<<முந்திய பக்கம் சங்க இலக்கியம் - தொடரடைவு

மை - முதல் சொற்கள்
மை 112
மை_ஈர்_ஓதி 1
மைந்த 4
மைந்தர் 25
மைந்தர்க்கு 1
மைந்தரும் 5
மைந்தரொடு 4
மைந்தரோடு 1
மைந்தன் 2
மைந்தின் 6
மைந்தினர் 1
மைந்தினன் 1
மைந்தினான் 1
மைந்தினை 1
மைந்தினோய் 1
மைந்தினோன் 1
மைந்து 24
மைந்துடன் 1
மைப்பு 1
மைம் 1
மைம்_மீன் 1
மையல் 27
மையலன் 1
மையலை 2
மையாடல் 1
மையாப்பது 1
மையின் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    மை (112)
மை இரும் குட்டத்து மகவொடு வழங்கி - பெரும் 271
மை தீர்ந்து கிளர்ந்து விளங்க - மது 9
மை உக்கு அன்ன மொய் இரும் கூந்தல் - மது 417
மை படு பெரும் தோள் மழவர் ஓட்டி - மது 687
மரம்-தோறும் மை வீழ்ப்ப - மது 754
மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய - பட் 159
மை என விரிந்தன நீள் நறு நெய்தல் - மலை 124
மை படு மா மலை பனுவலின் பொங்கி - மலை 361
மை ஈர் ஓதி பெரு மட தகையே - நற் 29/11
மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே - நற் 57/10
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் - நற் 83/5
மலை அயல் கலித்த மை ஆர் ஏனல் - நற் 108/1
வரை கிழிப்பு அன்ன மை இருள் பரப்பி - நற் 154/2
மை படு சிறு நெறி எஃகு துணை ஆக - நற் 168/9
மை அணல் காளை பொய் புகல் ஆக - நற் 179/8
மை அணல் எருத்தின் முன்பின் தட கை - நற் 198/9
மை சூழ் வெற்பின் மலை பல இறந்து - நற் 214/7
மை அற விளங்கிய மணி நிற விசும்பில் - நற் 231/1
ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்து - நற் 252/8
வாழேன் ஐய மை கூர் பனியே - நற் 292/9
மை இரும் பனை மிசை பைதல உயவும் - நற் 335/7
மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல் - நற் 344/2
மை படு மால் வரை பாடினள் கொடிச்சி - நற் 373/3
மை பட்டு அன்ன மா முக முசு கலை - குறு 121/2
மை ஈர் ஓதி மாஅயோள்-வயின் - குறு 199/5
மை இரும் கூந்தல் மடந்தை நட்பே - குறு 209/7
திரி மருப்பு எருமை இருள் நிற மை ஆன் - குறு 279/1
மை அணி மருங்கின் மலை_அகம் சேரவும் - குறு 319/4
மை படு சிலம்பின் ஐவனம் வித்தி - குறு 371/2
கையற வீழ்ந்த மை இல் வானமொடு - ஐங் 235/1
மால் வெள்ளோத்திரத்து மை இல் வால் இணர் - ஐங் 301/1
மை வரை நாட வருந்துவள் பெரிதே - ஐங் 301/4
மை அணல் காளையொடு பைய இயலி - ஐங் 389/2
மை அற விளங்கிய கழல் அடி - ஐங் 399/4
மை அறு சுடர் நுதல் விளங்க கறுத்தோர் - ஐங் 474/1
மை ஊன் பெய்த வெண்ணெல் வெண் சோறு - பதி 12/17
மை இல் அறிவினர் செவ்விதின் நடந்து தம் - பதி 22/8
மணி நிற மை இருள் அகல நிலா விரிபு - பதி 31/11
மை அற விளங்கிய வடு வாழ் மார்பின் - பதி 38/11
வைகு ஆர்ப்பு எழுந்த மை படு பரப்பின் - பதி 41/22
மை அணிந்து எழுதரு மா இரும் பல் தோல் - பதி 52/5
மை படு மலர் கழி மலர்ந்த நெய்தல் - பதி 64/16
மா உடை மலர் மார்பின் மை இல் வால் வளை மேனி - பரி 1/3
மை இல் கமலமும் வெள்ளமும் நுதலிய - பரி 2/14
இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால் - பரி 7/58
இருள் மை ஈர் உண்கண் இலங்கு இழை ஈன்றாட்கு - பரி 8/59
மை இரு நூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று - பரி 9/8
மை புரை மட பிடி மட நல்லார் விதிர்ப்பு உற - பரி 10/47
மலர் அகல் மார்பின் மை படி குடுமிய - பரி 15/9
மை படு சிலம்பின் கறியொடும் சாந்தொடும் - பரி 16/2
மை வளம் பூத்த மலர் ஏர் மழை கண்ணார் - பரி 18/16
