<<முந்திய பக்கம் சங்க இலக்கியம் - தொடரடைவு

மொ - முதல் சொற்கள்
மொக்குள் 4
மொக்குளின் 1
மொசி 2
மொசிக்கும் 1
மொசித்த 2
மொசிந்தன 1
மொசிந்து 3
மொசிய 2
மொய் 7
மொய்க்கும் 1
மொய்த்த 4
மொய்த்தலின் 1
மொய்த்தன 1
மொய்ப்ப 7
மொய்ம் 1
மொய்ம்ப 1
மொய்ம்பனின் 1
மொய்ம்பின் 14
மொய்ம்பின 1
மொய்ம்பினோர் 1
மொய்ம்பு 2
மொய்ம்பொடு 1
மொழி 93
மொழிக்-கண் 1
மொழிக்கு 1
மொழிகுவம் 1
மொழிகோ 5
மொழித்து 1
மொழிதலின் 1
மொழிதலும் 1
மொழிதும் 1
மொழிந்த 3
மொழிந்தனம் 1
மொழிந்தனனே 1
மொழிந்தனையே 1
மொழிந்து 5
மொழிந்தும் 1
மொழிந்தே 1
மொழிப 2
மொழிப-மன்னே 1
மொழிபவை 1
மொழிபெயர் 5
மொழிமே 1
மொழிமோ 2
மொழிய 2
மொழியர் 1
மொழியல் 2
மொழியலன் 1
மொழியலன்-மாதோ 1
மொழியலனே 1
மொழியவர் 1
மொழியவும் 2
மொழியா 2
மொழியாட்கே 1
மொழியாது 1
மொழியாம் 1
மொழியின் 1
மொழியினும் 2
மொழியும் 6
மொழியூஉ 1
மொழியே 2
மொழியோயே 1
மொழிவது 4
மொழிவல் 6
மொழிவாயோ 1
மொழிவென் 1
மொழிவோர் 4

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    மொக்குள் (4)
மரல் பழுத்து அன்ன மறுகு நீர் மொக்குள்
  நன் பகல் அந்தி நடை இடை விலங்கலின் - பொரு 45,46
மாரி மொக்குள் புடைக்கும் நாட - ஐங் 275/3
துளி படு மொக்குள் துள்ளுவன சால - அகம் 324/7
மொக்குள் அன்ன பொகுட்டு விழி கண்ண - புறம் 333/2

 TOP
 
    மொக்குளின் (1)
அடு மரல் மொக்குளின் அரும்பு வாய் அவிழ - நற் 278/2

 TOP
 
    மொசி (2)
மல்லல் மொசி விரல் ஒற்றி மணி கொண்டு - அகம் 215/14
நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல் - அகம் 375/7

 TOP
 
    மொசிக்கும் (1)
தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும்
  வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய் அணிகொள - அகம் 257/8,9

 TOP
 
    மொசித்த (2)
மை ஊன் மொசித்த ஒக்கலொடு துறை நீர் - புறம் 96/7
நெடு நகர் வந்து என விடு கணை மொசித்த
  மூரி வெண் தோள் - புறம் 285/8,9

 TOP
 
    மொசிந்தன (1)
கடும் தேறு உறு கிளை மொசிந்தன துஞ்சும் - பதி 71/6

 TOP
 
    மொசிந்து (3)
பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூம் கடம்பின் - பதி 11/12
மொய் வளம் செருக்கி மொசிந்து வரும் மோகூர் - பதி 49/8
விசும்பிடை தூர ஆடி மொசிந்து உடன் - அகம் 181/10

 TOP
 
    மொசிய (2)
வெண் புறம் மொசிய வார்க்கும் தெண் கடல் - நற் 74/9
வீங்கு சுவல் மொசிய தாங்கு நுகம் தழீஇ - அகம் 400/10

