திருக்குறள்




@1 கடவுள் வாழ்த்து
#1.அகர முதல எழுத்து எல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

#2.கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன்
நல் தாள் தொழாஅர் எனின்

#3.மலர் மிசை ஏகினான் மாண் அடி சேர்ந்தார்
நில மிசை நீடு வாழ்வார்

#4.வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல

#5.இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு

#6.பொறி வாயில் ஐந்து அவித்தான் பொய் தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடு வாழ்வார்

#7.தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
மனக் கவலை மாற்றல் அரிது

#8.அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
பிற ஆழி நீந்தல் அரிது

#9.கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான்
தாளை வணங்காத் தலை

#10.பிறவிப் பெரும் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடி சேராதார்


@2 வான் சிறப்பு
#1.வான் நின்று உலகம் வழங்கி வருதலான்
தான் அமிழ்தம் என்று உணர்தல்பாற்று

#2.துப்பார்க்குத் துப்பு ஆய துப்பு ஆக்கித் துப்பார்க்குத்
துப்பு ஆயதூஉம் மழை

#3.விண் இன்று பொய்ப்பின் விரி நீர் வியன் உலகத்து
உள் நின்று உடற்றும் பசி

#4.ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும்
வாரி வளம் குன்றியக்கால்

#5.கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்று ஆங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை

#6.விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே
பசும் புல் தலை காண்பு அரிது

#7.நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி
தான் நல்காது ஆகிவிடின்

#8.சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

#9.தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
வானம் வழங்காது எனின்

#10.நீர் இன்று அமையாது உலகு எனின் யார் யார்க்கும்
வான் இன்று அமையாது ஒழுக்கு


@3 நீத்தார் பெருமை
#1.ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு

#2.துறந்தார் பெருமை துணைக் கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண்டு அற்று

#3.இருமை வகை தெரிந்து ஈண்டு அறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு

#4.உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
வான் என்னும் வைப்பிற்கு ஓர் வித்து

#5.ஐந்து அவித்தான் ஆற்றல் அகல் விசும்புளார் கோமான்
இந்திரனே சாலும் கரி

#6.செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கு அரிய செய்கலாதார்

#7.சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின்
வகை தெரிவான்-கட்டே உலகு

#8.நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டிவிடும்

#9.குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது

#10.அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ் உயிர்க்கும்
செந்தண்மை பூண்டு ஒழுகலான்


@4 அறன் வலியுறுத்தல்
#1.சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு

#2.அறத்தின் ஊஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கு இல்லை கேடு

#3.ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும் வாய் எல்லாம் செயல்

#4.மனத்துக்-கண் மாசு இலன் ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற

#5.அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்

#6.அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது
பொன்றுங்கால் பொன்றாத் துணை

#7.அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை
பொறுத்தானொடு ஊர்ந்தானிடை

#8.வீழ் நாள் படாஅமை நன்று ஆற்றின் அஃது ஒருவன்
வாழ்நாள் வழி அடைக்கும் கல்

#9.அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம்
புறத்த புகழும் இல

#10.செயல்-பாலது ஓரும் அறனே ஒருவற்கு
உயல்-பாலது ஓரும் பழி


@5 இல்வாழ்க்கை
#1.இல்வாழ்வான் என்பான் இயல்பு உடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை

#2.துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை

#3.தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை

#4.பழி அஞ்சிப் பாத்தூண் உடைத்து ஆயின் வாழ்க்கை
வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல்

#5.அன்பும் அறனும் உடைத்து ஆயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

#6.அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றில்
போஒய்ப் பெறுவது எவன்

#7.இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை

#8.ஆற்றின் ஒழுக்கி அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து

#9.அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன் பழிப்பது இல் ஆயின் நன்று

#10.வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான் உறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்


@6 வாழ்க்கைத்துணை நலம்
#1.மனைத் தக்க மாண்புடையள் ஆகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத்_துணை

#2.மனை மாட்சி இல்லாள்-கண் இல் ஆயின் வாழ்க்கை
எனை மாட்சித்தாயினும் இல்

#3.இல்லது என் இல்லவள் மாண்பு ஆனால் உள்ளது என்
இல்லவள் மாணாக்-கடை

#4.பெண்ணின் பெரும் தக்க யா உள கற்பு எனும்
திண்மை உண்டாகப் பெறின்

#5.தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுது எழுவாள்
பெய் எனப் பெய்யும் மழை

#6.தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகை சான்ற
சொல் காத்துச் சோர்வு இலாள் பெண்

#7.சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
நிறை காக்கும் காப்பே தலை

#8.பெற்றான் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு

#9.புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை இகழ்வார் முன்
ஏறு போல் பீடு நடை

#10.மங்கலம் என்ப மனை மாட்சி மற்று அதன்
நன் கலம் நன் மக்கள் பேறு


@7 புதல்வரைப் பெறுதல்
#1.பெறுமவற்றுள் யாம் அறிவது இல்லை அறிவு அறிந்த
மக்கள் பேறு அல்ல பிற

#2.எழு பிறப்பும் தீயவை தீண்டா பழி பிறங்காப்
பண்பு உடை மக்கள் பெறின்

#3.தம் பொருள் என்ப தம் மக்கள் அவர் பொருள்
தம்தம் வினையான் வரும்

#4.அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்
சிறு கை அளாவிய கூழ்

#5.மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர்
சொல் கேட்டல் இன்பம் செவிக்கு

#6.குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்

#7.தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்

#8.தம்மின் தம் மக்கள் அறிவுடைமை மா நிலத்து
மன் உயிர்க்கு எல்லாம் இனிது

#9.ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய்

#10.மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை
என் நோற்றான்-கொல் எனும் சொல்


@8 அன்புடைமை
#1.அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புன் கணீர் பூசல் தரும்

#2.அன்பு இலார் எல்லாம் தமக்கு உரியர் அன்பு உடையார்
என்பும் உரியர் பிறற்கு

#3.அன்போடு இயைந்த வழக்கு என்ப ஆர் உயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு

#4.அன்பு ஈனும் ஆர்வமுடைமை அது ஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு

#5.அன்புற்று அமர்ந்த வழக்கு என்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு

#6.அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை

#7.என்பு இலதனை வெயில் போலக் காயுமே
அன்பு இலதனை அறம்

#8.அன்பு அகத்து இல்லா உயிர் வாழ்க்கை வன்பால்-கண்
வற்றல் மரம் தளிர்த்த அற்று

#9.புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை
அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு

#10.அன்பின் வழியது உயிர்நிலை அஃது இலார்க்கு
என்பு தோல் போர்த்த உடம்பு


@9 விருந்தோம்பல்
#1.இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தல்-பொருட்டு

#2.விருந்து புறத்ததாத் தான் உண்டல் சாவா
மருந்து எனினும் வேண்டற்பாற்று அன்று

#3.வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று

#4.அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து
நல் விருந்து ஓம்புவான் இல்

#5.வித்தும் இடல் வேண்டும்-கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்

#6.செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான்
நல் விருந்து வானத்தவர்க்கு

#7.இனைத்துணைத்து என்பது ஒன்று இல்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்

#8.பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படாதார்

#9.உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்-கண் உண்டு

#10.மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து


@10 இனியவை கூறல்
#1.இன்சொலால் ஈரம் அளைஇப் படிறு இல ஆம்
செம்பொருள் கண்டார் வாய்ச் சொல்

#2.அகன் அமர்ந்து ஈதலின் நன்றே முகன் அமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்

#3.முகத்தான் அமர்ந்து இனிது நோக்கி அகத்தான் ஆம்
இன்சொலினதே அறம்

#4.துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்-மாட்டும்
இன்புறூஉம் இன்சொலவர்க்கு

#5.பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணி அல்ல மற்றுப் பிற

#6.அல்லவை தேய அறம் பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின்

#7.நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன் ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்

#8.சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும்

#9.இன்சொல் இனிது ஈன்றல் காண்பான் எவன்-கொலோ
வன்சொல் வழங்குவது

#10.இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்பக் காய் கவர்ந்து அற்று


@11 செய்ந்நன்றியறிதல்
#1.செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது

#2.காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது

#3.பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
நன்மை கடலின் பெரிது

#4.தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன் தெரிவார்

#5.உதவி வரைத்து அன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து

#6.மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பு ஆயார் நட்பு

#7.எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தம்-கண்
விழுமம் துடைத்தவர் நட்பு

#8.நன்றி மறப்பது நன்று அன்று நன்று அல்லது
அன்றே மறப்பது நன்று

#9.கொன்று அன்ன இன்னா செயினும் அவர் செய்த
ஒன்றும் நன்று உள்ளக் கெடும்

#10.எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு


@12 நடுவுநிலைமை
#1.தகுதி என ஒன்றும் நன்றே பகுதியான்
பாற்பட்டு ஒழுகப் பெறின்

#2.செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து

#3.நன்றே தரினும் நடுவு இகந்து ஆம் ஆக்கத்தை
அன்றே ஒழியவிடல்

#4.தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப்படும்

#5.கேடும் பெருக்கமும் இல் அல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க்கு அணி

#6.கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம்
நடுவு ஒரீஇ அல்ல செயின்

#7.கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்-கண் தங்கியான் தாழ்வு

#8.சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி

#9.சொல் கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உள் கோட்டம் இன்மை பெறின்

#10.வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி
பிறவும் தம போல் செயின்


@13 அடக்கமுடைமை
#1.அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆர் இருள் உய்த்துவிடும்

#2.காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனின் ஊங்கு இல்லை உயிர்க்கு

#3.செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்

#4.நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது

#5.எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து

#6.ஒருமையுள் ஆமை போல் ஐந்து அடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து

#7.யா காவாராயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல் இழுக்குப்பட்டு

#8.ஒன்றானும் தீச்சொல் பொருள் பயன் உண்டாயின்
நன்று ஆகாது ஆகிவிடும்

#9.தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு

#10.கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து


@14 ஒழுக்கமுடைமை
#1.ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்

#2.பரிந்து ஓம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்து ஓம்பித்
தேரினும் அஃதே துணை

#3.ஒழுக்கமுடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய்விடும்

#4.மறப்பினும் ஓத்துக் கொளல் ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்

#5.அழுக்காறு உடையான்-கண் ஆக்கம் போன்று இல்லை
ஒழுக்கம் இலான்-கண் உயர்வு

#6.ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக்கு அறிந்து

#7.ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி

#8.நன்றிக்கு வித்து ஆகும் நல் ஒழுக்கம் தீ ஒழுக்கம்
என்றும் இடும்பை தரும்

#9.ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்

#10.உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பல கற்றும்
கல்லார் அறிவிலாதார்


@15 பிறனில் விழையாமை
#1.பிறன் பொருளான் பெட்டு ஒழுகும் பேதைமை ஞாலத்து
அறம் பொருள் கண்டார்-கண் இல்

#2.அறன் கடை நின்றாருள் எல்லாம் பிறன் கடை
நின்றாரின் பேதையார் இல்

#3.விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற தெளிந்தார் இல்
தீமை புரிந்து ஒழுகுவார்

#4.எனைத்துணையராயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறன் இல் புகல்

#5.எளிது என இல் இறப்பான் எய்தும் எஞ்ஞான்றும்
விளியாது நிற்கும் பழி

#6.பகை பாவம் அச்சம் பழி என நான்கும்
இகவா ஆம் இல் இறப்பான்-கண்

#7.அறன் இயலான் இல்வாழ்வான் என்பான் பிறன் இயலாள்
பெண்மை நயவாதவன்

#8.பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு

#9.நலக்கு உரியார் யார் எனின் நாம நீர் வைப்பில்
பிறற்கு உரியாள் தோள் தோயாதவர்

#10.அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள்
பெண்மை நயவாமை நன்று


@16 பொறையுடைமை
#1.அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை

#2.பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று

#3.இன்மையுள் இன்மை விருந்து ஒரால் வன்மையுள்
வன்மை மடவார் பொறை

#4.நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப்படும்

#5.ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன் போல் பொதிந்து

#6.ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்

#7.திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து
அறன் அல்ல செய்யாமை நன்று

#8.மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம் தம்
தகுதியான் வென்றுவிடல்

#9.துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார் வாய்
இன்னாச் சொல் நோற்கிற்பவர்

#10.உண்ணாது நோற்பார் பெரியர் பிறர் சொல்லும்
இன்னா சொல் நோற்பாரின் பின்


@17 அழுக்காறாமை
#1.ஒழுக்கு ஆறாக் கொள்க ஒருவன் தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு

#2.விழுப் பேற்றின் அஃது ஒப்பது இல்லை யார்-மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்

#3.அறன் ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறன் ஆக்கம்
பேணாது அழுக்கறுப்பான்

#4.அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்கு ஆற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து

#5.அழுக்காறு உடையார்க்கு அது சாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடு என்பது

#6.கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்

#7.அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டிவிடும்

#8.அழுக்காறு என ஒரு பாவி திருச் செற்றுத்
தீ உழி உய்த்துவிடும்

#9.அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப்படும்

#10.அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃது இல்லார்
பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்


@18 வெஃகாமை
#1.நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்

#2.படு பயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவு அன்மை நாணுபவர்

#3.சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே
மற்று இன்பம் வேண்டுபவர்

#4.இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற
புன்மை_இல் காட்சியவர்

#5.அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார்-மாட்டும்
வெஃகி வெறிய செயின்

#6.அருள் வெஃகி ஆற்றின்-கண் நின்றான் பொருள் வெஃகி
பொல்லாத சூழக் கெடும்

#7.வேண்டற்க வெஃகி ஆம் ஆக்கம் விளை-வயின்
மாண்டற்கு அரிது ஆம் பயன்

#8.அஃகாமை செல்வத்திற்கு யாது எனின் வெஃகாமை
வேண்டும் பிறன் கைப்பொருள்

#9.அறன் அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன் அறிந்து ஆங்கே திரு

#10.இறல் ஈனும் எண்ணாது வெஃகின் விறல் ஈனும்
வேண்டாமை என்னும் செருக்கு


@19 புறங்கூறாமை
#1.அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது

#2.அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறன் அழீஇப் பொய்த்து நகை

#3.புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
அறம் கூறும் ஆக்கம் தரும்

#4.கண் நின்று கண் அறச் சொல்லினும் சொல்லற்க
முன் இன்று பின் நோக்காச் சொல்

#5.அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும்
புன்மையால் காணப்படும்

#6.பிறன் பழி கூறுவான் தன் பழியுள்ளும்
திறன் தெரிந்து கூறப்படும்

#7.பகச் சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச் சொல்லி
நட்பாடல் தேற்றாதவர்

#8.துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னை-கொல் ஏதிலார்-மாட்டு

#9.அறன் நோக்கி ஆற்றும்-கொல் வையம் புறன் நோக்கி
புன்சொல் உரைப்பான் பொறை

#10.ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்
தீது உண்டோ மன்னும் உயிர்க்கு


@20 பயனில சொல்லாமை
#1.பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப்படும்

#2.பயனில பல்லார் முன் சொல்லல் நயனில
நட்டார்-கண் செய்தலின் தீது

#3.நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித்து உரைக்கும் உரை

#4.நயன் சாரா நன்மையின் நீக்கும் பயன் சாராப்
பண்பு_இல் சொல் பல்லார் அகத்து

#5.சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை உடையார் சொலின்

#6.பயன்_இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்
மக்கள் பதடி எனல்

#7.நயனில சொல்லினும் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று

#8.அரும் பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும் பயன் இல்லாத சொல்

