|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
கெட்ட (1)
கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில் - குறு 225/3
TOP
கெட்டதை (1)
தொட்டு ஆர்த்தும் இன்ப துறை பொதுவி கெட்டதை
பொய்தல் மகளிர் கண் காண இகுத்தந்து இ - பரி 20/58,59
TOP
கெட்டன்றே (1)
உடம்பும் தோன்றா உயிர் கெட்டன்றே
மலையுநர் மடங்கி மாறு எதிர் கழிய - புறம் 282/6,7
TOP
கெட்டனை (1)
கெட்டனை ஆயின் நீ வேட்டது செய்ம்மே - புறம் 46/8
TOP
கெட்டான் (1)
யார் கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல் - கலி 10/3
TOP
கெட்டு (4)
வாழாமையின் வழி தவ கெட்டு
பாழ் ஆயின நின் பகைவர் தேஎம் - மது 175,176
வினை கெட்டு வாய் அல்லா வெண்மை உரையாது கூறு நின் - கலி 88/6
நல் இறை தோன்ற கெட்டு ஆங்கு - கலி 120/24
நல் அவையுள் பட கெட்டு ஆங்கு - கலி 144/72
TOP
கெட (43)
கடும் தெற்று மூடையின் இடம் கெட கிடக்கும் - பொரு 245
நாடு கெட எரி பரப்பி - மது 126
முனை கெட சென்று முன் சமம் முருக்கி - பட் 238
தென்னவன் திறல் கெட சீறி மன்னர் - பட் 277
நெறி கெட கிடந்த இரும் பிணர் எருத்தின் - மலை 246
உரம் சா செய்யார் உயர் தவம் வளம் கெட
பொன்னும் கொள்ளார் மன்னர் நல்_நுதல் - நற் 226/2,3
குணக்கு தோன்று வெள்ளியின் இருள் கெட விரியும் - நற் 230/4
நெஞ்சு வடுப்படுத்து கெட அறியாதே - நற் 357/3
அறம் கெட அறியாது ஆங்கு சிறந்த - நற் 400/8
நாள் துயர் கெட பின் நீடலர்-மாதோ - குறு 253/4
இலங்கு கதிர் முத்தம் இருள் கெட இமைக்கும் - ஐங் 193/2
சீர் உடை தேஎத்த முனை கெட விலங்கிய - பதி 21/28
வழங்குநர் அற்று என மருங்கு கெட தூர்ந்து - பதி 23/12
பெரு மலை யானையொடு புலம் கெட இறுத்து - பதி 32/11
புலம் கெட நெரிதரும் வரம்பு இல் வெள்ளம் - பதி 33/6
ஒன்னா தெவ்வர் முனை கெட விலங்கி - பதி 53/10
மா இரு விசும்பில் பல் மீன் ஒளி கெட
ஞாயிறு தோன்றி ஆங்கு மாற்றார் - பதி 64/12,13
நாடு கெட எருக்கி நல் கலம் தரூஉம் நின் - பதி 83/7
ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆர் இடை - கலி 2/8
ஏழும் தம் பயன் கெட இடை நின்ற நரம்பு அறூஉம் - கலி 8/10
ஏற்றவர் புலம் கெட திறை கொண்டு - கலி 106/49
நயம் நின்ற பொருள் கெட புரி அறு நரம்பினும் - கலி 142/4
கல் அடைபு கதிர் ஊன்றி கண் பயம் கெட பெயர - கலி 148/3
நெறி கெட விலங்கிய நீயிர் இ சுரம் - அகம் 8/17
வளம் கெழு மா மலை பயம் கெட தெறுதலின் - அகம் 91/2
நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி - அகம் 92/1
நெறி கெட வீழ்ந்த துன் அரும் கூர் இருள் - அகம் 138/16
இருள் மயங்கு யாமத்து இயவு கெட விலங்கி - அகம் 218/10
நுண் கேழ் அடங்க வாரி பையுள் கெட
நல் முகை அதிரல் போதொடு குவளை - அகம் 223/13,14
பயம் கெட திருகிய பைது அறு காலை - அகம் 263/4
அகல் இடம் செல்லுநர் அறிவு கெட தாஅய் - அகம் 299/8
வயங்காது ஆயினும் பயம் கெட தூக்கி - அகம் 333/7
காயல் சிறு தடி கண் கெட பாய்தலின் - அகம் 366/5
இரங்குவை அல்லையோ உரம் கெட மெலிந்தே - அகம் 379/27
புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை - புறம் 16/9
இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறை - புறம் 62/11
பொலம் பைம் தார் கெட பரிதலின் - புறம் 97/12
சிறியவும் பெரியவும் புழை கெட விலங்கிய - புறம் 205/7
புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே - புறம் 216/7
அறிவு கெட நின்ற நல்கூர்மையே - புறம் 266/13
மன்றுள் என்பது கெட தானே பாங்கற்கு - புறம் 283/7
வேந்து உடை தானை முனை கெட நெரிதர - புறம் 330/1
இடம் கெட தொகுத்த விடையின் - புறம் 366/22
TOP
கெடல் (7)
கெடல் அரும் துயரம் நல்கி - ஐங் 195/3
கெடல் அரும் பல் புகழ் நிலைஇ நீர் புக்கு - பதி 48/3
கெடல் அரும் காதலர் துனைதர பிணி நீங்கி - கலி 144/69
கெடல் அரும் துப்பின் விடு தொழில் முடிமார் - அகம் 105/11
கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன - அகம் 369/14
கெடல் அரும்-குரைய நாடு கிழவோயே - புறம் 201/20
கெடல் அரும் திருவ உண்மோ - புறம் 366/16
TOP
கெடாது (1)
கெடாது நிலைஇயர் நின் சேண் விளங்கு நல் இசை - மது 209
TOP
கெடாதோ (3)
பொய் கூறாய் என நின்னை புகழ்வது கெடாதோ தான் - கலி 100/8
இரந்தது நசை வாட்டாய் என்பது கெடாதோ தான் - கலி 100/12
முறை செய்தி என நின்னை மொழிவது கெடாதோ தான் - கலி 100/16
