<<முந்திய பக்கம்

திருக்குறள் - தொடரடைவு

தா - முதல் சொற்கள்
தா 1
தாஅம் 1
தாஅயது 1
தாக்க 1
தாக்கற்கு 1
தாக்கு 1
தாக்கு_அணங்கு 1
தாக்குறின் 1
தாங்காது-மன்னோ 1
தாங்கி 2
தாங்கும் 2
தாம் 24
தாமரைக்கண்ணான் 1
தாமரைக்கண்ணான்_உலகு 1
தாமரையினாள் 1
தாமுடைய 2
தாமே 3
தாய் 1
தாயானும் 1
தார் 1
தாழ் 2
தாழ்ச்சியுள் 1
தாழ்ந்த 1
தாழ்வு 2
தாழாது 2
தாள் 6
தாளாண்மை 2
தாளை 1
தான் 41
தானம் 2
தானே 4
தானேயும் 1
தானை 4

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழு அதிகாரத்தையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.

 தா (1)
இகல் என்னும் எவ்வநோய் நீக்கின் தவல் இல்லா
  தா இல் விளக்கம் தரும் - குறள் 86:3

 TOP

 
 தாஅம் (1)
ஓஒ இனிதே எமக்கு இ நோய் செய்த கண்
  தாஅம் இதற்பட்டது - குறள் 118:6

 TOP

 
 தாஅயது (1)
மடி இலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
  தாஅயது எல்லாம் ஒருங்கு - குறள் 61:10

 TOP
 தாக்க (1)
இரவு என்னும் ஏமாப்பு_இல் தோணி கரவு என்னும்
  பார் தாக்க பக்கு விடும் - குறள் 107:8

 TOP

 
 தாக்கற்கு (1)
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொரு தகர்
  தாக்கற்கு பேரும் தகைத்து - குறள் 49:6

 TOP

 
 தாக்கு (1)
நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு_அணங்கு
  தானை கொண்ட அன்னது உடைத்து - குறள் 109:2

 TOP

 
 தாக்கு_அணங்கு (1)
நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு_அணங்கு
  தானை கொண்ட அன்னது உடைத்து - குறள் 109:2

 TOP

 
 தாக்குறின் (1)
பரியது கூர் கோட்டது ஆயினும் யானை
  வெரூஉம் புலி தாக்குறின் - குறள் 60:9

 TOP

 
 தாங்காது-மன்னோ (1)
சான்றவர் சான்றாண்மை குன்றின் இரு நிலம் தான்
  தாங்காது-மன்னோ பொறை - குறள் 99:10

 TOP

 
 தாங்கி (2)
பொறை ஒருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
  இறை ஒருங்கு நேர்வது நாடு - குறள் 74:3
தார் தாங்கி செல்வது தானை தலைவந்த
  போர் தாங்கும் தன்மை அறிந்து - குறள் 77:7

 TOP

 
 தாங்கும் (2)
அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை
  இகழ்வார் பொறுத்தல் தலை - குறள் 16:1
தார் தாங்கி செல்வது தானை தலைவந்த
  போர் தாங்கும் தன்மை அறிந்து - குறள் 77:7

