<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

பா - முதல் சொற்கள்
பாக்கியத்தால் 1
பாடற்கு 1
பாடு 7
பாத்தி 1
பாத்தியுள் 1
பாத்தூண் 2
பாம்பு 1
பாம்பொடு 1
பாய்பவரே 1
பார் 1
பார்க்கும் 3
பார்த்திருப்பான் 1
பார்த்து 3
பார்ப்பார்-கண் 1
பார்ப்பான் 1
பார்வல் 1
பாராட்டுதல் 1
பாராட்டும் 1
பாராட்டுவானை 1
பாரிக்கும் 1
பாரித்து 1
பாரிப்பார் 2
பால் 5
பாலால் 1
பாலொடு 1
பாவம் 1
பாவாய் 1
பாவி 2
பாவை 1
பாழ் 1
பாழ்படுதல் 1
பாற்பட்டு 1
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

 
 பாக்கியத்தால் (1)
அலர் எழ ஆர் உயிர் நிற்கும் அதனை
  பலர் அறியார் பாக்கியத்தால் - குறள் 115:1

 TOP

 
 பாடற்கு (1)
பண் என் ஆம் பாடற்கு இயைபு இன்றேல் கண் என் ஆம்
  கண்ணோட்டம் இல்லாத கண் - குறள் 58:3

 TOP

 
 பாடு (7)
மேல் பிறந்தாராயினும் கல்லாதார் கீழ் பிறந்தும்
  கற்றார் அனைத்து இலர் பாடு - குறள் 41:9
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதை அம்பின்
  பட்டு பாடு ஊன்றும் களிறு - குறள் 60:7
அடல் தகையும் ஆற்றலும் இல் எனினும் தானை
  படை தகையான் பாடு பெறும் - குறள் 77:8
இமையாரின் வாழினும் பாடு இலரே இல்லாள்
  அமை ஆர் தோள் அஞ்சுபவர் - குறள் 91:6
நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
  பண்பு உள பாடு அறிவார்-மாட்டு - குறள் 100:5
பாடு பெறுதியோ நெஞ்சே கொடியார்க்கு என்
  வாடூ தோள் பூசல் உரைத்து - குறள் 124:7
ஊடலின் தோன்றும் சிறு துனி நல் அளி
  வாடினும் பாடு பெறும் - குறள் 133:2

 TOP

 
 பாத்தி (1)
வகை அற சூழாது எழுதல் பகைவரை
  பாத்தி படுப்பது ஓர் ஆறு - குறள் 47:5

 TOP

 
 பாத்தியுள் (1)
உணர்வது உடையார் முன் சொல்லல் வளர்வதன்
  பாத்தியுள் நீர் சொரிந்து அற்று - குறள் 72:8

 TOP

 
 பாத்தூண் (2)
பழி அஞ்சி பாத்தூண் உடைத்து ஆயின் வாழ்க்கை
  வழி எஞ்சல் எஞ்ஞான்றும் இல் - குறள் 5:4
பாத்தூண் மரீஇயவனை பசி என்னும்
  தீ பிணி தீண்டல் அரிது - குறள் 23:7

 TOP

 
 பாம்பு (1)
கண்டது மன்னும் ஒரு நாள் அலர் மன்னும்
  திங்களை பாம்பு கொண்டு அற்று - குறள் 115:6

 TOP

 
 பாம்பொடு (1)
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
  பாம்பொடு உடன் உறைந்த அற்று - குறள் 89:10

 TOP

 
 பாய்பவரே (1)
உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல்
  பொய்த்தல் அறிந்து என் புலந்து - குறள் 129:7

 TOP

 
 பார் (1)
இரவு என்னும் ஏமாப்பு_இல் தோணி கரவு என்னும்
  பார் தாக்க பக்கு விடும் - குறள் 107:8

 TOP

 
 பார்க்கும் (3)
கதம் காத்து கற்று அடங்கல் ஆற்றுவான் செவ்வி
  அறம் பார்க்கும் ஆற்றின் நுழைந்து - குறள் 13:10
விளக்கு அற்றம் பார்க்கும் இருளே போல் கொண்கன்
  முயக்கு அற்றம் பார்க்கும் பசப்பு - குறள் 119:6

 TOP

 
 பார்த்திருப்பான் (1)
செல் விருந்து ஓம்பி வரு விருந்து பார்த்திருப்பான்
  நல் விருந்து வானத்தவர்க்கு - குறள் 9:6

