<<முந்திய பக்கம்

திருநாவுக்கரசர் (அப்பர்) இயற்றிய தேவாரம் (திருமுறை 4,5,6)
6.ஆறாம் திருமுறை
(2086 - 3066)
4.நான்காம்_திருமுறை
(1 - 1070)
5.ஐந்தாம் திருமுறை
(1071 - 2085)
பதிக எண்கள் தேவையான திருமுறையின் மீதும் பின்னர் பதிக எண் மீதும் சொடுக்குக
1 || 51
2 || 52
3 || 53
4 || 54
5 || 55
6 || 56
7 || 57
8 || 58
9 || 59
10 || 60
11 || 61
12 || 62
13 || 63
14 || 64|
15 || 65
16 || 66
17 || 67
18 || 68
19 || 69
20 || 70
21 || 71
22 || 72
23 || 73
24 || 74
25 || 75
26 || 76
27 || 77
28 || 78
29 || 79
30 || 80
31 || 81
32 || 82
33 || 83
34 || 84
35 || 85
36 || 86
37 || 87
38 || 88
39 || 89
40 || 90
41 || 91
42 || 92
43 || 93
44 || 94
45 || 95
46 || 96
47 || 97
48 || 98
49 || 99
50 -----

 திருநாவுக்கரசர் (அப்பர்) - தேவாரம் 6. ஆறாம் திருமுறை 

 1. கோயில் - பெரிய திருத்தாண்டகம்

#2086
அரியானை அந்தணர்-தம் சிந்தையானை அரு மறையின் அகத்தானை அணுவை யார்க்கும்
தெரியாத தத்துவனை தேனை பாலை திகழ் ஒளியை தேவர்கள்-தம் கோனை மற்றை
கரியானை நான்முகனை கனலை காற்றை கனை கடலை குல வரையை கலந்து நின்ற
பெரியானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே

 மேல்

#2087
கற்றானை கங்கை வார்சடையான்-தன்னை காவிரி சூழ் வலஞ்சுழியும் கருதினானை
அற்றார்க்கும் அலந்தார்க்கும் அருள்செய்வானை ஆரூரும் புகுவானை அறிந்தோம்அன்றே
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதானை வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்த
பெற்றானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே

 மேல்

#2088
கரு மானின் உரி அதளே உடையா வீக்கி கனை கழல்கள் கலந்து ஒலிப்ப அனல் கை ஏந்தி
வரு மான திரள் தோள்கள் மட்டித்து ஆட வளர் மதியம் சடைக்கு அணிந்து மான் நேர் நோக்கி
அரு மான வாள்முகத்தாள் அமர்ந்து காண அமரர் கணம் முடி வணங்க ஆடுகின்ற
பெருமானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே

 மேல்

#2089
அரும் தவர்கள் தொழுது ஏத்தும் அப்பன்-தன்னை அமரர்கள்-தம் பெருமானை அரனை மூவா
மருந்து அமரர்க்கு அருள்புரிந்த மைந்தன்-தன்னை மறி கடலும் குல வரையும் மண்ணும் விண்ணும்
திருந்து ஒளிய தாரகையும் திசைகள் எட்டும் திரி சுடர்கள் ஓர் இரண்டும் பிறவும் ஆய
பெருந்தகையை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே

 மேல்

#2090
அரும் துணையை அடியார்-தம் அல்லல் தீர்க்கும் அரு மருந்தை அகல் ஞாலத்து அகத்துள் தோன்றி
வரும் துணையும் சுற்றமும் பற்றும் விட்டு வான் புலன்கள் அகத்து அடக்கி மடவாரோடும்
பொருந்து அணை மேல் வரும் பயனை போக மாற்றி பொது நீக்கி தனை நினைய வல்லோர்க்கு என்றும்
பெரும் துணையை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே

 மேல்

#2091
கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன்-தன்னை கன வயிர குன்று அனைய காட்சியானை
அரும்பு அமரும் பூம் கொன்றைத்தாரான்-தன்னை அரு மறையோடு ஆறு அங்கம் ஆயினானை
சுரும்பு அமரும் கடி பொழில்கள் சூழ் தென் ஆரூர் சுடர் கொழுந்தை துளக்கு இல்லா விளக்கை மிக்க
பெரும் பொருளை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே

 மேல்

#2092
வரும் பயனை எழு நரம்பின் ஓசையானை வரை சிலையா வானவர்கள் முயன்ற வாளி
அரும் பயம் செய் அவுணர் புரம் எரிய கோத்த அம்மானை அலை கடல் நஞ்சு அயின்றான்-தன்னை
சுரும்பு அமரும் குழல் மடவார் கடைக்கண் நோக்கில் துளங்காத சிந்தையராய் துறந்தோர் உள்ள
பெரும் பயனை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே

 மேல்

#2093
கார் ஆனை ஈர் உரிவை போர்வையானை காமரு பூம் கச்சி ஏகம்பன்-தன்னை
ஆரேனும் அடியவர்கட்கு அணியான்-தன்னை அமரர்களுக்கு அறிவு அரிய அளவுஇலானை
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற பரஞ்சுடரை பரனை எண் இல்
பேரானை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே

 மேல்

#2094
முற்றாத பால் மதியம் சூடினானை மூஉலகம் தான் ஆய முதல்வன்-தன்னை
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான்-தன்னை திகழ் ஒளியை மரகதத்தை தேனை பாலை
குற்றாலத்து அமர்ந்து உறையும் குழகன்-தன்னை கூத்து ஆட வல்லானை கோனை ஞானம்
பெற்றார்கள் பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே

 மேல்

#2095
கார் ஒளிய திரு மேனி செங்கண்மாலும் கடி கமலத்து இருந்த அயனும் காணா வண்ணம்
சீர் ஒளிய தழல் பிழம்பாய் நின்ற தொல்லை திகழ் ஒளியை சிந்தை-தனை மயக்கம் தீர்க்கும்
ஏர் ஒளியை இரு நிலனும் விசும்பும் விண்ணும் ஏழ்உலகும் கடந்து அண்டத்து அப்பால் நின்ற
பேர் ஒளியை பெரும்பற்றப்புலியூரானை பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே

 மேல்

 2. கோயில் - புக்க திருத்தாண்டகம்

#2096
மங்குல் மதி தவழும் மாட வீதி மயிலாப்பில் உள்ளார் மருகல் உள்ளார்
கொங்கில் கொடுமுடியார் குற்றாலத்தார் குடமூக்கின் உள்ளார் போய் கொள்ளம்பூதூர்
தங்கும் இடம் அறியார் சால நாளார் தரமபுரத்து உள்ளார் தக்களூரார்
பொங்கு வெண் நீறு அணிந்து பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே

 மேல்

#2097
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் இ நாள் நனி பள்ளி உள்ளார் போய் நல்லூர் தங்கி
பாக பொழுது எலாம் பாசூர் தங்கி பரிதிநியமத்தார் பன்னிரு நாள்
வேதமும் வேள்வி புகையும் ஓவா விரி நீர் மிழலை எழு நாள் தங்கி
போகமும் பொய்யா பொருளும் ஆனார் புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே

 மேல்

#2098
துறம் காட்டி எல்லாம் விரித்தார் போலும் தூ மதியும் பாம்பும் உடையார் போலும்
மறம் காட்டி மும்மதிலும் எய்தார் போலும் மந்திரமும் தந்திரமும் தாமே போலும்
அறம் காட்டி அந்தணர்க்கு அன்று ஆல நீழல் அறம் அருளிச்செய்த அரனார் இ நாள்
புறங்காட்டு எரி ஆடி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே

 மேல்

#2099
வார் ஏறு வனமுலையாள் பாகம் ஆக மழுவாள் கை ஏந்தி மயானத்து ஆடி
சீர் ஏறு தண் வயல் சூழ் ஓத வேலி திரு வாஞ்சியத்தார் திரு நள்ளாற்றார்
கார் ஏறு கண்டத்தார் காமன் காய்ந்த கண் விளங்கு நெற்றியார் கடல் நஞ்சு உண்டார்
போர் ஏறு தாம் ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே

 மேல்

#2100
கார் ஆர் கமழ் கொன்றை கண்ணி சூடி கபாலம் கை ஏந்தி கணங்கள் பாட
ஊரார் இடு பிச்சை கொண்டு உழலும் உத்தமராய் நின்ற ஒருவனார்தாம்
சீர் ஆர் கழல் வணங்கும் தேவதேவர் திரு ஆரூர் திரு மூலட்டானம் மேயார்
போர ஆர் விடை ஏறி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே

 மேல்

#2101
காது ஆர் குழையினர் கட்டங்கத்தர் கயிலாய மா மலையார் காரோணத்தார்
மூதாயர் மூதாதை இல்லார் போலும் முதலும் இறுதியும் தாமே போலும்
மாது ஆய மாதர் மகிழ அன்று வன் மத வேள்-தன் உடலம் காய்ந்தார் இ நாள்
போது ஆர் சடை தாழ பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே

 மேல்

#2102
இறந்தார்க்கும் என்றும் இறவாதார்க்கும் இமையவர்க்கும் ஏகமாய் நின்று சென்று
பிறந்தார்க்கும் என்றும் பிறவாதார்க்கும் பெரியான் தன் பெருமையே பேச நின்று
மறந்தார் மனத்து என்றும் மருவார் போலும் மறைக்காட்டு உறையும் மழுவாள் செல்வர்
புறம் தாழ் சடை தாழ பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே

 மேல்

#2103
குலா வெண் தலை மாலை என்பு பூண்டு குளிர் கொன்றை தார் அணிந்து கொல் ஏறு ஏறி
கலா வெம் களிற்று உரிவை போர்வை மூடி கை ஓடு அனல் ஏந்தி காடு உறைவார்
நிலா வெண் மதி உரிஞ்ச நீண்ட மாடம் நிறை வயல் சூழ் நெய்த்தானம் மேய செல்வர்
புலா வெண் தலை ஏந்தி பூதம் சூழ புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே

 மேல்

#2104
சந்தித்த கோவணத்தர் வெண் நூல் மார்பர் சங்கரனை கண்டீரே கண்டோம் இ நாள்
பந்தித்த வெள் விடையை பாய ஏறி படு தலையில் என்-கொலோ ஏந்திக்கொண்டு
வந்து ஈங்கு என் வெள் வளையும் தாமும் எல்லாம் மணி ஆரூர் நின்று அந்தி கொள்ளக்கொள்ள
பொன் தீ மணி விளக்கு பூதம் பற்ற புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே

 மேல்

#2105
பாதங்கள் நல்லார் பரவி ஏத்த பத்திமையால் பணி செய்யும் தொண்டர்-தங்கள்
ஏதங்கள் தீர இருந்தார் போலும் எழு பிறப்பும் ஆள் உடைய ஈசனார்தாம்
வேதங்கள் ஓதி ஓர் வீணை ஏந்தி விடை ஒன்று தாம் ஏறி வேத கீதர்
பூதங்கள் சூழ புலி தோல் வீக்கி புலியூர் சிற்றம்பலமே புக்கார்தாமே

 மேல்

#2106
பட்டு உடுத்து தோல் போர்த்து பாம்பு ஒன்று ஆர்த்து பகவனார் பாரிடங்கள் சூழ நட்டம்
சிட்டராய் தீ ஏந்தி செல்வார்-தம்மை தில்லை சிற்றம்பலத்தே கண்டோம் இ நாள்
விட்டு இலங்கு சூலமே வெண் நூல் உண்டே ஓதுவதும் வேதமே வீணை உண்டே
கட்டங்கம் கையதே சென்று காணீர் கறை சேர் மிடற்று எம் கபாலியார்க்கே

 மேல்

 3. திரு அதிகை வீரட்டானம் - ஏழைத்திருத்தாண்டகம்

#2107
வெறி விரவு கூவிள நல் தொங்கலானை வீரட்டானத்தானை வெள்ஏற்றினானை
பொறி அரவினானை புன் ஊர்தியானை பொன்நிறத்தினானை புகழ் தக்கானை
அறிதற்கு அரிய சீர் அம்மான்-தன்னை அதியரையமங்கை அமர்ந்தான்-தன்னை
எறி கெடிலத்தானை இறைவன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே

 மேல்

#2108
வெள்ளி குன்று அன்ன விடையான்-தன்னை வில் வலான் வில் வட்டம் காய்ந்தான்-தன்னை
புள்ளி வரி நாகம் பூண்டான்-தன்னை பொன் பிதிர்ந்து அன்ன சடையான்-தன்னை
வள்ளி வளை தோள் முதல்வன்-தன்னை வாரா உலகு அருள வல்லான்-தன்னை
எள்க இடு பிச்சை ஏற்பான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே

 மேல்

#2109
முந்தி உலகம் படைத்தான்-தன்னை மூவா முதல் ஆய மூர்த்தி-தன்னை
சந்த வெண் திங்கள் அணிந்தான்-தன்னை தவ நெறிகள் சாதிக்க வல்லான்-தன்னை
சிந்தையில் தீர்வினையை தேனை பாலை செழும் கெடில வீரட்டம் மேவினானை
எந்தை பெருமானை ஈசன்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே

 மேல்

#2110
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மதியமும் ஞாயிறும் காற்றும் தீயும்
அந்தரமும் அலை கடலும் ஆனான்-தன்னை அதியரையமங்கை அமர்ந்தான்-தன்னை
கந்தருவம் செய்து இருவர் கழல் கைகூப்பி கடி மலர்கள் பல தூவி காலை மாலை
இந்திரனும் வானவரும் தொழ செல்வானை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே

 மேல்

#2111
ஒரு பிறப்பு இல் அரன் அடியை உணர்ந்தும் காணார் உயர் கதிக்கு வழி தேடி போகமாட்டார்
வரு பிறப்பு ஒன்று உணராது மாசு பூசி வழி காணாதவர் போல்வார் மனத்தன் ஆகி
அரு பிறப்பை அறுப்பிக்கும் அதிகைஊரன் அம்மான்-தன் அடி இணையே அணைந்து வாழாது
இரு பிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொல்கேட்டு ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே

 மேல்

#2112
ஆறு ஏற்க வல்ல சடையான்-தன்னை அஞ்சனம் போலும் மிடற்றான்-தன்னை
கூறு ஏற்க கூறு அமர வல்லான்-தன்னை கோல் வளை கை மாதராள்_பாகன்-தன்னை
நீறு ஏற்ப பூசும் அகலத்தானை நின்மலன்-தன்னை நிமலன்-தன்னை
ஏறு ஏற்க ஏறுமா வல்லான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே

 மேல்

#2113
குண்டு ஆக்கனாய் உழன்று கையில் உண்டு குவிமுலையார்-தம் முன்னே நாணம் இன்றி
உண்டி உகந்து அமணே நின்றார் சொல்கேட்டு உடன் ஆகி உழிதந்தேன் உணர்வு ஒன்று இன்றி
வண்டு உலவு கொன்றை அம் கண்ணியானை வானவர்கள் ஏத்தப்படுவான்-தன்னை
எண் திசைக்கும் மூர்த்தியாய் நின்றான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே

 மேல்

#2114
உறி முடித்த குண்டிகை தம் கையில் தூக்கி ஊத்தை வாய் சமணர்க்கு ஓர் குண்டு ஆக்கனாய்
கறி விரவு நெய் சோறு கையில் உண்டு கண்டார்க்கு பொல்லாத காட்சி ஆனேன்
மறி திரை நீர் பவ்வம் நஞ்சு உண்டான்-தன்னை மறித்து ஒரு கால் வல்வினையேன் நினைக்கமாட்டேன்
எறி கெடிலநாடர் பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே

 மேல்

#2115
நிறை ஆர்ந்த நீர்மையாய் நின்றான்-தன்னை நெற்றி மேல் கண் ஒன்று உடையான்-தன்னை
மறையானை மாசு ஒன்று இலாதான்-தன்னை வானவர் மேல் மலர் அடியை வைத்தான்-தன்னை
கறையானை காது ஆர் குழையான்-தன்னை கட்டங்கம் ஏந்திய கையான்-தன்னை
இறையானை எந்தை பெருமான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே

 மேல்

#2116
தொல்லை வான் சூழ்வினைகள் சூழ போந்து தூற்றியேன் ஆற்றியேன் சுடராய் நின்று
வல்லையே இடர் தீர்த்து இங்கு அடிமைகொண்ட வானவர்க்கும் தானவர்க்கும் பெருமான்-தன்னை
கொல்லை வாய் குருந்து ஒசித்து குழலும் ஊதும் கோவலனும் நான்முகனும் கூடி எங்கும்
எல்லை காண்பு அரியானை எம்மான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே

 மேல்

#2117
முலை மறைக்கப்பட்டு நீராட பெண்கள் முறைமுறையால் நம் தெய்வம் என்று தீண்டி
தலை பறிக்கும் தம்மையர்கள் ஆகி நின்று தவமே என்று அவம் செய்து தக்கது ஓரார்
மலை மறிக்க சென்ற இலங்கை_கோனை மதன் அழிய செற்ற சேவடியினானை
இலை மறித்த கொன்றை அம் தாரான்-தன்னை ஏழையேன் நான் பண்டு இகழ்ந்த ஆறே

 மேல்

 4. திரு அதிகை வீரட்டானம் - அடையாளத்திருத்தாண்டகம்

#2118
சந்திரனை மா கங்கை திரையால் மோத சடா மகுடத்து இருத்துமே சாமவேத
கந்தருவம் விரும்புமே கபாலம் ஏந்து கையனே மெய்யனே கனக மேனி
பந்து அணவு மெல்விரலாள் பாகன் ஆமே பசு ஏறுமே பரமயோகி ஆமே
ஐந்தலைய மாசுணம் கொண்டு அரை ஆர்க்குமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே

 மேல்

#2119
ஏறு ஏறி ஏழ்உலகம் உழிதர்வானே இமையவர்கள் தொழுது ஏத்த இருக்கின்றானே
பாறு ஏறு படு தலையில் பலி கொள்வானே பட அரவம் தட மார்பில் பயில்வித்தானே
நீறு ஏறு செழும் பவள குன்று ஒப்பானே நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தானே
ஆறு ஏறு சடை முடி மேல் பிறை வைத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே

 மேல்

#2120
முண்டத்தின் பொலிந்து இலங்கு நெற்றியானே முதல் ஆகி நடு ஆகி முடிவு ஆனானே
கண்டத்தில் வெண் மருப்பின் காறையானே கதம் நாகம் கொண்டு ஆடும் காட்சியானே
பிண்டத்தின் இயற்கைக்கு ஓர் பெற்றியானே பெரு நிலம் நீர் தீ வளி ஆகாசம் ஆகி
அண்டத்துக்கு அப்பாலாய் இ பாலானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே

 மேல்

#2121
செய்யனே கரியனே கண்டம் பைம் கண் வெள் எயிற்ற ஆடு அரவனே வினைகள் போக
வெய்யனே தண் கொன்றை மிலைத்த சென்னி சடையனே விளங்கு மழு சூலம் ஏந்தும்
கையனே காலங்கள் மூன்று ஆனானே கருப்பு வில் தனி கொடும் பூண் காமன் காய்ந்த
ஐயனே பருத்து உயர்ந்த ஆன் ஏற்றானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே

 மேல்

#2122
பாடுமே ஒழியாமே நால் வேதமும் படர் சடை மேல் ஒளி திகழ பனி வெண் திங்கள்
சூடுமே அரை திகழ தோலும் பாம்பும் சுற்றுமே தொண்டை வாய் உமை ஓர்பாகம்
கூடுமே குட முழவம் வீணை தாளம் குறு நடைய சிறு பூதம் முழக்க மா கூத்து
ஆடுமே அம் தட கை அனல் ஏந்துமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே

 மேல்

#2123
ஒழித்திடுமே உள்குவார் உள்ளத்து உள்ள உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக்கண்ணால்
விழித்திடுமே காமனையும் பொடியாய் வீழ வெள்ள புனல் கங்கை செம் சடை மேல்
இழித்திடுமே ஏழ்உலகும் தான் ஆகுமே இயங்கும் திரிபுரங்கள் ஓர் அம்பினால்
அழித்திடுமே ஆதி மா தவத்து உளானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே

 மேல்

#2124
குழலோடு கொக்கரை கைத்தாளம் மொந்தை குறள் பூதம் முன் பாட தான் ஆடுமே
கழல் ஆடு திரு விரலால் கரணம்செய்து கனவின்-கண் திரு உருவம் தான் காட்டுமே
எழில் ஆரும் தோள் வீசி நடம் ஆடுமே ஈம புறங்காட்டில் ஏமம்-தோறும்
அழல் ஆடுமே அட்டமூர்த்தி ஆமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே

 மேல்

#2125
மால் ஆகி மதம் மிக்க களிறு-தன்னை வதைசெய்து மற்று அதனின் உரிவை கொண்டு
மேலாலும் கீழாலும் தோன்றா வண்ணம் வெம் புலால் கை கலக்க மெய் போர்த்தானே
கோலாலம் பட வரை நட்டு அரவு சுற்றி குரை கடலை திரை அலற கடைந்து கொண்ட
ஆலாலம் உண்டு இருண்ட கண்டத்தானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே

 மேல்

#2126
செம்பொனால் செய்து அழகு பெய்தால் போலும் செம் சடை எம்பெருமானே தெய்வம் நாறும்
வம்பின் நாள் மலர் கூந்தல் உமையாள் காதல் மணவாளனே வலங்கை மழுவாளனே
நம்பனே நான்மறைகள் தொழ நின்றானே நடுங்காதார் புரம் மூன்றும் நடுங்க செற்ற
அம்பனே அண்டகோசத்து உளானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே

 மேல்

#2127
எழுந்த திரை நதி துவலை நனைந்த திங்கள் இள நிலா திகழ்கின்ற வளர் சடையனே
கொழும் பவள செம் கனி வாய் காமக்கோட்டி கொங்கை இணை அமர் பொருது கோலம் கொண்ட
தழும்பு உளவே வரை மார்பில் வெண் நூல் உண்டே சாந்தமொடு சந்தனத்தின் அளறு தங்கி
அழுந்திய செம் திரு உருவில் வெண் நீற்றானே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே

 மேல்

#2128
நெடியானும் நான்முகனும் நேடி காணா நீண்டானே நேர் ஒருவர் இல்லாதானே
கொடி ஏறு கோல மா மணி_கண்டனே கொல் வேங்கை அதளனே கோவணவனே
பொடி ஏறு மேனியனே ஐயம் வேண்டி புவலோகம் திரியுமே புரிநூலானே
அடியாரை அமர்_உலகம் ஆள்விக்குமே அவன் ஆகில் அதிகைவீரட்டன் ஆமே

 மேல்

 5. திரு அதிகை வீரட்டானம் - போற்றித்திருத்தாண்டகம்

#2129
எல்லாம் சிவன் என்ன நின்றாய் போற்றி எரி சுடராய் நின்ற இறைவா போற்றி
கொல் ஆர் மழுவாள் படையாய் போற்றி கொல்லும் கூற்று ஒன்றை உதைத்தாய் போற்றி
கல்லாதார் காட்சிக்கு அரியாய் போற்றி கற்றார் இடும்பை களைவாய் போற்றி
வில்லால் வியன் அரணம் எய்தாய் போற்றி வீரட்டம் காதல் விமலா போற்றி

 மேல்

#2130
பாட்டுக்கும் ஆட்டுக்கும் பண்பா போற்றி பல் ஊழி ஆய படைத்தாய் போற்றி
ஓட்டகத்தே ஊணா உகந்தாய் போற்றி உள்குவார் உள்ளத்து உறைவாய் போற்றி
காட்டகத்தே ஆடல் மகிழ்ந்தாய் போற்றி கார் மேகம் அன்ன மிடற்றாய் போற்றி
ஆட்டுவது ஓர் நாகம் அசைத்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி

 மேல்

#2131
முல்லை அம் கண்ணி முடியாய் போற்றி முழு நீறு பூசிய மூர்த்தி போற்றி
எல்லை நிறைந்த குணத்தாய் போற்றி ஏழ் நரம்பின் ஓசை படைத்தாய் போற்றி
சில்லை சிரை தலையில் ஊணா போற்றி சென்று அடைந்தார் தீவினைகள் தீர்ப்பாய் போற்றி
தில்லை சிற்றம்பலம் மேயாய் போற்றி திரு வீரட்டானத்து எம் செல்வா போற்றி

 மேல்

#2132
சாம்பர் அகலத்து அணிந்தாய் போற்றி தவ நெறிகள் சாதித்து நின்றாய் போற்றி
கூம்பி தொழுவார்-தம் குற்றேவலை குறிக்கொண்டு இருக்கும் குழகா போற்றி
பாம்பும் மதியும் புனலும் தம்மில் பகை தீர்த்து உடன்வைத்த பண்பா போற்றி
ஆம்பல் மலர் கொண்டு அணிந்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி

 மேல்

#2133
நீறு ஏறு நீல_மிடற்றாய் போற்றி நிழல் திகழும் வெண் மழுவாள் வைத்தாய் போற்றி
கூறு ஏறு உமை ஒருபால் கொண்டாய் போற்றி கோள் அரவம் ஆட்டும் குழகா போற்றி
ஆறு ஏறு சென்னி உடையாய் போற்றி அடியார்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
ஏறு ஏற என்றும் உகப்பாய் போற்றி இரும் கெடில வீரட்டத்து எந்தாய் போற்றி

 மேல்

#2134
பாடுவார் பாடல் உகப்பாய் போற்றி பழையாற்று பட்டீச்சுரத்தாய் போற்றி
வீடுவார் வீடு அருள வல்லாய் போற்றி வேழத்து உரி வெருவ போர்த்தாய் போற்றி
நாடுவார் நாடற்கு அரியாய் போற்றி நாகம் அரைக்கு அசைத்த நம்பா போற்றி
ஆடும் ஆன் அஞ்சு உகப்பாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி

 மேல்

#2135
மண் துளங்க ஆடல் மகிழ்ந்தாய் போற்றி மால் கடலும் மால் விசும்பும் ஆனாய் போற்றி
விண் துளங்க மும்மதிலும் எய்தாய் போற்றி வேழத்து உரி மூடும் விகிர்தா போற்றி
பண் துளங்க பாடல் பயின்றாய் போற்றி பார் முழுதும் ஆய பரமா போற்றி
கண் துளங்க காமனை முன் காய்ந்தாய் போற்றி கார் கெடிலம் கொண்ட கபாலீ போற்றி

 மேல்

#2136
வெம் சின வெள் ஊர்தி உடையாய் போற்றி விரி சடை மேல் வெள்ளம் படைத்தாய் போற்றி
துஞ்சா பலி தேரும் தோன்றால் போற்றி தொழுத கை துன்பம் துடைப்பாய் போற்றி
நஞ்சு ஒடுங்கும் கண்டத்து நாதா போற்றி நான்மறையோடு ஆறு அங்கம் ஆனாய் போற்றி
அம் சொலாள் பாகம் அமர்ந்தாய் போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி

 மேல்

#2137
சிந்தையாய் நின்ற சிவனே போற்றி சீபர்ப்பதம் சிந்தைசெய்தாய் போற்றி
புந்தியாய் புண்டரிகத்து உள்ளாய் போற்றி புண்ணியனே போற்றி புனிதா போற்றி
சந்தியாய் நின்ற சதுரா போற்றி தத்தவனே போற்றி என் தாதாய் போற்றி
அந்தியாய் நின்ற அரனே போற்றி அலை கெடில வீரட்டத்து ஆள்வாய் போற்றி

 மேல்

#2138
முக்கணா போற்றி முதல்வா போற்றி முருகவேள்-தன்னை பயந்தாய் போற்றி
தக்கணா போற்றி தருமா போற்றி தத்துவனே போற்றி என் தாதாய் போற்றி
தொக்கு அணா என்று இருவர் தோள் கைகூப்ப துளங்காது எரி சுடராய் நின்றாய் போற்றி
எக்கண்ணும் கண் இலேன் எந்தாய் போற்றி எறி கெடில வீரட்டத்து ஈசா போற்றி

 மேல்

 6. திரு அதிகை வீரட்டானம் - திருவடித்திருத்தாண்டகம்

#2139
அரவுஅணையான் சிந்தித்து அரற்றும் அடி அருமறையான் சென்னிக்கு அணி ஆம் அடி
சரவணத்தான் கைதொழுது சாரும் அடி சார்ந்தார்கட்கு எல்லாம் சரண் ஆம் அடி
பரவுவார் பாவம் பறைக்கும் அடி பதினெண் கணங்களும் பாடும் அடி
திரை விரவு தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி

 மேல்

#2140
கொடுவினையார் என்றும் குறுகா அடி குறைந்து அடைந்தார் ஆழாமை காக்கும் அடி
படு முழவம் பாணி பயிற்றும் அடி பதைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்த அடி
கடு முரண் ஏறு ஊர்ந்தான் கழல் சேவடி கடல் வையம் காப்பான் கருதும் அடி
நெடு மதியம் கண்ணி அணிந்தான் அடி நிறை கெடில வீரட்டம் நீங்கா அடி

 மேல்

#2141
வைது எழுவார் காமம் பொய் போகா அடி வஞ்ச வலைப்பாடு ஒன்று இல்லா அடி
கைதொழுது நாம் ஏத்தி காணும் அடி கணக்கு வழக்கை கடந்த அடி
நெய் தொழுது நாம் ஏத்தி ஆட்டும் அடி நீள் விசும்பை ஊடு அறுத்து நின்ற அடி
தெய்வ புனல் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி

 மேல்

#2142
அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும் அடி அழகு எழுதல் ஆகா அருள் சேவடி
சுரும்பித்த வண்டு இனங்கள் சூழ்ந்த அடி சோமனையும் காலனையும் காய்ந்த அடி
பெரும் பித்தர் கூடி பிதற்றும் அடி பிழைத்தார் பிழைப்பு அறிய வல்ல அடி
திருந்து நீர் தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி

 மேல்

#2143
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்ற அடி ஊழி-தோறு ஊழி உயர்ந்த அடி
பொரு கழலும் பல் சிலம்பும் ஆர்க்கும் அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி
இரு நிலத்தார் இன்புற்று அங்கு ஏத்தும் அடி இன்புற்றார் இட்ட பூ ஏறும் அடி
திரு அதிகை தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி

 மேல்

#2144
திருமகட்கு செந்தாமரை ஆம் அடி சிறந்தவர்க்கு தேனாய் விளைக்கும் அடி
பொருளவர்க்கு பொன்னுரையாய் நின்ற அடி புகழ்வார் புகழ் தகைய வல்ல அடி
உரு இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒவ்வா அடி உரு என்று உணரப்படாத அடி
திரு அதிகை தென் கெடில நாடன் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி

 மேல்

#2145
உரைமாலை எல்லாம் உடைய அடி உரையால் உணரப்படாத அடி
வரை மாதை வாடாமை வைக்கும் அடி வானவர்கள்தாம் வணங்கி வாழ்த்தும் அடி
அரைமாத்திரையில் அடங்கும் அடி அகலம் அளக்கிற்பார் இல்லா அடி
கரை மாம் கலி கெடில நாடன் அடி கமழ் வீரட்டான காபாலி அடி

 மேல்

#2146
நறு மலராய் நாறும் மலர் சேவடி நடுவாய் உலகம் நாடு ஆய அடி
செறி கதிரும் திங்களும் நின்ற அடி தீ திரளாய் உள்ளே திகழ்ந்த அடி
மறு மதியை மாசு கழுவும் அடி மந்திரமும் தந்திரமும் ஆய அடி
செறி கெடில நாடர் பெருமான் அடி திரு வீரட்டானத்து எம் செல்வன் அடி

 மேல்

#2147
அணியனவும் சேயனவும் அல்லா அடி அடியார்கட்கு ஆரமுதம் ஆய அடி
பணிபவர்க்கு பாங்கு ஆக வல்ல அடி பற்றற்றார் பற்றும் பவள அடி
மணி அடி பொன் அடி மாண்பு ஆம் அடி மருந்தாய் பிணி தீர்க்க வல்ல அடி
தணிபு ஆடு தண் கெடில நாடன் அடி தகை சார் வீரட்ட தலைவன் அடி

 மேல்

#2148
அம் தாமரை போது அலர்ந்த அடி அரக்கனையும் ஆற்றல் அழித்த அடி
முந்து ஆகி முன்னே முளைத்த அடி முழங்கு அழலாய் நீண்ட எம் மூர்த்தி அடி
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் அடி பவள தட வரையே போல்வான் அடி
வெந்தார் சுடலை நீறு ஆடும் அடி வீரட்டம் காதல் விமலன் அடி

 மேல்

 7. திரு அதிகை வீரட்டானம் - காப்புத்திருத்தாண்டகம்

#2149
செல்வ புனல் கெடில வீரட்டமும் சிற்றேமமும் பெரும் தண் குற்றாலமும்
தில்லை சிற்றம்பலமும் தென் கூடலும் தென் ஆனைக்காவும் சிராப்பள்ளியும்
நல்லூரும் தேவன்குடி மருகலும் நல்லவர்கள் தொழுது ஏத்தும் நாரையூரும்
கல்லலகு நெடும் புருவ கபாலம் ஏந்தி கட்டங்கத்தோடு உறைவார் காப்புக்களே

 மேல்

#2150
தீர்த்த புனல் கெடில வீரட்டமும் திரு கோவல் வீரட்டம் வெண்ணெய்நல்லூர்
ஆர்த்து அருவி வீழ் சுனை நீர் அண்ணாமலை அறையணி நல்லூரும் அரநெறியும்
ஏத்து-மின்கள் நீர் ஏத்த நின்ற ஈசன் இடைமருது இன்னம்பர் ஏகம்பமும்
கார் தயங்கு சோலை கயிலாயமும் கண்நுதலான்-தன்னுடைய காப்புக்களே

 மேல்

#2151
சிறை ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு பாதிரிப்புலியூர் திரு ஆமாத்தூர்
துறை ஆர் வன முனிகள் ஏத்த நின்ற சோற்றுத்துறை துருத்தி நெய்த்தானமும்
அறை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் ஐயாற்று அமுதர் பழனம் நல்லம்
கறை ஆர் பொழில் புடை சூழ் கானப்பேரும் கழுக்குன்றும் தம்முடைய காப்புக்களே

 மேல்

#2152
திரை ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு ஆரூர் தேவூர் திரு நெல்லிக்கா
உரையார் தொழ நின்ற ஒற்றியூரும் ஓத்தூரும் மாற்பேறும் மாந்துறையும்
வரை ஆர் அருவி சூழ் மாநதியும் மாகாளம் கேதாரம் மா மேருவும்
கரை ஆர் புனல் ஒழுகு காவிரீ சூழ் கடம்பந்துறை உறைவார் காப்புக்களே

 மேல்

#2153
செழு நீர் புனல் கெடில வீரட்டமும் திரிபுராந்தகம் தென் ஆர் தேவீச்சுரம்
கொழு நீர் புடை சுழிக்கும் கோட்டுக்காவும் குடமூக்கும் கோகரணம் கோலக்காவும்
பழி நீர்மை இல்லா பனங்காட்டூரும் பனையூர் பயற்றூர் பராய்த்துறையும்
கழுநீர் மது விரியும் காளிங்கமும் கணபதீச்சுரத்தார்-தம் காப்புக்களே

 மேல்

#2154
தெய்வ புனல் கெடில வீரட்டமும் செழும் தண் பிடவூரும் சென்று நின்று
பவ்வம் திரியும் பருப்பதமும் பறியலூர் வீரட்டம் பாவநாசம்
மவ்வம் திரையும் மணிமுத்தமும் மறைக்காடும் வாய்மூர் வலஞ்சுழியும்
கவ்வை வரி வண்டு பண்ணே பாடும் கழிப்பாலை தம்முடைய காப்புக்களே

 மேல்

#2155
தெண் நீர் புனல் கெடில வீரட்டமும் தீக்காலி வல்லம் திரு வேட்டியும்
உண் நீர் ஆர் ஏடகமும் ஊறல் அம்பர் உறையூர் நறையூர் அரணநல்லூர்
விண்ணார் விடையான் விளமர் வெண்ணி மீயச்சூர் வீழிமிழலை மிக்க
கண் ஆர் நுதலார் கரபுரமும் காபாலியார் அவர்-தம் காப்புக்களே

 மேல்

#2156
தெள்ளும் புனல் கெடில வீரட்டமும் திண்டீச்சுரமும் திரு புகலூர்
எள்ளும் படையான் இடைத்தானமும் ஏயீச்சுரமும் நல் ஏமம் கூடல்
கொள்ளும் இலயத்தார் கோடிகாவும் குரங்கணில்முட்டமும் குறும்பலாவும்
கள் அருந்த தெள்ளியார் உள்கி ஏத்தும் காரோணம் தம்முடைய காப்புக்களே

 மேல்

#2157
சீர் ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு காட்டுப்பள்ளி திரு வெண்காடும்
பாரார் பரவும் சீர் பைஞ்ஞீலியும் பந்தணைநல்லூரும் பாசூர் நல்லம்
நீர் ஆர் நிறை வயல் சூழ் நின்றியூரும் நெடுங்களமும் நெல்வெண்ணெய் நெல்வாயிலும்
கார் ஆர் கமழ் கொன்றைத்தாரார்க்கு என்றும் கடவூரில் வீரட்டம் காப்புக்களே

 மேல்

#2158
சிந்தும் புனல் கெடில வீரட்டமும் திரு வாஞ்சியமும் திரு நள்ளாறும்
அம் தண் பொழில் புடை சூழ் அயோகந்தியும் ஆக்கூரும் ஆவூரும் ஆன்பட்டியும்
எம்தம் பெருமாற்கு இடம் ஆவது இடைச்சுரமும் எந்தை தலைச்சங்காடும்
கந்தம் கமழும் கரவீரமும் கடம்பூர் கரக்கோயில் காப்புக்களே

 மேல்

#2159
தேன் ஆர் புனல் கெடில வீரட்டமும் திரு செம்பொன்பள்ளி திரு பூவணமும்
வானோர் வணங்கும் மணஞ்சேரியும் மதில் உஞ்சைமாகாளம் வாரணாசி
ஏனோர்கள் ஏத்தும் வெகுளீச்சுரம் இலங்கு ஆர் பருப்பதத்தோடு ஏண் ஆர் சோலை
கான் ஆர் மயில் ஆர் கருமாரியும் கறை_மிடற்றார்-தம்முடைய காப்புக்களே

 மேல்

#2160
திரு நீர் புனல் கெடில வீரட்டமும் திரு அளப்பூர் தெற்கு ஏறு சித்தவடம்
உரு நீர் வளம் பெருகு மா நிருபமும் மயிலாப்பில் மன்னினார் மன்னி ஏத்தும்
பெருநீர் வளர்சடையான் பேணி நின்ற பிரமபுரம் சுழியல் பெண்ணாகடம்
கருநீலவண்டு அரற்றும் காளத்தியும் கயிலாயம் தம்முடைய காப்புக்களே

 மேல்

 8. திருக்காளத்தி - திருத்தாண்டகம்

#2161
விற்று ஊண் ஒன்று இல்லாத நல்கூர்ந்தான் காண் வியன் கச்சி கம்பன் காண் பிச்சை அல்லால்
மற்று ஊண் ஒன்று இல்லாத மா சதுரன் காண் மயானத்து மைந்தன் காண் மாசு ஒன்று இல்லா
பொன் தூண் காண் மா மணி நல் குன்று ஒப்பான் காண் பொய்யாது பொழில் ஏழும் தாங்கி நின்ற
கல் தூண் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே

 மேல்

#2162
இடிப்பான் காண் என் வினையை ஏகம்பன் காண் எலும்பு ஆபரணன் காண் எல்லாம் முன்னே
முடிப்பான் காண் மூஉலகும் ஆயினான் காண் முறைமையால் ஐம்புரியும் வழுவா வண்ணம்
படித்தான் தலை அறுத்த பாசுபதன் காண் பராய்த்துறையான் பழனம் பைஞ்ஞீலியான் காண்
கடித்தார் கமழ் கொன்றை கண்ணியான் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே

 மேல்

#2163
நாரணன் காண் நான்முகன் காண் நால்வேதம் காண் ஞான பெரும் கடற்கு ஓர் நாவாய் அன்ன
பூரணன் காண் புண்ணியன் காண் புராணன் தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்ற புனிதன் தான் காண்
சாரணன் காண் சந்திரன் காண் கதிரோன் தான் காண் தன்மை-கண் தானே காண் தக்கோர்க்கு எல்லாம்
காரணன் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே

 மேல்

#2164
செற்றான் காண் என் வினையை தீ ஆடி காண் திரு ஒற்றியூரான் காண் சிந்தைசெய்வார்க்கு
உற்றான் காண் ஏகம்பம் மேவினான் காண் உமையாள் நல் கொழுநன் காண் இமையோர் ஏத்தும்
சொல் தான் காண் சோற்றுத்துறை உளான் காண் சுறா_வேந்தன் ஏவலத்தை நீறா நோக்க
கற்றான் காண் காளத்தி காணப்பட்ட கணநாதன் காண் அவன் என் கண் உளானே

 மேல்

#2165
மனத்து அகத்தான் தலைமேலான் வாக்கின் உள்ளான் வாய் ஆர தன் அடியே பாடும் தொண்டர்
இனத்து அகத்தான் இமையவர்-தம் சிரத்தின்மேலான் ஏழ்அண்டத்து அப்பாலான் இ பால் செம்பொன்
புனத்து அகத்தான் நறும் கொன்றை போதின் உள்ளான் பொருப்பிடையான் நெருப்பிடையான் காற்றின் உள்ளான்
கனத்து அகத்தான் கயிலாயத்து உச்சி உள்ளான் காளத்தியான் அவன் என் கண் உளானே

 மேல்

#2166
எல்லாம் முன் தோன்றாமே தோன்றினான் காண் ஏகம்பம் மேயான் காண் இமையோர் ஏத்த
பொல்லா புலன் ஐந்தும் போக்கினான் காண் புரி சடை மேல் பாய் கங்கை பூரித்தான் காண்
நல்ல விடை மேற்கொண்டு நாகம் பூண்டு நளிர் சிரம் ஒன்று ஏந்தி ஓர் நாணாய் அற்ற
கல் ஆடை மேல் கொண்ட காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே

 மேல்

#2167
கரி உருவு கண்டத்து எம் கண் உளான் காண் கண்டன் காண் வண்டு உண்ட கொன்றையான் காண்
எரி பவள_வண்ணன் காண் ஏகம்பன் காண் எண் திசையும் தான் ஆய குணத்தினான் காண்
திரிபுரங்கள் தீ இட்ட தீ ஆடீ காண் தீவினைகள் தீர்த்திடும் என் சிந்தையான் காண்
கரி உரிவை போர்த்து உகந்த காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே

 மேல்

#2168
இல் ஆடி சில் பலி சென்று ஏற்கின்றான் காண் இமையவர்கள் தொழுது இறைஞ்ச இருக்கின்றான் காண்
வில் ஆடி வேடனாய் ஓடினான் காண் வெண் நூலும் சேர்ந்த அகலத்தான் காண்
மல் ஆடு திரள் தோள் மேல் மழுவாளன் காண் மலைமகள்-தன் மணாளன் காண் மகிழ்ந்து முன்நாள்
கல்லாலின் கீழ் இருந்த காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே

 மேல்

#2169
தேன பூ வண்டு உண்ட கொன்றையான் காண் திரு ஏகம்பத்தான் காண் தேன் ஆர்ந்து உக்க
ஞான பூம் கோதையாள் பாகத்தான் காண் நம்பன் காண் ஞானத்து ஒளி ஆனான் காண்
வான பேர் ஊரும் மறிய ஓடி மட்டித்து நின்றான் காண் வண்டு ஆர் சோலை
கானப்பேரூரான் காண் கறை_கண்டன் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே

 மேல்

#2170
இறையவன் காண் ஏழ்உலகும் ஆயினான் காண் ஏழ்கடலும் சூழ் மலையும் ஆயினான் காண்
குறை உடையார் குற்றேவல் கொள்வான் தான் காண் குடமூக்கில் கீழ்க்கோட்டம் மேவினான் காண்
மறை உடைய வானோர் பெருமான் தான் காண் மறைக்காட்டு உறையும் மணி_கண்டன் காண்
கறை உடைய கண்டத்து எம் காபாலீ காண் காளத்தியான் அவன் என் கண் உளானே

 மேல்

#2171
உண்ணா அரு நஞ்சம் உண்டான் தான் காண் ஊழித்தீ அன்னான் காண் உகப்பார் காண
பண் ஆர பல்லியம் பாடினான் காண் பயின்ற நால் வேதத்தின் பண்பினான் காண்
அண்ணாமலையான் காண் அடியார் ஈட்டம் அடி இணைகள் தொழுது ஏத்த அருளுவான் காண்
கண் ஆர காண்பார்க்கு ஓர் காட்சியான் காண் காளத்தியான் அவன் என் கண் உளானே

 மேல்

 9. திருஆமாத்தூர் - திருத்தாண்டகம்

#2172
வண்ணங்கள் தாம் பாடி வந்து நின்று வலி செய்து வளை கவர்ந்தார் வகையால் நம்மை
கண் அம்பால் நின்று எய்து கனல பேசி கடியது ஓர் விடை ஏறி காபாலியார்
சுண்ணங்கள் தாம் கொண்டு துதைய பூசி தோல் உடுத்து நூல் பூண்டு தோன்றத்தோன்ற
அண்ணலார் போகின்றார் வந்து காணீர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே

 மேல்

#2173
வெந்தார் வெண் பொடி பூசி வெள்ளை மாலை விரி சடை மேல் தாம் சூடி வீணை ஏந்தி
கந்தாரம் தாம் முரலா போகாநிற்க கறை சேர் மணி_மிடற்றீர் ஊர் ஏது என்றேன்
நொந்தார் போல் வந்து எனது இல்லே புக்கு நுடங்கு ஏர் இடை மடவாய் நம் ஊர் கேட்கில்
அம் தாமரை மலர் மேல் அளி வண்டு யாழ்செய் ஆமாத்தூர் என்று அடிகள் போயினாரே

 மேல்

#2174
கட்டங்கம் தாம் ஒன்று கையில் ஏந்தி கடிய விடை ஏறி காபாலியார்
இட்டங்கள் தாம் பேசி இல்லே புக்கு இடும் பலியும் இட கொள்ளார் போவார்அல்லர்
பட்டிமையும் படிறுமே பேசுகின்றார் பார்ப்பாரை பரிசு அழிப்பார் போல்கின்றார் தாம்
அட்டிய சில் பலியும் கொள்ளார் விள்ளார் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே

 மேல்

#2175
பசைந்த பல பூதத்தர் பாடல் ஆடல் பட நாக கச்சையர் பிச்சைக்கு என்று அங்கு
இசைந்தது ஓர் இயல்பினர் எரியின் மேனி இமையா முக்கண்ணினர் நால் வேதத்தர்
பிசைந்த திருநீற்றினர் பெண் ஓர்பாகம் பிரிவு அறியா பிஞ்ஞகனார் தெண் நீர் கங்கை
அசைந்த திரு முடியர் அங்கை தீயர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே

 மேல்

#2176
உருள் உடைய தேர் புரவியோடும் யானை ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு
இருள் உடைய கண்டத்தர் செந்தீ_வண்ணர் இமையவர்கள் தொழுது ஏத்தும் இறைவனார் தாம்
பொருள் உடையர்அல்லர் இலரும் அல்லர் புலி தோல் உடை ஆக பூதம் சூழ
அருள் உடைய அம் கோதை மாலை மார்பர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே

 மேல்

#2177
வீறு உடைய ஏறு ஏறி நீறு பூசி வெண் தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தி
கூறு உடைய மடவாள் ஓர்பாகம் கொண்டு குழை ஆட கொடுகொட்டி கொட்டா வந்து
பாறு உடைய படு தலை ஓர் கையில் ஏந்தி பலி கொள்வார்அல்லர் படிறே பேசி
ஆறு உடைய சடை முடி எம் அடிகள் போலும் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே

 மேல்

#2178
கை ஓர் கபாலத்தர் மானின் தோலர் கருத்து உடையர் நிருத்தராய் காண்பார் முன்னே
செய்ய திரு மேனி வெண் நீறு ஆடி திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி
மெய் ஒருபாகத்து உமையை வைத்து மேவார் திரிபுரங்கள் வேவ செய்து
ஐயனார் போகின்றார் வந்து காணீர் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே

 மேல்

#2179
ஒன்றாலும் குறைவு இல்லை ஊர்தி வெள் ஏறு ஒற்றியூர் உம் ஊரே உணர கூறீர்
நின்றுதான் என் செய்வீர் போவீராகில் நெற்றி மேல் கண் காட்டி நிறையும் கொண்டீர்
என்றும்தான் இ வகையே இடர் செய்கின்றீர் இருக்கும் ஊர் இனி அறிந்தோம் ஏகம்பமோ
அன்றித்தான் போகின்றீர் அடிகள் எம்மோடு அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே

 மேல்

#2180
கல்லலகு தாம் கொண்டு காளத்தியார் கடிய விடை ஏறி காணக்காண
இல்லமே தாம் புகுதா இடு-மின் பிச்சை என்றாருக்கு எதிர் எழுந்தேன் எங்கும் காணேன்
சொல்லாதே போகின்றீர் உம் ஊர் ஏது துருத்தி பழமமோ நெய்த்தானமோ
அல்லலே செய்து அடிகள் போகின்றார் தாம் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே

 மேல்

#2181
மழுங்கலா நீறு ஆடும் மார்பர் போலும் மணி மிழலை மேய மணாளர் போலும்
கொழுங்கு வளை கோதைக்கு இறைவர் போலும் கொடுகொட்டி தாளம் உடையார் போலும்
செழும் கயிலாயத்து எம் செல்வர் போலும் தென் அதிகைவீரட்டம் சேர்ந்தார் போலும்
அழுங்கினார் ஐயுறவு தீர்ப்பார் போலும் அழகியரே ஆமாத்தூர் ஐயனாரே

 மேல்

 10. திருப்பந்தணை நல்லூர் - திருத்தாண்டகம்

#2182
நோதங்கம் இல்லாதார் நாகம் பூண்டார் நூல் பூண்டார் நூல் மேல் ஓர் ஆமை பூண்டார்
பேய் தங்கு நீள் காட்டில் நட்டம் ஆடி பிறை சூடும் சடை மேல் ஓர் புனலும் சூடி
ஆ தங்கு பைங்குழலாள் பாகம் கொண்டார் அனல் கொண்டார் அந்தி வாய் வண்ணம் கொண்டார்
பாதம் கம் நீறு ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே

 மேல்

#2183
காடு அலால் கருதாதார் கடல் நஞ்சு உண்டார் களிற்று உரிவை மெய் போர்த்தார் கலன் அது ஆக
ஓடு அலால் கருதாதார் ஒற்றியூரார் உறு பிணியும் செறு பகையும் ஒற்றைக்கண்ணால்
பீடு உலாம்-தனை செய்வார் பிடவம் மொந்தை குட முழவம் கொடுகொட்டி குழலும் ஓங்க
பாடலார் ஆடலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே

 மேல்

#2184
பூத படை உடையார் பொங்கு நூலார் புலி தோல் உடையினார் போர் ஏற்றினார்
வேத தொழிலார் விரும்ப நின்றார் விரி சடை மேல் வெண் திங்கள் கண்ணி சூடி
ஓதத்து ஒலி கடல் வாய் நஞ்சம் உண்டார் உம்பரோடு அம் பொன்_உலகம் ஆண்டு
பாத தொடு கழலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே

 மேல்

#2185
நீர் உலாம் சடை முடி மேல் திங்கள் ஏற்றார் நெருப்பு ஏற்றார் அங்கையில் நிறையும் ஏற்றார்
ஊர் எலாம் பலி ஏற்றார் அரவம் ஏற்றார் ஒலி கடல்-வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார்
வார் உலாம் முலை மடவாள் பாகம் ஏற்றார் மழு ஏற்றார் மான் மறி ஓர் கையில் ஏற்றார்
பார் உலாம் புகழ் ஏற்றார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே

 மேல்

#2186
தொண்டர் தொழுது ஏத்தும் சோதி ஏற்றார் துளங்கா மணி முடியார் தூய நீற்றார்
இண்டை சடைமுடியார் ஈமம் சூழ்ந்த இடு பிணக்காட்டு ஆடலார் ஏமம்-தோறும்
அண்டத்துக்கு அப்புறத்தார் ஆதி ஆனார் அருக்கனாய் ஆர் அழலாய் அடியார் மேலை
பண்டை வினை அறுப்பார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே

 மேல்

#2187
கடம் மன்னு களி யானை உரிவை போர்த்தார் கானப்பேர் காதலார் காதல்செய்து
மடம் மன்னும் அடியார்-தம் மனத்தின் உள்ளார் மான் உரி தோல் மிசை தோளார் மங்கை காண
நடம் மன்னி ஆடுவார் நாகம் பூண்டார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார்
படம் மன்னு திரு முடியார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே

 மேல்

#2188
முற்றா மதி சடையார் மூவர் ஆனார் மூஉலகும் ஏத்தும் முதல்வர் ஆனார்
கற்றார் பரவும் கழலார் திங்கள் கங்கையாள் காதலார் காம்பு ஏய் தோளி
பற்று ஆகும் பாகத்தார் பால் வெண் நீற்றார் பான்மையால் ஊழி உலகம் ஆனார்
பற்றார் மதில் எரித்தார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே

 மேல்

#2189
கண் அமரும் நெற்றியார் காட்டார் நாட்டார் கன மழுவாள் கொண்டது ஓர் கையார் சென்னி
பெண் அமரும் சடைமுடியார் பேர் ஒன்று இல்லார் பிறப்பு இலார் இறப்பு இலார் பிணி ஒன்று இல்லார்
மண்ணவரும் வானவரும் மற்றையோரும் மறையவரும் வந்து எதிரே வணங்கி ஏத்த
பண் அமரும் பாடலார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே

 மேல்

#2190
ஏறு ஏறி ஏழ்உலகும் ஏத்த நின்றார் இமையவர்கள் எப்பொழுதும் இறைஞ்ச நின்றார்
நீறு ஏறு மேனியார் நீலம் உண்டார் நெருப்பு உண்டார் அங்கை அனலும் உண்டார்
ஆறு ஏறு சென்னியார் ஆன் அஞ்சு ஆடி அனல் உமிழும் ஐவாய் அரவும் ஆர்த்தார்
பாறு ஏறு வெண் தலையார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே

 மேல்

#2191
கல் ஊர் கடி மதில்கள் மூன்றும் எய்தார் காரோணம் காதலார் காதல்செய்து
நல்லூரார் ஞானத்தார் ஞானம் ஆனார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார்
மல் ஊர் மணி மலையின் மேல் இருந்து வாள் அரக்கர்_கோன் தலையை மாள செற்று
பல் ஊர் பலி திரிவார் பைம் கண் ஏற்றார் பலி ஏற்றார் பந்தணைநல்லூராரே

 மேல்

 11. திருப்புன்கூர், திருநீடூர் - திருத்தாண்டகம்

#2192
பிறவாதே தோன்றிய பெம்மான்-தன்னை பேணாதார் அவர்-தம்மை பேணாதானை
துறவாதே கட்டு அறுத்த சோதியானை தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றான்-தன்னை
திறம் ஆய எத்திசையும் தானே ஆகி திரு புன்கூர் மேவிய சிவலோகனை
நிறம் ஆம் ஒளியானை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே

 மேல்

#2193
பின்தானும் முன்தானும் ஆனான்-தன்னை பித்தர்க்கு பித்தனாய் நின்றான்-தன்னை
நன்று ஆங்கு அறிந்தவர்க்கும் தானே ஆகி நல்வினையும் தீவினையும் ஆனான்-தன்னை
சென்று ஓங்கி விண் அளவும் தீ ஆனானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை
நின்று ஆய நீடூர் நிலாவினானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே

 மேல்

#2194
இல்லானை எவ்விடத்தும் உள்ளான்-தன்னை இனிய நினையாதார்க்கு இன்னாதானை
வல்லானை வல் அடைந்தார்க்கு அருளும் வண்ணம் மாட்டாதார்க்கு எத்திறத்தும் மாட்டாதானை
செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை
நெல்லால் விளை கழனி நீடூரானை நீதனேன் என்னை நான் நினையா ஆறே

 மேல்

#2195
கலை ஞானம் கல்லாமே கற்பித்தானை கடு நரகம் சாராமே காப்பான்-தன்னை
பல ஆய வேடங்கள் தானே ஆகி பணிவார்கட்கு அங்கங்கே பற்று ஆனானை
சிலையால் புரம் எரித்த தீ ஆடியை திரு புன்கூர் மேவிய சிவலோகனை
நிலை ஆர் மணி மாட நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே

 மேல்

#2196
நோக்காதே எவ்வளவும் நோக்கினானை நுணுகாதே யாது ஒன்றும் நுணுகினானை
ஆக்காதே யாது ஒன்றும் ஆக்கினானை அணுகாதார் அவர்-தம்மை அணுகாதானை
தேக்காதே தெண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை திரு புன்கூர் மேவிய சிவலோகனை
நீக்காத பேர் ஒளி சேர் நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே

 மேல்

#2197
பூண் அலா பூணானை பூசா சாந்தம் உடையானை முடை நாறும் புன் கலத்தில்
ஊண் அலா ஊணானை ஒருவர் காணா உத்தமனை ஒளி திகழும் மேனியானை
சேண் உலாம் செழும் பவள குன்று ஒப்பானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை
நீண் உலாம் மலர் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே

 மேல்

#2198
உரை ஆர் பொருளுக்கு உலப்பிலானை ஒழியாமே எவ்வுருவும் ஆனான்-தன்னை
புரையாய் கனமாய் ஆழ்ந்து ஆழாதானை புதியனவுமாய் மிகவும் பழையான்-தன்னை
திரை ஆர் புனல் சேர் மகுடத்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை
நிரை ஆர் மணி மாட நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே

 மேல்

#2199
கூர் அரவத்துஅணையானும் குளிர் தண் பொய்கை மலரவனும் கூடி சென்று அறியமாட்டார்
ஆர் ஒருவர் அவர் தன்மை அறிவார் தேவர் அறிவோம் என்பார்க்கு எல்லாம் அறியல் ஆகா
சீர் அரவ கழலானை நிழல் ஆர் சோலை திரு புன்கூர் மேவிய சிவலோகனை
நீர் அரவ தண் கழனி நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே

 மேல்

#2200
கை எலாம் நெய் பாய கழுத்தே கிட்ட கால் நிமிர்த்து நின்று உண்ணும் கையர் சொன்ன
பொய் எலாம் மெய் என்று கருதி புக்கு புள்ளுவரால் அகப்படாது உய்ய போந்தேன்
செய் எலாம் செழும் கமல பழன வேலி திரு புன்கூர் மேவிய சிவலோகனை
நெய்தல் வாய் புனல் படப்பை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே

 மேல்

#2201
இகழும் ஆறு எங்ஙனே ஏழை நெஞ்சே இகழாது பரந்து ஒன்றாய் நின்றான்-தன்னை
நகழ மால் வரை கீழ் இட்டு அரக்கர்_கோனை நலன் அழித்து நன்கு அருளிச்செய்தான்-தன்னை
திகழும் மா மத கரியின் உரி போர்த்தானை திரு புன்கூர் மேவிய சிவலோகனை
நிகழுமா வல்லானை நீடூரானை நீதனேன் என்னே நான் நினையா ஆறே

 மேல்

 12. திருக்கழிப்பாலை - திருத்தாண்டகம்

#2202
ஊன் உடுத்தி ஒன்பது வாசல் வைத்து ஒள் எலும்பு தூணா உரோமம் மேய்ந்து
தாம் எடுத்த கூரை தவிர போவார் தயக்கம் பல படைத்தார் தாமரையினார்
கான் எடுத்து மா மயில்கள் ஆலும் சோலை கழிப்பாலை மேய கபால அப்பனார்
வான் இடத்தை ஊடு அறுத்து வல்லை செல்லும் வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே

 மேல்

#2203
முறை ஆர்த்த மும்மதிலும் பொடியா செற்று முன்னுமாய் பின்னுமாய் முக்கண் எந்தை
பிறை ஆர்ந்த சடை முடி மேல் பாம்பு கங்கை பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார் பெரிய நஞ்சு
கறை ஆர்ந்த மிடற்று அடங்க கண்ட எந்தை கழிப்பாலை மேய கபால அப்பனார்
மறை ஆர்ந்த வாய்மொழியால் மாய யாக்கை வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே

 மேல்

#2204
நெளிவு உண்டா கருதாதே நிமலன்-தன்னை நினை-மின்கள் நித்தலும் நேர்_இழையாள் ஆய
ஒளி வண்டு ஆர் கருங்குழலி உமையாள்-தன்னை ஒருபாகத்து அமர்ந்து அடியார் உள்கி ஏத்த
களி வண்டு ஆர் கரும் பொழில் சூழ் கண்டல் வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார்
வளி உண்டு ஆர் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே

 மேல்

#2205
பொடி நாறு மேனியர் பூதி பையர் புலித்தோலர் பொங்கு அரவர் பூண நூலர்
அடி நாறு கமலத்தர் ஆரூர் ஆதி ஆன் அஞ்சும் ஆடும் ஆதிரையினார்தாம்
கடி நாறு பூம் சோலை கமழ்ந்து நாறும் கழிப்பாலை மேய கபால அப்பனார்
மடி நாறு மேனி இ மாயம் நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே

 மேல்

#2206
விண் ஆனாய் விண்ணவர்கள் விரும்பி வந்து வேதத்தாய் கீதத்தாய் விரவி எங்கும்
எண் ஆனாய் எழுத்து ஆனாய் கடல் ஏழ் ஆனாய் இறை ஆனாய் எம் இறையே என்று நிற்கும்
கண் ஆனாய் கார் ஆனாய் பாரும் ஆனாய் கழிப்பாலையுள் உறையும் கபால அப்பனார்
மண் ஆன மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே

