|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
தெங்கின் (6)
கோள் தெங்கின் குலை வாழை - பொரு 208
வண் தோட்டு தெங்கின் வாடு மடல் வேய்ந்த - பெரும் 353
புடை சூழ் தெங்கின் மு புடை திரள் காய் - பெரும் 364
கோள் தெங்கின் குலை வாழை - பட் 16
ஒலி தெங்கின் இமிழ் மருதின் - பதி 13/7
வெம் கள் தொலைச்சியும் அமையார் தெங்கின்
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நல் நாடு - புறம் 29/15,16
TOP
தெங்கு (1)
தெங்கு படு வியன் பழம் முனையின் தந்தையர் - புறம் 61/9
TOP
தெடாரி (1)
தெடாரி தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி - புறம் 368/15
TOP
தெண் (103)
தெண் கடல் குண்டு அகழி - மது 86
அதரி கொள்பவர் பகடு பூண் தெண் மணி - மது 94
தெண் கடல் திரையின் அசை வளி புடைப்ப - மது 450
தெண் திரை அவிர் அறல் கடுப்ப ஒண் பல் - மது 519
தெண் நீர் பசும் காய் சேறு கொள முற்ற - நெடு 26
அண்ணல் நெடும் கோட்டு இழிதரு தெண் நீர் - குறி 54
அம் தீம் தெண் நீர் குடித்தலின் நெஞ்சு அமர்ந்து - குறி 211
துகள் அற துணிந்த மணி மருள் தெண் நீர் - மலை 250
தெண் நீர் மலரின் தொலைந்த - நற் 23/8
உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெண் மணி - நற் 37/2
தெண் கடல் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே - நற் 49/10
தெண் திரை மணி புறம் தைவரும் - நற் 54/10
மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி - நற் 69/7
வெண் புறம் மொசிய வார்க்கும் தெண் கடல் - நற் 74/9
கேட்டிசின் வாழி தோழி தெண் கழி - நற் 78/7
தேயா வளை வாய் தெண் கண் கூர் உகிர் - நற் 83/3
ஆய் மலர் மழை கண் தெண் பனி உறைப்பவும் - நற் 85/1
உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர் - நற் 110/4
தெண் நீர் குமிழி இழிதரும் - நற் 124/8
வடு இன்று நிறைந்த மான் தேர் தெண் கண் - நற் 130/1
கண்டோர் தண்டா நலத்தை தெண் திரை - நற் 155/5
வினை பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்ப - நற் 171/8
அறல் போல் தெண் மணி இடை முலை நனைப்ப - நற் 208/2
ஆ பூண் தெண் மணி இயம்பும் - நற் 264/8
இரும் சேற்று அயிரை தேரிய தெண் கழி - நற் 272/5
உண்டு-கொல் வாழி தோழி தெண் கடல் - நற் 303/8
பாடு இன் தெண் மணி தோடு தலைப்பெயர - நற் 321/2
தெண் நீர் மணி சுனை ஆடின் - நற் 339/11
நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த - நற் 356/1
தெண் கடல் நாட்டு செல்வென் யான் என - நற் 363/2
கண்படல் ஈயாது பெருகும் தெண் கடல் - நற் 378/2
பேர் அமர் மழை கண் தெண் பனி கொளவே - நற் 391/10
மாண் எழில் மலர் கண் தெண் பனி கொளவே - நற் 398/10
ஊது உலை பெய்த பகு வாய் தெண் மணி - குறு 155/4
பாரி பறம்பில் பனி சுனை தெண் நீர் - குறு 196/3
தெண் கடல் அடை கரை தெளிர் மணி ஒலிப்ப - குறு 212/2
கண்டிசின் வாழி தோழி தெண் திரை - குறு 240/5
வரும் இடறு யாத்த பகு வாய் தெண் மணி - குறு 279/2
தெண் கடல் சேர்ப்பனை கண்ட பின்னே - குறு 306/6
தெண் நீர் நிகர் மலர் புரையும் - குறு 329/6
தெண் திரை பௌவம் பாய்ந்து நின்றோளே - ஐங் 121/3
தெண் திரை பாவை வௌவ - ஐங் 125/2
தெண் கடல் பெரும் திரை மூழ்குவோளே - ஐங் 126/3
தெண் கழி பரக்கும் துறைவன் - ஐங் 156/4
தெண் கடல் சேர்ப்பனொடு வாரான் - ஐங் 157/4
தெண் கழி சே இறா படூஉம் - ஐங் 196/3
ஒள் நுதல் பசப்ப நீ செலின் தெண் நீர் - ஐங் 424/2
புன் கால் உன்னம் சாய தெண் கண் - பதி 40/17
மா இரும் தெண் கடல் மலி திரை பௌவத்து - பதி 42/21
தெண் கடல் முன்னிய வெண் தலை செம் புனல் - பதி 87/3
தெண் கடல் வளைஇய மலர் தலை உலகத்து - பதி 88/3
வெம் போர் மள்ளர் தெண் கிணை கறங்க - பதி 90/44
திரி உமிழ் நெய்யே போல் தெண் பனி உறைக்கும்கால் - கலி 15/21
பண் அமை இன் சீர் குரவையுள் தெண் கண்ணி - கலி 102/35
தெண் கடல் அழுவத்து திரை நீக்கா எழுதரூஉம் - கலி 121/2
ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை - அகம் 64/15
தெண் நீர் உயர் கரை குவைஇய - அகம் 93/22
செருப்பு உடை அடியர் தெண் சுனை மண்டும் - அகம் 129/13
தோளா முத்தின் தெண் கடல் பொருநன் - அகம் 137/13
குவளை உண்கண் தெண் பனி மல்க - அகம் 138/2
அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே - அகம் 149/19
மணி ஓர்த்து அன்ன தெண் குரல் - அகம் 151/14
தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின் - அகம் 159/1
தெண் கண் உவரி குறை குட முகவை - அகம் 207/11
பாடு இன் தெண் கிணை பாடு கேட்டு அஞ்சி - அகம் 226/15
விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை - அகம் 249/3
தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு - அகம் 282/7
தெண் திரை பரப்பின் தொண்டி முன்துறை - அகம் 290/13
இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்ப - அகம் 299/15
பாடு இன் தெண் கிணை கறங்க காண்வர - அகம் 301/10
தெண் கள் தேறல் மாந்தி மகளிர் - அகம் 336/6
தெண் கடல் பரப்பின் எம் உறைவு இன் ஊர்க்கே - அகம் 340/24
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க - அகம் 344/8
தெண் நீர் வேட்ட சிறுமையின் தழை மறந்து - அகம் 353/13
தெண் கண் கிணையின் பிறழும் ஊரன் - அகம் 356/4
என்ன ஆம்-கொல் தாமே தெண் நீர் - அகம் 371/11
அரி மதர் மழை கண் தெண் பனி கொளவே - அகம் 381/21
அலமரல் மழை கண் தெண் பனி மல்க - அகம் 398/8
பாடு இன் தெண் மணி பயம் கெழு பெரு நிரை - அகம் 399/8
தெண் கழி மிசை தீ பூவின் - புறம் 17/12
நுண் கோல் தகைத்த தெண் கண் மா கிணை - புறம் 70/3
பாடு இன் தெண் கிணை கறங்க காண்தக - புறம் 76/8
தெண் கிணை கறங்க சென்று ஆண்டு அட்டனனே - புறம் 78/12
தெண் கிணை முன்னர் களிற்றின் இயலி - புறம் 79/3
வளி பொரு தெண் கண் கேட்பின் - புறம் 89/9
தெண் நீர் சிறு குளம் கீள்வது மாதோ - புறம் 118/3
பாடு இன் தெண் கண் கனி செத்து அடிப்பின் - புறம் 128/3
தெண் நீரின் கண் மல்கி - புறம் 136/7
பாரி பறம்பின் பனி சுனை தெண் நீர் - புறம் 176/9
தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி - புறம் 189/1
தெண் நீர் பரப்பின் இமிழ் திரை பெரும் கடல் - புறம் 204/5
அகல் அடை அரியல் மாந்தி தெண் கடல் - புறம் 209/4
மண்ணுறு மழி தலை தெண் நீர் வார - புறம் 280/11
தெண் நீர் படுவினும் தெருவினும் திரிந்து - புறம் 332/7
என் ஆவது-கொல் தானே தெண் நீர் - புறம் 351/8
தெடாரி தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி - புறம் 368/15
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி - புறம் 374/6
ஊன் சுகிர் வலந்த தெண் கண் ஒற்றி - புறம் 381/13
எனதே கிடை காழ் அன்ன தெண் கண் மா கிணை - புறம் 382/18
தெண் கண் மா கிணை இயக்கி என்றும் - புறம் 387/4
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி - புறம் 397/10
வள் பரிந்து கிடந்த என் தெண் கண் மா கிணை - புறம் 399/23
கேட்டோன் எந்தை என் தெண் கிணை குரலே - புறம் 400/8
TOP
தெம் (2)