TOP
கெடாஅ (6)
கெடாஅ நல் இசை நிலைஇ - பதி 14/21
கெடாஅ நல் இசை தம் குடி நிறுமார் - பதி 81/13
கெடாஅ தீயின் உரு கெழு செல்லூர் - அகம் 220/3
கெடாஅ நல் இசை தென்னன் தொடாஅ - அகம் 342/10
கெடாஅ துப்பின் நின் பகை எதிர்ந்தோரே - புறம் 27/19
படாஅம் ஈத்த கெடாஅ நல் இசை - புறம் 145/2
TOP
கெடிற்ற (1)
குரூஉ கெடிற்ற குண்டு அகழி - புறம் 18/10
TOP
கெடிற்று (1)
இரும் கெடிற்று மிசையொடு பூம் கள் வைகுந்து - புறம் 384/9
TOP
கெடிறு (2)
முள் எயிற்று பாண்_மகள் இன் கெடிறு சொரிந்த - ஐங் 47/1
இரும் கழி இன கெடிறு ஆரும் துறைவன் - ஐங் 167/2
TOP
கெடின் (1)
நேர்வரும்-குரைய கலம் கெடின் புணரும் - குறி 14
TOP
கெடு (14)
உரிவை தைஇய ஊன் கெடு மார்பின் - திரு 129
கெடு துணை ஆகிய தவறோ வை எயிற்று - நற் 26/7
கெடு அறியாய் என் நெஞ்சத்தானே - நற் 400/10
நிலம் பைது அற்ற புலம் கெடு காலையும் - பதி 23/3
கெடு குடி பயிற்றிய கொற்ற வேந்தே - பதி 69/10
கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும் - பரி 2/25
கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு - பரி 20/34
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை - அகம் 187/17
கெடு மான் இன நிரை தரீஇய கலையே - அகம் 199/11
சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின் - அகம் 293/3
கெடு மக பெண்டிரின் தேரும் - அகம் 347/15
கெடு நா மொழியலன் அன்பினன் என நீ - அகம் 352/9
அடுதல் நின் புகழும் அன்றே கெடு இன்று - புறம் 39/7
கெடு இல் நல் இசை சூடி - புறம் 221/12
TOP
கெடுக்கும் (1)
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்
அறிவு உடை வேந்தன் நெறி அறிந்து கொளினே - புறம் 184/4,5
TOP
கெடுக (5)
கேள் அவன் நிலையே கெடுக நின் அவலம் - பெரும் 38
தேய்வன கெடுக நின் தெவ்வர் ஆக்கம் - மது 196
கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம் - மது 208
அறம் நனி சிறக்க அல்லது கெடுக
என வேட்டோளே யாயே யாமே - ஐங் 7/2,3
கெடுக சிந்தை கடிது இவள் துணிவே - புறம் 279/1
TOP
கெடுத்த (5)
காதலன் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து - அகம் 45/13
கலுழ்ந்த கண்ணள் காதலன் கெடுத்த
ஆதிமந்தி போல - அகம் 236/19,20
வீழ் பிடி கெடுத்த நெடும் தாள் யானை - அகம் 359/10
வீழ் பிடி கெடுத்த வெண் கோட்டு யானை - அகம் 392/2
இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து - புறம் 174/3
TOP
கெடுத்தது (1)
அதனை கெடுத்தது பெற்றார் போல் கொண்டு யான் முடித்தது - கலி 107/10
TOP
கெடுத்தாள் (1)
தோள் நலம் உண்டானை கெடுத்தாள் போல் தெருவில் பட்டு - கலி 147/7
TOP
கெடுத்து (4)
என் கெடுத்து இருந்த அறன் இல் யாய்க்கே - ஐங் 385/6
அழல் கவர் மருங்கின் உரு அற கெடுத்து
தொல் கவின் அழிந்த கண் அகன் வைப்பின் - பதி 15/7,8
உடை நிலை நல் அமர் கடந்து மறம் கெடுத்து
கடும் சின வேந்தர் செம்மல் தொலைத்த - பதி 70/9,10
அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு - அகம் 39/10
TOP
கெடுத்துப்படு (1)
கெடுத்துப்படு நன் கலம் எடுத்து கொண்டு ஆங்கு - நற் 182/5
TOP
கெடுதி (1)
இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி
நிலை பால் அறியினும் நின் நொந்து நின்னை - கலி 87/6,7
TOP
கெடுதியும் (2)
கெடுதியும் உடையேன் என்றனன் அதன்எதிர் - குறி 142
கெடுதியும் விடீஇர் ஆயின் எம்மொடு - குறி 144
TOP
கெடுநரும் (1)
கெடுநரும் உளரோ நம் காதலோரே - குறு 130/5
TOP
கெடுப்பவன் (1)
அல்லது கெடுப்பவன் அருள் கொண்ட முகம் போல - கலி 148/4
TOP
கெடுமே (1)
தானும் உண்ணான் உலகமும் கெடுமே - புறம் 184/11
TOP
கெடுமோ (1)
பெருமை என்பது கெடுமோ ஒரு நாள் - அகம் 30/12
TOP
கெடுவ (1)
ஓடு மீன் வழியின் கெடுவ யானே - நற் 16/6
TOP
கெடூஉம் (1)
கன்றிடின் காமம் கெடூஉம் மகள் இவன் - பரி 6/98
TOP
கெண்டி (10)
மல்லல் மன்றத்து மத விடை கெண்டி
மடி வாய் தண்ணுமை நடுவண் சிலைப்ப - பெரும் 143,144
புலரா ஈர் மணல் மலிர கெண்டி
நாள்_இரை கவர மாட்டி தன் - நற் 21/10,11
நெடும் கோட்டு புற்றத்து ஈயல் கெண்டி
எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல - நற் 59/2,3
வாள் வாய் சுறவொடு வய மீன் கெண்டி
நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும் - நற் 111/7,8
பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும் - நற் 114/2
புனை இரும் கதுப்பின் மனையோள் கெண்டி
குடி முறை பகுக்கும் நெடு மலை நாட - நற் 336/5,6
மோட்டு மணல் அடைகரை கோட்டு_மீன் கெண்டி
மணம் கமழ் பாக்கத்து பகுக்கும் - அகம் 10/11,12
செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி
ஞாழல் ஓங்கு சினை தொடுத்த கொடும் கழி - அகம் 20/4,5
இன் சிலை எழில் ஏறு கெண்டி புரைய - அகம் 265/12
திருந்தா மூரி பரந்துபட கெண்டி
அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும் - புறம் 391/5,6
TOP
கெண்டிய (2)
வாழை அம் சிலம்பில் கேழல் கெண்டிய
நில வரை நிவந்த பல உறு திரு மணி - நற் 399/4,5
கவலை கெண்டிய அகல் வாய் சிறு குழி - குறு 233/1
TOP
கெண்டும் (4)
குரும்பி கெண்டும் பெரும் கை ஏற்றை - அகம் 72/5
கொடு விரல் உளியம் கெண்டும்
வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே - அகம் 88/14,15
இரும் கல் முடுக்கர் திற்றி கெண்டும்
கொலை வில் ஆடவர் போல பல உடன் - அகம் 97/5,6
முல்லை படப்பை புல்வாய் கெண்டும்
காமர் புறவினதுவே காமம் - அகம் 284/10,11
TOP
கெண்டை (5)
குண்டு நீர் இலஞ்சி கெண்டை கதூஉம் - குறு 91/2
குருகு கொள குளித்த கெண்டை அயலது - குறு 127/1
கெண்டை பாய்தர அவிழ்ந்த - ஐங் 40/4
ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண்கண் கெண்டை
பல் வரி வண்டு இனம் வாய் சூழ் கவினொடும் - பரி 16/40,41
புலியொடு வில் நீக்கி புகழ் பொறித்த கிளர் கெண்டை
வலியினான் வணக்கிய வாடா சீர் தென்னவன் - கலி 104/3,4
TOP
கெண்டையின் (1)
வயல் கெண்டையின் வேல் பிறழினும் - புறம் 287/4
TOP
கெண்டையொடு (1)
நெடு நீர் கெண்டையொடு பொறித்த - புறம் 58/31
TOP
கெழ (1)
குருதி ஒண் பூ உரு கெழ கட்டி - நற் 34/3
TOP
கெழீஇ (16)
கடை கால்யாத்த பல் குடி கெழீஇ
கொடையும் கோளும் வழங்குநர் தடுத்த - பெரும் 399,400
பால் வார்பு கெழீஇ பல் கவர் வளி போழ்பு - மலை 114
கிழவிர் போல கேளாது கெழீஇ
சேண் புலம்பு அகல இனிய கூறி - மலை 166,167
பதி எழல் அறியா பழம் குடி கெழீஇ
வியல் இடம் பெறாஅ விழு பெரு நியமத்து - மலை 479,480
நயன் இல் மாக்களொடு கெழீஇ
பயன் இன்று அம்ம இ வேந்து உடை அவையே - நற் 90/11,12
பணியா உள்ளமொடு அணி வர கெழீஇ
நட்டோர்க்கு அல்லது கண் அஞ்சலையே - பதி 63/2,3
சினை வளர் வாளையின் கிளையொடு கெழீஇ
பழன உழவர் பாய் புனல் பரத்தந்து - பரி 7/38,39
கெழீஇ கேளிர் சுற்ற நின்னை - பரி 14/23
எல்லா கெழீஇ தொடி செறித்த தோள் இணை தத்தி - கலி 97/22
இன் அமர் கேளிரொடு ஏமுற கெழீஇ
நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர் என - அகம் 151/2,3
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ
பந்து வழி படர்குவள் ஆயினும் நொந்து நனி - அகம் 153/2,3
தாழை மணந்து ஞாழலொடு கெழீஇ
படப்பை நின்ற முட தாள் புன்னை - அகம் 180/12,13
கண்டிசின் மகளே கெழீஇ இயைவெனை - அகம் 369/1
தெருளாமையின் தீதொடு கெழீஇ
அருள் அற நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து - அகம் 379/2,3
பொத்து இல் நண்பின் பொத்தியொடு கெழீஇ
வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே - புறம் 212/9,10
துறை நனி கெழீஇ கம்புள் ஈனும் - புறம் 297/7
TOP
கெழீஇய (15)
கூடு கெழீஇய குடி வயினான் - பொரு 182
குடி கெழீஇய நால் நிலவரொடு - மது 123
தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே - நற் 97/4
சேவலொடு கெழீஇய செம் கண் இரும் குயில் - நற் 118/3
ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல் - நற் 315/7
பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல் - குறு 2/3
கலி மழை கெழீஇய கான்யாற்று இகு கரை - குறு 264/1
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து - பதி 14/11
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து - பதி 16/17
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து - பதி 40/13
பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல் - கலி 125/17
முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரை - அகம் 130/4
தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி - புறம் 24/17,18
கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய
நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோனே - புறம் 232/5,6
