<<முந்திய பக்கம் சங்க இலக்கியம் - தொடரடைவு

மி - முதல் சொற்கள்
மிக்க 5
மிக்கதன் 1
மிக்கு 15
மிக 70
மிகமிக 1
மிகல் 3
மிகாது 2
மிகாஅ 2
மிகாஅது 2
மிகின் 3
மிகீஇ 1
மிகீஇயர் 1
மிகு 95
மிகுக்கும் 1
மிகுத்த 1
மிகுத்தனை 1
மிகுத்து 1
மிகுதர 1
மிகுதி 1
மிகுதியாள 1
மிகுதியின் 1
மிகுந்த 1
மிகுப்ப 1
மிகுபு 1
மிகும் 5
மிகுமே 1
மிகுவது 1
மிகூஉம் 2
மிகை 2
மிகைபட 1
மிகைமிகை 1
மிச்சில் 11
மிச்சிலா 1
மிச்சிலை 1
மிசை 113
மிசை-தொறும் 3
மிசை-மின் 1
மிசைத்து 1
மிசைந்த 2
மிசைந்து 4
மிசைமிசை 1
மிசைய 7
மிசையது 2
மிசையதுவே 1
மிசையராய் 1
மிசையவ்வும் 1
மிசையவர் 1
மிசையவும் 2
மிசையா 1
மிசையாக 1
மிசையாது 1
மிசையார் 1
மிசையானும் 1
மிசையானே 2
மிசையும் 6
மிசையொடு 1
மிசையோர் 1
மிசையோனே 1
மிசைவு 1
மிஞிலி 3
மிஞிலியொடு 2
மிஞிற்று 1
மிஞிறு 8
மிஞிறும் 1
மிஞிறொடு 1
மிடல் 11
மிடற்ற 3
மிடற்றது 1
மிடற்று 11
மிடற்றோனும் 1
மிடறு 2
மிடாஅ 1
மிடை 19
மிடைந்த 20
மிடைந்தவை 1
மிடைந்தன்றே 2
மிடைந்து 6
மிண்டி 1
மிதப்ப 1
மிதப்பு 1
மிதவை 6
மிதவையர் 1
மிதவையும் 1
மிதி 8
மிதிக்கும் 3
மிதித்த 6
மிதித்தது 1
மிதித்து 3
மிதிப்ப 1
மிதிப்புழி 1
மிதுனம் 2
மிரியல் 1
மிலேச்சர் 1
மிலைச்சி 3
மிலைந்த 3
மிலைந்து 4
மிலையும் 1
மிழலை 1
மிழலையொடு 1
மிழற்றி 1
மிழற்றும் 2
மிளகின் 2
மிளகு 3
மிளிர் 3
மிளிர்க்கும் 2
மிளிர்ந்த 2
மிளிர்ந்திசின் 1
மிளிர்ந்திட்ட 1
மிளிர்ப்ப 1
மிளிர்ப்பு 1
மிளிர்வையொடு 1
மிளிர 10
மிளை 19
மிளைநாட்டு 1
மிளைஇய 1
மிறை 1
மின் 35
மின்_ஈர்_ஓதி 1
மின்மினி 5
மின்னால் 1
மின்னி 25
மின்னின் 3
மின்னு 21
மின்னுக்கொடி 1
மின்னும் 4
மின்னுமால் 1
மின்னொடு 3

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    மிக்க (5)
மாலை நீ தகை மிக்க தாழ் சினை பதி சேர்ந்து புள் ஆர்ப்ப - கலி 118/17
பகை மிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய் - கலி 118/18
தகை மிக்க புணர்ச்சியார் தாழ் கொடி நறு முல்லை - கலி 118/19
ஆனா படர் மிக்க நெஞ்சு - கலி 145/44
மிக்க என் நாணும் நலனும் என் உள்ளமும் - கலி 146/20

 TOP
 
    மிக்கதன் (1)
மிக்கதன் காமமும் ஒன்று என்ப அம்மா - கலி 147/14

 TOP
 
    மிக்கு (15)
மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரை - மது 699
அரவு உறழ் அம் சிலை கொளீஇ நோய் மிக்கு
  உரவு சின முன்பால் உடல் சினம் செருக்கி - குறி 158,159
செரு மிக்கு புகலும் திரு ஆர் மார்பன் - மலை 356
நின் நயந்து வருவேம் கண்டனம் புல் மிக்கு
  வழங்குநர் அற்று என மருங்கு கெட தூர்ந்து - பதி 23/11,12
மிக்கு எழு கடும் தார் துய் தலை சென்று - பதி 32/4
உரும் என அதிர்பட்டு முழங்கி செரு மிக்கு
  அடங்கார் ஆர் அரண் வாட செல்லும் - பதி 39/6,7
நின் வழிப்படார் ஆயின் நெல் மிக்கு
  அறையுறு கரும்பின் தீம் சேற்று யாணர் - பதி 75/5,6
காண்கு வந்திசின் யானே செரு மிக்கு
  உரும் என முழங்கும் முரசின் - பதி 90/55,56
மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல் - கலி 104/11
மிக்கு தன் மேற்சென்ற செம் காரி கோட்டிடை - கலி 105/68
கயிறு இடு கத சே போல மதம் மிக்கு
  நாள் கயம் உழக்கும் பூ கேழ் ஊர - அகம் 36/7,8
மணி மருள் கலவத்து உறைப்ப அணி மிக்கு
  அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலை - அகம் 242/3,4
முறைமை நின் புகழும் அன்றே மறம் மிக்கு
  எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள் - புறம் 39/10,11
மிக்கு வரும் இன் நீர் காவிரி - புறம் 43/22
வளி மிகின் வலியும் இல்லை ஒளி மிக்கு
  அவற்று ஓர் அன்ன சின போர் வழுதி - புறம் 51/3,4

 TOP
 
    மிக (70)
பை தீர் கடும்பொடு பதம் மிக பெறுகுவிர் - பெரும் 105
மே தக மிக பொலிந்த - மது 14
உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிக கலுழ்ந்து - நெடு 156
இரும் பேர் ஒக்கலொடு பதம் மிக பெறுகுவிர் - மலை 157
கல் ஏசு கவலை எண்ணு மிக பலவே - மலை 389
பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிக பெரிது - நற் 14/5
நினக்கு யான் மறைத்தல் யாவது மிக பெரிது - நற் 72/4
தவ சேய் நாட்டர் ஆயினும் மிக பேர் - நற் 115/8
யாயொடு நனி மிக மடவை முனாஅது - நற் 162/8
உலகு மிக வருந்தி உயா உறு காலை - நற் 164/3
ஒல்காது ஒழி மிக பல்கின தூதே - நற் 165/9
நனி மிக பசந்து தோளும் சாஅய் - நற் 237/1
தொன்று படு துப்பொடு முரண் மிக சினைஇ - நற் 247/1
தொன்று உறை துப்பொடு முரண் மிக சினைஇ - நற் 294/5
முதை சுவல் கிளைத்த பூழி மிக பல - நற் 389/9
நல் நலம் தொலைய நலம் மிக சாஅய் - குறு 93/1
அரும்பே முன்னும் மிக சிவந்தனவே - குறு 94/2
எழில் மிக உடையது ஈங்கு அணிப்படூஉம் - குறு 247/1
மலை முதல் சிறு நெறி மணல் மிக தாஅய் - குறு 378/2
மிக நன்று அம்ம மகிழ்ந நின் சூளே - குறு 384/4
மகிழ் மிக சிறப்ப மயங்கினள்-கொல்லோ - ஐங் 42/1
பலர் மடி பொழுதின் நலம் மிக சாஅய் - ஐங் 104/2
அம்ம வாழி தோழி நலம் மிக
  நல்ல ஆயின அளிய மென் தோளே - ஐங் 120/1,2
பண்டையின் மிக பெரிது இனைஇ - ஐங் 160/4
மிக பெரிது புலம்பின்று தோழி நம் ஊரே - ஐங் 398/5
யாம் வெம் காதலி நோய் மிக சாஅய் - ஐங் 478/3
அச்சம் பொய் சொல் அன்பு மிக உடைமை - பதி 22/2
தீது சேண் இகந்து நன்று மிக புரிந்து - பதி 22/5
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை - பரி 1/24
ஈரணி அணியின் இகல் மிக நவின்று - பரி 6/28
மிக ஏற்றுதும் மலர் ஊட்டுதும் அவி - பரி 8/80
மிக வரினும் மீது இனிய வேழ பிணவும் - பரி 10/15
அணி மிக வந்து இறைஞ்ச அல் இகப்ப பிணி நீங்க - பரி 23/66
உள் நின்ற நோய் மிக உயிர் எஞ்சு துயர் செய்தல் - கலி 60/6
துன்ன தன் எதிர்வரூஉம் துணை கண்டு மிக நாணி - கலி 70/5
மிக நனி சேர்ந்த அ முகை மிசை அ மலர் - கலி 77/6
மிக நன்று இனி அறிந்தேன் இன்று நீ ஊர்ந்த குதிரை - கலி 96/32
ஒரு குழையவன் மார்பில் ஒண் தார் போல் ஒளி மிக
  பொரு அற பொருந்திய செம் மறு வெள்ளையும் - கலி  105/11,12
ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிக
  காயாம் பூம் கண்ணி கரும் துவர் ஆடையை - கலி  108/9,10
ஏதிலார் தந்த பூ கொள்வாய் நனி மிக
  பேதையை-மன்ற பெரிது என்றேன் மாதராய் - கலி  111/14,15
நலம் மிக நந்திய நய வரு தட மென் தோள் - கலி 113/1
மண் கனை முழவொடு மகிழ் மிக தூங்க - அகம் 76/1
சேயர் என்னாது அன்பு மிக கடைஇ - அகம் 83/11
எல்லும் எல்லின்று அசைவு மிக உடையேன் - அகம் 110/11
யாமம் நும்மொடு கழிப்பி நோய் மிக
  பனி வார் கண்ணேம் வைகுதும் இனியே - அகம் 168/1,2
நகை நனி உடைத்தால் தோழி தகை மிக
  கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி - அகம் 180/1,2
கார்-மன் இதுவால் தோழி போர் மிக
  கொடுஞ்சி நெடும் தேர் பூண்ட கடும் பரி - அகம் 194/16,17
சுரன் இறந்து அகன்றனர் ஆயினும் மிக நனி - அகம் 233/12
படர் மிக பிரிந்தோர் உள்ளுபு நினைதல் - அகம் 301/2
மணி மிடை பவளம் போல அணி மிக
  காயாம் செம்மல் தாஅய் பல உடன் - அகம் 304/13,14
காடு மிக நெடிய என்னார் கோடியர் - அகம் 309/9
நகை நனி வளர்க்கும் சிறப்பின் தகை மிக
  பூவொடு வளர்ந்த மூவா பசும் காய் - அகம் 335/22,23
துணிகுவன் போலாம் நாணு மிக உடையன் - அகம் 380/11
சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து - அகம் 388/16
பல் மலர் போர்த்து நாணு மிக ஒடுங்கி - அகம் 398/13
மிக புகழ் உலகம் எய்தி - புறம் 66/7
களிறு மிக உடைய இ கவின் பெறு காடே - புறம் 131/4
புகழ் சால் சிறப்பின் அம்பு மிக திளைக்கும் - புறம் 152/7
மிக பல் தீ நோய் தலைத்தலை தருமே - புறம் 185/6
மிக பேர் எவ்வம் உறினும் எனைத்தும் - புறம் 197/15
நோய் உழந்து வைகிய உலகினும் மிக நனி - புறம் 230/10
நீர் நணி படி கோடு ஏறி சீர் மிக
  கரையவர் மருள திரையகம் பிதிர - புறம் 243/7,8
மிக பல ஆயினும் என் ஆம் எனைத்தும் - புறம் 257/11
நனி நல்கூர்ந்தனன் ஆயினும் பனி மிக
  புல்லென் மாலை சிறு தீ ஞெலியும் - புறம் 331/3,4
தவ சிறிது ஆயினும் மிக பலர் என்னாள் - புறம் 331/7
சோறு கொடுத்து மிக பெரிதும் - புறம் 362/14
எமக்கு என வகுத்த அல்ல மிக பல - புறம் 378/10
மிக பொலியர் தன் சேவடி அத்தை என்று - புறம் 387/14
மிக வானுள் எரி தோன்றினும் - புறம் 395/34
மிக பெரும் சிறப்பின் வீறு சால் நல் கலம் - புறம் 400/11

