|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
மெச்ச (1)
மெச்ச பரன்-தன் வியாத்துவம் மேல் இட்டு - திருமந்:1608/2
மேல்
மெய் (53)
வேயின் எழும் கனல் போலே இ மெய் எனும் - திருமந்:116/1
மெய் விட்டு போக விடைகொள்ளுமாறே - திருமந்:151/4
விடும் பரிசாய் நின்ற மெய் நமன் தூதர் - திருமந்:176/3
மெய் அகத்தோர் உளம் வைத்த விதி அது - திருமந்:207/2
வேட நெறி நிற்போர் வேடம் மெய் வேடமே - திருமந்:240/2
மெய் தண்டம் செய்வது அ வேந்தன் கடனே - திருமந்:247/4
விழுப்பமும் கேள்வியும் மெய் நின்ற ஞானத்து - திருமந்:305/1
பொய்த்தவம் நீக்கி மெய் போகத்துள் போகியே - திருமந்:334/2
மெய் பரிசு எய்தி விரிந்து உயிராய் நிற்கும் - திருமந்:409/2
விஞ்ஞானர் நால்வரும் மெய் பிரளயாகலத்து - திருமந்:493/1
விஞ்ஞான கன்மத்தால் மெய் அகம் கூடிய - திருமந்:499/1
எஞ்ஞான மெய் தீண்டியே இடை இட்டு போய் - திருமந்:499/3
மெய் விட்டிலேன் விகிர்தன் அடி தேடுவன் - திருமந்:503/2
கார் உரு கண்டனை மெய் கண்டவாறே - திருமந்:636/4
விளக்கும் ஒரு நாலும் மெய் பட நிற்கும் - திருமந்:779/2
கட்டிட்டு நின்று கலந்த மெய் ஆகமும் - திருமந்:1032/3
மெய் கண்டமாம் விரி நீர் உலகு ஏழையும் - திருமந்:1037/1
வென்றிடு மங்கை-தன் மெய் உணர்வோர்க்கே - திருமந்:1232/4
மெய் அது செம்மை விளங்கு வயிரவன் - திருமந்:1294/2
பகுத்திடும் வேத மெய் ஆகமம் எல்லாம் - திருமந்:1335/2
கதி வைத்தவாறும் மெய் காட்டியவாறும் - திருமந்:1596/3
காதலும் வேண்டாம் மெய் காயம் இடம் கண்டால் - திருமந்:1633/2
மெய் வேடம் பூண்போர் மிகு பிச்சை கைக்கொள்வர் - திருமந்:1660/2
பொய் வேடம் மெய் வேடம் போலவே பூணினும் - திருமந்:1660/3
மிலை மிசை வைத்தனன் மெய் பணி செய்ய - திருமந்:1878/2
மெய் அக ஞானம் மிக தெளிந்தார்களும் - திருமந்:1891/1
விந்துவும் மாளும் மெய் காயத்தில் வித்திலே - திருமந்:1963/4
மெய் கரி ஞானம் கிரியா விசேடத்து - திருமந்:2007/3
மெய் பரிசே வினவாது இருந்தோமே - திருமந்:2092/4
மெய் கண்டவன் உந்தி ஆகும் துரியமே - திருமந்:2142/4
வேறான ஐயைந்து மெய் புருடன் பரம் - திருமந்:2172/2
மெய் கண்டவன் உந்தி மேவல் இருவரே - திருமந்:2200/4
மெய்யும் பின் சூக்கமும் மெய் பகுதி மாயை - திருமந்:2208/3
மெய் கண்டு சுத்த அவத்தையில் வீடாகும் - திருமந்:2238/2
மெய் கண்ட மேல் மூன்று மேவும் மெய் யோகத்தில் - திருமந்:2239/2
மெய் கண்ட மேல் மூன்று மேவும் மெய் யோகத்தில் - திருமந்:2239/2
அம் மெய் சகலத்தர் தேவர் சுரர் நரர் - திருமந்:2244/2
விரி சகம் உண்ட கனவு மெய் சாந்தி - திருமந்:2282/2
விரா முத்திரானந்தம் மெய் நடன ஆனந்தம் - திருமந்:2398/3
