<<முந்திய பக்கம் சங்க இலக்கியம் - தொடரடைவு

வை - முதல் சொற்கள்
வை 50
வை_நுதி 1
வைஇய 1
வைக்கும் 1
வைகம் 1
வைகல் 29
வைகல்-தொறும் 1
வைகல்-தோறு 1
வைகல்-தோறும் 4
வைகல்_வைகல் 1
வைகலான் 1
வைகலில் 1
வைகலும் 18
வைகலுள் 1
வைகலொடு 2
வைகவும் 3
வைகறை 27
வைகறையானே 1
வைகி 9
வைகிய 9
வைகின் 2
வைகின 1
வைகினிர் 1
வைகினை 1
வைகு 16
வைகுதி 1
வைகுதும் 2
வைகுந்து 1
வைகுநர் 1
வைகும் 3
வைகுற 1
வைகுறு 6
வைகுறு_மீனின் 3
வைகை 1
வைத்த 17
வைத்தது 2
வைத்தலை 1
வைத்தனர் 1
வைத்தனன் 1
வைத்தான் 1
வைத்து 9
வைப்பவும் 2
வைப்பில் 1
வைப்பின் 51
வைப்பின 1
வைப்பினதுவே 1
வைப்பு 2
வைப்பு-உற்று 1
வைப்பும் 3
வைப்பே 1
வைய 1
வையக 2
வையகத்து 2
வையகம் 9
வையத்து 5
வையத்துக்கு 1
வையம் 6
வையமும் 2
வையா 2
வையினர் 1
வையும் 1
வையை 72
வையை-தன் 1
வையைக்கு 5
வையைக்கும் 1
வையையும் 1
வையையுள் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
  வை (50)
வை_நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் - திரு 78
வேல் தலை அன்ன வை நுதி நெடும் தகர் - பெரும் 87
வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம் - பெரும் 119
கரு வை வேய்ந்த கவின் குடி சீறூர் - பெரும் 191
புது வை வேய்ந்த கவி குடில் முன்றில் - பெரும் 225
வை நுனை பகழி மூழ்கலின் செவி சாய்த்து - முல் 73
வை கண்டு அன்ன புல் முளி அம் காட்டு - மது 307
ஐஇய கலுழும் மாமையர் வை எயிற்று - மது 413
வை எயிற்று ஐயள் மடந்தை முன் உற்று - நற் 2/7
தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு - நற் 21/4
கெடு துணை ஆகிய தவறோ வை எயிற்று - நற் 26/7
பைபய இசைக்கும் அத்தம் வை எயிற்று - நற் 37/3
செய்த அல்லல் பல்குவ வை எயிற்று - நற் 200/9
பூ பொறி உழுவை தொலைச்சிய வை நுதி - நற் 205/3
வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை - நற் 225/3
வை ஏர் வால் எயிற்று ஒண் நுதல் குறு_மகள் - நற் 240/2
இ நிலை தவிர்ந்தனம் செலவே வை நுதி - நற் 256/5
வார்ந்து இலங்கு வை எயிற்று சின் மொழி அரிவையை - குறு 14/2
வை வார் வாளி விறல் பகை பேணார் - குறு 297/2
வை நுதி மழுகிய தடம் கோட்டு யானை - ஐங் 444/3
வில் விசை உமிழ்ந்த வை முள் அம்பின் - பதி 33/8
வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு - பரி 2/33
வையை வயம் ஆக வை/செல் யாற்று தீம் புனலில் செல் மரம் போல - பரி 6/78,79
வை எயிற்று எய்யா மகளிர் திறம் இனி - பரி 9/33
வை வேல் நுதி அன்ன கண்ணார் துணை ஆக - பரி 35/3
வை எயிற்றவர் நாப்பண் வகை அணி பொலிந்து நீ - கலி 59/12
வை காண் முது பகட்டின் பக்கத்தின் போகாது - கலி 65/12
ஒள் இழை வார்-உறு கூந்தல் துயில் பெறும் வை மருப்பின் - கலி 104/20
வை வாய் மருப்பினான் மாறாது குத்தலின் - கலி 106/12
இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று - அகம் 0/9
முல்லை வை நுனை தோன்ற இல்லமொடு - அகம் 4/1
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி - அகம் 37/5
வரை முதல் சிதறிய வை போல் யானை - அகம் 108/3
இலங்கு வேல் இளையர் துஞ்சின் வை எயிற்று - அகம் 122/7
வை வால் ஓதி மை அணல் ஏய்ப்ப - அகம் 125/5
வை வாய் வான் முகை அவிழ்ந்த கோதை - அகம் 144/4
வயிரத்து அன்ன வை ஏந்து மருப்பின் - அகம் 178/1
பொன் வார்ந்து அன்ன வை வால் எயிற்று - அகம் 219/12
ஐய அரும்பிய சுணங்கின் வை எயிற்று - அகம் 230/4
வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே - அகம் 237/17
வை நுதி வான் மருப்பு ஒடிய உக்க - அகம் 282/6
எவ்வம் இகந்து சேண் அகல வை எயிற்று - அகம் 285/3
குவி முகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று - அகம் 317/4
வெய்ய மன்ற நின் வை எயிறு_உணீஇய - அகம் 325/11
வை ஏர் வால் எயிற்று ஒண் நுதல் மகளிர் - அகம் 344/4
அண்ணல் எம் கோமான் வை நுதி வேலே - புறம் 95/9
வை எயிற்று உய்ந்த மதியின் மறவர் - புறம் 260/17
மண் கொள வரிந்த வை நுதி மருப்பின் - புறம் 288/1
தண்ணடை பெறுதலும் உரித்தே வை நுதி - புறம் 297/8
இஃது இவர் படிவம் ஆயின் வை எயிற்று - புறம் 349/4

