<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

கு - முதல் சொற்கள்
குடங்கருள் 1
குடம்பை 1
குடி 20
குடிக்கு 1
குடிகாத்தல் 1
குடிப்பிறந்தார் 2
குடிப்பிறந்தார்-கண் 1
குடிமை 1
குடிமைக்-கண் 1
குடிமையும் 1
குடியாக 1
குடியாண்மையுள் 1
குடியும் 1
குடியை 2
குடியொடு 1
குடும்பத்தை 1
குடை 2
குண 1
குணத்தான் 1
குணம் 4
குணனிலனாய் 1
குணனும் 1
குத்து 1
குதித்தலும் 1
குலத்தில் 1
குலத்தின்-கண் 1
குலம் 3
குலனுடையான்-கண்ணே 1
குவளை 1
குழல் 2
குழவி 1
குழாத்து 1
குழாஅத்து 1
குழுவும் 1
குழை 1
குழையும் 2
குள 1
குளித்தானை 1
குற்றத்தார்க்கு 1
குற்றத்தின் 1
குற்றப்படின் 1
குற்றம் 14
குற்றமும் 4
குற்றமே 3
குறிக்கொண்டு 1
குறித்த 1
குறித்தது 2
குறித்தமையான் 1
குறிப்பறிந்து 1
குறிப்பறிவான் 1
குறிப்பின் 2
குறிப்பு 4
குறியெதிர்ப்பை 1
குறுகுங்கால் 1
குறுகுதல் 1
குறும் 1
குறும்_தொடி 1
குறும்பும் 1
குறை 3
குறையினும் 1
குன்ற 3
குன்றல் 2
குன்றா 3
குன்றி 3
குன்றியக்கால் 1
குன்றின் 2
குன்று 3
குன்றும் 3
குன்றுவ 2
குன்றுவர் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

 குடங்கருள் (1)
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
  பாம்பொடு உடன் உறைந்த அற்று - குறள் 89:10

 TOP

 
 குடம்பை (1)
குடம்பை தனித்து ஒழிய புள் பறந்த அற்றே
  உடம்பொடு உயிரிடை நட்பு - குறள் 34:8

 TOP

 
 குடி (20)
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி
  குற்றமும் ஆங்கே தரும் - குறள் 18:1
படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும்
  உடையான் அரசருள் ஏறு - குறள் 39:1
கொடை அளி செங்கோல் குடி ஓம்பல் நான்கும்
  உடையான் ஆம் வேந்தர்க்கு ஒளி - குறள் 39:10
குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும்
  நாண் உடையான்-கட்டே தெளிவு - குறள் 51:2
வான் நோக்கி வாழும் உலகு எல்லாம் மன்னவன்
  கோல் நோக்கி வாழும் குடி - குறள் 55:2
குடி தழீஇ கோல் ஓச்சும் மாநில மன்னன்
  அடி தழீஇ நிற்கும் உலகு - குறள் 55:4
குடி புறங்காத்து ஓம்பி குற்றம் கடிதல்
  வடு அன்று வேந்தன் தொழில் - குறள் 55:9
குடி என்னும் குன்றா விளக்கம் மடி என்னும்
  மாசு ஊர மாய்ந்து கெடும் - குறள் 61:1
மடி மடி கொண்டு ஒழுகும் பேதை பிறந்த
  குடி மடியும் தன்னினும் முந்து - குறள் 61:3
குடி மடிந்து குற்றம் பெருகும் மடி மடிந்து
  மாண்ட உஞற்று இலவர்க்கு - குறள் 61:4
அன்புடைமை ஆன்ற குடி பிறத்தல் வேந்து அவாம்
  பண்புடைமை தூது உரைப்பான் பண்பு - குறள் 69:1
குடி பிறந்து தன்-கண் பழி நாணுவானை
  கொடுத்தும் கொளல் வேண்டும் நட்பு - குறள் 80:4
செப்பின் புணர்ச்சி போல் கூடினும் கூடாதே
  உட்பகை உற்ற குடி - குறள் 89:7
அரம் பொருத பொன் போல தேயும் உரம் பொருது
  உட்பகை உற்ற குடி - குறள் 89:8
அன்புடைமை ஆன்ற குடி பிறத்தல் இ இரண்டும்
  பண்புடைமை என்னும் வழக்கு - குறள் 100:2
ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின்
  நீள் வினையான் நீளும் குடி - குறள் 103:2
குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம்
  மடி தற்று தான் முந்துறும் - குறள் 103:3
குற்றம் இலனாய் குடி செய்து வாழ்வானை
  சுற்றமா சுற்றும் உலகு - குறள் 103:5
குடி செய்வார்க்கு இல்லை பருவம் மடி செய்து
  மானம் கருத கெடும் - குறள் 103:8
இடுக்கண் கால் கொன்றிட வீழும் அடுத்து ஊன்றும்
  நல் ஆள் இலாத குடி - குறள் 103:10