 TOP
 
    மொய் (7)
மை உக்கு அன்ன மொய் இரும் கூந்தல் - மது 417
மொய் வளம் செருக்கி மொசிந்து வரும் மோகூர் - பதி 49/8
மொய் வளம் பூத்த முயக்கம் யாம் கைப்படுத்தேம் - பரி 18/18
முற்றா நறு நறா மொய் புனல் அட்டி - பரி 20/52
முன்புற்று அறியா முதல் புணர்ச்சி மொய் குழலை - பரி 28/1
பொய்கை தேர்ந்து அலமரும் பொழுதினான் மொய் தப - கலி 78/7
மொய் வலி அறுத்த ஞான்றை - அகம் 246/13

 TOP
 
    மொய்க்கும் (1)
கயிறு குறு முகவை மூயின மொய்க்கும்
  ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த - பதி 22/14,15

 TOP
 
    மொய்த்த (4)
கிளை செத்து மொய்த்த தும்பி பழம் செத்து - நற் 35/3
வெள் வசி படீஇயர் மொய்த்த வள்பு அழீஇ - நற் 82/9
குளவி மொய்த்த அழுகல் சில் நீர் - குறு 56/2
மின்மினி மொய்த்த முரவு வாய் புற்றம் - அகம் 72/3

 TOP
 
    மொய்த்தலின் (1)
அறு_கால்_பறவை அளவு இல மொய்த்தலின்
  கண் கோள் ஆக நோக்கி பண்டும் - நற் 55/5,6

 TOP
 
    மொய்த்தன (1)
முயக்கு இடை ஈயாது மொய்த்தன பருந்தே - புறம் 288/9

 TOP
 
    மொய்ப்ப (7)
வரி கடை பிரசம் மூசுவன மொய்ப்ப
  எருத்தம் தாழ்ந்த விரவு பூம் தெரியல் - மது 717,718
உண்கண் வண்டு இனம் மொய்ப்ப
  தெண் கடல் பெரும் திரை மூழ்குவோளே - ஐங் 126/2,3
பொறி வரி சிறைய வண்டு இனம் மொய்ப்ப
  சாந்தம் நாறும் நறியோள் - ஐங் 240/2,3
இரும் சிறை வண்டின் பெரும் கிளை மொய்ப்ப
  நீ நயந்து உறையப்பட்டோள் - ஐங் 370/2,3
தாது ஆர் பிரசம் மொய்ப்ப
  போது ஆர் கூந்தல் முயங்கினள் எம்மே - ஐங் 417/3,4
அம் சிறை வண்டின் அரி இனம் மொய்ப்ப
  மென்புல முல்லை மலரும் மாலை - ஐங் 489/1,2
சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப
  மரீஇயோர் அறியாது மைந்து பட்டன்றே - புறம் 13/7,8

 TOP
 
    மொய்ம் (1)
உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன் - அகம் 152/9

 TOP
 
    மொய்ம்ப (1)
காண்தகு மொய்ம்ப காட்டினை ஆகலின் - புறம் 43/20

 TOP
 
    மொய்ம்பனின் (1)
வேல் ஆற்றும் மொய்ம்பனின் விரை மலர் அம்பினோன் - பரி 22/26

 TOP
 
    மொய்ம்பின் (14)
கூற்றத்து அன்ன மாற்று அரு மொய்ம்பின்
  கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு - திரு 81,82
செம் பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு - திரு 105
சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி - திரு 275
மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி - பொரு 140
மா தானை மற மொய்ம்பின்
  செம் கண்ணால் செயிர்த்து நோக்கி - பட் 279,280
செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு - நற் 184/2
வார்ந்து புனைந்து அன்ன ஏந்து குவவு மொய்ம்பின்
  மீன் பூத்து அன்ன விளங்கு மணி பாண்டில் - பதி 90/34,35
வாள் மிகு வய மொய்ம்பின்
  வரை அகலத்தவனை வானவன் மகள் - பரி  9/57,58
ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின்
  ஆட்டனத்தி நலன் நயந்து உரைஇ - அகம் 222/6,7
ஏற்று இயல் எழில் நடை பொலிந்த மொய்ம்பின்
  தோட்டு இரும் சுரியல் மணந்த பித்தை - அகம் 236/14,15
காய் சின மொய்ம்பின் பெரும் பெயர் கரிகால் - அகம் 246/8
ஏந்து குவவு மொய்ம்பின் பூ சோர் மாலை - அகம் 248/12
கூர் வேல் குவைஇய மொய்ம்பின்
  தேர் வண் பாரி தண் பறம்பு நாடே - புறம் 118/4,5
மொய்ம்பின் ஊக்கி மெய் கொண்டனனே - புறம் 274/7