#9.பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் மருள் தீர்ந்த
மாசு அறு காட்சியவர்

#10.சொல்லுக சொல்லில் பயன் உடைய சொல்லற்க
சொல்லில் பயன் இலாச் சொல்


@21 தீவினை அச்சம்
#1.தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு

#2.தீயவை தீய பயத்தலான் தீயவை
தீயினும் அஞ்சப்படும்

#3.அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல்

#4.மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின்
அறம் சூழும் சூழ்ந்தவன் கேடு

#5.இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலன் ஆகும் மற்றும் பெயர்த்து

#6.தீப்பால தான் பிறர்-கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல் வேண்டாதான்

#7.எனைப் பகை உற்றாரும் உய்வர் வினைப் பகை
வீயாது பின் சென்று அடும்

#8.தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
வீயாது அடி உறைந்து அற்று

#9.தன்னைத் தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால்

#10.அரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடி
தீவினை செய்யான் எனின்


@22 ஒப்புறவறிதல்
#1.கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரி-மாட்டு
என் ஆற்றும்-கொல்லோ உலகு

#2.தாள் ஆற்றித் தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தல்-பொருட்டு

#3.புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே
ஒப்புரவின் நல்ல பிற

#4.ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப்படும்

#5.ஊருணி நீர் நிறைந்து அற்றே உலகு அவாம்
பேரறிவாளன் திரு

#6.பயன் மரம் உள்ளூர்ப் பழுத்து அற்றால் செல்வம்
நயன் உடையான்-கண் படின்

#7.மருந்து ஆகித் தப்பா மரத்து அற்றால் செல்வம்
பெருந்தகையான்-கண் படின்

#8.இடன்_இல் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடன் அறி காட்சியவர்

#9.நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும் நீர
செய்யாது அமைகலா ஆறு

#10.ஒப்புரவினால் வரும் கேடு எனின் அஃது ஒருவன்
விற்றுக் கோள் தக்கது உடைத்து


@23 ஈகை
#1.வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து

#2.நல்லாறு எனினும் கொளல் தீது மேல் உலகம்
இல் எனினும் ஈதலே நன்று

#3.இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான்-கண்ணே உள

#4.இன்னாது இரக்கப்படுதல் இரந்தவர்
இன்முகம் காணும் அளவு

#5.ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அப் பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்

#6.அற்றார் அழி பசி தீர்த்தல் அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்பு உழி

#7.பாத்தூண் மரீஇயவனைப் பசி என்னும்
தீப் பிணி தீண்டல் அரிது

#8.ஈத்து உவக்கும் இன்பம் அறியார்-கொல் தாம் உடைமை
வைத்து இழக்கும் வன்கணவர்

#9.இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல்

#10.சாதலின் இன்னாதது இல்லை இனிது அதூஉம்
ஈதல் இயையாக்கடை


@24 புகழ்
#1.ஈதல் இசை பட வாழ்தல் அது அல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு

#2.உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று
ஈவார் மேல் நிற்கும் புகழ்

#3.ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்
பொன்றாது நிற்பது ஒன்று இல்

#4.நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு

#5.நத்தம் போல் கேடும் உளது ஆகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது

#6.தோன்றின் புகழொடு தோன்றுக அஃது இலார்
தோன்றலின் தோன்றாமை நன்று

#7.புகழ் பட வாழாதார் தம் நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்

#8.வசை என்ப வையத்தார்க்கு எல்லாம் இசை என்னும்
எச்சம் பெறாஅவிடின்

#9.வசை இலா வண் பயன் குன்றும் இசை இலா
யாக்கை பொறுத்த நிலம்

#10.வசை ஒழிய வாழ்வாரே வாழ்வார் இசை ஒழிய
வாழ்வாரே வாழாதவர்


@25 அருளுடைமை
#1.அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள் செல்வம்
பூரியார்-கண்ணும் உள

#2.நல்லாற்றான் நாடி அருள் ஆள்க பல் ஆற்றான்
தேரினும் அஃதே துணை

#3.அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த
இன்னா உலகம் புகல்

#4.மன் உயிர் ஓம்பி அருள் ஆள்வார்க்கு இல் என்ப
தன் உயிர் அஞ்சும் வினை

#5.அல்லல் அருள் ஆள்வார்க்கு இல்லை வளி வழங்கும்
மல்லல் மா ஞாலம் கரி

#6.பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி
அல்லவை செய்து ஒழுகுவார்

#7.அருள் இல்லார்க்கு அவ் உலகம் இல்லை பொருள் இல்லார்க்கு
இவ் உலகம் இல்லாகியாங்கு

#8.பொருள் அற்றார் பூப்பர் ஒருகால் அருள் அற்றார்
அற்றார் மற்று ஆதல் அரிது

#9.தெருளாதான் மெய்ப்பொருள் கண்டு அற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்

#10.வலியார் முன் தன்னை நினைக்க தான் தன்னின்
மெலியார் மேல் செல்லும் இடத்து


@26 புலால் மறுத்தல்
#1.தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்

#2.பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள் ஆட்சி
ஆங்கு இல்லை ஊன் தின்பவர்க்கு

#3.படை கொண்டார் நெஞ்சம் போல் நன்று ஊக்காது ஒன்றன்
உடல் சுவை உண்டார் மனம்

#4.அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்
பொருள் அல்லது அவ் ஊன் தினல்

#5.உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு

#6.தினல்-பொருட்டால் கொல்லாது உலகு எனின் யாரும்
விலை-பொருட்டால் ஊன் தருவார் இல்

#7.உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிது ஒன்றன்
புண் அது உணர்வார்ப் பெறின்

#8.செயிரின் தலைப்பிரிந்த காட்சியர் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்

#9.அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்து உண்ணாமை நன்று

#10.கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்


@27 தவம்
#1.உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்கு உரு

#2.தவமும் தவம் உடையார்க்கு ஆகும் அவம் அதனை
அஃது இலார் மேற்கொள்வது

#3.துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்-கொல்
மற்றையவர்கள் தவம்

#4.ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும்

#5.வேண்டிய வேண்டியாங்கு எய்தலான் செய் தவம்
ஈண்டு முயலப்படும்

#6.தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்று அல்லார்
அவம் செய்வார் ஆசையுள் பட்டு

#7.சுடச் சுடரும் பொன் போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற்பவர்க்கு

#8.தன் உயிர் தான் அறப் பெற்றானை ஏனைய
மன் உயிர் எல்லாம் தொழும்

#9.கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்டவர்க்கு

#10.இலர் பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர் பலர் நோலாதவர்


@28 கூடா ஒழுக்கம்
#1.வஞ்ச மனத்தான் படிற்று ஒழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்

#2.வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம்
தான் அறி குற்றப்படின்

#3.வலி_இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
புலியின் தோல் போர்த்து மேய்ந்து அற்று

#4.தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து
வேட்டுவன் புள் சிமிழ்த்து அற்று

#5.பற்றற்றேம் என்பார் படிற்று ஒழுக்கம் எற்றுஎற்று என்று
ஏதம் பலவும் தரும்

#6.நெஞ்சின் துறவார் துறந்தார் போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல்

#7.புறம் குன்றி கண்டு அனையரேனும் அகம் குன்றி
மூக்கின் கரியார் உடைத்து

#8.மனத்தது மாசு ஆக மாண்டார் நீர் ஆடி
மறைந்து ஒழுகும் மாந்தர் பலர்

#9.கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்

#10.மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்துவிடின்


@29 கள்ளாமை
#1.எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்க தன் நெஞ்சு

#2.உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன் பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல்

#3.களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்

#4.களவின்-கண் கன்றிய காதல் விளைவின்-கண்
வீயா விழுமம் தரும்

#5.அருள் கருதி அன்புடையார் ஆதல் பொருள் கருதி
பொச்சாப்புப் பார்ப்பார்-கண் இல்

#6.அளவின்-கண் நின்று ஒழுகலாற்றார் களவின்-கண்
கன்றிய காதலவர்

#7.களவு என்னும் கார் அறிவாண்மை அளவு என்னும்
ஆற்றல் புரிந்தார்-கண் இல்

#8.அளவு அறிந்தார் நெஞ்சத்து அறம் போல நிற்கும்
களவு அறிந்தார் நெஞ்சில் கரவு

#9.அளவு அல்ல செய்து ஆங்கே வீவர் களவு அல்ல
மற்றைய தேற்றாதவர்

#10.கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தேள் உலகு


@30 வாய்மை
#1.வாய்மை எனப்படுவது யாது எனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்

#2.பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
நன்மை பயக்கும் எனின்

#3.தன் நெஞ்சு அறிவது பொய்யற்க பொய்த்த பின்
தன் நெஞ்சே தன்னைச் சுடும்

#4.உள்ளத்தால் பொய்யாது ஒழுகின் உலகத்தார்
உள்ளத்துள் எல்லாம் உளன்

#5.மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானம் செய்வாரின் தலை

#6.பொய்யாமை அன்ன புகழ் இல்லை எய்யாமை
எல்லா அறமும் தரும்

#7.பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற
செய்யாமை செய்யாமை நன்று

#8.புறம் தூய்மை நீரான் அமையும் அகம் தூய்மை
வாய்மையான் காணப்படும்

#9.எல்லா விளக்கும் விளக்கு அல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு

#10.யாம் மெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற


@31 வெகுளாமை
#1.செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான் அல்லிடத்துக்
காக்கின் என் காவாக்கால் என்

#2.செல்லா இடத்துச் சினம் தீது செல்லிடத்தும்
இல் அதனின் தீய பிற

#3.மறத்தல் வெகுளியை யார்-மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்

#4.நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் தீய
பகையும் உளவோ பிற

#5.தன்னைத் தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்

#6.சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும்

#7.சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு
நிலத்து அறைந்தான் கை பிழையாது அற்று

#8.இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று

#9.உள்ளிய எல்லாம் உடன் எய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்

#10.இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை


@32 இன்னா செய்யாமை
#1.சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
செய்யாமை மாசற்றார் கோள்

#2.கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் மறுத்து இன்னா
செய்யாமை மாசற்றார் கோள்

#3.செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்த பின்
உய்யா விழுமம் தரும்

#4.இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன் நயம் செய்து விடல்

#5.அறிவினான் ஆவது உண்டோ பிறிதின் நோய்
தம் நோய் போல் போற்றாக்கடை

#6.இன்னா எனத் தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்-கண் செயல்

#7.எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம்
மாணா செய்யாமை தலை

#8.தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்-கொலோ
மன் உயிர்க்கு இன்னா செயல்

#9.பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும்

#10.நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய் செய்யார்
நோய் இன்மை வேண்டுபவர்


@33 கொல்லாமை
#1.அறவினை யாது எனின் கொல்லாமை கோறல்
பிற வினை எல்லாம் தரும்

#2.பகுத்து உண்டு பல் உயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை

#3.ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன்
பின் சாரப் பொய்யாமை நன்று

#4.நல்லாறு எனப்படுவது யாது எனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி

#5.நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை

#6.கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்
செல்லாது உயிர் உண்ணும் கூற்று

#7.தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது
இன் உயிர் நீக்கும் வினை

#8.நன்று ஆகும் ஆக்கம் பெரிது எனினும் சான்றோர்க்குக்
கொன்று ஆகும் ஆக்கம் கடை

#9.கொலை வினையர் ஆகிய மாக்கள் புலை வினையர்
புன்மை தெரிவார் அகத்து

#10.உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லாத் தீ வாழ்க்கையவர்


@34 நிலையாமை
#1.நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
புல்லறிவாண்மை கடை

#2.கூத்தாட்டு அவை குழாத்து அற்றே பெரும் செல்வம்
போக்கும் அது விளிந்து அற்று

#3.அற்கா இயல்பிற்றுச் செல்வம் அது பெற்றால்
அற்குப ஆங்கே செயல்

#4.நாள் என ஒன்று போல் காட்டி உயிர் ஈரும்
வாள் அது உணர்வார்ப் பெறின்

#5.நாச் செற்று விக்குள் மேல்வாரா முன் நல் வினை
மேற்சென்று செய்யப்படும்

#6.நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை என்னும்
பெருமை உடைத்து இவ் உலகு

#7.ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல

#8.குடம்பை தனித்து ஒழியப் புள் பறந்த அற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு

#9.உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு

#10.புக்கில் அமைந்தின்று-கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு


@35 துறவு
#1.யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

#2.வேண்டின் உண்டாகத் துறக்க துறந்த பின்
ஈண்டு இயற்பால பல

#3.அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும்
வேண்டிய எல்லாம் ஒருங்கு

#4.இயல்பு ஆகும் நோன்பிற்கு ஒன்று இன்மையுடைமை
மயல் ஆகும் மற்றும் பெயர்த்து

#5.மற்றும் தொடர்ப்பாடு எவன்-கொல் பிறப்பு அறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை

#6.யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்

#7.பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅதவர்க்கு

#8.தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றையவர்

#9.பற்றற்ற-கண்ணே பிறப்பு அறுக்கும் மற்றும்
நிலையாமை காணப்படும்

#10.பற்றுக பற்றற்றான் பற்றினை அப் பற்றைப்
பற்றுக பற்று விடற்கு


@36 மெய்யுணர்தல்
#1.பொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும்
மருளான் ஆம் மாணாப் பிறப்பு

#2.இருள் நீங்கி இன்பம் பயக்கும் மருள் நீங்கி
மாசறு காட்சியவர்க்கு

#3.ஐயத்தின் நீங்கி தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணியது உடைத்து

#4.ஐ உணர்வு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே
மெய் உணர்வு இல்லாதவர்க்கு

#5.எப்பொருள் எத்தன்மைத்தாயினும் அப் பொருள்
மெய்ப் பொருள் காண்பது அறிவு

#6.கற்று ஈண்டு மெய்ப் பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்று ஈண்டு வாரா நெறி

#7.ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்து உள்ள வேண்டா பிறப்பு

#8.பிறப்பு என்னும் பேதைமை நீங்கச் சிறப்பு என்னும்
செம்பொருள் காண்பது அறிவு

#9.சார்பு உணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்று அழித்துச்
சார்தரா சார்தரும் நோய்

#10.காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன்
நாமம் கெடக் கெடும் நோய்


@37 அவா அறுத்தல்
#1.அவா என்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பு ஈனும் வித்து

#2.வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்று அது
வேண்டாமை வேண்ட வரும்

#3.வேண்டாமை அன்ன விழுச் செல்வம் ஈண்டு இல்லை
யாண்டும் அஃது ஒப்பது இல்

#4.தூஉய்மை என்பது அவா இன்மை மற்று அது
வாஅய்மை வேண்ட வரும்

#5.அற்றவர் என்பார் அவா அற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர்

#6.அஞ்சுவது ஓரும் அறனே ஒருவனை
வஞ்சிப்பது ஓரும் அவா

#7.அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை
தான் வேண்டும் ஆற்றான் வரும்

#8.அவா இல்லார்க்கு இல் ஆகும் துன்பம் அஃது உண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்

#9.இன்பம் இடையறாது ஈண்டும் அவா என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்

#10.ஆரா இயற்கை அவா நீப்பின் அந் நிலையே
பேரா இயற்கை தரும்


@38 ஊழ்
#1.ஆகு_ஊழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகு_ஊழால் தோன்றும் மடி