மை இல் வாள் முகம் பசப்பு ஊரும்மே - கலி 7/8
மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ - கலி 15/15
மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ள - கலி 27/17
மை அற விளங்கிய துவர் மணல் அது அது - கலி 32/2
மை தவழ் வெற்பன் மண அணி காணாமல் - கலி 39/42
மை படு சென்னி பய மலை நாடனை - கலி 43/6
மை தீர்ந்தன்று மதியும் அன்று - கலி 55/10
மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை - கலி 62/14
மை தபு கிளர் கொட்டை மாண் பதி படர்தரூஉம் - கலி 74/4
மை அற விளங்கிய மணி மருள் அம் வாய் தன் - கலி 81/1
மை இல் செம் துகிர் கோவை அவற்றின் மேல் - கலி 85/4
மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண் - கலி 85/11
மை படு சென்னி மழ களிற்று ஓடை போல் - கலி 86/1
மை அறு மண்டிலம் வேட்டனள் வையம் - கலி 141/12
மை இல் சுடரே மலை சேர்தி நீ ஆயின் - கலி 142/41
மை ஈர் ஓதி மட மொழியோயே - கலி 150/23
மார்பினஃதே மை இல் நுண் ஞாண் - அகம் 0/3
மை படு மா மலை விலங்கிய சுரனே - அகம் 17/22
மலர் பாடு ஆன்ற மை எழில் மழை கண் - அகம் 33/9
வைகு புலர் விடியல் மை புலம் பரப்ப - அகம் 41/1
மை இரும் கானம் நாறும் நறு நுதல் - அகம் 43/10
மை ஈர் ஓதி மடவீர் நும் வாய் - அகம் 48/18
மை இல் மான் இனம் மருள பையென - அகம் 71/5
மை எழில் உண்கண் கலுழ - அகம் 81/14
உவ இனி வாழிய நெஞ்சே மை அற - அகம் 87/12
மை படு திண் தோள் மலிர வாட்டி - அகம் 89/11
மை ஆடு சென்னிய மலை கிழவோனே - அகம் 108/18
மை அணி யானை மற போர் செழியன் - அகம் 116/13
மை தோய் சிமைய மலை முதல் ஆறே - அகம் 119/20
வை வால் ஓதி மை அணல் ஏய்ப்ப - அகம் 125/5
மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதர - அகம் 125/10
மை தவழ் உயர் சிமை குதிரை கவாஅன் - அகம் 143/13
மை படு மா மலை விலங்கிய சுரனே - அகம் 153/19
மை_ஈர்_ஓதி அரும் படர் உழத்தல் - அகம் 173/5
மை படு மா மலை விலங்கிய சுரனே - அகம் 187/24
மை படு விடர்_அகம் துழைஇ ஒய்யென - அகம் 192/10
மதி உடம்பட்ட மை அணல் காளை - அகம் 221/6
மை ஈர் ஓதி வாள் நுதல் குறு_மகள் - அகம் 230/5
மை எழில் உண்கண் மடந்தையொடு வையை - அகம் 256/10
மை பட்டு அன்ன மா முக முசு இனம் - அகம் 267/9
மை ஈர் ஓதி மாஅயோளே - அகம் 279/17
மை அற விரிந்த படை அமை சேக்கை - அகம் 289/12
மை நிற உருவின் மணி கண் காக்கை - அகம் 327/15
கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில் - அகம் 329/12
எய்த வந்தனரே தோழி மை எழில் - அகம் 363/17
மை ஈர் ஓதி மடவோய் யானும் நின் - அகம் 386/10
மை ஈர் ஓதி மட நல்லீரே - அகம் 388/10
மை இல் பளிங்கின் அன்ன தோற்ற - அகம் 399/13
வாயில் மாடம்-தொறும் மை விடை வீழ்ப்ப - புறம் 33/21
மை படு மருங்குல் பொலிய மஞ்ஞை - புறம் 50/2
நொய்தால் அம்ம தானே மை அற்று - புறம் 75/10
அடி புனை தொடு கழல் மை அணல் காளைக்கு என் - புறம் 83/1
மை ஊன் மொசித்த ஒக்கலொடு துறை நீர் - புறம் 96/7
மட்டு வாய் திறப்பவும் மை விடை வீழ்ப்பவும் - புறம் 113/1
நெய்யொடு துறந்த மை இரும் கூந்தல் - புறம் 147/6
ஐவனம் வித்தி மை உற கவினி - புறம் 159/17
மை அணி நெடு வரை ஆங்கண் ஒய்யென - புறம் 174/11
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை - புறம் 261/8
மை இரும் பித்தை பொலிய சூட்டி - புறம் 269/3
கை பய பெயர்த்து மை இழுது இழுகி - புறம் 281/3
மை விடை இரும் போத்து செம் தீ சேர்த்தி - புறம் 364/4

