|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
தீ (63)
தீ எழுந்து அன்ன திறலினர் தீ பட - திரு 171
தீ எழுந்து அன்ன திறலினர் தீ பட - திரு 171
கரும் புகை செம் தீ மாட்டி பெரும் தோள் - சிறு 156
செம் தீ தோட்ட கரும் துளை குழலின் - பெரும் 179
நீத்து உடை நெடும் கயம் தீ பட மலர்ந்த - பெரும் 289
செம் தீ பேணிய முனிவர் வெண் கோட்டு - பெரும் 498
சினை தலைமணந்த சுரும்பு படு செம் தீ/ஒண் பூம் பிண்டி அவிழ்ந்த காவில் - மது 700,701
அம் தொடை ஒரு காழ் வளைஇ செம் தீ/ஒண் பூம் பிண்டி ஒரு காது செரீஇ - குறி 118,119
தீ தெறுவின் கவின் வாடி - பட் 10
தீ துணை ஆக சேந்தனிர் கழி-மின் - மலை 420
பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிக பெரிது - நற் 14/5
புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து - நற் 36/7
சிறு தீ விளக்கில் துஞ்சும் நறு மலர் - நற் 175/4
மரம் தீ உற்ற வறும் தலை அம் காட்டு - நற் 177/2
தீ உமிழ் தெறலின் வெய்து ஆகின்றே - நற் 236/2
தீ ஓர் அன்ன என் உரன் அவித்தன்றே - குறு 95/5
தீ உறு தளிரின் நடுங்கி - குறு 383/5
தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே - ஐங் 32/4
நீர் நிலம் தீ வளி விசும்போடு ஐந்தும் - பதி 24/15
தீ உமிழ் திறலொடு முடி மிசை அணவர - பரி 1/2
செம் தீ சுடரிய ஊழியும் பனியொடு - பரி 2/8
தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும் - பரி 3/4
தீ செம் கனலியும் கூற்றமும் ஞமனும் - பரி 3/21
தீ அழல் துவைப்ப திரிய விட்டெறிந்து - பரி 5/3
செறு தீ நெஞ்சத்து சினம் நீடினோரும் - பரி 5/73
தாய தோன்றி தீ என மலரா - பரி 11/21
தீ எரி பாலும் செறி தவம் முன் பற்றியோ - பரி 11/90
உருவும் உருவ தீ ஒத்தி முகனும் - பரி 19/99
முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரை - கலி 4/13
திங்களுள் தீ தோன்றி அற்று - கலி 41/24
செம் தீ செ அழல் தொடங்க வந்ததை - கலி 119/13
உயிர் திரியா மாட்டிய தீ/மை இல் சுடரே மலை சேர்தி நீ ஆயின் - கலி 142/40,41
ஈரம் இல் கேள்வன் உறீஇய காம தீ/நீருள் புகினும் சுடும் - கலி 144/61,62
திறன் இலார் எடுத்த தீ மொழி எல்லாம் - கலி 144/71
இறை இறை பொத்திற்று தீ/என பாடி - கலி 145/58,59
கனை கதிர் தெறுதலின் கடுத்து எழுந்த காம்பு தீ/மலை பரந்து தலைக்கொண்டு முழங்கிய முழங்கு அழல் - கலி 150/3,4
காடு கவர் பெரும் தீ ஓடு-வயின் ஓடலின் - அகம் 39/9
தீ படு சிறு கோல் வில்லொடு பற்றி - அகம் 101/7
தீ இல் அடுப்பின் அரங்கம் போல - அகம் 137/11
ஞெலி_கோல் சிறு தீ மாட்டி ஒலி திரை - அகம் 169/5
யாய் அறிந்து உணர்க என்னார் தீ வாய் - அகம் 203/2
எயிறு தீ பிறப்ப திருகி - அகம் 217/19
செம் தீ அணங்கிய செழு நிண கொழும் குறை - அகம் 237/9
கடை_கோல் சிறு தீ அடைய மாட்டி - அகம் 274/5
தீ முரணிய நீரும் என்று ஆங்கு - புறம் 2/5
எல்லு பட இட்ட சுடு தீ விளக்கம் - புறம் 16/7
தெண் கழி மிசை தீ பூவின் - புறம் 17/12
கரும் கை கொல்லன் செம் தீ மாட்டிய - புறம் 21/7
விசும்பு தீ பிறப்ப திருகி பசும் கொடி - புறம் 37/3
நீர் மிகின் சிறையும் இல்லை தீ மிகின் - புறம் 51/1
அடு தீ அல்லது சுடு தீ அறியாது - புறம் 70/8
அடு தீ அல்லது சுடு தீ அறியாது - புறம் 70/8
மதுகை இன்றி வயிற்று_தீ தணிய - புறம் 74/5
பளிங்கு வகுத்து அன்ன தீ நீர் - புறம் 150/27
ஐவனம் காவல் பெய் தீ நந்தின் - புறம் 172/6
மிக பல் தீ நோய் தலைத்தலை தருமே - புறம் 185/6
கானவர் பொத்திய ஞெலி தீ விளக்கத்து - புறம் 247/2
கடும் தெறல் செம் தீ வேட்டு - புறம் 251/6
இடையன் பொத்திய சிறு தீ விளக்கத்து - புறம் 324/11
பருத்தி_பெண்டின் சிறு தீ விளக்கத்து - புறம் 326/5
புல்லென் மாலை சிறு தீ ஞெலியும் - புறம் 331/4
மரம் படு சிறு தீ போல - புறம் 349/6
மை விடை இரும் போத்து செம் தீ சேர்த்தி - புறம் 364/4
TOP
தீங்கு (2)
தீங்கு செய்தனையே ஈங்கு வந்தோயே - அகம் 112/8
தீங்கு ஆயினள் இவள் ஆயின் தாங்காது - அகம் 300/10
TOP
தீட்டி (1)
குருதி செம் கை கூந்தல் தீட்டி/நிறம் கிளர் உருவின் பேஎய்_பெண்டிர் - புறம் 62/3,4
TOP
தீண்ட (3)
புதல்வனை மெய் தீண்ட பொருந்துதல் இயைபவால் - கலி 70/12
வடி தீண்ட வாய் விடூஉம் வயல் அணி நல் ஊர - கலி 72/8
தீண்ட பெறுபவோ மற்று - கலி 94/8
TOP
தீண்டலர் (1)
திரு மா மெய் தீண்டலர் என்று கருமமா - கலி 102/10
TOP
தீண்டலின் (4)
வளரா வாடை உளர்பு நனி தீண்டலின்/வேழ வெண் பூ விரிவன பல உடன் - நற் 241/4,5
உழை படு மான் பிணை தீண்டலின் இழை_மகள் - நற் 274/3
இரியல் பிணவல் தீண்டலின் பரீஇ - அகம் 21/19
உறு வளி ஒலி கழை கண் உறுபு தீண்டலின்/பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரி - அகம் 153/9,10
TOP
தீண்டலும் (1)
தீண்டலும் இயைவது-கொல்லோ மாண்ட - குறு 272/1
TOP
தீண்டற்கு (1)
தீண்டற்கு அருளி திறன் அறிந்து எழீஇ - கலி 136/19
TOP
தீண்டா (1)
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு - நற் 21/4
TOP
தீண்டாது (1)
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது/அடை இடை கிடந்த கை பிழி பிண்டம் - புறம் 246/5,6
TOP
தீண்டி (21)