குன்று பல கெழீஇய
கான் கெழு நாடன் நெடும் தேர் அவியன் என - புறம் 383/22,23
TOP
கெழீஇயினர் (1)
கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும் - அகம் 93/2
TOP
கெழு (319)
உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்_மகள் - திரு 51
ஊரூர் கொண்ட சீர் கெழு விழவினும் - திரு 220
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர் - திரு 244
ஆல்_கெழு_கடவுள் புதல்வ மால் வரை - திரு 256
வேல் கெழு தட கை சால் பெரும் செல்வ - திரு 265
பரிசிலர் தாங்கும் உரு கெழு நெடு வேஎள் - திரு 273
பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள் - பொரு 53
முருகன் சீற்றத்து உரு கெழு குரிசில் - பொரு 131
உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை - சிறு 190
வீயா யாணர் வளம் கெழு பாக்கத்து - பெரும் 367
உரு கெழு பெரும் சிறப்பின் - மது 100
பயன் அறவு அறியா வளம் கெழு திரு நகர் - மது 216
பணை கெழு பெரும் திறல் பல் வேல் மன்னர் - மது 234
வான வண் கை வளம் கெழு செல்வர் - மது 442
ஒண் குழை திகழும் ஒளி கெழு திரு முகம் - மது 448
நாற்ற_உணவின் உரு கெழு பெரியோர்க்கு - மது 458
உரு கெழு பானாள் வருவன பெயர்தலின் - மது 542
அளந்து கடை அறியா வளம் கெழு தாரமொடு - மது 697
வலி கெழு தட கை தொடியொடு சுடர்வர - மது 720
பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது - நெடு 106
கலி கெழு மரம் மிசை சேணோன் இழைத்த - குறி 40
குன்று கெழு நாடன் எம் விழைதரு பெரு விறல் - குறி 199
உரு கெழு திறல் உயர் கோட்டத்து - பட் 36
உரு கெழு கரும்பின் ஒண் பூ போல - பட் 162
உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடியும் - பட் 171
உரு கெழு தாயம் ஊழின் எய்தி - பட் 227
பாடு இன் அருவி பயம் கெழு மீமிசை - மலை 278
சீர் கெழு சிறப்பின் விளங்கு இழை அணிய - மலை 570
துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம் - நற் 35/7
ஆர் கலி யாணர்த்து ஆயினும் தேர் கெழு
மெல்லம்புலம்பன் பிரியின் புல்லென - நற் 38/4,5
சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த - நற் 40/9
கான் கெழு நாடன் படர்ந்தோர்க்கு - நற் 61/9
பூ கெழு படப்பை சாய்க்காட்டு அன்ன என் - நற் 73/9
சினை-தொறும் தூங்கும் பயம் கெழு பலவின் - நற் 77/5
மல் அற்று அம்ம இ மலை கெழு வெற்பு என - நற் 93/4
மலை கெழு நாடன் கேண்மை பலவின் - நற் 116/6
கல்லக வரைப்பில் கான் கெழு சிறுகுடி - நற் 122/3
மலை கெழு நாடனொடு நம்மிடை சிறிய - நற் 136/5
துறை கெழு கொண்க நீ நல்கின் - நற் 172/9
குருதி வேட்கை உரு கெழு வய_மான் - நற் 192/1
பயம் கெழு பலவின் கொல்லி குடவரை - நற் 192/8
செ வேர் பலவின் பயம் கெழு கொல்லி - நற் 201/5
கல் கெழு நாடன் கேண்மை - நற் 206/10
துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே - நற் 211/9
பகல் கெழு செல்வன் குடமலை மறைய - நற் 215/2
கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே - நற் 232/9
மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த - நற் 244/9
உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி - நற் 255/2
குறவர் மகளிரேம் குன்று கெழு கொடிச்சியேம் - நற் 276/4
நாடு கெழு வெற்பனொடு அமைந்த நம் தொடர்பே - நற் 282/9
உரு கெழு யானை உடை கோடு அன்ன - நற் 299/1
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே - நற் 303/2
மகட்கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே - நற் 310/5
கொழும் சுளை பலவின் பயம் கெழு கவாஅன் - நற் 326/1
சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி - நற் 339/6
கலி கெழு மறுகின் விழவு அயரும்மே - நற் 348/4
கல் கெழு குறவர் காதல் மட_மகள் - நற் 353/5
கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய் - நற் 358/6
கல் கெழு சிறுகுடி பொலிய - நற் 386/9
வேல் கெழு தானை செழியன் பாசறை - நற் 387/8
கடும் பெயல் பொழியும் கலி கெழு வானே - நற் 387/11
கடல் கெழு மாந்தை அன்ன எம் - நற் 395/9
உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே - நற் 398/1
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து - நற் 400/7
பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடுகள_மகனே - குறு 31/6
கல் கெழு கானவர் நல்குறு மகளே - குறு 71/4
கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர் - குறு 87/3
கேழ் இரும் துறுகல் கெழு மலை நாடன் - குறு 111/5
வளம் கெழு சோழர் உறந்தை பெரும் துறை - குறு 116/2
உரு கெழு தாமரை வான் முகை வெரூஉம் - குறு 127/2
உறை பதி அன்று இ துறை கெழு சிறுகுடி - குறு 145/1
மலை கெழு நாடன் கேண்மை - குறு 170/4
புல்லென் காயா பூ கெழு பெரும் சினை - குறு 183/5
மலை கெழு நாடனை வரும் என்றோளே - குறு 201/7
விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்கு - குறு 218/1
கொடியன் ஆகிய குன்று கெழு நாடன் - குறு 252/2
மறம் கெழு தட கையின் வாங்கி உயங்கு நடை - குறு 255/3
வில் கெழு தானை விச்சியர் பெருமகன் - குறு 328/5
கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே - குறு 328/8
பொன் கோல் அவிர் தொடி தன் கெழு தகுவி - குறு 364/3
மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப - குறு 374/3
வறிது ஆகின்று என் மடம் கெழு நெஞ்சே - ஐங் 17/4
நீர் படர் தூம்பின் பூ கெழு துறைவன் - ஐங் 109/2
பொன் நிறம் விரியும் பூ கெழு துறைவனை - ஐங் 110/2
துறை கெழு கொண்கன் பிரிந்து என - ஐங் 140/2
துறை கெழு தொண்டி அன்ன இவள் நலனே - ஐங் 180/4
துறை கெழு கொண்கன் நல்கின் - ஐங் 181/4
கணம்கொள் அருவி கான் கெழு நாடன் - ஐங் 183/1
இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய் - ஐங் 185/2
துறை கெழு கொண்க நீ தந்த - ஐங் 193/3
கடல் கெழு கொண்கன் காதல் மட_மகள் - ஐங் 195/2
பூ கெழு குன்றம் நோக்கி நின்று - ஐங் 210/3
செல்வல் என்ப தம் மலை கெழு நாடே - ஐங் 221/4
குன்று கெழு நல் நாட்டு சென்ற பின்றை - ஐங் 239/3
நறும் தண் சோலை நாடு கெழு நெடுந்தகை - ஐங் 244/2
கொண்டனர் செல்வர்-தம் குன்று கெழு நாட்டே - ஐங் 254/4
குன்று கெழு நாடன் தானும் - ஐங் 263/3
குன்று கெழு நாடன் மறந்தனன் - ஐங் 265/3
உரு கெழு நெடும் சினை பாயும் நாடன் - ஐங் 272/3
குன்று கெழு நாடனொடு சென்ற என் நெஞ்சே - ஐங் 295/6
ஒழிந்தோள் கொண்ட என் உரம் கெழு நெஞ்சே - ஐங் 329/5
குன்று கெழு கானத்த பண்பு இல் மா கணம் - ஐங் 332/3
மனை கெழு பெண்டிர்க்கு நோவுமார் பெரிதே - ஐங் 382/5
பிறங்கு இரும் சோலை நம் மலை கெழு நாட்டே - ஐங் 395/6
கல் கெழு சிறப்பின் நம் ஊர் - ஐங் 396/4
கான் கெழு நாடன் மகளே - ஐங் 430/3
நாடு முன்னியரோ பீடு கெழு வேந்தன் - ஐங் 450/2
மறந்து அமைகல்லாது என் மடம் கெழு நெஞ்சே - ஐங் 457/4
ஆர் அரண் கடந்த சீர் கெழு தானை - ஐங் 459/3
துறந்தோன்-மன்ற மறம் கெழு குருசில் - ஐங் 471/3
கலி கெழு துணங்கை ஆடிய மருங்கின் - பதி 13/5
பாடல் சான்ற பயம் கெழு வைப்பின் - பதி 13/9
ஏமம் ஆகிய சீர் கெழு விழவின் - பதி 15/38
உரு கெழு மரபின் கடவுள் பேணியர் - பதி 21/5
பல் பயம் தழீஇய பயம் கெழு நெடும் கோட்டு - பதி 21/25
ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த - பதி 22/15
வேல் கெழு தானை வெருவரு தோன்றல் - பதி 22/16
நாடு கெழு தண் பணை சீறினை ஆதலின் - பதி 22/31
பாய் இருள் அகற்றும் பயம் கெழு பண்பின் - பதி 22/33
பயம் கெழு பொழுதோடு ஆநியம் நிற்ப - பதி 24/25
இணர் ததை ஞாழல் கரை கெழு பெரும் துறை - பதி 30/1
பணை கெழு வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து - பதி 30/30
மண் கெழு ஞாலத்து மாந்தர் ஒராங்கு - பதி 31/2
ஓடை விளங்கும் உரு கெழு புகர் நுதல் - பதி 34/6
வென்றி மேவல் உரு கெழு சிறப்பின் - பதி 43/24
நாடு கெழு தாயத்து நனம் தலை அருப்பத்து - பதி 45/9
வளம் கெழு சிறப்பின் உலகம் புரைஇ - பதி 50/4
பீடு கெழு செல்வம் மரீஇய கண்ணே - பதி 50/26
மறம் கெழு போந்தை வெண் தோடு புனைந்து - பதி 51/31
தெறு கதிர் திகழ்தரும் உரு கெழு ஞாயிற்று - பதி 52/29
பிறிது ஆறு செல்-மதி சினம் கெழு குருசில் - பதி 53/14
வளம் கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை - பதி 57/11
வாடை தூக்கும் நாடு கெழு பெரு விறல் - பதி 61/2
ஆண்டோர் மன்ற இ மண் கெழு ஞாலம் - பதி 69/12
பயம் கெழு வெள்ளி ஆநியம் நிற்ப - பதி 69/14
சினம் கெழு குருசில் நின் உடற்றிசினோர்க்கே - பதி 72/16
உலகம் புரக்கும் உரு கெழு சிறப்பின் - பதி 81/1
வண்ண கருவிய வளம் கெழு கமம் சூல் - பதி 81/2
உரு கெழு மரபின் அயிரை பரைஇ - பதி 88/12
வியல் உளை அரிமான் மறம் கெழு குருசில் - பதி 88/15