 TOP
 
    மொய்ம்பின (1)
முடி உதிர் பூம் தாது மொய்ம்பின ஆக - கலி 88/2

 TOP
 
    மொய்ம்பினோர் (1)
இரும் செருவின் இகல் மொய்ம்பினோர்
  கல் எறியும் கவண் வெரீஇ - பட் 72,73

 TOP
 
    மொய்ம்பு (2)
மொய்ம்பு இறந்து திரிதரும் ஒரு பெரும் தெரியல் - மது 437
அம் தளிர் குவவு மொய்ம்பு அலைப்ப சாந்து அருந்தி - குறி 120

 TOP
 
    மொய்ம்பொடு (1)
மீளி மொய்ம்பொடு நிலன் எறியா குறுகி - அகம் 93/18

 TOP
 
    மொழி (93)
மென் மொழி மேவலர் இன் நரம்பு உளர - திரு 142
பலர் புகழ் நன் மொழி புலவர் ஏறே - திரு 268
அன்பு உடை நன் மொழி அளைஇ விளிவு இன்று - திரு 292
சீர் உடை நன் மொழி நீரொடு சிதறி - பொரு 24
இலவு இதழ் புரையும் இன் மொழி துவர் வாய் - பொரு 27
ஈர நன் மொழி இரவலர்க்கு ஈந்த - சிறு 93
ஆர்வ நன் மொழி ஆயும் மால் வரை - சிறு 99
நன்னர் நன் மொழி கேட்டனம் அதனால் - முல் 17
ஈர நன் மொழி தீர கூறி - குறி 234
புகழ் நிலைஇய மொழி வளர - பட் 42
மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்து - பட் 216
விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை - மலை 327
பிழையா நன் மொழி தேறிய இவட்கே - நற் 10/9
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து - நற் 36/7
மையல் நெஞ்சம் என் மொழி கொளினே - நற் 146/11
வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும் - நற் 148/1
சில் மொழி துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே - நற் 190/9
யான் தன் மொழிதலின் மொழி எதிர்வந்து - நற் 204/7
முடி முதிர் பரதவர் மட மொழி குறுமகள் - நற் 207/9
தாமே ஒப்புரவு அறியின் தே மொழி
  கயல் ஏர் உண்கண் குறுமகட்கு - நற் 220/8,9
தேர் நடைபயிற்றும் தே மொழி புதல்வன் - நற் 250/3
துனி இல் நல் மொழி இனிய கூறியும் - நற் 254/3
குவளை நாறும் கூந்தல் தே மொழி
  இவளின் தீர்ந்தும் ஆள்வினை வலிப்ப - நற் 262/7,8
பொம்மல்_ஓதியை தன் மொழி கொளீஇ - நற் 293/7
தாம் மொழி வன்மையின் பொய்த்தனர் வாழிய - நற் 314/8
என் வாய் நின் மொழி மாட்டேன் நின்-வயின் - நற் 342/3
திருந்து இழை அரிவை தே_மொழி நிலையே - நற் 374/9
மொழி பெயர் தேஎத்தர் ஆயினும் - குறு 11/7
வார்ந்து இலங்கு வை எயிற்று சின் மொழி அரிவையை - குறு 14/2
நாலூர் கோசர் நல் மொழி போல - குறு 15/3
தே மொழி திரண்ட மென் தோள் மா மலை - குறு 72/3
மொழி பெயர் பல் மலை இறப்பினும் - ஐங் 321/4
போகிய அவட்கோ நோவேன் தே மொழி
  துணையிலள் கலிழும் நெஞ்சின் - ஐங் 378/3,4
புதல்வன் கவைஇயினன் தந்தை மென் மொழி
  புதல்வன் தாயோ இருவரும் கவையினள் - ஐங் 409/1,2
தே மொழி அரிவை தெளிந்திசின் யானே - ஐங் 466/5
திருந்திய இயல் மொழி திருந்து இழை கணவ - பதி 24/11
விரவு மொழி கட்டூர் வயவர் வேந்தே - பதி 90/30
முன்துறை நிறை அணி நின்றவர் மொழி மொழி - பரி 12/36
முன்துறை நிறை அணி நின்றவர் மொழி மொழி
  ஒன்று அல பலபல உடன் எழுந்தன்று அவை - பரி  12/36,37
அவை நான்கும் உறழும் அருள் செறல்-வயின் மொழி
  முடிந்ததும் முடிவதும் முகிழ்ப்பதும் அவை மூன்றும் - பரி  13/46,47
சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம் - பரி 15/23
தெய்வத்து திறன் நோக்கி தெருமரல் தே_மொழி - கலி 16/19
பேதுறு மட மொழி பிணை எழில் மான் நோக்கின் - கலி 27/3
சேயார் கண் சென்ற என் நெஞ்சினை சில்_மொழி - கலி 29/10