 TOP
 
    மை_ஈர்_ஓதி (1)
மை_ஈர்_ஓதி அரும் படர் உழத்தல் - அகம் 173/5

 TOP
 
    மைந்த (4)
ஒடியா மைந்த நின் பண்பு பல நயந்தே - பதி 15/40
புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறே - பதி 34/12
புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறே - பதி 35/1
ஐம் கைம் மைந்த அறு கை நெடுவேள் - பரி 3/37

 TOP
 
    மைந்தர் (25)
மங்கையர் கணவ மைந்தர் ஏறே - திரு 264
வாள் மிகு மற மைந்தர்/தோள் முறையான் வீறு முற்றவும் - மது 53,54
மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் - பட் 109
மகளிர் கோதை மைந்தர் மலையவும் - பட் 110
மாறா மைந்தர் மாறு நிலை தேய - பதி 34/9
மாறா மைந்தர் மாறு நிலை தேய - பதி 94/7
அடியோர் மைந்தர் அகலத்து அகலா - பரி 8/43
மைந்தர் மார்வம் வழி வந்த - பரி 8/122
அம் தண் கரை நின்று பாய்வாராய் மைந்தர்/ஒளிறு இலங்கு எஃகொடு வாள் மாறு உழக்கி - பரி  10/108,109
மா மயில் அன்னார் மறையில் புணர் மைந்தர்/காமம் கள விட்டு கை கொள் கற்பு-உற்று என - பரி  11/41,42
நனை சேர் கதுப்பினுள் தண் போது மைந்தர்/மலர் மார்பின் சோர்ந்த மலர் இதழ் தாஅய் - பரி  16/34,35
மறு அற்ற மைந்தர் தோள் எய்தார் மணந்தார் - பரி 19/92
மகளிர் கோதை மைந்தர் புனையவும் - பரி 20/20
மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும் - பரி 20/21
மகளிரை மைந்து உற்று அமர்பு-உற்ற மைந்தர்/அகலம் கடிகுவேம் என்பவை யார்க்கானும் - பரி  20/91,92
வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவிய - பரி 21/46
தார் அணி மைந்தர் தவ பயன் சான்ம் என - பரி 22/28
மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்று - பரி 24/60
குறையா மைந்தர் கோள் எதிர் எடுத்த - கலி 104/30
மறுத்து மறுத்து மைந்தர் சார - கலி 104/52
மெல் இணர் கண்ணி மிலைந்த மைந்தர்/எல் வளை மகளிர் தலைக்கை தரூஉந்து - புறம் 24/8,9
பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டு - புறம் 62/2
மற மைந்தர் மைந்து கண்டவர் - புறம் 98/13
மைந்தர் தந்தை - புறம் 340/6
மைந்தர் ஆடிய மயங்கு பெரும் தானை - புறம் 373/7

 TOP
 
    மைந்தர்க்கு (1)
மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து - புறம் 221/5