 TOP

 
 பார்த்து (3)
பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து
  உள் வேர்ப்பர் ஒள்ளியவர் - குறள் 49:7
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
  படுபயனும் பார்த்து செயல் - குறள் 68:6
தம் இல் இருந்து தமது பார்த்து உண்டு அற்றால்
  அ மா அரிவை முயக்கு - குறள் 111:7

 TOP

 
 பார்ப்பார்-கண் (1)
அருள் கருதி அன்புடையார் ஆதல் பொருள் கருதி
  பொச்சாப்பு பார்ப்பார்-கண் இல் - குறள் 29:5

 TOP

 
 பார்ப்பான் (1)
மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான்
  பிறப்பு ஒழுக்கம் குன்ற கெடும் - குறள் 14:4

 TOP

 
 பார்வல் (1)
இன் கண் உடைத்து அவர் பார்வல் பிரிவு அஞ்சும்
  புன்கண் உடைத்தால் புணர்வு - குறள் 116:2

 TOP

 
 பாராட்டுதல் (1)
பற்றற்ற-கண்ணும் பழமை பாராட்டுதல்
  சுற்றத்தார்-கண்ணே உள - குறள் 53:1

 TOP

 
 பாராட்டும் (1)
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார்
  பண்பு பாராட்டும் உலகு - குறள் 100:4

 TOP

 
 பாராட்டுவானை (1)
பயன்_இல் சொல் பாராட்டுவானை மகன் எனல்
  மக்கள் பதடி எனல் - குறள் 20:6

 TOP

 
 பாரிக்கும் (1)
இகல் என்ப எல்லா உயிர்க்கும் பகல் என்னும்
  பண்பு இன்மை பாரிக்கும் நோய் - குறள் 86:1

 TOP

 
 பாரித்து (1)
நயனிலன் என்பது சொல்லும் பயனில
  பாரித்து உரைக்கும் உரை - குறள் 20:3

 TOP

 
 பாரிப்பார் (2)
தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கி
  புன் நலம் பாரிப்பார் தோள் - குறள் 92:6

 TOP

 
 பால் (5)
தன்னை தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
  துன்னற்க தீவினை பால் - குறள் 21:9
பரியினும் ஆகா ஆம் பால் அல்ல உய்த்து
  சொரியினும் போகா தம - குறள் 38:6
உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று
  அ பால் நால் கூற்றே மருந்து - குறள் 95:10
நகல் வல்லர் அல்லார்க்கு மா இரு ஞாலம்
  பகலும் பால் பட்டன்று இருள் - குறள் 100:9
பண்பிலான் பெற்ற பெரும் செல்வம் நன் பால்
  கலம் தீமையால் திரிந்து அற்று - குறள் 100:10

 TOP

 
 பாலால் (1)
கணை கொடிது யாழ் கோடு செவ்விது ஆங்கு அன்ன
  வினைபடு பாலால் கொளல் - குறள் 28:9

 TOP

 
 பாலொடு (1)
பாலொடு தேன் கலந்து அற்றே பணி_மொழி
  வால் எயிறு ஊறிய நீர் - குறள் 113:1

 TOP

 
 பாவம் (1)
பகை பாவம் அச்சம் பழி என நான்கும்
  இகவா ஆம் இல் இறப்பான்-கண் - குறள் 15:6

 TOP

 
 பாவாய் (1)
கருமணியின் பாவாய் நீ போதாய் யாம் வீழும்
  திரு_நுதற்கு இல்லை இடம் - குறள் 113:3

 TOP

 
 பாவி (2)
அழுக்காறு என ஒரு பாவி திரு செற்று
  தீ உழி உய்த்துவிடும் - குறள் 17:8
இன்மை என ஒரு பாவி மறுமையும்
  இம்மையும் இன்றி வரும் - குறள் 105:2

 TOP

 
 பாவை (1)
நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம்
  மண் மாண் புனை பாவை அற்று - குறள் 41:7

 TOP

 
 பாழ் (1)
பல் குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும்
  கொல் குறும்பும் இல்லது நாடு - குறள் 74:5

 TOP

 
 பாழ்படுதல் (1)
வரு விருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
  பருவந்து பாழ்படுதல் இன்று - குறள் 9:3

 TOP

 
 பாற்பட்டு (1)
தகுதி என ஒன்றும் நன்றே பகுதியான்
  பாற்பட்டு ஒழுக பெறின் - குறள் 12:1

 TOP