#2.பேதைப் படுக்கும் இழவு_ஊழ் அறிவு அகற்றும்
ஆகல்_ஊழ் உற்றக்கடை

#3.நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன்
உண்மை அறிவே மிகும்

#4.இரு வேறு உலகத்து இயற்கை திரு வேறு
தெள்ளியர் ஆதலும் வேறு

#5.நல்லவை எல்லாஅம் தீய ஆம் தீயவும்
நல்ல ஆம் செல்வம் செயற்கு

#6.பரியினும் ஆகா ஆம் பால் அல்ல உய்த்து
சொரியினும் போகா தம

#7.வகுத்தான் வகுத்த வகை அல்லால் கோடி
தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது

#8.துறப்பார்-மன் துப்புரவு இல்லார் உறற்பால
ஊட்டா கழியும் எனின்

#9.நன்று ஆம்கால் நல்லவாக் காண்பவர் அன்று ஆம்கால்
அல்லற்படுவது எவன்

#10.ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று
சூழினும் தான் முந்துறும்


@39 இறைமாட்சி
#1.படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு

#2.அஞ்சாமை ஈகை அறிவு ஊக்கம் இந் நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு

#3.தூங்காமை கல்வி துணிவுடைமை இம் மூன்றும்
நீங்கா நிலன் ஆள்பவற்கு

#4.அறன் இழுக்காது அல்லவை நீக்கி மறன் இழுக்கா
மானம் உடையது அரசு

#5.இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்லது அரசு

#6.காட்சிக்கு எளியன் கடும் சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்

#7.இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்குத் தன் சொலால்
தான் கண்டனைத்து இவ் உலகு

#8.முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறை என்று வைக்கப்படும்

#9.செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன்
கவி கைக் கீழ்த் தங்கும் உலகு

#10.கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும்
உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி


@40 கல்வி
#1.கற்க கசடு அற கற்பவை கற்ற பின்
நிற்க அதற்குத் தக

#2.எண் என்ப ஏனை எழுத்து என்ப இவ் இரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு

#3.கண் உடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு
புண் உடையர் கல்லாதவர்

#4.உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்

#5.உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லாதவர்

#6.தொட்டனைத்து ஊறும் மணல் கேணி மாந்தர்க்குக்
கற்றனைத்து ஊறும் அறிவு

#7.யாதானும் நாடு ஆமால் ஊர் ஆமால் என் ஒருவன்
சாம் துணையும் கல்லாதவாறு

#8.ஒருமைக்-கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்பு உடைத்து

#9.தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு
காமுறுவர் கற்று அறிந்தார்

#10.கேடு_இல் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு
மாடு அல்ல மற்றையவை


@41 கல்லாமை
#1.அரங்கு இன்றி வட்டாடிய அற்றே நிரம்பிய
நூல் இன்றிக் கோட்டி கொளல்

#2.கல்லாதான் சொல் காமுறுதல் முலை இரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்று அற்று

#3.கல்லாதவரும் நனி நல்லர் கற்றார் முன்
சொல்லாது இருக்கப் பெறின்

#4.கல்லாதான் ஒட்பம் கழிய நன்றாயினும்
கொள்ளார் அறிவுடையார்

#5.கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வுபடும்

#6.உளர் என்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களர் அனையர் கல்லாதவர்

#7.நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம்
மண் மாண் புனை பாவை அற்று

#8.நல்லார்-கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்-கண் பட்ட திரு

#9.மேல் பிறந்தாராயினும் கல்லாதார் கீழ்ப் பிறந்தும்
கற்றார் அனைத்து இலர் பாடு

#10.விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
கற்றாரோடு ஏனையவர்


@42 கேள்வி
#1.செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச் செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை

#2.செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும்

#3.செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின்
ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து

#4.கற்றிலனாயினும் கேட்க அஃது ஒருவற்கு
ஒற்கத்தின் ஊற்று ஆம் துணை

#5.இழுக்கல் உடை உழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்கம் உடையார் வாய்ச் சொல்

#6.எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்

#7.பிழைத்து உணர்ந்தும் பேதைமை சொல்லார் இழைத்து உணர்ந்து
ஈண்டிய கேள்வியவர்

#8.கேட்பினும் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப்படாத செவி

#9.நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது

#10.செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்


@43 அறிவுடைமை
#1.அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள் அழிக்கல் ஆகா அரண்

#2.சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ
நன்றின்-பால் உய்ப்பது அறிவு

#3.எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப் பொருள்
மெய்ப் பொருள் காண்பது அறிவு

#4.எண் பொருள ஆகச் செல சொல்லித் தான் பிறர்-வாய்
நுண் பொருள் காண்பது அறிவு

#5.உலகம் தழீஇயது ஒட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்லது அறிவு

#6.எவ்வது உறைவது உலகம் உலகத்தொடு
அவ்வது உறைவது அறிவு

#7.அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்
அஃது அறிகல்லாதவர்

#8.அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்

#9.எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்

#10.அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார்
என் உடையரேனும் இலர்


@44 குற்றங்கடிதல்
#1.செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து

#2.இவறலும் மாண்பு இறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு

#3.தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழி நாணுவார்

#4.குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றம் தரூஉம் பகை

#5.வரும் முன்னர்க் காவாதான் வாழ்க்கை எரி முன்னர்
வைத்தூறு போலக் கெடும்

#6.தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்கிற்பின்
என் குற்றம் ஆகும் இறைக்கு

#7.செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
உயற்பாலது அன்றிக் கெடும்

#8.பற்று உள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப்படுவது ஒன்று அன்று

#9.வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை

#10.காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்


@45 பெரியாரைத் துணைக்கோடல்
#1.அறன் அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன் அறிந்து தேர்ந்து கொளல்

#2.உற்ற நோய் நீக்கி உறாஅமை முன் காக்கும்
பெற்றியார் பேணிக் கொளல்

#3.அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்

#4.தம்மின் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை

#5.சூழ்வார் கண் ஆக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்துகொளல்

#6.தக்கார் இனத்தனாய்த் தான் ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்தது இல்

#7.இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமையவர்

#8.இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்

#9.முதல் இலார்க்கு ஊதியம் இல்லை மதலை ஆம்
சார்பு இலார்க்கு இல்லை நிலை

#10.பல்லார் பகை கொளலின் பத்து அடுத்த தீமைத்தே
நல்லார் தொடர் கைவிடல்


@46 சிற்றினம் சேராமை
#1.சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்துவிடும்

#2.நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்று ஆகும் மாந்தர்க்கு
இனத்து இயல்பது ஆகும் அறிவு

#3.மனத்தான் ஆம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தான் ஆம்
இன்னான் எனப்படும் சொல்

#4.மனத்து உளது போலக் காட்டி ஒருவற்கு
இனத்து உளது ஆகும் அறிவு

#5.மனம் தூய்மை செய் வினை தூய்மை இரண்டும்
இனம் தூய்மை தூவா வரும்

#6.மனம் தூயார்க்கு எச்சம் நன்று ஆகும் இனம் தூயார்க்கு
இல்லை நன்று ஆகா வினை

#7.மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம்
எல்லாப் புகழும் தரும்

#8.மன நலம் நன்கு உடையராயினும் சான்றோர்க்கு
இன நலம் ஏமாப்பு உடைத்து

#9.மன நலத்தின் ஆகும் மறுமை மற்று அஃதும்
இன நலத்தின் ஏமாப்பு உடைத்து

#10.நல் இனத்தின் ஊங்கும் துணை இல்லை தீ இனத்தின்
அல்லற்படுப்பதூஉம் இல்


@47 தெரிந்து செயல் வகை
#1.அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழி பயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்

#2.தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு
அரும் பொருள் யாதொன்றும் இல்

#3.ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை
ஊக்கார் அறிவுடையார்

#4.தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவு என்னும்
ஏதப்பாடு அஞ்சுபவர்

#5.வகை அறச் சூழாது எழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பது ஓர் ஆறு

#6.செய் தக்க அல்ல செயக் கெடும் செய் தக்க
செய்யாமையானும் கெடும்

#7.எண்ணித் துணிக கருமம் துணிந்த பின்
எண்ணுவம் என்பது இழுக்கு

#8.ஆற்றின் வருந்தா வருத்தம் பலர் நின்று
போற்றினும் பொத்துப்படும்

#9.நன்று ஆற்றலுள்ளும் தவறு உண்டு அவரவர்
பண்பு அறிந்து ஆற்றாக்கடை

#10.எள்ளாத எண்ணிச் செயல் வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு


@48 வலியறிதல்
#1.வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
துணை வலியும் தூக்கிச் செயல்

#2.ஒல்வது அறிவது அறிந்து அதன்-கண் தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்

#3.உடைத் தம் வலி அறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்-கண் முரிந்தார் பலர்

#4.அமைந்தாங்கு ஒழுகான் அளவு அறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்

#5.பீலி பெய் சாகாடும் அச்சு இறும் அப் பண்டம்
சால மிகுத்துப் பெயின்

#6.நுனிக் கொம்பர் ஏறினார் அஃது இறந்து ஊக்கின்
உயிர்க்கு இறுதி ஆகிவிடும்

#7.ஆற்றின் அளவு அறிந்து ஈக அது பொருள்
போற்றி வழங்கும் நெறி

#8.ஆகு_ஆறு அளவு இட்டிதாயினும் கேடு இல்லை
போகு_ஆறு அகலாக்கடை

#9.அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை உள போல
இல்லாகித் தோன்றாக் கெடும்

#10.உள வரை தூக்காத ஒப்புரவாண்மை
வள வரை வல்லைக் கெடும்


@49 காலமறிதல்
#1.பகல் வெல்லும் கூகையைக் காக்கை இகல் வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது

#2.பருவத்தொடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்கும் கயிறு

#3.அரு வினை என்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின்

#4.ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தான் செயின்

#5.காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருதுபவர்

#6.ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர்
தாக்கற்குப் பேரும் தகைத்து

#7.பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து
உள் வேர்ப்பர் ஒள்ளியவர்

#8.செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை

#9.எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந் நிலையே
செய்தற்கு அரிய செயல்

#10.கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன்
குத்து ஒக்க சீர்த்த இடத்து


@50 இடனறிதல்
#1.தொடங்கற்க எவ் வினையும் எள்ளற்க முற்றும்
இடம் கண்ட பின் அல்லது

#2.முரண் சேர்ந்த மொய்ம்பினவர்க்கும் அரண் சேர்ந்து ஆம்
ஆக்கம் பலவும் தரும்

#3.ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து
போற்றார்-கண் போற்றிச் செயின்

#4.எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன் அறிந்து
துன்னியார் துன்னிச் செயின்

#5.நெடும் புனலுள் வெல்லும் முதலை அடும் புனலின்
நீங்கின் அதனைப் பிற

#6.கடல் ஓடா கால் வல் நெடும் தேர் கடல் ஓடும்
நாவாயும் ஓடா நிலத்து

#7.அஞ்சாமை அல்லால் துணை வேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்

#8.சிறு படையான் செல்லிடம் சேரின் உறு படையான்
ஊக்கம் அழிந்துவிடும்

#9.சிறை நலனும் சீரும் இலர் எனினும் மாந்தர்
உறை நிலத்தோடு ஒட்டல் அரிது

#10.கால் ஆழ் களரின் நரி அடும் கண் அஞ்சா
வேல் ஆள் முகத்த களிறு


@51 தெரிந்து தெளிதல்
#1.அறம் பொருள் இன்பம் உயிர் அச்சம் நான்கின்
திறம் தெரிந்து தேறப்படும்

#2.குடிப் பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப் பரியும்
நாண் உடையான்-கட்டே தெளிவு

#3.அரிய கற்று ஆசு அற்றார்-கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு

#4.குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல்

#5.பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளை கல்

#6.அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்று அவர்
பற்று இலர் நாணார் பழி

#7.காதன்மை கந்தா அறிவு அறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாம் தரும்

#8.தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும்

#9.தேறற்க யாரையும் தேராது தேர்ந்த பின்
தேறுக தேறும் பொருள்

#10.தேரான் தெளிவும் தெளிந்தான்-கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்


@52 தெரிந்து வினையாடல்
#1.நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த
தன்மையான் ஆளப்படும்

#2.வாரி பெருக்கி வளம் படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை

#3.அன்பு அறிவு தேற்றம் அவா இன்மை இந் நான்கும்
நன்கு உடையான்-கட்டே தெளிவு

#4.எனை வகையான் தேறியக்-கண்ணும் வினை வகையான்
வேறு ஆகும் மாந்தர் பலர்

#5.அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினை தான்
சிறந்தான் என்று ஏவல்பாற்று அன்று

#6.செய்வானை நாடி வினை நாடி காலத்தோடு
எய்த உணர்ந்து செயல்

#7.இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்-கண் விடல்

#8.வினைக்கு உரிமை நாடிய பின்றை அவனை
அதற்கு உரியன் ஆகச் செயல்

#9.வினைக்-கண் வினை உடையான் கேண்மை வேறு ஆக
நினைப்பானை நீங்கும் திரு

#10.நாள்-தோறும் நாடுக மன்னன் வினை செய்வான்
கோடாமை கோடாது உலகு


@53 சுற்றம் தழால்
#1.பற்றற்ற-கண்ணும் பழமை பாராட்டுதல்
சுற்றத்தார்-கண்ணே உள

#2.விருப்பு அறாச் சுற்றம் இயையின் அருப்பு அறா
ஆக்கம் பலவும் தரும்

#3.அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குள வளாக்
கோடு இன்றி நீர் நிறைந்து அற்று

#4.சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம் தான்
பெற்றத்தால் பெற்ற பயன்

#5.கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப்படும்

#6.பெரும் கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்கு உடையார் மாநிலத்து இல்

#7.காக்கை கரவா கரைந்து உண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள

#8.பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அது நோக்கி வாழ்வார் பலர்

#9.தமர் ஆகித் தன் துறந்தார் சுற்றம் அமராமை
காரணம் இன்றி வரும்

#10.உழைப் பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத்து இருந்து எண்ணிக் கொளல்


@54 பொச்சாமை
#1.இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியின் சோர்வு

#2.பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்சம் நிரப்புக் கொன்றாங்கு

#3.பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து
எப்பால் நூலோர்க்கும் துணிவு

#4.அச்சம் உடையார்க்கு அரண் இல்லையாங்கு இல்லை
பொச்சாப்பு உடையார்க்கு நன்கு

#5.முன்னுறக் காவாது இழுக்கியான் தன் பிழை
பின் ஊறு இரங்கிவிடும்

#6.இழுக்காமை யார்-மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அஃது ஒப்பது இல்

#7.அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவாக்
கருவியான் போற்றிச் செயின்

#8.புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்

#9.இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து

#10.உள்ளியது எய்தல் எளிது-மன் மற்றும் தான்
உள்ளியது உள்ளப் பெறின்


@55 செங்கோன்மை
#1.ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார்-மாட்டும்
தேர்ந்து செய்வஃதே முறை

#2.வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழும் குடி

#3.அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல்

#4.குடி தழீஇக் கோல் ஓச்சும் மாநில மன்னன்
அடி தழீஇ நிற்கும் உலகு

#5.இயல்பு உளிக் கோல் ஓச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு

#6.வேல் அன்று வென்றி தருவது மன்னவன்
கோல் அதூஉம் கோடாது எனின்

#7.இறை காக்கும் வையகம் எல்லாம் அவனை
முறை காக்கும் முட்டாச் செயின்

#8.எண் பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண் பதத்தான் தானே கெடும்

#9.குடி புறங்காத்து ஓம்பிக் குற்றம் கடிதல்
வடு அன்று வேந்தன் தொழில்

#10.கொலையின் கொடியாரை வேந்து ஒறுத்தல் பைம் கூழ்
களை கட்டதனொடு நேர்


@56 கொடுங்கோன்மை
#1.கொலை மேற்கொண்டாரின் கொடிதே அலை மேற்கொண்டு
அல்லவை செய்து ஒழுகும் வேந்து