 TOP
 
    மைந்தரும் (5)
மணி அணி யானை மிசை மைந்தரும் மடவாரும் - பரி 24/69
விழு_தகை நல்லாரும் மைந்தரும் ஆடி - பரி 24/81
நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும்/தேன் இமிர் காவில் புணர்ந்திருந்து ஆடும்-மார் - கலி  92/65,66
மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்று - கலி 103/61
வாங்கு எழில் நல்லாரும் மைந்தரும் மல்லல் ஊர் - கலி 104/61

 TOP
 
    மைந்தரொடு (4)
மான மைந்தரொடு மன்னர் ஏத்த நின் - பதி 42/19
முனை புகல் புகல்வின் மாறா மைந்தரொடு/உரும் எறி வரையின் களிறு நிலம் சேர - பதி 84/17,18
போல் ஆற்று முன்பின் புனை கழல் மைந்தரொடு/தார் அணி மைந்தர் தவ பயன் சான்ம் என - பரி  22/27,28
மற தகை மைந்தரொடு ஆண்டு பட்டனவே - புறம் 63/4

 TOP
 
    மைந்தரோடு (1)
மணி அணிந்த தம் உரிமை_மைந்தரோடு ஆடி - பரி 24/49

 TOP
 
    மைந்தன் (2)
மைந்தன் அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு என - பரி 19/73
மறம் புகல் மைந்தன் மலைந்த மாறே - புறம் 271/8

 TOP
 
    மைந்தின் (6)
மாறா மைந்தின் ஊறு பட தாக்கி - மலை 332
தார் மிகு மைந்தின் நார்முடிச்சேரல் - பதி 40/16
அழல் விடுபு மரீஇய மைந்தின்/தொழில் புகல் யானை நல்குவன் பலவே - பதி 40/30,31
துணி புனல் ஆக துறை வேண்டும் மைந்தின்/அணி அணி ஆகிய தாரர் கருவியர் - பரி  6/30,31
அறாஅ மைந்தின் செறாஅ செம் கண் - பரி 13/58
மற படை குதிரை மாறா மைந்தின்/துறக்கம் எய்திய தொய்யா நல் இசை - அகம் 233/6,7

 TOP
 
    மைந்தினர் (1)
வாயில் கொள்ளா மைந்தினர் வயவர் - பதி 81/9

 TOP
 
    மைந்தினன் (1)
படை பழி தாரா மைந்தினன் ஆகலும் - புறம் 157/3

 TOP
 
    மைந்தினான் (1)
மறம் மிகு வேழம் தன் மாறுகொள் மைந்தினான்/புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல - கலி  53/3,4

 TOP
 
    மைந்தினை (1)
பாய்ந்து ஆய்ந்த தானை பரிந்து ஆனா மைந்தினை/சாந்து அழி வேரை சுவல் தாழ்ந்த கண்ணியை - கலி  96/2,3

 TOP
 
    மைந்தினோய் (1)
நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே - புறம் 15/25

 TOP
 
    மைந்தினோன் (1)
மற புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும் - புறம் 290/6

 TOP
 
    மைந்து (24)
படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ் - பெரும் 398
மைந்து இறைகொண்ட மலர்ந்து ஏந்து அகலத்து - குறி 121
மைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும் - மலை 260
மைந்து மலி பெரும் புகழ் அறியார் மலைந்த - பதி 23/16
மைந்து உடை நல் அமர் கடந்து வலம் தரீஇ - பதி 42/9
மைந்து உடை ஆர் எயில் புடை பட வளைஇ - பதி 62/4
மைந்து மலி ஊக்கத்த கந்து கால் கீழ்ந்து - பதி 94/8
மைந்து உடை ஒருவனும் மடங்கலும் நீ - பரி 1/47
அறத்தினுள் அன்பு நீ மறத்தினுள் மைந்து நீ - பரி 3/65
மைந்து உற்றாய் வெம் சொல் மட மயில் சாயலை - பரி 20/69
மகளிரை மைந்து உற்று அமர்பு-உற்ற மைந்தர் - பரி 20/91
தானை தலைத்தலை வந்து மைந்து உற்று - பரி 22/16
மைந்து உடை மார்பில் சுணங்கும் நினைத்து காண் - கலி 18/4
மாதர் மகளிரும் மைந்தரும் மைந்து உற்று - கலி 103/61
மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது - அகம் 75/3
உரவு கார் கடுப்ப மறலி மைந்து உற்று - அகம் 212/13
மைந்து மலி களிற்றின் தலை புணை தழீஇ - அகம் 266/3
மரீஇயோர் அறியாது மைந்து பட்டன்றே - புறம் 13/8
மைந்து மலிந்த மழ களிறு - புறம் 22/8
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே மைந்து உடை - புறம் 73/8
மைந்து உடை மல்லன் மத வலி முருக்கி - புறம் 80/2
மற மைந்தர் மைந்து கண்டவர் - புறம் 98/13
மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து/துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில் - புறம் 221/5,6
மைந்து உடை யானை கை வைத்து உறங்கவும் - புறம் 229/18

