<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

செ - முதல் சொற்கள்
செகுத்து 1
செங்கோல் 1
செங்கோன்மை 1
செத்தாரின் 1
செத்தாருள் 1
செத்தான் 1
செந்தண்மை 1
செப்பம் 2
செப்பமும் 1
செப்பின் 1
செம்பாகம் 1
செம்பொருள் 2
செம்மல் 1
செம்மாக்கும் 1
செய் 9
செய்க 5
செய்கலாதார் 1
செய்கலான் 1
செய்கிற்பாற்கு 1
செய்கையும் 1
செய்த 10
செய்தது 2
செய்தல் 4
செய்தல்-பொருட்டு 2
செய்தலால் 1
செய்தலின் 2
செய்தற்கு 1
செய்தாங்கு 1
செய்தார் 2
செய்தார்-கண் 1
செய்தார்க்கு 2
செய்தார்க்கும் 1
செய்தாரை 2
செய்து 20
செய்ந்நன்றி 1
செய்பவோ 1
செய்யப்படும் 1
செய்யல-மன் 1
செய்யவள் 1
செய்யற்க 6
செய்யா 2
செய்யாக்கால் 1
செய்யாது 4
செய்யாமல் 2
செய்யாமை 9
செய்யாமையானும் 1
செய்யார் 7
செய்யாரே 2
செய்யாள் 1
செய்யான் 2
செய்யின் 4
செய்யினும் 3
செய்யும் 15
செய்வஃதே 1
செய்வர் 2
செய்வல் 1
செய்வார் 5
செய்வார்-கண் 1
செய்வார்க்கு 3
செய்வார்க்கும் 1
செய்வாரின் 1
செய்வான் 4
செய்வானேல் 1
செய்வானை 1
செய்வேன்-கொல் 1
செய 2
செயக்கிடந்தது 2
செயப்பட்டார் 1
செயல் 26
செயலின் 1
செயலும் 1
செயற்கு 4
செயற்கை 1
செயற்பால 2
செயற்பாலது 1
செயிர் 1
செயிர்ப்பவர் 1
செயிரின் 1
செயின் 16
செயினும் 8
செயும் 1
செரு 1
செருக்கி 1
செருக்கு 10
செருக்கும் 1
செல் 1
செல்க 1
செல்கிற்பின் 1
செல்பவர் 1
செல்லா 4
செல்லாதது 1
செல்லாது 2
செல்லாமை 1
செல்லான் 1
செல்லிடத்து 1
செல்லிடத்தும் 1
செல்லிடம் 1
செல்லும் 5
செல்வ 1
செல்வத்திற்கு 1
செல்வத்துள் 3
செல்வத்தை 1
செல்வது 1
செல்வம் 26
செல்வமும் 2
செல்வர் 1
செல்வர்க்கே 1
செல்வரும் 1
செல்வரை 1
செல்வாய் 1
செல்வார் 1
செல்வார்க்கு 1
செல 7
செலல் 1
செலவிடா 1
செலவு 1
செவ்வி 3
செவ்விது 1
செவ்வியான் 1
செவி 5
செவிக்கு 3
செவியின் 1
செவிலியால் 1
செற்றவர் 1
செற்றார் 4
செற்றார்க்கும் 1
செற்று 2
செறப்பட்டவர் 1
செறாஅ 1
செறாஅய் 1
செறாஅர் 2
செறி 1
செறி-தோறும் 1
செறி_தொடி 1
செறிவு 2
செறிவுடையான் 1
செறின் 2
செறினும் 1
செறு 1
செறுநர் 1
செறுநரை 1
செறுப்ப 1
செறுவார்க்கு 1
செறுவார்க்கும் 3
சென்ற 2
சென்றது 1
சென்றார் 4
சென்றாரை 1
சென்று 7
சென்றேன் 1
சென்றேன்-மன் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

 செகுத்து (1)
அவி சொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
  உயிர் செகுத்து உண்ணாமை நன்று - குறள் 26:9

 TOP

 
 செங்கோல் (1)
கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும்
  உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி - குறள் 39:10

 TOP

 
 செங்கோன்மை (1)
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃது இன்றேல்
  மன்னாவாம் மன்னர்க்கு ஒளி - குறள் 56:6

 TOP

 
 செத்தாரின் (1)
துஞ்சினார் செத்தாரின் வேறு அல்லர் எஞ்ஞான்றும்
  நஞ்சு உண்பார் கள் உண்பவர் - குறள் 93:6

 TOP

 
 செத்தாருள் (1)
ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான் மற்றையான்
  செத்தாருள் வைக்கப்படும் - குறள் 22:4

 TOP

 
 செத்தான் (1)
வைத்தான்-வாய் சான்ற பெரும் பொருள் அஃது உண்ணான்
  செத்தான் செயக்கிடந்தது இல் - குறள் 101:1

 TOP

 
 செந்தண்மை (1)
அந்தணர் என்போர் அறவோர் மற்று எ உயிர்க்கும்
  செந்தண்மை பூண்டு ஒழுகலான் - குறள் 3:10

 TOP

 
 செப்பம் (2)
செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவு இன்றி
  எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து - குறள் 12:2
சொல் கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
  உள் கோட்டம் இன்மை பெறின் - குறள் 12:9

 TOP

 
 செப்பமும் (1)
இல் பிறந்தார்-கண் அல்லது இல்லை இயல்பாக
  செப்பமும் நாணும் ஒருங்கு - குறள் 96:1

 TOP

 
 செப்பின் (1)
செப்பின் புணர்ச்சி போல் கூடினும் கூடாதே
  உட்பகை உற்ற குடி - குறள் 89:7

 TOP

 
 செம்பாகம் (1)
கண் களவு கொள்ளும் சிறு நோக்கம் காமத்தின்
  செம்பாகம் அன்று பெரிது - குறள் 110:2

 TOP

 
 செம்பொருள் (2)
இன்சொலால் ஈரம் அளைஇ படிறு இல ஆம்
  செம்பொருள் கண்டார் வாய் சொல் - குறள் 10:1
பிறப்பு என்னும் பேதைமை நீங்க சிறப்பு என்னும்
  செம்பொருள் காண்பது அறிவு - குறள் 36:8

 TOP

 
 செம்மல் (1)
உயிர்ப்ப உளர் அல்லர் மன்ற செயிர்ப்பவர்
  செம்மல் சிதைக்கலாதார் - குறள் 88:10

 TOP

 
 செம்மாக்கும் (1)
அக பட்டி ஆவாரை காணின் அவரின்
  மிகப்பட்டு செம்மாக்கும் கீழ் - குறள் 108:4

 TOP

 
 செய் (9)
வேண்டிய வேண்டியாங்கு எய்தலான் செய் தவம்
  ஈண்டு முயலப்படும் - குறள் 27:5
மனம் தூய்மை செய் வினை தூய்மை இரண்டும்
  இனம் தூய்மை தூவா வரும் - குறள் 46:5
ஆக்கம் கருதி முதல் இழக்கும் செய் வினை
  ஊக்கார் அறிவுடையார் - குறள் 47:3
செய் தக்க அல்ல செய கெடும் செய் தக்க
  செய்யாமையானும் கெடும் - குறள் 47:6
ஓஒதல் வேண்டும் ஒளி மாழ்கும் செய் வினை
  ஆஅதும் என்னுமவர் - குறள் 66:3
கடை கொட்க செய் தக்கது ஆண்மை இடை கொட்கின்
  எற்றா விழுமம் தரும் - குறள் 67:3
செய் வினை செய்வான் செயல் முறை அ வினை
  உள் அறிவான் உள்ளம் கொளல் - குறள் 68:7
பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா
  செய் தொழில் வேற்றுமையான் - குறள் 98:2