 TOP

 
 தாம் (24)
மிகுதியான் மிக்கவை செய்தாரை தாம் தம்
  தகுதியான் வென்றுவிடல் - குறள் 16:8
ஈத்து உவக்கும் இன்பம் அறியார்-கொல் தாம் உடைமை
  வைத்து இழக்கும் வன்கணவர் - குறள் 23:8
ஒருமைக்-கண் தாம் கற்ற கல்வி ஒருவற்கு
  எழுமையும் ஏமாப்பு உடைத்து - குறள் 40:8
தாம் இன்புறுவது உலகு இன்புற கண்டு
  காமுறுவர் கற்று அறிந்தார் - குறள் 40:9
இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம் தம்
  மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து - குறள் 54:9
வேட்ப தாம் சொல்லி பிறர் சொல் பயன் கோடல்
  மாட்சியின் மாசற்றார் கோள் - குறள் 65:6
கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு அவை தாம்
  முடிந்தாலும் பீழை தரும் - குறள் 66:8
கற்றார் முன் கற்ற செல சொல்லி தாம் கற்ற
  மிக்காருள் மிக்க கொளல் - குறள் 73:4
அறிவிலார் தாம் தம்மை பீழிக்கும் பீழை
  செறுவார்க்கும் செய்தல் அரிது - குறள் 85:3
ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு
  ஆழி எனப்படுவார் - குறள் 99:9
தேவர் அனையர் கயவர் அவரும் தாம்
  மேவன செய்து ஒழுகலான் - குறள் 108:3
அறை பறை அன்னர் கயவர் தாம் கேட்ட
  மறை பிறர்க்கு உய்த்து உரைக்கலான் - குறள் 108:6
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல்
  தாமரைக்கண்ணான்_உலகு - குறள் 111:3
யாம் கண்ணின் காண நகுப அறிவில்லார்
  யாம் பட்ட தாம் படாவாறு - குறள் 114:10
தாம் வேண்டின் நல்குவர் காதலர் யாம் வேண்டும்
  கௌவை எடுக்கும் இ ஊர் - குறள் 115:10
கொடியார் கொடுமையின் தாம் கொடிய இ நாள்
  நெடிய கழியும் இரா - குறள் 117:9
கண் தாம் கலுழ்வது எவன்-கொலோ தண்டா நோய்
  தாம் காட்ட யாம் கண்டது - குறள் 118:1
கதுமென தாம் நோக்கி தாமே கலுழும்
  இது நகத்தக்கது உடைத்து - குறள் 118:3
தாம் வீழ்வார் தம் வீழப்பெற்றவர் பெற்றாரே
  காமத்து காழ்_இல் கனி - குறள் 120:1
வீழப்படுவார் கெழீஇயிலர் தாம் வீழ்வார்
  வீழப்படாஅர் எனின் - குறள் 120:4
நாம் காதல் கொண்டார் நமக்கு எவன் செய்பவோ
  தாம் காதல் கொள்ளாக்கடை - குறள் 120:5
எனைத்தொன்று இனிதே காண் காமம் தாம் வீழ்வார்
  நினைப்ப வருவது ஒன்று இல் - குறள் 121:2
தவறிலராயினும் தாம் வீழ்வார் மென் தோள்
  அகறலின் ஆங்கு ஒன்று உடைத்து - குறள் 133:5

 TOP

 
 தாமரைக்கண்ணான் (1)
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல்
  தாமரைக்கண்ணான்_உலகு - குறள் 111:3

 TOP

 
 தாமரைக்கண்ணான்_உலகு (1)
தாம் வீழ்வார் மென் தோள் துயிலின் இனிது-கொல்
  தாமரைக்கண்ணான்_உலகு - குறள் 111:3

 TOP

 
 தாமரையினாள் (1)
மடி உளான் மா முகடி என்ப மடி இலான்
  தாள் உளான் தாமரையினாள் - குறள் 62:7

 TOP

 
 தாமுடைய (2)
துன்பத்திற்கு யாரே துணை ஆவார் தாமுடைய
  நெஞ்சம் துணை அல்வழி - குறள் 130:9
தஞ்சம் தமர் அல்லர் ஏதிலார் தாமுடைய
  நெஞ்சம் தமர் அல்வழி - குறள் 130:10

 TOP

 
 தாமே (3)
இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
  தாமே தமியர் உணல் - குறள் 23:9
பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
  பிற்பகல் தாமே வரும் - குறள் 32:9
கதுமென தாம் நோக்கி தாமே கலுழும்
  இது நகத்தக்கது உடைத்து - குறள் 118:3

 TOP

 
 தாய் (1)
ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன் மகனை
  சான்றோன் என கேட்ட தாய் - குறள் 7:9

 TOP

 
 தாயானும் (1)
அறம் சாரா நல்குரவு ஈன்ற தாயானும்
  பிறன் போல நோக்கப்படும் - குறள் 105:7

 TOP

 
 தார் (1)
தார் தாங்கி செல்வது தானை தலைவந்த
  போர் தாங்கும் தன்மை அறிந்து - குறள் 77:7

 TOP

 
 தாழ் (2)
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
  புன் கணீர் பூசல் தரும் - குறள் 8:1
காம கணிச்சி உடைக்கும் நிறை என்னும்
  நாணு தாழ் வீழ்த்த கதவு - குறள் 126:1

 TOP

 
 தாழ்ச்சியுள் (1)
சூழ்ச்சி முடிவு துணிவு எய்தல் அ துணிவு
  தாழ்ச்சியுள் தங்குதல் தீது - குறள் 68:1

 TOP

 
 தாழ்ந்த (1)
இல்லாள்-கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
  நல்லாருள் நாணு தரும் - குறள் 91:3

 TOP

 
 தாழ்வு (2)
கெடுவாக வையாது உலகம் நடுவாக
  நன்றிக்-கண் தங்கியான் தாழ்வு - குறள் 12:7
தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்வு இலா
  செல்வரும் சேர்வது நாடு - குறள் 74:1