 TOP

 
 குடிக்கு (1)
நகை ஈகை இன்சொல் இகழாமை நான்கும்
  வகை என்ப வாய்மை குடிக்கு - குறள் 96:3

 TOP

 
 குடிகாத்தல் (1)
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
  ஐந்துடன் மாண்டது அமைச்சு - குறள் 64:2

 TOP

 
 குடிப்பிறந்தார் (2)
ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இ மூன்றும்
  இழுக்கார் குடிப்பிறந்தார் - குறள் 96:2
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
  குன்றுவ செய்தல் இலர் - குறள் 96:4

 TOP

 
 குடிப்பிறந்தார்-கண் (1)
குடிப்பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின்
  மதிக்-கண் மறு போல் உயர்ந்து - குறள் 96:7

 TOP

 
 குடிமை (1)
ஒழுக்கமுடைமை குடிமை இழுக்கம்
  இழிந்த பிறப்பாய்விடும் - குறள் 14:3

 TOP

 
 குடிமைக்-கண் (1)
மடிமை குடிமைக்-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு
  அடிமை புகுத்திவிடும் - குறள் 61:8

 TOP

 
 குடிமையும் (1)
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
  இனனும் அரிந்து யாக்க நட்பு - குறள் 80:3

 TOP

 
 குடியாக (1)
மடியை மடியா ஒழுகல் குடியை
  குடியாக வேண்டுபவர் - குறள் 61:2

 TOP

 
 குடியாண்மையுள் (1)
குடியாண்மையுள் வந்த குற்றம் ஒருவன்
  மடியாண்மை மாற்ற கெடும் - குறள் 61:9

 TOP

 
 குடியும் (1)
கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் கோல் கோடி
  சூழாது செய்யும் அரசு - குறள் 56:4

 TOP

 
 குடியை (2)
மடியை மடியா ஒழுகல் குடியை
  குடியாக வேண்டுபவர் - குறள் 61:2
சூழாமல் தானே முடிவு எய்தும் தம் குடியை
  தாழாது உஞற்றுபவர்க்கு - குறள் 103:4

 TOP

 
 குடியொடு (1)
குன்று அன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
  நின்று அன்னார் மாய்வர் நிலத்து - குறள் 90:8

 TOP

 
 குடும்பத்தை (1)
இடும்பைக்கே கொள்கலம்-கொல்லோ குடும்பத்தை
  குற்றம் மறைப்பான் உடம்பு - குறள் 103:9

 TOP

 
 குடை (2)
பல குடை நீழலும் தம் குடை கீழ் காண்பர்
  அலகு உடை நீழலவர் - குறள் 104:4

 TOP

 
 குண (1)
குண நலம் சான்றோர் நலனே பிற நலம்
  எந்நலத்து உள்ளதூஉம் அன்று - குறள் 99:2

 TOP

 
 குணத்தான் (1)
கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான்
  தாளை வணங்கா தலை - குறள் 1:9

 TOP

 
 குணம் (4)
கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான்
  தாளை வணங்கா தலை - குறள் 1:9
குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி
  கணமேயும் காத்தல் அரிது - குறள் 3:9
குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
  மிகை நாடி மிக்க கொளல் - குறள் 51:4
உள்ளுவன்-மன் யான் மறப்பின் மறப்பு அறியேன்
  ஒள் அமர்_கண்ணாள் குணம் - குறள் 113:5

 TOP

 
 குணனிலனாய் (1)
குணனிலனாய் குற்றம் பல் ஆயின் மாற்றார்க்கு
  இனனிலனாம் ஏமாப்பு உடைத்து - குறள் 87:8

 TOP

 
 குணனும் (1)
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
  இனனும் அரிந்து யாக்க நட்பு - குறள் 80:3

 TOP

 
 குத்து (1)
கொக்கு ஒக்க கூம்பும் பருவத்து மற்று அதன்
  குத்து ஒக்க சீர்த்த இடத்து - குறள் 49:10

