|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
யோக்யர் (1)
பெரிய மடம் மேவிய சுகத்தனே யோக்யர் பெருமாளே - திருப்:823/16
மேல்
யோக (17)
கவலைப்படுகின்ற யோக கற்பனை மருவு சிந்தை போய்விட கலகமிடும் அஞ்சும் வேர் அற செயல் மாள - திருப்:211/2
சகத்ர யோக வித தக்ஷண தெக்ஷிண குருநாதா - திருப்:273/8
லக்கு ஆக யோக ஜெப தப நேசித்து ஆரவார பரிபுரம் பாதத்து ஆளுமாறு திரு உள நினையாதோ - திருப்:361/4
பல பலவாம் யோக சாதக உடல் கொடு மாயாத போதக பதி அழியா வீடு போய் இனி அடைவேனோ - திருப்:416/4
எனை மனம் உருக்கி யோக அநுபூதி அளித்த பாத எழுத அரிய பச்சை மேனி உமை பாலா - திருப்:610/7
திகழ் உற்றிடு யோக தவ மிகு முக்கிய மாதவர்கள் இதயத்திடமே மருவிய பெருமாளே - திருப்:687/8
அயில் உறை கை தல சீலா பூரண பர யோக - திருப்:697/6
யோக சமாதி கொண்டு மோக பசாசு மண்டும் லோகத்தில் மாய்வது என்றும் ஒழியாதோ - திருப்:709/4
பசித பாரண வாரண துவச ஏடக மா அயில் பரவு பாணித பாவல பர யோக - திருப்:713/6
இரவு பகல் போன ஞான பரமசிவ யோக தீரம் என மொழியும் வீசு பாச கன கோப - திருப்:824/3
சரியை க்ரியா யோக நியமத்தின் மாயாது சலன படா ஞானம் வந்து தாராய் - திருப்:907/4
ஞாலம் உண்ட பிராணாதாரனும் யோக மந்திர மூலாதாரனு - திருப்:998/3
சரச மோகம் மா வேத சரியை யோக க்ரியா ஞான சமுகமோ தரா பூத முதலான - திருப்:1047/3
சுருதி வெகுமுக புராண கோடிகள் சரியை கிரியை மக யோக மோகிகள் - திருப்:1157/1
ஓ நமசிவாய குரு பாதம் அதிலே பணியும் யோக மயிலா அமலை மகிழ் பாலா - திருப்:1243/6
யோக பேத வகை எட்டும் இதில் ஒட்டும் வகை இன்று தாராய் - திருப்:1313/8
உடல் செய் கோர பாழ் வயிற்றை நிதமும் ஊணினால் உயர்த்தி உயிரின் நீடு யோக சித்தி பெறலாமே - திருப்:1316/3
மேல்
யோகத்தின் (1)
சரியை க்ரியை யோகத்தின் வழி வரு க்ருபா சுத்தர் தமை உணர ராகத்தின் வசமாக மேவியே - திருப்:641/2
மேல்
யோகத்தினர் (1)
கற்ற பேர் வைப்பு என செத்தை யோகத்தினர் கைக்குள் நான் வெட்கி நிற்பது பாராய் - திருப்:773/4
மேல்
யோகத்து (6)
யோகத்து ஆறு உபதேச தேசிக ஊமை தேவர்கள் தம்பிரானே - திருப்:59/8
கேசவன் பரவு குருமலையில் யோகத்து அமர்ந்த பெருமாளே - திருப்:222/8
பொய்யும் அகலாத மெய்யை வளர் ஆவி உய்யும் வகை யோகத்து அணுகாதே - திருப்:531/3
பதிவாகி சிவஞான பர யோகத்து அருள்வாயே - திருப்:923/2
பழுது அற ஓதி கடந்து பகை வினை தீர துறந்து பலபல யோகத்து இருந்து மத ராசன் - திருப்:1174/1
இக்கு வேளை கருக முக்கண் நாடி கனலை இட்டு யோகத்து அமர் இறையோர் முன் - திருப்:1267/5
மேல்
யோகத்தை (1)
யோகத்தை சேருமாறு மெய்ஞ்ஞானத்தை போதியாய் இனி ஊன் அத்தை போடிடாது மயங்கலாமோ - திருப்:561/4