 TOP

 
 செய்க (5)
அன்று அறிவாம் என்னாது அறம் செய்க மற்று அது
  பொன்றுங்கால் பொன்றா துணை - குறள் 4:6
வாரி பெருக்கி வளம் படுத்து உற்றவை
  ஆராய்வான் செய்க வினை - குறள் 52:2
துன்பம் உற வரினும் செய்க துணிவு ஆற்றி
  இன்பம் பயக்கும் வினை - குறள் 67:9
செய்க பொருளை செறுநர் செருக்கு அறுக்கும்
  எஃகு அதனின் கூரியது இல் - குறள் 76:9
கெடல் வேண்டின் கேளாது செய்க அடல் வேண்டின்
  ஆற்றுபவர்-கண் இழுக்கு - குறள் 90:3

 TOP

 
 செய்கலாதார் (1)
செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர்
  செயற்கு அரிய செய்கலாதார் - குறள் 3:6

 TOP

 
 செய்கலான் (1)
ஏவவும் செய்கலான் தான் தேறான் அ உயிர்
  போஒம் அளவும் ஓர் நோய் - குறள் 85:8

 TOP

 
 செய்கிற்பாற்கு (1)
அறிந்து ஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினை தான்
  சிறந்தான் என்று ஏவல்பாற்று அன்று - குறள் 52:5

 TOP

 
 செய்கையும் (1)
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
  அருவினையும் மாண்டது அமைச்சு - குறள் 64:1

 TOP

 
 செய்த (10)
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
  வானகமும் ஆற்றல் அரிது - குறள் 11:1
காலத்தினால் செய்த நன்றி சிறிது எனினும்
  ஞாலத்தின் மாண பெரிது - குறள் 11:2
பயன் தூக்கார் செய்த உதவி நயன் தூக்கின்
  நன்மை கடலின் பெரிது - குறள் 11:3
கொன்று அன்ன இன்னா செயினும் அவர் செய்த
  ஒன்றும் நன்று உள்ள கெடும் - குறள் 11:9
கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் மறுத்து இன்னா
  செய்யாமை மாசற்றார் கோள் - குறள் 32:2
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்த பின்
  உய்யா விழுமம் தரும் - குறள் 32:3
படல் ஆற்றா பைதல் உழக்கும் கடல் ஆற்றா
  காம நோய் செய்த என் கண் - குறள் 118:5
ஓஒ இனிதே எமக்கு இ நோய் செய்த கண்
  தாஅம் இதற்பட்டது - குறள் 118:6
காலைக்கு செய்த நன்று என்-கொல் எவன்-கொல் யான்
  மாலைக்கு செய்த பகை - குறள் 123:5

 TOP

 
 செய்தது (2)
கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
  ஒள் நுதல் செய்தது கண்டு - குறள் 124:10
தொடி நோக்கி மென் தோளும் நோக்கி அடி நோக்கி
  அஃது ஆண்டு அவள் செய்தது - குறள் 128:9

 TOP

 
 செய்தல் (4)
தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து
  வேட்டுவன் புள் சிமிழ்த்து அற்று - குறள் 28:4
அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை
  செறுவார்க்கும் செய்தல் அரிது - குறள் 85:3
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
  குன்றுவ செய்தல் இலர் - குறள் 96:4
மாலை நோய் செய்தல் மணந்தார் அகலாத
  காலை அறிந்தது இலேன் - குறள் 123:6

 TOP

 
 செய்தல்-பொருட்டு (2)
இருந்து ஓம்பி இல் வாழ்வது எல்லாம் விருந்தோம்பி
  வேளாண்மை செய்தல்-பொருட்டு - குறள் 9:1
தாள் ஆற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
  வேளாண்மை செய்தல்-பொருட்டு - குறள் 22:2

 TOP

 
 செய்தலால் (1)
உள்ளினும் தீரா பெரு மகிழ் செய்தலால்
  கள்ளினும் காமம் இனிது - குறள் 121:1

 TOP

 
 செய்தலின் (2)
அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே
  புறன் அழீஇ பொய்த்து நகை - குறள் 19:2
பயனில பல்லார் முன் சொல்லல் நயனில
  நட்டார்-கண் செய்தலின் தீது - குறள் 20:2

 TOP

 
 செய்தற்கு (1)
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அ நிலையே
  செய்தற்கு அரிய செயல் - குறள் 49:9

 TOP

 
 செய்தாங்கு (1)
பழகிய நட்பு எவன் செய்யும் கெழுதகைமை
  செய்தாங்கு அமையாக்கடை - குறள் 81:3

 TOP

 
 செய்தார் (2)
தீயவை செய்தார் கெடுதல் நிழல் தன்னை
  வீயாது அடி உறைந்து அற்று - குறள் 21:8
நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய் செய்யார்
  நோய் இன்மை வேண்டுபவர் - குறள் 32:10

 TOP

 
 செய்தார்-கண் (1)
இருந்து உள்ளி என் பரிதல் நெஞ்சே பரிந்து உள்ளல்
  பைதல் நோய் செய்தார்-கண் இல் - குறள் 125:3

 TOP

 
 செய்தார்க்கு (2)
கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவை தாம்
  முடிந்தாலும் பீழை தரும் - குறள் 66:8
கரத்தலும் ஆற்றேன் இ நோயை நோய் செய்தார்க்கு
  உரைத்தலும் நாணு தரும் - குறள் 117:2

 TOP

 
 செய்தார்க்கும் (1)
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
  என்ன பயத்ததோ சால்பு - குறள் 99:7

 TOP

 
 செய்தாரை (2)
மிகுதியான் மிக்கவை செய்தாரை தாம் தம்
  தகுதியான் வென்றுவிடல் - குறள் 16:8
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
  நன் நயம் செய்து விடல் - குறள் 32:4

 TOP

 
 செய்து (20)
சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல் அமைந்து ஒருபால்
  கோடாமை சான்றோர்க்கு அணி - குறள் 12:8
பொருள் நீங்கி பொச்சாந்தார் என்பர் அருள் நீங்கி
  அல்லவை செய்து ஒழுகுவார் - குறள் 25:6
அளவு அல்ல செய்து ஆங்கே வீவர் களவு அல்ல
  மற்றைய தேற்றாதவர் - குறள் 29:9
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
  நன் நயம் செய்து விடல் - குறள் 32:4
முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
  இறை என்று வைக்கப்படும் - குறள் 39:8
கொலை மேற்கொண்டாரின் கொடிதே அலை மேற்கொண்டு
  அல்லவை செய்து ஒழுகும் வேந்து - குறள் 56:1
வெருவந்த செய்து ஒழுகும் வெம் கோலன் ஆயின்
  ஒருவந்தம் ஒல்லை கெடும் - குறள் 57:3
சலத்தால் பொருள் செய்து ஏமாக்கல் பசு மண்
  கலத்துள் நீர் பெய்து இரீஇய அற்று - குறள் 66:10
செய்து ஏமம் சாரா சிறியவர் புன் கேண்மை
  எய்தலின் எய்தாமை நன்று - குறள் 82:5
மிக செய்து தம் எள்ளுவாரை நக செய்து
  நட்பினுள் சா புல்லற்பாற்று - குறள் 83:9
பெண் ஏவல் செய்து ஒழுகும் ஆண்மையின் நாண் உடை
  பெண்ணே பெருமை உடைத்து - குறள் 91:7
சிறுமை பல செய்து சீர் அழிக்கும் சூதின்
  வறுமை தருவது ஒன்று இல் - குறள் 94:4
குற்றம் இலனாய் குடி செய்து வாழ்வானை
  சுற்றமா சுற்றும் உலகு - குறள் 103:5
குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடி செய்து
  மானம் கருத கெடும் - குறள் 103:8
இரவார் இரப்பார்க்கு ஒன்று ஈவர் கரவாது
  கை செய்து ஊண் மாலையவர் - குறள் 104:5
தேவர் அனையர் கயவர் அவரும் தாம்
  மேவன செய்து ஒழுகலான் - குறள் 108:3
செறி_தொடி செய்து இறந்த கள்ளம் உறு துயர்
  தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து - குறள் 128:5
இனி அன்ன நின்னொடு சூழ்வார் யார் நெஞ்சே
  துனி செய்து துவ்வாய் காண் மற்று - குறள் 130:4
அலந்தாரை அல்லல் நோய் செய்து அற்றால் தம்மை
  புலந்தாரை புல்லா விடல் - குறள் 131:3

