<<முந்திய பக்கம் சங்க இலக்கியம் - தொடரடைவு

பே - முதல் சொற்கள்
பேஎ 2
பேஎம் 7
பேஎய் 16
பேஎய்_பெண்டிர் 1
பேஎய்_மகளிரொடு 1
பேஎய்_வெண்_தேர் 2
பேஎய்க்கு 1
பேஎர் 1
பேஎன் 1
பேக 3
பேகன் 4
பேகனும் 2
பேடி 1
பேடை 26
பேடைக்கு 5
பேண்-மார் 2
பேண 2
பேணலன் 1
பேணா 2
பேணாது 8
பேணாய் 3
பேணார் 6
பேணாரும் 1
பேணாரை 1
பேணாளோ 1
பேணான் 3
பேணி 35
பேணிய 5
பேணியர் 2
பேணியவே 1
பேணியும் 2
பேணின்றோ 1
பேணினர் 1
பேணினென் 1
பேணீர் 1
பேணு 1
பேணு_தகு 1
பேணுதும் 2
பேணுநர் 2
பேணுப 1
பேணேம் 1
பேதாய் 1
பேது 22
பேதை 25
பேதைக்கு 1
பேதைமை 1
பேதைமைத்தே 1
பேதைமையால் 1
பேதையவே 1
பேதையார் 1
பேதையின் 1
பேதையே 2
பேதையை 2
பேதையொடு 1
பேதையோன் 1
பேய் 14
பேய்_மகள் 10
பேய்_மகளிர் 2
பேயும் 4
பேயொடு 1
பேர் 131
பேர்தந்து 1
பேர்தல் 1
பேர்வனள் 1
பேரா 1
பேராது 1
பேராள 2
பேராளர் 1
பேரியாழ் 6
பேரியாற்று 7
பேரியாறு 2
பேரில் 1
பேரில்_பெண்டே 1
பேரிளம் 1
பேரிளம்_பெண்டிர் 1
பேரும் 3
பேரூர் 3
பேரொடு 1
பேழ் 10
பேழை 1
பேறு 1
பேனும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
  பேஎ (2)
பேஎ மன்ற பிறழ நோக்கு இயவர் - பதி 78/10
சால்வ தலைவ என பேஎ விழவினுள் - பரி 5/14

 TOP
 
  பேஎம் (7)
பேஎம் நிலைஇய இரும் பௌவத்து - மது 76
பெரு விழா கழிந்த பேஎம் முதிர் மன்றத்து - பட் 255
மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள் - குறு 87/1
பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லி - குறு 89/4
தாமம் தலை புனை பேஎம் நீர் வையை - பரி 7/84
மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல் - அகம் 297/7
பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில் - அகம் 377/10

 TOP
 
  பேஎய் (16)
பேஎய் வாங்க கைவிட்டு ஆங்கு - நற் 15/8
மாணா விரல வல் வாய் பேஎய்/மல்லல் மூதூர் மலர் பலி உணீஇய - நற் 73/2,3
பெரு_நீர் ஒப்பின் பேஎய்_வெண்_தேர் - நற் 84/4
பெரும் புண்ணுறுநர்க்கு பேஎய் போல - நற் 349/8
பேஎய் கொளீஇயள் இவள் எனப்படுதல் - குறு 263/5
பேஎய் அனையம் யாம் சேய் பயந்தனமே - ஐங் 70/5
பேஎய் ஆடும் வெல் போர் - பதி 35/9
உரு இல் பேஎய் ஊரா தேரொடு - அகம் 67/15
பேஎய் தலைய பிணர் அரை தாழை - அகம் 130/5
பேஎய்_வெண்_தேர் பெயல் செத்து ஓடி - அகம் 241/9
அணங்கு அரு மரபின் பேஎய் போல - அகம் 265/14
பேஎய் கண்ட கனவின் பன் மாண் - அகம் 303/2
நிறம் கிளர் உருவின் பேஎய்_பெண்டிர் - புறம் 62/4
பேஎய் ஆயமொடு பெட்டு ஆங்கு வழங்கும் - புறம் 238/4
ஈம விளக்கின் பேஎய்_மகளிரொடு - புறம் 356/3
பேஎய் மகளிர் பிணம் தழூஉ பற்றி - புறம் 359/4

 TOP
 
  பேஎய்_பெண்டிர் (1)
நிறம் கிளர் உருவின் பேஎய்_பெண்டிர்/எடுத்து எறி அனந்தல் பறை சீர் தூங்க - புறம் 62/4,5

 TOP
 
  பேஎய்_மகளிரொடு (1)
ஈம விளக்கின் பேஎய்_மகளிரொடு/அஞ்சு வந்தன்று இ மஞ்சு படு முதுகாடு - புறம் 356/3,4

 TOP
 
  பேஎய்_வெண்_தேர் (2)
பெரு_நீர் ஒப்பின் பேஎய்_வெண்_தேர்/மரன் இல் நீள் இடை மான் நசை-உறூஉம் - நற் 84/4,5
பேஎய்_வெண்_தேர் பெயல் செத்து ஓடி - அகம் 241/9

 TOP
 
  பேஎய்க்கு (1)
ஊட்டு அரு மரபின் அஞ்சு வரு பேஎய்க்கு/ஊட்டு எதிர்கொண்ட வாய்மொழி மிஞிலி - அகம் 142/10,11

 TOP
 
  பேஎர் (1)
நீர் ஒலித்த அன்ன பேஎர்/அலர் நமக்கு ஒழிய அழ பிரிந்தோரே - அகம் 211/16,17

 TOP
 
  பேஎன் (1)
பேஎன் பகை என ஒன்று என்கோ - புறம் 136/5

 TOP
 
  பேக (3)
கைவள் ஈகை கடு மான் பேக/யார்-கொல் அளியள் தானே நெருநல் - புறம் 143/6,7
கடாஅ யானை கலி_மான் பேக/பசித்தும் வாரோம் பாரமும் இலமே - புறம் 145/3,4
அவை பெறல் வேண்டேம் அடு போர் பேக/சீறியாழ் செவ்வழி பண்ணி நின் வன்_புல - புறம் 146/2,3