மேல்
யோகம் (11)
மூல பர யோகம் மேல் கொண்டிடா நின்றது உளதாகி - திருப்:94/4
சேர் பஞ்ச வடிவி மோகி யோகம் கொள் மவுன ஜோதி சேர் பங்கின் அமல நாதன் அருள் பாலா - திருப்:162/6
தருணம் இது ஐயா மிகுத்த கனம் அது உறு நீள் சவுக்ய சகல செல்வ யோகம் மிக்க பெருவாழ்வு - திருப்:216/5
சந்த்ர சூரியர் தாமும் அசபையும் விந்து நாதமும் ஏக வடிவம் அதன் சொரூபம் அதாக உறைவது சிவ யோகம்
தங்கள் ஆணவ மாயை கரும மலங்கள் போய் உபதேச குருபர சம்ப்ரதாயமொடு ஏயு நெற அது பெறுவேனோ - திருப்:575/3,4
ஓது மறை ஆகமம் சொல் யோகம் அதுவே புரிந்து ஊழி உணர்வார்கள்தங்கள் வினை தீர - திருப்:611/7
அன்னிய சற்று உலா மூச்சு அடங்க யோகம் - திருப்:811/4
நீரில் மிகுந்து உழல் ஆக்கையில் திட யோகம் மிகுந்திட நீக்கி இப்படி - திருப்:921/7
சகல வேத சாமுத்ரியங்கள் சமயம் ஆறு லோக த்ரயங்கள் தரும நீதி சேர் தத்துவங்கள் தவ யோகம்
தவறு இலாமல் ஆள பிறந்து தமிழ் செய் மாறர் கூன் வெப்போடு அன்று தவிர ஆலவாயில் சிறந்த பெருமாளே - திருப்:962/7,8
யோகம் அற்று உழல் ஆசா பசாசனை மோகம் முற்றிய மோடாதி மோடனை - திருப்:993/3
ஓடும் சிறு உயிர் மீளும்படி நல யோகம் புரிவது கிடையாதோ - திருப்:1036/4
வாரா உலாவி உணரும் யோகம் குலைய வீக்கிய வேளை கோபித்து ஏற பார்த்து அருளிய பார்வை - திருப்:1150/10
மேல்
யோகமதே (1)
வாக்கா சிவ மா மதமே மிக ஊக்கு அதிப யோகமதே உறும் - திருப்:681/11
மேல்
யோகமும் (2)
அடலை உடம்பை அவாவியே அநவரதம் சில சாரம் இலாத அவுடதமும் பல யோகமும் முயலா நின்று - திருப்:815/3
பூத கலாதிகள் கொண்டு யோகமும் ஆக மகிழ்ந்து பூசைகள் யாது நிகழ்ந்து பிழை கோடி - திருப்:1264/1
மேல்
யோகர் (2)
விடை கொளுவு பாகர் விமலர் திரிசூலர் விகிர்தர் பர யோகர் நிலவோடே - திருப்:245/5
படர் இச்சை ஒழித்த தவ சரியை க்ரியை யோகர் - திருப்:558/10
மேல்
யோகர்க்கும் (1)
சரியையார்க்கும் அ கிரியையார்க்கும் நல் சகல யோகர்க்கும் எட்ட அரிதாய - திருப்:643/1
மேல்
யோகவரே (1)
குடில் இல்லமே தரு நாள் எது மொழி நல்ல யோகவரே பணி - திருப்:682/7
மேல்
யோகி (12)
அவத்திலே குவால் மூலி புசித்து வாடும் ஆயாச அசட்டு யோகி ஆகாமல் மலம் மாயை - திருப்:355/2
செகத்தி யாவும் வேறாக நிகழ்ச்சியா மநோதீத சிவ சொரூப மா யோகி என ஆள்வாய் - திருப்:355/4
சலில மாரி சிவாய மனோகரி பரை யோகி - திருப்:384/10
கர உதாசனாசாரி பரசு பாணி பானாளி கணமொடு ஆடி கா யோகி சிவயோகி - திருப்:577/2
பரம யோகி மா யோகி பரி அரா ஜடா சூடி பகர் ஒணாத மா ஞானி பசு ஏறி - திருப்:577/3
பரம யோகி மா யோகி பரி அரா ஜடா சூடி பகர் ஒணாத மா ஞானி பசு ஏறி - திருப்:577/3
