<<முந்திய பக்கம் சங்க இலக்கியம் - தொடரடைவு

சோ - முதல் சொற்கள்
சோணாட்டு 2
சோபன 1
சோர் 7
சோர்_பதன் 2
சோர்க 1
சோர்குவ 1
சோர்ந்த 4
சோர்ந்தன 1
சோர்ந்தனள் 1
சோர்ந்து 7
சோர்பு 3
சோர்வ 1
சோர்விடை 1
சோர்வு 1
சோர 8
சோரா 1
சோரும் 4
சோலை 45
சோலைய 2
சோலையும் 1
சோலையொடு 1
சோழ 1
சோழநாட்டு 1
சோழர் 22
சோழன் 4
சோற்ற 1
சோற்றான் 1
சோற்றானும் 2
சோற்று 14
சோறு 41
சோறும் 3
சோறே 3
சோனை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
  சோணாட்டு (2)
குறும் பல் ஊர் நெடும் சோணாட்டு
 வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி - பட் 28,29
ஆர்கலியினனே சோணாட்டு அண்ணல் - புறம் 337/1

 TOP
 
  சோபன (1)
சோபன நிலை அது துணி பரங்குன்றத்து - பரி 19/56

 TOP
 
  சோர் (7)
காழ் சோர் முது சுவர் கண சிதல் அரித்த - சிறு 133
மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழை - நற் 20/9
ஆர் கலி எழிலி சோர் தொடங்கின்றே - ஐங் 428/2
வலைவர் போல சோர்_பதன் ஒற்றி - கலி 55/17
அரும் கடி காவலர் சோர்_பதன் ஒற்றி - அகம் 2/14
மணிப்புறா துறந்த மரம் சோர் மாடத்து - அகம் 167/14
ஏந்து குவவு மொய்ம்பின் பூ சோர் மாலை - அகம் 248/12

 TOP
 
  சோர்_பதன் (2)
வலைவர் போல சோர்_பதன் ஒற்றி - கலி 55/17
அரும் கடி காவலர் சோர்_பதன் ஒற்றி - அகம் 2/14

 TOP
 
  சோர்க (1)
கண்டனென்-மன்ற சோர்க என் கண்ணே - புறம் 261/5

 TOP
 
  சோர்குவ (1)
சோர்குவ அல்ல என்பர்-கொல் நமரே - குறு 282/8

 TOP
 
  சோர்ந்த (4)
மலர் மார்பின் சோர்ந்த மலர் இதழ் தாஅய் - பரி 16/35
ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும் நல்லார் - கலி 88/12
சோர்ந்த போல சொரிவன பயிற்றி - அகம் 374/6
தூர்ந்த கிடங்கின் சோர்ந்த ஞாயில் - புறம் 350/1

 TOP
 
  சோர்ந்தன (1)
கூந்தலும் பித்தையும் சோர்ந்தன பூவினும் அல்லால் - பரி 24/85

 TOP
 
  சோர்ந்தனள் (1)
இடம் தேற்றாள் சோர்ந்தனள் கை - கலி 92/50

 TOP
 
  சோர்ந்து (7)
சோர்ந்து உகு அன்ன வயக்குறு வந்திகை - மது 415
கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து
 அவல நெஞ்சினம் பெயர உயர் திரை - நற் 58/8,9
மரம் வறிது ஆக சோர்ந்து உக்கு ஆங்கு என் - நற் 64/7
சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று - பரி 17/27
சோர்ந்து வீழ் கதுப்பினாள் செய்குறி நீ வரின் - கலி 52/12
ஞெகிழ் தொடி இளையவர் இடை முலை தாது சோர்ந்து
 இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையாக்கால் - கலி 73/8,9
எரி இதழ் சோர்ந்து உக ஏதிலார் புணர்ந்தமை - கலி 78/13

 TOP
 
  சோர்பு (3)
எறி திரை உதைத்தலின் பொங்கி தாது சோர்பு
 சிறுகுடி பாக்கத்து மறுகு புலா மறுக்கும் - நற் 203/5,6
இறை நில்லா வளை ஓட இதழ் சோர்பு பனி மல்க - கலி 3/3
இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்ப - அகம் 142/24

