<<முந்திய பக்கம் சங்க இலக்கியம் - தொடரடைவு

வீ - முதல் சொற்கள்
வீ 142
வீ-வயின் 1
வீங்க 5
வீங்கி 4
வீங்கிய 4
வீங்கின 2
வீங்கு 61
வீங்குபு 4
வீங்குவனள் 1
வீச 2
வீசாயோ 1
வீசி 34
வீசிய 2
வீசியோயே 1
வீசினை 1
வீசு 10
வீசும் 10
வீட்டி 1
வீட 19
வீடு 4
வீடுமோ 1
வீத்த 1
வீதல் 1
வீதலின் 1
வீதியை 1
வீந்த 2
வீந்து 3
வீய்ந்து 1
வீய 2
வீயா 7
வீயாது 3
வீயும் 3
வீரர் 1
வீரன் 1
வீரை 2
வீவது-கொல் 1
வீவு 3
வீழ் 82
வீழ்-மின் 1
வீழ்க்கும் 2
வீழ்க்கும்மே 1
வீழ்க்குவனே 1
வீழ்க்கை 1
வீழ்த்த 4
வீழ்த்து 6
வீழ்தரு 1
வீழ்தும் 1
வீழ்ந்த 17
வீழ்ந்தன்றால் 1
வீழ்ந்தன்று 2
வீழ்ந்தன்று-மன் 1
வீழ்ந்தன்றே 1
வீழ்ந்தன 2
வீழ்ந்தனவே 1
வீழ்ந்தார் 1
வீழ்ந்தான் 2
வீழ்ந்து 18
வீழ்ந்தேன் 1
வீழ்ந்தோர் 4
வீழ்நரின் 1
வீழ்ப்ப 2
வீழ்ப்பவும் 1
வீழ்பவற்கு 1
வீழ்பு 2
வீழ்வார் 5
வீழ்வார்-கண் 1
வீழ்வாரும் 1
வீழ்வு 2
வீழ 7
வீழவும் 1
வீழா 3
வீழுநர் 1
வீழுநர்க்கு 1
வீழும் 6
வீளை 6
வீளையர் 2
வீளையொடு 1
வீற்றிருக்கும் 2
வீற்றிருந்த 5
வீற்றிருந்து 1
வீற்றிருந்தோரை 1
வீற்று 4
வீற்று_வீற்று 1
வீறியது 1
வீறு 20
வீறு_வீறு 2
வீறுபடு 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
முழுப் பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
  வீ (142)
நகு முல்லை உகு தேறு வீ/பொன் கொன்றை மணி காயா - பொரு 200,201
நறு வீ உறைக்கும் நாக நெடு வழி - சிறு 88
சிறு வீ முல்லைக்கு பெரும் தேர் நல்கிய - சிறு 89
நறு வீ நாகமும் அகிலும் ஆரமும் - சிறு 116
புகர் இணர் வேங்கை வீ கண்டு அன்ன - பெரும் 194
நாழி கொண்ட நறு வீ முல்லை - முல் 9
வெள்ளி அன்ன ஒள் வீ உதிர்ந்து - மது 280
விளை தயிர் பிதிர்வின் வீ உக்கு இருவி-தொறும் - மலை 109
நிரை இதழ் குவளை கடி வீ தொடினும் - மலை 189
செ வீ வேங்கை பூவின் அன்ன - மலை 434
வேங்கை வீ உகும் ஓங்கு மலை கட்சி - நற் 13/7
சிறு வீ ஞாழல் துறையும்-மார் இனிதே - நற் 31/5
மன்ற புன்னை மா சினை நறு வீ/முன்றில் தாழையொடு கமழும் - நற் 49/8,9
வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே - நற் 51/11
குறு நிலை குரவின் சிறு நனை நறு வீ/வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈய - நற் 56/1,2
சிறு வீ ஞாழல் பெரும் கடல் சேர்ப்பனை - நற் 74/5
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின் - நற் 76/7
சிறை நாள் ஈங்கை உறை நனி திரள் வீ/கூரை நன் மனை குறும் தொடி மகளிர் - நற் 79/1,2
நீ உணர்ந்தனையே தோழி வீ உக - நற் 91/1
இதுவே நறு வீ ஞாழல் மா மலர் தாஅய் - நற் 96/1
பால் வீ தோல் முலை அகடு நிலம் சேர்த்தி - நற் 103/5
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர் - நற் 124/5
வீ ததர் வேங்கைய வியல் நெடும் புறவின் - நற் 161/3
புது வீ ஞாழலொடு புன்னை தாஅம் - நற் 167/8
மீமிசை கலித்த வீ நறு முல்லை - நற் 169/5
சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர் - நற் 191/1
எல்லியும் பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே - நற் 218/2
கரும் கால் வேங்கை செம் வீ வாங்கு சினை - நற் 222/1
வீ உக வரிந்த முன்றில் - நற் 232/8
பொன் வீ கொன்றையொடு பிடவு தளை அவிழ - நற் 246/8
சிறு வீ முல்லை தேம் கமழ் பசு வீ - நற் 248/1
சிறு வீ முல்லை தேம் கமழ் பசு வீ/பொறி வரி நன் மான் புகர் முகம் கடுப்ப - நற் 248/1,2
பொன் மருள் நறு வீ கல் மிசை தாஅம் - நற் 257/6
யாங்கு செய்வாம்-கொல் தோழி பொன் வீ/வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல் - நற் 259/1,2
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர - நற் 264/5
மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன் - நற் 267/5
வீ சுனை சிறு நீர் குடியினள் கழிந்த - நற் 271/7
நீடு சுரி இணர சுடர் வீ கொன்றை - நற் 302/2
நரை நிறம் படுத்த நல் இணர் தெறுழ் வீ/தாஅம் தேரலர்-கொல்லோ சேய் நாட்டு - நற் 302/5,6
சிறு வீ ஞாழல் துறையும்-மார் இனிதே - நற் 311/7
நறு விரை நன் புகை கொடாஅர் சிறு வீ/ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல் - நற் 315/6,7
வெற்பு அணி நறு வீ கல் சுனை உறைப்ப - நற் 334/4
வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்த - நற் 342/8
சிறு வீ முல்லை பெரிது கமழ் அலரி - நற் 361/1
குவளையொடு தொடுத்த நறு வீ முல்லை - நற் 367/8
எரி அகைந்து அன்ன வீ ததை இணர - நற் 379/3
கரும் கால் வேங்கை வீ உகு துறுகல் - குறு 47/1
ஐயவி அன்ன சிறு வீ ஞாழல் - குறு 50/1
கோடல் எதிர் முகை பசு வீ முல்லை - குறு 62/1
வெள் வீ தாழை திரை அலை - குறு 163/4
சென்ற நாட்ட கொன்றை அம் பசு வீ/நம் போல் பசக்கும்-காலை தம் போல் - குறு 183/1,2
வெருகு சிரித்து அன்ன பசு வீ மென் பிணி - குறு 220/4
கொன்றை ஒள் வீ தாஅய் செல்வர் - குறு 233/2
வீயா மென் சினை வீ உக யானை - குறு 247/5
வெண் தோடு இரியும் வீ ததை கானல் - குறு 304/6
நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய் - குறு 318/2
சிறு வீ ஞாழல் வேர் அளை பள்ளி - குறு 328/1
வீ ததை வியல் அரில் துஞ்சி பொழுது செல - குறு 338/3
பல் வீ படரிய பசு நனை குரவம் - குறு 341/1
குமரி வாகை கோல் உடை நறு வீ/மட மா தோகை குடுமியின் தோன்றும் - குறு 347/2,3
சிறு வீ முல்லை கொம்பின் தாஅய் - குறு 348/3
வெண் மணல் விரிந்த வீ ததை கானல் - குறு 386/1
நனை முதிர் ஞாழல் தினை மருள் திரள் வீ/நெய்தல் மா மலர் பெய்த போல - குறு 397/1,2
நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும் - ஐங் 84/3
