சங்க இலக்கியம்
0.பத்துப்பாட்டு | 1.நற்றிணை | 2.குறுந்தொகை | 3.ஐங்குறுநூறு | 4.பதிற்றுப்பத்து |
---|---|---|---|---|
5.பரிபாடல் | 6.கலித்தொகை | 7.அகநானூறு | 8.புறநானூறு | பாடல் - தேடல் (புதியது) |
பாடல் - தேடல் |
---|
பாடல் முதல் அடி - அகர வரிசையில் |
பாடல் ஆசிரியர் - அகர வரிசையில் |
பாடல் திணை - மரபு வரிசையில் |
---|
ஆசிரியர் பெயர், வைப்பு முறை ஆகியவை மிகப் பெரும்பாலும் சங்க இலக்கியம் - தொகுப்பும் பதிப்பும் - எஸ்.வையாபுரிப்பிள்ளை, செம்மொழித் தமிழ் - பதிப்பு - ம.வே.பசுபதி, தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகிய நூல்களைப் பின்பற்றியது | |||||||||||
ஆசிரியர் பெயர் | தேவையான ஆசிரியர் பெயரைச் சொடுக்கவும் | ||||||||||
கடவுள் வாழ்த்து அகம்பன் மாலாதனார் அஞ்சியத்தை மகள் நாகையார் அஞ்சில் அஞ்சியார் அஞ்சில் ஆந்தையார் அடை நெடும் கல்வியார் - (அண்டர் நடுங்கல்லினார்) அணிலாடு முன்றிலார் (அண்டர் நடுங்கல்லினார்) அடை நெடும் கல்வியார் அண்டர் மகன் குறுவழுதியார் அதியன் விண்ணத்தனார் அந்தி இளங்கீரனார் அம்மள்ளனார் அம்மூவனார் அம்மெய்யன் நாகனார் அரிசில் கிழார் அல்லங்கீரனார் அழிசி நச்சாத்தனார் அள்ளூர் நன்முல்லையார் அறிவுடைநம்பி (பாண்டியன்) ஆசிரியர் பெருங்கண்ணனார் ஆடுதுறை மாசாத்தனார் ஆதிமந்தி ஆமூ(வூ)ர்க் (காவிதிகள்)கவுதமன் சாதேவனார் ஆரிய அரசன் யாழ் பிரமதத்தன் ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன்(பாண்டியன்) ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளை கண்ணத்தனார் ஆலங்குடி வங்கனார் ஆலத்(ந்)தூர் கிழார் ஆலம்பேரி சாத்தனார் ஆலியார் ( - ஆனீயார் - ஆவியார்) ஆவியார் ( - ஆனீயார் - ஆலியார்) ஆவூர் கிழார் ஆவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன் ஆவூர் கிழார் மகனார் கண்ணனார் ஆவூர் கிழார் (நெய்தற் சாய்த்துய்(ந்)த்த) ஆவூ(மூ)ர்க் (காவிதிகள்)கவுதமன் சாதேவனார் ஆவூர் மூலங்கிழார் ஆவூர் மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் ஆனீயார் ( - ஆவியார் - ஆலியார்) இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் இடைக்காடனார் இடைக்குன்றூர் கிழார் இடையன் சேந்தன் கொற்றனார்(இடையன் செங்கொற்றனார்) இடையன் நெடுங்கீரனார் இதையங்கண்ணனார் இம்மென் கீரனார் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார்(இருங்கோக் கண்ணனார்) இருந்தையூர்க் கொற்றன் புலவனார் இரும்பிடர்த் தலையார் இருவூர் பூதனார் மகனார் சாத்தனார் இளங்கீரந்தையார் இளங்கீரனாார்(எயினந்தை மகனார்) இளநாகனார் இளந்திரையனார் இளந்தேவனார்(மதுரை பண்ட வாணிகன்) இளம் புல்லூர்க் காவிதி இளம் பூதனார் இளம்பெருவழுதியார் இளம்போதியார் இளவெயினனார் இளவேட்டனார் (மதுரை அறுவை வாணிகன்) இறங்குகுடிக் குன்ற நாடன் இறையனார் இனிசந்த நாகனார் ஈழத்துப் பூதன் தேவனார் ஈழன் தேவனார் உகாய்க்குடி கிழார் உக்கிரப்பெருவழுதி (பாண்டியன் (கானப்பேரெயில் தந்த)) உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் உம்பற்காட்டு இளங்கண்ணனார் உருத்திரனார் உரோடகத்துக் கவுணியன் சேந்தன் உரோடோகத்துக் கந்தரத்தனார் உரோடோகத்துக் காரத்தனார் உலோச்சனார் உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார் உழுந்தினைம் புலவனார் உறையனார் உறையூர் இளம்பொன் வாணிகனார் உறையூர் இளம்பொன் வணிகன் சாத்தன் கொற்றனார் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் உறையூர் கதுவாய்ச் சாத்தனார் உறையூர்ச் சல்லியன் குமாரனார் உறையூர் சிறுகந்தனார் உறையூர் பல்காயனார் உறையூர் மருத்துவன் தாமோதரனார் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் உறையூர் முதுகூத்தனார் ஊட்டியார் ஊண்பித்தையார் ஊன் பொதி பசும் குடையார் எயிற்றியனார் (எயினந்தை மகனார்) இளங்கீரனாார் எயினந்தையார் எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் எருமை வெளியனார் எருமை வெளியனார் மகனார் கடலனார் எழூஉப் பன்றி நாகன் குமரனார் ஐயாதி சிறுவெண் தேரையார் ஐயூர் முடவனார் ஐயூர் மூலங்கிழார் ஒக்கூர் மாசாத்தனார் ஒக்கூர் மாசாத்தியார் ஒருசிறைப்பெரியனார் ஒரூஉத்தனார் ஒரோடோகத்துக் கந்தரத்தனார் ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் ஓதஞானியார் (கருவூர்) ஓதலாந்தையார் ஓரம்போகியார் ஓரில் பிச்சையார் ஓரேருழவர் ஒரோடோகத்துக் கந்தரத்தனார் ஔவையார் கங்குல் வெள்ளத்தார் கச்சிப்பேட்டு இளந்தச்சனார் கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார் கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் கச்சிப்பேட்டு நன்னாகையார் கடம்பனூர்ச் சாண்டிலியனார் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியார் கடலூர்(கூடலூர்) பல்கண்ணனார் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கடுகு பெருந்தேவனார் கடுந்தொடைக் காவினார் கடுந்தோட் கரவீரன் கடுவன் இளமள்ளனார் கடுவன் இளவெயினனார் கடுவன் மள்ளனார் (மதுரைத் தமிழ்க் கூத்தனார்) கணக்காயர் தத்தனார் கணக்காயனார் மகனார் நக்கீரனார் (கணி புன்குன்றனார்) - கணியன் பூங்குன்றனார் கண்ணகனார் கண்ணகாரன் கொற்றனார் கண்ணங் கொற்றனார் கண்ணம்பாளனார் (கருவூர்க்) கண்ணம்புல்லனார் (கருவூர்க்) கண்ணனார் (மதுரைக்) கதக்கண்ணனார் (மதுரைக்) கதப்பிள்ளையார் (கருவூர்க்) கந்தரத்தனார் (ஒரோடோகத்துக்) கபிலர் கயத்தூர்க் கிழார் கயமனார் கரவட்டனார் (காவட்டனார்) கருங்குழல் ஆதனார் கரும்பிள்ளைப் பூதனார் கருவூர் ஓதஞானியார் கருவூர்க் கிழார் கருவூர்க் கண்ணம்பாளனார் கருவூர்க் கண்ணம்புல்லனார் கருவூர்க் கதப்பிள்ளையார் கருவூர்க் க(ந்)தப்பிள்ளைச் சாத்தனார் கருவூர்க் கலிங்கத்தார் கருவூர்க் கோசனார் கருவூர்ச் சேரமான் சாத்தனார் கருவூர் நன்மார்பனார் கருவூர்ப் பவுத்திரனார் கருவூர் பூதஞ்சாத்தனார் கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார் கல்பொரு சிறுநுரையார் கல்லாடனார் கவுதமன் சாதேவனார்ஆவூ(மூ)ர்க் (காவிதிகள்) கவை மகனார் கழாத் தலையார் கழார்க் கீரன் எயிற்றியனார் கழார்க் கீரன் எயிற்றியார் கழைதின் யானையார் கள்ளிக்குடிப் பூதம் புல்லனார் கள்ளில் ஆத்திரையனார் காக்கை பாடினியார் நச்செள்ளையார் காசிபன் கீரனார் காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் காதற்பெண்டு (காவல் பெண்டு) காப்பியம் சேந்தனார் காப்பியாற்றுக் காப்பியனார் காமக்கணிப் பசலையார் (நப்பசலையார்) காமஞ்சேர் குளத்தார் காரிக்கண்ணனார் (காவிரிப்பூம்பட்டினத்துக்) காரிகிழார் காலெறி கடிகையார் காவட்டனார் (கரவட்டனார்) காவல் பெண்டு (காதற்பெண்டு) காவன்முல்லை பூதனார் காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார் (காவிரிப்பூம்பட்டினத்துக்) காரிக்கண்ணனார் காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் கானப்பேரெயில் தந்த (பாண்டியன்) உக்கிரப்பெருவழுதி கிடங்கில் காவிதி கீரங்கண்ணனார் கிடங்கில் காவிதிப் பெரும் கொற்றனார் கிடங்கில் குலபதி நக்கண்ணனார் கிள்ளிமங்கலங்கிழார் கிள்ளிமங்கலம் கிழார் மகனார் சேர கோவனார் கீரத்தனார் (குடவாயில்) கீரங்கீரனார் கீரந்தையார் குடபுலவியனார் (குடவாயில்) கீரத்தனார் குட்டுவன் கண்ணனார் குட்டுவன் கீரனார் குண்டுகட்பாலியாதனார் குதிரைத் தறியனார் குப்பைக் கோழியார் குமட்டூர்க் கண்ணனார் குமுழி ஞாழலார் நப்பசலையார் குழற்றத்தனார் குளம்பனார் குளம்பாதாயனார் குறமகள் இளவெயினி குறமகள் குறியெயினி குறியிறையார் குறுங்கீரனார் குறுங்குடி மருதனார் குறுங்கோழியூர் கிழார் குன்றம்பூதனார் - (குறும்பூதனார்) குன்றியனார் குன்றூர்கிழார் மகனார் (கண்ணத்தனார்) கூகைக் கோழியார் கூடலூர்க் கிழார் கூடலூர்ப் பல்கண்ணனார் கூவன் மைந்தனார் கூற்றங்குமரனார் கேசவனார் கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் கொடியூர்க் கிழார் மகனார் நெய்தல் தத்தனார் கொ(கோ)ட்டம்பலவனார் கொல்லன் அழிசி கொல்லிக் கண்ணன் கொள்ளம்பக்கனார் கொற்றம் கொற்றனார் (மாற்றூர் கிழார் மகனார்) கோக்குளமுற்றனார் கோடை பாடிய பெரும்பூதனார் கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் கோ(கொ)ட்டம்பலவனார் கோட்டியூர் நல்லந்தையார் கோண்மா நெடுங்கோட்டனார் கோதமனார் கோப்பெருஞ்சோழன் கோவர்த்தனார் கோவூர் கிழார் கோவேங்கைப் பெருங்கதவனார் கோழிக் கொற்றனார் கோளியூர் கிழார் மகனார் செழியனார் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் |
சங்க வருணர் என்னும் நாகரியர் சத்திநாதனார் சல்லியங்குமரனார் சாகலாசனார் சாத்தந்தையார் சாத்தனார் சிறுமோலிகனார் சிறுவெண் தேரையார் சிறைக்குடி ஆந்தையார் சீத்தலை சாத்தனார் (மதுரைக் (கூலவாணிகன்)) செங்கண்ணனார் (மதுரை) செம்பியனார் செம்புலப்பெயனீரார் செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார் செயலூர் கோசங்கண்ணனார் செய்தி வள்ளுவர் பெருஞ்சாத்தனார் செல்லூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார் செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார் செல்லூர் கோசிகன் கண்ணனார் சேகம் பூதனார் சேந்தங் கண்ணனார் சேந்தம்பூதனார் (மதுரை எழுத்தாளன்) சேந்தன் கீரனார் சேரமான் அந்தையார் சேரமான் எந்தை சேரமான் இளங்குட்டுவன் சேரமான் கணைக்கால் இரும்பொறை சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை சோணாட்டு முகையலூர்ச் சிறுகரும் தும்பியார் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் சோழன் நலங்கிள்ளி சோழன் நல்லுருத்திரன் தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் தங்கால் முடக் கொல்லனார் தங்கால் (முடக் கொற்றனார்) பொற்கொல்லன் வெண்ணாகனார் தங்கால் முடக் கோவனார் தனிமகனார் தாமப்பல் கண்ணனார் தாமோதரனார் தாயங்கண்ணனார் தாயங்கண்ணியார் திப்புத்தோளார் திண்பொற்கிழிக் காவிதி மகன் கண்ணனார் (நக்கண்ணையார்)(நக்கணன்) திருத்தாமனார் தீன்மதிநாகனார் தும்பிசேர்கீரனார் தும்பி சொகினனார் துறைக்குறுமாவின் பாலம் கொற்றனார் துறையூர் ஓடை கிழார் தூங்கலோரியார் தேய்புரிப் பழங்கயிற்றினார் தேரதரனார் தேவகுலத்தார் தேவனார் தையங்கண்ணனார் தொடித்தலை விழுத்தண்டினார் தொண்டி ஆமூர்ச் சாத்தனார் தொண்டைமான் இளந்திரையன் தொல் கபிலர் நக்கண்ணையார்(நக்கணன்) நக்கீரர் நத்தத்தனார் (கண்ணகனார்) நப்பசலையார் (காமக்கணிப் பசலையார்) நப்பண்ணனார் நப்பாலத்தனார் (பாலத்தனார்) நம்பி குட்டுவன் நரிவெரூஉத்தலையார் நரைமுடி நெட்டையார் (நிரைமுடி நெட்டையார்) நல்லச்சுதனார் நல்லந்துவனார் (மதுரை ஆசிரியர்) நல்லழிசியார் (நல்வழிசியார்) நல்லாவூர் கிழார் நல்லிறையனார் நல்லுருத்தினார் நல்லூர்ச் சிறுமேதாவியார் (நல்லெழுதியார்) நல்லெழுநியார் நல்வழிசியார் (நல்லழிசியார்) நல்வழுதியார் நல்விளக்கனார் நல்வெள்ளியார் (மிளைகிழார்) நல்வேட்டனார் நற்சேந்தனார் நற்றங் கொற்றனார் நற்றமனார் நன்பலூர் சிறுமேதாவியார் நன்னாகனார் (புறத்திணை) நன்னாகையார் (கச்சிப்பேட்டு) நாகம்போத்தனார் நாமலார் மகனார் இளங்கண்ணனார் நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் நிரைமுடி நெட்டையார் (நரைமுடி நெட்டையார்) (நெடுங்களத்துப் பரணர்)நெடுங்கழுத்துப் பரணர் நெடும்பல்லியத்தனார் நெடும்பல்லியத்தையார் நெடுவெண்ணிலவினார் நெட்டிமையார் நெய்தற் கார்க்கியர் நெய்தற் சாய்த்துய்(ந்)த்த ஆவூர் கிழார் நெய்தல் தத்தனார் (கொடியூர்க் கிழார் மகனார்) நொச்சி நியமம் கிழார் நொய்ப்பாடியார் - நோய்பாடியார் பக்குடுக்கை நன்கணியார் படுமரத்து மோசிகீரனார் படுமரத்து மோசி கொற்றனார் பதடி வைகலார் பதுமனார் பரணர் பராயனார் பரூஉ மோவாய்ப் பதுமன் பறநாட்டுப் பெருங்கொற்றனார் பனம்பாரனார் பாண்டரம் கண்ணனார் (பாண்டியன்)அறிவுடைநம்பி (பாண்டியன்)ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாண்டியன் பன்னாடு தந்தான் பாண்டியன் மாறன் வழுதி பாரதம் பாடிய பெருந்தேவனார் பாரி மகளிர் பார்காப்பானார் பாலத்தனார் (நப்பாலத்தனார்) பாலைக் கௌதமனார் பாலை பாடிய பெருங்கடுங்கோ பாவைக் கொட்டிலார் பிசிராந்தையார் பிரமசாரி பிரமனார் பிரான் சாத்தனார் புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான் புல்லாற்றூர் எயிற்றியனார் புறத்திணை நன்னாகனார் புறநாட்டுப் பெருங்கொற்றனார் பூங்கணுத்திரையார்(பூங்கண் உத்திரையார்) பூங்கண்ணனார் பூதங்கண்ணனார் பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு பூதம்புல்லனார் பூதனார் பூதன் தேவனார் - பூதத் தேவனார் பெருங்கொடுங்கோன் பெருங்கண்ணனார் பெருங்குன்றூர்கிழார் பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார் பெருங்கௌசிகனார் பெருஞ்சாத்தனார் பெருஞ்சித்திரனார் பெருந்தலைச் சாத்தனார் பெருந்தேவனார்(கடுகு பெருந்தேவனார்) பெருந்தோள் குறுஞ்சாத்தனார் பெரும்பதுமனார் பெரும்பாக்கனார் பெருவழுதி பேயனார்(பேயார்) பேய்மகள் இளவெயினியார் பேராலவாயார் (மதுரை) பேரிசாத்தனார் (வடம வண்ணக்கன்) பேரெயின் முறுவலார் பொதுக் கயத்துக் கீரந்தையார் பொதும்பில் கிழார் பொதும்பில் கிழான் வெண்கண்ணனார் பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார் பொதும்பிற் புல்லாளங்கண்ணியார் பொத்தியார் பொய்கையார் பொருந்தில் இளங்கீரனார் பொன்மணியார் பொன்முடியார் பொன்னாகன் போதனார் போந்தைப் பசலையார் |
மடல் பாடிய மாதங்கீரனார் மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார் மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார் மதுரை ஆசிரியர் நல்லந்துவனார் மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார் மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் மதுரை இளங்கௌசிகனார் மதுரை இளம்பாலாசிரியன் சேந்தம் கூத்தனார் மதுரை ஈழத்துப் பூதன் தேவனார் மதுரை எழுத்தாளன் சேந்தம்பூதனார் மதுரை ஓலைக்கடை கண்ணம் புகுந்தார் ஆயத்தனார் மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் மதுரைக் கடாரத்தனார் மதுரைக் கடையத்தார் மகனார் வெண்ணாகனார் மதுரைக் கணக்காயனார் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் மதுரைக் கண்டரதத்தனார் மதுரைக் கண்ணனார் மதுரைக் கண்ணத்தனார் மதுரைக் கதக்கண்ணனார் மதுரை கவுணியன் பூதத்தனார் மதுரை கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் மதுரைக் காஞ்சிப் புலவர் (மாங்குடிமருதனார்) மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார் மதுரைக் காருலவியம் கூத்தனார் மதுரைக் கூத்தனார் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் மதுரைக் கொல்லன் புல்லனார் மதுரை(ப் பொன்செய்) கொல்லன் வெண்ணாகனார் மதுரைக் கோடரத்தனார் மதுரைச் சுள்ளம் போதனார் மதுரைச் செங்கண்ணனார் மதுரை தத்தம் கண்ணனார் மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன்தேவனார் மதுரைத் தமிழ்க் கூத்தனார் (மதுரைத் தமிழ்க் கூத்தனார்) கடுவன் மள்ளனார் மதுரைப் படைமங்க மன்னியார் (மதுரை பண்ட வாணிகன்) இளந்தேவனார் மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார் மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் மதுரைப் புல்லங்கண்ணனார் மதுரைப் பூதன் இளநாகனார் மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார் மதுரைப் பெருங்கொல்லனார் மதுரைப் பெருமருதனார் மதுரைப் பெருமருதிள நாகனார் மதுரைப் பேராலவாயார் மதுரைப் போத்தனார் மதுரை மருதங்கண்ணனார் மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் மதுரை மருதங்கிழார் மகனார் வெண்ணாகனார் மதுரை மருதங்கிழார் மகன் இளம் போத்தனார் மதுரை மருதன் இளநாகனார் மதுரை வேளாசான் மதுரை வேள் ஆதத்தனார் தும்பிசேர்கீரனார் மரயேண்டனார் (மாயேண்டனார்) மருங்கூர் கிழார் பெரும் கண்ணனார் மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார் மருதம் பாடிய இளங்கடுங்கோ மருதன் இளநாகனார் (மதுரை) மலையனார் மள்ளனார் மாங்குடிமருதனார் (மதுரைக் காஞ்சிப் புலவர்) மாடலூர் கிழார் மாதீர்த்தனார் மாமிலாடன் (மாமலாடன்) மாமூலனார் மாயேண்டனார் (மரயேண்டனார்) மாரிப்பித்தியார் (மாற்பித்தியார்) மார்க்கண்டேயனார் மாலை மாறனார் மாவளத்தனார் மாறன் வழுதி(பாண்டியன்) மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார் மாறோக்கத்து நப்பசலையார் மாற்பித்தியார் (மாரிப்பித்தியார்) மாற்றூர் கிழார் மகனார் கொற்றம் கொற்றனார் மிளை கிழார் நல்வேட்டனார் மிளைக் கந்தனார் மிளைப்பெரும்கந்தனார் மிளைவேள் தித்தனார் மீளிப் பெரும்பதுமனார் மீனெறி தூண்டிலார் முக்கல் ஆசான் நல்வெள்ளையார் முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன் முடத்தாமக் கண்ணியார் முடத்திருமாறன் முதுகூத்தனார் (முதுகூற்றனார்) (உறையூர்) முதுகொற்றனார் (உறையூர்) முதுவெங்கண்ணனார் முப்பேர் நாகனார் முரஞ்சியூர் முடிநாகராயர் முள்ளியூர்ப் பூதியார் மூலங்கீரனார் மையோடக் கோவனார் மோசி கண்ணத்தனார் மோசி கீரனார் மோசி கொற்றனார் மோசிக் கரையனார் மோசி சாத்தனார் மோ(சி)தாசனார் வடநெடுந்தத்தனார்(வடம நெடுந்தத்தனார்) (வடம நெடுந் தச்சனார்) வடம வண்ணக்கன் தாமோதரன் வடம வண்ணக்கன் பேரிசாத்தனார் வடமோதம் கிழார் வண்ணக்கன் சோருமருங்குமரனார் வண்ணப்புறக் கந்தரத்தனார் (வண்ணப்புறக் கல்லாடனார்) வருமுலையாரித்தியார் வன்பரணர் வாடாப் பிரமந்தனார் வாயிலான் தேவன் வாயில் இளங்கண்ணனார் வான்மீகியார் விட்ட குதிரையார் விரிச்சியூர் நன்னாகனார் விரியூர் (கிழார்)நக்கனார் வில்லக விரலினார் விழிக்கட்பேதை பெருங்கண்ணனார் விற்றூற்று மூதெயினனார் விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் வினைத்தொழில் சோகீரனார் வீரை வெளியனார் வீரை வெளியன் தித்தனார் வெண்கண்ணனார் வெண்கண்ணனார் (பொதும்பில் கிழான்) வெண்கொற்றனார் வெண்ணிக் குயத்தியார் வெண்பூதனார் வெண்பூதியார் வெண்மணிப் பூதியார் வெள்ளாடியனார் வெள்ளியந்தின்னனார் வெள்ளிவீதியார் வெள்ளூர் கிழார் மகனார் வெண்பூதியார் வெள்ளெருக்கிலையார் வெள்ளைக்குடி நாகனார் வெள்ளை மாளர் (வெள்ளை மாறனார்) வெறிபாடிய காமக்கண்ணியார்(காமக் கணியார்) வேட்ட கண்ணனார் வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார் வேம்பற்றூர் குமரனார் ஆசிரியர் பெயர் காணாப் பாடல்கள் |
** சங்க இலக்கியம் &0 கடவுள் வாழ்த்து #1 அகநானூறு - கடவுள் வாழ்த்து - பாரதம் பாடிய பெருந்தேவனார் கார் விரி கொன்றைப் பொன் நேர் புது மலர் தாரன் மாலையன் மலைந்த கண்ணியன் மார்பினஃதே மை இல் நுண் ஞாண் நுதலது இமையா நாட்டம் இகல் அட்டு கையது கணிச்சியொடு மழுவே மூவாய் வேலும் உண்டு அத் தோலாதோற்கே ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையே செவ் வான் அன்ன மேனி அவ் வான் இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை முதிராத் திங்களொடு சுடரும் சென்னி மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொன் முறை மரபின் வரி கிளர் வய_மான் உரிவை தைஇய யாழ் கெழு மணி மிடற்று அந்தணன் தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகே #2 ஐங்குறுநூறு - கடவுள் வாழ்த்து - பாரதம் பாடிய பெருந்தேவனார் நீல மேனி வால் இழை பாகத்து ஒருவன் இரு தாள் நிழல் கீழ் மூ வகை உலகும் முகிழ்த்த முறையே #3 கலித்தொகை - கடவுள் வாழ்த்து - (நல்லந்துவனார்) ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து தேறு நீர் சடைக் கரந்து திரிபுரம் தீ மடுத்துக் கூறாமல் குறித்ததன் மேற்செல்லும் கடும் கூளி மாறாப் போர் மணி மிடற்று எண் கையாய் கேள் இனி படு பறை பல இயம்பப் பல் உருவம் பெயர்த்து நீ கொடுகொட்டி ஆடுங்கால் கோடு உயர் அகல் அல்குல் கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து பண்டரங்கம் ஆடுங்கால் பணை எழில் அணை மென் தோள் வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்கு தருவாளோ கொலை உழுவைத் தோல் அசைஇக் கொன்றைத் தார் சுவல் புரளத் தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடுங்கால் முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ என ஆங்கு பாணியும் தூக்கும் சீரும் என்று இவை மாண் இழை அரிவை காப்ப ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி #4 குறுந்தொகை - கடவுள் வாழ்த்து - பாரதம் பாடிய பெருந்தேவனார் தாமரை புரையும் காமர் சேவடிப் பவழத்து அன்ன மேனித் திகழ் ஒளிக் குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின் நெஞ்சு பக எறிந்த அம் சுடர் நெடு வேல் சேவல் அம் கொடியோன் காப்ப ஏம வைகல் எய்தின்றால் உலகே #5 - நற்றிணை - கடவுள் வாழ்த்து - பாரதம் பாடிய பெருந்தேவனார் மா நிலம் சேவடி ஆகத் தூ நீர் வளை நரல் பௌவம் உடுக்கை ஆக விசும்பு மெய் ஆகத் திசை கை ஆகப் பசும் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய வேத முதல்வன் என்ப தீது அற விளங்கிய திகிரியோனே #6 - பதிற்றுப்பத்து - கடவுள் வாழ்த்து ** திணை : பாடாண்டிணை ** துறை : கடவுள் வாழ்த்து. ** வண்ணம் : ஒழுகுவண்ணம். ** தூக்கு : செந்தூக்கு எரி எள்ளு அன்ன நிறத்தன் விரி இணர்க் கொன்றை அம் பைம் தார் அகலத்தன் பொன்றார் எயில் எரியூட்டிய வில்லன் பயில் இருள் காடு அமர்ந்து ஆடிய ஆடலன் நீடிய புறம் புதை தாழ்ந்த சடையன் குறங்கு அறைந்து வெண்மணி ஆர்க்கும் விழவினன் நுண் நூல் சிரந்தை இரட்டும் விரலன் இரண்டு உருவாய் ஈரணி பெற்ற எழில் தகையன் ஏரும் இளம்பிறை சேர்ந்த நுதலன் களங்கனி மாறு ஏற்கும் பண்பின் மறுமிடற்றன் தேறிய சூலம் பிடித்த சுடர்ப் படைக் காலக் கடவுட்கு உயர்கமா வலனே ** இப்பாட்டுப் பதிற்றுப்பத்தென வெளியாகியிருக்கும் தொகை நூலிற் ** காணப்பட்டிலது. ஆயினும், புறத்திணை யுரையில் ** நச்சினார்க்கினியரால் கடவுள்வாழ்த்துக்கு எடுத்துக்காட்டப்படும் ** இப்பாட்டு, பதிற்றுப்பத்தின் கடவுள்வாழ்த்துப் பாட்டாக ** இருக்கலாமென அறிஞர் பலரும் கருதுகின்றனர். #7 பரிபாடல் - கடவுள் வாழ்த்து - திருமால் ஆயிரம் விரித்த அணங்கு உடை அரும் தலை தீ உமிழ் திறலொடு முடி மிசை அணவர மா உடை மலர் மார்பின் மை இல் வால் வளை மேனிச் சேய் உயர் பணை மிசை எழில் வேழம் ஏந்திய வாய் வாங்கும் வளை நாஞ்சில் ஒரு குழை ஒருவனை எரி மலர் சினைஇய கண்ணை பூவை விரி மலர் புரையும் மேனியை மேனித் திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை மார்பில் தெரி மணி பிறங்கும் பூணினை மால் வரை எரி திரிந்து அன்ன பொன் புனை உடுக்கையை சேவல் அம் கொடியோய் நின் வல-வயின் நிறுத்தும் ஏவல் உழந்தமை கூறும் நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே இணை பிரி அணி துணி பணி எரி புரைய விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினை மலர் நெரி கிடர் எரி புரை தன மிகு தன முரண் மிகு கடல் தரு மணியொடும் முத்து யாத்த நேர் அணி நெறி செறி வெறியுறு முறல் விறல் வணங்கு அணங்கு வில் தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின் எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினில் துணி படல் இல மணி வெயில் உறழ் எழில் நக்கு இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்_மலர் மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை உடுவுறு தலை நிரை இதழ் அணி வயிறு இரிய அமரரைப் போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர் சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம் உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை பொருவேம் என்றவர் மதம் தபக் கடந்து செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல் இருவர் தாதை இலங்கு பூண் மாஅல் தெருள நின் வரவு அறிதல் மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே அன்ன மரபின் அனையோய் நின்னை இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது அருமை நற்கு அறியினும் ஆர்வம் நின்-வயின் பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை மெல்லிய எனாஅ வெறாஅது அல்லி அம் திரு மறு மார்ப நீ அருளல் வேண்டும் விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் அறனும் ஆர்வலர்க்கு அருளும் நீ திறன் இலோர்த் திருத்திய தீது தீர் கொள்கை மறனும் மாற்றலர்க்கு அணங்கும் நீ அம் கண் வானத்து அணி நிலாத் திகழ்தரும் திங்களும் தெறு கதிர்க் கனலியும் நீ ஐம் தலை உயிரிய அணங்கு உடை அரும் திறல் மைந்து உடை ஒருவனும் மடங்கலும் நீ நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப் புலமும் பூவனும் நாற்றமும் நீ வலன் உயர் எழிலியும் மாக விசும்பும் நிலனும் நீடிய இமயமும் நீ அதனால் இன்னோர் அனையை இனையையால் என அன்னோர் யாம் இவண் காணாமையின் பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய மன் உயிர் முதல்வனை ஆதலின் நின்னோர் அனையை நின் புகழோடும் பொலிந்தே நின் ஒக்கும் புகழ் நிழலவை பொன் ஒக்கும் உடையவை புள்ளின் கொடியவை புரி வளையினவை எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை மண்ணுறு மணி பாய் உருவினவை எண் இறந்த புகழவை எழில் மார்பினவை ஆங்கு காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக என ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும் வாய்மொழிப் புலவ நின் தாள் நிழல் தொழுதே #8 புறநானூறு - கடவுள் வாழ்த்து - பாரதம் பாடிய பெருந்தேவனார் கண்ணி கார் நறும் கொன்றை காமர் வண்ண மார்பின் தாரும் கொன்றை ஊர்தி வால் வெள் ஏறே சிறந்த சீர் கெழு கொடியும் அவ் ஏறு என்ப கறை மிடறு அணியலும் அணிந்தன்று அக் கறை மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே பெண் உரு ஒரு திறம் ஆகின்று அவ் உருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் பிறை நுதல் வண்ணம் ஆகின்று அப் பிறை பதினெண் கணணும் ஏத்தவும் படுமே எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய நீர் அறவு அறியாக் கரகத்துத் தாழ் சடைப் பொலிந்த அரும் தவத்தோற்கே &1 அகம்பன் மாலாதனார் #1 நற்றிணை 81 - முல்லை - அகம்பன் மாலாதனார் இரு நிலம் குறையக் கொட்டிப் பரிந்தின்று ஆதி போகிய அசைவு இல் நோன் தாள் மன்னர் மதிக்கும் மாண் வினைப் புரவி கொய்ம் மயிர் எருத்தில் பெய்ம் மணி ஆர்ப்பப் பூண்க-தில் பாக நின் தேரே பூண் தாழ் ஆக வன முலைக் கரை_வலம் தெறிப்ப அழுதனள் உறையும் அம் மா அரிவை விருந்து அயர் விருப்பொடு வருந்தினள் அசைஇய முறுவல் இன் நகை காண்கம் உறு பகை தணித்தனன் உரவு வாள் வேந்தே &2 அஞ்சியத்தை மகள் நாகையார் #1 அகநானூறு 352 - குறிஞ்சி - அஞ்சியத்தை மகள் நாகையார் முடவு முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் பல் கிளைத் தலைவன் கல்லாக் கடுவன் பாடு இமிழ் அருவிப் பாறை மருங்கின் ஆடு மயில் முன்னது ஆகக் கோடியர் விழவு கொள் மூதூர் விறலி பின்றை முழவன் போல அகப்படத் தழீஇ இன் துணைப் பயிரும் குன்ற நாடன் குடி நன்கு உடையன் கூடுநர்ப் பிரியலன் கெடு நா மொழியலன் அன்பினன் என நீ வல்ல கூறி வாய்வதின் புணர்த்தோய் நல்லை காண் இனிக் காதல் அம் தோழீஇ கடும் பரி புரவி நெடும் தேர் அஞ்சி நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல் தொல் இசை நிறீஇய உரை சால் பாண்_மகன் எண்ணு முறை நிறுத்த பண்ணினுள்ளும் புதுவது புனைந்த திறத்தினும் வதுவை நாளினும் இனியனால் எமக்கே &3 - அஞ்சில் அஞ்சியார் #1 நற்றிணை 90 - மருதம் - அஞ்சில் அஞ்சியார் ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர் உடையோர் பான்மையின் பெரும் கைதூவா வறன் இல் புலைத்தி எல்லத் தோய்த்த புகாப் புகர் கொண்ட புன் பூக் கலிங்கமொடு வாடா மாலை துயல்வர ஓடிப் பெரும் கயிறு நாலும் இரும் பனம் பிணையல் பூம் கண் ஆயம் ஊக்க ஊங்காள் அழுதனள் பெயரும் அம் சில் ஓதி நல்கூர் பெண்டின் சில் வளைக் குறுமகள் ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா நயன் இல் மாக்களொடு கெழீஇப் பயன் இன்று அம்ம இவ் வேந்து உடை அவையே &4 - அஞ்சில் ஆந்தையார் #1 குறுந்தொகை 294 - நெய்தல் - அஞ்சில் ஆந்தையார் கடல் உடன் ஆடியும் கானல் அல்கியும் தொடலை ஆயமொடு தழூஉ அணி அயர்ந்தும் நொதுமலர் போலக் கதுமென வந்து முயங்கினன் செலினே அலர்ந்தன்று-மன்னே துத்திப் பாந்தள் பைத்து அகல் அல்குல் திருந்து இழை துயல்வு கோட்டு அசைத்த பசும் குழைத் தழையினும் உழையின் போகான் தான் தந்தனன் யாய் காத்து ஓம்பல்லே #2 நற்றிணை 233 - குறிஞ்சி கல்லாக் கடுவன் நடுங்க முள் எயிற்று மட மா மந்தி மாணா வன் பறழ் கோடு உயர் அடுக்கத்து ஆடு மழை ஒளிக்கும் பெரும் கல் நாடனை அருளினை ஆயின் இனி என கொள்ளலை-மன்னே கொன் ஒன்று கூறுவென் வாழி தோழி முன் உற நார் உடை நெஞ்சத்து ஈரம் பொத்தி ஆன்றோர் செல் நெறி வழாஅச் சான்றோன் ஆதல் நன்கு அறிந்தனை தெளிமே &5 - அடை நெடும் கல்வியார் - (அண்டர் நடுங்கல்லினார்) #1 புறநானூறு 283 - அடை நெடும் கல்வியார் - (அண்டர் நடுங்கல்லினார்) ஒண் செம் குரலித் தண் கயம் கலங்கி வாளை நீர்நாய் நாள்_இரை பெறூஉப் பெறாஅ உறை அரா வராஅலின் மயங்கி மாறு கொள் முதலையொடு ஊழ் மாறு பெயரும் அழும்பு இலன் அடங்கான் தகையும் என்றும் வலம்புரிக் கோசர் அவைக்களத்தானும் மன்றுள் என்பது கெட தானே பாங்கற்கு ஆர் சூழ் குறட்டின் வேல் நிறத்து இங்க உயிர் புறப்படாஅ அளவைத் தெறுவரத் தெற்றிப் பாவை திணி மணல் அயரும் மென் தோள் மகளிர் நன்று புரப்ப இமிழ்ப்புற நீண்ட பாசிலைக் கமழ் பூம் தும்பை நுதல் அசைத்தோனே #2 புறநானூறு 344 - அடை நெடும் கல்வியார் - (அண்டர் நடுங்கல்லினார்) செந்நெல் உண்ட பைம் தோட்டு மஞ்ஞை செறி வளை மகளிர் ஒப்பலின் பறந்து எழுந்து துறை நணி மருதத்து இறுக்கும் ஊரொடு நிறை சால் விழுப் பொருள் தருதல் ஒன்றோ புகை படு கூர் எரி பரப்பிப் பகை செய்து பண்பு இல் ஆண்மை தருதல் ஒன்றோ இரண்டினுள் ஒன்று ஆகாமையோ அரிதே காஞ்சிப் பனி முறி ஆரம் கண்ணி கணி மேவந்தவள் அல்குல் அம் வரியே #3 புறநானூறு 345 - அடை நெடும் கல்வியார் - (அண்டர் நடுங்கல்லினார்) களிறு அணைப்பக் கலங்கின காஅ தேர் ஓடத் துகள் கெழுமின தெருவு மா மறுகலின் மயக்குற்றன வழி கலம் கழாஅலின் துறை கலக்குற்றன தெறல் மறவர் இறை கூர்தலின் பொறை மலிந்து நிலன் நெளிய வந்தோர் பலரே வம்ப வேந்தர் பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின் ஓவு உறழ் இரும் புறம் காவல் கண்ணிக் கரும் கண் கொண்ட நெருங்கல் வெம் முலை மையல் நோக்கின் தையலை நயந்தோர் அளியர் தாமே இவள் தன்னைமாரே செல்வம் வேண்டார் செருப் புகல் வேண்டி நிரல் அல்லோர்க்குத் தரலோ இல் எனக் கழிப் பிணிப் பலகையர் கதுவாய் வாளர் குழாஅம் கொண்ட குருதி அம் புலவொடு கழாஅத் தலையர் கரும் கடை நெடு வேல் இன்ன மறவர்த்து ஆயினும் அன்னோ என் ஆவது-கொல் தானே பன்னல் வேலி இப் பணை நல் ஊரே &6 - அணிலாடு முன்றிலார் #1 - குறுந்தொகை - 41 பாலை - அணிலாடு முன்றிலார் காதலர் உழையராகப் பெரிது உவந்து சாறு கொள் ஊரின் புகல்வேன்-மன்ற அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர் மக்கள் போகிய அணில் ஆடு முன்றில் புலப்பில் போலப் புல்லென்று அலப்பென் தோழி அவர் அகன்ற ஞான்றே &7 - அண்டர் மகன் குறுவழுதியார் #1 அகநானூறு - 150 நெய்தல் - அண்டர் மகன் குறுவழுதியார் பின்னு விட நெறித்த கூந்தலும் பொன் என ஆகத்து அரும்பிய சுணங்கும் வம்பு விடக் கண் உருத்து எழுதரு முலையும் நோக்கி எல்லினை பெரிது எனப் பல் மாண் கூறிப் பெரும் தோள் அடைய முயங்கி நீடு நினைந்து அரும் கடிப்படுத்தனள் யாயே கடும் செலல் வாள் சுறா வழங்கும் வளை மேய் பெரும் துறை கனைத்த நெய்தல் கண் போல் மா மலர் நனைத்த செருந்தி போது வாய் அவிழ மாலை மணி இதழ் கூம்பக் காலைக் கள் நாறு காவியொடு தண்ணென மலரும் கழியும் கானலும் காண்-தொறும் பல புலந்து வாரார்-கொல் எனப் பருவரும் தார் ஆர் மார்ப நீ தணந்த ஞான்றே #2 அகநானூறு - 228 குறிஞ்சி - அண்டர் மகன் குறுவழுதியார் பிரசப் பல் கிளை ஆர்ப்பக் கல்லென வரை இழி அருவி ஆரம் தீண்டித் தண் என நனைக்கும் நளிர் மலைச் சிலம்பில் கண் என மலர்ந்த மா இதழ்க் குவளைக் கல் முகை நெடும் சுனை நம்மொடு ஆடிப் பகலே இனிது உடன் கழிப்பி இரவே செல்வர் ஆயினும் நன்று-மன்-தில்ல வான் கண் விரிந்த பகல் மருள் நிலவின் சூரல் மிளைஇய சாரல் ஆர் ஆற்று ஓங்கல் மிசைய வேங்கை ஒள் வீ புலிப் பொறி கடுப்பத் தோன்றலின் கய வாய் இரும் பிடி இரியும் சோலைப் பெரும் கல் யாணர்த் தம் சிறுகுடியானே #3 குறுந்தொகை 345 நெய்தல் - அண்டர் மகன் குறுவழுதியார் இழை அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடும் தேர் வரை மருள் நெடு மணல் தவிர்த்தனிர் அசைஇத் தங்கினிர் ஆயின் தவறோ தகைய தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகலத் தாழை தைஇய தயங்கு திரைக் கொடும் கழி இழுமென ஒலிக்கும் ஆங்கண் பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே #4 புறநானூறு 346 - அண்டர் மகன் குறுவழுதியார் பிறங்கிலை இனி உள பால் என மடுத்தலின் ஈன்ற தாயோ வேண்டாள் அல்லள் கல்வியென் என்னும் வல் ஆண் சிறாஅன் ஒள் வேல் நல்லன் அது வாய் ஆகுதல் அழிந்தோர் அழிய ஒழிந்தோர் ஒக்கல் பேணுநர்ப் பெறாஅது விளியும் புன் தலைப் பெரும் பாழ் செயும் இவள் நலனே &8 - அதியன் விண்ணத்தனார் #1 அகநானூறு 301 பாலை - அதியன் விண்ணத்தனார் வறனுறு செய்யின் வாடுபு வருந்திப் படர் மிகப் பிரிந்தோர் உள்ளுபு நினைதல் சிறு நனி ஆன்றிகம் என்றி தோழி நல்குநர் ஒழித்த கூலிச் சில் பதம் ஒடிவை இன்றி ஓம்பாது உண்டு நீர் வாழ் முதலை ஆவித்து அன்ன ஆரை வேய்ந்த அறை வாய்ச் சகடத்து ஊர் இஃது என்னாஅர் ஊறு இல் வாழ்க்கை சுர முதல் வருத்தம் மர முதல் வீட்டி பாடு இன் தெண் கிணை கறங்கக் காண்வர குவி இணர் எருக்கின் ததர் பூம் கண்ணி ஆடூஉ சென்னித் தகைப்ப மகடூஉ முளரித் தீயின் முழம் அழல் விளக்கத்துக் களரி ஆவிரைக் கிளர் பூம் கோதை வண்ண மார்பின் வன முலைத் துயல்வர செறி நடைப் பிடியொடு களிறு புணர்ந்து என்னக் குறு நெடும் தூம்பொடு முழவு புணர்ந்து இசைப்பக் கார் வான் முழக்கின் நீர் மிசைத் தெவுட்டும் தேரை ஒலியின் மாணச் சீர் அமைத்து சில் அரி கறங்கும் சிறு பல்லியத்தொடு பல் ஊர் பெயர்வனர் ஆடி ஒல்லெனத் தலைப் புணர்த்து அசைத்த பல் தொகைக் கலப் பையர் இரும் பேர் ஒக்கல் கோடியர் இறந்த புன் தலை மன்றம் காணின் வழிநாள் அழுங்கல் மூதூர்க்கு இன்னாது ஆகும் அதுவே மருவினம் மாலை அதனால் காதலர் செய்த காதல் நீ இன்று மறத்தல் கூடுமோ மற்றே &9 - அந்தி இளங்கீரனார் #1 அகநானூறு 71 பாலை - அந்தி இளங்கீரனார் நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர் பயன் இன்மையின் பற்று விட்டு ஒரூஉம் நயன் இல் மாக்கள் போல வண்டு இனம் சுனைப் பூ நீத்துச் சினைப் பூப் படர மை இல் மான் இனம் மருளப் பையென வெந்து ஆறு பொன்னின் அந்தி பூப்ப ஐ அறிவு அகற்றும் கையறு படரோடு அகல் இரு வானம் அம் மஞ்சு ஈனப் பகல் ஆற்றுப்படுத்த பழங்கண் மாலை காதலர்ப் பிரிந்த புலம்பின் நோதக ஆர் அஞர் உறுநர் அரு நிறம் சுட்டிச் கூர் எஃகு எறிஞரின் அலைத்தல் ஆனாது எள் அற இயற்றிய நிழல்_காண்_மண்டிலத்து உள் ஊது ஆவியின் பைப்பய நுணுகி மதுகை மாய்தல் வேண்டும் பெரிது அழிந்து இது-கொல் வாழி தோழி என் உயிர் விலங்கு வெம் கடு வளி எடுப்பத் துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே &10 - அம்மூவனார் #1 அகநானூறு 10 நெய்தல் - அம்மூவனார் வான் கடல் பரப்பில் தூவற்கு எதிரிய மீன் கண்டு அன்ன மெல் அரும்பு ஊழ்த்த முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச் சினை புள் இறைகூரும் மெல்லம்புலம்ப நெய்தல் உண்கண் பைதல கலுழ பிரிதல் எண்ணினை ஆயின் நன்றும் அரிது உற்றனையால் பெரும உரிதினின் கொண்டு ஆங்கு பெயர்தல் வேண்டும் கொண்டலொடு குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப் பழம் திமில் கொன்ற புது வலைப் பரதவர் மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கெண்டி மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும் வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே #2 அகநானூறு 35 பாலை - அம்மூவனார் ஈன்று புறந்தந்த எம்மும் உள்ளாள் வான் தோய் இஞ்சி நல் நகர் புலம்பத் தனி மணி இரட்டும் தாள் உடைக் கடிகை நுழை நுதி நெடு வேல் குறும் படை மழவர் முனை ஆத் தந்து முரம்பின் வீழ்த்த வில் ஏர் வாழ்க்கை விழுத் தொடை மறவர் வல் ஆண் பதுக்கைக் கடவுள் பேண்மார் நடுகல் பீலி சூட்டித் துடிப்படுத்துத் தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும் போக்கு அரும் கவலைய புலவு நாறு அரும் சுரம் துணிந்து பிறள் ஆயினள் ஆயினும் அணிந்துஅணிந்து ஆர்வ நெஞ்சமொடு ஆய் நலன் அளைஇத் தன் மார்பு துணை ஆகத் துயிற்றுக-தில்ல துஞ்சா முழவின் கோவல் கோமான் நெடும் தேர்க் காரி கொடும் கால் முன்துறை பெண்ணை அம் பேரியாற்று நுண் அறல் கடுக்கும் நெறி இரும் கதுப்பின் என் பேதைக்கு அறியாத் தேஎத்து ஆற்றிய துணையே #3 அகநானூறு140 - நெய்தல் - அம்மூவனார் பெரும் கடல் வேட்டத்துச் சிறுகுடிப் பரதவர் இரும் கழி செறுவின் உழாஅது செய்த வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி என்றூழ் விடர குன்றம் போகும் கதழ் கோல் உமணர் காதல் மட_மகள் சில் கோல் எல் வளை தெளிர்ப்ப வீசி நெல்லின் நேரே வெண் கல் உப்பு எனச் சேரி விலைமாறு கூறலின் மனைய விளி அறி ஞமலி குரைப்ப வெரீஇய மதர் கயல் மலைப்பின் அன்ன கண் எமக்கு இதை முயல் புனவன் புகை நிழல் கடுக்கும் மா மூது அள்ளல் அழுந்திய சாகாட்டு எவ்வம் தீர வாங்கும் தந்தை கை பூண் பகட்டின் வருந்தி வெய்ய உயிர்க்கும் நோய் ஆகின்றே #4 அகநானூறு 280 - நெய்தல் - அம்மூவனார் பொன் அடர்ந்து அன்ன ஒள் இணர்ச் செருந்திப் பல் மலர் வேய்ந்த நலம் பெறு கோதையள் திணி மணல் அடைகரை அலவன் ஆட்டி அசையினள் இருந்த ஆய் தொடிக் குறு_மகள் நலம் சால் விழுப் பொருள் கலம் நிறை கொடுப்பினும் பெறல் அரும்-குரையள் ஆயின் அறம் தெரிந்து நாம் உறை தேஎம் மரூஉப் பெயர்ந்து அவனொடு இரு நீர்ச் சேர்ப்பின் உப்பு உடன் உழுதும் பெரு நீர்க் குட்டம் புணையொடு புக்கும் படுத்தனம் பணிந்தனம் அடுத்தனம் இருப்பின் தருகுவன்-கொல்லோ தானே விரி திரைக் கண் திரள் முத்தம் கொண்டு ஞாங்கர்த் தேன் இமிர் அகன் கரைப் பகுக்கும் கானல் அம் பெரும் துறைப் பரதவன் எமக்கே #5 அகநானூறு 370 - நெய்தல் - அம்மூவனார் வளை வாய்க் கோதையர் வண்டல் தைஇ இளையோர் செல்ப எல்லும் எல்லின்று அகல் இலைப் புன்னைப் புகர் இல் நீழல் பகலே எம்மொடு ஆடி இரவே காயல் வேய்ந்த தேயா நல் இல் நோயொடு வைகுதி ஆயின் நுந்தை அரும் கடிப் படுவலும் என்றி மற்று நீ செல்லல் என்றலும் ஆற்றாய் செலினே வாழலென் என்றி ஆயின் ஞாழல் வண்டு படத் ததைந்த கண்ணி நெய்தல் தண் அரும் பைம் தார் துயல்வர அந்தி கடல் கெழு செல்வி கரை நின்று ஆங்கு நீயே கானல் ஒழிய யானே வெறி கொள் பாவையின் பொலிந்த என் அணி துறந்து ஆடு_மகள் போலப் பெயர்தல் ஆற்றேன் தெய்ய அலர்க இவ் ஊரே #6 அகநானூறு 390 - நெய்தல் - அம்மூவனார் உவர் விளை உப்பின் கொள்ளை சாற்றி அதர் படு பூழிய சேண் புலம் படரும் ததர் கோல் உமணர் பதி போகு நெடு நெறிக் கண நிரை வாழ்க்கை தான் நன்று-கொல்லோ வணர் சுரி முச்சி முழுதும் மன் புரள ஐது அகல் அல்குல் கவின் பெறப் புனைந்த பல் குழைத் தொடலை ஒல்கு-வயின் ஒல்கி நெல்லும் உப்பும் நேரே ஊரீர் கொள்ளீரோ எனச் சேரி-தொறும் நுவலும் அம் வாங்கு உந்தி அமைத் தோளாய் நின் மெய் வாழ் உப்பின் விலை எய்யாம் எனச் சிறிய விலங்கினம் ஆகப் பெரிய தன் அரி வேய் உண்கண் அமர்த்தனள் நோக்கி யாரீரோ எம் விலங்கியீஇர் என மூரல் முறுவலள் பேர்வனள் நின்ற சில் நிரை வால் வளைப் பொலிந்த பல் மாண் பேதைக்கு ஒழிந்தது என் நெஞ்சே ** ஐங்குறுநூறு - நெய்தல் ** 11 தாய்க்கு உரைத்த பத்து #7 ஐங்குறுநூறு 101 - அம்மூவனார் அன்னை வாழி வேண்டு அன்னை உதுக் காண் ஏர் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு நெய்தல் மயக்கி வந்தன்று நின் மகள் பூப் போல் உண்கண் மரீஇய நோய்க்கு மருந்து ஆகிய கொண்கன் தேரே #8 ஐங்குறுநூறு 102 - அம்மூவனார் அன்னை வாழி வேண்டு அன்னை நம் ஊர் நீல் நிறப் பெரும் கடல் புள்ளின் ஆனாது துன்புறு துயரம் நீங்க இன்புற இசைக்கும் அவர் தேர் மணிக் குரலே #9 ஐங்குறுநூறு 103 - அம்மூவனார் அன்னை வாழி வேண்டு அன்னை புன்னையொடு ஞாழல் பூக்கும் தண்ணம் துறைவன் இவட்கு அமைந்தனனால் தானே தனக்கு அமைந்தன்று இவள் மாமைக் கவினே #10 ஐங்குறுநூறு 104 - அம்மூவனார் அன்னை வாழி வேண்டு அன்னை நம் ஊர்ப் பலர் மடி பொழுதின் நலம் மிகச் சாஅய் நள்ளென வந்த இயல் தேர்ச் செல்வ கொண்கன் செல்வனஃது ஊரே #11 ஐங்குறுநூறு 105 - அம்மூவனார் அன்னை வாழி வேண்டு அன்னை முழங்கு கடல் திரை தரு முத்தம் வெண் மணல் இமைக்கும் தண்ணம் துறைவன் வந்து எனப் பொன்னினும் சிவந்தன்று கண்டிசின் நுதலே #12 ஐங்குறுநூறு 106 - அம்மூவனார் அன்னை வாழி வேண்டு அன்னை அவர் நாட்டுத் துதிக் கால் அன்னம் துணை செத்து மிதிக்கும் தன் கடல் வளையினும் இலங்கும் இவள் அம் கலிழ் ஆகம் கண்டிசின் நினைந்தே #13 ஐங்குறுநூறு 107 - அம்மூவனார் அன்னை வாழி வேண்டு அன்னை என் தோழி சுடர் நுதல் பசப்பச் சாஅய்ப் படர் மெலிந்து தண் கடல் படு திரை கேள்-தொறும் துஞ்சாள் ஆகுதல் நோகோ யானே #14 ஐங்குறுநூறு 108 - அம்மூவனார் அன்னை வாழி வேண்டு அன்னை கழிய முண்டகம் மலரும் தண் கடல் சேர்ப்பன் எம் தோள் துறந்தனன் ஆயின் எவன்-கொல் மற்று அவன் நயந்த தோளே #15 ஐங்குறுநூறு 109 - அம்மூவனார் அன்னை வாழி வேண்டு அன்னை நெய்தல் நீர் படர் தூம்பின் பூக் கெழு துறைவன் எம் தோள் துறந்த காலை எவன்-கொல் பல் நாள் வரும் அவன் அளித்த போழ்தே #16 ஐங்குறுநூறு 110 - அம்மூவனார் அன்னை வாழி வேண்டு அன்னை புன்னை பொன் நிறம் விரியும் பூக் கெழு துறைவனை என் ஐ என்றும் யாமே இ ஊர் பிறிது ஒன்றாகக் கூறும் ஆங்கும் ஆக்குமோ வழிய பாலே ** 12 தோழிக்கு உரைத்த பத்து #17 ஐங்குறுநூறு 111 - அம்மூவனார் அம்ம வாழி தோழி பாணன் சூழ் கழி மருங்கின் நாண் இரை கொளீஇச் சினைக் கயல் மாய்க்கும் துறைவன் கேண்மை பிரிந்தும் வாழ்துமோ நாமே அரும் தவம் முயறல் ஆற்றாதேமே #18 ஐங்குறுநூறு 112 - அம்மூவனார் அம்ம வாழி தோழி பாசிலைச் செருந்தி தாய இரும் கழிச் சேர்ப்பன் தான் வரக் காண்குவம் நாமே மறந்தோம் மன்ற நாண் உடை நெஞ்சே #19 ஐங்குறுநூறு 113 - அம்மூவனார் அம்ம வாழி தோழி நென்னல் ஓங்கு திரை வெண் மணல் உடைக்கும் துறைவற்கு ஊரார் பெண்டு என மொழிய என்னை அது கேட்டு அன்னாய் என்றனள் அன்னை பைபய எம்மை என்றனென் யானே #20 ஐங்குறுநூறு 114 - அம்மூவனார் அம்ம வாழி தோழி கொண்கன் நேரேம் ஆயினும் செல்குவம்-கொல்லோ கடலின் நாரை இரற்றும் மடல் அம் பெண்ணை அவன் உடை நாட்டே #21 ஐங்குறுநூறு 115 - அம்மூவனார் அம்ம வாழி தோழி பல் மாண் நுண் மணல் அடைகரை நம்மோடு ஆடிய தண்ணம் துறைவன் மறைஇ அன்னை அரும் கடி வந்து நின்றோனே #22 ஐங்குறுநூறு 116 - அம்மூவனார் அம்ம வாழி தோழி நாம் அழ நீல இரும் கழி நீலம் கூம்பும் மாலை வந்தன்று-மன்ற காலை அன்ன காலை முந்துறுத்தே #23 ஐங்குறுநூறு 117 - அம்மூவனார் அம்ம வாழி தோழி நலனே இன்னது ஆகுதல் கொடிதே புன்னை அணி மலர் துறை-தொறும் வரிக்கும் மணி நீர்ச் சேர்ப்பனை மறவாதோர்க்கே #24 ஐங்குறுநூறு 118 - அம்மூவனார் அம்ம வாழி தோழி யான் இன்று அறனிலாளன் கண்ட பொழுதில் சினவுவென் தகைக்குவென் சென்றனென் பின் நினைந்து இரங்கிப் பெயர்தந்தேனே #25 ஐங்குறுநூறு 119 - அம்மூவனார் அம்ம வாழி தோழி நன்றும் எய்யாமையின் ஏது இல பற்றி அன்பு இலன்-மன்ற பெரிதே மென்புலக் கொண்கன் வாராதோனே #26 ஐங்குறுநூறு 120 - அம்மூவனார் அம்ம வாழி தோழி நலம் மிக நல்ல ஆயின அளிய மென் தோளே மல்லல் இரும் கழி மல்கும் மெல்லம்புலம்பன் வந்த மாறே ** 13 கிழவற்கு உரைத்த பத்து #27 ஐங்குறுநூறு 121 - அம்மூவனார் கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே முண்டகக் கோதை நனையத் தெண் திரைப் பௌவம் பாய்ந்து நின்றோளே #28 ஐங்குறுநூறு 122 - அம்மூவனார் கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே ஒள் இழை உயர் மணல் வீழ்ந்து என வெள்ளாங்குருகை வினவுவோளே #29 ஐங்குறுநூறு 123 - அம்மூவனார் கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே ஒள் நுதல் ஆயம் ஆர்ப்பத் தண்ணென் பெரும் கடல் திரை பாய்வோளே #30 ஐங்குறுநூறு 124 - அம்மூவனார் கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே வண்டல் பாவை வௌவலின் நுண் பொடி அளைஇக் கடல் தூர்ப்போளே #31 ஐங்குறுநூறு 125 - அம்மூவனார் கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே தெண் திரை பாவை வௌவ உண்கண் சிவப்ப அழுது நின்றோளே #32 ஐங்குறுநூறு 126 - அம்மூவனார் கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே உண்கண் வண்டு இனம் மொய்ப்பத் தெண் கடல் பெரும் திரை மூழ்குவோளே #33 ஐங்குறுநூறு 127 - அம்மூவனார் கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே தும்பை மாலை இள முலை நுண் பூண் ஆகம் விலங்குவோளே #34 ஐங்குறுநூறு 128 - அம்மூவனார் கண்டிகும் அல்லமோ கொண்க நின் கேளே உறாஅ வறு முலை மடாஅ உண்ணாப் பாவையை ஊட்டுவோளே #35 ஐங்குறுநூறு 129 ** கிடைக்காத பாடல் #36 ஐங்குறுநூறு 130 ** கிடைக்காத பாடல் ** 14 பாணற்கு உரைத்த பத்து #37 ஐங்குறுநூறு 131 - அம்மூவனார் நன்றே பாண கொண்கனது நட்பே தில்லை வேலி இவ் ஊர்க் கல்லென் கௌவை எழாஅக்காலே #38 ஐங்குறுநூறு 132 - அம்மூவனார் அம்ம வாழி பாண புன்னை அரும்பு மலி கானல் இவ் ஊர் அலர் ஆகின்று அவர் அருளும் ஆறே #38 ஐங்குறுநூறு 133 - அம்மூவனார் யான் எவன் செய்கோ பாண ஆனாது மெல்லம்புலம்பன் பிரிந்து எனப் புல்லென்றன என் புரி வளைத் தோளே #40 ஐங்குறுநூறு 134 - அம்மூவனார் காண்-மதி பாண இரும் கழிப் பாய் பரி நெடும் தேர்க் கொண்கனோடு தான் வந்தன்று என் மாமைக் கவினே #41 ஐங்குறுநூறு 135 - அம்மூவனார் பைதலம் அல்லேம் பாண பணைத் தோள் ஐது அமைந்து அகன்ற அல்குல் நெய்தல் அம் கண்ணியை நேர்தல் நாம் பெறினே #42 ஐங்குறுநூறு 136 - அம்மூவனார் நாணிலை மன்ற பாண நீயே கோள் நேர் இலங்கு வளை நெகிழ்த்த கானல் அம் துறைவற்குச் சொல் உகுப்போயே #43 ஐங்குறுநூறு 137 - அம்மூவனார் நின் ஒன்று வினவுவல் பாண நும் ஊர்த் திண் தேர்க் கொண்கனை நயந்தோர் பண்டைத் தம் நலம் பெறுபவோ மற்றே #44 ஐங்குறுநூறு 138 - அம்மூவனார் பண்பிலை மன்ற பாண இவ் ஊர் அன்பு இல கடிய கழறி மென்புலக் கொண்கனைத் தாராதோயே #45 ஐங்குறுநூறு 139 - அம்மூவனார் அம்ம வாழி கொண்க எம்-வயின் மாண் நலம் மருட்டும் நின்னினும் பாணன் நல்லோர் நலம் சிதைக்கும்மே #46 ஐங்குறுநூறு 140 - அம்மூவனார் காண்-மதி பாண நீ உரைத்தற்கு உரியை துறை கெழு கொண்கன் பிரிந்து என இறை கேழ் எல் வளை நீங்கிய நிலையே ** 15 ஞாழற் பத்து #47 ஐங்குறுநூறு 141 - அம்மூவனார் எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத் துவலைத் தண் துளி வீசிப் பயலை செய்தன பனி படு துறையே #48 ஐங்குறுநூறு 142 - அம்மூவனார் எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப் படு சினைப் புள் இறை கூரும் துறைவனை உள்ளேன் தோழி படீஇயர் என் கண்ணே #49 ஐங்குறுநூறு 143 - அம்மூவனார் எக்கர் ஞாழல் புள் இமிழ் அகன் துறை இனிய செய்த நின்று பின் முனிவு செய்த இவள் தட மென் தோளே #50 ஐங்குறுநூறு 144 - அம்மூவனார் எக்கர் ஞாழல் இணர் படு பொதும்பர்த் தனிக் குருகு உறங்கும் துறைவற்கு இனிப் பசந்தன்று என் மாமைக் கவினே #51 ஐங்குறுநூறு 145 - அம்மூவனார் எக்கர் ஞாழல் சிறியிலைப் பெரும் சினை ஓதம் வாங்கும் துறைவன் மாயோள் பசலை நீக்கினன் இனியே #52 ஐங்குறுநூறு 146 - அம்மூவனார் எக்கர் ஞாழல் அரும்பு முதிர் அவிழ் இணர் நறிய கமழும் துறைவற்கு இனிய-மன்ற என் மாமைக் கவினே #53 ஐங்குறுநூறு 147 - அம்மூவனார் எக்கர் ஞாழல் மலர் இல் மகளிர் ஒண் தழை அயரும் துறைவன் தண் தழை விலை என நல்கினன் நாடே #54 ஐங்குறுநூறு 148 - அம்மூவனார் எக்கர் ஞாழல் இகந்து படு பெரும் சினை வீ இனிது கமழும் துறைவனை நீ இனிது முயங்குதி காதலோயே #55 ஐங்குறுநூறு 149 - அம்மூவனார் எக்கர் ஞாழல் பூவின் அன்ன சுணங்கு வளர் இள முலை மடந்தைக்கு அணங்கு வளர்த்து அகறல் வல்லாதீமோ #56 ஐங்குறுநூறு 150 - அம்மூவனார் எக்கர் ஞாழல் நறு மலர்ப் பெரும் சினைப் புணரி திளைக்கும் துறைவன் புணர்வின் இன்னான் அரும் புணர்வினனே ** 16 வெள்ளங் குருகுப் பத்து #57 ஐங்குறுநூறு 151 - அம்மூவனார் வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து எனக் காணிய சென்ற மட நடை நாரை மிதிப்ப நக்க கண் போல் நெய்தல் கள் கமழ்ந்து ஆனாத் துறைவற்கு நெக்க நெஞ்சம் நேர்கல்லேனே #58 ஐங்குறுநூறு 152 - அம்மூவனார் வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து எனக் காணிய சென்ற மட நடை நாரை கையறுபு இரற்றும் கானல் அம் புலம்பத் துறைவன் வரையும் என்ப அறவன் போலும் அருளுமார் அதுவே #59 ஐங்குறுநூறு 153 - அம்மூவனார் வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து எனக் காணிய சென்ற மட நடை நாரை உளர ஒழிந்த தூவி குலவு மணல் போர்வில் பெறூஉம் துறைவன் கேண்மை நல் நெடும் கூந்தல் நாடுமோ மற்றே #60 ஐங்குறுநூறு 154 - அம்மூவனார் வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து எனக் காணிய சென்ற மட நடை நாரை கானல் சேக்கும் துறைவனோடு யான் எவன் செய்கோ பொய்க்கும் இவ் ஊரே #61 ஐங்குறுநூறு 155 - அம்மூவனார் வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து எனக் காணிய சென்ற மட நடை நாரை பதைப்பத் ததைந்த நெய்தல் கழிய ஓதமொடு பெயரும் துறைவற்குப் பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென் யானே #62 ஐங்குறுநூறு 156 - அம்மூவனார் வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து எனக் காணிய சென்ற மட நடை நாரை பதைப்ப ஒழிந்த செம் மறுத் தூவி தெண் கழிப் பரக்கும் துறைவன் எனக்கோ காதலன் அனைக்கோ வேறே #63 ஐங்குறுநூறு 157 - அம்மூவனார் வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து எனக் காணிய சென்ற மட நடை நாரை காலை இருந்து மாலைச் சேக்கும் தெண் கடல் சேர்ப்பனொடு வாரான் தான் வந்தனன் எம் காதலோனே #64 ஐங்குறுநூறு 158 - அம்மூவனார் வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து எனக் காணிய சென்ற மட நடை நாரை கானல் அம் பெரும் துறைத் துணையொடு கொட்கும் தண்ணம் துறைவன் கண்டிகும் அம் மா மேனி எம் தோழியது துயரே #65 ஐங்குறுநூறு 159 - அம்மூவனார் வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து எனக் காணிய சென்ற மட நடை நாரை பசி தின அல்கும் பனி நீர்ச் சேர்ப்ப நின் ஒன்று இரக்குவன் அல்லேன் தந்தனை சென்மோ கொண்ட இவள் நலனே #66 ஐங்குறுநூறு 160 - அம்மூவனார் வெள்ளாங்குருகின் பிள்ளை செத்து எனக் காணிய சென்ற மட நடை நாரை நொந்ததன்தலையும் நோய் மிகும் துறைவ பண்டையின் மிகப் பெரிது இனைஇ முயங்கு-மதி பெரும மயங்கினள் பெரிதே ** 17 சிறுவெண் காக்கைப் பத்து #67 ஐங்குறுநூறு 161 - அம்மூவனார் பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை கரும் கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப் பயந்த நுதல் அழியச் சாஅய் நயந்த நெஞ்சம் நோய்ப்பாலஃதே #68 ஐங்குறுநூறு 162 - அம்மூவனார் பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை நீத்து நீர் இரும் கழி இரை தேர்ந்து உண்டு பூக் கமழ் பொதும்பர்ச் சேக்கும் துறைவன் சொல்லோ பிற ஆயினவே #69 ஐங்குறுநூறு 163 - அம்மூவனார் பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை இரும் கழித் துவலை ஒலியின் துஞ்சும் துறைவன் துறந்து எனத் துறந்து என் இறை ஏர் முன்கை நீக்கிய வளையே #70 ஐங்குறுநூறு 164 - அம்மூவனார் பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை இரும் கழி மருங்கின் அயிரை ஆரும் தண்ணம் துறைவன் தகுதி நம்மோடு அமையாது அலர் பயந்தன்றே #71 ஐங்குறுநூறு 165 - அம்மூவனார் பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை அறு கழிச் சிறு மீன் ஆர மாந்தும் துறைவன் சொல்லிய சொல் என் இறை ஏர் எல் வளை கொண்டு நின்றதுவே #72 ஐங்குறுநூறு 166 - அம்மூவனார் பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை வரி வெண் தாலி வலை செத்து வெரூஉம் மெல்லம்புலம்பன் தேறி நல்ல ஆயின நல்லோள் கண்ணே #73 ஐங்குறுநூறு 167 - அம்மூவனார் பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை இரும் கழி இனக் கெடிறு ஆரும் துறைவன் நல்குவன் போலக் கூறி நல்கான் ஆயினும் தொல் கேளன்னே #74 ஐங்குறுநூறு 168 - அம்மூவனார் பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை துறை படி அம்பி அகமணை ஈனும் தண்ணம் துறைவன் நல்கின் ஒண் நுதல் அரிவை பால் ஆரும்மே #75 ஐங்குறுநூறு 169 - அம்மூவனார் பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை பொன் இணர் ஞாழல் முனையின் பொதி அவிழ் புன்னை அம் பூம் சினைச் சேக்கும் துறைவன் நெஞ்சத்து உண்மை அறிந்தும் என் செயப் பசக்கும் தோழி என் கண்ணே #76 ஐங்குறுநூறு 170 - அம்மூவனார் பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை இரும் கழி நெய்தல் சிதைக்கும் துறைவன் நல்லன் என்றி ஆயின் பல் இதழ் உண்கண் பசத்தல் மற்று எவனோ ** 18 தொண்டிப் பத்து #77 ஐங்குறுநூறு 171 - அம்மூவனார் திரை இமிழ் இன் இசை அளைஇ அயலது முழவு இமிழ் இன் இசை மறுகு-தொறு இசைக்கும் தொண்டி அன்ன பணைத் தோள் ஒண் தொடி அரிவை என் நெஞ்சு கொண்டோளே #78 ஐங்குறுநூறு 172 - அம்மூவனார் ஒண் தொடி அரிவை கொண்டனள் நெஞ்சே வண்டு இமிர் பனித் துறைத் தொண்டி ஆங்கண் உரவுக் கடல் ஒலித் திரை போல இரவினானும் துயில் அறியேனே #79 ஐங்குறுநூறு 173 - அம்மூவனார் இரவினானும் இன் துயில் அறியாது அரவு உறு துயரம் எய்துப தொண்டித் தண் நறு நெய்தல் நாறும் பின் இரும் கூந்தல் அணங்கு உற்றோரே #80 ஐங்குறுநூறு 174 - அம்மூவனார் அணங்கு உடைப் பனித் துறைத் தொண்டி அன்ன மணம் கமழ் பொழில் குறி நல்கினள் நுணங்கு இழை பொங்கு அரி பரந்த உண்கண் அம் கலிழ் மேனி அசைஇய எமக்கே #81 ஐங்குறுநூறு 175 - அம்மூவனார் எமக்கு நயந்து அருளினை ஆயின் பணைத் தோள் நல் நுதல் அரிவையொடு மென்மெல இயலி வந்திசின் வாழியோ மடந்தை தொண்டி அன்ன நின் பண்பு பல கொண்டே #82 ஐங்குறுநூறு 176 - அம்மூவனார் பண்பும் பாயலும் கொண்டனள் தொண்டித் தண் கமழ் புது மலர் நாறும் ஒண் தொடி ஐது அமைந்து அகன்ற அல்குல் கொய் தளிர் மேனி கூறு-மதி தவறே #83 ஐங்குறுநூறு 177 - அம்மூவனார் தவறிலர் ஆயினும் பனிப்ப மன்ற இவறு திரை திளைக்கும் இடு மணல் நெடும் கோட்டு முண்டக நறு மலர் கமழும் தொண்டி அன்னோள் தோள் உற்றோரே #84 ஐங்குறுநூறு 178 - அம்மூவனார் தோளும் கூந்தலும் பல பாராட்டி வாழ்தல் ஒல்லுமோ மற்றே செங்கோல் குட்டுவன் தொண்டி அன்ன என் கண்டு நயந்து நீ நல்காக்காலே #85 ஐங்குறுநூறு 179 - அம்மூவனார் நல்கு-மதி வாழியோ நளி நீர்ச் சேர்ப்ப அலவன் தாக்கத் துறை இறாப் பிறழும் இன் ஒலித் தொண்டி அற்றே நின் அலது இல்லா இவள் சிறு நுதலே #86 ஐங்குறுநூறு 180 - அம்மூவனார் சிறு நணி வரைந்தனை கொண்மோ பெருநீர் வலைவர் தந்த கொழு மீன் வல்சிப் பறை தபு முது குருகு இருக்கும் துறை கெழு தொண்டி அன்ன இவள் நலனே ** 19 நெய்தற் பத்து #87 ஐங்குறுநூறு 181 - அம்மூவனார் நெய்தல் உண்கண் ஏர் இறைப் பணைத் தோள் பொய்தல் ஆடிய பொய்யா மகளிர் குப்பை வெண் மணல் குரவை நிறூஉம் துறை கெழு கொண்கன் நல்கின் உறைவு இனிது அம்ம இவ் அழுங்கல் ஊரே #88 ஐங்குறுநூறு 182 - அம்மூவனார் நெய்தல் நறு மலர் செருந்தியொடு விரைஇக் கை புனை நறும் தார் கமழும் மார்பன் அரும் திறல் கடவுள் அல்லன் பெரும் துறைக் கண்டு இவள் அணங்கியோனே #89 ஐங்குறுநூறு 183 - அம்மூவனார் கணம்கொள் அருவிக் கான் கெழு நாடன் குறும்பொறை நாடன் நல் வயல் ஊரன் தண் கடல் சேர்ப்பன் பிரிந்து எனப் பண்டையின் கடும் பகல் வருதி கையறு மாலை கொடும் கழி நெய்தலும் கூம்பக் காலை வரினும் களைஞரோ இலரே #90 ஐங்குறுநூறு 184 - அம்மூவனார் நெய்தல் இரும் கழி நெய்தல் நீக்கி மீன் உண் குருகு இனம் கானல் அல்கும் கடல் அணிந்தன்று அவர் ஊரே கடலினும் பெரிது எமக்கு அவர் உடை நட்பே #91 ஐங்குறுநூறு 185 - அம்மூவனார் அலங்கு இதழ் நெய்தல் கொற்கை முன்துறை இலங்கு முத்து உறைக்கும் எயிறு கெழு துவர் வாய் அரம் போழ் அவ் வளைக் குறுமகள் நரம்பு ஆர்த்து அன்ன தீம் கிளவியளே #92 ஐங்குறுநூறு 186 - அம்மூவனார் நாரை நல் இனம் கடுப்ப மகளிர் நீர் வார் கூந்தல் உளரும் துறைவ பொங்கு கழி நெய்தல் உறைப்ப இத் துறைப் பல்கால் வரூஉம் தேர் எனச் செல்லாதீமோ என்றனள் யாயே #93 ஐங்குறுநூறு 187 - அம்மூவனார் நொதுமலாளர் கொள்ளார் இவையே எம்மொடு வந்து கடல் ஆடு மகளிரும் நெய்தல் அம் பகைத் தழைப் பாவை புனையார் உடலகம் கொள்வோர் இன்மையின் தொடலைக்கு உற்ற சில பூவினரே #94 ஐங்குறுநூறு 188 - அம்மூவனார் இரும் கழிச் சே_இறா இனப் புள் ஆரும் கொற்கைக் கோமான் கொற்கை அம் பெரும் துறை வைகறை மலரும் நெய்தல் போலத் தகை பெரிது உடைய காதலி கண்ணே #95 ஐங்குறுநூறு 189 - அம்மூவனார் புன்னை நுண் தாது உறைத்தரு நெய்தல் பொன்படு மணியின் பொற்பத் தோன்றும் மெல்லம்புலம்பன் வந்து என நல்லன ஆயின தோழி என் கண்ணே #96 ஐங்குறுநூறு 190 - அம்மூவனார் தண் நறு நெய்தல் தளை அவிழ் வான் பூ வெண்ணெல் அரிநர் மாற்றினர் அறுக்கும் மெல்லம்புலம்பன்-மன்ற எம் பல் இதழ் உண்கண் பனி செய்தோனே ** 20 வளைப் பத்து #97 ஐங்குறுநூறு 191 - அம்மூவனார் கடல் கோடு செறிந்த வளை வார் முன்கைக் கழிப் பூத் தொடர்ந்த இரும் பல் கூந்தல் கானல் ஞாழல் கவின் பெறும் தழையள் வரை அர_மகளிரின் அரியள் என் நிறை அரு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே #98 ஐங்குறுநூறு 192 - அம்மூவனார் கோடு புலம் கொட்பக் கடல் எழுந்து முழுங்கப் பாடு இமிழ் பனித் துறை ஓடு கலம் உகைக்கும் துறைவன் பிரிந்து என நெகிழ்ந்தன வீங்கின-மாதோ தோழி என் வளையே #99 ஐங்குறுநூறு 193 - அம்மூவனார் வலம்புரி உழுத வார் மணல் அடைகரை இலங்கு கதிர் முத்தம் இருள் கெட இமைக்கும் துறை கெழு கொண்க நீ தந்த அறை புனல் வால் வளை நல்லவோ தாமே #100 ஐங்குறுநூறு 194 - அம்மூவனார் கடல் கோடு அறுத்த அரம் போழ் அம் வளை ஒண் தொடி மடவரல் கண்டிகும் கொண்க நல் நுதல் இன்று மால்செய்து எனக் கொன் ஒன்று கடுத்தனள் அன்னையது நிலையே #101 ஐங்குறுநூறு 195 - அம்மூவனார் வளை படு முத்தம் பரதவர் பகரும் கடல் கெழு கொண்கன் காதல் மட_மகள் கெடல் அரும் துயரம் நல்கிப் படல் இன் பாயல் நல்கியோளே #102 ஐங்குறுநூறு 196 - அம்மூவனார் கோடு ஈர் எல் வளை கொழும் பல் கூந்தல் ஆய் தொடி மடவரல் வேண்டுதி ஆயின் தெண் கழி சே_இறாப் படூஉம் தண் கடல் சேர்ப்ப வரைந்தனை கொண்மோ #103 ஐங்குறுநூறு 197 - அம்மூவனார் இலங்கு வளை தெளிர்ப்ப அலவன் ஆட்டி முகம் புதை கதுப்பினள் இறைஞ்சி நின்றோளே புலம்பு கொள் மாலை மறைய நலம் கேழ் ஆகம் நல்குவள் எனக்கே #104 ஐங்குறுநூறு 198 - அம்மூவனார் வளை அணி முன்கை வால் எயிற்று அமர் நகை இளையர் ஆடும் தளை அவிழ் கானல் குறும் துறை வினவி நின்ற நெடும் தோள் அண்ணல் கண்டிகும் யாமே #105 ஐங்குறுநூறு 199 - அம்மூவனார் கானல் அம் பெரும் துறைக் கலி திரை திளைக்கும் வான் உயர் நெடு மணல் ஏறி ஆனாது காண்கம் வம்மோ தோழி செறி வளை நெகிழ்த்தோன் எறி கடல் நாடே #106 ஐங்குறுநூறு 200 - அம்மூவனார் இலங்கு வீங்கு எல் வளை ஆய் நுதல் கவினப் பொலம் தேர்க் கொண்கன் வந்தனன் இனியே விலங்கு அரி நெடும் கண் ஞெகிழ்-மதி நலம் கவர் பசலையை நகுகம் நாமே #107 குறுந்தொகை 49 - நெய்தல் - அம்மூவனார் அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து மணிக் கேழ் அன்ன மா நீர்ச் சேர்ப்ப இம்மை மாறி மறுமை ஆயினும் நீ ஆகியர் எம் கணவனை யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே #108 குறுந்தொகை125 - நெய்தல் - அம்மூவனார் இலங்கு வளை நெகிழச் சாஅய் யானே உளெனே வாழி தோழி சாரல் தழை அணி அல்குல் மகளிருள்ளும் விழவு மேம்பட்ட என் நலனே பழ விறல் பறை வலம் தப்பிய பைதல் நாரை திரை தோய் வாங்கு சினை இருக்கும் தண்ணம் துறைவனொடு கண்மாறின்றே #109 குறுந்தொகை 163 - நெய்தல் - அம்மூவனார் யார் அணங்கு உற்றனை கடலே பூழியர் சிறு தலை வெள்ளைத் தோடு பரந்து அன்ன மீன் ஆர் குருகின் கானல் அம் பெரும் துறை வெள் வீத் தாழை திரை அலை நள்ளென் கங்குலும் கேட்கும் நின் குரலே #110 குறுந்தொகை 303 - நெய்தல் - அம்மூவனார் கழி தேர்ந்து அசைஇய கரும் கால் வெண் குருகு அடைகரைத் தாழைக் குழீஇப் பெரும் கடல் உடை திரை ஒலியில் துஞ்சும் துறைவ தொல் நிலை நெகிழ்ந்த வளையள் ஈங்குப் பசந்தனள்-மன் என் தோழி என்னொடும் இன் இணர்ப் புன்னை அம் புகர் நிழல் பொன் வரி அலவன் ஆட்டிய ஞான்றே #111 குறுந்தொகை 306 - நெய்தல் - அம்மூவனார் மெல்லிய இனிய மேவரு தகுந இவை மொழியாம் எனச் சொல்லினும் அவை நீ மறத்தியோ வாழி என் நெஞ்சே பல உடன் காமர் மாஅத்துத் தாது அமர் பூவின் வண்டு வீழ்பு அயரும் கானல் தெண் கடல் சேர்ப்பனைக் கண்ட பின்னே #112 குறுந்தொகை 318 - நெய்தல் - அம்மூவனார் எறி சுறாக் கலித்த இலங்கு நீர்ப் பரப்பின் நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய் வெறி அயர் களத்தினின் தோன்றும் துறைவன் குறியான் ஆயினும் குறிப்பினும் பிறிது ஒன்று அறியாற்கு உரைப்பலோ யானே எய்த்த இப் பணை எழில் மென் தோள் அணைஇய அ நாள் பிழையா வஞ்சினம் செய்த கள்வனும் கடவனும் புணைவனும் தானே #113 குறுந்தொகை 327 - குறிஞ்சி - அம்மூவனார் நல்கின் வாழும் நல்கூர்ந்தோர்-வயின் நயன் இலர் ஆகுதல் நன்று என உணர்ந்த குன்ற நாடன் தன்னினும் நன்றும் நின் நிலை கொடிதால் தீம் கலுழ் உந்தி நம் மனை மட_மகள் இன்ன மென்மைச் சாயலள் அளியள் என்னாய் வாழை தந்தனையால் சிலம்பு புல்லெனவே #114 குறுந்தொகை 340 - நெய்தல் - அம்மூவனார் காமம் கடையின் காதலர்ப் படர்ந்து நாம் அவர்ப் புலம்பின் நம்மோடு ஆகி ஒருபாற்படுதல் செல்லாது ஆயிடை அழுவம் நின்ற அலர் வேர் கண்டல் கழி பெயர் மருங்கின் ஒல்கி ஓதம் பெயர்தரப் பெயர்தந்து ஆங்கு வருந்தும் தோழி அவர் இருந்த என் நெஞ்சே #115 குறுந்தொகை 351 - நெய்தல் - அம்மூவனார் வளையோய் உவந்திசின் விரைவுறு கொடும் தாள் அளை வாழ் அலவன் கூர் உகிர் வரித்த ஈர் மணல் மலிர் நெறி சிதைய இழுமென உரும் இசைப் புணரி உடைதரும் துறைவற்கு உரிமை செப்பினர் நமரே விரி அலர்ப் புன்னை ஓங்கிய புலால் அம் சேரி இன் நகை ஆயத்தாரோடு இன்னும் அற்றோ இவ் அழுங்கல் ஊரே #116 குறுந்தொகை 397 - நெய்தல் - அம்மூவனார் நனை முதிர் ஞாழல் தினை மருள் திரள் வீ நெய்தல் மா மலர்ப் பெய்த போல ஊதை தூற்றும் உரவு நீர்ச் சேர்ப்ப தாய் உடன்று அலைக்கும் காலையும் வாய்விட்டு அன்னாய் என்னும் குழவி போல இன்னா செயினும் இனிது தலையளிப்பினும் நின் வரைப்பினள் என் தோழி தன் உறு விழுமம் களைஞரோ இலளே #117 குறுந்தொகை 401 - நெய்தல் - அம்மூவனார் அடும்பின் ஆய் மலர் விரைஇ நெய்தல் நெடும் தொடை வேய்ந்த நீர் வார் கூந்தல் ஓரை_மகளிர் அஞ்சி ஈர் ஞெண்டு கடலில் பரிக்கும் துறைவனொடு ஒரு நாள் நக்கு விளையாடலும் கடிந்தன்று ஐது ஏகு அம்ம மெய் தோய் நட்பே #118 நற்றிணை 4 - நெய்தல் - அம்மூவனார் கானல் அம் சிறுகுடிக் கடல் மேம் பரதவர் நீல் நிறப் புன்னைக் கொழு நிழல் அசைஇத் தண் பெரும் பரப்பின் ஒண் பதம் நோக்கி அம் கண் அரில் வலை உணக்கும் துறைவனொடு அலரே அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை அரிய ஆகும் நமக்கு என கூறின் கொண்டும் செல்வர்-கொல் தோழி உமணர் வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றி கண நிரை கிளர்க்கும் நெடு நெறிச் சகடம் மணல் மடுத்து உரறும் ஓசை கழனிக் கரும் கால் வெண் குருகு வெரூஉம் இரும் கழிச் சேர்ப்பின் தம் உறைவு இன் ஊர்க்கே #119 நற்றிணை 35 - நெய்தல் - அம்மூவனார் பொங்கு திரை பொருத வார் மணல் அடைகரைப் புன் கால் நாவல் பொதிப் புற இரும் கனி கிளை செத்து மொய்த்த தும்பி பழம் செத்துப் பல் கால் அலவன் கொண்ட கோட்கு அசாந்து கொள்ளா நரம்பின் இமிரும் பூசல் இரை தேர் நாரை எய்தி விடுக்கும் துறை கெழு மாந்தை அன்ன இவள் நலம் பண்டும் இற்றே கண்டிசின் தெய்ய உழையின் போகாது