 TOP
 
    மிகமிக (1)
வகைவகை தைஇயினார் மாலை மிகமிக
  சூட்டும் கண்ணியும் மோட்டு வலையமும் - பரி  20/29,30

 TOP
 
    மிகல் (3)
மேல் நிலை மிகல் இகலின் மிடை கழிபு இழிபு மேற்சென்று - கலி 104/33
வரு தார் தாங்கி அமர் மிகல் யாவது - புறம் 62/1
இகல் கண்டோர் மிகல் சாய்மார் - புறம் 166/5

 TOP
 
    மிகாது (2)
மழை கொள குறையாது புனல் புக மிகாது
  கரை பொருது இரங்கும் முந்நீர் போல - மது 424,425
கொளக்கொள குறையாது தரத்தர மிகாது
  கழுநீர் கொண்ட எழு நாள் அந்தி - மது 426,427

 TOP
 
    மிகாஅ (2)
மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க - பரி 23/75
மிகாஅ மறலிய மே வலி எல்லாம் - பரி 23/78

 TOP
 
    மிகாஅது (2)
மிகாஅது சீர்ப்பட உண்ட சிறு களி ஏர் உண்கண் - கலி 97/26
நகான்-மின் கூறுவேன் மாக்காள் மிகாஅது
  மகளிர் தோள் சேர்ந்த மாந்தர் துயர் கூர நீத்தலும் - கலி  145/12,13

 TOP
 
    மிகின் (3)
நீர் மிகின் சிறையும் இல்லை தீ மிகின் - புறம் 51/1
நீர் மிகின் சிறையும் இல்லை தீ மிகின்
  மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை - புறம் 51/1,2
வளி மிகின் வலியும் இல்லை ஒளி மிக்கு - புறம் 51/3

 TOP
 
    மிகீஇ (1)
வார் முகில் முழக்கின் மழ களிறு மிகீஇ தன் - பதி 84/11

 TOP
 
    மிகீஇயர் (1)
சீர் உடை வியன் புலம் வாய் பரந்து மிகீஇயர்
  உவலை சூடி உருத்து வரு மலிர் நிறை - பதி 28/11,12

 TOP
 
    மிகு (95)
முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி - திரு 84
மூ_எயில் முருக்கிய முரண் மிகு செல்வனும் - திரு 154
போர் மிகு பொருந குருசில் என பல - திரு 276
மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி - பொரு 140
உண்டு தண்டா மிகு வளத்தான் - மது 17
வாள் மிகு மற மைந்தர் - மது 53
மே தகு தகைய மிகு நலம் எய்தி - மது 565
சீர் மிகு நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉ - மது 614
மறம் மிகு சிறப்பின் குறுநில மன்னர் - மது 776
முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய - நெடு 162
அணி மிகு வரி மிஞிறு ஆர்ப்ப தேம் கலந்து - குறி 111
மிகு வளம் பழுநிய யாணர் வைப்பின் - மலை 95
முத்து உடை மருப்பின் முழு வலி மிகு திரள் - மலை 518
மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண் - நற் 63/2
செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு - நற் 184/2
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும் - நற் 192/2
நல் வகை மிகு பலி கொடையோடு உகுக்கும் - நற் 281/4
தட மென் பணை தோள் மடம் மிகு குறுமகள் - நற் 319/8
அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த - நற் 362/4
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த - குறு 138/4
மிகு வலி இரும் புலி பகு வாய் ஏற்றை - குறு 343/3
நலம் மிகு புது புனல் ஆட கண்டோர் - ஐங் 64/2
அணி மிகு கொழு முகை உடையும் பொழுதே - ஐங் 343/3
நலம் மாண் எயிற்றி போல பல மிகு
  நல் நலம் நய வரவு உடையை - ஐங் 365/3,4
நலம் மிகு கூந்தல் தகைகொள புனைய - ஐங் 463/2
செய் அரண் சிதைத்த செரு மிகு தானையொடு - ஐங் 474/2
முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை - பதி 11/11
கான் மிகு குளவிய வன்பு சேர் இருக்கை - பதி 30/23
முரண் மிகு கடும் குரல் விசும்பு அடைபு அதிர - பதி 30/32
போர் மிகு குருசில் நீ மாண்டனை பலவே - பதி 31/36
மாண்டனை பலவே போர் மிகு குருசில் நீ - பதி 32/1
செரு மிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று - பதி 36/4
சீர் மிகு முத்தம் தைஇய - பதி 39/16
தார் மிகு மைந்தின் நார்முடிச்சேரல் - பதி 40/16
செரு மிகு தானை வெல் போரோயே - பதி 63/12
நெரி கிடர் எரி புரை தன மிகு தன முரண் மிகு - பரி 1/16
நெரி கிடர் எரி புரை தன மிகு தன முரண் மிகு
  கடல் தரு மணியொடும் முத்து யாத்த நேர் அணி - பரி  1/16,17
மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை - பரி 1/24
விறல் மிகு விழு சீர் அந்தணர் காக்கும் - பரி 1/40
தணி புனல் ஆடும் தகை மிகு போர்க்-கண் - பரி 6/29
வாள் மிகு வய மொய்ம்பின் - பரி 9/57
மறம் மிகு மலி ஒலி மாறு அடு தானையால் - பரி 13/31
விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின் - பரி 13/33
செரு மிகு திகிரி செல்வ வெல் போர் - பரி 13/59
மகிழ் மிகு தேஎம் கோதையர் கூந்தல் குஞ்சியின் - பரி 17/26
உருவம் மிகு தோன்றி ஊழ் இணர் நறவம் - பரி 19/78
செரு மிகு சின வேந்தன் சிவந்து இறுத்த புலம் போல - கலி 13/1
தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக - கலி 39/48
வலி மிகு வெகுளியான் வாளுற்ற மன்னரை - கலி 46/7
மறம் மிகு வேழம் தன் மாறுகொள் மைந்தினான் - கலி 53/3
மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும் - கலி 57/18
மேதக திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர - கலி 69/7
அணி மிகு சேவலை அகல் அடை மறைத்து என - கலி 70/2
முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும் - கலி 104/12
முரைசு கெழு முது குடி முரண் மிகு செல்வற்கு - கலி 105/2
சீர் மிகு சிறப்பினோன் தொல் குடிக்கு உரித்து என - கலி 105/3
இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர - கலி 119/3
செரு மிகு நேமியான் தார் போல பெரும் கடல் - கலி 127/4
சீர் மிகு சிறப்பினோன் மர முதல் கை சேர்த்த - கலி 133/3
நலம் மிகு சேவடி நிலம் வடு கொளாஅ - அகம் 5/3
விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி - அகம் 49/10
சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து - அகம் 59/11
சினம் மிகு முன்பின் வாம் மான் அஞ்சி - அகம் 115/14
வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு - அகம் 146/1
மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது - அகம் 151/4
படு மழை பொழிந்த பயம் மிகு புறவின் - அகம் 154/1
புதல்வன் பயந்த புகழ் மிகு சிறப்பின் - அகம் 184/2
சீர் மிகு குருசில் நீ வந்து நின்றதுவே - அகம் 184/19
முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின் - அகம் 197/6
மறம் மிகு தானை கண்ணன் எழினி - அகம் 197/7
அகுதை கிளைதந்து ஆங்கு மிகு பெயல் - அகம் 208/18
மிகு கவின் எய்திய தொகு குரல் ஐம்பால் - அகம் 212/3
வினை நசைஇ பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடு - அகம் 215/3
பகை மிகு கவலை செல் நெறி காண்மார் - அகம் 257/13
சீர் மிகு பாடலி குழீஇ கங்கை - அகம் 265/5
செரு மிகு சேஎயொடு உற்ற சூளே - அகம் 266/21
முரண் மிகு வடுகர் முன் உற மோரியர் - அகம் 281/8
மறம் மிகு தானை பசும் பூண் பொறையன் - அகம் 303/4
மிகு பெயல் நிலைஇய தீம் நீர் பொய்கை - அகம் 357/13
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை - அகம் 367/7
அணி மிகு செம்மல் ஒளிப்பன மறைய - அகம் 374/14
பெரும் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய் - புறம் 2/16
செரு மிகு சேஎய் நின் பாடுநர் கையே - புறம் 14/19
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நல் நாடு - புறம் 29/16
செரு மிகு வளவ நின் சினைஇயோர் நாடே - புறம் 41/18
நேரார் கடந்த முரண் மிகு திருவின் - புறம் 43/9
முரண் மிகு கோவலூர் நூறி நின் - புறம் 99/13
சினம் மிகு தானை வானவன் குட கடல் - புறம் 126/14
செலல் நசைஇ உற்றனென் விறல் மிகு குருசில் - புறம் 161/20
சீர் மிகு செல்வமும் ஏந்துகம் பலவே - புறம் 161/32
இரங்கு புனல் நெரிதரு மிகு பெரும் காவிரி - புறம் 174/8
வேல் மிகு தானை வேந்தற்கு கடனே - புறம் 186/4
தாள் உளம் தபுத்த வாள் மிகு தானை - புறம் 205/5
பொருநர் காணா செரு மிகு முன்பின் - புறம் 365/6
பிணர் மருப்பு யானை செரு மிகு நோன் தாள் - புறம் 387/29