வீ இனிது கமழும் துறைவனை - ஐங் 148/2
பொன் வீ மணி அரும்பினவே - ஐங் 201/3
பொன் மலி புது வீ தாஅம் அவர் நாட்டு - ஐங் 208/3
பெரு வரை வேங்கை பொன் மருள் நறு வீ/மான் இன பெரும் கிளை மேயல் ஆரும் - ஐங் 217/1,2
கரும் கால் வேங்கை மா தகட்டு ஒள் வீ/இரும் கல் வியல் அறை வரிப்ப தாஅம் - ஐங் 219/1,2
கால் எறுழ் ஒள் வீ தாஅய - ஐங் 308/3
பொரி அரை கோங்கின் பொன் மருள் பசு வீ/விரி இணர் வேங்கையொடு வேறு பட மிலைச்சி - ஐங் 367/1,2
சுடர் வீ வாகை கடி முதல் தடிந்த - பதி 40/15
வரை சேர்பு எழுந்த சுடர் வீ வேங்கை - பதி 41/8
இஞ்சி வீ விராய பைம் தார் பூட்டி - பதி 42/10
துய் வீ வாகை நுண் கொடி உழிஞை - பதி 43/23
கடவுள் வாகை துய் வீ ஏய்ப்ப - பதி 66/15
சுடர் வீ வாகை நன்னன் தேய்த்து - பதி 88/10
வீ மலி கான்யாற்றின் துருத்தி குறுகி - பரி 10/30
சினை விரிந்து உதிர்ந்த வீ புதல் விரி போதொடும் - பரி 20/102
இவட்கே அலங்கு இதழ் கோடல் வீ உகுபவை போல் - கலி 7/15
இறுவரை வேங்கையின் ஒள் வீ சிதறி - கலி 41/11
வீ அகம் புலம்ப வேட்டம் போகிய - கலி 46/1
இரவின் வாரல் ஐய விரவு வீ/அகல் அறை வரிக்கும் சாரல் - கலி 49/23,24
ஆங்கு ஆக அ திறம் அல்லா-கால் வேங்கை வீ/முற்று எழில் கொண்ட சுணங்கு அணி பூண் ஆகம் - கலி 64/26,27
வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்-மன் - கலி 77/17
கமழ் தண் தாது உதிர்ந்து உக ஊழ்-உற்ற கோடல் வீ/இதழ் சோரும் குலை போல இறை நீவு வளையாட்கு - கலி 121/13,14
கானல் கமழ் ஞாழல் வீ ஏய்ப்ப தோழி என் - கலி 131/19
நறு வீ தாழ் புன்னை கீழ் நயந்து நீ அளித்த-கால் - கலி 136/13
நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் - அகம் 2/7
பூ வீ கொடியின் புல்லென போகி - அகம் 19/16
கோடு அறை கொம்பின் வீ உக தீண்டி - அகம் 21/11
வீ ஏர் வண்ணம் கொண்டன்று-கொல்லோ - அகம் 57/13
பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும் - அகம் 70/9
பைம் கொடி முல்லை மென் பத புது வீ/வெண் களர் அரி மணல் நன் பல தாஅய் - அகம் 74/6,7
வலம் சுரி மராஅத்து சுரம் கமழ் புது வீ/சுரி ஆர் உளை தலை பொலிய சூடி - அகம் 83/1,2
நறு வீ முல்லை நாள்_மலர் உதிரும் - அகம் 84/8
நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை - அகம் 85/11
ஆலி ஒப்பின் தூம்பு உடை திரள் வீ/ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க - அகம் 95/7,8
உதிர் வீ அம் சினை தாஅய் எதிர் வீ - அகம் 99/7
உதிர் வீ அம் சினை தாஅய் எதிர் வீ/மராஅ மலரொடு விராஅய் பராஅம் - அகம் 99/7,8
பசு நனை நறு வீ பரூஉ பரல் உறைப்ப - அகம் 107/20
விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின் - அகம் 114/3
வீ கமழ் நெடு வழி ஊது வண்டு இரிய - அகம் 124/12
ஆலி அன்ன வால் வீ தாஅய் - அகம் 125/4
நல்_நாள் வேங்கை வீ நன் களம் வரிப்ப - அகம் 133/4
முல்லை வீ கழல் தாஅய் வல்லோன் - அகம் 134/5
வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில் - அகம் 137/10
நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற - அகம் 164/6
வெறி ஏன்றன்றே வீ கமழ் கானம் - அகம் 164/7
ஊழ்-உறு நறு வீ கடுப்ப கேழ் கொள - அகம் 174/11
வீ ததை கானல் வண்டல் அயர - அகம் 180/3
வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில் - அகம் 184/7
அத்த பாதிரி துய் தலை புது வீ/எரி இதழ் அலரியொடு இடைப்பட விரைஇ - அகம் 191/1,2
நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன் - அகம் 202/5
ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீ/புலி பொறி கடுப்ப தோன்றலின் கய வாய் - அகம் 228/10,11
மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய் - அகம் 232/8
புன் கால் பாதிரி அரி நிற திரள் வீ/நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப - அகம் 237/1,2
செம் வீ ஞாழல் கரும் கோட்டு இரும் சினை - அகம் 240/1
வெறி கமழ் கொண்ட வீ ததை புறவின் - அகம் 254/16
புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ - அகம் 260/9
கான பாதிரி கரும் தகட்டு ஒள் வீ/வேனில் அதிரலொடு விரைஇ காண்வர - அகம் 261/1,2
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும் - அகம் 302/6
முள் கொம்பு ஈங்கை துய் தலை புது வீ/ஈன்ற மாத்தின் இளம் தளிர் வருட - அகம் 306/3,4
வேலி சுற்றிய வால் வீ முல்லை - அகம் 314/19
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப - அகம் 317/11
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்து - அகம் 317/15
பொன் வீ வேங்கை புது மலர் புரைய - அகம் 319/8
வண்டு உண் நறு வீ துமித்த நேமி - அகம் 324/11
முத்தின் அன்ன வெள் வீ தாஅய் - அகம் 335/20
புழல் வீ இருப்பை புன் காட்டு அத்தம் - அகம் 351/8
நன் மலர் நறு வீ தாஅம் - அகம் 360/18
வீ தேர் பறவை விழையும் - அகம் 371/13
ஓங்கு இரும் சிலம்பின் ஒள் இணர் நறு வீ/வேங்கை அம் கவட்டு இடை நிவந்த இதணத்து - அகம் 388/6,7
வீ கமழ் நெடும் சினை புலம்ப காவு-தொறும் - புறம் 36/8
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப - புறம் 119/2
பொன் அன்ன வீ சுமந்து - புறம் 137/10
மா தகட்டு ஒள் வீ தாய துறுகல் - புறம் 202/19
வெள் வீ வேலி கோடை_பொருந - புறம் 205/6
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீ/போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து - புறம் 265/2,3
கான ஊகின் கழன்று உகு முது வீ/அரியல் வான் குழல் சுரியல் தங்க - புறம் 307/5,6
வீ ததை முல்லை பூ பறிக்குந்து - புறம் 339/3
அகடு நனை வேங்கை வீ கண்டு அன்ன - புறம் 390/21