#2.வேலொடு நின்றான் இடு என்றது போலும்
கோலொடு நின்றான் இரவு

#3.நாள்-தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்-தொறும் நாடு கெடும்

#4.கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் கோல் கோடி
சூழாது செய்யும் அரசு

#5.அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை

#6.மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃது இன்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி

#7.துளியின்மை ஞாலத்திற்கு எற்று அற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு

#8.இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோல் கீழ்ப் படின்

#9.முறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி
ஒல்லாது வானம் பெயல்

#10.ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர்
காவலன் காவான் எனின்


@57 வெருவந்த செய்யாமை
#1.தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து

#2.கடிது ஓச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம்
நீங்காமை வேண்டுபவர்

#3.வெருவந்த செய்து ஒழுகும் வெம் கோலன் ஆயின்
ஒருவந்தம் ஒல்லை கெடும்

#4.இறை கடியன் என்று உரைக்கும் இன்னாச் சொல் வேந்தன்
உறை கடுகி ஒல்லை கெடும்

#5.அரும் செவ்வி இன்னா முகத்தான் பெரும் செல்வம்
பேஎய் கண்ட அன்னது உடைத்து

#6.கடும் சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடும் செல்வம்
நீடு இன்றி ஆங்கே கெடும்

#7.கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடு முரண் தேய்க்கும் அரம்

#8.இனத்து ஆற்றி எண்ணாத வேந்தன் சினத்து ஆற்றிச்
சீறின் சிறுகும் திரு

#9.செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்

#10.கல்லார்ப் பிணிக்கும் கடும் கோல் அது அல்லது
இல்லை நிலக்குப் பொறை


@58 கண்ணோட்டம்
#1.கண்ணோட்டம் என்னும் கழி பெரும் காரிகை
உண்மையான் உண்டு இவ் உலகு

#2.கண்ணோட்டத்து உள்ளது உலகியல் அஃது இலார்
உண்மை நிலைக்குப் பொறை

#3.பண் என் ஆம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என் ஆம்
கண்ணோட்டம் இல்லாத கண்

#4.உள போல் முகத்து எவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண்

#5.கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃது இன்றேல்
புண் என்று உணரப்படும்

#6.மண்ணோடு இயைந்த மரத்து அனையர் கண்ணோடு
இயைந்து கண்ணோடாதவர்

#7.கண்ணோட்டம் இல்லவர் கண் இலர் கண் உடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்

#8.கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்து இவ் உலகு

#9.ஒறுத்தாற்றும் பண்பினார்-கண்ணும் கண்ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை

#10.பெயக் கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டுபவர்


@59 ஒற்றாடல்
#1.ஒற்றும் உரை சான்ற நூலும் இவை இரண்டும்
தெற்று என்க மன்னவன் கண்

#2.எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்

#3.ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன்
கொற்றம் கொளக் கிடந்தது இல்

#4.வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்று ஆங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று

#5.கடாஅ உருவொடு கண் அஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று

#6.துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து
என் செயினும் சோர்வு இலது ஒற்று

#7.மறைந்தவை கேட்க வற்று ஆகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று

#8.ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் மற்றும் ஓர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்

#9.ஒற்று ஒற்று உணராமை ஆள்க உடன் மூவர்
சொல் தொக்க தேறப்படும்

#10.சிறப்பு அறிய ஒற்றின்-கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை


@60 ஊக்கமுடைமை
#1.உடையர் எனப்படுவது ஊக்கம் அஃது இல்லார்
உடையது உடையரோ மற்று

#2.உள்ளம் உடைமை உடைமை பொருள் உடைமை
நில்லாது நீங்கிவிடும்

#3.ஆக்கம் இழந்தேம் என்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்து உடையார்

#4.ஆக்கம் அதர் வினாய்ச் செல்லும் அசைவு இலா
ஊக்கம் உடையான் உழை

#5.வெள்ளத்து அனைய மலர் நீட்டம் மாந்தர்-தம்
உள்ளத்து அனையது உயர்வு

#6.உள்ளுவது எல்லாம் உயர்வு உள்ளல் மற்று அது
தள்ளினும் தள்ளாமை நீர்த்து

#7.சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதை அம்பின்
பட்டு பாடு ஊன்றும் களிறு

#8.உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னும் செருக்கு

#9.பரியது கூர் கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலி தாக்குறின்

#10.உரம் ஒருவற்கு உள்ள வெறுக்கை அஃது இல்லர்
மரம் மக்கள் ஆதலே வேறு


@61 மடியின்மை
#1.குடி என்னும் குன்றா விளக்கம் மடி என்னும்
மாசு ஊர மாய்ந்து கெடும்

#2.மடியை மடியா ஒழுகல் குடியை
குடியாக வேண்டுபவர்

#3.மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த
குடி மடியும் தன்னினும் முந்து

#4.குடி மடிந்து குற்றம் பெருகும் மடி மடிந்து
மாண்ட உஞற்று இலவர்க்கு

#5.நெடுநீர் மறவி மடி துயில் நான்கும்
கெடும் நீரார் காமக் கலன்

#6.படி உடையார் பற்று அமைந்தக்-கண்ணும் மடி உடையார்
மாண் பயன் எய்தல் அரிது

#7.இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து
மாண்ட உஞற்று இலவர்

#8.மடிமை குடிமைக்-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்திவிடும்

#9.குடியாண்மையுள் வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும்

#10.மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு


@62 ஆள்வினையுடைமை
#1.அருமை உடைத்து என்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்

#2.வினைக்-கண் வினை கெடல் ஓம்பல் வினைக் குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு

#3.தாளாண்மை என்னும் தகைமைக்-கண் தங்கிற்றே
வேளாண்மை என்னும் செருக்கு

#4.தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடி கை
வாளாண்மை போலக் கெடும்

#5.இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர்
துன்பம் துடைத்து ஊன்றும் தூண்

#6.முயற்சி திருவினை ஆக்கும் முயற்று இன்மை
இன்மை புகுத்திவிடும்

#7.மடி உளான் மா முகடி என்ப மடி இலான்
தாள் உளான் தாமரையினாள்

#8.பொறி இன்மை யார்க்கும் பழி அன்று அறிவு அறிந்து
ஆள்வினை இன்மை பழி

#9.தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய் வருத்தக் கூலி தரும்

#10.ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றி
தாழாது உஞற்றுபவர்


@63 இடுக்கண் அழியாமை
#1.இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்து ஊர்வது அஃது ஒப்பது இல்

#2.வெள்ளத்து அனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும்

#3.இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅதவர்

#4.மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து

#5.அடுக்கி வரினும் அழிவு இலான் உற்ற
இடுக்கண் இடுக்கண் படும்

#6.அற்றேம் என்று அல்லற்படுபவோ பெற்றேம் என்று
ஓம்புதல் தேற்றாதவர்

#7.இலக்கம் உடம்பு இடும்பைக்கு என்று கலக்கத்தைக்
கையாறா கொள்ளாதாம் மேல்

#8.இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான்
துன்பமுறுதல் இலன்

#9.இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பமுறுதல் இலன்

#10.இன்னாமை இன்பம் எனக் கொளின் ஆகும் தன்
ஒன்னார் விழையும் சிறப்பு


@64 அமைச்சு
#1.கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு

#2.வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு

#3.பிரித்தலும் பேணிக்கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்லது அமைச்சு

#4.தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு

#5.அறன் அறிந்து ஆன்று அமைந்த சொல்லான் எஞ்ஞான்றும்
திறன் அறிந்தான் தேர்ச்சித் துணை

#6.மதி_நுட்பம் நூலொடு உடையார்க்கு அதி நுட்பம்
யா உள முன் நிற்பவை

#7.செயற்கை அறிந்தக்கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்

#8.அறி கொன்று அறியான் எனினும் உறுதி
உழை இருந்தான் கூறல் கடன்

#9.பழுது எண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ் ஓர்
எழுபது கோடி உறும்

#10.முறைப்பட சூழ்ந்தும் முடிவு இலவே செய்வர்
திறப்பாடு இலாஅதவர்


@65 சொல்வன்மை
#1.நாநலம் என்னும் நலனுடைமை அந் நலம்
யா நலத்து உள்ளதூஉம் அன்று

#2.ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்
காத்து ஓம்பல் சொல்லின்-கண் சோர்வு

#3.கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல்

#4.திறன் அறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனின் ஊங்கு இல்

#5.சொல்லுக சொல்லைப் பிறிது ஓர் சொல் அச் சொல்லை
வெல்லும் சொல் இன்மை அறிந்து

#6.வேட்பத் தாம் சொல்லிப் பிறர் சொல் பயன் கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள்

#7.சொலல் வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல் வெல்லல் யார்க்கும் அரிது

#8.விரைந்து தொழில் கேட்கும் ஞாலம் நிரந்து இனிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின்

#9.பல சொல்லக் காமுறுவர் மன்ற மாசற்ற
சில சொல்லல் தேற்றாதவர்

#10.இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் கற்றது
உணர விரித்து உரையாதார்


@66 வினைத்தூய்மை
#1.துணை நலம் ஆக்கம் தரூஉம் வினை நலம்
வேண்டிய எல்லாம் தரும்

#2.என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை

#3.ஓஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய் வினை
ஆஅதும் என்னுமவர்

#4.இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கு அற்ற காட்சியவர்

#5.எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்று அன்ன செய்யாமை நன்று

#6.ஈன்றாள் பசி காண்பானாயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை

#7.பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழி நல்குரவே தலை

#8.கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவை தாம்
முடிந்தாலும் பீழை தரும்

#9.அழக் கொண்ட எல்லாம் அழப் போம் இழப்பினும்
பின் பயக்கும் நற்பாலவை

#10.சலத்தால் பொருள் செய்து ஏமாக்கல் பசு மண்
கலத்துள் நீர் பெய்து இரீஇய அற்று


@67 வினைத்திட்பம்
#1.வினைத் திட்பம் என்பது ஒருவன் மனத் திட்பம்
மற்றைய எல்லாம் பிற

#2.ஊறு ஒரால் உற்ற பின் ஒல்காமை இவ் இரண்டின்
ஆறு என்பர் ஆய்ந்தவர் கோள்

#3.கடை கொட்கச் செய் தக்கது ஆண்மை இடை கொட்கின்
எற்றா விழுமம் தரும்

#4.சொல்லுதல் யார்க்கும் எளிய அரிய ஆம்
சொல்லிய வண்ணம் செயல்

#5.வீறு எய்தி மாண்டார் வினைத் திட்பம் வேந்தன்-கண்
ஊறு எய்தி உள்ளப்படும்

#6.எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியராகப் பெறின்

#7.உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெரும் தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து

#8.கலங்காது கண்ட வினைக்-கண் துளங்காது
தூக்கம் கடிந்து செயல்

#9.துன்பம் உற வரினும் செய்க துணிவு ஆற்றி
இன்பம் பயக்கும் வினை

#10.எனைத் திட்பம் எய்தியக்-கண்ணும் வினைத் திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு


@68 வினை செயல் வகை
#1.சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் அத் துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது

#2.தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை

#3.ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே ஒல்லாக்கால்
செல்லும் வாய் நோக்கிச் செயல்

#4.வினை பகை என்று இரண்டின் எச்சம் நினையுங்கால்
தீ எச்சம் போலத் தெறும்

#5.பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்
இருள் தீர எண்ணிச் செயல்

#6.முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்

#7.செய் வினை செய்வான் செயல் முறை அவ் வினை
உள் அறிவான் உள்ளம் கொளல்

#8.வினையான் வினை ஆக்கிக் கோடல் நனை கவுள்
யானையால் யானை யாத்து அற்று

#9.நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்

#10.உறை சிறியார் உள் நடுங்கல் அஞ்சிக் குறை பெறின்
கொள்வர் பெரியார் பணிந்து


@69 தூது
#1.அன்புடைமை ஆன்ற குடிப் பிறத்தல் வேந்து அவாம்
பண்புடைமை தூது உரைப்பான் பண்பு

#2.அன்பு அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூது உரைப்பார்க்கு
இன்றியமையாத மூன்று

#3.நூலாருள் நூல் வல்லான் ஆகுதல் வேலாருள்
வென்றி வினை உரைப்பான் பண்பு

#4.அறிவு உரு ஆராய்ந்த கல்வி இம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு

#5.தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச் சொல்லி
நன்றி பயப்பது ஆம் தூது

#6.கற்றுக் கண் அஞ்சான் செலச் சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவது ஆம் தூது

#7.கடன் அறிந்து காலம் கருதி இடன் அறிந்து
எண்ணி உரைப்பான் தலை

#8.தூய்மை துணைமை துணிவுடைமை இம் மூன்றும்
வாய்மை வழி உரைப்பான் பண்பு

#9.விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடு மாற்றம்
வாய் சோரா வன்கணவன்

#10.இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பது ஆம் தூது


@70 மன்னரைச் சேர்ந்தொழுகல்
#1.அகலாது அணுகாது தீக் காய்வார் போல்க
இகல் வேந்தர்ச் சேர்ந்து ஒழுகுவார்

#2.மன்னர் விழைப விழையாமை மன்னரான்
மன்னிய ஆக்கம் தரும்

#3.போற்றின் அரியவை போற்றல் கடுத்த பின்
தேற்றுதல் யார்க்கும் அரிது

#4.செவிச் சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல்
ஆன்ற பெரியார் அகத்து

#5.எப்பொருளும் ஓரார் தொடரார் மற்று அப் பொருளை
விட்டக்கால் கேட்க மறை

#6.குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பு இல
வேண்டுப வேட்பச் சொலல்

#7.வேட்பன சொல்லி வினை இல எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல்

#8.இளையர் இன முறையர் என்று இகழார் நின்ற
ஒளியொடு ஒழுகப்படும்

#9.கொளப்பட்டேம் என்று எண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கு அற்ற காட்சியவர்

#10.பழையம் எனக் கருதி பண்பு அல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும்


@71 குறிப்பறிதல்
#1.கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறா நீர் வையக்கு அணி

#2.ஐயப்படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தொடு ஒப்பக் கொளல்

#3.குறிப்பின் குறிப்பு உணர்வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல்

#4.குறித்தது கூறாமைக் கொள்வாரொடு ஏனை
உறுப்பு ஓர் அனையரால் வேறு

#5.குறிப்பின் குறிப்பு உணரா ஆயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்

#6.அடுத்தது காட்டும் பளிங்கு போல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம்

#7.முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான் முந்துறும்

#8.முகம் நோக்கி நிற்க அமையும் அகம் நோக்கி
உற்றது உணர்வார்ப் பெறின்

#9.பகைமையும் கேண்மையும் கண் உரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின்

#10.நுண்ணியம் என்பார் அளக்கும் கோல் காணுங்கால்
கண் அல்லது இல்லை பிற


@72 அவையறிதல்
#1.அவை அறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகை அறிந்த தூய்மையவர்

#2.இடைதெரிந்து நன்கு உணர்ந்து சொல்லுக சொல்லின்
நடை தெரிந்த நன்மையவர்

#3.அவை அறியார் சொல்லல் மேற்கொள்பவர் சொல்லின்
வகை அறியார் வல்லதூஉம் இல்

#4.ஒளியார் முன் ஒள்ளியர் ஆதல் வெளியார் முன்
வான் சுதை வண்ணம் கொளல்

#5.நன்று என்றவற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு

#6.ஆற்றின் நிலை தளர்ந்து அற்றே வியன் புலம்
ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு

#7.கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடு அறச்
சொல் தெரிதல் வல்லார் அகத்து

#8.உணர்வது உடையார் முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர் சொரிந்து அற்று

#9.புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல் அவையுள்
நன்கு செலச் சொல்லுவார்

#10.அங்கணத்துள் உக்க அமிழ்து அற்றால் தம் கணத்தர்
அல்லார் முன் கோட்டி கொளல்


@73 அவை அஞ்சாமை
#1.வகை அறிந்து வல் அவை வாய்சோரார் சொல்லின்
தொகை அறிந்த தூய்மையவர்

#2.கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார் முன்
கற்ற செலச் சொல்லுவார்

#3.பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சாதவர்

#4.கற்றார் முன் கற்ற செலச் சொல்லித் தாம் கற்ற
மிக்காருள் மிக்க கொளல்

#5.ஆற்றின் அளவு அறிந்து கற்க அவை அஞ்சா
மாற்றம் கொடுத்தல்-பொருட்டு

#6.வாளொடு என் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடு என்
நுண் அவை அஞ்சுபவர்க்கு

#7.பகையகத்துப் பேடி கை ஒள் வாள் அவையகத்து
அஞ்சுமவன் கற்ற நூல்

#8.பல்லவை கற்றும் பயம் இலரே நல் அவையுள்
நன்கு செலச் சொல்லாதார்

#9.கல்லாதவரின் கடை என்ப கற்றறிந்தும்
நல்லார் அவை அஞ்சுவார்

#10.உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் களன் அஞ்சிக்
கற்ற செலச் சொல்லாதார்


@74 நாடு
#1.தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வு இலா
செல்வரும் சேர்வது நாடு

#2.பெரும் பொருளான் பெட்டக்கது ஆகி அரும் கேட்டால்
ஆற்ற விளைவது நாடு

#3.பொறை ஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறை ஒருங்கு நேர்வது நாடு

#4.உறு பசியும் ஓவாப் பிணியும் செறு பகையும்
சேராது இயல்வது நாடு

#5.பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும்
கொல் குறும்பும் இல்லது நாடு

#6.கேடு அறியாக் கெட்ட இடத்தும் வளம் குன்றா
நாடு என்ப நாட்டின் தலை

#7.இரு புனலும் வாய்ந்த மலையும் வரு புனலும்
வல் அரணும் நாட்டிற்கு உறுப்பு

#8.பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்
அணி என்ப நாட்டிற்கு இவ் ஐந்து

#9.நாடு என்ப நாடா வளத்தன நாடு அல்ல
நாட வளம் தரும் நாடு

#10.ஆங்கு அமைவு எய்தியக்-கண்ணும் பயம் இன்றே
வேந்து அமைவு இல்லாத நாடு


@75 அரண்
#1.ஆற்றுபவர்க்கும் அரண் பொருள் அஞ்சி தன்
போற்றுபவர்க்கும் பொருள்

#2.மணி நீரும் மண்ணும் மலையும் அணி நிழல்
காடும் உடையது அரண்

#3.உயர்வு அகலம் திண்மை அருமை இந் நான்கின்
அமைவு அரண் என்று உரைக்கும் நூல்

#4.சிறு காப்பின் பேர் இடத்தது ஆகி உறு பகை
ஊக்கம் அழிப்பது அரண்

#5.கொளற்கு அரிதாய்க் கொண்ட கூழ்த்து ஆகி அகத்தார்
நிலைக்கு எளிதாம் நீரது அரண்

#6.எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்து உதவும்
நல் ஆள் உடையது அரண்

#7.முற்றியும் முற்றாது எறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற்கு அரியது அரண்

#8.முற்று ஆற்றி முற்றியவரையும் பற்று ஆற்றி
பற்றியார் வெல்வது அரண்

#9.முனை முகத்து மாற்றலர் சாய வினை முகத்து
வீறு எய்தி மாண்டது அரண்

#10.எனை மாட்சித்து ஆகியக்-கண்ணும் வினை மாட்சி
இல்லார்-கண் இல்லது அரண்


@76 பொருள் செயல் வகை
#1.பொருள் அல்லவரைப் பொருளாகச் செய்யும்
பொருள் அல்லது இல்லை பொருள்

#2.இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு

#3.பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று

#4.அறன் ஈனும் இன்பமும் ஈனும் திறன் அறிந்து
தீது இன்றி வந்த பொருள்

#5.அருளொடும் அன்பொடும் வாராப் பொருள் ஆக்கம்
புல்லார் புரள விடல்

#6.உறு பொருளும் உல்கு பொருளும் தன் ஒன்னார்
தெறு பொருளும் வேந்தன் பொருள்

#7.அருள் என்னும் அன்பு ஈன் குழவி பொருள் என்னும்
செல்வச் செவிலியால் உண்டு

#8.குன்று ஏறி யானைப் போர் கண்ட அற்றால் தன் கைத்து ஒன்று
உண்டாகச் செய்வான் வினை

#9.செய்க பொருளைச் செறுநர் செருக்கு அறுக்கும்
எஃகு அதனின் கூரியது இல்

#10.ஒண் பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண் பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு


@77 படை மாட்சி
#1.உறுப்பு அமைந்து ஊறு அஞ்சா வெல் படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை

#2.உலைவிடத்து ஊறு அஞ்சா வன்கண் தொலைவிடத்து
தொல் படைக்கு அல்லால் அரிது

#3.ஒலித்தக்கால் என் ஆம் உவரி எலிப் பகை
நாகம் உயிர்ப்பக் கெடும்

#4.அழிவு இன்று அறைபோகாது ஆகி வழிவந்த
வன்கணதுவே படை

#5.கூற்று உடன்று மேல்வரினும் கூடி எதிர் நிற்கும்
ஆற்றலதுவே படை

#6.மறம் மானம் மாண்ட வழிச் செலவு தேற்றம்
என நான்கே ஏமம் படைக்கு

#7.தார் தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர் தாங்கும் தன்மை அறிந்து

#8.அடல் தகையும் ஆற்றலும் இல் எனினும் தானை
படைத் தகையான் பாடு பெறும்

#9.சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல் ஆயின் வெல்லும் படை

#10.நிலை மக்கள் சால உடைத்து எனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல்


@78 படைச் செருக்கு
#1.என் ஐ முன் நில்லன்-மின் தெவ்விர் பலர் என் ஐ
முன் நின்று கல் நின்றவர்

#2.கான முயல் எய்த அம்பினில் யானை
பிழைத்த வேல் ஏந்தல் இனிது

#3.பேராண்மை என்ப தறுகண் ஒன்று உற்றக்-கால்
ஊராண்மை மற்று அதன் எஃகு

#4.கை வேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய் வேல் பறியா நகும்

#5.விழித்த கண் வேல் கொண்டு எறிய அழித்து இமைப்பின்
ஓட்டு அன்றோ வன்கணவர்க்கு

#6.விழுப்புண் படாத நாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும் தன் நாளை எடுத்து

#7.சுழலும் இசை வேண்டி வேண்டா உயிரார்
கழல் யாப்புக் காரிகை நீர்த்து

#8.உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர் குன்றல் இலர்

#9.இழைத்தது இகவாமை சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற்பவர்

#10.புரந்தார் கண் நீர் மல்கச் சாகில் பின் சாக்காடு
இரந்து கோள் தக்கது உடைத்து


@79 நட்பு
#1.செயற்கு அரிய யா உள நட்பின் அது போல்
வினைக்கு அரிய யா உள காப்பு

#2.நிறை நீர நீரவர் கேண்மை பிறை மதிப்
பின் நீர பேதையார் நட்பு

#3.நவில்-தொறும் நூல் நயம் போலும் பயில்-தொறும்
பண்புடையாளர் தொடர்பு

#4.நகுதல்-பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்-கண்
மேற்சென்று இடித்தல்-பொருட்டு

#5.புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பு ஆம் கிழமை தரும்

#6.முகம் நக நட்பது நட்பு அன்று நெஞ்சத்து
அகம் நக நட்பது நட்பு

#7.அழிவினவை நீக்கி ஆறு உய்த்து அழிவின்-கண்
அல்லல் உழப்பதாம் நட்பு

#8.உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு

#9.நட்பிற்கு வீற்றிருக்கை யாது எனின் கொட்பு இன்றி
ஒல்லும் வாய் ஊன்றும் நிலை

#10.இனையர் இவர் எமக்கு இன்னம் யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு


@80 நட்பாராய்தல்
#1.நாடாது நட்டலின் கேடு இல்லை நட்ட பின்
வீடு இல்லை நட்பு ஆள்பவர்க்கு

#2.ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான் சாம் துயரம் தரும்

#3.குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அரிந்து யாக்க நட்பு

#4.குடிப் பிறந்து தன்-கண் பழி நாணுவானைக்
கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு

#5.அழச் சொல்லி அல்லது இடித்து வழக்கு அறிய
வல்லார் நட்பு ஆய்ந்து கொளல்

#6.கேட்டினும் உண்டு ஓர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல்

#7.ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல்

#8.உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லல்-கண் ஆற்றறுப்பார் நட்பு

#9.கெடும் காலை கைவிடுவார் கேண்மை அடும் காலை
உள்ளினும் உள்ளம் சுடும்

#10.மருவுக மாசற்றார் கேண்மை ஒன்று ஈத்தும்
ஒருவுக ஒப்பு இலார் நட்பு


@81 பழமை
#1.பழமை எனப்படுவது யாது எனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு

#2.நட்பிற்கு உறுப்புக் கெழுதகைமை மற்று அதற்கு
உப்பு ஆதல் சான்றோர் கடன்

#3.பழகிய நட்பு எவன் செய்யும் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக்-கடை

#4.விழை தகையான் வேண்டியிருப்பர் கெழுதகையான்
கேளாது நட்டார் செயின்

#5.பேதைமை ஒன்றோ பெரும் கிழமை என்று உணர்க
நோதக்க நட்டார் செயின்

#6.எல்லைக்-கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்-கண் நின்றார் தொடர்பு

#7.அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின்
வழிவந்த கேண்மையவர்

#8.கேள் இழுக்கம் கேளா கெழுதகைமை வல்லார்க்கு
நாள் இழுக்கம் நட்டார் செயின்

#9.கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு

#10.விழையார் விழையப்படுப பழையார்-கண்
பண்பின் தலைப்பிரியாதார்


@82 தீ நட்பு
#1.பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலின் குன்றல் இனிது

#2.உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்

#3.உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர்

#4.அமரகத்து ஆற்றறுக்கும் கல்லா மா அன்னார்
தமரின் தனிமை தலை

#5.செய்து ஏமம் சாராச் சிறியவர் புன் கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று

#6.பேதை பெரும் கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும்

#7.நகை வகையர் ஆகிய நட்பின் பகைவரான்
பத்து அடுத்த கோடி உறும்

#8.ஒல்லும் கருமம் உடற்றுபவர் கேண்மை
சொல்லாடார் சோரவிடல்

#9.கனவினும் இன்னாது-மன்னோ வினை வேறு
சொல் வேறுபட்டார் தொடர்பு

#10.எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக் கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு


@83 கூடா நட்பு
#1.சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு

#2.இனம் போன்று இனம் அல்லார் கேண்மை மகளிர்
மனம் போல வேறுபடும்

#3.பல நல்ல கற்ற கடைத்தும் மனம் நல்லர்
ஆகுதல் மாணார்க்கு அரிது

#4.முகத்தின் இனிய நகாஅ அகத்து இன்னா
வஞ்சரை அஞ்சப்படும்

#5.மனத்தின் அமையாதவரை எனைத்தொன்றும்
சொல்லினான் தேறற்பாற்று அன்று

#6.நட்டார் போல் நல்லவை சொல்லினும் ஒட்டார் சொல்
ஒல்லை உணரப்படும்

#7.சொல் வணக்கம் ஒன்னார்-கண் கொள்ளற்க வில் வணக்கம்
தீங்கு குறித்தமையான்

#8.தொழுத கையுள்ளும் படை ஒடுங்கும் ஒன்னார்
அழுத கண்ணீரும் அனைத்து

#9.மிகச் செய்து தம் எள்ளுவாரை நகச் செய்து
நட்பினுள் சாப் புல்லற்பாற்று

#10.பகை நட்பு ஆம் காலம் வருங்கால் முகம் நட்டு
அகம் நட்பு ஒரீஇவிடல்


@84 பேதைமை
#1.பேதைமை என்பது ஒன்று யாது எனின் ஏதம் கொண்டு
ஊதியம் போகவிடல்

#2.பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கை அல்லதன்-கண் செயல்

#3.நாணாமை நாடாமை நார் இன்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில்

#4.ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கா
பேதையின் பேதையார் இல்

#5.ஒருமைச் செயல் ஆற்றும் பேதை எழுமையும்
தான் புக்கு அழுந்தும் அளறு

#6.பொய்படும் ஒன்றோ புனை பூணும் கை அறியா
பேதை வினை மேற்கொளின்

#7.ஏதிலார் ஆர தமர் பசிப்பர் பேதை
பெரும் செல்வம் உற்றக்கடை

#8.மையல் ஒருவன் களித்து அற்றால் பேதை தன்
கை ஒன்று உடைமை பெறின்

#9.பெரிது இனிது பேதையார் கேண்மை பிரிவின்-கண்
பீழை தருவது ஒன்று இல்

#10.கழாஅக் கால் பள்ளியுள் வைத்து அற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல்


@85 புல்லறிவாண்மை
#1.அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிது இன்மை
இன்மையா வையாது உலகு

#2.அறிவிலான் நெஞ்சு உவந்து ஈதல் பிறிது யாதும்
இல்லை பெறுவான் தவம்

#3.அறிவிலார் தாம் தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது

#4.வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை
உடையம் யாம் என்னும் செருக்கு

#5.கல்லாத மேற்கொண்டு ஒழுகல் கசடு அற
வல்லதூஉம் ஐயம் தரும்

#6.அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்-வயின்
குற்றம் மறையா வழி

#7.அரு மறை சோரும் அறிவிலான் செய்யும்
பெரு மிறை தானே தமக்கு

#8.ஏவவும் செய்கலான் தான் தேறான் அவ் உயிர்
போஒம் அளவும் ஓர் நோய்

#9.காணாதான் காட்டுவான் தான் காணான் காணாதான்
கண்டான் ஆம் தான் கண்ட ஆறு

#10.உலகத்தார் உண்டு என்பது இல் என்பான் வையத்து
அலகையா வைக்கப்படும்


@86 இகல்
#1.இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
பண்பு இன்மை பாரிக்கும் நோய்

#2.பகல் கருதி பற்றா செயினும் இகல் கருதி
இன்னா செய்யாமை தலை

#3.இகல் என்னும் எவ்வநோய் நீக்கின் தவல் இல்லா
தா இல் விளக்கம் தரும்

#4.இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல் என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்

#5.இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை யாரே
மிகல் ஊக்கும் தன்மையவர்

#6.இகலின் மிக இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து

#7.மிகல் மேவல் மெய்ப்பொருள் காணார் இகல் மேவல்
இன்னா அறிவினவர்

#8.இகலிற்கு எதிர் சாய்தல் ஆக்கம் அதனை
மிகல் ஊக்கின் ஊக்குமாம் கேடு

#9.இகல் காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல் காணும் கேடு தரற்கு

#10.இகலான் ஆம் இன்னாத எல்லாம் நகலான் ஆம்
நன்னயம் என்னும் செருக்கு


@87 பகை மாட்சி
#1.வலியார்க்கு மாறு ஏற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார் மேல் மேக பகை

