<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

பு - முதல் சொற்கள்
புக்கில் 1
புக்கு 2
புகல் 3
புகழ் 9
புகழ்ந்தவை 1
புகழ்மை 1
புகழும் 2
புகழை 1
புகழொடு 2
புகின் 1
புகுத்திவிடும் 2
புகும் 1
புடைபெயர்ந்தேன் 1
புண் 4
புணர்ச்சி 2
புணர்தல் 1
புணர்தலின் 1
புணர்ந்து 1
புணர்பவர் 1
புணர்வது 1
புணர்வு 2
புணரின் 1
புணை 1
புணை-மன்னும் 1
புணையை 1
புத்தேள் 5
புத்தேளிர் 1
புதல் 1
புதை 1
புயல் 1
புரந்தார் 1
புரள 1
புரிந்த 4
புரிந்தார் 1
புரிந்தார்-கண் 1
புரிந்து 4
புருவம் 1
புரை 2
புல் 2
புல்லல்-பாற்று 1
புல்லறிவு 2
புல்லா 1
புல்லாது 1
புல்லார் 1
புல்லாள் 1
புல்லி 2
புல்லினேன் 1
புல்லுதல் 1
புல்லுவேன்-கொல்லோ 1
புல்லென்னும் 1
புல 2
புலத்தலின் 1
புலத்தை 2
புலந்தாரை 1
புலந்து 3
புலப்பல் 1
புலப்பேன்-கொல் 1
புலம் 4
புலவர் 1
புலவரை 1
புலவி 1
புலவியும் 2
புலவியுள் 1
புலாலை 1
புலாஅல் 1
புலி 1
புலியின் 1
புலை 1
புழுதி 1
புள் 2
புற்கென்ற 1
புற்கை-ஆயினும் 1
புற 1
புறங்காத்து 1
புறங்கொடுக்கும் 1
புறத்த 1
புறத்ததா 1
புறத்து 2
புறப்படுத்தான் 1
புறம் 5
புறமே 1
புறன் 2
புன் 6
புன்கண் 1
புன்கண்ணை 1
புன்மை 2
புன்மையால் 1
புனல் 3
புனலின் 1
புனலும் 2
புனலுள் 1
புனை 2
புனையினும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

 புக்கில் (1)
புக்கில் அமைந்தின்று-கொல்லோ உடம்பினுள்
  துச்சில் இருந்த உயிர்க்கு - குறள் 34:10

 TOP

 
 புக்கு (2)
ஒருமை செயல் ஆற்றும் பேதை எழுமையும்
  தான் புக்கு அழுந்தும் அளறு - குறள் 84:5
பண்பு உடையார் பட்டு உண்டு உலகம் அது இன்றேல்
  மண் புக்கு மாய்வது மன் - குறள் 100:6

 TOP

 
 புகல் (3)
எனை துணையர்-ஆயினும் என்னாம் தினை துணையும்
  தேரான் பிறன் இல் புகல் - குறள் 15:4
அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள் சேர்ந்த
  இன்னா உலகம் புகல் - குறள் 25:3
கழாஅ கால் பள்ளியுள் வைத்து அற்றால் சான்றோர்
  குழாஅத்து பேதை புகல் - குறள் 84:10

 TOP

 
 புகழ் (9)
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
  பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - குறள் 1:5
புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை இகழ்வார் முன்
  ஏறு போல் பீடு நடை - குறள் 6:9
ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்கு
  பொன்றும் துணையும் புகழ் - குறள் 16:6
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கு ஒன்று
  ஈவார் மேல் நிற்கும் புகழ் - குறள் 24:2
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழ் அல்லால்
  பொன்றாது நிற்பது ஒன்று இல் - குறள் 24:3
நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரை
  போற்றாது புத்தேள் உலகு - குறள் 24:4
புகழ் பட வாழாதார் தம் நோவார் தம்மை
  இகழ்வாரை நோவது எவன் - குறள் 24:7
பொய்யாமை அன்ன புகழ் இல்லை எய்யாமை
  எல்லா அறமும் தரும் - குறள் 30:6
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று
  இகழ்வார் பின் சென்று நிலை - குறள் 97:6

 TOP

 
 புகழ்ந்தவை (1)
புகழ்ந்தவை போற்றி செயல் வேண்டும் செய்யாது
  இகழ்ந்தார்க்கு எழுமையும் இல் - குறள் 54:8