 TOP
 
  பேகன் (4)
வண்டு படு நறவின் வண் மகிழ் பேகன்/கொண்டல் மா மலை நாறி - அகம் 262/16,17
கடாஅ யானை கலி_மான் பேகன்/எ துணை ஆயினும் ஈதல் நன்று என - புறம் 141/12,13
கடாஅ யானை கழல் கால் பேகன்/கொடை மடம்படுதல் அல்லது - புறம் 142/4,5
வரூஉம் என்ப வயங்கு புகழ் பேகன்/ஒல்லென ஒலிக்கும் தேரொடு - புறம் 144/12,13

 TOP
 
  பேகனும் (2)
பெரும் கல் நாடன் பேகனும் சுரும்பு உண - சிறு 87
பெரும் கல் நாடன் பேகனும் திருந்து மொழி - புறம் 158/12

 TOP
 
  பேடி (1)
பேடி பெண் கொண்டு ஆடுகை கடுப்ப - அகம் 206/2

 TOP
 
  பேடை (26)
பேடை நோக்கிய பெரும் தகு நிலையே - நற் 21/12
மனை உறை புறவின் செம் கால் பேடை/காமர் துணையொடு சேவல் சேர - நற் 162/1,2
நலன் உணப்பட்ட நல்கூர் பேடை/கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது - நற் 178/3,4
வந்ததன் செவ்வி நோக்கி பேடை/நெறி கிளர் ஈங்கை பூவின் அன்ன - நற் 181/3,4
கொடு வாய் பேடை குடம்பை சேரிய - நற் 338/10
கொடும் கண் காக்கை கூர் வாய் பேடை/நடுங்கு சிறை பிள்ளை தழீஇ கிளை பயிர்ந்து - நற் 367/1,2
உயவு நடை பேடை உணீஇய மன்னர் - நற் 384/4
மனை உறை கோழி குறும் கால் பேடை/வேலி வெருகு இனம் மாலை உற்று என - குறு 139/1,2
வங்கா கடந்த செம் கால் பேடை/எழால் உற வீழ்ந்து என கணவன் காணாது - குறு 151/1,2
பொறி மயிர் எருத்தின் குறு நடை பேடை/பொரி கால் கள்ளி விரி காய் அம் கவட்டு - குறு 154/4,5
கூர் உகிர் பேடை வயாஅம் ஊர - ஐங் 51/2
புன் தலை பேடை வரி நிழல் அகவும் - ஐங் 62/2
வெண் நுதல் கம்புள் அரி குரல் பேடை/தண் நறும் பழனத்து கிளையோடு ஆலும் - ஐங் 85/1,2
உலறு தலை பருந்தின் உளி வாய் பேடை/அலறு தலை ஓமை அம் கவட்டு ஏறி - ஐங் 321/1,2
புன் புற பேடை சேவல் இன்புற - ஐங் 425/1
மென் நடை பேடை துனைதர தன் சேர்ந்த - கலி 147/65
வளை வாய் பேடை வரு_திறம் பயிரும் - அகம் 33/6
சிறு பைம் தூவி செம் கால் பேடை/நெடு நீர் வானத்து வாவு பறை நீந்தி - அகம் 57/1,2
வளை வாய் பருந்தின் வான் கண் பேடை/ஆடு-தொறு கனையும் அம் வாய் கடும் துடி - அகம் 79/12,13
பொதி வயிற்று இளம் காய் பேடை ஊட்டி - அகம் 129/8
சேவலொடு புணரா சிறு கரும் பேடை/இன்னாது உயங்கும் கங்குலும் - அகம் 270/13,14
குடுமி கொக்கின் பைம் கால் பேடை/இரும் சேற்று அள்ளல் நாள்_புலம் போகிய - அகம் 290/1,2
இளை படு பேடை இரிய குரைத்து எழுந்து - அகம் 310/15
வரி புற இதலின் மணி கண் பேடை/நுண் பொறி அணிந்த எருத்தின் கூர் முள் - அகம் 387/10,11
இன்புறு பேடை அணிய தன் - புறம் 67/13
இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை/உயிர் நடுக்கு-உற்று புலா விட்டு அரற்ற - புறம் 326/2,3

 TOP
 
  பேடைக்கு (5)
கழனி ஒழிந்த கொடு வாய் பேடைக்கு/முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும் - நற் 263/6,7
கடும் சூல் வதிந்த காமர் பேடைக்கு/இரும் சேற்று அயிரை தேரிய தெண் கழி - நற் 272/4,5
சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழையியர் - குறு 85/3
கொடு வாய் பேடைக்கு அல்கு_இரை தரீஇய - அகம் 3/4
வல் வாய் பேடைக்கு சொரியும் ஆங்கண் - அகம் 215/15

 TOP
 
  பேண்-மார் (2)
கடவுள் ஓங்கு வரை பேண்-மார் வேட்டு எழுந்து - நற் 165/4
வல் ஆண் பதுக்கை கடவுள் பேண்-மார்/நடுகல் பீலி சூட்டி துடிப்படுத்து - அகம் 35/7,8

 TOP
 
  பேண (2)
கடம்பு_அமர்_செல்வன் கடி நகர் பேண/மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த - பரி 8/126,127
நெடுவேள் பேண தணிகுவள் இவள் என - அகம் 22/6

 TOP
 
  பேணலன் (1)
தலை நாள் அன்ன பேணலன் பல நாள் - நற் 332/8

 TOP
 
  பேணா (2)
பேணா முன்பின் தன் சினம் தணிந்து அ மரம் - கலி 49/7
சேணின் வருநர் போல பேணா/இரும் கலி யாணர் எம் சிறுகுடி தோன்றின் - அகம் 300/13,14