தெம் முனை சிதைத்த கடும் பரி புரவி - அகம் 187/6
தெம் முனை சிதைத்த ஞான்றை மோகூர் - அகம் 251/10
TOP
தெம்முனையானே (1)
தொலையா கற்ப நின் தெம்முனையானே - பதி 80/17
TOP
தெய்ய (19)
பண்டும் இற்றே கண்டிசின் தெய்ய
உழையின் போகாது அளிப்பினும் சிறிய - நற் 35/8,9
தங்கின் எவனோ தெய்ய பொங்கு பிசிர் - நற் 67/10
தங்கின் எவனோ தெய்ய செம் கால் - நற் 215/9
இனிதே தெய்ய நின் காணும் காலே - நற் 230/10
வாரேன்-மன் யான் வந்தனென் தெய்ய
சிறு நா ஒண் மணி தெள் இசை கடுப்ப - நற் 267/8,9
நடுவணதுவே தெய்ய மடவரல் - நற் 323/2
இனிதே தெய்ய எம் முனிவு இல் நல் ஊர் - நற் 331/9
உது காண் தெய்ய உள்ளல் வேண்டும் - குறு 81/5
பலரே தெய்ய எம் மறையாதீமே - ஐங் 64/4
சேயதால் தெய்ய நீ பிரியும் நாடே - ஐங் 257/4
வையை மடுத்தால் கடல் என தெய்ய
நெறி மணல் நேடினர் செல்ல சொல் ஏற்று - பரி 20/42,43
ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய
ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை - அகம் 60/8,9
அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர் - அகம் 100/15
கடும் பகல் வருதல் வேண்டும் தெய்ய
அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ - அகம் 182/13,14
சொல் இனி தெய்ய யாம் தெளியுமாறே - அகம் 220/22
வாவே தெய்ய மணந்தனை செலற்கே - அகம் 240/15
கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க - அகம் 310/13
பெரும் புலம்பினளே தெய்ய அதனால் - அகம் 360/10
ஆற்றேன் தெய்ய அலர்க இ ஊரே - அகம் 370/16
TOP
தெய்யோ (10)
பசலை பாய பிரிவு தெய்யோ - ஐங் 231/4
பெயல் ஆனா என் கண்ணே தெய்யோ - ஐங் 232/4
கல் உடை நாட்டு செல்லல் தெய்யோ - ஐங் 233/4
நனவில் காணாள் நின் மார்பே தெய்யோ - ஐங் 234/4
பிரியலம் என்கமோ எழுகமோ தெய்யோ - ஐங் 235/4
நும் ஊர் செல்கம் எழுகமோ தெய்யோ - ஐங் 236/4
யாங்கு எனப்படுவது நும் ஊர் தெய்யோ - ஐங் 237/4
மேவரும்-மாதோ இவள் நலனே தெய்யோ - ஐங் 238/5
வாராய் ஆயின் வாழேம் தெய்யோ - ஐங் 239/5
கூந்தல் நாறும் நின் மார்பே தெய்யோ - ஐங் 240/4
TOP
தெய்வ (6)
திரு முகம் அவிழ்ந்த தெய்வ தாமரை - சிறு 73
தெய்வ மடையின் தேக்கு இலை குவைஇ நும் - பெரும் 104
தெய்வ விழவும் திருந்து விருந்து அயர்வும் - பரி 17/42
தெய்வ பிரமம் செய்குவோரும் - பரி 19/40
தீது இன்று பொலிக என தெய்வ கடி அயர்மார் - கலி 105/6
தெய்வ மால் காட்டிற்று இவட்கு என நின்னை அ - கலி 107/32
TOP
தெய்வத்தான் (1)
தெய்வத்தான் கண்டீ தெளிக்கு - கலி 91/8
TOP
தெய்வத்தின் (2)
தெய்வத்தின் தேற்றி தெளிப்பேன் பெரிது என்னை - கலி 98/32
பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்தக்கால் - கலி 124/18
TOP
தெய்வத்து (8)
நால் பெரும் தெய்வத்து நன் நகர் நிலைஇய - திரு 160
மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி - திரு 290
ஈண்டு பெரும் தெய்வத்து யாண்டு பல கழிந்து என - நற் 315/1
அர வழங்கும் பெரும் தெய்வத்து
வளை ஞரலும் பனி பௌவத்து - பதி 51/13,14
மாற்று அரும் தெய்வத்து கூட்டம் முன்னிய - பதி 88/24
அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலை காக்கும் - பரி 9/2
தெய்வத்து திறன் நோக்கி தெருமரல் தே_மொழி - கலி 16/19
வெருவரு கடும் திறல் இரு பெரும் தெய்வத்து
உரு உடன் இயைந்த தோற்றம் போல - அகம் 360/6,7
TOP
தெய்வம் (20)
தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் - திரு 287
தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி - நெடு 77
மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய - பட் 159
வழிபடு தெய்வம் கண் கண்டு ஆஅங்கு - நற் 9/2
தேன் உடை நெடு வரை தெய்வம் எழுதிய - நற் 185/10
தெய்வம் காக்கும் தீது தீர் நெடும் கோட்டு - நற் 201/6
எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி - நற் 351/4
கரும் கண் தெய்வம் குடவரை எழுதிய - குறு 89/5
வேற்று பெரும் தெய்வம் பல உடன் வாழ்த்தி - குறு 263/4
தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர் - பதி 73/6
பகை பெருமையின் தெய்வம் செப்ப - பதி 82/1
சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்புறும் - பரி 15/8
தெய்வம் பேணி திசை தொழுதனிர் செல்-மின் - பரி 15/48
வரை உறை தெய்வம் உவப்ப உவந்து - கலி 39/28
தேயா விழு புகழ் தெய்வம் பரவுதும் - கலி 103/76
பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கி தெளித்து என் - கலி 131/1
வழிபட்ட தெய்வம் தான் வலி என சார்ந்தார்-கண் - கலி 132/21
கொடும் சுழி புகாஅர் தெய்வம் நோக்கி - அகம் 110/4
உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம்
புனை இரும் கதுப்பின் நீ கடுத்தோள்-வயின் - அகம் 166/7,8
தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் - அகம் 309/4
TOP
தெய்வமும் (4)
உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே - நற் 398/1
அந்தர_மகளிர்க்கு தெய்வமும் போன்றே - ஐங் 76/4
தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என - பதி 74/26
இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு - புறம் 58/16
TOP
தெய்வஉத்தியொடு (1)
தெய்வஉத்தியொடு வலம்புரி வயின் வைத்து - திரு 23
TOP
தெரி (47)
நைவளம் பழுநிய நயம் தெரி பாலை - சிறு 36
பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்வி - சிறு 228
தெரி கொள் அரிசி திரள் நெடும் புழுக்கல் - பெரும் 474
தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை - மலை 296
நெய் தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும் - நற் 12/3
பயன் தெரி பனுவல் பை தீர் பாண - நற் 167/6
தெரி மணி கேட்டலும் அரிதே - நற் 323/10
தெரி தீம் கிளவி தெருமரல் உயவே - குறு 250/6
தேனூர் அன்ன இவள் தெரி வளை நெகிழ - ஐங் 54/3
தெரி இழை தெளிர்ப்ப முயங்கி - ஐங் 235/3
தெரி இழை அரிவை நின் பண்பு தர விரைந்தே - ஐங் 354/4
தெரி இழை அரிவைக்கு பெரு விருந்து ஆக - ஐங் 482/1
அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும் - பதி 22/4
தெரி மணி பிறங்கும் பூணினை மால் வரை - பரி 1/9
இ நிலை தெரி பொருள் தேரின் இ நிலை - பரி 2/26
தெரி_இழாய் செல்க என்றாய் எல்லா யாம் பெற்றேம் - பரி 8/83
வருடையை படிமகன் வாய்ப்ப பொருள் தெரி
புந்தி மிதுனம் பொருந்த புலர் விடியல் - பரி 11/5,6
தெரி கோதை நல்லார் தம் கேளிர் திளைக்கும் - பரி 11/58
தெரி மலர் தாரர் தெரு இருள் சீப்ப நின் - பரி 19/14
தெரி மலர் நனையுறுவ - பரி 19/71
பிணி நெகிழ் துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ் தெரி அரி - பரி 23/62
தெரி மருதம் பாடுப பிணி கொள் யாழ் பாணர் - பரி 24/73
தெரி மாண் தமிழ் மும்மை தென்னம் பொருப்பன் - பரி 26/1
அவரும் தெரி கணை நோக்கி சிலை நோக்கி கண் சேந்து - கலி 39/23
தெரி_இழாய் நீயும் நின் கேளும் புணர - கலி 39/27
தெருள தெரி_இழாய் நீ ஒன்று பாடித்தை - கலி 43/15
தெரி வேய் தோள் கரும்பு எழுதி தொய்யில் செய்தனைத்தற்கோ - கலி 76/15