கையினும் கலத்தினும் மெய் உற தீண்டி/பெரும் சினத்தால் புறக்கொடாஅது - பட் 70,71
பரு நிலை நெடும் தூண் ஒல்க தீண்டி/பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையவும் - பட் 250,251
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு - நற் 21/4
மாரி யானையின் மருங்குல் தீண்டி/பொரி அரை ஞெமிர்ந்த புழல் காய் கொன்றை - நற் 141/2,3
குளவி தண் கயம் குழைய தீண்டி/சோலை வாழை முணைஇ அயலது - நற் 232/2,3
அலங்கு குலை காந்தள் தீண்டி தாது உக - நற் 359/2
வேல் போல் வெண் முகை விரிய தீண்டி/முதுக்குறை குரீஇ முயன்று செய் குடம்பை - நற் 366/8,9
கைவள் ஓரி கானம் தீண்டி/எறி வளி கமழும் நெறிபடு கூந்தல் - குறு 199/3,4
கொடி பூ வேழம் தீண்டி அயல - ஐங் 14/1
வாய் விரிபு பனி ஏற்ற விரவு பன் மலர் தீண்டி/நோய் சேர்ந்த வைகலான் வாடை வந்து அலைத்தரூஉம் - கலி 29/12,13
பிடி கை அன்ன பின்_அகம் தீண்டி/தொடி கை தைவர தோய்ந்தன்று-கொல்லோ - அகம் 9/22,23
கோடு அறை கொம்பின் வீ உக தீண்டி/மராஅம் அலைத்த மண வாய் தென்றல் - அகம் 21/11,12
இரும் பிணர் துறுகல் தீண்டி வளி பொர - அகம் 57/7
செ வாய் வானம் தீண்டி மீன் அருந்தும் - அகம் 120/2
செம் கோல் வால் இணர் தயங்க தீண்டி/சொரி புறம் உரிஞிய நெறி அயல் மரா அத்து - அகம் 121/7,8
அலங்கு குலை அலரி தீண்டி தாது உக - அகம் 178/10
வரை இழி அருவி ஆரம் தீண்டி/தண் என நனைக்கும் நளிர் மலை சிலம்பில் - அகம் 228/2,3
சாந்த மென் சினை தீண்டி மேலது - அகம் 242/20
பெரு வளம் மலர அல்லி தீண்டி/பலவு காய் புறத்த பசும் பழ பாகல் - அகம் 255/12,13
இரு வெதிர் அம் கழை ஒசிய தீண்டி/வருவது மாதோ வண் பரி உந்தி - அகம் 278/8,9
அமை ஆடு அம் கழை தீண்டி கல்லென - அகம் 353/7
TOP
தீண்டிய (3)
புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉ சுவல் - நற் 149/6
பயலை ஆகம் தீண்டிய சிறிதே - நற் 236/10
வாள் வரி வய புலி தீண்டிய விளி செத்து - அகம் 249/16
TOP
தீண்டு (1)
குறவர் முன்றில் மா தீண்டு துறுகல் - ஐங் 277/1
TOP
தீண்டும் (1)
தாது எரு மறுகின் ஆ புறம் தீண்டும்/நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து - நற் 343/3,4
TOP
தீது (34)
திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து - திரு 70
திரு நிலைபெற்ற தீது தீர் சிறப்பின் - நெடு 89
தீது நீங்க கடல் ஆடியும் - பட் 99
தீது அற விளங்கிய திகிரியோனே - நற் 0/7
நினக்கு தீது அறிந்தன்றோ இலமே - நற் 193/5
தெய்வம் காக்கும் தீது தீர் நெடும் கோட்டு - நற் 201/6
தகாஅன் போல தான் தீது மொழியானும் - குறு 26/4
தீது இல் நெஞ்சத்து கிளவி நம்-வயின் - குறு 106/3
தீது இல் நிலைமை முயங்குகம் பலவே - குறு 368/8
நன்று பெரிது சிறக்க தீது இல் ஆகுக - ஐங் 9/2
ஞாயிறு புகன்ற தீது தீர் சிறப்பின் - பதி 17/10
தீது சேண் இகந்து நன்று மிக புரிந்து - பதி 22/5
தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டில் - பதி 74/11
திறன் இலோர் திருத்திய தீது தீர் கொள்கை - பரி 1/42
தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போல - கலி 26/6
தீது இலான் செல்வம் போல் தீம் கரை மரம் நந்த - கலி 27/2
தீது இலேன் யான் என தேற்றிய வருதி-மன் - கலி 73/7
மனத்தில் தீது இலன் என மயக்கிய வருதி-மன் - கலி 73/11
இனி எல்லா யாம் தீது இலேம் என்று தெளிப்பவும் கைந்நீவி - கலி 81/33
ஒள்_இழாய் யான் தீது இலேன் - கலி 83/25
அது தக்கது வேற்றுமை என்-கண்ணோ ஓராதி தீது இன்மை - கலி 88/15
ஐயத்தால் என்னை கதியாதி தீது இன்மை - கலி 91/7
தெரி_இழாய் தேற்றாய் சிவந்தனை காண்பாய் நீ தீது இன்மை - கலி 91/16
தீது இன்று பொலிக என தெய்வ கடி அயர்-மார் - கலி 105/6
திரை தர புணை பெற்று தீது இன்றி உய்ந்து ஆங்கு - கலி 134/25
நன்று தீது என்று பிற - கலி 142/50
இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீது இன்மை - கலி 143/20
நன்று செய் மருங்கில் தீது இல் என்னும் - அகம் 101/2
தீது இலாட்டி திரு நுதல் பசப்பே - அகம் 354/14
தீது இன்று ஆக நீ புணை புகுக என - அகம் 392/8
பிறர்க்கு தீது அறிந்தன்றோ இன்றே திறப்பட - புறம் 47/7
தீது இல் நெஞ்சத்து காதல் கொள்ளா - புறம் 73/12
காதல் மறந்து அவர் தீது மருங்கு அறும்-மார் - புறம் 93/6
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவ தலையே - புறம் 214/13
TOP
தீதும் (3)
நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி - மது 496
தீதும் உண்டோ மாதராய் என - அகம் 230/10
தீதும் நன்றும் பிறர் தர வாரா - புறம் 192/2
TOP
தீதொடு (2)
நன்றி விளைவும் தீதொடு வரும் என - நற் 188/6
தெருளாமையின் தீதொடு கெழீஇ - அகம் 379/2
TOP
தீதோ (1)
இன்_நகை தீதோ இலேன் - கலி 89/11
TOP
தீந்த (1)
இன்பத்தின் இகந்து ஒரீஇ இலை தீந்த உலவையால் - கலி 11/10
TOP
தீம் (198)
தீம் பெண்ணை மடல் சேப்பவும் - பொரு 207
தீம் கரும்போடு அவல் வகுத்தோர் - பொரு 216
அமிழ்து விளை தீம் கனி ஔவைக்கு ஈந்த - சிறு 101
உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து - பெரும் 158
இன் தீம் பாலை முனையின் குமிழின் - பெரும் 180
கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசை-மின் - பெரும் 262