 TOP
 
  பேணாது (8)
மென் பிணி வன் தொடர் பேணாது காழ் சாய்த்து - மது 382
கிளை கலித்து பகை பேணாது/வலைஞர் முன்றில் மீன் பிறழவும் - பட் 196,197
அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது/இடி சுர நிவப்பின் இயவு கொண்டு ஒழுகி - மலை 19,20
உறு பகை பேணாது இரவின் வந்து இவள் - நற் 55/3
பேணாது ஒருத்தி பேது உற ஆயிடை - பரி 7/67
பெரும் பெயர் மகிழ்ந பேணாது அகன்மோ - அகம் 306/1
காந்தள் அம் சிறுகுடி கௌவை பேணாது/அரி மதர் மழை கண் சிவப்ப நாளை - அகம் 312/5,6
அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம் - புறம் 224/1

 TOP
 
  பேணாய் (3)
கராஅம் பேணாய் இரவரின் - நற் 292/8
பேணாய் நீ பெட்ப செயல் - கலி 91/24
நின்னை யான் சொல்லினவும் பேணாய் நினைஇ - கலி 116/13

 TOP
 
  பேணார் (6)
துவலை தண் துளி பேணார் பகல் இறந்து - நெடு 34
பேணுப பேணார் பெரியோர் என்பது - நற் 72/1
வரையா நயவினர் நிரையம் பேணார்/கொன்று ஆற்று துறந்த மாக்களின் அடு பிணன் - நற் 329/1,2
வை வார் வாளி விறல் பகை பேணார்/மாறு நின்று எதிர்ந்த ஆறு செல் வம்பலர் - குறு 297/2,3
பேணார் ஆயினும் பெரியோர் நெஞ்சத்து - குறு 341/4
மென் தோள் மகளிர் மன்றம் பேணார்/புண் உவந்து - புறம் 373/12,13

 TOP
 
  பேணாரும் (1)
பெரு நன்று ஆற்றின் பேணாரும் உளரோ - குறு 115/1

 TOP
 
  பேணாரை (1)
பெரிது ஆய பகை வென்று பேணாரை தெறுதலும் - கலி 11/2

 TOP
 
  பேணாளோ (1)
பேணாளோ நின் பெண்டே - ஐங் 68/3

 TOP
 
  பேணான் (3)
சூள் பேணான் பொய்த்தான் மலை - கலி 41/20
பேணான் என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான் - கலி 72/11
பேணான் துறந்தானை நாடும் இடம் விடாய் ஆயின் - கலி 144/45

 TOP
 
  பேணி (35)
விளங்கு பொன் கலத்தில் விரும்புவன பேணி/ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி - சிறு 244,245
கடும் சூல் மகளிர் பேணி கைதொழுது - மது 609
சீர் மிகு நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉ - மது 614
வேறு பல் உருவின் கடவுள் பேணி/நறையும் விரையும் ஓச்சியும் அலவு-உற்று - குறி 6,7
பலி பெறு கடவுள் பேணி கலி சிறந்து - நற் 251/8
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி/வருந்தல் வாழி வேண்டு அன்னை கரும் தாள் - நற் 351/4,5
கடவுள் கற்பின் அவன் எதிர் பேணி/மடவை மன்ற நீ என கடவுபு - குறு 252/4,5
என்பு உற நலியினும் அவரொடு பேணி/சென்று நாம் முயங்கற்கு அரும் காட்சியமே - குறு 305/2,3
கறி வளர் சிலம்பின் கடவுள் பேணி/அறியா வேலன் வெறி என கூறும் - ஐங் 243/1,2
குன்ற குறவன் கடவுள் பேணி/இரந்தனன் பெற்ற எல் வளை குறு_மகள் - ஐங் 257/1,2
வண்டு படு கூந்தலை பேணி/பண்பு இல சொல்லும் தேறுதல் செத்தே - ஐங் 267/4,5
நிலவின் அன்ன நேர் அரும்பு பேணி/கார் நயந்து எய்தும் முல்லை அவர் - ஐங் 454/2,3
நிலை பெறு கடவுளும் விழை_தக பேணி/ஆர் வளம் பழுனிய ஐயம் தீர் சிறப்பின் - பதி 21/15,16
களைநர் யார் இனி பிறர் என பேணி/மன் எயில் மறவர் ஒலி அவிந்து அடங்க - பதி 40/7,8
இளம் துணை புதல்வரின் முதியர் பேணி/தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல் - பதி 70/21,22
பெரியோர் பேணி சிறியோரை அளித்தி - பதி 79/3
தெய்வம் பேணி திசை தொழுதனிர் செல்-மின் - பரி 15/48
கய மா பேணி கலவாது ஊரவும் - பரி 20/19
பிறை புரை நுதல் அவர் பேணி நம் - கலி 45/23
சிறு முத்தனை பேணி சிறு சோறு மடுத்து நீ - கலி 59/20
அழிந்து நின் பேணி கொளலின் இழிந்ததோ - கலி 72/25
பேணி நிறுத்தார் அணி - கலி 104/28
அரும் தலை ஏற்றொடு காதலர் பேணி/சுரும்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும் - கலி 106/47,48
பேணி துடைத்து அன்ன மேனியாய் கோங்கின் - கலி 117/2
பேணி அவன் சிறிது அளித்த-கால் என் - கலி 122/10
தெறல் அரு மரபின் கடவுள் பேணி/குறவர் தந்த சந்தின் ஆரமும் - அகம் 13/3,4
காணுநர் இன்மையின் செத்தனள் பேணி/பொலம் கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை - அகம் 16/8,9
நாணி நின்றனெமாக பேணி/ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல் - அகம் 48/16,17
வரையா வண்மையொடு புரையோர் பேணி/புள்ளு புணர்ந்து இனிய ஆக தெள் ஒளி - அகம் 136/2,3
கடி நகர் புனைந்து கடவுள் பேணி/படு மண முழவொடு பரூஉ பணை இமிழ - அகம் 136/6,7
நாணினள் இறைஞ்சியோளே பேணி/பரூஉ பகை ஆம்பல் குரூஉ தொடை நீவி - அகம் 136/26,27
வரு வழி வம்பலர் பேணி கோவலர் - அகம் 311/9
வேற்று நாட்டு உறையுள் விருப்பு-உற பேணி/பெறல் அரும் கேளிர் பின் வந்து விடுப்ப - அகம் 351/1,2
பெண்டிரும் பிணி உடையீரும் பேணி/தென் புலம் வாழ்நர்க்கு அரும் கடன் இறுக்கும் - புறம் 9/2,3
வாணிக பரிசிலன் அல்லேன் பேணி/தினை அனைத்து ஆயினும் இனிது அவர் - புறம் 208/7,8