 TOP

 
 புகழ்மை (1)
பொச்சாப்பார்க்கு இல்லை புகழ்மை அது உலகத்து
  எ பால் நூலோர்க்கும் துணிவு - குறள் 54:3

 TOP

 
 புகழும் (2)
அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம்
  புறத்த புகழும் இல - குறள் 4:9
மன நலம் மன் உயிர்க்கு ஆக்கம் இன நலம்
  எல்லா புகழும் தரும் - குறள் 46:7

 TOP

 
 புகழை (1)
பொச்சாப்பு கொல்லும் புகழை அறிவினை
  நிச்சம் நிரப்பு கொன்று ஆங்கு - குறள் 54:2

 TOP

 
 புகழொடு (2)
தோன்றின் புகழொடு தோன்றுக அஃது இலார்
  தோன்றலின் தோன்றாமை நன்று - குறள் 24:6
என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
  நன்றி பயவா வினை - குறள் 66:2

 TOP

 
 புகின் (1)
பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
  கழகத்து-காலை புகின் - குறள் 94:7

 TOP

 
 புகுத்திவிடும் (2)
மடிமை குடிமை-கண் தங்கின் தன் ஒன்னார்க்கு
  அடிமை புகுத்திவிடும் - குறள் 61:8
முயற்சி திருவினை ஆக்கும் முயற்று இன்மை
  இன்மை புகுத்திவிடும் - குறள் 62:6

 TOP

 
 புகும் (1)
யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
  உயர்ந்த உலகம் புகும் - குறள் 35:6

 TOP

 
 புடைபெயர்ந்தேன் (1)
புல்லி கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அ அளவில்
  அள்ளி கொள்வு அற்றே பசப்பு - குறள் 119:7

 TOP

 
 புண் (4)
தீயினால் சுட்ட புண் உள் ஆறும் ஆறாதே
  நாவினால் சுட்ட வடு - குறள் 13:9
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிது ஒன்றன்
  புண் அது உணர்வார் பெறின் - குறள் 26:7
கண் உடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு
  புண் உடையர் கல்லாதவர் - குறள் 40:3
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃது இன்றேல்
  புண் என்று உணரப்படும் - குறள் 58:5

 TOP

 
 புணர்ச்சி (2)
புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சி தான்
  நட்பு ஆம் கிழமை தரும் - குறள் 79:5
செப்பின் புணர்ச்சி போல் கூடினும் கூடாதே
  உள் பகை உற்ற குடி - குறள் 89:7

 TOP

 
 புணர்தல் (1)
ஊடல் உணர்தல் புணர்தல் இவை காமம்
  கூடியார் பெற்ற பயன் - குறள் 111:9

 TOP

 
 புணர்தலின் (1)
உணலினும் உண்டது அறல் இனிது காமம்
  புணர்தலின் ஊடல் இனிது - குறள் 133:6

 TOP

 
 புணர்ந்து (1)
நிணம் தீயில் இட்ட அன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
  புணர்ந்து ஊடி நிற்பேம் எனல் - குறள் 126:10

 TOP

 
 புணர்பவர் (1)
நிறை நெஞ்சம் இல்லவர் தோய்வர் பிற நெஞ்சில்
  பேணி புணர்பவர் தோள் - குறள் 92:7

 TOP

 
 புணர்வது (1)
ஊடலின் உண்டு ஆங்கு ஓர் இன்பம் புணர்வது
  நீடுவது அன்று-கொல் என்று - குறள் 131:7

 TOP

 
 புணர்வு (2)
இன் கண் உடைத்து அவர் பார்வல் பிரிவு அஞ்சும்
  புன்கண் உடைத்தால் புணர்வு - குறள் 116:2
ஓம்பின் அமைந்தார் பிரிவு ஓம்பல் மற்று அவர்
  நீங்கின் அரிதால் புணர்வு - குறள் 116:5

 TOP

 
 புணரின் (1)
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும்
  புணரின் வெகுளாமை நன்று - குறள் 31:8

 TOP

 
 புணை (1)
காம கடும் புனல் உய்க்குமே நாணொடு
  நல் ஆண்மை என்னும் புணை - குறள் 114:4

 TOP

 
 புணை-மன்னும் (1)
காம கடல்-மன்னும் உண்டே அது நீந்தும்
  ஏம புணை-மன்னும் இல் - குறள் 117:4