 TOP

 
 குதித்தலும் (1)
கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
  ஆற்றல் தலைப்பட்டவர்க்கு - குறள் 27:9

 TOP

 
 குலத்தில் (1)
நிலத்தில் கிடந்தமை கால் காட்டும் காட்டும்
  குலத்தில் பிறந்தார் வாய் சொல் - குறள் 96:9

 TOP

 
 குலத்தின்-கண் (1)
நலத்தின்-கண் நார் இன்மை தோன்றின் அவனை
  குலத்தின்-கண் ஐயப்படும் - குறள் 96:8

 TOP

 
 குலம் (3)
சலம் பற்றி சால்பு இல செய்யார் மாசற்ற
  குலம் பற்றி வாழ்தும் என்பார் - குறள் 96:6
நலம் வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம் வேண்டின்
  வேண்டுக யார்க்கும் பணிவு - குறள் 96:10
குலம் சுடும் கொள்கை பிழைப்பின் நலம் சுடும்
  நாணின்மை நின்றக்கடை - குறள் 102:9

 TOP

 
 குலனுடையான்-கண்ணே (1)
இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்
  குலனுடையான்-கண்ணே உள - குறள் 23:3

 TOP

 
 குவளை (1)
காணின் குவளை கவிழ்ந்து நிலன் நோகும்
  மாண்_இழை கண் ஒவ்வேம் என்று - குறள் 112:4

 TOP

 
 குழல் (2)
குழல் இனிது யாழ் இனிது என்ப தம் மக்கள்
  மழலை சொல் கேளாதவர் - குறள் 7:6
அழல் போலும் மாலைக்கு தூது ஆகி ஆயன்
  குழல் போலும் கொல்லும் படை - குறள் 123:8

 TOP

 
 குழவி (1)
அருள் என்னும் அன்பு ஈன் குழவி பொருள் என்னும்
  செல்வ செவிலியால் உண்டு - குறள் 76:7

 TOP

 
 குழாத்து (1)
கூத்தாட்டு அவை குழாத்து அற்றே பெரும் செல்வம்
  போக்கும் அது விளிந்து அற்று - குறள் 34:2

 TOP

 
 குழாஅத்து (1)
கழாஅ கால் பள்ளியுள் வைத்து அற்றால் சான்றோர்
  குழாஅத்து பேதை புகல் - குறள் 84:10

 TOP

 
 குழுவும் (1)
பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும்
  கொல் குறும்பும் இல்லது நாடு - குறள் 74:5

 TOP

 
 குழை (1)
அணங்கு-கொல் ஆய் மயில்-கொல்லோ கனம் குழை
  மாதர்-கொல் மாலும் என் நெஞ்சு - குறள் 109:1

 TOP

 
 குழையும் (2)
மோப்ப குழையும் அனிச்சம் முகம் திரிந்து
  நோக்க குழையும் விருந்து - குறள் 9:10

 TOP

 
 குள (1)
அளவளாவு இல்லாதான் வாழ்க்கை குள வளா
  கோடு இன்றி நீர் நிறைந்து அற்று - குறள் 53:3

 TOP

 
 குளித்தானை (1)
களித்தானை காரணம் காட்டுதல் கீழ் நீர்
  குளித்தானை தீ துரீஇ அற்று - குறள் 93:9

 TOP

 
 குற்றத்தார்க்கு (1)
நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள் என்னும்
  பேணா பெரும் குற்றத்தார்க்கு - குறள் 93:4

 TOP

 
 குற்றத்தின் (1)
குடி பிறந்து குற்றத்தின் நீங்கி வடு பரியும்
  நாண் உடையான்-கட்டே தெளிவு - குறள் 51:2

 TOP

 
 குற்றப்படின் (1)
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம்
  தான் அறி குற்றப்படின் - குறள் 28:2