அளிப்பினும் சிறிய ஞெகிழ்ந்த கவின் நலம்-கொல்லோ மகிழ்ந்தோர் கள் களி செருக்கத்து அன்ன காமம்-கொல் இவள் கண் பசந்ததுவே #120 நற்றிணை 76 பாலை - அம்மூவனார் வரு மழை கரந்த வால் நிற விசும்பின் நுண் துளி மாறிய உலவை அம் காட்டு ஆல நீழல் அசைவு நீக்கி அஞ்சுவழி அஞ்சாது அசைவழி அசைஇ வருந்தாது ஏகு-மதி வால் இழைக் குறுமகள் இம்மென் பேர் அலர் நும் ஊர்ப் புன்னை வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின் கானல் வார் மணல் மரீஇக் கல் உறச் சிவந்த நின் மெல் அடி உயற்கே #121 நற்றிணை 138 நெய்தல் - அம்மூவனார் உவர் விளை உப்பின் குன்று போல் குப்பை மலை உய்த்துப் பகரும் நிலையா வாழ்க்கைக் கணம்கொள் உமணர் உயங்கு-வயின் ஒழித்த பண் அழி பழம் பார் வெண்_குருகு ஈனும் தண்ணம் துறைவன் முன்_நாள் நம்மொடு பாசடைக் கலித்த கணைக் கால் நெய்தல் பூவுடன் நெறிதரு தொடலை தைஇக் கண் அறிவுடைமை அல்லது நுண் வினை இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர் முழங்கு திரை இன் சீர் தூங்கும் அழுங்கல் மூதூர் அறிந்தன்றோ இன்றே #122 நற்றிணை 275 - நெய்தல் - அம்மூவனார் செந்நெல் அரிநர் கூர் வாள் புண்ணுறக் காணார் முதலொடு போந்து எனப் பூவே படையொடும் கதிரொடும் மயங்கிய படுக்கைத் தன் உறு விழுமம் அறியா மென்மெலத் தெறு கதிர் இன் துயில் பசு வாய் திறக்கும் பேதை நெய்தல் பெருநீர்ச் சேர்ப்பதற்கு யான் நினைந்து இரங்கேன் ஆக நோய் இகந்து அறனிலாளன் புகழ என் பெறினும் வல்லேன்-மன் தோழி யானே #123 நற்றிணை 307 - நெய்தல் - அம்மூவனார் கவர் பரி நெடும் தேர் மணியும் இசைக்கும் பெயர்பட இயங்கிய இளையரும் ஒலிப்பர் கடல் ஆடு வியலிடைப் பேர் அணிப் பொலிந்த திதலை அல்குல் நலம் பாராட்டிய வருமே தோழி வார் மணல் சேர்ப்பன் இறைபட வாங்கிய முழவு முதல் புன்னை மா அரை மறைகம் வம்-மதி பானாள் பூ விரி கானல் புணர் குறி வந்து நம் மெல் இணர் நறும் பொழில் காணா அல்லல் அரும் படர் காண்கம் நாம் சிறிதே #124 நற்றிணை 315 - நெய்தல் - அம்மூவனார் ஈண்டு பெரும் தெய்வத்து யாண்டு பல கழிந்து எனப் பார்த் துறைப் புணரி அலைத்தலின் புடைகொண்டு மூத்து வினை போகிய முரி வாய் அம்பி நல் எருது நடை வளம் வைத்து என உழவர் புல் உடைக் காவில் தொழில் விட்டு ஆங்கு நறு விரை நன் புகை கொடாஅர் சிறு வீ ஞாழலொடு கெழீஇய புன்னை அம் கொழு நிழல் முழவு முதல் பிணிக்கும் துறைவ நன்றும் விழுமிதின் கொண்ட கேண்மை நொவ்விதின் தவறும் நன்கு அறியாய் ஆயின் எம் போல் ஞெகிழ் தோள் கலுழ்ந்த கண்ணர் மலர் தீய்ந்து அனையர் நின் நயந்தோரே #125 நற்றிணை 327 - நெய்தல் - அம்மூவனார் நாடல் சான்றோர் நம்புதல் பழி எனின் பாடு இல கலுழும் கண்ணொடு சாஅய்ச் சாதலும் இனிதே காதல் அம் தோழி அ நிலை அல்ல ஆயினும் சான்றோர் கடன் நிலை குன்றலும் இலர் என்று உடன் அமர்ந்து உலகம் கூறுவது உண்டு என நிலைஇய தாயம் ஆகலும் உரித்தே போது அவிழ் புன்னை ஓங்கிய கானல் தண்ணம் துறைவன் சாயல் மார்பே #126 நற்றிணை 395 - நெய்தல் - அம்மூவனார் யாரை எலுவ யாரே நீ எமக்கு யாரையும் அல்லை நொதுமலாளனை அனைத்தால் கொண்க நம்மிடையே நினைப்பின் கடும் பகட்டு யானை நெடும் தேர்க் குட்டுவன் வேந்து அடு மயக்கத்து முரசு அதிர்ந்து அன்ன ஓங்கல் புணரி பாய்ந்து ஆடு மகளிர் அணிந்திடு பல் பூ மரீஇ ஆர்ந்த ஆ புலம் புகுதரு பேர் இசை மாலைக் கடல் கெழு மாந்தை அன்ன எம் வேட்டனை அல்லையால் நலம் தந்து சென்மே #127 நற்றிணை 397 - பாலை - அம்மூவனார் தோளும் அழியும் நாளும் சென்று என நீள் இடை அத்தம் நோக்கி வாள் அற்றுக் கண்ணும் காட்சி தௌவின என் நீத்து அறிவும் மயங்கிப் பிறிது ஆகின்றே நோயும் பெருகும் மாலையும் வந்தன்று யாங்கு ஆகுவென்-கொல் யானே ஈங்கோ சாதல் அஞ்சேன் அஞ்சுவல் சாவின் பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின் மறக்குவேன்-கொல் என் காதலன் எனவே &11 - அம்மெய்யன் நாகனார் #1 நற்றிணை 252 - பாலை - அம்மெய்யன் நாகனார் உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கிச் சிள்வீடு கறங்கும் சேய் நாட்டு அத்தம் திறம் புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லது அரும் பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல் என வலியா நெஞ்சம் வலிப்பச் சூழ்ந்த வினையிடை விலங்கல போலும் புனை சுவர்ப் பாவை அன்ன பழி தீர் காட்சி ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்து மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழைக் கண் முயல் வேட்டு எழுந்த முடுகு விசைக் கத நாய் நல் நாப் புரையும் சீறடிப் பொம்மல் ஓதி புனை_இழை குணனே &12 - அரிசில் கிழார் #1 குறுந்தொகை 193 - முல்லை - அரிசில் கிழார் மட்டம் பெய்த மணிக் கலத்து அன்ன இட்டு வாய்ச் சுனைய பகு வாய்த் தேரை தட்டைப் பறையின் கறங்கும் நாடன் தொல்லைத் திங்கள் நெடு வெண்ணிலவின் மணந்தனன்-மன் எம் தோளே இன்றும் முல்லை முகை நாறும்மே #2 பதிற்றுப்பத்து - பாட்டு 71 - அரிசில் கிழார் **பெயர்: குறுந்தாள் ஞாயில் **துறை: செந்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும் அறாஅ யாணர் அகன் கண் செறுவின் அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து செறு வினை மகளிர் மலிந்த வெக்கைப் பரூஉப் பகடு உதிர்த்த மென் செந்நெல்லின் அம்பண அளவை உறை குவித்து ஆங்குக் கடும் தேறு உறு கிளை மொசிந்தன துஞ்சும் செழும் கூடு கிளைத்த இளம் துணை மகாரின் அலந்தனர் பெரும நின் உடற்றியோரே ஊர் எரி கவர உருத்து எழுந்து உரைஇப் போர் சுடு கமழ் புகை மாதிரம் மறைப்ப மதில் வாய்த் தோன்றல் ஈயாது தம் பழி ஊக்குநர் குண்டு கண் அகழிய குறும் தாள் ஞாயில் ஆர் எயில் தோட்டி வௌவினை ஏறொடு கன்று உடை ஆயம் தரீஇப் புகல் சிறந்து புலவு வில் இளையர் அங்கை விடுப்ப மத்துக் கயிறு ஆடா வைகல் பொழுது நினையூஉ ஆன் பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்கப் பதி பாழ் ஆக வேறு புலம் படர்ந்து விருந்தின் வாழ்க்கையொடு பெரும் திரு அற்று என அரும் சமத்து அரு நிலை தாங்கிய புகர் நுதல் பெரும் களிற்று யானையொடு அரும் கலம் தராஅர் மெய் பனி கூரா அணங்கு எனப் பராவலின் பலி கொண்டு பெயரும் பாசம் போலத் திறை கொண்டு பெயர்தி வாழ்க நின் ஊழி உரவரும் மடவரும் அறிவு தெரிந்து எண்ணி அறிந்தனை அருளாய் ஆயின் யார் இவண் நெடுந்தகை வாழுமோரே #3 பதிற்றுப்பத்து - பாட்டு 72 - அரிசில் கிழார் **பெயர்: உருத்து எழு வெள்ளம் **துறை: செந்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் இகல் பெருமையின் படை கோள் அஞ்சார் சூழாது துணிதல் அல்லது வறிது உடன் காவல் எதிரார் கறுத்தோர் நாடு நின் முன் திணை முதல்வர்க்கு ஓம்பினர் உறைந்து மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும் நன்று அறி உள்ளத்து சான்றோர் அன்ன நின் பண்பு நன்கு அறியார் மடம் பெருமையின் துஞ்சல் உறூஉம் பகல் புகு மாலை நிலம் பொறை ஒராஅ நீர் ஞெமர வந்து ஈண்டி உரவுத் திரை கடுகிய உருத்து எழு வெள்ளம் வரையா மாதிரத்து இருள் சேர்பு பரந்து ஞாயிறு பட்ட அகன்று வரு கூட்டத்து அம் சாறு புரையும் நின் தொழில் ஒழித்துப் பொங்கு பிசிர் நுடக்கிய செம் சுடர் நிகழ்வின் மடங்கல் தீயின் அனையை சினம் கெழு குருசில் நின் உடற்றிசினோர்க்கே #4 பதிற்றுப்பத்து - பாட்டு 73 - அரிசில் கிழார் **பெயர்: நிறந்திகழ் பாசிழை **துறை: செந்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் உரவோர் எண்ணினும் மடவோர் எண்ணினும் பிறர்க்கு நீ வாயின் அல்லது நினக்குப் பிறர் உவமம் ஆகா ஒரு பெரு வேந்தே கூந்தல் ஒள் நுதல் பொலிந்த நிறம் திகழ் பாசிழை உயர்திணை மகளிரும் தெய்வம் தரூஉ நெஞ்சத்து ஆன்றோர் மருதம் சான்ற மலர் தலை விளை வயல் செய்யுள் நாரை ஒய்யும் மகளிர் இரவும் பகலும் பாசிழை களையார் குறும் பல் யாணர்க் குரவை அயரும் காவிரி மண்டிய சேய் விரி வனப்பின் புகாஅர்ச் செல்வ பூழியர் மெய்ம்மறை கழை விரிந்து எழுதரும் மழை தவழ் நெடும் கோட்டுக் கொல்லிப் பொருந கொடித் தேர்ப் பொறைய நின் வளனும் ஆண்மையும் கைவண்மையும் மாந்தர் அளவு இறந்தன எனப் பல் நாள் யான் சென்று உரைப்பவும் தேறார் பிறரும் சான்றோர் உரைப்ப தெளிகுவர்-கொல் என ஆங்கும் மதி மருள காண்குவல் யாங்கு உரைப்பேன் என வருந்துவல் யானே #5 பதிற்றுப்பத்து - பாட்டு 74 - அரிசில் கிழார் **பெயர்: நலம்பெறு திருமணி **துறை: செந்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் கேள்வி கேட்டுப் படிவம் ஒடியாது வேள்வி வேட்டனை உயர்ந்தோர் உவப்பச் சாய் அறல் கடுக்கும் தாழ் இரும் கூந்தல் வேறுபடு திருவின் நின் வழி வாழியர் கொடுமணம் பட்ட வினை மாண் அரும் கலம் பந்தர்ப் பயந்த பலர் புகழ் முத்தம் வரையகம் நண்ணிக் குறும்பொறை நாடித் தெரியுநர் கொண்ட சிரறு உடைப் பைம் பொறிக் கவை மரம் கடுக்கும் கவலைய மருப்பின் புள்ளி இரலைத் தோல் ஊன் உதிர்த்துத் தீது களைந்து எஞ்சிய திகழ் விடு பாண்டில் பருதி போகிய புடை கிளை கட்டி எஃகு உடை இரும்பின் உள் அமைத்து வல்லோன் சூடு நிலையுற்றுச் சுடர் விடு தோற்றம் விசும்பு ஆடு மரபின் பருந்து ஊறு அளப்ப நலம் பெறு திரு மணி கூட்டும் நல் தோள் ஒடுங்கு ஈர் ஓதி ஒள் நுதல் கருவில் எண் இயல் முற்றி ஈர் அறிவு புரிந்து சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும் காவற்கு அமைந்த அரசு துறைபோகிய வீறு சால் புதல்வன் பெற்றனை இவணர்க்கு அரும் கடன் இறுத்த செருப் புகல் முன்ப அன்னவை மருண்டனென் அல்லேன் நின்-வயின் முழுது உணர்ந்து ஒழுக்கும் நரை மூதாளனை வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும் தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என வேறுபடு நனம் தலைப் பெயரக் கூறினை பெரும நின் படிமையானே #6 பதிற்றுப்பத்து - பாட்டு 75 - அரிசில் கிழார் **பெயர்: தீம்சேற்று யாணர் **துறை: செந்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் இரும் புலி கொன்று பெரும் களிறு அடூஉம் அரும் பொறி வய_மான் அனையை பல் வேல் பொலம் தார் யானை இயல் தேர்ப் பொறைய வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து நின் வழிப்படார் ஆயின் நெல் மிக்கு அறையுறு கரும்பின் தீம் சேற்று யாணர் வருநர் வரையா வளம் வீங்கு இருக்கை வன்புலம் தழீஇ மென்பால்-தோறும் அரும் பறை வினைஞர் புல் இகல் படுத்துக் கள் உடை நியமத்து ஒள் விலை கொடுக்கும் வெள் வரகு உழுத கொள் உடைக் கரம்பைச் செந்நெல் வல்சி அறியார் தத்தம் பாடல் சான்ற வைப்பின் நாடு உடன் ஆள்தல் யாவணது அவர்க்கே #7 பதிற்றுப்பத்து - பாட்டு 76 - அரிசில் கிழார் **பெயர்: மா சிதறு இருக்கை **துறை: செந்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் களிறு உடைப் பெரும் சமம் ததைய எஃகு உயர்த்து ஒளிறு வாள் மன்னர் துதை நிலை கொன்று முரசு கடிப்பு அடைய அரும் துறை போகிப் பெரும் கடல் நீந்திய மரம் வலியுறுக்கும் பண்ணிய விலைஞர் போலப் புண் ஒரீஇப் பெரும் கைத் தொழுதியின் வன் துயர் கழிப்பி இரந்தோர் வாழ நல்கி இரப்போர்க்கு ஈதல் தண்டா மா சிதறு இருக்கை கண்டனென் செல்கு வந்தனென் கால்கொண்டு கருவி வானம் தண் தளி சொரிந்து எனப் பல் விதை உழவின் சில் ஏராளர் பனித் துறைப் பகன்றைப் பாங்கு உடைத் தெரியல் கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி இலங்கு கதிர்த் திரு மணி பெறூஉம் அகன் கண் வைப்பின் நாடு கிழவோயே #8 பதிற்றுப்பத்து - பாட்டு 77 - அரிசில் கிழார் **பெயர்: வென்று ஆடு துணங்கை **துறை: உழிஞை அரவம் **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் எனைப் பெரும் படையனோ சினப் போர்ப் பொறையன் என்றனிர் ஆயின் ஆறு செல் வம்பலீர் மன்பதை பெயர அரசு களத்து ஒழியக் கொன்று தோள் ஓச்சிய வென்று ஆடு துணங்கை மீ பிணத்து உருண்ட தேயா ஆழியின் பண் அமை தேரும் மாவும் மாக்களும் எண்ணற்கு அருமையின் எண்ணின்றோ இலனே கந்து கோள் ஈயாது காழ் பல முருக்கி உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடிச் சேண் பரல் முரம்பின் ஈர்ம் படைக் கொங்கர் ஆ பரந்து அன்ன செலவின் பல் யானை காண்பல் அவன் தானையானே #9 பதிற்றுப்பத்து - பாட்டு 78 - அரிசில் கிழார் **பெயர்: பிறழநோக்கியவர் **துறை: விறலியாற்றுப்படை **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் வலம் படு முரசின் இலங்குவன விழூஉம் அம் வெள் அருவி உவ் வரையதுவே சில் வளை விறலி செல்குவை ஆயின் வள் இதழ்த் தாமரை நெய்தலொடு அரிந்து மெல் இயல் மகளிர் ஒல்குவனர் இயலி கிளி கடி மேவலர் புறவு-தொறும் நுவலப் பல் பயம் நிலைஇய கடறு உடை வைப்பின் வெல் போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும் வில் பயில் இறும்பின் தகடூர் நூறி பேஎம் அமன்ற பிறழ நோக்கு இயவர் ஓடுறு கடு முரண் துமியச் சென்று வெம் முனை தபுத்த காலைத் தம் நாட்டு யாடு பரந்து அன்ன மாவின் ஆ பரந்து அன்ன யானையோன் குன்றே #10 பதிற்றுப்பத்து - பாட்டு 79 - அரிசில் கிழார் **பெயர்: நிறம்படு குருதி **துறை: செந்துறைப்பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் உயிர் போற்றலையே செருவத்தானே கொடை போற்றலையே இரவலர் நடுவண் பெரியோர்ப் பேணிச் சிறியோரை அளித்தி நின்-வயின் பிரிந்த நல் இசை கனவினும் பிறர் நசை அறியா வயங்கு செம் நாவின் படியோர்த் தேய்த்த ஆண்மைத் தொடியோர் தோள் இடைக் குழைந்த கோதை மார்ப அனைய அளப்பு அரும்-குரையை அதனால் நின்னொடு வாரார் தம் நிலத்து ஒழிந்து கொல் களிற்று யானை எருத்தம் புல்லென வில் குலை அறுத்துக் கோலின் வாரா வெல் போர் வேந்தர் முரசு கண் போழ்ந்து அவர் அரசு உவா அழைப்பக் கோடு அறுத்து இயற்றிய அணங்கு உடை மரபின் கட்டில் மேல் இருந்து தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து நிறம் படு குருதி புறம்படின் அல்லது மடை எதிர்கொள்ளா அஞ்சுவரு மரபின் கடவுள் அயிரையின் நிலைஇக் கேடு இலவாக பெரும நின் புகழே #11 பதிற்றுப்பத்து - பாட்டு 80 - அரிசில் கிழார் **பெயர்: புண் உடை எறுழ்த்தோள் **துறை: வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் **வண்ணம்: ஒழுகு வண்ணம் வான் மருப்பின் களிற்று யானை மா மலையின் கணம் கொண்டு அவர் எடுத்து எறிந்த விறல் முரசம் கார் மழையின் கடிது முழங்க சாந்து புலர்ந்த வியல் மார்பின் தொடி சுடர் வரும் வலி முன் கைப் புண் உடை எறுழ்த் தோள் புடையல் அம் கழல் கால் பிறக்கு அடி ஒதுங்காப் பூட்கை ஒள் வாள் ஒடிவு இல் தெவ்வர் எதிர் நின்று உரைஇ இடுக திறையே புரவு எதிர்ந்தோற்கு என அம்பு உடை வலத்தர் உயர்ந்தோர் பரவ அனையை ஆகல் மாறே பகைவர் கால் கிளர்ந்து அன்ன கதழ் பரிப் புரவிக் கடும் பரி நெடும் தேர் மீமிசை நுடங்கு கொடி புல வரைத் தோன்றல் யாவது சினப் போர் நிலவரை நிறீஇய நல் இசைத் தொலையாக் கற்ப நின் தெம்முனையானே #12 புறநானூறு 146 - அரிசில் கிழார் **பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன் அன்ன ஆக நின் அரும் கல வெறுக்கை அவை பெறல் வேண்டேம் அடு போர்ப் பேக சீறியாழ் செவ்வழி பண்ணி நின் வன்புல நல் நாடு பாட என்னை நயந்து பரிசில் நல்குவை ஆயின் குரிசில் நீ நல்காமையின் நைவரச் சாஅய் அரும் துயர் உழக்கும் நின் திருந்து இழை அரிவை கலி மயில் கலாவம் கால் குவித்து அன்ன ஒலி மென் கூந்தல் கமழ் புகை கொளீஇத் தண் கமழ் கோதை புனைய வண் பரி நெடும் தேர் பூண்க நின் மாவே #13 புறநானூறு 230 - அரிசில் கிழார் **பாடப்பட்டோன்: அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி கன்று அமர் ஆயம் கானத்து அல்கவும் வெம் கால் வம்பலர் வேண்டு புலத்து உறையவும் களம் மலி குப்பை காப்பு இல வைகவும் விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோல் வையகம் புகழ்ந்த வயங்கு வினை ஒள் வாள் பொய்யா எழினி பொருது களம் சேர ஈன்றோள் நீத்த குழவி போலத் தன் அமர் சுற்றம் தலைத்தலை இனையக் கடும் பசி கலக்கிய இடும்பை கூர் நெஞ்சமொடு நோய் உழந்து வைகிய உலகினும் மிக நனி நீ இழந்தனையே அறன் இல் கூற்றம் வாழ்தலின் வரூஉம் வயல் வளன் அறியான் வீழ் குடி உழவன் வித்து உண்டு ஆங்கு ஒருவன் ஆர் உயிர் உண்ணாய் ஆயின் நேரார் பல் உயிர் பருகி ஆர்குவை-மன்னோ அவன் அமர் அடு களத்தே #14 புறநானூறு 281 - அரிசில் கிழார் தீம் கனி இரவமொடு வேம்பு மனைச் செரீஇ வாங்கு மருப்பு யாழொடு பல்லியம் கறங்கக் கை பயப் பெயர்த்து மை இழுது இழுகி ஐயவி சிதறி ஆம்பல் ஊதி இசை மணி எறிந்து காஞ்சி பாடி நெடு நகர் வரைப்பின் கடி நறை புகைஇக் காக்கம் வம்மோ காதல் அம் தோழீ வேந்து உறு விழுமம் தாங்கிய பூம் பொறிக் கழல் கால் நெடுந்தகை புண்ணே #15 புறநானூறு 285 - அரிசில் கிழார் பாசறையீரே பாசறையீரே துடியன் கையது வேலே அடி புணர் வாங்கு இரு மருப்பின் தீம் தொடைச் சீறியாழ்ப் பாணன் கையது தோலே காண்வரக் கடும் தெற்று மூடையின் வாடிய மாலை மலைந்த சென்னியன் வேந்து தொழில் அயரும் அரும் தலைச் சுற்றமொடு நெடு நகர் வந்து என விடு கணை மொசித்த மூரி வெண் தோள் சேறுபடு குருதிச் செம்மல் உக்கு ஓஒ மாறு செறு நெடு வேல் மார்பு உளம் போக நிணம் பொதி கழலொடு நிலம் சேர்ந்தனனே அது கண்டு பரந்தோர் எல்லாம் புகழத் தலை பணிந்து இறைஞ்சியோனே குருசில் பிணங்கு கதிர் அலமரும் கழனித் தண்ணடை ஒழிய இலம்பாடு ஒக்கல் தலைவற்கு ஓர் கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே #16 புறநானூறு 300 - அரிசில் கிழார் தோல் தா தோல் தா என்றி தோலொடு துறுகல் மறையினும் உய்குவை போலாய் நெருநல் எல்லை நீ எறிந்தோன் தம்பி அகல் பெய் குன்றியின் சுழலும் கண்ணன் பேர் ஊர் அட்ட கள்ளிற்கு ஓர் இல் கோயின் தேருமால் நின்னே #17 புறநானூறு 304 - அரிசில் கிழார் கொடும் குழை மகளிர் கோதை சூட்டி நடுங்கு பனிக் களைஇயர் நார் அரி பருகி வளி தொழில் ஒழிக்கும் வண் பரிப் புரவி பண்ணற்கு விரைதி நீயே நெருநை எம்முன் தப்பியோன் தம்பியொடு ஓராங்கு நாளைச் செய்குவென் அமர் எனக் கூறிப் புன் வயிறு அருத்தலும் செல்லான் வன் மான் கடவும் என்ப பெரிதே அது கேட்டு வலம் படு முரசின் வெல் போர் வேந்தன் இலங்கு இரும் பாசறை நடுங்கின்று இரண்டு ஆகாது அவன் கூறியது எனவே #18 புறநானூறு 342 - அரிசில் கிழார் கானக் காக்கைச் கலிச் சிறகு ஏய்க்கும் மயிலைக் கண்ணிப் பெரும் தோள் குறுமகள் ஏனோர் மகள்-கொல் இவள் என விதுப்புற்று என்னொடு வினவும் வென் வேல் நெடுந்தகை திரு நயத்தக்க பண்பின் இவள் நலனே பொருநர்க்கு அல்லது பிறர்க்கு ஆகாதே பைம் கால் கொக்கின் பகு வாய்ப் பிள்ளை மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதன் பின் ஆரல் ஈன்ற ஐயவி முட்டை கூர் நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம் தண் பணைக் கிழவன் இவள் தந்தையும் வேந்தரும் பெறாஅமையின் பேர் அமர் செய்தலின் கழி பிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருதா வாள் தக வைகலும் உழக்கும் மாட்சியவர் இவள் தன்னைமாரே &13 - அல்லங்கீரனார் #1 நற்றிணை 245 - நெய்தல் - அல்லங்கீரனார் நகை ஆகின்றே தோழி தகைய அணி மலர் முண்டகத்து ஆய் பூம் கோதை மணி மருள் ஐம்பால் வண்டு படத் தைஇத் துணி நீர்ப் பௌவம் துணையோடு ஆடி ஒழுகு நுண் நுசுப்பின் அகன்ற அல்குல் தெளி தீம் கிளவி யாரையோ என் அரிது புணர் இன் உயிர் வவ்விய நீ எனப் பூண் மலி நெடும் தேர்ப் புரவி தாங்கித் தான் நம் அணங்குதல் அறியான் நம்மின் தான் அணங்குற்றமை கூறிக் கானல் சுரும்பு இமிர் சுடர் நுதல் நோக்கிப் பெரும் கடல் சேர்ப்பன் தொழுது நின்றதுவே &14 - அழிசி நச்சாத்தனார் #1 குறுந் தொகை 271 மருதம் - அழிசி நச்சாத்தனார் அருவி அன்ன பரு உறை சிதறி யாறு நிறை பகரும் நாடனைத் தேறி உற்றது-மன்னும் ஒரு நாள் மற்று அது தவப் பல் நாள் தோள் மயங்கி வௌவும் பண்பின் நோய் ஆகின்றே &15 - அள்ளூர் நன்முல்லையார் #1 அகநானூறு 46 மருதம் - அள்ளூர் நன்முல்லையார் சேற்று நிலை முனைஇய செம் கண் காரான் ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து கூர் முள் வேலி கோட்டின் நீக்கி நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய அம் தூம்பு வள்ளை மயக்கித் தாமரை வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர யாரையோ நின் புலக்கேம் வாருற்று உறை இறந்து ஒளிரும் தாழ் இரும் கூந்தல் பிறரும் ஒருத்தியை நம் மனை தந்து வதுவை அயர்ந்தனை என்ப அஃது யாம் கூறேம் வாழியர் எந்தை செறுநர் களிறு உடை அரும் சமம் ததைய நூறும் ஒளிறு வாள் தானைக் கொற்றச் செழியன் பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என் ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க சென்றி பெரும நின் தகைக்குநர் யாரோ #2 குறுந்தொகை 32 குறிஞ்சி - அள்ளூர் நன்முல்லையார் காலையும் பகலும் கையறு மாலையும் ஊர் துஞ்சு யாமமும் விடியலும் என்று இப் பொழுது இடை தெரியின் பொய்யே காமம் மா என மடலொடு மறுகில் தோன்றித் தெற்றெனத் தூற்றலும் பழியே வாழ்தலும் பழியே பிரிவு தலைவரினே #3 குறுந்தொகை 67 பாலை - அள்ளூர் நன்முல்லையார் உள்ளார்-கொல்லோ தோழி கிள்ளை வளை வாய்க் கொண்ட வேப்ப ஒண் பழம் புது நாண் நுழைப்பான் நுதி மாண் வள் உகிர்ப் பொலம் கல ஒரு காசு ஏய்க்கும் நிலம் கரி கள்ளி அம் காடு இறந்தோரே #4 குறுந்தொகை 68 குறிஞ்சி - அள்ளூர் நன்முல்லையார் பூழ்க் கால் அன்ன செம் கால் உழுந்தின் ஊழ்ப்படு முது காய் உழை இனம் கவரும் அரும் பனி அற்சிரம் தீர்க்கும் மருந்து பிறிது இல்லை அவர் மணந்த மார்பே #5 குறுந்தொகை 93 மருதம் - அள்ளூர் நன்முல்லையார் நல் நலம் தொலைய நலம் மிகச் சாஅய் இன் உயிர் கழியினும் உரையல் அவர் நமக்கு அன்னையும் அத்தனும் அல்லரோ புலவி அஃது எவனோ அன்பு இலங்கடையே #6 குறுந்தொகை 96 குறிஞ்சி - அள்ளூர் நன்முல்லையார் அருவி வேங்கைப் பெரு மலை நாடற்கு யான் எவன் செய்கோ என்றி யான் அது நகை என உணரேன் ஆயின் என் ஆகுவை-கொல் நல்_நுதல் நீயே #7 குறுந்தொகை 140 பாலை - அள்ளூர் நன்முல்லையார் வேதின வெரிநின் ஓதி முது போத்து ஆறு செல் மாக்கள் புள் கொளப் பொருந்தும் சுரனே சென்றனர் காதலர் உரன் அழிந்து ஈங்கு யான் அழுங்கிய எவ்வம் யாங்கு அறிந்தன்று இவ் அழுங்கல் ஊரே #8 குறுந்தொகை 157 மருதம் - அள்ளூர் நன்முல்லையார் குக்கூ என்றது கோழி அதன்எதிர் துட்கென்றன்று என் தூ நெஞ்சம் தோள் தோய் காதலர்ப் பிரிக்கும் வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே #9 குறுந்தொகை 202 மருதம் - அள்ளூர் நன்முல்லையார் நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே புன் புலத்து அமன்ற சிறியிலை நெருஞ்சிக் கட்கு இன் புது மலர் முள் பயந்து ஆங்கு இனிய செய்த நம் காதலர் இன்னா செய்தல் நோம் என் நெஞ்சே #10 குறுந்தொகை 237 பாலை - அள்ளூர் நன்முல்லையார் அஞ்சுவது அறியாது அமர் துணை தழீஇ நெஞ்சு நம் பிரிந்தன்று ஆயினும் எஞ்சிய கை பிணி நெகிழின் அஃது எவனோ நன்றும் சேய அம்ம இருவாம் இடையே மாக் கடல் திரையின் முழங்கி வலன் ஏர்பு கோள் புலி வழங்கும் சோலை எனைத்து என்று எண்ணுகோ முயக்கிடை மலைவே #11 புறநானூறு 306 - அள்ளூர் நன்முல்லையார் களிறு பொரக் கலங்கு கழன் முள் வேலி அரிது உண் கூவல் அம் குடிச் சீறூர் ஒலி மென் கூந்தல் ஒண் நுதல் அரிவை நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது விருந்து எதிர் பெறுக-தில் யானே என்னையும் வேந்தனொடு நாடு தரு விழுப் பகை எய்துக எனவே &16 - அறிவுடைநம்பி #1 அகநானூறு 28 குறிஞ்சி - (பாண்டியன்)அறிவுடைநம்பி மெய்யின் தீரா மேவரு காமமொடு எய்யாய் ஆயினும் உரைப்பல் தோழி கொய்யா முன்னும் குரல் வார்பு தினையே அருவி ஆன்ற பைம் கால்-தோறும் இருவி தோன்றின பலவே நீயே முருகு முரண்கொள்ளும் தேம் பாய் கண்ணிப் பரியல் நாயொடு பன் மலைப் படரும் வேட்டுவன் பெறலொடு அமைந்தனை யாழ நின் பூக் கெழு தொடலை நுடங்க எழுந்துஎழுந்து கிள்ளைத் தெள் விளி இடையிடை பயிற்றி ஆங்காங்கு ஒழுகாய் ஆயின் அன்னை சிறு கிளி கடிதல் தேற்றாள் இவள் என பிறர் தந்து நிறுக்குவள் ஆயின் உறற்கு அரிது ஆகும் அவன் மலர்ந்த மார்பே #2 குறுந்தொகை 230 நெய்தல் - அறிவுடை நம்பியார் அம்ம வாழி தோழி கொண்கன் தான் அது துணிகுவன் அல்லன் யான் என் பேதைமையால் பெருந்தகை கெழுமி நோதகச் செய்தது ஒன்று உடையேன்-கொல்லோ வயச் சுறா வழங்கு நீர் அத்தம் தவச் சில் நாளினன் வரவு அறியானே #3 நற்றிணை 15 நெய்தல் - அறிவுடைநம்பி முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர் நுணங்கு துகில் நுடக்கம் போலக் கணம்கொள ஊதை தூற்றும் உரவு நீர்ச் சேர்ப்ப பூவின் அன்ன நலம் புதிது உண்டு நீ புணர்ந்த அனையேம் அன்மையின் யாமே நேர்பு உடை நெஞ்சம் தாங்கத் தாங்கி மாசு இல் கற்பின் மடவோள் குழவி பேஎய் வாங்கக் கைவிட்டு ஆங்கு சேணும் எம்மொடு வந்த நாணும் விட்டேம் அலர்க இவ் ஊரே #4 புறநானூறு 188 - பாண்டியன் அறிவுடை நம்பி படைப்புப் பல படைத்து பலரோடு உண்ணும் உடைப் பெரும் செல்வர் ஆயினும் இடைப் படக் குறுகுறு நடந்து சிறு கை நீட்டி இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய் உடை அடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை இல்லோர்க்குப் பயக் குறை இல்லை தாம் வாழும் நாளே &17 ஆசிரியர் பெருங்கண்ணனார் #1 குறுந்தொகை 239 குறிஞ்சி - ஆசிரியர் பெருங்கண்ணனார் தொடி நெகிழ்ந்தனவே தோள் சாயினவே விடும் நாண் உண்டோ தோழி விடர் முகைச் சிலம்பு உடன் கமழும் அலங்கு குலைக் காந்தள் நறும் தாது ஊதும் குறும் சிறைத் தும்பி பாம்பு உமிழ் மணியின் தோன்றும் முந்தூழ் வேலிய மலை கிழவோற்கே &18 - ஆடுதுறை மாசாத்தனார் #1 புறநானூறு 227 - ஆடுதுறை மாசாத்தனார் **பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் நனி பேதையே நயன் இல் கூற்றம் விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை இன்னும் காண்குவை நல் வாய் ஆகுதல் ஒளிறு வாள் மறவரும் களிறும் மாவும் குருதி அம் குரூஉப் புனல் பொருகளத்து ஒழிய நாளும் ஆனான் கடந்து அட்டு என்றும் நின் வாடு பசி அருத்திய பழி தீர் ஆற்றல் நின் ஓர் அன்ன பொன் இயல் பெரும் பூண் வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி இனையோன் கொண்டனை ஆயின் இனி யார் மற்று நின் பசி தீர்ப்போரே &19 - ஆதிமந்தி #1 குறுந்தொகை 31 மருதம் - ஆதிமந்தி மள்ளர் குழீஇய விழவினானும் மகளிர் தழீஇய துணங்கையானும் யாண்டும் காணேன் மாண் தக்கோனை யானும் ஓர் ஆடுகள_மகளே என் கைக் கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த பீடு கெழு குரிசிலும் ஓர் ஆடுகள_மகனே &20 - ஆரிய அரசன் யாழ் பிரமதத்தன் #1 குறுந்தொகை 184 நெய்தல் - ஆரிய அரசன் யாழ் பிரமதத்தன் அறிகரி பொய்த்தல் ஆன்றோர்க்கு இல்லை குறுகல் ஓம்பு-மின் சிறுகுடிச் செலவே இதற்கு இது மாண்டது என்னாது அதற்பட்டு ஆண்டு ஒழிந்தன்றே மாண் தகை நெஞ்சம் மயில் கண் அன்ன மாண் முடிப் பாவை நுண் வலைப் பரதவர் மட_மகள் கண் வலைப் படூஉம் கானலானே &21 - ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளை கண்ணத்தனார் #1 அகநானூறு 64 முல்லை - ஆர்க்காடு கிழார் மகனார் வெள்ளை கண்ணத்தனார் களையும் இடனால் பாக உளை அணி உலகு கடப்பு அன்ன புள் இயல் கலிமா வகை அமை வனப்பின் வள்பு நீ தெரியத் தளவுப் பிணி அவிழ்ந்த தண் பதப் பெரு வழி ஐது இலங்கு அகல் இலை நெய் கனி நோன் காழ் வெள் வேல் இளையர் வீங்கு பரி முடுகச் செலவு நாம் அயர்ந்தனம் ஆயின் பெயல கடு நீர் வரித்த செந்நில மருங்கின் விடு நெறி ஈர் மணல் வாரணம் சிதரப் பாம்பு உறை புற்றத்து ஈர்ம் புறம் குத்தி மண் உடைக் கோட்ட அண்ணல் ஏஎறு உடன் நிலை வேட்கையின் மட நாகு தழீஇ ஊர்-வயின் பெயரும் பொழுதில் சேர்பு உடன் கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும் ஆ பூண் தெண் மணி ஐது இயம்பு இன் இசை புலம்பு கொள் மாலை கேள்-தொறும் கலங்கினள் உறைவோள் கையறு நிலையே &22 - ஆலங்குடி வங்கனார் #1 அகநானூறு 106 மருதம் - ஆலங்குடி வங்கனார் எரி அகைந்து அன்ன தாமரைப் பழனத்துப் பொரி அகைந்து அன்ன பொங்கு பல் சிறு மீன் வெறி கொள் பாசடை உணீஇயர் பைப்பயப் பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும் துறை கேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை நம்மொடு புலக்கும் என்ப நாம் அது செய்யாம் ஆயினும் உய்யாமையின் செறி தொடி தெளிர்ப்ப வீசிச் சிறிது அவண் உலமந்து வருகம் சென்மோ தோழி ஒளிறு வாள் தானைக் கொற்றச் செழியன் வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடு-தொறும் களிறு பெறு வல்சி பாணன் எறியும் தண்ணுமை கண்ணின் அலைஇயர் தன் வயிறே #2 குறுந்தொகை 8 மருதம் - ஆலங்குடி வங்கனார் கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் பழன வாளை கதூஉம் ஊரன் எம் இல் பெருமொழி கூறித் தம் இல் கையும் காலும் தூக்கத் தூக்கும் ஆடிப் பாவை போல மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே #3 குறுந்தொகை 45 மருதம் - ஆலங்குடி வங்கனார் காலை எழுந்து கடும் தேர் பண்ணி வால் இழை மகளிர்த் தழீஇய சென்ற மல்லல் ஊரன் எல்லினன் பெரிது என மறுவரும் சிறுவன் தாயே தெறுவது அம்ம இத் திணைப் பிறத்தல்லே #4 நற்றிணை 230 மருதம் - ஆலங்குடி வங்கனார் முயப் பிடிச் செவியின் அன்ன பாசடைக் கயக் கணக் கொக்கின் அன்ன கூம்பு முகை கணைக் கால் ஆம்பல் அமிழ்து நாறு தண் போது குணக்குத் தோன்று வெள்ளியின் இருள் கெட விரியும் கயல் கணம் கலித்த பொய்கை ஊர முனிவு இல் பரத்தையை என் துறந்து அருளாய் நனி புலம்பு அலைத்த எல்லை நீங்கப் புது வறம் கூர்ந்த செறுவில் தண்ணென மலி புனல் பரத்தந்து ஆஅங்கு இனிதே தெய்ய நின் காணும் காலே #5 நற்றிணை 330 மருதம் - ஆலங்குடி வங்கனார் தட மருப்பு எருமைப் பிணர்ச் சுவல் இரும் போத்து மட நடை நாரைப் பல் இனம் இரிய நெடு நீர்த் தண் கயம் துடுமெனப் பாய்ந்து நாள் தொழில் வருத்தம் வீடச் சேண் சினை இருள் புனை மருதின் இன் நிழல் வதியும் யாணர் ஊர நின் மாண் இழை மகளிரை எம் மனைத் தந்து நீ தழீஇயினும் அவர்-தம் புன் மனத்து உண்மையோ அரிதே அவரும் பைம் தொடி மகளிரொடு சிறுவர்ப் பயந்து நன்றி சான்ற கற்பொடு எம் பாடு ஆதல் அதனினும் அரிதே #6 நற்றிணை 400 மருதம் - ஆலங்குடி வங்கனார் வாழை மென் தோடு வார்புறுபு ஊக்கும் நெல் விளை கழனி நேர் கண் செறுவின் அரிவனர் இட்ட சூட்டு அயல் பெரிய இரும் சுவல் வாளை பிறழும் ஊர நின் இன்று அமைகுவென் ஆயின் இவண் நின்று இன்னா நோக்கமொடு எவன் பிழைப்பு உண்டோ மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து அறம் கெட அறியாது ஆங்குச் சிறந்த கேண்மையொடு அளைஇ நீயே கெடு அறியாய் என் நெஞ்சத்தானே #7 புறநானூறு 319 - ஆலங்குடி வங்கனார் பூவல் படுவில் கூவல் தோண்டிய செம் கண் சில் நீர் பெய்த சீறில் முன்றில் இருந்த முது வாய்ச் சாடி யாம் கஃடு உண்டு என வறிது மாசு இன்று படலை முன்றில் சிறுதினை உணங்கல் புறவும் இதலும் அறவும் உண்கு எனப் பெய்தற்கு எல்லின்று பொழுதே அதனால் முயல் சுட்ட ஆயினும் தருகுவேம் புகுதந்து ஈங்கு இருந்தீமோ முது வாய்ப் பாண கொடும் கோட்டு ஆமான் நடுங்கு தலைக் குழவி புன் தலைச் சிறாஅர் கன்று எனப் பூட்டும் சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர் வேந்து விடு தொழிலொடு சென்றனன் வந்து நின் பாடினி மாலை அணிய வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே &23 - ஆலத்தூர் கிழார் #1 குறுந்தொகை 112 குறிஞ்சி - ஆலத்தூர் கிழார் கௌவை அஞ்சின் காமம் எய்க்கும் எள் அற விடினே உள்ளது நாணே பெரும் களிறு வாங்க முரிந்து நிலம் படாஅ நார் உடை ஒசியல் அற்றே கண்டிசின் தோழி அவர் உண்ட என் நலனே #2 குறுந்தொகை 350 பாலை - ஆலத்தூர்க் கிழார் (ஆலந்தூர்க் கிழார்) அம்ம வாழி தோழி முன் நின்று பனிக் கடும்-குரையம் செல்லாதீம் எனச் சொல்லினம் ஆயின் செல்வர்-கொல்லோ ஆற்று அயல் இருந்த இரும் கோட்டு அம் சிறை நெடும் கால் கணந்துள் ஆள் அறிவுறீஇ ஆறு செல் வம்பலர் படை தலைபெயர்க்கும் மலை உடைக் கானம் நீந்தி நிலையாப் பொருட்பிணிப் பிரிந்திசினோரே #3 புறநானூறு 34 - ஆலத்தூர் கிழார் **பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும் மாண் இழை மகளிர் கருச்சிதைத்தோர்க்கும் குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும் வழுவாய் மருங்கில் கழுவாயும் உள என நிலம் புடைபெயர்வது ஆயினும் ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என அறம் பாடின்றே ஆய்_இழை கணவ காலை அந்தியும் மாலை அந்தியும் புறவுக் கரு அன்ன புன்புல வரகின் பால் பெய் புன்கம் தேனொடு மயக்கிக் குறு முயல் கொழும் சூடு கிழித்த ஒக்கலொடு இரத்தி நீடிய அகன் தலை மன்றத்துக் கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி அமலைக் கொழும் சோறு ஆர்ந்த பாணர்க்கு அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன் எம் கோன் வளவன் வாழ்க என்று நின் பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின் படுபு அறியலனே பல் கதிர்ச் செல்வன் யானோ தஞ்சம் பெரும இவ் உலகத்துச் சான்றோர் செய்த நன்று உண்டாயின் இமையத்து ஈண்டி இன் குரல் பயிற்றிக் கொண்டல் மா மழை பொழிந்த நுண் பல் துளியினும் வாழிய பலவே #4 புறநானூறு 36 - ஆலத்தூர் கிழார் **பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் அடுநை ஆயினும் விடுநை ஆயினும் நீ அளந்து அறிதி நின் புரைமை வார் கோல் செறி அரிச் சிலம்பின் குறும் தொடி மகளிர் பொலம் செய் கழங்கின் தெற்றி ஆடும் தண் ஆன்பொருநை வெண் மணல் சிதையக் கரும் கைக் கொல்லன் அரம் செய் அவ் வாய் நெடும் கை நவியம் பாய்தலின் நிலை அழிந்து வீ கமழ் நெடும் சினைப் புலம்பக் காவு-தொறும் கடி மரம் தடியும் ஓசை தன் ஊர் நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப ஆங்கு இனிது இருந்த வேந்தனொடு ஈங்கு நின் சிலைத் தார் முரசம் கறங்க மலைத்தனை எண்பது நாணுத் தகவு உடைத்தே #5 புறநானூறு 69 - ஆலத்(ந்)தூர் கிழார் **பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் கையது கடன் நிறை யாழே மெய்யது புரவலர் இன்மையின் பசியே அரையது வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர் ஓம்பி உடுத்த உயவல் பாண பூட்கை இல்லோன் யாக்கை போலப் பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை வையகம் முழுவதுடன் வளைஇப் பையென என்னை வினவுதி ஆயின் மன்னர் அடு களிறு உயவும் கொடி கொள் பாசறைக் குருதிப் பரப்பின் கோட்டு_மா தொலைச்சிப் புலாக் களம் செய்த கலாஅத் தானையன் பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனே பொருநர்க்கு ஓங்கிய வேலன் ஒரு நிலைப் பகைப் புலம் படர்தலும் உரியன் தகைத் தார் ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண் கிள்ளி வளவன் படர்குவை ஆயின் நெடும் கடை நிற்றலும் இலையே கடும் பகல் தேர்_வீசு_இருக்கை ஆர நோக்கி நீ அவன் கண்ட பின்றைப் பூவின் ஆடு வண்டு இமிராத் தாமரை சூடாய் ஆதல் அதனினும் இலையே #6 புறநானூறு 225 - ஆலத்தூர்க் கிழார் **பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. தலையோர் நுங்கின் தீம் சேறு மிசைய இடையோர் பழத்தின் பைம் கனி மாந்தக் கடையோர் விடு வாய்ப் பிசிரொடு சுடு கிழங்கு நுகர நில மலர் வையத்து வல முறை வளைஇ வேந்து பீடு அழித்த ஏந்து வேல் தானையொடு ஆற்றல் என்பதன் தோற்றம் கேள் இனிக் கள்ளி போகிய களரி அம் பறந்தலை முள் உடை வியன் காட்டதுவே நன்றும் சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன்-கொல் என இன் இசைப் பறையொடு வென்றி நுவலத் தூக்கணங்குரீஇத் தூங்கு கூடு ஏய்ப்ப ஒரு சிறை கொளீஇய திரி வாய் வலம்புரி ஞாலம் காவலர் கடைத் தலைக் காலைத் தோன்றினும் நோகோ யானே #7 புறநானூறு 324 - ஆலத்தூர் கிழார் வெருக்கு விடை அன்ன வெருள் நோக்குக் கயம் தலை புள் ஊன் தின்ற புலவு நாறு கய வாய் வெள் வாய் வேட்டுவர் வீழ் துணை மகாஅர் சிறியிலை உடையின் சுரை உடை வால் முள் ஊக நுண் கோல் செறித்த அம்பின் வலாஅர் வல் வில் குலாவரக் கோலிப் பருத்தி வேலிக் கருப்பை பார்க்கும் புன்புலம் தழீஇய அம் குடிச் சீறூர்க் குமிழ் உண் வெள்ளைப் பகு வாய் பெயர்த்த வெண் காழ் தாய வண் கால் பந்தர் இடையன் பொத்திய சிறு தீ விளக்கத்துப் பாணரொடு இருந்த நாண் உடை நெடுந்தகை வலம் படு தானை வேந்தற்கு உலந்துழி உலக்கும் நெஞ்சு அறி துணையே &24 - ஆலம்பேரி சாத்தனார் #1 அகநானூறு 47 பாலை - ஆலம்பேரி சாத்தனார் அழிவு இல் உள்ளம் வழிவழிச் சிறப்ப வினை இவண் முடித்தனம் ஆயின் வல் விரைந்து எழு இனி வாழிய நெஞ்சே ஒலி தலை அலங்கு கழை நரலத் தாக்கி விலங்கு எழுந்து கடு வளி உருத்திய கொடி விடு கூர் எரி விடர் முகை அடுக்கம் பாய்தலின் உடன் இயைந்து அமைக் கண் விடு நொடி கணக் கலை அகற்றும் வெம் முனை அரும் சுரம் நீந்திக் கைம்மிக்கு அகன் சுடர் கல் சேர்பு மறைய மனை-வயின் ஒண் தொடி மகளிர் வெண் திரிக் கொளாஅலின் குறு நடைப் புறவின் செம் கால் சேவல் நெடு நிலை வியன் நகர் வீழ் துணைப் பயிரும் புலம்பொடு வந்த புன்கண் மாலை யாண்டு உளர்-கொல் எனக் கலிழ்வோள் எய்தி இழை அணி நெடும் தேர்க் கைவண் செழியன் மழை விளையாடும் வளம் கெழு சிறுமலை சிலம்பின் கூதளம் கமழும் வெற்பின் வேய் புரை பணைத் தோள் பாயும் நோய் அசா வீட முயங்குகம் பலவே #2 அகநானூறு 81 பாலை - ஆலம்பேரி சாத்தனார் நாள் உலா எழுந்த கோள் வல் உளியம் ஓங்கு சினை இருப்பை தீம் பழம் முனையின் புல் அளைப் புற்றின் பல் கிளைச் சிதலை ஒருங்கு முயன்று எடுத்த நனை வாய் நெடும் கோடு இரும்பு ஊது குருகின் இடந்து இரை தேரும் மண் பக வறந்த ஆங்கண் கண் பொரக் கதிர் தெறக் கவிழ்ந்த உலறு தலை நோன் சினை நெறி அயல் மராஅம் ஏறிப் புலம்பு கொள எறி பருந்து உயவும் என்றூழ் நீள் இடை வெம் முனை அரும் சுரம் நீந்திச் சிறந்த செம்மல் உள்ளம் துரத்தலின் கறுத்தோர் ஒளிறு வேல் அழுவம் களிறு படக் கடக்கும் மா வண் கடலன் விளங்கில் அன்ன எம் மை எழில் உண்கண் கலுழ ஐய சேறிரோ அகன்று செய்பொருட்கே #3 அகநானூறு 143 பாலை - ஆலம்பேரி சாத்தனார் செய்வினைப் பிரிதல் எண்ணிக் கைம்மிகக் காடு கவின் ஒழியக் கடும் கதிர் தெறுதலின் நீடு சினை வறிய ஆக ஒல்லென வாடு பல் அகல் இலை கோடைக்கு ஒய்யும் தேக்கு அமல் அடுக்கத்து ஆங்கண் மேக்கு எழுபு முளி அரில் பிறந்த வளி வளர் கூர் எரிச் சுடர் நிமிர் நெடும் கொடி விடர் முகை முழங்கும் வெம் மலை அரும் சுரம் நீந்தி ஐய சேறும் என்ற சிறுசொற்கு இவட்கே வசை இல் வெம் போர் வானவன் மறவன் நசையின் வாழ்நர்க்கு நல் கலம் சுரக்கும் பொய்யா வாய் வாள் புனை கழல் பிட்டன் மை தவழ் உயர் சிமைக் குதிரைக் கவாஅன் அகல் அறை நெடும் சுனை துவலையின் மலர்ந்த தண் கமழ் நீலம் போலக் கண் பனி கலுழ்ந்தன நோகோ யானே #4 அகநானூறு 175 பாலை - ஆலம்பேரி சாத்தனார் வீங்கு விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை வாங்கு தொடை பிழையா வன்கண் ஆடவர் விடு-தொறும் விளிக்கும் வெவ் வாய் வாளி ஆறு செல் வம்பலர் உயிர் செலப் பெயர்ப்பின் பாறு கிளை பயிர்ந்து படு முடை கவரும் வெம் சுரம் இறந்த காதலர் நெஞ்சு உணர அரிய வஞ்சினம் சொல்லியும் பல் மாண் தெரி வளை முன்கை பற்றியும் வினை முடித்து வருதும் என்றனர் அன்றே தோழி கால் இயல் நெடும் தேர்க் கைவண் செழியன் ஆலங்கானத்து அமர் கடந்து உயர்த்த வேலினும் பல் ஊழ் மின்னி முரசு என மா இரு விசும்பில் கடி இடி பயிற்றி நேர் கதிர் நிரைத்த நேமி அம் செல்வன் போர் அடங்கு அகலம் பொருந்திய தார் போல் திருவில் தேஎத்துக் குலைஇ உரு கெழு மண் பயம் பூப்பப் பாஅய்த் தண் பெயல் எழிலி தாழ்ந்த போழ்தே #5 நற்றிணை 152 நெய்தல் - ஆலம்பேரி சாத்தனார் மடலே காமம் தந்தது அலரே மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே இலங்கு கதிர் மழுங்கி எல் விசும்பு படரப் புலம்பு தந்தன்றே புகன்று செய் மண்டிலம் எல்லாம் தந்ததன்தலையும் பையென வடந்தை துவலை தூவக் குடம்பைப் பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇக் கங்குலும் கையறவு தந்தன்று யாங்கு ஆகுவென்-கொல் அளியென் யானே #6 நற்றிணை 255 குறிஞ்சி - ஆலம்பேரி சாத்தனார் கழுது கால்கிளர ஊர் மடிந்தன்றே உரு கெழு மரபின் குறிஞ்சி பாடிக் கடி உடை வியல் நகர்க் கானவர் துஞ்சார் வயக் களிறு பொருத வாள் வரி உழுவை கல் முகைச் சிலம்பில் குழுமும் அன்னோ மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும் இன்று அவர் வாரார் ஆயினோ நன்று-மன்-தில்ல உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னிப் பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள் திரு மணி அரவுத் தேர்ந்து உழல உருமுச் சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே #7 நற்றிணை 303 நெய்தல் - (மதுரை ஆருலவியநாட்டு) ஆலம்பேரி சாத்தனார் ஒலி அவிந்து அடங்கி யாமம் நள்ளெனக் கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை மன்றப் பெண்ணை வாங்கு மடல் குடம்பைத் துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேள்-தொறும் துஞ்சாக் கண்ணள் துயர் அடச் சாஅய் நம்-வயின் வருந்தும் நல்_நுதல் என்பது உண்டு-கொல் வாழி தோழி தெண் கடல் வன் கைப் பரதவர் இட்ட செம் கோல் கொடு முடி அவ் வலை பரியப் போக்கிக் கடு முரண் எறி சுறா வழங்கும் நெடு_நீர்ச் சேர்ப்பன்-தன் நெஞ்சத்தானே #8 நற்றிணை 338 நெய்தல் - (மதுரை ஆருலவிய நாட்டு) ஆலம்பேரி சாத்தனார் கடும் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து அவர் நெடும் தேர் இன் ஒலி இரவும் தோன்றா இறப்ப எவ்வம் நலியும் நின் நிலை நிறுத்தல் வேண்டும் என்றி நிலைப்ப யாங்ஙனம் விடுமோ மற்றே மால் கொள வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய ஆடு அரைப் பெண்ணைத் தோடு மடல் ஏறிக் கொடு வாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய உயிர் செலக் கடைஇப் புணர் துணைப் பயிர்தல் ஆனா பைதல் அம் குருகே &25 - ஆவியார் (ஆனீயார்)(ஆலியார்) #1 புறநானூறு 298 - ஆவியார் எமக்கே கலங்கல் தருமே தானே தேறல் உண்ணும்-மன்னே நன்றும் இன்னான் மன்ற வேந்தே இனியே நேரார் ஆர் எயில் முற்றி வாய் மடித்து உரறி நீ முந்து என்னானே &26 - ஆவூர்கிழார் #1 புறநானூறு 322 - ஆவூர்கிழார் உழுது ஊர் காளை ஊழ் கோடு அன்ன கவை முள் கள்ளிப் பொரி அரைப் பொருந்திப் புது வரகு அரிகால் கருப்பை பார்க்கும் புன் தலைச் சிறாஅர் வில் எடுத்து ஆர்ப்பின் பெரும் கண் குறு முயல் கரும் கலன் உடைய மன்றில் பாயும் வன்புலத்ததுவே கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது இரும் சுவல் வாளை பிறழும் ஆங்கண் தண் பணை ஆளும் வேந்தர்க்குக் கண் படை ஈயா வேலோன் ஊரே &27 - ஆவூர்கிழார் மகனார் கண்ணனார் #1 அகநானூறு 202 குறிஞ்சி - ஆவூர்கிழார் மகனார் கண்ணனார் வயங்கு வெள் அருவிய குன்றத்துக் கவாஅன் கயம் தலை மடப் பிடி இனன் ஏமார்ப்பப் புலிப் பகை வென்ற புண் கூர் யானை கல்லகச் சிலம்பில் கை எடுத்து உயிர்ப்பின் நல் இணர் வேங்கை நறு வீ கொல்லன் குருகு ஊது மிதி உலைப் பிதிர்வின் பொங்கி சிறு பல் மின்மினி போலப் பல உடன் மணி நிற இரும் புதல் தாவும் நாட யாமே அன்றியும் உளர்-கொல் பானாள் உத்தி அரவின் பைத் தலை துமிய உர உரும் உரறும் உட்குவரு நனம் தலை தவிர்வு இல் உள்ளமொடு எஃகு துணை ஆகக் கனை இருள் பரந்த கல் அதர்ச் சிறு நெறி தேராது வரூஉம் நின்-வயின் ஆர் அஞர் அரும் படர் நீந்துவோரே &28 - ஆ(வூ)மூர்க் (காவிதிகள்)கவுதமன் சாதேவனார் #1 அகநானூறு 159 பாலை - ஆ(வூ)மூர்க் (காவிதிகள்)கவுதமன் சாதேவனார் தெண் கழி விளைந்த வெண் கல் உப்பின் கொள்ளை சாற்றிய கொடு நுக ஒழுகை உரன் உடைச் சுவல பகடு பல பரப்பி உமண் உயிர்த்து இறந்த ஒழிகல் அடுப்பின் வடியுறு பகழிக் கொடு வில் ஆடவர் அணங்கு உடை நோன் சிலை வணங்க வாங்கிப் பல் ஆன் நெடு நிரை தழீஇக் கல்லென அரு முனை அலைத்த பெரும் புகல் வலத்தர் கனை குரல் கடும் துடிப் பாணி தூங்கி உவலைக் கண்ணியர் ஊன் புழுக்கு அயரும் கவலைக் காதலர் இறந்தனர் என நனி அவலம் கொள்ளல் மா காதல் அம் தோழி விசும்பின் நல் ஏறு சிலைக்கும் சேண் சிமை நறும் பூம் சாரல் குறும்பொறைக் குணாஅது வில் கெழு தடக் கை வெல் போர் வானவன் மிஞிறு மூசு கவுள சிறு கண் யானைத் தொடி உடைத் தட மருப்பு ஒடிய நூறிக் கொடுமுடி காக்கும் குரூஉக் கண் நெடு மதில் சேண் விளங்கு சிறப்பின் ஆமூர் எய்தினும் ஆண்டு அமைந்து உறையுநர் அல்லர் நின் பூண் தாங்கு ஆகம் பொருந்துதல் மறந்தே #2 நற்றிணை 264 பாலை - ஆவூர் காவிதிகள் சாதேவனார் பாம்பு அளைச் செறிய முழங்கி வலன் ஏர்பு வான் தளி பொழிந்த காண்பு இன் காலை அணி கிளர் கலாவம் ஐது விரித்து இயலும் மணி புரை எருத்தின் மஞ்ஞை போல நின் வீ பெய் கூந்தல் வீசு வளி உளர ஏகுதி மடந்தை எல்லின்று பொழுதே வேய் பயில் இறும்பில் கோவலர் யாத்த ஆ பூண் தெண் மணி இயம்பும் உதுக் காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே &29 - ஆவூர் மூலங்கிழார் #1 அகநானூறு 24 முல்லை - ஆவூர் மூலங்கிழார் வேளாப் பார்ப்பான் வாள் அரம் துமித்த வளை களைந்து ஒழிந்த கொழுந்தின் அன்ன தளை பிணி அவிழாச் சுரி முகப் பகன்றை சிதரல் அம் துவலை தூவலின் மலரும் தைஇ நின்ற தண் பெயல் கடை நாள் வயங்கு கதிர் கரந்த வாடை வைகறை விசும்பு உரிவது போல் வியல் இடத்து ஒழுகி மங்குல் மா மழை தென்புலம் படரும் பனி இரும் கங்குலும் தமியள் நீந்தி தம் ஊரோளே நல்_நுதல் யாமே கடி மதில் கதவம் பாய்தலின் தொடி பிளந்து நுதி முகம் மழுகிய மண்ணை வெண் கோட்டு சிறு கண் யானை நெடு நா ஒண் மணி கழி பிணிக் கறைத் தோல் பொழி கணை உதைப்புத் தழங்கு குரல் முரசமொடு முழங்கும் யாமத்து கழித்து உறை செறியா வாள் உடை எறுழ்த் தோள் இரவுத் துயில் மடிந்த தானை உரவுச் சின வேந்தன் பாசறையேமே #2 அகநானூறு 156 மருதம் - ஆவூர் மூலங்கிழார் முரசு உடைச் செல்வர் புரவிச் சூட்டும் மூட்டுறு கவரி தூக்கி அன்ன செழும் செய் நெல்லின் சேய் அரிப் புனிற்றுக் கதிர் மூதா தின்றல் அஞ்சிக் காவலர் பாகல் ஆய் கொடி பகன்றையொடு பரீஇக் காஞ்சியின் அகத்துக் கரும்பு அருத்தி யாக்கும் தீம் புனல் ஊர திறவிது ஆகக் குவளை உண்கண் இவளும் யானும் கழனி ஆம்பல் முழுநெறிப் பைம் தழை காயா ஞாயிற்று ஆகத் தலைப்பெயப் பொய்தல் ஆடிப் பொலிக என வந்து நின் நகாப் பிழைத்த தவறோ பெரும கள்ளும் கண்ணியும் கையுறை ஆக நிலைக் கோட்டு வெள்ளை நால் செவிக் கிடாஅய் நிலைத் துறைக் கடவுட்கு உளப்பட ஓச்சித் தணி மருங்கு அறியாள் யாய் அழ மணி மருள் மேனி பொன் நிறம் கொளலே #3 புறநானூறு 38 - ஆவூர் மூலங்கிழார் **பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் வரை புரையும் மழ களிற்றின் மிசை வான் துடைக்கும் வகைய போல விரவு உருவின கொடி நுடங்கும் வியன் தானை விறல் வேந்தே நீ உடன்று நோக்கும் வாய் எரி தவழ நீ நயந்து நோக்கும் வாய் பொன் பூப்பச் செம் ஞாயிற்று நிலவு வேண்டினும் வெண் திங்களுள் வெயில் வேண்டினும் வேண்டியது விளைக்கும் ஆற்றலை ஆகலின் நின் நிழல் பிறந்து நின் நிழல் வளர்ந்த எம் அளவு எவனோ மற்றே இன் நிலை பொலம் பூம் காவின் நல் நாட்டோரும் செய்வினை மருங்கின் எய்தல் அல்லதை உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும் கடவது அன்மையின் கையறவு உடைத்து என ஆண்டு செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின் நின் நாடு உள்ளுவர் பரிசிலர் ஒன்னார் தேஎத்தும் நின்னுடைத்து எனவே #4 புறநானூறு 40 - ஆவூர் மூலங்கிழார் **பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் நீயே பிறர் ஓம்புறு மற மன் எயில் ஓம்பாது கடந்து அட்டு அவர் முடி புனைந்த பசும்பொன் நின் அடி பொலியக் கழல் தைஇய வல்லாளனை வய வேந்தே யாமே நின் இகழ் பாடுவோர் எருத்து அடங்க புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற இன்று கண்டு ஆங்குக் காண்குவம் என்றும் இன் சொல் எண் பதத்தை ஆகு-மதி பெரும ஒரு பிடி படியும் சீறிடம் எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே #5 புறநானூறு 166 - ஆவூர் மூலங்கிழார் **பாடப்பட்டோன் : சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் **கௌணியன் விண்ணந்தாயன் நன்று ஆய்ந்த நீள் நிமிர் சடை முது முதல்வன் வாய் போகாது ஒன்று புரிந்த ஈர்_இரண்டின் ஆறு உணர்ந்த ஒரு முது நூல் இகல் கண்டோர் மிகல் சாய்மார் மெய் அன்ன பொய் உணர்ந்து பொய் ஓராது மெய் கொளீஇ மூ_ஏழ் துறையும் முட்டு இன்று போகிய உரை சால் சிறப்பின் உரவோர் மருக வினைக்கு வேண்டி நீ பூண்ட புலப் புல்வாய்க் கலைப் பச்சை சுவல் பூண் ஞான் மிசைப் பொலிய மறம் கடிந்த அரும் கற்பின் அறம் புகழ்ந்த வலை சூடிச் சிறு நுதல் பேர் அகல் அல்குல் சில சொல்லின் பல கூந்தல் நின் நிலைக்கு ஒத்த நின் துணைத் துணைவியர் தமக்கு அமைந்த தொழில் கேட்பக் காடு என்றா நாடு என்று ஆங்கு ஈர்_ஏழின் இடம் முட்டாது நீர் நாண நெய் வழங்கியும் எண் நாணப் பல வேட்டும் மண் நாணப் புகழ் பரப்பியும் அரும் கடிப் பெரும் காலை விருந்து உற்ற நின் திருந்து ஏந்து நிலை என்றும் காண்க-தில் அம்ம யாமே குடாஅது பொன் படு நெடு வரைப் புயலேறு சிலைப்பின் பூ விரி புது நீர்க் காவிரி புரக்கும் தண் புனல் படப்பை எம் ஊர் ஆங்கண் உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம் செல்வல் அத்தை யானே செல்லாது மழை அண்ணாப்ப நீடிய நெடு வரைக் கழை வளர் இமயம் போல நிலீஇயர் அத்தை நீ நிலம் மிசையானே #6 புறநானூறு 177 - ஆவூர் மூலங்கிழார் **பாடப்பட்டோன்: மல்லி கிழான் காரியாதி ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடு நகர் வெளிறு கண் போகப் பல் நாள் திரங்கிப் பாடிப் பெற்ற பொன் அணி யானை தமர் எனின் யாவரும் புகுப அமர் எனின் திங்களும் நுழையா எந்திரப் படு புழைக் கள் மாறு நீட்ட நணிநணி இருந்த குறும் பல் குறும்பின் ததும்ப வைகிப் புளிச் சுவை வேட்ட செம் கண் ஆடவர் தீம் புளிக் களாவொடு துடரி முனையின் மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறிக் கரும் கனி நாவல் இருந்து கொய்து உண்ணும் பெரும் பெயர் ஆதி பிணங்கு அரில் குடநாட்டு எயினர் தந்த எய்ம்_மான் எறி தசைப் பைம் ஞிணம் பெருத்த பசு வெள் அமலை வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய இரும் பனம் குடையின் மிசையும் பெரும் புலர் வைகறை சீர் சாலாதே #7 புறநானூறு 178 - ஆவூர் மூலங்கிழார் **பாடப்பட்டோன்: பாண்டியன் கீரஞ்சாத்தன் **பாண்டிக் குதிரைச் சாக்கையன் எனவும் பாடம். கந்து முனிந்து உயிர்க்கும் யானையொடு பணை முனிந்து கால் இயல் புரவி ஆலும் ஆங்கண் மணல் மலி முற்றம் புக்க சான்றோர் உண்ணார் ஆயினும் தன்னொடு சூளுற்று உண்ம் என இரக்கும் பெரும் பெயர்ச் சாத்தன் ஈண்டோர் இன் சாயலனே வேண்டார் எறி படை மயங்கிய வெருவரு ஞாட்பின் கள் உடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய நெடுமொழி மறந்த சிறு பேராளர் அஞ்சி நீங்கும் காலை ஏமம் ஆகத் தான் முந்துறுமே #8 புறநானூறு 196 - ஆவூர் மூலங்கிழார் **பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய **நன்மாறன். ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும் ஒல்லாது இல் என மறுத்தலும் இரண்டும் ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது இல் என மறுத்தலும் இரண்டும் வல்லே இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர் புகழ் குறைப்படூஉம் வாயில் அத்தை அனைத்து ஆகியர் இனி இதுவே எனைத்தும் சேய்த்துக் காணாது கண்டனம் அதனால் நோயிலர் ஆக நின் புதல்வர் யானும் வெயில் என முனியேன் பனி என மடியேன் கல் குயின்று அன்ன என் நல்கூர் வளி மறை நாண் அலது இல்லாக் கற்பின் வாள் நுதல் மெல் இயல் குறுமகள் உள்ளி செல்வல் அத்தை சிறக்க நின் நாளே #9 புறநானூறு 261 - ஆவூர் மூலங்கிழார் அந்தோ எந்தை அடையாப் பேர் இல் வண்டு படு நறவின் தண்டா மண்டையொடு வரையாப் பெரும் சோற்று முரி வாய் முற்றம் வெற்று யாற்று அம்பியின் எற்று அற்று ஆகக் கண்டனென்-மன்ற சோர்க என் கண்ணே வையம் காவலர் வளம் கெழு திரு நகர் மையல் யானை அயா உயிர்த்து அன்ன நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை புதுக் கண் மாக்கள் செதுக் கண் ஆரப் பயந்தனை-மன்னால் முன்னே இனியே பல் ஆ தழீஇய கல்லா வல் வில் உழைக் குரல் கூகை அழைப்ப ஆட்டி நாகு முலை அன்ன நறும் பூம் கரந்தை விரகு அறியாளர் மரபின் சூட்ட நிரை இவண் தந்து நடுகல் ஆகிய வென் வேல் விடலை இன்மையின் புலம்பி கொய் மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய கழி கல மகடூஉப் போல புல்லென்றனையால் பல் அணி இழந்தே #10 புறநானூறு 301 - ஆவூர் மூலங்கிழார் பல் சான்றீரே பல் சான்றீரே குமரி மகளிர் கூந்தல் புரைய அமரின் இட்ட அரு முள் வேலிக் கல்லென் பாசறைப் பல் சான்றீரே முரசு முழங்கு தானை நும் அரசும் ஓம்பு-மின் ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறும் போற்று-மின் எனை நாள் தங்கும் நும் போரே அனை நாள் எறியர் எறிதல் யாவணது எறிந்தோர் எதிர் சென்று எறிதலும் செல்லான் அதனால் அறிந்தோர் யார் அவன் கண்ணிய பொருளே பலம் என்று இகழ்தல் ஓம்பு-மின் உதுக் காண் நிலன் அளப்பு அன்ன நில்லாக் குறு நெறி வண் பரிப் புரவிப் பண்பு பாராட்டி எல்லிடைப் படர்தந்தோனே கல்லென வேந்து ஊர் யானைக்கு அல்லது ஏந்துவன் போலான் தன் இலங்கு இலை வேலே &30 இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார் **ஓய்மாநாட்டு நல்லியக்கோடனைப் பாடியது #1 பத்துப்பாட்டு - 3. சிறுபாணாற்றுப்படை மணி மலைப் பணைத் தோள் மா நில மடந்தை அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போலச் செல் புனல் உழந்த சேய் வரல் கான்யாற்றுக் கொல் கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்த புதுப் பூம் செம்மல் சூடிப் புடை நெறித்துக் கதுப்பு விரித்து அன்ன காழ் அக நுணங்கு அறல் அயில் உருப்பு அனைய ஆகி ஐது நடந்து வெயில் உருப்புற்ற வெம் பரல் கிழிப்ப வேனில் நின்ற வெம் பத வழி_நாள் காலை ஞாயிற்றுக் கதிர் கடாவுறுப்பப் பாலை நின்ற பாலை நெடு வழிச் சுரன் முதல் மராஅத்த வரி நிழல் அசைஇ ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு அருளி நெய் கனிந்து இருளிய கதுப்பின் கதுப்பு என மணி வயின் கலாபம் பரப்பிப் பல உடன் மயில் மயில் குளிக்கும் சாயல் சாஅய் உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ வயங்கு இழை உலறிய அடியின் அடி தொடர்ந்து ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடித் தடக் கையின் சேர்ந்து உடன் செறிந்த குறங்கின் குறங்கு என மால் வரை ஒழுகிய வாழை வாழைப் பூ எனப் பொலிந்த ஓதி ஓதி நளிச் சினை வேங்கை நாள்_மலர் நச்சிக் களிச் சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து யாணர்க் கோங்கின் அவிர் முகை எள்ளிப் பூண் அகத்து ஒடுங்கிய வெம் முலை முலை என வண் கோள் பெண்ணை வளர்த்த நுங்கின் இன் சேறு இகுதரும் எயிற்றின் எயிறு எனக் குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த முல்லை சான்ற கற்பின் மெல் இயல் மட மான் நோக்கின் வாள் நுதல் விறலியர் நடை மெலிந்து அசைஇய நன் மென் சீறடி கல்லா இளையர் மெல்லத் தைவரப் பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் இன் குரல் சீறியாழ் இட வயின் தழீஇ நைவளம் பழுநிய நயம் தெரி பாலை கைவல் பாண்_மகன் கடன் அறிந்து இயக்க இயங்கா வையத்து வள்ளியோர் நசைஇத் துனி கூர் எவ்வமொடு துயர் ஆற்றுப்படுப்ப முனிவு இகந்திருந்த முது வாய் இரவல கொழு மீன் குறைய ஒதுங்கி வள் இதழ்க் கழுநீர் மேய்ந்த கய வாய் எருமை பைம் கறி நிவந்த பலவின் நீழல் மஞ்சள் மெல் இலை மயிர்ப் புறம் தைவர விளையா இளம் கள் நாற மெல்குபு பெயரா குளவிப் பள்ளிப் பாயல்கொள்ளும் குடபுலம் காவலர் மருமான் ஒன்னார் வடபுல இமயத்து வாங்கு வில் பொறித்த எழு உறழ் திணி தோள் இயல் தேர்க் குட்டுவன் வரு புனல் வாயில் வஞ்சியும் வறிதே அதாஅன்று நறவு வாய் உறைக்கும் நாகு முதிர் நுணவத்து அறை வாய்க் குறும் துணி அயில் உளி பொருத கை புனை செப்பம் கடைந்த மார்பின் செய் பூம் கண்ணி செவி முதல் திருத்தி நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த மகாஅர் அன்ன மந்தி மடவோர் நகாஅர் அன்ன நளி நீர் முத்தம் வாள் வாய் எருந்தின் வயிற்று அகத்து அடக்கித் தோள் புறம் மறைக்கும் நல்கூர் நுசுப்பின் உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும் தத்து நீர் வரைப்பின் கொற்கைக் கோமான் தென்புலம் காவலர் மருமான் ஒன்னார் மண் மாறு கொண்ட மாலை வெண்குடை கண் ஆர் கண்ணிக் கடும் தேர்ச் செழியன் தமிழ் நிலைபெற்ற தாங்கு அரு மரபின் மகிழ் நனை மறுகின் மதுரையும் வறிதே அதாஅன்று நறு நீர்ப் பொய்கை அடைகரை நிவந்த துறு நீர்க் கடம்பின் துணை ஆர் கோதை ஓவத்து அன்ன உண்துறை மருங்கில் கோவத்து அன்ன கொங்கு சேர்பு உறைத்தலின் வரு முலை அன்ன வண் முகை உடைந்து திரு முகம் அவிழ்ந்த தெய்வத் தாமரை ஆசு இல் அங்கை அரக்கு தோய்ந்து அன்ன சே இதழ் பொதிந்த செம்பொன் கொட்டை ஏம இன் துணை தழீஇ இறகு உளர்ந்து காமரு தும்பி காமரம் செப்பும் தண் பணை தழீஇய தளரா இருக்கை குணபுலம் காவலர் மருமான் ஒன்னார் ஓங்கு எயில் கதவம் உருமுச் சுவல் சொறியும் தூங்கு எயில் எறிந்த தொடி விளங்கு தடக் கை நாடா நல் இசை நல் தேர்ச் செம்பியன் ஓடாப் பூட்கை உறந்தையும் வறிதே அதாஅன்று வானம் வாய்த்த வள மலைக் கவாஅன் கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய அரும் திறல் அணங்கின் ஆவியர் பெருமகன் பெரும் கல் நாடன் பேகனும் சுரும்பு உண நறு வீ உறைக்கும் நாக நெடு வழிச் சிறு வீ முல்லைக்குப் பெரும் தேர் நல்கிய பிறங்கு வெள் அருவி வீழும் சாரல் பறம்பின் கோமான் பாரியும் கறங்கு மணி வால் உளைப் புரவியொடு வையகம் மருள ஈர நன் மொழி இரவலர்க்கு ஈந்த அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடு வேல் கழல் தொடித் தடக் கைக் காரியும் நிழல் திகழ் நீல நாகம் நல்கிய கலிங்கம் ஆல்_அமர்_செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த சாவம் தாங்கிய சாந்து புலர் திணி தோள் ஆர்வ நன் மொழி ஆயும் மால் வரைக் கமழ் பூம் சாரல் கவினிய நெல்லி அமிழ்து விளை தீம் கனி ஔவைக்கு ஈந்த உரவுச் சினம் கனலும் ஒளி திகழ் நெடு வேல் அரவக் கடல் தானை அதிகனும் கரவாது நட்டோர் உவப்ப நடைப் பரிகாரம் முட்டாது கொடுத்த முனை விளங்கு தடக் கைத் துளி மழை பொழியும் வளி துஞ்சு நெடும் கோட்டு நளி மலை நாடன் நள்ளியும் நளி சினை நறும் போது கஞலிய நாகு முதிர் நாகத்து குறும் பொறை நன் நாடு கோடியர்க்கு ஈந்த காரிக் குதிரை காரியொடு மலைந்த ஓரிக் குதிரை ஓரியும் என ஆங்கு எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள் எழுவர் பூண்ட ஈகைச் செம் நுகம் விரி கடல் வேலி வியலகம் விளங்க ஒருதான் தாங்கிய உரன் உடை நோன் தாள் நறு வீ நாகமும் அகிலும் ஆரமும் துறை ஆடு மகளிர்க்குத் தோள் புணை ஆகிய பொரு புனல் தரூஉம் போக்கு அரு மரபின் தொன் மா இலங்கை கருவொடு பெயரிய நன் மா இலங்கை மன்னருள்ளும் மறு இன்றி விளங்கிய வடு இல் வாய் வாள் உறு புலித் துப்பின் ஓவியர் பெருமகன் களிற்றுத் தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடிப் பிடிக் கணம் சிதறும் பெயல் மழைத் தடக் கைப் பல்லியக் கோடியர் புரவலன் பேர் இசை நல்லியக்கோடனை நயந்த கொள்கையொடு தாங்கு அரு மரபின் தன்னும் தந்தை வான் பொரு நெடு வரை வளனும் பாடி முன்_நாள் சென்றனம் ஆக இ நாள் திறவாக் கண்ண சாய் செவிக் குருளை கறவாப் பால் முலை கவர்தல் நோனாது புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில் காழ் சோர் முது சுவர்க் கணச் சிதல் அரித்த பூழி பூத்த புழல் காளாம்பி ஒல்கு பசி உழந்த ஒடுங்கு நுண் மருங்குல் வளைக் கை கிணை_மகள் வள் உகிர்க் குறைத்த குப்பை வேளை உப்பு இலி வெந்ததை மடவோர் காட்சி நாணிக் கடை அடைத்து இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் மிசையும் அழி பசி வருத்தம் வீடப் பொழி கவுள் தறுகண் பூட்கைத் தயங்கு மணி மருங்கின் சிறு கண் யானையொடு பெரும் தேர் எய்தி யாம் அவண்-நின்றும் வருதும் நீயிரும் இவண் நயந்து இருந்த இரும் பேர் ஒக்கல் செம்மல் உள்ளமொடு செல்குவிர் ஆயின் அலை நீர்த் தாழை அன்னம் பூப்பவும் தலை_நாள் செருந்தி தமனியம் மருட்டவும் கடும் சூல் முண்டகம் கதிர் மணி கழாஅலவும் நெடும் கால் புன்னை நித்திலம் வைப்பவும் கானல் வெண் மணல் கடல் உலாய் நிமிர்தரப் பாடல் சான்ற நெய்தல் நெடு வழி மணி நீர் வைப்பு மதிலொடு பெயரிய பனி நீர்ப் படுவின் பட்டினம் படரின் ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்து அன்ன வீங்கு திரை கொணர்ந்த விரை மர விறகின் கரும் புகைச் செம் தீ மாட்டிப் பெரும் தோள் மதி ஏக்கறூஉம் மாசறு திரு முகத்து நுதி வேல் நோக்கின் நுளை_மகள் அரித்த பழம்படு தேறல் பரதவர் மடுப்பக் கிளை மலர்ப் படப்பைக் கிடங்கில் கோமான் தளை அவிழ் தெரியல் தகையோன் பாடி அறல் குழல் பாணி தூங்கியவரொடு வறல் குழல் சூட்டின் வயின்வயின் பெறுகுவிர் பைம் நனை அவரை பவழம் கோப்பவும் கரு நனைக் காயாக் கண மயில் அவிழவும் கொழும் கொடி முசுண்டை கொட்டம் கொள்ளவும் செழும் குலைக் காந்தள் கை விரல் பூப்பவும் கொல்லை நெடு வழிக் கோபம் ஊரவும் முல்லை சான்ற முல்லை அம் புறவின் விடர் கால் அருவி வியன் மலை மூழ்கி சுடர் கால் மாறிய செவ்வி நோக்கித் திறல் வேல் நுதியின் பூத்த கேணி விறல் வேல் வென்றி வேலூர் எய்தின் உறு வெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை எயிற்றியர் அட்ட இன் புளி வெம் சோறு தேமா மேனிச் சில் வளை ஆயமொடு ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவிர் நறும் பூ கோதை தொடுத்த நாள் சினைக் குறும் கால் காஞ்சிக் கொம்பர் ஏறி நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து புலவுக் கயல் எடுத்த பொன் வாய் மணிச் சிரல் வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை முள் அரைத் தாமரை முகிழ் விரி நாள் போது கொங்கு கவர் நீலச் செம் கண் சேவல் மதி சேர் அரவின் மானத் தோன்றும் மருதம் சான்ற மருதத் தண் பணை அந்தணர் அருகா அரும் கடி வியல் நகர் அம் தண் கிடங்கின் அவன் ஆமூர் எய்தின் வலம் பட நடக்கும் வலி புணர் எருத்தின் உரன் கெழு நோன் பகட்டு உழவர் தங்கை பிடிக் கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்துத் தொடிக் கை மகடூஉ மகமுறை தடுப்ப இரும் காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு கவைத் தாள் அலவன் கலவையொடு பெறுகுவிர் எரி மறிந்து அன்ன நாவின் இலங்கு எயிற்றுக் கருமறிக் காதின் கவை அடிப் பேய்_மகள் நிணன் உண்டு சிரித்த தோற்றம் போல பிணன் உகைத்துச் சிவந்த பேர் உகிர்ப் பணைத் தாள் அண்ணல் யானை அருவி துகள் அவிப்ப நீறு அடங்கு தெருவின் அவன் சாறு அயர் மூதூர் சேய்த்தும் அன்று சிறிது நணியதுவே பொருநர்க்கு ஆயினும் புலவர்க்கு ஆயினும் அரு மறை நாவின் அந்தணர்க்கு ஆயினும் கடவுள் மால் வரை கண்விடுத்து அன்ன அடையா வாயில் அவன் அரும் கடை குறுகிச் செய்ந்நன்றி அறிதலும் சிற்றினம் இன்மையும் இன் முகம் உடைமையும் இனியன் ஆதலும் செறிந்து விளங்கு சிறப்பின் அறிந்தோர் ஏத்த அஞ்சினர்க்கு அளித்தலும் வெம் சினம் இன்மையும் ஆண் அணி புகுதலும் அழி படை தாங்கலும் வாள் மீக்கூற்றத்து வயவர் ஏத்தக் கருதியது முடித்தலும் காமுறப்படுதலும் ஒருவழிப்படாமையும் ஓடியது உணர்தலும் அரி ஏர் உண்கண் அரிவையர் ஏத்த அறிவு மடம்படுதலும் அறிவு நன்கு உடைமையும் வரிசை அறிதலும் வரையாது கொடுத்தலும் பரிசில் வாழ்க்கைப் பரிசிலர் ஏத்தப் பல் மீன் நடுவண் பால் மதி போல இன் நகை ஆயமோடு இருந்தோன் குறுகிப் பைம் கண் ஊகம் பாம்பு பிடித்து அன்ன அம் கோட்டுச் செறிந்த அவிழ்ந்து வீங்கு திவவின் மணி நிரைத்து அன்ன வனப்பின் வாய் அமைத்து வயிறு சேர்பு ஒழுகிய வகை அமை அகளத்துக் கானக் குமிழின் கனி நிறம் கடுப்பப் புகழ் வினைப் பொலிந்த பச்சையொடு தேம் பெய்து அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின் பாடு துறை முற்றிய பயன் தெரி கேள்விக் கூடு கொள் இன்னியம் குரல் குரல் ஆக நூல் நெறி மரபின் பண்ணி ஆனாது முதுவோர்க்கு முகிழ்த்த கையினை எனவும் இளையோர்க்கு மலர்ந்த மார்பினை எனவும் ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும் தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும் நீ சில மொழியா அளவை மாசு இல் காம்பு சொலித்து அன்ன அறுவை உடீஇப் பாம்பு வெகுண்டு அன்ன தேறல் நல்கிக் கா