திருந்து எயிறு இலங்கு நின் தே மொழி படர்ந்தே - கலி 29/26
நகை_மொழி நல்லவர் நாணும் நிலை போல் - கலி 40/2
இன் நகை இலங்கு எயிற்று தே மொழி துவர் செம் வாய் - கலி 55/4
சேந்து நீ இனையையால் ஒத்ததோ சில்_மொழி - கலி 57/11
பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு - கலி 68/1
மதி மொழி இடல் மாலை வினைவர் போல் வல்லவர் - கலி 68/2
செது மொழி சீத்த செவி செறு ஆக - கலி 68/3
முது மொழி நீரா புலன் நா உழவர் - கலி 68/4
புது மொழி கூட்டுண்ணும் புரிசை சூழ் புனல் ஊர - கலி 68/5
கண்டும் நின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார் - கலி 74/9
தே மொழி கேட்டல் இனிது மற்று இன்னாதே - கலி 80/15
மட மொழி ஆயத்தவருள் இவள் யார் உடம்போடு - கலி 102/7
ஒரு மொழி கொள்க இ உலகுடன் எனவே - கலி 104/80
நின் மொழி கொண்டு யானோ விடுவேன் மற்று என் மொழி கொண்டு - கலி 113/17
நின் மொழி கொண்டு யானோ விடுவேன் மற்று என் மொழி கொண்டு - கலி 113/17
மகிழ் செய் தே_மொழி தொய்யில் சூழ் இள முலை - கலி 125/8
இன் மணி சிலம்பின் சில் மொழி ஐம்பால் - கலி 125/16
சில்_மொழி தெளி என தேற்றிய சிறப்பு அன்றோ - கலி 132/13
தே மொழி மாதர் உறாஅது உறீஇய - கலி 139/16
திறனிலார் எடுத்த தீ மொழி எல்லாம் - கலி 144/71
ஆறு அல்ல மொழி தோற்றி அற வினை கலக்கிய - கலி 147/1
தாழ கூறிய தகைசால் நல் மொழி
  மறந்தனிர் போறிர் எம் என சிறந்த நின் - அகம் 29/11,12
செயிர் தீர் கொள்கை சில் மொழி துவர் வாய் - அகம் 75/10
நயம் புரி நல் மொழி அடக்கவும் அடங்கான் - அகம் 126/14
கூட்டு எதிர்கொண்ட வாய் மொழி மிஞிலி - அகம் 142/11
பல் மாண் தங்கிய சாயல் இன் மொழி
  முருந்து ஏர் முறுவல் இளையோள் - அகம் 193/12,13
நயந்து நாம் விட்ட நல் மொழி நம்பி - அகம் 198/3
விரவு மொழி கட்டூர் வேண்டுவழி கொளீஇ - அகம் 212/14
அருள் மொழி தேற்றி நம் அகன்றிசினோரே - அகம் 311/14
தே மொழி புதல்வர் திரங்கு முலை சுவைப்ப - அகம் 316/15
தட மென் பணை தோள் மட மொழி அரிவை - அகம் 324/2
பழி தலைத்தருதல் வேண்டுதி மொழி கொண்டு - அகம் 333/4
நின் வாய் இன் மொழி நல் வாயாக - அகம் 333/16
சில் மொழி பொலிந்த துவர் வாய் - அகம் 343/18
நிலையா நல் மொழி தேறிய நெஞ்சே - அகம் 348/14
நம்மொடு நல் மொழி நவிலும் - அகம் 353/22
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய் - அகம் 361/8
சில் மொழி அரிவை தோளே பல் மலை - அகம் 361/14
இழி-மின் என்ற நின் மொழி மருண்டிசினே - அகம் 384/8
பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே - புறம் 10/2
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி - புறம் 34/13
வட_மீன் புரையும் கற்பின் மட மொழி
  அரிவை தோள் அளவு அல்லதை - புறம் 122/8,9
முயங்கற்கு ஒத்தனை-மன்னே வயங்கு மொழி
  பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடு மழை - புறம் 151/9,10
பெரும் கல் நாடன் பேகனும் திருந்து மொழி
  மோசி பாடிய ஆயும் ஆர்வமுற்று - புறம் 158/12,13
வள்ளியோர் செவி முதல் வயங்கு மொழி வித்தி தாம் - புறம் 206/2
நறும் பல் ஒலிவரும் கதுப்பின் தே மொழி
  தெரி இழை மகளிர் பாணி பார்க்கும் - புறம் 209/16,17
மயக்கு உடைய மொழி விடுத்தனன் ஆங்கு - புறம் 239/18
பிறர் கூறிய மொழி தெரியா - புறம் 366/9
உள்ளல் ஓம்பு-மின் உயர் மொழி புலவீர் - புறம் 394/5