 TOP
 
  வீ-வயின் (1)
செல் நீர் வீ-வயின் தேன் சோர பல் நீர் - பரி 16/42

 TOP
 
  வீங்க (5)
நீயே வினை மாண் காழகம் வீங்க கட்டி - கலி 7/9
பாலொடு வீங்க தவ நெடிது ஆயினை - கலி 82/3
வில்லோர் தூணி வீங்க பெய்த - அகம் 9/2
வீங்க முயங்கல் யாம் வேண்டினமே - அகம் 26/15
ஏந்து முலை முற்றம் வீங்க பல் ஊழ் - அகம் 51/11

 TOP
 
  வீங்கி (4)
நுண் நீர் தெவிள வீங்கி புடை திரண்டு - நெடு 25
அம் மெல் ஆகம் நிறைய வீங்கி/கொம்மை வரி முலை செப்புடன் எதிரின - குறு 159/3,4
கரந்து யான் அரக்கவும் கை நில்லா வீங்கி/சுரந்த என் மென் முலை பால் பழுது ஆக நீ - கலி 84/3,4
உடலுநர் உட்க வீங்கி கடல் என - புறம் 17/36

 TOP
 
  வீங்கிய (4)
நல்ல மன்ற இவண் வீங்கிய செலவே - பதி 92/16
பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய/மென் முலை முற்றம் கடவாதோர் என - அகம் 279/4,5
நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது - அகம் 289/7
நேர் இறை முன்கை வீங்கிய வளையே - அகம் 336/23

 TOP
 
  வீங்கின (2)
வீங்கின மாதோ தோழி என் வளையே - ஐங் 192/4
வாடிய மென் தோளும் வீங்கின/ஆடு அமை வெற்பன் அளித்த-கால் போன்றே - கலி 43/30,31

 TOP
 
  வீங்கு (61)
வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின் - சிறு 155
அம் கோட்டு செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின் - சிறு 222
குறும் தொடி ஏய்க்கும் மெலிந்து வீங்கு திவவின் - பெரும் 13
விசி வீங்கு இன் இயம் கடுப்ப கயிறு பிணித்து - பெரும் 56
சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவு உடை - பெரும் 73
மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை - முல் 59
வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூ - மது 376
வெள்ளி வள்ளி வீங்கு இறை பணை தோள் - நெடு 36
தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்ப - நெடு 120
விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து - நெடு 161
செம் பொறிக்கு ஏற்ற வீங்கு இறை தட கையின் - குறி 123
விரை பரி வருந்திய வீங்கு செலல் இளையர் - நற் 21/1
ஓங்கு வரை மிளிர ஆட்டி வீங்கு செலல் - நற் 51/3
வீங்கு உவர் கவவின் நீங்கல் செல்லேம் - நற் 52/5
வீங்கு சுரை ஞெமுங்க வாங்கி தீம் பால் - நற் 57/5
ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி - நற் 98/3
விரி உளை பொலிந்த வீங்கு செலல் கலி_மா - நற் 121/8
வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது - நற் 148/6
வீங்கு மடல் குடம்பை பைதல் வெண்_குருகு - நற் 199/2
ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம் - நற் 240/4
வீங்கு நீர் வார கண்டும் - நற் 325/8
நிலம் தூங்கு அணல வீங்கு முலை செருத்தல் - குறு 344/4
வீங்கு இழை நெகிழ விம்மி ஈங்கே - குறு 358/1
இலங்கு வீங்கு எல் வளை ஆய் நுதல் கவின - ஐங் 200/1
வீங்கு வளை நெகிழ பிரிதல் - ஐங் 285/4
மாதிரம் பனிக்கும் மறம் வீங்கு பல் புகழ் - பதி 12/8
வளம் வீங்கு பெருக்கம் இனிது கண்டிகுமே - பதி 24/17
வீங்கு இறை தடைஇய அமை மருள் பணை தோள் - பதி 54/3
வருநர் வரையா வளம் வீங்கு இருக்கை - பதி 75/7
வீங்கு பெரும் சிறப்பின் ஓங்கு புகழோயே - பதி 90/40
வெரு வரு கொல் யானை வீங்கு தோள் மாறன் - பரி 24/91
வீங்கு இறை பணை தோள் வரைந்தனன் கொளற்கே - கலி 38/26
பெரும் களிற்று இனத்தொடு வீங்கு எருத்து எறுழ் முன்பின் - கலி 48/6
வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயல் கொண்ட - கலி 66/1
வீங்கு இறை வடு கொள வீழுநர் புணர்ந்தவர் - கலி 66/5
பெரும் திரு நிலைஇய வீங்கு சோற்று அகல் மனை - கலி 83/1
வீங்கு இழை மாதர் திறத்து ஒன்று நீங்காது - கலி 139/12
வீங்கு மாண் செருத்தல் தீம் பால் பிலிற்ற - அகம் 14/10
தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடிய - அகம் 54/7
வீங்கு இறை பணை தோள் நெகிழ சேய் நாட்டு - அகம் 59/16
வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுக - அகம் 64/6
விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர் - அகம் 89/10
வீங்கு மென் சுரைய ஏற்று_இனம் தரூஉம் - அகம் 105/15
வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை - அகம் 175/1
ஓம்பு அரண் கடந்த வீங்கு பெரும் தானை - அகம் 181/4
வீங்கு இழை நெகிழ சாஅய் செல்லலொடு - அகம் 251/3
முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு - அகம் 284/3
சில் சுணங்கு அணிந்த செறிந்து வீங்கு இள முலை - அகம் 302/13
ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம் - அகம் 312/4
வீங்கு விசை பிணித்த விரை பரி நெடும் தேர் - அகம் 339/1
வாங்கு அமை புரையும் வீங்கு இறை பணை தோள் - அகம் 343/1
வித்தா வல்சி வீங்கு சிலை மறவர் - அகம் 377/4
வீங்கு சுவல் மொசிய தாங்கு நுகம் தழீஇ - அகம் 400/10
யாங்கனம் ஒத்தியோ வீங்கு செலல் மண்டிலம் - புறம் 8/6
வீங்கு சிறை வியல் அருப்பம் - புறம் 17/28
நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப - புறம் 68/13
ஒளிறு முகத்து ஏந்திய வீங்கு தொடி மருப்பின் - புறம் 336/3
வீங்கு முலை கறக்குந்து - புறம் 352/2
வீங்கு இறை பணை தோள் மடந்தை - புறம் 354/9
விசைப்பு உறு வல் வில் வீங்கு நாண் உகைத்த - புறம் 369/8
வீங்கு விசி புது போர்வை - புறம் 387/3

 TOP
 
  வீங்குபு (4)
பெரும் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேர - கலி 134/6
விசை வாங்கு தோலின் வீங்குபு ஞெகிழும் - அகம் 96/7
யாங்கு என உணர்கோ யானே வீங்குபு/தலை வரம்பு அறியா தகை வரல் வாடையொடு - அகம் 273/9,10
பெரும் துடி வள்பின் வீங்குபு நெகிழா - அகம் 372/12

 TOP
 
  வீங்குவனள் (1)
தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி - நற் 179/6