 TOP
 
  வை_நுதி (1)
வை_நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் - திரு 78

 TOP
 
  வைஇய (1)
வரி புனை பந்தொடு வைஇய செல்வோள் - நற் 12/6

 TOP
 
  வைக்கும் (1)
வல்சி கொண்டு அளை மல்க வைக்கும்/எலி முயன்று அனையர் ஆகி உள்ள தம் - புறம் 190/2,3

 TOP
 
  வைகம் (1)
வைகம் வம்மோ வாய்மொழி புலவீர் - புறம் 221/10

 TOP
 
  வைகல் (29)
வைகல்_வைகல் கை கவி பருகி - பொரு 158
வைகல்_வைகல் கை கவி பருகி - பொரு 158
வரும் வைகல் மீன் பிறழினும் - மது 108
தின்று ஆனா இன வைகல்/நிலன் எடுக்கல்லா ஒண் பல் வெறுக்கை - மது 214,215
பைதல் ஒரு நிலை காண வைகல்/யாங்கு வருவது-கொல்லோ தீம் சொல் - நற் 306/8,9
ஏம வைகல் எய்தின்றால் உலகே - குறு 0/6
இரவலர் வாரா வைகல்/பல ஆகுக யான் செலவு-உறு தகவே - குறு 137/3,4
வைகல் வைகல் வைகவும் வாரார் - குறு 285/1
வைகல் வைகல் வைகவும் வாரார் - குறு 285/1
எல்லாம் எவனோ பதடி வைகல்/பாணர் படுமலை பண்ணிய எழாலின் - குறு 323/1,2
மத்து கயிறு ஆடா வைகல் பொழுது நினையூஉ - பதி 71/16
இன்ன வைகல் பல் நாள் ஆக - பதி 82/10
வாய்மை வயங்கிய வைகல் சிறந்த - பரி 2/54
ஏம வைகல் பெறுக யாம் எனவே - பரி 17/53
வாங்கு கோல் நெல்லொடு வாங்கி வரு_வைகல் - கலி 50/1
தண் பனி வைகல் எமக்கு - கலி 78/27
ஆ முனியா ஏறு போல் வைகல் பதின்மரை - கலி 108/48
நினையாது கழிந்த வைகல் எனையதூஉம் - அகம் 29/9
வைகல் யாணர் நன் நாட்டு பொருநன் - புறம் 61/12
எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல்/எண் தேர் செய்யும் தச்சன் - புறம் 87/2,3
காணாது கழிந்த வைகல் காணா - புறம் 176/11
இயைந்த வைகல் உள ஆகியரோ - புறம் 190/12
இன்னா வைகல் உண்ணும் - புறம் 248/4
மணம் புகு வைகல் ஆகுதல் ஒன்றோ - புறம் 341/11
நினக்கும் வருதல் வைகல் அற்றே - புறம் 359/9
இன்னா வைகல் வாரா முன்னே - புறம் 363/16
வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல்/வாழ செய்த நல்வினை அல்லது - புறம் 367/9,10
வந்த வைகல் அல்லது - புறம் 384/23
வைகல் உழவ வாழிய பெரிது என - புறம் 392/11

 TOP
 
  வைகல்-தொறும் (1)
வைகல்-தொறும் அசைவு இன்றி - பட் 124

 TOP
 
  வைகல்-தோறு (1)
செய் குறி ஆழி வைகல்-தோறு எண்ணி - அகம் 351/10

 TOP
 
  வைகல்-தோறும் (4)
வைகல்-தோறும் வழிவழி சிறப்ப - மது 324
வைகல்-தோறும் இன்பமும் இளமையும் - நற் 46/1
வைகல்-தோறும் நிறம் பெயர்ந்து உறையும் அவன் - குறு 298/3
வைகல்-தோறும் பசலை பாய என் - அகம் 253/1