வீழ் இல் தாழை குழவி தீம் நீர் - பெரும் 357
தீம் பல் தாரம் முனையின் சேம்பின் - பெரும் 361
அரும் கடி தீம் சுவை அமுதொடு பிறவும் - பெரும் 475
இரும் கழி செறுவின் தீம் புளி வெள் உப்பு - மது 318
தீம் புழல் வல்சி கழல் கால் மழவர் - மது 395
தகை செய் தீம் சேற்று இன் நீர் பசும் காய் - மது 400
அமிர்து இயன்று அன்ன தீம் சேற்று கடிகையும் - மது 532
தீம் சேற்று கூவியர் தூங்குவனர் உறங்க - மது 627
தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை - நெடு 68
முழு_முதல் கொக்கின் தீம் கனி உதிர்ந்து என - குறி 188
அம் தீம் தெண் நீர் குடித்தலின் நெஞ்சு அமர்ந்து - குறி 211
ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற - குறி 222
தீம் புகார் திரை முன்துறை - பட் 173
திரி புரி நரம்பின் தீம் தொடை ஓர்க்கும் - பட் 254
விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ - மலை 8
ஆலைக்கு அலமரும் தீம் கழை கரும்பே - மலை 119
வண் கோள் பலவின் சுளை விளை தீம் பழம் - மலை 337
வளை ஆன் தீம் பால் மிளை சூழ் கோவலர் - மலை 409
வடி சேறு விளைந்த தீம் பழ தாரம் - மலை 513
கான் நிலை எருமை கழை பெய் தீம் தயிர் - மலை 523
சாந்தில் தொடுத்த தீம் தேன் போல - நற் 1/4
தீம் தொடை நரம்பின் இமிரும் - நற் 17/11
இரும் பன தீம் பிழி உண்போர் மகிழும் - நற் 38/3
அயிர்ப்பு கொண்டு அன்ன கொன்றை அம் தீம் கனி - நற் 46/6
விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும் - நற் 53/8
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி தீம் பால் - நற் 57/5
ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும் - நற் 70/7
இன் தீம் பால் பயம் கொள்-மார் கன்று விட்டு - நற் 80/2
அதவ தீம் கனி அன்ன செம் முக - நற் 95/3
பிரசம் கலந்த வெண் சுவை தீம் பால் - நற் 110/1
புள் உற்று கசிந்த தீம் தேன் கல் அளை - நற் 168/3
நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப - நற் 172/3
தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி - நற் 179/6
ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்து - நற் 200/6
மழலை அம் குறு_மகள் மிழலை அம் தீம் குரல் - நற் 209/5
அம் தீம் கிளவி கேட்கம் நாமே - நற் 221/13
செம் கால் பலவின் தீம் பழம் மிசையும் - நற் 232/5
மாதர் வண்டின் நயவரும் தீம் குரல் - நற் 244/3
தெளி தீம் கிளவி யாரையோ என் - நற் 245/6
தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ - நற் 279/2
கொக்கின் உக்கு ஒழிந்த தீம் பழம் கொக்கின் - நற் 280/1
தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும் - நற் 292/3
யாங்கு வருவது-கொல்லோ தீம் சொல் - நற் 306/9
ஓங்கு வரை சாரல் தீம் சுனை ஆடி - நற் 317/8
ஓங்கி தோன்றும் தீம் கள் பெண்ணை - நற் 323/1
அ மடல் பட்ட அருவி தீம் நீர் - நற் 355/4
கொன்றை அம் தீம் குழல் மன்று-தோறு இயம்ப - நற் 364/10
தேம் பெய் தீம் பால் வௌவலின் கொடிச்சி - நற் 379/5
திதலை மென் முலை தீம் பால் பிலிற்ற - நற் 380/3
துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின் - நற் 392/4
உடை திரை திவலை அரும்பும் தீம் நீர் - குறு 5/3
கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் - குறு 8/1
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கு ஆங்கு - குறு 27/2
தீம் பழம் தூங்கும் பலவின் - குறு 83/4
தேம் பொதி கொண்ட தீம் கழை கரும்பின் - குறு 85/4
தீம் புனல் நெரிதர வீந்து உக்கு ஆஅங்கு - குறு 149/4
துணர் தே கொக்கின் தீம் பழம் கதூஉம் - குறு 164/2
தான் துழந்து அட்ட தீம் புளி பாகர் - குறு 167/4
ஓங்கு வரை அடுக்கத்து தீம் தேன் கிழித்த - குறு 179/4
சுரை பொழி தீம் பால் ஆர மாந்தி - குறு 187/2
தீம் குரல் அகவ கேட்டும் நீங்கிய - குறு 191/4
அமிழ்தத்து அன்ன அம் தீம் கிளவி - குறு 206/1
தெரி தீம் கிளவி தெருமரல் உயவே - குறு 250/6
வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர் - குறு 267/4
ஊழ்-உறு தீம் கனி உதிர்ப்ப கீழ் இருந்து - குறு 278/5
தீம் புளி நெல்லி மாந்தி அயலது - குறு 317/2
நின் நிலை கொடிதால் தீம் கலுழ் உந்தி - குறு 327/4
தீம் பெரும் பொய்கை யாமை இளம் பார்ப்பு - ஐங் 44/1
நறு வடி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் - ஐங் 61/1
நரம்பு ஆர்த்து அன்ன தீம் கிளவியனே - ஐங் 185/4
தீம் குழல் ஆம்பலின் இனிய இமிரும் - ஐங் 215/4
அரு வரை தீம் தேன் எடுப்பி அயலது - ஐங் 272/2
அம் தீம் கிளவி பொலிக நின் சிறப்பே - ஐங் 300/4
அம்_தீம்_கிளவி தான் தர எம்-வயின் - ஐங் 490/1
அம்_தீம்_கிளவி நின் ஆய் நலம் கொண்டே - ஐங் 499/5
தீம் பிழி எந்திரம் பத்தல் வருந்த - பதி 19/23
புணர் புரி நரம்பின் தீம் தொடை பழுனிய - பதி 41/1
தீம் சேறு விளைந்த மணி நிற மட்டம் - பதி 42/12
மலி புனல் நிகழ்தரும் தீம் நீர் விழவின் - பதி 48/14
தீம் புனல் ஆயம் ஆடும் - பதி 48/17
மிஞிறு புறம் மூசவும் தீம் சுவை திரியாது - பதி 60/4
அரம் போழ்கல்லா மரம் படு தீம் கனி - பதி 60/5
தீம் தொடை நரம்பின் பாலை வல்லோன் - பதி 65/14
வாங்கு இரு மருப்பின் தீம் தொடை பழுனிய - பதி 66/1