 TOP
 
  வீச (2)
மாலை வெண் காழ் காவலர் வீச/நறும் பூ புறவின் ஒடுங்கு முயல் இரியும் - ஐங் 421/1,2
கடி மனை மாடத்து கங்குல் வீச/திருந்து இழை நெகிழ்ந்து பெரும் கவின் சாய - அகம் 255/16,17

 TOP
 
  வீசாயோ (1)
கண்ணீர் கடலால் கனை துளி வீசாயோ/கொண்மூ குழீஇ முகந்து - கலி 145/21,22

 TOP
 
  வீசி (34)
இரும் பிடி குளிர்ப்ப வீசி பெரும் களிற்று - திரு 304
உரிய எல்லாம் ஓம்பாது வீசி/நனி புகன்று உறைதும் என்னாது ஏற்றெழுந்து - மது 146,147
கோலோர் கொன்று மேலோர் வீசி/மென் பிணி வன் தொடர் பேணாது காழ் சாய்த்து - மது 381,382
ஆய் கோல் அவிர் தொடி விளங்க வீசி/போது அவிழ் புது மலர் தெரு_உடன் கமழ - மது 563,564
கொடுஞ்சி நெடும் தேர் களிற்றொடும் வீசி/களம்-தோறும் கள் அரிப்ப - மது 752,753
கன்று கோள் ஒழிய கடிய வீசி/குன்று குளிர்ப்பு அன்ன கூதிர் பானாள் - நெடு 11,12
செறி தொடி தெளிர்ப்ப வீசி மறுகில் - நற் 20/5
அகல் இலை அகல வீசி அகலாது - நற் 89/6
ஒளிர் சினை அதிர வீசி விளிபட - நற் 105/2
விரவு மலர் உதிர வீசி/இரவு பெயல் பொழிந்த உதவியோயே - நற் 139/9,10
துவலை தண் துளி வீசி/பயலை செய்தன பனி படு துறையே - ஐங் 141/2,3
வறந்த ஞாலம் தளிர்ப்ப வீசி/கறங்கு குரல் எழிலி கார் செய்தன்றே - ஐங் 452/1,2
இரு நிலம் குளிர்ப்ப வீசி அல்கலும் - ஐங் 470/1
வயிரியர் கண்ணுளர்க்கு ஓம்பாது வீசி/கடி மிளை குண்டு கிடங்கின் - பதி 20/16,17
அரிய என்னாது ஓம்பாது வீசி/கலம் செல சுரத்தல் அல்லது கனவினும் - பதி 44/4,5
உரை சால் நன் கலம் வரைவு இல வீசி/அனையை ஆகல் மாறே எனையதூஉம் - பதி 54/8,9
யாமை எடுத்து நிறுத்தற்றால் தோள் இரண்டும் வீசி/யாம் வேண்டேம் என்று விலக்கவும் எம் வீழும் - கலி 94/31,32
இவள் தான் திருத்தா சுமட்டினள் ஏனை தோள் வீசி/வரி கூழ வட்டி தழீஇ அரி குழை - கலி 109/13,14
மண் கண் குளிர்ப்ப வீசி தண் பெயல் - அகம் 23/1
இரந்தோர் வறும் கலம் மல்க வீசி/பாடு பல அமைத்து கொள்ளை சாற்றி - அகம் 30/9,10
என்றூழ் வியன் குளம் நிறைய வீசி/பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை - அகம் 42/9,10
செறி தொடி தெளிர்ப்ப வீசி சிறிது அவண் - அகம் 106/8
பொலம் தொடி தெளிர்ப்ப வீசி சேவடி - அகம் 117/8
சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி/நெல்லின் நேரே வெண் கல் உப்பு என - அகம் 140/6,7
கோல் அமை விழு தொடி விளங்க வீசி/கால் உறு தளிரின் நடுங்கி ஆனாது - அகம் 162/14,15
இரும் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி/பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது - அகம் 214/3,4
பயன் நிலம் குழைய வீசி பெயல் முனிந்து - அகம் 235/4
துய் அவிழ் பனி மலர் உதிர வீசி/தொழில் மழை பொழிந்த பானாள் கங்குல் - அகம் 252/10,11
மெல் இறை பணை தோள் விளங்க வீசி/வல்லுவை-மன்னால் நடையே கள்வர் - அகம் 257/11,12
இலங்கு வளை தெளிர்ப்ப வீசி சிலம்பு நக - அகம் 261/5
ஓம்பாது உண்டு கூம்பாது வீசி/வரிசைக்கு வருந்தும் இ பரிசில் வாழ்க்கை - புறம் 47/5,6
அரிது பெறு பொலம் கலம் எளிதினின் வீசி/நட்டோர் நட்ட நல் இசை குமணன் - புறம் 160/11,12
வீறு சால் நன் கலம் வீசி நன்றும் - புறம் 362/15
இரவலர்க்கு அரும் கலம் அருகாது வீசி/வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல் - புறம் 367/8,9

 TOP
 
  வீசிய (2)
ஆழி தலை வீசிய அயிர் சேற்று அருவி - குறு 372/4
கொள் பதம் ஒழிய வீசிய புலனும் - புறம் 23/7

 TOP
 
  வீசியோயே (1)
வீசியோயே வியல்_இடம் கமழ - புறம் 50/13

 TOP
 
  வீசினை (1)
நேர் சிலம்பு அரி ஆர்ப்ப நிரை தொடி கை வீசினை/ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய் கேள் - கலி 58/5,6

 TOP
 
  வீசு (10)
அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின் - குறி 48
தேம் பாய் கண்ணி தேர் வீசு கவி கை - மலை 399
வேந்து வீசு கவரியின் பூ புதல் அணிய - நற் 241/6
வீ பெய் கூந்தல் வீசு வளி உளர - நற் 264/5
தேர் வீசு இருக்கை போல - நற் 381/9
மா வீசு வண் மகிழ் அஃதை போற்றி - அகம் 113/4
இசை நல் ஈகை களிறு வீசு வண் மகிழ் - அகம் 152/11
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி - புறம் 69/18
தேர் வீசு இருக்கை நெடியோன் குன்றே - புறம் 114/6
வெம் விசை புரவி வீசு வளி ஆக - புறம் 369/7

 TOP
 
  வீசும் (10)
பல் பண்டம் பகர்ந்து வீசும்/தொல் கொண்டி துவன்று இருக்கை - பட் 211,212
கழுது கண் பனிப்ப வீசும் அதன்_தலை - குறு 161/2
மீமிசை தாஅய் வீசும் வளி கலந்து - குறு 200/2
நீர் பட எழிலி வீசும்/கார் பெயற்கு எதிரிய கானமும் உடைத்தே - ஐங் 433/2,3
சிறு மகிழானும் பெரும் கலம் வீசும்/போர் அடு தானை பொலம் தார் குட்டுவ - பதி 23/9,10
இகல் வினை மேவலன் தண்டாது வீசும்/செல்லாமோ தில் பாண்_மகள் காணியர் - பதி 60/2,3
கனை பெயல் தண் துளி வீசும் பொழுதில் குறி வந்தாள் - கலி 90/22
விரிந்து இலங்கு வெண் நிலா வீசும் பொழுதினான் - கலி 145/40
வெண்_குருகு நரல வீசும்/நுண் பல் துவலைய தண் பனி நாளே - அகம் 13/23,24
சால் அவிழ் நெடும் குழி நிறைய வீசும்/மாஅல் யானை ஆஅய் கானத்து - அகம் 152/20,21

 TOP
 
  வீட்டி (1)
சுர முதல் வருத்தம் மர முதல் வீட்டி/பாடு இன் தெண் கிணை கறங்க காண்வர - அகம் 301/9,10