 TOP

 
 செய்ந்நன்றி (1)
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வு உண்டாம் உய்வு இல்லை
  செய்ந்நன்றி கொன்ற மகற்கு - குறள் 11:10

 TOP

 
 செய்பவோ (1)
நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ
  தாம் காதல் கொள்ளாக்கடை - குறள் 120:5

 TOP

 
 செய்யப்படும் (1)
நா செற்று விக்குள் மேல்வாரா முன் நல் வினை
  மேற்சென்று செய்யப்படும் - குறள் 34:5

 TOP

 
 செய்யல-மன் (1)
கொடும் புருவம் கோடா மறைப்பின் நடுங்கு அஞர்
  செய்யல-மன் இவள் கண் - குறள் 109:6

 TOP

 
 செய்யவள் (1)
அவ்வித்து அழுக்காறு உடையானை செய்யவள்
  தவ்வையை காட்டிவிடும் - குறள் 17:7

 TOP

 
 செய்யற்க (6)
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
  இலன் ஆகும் மற்றும் பெயர்த்து - குறள் 21:5
தீப்பால தான் பிறர்-கண் செய்யற்க நோய்ப்பால
  தன்னை அடல் வேண்டாதான் - குறள் 21:6
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது
  இன் உயிர் நீக்கும் வினை - குறள் 33:7
சிறப்பு அறிய ஒற்றின்-கண் செய்யற்க செய்யின்
  புறப்படுத்தான் ஆகும் மறை - குறள் 59:10
எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
  மற்று அன்ன செய்யாமை நன்று - குறள் 66:5
ஈன்றாள் பசி காண்பானாயினும் செய்யற்க
  சான்றோர் பழிக்கும் வினை - குறள் 66:6

 TOP

 
 செய்யா (2)
அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய
  செறுவார்க்கும் செய்யா விடல் - குறள் 21:3
செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன்
  வெருவந்து வெய்து கெடும் - குறள் 57:9

 TOP

 
 செய்யாக்கால் (1)
இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
  என்ன பயத்ததோ சால்பு - குறள் 99:7

 TOP

 
 செய்யாது (4)
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும் நீர
  செய்யாது அமைகலா ஆறு - குறள் 22:9
உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன் உண்ண
  அண்ணாத்தல் செய்யாது அளறு - குறள் 26:5
செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
  உயற்பாலது அன்றி கெடும் - குறள் 44:7
புகழ்ந்தவை போற்றி செயல் வேண்டும் செய்யாது
  இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் - குறள் 54:8

 TOP

 
 செய்யாமல் (2)
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
  வானகமும் ஆற்றல் அரிது - குறள் 11:1
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்த பின்
  உய்யா விழுமம் தரும் - குறள் 32:3

 TOP

 
 செய்யாமை (9)
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து
  அறன் அல்ல செய்யாமை நன்று - குறள் 16:7
உற்ற நோய் நோன்றல் உயிர்க்கு உறுகண் செய்யாமை
  அற்றே தவத்திற்கு உரு - குறள் 27:1
பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற
  செய்யாமை செய்யாமை நன்று - குறள் 30:7
சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
  செய்யாமை மாசற்றார் கோள் - குறள் 32:1
கறுத்து இன்னா செய்த அக்கண்ணும் மறுத்து இன்னா
  செய்யாமை மாசற்றார் கோள் - குறள் 32:2
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தான் ஆம்
  மாணா செய்யாமை தலை - குறள் 32:7
எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
  மற்று அன்ன செய்யாமை நன்று - குறள் 66:5
பகல் கருதி பற்றா செயினும் இகல் கருதி
  இன்னா செய்யாமை தலை - குறள் 86:2

 TOP

 
 செய்யாமையானும் (1)
செய் தக்க அல்ல செய கெடும் செய் தக்க
  செய்யாமையானும் கெடும் - குறள் 47:6

 TOP

 
 செய்யார் (7)
அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்கு ஆற்றின்
  ஏதம் படுபாக்கு அறிந்து - குறள் 17:4
படு பயன் வெஃகி பழிப்படுவ செய்யார்
  நடுவு அன்மை நாணுபவர் - குறள் 18:2
இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற
  புன்மை_இல் காட்சியவர் - குறள் 18:4
நோய் எல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய் செய்யார்
  நோய் இன்மை வேண்டுபவர் - குறள் 32:10
இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
  நடுக்கு அற்ற காட்சியவர் - குறள் 66:4
கொளப்பட்டேம் என்று எண்ணி கொள்ளாத செய்யார்
  துளக்கு அற்ற காட்சியவர் - குறள் 70:9
சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசற்ற
  குலம் பற்றி வாழ்தும் என்பார் - குறள் 96:6

 TOP

 
 செய்யாரே (2)
சிற்றின்பம் வெஃகி அறன் அல்ல செய்யாரே
  மற்று இன்பம் வேண்டுபவர் - குறள் 18:3
சீரினும் சீர் அல்ல செய்யாரே சீரொடு
  பேராண்மை வேண்டுபவர் - குறள் 97:2

 TOP

 
 செய்யாள் (1)
அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து
  நல் விருந்து ஓம்புவான் இல் - குறள் 9:4

 TOP

 
 செய்யான் (2)
அரும் கேடன் என்பது அறிக மருங்கு ஓடி
  தீவினை செய்யான் எனின் - குறள் 21:10
வழி நோக்கான் வாய்ப்பன செய்யான் பழி நோக்கான்
  பண்பிலன் பற்றார்க்கு இனிது - குறள் 87:5

 TOP

 
 செய்யின் (4)
இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
  இலன் ஆகும் மற்றும் பெயர்த்து - குறள் 21:5
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
  பிற்பகல் தாமே வரும் - குறள் 32:9
முறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி
  ஒல்லாது வானம் பெயல் - குறள் 56:9
சிறப்பு அறிய ஒற்றின்-கண் செய்யற்க செய்யின்
  புறப்படுத்தான் ஆகும் மறை - குறள் 59:10