ஓவத்து அன்ன உரு கெழு நெடு நகர் - பதி 88/28
உரு கெழு கருவிய பெரு மழை சேர்ந்து - பதி 88/33
பயம் கடை அறியா வளம் கெழு சிறப்பின் - பதி 89/6
உரு கெழு மரபின் அயிரை பரவியும் - பதி 90/19
ஞாண் பொர விளங்கிய வலி கெழு தட கை - பதி 90/33
வளம் கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை - பதி 90/48
ஊழி ஆழிக்-கண் இரு நிலம் உரு கெழு
கேழலாய் மருப்பின் உழுதோய் எனவும் - பரி 3/23,24
வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்து - பரி 5/59
குறிஞ்சி குன்றவர் மறம் கெழு வள்ளி தமர் - பரி 9/67
உரு கெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர - பரி 11/4
புரை கெழு சையம் பொழி மழை தாழ - பரி 11/14
உரு கெழு தோற்றம் உரைக்குங்கால் நாளும் - பரி 11/59
கிளைக்கு உற்ற உழை சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஓர்-மின் - பரி 11/127
முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து பின்னும் - பரி 11/131
ஒளி திகழ் உத்தி உரு கெழு நாகம் - பரி 12/4
அகில் கெழு சாந்தம் மாற்றி ஆற்ற - பரி 12/13
புகை கெழு சாந்தம் பூசுவோரும் - பரி 12/14
சிலம்பாறு அணிந்த சீர் கெழு திருவின் - பரி 15/22
ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை - பரி 17/30
தொய்யா விழு சீர் வளம் கெழு வையைக்கும் - பரி 17/44
தார் ஆர் முடியர் தகை கெழு மார்பினர் - பரி 22/23
வரை கெழு செல்வன் நகர் - பரி 23/49
உரு கெழு கூடலவரொடு வையை - பரி 24/91
சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை - கலி 9/15
பயம் கெழு பல் கதிர் பால் போலும் பொழுதொடு - கலி 31/11
பலவின் பழத்துள் தங்கும் மலை கெழு வெற்பனை - கலி 41/16
வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள் - கலி 71/3
கனவினால் சென்றேன் கலி கெழு கூடல் - கலி 92/11
முரைசு கெழு முது குடி முரண் மிகு செல்வற்கு - கலி 105/2
சீர் கெழு சிலை நிலை செயிர் இகல் மிகுதியின் சின பொதுவர் - கலி 105/27
உரு கெழு மா நிலம் இயற்றுவான் - கலி 106/18
மாற்றாரை கடக்க எம் மறம் கெழு கோவே - கலி 106/50
வருந்தினை அளிய என் மடம் கெழு நெஞ்சே - கலி 123/19
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன் - அகம் 0/15
கல் கெழு சிறுகுடி கானவன் மகளே - அகம் 7/22
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே - அகம் 10/13
பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின் - அகம் 13/11
வளம் கெழு திரு நகர் பந்து சிறிது எறியினும் - அகம் 17/1
ஊர் எழுந்து அன்ன உரு கெழு செலவின் - அகம் 17/11
கணம்கொள் அருவி கான் கெழு நாடன் - அகம் 22/2
முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடுநாள் - அகம் 22/11
செல் சமம் கடந்த வில் கெழு தட கை - அகம் 25/19
நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் - அகம் 27/10
பூ கெழு தொடலை நுடங்க எழுந்துஎழுந்து - அகம் 28/9
எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க - அகம் 29/13
மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே - அகம் 29/23
தமிழ் கெழு மூவர் காக்கும் - அகம் 31/14
சேரல் செம்பியன் சினம் கெழு திதியன் - அகம் 36/15
மழை விளையாடும் வளம் கெழு சிறுமலை - அகம் 47/16
மலை கெழு சீறூர் புலம்ப கல்லென - அகம் 52/7
அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை - அகம் 59/12
நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் - அகம் 62/2
களிறு கெழு தானை பொறையன் கொல்லி - அகம் 62/13
முடங்கு தாள் உதைத்த பொலம் கெழு பூழி - அகம் 63/5
மலை மிசை குலைஇய உரு கெழு திருவில் - அகம் 84/1
கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின் - அகம் 87/7
வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும் - அகம் 89/16
வளம் கெழு மா மலை பயம் கெட தெறுதலின் - அகம் 91/2
அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன - அகம் 93/5
பனிவரை நிவந்த பயம் கெழு கவாஅன் - அகம் 98/1
கான் கெழு நாடன் கேட்பின் - அகம் 98/29
அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி - அகம் 103/7
சுரம் கெழு கவலை கோட்பால் பட்டு என - அகம் 109/9
வளம் கெழு நல் நாடு அன்ன என் தோள் மணந்து - அகம் 113/7
ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில் - அகம் 113/13