தெரி_இழாய் செய் தவறு இல் வழி யாங்கு சினவுவாய் - கலி 87/3
தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார் - கலி 88/18
தெரி மலர் கண்ணியும் தாரும் நயந்தார் - கலி 91/3
தெரி_இழாய் தேற்றாய் சிவந்தனை காண்பாய் நீ தீதின்மை - கலி 91/16
ஒருத்தி தெரி முத்தம் சேர்ந்த திலகம் - கலி 92/35
தெரி இழை ஆர்ப்ப மயங்கி இரிவுற்றார் வண்டிற்கு - கலி 92/53
தெரி கோதை அம் நல்லாய் தேறீயல் வேண்டும் - கலி 98/9
தெளிந்தேன் தெரி_இழாய் யான் - கலி 113/22
தெரி இணர் ஞாழலும் தேம் கமழ் புன்னையும் - கலி 127/1
தெரி இதழ் குவளை தேம் பாய் தாரன் - அகம் 38/2
அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர் - அகம் 41/6
வரி அதள் படுத்த சேக்கை தெரி இழை - அகம் 58/4
நுரை தெரி மத்தம் கொளீஇ நிரை புறத்து - அகம் 101/8
தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர் கோங்கின் - அகம் 153/16
தெரி வளை முன்கை பற்றியும் வினை முடித்து - அகம் 175/8
தேர் தர வந்த தெரி இழை நெகிழ் தோள் - அகம் 316/8
அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ - அகம் 321/15
புகர் இல் குவளை போதொடு தெரி இதழ் - அகம் 393/24
தெரி கோல் ஞமன்ன் போல ஒரு திறம் - புறம் 6/9
தெரி இழை மகளிர் பாணி பார்க்கும் - புறம் 209/17
TOP
தெரி_இழாய் (6)
தெரி_இழாய் செல்க என்றாய் எல்லா யாம் பெற்றேம் - பரி 8/83
தெரி_இழாய் நீயும் நின் கேளும் புணர - கலி 39/27
தெருள தெரி_இழாய் நீ ஒன்று பாடித்தை - கலி 43/15
தெரி_இழாய் செய் தவறு இல் வழி யாங்கு சினவுவாய் - கலி 87/3
தெரி_இழாய் தேற்றாய் சிவந்தனை காண்பாய் நீ தீதின்மை - கலி 91/16
தெளிந்தேன் தெரி_இழாய் யான் - கலி 113/22
TOP
தெரிகல்லா (1)
தெரிகல்லா இடையின்-கண் கண் கவர்பு ஒருங்கு ஓட - கலி 57/5
TOP
தெரிகோல் (1)
தெரிகோல் அன்ன செயிர் தீர் செம்மொழி - அகம் 349/4
TOP
தெரிதகு (1)
இரு வேறு ஆகிய தெரிதகு வனப்பின் - அகம் 29/6
TOP
தெரிதர (1)
கொளை பொருள் தெரிதர கொளுத்தாமல் குரல் கொண்ட - பரி 11/126
TOP
தெரிதியே (1)
புனை மாண் மரீஇய அம்பு தெரிதியே
இவட்கே சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல் - கலி 7/10,11
TOP
தெரிந்த (4)
மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் - நற் 83/5
இலை தெரிந்த வேல் - பதி 69/6
ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடு - பதி 69/8
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் - புறம் 183/8
TOP
தெரிந்திசின் (1)
செய்வது தெரிந்திசின் தோழி அல்கலும் - அகம் 281/1
TOP
தெரிந்து (20)
உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து
புகர் வாய் குழிசி பூம் சுமட்டு இரீஇ - பெரும் 158,159
இடை தெரிந்து உணரும் இருள் தீர் காட்சி - பெரும் 445
வண்ண வரி வில் ஏந்தி அம்பு தெரிந்து
நுண் வினை கச்சை தயக்கு அற கட்டி - குறி 124,125
இடை தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்து என - மலை 542
தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா - நற் 25/9
ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே புன் கால் - நற் 103/1
நம் நிலை இடை தெரிந்து உணரான் தன் மலை - நற் 344/5
தெரிந்து அது வியந்தனென் தோழி பணிந்து நம் - நற் 386/8
நன்றே செய்த உதவி நன்று தெரிந்து
யாம் எவன் செய்குவம் நெஞ்சே காமர் - ஐங் 288/1,2
நயம்படு முரற்கையின் யாத்த பயன் தெரிந்து
இன்புறு புணர்ச்சி நுகரும் - ஐங் 407/2,3
வள்பு தெரிந்து ஊர்-மதி வலவ நின் - ஐங் 486/4
வம்பு களைவு அறியா சுற்றமோடு அம்பு தெரிந்து
அ வினை மேவலை ஆகலின் - பதி 19/9,10
உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி - பதி 71/25
எங்கும் தெரிந்து அது கொள்வேன் அவன் உள் வழி - கலி 144/16
உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும் - அகம் 19/4
கணை வலம் தெரிந்து துணை படர்ந்து உள்ளி - அகம் 38/4
வரி புனை வில்லன் ஒரு கணை தெரிந்து கொண்டு - அகம் 48/12
உருவ வல் வில் பற்றி அம்பு தெரிந்து
செரு செய் யானை செல் நெறி வினாஅய் - அகம் 82/11,12
விரி மலர் மராஅம் பொருந்தி கோல் தெரிந்து
வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி - அகம் 172/7,8
பெறல் அரும்-குரையள் ஆயின் அறம் தெரிந்து
நாம் உறை தேஎம் மரூஉ பெயர்ந்து அவனொடு - அகம் 280/6,7
TOP
தெரிபு (1)
தேர் அணி அணி கயிறு தெரிபு வருவார் - பரி 9/52
TOP
தெரிபுதெரிபு (1)
தெரிபுதெரிபு குத்தின ஏறு - கலி 103/23
TOP
தெரிய (4)
கொல் படை தெரிய வெல் கொடி நுடங்க - பதி 67/5
தேறி தெரிய உணர் நீ பிறிதும் ஓர் - பரி 6/92
எல்லாம் தெரிய கேட்குநர் யார் அவை - பரி 12/38
வகை அமை வனப்பின் வள்பு நீ தெரிய
தளவு பிணி அவிழ்ந்த தண் பத பெரு வழி - அகம் 64/3,4
TOP
தெரியல் (16)
தளை அவிழ் தெரியல் தகையோன் பாடி - சிறு 161
மொய்ம்பு இறந்து திரிதரும் ஒரு பெரும் தெரியல்
மணி தொடர்ந்து அன்ன ஒண் பூம் கோதை - மது 437,438
எருத்தம் தாழ்ந்த விரவு பூம் தெரியல்
பொலம் செய பொலிந்த நலம் பெறு விளக்கம் - மது 718,719
புலர்ந்த சாந்தின் விரவு பூம் தெரியல்
பெரும் செய் ஆடவர் தம்-மின் பிறரும் - மது 745,746
ஒண் குரல் நொச்சி தெரியல் சூடி - நற் 200/2
மணி குரல் நொச்சி தெரியல் சூடி - நற் 293/1
சிறி இலை உழிஞை தெரியல் சூடி - பதி 63/8
பனி துறை பகன்றை பாங்கு உடை தெரியல்
கழுவுறு கலிங்கம் கடுப்ப சூடி - பதி 76/12,13
வகை அமை பொலிந்த வனப்பு அமை தெரியல்
சுரியல் அம் பொருநனை காண்டிரோ என - அகம் 76/8,9
மட்டு அவிழ் தெரியல் மற போர் குட்டுவன் - அகம் 212/16
கார் நறும் கடம்பின் பாசிலை தெரியல்
சூர் நவை முருகன் சுற்றத்து அன்ன நின் - புறம் 23/3,4
புனை விளை பொலிந்த பொலன் நறும் தெரியல்
பாறு மயிர் இரும் தலை பொலிய சூடி - புறம் 29/3,4
ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம் - புறம் 43/13
ஆர் புனை தெரியல் நெடுந்தகை போரே - புறம் 82/6
ஒறுவாய்ப்பட்ட தெரியல் ஊன் செத்து - புறம் 271/6
தொன்று தாம் உடுத்த அம் பகை தெரியல்
சிறு வெள்_ஆம்பல் அல்லி உண்ணும் - புறம் 280/12,13
TOP
தெரியலான் (1)
அயம் திகழ் நறும் கொன்றை அலங்கல் அம் தெரியலான்
இயங்கு எயில் எய பிறந்த எரி போல எவ்வாயும் - கலி 150/1,2
TOP
தெரியலும் (1)
அர வாய் வேம்பின் அம் குழை தெரியலும்
ஓங்கு இரும் சென்னி மேம்பட மிலைந்த - பொரு 144,145
TOP
தெரியலோன் (1)
கரும் சினை வேம்பின் தெரியலோன் அல்லன் - புறம் 45/2
TOP
தெரியா (3)
நின் நிலை தெரியா அளவை அ நிலை - பெரும் 464
இடை தெரியா ஏஎர் இருவரும் தத்தம் - கலி 109/17
பிறர் கூறிய மொழி தெரியா
ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி - புறம் 366/9,10
TOP
தெரியின் (1)
பொழுது இடை தெரியின் பொய்யே காமம் - குறு 32/3
TOP
தெரியுங்கால் (1)
தெருளுற நோக்கி தெரியுங்கால் இன்ன - கலி 140/31
TOP
தெரியுநர் (1)
தெரியுநர் கொண்ட சிரறு உடை பைம் பொறி - பதி 74/8
TOP
தெரியும் (1)