 TOP
 
  பேணிய (5)
செம் தீ பேணிய முனிவர் வெண் கோட்டு - பெரும் 498
தடவு நிமிர் முத்தீ பேணிய மன் எச்சில் - பரி 5/42
நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின் - பரி 11/85
முதியர் பேணிய உதியஞ்சேரல் - அகம் 233/8
கடவுள் பேணிய குறவர் மாக்கள் - புறம் 143/3

 TOP
 
  பேணியர் (2)
உரு கெழு மரபின் கடவுள் பேணியர்/கொண்ட தீயின் சுடர் எழு-தோறும் - பதி 21/5,6
அரும் திறல் மரபின் கடவுள் பேணியர்/உயர்ந்தோன் ஏந்திய அரும் பெறல் பிண்டம் - பதி 30/34,35

 TOP
 
  பேணியவே (1)
பேர் மகிழ் செய்யும் பெரு நறா பேணியவே/கூர் நறா ஆர்ந்தவள் கண் - பரி 7/63,64

 TOP
 
  பேணியும் (2)
அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும் - பட் 200
அமரர் பேணியும் ஆவுதி அருத்தியும் - புறம் 99/1

 TOP
 
  பேணின்றோ (1)
யாம் அது பேணின்றோ இலமே நீ நின் - அகம் 346/12

 TOP
 
  பேணினர் (1)
பேணினர் எனப்படுதல் பெண்மையும் அன்று அவன் - கலி 47/21

 TOP
 
  பேணினென் (1)
பேணினென் அல்லெனோ மகிழ்ந வானத்து - அகம் 16/17

 TOP
 
  பேணீர் (1)
பேணீர் ஆகுவிர் ஐய என் தோழி - நற் 46/4

 TOP
 
  பேணு (1)
பேணு_தகு சிறப்பின் பெண் இயல்பு ஆயினும் - பதி 93/1

 TOP
 
  பேணு_தகு (1)
பேணு_தகு சிறப்பின் பெண் இயல்பு ஆயினும் - பதி 93/1

 TOP
 
  பேணுதும் (2)
எலி வான் சூட்டொடு மலிய பேணுதும்/எஞ்சா கொள்கை எம் காதலர் வரல் நசைஇ - நற் 83/6,7
ஆழி முதல்வ நின் பேணுதும் தொழுது - பரி 2/19

 TOP
 
  பேணுநர் (2)
பெரிதே உலகம் பேணுநர் பலரே - புறம் 207/7
பேணுநர் பெறாஅது விளியும் - புறம் 346/6

 TOP
 
  பேணுப (1)
பேணுப பேணார் பெரியோர் என்பது - நற் 72/1

 TOP
 
  பேணேம் (1)
கடவுள் பேணேம் என்னா ஆங்கு - புறம் 106/3

 TOP
 
  பேதாய் (1)
பேதாய் பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை யாழ - கலி 61/15

 TOP
 
  பேது (22)
பெரும் பேது உறுவள் யாம் வந்தனம் எனவே - நற் 6/11
யாம் செய் தொல்_வினைக்கு எவன் பேது உற்றனை - நற் 88/1
காதலர் அகன்று என கலங்கி பேது உற்று - நற் 109/2
ஊதை அம் குளிரொடு பேது உற்று மயங்கிய - குறு 197/3
எறி கண் பேது உறல் ஆய் கோடு இட்டு - குறு 358/2
பேணாது ஒருத்தி பேது உற ஆயிடை - பரி 7/67
பேது உற்ற இதனை கண்டு யான் நோக்க நீ எம்மை - பரி 18/12
பேது உறு மட மொழி பிணை எழில் மான் நோக்கின் - கலி 27/3
பிரிந்து உள்ளார் அவர் ஆயின் பேது உறூஉம் பொழுது ஆயின் - கலி 28/9
பேது உறூஉம் என்பதை அறிதியோ அறியாயோ - கலி 56/18
பேது உற்றாய் போல பிறர் எவ்வம் நீ அறியாய் - கலி 56/28
பெரும் பேது உறுதல் களை-மதி பெரும - கலி 129/22
தாது_உண்_பறவை பேது உறல் அஞ்சி - அகம் 4/11
மாசு இல் குறு_மகள் எவன் பேது உற்றனை - அகம் 16/12
ஆதிமந்தி போல பேது உற்று - அகம் 45/14
ஆதிமந்தி பேது உற்று இனைய - அகம் 76/10
பேது உற்றிசினே காதலம் தோழி - அகம் 135/6
ஏதம் சொல்லி பேது பெரிது உறலே - அகம் 236/21
பெரு விதுப்பு உறுவி பேது உறு நிலையே - அகம் 299/21
இவளும் பெரும் பேது உற்றனள் ஓரும் - அகம் 310/6
வெம் திறல் கூற்றம் பெரும் பேது உறுப்ப - புறம் 238/10
அன்னோ பெரும் பேது உற்றன்று இ அரும் கடி மூதூர் - புறம் 336/7