 TOP

 
 செய்யினும் (3)
திறன் அல்ல தன் பிறர் செய்யினும் நோ நொந்து
  அறன் அல்ல செய்யாமை நன்று - குறள் 16:7
அழிவந்த செய்யினும் அன்பு அறார் அன்பின்
  வழிவந்த கேண்மையவர் - குறள் 81:7
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனை
  காணாது அமையல கண் - குறள் 129:3

 TOP

 
 செய்யும் (15)
சிறை காக்கும் காப்பு எவன் செய்யும் மகளிர்
  நிறை காக்கும் காப்பே தலை - குறள் 6:7
புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை
  அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு - குறள் 8:9
தெருளாதான் மெய்ப்பொருள் கண்டு அற்றால் தேரின்
  அருளாதான் செய்யும் அறம் - குறள் 25:9
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம்
  தான் அறி குற்றப்படின் - குறள் 28:2
கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் கோல் கோடி
  சூழாது செய்யும் அரசு - குறள் 56:4
உள போல் முகத்து எவன் செய்யும் அளவினால்
  கண்ணோட்டம் இல்லாத கண் - குறள் 58:4
கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
  அருவினையும் மாண்டது அமைச்சு - குறள் 64:1
தூங்குக தூங்கி செயற்பால தூங்கற்க
  தூங்காது செய்யும் வினை - குறள் 68:2
பழையம் என கருதி பண்பு அல்ல செய்யும்
  கெழு தகைமை கேடு தரும் - குறள் 70:10
பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும்
  கொல் குறும்பும் இல்லது நாடு - குறள் 74:5
பொருள் அல்லவரை பொருளாக செய்யும்
  பொருள் அல்லது இல்லை பொருள் - குறள் 76:1
பழகிய நட்பு எவன் செய்யும் கெழுதகைமை
  செய்தாங்கு அமையாக்கடை - குறள் 81:3
அரு மறை சோரும் அறிவிலான் செய்யும்
  பெரும் மிறை தானே தமக்கு - குறள் 85:7
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
  வளி முதலா எண்ணிய மூன்று - குறள் 95:1
எனைத்தும் நினைப்பினும் காயார் அனைத்து அன்றோ
  காதலர் செய்யும் சிறப்பு - குறள் 121:8

 TOP

 
 செய்வஃதே (1)
ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார்-மாட்டும்
  தேர்ந்து செய்வஃதே முறை - குறள் 55:1

 TOP

 
 செய்வர் (2)
முறைப்பட சூழ்ந்தும் முடிவு இலவே செய்வர்
  திறப்பாடு இலாஅதவர் - குறள் 64:10
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
  எல்லாரும் செய்வர் சிறப்பு - குறள் 76:2

 TOP

 
 செய்வல் (1)
குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம்
  மடி தற்று தான் முந்துறும் - குறள் 103:3

 TOP

 
 செய்வார் (5)
செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர்
  செயற்கு அரிய செய்கலாதார் - குறள் 3:6
தவம் செய்வார் தம் கருமம் செய்வார் மற்று அல்லார்
  அவம் செய்வார் ஆசையுள் பட்டு - குறள் 27:6
வினை செய்வார் தம் சுற்றம் வேண்டாதார் என்று ஆங்கு
  அனைவரையும் ஆராய்வது ஒற்று - குறள் 59:4

 TOP

 
 செய்வார்-கண் (1)
அற வினையும் ஆன்ற பொருளும் பிற வினையும்
  பெண் ஏவல் செய்வார்-கண் இல் - குறள் 91:9

 TOP

 
 செய்வார்க்கு (3)
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி
  பிறவும் தம போல் செயின் - குறள் 12:10
தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு
  அரும் பொருள் யாதொன்றும் இல் - குறள் 47:2
குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடி செய்து
  மானம் கருத கெடும் - குறள் 103:8

 TOP

 
 செய்வார்க்கும் (1)
நண்பு ஆற்றார் ஆகி நயம் இல செய்வார்க்கும்
  பண்பு ஆற்றார் ஆதல் கடை - குறள் 100:8

 TOP

 
 செய்வாரின் (1)
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
  தானம் செய்வாரின் தலை - குறள் 30:5

 TOP

 
 செய்வான் (4)
நாள்-தோறும் நாடுக மன்னன் வினை செய்வான்
  கோடாமை கோடாது உலகு - குறள் 52:10
செய் வினை செய்வான் செயல் முறை அ வினை
  உள் அறிவான் உள்ளம் கொளல் - குறள் 68:7
குன்று ஏறி யானை போர் கண்ட அற்றால் தன் கைத்து ஒன்று
  உண்டாக செய்வான் வினை - குறள் 76:8
கொடுத்தும் கொளல் வேண்டும்-மன்ற அடுத்து இருந்து
  மாணாத செய்வான் பகை - குறள் 87:7

 TOP

 
 செய்வானேல் (1)
எற்று என்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
  மற்று அன்ன செய்யாமை நன்று - குறள் 66:5

 TOP

 
 செய்வானை (1)
செய்வானை நாடி வினை நாடி காலத்தோடு
  எய்த உணர்ந்து செயல் - குறள் 52:6

 TOP

 
 செய்வேன்-கொல் (1)
காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
  யாது செய்வேன்-கொல் விருந்து - குறள் 122:1

 TOP

 
 செய (2)
செய் தக்க அல்ல செய கெடும் செய் தக்க
  செய்யாமையானும் கெடும் - குறள் 47:6
கருமம் செய ஒருவன் கைதூவேன் என்னும்
  பெருமையின் பீடு உடையது இல் - குறள் 103:1

 TOP

 
 செயக்கிடந்தது (2)
தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லானை
  செற்றார் செயக்கிடந்தது இல் - குறள் 45:6
வைத்தான்-வாய் சான்ற பெரும் பொருள் அஃது உண்ணான்
  செத்தான் செயக்கிடந்தது இல் - குறள் 101:1

 TOP

 
 செயப்பட்டார் (1)
உதவி வரைத்து அன்று உதவி உதவி
  செயப்பட்டார் சால்பின் வரைத்து - குறள் 11:5