#2.அன்பிலன் ஆன்ற துணையிலன் தான் துவ்வான்
என் பரியும் ஏதிலான் துப்பு

#3.அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு

#4.நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது

#5.வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது

#6.காணாச் சினத்தான் கழி பெரும் காமத்தான்
பேணாமை பேணப்படும்

#7.கொடுத்தும் கொளல் வேண்டும்-மன்ற அடுத்து இருந்து
மாணாத செய்வான் பகை

#8.குணனிலனாய்க் குற்றம் பல் ஆயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப்பு உடைத்து

#9.செறுவார்க்குச் சேண் இகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர் பெறின்

#10.கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லாது ஒளி


@88 பகைத்திறம் தெரிதல்
#1.பகை என்னும் பண்பிலதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று

#2.வில் ஏர் உழவர் பகை கொளினும் கொள்ளற்க
சொல் ஏர் உழவர் பகை

#3.ஏமுற்றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகை கொள்பவன்

#4.பகை நட்பாக் கொண்டு ஒழுகும் பண்புடையாளன்
தகைமைக்-கண் தங்கிற்று உலகு

#5.தன் துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன்
இன் துணையாக் கொள்க அவற்றின் ஒன்று

#6.தேறினும் தேறாவிடினும் அழிவின்-கண்
தேறான் பகாஅன் விடல்

#7.நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து

#8.வகை அறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்-கண் பட்ட செருக்கு

#9.இளைது ஆக முள் மரம் கொல்க களையுநர்
கை கொல்லும் காழ்த்த இடத்து

#10.உயிர்ப்ப உளர் அல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலாதார்


@89 உட்பகை
#1.நிழல் நீரும் இன்னாத இன்னா தமர் நீரும்
இன்னா ஆம் இன்னா செயின்

#2.வாள் போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள் போல் பகைவர் தொடர்பு

#3.உட்பகை அஞ்சித் தன் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும்

#4.மனம் மாணா உட்பகை தோன்றின் இனம் மாணா
ஏதம் பலவும் தரும்

#5.உறல் முறையான் உட்பகை தோன்றின் இறல் முறையான்
ஏதம் பலவும் தரும்

#6.ஒன்றாமை ஒன்றியார்-கண் படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது

#7.செப்பின் புணர்ச்சி போல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி

#8.அரம் பொருத பொன் போலத் தேயும் உரம் பொருது
உட்பகை உற்ற குடி

#9.எள் பகவு அன்ன சிறுமைத்தேயாயினும்
உட்பகை உள்ளது ஆம் கேடு

#10.உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்பொடு உடன் உறைந்த அற்று


@90 பெரியாரைப் பிழையாமை
#1.ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை

#2.பெரியாரைப் பேணாது ஒழுகின் பெரியாரால்
பேரா இடும்பை தரும்

#3.கெடல் வேண்டின் கேளாது செய்க அடல் வேண்டின்
ஆற்றுபவர்-கண் இழுக்கு

#4.கூற்றத்தைக் கையால் விளித்து அற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல்

#5.யாண்டுச் சென்று யாண்டும் உளர் ஆகார் வெம் துப்பின்
வேந்து செறப்பட்டவர்

#6.எரியான் சுடப்படினும் உய்வு உண்டாம் உய்யார்
பெரியார் பிழைத்து ஒழுகுவார்

#7.வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம்
தகை மாண்ட தக்கார் செறின்

#8.குன்று அன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்று அன்னார் மாய்வர் நிலத்து

#9.ஏந்திய கொள்கையர் சீறின் இடை முரிந்து
வேந்தனும் வேந்து கெடும்

#10.இறந்து அமைந்த சார்பு உடையராயினும் உய்யார்
சிறந்து அமைந்த சீரார் செறின்


@91 பெண்வழிச் சேறல்
#1.மனை விழைவார் மாண் பயன் எய்தார் வினை விழைவார்
வேண்டாப் பொருளும் அது

#2.பேணாது பெண் விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணும் தரும்

#3.இல்லாள்-கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும்

#4.மனையாளை அஞ்சும் மறுமையிலாளன்
வினை ஆண்மை வீறு எய்தல் இன்று

#5.இல்லாளை அஞ்சுவான் அஞ்சும் மற்று எஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல்

#6.இமையாரின் வாழினும் பாடு இலரே இல்லாள்
அமை ஆர் தோள் அஞ்சுபவர்

#7.பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் நாண் உடை
பெண்ணே பெருமை உடைத்து

#8.நட்டார் குறை முடியார் நன்று ஆற்றார் நல்_நுதலாள்
பெட்டாங்கு ஒழுகுபவர்

#9.அற வினையும் ஆன்ற பொருளும் பிற வினையும்
பெண் ஏவல் செய்வார்-கண் இல்

#10.எண் சேர்ந்த நெஞ்சத்து இடன் உடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண் சேர்ந்து ஆம் பேதைமை இல்


@92 வரைவில் மகளிர்
#1.அன்பின் விழையார் பொருள் விழையும் ஆய்_தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும்

#2.பயன் தூக்கிப் பண்பு உரைக்கும் பண்பு_இல் மகளிர்
நயன் தூக்கி நள்ளா விடல்

#3.பொருள்_பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டு அறையில்
ஏதில் பிணம் தழீஇ அற்று

#4.பொருள்_பொருளார் புன் நலம் தோயார் அருள் பொருள்
ஆயும் அறிவினவர்

#5.பொது நலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின்
மாண்ட அறிவினவர்

#6.தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கிப்
புன் நலம் பாரிப்பார் தோள்

#7.நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் பிற நெஞ்சில்
பேணிப் புணர்பவர் தோள்

#8.ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கு என்ப
மாயமகளிர் முயக்கு

#9.வரைவு இலா மாண்_இழையார் மென் தோள் புரை இலா
பூரியர்கள் ஆழும் அளறு

#10.இரு மனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திரு நீக்கப்பட்டார் தொடர்பு


@93 கள்ளுண்ணாமை
#1.உட்கப்படாஅர் ஒளி இழப்பர் எஞ்ஞான்றும்
கள் காதல் கொண்டு ஒழுகுவார்

#2.உண்ணற்க கள்ளை உணில் உண்க சான்றோரான்
எண்ணப்பட வேண்டாதார்

#3.ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என் மற்று
சான்றோர் முகத்துக் களி

#4.நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள் என்னும்
பேணா பெரும் குற்றத்தார்க்கு

#5.கை அறியாமை உடைத்தே பொருள் கொடுத்து
மெய் அறியாமை கொளல்

#6.துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சு உண்பார் கள் உண்பவர்

#7.உள் ஒற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள் ஒற்றிக் கண் சாய்பவர்

#8.களித்து அறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும்

#9.களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ் நீர்க்
குளித்தானைத் தீத் துரீஇ அற்று

#10.கள் உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்-கொல் உண்டதன் சோர்வு


@94 சூது
#1.வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டில் பொன் மீன் விழுங்கி அற்று

#2.ஒன்று எய்தி நூறு இழக்கும் சூதர்க்கும் உண்டாம்-கொல்
நன்று எய்தி வாழ்வதோர் ஆறு

#3.உருள் ஆயம் ஓவாது கூறின் பொருள் ஆயம்
போஒய்ப் புறமே படும்

#4.சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின்
வறுமை தருவது ஒன்று இல்

#5.கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகியார்

#6.அகடு ஆரார் அல்லல் உழப்பர் சூது என்னும்
முகடியான் மூடப்பட்டார்

#7.பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக்-காலை புகின்

#8.பொருள் கெடுத்துப் பொய் மேற்கொளீஇ அருள் கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது

#9.உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும்
அடையாவாம் ஆயம் கொளின்

#10.இழத்-தொறூஉம் காதலிக்கும் சூதே போல் துன்பம்
உழத்-தொறூஉம் காதற்று உயிர்


@95 மருந்து
#1.மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
வளி முதலா எண்ணிய மூன்று

#2.மருந்து என வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்

#3.அற்றால் அளவு அறிந்து உண்க அஃது உடம்பு
பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு

#4.அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறு அல்ல
துய்க்க துவரப் பசித்து

#5.மாறுபாடு இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு

#6.இழிவு அறிந்து உண்பான்-கண் இன்பம் போல் நிற்கும்
கழி பேரிரையான்-கண் நோய்

#7.தீ அளவு அன்றித் தெரியான் பெரிது உண்ணின்
நோய் அளவின்றிப் படும்

#8.நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்

#9.உற்றான் அளவும் பிணி அளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல்

#10.உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று
அப் பால் நால் கூற்றே மருந்து


@96 குடிமை
#1.இல் பிறந்தார்-கண் அல்லது இல்லை இயல்பாக
செப்பமும் நாணும் ஒருங்கு

#2.ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந்தார்

#3.நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகை என்ப வாய்மைக் குடிக்கு

#4.அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்

#5.வழங்குவது உள் வீழ்ந்தக்-கண்ணும் பழங்குடி
பண்பின் தலைப்பிரிதல் இன்று

#6.சலம் பற்றிச் சால்பு இல செய்யார் மாசற்ற
குலம் பற்றி வாழ்தும் என்பார்

#7.குடிப்பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்-கண் மறு போல் உயர்ந்து

#8.நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனைக்
குலத்தின்-கண் ஐயப்படும்

#9.நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார் வாய்ச் சொல்

#10.நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு


@97 மானம்
#1.இன்றியமையாச் சிறப்பினவாயினும்
குன்ற வருப விடல்

#2.சீரினும் சீர் அல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டுபவர்

#3.பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு

#4.தலையின் இழிந்த மயிர் அனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக்-கடை

#5.குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின்

#6.புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று
இகழ்வார் பின் சென்று நிலை

#7.ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அந் நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று

#8.மருந்தோ மற்று ஊன் ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடு அழிய வந்த இடத்து

#9.மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்

#10.இளி வரின் வாழாத மானம் உடையார்
ஒளி தொழுது ஏத்தும் உலகு


@98 பெருமை
#1.ஒளி ஒருவற்கு உள்ள வெறுக்கை இளி ஒருவற்கு
அஃது இறந்து வாழ்தும் எனல்

#2.பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
செய் தொழில் வேற்றுமையான்

#3.மேல் இருந்தும் மேல் அல்லார் மேல் அல்லர் கீழ் இருந்தும்
கீழ் அல்லார் கீழ் அல்லவர்

#4.ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத் தான் கொண்டு ஒழுகின் உண்டு

#5.பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல்

#6.சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு

#7.இறப்பே புரிந்த தொழிற்று ஆம் சிறப்பும் தான்
சீரல்லவர்-கண் படின்

#8.பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து

#9.பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்துவிடல்

#10.அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறிவிடும்


@99 சான்றாண்மை
#1.கடன் என்ப நல்லவை எல்லாம் கடன் அறிந்து
சான்றாண்மை மேற்கொள்பவற்கு

#2.குண நலம் சான்றோர் நலனே பிற நலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று

#3.அன்பு நாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்து சால்பு ஊன்றிய தூண்

#4.கொல்லா நலத்தது நோன்மை பிறர் தீமை
சொல்லா நலத்தது சால்பு

#5.ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அது சான்றோர்
மாற்றாரை மாற்றும் படை

#6.சால்பிற்குக் கட்டளை யாது எனின் தோல்வி
துலையல்லார்-கண்ணும் கொளல்

#7.இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு

#8.இன்மை ஒருவற்கு இளிவு அன்று சால்பு என்னும்
திண்மை உண்டாகப் பெறின்

#9.ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படுவார்

#10.சான்றவர் சான்றாண்மை குன்றின் இரு நிலம் தான்
தாங்காது-மன்னோ பொறை


@100 பண்புடைமை
#1.எண்பதத்தால் எய்தல் எளிது என்ப யார்-மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு

#2.அன்புடைமை ஆன்ற குடிப் பிறத்தல் இவ் இரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு

#3.உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பு ஒத்தல் ஒப்பது ஆம் ஒப்பு

#4.நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார்
பண்பு பாராட்டும் உலகு

#5.நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்பு உள பாடு அறிவார்-மாட்டு

#6.பண்புடையார்ப் பட்டு உண்டு உலகம் அது இன்றேல்
மண் புக்கு மாய்வது மன்

#7.அரம் போலும் கூர்மையரேனும் மரம் போல்வர்
மக்கள் பண்பு இல்லாதவர்

#8.நண்பு ஆற்றார் ஆகி நயம் இல செய்வார்க்கும்
பண்பு ஆற்றார் ஆதல் கடை

#9.நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம்
பகலும் பால் பட்டன்று இருள்

#10.பண்பிலான் பெற்ற பெரும் செல்வம் நன் பால்
கலம் தீமையால் திரிந்து அற்று


@101 நன்றியில் செல்வம்
#1.வைத்தான்-வாய் சான்ற பெரும் பொருள் அஃது உண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல்

#2.பொருளான் ஆம் எல்லாம் என்று ஈயாது இவறும்
மருளான் ஆம் மாணாப் பிறப்பு

#3.ஈட்டம் இவறி இசை வேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை

#4.எச்சம் என்று என் எண்ணும்-கொல்லோ ஒருவரால்
நச்சப்படாஅதவன்

#5.கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடி உண்டாயினும் இல்

#6.ஏதம் பெரும் செல்வம் தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று
ஈதல் இயல்பு இலாதான்

#7.அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம்
பெற்றாள் தமியள் மூத்து அற்று

#8.நச்சப்படாதவன் செல்வம் நடு ஊருள்
நச்சு மரம் பழுத்து அற்று

#9.அன்பு ஒரீஇத் தற்செற்று அறம் நோக்காது ஈட்டிய
ஒண் பொருள் கொள்வார் பிறர்

#10.சீர் உடைச் செல்வர் சிறு துனி மாரி
வறம் கூர்ந்த அனையது உடைத்து


@102 நாணுடைமை
#1.கருமத்தான் நாணுதல் நாணுத் திரு_நுதல்
நல்லவர் நாணுப் பிற

#2.ஊண் உடை எச்சம் உயிர்க்கு எல்லாம் வேறு அல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு

#3.ஊனைக் குறித்த உயிர் எல்லாம் நாண் என்னும்
நன்மை குறித்தது சால்பு

#4.அணி அன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃது இன்றேல்
பிணி அன்றோ பீடு நடை

#5.பிறர் பழியும் தம் பழியும் நாணுவார் நாணுக்கு
உறை_பதி என்னும் வழக்கு

#6.நாண் வேலி கொள்ளாது-மன்னோ வியன் ஞாலம்
பேணலர் மேலாயவர்

#7.நாணால் உயிரைத் துறப்பர் உயிர்-பொருட்டால்
நாண் துறவார் நாண் ஆள்பவர்

#8.பிறர் நாணத்தக்கது தான் நாணான் ஆயின்
அறம் நாணத்தக்கது உடைத்து

#9.குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்
நாணின்மை நின்றக்கடை

#10.நாண் அகத்து இல்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர் மருட்டி அற்று


@103 குடிசெயல் வகை
#1.கருமம் செய ஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடு உடையது இல்

#2.ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்
நீள் வினையான் நீளும் குடி

#3.குடி செய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடி தற்றுத் தான் முந்துறும்

#4.சூழாமல் தானே முடிவு எய்தும் தம் குடியைத்
தாழாது உஞற்றுபவர்க்கு

#5.குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு

#6.நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான் பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல்

#7.அமரகத்து வன்கண்ணர் போலத் தமர் அகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை

#8.குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடி செய்து
மானம் கருதக் கெடும்

#9.இடும்பைக்கே கொள்கலம்-கொல்லோ குடும்பத்தைக்
குற்றம் மறைப்பான் உடம்பு

#10.இடுக்கண் கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும்
நல் ஆள் இலாத குடி


