|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
பௌவ (3)
தண் பெரும் பௌவ நீர் துறைவற்கு நீயும் - நற் 291/5
பௌவ நீர் சாய் கொழுதி பாவை தந்தனைத்தற்கோ - கலி 76/7
பௌவ நீர் தோன்றி பகல் செய்யும் மாத்திரை - கலி 142/42
TOP
பௌவத்தின் (1)
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும் - புறம் 6/4
TOP
பௌவத்து (9)
திரை பிறழிய இரும் பௌவத்து
கரை சூழ்ந்த அகன் கிடக்கை - பொரு 178,179
சுற வழங்கும் இரும் பௌவத்து
இறவு அருந்திய இன நாரை - பொரு 203,204
பேஎம் நிலைஇய இரும் பௌவத்து
கொடும் புணரி விலங்கு போழ - மது 76,77
புலவு நீர் வியன் பௌவத்து
நிலவு கானல் முழவு தாழை - மது 113,114
இடி குரல் புணரி பௌவத்து இடுமார் - நற் 74/2
மா இரும் தெண் கடல் மலி திரை பௌவத்து
வெண் தலை குரூஉ பிசிர் உடைய - பதி 42/21,22
வளை ஞரலும் பனி பௌவத்து
குண குட கடலோடு ஆயிடை மணந்த - பதி 51/14,15
இன் இசை புணரி இரங்கும் பௌவத்து
நன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர் - பதி 55/3,4
கரை காணா பௌவத்து கலம் சிதைந்து ஆழ்பவன் - கலி 134/24
TOP
பௌவம் (11)
நிறை இரும் பௌவம் குறைபட முகந்து கொண்டு - குறி 47
வளை நரல் பௌவம் உடுக்கை ஆக - நற் 0/2
திரை எழு பௌவம் முன்னிய - நற் 207/11
துணி நீர் பௌவம் துணையோடு ஆடி - நற் 245/4
தெண் திரை பௌவம் பாய்ந்து நின்றோளே - ஐங் 121/3
கோடு நரல் பௌவம் கலங்க வேல் இட்டு - பதி 46/12
திரை இரும் பனி பௌவம் செவ்விதா அற முகந்து - பரி 7/1
முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை - அகம் 70/14
பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கி - அகம் 84/2
ஓங்கு திரை பௌவம் நீங்க ஓட்டிய - அகம் 212/19
பௌவம் உடுத்த இ பயம் கெழு மா நிலம் - புறம் 58/22
TOP
|
|
|