 TOP
 
  வீட (19)
வாக்குபு தரத்தர வருத்தம் வீட/ஆர உண்டு பேர் அஞர் போக்கி - பொரு 87,88
அழி பசி வருத்தம் வீட பொழி கவுள் - சிறு 140
தளர் நடை வருத்தம் வீட அலர் முலை - பெரும் 250
நும்மின் நெஞ்சத்து அவலம் வீட/இம்மென் கடும்போடு இனியிர் ஆகுவிர் - மலை 285,286
அற்கு இடை உழந்த நும் வருத்தம் வீட/அகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய - மலை 437,438
பரி புலம்பு அலைத்த நும் வருத்தம் வீட/எரி கான்று அன்ன பூ சினை மராஅத்து - மலை 497,498
நோயும் நெகிழ்ச்சியும் வீட சிறந்த - நற் 82/1
நாள்_தொழில் வருத்தம் வீட சேண் சினை - நற் 330/4
இரை நசை வருத்தம் வீட மரம் மிசை - நற் 385/4
பணி குறை வருத்தம் வீட/துணியின் எவனோ தோழி நம் மறையே - குறு 333/5,6
விண் தோய் வரை பந்து எறிந்த அயா வீட/தண் தாழ் அருவி அர_மகளிர் ஆடுபவே - கலி 40/22,23
தொழில் செருக்கு அனந்தர் வீட எழில் தகை - அகம் 37/6
நோய் அசா வீட முயங்குகம் பலவே - அகம் 47/19
பாசறை வருத்தம் வீட நீயும் - அகம் 124/8
நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி - அகம் 162/16
நின் திறத்து அவலம் வீட இன்று இவண் - அகம் 340/12
மதவு உடை நாக்கொடு அசை வீட பருகி - அகம் 341/8
யாமை புழுக்கின் காமம் வீட ஆரா - புறம் 212/3
பசித்த ஒக்கல் பழங்கண் வீட/வீறு சால் நன் கலம் நல்கு-மதி பெரும - புறம் 389/14,15

 TOP
 
  வீடு (4)
வீடு உறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் - நற் 366/2
பிணி வீடு பெறுக மன்னவன் தொழிலே - ஐங் 447/1
ஏடா நினக்கு தவறு உண்டோ நீ வீடு பெற்றாய் - கலி 87/5
கோடை பருத்தி வீடு நிறை பெய்த - புறம் 393/12

 TOP
 
  வீடுமோ (1)
காண வீடுமோ தோழி என் நலனே - நற் 347/11

 TOP
 
  வீத்த (1)
மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணி - கலி 72/6

 TOP
 
  வீதல் (1)
வீதல் அறியா விழு பொருள் நச்சியார்க்கு - கலி 86/21

 TOP
 
  வீதலின் (1)
குறு நெடும் துணையொடும் கூமை வீதலின்/குடி முறை பாடி ஒய்யென வருந்தி - புறம் 393/2,3

 TOP
 
  வீதியை (1)
வெள்ளி வீதியை போல நன்றும் - அகம் 147/9

 TOP
 
  வீந்த (2)
வறம் கொல வீந்த கானத்து குறும் பூ - நற் 238/1
பொறை ஆற்றா நுசுப்பினால் பூ வீந்த கொடி போன்றாள் - கலி 132/18

 TOP
 
  வீந்து (3)
தீம் புனல் நெரிதர வீந்து உக்கு ஆஅங்கு - குறு 149/4
பெரும் பெயல் தலைய வீந்து ஆங்கு இவள் - குறு 165/4
வீந்து உகு போர்_களத்து ஆடும் கோவே - பதி 56/8

 TOP
 
  வீய்ந்து (1)
வேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை - புறம் 373/19

 TOP
 
  வீய (2)
பிரிந்தவர் நுதல் போல பீர் வீய காதலர் - கலி 31/4
நறு வீய நனம் சாரல் சிலம்பலின் கதுமென - கலி 45/6

 TOP
 
  வீயா (7)
வீயா யாணர் வளம் கெழு பாக்கத்து - பெரும் 367
வீயா மென் சினை வீ உக யானை - குறு 247/5
வீயா யாணர் நின்-வயினானே - பதி 35/10
வீயா யாணர் நின்-வயினானே - பதி 36/1
வீயா விழு புகழ் விண் தோய் வியன் குடை - அகம் 135/11
வீயா சிறப்பின் வேள்வி முற்றி - புறம் 15/20
வீயா திருவின் விறல் கெழு தானை - புறம் 122/4

 TOP
 
  வீயாது (3)
வீயாது சுரக்கும் அவன் நாள்_மகிழ்_இருக்கையும் - மலை 76
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே - புறம் 168/22
அதனால் நீயும் கேள்-மதி அத்தை வீயாது/உடம்பொடு நின்ற உயிரும் இல்லை - புறம் 363/7,8

 TOP
 
  வீயும் (3)
இரும் கால் வீயும் பெரு மர குழாமும் - மலை 265
நாறு கமழ் வீயும் கூறும் இசை முழவமும் - பரி 8/99
ஈயாது வீயும் உயிர் தவ பலவே - புறம் 235/20

 TOP
 
  வீரர் (1)
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே - அகம் 36/23

 TOP
 
  வீரன் (1)
அணி துறை வீரன் மார்பே - ஐங் 14/3

 TOP
 
  வீரை (2)
வீரை வேண்மான் வெளியன் தித்தன் - நற் 58/5
அடு போர் வேளிர் வீரை முன்துறை - அகம் 206/13

 TOP
 
  வீவது-கொல் (1)
வீவது-கொல் என் வருந்திய உடம்பே - நற் 284/11

 TOP
 
  வீவு (3)
நாவல் அம் தண் பொழில் வீவு இன்று விளங்க - பெரும் 465
விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் - குறி 3
வீவு இல் குடி பின் இரும் குடி ஆயரும் - கலி 105/7