 TOP

 
 புணையை (1)
சினம் என்னும் சேர்ந்தாரை கொல்லி இனம் என்னும்
  ஏம புணையை சுடும் - குறள் 31:6

 TOP

 
 புத்தேள் (5)
புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே
  ஒப்புரவின் நல்ல பிற - குறள் 22:3
நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரை
  போற்றாது புத்தேள் உலகு - குறள் 24:4
கள்வார்க்கு தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்கு
  தள்ளாது புத்தேள் உலகு - குறள் 29:10
புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதால் என் மற்று
  இகழ்வார் பின் சென்று நிலை - குறள் 97:6
புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு
  நீர் இயைந்து அன்னார் அகத்து - குறள் 133:3

 TOP

 
 புத்தேளிர் (1)
பெற்றாள் பெறின் பெறுவர் பெண்டிர் பெரும் சிறப்பு
  புத்தேளிர் வாழும் உலகு - குறள் 6:8

 TOP

 
 புதல் (1)
தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து
  வேட்டுவன் புள் சிமிழ்த்த அற்று - குறள் 28:4

 TOP

 
 புதை (1)
சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதை அம்பின்
  பட்டு பாடு ஊன்றும் களிறு - குறள் 60:7

 TOP

 
 புயல் (1)
ஏரின் உழாஅர் உழவர் புயல் என்னும்
  வாரி வளம் குன்றிய-கால் - குறள் 2:4

 TOP

 
 புரந்தார் (1)
புரந்தார் கண் நீர் மல்க சாகில் பின் சாக்காடு
  இரந்து கோள் தக்கது உடைத்து - குறள் 78:10

 TOP

 
 புரள (1)
அருளொடும் அன்பொடும் வாரா பொருள் ஆக்கம்
  புல்லார் புரள விடல் - குறள் 76:5

 TOP

 
 புரிந்த (4)
புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை இகழ்வார் முன்
  ஏறு போல் பீடு நடை - குறள் 6:9
நன்மையும் தீமையும் நாடி நலம் புரிந்த
  தன்மையான் ஆளப்படும் - குறள் 52:1
இறப்பே புரிந்த தொழிற்று ஆம் சிறப்பும் தான்
  சீர்_அல்லவர்-கண் படின் - குறள் 98:7
நயனொடு நன்றி புரிந்த பயன் உடையார்
  பண்பு பாராட்டும் உலகு - குறள் 100:4

 TOP

 
 புரிந்தார் (1)
இருள் சேர் இரு வினையும் சேரா இறைவன்
  பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு - குறள் 1:5

 TOP

 
 புரிந்தார்-கண் (1)
களவு என்னும் கார் அறிவு ஆண்மை அளவு என்னும்
  ஆற்றல் புரிந்தார்-கண் இல் - குறள் 29:7

 TOP

 
 புரிந்து (4)
விளிந்தாரின் வேறு அல்லர் மன்ற தெளிந்தார் இல்
  தீமை புரிந்து ஒழுகுவார் - குறள் 15:3
ஓர்ந்து கண்ணோடாது இறை புரிந்து யார் மாட்டும்
  தேர்ந்து செய்வஃதே முறை - குறள் 55:1
இடி புரிந்து எள்ளும் சொல் கேட்பர் மடி புரிந்து
  மாண்ட உஞற்று இலர் - குறள் 61:7

 TOP

 
 புருவம் (1)
கொடும் புருவம் கோடா மறைப்பின் நடுங்கு அஞர்
  செய்யல-மன் இவள் கண் - குறள் 109:6

 TOP

 
 புரை (2)
பொய்ம்மையும் வாய்மை இடத்த புரை தீர்ந்த
  நன்மை பயக்கும் எனின் - குறள் 30:2
வரைவு இலா மாண் இழையார் மென் தோள் புரை இலா
  பூரியர்கள் ஆழும் அளறு - குறள் 92:9

 TOP

 
 புல் (2)
விசும்பின் துளி வீழின் அல்லால் மற்று ஆங்கே
  பசும் புல் தலை காண்பு அரிது - குறள் 2:6
புல் அவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல் அவையுள்
  நன்கு செல சொல்லுவார் - குறள் 72:9

 TOP

 
 புல்லல்-பாற்று (1)
மிக செய்து தம் எள்ளுவாரை நக செய்து
  நட்பினுள் சா புல்லல்-பாற்று - குறள் 83:9