 TOP
 
    மிகுக்கும் (1)
வெண் தலை செம் புனல் பரந்து வாய் மிகுக்கும்
  பல சூழ் பதப்பர் பரிய வெள்ளத்து - பதி 30/17,18

 TOP
 
    மிகுத்த (1)
அல்கு_பதம் மிகுத்த கடி உடை வியல் நகர் - அகம் 49/14

 TOP
 
    மிகுத்தனை (1)
செல்லா செல்வம் மிகுத்தனை வல்லே - புறம் 160/27

 TOP
 
    மிகுத்து (1)
மிகுத்து பதம் கொண்ட பரூஉ கண் பொதியினிர் - மலை 252

 TOP
 
    மிகுதர (1)
எவ்வம் மிகுதர எம்-திறத்து எஞ்ஞான்றும் - கலி 110/16

 TOP
 
    மிகுதி (1)
மிகுதி கண்டன்றோ இலெனே நீ நின் - அகம் 379/16

 TOP
 
    மிகுதியாள (1)
தகுதி கேள் இனி மிகுதியாள
  நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் - புறம் 18/17,18

 TOP
 
    மிகுதியின் (1)
சீர் கெழு சிலை நிலை செயிர் இகல் மிகுதியின் சின பொதுவர் - கலி 105/27

 TOP
 
    மிகுந்த (1)
வண்ணம் மிகுந்த அண்ணல் யானை - நற் 273/6

 TOP
 
    மிகுப்ப (1)
தாள் நிழல் வாழ்நர் நல் கலம் மிகுப்ப
  வாள் அமர் உழந்த நின் தானையும் - புறம் 161/30,31

 TOP
 
    மிகுபு (1)
ஊர்-மதி வலவ தேரே சீர் மிகுபு
  நம்-வயின் புரிந்த கொள்கை - அகம் 154/13,14

 TOP
 
    மிகும் (5)
நொந்ததன்தலையும் நோய் மிகும் துறைவ - ஐங் 160/3
வருந்த நோய் மிகும் ஆயின் வணங்கு இறை அளி என்னோ - கலி 28/11
பாயல் நோய் மிகும் ஆயின் பைம்_தொடி அளி என்னோ - கலி 28/19
நீயே வளியின் இகல் மிகும் தேரும் களிறும் - கலி 50/15
வலி மிகும் முன்பின் பாணனொடு மலி தார் - அகம் 226/13

 TOP
 
    மிகுமே (1)
எல்லாருள்ளும் நின் நல் இசை மிகுமே
  வளம் தலைமயங்கிய பைதிரம் திருத்திய - பதி 38/2,3

 TOP
 
    மிகுவது (1)
மிகுவது போலும் இ நோய் - கலி 33/21

 TOP
 
    மிகூஉம் (2)
எவ்வம் மிகூஉம் அரும் சுரம் இறந்து - நற் 46/9
காவே சுரும்பு இமிர் தாதொடு தலைத்தலை மிகூஉம்
  நரந்த நறு மலர் நன்கு அளிக்கும்மே - பரி  16/14,15

 TOP
 
    மிகை (2)
கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்பதூஉம் குறை கொடாது - பட் 210
புகும் அளவு அளவு இயல் இசை சிறை தணிவு இன்று வெள்ள மிகை
  வரை பல புரை உயர் கயிறு அணி பயில் தொழில் - பரி  24/67,68

 TOP
 
    மிகைபட (1)
கொண்டி மிகைபட தண் தமிழ் செறித்து - பதி 63/9

 TOP
 
    மிகைமிகை (1)
விரைபுவிரைபு மிகைமிகை ஈண்டி - பரி 12/30

 TOP
 
    மிச்சில் (11)
விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை - குறி 206
உண்டு படு மிச்சில் காழ் பயன் கொள்மார் - மலை 338
ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு - நற் 43/4
சூடுநர் தொடுத்த மிச்சில் கோடு-தொறும் - நற் 278/4
கன்று உடை புனிற்று ஆ தின்ற மிச்சில்
  ஓய் நடை முது பகடு ஆரும் ஊரன் - நற் 290/2,3
வேட்ட செந்நாய் கிளைத்து ஊண் மிச்சில்
  குளவி மொய்த்த அழுகல் சில் நீர் - குறு 56/1,2
நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் - குறு 233/5
கொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில்
  மறு அற்ற மைந்தர் தோள் எய்தார் மணந்தார் - பரி  19/91,92
தோடு சினை உரீஇ உண்ட மிச்சில்
  பைம் குழை தழையர் பழையர் மகளிர் - அகம் 331/4,5
கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில்
  கொள்_பதம் ஒழிய வீசிய புலனும் - புறம் 23/6,7
தொடுத்த கடவர்க்கு கொடுத்த மிச்சில்
  பசித்த பாணர் உண்டு கடை தப்பலின் - புறம் 327/3,4

 TOP
 
    மிச்சிலா (1)
முழுவதும் மிச்சிலா உண்டு - பரி 24/83

 TOP
 
    மிச்சிலை (1)
குற குறுமாக்கள் உண்ட மிச்சிலை
  புன் தலை மந்தி வன் பறழ் நக்கும் - நற் 168/4,5