 TOP
 
  வீழ் (82)
கீழ் வீழ் தொடியொடு மீமிசை கொட்ப ஒரு கை - திரு 114
ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு அருளி - சிறு 13
பிடி கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்து - சிறு 191
வீழ் இல் தாழை குழவி தீம் நீர் - பெரும் 357
கல் வீழ் அருவி கடல் படர்ந்து ஆங்கு - பெரும் 427
கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின் - பெரும் 496
வீழ் முக கேழல் அட்ட பூசல் - மது 295
வீழ் துணை தழீஇ வியல் விசும்பு கமழ - மது 561
கலிழ்ந்து வீழ் அருவி பாடு விறந்து அயல - நெடு 97
பின் அமை நெடு வீழ் தாழ துணை துறந்து - நெடு 137
வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின் - நெடு 140
மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரி பனி - நெடு 164
புடை வீழ் அம் துகில் இட-வயின் தழீஇ - நெடு 181
விசும்பு ஆடு பறவை வீழ் பதி படர - குறி 46
வீழ் தாழை தாள் தாழ்ந்த - பட் 84
புலி உற வெறுத்த தன் வீழ் பிணை உள்ளி - மலை 404
கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரி பனி - நற் 30/6
தான் வீழ் பெடைக்கு பயிரிடூஉ சுரக்கும் - நற் 31/4
வீழ் துணை பயிரும் கையறு முரல் குரல் - நற் 71/9
வீழ் தாழ் தாழை பூ கமழ் கானல் - நற் 78/4
வேனில் இற்றி தோயா நெடு வீழ்/வழி நார் ஊசலின் கோடை தூக்கு-தொறும் - நற் 162/9,10
எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே - நற் 228/9
வீழ் கடை திரள் காய் ஒருங்கு உடன் தின்று - நற் 271/6
புன் புறா வீழ் பெடை பயிரும் - நற் 314/11
நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து - நற் 343/4
வீழ் காவோலை சூழ் சிறை யாத்த - நற் 354/3
வீழ் மா மணிய புனை நெடும் கூந்தல் - நற் 374/6
புல் வீழ் இற்றி கல் இவர் வெள் வேர் - குறு 106/1
கல் பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி - குறு 134/5
விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்ப - குறு 189/4
வீழ் தாழ் தாழை ஊழ்-உறு கொழு முகை - குறு 228/1
கீழ் தாழ்வு அன்ன வீழ் கோள் பலவின் - குறு 257/3
வீழ் உறை இனிய சிதறி ஊழின் - குறு 270/2
பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ - குறு 353/6
உறை வீழ் ஆலியின் தொகுக்கும் சாரல் - ஐங் 213/3
விருந்தின் வீழ் பிடி எண்ணு முறை பெறாஅ - பதி 43/5
வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்ப சுனை மலர - பரி 8/23
பூ வீழ் அரியின் புலம்ப போகாது - பரி 11/118
தண் தும்பி இனம் காண்-மின் தான் வீழ் பூ நெரித்தாளை - பரி 11/130
தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும் - பரி 15/24
மேலோர் இயங்குதலால் வீழ் மணி நீலம் செறு உழக்கும் அரோ - பரி 17/41
மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண் பல் - கலி 14/3
மணம் நாறு நறு நுதல் மாரி வீழ் இரும் கூந்தல் - கலி 14/4
மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி - கலி 15/6
வீழ் கதிர் விடுத்த பூ விருந்து உண்ணும் இரும் தும்பி - கலி 29/16
ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற - கலி 40/26
வீழ் பெயல் கங்குலின் விளி ஓர்த்த ஒடுக்கத்தால் - கலி 48/8
சோர்ந்து வீழ் கதுப்பினாள் செய் குறி நீ வரின் - கலி 52/12
விறல் மலை வியல் அறை வீழ் பிடி உழையதா - கலி 53/2
தொய்யல் அம் தட கையின் வீழ் பிடி அளிக்கும் - கலி 54/13
மணம் கமழ் நறும் கோதை மாரி வீழ் இரும் கூந்தல் - கலி 60/2
வீழ் ஊசல் தூங்க பெறின் - கலி 131/11
மாரி வீழ் இரும் கூந்தல் மதைஇய நோக்கு எழில் உண்கண் - கலி 131/21
விரவு பல் உருவின வீழ் பெடை துணை ஆக - கலி 132/2
திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன் - அகம் 13/6
பழங்கண் கொண்ட கலிழ்ந்து வீழ் அவிர் அறல் - அகம் 19/13
தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கி - அகம் 20/6
துணை நிரைத்து அன்ன மா வீழ் வெண் பல் - அகம் 21/2
வீழ் களிறு மிசையா புலியினும் சிறந்த - அகம் 29/3
தாழ்வு இல் ஓங்கு சினை தொடுத்த வீழ் கயிற்று - அகம் 38/7
நெடு நிலை வியன் நகர் வீழ் துணை பயிரும் - அகம் 47/12
குறும் கால் இற்றி புன் தலை நெடு வீழ்/இரும் பிணர் துறுகல் தீண்டி வளி பொர - அகம் 57/6,7
பல் வீழ் ஆலம் போல - அகம் 70/16
நெய் கனி வீழ் குழல் அகப்பட தைஇ - அகம் 73/2
முகை நிரைத்து அன்ன மா வீழ் வெண் பல் - அகம் 162/12
ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை - அகம் 287/8
சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர் - அகம் 289/1
பிணி வீழ் ஆலத்து அலம் சினை ஏறி - அகம் 319/2
ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ்/கல் கண் சீக்கும் அத்தம் - அகம் 345/19,20
விலங்கு வீழ் அரி பனி பொலம் குழை தெறிப்ப - அகம் 351/12
வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி - அகம் 353/20
வீழ் பிடி கெடுத்த நெடும் தாள் யானை - அகம் 359/10
கணை இட கழிந்த தன் வீழ் துணை உள்ளி - அகம் 371/3
தாழை வேர் அளை வீழ் துணைக்கு இடூஉம் - அகம் 380/6
அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ்/தித்தி குறங்கில் திருந்த உரிஞ - அகம் 385/9,10
வீழ் பிடி கெடுத்த வெண் கோட்டு யானை - அகம் 392/2
கொழு நிழல் நெடும் சினை வீழ் பொறுத்து ஆங்கு - புறம் 58/3
திரு வீழ் நுண் பூண் பாண்டியன் மறவன் - புறம் 179/5
மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில் - புறம் 181/1
வீழ் குடி உழவன் வித்து உண்டு ஆங்கு - புறம் 230/13
வெள் வாய் வேட்டுவர் வீழ் துணை மகாஅர் - புறம் 324/3
ஒண் படை மாரி வீழ் கனி பெய்து என - புறம் 370/12

 TOP
 
  வீழ்-மின் (1)
நறவும் தொடு-மின் விடையும் வீழ்-மின்/பாசுவல் இட்ட புன் கால் பந்தர் - புறம் 262/1,2

 TOP
 
  வீழ்க்கும் (2)
தன் நலம் காட்டி தகையினால் கால் தட்டி வீழ்க்கும்/தொடர் தொடராக வலந்து படர் செய்யும் - கலி 97/17,18
தாள் படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும்/ஈர்ப்பு உடை கராஅத்து அன்ன என் ஐ - புறம் 104/3,4

 TOP
 
  வீழ்க்கும்மே (1)
மூன்றே கொழும் கொடி வள்ளி கிழங்கு வீழ்க்கும்மே/நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீது அழிந்து - புறம் 109/6,7

 TOP
 
  வீழ்க்குவனே (1)
வான் வீழ்க்குவனே வளி மாற்றுவன் என - பட் 272

 TOP
 
  வீழ்க்கை (1)
வீழ்க்கை பெரும் கரும்_கூத்து - கலி 65/29

 TOP
 
  வீழ்த்த (4)
எரி மலர் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி - பரி 9/4
முனை ஆ தந்து முரம்பின் வீழ்த்த/வில் ஏர் வாழ்க்கை விழு தொடை மறவர் - அகம் 35/5,6
தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர் - அகம் 337/11
வேழம் வீழ்த்த விழு தொடை பகழி - புறம் 152/1

 TOP
 
  வீழ்த்து (6)
ஏனல் காவலர் மா வீழ்த்து பறித்த - நற் 13/3
சிறு கண் யானை ஆள் வீழ்த்து திரிதரும் - ஐங் 314/3
சேம திரை வீழ்த்து சென்று அமளி சேர்குவோர் - பரி 10/34
நாகு ஆ வீழ்த்து திற்றி தின்ற - அகம் 249/13
பெரும் களிற்று தட கை புரைய கால் வீழ்த்து/இரும் பிடி தொழுதியின் ஈண்டுவன குழீஇ - அகம் 334/5,6
விடை வீழ்த்து சூடு கிழிப்ப - புறம் 366/17