 TOP

 
 குற்றம் (14)
ஏதிலார் குற்றம் போல் தம் குற்றம் காண்கிற்பின்
  தீது உண்டோ மன்னும் உயிர்க்கு - குறள் 19:10
தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையா
  கொள்வர் பழி நாணுவார் - குறள் 44:3
தன் குற்றம் நீக்கி பிறர் குற்றம் காண்கிற்பின்
  என் குற்றம் ஆகும் இறைக்கு - குறள் 44:6
குடி புறங்காத்து ஓம்பி குற்றம் கடிதல்
  வடு அன்று வேந்தன் தொழில் - குறள் 55:9
குடி மடிந்து குற்றம் பெருகும் மடி மடிந்து
  மாண்ட உஞற்று இலவர்க்கு - குறள் 61:4
குடியாண்மையுள் வந்த குற்றம் ஒருவன்
  மடியாண்மை மாற்ற கெடும் - குறள் 61:9
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்-வயின்
  குற்றம் மறையா வழி - குறள் 85:6
குணனிலனாய் குற்றம் பல் ஆயின் மாற்றார்க்கு
  இனனிலனாம் ஏமாப்பு உடைத்து - குறள் 87:8
குடிப்பிறந்தார்-கண் விளங்கும் குற்றம் விசும்பின்
  மதிக்-கண் மறு போல் உயர்ந்து - குறள் 96:7
குற்றம் இலனாய் குடி செய்து வாழ்வானை
  சுற்றமா சுற்றும் உலகு - குறள் 103:5
இடும்பைக்கே கொள்கலம்-கொல்லோ குடும்பத்தை
  குற்றம் மறைப்பான் உடம்பு - குறள் 103:9

 TOP

 
 குற்றமும் (4)
நடுவு இன்றி நன் பொருள் வெஃகின் குடி பொன்றி
  குற்றமும் ஆங்கே தரும் - குறள் 18:1
துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
  என்னை-கொல் ஏதிலார்-மாட்டு - குறள் 19:8
குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள்
  மிகை நாடி மிக்க கொளல் - குறள் 51:4
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
  இனனும் அரிந்து யாக்க நட்பு - குறள் 80:3

 TOP

 
 குற்றமே (3)
குற்றமே காக்க பொருளாக குற்றமே
  அற்றம் தரூஉம் பகை - குறள் 44:4
அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
  குற்றமே கூறிவிடும் - குறள் 98:10

 TOP

 
 குறிக்கொண்டு (1)
குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒரு கண்
  சிறக்கணித்தான் போல நகும் - குறள் 110:5

 TOP

 
 குறித்த (1)
ஊனை குறித்த உயிர் எல்லாம் நாண் என்னும்
  நன்மை குறித்தது சால்பு - குறள் 102:3

 TOP

 
 குறித்தது (2)
குறித்தது கூறாமை கொள்வாரொடு ஏனை
  உறுப்பு ஓர் அனையரால் வேறு - குறள் 71:4
ஊனை குறித்த உயிர் எல்லாம் நாண் என்னும்
  நன்மை குறித்தது சால்பு - குறள் 102:3

 TOP

 
 குறித்தமையான் (1)
சொல் வணக்கம் ஒன்னார்-கண் கொள்ளற்க வில் வணக்கம்
  தீங்கு குறித்தமையான் - குறள் 83:7

 TOP

 
 குறிப்பறிந்து (1)
குறிப்பறிந்து காலம் கருதி வெறுப்பு இல
  வேண்டுப வேட்ப சொலல் - குறள் 70:6

 TOP

 
 குறிப்பறிவான் (1)
கூறாமை நோக்கி குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
  மாறா நீர் வையக்கு அணி - குறள் 71:1

 TOP

 
 குறிப்பின் (2)
குறிப்பின் குறிப்பு உணர்வாரை உறுப்பினுள்
  யாது கொடுத்தும் கொளல் - குறள் 71:3
குறிப்பின் குறிப்பு உணரா ஆயின் உறுப்பினுள்
  என்ன பயத்தவோ கண் - குறள் 71:5

 TOP

 
 குறிப்பு (4)
குறிப்பின் குறிப்பு உணர்வாரை உறுப்பினுள்
  யாது கொடுத்தும் கொளல் - குறள் 71:3
குறிப்பின் குறிப்பு உணரா ஆயின் உறுப்பினுள்
  என்ன பயத்தவோ கண் - குறள் 71:5
செறாஅ சிறுசொல்லும் செற்றார் போல் நோக்கும்
  உறாஅர் போன்று உற்றார் குறிப்பு - குறள் 110:7
மறைப்பேன்-மன் காமத்தை யானோ குறிப்பு இன்றி
  தும்மல் போல் தோன்றிவிடும் - குறள் 126:3

 TOP

 
 குறியெதிர்ப்பை (1)
வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை மற்று எல்லாம்
  குறியெதிர்ப்பை நீரது உடைத்து - குறள் 23:1