 TOP
 
    மொழிக்-கண் (1)
நலன் உடையார் மொழிக்-கண் தாவார் தாம் தம் நலம் - கலி 22/6

 TOP
 
    மொழிக்கு (1)
நல் மொழிக்கு அச்சம் இல்லை அவர் நாட்டு - குறு 392/2

 TOP
 
    மொழிகுவம் (1)
கேள் பெருந்தகையோடு எவன் பல மொழிகுவம்
  நாளும் கோள்_மீன் தகைத்தலும் தகைமே - கலி  5/8,9

 TOP
 
    மொழிகோ (5)
இனி எவன் மொழிகோ யானே கயன் அற - நற் 224/8
உது காண் அதுவே இது என மொழிகோ
  நோன் சினை இருந்த இரும் தோட்டு புள் இனம் - குறு 191/1,2
நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகோ
  அரும் திறல் கடவுள் செல்லூர் குணாஅது - அகம் 90/8,9
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய - புறம் 39/13
யாங்கனம் மொழிகோ ஓங்கு வாள் கோதையை - புறம் 49/3

 TOP
 
    மொழித்து (1)
ஒழுக்கு உடை மருங்கின் ஒரு மொழித்து ஆக - புறம் 366/2

 TOP
 
    மொழிதலின் (1)
யான் தன் மொழிதலின் மொழி எதிர்வந்து - நற் 204/7

 TOP
 
    மொழிதலும் (1)
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் - நற் 210/5

 TOP
 
    மொழிதும் (1)
இன்னா மொழிதும் என்ப - அகம் 293/13

 TOP
 
    மொழிந்த (3)
அன்று என மொழிந்த தொன்றுபடு கிளவி - அகம் 5/17
நெருநலும் தீம் பல மொழிந்த
  சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே - அகம் 239/14,15
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய் - அகம் 361/8

 TOP
 
    மொழிந்தனம் (1)
நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா நம்மினும் - கலி 28/22

 TOP
 
    மொழிந்தனனே (1)
என மொழிந்தனனே ஒருவன் அவன் கண்டு - அகம் 110/14

 TOP
 
    மொழிந்தனையே (1)
நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே
  அவற்றுள் யாவோ வாயின மாஅல் மகனே - கலி  21/8,9