வளம் கெழு திரு நகர் புலம்ப போகி - அகம் 117/4
பயம் கெழு வைப்பின் பல் வேல் எவ்வி - அகம் 126/13
பின் நிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே - அகம் 126/22
உரு கெழு சிறப்பின் முருகு மனை தரீஇ - அகம் 138/10
வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ - அகம் 149/11
சினம் கெழு தானை தித்தன் வெளியன் - அகம் 152/5
வில் கெழு தட கை வெல் போர் வானவன் - அகம் 159/15
நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய் - அகம் 162/13
கோள் அறவு அறியா பயம் கெழு பலவின் - அகம் 162/19
வில் கெழு தானை பசும்பூண் பாண்டியன் - அகம் 162/21
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம் - அகம் 166/7
கலி கெழு மறவர் காழ் கோத்து ஒழிந்ததை - அகம் 169/4
திருவில் தேஎத்து குலைஇ உரு கெழு
மண் பயம் பூப்ப பாஅய் - அகம் 175/16,17
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர் - அகம் 181/14
ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை - அகம் 181/15
கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன் - அகம் 198/15
உரு கெழு பெரும் கடல் உவவு கிளர்ந்து ஆங்கு - அகம் 201/9
மனை கெழு பெண்டு யான் ஆகுக-மன்னே - அகம் 203/18
வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி - அகம் 205/9
பல் பழ பலவின் பயம் கெழு கொல்லி - அகம் 208/22
செ வேர் பலவின் பயம் கெழு கொல்லி - அகம் 209/15
மத்தி நாட்டிய கல் கெழு பனி துறை - அகம் 211/15
சீர் கெழு வியல் நகர் சிலம்பு நக இயலி - அகம் 219/1
கெடாஅ தீயின் உரு கெழு செல்லூர் - அகம் 220/3
பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்து என - அகம் 233/4
சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின் - அகம் 246/10
மா கெழு தானை வம்ப மோரியர் - அகம் 251/12
உலகு கிளர்ந்து அன்ன உரு கெழு வங்கம் - அகம் 255/1
மறம் கெழு தானை கொற்ற குறும்பியன் - அகம் 262/9
வயங்கு கதிர் விரிந்த உரு கெழு மண்டிலம் - அகம் 263/2
உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும் - அகம் 268/4
பணை கெழு வேந்தர் பல் படை தானை - அகம் 278/2
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து - அகம் 282/11
மலை கெழு நாடன் மணவாக்காலே - அகம் 292/15
பயம் கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு - அகம் 298/1
ஒண் தளிர் அவிர்வரும் ஒலி கெழு பெரும் சினை - அகம் 298/5
நலம் கெழு திரு முகம் இறைஞ்சி நிலம் கிளையா - அகம் 299/13
வருவர் என்று உணர்ந்த மடம் கெழு நெஞ்சம் - அகம் 303/15
கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே - அகம் 315/18
புலத்தல் ஒல்லுமோ மனை கெழு மடந்தை - அகம் 316/11
கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை - அகம் 318/12
மறம் கெழு தானை அரசருள்ளும் - அகம் 338/2
கலி கெழு கொற்கை எதிர்கொள இழிதரும் - அகம் 350/13
கிளை தரு தெள் விளி கெழு முடை பயிரும் - அகம் 363/14
கடல் கெழு செல்வி கரை நின்று ஆங்கு - அகம் 370/12
சுடர் கெழு மண்டிலம் அழுங்க ஞாயிறு - அகம் 378/14
காடு கெழு நெடு வேள் பாடு கொளைக்கு ஏற்ப - அகம் 382/5
உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்ப - அகம் 393/22
குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ - அகம் 398/10
பாடு இன் தெண் மணி பயம் கெழு பெரு நிரை - அகம் 399/8
இருள் நீர் இட்டு சுரம் நீந்தி துறை கெழு
மெல்லம்புலம்பன் வந்த ஞான்றை - அகம் 400/18,19
சீர் கெழு கொடியும் அ ஏறு என்ப - புறம் 1/4
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும் - புறம் 6/2
முருகன் சீற்றத்து உரு கெழு குருசில் - புறம் 16/12
உரவு சினம் திருகிய உரு கெழு ஞாயிறு - புறம் 25/3
உரு கெழு மதியின் நிவந்து சேண் விளங்க - புறம் 31/4
பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின் - புறம் 34/17
நாடு கெழு செல்வத்து பீடு கெழு வேந்தே - புறம் 35/12
நாடு கெழு செல்வத்து பீடு கெழு வேந்தே - புறம் 35/12
சினம் கெழு தானை செம்பியன் மருக - புறம் 37/6
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து - புறம் 39/8
பீடு கெழு நோன் தாள் பாடுங்காலே - புறம் 39/18
குருதி வேட்கை உரு கெழு முரசம் - புறம் 50/5
கலி கெழு கடவுள் கந்தம் கைவிட - புறம் 52/12