தீம் சுனை நீர் மலர் மலைந்து மதம் செருக்கி - பதி 70/8
அறை-உறு கரும்பின் தீம் சேற்று யாணர் - பதி 75/6
தூம்பு அகம் பழுனிய தீம் பிழி மாந்தி - பதி 81/21
தீம் சுனை நிலைஇய திரு மா மருங்கின் - பதி 85/6
தீம் தண் சாயலன் மன்ற தானே - பதி 86/13
அணி நிழல் வயங்கு ஒளி ஈர் எண் தீம் கதிர் - பரி 3/51
செல் யாற்று தீம் புனலில் செல் மரம் போல - பரி 6/79
மா தீம் தளிரொடு வாழை இலை மயக்கி - பரி 10/6
தெளிவு இன்று தீம் நீர் புனல் - பரி 10/111
நளி கடல் முன்னியது போலும் தீம் நீர் - பரி 12/7
கரைபு ஒழுகு தீம் புனற்கு எதிர் விருந்து அயர்வ போல் - பரி 16/16
திரை ஆர்க்கும் இ தீம் புனல் - பரி 16/49
ஒருதிறம் பாணர் யாழின் தீம் குரல் எழ - பரி 17/9
சினை போழ் பல்லவம் தீம் சுனை உதிர்ப்ப - பரி 19/68
ஊது சீர் தீம் குழல் இயம்ப மலர் மிசை - பரி 22/40
தீம் புனல் வையை திருமருத முன்துறையால் - பரி 22/45
மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய - பரி 23/4
தீம் கதிர் மதி ஏய்க்கும் திரு முகம் அம் முகம் - கலி 15/16
இன் தீம் கிளவியாய் வாய் மன்ற நின் கேள் - கலி 24/3
தீது இலான் செல்வம் போல் தீம் கரை மரம் நந்த - கலி 27/2
நரம்பின் தீம் குரல் நிறுக்கும் குழல் போல் - கலி 33/22
தீம் கண் கரும்பின் கழை வாங்கும் உற்றாரின் - கலி 40/28
பல் கோள் பலவின் பயிர்ப்பு உறு தீம் கனி - கலி 50/12
தீம் கதிர் விட்டது போல முகன் அமர்ந்து - கலி 56/5
உளைவு இலை ஊட்டலென் தீம் பால் பெருகும் அளவு எல்லாம் - கலி 83/5
அம் தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி - கலி 83/28
உரை இனி தண்டா தீம் சாயல் நெடுந்தகாய் அ வழி - கலி 92/14
தண்டா தீம் சாயல் பரத்தை வியன் மார்ப - கலி 93/2
ஒழுகிய கொன்றை தீம் குழல் முரற்சியர் - கலி 106/3
தீம் பால் கறந்த கலம் மாற்றி கன்று எல்லாம் - கலி 111/1
கோவலர் தீம் குழல் இனைய அரோ என் - கலி 130/15
தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல் - கலி 133/17
ஊழ் உறு தீம் கனி உண்ணுநர் தடுத்த - அகம் 2/2
அம் தீம் கிளவி ஆய் இழை மடந்தை - அகம் 3/16
இழுதின் அன்ன தீம் புழல் துய் வாய் - அகம் 9/5
அம் தீம் கிளவி குறு_மகள் - அகம் 9/25
வீங்கு மாண் செருத்தல் தீம் பால் பிலிற்ற - அகம் 14/10
நாவொடு நவிலா நகைபடு தீம் சொல் - அகம் 16/4
தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே ஆயிடை - அகம் 26/16
இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம் - அகம் 33/7
வேந்தனும் வெம் பகை தணிந்தனன் தீம் பெயல் - அகம் 54/2
இன் தீம் பைம் சுனை ஈர் அணி பொலிந்த - அகம் 59/13
தீம் பெரும் பைம் சுனை பூத்த - அகம் 78/23
ஓங்கு சினை இருப்பை தீம் பழம் முனையின் - அகம் 81/2
தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம் - அகம் 87/1
அளவு-உறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள் - அகம் 89/20
மணி செய் மண்டை தீம் பால் ஏந்தி - அகம் 105/5
நரம்பு இசைத்து அன்ன இன் தீம் கிளவி - அகம் 109/2
தீம் நீர் கான்யாற்று அவிர் அறல் போன்றே - அகம் 117/19
பூ கலுழ் சுமந்த தீம் புனல் கான்யாற்று - அகம் 133/10
தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது - அகம் 141/20
அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇ - அகம் 153/2
தீம் புனல் ஊர திறவிது ஆக - அகம் 156/7
சுனை கொள் தீம் நீர் சோற்று உலை கூட்டும் - அகம் 169/7
பழம் போல் சேற்ற தீம் புழல் உணீஇய - அகம் 171/13
தீம் பழ பலவின் சுளை விளை தேறல் - அகம் 182/3
தீம் புளி பிரம்பின் திரள் கனி பெய்து - அகம் 196/6
தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்தி - அகம் 207/14
இசை ஓர்த்து அன்ன இன் தீம் கிளவி - அகம் 212/7
விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு - அகம் 237/12
நெருநலும் தீம் பல மொழிந்த - அகம் 239/14
அத்த நெல்லி தீம் சுவை திரள் காய் - அகம் 241/13
தீம் பெரும் பழனம் உழக்கி அயலது - அகம் 256/6
அம் தீம் கிளவி வந்த மாறே - அகம் 262/18
யாங்கு ஆகுவள்-கொல் தானே தீம் தொடை - அகம் 279/10
இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து - அகம் 282/11
அம் தீம் கிளவி தந்தை காப்பே - அகம் 288/17
சிறியிலை நெல்லி தீம் சுவை திரள் காய் - அகம் 291/16
நினையா மாக்கள் தீம் குழல் கேட்டே - அகம் 305/16
மழ விடை பூட்டிய குழாஅய் தீம் புளி - அகம் 311/10
ஈர்ம் புறவு இயம் வழி அறுப்ப தீம் தொடை - அகம் 314/11
அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப - அகம் 322/12
தீம் பெரும் பொய்கை துறை கேழ் ஊரன் - அகம் 336/10
காஞ்சி அம் குறும் தறி குத்தி தீம் சுவை - அகம் 346/6
கோடைக்கு ஊழ்த்த கமழ் நறும் தீம் கனி - அகம் 348/3
இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும் - அகம் 355/2
தீம் சுளை பலவின் தொழுதி உம்பல் - அகம் 357/9
மிகு பெயல் நிலைஇய தீம் நீர் பொய்கை - அகம் 357/13
இன் தீம் குரல துவன்றி மென் சீர் - அகம் 358/3
தீம் பொழி வெள் உப்பு சிதைதலின் சினைஇ - அகம் 366/7
கடி சுனை தெளிந்த மணி மருள் தீம் நீர் - அகம் 368/10