 TOP
 
  பேதை (25)
பேதை ஆசினி ஒசித்த - நற் 51/10
கொடும் குழை பெய்த செழும் செய் பேதை/சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப - நற் 120/3,4
உவன் வரின் எவனோ பாண பேதை/கொழு மீன் ஆர்கை செழு நகர் நிறைந்த - நற் 127/3,4
பேதை நெஞ்சம் கவலை கவற்ற - நற் 144/4
பேதை நெய்தல் பெரு நீர் சேர்ப்பற்கு - நற் 275/6
அழிவது எவன்-கொல் இ பேதை ஊர்க்கே - குறு 89/3
பெரும் தண் மாரி பேதை பித்திகத்து - குறு 94/1
புன கிளி கடியும் பூ கண் பேதை/தான் அறிந்தன்றோ இலளே பானாள் - குறு 142/2,3
கவலை மாக்கட்டு இ பேதை ஊரே - குறு 159/7
பேதை யானை சுவைத்த - குறு 179/6
கலிழ் கவின் அசை நடை பேதை/மெலிந்திலள் நாம் விடற்கு அமைந்த தூதே - குறு 182/6,7
பேதை நெஞ்சம் பெரு மலக்கு-உறுமே - குறு 194/5
பெரிதும் பேதை மன்ற - குறு 276/7
பேதை நெஞ்சம் பின் செல சென்றோர் - ஐங் 334/3
ஒண்_தொடி வினவும் பேதை அம் பெண்டே - ஐங் 387/3
பேதை அம் கொன்றை கோதை நிலை நோக்கி - ஐங் 462/2
பேதை மட நோக்கம் பிறிது ஆக ஊத - பரி 9/48
பிறந்த தமரின் பெயர்ந்து ஒரு பேதை/பிறங்கல் இடையிடை புக்கு பிறழ்ந்து யான் - பரி 19/58,59
சொல் அறியா பேதை மடவை மற்று எல்லா - கலி 114/8
ஆழ் துயரம் எல்லாம் மறந்தனள் பேதை/நகை ஒழிந்து நாணு மெய் நிற்ப இறைஞ்சி - கலி 147/68,69
பேதை அல்லை மேதை அம் குறு_மகள் - அகம் 7/6
மட மயில் அன்ன என் நடை மெலி பேதை/தோள் துணை ஆக துயிற்ற துஞ்சாள் - அகம் 63/15,16
திரு நுதல் பொலிந்த என் பேதை/வரு முலை முற்றத்து ஏமுறு துயிலே - அகம் 263/14,15
பன் மாண் பேதை ஒழிந்தது என் நெஞ்சே - அகம் 390/17
பேதை சோழன் என்னும் சிறந்த - புறம் 216/9

 TOP
 
  பேதைக்கு (1)
நெறி இரும் கதுப்பின் என் பேதைக்கு/அறியா தேஎத்து ஆற்றிய துணையே - அகம் 35/17,18

 TOP
 
  பேதைமை (1)
பேதைமை அல்லது ஊதியம் இல் என - புறம் 28/5

 TOP
 
  பேதைமைத்தே (1)
சென்றே நிற்கும் பெரும் பேதைமைத்தே - குறு 78/6

 TOP
 
  பேதைமையால் (1)
பேதைமையால் பெருந்தகை கெழுமி - குறு 230/3

 TOP
 
  பேதையவே (1)
கூஉம் தோழி பெரும் பேதையவே - குறு 391/9

 TOP
 
  பேதையார் (1)
அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் - கலி 133/10

 TOP
 
  பேதையின் (1)
பல் மாண் பேதையின் பிரிந்த நீயே - அகம் 343/19

 TOP
 
  பேதையே (2)
ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே - குறு 113/6
நனி பேதையே நயன் இல் கூற்றம் - புறம் 227/1

 TOP
 
  பேதையை (2)
பேதையை மன்ற பெரிது என்றேன் மாதராய் - கலி 111/15
பேதையை பெரிது என தெளிப்பான் போலவும் - கலி 128/21

 TOP
 
  பேதையொடு (1)
விழி கண் பேதையொடு இனன் இரிந்து ஓட - நற் 242/8

 TOP
 
  பேதையோன் (1)
பேதையோன் வினை வாங்க பீடு இலா அரசன் நாட்டு - கலி 27/7

 TOP
 
  பேய் (14)
உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்_மகள் - திரு 51
கரு_மறி காதின் கவை அடி பேய்_மகள் - சிறு 197
நிண வாய் பெய்த பேய்_மகளிர் - மது 25
பேய்_மகளிர் பெயர்பு ஆட - மது 163
பேய் கண் அன்ன பிளிறு கடி முரசம் - பட் 236
பிணம் தின் யாக்கை பேய்_மகள் துவன்றவும் - பட் 260
கவை தலை பேய்_மகள் கழுது ஊர்ந்து இயங்க - பதி 13/15
கரும் கண் பேய்_மகள் வழங்கும் - பதி 22/37
கரும் கண் பேய்_மகள் கை புடையூஉ நடுங்க - பதி 30/36
உரு இல் பேய்_மகள் கவலை கவற்ற - பதி 67/11
பெரும் காட்டு கொற்றிக்கு பேய் நொடித்து ஆங்கு - கலி 89/8
பேய்_மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு - புறம் 369/15
அழு குரல் பேய்_மகள் அயர கழுகொடு - புறம் 370/25
உரு கெழு பேய்_மகள் அயர - புறம் 371/26