 TOP

 
 தாழாது (2)
ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவு இன்றி
  தாழாது உஞற்றுபவர் - குறள் 62:10
சூழாமல் தானே முடிவு எய்தும் தம் குடியை
  தாழாது உஞற்றுபவர்க்கு - குறள் 103:4

 TOP

 
 தாள் (6)
கற்றதனால் ஆய பயன் என்-கொல் வால்_அறிவன்
  நல் தாள் தொழாஅர் எனின் - குறள் 1:2
தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
  மன கவலை மாற்றல் அரிது - குறள் 1:7
அற ஆழி அந்தணன் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்
  பிற ஆழி நீந்தல் அரிது - குறள் 1:8
தாள் ஆற்றி தந்த பொருள் எல்லாம் தக்கார்க்கு
  வேளாண்மை செய்தல்-பொருட்டு - குறள் 22:2
மடி உளான் மா முகடி என்ப மடி இலான்
  தாள் உளான் தாமரையினாள் - குறள் 62:7
தெள் நீர் அடு புற்கையாயினும் தாள் தந்தது
  உண்ணலின் ஊங்கு இனியது இல் - குறள் 107:5

 TOP

 
 தாளாண்மை (2)
தாளாண்மை என்னும் தகைமைக்-கண் தங்கிற்றே
  வேளாண்மை என்னும் செருக்கு - குறள் 62:3
தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடி கை
  வாளாண்மை போல கெடும் - குறள் 62:4

 TOP

 
 தாளை (1)
கோள்_இல் பொறியின் குணம் இலவே எண்_குணத்தான்
  தாளை வணங்கா தலை - குறள் 1:9