 TOP

 
 செயல் (26)
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
  செல்லும் வாய் எல்லாம் செயல் - குறள் 4:3
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து
  முந்தி இருப்ப செயல் - குறள் 7:7
இன்னா என தான் உணர்ந்தவை துன்னாமை
  வேண்டும் பிறன்-கண் செயல் - குறள் 32:6
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்-கொலோ
  மன் உயிர்க்கு இன்னா செயல் - குறள் 32:8
அற்கா இயல்பிற்று செல்வம் அது பெற்றால்
  அற்குப ஆங்கே செயல் - குறள் 34:3
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழி பயக்கும்
  ஊதியமும் சூழ்ந்து செயல் - குறள் 47:1
எள்ளாத எண்ணி செயல் வேண்டும் தம்மொடு
  கொள்ளாத கொள்ளாது உலகு - குறள் 47:10
வினை வலியும் தன் வலியும் மாற்றான் வலியும்
  துணை வலியும் தூக்கி செயல் - குறள் 48:1
எய்தற்கு அரியது இயைந்தக்கால் அ நிலையே
  செய்தற்கு அரிய செயல் - குறள் 49:9
செய்வானை நாடி வினை நாடி காலத்தோடு
  எய்த உணர்ந்து செயல் - குறள் 52:6
வினைக்கு உரிமை நாடிய பின்றை அவனை
  அதற்கு உரியன் ஆக செயல் - குறள் 52:8
புகழ்ந்தவை போற்றி செயல் வேண்டும் செய்யாது
  இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் - குறள் 54:8
செயற்கை அறிந்தக்கடைத்தும் உலகத்து
  இயற்கை அறிந்து செயல் - குறள் 64:7
சொல்லுதல் யார்க்கும் எளிய அரிய ஆம்
  சொல்லிய வண்ணம் செயல் - குறள் 67:4
கலங்காது கண்ட வினைக்-கண் துளங்காது
  தூக்கம் கடிந்து செயல் - குறள் 67:8
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே ஒல்லாக்கால்
  செல்லும் வாய் நோக்கி செயல் - குறள் 68:3
பொருள் கருவி காலம் வினை இடனொடு ஐந்தும்
  இருள் தீர எண்ணி செயல் - குறள் 68:5
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
  படுபயனும் பார்த்து செயல் - குறள் 68:6
செய் வினை செய்வான் செயல் முறை அ வினை
  உள் அறிவான் உள்ளம் கொளல் - குறள் 68:7
பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
  கை அல்லதன்-கண் செயல் - குறள் 84:2
ஒருமை செயல் ஆற்றும் பேதை எழுமையும்
  தான் புக்கு அழுந்தும் அளறு - குறள் 84:5
கூற்றத்தை கையால் விளித்து அற்றால் ஆற்றுவார்க்கு
  ஆற்றாதார் இன்னா செயல் - குறள் 90:4
இல்லாளை அஞ்சுவான் அஞ்சும் மற்று எஞ்ஞான்றும்
  நல்லார்க்கு நல்ல செயல் - குறள் 91:5
நோய் நாடி நோய் முதல் நாடி அது தணிக்கும்
  வாய் நாடி வாய்ப்ப செயல் - குறள் 95:8
உற்றான் அளவும் பிணி அளவும் காலமும்
  கற்றான் கருதி செயல் - குறள் 95:9
பெருமை உடையவர் ஆற்றுவார் ஆற்றின்
  அருமை உடைய செயல் - குறள் 98:5

 TOP

 
 செயலின் (1)
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
  ஒட்டாரை ஒட்டி கொளல் - குறள் 68:9

 TOP

 
 செயலும் (1)
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையா
  சொல்லலும் வல்லது அமைச்சு - குறள் 64:4

 TOP

 
 செயற்கு (4)
செயற்கு அரிய செய்வார் பெரியர் சிறியர்
  செயற்கு அரிய செய்கலாதார் - குறள் 3:6
நல்லவை எல்லாஅம் தீய ஆம் தீயவும்
  நல்ல ஆம் செல்வம் செயற்கு - குறள் 38:5
செயற்கு அரிய யா உள நட்பின் அது போல்
  வினைக்கு அரிய யா உள காப்பு - குறள் 79:1

 TOP

 
 செயற்கை (1)
செயற்கை அறிந்தக்கடைத்தும் உலகத்து
  இயற்கை அறிந்து செயல் - குறள் 64:7

 TOP

 
 செயற்பால (2)
செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
  உயற்பாலது அன்றி கெடும் - குறள் 44:7
தூங்குக தூங்கி செயற்பால தூங்கற்க
  தூங்காது செய்யும் வினை - குறள் 68:2

 TOP

 
 செயற்பாலது (1)
செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு
  உயற்பாலது ஓரும் பழி - குறள் 4:10

 TOP

 
 செயிர் (1)
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
  செல்லா தீ வாழ்க்கையவர் - குறள் 33:10

 TOP

 
 செயிர்ப்பவர் (1)
உயிர்ப்ப உளர் அல்லர் மன்ற செயிர்ப்பவர்
  செம்மல் சிதைக்கலாதார் - குறள் 88:10

 TOP

 
 செயிரின் (1)
செயிரின் தலைப்பிரிந்த காட்சியர் உண்ணார்
  உயிரின் தலைப்பிரிந்த ஊன் - குறள் 26:8

 TOP

 
 செயின் (16)
கெடுவல் யான் என்பது அறிக தன் நெஞ்சம்
  நடுவு ஒரீஇ அல்ல செயின் - குறள் 12:6
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணி
  பிறவும் தம போல் செயின் - குறள் 12:10
அஃகி அகன்ற அறிவு என் ஆம் யார்-மாட்டும்
  வெஃகி வெறிய செயின் - குறள் 18:5
அரு வினை என்ப உளவோ கருவியான்
  காலம் அறிந்து செயின் - குறள் 49:3
ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
  கருதி இடத்தான் செயின் - குறள் 49:4
ஆற்றாரும் ஆற்றி அடுப இடன் அறிந்து
  போற்றார்-கண் போற்றி செயின் - குறள் 50:3
எண்ணியார் எண்ணம் இழப்பர் இடன் அறிந்து
  துன்னியார் துன்னி செயின் - குறள் 50:4
அஞ்சாமை அல்லால் துணை வேண்டா எஞ்சாமை
  எண்ணி இடத்தால் செயின் - குறள் 50:7
அரிய என்று ஆகாத இல்லை பொச்சாவா
  கருவியான் போற்றி செயின் - குறள் 54:7
இறை காக்கும் வையகம் எல்லாம் அவனை
  முறை காக்கும் முட்டா செயின் - குறள் 55:7
விழை தகையான் வேண்டியிருப்பர் கெழுதகையான்
  கேளாது நட்டார் செயின் - குறள் 81:4
பேதைமை ஒன்றோ பெரும் கிழமை என்று உணர்க
  நோதக்க நட்டார் செயின் - குறள் 81:5
கேள் இழுக்கம் கேளா கெழுதகைமை வல்லார்க்கு
  நாள் இழுக்கம் நட்டார் செயின் - குறள் 81:8
நிழல் நீரும் இன்னாத இன்னா தமர் நீரும்
  இன்னா ஆம் இன்னா செயின் - குறள் 89:1
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
  குன்றி அனைய செயின் - குறள் 97:5
நாண் என ஒன்றோ அறியலம் காமத்தான்
  பேணியார் பெட்ப செயின் - குறள் 126:7

 TOP

 
 செயினும் (8)
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையா
  கொள்வர் பயன் தெரிவார் - குறள் 11:4
கொன்று அன்ன இன்னா செயினும் அவர் செய்த
  ஒன்றும் நன்று உள்ள கெடும் - குறள் 11:9
அறன் வரையான் அல்ல செயினும் பிறன் வரையாள்
  பெண்மை நயவாமை நன்று - குறள் 15:10
அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன்
  புறங்கூறான் என்றல் இனிது - குறள் 19:1
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும்
  புணரின் வெகுளாமை நன்று - குறள் 31:8
துறந்தார் படிவத்தர் ஆகி இறந்து ஆராய்ந்து
  என் செயினும் சோர்வு இலது ஒற்று - குறள் 59:6
பகல் கருதி பற்றா செயினும் இகல் கருதி
  இன்னா செய்யாமை தலை - குறள் 86:2
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்கு
  கள் அற்றே கள்வ நின் மார்பு - குறள் 129:8

 TOP

 
 செயும் (1)
நயன் உடையான் நல்கூர்ந்தான் ஆதல் செயும் நீர
  செய்யாது அமைகலா ஆறு - குறள் 22:9

 TOP

 
 செரு (1)
செரு வந்த போழ்தில் சிறை செய்யா வேந்தன்
  வெருவந்து வெய்து கெடும் - குறள் 57:9