விட்ட பசு பாச மெய் கண்டோன் மேவுறான் - திருமந்:2409/2
மேலொடு கீழ்ப்பக்கம் மெய் வாய் கண் நாசிகள் - திருமந்:2460/1
மெய்த்த இதயத்து விட்டிடும் மெய் உணர்ந்து - திருமந்:2491/3
மெய்த்த இதயத்து விட்டிடும் மெய் உணர் - திருமந்:2574/3
மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் மெய்த்தோற்றத்து - திருமந்:2586/1
கை வாய் இலா நிறை எங்கும் மெய் கண்டதே - திருமந்:2586/4
செவி மெய் வாய் கண் மூக்கு சேர் இந்திரியம் - திருமந்:2589/1
மெய் செயின் மேலை விதி அதுவாய் நிற்கும் - திருமந்:2602/2
மெய் என் புரவியை மேற்கொள்ளல் ஆமே - திருமந்:2603/4
பறவையில் கற்பமும் பாம்பு மெய் ஆக - திருமந்:2629/1
மெய்த்தவம் செய்கை வினைவிட்ட மெய் உண்மை - திருமந்:2633/3
விளங்கு ஒளி செய்கின்ற மெய் காயம் ஆமே - திருமந்:2684/4
விம்மும் வெருவும் விழும் எழும் மெய் சோரும் - திருமந்:2744/1
வேதத்தின் அந்தமும் மெய் சிவானந்தமும் - திருமந்:2792/2
மேல்
மெய்க்கலை (1)
வேறுற செங்கதிர் மெய்க்கலை ஆறொடும் - திருமந்:878/1
மேல்
மெய்கலந்தாரொடு (2)
மெய்கலந்தாரொடு மெய்கலந்தான்-தன்னை - திருமந்:2600/1
மெய்கலந்தாரொடு மெய்கலந்தான் மிக - திருமந்:2601/1
மேல்
மெய்கலந்தான் (1)
மெய்கலந்தாரொடு மெய்கலந்தான் மிக - திருமந்:2601/1
மேல்
மெய்கலந்தான்-தன்னை (2)
மெய்கலந்தாரொடு மெய்கலந்தான்-தன்னை
பொய்கலந்தார் முன் புகுதா ஒருவனை - திருமந்:2600/1,2
மெய்கலந்தான்-தன்னை வேதமுதல்வனை - திருமந்:2604/2
மேல்
மெய்கலந்து (1)
மெய்கலந்து இன்பம் விளைந்திடும் மெய்யர்க்கே - திருமந்:2600/4
மேல்
மெய்கொண்டு (1)
விண்-நின்று இழிந்து வினைக்கு ஈடாய் மெய்கொண்டு
தண் நின்ற தாளை தலைக்காவல் முன் வைத்து - திருமந்:113/1,2
மேல்
மெய்கொள்வார் (1)
வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கு இலை - திருமந்:175/1
மேல்
மெய்ஞ்ஞான (4)
விளக்கி பரமாகும் மெய்ஞ்ஞான சோதி - திருமந்:91/1
நாம் பயில் நாதன் மெய்ஞ்ஞான முத்திரையே - திருமந்:1894/4
சார்ந்தவர் மெய்ஞ்ஞான தத்துவ சாத்தியர் - திருமந்:2347/2
நம்தமை உண்டு மெய்ஞ்ஞான நேயாந்தத்தே - திருமந்:2594/3
மேல்
மெய்ஞ்ஞானத்தவன் (1)
வாழ்கவே வாழ்க மெய்ஞ்ஞானத்தவன் தாள் - திருமந்:3047/3
மேல்
மெய்ஞ்ஞானத்தள் (1)
முத்திரை மூன்றின் முடிந்த மெய்ஞ்ஞானத்தள்
தத்துவமாய் அல்லவாய சகலத்தள் - திருமந்:1176/1,2
மேல்
மெய்ஞ்ஞானத்து (2)
ஒத்த மெய்ஞ்ஞானத்து உயர்ந்தார் பதத்தை - திருமந்:1829/2
அன்புறுவீர் தவம் செய்யும் மெய்ஞ்ஞானத்து
பண்புறுவீர் பிறவி தொழிலே நின்று - திருமந்:2112/2,3
மேல்
மெய்ஞ்ஞானத்துள் (1)
நந்தி அருளால் மெய்ஞ்ஞானத்துள் நண்ணினேன் - திருமந்:92/3
மேல்
மெய்ஞ்ஞானத்துள்ளே (1)