அரிய பெரியோர் தெரியும் காலை - அகம் 286/14
TOP
தெரிவார்-கண் (1)
அருகுவித்து ஒருவரை அகற்றலின் தெரிவார்-கண்
செய நின்ற பண்ணினுள் செவி சுவை கொள்ளாது - கலி 142/2,3
TOP
தெரிவை (1)
தேர் விலங்கினவால் தெரிவை கண்ணே - குறு 256/8
TOP
தெரீஇய (1)
களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின் - அகம் 22/14
TOP
தெரு (5)
பெரும் தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி - நற் 132/3
நெடும் தெரு அன்ன நேர்கொள் நெடு வழி - நற் 161/5
தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள் - பரி 11/3
தெரி மலர் தாரர் தெரு இருள் சீப்ப நின் - பரி 19/14
இயன்ற அணியன் இ தெரு இறப்போன் - அகம் 66/9
TOP
தெருமந்திட்டு (1)
வளை முன்கை பற்றி நலிய தெருமந்திட்டு
அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா - கலி 51/10,11
TOP
தெருமந்து (2)
தேறு நீர் உடையேன் யான் தெருமந்து ஈங்கு ஒழிவலோ - கலி 20/14
தெருமந்து சாய்த்தார் தலை - கலி 39/26
TOP
தெருமரல் (8)
செய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப - பொரு 134
தெரி தீம் கிளவி தெருமரல் உயவே - குறு 250/6
தெய்வத்து திறன் நோக்கி தெருமரல் தே_மொழி - கலி 16/19
தெருமரல் வாழி தோழி நம் காதலர் - கலி 26/22
தெருமரல் கைவிட்டு இருக்கோ அலர்ந்த - கலி 114/18
தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின்-வயின் - அகம் 90/7
தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது - அகம் 289/6
தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம் அதனால் - புறம் 381/16
TOP
தெருமரும் (2)
தேர் வழி நின்று தெருமரும் ஆய்_இழை - கலி 146/9
தெருமரும் அம்ம தானே தன் கொழுநன் - புறம் 247/7
TOP
தெருவம் (1)
இதழகத்து அனைய தெருவம் இதழகத்து - பரி 30/3
TOP
தெருவில் (24)
திண் தேர் குழித்த குண்டு நெடும் தெருவில்
படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ் - பெரும் 397,398
உவலை கூரை ஒழுகிய தெருவில்
கவலை முற்றம் காவல் நின்ற - முல் 29,30
உயர் பூரிம விழு தெருவில்
பொய் அறியா வாய்மொழியால் - மது 18,19
யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில்
பல் வேறு குழாஅத்து இசை எழுந்து ஒலிப்ப - மது 359,360
தேர் வழங்கு தெருவில் நீர் திரண்டு ஒழுக - மது 648
ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில்
படலை கண்ணி பரேர் எறுழ் திணி தோள் - நெடு 30,31
வேலாழி வியன் தெருவில்
நல் இறைவன் பொருள் காக்கும் - பட் 119,120
அரு விலை நறும் பூ தூஉய் தெருவில்
முது வாய் கோடியர் முழவொடு புணர்ந்த - பட் 252,253
நெடு நிமிர் தெருவில் கை புகு கொடு மிடை - நற் 50/4
யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில்
சாறு என நுவலும் முது வாய் குயவ - நற் 200/3,4
அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப தெருவில்
தேர் நடைபயிற்றும் தே மொழி புதல்வன் - நற் 250/2,3
மணல் மலி மூதூர் அகல் நெடும் தெருவில்
கூகை சேவல் குராலோடு ஏறி - நற் 319/3,4
ஓரி கொன்ற ஒரு பெரும் தெருவில்
காரி புக்க நேரார் புலம் போல் - நற் 320/5,6
கடும் பாம்பு வழங்கும் தெருவில்
நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே - குறு 354/5,6
வளி முனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில்
சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின் - பதி 47/4,5
சுடர் தொடீஇ கேளாய் தெருவில் நாம் ஆடும் - கலி 51/1
பெரும் தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்ற - கலி 81/12
தெருவில் தவிர்ப்ப தவிர்ந்தனன் மற்று அவர் - கலி 84/15
தோள் நலம் உண்டானை கெடுத்தாள் போல் தெருவில் பட்டு - கலி 147/7
தேர் வழங்கு தெருவில் தமியோன் கண்டே - அகம் 16/6
பரிவொடு வரூஉம் பாணன் தெருவில்
புனிற்று ஆ பாய்ந்து என கலங்கி யாழ் இட்டு - அகம் 56/10,11
தேர் ஊர் தெருவில் ததும்பும் - அகம் 189/14
இடை நெடும் தெருவில் கதுமென கண்டு என் - அகம் 356/5
நெடும் தெருவில் தேர் வழங்கினன் - புறம் 239/14
TOP
தெருவின் (10)
நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் - சிறு 201
பரதர் மலிந்த பல்வேறு தெருவின்
சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின் - பெரும் 323,324
இரும் சேற்று தெருவின் எறி துளி விதிர்ப்ப - நெடு 180
யாறு என கிடந்த தெருவின் சாறு என - மலை 481
ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி நின் - நற் 30/4
தேர் வழங்கு தெருவின் அன்ன - நற் 227/8
தழை அணிந்து அலமரும் அல்குல் தெருவின்
இளையோள் இறந்த அனைத்தற்கு பழ விறல் - நற் 320/3,4
தெருவின் இயலவும் தருவது-கொல்லோ - குறு 182/5
ஆசு இல் தெருவின் நாய் இல் வியன் கடை - குறு 277/1
இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின்
விளையாட்டி கொண்டுவரற்கு என சென்றாய் - கலி 83/3,4
TOP
தெருவின்-கண் (3)
தெருவின்-கண் காரணம் இன்றி கலங்குவார் கண்டு நீ - கலி 60/12
ஆறு விலங்கி தெருவின்-கண் நின்று ஒருவன் - கலி 60/23
தெள் அரி சிலம்பு ஆர்ப்ப தெருவின்-கண் தாக்கி நின் - கலி 69/8
TOP
தெருவினும் (2)
நால் வேறு தெருவினும் கால் உற நிற்றர - மது 522
தெண் நீர் படுவினும் தெருவினும் திரிந்து - புறம் 332/7
TOP
தெருவு (1)
தேர் ஓட துகள் கெழுமின தெருவு
மா மறுகலின் மயக்குற்றன வழி - புறம் 345/2,3
TOP
தெருவு-தொறு (2)
புது மலர் தெருவு-தொறு நுவலும் - நற் 118/10
ஏர் தரு கடு நீர் தெருவு-தொறு ஒழுக - அகம் 264/8
TOP
தெருவுடன் (2)
மணம் கமழ் நாற்றம் தெருவுடன் கமழ - மது 447
போது அவிழ் புது மலர் தெருவுடன் கமழ - மது 564
TOP
தெருவே (1)
வாரல் வாழியர் ஐய எம் தெருவே - குறு 139/6
TOP
தெருள் (1)
தெருள் நடை மா களிறொடு தன் - புறம் 361/7
TOP
தெருள (3)
தெருள நின் வரவு அறிதல் - பரி 1/32
தெருள தெரி_இழாய் நீ ஒன்று பாடித்தை - கலி 43/15
அருளுகம் யாம் யாரேம் எல்லா தெருள
அளித்து நீ பண்ணிய பூழ் எல்லாம் இன்னும் - கலி 95/29,30
TOP
தெருளாமல் (1)
தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண் - கலி 38/17
TOP
தெருளாமையின் (1)
தெருளாமையின் தீதொடு கெழீஇ - அகம் 379/2
TOP
தெருளும் (2)
தெருளும் பண்பிலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் - கலி 122/13
தெருளும் மருளும் மயங்கி வருபவள் - கலி 144/7
TOP
தெருளுற (1)
தெருளுற நோக்கி தெரியுங்கால் இன்ன - கலி 140/31
TOP
தெவ்-வழி (1)
தொலையா தும்பை தெவ்-வழி விளங்க - பதி 52/8
TOP
தெவ்வர் (34)
செயிர்த்து எழு தெவ்வர் திறை துறைபோகிய - பொரு 120
எய்யா தெவ்வர் ஏவல் கேட்ப - பொரு 133
ஒன்னா தெவ்வர் நடுங்க ஓச்சி - பெரும் 118
ஒன்னா தெவ்வர் உலைவிடத்து ஆர்த்து - பெரும் 419
ஒன்னா தெவ்வர் உலைவிடத்து ஒழித்த - பெரும் 491
நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து - முல் 18,19
செற்ற தெவ்வர் கலங்க தலைச்சென்று - மது 139
செற்ற தெவ்வர் நின் வழி நடப்ப - மது 189