 TOP
 
  வைகல்_வைகல் (1)
வைகல்_வைகல் கை கவி பருகி - பொரு 158

 TOP
 
  வைகலான் (1)
நோய் சேர்ந்த வைகலான் வாடை வந்து அலைத்தரூஉம் - கலி 29/13

 TOP
 
  வைகலில் (1)
சேகா கதிர் விரி வைகலில் கை வாரூஉ கொண்ட - கலி 96/22

 TOP
 
  வைகலும் (18)
வைகலும் பொருந்தல் ஒல்லா - நற் 98/11
வைகலும் இனையம் ஆகவும் செய் தார் - நற் 349/5
யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக என - பரி 1/66
வளமையோ வைகலும் செயல் ஆகும் மற்று இவள் - கலி 15/24
இள மழை வைகலும் ஆடும் என் முன்கை - கலி 41/26
துணை மலர் கோதையார் வைகலும் பாராட்ட - கலி 70/9
வதுவை நாளால் வைகலும் அஃது யான் - கலி 75/11
வதுவை விழவு அணி வைகலும் காட்டினையாய் - கலி 98/3
பெறல் அரும்-குரையள் என்னாய் வைகலும்/இன்னா அரும் சுரம் நீந்தி நீயே - அகம் 212/10,11
எவ்வம் கூரிய வைகலும் வருவோய் - அகம் 288/6
பெய் சிலம்பு ஒலிப்ப பெயர்வனள் வைகலும்/ஆர நீர் ஊட்டி புரப்போர் - அகம் 383/12,13
வேங்கைமார்பன் இரங்க வைகலும்/ஆடு கொள குழைந்த தும்பை புலவர் - புறம் 21/9,10
வைகலும் செலினும் பொய்யலன் ஆகி - புறம் 171/4
மெல்லியன் கிழவன் ஆகி வைகலும்/வரிசை அறியா கல்லென் சுற்றமொடு - புறம் 184/7,8
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்/பகை கூழ் அள்ளல் பட்டு - புறம் 185/4,5
செல்வல் அத்தை யானே வைகலும்/வல்சி இன்மையின் வயின்_வயின் மாறி - புறம் 211/17,18
வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே - புறம் 212/10
வாள் தக வைகலும் உழக்கும் - புறம் 342/14

 TOP
 
  வைகலுள் (1)
ஓர் இரா வைகலுள் தாமரை பொய்கையுள் - கலி 5/14

 TOP
 
  வைகலொடு (2)
தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே - குறு 101/6
வாய்மை அன்ன வைகலொடு புணர்ந்தே - கலி 35/25

 TOP
 
  வைகவும் (3)
வைகல் வைகல் வைகவும் வாரார் - குறு 285/1
கால் இயல் கலி_மா கதி இன்றி வைகவும்/மேலோர்_உலகம் எய்தினன் ஆகலின் - புறம் 229/21,22
களம் மலி குப்பை காப்பு இல வைகவும்/விலங்கு பகை கடிந்த கலங்கா செங்கோல் - புறம் 230/3,4

 TOP
 
  வைகறை (27)
முள் தாள் தாமரை துஞ்சி வைகறை/கள் கமழ் நெய்தல் ஊதி எல் பட - திரு 73,74
பொறி மயிர் வாரணம் வைகறை இயம்ப - மது 673
இரவு தலைப்பெயரும் ஏம வைகறை/மை படு பெரும் தோள் மழவர் ஓட்டி - மது 686,687
குறைவு இன்று பருகி நறவு மகிழ்ந்து வைகறை/பழம் செருக்கு உற்ற நும் அனந்தல் தீர - மலை 172,173
எஃகு உறு பஞ்சிற்று ஆகி வைகறை/கோடு உயர் நெடு வரை ஆடும் நாட நீ - நற் 247/4,5
நடுநாள் வேட்டம் போகி வைகறை/கடல் மீன் தந்து கானல் குவைஇ - நற் 388/5,6
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே - குறு 157/4
வைகறை மலரும் நெய்தல் போல - ஐங் 188/3
நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள் வைகறை/கார் பெற்ற புலமே போல் கவின் பெறும் அ கவின் - கலி 38/11,12
பொருள் இல்லான் இளமை போல் புல்லென்றாள் வைகறை/அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும் அ அணி - கலி 38/15,16
அறம் சாரான் மூப்பே போல் அழி_தக்காள் வைகறை/திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திரு தகும் அ திரு - கலி 38/19,20
அதனால் பொதி அவிழ் வைகறை வந்து நீ குறைகூறி - கலி 52/22
வதுவை அம் கமழ் நாற்றம் வைகறை பெற்றதை - கலி 66/12
வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை/விசும்பு உரிவது போல் வியல் இடத்து ஒழுகி - அகம் 24/6,7
பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை/பல்லோர் உவந்த உவகை எல்லாம் - அகம் 42/10,11
வான் தோய் உயர் வரை ஆடும் வைகறை/புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை - அகம் 139/7,8
பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கி - அகம் 157/7
கொண்டல் வான் மழை பொழிந்த வைகறை/தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது என - அகம் 178/18,19
பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை/ஏர் இடம்படுத்த இரு மறு பூழி - அகம் 194/1,2
விடியல் வைகறை இடூஉம் ஊர - அகம் 196/7
குரூஉ துளி பொழிந்த பெரும் புலர் வைகறை/செய்து விட்டு அன்ன செம் நில மருங்கில் - அகம் 304/5,6
ஆலி அழி துளி பொழிந்த வைகறை/வால் வெள் அருவி புனல் மலிந்து ஒழுகலின் - அகம் 308/3,4
பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறை/செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில் - அகம் 374/10,11
பெரும் புலர் வைகறை சீர் சாலாதே - புறம் 177/17
யானும் இருள் நிலா கழிந்த பகல் செய் வைகறை/ஒரு கண் மா கிணை தெளிர்ப்ப ஒற்றி - புறம் 394/6,7
வைகறை அரவம் கேளியர் பல கோள் - புறம் 397/8
இரவு புறம்பெற்ற ஏம வைகறை/பரிசிலர் வரையா விரை செய் பந்தர் - புறம் 398/6,7