கிள்ளையும் தீம் பால் உண்ணா மயில் இயல் - அகம் 369/4
சிறு வெதிர் தீம் குழல் புலம் கொள் தெள் விளி - அகம் 399/12
பூ கரும்பின் தீம் சாறும் - புறம் 24/13
தீம் நீரோடு உடன் விராஅய் - புறம் 24/15
தேஎம் தீம் தொடை சீறியாழ் பாண - புறம் 70/1
சிறியிலை நெல்லி தீம் கனி குறியாது - புறம் 91/9
இரண்டே தீம் சுளை பலவின் பழம் ஊழ்க்கும்மே - புறம் 109/5
தீம் நீர் பெரும் குண்டு சுனை பூத்த குவளை - புறம் 116/1
தீம் சுளை பலவின் மா மலை கிழவன் - புறம் 129/4
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால் - புறம் 168/8
தீம் புளி களாவொடு துடரி முனையின் - புறம் 177/9
தலையோர் நுங்கின் தீம் சேறு மிசைய - புறம் 225/1
தீம் செறி தசும்பு தொலைச்சினன் - புறம் 239/16
வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும் - புறம் 250/7
தெறிப்ப விளைந்த தீம் கந்தாரம் - புறம் 258/2
விளரி உறுதரும் தீம் தொடை நினையா - புறம் 260/2
தீம் கனி இரவமொடு வேம்பு மனை செரீஇ - புறம் 281/1
வாங்கு இரு மருப்பின் தீம் தொடை சீறியாழ் - புறம் 285/3
வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம் - புறம் 292/1
மேம் தோல் களைந்த தீம் கொள் வெள் எள் - புறம் 321/2
கண் மடல் கொண்ட தீம் தேன் இரிய - புறம் 348/2
அத்த குடிஞை துடி மருள் தீம் குரல் - புறம் 370/6
தீம் சுளை பலவின் நாஞ்சில் பொருநன் - புறம் 380/8
தீம் குரல் அரி குரல் தடாரியொடு - புறம் 395/25
தீம் தேறல் நறவு மகிழ்ந்து - புறம் 396/8
தீம் குரவை கொளை தாங்குந்து - புறம் 396/9
ஓங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி - புறம் 399/4
TOP
தீமடுக்கும் (1)
கையறு நெஞ்சம் கனன்று தீமடுக்கும்/இ மாலை - கலி 130/10,11
TOP
தீமடுத்து (1)
தேறு நீர் சடை கரந்து திரிபுரம் தீமடுத்து/கூறாமல் குறித்ததன் மேற்செல்லும் கடும் கூளி - கலி 1/2,3
TOP
தீமூட்டு (1)
கல்லா உமணர்க்கு தீமூட்டு ஆகும் - அகம் 257/17
TOP
தீமை (9)
தீமை கண்டோர் திறத்தும் பெரியோர் - நற் 116/1
பிரிவு அஞ்சாதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் - கலி 34/9
நிறை தளராதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் - கலி 34/13
கொளை தளராதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் - கலி 34/17
இனையன தீமை நினைவனள் காத்து ஆங்கு - கலி 44/18
அனை அரும் பண்பினான் நின் தீமை காத்தவள் - கலி 44/19
தன் தீமை பல கூறி கழறலின் என் தோழி - கலி 45/21
ஏடா குறை-உற்று நீ எம் உரையல் நின் தீமை/பொறை ஆற்றேம் என்றல் பெறுதுமோ யாழ - கலி 90/27,28
நீ மெய் கண்ட தீமை காணின் - புறம் 10/3
TOP
தீமையும் (1)
நல்லதன் நலனும் தீயதன் தீமையும்/இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர் - புறம் 29/11,12
TOP
தீய்ந்த (1)
தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெம் சினை - குறு 211/4
TOP
தீய்ந்து (1)
மலர் தீய்ந்து அனையர் நின் நயந்தோரே - நற் 315/12
TOP
தீய்ப்பு (1)
இமை தீய்ப்பு அன்ன கண்ணீர் தாங்கி - குறு 4/2
TOP
தீய (1)
எருவை சேவல் கரிபு சிறை தீய/வேனில் நீடிய வேய் உயர் நனம் தலை - அகம் 51/6,7
TOP
தீயதன் (1)
நல்லதன் நலனும் தீயதன் தீமையும் - புறம் 29/11
TOP
தீயவும் (1)
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர் - புறம் 106/1
TOP
தீயாரை (1)
அணை தோளாய் தீயாரை போல திறன் இன்று உடற்றுதி - கலி 87/9
TOP
தீயில் (1)
மலை உறு தீயில் சுர முதல் தோன்றும் - ஐங் 338/3
TOP
தீயின் (12)
சின தீயின் பெயர்பு பொங்க - மது 31
தீயின் அன்ன ஒண் செம்_காந்தள் - மலை 145
முளி கழை இழைந்த காடு படு தீயின்/நளி புகை கமழாது இறாயினிர் மிசைந்து - மலை 248,249
நெய் பெய் தீயின் எதிர்கொண்டு - குறு 106/5
பகலின் தோன்றும் பல் கதிர் தீயின்/ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்ன - ஐங் 57/1,2
தட்டை தீயின் ஊர் அலர் எழவே - ஐங் 340/4
காடு படு தீயின் கனலியர் மாதோ - ஐங் 376/2
கொண்ட தீயின் சுடர் எழு-தோறும் - பதி 21/6
மடங்கல் தீயின் அனையை - பதி 72/15
கெடாஅ தீயின் உரு கெழு செல்லூர் - அகம் 220/3
முளரி தீயின் முழம் அழல் விளக்கத்து - அகம் 301/13
தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு நின் - புறம் 150/12
TOP
தீயினால் (1)
தீயினால் சுடுதலோ இலர்-மன் ஆய்_இழை - கலி 137/21
TOP
தீயினும் (1)
தீயினும் கடிது அவர் சாயலின் கனலும் நோய் - கலி 137/22
TOP
தீயினுள் (1)
தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ - பரி 3/63
TOP
தீயும் (5)
நீரும் நிலனும் தீயும் வளியும் - மது 453
தீயும் வளியும் விசும்பு பயந்து ஆங்கு - நற் 294/1
மூன்றின் உணரும் தீயும் நீயே - பரி 13/20
வளி தலைஇய தீயும்/தீ முரணிய நீரும் என்று ஆங்கு - புறம் 2/4,5
நள் இரும் பொய்கையும் தீயும் ஓர் அற்றே - புறம் 246/15
TOP
தீயுள் (1)
ஓஒ கடலே ஊர் தலைக்கொண்டு கனலும் கடும் தீயுள்/நீர் பெய்த காலே சினம் தணியும் மற்று இஃதோ - கலி 144/59,60
TOP
தீயேன் (2)
தீயேன் தில்ல மலை கிழவோர்க்கே - ஐங் 204/5
தேறு நீ தீயேன் அலேன் என்று மற்று அவள் - கலி 90/17
TOP
தீயொடு (1)
தீயொடு விளங்கும் நாடன் வாய் வாள் - புறம் 397/21