 TOP

 
 செருக்கி (1)
தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கி
  புன் நலம் பாரிப்பார் தோள் - குறள் 92:6

 TOP

 
 செருக்கு (10)
இறல் ஈனும் எண்ணாது வெஃகின் விறல் ஈனும்
  வேண்டாமை என்னும் செருக்கு - குறள் 18:10
தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
  தீவினை என்னும் செருக்கு - குறள் 21:1
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
  உயர்ந்த உலகம் புகும் - குறள் 35:6
உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
  வள்ளியம் என்னும் செருக்கு - குறள் 60:8
தாளாண்மை என்னும் தகைமைக்-கண் தங்கிற்றே
  வேளாண்மை என்னும் செருக்கு - குறள் 62:3
செய்க பொருளை செறுநர் செருக்கு அறுக்கும்
  எஃகு அதனின் கூரியது இல் - குறள் 76:9
வெண்மை எனப்படுவது யாது எனின் ஒண்மை
  உடையம் யாம் என்னும் செருக்கு - குறள் 85:4
இகலான் ஆம் இன்னாத எல்லம் நகலான் ஆம்
  நன்னயம் என்னும் செருக்கு - குறள் 86:10
வகை அறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
  பகைவர்-கண் பட்ட செருக்கு - குறள் 88:8
வீழுநர் வீழப்படுவர்க்கு அமையுமே
  வாழுநம் என்னும் செருக்கு - குறள் 120:3

 TOP

 
 செருக்கும் (1)
செருக்கும் சினமும் சிறுமையும் இல்லார்
  பெருக்கம் பெருமித நீர்த்து - குறள் 44:1

 TOP

 
 செல் (1)
செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான்
  நல் விருந்து வானத்தவர்க்கு - குறள் 9:6

 TOP

 
 செல்க (1)
அறிவு உரு ஆராய்ந்த கல்வி இ மூன்றன்
  செறிவுடையான் செல்க வினைக்கு - குறள் 69:4

 TOP

 
 செல்கிற்பின் (1)
உள்ளம் போன்று உள்வழி செல்கிற்பின் வெள்ள நீர்
  நீந்தல-மன்னோ என் கண் - குறள் 117:10

 TOP

 
 செல்பவர் (1)
உழுது உண்டு வாழ்வாரே வாழ்வார் மற்று எல்லாம்
  தொழுது உண்டு பின் செல்பவர் - குறள் 104:3

 TOP

 
 செல்லா (4)
செல்லா இடத்து சினம் தீது செல்லிடத்தும்
  இல் அதனின் தீய பிற - குறள் 31:2
உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
  செல்லா தீ வாழ்க்கையவர் - குறள் 33:10
சிறுமையும் செல்லா துனியும் வறுமையும்
  இல் ஆயின் வெல்லும் படை - குறள் 77:9
செற்றார் பின் செல்லா பெருந்தகைமை காமநோய்
  உற்றார் அறிவது ஒன்று அன்று - குறள் 126:5

 TOP

 
 செல்லாதது (1)
ஒல்வது அறிவது அறிந்து அதன்-கண் தங்கி
  செல்வார்க்கு செல்லாதது இல் - குறள் 48:2

 TOP

 
 செல்லாது (2)
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
  வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு - குறள் 2:8
கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழ்நாள் மேல்
  செல்லாது உயிர் உண்ணும் கூற்று - குறள் 33:6

 TOP

 
 செல்லாமை (1)
செல்லாமை உண்டேல் எனக்கு உரை மற்று நின்
  வல் வரவு வாழ்வார்க்கு உரை - குறள் 116:1

 TOP

 
 செல்லான் (1)
செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து
  இல்லாளின் ஊடிவிடும் - குறள் 104:9

 TOP

 
 செல்லிடத்து (1)
செல்லிடத்து காப்பான் சினம் காப்பான் அல்லிடத்து
  காக்கின் என் காவாக்கால் என் - குறள் 31:1

 TOP

 
 செல்லிடத்தும் (1)
செல்லா இடத்து சினம் தீது செல்லிடத்தும்
  இல் அதனின் தீய பிற - குறள் 31:2

 TOP

 
 செல்லிடம் (1)
சிறு படையான் செல்லிடம் சேரின் உறு படையான்
  ஊக்கம் அழிந்துவிடும் - குறள் 50:8

 TOP

 
 செல்லும் (5)
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
  செல்லும் வாய் எல்லாம் செயல் - குறள் 4:3
வலியார் முன் தன்னை நினைக்க தான் தன்னின்
  மெலியார் மேல் செல்லும் இடத்து - குறள் 25:10
ஆக்கம் அதர் வினாய் செல்லும் அசைவு இலா
  ஊக்கம் உடையான் உழை - குறள் 60:4
ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்றே ஒல்லாக்கால்
  செல்லும் வாய் நோக்கி செயல் - குறள் 68:3
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார்
  வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு - குறள் 127:9

 TOP

 
 செல்வ (1)
அருள் என்னும் அன்பு ஈன் குழவி பொருள் என்னும்
  செல்வ செவிலியால் உண்டு - குறள் 76:7

 TOP

 
 செல்வத்திற்கு (1)
அஃகாமை செல்வத்திற்கு யாது எனின் வெஃகாமை
  வேண்டும் பிறன் கைப்பொருள் - குறள் 18:8

 TOP

 
 செல்வத்துள் (3)
அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள் செல்வம்
  பூரியார்-கண்ணும் உள - குறள் 25:1
செல்வத்துள் செல்வம் செவி செல்வம் அ செல்வம்
  செல்வத்துள் எல்லாம் தலை - குறள் 42:1

 TOP

 
 செல்வத்தை (1)
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே
  செல்வத்தை தேய்க்கும் படை - குறள் 56:5

 TOP

 
 செல்வது (1)
தார் தாங்கி செல்வது தானை தலைவந்த
  போர் தாங்கும் தன்மை அறிந்து - குறள் 77:7