 TOP

 
 தான் (41)
வான் நின்று உலகம் வழங்கி வருதலான்
  தான் அமிழ்தம் என்று உணர்தல்பாற்று - குறள் 2:1
நெடும் கடலும் தன் நீர்மை குன்றும் தடிந்து எழிலி
  தான் நல்காது ஆகிவிடின் - குறள் 2:7
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
  ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை - குறள் 5:3
விருந்து புறத்ததா தான் உண்டல் சாவா
  மருந்து எனினும் வேண்டற்பாற்று அன்று - குறள் 9:2
தீப்பால தான் பிறர்-கண் செய்யற்க நோய்ப்பால
  தன்னை அடல் வேண்டாதான் - குறள் 21:6
தன்னை தான் காதலன் ஆயின் எனைத்தொன்றும்
  துன்னற்க தீவினை பால் - குறள் 21:9
வலியார் முன் தன்னை நினைக்க தான் தன்னின்
  மெலியார் மேல் செல்லும் இடத்து - குறள் 25:10
தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான்
  எங்ஙனம் ஆளும் அருள் - குறள் 26:1
தன் உயிர் தான் அற பெற்றானை ஏனைய
  மன் உயிர் எல்லாம் தொழும் - குறள் 27:8
வான் உயர் தோற்றம் எவன் செய்யும் தன் நெஞ்சம்
  தான் அறி குற்றப்படின் - குறள் 28:2
தன்னை தான் காக்கின் சினம் காக்க காவாக்கால்
  தன்னையே கொல்லும் சினம் - குறள் 31:5
இன்னா என தான் உணர்ந்தவை துன்னாமை
  வேண்டும் பிறன்-கண் செயல் - குறள் 32:6
தன் உயிர்க்கு இன்னாமை தான் அறிவான் என்-கொலோ
  மன் உயிர்க்கு இன்னா செயல் - குறள் 32:8
தன் உயிர் நீப்பினும் செய்யற்க தான் பிறிது
  இன் உயிர் நீக்கும் வினை - குறள் 33:7
அவாவினை ஆற்ற அறுப்பின் தவா வினை
  தான் வேண்டும் ஆற்றான் வரும் - குறள் 37:7
ஊழின் பெரு வலி யா உள மற்று ஒன்று
  சூழினும் தான் முந்துறும் - குறள் 38:10
இன்சொலால் ஈத்து அளிக்க வல்லாற்கு தன் சொலால்
  தான் கண்டனைத்து இ உலகு - குறள் 39:7
எண் பொருள ஆக செல சொல்லி தான் பிறர்-வாய்
  நுண் பொருள் காண்பது அறிவு - குறள் 43:4
தக்கார் இனத்தனாய் தான் ஒழுக வல்லானை
  செற்றார் செயக்கிடந்தது இல் - குறள் 45:6
அறிந்து ஆற்றி செய்கிற்பாற்கு அல்லால் வினை தான்
  சிறந்தான் என்று ஏவல்பாற்று அன்று - குறள் 52:5
சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் செல்வம் தான்
  பெற்றத்தால் பெற்ற பயன் - குறள் 53:4
உள்ளியது எய்தல் எளிது-மன் மற்றும் தான்
  உள்ளியது உள்ளப் பெறின் - குறள் 54:10
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
  காயினும் தான் முந்துறும் - குறள் 71:7
ஆய்ந்து ஆய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
  தான் சாம் துயரம் தரும் - குறள் 80:2
ஓதி உணர்ந்தும் பிறர்க்கு உரைத்தும் தான் அடங்கா
  பேதையின் பேதையார் இல் - குறள் 84:4
ஒருமை செயல் ஆற்றும் பேதை எழுமையும்
  தான் புக்கு அழுந்தும் அளறு - குறள் 84:5
ஏவவும் செய்கலான் தான் தேறான் அ உயிர்
  போஒம் அளவும் ஓர் நோய் - குறள் 85:8
காணாதான் காட்டுவான் தான் காணான் காணாதான்
  கண்டான் ஆம் தான் கண்ட ஆறு - குறள் 85:9
அன்பிலன் ஆன்ற துணையிலன் தான் துவ்வான்
  என் பரியும் ஏதிலான் துப்பு - குறள் 87:2
தன் துணை இன்றால் பகை இரண்டால் தான் ஒருவன்
  இன் துணையா கொள்க அவற்றின் ஒன்று - குறள் 88:5
ஒருமை மகளிரே போல பெருமையும்
  தன்னை தான் கொண்டு ஒழுகின் உண்டு - குறள் 98:4
இறப்பே புரிந்த தொழிற்று ஆம் சிறப்பும் தான்
  சீரல்லவர்-கண் படின் - குறள் 98:7
சான்றவர் சான்றாண்மை குன்றின் இரு நிலம் தான்
  தாங்காது-மன்னோ பொறை - குறள் 99:10
ஏதம் பெரும் செல்வம் தான் துவ்வான் தக்கார்க்கு ஒன்று
  ஈதல் இயல்பு இலாதான் - குறள் 101:6
பிறர் நாணத்தக்கது தான் நாணான் ஆயின்
  அறம் நாணத்தக்கது உடைத்து - குறள் 102:8
குடி செய்வல் என்னும் ஒருவற்கு தெய்வம்
  மடி தற்று தான் முந்துறும் - குறள் 103:3
நல்லாண்மை என்பது ஒருவற்கு தான் பிறந்த
  இல்லாண்மை ஆக்கி கொளல் - குறள் 103:6
யான் நோக்கும் காலை நிலன் நோக்கும் நோக்காக்கால்
  தான் நோக்கி மெல்ல நகும் - குறள் 110:4
நனவினான் கண்டதூஉம் ஆங்கே கனவும் தான்
  கண்ட பொழுதே இனிது - குறள் 122:5
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
  என்னினும் தான் விதுப்புற்று - குறள் 129:10

 TOP

 
 தானம் (2)
தானம் தவம் இரண்டும் தங்கா வியன் உலகம்
  வானம் வழங்காது எனின் - குறள் 2:9
மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
  தானம் செய்வாரின் தலை - குறள் 30:5

 TOP

 
 தானே (4)
எண் பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
  தண் பதத்தான் தானே கெடும் - குறள் 55:8
அரு மறை சோரும் அறிவிலான் செய்யும்
  பெரும் மிறை தானே தமக்கு - குறள் 85:7
சூழாமல் தானே முடிவு எய்தும் தம் குடியை
  தாழாது உஞற்றுபவர்க்கு - குறள் 103:4
பிணிக்கு மருந்து பிற-மன் அணி_இழை
  தன் நோய்க்கு தானே மருந்து - குறள் 111:2

 TOP

 
 தானேயும் (1)
இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பு இடும்பை
  தானேயும் சாலும் கரி - குறள் 106:10

 TOP

 
 தானை (4)
தார் தாங்கி செல்வது தானை தலைவந்த
  போர் தாங்கும் தன்மை அறிந்து - குறள் 77:7
அடல் தகையும் ஆற்றலும் இல் எனினும் தானை
  படை தகையான் பாடு பெறும் - குறள் 77:8
நிலை மக்கள் சால உடைத்து எனினும் தானை
  தலைமக்கள் இல்வழி இல் - குறள் 77:10
நோக்கினாள் நோக்கு எதிர் நோக்குதல் தாக்கு_அணங்கு
  தானை கொண்ட அன்னது உடைத்து - குறள் 109:2

 TOP