TOP
தீயோடு (1)
சோறு படுக்கும் தீயோடு/செம் ஞாயிற்று தெறல் அல்லது - புறம் 20/7,8
TOP
தீர் (60)
சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி - திரு 19
திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து - திரு 70
பல உறு முத்தின் பழி தீர் வெண் பல் - பொரு 28
பொரு கணை தொலைச்சிய புண் தீர் மார்பின் - பெரும் 70
பை தீர் கடும்பொடு பதம் மிக பெறுகுவிர் - பெரும் 105
இடை தெரிந்து உணரும் இருள் தீர் காட்சி - பெரும் 445
திரு நிலைபெற்ற தீது தீர் சிறப்பின் - நெடு 89
துய் தலை வாங்கிய புனிறு தீர் பெரும் குரல் - குறி 37
மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்து - பட் 216
துறை பல முற்றிய பை தீர் பாணரொடு - மலை 40
துனி தீர் காதலின் இனிது அமர்ந்து உறையும் - மலை 485
உயிர் ஓர் அன்ன செயிர் தீர் நட்பின் - நற் 72/3
அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறு_மகட்கு - நற் 106/4
செல் வளி தூக்கலின் இலை தீர் நெற்றம் - நற் 107/4
பயன் தெரி பனுவல் பை தீர் பாண - நற் 167/6
தெய்வம் காக்கும் தீது தீர் நெடும் கோட்டு - நற் 201/6
செய்_பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர் - நற் 214/8
துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும் - நற் 216/1
பாவை அன்ன பழி தீர் காட்சி - நற் 252/7
செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெம் காதலி - நற் 269/5
செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே - நற் 364/12
இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி - குறு 207/3
பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டே - குறு 258/8
நல்_நாள் நீத்த பழி தீர் மாமை - குறு 368/2
நன் பொன் அன்ன புனிறு தீர் ஏனல் - ஐங் 263/1
துனி தீர் கொள்கை தன் புதல்வனொடு பொலிந்தே - ஐங் 408/4
உயிர் கலந்து ஒன்றிய செயிர் தீர் கேண்மை - ஐங் 419/1
வலன் உயர் மருப்பின் பழி தீர் யானை - பதி 11/18
ஞாயிறு புகன்ற தீது தீர் சிறப்பின் - பதி 17/10
ஆர் வளம் பழுனிய ஐயம் தீர் சிறப்பின் - பதி 21/16
ஆன்று அவிந்து அடங்கிய செயிர் தீர் செம்மால் - பதி 37/5
புறஞ்சொல் கேளா புரை தீர் ஒண்மை - பதி 70/13
செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல் - பரி 1/30
திறன் இலோர் திருத்திய தீது தீர் கொள்கை - பரி 1/42
செயிர் தீர் செம் கண் செல்வ நின் புகழ - பரி 4/10
கலப்போடு இயைந்த இரவு தீர் எல்லை - பரி 19/9
புரை தீர் நெடு மென் - பரி 22/47
தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போல - கலி 26/6
பல் பயம் உதவிய பசுமை தீர் அகல் ஞாலம் - கலி 29/3
புரை தீர் புது புனல் வெள்ளத்தின் இன்னும் - கலி 98/28
பொய் தீர் உலகம் எடுத்த கொடி மிசை - கலி 141/11
பழி தீர் கண்ணும் படுகுவ-மன்னே - அகம் 11/15
இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும் - அகம் 32/16
செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சி - அகம் 66/3
செயிர் தீர் கொள்கை சில் மொழி துவர் வாய் - அகம் 75/10
துனி தீர் கொள்கை நம் காதலி இனிது உற - அகம் 124/7
பழி தீர் காதலர் சென்ற நாட்டே - அகம் 127/18
சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்து - அகம் 136/5
துனி தீர் முயக்கம் பெற்றோள் போல - அகம் 144/10
செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை - அகம் 155/13
செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போல - அகம் 205/2
ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை - அகம் 285/11
பழி தீர் மாண் நலம் தருகுவர் மாதோ - அகம் 295/18
தெரிகோல் அன்ன செயிர் தீர் செம்மொழி - அகம் 349/4
செயிர் தீர் இன் துணை புணர்ந்திசினோர்க்கே - அகம் 367/16
செயிர் தீர் கற்பின் சே_இழை கணவ - புறம் 3/6
புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போல - புறம் 68/8
செயிர் தீர் கொள்கை எம் வெம் காதலி - புறம் 210/5
வாடு பசி அருத்திய பழி தீர் ஆற்றல் - புறம் 227/7
தீர் தொழில் தனி கலை திளைத்து விளையாட - புறம் 320/5
TOP
தீர்க்க (1)
உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்க என - புறம் 155/2
TOP
தீர்க்கலார் (1)
திங்கள் அரவு உறின் தீர்க்கலார் ஆயினும் - கலி 140/17
TOP
தீர்க்கு (1)
இரந்தோர் அற்றம் தீர்க்கு என விரைந்து இவண் - புறம் 158/19
TOP
தீர்க்கும் (11)
அரும் துயர் அவலம் தீர்க்கும்/மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே - நற் 140/10,11
அரும் பனி அற்சிரம் தீர்க்கும்/மருந்து பிறிது இல்லை அவர் மணந்த மார்பே - குறு 68/3,4
சிறு கண் பெரு நிரை உறு பசி தீர்க்கும்/தட மருப்பு யானை கண்டனர் தோழி - குறு 255/4,5
நயந்தோர் புன்கண் தீர்க்கும்/பயம் தலைப்படா பண்பினை எனினே - குறு 342/6,7
அரும் துயர் ஆர் அஞர் தீர்க்கும்/மருந்து ஆகி செல்கம் பெரும நாம் விரைந்தே - கலி 44/20,21
அவன் நின் திருந்து அடி மேல் வீழ்ந்து இரக்கும் நோய் தீர்க்கும்/மருந்து நீ ஆகுதலான் - கலி 63/10,11
மால் தீர்க்கும் அவன் மார்பு என்று எழுந்த சொல் நோவேமோ - கலி 68/13