எரியூட்டிய கவர் கணைத் தூணிப் பூ விரி கச்சைப் புகழோன் தன்முன் பனிவரை மார்பன் பயந்த நுண் பொருள் பனுவலின் வழாஅ பல் வேறு அடிசில் வாள் நிற விசும்பின் கோள்_மீன் சூழ்ந்த இளம் கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து விளங்கு பொன் கலத்தில் விரும்புவன பேணி ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டித் திறல் சால் வென்றியொடு தெவ்வுப் புலம் அகற்றி விறல் வேல் மன்னர் மன் எயில் முருக்கி நயவர் பாணர் புன்கண் தீர்த்த பின் வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு பருவ வானத்துப் பால் கதிர் பரப்பி உருவ வான் மதி ஊர்கொண்டு ஆங்கு கூர் உளி பொருத வடு ஆழ் நோன் குறட்டு ஆரம் சூழ்ந்த அயில் வாய் நேமியொடு சிதர் நனை முருக்கின் சேண் ஓங்கு நெடும் சினைத் ததர் பிணி அவிழ்ந்த தோற்றம் போல உள் அரக்கு எறிந்த உருக்குறு போர்வைக் கரும் தொழில் வினைஞர் கைவினை முற்றி ஊர்ந்து பெயர்பெற்ற எழில் நடைப் பாகரொடு மா செலவு ஒழிக்கும் மதன் உடை நோன் தாள் வாள் முகப் பாண்டில் வலவனொடு தரீஇ அன்றே விடுக்கும் அவன் பரிசில் மென் தோள் துகில் அணி அல்குல் துளங்கு இயல் மகளிர் அகில் உண விரித்த அம் மென் கூந்தலின் மணி மயில் கலாபம் மஞ்சிடை பரப்பித் துணி மழை தவழும் துயல் கழை நெடும் கோட்டு எறிந்து உரும் இறந்த ஏற்று அரும் சென்னிக் குறிஞ்சிக் கோமான் கொய் தளிர்க் கண்ணிச் செல் இசை நிலைஇய பண்பின் நல்லியக்கோடனை நயந்தனிர் செலினே &31 - இடைக்காடனார் #1 அகநானூறு 139 பாலை - இடைக்காடனார் துஞ்சுவது போல இருளி விண் பக இமைப்பது போல மின்னி உறைக்கொண்டு ஏறுவது போலப் பாடு சிறந்து உரைஇ நிலம் நெஞ்சு உட்க ஓவாது சிலைத்து ஆங்கு ஆர் தளி பொழிந்த வார் பெயல் கடை நாள் ஈன்று நாள் உலந்த வாலா வெண் மழை வான் தோய் உயர் வரை ஆடும் வைகறைப் புதல் ஒளி சிறந்த காண்பு இன் காலை தண் நறும் படு நீர் மாந்திப் பதவு அருந்து வெண் புறக்கு உடைய திரி மருப்பு இரலை வார் மணல் ஒரு சிறைப் பிடவு அவிழ் கொழு நிழல் காமர் துணையொடு ஏமுற வதிய அரக்கு நிற உருவின் ஈயல் மூதாய் பரப்பியவை போல் பாஅய்ப் பல உடன் நீர் வார் மருங்கின் ஈர் அணி திகழ இன்னும் வாரார் ஆயின் நல்_நுதல் யாது-கொல் மற்று அவர் நிலையே காதலர் கருவிக் கார் இடி இரீஇய பருவம் அன்று அவர் வருதும் என்றதுவே #2 அகநானூறு 194 முல்லை - இடைக்காடனார் பேர் உறை தலைஇய பெரும் புலர் வைகறை ஏர் இடம்படுத்த இரு மறுப் பூழிப் புறம் மாறுபெற்ற பூவல் ஈரத்து ஊன் கிழித்து அன்ன செம் சுவல் நெடும் சால் வித்திய மருங்கின் விதை பல நாறி இரலை நல் மான் இனம் பரந்தவை போல் கோடு உடைத் தலைக்குடை சூடிய வினைஞர் கறங்கு பறைச் சீரின் இரங்க வாங்கிக் களை கால் கழீஇய பெரும் புன வரகின் கவைக் கதிர் இரும் புறம் கதூஉ உண்ட குடுமி நெற்றி நெடு மாத் தோகை காமர் கலவம் பரப்பி ஏமுற கொல்லை உழவர் கூழ் நிழல் ஒழித்த வல் இலைக் குருந்தின் வாங்கு சினை இருந்து கிளி கடி மகளிரின் விளி படப் பயிரும் கார்-மன் இதுவால் தோழி போர் மிகக் கொடுஞ்சி நெடும் தேர் பூண்ட கடும் பரி விரி உளை நல் மான் கடைஇ வருதும் என்று அவர் தெளித்த போழ்தே #3 அகநானூறு 274 முல்லை - இடைக்காடனார்(கல்லாடனார்) இரு விசும்பு அதிர முழங்கி அர நலிந்து இகு பெயல் அழி துளி தலைஇ வானம் பருவம் செய்த பானாள் கங்குல் ஆடு தலைத் துருவின் தோடு ஏமார்ப்பக் கடை கோல் சிறு தீ அடைய மாட்டித் திண் கால் உறியன் பானையன் அதளன் நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்பத் தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன் மடி விடு வீளை கடிது சென்று இசைப்படத தெறி மறி பார்க்கும் குறுநரி வெரீஇ முள் உடைக் குறும் தூறு இரியப் போகும் தண் நறு புறவினதுவே நறு மலர் முல்லை சான்ற கற்பின் மெல் இயல் குறுமகள் உறைவு இன் ஊரே #4 அகநானூறு 284 முல்லை - இடைக்காடனார் சிறி இலை நெல்லிக் காய் கண்டு அன்ன குறு விழிக் கண்ண கூரல் அம் குறு முயல் முடந்தை வரகின் வீங்கு பீள் அருந்துபு குடந்தை அம் செவிய கோள் பவர் ஒடுங்கி இன் துயில் எழுந்து துணையொடு போகி முன்றில் சிறு நிறை நீர் கண்டு உண்ணும் புன்புலம் தழீஇய பொறை முதல் சிறுகுடித் தினைக் கள் உண்ட தெறி கோல் மறவர் விசைத்த வில்லர் வேட்டம் போகி முல்லைப் படப்பைப் புல்வாய் கெண்டும் காமர் புறவினதுவே காமம் நம்மினும் தான் தலைமயங்கிய அம் மா அரிவை உறைவு இன் ஊரே #5 அகநானூறு 304 முல்லை - இடைக்காடனார் இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல் சூர்ப் பனிப்பு அன்ன தண் வரல் ஆலியொடு பரூஉப் பெயல் அழி துளி தலைஇ வான் நவின்று குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை செய்து விட்டு அன்ன செந்நில மருங்கில் செறித்து நிறுத்து அன்ன தெள் அறல் பருகி சிறு மறி தழீஇய தெறி நடை மடப் பிணை வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதியச் சுரும்பு இமிர்பு ஊதப் பிடவுத் தளை அவிழ அரும் பொறி மஞ்ஞை ஆல வரி மணல் மணி மிடை பவளம் போல அணி மிகக் காயாம் செம்மல் தாஅய்ப் பல உடன் ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்பப் புலன் அணி கொண்ட கார் எதிர் காலை ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை வினையொடு வேறு புலத்து அல்கி நன்றும் அறவர் அல்லர் நம் அருளாதோர் என நம் நோய் தன்-வயின் அறியாள் எம் நொந்து புலக்கும்-கொல் மாஅயோளே #6 அகநானூறு 374 முல்லை - இடைக்காடனார் மாக் கடல் முகந்து மாதிரத்து இருளி மலர் தலை உலகம் புதைய வலன் ஏர்பு பழங்கண் கொண்ட கொழும் பல் கொண்மூ போழ்ந்த போல பல உடன் மின்னி தாழ்ந்த போல நனி அணி வந்து சோர்ந்த போலச் சொரிவன பயிற்றி இடியும் முழக்கும் இன்றிப் பாணர் வடியுறு நல் யாழ் நரம்பு இசைத்து அன்ன இன் குரல் அழி துளி தலைஇ நல் பல பெயல் பெய்து கழிந்த பூ நாறு வைகறைச் செறி மணல் நிவந்த களர் தோன்று இயவில் குறு மோட்டு மூதாய் குறுகுறு ஓடி மணி மண்டு பவளம் போலக் காயா அணி மிகு செம்மல் ஒளிப்பன மறையக் கார் கவின் கொண்ட காமர் காலைச் செல்க தேரே நல் வலம் பெறுந பெரும் தோள் நுணுகிய நுசுப்பின் திருந்து இழை அரிவை விருந்து எதிர்கொளவே #7 குறுந்தொகை 251 முல்லை - இடைக்காடனார் மடவ வாழி மஞ்ஞை மா இனம் கால மாரி பெய்து என அதன்எதிர் ஆலலும் ஆலின பிடவும் பூத்தன கார் அன்று இகுளை தீர்க நின் படரே கழிந்த மாரிக்கு ஒழிந்த பழ நீர் புது நீர் கொளீஇய உகுத்தரும் நொதுமல் வானத்து முழங்கு குரல் கேட்டே #252 குறிஞ்சி - கிடங்கில் குலபதி நக்கண்ணனார் நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த கொடியன் ஆகிய குன்று கெழு நாடன் வருவதோர் காலை இன்முகம் திரியாது கடவுள் கற்பின் அவன் எதிர் பேணி மடவை மன்ற நீ எனக் கடவுபு துனியல் வாழி தோழி சான்றோர் புகழும் முன்னர் நாணுப பழி யாங்கு ஒல்பவோ காணும் காலே #8 நற்றிணை 142 முல்லை - இடைக்காடனார் வான் இகுபு சொரிந்த வயங்கு பெயல் கடை நாள் பாணி கொண்ட பல் கால் மெல் உறி ஞெலிகோல் கலப் பை அதளொடு சுருக்கிப் பறிப் புறத்து இட்ட பால் நொடை இடையன் நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்பத் தண்டு கால் வைத்த ஒடுங்கு நிலை மடி விளி சிறு தலைத் தொழுதி ஏமார்த்து அல்கும் புறவினதுவே பொய்யா யாணர் அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும் முல்லை சான்ற கற்பின் மெல் இயல் குறுமகள் உறைவின் ஊரே #9 நற்றிணை 316 முல்லை - இடைக்காடனார் மடவது அம்ம மணி நிற எழிலி மலரின் மௌவல் நலம் வரக் காட்டிக் கயல் ஏர் உண்கண் கனம் குழை இவை நின் எயிறு ஏர் பொழுதின் ஏய்தருவேம் எனக் கண் அகன் விசும்பின் மதி என உணர்ந்த நின் நல் நுதல் நீவிச் சென்றோர் தம் நசை வாய்த்து வரல் வாரா அளவை அத்தக் கல் மிசை அடுக்கம் புதையக் கால் வீழ்த்துத் தளி தரு தண் கார் தலைஇ விளி இசைத்தன்றால் வியல் இடத்தானே #10 புறநானூறு 42 - இடைக்காடனார் **பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் ஆனா ஈகை அடு போர் அண்ணல் நின் யானையும் மலையின் தோன்றும் பெரும நின் தானையும் கடல் என முழங்கும் கூர் நுனை வேலும் மின்னின் விளங்கும் உலகத்து அரைசு தலை பனிக்கும் ஆற்றலை ஆதலின் புரை தீர்ந்தன்று அது புதுவதோ அன்றே தண் புனல் பூசல் அல்லது நொந்து களைக வாழி வளவ என்று நின் முனை தரு பூசல் கனவினும் அறியாது புலி புறங்காக்கும் குருளை போல மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப பெரு விறல் யாணர்த்து ஆகி அரிநர் கீழ்மடைக் கொண்ட வாளையும் உழவர் படை மிளிர்ந்திட்ட யாமையும் அறைநர் கரும்பில் கொண்ட தேனும் பெரும் துறை நீர் தரு மகளிர் குற்ற குவளையும் வன்புலக் கேளிர்க்கு வரு_விருந்து அயரும் மென்புல வைப்பின் நல் நாட்டுப் பொருந மலையின் இழிந்து மாக் கடல் நோக்கி நில வரை இழிதரும் பல் யாறு போலப் புலவர் எல்லாம் நின் நோக்கினரே நீயே மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்துக் கூற்று வெகுண்டு அன்ன முன்பொடு மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே &32 - இடைக்குன்றூர் கிழார் #1 புறநானூறு 76 - இடைக்குன்றூர் கிழார் **பாடப்பட்டோன் : பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற **நெடுஞ்செழியன் ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவது அன்று இவ் உலகத்து இயற்கை இன்றின் ஊங்கோ கேளலம் திரள் அரை மன்ற வேம்பின் மாச் சினை ஒண் தளிர் நெடும் கொடி உழிஞைப் பவரொடு மிடைந்து செறியத் தொடுத்த தேம் பாய் கண்ணி ஒலியல் மாலையொடு பொலியச் சூடிப் பாடு இன் தெண் கிணை கறங்கக் காண்தக நாடு கெழு திருவில் பசும் பூண் செழியன் பீடும் செம்மலும் அறியார் கூடிப் பொருதும் என்று தன் தலை வந்த புனை கழல் எழுவர் நல் வலம் அடங்க ஒருதான் ஆகிப் பொருது களத்து அடலே #2 புறநானூறு 77 - இடைக்குன்றூர் கிழார் **பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற **நெடுஞ் செழியன் கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டுக் குடுமி களைந்த நுதல் வேம்பின் ஒண் தளிர் நெடும் கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து குறும் தொடி கழித்த கைச் சாபம் பற்றி நெடும் தேர்க் கொடிஞ்சி பொலிய நின்றோன் யார்-கொல் வாழ்க அவன் கண்ணி தார் பூண்டு தாலி களைந்தன்றும் இலனே பால் விட்டு அயினியும் இன்று அயின்றனனே வயின்வயின் உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே அவரை அழுந்தப் பற்றி அகல் விசும்பு ஆர்ப்பு எழ கவிந்து நிலம் சேர அட்டதை மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினும் இலனே #3 புறநானூறு 78 - இடைக்குன்றூர்க் கிழார் **பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற **நெடுஞ்செழியன் வணங்கு தொடைப் பொலிந்த வலி கெழு நோன் தாள் அணங்கு அரும் கடும் திறல் என் ஐ முணங்கு நிமிர்ந்து அளைச் செறி உழுவை இரைக்கு வந்து அன்ன மலைப்பு அரும் அகலம் மதியார் சிலைத்து எழுந்து விழுமியம் பெரியம் யாமே நம்மின் பொருநனும் இளையன் கொண்டியும் பெரிது என எள்ளி வந்த வம்ப மள்ளர் புல்லென் கண்ணர் புறத்தில் பெயர ஈண்டு அவர் அடுதலும் ஒல்லான் ஆண்டு அவர் மாண் இழை மகளிர் நாணினர் கழியத் தந்தை தம் ஊர் ஆங்கண் தெண் கிணை கறங்கச் சென்று ஆண்டு அட்டனனே #4 புறநானூறு 79 - இடைக்குன்றூர் கிழார் **பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற **நெடுஞ்செழியன் மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி மன்ற வேம்பின் ஒண் குழை மிலைந்து தெண் கிணை முன்னர்க் களிற்றின் இயலி வெம் போர்ச் செழியனும் வந்தனன் எதிர்ந்த வம்ப மள்ளரோ பலரே எஞ்சுவர்-கொல்லோ பகல் தவச் சிறிதே &33 - இடையன் சேந்தன் கொற்றனார் #1 அகநானூறு 375 பாலை - இடையன் சேந்தன் கொற்றனார் ** (இடையன் செங்கொற்றனார்) சென்று நீடுநர் அல்லர் அவர்-வயின் இனைதல் ஆனாய் என்றிசின் இகுளை அம்பு தொடை அமைதி காண்மார் வம்பலர் கலன் இலர் ஆயினும் கொன்று புள் ஊட்டும் கல்லா இளையர் கலித்த கவலைக் கண நரி இனனொடு குழீஇ நிணன் அருந்தும் நெய்த்தோர் ஆடிய மல்லல் மொசி விரல் அத்த எருவைச் சேவல் சேர்ந்த அரை சேர் யாத்த வெண் திரள் வினை விறல் எழூஉத் திணி தோள் சோழர் பெருமகன் விளங்கு புகழ் நிறுத்த இளம் பெரும் சென்னி குடிக் கடன் ஆகலின் குறை வினை முடிமார் செம்பு உறழ் புரிசைப் பாழி நூறி வம்ப வடுகர் பைம் தலை சவட்டிக் கொன்ற யானைக் கோட்டின் தோன்றும் அஞ்சுவரு மரபின் வெம் சுரம் இறந்தோர் நோயிலர் பெயர்தல் அறியின் ஆழல-மன்னோ தோழி என் கண்ணே &34 - இடையன் நெடுங்கீரனார் #1 அகநானூறு 166 மருதம் - இடையன் நெடுங்கீரனார் நல் மரம் குழீஇய நனை முதிர் சாடி பல் நாள் அரித்த கோஒய் உடைப்பின் மயங்கு மழைத் துவலையின் மறுகு உடன் பனிக்கும் பழம் பல் நெல்லின் வேளூர் வாயில் நறு விரை தெளித்த நாறு இணர் மாலைப் பொறி வரி இன வண்டு ஊதல கழியும் உயர் பலி பெறூஉம் உரு கெழு தெய்வம் புனை இரும் கதுப்பின் நீ கடுத்தோள்-வயின் அனையேன் ஆயின் அணங்குக என் என மனையோள் தேற்றும் மகிழ்நன் ஆயின் யார்-கொல் வாழி தோழி நெருநல் தார் பூண் களிற்றின் தலைப் புணை தழீஇ வதுவை ஈர் அணிப் பொலிந்து நம்மொடு புதுவது வந்த காவிரிக் கோடு தோய் மலிர் நிறை ஆடியோரே &35 - இம்மென் கீரனார் #1 அகநானூறு 398 குறிஞ்சி - இம்மென் கீரனார் இழை நிலை நெகிழ்ந்த எவ்வம் கூரப் படர் மலி வருத்தமொடு பல புலந்து அசைஇ மென் தோள் நெகிழச் சாஅய்க் கொன்றை ஊழுறு மலரின் பாழ்பட முற்றிய பசலை மேனி நோக்கி நுதல் பசந்து இன்னேம் ஆகிய எம் இவண் அருளான் நும்மோன் செய்த கொடுமைக்கு இம்மென்று அலமரல் மழைக் கண் தெண் பனி மல்க நன்று புறம்மாறி அகறல் யாழ நின் குன்று கெழு நாடற்கு என் எனப்படுமோ கரை பொரு நீத்தம் உரை எனக் கழறி நின்னொடு புலத்தல் அஞ்சி அவர் மலைப் பல் மலர் போர்த்து நாணு மிக ஒடுங்கி மறைந்தனை கழியும் நின் தந்து செலுத்தி நயன் அறத் துறத்தல் வல்லியோரே நொதுமலாளர் அது கண்ணோடாது அழல் சினை வேங்கை நிழல் தவிர்ந்து அசைஇ மாரி புறந்தர நந்தி ஆரியர் பொன் படு நெடு வரை புரையும் எந்தை பல் பூம் கானத்து அல்கி இன்று இவண் சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ குய வரி இரும் போத்துப் பொருத புண் கூர்ந்து உயங்கு பிடி தழீஇய மதன் அழி யானை வாங்கு அமைக் கழையின் நரலும் அவர் ஓங்கு மலை நாட்டின் வரூஉவோயே &36 இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார் **பல்குன்றக்கோட்டத்துச் செங்கண்மாத்துவேள் **நன்னன் சேய் நன்னனைப் பாடியது #1 பத்துப்பாட்டு 10. மலைபடுகடாம் திரு மழை தலைஇய இருள் நிற விசும்பின் விண் அதிர் இமிழ் இசை கடுப்பப் பண் அமைத்துத் திண் வார் விசித்த முழவொடு ஆகுளி நுண் உருக்குற்ற விளங்கு அடர்ப் பாண்டில் மின் இரும் பீலி அணித் தழைக் கோட்டொடு கண் இடை விடுத்த களிற்று உயிர்த் தூம்பின் இளிப் பயிர் இமிரும் குறும் பரம் தூம்பொடு விளிப்பது கவரும் தீம் குழல் துதைஇ நடுவு நின்று இசைக்கும் அரிக் குரல் தட்டை கடி கவர்பு ஒலிக்கும் வல் வாய் எல்லரி நொடி தரு பாணிய பதலையும் பிறவும் கார் கோள் பலவின் காய் துணர் கடுப்ப நேர் சீர் சுருக்கிக் காய கலப்பையிர் கடு கலித்து எழுந்த கண் அகன் சிலம்பில் படுத்து வைத்து அன்ன பாறை மருங்கின் எடுத்து நிறுத்து அன்ன இட்டு அரும் சிறு நெறி தொடுத்த வாளியர் துணை புணர் கானவர் இடுக்கண் செய்யாது இயங்குநர் இயக்கும் அடுக்கல் மீமிசை அருப்பம் பேணாது இடிச் சுர நிவப்பின் இயவு கொண்டு ஒழுகித் தொடித் திரிவு அன்ன தொண்டு படு திவவின் கடிப்பகை அனைத்தும் கேள்வி போகா குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர் புரி நரம்பின் அரலை தீர உரீஇ வரகின் குரல் வார்ந்து அன்ன நுண் துளை இரீஇச் சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி இலங்கு துளை செறிய ஆணி முடுக்கிப் புதுவது புனைந்த வெண்கை யாப்பு அமைத்துப் புதுவது போர்த்த பொன் போல் பச்சை வதுவை நாறும் வண்டு கமழ் ஐம்பால் மடந்தை மாண்ட நுடங்கு எழில் ஆகத்து அடங்கு மயிர் ஒழுகிய அம் வாய் கடுப்ப அகடு சேர்பு பொருந்தி அளவினில் திரியாது கவடு படக் கவைஇய சென்று வாங்கு உந்தி நுணங்கு அரம் நுவறிய நுண் நீர் மாமை களங்கனி அன்ன கதழ்ந்து கிளர் உருவின் வணர்ந்து ஏந்து மருப்பின் வள் உயிர்ப் பேரியாழ் அமைவரப் பண்ணி அருள் நெறி திரியாது இசை பெறு திருவின் வேத்தவை ஏற்பத் துறை பல முற்றிய பை தீர் பாணரொடு உயர்ந்து ஓங்கு பெரு மலை ஊறு இன்று ஏறலின் மதம் தபு ஞமலி நாவின் அன்ன துளங்கு இயல் மெலிந்த கல் பொரு சீறடிக் கணம்கொள் தோகையின் கதுப்பு இகுத்து அசைஇ விலங்கு மலைத்து அமர்ந்த சே அரி நாட்டத்து இலங்கு வளை விறலியர் நின் புறம் சுற்ற கயம் புக்கு அன்ன பயம் படு தண் நிழல் புனல் கால்கழீஇய மணல் வார் புறவில் புலம்பு விட்டு இருந்த புனிறு இல் காட்சிக் கலம் பெறு கண்ணுளர் ஒக்கல் தலைவ தூ மலர் துவன்றிய கரை பொரு நிவப்பின் மீமிசை நல் யாறு கடல் படர்ந்து ஆஅங்கு யாம் அவண்-நின்றும் வருதும் நீயிரும் கனி பொழி கானம் கிளையொடு உணீஇய துனை பறை நிவக்கும் புள் இனம் மான புனை தார்ப் பொலிந்த வண்டு படு மார்பின் வனை புனை எழில் முலை வாங்கு அமைத் திரள் தோள் மலர் போல் மழைக் கண் மங்கையர் கணவன் முனை பாழ்படுக்கும் துன் அரும் துப்பின் இசை நுவல் வித்தின் நசை ஏர் உழவர்க்குப் புது நிறை வந்த புனல் அம் சாயல் மதி மாறு ஓரா நன்று உணர் சூழ்ச்சி வில் நவில் தடக் கை மேவரும் பெரும் பூண் நன்னன் சேய் நன்னன் படர்ந்த கொள்கையொடு உள்ளினிர் சேறிர் ஆயின் பொழுது எதிர்ந்த புள்ளினிர் மன்ற என் தாக்குறுதலின் ஆற்றின் அளவும் அசையும் நன் புலமும் வீற்று வளம் சுரக்கும் அவன் நாடு படு வல்சியும் மலையும் சோலையும் மா புகல் கானமும் தொலையா நல் இசை உலகமொடு நிற்பப் பலர் புறங்கண்டு அவர் அரும் கலம் தரீஇப் புலவோர்க்குச் சுரக்கும் அவன் ஈகை மாரியும் இகழுநர்ப் பிணிக்கும் ஆற்றலும் புகழுநர்க்கு அரசு முழுது கொடுப்பினும் அமரா நோக்கமொடு தூத் துளி பொழிந்த பொய்யா வானின் வீயாது சுரக்கும் அவன் நாள்_மகிழ் இருக்கையும் நல்லோர் குழீஇய நா நவில் அவையத்து வல்லார் ஆயினும் புறம் மறைத்துச் சென்றோரைச் சொல்லிக்காட்டிச் சோர்வு இன்றி விளக்கி நல்லிதின் இயக்கும் அவன் சுற்றத்து ஒழுக்கமும் நீர் அகம் பனிக்கும் அஞ்சுவரு கடும் திறல் பேர் இசை நவிரம் மேஎய் உறையும் காரி உண்டிக் கடவுளது இயற்கையும் பாய் இருள் நீங்கப் பகல் செய்யா எழுதரும் ஞாயிறு அன்ன அவன் வசை இல் சிறப்பும் இகந்தன ஆயினும் தெவ்வர் தேஎம் நுகம் படக் கடந்து நூழிலாட்டிப் புரைத் தோல் வரைப்பின் வேல் நிழல் புலவோர்க்குக் கொடைக் கடன் இறுத்த அவன் தொல்லோர் வரவும் இரை தேர்ந்து இவரும் கொடும் தாள் முதலையொடு திரை படக் குழிந்த கல் அகழ் கிடங்கின் வரை புரை நிவப்பின் வான் தோய் இஞ்சி உரை செல வெறுத்த அவன் மூதூர் மாலையும் கேள் இனி வேளை நீ முன்னிய திசையே மிகு வளம் பழுநிய யாணர் வைப்பின் புதுவது வந்தன்று இது அதன் பண்பே வானம் மின்னு வசிவு பொழிய ஆனாது இட்ட எல்லாம் பெட்டாங்கு விளையப் பெயலொடு வைகிய வியன் கண் இரும் புனத்து அகல் இரு விசும்பின் ஆஅல் போல வாலிதின் விரிந்த புன் கொடி முசுண்டை நீலத்து அன்ன விதைப் புன மருங்கில் மகுளி பாயாது மலி துளி தழாலின் அகளத்து அன்ன நிறை சுனைப் புறவின் கௌவை போகிய கரும் காய் பிடி ஏழ் நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எள் பொய் பொரு கயமுனி முயங்கு கை கடுப்பக் கொய்_பதம் உற்றன குலவுக் குரல் ஏனல் விளை தயிர்ப் பிதிர்வின் வீ உக்கு இருவி-தொறும் குளிர் புரை கொடும் காய் கொண்டன அவரை மேதி அன்ன கல் பிறங்கு இயவின் வாதி கை அன்ன கவைக் கதிர் இறைஞ்சி இரும்பு கவர்வுற்றன பெரும் புன வரகே பால் வார்பு கெழீஇப் பல் கவர் வளி போழ்பு வாலிதின் விளைந்தன ஐவனம் வெண்ணெல் வேல் ஈண்டு தொழுதி இரிவுற்று என்னக் கால் உறு துவைப்பின் கவிழ் கனைத்து இறைஞ்சிக் குறை அறை வாரா நிவப்பின் அறையுற்று ஆலைக்கு அலமரும் தீம் கழைக் கரும்பே புயல் புனிறு போகிய பூ மலி புறவின் அவல் பதம் கொண்டன அம் பொதித் தோரை தொய்யாது வித்திய துளர் படு துடவை ஐயவி அமன்ற வெண் கால் செறுவில் மை என விரிந்தன நீள் நறு நெய்தல் செய்யாப் பாவை வளர்ந்து கவின் முற்றிக் காயம் கொண்டன இஞ்சி மா இருந்து வயவுப் பிடி முழந்தாள் கடுப்பக் குழி-தொறும் விழுமிதின் வீழ்ந்தன கொழும் கொடிக் கவலை காழ் மண்டு எஃகம் களிற்று முகம் பாய்ந்து என ஊழ் மலர் ஒழி முகை உயர் முகம் தோயத் துறுகல் சுற்றிய சோலை வாழை இறுகு குலை முறுகப் பழுத்த பயம் புக்கு ஊழுற்று அலமரும் உந்தூழ் அகல் அறைக் காலம் அன்றியும் மரம் பயன் கொடுத்தலின் காலின் உதிர்ந்தன கரும் கனி நாவல் மாறுகொள ஒழுகின ஊறு நீர் உயவை நூறொடு குழீஇயின கூவை சேறு சிறந்து உண்ணுநர்த் தடுத்தன தேமாப் புண் அரிந்து அரலை உக்கன நெடும் தாள் ஆசினி விரல் ஊன்று படு கண் ஆகுளி கடுப்ப குடிஞை இரட்டும் நெடு மலை அடுக்கத்துக் கீழும் மேலும் கார் வாய்த்து எதிரிச் சுரம் செல் கோடியர் முழவின் தூங்கி முரஞ்சு கொண்டு இறைஞ்சின அலங்கு சினைப் பலவே தீயின் அன்ன ஒண் செங்காந்தள் தூவல் கலித்த புது முகை ஊன் செத்து அறியாது எடுத்த புன் புறச் சேவல் ஊஉன் அன்மையின் உண்ணாது உகுத்து என நெருப்பின் அன்ன பல் இதழ் தாஅய் வெறிக்களம் கடுக்கும் வியல் அறை-தோறும் மண இல் கமழும் மா மலைச் சாரல் தேனினர் கிழங்கினர் ஊன் ஆர் வட்டியர் சிறு கண் பன்றிப் பழுதுளிப் போக்கிப் பொருது தொலை யானைக் கோடு சீர் ஆகத் தூவொடு மலிந்த காய கானவர் செழும் பல் யாணர்ச் சிறுகுடிப் படினே இரும் பேர் ஒக்கலொடு பதம் மிகப் பெறுகுவிர் அன்று அவண் அசைஇ அல் சேர்ந்து அல்கிக் கன்று எரி ஒள் இணர் கடும்பொடு மலைந்து சேந்த செயலைச் செப்பம் போகி அலங்கு கழை நரலும் ஆரிப் படுகர்ச் சிலம்பு அடைந்து இருந்த பாக்கம் எய்தி நோனாச் செருவின் வலம் படு நோன் தாள் மான விறல் வேள் வயிரியம் எனினே நும் இல் போல நில்லாது புக்குக் கிழவிர் போலக் கேளாது கெழீஇச் சேண் புலம்பு அகல இனிய கூறிப் பரூஉக் குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு குரூஉக் கண் இறடிப் பொம்மல் பெறுகுவிர் ஏறித் தரூஉம் இலங்கு மலைத் தாரமொடு வேய்ப் பெயல் விளையுள் தேக் கள் தேறல் குறைவு இன்று பருகி நறவு மகிழ்ந்து வைகறைப் பழம் செருக்குற்ற நும் அனந்தல் தீர அருவி தந்த பழம் சிதை வெண் காழ் வரு விசை தவிர்த்த கடமான் கொழும் குறை முளவு_மாத் தொலைச்சிய பைம் நிணப் பிளவை பிணவு நாய் முடுக்கிய தடியொடு விரைஇ வெண் புடைக் கொண்ட துய்த் தலைப் பழனின் இன் புளிக் கலந்து மா மோர் ஆகக் கழை வளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து வழை அமை சாரல் கமழத் துழைஇ நறு மலர் அணிந்த நாறு இரு முச்சிக் குற_மகள் ஆக்கிய வால் அவிழ் வல்சி அகம் மலி உவகை ஆர்வமொடு அளைஇ மகமுறை தடுப்ப மனை-தொறும் பெறுகுவிர் செருச் செய் முன்பின் குருசில் முன்னிய பரிசில் மறப்ப நீடலும் உரியிர் அனையது அன்று அவன் மலை மிசை நாடே நிரை இதழ்க் குவளைக் கடி வீ தொடினும் வரை அர_மகளிர் இருக்கை காணினும் உயிர் செல வெம்பிப் பனித்தலும் உரியிர் பல நாள் நில்லாது நில நாடு படர்-மின் விளை புனம் நிழத்தலின் கேழல் அஞ்சிப் புழை-தொறும் மாட்டிய இரும் கல் அடாஅர் அரும் பொறி உடைய ஆறே நள்ளிருள் அலரி விரிந்த விடியல் வைகினிர் கழி-மின் நளிந்து பலர் வழங்காச் செப்பம் துணியின் முரம்பு கண் உடைந்த பரல் அவல் போழ்வில் கரந்து பாம்பு ஒடுங்கும் பயம்புமார் உளவே குறிக்கொண்டு மரம் கொட்டி நோக்கிச் செறி தொடி விறலியர் கைதொழூஉப் பழிச்ச வறிது நெறி ஒரீஇ வலம்செயாக் கழி-மின் புலந்து புனிறு போகிய புனம் சூழ் குறவர் உயர் நிலை இதணம் ஏறிக் கை புடையூஉ அகல் மலை இறும்பில் துவன்றிய யானைப் பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடும் கல் இரு வெதிர் ஈர்ம் கழை தத்திக் கல்லெனக் கரு விரல் ஊகம் பார்ப்போடு இரிய உயிர் செகு மரபின் கூற்றத்து அன்ன வரும் விசை தவிராது மரம் மறையாக் கழி-மின் உரவுக் களிறு கரக்கும் இடங்கர் ஒடுங்கி இரவின் அன்ன இருள் தூங்கு வரைப்பின் குமிழி சுழலும் குண்டு கய முடுக்கர் அகழ் இழிந்து அன்ன கான்யாற்று நடவை வழூஉம் மருங்கு உடைய வழாஅல் ஓம்பிப் பரூஉக் கொடி வலந்த மதலை பற்றித் துருவின் அன்ன புன் தலை மகாரோடு ஒருவிர்_ஒருவிர் ஓம்பினர் கழி-மின் அழுந்துபட்டு அலமரும் புழகு அமல் சாரல் விழுந்தோர் மாய்க்கும் குண்டு கயத்து அருகா வழும்பு கண் புதைத்த நுண் நீர்ப் பாசி அடி நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய முழுநெறி அணங்கிய நுண் கோல் வேரலோடு எருவை மென் கோல் கொண்டனிர் கழி-மின் உயர் நிலை மாக் கல் புகர் முகம் புதைய மாரியின் இகுதரு வில் உமிழ் கடும் கணைத் தாரொடு பொலிந்த வினை நவில் யானைச் சூழியின் பொலிந்த சுடர்ப் பூ இலஞ்சி ஓர் யாற்று இயவின் மூத்த புரிசைப் பராவு அரு மரபின் கடவுள் காணின் தொழாநிர் கழியின் அல்லது வறிது நும் இயம் தொடுதல் ஓம்பு-மின் மயங்கு துளி மாரி தலையும் அவன் மல்லல் வெற்பே அலகை அன்ன வெள் வேர்ப் பீலி கலவ மஞ்ஞை கட்சியில் தளரினும் கடும் பறைக் கோடியர் மகாஅர் அன்ன நெடும் கழைக் கொம்பர்க் கடுவன் உகளினும் நேர்கொள் நெடு வரை நேமியின் தொடுத்த சூர் புகல் அடுக்கத்துப் பிரசம் காணினும் ஞெரேரென நோக்கல் ஓம்பு-மின் உரித்து அன்று நிரை செலல் மெல் அடி நெறி மாறுபடுகுவிர் வரை சேர் வகுந்தின் கானத்துப் படினே கழுதில் சேணோன் ஏவொடு போகி இழுதின் அன்ன வால் நிணம் செருக்கி நிறப் புண் கூர்ந்த நிலம் தின் மருப்பின் நெறி கெடக் கிடந்த இரும் பிணர் எருத்தின் இருள் துணிந்து அன்ன ஏனம் காணின் முளி கழை இழைந்த காடு படு தீயின் நளி புகை கமழாது இறாயினிர் மிசைந்து துகள் அறத் துணிந்த மணி மருள் தெண் நீர்க் குவளை அம் பைம் சுனை அசைவு விடப் பருகி மிகுத்துப் பதம் கொண்ட பரூஉக் கண் பொதியினிர் புள் கை போகிய புன் தலை மகாரோடு அற்கு இடை கழிதல் ஓம்பி ஆற்ற நும் இல் புக்கு அன்ன கல் அளை வதி-மின் அல் சேர்ந்து அல்கி அசைதல் ஓம்பி வான் கண் விரிந்த விடியல் ஏற்றெழுந்து கானகப் பட்ட செம் நெறிக் கொள்-மின் கயம் கண்டு அன்ன அகன் பை அம் கண் மைந்து மலி சினத்த களிறு மதன் அழிக்கும் துஞ்சுமரம் கடுக்கும் மாசுணம் விலங்கி இகந்து சேண் கமழும் பூவும் உண்டோர் மறந்து அமைகல்லாப் பழனும் ஊழ் இறந்து பெரும் பயன் கழியினும் மாந்தர் துன்னார் இரும் கால் வீயும் பெரு மரக் குழாமும் இடனும் வலனும் நினையினிர் நோக்கிக் குறி அறிந்து அவைஅவை குறுகாது கழி-மின் கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்துக் கூடு இயத்து அன்ன குரல் புணர் புள்ளின் நாடு காண் நனம் தலை மென்மெல அகன்-மின் மா நிழல் பட்ட மரம் பயில் இறும்பின் ஞாயிறு தெறாஅ மாக நனம் தலைத் தேஎம் மருளும் அமையம் ஆயினும் இறாஅ வன் சிலையர் மா தேர்பு கொட்கும் குறவரும் மருளும் குன்றத்துப் படினே அகன் கண் பாறைத் துவன்றிக் கல்லென இயங்கல் ஓம்பி நும் இயங்கள் தொடு-மின் பாடு இன் அருவிப் பயம் கெழு மீமிசைக் காடு காத்து உறையும் கானவர் உளரே நிலைத் துறை வழீஇய மதன் அழி மாக்கள் புனல் படு பூசலின் விரைந்து வல் எய்தி உண்டற்கு இனிய பழனும் கண்டோர் மலைதற்கு இனிய பூவும் காட்டி ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற நும்மின் நெஞ்சத்து அவலம் வீட இம்மென் கடும்போடு இனியிர் ஆகுவிர் அறிஞர் கூறிய மாதிரம் கைக்கொள்பு குறியவும் நெடியவும் ஊழ் இழிபு புதுவோர் நோக்கினும் பனிக்கும் நோய் கூர் அடுக்கத்து அலர் தாய வரி நிழல் அசையினிர் இருப்பின் பல திறம் பெயர்பவை கேட்குவிர்-மாதோ கலை தொடு பெரும் பழம் புண் கூர்ந்து ஊறலின் மலை முழுதும் கமழும் மாதிரம்-தோறும் அருவி நுகரும் வான் அர_மகளிர் வரு விசை தவிராது வாங்குபு குடை-தொறும் தெரி இமிழ் கொண்ட நும் இயம் போல் இன் இசை இலங்கு ஏந்து மருப்பின் இனம் பிரி ஒருத்தல் விலங்கல் மீமிசைப் பணவைக் கானவர் புலம் புக்கு உண்ணும் புரி வளைப் பூசல் சேய் அளைப் பள்ளி எஃகு உறு முள்ளின் எய் தெற இழுக்கிய கானவர் அழுகை கொடு_வரி பாய்ந்து எனக் கொழுநர் மார்பில் நெடு வசி விழுப்புண் தணிமார் காப்பு என அறல் வாழ் கூந்தல் கொடிச்சியர் பாடல் தலை_நாள் பூத்த பொன் இணர் வேங்கை மலைமார் இடூஉம் ஏமப் பூசல் கன்று அரைப்பட்ட கயம் தலை மடப் பிடி வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின் ஒண் கேழ் வயப் புலி பாய்ந்து எனக் கிளையொடு நெடு வரை இயம்பும் இடி உமிழ் தழங்கு குரல் கை கோள் மறந்த கரு விரல் மந்தி அரு விடர் வீழ்ந்த தன் கல்லாப் பார்ப்பிற்கு முறி மேய் யாக்கை கிளையொடு துவன்றிச் சிறுமையுற்ற களையாப் பூசல் கலை கையற்ற காண்பு இன் நெடு வரை நிலை பெய்து இட்ட மால்பு நெறி ஆகப் பெரும் பயன் தொகுத்த தேம் கொள் கொள்ளை அரும் குறும்பு எறிந்த கானவர் உவகை திருந்து வேல் அண்ணற்கு விருந்து இறை சான்ம் என நறவு நாள்_செய்த குறவர் தம் பெண்டிரொடு மான் தோல் சிறு பறை கறங்கக் கல்லென வான் தோய் மீமிசை அயரும் குரவை நல் எழில் நெடும் தேர் இயவு வந்து அன்ன கல் யாறு ஒலிக்கும் விடர் முழங்கு இரங்கு இசை நெடும் சுழிப் பட்ட கடுங்கண் வேழத்து உரவுச் சினம் தணித்துப் பெரு வெளில் பிணிமார் விரவு மொழி பயிற்றும் பாகர் ஓதை ஒலி கழைத் தட்டை புடையுநர் புனம்-தொறும் கிளி கடி மகளிர் விளி படு பூசல் இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல் ஏறு மலை தலைவந்த மரையான் கதழ் விடை மாறா மைந்தின் ஊறு படத் தாக்கிக் கோவலர் குறவரோடு ஒருங்கு இயைந்து ஆர்ப்ப வள் இதழ் குளவியும் குறிஞ்சியும் குழைய நல் ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை காந்தள் துடுப்பின் கமழ் மடல் ஓச்சி வண் கோள் பலவின் சுளை விளை தீம் பழம் உண்டு படு மிச்சில் காழ் பயன் கொள்மார் கன்று கடாஅவுறுக்கும் மகாஅர் ஓதை மழை கண்டு அன்ன ஆலை-தொறும் ஞெரேரெனக் கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும் தினை குறு மகளிர் இசை படு வள்ளையும் சேம்பும் மஞ்சளும் ஓம்பினர் காப்போர் பன்றிப்பறையும் குன்றகச் சிலம்பும் என்று இ அனைத்தும் இயைந்து ஒருங்கு ஈண்டி அவலவும் மிசையவும் துவன்றிப் பல உடன் அலகைத் தவிர்த்த எண் அரும் திறத்த மலை படு கடாஅம் மாதிரத்து இயம்ப குரூஉக் கண் பிணையல் கோதை மகளிர் முழவுத் துயில் அறியா வியலுள் ஆங்கண் விழவின் அற்று அவன் வியன் கண் வெற்பே கண்ண் தண்ண் எனக் கண்டும் கேட்டும் உண்டற்கு இனிய பல பாராட்டியும் இன்னும் வருவதாக நமக்கு எனத் தொன் முறை மரபினிர் ஆகி பன் மாண் செரு மிக்குப் புகலும் திரு ஆர் மார்பன் உரும் உரறு கருவிய பெரு மலை பிற்பட இறும்பூது கஞலிய இன் குரல் விறலியர் நறும் கார் அடுக்கத்துக் குறிஞ்சி பாடிக் கைதொழூஉப் பரவிப் பழிச்சினிர் கழி-மின் மை படு மா மலைப் பனுவலின் பொங்கிக் கை தோய்வு அன்ன கார் மழைத் தொழுதி தூஉ அன்ன துவலை துவற்றலின் தேஎம் தேறாக் கடும் பரிக் கடும்பொடு காஅய்க் கொண்ட நும் இயம் தொய்படாமல் கூவல் அன்ன விடரகம் புகு-மின் இரும் கல் இகுப்பத்து இறுவரை சேராது குன்று இடம்பட்ட ஆர் இடர் அழுவத்து நின்று நோக்கினும் கண் வாள் வௌவும் மண் கனை முழவின் தலைக்கோல் கொண்டு தண்டு கால் ஆகத் தளர்தல் ஓம்பி ஊன்றினிர் கழி-மின் ஊறு தவப் பலவே அயில் காய்ந்து அன்ன கூர் கல் பாறை வெயில் புறந்தரூஉம் இன்னல் இயக்கத்துக் கதிர் சினம் தணிந்த அமயத்துக் கழி-மின் உரை செல வெறுத்த அவன் நீங்காச் சுற்றமொடு புரை தவ உயரிய மழை மருள் பஃறோல் அரசு நிலை தளர்க்கும் அருப்பமும் உடைய பின்னி அன்ன பிணங்கு அரில் நுழை-தொறும் முன்னோன் வாங்கிய கடு விசைக் கணைக் கோல் இன் இசை நல் யாழ்ப் பத்தரும் விசி பிணி மண் ஆர் முழவின் கண்ணும் ஓம்பிக் கை பிணி விடாஅது பைபயக் கழி-மின் களிறு மலைந்து அன்ன கண்கூடு துறுகல் தளி பொழி கானம் தலை தவப் பலவே ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்து என நல் வழிக் கொடுத்த நாண் உடை மறவர் செல்லா நல் இசைப் பெயரொடு நட்ட கல் ஏசு கவலை எண்ணு மிகப் பலவே இன்புறு முரற்கை நும் பாட்டு விருப்பு ஆகத் தொன்று ஒழுகு மரபின் நும் மருப்பு இகுத்துத் துனை-மின் பண்டு நற்கு அறியாப் புலம் பெயர் புதுவிர் சந்து நீவிப் புல் முடிந்து இடு-மின் செல்லும் தேஎத்துப் பெயர் மருங்கு அறிமார் கல் எறிந்து எழுதிய நல் அரை மராஅத்த கடவுள் ஓங்கிய காடு ஏசு கவலை ஒட்டாது அகன்ற ஒன்னாத் தெவ்வர் சுட்டினும் பனிக்கும் சுரம் தவப் பலவே தேம் பாய் கண்ணித் தேர் வீசு கவி கை ஓம்பா வள்ளல் படர்ந்திகும் எனினே மேம்பட வெறுத்த அவன் தொல் திணை மூதூர் ஆங்கனம் அற்றே நம்மனோர்க்கே அசைவுழி அசைஇ அஞ்சாது கழி-மின் புலி உற வெறுத்த தன் வீழ் பிணை உள்ளிக் கலை நின்று விளிக்கும் கானம் ஊழ் இறந்து சிலை ஒலி வெரீஇய செம் கண் மரை விடை தலை இறும்பு கதழும் நாறு கொடிப் புறவின் வேறு புலம் படர்ந்த ஏறு உடை இனத்த வளை ஆன் தீம் பால் மிளை சூழ் கோவலர் வளையோர் உவப்பத் தருவனர் சொரிதலின் பலம் பெறு நசையொடு பதி வயின் தீர்ந்த நும் புலம்பு சேண் அகல புதுவிர் ஆகுவிர் பகர் விரவு நெல்லின் பல அரி அன்ன தகர் விரவு துருவை வெள்ளையொடு விரைஇக் கல்லென் கடத்திடைக் கடலின் இரைக்கும் பல் யாட்டு இன நிரை எல்லினிர் புகினே பாலும் மிதவையும் பண்ணாது பெறுகுவிர் துய் மயிர் அடக்கிய சேக்கை அன்ன மெய் உரித்து இயற்றிய மிதி அதள் பள்ளி தீத் துணை ஆகச் சேந்தனிர் கழி-மின் கூப்பிடு கடக்கும் கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர் கூவை காணின் படியோர்த் தேய்த்த பணிவு இல் ஆண்மைக் கொடியோள் கணவன் படர்ந்திகும் எனினே தடியும் கிழங்கும் தண்டினர் தரீஇ ஓம்புநர் அல்லது உடற்றுநர் இல்லை ஆங்கு வியம் கொள்-மின் அது அதன் பண்பே தேம் பட மலர்ந்த மராஅ மெல் இணரும் உம்பல் அகைத்த ஒண் முறி யாவும் தளிரொடு மிடைந்த காமரு கண்ணி திரங்கு மரல் நாரில் பொலியச் சூடி முரம்பு கண் உடைந்த நடவை தண்ணென உண்டனிர் ஆடிக் கொண்டனிர் கழி-மின் செ வீ வேங்கைப் பூவின் அன்ன வேய் கொள் அரிசி மிதவை சொரிந்த சுவல் விளை நெல்லின் அவரை அம் புளிங்கூழ் அற்கு இடை உழந்த நும் வருத்தம் வீட அகலுள் ஆங்கண் கழி மிடைந்து இயற்றிய புல் வேய் குரம்பைக் குடி-தொறும் பெறுகுவிர் பொன் அறைந்து அன்ன நுண் நேர் அரிசி வெண் எறிந்து இயற்றிய மாக் கண் அமலை தண்ணென் நுண் இழுது உள்ளீடு ஆக அசையினிர் சேப்பின் அல்கலும் பெறுகுவிர் விசையம் கொழித்த பூழி அன்ன உண்ணுநர் தடுத்த நுண் இடி நுவணை நொய் மர விறகின் ஞெகிழி மாட்டிப் பனி சேண் நீங்க இனிது உடன் துஞ்சிப் புலரி விடியல் புள் ஓர்த்துக் கழி-மின் புல் அரைக் காஞ்சிப் புனல் பொரு புதவின் மெல் அவல் இருந்த ஊர்-தொறும் நல் யாழ்ப் பண்ணுப் பெயர்த்து அன்ன காவும் பள்ளியும் பல் நாள் நிற்பினும் சேந்தனிர் செலினும் நன் பல உடைத்து அவன் தண் பணை நாடே கண்பு மலி பழனம் கமழத் துழைஇ வலையோர் தந்த இரும் சுவல் வாளை நிலையோர் இட்ட நெடு நாண் தூண்டில் பிடிக் கை அன்ன செம் கண் வராஅல் துடிக் கண் அன்ன குறையொடு விரைஇப் பகன்றைக் கண்ணிப் பழையர் மகளிர் ஞெண்டு ஆடு செறுவில் தராய்க்-கண் வைத்த விலங்கல் அன்ன போர் முதல் தொலைஇ வளம் செய் வினைஞர் வல்சி நல்கத் துளங்கு தசும்பு வாக்கிய பசும் பொதித் தேறல் இளம் கதிர் ஞாயிற்றுக் களங்கள்-தொறும் பெறுகுவிர் முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண் சோறு வண்டு படக் கமழும் தேம் பாய் கண்ணித் திண் தேர் நன்னற்கும் அயினி சான்ம் எனக் கண்டோர் மருளக் கடும்புடன் அருந்தி எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ் மருதம் பண்ணி அசையினிர் கழி-மின் வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇச் செம் கண் எருமை இனம் பிரி ஒருத்தல் கனை செலல் முன்பொடு கதழ்ந்து வரல் போற்றி வனை கலத் திகிரியின் குமிழி சுழலும் துனை செலல் தலைவாய் ஓவு இறந்து வரிக்கும் காணுநர் வயாஅம் கட்கு இன் சேயாற்றின் யாணர் ஒரு கரைக் கொண்டனிர் கழி-மின் நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின் பதி எழல் அறியாப் பழம் குடி கெழீஇ வியல் இடம் பெறாஅ விழுப் பெரு நியமத்து யாறு எனக் கிடந்த தெருவின் சாறு என இகழுநர் வெரூஉம் கவலை மறுகின் கடல் எனக் கார் என ஒலிக்கும் சும்மையொடு மலை என மழை என மாடம் ஓங்கி துனி தீர் காதலின் இனிது அமர்ந்து உறையும் பனி வார் காவின் பல் வண்டு இமிரும் நனி சேய்த்து அன்று அவன் பழ விறல் மூதூர் பொருந்தாத் தெவ்வர் இரும் தலை துமியப் பருந்து படக் கடக்கும் ஒள் வாள் மறவர் கரும் கடை எஃகம் சாத்திய புதவின் அரும் கடி வாயில் அயிராது புகு-மின் மன்றில் வதியுநர் சேண் புலப் பரிசிலர் வெல் போர்ச் சேஎய் பெரு விறல் உள்ளி வந்தோர் மன்ற அளியர்தாம் எனக் கண்டோர் எல்லாம் அமர்ந்து இனிதின் நோக்கி விருந்து இறை அவரவர் எதிர்கொளக் குறுகிப் பரி புலம்பு அலைத்த நும் வருத்தம் வீட எரி கான்று அன்ன பூம் சினை மராஅத்துத் தொழுதி போக வலிந்து அகப்பட்ட மட நடை ஆமான் கயமுனிக் குழவி ஊமை எண்கின் குடா அடிக் குருளை மீமிசை கொண்ட கவர் பரிக் கொடும் தாள் வரை வாழ் வருடை வன் தலை மாத் தகர் அரவு குறும்பு எறிந்த சிறு கண் தீர்வை அளைச் செறி உழுவை கோளுற வெறுத்த மடக் கண் மரையான் பெரும் செவிக் குழவி அரக்கு விரித்து அன்ன செந்நில மருங்கின் பரல் தவழ் உடும்பின் கொடும் தாள் ஏற்றை வரைப் பொலிந்து இயலும் மடக் கண் மஞ்ஞை கானக்கோழிக் கவர் குரல் சேவல் கானப் பலவின் முழவு மருள் பெரும் பழம் இடிக் கலப்பு அன்ன நறு வடி மாவின் வடிச் சேறு விளைந்த தீம் பழத் தாரம் தூவல் கலித்த இவர் நனை வளர் கொடி காஅய்க் கொண்ட நுகம் மருள் நூறை பரூஉப் பளிங்கு உதிர்த்த பல உறு திரு மணி குரூஉப் புலி பொருத புண் கூர் யானை முத்து உடை மருப்பின் முழு வலி மிகு திரள் வளை உடைந்து அன்ன வள் இதழ்க் காந்தள் நாகம் திலகம் நறும் காழ் ஆரம் கரும் கொடி மிளகின் காய்த் துணர்ப் பசும் கறி திருந்து அமை விளைந்த தேக் கள் தேறல் கான் நிலை எருமைக் கழை பெய் தீம் தயிர் நீல் நிற ஓரி பாய்ந்து என நெடு வரை நேமியின் செல்லும் நெய்க் கண் இறாஅல் உடம்புணர்பு தழீஇய ஆசினி அனைத்தும் குடமலைப் பிறந்த தண் பெரும் காவிரி கடல் மண்டு அழுவத்துக் கயவாய் கடுப்ப நோனாச் செருவின் நெடும் கடைத் துவன்றி வானத்து அன்ன வளம் மலி யானைத் தாது எரு ததைந்த முற்றம் முன்னி மழை எதிர் படு கண் முழவு கண் இகுப்பக் கழை வளர் தூம்பின் கண் இடம் இமிர மருதம் பண்ணிய கரும் கோட்டுச் சீறியாழ் நரம்பு மீது இறவாது உடன்புணர்ந்து ஒன்றிக் கடவது அறிந்த இன் குரல் விறலியர் தொன்று ஒழுகு மரபின் தம் இயல்பு வழாஅது அரும் திறல் கடவுள் பழிச்சிய பின்றை விருந்தின் பாணி கழிப்பி நீள்மொழிக் குன்றா நல் இசைச் சென்றோர் உம்பல் இன்று இவண் செல்லாது உலகமொடு நிற்ப இடைத் தெரிந்து உணரும் பெரியோர் மாய்ந்து எனக் கொடைக் கடன் இறுத்த செம்மலோய் என வென்றிப் பல் புகழ் விறலோடு ஏத்திச் சென்றது நொடியவும் விடாஅன் நசை தர வந்தது சாலும் வருத்தமும் பெரிது எனப் பொரு முரண் எதிரிய வயவரொடு பொலிந்து திரு நகர் முற்றம் அணுகல் வேண்டிக் கல்லென் ஒக்கல் நல் வலத்து இரீஇ உயர்ந்த கட்டில் உரும்பு இல் சுற்றத்து அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து இலம் என மலர்ந்த கையர் ஆகித் தம் பெயர் தம்மொடு கொண்டனர் மாய்ந்தோர் நெடு வரை இழிதரு நீத்தம் சால் அருவிக் கடு வரல் கலுழி கட்கு இன் சேயாற்று வடு வாழ் எக்கர் மணலினும் பலரே அதனால் புகழொடும் கழிக நம் வரைந்த நாள் எனப் பரந்து இடம் கொடுக்கும் விசும்பு தோய் உள்ளமொடு நயந்தனிர் சென்ற நும்மினும் தான் பெரிது உவந்த உள்ளமோடு அமர்ந்து இனிது நோக்கி இழை மருங்கு அறியா நுழை நூல் கலிங்கம் எள் அறு சிறப்பின் வெள் அரைக் கொளீஇ முடுவல் தந்த பைம் நிணத் தடியொடு நெடு வெண்ணெல்லின் அரிசி முட்டாது தலை_நாள் அன்ன புகலொடு வழி சிறந்து பல நாள் நிற்பினும் பெறுகுவிர் நில்லாது செல்வேம்-தில்ல எம் தொல் பதி பெயர்ந்து என மெல்லெனக் கூறி விடுப்பின் நும்முள் தலைவன் தாமரை மலைய விறலியர் சீர் கெழு சிறப்பின் விளங்கு இழை அணிய நீர் இயக்கு அன்ன நிரை செலல் நெடும் தேர் வாரிக் கொள்ளா வரை மருள் வேழம் கறங்கு மணி துவைக்கும் ஏறு உடைப் பெரு நிரை பொலம் படைப் பொலிந்த கொய் சுவல் புரவி நிலம் தினக் கிடந்த நிதியமோடு அனைத்தும் இலம்படு புலவர் ஏற்ற கை நிறையக் கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக் கையின் வளம் பிழைப்பு அறியாது வாய் வளம் பழுநிக் கழை வளர் நவிரத்து மீமிசை ஞெரேரென மழை சுரந்து அன்ன ஈகை நல்கி தலை_நாள் விடுவிக்கும் பரிசில் மலை நீர் வென்று எழு கொடியின் தோன்றும் குன்று சூழ் இருக்கை நாடு கிழவோனே &37 - இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார் #1 அகநானூறு 279 பாலை - இருங்கோன் ஒல்லையாயன் செங்கண்ணனார் ** (இருங்கோக் கண்ணனார்) நட்டோர் இன்மையும் கேளிர் துன்பமும் ஒட்டாது உறையுநர் பெருக்கமும் காணூஉ ஒரு பதி வாழ்தல் ஆற்றுப-தில்ல பொன் அவிர் சுணங்கொடு செறிய வீங்கிய மென் முலை முற்றம் கடவாதோர் என நள்ளென் கங்குலும் பகலும் இயைந்துஇயைந்து உள்ளம் பொத்திய உரம் சுடு கூர் எரி ஆள்வினை மாரியின் அவியா நாளும் கடறு உழந்து இவணம் ஆகப் படர் உழந்து யாங்கு ஆகுவள்-கொல் தானே தீம் தொடை விளரி நரம்பின் நயவரு சீறியாழ் மலி பூம் பொங்கர் மகிழ் குரல் குயிலொடு புணர் துயில் எடுப்பும் புனல் தெளி காலையும் நம் உடை மதுகையள் ஆகி அணி நடை அன்ன மாண் பெடையின் மென்மெல இயலிக் கையறு நெஞ்சினள் அடைதரும் மை ஈர் ஓதி மாஅயோளே &38 - இருந்தையூர்க் கொற்றன் புலவனார் #1 குறுந்தொகை 335 குறிஞ்சி - இருந்தையூர்க் கொற்றன் புலவனார் நிரை வளை முன்கை நேர் இழை மகளிர் இரும் கல் வியல் அறைச் செந்தினை பரப்பிச் சுனை பாய் சோர்விடை நோக்கிச் சினை இழிந்து பைம் கண் மந்தி பார்ப்பொடு கவரும் வெற்பு அயல் நண்ணியதுவே வார் கோல் வல் வில் கானவர் தங்கைப் பெரும் தோள் கொடிச்சி இருந்த ஊரே &39 - இரும்பிடர்த் தலையார் #1 புறநானூறு 3 - இரும்பிடர்த் தலையார் **பாடப்பட்டோன் - பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி உவவு மதி உருவின் ஓங்கல் வெண்குடை நிலவுக் கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற ஏம முரசம் இழுமென முழங்க நேமி உய்த்த நேஎ நெஞ்சின் தவிரா ஈகைக் கவுரியர் மருக செயிர் தீர் கற்பின் சே_இழை கணவ பொன் ஓடைப் புகர் அணி நுதல் துன் அரும் திறல் கமழ் கடாஅத்து எயிறு படை ஆக எயில் கதவு இடாஅக் கயிறு பிணிக்கொண்ட கவிழ் மணி மருங்கில் பெரும் கை யானை இரும் பிடர்த் தலை இருந்து மருந்து இல் கூற்றத்து அரும் தொழில் சாயாக் கரும் கை ஒள் வாள் பெரும் பெயர் வழுதி நிலம் பெயரினும் நின் சொல் பெயரல் பொலம் கழல் கால் புலர் சாந்தின் விலங்கு அகன்ற வியன் மார்ப ஊர் இல்ல உயவு அரிய நீர் இல்ல நீள் இடைய பார்வல் இருக்கைக் கவி கண் நோக்கின் செம் தொடை பிழையா வன்கண் ஆடவர் அம்பு விட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத் திருந்து சிறை வளை வாய்ப் பருந்து இருந்து உயவும் உன்ன மரத்த துன் அரும் கவலை நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் அது முன்னம் முகத்தின் உணர்ந்து அவர் இன்மை தீர்த்தல் வன்மையானே &40 - இளங்கீரந்தையார் #1 குறுந்தொகை 148 முல்லை - இளங்கீரந்தையார் செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த தவளை வாஅய பொலம் செய் கிண்கிணிக் காசின் அன்ன போது ஈன் கொன்றை குருந்தொடு அலம்வரும் பெரும் தண் காலையும் கார் அன்று என்றி ஆயின் கனவோ மற்று இது வினவுவல் யானே &41 - (எயினந்தை மகனார்) இளங்கீரனாார் #1 அகநானூறு 3 பாலை - (எயினந்தை மகனார்) இளங்கீரனாார் இரும் கழி முதலை மேஎந்தோல் அன்ன கரும் கால் ஓமை காண்பு இன் பெரும் சினை கடி உடை நனம் தலை ஈன்று இளைப்பட்ட கொடு வாய்ப் பேடைக்கு அல்கு_இரை தரீஇய மான்று வேட்டு எழுந்த செம் செவி எருவை வான் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன் துளங்கு நடை மரையா வலம் படத் தொலைச்சி ஒண் செம் குருதி உவற்றி உண்டு அருந்துபு புலவுப் புலி துறந்த கலவுக் கழிக் கடு முடை கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் புல் இலை மராஅத்த அகன் சேண் அத்தம் கலம் தரல் உள்ளமொடு கழியக் காட்டி பின் நின்று துரக்கும் நெஞ்சம் நின் வாய் வாய் போல் பொய்ம்மொழி எவ்வம் என் களைமா கவிர் இதழ் அன்ன காண்பு இன் செவ் வாய் அம் தீம் கிளவி ஆய் இழை மடந்தை கொடும் குழைக்கு அமர்த்த நோக்கம் நெடும் சேண் ஆர் இடை விலங்கும் ஞான்றே #2 அகநானூறு 225 பாலை - (எயினந்தை மகனார்) இளங்கீரனார் அன்பும் மடனும் சாயலும் இயல்பும் என்பு நெகிழ்க்கும் கிளவியும் பிறவும் ஒன்றுபடு கொள்கையொடு ஓராங்கு முயங்கி இன்றே இவணம் ஆகி நாளைப் புதல் இவர் ஆடு அமைத் தும்பி குயின்ற அகலா அம் துளை கோடை முகத்தலின் நீர்க்கு இயங்கு இன நிரைப் பின்றை வார் கோல் ஆய் குழல் பாணியின் ஐது வந்து இசைக்கும் தேக்கு அமல் சோலை கடறு ஓங்கு அரும் சுரத்து யாத்த தூணி தலை திறந்தவை போல் பூத்த இருப்பைக் குழை பொதி குவி இணர் கழல் துளை முத்தின் செந்நிலத்து உதிர மழை துளி மறந்த அம் குடிச் சீறூர்ச் சேக்குவம்-கொலோ நெஞ்சே பூப் புனை புயல் என ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் செறி தொடி முன்கை நம் காதலி அறிவு அஞர் நோக்கமும் புலவியும் நினைந்தே #3 அகநானூறு 239 பாலை - (எயினந்தை மகன்) இளங்கீரனார் அளிதோ தானே எவன் ஆவது-கொல் மன்றும் தோன்றாது மரனும் மாயும் புலி என உலம்பும் செம் கண் ஆடவர் ஞெலியொடு பிடித்த வார் கோல் அம்பினர் எல் ஊர் எறிந்து பல் ஆத் தழீஇய விளி படு பூசல் வெம் சுரத்து இரட்டும் வேறு பல் தேஎத்து ஆறு பல நீந்திப் புள்ளித் தொய்யில் பொறி படு சுணங்கின் ஒள் இழை மகளிர் உயர் பிறை தொழூஉம் புல்லென் மாலை யாம் இவண் ஒழிய ஈட்டு அரும்-குரைய பொருள்-வயின் செலினே நீட்டுவிர் அல்லிரோ நெடுந்தகையீர் என குறு நெடும் புலவி கூறி நம்மொடு நெருநலும் தீம் பல மொழிந்த சிறு நல் ஒருத்தி பெரு நல் ஊரே #4 அகநானூறு 289 பாலை - (எயினந்தை மகன்) இளங்கீரனார் சிலை ஏறட்ட கணை வீழ் வம்பலர் உயர் பதுக்கு இவர்ந்த ததர் கொடி அதிரல் நெடு நிலை நடுகல் நாள் பலிக் கூட்டும் சுரன் இடை விலங்கிய மரன் ஓங்கு இயவின் வந்து வினை வலித்த நம்-வயின் என்றும் தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது நெகிழா மென் பிணி வீங்கிய கை சிறிது அவிழினும் உயவும் ஆய் மடத் தகுவி சேண் உறை புலம்பின் நாள் முறை இழைத்த திண் சுவர் நோக்கி நினைந்து கண் பனி நெகிழ் நூல் முத்தின் முகிழ் முலை தெறிப்ப மை அற விரிந்த படை அமை சேக்கை ஐ மென் தூவி அணை சேர்பு அசைஇ மையல் கொண்ட மதன் அழி இருக்கையள் பகு வாய்ப் பல்லி படு-தொறும் பரவி நல்ல கூறு என நடுங்கிப் புல்லென் மாலையொடு பொரும்-கொல் தானே #5 அகநானூறு 299 பாலை - (எயினந்தை மகனார்) இளங்கீரனார் எல்லையும் இரவும் வினை-வயின் பிரிந்த முன்னம் முன் உறுபு அடைய உள்ளிய பதி மறந்து உறைதல் வல்லுநம் ஆயினும் அது மறந்து உறைதல் அரிது ஆகின்றே கடு வளி எடுத்த கால் கழி தேக்கு இலை நெடு விளிப் பருந்தின் வெறி எழுந்து ஆங்கு விசும்பு கண் புதையப் பாஅய்ப் பல உடன் அகல் இடம் செல்லுநர் அறிவு கெடத் தாஅய்க் கவலை கரக்கும் காடு அகல் அத்தம் செய்பொருள் மருங்கின் செலவு தனக்கு உரைத்து என வைகு நிலை மதியம் போலப் பையெனப் புலம்பு கொள் அவலமொடு புதுக் கவின் இழந்த நலம் கெழு திரு முகம் இறைஞ்சி நிலம் கிளையா நீரொடு பொருத ஈர் இதழ் மழைக் கண் இகுதரு தெண் பனி ஆகத்து உறைப்பக் கால் நிலை செல்லாது கழி படர்க் கலங்கி நா நடுக்குற்ற நவிலாக் கிளவியொடு அறல் மருள் கூந்தலின் மறையினள் திறல் மாண்டு திருந்துக-மாதோ நும் செலவு என வெய்துயிராப் பருவரல் எவ்வமொடு அழிந்த பெரு விதுப்பு உறுவி பேதுறு நிலையே #6 அகநானூறு 361 பாலை - (எயினந்தை மகனார்) இளங்கீரனார் தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண் மா இதழ்க் குவளை மலர் பிணைத்து அன்ன திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண் அணி வளை முன்கை ஆய் இதழ் மடந்தை வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும் கவவுப் புலந்து உறையும் கழி பெரும் காமத்து இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல் என அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய் பொருள் புரிவு உண்ட மருளி நெஞ்சே கரியாப் பூவின் பெரியோர் ஆர அழல் எழு தித்தியம் மடுத்த யாமை நிழல் உடை நெடும் கயம் புகல் வேட்டு ஆங்கு உள்ளுதல் ஓம்பு-மதி இனி நீ முள் எயிற்றுச் சில் மொழி அரிவை தோளே பல் மலை வெம் அறை மருங்கின் வியன் சுரம் எவ்வம் கூர இறந்தனம் யாமே #7 அகநானூறு 371 பாலை - (எயினந்தை மகன்) இளங்கீரனார் அவ் விளிம்பு உரீஇய விசை அமை நோன் சிலை செவ் வாய்ப் பகழிச் செயிர் நோக்கு ஆடவர் கணை இடக் கழிந்த தன் வீழ் துணை உள்ளிக் குறு நெடும் துணைய மறி புடை ஆடப் புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை மேய் பதம் மறுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து நெய்தல் அம் படுவில் சில் நீர் உண்ணாது எஃகு உறு மாந்தரின் இனைந்து கண்படுக்கும் பைது அற வெம்பிய பாழ் சேர் அத்தம் எமியம் நீந்தும் எம்மினும் பனி வார்ந்து என்ன ஆம்-கொல் தாமே தெண் நீர் ஆய் சுனை நிகர் மலர் போன்ம் என நசைஇ வீ தேர் பறவை விழையும் போது ஆர் கூந்தல் நம் காதலி கண்ணே #8 அகநானூறு 395 பாலை - (எயினந்தை மகனார்) இளங்கீரனார் தண் கயம் பயந்த வண் கால் குவளை மாரி மா மலர் பெயற்கு ஏற்று அன்ன நீரொடு நிறைந்த பேர் அமர் மழைக் கண் பனி வார் எவ்வம் தீர இனி வரின் நன்று-மன் வாழி தோழி தெறு கதிர் ஈரம் நைத்த நீர் அறு நனம் தலை அழல் மேய்ந்து உண்ட நிழல் மாய் இயவின் வறல் மரத்து அன்ன கவை மருப்பு எழில் கலை அறல் அவிர்ந்து அன்ன தேர் நசைஇ ஓடிப் புலம்பு வழிப்பட்ட உலமரல் உள்ளமொடு மேய் பிணைப் பயிரும் மெலிந்து அழி படர் குரல் அரும் சுரம் செல்லுநர் ஆள் செத்து ஓர்க்கும் திருந்து அரை ஞெமைய பெரும் புனக் குன்றத்து ஆடு கழை இரு வெதிர் நரலும் கோடு காய் கடற்ற காடு இறந்தோரே #9 அகநானூறு 399 பாலை - (எயினந்தை மகனார்) இளங்கீரனார் சிமைய குரல சாந்து அருந்தி இருளி இமையக் கானம் நாறும் கூந்தல் நல் நுதல் அரிவை இன் உறல் ஆகம் பருகு அன்ன காதல் உள்ளமொடு திருகுபு முயங்கல் இன்றி அவண் நீடார் கடற்று அடை மருங்கின் கணிச்சியின் குழித்த உடைக்-கண் நீடு அமை ஊறல் உண்ட பாடு இன் தெண் மணி பயம் கெழு பெரு நிரை வாடு புலம் புக்கு எனக் கோடு துவைத்து அகற்றி ஒல்கு நிலைக் கடுக்கை அல்கு நிழல் அசைஇப் பல் ஆன் கோவலர் கல்லாது ஊதும் சிறு வெதிர் தீம் குழல் புலம் கொள் தெள் விளி மை இல் பளிங்கின் அன்ன தோற்றப் பல் கோள் நெல்லிப் பைம் காய் அருந்தி மெல்கிடு மட மரை ஓர்க்கும் அத்தம் காய் கதிர் கடுகிய கவின் அழி பிறங்கல் வேய் கண் உடைந்த சிமைய வாய் படு மருங்கின் மலை இறந்தோரே #10 குறுந்தொகை 116 குறிஞ்சி - இளங்கீரனார் யான் நயந்து உறைவோள் தேம் பாய் கூந்தல் வளம் கெழு சோழர் உறந்தைப் பெரும் துறை நுண் மணல் அறல் வார்ந்து அன்ன நல் நெறியவ்வே நறும் தண்ணியவே #11 நற்றிணை 3 பாலை - இளங்கீரனார் ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடும் சினைப் பொரி அரை வேம்பின் புள்ளி நீழல் கட்டளை அன்ன வட்டு அரங்கு இழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லி வட்டு ஆடும் வில் ஏர் உழவர் வெம் முனைச் சீறூர்ச் சுரன் முதல் வந்த உரன் மாய் மாலை உள்ளினென் அல்லெனோ யானே உள்ளிய வினை முடித்து அன்ன இனியோள் மனை மாண் சுடரொடு படர் பொழுது எனவே #12 நற்றிணை 62 பாலை - இளங்கீரனார் வேர் பிணி வெதிரத்துக் கால் பொரு நரல் இசை கந்து பிணி யானை அயா உயிர்த்து அன்ன என்றூழ் நீடிய வேய் பயில் அழுவத்துக் குன்றூர் மதியம் நோக்கி நின்று நினைந்து உள்ளினென் அல்லெனோ யானே முள் எயிற்றுத் திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் எமதும் உண்டு ஓர் மதி_நாள் திங்கள் உரறு குரல் வெவ் வளி எடுப்ப நிழல் தப உலவை ஆகிய மரத்த கல் பிறங்கு உயர் மலை உம்பரஃது எனவே #13 நற்றிணை 113 பாலை - இளங்கீரனார் உழை அணந்து உண்ட இறை வாங்கு உயர் சினைப் புல் அரை இரத்திப் பொதிப் புறப் பசும் காய் கல் சேர் சிறு நெறி மல்கத் தாஅம் பெரும் காடு இறந்தும் எய்த வந்தனவால் அரும் செயல் பொருட்பிணி முன்னி யாமே சேறும் மடந்தை என்றலின் தான் தன் நெய்தல் உண்கண் பைதல் கூரப் பின் இரும் கூந்தலின் மறையினள் பெரிது அழிந்து உதியன் மண்டிய ஒலி தலை ஞாட்பின் இம்மென் பெரும் களத்து இயவர் ஊதும் ஆம்பல் அம் குழலின் ஏங்கிக் கலங்கு அஞர் உறுவோள் புலம்பு கொள் நோக்கே #14 நற்றிணை 269 பாலை - எயினந்தை மகன் இளங்கீரனார் குரும்பை மணிப் பூண் பெரும் செம் கிண்கிணிப் பால் ஆர் துவர் வாய்ப் பைம் பூண் புதல்வன் மாலைக் கட்டில் மார்பு ஊர்பு இழிய அவ் எயிறு ஒழுகிய அவ் வாய் மாண் நகைக் செயிர் தீர் கொள்கை நம் உயிர் வெம் காதலி திரு முகத்து அலமரும் கண் இணைந்து அல்கலும் பெரும வள்ளியின் பிணிக்கும் என்னார் சிறு பல் குன்றம் இறப்போர் அறிவார் யார் அவர் முன்னியவ்வே #15 நற்றிணை 308 பாலை - எயினந்தை மகன் இளங்கீரனார் செல விரைவுற்ற அரவம் போற்றி மலர் ஏர் உண்கண் பனி வர ஆய்_இழை யாம் தன் கரையவும் நாணினள் வருவோள் வேண்டாமையின் மென்மெல வந்து வினவலும் தகைத்தலும் செல்லாள் ஆகி வெறி கமழ் துறு முடி தயங்க நல் வினைப் பொறி அழி பாவையின் கலங்கி நெடிது நினைந்து ஆகம் அடைதந்தோளே அது கண்டு ஈர் மண் செய்கை நீர் படு பசும் கலம் பெரு மழைப் பெயற்கு ஏற்று ஆங்கு எம் பொருள் மலி நெஞ்சம் புணர்ந்து உவந்தன்றே #16 நற்றிணை 346 பாலை - எயினந்தை மகன் இளங்கீரனார் குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளித் தண் கார் தலைஇய நிலம் தணி காலை அரசு பகை நுவலும் அரு முனை இயவின் அழிந்த வேலி அம் குடிச் சீறூர் ஆள் இல் மன்றத்து அல்கு வளி ஆட்டத் தாள் வலி ஆகிய வன்கண் இருக்கை இன்று நக்கனை-மன் போலா என்றும் நிறையுறு மதியின் இலங்கும் பொறையன் பெரும் தண் கொல்லிச் சிறு பசும் குளவிக் கடி_பதம் கமழும் கூந்தல் மட மா அரிவை தட மென் தோளே &42 - இளநாகனார் #1 நற்றிணை 151 குறிஞ்சி - இளநாகனார் நல் நுதல் பசப்பினும் பெரும் தோள் நெகிழினும் கொல் முரண் இரும் புலி அரும் புழைத் தாக்கிச் செம் மறுக் கொண்ட வெண் கோட்டு யானை கல் மிசை அருவியின் கழூஉம் சாரல் வாரற்க-தில்ல தோழி கடுவன் முறி ஆர் பெரும் கிளை அறிதல் அஞ்சிக் கறி வளர் அடுக்கத்து களவினில் புணர்ந்த செம் முக மந்தி செய்குறி கரும் கால் பொன் இணர் வேங்கைப் பூம் சினைச் செலீஇயர் குண்டு நீர் நெடும் சுனை நோக்கிக் கவிழ்ந்து தன் புன் தலைப் பாறு மயிர் திருத்தும் குன்ற நாடன் இரவினானே #2 நற்றிணை 205 பாலை - இளநாகனார் அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்து ஆளி நன் மான் வேட்டு எழு கோள் உகிர்ப் பூம் பொறி உழுவை தொலைச்சிய வை நுதி ஏந்து வெண் கோட்டு வயக் களிறு இழுக்கும் துன் அரும் கானம் என்னாய் நீயே குவளை உண்கண் இவள் ஈண்டு ஒழிய ஆள்வினைக்கு அகறி ஆயின் இன்றொடு போயின்று-கொல்லோ தானே படப்பைக் கொடு முள் ஈங்கை நெடு மா அம் தளிர் நீர் மலி கதழ் பெயல் தலைஇய ஆய் நிறம் புரையும் இவள் மாமைக் கவினே #3 நற்றிணை 231 நெய்தல் - இளநாகனார் மை அற விளங்கிய மணி நிற விசும்பில் கைதொழும் மரபின் எழு மீன் போலப் பெரும் கடல் பரப்பின் இரும் புறம் தோயச் சிறு_வெண்_காக்கை பல உடன் ஆடும் துறை புலம்பு உடைத்தே தோழி பண்டும் உள்ளூர்க் குரீஇக் கரு உடைத்து அன்ன பெரும் போது அவிழ்ந்த கரும் தாள் புன்னைக் கானல் அம் கொண்கன் தந்த காதல் நம்மொடு நீங்கா மாறே &43 - இளந்திரையனார் #1 நற்றிணை 94 நெய்தல் - இளந்திரையனார் நோய் அலைக் கலங்கிய மதன் அழி பொழுதில் காமம் செப்பல் ஆண்மகற்கு அமையும் யானே பெண்மை தட்ப நுண்ணிதின் தாங்கிக் கைவல் கம்மியன் கவின் பெறக் கழாஅ மண்ணாப் பசுமுத்து ஏய்ப்பக் குவி இணர்ப் புன்னை அரும்பிய புலவு நீர்ச் சேர்ப்பன் என்ன மகன்-கொல் தோழி தன்-வயின் ஆர்வம் உடையர் ஆகி மார்பு அணங்கு உறுநரை அறியாதோனே #2 நற்றிணை 99 முல்லை - இளந்திரையனார் நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை துகில் விரித்து அன்ன வெயில் அவிர் உருப்பின் அஞ்சுவரப் பனிக்கும் வெம் சுரம் இறந்தோர் தாம் வரத் தெளித்த பருவம் காண்வர இதுவோ என்றிசின் மடந்தை மதி இன்று மறந்து கடல் முகந்த கமம் சூல் மா மழை பொறுத்தல் செல்லாது இறுத்த வண் பெயல் கார் என்று அயர்ந்த உள்ளமொடு தேர்வு இல பிடவமும் கொன்றையும் கோடலும் மடவ ஆகலின் மலர்ந்தன பலவே #3 நற்றிணை 106 நெய்தல் - (தொண்டைமான்) இளந்திரையன் அறிதலும் அறிதியோ பாக பெரும் கடல் எறி திரை கொழீஇய எக்கர் வெறிகொள ஆடு வரி அலவன் ஓடு-வயின் ஆற்றாது அசைஇ உள் ஒழிந்த வசை தீர் குறுமகட்கு உயவினென் சென்று யான் உள் நோய் உரைப்ப மறுமொழி பெயர்த்தல் ஆற்றாள் நறு மலர் ஞாழல் அம் சினைத் தாழ் இணர் கொழுதி முறி திமிர்ந்து உதிர்த்த கையள் அறிவு அஞர் உறுவி ஆய் மட நிலையே #4 புறநானூறு 185 - (தொண்டைமான்) இளந்திரையன் கால் பார் கோத்து ஞாலத்து இயக்கும் காவல் சாகாடு உகைப்போன் மாணின் ஊறு இன்று ஆகி ஆறு இனிது படுமே உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும் பகைக் கூழ் அள்ளல் பட்டு மிகப் பல் தீ நோய் தலைத்தலைத் தருமே &44 - (மதுரை பண்ட வாணிகன்) இளந்தேவனார் #1 அகநானூறு 58 குறிஞ்சி - (மதுரை பண்ட வாணிகன்) இளந்தேவனார் இன் இசை உருமொடு கனை துளி தலைஇ மன் உயிர் மடிந்த பானாள் கங்குல் காடு தேர் வேட்டத்து விளிவிடம் பெறாஅது வரி அதள் படுத்த சேக்கை தெரி இழைத் தேன் நாறு கதுப்பின் கொடிச்சியர் தந்தை கூதிர் இல் செறியும் குன்ற நாட வனைந்து வரல் இள முலை ஞெமுங்கப் பல் ஊழ் விளங்கு தொடி முன்கை வளைந்து புறம் சுற்ற நின் மார்பு அடைதலின் இனிது ஆகின்றே நும் இல் புலம்பின் நும் உள்ளு-தொறும் நலியும் தண் வரல் அசைஇய பண்பு இல் வாடை பதம் பெறுகல்லாது இடம் பார்த்து நீடி மனை மரம் ஒசிய ஒற்றிப் பலர் மடி கங்குல் நெடும் புறநிலையே #2 அகநானூறு 298 குறிஞ்சி - (மதுரைப் பண்ட வாணிகன்) இளந்தேவனார் பயம் கெழு திருவின் பல் கதிர் ஞாயிறு வயங்கு தொழில் தரீஇயர் வலன் ஏர் விளங்கி மல்கு கடல் தோன்றி ஆங்கு மல்கு பட மணி மருள் மாலை மலர்ந்த வேங்கை ஒண் தளிர் அவிர்வரும் ஒலி கெழு பெரும் சினைத் தண் துளி அசை வளி தைவரும் நாட கொன்று சினம் தணியாது வென்று முரண் சாம்பாது இரும் பிடித் தொழுதியின் இனம் தலைமயங்காது பெரும் பெயல் கடாஅம் செருக்கி வள மலை இரும் களிறு இயல்வரும் பெரும் காட்டு இயவின் ஆர் இருள் துமிய வெள் வேல் ஏந்தித் தாழ் பூம் கோதை ஊது வண்டு இரீஇ மென் பிணி அவிழ்ந்த அரைநாள் இரவு இவண் நீ வந்ததனினும் இனிது ஆகின்றே தூவல் கள்ளின் துனை தேர் எந்தை கடி உடை வியல் நகர் ஓம்பினள் உறையும் யாய் அறிவுறுதல் அஞ்சிப் பானாள் காவல் நெஞ்சமொடு காமம் செப்பேன் யான் நின் கொடுமை கூற நினைபு ஆங்கு இனையல் வாழி தோழி நம் துறந்தவர் நீடலர் ஆகி வருவர் வல்லென கங்குல் உயவு துணை ஆகிய துஞ்சாது உறைவி இவள் உவந்ததுவே #3 அகநானூறு 328 குறிஞ்சி - (மதுரைப் பண்ட வாணிகன்) இளந்தேவனார் ** (ஈழன் தேவனார்) வழை அமல் அடுக்கத்து வலன் ஏர்பு வயிரியர் முழவு அதிர்ந்து அன்ன முழக்கத்து ஏறோடு உரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து அரவின் பைம் தலை இடறிப் பானாள் இரவின் வந்து எம் இடை முலை முயங்கித் துனி கண் அகல வளைஇக் கங்குலின் இனிதின் இயைந்த நண்பு அவர் முனிதல் தெற்று ஆகுதல் நற்கு அறிந்தனம் ஆயின் இலங்கு வளை நெகிழப் பரந்து படர் அலைப்ப யாம் முயங்கு-தொறும் முயங்கு-தொறும் உயங்க முகந்து கொண்டு அடக்குவம்-மன்னோ தோழி மடப் பிடி மழை தவழ் சிலம்பில் கடும் சூல் ஈன்று கழை தின் யாக்கை விழை களிறு தைவர வாழை அம் சிலம்பில் துஞ்சும் சாரல் நாடன் சாயல் மார்பே #4 நற்றிணை 41 பாலை - இளந்தேவனார் பைம் கண் யானைப் பரூஉத் தாள் உதைத்த வெண் புறக் களரி விடு நீறு ஆடிச் சுரன் முதல் வருந்திய வருத்தம் பைபயப் பாஅர் மலி சிறு கூவலின் தணியும் நெடும் சேண் சென்று வருந்துவர் மாதோ எல்லி வந்த நல் இசை விருந்திற்குக் கிளர் இழை அரிவை நெய் துழந்து அட்ட விளர் ஊன் அம் புகை எறிந்த நெற்றிச் சிறு நுண் பல் வியர் பொறித்த குறு நடைக் கூட்டம் வேண்டுவோரே &45 - இளம் புல்லூர்க் காவிதி #1 நற்றிணை 89 முல்லை - இளம் புல்லூர்க் காவிதி கொண்டல் ஆற்றி விண் தலைச் செறீஇயர் திரைப் பிதிர் கடுப்ப முகடு உகந்து ஏறி நிரைத்து நிறைகொண்ட கமம் சூல் மா மழை அழி துளி கழிப்பிய வழி பெயல் கடை நாள் இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின் அகல் இலை அகல வீசி அகலாது அல்கலும் அலைக்கும் நல்கா வாடை பரும யானை அயா உயிர்த்து ஆஅங்கு இன்னும் வருமே தோழி வாரா வன்கணாளரோடு இயைந்த புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே &46 - இளம் பூதனார் #1 குறுந்தொகை 334 நெய்தல் - இளம் பூதனார் சிறு_வெண்_காக்கைச் செவ் வாய்ப் பெரும் தோடு எறி திரைத் திவலை ஈர்ம் புறம் நனைப்பப் பனி புலந்து உறையும் பல் பூம் கானல் இரு நீர்ச் சேர்ப்பன் நீப்பன் ஒரு நம் இன் உயிர் அல்லது பிறிது ஒன்று எவனோ தோழி நாம் இழப்பதுவே &47 - இளம்பெருவழுதியார் #1 பரிபாடல் 15 திருமால் - இளம்பெருவழுதியார் **இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார் **பண் :: நோதிறம் புல வரை அறியாப் புகழொடு பொலிந்து நில வரைத் தாங்கிய நிலைமையின் பெயராத் தொலையா நேமி முதல் தொல் இசை அமையும் புலவர் ஆய்பு உரைத்த புனை நெடும் குன்றம் பல எனின் ஆங்கு அவை பலவே பலவினும் நிலவரை ஆற்றி நிறை பயன் ஒருங்கு உடன் நின்று பெற நிகழும் குன்று அவை சிலவே சிலவினும் சிறந்தன தெய்வம் பெட்புறும் மலர் அகல் மார்பின் மை படி குடுமிய குல வரை சிலவே குல வரை சிலவினும் சிறந்தது கல் அறை கடலும் கானலும் போலவும் புல்லிய சொல்லும் பொருளும் போலவும் எல்லாம் வேறுவேறு உருவின் ஒரு தொழில் இருவர்த் தாங்கும் நீள் நிலை ஓங்கு இருங்குன்றம் நாறு இணர்த் துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறு பெறு துறக்கம் அரிதின் பெறு துறக்கம் மாலிருங்குன்றம் எளிதின் பெறல் உரிமை ஏத்துகம் சிலம்ப அரா அணர் கயம் தலைத் தம்முன் மார்பின் மரா மலர்த் தாரின் மாண் வரத் தோன்றி அலங்கும் அருவி ஆர்த்து இமிழ்பு இழியச் சிலம்பாறு அணிந்த சீர் கெழு திருவின் சோலையொடு தொடர் மொழி மாலிருங்குன்றம் தாம் வீழ் காமம் வித்துபு விளைக்கும் நாமத் தன்மை நன்கனம் படி எழ யாமத் தன்மை இவ் ஐ இருங்குன்றத்து மன் புனல் இளவெயில் வளாவ இருள் வளர்வு எனப் பொன் புனை உடுக்கையோன் புணர்ந்து அமர் நிலையே நினை-மின் மாந்தீர் கேள்-மின் கமழ் சீர் சுனை எலாம் நீலம் மலரச் சுனை சூழ் சினை எலாம் செயலை மலரக் காய் கனி உறழ நனை வேங்கை ஒள் இணர் மலர மாயோன் ஒத்த இன் நிலைத்தே சென்று தொழுகல்லீர் கண்டு பணி-மின்மே இருங்குன்று என்னும் பெயர் பரந்ததுவே பெரும் கலி ஞாலத்துத் தொன்று இயல் புகழது கண்டு மயர் அறுக்கும் காமக் கடவுள் மக முயங்கு மந்தி வரைவரை பாய முகிழ் மயங்கு முல்லை முறை நிகழ்வு காட்ட மணி மருள் நல் நீர்ச் சினை மட மயில் அகவக் குருகு இலை உதிர குயில் இனம் கூவப் பகர் குழல் பாண்டில் இயம்ப அகவுநர் நா நவில் பாடல் முழவு எதிர்ந்து அன்ன சிலம்பின் சிலம்பு இசை ஓவாது ஒன்னார்க் கடந்து அட்டான் கேழ் இருங்குன்று தையலவரொடும் தந்தாரவரொடும் கைம்மகவோடும் காதலவரொடும் தெய்வம் பேணித் திசை தொழுதனிர் செல்-மின் புவ்வத் தாமரை புரையும் கண்ணன் வௌவல் கார் இருள் மயங்கு மணி மேனியன் எவ் வயின் உலகத்தும் தோன்றி அவ் வயின் மன்பது மறுக்கத் துன்பம் களைவோன் அன்பு அது மேஎய் இருங்குன்றத்தான் கள் அணி பசும் துளவினவை கரும் குன்று அனையவை ஒள் ஒளியவை ஒரு குழையவை புள் அணி பொலம் கொடியவை வள் அணி வளை நாஞ்சிலவை சலம் புரி தண்டு ஏந்தினவை வலம்புரி வய நேமியவை வரி சிலை வய அம்பினவை புகர் இணர் சூழ் வட்டத்தவை புகர் வாளவை என ஆங்கு நலம் புரீஇ அம் சீர் நாம வாய்மொழி இது என உரைத்தலின் எம் உள் அமர்ந்து இசைத்து இறை இருங்குன்றத்து அடியுறை இயைக