 TOP
 
  பேய்_மகள் (10)
உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்_மகள்/குருதி ஆடிய கூர் உகிர் கொடு விரல் - திரு 51,52
கரு_மறி காதின் கவை அடி பேய்_மகள்/நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல - சிறு 197,198
பிணம் தின் யாக்கை பேய்_மகள் துவன்றவும் - பட் 260
கவை தலை பேய்_மகள் கழுது ஊர்ந்து இயங்க - பதி 13/15
கரும் கண் பேய்_மகள் வழங்கும் - பதி 22/37
கரும் கண் பேய்_மகள் கை புடையூஉ நடுங்க - பதி 30/36
உரு இல் பேய்_மகள் கவலை கவற்ற - பதி 67/11
பேய்_மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு - புறம் 369/15
அழு குரல் பேய்_மகள் அயர கழுகொடு - புறம் 370/25
உரு கெழு பேய்_மகள் அயர - புறம் 371/26

 TOP
 
  பேய்_மகளிர் (2)
நிண வாய் பெய்த பேய்_மகளிர்/இணை ஒலி இமிழ் துணங்கை சீர் - மது 25,26
பேய்_மகளிர் பெயர்பு ஆட - மது 163

 TOP
 
  பேயும் (4)
பேயும் அணங்கும் உருவு கொண்டு ஆய் கோல் - மது 632
பேயும் பேயும் துள்ளல்-உறும் என - கலி 94/38
பேயும் பேயும் துள்ளல்-உறும் என - கலி 94/38
பேயும் அறியா மறை அமை புணர்ச்சி - அகம் 62/6

 TOP
 
  பேயொடு (1)
தா இன்று உதவும் பண்பின் பேயொடு/கண நரி திரிதரும் ஆங்கண் நிணன் அருந்து - புறம் 373/36,37