 TOP
 
  சோர்வ (1)
சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன மற்றும் - கலி 82/14

 TOP
 
  சோர்விடை (1)
சுனை பாய் சோர்விடை நோக்கி சினை இழிந்து - குறு 335/3

 TOP
 
  சோர்வு (1)
சொல்லிக்காட்டி சோர்வு இன்றி விளக்கி - மலை 79

 TOP
 
  சோர (8)
அளறு சொரிபு நிலம் சோர
 சேரார் இன் உயிர் செகுக்கும் - பரி 2/47,48
பாய் குருதி சோர பகை இன்று உளம் சோர - பரி 12/70
பாய் குருதி சோர பகை இன்று உளம் சோர
 நில்லாது நீங்கி நிலம் சோர அல்லாந்து - பரி 12/70,71
நில்லாது நீங்கி நிலம் சோர அல்லாந்து - பரி 12/71
வெல் நீர் வீ-வயின் தேன் சோர பல் நீர் - பரி 16/42
தொடுத்த தேன் சோர தயங்கும் தன் உற்றார் - கலி 40/13
அரிபு அரிபு இறுபு இறுபு குடர் சோர குத்தி தன் - கலி 104/40
புரப்போர் புன்கண் பாவை சோர
 அம் சொல் நுண் தேர்ச்சி புலவர் நாவில் - புறம் 235/12,13

 TOP
 
  சோரா (1)
நீர் எறி மலரின் சாஅய் இதழ் சோரா
 ஈரிய கலுழும் இவள் பெரு மதர் மழை கண் - குறி 247,248

 TOP
 
  சோரும் (4)
தொடுத்த தேன் சோரும் வரை போலும் தோற்றம் - பரி 16/46
இதழ் சோரும் குலை போல இறை நீவு வளையாட்கு - கலி 121/14
அயறு சோரும் இரும் சென்னிய - புறம் 22/7
பாஅல் நின்று கதிர் சோரும்
 வான் உறையும் மதி போலும் - புறம் 22/10,11