எனப் பெரும் பெயர் இருவரைப் பரவுதும் தொழுதே #2 புறநானூறு 182 - (கடலுள் மாய்ந்த) இளம்பெரு வழுதி உண்டால் அம்ம இவ் உலகம் இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத் தமியர் உண்டலும் இலரே முனிவு இலர் துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சிப் புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலர் அயர்வு இலர் அன்ன மாட்சி அனையர் ஆகித் தமக்கு என முயலா நோன் தாள் பிறர்க்கு என முயலுநர் உண்மையானே &48 - இளம்போதியார் #1 நற்றிணை 72 நெய்தல் - இளம்போதியார் பேணுப பேணார் பெரியோர் என்பது நாணுத்தக்கன்று அது காணும் காலை உயிர் ஓர் அன்ன செயிர் தீர் நட்பின் நினக்கு யான் மறைத்தல் யாவது மிகப் பெரிது அழிதக்கன்றால் தானே கொண்கன் யான் யாய் அஞ்சுவல் எனினும் தான் என் பிரிதல் சூழான்-மன்னே இனியே கானல் ஆயம் அறியினும் ஆனாது அலர் வந்தன்று-கொல் என்னும் அதனால் புலர்வது-கொல் அவன் நட்பு எனா அஞ்சுவல் தோழி என் நெஞ்சத்தானே &49 - இளவெயினனார் #1 நற்றிணை 263 நெய்தல் - இளவெயினனார் பிறை வனப்பு இழந்த நுதலும் யாழ நின் இறை வரை நில்லா வளையும் மறையாது ஊர் அலர் தூற்றும் கௌவையும் நாண் விட்டு உரை அவற்கு உரையாம் ஆயினும் இரை வேட்டுக் கடும் சூல் வயவொடு கானல் எய்தாது கழனி ஒழிந்த கொடு வாய்ப் பேடைக்கு முட முதிர் நாரை கடல் மீன் ஒய்யும் மெல்லம்புலம்பன் கண்டு நிலைசெல்லாக் கரப்பவும்கரப்பவும் கைம்மிக்கு உரைத்த தோழி உண்கண் நீரே &50 - இறங்குகுடிக் குன்ற நாடன் #1 அகநானூறு 215 பாலை -இறங்குகுடிக் குன்ற நாடன் விலங்கு இரும் சிமையக் குன்றத்து உம்பர் வேறு பல் மொழிய தேஎம் முன்னி வினை நசைஇப் பரிக்கும் உரன் மிகு நெஞ்சமொடு புனை மாண் எஃகம் வல வயின் ஏந்தி செலல் மாண்புற்ற நும்-வயின் வல்லே வலன் ஆக என்றலும் நன்று-மன்-தில்ல கடுத்தது பிழைக்குவது ஆயின் தொடுத்த கை விரல் கவ்வும் கல்லாக் காட்சிக் கொடு மரம் பிடித்த கோடா வன்கண் வடி நவில் அம்பின் ஏவல் ஆடவர் ஆள் அழித்து உயர்த்த அஞ்சுவரு பதுக்கைக் கூர் நுதிச் செவ் வாய் எருவைச் சேவல் படு பிணப் பைம் தலை தொடுவன குழீஇ மல்லல் மொசி விரல் ஒற்றி மணி கொண்டு வல் வாய்ப் பேடைக்குச் சொரியும் ஆங்கண் கழிந்தோர்க்கு இரங்கும் நெஞ்சமொடு ஒழிந்து இவண் உறைதல் ஆற்றுவோர்க்கே &51 - இறையனார் #1 குறுந்தொகை - குறிஞ்சி - இறையனார் கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறைத் தும்பி காமம் செப்பாது கண்டது மொழிமோ பயிலியது கெழீஇய நட்பின் மயில் இயல். செறி எயிற்று அரிவை கூந்தலின் நறியவும் உளவோ நீ அறியும் பூவே &52 - இனிசந்த நாகனார் #1 நற்றிணை 66 பாலை - இனிசந்த நாகனார் மிளகு பெய்து அனைய சுவைய புன் காய் உலறு தலை உகாஅய்ச் சிதர் சிதர்ந்து உண்ட புலம்பு கொள் நெடும் சினை ஏறி நினைந்து தன் பொறி கிளர் எருத்தம் வெறிபட மறுகி புன் புறா உயவும் வெம் துகள் இயவின் நயந்த காதலன் புணர்ந்தனள் ஆயினும் சிவந்து ஒளி மழுங்கி அமர்த்தன-கொல்லோ கோதை மயங்கினும் குறும் தொடி நெகிழினும் காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும் மாண் நலம் கையறக் கலுழும் என் மாயக் குறுமகள் மலர் ஏர் கண்ணே &53 - ஈழத்துப் பூதன் தேவனார் #1 அகநானூறு 88 குறிஞ்சி - ஈழத்துப் பூதன் தேவனார் முதைச் சுவல் கலித்த மூரிச் செந்தினை ஓங்கு வணர்ப் பெரும் குரல் உணீஇய பாங்கர்ப் பகு வாய்ப் பல்லி பாடு ஓர்த்துக் குறுகும் புருவைப் பன்றி வருதிறம் நோக்கிக் கடும் கைக் கானவன் கழுது மிசைக் கொளீஇய நெடும் சுடர் விளக்கம் நோக்கி வந்து நம் நடுங்கு துயர் களைந்த நன்னராளன் சென்றனன்-கொல்லோ தானே குன்றத்து இரும் புலி தொலைத்த பெரும் கை யானை கவுள் மலிபு இழிதரும் காமர் கடாஅம் இரும் சிறைத் தொழுதி ஆர்ப்ப யாழ் செத்து இரும் கல் விடர் அளை அசுணம் ஓர்க்கும் காம்பு அமல் இறும்பில் பாம்பு படத் துவன்றிக் கொடு விரல் உளியம் கெண்டும் வடு ஆழ் புற்றின வழக்கு அரு நெறியே #2 அகநானூறு 231 பாலை - (மதுரை) ஈழத்துப் பூதன் தேவனார் செறுவோர் செம்மல் வாட்டலும் சேர்ந்தோர்க்கு உறும் இடத்து உவக்கும் உதவி ஆண்மையும் இல் இருந்து அமைவோர்க்கு இல் என்று எண்ணி நல் இசை வலித்த நாண் உடை மனத்தர் கொடு வில் கானவர் கணை இடத் தொலைந்தோர் படு களத்து உயர்த்த மயிர்த் தலைப் பதுக்கை கள்ளி அம் பறந்தலைக் களர்-தொறும் குழீஇ உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அரும் கடத்து இடை வெம் சுரம் இறந்தனர் ஆயினும் நெஞ்சு உருக வருவர் வாழி தோழி பொருவர் செல் சமம் கடந்த செல்லா நல் இசை விசும்பு இவர் வெண் குடை பசும் பூண் பாண்டியன் பாடு பெறு சிறப்பின் கூடல் அன்ன நின் ஆடு வண்டு அரற்றும் முச்சித் தோடு ஆர் கூந்தல் மரீஇயோரே #3 அகநானூறு 307 பாலை - (மதுரை) ஈழத்துப் பூதன் தேவனார் சிறு நுதல் பசந்து பெரும் தோள் சாஅய் அகல் எழில் அல்குல் அம் வரி வாடப் பகலும் கங்குலும் மயங்கிப் பையெனப் பெயல் உறு மலரின் கண் பனி வார ஈங்கு இவள் உழக்கும் என்னாது வினை நயந்து நீங்கல் ஒல்லுமோ ஐய வேங்கை அடு முரண் தொலைத்த நெடு நல் யானை மையல் அம் கடாஅம் செருக்கி மதம் சிறந்து இயங்குநர்ச் செகுக்கும் எய் படு நனம் தலைப் பெரும் கை எண்கு இனம் குரும்பி தேரும் புற்று உடைச் சுவர புதல் இவர் பொதியில் கடவுள் போகிய கரும் தாள் கந்தத்து உடன் உறை பழமையின் துறத்தல் செல்லாது இரும் புறாப் பெடையொடு பயிரும் பெரும் கல் வைப்பின் மலை முதல் ஆறே #4 குறுந்தொகை 189 பாலை - (மதுரை) ஈழத்துப் பூதன் தேவன் இன்றே சென்று வருதும் நாளைக் குன்று இழி அருவியின் வெண் தேர் முடுக இளம்பிறை அன்ன விளங்கு சுடர் நேமி விசும்பு வீழ் கொள்ளியின் பைம் பயிர் துமிப்பக் கால் இயல் செலவின் மாலை எய்திச் சில் நிரை வால் வளைக் குறுமகள் பல் மாண் ஆகம் மணந்து உவக்குவமே #5 குறுந்தொகை 343 பாலை - ஈழத்துப் பூதன் தேவனார் நினையாய் வாழி தோழி நனை கவுள் அண்ணல் யானை அணி முகம் பாய்ந்து என மிகு வலி இரும் புலிப் பகு வாய் ஏற்றை வெண் கோடு செம் மறுக் கொளீஇய விடர் முகைக் கோடை ஒற்றிய கரும் கால் வேங்கை வாடு பூம் சினையின் கிடக்கும் உயர் வரை நாடனொடு பெயரும் ஆறே #6 குறுந்தொகை 360 குறிஞ்சி - (மதுரை) ஈழத்துப் பூதன் தேவனார் வெறி என உணர்ந்த வேலன் நோய் மருந்து அறியான் ஆகுதல் அன்னை காணிய அரும் படர் எவ்வம் இன்று நாம் உழப்பினும் வாரற்க-தில்ல தோழி சாரல் பிடிக் கை அன்ன பெரும் குரல் ஏனல் உண் கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே சிலம்பின் சிலம்பும் சோலை இலங்கு மலை நாடன் இரவினானே #7 நற்றிணை 366 பாலை - (மதுரை) ஈழத்துப் பூதன் தேவனார் அரவுக் கிளர்ந்து அன்ன விரவு உறு பல் காழ் வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும் திருந்து இழை அல்குல் பெரும் தோள் குறுமகள் மணி ஏர் ஐம்பால் மாசறக் கழீஇக் கூதிர் முல்லைக் குறும் கால் அலரி மாதர் வண்டொடு சுரும்பு பட முடித்த இரும் பல் மெல் அணை ஒழியக் கரும்பின் வேல் போல் வெண் முகை விரியத் தீண்டி முதுக் குறைக் குரீஇ முயன்று செய் குடம்பை மூங்கில் அம் கழைத் தூங்க ஒற்றும் வடபுல வாடைக்குப் பிரிவோர் மடவர் வாழி இவ் உலகத்தானே &54 - உகாய்க்குடி கிழார் #1 குறுந்தொகை 63 பாலை - உகாய்க்குடி கிழார் ஈதலும் துய்த்தலும் இல்லோர்க்கு இல் எனச் செய்வினை கைம்மிக எண்ணுதி அவ் வினைக்கு அம் மா அரிவையும் வருமோ எம்மை உய்த்தியோ உரைத்திசின் நெஞ்சே &55 - (பாண்டியன் (கானப்பேரெயில் தந்த)) உக்கிரப்பெருவழுதி #1 அகநானூறு 26 மருதம் - (பாண்டியன் (கானப்பேரெயில் தந்த)) உக்கிரப்பெருவழுதி கூன் முள் முள்ளிக் குவி குலைக் கழன்ற மீன் முள் அன்ன வெண் கால் மா மலர் பொய்தல் மகளிர் விழவு அணிக் கூட்டும் அம் வயல் நண்ணிய வளம் கேழ் ஊரனை புலத்தல் கூடுமோ தோழி அல்கல் பெரும் கதவு பொருத யானை மருப்பின் இரும்பு செய் தொடியின் ஏர ஆகி மாக் கண் அடைய மார்பகம் பொருந்தி முயங்கல் விடாஅல் இவை என மயங்கி யான் ஓம் என்னவும் ஒல்லார் தாம் மற்று இவை பாராட்டிய பருவமும் உளவே இனியே புதல்வன் தடுத்த பாலொடு தடைஇத் திதலை அணிந்த தேம் கொள் மென் முலை நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் அகலம் வீங்க முயங்கல் யாம் வேண்டினமே தீம் பால் படுதல் தாம் அஞ்சினரே ஆயிடை கவவுக் கை நெகிழ்ந்தமை போற்றி மதவு நடைச் செவிலி கை என் புதல்வனை நோக்கி நல்லோர்க்கு ஒத்தனிர் நீயிர் இஃதோ செல்வற்கு ஒத்தனம் யாம் என மெல்ல என் மகன்-வயின் பெயர்தந்தேனே அது கண்டு யாமும் காதலம் அவற்கு எனச் சாஅய்ச் சிறுபுறம் கவையினன் ஆக உறு பெயல் தண் துளிக்கு ஏற்ற பல உழு செம் செய் மண் போல் நெகிழ்ந்து அவன் கலுழ்ந்தே நெஞ்சு அறைபோகிய அறிவினேற்கே #2 நற்றிணை 98 குறிஞ்சி - உக்கிரப் பெருவழுதி எய்ம் முள் அன்ன பரூஉ மயிர் எருத்தின் செய்ய்ம்ம் மேவல் சிறு கண் பன்றி ஓங்கு மலை வியன் புனம் படீஇயர் வீங்கு பொறி நூழை நுழையும் பொழுதில் தாழாது பாங்கர்ப் பக்கத்துப் பல்லி பட்டு என மெல்லமெல்லப் பிறக்கே பெயர்ந்து தன் கல் அளைப் பள்ளி வதியும் நாடன் எந்தை ஓம்பும் கடி உடை வியல் நகர்த் துஞ்சாக் காவலர் இகழ்_பதம் நோக்கி இரவின் வரூஉம் அதனினும் கொடிதே வைகலும் பொருந்தல் ஒல்லாக் கண்ணொடு வாரா என் நார் இல் நெஞ்சே &56 - உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் #1 அகநானூறு 69 பாலை - உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் ஆய் நலம் தொலைந்த மேனியும் மா மலர் தகை வனப்பு இழந்த கண்ணும் வகை இல வண்ணம் வாடிய வரியும் நோக்கி ஆழல் ஆன்றிசின் நீயே உரிதினின் ஈதல் இன்பம் வெஃகி மேவரச் செய்பொருள் திறவர் ஆகிப் புல் இலைப் பராரை நெல்லி அம் புளித் திரள் காய் கான மட மரைக் கண நிரை கவரும் வேனில் அத்தம் என்னாது ஏமுற்று விண் பொரு நெடும் குடை இயல் தேர் மோரியர் பொன் புனை திகிரி திரிதரக் குறைத்த அறை இறந்து அகன்றனர் ஆயினும் எனையதூஉம் நீடலர் வாழி தோழி ஆடு இயல் மட மயில் ஒழித்த பீலி வார்ந்து தம் சிலை மாண் வல் வில் சுற்றிப் பல மாண் அம்பு உடைக் கையர் அரண் பல நூறி நல் கலம் தரூஉம் வயவர் பெருமகன் சுடர் மணிப் பெரும் பூண் ஆஅய் கானத்துத் தலை_நாள் அலரின் நாறும் நின் அலர் முலை ஆகத்து இன் துயில் மறந்தே &57 - உம்பற்காட்டு இளங்கண்ணனார் #1 அகநானூறு 264 முல்லை - உம்பற்காட்டு இளங்கண்ணனார் மழை இல் வானம் மீன் அணிந்து அன்ன குழை அமல் முசுண்டை வாலிய மலர வரி வெண் கோடல் வாங்கு குலை வான் பூப் பெரிய சூடிய கவர் கோல் கோவலர் எல்லுப் பெயல் உழந்த பல் ஆன் நிரையொடு நீர் திகழ் கண்ணியர் ஊர்-வயின் பெயர்தர நனி சேண்பட்ட மாரி தளி சிறந்து ஏர் தரு கடு நீர் தெருவு-தொறு ஒழுக பேர் இசை முழக்கமொடு சிறந்து நனி மயங்கிக் கூதிர் நின்றன்றால் பொழுதே காதலர் நம் நிலை அறியார் ஆயினும் தம் நிலை அறிந்தனர்-கொல்லோ தாமே ஓங்கு நடைக் காய் சின யானை கங்குல் சூழ அஞ்சுவர இறுத்த தானை வெம் சின வேந்தன் பாசறையோரே &58 - உருத்திரனார் #1 குறுந்தொகை 274 பாலை - உருத்திரனார் புறவுப் புறத்து அன்ன புன் கால் உகாஅத்து இறவுச் சினை அன்ன நளி கனி உதிர விடு கணை வில்லொடு பற்றிக் கோடு இவர்பு வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர் நீர் நசை வேட்கையின் நார் மென்று தணியும் இன்னாக் கானமும் இனிய பொன்னொடு மணி மிடை அல்குல் மடந்தை அணி முலை ஆகம் முயங்கினம் செலினே &59 - உலோச்சனார் #1 அகநானூறு 20 நெய்தல் - உலோச்சனார் பெருநீர் அழுவத்து எந்தை தந்த கொழு மீன் உணங்கல் படு புள் ஓப்பி எக்கர்ப் புன்னை இன் நிழல் அசைஇச் செக்கர் ஞெண்டின் குண்டு அளை கெண்டி ஞாழல் ஓங்கு சினை தொடுத்த கொடும் கழித் தாழை வீழ் கயிற்று ஊசல் தூங்கிக் கொண்டல் இடு மணல் குரவை முனையின் வெண் தலைப் புணரி ஆயமொடு ஆடி மணிப் பூம் பைம் தழை தைஇ அணித்தகப் பல் பூம் கானல் அல்கினம் வருதல் கவ்வை நல் அணங்கு உற்ற இ ஊர் கொடிது அறி பெண்டிர் சொல் கொண்டு அன்னை கடி கொண்டனளே தோழி பெரும் துறை எல்லையும் இரவும் என்னாது கல்லென வலவன் ஆய்ந்த வண் பரி நிலவு மணல் கொட்கும் ஓர் தேர் உண்டு எனவே #2 அகநானூறு 100 நெய்தல் - உலோச்சனார் அரையுற்று அமைந்த ஆரம் நீவிப் புரைய பூண்ட கோதை மார்பினை நல் அகம் வடுக்கொள முயங்கி நீ வந்து எல்லினில் பெயர்தல் எனக்குமார் இனிதே பெரும் திரை முழக்கமொடு இயக்கு அவிந்து இருந்த கொண்டல் இரவின் இரும் கடல் மடுத்த கொழு மீன் கொள்பவர் இருள் நீங்கு ஒண் சுடர் ஓடாப் பூட்கை வேந்தன் பாசறை ஆடு இயல் யானை அணி முகத்து அசைத்த ஓடை ஒண் சுடர் ஒப்பத் தோன்றும் பாடுநர்த் தொடுத்த கைவண் கோமான் பரி உடை நல் தேர் பெரியன் விரி இணர்ப் புன்னை அம் கானல் புறந்தை முன்துறை வம்ப நாரை இனன் ஒலித்து அன்ன அம்பல் வாய்த்த தெய்ய தண் புலர் வைகுறு விடியல் போகிய எருமை நெய்தல் அம் புது மலர் மாந்தும் கைதை அம் படப்பை எம் அழுங்கல் ஊரே #3 அகநானூறு 190 நெய்தல் - உலோச்சனார் திரை உழந்து அசைஇய நிரை வளை ஆயமொடு உப்பின் குப்பை ஏறி எல் பட வரு திமில் எண்ணும் துறைவனொடு ஊரே ஒரு தன் கொடுமையின் அலர் பாடும்மே அலமரல் மழைக் கண் அமர்ந்து நோக்காள் அலையல் வாழி வேண்டு அன்னை உயர் சிமைப் பொதும்பில் புன்னைச் சினை சேர்பு இருந்த வம்ப நாரை இரிய ஒரு நாள் பொங்கு வரல் ஊதையொடு புணரி அலைப்பவும் உழை கடல் வழங்கலும் உரியன் அதன்தலை இரும் கழிப் புகாஅர் பொருந்தத் தாக்கி வயச் சுறா எறிந்து என வலவன் அழிப்ப எழில் பயம் குன்றிய சிறை அழி தொழில நிரை மணிப் புரவி விரை நடை தவிர இழுமென் கானல் விழு மணல் அசைஇ ஆய்ந்த பரியன் வந்து இவண் மான்ற மாலைச் சேர்ந்தன்றோ இலனே #4 அகநானூறு 200 நெய்தல் - உலோச்சனார் நிலாவின் இலங்கு மணல் மலி மறுகில் புலால் அம் சேரிப் புல் வேய் குரம்பை ஊர் என உணராச் சிறுமையொடு நீர் உடுத்து இன்னா உறையுட்டு ஆயினும் இன்பம் ஒரு நாள் உறைந்திசினோர்க்கும் வழி_நாள் தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப பொம்மல் படு திரை கம்மென உடைதரும் மரன் ஓங்கு ஒரு சிறை பல பாராட்டி எல்லை எம்மொடு கழிப்பி எல் உற நல் தேர் பூட்டலும் உரியீர் அற்றன்று சேந்தனிர் செல்குவிர் ஆயின் யாமும் எம் வரை அளவையின் பெட்குவம் நும் ஒப்பதுவோ உரைத்திசின் எமக்கே #5 அகநானூறு 210 நெய்தல் - உலோச்சனார் குறி இறைக் குரம்பைக் கொலை வெம் பரதவர் எறியுளி பொருத ஏமுறு பெரு மீன் புண் உமிழ் குருதி புலவுக் கடல் மறுப்பட விசும்பு அணி வில்லின் போகிப் பசும் பிசிர்த் திரை பயில் அழுவம் உழக்கி உரன் அழிந்து நிரை திமில் மருங்கில் படர்தரும் துறைவன் பானாள் இரவில் நம் பணைத் தோள் உள்ளி தான் இவண் வந்த காலை நம் ஊர்க் கானல் அம் பெரும் துறை கவின் பாராட்டி ஆனாது புகழ்ந்திசினோனே இனித் தன் சாயல் மார்பின் பாயல் மாற்றிக் கைதை அம் படு சினைக் கடும் தேர் விலங்கச் செலவு அரிது என்னும் என்பது பல கேட்டனமால் தோழி நாமே #6 அகநானூறு 300 நெய்தல் - உலோச்சனார்(நக்கீரர்) நாள் வலை முகந்த கோள் வல் பரதவர் நுணங்கு மணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார் பறி கொள் கொள்ளையர் மறுக உக்க மீன் ஆர் குருகின் கானல் அம் பெரும் துறை எல்லை தண் பொழில் சென்று எனச் செலீஇயர் தேர் பூட்டு அயர ஏஎய் வார் கோல் செறி தொடி திருத்திப் பாறு மயிர் நீவிச் செல் இனி மடந்தை நின் தோழியொடு மனை எனச் சொல்லிய அளவை தான் பெரிது கலுழ்ந்து தீங்கு ஆயினள் இவள் ஆயின் தாங்காது நொதுமலர் போலப் பிரியின் கதுமெனப் பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல் அதனால் சேணின் வருநர் போலப் பேணா இரும் கலி யாணர் எம் சிறுகுடித் தோன்றின் வல் எதிர் கொண்டு மெல்லிதின் வினைஇத் துறையும் மான்றன்று பொழுதே சுறவும் ஓதம் மல்கலின் மாறு ஆயினவே எல்லின்று தோன்றல் செல்லாதீம் என எமர் குறை கூறத் தங்கி ஏமுற இளையரும் புரவியும் இன்புற நீயும் இல் உறை நல் விருந்து அயர்தல் ஒல்லுதும் பெரும நீ நல்குதல் பெறினே #7 அகநானூறு 330 நெய்தல் - உலோச்சனார் கழிப் பூக் குற்றும் கானல் அல்கியும் வண்டல் பாவை வரி மணல் அயர்ந்தும் இன்புறப் புணர்ந்தும் இளி வரப் பணிந்தும் தன் துயர் வெளிப்படத் தவறு இல் நம் துயர் அறியாமையின் அயர்ந்த நெஞ்சமொடு செல்லும் அன்னோ மெல்லம்புலம்பன் செல்வோன் பெயர் புறத்து இரங்கி முன் நின்று தகைஇய சென்ற என் நிறை இல் நெஞ்சம் எய்தின்று-கொல்லோ தானே எய்தியும் காமம் செப்ப நாண் இன்று-கொல்லோ உதுவக் காண் அவர் ஊர்ந்த தேரே குப்பை வெண் மணல் குவவு மிசையானும் எக்கர்த் தாழை மடல்-வயினானும் ஆய் கொடிப் பாசடும்பு பரிய ஊர்பு இழிபு சிறுகுடிப் பரதவர் பெரும் கடல் மடுத்த கடும் செலல் கொடும் திமில் போல நிவந்து படு தோற்றமொடு இகந்து மாயும்மே #8 அகநானூறு 400 நெய்தல் - உலோச்சனார் நகை நன்று அம்ம தானே அவனொடு மனை இறந்து அல்கினும் அலர் என நயந்து கானல் அல்கிய நம் களவு அகல பல் புரிந்து இயறல் உற்ற நல் வினை நூல் அமை பிறப்பின் நீல உத்திக் கொய்ம் மயிர் எருத்தம் பிணர்படப் பெருகி நெய்ம்மிதி முனைஇய கொழும் சோற்று ஆர்கை நிரல் இயைந்து ஒன்றிய செலவின் செந்தினைக் குரல் வார்ந்து அன்ன குவவுத் தலை நந்நான்கு வீங்கு சுவல் மொசியத் தாங்கு நுகம் தழீஇப் பூம் பொறிப் பல் படை ஒலிப்பப் பூட்டி மதி உடை வலவன் ஏவலின் இகு துறைப் புனல் பாய்ந்து அன்ன வாம் மான் திண் தேர்க் கணை கழிந்து அன்ன நோன் கால் வண் பரி பால் கண்டு அன்ன ஊதை வெண் மணல் கால் கண்டு அன்ன வழிபடப் போகி அயிர்ச் சேற்று அள்ளல் அழுவத்து ஆங்கண் இருள் நீர் இட்டுச் சுரம் நீந்தித் துறை கெழு மெல்லம்புலம்பன் வந்த ஞான்றை பூ மலி இரும் கழி துயல்வரும் அடையொடு நேமி தந்த நெடு_நீர் நெய்தல் விளையா இளம் கள் நாறப் பல உடன் பொதி அவிழ் தண் மலர் கண்டும் நன்றும் புதுவது ஆகின்று அம்ம பழ விறல் பாடு எழுந்து இரங்கும் முந்நீர் நீடு இரும் பெண்ணை நம் அழுங்கல் ஊரே #9 குறுந்தொகை 175 நெய்தல் - உலோச்சனார் பருவத் தேன் நசைஇப் பல் பறைத் தொழுதி உரவுத் திரை பொருத திணி மணல் அடைகரை நனைந்த புன்னை மாச் சினை தொகூஉம் மலர்ந்த பூவின் மா நீர்ச் சேர்ப்பற்கு இரங்கேன் தோழி ஈங்கு என்-கொல் என்று பிறர்பிறர் அறியக் கூறல் அமைந்து ஆங்கு அமைக அம்பல் அஃது எவனே #10 குறுந்தொகை 177 நெய்தல் - உலோச்சனார் கடல் பாடு அவிந்து கானல் மயங்கித் துறை நீர் இரும் கழி புல்லென்றன்றே மன்றல் அம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை அன்றிலும் பையென நரலும் இன்று அவர் வருவர்-கொல் வாழி தோழி நாம் நகப் புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சித் தணப்பு அரும் காமம் தண்டியோரே #11 குறுந்தொகை 205 நெய்தல் - உலோச்சனார் மின்னுச் செய் கருவிய பெயல் மழை தூங்க விசும்பு ஆடு அன்னம் பறை நிவந்து ஆங்குப் பொலம் படைப் பொலிந்த வெண் தேர் ஏறிக் கலங்கு கடல் துவலை ஆழி நனைப்ப இனிச் சென்றனனே இடு மணல் சேர்ப்பன் யாங்கு அறிந்தன்று-கொல் தோழி என் தேம் கமழ் திரு நுதல் ஊர்தரும் பசப்பே #12 குறுந்தொகை 248 நெய்தல் - உலோச்சனார் அது வரல் அன்மையோ அரிதே அவன் மார்பு உறுக என்ற நாளே குறுகி ஈங்கு ஆகின்றே தோழி கானல் ஆடு அரை புதையக் கோடை இட்ட அடும்பு இவர் மணல் கோடு ஊர நெடும் பனைக் குறிய ஆகும் துறைவனைப் பெரிய கூறி யாய் அறிந்தனளே #13 நற்றிணை 11 நெய்தல் - உலோச்சனார் பெய்யாது வைகிய கோதை போல மெய் சாயினை அவர் செய் குறி பிழைப்ப உள்ளி நொதுமலர் நேர்பு உரை தெள்ளிதின் வாரார் என்னும் புலவி உட்கொளல் ஒழிக மாள நின் நெஞ்சத்தானே புணரி பொருத பூ மணல் அடைகரை ஆழி மருங்கின் அலவன் ஓம்பி வலவன் வள்பு ஆய்ந்து ஊர நிலவு விரிந்தன்றால் கானலானே #14 நற்றிணை 38 நெய்தல் - உலோச்சனார் வேட்டம் பொய்யாது வலை_வளம் சிறப்பப் பாட்டம் பொய்யாது பரதவர் பகர இரும் பனம் தீம் பிழி உண்போர் மகிழும் ஆர் கலி யாணர்த்து ஆயினும் தேர் கெழு மெல்லம்புலம்பன் பிரியின் புல்லெனப் புலம்பு ஆகின்றே தோழி கலங்கு நீர்க் கழி சூழ் படப்பைக் காண்டவாயில் ஒலி கா ஓலை முள் மிடை வேலிப் பெண்ணை இவரும் ஆங்கண் வெண் மணல் படப்பை எம் அழுங்கல் ஊரே #15 நற்றிணை 63 நெய்தல் -உலோச்சனார் உரவுக் கடல் உழந்த பெரு வலைப் பரதவர் மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண் கல்லென் சேரிப் புலவல் புன்னை விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும் அழுங்கல் ஊரோ அறன் இன்று அதனால் அறன் இல் அன்னை அரும் கடிப் படுப்ப பசலை ஆகி விளிவது-கொல்லோ புள் உற ஒசிந்த பூ மயங்கு அள்ளல் கழிச் சுரம் நிவக்கும் இரும் சிறை இவுளி திரை தரு புணரியின் கழூஉம் மலி திரைச் சேர்ப்பனொடு அமைந்த நம் தொடர்பே #16 நற்றிணை 64 குறிஞ்சி -உலோச்சனார் என்னர் ஆயினும் இனி நினைவு ஒழிக அன்ன ஆக இனையல் தோழி யாம் இன்னம் ஆக நம் துறந்தோர் நட்பு எவன் மரல் நார் உடுக்கை மலை உறை குறவர் அறியாது அறுத்த சிறியிலைச் சாந்தம் வறனுற்று ஆர முருக்கிப் பையென மரம் வறிது ஆகச் சோர்ந்து உக்கு ஆங்கு என் அறிவும் உள்ளமும் அவர்-வயின் சென்று என வறிதால் இகுளை என் யாக்கை இனி அவர் வரினும் நோய் மருந்து அல்லர் வாராது அவணர் ஆகுக காதலர் இவண் நம் காமம் படர் அட வருந்திய நோய் மலி வருத்தம் காணன்மார் எமரே #17 நற்றிணை 74 நெய்தல் - உலோச்சனார் வடிக் கதிர் திரித்த வல் ஞாண் பெரு வலை இடிக் குரல் புணரிப் பௌவத்து இடுமார் நிறையப் பெய்த அம்பி காழோர் சிறை அரும் களிற்றின் பரதவர் ஒய்யும் சிறு வீ ஞாழல் பெரும் கடல் சேர்ப்பனை ஏதிலாளனும் என்ப போது அவிழ் புது மணல் கானல் புன்னை நுண் தாது கொண்டல் அசை வளி தூக்கு-தொறும் குருகின் வெண் புறம் மொசிய வார்க்கும் தெண் கடல் கண்டல் வேலிய ஊர் அவன் பெண்டு என அறிந்தன்று பெயர்த்தலோ அரிதே #18 நற்றிணை 131 நெய்தல் - உலோச்சனார் ஆடிய தொழிலும் அல்கிய பொழிலும் உள்ளல் ஆகா உயவு நெஞ்சமொடு ஊடலும் உடையமோ உயர் மணல் சேர்ப்ப திரை முதிர் அரைய தடம் தாள் தாழைச் சுறவு மருப்பு அன்ன முள் தோடு ஒசிய இறவு ஆர் இனக் குருகு இறைகொள இருக்கும் நறவு_மகிழ் இருக்கை நல் தேர்ப் பெரியன் கள் கமழ் பொறையாறு அன்ன என் நல் தோள் நெகிழ மறத்தல் நுமக்கே #19 நற்றிணை 149 நெய்தல் - உலோச்சனார் சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி மறுகில் பெண்டிர் அம்பல் தூற்றச் சிறு கோல் வலந்தனள் அன்னை அலைப்ப அலந்தனென் வாழி தோழி கானல் புது மலர் தீண்டிய பூ நாறு குரூஉச் சுவல் கடு மான் பரிய கதழ் பரி கடைஇ நடுநாள் வரூஉம் இயல் தேர்க் கொண்கனொடு செலவு அயர்ந்திசினால் யானே அலர் சுமந்து ஒழிக இவ் அழுங்கல் ஊரே #20 நற்றிணை 191 நெய்தல் - உலோச்சனார் சிறு வீ ஞாழல் தேன் தோய் ஒள் இணர் நேர் இழை மகளிர் வார் மணல் இழைத்த வண்டல் பாவை வன முலை முற்றத்து ஒண் பொறிச் சுணங்கின் ஐது படத் தாஅம் கண்டல் வேலிக் காமர் சிறுகுடி எல்லி வந்தன்றோ தேர் எனச் சொல்லி அலர் எழுந்தன்று இவ் ஊரே பலருளும் என் நோக்கினளே அன்னை நாளை மணிப் பூ முண்டகம் கொய்யேன் ஆயின் அணிக் கவின் உண்மையோ அரிதே மணிக் கழி நறும் பூம் கானல் வந்து அவர் வறும் தேர் போதல் அதனினும் அரிதே #21 நற்றிணை 203 நெய்தல் - உலோச்சனார் முழங்கு திரை கொழீஇய மூரி எக்கர்த் தடம் தாள் தாழை முள் உடை நெடும் தோட்டு அக மடல் பொதுளிய முகை முதிர் வான் பூம் கோடு வார்ந்து அன்ன வெண் பூத் தாழை எறி திரை உதைத்தலின் பொங்கித் தாது சோர்பு சிறுகுடிப் பாக்கத்து மறுகு புலா மறுக்கும் மணம் கமழ் கானல் இயைந்த நம் கேண்மை ஒரு நாள் பிரியினும் உய்வு அரிது என்னாது கதழ் பரி நெடும் தேர் வரவு ஆண்டு அழுங்கச் செய்த தன் தப்பல் அன்றியும் உயவுப் புணர்ந்தன்று இவ் அழுங்கல் ஊரே #22 நற்றிணை 223 நெய்தல் - உலோச்சனார் இவள் தன் காமம் பெருமையின் காலை என்னாள் நின் அன்பு பெரிது உடைமையின் அளித்தல் வேண்டிப் பகலும் வருதி பல் பூம் கானல் இ நீர ஆகலோ இனிதால் எனின் இவள் அலரின் அரும் கடிப்படுகுவள் அதனால் எல்லி வம்மோ மெல்லம்புலம்ப சுறவு இனம் கலித்த நிறை இரும் பரப்பின் துறையினும் துஞ்சாக் கண்ணர் பெண்டிரும் உடைத்து இவ் அம்பல் ஊரே #23 நற்றிணை 249 நெய்தல் - உலோச்சனார் இரும்பின் அன்ன கரும் கோட்டுப் புன்னை நீலத்து அன்ன பாசிலை அகம்-தொறும் வெள்ளி அன்ன விளங்கு இணர் நாப்பண் பொன்னின் அன்ன நறும் தாது உதிரப் புலிப் பொறிக் கொண்ட பூ நாறு குரூஉச் சுவல் வரி வண்டு ஊதலின் புலி செத்து வெரீஇப் பரி உடை வயங்கு தாள் பந்தின் தாவத் தாங்கவும் தகை வரை நில்லா ஆங்கண் மல்லல் அம் சேரி கல்லெனத் தோன்றி அம்பல் மூதூர் அலர் எழச் சென்றது அன்றோ கொண்கன் தேரே #24 நற்றிணை 254 நெய்தல் - உலோச்சனார் வண்டல் தைஇயும் வரு திரை உதைத்தும் குன்று ஓங்கு வெண் மணல் கொடி அடும்பு கொய்தும் துனி இல் நல் மொழி இனிய கூறியும் சொல் எதிர் பெறாஅய் உயங்கி மெல்லச் செலீஇய செல்லும் ஒலி இரும் பரப்ப உமணர் தந்த உப்பு நொடை நெல்லின் அயினி மா இன்று அருந்த நீலக் கணம் நாறு பெரும் தொடை புரளும் மார்பின் துணையிலை தமியை சேக்குவை அல்லை நேர் கண் சிறு தடி நீரின் மாற்றி வானம் வேண்டா உழவின் எம் கானல் அம் சிறுகுடிச் சேந்தனை செலினே #25 நற்றிணை 278 நெய்தல் - உலோச்சனார் படு காழ் நாறிய பராஅரைப் புன்னை அடு மரல் மொக்குளின் அரும்பு வாய் அவிழப் பொன்னின் அன்ன தாது படு பல் மலர் சூடுநர் தொடுத்த மிச்சில் கோடு-தொறும் நெய் கனி பசும் காய் தூங்கும் துறைவனை இனி அறிந்திசினே கொண்கன் ஆகுதல் கழிச் சேறு ஆடிய கணைக் கால் அத்திரி குளம்பினும் சே இறா ஒடுங்கின கோதையும் எல்லாம் ஊதை வெண் மணலே #26 நற்றிணை 287 நெய்தல் - உலோச்சனார் விசும்பு உறழ் புரிசை வெம்ப முற்றிப் பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்த நல் எயில் உடையோர் உடையம் என்னும் பெரும் தகை மறவன் போலக் கொடும் கழிப் பாசடை நெய்தல் பனி நீர்ச் சேர்ப்பன் நாம முதலை நடுங்கு பகை அஞ்சான் காமம் பெருமையின் வந்த ஞான்றை அருகாது ஆகிய வன்கண் நெஞ்சம் நள்ளென் கங்குல் புள் ஒலி கேள்-தொறும் தேர் மணித் தெள் இசை-கொல் என ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே #27 நற்றிணை 311 நெய்தல் - உலோச்சனார் பெயினே விடு மான் உளையின் வெறுப்பத் தோன்றி இரும் கதிர் நெல்லின் யாணரஃதே வறப்பின் மா நீர் முண்டகம் தாஅய்ச் சேறு புலர்ந்து இரும் கழிச் செறுவின் வெள் உப்பு விளையும் அழியா மரபின் நம் மூதூர் நன்றே கொழு மீன் சுடு புகை மறுகினுள் மயங்கிச் சிறு வீ ஞாழல் துறையுமார் இனிதே ஒன்றே தோழி நம் கானலது பழியே கரும் கோட்டுப் புன்னை மலர்த் தாது அருந்தி இரும் களிப் பிரசம் ஊத அவர் நெடும் தேர் இன் ஒலி கேட்டலோ அரிதே #28 நற்றிணை 331 நெய்தல் - உலோச்சனார் உவர் விளை உப்பின் உழாஅ உழவர் ஒழுகை உமணர் வரு_பதம் நோக்கி கானல் இட்ட காவல் குப்பைப் புலவு மீன் உணங்கல் படு புள் ஓப்பி மட நோக்கு ஆயமொடு உடன் ஊர்பு ஏறி எந்தை திமில் இது நுந்தை திமில் என வளை நீர் வேட்டம் போகிய கிளைஞர் திண் திமில் எண்ணும் தண் கடல் சேர்ப்ப இனிதே தெய்ய எம் முனிவு இல் நல் ஊர் இனி வரின் தவறும் இல்லை எனையதூஉம் பிறர்பிறர் அறிதல் யாவது தமர்தமர் அறியாச் சேரியும் உடைத்தே #29 நற்றிணை 354 நெய்தல் - உலோச்சனார் தான் அது பொறுத்தல் யாவது கானல் ஆடு அரை ஒழித்த நீடு இரும் பெண்ணை வீழ் காவோலைச் சூழ் சிறை யாத்த கானல் நண்ணிய வார் மணல் முன்றில் எல்லி அன்ன இருள் நிறப் புன்னை நல் அரை முழுமுதல் அவ் வயின் தொடுத்த தூங்கல் அம்பித் தூவல் அம் சேர்ப்பின் கடு வெயில் கொதித்த கல் விளை உப்பு நெடு நெறி ஒழுகை நிரை செலப் பார்ப்போர் அளம் போகு ஆகுலம் கடுப்பக் கௌவை ஆகின்றது ஐய நின் நட்பே #30 நற்றிணை 363 நெய்தல் - உலோச்சனார் கண்டல் வேலிக் கழி சூழ் படப்பைத் தெண் கடல் நாட்டுச் செல்வென் யான் என வியம் கொண்டு ஏகினை ஆயின் எனையதூஉம் உறு வினைக்கு அசாவா உலைவு இல் கம்மியன் பொறி அறு பிணைக் கூட்டும் துறை மணல் கொண்டு வம்மோ தோழி மலி நீர்ச் சேர்ப்ப பைம் தழை சிதையக் கோதை வாட நன்னர் மாலை நெருநை நின்னொடு சில விளங்கு எல் வளை ஞெகிழ அலவன் ஆட்டுவோள் சிலம்பு ஞெமிர்ந்து எனவே #31 நற்றிணை 372 நெய்தல் - உலோச்சனார் அழிதக்கன்றே தோழி கழி சேர்பு கானல் பெண்ணைத் தேன் உடை அளி பழம் வள் இதழ் நெய்தல் வருந்த மூக்கு இறுபு அள்ளல் இரும் சேற்று ஆழப் பட்டு எனக் கிளைக் குருகு இரியும் துறைவன் வளைக் கோட்டு அன்ன வெண் மணற்று அக-வயின் வேட்ட அண்ணல் உள்ளமொடு அமர்ந்து இனிது நோக்கி அன்னை தந்த அலங்கல் வான் கோடு உலைந்து ஆங்கு நோதல் அஞ்சி அடைந்ததற்கு இனையல் என்னும் என்ப மனை இருந்து இரும் கழி துழவும் பனித் தலைப் பரதவர் திண் திமில் விளக்கம் எண்ணும் கண்டல் வேலிக் கழி நல் ஊரே #32 நற்றிணை 398 நெய்தல் - உலோச்சனார் உரு கெழு தெய்வமும் கரந்து உறையின்றே விரி கதிர் ஞாயிறும் குடக்கு வாங்கும்மே நீர் அலைக் கலைஇய கூழை வடியாச் சாஅய் அவ் வயிறு அலைப்ப உடன் இயைந்து ஓரை மகளிரும் ஊர் எய்தினரே பல் மலர் நறும் பொழில் பழிச்சி யாம் முன் செல்மோ சே_இழை என்றனம் அதன்எதிர் சொல்லாள் மெல்_இயல் சிலவே நல் அகத்து யாணர் இள முலை நனைய மாண் எழில் மலர்க் கண் தெண் பனி கொளவே #33 புறநானூறு 258 - உலோச்சனார் முள் கால் காரை முது பழன் ஏய்ப்பத் தெறிப்ப விளைந்த தீம் கந்தாரம் நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு பச்சூன் தின்று பைம் நிணம் பெருத்த எச்சில் ஈர்ம் கை வில் புறம் திமிரிப் புலம் புக்கனனே புல் அணல் காளை ஒரு முறை உண்ணா அளவைப் பெரு நிரை ஊர்ப் புறம் நிறையத் தருகுவன் யார்க்கும் தொடுதல் ஓம்பு-மதி முது கள் சாடி ஆ தரக் கழுமிய துகளன் காய்தலும் உண்டு அக் கள் வெய்யோனே #34 புறநானூறு 274 - உலோச்சனார் நீலக் கச்சைப் பூ ஆர் ஆடைப் பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன் மேல்வரும் களிற்றொடு வேல் துரந்து இனியே தன்னும் துரக்குவன் போலும் ஒன்னலர் எஃகு உடை வலத்தர் மாவொடு பரத்தரக் கையின் வாங்கித் தழீஇ மொய்ம்பின் ஊக்கி மெய்க் கொண்டனனே #35 புறநானூறு 377 - உலோச்சனார் **பாடப்பட்டோன்: சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளி பனி பழுநிய பல் யாமத்துப் பாறு தலை மயிர் நனைய இனிது துஞ்சும் திரு நகர் வரைப்பின் இனையல் அகற்ற என் கிணை தொடாக் குறுகி அவி உணவினோர் புறம்காப்ப அற நெஞ்சத்தோன் வாழ நாள் என்று அதன் கொண்டு வரல் ஏத்திக் கரவு இல்லாக் கவி வண் கையான் வாழ்க எனப் பெயர் பெற்றோர் பிறர்க்கு உவமம் தான் அல்லது தனக்கு உவமம் பிறர் இல் என அது நினைத்து மதி மழுகி ஆங்கு நின்ற என் காணூஉச் சேய் நாட்டுச் செல் கிணைஞனை நீ புரவலை எமக்கு என்ன மலை பயந்த மணியும் கடறு பயந்த பொன்னும் கடல் பயந்த கதிர் முத்தமும் வேறுபட்ட உடையும் சேறுபட்ட தசும்பும் கனவில் கண்டு ஆங்கு வருந்தாது நிற்ப நனவின் நல்கியோன் நகை சால் தோன்றல் நாடு என மொழிவோர் அவன் நாடு என மொழிவோர் வேந்து என மொழிவோர் அவன் வேந்து என மொழிவோர் புகர் நுதல் அவிர் பொன் கோட்டு யானையர் கவர் பரிக் கச்சை நல் மான் வடி மணி வாங்கு உருள கொடி மிசை நல் தேர்க் குழுவினர் கதழ் இசை வன்கணினர் வாளின் வாழ்நர் ஆர்வமொடு ஈண்டிக் கடல் ஒலி கொண்ட தானை அடல் வெம் குருசில் மன்னிய நெடிதே &60 - உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார் #1 அகநானூறு 146 மருதம் - உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார் வலி மிகு முன்பின் அண்ணல் ஏஎறு பனி மலர்ப் பொய்கைப் பகல் செல மறுகி மடக் கண் எருமை மாண் நாகு தழீஇப் படப்பை நண்ணிப் பழனத்து அல்கும் கலி மகிழ் ஊரன் ஒலி மணி நெடும் தேர் ஒள் இழை மகளிர் சேரிப் பல் நாள் இயங்கல் ஆனாது ஆயின் வயங்கு_இழை யார்-கொல் அளியள் தானே எம் போல் மாயப் பரத்தன் வாய்மொழி நம்பி வளி பொரத் துயல்வரும் தளி பொழி மலரின் கண் பனி ஆகத்து உறைப்பக் கண் பசந்து ஆயமும் அயலும் மருள தாய் ஓம்பு ஆய் நலம் வேண்டாதோளே &61 - உழுந்தினைம் புலவனார் #1 குறுந்தொகை 333 குறிஞ்சி - உழுந்தினைம் புலவனார் குறும் படைப் பகழிக் கொடு வில் கானவன் புனம் உண்டு கடிந்த பைம் கண் யானை நறும் தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு குறும் பொறைக்கு அணவும் குன்ற நாடன் பணிக் குறை வருத்தம் வீடத் துணியின் எவனோ தோழி நம் மறையே &62 - உறையனார் #1 குறுந்தொகை 207 பாலை - உறையனார் செப்பினம் செலினே செலவு அரிது ஆகும் என்று அத்த ஓமை அம் கவட்டு இருந்த இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி சுரம் செல் மாக்கட்கு உயவுத் துணை ஆகும் கல் வரை அயலது தொல் வழங்கு சிறு நெறி நல் அடி பொறிப்பத் தாஅய்ச் சென்று எனக் கேட்ட நம் ஆர்வலர் பலரே &63 - உறையூர் இளம்பொன் வாணிகனார் #1 புறநானூறு 264 - உறையூர் இளம்பொன் வாணிகனார் பரல் உடை மருங்கின் பதுக்கை சேர்த்தி மரல் வகுந்து தொடுத்த செம் பூம் கண்ணியொடு அணி மயில் பீலி சூட்டிப் பெயர் பொறித்து இனி நட்டனரே கல்லும் கன்றொடு கறவை தந்து பகைவர் ஓட்டிய நெடுந்தகை கழிந்தமை அறியாது இன்றும் வரும்-கொல் பாணரது கடும்பே &64 - உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் #1 புறநானூறு 13 - உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் **பாடப்பட்டோன் - சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி இவன் யார் என்குவை ஆயின் இவனே புலி நிறக் கவசம் பூம் பொறி சிதைய எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின் மறலி அன்ன களிற்று மிசையோனே களிறே முந்நீர் வழங்கு நாவாய் போலவும் பல் மீன் நாப்பண் திங்கள் போலவும் சுறவு இனத்து அன்ன வாளோர் மொய்ப்ப மரீஇயோர் அறியாது மைந்து பட்டன்றே நோயிலன் ஆகிப் பெயர்க-தில் அம்ம பழன மஞ்ஞை உகுத்த பீலி கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும் கொழு மீன் விளைந்த கள்ளின் விழு நீர் வேலி நாடு கிழவோனே #2 புறநானூறு 127 - உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் **பாடப்பட்டோன்: வேள் ஆய் அரண்டின் களங்கனி அன்ன கரும் கோட்டுச் சீறியாழ் பாடு இன் பனுவல் பாணர் உய்த்து எனக் களிறு இல ஆகிய புல் அரை நெடு வெளில் கான மஞ்ஞை கணனொடு சேப்ப ஈகை அரிய இழை அணி மகளிரொடு சாயின்று என்ப ஆஅய் கோயில் சுவைக்கு இனிது ஆகிய குய் உடை அடிசில் பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்தி உரை சால் ஓங்கு புகழ் ஒரீஇய முரைசு கெழு செல்வர் நகர் போலாதே #3 புறநானூறு 128 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் **பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன் மன்றப் பலவின் மாச் சினை மந்தி இரவலர் நாற்றிய விசி கூடு முழவின் பாடு இன் தெண் கண் கனி செத்து அடிப்பின் அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும் கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் ஆடு_மகள் குறுகின் அல்லது பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே #4 புறநானூறு 129 - உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் **பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன் குறி இறைக் குரம்பைக் குறவர் மாக்கள் வாங்கு அமை பழுனிய தேறல் மகிழ்ந்து வேங்கை முன்றில் குரவை அயரும் தீம் சுளைப் பலவின் மா மலைக் கிழவன் ஆஅய் அண்டிரன் அடு போர் அண்ணல் இரவலர்க்கு ஈத்த யானையின் கரவு இன்று வானம் மீன் பல பூப்பின் ஆனாது ஒரு வழிக் கரு வழி இன்றிப் பெரு வெள் என்னில் பிழையாது-மன்னே #5 புறநானூறு 130 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் **பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன் விளங்கு மணிக் கொடும் பூண் ஆஅய் நின் நாட்டு இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு இன்முகம் கரவாது உவந்து நீ அளித்த அண்ணல் யானை எண்ணின் கொங்கர் குட கடல் ஓட்டிய ஞான்றை தலைப்பெயர்த்து இட்ட வேலினும் பலவே #6 புறநானூறு 131 - உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் **பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன் மழைக் கணம் சேக்கும் மா மலைக் கிழவன் வழைப் பூம் கண்ணி வாய் வாள் அண்டிரன் குன்றம் பாடின-கொல்லோ களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே #7 புறநானூறு 132 - உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் **பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன் முன் உள்ளுவோனைப் பின் உள்ளினேனே ஆழ்க என் உள்ளம் போழ்க என் நாவே பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க என் செவியே நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி குவளை பைம் சுனை பருகி அயல தகர தண் நிழல் பிணையொடு வதியும் வடதிசையதுவே வான் தோய் இமயம் தென்திசை ஆஅய் குடி இன்று ஆயின் பிறழ்வது-மன்னோ இ மலர் தலை உலகே #8 புறநானூறு 133 - உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் **பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன் மெல் இயல் விறலி நீ நல் இசை செவியின் கேட்பின் அல்லது காண்பு அறியலையே காண்டல் வேண்டினை ஆயின் மாண்ட நின் விரை வளர் கூந்தல் வரை வளி உளரக் கலவ மஞ்ஞையின் காண்வர இயலி மாரி அன்ன வண்மை தேர் வேள் ஆயைக் காணிய சென்மே #9 புறநானூறு 134 - உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் **பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன் இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அற விலை வணிகன் ஆஅய் அல்லன் பிறரும் சான்றோர் சென்ற நெறி என ஆங்குப் பட்டன்று அவன் கைவண்மையே #10 புறநானூறு 135 - உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் **பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன் கொடு_வரி வழங்கும் கோடு உயர் நெடு வரை அரு விடர்ச் சிறு நெறி ஏறலின் வருந்தி தடவரல் கொண்ட தகை மெல் ஒதுக்கின் வளைக் கை விறலி என் பின்னள் ஆகப் பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் வரி நவில் பனுவல் புலம்பெயர்ந்து இசைப்ப படுமலை நின்ற பயம் கெழு சீறியாழ் ஒல்கல் உள்ளமொடு ஒரு புடைத் தழீஇப் புகழ் சால் சிறப்பின் நின் நல் இசை உள்ளி வந்தெனன் எந்தை யானே என்றும் மன்று படு பரிசிலர் காணின் கன்றொடு கறை அடி யானை இரியல்போக்கும் மலை கெழு நாடன் மா வேள் ஆஅய் களிறும் அன்றே மாவும் அன்றே ஒளிறு படைப் புரவிய தேரும் அன்றே பாணர் படுநர் பரிசிலர் ஆங்கு அவர் தமது எனத் தொடுக்குவர் ஆயின் எமது எனப் பற்றல் தேற்றாப் பயம் கெழு தாயமொடு அன்ன ஆக நின் ஊழி நின்னைக் காண்டல் வேண்டிய அளவை வேண்டார் உறு முரண் கடந்த ஆற்றல் பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே #11 புறநானூறு 241 உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் **பாடப்பட்டோன்: ஆய் திண் தேர் இரவலர்க்கு ஈத்த தண் தார் அண்டிரன் வரூஉம் என்ன ஒண் தொடி வச்சிரத் தடக் கை நெடியோன் கோயிலுள் போர்ப்புறு முரசும் கறங்க ஆர்ப்பு எழுந்தன்றால் விசும்பினானே #12 புறநானூறு 374 - உறையூர் ஏணிச்சேர் முடமோசியார் **பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன் கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும் புல்வாய் இரலை நெற்றி அன்ன பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவியத் தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர் மன்றப் பலவின் மால் வரைப் பொருந்தி என் தெண் கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி இரும் கலை ஓர்ப்ப இசைஇக் காண்வரக் கரும் கோல் குறிஞ்சி அடுக்கம் பாடப் புலிப்_பல்_தாலிப் புன் தலைச் சிறாஅர் மான் கண் மகளிர் கான் தேர் அகன்று உவா சிலைப்-பால் பட்ட முளவு_மான் கொழும் குறை விடர் முகை அடுக்கத்துச் சினை முதிர் சாந்தம் புகர் முக வேழத்து மருப்பொடு மூன்றும் இரும் கேழ் வயப் புலி வரி அதள் குவைஇ விரிந்து இறை நல்கும் நாடன் எம் கோன் கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல வண்மையும் உடையையோ ஞாயிறு கொன் விளங்குதியால் விசும்பினானே #13 புறநானூறு 375 - உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் **பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன் அலங்கு கதிர் சுமந்த கலங்கல் சூழி நிலை தளர்வு தொலைந்த ஒல்கு நிலைப் பல் கால் பொதியில் ஒரு சிறை பள்ளி ஆக முழா அரைப் போந்தை அர வாய் மா மடல் நாரும் போழும் கிணையோடு சுருக்கி ஏரின் வாழ்நர் குடி முறை புகாஅ ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வைப் புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார் எனப் புரசம் தூங்கும் அறாஅ யாணர் வரை அணி படப்பை நல் நாட்டுப் பொருந பொய்யா ஈகைக் கழல் தொடி ஆஅய் யாவரும் இன்மையின் கிணைப்பத் தவாது பெரு மழை கடல் பரந்து ஆஅங்கு யானும் ஒரு நின் உள்ளி வந்தனென் அதனால் புலவர் புக்கில் ஆகி நிலவரை நிலீஇயர் அத்தை நீயே ஒன்றே நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து நிலவன்மாரோ புரவலர் துன்னிப் பெரிய ஓதினும் சிறிய உணராப் பீடு இன்று பெருகிய திருவின் பாடு இல் மன்னரைப் பாடன்மார் எமரே &65 - உறையூர் கதுவாய்ச் சாத்தனார் #1 நற்றிணை 370 மருதம் - உறையூர் கதுவாய்ச் சாத்தனார் வாராய் பாண நகுகம் நேர்_இழை கடும்பு உடைக் கடும் சூல் நம் குடிக்கு உதவி நெய்யோடு இமைக்கும் ஐயவித் திரள் காழ் விளங்கு நகர் விளங்கக் கிடந்தோள் குறுகிப் புதல்வன் ஈன்று எனப் பெயர் பெயர்த்து அவ் வரித் திதலை அல்குல் முதுபெண்டு ஆகித் துஞ்சுதியோ மெல் அம்_சில்_ஓதி எனப் பல் மாண் அகட்டில் குவளை ஒற்றி உள்ளினென் உறையும் என் கண்டு மெல்ல முகை நாள் முறுவல் தோற்றித் தகை மலர் உண்கண் கை புதைத்ததுவே &66 - உறையூர்ச் சல்லியன் குமாரனார் #1 குறுந்தொகை 309 மருதம் - உறையூர்ச் சல்லியன் குமாரனார் கைவினை மாக்கள் தம் செய்வினை முடிமார் சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்பட நீடிய வரம்பின் வாடிய விடினும் கொடியோர் நிலம் பெயர்ந்து உறைவேம் என்னாது பெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும் நின் ஊர் நெய்தல் அனையேம் பெரும நீ எமக்கு இன்னாதன பல செய்யினும் நின் இன்று அமைதல் வல்லாம் மாறே &67 - உறையூர் சிறுகந்தனார் #1 குறுந்தொகை 257 குறிஞ்சி - உறையூர் சிறுகந்தனார் வேரும் முதலும் கோடும் ஓராங்குத் தொடுத்த போலத் தூங்குபு தொடரிக் கீழ் தாழ்வு அன்ன வீழ் கோள் பலவின் ஆர் கலி வெற்பன் வரு-தொறும் வரூஉம் அகலினும் அகலாது ஆகி இகலும் தோழி நம் காமத்துப் பகையே &68 - உறையூர் பல்காயனார் #1 குறுந்தொகை 374 குறிஞ்சி - உறையூர் பல்காயனார் எந்தையும் யாயும் உணரக் காட்டி ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்த பின் மலை கெழு வெற்பன் தலைவந்து இரப்ப நன்று புரி கொள்கையின் ஒன்றாகின்றே முடங்கல் இறைய தூங்கணங்குரீஇ நீடு இரும் பெண்ணைத் தொடுத்த கூடினும் மயங்கிய மையல் ஊரே &69 - உறையூர் மருத்துவன் தாமோதரனார் #1 அகநானூறு 133 பாலை - உறையூர் மருத்துவன் தாமோதரனார் குன்றி அன்ன கண்ண குரூஉ மயிர்ப் புன் தாள் வெள்_எலி மோவாய் ஏற்றை செம் பரல் முரம்பில் சிதர்ந்த பூழி நல் நாள் வேங்கை வீ நல் களம் வரிப்பக் கார் தலைமணந்த பைம் புதல் புறவின் வில் எறி பஞ்சியின் வெண் மழை தவழும் கொல்லை இதைய குறும் பொறை மருங்கில் கரி பரந்து அன்ன காயாம் செம்மலொடு எரி பரந்து அன்ன இல மலர் விரைஇப் பூம் கலுழ் சுமந்த தீம் புனல் கான்யாற்று வான் கொள் தூவல் வளி தர உண்கும் எம்மொடு வருதல் வல்லையோ மற்று எனக் கொன் ஒன்று வினவினர்-மன்னே தோழி இதல் முள் ஒப்பின் முகை முதிர் வெட்சி கொல் புனக் குருந்தொடு கல் அறைத் தாஅம் மிளைநாட்டு அத்தத்து ஈர்ம் சுவல் கலித்த வரி மரல் கறிக்கும் மடப் பிணைத் திரி மருப்பு இரலைய காடு இறந்தோரே #2 அகநானூறு 257 பாலை - உறையூர் மருத்துவன் தாமோதரனார் வேனில் பாதிரிக் கூனி மா மலர் நறை வாய் வாடல் நாறும் நாள் சுரம் அரி ஆர் சிலம்பின் சீறடி சிவப்ப எம்மொடு ஓர் ஆறு படீஇயர் யாழ நின் பொம்மல் ஓதி பொதுள வாரி அரும்பு அற மலர்ந்த ஆய் பூ மராஅத்து சுரும்பு சூழ் அலரி தைஇ வேய்ந்த நின் தேம் பாய் கூந்தல் குறும் பல மொசிக்கும் வண்டு கடிந்து ஓம்பல் தேற்றாய் அணிகொள நுண் கோல் எல் வளை தெளிர்க்கும் முன்கை மெல் இறைப் பணைத் தோள் விளங்க வீசி வல்லுவை-மன்னால் நடையே கள்வர் பகை மிகு கவலைச் செல் நெறி காண்மார் மிசை மரம் சேர்த்திய கவை முறி யாஅத்து நார் அரை மருங்கின் நீர் வரப் பொளித்துக் களிறு சுவைத்திட்ட கோது உடைத் ததரல் கல்லா உமணர்க்குத் தீமூட்டு ஆகும் துன்புறு தகுவன ஆங்கண் புன் கோட்டு அரில் இவர் புற்றத்து அல்கு_இரை நசைஇ வெள் அரா மிளிர வாங்கும் பிள்ளை எண்கின் மலை-வயினானே #3 புறநானூறு 60 - உறையூர் மருத்துவன் தாமோதரனார் **பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் முந்நீர் நாப்பண் திமில் சுடர் போலச் செம்மீன் இமைக்கும் மாக விசும்பின் உச்சி நின்ற உவவு மதி கண்டு கட்சி மஞ்ஞையின் சுர முதல் சேர்ந்த சில் வளை விறலியும் யானும் வல் விரைந்து தொழுதனம் அல்லமோ பலவே கானல் கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும் ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் உரன் உடை நோன் பகட்டு அன்ன எம் கோன் வலன் இரங்கு முரசின் வாய் வாள் வளவன் வெயில் மறைக் கொண்ட உரு கெழு சிறப்பின் மாலை வெண்குடை ஒக்குமால் எனவே #4 புறநானூறு 170 - உறையூர் மருத்துவன் தாமோதரனார் **பாடப்பட்டோன் : பிட்டங்கொற்றன் மரை பிரித்து உண்ட நெல்லி வேலிப் பரல் உடை முன்றில் அம் குடிச் சீறூர் எல் அடிப்படுத்த கல்லாக் காட்சி வில் உழுது உண்மார் நாப்பண் ஒல்லென இழிபிறப்பாளன் கரும் கை சிவப்ப வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடும் துடி புலி துஞ்சு நெடு வரைக் குடிஞையோடு இரட்டும் மலை கெழு நாடன் கூர் வேல் பிட்டன் குறுகல் ஓம்பு-மின் தெவ்விர் அவனே சிறு கண் யானை வெண் கோடு பயந்த ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈந்து நார் பிழிக் கொண்ட வெம் கள் தேறல் பண் அமை நல் யாழ்ப் பாண் கடும்பு அருத்தி நசைவர்க்கு மென்மை அல்லது பகைவர்க்கு இரும்பு பயன் படுக்கும் கரும் கைக் கொல்லன் விசைத்து எறி கூடமொடு பொரூஉம் உலைக் கல் அன்ன வல்லாளன்னே #5 புறநானூறு 321 - உறையூர் மருத்துவன் தாமோதரனார் பொறிப் புறப் பூழின் போர் வல் சேவல் மேம் தோல் களைந்த தீம் கொள் வெள்_எள் சுளகிடை உணங்கல் செவ்வி கொண்டு உடன் வேனில் கோங்கின் பூம் பொகுட்டு அன்ன குடந்தை அம் செவிய கோட்டு எலி ஆட்டக் கலி ஆர் வரகின் பிறங்கு பீள் ஒளிக்கும் வன்புல வைப்பினதுவே சென்று தின் பழம் பசீஇ பாண வாள் வடு விளங்கிய சென்னிச் செரு வெம் குருசில் ஓம்பும் ஊரே &70 - உறையூர் முதுகண்ணன் சாத்தனார் #1 குறுந்தொகை 133 குறிஞ்சி - உறையூர் முதுகண்ணன் சாத்தனார் புனவன் துடவைப் பொன் போல் சிறுதினை கிளி குறைத்து உண்ட கூழை இருவி பெரும் பெயல் உண்மையின் இலை ஒலித்து ஆங்கு என் உரம் செத்தும் உளெனே தோழி என் நலம் புதிது உண்ட புலம்பினானே #2 புறநானூறு 27 - உறையூர் முதுகண்ணன் சாத்தனார் **பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி சேற்று வளர் தாமரை பயந்த ஒண் கேழ் நூற்று இதழ் அலரின் நிறை கண்டு அன்ன வேற்றுமை இல்லா விழுத் திணைப் பிறந்து வீற்றிருந்தோரை எண்ணும் காலை உரையும் பாட்டும் உடையோர் சிலரே மரை இலை போல மாய்ந்திசினோர் பலரே புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி எய்துப என்ப தம் செய்வினை முடித்து என கேட்பல் எந்தை சேட்சென்னி நலங்கிள்ளி தேய்தல் உண்மையும் பெருகல் உண்மையும் மாய்தல் உண்மையும் பிறத்தல் உண்மையும் அறியாதோரையும் அறியக் காட்டித் திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி அருள வல்லை ஆகு-மதி அருள் இலர் கொடாஅமை வல்லர் ஆகுக கெடாஅத் துப்பின் நின் பகை எதிர்ந்தோரே #3 புறநானூறு 28 உறையூர் முதுகண்ணன் சாத்தனார் **பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி சிறப்பு இல் சிதடும் உறுப்பு இல் பிண்டமும் கூனும் குறளும் ஊமும் செவிடும் மாவும் மருளும் உளப்பட வாழ்நர்க்கு எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம் பேதைமை அல்லது ஊதியம் இல் என முன்னும் அறிந்தோர் கூறினர் இன்னும் அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது வட்ட வரிய செம் பொறிச் சேவல் ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் கானத்தோர் நின் தெவ்வர் நீயே புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து அகத்தோர் புய்த்து எறி கரும்பின் விடு கழை தாமரைப் பூம் போது சிதைய வீழ்ந்து எனக் கூத்தர் ஆடுகளம் கடுக்கும் அக நாட்டையே அதனால் அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் ஆற்றும் பெரும நின் செல்வம் ஆற்றாமை நின் போற்றாமையே #4 புறநானூறு 29 - உறையூர் முதுகண்ணன் சாத்தனார் **பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி அழல் புரிந்த அடர் தாமரை ஐது அடர்ந்த நூல் பெய்து புனை விளைப் பொலிந்த பொலன் நறும் தெரியல் பாறு மயிர் இரும் தலை பொலியச் சூடிப் பாண் முற்றுக நின் நாள்_மகிழ்_இருக்கை பாண் முற்று ஒழிந்த பின்றை மகளிர் தோள் முற்றுக நின் சாந்து புலர் அகலம் ஆங்க முனிவு இல் முற்றத்து இனிது முரசு இயம்பக் கொடியோர்த் தெறுதலும் செவ்வியோர்க்கு அளித்தலும் ஒடியா முறையின் மடிவு இலை ஆகி நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர் நெல் விளை கழனிப் படு புள் ஓப்புநர் ஒழி மடல் விறகின் கழு மீன் சுட்டு வெம் கள் தொலைச்சியும் அமையார் தெங்கின் இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நல் நாடு பெற்றனர் உவக்கும் நின் படை_கொள்_மாக்கள் பற்றா_மாக்களின் பரிவு முந்துறுத்து கூவை துற்ற நால் கால் பந்தர்ச் சிறு மனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு உதவி ஆற்றும் நண்பின் பண்பு உடை ஊழிற்று ஆக நின் செய்கை விழவின் கோடியர் நீர்மை போல முறைமுறை ஆடுநர் கழியும் இவ் உலகத்துக் கூடிய நகைப் புறன் ஆக நின் சுற்றம் இசைப் புறன் ஆக நீ ஓம்பிய பொருளே #5 புறநானூறு 30 - உறையூர் முதுகண்ணன் சாத்தனார் **பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி செம் ஞாயிற்றுச் செலவும் அ ஞாயிற்றுப் பரிப்பும் பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும் வளி திரிதரு திசையும் வறிது நிலைஇய காயமும் என்று இவை சென்று அளந்து அறிந்தார் போல என்றும் இனைத்து என்போரும் உளரே அனைத்தும் அறி அறிவு ஆகச் செறிவினை ஆகிக் களிறு கவுள் அடுத்த எறிகல் போல ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு மீப் பாய் களையாது மிசைப் பரம் தோண்டாது புகாஅர்ப் புகுந்த பெரும் கலம் தகாஅர் இடைப்புலப் பெரு வழிச் சொரியும் கடல் பல் தாரத்த நாடு கிழவோயே #6 புறநானூறு 325 - உறையூர் முதுகண்ணன் சாத்தனார் களிறு நீறு ஆடிய விடு நில மருங்கின் வம்பப் பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்து எனக் குழி கொள் சில் நீர் குராஅல் உண்டலின் செறு கிளைத்திட்ட கலுழ் கண் ஊறல் முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை முளவு_மாத் தொலைச்சிய முழுச்சொல் ஆடவர் உடும்பு இழுது அறுத்த ஒடும் காழ்ப் படலை சீறில் முன்றில் கூறுசெய்திடுமார் கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம் மறுகு உடன் கமழும் மதுகை மன்றத்து அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல் கயம் தலைச் சிறாஅர் கணை விளையாடும் அரு மிளை இருக்கையதுவே வென் வேல் வேந்து தலைவரினும் தாங்கும் தாங்கா ஈகை நெடுந்தகை ஊரே &71 - ஊட்டியார் #1 அகநானூறு 68 குறிஞ்சி - ஊட்டியார் அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பைத் தண் அயத்து அமன்ற கூதளம் குழைய இன் இசை அருவிப் பாடும் என்னதூஉம் கேட்டியோ வாழி வேண்டு அன்னை நம் படப்பை ஊட்டி அன்ன ஒண் தளிர்ச் செயலை ஓங்கு சினைத் தொடுத்த ஊசல் பாம்பு என முழுமுதல் துமிய உரும் எறிந்தன்றே பின்னும் கேட்டியோ எனவும் அஃது அறியாள் அன்னையும் கனை துயில் மடிந்தனள் அதன்தலை மன் உயிர் மடிந்தன்றால் பொழுதே காதலர் வருவர் ஆயின் பருவம் இது எனச் சுடர்ந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்த நம்-வயின் படர்ந்த உள்ளம் பழுது அன்று ஆக வந்தனர் வாழி தோழி அந்தரத்து இமிழ் பெயல் தலைஇய இனப் பல கொண்மூ தவிர்வு இல் வெள்ளம் தலைத்தலைச் சிறப்பக் கன்று கால் ஒய்யும் கடும் சுழி நீத்தம் புன் தலை மடப் பிடிப் பூசல் பல உடன் வெண் கோட்டு யானை விளி படத் துழவும் அகல் வாய்ப் பாந்தள் படாஅர்ப் பகலும் அஞ்சும் பனிக் கடும் சுரனே #2 அகநானூறு 388 குறிஞ்சி - ஊட்டியார் அம்ம வாழி தோழி நம் மலை அமை அறுத்து இயற்றிய வெம் வாய்த் தட்டையின் நறு விரை ஆரம் அற எறிந்து உழுத உளைக் குரல் சிறுதினை கவர்தலின் கிளை அமல் பெரு வரை அடுக்கத்துக் குரீஇ ஓப்பி ஓங்கு இரும் சிலம்பின் ஒள் இணர் நறு வீ வேங்கை அம் கவட்டிடை நிவந்த இதணத்துப் பொன் மருள் நறும் தாது ஊதும் தும்பி இன் இசை ஓரா இருந்தனம் ஆக மை ஈர் ஓதி மட நல்லீரே நொவ்வு இயல் பகழி பாய்ந்து எனப் புண் கூர்ந்து எவ்வமொடு வந்த உயர் மருப்பு ஒருத்தல் நும் புனத்துழிப் போகல் உறுமோ மற்று என சினவுக் கொள் ஞமலி செயிர்த்துப் புடை ஆடச் சொல்லிக் கழிந்த வல் வில் காளை சாந்து ஆர் அகலமும் தகையும் மிக நயந்து ஈங்கு நாம் உழக்கும் எவ்வம் உணராள் நன்னர் நெஞ்சமொடு மயங்கி வெறி என அன்னை தந்த முது வாய் வேலன் எம் இறை அணங்கலின் வந்தன்று இ நோய் தணி மருந்து அறிவல் என்னும் ஆயின் வினவின் எவனோ மற்றே கனல் சின மையல் வேழம் மெய் உளம் போக ஊட்டி அன்ன ஊன் புரள் அம்பொடு காட்டு மான் அடி வழி ஒற்றி வேட்டம் செல்லுமோ நும் இறை எனவே &72 - ஊண்பித்தையார் #1 குறுந்தொகை 232 பாலை - ஊண்பித்தையார் உள்ளார்-கொல்லோ தோழி உள்ளியும் வாய் புணர்வு இன்மையின் வாரார்-கொல்லோ மரல் புகா அருந்திய மா எருத்து இரலை உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யாஅ வரி நிழல் துஞ்சும் மா இரும் சோலை மலை இறந்தோரே &73 - ஊன் பொதி பசும் குடையார் #1 புறநானூறு 10 - ஊன் பொதி பசும் குடையார் **பாடப்பட்டோன் - சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி வழிபடுவோரை வல் அறிதீயே பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே நீ மெய் கண்ட தீமை காணின் ஒப்ப நாடி அத் தக ஒறுத்தி வந்து அடி பொருந்தி முந்தை நிற்பின் தண்டமும் தணிதி நீ பண்டையின் பெரிதே அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில் வருநர்க்கு வரையா வசை இல் வாழ்க்கை மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர் மலைத்தல் போகிய சிலைத் தார் மார்ப செய்து இரங்கா வினைச் சேண் விளங்கும் புகழ் நெய்தல் அம் கானல் நெடியோய் எய்த வந்தனம் யாம் ஏத்துகம் பலவே #2 புறநானூறு 203 - ஊன்பொதி பசுங்குடையார் **பாடப்பட்டோன்: சேரமான் பாமுளூர் எறிந்த **நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி கழிந்தது பொழிந்து என வான் கண்மாறினும் தொல்லது விளைந்து என நிலம் வளம் கரப்பினும் எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை இன்னும் தம் என எம்மனோர் இரப்பின் முன்னும் கொண்டிர் என நும்மனோர் மறுத்தல் இன்னாது அம்ம இயல் தேர் அண்ணல் இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும் உள்ளி வருநர் நசை இழப்போரே அனையையும் அல்லை நீயே ஒன்னார் ஆர் எயில் அவர் கட்டு ஆகவும் நுமது எனப் பாண்_கடன் இறுக்கும் வள்ளியோய் பூண் கடன் எந்தை நீ இரவலர் புரவே #3 புறநானூறு 370 - ஊன்பொதி பசுங்குடையார் **பாடப்பட்டோன்: சோழன் செரப்பாழி இறிந்த இளஞ்சேட் சென்னி வள்ளியோர்க் காணாது உய் திறன் உள்ளி நாரும் போழும் செய்து உண்டு ஓராங்குப் பசி தினத் திரங்கிய இரும் பேர் ஒக்கற்கு ஆர் பதம் கண் என மாதிரம் துழைஇ வேர் உழந்து உலறி மருங்கு செத்து ஒழிய வந்து அத்தக் குடிஞைத் துடி மருள் தீம் குரல் உழுஞ்சில் அம் கவட்டிடை இருந்த பருந்தின் பெடை பயிர் குரலொடு இசைக்கும் ஆங்கண் கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை வரி மரல் திரங்கிய கானம் பிற்படப் பழு மரம் உள்ளிய பறவை போல ஒண் படை மாரி வீழ் கனி பெய்து எனத் துவைத்து எழு குருதி நில மிசைப் பரப்ப விளைந்த செழும் குரல் அரிந்து கால் குவித்துப் படு பிணப் பல் போர்பு அழிய வாங்கி எருது களிறு ஆக வாள் மடல் ஓச்சி அதரி திரித்த ஆள் உகு கடாவின் அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி வெம் திறல் வியன் களம் பொலிக என்று ஏத்தி இருப்பு முகம் செறித்த ஏந்து எழில் மருப்பின் வரை மருள் முகவைக்கு வந்தனென் பெரும வடி நவில் எஃகம் பாய்ந்து எனக் கிடந்த தொடி உடைத் தடக் கை ஓச்சி வெருவார் இனத்து அடி விராய வரிக் குடர் அடைச்சி அழு குரல் பேய்_மகள் அயரக் கழுகொடு செம் செவி எருவை திரிதரும் அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே #4 புறநானூறு 378 ஊன்பொதி பசுங்குடையார் **பாடப்பட்டோன்: சோழன் செரப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி தென் பரதவர் மிடல் சாய வட வடுகர் வாள் ஓட்டிய தொடை அமை கண்ணித் திருந்து வேல் தடக் கை கடு மா கடைஇய விடு பரி வடிம்பின் நல் தார்க் கள்ளின் சோழன் கோயில் புதுப் பிறை அன்ன சுதை செய் மாடத்துப் பனிக் கயத்து அன்ன நீள் நகர் நின்று என் அரிக் கூடு மாக் கிணை இரிய ஒற்றி எஞ்சா மரபின் வஞ்சி பாட எமக்கு என வகுத்த அல்ல மிகப் பல மேம்படு சிறப்பின் அரும் கல வெறுக்கை தாங்காது பொழிதந்தோனே அது கண்டு இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல் விரல் செறி மரபின செவித் தொடக்குநரும் செவித் தொடர் மரபின விரல் செறிக்குநரும் அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும் மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும் கடும் தெறல் இராமன் உடன் புணர் சீதையை வலித் தகை அரக்கன் வௌவிய ஞான்றை நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் செம் முகப் பெரும் கிளை இழை பொலிந்து ஆஅங்கு அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே இரும் கிளைத் தலைமை எய்தி அரும் படர் எவ்வம் உழந்ததன் தலையே &74 - எயிற்றியனார் #1 குறுந்தொகை 286 குறிஞ்சி - எயிற்றியனார் உள்ளிக் காண்பென் போல்வல் முள் எயிற்று அமிழ்தம் ஊறும் செம் வாய் கமழ் அகில் ஆரம் நாறும் அறல் போல் கூந்தல் பேர் அமர் மழைக் கண் கொடிச்சி மூரல் முறுவலொடு மதைஇய நோக்கே &75 - எயினந்தையார் #1 நற்றிணை 43 பாலை - எயினந்தையார் துகில் விரித்து அன்ன வெயில் அவிர் உருப்பின் என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன் ஓய் பசிச் செந்நாய் உயங்கு மரை தொலைச்சி ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு அரும் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் வெம்மை ஆரிடை இறத்தல் நுமக்கே மெய்மலி உவகை ஆகின்று இவட்கே அஞ்சல் என்ற இறை கைவிட்டு எனப் பைம் கண் யானை வேந்து புறத்து இறுத்தலின் களையுநர்க் காணாது கலங்கிய உடை மதில் ஓர் எயில் மன்னன் போல அழிவு வந்தன்றால் ஒழிதல் கேட்டே &76 - எருமை வெளியனார் #1 அகநானூறு 73 பாலை - எருமை வெளியனார் பின்னொடு முடித்த மண்ணா முச்சி நெய் கனி வீழ் குழல் அகப்படத் தைஇ வெருகு இருள் நோக்கி அன்ன கதிர் விடுபு ஒரு காழ் முத்தம் இடை முலை விளங்க அணங்குறு கற்பொடு மடம் கொளச் சாஅய் நின் நோய்த் தலையையும் அல்லை தெறுவர என் ஆகுவள்-கொல் அளியள் தான் என என் அழிபு இரங்கும் நின்னொடு யானும் ஆறு அன்று என்னா வேறு அல் காட்சி இருவேம் நம் படர் தீர வருவது காணிய வம்மோ காதல் அம் தோழி கொடி பிணங்கு அரில இருள் கொள் நாகம் மடி_பதம் பார்க்கும் வய_மான் துப்பின் ஏனல் அம் சிறுதினைச் சேணோன் கையதைப் பிடிக் கை அமைந்த கனல் வாய்க் கொள்ளி விடு பொறிச் சுடரின் மின்னி அவர் சென்ற தேஎத்து நின்றதால் மழையே #2 புறநானூறு 273 - எருமை வெளியனார் மா வாராதே மா வாராதே எல்லார் மாவும் வந்தன எம் இல் புல் உளைக் குடுமிப் புதல்வன் தந்த செல்வன் ஊரும் மா வாராதே இரு பேர் யாற்ற ஒரு பெரும் கூடல் விலங்கு இடு பெரு மரம் போல உலந்தன்று-கொல் அவன் மலைந்த மாவே #3 புறநானூறு 303 - எருமை வெளியனார் நிலம் பிறக்கிடுவது போலக் குளம்பு கடையூஉ உள்ளம் ஒழிக்கும் கொட்பின் மான் மேல் எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த வெம் திறல் எஃகம் நெஞ்சு வடு விளைப்ப ஆட்டிக் காணிய வருமே நெருநை உரை சால் சிறப்பின் வேந்தர் முன்னர்க் கரை பொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து அவர் கயம் தலை மடப் பிடி புலம்ப இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே &77 - எருமை வெளியனார் மகனார் கடலனார் #1 அகநானூறு 72 குறிஞ்சி - எருமை வெளியனார் மகனார் கடலனார் இருள் கிழிப்பது போல் மின்னி வானம் துளி தலைக்கொண்ட நளி பெயல் நடுநாள் மின்மினி மொய்த்த முரவு வாய்ப் புற்றம் பொன் எறி பிதிரின் சுடர வாங்கிக் குரும்பி கெண்டும் பெரும் கை ஏற்றை இரும்பு செய் கொல் எனத் தோன்றும் ஆங்கண் ஆறே அரு மரபினவே யாறே சுட்டுநர்ப் பனிக்கும் சூர் உடை முதலைய கழை மாய் நீத்தம் கல் பொருது இரங்க அஞ்சுவம் தமியம் என்னாது மஞ்சு சுமந்து ஆடு கழை நரலும் அணங்கு உடைக் கவாஅன் ஈர் உயிர் பிணவின் வயவுப் பசி களைஇய இரும் களிறு அட்ட பெரும் சின உழுவை நாம நல்_அராக் கதிர்பட உமிழ்ந்த மேய் மணி விளக்கின் புலர ஈர்க்கும் வாள் நடந்து அன்ன வழக்கு அரும் கவலை உள்ளுநர் உட்கும் கல் அடர்ச் சிறு நெறி அருள் புரி நெஞ்சமொடு எஃகு துணை ஆக வந்தோன் கொடியனும் அல்லன் தந்த நீ தவறுடையையும் அல்லை நின்-வயின் ஆனா அரும் படர் செய்த யானே தோழி தவறுடையேனே &78 - எழூஉப் பன்றி நாகன் குமரனார் #1 அகநானூறு 138 குறிஞ்சி - எழூஉப் பன்றி நாகன் குமரனார் இகுளை கேட்டிசின் காதல் அம் தோழி குவளை உண்கண் தெண் பனி மல்க வறிது யான் வருந்திய செல்லற்கு அன்னை பிறிது ஒன்று கடுத்தனள் ஆகி வேம்பின் வெறி கொள் பாசிலை நீலமொடு சூடி உடலுநர்க் கடந்த கடல் அம் தானை திருந்து இலை நெடு வேல் தென்னவன் பொதியில் அரும் சிமை இழிதரும் ஆர்த்து வரல் அருவியின் ததும்பு சீர் இன்னியம் கறங்கக் கைதொழுது உரு கெழு சிறப்பின் முருகு மனைத் தரீஇக் கடம்பும் களிறும் பாடி நுடங்குபு தோடும் தொடலையும் கைக்கொண்டு அல்கலும் ஆடினர் ஆதல் நன்றோ நீடு நின்னொடு தெளித்த நல் மலை நாடன் குறி வரல் அரைநாள் குன்றத்து உச்சி நெறி கெட வீழ்ந்த துன் அரும் கூர் இருள் திரு மணி உமிழ்ந்த நாகம் காந்தள் கொழு மடல் புதுப் பூ ஊதும் தும்பி நல் நிறம் மருளும் அரு விடர் இன்னா நீள் இடை நினையும் என் நெஞ்சே #2 அகநானூறு 240 நெய்தல் - எழுஉப்பன்றி நாகன் குமரனார் செவ் வீ ஞாழல் கரும் கோட்டு இரும் சினைத் தனிப் பார்ப்பு உள்ளிய தண் பறை நாரை மணிப் பூ நெய்தல் மாக் கழி நிவப்ப இனிப் புலம்பின்றே கானலும் நளி கடல் திரைச் சுரம் உழந்த திண் திமில் விளக்கில் பல் மீன் கூட்டம் என் ஐயர் காட்டிய எந்தையும் செல்லுமார் இரவே அந்தில் அணங்கு உடைப் பனித் துறை கைதொழுது ஏத்தி யாயும் ஆயமோடு அயரும் நீயும் தேம் பாய் ஓதி திரு நுதல் நீவிக் கோங்கு முகைத்து அன்ன குவி முலை ஆகத்து இன் துயில் அமர்ந்தனை ஆயின் வண்டு பட விரிந்த செருந்தி வெண் மணல் முடுக்கர்ப் பூ வேய் புன்னை அம் தண் பொழில் வாவே தெய்ய மணந்தனை செலற்கே &79 - ஐயாதி சிறுவெண் தேரையார் #1 புறநானூறு 363 - ஐயாதி சிறுவெண் தேரையார் இரும் கடல் உடுத்த இப் பெரும் கண் மா நிலம் உடை இலை நடுவணது இடை பிறர்க்கு இன்றித் தாமே ஆண்ட ஏமம் காவலர் இடு திரை மணலினும் பலரே சுடு பிணக் காடு பதி ஆகப் போகித் தத்தம் நாடு பிறர் கொளச் சென்று மாய்ந்தனரே அதனால் நீயும் கேள்-மதி அத்தை வீயாது உடம்பொடு நின்ற உயிரும் இல்லை மடங்கல் உண்மை மாயமோ அன்றே கள்ளி ஏய்ந்த முள்ளி அம் புறங்காட்டு வெள்ளில் போகிய வியலுள் ஆங்கண் உப்பு இலாஅ அவிப் புழுக்கல் கைக்கொண்டு பிறக்கு நோக்காது இழிபிறப்பினோன் ஈயப் பெற்று நிலம் கலன் ஆக இலங்கு பலி மிசையும் இன்னா வைகல் வாரா முன்னே செய் நீ முன்னிய வினையே முந்நீர் வரைப்பகம் முழுது உடன் துறந்தே &80 - ஐயூர் முடவனார் #1 அகநானூறு 216 