என் உள்ளம் மலையுளும் வான் அகத்து உள்ளும் புறத்தும் உலையுளும் உள்ளத்து மூழ்கி நின்றேனே மேல் #2633 முத்தியில் அத்தன் முழுத்த அருள்பெற்று தத்துவ சுத்தி தலைப்பட்டு தன் பணி மெய்த்தவம் செய்கை வினைவிட்ட மெய் உண்மை பத்தியில் உற்றோர் பரானந்த போதரே மேல் #2634 வளம் கனி தேடிய வன் தாள் பறவை உளம் கனி தேடி அழிதரும்-போது களம் கனி அங்கியில் கைவிளக்கு ஏற்றி நலம் கொண்ட நால்வரும் நாடுகின்றாரே மேல் #2635 பெம்மான் பெரு நந்தி பேச்சு அற்ற பேரின்பத்து அம்மான் அடி தந்து அருட்கடல் ஆடினோம் எம்மாயமும் விடுத்து எம்மை கரந்திட்டு சும்மா இருந்து இடம் சோதனை ஆகுமே மேல் #2636 அறிவு உடையான் அரு மா மறை உள்ளே செறிவு உடையான் மிகு தேவர்க்கும் தேவன் பொறி உடையான் புலன் ஐந்தும் கடந்த குறி உடையானொடும் கூடுவன் நானே மேல் #2637 அறிவு அறிவு என்று அங்கு அரற்றும் உலகம் அறிவு அறியாமை யாரும் அறியார் அறிவு அறியாமை கடந்து அறிவானால் அறிவு அறியாமை அழகியவாறே மேல் #2638 குறியா குறியினில் கூடாத கூட்டத்து அறியா அறிவில் அவிழ்ந்து ஏக சித்தமாய் நெறியாம் பராநந்தி நீடு அருள் ஒன்றும் செறியா செறிவே சிவம் எனலாமே மேல் #2639 காலினில் ஊறும் கரும்பினில் கட்டியும் பாலின் உள் நெய்யும் பழத்துள் இரதமும் பூவினுள் நாற்றமும் போல் உளன் எம் இறை காவலன் எங்கும் கலந்து நின்றானே மேல் #2640 விருப்பொடு கூடி விகிர்தனை நாடி பொருப்பு அகம் சேர்தரு பொன் கொடி போல இருப்பர் மனத்திடை எங்கள் பிரானார் நெருப்பு உரு ஆகி நிகழ்ந்து நின்றாரே மேல் #2641 நந்தி பெருமான் நடுவுள் வியோமத்து வந்து என் அகம் படி கோயில் கொண்டான் கொள்ள எந்தை வந்தான் என்று எழுந்தேன் எழுதலும் சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே மேல் #2642 தன்மை வல்லோனை தத்துவத்துள் நலத்தினை நன்மை வல்லோனை நடுவு உறை நந்தியை புன்மை பொய்யாதே புனிதனை நாடு-மின் பன்மையில் உம்மை பரிசு செய்வானே மேல் #2643 தொடர்ந்து நின்றான் என்னை சோதிக்கும்-போது தொடர்ந்து நின்றான் நல்ல நாதனும் அங்கே படர்ந்து நின்று ஆதி பராபரன் எந்தை கடந்து நின்று அ வழி காட்டுகின்றானே மேல் #2644 அ வழி காட்டும் அமரர்க்கு அரும்பொருள் இ வழி தந்தை தாய் கேள் யான் ஒக்கும் செ வழி சேர் சிவலோகத்து இருந்திடும் இ வழி நந்தி இயல்பு அது தானே மேல் #2645 எறிவது ஞானத்து உறைவாள் உருவி அறிவு அதனோடே அ ஆண் தகையானை செறிவது தேவர்க்கு தேவர் பிரானை பறிவது பல் கண பற்று விட்டாரே மேல் #2646 ஆதி பிரான் தந்த வாள் அங்கை கொண்ட பின் வேதித்து என்னை விலக்க வல்லார் இல்லை சோதிப்பன் அங்கே சுவடு படா வண்ணம் ஆதி கண் தெய்வம் அவன் இவன் ஆமே மேல் #2647 அந்த கருவை அருவை வினை செய்தல் பந்தம் பணி அச்சம் பல் பிறப்பும் வாட்டி சிந்தை திருத்தலும் சேர்ந்தார் அ சோதனை சந்திக்க தற்பரம் ஆகும் சதுரர்க்கே மேல் #2648 உரை அற்றது ஒன்றை உரைத்தான் எனக்கு கரையற்று எழுந்த கலை வேட்டு அறுத்து திரை ஒத்த என் உடல் நீங்காது இருத்தி புரை அற்ற என்னுள் புகும் தற்பரனே மேல் |
---|