@104 உழவு
#1.சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை

#2.உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃது ஆற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து

#3.உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்
தொழுது உண்டு பின் செல்பவர்

#4.பல குடை நீழலும் தம் குடைக் கீழ்க் காண்பர்
அலகு உடை நீழலவர்

#5.இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது
கை செய்து ஊண் மாலையவர்

#6.உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம் என்பார்க்கு நிலை

#7.தொடிப் புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும்
வேண்டாது சாலப் படும்

#8.ஏரினும் நன்றால் எரு இடுதல் இட்ட பின்
நீரினும் நன்று அதன் காப்பு

#9.செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து
இல்லாளின் ஊடிவிடும்

#10.இலம் என்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலம் என்னும் நல்லாள் நகும்


@105 நல்குரவு
#1.இன்மையின் இன்னாதது யாது எனின் இன்மையின்
இன்மையே இன்னாதது

#2.இன்மை என ஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்

#3.தொல் வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை

#4.இற்பிறந்தோர்-கண்ணேயும் இன்மை இளி வந்த
சொல் பிறக்கும் சோர்வு தரும்

#5.நல்குரவு என்னும் இடும்பையுள் பல்கு உரை
துன்பங்கள் சென்று படும்

#6.நன் பொருள் நன்கு உணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொல் பொருள் சோர்வு படும்

#7.அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும்
பிறன் போல நோக்கப்படும்

#8.இன்றும் வருவது-கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு

#9.நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது

#10.துப்புரவு இல்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று


@106 இரவு
#1.இரக்க இரத்தக்கார் காணின் கரப்பின்
அவர் பழி தம் பழி அன்று

#2.இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின்

#3.கரப்பு இலா நெஞ்சின் கடன் அறிவார் முன் நின்று
இரப்பும் ஓர் ஏஎர் உடைத்து

#4.இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவினும் தேற்றாதார்-மாட்டு

#5.கரப்பிலார் வையகத்து உண்மையான் கண் நின்று
இரப்பவர் மேற்கொள்வது

#6.கரப்பு இடும்பை இல்லாரைக் காணின் நிரப்பு இடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும்

#7.இகழ்ந்து எள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்து உள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து

#8.இரப்பாரை இல் ஆயின் ஈர் கண் மா ஞாலம்
மரப்பாவை சென்று வந்த அற்று

#9.ஈவார்-கண் என் உண்டாம் தோற்றம் இரந்து கோள்
மேவார் இலாஅக்கடை

#10.இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பு இடும்பை
தானேயும் சாலும் கரி


@107 இரவச்சம்
#1.கரவாது உவந்து ஈயும் கண்_அன்னார்-கண்ணும்
இரவாமை கோடி உறும்

#2.இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகு இயற்றியான்

#3.இன்மை இடும்பை இரந்து தீர்வாம் என்னும்
வன்மையின் வன்பாட்டது இல்

#4.இடம் எல்லாம் கொள்ளாத்தகைத்தே இடம் இல்லாக்
காலும் இரவு ஒல்லா சால்பு

#5.தெள் நீர் அடு புற்கையாயினும் தாள் தந்தது
உண்ணலின் ஊங்கு இனியது இல்

#6.ஆவிற்கு நீர் என்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்

#7.இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்-மின் என்று

#8.இரவு என்னும் ஏமாப்பு_இல் தோணி கரவு என்னும்
பார் தாக்கப் பக்கு விடும்

#9.இரவு உள்ள உள்ளம் உருகும் கரவு உள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும்

#10.கரப்பவர்க்கு யாங்கு ஒளிக்கும்-கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர்


@108 கயமை
#1.மக்களே போல்வர் கயவர் அவர் அன்ன
ஒப்பார் யாம் கண்டது இல்

#2.நன்று அறிவாரின் கயவர் திரு உடையர்
நெஞ்சத்து அவலம் இலர்

#3.தேவர் அனையர் கயவர் அவரும் தாம்
மேவன செய்து ஒழுகலான்

#4.அகப் பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்

#5.அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவா உண்டேல் உண்டாம் சிறிது

#6.அறை பறை அன்னர் கயவர் தாம் கேட்ட
மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான்

#7.ஈர் கை விதிரார் கயவர் கொடிறு உடைக்கும்
கூன் கையர் அல்லாதவர்க்கு

#8.சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்பு போல்
கொல்லப் பயன்படும் கீழ்

#9.உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல்
வடுக் காண வற்றாகும் கீழ்

#10.எற்றிற்கு உரியர் கயவர் ஒன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து


@109 தகையணங்குறுத்தல்
#1.அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை
மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு

#2.நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு_அணங்கு
தானைக் கொண்ட அன்னது உடைத்து

#3.பண்டு அறியேன் கூற்று என்பதனை இனி அறிந்தேன்
பெண் தகையான் பேர் அமர்க் கட்டு

#4.கண்டார் உயிர் உண்ணும் தோற்றத்தான் பெண் தகைப
பேதைக்கு அமர்த்தன கண்

#5.கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம் இம் மூன்றும் உடைத்து

#6.கொடும் புருவம் கோடா மறைப்பின் நடுங்கு அஞர்
செய்யல-மன் இவள் கண்

#7.கடாஅக் களிற்றின் மேல் கண் படாம் மாதர்
படாஅ முலை மேல் துகில்

#8.ஒள் நுதற்கு ஓஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்கும் என் பீடு

#9.பிணை ஏர் மட நோக்கும் நாணும் உடையாட்கு
அணி எவனோ ஏதில தந்து

#10.உண்டார்-கண் அல்லது அடு நறாக் காமம் போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று


@110 குறிப்பறிதல்
#1.இரு நோக்கு இவள் உண்கண் உள்ளது ஒரு நோக்கு
நோய் நோக்கு ஒன்று அந் நோய் மருந்து

#2.கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின்
செம்பாகம் அன்று பெரிது

#3.நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அஃது அவள்
யாப்பினுள் அட்டிய நீர்

#4.யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
தான் நோக்கி மெல்ல நகும்

#5.குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒரு கண்
சிறக்கணித்தான் போல நகும்

#6.உறாஅதவர் போல் சொலினும் செறாஅர் சொல்
ஒல்லை உணரப்படும்

#7.செறாஅச் சிறுசொல்லும் செற்றார் போல் நோக்கும்
உறாஅர் போன்று உற்றார் குறிப்பு

#8.அசையியற்கு உண்டு ஆண்டு ஓர் ஏஎர் யான் நோக்கப்
பசையினள் பைய நகும்

#9.ஏதிலார் போலப் பொது நோக்கு நோக்குதல்
காதலார்-கண்ணே உள

#10.கண்ணொடு கண் இணை நோக்கு ஒக்கின் வாய்ச் சொற்கள்
என்ன பயனும் இல


@111 புணர்ச்சி மகிழ்தல்
#1.கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும்
ஒண்_தொடி கண்ணே உள

#2.பிணிக்கு மருந்து பிற-மன் அணி_இழை
தன் நோய்க்குத் தானே மருந்து

#3.தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல்
தாமரைக்கண்ணான்_உலகு

#4.நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும்
தீ யாண்டு பெற்றாள் இவள்

#5.வேட்ட பொழுதின் அவை அவை போலுமே
தோட்டு ஆர் கதுப்பினாள் தோள்

#6.உறு-தொறு உயிர் தளிர்ப்பத் தீண்டலான் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்

#7.தம் இல் இருந்து தமது பார்த்து உண்டு அற்றால்
அம் மா அரிவை முயக்கு

#8.வீழும் இருவர்க்கு இனிதே வளி இடை
போழப்படாஅ முயக்கு

#9.ஊடல் உணர்தல் புணர்தல் இவை காமம்
கூடியார் பெற்ற பயன்

#10.அறி-தோறு அறியாமை கண்டு அற்றால் காமம்
செறி-தோறும் சே_இழை மாட்டு


@112 நலம் புனைந்துரைத்தல்
#1.நல் நீரை வாழி அனிச்சமே நின்னினும்
மெல் நீரள் யாம் வீழ்பவள்

#2.மலர் காணின் மையாத்தி நெஞ்சே இவள் கண்
பலர் காணும் பூ ஒக்கும் என்று

#3.முறி மேனி முத்தம் முறுவல் வெறி நாற்றம்
வேல் உண்கண் வேத்தோள் அவட்கு

#4.காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோகும்
மாண்_இழை கண் ஒவ்வேம் என்று

#5.அனிச்சப் பூக் கால் களையாள் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை

#6.மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன்

#7.அறுவாய் நிறைந்த அவிர் மதிக்குப் போல
மறு உண்டோ மாதர் முகத்து

#8.மாதர் முகம் போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி

#9.மலர் அன்ன கண்ணாள் முகம் ஒத்தியாயின்
பலர் காணத் தோன்றல் மதி

#10.அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்


@113 காதல் சிறப்புரைத்தல்
#1.பாலொடு தேன் கலந்து அற்றே பணி_மொழி
வால் எயிறு ஊறிய நீர்

#2.உடம்பொடு உயிரிடை என்ன மற்று அன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு

#3.கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும்
திரு_நுதற்கு இல்லை இடம்

#4.வாழ்தல் உயிர்க்கு அன்னள் ஆய்_இழை சாதல்
அதற்கு அன்னள் நீங்கும் இடத்து

#5.உள்ளுவன்-மன் யான் மறப்பின் மறப்பு அறியேன்
ஒள் அமர்க்_கண்ணாள் குணம்

#6.கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருவரார்
நுண்ணியர் எம் காதலவர்

#7.கண்ணுள்ளார் காதலவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து

#8.நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல்
அஞ்சுதும் வேபாக்கு அறிந்து

#9.இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னும் இவ் ஊர்

#10.உவந்து உறைவர் உள்ளத்துள் என்றும் இகந்து உறைவர்
ஏதிலர் என்னும் இ ஊர்


@114 நாணுத் துறவுரைத்தல்
#1.காமம் உழந்து வருந்தினார்க்கு ஏம
மடல் அல்லது இல்லை வலி

#2.நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து

#3.நாணொடு நல்லாண்மை பண்டு உடையேன் இன்று உடையேன்
காமுற்றார் ஏறும் மடல்

#4.காமக் கடும் புனல் உய்க்குமே நாணொடு
நல்லாண்மை என்னும் புணை

#5.தொடலைக் குறும்_தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர்

#6.மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன்-மன்ற
படல் ஒல்லா பேதைக்கு என் கண்

#7.கடல் அன்ன காமம் உழந்தும் மடல் ஏறாப்
பெண்ணின் பெரும் தக்கது இல்

#8.நிறை அரியர்-மன் அளியர் என்னாது காமம்
மறை இறந்து மன்று படும்

#9.அறிகிலார் எல்லாரும் என்றே என் காமம்
மறுகில் மறுகும் மருண்டு

#10.யாம் கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம் பட்ட தாம் படாவாறு


@115 அலை அறிவுறுத்தல்
#1.அலர் எழ ஆர் உயிர் நிற்கும் அதனை
பலர் அறியார் பாக்கியத்தால்

#2.மலர் அன்ன கண்ணாள் அருமை அறியாது
அலர் எமக்கு ஈந்தது இவ் ஊர்

#3.உறாஅதோ ஊர் அறிந்த கௌவை அதனைப்
பெறாஅது பெற்று அன்ன நீர்த்து

#4.கவ்வையான் கவ்விது காமம் அது இன்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து

#5.களித்-தொறும் கள் உண்டல் வேட்டு அற்றால் காமம்
வெளிப்படும்-தோறும் இனிது

#6.கண்டது மன்னும் ஒரு நாள் அலர் மன்னும்
திங்களைப் பாம்பு கொண்டு அற்று

#7.ஊரவர் கௌவை எரு ஆக அன்னை சொல்
நீர் ஆக நீளும் இந் நோய்

#8.நெய்யால் எரி நுதுப்பேம் என்று அற்றால் கௌவையான்
காமம் நுதுப்பேம் எனல்

#9.அலர் நாண ஒல்வதோ அஞ்சல் ஓம்பு என்றார்
பலர் நாண நீத்தக் கடை

#10.தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும்
கௌவை எடுக்கும் இவ் ஊர்


@116 பிரிவாற்றாமை
#1.செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின்
வல் வரவு வாழ்வார்க்கு உரை

#2.இன் கண் உடைத்து அவர் பார்வல் பிரிவு அஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு

#3.அரிது அரோ தேற்றம் அறிவுடையார்-கண்ணும்
பிரிவு ஓர் இடத்து உண்மையான்

#4.அளித்து அஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்த சொல்
தேறியாக்கு உண்டோ தவறு

#5.ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் மற்று அவர்
நீங்கின் அரிதால் புணர்வு

#6.பிரிவு உரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிது அவர்
நல்குவர் என்னும் நசை

#7.துறைவன் துறந்தமை தூற்றா-கொல் முன்கை
இறை இறவாநின்ற வளை

#8.இன்னாது இனன் இல் ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார் பிரிவு

#9.தொடின் சுடின் அல்லது காம நோய் போல
விடின் சுடல் ஆற்றுமோ தீ

#10.அரிது ஆற்றி அல்லல் நோய் நீக்கிப் பிரிவு ஆற்றிப்
பின் இருந்து வாழ்வார் பலர்


@117 படர்மெலிந்திரங்கல்
#1.மறைப்பேன்-மன் யான் இஃதோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்று நீர் போல மிகும்

#2.கரத்தலும் ஆற்றேன் இந் நோயை நோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும்

#3.காமமும் நாணும் உயிர் காவாத் தூங்கும் என்
நோனா உடம்பின் அகத்து

#4.காமக் கடல்-மன்னும் உண்டே அது நீந்தும்
ஏமப் புணை-மன்னும் இல்

#5.துப்பின் எவன் ஆவர்-மன்-கொல் துயர் வரவு
நட்பினுள் ஆற்றுபவர்

#6.இன்பம் கடல் மற்றுக் காமம் அஃது அடுங்கால்
துன்பம் அதனின் பெரிது

#7.காமக் கடும் புனல் நீந்திக் கரை காணேன்
யாமத்தும் யானே உளேன்

#8.மன் உயிர் எல்லாம் துயிற்றி அளித்து இரா
என் அல்லது இல்லை துணை

#9.கொடியார் கொடுமையின் தாம் கொடிய இந் நாள்
நெடிய கழியும் இரா

#10.உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் வெள்ள நீர்
நீந்தல-மன்னோ என் கண்


@118 கண் விதுப்பழிதல்
#1.கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய்
தாம் காட்ட யாம் கண்டது

#2.தெரிந்து உணரா நோக்கிய உண்கண் பரிந்து உணராப
பைதல் உழப்பது எவன்

#3.கதுமென தாம் நோக்கித் தாமே கலுழும்
இது நகத்தக்கது உடைத்து

#4.பெயல் ஆற்றா நீர் உலந்த உண்கண் உயல் ஆற்றா
உய்வு இல் நோய் என்-கண் நிறுத்து

#5.படல் ஆற்றா பைதல் உழக்கும் கடல் ஆற்றாக்
காம நோய் செய்த என் கண்

#6.ஓஒ இனிதே எமக்கு இந் நோய் செய்த கண்
தாஅம் இதற்பட்டது

#7.உழந்துழந்து உள் நீர் அறுக விழைந்து இழைந்து
வேண்டி அவர்க் கண்ட கண்

#8.பேணாது பெட்டார் உளர்-மன்னோ மற்று அவர்
காணாது அமைவு இல கண்

#9.வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா ஆயிடை
ஆர் அஞர் உற்றன கண்