 TOP

 
 புல்லறிவு (2)
நில்லாதவற்றை நிலையின என்று உணரும்
  புல்லறிவு ஆண்மை கடை - குறள் 34:1
அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்-வயின்
  குற்றம் மறையா வழி - குறள் 85:6

 TOP

 
 புல்லா (1)
அலந்தாரை அல்லல் நோய் செய்து அற்றால் தம்மை
  புலந்தாரை புல்லா விடல் - குறள் 131:3

 TOP

 
 புல்லாது (1)
புல்லாது இராஅ புலத்தை அவர் உறும்
  அல்லல் நோய் காண்கம் சிறிது - குறள் 131:1

 TOP

 
 புல்லார் (1)
அருளொடும் அன்பொடும் வாரா பொருள் ஆக்கம்
  புல்லார் புரள விடல் - குறள் 76:5

 TOP

 
 புல்லாள் (1)
உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னை
  புல்லாள் புல தக்கனள் - குறள் 132:6

 TOP

 
 புல்லி (2)
புல்லி கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அ அளவில்
  அள்ளி கொள்வு அற்றே பசப்பு - குறள் 119:7
புல்லி விடாஅ புலவியுள் தோன்றும் என்
  உள்ளம் உடைக்கும் படை - குறள் 133:4

 TOP

 
 புல்லினேன் (1)
புலப்பல் என சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
  கலத்தல் உறுவது கண்டு - குறள் 126:9

 TOP

 
 புல்லுதல் (1)
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
  என்னினும் தான் விதுப்பு உற்று - குறள் 129:10

 TOP

 
 புல்லுவேன்-கொல்லோ (1)
புலப்பேன்-கொல் புல்லுவேன்-கொல்லோ கலப்பேன்-கொல்
  கண் அன்ன கேளிர் வரின் - குறள் 127:7

 TOP

 
 புல்லென்னும் (1)
இனையர் இவர் எமக்கு இன்னம் யாம் என்று
  புனையினும் புல்லென்னும் நட்பு - குறள் 79:10

 TOP

 
 புல (2)
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புல தகை
  பூ அன்ன கண்ணார் அகத்து - குறள் 131:5
உள்ளினேன் என்றேன் மற்று என் மறந்தீர் என்று என்னை
  புல்லாள் புல தக்கனள் - குறள் 132:6

 TOP

 
 புலத்தலின் (1)
புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ நிலத்தொடு
  நீர் இயைந்து அன்னார் அகத்து - குறள் 133:3

 TOP

 
 புலத்தை (2)
அடல் வேண்டும் ஐந்தன் புலத்தை விடல் வேண்டும்
  வேண்டிய எல்லாம் ஒருங்கு - குறள் 35:3
புல்லாது இராஅ புலத்தை அவர் உறும்
  அல்லல் நோய் காண்கம் சிறிது - குறள் 131:1

 TOP

 
 புலந்தாரை (1)
அலந்தாரை அல்லல் நோய் செய்து அற்றால் தம்மை
  புலந்தாரை புல்லா விடல் - குறள் 131:3

 TOP

 
 புலந்து (3)
செல்லான் கிழவன் இருப்பின் நிலம் புலந்து
  இல்லாளின் ஊடிவிடும் - குறள் 104:9
கலந்து உணர்த்தும் காதலர் கண்டால் புலந்து உணராய்
  பொய் காய்வு காய்தி என் நெஞ்சு - குறள் 125:6
உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல்
  பொய்த்தல் அறிந்து என் புலந்து - குறள் 129:7

 TOP

 
 புலப்பல் (1)
புலப்பல் என சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
  கலத்தல் உறுவது கண்டு - குறள் 126:9

 TOP

 
 புலப்பேன்-கொல் (1)
புலப்பேன்-கொல் புல்லுவேன்-கொல்லோ கலப்பேன்-கொல்
  கண் அன்ன கேளிர் வரின் - குறள் 127:7

 TOP

 
 புலம் (4)
வித்தும் இடல் வேண்டும்-கொல்லோ விருந்து ஓம்பி
  மிச்சில் மிசைவான் புலம் - குறள் 9:5
இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற
  புன்மை இல் காட்சியவர் - குறள் 18:4
நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம்
  மண் மாண் புனை பாவை அற்று - குறள் 41:7
ஆற்றின் நிலை தளர்ந்து அற்றே வியன் புலம்
  ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு - குறள் 72:6