 TOP
 
  சோலை (45)
சூர்_அர_மகளிர் ஆடும் சோலை
 மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து - திரு 41,42
பழம் முதிர் சோலை மலை கிழவோனே - திரு 317
சோலை கமுகின் சூல் வயிற்று அன்ன - பெரும் 381
பூ மலி சோலை அ பகல் கழிப்பி - குறி 214
துறுகல் சுற்றிய சோலை வாழை - மலை 131
மரம் பயில் சோலை மலிய பூழியர் - நற் 192/3
பெரும் களிறு பிளிறும் சோலை அவர் - நற் 222/9
சோலை வாழை முணைஇ அயலது - நற் 232/3
இரும் புலி வழங்கும் சோலை
 பெரும் கல் வைப்பின் சுரன் இறந்தோரே - நற் 274/8,9
பீலி மஞ்ஞை ஆலும் சோலை
 அம் கண் அறைய அகல் வாய் பைம் சுனை - நற் 357/6,7
கழை நிவந்து ஓங்கிய சோலை
 மலை கெழு நாடனை வரும் என்றோளே - குறு 201/6,7
மா இரும் சோலை மலை இறந்தோரே - குறு 232/6
கோள் புலி வழங்கும் சோலை
 எனைத்து என்று எண்ணுகோ முயக்கிடை மலைவே - குறு 237/6,7
சோலை வாழை சுரி நுகும்பு இனைய - குறு 308/1
சிலம்பின் சிலம்பும் சோலை
 இலங்கு மலை நாடன் இரவினானே - குறு 360/7,8
நறும் தண் சோலை நாடு கெழு நெடுந்தகை - ஐங் 244/2
சோலை சிறு கிளி உன்னும் நாட - ஐங் 282/3
கழை முதிர் சோலை காடு இறந்தோரே - ஐங் 315/4
மா இரும் சோலை மலை இறந்தோரே - ஐங் 353/4
இன களிறு வழங்கும் சோலை
 வயக்குறு வெள் வேலவன் புணர்ந்து செலவே - ஐங் 379/3,4
பிறங்கு இரும் சோலை நம் மலை கெழு நாட்டே - ஐங் 395/6
சுரும்பு ஆர் சோலை பெரும் பெயல் கொல்லி - பதி 81/24
நளி இரும் சோலை நரந்தம் தாஅய் - பரி 7/11
வேய் பயில் சோலை அருவி தூர்த்தர - பரி 11/23
பிறங்கு இரும் சோலை நல் மலை நாடன் - கலி 42/4
இன் நுரை செதும்பு அரற்றும் செவ்வியுள் நின் சோலை
 மின் உகு தளிர் அன்ன மெலிவு வந்து உரைப்பதால் - கலி 48/18,19
இருள் தூங்கு சோலை இலங்கு நீர் வெற்ப - கலி 50/5
சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர் நீ - கலி 93/8
காடு கால்யாத்த நீடு மர சோலை
 விழை வெளில் ஆடும் கழை வளர் நனம் தலை - அகம் 109/5,6
பனி இரும் சோலை எமியம் என்னாய் - அகம் 112/7
மாலை வருதல் வேண்டும் சோலை
 முளை மேய் பெரும் களிறு வழங்கும் - அகம் 148/12,13
சோலை அடுக்கத்து சுரும்பு உண விரிந்த - அகம் 152/16
பனி படு சோலை வேங்கடத்து உம்பர் - அகம் 211/7
இரும் பிடி இரியும் சோலை
 அரும் சுரம் சேறல் அயர்ந்தனென் யானே - அகம் 221/13,14
தேக்கு அமல் சோலை கடறு ஓங்கு அரும் சுரத்து - அகம் 225/9
இரும் பிடி இரியும் சோலை
 பெரும் கல் யாணர் தம் சிறுகுடியானே - அகம் 228/12,13
அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை
 பைம் தாள் செந்தினை கொடும் குரல் வியன் புனம் - அகம் 242/4,5
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை
 நிரம்பா நீள் இடை போகி - அகம் 251/18,19
வெண் கோடு புய்க்கும் தண் கமழ் சோலை
 பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி - அகம் 252/4,5
வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும் - அகம் 302/7
சோலை அத்தம் மாலை போகி - அகம் 325/20
சிலம்பு நீடு சோலை சிதர் தூங்கு நளிப்பின் - அகம் 362/13
உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலை
 குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில் - அகம் 368/8,9
வறனுறல் அறியா சோலை
 விறல் மலை நாடன் சொல் நயந்தோயே - அகம் 382/12,13
பயில் பூம் சோலை மயில் எழுந்து ஆலவும் - புறம் 116/10

 TOP
 
  சோலைய (2)
வெயில் முளி சோலைய வேய் உயர் சுரனே - ஐங் 327/3
கடம் முதிர் சோலைய காடு இறந்தேற்கே - ஐங் 328/4

 TOP
 
  சோலையும் (1)
மலையும் சோலையும் மா புகல் கானமும் - மலை 69

 TOP
 
  சோலையொடு (1)
சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம் - பரி 15/23