 TOP
 
    மைந்துடன் (1)
மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறும்-மார் - கலி 101/7

 TOP
 
    மைப்பு (1)
மைப்பு அற புழுக்கின் நெய் கனி வெண் சோறு - அகம் 136/1

 TOP
 
    மைம் (1)
மைம்_மீன் புகையினும் தூமம் தோன்றினும் - புறம் 117/1

 TOP
 
    மைம்_மீன் (1)
மைம்_மீன் புகையினும் தூமம் தோன்றினும் - புறம் 117/1

 TOP
 
    மையல் (27)
மையல் கொண்டும் ஒய்யென உயிர்த்தும் - முல் 83
மையல் வேழம் மடங்கலின் எதிர்தர - குறி 165
மையல் மட பிடி இனைய - நற் 114/11
மையல் நெஞ்சம் என் மொழி கொளினே - நற் 146/11
மான் அமர்ப்பு அன்ன மையல் நோக்கமொடு - நற் 179/4
கையற வந்த மையல் மாலை - நற் 181/9
மையல் உறுகுவள் அன்னை - நற் 297/10
மாரி நின்ற மையல் அற்சிரம் - நற் 312/5
மயங்கு துயர்-உற்ற மையல் வேழம் - குறு 308/3
கூடினும் மயங்கிய மையல் ஊரே - குறு 374/7
மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர - ஐங் 59/2
மையல் யானையின் மருட்டலும் மருட்டினன் - கலி 54/14
மையல் கொள் நெஞ்சொடு மயக்கத்தால் மரன் நோக்கி - கலி 134/21
உய்யா அரு நோய்க்கு உயவு ஆகும் மையல்/உறீஇயாள் ஈத்த இ மா - கலி  139/18,19
மதர் புலி வெரீஇய மையல் வேழத்து - அகம் 39/11
மையல் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக - அகம் 98/22
மையல் கொண்ட மதன் அழி இருக்கையள் - அகம் 289/14
மையல் அம் கடாஅம் செருக்கி மதம் சிறந்து - அகம் 307/8
செய்_வினை அழிந்த மையல் நெஞ்சின் - அகம் 314/16
கை தலை வைத்த மையல் விதுப்பொடு - அகம் 347/14
மையல் வேழம் மெய் உளம் போக - அகம் 388/23
மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர் - புறம் 41/13
மையல் மாலை யாம் கையறுபு இனைய - புறம் 67/5
பொய்யா யாணர் மையல் கோமான் - புறம் 71/11
இரு பால் பட்ட இ மையல் ஊரே - புறம் 83/6
மையல் யானை அயா உயிர்த்து அன்ன - புறம் 261/7
மையல் நோக்கின் தையலை நயந்தோர் - புறம் 345/11

 TOP
 
    மையலன் (1)
எண்ணா மையலன் தந்தை தன் ஐயர் - புறம் 355/4

 TOP
 
    மையலை (2)
எய்யா மையலை நீயும் வருந்துதி - குறி 8
மையலை மாதோ விடுக என்றேன் தையலாய் - கலி 111/19

 TOP
 
    மையாடல் (1)
மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து - பரி 11/88

 TOP
 
    மையாப்பது (1)
இவட்கே செய்வு-உறு மண்டிலம் மையாப்பது போல் - கலி 7/7

 TOP
 
    மையின் (1)
உறை அறு மையின் போகி சாரல் - குறு 339/2

 TOP