<<முந்திய பக்கம்

வில்லி பாரதம் - தொடரடைவு

மௌ - முதல் சொற்கள்
மௌலி 12
மௌலியாய் 2
மௌலியான் 3
மௌலியும் 1
மௌலியை 3
மௌற்கல்லியன் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப்பாடலையும் காண தொடரடைவில் பாடல் எண் மேல் சொடுக்கவும்
 
  மௌலி (12)
பூ கதன் ஆகிய அன்றே பகைவர் எல்லாம் போற்ற வளர்ந்து உலகு ஆள புனைந்த மௌலி
 மாகதனும் வில் எடுத்து வரி நாண் வில்லின் மார்பளவும் போக்கினான் வன் போர் நீலன் - வில்லி:5 52/1,2
பாங்குடனே தனக்கு உயிர் ஆம் துளப மௌலி பரந்தாமன்-தனை நினைந்தான் பார்த்தன் ஆக - வில்லி:7 52/2
வாள் உகிர் வாளால் கனகனை பிளந்த வண் துழாய் மணம் கமழ் மௌலி
 கோள் அரி எனவே பிளந்து எறிந்து அண்ட கோளமும் பிளக்க நின்று ஆர்த்தான் - வில்லி:10 26/3,4
துளவ மாலை கமழ் மௌலி நாதன் உறை துவரை எய்தி உயர் சுருதியின் - வில்லி:10 53/2
தொழும் தகை மௌலி வேந்தன் சூழ்ச்சியிற்கு இசைவுறாமல் - வில்லி:11 41/3
தன் பிதாமகன் செய்ய தாள் தனது மௌலி மேல் வைத்து நின்று - வில்லி:36 8/1
சார மா மணி குண்டலங்கள் வயங்க மௌலி தயங்கவே - வில்லி:41 21/4
சடா துங்க மௌலி புரசூதனன் தன்னை ஒத்தான் - வில்லி:41 80/4
தன் திரு மைந்தனை மௌலி துணித்த சயத்திரதன்-தனை வாள் - வில்லி:41 231/1
வரத்தினில் முன் பெறு சாபம் வாங்கி அருச்சுனன் சிந்து மகீபன் மௌலி
 சிரத்தினில் எய்தலும் துணிந்தது ஒரு சரத்தால் துணிதலும் அ சிரம் வீழாமல் - வில்லி:42 167/1,2
சொல் தவறாத துரோணனை மௌலி துணித்த திட்டத்துய்மன்னும் - வில்லி:44 3/1
தார் அணி அலங்கல் மௌலி தருமன் மா மதலை சேனை - வில்லி:44 19/3

 மேல்
 
  மௌலியாய் (2)
செழும் சுடர் மணி பணி திங்கள் மௌலியாய்
 எழுந்தருளிய இஃது என்ன மாயமோ - வில்லி:12 117/3,4
சோதியே கொன்றை அம் தொங்கல் மௌலியாய்
 வாதியே மரகத வல்லியாள் ஒரு - வில்லி:12 118/2,3

 மேல்
 
  மௌலியான் (3)
அலங்கல் அம் துளவ மௌலியான் அது கேட்டு அந்தணன்-தனை எதிர்கொண்டு - வில்லி:10 143/3
மன்றல் அம் கொன்றை அம் மாலை மௌலியான்
 ஒன்றிய தவம் புரி உம்பர் தம்பிரான் - வில்லி:12 122/2,3
மன்றல் நிம்ப நாள் மாலை மௌலியான் மாறன் மீனவன் வழுதி பஞ்சவன் - வில்லி:35 3/1

 மேல்
 
  மௌலியும் (1)
மரு வரு கற்பக மாலை மௌலியும்
 விரி புகழ் மைந்தனும் விளங்கினார் அரோ - வில்லி:12 134/3,4

 மேல்
 
  மௌலியை (3)
மருவுறு கொன்றை நாள் மாலை மௌலியை
 கரு_மயில்_பாகனை காண்டல் வேண்டிய - வில்லி:12 47/2,3
எதிர்த்த யானையை அடர்த்த கேசரி என பொன் மௌலியை இருத்தினான் - வில்லி:46 187/2
உனக்கு வாழ்வு இனி என-கொல் ஆம் என உதைத்து மௌலியை உடைக்கவே - வில்லி:46 190/3

 மேல்
 
  மௌற்கல்லியன் (1)
கேள் ஆன மௌற்கல்லியன் என்பவன் கேள்வன் ஆனான் - வில்லி:5 73/4

 மேல்