 TOP
 
    மிசை (113)
நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை - திரு 109
மேம் பால் உரைத்த ஓரி ஓங்கு மிசை
  கோட்டவும் கொடியவும் விரைஇ காட்ட - பெரும் 172,173
நெடும் கொடி மிசை இதை எடுத்து - மது 79
புதுவது இயன்ற மெழுகு செய் பட மிசை
  திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக - நெடு 159,160
நீள் திரள் தட கை நிலம் மிசை புரள - நெடு 170
சுவல் மிசை அமைத்த கையன் முகன் அமர்ந்து - நெடு 183
கலி கெழு மரம் மிசை சேணோன் இழைத்த - குறி 40
மின் மயங்கு கருவிய கல் மிசை பொழிந்து என - குறி 53
விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த - குறி 226
மிசை கூம்பின் நசை கொடியும் - பட் 175
அனையது அன்று அவன் மலை மிசை நாடே - மலை 188
மணல் ஆடு கழங்கின் அறை மிசை தாஅம் - நற் 79/3
கல் மிசை அருவியின் கழூஉம் சாரல் - நற் 151/4
கவி குளம்பு பொருத கல் மிசை சிறு நெறி - நற் 185/5
அண்ணல் யானைக்கு அன்றியும் கல் மிசை
  தனி நிலை இதணம் புலம்ப போகி - நற் 194/5,6
புணர்ந்தீர் புணர்-மினோ என்ன இணர் மிசை
  செம் கண் இரும் குயில் எதிர் குரல் பயிற்றும் - நற் 224/4,5
பொன் மருள் நறு வீ கல் மிசை தாஅம் - நற் 257/6
உளம் மிசை தவிர்த்த முளவு மான் ஏற்றையொடு - நற் 285/4
கல் மிசை அடுக்கம் புதைய கால் வீழ்த்து - நற் 316/8
ஒடித்து மிசை கொண்ட ஓங்கு மருப்பு யானை - நற் 318/5
நீங்குக-மாதோ நின் அவலம் ஓங்கு மிசை
  உயர் புகழ் நல் இல் ஒண் சுவர் பொருந்தி - நற் 333/9,10
மை இரும் பனை மிசை பைதல உயவும் - நற் 335/7
இரை நசை வருத்தம் வீட மரம் மிசை
  புள்ளும் பிள்ளையொடு வதிந்தன அதனால் - நற் 385/4,5
கல் மிசை கவியும் நாடற்கு என் - குறு 185/7
முகை தலை திறந்த நாற்றம் புதல் மிசை
  பூ அமல் தளவமொடு தேம் கமழ்பு கஞல - குறு 382/2,3
புதல் மிசை நுடங்கும் வேழ வெண் பூ - ஐங் 17/1
அரி பறை வினைஞர் அல்கு மிசை கூட்டும் - ஐங் 81/2
வரை மிசை உகளும் நாட நீ வரின் - ஐங் 279/3
அறனில-மன்ற தாமே விறல் மிசை
  குன்று கெழு கானத்த பண்பு இல் மா கணம் - ஐங் 332/2,3
புதல் மிசை நறு மலர் கவின் பெற தொடரி நின் - ஐங் 463/1
வான் தோய் வெல் கொடி தேர் மிசை நுடங்க - பதி 44/2
வரை மிசை இழிதரும் அருவியின் மாடத்து - பதி 47/3
அரும் கலம் தரீஇயர் நீர் மிசை நிவக்கும் - பதி 52/3
வரை மிசை அருவியின் வயின்வயின் நுடங்க - பதி 69/2
பழனும் கிழங்கும் மிசை அறவு அறியாது - பதி 89/4
தீ உமிழ் திறலொடு முடி மிசை அணவர - பரி 1/2
சேய் உயர் பணை மிசை எழில் வேழம் ஏந்திய - பரி 1/4
குருகு பறியா நீள் இரும் பனை மிசை
  பல பதினாயிரம் குலை தரை உதிர்வ போல் - பரி  2/43,44
மண் மிசை அவிழ் துழாய் மலர் தரு செல்வத்து - பரி 8/1
புள் மிசை கொடியோனும் புங்கவம் ஊர்வோனும் - பரி 8/2
மலர் மிசை முதல்வனும் மற்று அவனிடை தோன்றி - பரி 8/3
அடு போராள நின் குன்றின் மிசை
  ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும் - பரி  9/71,72
சூடி அசையும் சுவல் மிசை தானையின் - பரி 19/25
நெடியாய் நின் குன்றின் மிசை
  நின யானை சென்னி நிறம் குங்குமத்தால் - பரி  19/84,85
நின் குன்றின் மிசை
  மிசை படு சாந்தாற்றி போல எழிலி - பரி  21/29,30
மிசை படு சாந்தாற்றி போல எழிலி - பரி 21/30
வண்மை போல் வானம் பொழிந்த நீர் மண் மிசை
  ஆனாது வந்து தொகுபு ஈண்டி மற்று அவன் - பரி  22/8,9
ஊது சீர் தீம் குழல் இயம்ப மலர் மிசை
  தாது ஊது தும்பி தவிர்பு அல இயம்ப - பரி  22/40,41
மணி அணி யானை மிசை மைந்தரும் மடவாரும் - பரி 24/69
கல் மிசை வேய் வாட கனை கதிர் தெறுதலான் - கலி 11/14
கல் மிசை உருப்பு அற கனை துளி சிதறு என - கலி 16/7
நிலம் பூத்த மரம் மிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள - கலி 27/9
கல் மிசை மயில் ஆல கறங்கி ஊர் அலர் தூற்ற - கலி 27/13
மா ஈன்ற தளிர் மிசை மாயவள் திதலை போல் - கலி 29/7
தாய சுணங்கு போல் தளிர் மிசை தாது உக - கலி 35/4
நெடு மிசை சூழும் மயில் ஆலும் சீர - கலி 36/2
வள்ளி கீழ் வீழா வரை மிசை தேன் தொடா - கலி 39/13
வரை மிசை மேல் தொடுத்த நெய் கண் இறாஅல் - கலி 42/22
அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ - கலி 44/3
துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின் தன் - கலி 46/20
சுவல் மிசை தாதொடு தாழ அகல்-மதி - கலி 56/4
மிக நனி சேர்ந்த அ முகை மிசை அ மலர் - கலி 77/6
ஈண்டு நீர் மிசை தோன்றி இருள் சீக்கும் சுடரே போல் - கலி 100/1
சுவல் மிசை கோல் அசைத்த கையன் அயலது - கலி 101/40
நாள்_மீன் வாய் சூழ்ந்த மதி போல் மிடை மிசை
  பேணி நிறுத்தார் அணி - கலி  104/27,28
பொய் தீர் உலகம் எடுத்த கொடி மிசை
  மை அறு மண்டிலம் வேட்டனள் வையம் - கலி  141/11,12
புதல் மிசை தளவின் இதல் முள் செம் நனை - அகம் 23/3
கல் மிசை அருவிய காடு இறந்தோரே - அகம் 25/22
வான் தோய் புணரி மிசை கண்டு ஆங்கு - அகம் 65/12
மலை மிசை குலைஇய உரு கெழு திருவில் - அகம் 84/1
கடும் கை கானவன் கழுது மிசை கொளீஇய - அகம் 88/5
அறை மிசை தாஅம் அத்த நீள் இடை - அகம் 115/12
மலை மிசை தொடுத்த மலிந்து செலல் நீத்தம் - அகம் 126/3
கயிற்று புறத்து அன்ன கல் மிசை சிறு நெறி - அகம் 128/11
கோடு கடை கழங்கின் அறை மிசை தாஅம் - அகம் 135/9
பிடி மடிந்து அன்ன கல் மிசை ஊழ் இழிபு - அகம் 178/6
நீர் மிசை நிவந்த நெடும் தாள் அகல் இலை - அகம் 186/4
வெண்ணெல் வித்தின் அறை மிசை உணங்கும் - அகம் 211/6
நமர்-மன் வாழி தோழி உயர் மிசை
  மூங்கில் இள முளை திரங்க காம்பின் - அகம் 241/5,6
கடி_மகள் கதுப்பின் நாறி கொடி மிசை
  வண்டு இனம் தவிர்க்கும் தண் பத காலை - அகம் 244/5,6
மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து - அகம் 257/14
நுண் பல துவலை புதல் மிசை நனைக்கும் - அகம் 262/15
கார் வான் முழக்கின் நீர் மிசை தெவுட்டும் - அகம் 301/18
நகை நன்று அம்ம தானே இறை மிசை
  மாரி சுதையின் ஈர்ம் புறத்து அன்ன - அகம் 346/1,2
ஓடை யானை உயர் மிசை எடுத்த - அகம் 358/13
இன மீன் அருந்தும் நாரையொடு பனை மிசை
  அன்றில் சேக்கும் முன்றில் பொன் என - அகம் 360/16,17
சுவல் மிசை அசைஇய நிலை தயங்கு உறு முடி - அகம் 379/11
பொலம் தேர் மிசை பொலிவு தோன்றி - புறம் 4/14
ஆவம் சேர்ந்த புறத்தை தேர் மிசை
  சாப நோன் ஞாண் வடுக்கொள வழங்கவும் - புறம் 14/8,9
தெண் கழி மிசை தீ பூவின் - புறம் 17/12
நாஞ்சில் ஒப்ப நிலம் மிசை புரள - புறம் 19/11
மிசை அலங்கு உளைய பனை போழ் செரீஇ - புறம் 22/21
தென் கடல் திரை மிசை பாயுந்து - புறம் 24/3
மீ பாய் களையாது மிசை பரம் தோண்டாது - புறம் 30/12
வரை புரையும் மழ களிற்றின் மிசை
  வான் துடைக்கும் வகைய போல - புறம் 38/1,2
நில மிசை வாழ்நர் அலமரல் தீர - புறம் 43/1
நில மிசை புரளும் கைய வெய்துயிர்த்து - புறம் 44/4
பெரு மலை விடரகத்து அரு மிசை கொண்ட - புறம் 91/8
அவல் இழியினும் மிசை ஏறினும் - புறம் 102/3
நில மிசை பரந்த மக்கட்கு எல்லாம் - புறம் 126/10
கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி நின் - புறம் 148/1
கல் மிசை அருவி தண்ணென பருகி - புறம் 150/16
பறம்பின் கோமான் பாரியும் பிறங்கு மிசை
  கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும் - புறம் 158/4,5
சுவல் பூண் ஞான் மிசை பொலிய - புறம் 166/12
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து - புறம் 200/4
கழை மிசை துஞ்சும் கல்லக வெற்ப - புறம் 200/5
வாள் மிசை கிடந்த ஆண்மையோன்-திறத்தே - புறம் 270/13
தோல் மிசை கிடந்த புல் அணலோனே - புறம் 310/8
மிசை அம்பியின் மனை மறுக்குந்து - புறம் 343/2
துவைத்து எழு குருதி நில மிசை பரப்ப - புறம் 370/13
உரு மிசை முழக்கு என முரசும் இசைப்ப - புறம் 373/1
கொடி மிசை நல் தேர் குழுவினர் - புறம் 377/26
மிசை பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து - புறம் 380/6