 TOP
 
  வைகறையானே (1)
தமர் ஓர் அன்னள் வைகறையானே - குறு 312/8

 TOP
 
  வைகி (9)
நிழல் காண்-தோறும் நெடிய வைகி/மணல் காண்-தோறும் வண்டல் தைஇ - நற் 9/7,8
ஐய குறு_மகள் கண்டிகும் வைகி/மகிழ்நன் மார்பில் துஞ்சி அவிழ் இணர் - நற் 20/1,2
வைகி கேட்டு பையாந்திசினே - நற் 114/4
தனி காயாம் தண் பொழில் எம்மொடு வைகி/பனி பட செல்வாய் நும் ஊர்க்கு - கலி 108/43,44
நாணு தளை ஆக வைகி மாண் வினைக்கு - அகம் 29/21
பாம்பு எறி கோலின் தமியை வைகி/தேம்புதி-கொல்லோ நெஞ்சே உரும் இசை - அகம் 322/5,6
குறும் பல் குறும்பின் ததும்ப வைகி/புளி சுவை வேட்ட செம் கண் ஆடவர் - புறம் 177/7,8
சூடாது வைகி ஆங்கு பிறர்க்கு ஒன்று - புறம் 235/19
மரம் தலை சேர்ந்து பட்டினி வைகி/போது அவிழ் அலரி நாரின் தொடுத்து - புறம் 371/2,3

 TOP
 
  வைகிய (9)
பெயலொடு வைகிய வியன் கண் இரும் புனத்து - மலை 99
பெய்யாது வைகிய கோதை போல - நற் 11/1
பழம் பிணி வைகிய தோள் இணை - நற் 20/10
மடை மாண் செப்பில் தமிய வைகிய/பெய்யா பூவின் மெய் சாயினளே - குறு 9/2,3
தண் பனி வைகிய வரி கச்சினனே - ஐங் 206/5
வகை வரி செப்பினுள் வைகிய கோதையேம் - கலி 68/15
உறையொடு வைகிய போது போல் ஒய்யென - கலி 121/9
நெடும் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு - அகம் 60/3
நோய் உழந்து வைகிய உலகினும் மிக நனி - புறம் 230/10

 TOP
 
  வைகின் (2)
ஒரு தனி வைகின் புலம்பு ஆகின்றே - குறு 166/4
அழிகளின் படுநர் களி அட வைகின்/பழம் சோறு அயிலும் முழங்கு நீர் படப்பை - புறம் 399/10,11

 TOP
 
  வைகின (1)
கண்ணும் தண் பனி வைகின அன்னோ - நற் 197/3

 TOP
 
  வைகினிர் (1)
அலரி விரிந்த விடியல் வைகினிர் கழி-மின் - மலை 196

 TOP
 
  வைகினை (1)
என்னும் பனியாய் இரவு எல்லாம் வைகினை/வையை உடைந்த மடை அடைத்த-கண்ணும் - பரி 6/81,82

 TOP
 
  வைகு (16)
வைகு புலர் விடியல் மெய் கரந்து தன் கால் - நற் 12/4
பைம் தாது எருவின் வைகு துயில் மடியும் - நற் 271/2
வைகு பனி உழந்த வாவல் சினை-தொறும் - நற் 279/3
பொய்கை நீர்நாய் வைகு துயில் ஏற்கும் - நற் 390/2
பெய்து போகு எழிலி வைகு மலை சேர - நற் 396/1
கரும் கால் மராஅத்து வைகு சினை வான் பூ - ஐங் 331/2
வைகு ஆர்ப்பு எழுந்த மை படு பரப்பின் - பதி 41/22
வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டி - அகம் 37/5
வைகு புலர் விடியல் மை புலம் பரப்ப - அகம் 41/1
வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர் - அகம் 87/13
வைகு புனல் அயர்ந்தனை என்ப அதுவே - அகம் 116/10
வைகு கடல் அம்பியின் தோன்றும் - அகம் 187/23
கொய் குழை அதிரல் வைகு புலர் அலரி - அகம் 213/4
வைகு நிலை மதியம் போல பையென - அகம் 299/11
வைகு தொழில் மடியும் மடியா விழவின் - புறம் 212/5
மட மான் பெரு நிரை வைகு துயில் எடுப்பி - புறம் 247/3

 TOP
 
  வைகுதி (1)
நோயொடு வைகுதி ஆயின் நுந்தை - அகம் 370/6

 TOP
 
  வைகுதும் (2)
பனி வார் கண்ணேம் வைகுதும் இனியே - அகம் 168/2
இழந்து வைகுதும் இனி நாம் இவன் - புறம் 17/29

 TOP
 
  வைகுந்து (1)
இரும் கெடிற்று மிசையொடு பூ கள் வைகுந்து/கரும்பனூரன் கிணையேம் பெரும - புறம் 384/9,10

 TOP
 
  வைகுநர் (1)
வைகுநர் ஆகுதல் அறிந்தும் - அகம் 316/16

 TOP
 
  வைகும் (3)
அரும் புண் உறுநரின் வருந்தி வைகும்/கானக நாடற்கு இது என யான் அது - நற் 47/5,6
விருந்தின் வெம் காட்டு வருந்தி வைகும்/அத்த நெல்லி தீம் சுவை திரள் காய் - அகம் 241/12,13
காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை - அகம் 251/18