விசும்பு ஒன்று தாங்கிய மெய்ஞ்ஞானத்துள்ளே
அசும்பின்-நின்று ஊறியது ஆரமுதாகும் - திருமந்:2818/1,2
மேல்
மெய்ஞ்ஞானத்தோர் (1)
சார்ந்த மெய்ஞ்ஞானத்தோர் தான் அவன் ஆயினோர் - திருமந்:1447/1
மேல்
மெய்ஞ்ஞானத்தோர்க்கு (1)
மெய்ஞ்ஞானத்தோர்க்கு சிவ தனு மேவுமே - திருமந்:2136/4
மேல்
மெய்ஞ்ஞானம் (2)
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார் - திருமந்:724/2
விந்துவின் மெய்ஞ்ஞானம் மேவும் பிரளயர் - திருமந்:2248/3
மேல்
மெய்ஞ்ஞானர் (2)
மெய்ஞ்ஞானர் ஆணவம் விட்டு நின்றாரே - திருமந்:494/4
மெய்ஞ்ஞானர் ஆகி சிவம் மேவல் உண்மையே - திருமந்:499/4
மேல்
மெய்த்த (4)
மெய்த்த சகம் உண்டு விட்டு பரானந்த - திருமந்:334/3
மெய்த்த வியோமமும் மேலை துரியமும் - திருமந்:2176/3
மெய்த்த இதயத்து விட்டிடும் மெய் உணர்ந்து - திருமந்:2491/3
மெய்த்த இதயத்து விட்டிடும் மெய் உணர் - திருமந்:2574/3
மேல்
மெய்த்தகு (1)
மெய்த்தகு அன்னம் ஐம்பான் ஒன்று மேதினி - திருமந்:2184/2
மேல்
மெய்த்தவத்தானை (1)
மெய்த்தவத்தானை விரும்பும் ஒருவர்க்கு - திருமந்:2992/1
மேல்
மெய்த்தவம் (7)
விது பதி செய்தவன் மெய்த்தவம் நோக்கி - திருமந்:19/3
விரும்பி நின்றே செயின் மெய்த்தவம் ஆகும் - திருமந்:1462/3
விளைவு அறிவார் பண்டை மெய்த்தவம் செய்வார் - திருமந்:1635/1
இடர் அடை செய்தவர் மெய்த்தவம் நோக்கில் - திருமந்:1641/3
பொய்த்தவம் மெய்த்தவம் போகத்துள் போக்கி அம் - திருமந்:1659/3
மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தவம் ஒன்று உண்டு - திருமந்:2113/1
மெய்த்தவம் செய்கை வினைவிட்ட மெய் உண்மை - திருமந்:2633/3
மேல்
மெய்த்தவர் (1)
விரும்பி நின்றே செயின் மெய்த்தவர் ஆகும் - திருமந்:1462/1
மேல்
மெய்த்தாள் (1)
மெய்த்தாள் அகம்படி மேவிய நந்தியை - திருமந்:2605/1
மேல்
மெய்த்தாளும் (1)
மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்த்தாளும் ஒன்று உண்டு - திருமந்:2113/2
மேல்
மெய்த்திடும் (1)
மா மரு உன்னிடை மெய்த்திடும் மானனாய் - திருமந்:691/3
மேல்
மெய்த்து (1)
மெய்த்து அறிகின்ற இடம் அறிவாளர்க்கு - திருமந்:1973/3
மேல்
மெய்த்தேன் (1)
மெய்த்தேன் அறிந்தேன் அ வேதத்தின் அந்தமே - திருமந்:1602/4
மேல்
மெய்த்தொகை (1)
வேறு செய்தான் இருபாதியின் மெய்த்தொகை
வேறு செய்தான் என்னை எங்கணும் விட்டு உய்த்தான் - திருமந்:2312/1,2
மேல்
மெய்த்தொழில் (1)
மேவிய சற்புத்திரமார்க்கம் மெய்த்தொழில்
தாவிப்பதாம் சகமார்க்கம் சக தொழில் - திருமந்:1495/1,2
மேல்
மெய்த்தோற்றத்து (1)
மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் மெய்த்தோற்றத்து
அவ்வாய அந்த கரணம் அகிலமும் - திருமந்:2586/1,2