 TOP
 
    மிசை-தொறும் (3)
நீலத்து அன்ன பைம் பயிர் மிசை-தொறும்
  வெள்ளி அன்ன ஒள் வீ உதிர்ந்து - மது 279,280
அவல்-தொறும் தேரை தெவிட்ட மிசை-தொறும்
  வெம் குரல் புள் இனம் ஒலிப்ப உது காண் - ஐங் 453/1,2
கரும் கோட்டு நறும் புன்னை மலர் சினை மிசை-தொறும்
  சுரும்பு ஆர்க்கும் குரலினோடு இரும் தும்பி இயைபு ஊத - கலி  123/1,2

 TOP
 
    மிசை-மின் (1)
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசை-மின்
  வேழம் நிரைத்து வெண் கோடு விரைஇ - பெரும் 262,263

 TOP
 
    மிசைத்து (1)
தோல் மிசைத்து எழுதரும் விரிந்து இலங்கு எஃகின் - பதி 66/12

 TOP
 
    மிசைந்த (2)
மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி - கலி 50/2
உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்த
  முளி புல் கானம் குழைப்ப கல்லென - புறம் 160/1,2

 TOP
 
    மிசைந்து (4)
நளி புகை கமழாது இறாயினிர் மிசைந்து
  துகள் அற துணிந்த மணி மருள் தெண் நீர் - மலை 249,250
பைம் காய் நெல்லி பல உடன் மிசைந்து
  செம் கால் மராஅத்த வரி நிழல் இருந்தோர் - ஐங் 381/1,2
அமிழ்தின் மிசைந்து காய் பசி நீங்கி - புறம் 150/14
அவிழ்_பதம் மறந்து பாசடகு மிசைந்து
  மாசொடு குறைந்த உடுக்கையள் அறம் பழியா - புறம் 159/12,13

 TOP
 
    மிசைமிசை (1)
தகை வகை மிசைமிசை பாயியர் ஆர்த்து உடன் - கலி 102/17

 TOP
 
    மிசைய (7)
நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல் - பொரு 33
நெடும் பொறை மிசைய குறும் கால் கொன்றை - ஐங் 430/1
முழுமுதல் மிசைய கோடு-தொறும் துவன்றும் - பதி 70/25
ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீ - அகம் 228/10
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ - புறம் 197/2
தலையோர் நுங்கின் தீம் சேறு மிசைய
  இடையோர் பழத்தின் பைம் கனி மாந்த - புறம் 225/1,2
கொடி நுடங்கு மிசைய தேரும் மாவும் - புறம் 351/2

 TOP
 
    மிசையது (2)
பெரு வரை மிசையது நெடு வெள் அருவி - குறு 78/1
நெடு வரை மிசையது குறும் கால் வருடை - ஐங் 287/1

 TOP
 
    மிசையதுவே (1)
படம் செய் பந்தர் கல் மிசையதுவே - புறம் 260/28

 TOP
 
    மிசையராய் (1)
மெய் அணி யானை மிசையராய் ஒய்யென - பரி 24/14

 TOP
 
    மிசையவ்வும் (1)
கல் மிசையவ்வும் கடலவும் பிறவும் - பதி 50/12

 TOP
 
    மிசையவர் (1)
பகை வென்று திறை கொண்ட பாய் திண் தேர் மிசையவர்
  வகை கொண்ட செம்மல் நாம் வனப்பு ஆர விடுவதோ - கலி  31/17,18

 TOP
 
    மிசையவும் (2)
அவலவும் மிசையவும் துவன்றி பல உடன் - மலை 346
சூடு கிழித்து வாடூன் மிசையவும்
  ஊன் கொண்ட வெண் மண்டை - புறம் 386/4,5

 TOP
 
    மிசையா (1)
வீழ் களிறு மிசையா புலியினும் சிறந்த - அகம் 29/3

 TOP
 
    மிசையாக (1)
அவலாக ஒன்றோ மிசையாக ஒன்றோ - புறம் 187/2

 TOP
 
    மிசையாது (1)
அல்குறு பொழுதின் மெல்கு இரை மிசையாது
  பைதல் பிள்ளை தழீஇ ஒய்யென - அகம் 290/5,6

 TOP
 
    மிசையார் (1)
பாசடகு மிசையார் பனி நீர் மூழ்கார் - புறம் 62/14

 TOP
 
    மிசையானும் (1)
குப்பை வெண் மணல் குவவு மிசையானும்
  எக்கர் தாழை மடல்-வயினானும் - அகம் 330/12,13

 TOP
 
    மிசையானே (2)
மன்னிய பெரும நீ நிலம் மிசையானே - புறம் 6/29
நிலீஇயர் அத்தை நீ நிலம் மிசையானே - புறம் 166/34

 TOP
 
    மிசையும் (6)
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும்
  அழி பசி வருத்தம் வீட பொழி கவுள் - சிறு 139,140
அவலும் மிசையும் நீர் திரள்பு ஈண்டி - மது 240
செம் கால் பலவின் தீம் பழம் மிசையும்
  மா மலை நாட காமம் நல்கு என - நற் 232/5,6
நெடும் கொடிய தேர் மிசையும்
  ஓடை விளங்கும் உரு கெழு புகர் நுதல் - பதி 34/5,6
இரும் பனம் குடையின் மிசையும்
  பெரும் புலர் வைகறை சீர் சாலாதே - புறம் 177/16,17
நிலம் கலன் ஆக இலங்கு பலி மிசையும்
  இன்னா வைகல் வாரா முன்னே - புறம் 363/15,16

 TOP
 
    மிசையொடு (1)
இரும் கெடிற்று மிசையொடு பூம் கள் வைகுந்து - புறம் 384/9

 TOP
 
    மிசையோர் (1)
மட மா மிசையோர்
  பிடி மேல் அன்ன பெரும் படை அனையோர் - பரி  12/26,27

 TOP
 
    மிசையோனே (1)
மறலி அன்ன களிற்று மிசையோனே
  களிறே முந்நீர் வழங்கு நாவாய் போலவும் - புறம் 13/4,5

 TOP
 
    மிசைவு (1)
சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும் - புறம் 236/2

 TOP
 
    மிஞிலி (3)
பூம் தோள் யாப்பின் மிஞிலி காக்கும் - நற் 265/4
கூட்டு எதிர்கொண்ட வாய் மொழி மிஞிலி
  புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர் - அகம் 142/11,12
அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ - அகம் 181/5

 TOP
 
    மிஞிலியொடு (2)
இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு
  நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து - அகம் 208/7,8
இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி - அகம் 396/5

 TOP
 
    மிஞிற்று (1)
மின் நேர் பச்சை மிஞிற்று குரல் சீறியாழ் - புறம் 308/2

 TOP
 
    மிஞிறு (8)
அணி மிகு வரி மிஞிறு ஆர்ப்ப தேம் கலந்து - குறி 111
மிஞிறு புறம் மூசவும் தீம் சுவை திரியாது - பதி 60/4
வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப சுனை மலர - பரி 8/23
மீன் ஏற்று கொடியோன் போல் மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும் - கலி 26/3
படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப - கலி 35/2
மிஞிறு மூசு கவுள சிறு கண் யானை - அகம் 159/16
மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள - அகம் 207/8
மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாஅத்து - புறம் 22/6

 TOP
 
    மிஞிறும் (1)
புள்ளும் மிஞிறும் மா சினை ஆர்ப்ப - பதி 89/3

 TOP
 
    மிஞிறொடு (1)
இரங்கு இசை மிஞிறொடு தும்பி தாது ஊத - கலி 33/23

 TOP
 
    மிடல் (11)
உள்ளம் அழிய ஊக்குநர் மிடல் தபுத்து - பதி 13/18
நெடு மிடல் சாய கொடு மிடல் துமிய - பதி 32/10
நெடு மிடல் சாய கொடு மிடல் துமிய - பதி 32/10
கடும் சினத்த மிடல் தபுக்கும் - பதி 51/27
ஓடா பூட்கை மறவர் மிடல் தப - பதி 57/1
உடலுநர் மிடல் சாய்த்தும் - பதி 90/21
அடங்காதார் மிடல் சாய அமரர் வந்து இரத்தலின் - கலி 2/2
கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல் மராத்து - கலி 36/1
நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர் - அகம் 266/12
நள்ளாதார் மிடல் சாய்ந்த - புறம் 125/5
தென் பரதவர் மிடல் சாய - புறம் 378/1

 TOP
 
    மிடற்ற (3)
அரி குரல் மிடற்ற அம் நுண் பல் பொறி - நற் 21/7
படு மணி மிடற்ற பய நிரை ஆயம் - அகம் 54/9
கரும் தாள் மிடற்ற செம் பூழ் சேவல் - அகம் 63/7