 TOP
 
  வைகுற (1)
அரு முனை பாக்கத்து அல்கி வைகுற/நிழல் பட கவின்ற நீள் அரை இலவத்து - அகம் 245/13,14

 TOP
 
  வைகுறு (6)
வைகுறு_மீனின் பைபய தோன்றும் - பெரும் 318
வைகுறு_மீனின் நினைய தோன்றி - நற் 48/4
வைகுறு வனப்பின் தோன்றும் - நற் 163/11
வைகுறு_மீனின் தோன்றும் - அகம் 17/21
வைகுறு விடியல் போகிய எருமை - அகம் 100/16
வைகுறு விடியல் இயம்பிய குரலே - புறம் 233/8

 TOP
 
  வைகுறு_மீனின் (3)
வைகுறு_மீனின் பைபய தோன்றும் - பெரும் 318
வைகுறு_மீனின் நினைய தோன்றி - நற் 48/4
வைகுறு_மீனின் தோன்றும் - அகம் 17/21

 TOP
 
  வைகை (1)
வறாஅற்க வைகை நினக்கு - பரி 16/55

 TOP
 
  வைத்த (17)
செவி நேர்பு வைத்த செய்வு-உறு திவவின் - திரு 140
காடி வைத்த கலன் உடை மூக்கின் - பெரும் 57
வாணன் வைத்த விழு நிதி பெறினும் - மது 203
ஞெண்டு ஆடு செறுவில் தராய்_கண் வைத்த/விலங்கல் அன்ன போர் முதல் தொலைஇ - மலை 460,461
தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி - நற் 142/6
கோடு அற வைத்த கோடா கொள்கையும் - பதி 37/11
வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போல - கலி 105/9
தொழில் மாறி தலை வைத்த தோட்டி கைநிமிர்ந்து ஆங்கு - கலி 138/2
கொற்ற சோழர் குடந்தை வைத்த/நாடு தரு நிதியினும் செறிய - அகம் 60/13,14
தொன் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த/பொன்னினும் அருமை நன்கு அறிந்தும் அன்னோள் - அகம் 258/2,3
கை தலை வைத்த மையல் விதுப்பொடு - அகம் 347/14
வரி நுதல் வைத்த வலி தேம்பு தட கை - அகம் 349/12
வேட்கோ சிறாஅர் தேர் கால் வைத்த/பசு மண் குரூஉ திரள் போல அவன் - புறம் 32/8,9
கோட்டு இடை வைத்த கவளம் போல - புறம் 101/7
பொன் உடை நெடு நகர் நிறைய வைத்த நின் - புறம் 198/16
தன் அமர் காதலி புல் மேல் வைத்த/இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்-கொல் - புறம் 234/3,4
கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம் - புறம் 325/9

 TOP
 
  வைத்தது (2)
கை இடை வைத்தது மெய் இடை திமிரும் - நற் 360/8
வைத்தது அன்றே வெறுக்கை வித்தும் - புறம் 357/5

 TOP
 
  வைத்தலை (1)
வைத்தலை மறந்த துய் தலை கூகை - பதி 44/18

 TOP
 
  வைத்தனர் (1)
குழல் வாய் வைத்தனர் கோவலர் வல் விரைந்து - அகம் 354/5

 TOP
 
  வைத்தனன் (1)
இரும் புடை பழ வாள் வைத்தனன் இன்று இ - புறம் 316/6

 TOP
 
  வைத்தான் (1)
வல்லவன் கூறிய வினை தலை வைத்தான் போல் - கலி 148/2

 TOP
 
  வைத்து (9)
தெய்வ_உத்தியொடு வலம்புரி வயின் வைத்து/திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் - திரு 23,24
படுத்து வைத்து அன்ன பாறை மருங்கின் - மலை 15
நல் எருது நடை வளம் வைத்து என உழவர் - நற் 315/4
கை வைத்து இமிர்பு குழல் காண்குவோரும் - பரி 19/41
மட மதர் உண்கண் கயிறு ஆக வைத்து/தட மென் தோள் தொட்டு தகைத்து மட விரலால் - பரி 20/55,56
மகர மறி கடல் வைத்து நிறுத்து - பரி 23/72
செறாஅ செம் கண் புதைய வைத்து/பறாஅ குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன் - கலி 54/10,11
நிணம் பொதி விழு தடி நெருப்பின் வைத்து எடுத்து - அகம் 265/13
மைந்து உடை யானை கை வைத்து உறங்கவும் - புறம் 229/18

 TOP
 
  வைப்பவும் (2)
நெடும் கால் புன்னை நித்திலம் வைப்பவும்/கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தர - சிறு 149,150
வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும்/பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும் - நற் 114/1,2

 TOP
 
  வைப்பில் (1)
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில்/பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை - அகம் 21/14,15