 TOP

 
 புலவர் (1)
உவப்ப தலைக்கூடி உள்ள பிரிதல்
  அனைத்தே புலவர் தொழில் - குறள் 40:4

 TOP

 
 புலவரை (1)
நில வரை நீள் புகழ் ஆற்றின் புலவரை
  போற்றாது புத்தேள் உலகு - குறள் 24:4

 TOP

 
 புலவி (1)
உப்பு அமைந்து அற்றால் புலவி அது சிறிது
  மிக்கு அற்றால் நீள விடல் - குறள் 131:2

 TOP

 
 புலவியும் (2)
துனியும் புலவியும் இல்லாயின் காமம்
  கனியும் கருக்காயும் அற்று - குறள் 131:6
நீரும் நிழலது இனிதே புலவியும்
  வீழுநர்-கண்ணே இனிது - குறள் 131:9

 TOP

 
 புலவியுள் (1)
புல்லி விடாஅ புலவியுள் தோன்றும் என்
  உள்ளம் உடைக்கும் படை - குறள் 133:4

 TOP

 
 புலாலை (1)
கொல்லான் புலாலை மறுத்தானை கைகூப்பி
  எல்லா உயிரும் தொழும் - குறள் 26:10

 TOP

 
 புலாஅல் (1)
உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிது ஒன்றன்
  புண் அது உணர்வார் பெறின் - குறள் 26:7

 TOP

 
 புலி (1)
பரியது கூர் கோட்டது-ஆயினும் யானை
  வெரூஉம் புலி தாக்குறின் - குறள் 60:9

 TOP

 
 புலியின் (1)
வலி இல் நிலைமையான் வல் உருவம் பெற்றம்
  புலியின் தோல் போர்த்து மேய்ந்த அற்று - குறள் 28:3

 TOP

 
 புலை (1)
கொலை வினையர் ஆகிய மாக்கள் புலை வினையர்
  புன்மை தெரிவார் அகத்து - குறள் 33:9

 TOP

 
 புழுதி (1)
தொடி புழுதி கஃசா உணக்கின் பிடித்து எருவும்
  வேண்டாது சால படும் - குறள் 104:7

 TOP

 
 புள் (2)
தவம் மறைந்து அல்லவை செய்தல் புதல் மறைந்து
  வேட்டுவன் புள் சிமிழ்த்த அற்று - குறள் 28:4
குடம்பை தனித்து ஒழிய புள் பறந்த அற்றே
  உடம்பொடு உயிர்-இடை நட்பு - குறள் 34:8

 TOP

 
 புற்கென்ற (1)
வாள் அற்று புற்கென்ற கண்ணும் அவர் சென்ற
  நாள் ஒற்றி தேய்த்த விரல் - குறள் 127:1

 TOP

 
 புற்கை-ஆயினும் (1)
தெள் நீர் அடு புற்கை-ஆயினும் தாள் தந்தது
  உண்ணலின் ஊங்கு இனியது இல் - குறள் 107:5

 TOP

 
 புற (1)
புற தூய்மை நீரான் அமையும் அக தூய்மை
  வாய்மையான் காணப்படும் - குறள் 30:8

 TOP

 
 புறங்காத்து (1)
குடி புறங்காத்து ஓம்பி குற்றம் கடிதல்
  வடு அன்று வேந்தன் தொழில் - குறள் 55:9

 TOP

 
 புறங்கொடுக்கும் (1)
நாண் என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள் என்னும்
  பேணா பெரும் குற்றத்தார்க்கு - குறள் 93:4

 TOP

 
 புறத்த (1)
அறத்தான் வருவதே இன்பம் மற்று எல்லாம்
  புறத்த புகழும் இல - குறள் 4:9

 TOP

 
 புறத்ததா (1)
விருந்து புறத்ததா தான் உண்டல் சாவா
  மருந்து எனினும் வேண்டல்-பாற்று அன்று - குறள் 9:2

 TOP

 
 புறத்து (2)
அறத்து ஆற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்து ஆற்றில்
  போஒய் பெறுவது எவன் - குறள் 5:6
புறத்து உறுப்பு எல்லாம் எவன் செய்யும் யாக்கை
  அகத்து உறுப்பு அன்பு இலவர்க்கு - குறள் 8:9

 TOP

 
 புறப்படுத்தான் (1)
சிறப்பு அறிய ஒற்றின்-கண் செய்யற்க செய்யின்
  புறப்படுத்தான் ஆகும் மறை - குறள் 59:10