தேய்வன கெடுக நின் தெவ்வர் ஆக்கம் - மது 196
இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம் - மலை 86
ஒன்னா தெவ்வர் உலைவிடத்து ஆர்த்து என - மலை 386
ஒட்டாது அகன்ற ஒன்னா தெவ்வர்
சுட்டினும் பனிக்கும் சுரம் தவ பலவே - மலை 397,398
பொருந்தா தெவ்வர் இரும் தலை துமிய - மலை 488
தெவ்வர் தேய்த்த செ வேல் வயவன் - நற் 260/6
ஒடுங்கா தெவ்வர் ஊக்கு அற கடைஇ - பதி 31/32
கறுத்த தெவ்வர் கடி முனை அலற - பதி 39/4
வெவ்வர் ஓச்சம் பெருக தெவ்வர்
மிளகு எறி உலக்கையின் இரும் தலை இடித்து - பதி 41/20,21
முள் இடுபு அறியா ஏணி தெவ்வர்
சிலை விசை அடக்கிய மூரி வெண் தோல் - பதி 45/15,16
ஒன்னா தெவ்வர் முனை கெட விலங்கி - பதி 53/10
மலைத்த தெவ்வர் மறம் தப கடந்த - பதி 65/3
ஒடிவு இல் தெவ்வர் எதிர் நின்று உரைஇ - பதி 80/9
கையதை கொள்ளா தெவ்வர் கொள் மா முதல் தடிந்து - பரி 21/8
கன்றிய தெவ்வர் கடந்து களம் கொள்ளும் - கலி 86/13
நெறி செல் வம்பலர் கொன்ற தெவ்வர்
எறி படை கழீஇய சேய் அரி சில் நீர் - அகம் 113/18,19
ஒன்னா தெவ்வர் மன் எயில் போல - அகம் 381/16
செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து - புறம் 6/11
தேர் வழங்கினை நின் தெவ்வர் தேஎத்து - புறம் 15/6
திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய அ - புறம் 20/12
கானத்தோர் நின் தெவ்வர் நீயே - புறம் 28/10
முனை தெவ்வர் முரண் அவிய - புறம் 98/1
நண்ணா தெவ்வர் தாங்கும் - புறம் 126/22
ஒன்னா தெவ்வர் முன் நின்று விலங்கி - புறம் 335/9
பொருந்தா தெவ்வர் அரிந்த தலை அடுப்பின் - புறம் 372/5
ஒன்னா தெவ்வர் உயர் குடை பணித்து இவண் - புறம் 387/31
TOP
தெவ்வர்க்கு (1)
திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய - பட் 299
TOP
தெவ்வரின் (1)
நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே - கலி 30/21
TOP
தெவ்விர் (2)
களம் புகல் ஓம்பு-மின் தெவ்விர் போர் எதிர்ந்து - புறம் 87/2
குறுகல் ஓம்பு-மின் தெவ்விர் அவனே - புறம் 170/9
TOP
தெவ்வு (3)
திறல் சால் வென்றியொடு தெவ்வு புலம் அகற்றி - சிறு 246
நீர் தெவ்வு நிரை தொழுவர் - மது 89
தெவ்வு குன்றத்து திருந்து வேல் அழுத்தி - பரி 19/102
TOP
தெவி (1)
சீர் அமை பாடல் பயத்தால் கிளர் செவி தெவி
உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும் - பரி 11/69,70
TOP
தெவிட்ட (5)
பணை நிலை புரவி புல் உணா தெவிட்ட
பல்வேறு பண்ணிய கடை மெழுக்குறுப்ப - மது 660,661
மான் கணம் மர முதல் தெவிட்ட ஆன் கணம் - குறி 217
அவல்-தொறும் தேரை தெவிட்ட மிசை-தொறும் - ஐங் 453/1
வரி நுணல் கறங்க தேரை தெவிட்ட
கார் தொடங்கின்றே காலை இனி நின் - ஐங் 468/1,2
வண்டு தாது ஊத தேரை தெவிட்ட
தண் கமழ் புறவின் முல்லை மலர - ஐங் 494/1,2
TOP
தெவிட்டல் (2)
வால் வெண் தெவிட்டல் வழி வார் நுணக்கம் - அகம் 224/7
துஞ்சு ஊர் யாமத்து தெவிட்டல் ஓம்பி - அகம் 360/12
TOP
தெவிட்டும் (2)
புல் உணா தெவிட்டும் புலம்பு விடு குரலொடு - நெடு 94
வன் கலை தெவிட்டும் அரும் சுரம் இறந்தோர்க்கு - புறம் 161/11
TOP
தெவிள (1)
நுண் நீர் தெவிள வீங்கி புடை திரண்டு - நெடு 25
TOP
தெவுட்டும் (2)
திரி வயின் தெவுட்டும் சேண் புல குடிஞை - அகம் 283/6
கார் வான் முழக்கின் நீர் மிசை தெவுட்டும்
தேரை ஒலியின் மாண சீர் அமைத்து - அகம் 301/18,19
TOP
தெழி (2)
வெண்ணெய் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி - கலி 108/35
கொடும் கோல் உமணர் பகடு தெழி தெள் விளி - அகம் 17/13
TOP
தெழிப்ப (2)
ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலி - மது 666
திருந்து கோல் எல் வளை தெழிப்ப நாணு மறந்து - குறி 167
TOP
தெள் (30)
தெள் அரி பொன் சிலம்பு ஒலிப்ப ஒள் அழல் - மது 444
வள் உயிர் தெள் விளி இடையிடை பயிற்றி - குறி 100
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற - குறி 222
நெடும் கால் கணந்துள் அம் புலம்பு கொள் தெள் விளி - நற் 212/2
தேம் படு சிலம்பில் தெள் அறல் தழீஇய - நற் 243/1
சிறு நா ஒண் மணி தெள் இசை கடுப்ப - நற் 267/9
தேர் மணி தெள் இசை-கொல் என - நற் 287/10
வரி புற புறவின் புலம்பு கொள் தெள் விளி - நற் 305/7
வன் பரல் தெள் அறல் பருகிய இரலை தன் - குறு 65/1
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி - குறு 207/3
எல் வளை மகளிர் தெள் விளி இசைப்பின் - பதி 27/7
தெள் உயர் வடி மணி எறியுநர் கல்லென - பதி 31/5
தெள் கடல் முத்தமொடு நல் கலம் பெறுகுவை - பதி 67/4
தெள் அரி சிலம்பு ஆர்ப்ப தெருவின்-கண் தாக்கி நின் - கலி 69/8
தேர் பூண்ட நெடு நல் மான் தெள் மணி வந்து எடுப்புமே - கலி 70/18
கொடும் கோல் உமணர் பகடு தெழி தெள் விளி - அகம் 17/13
தெள் நீர்க்கு ஏற்ற திரள் கால் குவளை - அகம் 27/13
கிள்ளை தெள் விளி இடையிடை பயிற்றி - அகம் 28/10
தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை - அகம் 34/7
ஓதை தெள் விளி புலம்-தொறும் பரப்ப - அகம் 41/7
புள்ளு புணர்ந்து இனிய ஆக தெள் ஒளி - அகம் 136/3
திரி மருப்பு இரலை தெள் அறல் பருகி - அகம் 154/8
தெள் அறல் பருகிய திரி மருப்பு எழில் கலை - அகம் 184/11
படு சுவல் கொண்ட பகு வாய் தெள் மணி - அகம் 214/11
ஆர் உயிர் அணங்கும் தெள் இசை - அகம் 214/14
வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப - அகம் 269/18
செறித்து நிறுத்து அன்ன தெள் அறல் பருகி - அகம் 304/7
வறும் சுனை முகந்த கோடை தெள் விளி - அகம் 321/2
கிளை தரு தெள் விளி கெழு முடை பயிரும் - அகம் 363/14
சிறு வெதிர் தீம் குழல் புலம் கொள் தெள் விளி - அகம் 399/12
TOP
தெள்ளிதின் (4)
உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின்
வாரார் என்னும் புலவி உட்கொளல் - நற் 11/3,4
புள் அறிவுறீஇயின-கொல்லோ தெள்ளிதின்
காதல் கெழுமிய நலத்தள் ஏது இல் - நற் 161/9,10
தெள்ளிதின் விளங்கும் சுரி நெற்றி காரியும் - கலி 105/10
உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல - புறம் 73/6,7
TOP
தெள்ளியேம் (1)
தெள்ளியேம் என்று உரைத்து தேராது ஒரு நிலையே - கலி 142/29
TOP
தெளி (7)
தெளி தீம் கிளவி யாரையோ என் - நற் 245/6
குருதி கோட்டு அழி கறை தெளி பெற கழீஇயின்று - பரி 20/5
பிணி நெகிழ் துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ் தெரி அரி - பரி 23/62
நில உலகத்து இன்மை தெளி நீ வருதி - கலி 108/54
சில்_மொழி தெளி என தேற்றிய சிறப்பு அன்றோ - கலி 132/13
கொடும்_குழாய் தெளி என கொண்டதன் கொளை அன்றோ - கலி 132/17
புணர் துயில் எடுப்பும் புனல் தெளி காலையும் - அகம் 279/13
TOP
தெளிக்கு (2)
தேற்ற கண்டீயாய் தெளிக்கு
இனி தேற்றேம் யாம் - கலி 88/16,17
தெய்வத்தான் கண்டீ தெளிக்கு
மற்று அது அறிவல் யான் நின் சூள் அனைத்து ஆக நல்லார் - கலி 91/8,9
TOP
தெளிக்குநர் (1)
தேன் ஆர்க்கும் பொழுது என தெளிக்குநர் உளர் ஆயின் - கலி 30/12
TOP
தெளிக்கும் (1)
தேம் படு கிளவி அவர் தெளிக்கும் பொழுதே - ஐங் 350/3