 TOP
 
  வைப்பின் (51)
தண் வைப்பின் நால் நாடு குழீஇ - பொரு 226
வில் உடை வைப்பின் வியன் காட்டு இயவின் - பெரும் 82
மிகு வளம் பழுநிய யாணர் வைப்பின்/புதுவது வந்தன்று இது அதன் பண்பே - மலை 95,96
குன்ற வைப்பின் கானம் - நற் 137/9
பெரும் கல் வைப்பின் சுரன் இறந்தோரே - நற் 274/9
யாணர் வைப்பின் கானம் என்னாய் - நற் 292/4
கண் அகன் வைப்பின் நாடும் ஊரும் - நற் 377/2
அரும் சுர வைப்பின் கானம் - குறு 154/7
புன்_புல வைப்பின் கானத்தானே - குறு 183/7
நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே - குறு 211/7
இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே - குறு 314/6
நாடு இடை விலங்கிய வைப்பின்/காடு இறந்தனள் நம் காதலோளே - ஐங் 313/4,5
ஓடு எரி நடந்த வைப்பின்/கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே - ஐங் 318/4,5
கண் பொர விளங்கிய கதிர் தெறு வைப்பின்/மண் புரை பெருகிய மரம் முளி கானம் - ஐங் 319/1,2
பூ பல அணிந்த வைப்பின்/புறவு அணி நாடன் புதல்வன் தாயே - ஐங் 405/3,4
மென்_புல வைப்பின் நாடு கிழவோனே - ஐங் 407/4
பாடல் சான்ற பயம் கெழு வைப்பின்/நாடு கவின் அழிய நாமம் தோற்றி - பதி 13/9,10
தொல் கவின் அழிந்த கண் அகன் வைப்பின்/வெண் பூ வேளையொடு பைம் சுரை கலித்து - பதி 15/8,9
புல் இலை வைப்பின் புலம் சிதை அரம்பின் - பதி 15/13
அகன் கண் வைப்பின் நாடு-மன் அளிய - பதி 29/10
செழும் பல் வைப்பின் பழன பாலும் - பதி 30/21
கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த நின் - பதி 53/4
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே - பதி 58/19
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே - பதி 66/20
பாடல் சான்ற வைப்பின்/நாடு உடன் ஆள்தல் யாவணது அவர்க்கே - பதி 75/13,14
அகன் கண் வைப்பின் நாடு கிழவோயே - பதி 76/15
பல் பயம் நிலைஇய கடறு உடை வைப்பின்/வெல் போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும் - பதி 78/7,8
வான் நீங்கு வைப்பின் வழங்கா தேர் நீர்க்கு அவாஅம் - கலி 7/2
குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை - அகம் 57/9
வெண்ணெல் வைப்பின் பருவூர் பறந்தலை - அகம் 96/14
பயம் கெழு வைப்பின் பல் வேல் எவ்வி - அகம் 126/13
வேங்கட வைப்பின் சுரன் இறந்தோரே - அகம் 141/29
வெயில் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள - அகம் 145/4
வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர் - அகம் 181/14
காவிரி வைப்பின் போஒர் அன்ன என் - அகம் 186/16
கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின்/நாறு உயிர் மட பிடி தழைஇ வேறு நாட்டு - அகம் 189/3,4
வெண்ணெல் வைப்பின் நன் நாடு பெறினும் - அகம் 201/13
பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண் - அகம் 255/10
சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின்/துகில் ஆய் செய்கை பா விரிந்து அன்ன - அகம் 293/3,4
பெரும் கல் வைப்பின் மலை முதல் ஆறே - அகம் 307/15
குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும் - அகம் 338/1
என்றூழ் வைப்பின் சுரன் இறந்தோரே - அகம் 391/14
புன்_புல வைப்பின் எம் சிறு நல் ஊரே - அகம் 394/16
யாணர் வைப்பின் நன் நாட்டு பொருந - புறம் 2/11
பயன் திகழ் வைப்பின் பிறர் அகன் தலை நாடே - புறம் 7/13
மென்_புல வைப்பின் நன் நாட்டு பொருந - புறம் 42/18
யாணர் அறாஅ வைப்பின்/காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே - புறம் 63/14,15
வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின்/பொய்யா யாணர் மையல் கோமான் - புறம் 71/10,11
பெரும் கல் வைப்பின் நாடு கிழவோயே - புறம் 202/21
மென்_புல வைப்பின் நன் நாட்டு பொருந - புறம் 209/6
மென் புனல் வைப்பின் இ தண் பணை ஊரே - புறம் 341/18

 TOP
 
  வைப்பின (1)
விண் உயர் வைப்பின காடு ஆயின நின் - பதி 23/15

 TOP
 
  வைப்பினதுவே (1)
வன்_புல வைப்பினதுவே சென்று - புறம் 321/7

 TOP
 
  வைப்பு (2)
மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய - சிறு 152
மருந்து எனின் மருந்தே வைப்பு எனின் வைப்பே - குறு 71/1

 TOP
 
  வைப்பு-உற்று (1)
வைப்பு-உற்று ஆயினும் நண்ணி ஆளும் - புறம் 18/25

 TOP
 
  வைப்பும் (3)
யாறும் குளனும் வேறு பல் வைப்பும்/சதுக்கமும் சந்தியும் புது பூ கடம்பும் - திரு 224,225
குன்று தலைமணந்த புன்_புல வைப்பும்/காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது - பதி 30/13,14
புன்_புலம் தழீஇய புறவு அணி வைப்பும்/பல் பூ செம்மல் காடு பயம் மாறி - பதி 30/25,26

 TOP
 
  வைப்பே (1)
மருந்து எனின் மருந்தே வைப்பு எனின் வைப்பே/அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை - குறு 71/1,2