மேல்
மெய்தான் (1)
மெய்தான் உரைக்கில் விண்ணோர் தொழ செய்வன் - திருமந்:2068/3
மேல்
மெய்ந்நின்ற (3)
விளிந்தவர் மெய்ந்நின்ற ஞானம் உணரார் - திருமந்:527/2
விளங்கிடும் மெய்ந்நின்ற ஞானப்பொருளை - திருமந்:1360/3
விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம் - திருமந்:2616/3
மேல்
மெய்ந்நெறி (4)
வேந்தன் அமரர்க்கு அருளிய மெய்ந்நெறி
ஆர்ந்த சுடர் அன்ன ஆயிரம் நாமமும் - திருமந்:34/2,3
தாம் விதி வேண்டி தலைப்படு மெய்ந்நெறி
தாம் அறிவாலே தலைப்பட்டவாறே - திருமந்:215/3,4
மேல் இங்ஙன் வைத்தது ஓர் மெய்ந்நெறி முன் கண்டு - திருமந்:378/2
மேற்கொள்ளல் ஆவது ஓர் மெய்ந்நெறி ஒன்று உண்டு - திருமந்:2113/3
மேல்
மெய்ப்பட்ட (1)
மெய்ப்பட்ட கல்லை சுமப்போன் விதி போன்றும் - திருமந்:536/2
மேல்
மெய்ப்பதம் (1)
மேவு சிவ துரிய தசி மெய்ப்பதம்
ஓவி விடும் தத்துவ மசி உண்மையே - திருமந்:2568/3,4
மேல்
மெய்ப்பதி (1)
விரைந்து அன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து - திருமந்:2087/1
மேல்
மெய்ப்பரத்தோடு (1)
அ மெய்ப்பரத்தோடு அணுவன் உள் ஆயிட - திருமந்:2455/2
மேல்
மெய்ப்பரன் (3)
மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன்
ஆவயின் ஞான நெறிநிற்றல் அர்ச்சனை - திருமந்:1849/1,2
மீதாந்த காரணோபாதி ஏழ் மெய்ப்பரன்
போதாந்த தற்பதம் போமசி என்பவே - திருமந்:2387/3,4
வேறாகிய பரை யா என்று மெய்ப்பரன்
ஈறான வாசியில் கூட்டும் அது அன்றோ - திருமந்:2499/2,3
மேல்
மெய்ப்பொருள் (11)
வேதன் உரைத்தானும் மெய்ப்பொருள் காட்டவே - திருமந்:52/4
மேல் ஒளி ஆகிய மெய்ப்பொருள் காணுமே - திருமந்:675/4
மெய்ப்பொருள் சொல்லிய மெல் இயலாளுடன் - திருமந்:676/1
மென்மை அது ஆகிய மெய்ப்பொருள் காணுமே - திருமந்:687/4
மென்மை அது ஆகிய மெய்ப்பொருள் கண்டிடின் - திருமந்:689/2
செற்றம் அறுத்த செழும் சுடர் மெய்ப்பொருள்
குற்றம் அறுத்த பொன் போலும் குளிகையே - திருமந்:952/3,4
விண்டிடும் வல்வினை மெய்ப்பொருள் ஆகுமே - திருமந்:1353/4
மெய்ப்பொருள் ஔ முதல் ஹௌ அது ஈறா - திருமந்:1354/1
விளக்கு ஒளி சக்கரம் மெய்ப்பொருள் ஆகும் - திருமந்:1359/2
விளங்கிடும் மேல் வரும் மெய்ப்பொருள் சொல்லின் - திருமந்:1360/1
வேறு ஒரு தெய்வத்தின் மெய்ப்பொருள் நீக்கிடும் - திருமந்:1822/2
மேல்
மெய்ப்பொருளாக (1)
மெய்ப்பொருளாக விளைந்தது ஏது எனின் - திருமந்:688/1
மேல்
மெய்ப்பொருளாள்-தனை (1)
மெல்லியல் ஆகிய மெய்ப்பொருளாள்-தனை
சொல் இயலாலே தொடர்ந்து அங்கு இருந்திடும் - திருமந்:1337/1,2
மேல்
மெய்ம்மை (1)
விதி பல செய்து ஒன்று மெய்ம்மை உணரார் - திருமந்:33/2
மேல்
மெய்ம்மையில் (1)