 TOP

 
 செல்வம் (26)
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
  செல்வர்க்கே செல்வம் தகைத்து - குறள் 13:5
பயன் மரம் உள்ளூர் பழுத்து அற்றால் செல்வம்
  நயன் உடையான்-கண் படின் - குறள் 22:6
மருந்து ஆகி தப்பா மரத்து அற்றால் செல்வம்
  பெருந்தகையான்-கண் படின் - குறள் 22:7
அருள் செல்வம் செல்வத்துள் செல்வம் பொருள் செல்வம்
  பூரியார்-கண்ணும் உள - குறள் 25:1
சிறப்பு ஈனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
  செய்யாமை மாசற்றார் கோள் - குறள் 32:1
கூத்தாட்டு அவை குழாத்து அற்றே பெரும் செல்வம்
  போக்கும் அது விளிந்து அற்று - குறள் 34:2
அற்கா இயல்பிற்று செல்வம் அது பெற்றால்
  அற்குப ஆங்கே செயல் - குறள் 34:3
வேண்டாமை அன்ன விழு செல்வம் ஈண்டு இல்லை
  யாண்டும் அஃது ஒப்பது இல் - குறள் 37:3
நல்லவை எல்லாஅம் தீய ஆம் தீயவும்
  நல்ல ஆம் செல்வம் செயற்கு - குறள் 38:5
கேடு_இல் விழு செல்வம் கல்வி ஒருவற்கு
  மாடு அல்ல மற்றையவை - குறள் 40:10
செல்வத்துள் செல்வம் செவி செல்வம் அ செல்வம்
  செல்வத்துள் எல்லாம் தலை - குறள் 42:1
செயற்பால செய்யாது இவறியான் செல்வம்
  உயற்பாலது அன்றி கெடும் - குறள் 44:7
சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம் தான்
  பெற்றத்தால் பெற்ற பயன் - குறள் 53:4
அரும் செவ்வி இன்னா முகத்தான் பெரும் செல்வம்
  பேஎய் கண்ட அன்னது உடைத்து - குறள் 57:5
கடும் சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடும் செல்வம்
  நீடு இன்றி ஆங்கே கெடும் - குறள் 57:6
பிணியின்மை செல்வம் விளைவு இன்பம் ஏமம்
  அணி என்ப நாட்டிற்கு இ ஐந்து - குறள் 74:8
ஏதிலார் ஆர தமர் பசிப்பர் பேதை
  பெரும் செல்வம் உற்றக்கடை - குறள் 84:7
உடை செல்வம் ஊண் ஒளி கல்வி என்று ஐந்தும்
  அடையாவாம் ஆயம் கொளின் - குறள் 94:9
பண்பிலான் பெற்ற பெரும் செல்வம் நன் பால்
  கலம் தீமையால் திரிந்து அற்று - குறள் 100:10
ஏதம் பெரும் செல்வம் தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று
  ஈதல் இயல்பு இலாதான் - குறள் 101:6
அற்றார்க்கு ஒன்று ஆற்றாதான் செல்வம் மிகு நலம்
  பெற்றாள் தமியள் மூத்து அற்று - குறள் 101:7
நச்சப்படாதவன் செல்வம் நடு ஊருள்
  நச்சு மரம் பழுத்து அற்று - குறள் 101:8

 TOP

 
 செல்வமும் (2)
சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தின் ஊஉங்கு
  ஆக்கம் எவனோ உயிர்க்கு - குறள் 4:1
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
  கழகத்து காலை புகின் - குறள் 94:7

 TOP

 
 செல்வர் (1)
சீர் உடை செல்வர் சிறு துனி மாரி
  வறம் கூர்ந்த அனையது உடைத்து - குறள் 101:10

 TOP

 
 செல்வர்க்கே (1)
எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
  செல்வர்க்கே செல்வம் தகைத்து - குறள் 13:5

 TOP

 
 செல்வரும் (1)
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வு இலா
  செல்வரும் சேர்வது நாடு - குறள் 74:1

 TOP

 
 செல்வரை (1)
இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
  எல்லாரும் செய்வர் சிறப்பு - குறள் 76:2

 TOP

 
 செல்வாய் (1)
பரிந்து அவர் நல்கார் என்று ஏங்கி பிரிந்தவர்
  பின் செல்வாய் பேதை என் நெஞ்சு - குறள் 125:8

 TOP

 
 செல்வார் (1)
உவக்காண் எம் காதலர் செல்வார் இவக்காண் என்
  மேனி பசப்பு ஊர்வது - குறள் 119:5

 TOP

 
 செல்வார்க்கு (1)
ஒல்வது அறிவது அறிந்து அதன்-கண் தங்கி
  செல்வார்க்கு செல்லாதது இல் - குறள் 48:2

 TOP

 
 செல (7)
எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்-வாய்
  நுண் பொருள் காண்பது அறிவு - குறள் 43:4
கற்று கண் அஞ்சான் செல சொல்லி காலத்தால்
  தக்கது அறிவது ஆம் தூது - குறள் 69:6
புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல் அவையுள்
  நன்கு செல சொல்லுவார் - குறள் 72:9
கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார் முன்
  கற்ற செல சொல்லுவார் - குறள் 73:2
கற்றார் முன் கற்ற செல சொல்லி தாம் கற்ற
  மிக்காருள் மிக்க கொளல் - குறள் 73:4
பல்லவை கற்றும் பயம் இலரே நல் அவையுள்
  நன்கு செல சொல்லாதார் - குறள் 73:8
உளர் எனினும் இல்லாரொடு ஒப்பர் களன் அஞ்சி
  கற்ற செல சொல்லாதார் - குறள் 73:10

 TOP

 
 செலல் (1)
கெட்டார்க்கு நட்டார் இல் என்பதோ நெஞ்சே நீ
  பெட்டாங்கு அவர் பின் செலல் - குறள் 130:3

 TOP

 
 செலவிடா (1)
சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ
  நன்றின்-பால் உய்ப்பது அறிவு - குறள் 43:2

 TOP

 
 செலவு (1)
மறம் மானம் மாண்ட வழி செலவு தேற்றம்
  என நான்கே ஏமம் படைக்கு - குறள் 77:6

 TOP

 
 செவ்வி (3)
கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி
  அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து - குறள் 13:10
அரும் செவ்வி இன்னா முகத்தான் பெரும் செல்வம்
  பேஎய் கண்ட அன்னது உடைத்து - குறள் 57:5
மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்
  செவ்வி தலைப்படுவார் - குறள் 129:9

 TOP

 
 செவ்விது (1)
கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கு அன்ன
  வினைபடு பாலால் கொளல் - குறள் 28:9

 TOP

 
 செவ்வியான் (1)
அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
  கேடும் நினைக்கப்படும் - குறள் 17:9

 TOP

 
 செவி (5)
செவி கைப்ப சொல் பொறுக்கும் பண்பு உடை வேந்தன்
  கவி கை கீழ் தங்கும் உலகு - குறள் 39:9
செல்வத்துள் செல்வம் செவி செல்வம் அ செல்வம்
  செல்வத்துள் எல்லாம் தலை - குறள் 42:1
செவி உணவின் கேள்வி உடையார் அவி உணவின்
  ஆன்றாரோடு ஒப்பர் நிலத்து - குறள் 42:3
கேட்பினும் கேளா தகையவே கேள்வியால்
  தோட்கப்படாத செவி - குறள் 42:8
செவி சொல்லும் சேர்ந்த நகையும் அவித்து ஒழுகல்
  ஆன்ற பெரியார் அகத்து - குறள் 70:4

 TOP

 
 செவிக்கு (3)
மக்கள் மெய் தீண்டல் உடற்கு இன்பம் மற்று அவர்
  சொல் கேட்டல் இன்பம் செவிக்கு - குறள் 7:5
செவிக்கு உணவு இல்லாத போழ்து சிறிது
  வயிற்றுக்கும் ஈயப்படும் - குறள் 42:2
நசைஇயார் நல்கார் எனினும் அவர்-மாட்டு
  இசையும் இனிய செவிக்கு - குறள் 120:9

 TOP

 
 செவியின் (1)
செவியின் சுவை உணரா வாய் உணர்வின் மாக்கள்
  அவியினும் வாழினும் என் - குறள் 42:10

 TOP

 
 செவிலியால் (1)
அருள் என்னும் அன்பு ஈன் குழவி பொருள் என்னும்
  செல்வ செவிலியால் உண்டு - குறள் 76:7

 TOP

 
 செற்றவர் (1)
செற்றவர் பின் சேறல் வேண்டி அளித்து அரோ
  எற்று என்னை உற்ற துயர் - குறள் 126:6