 TOP
 
  சோழ (1)
சோழ நல் நாட்டு படினே கோழி - புறம் 67/8

 TOP
 
  சோழநாட்டு (1)
தண் சோழநாட்டு பொருநன் - புறம் 382/3

 TOP
 
  சோழர் (22)
கொற்ற சோழர் கொங்கர் பணீஇயர் - நற் 10/6
வெல் போர் சோழர் அழிசி அம் பெரும் காட்டு - நற் 87/3
படு மணி யானை பசும் பூண் சோழர்
 கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண் - நற் 227/5,6
வெல் போர் சோழர் கழாஅர் கொள்ளும் - நற் 281/3
தேர் வண் சோழர் குடந்தைவாயில் - நற் 379/7
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து - நற் 400/7
வளம் கெழு சோழர் உறந்தை பெரும் துறை - குறு 116/2
வெல் போர் சோழர் ஆமூர் அன்ன இவள் - ஐங் 56/2
கொற்ற சோழர் குடந்தை வைத்த - அகம் 60/13
ஆரம் கண்ணி அடு போர் சோழர்
 அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன - அகம் 93/4,5
அண்ணல் யானை அடு போர் சோழர்
 வெண்ணெல் வைப்பின் பருவூர் பறந்தலை - அகம் 96/13,14
மழை மருள் பல் தோல் மா வண் சோழர்
 கழை மாய் காவிரி கடல் மண்டு பெரும் துறை - அகம் 123/10,11
வென்று எறி முரசின் விறல் போர் சோழர்
 இன் கடும் கள்ளின் உறந்தை ஆங்கண் - அகம் 137/5,6
எவன் கையற்றனை இகுளை சோழர்
 வெண்ணெல் வைப்பின் நல் நாடு பெறினும் - அகம் 201/12,13
வலம் படு வென்றி வாய் வாள் சோழர்
 இலங்கு நீர் காவிரி இழி புனல் வரித்த - அகம் 213/21,22
இழை அணி யானை சோழர் மறவன் - அகம் 326/9
மாரி அம்பின் மழை தோல் சோழர்
 வில் ஈண்டு குறும்பின் வல்லத்து புற மிளை - அகம் 336/20,21
கடும் பகட்டு யானை சோழர் மருகன் - அகம் 356/12
கடல் அம் தானை கைவண் சோழர்
 கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன - அகம் 369/13,14
எழூஉ திணி தோள் சோழர் பெருமகன் - அகம் 375/10
கை வல் யானை கடும் தேர் சோழர்
 காவிரி படப்பை உறந்தை அன்ன - அகம் 385/3,4
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து - புறம் 39/8

 TOP
 
  சோழன் (4)
வெல் போர் சோழன் இடையாற்று அன்ன - அகம் 141/23
தொகு போர் சோழன் பொருள் மலி பாக்கத்து - அகம் 338/19
பேதை சோழன் என்னும் சிறந்த - புறம் 216/9
நல் தார் கள்ளின் சோழன் கோயில் - புறம் 378/5

 TOP
 
  சோற்ற (1)
செம் சோற்ற பலி மாந்திய - பொரு 183

 TOP
 
  சோற்றான் (1)
பல் சோற்றான் இன் சுவைய - புறம் 382/9

 TOP
 
  சோற்றானும் (2)
சிறு சோற்றானும் நனி பல கலத்தன் மன்னே - புறம் 235/4
பெரும் சோற்றானும் நனி பல கலத்தன் மன்னே - புறம் 235/5

 TOP
 
  சோற்று (14)
விருந்து உண்டு ஆனா பெரும் சோற்று அட்டில் - பட் 262
குருதி விதிர்த்த குவவு சோற்று குன்றோடு - பதி 88/11
பெரும் திரு நிலைஇய வீங்கு சோற்று அகல் மனை - கலி 83/1
பெரும் சோற்று அமலை நிற்ப நிரை கால் - அகம் 86/2
சுனை கொள் தீம் நீர் சோற்று உலை கூட்டும் - அகம் 169/7
கள் உடை பெரும் சோற்று எல் இமிழ் அன்ன - அகம் 266/14
பெரும் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள் - அகம் 275/9
நெய்ம்மிதி முனைஇய கொழும் சோற்று ஆர்கை - அகம் 400/7
பெரும் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய் - புறம் 2/16
ஊன் சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும் - புறம் 33/14
புது நெல் வெண் சோற்று கண்ணுறை ஆக - புறம் 61/5
வரையா பெரும் சோற்று முரி வாய் முற்றம் - புறம் 261/3
நிணம் பெருத்த கொழும் சோற்று இடை - புறம் 384/15
பழம் சோற்று புக வருந்தி - புறம் 395/5