மெய்ம்மையில் வேதா விரி மிகு கீடாந்தத்து - திருமந்:2244/3
மேல்
மெய்ம்மையே (2)
மேவிய மந்திர மா மாயை மெய்ம்மையே - திருமந்:2242/4
வேதம் சொல் தொம்பதம் ஆகும் தன் மெய்ம்மையே - திருமந்:2438/4
மேல்
மெய்மை (1)
வேகமில் வேதாந்த சித்தாந்த மெய்மை ஒன்று - திருமந்:1429/3
மேல்
மெய்ய (1)
மெய்ய பெருமையர்க்கு அன்பனை இன்பம்செய் - திருமந்:1559/3
மேல்
மெய்யகத்தே (1)
மெய்யகத்தே பெறும் வேம்பு அதுவாமே - திருமந்:207/4
மேல்
மெய்யடியார்க்கு (1)
விதி அது செய்கின்ற மெய்யடியார்க்கு
பதி அது காட்டும் பரமன் நின்றானே - திருமந்:710/3,4
மேல்
மெய்யடியார்களே (1)
மேல் உணர்வார் சிவன் மெய்யடியார்களே - திருமந்:1883/4
மேல்
மெய்யது (1)
வேண்டிய ஆறின் நுண் மெய்யது பெற்ற பின் - திருமந்:1296/2
மேல்
மெய்யர்க்கு (1)
மெய்யர்க்கு பற்று கொடுக்கும் கொடாது போய் - திருமந்:564/3
மேல்
மெய்யர்க்கே (1)
மெய்கலந்து இன்பம் விளைந்திடும் மெய்யர்க்கே - திருமந்:2600/4
மேல்
மெய்யறம் (1)
விளைவு அறிவார் பண்டை மெய்யறம் செய்வார் - திருமந்:1635/3
மேல்
மெய்யறிவு (1)
ஏகிய தொந்த தசி என்ப மெய்யறிவு
ஆகிய சீவன் பரசிவன் ஆமே - திருமந்:2493/3,4
மேல்
மெய்யன் (2)
பொய் இலன் மெய்யன் புவனாபதி எந்தை - திருமந்:1996/1
மெய்யன் அரன்நெறி மேல் உண்டு திண் என - திருமந்:2606/2
மேல்
மெய்யாம் (2)
மெய்யாம் சராசரமாய் வெளி தன்னுள் புக்கு - திருமந்:2235/3
வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல் - திருமந்:2397/1
மேல்
மெய்யில் (2)
பூட்டு ஒத்து மெய்யில் பொறிபட்ட வாயுவை - திருமந்:624/1
மெய்யில் அணிகலன் இரத்தின மா மேனி - திருமந்:1316/3
மேல்
மெய்யின் (1)
விளைந்த எழுத்து அவை மெய்யின் உள் நிற்கும் - திருமந்:1280/3
மேல்
மெய்யினில் (1)
மெய்யினில் தூலம் மிகுத்த முகத்தையும் - திருமந்:2130/1
மேல்
மெய்யினின் (1)
மெய்யினின் உள்ளே விளக்கும் ஒளியது ஆம் - திருமந்:820/2
மேல்
மெய்யும் (1)
மெய்யும் பின் சூக்கமும் மெய் பகுதி மாயை - திருமந்:2208/3
மேல்
மெய்யுரை (2)
விரும்பி நின்றே செயின் மெய்யுரை ஆகும் - திருமந்:1462/2
விளைவு அறிவார் பண்டை மெய்யுரை செய்வார் - திருமந்:1635/2
மேல்
மெய்யுளும் (1)
கண்ணுளும் மெய்யுளும் காணலும் ஆமே - திருமந்:1351/4
மேல்
மெய்யுற்றதாய் (1)
துய்யர் உளத்தில் துளங்கு மெய்யுற்றதாய்
பொய் வகை விட்டு நீ பூசனை செய்யே - திருமந்:1294/3,4
மேல்
மெய்யே (4)
மெய்யே உரைக்கில் விண்ணோர் தொழ செய்வன் - திருமந்:522/3
மெழுகு உருகும் பரிசு எய்திடும் மெய்யே
உழுகின்றது இல்லை ஒளியை அறிந்த பின் - திருமந்:838/2,3
புணர்ந்தேன் புனிதனும் பொய் அல்ல மெய்யே
பணிந்தேன் பகலவன் பாட்டும் ஒலியே - திருமந்:1748/3,4