TOP
தெளிகுவர்-கொல் (1)
சான்றோர் உரைப்ப தெளிகுவர்-கொல் என - பதி 73/18
TOP
தெளித்த (7)
தாம் வர தெளித்த பருவம் காண்வர - நற் 99/4
இரும்பு செய் கொல்லன் வெ உலை தெளித்த
தோய் மடல் சில் நீர் போல - நற் 133/9,10
நல்கி நீ தெளித்த சொல் நசை என தேறியாள் - கலி 100/9
தென்னவன் தெளித்த தேஎம் போல - கலி 143/59
நின்னொடு தெளித்த நல் மலை நாடன் - அகம் 138/14
நறு விரை தெளித்த நாறு இணர் மாலை - அகம் 166/5
வருதும் என்று அவர் தெளித்த போழ்தே - அகம் 194/19
TOP
தெளித்தக்கால் (1)
பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்தக்கால்
அரிது என்னாள் துணிந்தவள் ஆய் நலம் பெயர்தர - கலி 124/18,19
TOP
தெளித்தவன் (1)
பலவும் சூள் தேற்றி தெளித்தவன் என்னை - கலி 147/23
TOP
தெளித்தனர் (1)
நின்னொடு தெளித்தனர் ஆயினும் என்னதூஉம் - நற் 358/4
TOP
தெளித்து (3)
சிறு பசு மஞ்சளொடு நறு விரை தெளித்து
பெரும் தண் கணவீர நறும் தண் மாலை - திரு 235,236
பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கி தெளித்து என் - கலி 131/1
கண்ணீர் அழலால் தெளித்து
பேணான் துறந்தானை நாடும் இடம் விடாய் ஆயின் - கலி 144/44,45
TOP
தெளித்தோர் (2)
ஆயா காதலொடு அதர் பட தெளித்தோர்
கூறிய பருவம் கழிந்தன்று பாரிய - நற் 218/5,6
பிரியலம் என்று தெளித்தோர் தேஎத்து - நற் 224/7
TOP
தெளித்தோரே (1)
இன்னே வருதும் என தெளித்தோரே - அகம் 229/21
TOP
தெளிதல் (1)
சொல்லின் தெளிப்பவும் தெளிதல் செல்லாய் - நற் 164/5
TOP
தெளிந்த (5)
விளிந்தன்று-மாது அவர் தெளிந்த என் நெஞ்சே - நற் 178/10
அற நெறி இது என தெளிந்த என் - ஐங் 371/4
கலங்கின்று-மாது அவர் தெளிந்த என் நெஞ்சே - அகம் 135/14
நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி - அகம் 214/9
கடி சுனை தெளிந்த மணி மருள் தீம் நீர் - அகம் 368/10
TOP
தெளிந்தனம் (3)
தெளிந்தனம் மன்ற தேயர் என் உயிர் என - நற் 197/4
பொய்யார் ஆகுதல் தெளிந்தனம்
மை ஈர் ஓதி மட மொழியோயே - கலி 150/22,23
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின் - புறம் 192/11
TOP
தெளிந்தாய் (1)
நீ தக்காய் தை நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும் - பரி 11/115
TOP
தெளிந்திசின் (1)
தே மொழி அரிவை தெளிந்திசின் யானே - ஐங் 466/5
TOP
தெளிந்து (3)
ஒருங்கு இவண் உறைதல் தெளிந்து அகன்றோரே - ஐங் 456/5
தேறி தெளிந்து செறி இருள் மால் மாலை - பரி 12/82
கலங்கிய நீர் போல் தெளிந்து நலம் பெற்றாள் - கலி 142/65
TOP
தெளிந்தேம் (1)
ஏஎ தெளிந்தேம் யாம் காயாதி எல்லாம் வல் எல்லா - கலி 89/7
TOP
தெளிந்தேன் (1)
தெளிந்தேன் தெரி_இழாய் யான் - கலி 113/22
TOP
தெளிப்பவும் (3)
சொல்லின் தெளிப்பவும் தெளிதல் செல்லாய் - நற் 164/5
தண் துறை ஊரன் தெளிப்பவும்
உண்கண் பசப்பது எவன்-கொல் அன்னாய் - ஐங் 21/3,4
இனி எல்லா யாம் தீதிலேம் என்று தெளிப்பவும் கைந்நீவி - கலி 81/33
TOP
தெளிப்பான் (1)
பேதையை பெரிது என தெளிப்பான் போலவும் - கலி 128/21
TOP
தெளிப்பின் (1)
நோயுறு வெம் நீர் தெளிப்பின் தலைக்கொண்டு - கலி 142/53
TOP
தெளிப்பேன் (1)
தெய்வத்தின் தேற்றி தெளிப்பேன் பெரிது என்னை - கலி 98/32
TOP
தெளிமே (2)
சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தெளிமே - நற் 233/9
நாம் உளேம் ஆக பிரியலன் தெளிமே - குறு 273/8
TOP
தெளிய (3)
ஒன்று தெளிய நசையினம் மொழிமோ - குறு 75/2
சொல்லிய வன்மை தெளிய காட்டி - குறு 283/3
தெளிய விசும்பினும் ஞாலத்தகத்தும் - கலி 144/39
TOP
தெளியரோ (1)
ஐயம் தெளியரோ நீயே பல உடன் - அகம் 303/16
TOP
தெளியா (1)
தெளியா நோக்கம் உள்ளினை உளி வாய் - அகம் 33/10
TOP
தெளியுமாறே (1)
சொல் இனி தெய்ய யாம் தெளியுமாறே - அகம் 220/22
TOP
தெளிர் (1)
தெண் கடல் அடை கரை தெளிர் மணி ஒலிப்ப - குறு 212/2
TOP
தெளிர்க்கும் (1)
நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை - அகம் 257/10
TOP
தெளிர்ப்ப (18)
செறி தொடி தெளிர்ப்ப வீசி மறுகில் - நற் 20/5
பொன் செய் கொல்லனின் இனிய தெளிர்ப்ப
பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடும் தேர் - நற் 394/3,4
பொலம் தொடி தெளிர்ப்ப முயங்கியவர் - ஐங் 24/4
இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி - ஐங் 197/1
தெரி இழை தெளிர்ப்ப முயங்கி - ஐங் 235/3
வருநர்க்கு வரையாது பொலன் கலம் தெளிர்ப்ப
இருள் வணர் ஒலிவரும் புரி அவிழ் ஐம்பால் - பதி 18/3,4
சே_இழை தெளிர்ப்ப கவைஇ நாளும் - அகம் 51/12
செறி தொடி தெளிர்ப்ப வீசி சிறிது அவண் - அகம் 106/8
பொலம் தொடி தெளிர்ப்ப வீசி சேவடி - அகம் 117/8
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி - அகம் 140/6
இலங்கு வளை தெளிர்ப்ப வீசி சிலம்பு நக - அகம் 261/5
இரும் பொல பாண்டில் மணியொடு தெளிர்ப்ப
புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து - அகம் 376/9,10
தெடாரி தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி - புறம் 368/15
அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி - புறம் 370/18
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி - புறம் 374/6
மதி புரை மா கிணை தெளிர்ப்ப ஒற்றி - புறம் 393/20
ஒரு கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி - புறம் 394/7
தெண் கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி - புறம் 397/10
TOP
தெளிர (1)
வண்ணம் தெளிர முகமும் வளர் முலை - பரி 10/95
TOP
தெளிவரல் (1)
கார் ஒவ்வா வேனில் கலங்கி தெளிவரல்
நீர் ஒவ்வா வையை நினக்கு - பரி 11/72,73
TOP
தெளிவு (1)
தெளிவு இன்று தீம் நீர் புனல் - பரி 10/111
TOP
தெளிவே (1)
வாழ்தல் மற்று எவனோ தேய்கமா தெளிவே - நற் 345/10
TOP
தெற்கு (5)
தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல் - நெடு 174
திசை திரிந்து தெற்கு ஏகினும் - பட் 2
தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிர காலையும் - நற் 5/6
வட_தெற்கு விலங்கி விலகு தலைத்து எழிலிய - பதி 31/16
விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு - அகம் 13/12
TOP
தெற்கும் (1)
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும் - புறம் 6/2,3
TOP
தெற்றி (4)
தெற்றி உலறினும் வயலை வாடினும் - அகம் 259/13
பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும் - புறம் 36/4
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும் - புறம் 53/3
தெற்றி பாவை திணி மணல் அயரும் - புறம் 283/10
TOP
தெற்றியும் (1)
மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே - நற் 184/9
TOP
தெற்று (3)
கடும் தெற்று மூடையின் இடம் கெட கிடக்கும் - பொரு 245
தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின் - அகம் 328/8
கடும் தெற்று மூடையின் - புறம் 285/5
TOP
தெற்றுவது (1)
சிறிய தெற்றுவது ஆயின் பெரிய - அகம் 387/17
TOP
தெற்றென (11)