 TOP
 
  சோறு (41)
சாறு கழி வழி_நாள் சோறு நசையுறாது - பொரு 2
எயிற்றியர் அட்ட இன் புளி வெம் சோறு
 தேமா மேனி சில் வளை ஆயமொடு - சிறு 175,176
அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு
 கவை தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர் - சிறு 194,195
சோறு அடு குழிசி இளக விழூஉம் - பெரும் 366
சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும் தோல் துமிபு - முல் 72
ஆடுற்ற ஊன் சோறு
 நெறி அறிந்த கடி வாலுவன் - மது 35,36
இன் சோறு தருநர் பல் வயின் நுகர - மது 535
சோறு அமைவுற்ற நீர் உடை கலிங்கம் - மது 721
சோறு வாக்கிய கொழும் கஞ்சி - பட் 44
முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண் சோறு
 வண்டு பட கமழும் தேம் பாய் கண்ணி - மலை 465,466
புகர்வை அரிசி பொம்மல் பெரும் சோறு
 கவர் படு கையை கழும மாந்தி - நற் 60/5,6
கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள் - நற் 110/11
விடக்கு உடை பெரும் சோறு உள்ளுவன இருப்ப - நற் 281/6
சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ - நற் 335/5
கரும் கண் கருனை செந்நெல் வெண் சோறு
 சூர் உடை பலியொடு கவரிய குறும் கால் - நற் 367/3,4
முழுது உடன் விளைந்த வெண்ணெல் வெம் சோறு
 எழு கலத்து ஏந்தினும் சிறிது என் தோழி - குறு 210/3,4
மை ஊன் பெய்த வெண்ணெல் வெண் சோறு
 நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி - பதி 12/17,18
பெரும் சோறு உகுத்தற்கு எறியும் - பதி 30/43
சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில் - பதி 45/13
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு
 அயிலை துழந்த அம் புளி சொரிந்து - அகம் 60/4,5
வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு
 புகர் அரை தேக்கின் அகல் இலை மாந்தும் - அகம் 107/9,10
சிற்றில் இழைத்தும் சிறு சோறு குவைஇயும் - அகம் 110/7
ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை - அகம் 121/12
மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு
 வரையா வண்மையொடு புரையோர் பேணி - அகம் 136/1,2
ஆம்பல் அகல் இலை அமலை வெம் சோறு
 தீம் புளி பிரம்பின் திரள் கனி பெய்து - அகம் 196/5,6
பெரும் சோறு கொடுத்த ஞான்றை இரும் பல் - அகம் 233/9
ஈயல் பெய்து அட்ட இன் புளி வெம் சோறு
 சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக - அகம் 394/5,6
கறி சோறு உண்டு வருந்து தொழில் அல்லது - புறம் 14/14
சோறு படுக்கும் தீயோடு - புறம் 20/7
சோறு பட நடத்தி நீ துஞ்சாய் மாறே - புறம் 22/38
அமலை கொழும் சோறு ஆர்ந்த பாணர்க்கு - புறம் 34/14
நறு நெய் கடலை விசைப்ப சோறு அட்டு - புறம் 120/14
சோறு உடை கையர் வீறுவீறு இயங்கும் - புறம் 173/8
பெரும் சோறு பயந்து பல் யாண்டு புரந்த - புறம் 220/1
வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும் - புறம் 250/7
துடுப்பொடு சிவணிய களி கொள் வெண் சோறு
 உண்டு இனிது இருந்த பின் - புறம் 328/11,12
போகு பலி வெண் சோறு போல - புறம் 331/12
சோறு கொடுத்து மிக பெரிதும் - புறம் 362/14
நறு நெய் உருக்கி நாள்_சோறு ஈயா - புறம் 379/9
நறு நெய்ய சோறு என்கோ - புறம் 396/18
பழம் சோறு அயிலும் முழங்கு நீர் படப்பை - புறம் 399/11

 TOP
 
  சோறும் (3)
புகழ் பட பண்ணிய பேர் ஊன் சோறும்
 கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும் - மது 533,534
அட்டு ஆன்று ஆனா கொழும் துவை ஊன்_சோறும் - புறம் 113/2
கூழும் சோறும் கடைஇ ஊழின் - புறம் 160/20

 TOP
 
  சோறே (3)
உண்-மின் கள்ளே அடு-மின் சோறே
 எறிக திற்றி ஏற்று-மின் புழுக்கே - பதி 18/1,2
ஏற்றுக உலையே ஆக்குக சோறே
 கள்ளும் குறைபடல் ஓம்புக ஒள் இழை - புறம் 172/1,2
எ திசை செலினும் அ திசை சோறே - புறம் 206/13

 TOP
 
  சோனை (1)
வெண் கோட்டு யானை சோனை படியும் - குறு 75/3

 TOP