மருதம் - ஐயூர் முடவனார் நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண்_மகள் தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல் நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு வஞ்சி விறகின் சுட்டு வாய் உறுக்கும் தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப் பெட்டாங்கு மொழிப என்ப அவ் அலர் பட்டனம் ஆயின் இனி எவன் ஆகியர் கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும் கழனி உழவர் குற்ற குவளையும் கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு பல் இளம் கோசர் கண்ணி அயரும் மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான் எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல் ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய பெரும் களிற்று எவ்வம் போல வருந்துப மாது அவர் சேரி யாம் செலினே #2 குறுந்தொகை 123 நெய்தல் - ஐயூர் முடவன் இருள் திணிந்து அன்ன ஈர்ம் தண் கொழு நிழல் நிலவுக் குவித்து அன்ன வெண் மணல் ஒரு சிறைக் கரும் கோட்டுப் புன்னைப் பூம் பொழில் புலம்ப இன்னும் வாரார் வரூஉம் பல் மீன் வேட்டத்து என் ஐயர் திமிலே #3 குறுந்தொகை 322 குறிஞ்சி - ஐயூர் முடவனார் அமர்க் கண் ஆமான் அம் செவிக் குழவி கானவர் எடுப்ப வெரீஇ இனம் தீர்ந்து கானம் நண்ணிய சிறுகுடிப் பட்டு என இளையர் ஓம்ப மரீஇ அவண் நயந்து மனை உறை வாழ்க்கை வல்லி ஆங்கு மருவின் இனியவும் உளவோ செல்வாம் தோழி ஒல்வாங்கு நடந்தே #4 நற்றிணை 206 குறிஞ்சி - ஐயூர் முடவனார் துய்த் தலைப் புனிற்றுக் குரல் பால் வார்பு இறைஞ்சித் தோடு அலைக் கொண்டன ஏனல் என்று துறு கல் மீமிசைக் குறுவன குழீஇச் செவ் வாய்ப் பாசினம் கவரும் என்று அவ் வாய்த் தட்டையும் புடைத்தனை கவணையும் தொடுக்க என எந்தை வந்து உரைத்தனன் ஆக அன்னையும் நல் நாள் வேங்கையும் மலர்கமா இனி என என் முகம் நோக்கினள் எவன்-கொல் தோழி செல்வாள் என்று-கொல் செறிப்பல் என்று-கொல் கல் கெழு நாடன் கேண்மை அறிந்தனள்-கொல் அஃது அறிகலென் யானே #5 நற்றிணை 334 குறிஞ்சி - ஐயூர் முடவனார் கரு விரல் மந்திச் செம் முகப் பெரும் கிளை பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி ஓங்கு கழை ஊசல் தூங்கி வேங்கை வெற்பு அணி நறு வீ கல் சுனை உறைப்ப கலையொடு திளைக்கும் வரையக நாடன் மாரி நின்ற ஆர் இருள் நடுநாள் அருவி அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி மின்னு வசி விளக்கத்து வரும் எனின் என்னோ தோழி நம் இன் உயிர் நிலையே #6 புறநானூறு 51 - ஐயூர் முடவனார் - ஐயூர் கிழார் எனவும் பாடம் **பாடப்பட்டோன்: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி நீர் மிகின் சிறையும் இல்லை தீ மிகின் மன் உயிர் நிழற்றும் நிழலும் இல்லை வளி மிகின் வலியும் இல்லை ஒளி மிக்கு அவற்று ஓர் அன்ன சினப் போர் வழுதி தண் தமிழ் பொது எனப் பொறாஅன் போர் எதிர்ந்து கொண்டி வேண்டுவன் ஆயின் கொள்க என கொடுத்த மன்னர் நடுக்கு அற்றனரே அளியரோ அளியர் அவன் அளி இழந்தோரே நுண் பல சிதலை அரிது முயன்று எடுத்த செம் புற்று ஈயல் போல ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோரே #7 புறநானூறு 228 - ஐயூர் முடவனார். **பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் கலம் செய் கோவே கலம் செய் கோவே இருள் திணிந்து அன்ன குரூஉத் திரள் பரூஉப் புகை அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை நனம் தலை மூதூர்க் கலம் செய் கோவே அளியை நீயே யாங்கு ஆகுவை-கொல் நில வரை சூட்டிய நீள் நெடும் தானைப் புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்து அன்ன சேண் விளங்கு சிறப்பின் செம்பியர் மருகன் கொடி நுடங்கு யானை நெடுமாவளவன் தேவர் உலகம் எய்தினன் ஆதலின் அன்னோர் கவிக்கும் கண் அகன் தாழி வனைதல் வேட்டனை ஆயின் எனையதூஉம் இரு நிலம் திகிரியாப் பெரு மலை மண்ணா வனைதல் ஒல்லுமோ நினக்கே #8 புறநானூறு 314 - ஐயூர் முடவனார் மனைக்கு விளக்கு ஆகிய வாள்_நுதல் கணவன் முனைக்கு வரம்பு ஆகிய வென் வேல் நெடுந்தகை நடுகல் பிறங்கிய உவல் இடு பறந்தலைப் புன் காழ் நெல்லி வன்புலச் சீறூர் குடியும்-மன்னும் தானே கொடி எடுத்து நிறை அழிந்து எழுதரு தானைக்குச் சிறையும் தானே தன் இறை விழுமுறினே #9 புறநானூறு 399 - ஐயூர் முடவனார் **பாடப்பட்டோன்: தாமான் தோன்றிக்கோன் அடு_மகள் முகந்த அளவா வெண்ணெல் தொடி மாண் உலக்கைப் பரூஉக் குற்று அரிசி காடி வெள் உலைக் கொளீஇ நீழல் ஓங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி மோட்டு இரு வராஅல் கோட்டு_மீன் கொழும் குறை செறுவின் வள்ளை சிறு கொடிப் பாகல் பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்து அன்ன மெய் களைந்து இனனொடு விரைஇ மூழ்ப்பப் பெய்த முழு அவிழ்ப் புழுக்கல் அழிகளின் படுநர் களி அட வைகின் பழம் சோறு அயிலும் முழங்கு நீர்ப் படப்பைக் காவிரிக் கிழவன் மாயா நல் இசைக் கிள்ளிவளவன் உள்ளி அவன் படர்தும் செல்லேன் செல்லேன் பிறர் முகம் நோக்கேன் நெடும் கழைத் தூண்டில் விடு மீன் நொடுத்துக் கிணை_மகள் அட்ட பாவல் புளிங்கூழ் பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன் அழிவு கொண்டு ஒரு சிறை இருந்தேன் என்னே இனியே அறவர் அறவன் மறவர் மறவன் மள்ளர் மள்ளன் தொல்லோர் மருகன் இசையின் கொண்டான் நசை அமுது உண்க என மீப் படர்ந்து இறந்து வன் கோல் மண்ணி வள் பரிந்து கிடந்த என் தெண் கண் மாக் கிணை விசிப்புறுத்து அமைந்த புதுக் காழ்ப் போர்வை அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்துக் கடியும் உணவு என்ன கடவுட்கும் தொடேன் கடும் தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவல் பகடே அத்தை யான் வேண்டி வந்தது என ஒன்று யான் பெட்டா அளவை அன்றே ஆன்று விட்டனன் அத்தை விசும்பின் மீன் பூத்து அன்ன உருவப் பல் நிரை ஊர்தியொடு நல்கியோனே சீர் கொள இழுமென இழிதரும் அருவி வான் தோய் உயர் சிமைத் தோன்றிக் கோவே &81 - ஐயூர் மூலங்கிழார் #1 புறநானூறு 21 - ஐயூர் மூலங்கிழார் **பாடப்பட்டோன்: கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி புல வரை இறந்த புகழ் சால் தோன்றல் நில வரை இறந்த குண்டு கண் அகழி வான் தோய்வு அன்ன புரிசை விசும்பின் மீன் பூத்து அன்ன உருவ ஞாயில் கதிர் நுழைகல்லா மரம் பயில் கடி மிளை அரும் குறும்பு உடுத்த கானப்பேர் எயில் கரும் கைக் கொல்லன் செம் தீ மாட்டிய இரும்பு உண் நீரினும் மீட்டற்கு அரிது என வேங்கைமார்பன் இரங்க வைகலும் ஆடு கொளக் குழைந்த தும்பைப் புலவர் பாடு துறை முற்றிய கொற்ற வேந்தே இகழுநர் இசையொடு மாயப் புகழொடு விளங்கிப் பூக்க நின் வேலே &82 - ஒக்கூர் மாசாத்தனார் #1 அகநானூறு 14 முல்லை - ஒக்கூர் மாசாத்தனார் அரக்கத்து அன்ன செந்நிலப் பெரு வழி காயாம் செம்மல் தாஅய்ப் பல உடன் ஈயல் மூதாய் வரிப்பப் பவளமொடு மணி மிடைந்து அன்ன குன்றம் கவைஇய அம் காட்டு ஆர் இடை மடப் பிணை தழீஇ திரி மருப்பு இரலை புல் அருந்து உகள முல்லை வியன் புலம் பரப்பிக் கோவலர் குறும்பொறை மருங்கின் நறும் பூ அயரப் பதவு மேயல் அருந்து மதவு நடை நல் ஆன் வீங்கு மாண் செருத்தல் தீம் பால் பிலிற்ற கன்று பயிர் குரல மன்று நிறை புகுதரும் மாலையும் உள்ளார் ஆயின் காலை யாங்கு ஆகுவம்-கொல் பாண என்ற மனையோள் சொல் எதிர் சொல்லல் செல்லேன் செவ்வழி நல் யாழ் இசையினென் பையென கடவுள் வாழ்த்திப் பையுள் மெய் நிறுத்து அவர் திறம் செல்வேன் கண்டனென் யானே விடு விசைக் குதிரை விலங்கு பரி முடுகக் கல் பொருது இரங்கும் பல் ஆர் நேமிக் கார் மழை முழக்கு இசை கடுக்கும் முனை நல் ஊரன் புனை நெடும் தேரே #2 புறநானூறு 248 - ஒக்கூர் மாசாத்தனார் அளிய தாமே சிறு வெள்_ஆம்பல் இளையம் ஆகத் தழை ஆயினவே இனியே பெரு வளக் கொழுநன் மாய்ந்து எனப் பொழுது மறுத்து இன்னா வைகல் உண்ணும் அல்லிப் படூஉம் புல் ஆயினவே &83 - ஒக்கூர் மாசாத்தியார் #1 அகநானூறு 324 முல்லை - ஒக்கூர் மாசாத்தியார் விருந்தும் பெறுகுநள் போலும் திருந்து இழைத் தட மென் பணைத் தோள் மட மொழி அரிவை தளிர் இயல் கிள்ளை இனிதினின் எடுத்த வளராப் பிள்ளைத் தூவி அன்ன வார் பெயல் வளர்த்த பைம் பயிர்ப் புறவில் பறைக் கண் அன்ன நிறைச் சுனை-தோறும் துளி படு மொக்குள் துள்ளுவன சாலத் தொளி பொரு பொகுட்டுத் தோன்றுவன மாய வளி சினை உதிர்த்தலின் வெறி கொள்பு தாஅய்ச் சிரல் சிறகு ஏய்ப்ப அறல்-கண் வரித்த வண்டு உண் நறு வீ துமித்த நேமி தண் நில மருங்கில் போழ்ந்த வழியுள் நிரை செல் பாம்பின் விரைபு நீர் முடுகச் செல்லும் நெடுந்தகை தேரே முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே #2 அகநானூறு 384 முல்லை - ஒக்கூர் மாசாத்தியார் இருந்த வேந்தன் அரும் தொழில் முடித்து எனப் புரிந்த காதலொடு பெரும் தேர் யானும் ஏறியது அறிந்தன்று அல்லது வந்த ஆறு நனி அறிந்தன்றோ இலெனே தாஅய் முயல் பறழ் உகளும் முல்லை அம் புறவில் கவைக் கதிர் வரகின் சீறூர் ஆங்கண் மெல் இயல் அரிவை இல் வயின் நிறீஇ இழி-மின் என்ற நின் மொழி மருண்டிசினே வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ உரை-மதி வாழியோ வலவ எனத் தன் வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி மனைக் கொண்டு புக்கனன் நெடுந்தகை விருந்து ஏர் பெற்றனள் திருந்து_இழையோளே #3 குறுந்தொகை 126 முல்லை - ஒக்கூர் மாசாத்தியார் இளமை பாரார் வளம் நசைஇச் சென்றோர் இவணும் வாரார் எவணரோ எனப் பெயல் புறந்தந்த பூம் கொடி முல்லைத் தொகு முகை இலங்கு எயிறு ஆக நகுமே தோழி நறும் தண் காரே #4 குறுந்தொகை 139 மருதம் - ஒக்கூர் மாசாத்தியார் மனை உறை கோழிக் குறும் கால் பேடை வேலி வெருகு இனம் மாலை உற்று எனப் புகும் இடன் அறியாது தொகுபு உடன் குழீஇய பைதல் பிள்ளைக் கிளை பயிர்ந்து ஆஅங்கு இன்னாது இசைக்கும் அம்பலொடு வாரல் வாழியர் ஐய எம் தெருவே #5 குறுந்தொகை 186 முல்லை - ஒக்கூர் மாசாத்தியார் ஆர் கலி ஏற்றொடு கார் தலைமணந்த கொல்லைப் புனத்த முல்லை மென் கொடி எயிறு என முகையும் நாடற்குத் துயில் துறந்தனவால் தோழி என் கண்ணே #6 குறுந்தொகை 220 முல்லை - ஒக்கூர் மாசாத்தியார் பழ மழைக் கலித்த புதுப் புன வரகின் இரலை மேய்ந்த குறைத் தலைப் பாவை இருவி சேர் மருங்கில் பூத்த முல்லை வெருகு சிரித்து அன்ன பசு வீ மென் பிணிக் குறு முகை அவிழ்ந்த நறு மலர்ப் புறவின் வண்டு சூழ் மாலையும் வாரார் கண்டிசின் தோழி பொருள் பிரிந்தோரே #7 குறுந்தொகை 275 முல்லை - ஒக்கூர் மாசாத்தியார் முல்லை ஊர்ந்த கல் உயர்பு ஏறிக் கண்டனம் வருகம் சென்மோ தோழி எல் ஊர்ச் சேர்தரும் ஏறு உடை இனத்துப் புல் ஆர் நல் ஆன் பூண் மணி-கொல்லோ செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு வல் வில் இளையர் பக்கம் போற்ற ஈர் மணல் காட்டாறு வரூஉம் தேர் மணி-கொல் ஆண்டு இயம்பிய உளவே #8 புறநானூறு 279 - ஒக்கூர் மாசாத்தியார் கெடுக சிந்தை கடிது இவள் துணிவே மூதின் மகளிர் ஆதல் தகுமே மேல்_நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை யானை எறிந்து களத்து ஒழிந்தனனே நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன் பெரு நிரை விலங்கி ஆண்டுப் பட்டனனே இன்றும் செருப் பறை கேட்டு விருப்புற்று மயங்கி வேல் கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇப் பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி ஒரு மகன் அல்லது இல்லோள் செருமுகம் நோக்கிச் செல்க என விடுமே &84 - ஒருசிறைப்பெரியனார் #1 குறுந்தொகை 272 குறிஞ்சி - ஒருசிறைப்பெரியனார் தீண்டலும் இயைவது-கொல்லோ மாண்ட வில் உடை வீளையர் கல் இடுபு எடுத்த நனம் தலைக் கானத்து இனம் தலைப்பிரிந்த புன்கண் மட மான் நேர்படத் தன் ஐயர் சிலை மாண் கடு விசைக் கலை நிறத்து அழுத்திக் குருதியொடு பறித்த செம் கோல் வாளி மாறு கொண்டு அன்ன உண்கண் நாறு இரும் கூந்தல் கொடிச்சி தோளே #2 நற்றிணை 121 முல்லை - ஒரு சிறைப்பெரியனார் விதையர் கொன்ற முதையல் பூழி இடு முறை நிரப்பிய ஈர் இலை வரகின் கவைக் கதிர் கறித்த காமர் மடப் பிணை அரலை அம் காட்டு இரலையொடு வதியும் புறவிற்று அம்ம நீ நயந்தோள் ஊரே எல்லி விட்டு அன்று வேந்து எனச் சொல்லுபு பரியல் வாழ்க நின் கண்ணி காண்வர விரி உளைப் பொலிந்த வீங்கு செலல் கலிமா வண் பரி தயங்க எழீஇத் தண் பெயல் கான்யாற்று இகு மணல் கரை பிறக்கு ஒழிய எல் விருந்து அயரும் மனைவி மெல் இறைப் பணைத் தோள் துயில் அமர்வோயே #3 புறநானூறு 137 - ஒருசிறைப் பெரியனார் **பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன் இரங்கு முரசின் இனம் சால் யானை முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை இன்னும் ஓர் யான் அவா அறியேனே நீயே முன் யான் அறியுமோனே துவன்றிய கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது கழைக் கரும்பின் ஒலிக்குந்து கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும் கண் அன்ன மலர் பூக்குந்து கரும் கால் வேங்கை மலரின் நாளும் பொன் அன்ன வீ சுமந்து மணி அன்ன நீர் கடல் படரும் செவ் வரைப் படப்பை நாஞ்சில் பொருந சிறு வெள் அருவிப் பெரும் கல் நாடனை நீ வாழியர் நின் தந்தை தாய் வாழியர் நின் பயந்திசினோரே &85 - ஒரூஉத்தனார் #1 புறநானூறு 275 - ஒரூஉத்தனார் கோட்டம் கண்ணியும் கொடும் திரை ஆடையும் வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும் ஒத்தன்று-மாதோ இவற்கே செற்றிய திணி நிலை அலறக் கூவை போழ்ந்து தன் வடி மாண் எஃகம் கடி முகத்து ஏந்தி ஓம்பு-மின் ஓம்பு-மின் இவண் என ஓம்பாது தொடர் கொள் யானையின் குடர் கால் தட்பக் கன்று அமர் கறவை மான முன் சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வருமே &86 - ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் #1 அகநானூறு 25 பாலை - ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் நெடும் கரைக் கான்யாற்றுக் கடும் புனல் சாஅய் அவிர் அறல் கொண்ட விரவு மணல் அகன் துறைத் தண் கயம் நண்ணிய பொழில்-தொறும் காஞ்சிப் பைம் தாது அணிந்த போது மலி எக்கர் வதுவை நாற்றம் புதுவது கஞல மா நனை கொழுதிய மணி நிற இரும் குயில் படு நா விளியால் நடு நின்று அல்கலும் உரைப்ப போல ஊழ் கொள்பு கூவ இனச் சிதர் உகுத்த இலவத்து ஆங்கண் சினைப் பூம் கோங்கின் நுண் தாது பகர்நர் பவளச் செப்பில் பொன் சொரிந்து அன்ன இகழுநர் இகழா இளநாள் அமையம் செய்தோர்-மன்ற குறி என நீ நின் பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப வாராமையின் புலந்த நெஞ்சமொடு நோவல் குறுமகள் நோயியர் என் உயிர் என மெல்லிய இனிய கூறி வல்லே வருவர் வாழி தோழி பொருநர் செல் சமம் கடந்த வில் கெழு தடக் கைப் பொதியின் செல்வன் பொலம் தேர்த் திதியன் இன் இசை இயத்தின் கறங்கும் கல் மிசை அருவிய காடு இறந்தோரே #2 புறநானூறு 71 - ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் மடங்கலின் சினைஇ மடங்கா உள்ளத்து அடங்காத் தானை வேந்தர் உடங்கு இயைந்து என்னொடு பொருதும் என்ப அவரை ஆர் அமர் அலறத் தாக்கித் தேரோடு அவர்ப் புறங்காணேன் ஆயின் சிறந்த பேர் அமர் உண்கண் இவளினும் பிரிக அறன் நிலை திரியா அன்பின் அவையத்துத் திறன் இல் ஒருவனை நாட்டி முறை திரிந்து மெலி_கோல் செய்தேன் ஆகுக மலி புகழ் வையை சூழ்ந்த வளம் கெழு வைப்பின் பொய்யா யாணர் மையல் கோமான் மாவனும் மன் எயில் ஆந்தையும் உரை சால் அந்துவன்சாத்தனும் ஆதன்அழிசியும் வெம் சின இயக்கனும் உளப்படப் பிறரும் கண் போல் நண்பின் கேளிரொடு கலந்த இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ மன்பதை காக்கும் நீள் குடிச் சிறந்த தென்புலம் காவலின் ஒரீஇப் பிறர் வன்புலம் காவலின் மாறி யான் பிறக்கே &87 - (கருவூர்) ஓதஞானியார் #1 குறுந்தொகை 71 பாலை - (கருவூர்) ஓதஞானியார் மருந்து எனின் மருந்தே வைப்பு எனின் வைப்பே அரும்பிய சுணங்கின் அம் பகட்டு இள முலை பெரும் தோள் நுணுகிய நுசுப்பின் கல் கெழு கானவர் நல்குறு மகளே #2 குறுந்தொகை 227 நெய்தல் - ஓதஞானியார் பூண் வனைந்து அன்ன பொலம் சூட்டு நேமி வாள் முகம் துமிப்ப வள் இதழ் குறைந்த கூழை நெய்தலும் உடைத்து இவண் தேரோன் போகிய கானலானே &88 - ஓதலாந்தையார் ** ஐங்குறுநூறு - நான்காம் நூறு - பாலை - ஓதலாந்தையார் **31 செலவு அழுங்குவித்த பத்து #1 ஐங்குறுநூறு 301 - ஓதலாந்தையார் மால் வெள்ளோத்திரத்து மை இல் வால் இணர் அரும் சுரம் செல்வோர் சென்னிக் கூட்டும் அவ் வரை இறக்குவை ஆயின் மை வரை நாட வருந்துவள் பெரிதே #2 ஐங்குறுநூறு 302 - ஓதலாந்தையார் அரும் பொருள் செய்வினை தப்பற்கும் உரித்தே பெரும் தோள் அரிவை தகைத்தற்கும் உரியள் செல்லாய் ஆயினோ நன்றே மெல்லம்புலம்ப இவள் அழப் பிரிந்தே #3 ஐங்குறுநூறு 303 - ஓதலாந்தையார் புதுக் கலத்து அன்ன கனிய ஆலம் போகில்-தனைத் தடுக்கும் வேனில் அரும் சுரம் தண்ணிய இனிய ஆக எம்மொடும் சென்மோ விடலை நீயே #4 ஐங்குறுநூறு 304 - ஓதலாந்தையார் கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய ஆன் நீர்ப் பத்தல் யானை வௌவும் கல் அதர்க் கவலை செல்லின் மெல் இயல் புயல் நெடும் கூந்தல் புலம்பும் வய_மான் தோன்றல் வல்லாதீமே #5 ஐங்குறுநூறு 305 - ஓதலாந்தையார் களிறு பிடி தழீஇப் பிற புலம் படராது பசி தின வருத்தம் பைது அறு குன்றத்துச் சுடர் தொடிக் குறுமகள் இனைய எனைப் பயம் செய்யுமோ விடலை நின் செலவே #6 ஐங்குறுநூறு 306 - ஓதலாந்தையார் வெல் போர்க் குருசில் நீ வியன் சுரம் இறப்பின் பல் காழ் அல்குல் அவ் வரி வாடக் குழலினும் இனைகுவள் பெரிதே விழவு ஒலி கூந்தல் மாஅயோளே #7 ஐங்குறுநூறு 307 - ஓதலாந்தையார் ஞெலி கழை முழங்கு அழல் வய_மா வெரூஉம் குன்று உடை அரும் சுரம் செலவு அயர்ந்தனையே நன்று இல கொண்க நின் பொருளே பாவை அன்ன நின் துணை பிரிந்து வருமே #8 ஐங்குறுநூறு 308 - ஓதலாந்தையார் பல் இரும் கூந்தல் மெல்லியலோள்-வயின் பிரியாய் ஆயினும் நன்றே விரி இணர்க் கால் எறுழ் ஒள் வீ தாஅய முருகு அமர் மா மலை பிரிந்து எனப் பிரிமே #9 ஐங்குறுநூறு 309 - ஓதலாந்தையார் வேனில் திங்கள் வெம் சுரம் இறந்து செலவு அயர்ந்தனையால் நீயே நன்றும் நின் நயந்து உறைவி கடும் சூல் சிறுவன் முறுவல் காண்டலின் இனிதோ இறு வரை நாட நீ இறந்து செய் பொருளே #10 ஐங்குறுநூறு 310 - ஓதலாந்தையார் பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல் இலங்கு வளை மென் தோள் இழை நிலை நெகிழப் பிரிதல் வல்லுவை ஆயின் அரிதே விடலை இவள் ஆய் நுதல் கவினே **32 செலவுப் பத்து #11 ஐங்குறுநூறு 311 - ஓதலாந்தையார் வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும் ஆர் இடைச் செல்வோர் ஆறு நனி வெரூஉம் காடு இறந்தனரே காதலர் நீடுவர்-கொல் என நினையும் என் நெஞ்சே #12 ஐங்குறுநூறு 312 - ஓதலாந்தையார் அறம் சாலியரோ அறம் சாலியரோ வறன் உண்டாயினும் அறம் சாலியரோ வாள் வனப்புற்ற அருவிக் கோள் வல் என் ஐயை மறைத்த குன்றே #13 ஐங்குறுநூறு 313 - ஓதலாந்தையார் தெறுவது அம்ம நும் மகள் விருப்பே உறு துயர் அவலமொடு உயிர் செலச் சாஅய்ப் பாழ்படு நெஞ்சம் படர் அடக் கலங்க நாடு இடை விலங்கிய வைப்பின் காடு இறந்தனள் நம் காதலோளே #14 ஐங்குறுநூறு 314 - ஓதலாந்தையார் அவிர் தொடி கொட்பக் கழுது புகவு அயரக் கரும் கண் காக்கையொடு கழுகு விசும்பு அகவச் சிறு கண் யானை ஆள் வீழ்த்துத் திரிதரும் நீள் இடை அரும் சுரம் என்ப நம் தோள் இடை முனிநர் சென்ற ஆறே #15 ஐங்குறுநூறு 315 - ஓதலாந்தையார் பாயல் கொண்ட பனி மலர் நெடும் கண் பூசல் கேளார் சேயர் என்ப இழை நெகிழ் செல்லல் உறீஇக் கழை முதிர் சோலைக் காடு இறந்தோரே #16 ஐங்குறுநூறு 316 - ஓதலாந்தையார் பொன் செய் பாண்டில் பொலம் கலம் நந்தத் தேர் அகல் அல்குல் அவ் வரி வாட இறந்தோர்-மன்ற தாமே பிறங்கு மலைப் புல் அரை ஓமை நீடிய புலி வழங்கு அதர கானத்தானே #17 ஐங்குறுநூறு 317 - ஓதலாந்தையார் சூழ்கம் வம்மோ தோழி பாழ்பட்டுப் பைது அற வெந்த பாலை வெம் காட்டு அரும் சுரம் இறந்தோர் தேஎத்துச் சென்ற நெஞ்சம் நீடிய பொருளே #18 ஐங்குறுநூறு 318 - ஓதலாந்தையார் ஆய் நலம் பசப்ப அரும் படர் நலிய வேய் மருள் பணைத் தோள் வில் இலை நெகிழ நசை நனி கொன்றோர்-மன்ற விசை நிமிர்ந்து ஓடு எரி நடந்த வைப்பின் கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே #19 ஐங்குறுநூறு 319 - ஓதலாந்தையார் கண் பொர விளங்கிய கதிர் தெறு வைப்பின் மண் புரை பெருகிய மரம் முளி கானம் இறந்தனரோ நம் காதலர் மறந்தனரோ- ஓதலாந்தையார்தில் மறவா நம்மே #20 ஐங்குறுநூறு 320 - ஓதலாந்தையார் முள் அரை இலவத்து ஒள் இணர் வான் பூ முழங்கு அழல் அசை வளி எடுப்ப வானத்து உருமுப்படு கனலின் இரு நிலத்து உறைக்கும் கவலை அரும் சுரம் போயினர் தவல் இல் அரு நோய் தலைதந்தோரே **33 இடைச்சுரப் பத்து #21 ஐங்குறுநூறு 321 - ஓதலாந்தையார் உலறு தலைப் பருந்தின் உளி வாய்ப் பேடை அலறு தலை ஓமை அம் கவட்டு ஏறிப் புலம்பு கொள விளிக்கும் நிலம் காய் கானத்து மொழி பெயர் பல் மலை இறப்பினும் ஒழிதல் செல்லாது ஒண்_தொடி குணனே #22 ஐங்குறுநூறு 322 - ஓதலாந்தையார் நெடும் கழை முளிய வேனில் நீடிக் கடும் கதிர் ஞாயிறு கல் பகத் தெறுதலின் வெய்ய ஆயினை முன்னே இனியே ஒண் நுதல் அரிவையை உள்ளு-தொறும் தண்ணிய ஆயின சுரத்து இடை யாறே #23 ஐங்குறுநூறு 323 - ஓதலாந்தையார் வள் எயிற்றுச் செந்நாய் வயவுறு பிணவிற்குக் கள்ளி அம் கடத்திடைக் கேழல் பார்க்கும் வெம் சுரக் கவலை நீந்தி வந்த நெஞ்சம் நீ நயந்தோள் பண்பே #24 ஐங்குறுநூறு 324 - ஓதலாந்தையார் எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடைச் சிறிது கண்படுப்பினும் காண்குவென் மன்ற நள்ளென் கங்குல் நளி மனை நெடு நகர் வேங்கை வென்ற சுணங்கின் தேம் பாய் கூந்தல் மாஅயோளே #25 ஐங்குறுநூறு 325 - ஓதலாந்தையார் வேனில் அரையத்து இலை ஒலி வெரீஇப் போகில் புகா உண்ணாது பிறிது புலம் படரும் வெம்பு அலை அரும் சுரம் நலியாது எம் வெம் காதலி பண்பு துணைப் பெற்றே #26 ஐங்குறுநூறு 326 - ஓதலாந்தையார் அழல் அவிர் நனம் தலை நிழல் இடம் பெறாது மட மான் அம் பிணை மறியொடு திரங்க நீர் மருங்கு அறுத்த நிரம்பா இயவின் இன்னா- ஓதலாந்தையார்மன்ற சுரமே இனிய-மன்ற யான் ஒழிந்தோள் பண்பே #27 ஐங்குறுநூறு 327 - ஓதலாந்தையார் பொறி வரித் தடக் கை வேதல் அஞ்சிச் சிறு கண் யானை நிலம் தொடல் செல்லா வெயில் முளி சோலைய வேய் உயர் சுரனே அன்ன ஆர் இடையானும் தண்மை செய்த இத் தகையோள் பண்பே #28 ஐங்குறுநூறு 328 - ஓதலாந்தையார் நுண் மழை தளித்து என நறு மலர் தாஅய்த் தண்ணிய ஆயினும் வெய்ய-மன்ற மட வரல் இன் துணை ஒழியக் கடம் முதிர் சோலைய காடு இறந்தேற்கே #29 ஐங்குறுநூறு 329 - ஓதலாந்தையார் ஆள்_வழக்கு அற்ற பாழ்படு நனம் தலை வெம் முனை அரும் சுரம் நீந்தி நம்மொடு மறுதருவது-கொல் தானே செறி தொடி கழிந்து உகு நிலைய ஆக ஒழிந்தோள் கொண்ட என் உரம் கெழு நெஞ்சே #30 ஐங்குறுநூறு 330 - ஓதலாந்தையார் வெம் துகள் ஆகிய வெயில் கடம் நீந்தி வந்தனம் ஆயினும் ஒழிக இனிச் செலவே அழுத கண்ணள் ஆய் நலம் சிதையக் கதிர் தெறு வெம் சுரம் நினைக்கும் அவிர் கோல் ஆய்_தொடி உள்ளத்து படரே **34 தலைவி இரங்கு பத்து #31 ஐங்குறுநூறு 331 - ஓதலாந்தையார் அம்ம வாழி தோழி அவிழ் இணர்க் கரும் கால் மராஅத்து வைகு சினை வான் பூ அரும் சுரம் செல்லுநர் ஒழிந்தோர் உள்ள இனிய கமழும் வெற்பின் இன்னாது என்ப அவர் சென்ற ஆறே #32 ஐங்குறுநூறு 332 - ஓதலாந்தையார் அம்ம வாழி தோழி என்னதூஉம் அறனில-மன்ற தாமே விறல் மிசைக் குன்று கெழு கானத்த பண்பு இல் மாக் கணம் கொடிதே காதலிப் பிரிதல் செல்லல் ஐய என்னாது அவ்வே #33 ஐங்குறுநூறு 333 - ஓதலாந்தையார் அம்ம வாழி தோழி யாவதும் வல்லா-கொல்லோ தாமே அவண கல் உடை நன் நாட்டுப் புள் இனப் பெரும் தோடு யாஅம் துணை புணர்ந்து உறைதும் யாங்குப் பிரிந்து உறைதி என்னாது அவ்வே #34 ஐங்குறுநூறு 334 - ஓதலாந்தையார் அம்ம வாழி தோழி சிறியிலை நெல்லி நீடிய கல் காய் கடத்து இடைப் பேதை நெஞ்சம் பின் செலச் சென்றோர் கல்லினும் வலியர்-மன்ற பல் இதழ் உண்கண் அழப் பிரிந்தோரே #35 ஐங்குறுநூறு 335 - ஓதலாந்தையார் அம்ம வாழி தோழி நம்-வயின் நெய்த்தோர் அன்ன செவிய எருவை கல் புடை மருங்கில் கடு முடை பார்க்கும் கடு நனி கடிய என்ப நீடி இவண் வருநர் சென்ற ஆறே #36 ஐங்குறுநூறு 336 - ஓதலாந்தையார் அம்ம வாழி தோழி நம்-வயின் பிரியலர் போலப் புணர்ந்தோர்-மன்ற நின்றது இல் பொருட்பிணி முற்றிய என்றூழ் நீடிய சுரன் இறந்தோரே #37 ஐங்குறுநூறு 337 - ஓதலாந்தையார் அம்ம வாழி தோழி நம்-வயின் மெய் உற விரும்பிய கை கவர் முயக்கினும் இனிய மன்ற தாமே பனி இரும் குன்றம் சென்றோர்க்குப் பொருளே #38 ஐங்குறுநூறு 338 - ஓதலாந்தையார் அம்ம வாழி தோழி சாரல் இலை இல மலர்ந்த ஓங்கு நிலை இலவம் மலை உறு தீயில் சுர முதல் தோன்றும் பிரிவு அரும் காலையும் பிரிதல் அரிது வல்லுநர் நம் காதலோரே #39 ஐங்குறுநூறு 339 - ஓதலாந்தையார் அம்ம வாழி தோழி சிறியிலைக் குறும் சினை வேம்பின் நறும் பழம் உணீஇய வாவல் உகக்கும் மாலையும் இன்று-கொல் தோழி அவர் சென்ற நாடே #40 ஐங்குறுநூறு 340 - ஓதலாந்தையார் அம்ம வாழி தோழி காதலர் உள்ளார்-கொல் நாம் மருளுற்றனம்-கொல் விட்டுச் சென்றனர் நம்மே தட்டைத் தீயின் ஊர் அலர் எழவே **35 இளவேனிற் பத்து #41 ஐங்குறுநூறு 341 - ஓதலாந்தையார் அவரோ வாரார் தான் வந்தன்றே குயில் பெடை இன் குரல் அகவ அயிர்க் கேழ் நுண் அறல் நுடங்கும் பொழுதே #42 ஐங்குறுநூறு 342 - ஓதலாந்தையார் அவரோ வாரார் தான் வந்தன்றே சுரும்பு களித்து ஆலும் இரும் சினைக் கரும் கால் நுணவம் கமழும் பொழுதே #43 ஐங்குறுநூறு 343 - ஓதலாந்தையார் அவரோ வாரார் தான் வந்தன்றே திணி நிலைக் கோங்கம் பயந்த அணி மிகு கொழு முகை உடையும் பொழுதே #44 ஐங்குறுநூறு 344 - ஓதலாந்தையார் அவரோ வாரார் தான் வந்தன்றே நறும் பூம் குரவம் பயந்த செய்யாப் பாவை கொய்யும் பொழுதே #45 ஐங்குறுநூறு 345 - ஓதலாந்தையார் அவரோ வாரார் தான் வந்தன்றே புதுப் பூ அதிரல் தாஅய்த் கதுப்பு அறல் அணியும் காமர் பொழுதே #46 ஐங்குறுநூறு 346 - ஓதலாந்தையார் அவரோ வாரார் தான் வந்தன்றே அம் சினைப் பாதிரி அலர்ந்து எனச் செம் கண் இரும் குயில் அறையும் பொழுதே #47 ஐங்குறுநூறு 347 - ஓதலாந்தையார் அவரோ வாரார் தான் வந்தன்றே எழில் தகை இள முலை பொலியப் பொரிப் பூம் புன்கின் முறி திமிர் பொழுதே #48 ஐங்குறுநூறு 348 - ஓதலாந்தையார் அவரோ வாரார் தான் வந்தன்றே வலம் சுரி மராஅம் வேய்ந்து நம் மணம் கமழ் தண் பொழில் மலரும் பொழுதே #49 ஐங்குறுநூறு 349 - ஓதலாந்தையார் அவரோ வாரார் தான் வந்தன்றே பொரி கால் மாம் சினை புதைய எரி கால் இளம் தளிர் ஈனும் பொழுதே #50 ஐங்குறுநூறு 350 - ஓதலாந்தையார் அவரோ வாரார் தான் வந்தன்றே வேம்பின் ஒண் பூ உறைப்பத் தேம் படு கிளவி அவர்த் தெளிக்கும் பொழுதே **36 வரவுரைத்த பத்து #51 ஐங்குறுநூறு 351 - ஓதலாந்தையார் அத்தப் பலவின் வெயில் தின் சிறு காய் அரும் சுரம் செல்வோர் அருந்தினர் கழியும் காடு பின் ஒழிய வந்தனர் தீர்க இனிப் பல் இதழ் உண்கண் மடந்தை நின் நல் எழில் அல்குல் வாடிய நிலையே #52 ஐங்குறுநூறு 352- ஓதலாந்தையார் விழுத் தொடை மறவர் வில் இடத் தொலைந்தோர் எழுத்து உடை நடுகல் அன்ன விழுப் பிணர்ப் பெரும் கை யானை இரும் சினம் உறைக்கும் வெம் சுரம் அரிய என்னார் வந்தனர் தோழி நம் காதலோரே #53 ஐங்குறுநூறு 353 - ஓதலாந்தையார் எரிக் கொடி கவைஇய செம் வரை போலச் சுடர்ப் பூண் விளங்கும் ஏந்து எழில் அகலம் நீ இனிது முயங்க வந்தனர் மா இரும் சோலை மலை இறந்தோரே #54 ஐங்குறுநூறு 354 - ஓதலாந்தையார் ஈர்ம் பிணவு புணர்ந்த செந்நாய் ஏற்றை மறி உடை மான் பிணை கொள்ளாது கழியும் அரிய சுரன் வந்தனரே தெரி இழை அரிவை நின் பண்பு தர விரைந்தே #55 ஐங்குறுநூறு 355 - ஓதலாந்தையார் திருந்து இழை அரிவை நின் நலம் உள்ளி அரும் செயல் பொருட்பிணி பெரும் திரு உறுக எனச் சொல்லாது பெயர்தந்தேனே பல் பொறிச் சிறு கண் யானை திரிதரும் நெறி விலங்கு அதர கானத்தானே #56 ஐங்குறுநூறு 356 - ஓதலாந்தையார் உள்ளுதற்கு இனிய-மன்ற செல்வர் யானை பிணித்த பொன் புனை கயிற்றின் ஒள் எரி மேய்ந்த சுரத்திடை உள்ளம் வாங்கத் தந்த நின் குணனே #57 ஐங்குறுநூறு 357 - ஓதலாந்தையார் குரவம் மலர மரவம் பூப்பச் சுரன் அணிகொண்ட கானம் காணூஉ அழுங்குக செய்பொருள் செலவு என விரும்பி நின் அம் கலிழ் மாமை கவின வந்தனர் தோழி நம் காதலோரே #58 ஐங்குறுநூறு 358 - ஓதலாந்தையார் கோடு உயர் பல் மலை இறந்தனர் ஆயினும் நீட விடுமோ மற்றே நீடு நினைந்து துடை-தொறும் துடை-தொறும் கலங்கி உடைத்து எழு வெள்ளம் ஆகிய கண்ணே #59 ஐங்குறுநூறு 359 - ஓதலாந்தையார் அரும் பொருள் வேட்கையம் ஆகி நின் துறந்து பெரும் கல் அதர் இடைப் பிரிந்த காலைத் தவ நனி நெடிய ஆயின இனியே அணி_இழை உள்ளி யாம் வருதலின் நணிய ஆயின சுரத்திடை ஆறே #60 ஐங்குறுநூறு 360 - ஓதலாந்தையார் எரி கவர்ந்து உண்ட என்றூழ் நீள் இடை அரிய ஆயினும் எளிய அன்றே அவவுறு நெஞ்சம் கவவு நனி விரும்பிக் கடு மான் திண் தேர் கடைஇ நெடு மான் நோக்கி நின் உள்ளியாம் வரவே **37 முன்னிலைப் பத்து #61 ஐங்குறுநூறு 361 - ஓதலாந்தையார் உயர் கரைக் கான்யாற்று அவிர் மணல் அகன் துறை வேனில் பாதிரி விரி மலர் குவைஇத் தொடலை தைஇய மடவரல் மகளே கண்ணினும் கதவ நின் முலையே முலையினும் கதவ நின் தட மென் தோளே #62 ஐங்குறுநூறு 362 - ஓதலாந்தையார் பதுக்கைத்து ஆய ஒதுக்கு அரும் கவலைச் சிறு கண் யானை உறு பகை நினையாது யாங்கு வந்தனையோ பூம் தார் மார்ப அருள் புரி நெஞ்சம் உய்த்தர இருள் பொர நின்ற இரவினானே #63 ஐங்குறுநூறு 363 - ஓதலாந்தையார் சிலை வில் பகழிச் செம் துவர் ஆடைக் கொலை வில் எயினர் தங்கை நின் முலைய சுணங்கு என நினைதி நீயே அணங்கு என நினையும் என் அணங்குறு நெஞ்சே #64 ஐங்குறுநூறு 364 - ஓதலாந்தையார் முள_மா வல்சி எயினர் தங்கை இள மா எயிற்றிக்கு நின் நிலை அறியச் சொல்லினேன் இரக்கும் அளவை வெல் வேல் விடலை விரையாதீமே #65 ஐங்குறுநூறு 365 - ஓதலாந்தையார் கண மா தொலைச்சித் தன் ஐயர் தந்த நிண ஊன் வல்சிப் படு புள் ஓப்பும் நலம் மாண் எயிற்றி போலப் பல மிகு நல் நலம் நய வரவு உடையை என் நோற்றனையோ மாவின் தளிரே #66 ஐங்குறுநூறு 366 - ஓதலாந்தையார் அன்னாய் வாழி வேண்டு அன்னை தோழி பசந்தனள் பெரிது எனச் சிவந்த கண்ணை கொன்னே கடவுதி ஆயின் என்னதூஉம் அறிய ஆகுமோ மற்றே முறி இணர்க் கோங்கம் பயந்த மாறே #67 ஐங்குறுநூறு 367 - ஓதலாந்தையார் பொரி அரைக் கோங்கின் பொன் மருள் பசு வீ விரி இணர் வேங்கையொடு வேறு பட மிலைச்சி விரிவு மலர் அணிந்த வேனில் கான்யாற்றுத் தேரொடு குறுக வந்தோன் பேரொடு புணர்ந்தன்று அன்னை இவள் உயிரே #68 ஐங்குறுநூறு 368 - ஓதலாந்தையார் எரிப் பூ இலவத்து ஊழ் கழி பல் மலர் பொரிப் பூம் புன்கின் புகர் நிழல் வரிக்கும் தண் பத வேனில் இன்ப நுகர்ச்சி எம்மொடு கொண்மோ பெரும நின் அம்_மெல்_ஓதி அழிவு இலள் எனினே #69 ஐங்குறுநூறு 369 - ஓதலாந்தையார் வள மலர் ததைந்த வண்டு படு நறும் பொழில் முளை நிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல் குறி நீ செய்தனை என்ப அலரே குரவ நீள் சினை உறையும் பருவ மாக் குயில் கௌவையில் பெரிதே #70 ஐங்குறுநூறு 370 - ஓதலாந்தையார் வண் சினைக் கோங்கின் தண் கமழ் படலை இரும் சிறை வண்டின் பெரும் கிளை மொய்ப்ப நீ நயந்து உறையப்பட்டோள் யாவளோ எம் மறையாதீமே **38 மகட் போக்கிய வழித் தாயிரங்கு பத்து #71 ஐங்குறுநூறு 371 - ஓதலாந்தையார் மள்ளர் கோட்டின் மஞ்ஞை ஆலும் உயர் நெடும் குன்றம் படு மழை தலைஇச் சுரம் நனி இனிய ஆகுக-தில்ல அற நெறி இது எனத் தெளிந்த என் பிறை நுதல் குறுமகள் போகிய சுரனே #72 ஐங்குறுநூறு 372 - ஓதலாந்தையார் என்னும் உள்ளினள்-கொல்லோ தன்னை நெஞ்சு உணத் தேற்றிய வஞ்சினக் காளையொடு அழுங்கல் மூதூர் அலர் எழச் செழும் பல் குன்றம் இறந்த என் மகளே #73 ஐங்குறுநூறு 373 - ஓதலாந்தையார் நினைத்-தொறும் கலிழும் இடும்பை எய்துக புலிக் கோள் பிழைத்த கவைக் கோட்டு முது கலை மான் பிணை அணைதர ஆண் குரல் விளிக்கும் வெம் சுரம் என் மகள் உய்த்த அம்பு அமை வல் வில் விடலை தாயே #74 ஐங்குறுநூறு 374 - ஓதலாந்தையார் பல் ஊழ் நினைப்பினும் நல்லென்று ஊழ மீளி முன்பின் காளை காப்ப முடி அகம் புகாக் கூந்தலள் கடுவனும் அறியாக் காடு இறந்தோளே #75 ஐங்குறுநூறு 375 - ஓதலாந்தையார் இது என் பாவைக்கு இனிய நன் பாவை இது என் பைம் கிளி எடுத்த பைம் கிளி இது என் பூவைக்கு இனிய சொல் பூவை என்று அலமரும் நோக்கின் நலம் வரு சுடர் நுதல் காண்-தொறும் காண்-தொறும் கலங்க நீங்கினளோ என் பூம் கணோளே #76 ஐங்குறுநூறு 376 - ஓதலாந்தையார் நாள்-தொறும் கலிழும் என்னினும் இடை நின்று காடு படு தீயின் கனலியர்-மாதோ நல் வினை நெடு நகர் கல்லெனக் கலங்கப் பூப் புரை உண்கண் மடவரல் போக்கிய புணர்த்த அறன் இல் பாலே #77 ஐங்குறுநூறு 377 - ஓதலாந்தையார் நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை இயம் புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம் சென்றனள்-மன்ற என் மகளே பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே #78 ஐங்குறுநூறு 378 - ஓதலாந்தையார் செல்லிய முயலிப் பாஅய சிறகர் வாவல் உகக்கும் மாலை யாம் புலம்பப் போகிய அவட்கோ நோவேன் தே மொழித் துணையிலள் கலிழும் நெஞ்சின் இணை ஏர் உண்கண் இவட்கு நோவதுமே #79 ஐங்குறுநூறு 379 - ஓதலாந்தையார் தன் அமர் ஆயமொடு நல் மண நுகர்ச்சியின் இனிதாம்-கொல்லோ தனக்கே பனிவரை இனக் களிறு வழங்கும் சோலை வயக்குறு வெள் வேலவன் புணர்ந்து செலவே #80 ஐங்குறுநூறு 380 - ஓதலாந்தையார் அத்த நீள் இடை அவனொடு போகிய முத்து ஏர் வெண் பல் முகிழ் நகை மடவரல் தாயர் என்னும் பெயரே வல்லாறு எடுத்தேன் மன்ற யானே கொடுத்தோர் மன்ற அவள் ஆயத்தோரே **39 உடன்போக்கின் கண் இடைச் சுரத்து உரைத்த பத்து #81 ஐங்குறுநூறு 381 - ஓதலாந்தையார் பைம் காய் நெல்லி பல உடன் மிசைந்து செம் கால் மராஅத்த வரி நிழல் இருந்தோர் யார்-கொல் அளியர் தாமே வார் சிறைக் குறும் கால் மகன்றில் அன்ன உடன் புணர் கொள்கைக் காதலோரே #82 ஐங்குறுநூறு 382 - ஓதலாந்தையார் புள் ஒலிக்கு அமர்த்த கண்ணள் வெள் வேல் திருந்து கழல் காளையொடு அரும் சுரம் கழிவோள் எல்லிடை அசைந்த கல்லென் சீறூர்ப் புனை இழை மகளிர்ப் பயந்த மனை கெழு பெண்டிர்க்கு நோவுமார் பெரிதே #83 ஐங்குறுநூறு 383 - ஓதலாந்தையார் கோள் சுரும்பு அரற்றும் நாள் சுரத்து அமன்ற நெடும் கால் மராஅத்துக் குறும் சினை பற்றி வலம் சுரி வால் இணர் கொய்தற்கு நின்ற மள்ளன் உள்ளம் மகிழ்கூர்ந்தன்றே பஞ்சாய்ப் பாவைக்கும் தனக்கும் அம் சாய் கூந்தல் ஆய்வது கண்டே #84 ஐங்குறுநூறு 384 - ஓதலாந்தையார் சேண் புலம் முன்னிய அசை நடை அந்தணிர் நும் ஒன்று இரந்தனென் மொழிவல் எம் ஊர் யாய் நயந்து எடுத்த ஆய் நலம் கவின ஆர் இடை இறந்தனள் என்-மின் நேர் இறை முன்கை என் ஆயத்தோர்க்கே #85 ஐங்குறுநூறு 385 - ஓதலாந்தையார் கடும் கண் காளையொடு நெடும் தேர் ஏறிக் கோள் வல் வேங்கைய மலை பிறக்கு ஒழிய வேறு பல் அரும் சுரம் இறந்தனள் அவள் எனக் கூறு-மின் வாழியோ ஆறு செல் மாக்கள் நல் தோள் நயந்து பாராட்டி என் கெடுத்து இருந்த அறன் இல் யாய்க்கே #86 ஐங்குறுநூறு 386 - ஓதலாந்தையார் புன்கண் யானையொடு புலி வழங்கு அத்தம் நயந்த காதலன் புணர்ந்து சென்றனளே நெடும் சுவர் நல் இல் மருண்ட இடும்பை உறுவி நின் கடும் சூல் மகளே #87 ஐங்குறுநூறு 387 - ஓதலாந்தையார் அறம் புரி அரு மறை நவின்ற நாவில் திறம் புரி கொள்கை அந்தணீர் தொழுவல் என்று ஒண்_தொடி வினவும் பேதை அம் பெண்டே கண்டனெம் அம்ம சுரத்திடை அவளை இன் துணை இனிது பாராட்டக் குன்று உயர் பிறங்கல் மலை இறந்தோளே #88 ஐங்குறுநூறு 388 - ஓதலாந்தையார் நெருப்பு அவிர் கனலி உருப்புச் சினம் தணியக் கரும் கால் யாத்து வரி நிழல் இரீஇச் சிறு வரை இறப்பின் காண்குவை செறி தொடிப் பொன் ஏர் மேனி மடந்தையொடு வென் வேல் விடலை முன்னிய சுரனே #89 ஐங்குறுநூறு 389 - ஓதலாந்தையார் செய்வினை பொலிந்த செறி கழல் நோன் தாள் மை அணல் காளையொடு பைய இயலிப் பாவை அன்ன என் ஆய் தொடி மடந்தை சென்றனள் என்றிர் ஐய ஒன்றினவோ அவள் அம் சிலம்பு அடியே #90 ஐங்குறுநூறு 390 - ஓதலாந்தையார் நல்லோர் ஆங்கண் பரந்து கைதொழுது பல் ஊழ் மறுகி வினவுவோயே திண் தோள் வல் வில் காளையொடு கண்டனெம் மன்ற சுரத்திடை யாமே **40 மறுதரவுப் பத்து #91 ஐங்குறுநூறு 391 - ஓதலாந்தையார் மறு இல் தூவிச் சிறு_கரும்_காக்கை அன்பு உடை மரபின் நின் கிளையோடு ஆரப் பச்சூன் பெய்த பைம் நிண வல்சி பொலம் புனை கலத்தில் தருகுவென்-மாதோ வெம் சின விறல் வேல் காளையொடு அம்_சில்_ஓதியை வரக் கரைந்தீமே #92 ஐங்குறுநூறு 392 - ஓதலாந்தையார் வேய் வனப்பு இழந்த தோளும் வெயில் தெற ஆய் கவின் தொலைந்த நுதலும் நோக்கிப் பரியல் வாழி தோழி பரியின் எல்லை இல் இடும்பை தரூஉம் நல் வரை நாடனொடு வந்த மாறே #93 ஐங்குறுநூறு 393 - ஓதலாந்தையார் துறந்ததன் கொண்டு துயர் அடச் சாஅய் அறம் புலந்து பழிக்கும் அளைகணாட்டி எவ்வ நெஞ்சிற்கு ஏமம் ஆக வந்தனளோ நின் மட_மகள் வெம் திறல் வெள் வேல் விடலை முந்துறவே #94 ஐங்குறுநூறு 394 - ஓதலாந்தையார் மாண்பு இல் கொள்கையொடு மயங்கு துயர் செய்த அன்பு இல் அறனும் அருளிற்று மன்ற வெம் சுரம் இறந்த அம்_சில்_ஓதிப் பெரு மட மான் பிணை அலைத்த சிறு நுதல் குறுமகள் காட்டிய வம்மே #95 ஐங்குறுநூறு 395 - ஓதலாந்தையார் முளி வயிர்ப் பிறந்த வளி வளர் கூர் எரிச் சுடர் விடு நெடும் கொடி விடர் முகை முழங்கும் இன்னா அரும் சுரம் தீர்ந்தனம் மென்மெல ஏகு-மதி வாழியோ குறுமகள் போது கலந்து கறங்கு இசை அருவி வீழும் பிறங்கு இரும் சோலை நம் மலை கெழு நாட்டே #96 ஐங்குறுநூறு 396 - ஓதலாந்தையார் புலிப் பொறி வேங்கைப் பொன் இணர் கொய்து நின் கதுப்பு அயல் அணியும் அளவை பைபயச் சுரத்திடை அயர்ச்சியை ஆறுகம் மடந்தை கல் கெழு சிறப்பின் நம் ஊர் எல் விருந்து ஆகிப் புகுகம் நாமே #97 ஐங்குறுநூறு 397 - ஓதலாந்தையார் கவிழ் மயிர் எருத்தின் செந்நாய் ஏற்றை குருளைப் பன்றி கொள்ளாது கழியும் சுரம் நனி வாராநின்றனள் என்பது முன் உற விரைந்த நீர் உரை-மின் இன் நகை முறுவல் என் ஆயத்தோர்க்கே #98 ஐங்குறுநூறு 398 - ஓதலாந்தையார் புள்ளும் அறியாப் பல் பழம் பழுனி மட மான் அறியாத் தட நீர் நிலைஇச் சுரம் நனி இனிய ஆகுக என்று நினைத்-தொறும் கலிழும் என்னினும் மிகப் பெரிது புலம்பின்று தோழி நம் ஊரே #99 ஐங்குறுநூறு 399 - ஓதலாந்தையார் நும் மனைச் சிலம்பு கழீஇ அயரினும் எம் மனை வதுவை நல் மணம் கழிக எனச் சொல்லின் எவனோ மற்றே வெல் வேல் மை அற விளங்கிய கழல் அடிப் பொய் வல் காளையை ஈன்ற தாய்க்கே #100 ஐங்குறுநூறு 400 - ஓதலாந்தையார் மள்ளர் அன்ன மரவம் தழீஇ மகளிர் அன்ன ஆடு கொடி நுடக்கும் அரும் பதம் கொண்ட பெரும் பத வேனில் காதல் புணர்ந்தனள் ஆகி ஆய் கழல் வெம் சின விரல் வேல் காளையொடு இன்று புகுதரும் என வந்தன்று தூதே #101 குறுந்தொகை 12 பாலை - ஓதலாந்தையார் எறும்பி அளையின் குறும் பல் சுனைய உலைக் கல் அன்ன பாறை ஏறிக் கொடு வில் எயினர் பகழி மாய்க்கும் கவலைத்து என்ப அவர் தேர் சென்ற ஆறே அது மற்று அவலம் கொள்ளாது நொதுமல் கழறும் இவ் அழுங்கல் ஊரே #102 குறுந்தொகை 21 முல்லை - ஓதலாந்தையார் வண்டு படத் தகைந்த கொடி இணர் இடை இடுபு பொன் செய் புனை இழை கட்டிய மகளிர் கதுப்பின் தோன்றும் புதுப் பூம் கொன்றை கானம் கார் எனக் கூறினும் யானோ தேறேன் அவர் பொய் வழங்கலரே #103 குறுந்தொகை 329 பாலை - ஓதலாந்தையார் கான இருப்பை வேனில் வெண் பூ வளி பொரு நெடும் சினை உகுத்தலின் ஆர் கழல்பு களிறு வழங்கு சிறு நெறி புதையத் தாஅம் பிறங்கு மலை அரும் சுரம் இறந்தவர்ப் படர்ந்து பயில் இருள் நடுநாள் துயில் அரிது ஆகித் தெண் நீர் நிகர் மலர் புரையும் நல் மலர் மழைக் கணிற்கு எளியவால் பனியே &89 - ஓரம்போகியார் #1 அகநானூறு 286 மருதம் - ஓரம்போகியார் வெள்ளி விழுத் தொடி மென் கருப்பு உலக்கை வள்ளி நுண் இடை வயின்வயின் நுடங்க மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇக் காஞ்சி நீழல் தமர் வளம் பாடி ஊர்க் குறுமகளிர் குறுவழி விறந்த வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின் தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர விழையா உள்ளம் விழையும் ஆயினும் என்றும் கேட்டவை தோட்டி ஆக மீட்டு ஆங்கு அறனும் பொருளும் வழாமை நாடித் தன் தகவு உடைமை நோக்கி மற்று அதன் பின் ஆகும்மே முன்னியது முடித்தல் அனைய பெரியோர் ஒழுக்கம் அதனால் அரிய பெரியோர்த் தெரியும் காலை நும்மோர் அன்னோர் மாட்டும் இன்ன பொய்யொடு மிடைந்தவை தோன்றின் மெய் யாண்டு உளதோ இவ் உலகத்தானே #2 அகநானூறு 316 மருதம் ஓரம்போகியார் துறை மீன் வழங்கும் பெரு நீர்ப் பொய்கை அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு ஈர்ம் தண் எருமை சுவல் படு முது போத்துத் தூங்கு சேற்று அள்ளல் துஞ்சிப் பொழுது படப் பைம் நிண வராஅல் குறையப் பெயர்தந்து குரூஉக் கொடிப் பகன்றை சூடி மூதூர்ப் போர்ச் செறி மள்ளரின் புகுதரும் ஊரன் தேர் தர வந்த தெரி இழை நெகிழ் தோள் ஊர் கொள்கல்லா மகளிர் தரத்தரப் பரத்தைமை தாங்கலோ இலென் என வறிது நீ புலத்தல் ஒல்லுமோ மனை கெழு மடந்தை அது புலந்து உறைதல் வல்லியோரே செய்யோள் நீங்கச் சில்பதம் கொழித்துத் தாம் அட்டு உண்டு தமியர் ஆகித் தே மொழிப் புதல்வர் திரங்கு முலை சுவைப்ப வைகுநர் ஆகுதல் அறிந்தும் அறியார் அம்ம அஃது உடலுமோரே ** ஐங்குறுநூறு - முதல் நூறு - மருதம் - ஓரம்போகியார் **1 வேட்கைப் பத்து #3 ஐங்குறுநூறு 1 - ஓரம்போகியார் வாழி ஆதன் வாழி அவினி நெல் பல பொலிக பொன் பெரிது சிறக்க என வேட்டோளே யாயே யாமே நனைய காஞ்சிச் சினைய சிறு மீன் யாணர் ஊரன் வாழ்க பாணனும் வாழ்க என வேட்டேமே #4 ஐங்குறுநூறு 2 - ஓரம்போகியார் வாழி ஆதன் வாழி அவினி விளைக வயலே வருக இரவலர் என வேட்டோளே யாயே யாமே பல் இதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்கும் தண் துறை ஊரன் கேண்மை வழிவழிச் சிறக்க என வேட்டேமே #5 ஐங்குறுநூறு 3 - ஓரம்போகியார் வாழி ஆதன் வாழி அவினி பால் பல ஊறுக பகடு பல சிறக்க என வேட்டோளே யாயே யாமே வித்திய உழவர் நெல்லோடு பெயரும் பூக் கஞல் ஊரன்-தன் மனை வாழ்க்கை பொலிக என வேட்டேமே #6 ஐங்குறுநூறு 4 - ஓரம்போகியார் வாழி ஆதன் வாழி அவினி பகைவர் புல் ஆர்க பார்ப்பார் ஓதுக என வேட்டோளே யாயே யாமே பூத்த கரும்பின் காய்த்த நெல்லின் கழனி ஊரன் மார்பு பழனம் ஆகற்க என வேட்டேமே #7 ஐங்குறுநூறு 5 - ஓரம்போகியார் வாழி ஆதன் வாழி அவினி பசி இல் ஆகுக பிணி சேண் நீங்குக என வேட்டோளே யாயே யாமே முதலைப் போத்து முழு மீன் ஆரும் தண் துறை ஊரன் தேர் எம் முன்கடை நிற்க என வேட்டேமே #8 ஐங்குறுநூறு 6 - ஓரம்போகியார் வாழி ஆதன் வாழி அவினி வேந்து பகை தணிக யாண்டு பல நந்துக என வேட்டோளே யாயே யாமே மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத் தண் துறை ஊரன் வரைக எந்தையும் கொடுக்க என வேட்டேமே #9 ஐங்குறுநூறு 7 - ஓரம்போகியார் வாழி ஆதன் வாழி அவினி அறம் நனி சிறக்க அல்லது கெடுக என வேட்டோளே யாயே யாமே உளைப் பூ மருதத்துக் கிளைக் குருகு இருக்கும் தண் துறை ஊரன் தன் ஊர் கொண்டனன் செல்க என வேட்டேமே #10 ஐங்குறுநூறு 8 - ஓரம்போகியார் வாழி ஆதன் வாழி அவினி அரசு முறை செய்க களவு இல் ஆகுக என வேட்டோளே யாயே யாமே அலங்கு சினை மாஅத்து அணி மயில் இருக்கும் பூக் கஞல் ஊரன் சூள் இவண் வாய்ப்பது ஆக என வேட்டோமே #11 ஐங்குறுநூறு 9 - ஓரம்போகியார் வாழி ஆதன் வாழி அவினி நன்று பெரிது சிறக்க தீது இல் ஆகுக என வேட்டோளே யாயே யாமே கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் தண் துறை ஊரன் கேண்மை அம்பல் ஆகற்க என வேட்டேமே #12 ஐங்குறுநூறு 10 - ஓரம்போகியார் வாழி ஆதன் வாழி அவினி மாரி வாய்க்க வளம் நனி சிறக்க என வேட்டோளே யாயே யாமே பூத்த மாஅத்துப் புலால் அம் சிறு மீன் தண் துறை ஊரன் தன்னோடு கொண்டனன் செல்க என வேட்டேமே **2 வேழப்பத்து #13 ஐங்குறுநூறு 11 - ஓரம்போகியார் மனை நடு வயலை வேழம் சுற்றும் துறை கேழ் ஊரன் கொடுமை நாணி நல்லன் என்றும் யாமே அல்லன் என்னும் என் தட மென் தோளே #14 ஐங்குறுநூறு 12 - ஓரம்போகியார் கரை சேர் வேழம் கரும்பின் பூக்கும் துறை கேழ் ஊரன் கொடுமை நன்றும் ஆற்றுக-தில்ல யாமே தோற்க-தில்ல என் தட மென் தோளே #15 ஐங்குறுநூறு 13 - ஓரம்போகியார் பரி உடை நல் மான் பொங்கு உளை அன்ன அடைகரை வேழம் வெண் பூப் பகரும் தண் துறை ஊரன் பெண்டிர் துஞ்சு ஊர் யாமத்தும் துயில் அறியலரே #16 ஐங்குறுநூறு 14 - ஓரம்போகியார் கொடிப் பூ வேழம் தீண்டி அயல வடுக் கொள் மாஅத்து வண் தளிர் நுடங்கும் அணித் துறை வீரன் மார்பே பனித் துயில் செய்யும் இன் சாயற்றே #17 ஐங்குறுநூறு 15 - ஓரம்போகியார் மணல் ஆடு மலிர் நிறை விரும்பிய ஒண் தழைப் புனல் ஆடு மகளிர்க்குப் புணர் துணை உதவும் வேழ மூதூர் ஊரன் ஊரன் ஆயினும் ஊரன் அல்லன்னே #18 ஐங்குறுநூறு 16 - ஓரம்போகியார் ஓங்கு பூ வேழத்துத் தூம்பு உடைத் திரள் கால் சிறு தொழு_மகளிர் அஞ்சனம் பெய்யும் பூக் கஞல் ஊரனை உள்ளிப் பூப் போல் உண்கண் பொன் போர்த்தனவே #19 ஐங்குறுநூறு 17 - ஓரம்போகியார் புதல் மிசை நுடங்கும் வேழ வெண் பூ விசும்பு ஆடு குருகின் தோன்றும் ஊரன் புதுவோர் மேவலன் ஆகலின் வறிது ஆகின்று என் மடம் கெழு நெஞ்சே #20 ஐங்குறுநூறு 18 - ஓரம்போகியார் இரும் சாய் அன்ன செருந்தியொடு வேழம் கரும்பின் அலமரும் கழனி ஊரன் பொருந்து மலர் அன்ன என் கண் அழப் பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே #21 ஐங்குறுநூறு 19 - ஓரம்போகியார் எக்கர் மாஅத்துப் புதுப் பூம் பெரும் சினை புணர்ந்தோர் மெய்மணம் கமழும் தண் பொழில் வேழ வெண் பூ வெள் உகை சீக்கும் ஊரன் ஆகலின் கலங்கி மாரி மலரின் கண் பனி உகுமே #22 ஐங்குறுநூறு 20 - ஓரம்போகியார் அறு சில் கால அம் சிறைத் தும்பி நூற்று இதழ்த் தாமரைப் பூச் சினை சீக்கும் காம்பு கண்டு அன்ன தூம்பு உடை வேழத்துத் துறை நணி ஊரனை உள்ளி என் இறை ஏர் எல் வளை நெகிழ்பு ஓடும்மே **3 களவன் பத்து #23 ஐங்குறுநூறு 21 - ஓரம்போகியார் முள்ளி நீடிய முது நீர் அடைகரைப் புள்ளிக் களவன் ஆம்பல் அறுக்கும் தண் துறை ஊரன் தெளிப்பவும் உண்கண் பசப்பது எவன்-கொல் அன்னாய் #24 ஐங்குறுநூறு 22 - ஓரம்போகியார் அள்ளல் ஆடிய புள்ளிக் களவன் முள்ளி வேர் அளை செல்லும் ஊரன் நல்ல சொல்லி மணந்து இனி நீயேன் என்றது எவன்-கொல் அன்னாய் #25 ஐங்குறுநூறு 23 - ஓரம்போகியார் முள்ளி வேர் அளைக் களவன் ஆட்டிப் பூக் குற்று எய்திய புனல் அணி ஊரன் தேற்றம் செய்து நம் புணர்ந்து இனித் தாக்கு அணங்கு ஆவது எவன்-கொல் அன்னாய் #26 ஐங்குறுநூறு 24 - ஓரம்போகியார் தாய் சாப் பிறக்கும் புள்ளிக் களவனொடு பிள்ளை தின்னும் முதலைத்து அவன் ஊர் எய்தினன் ஆகின்று-கொல்லோ மகிழ்நன் பொலம் தொடி தெளிர்ப்ப முயங்கியவர் நலம் கொண்டு துறப்பது எவன்-கொல் அன்னாய் #27 ஐங்குறுநூறு 25 - ஓரம்போகியார் புயல் புறந்தந்த புனிற்று வளர் பைம் காய் வயலைச் செம் கொடி களவன் அறுக்கும் கழனி ஊரன் மார்பு பலர்க்கு இழை நெகிழ் செல்லல் ஆகும் அன்னாய் #28 ஐங்குறுநூறு 26 - ஓரம்போகியார் கரந்தை அம் செறுவில் துணை துறந்து களவன் வள்ளை மென் கால் அறுக்கும் ஊரன் எம்மும் பிறரும் அறியான் இன்னன் ஆவது எவன்-கொல் அன்னாய் #29 ஐங்குறுநூறு 27 - ஓரம்போகியார் செந்நெல் அம் செறுவில் கதிர் கொண்டு களவன் தண் அக மண் அளைச் செல்லும் ஊரற்கு எல் வளை நெகிழச் சாஅய் அல்லல் உழப்பது எவன்-கொல் அன்னாய் #30 ஐங்குறுநூறு 28 - ஓரம்போகியார் உண்துறை அணங்கு இவள் உறை நோய் ஆயின் தண் சேறு களவன் வரிக்கும் ஊரற்கு ஒண் தொடி நெகிழச் சாஅய் மென் தோள் பசப்பது எவன்-கொல் அன்னாய் #31 ஐங்குறுநூறு 29 - ஓரம்போகியார் மாரி கடிகொளக் காவலர் கடுக வித்திய வெண் முளை களவன் அறுக்கும் கழனி ஊரன் மார்புற மரீஇத் திதலை அல்குல் நின் மகள் பசலை கொள்வது எவன்-கொல் அன்னாய் #32 ஐங்குறுநூறு 30 - ஓரம்போகியார் வேப்பு நனை அன்ன நெடும் கண் களவன் தண் அக மண் அளை நிறைய நெல்லின் இரும் பூ உறைக்கும் ஊரற்கு இவள் பெரும் கவின் இழப்பது எவன்-கொல் அன்னாய் **4 தோழிக்கு உரைத்த பத்து #33 ஐங்குறுநூறு 31 - ஓரம்போகியார் அம்ம வாழி தோழி மகிழ்நன் கடன் அன்று என்னும்-கொல்லோ நம் ஊர் முடம் முதிர் மருதத்துப் பெரும் துறை உடன் ஆடு ஆயமோடு உற்ற சூளே #34 ஐங்குறுநூறு 32 - ஓரம்போகியார் அம்ம வாழி தோழி மகிழ்நன் ஒரு நாள் நம் இல் வந்ததற்கு எழு நாள் அழுப என்ப அவன் பெண்டிர் தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர் விரைந்தே #35 ஐங்குறுநூறு 33 - ஓரம்போகியார் அம்ம வாழி தோழி மகிழ்நன் மருது உயர்ந்து ஓங்கிய விரி பூம் பெரும் துறைப் பெண்டிரோடு ஆடும் என்ப தன் தண் தார் அகலம் தலைத்தலைக் கொளவே #36 ஐங்குறுநூறு 34 - ஓரம்போகியார் அம்ம வாழி தோழி நம் ஊர்ப் பொய்கைப் பூத்த புழைக் கால் ஆம்பல் தாது ஏர் வண்ணம் கொண்டன ஏதிலாளற்குப் பசந்த என் கண்ணே #37 ஐங்குறுநூறு 35 - ஓரம்போகியார் அம்ம வாழி தோழி நம் ஊர்ப் பொய்கை ஆம்பல் நார் உரி மென் கால் நிறத்தினும் நிழற்றுதல் மன்னே இனிப் பசந்தன்று என் மாமைக் கவினே #38 ஐங்குறுநூறு 36 - ஓரம்போகியார் அம்ம வாழி தோழி ஊரன் நம் மறந்து அமைகுவன் ஆயின் நாம் மறந்து உள்ளாது அமைதலும் அமைகுவம்-மன்னே கயல் எனக் கருதிய உண்கண் பசலைக்கு ஒல்கா ஆகுதல் பெறினே #39 ஐங்குறுநூறு 37 - ஓரம்போகியார் அம்ம வாழி தோழி மகிழ்நன் நயந்தோர் உண்கண் பசந்து பனி மல்க வல்லன் வல்லன் பொய்த்தல் தேற்றான் உற்ற சூள் வாய்த்தல்லே #40 ஐங்குறுநூறு 38 - ஓரம்போகியார் அம்ம வாழி தோழி மகிழ்நன் தன் சொல் உணர்ந்தோர் அறியலன் என்றும் தண் தளிர் வௌவும் மேனி ஒண் தொடி முன்கை யாம் அழப் பிரிந்தே #41 ஐங்குறுநூறு 39 - ஓரம்போகியார் அம்ம வாழி தோழி ஊரன் வெம் முலை அடைய முயங்கி நம்-வயின் திருந்து இழைப் பணைத் தோள் ஞெகிழப் பிரிந்தனன் ஆயினும் பிரியலன் மன்னே #42 ஐங்குறுநூறு 40 - ஓரம்போகியார் அம்ம வாழி தோழி மகிழ்நன் ஒண் தொடி முன்கை யாம் அழப் பிரிந்து தன் பெண்டிர் ஊர் இறைகொண்டனன் என்ப கெண்டை பாய்தர அவிழ்ந்த வண்டு பிணி ஆம்பல் நாடு கிழவோனே **5 புலவிப் பத்து #43 ஐங்குறுநூறு 41 - ஓரம்போகியார் தன் பார்ப்புத் தின்னும் அன்பு இல் முதலையொடு வெண் பூம் பொய்கைத்து அவன் ஊர் என்ப அதனால் தன் சொல் உணர்ந்தோர் மேனி பொன் போல் செய்யும் ஊர் கிழவோனே #44 ஐங்குறுநூறு 42 - ஓரம்போகியார் மகிழ் மிகச் சிறப்ப மயங்கினள்-கொல்லோ யாணர் ஊர நின் மாண் இழை அரிவை காவிரி மலிர் நிறை அன்ன நின் மார்பு நனி விலக்கல் தொடங்கியோளே #45 ஐங்குறுநூறு 43 - ஓரம்போகியார் அம்பணத்து அன்ன யாமை ஏறிச் செம்பின் அன்ன பார்ப்புப் பல துஞ்சும் யாணர் ஊர நின்னினும் பாணன் பொய்யன் பல் சூளினனே #46 ஐங்குறுநூறு 44 - ஓரம்போகியார் தீம் பெரும் பொய்கை யாமை இளம் பார்ப்புத் தாய் முகம் நோக்கி வளர்ந்திசின் ஆங்கு அதுவே ஐய நின் மார்பே அறிந்தனை ஒழுகு-மதி அறனுமார் அதுவே #47 ஐங்குறுநூறு 45 - ஓரம்போகியார் கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து வேனில் ஆயின் மணி நிறம் கொள்ளும் யாறு அணிந்தன்று நின் ஊரே பசப்பு அணிந்தனவால் மகிழ்ந என் கண்ணே #48 ஐங்குறுநூறு 46 - ஓரம்போகியார் நினக்கே அன்று அஃது எமக்குமார் இனிதே நின் மார்பு நயந்த நல் நுதல் அரிவை வேண்டிய குறிப்பினை ஆகி ஈண்டு நீ அருளாது ஆண்டு உறைதல்லே #49 ஐங்குறுநூறு 47 - ஓரம்போகியார் முள் எயிற்றுப் பாண்_மகள் இன் கெடிறு சொரிந்த அகன் பெரு வட்டி நிறைய மனையோள் அரிகால் பெரும் பயறு நிறைக்கும் ஊர மாண் இழை ஆயம் அறியும் நின் பாணன் போலப் பல பொய்த்தல்லே #50 ஐங்குறுநூறு 48 - ஓரம்போகியார் வலை வல் பாண்_மகன் வால் எயிற்று மட_மகள் வராஅல் சொரிந்த வட்டியுள் மனையோள் யாண்டு கழி வெண்ணெல் நிறைக்கும் ஊர வேண்டேம் பெரும நின் பரத்தை ஆண்டுச் செய் குறியோடு ஈண்டு நீ வரலே #51 ஐங்குறுநூறு 49 - ஓரம்போகியார் அம் சில் ஓதி அசை நடைப் பாண்_மகள் சில் மீன் சொரிந்து பல் நெல் பெறூஉம் யாணர் ஊர நின் பாண்_மகன் யார் நலம் சிதையப் பொய்க்குமோ இனியே #52 ஐங்குறுநூறு 50 - ஓரம்போகியார் துணையோர் செல்வமும் யாமும் வருந்துதும் வஞ்சி ஓங்கிய யாணர் ஊர தஞ்சம் அருளாய் நீயே நின் நெஞ்சம் பெற்ற இவளுமார் அழுமே **6 தோழி கூற்றுப் பத்து #53 ஐங்குறுநூறு 51 - ஓரம்போகியார் நீர் உறை கோழி நீலச் சேவல் கூர் உகிர்ப் பேடை வயாஅம் ஊர புளிங்காய் வேட்கைத்து அன்று நின் மலர்ந்த மார்பு இவள் வயாஅ நோய்க்கே #54 ஐங்குறுநூறு 52 - ஓரம்போகியார் வயலைச் செம் கொடிப் பிணையல் தைஇச் செவ் விரல் சிவந்த சே அரி மழைக் கண் செவ் வாய்க் குறுமகள் இனைய எவ் வாய் முன்னின்று மகிழ்ந நின் தேரே #55 ஐங்குறுநூறு 53 - ஓரம்போகியார் துறை எவன் அணங்கும் யாம் உற்ற நோயே சிறை அழி புதுப் புனல் பாய்ந்து எனக் கலங்கிக் கழனித் தாமரை மலரும் பழன ஊர நீ உற்ற சூளே #56 ஐங்குறுநூறு 54 - ஓரம்போகியார் திண் தேர்த் தென்னவன் நல் நாட்டு உள்ளதை வேனில் ஆயினும் தண் புனல் ஒழுகும் தேனூர் அன்ன இவள் தெரி வளை நெகிழ ஊரின் ஊரனை நீ தர வந்த பஞ்சாய்க் கோதை மகளிர்க்கு அஞ்சுவல் அம்ம அம் முறை வரினே #57 ஐங்குறுநூறு 55 - ஓரம்போகியார் கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும் தேர் வண் கோமான் தேனூர் அன்ன இவள் நல் அணி நயந்து நீ துறத்தலின் பல்லோர் அறியப் பசந்தன்று நுதலே #58 ஐங்குறுநூறு 56 - ஓரம்போகியார் பகல் கொள் விளக்கோடு இரா நாள் அறியா வெல் போர்ச் சோழர் ஆமூர் அன்ன இவள் நலம் பெறு சுடர் நுதல் தேம்ப எவன் பயம் செய்யும் நீ தேற்றிய மொழியே #59 ஐங்குறுநூறு 57 - ஓரம்போகியார் பகலின் தோன்றும் பல் கதிர்த் தீயின் ஆம்பல் அம் செறுவின் தேனூர் அன்ன இவள் நலம் புலம்பப் பிரிய அனை நலம் உடையளோ மகிழ்ந நின் பெண்டே #60 ஐங்குறுநூறு 58 - ஓரம்போகியார் விண்டு அன்ன வெண்ணெல் போர்வின் கைவண் விராஅன் இருப்பை அன்ன இவள் அணங்கு உற்றனை போறி பிறர்க்கும் அனையையால் வாழி நீயே #61 ஐங்குறுநூறு 59 - ஓரம்போகியார் கேட்டிசின் வாழியோ மகிழ்ந ஆற்று உற மையல் நெஞ்சிற்கு எவ்வம் தீர நினக்கு மருந்து ஆகிய யான் இனி இவட்கு மருந்து அன்மை நோம் என் நெஞ்சே #62 ஐங்குறுநூறு 60 - ஓரம்போகியார் பழனக் கம்புள் பயிர்ப் பெடை அகவும் கழனி ஊர நின் மொழிவல் என்றும் துஞ்சு மனை நெடு நகர் வருதி அஞ்சாயோ இவள் தந்தை கை வேலே **7 கிழத்தி கூற்றுப்பத்து #63 ஐங்குறுநூறு 61 - ஓரம்போகியார் நறு வடி மாஅத்து விளைந்து உகு தீம் பழம் நெடு நீர்ப் பொய்கைத் துடுமென விழூஉம் கைவண் மத்தி கழாஅர் அன்ன நல்லோர் நல்லோர் நாடி வதுவை அயர விரும்புதி நீயே #64 ஐங்குறுநூறு 62 - ஓரம்போகியார் இந்திர விழவின் பூவின் அன்ன புன் தலைப் பேடை வரி நிழல் அகவும் இவ் ஊர் மங்கையர்த் தொகுத்து இனி எவ் ஊர் நின்றன்று மகிழ்ந நின் தேரே #65 ஐங்குறுநூறு 63 - ஓரம்போகியார் பொய்கைப் பள்ளி புலவு நாறு நீர்நாய் வாளை நாள்_இரை பெறூஉம் ஊர எம் நலம் தொலைவது ஆயினும் துன்னலம் பெரும பிறர்த் தோய்ந்த மார்பே #66 ஐங்குறுநூறு 64 - ஓரம்போகியார் அலமரல் ஆயமோடு அமர் துணை தழீஇ நலம் மிகு புதுப் புனல் ஆடக் கண்டோர் ஒருவரும் இருவரும் அல்லர் பலரே தெய்ய எம் மறையாதீமே #67 ஐங்குறுநூறு 65 - ஓரம்போகியார் கரும்பு நடு பாத்தியில் கலித்த ஆம்பல் சுரும்பு பசி களையும் பெரும் புனல் ஊர புதல்வனை ஈன்ற எம் மேனி முயங்கன்மோ-தெய்ய நின் மார்பு சிதைப்பதுவே #68 ஐங்குறுநூறு 66 - ஓரம்போகியார் உடலினேன் அல்லேன் பொய்யாது உரைமோ யார் அவள் மகிழ்ந தானே தேரொடு தளர் நடைப் புதல்வனை உள்ளி நின் வள மனை வருதலும் வௌவியோனே #69 ஐங்குறுநூறு 67 - ஓரம்போகியார் மடவள் அம்ம நீ இனிக் கொண்டோளே தன்னொடு நிகரா என்னொடு நிகரிப் பெரு நலம் தருக்கும் என்ப விரி மலர்த் தாது உண் வண்டினும் பலரே ஓதி ஒண் நுதல் பசப்பித்தோரே #70 ஐங்குறுநூறு 68 - ஓரம்போகியார் கன்னி விடியல் கணைக் கால் ஆம்பல் தாமரை போல மலரும் ஊர பேணாளோ நின் பெண்டே யான் தன் அடக்கவும் தான் அடங்கலளே #71 ஐங்குறுநூறு 69 - ஓரம்போகியார் கண்டனெம் அல்லமோ மகிழ்ந நின் பெண்டே பலர் ஆடு பெரும் துறை மலரொடு வந்த தண் புனல் வண்டல் உய்த்து என உண்கண் சிவப்ப அழுது நின்றோளே #72 ஐங்குறுநூறு 70 - ஓரம்போகியார் பழனப் பல் மீன் அருந்த நாரை கழனி மருதின் சென்னிச் சேக்கும் மா நீர்ப் பொய்கை யாணர் ஊர தூயர் நறியர் நின் பெண்டிர் பேஎய் அனையம் யாம் சேய் பயந்தனமே **8 புனலாட்டுப் பத்து #73 ஐங்குறுநூறு 71 - ஓரம்போகியார் சூது ஆர் குறும் தொடிச் சூர் அமை நுடக்கத்து நின் வெம் காதலி தழீஇ நெருநை ஆடினை என்ப புனலே அலரே மறைத்தல் ஒல்லுமோ மகிழ்ந புதைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியே #74 ஐங்குறுநூறு 72 - ஓரம்போகியார் வயல் மலர் ஆம்பல் கயில் அமை நுடங்கு தழைத் திதலை அல்குல் துயல்வரும் கூந்தல் குவளை உண்கண் ஏஎர் மெல் இயல் மலர் ஆர் மலிர் நிறை வந்து எனப் புனல் ஆடு புணர் துனை ஆயினள் எமக்கே #75 ஐங்குறுநூறு 73 - ஓரம்போகியார் வண்ண ஒண் தழை நுடங்க வால் இழை ஒண் நுதல் அரிவை பண்ணை பாய்ந்து எனக் கள் நறும் குவளை நாறித் தண்ணென்றிசினே பெரும் துறைப் புனலே #76 ஐங்குறுநூறு 74 - ஓரம்போகியார் விசும்பு இழி தோகைச் சீர் போன்றிசினே பசும்பொன் அவிர் இழை பைய நிழற்றக் கரை சேர் மருதம் ஏறிப் பண்ணை பாய்வோள் தண் நறும் கதுப்பே #77 ஐங்குறுநூறு 75 - ஓரம்போகியார் பலர் இவண் ஒவ்வாய் மகிழ்ந அதனால் அலர் தொடங்கின்றால் ஊரே மலர தொல் நிலை மருதத்துப் பெரும் துறை நின்னோடு ஆடினள் தண் புனல் அதுவே #78 ஐங்குறுநூறு 76 - ஓரம்போகியார் பஞ்சாய்க் கூந்தல் பசு மலர்ச் சுணங்கின் தண் புனல் ஆடித் தன் நலம் மேம்பட்டனள் ஒண் தொடி மடவரால் நின்னோடு அந்தர_மகளிர்க்குத் தெய்வமும் போன்றே #79 ஐங்குறுநூறு 77 - ஓரம்போகியார் அம்ம வாழியோ மகிழ்ந நின் மொழிவல் பேர் ஊர் அலர் எழ நீர் அலைக் கலங்கி நின்னொடு தண் புனல் ஆடுதும் எம்மோடு சென்மோ செல்லல் நின் மனையே #80 ஐங்குறுநூறு 78 - ஓரம்போகியார் கதிர் இலை நெடு வேல் கடு மான் கிள்ளி மதில் கொல் யானையின் கதழ்பு நெறி வந்த சிறை அழி புதுப் புனல் ஆடுகம் எம்மொடு கொண்மோ எம் தோள் புரை புணையே #81 ஐங்குறுநூறு 79 - ஓரம்போகியார் புதுப் புனல் ஆடி அமர்த்த கண்ணள் யார் மகள் இவள் எனப் பற்றிய மகிழ்ந யார் மகள் ஆயினும் அறியாய் நீ யார் மகனை எம் பற்றியோயே #82 ஐங்குறுநூறு 80 - ஓரம்போகியார் புலக்குவேம் அல்லேம் பொய்யாது உரைமோ நலத்தகு மகளிர்க்கு தோள் துணை ஆகித் தலைப் பெயல் செம் புனல் ஆடித் தவ நனி சிவந்தன மகிழ்ந நின் கண்ணே **9 புலவி விராய பத்து #83 ஐங்குறுநூறு 81 - ஓரம்போகியார் குருகு உடைத்து உண்ட வெள் அகட்டு யாமை அரிப் பறை வினைஞர் அல்கு மிசை கூட்டும் மலர் அணி வாயில் பொய்கை ஊர நீ என்னை நயந்தனென் என்றி நின் மனையோள் கேட்கின் வருந்துவள் பெரிதே #84 ஐங்குறுநூறு 82 - ஓரம்போகியார் வெகுண்டனள் என்ப பாண நின் தலைமகள் மகிழ்நன் மார்பின் அவிழ் இணர் நறும் தார்த் தாது உண் பறவை வந்து எம் போது ஆர் கூந்தல் இருந்தன எனவே #85 ஐங்குறுநூறு 83 - ஓரம்போகியார் மணந்தனை அருளாய் ஆயினும் பைபயத் தணந்தனை ஆகி உய்ம்மோ நும் ஊர் ஒண் தொடி முன்கை ஆயமும் தண் துறை ஊரன் பண்டு எனப்படற்கே #86 ஐங்குறுநூறு 84 - ஓரம்போகியார் செவியின் கேட்பினும் சொல் இறந்து வெகுள்வோள் கண்ணின் காணின் என் ஆகுவள்-கொல் நறு வீ ஐம்பால் மகளிர் ஆடும் தைஇத் தண் கயம் போல பலர் படிந்து உண்ணும் நின் பரத்தை மார்பே #87 ஐங்குறுநூறு 85 - ஓரம்போகியார் வெண் நுதல் கம்புள் அரி குரல் பேடை தண் நறும் பழனத்துக் கிளையோடு ஆலும் மறு இல் யாணர் மலி கேழ் ஊர நீ சிறுவரின் இனைய செய்தி நகாரோ பெரும நின் கண்டிசினோரே #88 ஐங்குறுநூறு 86 - ஓரம்போகியார் வெண் தலைக் குருகின் மென் பறை விளிக் குரல் நீள் வயல் நண்ணி இமிழும் ஊர எம் இவண் நல்குதல் அரிது நும் மனை மடந்தையொடு தலைப்பெய்தீமே #89 ஐங்குறுநூறு 87 - ஓரம்போகியார் பகன்றைக் கண்ணிப் பல் ஆன் கோவலர் கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும் யாணர் ஊர நின் மனையோள் யாரையும் புலக்கும் எம்மை மற்று எவனோ #90 ஐங்குறுநூறு 88 - ஓரம்போகியார் வண் துறை நயவரும் வள மலர்ப் பொய்கைத் தண் துறை ஊரனை எவ்வை எம்-வயின் வருதல் வேண்டுதும் என்பது ஒல்லேம் போல் யாம் அது வேண்டுதுமே #91 ஐங்குறுநூறு 89 - ஓரம்போகியார் அம்ம வாழி பாண எவ்வைக்கு எவன் பெரிது அளிக்கும் என்ப பழனத்து வண்டு தாது ஊதும் ஊரன் பெண்டு என விரும்பின்று அவள் தன் பண்பே #92 ஐங்குறுநூறு 90 - ஓரம்போகியார் மகிழ்நன் மாண் குணம் வண்டு கொண்டன-கொல் வண்டின் மாண் குணம் மகிழ்நன் கொண்டான்-கொல் அன்னது ஆகலும் அறியாள் எம்மொடு புலக்கும் அவன் புதல்வன் தாயே **10 எருமைப் பத்து #93 ஐங்குறுநூறு 91 - ஓரம்போகியார் நெறி மருப்பு எருமை நீல இரும் போத்து வெறி மலர்ப் பொய்கை ஆம்பல் மயக்கும் கழனி ஊரன் மகள் இவள் பழன வெதிரின் கொடிப் பிணையலளே #94 ஐங்குறுநூறு 92 - ஓரம்போகியார் கரும் கோட்டு எருமைச் செம் கண் புனிற்று ஆக் காதல் குழவிக்கு ஊறு முலை மடுக்கும் நுந்தை நும் ஊர் வருதும் ஒண் தொடி மடந்தை நின்னை யாம் பெறினே #95 ஐங்குறுநூறு 93 - ஓரம்போகியார் எருமை நல் ஏற்று இனம் மேயல் அருந்து எனப் பசு மோரோடமோடு ஆம்பல் ஒல்லா செய்த வினைய-மன்ற பல் பொழில் தாது உண் வெறுக்கைய ஆகி இவள் போது அவிழ் முச்சி ஊதும் வண்டே #96 ஐங்குறுநூறு 94 - ஓரம்போகியார் மள்ளர் அன்ன தடம் கோட்டு எருமை மகளிர் அன்ன துணையோடு வதியும் நிழல் முதிர் இலஞ்சிப் பழனத்ததுவே கழனித் தாமரை மலரும் கவின் பெறு சுடர்_நுதல் தந்தை ஊரே #97 ஐங்குறுநூறு 95 - ஓரம்போகியார் கரும் கோட்டு எருமை கயிறு பரிந்து அசைஇ நெடும் கதிர் நெல்லின் நாள் மேயல் ஆரும் புனல் முற்று ஊரன் பகலும் படர் மலி அரு நோய் செய்தனன் எமக்கே #98 ஐங்குறுநூறு 96 - ஓரம்போகியார் அணி நடை எருமை ஆடிய அள்ளல் மணி நிற நெய்தல் ஆம்பலொடு கலிக்கும் கழனி ஊரன் மகள் இவள் பழன ஊரன் பாயல் இன் துணையே #99 ஐங்குறுநூறு 97 - ஓரம்போகியார் பகன்றை வான் மலர் மிடைந்த கோட்டைக் கரும் தாள் எருமைக் கன்று வெரூஉம் பொய்கை ஊரன் மகள் இவள் பொய்கைப் பூவினும் நறும் தண்ணியளே #100 ஐங்குறுநூறு 98 - ஓரம்போகியார் தண் புனல் ஆடும் தடம் கோட்டு எருமை திண் பிணி அம்பியின் தோன்றும் ஊர ஒண் தொடி மட_மகள் இவளினும் நுந்தையும் யாயும் துடியரோ நின்னே #101 ஐங்குறுநூறு 99 - ஓரம்போகியார் பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை கழனி எருமை கதிரொடு மயக்கும் பூக் கஞல் ஊரன் மகள் இவள் நோய்க்கு மருந்து ஆகிய பணைத் தோளோளே #102 ஐங்குறுநூறு 100 - ஓரம்போகியார் புனல் ஆடு மகளிர் இட்ட ஒள் இழை மணல் ஆடு சிமையத்து எருமை கிளைக்கும் யாணர் ஊரன் மகள் இவள் பாணர் நரம்பினும் இன் கிளவியளே #103 குறுந்தொகை 10 மருதம் - ஓரம்போகியர் யாய் ஆகியளே விழவு முதலாட்டி பயறு போல் இணர பைம் தாது படீஇயர் உழவர் வாங்கிய கமழ் பூ மென் சினைக் காஞ்சி ஊரன் கொடுமை கரந்தனள் ஆகலின் நாணிய வருமே #104 குறுந்தொகை 70 குறிஞ்சி - ஓரம்போகியார் ஒடுங்கு ஈர் ஓதி ஒண் நுதல் குறுமகள் நறும் தண் நீரள் ஆர் அணங்கினளே இனையள் என்று அவள் புனை அளவு அறியேன் சில மெல்லியவே கிளவி அனை மெல்லியள் யான் முயங்கும் காலே #105 குறுந்தொகை 122 நெய்தல் - ஓரம்போகியார் பைம் கால் கொக்கின் புன் புறத்து அன்ன குண்டு நீர் ஆம்பலும் கூம்பின இனியே வந்தன்று வாழியோ மாலை ஒரு தான் அன்றே கங்குலும் உடைத்தே #105 குறுந்தொகை 127 மருதம் - ஓரம்போகியார் குருகு கொளக் குளித்த கெண்டை அயலது உரு கெழு தாமரை வான் முகை வெரூஉம் கழனி அம் படப்பைக் காஞ்சி ஊர ஒரு நின் பாணன் பொய்யன் ஆக உள்ள பாணர் எல்லாம் கள்வர் போல்வர் நீ அகன்றிசினோர்க்கே #106 குறுந்தொகை 384 மருதம் - ஓரம்போகியார் உழுந்து உடைக் கழுந்தின் கரும்பு உடைப் பணைத் தோள் நெடும் பல் கூந்தல் குறும் தொடி மகளிர் நலன் உண்டு துறத்தி ஆயின் மிக நன்று அம்ம மகிழ்ந நின் சூளே #107 நற்றிணை 20 மருதம் - ஓரம்போகியார் ஐய குறுமகள் கண்டிகும் வைகி மகிழ்நன் மார்பில் துஞ்சி அவிழ் இணர்த் தேம் பாய் மராஅம் கமழும் கூந்தல் துளங்கு இயல் அசைவரக் கலிங்கம் துயல்வரச் செறி தொடி தெளிர்ப்ப வீசி மறுகில் பூ போல் உண்கண் பெயர்ப்ப நோக்கிச் சென்றனள் வாழிய மடந்தை நுண் பல் சுணங்கு அணிவுற்ற விளங்கு பூணள் மார்புறு முயக்கிடை ஞெமிர்ந்த சோர் குழைப் பழம் பிணி