பெற்றவை பிறர்பிறர்க்கு ஆர்த்தி தெற்றென
செலவு கடைக்கூட்டுதிர் ஆயின் பல புலந்து - பொரு 174,175
தெற்றென தூற்றலும் பழியே - குறு 32/5
தெற்றென இறீஇயரோ ஐய மற்று யாம் - குறு 169/2
என் புறங்கூறும் என்ப தெற்றென
வணங்கு இறை பணை தோள் எல் வளை மகளிர் - குறு 364/4,5
என் பார்த்து உறுவோய் கேள் இனி தெற்றென
எல்லினை வருதி எவன் குறித்தனை என - கலி 75/13,14
வினவுவீர் தெற்றென கேள்-மின் ஒருவன் - கலி 144/11
ஓஒ கடலே தெற்றென கண் உள்ளே தோன்ற இமை எடுத்து - கலி 144/55
யானும் தெற்றென உணரேன் மேல்_நாள் - அகம் 48/4
மற்றும்மற்றும் வினவுதும் தெற்றென
பசி பிணி மருத்துவன் இல்லம் - புறம் 173/10,11
அற்று அன்று ஆகலின் தெற்றென போற்றி - புறம் 337/13
மற்று இவர் மறனும் இற்றால் தெற்றென
யார் ஆகுவர்-கொல் தாமே நேர்_இழை - புறம் 337/19,20
TOP
தெற (8)
எய் தெற இழுக்கிய கானவர் அழுகை - மலை 301
வேய் வனப்பு இழந்த தோளும் வெயில் தெற
ஆய் கவின் தொலைந்த நுதலும் நோக்கி - ஐங் 392/1,2
நோய் தெற உழப்பார்-கண் இமிழ்தியோ எம் போல - கலி 129/10
வறம் தெற மாற்றிய வானமும் போலும் - கலி 146/14
ஆள்_வழக்கு அற்ற சுரத்திடை கதிர் தெற
நீள் எரி பரந்த நெடும் தாள் யாத்து - அகம் 51/1,2
கதிர் தெற கவிழ்ந்த உலறு தலை நோன் சினை - அகம் 81/7
சுடர் தெற வருந்திய அரும் சுரம் இறந்து ஆங்கு - அகம் 291/21
அறிவுறூஉம்-கொல்லோ தானே கதிர் தெற
கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை - அகம் 351/5,6
TOP
தெறப்பட்டு (1)
கடும் தாம் பதிபு ஆங்கு கை தெறப்பட்டு
வெறி நிரை வேறு ஆக சார் சாரல் ஓடி - கலி 12/5,6
TOP
தெறல் (18)
வெம் தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும் - பெரும் 17
தெறல் அரும் கடும் துப்பின் - மது 32
தெறல் அரும் தானை பொறையன் பாசறை - நற் 18/5
தெறல் அரும் கடவுள் முன்னர் சீறியாழ் - நற் 189/3
தெறல் கடுமையொடு பிறவும் இ உலகத்து - பதி 22/3
தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ - பரி 3/63
பிணி தெறல் உயக்கத்த பெரும் களிற்று இனம் தாங்கும் - கலி 20/4
வரை நில்லா விழுமம் உறீஇ நடுக்கு உரைத்து தெறல் மாலை - கலி 146/2
தெறல் அரு மரபின் கடவுள் பேணி - அகம் 13/3
நாம் நகை உடையம் நெஞ்சே கடும் தெறல்
வேனில் நீடிய வான் உயர் வழி_நாள் - அகம் 121/1,2
அரும் தெறல் மரபின் கடவுள் காப்ப - அகம் 372/1
தெறல் அரும் கடவுள் முன்னர் தேற்றி - அகம் 396/7
செம் ஞாயிற்று தெறல் அல்லது - புறம் 20/8
பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரே - புறம் 20/9
தெறல் அரு மரபின் நின் கிளையொடும் பொலிய - புறம் 126/9
கடும் தெறல் செம் தீ வேட்டு - புறம் 251/6
தெறல் மறவர் இறை கூர்தலின் - புறம் 345/5
கடும் தெறல் இராமன் உடன் புணர் சீதையை - புறம் 378/18
TOP
தெறலின் (1)
தீ உமிழ் தெறலின் வெய்து ஆகின்றே - நற் 236/2
TOP
தெறலும் (2)
அளியும் தெறலும் எளிய ஆகலின் - பெரும் 422
வலியும் தெறலும் அளியும் உடையோய் - புறம் 2/8
TOP
தெறாமை (1)
ஒண் கதிர் தெறாமை சிறகரின் கோலி - அகம் 208/11
TOP
தெறாஅ (1)
ஞாயிறு தெறாஅ மாக நனம் தலை - மலை 272
TOP
தெறி (6)
தெறி நடை மரை கணம் இரிய மனையோள் - அகம் 224/11
ததர் தழை முனைஇய தெறி நடை மட பிணை - அகம் 234/10
தெறி மறி பார்க்கும் குறுநரி வெரீஇ - அகம் 274/10
தினை கள் உண்ட தெறி கோல் மறவர் - அகம் 284/8
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை - அகம் 304/8
சிறு மறி தழீஇய தெறி நடை மட பிணை - புறம் 23/19
TOP
தெறிக்கும் (4)
பூட்டு அறு வில்லின் கூட்டு முதல் தெறிக்கும்
பழன பொய்கை அடைகரை பிரம்பின் - அகம் 96/2,3
கண் விட தெறிக்கும் மண்ணா முத்தம் - அகம் 173/14
துய் தலை முடங்கு இறா தெறிக்கும் பொற்பு உடை - அகம் 376/16
தாவுபு தெறிக்கும் ஆன் மேல் - புறம் 259/6
TOP
தெறித்த (1)
மட பால் ஆய்_மகள் வள் உகிர் தெறித்த
குட பால் சில் உறை போல - புறம் 276/4,5
TOP
தெறித்து (1)
தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி - குறு 213/5
TOP
தெறிப்ப (6)
ஆக வன முலை கரை_வலம் தெறிப்ப
அழுதனள் உறையும் அம் மா அரிவை - நற் 81/6,7
அரி மதர் மழை கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல் - கலி 77/4
பரல் அவல் அடைய இரலை தெறிப்ப
மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப - அகம் 4/4,5
நெகிழ் நூல் முத்தின் முகிழ் முலை தெறிப்ப
மை அற விரிந்த படை அமை சேக்கை - அகம் 289/11,12
விலங்கு வீழ் அரி பனி பொலம் குழை தெறிப்ப
திருந்து இழை முன்கை அணல் அசைத்து ஊன்றி - அகம் 351/12,13
தெறிப்ப விளைந்த தீம் கந்தாரம் - புறம் 258/2
TOP
தெறியா (2)
வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியா
கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி - திரு 37,38
செ விரல் கடைக்கண் சேர்த்தி சில தெறியா
புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு - நெடு 165,166
TOP
தெறியினள் (1)
மெல் விரல் உகிரின் தெறியினள் வென் வேல் - அகம் 373/15
TOP
தெறீஇ (1)
அகன் கண் பாறை செ வயின் தெறீஇ
வரி அணி பணை தோள் வார் செவி தன்னையர் - அகம் 393/7,8
TOP
தெறு (14)
தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும் - நற் 275/5
கண் பொர விளங்கிய கதிர் தெறு வைப்பின் - ஐங் 319/1
கதிர் தெறு வெம் சுரம் நினைக்கும் - ஐங் 330/4
தெறு கதிர் திகழ்தரும் உரு கெழு ஞாயிற்று - பதி 52/29
திங்களும் தெறு கதிர் கனலியும் நீ - பரி 1/45
தெறு கதிர் கனலியும் மாலையும் மணியும் - பரி 5/67
எல்லுறு தெறு கதிர் மடங்கி தன் கதிர் மாய - கலி 129/3
உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன் - அகம் 5/11
தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின் - அகம் 89/1
தெறு கதிர் உலைஇய வேனில் வெம் காட்டு - அகம் 153/8
நன்று-மன் வாழி தோழி தெறு கதிர் - அகம் 395/5
தண் கதிர் மதியம் போலவும் தெறு சுடர் - புறம் 6/27
தெறு கதிர் கனலி வெம்மை தாங்கி - புறம் 43/2
தெறு கதிர் கனலி தென்திசை தோன்றினும் - புறம் 397/24
TOP
தெறுத்த (1)
அரும் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர் - அகம் 89/15
TOP
தெறுத்து (1)
இரும் கண் யானையொடு அரும் கலம் தெறுத்து
பணிந்து வழிமொழிதல் அல்லது பகைவர் - பதி 91/1,2
TOP
தெறுதலான் (1)
கல் மிசை வேய் வாட கனை கதிர் தெறுதலான்
துன் அரூஉம் தகையவே காடு என்றார் அ காட்டுள் - கலி 11/14,15
TOP
தெறுதலின் (13)
செம் கதிர் செல்வன் தெறுதலின் மண் பக - நற் 164/2
கடும் கதிர் ஞாயிறு கல் பக தெறுதலின்
வெய்ய ஆயினை முன்னே இனியே - ஐங் 322/2,3
உடன்றக்கால் முகம் போல ஒண் கதிர் தெறுதலின்
சீறு அரும் கணிச்சியோன் சினவலின் அ எயில் - கலி 2/5,6
கடுகுபு கதிர் மூட்டி காய் சினம் தெறுதலின்
உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம் - கலி 8/3,4
வேரொடு மரம் வெம்ப விரி கதிர் தெறுதலின்
அலவுற்று குடி கூவ ஆறு இன்றி பொருள் வெஃகி - கலி 10/4,5
கனை கதிர் தெறுதலின் கடுத்து எழுந்த காம்பு தீ - கலி 150/3