கடும் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும்/கல் நெடும் கவலைய கானம் நீந்தி - அகம் 245/18,19
இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும்/அருள் நன்கு உடையர் ஆயினும் ஈதல் - அகம் 335/1,2
இன்மை தீர்க்கும் குடி பிறந்தோயே - புறம் 164/13
பருந்து பசி தீர்க்கும் நல் போர் - புறம் 179/11
TOP
தீர்க்குவெம் (1)
தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம் அதனால் - புறம் 381/16
TOP
தீர்க்குவேம்-மன் (1)
புலம்பு எலாம் தீர்க்குவேம்-மன் என்று இரங்குபு - கலி 83/22
TOP
தீர்க (4)
கார் அன்று இகுளை தீர்க நின் படரே - குறு 251/4
காடு பின் ஒழிய வந்தனர் தீர்க இனி - ஐங் 351/3
நின் குறி வாய்த்தனம் தீர்க இனி படரே - ஐங் 494/4
தொடி தோள் இவர்க எவ்வமும் தீர்க/நெறி இரும் கதுப்பின் கோதையும் புனைக - அகம் 269/1,2
TOP
தீர்கம் (1)
செல்லல் தீர்கம் செல்வாம் என்னும் - நற் 284/4
TOP
தீர்குவள் (1)
பனியும் தீர்குவள் செல்க என்றோளே - நற் 53/11
TOP
தீர்கை (1)
தீர்கை விடுக்கும் பண்பின முதுகுடி - புறம் 391/9
TOP
தீர்த்த (3)
நயவர் பாணர் புன்கண் தீர்த்த பின் - சிறு 248
வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன் - கலி 129/23
புள் உறு புன்கண் தீர்த்த வெள் வேல் - புறம் 37/5
TOP
தீர்த்தல் (3)
துயர் நிலை தீர்த்தல் நும் தலை கடனே - கலி 139/37
இன்மை தீர்த்தல் வன்மையானே - புறம் 3/26
வல்லன் எந்தை பசி தீர்த்தல் என - புறம் 379/10
TOP
தீர்த்தனன் (1)
பாண் உவப்ப பசி தீர்த்தனன்/மயக்கு உடைய மொழி விடுத்தனன் ஆங்கு - புறம் 239/17,18
TOP
தீர்தல் (1)
தீர்தல் செல்லாது என் உயிர் என பல புலந்து - புறம் 159/2
TOP
தீர்தலும் (1)
பிணை-வயின் தீர்தலும் அஞ்சி யாவதும் - புறம் 320/8
TOP
தீர்ந்த (11)
இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு - மலை 330
பலம் பெறு நசையொடு பதி-வயின் தீர்ந்த நும் - மலை 411
துணையின் தீர்ந்த கடுங்கண் யானை - நற் 108/2
சிறு தலை பிணையின் தீர்ந்த நெறி கோட்டு - குறு 183/3
அரும் கள் நொடைமை தீர்ந்த பின் மகிழ் சிறந்து - பதி 68/11
வசை தீர்ந்த என் நலம் வாடுவது அருளுவார் - கலி 26/14
நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை - கலி 52/4
பால்நிறவண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும் - கலி 104/8
பொய் தீர்ந்த புணர்ச்சியுள் புது நலம் கடிகல்லாய் - கலி 118/16
அருள் தீர்ந்த காட்சியான் அறன் நோக்கான் நயம் செய்யான் - கலி 120/1
புலம் புனிறு தீர்ந்த புது வரல் அற்சிரம் - அகம் 273/4
TOP
தீர்ந்தன்று (3)
மை தீர்ந்தன்று மதியும் அன்று - கலி 55/10
அல்லல் தீர்ந்தன்று ஆய்_இழை பண்பே - கலி 146/55
புரை தீர்ந்தன்று அது புதுவதோ அன்றே - புறம் 42/6
TOP
தீர்ந்தன்றும் (1)
தன் நிலை தீர்ந்தன்றும் இலனே கொன் ஊர் - குறி 245
TOP
தீர்ந்தனம் (1)
இன்னா அரும் சுரம் தீர்ந்தனம் மென்மெல - ஐங் 395/3
TOP
தீர்ந்தனள் (1)
இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை - நற் 351/1
TOP
தீர்ந்தான் (1)
உரை கேட்பு-உழி எல்லாம் செல்வேன் புரை தீர்ந்தான்/யாண்டு ஒளிப்பான்-கொல்லோ மற்று - கலி 146/30,31
TOP
தீர்ந்து (16)
மை தீர்ந்து கிளர்ந்து விளங்க - மது 9
புலவு புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு - மது 602
கைவல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து/ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை - நெடு 85,86
தகடு கண் புதைய கொளீஇ துகள் தீர்ந்து/ஊட்டு-உறு பல் மயிர் விரைஇ வய_மான் - நெடு 127,128
இனிது-மன் அளிதோ தானே துனி தீர்ந்து/அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின் - நற் 101/6,7
கானவர் எடுப்ப வெரீஇ இனம் தீர்ந்து/கானம் நண்ணிய சிறுகுடி பட்டு என - குறு 322/2,3
புலம்பு தீர்ந்து இனிய ஆயின புறவே - ஐங் 495/2
அச்சு அற்று ஏமம் ஆகி இருள் தீர்ந்து/இன்பம் பெருக தோன்றி தம் துணை - பதி 90/2,3
முளி முதல் மூழ்கிய வெம்மை தீர்ந்து உறுக என - கலி 16/15
புரிந்து ஆர்க்கும் வண்டொடு புலம்பு தீர்ந்து எ வாயும் - கலி 30/3
பாய்ந்து ஊதி படர் தீர்ந்து பண்டு தாம் மரீஇய - கலி 66/7
ஐயம் தீர்ந்து யார்-கண்ணும் அரும் தவ முதல்வன் போல் - கலி 100/7
இரும்பு சுவை கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து/மருந்து கொள் மரத்தின் வாள் வடு மயங்கி - புறம் 180/4,5
பழன் உடை பெரு மரம் தீர்ந்து என கையற்று - புறம் 209/9
இரவல் மாக்கள் உண கொள தீர்ந்து என - புறம் 333/10
மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇ - புறம் 362/11
TOP
தீர்ந்தும் (1)
இவளின் தீர்ந்தும் ஆள்வினை வலிப்ப - நற் 262/8
TOP
தீர்ப்ப (1)
செம் தளிர் மேனியார் செல்லல் தீர்ப்ப/என ஆங்கு - பரி 8/123,124
TOP
தீர்ப்பது (1)
புறங்கூற்று தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல் உரைத்தை காண் - கலி 38/21
TOP
தீர்ப்போரே (1)
இனி யார் மற்று நின் பசி தீர்ப்போரே - புறம் 227/11
TOP
தீர்வது (1)
கார் தலைக்கொண்டு பொழியினும் தீர்வது/போலாது என் மெய் கனலும் நோய் - கலி 146/44,45
TOP
தீர்வு (1)