வைகிய தோள் இணைக் குழைந்த கோதைக் கொடி முயங்கலளே #108 நற்றிணை 360 மருதம் - ஓரம்போகியார் முழவு முகம் புலர்ந்து முறையின் ஆடிய விழவு ஒழி களத்த பாவை போல நெருநைப் புணர்ந்தோர் புது நலம் வௌவி இன்று தரு மகளிர் மென் தோள் பெறீஇயர் சென்றீ பெரும சிறக்க நின் பரத்தை பல்லோர் பழித்தல் நாணி வல்லே காழின் குத்திக் கசிந்தவர் அலைப்பக் கையிடை வைத்தது மெய்யிடைத் திமிரும் முனி உடைக் கவளம் போல நனி பெரிது உற்ற நின் விழுமம் உவப்பென் மற்றும் கூடும் மனை மடி துயிலே #109 புறநானூறு 284 - ஓரம் போகியார் வருக-தில் வல்லே வருக-தில் வல் என வேந்து விடு விழுத் தூது ஆங்காங்கு இசைப்ப நூல் அரி மாலை சூடிக் காலின் தமியன் வந்த மூதிலாளன் அரும் சமம் தாங்கி முன் நின்று எறிந்த ஒரு கை இரும் பிணத்து எயிறு மிறை ஆகத் திரிந்த வாய் வாள் திருத்தாத் தனக்கு இரிந்தானைப் பெயர் புறம் நகுமே &90 - ஓரில் பிச்சையார் #1 குறுந்தொகை 277 பாலை - ஓரில் பிச்சையார் ஆசு இல் தெருவின் நாய் இல் வியன் கடைச் செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது ஓர் இல் பிச்சை ஆர மாந்தி அற்சிர வெய்ய வெப்பத் தண்ணீர் சேமச் செப்பில் பெறீஇயரோ நீயே மின் இடை நடுங்கும் கடைப் பெயல் வாடை எக்கால் வருவது என்றி அக்கால் வருவர் எம் காதலோரே &91 - ஓரேருழவர் #1 புறநானூறு 193 - ஓரேருழவர் அதள் எறிந்து அன்ன நெடு வெண் களரின் ஒருவன் ஆட்டும் புல்வாய் போல ஓடி உய்தலும் கூடும்-மன் ஒக்கல் வாழ்க்கை தட்கும் மா காலே &92 - ஔவையார் #1 அகநானூறு 11 பாலை - ஔவையார் வானம் ஊர்ந்த வயங்கு ஒளி மண்டிலம் நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் அம் காட்டு இலை இல மலர்ந்த முகை இல் இலவம் கலி கொள் ஆயம் மலிபு தொகுபு எடுத்த அம் சுடர் நெடும் கொடி பொற்பத் தோன்றி கயம் துகள் ஆகிய பயம் தபு கானம் எம்மொடு கழிந்தனர் ஆயின் கம்மென வம்பு விரித்து அன்ன பொங்கு மணல் கான்யாற்றுப் படு சினை தாழ்ந்த பயில் இணர் எக்கர் மெய் புகுவு அன்ன கை கவர் முயக்கம் அவரும் பெறுகுவர்-மன்னே நயவர நீர் வார் நிகர் மலர் கடுப்ப ஓ மறந்து அறு குளம் நிறைக்குந போல அல்கலும் அழுதல் மேவல ஆகி பழி தீர் கண்ணும் படுகுவ-மன்னே #2 அகநானூறு 147 பாலை - ஔவையார் ஓங்கு மலைச் சிலம்பில் பிடவுடன் மலர்ந்த வேங்கை வெறித் தழை வேறு வகுத்து அன்ன ஊன் பொதி அவிழாக் கோட்டு உகிர்க் குருளை மூன்று உடன் ஈன்ற முடங்கர் நிழத்த துறுகல் விடர் அளைப் பிணவுப் பசி கூர்ந்து எனப் பொறி கிளர் உழுவைப் போழ் வாய் ஏற்றை அறு கோட்டு உழை மான் ஆண் குரல் ஓர்க்கும் நெறி படு கவலை நிரம்பா நீள் இடை வெள்ளிவீதியைப் போல நன்றும் செலவு அயர்ந்திசினால் யானே பல புலந்து உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய்த் தோளும் தொல் கவின் தொலைய நாளும் பிரிந்தோர் பெயர்வுக்கு இரங்கி மருந்து பிறிது இன்மையின் இருந்து வினை இலனே #3 அகநானூறு 273 பாலை - ஔவையார் விசும்பு விசைத்து எழுந்த கூதளம் கோதையின் பசும் கால் வெண் குருகு வாப் பறை வளைஇ ஆர்கலி வள வயின் போதொடு பரப்பப் புலம் புனிறு தீர்ந்த புது வரல் அற்சிரம் நலம் கவர் பசலை நலியவும் நம் துயர் அறியார்-கொல்லோ தாமே அறியினும் நம் மனத்து அன்ன மென்மை இன்மையின் நம் உடை உலகம் உள்ளார்-கொல்லோ யாங்கு என உணர்கோ யானே வீங்குபு தலை வரம்பு அறியாத தகை வரல் வாடையொடு முலை இடைத் தோன்றிய நோய் வளர் இள முளை அசைவு உடை நெஞ்சத்து உயவுத் திரள் நீடி ஊரோர் எடுத்த அம்பல் அம் சினை ஆராக் காதல் அவிர் தளிர் பரப்பிப் புலவர் புகழ்ந்த நாண் இல் பெரு மரம் நில வரை எல்லாம் நிழற்றி அலர் அரும்பு ஊழ்ப்பவும் வாராதோரே #4 அகநானூறு 303 பாலை - ஔவையார் இடை பிறர் அறிதல் அஞ்சி மறை கரந்து பேஎய் கண்ட கனவின் பல் மாண் நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல் மறம் மிகு தானைப் பசும் பூண் பொறையன் கார் புகன்று எடுத்த சூர் புகல் நனம் தலை மா இரும் கொல்லி உச்சித் தாஅய்த் ததைந்து செல் அருவியின் அலர் எழப் பிரிந்தோர் புலம் கந்து ஆக இரவலர் செலினே வரை புரை களிற்றொடு நல் கலன் ஈயும் உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின் நிரை பறைக் குரீஇ இனம் காலைப் போகி முடங்கு புறச் செந்நெல் தரீஇயர் ஓராங்கு இரை தேர் கொட்பின ஆகிப் பொழுது படப் படர் கொள் மாலைப் படர்தந்து ஆங்கு வருவர் என்று உணர்ந்த மடம் கெழு நெஞ்சம் ஐயம் தெளியரோ நீயே பல உடன் வறல் மரம் பொருந்திய சிள்வீடு உமணர் கண நிரை மணியின் ஆர்க்கும் சுரன் இறந்து அழி நீர் மீன் பெயர்ந்து ஆங்கு அவர் வழி நடைச் சேறல் வலித்திசின் யானே #5 குறுந்தொகை 15 பாலை - ஔவையார் பறை படப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு தொன் மூதாலத்துப் பொதியில் தோன்றிய நாலூர்க் கோசர் நல் மொழி போல வாய் ஆகின்றே தோழி ஆய் கழல் சே இலை வெள் வேல் விடலையொடு தொகு வளை முன்கை மடந்தை நட்பே #6 குறுந்தொகை 23 குறிஞ்சி - ஔவையார் அகவன்_மகளே அகவன்_மகளே மனவுக் கோப்பு அன்ன நல் நெடும் கூந்தல் அகவன்_மகளே பாடுக பாட்டே இன்னும் பாடுக பாட்டே அவர் நல் நெடும் குன்றம் பாடிய பாட்டே #7 குறுந்தொகை 28 பாலை - ஔவையார் முட்டுவேன்-கொல் தாக்குவேன்-கொல் ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு ஆஅ ஒல் எனக் கூவுவேன்-கொல் அலமரல் அசை வளி அலைப்ப என் உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே #8 குறுந்தொகை 29 குறிஞ்சி - ஔவையார் நல் உரை இகந்து புல் உரை தாஅய்ப் பெயல் நீர்க்கு ஏற்ற பசும் கலம் போல உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி அரிது அவாவுற்றனை நெஞ்சமே நன்றும் பெரிதால் அம்ம நின் பூசல் உயர் கோட்டு மகவு உடை மந்தி போல அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே #9 குறுந்தொகை 39 பாலை - ஔவையார் வெம் திறல் கடும் வளி பொங்கர்ப் போந்து என நெற்று விளை உழிஞ்சில் வற்றல் ஆர்க்கும் மலை உடை அரும் சுரம் என்ப நம் முலை இடை முனிநர் சென்ற ஆறே #10 குறுந்தொகை 43 பாலை - ஔவையார் செல்வார் அல்லர் என்று யான் இகழ்ந்தனனே ஒல்வாள் அல்லள் என்று அவர் இகழ்ந்தனரே ஆயிடை இரு பேர் ஆண்மை செய்த பூசல் நல்_அராக் கதுவி ஆங்கு என் அல்லல் நெஞ்சம் அலமலக்குறுமே #11 குறுந்தொகை 80 மருதம் - ஔவையார் கூந்தல் ஆம்பல் முழுநெறி அடைச்சிப் பெரும் புனல் வந்த இரும் துறை விரும்பி யாம் அஃது அயர்கம் சேறும் தான் அஃது அஞ்சுவது உடையள் ஆயின் வெம் போர் நுகம் படக் கடக்கும் பல் வேல் எழினி முனை ஆன் பெரு நிரை போலக் கிளையொடு காக்க தன் கொழுநன் மார்பே #12 குறுந்தொகை 91 மருதம் - ஔவையார் அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற விளை கனி குண்டு நீர் இலஞ்சிக் கெண்டை கதூஉம் தண் துறை ஊரன் பெண்டினை ஆயின் பல ஆகுக நின் நெஞ்சில் படரே ஓவாது ஈயும் மாரி வண்கை கடும் பகட்டு யானை நெடும் தேர் அஞ்சி கொன் முனை இரவு ஊர் போலச் சில ஆகுக நீ துஞ்சும் நாளே #13 குறுந்தொகை 99 முல்லை - ஔவையார் உள்ளினென் அல்லெனோ யானே உள்ளி நினைந்தனென் அல்லெனோ பெரிதே நினைந்து மருண்டனென் அல்லெனோ உலகத்துப் பண்பே நீடிய மராஅத்த கோடு தோய் மலிர் நிறை இறைத்து உணச் சென்று அற்று ஆங்கு அனைப் பெரும் காமம் ஈண்டு கடைக்கொளவே #14 குறுந்தொகை 102 நெய்தல் - ஔவையார் உள்ளின் உள்ளம் வேமே உள்ளாது இருப்பின் எம் அளவைத்து அன்றே வருத்தி வான் தோய்வு அற்றே காமம் சான்றோர் அல்லர் யாம் மரீஇயோரே #15 குறுந்தொகை 158 குறிஞ்சி - ஔவையார் நெடு வரை மருங்கின் பாம்பு பட இடிக்கும் கடு விசை உருமின் கழறு குரல் அளைஇக் காலொடு வந்த கமம் சூல் மா மழை ஆர் அளி இலையோ நீயே பேர் இசை இமயமும் துளக்கும் பண்பினை துணையிலர் அளியர் பெண்டிர் இஃது எவனே #16 குறுந்தொகை 183 முல்லை - ஔவையார் சென்ற நாட்ட கொன்றை அம் பசு வீ நம் போல் பசக்கும் காலைத் தம் போல் சிறு தலைப் பிணையின் தீர்ந்த நெறி கோட்டு இரலை மானையும் காண்பர்-கொல் நமரே புல்லென் காயாப் பூக் கெழு பெரும் சினை மென் மயில் எருத்தின் தோன்றும் புன் புல வைப்பின் கானத்தானே #17 குறுந்தொகை 200 நெய்தல் - ஔவையார் பெய்த குன்றத்துப் பூ நாறு தண் கலுழ் மீமிசைத் தாஅய் வீசும் வளி கலந்து இழிதரும் புனலும் வாரார் தோழி மறந்தோர்-மன்ற மறவாம் நாமே கால மாரி மாலை மா மலை இன் இசை உருமின முரலும் முன் வரல் ஏமம் செய்து அகன்றோரே #18 குறுந்தொகை 364 மருதன் - ஔவையார் அரில் பவர்ப் பிரம்பின் வரிப் புற நீர்நாய் வாளை நாள் இரை பெறூஉம் ஊரன் பொன் கோல் அவிர் தொடித் தன் கெழு தகுவி என் புறங்கூறும் என்ப தெற்றென வணங்கு இறைப் பணை தோள் எல் வளை மகளிர் துணங்கை நாளும் வந்தன அவ் வரைக் கண் பொர மற்று அதன்-கண் அவர் மணம் கொளற்கு இவரும் மள்ளர் போரே #19 குறுந்தொகை 388 குறிஞ்சி - ஔவையார் நீர் கால் யாத்த நிரை இதழ்க் குவளை கோடை ஒற்றினும் வாடாது ஆகும் கவணை அன்ன பூட்டுப் பொருது அசாஅ உமண் எருத்து ஒழுகைத் தோடு நிரைத்து அன்ன முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின் யானை கை மடித்து உயவும் கானமும் இனிய ஆம் நும்மொடு வரினே #20 நற்றிணை 129 குறிஞ்சி - ஒளவையார் பெரு நகை கேளாய் தோழி காதலர் ஒரு நாள் கழியினும் உயிர் வேறுபடூஉம் பொம்மல் ஓதி நம் இவண் ஒழியச் செல்ப என்ப தாமே சென்று தம் வினை முற்றி வரூஉம் வரை நம் மனை வாழ்தும் என்ப நாமே அதன்தலைக் கேழ் கிளர் உத்தி அரவுத் தலை பனிப்பப் படு மழை உருமின் உரற்று குரல் நடுநாள் யாமத்தும் தமியம் கேட்டே #21 நற்றிணை 187 நெய்தல் - ஒளவையார் நெய்தல் கூம்ப நிழல் குணக்கு ஒழுகக் கல் சேர் மண்டிலம் சிவந்து நிலம் தணியப் பல் பூம் கானலும் அல்கின்றன்றே இன மணி ஒலிப்பப் பொழுதுபடப் பூட்டி மெய்மலி காமத்து யாம் தொழுது ஒழியத் தேரும் செல் புறம் மறையும் ஊரொடு யாங்கு ஆவது-கொல் தானே தேம் பட ஊது வண்டு இமிரும் கோதை மார்பின் மின் இவர் கொடும் பூண் கொண்கனொடு இன் நகை மேவி நாம் ஆடிய பொழிலே #22 நற்றிணை 295 நெய்தல் - ஔவையார் முரிந்த சிலம்பின் நெரிந்த வள்ளியின் புறன் அழிந்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் ஆயமும் அழுங்கின்று யாயும் அஃது அறிந்தனள் அரும் கடி அயர்ந்தனள் காப்பே எந்தை வேறு பல் நாட்டுக் கால் தர வந்த பல வினை நாவாய் தோன்றும் பெரும் துறைக் கலி மடைக் கள்ளின் சாடி அன்ன எம் இள நலம் இல்-கடை ஒழியச் சேறும் வாழியோ முதிர்கம் யாமே #23 நற்றிணை 371 முல்லை - ஔவையார் காயாம் குன்றத்துக் கொன்றை போல மா மலை விடரகம் விளங்க மின்னி மாயோள் இருந்த தேஎம் நோக்கி வியல் இரு விசும்பு அகம் புதையப் பாஅய்ப் பெயல் தொடங்கினவே பெய்யா வானம் நிழல் திகழ் சுடர்த் தொடி ஞெகிழ ஏங்கி அழல் தொடங்கினளே ஆய்_இழை அதன்எதிர் குழல் தொடங்கினரே கோவலர் தழங்கு குரல் உருமின் கங்குலானே #24 நற்றிணை 381 முல்லை - ஔவையார் அரும் துயர் உழத்தலின் உண்மை சான்ம் எனப் பெரும்பிறிது இன்மையின் இலேனும் அல்லேன் கரை பொருது இழிதரும் கான்யாற்று இகு கரை வேர் கிளர் மராஅத்து அம் தளிர் போல நடுங்கல் ஆனா நெஞ்சமொடு இடும்பை யாங்கனம் தாங்குவென் மற்றே ஓங்கு செலல் கடும் பகட்டு யானை நெடு மான் அஞ்சி ஈர நெஞ்சமோடு இசை சேண் விளங்க தேர் வீசு இருக்கை போல மாரி இரீஇ மான்றன்றால் மழையே #25 நற்றிணை 390 மருதம் - ஔவையார் வாளை வாளின் பிறழ நாளும் பொய்கை நீர்நாய் வைகு துயில் ஏற்கும் கைவண் கிள்ளி வெண்ணி சூழ்ந்த வயல் வெள்_ஆம்பல் உருவ நெறித் தழை ஐது அகல் அல்குல் அணி பெறத் தைஇ விழவின் செலீஇயர் வேண்டும்-மன்னோ யாணர் ஊரன் காணுநன் ஆயின் வரையாமையோ அரிதே வரையின் வரை போல் யானை வாய்மொழி முடியன் வரை வேய் புரையும் நல் தோள் அளிய தோழி தொலையுந பலவே #26 நற்றிணை 394 முல்லை ஔவையார் மரம் தலைமணந்த நனம் தலைக் கானத்து அலம் தலை ஞெமையத்து இருந்த குடிஞை பொன் செய் கொல்லனின் இனிய தெளிர்ப்பப் பெய்ம் மணி ஆர்க்கும் இழை கிளர் நெடும் தேர் வன் பரல் முரம்பின் நேமி அதிரச் சென்றிசின் வாழியோ பனிக் கடு நாளே இடைச் சுரத்து எழிலி உறைத்து என மார்பின் குறும் பொறிக் கொண்ட சாந்தமொடு நறும் தண்ணியன்-கொல் நோகோ யானே #27 புறநானூறு 87 - ஔவையார் **பாடப்பட்டோன் :அதியமான் நெடுமானஞ்சி களம் புகல் ஓம்பு-மின் தெவ்விர் போர் எதிர்ந்து எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல் எண் தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால் அன்னோனே #28 புறநானூறு 88 - ஔவையார் **பாடப்பட்டோன் :அதியமான் நெடுமானஞ்சி யாவிர் ஆயினும் கூழை தார் கொண்டு யாம் பொருதும் என்றல் ஓம்பு-மின் ஓங்கு திறல் ஒளிறு இலங்கு நெடு வேல் மழவர் பெருமகன் கதிர் விடு நுண் பூண் அம் பகட்டு மார்பின் விழவு மேம்பட்ட நல் போர் முழவுத் தோள் என் ஐயைக் காணா ஊங்கே #29 புறநானூறு 89 - ஔவையார் **பாடப்பட்டோன் :அதியமான் நெடுமானஞ்சி இழை அணிப் பொலிந்த ஏந்து கோட்டு அல்குல் மடவரல் உண்கண் வாள் நுதல் விறலி பொருநரும் உளரோ நும் அகன் தலை நாட்டு என வினவல் ஆனாப் பொரு படை வேந்தே எறி கோல் அஞ்சா அரவின் அன்ன சிறு வல் மள்ளரும் உளரே அதாஅன்று பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை வளி பொரு தெண் கண் கேட்பின் அது போர் என்னும் என் ஐயும் உளனே #30 புறநானூறு 90 - ஔவையார் **பாடப்பட்டோன் :அதியமான் நெடுமானஞ்சி உடை வளை கடுப்ப மலர்ந்த காந்தள் அடை மல்கு குளவியொடு கமழும் சாரல் மறப் புலி உடலின் மான் கணம் உளவோ மருளின விசும்பின் மாதிரத்து ஈண்டிய இருளும் உண்டோ ஞாயிறு சினவின் அச்சொடு தாக்கிப் பாருற்று இயங்கிய பண்டச் சாகாட்டு ஆழ்ச்சி சொல்லிய வரி மணல் ஞெமரக் கல் பக நடக்கும் பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ எழுமரம் கடுக்கும் தாள் தோய் தடக் கை வழு இல் வன் கை மழவர் பெரும இரு நில மண் கொண்டு சிலைக்கும் பொருநரும் உளரோ நீ களம் புகினே #31 புறநானூறு 91 - ஔவையார் **பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி வலம் படு வாய் வாள் ஏந்தி ஒன்னார் களம் படக் கடந்த கழல் தொடி தடக் கை ஆர் கலி நறவின் அதியர் கோமான் போர் அடு திருவின் பொலம் தார் அஞ்சி பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி நீல மணி மிடற்று ஒருவன் போல மன்னுக பெரும நீயே தொல் நிலை பெரு மலை விடரகத்து அரு மிசை கொண்ட சிறி இலை நெல்லித் தீம் கனி குறியாது ஆதல் நின் அகத்து அடக்கிச் சாதல் நீங்க எமக்கு ஈத்தனையே #32 புறநானூறு 92 - ஔவையார் **பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி யாழொடும் கொள்ளா பொழுதொடும் புணரா பொருள் அறிவாரா ஆயினும் தந்தையர்க்கு அருள் வந்தனவால் புதல்வர் தம் மழலை என் வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார் கடி மதில் அரண் பலக் கடந்து நெடுமான்_அஞ்சி நீ அருளல் மாறே #33 புறநானூறு 93 - ஔவையார் **பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி திண் பிணி முரசம் இழுமென முழங்கச் சென்று அமர் கடத்தல் யாவது வந்தோர் தார் தாங்குதலும் ஆற்றார் வெடிபட்டு ஓடல் மரீஇய பீடு இல் மன்னர் நோய்ப்-பால் விளிந்த யாக்கை தழீஇக் காதல் மறந்து அவர் தீது மருங்கு அறுமார் அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி மறம் கந்து ஆக நல் அமர் வீழ்ந்த நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க என வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர்-மாதோ வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து அண்ணல் யானை அடு களத்து ஒழிய அரும் சமம் ததைய நூறி நீ பெருந்தகை விழுப்புண் பட்ட மாறே #34 புறநானூறு 94 - ஔவையார் **பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி ஊர்க் குறுமாக்கள் வெண் கோடு கழாஅலின் நீர்த் துறை படியும் பெரும் களிறு போல இனியை பெரும எமக்கே மற்று அதன் துன் அரும் கடாஅம் போல இன்னாய் பெரும நின் ஒன்னாதோர்க்கே #35 புறநானூறு 95 - ஔவையார் **பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி இவ்வே பீலி அணிந்து மாலை சூட்டிக் கண் திரள் நோன் காழ் திருத்தி நெய் அணிந்து கடி உடை வியன் நகரவ்வே அவ்வே பகைவர்க் குத்திக் கோடு நுதி சிதைந்து கொல் துறைக் குற்றில-மாதோ என்றும் உண்டு ஆயின் பதம் கொடுத்து இல் ஆயின் உடன் உண்ணும் இல்லோர் ஒக்கல் தலைவன் அண்ணல் எம் கோமான் வை நுதி வேலே #36 புறநானூறு 96 - ஔவையார் **பாடப்பட்டோன்: அதியமான் மகன் பொகுட்டெழினி அலர் பூம் தும்பை அம் பகட்டு மார்பின் திரண்டு நீடு தடக் கை என் ஐ இளையோற்கு இரண்டு எழுந்தனவால் பகையே ஒன்றே பூப் போல் உண்கண் பசந்து தோள் நுணுகி நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று ஒன்றே விழவின்று ஆயினும் படு_பதம் பிழையாது மை ஊன் மொசித்த ஒக்கலொடு துறை நீர்க் கை_மான் கொள்ளுமோ என உறையுள் முனியும் அவன் செல்லும் ஊரே #37 புறநானூறு 97 - ஔவையார் **பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள் உடன்றவர் காப்பு உடை மதில் அழித்தலின் ஊனுற மூழ்கி உரு இழந்தனவே வேலே குறும்பு அடைந்த அரண் கடந்து அவர் நறும் கள்ளின் நாடு நைத்தலின் சுரை தழீஇய இரும் காழொடு மடை கலங்கி நிலை திரிந்தனவே களிறே எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து அவர் குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின் பரூஉப் பிணிய தொடி கழிந்தனவே மாவே பரந்து ஒருங்கு மலைந்த மறவர் பொலம் பைம் தார் கெடப் பரிதலின் களன் உழந்து அசைஇய மறுக் குளம்பினவே அவன் தானும் நிலம் திரைக்கும் கடல் தானைப் பொலம் தும்பைக் கழல் பாண்டில் கணை பொருத துளைத் தோலன்னே ஆயிடை உடன்றோர் உய்தல் யாவது தடம் தாள் பிணி கதிர் நெல்லின் செம்மல் மூதூர் நுமக்கு உரித்து ஆகல் வேண்டின் சென்று அவற்கு இறுக்கல் வேண்டும் திறையே மறுப்பின் ஒல்வான் அல்லன் வெல் போரான் எனச் சொல்லவும் தேறீர் ஆயின் மெல் இயல் கழல் கனி வகுத்த துணை சில் ஓதி குறும் தொடி மகளிர் தோள் விடல் இறும்பூது அன்று அஃது அறிந்து ஆடு-மினே #38 புறநானூறு98 - ஔவையார் **பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி முனைத் தெவ்வர் முரண் அவியப் பொரக் குறுகிய நுதி மருப்பின் நின் இனக் களிறு செலக் கண்டவர் மதில் கதவம் எழுச் செல்லவும் பிணன் அழுங்க களன் உழக்கிச் செலவு அசைஇய மறுக் குளம்பின் நின் இன நல் மா செலக் கண்டவர் கவை முள்ளின் புழை அடைப்பவும் மார்புறச் சேர்ந்து ஒல்காத் தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர் தோள் கழியொடு பிடி செறிப்பவும் வாள் வாய்த்த வடுப் பரந்த நின் மற மைந்தர் மைந்து கண்டவர் புண் படு குருதி அம்பு ஒடுக்கவும் நீயே ஐயவி புகைப்பவும் தாங்காது ஒய்யென உறு முறை மரபின் புறம் நின்று உய்க்கும் கூற்றத்து அனையை ஆகலின் போற்றார் இரங்க விளிவது-கொல்லோ வரம்பு அணைந்து இறங்கு கதிர் அலம்வரு கழனிப் பெரும் புனல் படப்பை அவர் அகன் தலை நாடே #39 புறநானூறு 99 - ஔவையார் **பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும் நீர் அக இருக்கை ஆழி சூட்டிய தொல் நிலை மரபின் நின் முன்னோர் போல ஈகை அம் கழல் கால் இரும் பனம் புடையல் பூ ஆர் காவின் புனிற்றுப் புலால் நெடு வேல் எழு பொறி நாட்டத்து எழாஅத் தாயம் வழு இன்று எய்தியும் அமையாய் செரு வேட்டு இமிழ் குரல் முரசின் எழுவரொடு முரணி சென்று அமர் கடந்து நின் ஆற்றல் தோற்றிய அன்றும் பாடுநர்க்கு அரியை இன்றும் பரணன் பாடினன்-மன்-கொல் மற்று நீ முரண் மிகு கோவலூர் நூறி நின் அரண் அடு திகிரி ஏந்திய தோளே #40 புறநானூறு 100 - ஔவையார் **பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி கையது வேலே காலன புனை கழல் மெய்யது வியரே மிடற்றது பசும் புண் வட்கர் போகிய வளர் இளம் போந்தை உச்சிக் கொண்ட ஊசி வெண் தோட்டு வெட்சி மா மலர் வேங்கையொடு விரைஇச் சுரி இரும் பித்தை பொலியச் சூடி வரி வயம் பொருத வயக் களிறு போல இன்னும் மாறாது சினனே அன்னோ உய்ந்தனர் அல்லர் இவண் உடற்றியோரே செறுவர் நோக்கிய கண் தன் சிறுவனை நோக்கியும் சிவப்பு ஆனாவே #41 புறநானூறு 101 - ஔவையார் **பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி ஒரு நாள் செல்லலம் இரு நாள் செல்லலம் பல நாள் பயின்று பலரொடு செல்லினும் தலை_நாள் போன்ற விருப்பினன் மாதோ இழை அணி யானை இயல் தேர் அஞ்சி அதியமான் பரிசில் பெறூஉம் காலம் நீட்டினும் நீட்டாது ஆயினும் யானை தன் கோட்டிடை வைத்த கவளம் போலக் கையகத்தது அது பொய் ஆகாதே அருந்த ஏமாந்த நெஞ்சம் வருந்த வேண்டா வாழ்க அவன் தாளே #42 புறநானூறு 102 - ஔவையார் **பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சியின் மகன் **பொகுட்டெழினி எருதே இளைய நுகம் உணராவே சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே அவல் இழியினும் மிசை ஏறினும் அவணது அறியுநர் யார் என உமணர் கீழ்மரத்து யாத்த சேம_அச்சு அன்ன இசை விளங்கு கவி கை நெடியோய் திங்கள் நாள் நிறை மதியத்து அனையை இருள் யாவணதோ நின் நிழல் வாழ்வோர்க்கே #43 புறநானூறு 103 - ஔவையார் **பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி ஒரு தலைப் பதலை தூங்க ஒரு தலைத் தூம்பு அகச் சிறு முழாத் தூங்கத் தூக்கிக் கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார் என சுரன் முதல் இருந்த சில் வளை விறலி செல்வை ஆயின் சேணோன் அல்லன் முனை சுட எழுந்த மங்குல் மாப் புகை மலை சூழ் மஞ்சின் மழ களிறு அணியும் பகைப் புலத்தோனே பல் வேல் அஞ்சி பொழுது இடைப்படாஅப் புலரா மண்டை மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப அலத்தல் காலை ஆயினும் புரத்தல் வல்லன் வாழ்க அவன் தாளே #44 புறநானூறு 104 - ஔவையார் **பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி போற்று-மின் மறவீர் சாற்றுதும் நும்மை ஊர்க் குறுமாக்கள் ஆடக் கலங்கும் தாள் படு சின்னீர் களிறு அட்டு வீழ்க்கும் ஈர்ப்பு உடை கராஅத்து அன்ன என் ஐ நுண் பல் கருமம் நினையாது இளையன் என்று இகழின் பெறல் அரிது ஆடே #45 புறநானூறு 140 - ஔவையார் **பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன் தடவு நிலைப் பலவின் நாஞ்சில் பொருநன் மடவன்-மன்ற செம் நாப் புலவீர் வளைக் கை விறலியர் படப்பைக் கொய்த அடகின் கண்ணுறையாக யாம் சில அரிசி வேண்டினெம் ஆகத் தான் பிற வரிசை அறிதலின் தன்னும் தூக்கி இரும் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர் பெரும் களிறு நல்கியோனே அன்னது ஓர் தேற்றா ஈகையும் உளது-கொல் போற்றார் அம்ம பெரியோர் தம் கடனே #46 புறநானூறு 187 - ஔவையார் நாடாக ஒன்றோ காடாக ஒன்றோ அவலாக ஒன்றோ மிசையாக ஒன்றோ எவ் வழி நல்லவர் ஆடவர் அவ் வழி நல்லை வாழிய நிலனே #47 புறநானூறு 206 - ஔவையார் **பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி வாயிலோயே வாயிலோயே வள்ளியோர் செவி முதல் வயங்கு மொழி வித்தித் தாம் உள்ளியது முடிக்கும் உரன் உடை உள்ளத்து வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கைப் பரிசிலர்க்கு அடையா வாயிலோயே கடு_மான் தோன்றல் நெடுமான் அஞ்சி தன் அறியலன்-கொல் என் அறியலன்-கொல் அறிவும் புகழும் உடையோர் மாய்ந்து என வறும் தலை உலகமும் அன்றே அதனால் காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை மரம் கொல் தச்சன் கை வல் சிறாஅர் மழு உடை காட்டகத்து அற்றே எத் திசை செலினும் அத் திசைச் சோறே #48 புறநானூறு 231 - ஔவையார். **பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. எறி புனக் குறவன் குறையல் அன்ன கரி புற விறகின் ஈம ஒள் அழல் குறுகினும் குறுகுக குறுகாது சென்று விசும்புற நீளினும் நீள்க பசும் கதிர் திங்கள் அன்ன வெண்குடை ஒண் ஞாயிறு அன்னோன் புகழ் மாயலவே #49 புறநானூறு 232 - ஔவையார். **பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி இல் ஆகியரோ காலை மாலை அல் ஆகியர் யான் வாழும் நாளே நடுகல் பீலி சூட்டி நார் அரி சிறு கலத்து உகுப்பவும் கொள்வன்-கொல்லோ கோடு உயர் பிறங்கு மலை கெழீஇய நாடு உடன் கொடுப்பவும் கொள்ளாதோனே #50 புறநானூறு 235 - ஔவையார். **பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் மன்னே பெரிய கள் பெரினே யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே சிறு சோற்றானும் நனி பல கலத்தன் மன்னே பெரும் சோற்றானும் நனி பல கலத்தன் மன்னே என்பொடு தடி படு இடம் எல்லாம் எமக்கு ஈயும் மன்னே அம்பொடு வேல் நுழை வழி எல்லாம் தான் நிற்கும் மன்னே நரந்தம் நாறும் தன் கையால் புலவு நாறும் என் தலை தைவரும் மன்னே அரும் தலை இரும் பாணர் அகல் மண்டைத் துளை உரீஇ இரப்போர் கையுளும் போகிப் புரப்போர் புன்கண் பாவை சோர அம் சொல் நுண் தேர்ச்சிப் புலவர் நாவில் சென்று வீழ்ந்தன்று அவன் அரு நிறத்து இயங்கிய வேலே ஆசு ஆகு எந்தை ஆண்டு உளன்-கொல்லோ இனிப் பாடுநரும் இல்லை பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை பனித் துறைப் பகன்றை நறை கொள் மா மலர் சூடாது வைகி ஆங்குப் பிறர்க்கு ஒன்று ஈயாது வீயும் உயிர் தவப் பலவே #51 புறநானூறு 269 : ஔவையார் குயில் வாய் அன்ன கூர் முகை அதிரல் பயிலாது அல்கிய பல் காழ் மாலை மை இரும் பித்தை பொலியச் சூட்டிப் புத்து அகல் கொண்ட புலிக் கண் வெப்பர் ஒன்றிரு முறை இருந்து உண்ட பின்றை உவலைக் கண்ணித் துடியன் வந்து எனப் பிழி மகிழ் வல்சி வேண்ட மற்று இது கொள்ளாய் என்ப கள்ளின் வாழ்த்திக் கரந்தை நீடிய அறிந்து மாறு செருவின் பல் ஆன் இன நிரை தழீஇய வில்லோர்க் கொடும் சிறைக் குரூஉப் பருந்து ஆர்ப்பத் தடிந்து மாறு பெயர்த்தது இக் கரும் கை வாளே #52 புறநானூறு 286 - ஔவையார் வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத் தன்னோர் அன்ன இளையர் இருப்பப் பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக் கால் வழி கட்டிலில் கிடப்பித் தூ வெள் அறுவை போர்ப்பித்திலதே #53 புறநானூறு 290 - ஔவையார் இவற்கு ஈந்து உண்-மதி கள்ளே சினப் போர் இனக் களிற்று யானை இயல் தேர்க் குருசில் நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை எடுத்து எறி ஞாட்பின் இமையான் தச்சன் அடுத்து எறி குறட்டின் நின்று மாய்ந்தனனே மறப் புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும் உறைப்புழி ஓலை போல மறைக்குவன் பெரும நின் குறித்து வரு வேலே #54 புறநானூறு 295 - ஔவையார் கடல் கிளர்ந்து அன்ன கட்டூர் நாப்பண் வெந்து வாய் வடித்த வேல் தலைப்பெயரித் தோடு உகைத்து எழுதரூஉ துரந்து எறி ஞாட்பின் வரு படை போழ்ந்து வாய்ப் பட விலங்கி இடைப் படை அழுவத்து சிதைந்து வேறாகிய சிறப்பு உடையாளன் மாண்பு கண்டு அருளி வாடு முலை ஊறிச் சுரந்தன ஓடாப் பூட்கை விடலை தாய்க்கே #55 புறநானூறு 311 - ஔவையார் களர்ப் படு கூவல் தோண்டி நாளும் புலைத்தி கழீஇய தூ வெள் அறுவை தாது எரு மறுகின் மாசுண இருந்து பலர் குறை செய்த மலர் தார் அண்ணற்கு ஒருவரும் இல்லை-மாதோ செருவத்துச் சிறப்பு உடை செம் கண் புகைய ஓர் தோல் கொண்டு மறைக்கும் சால்புடையோனே #56 புறநானூறு 315 - ஔவையார் **பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி உடையன் ஆயின் உண்ணவும் வல்லன் கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும் மடவர் மகிழ் துணை நெடுமான் அஞ்சி இல் இறைச் செரீஇய ஞெலிகோல் போலத் தோன்றாது இருக்கவும் வல்லன் மற்று அதன் கான்று படு கனை எரி போலத் தோன்றவும் வல்லன் தான் தோன்றும் காலே #57 புறநானூறு 367 - ஔவையார் நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம் தமவே ஆயினும் தம்மொடு செல்லா வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும் ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ம் கை நிறையப் பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து பாசிழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய நார் அறி தேறல் மாந்தி மகிழ் சிறந்து இரவலர்க்கு அரும் கலம் அருகாது வீசி வாழ்தல் வேண்டும் இவண் வரைந்த வைகல் வாழச் செய்த நல்வினை அல்லது ஆழும் காலைப் புணை பிறிது இல்லை ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர் முத்தீப் புரையக் காண்தக இருந்த கொற்ற வெண்குடைக் கொடித் தேர் வேந்திர் யான் அறி அளவையோ இதுவே வானத்து வயங்கித் தோன்றும் மீனினும் இம்மெனப் பரந்து இயங்கும் மா மழை உறையினும் உயர்ந்து மேந்தோன்றிப் பொலிக நும் நாளே #58 புறநானூறு 390 - ஔவையார் **பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி அறவை நெஞ்சத்து ஆயர் வளரும் மறவை நெஞ்சத்து ஆய் இலாளர் அரும்பு அலர் செருந்தி நெடும் கான் மலர் கமழ் விழவு அணி வியன் களம் அன்ன முற்றத்து ஆர்வலர் குறுகின் அல்லது காவலர் கனவினும் குறுகாக் கடி உடை வியன் நகர் மலைக் கணத்து அன்ன மாடம் சிலம்ப என் அரிக் குரல் தடாரி இரிய ஒற்றிப் பாடி நின்ற பல் நாள் அன்றியும் சென்ற ஞான்றைச் சென்று படர் இரவின் வந்ததன் கொண்டு நெடும் கடை நின்ற புன் தலைப் பொருநன் அளியன் தான் எனத் தன் உழைக் குறுகல் வேண்டி என் அரை முது நீர்ப் பாசி அன்ன உடை களைந்து திரு மலர் அன்ன புது மடிக் கொளீஇ மகிழ் தரல் மரபின் மட்டே அன்றியும் அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில் வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி முன் ஊர்ப் பொதியில் சேர்ந்த மென் நடை இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு அகற்ற அகடு நனை வேங்கை வீ கண்டு அன்ன பகடு தரு செந்நெல் போரொடு நல்கிக் கொண்டி பெறுக என்றோனே உண் துறை மலை அலர் அணியும் தலை நீர் நாடன் கண்டால் கொண்டு மனை திருந்து அடி வாழ்த்தி வான் அறியல என் பாடு பசி போக்கல் அண்ணல் யானை வேந்தர் உண்மையோ அறியலர் காண்பு அறியலரே #59 புறநானூறு 392 - ஔவையார் **பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி மகன் **பொகுட்டெழினி மதி ஏர் வெண்குடை அதியர் கோமான் கொடும் பூண் எழினி நெடும் கடை நின்று யான் பசலை நிலவின் பனி படு விடியல் பொரு களிற்று அடி வழி அன்ன என் கை ஒரு கண் மாக் கிணை ஒற்றுபு கொடாஅ உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து நிணம் படு குருதிப் பெரும் பாட்டு ஈரத்து அணங்கு உடை மரபின் இரும் களம்-தோறும் வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும் வைகல் உழவ வாழிய பெரிது எனச் சென்று யான் நின்றனென் ஆக அன்றே ஊர் உண் கேணிப் பகட்டு இலைப் பாசி வேர் புரை சிதாஅர் நீக்கி நேர் கரை நுண் நூல் கலிங்கம் உடீஇ உண்ம் எனத் தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல் கோள்_மீன் அன்ன பொலம் கலத்து அளைஇ ஊண் முறை ஈத்தல் அன்றியும் கோள் முறை விருந்து இறை நல்கியோனே அந்தரத்து அரும் பெறல் அமிழ்தம் அன்ன கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே &93 - கங்குல் வெள்ளத்தார் #1 குறுந்தொகை 387 முல்லை - கங்குல் வெள்ளத்தார் எல்லை கழிய முல்லை மலரக் கதிர் சினம் தணிந்த கையறு மாலை உயிர் வரம்பு ஆக நீந்தினம் ஆயின் எவன்-கொல் வாழி தோழி கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே &94 - கச்சிப்பேட்டு இளந்தச்சனார் #1 நற்றிணை 266 முல்லை - கச்சிப்பேட்டு இளந்தச்சனார் கொல்லைக் கோவலர் குறும் புனம் சேர்ந்த குறும் கால் குரவின் குவி இணர் வான் பூ ஆடு உடை இடை_மகன் சூடப் பூக்கும் அகலுள் ஆங்கண் சீறூரேமே அதுவே சாலும் காமம் அன்றியும் எம் விட்டு அகறிர் ஆயின் கொன் ஒன்று கூறுவல் வாழியர் ஐய வேறுபட்டு இரீஇய காலை இரியின் பெரிய அல்லவோ பெரியவர் நிலையே &95 - கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார் #1 குறுந்தொகை 213 பாலை - கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார் நசை நன்கு உடையர் தோழி ஞெரேரெனக் கவைத் தலை முது கலை காலின் ஒற்றிப் பசிப் பிணிக்கு இறைஞ்சிய பரூஉப் பெரும் ததரல் ஒழியின் உண்டு வழு இல் நெஞ்சின் தெறித்து நடை மரபின் தன் மறிக்கு நிழல் ஆகி நின்று வெயில் கழிக்கும் என்ப நம் இன் துயில் முனிநர் சென்ற ஆறே #2 குறுந்தொகை 216 பாலை - கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார் அவரே கேடு இல் விழுப் பொருள் தருமார் பாசிலை வாடா வள்ளி அம் காடு இறந்தோரே யானே தோடு ஆர் எல் வளை ஞெகிழ நாளும் பாடு அமை சேக்கையில் படர்கூர்ந்திசினே அன்னள் அளியள் என்னாது மா மழை இன்னும் பெய்யும் முழங்கி மின்னும் தோழி என் இன் உயிர் குறித்தே &96 - கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் #1 நற்றிணை 144 குறிஞ்சி - கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் பெரும் களிறு உழுவை தாக்கலின் இரும் பிடிக் கருவி மா மழையின் அரவம் அஞ்சுபு போது ஏர் உண்கண் கலுழவும் ஏது இல் பேதை நெஞ்சம் கவலை கவற்ற ஈங்கு ஆகின்றால் தோழி பகு வாய்ப் பிணவுப் புலி வழங்கும் அணங்கு அரும் கவலை அவிர் அறல் ஒழுகும் விரை செலல் கான்யாற்றுக் கரை அரும் குட்டம் தமியர் நீந்தி விரவு மலர் பொறித்த தோளர் இரவின் வருதல் அறியாதேற்கே #2 நற்றிணை 213 குறிஞ்சி - கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார் அருவி ஆர்க்கும் பெரு வரை நண்ணிக் கன்று கால்யாத்த மன்றப் பலவின் வேர்க் கொண்டு தூங்கும் கொழும் சுளைப் பெரும் பழம் குழவிச் சேதா மாந்தி அயலது வேய் பயில் இறும்பின் ஆம் அறல் பருகும் பெரும் கல் வேலிச் சிறுகுடி யாது எனச் சொல்லவும் சொல்லீர் ஆயின் கல்லெனக் கருவி மா மழை வீழ்ந்து என எழுந்த செம் கேழ் ஆடிய செழும் குரல் சிறுதினைக் கொய் புனம் காவலும் நுமதோ கோடு ஏந்து அல்குல் நீள் தோளீரே &97 - கடம்பனூர்ச் சாண்டிலியனார் #1 குறுந்தொகை 307 பாலை - கடம்பனூர்ச் சாண்டிலியனார் வளை உடைத்து அனையது ஆகி பலர் தொழச் செவ் வாய் வானத்து ஐயெனத் தோன்றி இன்னம் பிறந்தன்று பிறையே அன்னோ மறந்தனர்-கொல்லோ தாமே களிறு தன் உயங்கு நடை மடப் பிடி வருத்தம் நோனாது நிலை உயர் யாஅம் தொலையக் குத்தி வெண் நார் கொண்டு கை சுவைத்து அண்ணாந்து அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும் அத்த நீளிடை அழப் பிரிந்தோரே &98 - கடலூர்(கூடலூர்) பல்கண்ணனார் #1 நற்றிணை 380 மருதம் - கடலூர்(கூடலூர்) பல்கண்ணனார் நெய்யும் குய்யும் ஆடி மெய்யொடு மாசு பட்டன்றே கலிங்கமும் தோளும் திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்றப் புதல்வன் புல்லிப் புனிறு நாறும்மே வால் இழை மகளிர் சேரித் தோன்றும் தேரோற்கு ஒத்தனெம் அல்லேம் அதனால் பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ் எழாஅல் வல்லை ஆயினும் தொழாஅல் கொண்டு செல் பாண நின் தண் துறை ஊரனைப் பாடு மனைப் பாடல் கூடாது நீடு நிலைப் புரவியும் பூண் நிலை முனிகுவ விரகு இல மொழியல் யாம் வேட்டது இல் வழியே &99 - கடியலூர் உருத்திரங்கண்ணனார் #1 அகநானூறு 167 பாலை - கடியலூர் உருத்திரங்கண்ணனார் வயங்கு மணி பொருத வகை அமை வனப்பின் பசும் காழ் அல்குல் மாஅயோளொடு வினை வனப்பு எய்திய புனை பூம் சேக்கை விண் பொரு நெடு நகர்த் தங்கி இன்றே இனிது உடன் கழிந்தன்று-மன்னே நாளைப் பொருந்தாக் கண்ணேம் புலம்பு வந்து உறுதரச் சேக்குவம்-கொல்லோ நெஞ்சே சாத்து எறிந்து அதர் கூட்டுண்ணும் அணங்கு உடைப் பகழிக் கொடு வில் ஆடவர் படு பகை வெரீஇ ஊர் எழுந்து உலறிய பீர் எழு முது பாழ் முருங்கை மேய்ந்த பெரும் கை யானை வெரிந் ஓங்கு சிறுபுறம் உரிஞ ஒல்கி இட்டிகை நெடும் சுவர் விட்டம் வீழ்ந்து என மணிப்புறாத் துறந்த மரம் சோர் மாடத்து எழுது அணி கடவுள் போகலின் புல்லென்று ஒழுகு பலி மறந்த மெழுகாப் புன் திணைப் பால் நாய் துன்னிய பறைக் கண் சிற்றில் குயில் காழ் சிதைய மண்டி அயில் வாய்க் கூர் முகச் சிதலை வேய்ந்த போர் மடி நல் இறைப் பொதியிலானே #2 குறுந்தொகை 352 பாலை - கடியலூர் உருத்திரங்கண்ணனார் நெடு நீர் ஆம்பல் அடைப் புறத்து அன்ன கொடு மென் சிறைய கூர் உகிர்ப் பறவை அகல் இலைப் பலவின் சாரல் முன்னிப் பகல் உறை முது மரம் புலம்பப் போகும் சிறு புன் மாலை உண்மை அறிவேன் தோழி அவர்க் காணா ஊங்கே #3 பத்துப்பாட்டு - 9. பட்டினப்பாலை - கடியலூர் உருத்திரங்கண்ணனார் **சோழன் கரிகால் பெருவளத்தான் என்னும் திருமாவளவனைப் பாடியது வசை இல் புகழ் வயங்கு வெண் மீன் திசை திரிந்து தெற்கு ஏகினும் தன் பாடிய தளி உணவின் புள் தேம்பப் புயல் மாறி வான் பொய்ப்பினும் தான் பொய்யா மலைத் தலைய கடல் காவிரி புனல் பரந்து பொன் கொழிக்கும் விளைவு அறா வியன் கழனிக் கார்க் கரும்பின் கமழ் ஆலைத் தீத் தெறுவின் கவின் வாடி நீர்ச் செறுவின் நீள் நெய்தல் பூச் சாம்பும் புலத்து ஆங்கண் காய்ச் செந்நெல் கதிர் அருந்து மோட்டு எருமை முழுக்_குழவி கூட்டு நிழல் துயில் வதியும் கோள் தெங்கின் குலை வாழை காய்க் கமுகின் கமழ் மஞ்சள் இன மாவின் இணர்ப் பெண்ணை முதல் சேம்பின் முளை இஞ்சி அகல் நகர் வியல் முற்றத்துச் சுடர் நுதல் மட நோக்கின் நேர் இழை மகளிர் உணங்கு உணாக் கவரும் கோழி எறிந்த கொடும் கால் கனம் குழை பொன் கால் புதல்வர் புரவி இன்று உருட்டும் முக் கால் சிறுதேர் முன் வழி விலக்கும் விலங்கு பகை அல்லது கலங்கு பகை அறியாக் கொழும் பல் குடிச் செழும் பாக்கத்துக் குறும் பல் ஊர் நெடும் சோணாட்டு வெள்ளை உப்பின் கொள்ளை சாற்றி நெல்லொடு வந்த வல் வாய்ப் பஃறி பணை நிலைப் புரவியின் அணை முதல் பிணிக்கும் கழி சூழ் படப்பைக் கலி யாணர்ப் பொழில் புறவின் பூம் தண்டலை மழை நீங்கிய மா விசும்பின் மதி சேர்ந்த மக வெண் மீன் உரு கெழு திறல் உயர் கோட்டத்து முருகு அமர் பூ முரண் கிடக்கை வரி அணி சுடர் வான் பொய்கை இரு காமத்து இணை ஏரி புலிப் பொறிப் போர்க் கதவின் திருத் துஞ்சும் திண் காப்பின் புகழ் நிலைஇய மொழி வளர அறம் நிலைஇய அகன் அட்டில் சோறு வாக்கிய கொழும் கஞ்சி யாறு போலப் பரந்து ஒழுகி ஏறு பொரச் சேறு ஆகித் தேர் ஓடத் துகள் கெழுமி நீறு ஆடிய களிறு போல வேறுபட்ட வினை ஓவத்து வெண் கோயில் மாசு ஊட்டும் தண் கேணி தகை முற்றத்துப் பகட்டு எருத்தின் பல சாலைத் தவப் பள்ளித் தாழ் காவின் அவிர் சடை முனிவர் அங்கி வேட்கும் ஆவுதி நறும் புகை முனைஇக் குயில் தம் மா இரும் பெடையோடு இரியல்போகிப் பூதம் காக்கும் புகல் அரும் கடி நகர்த் தூதுணம்புறவொடு துச்சில் சேக்கும் முது மரத்த முரண் களரி வரி மணல் அகன் திட்டை இரும் கிளை இனன் ஒக்கல் கரும் தொழில் கலி மாக்கள் கடல் இறவின் சூடு தின்றும் வயல் ஆமைப் புழுக்கு உண்டும் வறள் அடும்பின் மலர் மலைந்தும் புனல் ஆம்பல் பூச் சூடியும் நீல் நிற விசும்பின் வலன் ஏர்பு திரிதரும் நாள்_மீன் விராய கோள்_மீன் போல மலர் தலை மன்றத்துப் பலர் உடன் குழீஇக் கையினும் கலத்தினும் மெய்யுறத் தீண்டிப் பெரும் சினத்தால் புறக்கொடாஅது இரும் செருவின் இகல் மொய்ம்பினோர் கல் எறியும் கவண் வெரீஇப் புள் இரியும் புகர்ப் போந்தைப் பறழ் பன்றிப் பல் கோழி உறைக்கிணற்றுப் புறச்சேரி மேழகத் தகரொடு சிவல் விளையாடக் கிடுகு நிரைத்து எஃகு ஊன்றி நடுகல்லின் அரண் போல நெடும் தூண்டிலில் காழ் சேர்த்திய குறும் கூரைக் குடி நாப்பண் நிலவு அடைந்த இருள் போல வலை உணங்கும் மணல் முன்றில் வீழ் தாழைத் தாள் தாழ்ந்த வெண்கூதாளத்துத் தண் பூம் கோதையர் சினைச் சுறவின் கோடு நட்டு மனைச் சேர்த்திய வல் அணங்கினான் மடல் தாழை மலர் மலைந்தும் பிணர்ப் பெண்ணைப் பிழி மாந்தியும் புன் தலை இரும் பரதவர் பைம் தழை மா மகளிரொடு பாய் இரும் பனிக் கடல் வேட்டம் செல்லாது உவவு மடிந்து உண்டு ஆடியும் புலவு மணல் பூம் கானல் மா மலை அணைந்த கொண்மூப் போலவும் தாய் முலை தழுவிய குழவி போலவும் தேறு நீர்ப் புணரியோடு யாறு தலைமணக்கும் மலி ஓதத்து ஒலி கூடல் தீது நீங்கக் கடல் ஆடியும் மாசு போகப் புனல் படிந்தும் அலவன் ஆட்டியும் உரவுத் திரை உழக்கியும் பாவை சூழ்ந்தும் பல் பொறி மருண்டும் அகலாக் காதலொடு பகல் விளையாடிப் பெறற்கு அரும் தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும் பொய்யா மரபின் பூ மலி பெரும் துறை துணைப் புணர்ந்த மட மங்கையர் பட்டு நீக்கித் துகில் உடுத்தும் மட்டு நீக்கி மது மகிழ்ந்தும் மைந்தர் கண்ணி மகளிர் சூடவும் மகளிர் கோதை மைந்தர் மலையவும் நெடும் கால் மாடத்து ஒள் எரி நோக்கி கொடும் திமில் பரதவர் குரூஉச் சுடர் எண்ணவும் பாடல் ஓர்த்தும் நாடகம் நயந்தும் வெண் நிலவின் பயன் துய்த்தும் கண் அடைஇய கடைக் கங்குலான் மாஅ காவிரி மணம் கூட்டும் தூஉ எக்கர்த் துயில் மடிந்து வால் இணர் மடல் தாழை வேலாழி வியன் தெருவில் நல் இறைவன் பொருள் காக்கும் தொல் இசைத் தொழில் மாக்கள் காய் சினத்த கதிர்ச்செல்வன் தேர் பூண்ட மாஅ போல வைகல்-தொறும் அசைவு இன்றி உல்கு செயக் குறைபடாது வான் முகந்த நீர் மலைப் பொழியவும் மலைப் பொழிந்த நீர் கடல் பரப்பவும் மாரி பெய்யும் பருவம் போல நீரின்-நின்றும் நிலத்து ஏற்றவும் நிலத்தின்-நின்று நீர்ப் பரப்பவும் அளந்து அறியாப் பல பண்டம் வரம்பு அறியாமை வந்து ஈண்டி அரும் கடிப் பெரும் காப்பின் வலி உடை வல் அணங்கின் நோன் புலி பொறித்துப் புறம் போக்கி மதி நிறைந்த மலி பண்டம் பொதி மூடைப் போர் ஏறி மழை ஆடு சிமைய மால் வரைக் கவாஅன் வரை ஆடு வருடை தோற்றம் போல கூர் உகிர் ஞமலி கொடும் தாள் ஏற்றை ஏழகத் தகரோடு உகளும் முன்றில் குறும் தொடை நெடும் படிக்கால் கொடும் திண்ணைப் பல் தகைப்பின் புழை வாயில் போகு இடைகழி மழை தோயும் உயர் மாடத்துச் சேவடிச் செறி குறங்கின் பாசிழைப் பகட்டு அல்குல் தூசு உடைத் துகிர் மேனி மயில் இயல் மான் நோக்கின் கிளி மழலை மென் சாயலோர் வளி நுழையும் வாய் பொருந்தி ஓங்கு வரை மருங்கின் நுண் தாது உறைக்கும் காந்தள் அம் துடுப்பின் கவி குலை அன்ன செறி தொடி முன்கை கூப்பிச் செவ்வேள் வெறி ஆடு மகளிரொடு செறியத் தாஅய்க் குழல் அகவ யாழ் முரல முழவு அதிர முரசு இயம்ப விழவு அறா வியல் ஆவணத்து மை அறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய மலர் அணி வாயில் பலர் தொழு கொடியும் வரு புனல் தந்த வெண் மணல் கான்யாற்று உரு கெழு கரும்பின் ஒண் பூப் போலக் கூழ் உடைக் கொழு மஞ்சிகை தாழ் உடைத் தண் பணியத்து வால் அரிசிப் பலி சிதறிப் பாகு உகுத்த பசு மெழுக்கின் காழ் ஊன்றிய கவி கிடுகின் மேல் ஊன்றிய துகில் கொடியும் பல் கேள்வித் துறைபோகிய தொல் ஆணை நல் ஆசிரியர் உறழ் குறித்து எடுத்த உரு கெழு கொடியும் வெளில் இளக்கும் களிறு போலத் தீம் புகார்த் திரை முன்துறை தூங்கு நாவாய் துவன்று இருக்கை மிசைக் கூம்பின் நசைக் கொடியும் மீன் தடிந்து விடக்கு அறுத்து ஊன் பொரிக்கும் ஒலி முன்றில் மணல் குவைஇ மலர் சிதறிப் பலர் புகு மனைப் பலிப் புதவின் நறவு நொடைக் கொடியொடு பிறபிறவும் நனி விரைஇ பல்வேறு உருவின் பதாகை நீழல் செல் கதிர் நுழையாச் செழு நகர் வரைப்பின் செல்லா நல் இசை அமரர் காப்பின் நீரின் வந்த நிமிர் பரிப் புரவியும் காலின் வந்த கரும் கறி மூடையும் வடமலைப் பிறந்த மணியும் பொன்னும் குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும் தென் கடல் முத்தும் குண கடல் துகிரும் கங்கை வாரியும் காவிரிப் பயனும் ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும் அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி வளம் தலைமயங்கிய நனம் தலை மறுகின் நீர் நாப்பண்ணும் நிலத்தின் மேலும் ஏமாப்ப இனிது துஞ்சிக் கிளை கலித்துப் பகை பேணாது வலைஞர் முன்றில் மீன் பிறழவும் விலைஞர் குரம்பை மா ஈண்டவும் கொலை கடிந்தும் களவு நீக்கியும் அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் நல் ஆனொடு பகடு ஓம்பியும் நான்மறையோர் புகழ் பரப்பியும் பண்ணியம் அட்டியும் பசும் பதம் கொடுத்தும் புண்ணியம் முட்டாத் தண் நிழல் வாழ்க்கை கொடு மேழி நசை உழவர் நெடு நுகத்துப் பகல் போல நடுவு நின்ற நன் நெஞ்சினோர் வடு அஞ்சி வாய் மொழிந்து தமவும் பிறவும் ஒப்ப நாடிக் கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்பதூஉம் குறை கொடாது பல் பண்டம் பகர்ந்து வீசும் தொல் கொண்டித் துவன்று இருக்கைப் பல் ஆயமொடு பதி பழகி வேறுவேறு உயர்ந்த முது வாய் ஒக்கல் சாறு அயர் மூதூர் சென்று தொக்கு ஆங்கு மொழி பல பெருகிய பழி தீர் தேஎத்துப் புலம் பெயர் மாக்கள் கலந்து இனிது உறையும் முட்டாச் சிறப்பின் பட்டினம் பெறினும் வார் இரும் கூந்தல் வயங்கு_இழை ஒழிய வாரேன் வாழிய நெஞ்சே கூர் உகிர்க் கொடு_வரிக் குருளை கூட்டுள் வளர்ந்து ஆங்கு பிறர் பிணியகத்து இருந்து பீடு காழ் முற்றி அரும் கரை கவியக் குத்திக் குழி கொன்று பெரும் கை யானை பிடி புக்கு ஆங்கு நுண்ணிதின் உணர நாடி நண்ணார் செறிவு உடைத் திண் காப்பு ஏறி வாள் கழித்து உரு கெழு தாயம் ஊழின் எய்திப் பெற்றவை மகிழ்தல் செய்யான் செற்றோர் கடி அரண் தொலைத்த கதவு கொல் மருப்பின் முடி உடைக் கரும் தலை புரட்டும் முன் தாள் உகிர் உடை அடிய ஓங்கு எழில் யானை வடி மணிப் புரவியொடு வயவர் வீழப் பெரு நல் வானத்துப் பருந்து உலாய் நடப்பத் தூறு இவர் துறுகல் போலப் போர் வேட்டு வேறு பல் பூளையொடு உழிஞை சூடிப் பேய்க் கண் அன்ன பிளிறு கடி முரசம் மாக் கண் அகல் அறை அதிர்வன முழங்க முனை கெடச் சென்று முன் சமம் முருக்கித் தலை தவச் சென்று தண் பணை எடுப்பி வெண் பூக் கரும்பொடு செந்நெல் நீடி மா இதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கி கராஅம் கலித்த கண் அகன் பொய்கைக் கொழும் கால் புதவமொடு செருந்தி நீடிச் செறுவும் வாவியும் மயங்கி நீர் அற்று அறு கோட்டு இரலையொடு மான் பிணை உகளவும் கொண்டி மகளிர் உண்துறை மூழ்கி அந்தி மாட்டிய நந்தா விளக்கின் மலர் அணி மெழுக்கம் ஏறிப் பலர் தொழ வம்பலர் சேக்கும் கந்து உடைப் பொதியில் பரு நிலை நெடும் தூண் ஒல்கத் தீண்டிப் பெரு நல் யானையொடு பிடி புணர்ந்து உறையவும் அரு விலை நறும் பூத் தூஉய்த் தெருவில் முது வாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த திரி புரி நரம்பின் தீம் தொடை ஓர்க்கும் பெரு விழாக் கழிந்த பேஎம் முதிர் மன்றத்துச் சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி அழல் வாய் ஓரி அஞ்சுவரக் கதிர்ப்பவும் அழு குரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும் கணம்கொள் கூளியொடு கதுப்பு இகுத்து அசைஇப் பிணம் தின் யாக்கைப் பேய்_மகள் துவன்றவும் கொடும் கால் மாடத்து நெடும் கடைத் துவன்றி விருந்து உண்டு ஆனாப் பெரும் சோற்று அட்டில் ஒண் சுவர் நல் இல் உயர் திணை இருந்து பைம் கிளி மிழற்றும் பால் ஆர் செழு நகர் தொடுதோல் அடியர் துடி படக் குழீஇ கொடு வில் எயினர் கொள்ளை உண்ட உணவு இல் வறும் கூட்டு உள்ளகத்து இருந்து வளை வாய்க் கூகை நன் பகல் குழறவும் அரும் கடி வரைப்பின் ஊர் கவின் அழியப் பெரும் பாழ் செய்தும் அமையான் மருங்கு அற மலை அகழ்க்குவனே கடல் தூர்க்குவனே வான் வீழ்க்குவனே வளி மாற்றுவன் எனத் தான் முன்னிய துறைபோகலின் பல் ஒளியர் பணிபு ஒடுங்கத் தொல் அருவாளர் தொழில் கேட்ப வடவர் வாடக் குடவர் கூம்பத் தென்னவன் திறல் கெடச் சீறி மன்னர் மன் எயில் கதுவும் மதன் உடை நோன் தாள் மாத் தானை மற மொய்ம்பின் செம் கண்ணால் செயிர்த்து நோக்கிப் புன் பொதுவர் வழி பொன்ற இருங்கோவேள் மருங்கு சாய காடு கொன்று நாடு ஆக்கிக் குளம் தொட்டு வளம் பெருக்கிப் பிறங்கு நிலை மாடத்து உறந்தை போக்கிக் கோயிலொடு குடி நிறீஇ வாயிலொடு புழை அமைத்து ஞாயில்-தொறும் புதை நிறீஇ பொருவேம் எனப் பெயர் கொடுத்து ஒருவேம் எனப் புறக்கொடாது திரு நிலைஇய பெரு மன் எயில் மின் ஒளி எறிப்பத் தம் ஒளி மழுங்கி விசி பிணி முழவின் வேந்தர் சூடிய பசு மணி பொருத பரேர் எறுழ்க் கழல் கால் பொன் தொடிப் புதல்வர் ஓடி ஆடவும் முற்று இழை மகளிர் முகிழ் முலை திளைப்பவும் செம் சாந்து சிதைந்த மார்பின் ஒண் பூண் அரிமா அன்ன அணங்கு உடைத் துப்பின் திருமாவளவன் தெவ்வர்க்கு ஓக்கிய வேலினும் வெய்ய கானம் அவன் கோலினும் தண்ணிய தட மென் தோளே #4 பத்துப்பாட்டு - 4. பெரும்பாணாற்றுப்படை - கடியலூர் உருத்திரங்கண்ணனார் **தொண்டைமான் இளந்திரையனைப் பாடியது அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகிப் பகல் கான்று எழுதரு பல் கதிர்ப் பருதி காய் சினம் திருகிய கடும் திறல் வேனில் பாசிலை ஒழித்த பராஅரைப் பாதிரி வள் இதழ் மா மலர் வயிற்றிடை வகுத்ததன் உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சைப் பரி அரைக் கமுகின் பாளை அம் பசும் பூக் கரு இருந்து அன்ன கண்கூடு செறி துளை உருக்கி அன்ன பொருத்துறு போர்வைச் சுனை வறந்து அன்ன இருள் தூங்கு வறு வாய்ப் பிறை பிறந்து அன்ன பின் ஏந்து கவைக் கடை நெடும் பணைத் திரள் தோள் மடந்தை முன்கைக் குறும் தொடி ஏய்க்கும் மெலிந்து வீங்கு திவவின் மணி வார்ந்து அன்ன மா இரு மருப்பின் பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் தொடை அமை கேள்வி இட வயின் தழீஇ வெம் தெறல் கனலியொடு மதி வலம் திரிதரும் தண் கடல் வரைப்பில் தாங்குநர்ப் பெறாது பொழி மழை துறந்த புகை வேய் குன்றத்துப் பழு மரம் தேரும் பறவை போலக் கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும் புல்லென் யாக்கைப் புலவு வாய்ப் பாண பெரு வறம் கூர்ந்த கானம் கல்லெனக் கருவி வானம் துளி சொரிந்து ஆங்குப் பழம் பசி கூர்ந்த எம் இரும் பேர் ஒக்கலொடு வழங்கத் தவாஅப் பெரு வளன் எய்தி வால் உளைப் புரவியொடு வயக் களிறு முகந்துகொண்டு யாம் அவன்-நின்றும் வருதும் நீயிரும் இரு நிலம் கடந்த திரு மறு மார்பின் முந்நீர் வண்ணன் பிறங்கடை அ நீர்த் திரை தரு மரபின் உரவோன் உம்பல் மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும் முரசு முழங்கு தானை மூவருள்ளும் இலங்கு நீர் பரப்பின் வளை மீக்கூறும் வலம்புரி அன்ன வசை நீங்கு சிறப்பின் அல்லது கடிந்த அறம் புரி செங்கோல் பல் வேல் திரையன் படர்குவிர் ஆயின் கேள் அவன் நிலையே கெடுக நின் அவலம் அத்தம் செல்வோர் அலறத் தாக்கிக் கைப்பொருள் வௌவும் களவு ஏர் வாழ்க்கைக் கொடியோர் இன்று அவன் கடி உடை வியன் புலம் உருமும் உரறாது அரவும் தப்பா காட்டு மாவும் உறுகண் செய்யா வேட்டாங்கு அசைவுழி அசைஇ நசைவுழித் தங்கிச் சென்மோ இரவல சிறக்க நின் உள்ளம் கொழும் சூட்டு அருந்திய திருந்து நிலை ஆரத்து முழவின் அன்ன முழு மர உருளி எழூஉப் புணர்ந்து அன்ன பரூஉக் கை நோன் பார் மாரிக் குன்றம் மழை சுமந்து அன்ன ஆரை வேய்ந்த அறை வாய்ச் சகடம் வேழம் காவலர் குரம்பை ஏய்ப்பக் கோழி சேக்கும் கூடு உடைப் புதவின் முளை எயிற்று இரும் பிடி முழந்தாள் ஏய்க்கும் துளை அரைச் சீறுரல் தூங்கத் தூக்கி நாடக மகளிர் ஆடுகளத்து எடுத்த விசி வீங்கு இன்னியம் கடுப்பக் கயிறு பிணித்துக் காடி வைத்த கலன் உடை மூக்கின் மகவு உடை மகடூஉப் பகடு புறம் துரப்ப கோட்டு இணர் வேம்பின் ஏட்டு இலை மிடைந்த படலைக் கண்ணிப் பரேர் எறுழ்த் திணி தோள் முடலை யாக்கை முழு வலி மாக்கள் சிறு துளைக் கொடு நுகம் நெறிபட நிரைத்த பெரும் கயிற்று ஒழுகை மருங்கில் காப்பச் சில்_பத_உணவின் கொள்ளை சாற்றி பல் எருத்து உமணர் பதி போகு நெடு நெறி எல்லிடைக் கழியுநர்க்கு ஏமம் ஆக மலையவும் கடலவும் மாண் பயம் தரூஉம் அரும் பொருள் அருத்தும் திருந்து தொடை நோன் தாள் அடி புதை அரணம் எய்திப் படம் புக்குப் பொரு கணை தொலைச்சிய புண் தீர் மார்பின் விரவு வரிக் கச்சின் வெண் கை ஒள் வாள் வரை ஊர் பாம்பின் பூண்டு புடை தூங்கச் சுரிகை நுழைந்த சுற்று வீங்கு செறிவு உடைக் கரு வில் ஓச்சிய கண் அகன் எறுழ்த் தோள் கடம்பு அமர் நெடுவேள் அன்ன மீளி உடம்பிடித் தடக் கை ஓடா வம்பலர் தடவு நிலைப் பலவின் முழுமுதல் கொண்ட சிறு சுளைப் பெரும் பழம் கடுப்ப மிரியல் புணர்ப் பொறை தாங்கிய வடு ஆழ் நோன் புறத்து அணர் செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும் உல்கு உடைப் பெருவழிக் கவலை காக்கும் வில் உடை வைப்பின் வியன் காட்டு இயவின் நீள் அரை இலவத்து அலங்கு சினை பயந்த பூளை அம் பசும் காய் புடை விரிந்து அன்ன வரிப் புற அணிலொடு கருப்பை ஆடாது யாற்று அறல் புரையும் வெரிந் உடைக் கொழு மடல் வேல் தலை அன்ன வை நுதி நெடும் தகர் ஈத்து இலை வேய்ந்த எய்ப் புறக் குரம்பை மான் தோல் பள்ளி மகவொடு முடங்கி ஈன் பிணவு ஒழியப் போகி நோன் காழ் இரும்பு தலை யாத்த திருந்து கணை விழுக் கோல் உளி வாய்ச் சுரையின் மிளிர மிண்டி இரு நிலக் கரம்பைப் படு நீறு ஆடி நுண் புல் அடக்கிய வெண் பல் எயிற்றியர் பார்வை யாத்த பறை தாள் விளவின் நீழல் முன்றில் நில உரல் பெய்து குறும் காழ் உலக்கை ஓச்சி நெடும் கிணற்று வல் ஊற்று உவரி தோண்டித் தொல்லை முரவு வாய்க் குழிசி முரி அடுப்பு ஏற்றி வாராது அட்ட வாடூன் புழுக்கல் வாடாத் தும்பை வயவர் பெருமகன் ஓடாத் தானை ஒண் தொழில் கழல் கால் செவ் வரை நாடன் சென்னியம் எனினே தெய்வ மடையின் தேக்கு இலைக் குவைஇ நும் பை தீர் கடும்பொடு பதம் மிகப் பெறுகுவிர் மான் அடி பொறித்த மயங்கு அதர் மருங்கின் வான் மடி பொழுதில் நீர் நசைஇக் குழித்த அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கிப் புகழா வாகைப் பூவின் அன்ன வளை மருப்பு ஏனம் வரவு பார்த்து இருக்கும் அரைநாள் வேட்டம் அழுங்கின் பகல் நாள் பகு வாய் ஞமலியொடு பைம் புதல் எருக்கித் தொகு வாய் வேலித் தொடர் வலை மாட்டி முள் அரைத் தாமரை புல் இதழ் புரையும் நெடும் செவிக் குறு முயல் போக்கு அற வளைஇக் கடுங்கண் கானவர் கடறு கூட்டுண்ணும் அரும் சுரம் இறந்த அம்பர்ப் பருந்து பட ஒன்னாத் தெவ்வர் நடுங்க ஓச்சி வை நுதி மழுங்கிய புலவு வாய் எஃகம் வடி மணிப் பலகையொடு நிரைஇ முடி நாண் சாபம் சார்த்திய கணை துஞ்சு வியல் நகர் ஊகம் வேய்ந்த உயர் நிலை வரைப்பின் வரைத் தேன் புரையும் கவைக் கடைப் புதையொடு கடும் துடி தூங்கும் கணைக் கால் பந்தர்த் தொடர் நாய் யாத்த துன் அரும் கடி நகர் வாழ் முள் வேலிச் சூழ் மிளைப் படப்பைக் கொடு நுகம் தழீஇய புதவின் செந்நிலை நெடு நுதி வயக் கழு நிரைத்த வாயில் கொடு வில் எயினக் குறும்பில் சேப்பின் களர் வளர் ஈந்தின் காழ் கண்டு அன்ன சுவல் விளை நெல்லின் செவ் அவிழ்ச் சொன்றி ஞமலி தந்த மனவுச் சூல் உடும்பின் வறை கால்யாத்தது வயின்-தொறும் பெறுகுவிர் யானை தாக்கினும் அரவு மேல் செலினும் நீல் நிற விசும்பின் வல் ஏறு சிலைப்பினும் சூல்_மகள் மாறா மறம் பூண் வாழ்க்கை வலிக் கூட்டுணவின் வாள் குடிப் பிறந்த புலிப் போத்து அன்ன புல் அணல் காளை செல்நாய் அன்ன கரு வில் சுற்றமொடு கேளா மன்னர் கடி புலம் புக்கு நாள் ஆ தந்து நறவு நொடை தொலைச்சி இல் அடு கள் இன் தோப்பி பருகி மல்லல் மன்றத்து மத விடை கெண்டி மடி வாய்த் தண்ணுமை நடுவண் சிலைப்பச் சிலை நவில் எறுழ்த் தோள் ஓச்சி வலன் வளையூஉ பகல் மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை முரண் தலை கழிந்த பின்றை மறிய குளகு அரை யாத்த குறும் கால் குரம்பைச் செற்றை வாயில் செறி கழிக் கதவின் கற்றை வேய்ந்த கழித் தலைச் சாம்பின் அதளோன் துஞ்சும் காப்பின் உதள நெடும் தாம்பு தொடுத்த குறும் தறி முன்றில் கொடு முகத் துருவையொடு வெள்ளை சேக்கும் இடு முள் வேலி எருப் படு வரைப்பின் நள்ளிருள் விடியல் புள் எழப் போகிப் புலிக் குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி ஆம்பி வான் முகை அன்ன கூம்பு முகிழ் உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து புகர் வாய்க் குழிசிப் பூம் சுமட்டு இரீஇ நாள்_மோர் மாறும் நன் மா மேனிச் சிறு குழை துயல்வரும் காதின் பணைத் தோள் குறு நெறிக் கொண்ட கூந்தல் ஆய்_மகள் அளை விலை உணவின் கிளை உடன் அருத்தி நெய் விலைக் கட்டிப் பசும்பொன் கொள்ளாள் எருமை நல் ஆன் கரு நாகு பெறூஉம் மடி வாய்க் கோவலர் குடி வயின் சேப்பின் இரும் கிளை ஞெண்டின் சிறு பார்ப்பு அன்ன பசும் தினை மூரல் பாலொடும் பெறுகுவிர் தொடுதோல் மரீஇய வடு ஆழ் நோன் அடி விழுத் தண்டு ஊன்றிய மழுத் தின் வன் கை உறிக் கா ஊர்ந்த மறுப் படு மயிர்ச் சுவல் மேம் பால் உரைத்த ஓரி ஓங்கு மிசைக் கோட்டவும் கொடியவும் விரைஇக் காட்ட பல் பூ மிடைந்த படலைக் கண்ணி ஒன்று அமர் உடுக்கைக் கூழ் ஆர் இடையன் கன்று அமர் நிரையொடு கானத்து அல்கி அம் நுண் அவிர் புகை கமழக் கை முயன்று ஞெலிகோல் கொண்ட பெரு விறல் ஞெகிழிச் செம் தீத் தோட்ட கரும் துளைக் குழலின் இன் தீம் பாலை முனையின் குமிழின் புழல் கோட்டுத் தொடுத்த மரல் புரி நரம்பின் வில் யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சிப் பல்_கால்_பறவை கிளை செத்து ஓர்க்கும் புல் ஆர் வியன் புலம் போகி முள் உடுத்து எழு காடு ஓங்கிய தொழு உடை வரைப்பில் பிடிக் கணத்து அன்ன குதிர் உடை முன்றில் களிற்றுத் தாள் புரையும் திரிமரப் பந்தர் குறும் சாட்டு உருளையொடு கலப்பை சார்த்தி நெடும் சுவர் பறைந்த புகை சூழ் கொட்டில் பருவ வானத்துப் பா மழை கடுப்பக் கரு வை வேய்ந்த கவின் குடிச் சீறூர் நெடும் குரல் பூளைப் பூவின் அன்ன குறும் தாள் வரகின் குறள் அவிழ்ச் சொன்றிப் புகர் இணர் வேங்கை வீ கண்டு அன்ன அவரை வான் புழுக்கு அட்டிப் பயில்வுற்று இன் சுவை மூரல் பெறுகுவிர் ஞாங்கர் குடி நிறை வல்சிச் செம் சால் உழவர் நடை நவில் பெரும் பகடு புதவில் பூட்டிப் பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில் உடுப்பு முக முழுக் கொழு மூழ்க ஊன்றித் தொடுப்பு எறிந்து உழுத துளர் படு துடவை அரி புகு பொழுதின் இரியல்போகி வண்ணக் கடம்பின் நறு மலர் அன்ன வளர் இளம் பிள்ளை தழீஇக் குறும் கால் கறை அணல் குறும்பூழ் கட்சிச் சேக்கும் வன்புலம் இறந்த பின்றை மென் தோல் மிதி உலைக் கொல்லன் முறி கொடிற்று அன்ன கவைத் தாள் அலவன் அளற்று அளை சிதையப் பைம் சாய் கொன்ற மண் படு மருப்பின் கார் ஏறு பொருத கண் அகன் செறுவின் உழாஅ நுண் தொளி நிரவிய வினைஞர் முடி நாறு அழுத்திய நெடு நீர்ச் செறுவில் களைஞர் தந்த கணைக் கால் நெய்தல் கள் கமழ் புதுப் பூ முனையின் முள் சினை முகை சூழ் தகட்ட பிறழ் வாய் முள்ளிக் கொடும் கால் மா மலர் கொய்து கொண்டு அவண பஞ்சாய்க் கோரை பல்லின் சவட்டிப் புணர் நார்ப் பெய்த புனைவு இன் கண்ணி ஈர் உடை இரும் தலை ஆரச் சூடி பொன் காண் கட்டளை கடுப்பக் கண்பின் புன் காய்ச் சுண்ணம் புடைத்த மார்பின் இரும்பு வடித்து அன்ன மடியா மென் தோல் கரும் கை வினைஞர் காதல் அம் சிறாஅர் பழஞ்சோற்று அமலை முனையின் வரம்பின் புது வை வேய்ந்த கவி குடில் முன்றில் அவல் எறி உலக்கைப் பாடு விறந்து அயல கொடு வாய்க் கிள்ளை படு பகை வெரூஉம் நீங்கா யாணர் வாங்கு கதிர்க் கழனி கடுப்புடை_பறவை சாதி அன்ன பைது அற விளைந்த பெரும் செந்நெல்லின் தூம்பு உடைத் திரள் தாள் துமித்த வினைஞர் பாம்பு உறை மருதின் ஓங்கு சினை நீழல் பலி பெறு வியன் களம் மலிய ஏற்றிக் கணம்கொள் சுற்றமொடு கை புணர்ந்து ஆடும் துணங்கை அம் பூதம் துகில் உடுத்தவை போல் சிலம்பி வால் நூல் வலந்த மருங்கின் குழுமு நிலைப் போரின் முழுமுதல் தொலைச்சிப் பகடு ஊர்பு இழிந்த பின்றைத் துகள் தப வையும் துரும்பும் நீக்கிப் பைது அறக் குடகாற்று எறிந்த குப்பை வட பால் செம்பொன்_மலையின் சிறப்பத் தோன்றும் தண் பணை தழீஇய தளரா இருக்கைப் பகட்டு ஆ ஈன்ற கொடு நடைக் குழவிக் கவைத் தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல் ஏணி எய்தா நீள் நெடு மார்பின் முகடு துமித்து அடுக்கிய பழம் பல் உணவின் குமரிமூத்த கூடு ஓங்கு நல் இல் தச்சச் சிறாஅர் நச்சப் புனைந்த ஊரா நல் தேர் உருட்டிய புதல்வர் தளர் நடை வருத்தம் வீட அலர் முலைச் செவிலி அம் பெண்டிர்த் தழீஇல் பால் ஆர்ந்து அமளித் துஞ்சும் அழகு உடை நல் இல் தொல் பசி அறியாத் துளங்கா இருக்கை மல்லல் பேரூர் மடியின் மடியா வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி மனை வாழ் அளகின் வாட்டொடு பெறுகுவிர் மழை விளையாடும் கழை வளர் அடுக்கத்து அணங்கு உடை யாளி தாக்கலின் பல உடன் கணம் சால் வேழம் கதழ்வுற்று ஆஅங்கு எந்திரம் சிலைக்கும் துஞ்சாக் கம்பலை விசயம் அடூஉம் புகை சூழ் ஆலை-தொறும் கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசை-மின் வேழம் நிரைத்து வெண் கோடு விரைஇ தாழை முடித்துத் தருப்பை வேய்ந்த குறி இறைக் குரம்பை பறி உடை முன்றில் கொடும் கால் புன்னைக் கோடு துமித்து இயற்றிய பைம் காய் தூங்கும் பாய் மணல் பந்தர் இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி புலவு நுனைப் பகழியும் சிலையும் மான செவ் வரிக் கயலொடு பச்சிறா பிறழும் மை இரும் குட்டத்து மகவொடு வழங்கிக் கோடை நீடினும் குறைபடல் அறியாத் தோள் தாழ் குளத்த கோடு காத்திருக்கும் கொடு முடி வலைஞர் குடி வயின் சேப்பின் அவையா அரிசி அம் களித் துழவை மலர் வாய்ப் பிழாவில் புலர ஆற்றிப் பாம்பு உறை புற்றின் குரும்பி ஏய்க்கும் பூம் புற நல் அடை அளைஇத் தேம் பட எல்லையும் இரவும் இரு முறை கழிப்பி வல் வாய்ச் சாடியின் வழைச்சு அற விளைந்த வெம் நீர் அரியல் விரல் அலை நறும் பிழி தண் மீன் சூட்டொடு தளர்தலும் பெறுகுவிர் பச்சூன் பெய்த சுவல் பிணி பைம் தோல் கோள் வல் பாண்_மகன் தலை வலித்து யாத்த நெடும் கழைத் தூண்டில் நடுங்க நாண் கொளீஇக் கொடு வாய் இரும்பின் மடி தலை புலம்பப் பொதி இரை கதுவிய போழ் வாய் வாளை நீர் நணிப் பிரம்பின் நடுங்கு நிழல் வெரூஉம் நீத்து உடை நெடும் கயம் தீப் பட மலர்ந்த கடவுள் ஒண் பூ அடைதல் ஓம்பி உறை கால் மாறிய ஓங்கு உயர் நனம் தலை அகல் இரு வானத்துக் குறை_வில் ஏய்ப்ப அரக்கு இதழ்க் குவளையொடு நீலம் நீடி முரண் பூ மலிந்த முது நீர்ப் பொய்கைக் குறுநர் இட்ட கூம்பு விடு பன் மலர் பெருநாள் அமையத்துப் பிணையினிர் கழி-மின் செழும் கன்று யாத்த சிறு தாள் பந்தர்ப் பைம்_சேறு மெழுகிய படிவ நன் நகர் மனை உறை கோழியொடு ஞமலி துன்னாது வளை வாய்க் கிள்ளை மறை விளி பயிற்றும் மறை காப்பாளர் உறை பதிச் சேப்பின் பெரு நல் வானத்து வட வயின் விளங்கும் சிறு_மீன் புரையும் கற்பின் நறு நுதல் வளைக் கை மகடூஉ வயின் அறிந்து அட்ட சுடர்க் கடை பறவைப் பெயர்ப் படு வத்தம் சேதா நறு மோர் வெண்ணெயின் மாதுளத்து உருப்புறு பசும் காய்ப் போழொடு கறி கலந்து கஞ்சக நறு முறி அளைஇப் பைம் துணர் நெடு மரக் கொக்கின் நறு வடி விதிர்த்த தகை மாண் காடியின் வகைபடப் பெறுகுவிர் வண்டல் ஆயமொடு உண்துறை தலைஇப் புனல் ஆடு மகளிர் இட்ட பொலம் குழை இரை தேர் மணிச் சிரல் இரை செத்து எறிந்து எனப் புள் ஆர் பெண்ணைப் புலம்பு மடல் செல்லாது கேள்வி அந்தணர் அரும் கடன் இறுத்த வேள்வித் தூணத்து அசைஇ யவனர் ஓதிம விளக்கின் உயர்மிசைக் கொண்ட வைகுறுமீனின் பைபயத் தோன்றும் நீர்ப்பெயற்று எல்லை போகிப் பால் கேழ் வால் உளைப் புரவியொடு வட வளம் தரூஉம் நாவாய் சூழ்ந்த நளி நீர்ப் படப்பை மாடம் ஓங்கிய மணல் மலி மறுகின் பரதர் மலிந்த பல்வேறு தெருவின் சிலதர் காக்கும் சேண் உயர் வரைப்பின் நெல் உழு பகட்டொடு கறவை துன்னா ஏழகத் தகரோடு எகினம் கொட்கும் கூழ் உடை நல் இல் கொடும் பூண் மகளிர் கொன்றை மென் சினைப் பனி தவழ்பவை போல் பைம் காழ் அல்குல் நுண் துகில் நுடங்க மால் வரைச் சிலம்பில் மகிழ் சிறந்து ஆலும் பீலி மஞ்ஞையின் இயலிக் கால தமனியப் பொன் சிலம்பு ஒலிப்ப உயர் நிலை வான் தோய் மாடத்து வரிப்பந்து அசைஇக் கை புனை குறும் தொடி தத்தப் பைபய முத்த வார் மணல் பொன் கழங்கு ஆடும் பட்டின மருங்கின் அசையின் முட்டு இல் பைம் கொடி நுடங்கும் பலர் புகு வாயில் செம் பூத் தூய செதுக்கு உடை முன்றில் கள் அடு மகளிர் வள்ளம் நுடக்கிய வார்ந்து உகு சில் நீர் வழிந்த குழம்பின் ஈர்ம் சேறு ஆடிய இரும் பல் குட்டிப் பல் மயிர் பிணவொடு பாயம் போகாது நெல்மா வல்சி தீற்றிப் பல் நாள் குழி நிறுத்து ஓம்பிய குறும் தாள் ஏற்றைக் கொழு நிணத் தடியொடு கூர் நறாப் பெறுகுவிர் வானம் ஊன்றிய மதலை போல ஏணி சாத்திய ஏற்ற அரும் சென்னி விண் பொர நிவந்த வேயா மாடத்து இரவில் மாட்டிய இலங்கு சுடர் ஞெகிழி உரவு நீர் அழுவத்து ஓடு கலம் கரையும் துறை பிறக்கு ஒழியப் போகிக் கறை அடிக் குன்று உறழ் யானை மருங்குல் ஏய்க்கும் வண் தோட்டுத் தெங்கின் வாடு மடல் வேய்ந்த மஞ்சள் முன்றில் மணம் நாறு படப்பை தண்டலை உழவர் தனி மனைச் சேப்பின் தாழ் கோள் பலவின் சூழ் சுளைப் பெரும் பழம் வீழ் இல் தாழைக் குழவித் தீம் நீர்க் கவை முலை இரும் பிடிக் கவுள் மருப்பு ஏய்க்கும் குலை முதிர் வாழைக் கூனி வெண் பழம் திரள் அரைப் பெண்ணை நுங்கொடு பிறவும் தீம் பல் தாரம் முனையின் சேம்பின் முளை புற முதிர் கிழங்கு ஆர்குவிர் பகல் பெயல் மழை வீழ்ந்து அன்ன மாத் தாள் கமுகின் புடை சூழ் தெங்கின் முப் புடைத் திரள் காய் ஆறு