 TOP
 
  வைய (1)
வேத மா பூண் வைய தேர் ஊர்ந்து - பரி 5/23

 TOP
 
  வையக (2)
வையக வரை அளவு இறந்த - நற் 130/11
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப - புறம் 168/18

 TOP
 
  வையகத்து (2)
வறன் ஓடின் வையகத்து வான் தரும் கற்பினாள் - கலி 16/20
இரும் கடல் உடுத்த இ வையகத்து அரும் திறல் - புறம் 201/17

 TOP
 
  வையகம் (9)
வால் உளை புரவியொடு வையகம் மருள - சிறு 92
எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய் நின் - முல் 57
வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇ - நெடு 1
வையகம் மலர்ந்த தொழில் முறை ஒழியாது - பதி 88/1
வையகம் முழுதுடன் வளைஇ பையென - புறம் 69/7
வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள் - புறம் 230/5
வையகம் புலம்ப வளைஇய பாம்பின் - புறம் 260/16
வள்ளியன் ஆதல் வையகம் புகழினும் - புறம் 394/4
வரை உறழ் மார்பின் வையகம் விளக்கும் - புறம் 398/26

 TOP
 
  வையத்து (5)
இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇ - சிறு 38
நிலம் அமர் வையத்து ஒருதாம் ஆகி - மது 470
அகல் வையத்து பகல் ஆற்றி - பதி 90/9
நில மலர் வையத்து வல முறை வளைஇ - புறம் 225/4
அகன் தலை வையத்து புரவலர் காணாது - புறம் 371/1

 TOP
 
  வையத்துக்கு (1)
மெய்யாப்பு மெய் ஆர மூடுவார் வையத்துக்கு/ஊடுவார் ஊடல் ஒழிப்பார் உணர்குவார் - பரி 24/19,20

 TOP
 
  வையம் (6)
தச்சன் செய்த சிறு மா வையம்/ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும் கையின் - குறு 61/1,2
இரு முந்நீர் வையம் பிடித்து என்னை யான் ஊர்க்கு - பரி 24/94
வையம் விளங்கி புகழ் பூத்தல் அல்லது - பரி 32/2
மை அறு மண்டிலம் வேட்டனள் வையம்/புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும் - கலி 141/12,13
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக - புறம் 8/1
வையம் காவலர் வளம் கெழு திரு நகர் - புறம் 261/6

 TOP
 
  வையமும் (2)
வையமும் தேரும் அமைப்போரும் எ வாயும் - பரி 24/17
வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு - புறம் 358/3

 TOP
 
  வையா (2)
நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா/கடும் கால் ஒற்றலின் சுடர் சிறந்து உருத்து - பதி 25/5,6
வையா மாலையர் வசையுநர் கறுத்த - பதி 32/15

 TOP
 
  வையினர் (1)
வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின் - கலி 134/19

