|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
பீடர் (1)
ஓடா பீடர் உள் வழி இறுத்து - பதி 45/14
TOP
பீடிலார் (1)
பிரிந்தக்கால் பிறர்க்கு உரைக்கும் பீடிலார் தொடர்பு போல் - கலி 25/24
TOP
பீடு (32)
பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள் - பொரு 53
பீடு அழிய கடந்து அட்டு அவர் - மது 186
பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது - நெடு 106
பிறர் பிணியகத்து இருந்து பீடு காழ் முற்றி - பட் 222
பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடுகள_மகனே - குறு 31/6
நாடு முன்னியரோ பீடு கெழு வேந்தன் - ஐங் 450/2
போர் பீடு அழித்த செரு புகல் முன்ப - பதி 14/9
பீடு கொள் மாலை பெரும் படை தலைவ - பதி 24/5
பீடு கெழு செல்வம் மரீஇய கண்ணே - பதி 50/26
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கும் - பரி 2/11
பிரியுங்கால் பிறர் எள்ள பீடு இன்றி புறம்மாறும் - கலி 8/13
பேதையோன் வினை வாங்க பீடு இலா அரசன் நாட்டு - கலி 27/7
பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடு உடையாளர் போல் - கலி 34/5
ஆடி நின்று அ குடர் வாங்குவான் பீடு காண் - கலி 103/29
பீடு இல் மன்னர் போல - அகம் 125/21
பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்து என - அகம் 233/4
பீடு உடைய எறுழ் முன்பின் - புறம் 17/16
பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின் - புறம் 34/17
நாடு கெழு செல்வத்து பீடு கெழு வேந்தே - புறம் 35/12
பீடு கெழு நோன் தாள் பாடுங்காலே - புறம் 39/18
ஆடவர் பிணிக்கும் பீடு கெழு நெடுந்தகை - புறம் 68/7
ஓடல் மரீஇய பீடு இல் மன்னர் - புறம் 93/4
பீடு கெழு மலையன் பாடியோரே - புறம் 124/5
பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே - புறம் 128/7
பீடு இல் மன்னர் புகழ்ச்சி வேண்டி - புறம் 148/5
வேந்து பீடு அழித்த ஏந்து வேல் தானையொடு - புறம் 225/5
பீடு கெழு சென்னி கிழமையும் நினதே - புறம் 272/8
பீடு பெறு தொல் குடி பாடு பல தாங்கிய - புறம் 289/4
நெடும் பீடு அழிந்து நிலம் சேர்ந்தனவே - புறம் 368/6
பீடு இன்று பெருகிய திருவின் - புறம் 375/20
பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை - புறம் 388/14
பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே - புறம் 393/25
TOP
பீடுடையாள (1)
பாடுநர்க்கு இருந்த பீடுடையாள
தேய்வை வெண் காழ் புரையும் விசி பிணி - புறம் 369/18,19
TOP
பீடுடையாளர் (1)
ஓடல் செல்லா பீடுடையாளர்
நெடு நீர் பொய்கை பிறழிய வாளை - புறம் 287/7,8
TOP
பீடும் (3)
பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும் - அகம் 67/9
பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும் - அகம் 131/10
பீடும் செம்மலும் அறியார் கூடி - புறம் 76/10
TOP
பீர் (10)
பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே - நற் 197/2
பீர் இவர்பு பரந்த நீர் அறு நிறை முதல் - பதி 15/10
பீர் இவர் வேலி பாழ் மனை நெருஞ்சி - பதி 26/10
பிரிந்தவர் நுதல் போல பீர் வீய காதலர் - கலி 31/4
பீர் அலர் அணி கொண்டு பிறை வனப்பு இழவாக்கால் - கலி 53/15
பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லாக்கால் - கலி 124/8
பீர் அலர் போல பெரிய பசந்தன - கலி 143/49
பெரு நல் ஆய் கவின் ஒரீஇ சிறு பீர்
வீ ஏர் வண்ணம் கொண்டன்று-கொல்லோ - அகம் 57/12,13
ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ் - அகம் 167/10