 TOP
 
  வீழ்தரு (1)
வீழ்தரு புது புனல் ஆடுகம் - ஐங் 411/3

 TOP
 
  வீழ்தும் (1)
யாம் வீழ்தும் என்று தன் பின் செலவும் உற்றீயா - கலி 94/29

 TOP
 
  வீழ்ந்த (17)
நெடு நகர் வீழ்ந்த கரி குதிர் பள்ளி - மது 169
கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும் - மது 534
விழுமிய வீழ்ந்த குரிசிலர் தம்-மின் - மது 736
அரு விடர் வீழ்ந்த தன் கல்லா பார்ப்பிற்கு - மலை 312
அழுந்துபட வீழ்ந்த பெரும் தண் குன்றத்து - நற் 2/1
பார் பக வீழ்ந்த வேர் உடை விழு கோட்டு - நற் 24/1
வீழா கொள்கை வீழ்ந்த கொண்டி - நற் 174/9
தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு - நற் 197/6
வீழ்ந்த மா மழை தழீஇ பிரிந்தோர் - குறு 391/5
கையற வீழ்ந்த மை இல் வானமொடு - ஐங் 235/1
எவ்வி வீழ்ந்த செருவில் பாணர் - அகம் 115/8
நெறி கெட வீழ்ந்த துன் அரும் கூர் இருள் - அகம் 138/16
நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின் - அகம் 176/2
மறம் கந்து ஆக நல் அமர் வீழ்ந்த/நீள் கழல் மறவர் செல்வு-உழி செல்க என - புறம் 93/9,10
நெஞ்சு அற வீழ்ந்த புரைமையோனே - புறம் 307/14
முன்_நாள் வீழ்ந்த உரவோர் மகனே - புறம் 310/5
நிலம் பக வீழ்ந்த அலங்கல் பல் வேர் - புறம் 364/10

 TOP
 
  வீழ்ந்தன்றால் (1)
உடன் வீழ்ந்தன்றால் அமரே பெண்டிரும் - புறம் 62/13

 TOP
 
  வீழ்ந்தன்று (2)
அன்னை முன் வீழ்ந்தன்று அ பூ - கலி 115/9
சென்று வீழ்ந்தன்று அவன் - புறம் 235/14

 TOP
 
  வீழ்ந்தன்று-மன் (1)
கூழையுள் வீழ்ந்தன்று-மன்/அதனை கெடுத்தது பெற்றார் போல் கொண்டு யான் முடித்தது - கலி 107/9,10

 TOP
 
  வீழ்ந்தன்றே (1)
இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே/வீழ்ந்த மா மழை தழீஇ பிரிந்தோர் - குறு 391/4,5

 TOP
 
  வீழ்ந்தன (2)
விழுமிதின் வீழ்ந்தன கொழும் கொடி கவலை - மலை 128
வினை பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்ப - நற் 171/8

 TOP
 
  வீழ்ந்தனவே (1)
கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே/செறி முறை வெண் பலும் பறிமுறை நிரம்பின - குறு 337/2,3

 TOP
 
  வீழ்ந்தார் (1)
வீழ்ந்தார் விருப்பு அற்ற-கால் - கலி 69/24

 TOP
 
  வீழ்ந்தான் (2)
கோள் வழுக்கி தன் முன்னர் வீழ்ந்தான் மேல் செல்லாது - கலி 104/47
அரு குறை ஆற்றி வீழ்ந்தான் மன்ற - புறம் 288/7

 TOP
 
  வீழ்ந்து (18)
மழை வீழ்ந்து அன்ன மா தாள் கமுகின் - பெரும் 363
விடர் அளை வீழ்ந்து உக்கு ஆங்கு தொடர்பு அற - நற் 116/8
கருவி மா மழை வீழ்ந்து என எழுந்த - நற் 213/8
கிழங்கு கீழ் வீழ்ந்து தேன் மேல் தூங்கி - நற் 328/1
நீல் நிற இரும் கழி உட்பட வீழ்ந்து என - நற் 345/2
கருவி மா மழை வீழ்ந்து என அருவி - குறு 42/2
மங்குல் மா மழை வீழ்ந்து என பொங்கு மயிர் - குறு 90/3
எழால் உற வீழ்ந்து என கணவன் காணாது - குறு 151/2
ஒள் இழை உயர் மணல் வீழ்ந்து என - ஐங் 122/2
இரும் கல் விடர் அளை வீழ்ந்து என வெற்பில் - ஐங் 214/2
கொழுநன் மகிழ் தூங்கி கொய் பூ புனல் வீழ்ந்து/தழுவும் தகை வகைத்து தண் பரங்குன்று - பரி 21/44,45
அவன் நின் திருந்து அடி மேல் வீழ்ந்து இரக்கும் நோய் தீர்க்கும் - கலி 63/10
இட்டிகை நெடும் சுவர் விட்டம் வீழ்ந்து என - அகம் 167/13
ஆஅய் எயினன் வீழ்ந்து என ஞாயிற்று - அகம் 181/7
ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்து என புள் ஒருங்கு - அகம் 208/9
பூ போது சிதைய வீழ்ந்து என கூத்தர் - புறம் 28/13
கடுங்கண் கேழல் இடம் பட வீழ்ந்து என - புறம் 190/6
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்து என - புறம் 335/10

 TOP
 
  வீழ்ந்தேன் (1)
பொய்யாக வீழ்ந்தேன் அவன் மார்பின் வாயா செத்து - கலி 37/17

 TOP
 
  வீழ்ந்தோர் (4)
விழு தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர்/எழுத்து உடை நடுகல் இன் நிழல் வதியும் - அகம் 53/10,11
வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர்/எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கை - அகம் 109/7,8
வில் இட வீழ்ந்தோர் பதுக்கை கோங்கின் - அகம் 157/5
அம்பு விட வீழ்ந்தோர் வம்ப பதுக்கை - புறம் 3/21

 TOP
 
  வீழ்நரின் (1)
இறுவரை வீழ்நரின் நடுங்கி தெறுவர - அகம் 322/4

 TOP
 
  வீழ்ப்ப (2)
மரம்-தோறும் மை வீழ்ப்ப/நிண ஊன் சுட்டு உருக்கு அமைய - மது 754,755
வாயில் மாடம்-தொறும் மை விடை வீழ்ப்ப/நீ ஆங்கு கொண்ட விழவினும் பலவே - புறம் 33/21,22

 TOP
 
  வீழ்ப்பவும் (1)
மட்டு வாய் திறப்பவும் மை விடை வீழ்ப்பவும்/அட்டு ஆன்று ஆனா கொழும் துவை ஊன்_சோறும் - புறம் 113/1,2

 TOP
 
  வீழ்பவற்கு (1)
திரு முகம் இறைஞ்சினள் வீழ்பவற்கு இனைபவள் - கலி 77/3

 TOP
 
  வீழ்பு (2)
கடல்_மரம் கவிழ்ந்து என கலங்கி உடன் வீழ்பு/பலர் கொள் பலகை போல - நற் 30/8,9
வண்டு வீழ்பு அயரும் கானல் - குறு 306/5

 TOP
 
  வீழ்வார் (5)
தாம் வீழ்வார் ஆகம் தழுவுவோர் தழுவு எதிராது - பரி 10/31
யாம் வீழ்வார் ஏமம் எய்துக என்மாரும் - பரி 11/119
உரிதின் ஒருதலை எய்தலும் வீழ்வார்/பிரிதலும் ஆங்கே புணர்தலும் தம்மில் - கலி 92/7,8
கொலை ஏற்று கோட்டு இடை தாம் வீழ்வார் மார்பின் - கலி 103/72
புது நலம் பூ வாடி அற்று தாம் வீழ்வார்/மதி மருள நீத்த-கடை - கலி 147/15,16