 TOP
 
  பேர் (131)
இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை - திரு 57
இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை - திரு 57
அறாஅ யாணர் அகன் தலை பேர் ஊர் - பொரு 1
ஆடு பசி உழந்த நின் இரும் பேர் ஒக்கலொடு - பொரு 61
ஆர உண்டு பேர் அஞர் போக்கி - பொரு 88
பல் இய கோடியர் புரவலன் பேர் இசை - சிறு 125
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும் - சிறு 139
இவண் நயந்து இருந்த இரும் பேர் ஒக்கல் - சிறு 144
பிணன் உகைத்து சிவந்த பேர் உகிர் பணை தாள் - சிறு 199
பழம் பசி கூர்ந்த எம் இரும் பேர் ஒக்கலொடு - பெரும் 25
பேர் அமர் கடந்த கொடுஞ்சி நெடும் தேர் - பெரும் 416
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇ - பெரும் 470
வினை நவின்ற பேர் யானை - மது 47
நிலம் தந்த பேர் உதவி - மது 60
இரு பெயர் பேர் ஆயமொடு - மது 101
பேர் உலகத்து மேஎம் தோன்றி - மது 133
நாடு எனும் பேர் காடு ஆக - மது 156
புகழ் பட பண்ணிய பேர் ஊன் சோறும் - மது 533
பேர் இசை நன்னன் பெரும் பெயர் நன்_நாள் - மது 618
பேர் அளவு எய்திய பெரும் பெயர் பாண்டில் - நெடு 123
இரு பேர் அச்சமோடு யானும் ஆற்றலென் - குறி 29
பேர் இசை நவிரம் மேஎய் உறையும் - மலை 82
இரும் பேர் ஒக்கலொடு பதம் மிக பெறுகுவிர் - மலை 157
பேர் அமர் மழை கண் ஈரிய கலுழ - நற் 29/9
நீர் அலை சிவந்த பேர் அமர் மழை கண் - நற் 44/2
இம்மென் பேர் அலர் நும் ஊர் புன்னை - நற் 76/6
தேர் வண் மலையன் முந்தை பேர் இசை - நற் 100/9
தவ சேய் நாட்டர் ஆயினும் மிக பேர்/அன்பினர் வாழி தோழி நன் புகழ் - நற் 115/8,9
எவன் செய்தனள் இ பேர் அஞர் உறுவி என்று - நற் 130/9
வாழ்வோர் போகிய பேர் ஊர் - நற் 153/9
பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம் - நற் 154/8
பேர் அன்பினையே பெரும் கல் நாட - நற் 156/3
ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர் - நற் 170/6
பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு - நற் 186/8
பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே - நற் 193/9
ஊரேம் என்னும் இ பேர் ஏமுறுநர் - நற் 220/7
பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர் - நற் 248/5
நனி பேர் அன்பின் நின் குரல் ஓப்பி - நற் 251/5
பேர் இசை உருமொடு மாரி முற்றிய - நற் 253/6
கடல் ஆடு வியல் இடை பேர் அணி பொலிந்த - நற் 307/3
நீர் அன நிலையன் பேர் அன்பினன் என - நற் 347/8
மூதில் அருமன் பேர் இசை சிறுகுடி - நற் 367/6
கங்கை அம் பேர் யாற்று கரை இறந்து இழிதரும் - நற் 369/9
பேர் அமர் மழை கண் தெண் பனி கொளவே - நற் 391/10
நனி பேர் அன்பினர் காதலோரே - நற் 392/11
ஆ புலம் புகுதரு பேர் இசை மாலை - நற் 395/8
ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல் - குறு 43/3
யாரினும் இனியன் பேர் அன்பினனே - குறு 85/1
பேர் அமர் கண்ணி இருந்த ஊரே - குறு 131/2
ஆர் அளி இலையோ நீயே பேர் இசை - குறு 158/4
பேர் ஊர் கொண்ட ஆர் கலி விழவில் - குறு 223/1
பேர் அமர் மழை கண் கொடிச்சி - குறு 286/4
பேர் இலை பகன்றை பொதி அவிழ் வான் பூ - குறு 330/4
பேர் ஊர் அலர் எழ நீர் அலை கலங்கி - ஐங் 77/2
பேர் அமர் மழை கண் கலிழ தன் - ஐங் 214/4
பேர் அமர் மழை கண் கொடிச்சி கடியவும் - ஐங் 282/2
பிரிதல் தேற்றா பேர் அன்பினவே - ஐங் 284/4
பேர் அமர் கண்ணி ஆடுகம் விரைந்தே - ஐங் 412/4
பேர் இயல் அரிவை நாம் நய_தகவே - ஐங் 413/4
பேர் அமர் மலர் கண் மடந்தை நீயே - ஐங் 427/1
தம்மோன் போலான் பேர் அன்பினனே - ஐங் 475/5
பேர் அமர் கண்ணி நின் பிரிந்து உறைநர் - ஐங் 496/3
பேர் இயல் அரிவை நின் உள்ளி - ஐங் 497/4
சூர் உடை முழு_முதல் தடிந்த பேர் இசை - பதி 11/5
ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம் - பதி 11/23
வந்து அவண் நிறுத்த இரும் பேர் ஒக்கல் - பதி 12/14
அரும் செலல் பேர் ஆற்று இரும் கரை உடைத்து - பதி 43/15
பொழில் வதி வேனில் பேர் எழில் வாழ்க்கை - பதி 48/15
ஈர் இதழ் மழை கண் பேர் இயல் அரிவை - பதி 52/18
பந்தர் பெயரிய பேர் இசை மூதூர் - பதி 67/2
பேர் மகிழ் செய்யும் பெரு நறா பேணியவே - பரி 7/63
பேர் அணி நிற்போர் பெரும் பூசல் தாக்குவோர் - பரி 10/28
பொலம் புனை இதழ் அணி மணி மடல் பேர் அணி - பரி 13/36
கோழியின் எழாது எம் பேர் ஊர் துயிலே - பரி 30/11
பேர் எழில் மலர் உண்கண் பிணை எழில் மான் நோக்கின் - கலி 58/2
பேர் அமர் உண்கண் நின் தோழி உறீஇய - கலி 60/16
பேர் அமர் கண்ணார்க்கும் படு வலை இது என - கலி 74/14
பல்லும் பணை தோளும் பேர் அமர் உண்கண்ணும் - கலி 108/16
பேர் ஊரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல் - கலி 109/6
பேர் ஏமுற்றார் போல முன் நின்று விலக்குவாய் - கலி 113/4
பேர் அஞர் செய்த என் கண் - கலி 143/51
பேர் அமர் உண்கண் நிறை மல்க அ நீர் தன் - கலி 146/7
பேர் ஊர் மறுகில் பெரும் துயில் சான்றீரே - கலி 146/42
இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும் - அகம் 13/5
பேர் இற்கிழத்தி ஆக என தமர் தர - அகம் 86/19
பெரும் பேர் அன்பினர் தோழி இரும் கேழ் - அகம் 91/9
நுண் கோல் அகவுநர் புரந்த பேர் இசை - அகம் 152/4
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை - அகம் 194/1
வாராயோ என்று ஏத்தி பேர் இலை - அகம் 219/3
பேர் இசை எருமை நன் நாட்டு உள்ளதை - அகம் 253/19
பேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கி - அகம் 264/9
பேர் இசை கொற்கை பொருநன் வென் வேல் - அகம் 296/10
இரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்த - அகம் 301/23
மெல்லியள் இளையள் நனி பேர் அன்பினள் - அகம் 319/14
இம்மென் பேர் அலர் இ ஊர் நம்-வயின் - அகம் 323/1
பேர் அமர் மழை கண் பெரும் தோள் சிறு நுதல் - அகம் 326/2
பேர் அமர் மழை கண் புலம் கொண்டு ஒழிய - அகம் 337/3
சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும் - அகம் 382/11
நீரொடு நிறைந்த பேர் அமர் மழை கண் - அகம் 395/3
ஆரியர் அலற தாக்கி பேர் இசை - அகம் 396/16
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம் - புறம் 28/4
ஏரின்_வாழ்நர் பேர் இல் அரிவையர் - புறம் 33/4
பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை - புறம் 69/6
பேர் அமர் உண்கண் இவளினும் பிரிக - புறம் 71/6
கல்லென் பேர் ஊர் விழவு உடை ஆங்கண் - புறம் 84/4
அளிதோ தானே பேர் இரும் குன்றே - புறம் 111/1
நீயே பேர் எண்ணலையே நின் இறை - புறம் 138/6
இரும் பேர் ஒக்கலொடு தின்ம் என தருதலின் - புறம் 150/13
காரி ஊர்ந்து பேர் அமர் கடந்த - புறம் 158/6
சிறு நுதல் பேர் அகல் அல்குல் - புறம் 166/15
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று - புறம் 192/8
மிக பேர் எவ்வம் உறினும் எனைத்தும் - புறம் 197/15
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே - புறம் 220/7
ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே - புறம் 221/2
பேர் அஞர் கண்ணள் பெரும் காடு நோக்கி - புறம் 247/6
அந்தோ எந்தை அடையா பேர் இல் - புறம் 261/1
பேர் அமர் உழந்த வெருவரு பறந்தலை - புறம் 270/11
இரு பேர் யாற்ற ஒரு பெரும் கூடல் - புறம் 273/5
எம்மினும் பேர் எழில் இழந்து வினை என - புறம் 293/4
பேர் ஊர் அட்ட கள்ளிற்கு - புறம் 300/5
பேர் உயிர் கொள்ளும் மாதோ அது கண்டு - புறம் 307/10
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி - புறம் 320/14
நீருள் பட்ட மாரி பேர் உறை - புறம் 333/1
பெறாஅமையின் பேர் அமர் செய்தலின் - புறம் 342/12
பசி தின திரங்கிய இரும் பேர் ஒக்கற்கு - புறம் 370/3
இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல் - புறம் 378/13
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு அகற்ற - புறம் 390/20
ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல் - புறம் 391/8
ஈர்ம் கை மறந்த என் இரும் பேர் ஒக்கல் - புறம் 393/10
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு உறினும் - புறம் 394/16
இரும் பேர் ஒக்கல் அருந்தி எஞ்சிய - புறம் 396/23