 மேல்

#2207
விண்ணப்ப விச்சாதர்கள் ஏத்த விரி கதிரோன் எரி சுடரான் விண்ணும் ஆகி
பண் அப்பன் பத்தர் மனத்துள் ஏயும் பசுபதி பாசுபதன் தேசமூர்த்தி
கண்ணப்பன் கண் அப்ப கண்டு உகந்தார் கழிப்பாலை மேய கபால அப்பனார்
வண்ண பிணி மாய யாக்கை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே

 மேல்

#2208
பிணம் புல்கு பீறல் குரம்பை மெய்யா பேதப்படுகின்ற பேதைமீர்காள்
நிணம் புல்கு சூலத்தர் நீல_கண்டர் எண் தோளர் எண் நிறைந்த குணத்தினாலே
கணம்புல்லன் கருத்து உகந்தார் காஞ்சி உள்ளார் கழிப்பாலை மேய கபால அப்பனார்
மணம் புல்கு மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே

 மேல்

#2209
இயல்பு ஆய ஈசனை எந்தைதந்தை என் சிந்தை மேவி உறைகின்றானை
முயல்வானை மூர்த்தியை தீர்த்தம் ஆன தியம்பகன் திரிசூலத்து அனல் நகையன்
கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார்
மயல் ஆய மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே

 மேல்

#2210
செற்றது ஓர் மனம் ஒழிந்து சிந்தைசெய்து சிவமூர்த்தி என்று எழுவார் சிந்தையுள்ளால்
உற்றது ஓர் நோய் களைந்து இ உலகம் எல்லாம் காட்டுவான் உத்தமன்தான் ஓதாது எல்லாம்
கற்றது ஓர் நூலினன் களிறு செற்றான் கழிப்பாலை மேய கபால அப்பனார்
மற்று இது ஓர் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே

 மேல்

#2211
பொருது அலங்கல் நீள் முடியான் போர் அரக்கன் புட்பகம்தான் பொருப்பின் மீது ஓடாது ஆக
இரு நிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும் ஏந்து_இழையாள்தான் வெருவ இறைவன் நோக்கி
கரதலங்கள் கதிர் முடி ஆறு அஞ்சினோடு கால்விரலால் ஊன்று கழிப்பாலையார்
வருதல் அங்கம் மாய குரம்பை நீங்க வழி வைத்தார்க்கு அ வழியே போதும் நாமே

 மேல்

 13. திருப்புறம்பயம் - திருத்தாண்டகம்

#2212
கொடி மாட நீள் தெருவு கூடல் கோட்டூர் கொடுங்கோளூர் தண் வளவி கண்டியூரும்
நடம் ஆடும் நல் மருகல் வைகி நாளும் நலம் ஆகும் ஒற்றியூர் ஒற்றி ஆக
படு மாலை வண்டு அறையும் பழனம் பாசூர் பழையாறும் பாற்குளமும் கைவிட்டு இ நாள்
பொடி ஏறும் மேனியராய் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே

 மேல்

#2213
முற்று ஒருவர் போல முழு நீறு ஆடி முளை திங்கள் சூடி முந்நூலும் பூண்டு
ஒற்று ஒருவர் போல உறங்குவேன் கை ஒளி வளையை ஒன்றுஒன்றா எண்ணுகின்றார்
மற்று ஒருவர் இல்லை துணை எனக்கு மால் கொண்டால் போல மயங்குவேற்கு
புற்று அரவ கச்சு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே

 மேல்

#2214
ஆகாத நஞ்சு உண்ட அந்தி_வண்ணர் ஐந்தலைய மாசுணம் கொண்டு அம் பொன் தோள் மேல்
ஏகாசமா இட்டு ஓடு ஒன்று ஏந்தி வந்து இடு திருவே பலி என்றார்க்கு இல்லே புக்கேன்
பாகு ஏதும் கொள்ளார் பலியும் கொள்ளார் பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கி
போகாத வேடத்தர் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே

 மேல்

#2215
பல் மலிந்த வெண் தலை கையில் ஏந்தி பனி முகில் போல் மேனி பவந்த நாதர்
நெல் மலிந்த நெய்த்தானம் சோற்றுத்துறை நியமம் துருத்தியும் நீடூர் பாச்சில்
கல் மலிந்து ஓங்கு கழுநீர்க்குன்றம் கடல் நாகைக்காரோணம் கைவிட்டு இ நாள்
பொன் மலிந்த கோதையரும் தாமும் எல்லாம் புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே

 மேல்

#2216
செத்தவர்-தம் தலை மாலை கையில் ஏந்தி சிர மாலை சூடி சிவந்த மேனி
மத்தகத்த யானை உரிவை மூடி மடவாள் அவளோடும் மான் ஒன்று ஏந்தி
அ தவத்த தேவர் அறுபதின்மர் ஆறுநூறாயிரவர்க்கு ஆடல் காட்டி
புத்தகம் கை கொண்டு புலி தோல் வீக்கி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே

 மேல்

#2217
நஞ்சு அடைந்த கண்டத்தர் வெண் நீறு ஆடி நல்ல புலி அதள் மேல் நாகம் கட்டி
பஞ்சு அடைந்த மெல்விரலாள் பாகம் ஆக பராய்த்துறையேன் என்று ஓர் பவள_வண்ணர்
துஞ்சு இடைய வந்து துடியும் கொட்ட துண்ணென்று எழுந்திருந்தேன் சொல்லமாட்டேன்
புன் சடையின் மேல் ஓர் புனலும் சூடி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே

 மேல்

#2218
மறி இலங்கு கையர் மழு ஒன்று ஏந்தி மறைக்காட்டேன் என்று ஓர் மழலை பேசி
செறி இலங்கு திண் தோள் மேல் நீறு கொண்டு திரு முண்டமா இட்ட திலக நெற்றி
நெறி இலங்கு கூந்தலார் பின்பின் சென்று நெடும் கண் பனி சோர நின்று நோக்கி
பொறி இலங்கு பாம்பு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே

 மேல்

#2219
நில்லாதே பல் ஊரும் பலிகள் வேண்டி நிரை வளையார் பலி பெய்ய நிறையம் கொண்டு
கொல் ஏறும் கொக்கரையும் கொடுகொட்டியும் குடமூக்கில் அங்கு ஒழிய குளிர் தண் பொய்கை
நல்லாடை நல்லூரே தவிரேன் என்று நறையூரில் தாமும் தவிர்வார் போல
பொல்லாத வேடத்தர் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே

 மேல்

#2220
விரை ஏறு நீறு அணிந்து ஓர் ஆமை பூண்டு வெண் தோடு பெய்து இடங்கை வீணை ஏந்தி
திரை ஏறு சென்னி மேல் திங்கள்-தன்னை திசை விளங்க வைத்து உகந்த செந்தீ_வண்ணர்
அரை ஏறு மேகலையாள் பாகம் ஆக ஆர் இடத்தில் ஆடல் அமர்ந்த ஐயன்
புரை ஏறு தாம் ஏறி பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே

 மேல்

#2221
கோ ஆய இந்திரன் உள்ளிட்டார் ஆக குமரனும் விக்கினவிநாயகனும்
பூ ஆய பீடத்து மேல் அயனும் பூமி அளந்தானும் போற்றி இசைப்ப
பா ஆய இன்னிசைகள் பாடி ஆடி பாரிடமும் தாமும் பரந்து பற்றி
பூ ஆர்ந்த கொன்றை பொறி வண்டு ஆர்க்க புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே

 மேல்

 14. திருநல்லூர் - திருத்தாண்டகம்

#2222
நினைந்து உருகும் அடியாரை நைய வைத்தார் நில்லாமே தீவினைகள் நீங்க வைத்தார்
சினம் திருகு களிற்று உரிவை போர்வை வைத்தார் செழு மதியின் தளிர் வைத்தார் சிறந்து வானோர்
இனம் துருவி மணி மகுடத்து ஏற துற்ற இன மலர்கள் போது அவிழ்ந்து மது வாய் பில்கி
நனைந்தனைய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே

 மேல்

#2223
பொன் நலத்த நறும் கொன்றை சடை மேல் வைத்தார் புலி உரியின் அதள் வைத்தார் புனலும் வைத்தார்
மன் நலத்த திரள் தோள் மேல் மழுவாள் வைத்தார் வார் காதில் குழை வைத்தார் மதியும் வைத்தார்
மின் நலத்த நுண்இடையாள் பாகம் வைத்தார் வேழத்தின் உரி வைத்தார் வெண் நூல் வைத்தார்
நல் நலத்த திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே

 மேல்

#2224
தோடு ஏறும் மலர் கொன்றை சடை மேல் வைத்தார் துன் எருக்கின் வடம் வைத்தார் துவலை சிந்த
பாடு ஏறு படு திரைகள் எறிய வைத்தார் பனி மத்த மலர் வைத்தார் பாம்பும் வைத்தார்
சேடு ஏறு திரு நுதல் மேல் நாட்டம் வைத்தார் சிலை வைத்தார் மலை பெற்ற மகளை வைத்தார்
நாடு ஏறு திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே

 மேல்

#2225
வில் அருளி வரு புருவத்து ஒருத்தி பாகம் பொருத்து ஆகி விரி சடை மேல் அருவி வைத்தார்
கல் அருளி வரி சிலையா வைத்தார் ஊரா கயிலாய மலை வைத்தார் கடவூர் வைத்தார்
சொல் அருளி அறம் நால்வர்க்கு அறிய வைத்தார் சுடு சுடலை பொடி வைத்தார் துறவி வைத்தார்
நல் அருளால் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே

 மேல்

#2226
விண் இரியும் திரிபுரங்கள் எரிய வைத்தார் வினை தொழுவார்க்கு அற வைத்தார் துறவி வைத்தார்
கண் எரியால் காமனையும் பொடியா வைத்தார் கடி கமல மலர் வைத்தார் கயிலை வைத்தார்
திண் எரியும் தண் புனலும் உடனே வைத்தார் திசை தொழுது மிசை அமரர் திகழ்ந்து வாழ்த்தி
நண்ண அரிய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே

 மேல்

#2227
உற்று உலவு பிணி உலகத்து எழுமை வைத்தார் உயிர் வைத்தார் உயிர் செல்லும் கதிகள் வைத்தார்
மற்று அமரர் கணம் வைத்தார் அமரர் காணா மறை வைத்தார் குறை மதியம் வளர வைத்தார்
செற்றம் மலி ஆர்வமொடு காமலோபம் சிறவாத நெறி வைத்தார் துறவி வைத்தார்
நல் தவர் சேர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே

 மேல்

#2228
மாறு மலைந்தார் அரணம் எரிய வைத்தார் மணி முடி மேல் அர வைத்தார் அணி கொள் மேனி
நீறு மலிந்து எரி ஆடல் நிலவ வைத்தார் நெற்றி மேல் கண் வைத்தார் நிலையம் வைத்தார்
ஆறு மலைந்து அறு திரைகள் எறிய வைத்தார் ஆர்வத்தால் அடி அமரர் பரவ வைத்தார்
நாறு மலர் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே

 மேல்

#2229
குலங்கள் மிகு மலை கடல்கள் ஞாலம் வைத்தார் குரு மணி சேர் அர வைத்தார் கோலம் வைத்தார்
உலம் கிளரும் அரவத்தின் உச்சி வைத்தார் உண்டு அருளி விடம் வைத்தார் எண் தோள் வைத்தார்
நிலம் கிளரும் புனல் கனலுள் அனிலம் வைத்தார் நிமிர் விசும்பின் மிசை வைத்தார் நினைந்தார் இ நாள்
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே

 மேல்

#2230
சென்று உருளும் கதிர் இரண்டும் விசும்பில் வைத்தார் திசை பத்தும் இரு நிலத்தில் திருந்த வைத்தார்
நின்று அருளி அடி அமரர் வணங்க வைத்தார் நிறை தவமும் மறைப்பொருளும் நிலவ வைத்தார்
கொன்று அருளி கொடும் கூற்றம் நடுங்கி ஓட குரை கழல் சேவடி வைத்தார் விடையும் வைத்தார்
நன்று அருளும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே

 மேல்

#2231
பாம்பு உரிஞ்சி மதி கிடந்து திரைகள் ஏங்க பனி கொன்றை சடை வைத்தார் பணி செய் வானோர்
ஆம் பரிசு தமக்கு எல்லாம் அருளும் வைத்தார் அடு சுடலை பொடி வைத்தார் அழகும் வைத்தார்
ஓம்ப அரிய வல் வினை நோய் தீர வைத்தார் உமையை ஒருபால் வைத்தார் உகந்து வானோர்
நாம் பரவும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே

 மேல்

#2232
குலம் கிளரும் வரு திரைகள் ஏழும் வைத்தார் குரு மணி சேர் மலை வைத்தார் மலையை கையால்
உலம் கிளர எடுத்தவன் தோள் முடியும் நோவ ஒரு விரலால் உற வைத்தார் இறைவா என்று
புலம்புதலும் அருளொடு போர் வாளும் வைத்தார் புகழ் வைத்தார் புரிந்து ஆளா கொள்ள வைத்தார்
நலம் கிளரும் திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே

 மேல்

 15. திருக்கருகாவூர் - திருத்தாண்டகம்

#2233
குருகு ஆம் வயிரம் ஆம் கூறும் நாள் ஆம் கொள்ளும் கிழமை ஆம் கோளேதான் ஆம்
பருகா அமுதம் ஆம் பாலின் நெய் ஆம் பழத்தின் இரதம் ஆம் பாட்டின் பண் ஆம்
ஒரு கால் உமையாள் ஓர்பாகனும் ஆம் உள் நின்ற நாவிற்கு உரையாடி ஆம்
கருவாய் உலகுக்கு முன்னே தோன்றும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே

 மேல்

#2234
வித்து ஆம் முளை ஆகும் வேரேதான் ஆம் வேண்டும் உருவம் ஆம் விரும்பி நின்ற
பத்தாம் அடியர்க்கு ஓர் பாங்கனும் ஆம் பால் நிறமும் ஆம் பரஞ்சோதிதான் ஆம்
தொத்து ஆம் அமரர் கணம் சூழ்ந்து போற்ற தோன்றாது என் உள்ளத்தின் உள்ளே நின்ற
கத்து ஆம் அடியேற்கு காணா காட்டும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே

 மேல்

#2235
பூ தான் ஆம் பூவின் நிறத்தானும் ஆம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற
கோ தான் ஆம் கோல் வளையாள் கூறன் ஆகும் கொண்ட சமயத்தார் தேவன் ஆகி
ஏத்தாதார்க்கு என்றும் இடரே துன்பம் ஈவான் ஆம் என் நெஞ்சத்துள்ளே நின்று
காத்தான் ஆம் காலன் அடையா வண்ணம் கண் அம் கருகாவூர் எந்தைதானே

 மேல்

#2236
இரவன் ஆம் எல்லி நடம் ஆடி ஆம் எண் திசைக்கும் தேவன் ஆம் என் உளான் ஆம்
அரவன் ஆம் அல்லல் அறுப்பானும் ஆம் ஆகாசமூர்த்தி ஆம் ஆன் ஏறு ஏறும்
குரவன் ஆம் கூற்றை உதைத்தான்தான் ஆம் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும்
கரவன் ஆம் காட்சிக்கு எளியானும் ஆம் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே

 மேல்

#2237
படைத்தான் ஆம் பாரை இடந்தான் ஆகும் பரிசு ஒன்று அறியாமை நின்றான்தான் ஆம்
உடைத்தான் ஆம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலால் மூட்டி ஒடுக்கி நின்று
அடைத்தான் ஆம் சூலம் மழு ஓர் நாகம் அசைத்தான் ஆம் ஆன் ஏறு ஒன்று ஊர்ந்தான் ஆகும்
கடைத்தான் ஆம் கள்ளம் அறுவார் நெஞ்சின் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே

 மேல்

#2238
மூலன் ஆம் மூர்த்தி ஆம் முன்னேதான் ஆம் மூவாத மேனி முக்கண்ணினான் ஆம்
சீலன் ஆம் சேர்ந்தார் இடர்கள் தீர்க்கும் செல்வன் ஆம் செம் சுடர்க்கு ஓர் சோதிதான் ஆம்
மாலன் ஆம் மங்கை ஓர்பங்கன் ஆகும் மன்று ஆடி ஆம் வானோர்-தங்கட்கு எல்லாம்
காலன் ஆம் காலனை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே

 மேல்

#2239
அரை சேர் அரவன் ஆம் ஆலத்தான் ஆம் ஆதிரைநாளான் ஆம் அண்ட வானோர்
திரை சேர் திரு முடி திங்களான் ஆம் தீவினைநாசன் என் சிந்தையான் ஆம்
உரை சேர் உலகத்தார் உள்ளானும் ஆம் உமையாள் ஓர்பாகன் ஆம் ஓத வேலி
கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே

 மேல்

#2240
துடி ஆம் துடியின் முழக்கம்தான் ஆம் சொல்லுவார் சொல் எல்லாம் சோதிப்பான் ஆம்
படிதான் ஆம் பாவம் அறுப்பான் ஆகும் பால் நீற்றன் ஆம் பரஞ்சோதிதான் ஆம்
கொடியான் ஆம் கூற்றை உதைத்தான் ஆகும் கூறாத வஞ்ச குயலர்க்கு என்றும்
கடியான் ஆம் காட்சிக்கு அரியான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே

 மேல்

#2241
விட்டு உருவம் கிளர்கின்ற சோதியான் ஆம் விண்ணவர்க்கும் அறியாத சூழலான் ஆம்
பட்டு உருவ மால் யானை தோல் கீண்டான் ஆம் பலபலவும் பாணி பயின்றான்தான் ஆம்
எட்டு உருவ மூர்த்தி ஆம் எண் தோளான் ஆம் என் உச்சிமேலான் ஆம் எம்பிரான் ஆம்
கட்டு உருவம் கடியானை காய்ந்தான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே

 மேல்

#2242
பொறுத்திருந்த புள்ஊர்வான் உள்ளான் ஆகி உள் இருந்து அங்கு உள் நோய் களைவான்தானாய்
செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவ சிலை குனிய தீ மூட்டும் திண்மையான் ஆம்
அறுத்திருந்த கையான் ஆம் அம் தார் அல்லி இருந்தானை ஒரு தலையை தெரிய நோக்கி
கறுத்திருந்த கண்டம் உடையான் போலும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே

 மேல்

#2243
ஒறுத்தான் ஆம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள் அழலை மாட்டி உடனே வைத்து
இறுத்தான் ஆம் எண்ணான் முடிகள் பத்தும் இசைந்தான் ஆம் இன்னிசைகள் கேட்டான் ஆகும்
அறுத்தான் ஆம் அஞ்சும் அடக்கி அங்கே ஆகாய மந்திரமும் ஆனான் ஆகும்
கறுத்தான் ஆம் காலனை காலால் வீழ கண் ஆம் கருகாவூர் எந்தைதானே

 மேல்

 16. திருஇடைமருதூர் - திருத்தாண்டகம்

#2244
சூல படை உடையார் தாமே போலும் சுடர் திங்கள் கண்ணி உடையார் போலும்
மாலை மகிழ்ந்து ஒருபால் வைத்தார் போலும் மந்திரமும் தந்திரமும் ஆனார் போலும்
வேலை கடல் நஞ்சம் உண்டார் போலும் மேல் வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்
ஏல கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே

 மேல்

#2245
கார் ஆர் கமழ் கொன்றை கண்ணி போலும் கார் ஆனை ஈர் உரிவை போர்த்தார் போலும்
பாரார் பரவப்படுவார் போலும் பத்தப்பல் ஊழி பரந்தார் போலும்
சீரால் வணங்கப்படுவார் போலும் திசை அனைத்துமாய் மற்றும் ஆனார் போலும்
ஏர் ஆக கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே

 மேல்

#2246
வேதங்கள் வேள்வி பயந்தார் போலும் விண்ணுலகும் மண்ணுலகும் ஆனார் போலும்
பூதங்கள் ஆய புராணர் போலும் புகழ வளர் ஒளியாய் நின்றார் போலும்
பாதம் பரவப்படுவார் போலும் பத்தர்களுக்கு இன்பம் பயந்தார் போலும்
ஏதங்கள் ஆன கடிவார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே

 மேல்

#2247
திண் குணத்தார் தேவர் கணங்கள் ஏத்தி திசை வணங்க சேவடியை வைத்தார் போலும்
விண் குணத்தார் வேள்வி சிதைய நூறி வியன் கொண்டல் மேல் செல் விகிர்தர் போலும்
பண் குணத்தார் பாடலோடு ஆடல் ஓவா பரங்குன்றம் மேய பரமர் போலும்
எண் குணத்தார் எண்ணாயிரவர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே

 மேல்

#2248
ஊகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த உயர் பொழில் அண்ணாவில் உறைகின்றாரும்
பாகம் பணிமொழியாள் பாங்கர் ஆகி படு வெண் தலையில் பலி கொள்வாரும்
மாகம் அடை மும்மதிலும் எய்தார்தாமும் மணி பொழில் சூழ் ஆரூர் உறைகின்றாரும்
ஏகம்பம் மேயாரும் எல்லாம் ஆவார் இடைமருது மேவிய ஈசனாரே

 மேல்

#2249
ஐ_இரண்டும் ஆறுஒன்றும் ஆனார் போலும் அறு_மூன்றும் நால்_மூன்றும் ஆனார் போலும்
செய் வினைகள் நல்வினைகள் ஆனார் போலும் திசை அனைத்துமாய் நிறைந்த செல்வர் போலும்
கொய் மலர் அம் கொன்றை சடையார் போலும் கூத்து ஆட வல்ல குழகர் போலும்
எய்ய வந்த காமனையும் காய்ந்தார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே

 மேல்

#2250
பிரியாத குணம் உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சாய் பிரிவு உடைய குணம் பேசில் பத்தோடுஒன்றாய்
விரியாத குணம் ஒரு கால் நான்கே என்பர் விரிவு இலா குணம் நாட்டத்து ஆறே என்பர்
தெரிவு ஆய குணம் அஞ்சும் சமிதை அஞ்சும் பதம் அஞ்சும் கதி அஞ்சும் செப்பினாரும்
எரி ஆய தாமரை மேல் இயங்கினாரும் இடைமருது மேவிய ஈசனாரே

 மேல்

#2251
தோலின் பொலிந்த உடையார் போலும் சுடர் வாய் அரசு அசைத்த சோதி போலும்
ஆலம் அமுது ஆக உண்டார் போலும் அடியார்கட்கு ஆரமுதம் ஆனார் போலும்
காலனையும் காய்ந்த கழலார் போலும் கயிலாயம் தம் இடமா கொண்டார் போலும்
ஏலம் கமழ்குழலாள்_பாகர் போலும் இடைமருது மேவிய ஈசனாரே

 மேல்

#2252
பைம் தளிர் கொன்றை அம் தாரர் போலும் படை கணாள் பாகம் உடையார் போலும்
அந்தி வாய் வண்ணத்து அழகர் போலும் அணி நீல_கண்டம் உடையார் போலும்
வந்த வரவும் செலவும் ஆகி மாறாது என் உள்ளத்து இருந்தார் போலும்
எம்தம் இடர் தீர்க்க வல்லார் போலும் இடைமருது மேவிய ஈசனாரே

 மேல்

#2253
கொன்றை அம் கூவிள மாலை-தன்னை குளிர் சடை மேல் வைத்து உகந்த கொள்கையாரும்
நின்ற அனங்கனை நீறா நோக்கி நெருப்பு உருவமாய் நின்ற நிமலனாரும்
அன்று அ அரக்கன் அலறி வீழ அரு வரையை காலால் அழுத்தினாரும்
என்றும் இடு பிச்சை ஏற்று உண்பாரும் இடைமருது மேவிய ஈசனாரே

 மேல்

 17. திருஇடைமருதூர் - திருத்தாண்டகம்

#2254
ஆறு சடைக்கு அணிவர் அங்கை தீயர் அழகர் படை உடையர் அம் பொன் தோள் மேல்
நீறு தடவந்து இடபம் ஏறி நித்தம் பலி கொள்வர் மொய்த்த பூதம்
கூறும் குணம் உடையர் கோவணத்தர் கோள் தால வேடத்தர் கொள்கை சொல்லின்
ஈறும் நடுவும் முதலும் ஆவார் இடைமருது மேவி இடம்கொண்டாரே

 மேல்

#2255
மங்குல் மதி வைப்பர் வான நாடர் மட மான் இடம் உடையர் மாதராளை
பங்கில் மிக வைப்பர் பால் போல் நீற்றர் பளிக்கு வடம் புனைவர் பாவநாசர்
சங்கு திரை உகளும் சாய்க்காடு ஆள்வர் சரிதை பல உடையர் தன்மை சொல்லின்
எங்கும் பலி திரிவர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே

 மேல்

#2256
ஆல நிழல் இருப்பர் ஆகாயத்தர் அரு வரையின் உச்சியர் ஆணர் பெண்ணர்
காலம் பல கழித்தார் கறை சேர் கண்டர் கருத்துக்கு சேயார் தாம் காணாதார்க்கு
கோலம் பல உடையர் கொல்லை ஏற்றர் கொடு மழுவர் கோழம்பம் மேய ஈசர்
ஏலம் மணம் நாறும் ஈங்கோய் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே

 மேல்

#2257
தேசர் திறம் நினைவார் சிந்தை சேரும் செல்வர் திரு ஆரூர் என்றும் உள்ளார்
வாசம் மலரின்-கண் மான் தோல் போர்ப்பர் மருவும் கரி உரியர் வஞ்ச கள்வர்
நேசர் அடைந்தார்க்கு அடையாதார்க்கு நிட்டுரவர் கட்டங்கர் நினைவார்க்கு என்றும்
ஈசர் புனல் பொன்னி தீர்த்தர் வாய்த்த இடைமருது மேவி இடம்கொண்டாரே

 மேல்

#2258
கரப்பர் கரிய மன கள்வர்க்கு உள்ளம் கரவாதே தம் நினையகிற்பார் பாவம்
துரப்பர் தொடு கடலின் நஞ்சம் உண்பர் தூய மறைமொழியர் தீயால் ஒட்டி
நிரப்பர் புரம் மூன்றும் நீறு செய்வர் நீள் சடையர் பாய் விடை கொண்டு எங்கும் ஐயம்
இரப்பர் எமை ஆள்வர் என் உள் நீங்கார் இடைமருது மேவி இடம்கொண்டாரே

 மேல்

#2259
கொடி ஆர் இடபத்தர் கூத்தும் ஆடி குளிர் கொன்றை மேல் வைப்பர் கோலம் ஆர்ந்த
பொடி ஆரும் மேனியர் பூதி பையர் புலித்தோலர் பொங்கு அரவர் பூண நூலர்
அடியார் குடி ஆவர் அந்தணாளர் ஆகுதியின் மந்திரத்தார் அமரர் போற்ற
இடி ஆர் களிற்று உரியர் எவரும் போற்ற இடைமருது மேவி இடம்கொண்டாரே

 மேல்

#2260
பச்சை நிறம் உடையர் பாலர் சால பழையர் பிழை எல்லாம் நீக்கி ஆள்வர்
கச்சை கத நாகம் பூண்ட தோளர் கலன் ஒன்று கை ஏந்தி இல்லம்-தோறும்
பிச்சை கொள நுகர்வர் பெரியர் சால பிறங்கு சடைமுடியர் பேணும் தொண்டர்
இச்சை மிக அறிவர் என்றும் உள்ளார் இடைமருது மேவி இடம்கொண்டாரே

 மேல்

#2261
கா ஆர் சடைமுடியர் காரோணத்தர் கயிலாயம் மன்னினார் பன்னும் இன்சொல்
பா ஆர் பொருளாளர் வாள் ஆர் கண்ணி பயிலும் திரு உருவம் பாகம் மேயார்
பூ ஆர் புனல் அணவு புன்கூர் வாழ்வர் புரம் மூன்றும் ஒள் அழலா காய தொட்ட
ஏ ஆர் சிலை மலையர் எங்கும் தாமே இடைமருது மேவி இடம்கொண்டாரே

 மேல்

#2262
புரிந்தார் நடத்தின்-கண் பூதநாதர் பொழில் ஆரூர் புக்கு உறைவர் போந்து தம்மில்
பிரிந்து ஆர் அகல் வாய பேயும் தாமும் பிரியார் ஒருநாளும் பேணு காட்டில்
எரிந்தார் அனல் உகப்பர் ஏழில் ஓசை எவ்விடத்தும் தாமே என்று ஏத்துவார்-பால்
இருந்தார் இமையவர்கள் போற்ற என்றும் இடைமருது மேவி இடம்கொண்டாரே

 மேல்

#2263
விட்டு இலங்கு மா மழுவர் வேலை நஞ்சர் விடங்கர் விரி புனல் சூழ் வெண்காட்டு உள்ளார்
மட்டு இலங்கு தார் மாலை மார்பில் நீற்றர் மழபாடியுள் உறைவர் மாகாளத்தர்
சிட்டு இலங்கு வல் அரக்கர்_கோனை அன்று செழு முடியும் தோள் ஐ_நான்கு அடர காலால்
இட்டு இரங்கி மற்று அவனுக்கு ஈந்தார் வென்றி இடைமருது மேவி இடம்கொண்டாரே

 மேல்

 18. திருப்பூவணம் - திருத்தாண்டகம்

#2264
வடி ஏறு திரிசூலம் தோன்றும்தோன்றும் வளர் சடை மேல் இள மதியம் தோன்றும்தோன்றும்
கடி ஏறு கமழ் கொன்றை கண்ணி தோன்றும் காதில் வெண் குழை தோடு கலந்து தோன்றும்
இடி ஏறு களிற்று உரிவை போர்வை தோன்றும் எழில் திகழும் திரு முடியும் இலங்கி தோன்றும்
பொடி ஏறு திரு மேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே

 மேல்

#2265
ஆண் ஆகி பெண் ஆய வடிவு தோன்றும் அடியவர்கட்கு ஆரமுதம் ஆகி தோன்றும்
ஊண் ஆகி ஊர் திரிவான் ஆகி தோன்றும் ஒற்றை வெண் பிறை தோன்றும் பற்றார்-தம் மேல்
சேண் நாக வரைவில்லால் எரித்தல் தோன்றும் செத்தவர்-தம் எலும்பினால் செறிய செய்த
பூண் நாணும் அரைநாணும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே

 மேல்

#2266
கல்லாலின் நீழலில் கலந்து தோன்றும் கவின் மறையோர் நால்வர்க்கும் நெறிகள் அன்று
சொல் ஆக சொல்லியவா தோன்றும்தோன்றும் சூழ் அரவும் மான் மறியும் தோன்றும்தோன்றும்
அல்லாத காலனை முன் அடர்த்தல் தோன்றும் ஐவகையால் நினைவார்-பால் அமர்ந்து தோன்றும்
பொல்லாத புலால் எலும்பு பூணாய் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே

 மேல்

#2267
படை மலிந்த மழுவாளும் மானும் தோன்றும் பன்னிரண்டு கண் உடைய பிள்ளை தோன்றும்
நடை மலிந்த விடையோடு கொடியும் தோன்றும் நான்மறையின் ஒலி தோன்றும் நயனம் தோன்றும்
உடை மலிந்த கோவணமும் கீளும் தோன்றும் ஊரல் வெண் சிர மாலை உலாவி தோன்றும்
புடை மலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே

 மேல்

#2268
மயல் ஆகும் தன் அடியார்க்கு அருளும் தோன்றும் மாசு இலா புன் சடை மேல் மதியம் தோன்றும்
இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் இரும் கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும்
கயல் பாய கடும் கலுழி கங்கை நங்கை ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் தோன்றும்
புயல் பாய சடை விரித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே

 மேல்

#2269
பார்ஆழிவட்டத்தார் பரவி இட்ட பலி மலரும் நறும் புகையும் பரந்து தோன்றும்
சீர் ஆழி தாமரையின் மலர்கள் அன்ன திருந்திய மா நிறத்த சேவடிகள் தோன்றும்
ஓர் ஆழி தேர் உடைய இலங்கை_வேந்தன் உடல் துணித்த இடர் பாவம் கெடுப்பித்து அன்று
போர் ஆழி முன் ஈந்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே

 மேல்

#2270
தன் அடியார்க்கு அருள்புரிந்த தகவு தோன்றும் சதுர்முகனை தலை அரிந்த தன்மை தோன்றும்
மின் அனைய நுண்இடையாள் பாகம் தோன்றும் வேழத்தின் உரி விரும்பி போர்த்தல் தோன்றும்
துன்னிய செம் சடை மேல் ஓர் புனலும் பாம்பும் தூய மா மதி உடனே வைத்தல் தோன்றும்
பொன் அனைய திரு மேனி பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே

 மேல்

#2271
செறி கழலும் திருவடியும் தோன்றும்தோன்றும் திரிபுரத்தை எரிசெய்த சிலையும் தோன்றும்
நெறி அதனை விரித்து உரைத்த நேர்மை தோன்றும் நெற்றி மேல் கண் தோன்றும் பெற்றம் தோன்றும்
மறுபிறவி அறுத்து அருளும் வகையும் தோன்றும் மலைமகளும் சலமகளும் மலிந்து தோன்றும்
பொறி அரவும் இள மதியும் பொலிந்து தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே

 மேல்

#2272
அரும்பு ஓட்டு முலை மடவாள் பாகம் தோன்றும் அணி கிளரும் உரும் என்ன அடர்க்கும் கேழல்
மருப்பு ஓட்டு மணி வயிர கோவை தோன்றும் மணம் மலிந்த நடம் தோன்றும் மணி ஆர் வைகை
திருக்கோட்டில் நின்றது ஓர் திறமும் தோன்றும் செக்கர் வான் ஒளி மிக்கு திகழ்ந்த சோதி
பொருட்டு ஓட்டி நின்ற திண் புயமும் தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே

 மேல்

#2273
ஆங்கு அணைந்த சண்டிக்கும் அருளி அன்று தன் முடி மேல் அலர் மாலை அளித்தல் தோன்றும்
பாங்கு அணைந்து பணி செய்வார்க்கு அருளி அன்று பல பிறவி அறுத்து அருளும் பரிசு தோன்றும்
கோங்கு அணைந்த கூவிளமும் மத மத்தமும் குழற்கு அணிந்த கொள்கையொடு கோலம் தோன்றும்
பூம் கணை வேள் உரு அழித்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே

 மேல்

#2274
ஆர் உருவ உள்குவார் உள்ளத்துள்ளே அ உருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்
வார் உருவ பூண் முலை நல் மங்கை-தன்னை மகிழ்ந்து ஒருபால் வைத்து உகந்த வடிவும் தோன்றும்
நீர் உருவ கடல் இலங்கை அரக்கர்_கோனை நெறுநெறுவென அடர்த்திட்ட நிலையும் தோன்றும்
போர் உருவ கூற்று உதைத்த பொற்பு தோன்றும் பொழில் திகழும் பூவணத்து எம் புனிதனார்க்கே

 மேல்

 19. திருஆலவாய் - திருத்தாண்டகம்

#2275
முளைத்தானை எல்லார்க்கும் முன்னே தோன்றி முதிரும் சடை முடி மேல் முகிழ் வெண் திங்கள்
வளைத்தானை வல் அசுரர் புரங்கள் மூன்றும் வரை சிலையா வாசுகி மா நாணா கோத்து
துளைத்தானை சுடு சரத்தால் துவள நீறா தூ முத்த வெண் முறுவல் உமையோடு ஆடி
திளைத்தானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே

 மேல்

#2276
விண்ணுலகின் மேலார்கள் மேலான்-தன்னை மேல் ஆடு புரம் மூன்றும் பொடிசெய்தானை
பண் நிலவு பைம் பொழில் சூழ் பழனத்தானை பசும்பொன்னின் நிறத்தானை பால் நீற்றானை
உள் நிலவு சடை கற்றை கங்கையாளை கரந்து உமையோடு உடன் ஆகி இருந்தான்-தன்னை
தெள் நிலவு தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே

 மேல்

#2277
நீர் திரளை நீள் சடை மேல் நிறைவித்தானை நிலம் மருவி நீர் ஓட கண்டான்-தன்னை
பால் திரளை பயின்று ஆட வல்லான்-தன்னை பகைத்து எழுந்த வெம் கூற்றை பாய்ந்தான்-தன்னை
கால் திரளாய் மேகத்தினுள்ளே நின்று கடும் குரலாய் இடிப்பானை கண் ஓர் நெற்றி
தீ திரளை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே

 மேல்

#2278
வானம் இது எல்லாம் உடையான்-தன்னை வரி அரவ கச்சானை வன் பேய் சூழ
கானம் அதில் நடம் ஆட வல்லான்-தன்னை கடைக்கண்ணால் மங்கையையும் நோக்கா என் மேல்
ஊனம் அது எல்லாம் ஒழித்தான்-தன்னை உணர்வு ஆகி அடியேனது உள்ளே நின்ற
தேன் அமுதை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே

 மேல்

#2279
ஊரானை உலகு ஏழாய் நின்றான்-தன்னை ஒற்றை வெண் பிறையானை உமையோடு என்றும்
பேரானை பிறர்க்கு என்றும் அரியான்-தன்னை பிணக்காட்டில் நடம் ஆடல் பேயோடு என்றும்
ஆரானை அமரர்களுக்கு அமுது ஈந்தானை அரு மறையால் நான்முகனும் மாலும் போற்றும்
சீரானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே

 மேல்

#2280
மூவனை மூர்த்தியை மூவா மேனி உடையானை மூஉலகும் தானே எங்கும்
பாவனை பாவம் அறுப்பான்-தன்னை படி எழுதல் ஆகாத மங்கையோடும்
மேவனை விண்ணோர் நடுங்க கண்டு விரி கடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்த
தேவனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே

 மேல்

#2281
துறந்தார்க்கு தூ நெறியாய் நின்றான்-தன்னை துன்பம் துடைத்து ஆள வல்லான்-தன்னை
இறந்தார்கள் என்பே அணிந்தான்-தன்னை எல்லி நடம் ஆட வல்லான்-தன்னை
மறந்தார் மதில் மூன்றும் மாய்த்தான்-தன்னை மற்று ஒரு பற்று இல்லா அடியேற்கு என்றும்
சிறந்தானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே

 மேல்

#2282
வாயானை மனத்தானை மனத்துள் நின்ற கருத்தானை கருத்து அறிந்து முடிப்பான்-தன்னை
தூயானை தூ வெள்ளை ஏற்றான்-தன்னை சுடர் திங்கள் சடையானை தொடர்ந்து நின்ற என்
தாயானை தவம் ஆய தன்மையானை தலை ஆய தேவாதிதேவர்க்கு என்றும்
சேயானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே

 மேல்

#2283
பகை சுடராய் பாவம் அறுப்பான்-தன்னை பழியிலியாய் நஞ்சம் உண்டு அமுது ஈந்தானை
வகை சுடராய் வல் அசுரர் புரம் அட்டானை வளைவிலியாய் எல்லார்க்கும் அருள்செய்வானை
மிகை சுடரை விண்ணவர்கள் மேல் அப்பாலை மேல் ஆய தேவாதிதேவர்க்கு என்றும்
திகை சுடரை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே

 மேல்

#2284
மலையானை மா மேரு மன்னினானை வளர் புன் சடையானை வானோர்-தங்கள்
தலையானை என் தலையின் உச்சி என்றும் தாபித்து இருந்தானை தானே எங்கும்
துலை ஆக ஒருவரையும் இல்லாதானை தோன்றாதார் மதில் மூன்றும் துவள எய்த
சிலையானை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே

 மேல்

#2285
தூர்த்தனை தோள் முடி பத்து இறுத்தான்-தன்னை தொல் நரம்பின் இன்னிசை கேட்டு அருள்செய்தானை
பார்த்தனை பணி கண்டு பரிந்தான்-தன்னை பரிந்து அவற்கு பாசுபதம் ஈந்தான்-தன்னை
ஆத்தனை அடியேனுக்கு அன்பன்-தன்னை அளவு இலா பல் ஊழி கண்டு நின்ற
தீர்த்தனை தென் கூடல் திரு ஆலவாய் சிவன் அடியே சிந்திக்கப்பெற்றேன் நானே

 மேல்

 20. திருநள்ளாறு - திருத்தாண்டகம்

#2286
ஆதி-கண் நான்முகத்தில் ஒன்று சென்று அல்லாத சொல் உரைக்க தன் கை வாளால்
சேதித்த திருவடியை செல்ல நல்ல சிவலோகநெறி வகுத்து காட்டுவானை
மா மதியை மாது ஓர்கூறாயினானை மா மலர் மேல் அயனோடு மாலும் காணா
நாதியை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே

 மேல்

#2287
படையானை பாசுபதவேடத்தானை பண்டு அனங்கன் பார்த்தானை பாவம் எல்லாம்
அடையாமை காப்பானை அடியார்-தங்கள் அருமருந்தை ஆவா என்று அருள்செய்வானை
சடையானை சந்திரனை தரித்தான்-தன்னை சங்கத்த முத்து அனைய வெள்ளை ஏற்றின்
நடையானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே

 மேல்

#2288
பட அரவம் ஒன்று கொண்டு அரையில் ஆர்த்த பராபரனை பைஞ்ஞீலி மேவினானை
அடல் அரவம் பற்றி கடைந்த நஞ்சை அமுது ஆக உண்டானை ஆதியானை
மடல் அரவம் மன்னு பூம் கொன்றையானை மா மணியை மாணிக்காய் காலன்-தன்னை
நடல் அரவம் செய்தானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே

 மேல்

#2289
கட்டங்கம் ஒன்று தம் கையில் ஏந்தி கங்கணமும் காதில் விடு தோடும் இட்டு
சுட்ட அங்கம் கொண்டு துதைய பூசி சுந்தரனாய் சூலம் கை ஏந்தினானை
பட்ட அங்க மாலை நிறைய சூடி பல் கணமும் தாமும் பரந்த காட்டில்
நட்டங்கம் ஆடியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே

 மேல்

#2290
உலந்தார்-தம் அங்கம் கொண்டு உலகம் எல்லாம் ஒரு நொடியில் உழல்வானை உலப்பு இல் செல்வம்
சிலந்தி-தனக்கு அருள்செய்த தேவதேவை திரு சிராப்பள்ளி எம் சிவலோகனை
கலந்தார்-தம் மனத்து என்றும் காதலானை கச்சி ஏகம்பனை கமழ் பூம் கொன்றை
நலம் தாங்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே

 மேல்

#2291
குலம் கொடுத்து கோள் நீக்க வல்லான்-தன்னை குல வரையின் மட பாவை இடப்பாலனை
மலம் கெடுத்து மா தீர்த்தம் ஆட்டி கொண்ட மறையவனை பிறை தவழ் செம் சடையினானை
சலம் கெடுத்து தயாமூலதன்மம் என்னும் தத்துவத்தின் வழி நின்று தாழ்ந்தோர்க்கு எல்லாம்
நலம் கொடுக்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே

 மேல்

#2292
பூ விரியும் மலர் கொன்றை சடையினானை புறம்பயத்து எம்பெருமானை புகலூரானை
மா இரிய களிறு உரித்த மைந்தன்-தன்னை மறைக்காடும் வலிவலமும் மன்னினானை
தே இரிய திகழ் தக்கன் வேள்வி எல்லாம் சிதைத்தானை உதைத்து அவன்-தன் சிரம் கொண்டானை
நா விரிய மறை நவின்ற நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே

 மேல்

#2293
சொல்லானை சுடர் பவள சோதியானை தொல் அவுணர் புரம் மூன்றும் எரிய செற்ற
வில்லானை எல்லார்க்கும் மேலானானை மெல்லியலாள் பாகனை வேதம் நான்கும்
கல்லாலின் நீழல் கீழ் அறம் கண்டானை காளத்தியானை கயிலை மேய
நல்லானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே

 மேல்

#2294
குன்றாத மா முனிவன் சாபம் நீங்க குரை கழலால் கூற்றுவனை குமைத்த கோனை
அன்றாக அவுணர் புரம் மூன்றும் வேவ ஆர் அழல்-வாய் ஓட்டி அடர்வித்தானை
சென்று ஆது வேண்டிற்று ஒன்று ஈவான்-தன்னை சிவன் எம்பெருமான் என்று இருப்பார்க்கு என்றும்
நன்று ஆகும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே

 மேல்

#2295
இறவாதே வரம் பெற்றேன் என்று மிக்க இராவணனை இருபது தோள் நெரிய ஊன்றி
உறவு ஆகி இன்னிசை கேட்டு இரங்கி மீண்டே உற்ற பிணி தவிர்த்து அருள வல்லான்-தன்னை
மறவாதார் மனத்து என்றும் மன்னினானை மா மதியம் மலர் கொன்றை வன்னி மத்தம்
நறவு ஆர் செம் சடையானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே

 மேல்

 21. திருஆக்கூர் - திருத்தாண்டகம்

#2296
முடி தாமரை அணிந்த மூர்த்தி போலும் மூஉலகும் தாம் ஆகி நின்றார் போலும்
கடி தாமரை ஏய்ந்த கண்ணார் போலும் கல்லலகு பாணி பயின்றார் போலும்
கொடி தாமரை காடே நாடும் தொண்டர் குற்றேவல் தாம் மகிழ்ந்த குழகர் போலும்
அடி தாமரை மலர் மேல் வைத்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே

 மேல்

#2297
ஓதிற்று ஒரு நூலும் இல்லை போலும் உணரப்படாதது ஒன்று இல்லை போலும்
காதில் குழை இலங்க பெய்தார் போலும் கவலை பிறப்பு இடும்பை காப்பார் போலும்
வேதத்தோடு ஆறு அங்கம் சொன்னார் போலும் விடம் சூழ்ந்து இருண்ட மிடற்றார் போலும்
ஆதிக்கு அளவு ஆகி நின்றார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே

 மேல்

#2298
மை ஆர் மலர்க்கண்ணாள்_பாகர் போலும் மணி நீல_கண்டம் உடையார் போலும்
நெய் ஆர் திரிசூலம் கையார் போலும் நீறு ஏறு தோள் எட்டு உடையார் போலும்
வை ஆர் மழுவாள் படையார் போலும் வளர் ஞாயிறு அன்ன ஒளியார் போலும்
ஐ வாய் அரவம் ஒன்று ஆர்த்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே

 மேல்

#2299
வடி விளங்கு வெண் மழுவாள் வல்லார் போலும் வஞ்ச கரும் கடல் நஞ்சு உண்டார் போலும்
பொடி விளங்கு முந்நூல் சேர் மார்பர் போலும் பூம் கங்கை தோய்ந்த சடையார் போலும்
கடி விளங்கு கொன்றை அம் தாரார் போலும் கட்டங்கம் ஏந்திய கையார் போலும்
அடி விளங்கு செம்பொன் கழலார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே

 மேல்

#2300
ஏகாசம் ஆம் புலி தோல் பாம்பு தாழ இடு வெண் தலை கலனா ஏந்தி நாளும்
மேகாசம் கட்டழித்த வெள்ளி மாலை புனல் ஆர் சடை முடி மேல் புனைந்தார் போலும்
மா காசம் ஆய வெண் நீரும் தீயும் மதியும் மதி பிறந்த விண்ணும் மண்ணும்
ஆகாசம் என்று இவையும் ஆனார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே

 மேல்

#2301
மாது ஊரும் வாள் நெடும் கண் செ வாய் மென் தோள் மலைமகளை மார்பத்து அணைத்தார் போலும்
மூதூர் முது திரைகள் ஆனார் போலும் முதலும் இறுதியும் இல்லார் போலும்
தீது ஊரா நல்வினையாய் நின்றார் போலும் திசை எட்டும் தாமே ஆம் செல்வர் போலும்
ஆதிரை நாளாய் அமர்ந்தார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே

 மேல்

#2302
மால் யானை மத்தகத்தை கீண்டார் போலும் மான் தோல் உடையா மகிழ்ந்தார் போலும்
கோலானை கோ அழலால் காய்ந்தார் போலும் குழவி பிறை சடை மேல் வைத்தார் போலும்
காலனை காலால் கடந்தார் போலும் கயிலாயம் தம் இடமா கொண்டார் போலும்
ஆல் ஆன் ஐந்து ஆடல் உகப்பார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே

 மேல்

#2303
கண் ஆர்ந்த நெற்றி உடையார் போலும் காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும்
உண்ணா அரு நஞ்சம் உண்டார் போலும் ஊழித்தீ அன்ன ஒளியார் போலும்
எண்ணாயிரம் கோடி பேரார் போலும் ஏறு ஏறி செல்லும் இறைவர் போலும்
அண்ணாவும் ஆரூரும் மேயார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே

 மேல்

#2304
கடி ஆர் தளிர் கலந்த கொன்றை மாலை கதிர் போது தாது அணிந்த கண்ணி போலும்
நெடியானும் சதுமுகனும் நேட நின்ற நீல நல் கண்டத்து இறையார் போலும்
படி ஏல் அழல் வண்ணம் செம்பொன் மேனி மணி_வண்ணம் தம் வண்ணம் ஆவார் போலும்
அடியார் புகலிடம் அது ஆனார் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே

 மேல்

#2305
திரையானும் செந்தாமரை மேலானும் தேர்ந்து அவர்கள்தாம் தேடி காணார் நாணும்
புரையான் எனப்படுவார் தாமே போலும் போர் ஏறு தாம் ஏறி செல்வார் போலும்
கரையா வரை வில் ஏ நாகம் நாணா கால தீ அன்ன கனலார் போலும்
வரை ஆர் மதில் எய்த வண்ணர் போலும் ஆக்கூரில் தான்தோன்றி அப்பனாரே

 மேல்

 22. திருநாகைக்காரோணம் - திருத்தாண்டகம்

#2306
பாரார் பரவும் பழனத்தானை பருப்பதத்தானை பைஞ்ஞீலியானை
சீரார் செழும் பவள குன்று ஒப்பானை திகழும் திரு முடி மேல் திங்கள் சூடி
பேர் ஆயிரம் உடைய பெம்மான்-தன்னை பிறர் தன்னை காட்சிக்கு அரியான்-தன்னை
கார் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே

 மேல்

#2307
விண்ணோர் பெருமானை வீரட்டனை வெண் நீறு மெய்க்கு அணிந்த மேனியானை
பெண்ணானை ஆணானை பேடியானை பெரும்பற்றத்தண்புலியூர் பேணினானை
அண்ணாமலையானை ஆன் ஐந்து ஆடும் அணி ஆரூர் வீற்றிருந்த அம்மான்-தன்னை
கண் ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே

 மேல்

#2308
சிறை ஆர் வரி வண்டு தேனே பாடும் திரு மறைக்காட்டு எந்தை சிவலோகனை
மறை ஆன்ற வாய்மூரும் கீழ்வேளூரும் வலிவலமும் தேவூரும் மன்னி அங்கே
உறைவானை உத்தமனை ஒற்றியூரில் பற்றி ஆள்கின்ற பரமன்-தன்னை
கறை ஆர் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே

 மேல்

#2309
அன்னம் ஆம் பொய்கை சூழ் அம்பரானை ஆச்சிராமநகரும் ஆனைக்காவும்
முன்னமே கோயிலா கொண்டான்-தன்னை மூஉலகும் தான் ஆய மூர்த்தி-தன்னை
சின்னம் ஆம் பல் மலர்கள் அன்றே சூடி செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினானை
கன்னி அம் புன்னை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே

 மேல்

#2310
நடை உடைய நல் எருது ஒன்று ஊர்வான்-தன்னை ஞான பெரும் கடலை நல்லூர் மேய
படை உடைய மழுவாள் ஒன்று ஏந்தினானை பன்மையே பேசும் படிறன்-தன்னை
மடையிடையே வாளை உகளும் பொய்கை மருகல்-வாய் சோதி மணி_கண்டனை
கடை உடைய நெடு மாடம் ஓங்கு நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே

 மேல்

#2311
புலம் கொள் பூம் தேறல் வாய் புகலி கோனை பூம்புகார் கற்பகத்தை புன்கூர் மேய
அலங்கல் அம் கழனி சூழ் அணி நீர் கங்கை அவிர் சடை மேல் ஆதரித்த அம்மான்-தன்னை
இலங்கு தலை மாலை பாம்பு கொண்டே ஏகாசம் இட்டு இயங்கும் ஈசன்-தன்னை
கலங்கல் கடல் புடை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே

 மேல்

#2312
பொன் மணி அம் பூம் கொன்றைமாலையானை புண்ணியனை வெண் நீறு பூசினானை
சில் மணிய மூ இலைய சூலத்தானை தென் சிராப்பள்ளி சிவலோகனை
மன் மணியை வான் சுடலை ஊரா பேணி வல் எருது ஒன்று ஏறும் மறை வல்லானை
கல் மணிகள் வெண் திரை சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே

 மேல்

#2313
வெண் தலையும் வெண் மழுவும் ஏந்தினானை விரி கோவணம் அசைத்த வெண் நீற்றானை
புண் தலைய மால் யானை உரி போர்த்தானை புண்ணியனை வெண் நீறு அணிந்தான்-தன்னை
எண் திசையும் எரி ஆட வல்லான்-தன்னை ஏகம்பம் மேயானை எம்மான்-தன்னை
கண்டல் அம் கழனி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே

 மேல்

#2314
சொல் ஆர்ந்த சோற்றுத்துறையான்-தன்னை தொல் நகரம் நல் நெறியால் தூர்ப்பான்-தன்னை
வில்லானை மீயச்சூர் மேவினானை வேதியர்கள் நால்வர்க்கும் வேதம் சொல்லி
பொல்லாதார்-தம் அரணம் மூன்றும் பொன்ற பொறி அரவம் மார்பு ஆர பூண்டான்-தன்னை
கல்லாலின் கீழானை கழி சூழ் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே

 மேல்

#2315
மனை துறந்த வல் அமணர்-தங்கள் பொய்யும் மாண்பு உரைக்கும் மன குண்டர்-தங்கள் பொய்யும்
சினை பொதிந்த சீவரத்தர்-தங்கள் பொய்யும் மெய் என்று கருதாதே போத நெஞ்சே
பனை உரியை தன் உடலில் போர்த்த எந்தை அவன் பற்றே பற்று ஆக காணின் அல்லால்
கனை கடலின் தெண் கழி சூழ் அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே

 மேல்

#2316
நெடியானும் மலரவனும் நேடி ஆங்கே நேர் உருவம் காணாமே சென்று நின்ற
படியானை பாம்புரமே காதலானை பாம்பு அரையோடு ஆர்த்த படிறன்-தன்னை
செடி நாறும் வெண் தலையில் பிச்சைக்கு என்று சென்றானை நின்றியூர் மேயான்-தன்னை
கடி நாறு பூம் சோலை அம் தண் நாகை காரோணத்து எஞ்ஞான்றும் காணல் ஆமே

 மேல்

 23. திருமறைக்காடு - திருத்தாண்டகம்

#2317
தூண்டு சுடர் அனைய சோதி கண்டாய் தொல் அமரர் சூளாமணிதான் கண்டாய்
காண்டற்கு அரிய கடவுள் கண்டாய் கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய் மெய்ந்நெறி கண்டாய் விரதம் எல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே

 மேல்

#2318
கை கிளரும் வீணை வலவன் கண்டாய் காபாலி கண்டாய் திகழும் சோதி
மெய் கிளரும் ஞான விளக்கு கண்டாய் மெய்யடியார் உள்ளத்து வித்து கண்டாய்
பை கிளரும் நாகம் அசைத்தான் கண்டாய் பராபரன் கண்டாய் பாசூரான் கண்டாய்
வை கிளரும் கூர் வாள் படையான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே

 மேல்

#2319
சிலந்திக்கு அருள் முன்னம் செய்தான் கண்டாய் திரிபுரங்கள் தீவாய் படுத்தான் கண்டாய்
நிலம் துக்கம் நீர் வளி தீ ஆனான் கண்டாய் நிரூபியாய் ரூபியுமாய் நின்றான் கண்டாய்
சலம் துக்க சென்னி சடையான் கண்டாய் தாமரையான் செங்கண்மால்தானே கண்டாய்
மலம் துக்க மால் விடை ஒன்று ஊர்ந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே

 மேல்

#2320
கள்ளி முதுகாட்டில் ஆடி கண்டாய் காலனையும் காலால் கடந்தான் கண்டாய்
புள்ளி உழை மானின் தோலான் கண்டாய் புலி உரி சேர் ஆடை புனிதன் கண்டாய்
வெள்ளி மிளிர் பிறை முடி மேல் சூடி கண்டாய் வெண் நீற்றான் கண்டாய் நம் செந்தில் மேய
வள்ளி_மணாளற்கு தாதை கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே

 மேல்

#2321
மூரி முழங்கு ஒலி நீர் ஆனான் கண்டாய் முழு தழல் போல் மேனி முதல்வன் கண்டாய்
ஏரி நிறைந்து அனைய செல்வன் கண்டாய் இன் அடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய்
ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் அண்ணாமலை உறையும் அண்ணல் கண்டாய்
வாரி மத களிறே போல்வான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே

 மேல்

#2322
ஆடல் மால் யானை உரித்தான் கண்டாய் அகத்தியான் பள்ளி அமர்ந்தான் கண்டாய்
கோடியான் கண்டாய் குழகன் கண்டாய் குளிர் ஆரூர் கோயிலா கொண்டான் கண்டாய்
நாடிய நல் பொருள்கள் ஆனான் கண்டாய் நன்மையோடு இம்மை மற்று அம்மை எல்லாம்
வாடிய வாட்டம் தவிர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே

 மேல்

#2323
வேலை சேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய் விண் தடவு பூம் கயிலை வெற்பன் கண்டாய்
ஆலை சேர் வேள்வி அழித்தான் கண்டாய் அமரர்கள்தாம் ஏத்தும் அண்ணல் கண்டாய்
பால் நெய் சேர் ஆன் அஞ்சும் ஆடி கண்டாய் பருப்பதத்தான் கண்டாய் பரவை மேனி
மாலை ஓர்கூறு உடைய மைந்தன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே

 மேல்

#2324
அம்மை பயக்கும் அமிர்து கண்டாய் அம் தேன் தெளி கண்டாய் ஆக்கம் செய்திட்டு
இம்மை பயக்கும் இறைவன் கண்டாய் என் நெஞ்சே உன்னில் இனியான் கண்டாய்
மெய்ம்மையே ஞான விளக்கு கண்டாய் வெண்காடன் கண்டாய் வினைகள் போக
மம்மர் அறுக்கும் மருந்து கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே

 மேல்

#2325
மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய் முத்தமிழும் நான்மறையும் ஆனான் கண்டாய்
ஆலின் கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய் ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய்
பாலவிருத்தனும் ஆனான் கண்டாய் பவள தட வரையே போல்வான் கண்டாய்
மாலை சேர் கொன்றை மலிந்தான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே

 மேல்

#2326
அயன் அவனும் மால் அவனும் அறியா வண்ணம் ஆர் அழலாய் நீண்டு உகந்த அண்ணல் கண்டாய்
துயர் இலங்கை வேந்தன் துளங்க அன்று சோதி விரலால் உற வைத்தான் கண்டாய்
பெயர அவற்கு பேர் அருள்கள் செய்தான் கண்டாய் பேரும் பெரும் படையோடு ஈந்தான் கண்டாய்
மயர் உறு வல்வினை நோய் தீர்ப்பான் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன்தானே

 மேல்

 24. திருவாரூர் - திருத்தாண்டகம்

#2327
கை மான மத களிற்றின் உரிவையான் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண்
அம்மான் காண் ஆடு அரவு ஒன்று ஆட்டினான் காண் அனல் ஆடி காண் அயில் வாய் சூலத்தான் காண்
எம்மான் காண் ஏழ்உலகும் ஆயனான் காண் எரி சுடரோன் காண் இலங்கும் மழுவாளன் காண்
செம் மானத்து ஒளி அன்ன மேனியான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே

 மேல்

#2328
ஊன் ஏறு படு தலையில் உண்டியான் காண் ஓங்காரன் காண் ஊழி முதல் ஆனான் காண்
ஆன் ஏறு ஒன்று ஊர்ந்து உழலும் ஐயாறன் காண் அண்டன் காண் அண்டத்துக்கு அப்பாலன் காண்
மான் ஏறு கரதலத்து எம் மணி_கண்டன் காண் மா தவன் காண் மா தவத்தின் விளைவு ஆனான் காண்
தேன் ஏறும் மலர் கொன்றை கண்ணியான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே

 மேல்

#2329
ஏ வணத்த சிலையால் முப்புரம் எய்தான் காண் இறையவன் காண் மறையவன் காண் ஈசன்தான் காண்
தூ வணத்த சுடர் சூல படையினான் காண் சூடர் மூன்றும் கண் மூன்றா கொண்டான்தான் காண்
ஆவணத்தால் என்தன்னை ஆட்கொண்டான் காண் அனல் ஆடி காண் அடியார்க்கு அமிர்து ஆனான் காண்
தீ வணத்த திரு உருவின் கரி உருவன் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே

 மேல்

#2330
கொங்கு வார் மலர் கண்ணி குற்றாலன் காண் கொடு மழுவன் காண் கொல்லை வெள் ஏற்றான் காண்
எங்கள்-பால் துயர் கெடுக்கும் எம்பிரான் காண் ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆயினான் காண்
பொங்கு மா கரும் கடல் நஞ்சு உண்டான்தான் காண் பொன் தூண் காண் செம்பவள திரள் போல்வான் காண்
செம் கண் வாள் அரா மதியோடு உடன்வைத்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே

 மேல்

#2331
கார் ஏறு நெடும் குடுமி கயிலாயன் காண் கறை_கண்டன் காண் கண் ஆர் நெற்றியான் காண்
போர் ஏறு நெடும் கொடி மேல் உயர்த்தினான் காண் புண்ணியன் காண் எண்ண அரும் பல் குணத்தினான் காண்
நீர் ஏறு சுடர் சூல படையினான் காண் நின்மலன் காண் நிகர் ஏதும் இல்லாதான் காண்
சீர் ஏறு திருமால் ஓர்பாகத்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே

 மேல்

#2332
பிறை அரவ குறும் கண்ணி சடையினான் காண் பிறப்பிலி காண் பெண்ணோடு ஆண் ஆயினான் காண்
கறை உருவ மணி மிடற்று வெண் நீற்றான் காண் கழல் தொழுவார் பிறப்பு அறுக்கும் காபாலீ காண்
இறை உருவ கன வளையாள் இடப்பாகன் காண் இரு நிலன் காண் இரு நிலத்துக்கு இயல்பு ஆனான் காண்
சிறை உருவ களி வண்டு ஆர் செம்மையான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே

 மேல்

#2333
தலை உருவ சிர மாலை சூடினான் காண் தமர் உலகம் தலை கலனா பலி கொள்வான் காண்
அலை உருவ சுடர் ஆழி ஆக்கினான் காண் அ ஆழி நெடு மாலுக்கு அருளினான் காண்
கொலை உருவ கூற்று உதைத்த கொள்கையான் காண் கூர் எரி நீர் மண்ணொடு காற்று ஆயினான் காண்
சிலை உருவ சரம் துரந்த திறத்தினான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே

 மேல்

#2334
ஐயன் காண் குமரன் காண் ஆதியான் காண் அடல் மழுவாள் தான் ஒன்று பியல் மேல் ஏந்து
கையன் காண் கடல் பூத படையினான் காண் கண் எரியால் ஐங்கணையோன் உடல் காய்ந்தான் காண்
வெய்யன் காண் தண் புனல் சூழ் செஞ்சடையான் காண் வெண் நீற்றான் காண் விசயற்கு அருள்செய்தான் காண்
செய்யன் காண் கரியன் காண் வெளியோன்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே

 மேல்

#2335
மலை வளர்த்த மட மங்கை பாகத்தான் காண் மயானத்தான் காண் மதியம் சூடினான் காண்
இலை வளர்த்த மலர் கொன்றை மாலையான் காண் இறையவன் காண் எறி திரை நீர் நஞ்சு உண்டான் காண்
கொலை வளர்த்த மூ இலைய சூலத்தான் காண் கொடும் குன்றன் காண் கொல்லை ஏற்றினான் காண்
சிலை வளர்த்த சரம் துரந்த திறத்தினான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே

 மேல்

#2336
பொன் தாது மலர் கொன்றை சூடினான் காண் புரி நூலன் காண் பொடி ஆர் மேனியான் காண்
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான் காண் மறை_ஓதி காண் எறி நீர் நஞ்சு உண்டான் காண்
எற்றாலும் குறைவு ஒன்றும் இல்லாதான் காண் இறையவன் காண் மறையவன் காண் ஈசன்தான் காண்
செற்றார்கள் புரம் மூன்றும் செற்றான்தான் காண் திரு ஆரூரான் காண் என் சிந்தையானே

 மேல்

 25. திருவாரூர் - திருத்தாண்டகம்

#2337
உயிராவணம் இருந்து உற்று நோக்கி உள்ள கிழியின் உரு எழுதி
உயிர் ஆவணம் செய்திட்டு உன் கை தந்தால் உணரப்படுவாரோடு ஒட்டி வாழ்தி
அயிராவணம் ஏறாது ஆன் ஏறு ஏறி அமரர் நாடு ஆளாதே ஆரூர் ஆண்ட
அயிராவணமே என் அம்மானே நின் அருள் கண்ணால் நோக்காதார் அல்லாதாரே

 மேல்

#2338
எழுது கொடிஇடையார் ஏழை மென் தோள் இளையார்கள் நம்மை இகழா முன்னம்
பழுதுபட நினையேல் பாவி நெஞ்சே பண்டுதான் என்னோடு பகைதான் உண்டோ
முழுது உலகில் வானவர்கள் முற்றம் கூடி முடியால் உற வணங்கி முற்றம் பற்றி
அழுது திருவடிக்கே பூசை செய்ய இருக்கின்றான் ஊர் போலும் ஆரூர்தானே

 மேல்

#2339
தேரூரார் மாவூரார் திங்களூரார் திகழ் புன் சடை முடி மேல் திங்கள் சூடி
கார் ஊராநின்ற கழனி சாயல் கண் ஆர்ந்த நெடு மாடம் கலந்து தோன்றும்
ஓர் ஊரா உலகு எலாம் ஒப்ப கூடி உமையாள்_மணவாளா என்று வாழ்த்தி
ஆரூரா ஆரூரா என்கின்றார்கள் அமரர்கள்-தம் பெருமானே எங்கு உற்றாயே

 மேல்

#2340
கோவணமோ தோலோ உடை ஆவது கொல் ஏறோ வேழமோ ஊர்வதுதான்
பூவணமோ புறம்பயமோ அன்றாயில் தான் பொருந்தாதார் வாழ்க்கை திருந்தாமேயோ
தீ வணத்த செம் சடை மேல் திங்கள் சூடி திசை நான்கும் வைத்து உகந்த செந்தீ_வண்ணர்
ஆவணமோ ஒற்றியோ அம்மானார்தாம் அறியேன் மற்று ஊர் ஆம் ஆறு ஆரூர்தானே

 மேல்

#2341
ஏந்து மழுவாளர் இன்னம்பரார் எரி பவள_வண்ணர் குடமூக்கிலார்
வாய்ந்த வளைக்கையாள் பாகம் ஆக வார் சடையார் வந்து வலஞ்சுழியார்
போந்தார் அடிகள் புறம்பயத்தே புகலூர்க்கே போயினார் போர் ஏறு ஏறி
ஆய்ந்தே இருப்பார் போய் ஆரூர் புக்கார் அண்ணலார் செய்கின்ற கண் மாயமே

 மேல்

#2342
கரு ஆகி குழம்பி இருந்து கலித்து மூளை கரு நரம்பும் வெள் எலும்பும் சேர்ந்து ஒன்று ஆகி
உரு ஆகி புறப்பட்டு இங்கு ஒருத்தி-தன்னால் வளர்க்கப்பட்டு உயிராகும் கடைபோகாரால்
மருவு ஆகி நின் அடியே மறவேன் அம்மான் மறித்து ஒரு கால் பிறப்பு உண்டேல் மறவா வண்ணம்
திரு ஆரூர் மணவாளா திரு தெங்கூராய் செம்பொன் ஏகம்பனே திகைத்திட்டேனே

 மேல்

#2343
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள்
பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள்
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே

 மேல்

#2344
ஆடுவாய் நீ நட்டம் அளவின் குன்றா அவி அடுவார் அரு மறையோர் அறிந்தேன் உன்னை
பாடுவார் தும்புருவும் நாரதாதி பரவுவார் அமரர்களும் அமரர்_கோனும்
தேடுவார் திருமாலும் நான்முகனும் தீண்டுவார் மலைமகளும் கங்கையாளும்
கூடுமே நாய் அடியேன் செய் குற்றேவல் குறை உண்டே திரு ஆரூர் குடிகொண்டீர்க்கே

 மேல்

#2345
நீர் ஊரும் செஞ்சடையாய் நெற்றிக்கண்ணாய் நிலா திங்கள் துண்டத்தாய் நின்னை தேடி
ஓர் ஊரும் ஒழியாமே ஒற்றித்து எங்கும் உலகம் எலாம் திரிதந்து நின்னை காண்பான்
தேர் ஊரும் நெடு வீதி பற்றி நின்று திருமாலும் நான்முகனும் தேர்ந்தும் காணாது
ஆரூரா ஆரூரா என்கின்றார்கள் அமரர்கள்-தம் பெருமானே ஆரூராயே

 மேல்

#2346
நல்லூரே நன்று ஆக நட்டமிட்டு நரை ஏற்றை பழையாறே பாய ஏறி
பல் ஊரும் பலி திரிந்து சேற்றூர் மீதே பலர் காண தலையாலங்காட்டினூடே
இல் ஆர்ந்த பெருவேளூர் தளியே பேணி இரா பட்டீச்சுரம் கடந்து மணக்கால் புக்கு
எல் ஆரும் தளிச்சாத்தங்குடியில் காண இறை பொழுதில் திரு ஆரூர் புக்கார் தாமே

 மேல்

#2347
கரு துத்தி கத நாகம் கையில் ஏந்தி கரு வரை போல் களி யானை கதற கையால்
உரித்து எடுத்து சிவந்து அதன் தோல் பொருந்த மூடி உமையவளை அச்சுறுத்தும் ஒளி கொள் மேனி
திரு துருத்தி திரு பழனம் திரு நெய்த்தானம் திரு ஐயாறு இடம்கொண்ட செல்வர் இந்நாள்
அரி பெருத்த வெள் ஏற்றை உடர ஏறி அப்பனார் இ பருவம் ஆரூராரே

 மேல்

 26. திருவாரூர் - திருத்தாண்டகம்

#2348
பாதி தன் திரு உருவில் பெண் கொண்டானை பண்டு ஒரு கால் தசமுகனை அழுவித்தானை
வாதித்து தட மலரான் சிரம் கொண்டானை வன் கருப்பு சிலை காமன் உடல் அட்டானை
சோதி சந்திரன் மேனி மறு செய்தானை சுடர் அங்கி தேவனை ஓர் கை கொண்டானை
ஆதித்தன் பல் கொண்ட அம்மான்-தன்னை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே

 மேல்

#2349
வெற்பு உறுத்த திருவடியால் கூற்று அட்டானை விளக்கின் ஒளி மின்னின் ஒளி முத்தின் சோதி
ஒப்பு உறுத்த திரு உருவத்து ஒருவன்-தன்னை ஓதாதே வேதம் உணர்ந்தான்-தன்னை
அப்பு உறுத்த கடல் நஞ்சம் உண்டான்-தன்னை அமுது உண்டார் உலந்தாலும் உலவாதானை
அப்பு உறுத்த நீர் அகத்தே அழல் ஆனானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே

 மேல்

#2350
ஒரு காலத்து ஒரு தேவர் கண் கொண்டானை ஊழி-தோறு ஊழி உயர்ந்தான்-தன்னை
வருகாலம் செல்காலம் ஆயினானை வன் கருப்பு சிலை காமன் உடல் அட்டானை
பொரு வேழ களிற்று உரிவை போர்வையானை புள் அரையன் உடல்-தன்னை பொடிசெய்தானை
அரு வேள்வி தகர்த்து எச்சன் தலை கொண்டானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே

 மேல்

#2351
மெய் பால் வெண் நீறு அணிந்த மேனியானை வெண் பளிங்கின் உடல் பதித்த சோதியானை
ஒப்பானை ஒப்பு இலா ஒருவன்-தன்னை உத்தமனை நித்திலத்தை உலகம் எல்லாம்
வைப்பானை களைவானை வருவிப்பானை வல்வினையேன் மனத்தகத்தே மன்னினானை
அப்பாலைக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே

 மேல்

#2352
பிண்டத்தில் புறந்தது ஒரு பொருளை மற்றை பிண்டத்தை படைத்தானை பெரிய வேத
துண்டத்தில் துணி பொருளை சுடு தீ ஆகி சுழல் காலாய் நீர் ஆகி பாராய் இற்றை
கண்டத்தில் தீதின் நஞ்சு அமுதுசெய்து கண் மூன்று படைத்தது ஒரு கரும்பை பாலை
அண்டத்துக்கு அ புறத்தார்-தமக்கு வித்தை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே

 மேல்

#2353
நீதியாய் நிலன் ஆகி நெருப்பாய் நீராய் நிறை காலாய் இவையிற்றின் நியமம் ஆகி
பாதியாய் ஒன்று ஆகி இரண்டாய் மூன்றாய் பரமாணுவாய் பழுத்த பண்கள் ஆகி
சோதியாய் இருள் ஆகி சுவைகள் ஆகி சுவை கலந்த அப்பாலாய் வீடாய் வீட்டின்
ஆதியாய் அந்தமாய் நின்றான்-தன்னை ஆரூரில் கண்டு அடியேன் அயர்த்த ஆறே

 மேல்

 27. திருவாரூர் - திருத்தாண்டகம்

#2354
பொய் மாய பெரும் கடலில் புலம்பாநின்ற புண்ணியங்காள் தீவினைகாள் திருவே நீங்கள்
இ மாய பெரும் கடலை அரித்து தின்பீர்க்கு இல்லையே கிடந்ததுதான் யானேல் வானோர்
தம்மானை தலைமகனை தண் நல் ஆரூர் தடம் கடலை தொடர்ந்தோரை அடங்க செய்யும்
எம்மான்-தன் அடி தொடர்வான் உழிதர்கின்றேன் இடையிலேன் கெடுவீர்காள் இடறேன்-மினே

 மேல்

#2355
ஐம்பெருமாபூதங்காள் ஒருவீர் வேண்டிற்று ஒருவீர் வேண்டீர் ஈண்டு இ அவனி எல்லாம்
உம் பரமே உம் வசமே ஆக்க வல்லீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர்
உம்பருமாய் ஊழியுமாய் உலகு ஏழ் ஆகி ஒள் ஆரூர் நள் அமிர்து ஆம் வள்ளல் வானோர்
தம் பெருமானாய் நின்ற அரனை காண்பேன் தடைப்படுவேனா கருதி தருக்கேன்-மினே

 மேல்

#2356
சில் உருவில் குறி இருத்தி நித்தல் பற்றி செழும் கணால் நோக்கும் இது ஊகம் அன்று
பல் உருவில் தொழில் பூண்ட பஞ்சபூத பளகீர் உம் வசம் அன்றே யானேல் எல்லாம்
சொல் உருவின் சுடர் மூன்றாய் உருவம் மூன்றாய் தூ நயனம் மூன்று ஆகி ஆண்ட ஆரூர்
நல் உருவில் சிவன் அடியே அடைவேன் நும்மால் நமைப்புண்ணேன் சமைத்து நீர் நட-மின்களே

 மேல்

#2357
உன் உருவின் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றத்து உறுப்பினது குறிப்பு ஆகும் ஐவீர் நுங்கள்
மன் உருவத்து இயற்கைகளால் சுவைப்பீர்க்கு ஐயோ வையகமே போதாதே யானேல் வானோர்
பொன் உருவை தென் ஆரூர் மன்னு குன்றை புவிக்கு எழில் ஆம் சிவக்கொழுந்தை புகுந்து என் சிந்தை
தன் உருவை தந்துவனை எந்தை-தன்னை தலைப்படுவேன் துலை படுவான் தருக்கேன்-மினே

 மேல்

#2358
துப்பினை முன் பற்று அறா விறலே மிக்க சோர்வு படு சூட்சியமே சுகமே நீங்கள்
ஒப்பனையை பாவித்து இ உலகம் எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே என்தன்
வைப்பினை பொன் மதில் ஆரூர் மணியை வைகல் மணாளனை எம்பெருமானை வானோர்-தங்கள்
அப்பனை செப்பட அடைவேன் நும்மால் நானும் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே

 மேல்

#2359
பொங்கு மத மானமே ஆர்வ செற்ற குரோதமே உலோபமே பொறையே நீங்கள்
உங்கள் பெரு மா நிலத்தின் எல்லை எல்லாம் உழறும் இது குறை முடிப்பீர்க்கு அரிதே யானேல்
அம் கமலத்து அயனொடு மால் ஆகி மற்றும் அதற்கு அப்பால் ஒன்று ஆகி அறிய ஒண்ணா
செம் கனக தனி குன்றை சிவனை ஆரூர் செல்வனை சேர்வேன் நும்மால் செலுத்துணேனே

 மேல்

#2360
இடர் பாவம் என மிக்க துக்க வேட்கை வெறுப்பே என்று அனைவீரும் உலகை ஓடி
குடைகின்றீர்க்கு உலகங்கள் குலுங்கி நுங்கள் குறி நின்றது அமையாதே யானேல் வானோர்
அடையார்-தம் புரம் மூன்றும் எரிசெய்தானை அமரர்கள்-தம் பெருமானை அரனை ஆரூர்
உடையானை கடுக சென்று அடைவேன் நும்மால் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே

 மேல்

#2361
விரைந்து ஆளும் நல்குரவே செல்வே பொல்லா வெகுட்சியே மகிழ்ச்சியே வெறுப்பே நீங்கள்
நிரந்து ஓடி மா நிலத்தை அரித்து தின்பீர்க்கு இல்லையே நுகர் போகம் யானேல் வானோர்
கரைந்து ஓட வரு நஞ்சை அமுது செய்த கற்பகத்தை தற்பரத்தை திரு ஆரூரில்
பரஞ்சோதி-தனை காண்பேன் படேன் நும் பண்பில் பரிந்து ஓடி ஓட்டந்து பகட்டேன்-மினே

 மேல்

#2362
மூள்வு ஆய தொழில் பஞ்சேந்திரிய வஞ்ச முகரிகாள் முழுதும் இ உலகை ஓடி
நாள்-வாயும் நும்முடைய மம்மர் ஆணை நடாத்துகின்றீர்க்கு அமையாதே யானேல் வானோர்
நீள் வான முகடு அதனை தாங்கி நின்ற நெடும் தூணை பாதாள கருவை ஆரூர்
ஆள்வானை கடுக சென்று அடைவேன் நும்மால் ஆட்டுணேன் ஓட்டந்து ஈங்கு அலையேன்-மினே

 மேல்

#2363
சுருக்கமொடு பெருக்கம் நிலைநிற்றல் பற்றி துப்பறை என்று அனைவீர் இ உலகை ஓடி
செருக்கி மிகை செலுத்தி உம் செய்கை வைகல் செய்கின்றீர்க்கு அமையாதே யானேல் மிக்க
தருக்கி மிக வரை எடுத்த அரக்கன் ஆகம் தளர அடி எடுத்து அவன்-தன் பாடல் கேட்டு
இரக்கம் எழுந்து அருளிய எம்பெருமான் பாதத்து இடையிலேன் கெடுவீர்காள் இடறேன்-மினே

 மேல்

 28. திருவாரூர் - திருத்தாண்டகம்

#2364
நீற்றினையும் நெற்றி மேல் இட்டார் போலும் நீங்காமே வெள் எலும்பு பூண்டார் போலும்
காற்றினையும் கடிது ஆக நடந்தார் போலும் கண்ணின் மேல் கண் ஒன்று உடையார் போலும்
கூற்றினையும் குரை கழலால் உதைத்தார் போலும் கொல் புலி தோல் ஆடை குழகர் போலும்
ஆற்றினையும் செம் சடை மேல் வைத்தார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே

 மேல்

#2365
பரியது ஓர் பாம்பு அரை மேல் ஆர்த்தார் போலும் பாசுபதம் பார்த்தற்கு அளித்தார் போலும்
கரியது ஓர் களிற்று உரிவை போர்த்தார் போலும் காபாலம் கட்டங்க கொடியார் போலும்
பெரியது ஓர் மலை வில்லா எய்தார் போலும் பேர் நந்தி என்னும் பெயரார் போலும்
அரியது ஓர் அரணங்கள் அட்டார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே

 மேல்

#2366
துணி உடையர் தோல் உடையர் என்பார் போலும் தூய திரு மேனி செல்வர் போலும்
பிணி உடைய அடியாரை தீர்ப்பார் போலும் பேசுவார்க்கு எல்லாம் பெரியார் போலும்
மணி உடைய மா நாகம் ஆர்ப்பார் போலும் வாசுகி மா நாணாக வைத்தார் போலும்
அணி உடைய நெடு வீதி நடப்பார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே

 மேல்

#2367
ஓட்டகத்தே ஊண் ஆக உகந்தார் போலும் ஓர் உருவாய் தோன்றி உயர்ந்தார் போலும்
நாட்டகத்தே நடை பலவும் நவின்றார் போலும் ஞான பெரும் கடற்கு ஓர் நாதர் போலும்
காட்டகத்தே ஆடல் உடையார் போலும் காமரங்கள் பாடி திரிவார் போலும்
ஆட்டகத்தில் ஆன் ஐந்து உகந்தார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே

 மேல்

#2368
ஏனத்து இள மருப்பு பூண்டார் போலும் இமையவர்கள் ஏத்த இருந்தார் போலும்
கான கல்லால் கீழ் நிழலார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும்
வானத்து இள மதி சேர் சடையார் போலும் வான் கயிலை வெற்பில் மகிழ்ந்தார் போலும்
ஆனத்து முன் எழுத்தாய் நின்றார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே

 மேல்

#2369
காமனையும் கரி ஆக காய்ந்தார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும்
சோமனையும் செம் சடை மேல் வைத்தார் போலும் சொல் ஆகி சொல்பொருளாய் நின்றார் போலும்
நா மனையும் வேதத்தார் தாமே போலும் நங்கை ஓர்பால் மகிழ்ந்த நம்பர் போலும்
ஆம் மனையும் திரு முடியார் தாமே போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே

 மேல்

#2370
முடி ஆர் மதி அரவம் வைத்தார் போலும் மூஉலகும் தாமேயாய் நின்றார் போலும்
செடி ஆர் தலை பலி கொண்டு உழல்வார் போலும் செல் கதிதான் கண்ட சிவனார் போலும்
கடி ஆர் நஞ்சு உண்டு இருண்ட_கண்டர் போலும் கங்காளவேட கருத்தர் போலும்
அடியார் அடிமை உகப்பார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே

 மேல்

#2371
இந்திரத்தை இனிது ஆக ஈந்தார் போலும் இமையவர்கள் வந்து இறைஞ்சும் இறைவர் போலும்
சுந்தரத்த பொடி-தன்னை துதைந்தார் போலும் தூ தூய திரு மேனி தோன்றல் போலும்
மந்திரத்தை மனத்துள்ளே வைத்தார் போலும் மா நாகம் நாண் ஆக வளைத்தார் போலும்
அம் திரத்தே அணியா நஞ்சு உண்டார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே

 மேல்

#2372
பிண்டத்தை காக்கும் பிரானார் போலும் பிறவி இறவி இலாதார் போலும்
முண்டத்து முக்கண் உடையார் போலும் முழு நீறு பூசும் முதல்வர் போலும்
கண்டத்து இறையே கறுத்தார் போலும் காளத்தி காரோணம் மேயார் போலும்
அண்டத்துக்கு அப்புறமாய் நின்றார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே

 மேல்

#2373
ஒரு காலத்து ஒன்று ஆகி நின்றார் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும்
பெருகாமே வெள்ளம் தவிர்த்தார் போலும் பிறப்பு இடும்பை சாக்காடு ஒன்று இல்லார் போலும்
உருகாதார் உள்ளத்து நில்லார் போலும் உகப்பார்-தம் மனத்து என்றும் நீங்கார் போலும்
அருகு ஆக வந்து என்னை அஞ்சல் என்பார் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே

 மேல்

#2374
நன்றாக நடை பலவும் நவின்றார் போலும் ஞான பெரும் கடற்கு ஓர் நாதர் போலும்
கொன்றாகி கொன்றது ஒன்று உண்டார் போலும் கோள் அரக்கர்_கோன் தலைகள் குறைத்தார் போலும்
சென்று ஆர் திரிபுரங்கள் எய்தார் போலும் திசை அனைத்துமாய் அனைத்தும் ஆனார் போலும்
அன்று ஆகில் ஆயிரம்பேரார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே

 மேல்

 29. திருவாரூர் - திருத்தாண்டகம்

#2375
திரு மணியை தித்திக்கும் தேனை பாலை தீம் கரும்பின் இன் சுவையை தெளிந்த தேறல்
குரு மணியை குழல் மொந்தை தாளம் வீணை கொக்கரையின் சச்சரியின் பாணியானை
பரு மணியை பவளத்தை பசும்பொன் முத்தை பருப்பதத்தில் அரும் கலத்தை பாவம் தீர்க்கும்
அரு மணியை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே

 மேல்

#2376
பொன்னே போல் திரு மேனி உடையான்-தன்னை பொங்கு வெண் நூலானை புனிதன்-தன்னை
மின்னானை மின்இடையாள்_பாகன்-தன்னை வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் தன்னை
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை தழல் போல் மேனி
அன்னானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே

 மேல்

#2377
ஏற்றானை ஏழ்உலகும் ஆனான்-தன்னை ஏழ்கடலும் ஏழ்மலையும் ஆனான்-தன்னை
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை கொடு மழுவாள் கொண்டது ஓர் கையான்-தன்னை
காற்றானை தீயானை நீரும் ஆகி கடி கமழும் புன் சடை மேல் கங்கை வெள்ள
ஆற்றானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே

 மேல்

#2378
முந்திய வல்வினைகள் தீர்ப்பான்-தன்னை மூவாத மேனி முக்கண்ணினானை
சந்திரனும் வெம் கதிரும் ஆயினானை சங்கரனை சங்க குழையான்-தன்னை
மந்திரமும் மறைப்பொருளும் ஆனான்-தன்னை மறுமையும் இம்மையும் ஆனான்-தன்னை
அம் திரனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே

 மேல்

#2379
பிற நெறியாய் பீடு ஆகி பிஞ்ஞகனுமாய் பித்தனாய் பத்தர் மனத்தினுள்ளே
உற நெறியாய் ஓமமாய் ஈமக்காட்டில் ஓரி பல விட நட்டம் ஆடினானை
துற நெறியாய் தூபமாய் தோற்றம் ஆகி நாற்றமாய் நல் மலர் மேல் உறையாநின்ற
அற நெறியை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே

 மேல்

#2380
பழகிய வல்வினைகள் பாற்றுவானை பசுபதியை பாவகனை பாவம் தீர்க்கும்
குழகனை கோள் அரவு ஒன்று ஆட்டுவானை கொடுகொட்டி கொண்டது ஓர் கையான்-தன்னை
விழவனை வீரட்டம் மேவினானை விண்ணவர்கள் ஏத்தி விரும்புவானை
அழகனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே

 மேல்

#2381
சூளாமணி சேர் முடியான்-தன்னை சுண்ண வெண் நீறு அணிந்த சோதியானை
கோள் வாய் அரவம் அசைத்தான்-தன்னை கொல் புலி தோல் ஆடை குழகன்-தன்னை
நாள்-வாயும் பத்தர் மனத்து உளானை நம்பனை நக்கனை முக்கணானை
ஆள்வானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே

 மேல்

#2382
முத்தினை மணி-தன்னை மாணிக்கத்தை மூவாத கற்பகத்தின் கொழுந்து-தன்னை
கொத்தினை வயிரத்தை கொல் ஏறு ஊர்ந்து கோள் அரவு ஒன்று ஆட்டும் குழகன்-தன்னை
பத்தனை பத்தர் மனத்து உளானை பரிதி போல் திரு மேனி உடையான்-தன்னை
அத்தனை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே

 மேல்

#2383
பை ஆடு அரவம் கை ஏந்தினானை பரிதி போல் திரு மேனி பால் நீற்றானை
நெய் ஆடு திரு மேனி நிமலன்-தன்னை நெற்றி மேல் மற்றொரு கண் நிறைவித்தானை
செய்யானை செழும் பவள திரள் ஒப்பானை செம் சடை மேல் வெண் திங்கள் சேர்த்தினானை
ஐயாறு மேயானை ஆரூரானை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே

 மேல்

#2384
சீர் ஆர் முடி பத்து உடையான்-தன்னை தேசு அழிய திரு விரலால் சிதைய நூக்கி
பேர் ஆர் பெருமை கொடுத்தான்-தன்னை பெண் இரண்டும் ஆணுமாய் நின்றான்-தன்னை
போர் ஆர் புரங்கள் புரள நூறும் புண்ணியனை வெண் நீறு அணிந்தாள்-தன்னை
ஆரானை ஆரூரில் அம்மான்-தன்னை அறியாது அடி நாயேன் அயர்த்த ஆறே

 மேல்

 30. திருவாரூர் - திருத்தாண்டகம்

#2385
எம் பந்த வல்வினை நோய் தீர்த்திட்டான் காண் ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயினான் காண்
வம்பு உந்து கொன்றை அம் தார் மாலையான் காண் வளர் மதி சேர் கண்ணியன் காண் வானோர் வேண்ட
அம்பு ஒன்றால் மூஎயிலும் எரிசெய்தான் காண் அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆடினான் காண்
செம்பொன் செய் மணி மாட திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே

 மேல்

#2386
அக்கு உலாம் அரையினன் காண் அடியார்க்கு என்றும் ஆரமுதாய் அண்ணிக்கும் ஐயாற்றான் காண்
கொக்கு உலாம் பீலியொடு கொன்றை மாலை குளிர் மதியும் கூர் அரவும் நீரும் சென்னி
தொக்கு உலாம் சடையினன் காண் தொண்டர் செல்லும் தூ நெறி காண் வானவர்கள் துதி செய்து ஏத்தும்
திக்கு எலாம் நிறைந்த புகழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே

 மேல்

#2387
நீர் ஏறு சடை முடி எம் நிமலன்தான் காண் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தான் காண்
வார் ஏறு வனமுலையாள்_பாகத்தான் காண் வளர் மதி சேர் சடையான் காண் மாதேவன் காண்
கார் ஏறு முகில் அனைய கண்டத்தான் காண் கல்லாலின் கீழ் அறங்கள் சொல்லினான் காண்
சீர் ஏறு மணி மாட திரு ஆரூரில் திரு மூலட்டானத்த எம் செல்வன்தானே

 மேல்

#2388
கான் ஏறு களிற்று உரிவை போர்வையான் காண் கற்பகம் காண் காலனை அன்று உதைசெய்தான் காண்
ஊன் ஏறும் உடை தலையில் பலி கொள்வான் காண் உத்தமன் காண் ஒற்றியூர் மேவினான் காண்
ஆன் ஏறு ஒன்று அது ஏறும் அண்ணல்தான் காண் ஆதித்தன் பல் இறுத்த ஆதிதான் காண்
தேன் ஏறு மலர் சோலை திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே

 மேல்

#2389
பிறப்போடு இறப்பு என்னும் இல்லாதான் காண் பெண் உருவோடு ஆண் உருவம் ஆயினான் காண்
மறப்படும் என் சிந்தை மருள் நீக்கினான் காண் வானவரும் அறியாத நெறி தந்தான் காண்
நற படு பூ மலர் தூபம் தீபம் நல்ல நறும் சாந்தம் கொண்டு ஏத்தி நாளும் வானோர்
சிறப்போடு பூசிக்கும் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே

 மேல்

#2390
சங்கரன் காண் சக்கரம் மாற்கு அருள்செய்தான் காண் தருணேந்துசேகரன் காண் தலைவன்தான் காண்
அம் கமலத்து அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை அறுத்தவன் காண் அணி பொழில் சூழ் ஐயாற்றான் காண்
எங்கள் பெருமான் காண் என் இடர்கள் போக அருள்செய்யும் இறைவன் காண் இமையோர் ஏத்தும்
செங்கமல வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்த எம் செல்வன்தானே

 மேல்

#2391
நன்று அருளி தீது அகற்றும் நம்பிரான் காண் நான்மறையோடு ஆறு அங்கம் ஆயினான் காண்
மின் திகழும் சோதியான் காண் ஆதிதான் காண் வெள் ஏறு நின்று உலவு கொடியினான் காண்
துன்று பொழில் கச்சி ஏகம்பன்தான் காண் சோற்றுத்துறையான் காண் சோலை சூழ்ந்த
தென்றலால் மணம் கமழும் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே

 மேல்

#2392
பொன் நலத்த நறும் கொன்றை சடையினான் காண் புகலூரும் பூவணமும் பொருந்தினான் காண்
மின் நலத்த நுண்இடையாள்_பாகத்தான் காண் வேதியன் காண் வெண் புரி நூல் மார்பினான் காண்
கொல் நலத்த மூ இலை வேல் ஏந்தினான் காண் கோல மா நீறு அணிந்த மேனியான் காண்
செம் நலத்த வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே

 மேல்

#2393
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வேலை விடம் உண்டு இருண்ட_கண்டத்தான் காண்
மண்டலத்தில் ஒளி வளர விளங்கினான் காண் வாய்மூரும் மறைக்காடும் மருவினான் காண்
புண்டரிக கண்ணானும் பூவின் மேலை புத்தேளும் காண்பு அரிய புராணன்தான் காண்
தெண் திரை நீர் வயல் புடை சூழ் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே

 மேல்

#2394
செரு வளரும் செங்கண்மால் ஏற்றினான் காண் தென் ஆனைக்காவன் காண் தீயில் வீழ
மருவலர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தான் காண் வஞ்சகர்-பால் அணுகாத மைந்தன்தான் காண்
அரு வரையை எடுத்தவன்-தன் சிரங்கள் பத்தும் ஐ_நான்கு தோளும் நெரிந்து அலற அன்று
திரு விரலால் அடர்த்தவன் காண் திரு ஆரூரில் திரு மூலட்டானத்து எம் செல்வன்தானே

 மேல்

 31. திருவாரூர் - திருத்தாண்டகம்

#2395
இடர் கெடும் ஆறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா ஈண்டு ஒளி சேர் கங்கை சடையாய் என்றும்
சுடர் ஒளியாய் உள் விளங்கு சோதீ என்றும் தூ நீறு சேர்ந்து இலங்கு தோளா என்றும்
கடல் விடம் அது உண்டு இருண்ட_கண்டா என்றும் கலைமான் மறி ஏந்து கையா என்றும்
அடல் விடையாய் ஆரமுதே ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே

 மேல்

#2396
செடி ஏறு தீவினைகள் தீரும் வண்ணம் சிந்தித்தே நெஞ்சமே திண்ணம் ஆக
பொடி ஏறு திரு மேனி உடையாய் என்றும் புரந்தரன்-தன் தோள் துணித்த புனிதா என்றும்
அடியேனை ஆள் ஆக கொண்டாய் என்றும் அம்மானே ஆரூர் எம் அரசே என்றும்
கடி நாறு பொழில் கச்சி கம்பா என்றும் கற்பகமே என்று என்றே கதறாநில்லே

 மேல்

#2397
நிலை பெறுமாறு எண்ணுதியேல் நெஞ்சே நீ வா நித்தலும் எம்பிரானுடைய கோயில் புக்கு
புலர்வதன் முன் அலகிட்டு மெழுக்குமிட்டு பூ மாலை புனைந்து ஏத்தி புகழ்ந்து பாடி
தலை ஆர கும்பிட்டு கூத்தும் ஆடி சங்கரா சய போற்றிபோற்றி என்றும்
அலை புனல் சேர் செம் சடை எம் ஆதீ என்றும் ஆரூரா என்று என்றே அலறாநில்லே

 மேல்

#2398
புண்ணியமும் நல் நெறியும் ஆவது எல்லாம் நெஞ்சமே இது கண்டாய் பொருந்த கேள் நீ
நுண்ணிய வெண் நூல் கிடந்த மார்பா என்றும் நுந்தாத ஒண் சுடரே என்றும் நாளும்
விண் இயங்கு தேவர்களும் வேதம் நான்கும் விரை மலர் மேல் நான்முகனும் மாலும் கூடி
எண்ண அரிய திரு நாமம் உடையாய் என்றும் எழில் ஆரூரா என்றே ஏத்தாநில்லே

 மேல்

#2399
இழைத்த நாள் எல்லை கடப்பது அன்றால் இரவினொடு நண்பகலும் ஏத்தி வாழ்த்தி
பிழைத்தது எலாம் பொறுத்து அருள்செய் பெரியோய் என்றும் பிஞ்ஞகனே மை ஞவிலும் கண்டா என்றும்
அழைத்து அலறி அடியேன் உன் அரணம் கண்டாய் அணி ஆரூர் இடம்கொண்ட அழகா என்றும்
குழல் சடை எம் கோன் என்றும் கூறு நெஞ்சே குற்றம் இல்லை என் மேல் நான் கூறினேனே

 மேல்

#2400
நீப்ப அரிய பல் பிறவி நீக்கும் வண்ணம் நினைந்திருந்தேன் காண் நெஞ்சே நித்தம் ஆக
சே பிரியா வெல் கொடியினானே என்றும் சிவலோக நெறி தந்த சிவனே என்றும்
பூ பிரியா நான்முகனும் புள்ளின் மேலை புண்டரிகக்கண்ணானும் போற்றி என்ன
தீ பிழம்பாய் நின்றவனே செல்வம் மல்கும் திரு ஆரூரா என்றே சிந்தி நெஞ்சே

 மேல்

#2401
பற்றி நின்ற பாவங்கள் பாற்ற வேண்டில் பரகதிக்கு செல்வது ஒரு பரிசு வேண்டில்
சுற்றி நின்ற சூழ்வினைகள் வீழ்க்க வேண்டில் சொல்லுகேன் கேள் நெஞ்சே துஞ்சா வண்ணம்
உற்றவரும் உறு துணையும் நீயே என்றும் உன்னை அல்லால் ஒரு தெய்வம் உள்கேன் என்றும்
புற்று அரவ கச்சு ஆர்த்த புனிதா என்றும் பொழில் ஆரூரா என்றே போற்றாநில்லே

 மேல்

#2402
மதி தருவன் நெஞ்சமே உஞ்சு போக வழி ஆவது இது கண்டாய் வானோர்க்கு எல்லாம்
அதிபதியே ஆரமுதே ஆதி என்றும் அம்மானே ஆரூர் எம் ஐயா என்றும்
துதிசெய்து துன்று மலர் கொண்டு தூவி சூழும் வலம்செய்து தொண்டு பாடி
கதிர் மதி சேர் சென்னியனே காலகாலா கற்பகமே என்று என்றே கதறாநில்லே

 மேல்

#2403
பாசத்தை பற்று அறுக்கல் ஆகும் நெஞ்சே பரஞ்சோதீ பண்டரங்கா பாவநாசா
தேசத்து ஒளி விளக்கே தேவதேவே திரு ஆரூர் திரு மூலட்டானா என்றும்
நேசத்தை நீ பெருக்கி நேர் நின்று உள்கி நித்தலும் சென்று அடி மேல் வீழ்ந்து நின்று
ஏசற்று நின்று இமையோர் ஏறே என்றும் எம்பெருமான் என்று என்றே ஏத்தாநில்லே

 மேல்

#2404
புலன்கள் ஐந்தால் ஆட்டுண்டு போது போக்கி புறம்புறமே திரியாதே போது நெஞ்சே
சலம் கொள் சடை முடி உடைய தலைவா என்றும் தக்கன் செய் பெரு வேள்வி தகர்த்தாய் என்றும்
இலங்கையர்_கோன் சிரம் நெரித்த இறைவா என்றும் எழில் ஆரூர் இடம்கொண்ட எந்தாய் என்றும்
நலம் கொள் அடி என் தலை மேல் வைத்தாய் என்றும் நாள்-தோறும் நவின்று ஏத்தாய் நன்மை ஆமே

 மேல்

 32. திருவாரூர் - போற்றித் திருத்தாண்டகம்

#2405
கற்றவர்கள் உண்ணும் கனியே போற்றி கழல் அடைந்தார் செல்லும் கதியே போற்றி
அற்றவர்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி அல்லல் அறுத்து அடியேனை ஆண்டாய் போற்றி
மற்று ஒருவர் ஒப்பு இல்லா மைந்தா போற்றி வானவர்கள் போற்றும் மருந்தே போற்றி
செற்றவர்-தம் புரம் எரித்த சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி

 மேல்

#2406
வங்கம் மலி கடல் நஞ்சம் உண்டாய் போற்றி மத யானை ஈர் உரிவை போர்த்தாய் போற்றி
கொங்கு அலரும் நறும் கொன்றை தாராய் போற்றி கொல் புலி தோல் ஆடை குழகா போற்றி
அங்கணனே அமரர்கள்-தம் இறைவா போற்றி ஆல மர நீழல் அறம் சொன்னாய் போற்றி
செம் கனக தனி குன்றே சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி

 மேல்

#2407
மலையான்மடந்தை_மணாளா போற்றி மழ விடையாய் நின் பாதம் போற்றிபோற்றி
நிலை ஆக என் நெஞ்சில் நின்றாய் போற்றி நெற்றி மேல் ஒற்றைக்கண் உடையாய் போற்றி
இலை ஆர்ந்த மூ இலை வேல் ஏந்தீ போற்றி ஏழ்கடலும் ஏழ்பொழிலும் ஆனாய் போற்றி
சிலையாய் அன்று எயில் எரித்த சிவனே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி

 மேல்

#2408
பொன் இயலும் மேனியனே போற்றிபோற்றி பூத படை உடையாய் போற்றிபோற்றி
மன்னிய சீர் மறை நான்கும் ஆனாய் போற்றி மறி ஏந்து கையானே போற்றிபோற்றி
உன்னுமவர்க்கு உண்மையனே போற்றிபோற்றி உலகுக்கு ஒருவனே போற்றிபோற்றி
சென்னி மிசை வெண் பிறையாய் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி

 மேல்

#2409
நஞ்சு உடைய கண்டனே போற்றிபோற்றி நல் தவனே நின் பாதம் போற்றிபோற்றி
வெம் சுடரோன் பல் இறுத்த வேந்தே போற்றி வெண் மதி அம் கண்ணி விகிர்தா போற்றி
துஞ்சு இருளில் ஆடல் உகந்தாய் போற்றி தூ நீறு மெய்க்கு அணிந்த சோதீ போற்றி
செம் சடையாய் நின் பாதம் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி

 மேல்

#2410
சங்கரனே நின் பாதம் போற்றிபோற்றி சதாசிவனே நின் பாதம் போற்றிபோற்றி
பொங்கு அரவா நின் பாதம் போற்றிபோற்றி புண்ணியனே நின் பாதம் போற்றிபோற்றி
அம் கமலத்து அயனோடு மாலும் காணா அனல் உருவா நின் பாதம் போற்றிபோற்றி
செங்கமல திரு பாதம் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி

 மேல்

#2411
வம்பு உலவு கொன்றை சடையாய் போற்றி வான் பிறையும் வாள் அரவும் வைத்தாய் போற்றி
கொம்பு அனைய நுண்இடையாள்_கூறா போற்றி குரை கழலால் கூற்று உதைத்த கோவே போற்றி
நம்புமவர்க்கு அரும் பொருளே போற்றிபோற்றி நால் வேதம் ஆறு அங்கம் ஆனாய் போற்றி
செம்பொனே மரகதமே மணியே போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி

 மேல்

#2412
உள்ளமாய் உள்ளத்தே நின்றாய் போற்றி உகப்பார் மனத்து என்றும் நீங்காய் போற்றி
வள்ளலே போற்றி மணாளா போற்றி வானவர்_கோன் தோள் துணித்த மைந்தா போற்றி
வெள்ளை ஏறு ஏறும் விகிர்தா போற்றி மேலோர்க்கும் மேலோர்க்கும் மேலாய் போற்றி
தெள்ளு நீர் கங்கை சடையாய் போற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி

 மேல்

#2413
பூ ஆர்ந்த சென்னி புனிதா போற்றி புத்தேளிர் போற்றும் பொருளே போற்றி
தே ஆர்ந்த தேவர்க்கும் தேவே போற்றி திருமாலுக்கு ஆழி அளித்தாய் போற்றி
சாவாமே காத்து என்னை ஆண்டாய் போற்றி சங்கு ஒத்த நீற்று எம் சதுரா போற்றி
சே ஆர்ந்த வெல் கொடியாய் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி

 மேல்

#2414
பிரமன்-தன் சிரம் அரிந்த பெரியோய் போற்றி பெண் உருவோடு ஆண் உருவாய் நின்றாய் போற்றி
கரம் நான்கும் முக்கண்ணும் உடையாய் போற்றி காதலிப்பார்க்கு ஆற்ற எளியாய் போற்றி
அருமந்த தேவர்க்கு அரசே போற்றி அன்று அரக்கன் ஐ_நான்கு தோளும் தாளும்
சிரம் நெரித்த சேவடியாய் போற்றிபோற்றி திரு மூலட்டானனே போற்றிபோற்றி

 மேல்

 33. திருவாரூர் அரநெறி- திருத்தாண்டகம்

#2415
பொரும் கை மத கரி உரிவை போர்வையானை பூவணமும் வலஞ்சுழியும் பொருந்தினானை
கரும்பு தரு கட்டியை இன் அமிர்தை தேனை காண்பு அரிய செழும் சுடரை கனக குன்றை
இரும் கனக மதில் ஆரூர் மூலட்டானத்து எழுந்தருளி இருந்தானை இமையோர் ஏத்தும்
அரும் தவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே

 மேல்

#2416
கற்பகமும் இரு சுடரும் ஆயினானை காளத்தி கயிலாய மலை உளானை
வில் பயிலும் மதன் அழிய விழித்தான்-தன்னை விசயனுக்கு வேடுவனாய் நின்றான்-தன்னை
பொற்பு அமரும் பொழில் ஆரூர் மூலட்டானம் பொருந்திய எம்பெருமானை பொருந்தார் சிந்தை
அற்புதனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே

 மேல்

#2417
பாதி ஒரு பெண் முடி மேல் கங்கையானை பாசூரும் பரங்குன்றும் மேயான்-தன்னை
வேதியனை தன் அடியார்க்கு எளியான்-தன்னை மெய்ஞ்ஞான விளக்கானை விரையே நாறும்
போது இயலும் பொழில் ஆரூர் மூலட்டானம் புற்று இடம்கொண்டிருந்தானை போற்றுவார்கள்
ஆதியனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே

 மேல்

#2418
நந்தி பணி கொண்டு அருளும் நம்பன்-தன்னை நாகேச்சுரம் இடமா நண்ணினானை
சந்தி மலர் இட்டு அணிந்து வானோர் ஏத்தும் தத்துவனை சக்கரம் மாற்கு ஈந்தான்-தன்னை
இந்து நுழை பொழில் ஆரூர் மூலட்டானம் இடம்கொண்ட பெருமானை இமையோர் போற்றும்
அந்தணனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே

 மேல்

#2419
சுடர் பவள திரு மேனி வெண் நீற்றானை சோதிலிங்க தூங்கானைமாடத்தானை
விடக்கு இடுகாடு இடம் ஆக உடையான்-தன்னை மிக்க அரணம் எரியூட்ட வல்லான்-தன்னை
மடல் குலவு பொழில் ஆரூர் மூலட்டானம் மன்னிய எம்பெருமானை மதியார் வேள்வி
அடர்த்தவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே

 மேல்

#2420
தாய் அவனை எ உயிர்க்கும் தன் ஒப்பு இல்லா தகு தில்லை நடம் பயிலும் தலைவன்-தன்னை
மாயவனும் மலரவனும் வானோர் ஏத்த மறி கடல் நஞ்சு உண்டு உகந்த மைந்தன்-தன்னை
மேயவனை பொழில் ஆரூர் மூலட்டானம் விரும்பிய எம்பெருமானை எல்லாம் முன்னே
ஆயவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே

 மேல்

#2421
பொருள் இயல் நல் சொல் பதங்கள் ஆயினானை புகலூரும் புறம்பயமும் மேயான்-தன்னை
மருள் இயலும் சிந்தையர்க்கு மருந்து-தன்னை மறைக்காடும் சாய்க்காடும் மன்னினானை
இருள் இயன்ற பொழில் ஆரூர் மூலட்டானத்து இனிது அமரும் பெருமானை இமையோர் ஏத்த
அருளியனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே

 மேல்

#2422
காலனை காலால் காய்ந்த கடவுள்-தன்னை காரோணம் கழிப்பாலை மேயான்-தன்னை
பாலனுக்கு பாற்கடல் அன்று ஈந்தான்-தன்னை பணி உகந்த அடியார்கட்கு இனியான்-தன்னை
சேல் உகளும் வயல் ஆரூர் மூலட்டானம் சேர்ந்து இருந்த பெருமானை பவளம் ஈன்ற
ஆலவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே

 மேல்

#2423
ஒப்பு ஒருவர் இல்லாத ஒருவன்-தன்னை ஓத்தூரும் உறையூரும் மேவினானை
வைப்பு அவனை மாணிக்க சோதியானை மாருதமும் தீ வெளி நீர் மண் ஆனானை
மெய்ப்பொருளாய் அடியேனது உள்ளே நின்ற வினையிலியை திரு மூலட்டானம் மேய
அ பொன்னை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே

 மேல்

#2424
பகலவன்-தன் பல் உகுத்த படிறன்-தன்னை பராய்த்துறை பைஞ்ஞீலியிடம் பாவித்தானை
இகலவனை இராவணனை இடர் செய்தானை ஏத்தாதார் மனத்தகத்துள் இருள் ஆனானை
புகழ் நிலவு பொழில் ஆரூர் மூலட்டானம் பொருந்திய எம்பெருமானை போற்றார் சிந்தை
அகலவனை அரநெறியில் அப்பன்-தன்னை அடைந்து அடியேன் அருவினை நோய் அறுத்த ஆறே

 மேல்

 34. திருவாரூர் - திருத்தாண்டகம்

#2425
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ ஓர் உருவே மூ உருவம் ஆன நாளோ
கருவனாய் காலனை முன் காய்ந்த நாளோ காமனையும் கண் அழலால் விழித்த நாளோ
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரிந்த நாளோ மான் மறி கை ஏந்தி ஓர் மாது ஓர்பாகம்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே

 மேல்

#2426
மலையார் பொன் பாவையொடு மகிழ்ந்த நாளோ வானவரை வலி அமுதம் ஊட்டி அ நாள்
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ நினைப்ப அரிய தழல் பிழம்பாய் நிமிர்ந்த நாளோ
அலைசாமே அலை கடல் நஞ்சு உண்ட நாளோ அமரர் கணம் புடை சூழ இருந்த நாளோ
சிலையாய் முப்புரம் எரித்த முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே

 மேல்

#2427
பாடகம் சேர் மெல் அடி நல் பாவையாளும் நீயும் போய் பார்த்தனது பலத்தை காண்பான்
வேடனாய் வில் வாங்கி எய்த நாளோ விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணி திகழும் அம்பலத்தை மன்னி கூத்தை
ஆடுவான் புகுவதற்கு முன்னோ பின்னோ அணி ஆரூர் கோயிலா கொண்ட நாளே

 மேல்

#2428
ஓங்கி உயர்ந்து எழுந்து நின்ற நாளோ ஓர் உகம் போல் ஏழ்உகமாய் நின்ற நாளோ
தாங்கிய சீர் தலை ஆன வானோர் செய்த தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்த நாளோ
நீங்கிய நீர் தாமரையான் நெடு மாலோடு நில்லாய் எம்பெருமானே என்று அங்கு ஏத்தி
வாங்கி மதி வைப்பதற்கு முன்னோ பின்னோ வளர் ஆரூர் கோயிலா கொண்ட நாளே

 மேல்

#2429
பாலனாய் வளர்ந்திலா பான்மையானே பணிவார்கட்கு அங்கங்கே பற்று ஆனானே
நீல மா மணி கண்டத்து எண் தோளானே நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகும்
சீலமே சிவலோக நெறியே ஆகும் சீர்மையே கூர்மையே குணமே நல்ல
கோலம் நீ கொள்வதற்கு முன்னோ பின்னோ குளிர் ஆரூர் கோயிலா கொண்ட நாளே

 மேல்

#2430
திறம் பலவும் வழி காட்டி செய்கை காட்டி சிறியையாய் பெரியையாய் நின்ற நாளோ
மறம் பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து மா முனிவர்க்கு அருள்செய்து அங்கு இருந்த நாளோ
பிறங்கிய சீர் பிரமன்-தன் தலை கை ஏந்தி பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ
அறம் பலவும் உரைப்பதற்கு முன்னோ பின்னோ அணி ஆரூர் கோயிலா கொண்ட நாளே

 மேல்

#2431
நிலந்தரத்து நீண்டு உருவம் ஆன நாளோ நிற்பனவும் நடப்பனவும் நீயே ஆகி
கலந்து உரைக்க கற்பகமாய் நின்ற நாளோ காரணத்தால் நாரணனை கற்பித்து அன்று
வலம் சுருக்கி வல் அசுரர் மாண்டு வீழ வாசுகியை வாய் மடுத்து வானோர் உய்ய
சலந்தரனை கொல்வதற்கு முன்னோ பின்னோ தண் ஆரூர் கோயிலா கொண்ட நாளே

 மேல்

#2432
பாதத்தால் முயலகனை பாதுகாத்து பாரகத்தே பரஞ்சுடராய் நின்ற நாளோ
கீதத்தை மிக பாடும் அடியார்க்கு என்றும் கேடு இலா வான்_உலகம் கொடுத்த நாளோ
பூதத்தான் பொரு நீலி புனிதன் மேவி பொய் உரையா மறை நால்வர் விண்ணோர்க்கு என்றும்
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ பின்னோ விழவு ஆரூர் கோயிலா கொண்ட நாளே

 மேல்

#2433
புகை எட்டும் போக்கு எட்டும் புலன்கள் எட்டும் பூதலங்கள் அவை எட்டும் பொழில்கள் எட்டும்
கலை எட்டும் காப்பு எட்டும் காட்சி எட்டும் கழல் சேவடி அடைந்தார் களைகண் எட்டும்
நகை எட்டும் நாள் எட்டும் நன்மை எட்டும் நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும்
திகை எட்டும் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே

 மேல்

#2434
ஈசனாய் உலகு ஏழும் மலையும் ஆகி இராவணனை ஈடு அழித்திட்டு இருந்த நாளோ
வாச மலர் மகிழ் தென்றல் ஆன நாளோ மத யானை உரி போர்த்து மகிழ்ந்த நாளோ
தாது மலர் சண்டிக்கு கொடுத்த நாளோ சகரர்களை மறித்திட்டு ஆட்கொண்ட நாளோ
தேசம் உமை அறிவதற்கு முன்னோ பின்னோ திரு ஆரூர் கோயிலா கொண்ட நாளே

 மேல்

 35. திருவெண்காடு - திருத்தாண்டகம்

#2435
தூண்டு சுடர் மேனி தூ நீறு ஆடி சூலம் கை ஏந்தி ஓர் சுழல் வாய் நாகம்
பூண்டு பொறி அரவம் காதில் பெய்து பொன் சடைகள் அவை தாழ புரி வெண்நூலர்
நீண்டு கிடந்து இலங்கு திங்கள் சூடி நெடும் தெருவே வந்து எனது நெஞ்சம் கொண்டார்
வேண்டும் நடை நடக்கும் வெள் ஏறு ஏறி வெண்காடு மேவிய விகிர்தனாரே

 மேல்

#2436
பாதம் தனி பார் மேல் வைத்த பாதர் பாதாளம் ஏழ் உருவ பாய்ந்த பாதர்
ஏதம் படா வண்ணம் நின்ற பாதர் ஏழ்உலகுமாய் நின்ற ஏகபாதர்
ஓதத்து ஒலி மடங்கி ஊர் உண்டு ஏறி ஒத்து உலகம் எல்லாம் ஒடுங்கிய பின்
வேதத்து ஒலி கொண்டு வீணை கேட்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே

 மேல்

#2437
நென்னலை ஓர் ஓடு ஏத்தி பிச்சைக்கு என்று வந்தார்க்கு வந்தேன் என்று இல்லே புக்கேன்
அ நிலையே நிற்கின்றார் ஐயம் கொள்ளார் அருகே வருவார் போல் நோக்குகின்றார்
நும் நிலைமை ஏதோ நும் ஊர்தான் ஏதோ என்றேனுக்கு ஒன்று ஆக சொல்லமாட்டார்
மென்முலையார் கூடி விரும்பி ஆடும் வெண்காடு மேவிய விகிர்தனாரே

 மேல்

#2438
ஆகத்து உமை அடக்கி ஆறு சூடி ஐ வாய் அரவு அசைத்து அங்கு ஆன் ஏறு ஏறி
போகம் பல உடைத்தாய் பூதம் சூழ புலி தோல் உடையா புகுந்து நின்றார்
பாகு இடுவான் சென்றேனை பற்றி நோக்கி பரிசு அழித்து என் வளை கவர்ந்தார் பாவியேனை
மேகம் முகில் உரிஞ்சு சோலை சூழ்ந்த வெண்காடு மேவிய விகிர்தனாரே

 மேல்

#2439
கொள்ளை குழை காதின் குண்டை பூதம் கொடுகொட்டி கொட்டி குனித்து பாட
உள்ளம் கவர்ந்திட்டு போவார் போல உழிதருவர் நான் தெரியமாட்டேன் மீண்டேன்
கள்ள விழி விழிப்பார் காணா கண்ணால் கண்ணுளார் போலே கரந்து நிற்பர்
வெள்ள சடை முடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே

 மேல்

#2440
தொட்டு இலங்கு சூலத்தர் மழுவாள் ஏந்தி சுடர் கொன்றை தார் அணிந்து சுவைகள் பேசி
பட்டி வெள் ஏறு ஏறி பலியும் கொள்ளார் பார்ப்பாரை பரிசு அழிப்பார் ஒக்கின்றாரால்
கட்டு இலங்கு வெண் நீற்றர் கனல பேசி கருத்து அழித்து வளை கவர்ந்தார் காலை மாலை
விட்டு இலங்கு சடை முடியர் வேத நாவர் வெண்காடு மேவிய விகிர்தனாரே

 மேல்

#2441
பெண்பால் ஒருபாகம் பேணா வாழ்க்கை கோள் நாகம் பூண்பனவும் நாண் ஆம் சொல்லார்
உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் உண்பதுவும் நஞ்சு அன்றே உலோபி உண்ணார்
பண்பால் அவிர் சடையர் பற்றி நோக்கி பாலை பரிசு அழிய பேசுகின்றார்
விண்-பால் மதி சூடி வேதம் ஓதி வெண்காடு மேவிய விகிர்தனாரே

 மேல்

#2442
மருதங்களா மொழிவர் மங்கையோடு வானவரும் மால் அயனும் கூடி தங்கள்
சுருதங்களால் துதித்து தூ நீர் ஆட்டி தோத்திரங்கள் பல சொல்லி தூபம் காட்டி
கருதும்-கொல் எம்பிரான் செய் குற்றேவல் என்பார்க்கு வேண்டும் வரம் கொடுத்து
விகிர்தங்களா நடப்பர் வெள் ஏறு ஏறி வெண்காடு மேவிய விகிர்தனாரே

 மேல்

#2443
புள்ளானும் நான்முகனும் புக்கும் போந்தும் காணார் பொறி அழலாய் நின்றான்-தன்னை
உள்ளானை ஒன்று அல்லா உருவினானை உலகுக்கு ஒரு விளக்காய் நின்றான்-தன்னை
கள் ஏந்து கொன்றை தூய் காலை மூன்றும் ஓவாமே நின்று தவங்கள் செய்த
வெள்ளானை வேண்டும் வரம் கொடுப்பார் வெண்காடு மேவிய விகிர்தனாரே

 மேல்

#2444
மா குன்று எடுத்தோன்-தன் மைந்தன் ஆகி மா வேழம் வில்லா மதித்தான்-தன்னை
நோக்கும் துணை தேவர் எல்லாம் நிற்க நொடி வரையில் நோவ விழித்தான்-தன்னை
காக்கும் கடல் இலங்கை கோமான்-தன்னை கதிர் முடியும் கண்ணும் பிதுங்க ஊன்றி
வீக்கம் தவிர்த்த விரலார் போலும் வெண்காடு மேவிய விகிர்தனாரே

 மேல்

 36. திருப்பழனம் - திருத்தாண்டகம்

#2445
அலை ஆர் கடல் நஞ்சம் உண்டார்தாமே அமரர்களுக்கு அருள்செய்யும் ஆதிதாமே
கொலை ஆய கூற்றம் உதைத்தார்தாமே கொல் வேங்கை தோல் ஒன்று அசைத்தார்தாமே
சிலையாய் புரம் மூன்றும் எரித்தார்தாமே தீ நோய் களைந்து என்னை ஆண்டார்தாமே
பலி தேர்ந்து அழகு ஆய பண்பர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே

 மேல்

#2446
வெள்ளம் ஒரு சடை மேல் ஏற்றார்தாமே மேலார்கள்மேலார்கள் மேலார்தாமே
கள்ளம் கடிந்து என்னை ஆண்டார்தாமே கருத்து உடைய பூத படையார்தாமே
உள்ளத்து உவகை தருவார்தாமே உறு நோய் சிறு பிணிகள் தீர்ப்பார்தாமே
பள்ள பரவை நஞ்சு உண்டார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே

 மேல்

#2447
இரவும் பகலுமாய் நின்றார்தாமே எப்போதும் என் நெஞ்சத்து உள்ளார்தாமே
அரவம் அரையில் அசைத்தார்தாமே அனல் ஆடி அங்கை மறித்தார்தாமே
குரவம் கமழும் குற்றாலர்தாமே கோலங்கள் மேல்மேல் உகப்பார்தாமே
பரவும் அடியார்க்கு பாங்கர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே

 மேல்

#2448
மாறு இல் மதில் மூன்றும் எய்தார்தாமே வரி அரவம் கச்சு ஆக ஆர்த்தார்தாமே
நீறு சேர் திரு மேனி நிமலர்தாமே நெற்றி நெருப்பு கண் வைத்தார்தாமே
ஏறு கொடும் சூல கையார்தாமே என்பு ஆபரணம் அணிந்தார்தாமே
பாறு உண் தலையில் பலியார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே

 மேல்

#2449
சீரால் வணங்கப்படுவார்தாமே திசைக்கு எல்லாம் தேவு ஆகி நின்றார்தாமே
ஆராவமுதம் ஆனார்தாமே அளவு இல் பெருமை உடையார்தாமே
நீர் ஆர் நியமம் உடையார்தாமே நீள் வரை வில் ஆக வளைத்தார்தாமே
பாரார் பரவப்படுவார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே

 மேல்

#2450
காலன் உயிர் வௌவ வல்லார்தாமே கடிது ஓடும் வெள்ளை விடையார்தாமே
கோலம் பலவும் உகப்பார்தாமே கோள் நாகம் நாண் ஆக பூண்டார்தாமே
நீலம் பொலிந்த மிடற்றார்தாமே நீள் வரையின் உச்சி இருப்பார்தாமே
பால விருத்தரும் ஆனார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே

 மேல்

#2451
ஏய்ந்த உமை நங்கை_பங்கர்தாமே ஏழ் ஊழிக்கு அ புறமாய் நின்றார்தாமே
ஆய்ந்து மலர் தூவ நின்றார்தாமே அளவு இல் பெருமை உடையார்தாமே
தேய்ந்த பிறை சடை மேல் வைத்தார்தாமே தீ வாய் அரவு அதனை ஆர்த்தார்தாமே
பாய்ந்த படர் கங்கை ஏற்றார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே

 மேல்

#2452
ஓராதார் உள்ளத்தில் நில்லார்தாமே உள் ஊறும் அன்பர் மனத்தார்தாமே
பேராது என் சிந்தை இருந்தார்தாமே பிறர்க்கு என்றும் காட்சிக்கு அரியார்தாமே
ஊர் ஆரும் மூஉலகத்து உள்ளார்தாமே உலகை நடுங்காமல் காப்பார்தாமே
பார் ஆர் முழவத்து இடையார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே

 மேல்

#2453
நீண்டவர்க்கு ஓர் நெருப்பு உருவம் ஆனார்தாமே நேர்_இழையை ஒருபாகம் வைத்தார்தாமே
பூண்டு அரவை புலி தோல் மேல் ஆர்த்தார்தாமே பொன் நிறத்த வெள்ள சடையார்தாமே
ஆண்டு உலகு ஏழ் அனைத்தினையும் வைத்தார்தாமே அங்கங்கே சிவம் ஆகி நின்றார்தாமே
பாண்டவரில் பார்த்தனுக்கு பரிந்தார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே

 மேல்

#2454
விடை ஏறி வேண்டு உலகத்து இருப்பார்தாமே விரி கதிரோன் சோற்றுத்துறையார்தாமே
புடை சூழ் தேவர் குழாத்தார்தாமே பூந்துருத்தி நெய்த்தானம் மேயார்தாமே
அடைவே புனல் சூழ் ஐயாற்றார்தாமே அரக்கனையும் ஆற்றல் அழித்தார்தாமே
படையா பல் பூதம் உடையார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே

 மேல்

 37. திருவையாறு - திருத்தாண்டகம்

#2455
ஆரார் திரிபுரங்கள் நீறா நோக்கும் அனல் ஆடி ஆரமுதே என்றேன் நானே
கூர் ஆர் மழுவாள் படை ஒன்று ஏந்தி குறள் பூத பல் படையாய் என்றேன் நானே
பேர் ஆயிரம் உடையாய் என்றேன் நானே பிறை சூடும் பிஞ்ஞகனே என்றேன் நானே
ஆராவமுதே என் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே

 மேல்

#2456
தீ வாயில் முப்புரங்கள் நீறா நோக்கும் தீர்த்தா புராணனே என்றேன் நானே
மூவா மதிசூடி என்றேன் நானே முதல்வா முக்கண்ணனே என்றேன் நானே
ஏ ஆர் சிலையானே என்றேன் நானே இடும்பை கடல்-நின்றும் ஏற வாங்கி
ஆவா என்று அருள்புரியும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே

 மேல்

#2457
அம் சுண்ண_வண்ணனே என்றேன் நானே அடியார்கட்கு ஆரமுதே என்றேன் நானே
நஞ்சு அணி கண்டனே என்றேன் நானே நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே
நெஞ்சு உணர உள் புக்கு இருந்தபோது நிறையும் அமுதமே என்றேன் நானே
அஞ்சாதே ஆள்வானே ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே

 மேல்

#2458
தொல்லை தொடு கடலே என்றேன் நானே துலங்கும் இளம் பிறையாய் என்றேன் நானே
எல்லை நிறைந்தானே என்றேன் நானே ஏழ் நரம்பின் இன்னிசையாய் என்றேன் நானே
அல்லல் கடல் புக்கு அழுந்துவேனை வாங்கி அருள்செய்தாய் என்றேன் நானே
எல்லை ஆம் ஐயாறா என்றேன் நானே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே

 மேல்

#2459
இண்டை சடை முடியாய் என்றேன் நானே இரு சுடர் வானத்தாய் என்றேன் நானே
தொண்டர் தொழப்படுவாய் என்றேன் நானே துருத்தி நெய்த்தானத்தாய் என்றேன் நானே
கண்டம் கறுத்தானே என்றேன் நானே கனல் ஆகும் கண்ணானே என்றேன் நானே
அண்டத்துக்கு அப்பால் ஆம் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே

 மேல்

#2460
பற்றார் புரம் எரித்தாய் என்றேன் நானே பசுபதீ பண்டரங்கா என்றேன் நானே
கற்றார்கள் நாவினாய் என்றேன் நானே கடு விடை ஒன்று ஊர்தியாய் என்றேன் நானே
பற்று ஆனார் நெஞ்சு உளாய் என்றேன் நானே பார்த்தர்க்கு அருள்செய்தாய் என்றேன் நானே
அற்றார்க்கு அருள்செய்யும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே

 மேல்

#2461
விண்ணோர் தலைவனே என்றேன் நானே விளங்கும் இளம் பிறையாய் என்றேன் நானே
எண்ணார் எயில் எரித்தாய் என்றேன் நானே ஏகம்பம் மேயானே என்றேன் நானே
பண் ஆர் மறை பாடி என்றேன் நானே பசுபதீ பால் நீற்றாய் என்றேன் நானே
அண்ணா ஐயாறனே என்றேன் நானே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே

 மேல்

#2462
அவன் என்று நான் உன்னை அஞ்சாதேனை அல்லல் அறுப்பானே என்றேன் நானே
சிவன் என்று நான் உன்னை எல்லாம் சொல்ல செல்வம் தருவானே என்றேன் நானே
பவன் ஆகி என் உள்ளத்துள்ளே நின்று பண்டைவினை அறுப்பாய் என்றேன் நானே
அவன் என்றே ஆதியே ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே

 மேல்

#2463
கச்சி ஏகம்பனே என்றேன் நானே கயிலாயா காரோணா என்றேன் நானே
நிச்சல் மணாளனே என்றேன் நானே நினைப்பார் மனத்து உளாய் என்றேன் நானே
உச்சம்போது ஏறு ஏறீ என்றேன் நானே உள்குவார் உள்ளத்தாய் என்றேன் நானே
அச்சம் பிணி தீர்க்கும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே

 மேல்

#2464
வில் ஆடி வேடனே என்றேன் நானே வெண் நீறு மெய்க்கு அணிந்தாய் என்றேன் நானே
சொல் ஆய குழலாய் என்றேன் நானே சுலா ஆய தொல் நெறியே என்றேன் நானே
எல்லாமாய் என் உயிரே என்றேன் நானே இலங்கையர்_கோன் தோள் இறுத்தாய் என்றேன் நானே
அல்லா வினை தீர்க்கும் ஐயாறனே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே

 மேல்

 38. திருவையாறு - திருத்தாண்டகம்

#2465
ஓசை ஒலி எலாம் ஆனாய் நீயே உலகுக்கு ஒருவனாய் நின்றாய் நீயே
வாச மலர் எலாம் ஆனாய் நீயே மலையான்மருமகனாய் நின்றாய் நீயே
பேச பெரிதும் இனியாய் நீயே பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே
தேச விளக்கு எலாம் ஆனாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ

 மேல்

#2466
நோக்க அரிய திரு மேனி உடையாய் நீயே நோவாமே நோக்கு அருள வல்லாய் நீயே
காப்ப அரிய ஐம்புலனும் காத்தாய் நீயே காமனையும் கண் அழலால் காய்ந்தாய் நீயே
ஆர்ப்ப அரிய மா நாகம் ஆர்த்தாய் நீயே அடியான் என்று அடி என் மேல் வைத்தாய் நீயே
தீர்ப்ப அரிய வல்வினை நோய் தீர்ப்பாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ

 மேல்

#2467
கனத்தகத்து கடும் சுடராய் நின்றாய் நீயே கடல் வரை வான் ஆகாயம் ஆனாய் நீயே
தனத்தகத்து தலை கலனா கொண்டாய் நீயே சார்ந்தாரை தகைந்து ஆள வல்லாய் நீயே
மனத்து இருந்த கருத்து அறிந்து முடிப்பாய் நீயே மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே
சினத்து இருந்த திரு நீல_கண்டன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ

 மேல்

#2468
வான் உற்ற மா மலைகள் ஆனாய் நீயே வட கயிலை மன்னி இருந்தாய் நீயே
ஊன் உற்ற ஒளி மழுவாள் படையாய் நீயே ஒளி மதியோடு அரவு புனல் வைத்தாய் நீயே
ஆன் உற்ற ஐந்தும் அமர்ந்தாய் நீயே அடியான் என்று அடி என் மேல் வைத்தாய் நீயே
தேன் உற்ற சொல் மடவாள்_பங்கன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ

 மேல்

#2469
பெண் ஆண் பிறப்பிலியாய் நின்றாய் நீயே பெரியார்கட்கு எல்லாம் பெரியாய் நீயே
உண்ணா அரு நஞ்சம் உண்டாய் நீயே ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே
கண்ணாய் உலகு எலாம் காத்தாய் நீயே கழல் சேவடி என் மேல் வைத்தாய் நீயே
திண் ஆர் மழுவாள் படையாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ

 மேல்

#2470
உற்றிருந்த உணர்வு எலாம் ஆனாய் நீயே உற்றவர்க்கு ஓர் சுற்றமாய் நின்றாய் நீயே
கற்றிருந்த கலை ஞானம் ஆனாய் நீயே கற்றவர்க்கு ஓர் கற்பகமாய் நின்றாய் நீயே
பெற்றிருந்த தாய் அவளின் நல்லாய் நீயே பிரானாய் அடி என் மேல் வைத்தாய் நீயே
செற்றிருந்த திரு நீல_கண்டன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ

 மேல்

#2471
எல்லா உலகமும் ஆனாய் நீயே ஏகம்பம் மேவி இருந்தாய் நீயே
நல்லாரை நன்மை அறிவாய் நீயே ஞான சுடர் விளக்காய் நின்றாய் நீயே
பொல்லா வினைகள் அறுப்பாய் நீயே புகழ் சேவடி என் மேல் வைத்தாய் நீயே
செல்வாய செல்வம் தருவாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ

 மேல்

#2472
ஆவினில் ஐந்தும் அமர்ந்தாய் நீயே அளவு இல் பெருமை உடையாய் நீயே
பூவினில் நாற்றமாய் நின்றாய் நீயே போர் கோலம் கொண்டு எயில் எய்தாய் நீயே
நாவில் நடுஉரையாய் நின்றாய் நீயே நண்ணி அடி என் மேல் வைத்தாய் நீயே
தேவர் அறியாத தேவன் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ

 மேல்

#2473
எண் திசைக்கும் ஒண் சுடராய் நின்றாய் நீயே ஏகம்பம் மேய இறைவன் நீயே
வண்டு இசைக்கும் நறும் கொன்றை தாராய் நீயே வாரா உலகு அருள வல்லாய் நீயே
தொண்டு இசைத்து உன் அடி பரவ நின்றாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே
திண் சிலைக்கு ஓர் சரம் கூட்ட வல்லாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ

 மேல்

#2474
விண்டார் புரம் மூன்றும் எய்தாய் நீயே விண்ணவர்க்கும் மேல் ஆகி நின்றாய் நீயே
கண்டாரை கொல்லும் நஞ்சு உண்டாய் நீயே காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே
தொண்டாய் அடியேனை ஆண்டாய் நீயே தூ மலர் சேவடி என் மேல் வைத்தாய் நீயே
திண் தோள் விட்டு எரி ஆடல் உகந்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ

 மேல்

#2475
ஆரும் அறியா இடத்தாய் நீயே ஆகாயம் தேர் ஊர வல்லாய் நீயே
பேரும் பெரிய இலங்கை_வேந்தன் பெரிய முடி பத்து இறுத்தாய் நீயே
ஊரும் புரம் மூன்றும் அட்டாய் நீயே ஒண் தாமரையானும் மாலும் கூடி
தேரும் அடி என் மேல் வைத்தாய் நீயே திரு ஐயாறு அகலாத செம்பொன் சோதீ

 மேல்

 39. திருமழபாடி - திருத்தாண்டகம்

#2476
நீறு ஏறு திரு மேனி உடையான் கண்டாய் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைத்தான் கண்டாய்
கூறு ஆக உமை பாகம் கொண்டான் கண்டாய் கொடிய விடம் உண்டு இருண்ட கண்டன் கண்டாய்
ஏறு ஏறி எங்கும் திரிவான் கண்டாய் ஏழ்உலகும் ஏழ்மலையும் ஆனான் கண்டாய்
மாறு ஆனார்-தம் அரணம் அட்டான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே

 மேல்

#2477
கொக்கு இறகு சென்னி உடையான் கண்டாய் கொல்லை விடை ஏறும் கூத்தன் கண்டாய்
அக்கு அரை மேல் ஆடல் உடையான் கண்டாய் அனல் அங்கை ஏந்திய ஆதி கண்டாய்
அக்கோடு அரவம் அணிந்தான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுதம் ஆனான் கண்டாய்
மற்று இருந்த கங்கை சடையான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே

 மேல்

#2478
நெற்றி தனி கண் உடையான் கண்டாய் நேர்_இழை ஓர்பாகமாய் நின்றான் கண்டாய்
பற்றி பாம்பு ஆட்டும் படிறன் கண்டாய் பல் ஊர் பலி தேர் பரமன் கண்டாய்
செற்றார் புரம் மூன்றும் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய்
மற்று ஒரு குற்றம் இலாதான் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே

 மேல்

#2479
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அண்டத்துக்கு அப்பாலாய் நின்றான் கண்டாய்
கொலை ஆன கூற்றம் குமைத்தான் கண்டாய் கொல் வேங்கை தோல் ஒன்று உடுத்தான் கண்டாய்
சிலையால் திரிபுரங்கள் செற்றான் கண்டாய் செழு மா மதி சென்னி வைத்தான் கண்டாய்
மலை ஆர் மடந்தை மணாளன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே

 மேல்

#2480
உலந்தார்-தம் அங்கம் அணிந்தான் கண்டாய் உவகையோடு இன் அருள்கள் செய்தான் கண்டாய்
நலம் திகழும் கொன்றை சடையான் கண்டாய் நால் வேதம் ஆறு அங்கம் ஆனான் கண்டாய்
உலந்தார் தலை கலனா கொண்டான் கண்டாய் உம்பரார்-தங்கள் பெருமான் கண்டாய்
மலர்ந்து ஆர் திருவடி என் தலை மேல் வைத்த மழபாடி மன்னும் மணாளன்தானே

 மேல்

#2481
தாமரையான்-தன் தலையை சாய்த்தான் கண்டாய் தகவு உடையார் நெஞ்சு இருக்கை கொண்டான் கண்டான்
பூ மலரான் ஏத்தும் புனிதன் கண்டாய் புணர்ச்சி பொருள் ஆகி நின்றான் கண்டாய்
ஏ மருவு வெம் சிலை ஒன்று ஏந்தி கண்டாய் இருள் ஆர்ந்த கண்டத்து இறைவன் கண்டாய்
மா மருவும் கலை கையில் ஏந்தி கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே

 மேல்

#2482
நீர் ஆகி நெடு வரைகள் ஆனான் கண்டாய் நிழல் ஆகி நீள் விசும்பும் ஆனான் கண்டாய்
பார் ஆகி பௌவம் ஏழ் ஆனான் கண்டாய் பகல் ஆகி வான் ஆகி நின்றான் கண்டாய்
ஆரேனும் தன் அடியார்க்கு அன்பன் கண்டாய் அணு ஆகி ஆதியாய் நின்றான் கண்டாய்
வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே

 மேல்

#2483
பொன் இயலும் திரு மேனி உடையான் கண்டாய் பூம் கொன்றை தார் ஒன்று அணிந்தான் கண்டாய்
மின் இயலும் வார் சடை எம்பெருமான் கண்டாய் வேழத்தின் உரி விரும்பி போர்த்தான் கண்டாய்
தன் இயல்பார் மற்று ஒருவர் இல்லான் கண்டாய் தாங்க அரிய சிவம் தானாய் நின்றான் கண்டாய்
மன்னிய மங்கை ஓர்கூறன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே

 மேல்

#2484
ஆலாலம் உண்டு உகந்த ஆதி கண்டாய் அடையலர்-தம் புரம் மூன்றும் எய்தான் கண்டாய்
காலால் அ காலனையும் காய்ந்தான் கண்டாய் கண்ணப்பர்க்கு அருள்செய்த காளை கண்டாய்
பால் ஆரும் மொழி மடவாள் பாகன் கண்டாய் பசு ஏறி பலி திரியும் பண்பன் கண்டாய்
மாலாலும் அறிவு அரிய மைந்தன் கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே

 மேல்

#2485
ஒரு சுடராய் உலகு ஏழும் ஆனான் கண்டாய் ஓங்காரத்து உட்பொருளாய் நின்றான் கண்டாய்
விரி சுடராய் விளங்கு ஒளியாய் நின்றான் கண்டாய் விழவு ஒலியும் வேள்வு ஒலியும் ஆனான் கண்டாய்
இரு சுடர் மீது ஓடா இலங்கை_கோனை ஈடு அழிய இருபது தோள் இறுத்தான் கண்டாய்
மரு சுடரின் மாணிக்க குன்று கண்டாய் மழபாடி மன்னும் மணாளன்தானே

 மேல்

 40. திருமழபாடி - திருத்தாண்டகம்

#2486
அலை அடுத்த பெரும் கடல் நஞ்சு அமுதா உண்டு அமரர்கள்-தம் தலை காத்த ஐயர் செம்பொன்
சிலை எடுத்து மா நாகம் நெருப்பு கோத்து திரிபுரங்கள் தீ இட்ட செல்வர் போலும்
நிலை அடுத்த பசும்பொன்னால் முத்தால் நீண்ட நிரை வயிர பலகையால் குவை ஆர்த்து உற்ற
மலை அடுத்த மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே

 மேல்

#2487
அறை கலந்த குழல் மொந்தை வீணை யாழும் அந்தரத்தின் கந்தருவர் அமரர் ஏத்த
மறை கலந்த மந்திரமும் நீரும் கொண்டு வழிபட்டார் வான் ஆள கொடுத்தி அன்றே
கறை கலந்த பொழில் கச்சி கம்பம் மேய கன வயிர திரள் தூணே கலி சூழ் மாடம்
மறை கலந்த மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே

 மேல்

#2488
உரம் கொடுக்கும் இருள் மெய்யர் மூர்க்கர் பொல்லா ஊத்தை வாய் சமணர்-தமை உறவா கொண்ட
பரம் கெடுத்து இங்கு அடியேனை ஆண்டுகொண்ட பவளத்தின் திரள் தூணே பசும்பொன் முத்தே
புரம் கெடுத்து பொல்லாத காமன் ஆகம் பொடி ஆக விழித்து அருளி புவியோர்க்கு என்றும்
வரம் கொடுக்கும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே

 மேல்

#2489
ஊன் இகந்து ஊண் உறி கையர் குண்டர் பொல்லா ஊத்தை வாய் சமணர் உறவு ஆக கொண்டு
ஞான அகம் சேர்ந்து உள்ள வயிரத்தை நண்ணா நாயேனை பொருள் ஆக ஆண்டுகொண்ட
மீன் அகம் சேர் வெள்ள நீர் விதியால் சூடும் வேந்தனே விண்ணவர்-தம் பெருமான் மேக
வானகம் சேர் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே

 மேல்

#2490
சிரம் ஏற்ற நான்முகன்-தன் தலையும் மற்றை திருமால்-தன் செழும் தலையும் பொன்ற சிந்தி
உரம் ஏற்ற இரவி பல் தகர்த்து சோமன் ஒளிர் கலைகள் பட உழக்கி உயிரை நல்கி
நரை ஏற்ற விடை ஏறி நாகம் பூண்ட நம்பியையே மறை நான்கும் ஓலமிட்டு
வரம் ஏற்கும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே

 மேல்

#2491
சினம் திருத்தும் சிறு பெரியார் குண்டர்-தங்கள் செது மதியார் தீவினைக்கே விழுந்தேன் தேடி
புனம் திருந்தும் பொல்லாத பிண்டி பேணும் பொறியிலியேன்-தனை பொருளா ஆண்டுகொண்டு
தனம் திருத்துமவர் திறத்தை ஒழிய பாற்றி தயாமூலதன்மவழி எனக்கு நல்கி
மனம் திருத்தும் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே

 மேல்

#2492
சுழி துணை ஆம் பிறவி வழி துக்கம் நீக்கும் சுருள் சடை எம்பெருமானே தூய தெண் நீர்
இழிப்ப அரிய பசுபாச பிறப்பை நீக்கும் என் துணையே என்னுடைய பெம்மான் தம்மான்
பழிப்ப அரிய திருமாலும் அயனும் காணா பருதியே சுருதி முடிக்கு அணியாய் வாய்த்த
வழித்துணை ஆம் மழபாடி வயிர தூணே என்று என்றே நான் அரற்றி நைகின்றேனே

 மேல்

 41. திருநெய்த்தானம் - திருத்தாண்டகம்

#2493
வகை எலாம் உடையாயும் நீயே என்றும் வான் கயிலை மேவினாய் நீயே என்றும்
மிகை எலாம் மிக்காயும் நீயே என்றும் வெண்காடு மேவினாய் நீயே என்றும்
பகை எலாம் தீர்த்து ஆண்டாய் நீயே என்றும் பாசூர் அமர்ந்தாயும் நீயே என்றும்
திகை எலாம் தொழ செல்வாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே

 மேல்

#2494
ஆர்த்த எனக்கு அன்பன் நீயே என்றும் ஆதி கயிலாயன் நீயே என்றும்
கூர்த்த நடம் ஆடி நீயே என்றும் கோடிகா மேய குழகா என்றும்
பார்த்தற்கு அருள்செய்தாய் நீயே என்றும் பழையனூர் மேவிய பண்பா என்றும்
தீர்த்தன் சிவலோகன் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே

 மேல்

#2495
அல்லாய் பகல் ஆனாய் நீயே என்றும் ஆதி கயிலாயன் நீயே என்றும்
கல்லால் அமர்ந்தாயும் நீயே என்றும் காளத்தி கற்பகமும் நீயே என்றும்
சொல்லாய் பொருள் ஆனாய் நீயே என்றும் சோற்றுத்துறை உறைவார் நீயே என்றும்
செல்வாய் திரு ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே

 மேல்

#2496
மின்_நேர்_இடை_பங்கன் நீயே என்றும் வெண் கயிலை மேவினாய் நீயே என்றும்
பொன் நேர் சடை முடியாய் நீயே என்றும் பூத கண நாதன் நீயே என்றும்
என் நா இரதத்தாய் நீயே என்றும் ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும்
தென்னூர்ப்பதி உளாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே

 மேல்

#2497
முந்தி இருந்தாயும் நீயே என்றும் முன் கயிலை மேவினாய் நீயே என்றும்
நந்திக்கு அருள்செய்தாய் நீயே என்றும் நடம் ஆடி நள்ளாறன் நீயே என்றும்
பந்திப்ப அரியாயும் நீயே என்றும் பைஞ்ஞீலி மேவினாய் நீயே என்றும்
சிந்திப்ப அரியாயும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே

 மேல்

#2498
தக்கார் அடியார்க்கு நீயே என்றும் தலை ஆர் கயிலாயன் நீயே என்றும்
அக்கு ஆரம் பூண்டாயும் நீயே என்றும் ஆக்கூரில் தான்தோன்றி நீயே என்றும்
புக்கு ஆய ஏழ்உலகும் நீயே என்றும் புள்ளிக்கு வேளூராய் நீயே என்றும்
தெக்கு ஆரும் மாகோணத்தானே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே

 மேல்

#2499
புகழும் பெருமையாய் நீயே என்றும் பூம் கயிலை மேவினாய் நீயே என்றும்
இகழும் தலை_ஏந்தி நீயே என்றும் இராமேச்சுரத்து இன்பன் நீயே என்றும்
அகழும் மதில் உடையாய் நீயே என்றும் ஆலவாய் மேவினாய் நீயே என்றும்
திகழும் மதிசூடி நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே

 மேல்

#2500
வானவர்க்கு மூத்து இளையாய் நீயே என்றும் வான கயிலாயன் நீயே என்றும்
கானம் நடம் ஆடி நீயே என்றும் கடவூரில் வீரட்டன் நீயே என்றும்
ஊன் ஆர் முடி அறுத்தாய் நீயே என்றும் ஒற்றியூர் ஆரூராய் நீயே என்றும்
தேனாய் அமுது ஆனாய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே

 மேல்

#2501
தந்தை தாய் இல்லாதாய் நீயே என்றும் தலை ஆர் கயிலாயன் நீயே என்றும்
எம் தாய் எம்பிரான் ஆனாய் நீயே என்றும் ஏகம்பத்து என் ஈசன் நீயே என்றும்
முந்திய முக்கணாய் நீயே என்றும் மூவலூர் மேவினாய் நீயே என்றும்
சிந்தையாய் தேனூராய் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே

 மேல்

#2502
மறித்தான் வலி செற்றாய் நீயே என்றும் வான் கயிலை மேவினாய் நீயே என்றும்
வெறுத்தார் பிறப்பு அறுப்பாய் நீயே என்றும் வீழிமிழலையாய் நீயே என்றும்
அறத்தாய் அமுது ஈந்தாய் நீயே என்றும் யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு
பொறுத்தாய் புலன் ஐந்தும் நீயே என்றும் நின்ற நெய்த்தானா என் நெஞ்சு உளாயே

 மேல்

 42. திருநெய்த்தானம் - திருத்தாண்டகம்

#2503
மெய் தானத்து அகம்படியுள் ஐவர் நின்று வேண்டிற்று குறை முடித்து வினைக்கு கூடு ஆம்
இ தானத்து இருந்து இங்ஙன் உய்வான் எண்ணும் இதனை ஒழி இயம்ப கேள் ஏழை நெஞ்சே
மைத்து ஆன நீள் நயனி_பங்கன் வங்கம் வரு திரை நீர் நஞ்சு உண்ட கண்டன் மேய
நெய்த்தான நல் நகர் என்று ஏத்தி நின்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே

 மேல்

#2504
ஈண்டா இரும் பிறவி துறவா ஆக்கை இது நீங்கல் ஆம் விதி உண்டு என்று சொல்ல
வேண்டாவே நெஞ்சமே விளம்ப கேள் நீ விண்ணவர்-தம் பெருமானார் மண்ணில் என்னை
ஆண்டான் அன்று அரு வரையால் புரம் மூன்று எய்த அம்மானை அரி அயனும் காணா வண்ணம்
நீண்டான் உறை துறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே

 மேல்

#2505
பரவி பலபலவும் தேடி ஓடி பாழ் ஆம் குரம்பையிடை கிடந்து வாளா
குரவி குடி வாழ்க்கை வாழ எண்ணி குலைகை தவிர் நெஞ்சே கூற கேள் நீ
இரவி குலம் முதலா வானோர் கூடி எண் இறந்த கோடி அமரர் ஆயம்
நிரவிக்க அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே

 மேல்

#2506
அலை ஆர் வினை திறம் சேர் ஆக்கையுள்ளே அகப்பட்டு உள் ஆசை எனும் பாசம்-தன்னுள்
தலையாய் கடை ஆகும் வாழ்வில் ஆழ்ந்து தளர்ந்து மிக நெஞ்சமே அஞ்சவேண்டா
இலை ஆர் புன கொன்றை எறி நீர் திங்கள் இரும் சடை மேல் வைத்து உகந்தான் இமையோர் ஏத்தும்
நிலையான உறை நிறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே

 மேல்

#2507
தினைத்தனை ஓர் பொறை இலா உயிர் போம் கூட்டை பொருள் என்று மிக உன்னி மதியால் இந்த
அனைத்து உலகும் ஆளல் ஆம் என்று பேசும் ஆங்காரம் தவிர் நெஞ்சே அமரர்க்கு ஆக
முனைத்து வரு மதில் மூன்றும் பொன்ற அன்று முடுகிய வெம் சிலை வளைத்து செம் தீ மூழ்க
நினைத்த பெரும் கருணையன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே

 மேல்

#2508
மிறை படும் இ உடல் வாழ்வை மெய் என்று எண்ணி வினையிலே கிடந்து அழுந்தி வியவேல் நெஞ்சே
குறைவு உடையார் மனத்து உளான் குமரன்_தாதை கூத்து ஆடும் குணம் உடையான் கொலை வேல் கையான்
அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற
நிறைவு உடையான் இடம் ஆம் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே

 மேல்

#2509
பேச பொருள் அலா பிறவி-தன்னை பெரிது என்று உன் சிறு மனத்தால் வேண்டி ஈண்டு
வாச குழல் மடவார் போகம் என்னும் வலைப்பட்டு வீழாதே வருக நெஞ்சே
தூச கரி உரித்தான் தூ நீறு ஆடி துதைந்து இலங்கு நூல் மார்பன் தொடரகில்லா
நீசர்க்கு அரியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே

 மேல்

#2510
அஞ்ச புலன் இவற்றால் ஆட்ட ஆட்டுண்டு அரு நோய்க்கு இடம் ஆய உடலின் தன்மை
தஞ்சம் என கருதி தாழேல் நெஞ்சே தாழ கருதுதியே தன்னை சேரா
வஞ்சம் மனத்தவர்கள் காண ஒண்ணா மணி_கண்டன் வானவர்-தம் பிரான் என்று ஏத்தும்
நெஞ்சர்க்கு இனியவன் நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே

 மேல்

#2511
பொருந்தாத உடலகத்தின் புக்க ஆவி போம் ஆறு அறிந்து அறிந்தே புலை வாழ்வு உன்னி
இருந்து ஆங்கு இடர்ப்பட நீ வேண்டா நெஞ்சே இமையவர்-தம் பெருமான் அன்று உமையாள் அஞ்ச
கரும் தாள மத கரியை வெருவ கீறும் கண்நுதல் கண்டு அமர் ஆடி கருதார் வேள்வி
நிரந்தரமா இனிது உறை நெய்த்தானம் என்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே

 மேல்

#2512
உரித்து அன்று உனக்கு இ உடலின் தன்மை உண்மை உரைத்தேன் விரதம் எல்லாம்
தரித்தும் தவம் முயன்றும் வாழா நெஞ்சே தம்மிடையில் இல்லார்க்கு ஒன்று அல்லார்க்கு அன்னன்
எரித்தான் அனல் உடையான் எண் தோளானே எம்பெருமான் என்று ஏத்தா இலங்கை_கோனை
நெரித்தானை நெய்த்தானம் மேவினானை நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே

 மேல்

 43. திருப்பூந்துருத்தி - திருத்தாண்டகம்

#2513
நில்லாத நீர் சடை மேல் நிற்பித்தானை நினையா என் நெஞ்சை நினைவித்தானை
கல்லாதன எல்லாம் கற்பித்தானை காணாதன எல்லாம் காட்டினானை
சொல்லாதன எல்லாம் சொல்லி என்னை தொடர்ந்து இங்கு அடியேனை ஆளாக்கொண்டு
பொல்லா என் நோய் தீர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே

 மேல்

#2514
குற்றாலம் கோகரணம் மேவினானை கொடும் கை கரும் கூற்றை பாய்ந்தான்-தன்னை
உற்று ஆலம் நஞ்சு உண்டு ஒடுக்கினானை உணரா என் நெஞ்சை உணர்வித்தானை
பற்று ஆலின் கீழ் அங்கு இருந்தான்-தன்னை பண் ஆர்ந்த வீணை பயின்றான்-தன்னை
புற்று ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை புண்ணியனை பூந்துருத்தி கண்டேன் நானே

 மேல்

#2515
எனக்கு என்றும் இனியானை எம்மான்-தன்னை எழில் ஆரும் ஏகம்பம் மேயான்-தன்னை
மனக்கு என்றும் வருவானை வஞ்சர் நெஞ்சில் நில்லானை நின்றியூர் மேயான்-தன்னை
தனக்கு என்றும் அடியேனை ஆளாக்கொண்ட சங்கரனை சங்க வார் குழையான்-தன்னை
புன கொன்றை தார் அணிந்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே

 மேல்

#2516
வெறி ஆர் மலர் கொன்றை சூடினானை வெள்ளானை வந்து இறைஞ்சும் வெண்காட்டானை
அறியாது அடியேன் அகப்பட்டேனை அல்லல் கடல்-நின்றும் ஏற வாங்கி
நெறிதான் இது என்று காட்டினானை நிச்சல் நலி பிணிகள் தீர்ப்பான்-தன்னை
பொறி ஆடு அரவு ஆர்த்த புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே

 மேல்

#2517
மிக்காரை வெண் நீறு சண்ணித்தானை விண்டார் புரம் மூன்றும் வேவ நோக்கி
நக்கானை நான்மறைகள் பாடினானை நல்லார்கள் பேணி பரவ நின்ற
தக்கானை தண் தாமரை மேல் அண்ணல் தலை கொண்டு மாத்திரை-கண் உலகம் எல்லாம்
புக்கானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே

 மேல்

#2518
ஆர்த்தானை வாசுகியை அரைக்கு ஓர் கச்சா அசைத்தானை அழகு ஆய பொன் ஆர் மேனி
பூத்தானத்தான் முடியை பொருந்தா வண்ணம் புணர்த்தானை பூங்கணையான் உடலம் வேவ
பார்த்தானை பரிந்தானை பனி நீர் கங்கை படர் சடை மேல் பயின்றானை பதைப்ப யானை
போர்த்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே

 மேல்

#2519
எரித்தானை எண்ணார் புரங்கள் மூன்றும் இமைப்பளவில் பொடி ஆக எழில் ஆர் கையால்
உரித்தானை மத கரியை உற்று பற்றி உமை அதனை கண்டு அஞ்சி நடுங்க கண்டு
சிரித்தானை சீர் ஆர்ந்த பூதம் சூழ திரு சடை மேல் திங்களும் பாம்பும் நீரும்
புரித்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே

 மேல்

#2520
வைத்தானை வானோர் உலகம் எல்லாம் வந்து இறைஞ்சி மலர் கொண்டு நின்று போற்றும்
வித்தானை வேண்டிற்று ஒன்று ஈவான்-தன்னை விண்ணவர்-தம் பெருமானை வினைகள் போக
உய்த்தானை ஒலி கங்கை சடை மேல் தாங்கி ஒளித்தானை ஒருபாகத்து உமையோடு ஆங்கே
பொய்த்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே

 மேல்

#2521
ஆண்டானை வானோர் உலகம் எல்லாம் அ நாள் அறியாத தக்கன் வேள்வி
மீண்டானை விண்ணவர்களோடும் கூடி விரை மலர் மேல் நான்முகனும் மாலும் தேர
நீண்டானை நெருப்பு உருவம் ஆனான்-தன்னை நிலைஇலார் மும்மதிலும் வேவ வில்லை
பூண்டானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே

 மேல்

#2522
மறுத்தானை மலை கோத்து அங்கு எடுத்தான்-தன்னை மணி முடியோடு இருபது தோள் நெரிய காலால்
இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை எண் திசைக்கும் கண் ஆனான் சிரம் மேல் ஒன்றை
அறுத்தானை அமரர்களுக்கு அமுது ஈந்தானை யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு
பொறுத்தானை புண்ணியனை புனிதன்-தன்னை பொய்யிலியை பூந்துருத்தி கண்டேன் நானே

 மேல்

 44. திருச்சோற்றுத்துறை - திருத்தாண்டகம்

#2523
மூத்தவனாய் உலகுக்கு முந்தினானே முறைமையால் எல்லாம் படைக்கின்றானே
ஏத்து அவனாய் ஏழ்உலகும் ஆயினானே இன்பனாய் துன்பம் களைகின்றானே
காத்தவனாய் எல்லாம் தான் காண்கின்றானே கடு வினையேன் தீவினையை கண்டு போக
தீர்த்தவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே

 மேல்

#2524
தலையவனாய் உலகுக்கு ஓர் தன்மையானே தத்துவனாய் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே
நிலையவனாய் நின் ஒப்பார் இல்லாதானே நின்று உணரா கூற்றத்தை சீறி பாய்ந்த
கொலையவனே கொல் யானை தோல் மேல் இட்ட கூற்றுவனே கொடி மதில்கள் மூன்றும் எய்த
சிலையவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே

 மேல்

#2525
முற்றாத பால் மதியம் சூடினானே முளைத்து எழுந்த கற்பகத்தின் கொழுந்து ஒப்பானே
உற்றார் என்று ஒருவரையும் இல்லாதானே உலகு ஓம்பும் ஒண் சுடரே ஓதும் வேதம்
கற்றானே எல்லா கலை ஞானமும் கல்லாதேன் தீவினை நோய் கண்டு போக
செற்றானே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே

 மேல்

#2526
கண் அவனாய் உலகு எல்லாம் காக்கின்றானே காலங்கள் ஊழி கண்டு இருக்கின்றானே
விண்ணவனாய் விண்ணவர்க்கும் அருள்செய்வானே வேதனாய் வேதம் விரித்திட்டானே
எண்ணவனே எண்ணார் புரங்கள் மூன்றும் இமையா முன் எரி கொளுவ நோக்கி நக்க
திண்ணவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே

 மேல்

#2527
நம்பனே நான்மறைகள் ஆயினானே நடம் ஆட வல்லானே ஞான கூத்தா
கம்பனே கச்சி மா நகர் உளானே கடி மதில்கள் மூன்றினையும் பொடியா எய்த
அம்பனே அளவு இலா பெருமையானே அடியார்கட்கு ஆரமுதே ஆன் ஏறு ஏறும்
செம்பொனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே

 மேல்

#2528
ஆர்ந்தவனே உலகு எலாம் நீயே ஆகி அமைந்தவனே அளவு இலா பெருமையானே
கூர்ந்தவனே குற்றாலம் மேய கூத்தா கொடு மூ இலையது ஓர் சூலம் ஏந்தி
பேர்ந்தவனே பிரளயங்கள் எல்லாம் ஆய பெம்மான் என்று எப்போதும் பேசும் நெஞ்சில்
சேர்ந்தவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே

 மேல்

#2529
வானவனாய் வண்மை மனத்தினானே மா மணி சேர் வானோர் பெருமான் நீயே
கானவனாய் ஏனத்தின் பின் சென்றானே கடிய அரணங்கள் மூன்று அட்டானே
தானவனாய் தண் கயிலை மேவினானே தன் ஒப்பார் இல்லாத மங்கைக்கு என்றும்
தேனவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே

 மேல்

#2530
தன்னவனாய் உலகு எல்லாம் தானே ஆகி தத்துவனாய் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனானே
என்னவனாய் என் இதயம் மேவினானே ஈசனே பாசவினைகள் தீர்க்கும்
மன்னவனே மலைமங்கை பாகம் ஆக வைத்தவனே வானோர் வணங்கும் பொன்னி
தென்னவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே

 மேல்

#2531
எறிந்தானே எண் திசைக்கும் கண் ஆனானே ஏழ்உலகம் எல்லாம் முன்னாய் நின்றானே
அறிந்தார்தாம் ஓரிருவர் அறியா வண்ணம் ஆதியும் அந்தமும் ஆகி அங்கே
பிறிந்தானே பிறர் ஒருவர் அறியா வண்ணம் பெம்மான் என்று எப்போதும் ஏத்தும் நெஞ்சில்
செறிந்தானே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே

 மேல்

#2532
மை அனைய கண்டத்தாய் மாலும் மற்றை வானவரும் அறியாத வண்ண சூல
கையவனே கடி இலங்கை_கோனை அன்று கால்விரலால் கதிர் முடியும் தோளும் செற்ற
மெய்யவனே அடியார்கள் வேண்டிற்று ஈயும் விண்ணவனே விண்ணப்பம் கேட்டு நல்கும்
செய்யவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே

 மேல்

 45. திருவொற்றியூர் - திருத்தாண்டகம்

#2533
வண்டு ஓங்கு செங்கமலம் கழுநீர் மல்கும் மத மத்தம் சேர் சடை மேல் மதியம் சூடி
திண் தோள்கள் ஆயிரமும் வீசி நின்று திசை சேர நடம் ஆடி சிவலோகனார்
உண்டார் நஞ்சு உலகுக்கு ஓர் உறுதி வேண்டி ஒற்றியூர் மேய ஒளி வண்ணனார்
கண்டேன் நான் கனவகத்தில் கண்டேற்கு என்தன் கடும் பிணியும் சுடும் தொழிலும் கைவிட்டவே

 மேல்

#2534
ஆகத்து ஓர் பாம்பு அசைத்து வெள் ஏறு ஏறி அணி கங்கை செம் சடை மேல் ஆர்க்க சூடி
பாகத்து ஓர் பெண் உடையார் ஆணும் ஆவார் பசு ஏறி உழிதரும் எம் பரமயோகி
காமத்தால் ஐங்கணையான்-தன்னை வீழ கனலா எரி விழித்த கண் மூன்றினார்
ஓமத்தால் நான்மறைகள் ஓதல் ஓவா ஒளி திகழும் ஒற்றியூர் உறைகின்றாரே

 மேல்

#2535
வெள்ளத்தை செம் சடை மேல் விரும்பி வைத்தீர் வெண் மதியும் பாம்பும் உடனே வைத்தீர்
கள்ளத்தை மனத்தகத்தே கரந்து வைத்தீர் கண்டார்க்கு பொல்லாது கண்டீர் எல்லே
கொள்ளத்தான் இசை பாடி பலியும் கொள்ளீர் கோள் அரவும் குளிர் மதியும் கொடியும் காட்டி
உள்ளத்தை நீர் கொண்டீர் ஓதல் ஓவா ஒளி திகழும் ஒற்றியூர் உடைய கோவே

 மேல்

#2536
நரை ஆர்ந்த விடை ஏறி நீறு பூசி நாகம் கச்சு அரைக்கு ஆர்த்து ஓர் தலை கை ஏந்தி
உரையா வந்து இல் புகுந்து பலிதான் வேண்ட எம் அடிகள் உம் ஊர்தான் ஏதோ என்ன
விரையாதே கேட்டியேல் வேல் கண் நல்லாய் விடும் கலங்கள் நெடும் கடலுள் நின்று தோன்றும்
திரை மோத கரை ஏறி சங்கம் ஊரும் திரு ஒற்றியூர் என்றார் தீய ஆறே

 மேல்

#2537
மத்த களி யானை உரிவை போர்த்து வானகத்தார் தானகத்தார் ஆகி நின்று
பித்தர்தாம் போல் அங்கு ஓர் பெருமை பேசி பேதையரை அச்சுறுத்தி பெயர கண்டு
பத்தர்கள்தாம் பலர் உடனே கூடி பாடி பயின்று இருக்கும் ஊர் ஏதோ பணியீர் என்ன
ஒத்து அமைந்த உத்தரநாள் தீர்த்தம் ஆக ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றாரே

 மேல்

#2538
கடிய விடை ஏறி காள_கண்டர் கலையோடு மழுவாள் ஓர் கையில் ஏந்தி
இடிய பலி கொள்ளார் போவார்அல்லர் எல்லாம்தான் இ அடிகள் யார் என்பாரே
வடிவு உடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர் கண்டோம் மயிலாப்பு உள்ளே
செடி படு வெண் தலை ஒன்று ஏந்தி வந்து திரு ஒற்றியூர் புக்கார் தீய ஆறே

 மேல்

#2539
வல்லராய் வானவர்கள் எல்லாம் கூடி வணங்குவார் வாழ்த்துவார் வந்து நிற்பார்
எல்லை எம்பெருமானை காணோம் என்ன எவ்வாற்றால் எவ்வகையால் காணமாட்டார்
நல்லார்கள் நான்மறையோர் கூடி நேடி நாம் இருக்கும் ஊர் பணியீர் அடிகேள் என்ன
ஒல்லைதான் திரை ஏறி ஓதம் மீளும் ஒளி திகழும் ஒற்றியூர் என்கின்றாரே

 மேல்

#2540
நிலைப்பாடே நான் கண்டது ஏடீ கேளாய் நெருநலை நன்பகல் இங்கு ஓர் அடிகள் வந்து
கலைப்பாடும் கண் மலரும் கலக்க நோக்கி கலந்து பலி இடுவேன் எங்கும் காணேன்
சலப்பாடே இனி ஒரு நாள் காண்பேனாகில் தன் ஆகத்து என் ஆகம் ஒடுங்கும் வண்ணம்
உலைப்பாடே பட தழுவி போகல் ஒட்டேன் ஒற்றியூர் உறைந்து இங்கே திரிவானையே

 மேல்

#2541
மண் அல்லை விண் அல்லை வலயம் அல்லை மலை அல்லை கடல் அல்லை வாயு அல்லை
எண் அல்லை எழுத்து அல்லை எரியும் அல்லை இரவு அல்லை பகல் அல்லை யாவும் அல்லை
பெண் அல்லை ஆண் அல்லை பேடும் அல்லை பிறிது அல்லை ஆனாயும் பெரியாய் நீயே
உள் நல்லை நல்லார்க்கு தீயை அல்லை உணர்வு அரிய ஒற்றியூர் உடைய கோவே

 மேல்

#2542
மரு உற்ற மலர் குழலி மடவாள் அஞ்ச மலை துளங்க திசை நடுங்க செறுத்து நோக்கி
செரு உற்ற வாள் அரக்கன் வலிதான் மாள திருவடியின் விரல் ஒன்றால் அலற ஊன்றி
உரு ஒற்றி அங்கு இருவர் ஓடி காண ஓங்கின அ ஒள் அழலார் இங்கே வந்து
திரு ஒற்றியூர் நம் ஊர் என்று போனார் செறி வளைகள் ஒன்றொன்றாய் சென்ற ஆறே

 மேல்

 46. திருஆவடுதுறை - திருத்தாண்டகம்

#2543
நம்பனை நால் வேதம் கரை கண்டானை ஞான பெரும் கடலை நன்மை-தன்னை
கம்பனை கல்லால் இருந்தான்-தன்னை கற்பகமாய் அடியார்கட்கு அருள்செய்வானை
செம்பொன்னை பவளத்தை திரளும் முத்தை திங்களை ஞாயிற்றை தீயை நீரை
அம் பொன்னை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே

 மேல்

#2544
மின்னானை மின் இடை சேர் உருமினானை வெண் முகிலாய் எழுந்து மழை பொழிவான்-தன்னை
தன்னானை தன் ஒப்பார் இல்லாதானை தாய் ஆகி பல் உயிர்க்கு ஓர் தந்தை ஆகி
என்னானை எந்தை பெருமான்-தன்னை இரு நிலமும் அண்டமுமாய் செக்கர் வானே
அன்னானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே

 மேல்

#2545
பத்தர்கள் சித்தத்தே பாவித்தானை பவள கொழுந்தினை மாணிக்கத்தின்
தொத்தினை தூ நெறியாய் நின்றான்-தன்னை சொல்லுவார் சொல்பொருளின் தோற்றம் ஆகி
வித்தினை முளை கிளையை வேரை சீரை வினைவயத்தின் தன்சார்பை வெய்ய தீர்க்கும்
அத்தனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே

 மேல்

#2546
பேணிய நல் பிறை தவழ் செஞ்சடையினானை பித்தர் ஆம் அடியார்க்கு முத்தி காட்டும்
ஏணியை இடர் கடலுள் சுழிக்கப்பட்டு இங்கு இளைக்கின்றேற்கு அ கரைக்கே ஏற வாங்கும்
தோணியை தொண்டனேன் தூய சோதி சுலா வெண் குழையானை சுடர் பொன் காசின்
ஆணியை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே

 மேல்

#2547
ஒரு மணியை உலகுக்கு ஓர் உறுதி-தன்னை உதயத்தின் உச்சியை உரும் ஆனானை
பரு மணியை பாலோடு அஞ்சு ஆடினானை பவித்திரனை பசுபதியை பவள குன்றை
திரு மணியை தித்திப்பை தேன் அது ஆகி தீம் கரும்பின் இன் சுவையை திகழும் சோதி
அரு மணியை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே

 மேல்

#2548
ஏற்றானை எண் தோள் உடையான்-தன்னை எல்லில் நடம் ஆட வல்லான்-தன்னை
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை குரை கடல்-வாய் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை
நீற்றானை நீள் அரவு ஒன்று ஆர்த்தான்-தன்னை நீண்ட சடை முடி மேல் நீர் ஆர் கங்கை
ஆற்றானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே

 மேல்

#2549
கை மான மத களிற்றை உரித்தான்-தன்னை கடல் வரை வான் ஆகாசம் ஆனான்-தன்னை
செம் மான பவளத்தை திகழும் முத்தை திங்களை ஞாயிற்றை தீ ஆனானை
எம்மானை என் மனமே கோயில் ஆக இருந்தானை என்பு உருகும் அடியார்-தங்கள்
அம்மானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே

 மேல்

#2550
மெய்யானை பொய்யரொடு விரவாதானை வெள்ளிடையை தண் நிழலை வெம் தீ ஏந்தும்
கையானை காமன் உடல் வேவ காய்ந்த கண்ணானை கண் மூன்று உடையான்-தன்னை
பை ஆடு அரவம் மதி உடனே வைத்த சடையானை பாய் புலி தோல் உடையான்-தன்னை
ஐயானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே

 மேல்

#2551
வேண்டாமை வேண்டுவதும் இல்லான்-தன்னை விசயனை முன் அசைவித்த வேடன்-தன்னை
தூண்டாமை சுடர்விடு நல் சோதி-தன்னை சூல படையானை காலன் வாழ்நாள்
மாண்டு ஓட உதைசெய்த மைந்தன்-தன்னை மண்ணவரும் விண்ணவரும் வணங்கி ஏத்தும்
ஆண்டானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே

 மேல்

#2552
பந்து அணவு மெல்விரலாள்_பாகன்-தன்னை பாடலோடு ஆடல் பயின்றான்-தன்னை
கொந்து அணவு நறும் கொன்றை மாலையானை கோல மா நீல_மிடற்றான்-தன்னை
செந்தமிழோடு ஆரியனை சீரியானை திரு மார்பில் புரி வெண் நூல் திகழ பூண்ட
அந்தணனை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே

 மேல்

#2553
தரித்தானை தண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்தான்-தன்னை
பிரித்தானை பிறை தவழ் செஞ்சடையினானை பெரு வலியால் மலை எடுத்த அரக்கன்-தன்னை
நெரித்தானை நேர்_இழையாள் பாகத்தானை நீசனேன் உடல் உறு நோய் ஆன தீர
அரித்தானை ஆவடுதண்துறையுள் மேய அரன் அடியே அடி நாயேன் அடைந்து உய்ந்தேனே

 மேல்

 47. திருஆவடுதுறை - திருத்தாண்டகம்

#2554
திருவே என் செல்வமே தேனே வானோர் செழும் சுடரே செழும் சுடர் நல் சோதி மிக்க
உருவே என் உறவே என் ஊனே ஊனின் உள்ளமே உள்ளத்தின் உள்ளே நின்ற
கருவே என் கற்பகமே கண்ணே கண்ணின் கருமணியே மணி ஆடு பாவாய் காவாய்
அரு ஆய வல்வினை நோய் அடையா வண்ணம் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே

 மேல்

#2555
மாற்றேன் எழுத்து அஞ்சும் என்தன் நாவில் மறவேன் திருவருள்கள் வஞ்சம் நெஞ்சின்
ஏற்றேன் பிற தெய்வம் எண்ணா நாயேன் எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்
மேல் தான் நீ செய்வனகள் செய்ய கண்டு வேதனைக்கே இடம் கொடுத்து நாளும்நாளும்
ஆற்றேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே

 மேல்

#2556
வரை ஆர் மட மங்கை_பங்கா கங்கை மணவாளா வார் சடையாய் நின்தன் நாமம்
உரையா உயிர் போகப்பெறுவேனாகில் உறு நோய் வந்து எத்தனையும் உற்றால் என்னே
கரையா நினைந்து உருகி கண்ணீர் மல்கி காதலித்து நின் கழலே ஏத்தும் அன்பர்க்கு
அரையா அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே

 மேல்

#2557
சிலைத்தார் திரிபுரங்கள் தீயில் வேவ சிலை வளைவித்து உமையவளை அஞ்ச நோக்கி
கலித்து ஆங்கு இரும் பிடி மேல் கை வைத்து ஓடும் களிறு உரித்த கங்காளா எங்கள் கோவே
நிலத்தார் அவர் தமக்கே பொறையாய் நாளும் நில்லா உயிர் ஓம்பும் நீதனேன் நான்
அலுத்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே

 மேல்

#2558
நறு மா மலர் கொய்து நீரில் மூழ்கி நாள்-தோறும் நின் கழலே ஏத்தி வாழ்த்தி
துறவா துன்பம் துறந்தேன்-தன்னை சூழ் உலகில் ஊழ்வினை வந்து உற்றால் என்னே
உறவு ஆகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒலி திரை நீர் கடல் நஞ்சு உண்டு உய்யக்கொண்ட
அறவா அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே

 மேல்

#2559
கோன் நாரணன் அங்கம் தோள் மேல் கொண்டு கொழு மலரான்-தன் சிரத்தை கையில் ஏந்தி
கான் ஆர் களிற்று உரிவை போர்வை மூடி கங்காளவேடராய் எங்கும் செல்வீர்
நான் ஆர் உமக்கு ஓர் வினைக்கேடனேன் நல்வினையும் தீவினையும் எல்லாம் முன்னே
ஆனாய் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே

 மேல்

#2560
உழை உரித்த மான் உரி தோல் ஆடையானே உமையவள்-தம் பெருமானே இமையோர் ஏறே
கழை இறுத்த கரும் கடல் நஞ்சு உண்ட கண்டா கயிலாய மலையானே உன்-பால் அன்பர்
பிழை பொறுத்தி என்பதுவும் பெரியோய் நின்தன் கடன் அன்றே பேர் அருள் உன்-பாலது அன்றே
அழையுறுத்து மா மயில்கள் ஆலும் சோலை ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே

 மேல்

#2561
உலந்தார் தலை கலன் ஒன்று ஏத்தி வானோர் உலகம் பலி திரிவாய் உன்-பால் அன்பு
கலந்தார் மனம் கவரும் காதலானே கனல் ஆடும் கையவனே ஐயா மெய்யே
மலம் தாங்கு உயிர் பிறவி மாய காய மயக்குளே விழுந்து அழுந்தி நாளும்நாளும்
அலந்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே

 மேல்

#2562
பல் ஆர்ந்த வெண் தலை கையில் ஏந்தி பசு ஏறி ஊர்ஊரன் பலி கொள்வானே
கல் ஆர்ந்த மலைமகளும் நீயும் எல்லாம் கரிகாட்டில் ஆட்டு உகந்தீர் கருதீராகில்
எல்லாரும் என்தன்னை இகழ்வர் போலும் ஏழை அமண் குண்டர் சாக்கியர்கள் ஒன்றுக்கு
அல்லாதார் திறத்து ஒழிந்தேன் அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே

 மேல்

#2563
துறந்தார்-தம் தூ நெறி-கண் சென்றேன்அல்லேன் துணைமாலை சூட்ட நான் தூயேன்அல்லேன்
பிறந்தேன் நின் திரு அருளே பேசினல்லால் பேசாத நாள் எல்லாம் பிறவா நாளே
செறிந்து ஆர் மதில் இலங்கை_கோமான்-தன்னை செறு வரை கீழ் அடர்த்து அருளி செய்கை எல்லாம்
அறிந்தேன் அடியேனை அஞ்சேல் என்னாய் ஆவடுதண்துறை உறையும் அமரர் ஏறே

 மேல்

 48. திருவலிவலம் - திருத்தாண்டகம்

#2564
நல்லான் காண் நான்மறைகள் ஆயினான் காண் நம்பன் காண் நணுகாதார் புரம் மூன்று எய்த
வில்லான் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெல்லியலாள்_பாகன் காண் வேத வேள்வி
சொல்லான் காண் சுடர் மூன்றும் ஆயினான் காண் தொண்டு ஆகி பணிவார்க்கு தொல் வான் ஈய
வல்லான் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே

 மேல்

#2565
ஊனவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் உள்ளவன் காண் இல்லவன் காண் உமையாட்கு என்றும்
தேன் அவன் காண் திரு அவன் காண் திசை ஆனான் காண் தீர்த்தன் காண் பார்த்தன்-தன் பணியை கண்ட
கானவன் காண் கடல் அவன் காண் மலை ஆனான் காண் களி யானை ஈர் உரிவை கதற போர்த்த
வானவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே

 மேல்

#2566
ஏயவன் காண் எல்லார்க்கும் இயல்பு ஆனான் காண் இன்பன் காண் துன்பங்கள் இல்லாதான் காண்
தாய் அவன் காண் உலகுக்கு ஓர் தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் உத்தமன் காண் தானே எங்கும்
ஆயவன் காண் அண்டத்துக்கு அப்பாலான் காண் அகம் குழைந்து மெய் அரும்பி அழுவார்-தங்கள்
வாயவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே

 மேல்

#2567
உய்த்தவன் காண் உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனான் காண் ஓங்காரத்து ஒருவன் காண் உலகுக்கு எல்லாம்
வித்து அவன் காண் விண் பொழியும் மழை ஆனான் காண் விளைவு அவன் காண் விரும்பாதார் நெஞ்சத்து என்றும்
பொய்த்தவன் காண் பொழில் ஏழும் தாங்கினான் காண் புனலோடு வளர் மதியும் பாம்பும் சென்னி
வைத்தவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே

 மேல்

#2568
கூற்று அவன் காண் குணம் அவன் காண் குறி ஆனான் காண் குற்றங்கள் அனைத்தும் காண் கோலம் ஆய
நீற்றவன் காண் நிழல் அவன் காண் நெருப்பு ஆனான் காண் நிமிர் புன் சடை முடி மேல் நீர் ஆர் கங்கை
ஏற்றவன் காண் ஏழ்உலகும் ஆயினான் காண் இமைப்பளவில் காமனை முன் பொடியாய் வீழ
மாற்றவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே

 மேல்

#2569
நிலையவன் காண் தோற்று அவன் காண் நிறை ஆனான் காண் நீர் அவன் காண் பார் அவன் காண் ஊர் மூன்று எய்த
சிலையவன் காண் செய்ய வாய் கரிய கூந்தல் தேன்_மொழியை ஒருபாகம் சேர்த்தினான் காண்
கலையவன் காண் காற்று அவன் காண் காலன் வீழ கறுத்தவன் காண் கயிலாயம் என்னும் தெய்வ
மலையவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே

 மேல்

#2570
பெண் அவன் காண் ஆண் அவன் காண் பெரியோர்க்கு என்றும் பெரியவன் காண் அரி அவன் காண் அயன் ஆனான் காண்
எண் அவன் காண் எழுத்து அவன் காண் இன்ப கேள்வி இசை அவன் காண் இயல் அவன் காண் எல்லாம் காணும்
கண் அவன் காண் கருத்து அவன் காண் கழிந்தோர் செல்லும் கதி அவன் காண் மதி அவன் காண் கடல் ஏழ் சூழ்ந்த
மண் அவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே

 மேல்

#2571
முன்னவன் காண் பின்னவன் காண் மூவா மேனி முதல் அவன் காண் முடிவு அவன் காண் மூன்று சோதி
அன்னவன் காண் அடியார்க்கும் அண்டத்தார்க்கும் அணியவன் காண் சேயவன் காண் அளவு இல் சோதி
மின் அவன் காண் உரும் அவன் காண் திருமால் பாகம் வேண்டினன் காண் ஈண்டு புனல் கங்கைக்கு என்றும்
மன்னவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே

 மேல்

#2572
நெதி அவன் காண் யாவர்க்கும் நினைய ஒண்ணா நீதியன் காண் வேதியன் காண் நினைவார்க்கு என்றும்
கதி அவன் காண் கார் அவன் காண் கனல் ஆனான் காண் காலங்கள் ஊழியா கலந்து நின்ற
பதி அவன் காண் பழம் அவன் காண் இரதம் தான் காண் பாம்போடு திங்கள் பயில வைத்த
மதியவன் காண் வானவர்கள் வணங்கி ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே

 மேல்

#2573
பங்கயத்தின் மேலானும் பாலன் ஆகி உலகு அளந்த படியானும் பரவி காணாது
அங்கை வைத்த சென்னியராய் அளக்கமாட்டா அனல் அவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன்
கொங்கு அலர்த்த முடி நெரிய விரலால் ஊன்றும் குழகன் காண் அழகன் காண் கோலம் ஆய
மங்கையர்க்கு ஓர்கூறன் காண் வானோர் ஏத்தும் வலிவலத்தான் காண் அவன் என் மனத்து உளானே

 மேல்

 49. திருக்கோகரணம் - திருத்தாண்டகம்

#2574
சந்திரனும் தண் புனலும் சந்தித்தான் காண் தாழ் சடையான் காண் சார்ந்தார்க்கு அமுது ஆனான் காண்
அந்தரத்தில் அசுரர் புரம் மூன்று அட்டான் காண் அ உருவில் அ உருவம் ஆயினான் காண்
பந்தரத்து நான்மறைகள் பாடினான் காண் பலபலவும் பாணி பயில்கின்றான் காண்
மந்திரத்து மறைப்பொருளும் ஆயினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே

 மேல்

#2575
தந்த அத்தன்-தன் தலையை தாங்கினான் காண் சாரணன் காண் சார்ந்தார்க்கு இன் அமுது ஆனான் காண்
கெந்தத்தன் காண் கெடில வீரட்டன் காண் கேடிலி காண் கெடுப்பார் மற்று இல்லாதான் காண்
வெந்து ஒத்த நீறு மெய் பூசினான் காண் வீரன் காண் வியன் கயிலை மேவினான் காண்
வந்து ஒத்த நெடு மாற்கும் அறிவு ஒணான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே

 மேல்

#2576
தன் உருவம் யாவர்க்கும் தாக்காதான் காண் தாழ் சடை எம்பெருமான் காண் தக்கார்க்கு உள்ள
பொன் உருவ சோதி புனல் ஆடினான் காண் புராணன் காண் பூதங்கள் ஆயினான் காண்
மின் உருவ நுண்இடையாள்_பாகத்தான் காண் வேழத்தின் உரி வெருவ போர்த்தான்தான் காண்
மன் உருவாய் மா மறைகள் ஓதினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே

 மேல்

#2577
ஆறு ஏறு செம் சடை எம் ஆரூரன் காண் அன்பன் காண் அணி பழனம் மேயான்தான் காண்
நீறு ஏறி நிழல் திகழும் மேனியான் காண் நிருபன் காண் நிகர் ஒன்றும் இல்லாதான் காண்
கூறு ஏறு கொடு மழுவாள் படையினான் காண் கொக்கரையன் காண் குழு நல் பூதத்தான் காண்
மாறு ஆய மதில் மூன்றும் மாய்வித்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே

 மேல்

#2578
சென்று அ சிலை வாங்கி சேர்வித்தான் காண் தியம்பகன் காண் திரிபுரங்கள் மூன்றும்
பொன்ற பொடி ஆக நோக்கினான் காண் பூதன் காண் பூத படையாளீ காண்
அன்று அப்பொழுதே அருள்செய்தான் காண் அனல் ஆடி காண் அடியார்க்கு அமுது ஆனான் காண்
மன்றல் மணம் கமழும் வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே

 மேல்

#2579
பிறையோடு பெண் ஒருபால் வைத்தான்தான் காண் பேரவன் காண் பிறப்பு ஒன்றும் இல்லாதான் காண்
கறை ஓடு மணி_மிடற்று காபாலீ காண் கட்டங்கன் காண் கையில் கபாலம் ஏந்தி
பறையோடு பல் கீதம் பாடினான் காண் ஆடினான் காண் பாணி ஆக நின்று
மறையோடு மா கீதம் கேட்டான்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே

 மேல்

#2580
மின் அளந்த மேல் முகட்டின் மேல் உற்றான் காண் விண்ணவர்-தம் பெருமான் காண் மேவில் எங்கும்
முன் அளந்த மூவர்க்கும் முதல் ஆனான் காண் மூ இலை வேல் சூலத்து எம் கோலத்தான் காண்
எண் அளந்து என் சிந்தையே மேவினான் காண் ஏ வலன் காண் இமையோர்கள் ஏத்த நின்று
மண் அளந்த மால் அறியா மாயத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே

 மேல்

#2581
பின்னு சடை மேல் பிறை சூடினான் காண் பேர் அருளன் காண் பிறப்பு ஒன்று இல்லாதான் காண்
முன்னி உலகுக்கு முன் ஆனான் காண் மூஎயிலும் செற்று உகந்த முதல்வன்தான் காண்
இன்ன உரு என்று அறிவு ஒணாதான்தான் காண் ஏழ்கடலும் ஏழ்உலகும் ஆயினான் காண்
மன்னும் மடந்தை ஓர்பாகத்தான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே

 மேல்

#2582
வெட்ட வெடித்தார்க்கு ஓர் வெவ் அழலன் காண் வீரன் காண் வீரட்டம் மேவினான் காண்
பொட்ட அநங்கனையும் நோக்கினான் காண் பூதன் காண் பூத படையினான் காண்
கட்ட கடு வினைகள் காத்து ஆள்வான் காண் கண்டன் காண் வண்டு உண்ட கொன்றையான் காண்
வட்ட மதி பாகம் சூடினான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே

 மேல்

#2583
கையால் கயிலை எடுத்தான்-தன்னை கால்விரலால் தோள் நெரிய ஊன்றினான் காண்
மெய்யின் நரம்பு இசையால் கேட்பித்தாற்கு மீண்டே அவற்கு அருள்கள் நல்கினான் காண்
பொய்யர் மனத்து புறம்பு ஆவான் காண் போர் படையான் காண் பொருவார் இல்லாதான் காண்
மை கொள் மணி மிடற்று வார் சடையான் காண் மா கடல் சூழ் கோகரணம் மன்னினானே

 மேல்

 50. திருவீழிமிழலை - திருத்தாண்டகம்

#2584
போர் ஆனை ஈர் உரிவை போர்வையானை புலி அதளே உடை ஆடை போற்றினானை
பாரானை மதியானை பகல் ஆனானை பல் உயிராய் நெடு வெளியாய் பரந்து நின்ற
நீரானை காற்றானை தீ ஆனானை நினையாதார் புரம் எரிய நினைந்த தெய்வ
தேரானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே

 மேல்

#2585
சவம் தாங்கு மயானத்து சாம்பல் என்பு தலை ஓடு மயிர் கயிறு தரித்தான்-தன்னை
பவம் தாங்கு பாசுபதவேடத்தானை பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம்
கவர்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை கழல் அடைந்தான் மேல் கறுத்த காலன் வீழ
சிவந்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே

 மேல்

#2586
அன்று ஆலின் கீழ் இருந்து அங்கு அறம் சொன்னானை அகத்தியனை உகப்பானை அயன் மால் தேட
நின்றானை கிடந்த கடல் நஞ்சு உண்டானை நேர்_இழையை கலந்திருந்தே புலன்கள் ஐந்தும்
வென்றானை மீயச்சூர் மேவினானை மெல்லியலாள் தவத்தின் நிறை அளக்கலுற்று
சென்றானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே

 மேல்

#2587
தூயானை சுடர் பவள சோதியானை தோன்றிய எ உயிர்க்கும் துணையாய் நின்ற
தாயானை சக்கரம் மாற்கு ஈந்தான்-தன்னை சங்கரனை சந்தோக சாமம் ஓதும்
வாயானை மந்திரிப்பார் மனத்து உளானை வஞ்சனையால் அஞ்சுஎழுத்தும் வழுத்துவார்க்கு
சேயானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே

 மேல்

#2588
நல் தவத்தின் நல்லானை தீதாய் வந்த நஞ்சு அமுது செய்தானை அமுதம் உண்ட
மற்ற அமரர் உலந்தாலும் உலவாதானை வருகாலம் செல்காலம் வந்தகாலம்
உற்று அவத்தை உணர்ந்தாரும் உணரல் ஆகா ஒரு சுடரை இரு விசும்பின் ஊர் மூன்று ஒன்ற
செற்றவனை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே

 மேல்

#2589
மை வானம் மிடற்றானை அ வான் மின் போல் வளர் சடை மேல் மதியானை மழையாய் எங்கும்
பெய்வானை பிச்சாடல் ஆடுவானை பிலவாய பேய் கணங்கள் ஆர்க்க சூல் அம்பு
ஒய்வானை பொய் இலா மெய்யன்-தன்னை பூதலமும் மண்டலமும் பொருந்தும் வாழ்க்கை
செய்வானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே

 மேல்

#2590
மிக்கானை குறைந்து அடைந்தார் மேவலானை வெவ்வேறாய் இரு_மூன்று சமயம் ஆகி
புக்கானை எப்பொருட்கும் பொது ஆனானை பொன்_உலகத்தவர் போற்றும் பொருளுக்கு எல்லாம்
தக்கானை தான் அன்றி வேறு ஒன்று இல்லா தத்துவனை தட வரையை நடுவு செய்த
திக்கானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே

 மேல்

#2591
வானவர்_கோன் தோள் இறுத்த மைந்தன்-தன்னை வளைகுளமும் மறைக்காடும் மன்னினானை
ஊனவனை உயிரவனை ஒரு நாள் பார்த்தன் உயர் தவத்தின் நிலை அறியலுற்று சென்ற
கானவனை கயிலாயம் மேவினானை கங்கை சேர் சடையானை கலந்தார்க்கு என்றும்
தேனவனை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே

 மேல்

#2592
பரத்தானை இ பக்கம் பல ஆனானை பசுபதியை பத்தர்க்கு முத்தி காட்டும்
வரத்தானை வணங்குவார் மனத்து உளானை மாருதம் மால் எரி மூன்றும் வாய் அம்பு ஈர்க்கு ஆம்
சரத்தானை சரத்தையும் தன் தாள் கீழ் வைத்த தபோதனனை சடாமகுடத்து அணிந்த பைம் கண்
சிரத்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே

 மேல்

#2593
அறுத்தானை அயன் தலைகள் அஞ்சில் ஒன்றை அஞ்சாதே வரை எடுத்த அரக்கன் தோள்கள்
இறுத்தானை எழு நரம்பின் இசை கேட்டானை இந்துவினை தேய்த்தானை இரவி-தன் பல்
பறித்தானை பகீரதற்கா வானோர் வேண்ட பரந்து இழியும் புனல் கங்கை பனி போல் ஆக
செறித்தானை திரு வீழிமிழலையானை சேராதார் தீ நெறிக்கே சேர்கின்றாரே

 மேல்

 51. திருவீழிமிழலை - திருத்தாண்டகம்

#2594
கயிலாய மலை உள்ளார் காரோணத்தார் கந்தமாதனத்து உளார் காளத்தியார்
மயிலாடுதுறை உளார் மாகாளத்தார் வக்கரையார் சக்கரம் மாற்கு ஈந்தார் வாய்ந்த
அயில் வாய சூலமும் காபாலமும் அமரும் திருக்கரத்தார் ஆன் ஏறு ஏறி
வெயில் ஆய சோதி விளங்கும் நீற்றார் வீழிமிழலையே மேவினாரே

 மேல்

#2595
பூதி அணி பொன் நிறத்தர் பூண நூலர் பொங்கு அரவர் சங்கரர் வெண் குழை ஓர் காதர்
கேதிசரம் மேவினார் கேதாரத்தார் கெடில வட அதிகைவீரட்டத்தார்
மா துயரம் தீர்த்து என்னை உய்யக்கொண்டார் மழபாடி மேய மணவாளனார்
வேதிகுடி உளார் மீயச்சூரார் வீழிமிழலையே மேவினாரே

 மேல்

#2596
அண்ணாமலை அமர்ந்தார் ஆரூர் உள்ளார் அளப்பூரார் அந்தணர்கள் மாட கோயில்
உண்ணாழிகையார் உமையாளோடும் இமையோர் பெருமானார் ஒற்றியூரார்
பெண்ணாகடத்து பெரும் தூங்கானைமாடத்தார் கூடத்தார் பேராவூரார்
விண்ணோர்கள் எல்லாம் விரும்பி ஏத்த வீழிமிழலையே மேவினாரே

 மேல்

#2597
வெண்காட்டார் செங்காட்டங்குடியார் வெண்ணி நன்நகரார் வெட்களத்தார் வேதம் நாவார்
பண் காட்டும் வண்டு ஆர் பழனத்து உள்ளார் பராய்த்துறையார் சிராப்பள்ளி உள்ளார் பண்டு ஓர்
வெண் கோட்டு கரும் களிற்றை பிளிற பற்றி உரித்து உரிவை போர்த்த விடலை வேடம்
விண் காட்டும் பிறை_நுதலி அஞ்ச காட்டி வீழிமிழலையே மேவினாரே

 மேல்

#2598
புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாட புலியூர் சிற்றம்பலத்தே நடம் ஆடுவார்
உடை சூழ்ந்த புலி தோலர் கலி கச்சி மேற்றளி உளார் குளிர் சோலை ஏகம்பத்தார்
கடை சூழ்ந்து பலி தேரும் கங்காளனார் கழுமலத்தார் செழு மலர் தார் குழலியோடும்
விடை சூழ்ந்த வெல் கொடியார் மல்கு செல்வ வீழிமிழலையே மேவினாரே

 மேல்

#2599
பெரும்புலியூர் விரும்பினார் பெரும் பாழியார் பெரும்பற்றப்புலியூர் மூலட்டானத்தார்
இரும்புதலார் இரும்பூளை உள்ளார் ஏர் ஆர் இன்னம்பரார் ஈங்கோய்மலையார் இன் சொல்
கரும்பு அனையாள் உமையோடும் கருகாவூரார் கருப்பறியலூரார் கரவீரத்தார்
விரும்பு அமரர் இரவுபகல் பரவி ஏத்த வீழிமிழலையே மேவினாரே

 மேல்

#2600
மறைக்காட்டார் வலிவலத்தார் வாய்மூர் மேயார் வாழ்கொளிபுத்தூரார் மாகாளத்தார்
கறை காட்டும் கண்டனார் காபாலியார் கற்குடியார் விற்குடியார் கானப்பேரார்
பறை காட்டும் குழி விழி கண் பல் பேய் சூழ பழையனூர் ஆலங்காட்டு அடிகள் பண்டு ஓர்
மிறை காட்டும் கொடும் காலன் வீட பாய்ந்தார் வீழிமிழலையே மேவினாரே

 மேல்

#2601
அஞ்சைக்களத்து உள்ளார் ஐயாற்று உள்ளார் ஆரூரார் பேரூரார் அழுந்தூர் உள்ளார்
தஞ்சை தளிக்குளத்தார் தக்களூரார் சாந்தை அயவந்தி தங்கினார்தாம்
நஞ்சை தமக்கு அமுதா உண்ட நம்பர் நாகேச்சுரத்து உள்ளார் நாரையூரார்
வெம் சொல் சமண் சிறையில் என்னை மீட்டார் வீழிமிழலையே மேவினாரே

 மேல்

#2602
கொண்டல் உள்ளார் கொண்டீச்சரத்தின் உள்ளார் கோவலூர் வீரட்டம் கோயில்கொண்டார்
தண்டலையார் தலையாலங்காட்டில் உள்ளார் தலைச்சங்கை பெருங்கோயில் தங்கினார்தாம்
வண்டலொடு மணல் கொணரும் பொன்னி நல் நீர் வலஞ்சுழியார் வைகலில் மேல் மாடத்து உள்ளார்
வெண் தலை மான் கைக்கொண்ட விகிர்த வேடர் வீழிமிழலையே மேவினாரே

 மேல்

#2603
அரிச்சந்திரத்து உள்ளார் அம்பர் உள்ளார் அரி பிரமர் இந்திரர்க்கும் அரியர் ஆனார்
புரிச்சந்திரத்து உள்ளார் போகத்து உள்ளார் பொருப்பு_அரையன் மகளோடு விருப்பர் ஆகி
எரி சந்தி வேட்கும் இடத்தார் ஏம கூடத்தார் பாட தேன் இசை ஆர் கீதர்
விரிச்சு அங்கை எரி கொண்டு அங்கு ஆடும் வேடர் வீழிமிழலையே மேவினாரே

 மேல்

#2604
புன்கூரார் புறம்பயந்தார் புத்தூர் உள்ளார் பூவணத்தார் புலிவலத்தார் வலியின் மிக்க
தன் கூர்மை கருதி வரை எடுக்கலுற்றான் தலைகளொடு மலைகள் அன தாளும் தோளும்
பொன் கூரும் கழல் அடி ஓர் விரலால் ஊன்றி பொருப்பு அதன் கீழ் நெரித்து அருள்செய் புவனநாதர்
மின் கூரும் சடை முடியார் விடையின் பாகர் வீழிமிழலையே மேவினாரே

 மேல்

 52. திருவீழிமிழலை - திருத்தாண்டகம்

#2605
கண் அவன் காண் கண் ஒளி சேர் காட்சியான் காண் கந்திருவம் பாட்டு இசையில் காட்டுகின்ற
பண் அவன் காண் பண் அவற்றின் திறம் ஆனான் காண் பழம் ஆகி சுவை ஆகி பயக்கின்றான் காண்
மண் அவன் காண் தீ அவன் காண் நீர் ஆனான் காண் வந்து அலைக்கும் மாருதன் காண் மழை மேகம் சேர்
விண் அவன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் விண் இழி தன் வீழிமிழலையானே

 மேல்

#2606
ஆலை படு கரும்பின் சாறு போல அண்ணிக்கும் அஞ்சுஎழுத்தின் நாமத்தான் காண்
சீலம் உடை அடியார் சிந்தையான் காண் திரிபுரம் மூன்று எரிபடுத்த சிலையினான் காண்
பாலினொடு தயிர் நறு நெய் ஆடினான் காண் பண்டரங்கவேடன் காண் பலி தேர்வான் காண்
வேலை விடம் உண்ட மிடற்றினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே

 மேல்

#2607
தண்மையொடு வெம்மைதான் ஆயினான் காண் சக்கரம் புள்_பாகற்கு அருள்செய்தான் காண்
கண்ணும் ஒரு மூன்று உடைய காபாலீ காண் காமன் உடல் வேவித்த கண்ணினான் காண்
எண் இல் சமண் தீர்த்து என்னை ஆட்கொண்டான் காண் இருவர்க்கு எரியா அருளினான் காண்
விண்ணவர்கள் போற்ற இருக்கின்றான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே

 மேல்

#2608
காது இசைந்த சங்க குழையினான் காண் கனக மலை அனைய காட்சியான் காண்
மாது இசைந்த மா தவமும் சோதித்தான் காண் வல் ஏன வெள் எயிற்று ஆபரணத்தான் காண்
ஆதியன் காண் அண்டத்துக்கு அப்பாலான் காண் ஐந்தலை மா நாகம் நாண் ஆக்கினான் காண்
வேதியன் காண் வேத விதி காட்டினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே

 மேல்

#2609
நெய்யினொடு பால் இள நீர் ஆடினான் காண் நித்த மணவாளன் என நிற்கின்றான் காண்
கையில் மழுவாளொடு மான் ஏந்தினான் காண் காலன் உயிர் காலால் கழிவித்தான் காண்
செய்ய திரு மேனியில் வெண் நீற்றினான் காண் செம் சடை மேல் வெண் மதியம் சேர்த்தினான் காண்
வெய்ய கனல் விளையாட்டு ஆடினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே

 மேல்

#2610
கண் துஞ்சும் கரு நெடு மால் ஆழி வேண்டி கண் இடந்து சூட்ட கண்டு அருளுவான் காண்
வண்டு உண்ணும் மது கொன்றை வன்னி மத்தம் வான் கங்கை சடை கரந்த மாதேவன் காண்
பண் தங்கு மொழி மடவாள் பாகத்தான் காண் பரமன் காண் பரமேட்டி ஆயினான் காண்
வெண் திங்கள் அரவொடு செம் சடை வைத்தான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே

 மேல்

#2611
கல் பொலி தோள் சலந்தரனை பிளந்த ஆழி கரு மாலுக்கு அருள்செய்த கருணையான் காண்
வில் பொலி தோள் விசயன் வலி தேய்வித்தான் காண் வேடுவனாய் போர் பொருது காட்டினான் காண்
தற்பரமாய் நற்பரமாய் நிற்கின்றான் காண் சதாசிவன் காண் தன் ஒப்பார் இல்லாதான் காண்
வெற்பு அரையன் பாவை விருப்பு உளான் காண் விண் இழி கண் வீழிமிழலையானே

 மேல்

#2612
மெய்த்தவன் காண் மெய் தவத்தில் நிற்பார்க்கு எல்லாம் விருப்பு இலா இருப்பு மன வினையர்க்கு என்றும்
பொய்த்தவன் காண் புத்தன் மறவாது ஓடி எறி சல்லி புது மலர்கள் ஆக்கினான் காண்
உய்த்தவன் காண் உயர் கதிக்கே உள்கினாரை உலகு அனைத்தும் ஒளித்து அளித்திட்டு உய்ய செய்யும்
வித்தகன் காண் வித்தகர்தாம் விரும்பி ஏத்தும் விண் இழி தண் வீழிமிழலையானே

 மேல்

#2613
சந்திரனை திருவடியால் தளர்வித்தான் காண் தக்கனையும் முனிந்து எச்சன் தலை கொண்டான் காண்
இந்திரனை தோள் முறிவித்து அருள்செய்தான் காண் ஈசன் காண் நேசன் காண் நினைவோர்க்கு எல்லாம்
மந்திரமும் மறைப்பொருளும் ஆயினான் காண் மாலொடு அயன் மேலொடு கீழ் அறியா வண்ணம்
வெம் தழலின் விரி சுடராய் ஓங்கினான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே

 மேல்

#2614
ஈங்கை பேர் ஈமவனத்து இருக்கின்றான் காண் எம்மான் காண் கைம்மாவின் உரி போர்த்தான் காண்
ஓங்கு மலைக்கு அரையன்தன் பாவையோடும் ஓர் உருவாய் நின்றான் காண் ஓங்காரன் காண்
கோங்கு மலர் கொன்றை அம் தார் கண்ணியான் காண் கொல் ஏறு வெல் கொடி மேல் கூட்டினான் காண்
வேங்கை வரி புலி தோல் மேல் ஆடையான் காண் விண் இழி தண் வீழிமிழலையானே

 மேல்

 53. திருவீழிமிழலை - திருத்தாண்டகம்

#2615
மான் ஏறு கரம் உடைய வரதர் போலும் மால் வரை கால் வளை வில்லா வளைத்தார் போலும்
கான் ஏறு கரி கதற உரித்தார் போலும் கட்டங்கம் கொடி துடி கை கொண்டார் போலும்
தேன் ஏறு திரு இதழி தாரார் போலும் திரு வீழிமிழலை அமர் செல்வர் போலும்
ஆன் ஏறு அது ஏறும் அழகர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே

 மேல்

#2616
சமரம் மிகு சலந்தரன் போர் வேண்டினானை சக்கரத்தால் பிளப்பித்த சதுரர் போலும்
நமனை ஒரு கால் குறைத்த நாதர் போலும் நாரணனை இடப்பாகத்து அடைத்தார் போலும்
குமரனையும் மகன் ஆக உடையார் போலும் குளிர் வீழிமிழலை அமர் குழகர் போலும்
அமரர்கள் பின் அமுது உண நஞ்சு உண்டார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே

 மேல்

#2617
நீறு அணிந்த திரு மேனி நிமலர் போலும் நேமி நெடு மாற்கு அருளிச்செய்தார் போலும்
ஏறு அணிந்த கொடி உடை எம் இறைவர் போலும் எயில் மூன்றும் எரி சரத்தால் எய்தார் போலும்
வேறு அணிந்த கோலம் உடை வேடர் போலும் வியன் வீழிமிழலை உறை விகிர்தர் போலும்
ஆறு அணிந்த சடாமகுடத்து அழகர் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே

 மேல்

#2618
கை வேழ முகத்தவனை படைத்தார் போலும் கயாசுரனை அவனால் கொல்வித்தார் போலும்
செய் வேள்வி தக்கனை முன் சிதைத்தார் போலும் திசைமுகன்-தன் சிரம் ஒன்று சிதைத்தார் போலும்
மெய் வேள்வி மூர்த்தி தலை அறுத்தார் போலும் வியன் வீழிமிழலை இடம் கொண்டார் போலும்
ஐ வேள்வி ஆறு அங்கம் ஆனார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே

 மேல்

#2619
துன்னத்தின் கோவணம் ஒன்று உடையார் போலும் சுடர் மூன்றும் சோதியுமாய் தூயார் போலும்
பொன் ஒத்த திரு மேனி புனிதர் போலும் பூத கணம் புடை சூழ வருவார் போலும்
மின் ஒத்த செம் சடை வெண் பிறையார் போலும் வியன் வீழிமிழலை சேர் விமலர் போலும்
அன்ன தேர் அயன் முடி சேர் அடிகள் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே

 மேல்

#2620
மாலாலும் அறிவு அரிய வரதர் போலும் மறவாதார் பிறப்பு அறுக்க வல்லார் போலும்
நால் ஆய மறைக்கு இறைவர் ஆனார் போலும் நாம எழுத்து அஞ்சு ஆய நம்பர் போலும்
வேல் ஆர் கை வீரியை முன் படைத்தார் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும்
ஆலாலம் மிடற்று அடக்கி அளித்தார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே

 மேல்

#2621
பஞ்சு அடுத்த மெல்விரலாள்_பங்கர் போலும் பை நாகம் அரைக்கு அசைத்த பரமர் போலும்
மஞ்சு அடுத்த மணி நீல_கண்டர் போலும் வட கயிலை மலை உடைய மணாளர் போலும்
செம் சடை-கண் வெண் பிறை கொண்டு அணிந்தார் போலும் திரு வீழிமிழலை அமர் சிவனார் போலும்
அஞ்சு அடக்கும் அடியவர்கட்கு அணியார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே

 மேல்

#2622
குண்டரொடு பிரித்து எனை ஆட்கொண்டார் போலும் குடமூக்கில் இடம் ஆக்கிக்கொண்டார் போலும்
புண்டரிக புது மலர் ஆதனத்தார் போலும் புள் அரசை கொன்று உயிர் பின் கொடுத்தார் போலும்
வெண் தலையில் பலி கொண்ட விகிர்தர் போலும் வியன் வீழிமிழலை நகர் உடையார் போலும்
அண்டத்து புறத்து அப்பால் ஆனார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே

 மேல்

#2623
முத்து அனைய முகிழ் முறுவல் உடையார் போலும் மொய் பவள கொடி அனைய சடையார் போலும்
எத்தனையும் பத்தி செய்வார்க்கு இனியார் போலும் இரு_நான்கு மூர்த்திகளும் ஆனார் போலும்
மித்திர வச்சிரவணற்கு விருப்பர் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும்
அத்தனொடும் அம்மை எனக்கு ஆனார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே

 மேல்

#2624
கரி உரி செய்து உமை வெருவ கண்டார் போலும் கங்கையையும் செம் சடை மேல் கரந்தார் போலும்
எரி அது ஒரு கை தரித்த இறைவர் போலும் ஏனத்தின் கூன் எயிறு பூண்டார் போலும்
விரி கதிரோன் இருவரை முன் வெகுண்டார் போலும் வியன் வீழிமிழலை அமர் விமலர் போலும்
அரி பிரமர் துதிசெய நின்று அளித்தார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே

 மேல்

#2625
கயிலாய மலை எடுத்தான் கதறி வீழ கால்விரலால் அடர்த்து அருளிச்செய்தார் போலும்
குயில் ஆய மென்மொழியாள் குளிர்ந்து நோக்க கூத்து ஆட வல்ல குழகர் போலும்
வெயில் ஆய சோதி விளக்கு ஆனார் போலும் வியன் வீழிமிழலை அமர் விகிர்தர் போலும்
அயில் ஆய மூ இலை வேல் படையார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே

 மேல்

 54. திருப்புள்ளிருக்குவேளூர் - திருத்தாண்டகம்

#2626
ஆண்டானை அடியேனை ஆளாக்கொண்டு அடியோடு முடி அயன் மால் அறியா வண்ணம்
நீண்டானை நெடுங்கள மா நகரான்-தன்னை நேமி வான் படையால் நீள் உரவோன் ஆகம்
கீண்டானை கேதாரம் மேவினானை கேடிலியை கிளர் பொறிவாள் அரவோடு என்பு
பூண்டானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே

 மேல்

#2627
சீர்த்தானை சிறந்து அடியேன் சிந்தையுள்ளே திகழ்ந்தானை சிவன்-தன்னை தேவதேவை
கூர்த்தானை கொடு நெடு வேல் கூற்றம்-தன்னை குரை கழலால் குமைத்து முனி கொண்ட அச்சம்
பேர்த்தானை பிறப்பிலியை இறப்பு ஒன்று இல்லா பெம்மானை கைம்மாவின் உரிவை பேணி
போர்த்தானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினானே

 மேல்

#2628
பத்திமையால் பணிந்து அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை
எத்தேவும் ஏத்தும் இறைவன்-தன்னை எம்மானை என் உள்ளத்துள்ளே ஊறும்
அ தேனை அமுதத்தை ஆவின் பாலை அண்ணிக்கும் தீம் கரும்பை அரனை ஆதி
புத்தேளை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே

 மேல்

#2629
இருள் ஆய உள்ளத்தின் இருளை நீக்கி இடர் பாவம் கெடுத்து ஏழையேனை உய்ய
தெருளாத சிந்தை-தனை தெருட்டி தன் போல் சிவலோக நெறி அறிய சிந்தை தந்த
அருளானை ஆதி மா தவத்து உளானை ஆறு அங்கம் நால் வேதத்து அப்பால் நின்ற
பொருளானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே

 மேல்

#2630
மின் உருவை விண்ணகத்தில் ஒன்றாய் மிக்கு வீசும்-கால் தன் அகத்தில் இரண்டாய் செம் தீ
தன் உருவில் மூன்றாய் தாழ் புனலில் நான்காய் தரணி தலத்து அஞ்சு ஆகி எஞ்சா தஞ்ச
மன் உருவை வான் பவள கொழுந்தை முத்தை வளர் ஒளியை வயிரத்தை மாசு ஒன்று இல்லா
பொன் உருவை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே

 மேல்

#2631
அறை ஆர் பொன் கழல் ஆர்ப்ப அணி ஆர் தில்லை அம்பலத்துள் நடம் ஆடும் அழகன்-தன்னை
கறை ஆர் மூ இலை நெடு வேல் கடவுள்-தன்னை கடல் நாகைக்காரோணம் கருதினானை
இறையானை என் உள்ளத்துள்ளே விள்ளாது இருந்தானை ஏழ்பொழிலும் தாங்கி நின்ற
பொறையானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே

 மேல்

#2632
நெருப்பு அனைய திரு மேனி வெண் நீற்றானை நீங்காது என் உள்ளத்தினுள்ளே நின்ற
விருப்பவனை வேதியனை வேத வித்தை வெண்காடும் வியன் துருத்தி நகரும் மேவி
இருப்பவனை இடைமருதோடு ஈங்கோய் நீங்கா இறையவனை எனை ஆளும் கயிலை என்னும்
பொருப்பவனை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே

 மேல்

#2633
பேர் ஆயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மானை பிரிவு இலா அடியார்க்கு என்றும்
வாராத செல்வம் வருவிப்பானை மந்திரமும் தந்திரமும் மருந்தும் ஆகி
தீரா நோய் தீர்த்து அருள வல்லான்-தன்னை திரிபுரங்கள் தீ எழ திண் சிலை கை கொண்ட
போரானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே

 மேல்

#2634
பண்ணியனை பைங்கொடியாள்_பாகன்-தன்னை படர் சடை மேல் புனல் கரந்த படிறன்-தன்னை
நண்ணியனை என் ஆக்கி தன் ஆனானை நான்மறையின் நற்பொருளை நளிர் வெண் திங்கள்
கண்ணியனை கடிய நடை விடை ஒன்று ஏறும் காரணனை நாரணனை கமலத்து ஓங்கும்
புண்ணியனை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே

 மேல்

#2635
இறுத்தானை இலங்கையர்_கோன் சிரங்கள் பத்தும் எழு நரம்பின் இன்னிசை கேட்டு இன்புற்றானை
அறுத்தானை அடியார்-தம் அரு நோய் பாவம் அலை கடலில் ஆலாலம் உண்டு கண்டம்
கறுத்தானை கண் அழலால் காமன் ஆகம் காய்ந்தானை கனல் மழுவும் கலையும் அங்கை
பொறுத்தானை புள்ளிருக்குவேளூரானை போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே

 மேல்

 55. திருக்கயிலாயம் - போற்றித் திருத்தாண்டகம்

#2636
வேற்று ஆகி விண் ஆகி நின்றாய் போற்றி மீளாமே ஆள் என்னை கொண்டாய் போற்றி
ஊற்று ஆகி உள்ளே ஒளித்தாய் போற்றி ஓவாத சத்தத்து ஒலியே போற்றி
ஆற்று ஆகி அங்கே அமர்ந்தாய் போற்றி ஆறு அங்கம் நால் வேதம் ஆனாய் போற்றி
காற்று ஆகி எங்கும் கலந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

#2637
பிச்சு ஆடல் பேயோடு உகந்தாய் போற்றி பிறவி அறுக்கும் பிரானே போற்றி
வைச்சு ஆடல் நன்று மகிழ்ந்தாய் போற்றி மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி
பொய் சார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி
கச்சு ஆக நாகம் அசைத்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

#2638
மருவார் புரம் மூன்றும் எய்தாய் போற்றி மருவி என் சிந்தை புகுந்தாய் போற்றி
உரு ஆகி என்னை படைத்தாய் போற்றி உள் ஆவி வாங்கி ஒளித்தாய் போற்றி
திரு ஆகி நின்ற திறமே போற்றி தேசம் பரவப்படுவாய் போற்றி
கரு ஆகி ஓடும் முகிலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

#2639
வானத்தார் போற்றும் மருந்தே போற்றி வந்து என்தன் சிந்தை புகுந்தாய் போற்றி
ஊனத்தை நீக்கும் உடலே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
தேனத்தை வார்த்த தெளிவே போற்றி தேவர்க்கும் தேவனாய் நின்றாய் போற்றி
கான தீ ஆடல் உகந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

#2640
ஊர் ஆகி நின்ற உலகே போற்றி ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி
பேர் ஆகி எங்கும் பரந்தாய் போற்றி பெயராது என் சிந்தை புகுந்தாய் போற்றி
நீர் ஆவி ஆன நிழலே போற்றி நேர்வார் ஒருவரையும் இல்லாய் போற்றி
கார் ஆகி நின்ற முகிலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

#2641
சில் உருவாய் சென்று திரண்டாய் போற்றி தேவர் அறியாத தேவே போற்றி
புல் உயிர்க்கும் பூட்சி புணர்ந்தாய் போற்றி போகாது என் சிந்தை புகுந்தாய் போற்றி
பல் உயிராய் பார்-தோறும் நின்றாய் போற்றி பற்றி உலகை விடாதாய் போற்றி
கல் உயிராய் நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

#2642
பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி பாவிப்பார் பாவம் அறுப்பார் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி மேலவர்க்கும் மேல் ஆகி நின்றாய் போற்றி
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

#2643
இமையாது உயிராது இருந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
உமை பாகம் ஆகத்து அணைத்தாய் போற்றி ஊழி ஏழ் ஆன ஒருவா போற்றி
அமையா அரு நஞ்சம் ஆர்ந்தாய் போற்றி ஆதிபுராணனாய் நின்றாய் போற்றி
கமை ஆகி நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

#2644
மூவாய் பிறவாய் இறவாய் போற்றி முன்னமே தோன்றி முளைத்தாய் போற்றி
தேவாதிதேவர் தொழும் தேவே போற்றி சென்று ஏறி எங்கும் பரந்தாய் போற்றி
ஆவா அடியேனுக்கு எல்லாம் போற்றி அல்லல் நலிய அலந்தேன் போற்றி
காவாய் கனக திரளே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

#2645
நெடிய விசும்போடு கண்ணே போற்றி நீள அகலம் உடையாய் போற்றி
அடியும் முடியும் இகலி போற்றி அங்கு ஒன்று அறியாமை நின்றாய் போற்றி
கொடிய வன் கூற்றம் உதைத்தாய் போற்றி கோயிலா என் சிந்தை கொண்டாய் போற்றி
கடிய உருமொடு மின்னே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

#2646
உண்ணாது உறங்காது இருந்தாய் போற்றி ஓதாதே வேதம் உணர்ந்தாய் போற்றி
எண்ணா இலங்கை_கோன்-தன்னை போற்றி இறை விரலால் வைத்து உகந்த ஈசா போற்றி
பண் ஆர் இசை இன்சொல் கேட்டாய் போற்றி பண்டே என் சிந்தை புகுந்தாய் போற்றி
கண்ணாய் உலகுக்கு நின்றாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

 56. திருக்கயிலாயம் - போற்றித் திருத்தாண்டகம்

#2647
பொறை உடைய பூமி நீர் ஆனாய் போற்றி பூத படை ஆள் புனிதா போற்றி
நிறை உடைய நெஞ்சினிடையாய் போற்றி நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி
மறை உடைய வேதம் விரித்தாய் போற்றி வானோர் வணங்கப்படுவாய் போற்றி
கறை உடைய கண்டம் உடையாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

#2648
முன்பு ஆகி நின்ற முதலே போற்றி மூவாத மேனி முக்கண்ணா போற்றி
அன்பு ஆகி நின்றார்க்கு அணியாய் போற்றி ஆறு ஏறு சென்னி சடையாய் போற்றி
என்பு ஆகம் எங்கும் அணிந்தாய் போற்றி என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
கண் பாவி நின்ற கனலே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

#2649
மாலை எழுந்த மதியே போற்றி மன்னி என் சிந்தை இருந்தாய் போற்றி
மேலை வினைகள் அறுப்பாய் போற்றி மேல் ஆடு திங்கள் முடியாய் போற்றி
ஆலை கரும்பின் தெளிவே போற்றி அடியார்கட்கு ஆரமுதம் ஆனாய் போற்றி
காலை முளைத்த கதிரே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

#2650
உடலில் வினைகள் அறுப்பாய் போற்றி ஒள் எரி வீசும் பிரானே போற்றி
படரும் சடை மேல் மதியாய் போற்றி பல் கண கூத்தப்பிரானே போற்றி
சுடரில் திகழ்கின்ற சோதீ போற்றி தோன்றி என் உள்ளத்து இருந்தாய் போற்றி
கடலில் ஒளி ஆய முத்தே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

#2651
மை சேர்ந்த கண்டம் உடையாய் போற்றி மாலுக்கும் ஓர் ஆழி ஈந்தாய் போற்றி
பொய் சேர்ந்த சிந்தை புகாதாய் போற்றி போகாது என் உள்ளத்து இருந்தாய் போற்றி
மெய் சேர பால் வெண் நீறு ஆடீ போற்றி மிக்கார்கள் ஏத்தும் விளக்கே போற்றி
கை சேர் அனல் ஏந்தி ஆடீ போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

#2652
ஆறு ஏறு சென்னி முடியாய் போற்றி அடியார்கட்கு ஆரமுதாய் நின்றாய் போற்றி
நீறு ஏறும் மேனி உடையாய் போற்றி நீங்காது என் உள்ளத்து இருந்தாய் போற்றி
கூறு ஏறும் அம் கை மழுவா போற்றி கொள்ளும் கிழமை ஏழ் ஆனாய் போற்றி
காறு ஏறு கண்டம் மிடற்றாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

#2653
அண்டம் ஏழ் அன்று கடந்தாய் போற்றி ஆதிபுராணனாய் நின்றாய் போற்றி
பண்டை வினைகள் அறுப்பாய் போற்றி பாரோர் விண் ஏத்தப்படுவாய் போற்றி
தொண்டர் பரவும் இடத்தாய் போற்றி தொழில் நோக்கி ஆளும் சுடரே போற்றி
கண்டம் கறுக்கவும் வல்லாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

#2654
பெருகி அலைக்கின்ற ஆறே போற்றி பேரா நோய் பேர விடுப்பாய் போற்றி
உருகி நினைவார்-தம் உள்ளாய் போற்றி ஊனம் தவிர்க்கும் பிரானே போற்றி
அருகி மிளிர்கின்ற பொன்னே போற்றி ஆரும் இகழப்படாதாய் போற்றி
கருகி பொழிந்து ஓடும் நீரே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

#2655
செய்ய மலர் மேலான் கண்ணன் போற்றி தேடி உணராமை நின்றாய் போற்றி
பொய்யா நஞ்சு உண்ட பொறையே போற்றி பொருள் ஆக என்னை ஆட்கொண்டாய் போற்றி
மெய் ஆக ஆன் அஞ்சு உகந்தாய் போற்றி மிக்கார்கள் ஏத்தும் குணத்தாய் போற்றி
கை ஆனை மெய் தோல் உரித்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

#2656
மேல் வைத்த வானோர் பெருமான் போற்றி மேல் ஆடு புரம் மூன்றும் எய்தாய் போற்றி
சீலத்தான் தென் இலங்கை_மன்னன் போற்றி சிலை எடுக்க வாய் அலற வைத்தாய் போற்றி
கோலத்தால் குறைவில்லான்-தன்னை அன்று கொடிது ஆக காய்ந்த குழகா போற்றி
காலத்தால் காலனையும் காய்ந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

 57. திருக்கயிலாயம் - போற்றித் திருத்தாண்டகம்

#2657
பாட்டு ஆன நல்ல தொடையாய் போற்றி பரிசை அறியாமை நின்றாய் போற்றி
சூட்டு ஆன திங்கள் முடியாய் போற்றி தூ மாலை மத்தம் அணிந்தாய் போற்றி
ஆட்டு ஆனது அஞ்சும் அமர்ந்தாய் போற்றி அடங்கார் புரம் எரிய நக்காய் போற்றி
காட்டு ஆனை மெய் தோல் உரித்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

#2658
அதிரா வினைகள் அறுப்பாய் போற்றி ஆல நிழல் கீழ் அமர்ந்தாய் போற்றி
சதுரா சதுர குழையாய் போற்றி சாம்பர் மெய் பூசும் தலைவா போற்றி
எதிரா உலகம் அமைப்பாய் போற்றி என்றும் மீளா அருள்செய்வாய் போற்றி
கதிர் ஆர் கதிருக்கு ஓர் கண்ணே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

#2659
செய்யாய் கரியாய் வெளியாய் போற்றி செல்லாத செல்வம் உடையாய் போற்றி
ஐயாய் பெரியாய் சிறியாய் போற்றி ஆகாய வண்ண முடியாய் போற்றி
வெய்யாய் தணியாய் அணியாய் போற்றி வேளாத வேள்வி உடையாய் போற்றி
கை ஆர் தழல் ஆர் விடங்கா போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

#2660
ஆட்சி உலகை உடையாய் போற்றி அடியார்க்கு அமுது எலாம் ஈவாய் போற்றி
சூட்சி சிறிதும் இலாதாய் போற்றி சூழ்ந்த கடல் நஞ்சம் உண்டாய் போற்றி
மாட்சி பெரிதும் உடையாய் போற்றி மன்னி என் சிந்தை மகிழ்ந்தாய் போற்றி
காட்சி பெரிதும் அரியாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

#2661
முன்னியா நின்ற முதல்வா போற்றி மூவாத மேனி உடையாய் போற்றி
என்னியாய் எந்தை பிரானே போற்றி ஏழ் இன இசையே உகப்பாய் போற்றி
மன்னிய மங்கை_மணாளா போற்றி மந்திரமும் தந்திரமும் ஆனாய் போற்றி
கன்னி ஆர் கங்கை தலைவா போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

#2662
உரியாய் உலகினுக்கு எல்லாம் போற்றி உணர்வு என்னும் ஊர்வது உடையாய் போற்றி
எரி ஆய தெய்வ சுடரே போற்றி ஏசும் மா முண்டி உடையாய் போற்றி
அரியாய் அமரர்கட்கு எல்லாம் போற்றி அறிவே அடக்கம் உடையாய் போற்றி
கரியானுக்கு ஆழி அன்று ஈந்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

#2663
எண் மேலும் எண்ணம் உடையாய் போற்றி ஏறு அரிய ஏறும் குணத்தாய் போற்றி
பண் மேலே பாவித்து இருந்தாய் போற்றி பண்ணொடு யாழ் வீணை பயின்றாய் போற்றி
விண் மேலும் மேலும் நிமிர்ந்தாய் போற்றி மேலார்கள் மேலார்கள் மேலாய் போற்றி
கண் மேலும் கண் ஒன்று உடையாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

#2664
முடி ஆர் சடை மேல் மதியாய் போற்றி முழு நீறு சண்ணித்த மூர்த்தி போற்றி
துடி ஆர் இடை உமையாள் பங்கா போற்றி சோதித்தார் காணாமை நின்றாய் போற்றி
அடியார் அடிமை அறிவாய் போற்றி அமரர்பதி ஆள வைத்தாய் போற்றி
கடி ஆர் பரம் மூன்றும் எய்தாய் போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

#2665
போற்றி இசைத்து உன் அடி பரவ நின்றாய் போற்றி புண்ணியனே நண்ணல் அரியாய் போற்றி
ஏற்று இசைக்கும் வான் மேல் இருந்தாய் போற்றி எண்ணாயிரம் நூறுபெயராய் போற்றி
நால் திசைக்கும் விளக்கு ஆய நாதா போற்றி நான்முகற்கும் மாற்கும் அரியாய் போற்றி
காற்று இசைக்கும் திசைக்கு எல்லாம் வித்தே போற்றி கயிலைமலையானே போற்றிபோற்றி

 மேல்

 58. திருவலம்புரம் - திருத்தாண்டகம்

#2666
மண் அளந்த மணி_வண்ணர்தாமும் மற்றை மறையவனும் வானவரும் சூழ நின்று
கண் மலிந்த திரு நெற்றி உடையார் ஒற்றை கத நாகம் கை உடையார் காணீர் அன்றே
பண் மலிந்த மொழியவரும் யானும் எல்லாம் பணிந்து இறைஞ்சி தம்முடைய பின்பின் செல்ல
மண் மலிந்த வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே

 மேல்

#2667
சிலை நவின்று ஒரு கணையால் புரம் மூன்று எய்த தீ_வண்ணர் சிறிது இமையோர் இறைஞ்சி ஏத்த
கொலை நவின்ற களி யானை உரிவை போர்த்து கூத்து ஆடி திரிதரும் அ கூத்தர் நல்ல
கலை நவின்ற மறையவர்கள் காணக்காண கடு விடை மேல் பாரிடங்கள் சூழ காதல்
மலைமகளும் கங்கையும் தாமும் எல்லாம் வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே

 மேல்

#2668
தீ கூரும் திரு மேனி ஒருபால் மற்றை ஒருபாலும் அரி உருவம் திகழ்ந்த செல்வர்
ஆக்கூரில் தான்தோன்றி புகுவார் போல அரு வினையேன் செல்வதுமே அப்பால் எங்கும்
நோக்கார் ஒருஇடத்தும் நூலும் தோலும் துதைந்து இலங்கும் திரு மேனி வெண் நீறு ஆடி
வாக்கால் மறை விரித்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே

 மேல்

#2669
மூவாத மூக்க பாம்பு அரையில் சாத்தி மூவர் உரு ஆய முதல்வர் இ நாள்
கோவாத எரி கணையை சிலை மேல் கோத்த குழகனார் குளிர் கொன்றை சூடி இங்கே
போவாரை கண்டு அடியேன் பின்பின் செல்ல புறக்கணித்து தம்முடைய பூதம் சூழ
வாவா என உரைத்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே

 மேல்

#2670
அனல் ஒரு கையது ஏந்தி அதளினோடே ஐந்தலைய மா நாகம் அரையில் சாத்தி
புனல் பொதிந்த சடை கற்றை பொன் போல் மேனி புனிதனார் புரிந்து அமரர் இறைஞ்சி ஏத்த
சின விடையை மேற்கொண்டு திரு ஆரூரும் சிரபுரமும் இடைமருதும் சேர்வார் போல
மனம் உருக வளை கழல மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே

 மேல்

#2671
கறுத்தது ஒரு கண்டத்தர் காலன் வீழ காலினால் காய்ந்து உகந்த காபாலியார்
முறித்தது ஒரு தோல் உடுத்து முண்டம் சாத்தி முனி கணங்கள் புடை சூழ முற்றம்-தோறும்
தெறித்தது ஒரு வீணையராய் செல்வார் தம் வாய் சிறு முறுவல் வந்து எனது சிந்தை வௌவ
மறித்து ஒரு கால் நோக்காதே மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே

 மேல்

#2672
பட்டு உடுத்து பவளம் போல் மேனி எல்லாம் பசும் சாந்தம் கொண்டு அணிந்து பாதம் நோவ
இட்டு எடுத்து நடம் ஆடி இங்கே வந்தார்க்கு எ ஊரீர் எம்பெருமான் என்றேன் ஆவி
விட்டிடும் ஆறு அது செய்து விரைந்து நோக்கி வேறு ஓர் பதி புக போவார் போல
வட்டணைகள் பட நடந்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே

 மேல்

#2673
பல்லார் பயில் பழன பாசூர் என்று பழனம்பதி பழைமை சொல்லி நின்றார்
நல்லார் நனி பள்ளி இன்று வைகி நாளை போய் நள்ளாறு சேர்தும் என்றார்
சொல்லார் ஒரு இடமா தோள் கை வீசி சுந்தரராய் வெந்த நீறு ஆடி எங்கும்
மல் ஆர் வயல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே

 மேல்

#2674
பொங்கு ஆடு அரவு ஒன்று கையில் கொண்டு போர் வெண் மழு ஏந்தி போகாநிற்பர்
தங்கார் ஒரு இடத்தும் தம் மேல் ஆர்வம் தவிர்த்து அருளார் தத்துவத்தே நின்றேன் என்பர்
எங்கே இவர் செய்கை ஒன்றொன்று ஒவ்வா என் கண்ணில் நின்று அகலா வேடம் காட்டி
மங்குல் மதி தவழும் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே

 மேல்

#2675
செங்கண்மால் சிலை பிடித்து சேனையோடும் சேதுபந்தனம் செய்து சென்று புக்கு
பொங்கு போர் பல செய்து புகலால் வென்ற போர் அரக்கன் நெடு முடிகள் பொடியாய் வீழ
அங்கு ஒரு தம் திரு விரலால் இறையே ஊன்றி அடர்த்து அவற்கே அருள்புரிந்த அடிகள் இ நாள்
வங்கம் மலி கடல் புடை சூழ் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே

 மேல்

 59. திருவெண்ணியூர் - திருத்தாண்டகம்

#2676
தொண்டு இலங்கும் அடியவர்க்கு ஓர் நெறியினாரும் தூ நீறு துதைந்து இலங்கும் மார்பினாரும்
புண்டரிகத்து அயனொடு மால் காணா வண்ணம் பொங்கு தழல் பிழம்பு ஆய புராணனாரும்
வண்டு அமரும் மலர் கொன்றை மாலையாரும் வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும்
விண்டவர்-தம் புரம் மூன்றும் எரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே

 மேல்

#2677
நெருப்பு அனைய மேனி மேல் வெண் நீற்றாரும் நெற்றி மேல் ஒற்றைக்கண் நிறைவித்தாரும்
பொருப்பு_அரையன் மட பாவை இடப்பாலாரும் பூந்துருத்தி நகர் மேய புராணனாரும்
மருப்பு அனைய வெண் மதிய கண்ணியாரும் வளைகுளமும் மறைக்காடும் மன்னினாரும்
விருப்பு உடைய அடியவர்-தம் உள்ளத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே

 மேல்

#2678
கை உலாம் மூ இலை வேல் ஏந்தினாரும் கரிகாட்டில் எரி ஆடும் கடவுளாரும்
பை உலாம் நாகம் கொண்டு ஆட்டுவாரும் பரவுவார் பாவங்கள் பாற்றுவாரும்
செய் உலாம் கயல் பாய வயல்கள் சூழ்ந்த திரு புன்கூர் மேவிய செல்வனாரும்
மெய் எலாம் வெண் நீறு சண்ணித்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே

 மேல்

#2679
சடை ஏறு புனல் வைத்த சதுரனாரும் தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்திட்டாரும்
உடை ஏறு புலி அதள் மேல் நாகம் கட்டி உண் பலிக்கு என்று ஊர்ஊரின் உழிதர்வாரும்
மடை ஏறி கயல் பாய வயல்கள் சூழ்ந்த மயிலாடுதுறை உறையும் மணாளனாரும்
விடை ஏறு வெல் கொடி எம் விமலனாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே

 மேல்

#2680
மண் இலங்கு நீர் அனல் கால் வானும் ஆகி மற்று அவற்றின் குணம் எலாமாய் நின்றாரும்
பண் இலங்கு பாடலோடு ஆடலாரும் பருப்பதமும் பாசூரும் மன்னினாரும்
கண் இலங்கு நுதலாரும் கபாலம் ஏந்தி கடை-தோறும் பலி கொள்ளும் காட்சியாரும்
விண் இலங்கு வெண் மதிய கண்ணியாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே

 மேல்

#2681
வீடு-தனை மெய் அடியார்க்கு அருள்செய்வாரும் வேலை விடம் உண்டு இருண்ட கண்டத்தாரும்
கூடலர்-தம் மூஎயிலும் எரிசெய்தாரும் குரை கழலால் கூற்றுவனை குமைசெய்தாரும்
ஆடும் அரவு அரைக்கு அசைத்து அங்கு ஆடுவாரும் ஆலமர நீழல் இருந்து அறம் சொன்னாரும்
வேடுவனாய் மேல் விசயற்கு அருள்செய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே

 மேல்

#2682
மட்டு இலங்கு கொன்றை அம் தார் மாலை சூடி மடவாள் அவளோடு மான் ஒன்று ஏந்தி
சிட்டு இலங்கு வேடத்தார் ஆகி நாளும் சில் பலிக்கு என்று ஊர்ஊரின் திரிதர்வாரும்
கட்டு இலங்கு பாசத்தால் வீச வந்த காலன்-தன் காலம் அறுப்பார்-தாமும்
விட்டு இலங்கு வெண் குழை சேர் காதினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே

 மேல்

#2683
செம் சடைக்கு ஓர் வெண் திங்கள் சூடினாரும் திரு ஆலவாய் உறையும் செல்வனாரும்
அஞ்சன கண் அரிவை ஒருபாகத்தாரும் ஆறு அங்கம் நால் வேதமாய் நின்றாரும்
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் புக்கு அங்கே மன்னினாரும்
வெம் சினத்த வேழம் அது உரிசெய்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே

 மேல்

#2684
வளம் கிளர் மா மதி சூடும் வேணியாரும் வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும்
களம் கொள என் சிந்தையுள்ளே மன்னினாரும் கச்சி ஏகம்பத்து எம் கடவுளாரும்
உளம் குளிர அமுது ஊறி அண்ணிப்பாரும் உத்தமராய் எ திசையும் மன்னினாரும்
விளங்கிளரும் வெண் மழு ஒன்று ஏந்தினாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே

 மேல்

#2685
பொன் இலங்கு கொன்றை அம் தார் மாலை சூடி புகலூரும் பூவணமும் பொருந்தினாரும்
கொன் இலங்கு மூ இலை வேல் ஏந்தினாரும் குளிர் ஆர்ந்த செம் சடை எம் குழகனாரும்
தென் இலங்கை_மன்னவர் கோன் சிரங்கள் பத்தும் திரு விரலால் அடர்த்து அவனுக்கு அருள்செய்தாரும்
மின் இலங்கு நுண்இடையாள்_பாகத்தாரும் வெண்ணி அமர்ந்து உறைகின்ற விகிர்தனாரே

 மேல்

 60. திருக்கற்குடி - திருத்தாண்டகம்

#2686
மூத்தவனை வானவர்க்கு மூவா மேனி முதலவனை திரு அரையில் மூக்க பாம்பு ஒன்று
ஆத்தவனை அக்கு அரவம் ஆரம் ஆக அணிந்தவனை பணிந்து அடியார் அடைந்த அன்போடு
ஏத்தவனை இறுவரையில் தேனை ஏனோர்க்கு இன் அமுதம் அளித்தவனை இடரை எல்லாம்
காத்தவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே

 மேல்

#2687
செய்யானை வெளியானை கரியான்-தன்னை திசைமுகனை திசை எட்டும் செறிந்தான்-தன்னை
ஐயானை நொய்யானை சீரியானை அணியானை சேயானை ஆன் அஞ்சு ஆடும்
மெய்யானை பொய்யாதும் இல்லான்-தன்னை விடையானை சடையானை வெறித்த மான் கொள்
கையானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே

 மேல்

#2688
மண் அதனில் ஐந்தை மா நீரில் நான்கை வயங்கு எரியில் மூன்றை மாருதத்து இரண்டை
விண் அதனில் ஒன்றை விரி கதிரை தண் மதியை தாரகைகள்-தம்மில் மிக்க
எண் அதனில் எழுத்தை ஏழ் இசையை காமன் எழில் அழிய எரி உமிழ்ந்த இமையா நெற்றி
கண்ணவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே

 மேல்

#2689
நல் தவனை புற்று அரவம் நாணினானை நாணாது நகுதலை ஊண் நயந்தான்-தன்னை
முற்றவனை மூவாத மேனியானை முந்நீரின் நஞ்சம் உகந்து உண்டான்-தன்னை
பற்றவனை பற்றார்-தம் பதிகள் செற்ற படையானை அடைவார்-தம் பாவம் போக்க
கற்றவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே

 மேல்

#2690
சங்கை-தனை தவிர்த்து ஆண்ட தலைவன்-தன்னை சங்கரனை தழல் உறு தாள் மழுவாள் தாங்கும்
அம் கையனை அங்கம் அணி ஆகத்தானை ஆகத்து ஓர்பாகத்தே அமர வைத்த
மங்கையனை மதியொடு மாசுணமும் தம்மில் மருவ விரி சடை முடி மேல் வைத்த வான் நீர்
கங்கையனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே

 மேல்

#2691
பெண் அவனை ஆண் அவனை பேடு ஆனானை பிறப்பிலியை இறப்பிலியை பேரா வாணி
விண்ணவனை விண்ணவர்க்கும் மேல் ஆனானை வேதியனை வேதத்தின் கீதம் பாடும்
பண்ணவனை பண்ணில் வரு பயன் ஆனானை பார் அவனை பாரில் வாழ் உயிர்கட்கு எல்லாம்
கண் அவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே

 மேல்

#2692
பண்டானை பரந்தானை குவிந்தான்-தன்னை பாரானை விண்ணாய் இ உலகம் எல்லாம்
உண்டானை உமிழ்ந்தானை உடையான்-தன்னை ஒருவரும் தன் பெருமை-தனை அறிய ஒண்ணா
விண்டானை விண்டார்-தம் புரங்கள் மூன்றும் வெவ் அழலில் வெந்து பொடி ஆகி வீழ
கண்டானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே

 மேல்

#2693
வானவனை வானவர்க்கு மேல் ஆனானை வணங்கும் அடியார் மனத்துள் மருவி புக்க
தேன் அவனை தேவர் தொழு கழலான்-தன்னை செய் குணங்கள் பல ஆகி நின்ற வென்றி
கோன் அவனை கொல்லை விடைஏற்றினானை குழல் முழவம் இயம்ப கூத்து ஆட வல்ல
கானவனை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே

 மேல்

#2694
கொலை யானை உரி போர்த்த கொள்கையானை கோள் அரியை கூர் அம்பா வரை மேல் கோத்த
சிலையானை செம்மை தரு பொருளான்-தன்னை திரிபுரத்தோர் மூவர்க்கு செம்மை செய்த
தலையானை தத்துவங்கள் ஆனான்-தன்னை தையல் ஓர்பங்கினனை தன் கை ஏந்து
கலையான கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே

 மேல்

#2695
பொழிலானை பொழில் ஆரும் புன்கூரானை புறம்பயனை அறம் புரிந்த புகலூரானை
எழிலானை இடைமருதின் இடம்கொண்டானை ஈங்கோய் நீங்காது உறையும் இறைவன்-தன்னை
அழல் ஆடு மேனியனை அன்று சென்று அ குன்று எடுத்த அரக்கன் தோள் நெரிய ஊன்றும்
கழலானை கற்குடியில் விழுமியானை கற்பகத்தை கண்ணார கண்டேன் நானே

 மேல்

 61. திருக்கன்றாப்பூர் - திருத்தாண்டகம்

#2696
மாதினை ஓர்கூறு உகந்தாய் மறை கொள் நாவா மதிசூடீ வானவர்கள்-தங்கட்கு எல்லாம்
நாதனே என்றுஎன்று பரவி நாளும் நைந்து உருகி வஞ்சகம் அற்று அன்பு கூர்ந்து
வாதனையால் முப்பொழுதும் பூநீர் கொண்டு வைகல் மறவாது வாழ்த்தி ஏத்தி
காதன்மையால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே

 மேல்

#2697
விடிவதுமே வெண் நீற்றை மெய்யில் பூசி வெளுத்து அமைந்த கீளொடு கோவணமும் தற்று
செடி உடைய வல்வினை நோய் தீர்ப்பாய் என்றும் செல் கதிக்கு வழி காட்டும் சிவனே என்றும்
துடி அனைய இடை மடவாள்_பங்கா என்றும் சுடலை-தனில் நடம் ஆடும் சோதீ என்றும்
கடி மலர் தூய் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே

 மேல்

#2698
எவரேனும் தாம் ஆக இலாடத்து இட்ட திருநீறும் சாதனமும் கண்டால் உள்கி
உவராதே அவர் அவரை கண்டபோது உகந்து அடிமை திறம் நினைந்து அங்கு உவந்து நோக்கி
இவர் தேவர் அவர் தேவர் என்று சொல்லி இரண்டு ஆட்டாது ஒழிந்து ஈசன் திறமே பேணி
கவராதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே

 மேல்

#2699
இலம் காலம் செல்லா நாள் என்று நெஞ்சத்து இடையாதே யாவர்க்கும் பிச்சை இட்டு
விலங்காதே நெறி நின்று அங்கு அறிவே மிக்கு மெய் அன்பு மிக பெய்து பொய்யை நீக்கி
துலங்காமே வானவரை காத்து நஞ்சம் உண்ட பிரான் அடி இணைக்கே சித்தம்வைத்து
கலங்காதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே

 மேல்

#2700
விருத்தனே வேலை விடம் உண்ட கண்டா விரி சடை மேல் வெண் திங்கள் விளங்க சூடும்
ஒருத்தனே உமை_கணவா உலகமூர்த்தி நுந்தாத ஒண் சுடரே அடியார்-தங்கள்
பொருத்தனே என்றுஎன்று புலம்பி நாளும் புலன் ஐந்தும் அகத்து அடக்கி புலம்பி நோக்கி
கருத்தினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே

 மேல்

#2701
பொசியினால் மிடைந்து புழு பொதிந்த போர்வை பொல்லாத புலால் உடம்பை நிலாசும் என்று
பசியினால் மீதூரப்பட்டே ஈட்டி பலர்க்கு உதவல் அது ஒழிந்து பவளவாயார்
வசியினால் அகப்பட்டு வீழா முன்னம் வானவர்_கோன் திரு நாமம் அஞ்சும் சொல்லி
கசிவினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே

 மேல்

#2702
ஐயினால் மிடறு அடைப்புண்டு ஆக்கை விட்டு ஆவியார் போலதுமே அகத்தார் கூடி
மையினால் கண் எழுதி மாலை சூட்டி மயானத்தில் இடுவதன் முன் மதியம் சூடும்
ஐயனார்க்கு ஆள் ஆகி அன்பு மிக்கு அகம் குழைந்து மெய் அரும்பி அடிகள் பாதம்
கையினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே

 மேல்

#2703
திருதிமையால் ஐவரையும் காவல் ஏவி திகையாதே சிவாயநம என்னும் சிந்தை
சுருதி-தனை துயக்கு அறுத்து துன்ப வெள்ள கடல் நீந்தி கரை ஏறும் கருத்தே மிக்கு
பருதி-தனை பல் பறித்த பாவநாசா பரஞ்சுடரே என்றுஎன்று பரவி நாளும்
கருதி மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே

 மேல்

#2704
குனிந்த சிலையால் புரம் மூன்று எரித்தாய் என்றும் கூற்று உதைத்த குரை கழல் சேவடியாய் என்றும்
தனஞ்சயற்கு பாசுபதம் ஈந்தாய் என்றும் தசக்கிரிவன் மலை எடுக்க விரலால் ஊன்றி
முனிந்து அவன்-தன் சிரம் பத்தும் தாளும் தோளும் முரண் அழித்திட்டு அருள் கொடுத்த மூர்த்தி என்றும்
கனிந்து மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே

 மேல்

 62. திருவானைக்கா - திருத்தாண்டகம்

#2705
எ தாயர் எ தந்தை எ சுற்றத்தார் எ மாடு சும்மாடு ஏவர் நல்லார்
செத்தால் வந்து உதவுவார் ஒருவர் இல்லை சிறு விறகால் தீ மூட்டி செல்லாநிற்பர்
சித்து ஆய வேடத்தாய் நீடு பொன்னி திரு ஆனைக்கா உடைய செல்வா என்தன்
அத்தா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே

 மேல்

#2706
ஊன் ஆகி உயிர் ஆகி அதனுள் நின்ற உணர்வு ஆகி பிற அனைத்தும் நீயாய் நின்றாய்
நான் ஏதும் அறியாமே என்னுள் வந்து நல்லனவும் தீயனவும் காட்டாநின்றாய்
தேன் ஆரும் கொன்றையனே நின்றியூராய் திரு ஆனைக்காவில் உறை சிவனே ஞானம்
ஆனாய் உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே

 மேல்

#2707
ஒப்பாய் இ உலகத்தோடு ஒட்டி வாழ்வான் ஒன்று அலா தவத்தாரோடு உடனே நின்று
துப்பு ஆரும் குறை அடிசில் துற்றி நற்று உன் திறம் மறந்து திரிவேனை காத்து நீ வந்து
எப்பாலும் நுன் உணர்வே ஆக்கி என்னை ஆண்டவனே எழில் ஆனைக்காவா வானோர்
அப்பா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே

 மேல்

#2708
நினைத்தவர்கள் நெஞ்சுளாய் வஞ்ச கள்வா நிறை மதியம் சடை வைத்தாய் அடையாது உன்-பால்
முனைத்தவர்கள் புரம் மூன்றும் எரிய செற்றாய் முன் ஆனை தோல் போர்த்த முதல்வா என்றும்
கனைத்து வரும் எருது ஏறும் காள_கண்டா கயிலாயமலையா நின் கழலே சேர்ந்தேன்
அனைத்து உலகும் ஆள்வானே ஆனைக்காவா அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே

 மேல்

#2709
இ மாய பிறப்பு என்னும் கடல் ஆம் துன்பத்து இடை சுழிப்பட்டு இளைப்பேனை இளையா வண்ணம்
கை மான மனத்து உதவி கருணை செய்து காதல் அருள் அவை வைத்தாய் காண நில்லாய்
வெம் மான மத கரியின் உரிவை போர்த்த வேதியனே தென் ஆனைக்காவுள் மேய
அம்மான் நின் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே

 மேல்

#2710
உரை ஆரும் புகழானே ஒற்றியூராய் கச்சி ஏகம்பனே காரோணத்தாய்
விரை ஆரும் மலர் தூவி வணங்குவார்-பால் மிக்கானே அக்கு அரவம் ஆரம் பூண்டாய்
திரை ஆரும் புனல் பொன்னி தீர்த்தம் மல்கு திரு ஆனைக்காவில் உறை தேனே வானோர்
அரையா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே

 மேல்

#2711
மை ஆரும் மணி_மிடற்றாய் மாது ஓர்கூறாய் மான் மறியும் மா மழுவும் அனலும் ஏந்தும்
கையானே காலன் உடல் மாள செற்ற கங்காளா முன் கோளும் விளைவும் ஆனாய்
செய்யானே திரு மேனி அரியாய் தேவர் குல கொழுந்தே தென் ஆனைக்காவுள் மேய
ஐயா உன் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே

 மேல்

#2712
இலை ஆரும் சூலத்தாய் எண் தோளானே எவ்விடத்தும் நீ அலாது இல்லை என்று
தலை ஆர கும்பிடுவார் தன்மையானே தழல் மடுத்த மா மேரு கையில் வைத்த
சிலையானே திரு ஆனைக்காவுள் மேய தீ ஆடி சிறு நோயால் நலிவுண்டு உள்ளம்
அலையாதே நின் அடியே அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே

 மேல்

#2713
விண் ஆரும் புனல் பொதி செஞ்சடையாய் வேத நெறியானே எறி கடலின் நஞ்சம் உண்டாய்
எண் ஆரும் புகழானே உன்னை எம்மான் என்றுஎன்றே நாவினில் எப்பொழுதும் உன்னி
கண்ணார கண்டிருக்க களித்து எப்போதும் கடி பொழில் சூழ் தென் ஆனைக்காவுள் மேய
அண்ணா நின் பொன் பாதம் அடையப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே

 மேல்

#2714
கொடி ஏயும் வெள் ஏற்றாய் கூளி பாட குறள் பூதம் கூத்து ஆட நீயும் ஆடி
வடிவு ஏயும் மங்கை-தனை வைத்த மைந்தா மதில் ஆனைக்கா உளாய் மாகாளத்தாய்
படி ஏயும் கடல் இலங்கை_கோமான்-தன்னை பரு முடியும் திரள் தோளும் அடர்த்து உகந்த
அடியே வந்து அடைந்து அடிமையாகப்பெற்றால் அல்லகண்டம் கொண்டு அடியேன் என் செய்கேனே

 மேல்

 63. திருவானைக்கா - திருத்தாண்டகம்

#2715
முன் ஆனை தோல் போர்த்த மூர்த்தி-தன்னை மூவாத சிந்தையே மனமே வாக்கே
தன் ஆனையா பண்ணி ஏறினானை சார்தற்கு அரியானை தாதை-தன்னை
என் ஆனை கன்றினை என் ஈசன்-தன்னை எறி நீர் திரை உகளும் காவிரி சூழ்
தென் ஆனைக்காவானை தேனை பாலை செழு நீர் திரளை சென்று ஆடினேனே

 மேல்

#2716
மருந்தானை மந்திரிப்பார் மனத்து உளானை வளர் மதி அம் சடையானை மகிழ்ந்து என் உள்ளத்து
இருந்தானை இறப்பிலியை பிறப்பிலானை இமையவர்-தம் பெருமானை உமையாள் அஞ்ச
கரும் தான மத களிற்றின் உரி போர்த்தானை கன மழுவாள் படையானை பலி கொண்டு ஊர்ஊர்
திரிந்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே

 மேல்

#2717
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை முந்நீர் நஞ்சு உண்டு இமையோர்க்கு அமுதம் நல்கும்
உற்றானை பல் உயிர்க்கும் துணை ஆனானை ஓங்காரத்து உட்பொருளை உலகம் எல்லாம்
பெற்றானை பின் இறக்கம் செய்வான்-தன்னை பிரான் என்று போற்றாதார் புரங்கள் மூன்றும்
செற்றானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே

 மேல்

#2718
கார் ஆரும் கறை மிடற்று எம்பெருமான்-தன்னை காதில் வெண் குழையானை கமழ் பூம் கொன்றை
தாரானை புலி அதளின் ஆடையானை தான் அன்றி வேறு ஒன்றும் இல்லா ஞான
பேரானை மணி ஆரம் மார்பினானை பிஞ்ஞகனை தெய்வ நான்மறைகள் பூண்ட
தேரானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே

 மேல்

#2719
பொய் ஏதும் இல்லாத மெய்யன்-தன்னை புண்ணியனை நண்ணாதார் புரம் நீறு ஆக
எய்தானை செய் தவத்தின் மிக்கான்-தன்னை ஏறு அமரும் பெருமானை இடம் மான் ஏந்து
கையானை கங்காளவேடத்தானை கட்டங்க கொடியானை கனல் போல் மேனி
செய்யானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே

 மேல்

#2720
கலையானை பரசு தர பாணியானை கன வயிர திரளானை மணி மாணிக்க
மலையானை என் தலையின் உச்சியானை வார் தரு புன் சடையானை மயானம் மன்னும்
நிலையானை வரி அரவு நாணா கோத்து நினையாதார் புரம் எரிய வளைத்த மேரு
சிலையானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே

 மேல்

#2721
ஆதியனை எறி மணியின் ஓசையானை அண்டத்தார்க்கு அறிவு ஒண்ணாது அப்பால் மிக்க
சோதியனை தூ மறையின் பொருளான்-தன்னை சுரும்பு அமரும் மலர் கொன்றை தொல் நூல் பூண்ட
வேதியனை அறம் உரைத்த பட்டன்-தன்னை விளங்கு மலர் அயன் சிரங்கள் ஐந்தில் ஒன்றை
சேதியனை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே

 மேல்

#2722
மகிழ்ந்தானை கச்சி ஏகம்பன்-தன்னை மறவாது கழல் நினைந்து வாழ்த்தி ஏத்தி
புகழ்ந்தாரை பொன்_உலகம் ஆள்விப்பானை பூத கண படையானை புறங்காட்டு ஆடல்
உகந்தானை பிச்சையே இச்சிப்பானை ஒண் பவள திரளை என் உள்ளத்துள்ளே
திகழ்ந்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே

 மேல்

#2723
நசையானை நால் வேதத்து அப்பாலானை நல்குரவும் தீ பிணி நோய் காப்பான்-தன்னை
இசையானை எண் இறந்த குணத்தான்-தன்னை இடைமருதும் ஈங்கோயும் நீங்காது ஏற்றின்
மிசையானை விரி கடலும் மண்ணும் விண்ணும் மிகு தீயும் புனல் எறி காற்று ஆகி எட்டு
திசையானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே

 மேல்

#2724
பார்த்தானை காமன் உடல் பொடியாய் வீழ பண்டு அயன் மால் இருவர்க்கும் அறியா வண்ணம்
சீர்த்தானை செம் தழல் போல் உருவினானை தேவர்கள்-தம் பெருமானை திறம் உன்னாதே
ஆர்த்து ஓடி மலை எடுத்த இலங்கை வேந்தன் ஆண்மை எலாம் கெடுத்து அவன்-தன் இடர் அப்போதே
தீர்த்தானை திரு ஆனைக்கா உளானை செழு நீர் திரளை சென்று ஆடினேனே

 மேல்

 64. திருவானைக்கா - திருத்தாண்டகம்

#2725
கூற்றுவன் காண் கூற்றுவனை குமைத்த கோன் காண் குவலயன் காண் குவலயத்தின் நீர் ஆனான் காண்
காற்று அவன் காண் கனல் அவன் காண் கலிக்கும் மின் காண் கன பவள செம் மேனி கலந்த வெள்ளை
நீற்றவன் காண் நிலா ஊரும் சென்னியான் காண் நிறை ஆர்ந்த புனல் கங்கை நிமிர் சடை மேல்
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

 மேல்

#2726
பரந்தவன் காண் பல் உயிர்கள் ஆகி எங்கும் பணிந்து எழுவார் பாவமும் வினையும் போக
துரந்தவன் காண் தூ மலர் அம் கண்ணியான் காண் தோற்றம் நிலை இறுதி பொருளாய் வந்த
மருந்து அவன் காண் வையகங்கள் பொறை தீர்ப்பான் காண் மலர் தூவி நினைந்து எழுவார் உள்ளம் நீங்காது
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

 மேல்

#2727
நீற்றவன் காண் நீர் ஆகி தீ ஆனான் காண் நிறை மழுவும் தமருகமும் எரியும் கையில்
தோற்றவன் காண் தோற்ற கேடு இல்லாதான் காண் துணையிலி காண் துணை என்று தொழுவார் உள்ளம்
போற்றவன் காண் புகழ்கள்-தமை படைத்தான்தான் காண் பொறி அரவும் விரி சடை மேல் புனலும் கங்கை
ஏற்றவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

 மேல்

#2728
தாய் அவன் காண் உலகிற்கு தன் ஒப்பு இல்லா தத்துவன் காண் மலைமங்கை_பங்கா என்பார்
வாயவன் காண் வரும் பிறவிநோய் தீர்ப்பான் காண் வானவர்க்கும் தானவர்க்கும் மண்ணுளோர்க்கும்
சேயவன் காண் நினையார்க்கு சித்தம் ஆர திருவடியே உள்கி நினைந்து எழுவார் உள்ளம்
ஏயவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

 மேல்

#2729
அடுத்த ஆனை உரித்தான் காண்

 மேல்

#2730
அழித்தவன் காண் எயில் மூன்றும் அயில்-வாய் அம்பால் ஐயாறும் இடைமருதும் ஆள்வான்தான் காண்
பழித்தவன் காண் அடையாரை அடைவார்-தங்கள் பற்று அவன் காண் புற்று அரவம் நாணினான் காண்
சுழித்தவன் காண் முடி கங்கை அடியே போற்றும் தூய மா முனிவர்க்கா பார் மேல் நிற்க
இழித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

 மேல்

#2731
அசைத்தவன் காண் நடம் ஆடி பாடல் பேணி அழல் வண்ணத்தில் அடியும் முடியும் தேட
பசைந்தவன் காண் பேய் கணங்கள் பரவி ஏத்தும் பான்மையன் காண் பரவி நினைந்து எழுவார்-தம்-பால்
கசிந்தவன் காண் கரியின் உரி போர்த்தான்தான் காண் கடலில் விடம் உண்டு அமரர்க்கு அமுதம் ஈய
இசைந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

 மேல்

#2732
முடித்தவன் காண் வன் கூற்றை சீற்ற தீயால் வலியார்-தம் புரம் மூன்றும் வேவ சாபம்
பிடித்தவன் காண் பிஞ்ஞகன் ஆம் வேடத்தான் காண் பிணையல் வெறி கமழ் கொன்றை அரவு சென்னி
முடித்தவன் காண் மூ இலை நல் வேலினான் காண் முழங்கி உரும் என தோன்றும் மழையாய் மின்னி
இடித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

 மேல்

#2733
வரும் தவன் காண் மனம் உருகி நினையாதார்க்கு வஞ்சகன் காண் அஞ்சுஎழுத்தும் நினைவார்க்கு என்றும்
மருந்து அவன் காண் வான் பிணிகள் தீரும் வண்ணம் வானகமும் மண்ணகமும் மற்றும் ஆகி
பரந்தவன் காண் படர் சடை எட்டு உடையான்தான் காண் பங்கயத்தோன்-தன் சிரத்தை ஏந்தி ஊர்ஊர்
இரந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

 மேல்

#2734
வெம் மான உழுவை அதள் உரி போர்த்தான் காண் வேதத்தின் பொருளான் காண் என்று இயம்பி
விம்மாநின்று அழுவார்கட்கு அளிப்பான்தான் காண் விடை ஏறி திரிவான் காண் நடம்செய் பூதத்து
அம்மான் காண் அகலிடங்கள் தாங்கினான் காண் அற்புதன் காண் சொல்பதமும் கடந்து நின்ற
எம்மான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

 மேல்

#2735
அறுத்தான் காண் அயன் சிரத்தை அமரர் வேண்ட ஆழ் கடலின் நஞ்சு உண்டு அங்கு அணி நீர் கங்கை
செறுத்தான் காண் தேவர்க்கும் தேவன்தான் காண் திசை அனைத்தும் தொழுது ஏத்த கலை மான் கையில்
பொறுத்தான் காண் புகலிடத்தை நலிய வந்து பொரு கயிலை எடுத்தவன்-தன் முடி தோள் நால்_அஞ்சு
இறுத்தான் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

 மேல்

 65. திருக்கச்சியேகம்பம் - திருத்தாண்டகம்

#2736
உரித்தவன் காண் உர களிற்றை உமையாள் ஒல்க ஓங்காரத்து ஒருவன் காண் உணர் மெய்ஞ்ஞானம்
விரித்தவன் காண் விரித்த நால் வேதத்தான் காண் வியன் உலகில் பல் உயிரை விதியினாலே
தெரித்தவன் காண் சில் உருவாய் தோன்றி எங்கும் திரண்டவன் காண் திரிபுரத்தை வேவ வில்லால்
எரித்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

 மேல்

#2737
நேசன் காண் நேசர்க்கு நேசம் தன்பால் இல்லாத நெஞ்சத்து நீசர்-தம்மை
கூசன் காண் கூசாதார் நெஞ்சு தஞ்சே குடிகொண்ட குழகன் காண் அழகு ஆர் கொன்றை
வாசன் காண் மலைமங்கை_பங்கன்தான் காண் வானவர்கள் எப்பொழுதும் வணங்கி ஏத்தும்
ஈசன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

 மேல்

#2738
பொறையவன் காண் பூமி ஏழ் தாங்கி ஓங்கும் புண்ணியன் காண் நண்ணிய புண்டரீக போதில்
மறையவன் காண் மறையவனை பயந்தோன்தான் காண் வார் சடை மாசுணம் அணிந்து வளரும் பிள்ளை
பிறையவன் காண் பிறை திகழும் எயிற்று பேழ் வாய் பேயோடு அங்கு இடுகாட்டில் எல்லி ஆடும்
இறையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

 மேல்

#2739
பார் அவன் காண் விசும்பு அவன் காண் பவ்வம்தான் காண் பனி வரைகள் இரவினொடு பகலாய் நின்ற
சீரவன் காண் திசையவன் காண் திசைகள் எட்டும் செறிந்தவன் காண் சிறந்த அடியார் சிந்தைசெய்யும்
பேரவன் காண் பேர் ஆயிரங்கள் ஏத்தும் பெரியவன் காண் அரியவன் காண் பெற்றம் ஊர்ந்த
ஏரவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

 மேல்

#2740
பெரும் தவத்து எம் பிஞ்ஞகன் காண் பிறை_சூடி காண் பேதையேன் வாதை உறு பிணியை தீர்க்கும்
மருந்து அவன் காண் மந்திரங்கள் ஆயினான் காண் வானவர்கள் தாம் வணங்கும் மாதேவன் காண்
அரும் தவத்தான் ஆய்_இழையாள் உமையாள் பாகம் அமர்ந்தவன் காண் அமரர்கள் தாம் அர்ச்சித்து ஏத்த
இருந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

 மேல்

#2741
ஆய்ந்தவன் காண் அரு மறையோடு அங்கம் ஆறும் அணிந்தவன் காண் ஆடு அரவோடு என்பும் ஆமை
காய்ந்தவன் காண் கண் அழலால் காமன் ஆகம் கனன்று எழுந்த காலன் உடல் பொடியாய் வீழ
பாய்ந்தவன் காண் பண்டு பல சருகால் பந்தர் பயின்ற நூல் சிலந்திக்கு பார் ஆள் செல்வம்
ஈந்தவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

 மேல்

#2742
உமையவளை ஒருபாகம் சேர்த்தினான் காண் உகந்து ஒலி நீர் கங்கை சடை ஒழுக்கினான் காண்
இமய வட கயிலை செல்வன்தான் காண் இல் பலிக்கு சென்று உழலும் நல்கூர்ந்தான் காண்
சமயம் அவை ஆறினுக்கும் தலைவன்தான் காண் தத்துவன் காண் உத்தமன் காண் தானே ஆய
இமையவன் காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

 மேல்

#2743
தொண்டு படு தொண்டர் துயர் தீர்ப்பான்தான் காண் தூ மலர் சேவடி இணை எம் சோதியான் காண்
உண்டு படு விடம் கண்டத்து ஒடுக்கினான் காண் ஒலி கடலில் அமுது அமரர்க்கு உதவினான் காண்
வண்டு படு மலர் கொன்றை மாலையான் காண் வாள் மதியாய் நாள்மீனும் ஆயினான் காண்
எண் திசையும் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

 மேல்

#2744
முந்தை காண் மூவரினும் முதல் ஆனான் காண் மூ இலை வேல் மூர்த்தி காண் முருகவேட்கு
தந்தை காண் தண் கட மா முகத்தினாற்கு தாதை காண் தாழ்ந்து அடியே வணங்குவார்க்கு
சிந்தை காண் சிந்தாத சித்தத்தார்க்கு சிவன் அவன் காண் செங்கண்மால் விடை ஒன்று ஏறும்
எந்தை காண் எழில் ஆரும் பொழில் ஆர் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

 மேல்

#2745
பொன் இசையும் புரி சடை எம் புனிதன்தான் காண் பூத கண நாதன் காண் புலி தோல் ஆடை
தன் இசைய வைத்த எழில் அரவினான் காண் சங்க வெண் குழை காதின் சதுரன்தான் காண்
மின் இசையும் வெள் எயிற்றோன் வெகுண்டு வெற்பை எடுக்க அடி அடர்ப்ப மீண்டு அவன்-தன் வாயில்
இன்னிசை கேட்டு இலங்கு ஒளி வாள் ஈந்தோன் கச்சி ஏகம்பன் காண் அவன் என் எண்ணத்தானே

 மேல்

 66. திருவானைக்கா - திருத்தாண்டகம்

#2746
தாய் அவனை வானோர்க்கும் ஏனோருக்கும் தலையவனை மலையவனை உலகம் எல்லாம்
ஆயவனை சேயவனை அணியான்-தன்னை அழலவனை நிழலவனை அறிய ஒண்ணா
மாயவனை மறையவனை மறையோர்-தங்கள் மந்திரனை தந்திரனை வளராநின்ற
தீ அவனை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே

 மேல்

#2747
உரித்தானை மதவேழம்-தன்னை மின் ஆர் ஒளி முடி எம்பெருமானை உமை ஓர்பாகம்
தரித்தானை தரியலர்-தம் புரம் எய்தானை தன் அடைந்தார்-தம் வினை நோய் பாவம் எல்லாம்
அரித்தானை ஆல் அதன் கீழ் இருந்து நால்வர்க்கு அறம் பொருள் வீடு இன்பம் ஆறு அங்கம் வேதம்
தெரித்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே

 மேல்

#2748
கார் ஆனை உரி போர்த்த கடவுள்-தன்னை காதலித்து நினையாத கயவர் நெஞ்சில்
வாரானை மதிப்பவர்-தம் மனத்து உளானை மற்று ஒருவர் தன் ஒப்பார் ஒப்பு இலாத
ஏரானை இமையவர்-தம் பெருமான்-தன்னை இயல்பு ஆகி உலகு எலாம் நிறைந்து மிக்க
சீரானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே

 மேல்

#2749
தலையானை எ உலகும் தான் ஆனானை தன் உருவம் யாவர்க்கும் அறிய ஒண்ணா
நிலையானை நேசர்க்கு நேசன்-தன்னை நீள் வான முகடு அதனை தாங்கி நின்ற
மலையானை வரி அரவு நாணா கோத்து வல் அசுரர் புரம் மூன்றும் மடிய எய்த
சிலையானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே

 மேல்

#2750
மெய்யானை தன் பக்கல் விரும்புவார்க்கு விரும்பாத அரும் பாவியவர்கட்கு என்றும்
பொய்யானை புறங்காட்டில் ஆடலானை பொன் பொலிந்த சடையானை பொடி கொள் பூதி
பையானை பை அரவம் அசைத்தான்-தன்னை பரந்தானை பவள மால் வரை போல் மேனி
செய்யானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே

 மேல்

#2751
துறந்தானை அறம் புரியா துரிசர்-தம்மை தோத்திரங்கள் பல சொல்லி வானோர் ஏத்த
நிறைந்தானை நீர் நிலம் தீ வெளி காற்று ஆகி நிற்பனவும் நடப்பனவும் ஆயினானை
மறந்தானை தன் நினையா வஞ்சர்-தம்மை அஞ்சுஎழுத்தும் வாய் நவில வல்லோர்க்கு என்றும்
சிறந்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே

 மேல்

#2752
மறையானை மால் விடை ஒன்று ஊர்தியானை மால் கடல் நஞ்சு உண்டானை வானோர்-தங்கள்
இறையானை என் பிறவி துயர் தீர்ப்பானை இன் அமுதை மன்னிய சீர் ஏகம்பத்தில்
உறைவானை ஒருவரும் ஈங்கு அறியா வண்ணம் என் உள்ளத்துள்ளே ஒளித்து வைத்த
சிறையானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே

 மேல்

#2753
எய்தானை புரம் மூன்றும் இமைக்கும்போதில் இரு விசும்பில் வரு புனலை திரு ஆர் சென்னி
பெய்தானை பிறப்பிலியை அறத்தில் நில்லா பிரமன்-தன் சிரம் ஒன்றை கரம் ஒன்றினால்
கொய்தானை கூத்து ஆட வல்லான் தன்னை குறி இலா கொடியேனை அடியேன் ஆக
செய்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே

 மேல்

#2754
அளியானை அண்ணிக்கும் ஆன் பால்-தன்னை வான் பயிரை அ பயிரின் வாட்டம் தீர்க்கும்
துளியானை அயன் மாலும் தேடி காணா சுடரானை துரிசு அற தொண்டுபட்டார்க்கு
எளியானை யாவர்க்கும் அரியான்-தன்னை இன் கரும்பின் தன்னுள்ளால் இருந்த தேறல்
தெளியானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே

 மேல்

#2755
சீர்த்தானை உலகு ஏழும் சிறந்து போற்ற சிறந்தானை நிறைந்து ஓங்கு செல்வன்-தன்னை
பார்த்தானை மதனவேள் பொடியாய் வீழ பனி மதி அம் சடையானை புனிதன்-தன்னை
ஆர்த்து ஓடி மலை எடத்த அரக்கன் அஞ்ச அரு விரலால் அடர்த்தானை அடைந்தோர் பாவம்
தீர்த்தானை திரு நாகேச்சுரத்து உளானை சேராதார் நல் நெறி-கண் சேராதாரே

 மேல்

 67. திருக்கீழ்வேளூர் - திருத்தாண்டகம்

#2756
ஆள் ஆன அடியவர்கட்கு அன்பன்-தன்னை ஆன் அஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க
தாளானை தன் ஒப்பார் இல்லாதானை சந்தனமும் குங்குமமும் சாந்தும் தோய்ந்த
தோளானை தோளாத முத்து ஒப்பானை தூ வெளுத்த கோவணத்தை அரையில் ஆர்த்த
கீளானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே

 மேல்

#2757
சொல் பாவும் பொருள் தெரிந்து தூய்மை நோக்கி தூங்காதார் மனத்து இருளை வாங்காதானை
நல் பான்மை அறியாத நாயினேனை நல் நெறிக்கே செலும் வண்ணம் நல்கினானை
பல் பாவும் வாயார பாடி ஆடி பணிந்து எழுந்து குறைந்து அடைந்தார் பாவம் போக்க
கிற்பானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே

 மேல்

#2758
அளை வாயில் அரவு அசைத்த அழகன்-தன்னை ஆதரிக்கும் அடியவர்கட்கு அன்பே என்றும்
விளைவானை மெய்ஞ்ஞான பொருள் ஆனானை வித்தகனை எத்தனையும் பத்தர் பத்திக்கு
உளைவானை அல்லாதார்க்கு உளையாதானை உலப்பிலியை உள் புக்கு என் மனத்து மாசு
கிளைவானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே

 மேல்

#2759
தாள் பாவு கமல மலர் தயங்குவானை தலை அறுத்து மா விரதம் தரித்தான்-தன்னை
கோள் பாவு நாள் எல்லாம் ஆனான் தன்னை கொடுவினையேன் கொடு நரக குழியில் நின்றால்
மீட்பானை வித்துருவின் கொத்து ஒப்பானை வேதியனை வேதத்தின் பொருள் கொள் வீணை
கேட்பானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே

 மேல்

#2760
நல்லானை நரை விடை ஒன்று ஊர்தியானை நால் வேதத்து ஆறு அங்கம் நணுகமாட்டா
சொல்லானை சுடர் மூன்றும் ஆனான் தன்னை தொண்டு ஆகி பணிவார்கட்கு அணியான்-தன்னை
வில்லானை மெல்லியல் ஓர்பங்கன்-தன்னை மெய்யராய் நினையாதார் வினைகள் தீர்க்க
கில்லானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே

 மேல்

#2761
சுழித்தானை கங்கை மலர் வன்னி கொன்றை தூ மத்தம் வாள் அரவம் சூடினானை
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ ஆலால நஞ்சு அதனை உண்டான்-தன்னை
விழித்தானை காமன் உடல் பொடியாய் வீழ மெல்லியல் ஓர்பங்கனை முன் வேல் நல் ஆனை
கிழித்தானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே

 மேல்

#2762
உளர் ஒளியை உள்ளத்தின் உள்ளே நின்ற ஓங்காரத்து உட்பொருள்தான் ஆயினானை
விளர் ஒளியை விடு சுடர்கள் இரண்டும் ஒன்றும் விண்ணொடு மண் ஆகாசம் ஆயினானை
வளர் ஒளியை மரகதத்தின் உருவினானை வானவர்கள் எப்பொழுதும் வாழ்த்தி ஏத்தும்
கிளர் ஒளியை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே

 மேல்

#2763
தடுத்தானை காலனை காலால் பொன்ற தன் அடைந்த மாணிக்கு அன்று அருள்செய்தானை
உடுத்தானை புலி அதளோடு அக்கும் பாம்பும் உள்குவார் உள்ளத்தின் உள்ளான்-தன்னை
மடுத்தானை அரு நஞ்சம் மிடற்றுள் தங்க வானவர்கள் கூடிய அ தக்கன் வேள்வி
கெடுத்தானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே

 மேல்

#2764
மாண்டார் எலும்பு அணிந்த வாழ்க்கையானை மயானத்தில் கூத்தனை வாள் அரவோடு என்பு
பூண்டானை புறங்காட்டில் ஆடலானை போகாது என் உள் புகுந்து இடம்கொண்டு என்னை
ஆண்டானை அறிவு அரிய சிந்தையானை அசங்கையனை அமரர்கள்-தம் சங்கை எல்லாம்
கீண்டானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே

 மேல்

#2765
முறிப்பு ஆன பேசி மலை எடுத்தான்தானும் முதுகு இற முன்கை நரம்பை எடுத்து பாட
பறிப்பான் கை சிற்றரிவாள் நீட்டினானை பாவியேன் நெஞ்சகத்தே பாத போது
பொறித்தானை புரம் மூன்றும் எரிசெய்தானை பொய்யர்களை பொய்செய்து போது போக்கி
கிறிப்பானை கீழ்வேளூர் ஆளும் கோவை கேடிலியை நாடுமவர் கேடு இலாரே

 மேல்

 68. திருவானைக்கா - திருத்தாண்டகம்

#2766
கருமணியை கனகத்தின் குன்று ஒப்பானை கருதுவார்க்கு ஆற்ற எளியான்-தன்னை
குரு மணியை கோள் அரவம் ஆட்டுவானை கொல் வேங்கை அதளானை கோவணனை
அரு மணியை அடைந்தவர்கட்கு அமுது ஒப்பானை ஆன் அஞ்சும் ஆடியை நான் அபயம் புக்க
திரு மணியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே

 மேல்

#2767
கார் ஒளிய கண்டத்து எம் கடவுள்-தன்னை காபாலி கட்டங்கம் ஏந்தினானை
பார் ஒளியை விண் ஒளியை பாதாளனை பால் மதியம் சூடி ஓர் பண்பன்-தன்னை
பேர் ஒளியை பெண் பாகம் வைத்தான்-தன்னை பேணுவார்-தம் வினையை பேணி வாங்கும்
சீர் ஒளியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே

 மேல்

#2768
எ திசையும் வானவர்கள் தொழ நின்றானை ஏறு ஊர்ந்த பெம்மானை எம்மான் என்று
பத்தனாய் பணிந்த அடியேன்-தன்னை பல் நாள் பாமாலை பாட பயில்வித்தானை
முத்தினை என் மணியை மாணிக்கத்தை முளைத்து எழுந்த செம்பவள கொழுந்தை ஒப்பானை
சித்தனை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே

 மேல்

#2769
ஊன் கருவின் உள் நின்ற சோதியானை உத்தமனை பத்தர் மனம் குடிகொண்டானை
கான் திரிந்து காண்டீபம் ஏந்தினானை கார் மேக மிடற்றானை கனலை காற்றை
தான் தெரிந்து அங்கு அடியேனை ஆளாக்கொண்டு தன்னுடைய திருவடி என் தலை மேல் வைத்த
தீம் கரும்பை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே

 மேல்

#2770
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் ஆகி தாமரை ஆர் நான்முகனும் தானே ஆகி
மிக்கது ஒரு தீ வளி நீர் ஆகாசமாய் மேல் உலகுக்கு அப்பாலாய் இப்பாலானை
அக்கினொடு முத்தினையும் அணிந்து தொண்டர்க்கு அங்கங்கே அறு சமயம் ஆகி நின்ற
திக்கினை என் திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே

 மேல்

#2771
புகழ் ஒளியை புரம் எரித்த புனிதன்-தன்னை பொன் பொதிந்த மேனியனை புராணன்-தன்னை
விழவு ஒலியும் விண் ஒலியும் ஆனான்-தன்னை வெண்காடு மேவிய விகிர்தன்-தன்னை
கழல் ஒலியும் கை வளையும் ஆர்ப்ப ஆர்ப்ப கடை-தோறும் இடு பிச்சைக்கு என்று செல்லும்
திகழ் ஒளியை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே

 மேல்

#2772
போர்த்து ஆனையின் உரி தோல் பொங்கப்பொங்க புலி அதளே உடையாக திரிவான்-தன்னை
காத்தானை ஐம்புலனும் புரங்கள் மூன்றும் காலனையும் குரை கழலால் காய்ந்தான்-தன்னை
மாத்து அடி பத்தராய் வணங்கும் தொண்டர் வல்வினை வேர் அறும் வண்ணம் மருந்தும் ஆகி
தீர்த்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே

 மேல்

#2773
துறவாதே யாக்கை துறந்தான்-தன்னை சோதி முழுமுதலாய் நின்றான்-தன்னை
பிறவாதே எ உயிர்க்கும் தானே ஆகி பெண்ணினோடு ஆண் உருவாய் நின்றான்-தன்னை
மறவாதே தன் திறமே வாழ்த்தும் தொண்டர் மனத்தகத்தே அனவரதம் மன்னி நின்ற
திறலானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே

 மேல்

#2774
பொன் தூணை புலால் நாறு கபாலம் ஏந்தி புவலோகம் எல்லாம் உழிதந்தானை
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை முழுமுதலாய் மூஉலகும் முடிவு ஒன்று இல்லா
கல் தூணை காளத்தி மலையான்-தன்னை கருதாதார் புரம் மூன்றும் எரிய அம்பால்
செற்றானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே

 மேல்

#2775
இகழ்ந்தானை இருபது தோள் நெரிய ஊன்றி எழு நரம்பின் இசை பாட இனிது கேட்டு
புகழ்ந்தானை பூந்துருத்தி மேயான்-தன்னை புண்ணியனை விண்ணவர்கள் நிதியம்-தன்னை
மகிழ்ந்தானை மலைமகள் ஓர்பாகம் வைத்து வளர் மதியம் சடை வைத்து மால் ஓர்பாகம்
திகழ்ந்தானை திரு முதுகுன்று உடையான்-தன்னை தீவினையேன் அறியாதே திகைத்த ஆறே

 மேல்

 69. திருப்பள்ளியின் முக்கூடல் - திருத்தாண்டகம்

#2776
ஆராத இன் அமுதை அம்மான்-தன்னை அயனொடு மால் அறியாத ஆதியானை
தார் ஆரும் மலர் கொன்றை சடையான்-தன்னை சங்கரனை தன் ஒப்பார் இல்லாதானை
நீரானை காற்றானை தீ ஆனானை நீள் விசும்பாய் ஆழ் கடல்கள் ஏழும் சூழ்ந்த
பாரானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே

 மேல்

#2777
விடையானை விண்ணவர்கள் எண்ணத்தானை வேதியனை வெண் திங்கள் சூடும் சென்னி
சடையானை சாமம் போல் கண்டத்தானை தத்துவனை தன் ஒப்பார் இல்லாதானை
அடையாதார் மும்மதிலும் தீயில் மூழ்க அடு கணை கோத்து எய்தானை அயில் கொள் சூல
படையானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே

 மேல்

#2778
பூதியனை பொன் வரையே போல்வான்-தன்னை புரி சடை மேல் புனல் கரந்த புனிதன்-தன்னை
வேதியனை வெண்காடு மேயான்-தன்னை வெள் ஏற்றின் மேலானை விண்ணோர்க்கு எல்லாம்
ஆதியனை ஆதிரைநன்நாளான்-தன்னை அம்மானை மை மேவு கண்ணியாள் ஓர்
பாதியனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே

 மேல்

#2779
போர்த்தானை ஆனையின் தோல் புரங்கள் மூன்றும் பொடி ஆக எய்தானை புனிதன்-தன்னை
வார் தாங்கு வனமுலையாள்_பாகன்-தன்னை மறி கடலுள் நஞ்சு உண்டு வானோர் அச்சம்
தீர்த்தானை தென் திசைக்கே காமன் செல்ல சிறிதளவில் அவன் உடலம் பொடியா அங்கே
பார்த்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே

 மேல்

#2780
அடைந்தார்-தம் பாவங்கள் அல்லல் நோய்கள் அருவினைகள் நல்குரவு செல்லா வண்ணம்
கடிந்தானை கார் முகில் போல் கண்டத்தானை கடும் சினத்தோன்-தன் உடலை நேமியாலே
தடிந்தானை தன் ஒப்பார் இல்லாதானை தத்துவனை உத்தமனை நினைவார் நெஞ்சில்
படிந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே

 மேல்

#2781
கரந்தானை செம் சடை மேல் கங்கை வெள்ளம் கனல் ஆடு திரு மேனி கமலத்தோன்-தன்
சிரம் தாங்கு கையானை தேவதேவை திகழ் ஒளியை தன் அடியே சிந்தைசெய்வார்
வருந்தாமை காப்பானை மண்ணாய் விண்ணாய் மறி கடலாய் மால் விசும்பாய் மற்றும் ஆகி
பரந்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே

 மேல்

#2782
நதி ஆரும் சடையானை நல்லூரானை நள்ளாற்றின் மேயானை நல்லத்தானை
மது வாரும் பொழில் புடை சூழ் வாய்மூரானை மறைக்காடு மேயானை ஆக்கூரானை
நிதியாளன் தோழனை நீடூரானை நெய்த்தானம் மேயானை ஆரூர் என்னும்
பதியானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே

 மேல்

#2783
நல் தவனை நான்மறைகள் ஆயினானை நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றும்
செற்றவனை செம் சடை மேல் திங்கள் சூடும் திரு ஆரூர் திரு மூலட்டானம் மேய
கொற்றவனை கூர் அரவம் பூண்டான்-தன்னை குறைந்து அடைந்து தன் திறமே கொண்டாற்கு என்றும்
பற்றவனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே

 மேல்

#2784
ஊனவனை உடலவனை உயிர் ஆனானை உலகு ஏழும் ஆனானை உம்பர் கோவை
வானவனை மதி சூடும் வளவியானை மலைமகள் முன் வராகத்தின் பின்பே சென்ற
கானவனை கயிலாய மலை உளானை கலந்து உருகி நைவார்-தம் நெஞ்சினுள்ளே
பானவனை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே

 மேல்

#2785
தடுத்தானை தான் முனிந்து தன் தோள் கொட்டி தட வரையை இருபது தோள் தலையினாலும்
எடுத்தானை தாள்விரலால் மாள ஊன்றி எழு நரம்பின் இசை பாடல் இனிது கேட்டு
கொடுத்தானை பேரோடும் கூர் வாள்-தன்னை குரை கழலால் கூற்றுவனை மாள அன்று
படுத்தானை பள்ளியின்முக்கூடலானை பயிலாதே பாழே நான் உழன்ற ஆறே

 மேல்

 70. திருவானைக்கா - திருத்தாண்டகம்

#2786
தில்லை சிற்றம்பலமும் செம்பொன்பள்ளி தேவன்குடி சிராப்பள்ளி தெங்கூர்
கொல்லி குளிர் அறைப்பள்ளி கேரவல் வீரட்டம் கோகரணம் கோடிகாவும்
முல்லை புறவம் முருகன்பூண்டி முழையூர் பழையாறை சத்திமுற்றம்
கல்லில் திகழ் சீர் ஆர் காளத்தியும் கயிலாயநாதனையே காணல் ஆமே

 மேல்

#2787
ஆரூர் மூலட்டானம் ஆனைக்காவும் ஆக்கூரில் தான்தோன்றிமாடம் ஆவூர்
பேரூர் பிரமபுரம் பேராவூரும் பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணும்
கூர் ஆர் குறுக்கைவீரட்டானமும் கோட்டூர் குடமூக்கு கோழம்பமும்
கார் ஆர் கழுக்குன்றும் கானப்பேரும் கயிலாயநாதனையே காணல் ஆமே

 மேல்

#2788
இடைமருது ஈங்கோய் இராமேச்சுரம் இன்னம்பர் ஏர் இடவை ஏமப்பேறூர்
சடை முடி சாலைக்குடி தக்களூர் தலையாலங்காடு தலைச்சங்காடு
கொடுமுடி குற்றாலம் கொள்ளம்பூதூர் கோத்திட்டை கோட்டாறு கோட்டுக்காடு
கடைமுடி கானூர் கடம்பந்துறை கயிலாயநாதனையே காணல் ஆமே

 மேல்

#2789
எச்சில்இளமர் ஏமநல்லூர் இலம்பையங்கோட்டூர் இறையான்சேரி
அச்சிறுப்பாக்கம் அளப்பூர் அம்பர் ஆவடுதண்துறை அழுந்தூர் ஆறை
கச்சினம் கற்குடி கச்சூர் ஆல கோயில் கரவீரம் காட்டுப்பள்ளி
கச்சி பலதளியும் ஏகம்பத்தும் கயிலாயநாதனையே காணல் ஆமே

 மேல்

#2790
கொடுங்கோளூர் அஞ்சைக்களம் செங்குன்றூர் கொங்கணம் குன்றியூர் குரக்குக்காவும்
நெடுங்களம் நன்னிலம் நெல்லிக்காவும் நின்றியூர் நீடூர் நியமநல்லூர்
இடும்பாவனம் எழுமூர் ஏழூர் தோழூர் எறும்பியூர் ஏர் ஆரும் ஏமகூடம்
கடம்பை இளங்கோயில் தன்னிலுள்ளும் கயிலாயநாதனையே காணல் ஆமே

 மேல்

#2791
மண்ணி படிக்கரை வாழ்கொளிபுத்தூர் வக்கரை மந்தாரம் வாரணாசி
வெண்ணி விளத்தொட்டி வேள்விக்குடி விளமர் விராடபுரம் வேட்களத்தும்
பெண்ணை அருள் துறை தண் பெண்ணாகடம் பிரம்பில் பெரும்புலியூர் பெருவேளூரும்
கண்ணை களர் காறை கழிப்பாலையும் கயிலாயநாதனையே காணல் ஆமே

 மேல்

#2792
வீழிமிழலை வெண்காடு வேங்கூர் வேதிகுடி விசயமங்கை வியலூர்
ஆழி அகத்தியான்பள்ளி அண்ணாமலை ஆலங்காடும் அரதைப்பெரும்
பாழி பழனம் பனந்தாள் பாதாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட்டூர் தண்
காழி கடல் நாகைக்காரோணத்தும் கயிலாயநாதனையே காணல் ஆமே

 மேல்

#2793
உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர் உருத்திரகோடி மறைக்காட்டுள்ளும்
மஞ்சு ஆர் பொதியில் மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானம் கேதாரத்தும்
வெஞ்சமாக்கூடல் மீயச்சூர் வைகா வேதீச்சுரம் வில்வீச்சுரம் வெற்றியூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையும் கயிலாயநாதனையே காணல் ஆமே

 மேல்

#2794
திண்டீச்சுரம் சேய்ஞலூர் செம்பொன்பள்ளி தேவூர் சிரபுரம் சிற்றேமம் சேறை
கொண்டீச்சுரம் கூந்தலூர் கூழையூர் கூடல் குருகாவூர்வெள்ளடை குமரி கொங்கு
அண்டர் தொழும் அதிகைவீரட்டானம் ஐயாறு அசோகந்தி ஆமாத்தூரும்
கண்டியூர்வீரட்டம் கருகாவூரும் கயிலாயநாதனையே காணல் ஆமே

 மேல்

#2795
நறையூரில் சித்தீச்சுரம் நள்ளாறு நாரையூர் நாகேச்சுரம் நல்லூர் நல்ல
துறையூர் சோற்றுத்துறை சூலமங்கை தோணிபுரம் துருத்தி சோமீச்சுரம்
உறையூர் கடல் ஒற்றியூர் ஊற்றத்தூர் ஓமாம்புலியூர் ஓர் ஏடகத்தும்
கறையூர் கருப்பறியல் கன்றாப்பூரும் கயிலாயநாதனையே காணல் ஆமே

 மேல்

#2796
புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர் புறம்பயம் பூவணம் பொய்கைநல்லூர்
வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல் வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி
நிலம் மலி நெய்த்தானத்தோடு எத்தானத்தும் நிலவு பெருங்கோயில் பல கண்டால் தொண்டீர்
கலி வலி மிக்கோனை கால்விரலால் செற்ற கயிலாயநாதனையே காணல் ஆமே

 மேல்

 71. அடைவுத் திருத்தாண்டகம்

#2797
பொருப்பள்ளி வரை வில்லா புரம் மூன்று எய்து புலந்து அழிய சலந்தரனை பிளந்தான் பொன் சக்
கரப்பள்ளி திருக்காட்டுப்பள்ளி கள் ஆர் கமழ் கொல்லி அறைப்பள்ளி கலவம் சாரல்
சிரப்பள்ளி சிவப்பள்ளி செம்பொன்பள்ளி செழு நனிபள்ளி தவப்பள்ளி சீர் ஆர்
பரப்பள்ளி என்றுஎன்று பகர்வோர் எல்லாம் பரலோகத்து இனிது ஆக பாலிப்பாரே

 மேல்

#2798
காவிரியின் கரை கண்டிவீரட்டானம் கடவூர்வீரட்டானம் காமரு சீர் அதிகை
மேவிய வீரட்டானம் வழுவைவீரட்டம் வியன்பறியல்வீரட்டம் விடை ஊர்திக்கு இடம் ஆம்
கோவல்நகர்வீரட்டம் குறுக்கைவீரட்டம் கோத்திட்டை குடிவீரட்டானம் இவை கூறி
நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுக சென்றால் நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே

 மேல்

#2799
நல் கொடி மேல் விடை உயர்த்த நம்பன் செம்பங்குடி நல்லக்குடி நளி நாட்டியத்தான்குடி
கற்குடி தென்களக்குடி செங்காட்டங்குடி கருந்திட்டைக்குடி கடையக்குடி காணும்-கால்
விற்குடி வேள்விக்குடி நல் வேட்டக்குடி வேதிகுடி மாணிகுடி விடைவாய்க்கடி
புற்குடி மாகுடி தேவன்குடி நீலக்குடி புதுக்குடியும் போற்ற இடர் போகும் அன்றே

 மேல்

#2800
பிறை ஊரும் சடை முடி எம்பெருமான் ஆரூர் பெரும்பற்றப்புலியூரும் பேராவூரும்
நறையூரும் நல்லூரும் நல்லாற்றூரும் நாலூரும் சேறூரும் நாரையூரும்
உறையூரும் ஓத்தூரும் ஊற்றத்தூரும் அளப்பூர் ஓமாம்புலியூர் ஒற்றியூரும்
துறையூரும் துவையூரும் தோழூர்-தானும் துடையூரும் தொழ இடர்கள் தொடரா அன்றே

 மேல்

#2801
பெருக்கு ஆறு சடைக்கு அணிந்த பெருமான் சேரும் பெரும் கோயில் எழுபதினோடு எட்டும் மற்றும்
கரக்கோயில் கடி பொழில் சூழ் ஞாழற்கோயில் கருப்பறியல் பொருப்பு அனைய கொகுடிக்கோயில்
இருக்கு ஓதி மறையவர்கள் வழிபட்டு ஏத்தும் இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்
திருக்கோயில் சிவன் உறையும் கோயில் சூழ்ந்து தாழ்ந்து இறைஞ்ச தீவினைகள் தீரும் அன்றே

 மேல்

#2802
மலையார்-தம் மகளொடு மாதேவன் சேரும் மறைக்காடு வண் பொழில் சூழ் தலைச்சங்காடு
தலையாலங்காடு தடம் கடல் சூழ் அம் தண் சாய்க்காடு தெள்ளு புனல் கொள்ளிக்காடு
பலர் பாடும் பழையனூர் ஆலங்காடு பனங்காடு பாவையர்கள் பாவம் நீங்க
விலை ஆடும் வளை திளைக்க குடையும் பொய்கை வெண்காடும் அடைய வினை வேறு ஆம் அன்றே

 மேல்

#2803
கடு வாயர்-தமை நீக்கி என்னை ஆட்கொள் கண்நுதலோன் நண்ணும் இடம் அண்ணல்வாயில்
நெடுவாயில் நிறை வயல் சூழ் நெய்தல்வாயில் நிகழ் முல்லைவாயிலொடு ஞாழல்வாயில்
மடு ஆர் தென் மதுரை நகர் ஆலவாயில் மறி கடல் சூழ் புனவாயில் மாடம் நீடு
குடவாயில் குணவாயில் ஆன எல்லாம் புகுவாரை கொடுவினைகள் கூடா அன்றே

 மேல்

#2804
நாடகம் ஆடி இடம் நந்திகேச்சுரம் மா காளேச்சுரம் நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன்கு ஆன
கோடீச்சுரம் கொண்டீச்சுரம் திண்டீச்சுரம் குக்குடேச்சுரம் அக்கீச்சுரம் கூறும்-கால்
ஆடகேச்சுரம் அகத்தீச்சுரம் அயனீச்சுரம் அத்தீச்சுரம் சித்தீச்சுரம் அம் தண் கானல்
ஈடு திரை இராமேச்சுரம் என்றுஎன்று ஏத்தி இறைவன் உறை சுரம் பலவும் இயம்புவோமே

 மேல்

#2805
கந்தமாதனம் கயிலை மலை கேதாரம் காளத்தி கழுக்குன்றம் கண் ஆர் அண்ணா
மந்தம் ஆம் பொழில் சாரல் வட பர்ப்பதம் மகேந்திர மா மலை நீலம் ஏமகூடம்
விந்த மா மலை வேதம் சையம் மிக்க வியன் பொதியில் மலை மேரு உதயம் அத்தம்
இந்துசேகரன் உறையும் மலைகள் மற்றும் ஏத்துவோம் இடர் கெட நின்று ஏத்துவோமே

 மேல்

#2806
நள்ளாறும் பழையாறும் கோட்டாற்றோடு நலம் திகழும் நாலாறும் திரு ஐயாறும்
தெள்ளாறும் வளைகுளமும் தளிக்குளமும் நல் இடைக்குளமும் திருக்குளத்தோடு அஞ்சைக்களம்
விள்ளாத நெடுங்களம் வேட்களம் நெல்லிக்கா கோலக்கா ஆனைக்கா வியன் கோடிகா
கள் ஆர்ந்த கொன்றையான் நின்ற ஆறும் குளம் களம் கா என அனைத்தும் கூறுவோமே

 மேல்

#2807
கயிலாய மலை எடுத்தான் கரங்களோடு சிரங்கன் உரம் நெரிய கால்விரலால் செற்றோன்
பயில்வு ஆய பராய்த்துறை தென்பாலைத்துறை பண்டு எழுவர் தவத்துறை வெண்துறை பைம் பொழில்
குயில் ஆலந்துறை சோற்றுத்துறை பூந்துறை பெருந்துறையும் குரங்காடுதுறையினோடு
மயிலாடுதுறை கடம்பந்துறை ஆவடுதுறை மற்றும் துறை அனைத்தும் வணங்குவோமே

 மேல்

 72. திருவலஞ்சுழி - திருத்தாண்டகம்

#2808
அலை ஆர் புனல் கங்கை நங்கை காண அம்பலத்தில் அரு நட்டம் ஆடி வேடம்
தொலையாத வென்றியார் நின்றியூரும் நெடுங்களமும் மேவி விடையை மேற்கொண்டு
இலை ஆர் படை கையில் ஏந்தி எங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி ஏத்த
மலை ஆர் திரள் அருவி பொன்னி சூழ்ந்த வலஞ்சுழியே புக்கு இடமா மன்னினாரே

 மேல்

 73. திருவலஞ்சுழி, , திருக்கொட்டையூர்க்கோடீச்சரம்

#2809
கருமணி போல் கண்டத்து அழகன் கண்டாய் கல்லால் நிழல் கீழ் இருந்தான் கண்டாய்
பரு மணி மா நாகம் பூண்டான் கண்டாய் பவள குன்று அன்ன பரமன் கண்டாய்
வரு மணி நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் வரதன் கண்டாய்
குரு மணி போல் அழகு அமரும் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே

 மேல்

#2810
கலை கன்று தங்கு கரத்தான் கண்டாய் கலை பயில்வோர் ஞான கண் ஆனான் கண்டாய்
அலை கங்கை செம் சடை மேல் ஏற்றான் கண்டாய் அண்ட கபாலத்து அப்பாலான் கண்டாய்
மலை பண்டம் கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய்
குலை தெங்கு அம் சோலை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே

 மேல்

#2811
செந்தாமரை போது அணிந்தான் கண்டாய் சிவன் கண்டாய் தேவர் பெருமான் கண்டாய்
பந்து ஆடு மெல்விரலாள்_பாகன் கண்டாய் பாலோடு நெய் தயிர் தேன் ஆடி கண்டாய்
மந்தாரம் உந்தி வரும் நீர் பொன்னி வலஞ்சுழியில் மன்னும் மணாளன் கண்டாய்
கொந்து ஆர் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே

 மேல்

#2812
பொடி ஆடும் மேனி புனிதன் கண்டாய் புள்_பாகற்கு ஆழி கொடுத்தான் கண்டாய்
இடி ஆர் கடு முழக்கு ஏறு ஊர்ந்தான் கண்டாய் எண் திசைக்கும் விளக்கு ஆகி நின்றான் கண்டாய்
மடல் ஆர் திரை புரளும் காவிரி-வாய் வலஞ்சுழியில் மேவிய மைந்தன் கண்டாய்
கொடி ஆடு நெடு மாட கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே

 மேல்

#2813
அக்கு அரவம் அரைக்கு அசைத்த அம்மான் கண்டாய் அரு மறைகள் ஆறு அங்கம் ஆனான் கண்டாய்
தக்கனது பெரு வேள்வி தகர்த்தான் கண்டாய் சதாசிவன் காண் சலந்தரனை பிளந்தான் கண்டாய்
மை கொள் மயில் தழை கொண்டு வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மழுவன் கண்டாய்
கொக்கு அமரும் வயல் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே

 மேல்

#2814
சண்டனை நல் அண்டர் தொழ செய்தான் கண்டாய் சதாசிவன் கண்டாய் சங்கரன்தான் கண்டாய்
தொண்டர் பலர் தொழுது ஏத்தும் கழலான் கண்டாய் சுடர் ஒளியாய் தொடர்வு அரிதாய் நின்றான் கண்டாய்
மண்டு புனல் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிவர்-தம்முடைய மருந்து கண்டாய்
கொண்டல் தவழ் கொடி மாட கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே

 மேல்

#2815
அணவு அரியான் கண்டாய் அமலன் கண்டாய் அவிநாசி கண்டாய் அண்டத்தான் கண்டாய்
பண மணி மா நாகம் உடையான் கண்டாய் பண்டரங்கன் கண்டாய் பகவன் கண்டாய்
மணல் வரும் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மாதவற்கும் நான்முகற்கும் வரதன் கண்டாய்
குணம் உடை நல் அடியார் வாழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே

 மேல்

#2816
விரை கமழும் மலர் கொன்றை தாரான் கண்டாய் வேதங்கள் தொழ நின்ற நாதன் கண்டாய்
அரை அதனில் புள்ளி அதள் உடையான் கண்டாய் அழல் ஆடி கண்டாய் அழகன் கண்டாய்
வரு திரை நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் வஞ்ச மனத்தவர்க்கு அரிய மைந்தன் கண்டாய்
குரவு அமரும் பொழில் புடை சூழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே

 மேல்

#2817
தளம் கிளரும் தாமரை ஆதனத்தான் கண்டாய் தசரதன்-தன் மகன் அசைவு தவிர்த்தான் கண்டாய்
இளம் பிறையும் முதிர் சடை மேல் வைத்தான் கண்டாய் எட்டுஎட்டு இரும் கலையும் ஆனான் கண்டாய்
வளம் கிளர் நீர் பொன்னி வலஞ்சுழியான் கண்டாய் மா முனிகள் தொழுது எழு பொன் கழலான் கண்டாய்
குளம் குளிர் செங்குவளை கிளர் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே

 மேல்

#2818
விண்டார் புரம் மூன்று எரித்தான் கண்டாய் விலங்கலில் வல் அரக்கன் உடல் அடர்த்தான் கண்டாய்
தண் தாமரையானும் மாலும் தேட தழல் பிழம்பாய் நீண்ட கழலான் கண்டாய்
வண்டு ஆர் பூம் சோலை வலஞ்சுழியான் கண்டாய் மாதேவன் கண்டாய் மறையோடு அங்கம்
கொண்டாடு வேதியர் வாழ் கொட்டையூரில் கோடீச்சுரத்து உறையும் கோமான்தானே

 மேல்

 74. திருநாரையூர் - திருத்தாண்டகம்

#2819
சொல்லானை பொருளானை சுருதியானை சுடர் ஆழி நெடு மாலுக்கு அருள்செய்தானை
அல்லானை பகலானை அரியான்-தன்னை அடியார்கட்கு எளியானை அரண் மூன்று எய்த
வில்லானை சரம் விசயற்கு அருள்செய்தானை வெம் கதிரோன் மா முனிவர் விரும்பி ஏத்தும்
நல்லானை தீ ஆடும் நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே

 மேல்

#2820
பஞ்சு உண்ட மெல்லடியாள்_பங்கன்-தன்னை பாரொடு நீர் சுடர் படர் காற்று ஆயினானை
மஞ்சு உண்ட வான் ஆகி வானம்-தன்னில் மதி ஆகி மதி சடை மேல் வைத்தான்-தன்னை
நெஞ்சு உண்டு என் நினைவு ஆகி நின்றான்-தன்னை நெடும் கடலை கடந்தவர் போய் நீங்க ஓங்கும்
நஞ்சு உண்டு தேவர்களுக்கு அமுது ஈந்தானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே

 மேல்

#2821
மூவாது யாவர்க்கும் மூத்தான் தன்னை முடியாதே முதல் நடுவு முடிவு ஆனானை
தேவாதிதேவர்கட்கும் தேவன்-தன்னை திசைமுகன்-தன் சிரம் ஒன்று சிதைத்தான்-தன்னை
ஆ வாத அடல் ஏறு ஒன்று உடையான் தன்னை அடியேற்கு நினை-தோறும் அண்ணிக்கின்ற
நாவானை நாவினில் நல் உரை ஆனானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே

 மேல்

#2822
செம்பொன்னை நன் பவளம் திகழும் முத்தை செழு மணியை தொழுமவர்-தம் சித்தத்தானை
வம்பு அவிழும் மலர் கணை வேள் உலக்க நோக்கி மகிழ்ந்தானை மதில் கச்சி மன்னுகின்ற
கம்பனை எம் கயிலாயமலையான்-தன்னை கழுகினொடு காகுத்தன் கருதி ஏத்தும்
நம்பனை எம்பெருமானை நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே

 மேல்

#2823
புரை உடைய கரி உரிவை போர்வையானை புரி சடை மேல் புனல் அடைத்த புனிதன்-தன்னை
விரை உடைய வெள் எருக்கு அம் கண்ணியானை வெண் நீறு செம் மேனி விரவினானை
வரை உடைய மகள் தவம் செய் மணாளன்-தன்னை வரு பிணி நோய் பிரிவிக்கும் மருந்து-தன்னை
நரை விடை நல் கொடி உடைய நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே

 மேல்

#2824
பிறவாதும் இறவாதும் பெருகினானை பேய் பாட நடம் ஆடும் பித்தன்-தன்னை
மறவாத மனத்தகத்து மன்னினானை மலையானை கடலானை வனத்து உளானை
உறவானை பகையானை உயிர் ஆனானை உள்ளானை புறத்தானை ஓசையானை
நறவு ஆரும் பூம் கொன்றை சூடினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே

 மேல்

#2825
தக்கனது வேள்வி கெட சாடினானை தலை கலனா பலி ஏற்ற தலைவன்-தன்னை
கொக்கரை சச்சரி வீணை பாணியானை கோள் நாகம் பூண் ஆக கொண்டான்-தன்னை
அக்கினொடும் என்பு அணிந்த அழகன்-தன்னை அறுமுகனோடு ஆனைமுகற்கு அப்பன்-தன்னை
நக்கனை வக்கரையானை நள்ளாற்றானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே

 மேல்

#2826
அரி பிரமர் தொழுது ஏத்தும் அத்தன்-தன்னை அந்தகனக்கு அந்தகனை அளக்கல் ஆகா
எரி புரியும் இலிங்கபுராணத்து உளானை எண் ஆகி பண் ஆர் எழுத்து ஆனானை
திரிபுரம் செற்று ஒரு மூவர்க்கு அருள்செய்தானை சிலந்திக்கும் அரசு அளித்த செல்வன்-தன்னை
நரி விரவு காட்டகத்தில் ஆடலானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே

 மேல்

#2827
ஆலாலம் மிடற்று அணியா அடக்கினானை ஆல் அதன் கீழ் அறம் நால்வர்க்கு அருள்செய்தானை
பால் ஆகி தேன் ஆகி பழமும் ஆகி பைம் கரும்பாய் அங்கு அருந்தும் சுவைஅனானை
மேல் ஆய வேதியர்க்கு வேள்வி ஆகி வேள்வியினின் பயன் ஆய விமலன்-தன்னை
நால் ஆய மறைக்கு இறைவன் ஆயினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே

 மேல்

#2828
மீளாத ஆள் என்னை உடையான்-தன்னை வெளி செய்த வழிபாடு மேவினானை
மாளாமை மறையவனுக்கு உயிரும் வைத்து வன் கூற்றின் உயிர் மாள உதைத்தான்-தன்னை
தோள் ஆண்மை கருதி வரை எடுத்த தூர்த்தன் தோள் வலியும் தாள் வலியும் தொலைவித்து ஆங்கே
நாளோடு வாள் கொடுத்த நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே

 மேல்

 75. திருக்குடந்தைக் கீழ்க்கோட்டம் - திருத்தாண்டகம்

#2829
சொல் மலிந்த மறை நான்கு ஆறு அங்கம் ஆகி சொல்பொருளும் கடந்த சுடர் சோதி போலும்
கல் மலிந்த கயிலைமலைவாணர் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் போலும்
மல் மலிந்த மணி வரை திண் தோளர் போலும் மலை_அரையன் மட பாவை மணாளர் போலும்
கொன் மலிந்த மூ இலை வேல் குழகர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே

 மேல்

#2830
கான் நல் இளம் கலி மறவன் ஆகி பார்த்தன் கருத்து அளவு செரு தொகுதி கண்டார் போலும்
ஆன் நல் இளம் கடு விடை ஒன்று ஏறி அண்டத்து அப்பாலும் பலி திரியும் அழகர் போலும்
தேன் நல் இளம் துவலை மலி தென்றல் முன்றில் செழும் பொழில் பூம் பாளை விரி தேறல் நாறும்
கூனல் இளம் பிறை தடவு கொடி கொள் மாட குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே

 மேல்

#2831
நீறு அலைத்த திரு உருவும் நெற்றிக்கண்ணும் நிலா அலைத்த பாம்பினொடு நிறை நீர் கங்கை
ஆறு அலைத்த சடை முடியும் அம் பொன் தாளும் அடியவர்க்கு காட்டி அருள்புரிவார் போலும்
ஏறு அலைத்த நிமிர் கொடி ஒன்று உடையர் போலும் ஏழ்உலகும் தொழு கழல் எம் ஈசர் போலும்
கூறு அலைத்த மலைமடந்தை_கொழுநர் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே

 மேல்

#2832
தக்கனது பெரு வேள்வி தகர்த்தார் போலும் சந்திரனை கலை கவர்ந்து தரித்தார் போலும்
செக்கர் ஒளி பவள ஒளி மின்னின் சோதி செழும் சுடர் தீ ஞாயிறு என செய்யர் போலும்
மிக்க திறல் மறையவரால் விளங்கு வேள்வி மிகு புகை போய் விண் பொழிய கழனி எல்லாம்
கொக்கு இனிய கனி சிதறி தேறல் பாயும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே

 மேல்

#2833
காலன் வலி தொலைத்த கழல் காலர் போலும் காமன் எழில் அழல் விழுங்க கண்டார் போலும்
ஆல் அதனில் அறம் நால்வர்க்கு அளித்தார் போலும் ஆணொடு பெண் அலி அல்லர் ஆனார் போலும்
நீல உரு வயிர நிரை பச்சை செம்பொன் நெடும் பளிங்கு என்று அறிவு அரிய நிறத்தார் போலும்
கோல மணி கொழித்து இழியும் பொன்னி நல் நீர் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே

 மேல்

#2834
முடி கொண்ட வளர் மதியும் மூன்றாய் தோன்றும் முளை ஞாயிறு அன்ன மலர் கண்கள் மூன்றும்
அடி கொண்ட சிலம்பு ஒலியும் அருள் ஆர் சோதி அணி முறுவல் செ வாயும் அழகாய் தோன்ற
துடி கொண்ட இடை மடவாள் பாகம் கொண்டு சுடர் சோதி கடல் செம்பொன் மலை போல் இ நாள்
குடிகொண்டு என் மனத்தகத்தே புகுந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே

 மேல்

#2835
கார் இலங்கு திரு உருவத்தவற்கும் மற்றை கமலத்தில் காரணற்கும் காட்சி ஒண்ணா
சீர் இலங்கு தழல் பிழம்பின் சிவந்தார் போலும் சிலை வளைவித்து அவுணர் புரம் சிதைத்தார் போலும்
பார் இலங்கு புனல் அனல் கால் பரமாகாசம் பருதி மதி சுருதியுமாய் பரந்தார் போலும்
கூர் இலங்கு வேல் குமரன் தாதை போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே

 மேல்

#2836
பூ சூழ்ந்த பொழில் தழுவு புகலூர் உள்ளார் புறம்பயத்தார் அறம் புரி பூந்துருத்தி புக்கு
மா சூழ்ந்த பழனத்தார் நெய்த்தானத்தார் மா தவத்து வளர் சோற்றுத்துறையார் நல்ல
தீ சூழ்ந்த திகிரி திருமாலுக்கு ஈந்து திரு ஆனைக்காவில் ஓர் சிலந்திக்கு அ நாள்
கோ சோழர் குலத்து அரசு கொடுத்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே

 மேல்

#2837
பொங்கு அரவர் புலி தோலர் புராணர் மார்பில் பொறி கிளர் வெண் பூண நூல் புனிதர் போலும்
சங்கு அரவ கடல் முகடு தட்டவிட்டு சதுர நடம் ஆட்டு உகந்த சைவர் போலும்
அங்கு அரவ திருவடிக்கு ஆட்பிழைப்ப தந்தை அந்தணனை அற எறிந்தார்க்கு அருள் அப்போதே
கொங்கு அரவ சடை கொன்றை கொடுத்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே

 மேல்

#2838
ஏவி இடர் கடலிடை பட்டு இளைக்கின்றேனை இ பிறவி அறுத்து ஏற வாங்கி ஆங்கே
கூவி அமர்_உலகு அனைத்தும் உருவி போக குறியில் அறு குணத்து ஆண்டுகொண்டார் போலும்
தாவி முதல் காவிரி நல் யமுனை கங்கை சரசுவதி பொற்றாமரை புட்கரணி தெண் நீர்
கோவியொடு குமரி வரு தீர்த்தம் சூழ்ந்த குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே

 மேல்

#2839
செறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறி தித்திக்கும் சிவபுவனத்து அமுதம் போலும்
நெறி கொண்ட குழலி உமை பாகம் ஆக நிறைந்து அமரர் கணம் வணங்க நின்றார் போலும்
மறி கொண்ட கரதலத்து எம் மைந்தர் போலும் மதில் இலங்கை கோன் மலங்க வரை கீழ் இட்டு
குறி கொண்ட இன்னிசை கேட்டு உகந்தார் போலும் குடந்தை கீழ்க்கோட்டத்து எம் கூத்தனாரே

 மேல்

 76. திருப்புத்தூர் - திருத்தாண்டகம்

#2840
புரிந்து அமரர் தொழுது ஏத்தும் புகழ் தக்கோன் காண் போர் விடையின் பாகன் காண் புவனம் ஏழும்
விரிந்து பல உயிர் ஆகி விளங்கினான் காண் விரை கொன்றை கண்ணியன் காண் வேதம் நான்கும்
தெரிந்து முதல் படைத்தோனை சிரம் கொண்டோன் காண் தீர்த்தன் காண் திருமால் ஓர்பங்கத்தான் காண்
திருந்து வயல் புடை தழுவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே

 மேல்

#2841
வார் ஆரும் முலை மங்கை_பங்கத்தான் காண் மா மறைகள் ஆயவன் காண் மண்ணும் விண்ணும்
கூர் ஆர் வெம் தழலவனும் காற்றும் நீரும் குல வரையும் ஆயவன் காண் கொடு நஞ்சு உண்ட
கார் ஆரும் கண்டன் காண் எண் தோளன் காண் கயிலை மலை பொருப்பன் காண் விருப்போடு என்றும்
தேர் ஆரும் நெடு வீதி திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே

 மேல்

#2842
மின் காட்டும் கொடி மருங்குல் உமையாட்கு என்றும் விருப்பவன் காண் பொருப்பு வலி சிலை கையோன் காண்
நன் பாட்டு புலவனாய் சங்கம் ஏறி நல் கனக கிழி தருமிக்கு அருளினோன் காண்
பொன் காட்ட கடி கொன்றை மருங்கே நின்ற புன காந்தள் கை காட்ட கண்டு வண்டு
தென் காட்டும் செழும் புறவின் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே

 மேல்

#2843
ஏடு ஏறு மலர் கமலத்து அயனும் மாலும் இந்திரனும் பணிந்து ஏத்த இருக்கின்றான் காண்
தோடு ஏறும் மலர் கடுக்கை வன்னி மத்தம் துன்னிய செஞ்சடையான் காண் துகள் தீர் சங்கம்
மாடு ஏறி முத்து ஈனும் கானல் வேலி மறைக்காட்டு மா மணி காண் வளம் கொள் மேதி
சேடு ஏறி மடு படியும் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே

 மேல்

#2844
கரு மருவு வல்வினை நோய் காற்றினான் காண் கா மரு பூம் கச்சி ஏகம்பத்தான் காண்
பெரு மருவு பேர் உலகில் பிணிகள் தீர்க்கும் பெரும்பற்றத்தண்புலியூர் மன்று ஆடீ காண்
தரு மருவு கொடை தட கை அளகை_கோன்-தன் சங்காத்தி ஆரூரில் தனியானை காண்
திரு மருவு பொழில் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே

 மேல்

#2845
காம்பு ஆடு தோள் உமையாள் காண நட்டம் கலந்து ஆடல் புரிந்தவன் காண் கையில் வெய்ய
பாம்பு ஆட படு தலையில் பலி கொள்வோன் காண் பவளத்தின் பரு வரை போல் படிமத்தான் காண்
தாம்பு ஆடு சின விடையே பகடா கொண்ட சங்கரன் காண் பொங்கு அரவ கச்சையோன் காண்
சேம்பு ஆடு வயல் புடை சூழ் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே

 மேல்

#2846
வெறி விரவு மலர் கொன்றை விளங்கு திங்கள் வன்னியொடு விரி சடை மேல் மிலைச்சினான் காண்
பொறி விரவு கத நாகம் அக்கினோடு பூண்டவன் காண் பொரு புலி தோல் ஆடையான் காண்
அறிவு அரிய நுண்பொருள்கள் ஆயினான் காண் ஆயிரம் பேர் உடையவன் காண் அம் தண் கானல்
செறி பொழில் சூழ் மணி மாட திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே

 மேல்

#2847
புக்கு அடைந்த வேதியற்காய் காலன் காய்ந்த புண்ணியன் காண் வெண் நகை வெள் வளையாள் அஞ்ச
மிக்கு எதிர்ந்த கரி வெருவ உரித்த கோன் காண் வெண் மதியை கலை சேர்த்த திண்மையோன் காண்
அக்கு அரும்பு பெரும் புன்னை நெருங்கு சோலை ஆரூருக்கு அதிபதி காண் அம் தண் தென்றல்
திக்கு அணைந்து வரு மருங்கில் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே

 மேல்

#2848
பற்றவன் காண் ஏனோர்க்கும் வானோருக்கும் பராபரன் காண் தக்கன்-தன் வேள்வி செற்ற
கொற்றவன் காண் கொடும் சினத்தை அடங்க செற்று ஞானத்தை மேல் மிகுத்தல் கோளா கொண்ட
பெற்றியன் காண் பிறங்கு அருவி கழுக்குன்றத்து எம் பிஞ்ஞகன் காண் பேர் எழில் ஆர் காமவேளை
செற்றவன் காண் சீர் மருவு திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே

 மேல்

#2849
உரம் மதித்த சலந்தன்-தன் ஆகம் கீண்ட ஓர் ஆழி படைத்தவன் காண் உலகு சூழும்
வரம் மதித்த கதிரவனை பல் கொண்டான் காண் வானவர்_கோன் புயம் நெரித்த வல்லாளன் காண்
அர மதித்து செம்பொன்னின் ஆரம் பூணா அணிந்தவன் காண் அலை கடல் சூழ் இலங்கை_வேந்தன்
சிரம் நெரித்த சேவடி காண் திரு புத்தூரில் திரு தளியான் காண் அவன் என் சிந்தையானே

 மேல்

 77. திருவாய்மூர் - திருத்தாண்டகம்

#2850
பாட அடியார் பரவ கண்டேன் பத்தர் கணம் கண்டேன் மொய்த்த பூதம்
ஆடல் முழவம் அதிர கண்டேன் அங்கை அனல் கண்டேன் கங்கையாளை
கோடல் அரவு ஆர் சடையில் கண்டேன் கொக்கின் இதழ் கண்டேன் கொன்றை கண்டேன்
வாடல் தலை ஒன்று கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே

 மேல்

#2851
பால் இன் மொழியாள் ஓர்பாகம் கண்டேன் பதினெண் கணமும் பயில கண்டேன்
நீல நிறமுண்ட கண்டம் கண்டேன் நெற்றி நுதல் கண்டேன் பெற்றம் கண்டேன்
காலை கதிர் செய் மதியம் கண்டேன் கரந்தை திரு முடி மேல் தோன்ற கண்டேன்
மாலை சடையும் முடியும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே

 மேல்

#2852
மண்ணை திகழ நடம் அது ஆடும் வரை சிலம்பு ஆர்க்கின்ற பாதம் கண்டேன்
விண்ணில் திகழும் முடியும் கண்டேன் வேடம் பல ஆம் சரிதை கண்டேன்
நண்ணி பிரியா மழுவும் கண்டேன் நாலு மறை அங்கம் ஓத கண்டேன்
வண்ணம் பொலிந்து இலங்கு கோலம் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே

 மேல்

#2853
விளைத்த பெரும் பத்தி கூர நின்று மெய் அடியார்-தம்மை விரும்ப கண்டேன்
இளைக்கும் கத நாகம் மேனி கண்டேன் என்பின் கலம் திகழ்ந்து தோன்ற கண்டேன்
திளைக்கும் திரு மார்பில் நீறு கண்டேன் சேண் ஆர் மதில் மூன்றும் பொன்ற அன்று
வளைத்த வரி சிலையும் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே

 மேல்

#2854
கான் மறையும் போதகத்தின் உரிவை கண்டேன் காலில் கழல் கண்டேன் கரியின் தோல் கொண்டு
ஊன் மறைய போர்த்த வடிவும் கண்டேன் உள்க மனம்வைத்த உணர்வும் கண்டேன்
நான்மறையானோடு நெடிய மாலும் நண்ணி வர கண்டேன் திண்ணம் ஆக
மான் மறி தம் கையில் மருவ கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே

 மேல்

#2855
அடி ஆர் சிலம்பு ஒலிகள் ஆர்ப்ப கண்டேன் அவ்வவர்க்கே ஈந்த கருணை கண்டேன்
முடி ஆர் சடை மேல் அரவம் மூழ்க மூரி பிறை போய் மறைய கண்டேன்
கொடி ஆர் அதன் மேல் இடபம் கண்டேன் கோவணமும் கீளும் குலாவ கண்டேன்
வடி ஆரும் மூ இலை வேல் கையில் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே

 மேல்

#2856
குழை ஆர் திரு தோடு காதில் கண்டேன் கொக்கரையும் சச்சரியும் கொள்கை கண்டேன்
இழை ஆர் புரி நூல் வலத்தே கண்டேன் ஏழ் இசை யாழ் வீணை முரல கண்டேன்
தழை ஆர் சடை கண்டேன் தன்மை கண்டேன் தக்கையொடு தாளம் கறங்க கண்டேன்
மழை ஆர் திரு மிடறும் மற்றும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே

 மேல்

#2857
பொருந்தாத செய்கை பொலிய கண்டேன் போற்றி இசைத்து விண்ணோர் புகழ கண்டேன்
பரிந்தார்க்கு அருளும் பரிசும் கண்டேன் பார் ஆகி புனல் ஆகி நிற்கை கண்டேன்
விருந்தாய் பரந்த தொகுதி கண்டேன் மெல்லியலும் விநாயகனும் தோன்ற கண்டேன்
மருந்தாய் பிணி தீர்க்கும் ஆறு கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே

 மேல்

#2858
மெய் அன்பர் ஆனார்க்கு அருளும் கண்டேன் வேடுவனாய் நின்ற நிலையும் கண்டேன்
கை அம்பு அரண் எரித்த காட்சி கண்டேன் கங்கணமும் அங்கை கனலும் கண்டேன்
ஐயம் பல ஊர் திரிய கண்டேன் அன்றவன்-தன் வேள்வி அழித்து உகந்து
வையம் பரவ இருத்தல் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே

 மேல்

#2859
கலங்க இருவர்க்கு அழலாய் நீண்ட காரணமும் கண்டேன் கருவாய் நின்று
பலங்கள் தரித்து உகந்த பண்பும் கண்டேன் பாடல் ஒலி எலாம் கூட கண்டேன்
இலங்கை_தலைவன் சிரங்கள் பத்தும் இறுத்து அவனுக்கு ஈந்த பெருமை கண்டேன்
வலங்கை தலத்துள் அனலும் கண்டேன் வாய்மூர் அடிகளை நான் கண்ட ஆறே

 மேல்

 78. திருவாலங்காடு - திருத்தாண்டகம்

#2860
ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே ஊழி-தோறு ஊழி உயர்ந்தார் தாமே
நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே நீர் வளி தீ ஆகாசம் ஆனார் தாமே
கொன்று ஆரும் கூற்றை உதைத்தார் தாமே கோல பழனை உடையார் தாமே
சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே

 மேல்

#2861
மலைமகளை பாகம் அமர்ந்தார் தாமே வானோர் வணங்கப்படுவார் தாமே
சலமகளை செம் சடை மேல் வைத்தார் தாமே சரண் என்று இருப்பார்கட்கு அன்பர் தாமே
பலபலவும் வேடங்கள் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே
சிலை மலையா மூஎயிலும் அட்டார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே

 மேல்

#2862
ஆ உற்ற ஐந்தும் உகந்தார் தாமே அளவு இல் பெருமை உடையார் தாமே
பூ உற்ற நாற்றமாய் நின்றார் தாமே புனித பொருள் ஆகி நின்றார் தாமே
பா உற்ற பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே
தே உற்று அடி பரவ நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே

 மேல்

#2863
நாறு பூம் கொன்றை முடியார் தாமே நான்மறையோடு ஆறு அங்கம் சொன்னார் தாமே
மாறு இலா மேனி உடையார் தாமே மா மதியம் செம் சடை மேல் வைத்தார் தாமே
பாறினார் வெண் தலையில் உண்டார் தாமே பழனை பதியா உடையார் தாமே
தேறினார் சித்தத்து இருந்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே

 மேல்

#2864
அல்லும் பகலுமாய் நின்றார் தாமே அந்தியும் சந்தியும் ஆனார் தாமே
சொல்லும் பொருள் எலாம் ஆனார் தாமே தோத்திரமும் சாத்திரமும் ஆனார் தாமே
பல் உரைக்கும் பா எலாம் ஆனார் தாமே பழனை பதியா உடையார் தாமே
செல்லும் நெறி காட்ட வல்லார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே

 மேல்

#2865
தொண்டாய் பணிவார்க்கு அணியார் தாமே தூ நீறு அணியும் சுவண்டர் தாமே
தண் தாமரையானும் மாலும் தேட தழல் உருவாய் ஓங்கி நிமிர்ந்தார் தாமே
பண்தான் இசை பாட நின்றார் தாமே பழனை பதியா உடையார் தாமே
திண் தோள்கள் எட்டும் உடையார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே

 மேல்

#2866
மை ஆரும் கண்டம் மிடற்றார் தாமே மயானத்தில் ஆடல் மகிழ்ந்தார் தாமே
ஐயாறும் ஆரூரும் ஆனைக்காவும் அம்பலமும் கோயிலா கொண்டார் தாமே
பை ஆடு அரவம் அசைத்தார் தாமே பழனை பதியா உடையார் தாமே
செய்யாள் வழிபட நின்றார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர்தாமே

 மேல்

#2867
விண் முழுதும் மண் முழுதும் ஆனார் தாமே மிக்கோர்கள் ஏத்தும் குணத்தார் தாமே
கண் விழியா காமனையும் காய்ந்தார் தாமே காலங்கள் ஊழி கடந்தார் தாமே
பண் இயலும் பாடல் உகப்பார் தாமே பழனை பதியா உடையார் தாமே
திண் மழுவாள் ஏந்து கரந்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே

 மேல்

#2868
கார் ஆர் கடல் நஞ்சை உண்டார் தாமே கயிலை மலையை உடையார் தாமே
ஊர் ஆக ஏகம்பம் உகந்தார் தாமே ஒற்றியூர் பற்றி இருந்தார் தாமே
பாரார் புகழப்படுவார் தாமே பழனை பதியா உடையார் தாமே
தீராத வல்வினை நோய் தீர்ப்பார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே

 மேல்

#2869
மாலை பிறை சென்னி வைத்தார் தாமே வண் கயிலை மா மலையை வந்தியாத
நீல கடல் சூழ் இலங்கை_கோனை நெரிய விரலால் அடர்த்தார் தாமே
பால் ஒத்த மேனி நிறத்தார் தாமே பழனை பதியா உடையார் தாமே
சீலத்தார் ஏத்தும் திறத்தார் தாமே திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே

 மேல்

 79. திருத்தலையாலங்காடு - திருத்தாண்டகம்

#2870
தொண்டர்க்கு தூ நெறியாய் நின்றான் தன்னை சூழ் நரகில் வீழாமே காப்பான் தன்னை
அண்டத்துக்கு அப்பாலைக்கு அப்பாலானை ஆதிரை நாள் ஆதரித்த அம்மான் தன்னை
முண்டத்தின் முளைத்து எழுந்த தீ ஆனானை மூ உருவத்து ஓர் உருவாய் முதலாய் நின்ற
தண்டத்தில் தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே

 மேல்

#2871
அக்கு இருந்த அரையானை அம்மான்-தன்னை அவுணர் புரம் ஒரு நொடியில் எரிசெய்தானை
கொக்கு இருந்த மகுடத்து எம் கூத்தன்-தன்னை குண்டலம் சேர் காதானை குழைவார் சிந்தை
புக்கு இருந்து போகாத புனிதன்-தன்னை புண்ணியனை எண்ண அரும் சீர் போகம் எல்லாம்
தக்கு இருந்த தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே

 மேல்

#2872
மெய் தவத்தை வேதத்தை வேத வித்தை விளங்கு இள மா மதி சூடும் விகிர்தன்-தன்னை
எய்த்து அவமே உழிதந்த ஏழையேனை இடர் கடலில் வீழாமே ஏற வாங்கி
பொய் தவத்தார் அறியாத நெறி நின்றானை புனல் கரந்திட்டு உமையொடு ஒருபாகம் நின்ற
தத்துவனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே

 மேல்

#2873
சிவன் ஆகி திசைமுகனாய் திருமால் ஆகி செழும் சுடராய் தீ ஆகி நீரும் ஆகி
புவன் ஆகி புவனங்கள் அனைத்தும் ஆகி பொன் ஆகி மணி ஆகி முத்தும் ஆகி
பவன் ஆகி பவனங்கள் அனைத்தும் ஆகி பசு ஏறி திரிவான் ஓர் பவனாய் நின்ற
தவன் ஆய தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே

 மேல்

#2874
கங்கை எனும் கடும் புனலை கரந்தான்-தன்னை கா மரு பூம் பொழில் கச்சி கம்பன்-தன்னை
அம் கையினில் மான் மறி ஒன்று ஏந்தினானை ஐயாறு மேயானை ஆரூரானை
பங்கம் இலா அடியார்க்கு பரிந்தான்-தன்னை பரிதிநியமத்தானை பாசூரானை
சங்கரனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே

 மேல்

#2875
விடம் திகழும் அரவு அரை மேல் வீக்கினானை விண்ணவர்க்கும் எண்ண அரிய அளவினானை
அடைந்தவரை அமர்_உலகம் ஆள்விப்பானை அம் பொன்னை கம்ப மா களிறு அட்டானை
மடந்தை ஒருபாகனை மகுடம்-தன் மேல் வார் புனலும் வாள் அரவும் மதியும் வைத்த
தடம் கடலை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே

 மேல்

#2876
விடை ஏறி கடை-தோறும் பலி கொள்வானை வீரட்டம் மேயானை வெண் நீற்றானை
முடை நாறும் முதுகாட்டில் ஆடலானை முன்னானை பின்னானை அ நாளானை
உடை ஆடை உரி தோலே உகந்தான்-தன்னை உமை இருந்த பாகத்துள் ஒருவன்-தன்னை
சடையானை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே

 மேல்

#2877
கரும்பு இருந்த கட்டி-தனை கனியை தேனை கன்றாப்பின் நடுதறியை காறையானை
இரும்பு அமர்ந்த மூ இலை வேல் ஏந்தினானை என்னானை தென் ஆனைக்காவான்-தன்னை
சுரும்பு அமரும் மலர் கொன்றை சூடினானை தூயானை தாய் ஆகி உலகுக்கு எல்லாம்
தரும் பொருளை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே

 மேல்

#2878
பண்டு அளவு நரம்பு ஓசை பயனை பாலை படு பயனை கடு வெளியை கனலை காற்றை
கண்ட அளவில் களி கூர்வார்க்கு எளியான்-தன்னை காரணனை நாரணனை கமலத்தோனை
எண் தள இல் என் நெஞ்சத்துள்ளே நின்ற எம்மானை கைம்மாவின் உரிவை பேணும்
தண்டு அரனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே

 மேல்

#2879
கைத்தலங்கள் இருபது உடை அரக்கர்_கோமான் கயிலை மலை அது-தன்னை கருதாது ஓடி
முத்து இலங்கு முடி துளங்க வளைகள் எற்றி முடுகுதலும் திரு விரல் ஒன்று அவன் மேல் வைப்ப
பத்து இலங்கு வாயாலும் பாடல் கேட்டு பரிந்து அவனுக்கு இராவணன் என்று ஈந்த நாம
தத்துவனை தலையாலங்காடன்-தன்னை சாராதே சால நாள் போக்கினேனே

 மேல்

 80. திருமாற்பேறு - திருத்தாண்டகம்

#2880
பாரானை பாரினது பயன் ஆனானை படைப்பு ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை
ஆராத இன்னமுதை அடியார்-தங்கட்கு அனைத்து உலகும் ஆனானை அமரர்_கோனை
கார் ஆரும் கண்டனை கயிலை வேந்தை கருதுவார் மனத்தானை காலன் செற்ற
சீரானை செல்வனை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே

 மேல்

#2881
விளைக்கின்ற நீர் ஆகி வித்தும் ஆகி விண்ணோடு மண் ஆகி விளங்கு செம்பொன்
துளைக்கின்ற துளை ஆகி சோதி ஆகி தூண்ட அரிய சுடர் ஆகி துளக்கு இல் வான் மேல்
முளைக்கின்ற கதிர் மதியும் அரவும் ஒன்றி முழங்கு ஒலி நீர் கங்கையொடு மூவாது என்றும்
திளைக்கின்ற சடையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே

 மேல்

#2882
மலைமகள்-தம்_கோன் அவனை மா நீர் முத்தை மரகதத்தை மா மணியை மல்கு செல்வ
கலை நிலவு கையானை கம்பன்-தன்னை காண்பு இனிய செழும் சுடரை கனக குன்றை
விலை பெரிய வெண் நீற்று மேனியானை மெய்யடியார் வேண்டுவதே வேண்டுவானை
சிலை நிலவு கரத்தானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே

 மேல்

#2883
உற்றானை உடல்-தனக்கு ஓர் உயிர் ஆனானை ஓங்காரத்து ஒருவனை அங்கு உமை ஓர்பாகம்
பெற்றானை பிஞ்ஞகனை பிறவாதானை பெரியனவும் அரியனவும் எல்லாம் முன்னே
கற்றானை கற்பனவும் தானே ஆய கச்சி ஏகம்பனை காலன் வீழ
செற்றானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே

 மேல்

#2884
நீறு ஆகி நீறு உமிழும் நெருப்பும் ஆகி நினைவு ஆகி நினைவு இனிய மலையான்மங்கை
கூறு ஆகி கூற்று ஆகி கோளும் ஆகி குணம் ஆகி குறையாத உவகை கண்ணீர்
ஆறாத ஆனந்தத்து அடியார் செய்த அநாசாரம் பொறுத்தருளி அவர் மேல் என்றும்
சீறாத பெருமானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே

 மேல்

#2885
மருவு இனிய மறைப்பொருளை மறைக்காட்டானை மறப்பிலியை மதி ஏந்து சடையான்-தன்னை
உரு நிலவும் ஒண் சுடரை உம்பரானை உரைப்பு இனிய தவத்தானை உலகின் வித்தை
கரு நிலவு கண்டனை காளத்தியை கருதுவார் மனத்தானை கல்வி-தன்னை
செரு நிலவு படையானை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே

 மேல்

#2886
பிறப்பானை பிறவாத பெருமையானை பெரியானை அரியானை பெண் ஆண் ஆய
நிறத்தானை நின்மலனை நினையாதாரை நினையானை நினைவோரை நினைவோன்-தன்னை
அறத்தானை அறவோனை ஐயன்-தன்னை அண்ணல்-தனை நண்ண அரிய அமரர் ஏத்தும்
திறத்தானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே

 மேல்

#2887
வானகத்தில் வளர் முகிலை மதியம்-தன்னை வணங்குவார் மனத்தானை வடிவு ஆர் பொன்னை
ஊனகத்தில் உறுதுணையை உலவாதானை ஒற்றியூர் உத்தமனை ஊழி கன்றை
கானகத்து கரும் களிற்றை காளத்தியை கருதுவார் கருத்தானை கருவை மூல
தேன் அகத்தில் இன் சுவையை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே

 மேல்

#2888
முற்றாத முழுமுதலை முளையை மொட்டை முழு மலரின் மூர்த்தியை முனியாது என்றும்
பற்று ஆகி பல் உயிர்க்கும் பரிவோன்-தன்னை பராபரனை பரஞ்சுடரை பரிவோர் நெஞ்சில்
உற்றானை உயர் கருப்பு சிலையோன் நீறாய் ஒள் அழல்-வாய் வேவ உறும் நோக்கத்தானை
செற்றானை திரிபுரங்கள் திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே

 மேல்

#2889
விரித்தானை நான்மறையோடு அங்கம் ஆறும் வெற்பு எடுத்த இராவணனை விரலால் ஊன்றி
நெரித்தானை நின்மலனை அம்மான்-தன்னை நிலா நிலவு செம் சடை மேல் நிறை நீர் கங்கை
தரித்தானை சங்கரனை சம்பு-தன்னை தரியலர்கள் புரம் மூன்றும் தழல்-வாய் வேவ
சிரித்தானை திகழ் ஒளியை திரு மாற்பேற்று எம் செம்பவள குன்றினை சென்று அடைந்தேன் நானே

 மேல்

 81. திருக்கோடிகா - திருத்தாண்டகம்

#2890
கண் தலம் சேர் நெற்றி இளம் காளை கண்டாய் கல் மதில் சூழ் கந்தமாதனத்தான் கண்டாய்
மண்டலம் சேர் மயக்கு அறுக்கும் மருந்து கண்டாய் மதில் கச்சி ஏகம்பம் மேயான் கண்டாய்
விண் தலம் சேர் விளக்கு ஒளியாய் நின்றான் கண்டாய் மீயச்சூர் பிரியாத விகிர்தன் கண்டாய்
கொண்டல் அம் சேர் கண்டத்து எம் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே

 மேல்

#2891
வண்டு ஆடு பூம் குழலாள்_பாகன் கண்டாய் மறைக்காட்டு உறையும் மணாளன் கண்டாய்
பண்டு ஆடும் பழவினை நோய் தீர்ப்பான் கண்டாய் பரலோக நெறி காட்டும் பரமன் கண்டாய்
செண்டு ஆடி அவுணர்புரம் செற்றான் கண்டாய் திரு ஆரூர் திரு மூலட்டானன் கண்டாய்
கொண்டாடும் அடியவர்-தம் மனத்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே

 மேல்

#2892
அலை ஆர்ந்த புனல் கங்கை சடையான் கண்டாய் அடியார்கட்கு ஆரமுதம் ஆனான் கண்டாய்
மலை ஆர்ந்த மட மங்கை_பங்கன் கண்டாய் வானோர்கள் முடிக்கு அணியாய் நின்றான் கண்டாய்
இலை ஆர்ந்த திரிசூல படையான் கண்டாய் ஏழ்உலகுமாய் நின்ற எந்தை கண்டாய்
கொலை ஆர்ந்த குஞ்சர தோல் போர்த்தான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே

 மேல்

#2893
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லான் கண்டாய் மயிலாடுதுறை இடமா மகிழ்ந்தான் கண்டாய்
புற்று ஆடு அரவு அணிந்த புனிதன் கண்டாய் பூந்துருத்தி பொய்யிலியாய் நின்றான் கண்டாய்
அற்றார்கட்கு அற்றானாய் நின்றான் கண்டாய் ஐயாறு அகலாத ஐயன் கண்டாய்
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே

 மேல்

#2894
வார் ஆர்ந்த வனமுலையாள்_பங்கன் கண்டாய் மாற்பேறு காப்பா மகிழ்ந்தான் கண்டாய்
போர் ஆர்ந்த மால் விடை ஒன்று ஊர்வான் கண்டாய் புகலூரை அகலாத புனிதன் கண்டாய்
நீர் ஆர்ந்த நிமிர் சடை ஒன்று உடையான் கண்டாய் நினைப்பார்-தம் வினை பாரம் இழிப்பான் கண்டாய்
கூர் ஆர்ந்த மூ இலை வேல் படையான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே

 மேல்

#2895
கடி மலிந்த மலர் கொன்றை சடையான் கண்டாய் கண் அப்ப விண் அப்பு கொடுத்தான் கண்டாய்
படி மலிந்த பல் பிறவி அறுப்பான் கண்டாய் பற்றற்றார் பற்றவனாய் நின்றான் கண்டாய்
அடி மலிந்த சிலம்பு அலம்ப திரிவான் கண்டாய் அமரர் கணம் தொழுது ஏத்தும் அம்மான் கண்டாய்
கொடி மலிந்த மதில் தில்லை கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே

 மேல்

#2896
உழை ஆடு கரதலம் ஒன்று உடையான் கண்டாய் ஒற்றியூர் ஒற்றியா உடையான் கண்டாய்
கழை ஆடு கழுக்குன்றம் அமர்ந்தான் கண்டாய் காளத்தி கற்பகமாய் நின்றான் கண்டாய்
இழை ஆடும் எண் புயத்த இறைவன் கண்டாய் என் நெஞ்சத்துள் நீங்கா எம்மான் கண்டாய்
குழை ஆட நடம் ஆடும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே

 மேல்

#2897
படம் ஆடு பன்னக கச்சு அசைத்தான் கண்டாய் பராய்த்துறையும் பாசூரும் மேயான் கண்டாய்
நடம் ஆடி ஏழ்உலகும் திரிவான் கண்டாய் நான்மறையின் பொருள் கண்டாய் நாதன் கண்டாய்
கடம் ஆடு களிறு உரித்த கண்டன் கண்டாய் கயிலாயம் மேவி இருந்தான் கண்டாய்
குடம் ஆடி இடம் ஆக கொண்டான் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே

 மேல்

 82. திருச்சாய்க்காடு - திருத்தாண்டகம்

#2898
வானத்து இள மதியும் பாம்பும் தன்னில் வளர் சடை மேல் ஆதரிப்ப வைத்தார் போலும்
தேனை திளைத்து உண்டு வண்டு பாடும் தில்லை நடம் ஆடும் தேவர் போலும்
ஞானத்தின் ஒண் சுடராய் நின்றார் போலும் நன்மையும் தீமையும் ஆனார் போலும்
தேன் ஒத்து அடியார்க்கு இனியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே

 மேல்

#2899
விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும் வியன் துருத்தி வேள்விக்குடியார் போலும்
அண்ணாமலை உறையும் அண்ணல் போலும் அதியரையமங்கை அமர்ந்தார் போலும்
பண் ஆர் களி வண்டு பாடி ஆடும் பராய்த்துறையுள் மேய பரமர் போலும்
திண் ஆர் புகார் முத்து அலைக்கும் தெண் நீர் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே

 மேல்

#2900
கான் இரிய வேழம் உரித்தார் போலும் காவிரிப்பூம்பட்டினத்து உள்ளார் போலும்
வான் இரிய வரு புரம் மூன்று எரித்தார் போலும் வட கயிலை மலை அது தன் இருக்கை போலும்
ஊன் இரிய தலை கலனா உடையார் போலும் உயர் தோணிபுரத்து உறையும் ஒருவர் போலும்
தேன் இரிய மீன் பாயும் தெண் நீர் பொய்கை திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே

 மேல்

#2901
ஊன் உற்ற வெண் தலை சேர் கையர் போலும் ஊழி பல கண்டு இருந்தார் போலும்
மான் உற்ற கரதலம் ஒன்று உடையார் போலும் மறைக்காட்டு கோடி மகிழ்ந்தார் போலும்
கான் உற்ற ஆடல் அமர்ந்தார் போலும் காமனையும் கண் அழலால் காய்ந்தார் போலும்
தேன் உற்ற சோலை திகழ்ந்து தோன்றும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே

 மேல்

#2902
கார் மல்கு கொன்றை அம் தாரார் போலும் காலனையும் ஓர் உதையால் கண்டார் போலும்
பார் மல்கி ஏத்தப்படுவார் போலும் பருப்பதத்தே பல் ஊழி நின்றார் போலும்
ஊர் மல்கு பிச்சைக்கு உழன்றார் போலும் ஓத்தூர் ஒருநாளும் நீங்கார் போலும்
சீர் மல்கு பாடல் உகந்தார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே

 மேல்

#2903
மா வாய் பிளந்து உகந்த மாலும் செய்ய மலரவனும் தாமேயாய் நின்றார் போலும்
மூவாத மேனி முதல்வர் போலும் முதுகுன்ற மூதூர் உடையார் போலும்
கோ ஆய முனிதன் மேல் வந்த கூற்றை குரை கழலால் அன்று குமைந்தார் போலும்
தேவாதிதேவர்க்கு அரியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே

 மேல்

#2904
கடு வெளியோடு ஓர் ஐந்தும் ஆனார் போலும் காரோணத்து என்றும் இருப்பார் போலும்
இடி குரல் வாய் பூத படையார் போலும் ஏகம்பம் மேவி இருந்தார் போலும்
படி ஒருவர் இல்லா படியார் போலும் பாண்டிக்கொடுமுடியும் தம் ஊர் போலும்
செடி படு நோய் அடியாரை தீர்ப்பார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே

 மேல்

#2905
விலை இலா ஆரம் சேர் மார்பர் போலும் வெண் நீறு மெய்க்கு அணிந்த விகிர்தர் போலும்
மலையினார் மங்கை_மணாளர் போலும் மாற்பேறு காப்பாய் மகிழ்ந்தார் போலும்
தொலைவிலார் புரம் மூன்றும் தொலைத்தார் போலும் சோற்றுத்துறை துருத்தி உள்ளார் போலும்
சிலையின் ஆர் செம் கண் அரவர் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே

 மேல்

#2906
அல்லல் அடியார்க்கு அறுப்பார் போலும் அமர்_உலகம் தம் அடைந்தார்க்கு ஆட்சி போலும்
நல்லமும் நல்லூரும் மேயார் போலும் நள்ளாறு நாளும் பிரியார் போலும்
முல்லை முகை நகையாள் பாகர் போலும் முன்னமே தோன்றி முளைத்தார் போலும்
தில்லை நடம் ஆடும் தேவர் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே

 மேல்

#2907
உறைப்பு உடைய இராவணன் பொன் மலையை கையால் ஊக்கம்செய்து எடுத்தலுமே உமையாள் அஞ்ச
நிறை பெரும் தோள் இருபதும் பொன் முடிகள் பத்தும் நிலம் சேர விரல் வைத்த நிமலர் போலும்
பிறை பிளவு சடைக்கு அணிந்த பெம்மான் போலும் பெண் ஆண் உரு ஆகி நின்றார் போலும்
சிறப்பு உடைய அடியார்கட்கு இனியார் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே

 மேல்

 83. திருப்பாசூர் - திருத்தாண்டகம்

#2908
விண் ஆகி நிலன் ஆகி விசும்பும் ஆகி வேலை சூழ் ஞாலத்தார் விரும்புகின்ற
எண் ஆகி எழுத்து ஆகி இயல்பும் ஆகி ஏழ்உலகும் தொழுது ஏத்தி காண நின்ற
கண் ஆகி மணி ஆகி காட்சி ஆகி காதலித்து அங்கு அடியார்கள் பரவ நின்ற
பண் ஆகி இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே

 மேல்

#2909
வேதம் ஓர் நான்காய் ஆறு அங்கம் ஆகி விரிக்கின்ற பொருட்கு எல்லாம் வித்தும் ஆகி
கூதலாய் பொழிகின்ற மாரி ஆகி குவலயங்கள் முழுதுமாய் கொண்டல் ஆகி
காதலால் வானவர்கள் போற்றி என்று கடி மலர்கள் அவை தூவி ஏத்த நின்ற
பாதி ஓர் மாதினனை பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே

 மேல்

#2910
தட வரைகள் ஏழுமாய் காற்றுமாய் தீயாய் தண் விசும்பாய் தண் விசும்பின் உச்சி ஆகி
கடல் வலயம் சூழ்ந்தது ஒரு ஞாலம் ஆகி காண்கின்ற கதிரவனும் மதியும் ஆகி
குட முழவ சதி வழியே அனல் கை ஏந்தி கூத்து ஆட வல்ல குழகன் ஆகி
பட அரவு ஒன்று அது ஆட்டி பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே

 மேல்

#2911
நீர் ஆரும் செம் சடை மேல் அரவம் கொன்றை நிறை மதியம் உடன் சூடி நீதியாலே
சீர் ஆரும் மறை ஓதி உலகம் உய்ய செழும் கடலை கடைந்த கடல் நஞ்சம் உண்ட
கார் ஆரும் கண்டனை கச்சி மேய கண்நுதலை கடல் ஒற்றி கருதினானை
பாரோரும் விண்ணோரும் பரசும் பாசூர் பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே

 மேல்

#2912
வேடனாய் விசயன்-தன் வியப்பை காண்பான் வில் பிடித்து கொம்பு உடைய ஏனத்தின் பின்
கூடினார் உமை அவளும் கோலம் கொள்ள கொலை பகழி உடன் கோத்து கோர பூசல்
ஆடினார் பெரும் கூத்து காளி காண அரு மறையோடு ஆறு அங்கம் ஆய்ந்துகொண்டு
பாடினார் நால் வேதம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே

 மேல்

#2913
புத்தியினால் சிலந்தியும் தன் வாயின் நூலால் பொது பந்தர் அது இழைத்து சருகால் மேய்ந்த
சித்தியினால் அரசாண்டு சிறப்பு செய்ய சிவகணத்து புக பெய்தார் திறலால் மிக்க
வித்தகத்தால் வெள்ளானை விள்ளா அன்பு விரவியவா கண்டு அதற்கு வீடு காட்டி
பத்தர்களுக்கு இன் அமுது ஆம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே

 மேல்

#2914
இணை ஒருவர் தாம் அல்லால் யாரும் இல்லார் இடைமருதோடு ஏகம்பத்து என்றும் நீங்கார்
அணைவு அரியர் யாவர்க்கும் ஆதிதேவர் அருமந்த நன்மை எலாம் அடியார்க்கு ஈவர்
தணல் முழுகு பொடி ஆடும் செக்கர் மேனி தத்துவனை சாந்து அகிலின் அளறு தோய்ந்த
பணைமுலையாள்_பாகனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே

 மேல்

#2915
அண்டவர்கள் கடல் கடைய அதனுள் தோன்றி அதிர்ந்து எழுந்த ஆலாலம் வேலை ஞாலம்
எண் திசையும் சுடுகின்ற ஆற்றை கண்டு இமைப்பளவில் உண்டு இருண்ட கண்டர் தொண்டர்
வண்டு படு மது மலர்கள் தூவி நின்று வானவர்கள் தானவர்கள் வணங்கி ஏத்தும்
பண்டரங்க வேடனை எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே

 மேல்

#2916
ஞாலத்தை உண்ட திருமாலும் மற்றை நான்முகனும் அறியாத நெறியார் கையில்
சூலத்தால் அந்தகனை சுருள கோத்து தொல் உலகில் பல் உயிரை கொல்லும் கூற்றை
காலத்தால் உதைசெய்து காதல்செய்த அந்தணனை கைக்கொண்ட செவ்வான்_வண்ணர்
பால் ஒத்த வெண் நீற்றர் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே

 மேல்

#2917
வேந்தன் நெடு முடி உடைய அரக்கர்_கோமான் மெல்லியலாள் உமை வெருவ விரைந்திட்டு ஓடி
சாந்தம் என நீறு அணிந்தான் கயிலை வெற்பை தட கைகளால் எடுத்திடலும் தாளால் ஊன்றி
ஏந்து திரள் திண் தோளும் தலைகள் பத்தும் இறுத்து அவன்-தன் இசை கேட்டு இரக்கம் கொண்ட
பாந்தள் அணி சடை முடி எம் பாசூர் மேய பரஞ்சுடரை கண்டு அடியேன் உய்ந்த ஆறே

 மேல்

 84. திருச்செங்காட்டங்குடி - திருத்தாண்டகம்

#2918
பெருந்தகையை பெறற்கு அரிய மாணிக்கத்தை பேணி நினைந்து எழுவார்-தம் மனத்தே மன்னி
இருந்த மணி விளக்கு அதனை நின்ற பூ மேல் எழுந்தருளி இருந்தானை எண் தோள் வீசி
அரும் திறல் மா நடம் ஆடும் அம்மான்-தன்னை அம் கனக சுடர் குன்றை அன்று ஆலின் கீழ்
திருந்து மறைப்பொருள் நால்வர்க்கு அருள்செய்தானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே

 மேல்

#2919
துங்க நகத்தால் அன்றி தொலையா வென்றி தொகு திறல் அ இரணியனை ஆகம் கீண்ட
அம் கனக திருமாலும் அயனும் தேடும் ஆர் அழலை அநங்கன் உடல் பொடியாய் வீழ்ந்து
மங்க நக தான் வல்ல மருந்து-தன்னை வண் கயிலை மா மலை மேல் மன்னி நின்ற
செம் கனக திரள் தோள் எம் செல்வன்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே

 மேல்

#2920
உருகு மனத்து அடியவர்கட்கு ஊறும் தேனை உம்பர் மணி முடிக்கு அணியை உண்மை நின்ற
பெருகு நிலை குறியாளர் அறிவு-தன்னை பேணிய அந்தணர்க்கு மறைப்பொருளை பின்னும்
முருகு விரி நறு மலர் மேல் அயற்கும் மாற்கும் முழுமுதலை மெய் தவத்தோர் துணையை வாய்த்த
திருகு குழல் உமைநங்கை_பங்கன் தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே

 மேல்

#2921
கந்த மலர் கொன்றை அணி சடையான்-தன்னை கதிர் விடு மா மணி பிறங்கு கனக சோதி
சந்த மலர் தெரிவை ஒருபாகத்தானை சராசர நல் தாயானை நாயேன் முன்னை
பந்தம் அறுத்து ஆள் ஆக்கி பணி கொண்டு ஆங்கே பன்னிய நூல் தமிழ்மாலை பாடுவித்து என்
சிந்தை மயக்கு அறுத்த திரு அருளினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே

 மேல்

#2922
நஞ்சு அடைந்த கண்டத்து நாதன்-தன்னை நளிர் மலர் பூங்கணைவேளை நாசம் ஆக
வெம் சின தீ விழித்தது ஒரு நயனத்தானை வியன் கெடில வீரட்டம் மேவினானை
மஞ்சு அடுத்த நீள் சோலை மாட வீதி மதில் ஆரூர் இடம்கொண்ட மைந்தன்-தன்னை
செம் சினத்த திரிசூல படையான்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே

 மேல்

#2923
கன்னியை அங்கு ஒரு சடையில் கரந்தான்-தன்னை கடவூரில் வீரட்டம் கருதினானை
பொன்னி சூழ் ஐயாற்று எம் புனிதன்-தன்னை பூந்துருத்தி நெய்த்தானம் பொருந்தினானை
பன்னிய நான்மறை விரிக்கும் பண்பன்-தன்னை பரிந்து இமையோர் தொழுது ஏத்தி பரனே என்று
சென்னி மிசை கொண்டு அணி சேவடியினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே

 மேல்

#2924
எத்திக்குமாய் நின்ற இறைவன்-தன்னை ஏகம்பம் மேயானை இல்லா தெய்வம்
பொத்தி தம் மயிர் பறிக்கும் சமணர் பொய்யில் புக்கு அழுந்தி வீழாமே போத வாங்கி
பத்திக்கே வழி காட்டி பாவம் தீர்த்து பண்டை வினை பயம் ஆன எல்லாம் போக்கி
தித்தித்து என் மனத்துள்ளே ஊறும் தேனை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே

 மேல்

#2925
கல்லாதார் மனத்து அணுகா கடவுள்-தன்னை கற்றார்கள் உற்று ஓரும் காதலானை
பொல்லாத நெறி உகந்தார் புரங்கள் மூன்றும் பொன்றி விழ அன்று பொரு சரம் தொட்டானை
நில்லாத நிண குரம்பை பிணக்கம் நீங்க நிறை தவத்தை அடியேற்கு நிறைவித்து என்றும்
செல்லாத செந்நெறிக்கே செல்விப்பானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே

 மேல்

#2926
அரிய பெரும்பொருள் ஆகி நின்றான்-தன்னை அலை கடலில் ஆலாலம் அமுதுசெய்த
கரியது ஒரு கண்டத்து செம் கண் ஏற்று கதிர் விடு மா மணி பிறங்கு காட்சியானை
உரிய பல தொழில் செய்யும் அடியார்-தங்கட்கு உலகம் எலாம் முழுது அளிக்கும் உலப்பிலானை
தெரிவை ஒருபாகத்து சேர்த்தினானை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே

 மேல்

#2927
போர் அரவம் மால் விடை ஒன்று ஊர்தியானை புறம்பயமும் புகலூரும் மன்னினானை
நீர் அரவ செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்தானை நிமலன்-தன்னை
பேர் அரவ புட்பகத்தேர் உடைய வென்றி பிறங்கு ஒளி வாள் அரக்கன் முடி இடிய செற்ற
சீர் அரவ கழலானை செல்வன்-தன்னை செங்காட்டங்குடி அதனில் கண்டேன் நானே

 மேல்

 85. திருமுண்டீச்சரம் - திருத்தாண்டகம்

#2928
ஆர்த்தான் காண் அழல் நாகம் அரைக்கு நாணா அடியவர்கட்கு அன்பன் காண் ஆனை தோலை
போர்த்தான் காண் புரி சடை மேல் புனல் ஏற்றான் காண் புறங்காட்டில் ஆடல் புரிந்தான்தான் காண்
காத்தான் காண் உலகு ஏழும் கலங்கா வண்ணம் கனை கடல்-வாய் நஞ்சு அதனை கண்டத்துள்ளே
சேர்ந்தான் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே

 மேல்

#2929
கருத்தன் காண் கமலத்தோன் தலையில் ஒன்றை காய்ந்தான் காண் பாய்ந்த நீர் பரந்த சென்னி
ஒருத்தன் காண் உமையவள் ஓர்பாகத்தான் காண் ஓர் உருவின் மூ உருவாய் ஒன்றாய் நின்ற
விருத்தன் காண் விண்ணவர்க்கும் மேல் ஆனான் காண் மெய் அடியார் உள்ளத்தே விரும்பி நின்ற
திருத்தன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே

 மேல்

#2930
நம்பன் காண் நரை விடை ஒன்று ஏறினான் காண் நாதன் காண் கீதத்தை நவிற்றினான் காண்
இன்பன் காண் இமையா முக்கண்ணினான் காண் ஏகற்று மனம் உருகும் அடியார்-தங்கட்கு
அன்பன் காண் ஆர் அழல் அது ஆடினான் காண் அவன் இவன் என்று யாவர்க்கும் அறிய ஒண்ணா
செம்பொன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே

 மேல்

#2931
மூவன் காண் மூவர்க்கும் முதல் ஆனான் காண் முன்னுமாய் பின்னுமாய் முடிவு ஆனான் காண்
காவன் காண் உலகுக்கு ஓர் கண் ஆனான் காண் கங்காளன் காண் கயிலை மலையினான் காண்
ஆவன் காண் ஆ அகத்து அஞ்சு ஆடினான் காண் ஆர் அழலாய் அயற்கு அரிக்கும் அறிய ஒண்ணா
தேவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே

 மேல்

#2932
கானவன் காண் கானவனாய் பொருதான்தான் காண் கனல் ஆட வல்லான் காண் கையில் ஏந்தும்
மானவன் காண் மறை நான்கும் ஆயினான் காண் வல் ஏறு ஒன்று அது ஏற வல்லான்தான் காண்
ஊனவன் காண் உலகத்துக்கு உயிர் ஆனான் காண் உரை அவன் காண் உணர்வு அவன் காண் உணர்ந்தார்க்கு என்றும்
தேன் அவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே

 மேல்

#2933
உற்றவன் காண் உறவு எல்லாம் ஆவான் தான் காண் ஒழிவு அற நின்ற எங்கும் உலப்பிலான் காண்
புற்று அரவே ஆடையுமாய் பூணும் ஆகி புறங்காட்டில் எரி ஆடல் புரிந்தான்தான் காண்
நல் தவன் காண் அடி அடைந்த மாணிக்கு ஆக நணுகியது ஓர் பெரும் கூற்றை சேவடியினால்
செற்றவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே

 மேல்

#2934
உதைத்தவன் காண் உணராத தக்கன் வேள்வி உருண்டு ஓட தொடர்ந்து அருக்கன் பல்லை எல்லாம்
தகர்த்தவன் காண் தக்கன்-தன் தலையை செற்ற தலையவன் காண் மலைமகள் ஆம் உமையை சால
மதிப்பு ஒழிந்த வல் அமரர் மாண்டார் வேள்வி வந்து அவி உண்டவரோடும் அதனை எல்லாம்
சிதைத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே

 மேல்

#2935
உரிந்த உடையார் துவரால் உடம்பை மூடி உழிதரும் அ ஊமர் அவர் உணரா வண்ணம்
பரிந்தவன் காண் பனி வரை மீ பண்டம் எல்லாம் பறித்து உடனே நிரந்து வரு பாய் நீர் பெண்ணை
நிரந்து வரும் இரு கரையும் தடவா ஓடி நின்மலனை வலம்கொண்டு நீள நோக்கி
திரிந்து உலவு திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே

 மேல்

#2936
அறுத்தவன் காண் அடியவர்கள் அல்லல் எல்லாம் அரும்பொருளாய் நின்றவன் காண் அநங்கன் ஆகம்
மறுத்தவன் காண் மலை-தன்னை மதியாது ஓடி மலைமகள்-தன் மனம் நடுங்க வானோர் அஞ்ச
கறுத்தவனாய் கயிலாயம் எடுத்தோன் கையும் கதிர் முடியும் கண்ணும் பிதுங்கி ஓட
செறுத்தவன் காண் திரு முண்டீச்சுரத்து மேய சிவலோகன் காண் அவன் என் சிந்தையானே

 மேல்

 86. திருவாலம்பொழில் - திருத்தாண்டகம்

#2937
கரு ஆகி கண்நுதலாய் நின்றான் தன்னை கமலத்தோன் தலை அரிந்த காபாலியை
உரு ஆர்ந்த மலைமகள் ஓர்பாகத்தானை உணர்வு எலாம் ஆனானை ஓசை ஆகி
வருவானை வலஞ்சுழி எம்பெருமான்-தன்னை மறைக்காடும் ஆவடுதண்துறையும் மேய
திருவானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே

 மேல்

#2938
உரித்தானை களிறு அதன் தோல் போர்வை ஆக உடையானை உடை புலியின் அதளே ஆக
தரித்தானை சடை அதன் மேல் கங்கை அங்கை தழல் உருவை விடம் அமுதா உண்டு இது எல்லாம்
பரித்தானை பவள மால் வரை அன்னானை பாம்புஅணையான் தனக்கு அன்று அங்கு ஆழி நல்கி
சிரித்தானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே

 மேல்

#2939
உரு மூன்றாய் உணர்வின்-கண் ஒன்று ஆனானை ஓங்கார மெய்ப்பொருளை உடம்பிலுள்ளால்
கரு ஈன்ற வெங்களவை அறிவான்-தன்னை காலனை தன் கழல் அடியால் காய்ந்து மாணிக்கு
அருள் ஈன்ற ஆரமுதை அமரர்_கோனை அள் ஊறி எம்பெருமான் என்பார்க்கு என்றும்
திரு ஈன்ற தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே

 மேல்

#2940
பார் முழுதாய் விசும்பு ஆகி பாதாளமாம் பரம்பரனை சுரும்பு அமரும் குழலாள் பாகத்து
ஆரமுதாம் அணி தில்லை கூத்தன்-தன்னை வாட்போக்கி அம்மானை எம்மான் என்று
வாரம் அது ஆம் அடியார்க்கு வாரம் ஆகி வஞ்சனை செய்வார்க்கு என்றும் வஞ்சன் ஆகும்
சீர் அரசை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே

 மேல்

#2941
வரை ஆர்ந்த மடமங்கை_பங்கன்-தன்னை வானவர்க்கும் வானவனை மணியை முத்தை
அரை ஆர்ந்த புலி தோல் மேல் அரவம் ஆர்த்த அம்மானை தம்மானை அடியார்க்கு என்றும்
புரை ஆர்ந்த கோவணத்து எம் புனிதன்-தன்னை பூந்துருத்தி மேயானை புகலூரானை
திரை ஆர்ந்த தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே

 மேல்

#2942
விரிந்தானை குவிந்தானை வேத வித்தை வியன் பிறப்போடு இறப்பு ஆகி நின்றான்-தன்னை
அரிந்தானை சலந்தரன்-தன் உடலம் வேறா ஆழ் கடல் நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்ய
பரிந்தானை பல் அசுரர் புரங்கள் மூன்றும் பாழ்படுப்பான் சிலை மலை நாண் ஏற்றி அம்பு
தெரிந்தானை தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே

 மேல்

#2943
பொல்லாத என் அழுக்கில் புகுவான் என்னை புறம்புறமே சோதித்த புனிதன்-தன்னை
எல்லாரும் தன்னையே இகழ அ நாள் இடு பலி என்று அகம் திரியும் எம்பிரானை
சொல்லாதார் அவர் தம்மை சொல்லாதானை தொடர்ந்து தன் பொன் அடியே பேணுவாரை
செல்லாத நெறி செலுத்த வல்லான்-தன்னை திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே

 மேல்

#2944
ஐம் தலைய நாகஅணை கிடந்த மாலோடு அயன் தேடி நாட அரிய அம்மான்-தன்னை
பந்து அணவு மெல்விரலாள்_பாகத்தானை பராய்த்துறையும் வெண்காடும் பயின்றான்-தன்னை
பொந்து உடைய வெண் தலையில் பலி கொள்வானை பூவணமும் புறம்பயமும் பொருந்தினானை
சிந்திய வெம் தீவினைகள் தீர்ப்பான்-தன்னை திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே

 மேல்

#2945
கையில் உண்டு உழல்வாரும் சாக்கியரும் கல்லாத வன் மூடர்க்கு அல்லாதானை
பொய்யிலாதவர்க்கு என்றும் பொய்யிலானை பூண் நாகம் நாண் ஆக பொருப்பு வில்லா
கையின் ஆர் அம்பு எரி கால் ஈர்க்கு கோலா கடும் தவத்தோர் நெடும் புரங்கள் கனல்-வாய் வீழ்த்த
செய்யின் ஆர் தென் பரம்பைக்குடியில் மேய திரு ஆலம்பொழிலானை சிந்தி நெஞ்சே

 மேல்

 87. திருச்சிவபுரம் - திருத்தாண்டகம்

#2946
வானவன் காண் வானவர்க்கும் மேல் ஆனான் காண் வடமொழியும் தென்தமிழும் மறைகள் நான்கும்
ஆனவன் காண் ஆன் ஐந்தும் ஆடினான் காண் ஐயன் காண் கையில் அனல் ஏந்தி ஆடும்
கானவன் காண் கானவனுக்கு அருள்செய்தான் காண் கருதுவார் இதயத்து கமலத்து ஊறும்
தேன் அவன் காண் சென்று அடையா செல்வன்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே

 மேல்

#2947
நக்கன் காண் நக்க அரவம் அரையில் ஆர்த்த நாதன் காண் பூத கணம் ஆட ஆடும்
சொக்கன் காண் கொக்கு இறகு சூடினான் காண் துடி_இடையாள் துணை முலைக்கு சேர்வு அது ஆகும்
பொக்கன் காண் பொக்கணத்த வெண் நீற்றான் காண் புவனங்கள் மூன்றினுக்கும் பொருளாய் நின்ற
திக்கன் காண் செக்கர் அது திகழும் மேனி சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே

 மேல்

#2948
வம்பின் மலர் குழல் உமையாள்_மணவாளன் காண் மலரவன் மால் காண்பு அரிய மைந்தன்தான் காண்
கம்ப மத கரி பிளிற உரிசெய்தோன் காண் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டத்தோன் காண்
அம்பர் நகர் பெரும் கோயில் அமர்கின்றான் காண் அயவந்தி உள்ளான் காண் ஐயாறன் காண்
செம்பொன் என திகழ்கின்ற உருவத்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே

 மேல்

#2949
பித்தன் காண் தக்கன்-தன் வேள்வி எல்லாம் பீடு அழிய சாடி அருள்கள்செய்த
முத்தன் காண் முத்தீயும் ஆயினான் காண் முனிவர்க்கும் வானவர்க்கும் முதலாய் மிக்க
அத்தன் காண் புத்தூரில் அமர்ந்தான்தான் காண் அரிசில்பெருந்துறையே ஆட்சி கொண்ட
சித்தன் காண் சித்தீச்சுரத்தான்தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே

 மேல்

#2950
தூயவன் காண் நீறு துதைந்த மேனி துளங்கும் பளிங்கு அனைய சோதியான் காண்
தீ அவன் காண் தீ அவுணர் புரம் செற்றான் காண் சிறு மான் கொள் செங்கை எம்பெருமான்தான் காண்
ஆயவன் காண் ஆரூரில் அம்மான்தான் காண் அடியார்கட்கு ஆரமுதம் ஆயினான் காண்
சேயவன் காண் சேம நெறி ஆயினான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே

 மேல்

#2951
பார் அவன் காண் பார்-அதனில் பயிர் ஆனான் காண் பயிர் வளர்க்கும் துளி அவன் காண் துளியில் நின்ற
நீர் அவன் காண் நீர் சடை மேல் நிகழ்வித்தான் காண் நில வேந்தர் பரிசு ஆக நினைவுற்று ஓங்கும்
பேரவன் காண் பிறை எயிற்று வெள்ளை பன்றி பிரியாது பல நாளும் வழிபட்டு ஏத்தும்
சீரவன் காண் சீர் உடைய தேவர்க்கு எல்லாம் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே

 மேல்

#2952
வெய்யவன் காண் வெய்ய கனல் ஏந்தினான் காண் வியன் கெடில வீரட்டம் மேவினான் காண்
மெய்யவன் காண் பொய்யர் மனம் விரவாதான் காண் வீணையோடு இசைந்த மிகு பாடல் மிக்க
கையவன் காண் கையில் மழு ஏந்தினான் காண் காமன் அங்கம் பொடி விழித்த கண்ணினான் காண்
செய்யவன் காண் செய்யவளை மாலுக்கு ஈந்த சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே

 மேல்

#2953
கலை ஆரும் நூல் அங்கம் ஆயினான் காண் கலை பயிலும் கருத்தன் காண் திருத்தம் ஆகி
மலை ஆகி மறி கடல் ஏழ் சூழ்ந்து நின்ற மண் ஆகி விண் ஆகி நின்றான்தான் காண்
தலை ஆய மலை எடுத்த தகவிலோனை தகர்ந்து விழ ஒரு விரலால் சாதித்து ஆண்ட
சிலை ஆரும் மடமகள் ஓர்கூறன் தான் காண் சிவன் அவன் காண் சிவபுரத்து எம் செல்வன்தானே

 மேல்

 88. திருவோமாம்புலியூர் - திருத்தாண்டகம்

#2954
ஆர் ஆரும் மூ இலை வேல் அங்கையானை அலை கடல் நஞ்சு அயின்றானை அமரர் ஏத்தும்
ஏர் ஆரும் மதி பொதியும் சடையினானை எழு பிறப்பும் எனை ஆளா உடையான்-தன்னை
ஊர் ஆரும் பட நாகம் ஆட்டுவானை உயர் புகழ் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும்
சீர் ஆரும் வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே

 மேல்

#2955
ஆதியான் அரி அயன் என்று அறிய ஒண்ணா அமரர் தொழும் கழலானை அமலன்-தன்னை
சோதி மதி கலை தொலைய தக்கன் எச்சன் சுடர் இரவி அயில் எயிறு தொலைவித்தானை
ஓதி மிக அந்தணர்கள் எரி மூன்றும் ஓம்பும் உயர் புகழ் ஆர்தரும் ஓமாம்புலியூர் மன்னும்
தீது இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே

 மேல்

#2956
வரும் மிக்க மத யானை உரித்தான்-தன்னை வானவர்_கோன் தோள் அனைத்தும் மடிவித்தானை
தரு மிக்க குழல் உமையாள்_பாகன்-தன்னை சங்கரன் எம்பெருமானை தரணி-தன் மேல்
உரு மிக்க மணி மாடம் நிலாவு வீதி உத்தமர் வாழ்தரும் ஓமாம்புலியூர் மன்னும்
திரு மிக்க வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே

 மேல்

#2957
அன்றினவர் புரம் மூன்றும் பொடியாய் வேவ அழல் விழித்த கண்ணானை அமரர்_கோனை
வென்றி மிகு காலன் உயிர் பொன்றி வீழ விளங்கு திருவடி எடுத்த விகிர்தன்-தன்னை
ஒன்றிய சீர் இருபிறப்பர் முத்தீ ஓம்பும் உயர் புகழ் நான்மறை ஓமாம்புலியூர் நாளும்
தென்றல் மலி வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே

 மேல்

#2958
பாங்கு உடைய எழில் அங்கி அருச்சனை முன் விரும்ப பரிந்து அவனுக்கு அருள்செய்த பரமன்-தன்னை
பாங்கு இலா நரகு அதனில் தொண்டர் ஆனார் பாராத வகை பண்ண வல்லான்-தன்னை
ஓங்கு மதில் புடை தழுவும் எழில் ஓமாம்புலியூர் உயர் புகழ் அந்தணர் ஏத்த உலகர்க்கு என்றும்
தீங்கு இல் திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே

 மேல்

#2959
அரும் தவத்தோர் தொழுது ஏத்தும் அம்மான்-தன்னை ஆராத இன்னமுதை அடியார்-தம் மேல்
வரும் துயரம் தவிர்ப்பானை உமையாள் நங்கை மணவாள நம்பியை என் மருந்து-தன்னை
பொருந்து புனல் தழுவு வயல் நிலவு துங்க பொழில் கெழுவுதரும் ஓமாம்புலியூர் நாளும்
திருந்து திரு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே

 மேல்

#2960
மலையானை வரும் மலை அன்று உரிசெய்தானை மறையானை மறையாலும் அறிய ஒண்ணா
கலையானை கலை ஆரும் கையினானை கடிவானை அடியார்கள் துயரம் எல்லாம்
உலையாத அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூர் எம் உத்தமனை புரம் மூன்று எய்த
சிலையானை வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே

 மேல்

#2961
சேர்ந்து ஓடும் மணி கங்கை சூடினானை செழு மதியும் படஅரவும் உடன்வைத்தானை
சார்ந்தோர்கட்கு இனியானை தன் ஒப்பு இல்லா தழல் உருவை தலைமகனை தகை நால் வேதம்
ஓர்ந்து ஓதி பயில்வார் வாழ்தரும் ஓமாம்புலியூர் உள்ளானை கள்ளாத அடியார் நெஞ்சில்
சேர்ந்தானை வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே

 மேல்

#2962
வார் கெழுவு முலை உமையாள் வெருவ அன்று மலை எடுத்த வாள் அரக்கன் தோளும் தாளும்
ஏர் கெழுவு சிரம் பத்தும் இறுத்து மீண்டே இன்னிசை கேட்டு இருந்தானை இமையோர்_கோனை
பார் கெழுவு புகழ் மறையோர் பயிலும் மாட பைம் பொழில் சேர்தரும் ஓமாம்புலியூர் மன்னும்
சீர் கெழுவு வடதளி எம் செல்வன்-தன்னை சேராதே திகைத்து நாள் செலுத்தினேனே

 மேல்

 89. திருஇன்னம்பர் - திருத்தாண்டகம்

#2963
அல்லி மலர் நாற்றத்து உள்ளார் போலும் அன்புடையார் சிந்தை அகலார் போலும்
சொல்லின் அரு மறைகள் தாமே போலும் தூ நெறிக்கு வழி காட்டும் தொழிலார் போலும்
வில்லின் புரம் மூன்று எரித்தார் போலும் வீங்கு இருளும் நல் வெளியும் ஆனார் போலும்
எல்லி நடம் ஆட வல்லார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே

 மேல்

#2964
கோழிக்கொடியோன்-தன் தாதை போலும் கொம்பனாள் பாகம் குளிர்ந்தார் போலும்
ஊழி முதல்வரும் தாமே போலும் உள்குவார் உள்ளத்தின் உள்ளார் போலும்
ஆழி தேர் வித்தகரும் தாமே போலும் அடைந்தவர்கட்கு அன்பராய் நின்றார் போலும்
ஏழு பிறவிக்கும் தாமே போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே

 மேல்

#2965
தொண்டர்கள்-தம் தகவின் உள்ளார் போலும் தூ நெறிக்கும் தூ நெறியாய் நின்றார் போலும்
பண்டு இருவர் காணா படியார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும்
கண்டம் இறையே கறுத்தார் போலும் காமனையும் காலனையும் காய்ந்தார் போலும்
இண்டை சடை சேர் முடியார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே

 மேல்

#2966
வானத்து இளம் திங்கள் கண்ணி-தன்னை வளர் சடை மேல் வைத்து உகந்த மைந்தர் போலும்
ஊன் ஒத்த வேல் ஒன்று உடையார் போலும் ஒளி நீறு பூசும் ஒருவர் போலும்
தானத்தின் முப்பொழுதும் தாமே போலும் தம்மின் பிறர் பெரியார் இல்லை போலும்
ஏனத்து எயிறு இலங்க பூண்டார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே

 மேல்

#2967
சூழும் துயரம் அறுப்பார் போலும் தோற்றம் இறுதியாய் நின்றார் போலும்
ஆழும் கடல் நஞ்சை உண்டார் போலும் ஆடல் உகந்த அழகர் போலும்
தாழ்வு இல் மனத்தேனை ஆளாக்கொண்டு தன்மை அளித்த தலைவர் போலும்
ஏழு பிறப்பும் அறுப்பார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே

 மேல்

#2968
பாதத்து அணையும் சிலம்பர் போலும் பார் ஊர் விடை ஒன்று உடையார் போலும்
பூத படை ஆள் புனிதர் போலும் பூம் புகலூர் மேய புராணர் போலும்
வேதப்பொருளாய் விளைவார் போலும் வேடம் பரவி திரியும் தொண்டர்
ஏதப்படா வண்ணம் நின்றார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே

 மேல்

#2969
பல் ஆர் தலை ஓட்டில் ஊணார் போலும் பத்தர்கள்-தம் சித்தத்து இருந்தார் போலும்
கல்லாதார் காட்சிக்கு அரியார் போலும் கற்றவர்கள் ஏதம் களைவார் போலும்
பொல்லாத பூத படையார் போலும் பொரு கடலும் ஏழ்மலையும் தாமே போலும்
எல்லாரும் ஏத்த தகுவார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே

 மேல்

#2970
மட்டு மலியும் சடையார் போலும் மாதை ஓர்பாகம் உடையார் போலும்
கட்டம் பிணிகள் தவிர்ப்பார் போலும் காலன்-தன் வாழ்நாள் கழிப்பார் போலும்
நட்டம் பயின்று ஆடும் நம்பர் போலும் ஞாலம் எரி நீர் வெளி கால் ஆனார் போலும்
எட்டு திசைகளும் தாமே போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே

 மேல்

#2971
கரு உற்ற காலத்தே என்னை ஆண்டு கழல் போது தந்து அளித்த கள்வர் போலும்
செருவில் புரம் மூன்றும் அட்டார் போலும் தேவர்க்கும் தேவர் ஆம் செல்வர் போலும்
மருவில் பிரியாத மைந்தர் போலும் மலர் அடிகள் நாடி வணங்கலுற்ற
இருவர்க்கு ஒருவராய் நின்றார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே

 மேல்

#2972
அலங்கல் சடை தாழ ஐயம் ஏற்று அரவம் அரை ஆர்க்க வல்லார் போலும்
வலங்கை மழு ஒன்று உடையார் போலும் வான் தக்கன் வேள்வி சிதைத்தார் போலும்
விலங்கல் எடுத்து உகந்த வெற்றியானை விறல் அழித்து மெய் நரம்பால் கீதம் கேட்டு அன்று
இலங்கு சுடர் வாள் கொடுத்தார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே

 மேல்

 90. திருக்கஞ்சனூர் - திருத்தாண்டகம்

#2973
மூ இலை நல் சூலம் வலன் ஏந்தினானை மூன்று சுடர் கண்ணானை மூர்த்தி-தன்னை
நாவலனை நரை விடை ஒன்று ஏறுவானை நால் வேதம் ஆறு அங்கம் ஆயினானை
ஆவினில் ஐந்து உகந்தானை அமரர்_கோவை அயன் திருமால் ஆனானை அனலோன் போற்றும்
காவலனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே

 மேல்

#2974
தலை ஏந்து கையானை என்பு ஆர்த்தானை சவம் தாங்கு தோளானை சாம்பலானை
குலை ஏறு நறும் கொன்றை முடி மேல் வைத்து கோள் நாகம் அசைத்தானை குலம் ஆம் கைலை
மலையானை மற்று ஒப்பார் இல்லாதானை மதி கதிரும் வானவரும் மாலும் போற்றும்
கலையானை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே

 மேல்

#2975
தொண்டர் குழாம் தொழுது ஏத்த அருள்செய்வானை சுடர் மழுவாள் படையானை சுழி வான் கங்கை
தெண் திரைகள் பொருது இழி செஞ்சடையினானை செக்கர் வான் ஒளியானை சேராது எண்ணி
பண்டு அமரர் கொண்டு உகந்த வேள்வி எல்லாம் பாழ்படுத்து தலை அறுத்து பல் கண் கொண்ட
கண்டகனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே

 மேல்

#2976
விண்ணவனை மேரு வில்லா உடையான்-தன்னை மெய் ஆகி பொய் ஆகி விதி ஆனானை
பெண் அவனை ஆண் அவனை பித்தன்-தன்னை பிணம் இடுகாடு உடையானை பெரும் தக்கோனை
எண் அவனை எண் திசையும் கீழும் மேலும் இரு விசும்பும் இரு நிலமும் ஆகி தோன்றும்
கண் அவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே

 மேல்

#2977
உருத்திரனை உமாபதியை உலகு ஆனானை உத்தமனை நித்திலத்தை ஒருவன்-தன்னை
பருப்பதத்தை பஞ்சவடி மார்பினானை பகல் இரவாய் நீர் வெளியாய் பரந்து நின்ற
நெருப்பு அதனை நித்திலத்தின் தொத்து ஒப்பானை நீறு அணிந்த மேனியராய் நினைவார் சிந்தை
கருத்தவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே

 மேல்

#2978
ஏடு ஏறு மலர் கொன்றை அரவு தும்பை இள மதியம் எருக்கு வான் இழிந்த கங்கை
சேடு எறிந்த சடையானை தேவர்_கோவை செம்பொன் மால் வரையானை சேர்ந்தார் சிந்தை
கேடிலியை கீழ்வேளூர் ஆளும் கோவை கிறி பேசி மடவார் பெய் வளைகள் கொள்ளும்
காடவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே

 மேல்

#2979
நாரணனும் நான்முகனும் அறியாதானை நால் வேதத்து உருவானை நம்பி-தன்னை
பாரிடங்கள் பணி செய்ய பலி கொண்டு உண்ணும் பால்_வணனை தீ_வணனை பகல் ஆனானை
வார் பொதியும் முலையாள் ஓர்கூறன்-தன்னை மான் இடங்கை உடையானை மலிவு ஆர் கண்டம்
கார் பொதியும் கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே

 மேல்

#2980
வானவனை வலிவலமும் மறைக்காட்டானை மதி சூடும் பெருமானை மறையோன்-தன்னை
ஏனவனை இமவான்-தன் பேதையோடும் இனிது இருந்த பெருமானை ஏத்துவார்க்கு
தேனவனை தித்திக்கும் பெருமான்-தன்னை தீது இலா மறையவனை தேவர் போற்றும்
கானவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே

 மேல்

#2981
நெருப்பு உருவு திரு மேனி வெண் நீற்றானை நினைப்பார்-தம் நெஞ்சானை நிறைவு ஆனானை
தருக்கு அழிய முயலகன் மேல் தாள் வைத்தானை சலந்தரனை தடிந்தோனை தக்கோர் சிந்தை
விருப்பவனை விதியானை வெண் நீற்றானை விளங்கு ஒளியாய் மெய் ஆகி மிக்கோர் போற்றும்
கருத்தவனை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே

 மேல்

#2982
மடல் ஆழி தாமரை ஆயிரத்தில் ஒன்று மலர் கண் இடந்து இடுதலுமே மலி வான் கோல
சுடர் ஆழி நெடு மாலுக்கு அருள்செய்தானை தும்பி உரி போர்த்தானை தோழன் விட்ட
அடல் ஆழி தேர் உடைய இலங்கை_கோனை அரு வரை கீழ் அடர்த்தானை அருள் ஆர் கருணை
கடலானை கஞ்சனூர் ஆண்ட கோவை கற்பகத்தை கண் ஆர கண்டு உய்ந்தேனே

 மேல்

 91. திருஎறும்பியூர் - திருத்தாண்டகம்

#2983
பன்னிய செந்தமிழ் அறியேன் கவியேல் மாட்டேன் எண்ணோடு பண் நிறைந்த கலைகள் ஆய
தன்னையும் தன் திறத்து அறியா பொறியிலேனை தன் திறமும் அறிவித்து நெறியும் காட்டி
அன்னையையும் அத்தனையும் போல அன்பாய் அடைந்தேனை தொடர்ந்து என்னை ஆளா கொண்ட
தென் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே

 மேல்

#2984
பளிங்கின் நிழலுள் பதித்த சோதியானை பசுபதியை பாசுபதவேடத்தானை
விளிந்து எழுந்த சலந்தரனை வீட்டினானை வேதியனை விண்ணவனை மேவி வையம்
அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும் அரு மருந்தை ஆம் ஆறு அறிந்து என் உள்ளம்
தெளிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே

 மேல்

#2985
கருவை என்தன் மனத்து இருந்த கருத்தை ஞான கடும் சுடரை படிந்து கிடந்து அமரர் ஏத்தும்
உருவை அண்டத்து ஒரு முதலை ஓத வேலி உலகில் நிறை தொழில் இறுதி நடுவாய் நின்ற
மருவை வென்ற குழல் மடவாள் பாகம் வைத்த மயானத்து மாசிலா மணியை வாச
திரு எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே

 மேல்

#2986
பகழி பொழிந்து அடல் அரக்கர் புரங்கள் மூன்றும் பாழ்படுத்த பரஞ்சுடரை பரிந்து தன்னை
புகழும் அன்பர்க்கு இன்பு அமரும் அமுதை தேனை புண்ணியனை புவனி அது முழுதும் போத
உமிழும் அம் பொன் குன்றத்தை முத்தின் தூணை உமையவள்-தம் பெருமானை இமையோர் ஏத்தும்
திகழ் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே

 மேல்

#2987
பாரிடங்கள் உடன்பாட பயின்று நட்டம் பயில்வானை அயில் வாய சூலம் ஏந்தி
நேரிடும் போர் மிக வல்ல நிமலன்-தன்னை நின்மலனை அம் மலர் கொண்ட அயனும் மாலும்
பார் இடந்தும் மேல் உயர்ந்தும் காணா வண்ணம் பரந்தானை நிமிர்ந்து முனி கணங்கள் ஏத்தும்
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே

 மேல்

#2988
கார் முகிலாய் பொழிவானை பொழிந்த முந்நீர் கரப்பானை கடிய நடை விடை ஒன்று ஏறி
ஊர் பலவும் திரிவானை ஊர் அது ஆக ஒற்றியூர் உடையனாய் முற்றும் ஆண்டு
பேர் எழுத்து ஒன்று உடையானை பிரமனோடு மாலவனும் இந்திரனும் மந்திரத்தால் ஏத்தும்
சீர் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே

 மேல்

#2989
நீள் நிலமும் அம் தீயும் நீரும் மற்றை நெறி இலங்கும் மிகு காலும் ஆகாசமும்
வாள் நிலவு தாரகையும் மண்ணும் விண்ணும் மன் உயிரும் என் உயிரும் தான் ஆம் செம்பொன்
ஆணி என்றும் அஞ்சன மா மலையே என்றும் அம் பவள திரள் என்றும் அறிந்தோர் ஏத்தும்
சேண் எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே

 மேல்

#2990
அறம் தெரியா ஊத்தைவாய் அறிவு இல் சிந்தை ஆரம்ப குண்டரோடு அயர்த்து நாளும்
மறந்தும் அரன் திருவடிகள் நினையமாட்டா மதியிலியேன் வாழ்வு எல்லாம் வாளா மண் மேல்
பிறந்த நாள் நாள் அல்ல வாளா ஈசன் பேர் பிதற்றி சீர் அடிமை திறத்து உள் அன்பு
செறிந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே

 மேல்

#2991
அறிவு இலங்கு மனத்தானை அறிவார்க்கு அன்றி அறியாதார்-தம் திறத்து ஒன்று அறியாதானை
பொறி இலங்கு வாள் அரவம் புனைந்து பூண்ட புண்ணியனை பொரு திரை-வாய் நஞ்சம் உண்ட
குறி இலங்கு மிடற்றானை மடல் தேன் கொன்றை சடையானை மடை-தோறும் கமல மென் பூ
செறி எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே

 மேல்

#2992
அரும் தவத்தின் பெரு வலியால் அறிவது அன்றி அடல் அரக்கன் தட வரையை எடுத்தான் திண் தோள்
முரிந்து நெரிந்து அழிந்து பாதாளம் உற்று முன்கை நரம்பினை எடுத்து கீதம் பாட
இருந்தவனை ஏழ்உலகும் ஆக்கினானை எம்மானை கைம்மாவின் உரிவை போர்த்த
திருந்து எறும்பியூர் மலை மேல் மாணிக்கத்தை செழும் சுடரை சென்று அடையப்பெற்றேன் நானே

 மேல்

 92. திருக்கழுக்குன்றம் - திருத்தாண்டகம்

#2993
மூ இலை வேல் கையானை மூர்த்தி-தன்னை முது பிணக்காடு உடையானை முதல் ஆனானை
ஆவினில் ஐந்து உகந்தானை அமர்_கோனை ஆலாலம் உண்டு உகந்த ஐயன்-தன்னை
பூவினின் மேல் நான்முகனும் மாலும் போற்ற புணர்வு அரிய பெருமானை புனிதன்-தன்னை
காவலனை கழுக்குன்றம் அமர்ந்தான்-தன்னை கற்பகத்தை கண் ஆர கண்டேன் நானே

 மேல்

#2994
பல் ஆடு தலை சடை மேல் உடையான்-தன்னை பாய் புலி தோல் உடையானை பகவன்-தன்னை
சொல்லோடு பொருள் அனைத்தும் ஆனான் தன்னை சுடர் உருவில் என்பு அறா கோலத்தானை
அல்லாத காலனை முன் அடர்த்தான்-தன்னை ஆலின் கீழ் இருந்தானை அமுது ஆனானை
கல் ஆடை புனைந்து அருளும் காபாலியை கற்பகத்தை கண் ஆர கண்டேன் நானே

 மேல்

 93. பலவகைத் திருத்தாண்டகம்

#2995
நேர்ந்து ஒருத்தி ஒருபாகத்து அடங்க கண்டு நிலை தளர ஆயிரமா முகத்தினோடு
பாய்ந்து ஒருத்தி படர் சடை மேல் பயில கண்டு பட அரவும் பனி மதியும் வைத்த செல்வர்
தாம் திருத்தி தம் மனத்தை ஒருக்கா தொண்டர் தனித்து ஒரு தண்டு ஊன்றி மெய் தளரா முன்னம்
பூந்துருத்தி பூந்துருத்தி என்பீராகில் பொல்லா புலால் துருத்தி போக்கல் ஆமே

 மேல்

#2996
ஐ தானத்து அகமிடறு சுற்றி ஆங்கே அகத்து அடைந்தால் யாதொன்றும் இடுவார் இல்லை
மை தான கண் மடவார்-தங்களோடு மாயம் மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்
பை தானத்து ஒண் மதியும் பாம்பும் நீரும் படர் சடை மேல் வைத்து உகந்த பண்பன் மேய
நெய்த்தானம் நெய்த்தானம் என்பீராகில் நிலாவா புலால் தானம் நீக்கல் ஆமே

 மேல்

#2997
பொய் ஆறா ஆறே புனைந்து பேசி புலர்ந்து எழுந்த-காலை பொருளே தேடி
கையாறா கரணம் உடையோம் என்று களித்த மனத்தராய் கருதி வாழ்வீர்
நெய் ஆறா ஆடிய நீல_கண்டர் நிமிர் புன் சடை நெற்றிக்கண்ணர் மேய
ஐயாறே ஐயாறே என்பீராகில் அல்லல் தீர்ந்து அமர்_உலகம் ஆளல் ஆமே

 மேல்

#2998
இழவு ஒன்று தாம் ஒருவர்க்கு இட்டு ஒன்று ஈயார் ஈன்று எடுத்த தாய்தந்தை பெண்டீர் மக்கள்
கழல் நம் கோவை ஆதல் கண்டும் தேறார் களித்த மனத்தராய் கருதி வாழ்வீர்
அழல் நம்மை நீக்குவிக்கும் அரையன் ஆக்கும் அமர்_உலகம் ஆள்விக்கும் அம்மான் மேய
பழனம் பழனமே என்பீராகில் பயின்று எழுந்த பழவினை நோய் பாற்றல் ஆமே

 மேல்

#2999
ஊற்றுத்துறை ஒன்பது உள் நின்று ஓரீர் ஒக்க அடைக்கும்போது உணரமாட்டீர்
மாற்றுத்துறை வழி கொண்டு ஓடா முன்னம் மாயம் மனைவாழ்க்கை மகிழ்ந்து வாழ்வீர்
வேற்று தொழில் பூண்டார் புரங்கள் மூன்றும் வெவ் அழல் வாய் வீழ்விக்கும் வேந்தன் மேய
சோற்றுத்துறை சோற்றுத்துறை என்பீராகில் துயர் நீங்கி தூ நெறி-கண் சேரல் ஆமே

 மேல்

#3000
கலம் சுழிக்கும் கரும் கடல் சூழ் வையம்-தன்னில் கள்ள கடலில் அழுந்தி வாளா
நலம் சுழியா எழும் நெஞ்சே இன்பம் வேண்டில் நம்பன்-தன் அடி இணைக்கே நவில்வாய் ஆகில்
அலம் சுழிக்கும் மன் நாகம் தன்னால் மேய அரு மறையோடு ஆறு அங்கம் ஆனார் கோயில்
வலஞ்சுழியே வலஞ்சுழியே என்பீராகில் வல்வினைகள் தீர்ந்து வான் ஆளல் ஆமே

 மேல்

#3001
தண்டி குண்டோதரன் பிங்கிருடி சார்ந்த புகழ் நந்தி சங்குகன்னன்
பண்டை உலகம் படைத்தான்-தானும் பாரை அளந்தான் பல்லாண்டு இசைப்ப
திண்டி வயிற்று சிறு கண் பூதம் சில பாட செம் கண் விடை ஒன்று ஊர்வான்
கண்டியூர் கண்டியூர் என்பீராகில் கடுக நும் வல்வினையை கழற்றல் ஆமே

 மேல்

#3002
விடம் மூக்க பாம்பே போல் சிந்தி நெஞ்சே வெள் ஏற்றான்-தன் தமரை கண்டபோது
வடம் ஊக்க மா முனிவர் போல சென்று மா தவத்தார் மனத்து உளார் மழுவாள் செல்வர்
படம் மூக்க பாம்புஅணையில் பள்ளியானும் பங்கயத்து மேல் அயனும் பரவி காணா
குடமூக்கே குடமூக்கே என்பீராகில் கொடுவினைகள் தீர்ந்து அரனை குறுகல் ஆமே

 மேல்

#3003
தண் காட்ட சந்தனமும் தவள நீறும் தழை அணுகும் குறும் கொன்றை மாலை சூடி
கண் காட்டா கருவரை போல் அனைய காஞ்சி கார் மயில் அம் சாயலார் கலந்து காண
எண் காட்டா காடு அங்கு இடமா நின்று எரி வீசி இரவு ஆடும் இறைவர் மேய
வெண்காடே வெண்காடே என்பீராகில் வீடாத வல்வினை நோய் வீட்டல் ஆமே

 மேல்

#3004
தந்தை யார் தாய் யார் உடன்பிறந்தார் தாரம் ஆர் புத்திரர் ஆர் தாம்தாம் ஆரே
வந்த ஆறு எங்ஙனே போம் ஆறு ஏதோ மாயம் ஆம் இதற்கு ஏதும் மகிழவேண்டா
சிந்தையீர் உமக்கு ஒன்று சொல்ல கேண்-மின் திகழ் மதியும் வாள் அரவும் திளைக்கும் சென்னி
எந்தையார் திரு நாமம் நமச்சிவாய என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கல் ஆமே

 மேல்

 94. நின்ற திருத்தாண்டகம்

#3005
இரு நிலனாய் தீ ஆகி நீரும் ஆகி இயமானனாய் எறியும் காற்றும் ஆகி
அரு நிலைய திங்களாய் ஞாயிறு ஆகி ஆகாசமாய் அட்டமூர்த்தி ஆகி
பெரு நலமும் குற்றமும் பெண்ணும் ஆணும் பிறர் உருவும் தம் உருவும் தாமே ஆகி
நெருநலையாய் இன்று ஆகி நாளை ஆகி நிமிர் புன் சடை அடிகள் நின்ற ஆறே

 மேல்

#3006
மண் ஆகி விண் ஆகி மலையும் ஆகி வயிரமுமாய் மாணிக்கம்தானே ஆகி
கண் ஆகி கண்ணுக்கு ஓர் மணியும் ஆகி கலை ஆகி கலை ஞானம் தானே ஆகி
பெண் ஆகி பெண்ணுக்கு ஓர் ஆணும் ஆகி பிரளயத்துக்கு அப்பால் ஓர் அண்டம் ஆகி
எண் ஆகி எண்ணுக்கு ஓர் எழுத்தும் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே

 மேல்

#3007
கல் ஆகி களறு ஆகி கானும் ஆகி காவிரியாய் கால் ஆறாய் கழியும் ஆகி
புல் ஆகி புதல் ஆகி பூடும் ஆகி புரம் ஆகி புரம் மூன்றும் கெடுத்தான் ஆகி
சொல் ஆகி சொல்லுக்கு ஓர் பொருளும் ஆகி சுலாவு ஆகி சுலாவுக்கு ஓர் சூழல் ஆகி
நெல் ஆகி நிலன் ஆகி நீரும் ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே

 மேல்

#3008
காற்று ஆகி கார் முகிலாய் காலம் மூன்றாய் கனவு ஆகி நனவு ஆகி கங்குல் ஆகி
கூற்று ஆகி கூற்று உதைத்த கொல் களிறும் ஆகி குரை கடலாய் குரை கடற்கு ஓர் கோமானுமாய்
நீற்றானாய் நீறு ஏற்ற மேனி ஆகி நீள் விசும்பாய் நீள் விசும்பின் உச்சி ஆகி
ஏற்றனாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே

 மேல்

#3009
தீ ஆகி நீர் ஆகி திண்மை ஆகி திசை ஆகி அ திசைக்கு ஓர் தெய்வம் ஆகி
தாய் ஆகி தந்தையாய் சார்வும் ஆகி தாரகையும் ஞாயிறும் தண் மதியும் ஆகி
காய் ஆகி பழம் ஆகி பழத்தில் நின்ற இரதங்கள் நுகர்வானும் தானே ஆகி
நீ ஆகி நான் ஆகி நேர்மை ஆகி நெடும் சுடராய் நிமிர்ந்து அடிகள் நின்ற ஆறே

 மேல்

#3010
அங்கமாய் ஆதியாய் வேதம் ஆகி அரு மறையோடு ஐம்பூதம் தானே ஆகி
பங்கமாய் பல சொல்லும் தானே ஆகி பால் மதியோடு ஆதியாய் பான்மை ஆகி
கங்கையாய் காவிரியாய் கன்னி ஆகி கடல் ஆகி மலை ஆகி கழியும் ஆகி
எங்குமாய் ஏறு ஊர்ந்த செல்வன் ஆகி எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே

 மேல்

#3011
மாதா பிதா ஆகி மக்கள் ஆகி மறி கடலும் மால் விசும்பும் தானே ஆகி
கோதாவிரியாய் குமரி ஆகி கொல் புலி தோல் ஆடை குழகன் ஆகி
போதாய் மலர் கொண்டு போற்றி நின்று புனைவார் பிறப்பு அறுக்கும் புனிதன் ஆகி
ஆதானும் என நினைந்தார்க்கு அஃதே ஆகி அழல்_வண்ண வண்ணர்தாம் நின்ற ஆறே

 மேல்

#3012
ஆ ஆகி ஆவினில் ஐந்தும் ஆகி அறிவு ஆகி அழல் ஆகி அவியும் ஆகி
நா ஆகி நாவுக்கு ஓர் உரையும் ஆகி நாதனாய் வேதத்தின் உள்ளோன் ஆகி
பூ ஆகி பூவுக்கு ஓர் நாற்றம் ஆகி பூக்குளால் வாசமாய் நின்றான் ஆகி
தே ஆகி தேவர் முதலும் ஆகி செழும் சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே

 மேல்

#3013
நீர் ஆகி நீள் அகலம் தானே ஆகி நிழல் ஆகி நீள் விசும்பின் உச்சி ஆகி
பேர் ஆகி பேருக்கு ஓர் பெருமை ஆகி பெரு மதில்கள் மூன்றினையும் எய்தான் ஆகி
ஆரேனும் தன் அடைந்தார்-தம்மை எல்லாம் ஆட்கொள்ள வல்ல எம் ஈசனார்தாம்
பார் ஆகி பண் ஆகி பாடல் ஆகி பரஞ்சுடராய் சென்று அடிகள் நின்ற ஆறே

 மேல்

#3014
மால் ஆகி நான்முகனாய் மா பூதமாய் மருக்கமாய் அருக்கமாய் மகிழ்வும் ஆகி
பால் ஆகி எண் திசைக்கும் எல்லை ஆகி பரப்பு ஆகி பரலோகம்தானே ஆகி
பூலோக புவலோக சுவலோகமாய் பூதங்களாய் புராணன் தானே ஆகி
ஏலாதன எலாம் ஏல்விப்பானாய் எழும் சுடராய் எம் அடிகள் நின்ற ஆறே

 மேல்

 95. தனித் திருத்தாண்டகம்

#3015
அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன்பு உடைய மாமனும் மாமியும் நீ
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ ஒரு குலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இ பொன் நீ இ மணி நீ இ முத்து நீ இறைவன் நீ ஏறு ஊர்ந்த செல்வன் நீயே

 மேல்

#3016
வெம்ப வருகிற்பது அன்று கூற்றம் நம் மேல் வெய்ய வினை பகையும் பைய நையும்
எம் பரிவு தீர்ந்தோம் இடுக்கண் இல்லோம் எங்கு எழில் என் ஞாயிறு எளியோம்அல்லோம்
அம் பவள செம் சடை மேல் ஆறு சூடி அனல் ஆடி ஆன் அஞ்சும் ஆட்டு உகந்த
செம்பவள_வண்ணர் செங்குன்ற_வண்ணர் செவ்வான_வண்ணர் என் சிந்தையாரே

 மேல்

#3017
ஆட்டுவித்தால் ஆர் ஒருவர் ஆடாதாரே அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்காதாரே
ஓட்டுவித்தால் ஆர் ஒருவர் ஓடாதாரே உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகாதாரே
பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடாதாரே பணிவித்தால் ஆர் ஒருவர் பணியாதாரே
காட்டுவித்தால் ஆர் ஒருவர் காணாதாரே காண்பார் ஆர் கண்நுதலாய் காட்டா-காலே

 மேல்

#3018
நல் பதத்தார் நல் பதமே ஞானமூர்த்தீ நலஞ்சுடரே நால் வேதத்து அப்பால் நின்ற
சொல் பதத்தார் சொல் பதமும் கடந்து நின்ற சொலற்கு அரிய சூழலாய் இது உன் தன்மை
நிற்பது ஒத்து நிலை இலா நெஞ்சம்-தன்னுள் நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற
கற்பகமே யான் உன்னை விடுவேன்அல்லேன் கனகம் மா மணி நிறத்து எம் கடவுளானே

 மேல்

#3019
திருக்கோயில் இல்லாத திரு இல் ஊரும் திரு வெண் நீறு அணியாத திரு இல் ஊரும்
பருக்கு ஓடி பத்திமையால் பாடா ஊரும் பாங்கினொடு பல தளிகள் இல்லா ஊரும்
விருப்போடு வெண் சங்கம் ஊதா ஊரும் விதானமும் வெண் கொடியும் இல்லா ஊரும்
அருப்போடு மலர் பறித்து இட்டு உண்ணா ஊரும் அவை எல்லாம் ஊர் அல்ல அடவி காடே

 மேல்

#3020
திரு நாமம் அஞ்சுஎழுத்தும் செப்பாராகில் தீ_வண்ணர் திறம் ஒரு-கால் பேசாராகில்
ஒருகாலும் திருக்கோயில் சூழாராகில் உண்பதன் முன் மலர் பறித்து இட்டு உண்ணாராகில்
அரு நோய்கள் கெட வெண் நீறு அணியாராகில் அளி அற்றார் பிறந்த ஆறு ஏதோ என்னில்
பெரு நோய்கள் மிக நலிய பெயர்த்தும் செத்தும் பிறப்பதற்கே தொழில் ஆகி இறக்கின்றாரே

 மேல்

#3021
நின் ஆவார் பிறர் இன்றி நீயே ஆனாய் நினைப்பார்கள் மனத்துக்கு ஓர் வித்தும் ஆனாய்
மன் ஆனாய் மன்னவர்க்கு ஓர் அமுதம் ஆனாய் மறை நான்கும் ஆனாய் ஆறு அங்கம் ஆனாய்
பொன் ஆனாய் மணி ஆனாய் போகம் ஆனாய் பூமி மேல் புகழ் தக்க பொருளே உன்னை
என் ஆனாய் என் ஆனாய் என்னின் அல்லால் ஏழையேன் என் சொல்லி ஏத்துகேனே

 மேல்

#3022
அத்தா உன் அடியேனை அன்பால் ஆர்த்தாய் அருள் நோக்கில் தீர்த்த நீர் ஆட்டிக்கொண்டாய்
எத்தனையும் அரிவை நீ எளியை ஆனாய் எனை ஆண்டுகொண்டு இரங்கி ஏன்றுகொண்டாய்
பித்தனேன் பேதையேன் பேயேன் நாயேன் பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தாய் அன்றே
இத்தனையும் எம் பரமோ ஐய ஐயோ எம்பெருமான் திரு கருணை இருந்த ஆறே

 மேல்

#3023
குலம் பொல்லேன் குணம் பொல்லேன் குறியும் பொல்லேன் குற்றமே பெரிது உடையேன் கோலம் ஆய
நலம் பொல்லேன் நான் பொல்லேன் ஞானி அல்லேன் நல்லாரோடு இசைந்திலேன் நடுவே நின்ற
விலங்கு அல்லேன் விலங்கு அல்லாது ஒழிந்தேன்அல்லேன் வெறுப்பனவும் மிக பெரிதும் பேச வல்லேன்
இலம் பொல்லேன் இரப்பதே ஈயமாட்டேன் என் செய்வான் தோன்றினேன் ஏழையேனே

 மேல்

#3024
சங்கநிதி பதுமநிதி இரண்டும் தத்து தரணியொடு வான் ஆள தருவரேனும்
மங்குவார் அவர் செல்வம் மதிப்போம்அல்லோம் மாதேவர்க்கு ஏகாந்தர் அல்லாராகில்
அங்கம் எலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆ உரித்து தின்று உழலும் புலையரேனும்
கங்கை வார் சடை கரந்தார்க்கு அன்பராகில் அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே

 மேல்

 96. தனித் திருத்தாண்டகம்

#3025
ஆமயம் தீர்த்து அடியேனை ஆளா கொண்டார் அதிகைவீரட்டானம் ஆட்சி கொண்டார்
தாமரையோன் சிரம் அரிந்து கையில் கொண்டார் தலை அதனில் பலி கொண்டார் நிறைவு ஆம் தன்மை
வாமனனார் மா காயத்து உதிரம் கொண்டார் மான் இடம் கொண்டார் வலங்கை மழுவாள் கொண்டார்
காமனையும் உடல் கொண்டார் கண்ணால் நோக்கி கண்ணப்பர் பணியும் கொள் கபாலியாரே

 மேல்

#3026
முப்புரி நூல் வரை மார்பில் முயங்க கொண்டார் முது கேழல் முளை மருப்பும் கொண்டார் பூணா
செப்பு உருவம் முலை மலையாள் பாகம் கொண்டார் செம் மேனி வெண் நீறு திகழ கொண்டார்
துப்புரவு ஆர் சுரி சங்கின் தோடு கொண்டார் சுடர் முடி சூழ்ந்து அடி அமரர் தொழவும் கொண்டார்
அ பலி கொண்டு ஆய்_இழையார் அன்பும் கொண்டார் அடியேனை ஆள் உடைய அடிகளாரே

 மேல்

#3027
முடி கொண்டார் முளை இள வெண் திங்களோடு மூசும் இள நாகம் உடன் ஆக கொண்டார்
அடி கொண்டார் சிலம்பு அலம்பு கழலும் ஆர்ப்ப அடங்காத முயலகனை அடி கீழ் கொண்டார்
வடி கொண்டு ஆர்ந்து இலங்கும் மழு வலங்கை கொண்டார் மாலை இடப்பாகத்தே மருவ கொண்டார்
துடி கொண்டார் கங்காளம் தோள் மேல் கொண்டார் சூலை தீர்த்து அடியேனை ஆட்கொண்டாரே

 மேல்

#3028
பொக்கணமும் புலி தோலும் புயத்தில் கொண்டார் பூத படைகள் புடை சூழ கொண்டார்
அக்கினொடு பட அரவம் அரை மேல் கொண்டார் அனைத்து உலகும் படைத்து அவையும் அடங்க கொண்டார்
கொக்கு இறகும் கூவிளமும் கொண்டை கொண்டார் கொடியானை அடல் ஆழிக்கு இரையா கொண்டார்
செக்கர் நிற திரு மேனி திகழ கொண்டார் செடியேனை ஆட்கொண்ட சிவனார்தாமே

 மேல்

#3029
அந்தகனை அயில் சூலத்து அழுத்தி கொண்டார் அரு மறையை தேர் குதிரை ஆக்கிக்கொண்டார்
சுந்தரனை துணை கவரி வீச கொண்டார் சுடுகாடு நடம் ஆடும் இடமா கொண்டார்
மந்தரம் நல் பொரு சிலையா வளைத்துக்கொண்டார் மாகாளன் வாசல் காப்பு ஆக கொண்டார்
தந்திர மந்திரத்தராய் அருளிக்கொண்டார் சமண் தீர்த்து என்தன்னை ஆட்கொண்டார்தாமே

 மேல்

#3030
பாரிடங்கள் பல கருவி பயில கொண்டார் பவள நிறம் கொண்டார் பளிங்கும் கொண்டார்
நீர் அடங்கு சடை முடி மேல் நிலாவும் கொண்டார் நீல நிறம் கோலம் நிறை மிடற்றில் கொண்டார்
வார் அடங்கு வன முலையார் மையல் ஆகி வந்து இட்ட பலி கொண்டார் வளையும் கொண்டார்
ஊர் அடங்க ஒற்றி நகர் பற்றிக்கொண்டார் உடல் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே

 மேல்

#3031
அணி தில்லை அம்பலம் ஆடு அரங்கா கொண்டார் ஆலால அரு நஞ்சம் அமுதா கொண்டார்
கணி வளர் தார் பொன் இதழி கமழ் தார் கொண்டார் காதல் ஆர் கோடி கலந்து இருக்கை கொண்டார்
மணி பணத்த அரவம் தோள் வளையா கொண்டார் மால் விடை மேல் நெடு வீதி போத கொண்டார்
குணி புலி தோலினை ஆடை உடையா கொண்டார் சூலம் கை கொண்டார் தொண்டு எனை கொண்டாரே

 மேல்

#3032
பட மூக்க பாம்புஅணையானோடு வானோன் பங்கயன் என்று அங்கு அவரை படைத்து கொண்டார்
குடமூக்கில் கீழ்க்கோட்டம் கோயில்கொண்டார் கூற்று உதைத்து ஓர் வேதியனை உய்யக்கொண்டார்
நெடு மூக்கின் கரியின் உரி மூடிக்கொண்டார் நினையாத பாவிகளை நீங்கக்கொண்டார்
இடம் ஆக்கி இடைமருதும் கொண்டார் பண்டே என்னை இ நாள் ஆட்கொண்ட இறைவர்தாமே

 மேல்

#3033
எச்சன் இணை தலை கொண்டார் பகன் கண் கொண்டார் இரவிகளில் ஒருவன் பல் இறுத்துக்கொண்டார்
மெச்சன் விதாத்திரன் தலையும் வேறா கொண்டார் விறல் அங்கி கரம் கொண்டார் வேள்வி காத்து
உச்ச நமன் தாள் அறுத்தார் சந்திரனை உதைத்தார் உணர்வு இலா தக்கன்-தன் வேள்வி எல்லாம்
அச்சம் எழ அழித்துக்கொண்டு அருளும் செய்தார் அடியேனை ஆட்கொண்ட அமலர்தாமே

 மேல்

#3034
சடை ஒன்றில் கங்கையையும் தரித்துக்கொண்டார் சாமத்தின் இசை வீணை தடவிக்கொண்டார்
உடை ஒன்றில் புள்ளி உழை தோலும் கொண்டார் உள்குவார் உள்ளத்தை ஒருக்கிக்கொண்டார்
கடை முன்றில் பலி கொண்டார் கனலும் கொண்டார் காபால வேடம் கருதி கொண்டார்
விடை வென்றி கொடி அதனில் மேவ கொண்டார் வெம் துயரம் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே

 மேல்

#3035
குரா மலரோடு அரா மதியம் சடை மேல் கொண்டார் குட முழ நந்தீசனை வாசகனா கொண்டார்
சிராமலை தம் சேர்விடமா திருந்த கொண்டார் தென்றல் நெடும் தேரோனை பொன்றக்கொண்டார்
பராபரன் என்பது தமது பேரா கொண்டார் பருப்பதம் கைக்கொண்டார் பயங்கள் பண்ணி
இராவணன் என்று அவனை பேர் இயம்ப கொண்டார் இடர் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே

 மேல்

 97. திருவினாத் திருத்தாண்டகம்

#3036
அண்டம் கடந்த சுவடும் உண்டோ அனல் அங்கை ஏந்திய ஆடல் உண்டோ
பண்டை எழுவர் படியும் உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ
கண்டம் இறையே கறுத்தது உண்டோ கண்ணின் மேல் கண் ஒன்று கண்டது உண்டோ
தொண்டர்கள் சூழ தொடர்ச்சி உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே

 மேல்

#3037
எரிகின்ற இள ஞாயிறு அன்ன மேனி இலங்கு_இழை ஓர்பால் உண்டோ வெள் ஏறு உண்டோ
விரிகின்ற பொறி அரவ தழலும் உண்டோ வேழத்தின் உரி உண்டோ வெண் நூல் உண்டோ
வரி நின்ற பொறி அரவ சடையும் உண்டோ அ சடை மேல் இள மதியம் வைத்தது உண்டோ
சொரிகின்ற புனல் உண்டோ சூலம் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே

 மேல்

#3038
நிலா மாலை செம் சடை மேல் வைத்தது உண்டோ நெற்றி மேல் கண் உண்டோ நீறு சாந்தோ
புலால் நாறு வெள் எலும்பு பூண்டது உண்டோ பூதம் தற்சூழ்ந்தனவோ போர் ஏறு உண்டோ
கலாம் மாலை வேல்கண்ணாள் பாகத்து உண்டோ கார் கொன்றை மாலை கலந்தது உண்டோ
சுலா மாலை ஆடு அரவம் தோள் மேல் உண்டோ சொல்லீர் எம்பிரானாரை கண்ட ஆறே

 மேல்

#3039
பண் ஆர்ந்த வீணை பயின்றது உண்டோ பாரிடங்கள் பல சூழ போந்தது உண்டோ
உண்ணா அரு நஞ்சம் உண்டது உண்டோ ஊழித்தீ அன்ன ஒளிதான் உண்டோ
கண் ஆர் கழல் காலன் செற்றது உண்டோ காமனையும் கண் அழலால் காய்ந்தது உண்டோ
எண்ணார் திரிபுரங்கள் எய்தது உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே

 மேல்

#3040
நீறு உடைய திரு மேனி பாகம் உண்டோ நெற்றி மேல் ஒற்றைக்கண் முற்றும் உண்டோ
கூறு உடைய கொடு மழுவாள் கையில் உண்டோ கொல் புலி தோல் உடை உண்டோ கொண்ட வேடம்
ஆறு உடைய சடை உண்டோ அரவம் உண்டோ அதன் அருகே பிறை உண்டோ அளவு இலாத
ஏறு உடைய கொடி உண்டோ இலயம் உண்டோ எ வகை எம்பிரானாரை கண்ட ஆறே

 மேல்

#3041
பட்டமும் தோடும் ஓர்பாகம் கண்டேன் பார் திகழ பலி திரிந்து போத கண்டேன்
கொட்டி நின்று இலயங்கள் ஆட கண்டேன் குழை காதில் பிறை சென்னி இலங்க கண்டேன்
கட்டங்க கொடி திண் தோள் ஆட கண்டேன் கனம் மழுவாள் வலங்கையில் இலங்க கண்டேன்
சிட்டனை திரு ஆலவாயில் கண்டேன் தேவனை கனவில் நான் கண்ட ஆறே

 மேல்

#3042
அலைத்து ஓடு புனல் கங்கை சடையில் கண்டேன் அலர் கொன்றை தார் அணிந்த ஆறு கண்டேன்
பலிக்கு ஓடி திரிவார் கை பாம்பு கண்டேன் பழனம் புகுவாரை பகலே கண்டேன்
கலி கச்சிமேற்றளியே இருக்க கண்டேன் கறை மிடறும் கண்டேன் கனலும் கண்டேன்
வலித்து உடுத்த மான் தோல் அரையில் கண்டேன் மறை வல்ல மா தவனை கண்ட ஆறே

 மேல்

#3043
நீறு ஏறு திரு மேனி நிகழ கண்டேன் நீள் சடை மேல் நிறை கங்கை ஏற கண்டேன்
கூறு ஏறு கொடு மழுவாள் கொள்ள கண்டேன் கொடுகொட்டி கை அலகு கையில் கண்டேன்
ஆறு ஏறு சென்னி அணி மதியும் கண்டேன் அடியார்கட்கு ஆரமுதம் ஆக கண்டேன்
ஏறு ஏறி இ நெறியே போத கண்டேன் இ வகை எம்பெருமானை கண்ட ஆறே

 மேல்

#3044
விரையுண்ட வெண் நீறுதானும் உண்டு வெண் தலை கை உண்டு ஒரு கை வீணை உண்டு
சுரை உண்டு சூடும் பிறை ஒன்று உண்டு சூலமும் தண்டும் சுமந்தது உண்டு
அரையுண்ட கோவண ஆடை உண்டு அலிக்கோலும் தோலும் அழகா உண்டு
இரை உண்டு அறியாத பாம்பும் உண்டு இமையோர் பெருமான் இலாதது என்னே

 மேல்

#3045
மை படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வார் சடையான் என்னின் அல்லான்
ஒப்பு உடையன்அல்லன் ஒருவன்அல்லன் ஓர் ஊரன்அல்லன் ஓர் உவமனிலி
அ படியும் அ நிறமும் அ வண்ணமும் அவன் அருளே கண் ஆக காணின் அல்லால்
இ படியன் இ நிறத்தன் இ வண்ணத்தன் இவன் இறைவன் என்று எழுதி காட்ட ஒணாதே

 மேல்

#3046
பொன் ஒத்த மேனி மேல் பொடியும் கண்டேன் புலி தோல் உடை கண்டேன் புணர தன் மேல்
மின் ஒத்த நுண்இடையாள்_பாகம் கண்டேன் மிளிர்வது ஒரு பாம்பும் அரை மேல் கண்டேன்
அன்ன தேர் ஊர்ந்த அரக்கன்-தன்னை அலற அடர்த்திட்ட அடியும் கண்டேன்
சின்ன மலர் கொன்றை கண்ணி கண்டேன் சிவனை நான் சிந்தையுள் கண்ட ஆறே

 மேல்

 98. மறுமாற்றத் திருத்தாண்டகம்

#3047
நாம் ஆர்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்
ஏமாப்போம் பிணி அறியோம் பணிவோம்அல்லோம் இன்பமே எந்நாளும் துன்பம் இல்லை
தாம் ஆர்க்கும் குடி அல்லா தன்மை ஆன சங்கரன் நல் சங்க வெண் குழை ஓர் காதின்
கோமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய் கொய் மலர் சேவடி இணையே குறுகினோமே

 மேல்

#3048
அகலிடமே இடம் ஆக ஊர்கள்-தோறும் அட்டு உண்பார் இட்டு உண்பார் விலக்கார் ஐயம்
புகல் இடம் அம் அம்பலங்கள் பூமி தேவி உடன்கிடந்தால் புரட்டாள் பொய் அன்று மெய்யே
இகல் உடைய விடை உடையான் ஏன்றுகொண்டான் இனி ஏதும் குறைவு இலோம் இடர்கள் தீர்ந்தோம்
துகில் உடுத்து பொன் பூண்டு திரிவார் சொல்லும் சொல் கேட்க கடவோமோ துரிசு அற்றோமே

 மேல்

#3049
வார் ஆண்ட கொங்கையர் சேர் மனையில் சேரோம் மாதேவா மாதேவா என்று வாழ்த்தி
நீர் ஆண்ட புரோதாயம் ஆடப்பெற்றோம் நீறு அணியும் கோலமே நிகழப்பெற்றோம்
கார் ஆண்ட மழை போல கண்ணீர் சோர கல் மனமே நல் மனமா கரையப்பெற்றோம்
பார் ஆண்டு பகடு ஏறி திரிவார் சொல்லும் பணி கேட்க கடவோமோ பற்று அற்றோமே

 மேல்

#3050
உறவு ஆவார் உருத்திர பல் கணத்தினோர்கள் உடுப்பன கோவணத்தொடு கீள் உள ஆம் அன்றே
செறுவாரும் செறமாட்டார் தீமைதானும் நன்மையாய் சிறப்பதே பிறப்பில் செல்லோம்
நறவு ஆர் பொன் இதழி நறும் தாரோன் சீர் ஆர் நமச்சிவாயம் சொல்ல வல்லோம் நாவால்
சுறவு ஆரும் கொடியானை பொடியா கண்ட சுடர் நயன சோதியையே தொடர்வுற்றோமே

 மேல்

#3051
என்றும் நாம் யாவர்க்கும் இடைவோம்அல்லோம் இரு நிலத்தில் எமக்கு எதிர் ஆவாரும் இல்லை
சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம்அல்லோம் சிவபெருமான் திருவடியே சேரப்பெற்றோம்
ஒன்றினால் குறை உடையோம்அல்லோம் அன்றே உறு பிணியார் செறல் ஒழிந்திட்டு ஓடி போனார்
பொன்றினார் தலை மாலை அணிந்த சென்னி புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உளோமே

 மேல்

#3052
மூ உருவில் முதல் உருவாய் இரு நான்கு ஆன மூர்த்தியே என்று முப்பத்துமூவர்
தேவர்களும் மிக்கோரும் சிறந்து வாழ்த்தும் செம்பவள திரு மேனி சிவனே என்னும்
நா உடையார் நமை ஆள உடையார் அன்றே நாவலம்தீவு அகத்தினுக்கு நாதர் ஆன
காவலரே ஏவி விடுத்தாரேனும் கடவம்அலோம் கடுமையொடு களவு அற்றோமே

 மேல்

#3053
நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும் நெருப்பினொடு காற்று ஆகி நெடு வான் ஆகி
அற்பமொடு பெருமையுமாய் அருமை ஆகி அன்புடையார்க்கு எளிமையதாய் அளக்கல் ஆகா
தற்பரமாய் சதாசிவமாய் தானும் யானும் ஆகின்ற தன்மையனை நன்மையோடும்
பொற்புடைய பேச கடவோம் பேயர் பேசுவன பேசுதுமோ பிழை அற்றோமே

 மேல்

#3054
ஈசனை எ உலகினுக்கும் இறைவன்-தன்னை இமையவர்-தம் பெருமானை எரியாய் மிக்க
தேசனை செம் மேனி வெண் நீற்றானை சிலம்பு_அரையன் பொன் பாவை நலம் செய்கின்ற
நேசனை நித்தலும் நினையப்பெற்றோம் நின்று உண்பார் எம்மை நினைய சொன்ன
வாசகம் எல்லாம் மறந்தோம் அன்றே வந்தீர் ஆர் மன்னவன் ஆவான்தான் ஆரே

 மேல்

#3055
சடை உடையான் சங்க குழை ஓர் காதன் சாம்பலும் பாம்பும் அணிந்த மேனி
விடை உடையான் வேங்கை அதள் மேல் ஆடை வெள்ளி போல் புள்ளி உழை மான் தோல் சார்ந்த
உடை உடையான் நம்மை உடையான் கண்டீர் உம்மோடு மற்றும் உளராய் நின்ற
படை உடையான் பணி கேட்கும் பணியோம்அல்லோம் பாசம் அற வீசும் படியோம் நாமே

 மேல்

#3056
நாவார நம்பனையே பாடப்பெற்றோம் நாண் அற்றார் நள்ளாமே விள்ளப்பெற்றோம்
ஆவா என்று எமை ஆள்வான் அமரர்நாதன் அயனொடு மாற்கு அறிவு அரிய அனலாய் நீண்ட
தேவாதிதேவன் சிவன் என் சிந்தை சேர்ந்து இருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து
கோ ஆடி குற்றேவல் செய்கு என்றாலும் குணம் ஆக கொள்ளோம் எண் குணத்து உளோமே

 மேல்

 99. திருப்புகலூர் - திருத்தாண்டகம்

#3057
எண்ணுகேன் என் சொல்லி எண்ணுகேனோ எம்பெருமான் திருவடியே எண்ணின் அல்லால்
கண் இலேன் மற்று ஓர் களைகண் இல்லேன் கழல் அடியே கைதொழுது காணின் அல்லால்
ஒண்ணுளே ஒன்பது வாசல் வைத்தாய் ஒக்க அடைக்கும்போது உணரமாட்டேன்
புண்ணியா உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே

 மேல்

#3058
அங்கமே பூண்டாய் அனல் ஆடினாய் ஆதிரையாய் ஆல் நிழலாய் ஆன் ஏறு ஊர்ந்தாய்
பங்கம் ஒன்று இல்லாத படர் சடையினாய் பாம்பொடு திங்கள் பகை தீர்த்து ஆண்டாய்
சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்ட சமுத்திரத்தின் நஞ்சு உண்டு சாவா மூவா
சிங்கமே உன் அடிக்கே போதுகின்றேன் திரு புகலூர் மேவிய தேவதேவே

 மேல்

#3059
பை அரவ கச்சையாய் பால் வெண் நீற்றாய் பளிக்கு குழையினாய் பண் ஆர் இன்சொல்
மை விரவு கண்ணாளை பாகம் கொண்டாய் மான் மறி கை ஏந்தினாய் வஞ்ச கள்வர்
ஐவரையும் என் மேல் தரவு அறுத்தாய் அவர் வேண்டும் காரியம் இங்கு ஆவதில்லை
பொய் உரையாது உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே

 மேல்

#3060
தெருளாதார் மூஎயிலும் தீயில் வேவ சிலை வளைத்து செம் கணையால் செற்ற தேவே
மருளாதார்-தம் மனத்தில் வாட்டம் தீர்ப்பாய் மருந்தாய் பிணி தீர்ப்பாய் வானோர்க்கு என்றும்
அருள் ஆகி ஆதியா வேதம் ஆகி அலர்மேலான் நீர்மேலான் ஆய்ந்தும் காணா
பொருள் ஆவாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே

 மேல்

#3061
நீர் ஏறு செம் சடை மேல் நிலா வெண் திங்கள் நீங்காமை வைத்து உகந்த நீதியானே
பார் ஏறு படு தலையில் பலி கொள்வானே பண்டு அநங்கன் காய்ந்தானே பாவநாசா
கார் ஏறு முகில் அனைய கண்டத்தானே கரும் கை களிற்று உரிவை கதற போர்த்த
போர் ஏறே உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே

 மேல்

#3062
விரி சடையாய் வேதியனே வேத கீதா விரி பொழில் சூழ் வெண் காட்டாய் மீயச்சூராய்
திரிபுரங்கள் எரிசெய்த தேவதேவே திரு ஆரூர் திரு மூலட்டானம் மேயாய்
மருவு இனியார் மனத்து உளாய் மாகாளத்தாய் வலஞ்சுழியாய் மா மறைக்காட்டு எந்தாய் என்றும்
புரி சடையாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே

 மேல்

#3063
தே ஆர்ந்த தேவனை தேவர் எல்லாம் திருவடி மேல் அலர் இட்டு தேடி நின்று
நா ஆர்ந்த மறை பாடி நட்டம் ஆடி நான்முகனும் இந்திரனும் மாலும் போற்ற
கா ஆர்ந்த பொழில் சோலை கானப்பேராய் கழுக்குன்றத்து உச்சியாய் கடவுளே நின்
பூ ஆர்ந்த பொன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே

 மேல்

#3064
நெய் ஆடி நின்மலனே நீல_கண்டா நிறைவு உடையாய் மறை வல்லாய் நீதியானே
மை ஆடு கண் மடவாள் பாகத்தானே மான் தோல் உடையாய் மகிழ்ந்து நின்றாய்
கொய் ஆடு கூவிளம் கொன்றை மாலை கொண்டு அடியேன் நான் இட்டு கூறி நின்று
பொய்யாத சேவடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே

 மேல்

#3065
துன்னம் சேர் கோவணத்தாய் தூய நீற்றாய் துதைந்து இலங்கு வெண் மழுவாள் கையில் ஏந்தி
தன் அணையும் தண் மதியும் பாம்பும் நீரும் சடை முடி மேல் வைத்து உகந்த தன்மையானே
அன்ன நடை மடவாள்_பாகத்தானே அக்கு ஆரம் பூண்டானே ஆதியானே
பொன் அம் கழல் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே

 மேல்

#3066
ஒருவரையும் அல்லாது உணராது உள்ளம் உணர்ச்சி தடுமாற்றத்துள்ளே நின்ற
இருவரையும் மூவரையும் என் மேல் ஏவி இல்லாத தரவு அறுத்தாய்க்கு இல்லேன் ஏல
கருவரை சூழ் கானல் இலங்கை_வேந்தன் கடும் தேர் மீது ஓடாமை காலால் செற்ற
பொரு வரையாய் உன் அடிக்கே போதுகின்றேன் பூம் புகலூர் மேவிய புண்ணியனே
 மேல்