<<முந்திய பக்கம் சங்க இலக்கியம் - தொடரடைவு

நொ - முதல் சொற்கள்
நொ 1
நொச்சி 18
நொச்சியும் 4
நொசி 3
நொசிப்பின் 1
நொசிவு 1
நொடி 5
நொடித்து 3
நொடியவும் 1
நொடியா 1
நொடிவிடுவு 1
நொடுத்த 1
நொடுத்து 4
நொடை 13
நொடைமை 1
நொண்டு 2
நொதுமல் 5
நொதுமலர் 6
நொதுமலாட்டிக்கு 1
நொதுமலாளர் 3
நொதுமலாளன் 2
நொதுமலாளனை 1
நொந்ததன் 1
நொந்தன 1
நொந்தனள் 1
நொந்தீவார் 1
நொந்து 25
நொந்து_நொந்து 5
நொந்தும் 1
நொய் 2
நொய்தால் 1
நொய்யார் 1
நொவ்வல் 1
நொவ்விதின் 1
நொவ்வு 2
நொள்ளை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
  நொ (1)
தாஅல் அம் சிறை நொ பறை வாவல் - குறு 172/1

 TOP
 
  நொச்சி (18)
மனை நொச்சி நிழல் ஆங்கண் - பொரு 185
மயில் அடி இலைய மா குரல் நொச்சி/மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ - நற் 115/5,6
ஒண் குரல் நொச்சி தெரியல் சூடி - நற் 200/2
மனை மா நொச்சி மீமிசை மா சினை - நற் 246/3
நொச்சி மா அரும்பு அன்ன கண்ண - நற் 267/1
மணி குரல் நொச்சி தெரியல் சூடி - நற் 293/1
மயில் அடி இலைய மா குரல் நொச்சி/அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த - குறு 138/3,4
கூடுதல் வேட்கையான் குறி பார்த்து குரல் நொச்சி/பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக - கலி 46/12,13
மனை இள நொச்சி மௌவல் வால் முகை - அகம் 21/1
தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும் - அகம் 23/11
நொச்சி வேலி தித்தன் உறந்தை - அகம் 122/21
தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ - அகம் 165/10
நுனை குழைத்து அலமரும் நொச்சி/மனை கெழு பெண்டு யான் ஆகுக-மன்னே - அகம் 203/17,18
நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும் - அகம் 259/14
கூழை நொச்சி கீழது என் மகள் - அகம் 275/17
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய - அகம் 367/4
கரும் குரல் நொச்சி கண் ஆர் குரூஉ தழை - புறம் 271/2
மணி துணர்ந்து அன்ன மா குரல் நொச்சி/போது விரி பன் மரனுள்ளும் சிறந்த - புறம் 272/1,2

 TOP
 
  நொச்சியும் (4)
ஓரை ஆயமும் நொச்சியும் காண்-தொறும் - நற் 143/3
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே - நற் 184/9
மயில் அடி அன்ன மா குரல் நொச்சியும்/கடி உடை வியல் நகர் காண்வர தோன்ற - நற் 305/2,3
மௌவலொடு மலர்ந்த மா குரல் நொச்சியும்/அம் வரி அல்குல் ஆயமும் உள்ளாள் - அகம் 117/1,2

 TOP
 
  நொசி (3)
நுடங்கு நொசி நுசுப்பார் நூழில் தலைக்கொள்ள - பரி 9/49
நுணங்கு எழில் ஒண் தித்தி நுழை நொசி மட மருங்குல் - கலி 60/3
நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர் - அகம் 229/11

 TOP
 
  நொசிப்பின் (1)
நொசிப்பின் ஏழ் உறு முனிவர் நனி உணர்ந்து - பரி 5/37

 TOP
 
  நொசிவு (1)
நொசிவு உடை வில்லின் ஒசியா நெஞ்சின் - பதி 45/3

 TOP
 
  நொடி (5)
நொடி தரு பாணிய பதலையும் பிறவும் - மலை 11
குன்ற குறவனொடு குறு நொடி பயிற்றும் - நற் 341/5
கவை முட கள்ளி காய் விடு கடு நொடி/துதை மென் தூவி துணை புறவு இரிக்கும் - குறு 174/2,3
அமை கண் விடு நொடி கண கலை அகற்றும் - அகம் 47/7
நொடி விடு கல்லின் போகி அகன் துறை - அகம் 256/3