 TOP
 
    மிடற்றது (1)
மெய்யது வியரே மிடற்றது பசும் புண் - புறம் 100/2

 TOP
 
    மிடற்று (11)
மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த - பரி 8/127
மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ - பரி 9/7
மாறா போர் மணி மிடற்று எண் கையாய் கேள் இனி - கலி 1/4
பெரும் பெயர் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல - கலி 105/13
காணான் திரிதரும்-கொல்லோ மணி மிடற்று
  மாண் மலர் கொன்றையவன் - கலி  142/27,28
யாழ் கெழு மணி மிடற்று அந்தணன் - அகம் 0/15
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னி - புறம் 55/4
நீல மணி மிடற்று ஒருவன் போல - புறம் 91/6
அரு முனை இருக்கைத்து ஆயினும் வரி மிடற்று
  அரவு உறை புற்றத்து அற்றே நாளும் - புறம் 329/5,6
அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும் - புறம் 378/16
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும் - புறம் 378/17

 TOP
 
    மிடற்றோனும் (1)
மாற்று அரும் கணிச்சி மணி மிடற்றோனும்
  கடல் வளர் புரி வளை புரையும் மேனி - புறம் 56/2,3

 TOP
 
    மிடறு (2)
பருகு படி மிடறு என்கோ பெரிய - பரி 11/29
கறை மிடறு அணியலும் அணிந்தன்று அ கறை - புறம் 1/5

 TOP
 
    மிடாஅ (1)
சாறு அயர்ந்து அன்ன மிடாஅ சொன்றி - குறி 201

 TOP
 
    மிடை (19)
புலவு பட கொன்று மிடை தோல் ஓட்டி - மது 370
ஒலி கா ஓலை முள் மிடை வேலி - நற் 38/8
நெடு நிமிர் தெருவில் கை புகு கொடு மிடை
  நொதுமலாளன் கதுமென தாக்கலின் - நற் 50/4,5
மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே - நற் 152/2
மணி மிடை பொன்னின் மாமை சாய என் - நற் 304/6
மணி மிடை அல்குல் மடந்தை - குறு 274/7
மிடை பெறின் நேரா தகைத்து - கலி 102/16
நல்லவர் கொண்டார் மிடை
  அவர் மிடை கொள - கலி  103/9,10
அவர் மிடை கொள - கலி 103/10
நாள்_மீன் வாய் சூழ்ந்த மதி போல் மிடை மிசை - கலி 104/27
மேல் நிலை மிகல் இகலின் மிடை கழிபு இழிபு மேற்சென்று - கலி 104/33
மிடை பாயும் வெள் ஏறு கண்டைகா - கலி 105/44
பிடி மிடை களிற்றின் தோன்றும் - அகம் 99/13
மிடை ஊர்பு இழிய கண்டனென் இவள் என - அகம் 158/6
கடவுள் மரத்த முள் மிடை குடம்பை - அகம் 270/12
மணி மிடை பவளம் போல அணி மிக - அகம் 304/13
புன் மூசு கவலைய முள் மிடை வேலி - புறம் 116/4
பனி நீர் பூவா மணி மிடை குவளை - புறம் 153/7
மூடை பண்டம் மிடை நிறைந்து அன்ன - புறம் 393/13

 TOP
 
    மிடைந்த (20)
கோட்டு இணர் வேம்பின் ஏட்டு இலை மிடைந்த
  படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் - பெரும் 59,60
பல் பூ மிடைந்த படலை கண்ணி - பெரும் 174
தளிரொடு மிடைந்த காமரு கண்ணி - மலை 430
நறும் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில் - நற் 314/4
இல்லமொடு மிடைந்த ஈர்ம் தண் கண்ணியன் - நற் 376/6
பொன் நேர் ஆவிரை புது மலர் மிடைந்த
  பல் நூல் மாலை பனை படு கலி மா - குறு 173/1,2
கடவை மிடைந்த துடவை அம் சிறுதினை - குறு 392/4
பகன்றை வான் மலர் மிடைந்த கோட்டை - ஐங் 97/1
இலங்கு மணி மிடைந்த பொலம் கல திகிரி - பதி 14/18
இலங்கு மணி மிடைந்த பசும்பொன் படலத்து - பதி 39/14
கொல் களிறு மிடைந்த பஃறோல் தொழுதியொடு - பதி 83/3
வெரிந தோலொடு முழு மயிர் மிடைந்த
  வரி மலி அர உரி வள்பு கண்டு அன்ன - பரி  21/5,6
நாணொடு மிடைந்த கற்பின் வாள் நுதல் - அகம் 9/24
குளவியொடு மிடைந்த கூதளம் கண்ணி - அகம் 272/8
கொடு முள் ஈங்கை சூரலொடு மிடைந்த
  வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த - அகம் 357/1,2
இரும் இடை மிடைந்த சில சொல் - புறம் 243/13
காட்டொடு மிடைந்த சீயா முன்றில் - புறம் 316/2
ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த
  மதி உறழ் ஆரம் மார்பில் புரள - புறம் 362/1,2
முழவு மருள் திரு மணி மிடைந்த நின் - புறம் 368/17
துடி அடி குழவிய பிடி இடை மிடைந்த
  வேழ முகவை நல்கு-மதி - புறம் 369/26,27

 TOP
 
    மிடைந்தவை (1)
பொய்யொடு மிடைந்தவை தோன்றின் - அகம் 286/16

 TOP
 
    மிடைந்தன்றே (2)
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே நின்னொடு - புறம் 45/3
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே
  ஒருவீர் தோற்பினும் தோற்ப நும் குடியே - புறம் 45/4,5

 TOP
 
    மிடைந்து (6)
ஓங்கு நிலை கரும்பொடு கதிர் மிடைந்து யாத்த - முல் 32
அகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய - மலை 438
கொடி நுடங்கு நிலைய கொல் களிறு மிடைந்து
  வடி மணி நெடும் தேர் வேறு புலம் பரப்பி - பதி 52/1,2
மணி மிடைந்து அன்ன குன்றம் கவைஇய - அகம் 14/4
மென் கழை கரும்பின் நல் பல மிடைந்து
  பெரும் செய் நெல்லின் பாசவல் பொத்தி - அகம் 346/7,8
நெடும் கொடி உழிஞை பவரொடு மிடைந்து
  செறிய தொடுத்த தேம் பாய் கண்ணி - புறம் 76/5,6

 TOP
 
    மிண்டி (1)
உளி வாய் சுரையின் மிளிர மிண்டி
  இரு நில கரம்பை படு நீறு ஆடி - பெரும் 92,93

 TOP
 
    மிதப்ப (1)
பரல் வறை கருனை காடியின் மிதப்ப
  அயின்ற காலை பயின்று இனிது இருந்து - பொரு 115,116

 TOP
 
    மிதப்பு (1)
பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன - அகம் 224/6

 TOP
 
    மிதவை (6)
வேய் கொள் அரிசி மிதவை சொரிந்த - மலை 435
கோல் வரைந்து அன்ன வால் அவிழ் மிதவை
  வாங்கு கை தடுத்த பின்றை ஓங்கிய - அகம் 37/13,14
உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை
  பெரும் சோற்று அமலை நிற்ப நிரை கால் - அகம் 86/1,2
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே - அகம் 340/15
ஆய்_மகள் அட்ட அம் புளி மிதவை
  அவரை கொய்யுநர் ஆர மாந்தும் - புறம் 215/4,5
விழுக்கு நிணம் பெய்த தயிர் கண் மிதவை
  யாணர் நல்லவை பாணரொடு ஒராங்கு - புறம் 326/10,11

 TOP
 
    மிதவையர் (1)
வெண் கிடை மிதவையர் நன் கிடை தேரினர் - பரி 6/35

 TOP
 
    மிதவையும் (1)
பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர் - மலை 417

 TOP
 
    மிதி (8)
மிதி உலை கொல்லன் முறி கொடிற்று அன்ன - பெரும் 207
நெடும் கை யானை நெய் மிதி கவளம் - பெரும் 394
மெய் உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளி - மலை 419
உலை வாங்கு மிதி தோல் போல - குறு 172/6
மிதி அல் செருப்பின் பூழியர் கோவே - பதி 21/23
குருகு ஊது மிதி உலை பிதிர்வின் பொங்கி - அகம் 202/6
பிடி மிதி வழுதுணை பெரும் பெயர் தழும்பன் - அகம் 227/17
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே - அகம் 340/15

 TOP
 
    மிதிக்கும் (3)
புல் இதழ் பொதிந்த பூ தப மிதிக்கும்
  மல்லல் இரும் கழி மலி நீர் சேர்ப்பற்கு - நற் 239/7,8
நாரை மிதிக்கும் என் மகள் நுதலே - குறு 114/5
துதி கால் அன்னம் துணை செத்து மிதிக்கும்
  தன் கடல் வளையினும் இலங்கும் இவள் - ஐங் 106/2,3

 TOP
 
    மிதித்த (6)
இன மீன் ஆர்ந்த வெண்_குருகு மிதித்த
  வறு நீர் நெய்தல் போல - நற் 183/9,10
எழு குளிறு மிதித்த ஒரு பழம் போல - குறு 24/4
ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில் - குறு 52/1
பொரு களிறு மிதித்த நெரி தாள் வேங்கை - குறு 208/2
மரம் செல மிதித்த மாஅல் போல - அகம் 59/6
பெரும் களிறு மிதித்த அடியகத்து இரும் புலி - அகம் 155/11