அழல் போல் வெம் கதிர் பைது அற தெறுதலின்
நிழல் தேய்ந்து உலறிய மரத்த அறை காய்பு - அகம் 1/10,11
புலம் கடை மடங்க தெறுதலின் ஞொள்கி - அகம் 31/2
காய்ந்து செலல் கனலி கல் பக தெறுதலின்
ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை - அகம் 55/1,2
வளம் கெழு மா மலை பயம் கெட தெறுதலின்
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் - அகம் 91/2,3
காடு கவின் ஒழிய கடும் கதிர் தெறுதலின்
நீடு சினை வறிய ஆக ஒல்லென - அகம் 143/2,3
பைது அற தெறுதலின் பயம் கரந்து மாறி - அகம் 164/2
குன்று கோடு அகைய கடும் கதிர் தெறுதலின்
என்றூழ் நீடிய வேய் படு நனம் தலை - அகம் 295/2,3
TOP
தெறுதலும் (2)
பெரிது ஆய பகை வென்று பேணாரை தெறுதலும்
புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும் என - கலி 11/2,3
கொடியோர் தெறுதலும் செவ்வியோர்க்கு அளித்தலும் - புறம் 29/9
TOP
தெறுப்ப (2)
விருந்தின் மன்னர் அரும் கலம் தெறுப்ப
வேந்தனும் வெம் பகை தணிந்தனன் தீம் பெயல் - அகம் 54/1,2
ஏறு உடை ஆயத்து இனம் பசி தெறுப்ப
கயன் அற வறந்த கோடையொடு நயன் அற - அகம் 291/3,4
TOP
தெறும் (1)
உரவு கதிர் தெறும் என ஓங்கு திரை விரைபு தன் - கலி 127/20
TOP
தெறுமார் (1)
துறை நணி மருதம் ஏறி தெறுமார்
எல் வளை மகளிர் தெள் விளி இசைப்பின் - பதி 27/6,7
TOP
தெறுவது (2)
தெறுவது அம்ம இ திணை பிறத்தல்லே - குறு 45/5
தெறுவது அம்ம நும் மகள் விருப்பே - ஐங் 313/1
TOP
தெறுவர் (1)
வாழா வான் பகடு ஏய்ப்ப தெறுவர்
பேர் உயிர் கொள்ளும்-மாதோ அது கண்டு - புறம் 307/9,10
TOP
தெறுவர (11)
தமியே கண்ட தண்டலையும் தெறுவர
நோய் ஆகின்றேம் மகளை நின் தோழி - நற் 305/4,5
விழவு ஒழி வியன் களம் கடுப்ப தெறுவர
பைதல் ஒரு நிலை காண வைகல் - நற் 306/7,8
செறுவர்க்கு உவகை ஆக தெறுவர
ஈங்ஙனம் வருபவோ தேம் பாய் துறைவ - குறு 336/1,2
நின் நோய் தலையையும் அல்லை தெறுவர
என் ஆகுவள்-கொல் அளியள் தான் என - அகம் 73/6,7
தறுகணாளர் குடர் தரீஇ தெறுவர
செம் செவி எருவை அஞ்சுவர இகுக்கும் - அகம் 77/10,11
கண் கவின் அழித்ததன் தப்பல் தெறுவர
ஒன்றுமொழி கோசர் கொன்று முரண் போகிய - அகம் 196/9,10
இறுவரை வீழ்நரின் நடுங்கி தெறுவர
பாம்பு எறி கோலின் தமியை வைகி - அகம் 322/4,5
அறியாது ஏறிய என்னை தெறுவர
இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை - புறம் 50/8,9
களம் கொளற்கு உரியோர் இன்றி தெறுவர
உடன் வீழ்ந்தன்றால் அமரே பெண்டிரும் - புறம் 62/12,13
உயிர் புறப்படாஅ அளவை தெறுவர
தெற்றி பாவை திணி மணல் அயரும் - புறம் 283/9,10
ஆர் அமர் மயங்கிய ஞாட்பின் தெறுவர
நெடு வேல் பாய்ந்த நாண் உடை நெஞ்சத்து - புறம் 288/5,6
TOP
தெறுவின் (1)
தீ தெறுவின் கவின் வாடி - பட் 10
TOP
தெறுழ் (1)
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப - புறம் 119/2
TOP
தெறூஉம் (2)
உரவு கதிர் தெறூஉம் உருப்பு அவிர் அமயத்து - குறி 45
கொடியோர் தெறூஉம் என்ப யாவதும் - குறு 87/2
TOP
தென் (8)
தென் குமரி வட பெருங்கல் - மது 70
தென் பரதவர் போர் ஏறே - மது 144
தென் கடல் முத்தும் குண கடல் துகிரும் - பட் 189
தென் குமரி வட பெருங்கல் - புறம் 17/1
தென் கடல் திரை மிசை பாயுந்து - புறம் 24/3
தென் பரதவர் மிடல் சாய - புறம் 378/1
தென் பவ்வத்து முத்து பூண்டு - புறம் 380/1
வடதிசை-நின்று தென் வயின் செலினும் - புறம் 386/22
TOP
தென்திசை (5)
தென்திசை நோக்கி திரிதர்வாய் மண்டு கால் சார்வா - பரி 10/121
தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு - அகம் 281/9
தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும் - புறம் 117/2
தென்திசை ஆஅய் குடி இன்று ஆயின் - புறம் 132/8
தெறு கதிர் கனலி தென்திசை தோன்றினும் - புறம் 397/24
TOP
தென்திசை-நின்று (1)
தென்திசை-நின்று குறுகாது நீடினும் - புறம் 386/23
TOP
தென்புல (3)
தென்புல மருங்கின் விண்டு நிறைய - மது 202
தென்புல மருங்கில் சாந்தொடு துறப்ப - நெடு 52
தென்புல மருங்கில் சென்று அற்று ஆங்கு - நற் 153/5
TOP
தென்புலத்து (1)
வெள்ளி தென்புலத்து உறைய விளை வயல் - புறம் 388/1
TOP
தென்புலம் (6)
தென்புலம் காவலர் மருமான் ஒன்னார் - சிறு 63
தென்புலம் படரும் தண் பனி நாளே - குறு 317/7
மங்குல் மா மழை தென்புலம் படரும் - அகம் 24/8
தென்புலம் வாழ்நர்க்கு அரும் கடன் இறுக்கும் - புறம் 9/3
இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும் - புறம் 35/7
தென்புலம் காவலின் ஒரீஇ பிறர் - புறம் 71/18
TOP
தென்வளி (1)
வேனில் பள்ளி தென்வளி தரூஉம் - நெடு 61
TOP
தென்றல் (3)
தென்றல் அசைவரூஉம் செம்மற்றே அம்ம நின் - பரி 8/27
மராஅம் அலைத்த மண வாய் தென்றல்
சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும் - அகம் 21/12,13
தேன் இமிர் நறும் சினை தென்றல் போழ - அகம் 237/4
TOP
தென்னம் (5)
தென்னம் குமரியொடு ஆயிடை - பதி 11/24
தென்னம் குமரியொடு ஆயிடை அரசர் - பதி 43/8
தெரி மாண் தமிழ் மும்மை தென்னம் பொருப்பன் - பரி 26/1
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும் - புறம் 33/7
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும் - புறம் 215/6
TOP
தென்னர் (1)
பொன் அணி நெடும் தேர் தென்னர் கோமான் - அகம் 209/3
TOP
தென்னவர் (2)
வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய - பரி 7/6
தென்னவர் வய மறவன் - புறம் 380/5
TOP
தென்னவற்கு (1)
உரும் உறழ் முரசின் தென்னவற்கு
ஒரு மொழி கொள்க இ உலகுடன் எனவே - கலி 104/79,80
TOP
தென்னவன் (13)
தென்னவன் பெயரிய துன் அரும் துப்பின் - மது 40
தென்னவன் திறல் கெட சீறி மன்னர் - பட் 277
திண் தேர் தென்னவன் நல் நாட்டு உள்ளதை - ஐங் 54/1
எல்லம் கவரும் இயல்பிற்றாய் தென்னவன்
ஒன்னார் உடை புலம் புக்கற்றால் மாறு அட்ட - பரி 7/48,49
தென்னவன் வையை சிறப்பு - பரி 20/97
தான் வாட வாடாத தன்மைத்தே தென்னவன்
நான்மாடக்கூடல் நகர் - பரி 29/3,4
பூம் தண் தார் புலர் சாந்தின் தென்னவன் உயர் கூடல் - கலி 57/8
நிரை_தொடீஇ பொய்யா வாள் தானை புனை கழல் கால் தென்னவன்
வையை புது புனல் ஆட தவிர்ந்ததை - கலி 98/30,31
வலியினான் வணக்கிய வாடா சீர் தென்னவன்
தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய - கலி 104/4,5
தென்னவன் தெளித்த தேஎம் போல - கலி 143/59
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன் - அகம் 13/6
திருந்து இலை நெடு வேல் தென்னவன் பொதியில் - அகம் 138/7
மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன் - புறம் 388/13
TOP
தென்னன் (1)
கெடாஅ நல் இசை தென்னன் தொடாஅ - அகம் 342/10
TOP
தெனாஅது (3)
அம் மா அரிவையோ அல்லள் தெனாஅது
ஆஅய் நல் நாட்டு அணங்கு உடை சிலம்பில் - அகம் 198/13,14
கிளைஞன் அல்லெனோ நெஞ்சே தெனாஅது
வெல் போர் கவுரியர் நல் நாட்டு உள்ளதை - அகம் 342/3,4
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும் - புறம் 6/2
TOP
|
|
|