செல் வம்பலர் காய் பசி தீரச் சோறு அடு குழிசி இளக விழூஉம் வீயா யாணர் வளம் கெழு பாக்கத்துப் பல் மரம் நீள் இடைப் போகி நன் நகர் விண் தோய் மாடத்து விளங்கு சுவர் உடுத்த வாடா வள்ளியின் வளம் பல தரூஉம் நாடு பல கழிந்த பின்றை நீடு குலைக் காந்தள் அம் சிலம்பில் களிறு படிந்து ஆங்குப் பாம்பணைப் பள்ளி அமர்ந்தோன் ஆங்கண் வெயில் நுழைபு அறியா குயில் நுழை பொதும்பர்க் குறும் கால் காஞ்சி சுற்றிய நெடும் கொடிப் பாசிலைக் குருகின் புன் புற வரிப் பூக் கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த இழை சூழ் வட்டம் பால் கலந்தவை போல் நிழல் தாழ் வார் மணல் நீர் முகத்து உறைப்பப் புனல் கால்கழீஇய பொழில்-தொறும் திரள் கால் சோலைக் கமுகின் சூல் வயிற்று அன்ன நீலப் பைம் குடம் தொலைச்சி நாளும் பெரு மகிழ் இருக்கை மரீஇச் சிறு கோட்டுக் குழவித் திங்கள் கோள் நேர்ந்து ஆங்குச் சுறவு வாய் அமைத்த சுரும்பு சூழ் சுடர் நுதல் நறவுப் பெயர்த்து அமர்த்த நல் எழில் மழைக் கண் மடவரல் மகளிரொடு பகல் விளையாடிப் பெறற்கு அரும் தொல் சீர்த் துறக்கம் ஏய்க்கும் பொய்யா மரபின் பூ மலி பெரும் துறை செவ்வி கொள்பவரோடு அசைஇ அவ் வயின் அரும் திறல் கடவுள் வாழ்த்திச் சிறிது நும் கரும் கோட்டு இன்னியம் இயக்கினிர் கழி-மின் காழோர் இகழ்_பதம் நோக்கிக் கீழ நெடும் கை யானை நெய் மிதி கவளம் கடும் சூல் மந்தி கவரும் காவில் களிறு கதன் அடக்கிய வெளிறு இல் கந்தின் திண் தேர் குழித்த குண்டு நெடும் தெருவில் படை தொலைபு அறியா மைந்து மலி பெரும் புகழ்க் கடை கால்யாத்த பல் குடி கெழீஇக் கொடையும் கோளும் வழங்குநர்த் தடுத்த அடையா வாயில் மிளை சூழ் படப்பை நீல் நிற உருவின் நெடியோன் கொப்பூழ் நான்முக ஒருவன் பயந்த பல் இதழ்த் தாமரைப் பொகுட்டின் காண்வரத் தோன்றி சுடுமண் ஓங்கிய நெடு நகர் வரைப்பின் இழுமென் புள்ளின் ஈண்டு கிளைத் தொழுதிக் கொழு மென் சினைய கோளியுள்ளும் பழம் மீக்கூறும் பலாஅப் போலப் புலவுக் கடல் உடுத்த வானம் சூடிய மலர் தலை உலகத்துள்ளும் பலர் தொழ விழவு மேம்பட்ட பழ விறல் மூதூர் அம் வாய் வளர் பிறை சூடிச் செவ் வாய் அந்தி வானத்து ஆடு மழை கடுப்ப வெண் கோட்டு இரும் பிணம் குருதி ஈர்ப்ப ஈர்_ஐம்பதின்மரும் பொருது களத்து அவிய பேர் அமர்க் கடந்த கொடுஞ்சி நெடும் தேர் ஆராச் செருவின் ஐவர் போல அடங்காத் தானையோடு உடன்று மேல்வந்த ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்துக் கச்சியோனே கைவண் தோன்றல் நச்சிச் சென்றோர்க்கு ஏமம் ஆகிய அளியும் தெறலும் எளிய ஆகலின் மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட நயந்தோர் தேஎம் நன் பொன் பூப்ப நட்புக்கொளல் வேண்டி நயந்திசினோரும் துப்புக்கொளல் வேண்டிய துணையிலோரும் கல் வீழ் அருவி கடல் படர்ந்து ஆங்கு பல் வேறு வகையின் பணிந்த மன்னர் இமையவர் உறையும் சிமையச் செவ் வரை வெண் திரை கிழித்த விளங்கு சுடர் நெடும் கோட்டுப் பொன் கொழித்து இழிதரும் போக்கு அரும் கங்கைப் பெரு நீர் போகும் இரியல் மாக்கள் ஒருமரப்பாணியில் தூங்கி ஆங்குத் தொய்யா வெறுக்கையொடு துவன்றுபு குழீஇச் செவ்வி பார்க்கும் செழு நகர் முற்றத்துப் பெரும் கை யானைக் கொடும் தொடிப் படுக்கும் கரும் கைக் கொல்லன் இரும்பு விசைத்து எறிந்த கூடத் திண் இசை வெரீஇ மாடத்து இறை உறை புறவின் செம் கால் சேவல் இன் துயில் இரியும் பொன் துஞ்சு வியல் நகர்க் குண கடல் வரைப்பின் முந்நீர் நாப்பண் பகல் செய் மண்டிலம் பாரித்து ஆங்கு முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும் வேண்டுப_வேண்டுப வேண்டினர்க்கு அருளி இடை தெரிந்து உணரும் இருள் தீர் காட்சிக் கொடைக் கடன் இறுத்த கூம்பா உள்ளத்து உரும்பு இல் சுற்றமோடு இருந்தோன் குறுகிப் பொறி வரி புகர்_முகம் தாக்கிய வய_மான் கொடு_வரிக் குருளை கொள வேட்டு ஆங்குப் புலவர் பூண் கடன் ஆற்றிப் பகைவர் கடி மதில் எறிந்து குடுமி கொள்ளும் வென்றி அல்லது வினை உடம்படினும் ஒன்றல் செல்லா உரவு வாள் தடக் கைக் கொண்டி உண்டித் தொண்டையோர் மருக மள்ளர் மள்ள மறவர் மறவ செல்வர் செல்வ செரு மேம்படுந வெண் திரைப் பரப்பின் கடும் சூர்க் கொன்ற பைம் பூண் சேஎய் பயந்த மா மோட்டு துணங்கை அம் செல்விக்கு அணங்கு நொடித்து ஆங்குத் தண்டா ஈகை நின் பெரும் பெயர் ஏத்தி வந்தேன் பெரும வாழிய நெடிது என இடன் உடைப் பேரியாழ் முறையுளிக் கழிப்பிக் கடன் அறி மரபின் கைதொழூஉப் பழிச்சி நின் நிலை தெரியா அளவை அ நிலை நாவல் அம் தண் பொழில் வீவு இன்று விளங்க நில்லா உலகத்து நிலைமை தூக்கி அ நிலை அணுகல் வேண்டி நின் அரைப் பாசி அன்ன சிதர்வை நீக்கி ஆவி அன்ன அவிர் நூல் கலிங்கம் இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு உடன் உடீஇக் கொடு வாள் கதுவிய வடு ஆழ் நோன் கை வல்லோன் அட்ட பல் ஊன் கொழும் குறை அரி செத்து உணங்கிய பெரும் செந்நெல்லின் தெரி கொள் அரிசித் திரள் நெடும் புழுக்கல் அரும் கடித் தீம் சுவை அமுதொடு பிறவும் விருப்பு உடை மரபின் கரப்பு உடை அடிசில் மீன் பூத்து அன்ன வான் கலம் பரப்பி மகமுறை மகமுறை நோக்கி முகன் அமர்ந்து ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி மங்குல் வானத்துத் திங்கள் ஏய்க்கும் ஆடு வண்டு இமிரா அழல் அவிர் தாமரை நீடு இரும் பித்தை பொலியச் சூட்டி உரவுக் கடல் முகந்த பருவ வானத்துப் பகல் பெயல் துளியின் மின்னு நிமிர்ந்து ஆங்குப் புனை இரும் கதுப்பகம் பொலியப் பொன்னின் தொடை அமை மாலை விறலியர் மலைய நூலோர் புகழ்ந்த மாட்சிய மால் கடல் வளை கண்டு அன்ன வால் உளைப் புரவி துணை புணர் தொழில நால்கு உடன் பூட்டி அரித் தேர் நல்கியும் அமையான் செருத் தொலைத்து ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஒழித்த விசும்பு செல் இவுளியொடு பசும் படை தரீஇ அன்றே விடுக்கும் அவன் பரிசில் இன் சீர் கின்னரம் முரலும் அணங்கு உடைச் சாரல் மஞ்ஞை ஆலும் மரம் பயில் இறும்பின் கலை பாய்ந்து உதிர்த்த மலர் வீழ் புறவின் மந்தி சீக்கும் மா துஞ்சு முன்றில் செம் தீப் பேணிய முனிவர் வெண் கோட்டுக் களிறு தரு விறகின் வேட்கும் ஒளிறு இலங்கு அருவிய மலை கிழவோனே &100 - கடுந்தொடைக் காவினார் #1 அகநானூறு 109 பாலை - கடுந்தொடைக் காவினார் பல் இதழ் மென் மலர் உண்கண் நல் யாழ் நரம்பு இசைத்து அன்ன இன் தீம் கிளவி நலம் நல்கு ஒருத்தி இருந்த ஊரே கோடு உழு களிற்றின் தொழுதி ஈண்டிக் காடு கால்யாத்த நீடு மரச் சோலை விழை வெளில் ஆடும் கழை வளர் நனம் தலை வெண் நுனை அம்பின் விசை இட வீழ்ந்தோர் எண்ணு வரம்பு அறியா உவல் இடு பதுக்கைச் சுரம் கெழு கவலை கோட்பால் பட்டு என வழங்குநர் மடிந்த அத்தம் இறந்தோர் கைப்பொருள் இல்லை ஆயினும் மெய் கொண்டு இன் உயிர் செகாஅர் விட்டு அகல் தப்பற்குப் பெரும் களிற்று மருப்பொடு வரி அதள் இறுக்கும் அறன் இல் வேந்தன் ஆளும் வறனுறு குன்றம் பல விலங்கினவே &101 - கடுந்தோட் கரவீரன் #1 குறுந்தொகை 69 குறிஞ்சி - கடுந்தோட் கரவீரன் கரும் கண் தாக் கலை பெரும்பிறிதுற்று எனக் கைம்மை உய்யாக் காமர் மந்தி கல்லா வன் பறழ் கிளை முதல் சேர்த்தி ஓங்கு வரை அடுக்கத்துப் பாய்ந்து உயிர் செகுக்கும் சாரல் நாட நடுநாள் வாரல் வாழியோ வருந்துதும் யாமே &102 - கடுவன் இளமள்ளனார் #1 நற்றிணை 150 மருதம் - கடுவன் இளமள்ளனார் நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன் மிளை வலி சிதையக் களிறு பல பரப்பி அரண் பல கடந்த முரண் கொள் தானை வழுதி வாழிய பல எனத் தொழுது ஈண்டு மன் எயில் உடையோர் போல அஃது யாம் என்னதும் பரியலோ இலம் எனத் தண் நடைக் கலிமா கடைஇ வந்து எம் சேரித் தாரும் கண்ணியும் காட்டி ஒருமைய நெஞ்சம் கொண்டமை விடுமோ அஞ்சக் கண் உடைச் சிறு கோல் பற்றிக் கதம் பெரிது உடையள் யாய் அழுங்கலோ இலளே &103 - கடுவன் இளவெயினனார் #1 பரிபாடல் - 3 திருமால் - கடுவன் இளவெயினனார் **இசையமைத்தவர் :: பெட்டனாகனார் **பண் :: பாலையாழ் மாஅயோயே மாஅயோயே மறுபிறப்பு அறுக்கும் மாசு இல் சேவடி மணி திகழ் உருபின் மாஅயோயே தீ வளி விசும்பு நிலன் நீர் ஐந்தும் ஞாயிறும் திங்களும் அறனும் ஐவரும் திதியின் சிறாரும் விதியின் மக்களும் மாசு இல் எண்மரும் பதினொரு கபிலரும் தா மா இருவரும் தருமனும் மடங்கலும் மூ_ஏழ் உலகமும் உலகினுள் மன்பதும் மாயோய் நின்-வயின் பரந்தவை உரைத்தேம் மாயா வாய்மொழி உரைதர வலந்து வாய்மொழி ஓடை மலர்ந்த தாமரைப் பூவினுள் பிறந்தோனும் தாதையும் நீ எனப் பொழியுமால் அந்தணர் அரு மறை ஏஎர் வயங்கு பூண் அமரரை வௌவிய அமிழ்தின் பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளினை பயந்தோள் இடுக்கண் களைந்த புள்ளின் நிவந்து ஓங்கு உயர் கொடிச் சேவலோய் நின் சேவடி தொழாரும் உளரோ அவற்றுள் கீழ் ஏழ் உலகமும் உற்ற அடியினை தீ செம் கனலியும் கூற்றமும் ஞமனும் மாசு இல் ஆயிரம் கதிர் ஞாயிறும் தொகூஉம் ஊழி ஆழிக்-கண் இரு நிலம் உரு கெழு கேழலாய் மருப்பின் உழுதோய் எனவும் மா விசும்பு ஒழுகு புனல் வறள அன்னச் சேவலாய்ச் சிறகர்ப் புலர்த்தியோய் எனவும் ஞாலத்து உறையுள் தேவரும் வானத்து நால் எண் தேவரும் நயந்து நின் பாடுவோர் பாடும் வகையே எம் பாடல்தாம் அப் பாடுவார் பாடும் வகை கூந்தல் என்னும் பெயரொடு கூந்தல் எரி சினம் கொன்றோய் நின் புகழ் உருவின கை நகை அச்சாக நல் அமிர்து கலந்த நடுவுநிலை திறம்பிய நயம் இல் ஒரு கை இரு கை மாஅல் முக் கை முனிவ நால் கை அண்ணல் ஐம் கைம் மைந்த அறு கை நெடுவேள் எழு கையாள எண் கை ஏந்தல் ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள பதிற்றுக் கை மதவலி நூற்றுக் கை ஆற்றல் ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள பதினாயிரம் கை முதுமொழி முதல்வ நூறாயிரம் கை ஆறு அறி கடவுள் அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல் இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை நின்னைப் புரை நினைப்பின் நீ அலது உணர்தியோ முன்னை மரபின் முதுமொழி முதல்வ நினக்கு விரிந்து அகன்ற கேள்வி அனைத்தினும் வலியினும் மனத்தினும் உணர்வினும் எல்லாம் வனப்பு வரம்பு அறியா மரபினோயே அணி நிழல் வயங்கு ஒளி ஈர்_எண் தீம் கதிர் பிறை வளர் நிறை மதி உண்டி அணி மணிப் பைம் பூண் அமரர்க்கு முதல்வன் நீ திணி நிலம் கடந்தக்கால் திரிந்து அயர்ந்து அகன்று ஓடி நின் அஞ்சிக் கடல் பாய்ந்த பிணி நெகிழ்பு அவிழ் தண் தார் அன்னவர் பட அல்லா அவுணர்க்கும் முதல்வன் நீ அதனால் பகைவர் இவர் இவர் நட்டோர் என்னும் வகையும் உண்டோ நின் மரபு அறிவோர்க்கே ஆயிர அணர் தலை அரவு வாய்க் கொண்ட சேவல் ஊர்தியும் செம் கண் மாஅல் ஓ எனக் கிளக்கும் கால முதல்வனை ஏஎ எனக் கிளத்தலின் இனைமை நற்கு அறிந்தனம் தீயினுள் தெறல் நீ பூவினுள் நாற்றம் நீ கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ அறத்தினுள் அன்பு நீ மறத்தினுள் மைந்து நீ வேதத்து மறை நீ பூதத்து முதலும் நீ வெம் சுடர் ஒளியும் நீ திங்களுள் அளியும் நீ அனைத்தும் நீ அனைத்தின் உட்பொருளும் நீ ஆதலின் உறையும் உறைவதும் இலையே உண்மையும் மறவி இல் சிறப்பின் மாயமார் அனையை முதல் முறை இடை முறை கடை முறை தொழிலில் பிறவாப் பிறப்பு இலை பிறப்பித்தோர் இலையே பறவாப் பூவைப் பூவினோயே அருள் குடை ஆக அறம் கோல் ஆக இரு நிழல் படாமை மூ_ஏழ் உலகமும் ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை-மாதோ பாழ் என கால் என பாகு என ஒன்று என இரண்டு என மூன்று என நான்கு என ஐந்து என ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என நால் வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை செம் கண் காரி கரும் கண் வெள்ளை பொன் கண் பச்சை பைம் கண் மாஅல் இட வல குட அல கோவல காவல காணா மரப நீயா நினைவ மாயா மன்ன உலகு ஆள் மன்னவ தொல் இயல் புலவ நல் யாழ்ப் பாண மாலைச் செல்வ தோலாக் கோட்ட பொலம் புரி ஆடை வலம்புரி வண்ண பருதி வலவ பொரு திறல் மல்ல திருவின் கணவ பெரு விறல் மள்ள மா நிலம் இயலா முதல் முறை அமையத்து நாம வெள்ளத்து நடுவண் தோன்றிய வாய்மொழி மகனொடு மலர்ந்த தாமரைப் பொகுட்டு நின் நேமி நிழலே #2 பரிபாடல் - 4 திருமால் - கடுவன் இளவெயினனார் **இசையமைத்தவர் :: பெட்டனாகனார் **பண் :: பாலையாழ் ஐந்து இருள் அற நீக்கி நான்கினுள் துடைத்துத் தம் ஒன்று ஆற்றுப்படுத்த நின் ஆர்வலர் தொழுது ஏத்தி நின் புகழ் விரித்தனர் கிளக்குங்கால் அவை நினக்கு இறும்பூது அன்மை நற்கு அறிந்தேம் ஆயினும் நகுதலும் தகுதி ஈங்கு ஊங்கு நின் கிளப்ப திரு மணி திரை பாடு அவிந்த முந்நீர் வரு மழை இரும் சூல் மூன்றும் புரையும் மா மெய் மாஅ மெய்யொடு முரணிய உடுக்கையை நோனார் உயிரொடு முரணிய நேமியை செயிர் தீர் செம் கண் செல்வ நின் புகழ புகைந்த நெஞ்சின் புலர்ந்த சாந்தின் பிருங்கலாதன் பலபல பிணி பட வலந்துழி மலர்ந்த நோய் கூர் கூம்பிய நடுக்கத்து அலர்ந்த புகழோன் தாதை ஆகலின் இகழ்வோன் இகழா நெஞ்சினன் ஆக நீ இகழா நன்றா நட்ட அவன் நல் மார்பு முயங்கி ஒன்றா நட்டவன் உறு வரை மார்பின் படி மதம் சாம்ப ஒதுங்கி இன்னல் இன்னரொடு இடி முரசு இயம்ப வெடி படா ஒடி தூண் தடியொடு தடி தடி பல பட வகிர் வாய்த்த உகிரினை புருவத்துக் கரு வல் கந்தரத்தால் தாங்கி இவ் உலகம் தந்து அடிப்படுத்ததை நடுவண் ஓங்கிய பலர் புகழ் குன்றினோடு ஒக்கும் நின் வெம்மையும் விளக்கமும் ஞாயிற்று உள நின் தண்மையும் சாயலும் திங்கள் உள நின் சுரத்தலும் வண்மையும் மாரி உள நின் புரத்தலும் நோன்மையும் ஞாலத்து உள நின் நாற்றமும் ஒண்மையும் பூவை உள நின் தோற்றமும் அகலமும் நீரின் உள நின் உருவமும் ஒலியும் ஆகாயத்து உள நின் வருதலும் ஒடுக்கமும் மருத்தின் உள அதனால் இவ்வும் உவ்வும் அவ்வும் பிறவும் ஏமம் ஆர்த்த நின் பிரிந்து மேவல் சான்றன எல்லாம் சேவல் ஓங்கு உயர் கொடியோயே சேவல் ஓங்கு உயர் கொடி நின் ஒன்று உயர் கொடி பனை நின் ஒன்று உயர் கொடி நாஞ்சில் நின் ஒன்று உயர் கொடி யானை நின் ஒன்றா உயர் கொடி ஒன்று இன்று விடம் உடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம் அவன் மடி மேல் வலந்தது பாம்பு பாம்பு தொடி பாம்பு முடி மேலன பாம்பு பூண் பாம்பு தலை மேலது பாம்பு சிறை தலையன பாம்பு படி மதம் சாய்த்தோய் பசும் பூணவை கொடி மேல் இருந்தவன் தாக்கு இரையது பாம்பு கடு நவை அணங்கும் கடுப்பும் நல்கலும் கொடுமையும் செம்மையும் வெம்மையும் தண்மையும் உள் வழி உடையை இல் வழி இலையே போற்றார் உயிரினும் போற்றுநர் உயிரினும் மாற்று ஏமாற்றல் இலையே நினக்கு மாற்றோரும் இலர் கேளிரும் இலர் எனும் வேற்றுமை இன்று அது போற்றுநர்ப் பெறினே மனக்கோள் நினக்கு என வடிவு வேறு இலையே கோள் இருள் இருக்கை ஆய் மணி மேனி நக்கு அலர் துழாஅய் நாறு இணர்க் கண்ணியை பொன்னின் தோன்றிய புனை மறு மார்ப நின்னில் தோன்றிய நிரை இதழ்த் தாமரை அன்ன நாட்டத்து அளப்பு அரியவை நின்னின் சிறந்த நின் தாள் இணையவை நின்னில் சிறந்த நிறை கடவுளவை அன்னோர் அல்லா வேறும் உள அவை நின் ஓர் அன்ன ஓர் அந்தணர் அரு மறை அழல் புரை குழை கொழு நிழல் தரும் பல சினை ஆலமும் கடம்பும் நல் யாற்று நடுவும் கால் வழக்கு அறு நிலைக் குன்றமும் பிறவும் அவ்வவை மேவிய வேறுவேறு பெயரோய் எவ் வயினோயும் நீயே நின் ஆர்வலர் தொழுத கை அமைதியின் அமர்ந்தோயும் நீயே அவரவர் ஏவலாளனும் நீயே அவரவர் செய்பொருட்கு அரணமும் நீயே #3 பரிபாடல் - 5 செவ்வேள் - கடுவன் இளவெயினனார் **இசையமைத்தவர் :: கண்ணனாகனார் **பண் :: பாலையாழ் பாய் இரும் பனிக் கடல் பார் துகள் படப் புக்கு சேய் உயர் பிணிமுகம் ஊர்ந்து அமர் உழக்கி தீ அழல் துவைப்பத் திரிய விட்டெறிந்து நோய் உடை நுடங்கு சூர் மா முதல் தடிந்து வென்றியின் மக்களுள் ஒருமையொடு பெயரிய கொன்று உணல் அஞ்சாக் கொடு வினைக் கொல் தகை மாய அவுணர் மருங்கு அறத் தபுத்த வேல் நாவல் அம் தண் பொழில் வட பொழில் ஆயிடை குருகொடு பெயர் பெற்ற மால் வரை உடைத்து மலை ஆற்றுப்படுத்த மூ_இரு கயந்தலை மூ_இரு கயந்தலை மு_நான்கு முழவுத் தோள் ஞாயிற்று ஏர் நிறத் தகை நளினத்துப் பிறவியை காஅய் கடவுள் சேஎய் செவ்வேள் சால்வ தலைவ எனப் பேஎ விழவினுள் வேலன் ஏத்தும் வெறியும் உளவே அவை வாயும் அல்ல பொய்யும் அல்ல நீயே வரம்பிற்று இவ் உலகம் ஆதலின் சிறப்போய் சிறப்பு இன்றிப் பெயர்குவை சிறப்பினுள் உயர்பு ஆகலும் பிறப்பினுள் இழிபு ஆகலும் ஏனோர் நின் வலத்தினதே ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து நாகம் நாணா மலை வில் ஆக மூ வகை ஆர் எயில் ஓர் அழல் அம்பின் முளிய மாதிரம் அழல எய்து அமரர் வேள்வி பாகம் உண்ட பைம் கண் பார்ப்பான் உமையொடு புணர்ந்து காம வதுவையுள் அமையாப் புணர்ச்சி அமைய நெற்றி இமையா நாட்டத்து ஓரு வரம் கொண்டு விலங்கு என விண்ணோர் வேள்வி முதல்வன் விரி கதிர் மணி பூணவற்குத் தான் ஈத்தது அரிது என மாற்றான் வாய்மையன் ஆதலின் எரி கனன்று ஆனாக் குடாரி கொண்டு அவன் உருவு திரித்திட்டோன் இவ் உலகு ஏழும் மருள கருப் பெற்றுக் கொண்டோர் கழிந்த சேய் யாக்கை நொசிப்பின் ஏழ் உறு முனிவர் நனி உணர்ந்து வசித்ததைக் கண்டம் ஆக மாதவர் மனைவியர் நிறை-வயின் வசி தடி சமைப்பின் சாலார் தானே தரிக்க என அவர் அவி உடன் பெய்தோரே அழல் வேட்டு அவ் அவித் தடவு நிமிர் முத்தீப் பேணிய மன் எச்சில் வட வயின் விளங்கு ஆல் உறை எழு மகளிருள் கடவுள் ஒரு மீன் சாலினி ஒழிய அறுவர் மற்றையோரும் அ நிலை அயின்றனர் மறு அறு கற்பின் மாதவர் மனைவியர் நிறை-வயின் வழாஅது நின் சூலினரே நிவந்து ஓங்கு இமயத்து நீலப் பைம் சுனைப் பயந்தோர் என்ப பதுமத்துப் பாயல் பெரும் பெயர் முருக நின் பயந்த ஞான்றே அரிது அமர் சிறப்பின் அமரர் செல்வன் எரி உமிழ் வச்சிரம் கொண்டு இகந்து வந்து எறிந்து என அறு வேறு துணியும் அறுவர் ஆகி ஒருவனை வாழி ஓங்கு விறல் சேஎய் ஆரா உடம்பின் நீ அமர்ந்து விளையாடிய போரால் வறும் கைக்குப் புரந்தரன் உடைய அல்லல் இல் அனலன் தன் மெய்யின் பிரித்து செல்வ வாரணம் கொடுத்தோன் வானத்து வளம் கெழு செல்வன் தன் மெய்யின் பிரித்துத் திகழ் பொறிப் பீலி அணி மயில் கொடுத்தோன் திருந்து கோல் ஞமன் தன் மெய்யின் பிரிவித்து இரும் கண் வெள்யாட்டு எழில் மறி கொடுத்தோன் ஆஅங்கு அவரும் பிறரும் அமர்ந்து படை அளித்த மறியும் மஞ்ஞையும் வாரணச் சேவலும் பொறி வரிச் சாபமும் மரனும் வாளும் செறி இலை ஈட்டியும் குடாரியும் கணிச்சியும் தெறு கதிர்க் கனலியும் மாலையும் மணியும் வேறுவேறு உருவின் இவ் ஆறு இரு கைக்கொண்டு மறு இல் துறக்கத்து அமரர் செல்வன்-தன் பொறி வரிக் கொட்டையொடு புகழ் வரம்பு இகந்தோய் நின் குணம் எதிர்கொண்டோர் அறம் கொண்டோர் அல்லதை மன் குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை செறு தீ நெஞ்சத்துச் சினம் நீடினோரும் சேரா அறத்துச் சீர் இலோரும் அழி தவப் படிவத்து அயரியோரும் மறுபிறப்பு இல் எனும் மடவோரும் சேரார் நின் நிழல் அன்னோர் அல்லது இன்னோர் சேர்வார் ஆதலின் யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்-பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருள் இணர்க் கடம்பின் ஒலி தாரோயே &104 - (மதுரைத் தமிழ்க் கூத்தனார்) கடுவன் மள்ளனார் #1 அகநானூறு 70 நெய்தல் - (மதுரைத் தமிழ்க் கூத்தனார்) கடுவன் மள்ளனார் கொடும் திமில் பரதவர் வேட்டம் வாய்த்து என இரும் புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக் குறும் கண் அம் வலைப் பயம் பாராட்டிக் கொழும் கண் அயிலை பகுக்கும் துறைவன் நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே அலர் வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்றப் பலரும் ஆங்கு அறிந்தனர்-மன்னே இனியே வதுவை கூடிய பின்றைப் புதுவது பொன் வீ ஞாழலொடு புன்னை வரிக்கும் கானல் அம் பெரும் துறைக் கவினி மா நீர்ப் பாசடைக் கலித்த கணைக் கால் நெய்தல் விழவு அணி மகளிர் தழை அணிக் கூட்டும் வென் வேல் கவுரியர் தொல் முது கோடி முழங்கு இரும் பௌவம் இரங்கும் முன்துறை வெல் போர் இராமன் அரு மறைக்கு அவித்த பல் வீழ் ஆலம் போல ஒலி அவிந்தன்று இவ் அழுங்கல் ஊரே #2 அகநானூறு 256 மருதம் - (மதுரைத் தமிழ்க் கூத்தனார்) கடுவன் மள்ளனார் பிணங்கு அரில் வள்ளை நீடு இலைப் பொதும்பின் மடி துயில் முனைஇய வள் உகிர் யாமை நொடி விடு கல்லின் போகி அகன் துறைப் பகு வாய் நிறைய நுங்கின் கள்ளின் நுகர்வார் அருந்து மகிழ்பு இயங்கு நடையொடு தீம் பெரும் பழனம் உழக்கி அயலது ஆம்பல் மெல் அடை ஒடுங்கும் ஊர பொய்யால் அறிவென் நின் மாயம் அதுவே கையகப்பட்டமை அறியாய் நெருநை மை எழில் உண்கண் மடந்தையொடு வையை ஏர் தரு புதுப் புனல் உரிதினின் நுகர்ந்து பரத்தை ஆயம் கரப்பவும் ஒல்லாது கவ்வை ஆகின்றால் பெரிதே காண்தகத் தொல் புகழ் நிறைந்த பல் பூம் கழனிக் கரும்பு அமல் படப்பைப் பெரும் பெயர் கள்ளூர்த் திரு நுதல் குறுமகள் அணி நலம் வவ்விய அறனிலாளன் அறியேன் என்ற திறன் இல் வெம் சூள் அறி கரி கடாஅய் முறி ஆர் பெரும் கிளை செறியப் பற்றி நீறு தலைப்பெய்த ஞான்றை வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே #3 அகநானூறு 354 முல்லை - (மதுரைத் தமிழ்க் கூத்தன்) கடுவன் மள்ளனார் மத வலி யானை மறலிய பாசறை இடி உமிழ் முரசம் பொருகளத்து இயம்ப வென்று கொடி எடுத்தனன் வேந்தனும் கன்றொடு கறவைப் பல் இனம் புறவு-தொறு உகள குழல் வாய்வைத்தனர் கோவலர் வல் விரைந்து இளையர் ஏகுவனர் பரிய விரி உளைக் கடு நடைப் புரவி வழி-வாய் ஓட வலவன் வள்பு வலி உறுப்பப் புலவர் புகழ் குறி கொண்ட பொலம் தார் அகலத்துத் தண் கமழ் சாந்தம் நுண் துகள் அணிய வென்றி கொள் உவகையொடு புகுதல் வேண்டின் யாண்டு உறைவது-கொல் தானே மாண்ட போது உறழ் கொண்ட உண்கண் தீதிலாட்டி திரு நுதல் பசப்பே #4 குறுந்தொகை 82 குறிஞ்சி - கடுவன் மள்ளனார் வாருறு வணர் கதுப்பு உளரிப் புறம் சேர்பு அழாஅல் என்று நம் அழுத கண் துடைப்பார் யார் ஆகுவர்-கொல் தோழி சாரல் பெரும் புனக் குறவன் சிறுதினை மறுகால் கொழும் கொடி அவரை பூக்கும் அரும் பனி அற்சிரம் வாராதோரே &105 - கணக்காயர் தத்தனார் #1 குறுந்தொகை 304 நெய்தல் - கணக்காயர் தத்தனார் கொல் வினைப் பொலிந்த கூர் வாய் எறி உளி முகம் பட மடுத்த முளி வெதிர் நோன் காழ் தாங்கு அரு நீர்ச் சுரத்து எறிந்து வாங்கு விசைக் கொடும் திமில் பரதவர் கோட்டு மீன் எறிய நெடும் கரை இருந்த குறும் கால் அன்னத்து வெண் தோடு இரியும் வீ ததை கானல் கைதை அம் தண் புனல் சேர்ப்பனொடு செய்தனெம்-மன்ற ஓர் பகை தரு நட்பே &106 - (கணி புன்குன்றனார்) - கணியன் பூங்குன்றனார் #1 நற்றிணை 226 பாலை - கணி புன்குன்றனார் மரம் சா மருந்தும் கொள்ளார் மாந்தர் உரம் சாச் செய்யார் உயர் தவம் வளம் கெடப் பொன்னும் கொள்ளார் மன்னர் நல்_நுதல் நாம் தம் உண்மையின் உளமே அதனால் தாம் செய்பொருள் அளவு அறியார் தாம் கசிந்து என்றூழ் நிறுப்ப நீள் இடை ஒழியச் சென்றோர்-மன்ற நம் காதலர் என்றும் இன்ன நிலைமைத்து என்ப என்னோரும் அறிப இவ் உலகத்தானே #2 புறநானூறு 192 - கணியன் பூங்குன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா நோதலும் தணிதலும் அவற்று ஓர் அன்ன சாதலும் புதுவது அன்றே வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின் இன்னாது என்றலும் இலமே மின்னொடு வானம் தண் துளி தலைஇ ஆனாது கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று நீர் வழிப்படூஉம் புணை போல் ஆர் உயிர் முறை வழிப்படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே &107 - கண்ணகனார் #1 நற்றிணை 79 பாலை - கண்ணகனார் சிறை நாள் ஈங்கை உறை நனி திரள் வீ கூரை நன் மனைக் குறும் தொடி மகளிர் மணல் ஆடு கழங்கின் அறை மிசைத் தாஅம் ஏர்தரல் உற்ற இயக்கு அரும் கவலைப் பிரிந்தோர் வந்து நம் புணரப் புணர்ந்தோர் பிரிதல் சூழ்தலின் அரியதும் உண்டோ என்று நாம் கூறிக் காமம் செப்புதும் செப்பாது விடினே உயிரொடும் வந்தன்று அம்ம வாழி தோழி யாதனின் தவிர்க்குவம் காதலர் செலவே #2 புறநானூறு 218 - கண்ணகனார் (நத்தத்தனார்) பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மா மலை பயந்த காமரு மணியும் இடைபடச் சேய ஆயினும் தொடை புணர்ந்து அரு விலை நன் கலம் அமைக்கும் காலை ஒரு வழித் தோன்றி ஆங்கு என்றும் சான்றோர் சான்றோர் பாலர் ஆப சாலார் சாலார் பாலர் ஆகுபவே &108 - கண்ணகாரன் கொற்றனார் #1 நற்றிணை 143 பாலை - கண்ணகாரன் கொற்றனார் ஐது ஏகு அம்ம யானே ஒய்யெனத் தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து ஓரை ஆயமும் நொச்சியும் காண்-தொறும் நீர் வார் கண்ணேன் கலுழும் என்னினும் கிள்ளையும் கிளை எனக் கூஉம் இளையோள் வழு இலள் அம்ம தானே குழீஇ அம்பல் மூதூர் அலர் வாய்ப் பெண்டிர் இன்னா இன் உரை கேட்ட சில் நாள் அறியேன் போல உயிரேன் நறிய நாறும் நின் கதுப்பு என்றேனே &109 - கண்ணங் கொற்றனார் #1 நற்றிணை 156 குறிஞ்சி - கண்ணங் கொற்றனார் நீயே அடி அறிந்து ஒதுங்கா ஆர் இருள் வந்து எம் கடி உடை வியல் நகர்க் காவல் நீவியும் பேர் அன்பினையே பெரும் கல் நாட யாமே நின்னும் நின் மலையும் பாடிப் பல் நாள் சிறுதினை காக்குவம் சேறும் அதனால் பகல் வந்தீமோ பல் படர் அகல எருவை நீடிய பெரு வரைச் சிறுகுடி அரியல் ஆர்ந்தவர் ஆயினும் பெரியர் பாடு இமிழ் விடர் முகை முழங்க ஆடு மழை இறுத்தது எம் கோடு உயர் குன்றே &110 - (கருவூர்க்) கண்ணம்புல்லனார் #1 அகநானூறு 63 பாலை - (கருவூர்க்) கண்ணம்புல்லனார் கேளாய் வாழியோ மகளை நின் தோழி திரு நகர் வரைப்பகம் புலம்ப அவனொடு பெரு மலை இறந்தது நோவேன் நோவல் கடுங்கண் யானை நெடும் கை சேர்த்தி முடங்கு தாள் உதைத்த பொலம் கெழு பூழி பெரும் புலர் விடியல் விரிந்து வெயில் எறிப்பக் கரும் தாள் மிடற்ற செம் பூழ்ச் சேவல் சிறு புன் பெடையொடு குடையும் ஆங்கண் அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி கன்று காணாது புன் கண்ண செவி சாய்த்து மன்று நிறை பைதல் கூரப் பல உடன் கறவை தந்த கடும் கால் மறவர் கல்லென் சீறூர் எல்லியின் அசைஇ முது வாய்ப் பெண்டின் செது கால் குரம்பை மட மயில் அன்ன என் நடை மெலி பேதை தோள் துணை ஆகத் துயிற்றத் துஞ்சாள் வேட்டக் கள்வர் விசியுறு கடும் கண் சேக் கோள் அறையும் தண்ணுமை கேட்குநள்-கொல் எனக் கலுழும் என் நெஞ்சே #2 நற்றிணை 159 நெய்தல் - கண்ணம்புல்லனார் மணி துணிந்து அன்ன மா இரும் பரப்பின் உரவுத் திரை கொழீஇய பூ மலி பெரும் துறை நிலவுக் குவித்து அன்ன மோட்டு மணல் இடிகரைக் கோடு துணர்ந்து அன்ன குருகு ஒழுக்கு எண்ணி எல்லை கழிப்பினம் ஆயின் மெல்ல வளி சீத்து வரித்த புன்னை முன்றில் கொழு மீன் ஆர்கைச் செழு நகர்ச் செலீஇய எழு எனின் அவளும் ஒல்லாள் யாமும் ஒழி என அல்லம் ஆயினம் யாமத்து உடை திரை ஒலியின் துஞ்சும் மலி கடல் சில் குடிப் பாக்கம் கல்லென அல்குவது ஆக நீ அமர்ந்த தேரே &111 - (மதுரைக்) கண்ணனார் #1 குறுந்தொகை 107 மருதம் - (மதுரைக்) கண்ணனார் குவி இணர்த் தோன்றி ஒண் பூ அன்ன தொகு செம் நெற்றிக் கணம்கொள் சேவல் நள்ளிருள் யாமத்து இல் எலி பார்க்கும் பிள்ளை வெருகிற்கு அல்கு_இரை ஆகிக் கடு நவைப்படீஇயரோ நீயே நெடு நீர் யாணர் ஊரனொடு வதிந்த ஏம இன் துயில் எடுப்பியோயே #2 குறுந்தொகை 244 குறிஞ்சி - கண்ணனார் பல்லோர் துஞ்சும் நள்ளென் யாமத்து உரவுக் களிறு போல் வந்து இரவுக் கதவு முயறல் கேளேம் அல்லேம் கேட்டனெம் பெரும ஓரி முருங்கப் பீலி சாய நல் மயில் வலைப்பட்டு ஆங்கு யாம் உயங்கு-தொறும் முயங்கும் அறன் இல் யாயே &112 - (மதுரைக்) கதக்கண்ணனார் #1 குறுந்தொகை 88 குறிஞ்சி - (மதுரைக்) கதக்கண்ணனார் ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன் சிறு கண் பெரும் களிறு வயப் புலி தாக்கித் தொல் முரண் சொல்லும் துன் அரும் சாரல் நடுநாள் வருதலும் வரூஉம் வடு நாணலமே தோழி நாமே #2 குறுந்தொகை 94 முல்லை - கதக்கண்ணனார் பெரும் தண் மாரிப் பேதைப் பித்திகத்து அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே யானே மருள்வென் தோழி பானாள் இன்னும் தமியர் கேட்பின் பெயர்த்தும் என் ஆகுவர்-கொல் பிரிந்திசினோரே அருவி மா மலைத் தத்த கருவி மா மழைச் சிலைதரும் குரலே &113 - (கருவூர்க்) கதப்பிள்ளையார் #1 குறுந்தொகை 64 முல்லை - (கருவூர்க்) கதப்பிள்ளையார் பல் ஆ நெடு நெறிக்கு அகன்று வந்து எனப் புன் தலை மன்றம் நோக்கி மாலை மடக் கண் குழவி அலம்வந்து அன்ன நோயேம் ஆகுதல் அறிந்தும் சேயர் தோழி சேய்நாட்டோரே #2 குறுந்தொகை 265 குறிஞ்சி - (கருவூர்க்) கதப்பிள்ளையார் காந்தள் அம் கொழு முகை காவல் செல்லாது வண்டு வாய் திறக்கும் பொழுதில் பண்டும் தாம் அறி செம்மைச் சான்றோர்க் கண்ட கடன் அறி மாக்கள் போல இடன் விட்டு இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன் நன்னர் நெஞ்சத்தன் தோழி நின் நிலை யான் தனக்கு உரைத்தனென் ஆகத் தான் நாணினன் இஃது ஆகா ஆறே #3 குறுந்தொகை 380 பாலை - கருவூர் கதப்பிள்ளையார் விசும்பு கண் புதையப் பாஅய் வேந்தர் வென்று எறி முரசின் நல் பல முழுங்கிப் பெயல் ஆனாதே வானம் காதலர் நனி சேய் நாட்டர் நம் உன்னலரே யாங்குச் செய்வாம்-கொல் தோழி ஈங்கைய வண்ணத் துய்ம் மலர் உதிர முன்னர்த் தோன்றும் பனிக் கடு நாளே #4 நற்றிணை 135 நெய்தல் - கதப்பிள்ளையார் தூங்கல் ஓலை ஓங்கு மடல் பெண்ணை மா அரை புதைத்த மணல் மலி முன்றில் வரையாத் தாரம் வரு_விருந்து அயரும் தண் குடி வாழ்நர் அம் குடிச் சீறூர் இனிது-மன்று அம்ம தானே பனி படு பல் சுரம் உழந்த நல்கூர் பரிய முழங்கு திரைப் புது மணல் அழுந்தக் கொட்கும் வால் உளைப் பொலிந்த புரவித் தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே #5 புறநானூறு 380 - கருவூர்க் கதப்பிள்ளை **பாடப்பட்டோன்: நாஞ்சில் வள்ளுவன் தென் பவ்வத்து முத்துப் பூண்டு வடகுன்றத்துச் சாந்தம் உரீஇ கடல் தானை இன் இசைய விறல் வென்றித் தென்னவர் வய மறவன் மிசைப் பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து நாறு இதழ்க் குளவியொடு கூதளம் குழைய தீம் சுளைப் பலவின் நாஞ்சில் பொருநன் துப்பு எதிர்ந்தோர்க்கே உள்ளாச் சேய்மையன் நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன் வல் வேல் கந்தன் நல் இசை அல்ல சிலத்தார் பிள்ளை அம் சிறாஅர் அன்னன் ஆகன் மாறே இ நிலம் இலம்படு காலை ஆயினும் புலம்பல் போயின்று பூத்த என் கடும்பே &114 - (ஒரோடோகத்துக்) கந்தரத்தனார் #1 அகநானூறு 23 பாலை - (ஒரோடோகத்துக்) கந்தரத்தனார் மண் கண் குளிர்ப்ப வீசித் தண் பெயல் பாடு உலந்தன்றே பறைக் குரல் எழிலி புதல் மிசைத் தளவின் இதல் முள் செம் நனை நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழக் காடே கம்மென்றன்றே அவல கோடு உடைந்து அன்ன கோடல் பைம் பயிர் பதவின் பாவை முனைஇ மதவு நடை அண்ணல் இரலை அமர் பிணை தழீஇத் தண் அறல் பருகித் தாழ்ந்துபட்டனவே அனைய-கொல் வாழி தோழி மனைய தாழ்வின் நொச்சி சூழ்வன மலரும் மௌவல் மாச் சினை காட்டி அவ்வளவு என்றார் ஆண்டுச் செய்பொருளே #2 அகநானூறு 95 பாலை - (ஒரோடோகத்துக்) கந்தரத்தனார் பைபயப் பசந்தன்று நுதலும் சாஅய் ஐது ஆகின்று என் தளிர் புரை மேனியும் பலரும் அறியத் திகழ்தரும் அவலமும் உயிர் கொடு கழியின் அல்லதை நினையின் எவனோ வாழி தோழி பொரி கால் பொகுட்டு அரை இருப்பை குவி குலைக் கழன்ற ஆலி ஒப்பின் தூம்பு உடைத் திரள் வீ ஆறு செல் வம்பலர் நீள் இடை அழுங்க ஈனல் எண்கின் இரும் கிளை கவரும் சுரம் பல கடந்தோர்க்கு இரங்குப என்னார் கௌவை மேவலர் ஆகி இ ஊர் நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ புரைய அல்ல என் மகட்கு எனப் பரைஇ நம் உணர்ந்து ஆறிய கொள்கை அன்னை முன்னர் யாம் என் இதன் படலே #3 அகநானூறு 191 பாலை - (ஒரோடோகத்துக்) கந்தரத்தனார் ** (உரோடகத்துக் கவுணியன் சேந்தன்) அத்தப் பாதிரித் துய்த் தலைப் புது வீ எரி இதழ் அலரியொடு இடைப்பட விரைஇ வண் தோட்டுத் தொடுத்த வண்டு படு கண்ணித் தோல் புதை சிரற்று அடிக் கோல் உடை உமணர் ஊர் கண்டு அன்ன ஆரம் வாங்கி அரும் சுரம் இவர்ந்த அசைவு இல் நோன் தாள் திருந்து பகட்டு இயம்பும் கொடு மணி புரிந்து அவர் மடி விடு வீளையொடு கடிது எதிர் ஓடி ஓமை அம் பெரும் காட்டு வரூஉம் வம்பலர்க்கு ஏமம் செப்பும் என்றூழ் நீள் இடை அரும் பொருள் நசைஇப் பிரிந்து உறை வல்லி சென்று வினை எண்ணுதி ஆயின் நன்றும் உரைத்திசின் வாழி என் நெஞ்சே நிரை முகை முல்லை அருந்தும் மெல்லிய ஆகி அறல் என விரிந்த உறல் இன் சாயல் ஒலி இரும் கூந்தல் தேறும் என வலிய கூறவும் வல்லையோ மற்றே #4 குறுந்தொகை 155 முல்லை - (உ)(ஒரோடகத்துக்) கந்தரத்தனார் (காரத்தனார்) முதைப் புனம் கொன்ற ஆர் கலி உழவர் விதைக் குறு வட்டி போதொடு பொதுளப் பொழுதோ தான் வந்தன்றே மெழுகு ஆன்று ஊது உலைப் பெய்த பகு வாய்த் தெண் மணி மரம் பயில் இறும்பின் ஆர்ப்ப சுரன் இழிபு மாலை நனி விருந்து அயர்மார் தேர் வரும் என்னும் உரை வாராதே #5 நற்றிணை 116 குறிஞ்சி - கந்தரத்தனார் தீமை கண்டோர் திறத்தும் பெரியோர் தாம் அறிந்து உணர்க என்ப-மாதோ வழுவப் பிண்டம் நாப்பண் ஏமுற்று இரு வெதிர் ஈன்ற வேல் தலைக் கொழு முளை சூல் முதிர் மடப் பிடி நாள்_மேயல் ஆரும் மலை கெழு நாடன் கேண்மை பலவின் மாச் சினை துறந்த கோல் முதிர் பெரும் பழம் விடர் அளை வீழ்ந்து உக்கு ஆங்குத் தொடர்பு அறச் சேணும் சென்று உக்கன்றே அறியாது ஏ கல் அடுக்கத்து இருள் முகை இருந்த குறிஞ்சி நல் ஊர்ப் பெண்டிர் இன்னும் ஓவார் என் திறத்து அலரே #6 நற்றிணை 146 குறிஞ்சி - கந்தரத்தனார் வில்லாப் பூவின் கண்ணி சூடி நல் ஏமுறுவல் எனப் பல் ஊர் திரிதரும் நெடு மாப் பெண்ணை மடல்_மானோயே கடன் அறி மன்னர் குடை_நிழல் போலப் பெரும் தண்ணென்ற மர நிழல் சிறிது இழிந்து இருந்தனை சென்மோ வழங்குக சுடர் என அருளிக் கூடும் ஆர்வ மாக்கள் நல்லேம் என்னும் கிளவி வல்லோன் எழுதி அன்ன காண்தகு வனப்பின் ஐயள் மாயோள் அணங்கிய மையல் நெஞ்சம் என் மொழிக் கொளினே #7 நற்றிணை 238 முல்லை - கந்தரத்தனார் வறம் கொல வீந்த கானத்துக் குறும் பூம் கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப வண்டு வாய் திறப்ப விண்ட பிடவம் மாலை அந்தி மால் அதர் நண்ணிய பருவம் செய்த கருவி மா மழை அவர் நிலை அறியுமோ ஈங்கு என வருதல் சான்றோர்ப் புரைவதோ அன்றே மான்று உடன் உர உரும் உரறும் நீரின் பரந்த பாம்பு பை மழுங்கல் அன்றியும் மாண்ட கனியா நெஞ்சத்தானும் இனிய அல்ல நின் இடி நவில் குரலே #8 நற்றிணை 306 குறிஞ்சி - (உரோடோகத்துக்) கந்தரத்தனார் தந்தை வித்திய மென் தினை பைபயச் சிறு கிளி கடிதல் பிறக்கு யாவணதோ குளிர்படு கையள் கொடிச்சி செல்க என நல்ல இனிய கூறி மெல்லக் கொயல் தொடங்கினரே கானவர் கொடும் குரல் சூல் பொறை இறுத்த கோல் தலை இருவி விழவு ஒழி வியன் களம் கடுப்பத் தெறுவரப் பைதல் ஒரு நிலை காண வைகல் யாங்கு வருவது-கொல்லோ தீம் சொல் செறி தோட்டு எல் வளைக் குறுமகள் சிறு புனத்து அல்கிய பெரும் புற நிலையே &115 - கபிலர் #1 அகநானூறு 2 குறிஞ்சி - கபிலர் கோழ் இலை வாழைக் கோள் முதிர் பெரும் குலை ஊழுறு தீம் கனி உண்ணுநர்த் தடுத்த சாரல் பலவின் சுளையொடு ஊழ் படு பாறை நெடும் சுனை விளைந்த தேறல் அறியாது உண்ட கடுவன் அயலது கறி வளர் சாந்தம் ஏறல் செல்லாது நறு வீ அடுக்கத்து மகிழ்ந்து கண்படுக்கும் குறியா இன்பம் எளிதின் நின் மலை பல் வேறு விலங்கும் எய்தும் நாட குறித்த இன்பம் நினக்கு எவன் அரிய வெறுத்த ஏஎர் வேய் புரை பணைத் தோள் நிறுப்ப நில்லா நெஞ்சமொடு நின்-மாட்டு இவளும் இனையள் ஆயின் தந்தை அரும் கடிக் காவலர் சோர்_பதன் ஒற்றி கங்குல் வருதலும் உரியை பைம் புதல் வேங்கையும் ஒள் இணர் விரிந்தன நெடு வெண் திங்களும் ஊர்கொண்டன்றே #2 அகநானூறு 12 குறிஞ்சி - கபிலர் யாயே கண்ணினும் கடும் காதலளே எந்தையும் நிலன் உறப் பொறாஅன் சீறடி சிவப்ப எவன் இல குறுமகள் இயங்குதி என்னும் யாமே பிரிவு இன்று இயைந்த துவரா நட்பின் இரு தலைப் புள்ளின் ஓர் உயிர் அம்மே ஏனல் அம் காவலர் ஆனாது ஆர்-தொறும் கிளி விளி பயிற்றும் வெளில் ஆடு பெரும் சினை விழுக் கோட்டுப் பலவின் பழு பயம் கொள்மார் குறவர் ஊன்றிய குரம்பை புதைய வேங்கை தாஅய தேம் பாய் தோற்றம் புலி செத்து வெரீஇய புகர் முக வேழம் மழை படு சிலம்பில் கழைபடப் பெயரும் நல் வரை நாட நீ வரின் மெல்_இயல் ஓரும் தான் வாழலளே #3 அகநானூறு 18 குறிஞ்சி - கபிலர் நீர் நிறம் கரப்ப ஊழுறுபு உதிர்ந்து பூ மலர் கஞலிய கடு வரல் கான்யாற்று கராஅம் துஞ்சும் கல் உயர் மறி சுழி மராஅ யானை மதம் தப ஒற்றி உராஅ ஈர்க்கும் உட்குவரு நீத்தம் கடுங்கண் பன்றியின் நடுங்காது துணிந்து நாம அரும் துறைப் பேர்தந்து யாமத்து ஈங்கும் வருபவோ ஓங்கல் வெற்ப ஒரு நாள் விழுமம் உறினும் வழி_நாள் வாழ்குவள் அல்லள் என் தோழி யாவதும் ஊறு இல் வழிகளும் பயில வழங்குநர் நீடு இன்று ஆக இழுக்குவர் அதனால் உலமரல் வருத்தம் உறுதும் எம் படப்பை கொடும் தேன் இழைத்த கோடு உயர் நெடு வரை பழம் தூங்கு நளிப்பின் காந்தள் அம் பொதும்பில் பகல் நீ வரினும் புணர்குவை அகல் மலை வாங்கு அமைக் கண் இடை கடுப்ப யாய் ஓம்பினள் எடுத்த தட மென் தோளே #4 அகநானூறு 42 குறிஞ்சி - கபிலர் மலி பெயல் கலித்த மாரிப் பித்திகத்துக் கொயல் அரு நிலைஇய பெயல் ஏர் மண முகைச் செவ் வெரிந் உறழும் கொழும் கடை மழைக் கண் தளிர் ஏர் மேனி மாஅயோயே நாடு வறம் கூர நாஞ்சில் துஞ்ச கோடை நீடிய பைது அறு காலைக் குன்று கண்டு அன்ன கோட்ட யாவையும் சென்று சேக்கல்லாப் புள்ள உள் இல் என்றூழ் வியன் குளம் நிறைய வீசி பெரும் பெயல் பொழிந்த ஏம வைகறை பல்லோர் உவந்த உவகை எல்லாம் என்னுள் பெய்தந்தற்றே சேண் இடை ஓங்கித் தோன்றும் உயர் வரை வான் தோய் வெற்பன் வந்த மாறே #5 அகநானூறு 82 குறிஞ்சி - கபிலர் ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கின் கோடை அம் வளி குழலிசை ஆகப் பாடு இன் அருவிப் பனி நீர் இன் இசைத் தோடு அமை முழவின் துதை குரல் ஆகக் கணக் கலை இகுக்கும் கடும் குரல் தூம்பொடு மலைப் பூம் சாரல் வண்டு யாழ் ஆக இன் பல் இமிழ் இசை கேட்டுக் கலி சிறந்து மந்தி நல் அவை மருள்வன நோக்க கழை வளர் அடுக்கத்து இயலி ஆடு மயில் நனவுப் புகு விறலியின் தோன்றும் நாடன் உருவ வல் வில் பற்றி அம்பு தெரிந்து செருச் செய் யானை செல் நெறி வினாஅய் புலர் குரல் ஏனல் புழை உடை ஒரு சிறை மலர் தார் மார்பன் நின்றோன் கண்டோர் பலர்-தில் வாழி தோழி அவருள் ஆர் இருள் கங்குல் அணையொடு பொருந்தி ஓர் யான் ஆகுவது எவன்-கொல் நீர் வார் கண்ணொடு நெகிழ் தோளேனே #6 அகநானூறு 118 குறிஞ்சி - கபிலர் கறங்கு வெள் அருவி பிறங்கு மலைக் கவாஅன் தேம் கமழ் இணர வேங்கை சூடித் தொண்டகப்பறைச் சீர்ப் பெண்டிரொடு விரைஇ மறுகில் தூங்கும் சிறுகுடிப் பாக்கத்து இயல் முருகு ஒப்பினை வய நாய் பிற்படப் பகல் வரின் கவ்வை அஞ்சுதும் இகல் கொள இரும் பிடி கன்றொடு விரைஇய கய வாய்ப் பெரும் கை யானைக் கோள் பிழைத்து இரீஇய அடு புலி வழங்கும் ஆர் இருள் நடுநாள் தனியை வருதல் அதனினும் அஞ்சுதும் என் ஆகுவள்-கொல் தானே பல் நாள் புணர் குறி செய்த புலர் குரல் ஏனல் கிளி கடி பாடலும் ஒழிந்தனள் அளியள் தான் நின் அளி அலது இலளே #7 அகநானூறு 128 குறிஞ்சி - கபிலர் மன்று பாடு அவிந்து மனை மடிந்தன்றே கொன்றோர் அன்ன கொடுமையோடு இன்றே யாமம் கொள வரின் கனைஇக் காமம் கடலினும் உரைஇக் கரை பொழியும்மே எவன்-கொல் வாழி தோழி மயங்கி இன்னம் ஆகவும் நன்னர் நெஞ்சம் என்னொடும் நின்னொடும் சூழாது கைம்மிக்கு இறும்பு பட்டு இருளிய இட்டு அரும் சிலம்பில் குறும் சுனைக் குவளை வண்டு படச் சூடிக் கான நாடன் வரூஉம் யானைக் கயிற்றுப் புறத்து அன்ன கல் மிசைச் சிறு நெறி மாரி வானம் தலைஇ நீர் வார்பு இட்டு அரும் கண்ண படுகுழி இயவின் இருளிடை மிதிப்புழி நோக்கி அவர் தளர் அடி தாங்கிய சென்றது இன்றே #8 அகநானூறு 158 குறிஞ்சி - கபிலர் உரும் உரறு கருவிய பெரு மழை தலைஇப் பெயல் ஆன்று அவிந்த தூங்கு இருள் நடுநாள் மின்னு நிமிர்ந்து அன்ன கனம் குழை இமைப்பப் பின்னு விடு நெறியின் கிளைஇய கூந்தலள் வரை இழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி மிடை ஊர்பு இழியக் கண்டனென் இவள் என அலையல் வாழி வேண்டு அன்னை நம் படப்பைச் சூர் உடைச் சிலம்பில் சுடர்ப் பூ வேய்ந்து தாம் வேண்டு உருவின் அணங்குமார் வருமே நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் கனவு ஆண்டு மருட்டலும் உண்டே இவள் தான் சுடர் இன்று தமியளும் பனிக்கும் வெருவர மன்ற மராஅத்த கூகை குழறினும் நெஞ்சு அழிந்து அரணம் சேரும் அதன்தலைப் புலிக் கணத்து அன்ன நாய் தொடர் விட்டு முருகன் அன்ன சீற்றத்துக் கடும் திறல் எந்தையும் இல்லன் ஆக அஞ்சுவள் அல்லளோ இவள் இது செயலே #9 அகநானூறு 182 குறிஞ்சி - கபிலர் பூம் கண் வேங்கைப் பொன் இணர் மிலைந்து வாங்கு அமை நோன் சிலை எருத்தத்து இரீஇத் தீம் பழப் பலவின் சுளை விளை தேறல் வீளை அம்பின் இளையரொடு மாந்தி ஓட்டு இயல் பிழையா வய நாய் பிற்பட வேட்டம் போகிய குறவன் காட்ட குளவித் தண் புதல் குருதியொடு துயல்வர முளவு_மாத் தொலைச்சும் குன்ற நாட அரவு எறி உருமோடு ஒன்றிக் கால் வீழ்த்து உரவு மழை பொழிந்த பானாள் கங்குல் தனியை வந்த ஆறு நினைந்து அல்கலும் பனியொடு கலுழும் இவள் கண்ணே அதனால் கடும் பகல் வருதல் வேண்டும் தெய்ய அதிர் குரல் முது கலை கறி முறி முனைஇ உயர் சிமை நெடும் கோட்டு உகள உக்க கமழ் இதழ் அலரி தாஅய் வேலன் வெறி அயர் வியன் களம் கடுக்கும் பெரு வரை நண்ணிய சாரலானே #10 அகநானூறு 203 பாலை - கபிலர் உவக்குநள் ஆயினும் உடலுநள் ஆயினும் யாய் அறிந்து உணர்க என்னார் தீ வாய் அலர் வினை மேவல் அம்பல் பெண்டிர் இன்னள் இனையள் நின் மகள் எனப் பல் நாள் எனக்கு வந்து உரைப்பவும் தனக்கு உரைப்பு அறியேன் நாணுவள் இவள் என நனி கரந்து உறையும் யான் இவ் வறு மனை ஒழியத் தானே அன்னை அறியின் இவண் உறை வாழ்க்கை எனக்கு எளிது ஆகல் இல் எனக் கழல் கால் மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன் உறப் பல் மலை அரும் சுரம் போகிய தனக்கு யான் அன்னேன் அன்மை நல் வாய் ஆக மான் அதர் மயங்கிய மலை முதல் சிறு நெறி வெய்து இடையுறாஅது எய்தி முன்னர்ப் புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர் செல்_விருந்து ஆற்றித் துச்சில் இருத்த நுனை குழைத்து அலமரும் நொச்சி மனை கெழு பெண்டு யான் ஆகுக-மன்னே #11 அகநானூறு 218 குறிஞ்சி - கபிலர் கிளை பாராட்டும் கடு நடை வயக் களிறு முளை தருபு ஊட்டி வேண்டு குளகு அருத்த வாள் நிற உருவின் ஒளிறுபு மின்னி பரூஉ உறைப் பல் துளி சிதறி வான் நவின்று பெரு வரை நளிர் சிமை அதிர வட்டித்துப் புயலேறு உரைஇய வியல் இருள் நடுநாள் விறல் இழைப் பொலிந்த காண்பு இன் சாயல் தடைஇத் திரண்ட நின் தோள் சேர்பு அல்லதை படாஅ ஆகும் எம் கண் என நீயும் இருள் மயங்கு யாமத்து இயவுக் கெட விலங்கி வரி வயங்கு இரும் புலி வழங்குநர்ப் பார்க்கும் பெரு மலை விடரகம் வர அரிது என்னாய் வர எளிது ஆக எண்ணுதி அதனால் நுண்ணிதின் கூட்டிய படு மாண் ஆரம் தண்ணிது கமழும் நின் மார்பு ஒரு நாள் அடைய முயங்கேம் ஆயின் யாமும் விறல் இழை நெகிழச் சாஅய்தும் அதுவே அன்னை அறியினும் அறிக அலர் வாய் அம்பல் மூதூர் கேட்பினும் கேட்க வண்டு இறை கொண்ட எரி மருள் தோன்றியொடு ஒண் பூ வேங்கை கமழும் தண் பெரும் சாரல் பகல் வந்தீமே #12 அகநானூறு 238 குறிஞ்சி - கபிலர் மான்றமை அறியா மரம் பயில் இறும்பின் ஈன்று இளைப்பட்ட வயவுப் பிணப் பசித்து என மட மான் வல்சி தரீஇய நடுநாள் இருள் முகைச் சிலம்பின் இரை வேட்டு எழுந்த பணை மருள் எருத்தின் பல் வரி இரும் போத்து மடக் கண் ஆமான் மாதிரத்து அலற தடக் கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு நனம் தலைக் கானத்து வலம் படத் தொலைச்சி இரும் கல் வியல் அறை சிவப்ப ஈர்க்கும் பெரும் கல் நாட பிரிதி ஆயின் மருந்தும் உடையையோ மற்றே இரப்போர்க்கு இழை அணி நெடும் தேர் களிறொடு என்றும் மழை சுரந்து அன்ன ஈகை வண் மகிழ் கழல் தொடி தடக் கை கலி மான் நள்ளி நளி முகை உடைந்த நறும் கார் அடுக்கத்துப் போந்தை முழுமுதல் நிலைஇய காந்தள் மென் பிணி முகை அவிழ்ந்து அலர்ந்த தண் கமழ் புது மலர் நாறும் நறு நுதற்கே #13 அகநானூறு 248 குறிஞ்சி - கபிலர் நகை நீ கேளாய் தோழி அல்கல் வய நாய் எறிந்து வன் பறழ் தழீஇ இளையர் எய்துதல் மடக்கிக் கிளையொடு நால் முலைப் பிணவல் சொலியக் கான் ஒழிந்து அரும் புழை முடுக்கர் ஆள் குறித்து நின்ற தறுகண் பன்றி நோக்கிக் கானவன் குறுகினன் தொடுத்த கூர் வாய்ப் பகழி மடை செலல் முன்பின் தன் படை செலச் செல்லாது அரு வழி விலக்கும் எம் பெரு விறல் போன்ம் என எய்யாது பெயரும் குன்ற நாடன் செறி அரில் துடக்கலின் பரீஇப் புரி அவிழ்ந்து ஏந்து குவவு மொய்ம்பின் பூச் சோர் மாலை ஏற்று இமில் கயிற்றின் எழில் வந்து துயல்வர இல் வந்து நின்றோன் கண்டனள் அன்னை வல்லே என் முகம் நோக்கி நல்லை-மன் என நகூஉப் பெயர்ந்தோளே #14 அகநானூறு 278 குறிஞ்சி - கபிலர் குண கடல் முகந்த கொள்ளை வானம் பணை கெழு வேந்தர் பல் படைத் தானைத் தோல் நிரைத்து அனைய ஆகி வலன் ஏர்பு கோல் நிமிர் கொடியின் வசிபட மின்னி உரும் உரறு அதிர் குரல் தலைஇப் பானாள் பெரு மலை மீமிசை முற்றின ஆயின் வாள் இலங்கு அருவி தாஅய் நாளை இரு வெதிர் அம் கழை ஒசியத் தீண்டி வருவது-மாதோ வண் பரி உந்தி நனி பெரும் பரப்பின் நம் ஊர் முன்துறை பனி பொரு மழைக் கண் சிவப்பப் பானாள் முனி படர் அகல மூழ்குவம்-கொல்லோ மணி மருள் மேனி ஆய் நலம் தொலையத் தணிவு அரும் துயரம் செய்தோன் அணி கிளர் நெடு வரை ஆடிய நீரே #15 அகநானூறு 292 குறிஞ்சி - கபிலர் கூறாய் செய்வது தோழி வேறு உணர்ந்து அன்னையும் பொருள் உகுத்து அலமரும் மென் முறிச் சிறு குளகு அருந்து தாய் முலை பெறாஅ மறி கொலைப் படுத்தல் வேண்டி வெறி புரி ஏதில் வேலன் கோதை துயல்வரத் தூங்கும் ஆயின் அதூஉம் நாணுவல் இலங்கு வளை நெகிழ்ந்த செல்லல் புலம் படர்ந்து இரவின் மேயல் மரூஉம் யானைக் கால் வல் இயக்கம் ஒற்றி நடுநாள் வரையிடைக் கழுதின் வன் கைக் கானவன் கடு விசைக் கவணின் எறிந்த சிறு கல் உடு உறு கணையின் போகிச் சாரல் வேங்கை விரி இணர் சிதறித் தேன் சிதையூஉ பலவின் பழத்துள் தங்கும் மலை கெழு நாடன் மணவாக்காலே #16 அகநானூறு 318 குறிஞ்சி - கபிலர் கான மான் அதர் யானையும் வழங்கும் வான மீமிசை உருமு நனி உரறும் அரவும் புலியும் அஞ்சுதகவு உடைய இர வழங்கு சிறு நெறி தமியை வருதி வரை இழி அருவி பாட்டொடு பிரசம் முழவுச் சேர் நரம்பின் இம்மென இமிரும் பழ விறல் நனம் தலைப் பய மலை நாட மன்றல் வேண்டினும் பெறுகுவை ஒன்றோ இன்று தலையாக வாரல் வரினே ஏமுறு துயரமொடு யாம் இவண் ஒழிய என் கண்டு பெயரும் காலை யாழ நின் கல் கெழு சிறுகுடி எய்திய பின்றை ஊதல் வேண்டுமால் சிறிதே வேட்டொடு வேய் பயில் அழுவத்துப் பிரிந்த நின் நாய் பயிர் குறி நிலை கொண்ட கோடே #17 அகநானூறு 332 குறிஞ்சி - கபிலர் முளை வளர் முதல மூங்கில் முருக்கிக் கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய பொரு முரண் உழுவை தொலைச்சிக் கூர் நுனைக் குருதிச் செம் கோட்டு அழி துளி கழாஅக் கல் முகை அடுக்கத்து மென்மெல இயலிச் செறு பகை வாட்டிய செம்மலொடு அறு கால் யாழ் இசைப் பறவை இமிரப் பிடி புணர்ந்து வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன் நின் புரைத் தக்க சாயலன் என நீ அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல் வாய்த்தன வாழி தோழி வேட்டோர்க்கு அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின் வண்டு இடைப்படாஅ முயக்கமும் தண்டாக் காதலும் தலை_நாள் போன்மே #18 அகநானூறு 382 குறிஞ்சி - கபிலர் பிறர் உறு விழுமம் பிறரும் நோப தம் உறு விழுமம் தமக்கோ தஞ்சம் கடம்பு கொடி யாத்துக் கண்ணி சூட்டி வேறு பல் குரல ஒரு தூக்கு இன்னியம் காடு கெழு நெடு வேள் பாடு கொளைக்கு ஏற்ப அணங்கு அயர் வியன் களம் பொலியப் பையத் தூங்குதல் புரிந்தனர் நமர் என ஆங்கு அவற்கு அறியக் கூறல் வேண்டும் தோழி அருவி பாய்ந்த கரு விரல் மந்தி செழும் கோள் பலவின் பழம் புணை ஆகச் சாரல் பேர் ஊர் முன்துறை இழிதரும் வறனுறல் அறியாச் சோலை விறல் மலை நாடன் சொல் நயந்தோயே ** ஐங்குறுநூறு - மூன்றாம் நூறு - குறிஞ்சி - கபிலர் **21 அன்னாய் வாழிப் பத்து #19 ஐங்குறுநூறு 201 - கபிலர் அன்னாய் வாழி வேண்டு அன்னை என் ஐ தானும் மலைந்தான் எமக்கும் தழை ஆயின பொன் வீ மணி அரும்பினவே என்ன மரம்-கொல் அவர் சாரல் அவ்வே #20 ஐங்குறுநூறு 202 - கபிலர் அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் ஊர்ப் பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும் குடுமித் தலைய மன்ற நெடு மலை நாடன் ஊர்ந்த மாவே #21 ஐங்குறுநூறு 203 - கபிலர் அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை தேன் மயங்கு பாலினும் இனிய அவர் நாட்டு உவலைக் கூவல் கீழ மான் உண்டு எஞ்சிய கலிழி நீரே #22 ஐங்குறுநூறு 204 - கபிலர் அன்னாய் வாழி வேண்டு அன்னை அஃது எவன்-கொல் வரை அர_மகளிரின் நிரையுடன் குழீஇப் பெயர்வுழிப் பெயர்வுழி தவிராது நோக்கி நல்லள் நல்லள் என்ப தீயேன்-தில்ல மலை கிழவோர்க்கே #23 ஐங்குறுநூறு 205 - கபிலர் அன்னாய் வாழி வேண்டு அன்னை என் தோழி நனி நாண் உடையள் நின்னும் அஞ்சும் ஒலி வெள் அருவி ஓங்கு மலை நாடன் மலர்ந்த மார்பின் பாயல் துஞ்சிய வெய்யள் நோகோ யானே #24 ஐங்குறுநூறு 206 - கபிலர் அன்னாய் வாழி வேண்டு அன்னை உவக் காண் மாரிக் குன்றத்துக் காப்பாள் அன்னன் தூவலின் நனைந்த தொடலை ஒள் வாள் பாசி சூழ்ந்த பெரும் கழல் தண் பனி வைகிய வரிக் கச்சினனே #25 ஐங்குறுநூறு 207 - கபிலர் அன்னாய் வாழி வேண்டு அன்னை நன்றும் உணங்கல-கொல்லோ நின் தினையே உவக் காண் நிணம் பொதி வழுக்கில் தோன்றும் மழை தலைவைத்து அவர் மணி நெடும் குன்றே #26 ஐங்குறுநூறு 208 - கபிலர் அன்னாய் வாழி வேண்டு அன்னை கானவர் கிழங்கு அகழ் நெடும் குழி மல்க வேங்கைப் பொன் மலி புது வீத் தாஅம் அவர் நாட்டு மணி நிற மால் வரை மறை-தொறு இவள் அறை மலர் நெடும் கண் ஆர்ந்தன பனியே #27 ஐங்குறுநூறு 209 - கபிலர் அன்னாய் வாழி வேண்டு அன்னை நீ மற்று யான் அவர் மறத்தல் வேண்டுதி ஆயின் கொண்டல் அவரைப் பூவின் அன்ன வெண் தலை மா மழை சூடித் தோன்றல் அனாது அவர் மணி நெடும் குன்றே #28 ஐங்குறுநூறு 210 - கபிலர் அன்னாய் வாழி வேண்டு அன்னை நம் படப்பை புலவுச் சேர் துறுகல் ஏறி அவர் நாட்டுப் பூக் கெழு குன்றம் நோக்கி நின்று மணி புரை வயங்கு இழை நிலைபெறத் தணிதற்கும் உரித்து அவள் உற்ற நோயே **22 அன்னாய்ப் பத்து #29 ஐங்குறுநூறு 211 - கபிலர் நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்று அன்ன வயலை அம் சிலம்பின் தலையது செயலை அம் பகைத் தழை வாடும் அன்னாய் #30 ஐங்குறுநூறு 212 - கபிலர் சாந்த மரத்த பூழில் எழு புகை கூட்டு விரை கமழும் நாடன் அறவற்கு எவனோ நாம் அகல்வு அன்னாய் #31 ஐங்குறுநூறு 213 - கபிலர் நறு வடி மாஅத்து மூக்கு இறுபு உதிர்த்த ஈர்ம் தண் பெரு வடுப் பாலையில் குறவர் உறை வீழ் ஆலியின் தொகுக்கும் சாரல் மீமிசை நல் நாட்டவர் வரின் யான் உயிர் வாழ்தல் கூடும் அன்னாய் #32 ஐங்குறுநூறு 214 - கபிலர் சாரல் பலவின் கொழும் துணர் நறும் பழம் இரும் கல் விடர் அளை வீழ்ந்து என வெற்பில் பெரும் தேன் இறாஅல் சிதறும் நாடன் பேர் அமர் மழைக் கண் கழிலத் தன் சீர் உடை நல் நாட்டுச் செல்லும் அன்னாய் #33 ஐங்குறுநூறு 215 - கபிலர் கட்டளை அன்ன மணி நிறத் தும்பி இட்டிய குயின்ற துறை-வயின் செலீஇயர் தட்டைத் தண்ணுமைப் பின்னர் இயவர் தீம் குழல் ஆம்பலின் இனிய இமிரும் புதல் மலர் மாலையும் பிரிவோர் இதனினும் கொடிய செய்குவர் அன்னாய் #34 ஐங்குறுநூறு 216 - கபிலர் குறும் கை இரும் புலிக் கோள் வல் ஏற்றை நெடும் புதல் கானத்து மடப் பிடி ஈன்ற நடுங்கு நடைக் குழவி கொளீஇய பலவின் பழம் தாங்கு கொழு நிழல் ஒளிக்கும் நாடற்குக் கொய்திடு தளிரின் வாடி நின் மெய் பிறிது ஆதல் எவன்-கொல் அன்னாய் #35 ஐங்குறுநூறு 217 - கபிலர் பெரு வரை வேங்கைப் பொன் மருள் நறு வீ மான் இனப் பெரும் கிளை மேயல் ஆரும் கானக நாடன் வரவும் இவள் மேனி பசப்பது எவன்-கொல் அன்னாய் #36 ஐங்குறுநூறு 218 - கபிலர் நுண் ஏர் புருவத்த கண்ணும் ஆடும் மயிர் வார் முன்கை வளையும் செறூஉம் களிறு கோள் பிழைத்த கதம் சிறந்து எழு புலி எழுதரு மழையின் குழுமும் பெரும் கல் நாடன் வரும்-கொல் அன்னாய் #37 ஐங்குறுநூறு 219 - கபிலர் கரும் கால் வேங்கை மாத் தகட்டு ஒள் வீ இரும் கல் வியல் அறை வரிப்பத் தாஅம் நல் மலை நாடன் பிரிந்து என ஒள் நுதல் பசப்பது எவன்-கொல் அன்னாய் #38 ஐங்குறுநூறு 220 - கபிலர் அலங்கு மழை பொழிந்த அகன் கண் அருவி ஆடு கழை அடுக்கத்து இழிதரு நாடன் பெரு வரை அன்ன திரு விறல் வியன் மார்பு முயங்காது கழிந்த நாள் இவள் மயங்கு இதழ் மழைக் கண் கலிழும் அன்னாய் **23 அம்ம வாழிப் பத்து #39 ஐங்குறுநூறு 221 - கபிலர் அம்ம வாழி தோழி காதலர் பாவை அன்ன என் ஆய் கவின் தொலைய நல் மா மேனி பசப்பச் செல்வல் என்ப தம் மலை கெழு நாடே #40 ஐங்குறுநூறு 222 - கபிலர் அம்ம வாழி தோழி நம் ஊர் நனிந்து வந்து உறையும் நறும் தண் மார்பன் இன் இனி வாரா மாறு-கொல் சில் நிரை ஓதி என் நுதல் பசப்பதுவே #41 ஐங்குறுநூறு 223 - கபிலர் அம்ம வாழி தோழி நம் மலை வரை ஆம் இழியக் கோடல் நீடக் காதலர்ப் பிரிந்தோர் கையற நலியும் தண் பனி வடந்தை அச்சிரம் முந்து வந்தனர் நம் காதலோரே #42 ஐங்குறுநூறு 224 - கபிலர் அம்ம வாழி தோழி நம் மலை மணி நிறம் கொண்ட மா மலை வெற்பில் துணி நீர் அருவி நம்மோடு ஆடல் எளிய-மன்னால் அவர்க்கு இனி அரிய ஆகுதல் மருண்டனென் யானே #43 ஐங்குறுநூறு 225 - கபிலர் அம்ம வாழி தோழி பைம் சுனைப் பாசடை நிவந்த பனி மலர்க் குவளை உள்ளகம் கமழும் கூந்தல் மெல்_இயல் ஏர் திகழ் ஒள் நுதல் பசத்தல் ஓரார்-கொல் நம் காதலோரே #44 ஐங்குறுநூறு 226 - கபிலர் அம்ம வாழி தோழி நம் மலை நறும் தண் சிலம்பின் நாறு குலைக் காந்தள் கொங்கு உண் வண்டின் பெயர்ந்து புறமாறி நின் வன்பு உடை விறல் கவின் கொண்ட அன்பு இலாளன் வந்தனன் இனியே #45 ஐங்குறுநூறு 227 - கபிலர் அம்ம வாழி தோழி நாளும் நல் நுதல் பசப்பவும் நறும் தோள் நெகிழவும் ஆற்றலம் யாம் என மதிப்பக் கூறி நம் பிரிந்து உறைந்தோர்-மன்ற நீ விட்டனையோ அவர் உற்ற சூளே #46 ஐங்குறுநூறு 228 - கபிலர் அம்ம வாழி தோழி நம் ஊர் நிரந்து இலங்கு அருவிய நெடு மலை நாடன் இரந்து குறையுறாஅன் பெயரின் என் ஆவது-கொல் நம் இன் உயிர் நிலையே #47 ஐங்குறுநூறு 229 - கபிலர் அம்ம வாழி தோழி நாம் அழப் பல் நாள் பிரிந்த அறனிலாளன் வந்தனனோ மற்று இரவில் பொன் போல் விறல் கவின் கொள்ளும் நின் நுதலே #48 ஐங்குறுநூறு 230 - கபிலர் அம்ம வாழி தோழி நம்மொடு சிறுதினைக் காவலன் ஆகிப் பெரிதும் நின் மென் தோள் நெகிழவும் திரு நுதல் பசப்பவும் பொன் போல் விறல் கவின் தொலைத்த குன்ற நாடற்கு அயர்வர் நல் மணனே **24 தெய்யோப் பத்து #49 ஐங்குறுநூறு 231 - கபிலர் யாங்கு வல்லுநையோ ஓங்கல் வெற்ப இரும் பல் கூந்தல் திருந்து இழை அரிவை திதலை மாமை தேயப் பசலை பாயப் பிரிவு தெய்யோ #50 ஐங்குறுநூறு 232 - கபிலர் போது ஆர் கூந்தல் இயல் அணி அழுங்க ஏதிலாளனை நீ பிரிந்ததற்கே அழல் அவிர் மணிப் பூண் நனையப் பெயல் ஆனா என் கண்ணே தெய்யோ #51 ஐங்குறுநூறு 233 - கபிலர் வருவை அல்லை வாடை நனி கொடிதே அரு வரை மருங்கின் ஆய் மணி வரன்றி ஒல்லென இழிதரும் அருவி நின் கல் உடை நாட்டுச் செல்லல் தெய்யோ #52 ஐங்குறுநூறு 234 - கபிலர் மின் அவிர் வயங்கு இழை ஞெகிழச் சாஅய் நல் நுதல் பசத்தல் ஆவது துன்னிக் கனவில் காணும் இவளே நனவில் காணாள் நின் மார்பே தெய்யோ #53 ஐங்குறுநூறு 235 - கபிலர் கையற வீழ்ந்த மை இல் வானமொடு அரிது காதலர்ப் பொழுதே அதனால் தெரி இழை தெளிர்ப்ப முயங்கி பிரியலம் என்கமோ எழுகமோ தெய்யோ #54 ஐங்குறுநூறு 236 - கபிலர் அன்னையும் அறிந்தனள் அலரும் ஆயின்று நன் மனை நெடு நகர் புலம்பு கொள உறுதரும் இன்னா வாடையும் மலையும் நும் ஊர்ச் செல்கம் எழுகமோ தெய்யோ #55 ஐங்குறுநூறு 237 - கபிலர் காமம் கடவ உள்ளம் இனைப்ப யாம் வந்து காண்பது ஓர் பருவம் ஆயின் ஓங்கித் தோன்றும் உயர் வரைக்கு யாங்கு எனப்படுவது நும் ஊர் தெய்யோ #56 ஐங்குறுநூறு 238 - கபிலர் வார் கோட்டு வயத் தகர் வாராது மாறினும் குரு மயிர்ப் புருவை நசையின் அல்கும் மாஅல் அருவித் தண் பெரும் சிலம்ப நீ இவண் வரூஉம் காலை மேவரும்-மாதோ இவள் நலனே தெய்யோ #57 ஐங்குறுநூறு 239 - கபிலர் சுரும்பு உணக் களித்த புகர் முக வேழம் இரும் பிணர்த் துறுகல் பிடி செத்துத் தழூஉம் நின் குன்று கெழு நல் நாட்டுச் சென்ற பின்றை நேர் இறைப் பணைத் தோள் ஞெகிழ வாராய் ஆயின் வாழேம் தெய்யோ #58 ஐங்குறுநூறு 240 - கபிலர் அறியேம் அல்லேம் அறிந்தனம்-மாதோ பொறி வரிச் சிறைய வண்டு இனம் மொய்ப்பச் சாந்தம் நாறும் நறியோள் கூந்தல் நாறும் நின் மார்பே தெய்யோ **25 வெறிப்பத்து #59 ஐங்குறுநூறு 241 - கபிலர் நம் உறு துயரம் நோக்கி அன்னை வேலன் தந்தாள் ஆயின் அவ் வேலன் வெறி கமழ் நாடன் கேண்மை அறியுமோ-தில்ல செறி எயிற்றோயே #60 ஐங்குறுநூறு 242 - கபிலர் அறியாமையின் வெறி என மயங்கி அன்னையும் அரும் துயர் உழந்தனள் அதனால் எய்யாது விடுதலோ கொடிதே நிரை இதழ் ஆய் மலர் உண்கண் பசப்பச் சேய் மலை நாடன் செய்த நோயே #61 ஐங்குறுநூறு 243 - கபிலர் கறி வளர் சிலம்பின் கடவுள் பேணி அறியா வேலன் வெறி எனக் கூறும் அது மனம் கொள்குவை அனை இவள் புது மலர் மழைக் கண் புலம்பிய நோய்க்கே #62 ஐங்குறுநூறு 244 - கபிலர் அம்ம வாழி தோழி பல் மலர் நறும் தண் சோலை நாடு கெழு நெடுந்தகை குன்றம் பாடான் ஆயின் என் பயம் செய்யுமோ வேலற்கு அவ் வெறியே #63 ஐங்குறுநூறு 245 - கபிலர் பொய்யா மரபின் ஊர் முது வேலன் கலங்கு மெய்ப்படுத்துக் கன்னம் தூக்கி முருகு என மொழியும் ஆயின் கெழுதகை-கொல் இவள் அணங்கியோற்கே #64 ஐங்குறுநூறு 246 - கபிலர் வெறி செறித்தனனே வேலன் கறிய கல் முகை வயப் புலி கலங்கு மெய்ப்படூஉ புன்புலம் வித்திய புனவர் புணர்த்த மெய்ம்மை அன்ன பெண்பால் புணர்ந்து மன்றில் பையுள் தீரும் குன்ற நாடன் உறீஇய நோயே #65 ஐங்குறுநூறு 247 - கபிலர் அன்னை தந்தது ஆகுவது அறிவன் பொன் நகர் வரைப்பின் கன்னம் தூக்கி முருகு என மொழியும் ஆயின் அரு வரை நாடன் பெயர்-கொலோ அதுவே #66 ஐங்குறுநூறு 248 - கபிலர் பெய்ம் மணல் முற்றம் கவின் பெற இயற்றி மலை வான் கொண்ட சினைஇய வேலன் கழங்கினால் அறிகுவது என்றால் நன்றால் அம்ம நின்ற இவள் நலனே #67 ஐங்குறுநூறு 249 - கபிலர் பெய்ம் மணல் வரைப்பின் கழங்கு படுத்து அன்னைக்கு முருகு என மொழியும் வேலன் மற்று அவன் வாழிய இலங்கும் அருவிச் சூர் மலை நாடனை அறியாதோனே #68 ஐங்குறுநூறு 250 - கபிலர் பொய் படுபு அறியாக் கழங்கே மெய்யே மணி வரைக் கட்சி மட மயில் ஆலும் நம் மலர்ந்த வள்ளி அம் கானம் கிழவோன் ஆண்டகை விறல் வேள் அல்லன் இவள் பூண் தாங்கு இள முலை அணங்கியோனே **26 குன்றக் குறவன் பத்து #69 ஐங்குறுநூறு 251 - கபிலர் குன்றக் குறவன் ஆர்ப்பின் எழிலி நுண் பல் அழி துளி பொழியும் நாட நெடு வரைப் படப்பை நும் ஊர்க் கடு வரல் அருவி காணினும் அழுமே #70 ஐங்குறுநூறு 252 - கபிலர் குன்றக் குறவன் புல் வேய் குரம்பை மன்று ஆடு இள மழை மறைக்கும் நாடன் புரையோன் வாழி தோழி விரை பெயல் அரும் பனி அளைஇய கூதிர்ப் பெரும் தண் வாடையின் முந்து வந்தனனே #71 ஐங்குறுநூறு 253 - கபிலர் குன்றக் குறவன் சார்ந்த நறும் புகை தேம் கமழ் சிலம்பின் வரையகம் கமழும் கானக நாடன் வரையின் மன்றலும் உடையள்-கொல் தோழி யாயே #72 ஐங்குறுநூறு 254 - கபிலர் குன்றக் குறவன் ஆரம் அறுத்து என நறும் புகை சூழ்ந்து காந்தள் நாறும் வண்டு இமிர் சுடர் நுதல் குறுமகள் கொண்டனர் செல்வர்-தம் குன்று கெழு நாட்டே #73 ஐங்குறுநூறு 255 - கபிலர் குன்றக் குறவன் காதல் மட_மகள் வரை அர_மகளிர்ப் புரையும் சாயலள் ஐயள் அரும்பிய முலையள் செய்ய வாயினள் மார்பினள் சுணங்கே #74 ஐங்குறுநூறு 256 - கபிலர் குன்றக் குறவன் காதல் மட_மகள் வண்டு படு கூந்தல் தண் தழைக் கொடிச்சி வளையள் முளை வாள் எயிற்றள் இளையள் ஆயினும் ஆர் அணங்கினளே #75 ஐங்குறுநூறு 257 - கபிலர் குன்றக் குறவன் கடவுள் பேணி இரந்தனன் பெற்ற எல் வளைக் குறுமகள் ஆய் அரி நெடும் கண் கலிழச் சேயதால் தெய்ய நீ பிரியும் நாடே #76 ஐங்குறுநூறு 258 - கபிலர் குன்றக் குறவன் காதல் மட_மகள் அணி மயில் அன்ன அசை நடைக் கொடிச்சியைப் பெரு வரை நாடன் வரையும் ஆயின் கொடுத்தனெம் ஆயினோம் நன்றே இன்னும் ஆனாது நல்_நுதல் துயரே #77 ஐங்குறுநூறு 259 - கபிலர் குன்றக் குறவன் காதல் மட_மகள் மன்ற வேங்கை மலர் சில கொண்டு மலை உறை கடவுள் குலமுதல் வழுத்தித் தேம் பலிச் செய்த ஈர் நறும் கையள் மலர்ந்த காந்தள் நாறிக் கவிழ்ந்த கண்ணள் எம் அணங்கியோளே #78 ஐங்குறுநூறு 260 - கபிலர் குன்றக் குறவன் காதல் மட_மகள் மென் தோள் கொடிச்சியைப் பெறற்கு அரிது-தில்ல பைம் புறப் படு கிளி ஒப்பலர் புன்புல மயக்கத்து விளைந்தன தினையே **27 கேழற் பத்து #79 ஐங்குறுநூறு 261 - கபிலர் மென் தினை மேய்ந்த தறுகண் பன்றி வன் கல் அடுக்கத்துத் துஞ்சும் நாடன் எந்தை அறிதல் அஞ்சிக்-கொல் அதுவே மன்ற வாராமையே #80 ஐங்குறுநூறு 262 - கபிலர் சிறுதினை மேய்ந்த தறுகண் பன்றி துறுகல் அடுக்கத்துத் துணையொடு வதியும் இலங்கு மலை நாடன் வரூஉம் மருந்தும் அறியும்-கொல் தோழி அவன் விருப்பே #81 ஐங்குறுநூறு 263 - கபிலர் நல் பொன் அன்ன புனிறு தீர் ஏனல் கட்டளை அன்ன கேழல் மாந்தும் குன்று கெழு நாடன் தானும் வந்தனன் வந்தன்று தோழி என் நலனே #82 ஐங்குறுநூறு 264 - கபிலர் இளம்பிறை அன்ன கோட்ட கேழல் களங்கனி அன்ன பெண்பால் புணரும் அயம் திகழ் சிலம்ப கண்டிகும் பயந்தன-மாதோ நீ நயந்தோள் கண்ணே #83 ஐங்குறுநூறு 265 - கபிலர் புலி கொல் பெண்பால் பூ வரிக் குருளை வளை வெண் மருப்பின் கேழல் புரக்கும் குன்று கெழு நாடன் மறந்தனன் பொன் போல் புதல்வனோடு என் நீத்தோனே #84 ஐங்குறுநூறு 266 - கபிலர் சிறு கண் பன்றிப் பெரும் சின ஒருத்தலொடு குறுக் கை இரும் புலி பொரூஉம் நாடன் நனி நாண் உடையை மன்ற பனிப் பயந்தன நீ நயந்தோள் கண்ணே #85 ஐங்குறுநூறு 267 - கபிலர் சிறு கண் பன்றிப் பெரும் சின ஒருத்தல் துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றி ஐவனம் கவரும் குன்ற நாடன் வண்டு படு கூந்தலைப் பேணிப் பண்பில சொல்லும் தேறுதல் செத்தே #86 ஐங்குறுநூறு 268 - கபிலர் தாஅய் இழந்த தழு வரிக் குருளையொடு வள மலைச் சிறுதினை உணீஇய கானவர் வரை ஓங்கு உயர் சிமைக் கேழல் உறங்கும் நல் மலை நாடன் பிரிதல் என் பயக்கும்மோ நம் விட்டுத் துறந்தே #87 ஐங்குறுநூறு 269 - கபிலர் கேழல் உழுது எனக் கிளர்ந்த எருவை விளைந்த செறுவில் தோன்றும் நாடன் வாராது அவண் உறை நீடின் நேர் வளை இணை_ஈர்_ஓதி நீ அழத் துணை நனி இழக்குவென் மடமையானே #88 ஐங்குறுநூறு 270 - கபிலர் கிழங்கு அகழ் கேழல் உழுத சிலம்பில் தலை விளை கானவர் கொய்தனர் பெயரும் புல்லென் குன்றத்துப் புலம்புகொள் நெடு வரை காணினும் கலிழும் நோய் செத்துத் தாம் வந்தனர் நம் காதலோரே **28 குரக்குப் பத்து #89 ஐங்குறுநூறு 271 - கபிலர் அவரை அருந்த மந்தி பகர்வர் பக்கின் தோன்றும் நாடன் வேண்டின் பல் பசுப் பெண்டிரும் பெறுகுவன் தொல் கேள் ஆகலின் நல்குமால் இவட்கே #90 ஐங்குறுநூறு 272 - கபிலர் கரு விரல் மந்திக் கல்லா வன் பறழ் அரு வரைத் தீம் தேன் எடுப்பி அயலது உரு கெழு நெடும் சினைப் பாயும் நாடன் இரவின் வருதல் அறியான் வரும்வரும் என்ப தோழி ஆயே #91 ஐங்குறுநூறு 273 - கபிலர் அத்தச் செயலைத் துப்பு உறழ் ஒண் தளிர் புன் தலை மந்தி வன் பறழ் ஆரும் நல் மலை நாட நீ செலின் நின் நயத்து உறைவி என்னினும் கலிழ்மே #92 ஐங்குறுநூறு 274 - கபிலர் மந்திக் கணவன் கல்லாக் கடுவன் ஒண் கேழ் வயப் புலி குழுமலின் விரைந்து உடன் குன்று உயர் அடுக்கம் கொள்ளும் நாடன் சென்றனன் வாழி தோழி என் மென் தோள் கவினும் பாயலும் கொண்டே #93 ஐங்குறுநூறு 275 - கபிலர் குரங்கின் தலைவன் குரு மயிர்க் கடுவன் சூரல் அம் சிறு கோல் கொண்டு வியல் அறை மாரி மொக்குள் புடைக்கும் நாட யாம் நின் நயத்தனம் எனினும் எம் ஆய் நலம் வாடுமோ அருளுதி எனினே #94 ஐங்குறுநூறு 276 - கபிலர் மந்திக் காதலன் முறி மேய் கடுவன் தண் கமழ் நறைக் கொடி கொண்டு வியல் அறைப் பொங்கல் இள மழை புடைக்கும் நாட நயவாய் ஆயினும் வரைந்தனை சென்மோ கல் முகை வேங்கை மலரும் நல் மலை நாடன் பெண்டு எனப் படுத்தே #95 ஐங்குறுநூறு 277 - கபிலர் குறவர் முன்றில் மா தீண்டு துறுகல் கல்லா