 TOP
 
    மிதித்தது (1)
போர் ஆர் கதவம் மிதித்தது அமையுமோ - கலி 90/12

 TOP
 
    மிதித்து (3)
சேறு ஆடு மேனி திரு நிலத்து உய்ப்ப சிரம் மிதித்து
  தீர்வு இலது ஆக செருவுற்றாள் செம் புனல் - பரி  7/74,75
அழுவம் சூழ் புகை அழல் அதர்பட மிதித்து தம் - கலி 25/10
ஊராரை உச்சி மிதித்து
  ஆங்கு - கலி  104/76,77

 TOP
 
    மிதிப்ப (1)
மிதிப்ப நக்க கண் போல் நெய்தல் - ஐங் 151/3

 TOP
 
    மிதிப்புழி (1)
இருளிடை மிதிப்புழி நோக்கி அவர் - அகம் 128/14

 TOP
 
    மிதுனம் (2)
புந்தி மிதுனம் பொருந்த புலர் விடியல் - பரி 11/6
மிதுனம் அடைய விரி கதிர் வேனில் - பரி 11/12

 TOP
 
    மிரியல் (1)
சிறு சுளை பெரும் பழம் கடுப்ப மிரியல்
  புணர் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து - பெரும் 78,79

 TOP
 
    மிலேச்சர் (1)
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக - முல் 66

 TOP
 
    மிலைச்சி (3)
நலம் பெறு சென்னி நாம் உற மிலைச்சி
  பைம் கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி - குறி 116,117
விரி இணர் வேங்கையொடு வேறு பட மிலைச்சி
  விரிவு மலர் அணிந்த வேனில் கான்யாற்று - ஐங் 367/2,3
மா இரும் சென்னி அணிபெற மிலைச்சி
  சேஎருற்ற செல் படை மறவர் - பதி 41/10,11

 TOP
 
    மிலைந்த (3)
பெரும் தண் கண்ணி மிலைந்த சென்னியன் - திரு 44
ஓங்கு இரும் சென்னி மேம்பட மிலைந்த
  இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய - பொரு 145,146
மெல் இணர் கண்ணி மிலைந்த மைந்தர் - புறம் 24/8

 TOP
 
    மிலைந்து (4)
பிணையல் அம் கண்ணி மிலைந்து மணி ஆர்ப்ப - கலி 139/9
பூம் கண் வேங்கை பொன் இணர் மிலைந்து
  வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇ - அகம் 182/1,2
நெடும் கொடி உழிஞை பவரொடு மிலைந்து
  குறும் தொடி கழித்த கை சாபம் பற்றி - புறம் 77/3,4
மன்ற வேம்பின் ஒண் குழை மிலைந்து
  தெண் கிணை முன்னர் களிற்றின் இயலி - புறம் 79/2,3

 TOP
 
    மிலையும் (1)
இன மீன் வேட்டுவர் ஞாழலொடு மிலையும்
  மெல்லம்புலம்ப நெகிழ்ந்தன தோளே - அகம் 270/3,4

 TOP
 
    மிழலை (1)
மழலை அம் குறுமகள் மிழலை அம் தீம் குரல் - நற் 209/5

 TOP
 
    மிழலையொடு (1)
புனல் அம் புதவின் மிழலையொடு கழனி - புறம் 24/19

 TOP
 
    மிழற்றி (1)
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி
  முகிழ் நிலா திகழ்தரும் மூவா திங்கள் - அகம் 54/16,17

 TOP
 
    மிழற்றும் (2)
பைம் கிளி மிழற்றும் பால் ஆர் செழு நகர் - பட் 264
சிறிய மிழற்றும் செ வாய் பெரிய - அகம் 126/18

 TOP
 
    மிளகின் (2)
கரும் கொடி மிளகின் காய் துணர் பசும் கறி - மலை 521
ஆய் கொல் மிளகின் அமலை அம் கொழும் கொடி - நற் 234/16

 TOP
 
    மிளகு (3)
பழு மிளகு உக்க பாறை நெடும் சுனை - குறி 187
மிளகு பெய்து அனைய சுவைய புன் காய் - நற் 66/1
மிளகு எறி உலக்கையின் இரும் தலை இடித்து - பதி 41/21

 TOP
 
    மிளிர் (3)
ஆற்று அணி வெள் வாள் விதிர்ப்போர் மிளிர் குந்தம் ஏந்துவோர் - பரி 11/50
மிளிர் மின் வாய்ந்த விளங்கு ஒளி நுதலார் - பரி 23/34
மலங்கு மிளிர் செறுவின் தளம்பு தடிந்திட்ட - புறம் 61/3

 TOP
 
    மிளிர்க்கும் (2)
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே - நற் 2/10
வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும்
  சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகை - நற் 261/7,8

 TOP
 
    மிளிர்ந்த (2)
செரு படை மிளிர்ந்த திருத்துறு பைம் சாலி - புறம் 369/12
உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன் - புறம் 376/19

 TOP
 
    மிளிர்ந்திசின் (1)
இரு நிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒரு நாள் - புறம் 139/13

 TOP
 
    மிளிர்ந்திட்ட (1)
படை மிளிர்ந்திட்ட யாமையும் அறைநர் - புறம் 42/14

 TOP
 
    மிளிர்ப்ப (1)
கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப
  வரு கணை வாளி - புறம் 371/10,11

 TOP
 
    மிளிர்ப்பு (1)
பெரும் மலை மிளிர்ப்பு அன்ன காற்று உடை கனை பெயல் - கலி 45/4

 TOP
 
    மிளிர்வையொடு (1)
கரும் கண் வராஅல் பெரும் தடி மிளிர்வையொடு
  புகர்வை அரிசி பொம்மல் பெரும் சோறு - நற் 60/4,5

 TOP
 
    மிளிர (10)
உளி வாய் சுரையின் மிளிர மிண்டி - பெரும் 92
ஓங்கு வரை மிளிர ஆட்டி வீங்கு செலல் - நற் 51/3
பாம்பு உடை விடர ஓங்கு மலை மிளிர
  உருமு சிவந்து எறியும் பொழுதொடு பெரு நீர் - நற் 104/9,10
ஓங்கு வரை மிளிர ஆட்டி பாம்பு எறிபு - நற் 347/3
குடுமி கட்டிய படப்பையொடு மிளிர
  அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர் - அகம் 41/5,6
வெள் அரா மிளிர வாங்கும் - அகம் 257/20
கொழும் கிழங்கு மிளிர கிண்டி கிளையொடு - புறம் 168/3
கடறு மணி கிளர சிதறு பொன் மிளிர
  கடிய கதழும் நெடு வரை படப்பை - புறம் 202/3,4
நின்று காண்பு அன்ன நீள் மலை மிளிர
  குன்று தூவ எறியும் அரவம் போல - புறம் 211/3,4
அரி குரல் தடாரியின் யாமை மிளிர
  பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு - புறம் 249/4,5

 TOP
 
    மிளை (19)
வாழ் முள் வேலி சூழ் மிளை படப்பை - பெரும் 126
அடையா வாயில் மிளை சூழ் படப்பை - பெரும் 401
அரும் குழு மிளை குண்டு கிடங்கின் - மது 64
வளை ஆன் தீம் பால் மிளை சூழ் கோவலர் - மலை 409
குன்றகத்ததுவே குழு மிளை சீறூர் - நற் 95/7
மிளை வலி சிதைய களிறு பல பரப்பி - நற் 150/2
மிளை வந்து பெயரும் தண்ணுமை குரலே - குறு 390/5
கடி மிளை குண்டு கிடங்கின் - பதி 20/17
கடி மிளை குண்டு கிடங்கின் - பதி 22/24
வாள் மதில் ஆக வேல் மிளை உயர்த்து - பதி 33/7
கடி மிளை குண்டு கிடங்கின் - பதி 92/12
பொங்கடி படி கயம் மண்டிய பசு மிளை
  தண் குடவாயில் அன்னோள் - அகம் 44/17,18
கடி மிளை புறவின் பூத்த முல்லையொடு - அகம் 216/10
வில் ஈண்டு குறும்பின் வல்லத்து புற மிளை
  ஆரியர் படையின் உடைக என் - அகம் 336/21,22
கதிர் நுழைகல்லா மரம் பயில் கடி மிளை
  அரும் குறும்பு உடுத்த கானப்பேர் எயில் - புறம் 21/5,6
புலாஅல் அம்பின் போர் அரும் கடி மிளை
  வலாஅரோனே வாய் வாள் பண்ணன் - புறம் 181/5,6
அரு மிளை இருக்கையதுவே வென் வேல் - புறம் 325/13
அரு மிளை இருக்கையதுவே மனைவியும் - புறம் 326/7
வேந்து உடை மிளை அயல் பரக்கும் - புறம் 387/9

 TOP
 
    மிளைநாட்டு (1)
மிளைநாட்டு அத்தத்து ஈர்ம் சுவல் கலித்த - அகம் 133/16

 TOP
 
    மிளைஇய (1)
சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று - அகம் 228/9

 TOP
 
    மிறை (1)
ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறை ஆக - புறம் 284/6