 TOP
 
  பேர்தந்து (1)
நாம அரும் துறை பேர்தந்து யாமத்து - அகம் 18/7

 TOP
 
  பேர்தல் (1)
நீயும் தேரொடு வந்து பேர்தல் செல்லாது - நற் 300/7

 TOP
 
  பேர்வனள் (1)
மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற - அகம் 390/15

 TOP
 
  பேரா (1)
பேரா யாணர்த்தால் வாழ்க நின் வளனே - பதி 24/30

 TOP
 
  பேராது (1)
பேராது சென்று பெரும் பதவ புல் மாந்தி - கலி 109/2

 TOP
 
  பேராள (2)
நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேராள/அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூண் சேஎய் - திரு 270,271
ஒன்பதிற்று தட கை மன் பேராள/பதிற்று கை மதவலி நூற்று கை ஆற்றல் - பரி 3/39,40

 TOP
 
  பேராளர் (1)
நெடுமொழி மறந்த சிறு பேராளர்/அஞ்சி நீங்கும்-காலை - புறம் 178/9,10

 TOP
 
  பேரியாழ் (6)
பேரியாழ் முறையுளி கழிப்பி நீர் வாய் - பொரு 168
இடன் உடை பேரியாழ் முறையுளி கழிப்பி - பெரும் 462
வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர் பேரியாழ்/அமைவர பண்ணி அருள் நெறி திரியாது - மலை 37,38
தொடை படு பேரியாழ் பாலை பண்ணி - பதி 46/5
விரல் கவர் பேரியாழ் பாலை பண்ணி - பதி 57/8
இடன் உடை பேரியாழ் பாலை பண்ணி - பதி 66/2

 TOP
 
  பேரியாற்று (7)
நிவந்து கரை இழிதரும் நனம் தலை பேரியாற்று/சீர் உடை வியன் புலம் வாய் பரந்து மிகீஇயர் - பதி 28/10,11
பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும் - அகம் 35/16
கடும் புனல் மலிந்த காவிரி பேரியாற்று/நெடும் சுழி நீத்தம் மண்ணுநள் போல - அகம் 62/9,10
கடற்கரை மெலிக்கும் காவிரி பேரியாற்று/அறல் வார் நெடும் கயத்து அரு நிலை கலங்க - அகம் 126/5,6
வரு புனல் நெரிதரும் இகு கரை பேரியாற்று/உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழில் - அகம் 137/7,8
சுள்ளி அம் பேரியாற்று வெண் நுரை கலங்க - அகம் 149/8
காவிரி பேரியாற்று அயிர் கொண்டு ஈண்டி - அகம் 181/12

 TOP
 
  பேரியாறு (2)
கங்கை அம் பேரியாறு கடல் படர்ந்து ஆஅங்கு - மது 696
புனல் மலி பேரியாறு இழிதந்து ஆங்கு - பதி 88/25

 TOP
 
  பேரில் (1)
சிறுவர் தாயே பேரில்_பெண்டே - புறம் 270/6

 TOP
 
  பேரில்_பெண்டே (1)
சிறுவர் தாயே பேரில்_பெண்டே/நோகோ யானே நோக்கு-மதி நீயே - புறம் 270/6,7

 TOP
 
  பேரிளம் (1)
காமர் கவினிய பேரிளம்_பெண்டிர் - மது 465

 TOP
 
  பேரிளம்_பெண்டிர் (1)
காமர் கவினிய பேரிளம்_பெண்டிர்/பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சி - மது 465,466

 TOP
 
  பேரும் (3)
மரம் கோள் உமண்_மகன் பேரும் பருதி - அகம் 343/4
யாரீரோ என பேரும் சொல்லான் - புறம் 150/23
ஈம விளக்கின் வெருவர பேரும்/காடு முன்னினரே நாடு கொண்டோரும் - புறம் 359/7,8

 TOP
 
  பேரூர் (3)
மல்லல் பேரூர் மடியின் மடியா - பெரும் 254
பேரூர் துஞ்சும் யாரும் இல்லை - நற் 132/1
நனம் தலை பேரூர் எரியும் நைக்க - புறம் 57/7

 TOP
 
  பேரொடு (1)
பேரொடு புணர்ந்தன்று அன்னை இவள் உயிரே - ஐங் 367/5

 TOP
 
  பேழ் (10)
உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய் - திரு 47
பூ பொறி உழுவை பேழ் வாய் ஏற்றை - நற் 104/1
வெம் சின உழுவை பேழ் வாய் ஏற்றை - நற் 154/5
பேழ் வாய் தண்ணுமை இடம் தொட்டு அன்ன - நற் 347/6
கேழல் அட்ட பேழ் வாய் ஏற்றை - அகம் 8/6
பெரும் கை எண்கின் பேழ் வாய் ஏற்றை - அகம் 201/16
பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை - அகம் 246/1
பேழ் வாய் பிணவின் விழு பசி நோனாது - அகம் 277/6
பேழ் வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை - புறம் 33/9
பேழ் வாய் உழுவையை பெரும்பிறிது உறீஇ - புறம் 152/2

 TOP
 
  பேழை (1)
பொன் பெய் பேழை மூய் திறந்து அன்ன - குறு 233/3

 TOP
 
  பேறு (1)
யானும் பெற்றது ஊதியம் பேறு யாது என்னேன் - புறம் 154/6

 TOP
 
  பேனும் (1)
ஈரும் பேனும் இருந்து இறைகூடி - பொரு 79

 TOP