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே - புறம் 58/13
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி - புறம் 58/17
பௌவம் உடுத்த இ பயம் கெழு மா நிலம் - புறம் 58/22
குடுமிய ஆக பிறர் குன்று கெழு நாடே - புறம் 58/32
வெயில் மறை கொண்ட உரு கெழு சிறப்பின் - புறம் 60/11
ஆடவர் பிணிக்கும் பீடு கெழு நெடுந்தகை - புறம் 68/7
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண் - புறம் 69/15
வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின் - புறம் 71/10
சிறுசொல் சொல்லிய சினம் கெழு வேந்தரை - புறம் 72/7
முரசு கெழு தாயத்து அரசோ தஞ்சம் - புறம் 73/3
முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே - புறம் 75/12
முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே - புறம் 75/12
நாடு கெழு திருவில் பசும் பூண் செழியன் - புறம் 76/9
வணங்கு தொடை பொலிந்த வலி கெழு நோன் தாள் - புறம் 78/1
பணை கெழு வேந்தரை இறந்தும் - புறம் 119/6
வீயா திருவின் விறல் கெழு தானை - புறம் 122/4
பயன் கெழு முள்ளூர் மீமிசை - புறம் 123/5
பீடு கெழு மலையன் பாடியோரே - புறம் 124/5
முரைசு கெழு செல்வர் நகர் போலாதே - புறம் 127/10
பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே - புறம் 128/7
படுமலை நின்ற பயம் கெழு சீறியாழ் - புறம் 135/7
மலை கெழு நாடன் மா வேள் ஆஅய் - புறம் 135/13
பற்றல் தேற்றா பயம் கெழு தாயமொடு - புறம் 135/18
முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை - புறம் 137/2
ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசை - புறம் 157/8
உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்த - புறம் 160/1
சீர் கெழு விழு புகழ் ஏத்துகம் பலவே - புறம் 160/30
மலை கெழு நாடன் கூர் வேல் பிட்டன் - புறம் 170/8
மண் கெழு தானை ஒண் பூண் வேந்தர் - புறம் 197/7
வேல் கெழு குருசில் கண்டேன் ஆதலின் - புறம் 198/10
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர் - புறம் 202/6
வெண்குடை விளக்கும் விறல் கெழு வேந்தே - புறம் 213/2
சீர் கெழு நோன் தாள் அகுதை-கண் தோன்றிய - புறம் 233/3
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும் - புறம் 236/2
மலை கெழு நாட மா வண் பாரி - புறம் 236/3
புல்லென்றனையால் வளம் கெழு திரு நகர் - புறம் 250/6
வையம் காவலர் வளம் கெழு திரு நகர் - புறம் 261/6
பயம் கெழு மா மழை பெய்யாது மாறி - புறம் 266/1
நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல் - புறம் 266/6
பீடு கெழு சென்னி கிழமையும் நினதே - புறம் 272/8
அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல் - புறம் 313/1
பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல் - புறம் 337/17
மறம் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே - புறம் 339/14
பருதி சூழ்ந்த இ பயம் கெழு மா நிலம் - புறம் 358/1
உரு கெழு பேய்_மகள் அயர - புறம் 371/27
கான் கெழு நாடன் நெடும் தேர் அவியன் என - புறம் 383/23
பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை - புறம் 388/14
உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து - புறம் 392/6
பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே - புறம் 393/25
என்றும் செல்லேன் அவன் குன்று கெழு நாட்டே - புறம் 394/18
TOP
கெழுதகை-கொல் (1)
கெழுதகை-கொல் இவள் அணங்கியோற்கே - ஐங் 245/4
TOP
கெழுதகைமையின் (1)
கெழுதகைமையின் அழுதன தோழி - குறு 241/2
TOP
கெழும (1)
பெரும் பல் யாணர் கூலம் கெழும
நல் பல் ஊழி நடுவு நின்று ஒழுக - பதி 89/7,8
TOP
கெழுமி (2)
தேர் ஓட துகள் கெழுமி
நீறு ஆடிய களிறு போல - பட் 47,48
பேதைமையால் பெருந்தகை கெழுமி
நோதக செய்தது ஒன்று உடையேன்-கொல்லோ - குறு 230/3,4
TOP
கெழுமிய (1)
காதல் கெழுமிய நலத்தள் ஏது இல் - நற் 161/10
TOP
கெழுமின (1)
தேர் ஓட துகள் கெழுமின தெருவு - புறம் 345/2
TOP
கெழுவு (1)
மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை - பரி 6/6
TOP
கெழுவும் (1)
கேளிர் மணலின் கெழுவும் இதுவோ - பரி 8/63
TOP
கெழுவுற்ற (1)
கேளிர்கள் நெஞ்சு அழுங்க கெழுவுற்ற செல்வங்கள் - கலி 149/8
TOP
கெளிற்று (1)
சினை கெளிற்று ஆர்கையை அவர் ஊர் பெயர்தி - நற் 70/5
TOP
|
|
|