 TOP

 
 செற்றார் (4)
தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லானை
  செற்றார் செயக்கிடந்தது இல் - குறள் 45:6
செறாஅ சிறுசொல்லும் செற்றார் போல் நோக்கும்
  உறாஅர் போன்று உற்றார் குறிப்பு - குறள் 110:7
செற்றார் என கைவிடல் உண்டோ நெஞ்சே யாம்
  உற்றால் உறாஅதவர் - குறள் 125:5
செற்றார் பின் செல்லா பெருந்தகைமை காமநோய்
  உற்றார் அறிவது ஒன்று அன்று - குறள் 126:5

 TOP

 
 செற்றார்க்கும் (1)
செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்த பின்
  உய்யா விழுமம் தரும் - குறள் 32:3

 TOP

 
 செற்று (2)
அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று
  தீ உழி உய்த்துவிடும் - குறள் 17:8
நா செற்று விக்குள் மேல்வாரா முன் நல் வினை
  மேற்சென்று செய்யப்படும் - குறள் 34:5

 TOP

 
 செறப்பட்டவர் (1)
யாண்டு சென்று யாண்டும் உளர் ஆகார் வெம் துப்பின்
  வேந்து செறப்பட்டவர் - குறள் 90:5

 TOP

 
 செறாஅ (1)
செறாஅ சிறுசொல்லும் செற்றார் போல் நோக்கும்
  உறாஅர் போன்று உற்றார் குறிப்பு - குறள் 110:7

 TOP

 
 செறாஅய் (1)
உறாஅர்க்கு உறு நோய் உரைப்பாய் கடலை
  செறாஅய் வாழிய நெஞ்சு - குறள் 120:10

 TOP

 
 செறாஅர் (2)
உறாஅதவர் போல் சொலினும் செறாஅர் சொல்
  ஒல்லை உணரப்படும் - குறள் 110:6
உறாஅதவர் கண்ட கண்ணும் அவரை
  செறாஅர் என சேறி என் நெஞ்சு - குறள் 130:2

 TOP

 
 செறி (1)
செறி_தொடி செய்து இறந்த கள்ளம் உறு துயர்
  தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து - குறள் 128:5

 TOP

 
 செறி-தோறும் (1)
அறி-தோறு அறியாமை கண்டு அற்றால் காமம்
  செறி-தோறும் சே_இழை-மாட்டு - குறள் 111:10

 TOP

 
 செறி_தொடி (1)
செறி_தொடி செய்து இறந்த கள்ளம் உறு துயர்
  தீர்க்கும் மருந்து ஒன்று உடைத்து - குறள் 128:5

 TOP

 
 செறிவு (2)
செறிவு அறிந்து சீர்மை பயக்கும் அறிவு அறிந்து
  ஆற்றின் அடங்க பெறின் - குறள் 13:3
நன்று என்றவற்றுள்ளும் நன்றே முதுவருள்
  முந்து கிளவா செறிவு - குறள் 72:5

 TOP

 
 செறிவுடையான் (1)
அறிவு உரு ஆராய்ந்த கல்வி இ மூன்றன்
  செறிவுடையான் செல்க வினைக்கு - குறள் 69:4

 TOP

 
 செறின் (2)
வகை மாண்ட வாழ்க்கையும் வான் பொருளும் என் ஆம்
  தகை மாண்ட தக்கார் செறின் - குறள் 90:7
இறந்து அமைந்த சார்பு உடையராயினும் உய்யார்
  சிறந்து அமைந்த சீரார் செறின் - குறள் 90:10

 TOP

 
 செறினும் (1)
உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன்
  செறினும் சீர் குன்றல் இலர் - குறள் 78:8

 TOP

 
 செறு (1)
உறு பசியும் ஓவா பிணியும் செறு பகையும்
  சேராது இயல்வது நாடு - குறள் 74:4

 TOP

 
 செறுநர் (1)
செய்க பொருளை செறுநர் செருக்கு அறுக்கும்
  எஃகு அதனின் கூரியது இல் - குறள் 76:9

 TOP

 
 செறுநரை (1)
செறுநரை காணின் சுமக்க இறுவரை
  காணின் கிழக்காம் தலை - குறள் 49:8

 TOP

 
 செறுப்ப (1)
தும்மு செறுப்ப அழுதாள் நுமர் உள்ளல்
  எம்மை மறைத்திரோ என்று - குறள் 132:8

 TOP

 
 செறுவார்க்கு (1)
செறுவார்க்கு சேண் இகவா இன்பம் அறிவிலா
  அஞ்சும் பகைவர் பெறின் - குறள் 87:9

 TOP

 
 செறுவார்க்கும் (3)
அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய
  செறுவார்க்கும் செய்யா விடல் - குறள் 21:3
அறிவு அற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
  உள் அழிக்கல் ஆகா அரண் - குறள் 43:1
அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை
  செறுவார்க்கும் செய்தல் அரிது - குறள் 85:3

 TOP

 
 சென்ற (2)
சென்ற இடத்தால் செலவிடா தீது ஒரீஇ
  நன்றின்-பால் உய்ப்பது அறிவு - குறள் 43:2
வாள் அற்று புற்கென்ற கண்ணும் அவர் சென்ற
  நாள் ஒற்றி தேய்த்த விரல் - குறள் 127:1

 TOP

 
 சென்றது (1)
ஊடல்-கண் சென்றேன்-மன் தோழி அது மறந்து
  கூடல்-கண் சென்றது என் நெஞ்சு - குறள் 129:4

 TOP

 
 சென்றார் (4)
சிறுமை நமக்கு ஒழிய சேண் சென்றார் உள்ளி
  நறு மலர் நாணின கண் - குறள் 124:1
உரன் நசைஇ உள்ளம் துணையாக சென்றார்
  வரல் நசைஇ இன்னும் உளேன் - குறள் 127:3
ஒரு நாள் எழு நாள் போல் செல்லும் சேண் சென்றார்
  வரு நாள் வைத்து ஏங்குபவர்க்கு - குறள் 127:9
நெருநற்று சென்றார் எம் காதலர் யாமும்
  எழு நாளேம் மேனி பசந்து - குறள் 128:8

 TOP

 
 சென்றாரை (1)
விடாஅது சென்றாரை கண்ணினால் காண
  படாஅதி வாழி மதி - குறள் 121:10

 TOP

 
 சென்று (7)
எனை பகை உற்றாரும் உய்வர் வினை பகை
  வீயாது பின் சென்று அடும் - குறள் 21:7
பொருள் என்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும்
  எண்ணிய தேயத்து சென்று - குறள் 76:3
யாண்டு சென்று யாண்டும் உளர் ஆகார் வெம் துப்பின்
  வேந்து செறப்பட்டவர் - குறள் 90:5
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று
  இகழ்வார் பின் சென்று நிலை - குறள் 97:6
ஒட்டார் பின் சென்று ஒருவன் வாழ்தலின் அ நிலையே
  கெட்டான் எனப்படுதல் நன்று - குறள் 97:7
நல்குரவு என்னும் இடும்பையுள் பல்கு உரை
  துன்பங்கள் சென்று படும் - குறள் 105:5
இரப்பாரை இல் ஆயின் ஈர் கண் மா ஞாலம்
  மரப்பாவை சென்று வந்த அற்று - குறள் 106:8

 TOP

 
 சென்றேன் (1)
புலப்பல் என சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
  கலத்தலுறுவது கண்டு - குறள் 126:9

 TOP

 
 சென்றேன்-மன் (1)
ஊடல்-கண் சென்றேன்-மன் தோழி அது மறந்து
  கூடல்-கண் சென்றது என் நெஞ்சு - குறள் 129:4

 TOP