தீர்வு இலது ஆக செரு உற்றாள் செம் புனல் - பரி 7/75
TOP
தீர்வை (1)
அரவு குறும்பு எறிந்த சிறு கண் தீர்வை/அளை செறி உழுவை கோள் உற வெறுத்த - மலை 504,505
TOP
தீர (45)
இசையேன் புக்கு என் இடும்பை தீர/எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகி - பொரு 67,68
இன்மை தீர வந்தனென் வென் வேல் - பொரு 129
ஆறு செல் வம்பலர் காய் பசி தீர/சோறு அடு குழிசி இளக விழூஉம் - பெரும் 365,366
இன்னா அரும் படர் தீர விறல் தந்து - நெடு 167
ஈர நன் மொழி தீர கூறி - குறி 234
அரலை தீர உரீஇ வரகின் - மலை 24
பழம் செருக்கு உற்ற நும் அனந்தல் தீர/அருவி தந்த பழம் சிதை வெண் காழ் - மலை 173,174
அலமரல் வருத்தம் தீர யாழ நின் - நற் 9/3
இன் புனிற்று இடும்பை தீர சினம் சிறந்து - நற் 148/8
வருவம் என்னும் பருவரல் தீர/படும்-கொல் வாழி நெடும் சுவர் பல்லி - நற் 169/2,3
பயந்து எழு பருவரல் தீர/நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே - நற் 225/8,9
அதிர் குரல் எழிலி முதிர் கடன் தீர/கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள் - நற் 228/2,3
புலவி தீர அளி-மதி இலை கவர்பு - குறு 115/3
நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்து - குறு 332/2
மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர/நினக்கு மருந்து ஆகிய யான் இனி - ஐங் 59/2,3
மெல் இறை பணை தோள் பசலை தீர/புல்லவும் இயைவது-கொல்லோ புல்லார் - ஐங் 459/1,2
அரும் படர் அவலம் அவளும் தீர/பெரும் தோள் நலம் வர யாமும் முயங்க - ஐங் 485/1,2
பருவரல் தீர கடவு-மதி தேரே - ஐங் 488/4
ஆய்_தொடி அரும் படர் தீர/ஆய் மணி நெடும் தேர் கடவு-மதி விரைந்தே - ஐங் 490/3,4
இரவலர் புன்கண் தீர நாள்-தொறும் - பதி 54/7
இல்லோர் புன்கண் தீர நல்கும் - பதி 86/6
விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர/சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல் - பரி 7/61,62
தீர தறைந்த தலையும் தன் கம்பலும் - கலி 65/6
ஞாலம் வறம் தீர பெய்ய குணக்கு ஏர்பு - கலி 82/1
துனி கொள் துயர் தீர காதலர் துனைதர - கலி 120/21
நடுங்கு நோய் தீர நின் குறி வாய்த்தாள் என்பதோ - கலி 127/7
இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர/உரவு கதிர் தெறும் என ஓங்கு திரை விரைபு தன் - கலி 127/19,20
கடலொடு புலம்புவோள் கலங்கு அஞர் தீர/கெடல் அரும் காதலர் துனைதர பிணி நீங்கி - கலி 144/68,69
அரைசினும் அன்பு இன்றாம் காமம் புரை தீர/அன்ன மென் சேக்கையுள் ஆராது அளித்தவன் - கலி 146/3,4
நடுங்கு அஞர் தீர முயங்கி நெருநல் - அகம் 62/11
இருவேம் நம் படர் தீர வருவது - அகம் 73/10
வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது - அகம் 110/8
எவ்வம் தீர வாங்கும் தந்தை - அகம் 140/13
நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து - அகம் 152/1
செவி அடை தீர தேக்கு இலை பகுக்கும் - அகம் 311/11
துனி கொள் பருவரல் தீர வந்தோய் - அகம் 314/17
பன் நாள் எவ்வம் தீர பகல் வந்து - அகம் 340/1
பனி வார் எவ்வம் தீர இனி வரின் - அகம் 395/4
நில மிசை வாழ்நர் அலமரல் தீர/தெறு கதிர் கனலி வெம்மை தாங்கி - புறம் 43/1,2
உள்ளி வருநர் உலைவு நனி தீர/தள்ளாது ஈயும் தகை சால் வண்மை - புறம் 158/14,15
கடும்பின் கடும் பசி தீர யாழ நின் - புறம் 163/3
இடும்பை கொள் பருவரல் தீர கடும் திறல் - புறம் 174/4
மல்லல் நன் நாட்டு அல்லல் தீர/பொய்யா நாவின் கபிலன் பாடிய - புறம் 174/9,10
கவலை நெஞ்சத்து அவலம் தீர/நீ தோன்றினையே நிரை தார் அண்ணல் - புறம் 174/22,23
இன்மை தீர வேண்டின் எம்மொடு - புறம் 180/8
TOP
தீரமும் (1)
தீரமும் வையையும் சேர்கின்ற கண் கவின் - பரி 22/35
TOP
தீரா (2)
தீரா முயக்கம் பெறுநர் புலப்பவர் - கலி 71/22
மெய்யின் தீரா மேவரு காமமொடு - அகம் 28/1
TOP
தீராமல் (1)
தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தை காண் - கலி 38/13
TOP
தீராய் (1)
என் அல்லல் தீராய் எனின் - கலி 144/23
TOP
தீராள் (1)
தமரின் தீராள் என்மோ அரசர் - குறு 392/6
TOP
தீரிய (4)
பால் ஆர் பசும் புனிறு தீரிய களி சிறந்து - நற் 393/3
உண்ணா பிணவின் உயக்கம் தீரிய/தட மருப்பு யானை வலம் பட தொலைச்சி - அகம் 357/3,4
ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய/முதை சுவல் கலித்த ஈர் இலை நெடும் தோட்டு - அகம் 393/3,4
இடுக்கண் மனையோள் தீரிய இ நிலை - புறம் 210/11
TOP
தீரும் (4)
படும்_கால் பையுள் தீரும் படாஅது - நற் 209/7
மன்றில் பையுள் தீரும்/குன்ற நாடன் உறீஇய நோயே - ஐங் 246/5,6
சிந்திக்க தீரும் பிணியாள் செறேற்க - பரி 20/68
மற்று இ நோய் தீரும் மருந்து அருளாய் ஒண்_தொடீ - கலி 60/18
TOP
தீவிய (3)
செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு - கலி 19/1
நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி - அகம் 54/16
வடிப்பு உறு நரம்பின் தீவிய மொழிந்தே - அகம் 142/26
TOP
தீவின் (1)
வலம் படு தீவின் பொலம் பூண் வளவன் - புறம் 397/22
TOP
தீற்றி (2)
நெல்மா வல்சி தீற்றி பல் நாள் - பெரும் 343
காய் நெல் கவளம் தீற்றி காவு-தொறும் - புறம் 337/14
TOP
|
|
|