பொருந்தும் உடல் உயிர் போல் உமை மெய்யே
திருந்த முன் செய்கின்ற தேவர் பிரானே - திருமந்:1791/3,4
மேல்
மெய்யை (1)
அகலிடத்தார் மெய்யை அண்டத்து வித்தை - திருமந்:4/1
மேல்
மெய்யோகம் (1)
கற்பன கற்று கலை மன்னும் மெய்யோகம்
முற்பத ஞான முறைமுறை நண்ணியே - திருமந்:1421/1,2
மேல்
மெய்வழி (1)
விதறு படாமுன்னம் மெய்வழி நின்றால் - திருமந்:2215/3
மேல்
மெய்வீடே (1)
சிவம் ஆகும் மாமோனம் சேர்தல் மெய்வீடே - திருமந்:1013/4
மேல்
மெல் (5)
விரும்புவர் முன் என்னை மெல் இயல் மாதர் - திருமந்:180/1
உலை தந்த மெல் அரி போலும் உலகம் - திருமந்:422/3
மெய்ப்பொருள் சொல்லிய மெல் இயலாளுடன் - திருமந்:676/1
வேய் அன தோளி விரை உறு மெல் மலர் - திருமந்:1104/1
மெல் இசை பாவை வியோமத்தின் மென் கொடி - திருமந்:1152/1
மேல்
மெல்ல (4)
மேவிய சீவனில் மெல்ல நீள் வாயுவும் - திருமந்:456/3
மெல்ல நின்றாளை வினவகில்லாதவர் - திருமந்:1022/3
மெல்ல விளையாடும் விமலன் அகத்திலே - திருமந்:2138/2
மெல்ல தரித்தார் முகத்தார் பசித்தே - திருமந்:2138/4
மேல்
மெல்லியல் (5)
மேதாதி ஈரெட்டும் ஆகிய மெல்லியல்
வேத ஆதி நூலின் விளங்கும் பராபரை - திருமந்:1070/1,2
மெல்லியல் வஞ்சி விடமி கலை ஞானி - திருமந்:1082/1
வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே - திருமந்:1336/4
மெல்லியல் ஆகிய மெய்ப்பொருளாள்-தனை - திருமந்:1337/1
விளங்கிடும் மெல்லியல் ஆனது ஆகும் - திருமந்:1360/2
மேல்
மெல்லியலாளே (1)
மேல் அங்கமாய் நின்ற மெல்லியலாளே - திருமந்:1081/4
மேல்
மெல்லியலாளோடு (1)
விஞ்சையர் வேந்தனும் மெல்லியலாளோடு
நஞ்சுற நாதி நயம் செய்யுமாறே - திருமந்:2272/3,4
மேல்
மெலிந்த (1)
மெலிந்த சினத்தின் உள் வீழ்ந்து ஒழிந்தாரே - திருமந்:266/4
மேல்
மெலிந்து (1)
மெலிந்து அங்கு இருந்திடும் வெல்ல ஒண்ணாதே - திருமந்:673/4
மேல்
மெழுகல் (1)
அளிது இன் மெழுகல் அது தூர்த்தல் வாழ்த்தல் - திருமந்:1502/2
மேல்
மெழுகு (1)
மெழுகு உருகும் பரிசு எய்திடும் மெய்யே - திருமந்:838/2
மேல்
மெழுகுடன் (1)
துன்றும் தயிர் நெய் பால் துய்ய மெழுகுடன்
கன்றிய செம்பு கனல் இரதம் சலம் - திருமந்:1720/1,2
மேல்
மெள்ள (2)
மெள்ள குடைந்து நின்று ஆடார் வினை கெட - திருமந்:509/2
மிடா கொண்டு சோறு அட்டு மெள்ள விழுங்கார் - திருமந்:2878/3
மேல்
மென் (3)
அரும்பு ஒத்த மென் முலை ஆய் இழையார்க்கு - திருமந்:180/3
சூது ஒத்த மென் முலையாளும் நல் சூதனும் - திருமந்:826/3
மெல் இசை பாவை வியோமத்தின் மென் கொடி - திருமந்:1152/1
மேல்
மென்மை (2)
மென்மை அது ஆகிய மெய்ப்பொருள் காணுமே - திருமந்:687/4
மென்மை அது ஆகிய மெய்ப்பொருள் கண்டிடின் - திருமந்:689/2
மேல்
|
|
|