 TOP
 
  வையும் (1)
வையும் துரும்பும் நீக்கி பைது அற - பெரும் 239

 TOP
 
  வையை (72)
அவிர் அறல் வையை துறை_துறை-தோறும் - மது 340
வையை அன்ன வழக்கு உடை வாயில் - மது 356
வகை சாலும் வையை வரவு - பரி 6/13
வரை சிறை உடைத்ததை வையை வையை - பரி 6/22
வரை சிறை உடைத்ததை வையை வையை/திரை சிறை உடைத்தன்று கரை சிறை அறைக எனும் - பரி 6/22,23
தமிழ் வையை தண்ணம் புனல் - பரி 6/60
பெருக்கு அன்றோ வையை வரவு - பரி 6/70
சுருக்கமும் ஆக்கமும் சூள் உறல் வையை/பெருக்கு அன்றோ பெற்றாய் பிழை - பரி 6/73,74
இன் இளவேனில் இது அன்றோ வையை நின் - பரி 6/77
வையை வயம் ஆக வை - பரி 6/78
வையை உடைந்த மடை அடைத்த-கண்ணும் - பரி 6/82
யாறு உண்டோ இ வையை யாறு - பரி 6/93
இ வையை யாறு என்ற மாறு என்னை கையால் - பரி 6/94
வாடற்க வையை நினக்கு - பரி 6/106
வந்தன்று வையை புனல் - பரி 7/10
தானையான் வையை வனப்பு - பரி 7/50
வையை பெருக்கு வடிவு - பரி 7/60
தாமம் தலை புனை பேஎம் நீர் வையை/நின் பயம் பாடி விடிவு உற்று ஏமாக்க - பரி 7/84,85
இனி மணல் வையை இரும் பொழிலும் குன்ற - பரி 8/51
வரு புனல் வையை மணல் தொட்டேன் தரு மண வேள் - பரி 8/61
நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை/வரு புனல் அணிக என வரம் கொள்வோரும் - பரி 8/104,105
போந்தது வையை புனல் - பரி 10/8
யாம் வேண்டும் வையை புனல் எதிர்கொள் கூடல் - பரி 10/40
நெரிதரூஉம் வையை புனல் - பரி 11/15
சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை/வய தணிந்து ஏகு நின் யாணர் இறு நாள் பெற - பரி 11/39,40
மல்லல் புனல் வையை மா மலை விட்டு இருத்தல் - பரி 11/43
பாய் தேரான் வையை அகம் - பரி 11/61
நீர் ஒவ்வா வையை நினக்கு - பரி 11/73
வையை நினக்கு மடை வாய்த்தன்று - பரி 11/87
நீ உரைத்தி வையை நதி - பரி 11/92
நறு நீர் வையை நய_தகு நிறையே - பரி 11/140
வளி வரல் வையை வரவு - பரி 12/8
அம் தண் புனல் வையை யாறு என கேட்டு - பரி 12/10
உரைதர வந்தன்று வையை நீர் வையை - பரி 12/32
உரைதர வந்தன்று வையை நீர் வையை/கரை தர வந்தன்று காண்பவர் ஈட்டம் - பரி 12/32,33
வல்லதால் வையை புனல் - பரி 12/75
நன் பல நன் பல நன் பல வையை/நின் புகழ் கொள்ளாது இ மலர் தலை உலகே - பரி 12/101,102
பூத்தன்று வையை வரவு - பரி 16/19
வாய்த்தன்றால் வையை வரவு - பரி 16/31
தான் நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து தரூஉம் வையை/தன் நாற்றம் மீது தடம் பொழில் தான் யாற்று - பரி 20/11,12
கூடல் விழையும் தகைத்து தகை வையை/புகை வகை தைஇயினார் பூம் கோதை நல்லார் - பரி 20/26,27
வையை மடுத்தால் கடல் என தெய்ய - பரி 20/42
வையை தொழுவத்து தந்து அடித்து இடித்து - பரி 20/60
ஊடினார் வையை அகத்து - பரி 20/67
தென்னவன் வையை சிறப்பு - பரி 20/97
தீம் புனல் வையை திருமருத முன்துறையால் - பரி 22/45
காமரு வையை கடுகின்றே கூடல் - பரி 24/4
நீர் அணி கொண்டன்று வையை என விரும்பி - பரி 24/5
முற்று இன்று வையை துறை - பரி 24/27
அகல் அல்கும் வையை துறை - பரி 24/33
தணிவு இன்று வையை புனல் - பரி 24/50
வையை தேம் மேவ வழுவழுப்பு-உற்று என - பரி 24/62
மழுபொடு நின்ற மலி புனல் வையை/விழு_தகை நல்லாரும் மைந்தரும் ஆடி - பரி 24/80,81
தான் தோன்றாது இ வையை ஆறு - பரி 24/87
வழி நீர் விழு நீர அன்று வையை/வெரு வரு கொல் யானை வீங்கு தோள் மாறன் - பரி 24/90,91
உரு கெழு கூடலவரொடு வையை/வரு புனல் ஆடிய தன்மை பொருவும்-கால் - பரி 24/92,93
தண் வரல் வையை எமக்கு - பரி 25/4
பரி_மா நிரையின் பரந்தன்று வையை - பரி 26/2
வையை உண்டாகும் அளவு - பரி 32/4
வையை வரு புனல் ஆடல் இனிது-கொல் - பரி 35/1
வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்-கொல் - கலி 27/20
வையை வார் அவிர் அறல் இடை போழும் பொழுதினான் - கலி 28/7
அறல் வாரும் வையை என்று அறையுநர் உளர் ஆயின் - கலி 30/16
வண்ண வண்டு இமிர்ந்து ஆனா வையை வார் உயர் எக்கர் - கலி 35/9
தார் முற்றியது போல தகை பூத்த வையை தன் - கலி 67/3
வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையை/கரை அணி காவின் அகத்து - கலி 92/12,13
பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை/வரு புனல் ஆட தவிர்ந்தேன் பெரிது என்னை - கலி 98/10,11
வையை புது புனல் ஆட தவிர்ந்ததை - கலி 98/31
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை - அகம் 36/9
மை எழில் உண்கண் மடந்தையொடு வையை/ஏர் தரு புது புனல் உரிதினின் நுகர்ந்து - அகம் 256/10,11
பெரு நீர் வையை அவளொடு ஆடி - அகம் 296/5
வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின் - புறம் 71/10

 TOP
 
  வையை-தன் (1)
சீர் அணி வையைக்கு அணி-கொல்லோ வையை-தன்/நீர் அணி நீத்தம் இவர்க்கு அணி-கொல் என - பரி 22/32,33

 TOP
 
  வையைக்கு (5)
வையைக்கு தக்க மணல் சீர் சூள் கூறல் - பரி 8/71
தேன் இமிர் வையைக்கு இயல்பு - பரி 16/38
கொடி தேரான் வையைக்கு இயல்பு - பரி 16/47
பூ மலி வையைக்கு இயல்பு - பரி 20/111
சீர் அணி வையைக்கு அணி-கொல்லோ வையை-தன் - பரி 22/32

 TOP
 
  வையைக்கும் (1)
தொய்யா விழு சீர் வளம் கெழு வையைக்கும்/கொய் உளை மான் தேர் கொடி தேரான் கூடற்கும் - பரி 17/44,45

 TOP
 
  வையையும் (1)
தீரமும் வையையும் சேர்கின்ற கண் கவின் - பரி 22/35

 TOP
 
  வையையுள் (1)
தண்டு தழுவா தாவு நீர் வையையுள்/கண்ட பொழுதில் கடும் புனல் கை வாங்க - பரி 11/106,107

 TOP