 TOP
 
    மின் (35)
மின் உறழ் இமைப்பின் சென்னி பொற்ப - திரு 85
இன்னே முடிக-தில் அம்ம மின் அவிர் - நெடு 168
மின் மயங்கு கருவிய கல் மிசை பொழிந்து என - குறி 53
மின் ஒளி எறிப்ப தம் ஒளி மழுங்கி - பட் 292
மின் இரும் பீலி அணி தழை கோட்டொடு - மலை 5
மின் இவர் கொடும் பூண் கொண்கனொடு - நற் 187/9
மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க - நற் 221/9
மின் நேர் ஓதி இவளொடு நாளை - நற் 339/9
பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர் - குறு 246/6
மின் இடை நடுங்கும் கடை பெயல் வாடை - குறு 277/6
மின் அவிர் வயங்கு இழை ஞெகிழ சாஅய் - ஐங் 234/1
மின் இழை ஞெகிழ சாஅய் - ஐங் 455/4
அவிர் இழை தைஇ மின் உமிழ்பு இலங்க - பதி 39/15
மின் இழை விறலியர் நின் மறம் பாட - பதி 54/6
மின் உமிழ்ந்து அன்ன சுடர் இழை ஆயத்து - பதி 81/26
மின் ஈன்ற விளங்கு இணர் ஊழா - பரி 8/14
மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட - பரி 11/135
மின் அவிர் ஒளி இழை வேயுமோரும் - பரி 12/11
கருவி மின் அவிர் இலங்கும் பொலம் பூண் - பரி 13/10
மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த - பரி 13/28
மிளிர் மின் வாய்ந்த விளங்கு ஒளி நுதலார் - பரி 23/34
மின் உகு தளிர் அன்ன மெலிவு வந்து உரைப்பதால் - கலி 48/19
மின் ஓரும் கண் ஆக இடி என்னாய் பெயல் என்னாய் - கலி 49/12
மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலே போல் - கலி 55/1
கொடி என மின் என அணங்கு என யாது ஒன்றும் - கலி 57/4
மின் அவிர் நுடக்கமும் கனவும் போல் மெய் காட்டி - கலி 138/5
மின் இலை பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன் - அகம் 80/11
மின் நேர் மருங்குல் குறுமகள் - அகம் 126/21
மின் உடை கருவியை ஆகி நாளும் - அகம் 188/7
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன் உற - அகம் 203/10
மின் நேர் ஓதி பின்னு பிணி விடவே - அகம் 234/18
மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்க - அகம் 272/5
மின்_ஈர்_ஓதி என்னை நின் குறிப்பே - அகம் 356/20
மின் நேர் பச்சை மிஞிற்று குரல் சீறியாழ் - புறம் 308/2
வாள் மின் நாக வயங்கு கடிப்பு அமைந்த - புறம் 369/4

 TOP
 
    மின்_ஈர்_ஓதி (1)
மின்_ஈர்_ஓதி என்னை நின் குறிப்பே - அகம் 356/20

 TOP
 
    மின்மினி (5)
பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்து - நற் 44/10
நிலம் படு மின்மினி போல பல உடன் - அகம் 67/16
மின்மினி மொய்த்த முரவு வாய் புற்றம் - அகம் 72/3
சிறு பல் மின்மினி போல பல உடன் - அகம் 202/7
சிறு பல் மின்மினி கடுப்ப எவ்வாயும் - அகம் 291/8

 TOP
 
    மின்னால் (1)
இருள் போழும் கொடி மின்னால்
  வெண் சுடர் வேல் வேள் விரை மயில் மேல் ஞாயிறு நின் - பரி  18/25,26

 TOP
 
    மின்னி (25)
கொடி நுடங்கு இலங்கின மின்னி
  ஆடு மழை இறுத்தன்று அவர் கோடு உயர் குன்றே - நற் 68/9,10
மலை இமைப்பது போல் மின்னி
  சிலை வல் ஏற்றொடு செறிந்த இ மழைக்கே - நற் 112/8,9
செம்பு சொரி பானையின் மின்னி எவ்வாயும் - நற் 153/3
பொலம் தொடி போல மின்னி கணம்கொள் - நற் 197/9
நகுவது போல மின்னி
  ஆர்ப்பது போலும் இ கார் பெயல் குரலே - நற் 214/11,12
உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னி
  பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள் - நற் 255/8,9
நெடு வான் மின்னி குறும் துளி தலைஇ - நற் 274/1
இரு விசும்பு அதிர மின்னி
  கருவி மா மழை கடல் முகந்தனவே - நற் 329/10,11
மா மலை விடரகம் விளங்க மின்னி
  மாயோள் இருந்த தேஎம் நோக்கி - நற் 371/2,3
உறை கழி வாளின் மின்னி உது காண் - நற் 387/9
வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி
  நிலை கிளர் மீனின் தோன்றும் நாடன் - நற் 393/6,7
தாழ் இருள் துமிய மின்னி தண்ணென - குறு 270/1
கண் ஒளிர் எஃகின் கடிய மின்னி அவன் - பரி 22/7
நல் நுதல் நீத்த திலகத்தள் மின்னி
  மணி பொரு பசும்பொன்-கொல் மா ஈன்ற தளிரின் மேல் - கலி  143/3,4
இருள் கிழிப்பது போல் மின்னி வானம் - அகம் 72/1
விடு பொறி சுடரின் மின்னி அவர் - அகம் 73/16
நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னி
  படு மழை பொழிந்த பானாள் கங்குல் - அகம் 92/1,2
விடு பொறி ஞெகிழியின் கொடி பட மின்னி
  படு மழை பொழிந்த பானாள் கங்குல் - அகம் 108/7,8
இமைப்பது போல மின்னி உறைக்கொண்டு - அகம் 139/2
வேலினும் பல் ஊழ் மின்னி முரசு என - அகம் 175/12
வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி
  பரூஉ உறை பல் துளி சிதறி வான் நவின்று - அகம் 218/3,4
கோல் நிமிர் கொடியின் வசிபட மின்னி
  உரும் உரறு அதிர் குரல் தலைஇ பானாள் - அகம் 278/4,5
கொடிபட மின்னி பாயின்றால் மழையே - அகம் 312/14
போழ்ந்த போல பல உடன் மின்னி
  தாழ்ந்த போல நனி அணி வந்து - அகம் 374/4,5
இலங்கு வாள் அவிர் ஒளி வலம் பட மின்னி
  கணை துளி பொழிந்த கண்கூடு பாசறை - புறம் 372/3,4

 TOP
 
    மின்னின் (3)
மின்னின் தூவி இரும் குயில் பொன்னின் - குறு 192/3
நுண் கொடி மின்னின் பைம் பயிர் துமிய - அகம் 254/14
வேலும் மின்னின் விளங்கும் உலகத்து - புறம் 42/4

 TOP
 
    மின்னு (21)
பகல் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்து ஆங்கு - பெரும் 484
மின்னு நிமிர்ந்து அனையர் ஆகி நறவு மகிழ்ந்து - மது 679
வானம் மின்னு வசிவு பொழிய ஆனாது - மலை 97
மின்னு நிமிர்ந்து அன்ன வேலன் வந்து என - நற் 51/6
என் எனப்படுமோ தோழி மின்னு வசிபு - நற் 228/1
அருளிலர் வாழி தோழி மின்னு வசிபு - நற் 261/1
மின்னு வசி விளக்கத்து வரும் எனின் - நற் 334/8
என் எனப்படும்-கொல் தோழி மின்னு வர - குறு 194/1
மின்னு செய் கருவிய பெயல் மழை தூங்க - குறு 205/1
நெடு வயின் ஒளிறும் மின்னு பரந்து ஆங்கு - பதி 24/1
கண் ஒளிர் திகழ் அடர் இடு சுடர் படர் கொடி மின்னு போல் - பரி 21/54
கொடி விடுபு இருளிய மின்னு செய் விளக்கத்து - கலி 41/6
துளி இடை மின்னு போல் தோன்றி ஒருத்தி - கலி 139/5
கொடி மின்னு கொள்வேன் என்றன்னள் வடி நாவின் - கலி 141/18
மின்னு விட சிறிய ஒதுங்கி மென்மெல - அகம் 8/14
மின்னு நிமிர்ந்து அன்ன பொன் இயல் புனை படை - அகம் 124/9
மின்னு நிமிர்ந்து அன்ன கனம் குழை இமைப்ப - அகம் 158/3
அழல் கொடி அன்ன மின்னு வசிபு நுடங்க - அகம் 162/4
என்னை இன்னல் படுத்தனை மின்னு வசிபு - அகம் 212/12
வயங்கு வெயில் ஞெமிய பாஅய் மின்னு வசிபு - அகம் 322/1
மின்னு நிமிர்ந்து அன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல் - புறம் 57/8

 TOP
 
    மின்னுக்கொடி (1)
கண் பொரா எறிக்கும் மின்னுக்கொடி புரைய - மது 665

 TOP
 
    மின்னும் (4)
ஒளிறு வான் பளிங்கொடு செம்பொன் மின்னும்
  கரும் கல் கான்யாற்று அரும் சுழி வழங்கும் - நற் 292/6,7
மின்னும் தோழி என் இன் உயிர் குறித்தே - குறு 216/7
கயம் தலை மின்னும் கதிர் விடு மு காழ் - கலி 80/2
செவி மறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளை - கலி 101/27

 TOP
 
    மின்னுமால் (1)
இன்னே பெய்ய மின்னுமால் தோழி - நற் 7/6

 TOP
 
    மின்னொடு (3)
வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி - பரி 12/1
சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு இரங்கி - அகம் 43/2
இன்னாது என்றலும் இலமே மின்னொடு
  வானம் தண் துளி தலைஇ ஆனாது - புறம் 192/6,7

 TOP