 TOP

 
 புறம் (5)
அறம் கூறான் அல்ல செயினும் ஒருவன்
  புறம் கூறான் என்றல் இனிது - குறள் 19:1
புறம் கூறி பொய்த்து உயிர் வாழ்தலின் சாதல்
  அறம் கூறும் ஆக்கம் தரும் - குறள் 19:3
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும்
  புன்மையால் காணப்படும் - குறள் 19:5
புறம் குன்றி கண்டு அனையரேனும் அகம் குன்றி
  மூக்கின் கரியார் உடைத்து - குறள் 28:7
பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து
  உள் வேர்ப்பர் ஒள்ளியவர் - குறள் 49:7

 TOP

 
 புறமே (1)
உருள் ஆயம் ஓவாது கூறின் பொருள் ஆயம்
  போஒய் புறமே படும் - குறள் 94:3

 TOP

 
 புறன் (2)
அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீதே
  புறன் அழீஇ பொய்த்து நகை - குறள் 19:2
அறன் நோக்கி ஆற்றும்-கொல் வையம் புறன் நோக்கி
  புன் சொல் உரைப்பான் பொறை - குறள் 19:9

 TOP

 
 புன் (6)
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
  புன் கணீர் பூசல் தரும் - குறள் 8:1
அறன் நோக்கி ஆற்றும்-கொல் வையம் புறன் நோக்கி
  புன் சொல் உரைப்பான் பொறை - குறள் 19:9
செய்து ஏமம் சாரா சிறியவர் புன் கேண்மை
  எய்தலின் எய்தாமை நன்று - குறள் 82:5
பொருள்_பொருளார் புன் நலம் தோயார் அருள் பொருள்
  ஆயும் அறிவினவர் - குறள் 92:4
பொது நலத்தார் புன் நலம் தோயார் மதி நலத்தின்
  மாண்ட அறிவினவர் - குறள் 92:5
தம் நலம் பாரிப்பார் தோயார் தகை செருக்கி
  புன் நலம் பாரிப்பார் தோள் - குறள் 92:6

 TOP

 
 புன்கண் (1)
இன் கண் உடைத்து அவர் பார்வல் பிரிவு அஞ்சும்
  புன்கண் உடைத்தால் புணர்வு - குறள் 116:2

 TOP

 
 புன்கண்ணை (1)
புன்கண்ணை வாழி மருள் மலை எம் கேள் போல்
  வன்கண்ணதோ நின் துணை - குறள் 123:2

 TOP

 
 புன்மை (2)
இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம் வென்ற
  புன்மை இல் காட்சியவர் - குறள் 18:4
கொலை வினையர் ஆகிய மாக்கள் புலை வினையர்
  புன்மை தெரிவார் அகத்து - குறள் 33:9

 TOP

 
 புன்மையால் (1)
அறம் சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறம் சொல்லும்
  புன்மையால் காணப்படும் - குறள் 19:5

 TOP

 
 புனல் (3)
காம கடும் புனல் உய்க்குமே நாணொடு
  நல் ஆண்மை என்னும் புணை - குறள் 114:4
காம கடும் புனல் நீந்தி கரை காணேன்
  யாமத்தும் யானே உளேன் - குறள் 117:7
உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல்
  பொய்த்தல் அறிந்து என் புலந்து - குறள் 129:7

 TOP

 
 புனலின் (1)
நெடும் புனலுள் வெல்லும் முதலை அடும் புனலின்
  நீங்கின் அதனை பிற - குறள் 50:5

 TOP

 
 புனலும் (2)
இரு புனலும் வாய்ந்த மலையும் வரு புனலும்
  வல் அரணும் நாட்டிற்கு உறுப்பு - குறள் 74:7

 TOP

 
 புனலுள் (1)
நெடும் புனலுள் வெல்லும் முதலை அடும் புனலின்
  நீங்கின் அதனை பிற - குறள் 50:5

 TOP

 
 புனை (2)
நுண் மாண் நுழை புலம் இல்லான் எழில் நலம்
  மண் மாண் புனை பாவை அற்று - குறள் 41:7
பொய்படும் ஒன்றோ புனை பூணும் கை அறியா
  பேதை வினை மேற்கொளின் - குறள் 84:6

 TOP

 
 புனையினும் (1)
இனையர் இவர் எமக்கு இன்னம் யாம் என்று
  புனையினும் புல்லென்னும் நட்பு - குறள் 79:10

 TOP