 TOP
 
    மொழிந்து (5)
தொன்று மொழிந்து தொழில் கேட்ப - மது 72
தொன்று மொழிந்து தொழில் கேட்ப - மது 124
வடு அஞ்சி வாய் மொழிந்து
  தமவும் பிறவும் ஒப்ப நாடி - பட் 208,209
சேணன் ஆயினும் கேள் என மொழிந்து
  புலம் பெயர்ந்து ஒளித்த களையா பூசற்கு - பதி 44/11,12
தொன்று மொழிந்து தொழில் கேட்ப - பதி 90/8

 TOP
 
    மொழிந்தும் (1)
நசை வேண்டாது நன்று மொழிந்தும்
  நிலவு கோட்டு பல களிற்றோடு - புறம் 359/12,13

 TOP
 
    மொழிந்தே (1)
வடிப்புறு நரம்பின் தீவிய மொழிந்தே - அகம் 142/26

 TOP
 
    மொழிப (2)
வண்டு என மொழிப மகன் என்னாரே - நற் 290/9
பெட்டாங்கு மொழிப என்ப அ அலர் - அகம் 216/6

 TOP
 
    மொழிப-மன்னே (1)
நெஞ்சு உண மொழிப-மன்னே தோழி - அகம் 157/10

 TOP
 
    மொழிபவை (1)
பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை
  மெல்லிய எனாஅ வெறாஅது அல்லி அம் - பரி  1/37,38

 TOP
 
    மொழிபெயர் (5)
மொழிபெயர் தேஎத்த பல் மலை இறந்தே - அகம் 31/15
மொழிபெயர் தேஎம் தருமார் மன்னர் - அகம் 67/12
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் - அகம் 127/17
மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் நல்குவர் - அகம் 211/8
மொழிபெயர் தேஎம் இறந்தனர் ஆயினும் - அகம் 295/17

 TOP
 
    மொழிமே (1)
அம்பல் ஊரும் அவனொடு மொழிமே - குறு 51/6

 TOP
 
    மொழிமோ (2)
காமம் செப்பாது கண்டது மொழிமோ
  பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல் - குறு 2/2,3
ஒன்று தெளிய நசையினம் மொழிமோ
  வெண் கோட்டு யானை சோனை படியும் - குறு 75/2,3

 TOP
 
    மொழிய (2)
ஊரார் பெண்டு என மொழிய என்னை - ஐங் 113/3
வேறு பல் மொழிய தேஎம் முன்னி - அகம் 215/2

 TOP
 
    மொழியர் (1)
தாழ் உவந்து தழூஉ மொழியர்
  பயனுறுப்ப பலர்க்கு ஆற்றி - புறம் 360/6,7

 TOP
 
    மொழியல் (2)
விரகு இல மொழியல் யாம் வேட்டது இல் வழியே - நற் 380/12
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல் நின் - அகம் 39/4

 TOP
 
    மொழியலன் (1)
கெடு நா மொழியலன் அன்பினன் என நீ - அகம் 352/9

 TOP
 
    மொழியலன்-மாதோ (1)
மாறி வா என மொழியலன்-மாதோ
  ஒலி இரும் கதுப்பின் ஆய்_இழை கணவன் - புறம் 138/7,8

 TOP
 
    மொழியலனே (1)
நெடிய அல்லது பணிந்து மொழியலனே
  இஃது இவர் படிவம் ஆயின் வை எயிற்று - புறம் 349/3,4

 TOP
 
    மொழியவர் (1)
மட மொழியவர் உடன் சுற்றி - பரி 9/60

 TOP
 
    மொழியவும் (2)
உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிக கலுழ்ந்து - நெடு 156
வேட்டது மொழியவும் விடாஅன் வேட்டத்தில் - புறம் 152/25

 TOP
 
    மொழியா (2)
குறித்தது மொழியா அளவையின் குறித்து உடன் - திரு 281
நீ சில மொழியா அளவை மாசு இல் - சிறு 235

 TOP
 
    மொழியாட்கே (1)
திதலை அல்குல் தே_மொழியாட்கே - நற் 161/12

 TOP
 
    மொழியாது (1)
தேன் இமிர் நறு மலர் புன்னையும் மொழியாது
  ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே - அகம் 170/2,3