 TOP
 
  நொடித்து (3)
துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்து ஆங்கு - பெரும் 459
பெரும் காட்டு கொற்றிக்கு பேய் நொடித்து ஆங்கு - கலி 89/8
நொடித்து என சிவந்த மெல் விரல் திருகுபு - அகம் 176/24

 TOP
 
  நொடியவும் (1)
சென்றது நொடியவும் விடாஅன் நசை தர - மலை 545

 TOP
 
  நொடியா (1)
செம் கோல் அம்பினர் கை நொடியா பெயர - அகம் 337/13

 TOP
 
  நொடிவிடுவு (1)
நொடிவிடுவு அன்ன காய் விடு கள்ளி - நற் 314/9

 TOP
 
  நொடுத்த (1)
பசு மீன் நொடுத்த வெண்ணெல் மாஅ - அகம் 340/14

 TOP
 
  நொடுத்து (4)
கடுங்கண் வேழத்து கோடு நொடுத்து உண்ணும் - குறு 100/4
துடி கண் கொழும் குறை நொடுத்து உண்டு ஆடி - அகம் 196/3
மீன் நொடுத்து நெல் குவைஇ - புறம் 343/1
நெடும் கழை தூண்டில் விடு மீன் நொடுத்து/கிணை_மகள் அட்ட பாவல் புளிங்கூழ் - புறம் 399/15,16

 TOP
 
  நொடை (13)
நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி - பெரும் 141
நொடை நவில் நெடும் கடை அடைத்து மட மதர் - மது 622
கள்ளோர் களி நொடை நுவல இல்லோர் - மது 662
நறவு நொடை கொடியொடு - பட் 180
பறி புறத்து இட்ட பால் நொடை இடையன் - நற் 142/4
உமணர் தந்த உப்பு நொடை நெல்லின் - நற் 254/6
பொன் உடை நியமத்து பிழி நொடை கொடுக்கும் - பதி 30/12
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு - அகம் 60/4
நறவு நொடை நெல்லின் நாள்_மகிழ் அயரும் - அகம் 61/10
நறவு நொடை நல் இல் புதவு முதல் பிணிக்கும் - அகம் 83/8
மகிழ் நொடை பெறாஅராகி நனை கவுள் - அகம் 245/10
நார் அரி நறவின் மகிழ் நொடை கூட்டும் - அகம் 296/9
நொடை நறவின் - புறம் 352/8

 TOP
 
  நொடைமை (1)
அரும் கள் நொடைமை தீர்ந்த பின் மகிழ் சிறந்து - பதி 68/11

 TOP
 
  நொண்டு (2)
இரும் பிணர் தட கை நீட்டி நீர் நொண்டு/பெரும் கை யானை பிடி எதிர் ஓடும் - நற் 186/2,3
புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு/மனை புறந்தருதி ஆயின் எனையதூஉம் - அகம் 230/7,8

 TOP
 
  நொதுமல் (5)
நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என் குறை - நற் 54/7
நொதுமல் கழறும் இ அழுங்கல் ஊரே - குறு 12/6
நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே - குறு 251/7
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல் நின் - அகம் 39/4
நொதுமல் விருந்தினம் போல இவள் - அகம் 112/18

 TOP
 
  நொதுமலர் (6)
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின் - நற் 11/3
அழாஅதீமோ நொதுமலர் தலையே - நற் 13/2
இது மற்று எவனோ நொதுமலர் தலையே - குறு 171/4
நொதுமலர் போல கதுமென வந்து - குறு 294/3
நோய் இலை இவட்கு என நொதுமலர் பழிக்கும்-கால் - கலி 59/19
நொதுமலர் போல பிரியின் கதுமென - அகம் 300/11

 TOP
 
  நொதுமலாட்டிக்கு (1)
நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சே - நற் 118/11

 TOP
 
  நொதுமலாளர் (3)
நொதுமலாளர் கொள்ளார் இவையே - ஐங் 187/1
நொதுமலாளர் அது கண்ணோடாது - அகம் 398/16
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது - புறம் 35/31

 TOP
 
  நொதுமலாளன் (2)
நொதுமலாளன் கதுமென தாக்கலின் - நற் 50/5
நொதுமலாளன் நெஞ்சு அற பெற்ற என் - அகம் 17/8

 TOP
 
  நொதுமலாளனை (1)
யாரையும் அல்லை நொதுமலாளனை/அனைத்தால் கொண்க நம் இடையே நினைப்பின் - நற் 395/2,3