அருள்பெறா அனாசார கரும யோகி ஆகாமல் அவனி மீதில் ஓயாது தடுமாறும் - திருப்:1044/2
உருகி ஆரியாசார பரம யோகி ஆம் ஆறும் உன் உபய பாத ராசீகம் அருள்வாயே - திருப்:1044/4
பரத நீல மாயூர வரத நாக கேயூர பரம யோகி மா தேசி மிகு ஞான - திருப்:1047/5
யோகி ஞானி பரப்ரமி நீலி நாரணி உத்தமி ஓலமான மறைச்சி சொல் அபிராமி - திருப்:1214/6
நாத பராபரம் என்ற யோகி உலாசம் அறிந்து ஞான சுவாசம் உணர்ந்து ஒளி காண - திருப்:1264/3
பலிகொள் கபாலி யோகி பரம கல்யாணி லோக பதிவ்ரதை வேத ஞானி புதல்வோனே - திருப்:1308/7
மேல்
யோகிகள் (4)
நாசிக்குள் ப்ராண வாயுவை ரேசித்து எட்டாத யோகிகள் நாடிற்று காணவொணாது என நின்ற நாதா - திருப்:561/7
சேரொணா வகை வெளியே திரியும் மெய்ஞ்ஞான யோகிகள் உளமே உறை தரு - திருப்:736/15
தெளியும் மந்த்ர கலா பாய் யோகிகள் அயல் விளங்கு சுவாமீ காமரு - திருப்:876/15
பதி குடி ஏற வேல் தொடு முருக மயூர வாகன பரவச ஞான யோகிகள் பெருமாளே - திருப்:1218/8
மேல்
யோகிகளாய் (1)
காணுதல் கூர் தவம் செய் யோகிகளாய் விளங்க அருள்வாயே - திருப்:82/8
மேல்
யோகியர் (3)
வசிட்டர் காசிபர் தவத்தான யோகியர் அகத்ய மா முநி இடைக்காடர் கீரனும் - திருப்:650/11
வைத்த போதக சித்த யோகியர் வாழ்நாள் கோள் நாள் வீண் நாள் காணார் அது போலே - திருப்:950/2
மந்திர தந்திர முத்த யோகியர் அஞ்சலி செங்கை முடிக்கவே அருள் - திருப்:1324/15
மேல்
யோகினி (5)
குடிலை யோகினி சண்டினி குண்டலி எமது ஆயி - திருப்:40/10
பங்கம் இலா நீலி மோடி பயங்கரி மா காளி யோகினி பண்டு சுரா பான சூரனொடு எதிர் போர் கண்டு - திருப்:53/6
மவுந சுந்தரி காரணி யோகினி சிறுவோனே - திருப்:198/12
வாதாடி மோடி காடுகாள் உமை மா ஞால லீலி ஆல போசனி மா காளி சூலி வாலை யோகினி அம் பவானி - திருப்:1126/6
தோரணி புயத்தி யோகினி சமர்த்தி தோகை உமை பெற்ற புதல்வோனே - திருப்:1319/7
மேல்
யோகினீ (1)
பரிபுரார பாதார சரணி சாமளாகார பரம யோகினீ மோகி மகமாயி - திருப்:1046/6
மேல்
யோகீசர் (1)
ஆறாறின் அதிகம் அக்க்ராயம் அநுதினம் யோகீசர் எவரும் எட்டாத பர துரியாதீதம் - திருப்:203/3
மேல்
யோசித்து (1)
யோசித்து அயர் உடம்பை நேசித்து உறாது அலைந்து ரோம துவாரம் எங்கும் உயிர் போக - திருப்:709/3
மேல்
யோனி (3)
கரி புராரி காமாரி திரிபுராரி தீ ஆடி கயிலையாளி காபாலி கழை யோனி
கர உதாசனாசாரி பரசு பாணி பானாளி கணமொடு ஆடி கா யோகி சிவயோகி - திருப்:577/1,2
கமல யோனி வீடான ககன கோள மீது ஓடி கலப நீல மாயூர இளையோனே - திருப்:1045/7
இப்படி யோனி வாய்தொறும் உற்பவியா விழா உலகில் தடுமாறியே திரிதரு காலம் - திருப்:1205/3
மேல்
யோனியை (1)
மகிதலம் அணைந்த அத்த யோனியை வரைவு அற மணந்து நித்த நீடு அருள் - திருப்:171/13
மேல்
|
|
|