 TOP

 
 குறுகுங்கால் (1)
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும்
  தீ யாண்டு பெற்றாள் இவள் - குறள் 111:4

 TOP

 
 குறுகுதல் (1)
எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனை கெழீஇ
  மன்றில் பழிப்பார் தொடர்பு - குறள் 82:10

 TOP

 
 குறும் (1)
தொடலை குறும்_தொடி தந்தாள் மடலொடு
  மாலை உழக்கும் துயர் - குறள் 114:5

 TOP

 
 குறும்_தொடி (1)
தொடலை குறும்_தொடி தந்தாள் மடலொடு
  மாலை உழக்கும் துயர் - குறள் 114:5

 TOP

 
 குறும்பும் (1)
பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும்
  கொல் குறும்பும் இல்லது நாடு - குறள் 74:5

 TOP

 
 குறை (3)
வினைக்-கண் வினை கெடல் ஓம்பல் வினை குறை
  தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு - குறள் 62:2
உறை சிறியார் உள் நடுங்கல் அஞ்சி குறை பெறின்
  கொள்வர் பெரியார் பணிந்து - குறள் 68:10
நட்டார் குறை முடியார் நன்று ஆற்றார் நல்_நுதலாள்
  பெட்டாங்கு ஒழுகுபவர் - குறள் 91:8

 TOP

 
 குறையினும் (1)
மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
  வளி முதலா எண்ணிய மூன்று - குறள் 95:1

 TOP

 
 குன்ற (3)
மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
  பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் - குறள் 14:4
குன்று அன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
  நின்று அன்னார் மாய்வர் நிலத்து - குறள் 90:8
இன்றியமையா சிறப்பினவாயினும்
  குன்ற வருப விடல் - குறள் 97:1

 TOP

 
 குன்றல் (2)
உறின் உயிர் அஞ்சா மறவர் இறைவன்
  செறினும் சீர் குன்றல் இலர் - குறள் 78:8
பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
  பெருகலின் குன்றல் இனிது - குறள் 82:1

 TOP

 
 குன்றா (3)
குடி என்னும் குன்றா விளக்கம் மடி என்னும்
  மாசு ஊர மாய்ந்து கெடும் - குறள் 61:1
கேடு அறியா கெட்ட இடத்தும் வளம் குன்றா
  நாடு என்ப நாட்டின் தலை - குறள் 74:6
குணனும் குடிமையும் குற்றமும் குன்றா
  இனனும் அரிந்து யாக்க நட்பு - குறள் 80:3

 TOP

 
 குன்றி (3)
புறம் குன்றி கண்டு அனையரேனும் அகம் குன்றி
  மூக்கின் கரியார் உடைத்து - குறள் 28:7
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
  குன்றி அனைய செயின் - குறள் 97:5

 TOP

 
 குன்றியக்கால் (1)
ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும்
  வாரி வளம் குன்றியக்கால் - குறள் 2:4

 TOP

 
 குன்றின் (2)
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
  குன்றி அனைய செயின் - குறள் 97:5
சான்றவர் சான்றாண்மை குன்றின் இரு நிலம் தான்
  தாங்காது-மன்னோ பொறை - குறள் 99:10

 TOP

 
 குன்று (3)
குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி
  கணமேயும் காத்தல் அரிது - குறள் 3:9
குன்று ஏறி யானை போர் கண்ட அற்றால் தன் கைத்து ஒன்று
  உண்டாக செய்வான் வினை - குறள் 76:8
குன்று அன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
  நின்று அன்னார் மாய்வர் நிலத்து - குறள் 90:8

 TOP

 
 குன்றும் (3)
நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி
  தான் நல்காது ஆகிவிடின் - குறள் 2:7
வசை இலா வண் பயன் குன்றும் இசை இலா
  யாக்கை பொறுத்த நிலம் - குறள் 24:9
ஆ பயன் குன்றும் அறு_தொழிலோர் நூல் மறப்பர்
  காவலன் காவான் எனின் - குறள் 56:10

 TOP

 
 குன்றுவ (2)
அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
  குன்றுவ செய்தல் இலர் - குறள் 96:4
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
  குன்றி அனைய செயின் - குறள் 97:5

 TOP

 
 குன்றுவர் (1)
குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
  குன்றி அனைய செயின் - குறள் 97:5

 TOP