 TOP
 
    மொழியாம் (1)
இவை மொழியாம் என சொல்லினும் அவை நீ - குறு 306/2

 TOP
 
    மொழியின் (1)
மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது - அகம் 13/8

 TOP
 
    மொழியினும் (2)
தகாஅன் போல தான் தீது மொழியினும்
  தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே - குறு 26/4,5
பதன் அன்று புக்கு திறன் அன்று மொழியினும்
  வறிது பெயர்குநர் அல்லர் நெறி கொள - புறம் 124/2,3

 TOP
 
    மொழியும் (6)
முருகு என மொழியும் ஆயின் - ஐங் 245/3
முருகு என மொழியும் ஆயின் - ஐங் 247/3
முருகு என மொழியும் வேலன் மற்று அவன் - ஐங் 249/2
நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே - கலி 21/8
ஏதில மொழியும் இ ஊரும் ஆகலின் - அகம் 132/3
அம்பல் ஊரும் அவனொடு மொழியும்
  சாய் இறை திரண்ட தோள் பாராட்டி - அகம் 282/13,14

 TOP
 
    மொழியூஉ (1)
முடிதல் வேட்கையர் நெடிய மொழியூஉ
  கெடாஅ நல் இசை தம் குடி நிறுமார் - பதி 81/12,13

 TOP
 
    மொழியே (2)
எவன் பயம் செய்யும் நீ தேற்றிய மொழியே - ஐங் 56/4
நல்ல பல்லோர் இரு நல் மொழியே
  அம் சிலம்பு ஒலிப்ப ஓடி எம் இல் - புறம் 85/5,6

 TOP
 
    மொழியோயே (1)

 TOP
 
    மொழிவது (4)
ஏஎ எல்லா மொழிவது கண்டை இஃது ஒத்தன் தொய்யில் - கலி 64/8
செய்யா மொழிவது எவன் - கலி 98/12
செய்யா மொழிவது எவன் - கலி 98/33
முறை செய்தி என நின்னை மொழிவது கெடாதோ தான் - கலி 100/16

 TOP
 
    மொழிவல் (6)
நொந்தன ஆயின் கண்டது மொழிவல்
  பெரும் தேன் கண்படு வரையில் முது மால்பு - குறு 273/4,5
கழனி ஊர நின் மொழிவல் என்றும் - ஐங் 60/2
அம்ம வாழியோ மகிழ்ந நின் மொழிவல்
  பேர் ஊர் அலர் எழ நீர் அலை கலங்கி - ஐங் 77/1,2
குன்ற நாட நின் மொழிவல் என்றும் - ஐங் 277/3
நும் ஒன்று இரந்தனென் மொழிவல் எம் ஊர் - ஐங் 384/2
நீ ஓர் ஆகலின் நின் ஒன்று மொழிவல்
  அருளும் அன்பும் நீக்கி நீங்கா - புறம் 5/4,5

 TOP
 
    மொழிவாயோ (1)
பணிந்தாய் போல் வந்து ஈண்டு பயனில மொழிவாயோ
  பட்டுழி அறியாது பாகனை தேரொடும் - கலி  69/11,12

 TOP
 
    மொழிவென் (1)
மேனி ஆய் நலம் தொலைதலின் மொழிவென்
  முழவு முகம் புலரா கலி கொள் ஆங்கண் - அகம் 222/3,4

 TOP
 
    மொழிவோர் (4)
நாடு என மொழிவோர் அவன் நாடு என மொழிவோர் - புறம் 377/21
நாடு என மொழிவோர் அவன் நாடு என மொழிவோர்
  வேந்து என மொழிவோர் அவன் வேந்து என மொழிவோர் - புறம் 377/21,22
வேந்து என மொழிவோர் அவன் வேந்து என மொழிவோர் - புறம் 377/22
வேந்து என மொழிவோர் அவன் வேந்து என மொழிவோர்
  புகர் நுதல் அவிர் பொன் கோட்டு யானையர் - புறம் 377/22,23

 TOP