முனை கவர்ந்து கொண்டு என கலங்கி பீர் எழுந்து - அகம் 373/1
TOP
பீரத்து (4)
நுண் கொடி பீரத்து ஊழ் உறு பூ என - நற் 326/6
மாரி பீரத்து அலர் சில கொண்டே - குறு 98/5
பொன் புனை பீரத்து அலர் செய்தன்றே - ஐங் 452/5
அரி நுண் பசலை பாஅய் பீரத்து
எழில் மலர் புரைதல் வேண்டும் அலரே - அகம் 45/7,8
TOP
பீரம் (3)
பாரம் பீரம் பைம் குருக்கத்தி - குறி 92
தாறு படு பீரம் ஊதி வேறுபட - நற் 277/7
இவர் கொடி பீரம் இரும் புதல் மலரும் - ஐங் 464/2
TOP
பீரமொடு (1)
பொன் போல் பீரமொடு புதல்புதல் மலர - நெடு 14
TOP
பீரின் (1)
புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்ப - அகம் 135/2
TOP
பீரை (1)
பீரை நாறிய சுரை இவர் மருங்கின் - புறம் 116/6
TOP
பீலி (29)
பீலி மஞ்ஞையின் இயலி கால - பெரும் 331
ஒலி நெடும் பீலி ஒல்க மெல் இயல் - நெடு 98
மின் இரும் பீலி அணி தழை கோட்டொடு - மலை 5
அலகை அன்ன வெள் வேர் பீலி
கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும் - மலை 234,235
பீலி சூட்டி மணி அணிபவ்வே - நற் 177/6
பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும் - நற் 288/3
பீலி மஞ்ஞை ஆலும் சோலை - நற் 357/6
பீலி ஒண் பொறி கருவிளை ஆட்டி - குறு 110/4
ஓரி முருங்க பீலி சாய - குறு 244/4
ஒலி நெடும் பீலி துயல்வர இயலி - குறு 264/2
திகழ் பொறி பீலி அணி மயில் கொடுத்தோன் - பரி 5/60
புரி மென் பீலி போழ் புனை அடையல் - பரி 21/7
மணி பீலி சூட்டிய நூலொடு மற்றை - கலி 138/8
புன வரை இட்ட வயங்கு தார் பீலி
பிடி அமை நூலொடு பெய்ம் மணி கட்டி - கலி 140/5,6
பாகல் ஆர்கை பறை கள் பீலி
தோகை காவின் துளுநாட்டு அன்ன - அகம் 15/4,5
நடுகல் பீலி சூட்டி துடிப்படுத்து - அகம் 35/8
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் - அகம் 67/10
மட மயில் ஒழித்த பீலி வார்ந்து தம் - அகம் 69/14
தொடை அமை பீலி பொலிந்த கடிகை - அகம் 119/12
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் - அகம் 131/11
ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி
வான் போழ் வல் வில் சுற்றி நோன் சிலை - அகம் 281/4,5
காமர் பீலி ஆய் மயில் தோகை - அகம் 358/2
காமர் பீலி ஆய் மயில் தோகை - அகம் 378/5
பழன மஞ்ஞை உகுத்த பீலி
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும் - புறம் 13/10,11
ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணி தார் - புறம் 50/3
இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டி - புறம் 95/1
நடுகல் பீலி சூட்டி நார் அரி - புறம் 232/3
அணி மயில் பீலி சூட்டி பெயர் பொறித்து - புறம் 264/3
பீலி கண்ணி பெருந்தகை மறவன் - புறம் 274/2
TOP
பீலியின் (3)
ஆடு மயில் பீலியின் வாடையொடு துயல்வர - நற் 262/2
ஆடு மயில் பீலியின் பொங்க நன்றும் - அகம் 385/14
குரல் செய் பீலியின் இழைத்த குடம்பை - புறம் 318/6
TOP
பீள் (7)
நுடங்கு நிலை பறவை உடங்கு பீள் கவரும் - நற் 251/9
மாரிக்கு அவாவுற்று பீள் வாடும் நெல்லிற்கு ஆங்கு - கலி 71/24
பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர் கழனி - அகம் 243/6
முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு - அகம் 284/3
வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரிய - அகம் 376/15
கரும் தாள் போகி ஒருங்கு பீள் விரிந்து - புறம் 120/7
கலி ஆர் வரகின் பிறங்கு பீள் ஒளிக்கும் - புறம் 321/6
TOP
பீளொடு (1)
பீளொடு திரங்கிய நெல்லிற்கு - நற் 22/10
TOP
|
|
|