 TOP
 
  வீழ்வார்-கண் (1)
வீழ்வார்-கண் தோன்றும் தடுமாற்றம் ஞாலத்துள் - கலி 145/16

 TOP
 
  வீழ்வாரும் (1)
வெய்யாரும் வீழ்வாரும் வேறு ஆக கையின் - கலி 78/25

 TOP
 
  வீழ்வு (2)
அணங்கு வீழ்வு அன்ன பூ தொடி மகளிர் - மது 446
ஊர் இழந்தன்று தன் வீழ்வு உறு பொருளே - அகம் 189/15

 TOP
 
  வீழ (7)
பறவை படிவன வீழ கறவை - நெடு 10
வடி மணி புரவியொடு வயவர் வீழ/பெரு நல் வானத்து பருந்து உலாய் நடப்ப - பட் 232,233
வானத்து அஞ்சுவர நல் இசை வீழ/பெய்த புலத்து பூத்த முல்லை - குறு 323/3,4
வயவர் வீழ வாள் அரில் மயக்கி - பதி 12/1
தொல் பசி உழந்த பழங்கண் வீழ/எஃகு போழ்ந்து அறுத்த வாள் நிண கொழும் குறை - பதி 12/15,16
அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ/முதிர் இணர் ஊழ் கொண்ட முழவு தாள் எரிவேங்கை - கலி 44/3,4
கேழல் பன்றி வீழ அயலது - புறம் 152/4

 TOP
 
  வீழவும் (1)
எயிறு நிலத்து வீழவும் எண்ணெய் ஆடவும் - புறம் 41/8

 TOP
 
  வீழா (3)
வீழா கொள்கை வீழ்ந்த கொண்டி - நற் 174/9
வள்ளி கீழ் வீழா வரை மிசை தேன் தொடா - கலி 39/13
வீழா கதவம் அசையினன் புகுதந்து - அகம் 102/13

 TOP
 
  வீழுநர் (1)
வீங்கு இறை வடு கொள வீழுநர் புணர்ந்தவர் - கலி 66/5

 TOP
 
  வீழுநர்க்கு (1)
வீழுநர்க்கு இறைச்சியாய் விரல் கவர்பு இசைக்கும் கோல் - கலி 8/9

 TOP
 
  வீழும் (6)
பிறங்கு வெள் அருவி வீழும் சாரல் - சிறு 90
தூங்கு நீர் குட்டத்து துடுமென வீழும்/தண் துறை ஊரன் தண்டா பரத்தமை - நற் 280/3,4
கறங்கு இசை அருவி வீழும்/பிறங்கு இரும் சோலை நம் மலை கெழு நாட்டே - ஐங் 395/5,6
கண்ணாது உடன் வீழும் காரிகை கண்டோர்க்கு - பரி 27/2
யாம் வேண்டேம் என்று விலக்கவும் எம் வீழும்/காமர் நடக்கும் நடை காண் கவர் கணை - கலி 94/32,33
கல் முகை விடர்_அகம் சிலம்ப வீழும்/காம்பு தலைமணந்த ஓங்கு மலை சாரல் - அகம் 172/4,5

 TOP
 
  வீளை (6)
வீளை அம்பின் வில்லோர் பெருமகன் - நற் 265/3
வீளை பருந்தின் கோள் வல் சேவல் - அகம் 33/5
வீளை அம்பின் விழு தொடை மழவர் - அகம் 131/6
வீளை அம்பின் இளையரொடு மாந்தி - அகம் 182/4
மடி விடு வீளை கடிது சென்று இசைப்ப - அகம் 274/9
மடி விடு வீளை வெரீஇ குறு முயல் - அகம் 394/14

 TOP
 
  வீளையர் (2)
மடி விடு வீளையர் வெடி படுத்து எதிர - குறி 161
வில் உடை வீளையர் கல் இடுபு எடுத்த - குறு 272/2

 TOP
 
  வீளையொடு (1)
மடி விடு வீளையொடு கடிது எதிர் ஓடி - அகம் 191/8

 TOP
 
  வீற்றிருக்கும் (2)
விண் வீற்றிருக்கும் கய மீன் விரி தகையின் - பரி 23/12
கண் வீற்றிருக்கும் கயம் - பரி 23/13

 TOP
 
  வீற்றிருந்த (5)
திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து - திரு 70
வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அரும் சுரம் - நற் 84/9
விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண் - பதி 56/1
தொழில் வீற்றிருந்த நகர் - பரி 18/29
புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெம் சுரம் - அகம் 335/8

 TOP
 
  வீற்றிருந்து (1)
புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தனவே - நற் 256/4

 TOP
 
  வீற்றிருந்தோரை (1)
வீற்றிருந்தோரை எண்ணும்-காலை - புறம் 27/4

 TOP
 
  வீற்று (4)
வீற்று வளம் சுரக்கும் அவன் நாடு படு வல்சியும் - மலை 68
வில்லோர் மெய்ம்மறை வீற்று இரும் கொற்றத்து - பதி 59/9
வெளிற்று பனம் துணியின் வீற்று_வீற்று கிடப்ப - புறம் 35/22
வெளிற்று பனம் துணியின் வீற்று_வீற்று கிடப்ப - புறம் 35/22

 TOP
 
  வீற்று_வீற்று (1)
வெளிற்று பனம் துணியின் வீற்று_வீற்று கிடப்ப - புறம் 35/22

 TOP
 
  வீறியது (1)
குதிரையோ வீறியது/கூர் உகிர் மாண்ட குளம்பின் அது நன்றே - கலி 96/24,25

 TOP
 
  வீறு (20)
சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி - திரு 283
தாறு களைந்து ஏறு என்று ஏற்றி வீறு பெறு - பொரு 167
தோள் முறையான் வீறு முற்றவும் - மது 54
தாறு அடு களிற்றின் வீறு பெற ஓச்சி - குறி 150
காமர் பணை தோள் நலம் வீறு எய்திய - நற் 190/7
வீறு பெற்று மறந்த மன்னன் போல - குறு 225/4
வீறு சால் புதல்வன் பெற்றனை இவணர்க்கு - பதி 74/21
ஏறுதல் எளிதோ வீறு பெறு துறக்கம் - பரி 15/16
வீறு சால் ஞாலத்து வியல் அணி காணிய - கலி 33/1
புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தி - கலி 44/6
விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர் - அகம் 227/19
வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே - அகம் 256/21
பெறுதற்கு அரிய வீறு சால் நன் கலம் - புறம் 150/18
சோறு உடை கையர் வீறு_வீறு இயங்கும் - புறம் 173/8
சோறு உடை கையர் வீறு_வீறு இயங்கும் - புறம் 173/8
வீறு_வீறு ஆயும் உழவன் போல - புறம் 289/3
வீறு_வீறு ஆயும் உழவன் போல - புறம் 289/3
வீறு சால் நன் கலம் வீசி நன்றும் - புறம் 362/15
வீறு சால் நன் கலம் நல்கு-மதி பெரும - புறம் 389/15
மிக பெரும் சிறப்பின் வீறு சால் நன் கலம் - புறம் 400/11

 TOP
 
  வீறு_வீறு (2)
சோறு உடை கையர் வீறு_வீறு இயங்கும் - புறம் 173/8
வீறு_வீறு ஆயும் உழவன் போல - புறம் 289/3

 TOP
 
  வீறுபடு (1)
வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும் - பரி 8/97

 TOP