#10.மறை பெறல் ஊரார்க்கு அரிது அன்றால் எம் போல்
அறை பறை கண்ணார் அகத்து


@119 பசப்புறு பருவரல்
#1.நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்த என்
பண்பு யார்க்கு உரைக்க பிற

#2.அவர் தந்தார் என்னும் தகையால் இவர்தந்து என்
மேனி மேல் ஊரும் பசப்பு

#3.சாயலும் நாணும் அவர் கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து

#4.உள்ளுவன்-மன் யான் உரைப்பது அவர் திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு

#5.உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண் என்
மேனி பசப்பு ஊர்வது

#6.விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல் கொண்கன்
முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு

#7.புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக் கொள்வு அற்றே பசப்பு

#8.பசந்தாள் இவள் என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர் என்பார் இல்

#9.பசக்க-மன் பட்டாங்கு என் மேனி நயப்பித்தார்
நன் நிலையர் ஆவர் எனின்

#10.பசப்பு எனப் பேர் பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின்


@120 தனிப்படர் மிகுதி
#1.தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே
காமத்து காழ்_இல் கனி

#2.வாழ்வார்க்கு வானம் பயந்து அற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி

#3.வீழுநர் வீழப்படுவர்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு

#4.வீழப்படுவார் கெழீஇயிலர் தாம் வீழ்வார்
வீழப்படாஅர் எனின்

#5.நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ
தாம் காதல் கொள்ளாக்கடை

#6.ஒருதலையான் இன்னாது காமம் காப் போல
இருதலையானும் இனிது

#7.பருவரலும் பைதலும் காணான்-கொல் காமன்
ஒருவர்-கண் நின்று ஒழுகுவான்

#8.வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல்

#9.நசைஇயார் நல்கார் எனினும் அவர்-மாட்டு
இசையும் இனிய செவிக்கு

#10.உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய் கடலைச்
செறாஅய் வாழிய நெஞ்சு


@121 நினைந்தவர் புலம்பல்
#1.உள்ளினும் தீராப் பெரு மகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது

#2.எனைத்தொன்று இனிதே காண் காமம் தாம் வீழ்வார்
நினைப்ப வருவது ஒன்று இல்

#3.நினைப்பவர் போன்று நினையார்-கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்

#4.யாமும் உளேம்-கொல் அவர் நெஞ்சத்து எம் நெஞ்சத்து
ஓஒ உளரே அவர்

#5.தம் நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்-கொல்
எம் நெஞ்சத்து ஓவா வரல்

#6.மற்று யான் என் உளேன் மன்னோ அவரொடு யான்
உற்ற நாள் உள்ள உளேன்

#7.மறப்பின் எவன் ஆவன்-மன்-கொல் மறப்பு அறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும்

#8.எனைத்தும் நினைப்பினும் காயார் அனைத்து அன்றோ
காதலர் செய்யும் சிறப்பு

#9.விளியும் என் இன் உயிர் வேறு அல்லேம் என்பார்
அளி இன்மை ஆற்ற நினைந்து

#10.விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி


@122 கனவுநிலை உரைத்தல்
#1.காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாது செய்வேன்-கொல் விருந்து

#2.கயல் உண்கண் யான் இரப்பத் துஞ்சின் கலந்தார்க்கு
உயல் உண்மை சாற்றுவேன்-மன்

#3.நனவினான் நல்காதவரைக் கனவினான்
காண்டலின் உண்டு என் உயிர்

#4.கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு

#5.நனவினான் கண்டதூஉம் ஆங்கே கனவும் தான்
கண்ட பொழுதே இனிது

#6.நனவு என ஒன்று இல்லையாயின் கனவினான்
காதலர் நீங்கலர்-மன்

#7.நனவினான் நல்காக் கொடியார் கனவினான்
என் எம்மைப் பீழிப்பது

#8.துஞ்சுங்கால் தோள் மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து

#9.நனவினான் நல்காரை நோவர் கனவினான்
காதலர் காணாதவர்

#10.நனவினான் நம் நீத்தார் என்ப கனவினான்
காணார்-கொல் இவ் ஊரவர்


@123 பொழுது கண்டிரங்கல்
#1.மாலையோ அல்லை மணந்தார் உயிர் உண்ணும்
வேலை நீ வாழி பொழுது

#2.புன்கண்ணை வாழி மருள் மாலை எம் கேள் போல்
வன்கண்ணதோ நின் துணை

#3.பனி அரும்பிப் பைதல் கொள் மாலை துனி அரும்பித்
துன்பம் வளர வரும்

#4.காதலர் இல் வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும்

#5.காலைக்குச் செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான்
மாலைக்குச் செய்த பகை

#6.மாலை நோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன்

#7.காலை அரும்பிப் பகல் எல்லாம் போது ஆகி
மாலை மலரும் இந் நோய்

#8.அழல் போலும் மாலைக்கு தூது ஆகி ஆயன்
குழல் போலும் கொல்லும் படை

#9.பதி மருண்டு பைதல் உழக்கும் மதி மருண்டு
மாலை படர்தரும் போழ்து

#10.பொருள் மாலையாளரை உள்ளி மருள் மாலை
மாயும் என் மாயா உயிர்


@124 உறுப்புநலன் அழிதல்
#1.சிறுமை நமக்கு ஒழிய சேண் சென்றார் உள்ளி
நறு மலர் நாணின கண்

#2.நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனி வாரும் கண்

#3.தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்த நாள் வீங்கிய தோள்

#4.பணை நீங்கிப் பைம் தொடி சோரும் துணை நீங்கித்
தொல் கவின் வாடிய தோள்

#5.கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல் கவின் வாடிய தோள்

#6.தொடியொடு தோள் நெகிழ நோவல் அவரை
கொடியர் எனக் கூறல் நொந்து

#7.பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு என்
வாடு தோள் பூசல் உரைத்து

#8.முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைம் தொடிப் பேதை நுதல்

#9.முயக்கிடைத் தண் வளி போழ பசப்புற்ற
பேதை பெரு மழைக் கண்

#10.கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒள் நுதல் செய்தது கண்டு


@125 நெஞ்சொடு கிளத்தல்
#1.நினைத்து ஒன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து

#2.காதலவர் இலர் ஆக நீ நோவது
பேதைமை வாழி என் நெஞ்சு

#3.இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல்
பைதல் நோய் செய்தார்-கண் இல்

#4.கண்ணும் கொளச் சேறி நெஞ்சே இவை என்னை
தின்னும் அவர் காணலுற்று

#5.செற்றார் எனக் கைவிடல் உண்டோ நெஞ்சே யாம்
உற்றால் உறாஅதவர்

#6.கலந்து உணர்த்தும் காதலர் கண்டால் புலந்து உணராய்
பொய்க் காய்வு காய்தி என் நெஞ்சு

#7.காமம் விடு ஒன்றோ நாண் விடு நல் நெஞ்சே
யானோ பொறேன் இவ் இரண்டு

#8.பரிந்து அவர் நல்கார் என்று ஏங்கிப் பிரிந்தவர்
பின் செல்வாய் பேதை என் நெஞ்சு

#9.உள்ளத்தார் காதலவர் ஆக உள்ளி நீ
யாருழைச் சேறி என் நெஞ்சு

#10.துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமோ
இன்னும் இழத்தும் கவின்


@126 நிறையழிதல்
#1.காமக் கணிச்சி உடைக்கும் நிறை என்னும்
நாணுத் தாழ் வீழ்த்த கதவு

#2.காமம் என ஒன்றோ கண் இன்று என் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில்

#3.மறைப்பேன்-மன் காமத்தை யானோ குறிப்பு இன்றி
தும்மல் போல் தோன்றிவிடும்

#4.நிறை உடையேன் என்பேன்-மன் யானோ என் காமம்
மறை இறந்து மன்றுபடும்

#5.செற்றார் பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவது ஒன்று அன்று

#6.செற்றவர் பின் சேறல் வேண்டி அளித்து அரோ
எற்று என்னை உற்ற துயர்

#7.நாண் என ஒன்றோ அறியலம் காமத்தான்
பேணியார் பெட்ப செயின்

#8.பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோ நம்
பெண்மை உடைக்கும் படை

#9.புலப்பல் எனச் சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தலுறுவது கண்டு

#10.நிணம் தீயில் இட்டு அன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்து ஊடி நிற்பேம் எனல்


@127 அவர்வயின் விதும்பல்
#1.வாள் அற்றுப் புற்கென்ற கண்ணும் அவர் சென்ற
நாள் ஒற்றித் தேய்த்த விரல்

#2.இலங்கு_இழாய் இன்று மறப்பின் என் தோள் மேல்
கலம் கழியும் காரிகை நீத்து

#3.உரன் நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல் நசைஇ இன்னும் உளேன்

#4.கூடிய காமம் பிரிந்தார் வரவு உள்ளி
கோடு கொடு ஏறும் என் நெஞ்சு

#5.காண்க-மன் கொண்கனைக் கண்ணாரக் கண்ட பின்
நீங்கும் என் மென் தோள் பசப்பு

#6.வருக-மன் கொண்கன் ஒரு நாள் பருகுவன்
பைதல் நோய் எல்லாம் கெட

#7.புலப்பேன்-கொல் புல்லுவேன்-கொல்லோ கலப்பேன்-கொல்
கண் அன்ன கேளிர் வரின்

#8.வினை கலந்து வென்றீக வேந்தன் மனை கலந்து
மாலை அயர்கம் விருந்து

#9.ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார்
வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு

#10.பெறின் என் ஆம் பெற்றக்கால் என் ஆம் உறின் என் ஆம்
உள்ளம் உடைந்து உக்கக்கால்


@128 குறிப்பறிவுறுத்தல்
#1.கரப்பினும் கையிகந்து ஒல்லா நின் உண்கண்
உரைக்கலுறுவது ஒன்று உண்டு

#2.கண் நிறைந்த காரிகைக் காம்பு ஏர் தோள் பேதைக்கு
பெண் நிறைந்த நீர்மை பெரிது

#3.மணியில் திகழ்தரும் நூல் போல் மடந்தை
அணியில் திகழ்வது ஒன்று உண்டு

#4.முகை மொக்குள் உள்ளது நாற்றம் போல் பேதை
நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு

#5.செறி_தொடி செய்து இறந்த கள்ளம் உறு துயர்
தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து

#6.பெரிது ஆற்றிப் பெட்பக் கலத்தல் அரிது ஆற்றி
அன்பின்மை சூழ்வது உடைத்து

#7.தண்ணம்துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை

#8.நெருநற்றுச் சென்றார் எம் காதலர் யாமும்
எழு நாளேம் மேனி பசந்து

#9.தொடி நோக்கி மென் தோளும் நோக்கி அடி நோக்கி
அஃது ஆண்டு அவள் செய்தது

#10.பெண்ணினான் பெண்மை உடைத்து என்ப கண்ணினான்
காமநோய் சொல்லி இரவு


@129 புணர்ச்சி விதும்பல்
#1.உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு

#2.தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்

#3.பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணாது அமையல கண்

#4.ஊடல்-கண் சென்றேன்-மன் தோழி அது மறந்து
கூடல்-கண் சென்றது என் நெஞ்சு

#5.எழுதுங்கால் கோல் காணாக் கண்ணே போல் கொண்கன்
பழி காணேன் கண்ட இடத்து

#6.காணுங்கால் காணேன் தவறு ஆய காணாக்கால்
காணேன் தவறு அல்லவை

#7.உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல்
பொய்த்தல் அறிந்து என் புலந்து

#8.இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள் அற்றே கள்வ நின் மார்பு

#9.மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்
செவ்வி தலைப்படுவார்

#10.கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான் விதுப்புற்று


@130 நெஞ்சொடு புலத்தல்
#1.அவர் நெஞ்சு அவர்க்கு ஆதல் கண்டும் எவன் நெஞ்சே
நீ எமக்கு ஆகாதது

#2.உறாஅதவர் கண்ட கண்ணும் அவரைச்
செறாஅர் என சேறி என் நெஞ்சு

#3.கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ நெஞ்சே நீ
பெட்டாங்கு அவர் பின் செலல்

#4.இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் நெஞ்சே
துனி செய்து துவ்வாய் காண் மற்று

#5.பெறாஅமை அஞ்சும் பெறின் பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்து என் நெஞ்சு

#6.தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்தது என் நெஞ்சு

#7.நாணும் மறந்தேன் அவர் மறக்கல்லா என்
மாணா மட நெஞ்சின் பட்டு

#8.எள்ளின் இளிவாம் என்று எண்ணி அவர் திறம்
உள்ளும் உயிர்க் காதல் நெஞ்சு

#9.துன்பத்திற்கு யாரே துணை ஆவார் தாமுடைய
நெஞ்சம் துணை அல்வழி

#10.தஞ்சம் தமர் அல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமர் அல்வழி


@131 புலவி
#1.புல்லாது இராஅப் புலத்தை அவர் உறும்
அல்லல் நோய் காண்கம் சிறிது

#2.உப்பு அமைந்து அற்றால் புலவி அது சிறிது
மிக்கு அற்றால் நீள விடல்

#3.அலந்தாரை அல்லல் நோய் செய்து அற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல்

#4.ஊடியவரை உணராமை வாடிய
வள்ளி முதல் அரிந்து அற்று

#5.நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூ அன்ன கண்ணார் அகத்து

#6.துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று

#7.ஊடலின் உண்டு ஆங்கு ஓர் இன்பம் புணர்வது
நீடுவது அன்று-கொல் என்று

#8.நோதல் எவன் மற்று நொந்தார் என்று அஃது அறியும்
காதலர் இல்லா வழி

#9.நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர்-கண்ணே இனிது

#10.ஊடல் உணங்க விடுவாரோடு என் நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா


@132 புலவி நுணுக்கம்
#1.பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொது உண்பர்
நண்ணேன் பரத்த நின் மார்பு

#2.ஊடி இருந்தேமா தும்மினார் யாம் தம்மை
நீடு வாழ்க என்பார்க்கு அறிந்து

#3.கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியை
காட்டிய சூட்டினீர் என்று

#4.யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று

#5.இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண் நிறை நீர் கொண்டனள்

#6.உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னைப்
புல்லாள் புலத்தக்கனள்

#7.வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்து அழுதாள்
யார் உள்ளித் தும்மினீர் என்று

#8.தும்முச் செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று

#9.தன்னை உணர்த்தியும் காயும் பிறர்க்கும் நீர்
இந் நீரர் ஆகுதிர் என்று

#10.நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்தும் நீர்
யார் உள்ளி நோக்கினீர் என்று


@133 ஊடலுவகை
#1.இல்லை தவறு அவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர் அளிக்குமாறு

#2.ஊடலின் தோன்றும் சிறு துனி நல் அளி
வாடினும் பாடு பெறும்

#3.புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு
நீர் இயைந்து அன்னார் அகத்து

#4.புல்லி விடாஅப் புலவியுள் தோன்றும் என்
உள்ளம் உடைக்கும் படை

#5.தவறிலராயினும் தாம் வீழ்வார் மென் தோள்
அகறலின் ஆங்கு ஒன்று உடைத்து

#6.உணலினும் உண்டது அறல் இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது

#7.ஊடலின் தோற்றவர் வென்றார் அது மன்னும்
கூடலின் காணப்படும்

#8.ஊடிப் பெறுகுவம்-கொல்லோ நுதல் வெயர்ப்பக்
கூடலின் தோன்றிய உப்பு

#9.ஊடுக-மன்னோ ஒளி_இழை யாம் இரப்ப
நீடுக-மன்னோ இரா

#10.ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம்
கூடி முயங்கப் பெறின்
*