 TOP
 
  நொந்ததன் (1)
நொந்ததன் தலையும் நோய் மிகும் துறைவ - ஐங் 160/3

 TOP
 
  நொந்தன (1)
நொந்தன ஆயின் கண்டது மொழிவல் - குறு 273/4

 TOP
 
  நொந்தனள் (1)
நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளி - புறம் 160/23

 TOP
 
  நொந்தீவார் (1)
நோ_தக்காய் என நின்னை நொந்தீவார் இல்-வழி - கலி 73/6

 TOP
 
  நொந்து (25)
வந்தன்று போலும் தோழி நொந்து_நொந்து - நற் 177/8
வந்தன்று போலும் தோழி நொந்து_நொந்து - நற் 177/8
யார்க்கு நொந்து உரைக்கோ யானே ஊர் கடல் - நற் 211/1
புனை இழை நெகிழ விம்மி நொந்து_நொந்து - நற் 286/5
புனை இழை நெகிழ விம்மி நொந்து_நொந்து - நற் 286/5
நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்-கொல் - நற் 324/2
யார்க்கு நொந்து உரைக்கோ யானே பல் நாள் - நற் 396/9
வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே - குறு 65/5
அழாஅற்கோ இனியே நோய் நொந்து உறைவி - குறு 192/2
புனை இழை நெகிழ சாஅய் நொந்து_நொந்து - ஐங் 467/1
புனை இழை நெகிழ சாஅய் நொந்து_நொந்து - ஐங் 467/1
நொந்து_நொந்து உயவும் உள்ளமொடு - ஐங் 491/2
நொந்து_நொந்து உயவும் உள்ளமொடு - ஐங் 491/2
நொந்து அவள் மாற்றாள் இவள் என நோக்க - பரி 20/35
நொந்து நகுவன போல் நந்தின கொம்பு நைந்து உள்ளி - கலி 33/16
என் உழை வந்து நொந்து உரையாமை பெறுகற்பின் - கலி 77/15
நிலை பால் அறியினும் நின் நொந்து நின்னை - கலி 87/7
இனைந்து நொந்து அழுதனள் நினைந்து நீடு உயிர்த்தனள் - கலி 142/60
பந்து வழி படர்குவள் ஆயினும் நொந்து நனி - அகம் 153/3
நெஞ்சு அமர் குழவி போல நொந்து நொந்து - அகம் 293/12
நெஞ்சு அமர் குழவி போல நொந்து நொந்து/இன்னா மொழிதும் என்ப - அகம் 293/12,13
எம் நொந்து புலக்கும்-கொல் மாஅயோளே - அகம் 304/21
தண் புனல் பூசல் அல்லது நொந்து/களைக வாழி வளவ என்று நின் - புறம் 42/7,8
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து_நொந்து - புறம் 68/3
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து_நொந்து - புறம் 68/3

 TOP
 
  நொந்து_நொந்து (5)
வந்தன்று போலும் தோழி நொந்து_நொந்து/எழுது எழில் உண்கண் பாவை - நற் 177/8,9
புனை இழை நெகிழ விம்மி நொந்து_நொந்து/இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை நினையின் - நற் 286/5,6
புனை இழை நெகிழ சாஅய் நொந்து_நொந்து/இனையல் வாழியோ இகுளை வினை-வயின் - ஐங் 467/1,2
நொந்து_நொந்து உயவும் உள்ளமொடு - ஐங் 491/2
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து_நொந்து/ஈங்கு எவன் செய்தியோ பாண பூண் சுமந்து - புறம் 68/3,4

 TOP
 
  நொந்தும் (1)
நொந்தும் நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல் - குறு 211/2

 TOP
 
  நொய் (2)
நொய் மர விறகின் ஞெகிழி மாட்டி - மலை 446
தாளித நொய் நூல் சரணத்தர் மேகலை - பரி 10/10

 TOP
 
  நொய்தால் (1)
நொய்தால் அம்ம தானே மை அற்று - புறம் 75/10

 TOP
 
  நொய்யார் (1)
நொய்யார் நுவலும் பழி நிற்ப தம்மொடு - கலி 24/16

 TOP
 
  நொவ்வல் (1)
மையல் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக - அகம் 98/22

 TOP
 
  நொவ்விதின் (1)
விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின்/தவறும் நன்கு அறியாய் ஆயின் எம் போல் - நற் 315/9,10

 TOP
 
  நொவ்வு (2)
அம் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல் - அகம் 281/6
நொவ்வு இயல் பகழி பாய்ந்து என புண் கூர்ந்து - அகம் 388/11

 TOP
 
  நொள்ளை (1)
உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை/பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின் - அகம் 53/8,9

 TOP