மந்தி கடுவனோடு உகளும் குன்ற நாட நின் மொழிவல் என்றும் பயப்ப நீத்தல் என் இவள் கயத்து வளர் குவளையின் அமர்த்த கண்ணே #96 ஐங்குறுநூறு 278 - கபிலர் சிலம்பின் வெதிரத்துக் கண்விடு கழைக் கோல் குரங்கின் வன் பறழ் பாய்ந்தன இலஞ்சி மீன் எறி தூண்டிலின் நிவக்கும் நாடன் உற்றோர் மறவா நோய் தந்து கண்டோர் தண்டா நலம் கொண்டனனே #97 ஐங்குறுநூறு 279 - கபிலர் கல் இவர் இற்றி புல்லுவன ஏறிக் குளவி மேய்ந்த மந்தி துணையோடு வரை மிசை உகளும் நாட நீ வரின் கல் அகத்தது எம் ஊரே அம்பல் சேரி அலர் ஆங்கட்டே #98 ஐங்குறுநூறு 280 - கபிலர் கரு விரல் மந்திக் கல்லா வன் பார்ப்பு இரு வெதிர் ஈர்ம் கழை ஏறிச் சிறு கோல் மதி புடைப்பது போல தோன்றும் நாட வரைந்தனை நீ எனக் கேட்டு யான் உரைத்தனென் அல்லனோ அஃது என் யாய்க்கே **29 கிள்ளைப் பத்து #99 ஐங்குறுநூறு 281 - கபிலர் வெள்ள வரம்பின் ஊழி போகியும் கிள்ளை வாழிய பலவே ஒள் இழை இரும் பல் கூந்தல் கொடிச்சி பெரும் தோள் காவல் காட்டிய அவ்வே #100 ஐங்குறுநூறு 282 - கபிலர் சாரல் புறத்த பெரும் குரல் சிறுதினைப் பேர் அமர் மழைக் கண் கொடிச்சி கடியவும் சோலைச் சிறு கிளி உன்னும் நாட ஆர் இருள் பெருகின வாரல் கோட்டு மா வழங்கும் காட்டக நெறியே #101 ஐங்குறுநூறு 283 - கபிலர் வன்கண் கானவன் மென் சொல் மட_மகள் புன்புல மயக்கத்து உழுத ஏனல் பைம் புறச் சிறு கிளி கடியும் நாட பெரிய கூறி நீப்பினும் பொய் வலைப் படூஉம் பெண்டு தவப் பலவே #102 ஐங்குறுநூறு 284 - கபிலர் அரிய தாமே செவ் வாய்ப் பைம் கிளி குன்றக் குறவர் கொய் தினைப் பைம் கால் இருவை நீள் புனம் கண்டும் பிரிதல் தேற்றாப் பேர் அன்பினவே #103 ஐங்குறுநூறு 285 - கபிலர் பின் இரும் கூந்தல் நல் நுதல் குற_மகள் மெல் தினை நுவணை உண்டு தட்டையின் ஐவனச் சிறு கிளி கடியும் நாட வீங்கு வளை நெகிழப் பிரிதல் யாங்கு வல்லுநையோ ஈங்கு இவள் துறந்தே #104 ஐங்குறுநூறு 286 - கபிலர் சிறுதினை கொய்த இருவி வெண் கால் காய்த்த அவரைப் படு கிளி கடியும் யாணர் ஆகிய நன் மலை நாடன் புகர் இன்று நயந்தனன் போலும் கவரும் தோழி என் மாமைக் கவினே #105 ஐங்குறுநூறு 287 - கபிலர் நெடு வரை மிசையது குறும் கால் வருடை தினை பாய் கிள்ளை வெரூஉம் நாட வல்லை-மன்ற பொய்த்தல் வல்லாய்-மன்ற நீ அல்லது செயலே #106 ஐங்குறுநூறு 288 - கபிலர் நன்றே செய்த உதவி நன்று தெரிந்து யாம் எவன் செய்குவம் நெஞ்சே காமர் மெல் இயல் கொடிச்சி காப்பப் பல் குரல் ஏனல் பாத்தரும் கிளியே #107 ஐங்குறுநூறு 289 - கபிலர் கொடிச்சி இன் குரல் கிளி செத்து அடுக்கத்துப் பைம் குரல் ஏனல் படர்தரும் கிளி எனக் காவலும் கடியுநர் போல்வர் மால் வரை நாட வரைந்தனை கொண்மோ #108 ஐங்குறுநூறு 290 - கபிலர் அறம் புரி செங்கோல் மன்னனின் தாம் நனி சிறந்தன போலும் கிள்ளை பிறங்கிய பூக் கமழ் கூந்தல் கொடிச்சி நோக்கவும்படும் அவள் ஒப்பவும்படுமே **30 மஞ்ஞைப் பத்து #109 ஐங்குறுநூறு 291 - கபிலர் மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும் துறுகல் அடுக்கத்ததுவே பணைத் தோள் ஆய் தழை நுடங்கும் அல்குல் காதலி உறையும் நனி நல் ஊரே #110 ஐங்குறுநூறு 292 - கபிலர் மயில்கள் ஆலப் பெரும் தேன் இமிரத் தண் மழை தழீஇய மா மலை நாட நின்னினும் சிறந்தனள் எமக்கே நீ நயந்து நல் மனை அரும் கடி அயர எம் நலம் சிறப்ப யாம் இனிப் பெற்றோளே #111 ஐங்குறுநூறு 293 - கபிலர் சிலம்பு கமழ் காந்தள் நறும் குலை அன்ன நலம் பெறு கையின் என் கண் புதைத்தோயே பாயல் இன் துணை ஆகிய பணைத் தோள் தோகை மாட்சிய மடந்தை நீ அலது உளரோ என் நெஞ்சு அமர்ந்தோரே #112 ஐங்குறுநூறு 294 - கபிலர் எரி மருள் வேங்கை இருந்த தோகை இழை அணி மடந்தையின் தோன்றும் நாட இனிது செய்தனையால் நுந்தை வாழியர் நல் மனை வதுவை அயர இவள் பின் இரும் கூந்தல் மலர் அணிந்தோரே #113 ஐங்குறுநூறு 295 - கபிலர் வருவது-கொல்லோ தானே வாராது அவண் உறை மேவலின் அமைவது-கொல்லோ புனவர் கொள்ளியின் புகல் வரும் மஞ்ஞை இருவி இருந்த குருவி வருந்துறப் பந்து ஆடு மகளிரின் படர்தரும் குன்று கெழு நாடனொடு சென்ற என் நெஞ்சே #114 ஐங்குறுநூறு 296 - கபிலர் கொடிச்சி காக்கும் பெரும் குரல் ஏனல் அடுக்கல் மஞ்ஞை கவரும் நாட நடுநாள் கங்குலும் வருதி கடு மா தாக்கின் அறியேன் யானே #115 ஐங்குறுநூறு 297 - கபிலர் விரிந்த வேங்கைப் பெரும் சினைத் தோகை பூக் கொய் மகளிரின் தோன்றும் நாட பிரியினும் பிரிவது அன்றே நின்னொடு மேய மடந்தை நட்பே #116 ஐங்குறுநூறு 298 - கபிலர் மழை வரவு அறியா மஞ்ஞை ஆலும் அடுக்கல் நல் ஊர் அசை நடைக் கொடிச்சி தான் எம் அருளாள் ஆயினும் யாம் தன் உள்ளுபு மறந்து அறியேமே #117 ஐங்குறுநூறு 299 - கபிலர் குன்ற நாடன் குன்றத்துக் கவாஅன் பைம் சுனைப் பூத்த பகு வாய்க் குவளையும் அம் சில் ஓதி அசை நடைக் கொடிச்சி கண் போல் மலர்தலும் அரிது இவள் தன் போல் சாயல் மஞ்ஞைக்கும் அரிதே #118 ஐங்குறுநூறு 300 - கபிலர் கொடிச்சி கூந்தல் போலத் தோகை அம் சிறை விரிக்கும் பெரும் கல் வெற்பன் வந்தனன் எதிர்ந்தனர் கொடையே அம் தீம் கிளவி பொலிக நின் சிறப்பே ** கலித்தொகை - இரண்டாவது - குறிஞ்சிக்கலி - கபிலர் #119 கலித்தொகை 37 - கபிலர் கய மலர் உண்கண்ணாய் காணாய் ஒருவன் வய_மான் அடித் தேர்வான் போலத் தொடை மாண்ட கண்ணியன் வில்லன் வரும் என்னை நோக்குபு முன்னத்தின் காட்டுதல் அல்லது தான் உற்ற நோய் உரைக்கல்லான் பெயரும்-மன் பல் நாளும் பாயல் பெறேஎன் படர் கூர்ந்து அவன்-வயின் சேயேன்-மன் யானும் துயர் உழப்பேன் ஆயிடை கண் நின்று கூறுதல் ஆற்றான் அவன் ஆயின் பெண் அன்று உரைத்தல் நமக்கு ஆயின் இன்னதூஉம் காணான் கழிதலும் உண்டு என்று ஒரு நாள் என் தோள் நெகிழ்புற்ற துயரால் துணிதந்து ஓர் நாணின்மை செய்தேன் நறு_நுதால் ஏனல் இனக் கிளி யாம் கடிந்து ஓம்பும் புனத்து அயல் ஊசல் ஊர்ந்து ஆட ஒரு ஞான்று வந்தானை ஐய சிறிது என்னை ஊக்கி எனக் கூற தையால் நன்று என்று அவன் ஊக்கக் கை நெகிழ்பு பொய்யாக வீழ்ந்தேன் அவன் மார்பின் வாயாச் செத்து ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான் மேல் மெய் அறியாதேன் போல் கிடந்தேன்-மன் ஆயிடை மெய் அறிந்து ஏற்று எழுவேன் ஆயின் மற்று ஒய்யென ஒண்_குழாய் செல்க எனக் கூறி விடும் பண்பின் அங்கண் உடையன் அவன் #120 கலித்தொகை 38 - கபிலர் இமைய வில் வாங்கிய ஈர்ம் சடை அந்தணன் உமை அமர்ந்து உயர் மலை இருந்தனன் ஆக ஐ_இரு தலையின் அரக்கர் கோமான் தொடிப் பொலி தடக் கையின் கீழ் புகுத்து அ மலை எடுக்கல் செல்லாது உழப்பவன் போல உறு புலி உரு ஏய்ப்பப் பூத்த வேங்கையைக் கறுவுகொண்டு அதன் முதல் குத்திய மத யானை நீடு இரு விடரகம் சிலம்பக் கூய்த் தன் கோடு புய்க்க அல்லாது உழக்கும் நாட கேள் ஆர் இடை என்னாய் நீ அரவு அஞ்சாய் வந்தக்கால் நீர் அற்ற புலமே போல் புல்லென்றாள் வைகறை கார் பெற்ற புலமே போல் கவின் பெறும் அ கவின் தீராமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தைக் காண் இருள் இடை என்னாய் நீ இரவு அஞ்சாய் வந்தக்கால் பொருள் இல்லான் இளமை போல் புல்லென்றாள் வைகறை அருள் வல்லான் ஆக்கம் போல் அணி பெறும் அவ் அணி தெருளாமல் காப்பது ஓர் திறன் உண்டேல் உரைத்தைக் காண் மறம் திருந்தார் என்னாய் நீ மலையிடை வந்தக்கால் அறம் சாரான் மூப்பே போல் அழிதக்காள் வைகறை திறம் சேர்ந்தான் ஆக்கம் போல் திருத்தகும் அத் திருப் புறங்கூற்றுத் தீர்ப்பது ஓர் பொருள் உண்டேல் உரைத்தைக் காண் என ஆங்கு நின் உறு விழுமம் கூறக் கேட்டு வருமே தோழி நல் மலை நாடன் வேங்கை விரிவிடம் நோக்கி வீங்கு இறைப் பணைத் தோள் வரைந்தனன் கொளற்கே #121 கலித்தொகை 39 - கபிலர் காமர் கடும் புனல் கலந்து எம்மோடு ஆடுவாள் தாமரைக் கண்புதைத்து அஞ்சித் தளர்ந்து அதனோடு ஒழுகலான் நீள் நாக நறும் தண் தார் தயங்கப் பாய்ந்து அருளினால் பூண் ஆகம் உறத் தழீஇப் போத்தந்தான் அகன் அகலம் வரு முலை புணர்ந்தன என்பதனால் என் தோழி அரு மழை தரல் வேண்டின் தருகிற்கும் பெருமையளே அவனும் தான் ஏனல் இதணத்து அகில் புகை உண்டு இயங்கும் வான் ஊர் மதியம் வரை சேரின் அவ் வரைத் தேனின் இறால் என ஏணி இழைத்து இருக்கும் கான் அகல் நாடன் மகன் சிறுகுடியீரே சிறுகுடியீரே வள்ளி கீழ் வீழா வரை மிசைத் தேன் தொடா கொல்லை குரல் வாங்கி ஈனா மலை வாழ்நர் அல்ல புரிந்து ஒழுகலான் காந்தள் கடி கமழும் கண் வாங்கு இரும் சிலம்பின் வாங்கு அமை மென் தோள் குறவர் மட மகளிர் தாம் பிழையார் கேள்வர்த் தொழுது எழலால் தம் ஐயரும் தாம் பிழையார் தாம் தொடுத்த கோல் என ஆங்கு அறத்தொடு நின்றேனைக் கண்டு திறப்பட என் ஐயர்க்கு உய்த்து உரைத்தாள் யாய் அவரும் தெரி கணை நோக்கிச் சிலை நோக்கிக் கண் சேந்து ஒரு பகல் எல்லாம் உருத்து எழுந்து ஆறி இருவர்-கண் குற்றமும் இல்லையால் என்று தெருமந்து சாய்த்தார் தலை தெரி_இழாய் நீயும் நின் கேளும் புணர வரை உறை தெய்வம் உவப்ப உவந்து குரவை தழீஇ யாம் ஆடக் குரவையுள் கொண்டுநிலை பாடிக் காண் நல்லாய் நல் நாள் தலைவரும் எல்லை நமர் மலைத் தம் நாண் தாம் தாங்குவார் என் நோற்றனர்-கொல் புன வேங்கைத் தாது உறைக்கும் பொன் அறை முன்றில் நனவில் புணர்ச்சி நடக்குமாம் அன்றோ நனவில் புணர்ச்சி நடக்கலும் ஆங்கே கனவில் புணர்ச்சி கடிதுமாம் அன்றோ விண் தோய் கல் நாடனும் நீயும் வதுவையுள் பண்டு அறியாதீர் போல் படர்கிற்பீர்-மன்-கொலோ பண்டு அறியாதீர் போல் படர்ந்தீர் பழம் கேண்மை கண்டு அறியாதேன் போல் கரக்கிற்பென்-மன்-கொலோ மை தவழ் வெற்பன் மண அணி காணாமல் கையால் புதைபெறூஉம் கண்களும் கண்களோ என்னை-மன் நின் கண்ணால் காண்பென்-மன் யான் நெய்தல் இதழ் உண்கண் நின் கண் ஆக என் கண் மன என ஆங்கு நெறி அறி செறி குறி புரி திரிபு அறியா அறிவனை முந்துறீஇத் தகை மிகு தொகை வகை அறியும் சான்றவர் இனம் ஆக வேய் புரை மென் தோள் பசலையும் அம்பலும் மாயப் புணர்ச்சியும் எல்லாம் உடன் நீங்கச் சேய் உயர் வெற்பனும் வந்தனன் பூ எழில் உண்கணும் பொலிகமா இனியே #122 கலித்தொகை 40 - கபிலர் அகவினம் பாடுவாம் தோழி அமர்க்-கண் நகை_மொழி நல்லவர் நாணும் நிலை போல் தகைகொண்ட ஏனலுள் தாழ் குரல் உரீஇ முகை வளர் சாந்து உரல் முத்து ஆர் மருப்பின் வகை சால் உலக்கை வயின்வயின் ஓச்சிப் பகை இல் நோய் செய்தான் பய மலை ஏத்தி அகவினம் பாடுவாம் நாம் ஆய் நுதல் அணி கூந்தல் அம் பணைத் தட மென் தோள் தேன் நாறு கதுப்பினாய் யானும் ஒன்று ஏத்துகு வேய் நரல் விடரகம் நீ ஒன்று பாடித்தை கொடிச்சியர் கூப்பி வரை தொழு கை போல் எடுத்த நறவின் குலை அலம் காந்தள் தொடுத்த தேன் சோரத் தயங்கும் தன் உற்றார் இடுக்கண் தவிர்ப்பான் மலை கல்லாக் கடுவன் கணம் மலி சுற்றத்து மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே தொல் எழில் தோய்ந்தார் தொலையின் அவரினும் அல்லல்படுவான் மலை புரி விரி புதை துதை பூத் ததைந்த தாழ் சினைத் தளிர் அன்ன எழில் மேனி தகை வாட நோய் செய்தான் அரு வரை அடுக்கம் நாம் அழித்து ஒன்று பாடுவாம் விண் தோய் வரைப் பந்து எறிந்த அயா வீடத் தண் தாழ் அருவி அர_மகளிர் ஆடுபவே பெண்டிர் நலம் வௌவித் தண் சாரல் தாது உண்ணும் வண்டின் துறப்பான் மலை ஒடுங்கா எழில் வேழம் வீழ் பிடிக்கு உற்ற கடும் சூல் வயாவிற்கு அமர்ந்து நெடும் சினைத் தீம் கண் கரும்பின் கழை வாங்கும் உற்றாரின் நீங்கலம் என்பான் மலை என நாம் தன் மலை பாட நயவந்து கேட்டு அருளி மெய்மலி உவகையன் புகுதந்தான் புணர்ந்து ஆரா மென் முலை ஆகம் கவின் பெறச் செம்மலை ஆகிய மலை கிழவோனே #123 கலித்தொகை 41 - கபிலர் பாடுகம் வா வாழி தோழி வயக் களிற்றுக் கோடு உலக்கையாக நல் சேம்பின் இலை சுளகா ஆடு கழை நெல்லை அறை உரலுள் பெய்து இருவாம் பாடுகம் வா வாழி தோழி நல் தோழி பாடுற்று இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடுநாள் கொடி விடுபு இருளிய மின்னுச் செய் விளக்கத்துப் பிடியொடு மேயும் புன்செய் யானை அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன் நெடு வரை ஆசினிப் பணவை ஏறிக் கடு விசைக் கவணையில் கல் கை விடுதலின் இறுவரை வேங்கையின் ஒள் வீ சிதறி ஆசினி மென் பழம் அளிந்தவை உதிராத் தேன் செய் இறாஅல் துளைபடப் போகி நறு வடி மாவின் பைம் துணர் உழக்கிக் குலை உடை வாழை கொழு மடல் கிழியாப் பலவின் பழத்துள் தங்கும் மலை கெழு வெற்பனைப் பாடுகம் வா வாழி தோழி நல் தோழி பாடுற்று இலங்கும் அருவித்து இலங்கும் அருவித்தே வானின் இலங்கும் அருவித்தே தான் உற்ற சூள் பேணான் பொய்த்தான் மலை பொய்த்தற்கு உரியனோ பொய்த்தற்கு உரியனோ அஞ்சல் ஓம்பு என்றாரைப் பொய்த்தற்கு உரியனோ குன்று அகல் நல் நாடன் வாய்மையில் பொய் தோன்றின் திங்களுள் தீத் தோன்றி அற்று இள மழை ஆடும் இள மழை ஆடும் இள மழை வைகலும் ஆடும் என் முன்கை வளை நெகிழ வாராதோன் குன்று வாராது அமைவானோ வாராது அமைவானோ வாராது அமைகுவான் அல்லன் மலை நாடன் ஈரத்துள் இன்னவை தோன்றின் நிழல் கயத்து நீருள் குவளை வெந்து அற்று மணி போலத் தோன்றும் மணி போலத் தோன்றும் மண்ணா மணி போலத் தோன்றும் என் மேனியைத் துன்னான் துறந்தான் மலை துறக்குவன் அல்லன் துறக்குவன் அல்லன் தொடர் வரை வெற்பன் துறக்குவன் அல்லன் தொடர்புள் இனையவை தோன்றின் விசும்பில் சுடருள் இருள் தோன்றி அற்று என ஆங்கு நன்று ஆகின்றால் தோழி நம் வள்ளையுள் ஒன்றி நாம் பாட மறை நின்று கேட்டு அருளி மென் தோள் கிழவனும் வந்தனன் நுந்தையும் மன்றல் வேங்கைக் கீழ் இருந்து மணம் நயந்தனன் அ மலை கிழவோற்கே #124 கலித்தொகை 42 - கபிலர் மறம் கொள் இரும் புலித் தொல் முரண் தொலைத்த முறம் செவி வாரணம் முன் குளகு அருந்திக் கறங்கு வெள் அருவி ஓலின் துஞ்சும் பிறங்கு இரும் சோலை நல் மலை நாடன் மறந்தான் மறக்க இனி எல்லா நமக்கு சிறந்தமை நாம் நன்கு அறிந்தனம் ஆயின் அவன் திறம் கொல் யானைக் கோட்டால் வெதிர் நெல் குறுவாம் நாம் வள்ளை அகவுவம் வா இகுளை நாம் வள்ளை அகவுவம் வா காணிய வா வாழி தோழி வரைத் தாழ்பு வாள் நிறம் கொண்ட அருவித்தே நம் அருளா நாணிலி நாட்டு மலை ஆர்வுற்றார் நெஞ்சம் அழிய விடுவானோ ஓர்வுற்று ஒரு திறம் ஒல்காத நேர்கோல் அறம் புரி நெஞ்சத்தவன் தண் நறும் கோங்கம் மலர்ந்த வரை எல்லாம் பொன் அணி யானை போல் தோன்றுமே நம் அருளாக் கொன்னாளன் நாட்டு மலை கூரு நோய் ஏய்ப்ப விடுவானோ தன் மலை நீரினும் சாயல் உடையன் நயந்தோர்க்குத் தேர் ஈயும் வண் கையவன் வரை மிசை மேல் தொடுத்த நெய்க் கண் இறாஅல் மழை நுழை திங்கள் போல் தோன்றும் இழை நெகிழ எவ்வம் உறீஇயினான் குன்று எஞ்சாது எல்லா கொடுமை நுவலாதி அஞ்சுவது அஞ்சா அறனிலி அல்லன் என் நெஞ்சம் பிணிக்கொண்டவன் என்று யாம் பாட மறை நின்று கேட்டனன் தாழ் இரும் கூந்தல் என் தோழியைக் கை கவியாச் சாயல் இன் மார்பன் சிறுபுறம் சார்தர ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என் ஆய் இழை மேனிப் பசப்பு #125 கலித்தொகை 43 - கபிலர் வேங்கை தொலைத்த வெறி பொறி வாரணத்து ஏந்து மருப்பின் இன வண்டு இமிர்பு ஊதும் சாந்த மரத்தின் இயன்ற உலக்கையால் ஐவன வெண்ணெல் அறை உரலுள் பெய்து இருவாம் ஐயனை ஏத்துவாம் போல அணி பெற்ற மை படு சென்னிப் பய மலை நாடனைத் தையலாய் பாடுவாம் நாம் தகையவர் கைச் செறித்த தாள் போலக் காந்தள் முகையின் மேல் தும்பி இருக்கும் பகை எனின் கூற்றம் வரினும் தொலையான் தன் நட்டார்க்குத் தோற்றலை நாணாதோன் குன்று வெருள்புடன் நோக்கி வியல் அறை யூகம் இருள் தூங்கு இறுவரை ஊர்பு இழிபு ஆடும் வருடை மான் குழவிய வள மலை நாடனைத் தெருளத் தெரி_இழாய் நீ ஒன்று பாடித்தை நுண் பொறி மான் செவி போல வெதிர் முளைக் கண் பொதி பாளை கழன்று உகும் பண்பிற்றே மாறுகொண்டு ஆற்றார் எனினும் பிறர் குற்றம் கூறுதல் தேற்றாதோன் குன்று புணர் நிலை வளகின் குளகு அமர்ந்து உண்ட புணர் மருப்பு எழில் கொண்ட வரை புரை செலவின் வயங்கு எழில் யானைப் பய மலை நாடனை மணம் நாறு கதுப்பினாய் மறுத்து ஒன்று பாடித்தை கடும் கண் உழுவை அடி போல வாழைக் கொடும் காய் குலை-தொறூஉம் தூங்கும் இடும்பையால் இன்மை உரைத்தார்க்கு அது நிறைக்கல் ஆற்றாக்கால் தன் மெய் துறப்பான் மலை என ஆங்கு கூடி அவர் திறம் பாட என் தோழிக்கு வாடிய மென் தோளும் வீங்கின ஆடு அமை வெற்பன் அளித்தக்கால் போன்றே #126 கலித்தொகை 44 - கபிலர் கதிர் விரி கனை சுடர்க் கவின் கொண்ட நனம் சாரல் எதிரெதிர் ஓங்கிய மால் வரை அடுக்கத்து அதிர் இசை அருவி தன் அம் சினை மிசை வீழ முதிர் இணர் ஊழ் கொண்ட முழவுத் தாள் எரிவேங்கை வரி நுதல் எழில் வேழம் பூ நீர் மேல் சொரிதரப் புரி நெகிழ் தாமரை மலர் அம் கண் வீறு எய்தித் திரு நயந்து இருந்து அன்ன தேம் கமழ் விறல் வெற்ப தன் எவ்வம் கூரினும் நீ செய்த அருளின்மை என்னையும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு நின்னை யான் பிறர் முன்னர் பழி கூறல் தான் நாணி கூரும் நோய் சிறப்பவும் நீ செய்த அருளின்மை சேரியும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு ஆங்கு ஓரும் நீ நிலையலை எனக் கூறல் தான் நாணி நோய் அட வருந்தியும் நீ செய்த அருளின்மை ஆயமும் மறைத்தாள் என் தோழி அது கேட்டு மாய நின் பண்பின்மை பிறர் கூறல் தான் நாணி என ஆங்கு இனையன தீமை நினைவனள் காத்து ஆங்கு அனை அரும் பண்பினான் நின் தீமை காத்தவள் அரும் துயர் ஆர் அஞர் தீர்க்கும் மருந்து ஆகிச் செல்கம் பெரும நாம் விரைந்தே #127 கலித்தொகை 45 - கபிலர் விடியல் வெம் கதிர் காயும் வேய் அமல் அகல் அறைக் கடி சுனைக் கவினிய காந்தள் அம் குலையினை அரும் மணி அவிர் உத்தி அரவு நீர் உணல் செத்துப் பெரும் மலை மிளிர்ப்பு அன்ன காற்று உடைக் கனைப் பெயல் உருமுக் கண்ணுறுதலின் உயர் குரல் ஒலி ஓடி நறு வீய நனம் சாரல் சிலம்பலின் கதுமெனச் சிறுகுடி துயில் எழூஉம் சேண் உயர் விறல் வெற்ப கால் பொர நுடங்கல கறங்கு இசை அருவி நின் மால் வரை மலி சுனை மலர் ஏய்க்கும் என்பதோ புல் ஆராப் புணர்ச்சியால் புலம்பிய என் தோழி பல் இதழ் மலர் உண்கண் பசப்ப நீ சிதைத்ததை புகர் முகக் களிறொடு புலி பொருது உழக்கும் நின் அகல் மலை அடுக்கத்த அமை ஏய்க்கும் என்பதோ கடை எனக் கலுழும் நோய் கைம்மிக என் தோழி தடையின திரண்ட தோள் தகை வாடச் சிதைத்ததை சுடர் உறஉற நீண்ட சுரும்பு இமிர் அடுக்கத்த விடர் வரை எரிவேங்கை இணர் ஏய்க்கும் என்பதோ யாமத்தும் துயில் அலள் அலமரும் என் தோழி காமரு நல் எழில் கவின் வாடச் சிதைத்ததை என ஆங்கு தன் தீமை பல கூறிக் கழறலின் என் தோழி மறையில் தான் மருவுற மணந்த நட்பு அருகலான் பிறை புரை நுதல் அவர் பேணி நம் உறை வரைந்தனர் அவர் உவக்கும் நாளே #128 கலித்தொகை 46 - கபிலர் வீ அகம் புலம்ப வேட்டம் போகிய மாஅல் அம் சிறை மணி நிறத் தும்பி வாய் இழி கடாத்த வால் மருப்பு ஒருத்தலோடு ஆய் பொறி உழுவை தாக்கிய பொழுதின் வேங்கை அம் சினை என விறல் புலி முற்றியும் பூம் பொறி யானைப் புகர் முகம் குறுகியும் வலி மிகு வெகுளியான் வாளுற்ற மன்னரை நயன் நாடி நட்பாக்கும் வினைவர் போல் மறிதரும் அயம் இழி அருவிய அணி மலை நல் நாட ஏறு இரங்கு இருளிடை இரவினில் பதம் பெறாஅன் மாறினென் எனக் கூறி மனம் கொள்ளும் தான் என்ப கூடுதல் வேட்கையான் குறி பார்த்துக் குரல் நொச்சிப் பாடு ஓர்க்கும் செவியோடு பைதலேன் யான் ஆக அரும் செலவு ஆர் இடை அருளி வந்து அளி பெறாஅன் வருந்தினென் எனப் பல வாய்விடூஉம் தான் என்ப நிலை உயர் கடவுட்குக் கடம் பூண்டு தன் மாட்டுப் பல சூழும் மனத்தோடு பைதலேன் யான் ஆக கனை பெயல் நடுநாள் யான் கண்மாறக் குறி பெறாஅன் புனை_இழாய் என் பழி நினக்கு உரைக்கும் தான் என்ப துளி நசை வேட்கையான் மிசை பாடும் புள்ளின் தன் அளி நசைஇ ஆர்வுற்ற அன்பினேன் யான் ஆக என ஆங்கு கலந்த நோய் கைம்மிகக் கண் படா என்-வயின் புலந்தாயும் நீ ஆயின் பொய்யானே வெல்குவை இலங்கு தாழ் அருவியோடு அணி கொண்ட நின் மலைச் சிலம்பு போல் கூறுவ கூறும் இலங்கு ஏர் எல் வளை இவள் உடை நோயே #129 கலித்தொகை 47 - கபிலர் ஒன்று இரப்பான் போல் எளிவந்தும் சொல்லும் உலகம் புரப்பான் போல்வது ஓர் மதுகையும் உடையன் வல்லாரை வழிபட்டு ஒன்று அறிந்தான் போல் நல்லார்-கண் தோன்றும் அடக்கமும் உடையன் இல்லோர் புன்கண் ஈகையின் தணிக்க வல்லான் போல்வது ஓர் வன்மையும் உடையன் அன்னான் ஒருவன் தன் ஆண்தகை விட்டு என்னை சொல்லும் சொல் கேட்டீ சுடர்_இழாய் பல் மாணும் நின் இன்றி அமையலேன் யான் என்னும் அவன் ஆயின் அன்னான் சொல் நம்புண்டல் யார்க்கும் இங்கு அரிது ஆயின் என் உற்ற பிறர்க்கும் ஆங்கு உள-கொல்லோ நறு_நுதால் அறியாய் நீ வருந்துவல் யான் என்னும் அவன் ஆயின் தமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கும் அரிது ஆயின் அளியரோ எம் போல ஈங்கு இவன் வலைப்பட்டார் வாழலேன் யான் என்னும் நீ நீப்பின் அவன் ஆயின் ஏழையர் எனப் பலர் கூறும் சொல் பழி ஆயின் சூழுங்கால் நினைப்பது ஒன்று அறிகலேன் வருந்துவல் சூழுங்கால் நறு_நுதால் நம்முளே சூழ்குவம் அவனை நாண் அடப் பெயர்த்தல் நமக்கும் ஆங்கு ஒல்லாது பேணினர் எனப்படுதல் பெண்மையும் அன்று அவன் வௌவினன் முயங்கும் மாத்திரம் வா என கூறுவென் போலக் காட்டி மற்று அவன் மேஎ வழி மேவாய் நெஞ்சே #130 கலித்தொகை 48 - கபிலர் ஆம் இழி அணி மலை அலர் வேங்கைத் தகை போலத் தே மூசு நனை கவுள் திசை காவல் கொளற்கு ஒத்த வாய் நில்லா வலி முன்பின் வண்டு ஊது புகர் முகப் படு மழை அடுக்கத்த மா விசும்பு ஓங்கிய கடி மரத் துருத்திய கமழ் கடாம் திகழ்தரும் பெரும் களிற்று இனத்தொடு வீங்கு எருத்து எறுழ் முன்பின் இரும் புலி மயக்குற்ற இகல் மலை நல் நாட வீழ் பெயல் கங்குலின் விளி ஓர்த்த ஒடுக்கத்தால் வாழும் நாள் சிறந்தவள் வருந்து தோள் தவறு உண்டோ தாழ் செறி கடும் காப்பின் தாய் முன்னர் நின் சாரல் ஊழுறு கோடல் போல் எல் வளை உகுபவால் இனை இருள் இது என ஏங்கி நின் வரல் நசைஇ நினை துயர் உழப்பவள் பாடு இல் கண் பழி உண்டோ இனையள் என்று எடுத்து அரற்றும் அயல் முன்னர் நின் சுனைக் கனை பெயல் நீலம் போல் கண் பனி கலுழ்பவால் பல் நாளும் படர் அடப் பசலையால் உணப்பட்டாள் பொன் உரை மணி அன்ன மாமைக் கண் பழி உண்டோ இன் நுரைச் செதும்பு அரற்றும் செவ்வியுள் நின் சோலை மின் உகு தளிர் அன்ன மெலிவு வந்து உரைப்பதால் என ஆங்கு பின் ஈதல் வேண்டும் நீ பிரிந்தோள் நட்பு என நீவிப் பூம் கண் படுதலும் அஞ்சுவல் தாங்கிய அரும் துயர் அவலம் தூக்கின் மருங்கு அறிவாரா மலையினும் பெரிதே #131 கலித்தொகை 49 - கபிலர் கொடு_வரி தாக்கி வென்ற வருத்தமொடு நெடு வரை மருங்கின் துஞ்சும் யானை நனவில் தான் செய்தது மனத்தது ஆகலின் கனவில் கண்டு கதுமென வெரீஇப் புதுவது ஆக மலர்ந்த வேங்கையை அது என உணர்ந்து அதன் அணி நலம் முருக்கிப் பேணா முன்பின் தன் சினம் தணிந்து அ மரம் காணும் பொழுதின் நோக்கல் செல்லாது நாணி இறைஞ்சும் நல் மலை நல் நாட போது எழில் மலர் உண்கண் இவள்-மாட்டு நீ இன்ன காதலை என்பதோ இனிது மற்று இன்னாதே மின் ஓரும் கண் ஆக இடி என்னாய் பெயல் என்னாய் இன்னது ஓர் ஆர் இடை ஈங்கு நீ வருவதை இன்புற அளித்தனை இவள்-மாட்டு நீ இன்ன அன்பினை என்பதோ இனிது மற்று இன்னாதே மணம் கமழ் மார்பினை மஞ்சு இவர் அடுக்கம் போழ்ந்து அணங்கு உடை ஆர் இடை ஈங்கு நீ வருவதை இருள் உறழ் இரும் கூந்தல் இவள் மாட்டு நீ இன்ன அருளினை என்பதோ இனிது மற்று இன்னாதே ஒளிறு வேல் வலன் ஏந்தி ஒருவன் யான் என்னாது களிறு இயங்கு ஆர் இடை ஈங்கு நீ வருவதை அதனால் இரவின் வாரல் ஐய விரவு வீ அகல் அறை வரிக்கும் சாரல் பகலும் பெறுவை இவள் தட மென் தோளே #132 கலித்தொகை 50 - கபிலர் வாங்கு கோல் நெல்லொடு வாங்கி வரு வைகல் மூங்கில் மிசைந்த முழந்தாள் இரும் பிடி தூங்கு இலை வாழை நளி புக்கு ஞாங்கர் வருடை மட மறி ஊர்விடைத் துஞ்சும் இருள் தூங்கு சோலை இலங்கு நீர் வெற்ப அரவின் பொறியும் அணங்கும் புணர்ந்த உரவு வில் மேல் அசைத்த கையை ஓராங்கு நிரை வளை முன்கை என் தோழியை நோக்கிப் படி கிளி பாயும் பசும் குரல் ஏனல் கடிதல் மறப்பித்தாய் ஆயின் இனி நீ நெடிது உள்ளல் ஓம்புதல் வேண்டும் இவளே பல் கோள் பலவின் பயிர்ப்புறு தீம் கனி அல்கு அறை கொண்டு ஊண் அமலைச் சிறுகுடி நல்கூர்ந்தார் செல்வ மகள் நீயே வளியின் இகல் மிகும் தேரும் களிறும் தளியின் சிறந்தனை வந்த புலவர்க்கு அளியொடு கைதூவலை அதனால் கடு மா கடவுறூஉம் கோல் போல் எனைத்தும் கொடுமை இலை ஆவது அறிந்தும் அடுப்பல் வழை வளர் சாரல் வருடை நல் மான் குழவி வளர்ப்பவர் போலப் பாராட்டி உழையின் பிரியின் பிரியும் இழை அணி அல்குல் என் தோழியது கவினே #133 கலித்தொகை 51 - கபிலர் சுடர்த் தொடீஇ கேளாய் தெருவில் நாம் ஆடும் மணல் சிற்றில் காலின் சிதையா அடைச்சிய கோதை பரிந்து வரிப் பந்து கொண்டு ஓடி நோதக்க செய்யும் சிறு பட்டி மேல் ஓர் நாள் அன்னையும் யானும் இருந்தேமா இல்லிரே உண்ணு நீர் வேட்டேன் என வந்தாற்கு அன்னை அடர் பொன் சிரகத்தால் வாக்கிச் சுடர்_இழாய் உண்ணு நீர் ஊட்டி வா என்றாள் என யானும் தன்னை அறியாது சென்றேன் மற்று என்னை வளை முன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு அன்னாய் இவன் ஒருவன் செய்தது காண் என்றேனா அன்னை அலறிப் படர்தரத் தன்னை யான் உண்ணு நீர் விக்கினான் என்றேனா அன்னையும் தன்னைப் புறம்பு அழித்து நீவ மற்று என்னைக் கடைக்கண்ணால் கொல்வான் போல் நோக்கி நகைக் கூட்டம் செய்தான் அக் கள்வன் மகன் #134 கலித்தொகை 52 - கபிலர் முறம் செவி மறைப் பாய்பு முரண் செய்த புலி செத்து மறம் தலைக்கொண்ட நூற்றுவர் தலைவனைக் குறங்கு அறுத்திடுவான் போல் கூர் நுதி மடுத்து அதன் நிறம் சாடி முரண் தீர்ந்த நீள் மருப்பு எழில் யானை மல்லரை மறம் சாய்த்த மால் போல் தன் கிளை நாப்பண் கல் உயர் நனம் சாரல் கலந்து இயலும் நாட கேள் தாமரைக் கண்ணியைத் தண் நறும் சாந்தினை நேர் இதழ் கோதையாள் செய்குறி நீ வரின் மணம் கமழ் நாற்றத்த மலை நின்று பலி பெறூஉம் அணங்கு என அஞ்சுவர் சிறுகுடியோரே ஈர்ம் தண் ஆடையை எல்லி மாலையை சோர்ந்து வீழ் கதுப்பினாள் செய்குறி நீ வரின் ஒளி திகழ் ஞெகிழியர் கவணையர் வில்லர் களிறு என ஆர்ப்பவர் ஏனல் காவலரே ஆர மார்பினை அண்ணலை அளியை ஐது அகல் அல்குலாள் செய்குறி நீ வரின் கறி வளர் சிலம்பில் வழங்கல் ஆனாப் புலி என்று ஓர்க்கும் இக் கலி கேழ் ஊரே என ஆங்கு விலங்கு ஓரார் மெய் ஓர்ப்பின் இவள் வாழாள் இவள் அன்றிப் புலம் புகழ் ஒருவ யானும் வாழேன் அதனால் பொதி அவிழ் வைகறை வந்து நீ குறைகூறி வதுவை அயர்தல் வேண்டுவல் ஆங்குப் புதுவை போலும் நின் வரவும் இவள் வதுவை நாண் ஒடுக்கமும் காண்குவல் யானே #135 கலித்தொகை 53 - கபிலர் வறனுறல் அறியாத வழை அமை நறும் சாரல் விறல் மலை வியல் அறை வீழ் பிடி உழையதா மறம் மிகு வேழம் தன் மாறுகொள் மைந்தினான் புகர் நுதல் புண் செய்த புய் கோடு போல உயர் முகை நறும் காந்தள் நாள்-தோறும் புதிது ஈன அயம் நந்தி அணிபெற அருவி ஆர்த்து இழிதரும் பய மழை தலைஇய பாடு சால் விறல் வெற்ப மறையினின் மணந்து ஆங்கே மருவு அறத் துறந்த பின் இறை வளை நெகிழ்பு ஓட ஏற்பவும் ஒல்லும்-மன் அயல் அலர் தூற்றலின் ஆய் நலன் இழந்த கண் கயல் உமிழ் நீர் போலக் கண் பனி கலுழாக்கால் இனிய செய்து அகன்று நீ இன்னாதா துறத்தலின் பனி இவள் படர் எனப் பரவாமை ஒல்லும்-மன் ஊர் அலர் தூற்றலின் ஒளி ஓடி நறு நுதல் பீர் அலர் அணி கொண்டு பிறை வனப்பு இழவாக்கால் அஞ்சல் என்று அகன்று நீ அருளாது துறத்தலின் நெஞ்சு அழி துயர் அட நிறுப்பவும் இயையும்-மன் நனவினால் நலம் வாட நலிதந்த நடுங்கு அஞர் கனவினால் அழிவுற்றுக் கங்குலும் அரற்றாக்கால் என ஆங்கு விளியா நோய் உழந்து ஆனா என் தோழி நின் மலை முளிவுற வருந்திய முளை முதிர் சிறுதினை தளி பெறத் தகை பெற்று ஆங்கு நின் அளி பெற நந்தும் இவள் ஆய் நுதல் கவினே #136 கலித்தொகை 54 - கபிலர் கொடியவும் கோட்டவும் நீர் இன்றி நிறம் பெறப் பொடி அழல் புறந்தந்த பூவாப் பூம் பொலன் கோதைத் தொடி செறி யாப்பு அமை அரி முன்கை அணைத் தோளாய் அடி உறை அருளாமை ஒத்ததோ நினக்கு என்ன நரந்தம் நாறு இரும் கூந்தல் எஞ்சாது நனி பற்றிப் பொலம் புனை மகரவாய் நுங்கிய சிகழிகை நலம்பெறச் சுற்றிய குரல் அமை ஒரு காழ் விரல் முறை சுற்றி மோக்கலும் மோந்தனன் நறாஅ அவிழ்ந்து அன்ன என் மெல் விரல் போது கொண்டு செறாஅச் செம் கண் புதைய வைத்துப் பறாஅக் குருகின் உயிர்த்தலும் உயிர்த்தனன் தொய்யில் இள முலை இனிய தைவந்து தொய்யல் அம் தடக் கையின் வீழ் பிடி அளிக்கும் மையல் யானையின் மருட்டலும் மருட்டினன் அதனால் அல்லல் களைந்தனன் தோழி நம் நகர் அரும் கடி நீவாமை கூறின் நன்று என நின்னொடு சூழ்வல் தோழி நயம் புரிந்து இன்னது செய்தாள் இவள் என மன்னா உலகத்து மன்னுவது புரைமே #137 கலித்தொகை 55 - கபிலர் மின் ஒளிர் அவிர் அறல் இடை போழும் பெயலே போல் பொன் அகை தகை வகிர் வகை நெறி வயங்கிட்டுப் போழ் இடை இட்ட கமழ் நறும் பூம் கோதை இன் நகை இலங்கு எயிற்றுத் தே மொழித் துவர்ச் செம் வாய் நல்_நுதால் நினக்கு ஒன்று கூறுவாம் கேள் இனி நில் என நிறுத்தான் நிறுத்தே வந்து நுதலும் முகனும் தோளும் கண்ணும் இயலும் சொல்லும் நோக்குபு நினைஇ ஐ தேய்ந்தன்று பிறையும் அன்று மை தீர்ந்தன்று மதியும் அன்று வேய் அமன்றன்று மலையும் அன்று பூ அமன்றன்று சுனையும் அன்று மெல்ல இயலும் மயிலும் அன்று சொல்லத் தளரும் கிளியும் அன்று என ஆங்கு அனையன பல பாராட்டிப் பையென வலைவர் போலச் சோர்_பதன் ஒற்றிப் புலையர் போலப் புன்கண் நோக்கித் தொழலும் தொழுதான் தொடலும் தொட்டான் காழ் வரை நில்லாக் கடும் களிறு அன்னோன் தொழூஉம் தொடூஉம் அவன் தன்மை ஏழைத் தன்மையோ இல்லை தோழி #138 கலித்தொகை 56 - கபிலர் ஊர்க் கால் நிவந்த பொதும்பருள் நீர்க் கால் கொழு நிழல் ஞாழல் முதிர் இணர் கொண்டு கழும முடித்துக் கண்கூடு கூழை சுவல் மிசைத் தாதொடு தாழ அகல்-மதி தீம் கதிர் விட்டது போல முகன் அமர்ந்து ஈங்கே வருவாள் இவள் யார்-கொல் ஆங்கே ஓர் வல்லவன் தைஇய பாவை-கொல் நல்லார் உறுப்பு எலாம் கொண்டு இயற்றியாள்-கொல் வெறுப்பினால் வேண்டு உருவம் கொண்டதோர் கூற்றம்-கொல் ஆண்டார் கடிது இவளைக் காவார் விடுதல் கொடி இயல் பல் கலைச் சில் பூம் கலிங்கத்தள் ஈங்கு இது ஓர் நல்கூர்ந்தார் செல்வ மகள் இவளைச் சொல்லாடிக் காண்பேன் தகைத்து நல்லாய் கேள் ஆய் தூவி அனம் என அணி மயில் பெடை எனத் தூதுணம்புறவு எனத் துதைந்த நின் எழில் நலம் மாதர் கொள் மான் நோக்கின் மட நல்லாய் நின் கண்டார்ப் பேதுறூஉம் என்பதை அறிதியோ அறியாயோ நுணங்கு அமைத் திரள் என நுண் இழை அணை என முழங்கு நீர்ப் புணை என அமைந்த நின் தட மென் தோள் வணங்கு இறை வால் எயிற்று அம் நல்லாய் நின் கண்டார்க்கு அணங்கு ஆகும் என்பதை அறிதியோ அறியாயோ முதிர் கோங்கின் முகை என முகம்செய்த குரும்பை எனப் பெயல் துளி முகிழ் எனப் பெருத்த நின் இள முலை மயிர் வார்ந்த வரி முன்கை மட நல்லாய் நின் கண்டார் உயிர் வாங்கும் என்பதை உணர்தியோ உணராயோ என ஆங்கு பேதுற்றாய் போலப் பிறர் எவ்வம் நீ அறியாய் யாது ஒன்றும் வாய்வாளாது இறந்தீவாய் கேள் இனி நீயும் தவறிலை நின்னைப் புறங்கடை போதர விட்ட நுமரும் தவறிலர் நிறை அழி கொல் யானை நீர்க்கு விட்டு ஆங்குப் பறை அறைந்து அல்லது செல்லற்க என்னா இறையே தவறுடையான் #139 கலித்தொகை 57 - கபிலர் வேய் எனத் திரண்ட தோள் வெறி கமழ் வணர் ஐம்பால் மா வென்ற மட நோக்கின் மயில் இயல் தளர்பு ஒல்கி ஆய் சிலம்பு அரி ஆர்ப்ப அவிர் ஒளி இழை இமைப்பக் கொடி என மின் என அணங்கு என யாது ஒன்றும் தெரிகல்லா இடையின்-கண் கண் கவர்பு ஒருங்கு ஓட வளமை சால் உயர் சிறப்பின் நுந்தை தொல் வியல் நகர் இளமையான் எறி பந்தொடு இகத்தந்தாய் கேள் இனி பூம் தண் தார்ப் புலர் சாந்தின் தென்னவன் உயர் கூடல் தேம் பாய அவிழ் நீலத்து அலர் வென்ற அமர் உண்கண் ஏந்து கோட்டு எழில் யானை ஒன்னாதார்க்கு அவன் வேலின் சேந்து நீ இனையையால் ஒத்ததோ சில்_மொழி பொழி பெயல் வண்மையான் அசோகம் தண் காவினுள் கழி கவின் இள மாவின் தளிர் அன்னாய் அதன்தலைப் பணை அமை பாய் மான் தேர் அவன் செற்றார் நிறம் பாய்ந்த கணையினும் நோய் செய்தல் கடப்பு அன்றோ கனம்_குழாய் வகை அமை தண் தாரான் கோடு உயர் பொருப்பின் மேல் தகை இணர் இள வேங்கை மலர் அன்ன சுணங்கினாய் மத வலி மிகு கடாஅத்து அவன் யானை மருப்பினும் கதவவால் தக்கதோ காழ் கொண்ட இள முலை என ஆங்கு இனையன கூற இறைஞ்சுபு நிலம் நோக்கி நினையுபு நெடிது ஒன்று நினைப்பாள் போல் மற்று ஆங்கே துணை அமை தோழியர்க்கு அமர்த்த கண்ணள் மனை ஆங்குப் பெயர்ந்தாள் என் அறிவு அகப்படுத்தே #140 கலித்தொகை 58 - கபிலர் வாருறு வணர் ஐம்பால் வணங்கு இறை நெடு மென் தோள் பேர் எழில் மலர் உண்கண் பிணை எழில் மான் நோக்கின் கார் எதிர் தளிர் மேனிக் கவின் பெறு சுடர் நுதல் கூர் எயிற்று முகை வெண் பல் கொடி புரையும் நுசுப்பினாய் நேர் சிலம்பு அரி ஆர்ப்ப நிரை தொடிக் கை வீசினை ஆர் உயிர் வௌவிக்கொண்டு அறிந்தீயாது இறப்பாய் கேள் உளனா என் உயிரை உண்டு உயவு நோய் கைம்மிக இளமையான் உணராதாய் நின் தவறு இல்லானும் களைநர் இல் நோய் செய்யும் கவின் அறிந்து அணிந்து தம் வளமையான் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் நடை மெலிந்து அயர்வுறீஇ நாளும் என் நலியும் நோய் மடமையான் உணராதாய் நின் தவறு இல்லானும் இடை நில்லாது எய்க்கும் நின் உரு அறிந்து அணிந்து தம் உடைமையால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் அல்லல் கூர்ந்து அழிவு உற அணங்காகி அடரும் நோய் சொல்லினும் அறியாதாய் நின் தவறு இல்லானும் ஒல்லையே உயிர் வௌவும் உரு அறிந்து அணிந்து தம் செல்வத்தால் போத்தந்த நுமர் தவறு இல் என்பாய் என ஆங்கு ஒறுப்பின் யான் ஒறுப்பது நுமரை யான் மற்று இ நோய் பொறுக்கலாம் வரைத்து அன்றிப் பெரிது ஆயின் பொலம்_குழாய் மறுத்து இவ் ஊர் மன்றத்து மடல் ஏறி நிறுக்குவென் போல்வல் யான் நீ படு பழியே #141 கலித்தொகை 59 - கபிலர் தளை நெகிழ் பிணி நிவந்த பாசடைத் தாமரை முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின் துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கை சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும் விளையாட அரிப் பெய்த அழகு அமை புனை வினை ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப அம் சில இயலும் நின் பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு என் பால என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி மருளி யான் மருளுற இவன் உற்றது எவன் என்னும் அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்குங்கால் வை எயிற்றவர் நாப்பண் வகை அணிப் பொலிந்து நீ தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ உருள்_இழாய் ஒளி வாட இவன் உள் நோய் யாது என்னும் அருள் இலை இவட்கு என அயலார் நின் பழிக்குங்கால் பொய்தல மகளையாய்ப் பிறர் மனைப் பாடி நீ எய்திய பலர்க்கு ஈத்த பயம் பயக்கிற்பதோ ஆய்_தொடி ஐது உயிர்த்து இவன் உள் நோய் யாது என்னும் நோய் இலை இவட்கு என நொதுமலர் பழிக்குங்கால் சிறுமுத்தனைப் பேணிச் சிறுசோறு மடுத்து நீ நறு நுதலவரொடு நக்கது நன்கு இயைவதோ என ஆங்கு அனையவை உளையவும் யான் நினக்கு உரைத்ததை இனைய நீ செய்தது உதவாய் ஆயின் சே_இழாய் செய்ததன் பயம் பற்று விடாது நயம் பற்று விடின் இல்லை நசைஇயோர் திறத்தே #142 கலித்தொகை 60 - கபிலர் சுணங்கு அணி வன முலைச் சுடர் கொண்ட நறு நுதல் மணம் கமழ் நறும் கோதை மாரி வீழ் இரும் கூந்தல் நுணங்கு எழில் ஒண் தித்தி நுழை நொசி மட மருங்குல் வணங்கு இறை வரி முன்கை வரி ஆர்ந்த அல்குலாய் கண் ஆர்ந்த நலத்தாரைக் கதுமெனக் கண்டவர்க்கு உள் நின்ற நோய் மிக உயிர் எஞ்சு துயர் செய்தல் பெண் அன்று புனை_இழாய் எனக் கூறித் தொழூஉம் தொழுதே கண்ணும் நீர் ஆக நடுங்கினன் இன்_நகாய் என் செய்தான்-கொல்லோ இஃது ஒத்தன் தன்-கண் பொரு களிறு அன்ன தகை சாம்பி உள்ளுள் உருகுவான் போலும் உடைந்து தெருவின்-கண் காரணம் இன்றிக் கலங்குவார்க் கண்டு நீ வாரணவாசிப்பதம் பெயர்த்தல் ஏதில நீ நின் மேல் கொள்வது எவன் அலர் முலை ஆய் இழை நல்லாய் கதுமெனப் பேர் அமர் உண்கண் நின் தோழி உறீஇய ஆர் அஞர் எவ்வம் உயிர் வாங்கும் மற்று இ நோய் தீரும் மருந்து அருளாய் ஒண்_தொடீ நின் முகம் காணும் மருந்தினேன் என்னுமால் நின் முகம் தான் பெறின் அல்லது கொன்னே மருந்து பிறிது யாதும் இல்லேல் திருந்து_இழாய் என் செய்வாம்-கொல் இனி நாம் பொன் செய்வாம் ஆறு விலங்கித் தெருவின்-கண் நின்று ஒருவன் கூறும் சொல் வாய் என கொண்டு அதன் பண்பு உணராம் தேறல் எளிது என்பாம் நாம் ஒருவன் சாம் ஆறு எளிது என்பாம் மற்று சிறிது ஆங்கே மாணா ஊர் அம்பல் அலரின் அலர்க என நாணும் நிறையும் நயப்பு இல் பிறப்பிலி பூண் ஆகம் நோக்கி இமையான் நயந்து நம் கேண்மை விருப்புற்றவனை எதிர் நின்று நாண் அடப் பெயர்த்த நய வரவு இன்றே #143 கலித்தொகை 61 - கபிலர் எல்லா இஃது ஒத்தன் என் பெறான் கேட்டைக் காண் செல்வம் கடைகொளச் சாஅய்ச் சான்றவர் அல்லல் களை தக்க கேளிர் உழைச் சென்று சொல்லுதலுற்று உரைக்கல்லாதவர் போலப் பல் ஊழ் பெயர்ந்து என்னை நோக்கும் மற்று யான் நோக்கின் மெல்ல இறைஞ்சும் தலை எல்லா நீ முன்னத்தான் ஒன்று குறித்தாய் போல் காட்டினை நின்னின் விடாஅ நிழல் போல் திரிதருவாய் என் நீ பெறாதது ஈது என் சொல்லின் மறாதீவாள்-மன்னோ இவள் செறாஅது ஈதல் இரந்தார்க்கு ஒன்று ஆற்றாது வாழ்தலின் சாதலும் கூடுமாம் மற்று இவள் தந்தை காதலின் யார்க்கும் கொடுக்கும் விழுப் பொருள் யாது நீ வேண்டியது பேதாய் பொருள் வேண்டும் புன்கண்மை ஈண்டு இல்லை யாழ மருளி மட நோக்கின் நின் தோழி என்னை அருளீயல் வேண்டுவல் யான் அன்னையோ மண்டு அமர் அட்ட களிறு அன்னான் தன்னை ஒரு பெண்டிர் அருளக் கிடந்தது எவன்-கொலோ ஒண் தொடீ நாணிலன்-மன்ற இவன் ஆயின் ஏஎ பல்லார் நக்கு எள்ளப்படு மடல்_மா ஏறி மல்லல் ஊர் ஆங்கண் படுமே நறு_நுதல் நல்காள் கண்மாறிவிடின் எனச் செல்வான் நாம் எள்ளி நகினும் வரூஉம் இடையிடைக் கள்வர் போல் நோக்கினும் நோக்கும் குறித்தது கொள்ளாது போகாக் குணன் உடையன் எந்தை-தன் உள்ளம் குறைபடாவாறு #144 கலித்தொகை 62 - கபிலர் ஏஎ இஃது ஒத்தன் நாணிலன் தன்னொடு மேவேம் என்பாரையும் மேவினன் கைப்பற்றும் மேவினும் மேவாக்கடையும் அஃது எல்லாம் நீ அறிதி யான் அஃது அறிகல்லேன் பூ அமன்ற மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய் நின்னை யான் புல் இனிது ஆகலின் புல்லினென் எல்லா தமக்கு இனிது என்று வலிதின் பிறர்க்கு இன்னா செய்வது நன்று ஆமோ மற்று சுடர்த்_தொடீ போற்றாய் களை நின் முதுக்குறைமை போற்றிக் கேள் வேட்டார்க்கு இனிது ஆயின் அல்லது நீர்க்கு இனிது என்று உண்பவோ நீர் உண்பவர் செய்வது அறிகல்லேன் யாது செய்வேன்-கொலோ ஐ வாய் அரவின் இடைப்பட்டு நைவாரா மை இல் மதியின் விளங்கும் முகத்தாரை வௌவிக் கொளலும் அறன் எனக் கண்டன்று அறனும் அது கண்டு அற்று ஆயின் திறன் இன்றிக் கூறும் சொல் கேளான் நலிதரும் பண்டு நாம் வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால் அவனொடு மாறு உண்டோ நெஞ்சே நமக்கு #145 கலித்தொகை 63 - கபிலர் நோக்குங்கால் நோக்கித் தொழூஉம் பிறர் காண்பார் தூக்கிலி தூற்றும் பழி என கை கவித்துப் போக்குங்கால் போக்கு நினைந்து இருக்கும் மற்று நாம் காக்கும் இடம் அன்று இனி எல்லா எவன் செய்வாம் பூம்_குழாய் செல்லல் அவன் உழைக் கூஉய்க் கூஉய் விரும்பி யான் விட்டேனும் போல்வல் என் தோள் மேல் கரும்பு எழுது தொய்யிற்குச் செல்வல் ஈங்கு ஆக இருந்தாயோ என்று ஆங்கு இற அவன் நின் திருந்து அடி மேல் வீழ்ந்து இரக்கும் நோய் தீர்க்கும் மருந்து நீ ஆகுதலான் இன்னும் கடம் பூண்டு ஒரு கால் நீ வந்தை உடம்பட்டாள் என்னாமை என் மெய் தொடு இஃதோ அடங்கக் கேள் நின்னொடு சூழுங்கால் நீயும் நிலம் கிளையா என்னொடு நிற்றல் எளிது அன்றோ மற்று அவன் தன்னொடு நின்று விடு #146 கலித்தொகை 64 - கபிலர் அணி முகம் மதி ஏய்ப்ப அ மதியை நனி ஏய்க்கும் மணி முகம் மா மழை நின் பின் ஒப்பப் பின்னின்-கண் விரி நுண் நூல் சுற்றிய ஈர் இதழ் அலரி அரவுக் கண் அணி உறழ் ஆரல் மீன் தகை ஒப்ப அரும் படர் கண்டாரைச் செய்து ஆங்கு இயலும் விரிந்து ஒலி கூந்தலாய் கண்டை எமக்குப் பெரும் பொன் படுகுவை பண்டு ஏஎ எல்லா மொழிவது கண்டை இஃது ஒத்தன் தொய்யில் எழுதி இறுத்த பெரும் பொன் படுகம் உழுவது உடையமோ யாம் உழுதாய் சுரும்பு இமிர் பூம் கோதை அம் நல்லாய் யான் நின் திருந்து இழை மென் தோள் இழைத்த மற்று இஃதோ கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ ஒருங்கே துகள் அறு வாள் முகம் ஒப்ப மலர்ந்த குவளையும் நின் உழவு அன்றோ இகலி முகை மாறுகொள்ளும் எயிற்றாய் இவை அல்ல என் உழுவாய் நீ மற்று இனி எல்லா நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு முற்று எழில் நீல மலர் என உற்ற இரும்பு ஈர் வடி அன்ன உண்கட்கும் எல்லாம் பெரும் பொன் உண்டு என்பாய் இனி நல்லாய் இகுளை கேள் ஈங்கே தலைப்படுவன் உண்டான் தலைப்பெயின் வேந்து கொண்டு அன்ன பல ஆங்கு ஆக அத் திறம் அல்லாக்கால் வேங்கை வீ முற்று எழில் கொண்ட சுணங்கு அணி பூண் ஆகம் பொய்த்து ஒரு கால் எம்மை முயங்கினை சென்றீமோ முத்து ஏர் முறுவலாய் நீ படும் பொன் எல்லாம் உத்தி எறிந்துவிடற்கு #147 கலித்தொகை 65 - கபிலர் திருந்து_இழாய் கேளாய் நம் ஊர்க்கு எல்லாம் சாலும் பெரு நகை அல்கல் நிகழ்ந்தது ஒரு நிலையே மன்பதை எல்லாம் மடிந்த இரும் கங்குல் அம் துகில் போர்வை அணிபெறத் தைஇ நம் இன் சாயல் மார்பன் குறிநின்றேன் யான் ஆகத் தீரத் தறைந்த தலையும் தன் கம்பலும் காரக் குறைந்து கறைப்பட்டு வந்து நம் சேரியின் போகா முட முதிர் பார்ப்பானைத் தோழி நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே பாராக் குறழாப் பணியாப் பொழுது அன்றி யார் இவண் நின்றீர் எனக் கூறிப் பையென வை காண் முது பகட்டின் பக்கத்தின் போகாது தையால் தம்பலம் தின்றியோ என்று தன் பக்கு அழித்துக் கொண்டீ எனத் தரலும் யாது ஒன்றும் வாய்வாளேன் நிற்பக் கடிது அகன்று கைமாறிக் கைப்படுக்கப்பட்டாய் சிறுமி நீ மற்று யான் ஏனை பிசாசு அருள் என்னை நலிதரின் இவ் ஊர்ப் பலி நீ பெறாஅமல் கொள்வேன் எனப் பலவும் தாங்காது வாய் பாடி நிற்ப முது பார்ப்பான் அஞ்சினன் ஆதல் அறிந்து யான் எஞ்சாது ஒரு கை மணல் கொண்டு மேல் தூவக் கண்டே கடிது அரற்றிப் பூசல் தொடங்கினன் ஆங்கே ஒடுங்கா வயத்தின் கொடும் கேழ்க் கடும் கண் இரும் புலி கொண்மார் நிறுத்த வலையுள் ஓர் ஏதில் குறுநரி பட்டு அற்றால் காதலன் காட்சி அழுங்க நம் ஊர்க்கு எலாஅம் ஆகுலம் ஆகி விளைந்ததை என்றும் தன் வாழ்க்கை அது ஆகக் கொண்ட முது பார்ப்பான் வீழ்க்கைப் பெரும் கரும் கூத்து #148 குறுந்தொகை 13 குறிஞ்சி - கபிலர் மாசறக் கழீஇய யானை போலப் பெரும் பெயல் உழந்த இரும் பிணர்த் துறுகல் பைதல் ஒரு தலைச் சேக்கும் நாடன் நோய் தந்தனனே தோழி பசலை ஆர்ந்த நம் குவளை அம் கண்ணே #149 குறுந்தொகை 18 குறிஞ்சி - கபிலர் வேரல் வேலி வேர்க் கோள் பலவின் சாரல் நாட செவ்வியை ஆகு-மதி யார் அஃது அறிந்திசினோரே சாரல் சிறு கோட்டுப் பெரும் பழம் தூங்கி ஆங்கு இவள் உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே #150 குறுந்தொகை 25 குறிஞ்சி - கபிலர் யாரும் இல்லைத் தானே கள்வன் தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ தினைத் தாள் அன்ன சிறு பசும் கால ஒழுகு நீர் ஆரல் பார்க்கும் குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே #151 குறுந்தொகை 38 குறிஞ்சி - கபிலர் கான மஞ்ஞை அறை ஈன் முட்டை வெயில் ஆடு முசுவின் குருளை உருட்டும் குன்ற நாடன் கேண்மை என்றும் நன்று-மன் வாழி தோழி உண்கண் நீரொடு ஒராங்கு தணப்ப உள்ளாது ஆற்றல் வல்லுவோர்க்கே #152 குறுந்தொகை 42 குறிஞ்சி - கபிலர் காமம் ஒழிவது ஆயினும் யாமத்துக் கருவி மா மழை வீழ்ந்து என அருவி விடரகத்து இயம்பும் நாட எம் தொடர்பும் தேயுமோ நின்-வயினானே #153 குறுந்தொகை 87 குறிஞ்சி - கபிலர் மன்ற மராஅத்த பேஎம் முதிர் கடவுள் கொடியோர்த் தெறூஉம் என்ப யாவதும் கொடியர் அல்லர் எம் குன்று கெழு நாடர் பசைஇப் பசந்தன்று நுதலே ஞெகிழ ஞெகிழ்ந்தன்று தட மென் தோளே #154 குறுந்தொகை 95 குறிஞ்சி - கபிலர் மால் வரை இழிதரும் தூ வெள் அருவி கல் முகைத் ததும்பும் பல் மலர்ச் சாரல் சிறுகுடிக் குறவன் பெரும் தோள் குறுமகள் நீர் ஓர் அன்ன சாயல் தீ ஓர் அன்ன என் உரன் அவித்தன்றே #155 குறுந்தொகை 100 குறிஞ்சி - கபிலர் அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப் பரு இலைக் குளவியொடு பசு மரல் கட்கும் காந்தள் அம் சிலம்பில் சிறுகுடி பசித்து என கடும் கண் வேழத்துக் கோடு நொடுத்து உண்ணும் வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப் பாவையின் மடவந்தனளே மணத்தற்கு அரிய பணைப் பெரும் தோளே #156 குறுந்தொகை 106 குறிஞ்சி - கபிலர் புல் வீழ் இற்றிக் கல் இவர் வெள் வேர் வரை இழி அருவியின் தோன்றும் நாடன் தீது இல் நெஞ்சத்துக் கிளவி நம்-வயின் வந்தன்று வாழி தோழி நாமும் நெய் பெய் தீயின் எதிர்கொண்டு தான் மணந்து அனையம் என விடுகம் தூதே #157 குறுந்தொகை 115 குறிஞ்சி - கபிலர் பெரு நன்று ஆற்றின் பேணாரும் உளரோ ஒரு நன்று உடையள் ஆயினும் புரி மாண்டு புலவி தீர அளி-மதி இலை கவர்பு ஆடு அமை ஒழுகிய தண் நறும் சாரல் மென் நடை மரையா துஞ்சும் நல் மலை நாட நின் அலது இலளே #158 குறுந்தொகை 121 குறிஞ்சி - கபிலர் மெய்யே வாழி தோழி சாரல் மை பட்டு அன்ன மா முக முசுக் கலை ஆற்றப் பாயாத் தப்பல் ஏற்ற கோட்டொடு போகி ஆங்கு நாடன் தான் குறி வாயாத் தப்பற்குத் தாம் பசந்தன என் தட மென் தோளே #159 குறுந்தொகை 142 குறிஞ்சி - கபிலர் சுனைப் பூக் குற்றுத் தொடலை தைஇப் புனக் கிளி கடியும் பூம் கண் பேதை தான் அறிந்தன்றோ இலளே பானாள் பள்ளி யானையின் உயிர்த்து என் உள்ளம் பின்னும் தன் உழையதுவே #160 குறுந்தொகை 153 குறிஞ்சி - கபிலர் குன்றக் கூகை குழறினும் முன்றில் பலவின் இரும் சினைக் கலை பாய்ந்து உகளினும் அஞ்சும்-மன் அளித்து என் நெஞ்சம் இனியே ஆர் இருள் கங்குல் அவர்-வயின் சாரல் நீள் இடைச் செலவு ஆனாதே #161 குறுந்தொகை 187 குறிஞ்சி - கபிலர் செவ் வரைச் சேக்கை வருடை மான் மறி சுரை பொழி தீம் பால் ஆர மாந்திப் பெரு வரை நீழல் உகளும் நாடன் கல்லினும் வலியன் தோழி வலியன் என்னாது மெலியும் என் நெஞ்சே #162 குறுந்தொகை 198 குறிஞ்சி - கபிலர் யாஅம் கொன்ற மரம் சுட்ட இயவில் கரும்பு மருள் முதல பைம் தாள் செந்தினை மடப் பிடித் தடக் கை அன்ன பால் வார்பு கரிக் குறட்டு இறைஞ்சிய செறிக் கோள் பைம் குரல் படு கிளி கடிகம் சேறும் அடு போர் எஃகு விளங்கு தடக் கை மலையன் கானத்து ஆரம் நாறும் மார்பினை வாரற்க-தில்ல வருகுவள் யாயே #163 குறுந்தொகை 208 குறிஞ்சி - கபிலர் ஒன்றேன் அல்லேன் ஒன்றுவென் குன்றத்துப் பொரு களிறு மிதித்த நெரி தாள் வேங்கை குறவர் மகளிர் கூந்தல் பெய்ம்மார் நின்று கொய மலரும் நாடனொடு ஒன்றேன் தோழி ஒன்றினானே #164 குறுந்தொகை 225 குறிஞ்சி - கபிலர் கன்று தன் பய முலை மாந்த முன்றில் தினை பிடி உண்ணும் பெரும் கல் நாட கெட்ட இடத்து உவந்த உதவி கட்டில் வீறு பெற்று மறந்த மன்னன் போல நன்றி மறந்து அமையாய் ஆயின் மென் சீர்க் கலி மயில் கலாவத்து அன்ன இவள் ஒலி மென் கூந்தல் உரியவால் நினக்கே #165 குறுந்தொகை 241 குறிஞ்சி - கபிலர் யாம் எம் காமம் தாங்கவும் தாம் தம் கெழுதகைமையின் அழுதன தோழி கன்று ஆற்றுப்படுத்த புன் தலைச் சிறாஅர் மன்ற வேங்கை மலர்_பதம் நோக்கி ஏறாது இட்ட ஏமப் பூசல் விண் தோய் விடரகத்து இயம்பும் குன்ற நாடன் கண்ட எம் கண்ணே #166 குறுந்தொகை 246 நெய்தல் - கபிலர் பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை களிற்றுச் செவி அன்ன பாசடை மயக்கிப் பனிக் கழி துழவும் பானாள் தனித்து ஓர் தேர் வந்து பெயர்ந்தது என்ப அதற்கொண்டு ஓரும் அலைக்கும் அன்னை பிறரும் பின்னு விடு கதுப்பின் மின் இழை மகளிர் இளையரும் மடவரும் உளரே அலையாத் தாயரொடு நற்பாலோரே #167 குறுந்தொகை 249 குறிஞ்சி - கபிலர் இன மயில் அகவும் மரம் பயில் கானத்து நரை முக ஊகம் பார்ப்பொடு பனிப்பப் படு மழை பொழிந்த சாரல் அவர் நாட்டுக் குன்றம் நோக்கினென் தோழி பண்டை அற்றோ கண்டிசின் நுதலே #168 குறுந்தொகை 259 குறிஞ்சி - கபிலர் - (பரணர்) மழை சேர்ந்து எழுதரு மாரிக் குன்றத்து அருவி ஆர்ந்த தண் நறும் காந்தள் முகை அவிழ்ந்து ஆனா நாறும் நறு நுதல் பல் இதழ் மழைக் கண் மாஅயோயே ஒல்வை ஆயினும் கொல்வை ஆயினும் நீ அளந்து அறிவை நின் புரைமை வாய் போல் பொய்ம்மொழி கூறல் அஃது எவனோ நெஞ்சம் நன்றே நின்-வயினானே #169 குறுந்தொகை 264 குறிஞ்சி - கபிலர் கலி மழை கெழீஇய கான்யாற்று இகு கரை ஒலி நெடும் பீலி துயல்வர இயலி ஆடு மயில் அகவும் நாடன் நம்மொடு நயந்தனன் கொண்ட கேண்மை பயந்தக் காலும் பயப்பு ஒல்லாதே #170 குறுந்தொகை 288 குறிஞ்சி - கபிலர் கறி வளர் அடுக்கத்து ஆங்கண் முறி அருந்து குரங்கு ஒருங்கு இருக்கும் பெரும் கல் நாடன் இனியன் ஆகலின் இனத்தின் இயன்ற இன்னாமையினும் இனிதோ இனிது எனப்படூஉம் புத்தேள்_நாடே #171 குறுந்தொகை 291 குறிஞ்சி - கபிலர் சுடு புன மருங்கில் கலித்த ஏனல் படு கிளி கடியும் கொடிச்சி கைக் குளிரே இசையின் இசையா இன் பாணித்தே கிளி அவள் விளி என விழல் ஒல்லாவே அது புலந்து அழுத கண்ணே சாரல் குண்டு நீர்ப் பைம் சுனைப் பூத்த குவளை வண்டு பயில் பல் இதழ் கலைஇத் தண் துளிக்கு ஏற்ற மலர் போன்றவ்வே #172 குறுந்தொகை 312 குறிஞ்சி - கபிலர் இரண்டு அறி கள்வி நம் காதலோளே முரண் கொள் துப்பின் செவ் வேல் மலையன் முள்ளூர்க் கானம் நாற வந்து நள்ளென் கங்குல் நம் ஓர் அன்னள் கூந்தல் வேய்ந்த விரவு மலர் உதிர்த்துச் சாந்து உளர் நறும் கதுப்பு எண்ணெய் நீவி அமரா முகத்தள் ஆகித் தமர் ஓர் அன்னள் வைகறையானே #173 குறுந்தொகை 355 குறிஞ்சி - கபிலர் பெயல் கால் மறைத்தலின் விசும்பு காணலரே நீர் பரந்து ஒழுகலின் நிலம் காணலரே எல்லை சேறலின் இருள் பெரிது பட்டன்று பல்லோர் துஞ்சும் பானாள் கங்குல் யாங்கு வந்தனையோ ஓங்கல் வெற்ப வேங்கை கமழும் எம் சிறுகுடி யாங்கு அறிந்தனையோ நோகோ யானே #174 குறுந்தொகை 357 குறிஞ்சி - கபிலர் முனி படர் உழந்த பாடு இல் உண்கண் பனி கால் போழ்ந்து பணை எழில் ஞெகிழ் தோள் மெல்லிய ஆகலின் மேவரத் திரண்டு நல்ல என்னும் சொல்லை மன்னிய ஏனல் அம் சிறுதினை காக்கும் சேணோன் ஞெகிழியின் பெயர்ந்த நெடு நல் யானை மீன் படு சுடர் ஒளி வெரூஉம் வான் தோய் வெற்பன் மணவா ஊங்கே #175 குறுந்தொகை 361 குறிஞ்சி - கபிலர் அம்ம வாழி தோழி அன்னைக்கு உயர்_நிலை_உலகமும் சிறிதால் அவர் மலை மாலைப் பெய்த மணம் கமழ் உந்தியொடு காலை வந்த முழுமுதல் காந்தள் மெல் இழை குழைய முயங்கலும் இல் உய்த்து நடுதலும் கடியாதோளே #176 குறுந்தொகை 385 குறிஞ்சி - கபிலர் பலவில் சேர்ந்த பழம் ஆர் இனக் கலை சிலை வில் கானவன் செம் தொடை வெரீஇச் செருவுறு குதிரையின் பொங்கிச் சாரல் இரு வெதிர் நீடு அமை தயங்கப் பாயும் பெரு வரை அடுக்கத்துக் கிழவோன் என்றும் அன்றை அன்ன நட்பினன் புதுவோர்த்து அம்ம இவ் அழுங்கல் ஊரே #177 நற்றிணை 1 குறிஞ்சி - கபிலர் நின்ற சொல்லர் நீடு தோன்று இனியர் என்றும் என் தோள் பிரிபு அறியலரே தாமரைத் தண் தாது ஊதி மீமிசைச் சாந்தில் தொடுத்த தீம் தேன் போலப் புரைய மன்ற புரையோர் கேண்மை நீர் இன்று அமையா உலகம் போலத் தம் இன்று அமையா நம் நயந்து அருளி நறு நுதல் பசத்தல் அஞ்சிச் சிறுமை உறுபவோ செய்பு அறியலரே #178 நற்றிணை 13 குறிஞ்சி - கபிலர் எழாஅ ஆகலின் எழில் நலம் தொலைய அழாஅதீமோ நொதுமலர் தலையே ஏனல் காவலர் மா வீழ்த்துப் பறித்த பகழி அன்ன சே அரி மழைக் கண் நல்ல பெரும் தோளோயே கொல்லன் எறி பொன் பிதிரின் சிறு பல தாஅய் வேங்கை வீ உகும் ஓங்கு மலைக் கட்சி மயில் அறிபு அறியா-மன்னோ பயில் குரல் கவரும் பைம் புறக் கிளியே #179 நற்றிணை 32 குறிஞ்சி - கபிலர் மாயோன் அன்ன மால் வரைக் கவாஅன் வாலியோன் அன்ன வயங்கு வெள் அருவி அம் மலை கிழவோன் நம் நயந்து என்றும் வருந்தினன் என்பது ஓர் வாய்ச்சொல் தேறாய் நீயும் கண்டு நுமரொடும் எண்ணி அறிவு அறிந்து அளவல் வேண்டும் மறுதரற்கு அரிய வாழி தோழி பெரியோர் நாடி நட்பின் அல்லது நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே #180 நற்றிணை 59 முல்லை - கபிலர் உடும்பு கொலீஇ வரி நுணல் அகழ்ந்து நெடும் கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி எல்லு முயல் எறிந்த வேட்டுவன் சுவல பல்வேறு பண்டத் தொடை மறந்து இல்லத்து இரு மடைக் கள்ளின் இன் களி செருக்கும் வன்புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து நம்-வயின் புரிந்த கொள்கையொடு நெஞ்சத்து உள்ளினள் உறைவோள் ஊரே முல்லை நுண் முகை அவிழ்ந்த புறவின் பொறை தலைமணந்தன்று உயவும்-மார் இனியே #181 நற்றிணை 65 குறிஞ்சி - கபிலர் அமுதம் உண்க நம் அயல் இலாட்டி கிடங்கில் அன்ன இட்டுக் கரைக் கான்யாற்றுக் கலங்கும் பாசி நீர் அலைக் கலாவ ஒளிறு வெள் அருவி ஒண் துறை மடுத்து புலியொடு பொருத புண் கூர் யானை நல் கோடு நயந்த அன்பு இல் கானவர் வில் சுழி பட்ட நாமப் பூசல் உரும் இடைக் கடி இடி கரையும் பெரு மலை நாடனை வரூஉம் என்றோளே #182 நற்றிணை 77 குறிஞ்சி - கபிலர் மலையன் மா ஊர்ந்து போகிப் புலையன் பெரும் துடி கறங்கப் பிற புலம் புக்கு அவர் அரும் குறும்பு எருக்கி அயா உயிர்த்து ஆஅங்கு உய்த்தன்று-மன்னே நெஞ்சே செவ் வேர்ச் சினை-தொறும் தூங்கும் பயம் கெழு பலவின் சுளை உடை முன்றில் மனையோள் கங்குல் ஒலி வெள் அருவி ஒலியின் துஞ்சும் ஊரலம்சேரிச் சீறூர் வல்லோன் வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை அகன் தொடி செறித்த முன்கை ஒண் நுதல் திதலை அல்குல் குறுமகள் குவளை உண்கண் மகிழ் மட நோக்கே #183 நற்றிணை 217 குறிஞ்சி - கபிலர் இசை பட வாழ்பவர் செல்வம் போலக் காண்-தொறும் பொலியும் கதழ் வாய் வேழம் இரும் கேழ் வயப் புலி வெரீஇ அயலது கரும் கால் வேங்கை ஊறுபட மறலிப் பெரும் சினம் தணியும் குன்ற நாடன் நனி பெரிது இனியன் ஆயினும் துனி படர்ந்து ஊடல் உறுவேன் தோழி நீடு புலம்பு சேண் அகல நீக்கிப் புலவி உணர்த்தல் வன்மையானே #184 நற்றிணை 222 குறிஞ்சி - கபிலர் கரும் கால் வேங்கைச் செவ் வீ வாங்கு சினை வடுக்கொளப் பிணித்த விடு புரி முரற்சிக் கை புனை சிறு நெறி வாங்கிப் பையென விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்று பசும் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கிச் செலவுடன் விடுகோ தோழி பல உடன் வாழை ஓங்கிய வழை அமை சிலம்பில் துஞ்சு பிடி மருங்கின் மஞ்சு படக் காணாது பெரும் களிறு பிளிறும் சோலை அவர் சேண் நெடும் குன்றம் காணிய நீயே #185 நற்றிணை 225 குறிஞ்சி - கபிலர் முருகு உறழ் முன்பொடு கடும் சினம் செருக்கிப் பொருத யானை வெண் கோடு கடுப்ப வாழை ஈன்ற வை ஏந்து கொழு முகை மெல் இயல் மகளிர் ஓதி அன்ன பூவொடு துயல்வரும் மால் வரை நாடனை இரந்தோர் உளர்-கொல் தோழி திருந்து இழைத் தொய்யில் வன முலை வரி வனப்பு இழப்பப் பயந்து எழு பருவரல் தீர நயந்தோர்க்கு உதவா நார் இல் மார்பே #186 நற்றிணை 253 குறிஞ்சி - கபிலர் புள்ளுப் பதி சேரினும் புணர்ந்தோர்க் காணினும் பள்ளி யானையின் வெய்ய உயிரினை கழிபட வருந்திய எவ்வமொடு பெரிது அழிந்து எனவ கேளாய் நினையினை நீ நனி உள்ளினும் பனிக்கும் ஒள் இழைக் குறுமகள் பேர் இசை உருமொடு மாரி முற்றிய பல் குடைக் கள்ளின் வண் மகிழ்ப் பாரி பலவு உறு குன்றம் போலப் பெரும் கவின் எய்திய அரும் காப்பினளே #187 நற்றிணை 267 நெய்தல் - கபிலர் நொச்சி மா அரும்பு அன்ன கண்ண எக்கர் ஞெண்டின் இரும் கிளைத் தொழுதி இலங்கு எயிற்று ஏஎர் இன் நகை மகளிர் உணங்கு தினை துழவும் கை போல் ஞாழல் மணம் கமழ் நறு வீ வரிக்கும் துறைவன் தன்னொடு புணர்த்த இன் அமர் கானல் தனியே வருதல் நனி புலம்பு உடைத்து என வாரேன்-மன் யான் வந்தனென் தெய்ய சிறு நா ஒண் மணித் தெள் இசை கடுப்ப இன மீன் ஆர்கை ஈண்டு புள் ஒலிக் குரல் இவை மகன் என்னா அளவை வய_மான் தோன்றல் வந்து நின்றனனே #188 நற்றிணை 291 நெய்தல் - கபிலர் நீர் பெயர்ந்து மாறிய செறி சேற்று அள்ளல் நெய்த் தலைக் கொழு மீன் அருந்த இனக் குருகு குப்பை வெண் மணல் ஏறி அரைசர் ஒண் படைத் தொகுதியின் இலங்கித் தோன்றும் தண் பெரும் பௌவ நீர்த் துறைவற்கு நீயும் கண்டு ஆங்கு உரையாய் கொண்மோ பாண மா இரு முள்ளூர் மன்னன் மா ஊர்ந்து எல்லித் தரீஇய இன நிரைப் பல் ஆன் கிழவரின் அழிந்த இவள் நலனே #189 நற்றிணை 309 குறிஞ்சி - கபிலர் நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும் தளிர் வனப்பு இழந்த என் நிறனும் நோக்கி யான் செய்தன்று இவள் துயர் என அன்பின் ஆழல் வாழி தோழி வாழைக் கொழு மடல் அகல் இலைத் தளி தலைக் கலாவும் பெரு மலை நாடன் கேண்மை நமக்கே விழுமம் ஆக அறியுநர் இன்று எனக் கூறுவை-மன்னோ நீயே தேறுவன்-மன் யான் அவர் உடை நட்பே #190 நற்றிணை 320 மருதம் - கபிலர் விழவும் மூழ்த்தன்று முழவும் தூங்கின்று எவன் குறித்தனள்-கொல் என்றி ஆயின் தழை அணிந்து அலமரும் அல்குல் தெருவின் இளையோள் இறந்த அனைத்தற்குப் பழ விறல் ஓரிக் கொன்ற ஒரு பெரும் தெருவில் காரி புக்க நேரார் புலம் போல் கல்லென்றன்றால் ஊரே அதற்கொண்டு காவல் செறிய மாட்டி ஆய் தொடி எழில் மா மேனி மகளிர் விழுமாந்தனர் தம் கொழுநரைக் காத்தே #191 நற்றிணை 336 குறிஞ்சி - கபிலர் பிணர்ச் சுவல் பன்றி தோல் முலைப் பிணவொடு கணைக் கால் ஏனல் கைம்மிகக் கவர்தலின் கல் அதர் அரும் புழை அல்கிக் கானவன் வில்லின் தந்த வெண் கோட்டு ஏற்றைப் புனை இரும் கதுப்பின் மனையோள் கெண்டிக் குடி முறை பகுக்கும் நெடு மலை நாட உரவுச் சின வேழம் உறு புலி பார்க்கும் இரவின் அஞ்சாய் அஞ்சுவல் அரவின் ஈர் அளைப் புற்றம் கார் என முற்றி இரை தேர் எண்கு இனம் அகழும் வரை சேர் சிறு நெறி வாராதீமே #193 நற்றிணை 353 குறிஞ்சி - கபிலர் ஆள் இல் பெண்டிர் தாளின் செய்த நுணங்கு நுண் பனுவல் போல கணம்கொள ஆடு மழை தவழும் கோடு உயர் நெடு வரை முட முதிர் பலவின் குடம் மருள் பெரும் பழம் கல் கெழு குறவர் காதல் மட_மகள் கரு விரல் மந்திக்கு வரு_விருந்து அயரும் வான் தோய் வெற்ப சான்றோய் அல்லை எம் காமம் கனிவது ஆயினும் யாமத்து இரும் புலி தொலைத்த பெரும் கை யானை வெம் சின உருமின் உரறும் அஞ்சுவரு சிறு நெறி வருதலானே #194 நற்றிணை 359 குறிஞ்சி - கபிலர் சிலம்பின் மேய்ந்த சிறு கோட்டுச் சேதா அலங்கு குலைக் காந்தள் தீண்டித் தாது உகக் கன்று தாய் மருளும் குன்ற நாடன் உடுக்கும் தழை தந்தனனே யாம் அஃது உடுப்பின் யாய் அஞ்சுதுமே கொடுப்பின் கேளுடைக் கேடு அஞ்சுதுமே ஆயிடை வாடல-கொல்லோ தாமே அவன் மலைப் போர் உடை வருடையும் பாயாச் சூர் உடை அடுக்கத்த கொயற்கு அரும் தழையே #195 நற்றிணை 368 குறிஞ்சி - கபிலர் பெரும் புனம் கவரும் சிறு கிளி ஓப்பிக் கரும் கால் வேங்கை ஊசல் தூங்கிக் கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து நும்மொடு ஆடினம் வருதலின் இனியதும் உண்டோ நெறி படு கூழைக் கார் முதிர்பு இருந்த வெறி கமழ் கொண்ட நாற்றமும் சிறிய பசலை பாய்தரு நுதலும் நோக்கி வறிது உகு நெஞ்சினள் பிறிது ஒன்று சுட்டி வெய்ய உயிர்த்தனள் யாயே ஐய அஞ்சினம் அளியம் யாமே #196 நற்றிணை 373 குறிஞ்சி - கபிலர் முன்றில் பலவின் படு சுளை மரீஇப் புன் தலை மந்தி தூர்ப்பத் தந்தை மை படு மால் வரை பாடினள் கொடிச்சி ஐவன வெண்ணெல் குறூஉம் நாடனொடு சூர் உடைச் சிலம்பின் அருவி ஆடிக் கார் அரும்பு அவிழ்ந்த கணி வாய் வேங்கைப் பா அமை இதணம் ஏறிப் பாசினம் வணர் குரல் சிறுதினை கடியப் புணர்வது-கொல்லோ நாளையும் நமக்கே #197 நற்றிணை 376 குறிஞ்சி - கபிலர் முறம் செவி யானைத் தடக் கையின் தடைஇ இறைஞ்சிய குரல பைம் தாள் செந்தினை வரையோன் வண்மை போலப் பல உடன் கிளையோடு உண்ணும் வளை வாய்ப் பாசினம் குல்லை குளவி கூதளம் குவளை இல்லமொடு மிடைந்த ஈர்ம் தண் கண்ணியன் சுற்று அமை வில்லன் செயலைத் தோன்றும் நல் தார் மார்பன் காண்குறின் சிறிய நன்கு அவற்கு அறிய உரை-மின் பிற்றை அணங்கும் அணங்கும் போலும் அணங்கி வறும் புனம் காவல் விடாமை அறிந்தனிர் அல்லிரோ அறன் இல் யாயே ** பதிற்றுப்பத்து - ஏழாம் பத்து - கபிலர் **பாடப்பட்டோன்: செல்வக்கடுங்கோ வாழிஆதன் #198 பதிற்றுப்பத்து பாட்டு 61 - கபிலர் **பெயர்: புலாஅம் பாசறை **துறை: காட்சிவாழ்த்து **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் பலா அம் பழுத்த பசும் புண் அரியல் வாடை தூக்கும் நாடு கெழு பெரு விறல் ஓவத்து அன்ன வினை புனை நல் இல் பாவை அன்ன நல்லோள் கணவன் பொன்னின் அன்ன பூவின் சிறி இலைப் புன் கால் உன்னத்துப் பகைவன் எம் கோ புலர்ந்த சாத்தின் புலரா ஈகை மலர்ந்த மார்பின் மா வண் பாரி முழவு மண் புலர இரவலர் இனைய வாராச் சேண் புலம் படர்ந்தோன் அளிக்க என இரக்கு வாரேன் எஞ்சிக் கூறேன் ஈத்தது இரங்கான் ஈத்-தொறும் மகிழான் ஈத்-தொறும் மா வள்ளியன் என நுவலும் நின் நல் இசை தர வந்திசினே ஒள் வாள் உரவுக் களிற்றுப் புலா அம் பாசறை நிலவின் அன்ன வெள் வேல் பாடினி முழவில் போக்கிய வெண் கை விழவின் அன்ன நின் கலி மகிழானே #199 பதிற்றுப்பத்து பாட்டு 62 - கபிலர் **பெயர்: வரைபோல் இஞ்சி **துறை: செந்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் இழை அணிந்து எழுதரும் பல் களிற்றுத் தொழுதியொடு மழை என மருளும் மா இரும் பஃறோல் எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவியொடு மைந்து உடை ஆர் எயில் புடை பட வளைஇ வந்து புறத்து இறுக்கும் பசும் பிசிர் ஒள் அழல் ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு ஒல்லா மயலொடு பாடு இமிழ்பு உழிதரும் மடங்கல் வண்ணம் கொண்ட கடும் திறல் துப்புத் துறைபோகிய கொற்ற வேந்தே புனல் பொரு கிடங்கின் வரை போல் இஞ்சி அணங்கு உடைத் தடக் கையர் தோட்டி செப்பிப் பணிந்து திறை தருப நின் பகைவர் ஆயின் புல் உடை வியன் புலம் பல் ஆ பரப்பி வளன் உடைச் செறுவின் விளைந்தவை உதிர்ந்த களன் அறு குப்பை காஞ்சிச் சேர்த்தி அரியல் ஆர்கை வன் கை வினைநர் அருவி ஆம்பல் மலைந்த சென்னியர் ஆடு சிறை வரி வண்டு ஓப்பும் பாடல் சான்ற அவர் அகன் தலை நாடே #200 பதிற்றுப்பத்து பாட்டு 63 - கபிலர் **பெயர்: அருவி ஆம்பல் **துறை: செந்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலையே பணியா உள்ளமொடு அணி வரக் கெழீஇ நட்டோர்க்கு அல்லது கண் அஞ்சலையே வணங்கு சிலை பொருத நின் மணம் கமழ் அகலம் மகளிர்க்கு அல்லது மலர்ப்பு அறியலையே நிலம் திறம் பெயரும் காலை ஆயினும் கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே சிறி இலை உழிஞை தெரியல் சூடிக் கொண்டி மிகைபடத் தண் தமிழ் செறித்துக் குன்று நிலை தளர்க்கும் உருமின் சீறி ஒரு முற்று இருவர் ஓட்டிய ஒள் வாள் செரு மிகு தானை வெல் போரோயே ஆடு பெற்று அழிந்த மள்ளர் மாறி நீ கண்டனையேம் என்றனர் நீயும் நும் நுகம் கொண்டு இனும் வென்றோய் அதனால் செல்வக் கோவே சேரலர் மருக கால் திரை எடுத்த முழங்கு குரல் வேலி நனம் தலை உலகம் செய்த நன்று உண்டு எனின் அடை அடுப்பு அறியா அருவி ஆம்பல் ஆயிர வெள்ள ஊழி வாழி ஆத வாழிய பலவே #201 பதிற்றுப்பத்து பாட்டு 64 - கபிலர் **பெயர்: உரைசால்வேள்வி **துறை: காட்சிவாழ்த்து **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் வலம் படு முரசின் வாய் வாள் கொற்றத்துப் பொலம் பூண் வேந்தர் பலர்-தில் அம்ம அறம் கரைந்து வயங்கிய நாவின் பிறங்கிய உரை சால் வேள்வி முடித்த கேள்வி அந்தணர் அரும் கலம் ஏற்ப நீர் பட்டு இரும் சேறு ஆடிய மணல் மலி முற்றத்துக் களிறு நிலை முணைஇய தார் அரும் தகைப்பின் புறஞ்சிறை வயிரியர்க் காணின் வல்லே எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவி அலங்கும் பாண்டில் இழை அணிந்து ஈம் என ஆனாக் கொள்கையை ஆதலின் அவ் வயின் மா இரு விசும்பில் பல் மீன் ஒளி கெட ஞாயிறு தோன்றி ஆங்கு மாற்றார் உறு முரண் சிதைத்த நின் நோன் தாள் வாழ்த்திக் காண்கு வந்திசின் கழல் தொடி அண்ணல் மை படு மலர் கழி மலர்ந்த நெய்தல் இதழ் வனப்பு உற்ற தோற்றமொடு உயர்ந்த மழையினும் பெரும் பயம் பொழிதி அதனால் பசி உடை ஒக்கலை ஒரீஇய இசை மேம் தோன்றல் நின் பாசறையானே #202 பதிற்றுப்பத்து பாட்டு 65 - கபிலர் **பெயர்: நாள்மகிழிருக்கை **துறை: பரிசிற்றுறைப் பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் எறி பிணம் இடறிய செம் மறுக் குளம்பின் பரி உடை நல் மா விரி உளை சூட்டி மலைத்த தெவ்வர் மறம் தபக் கடந்த காஞ்சி சான்ற வயவர் பெரும வில்லோர் மெய்ம்மறை சேர்ந்தோர் செல்வ பூண் அணிந்து எழிலிய வனைந்துவரல் இள முலை மாண் வரி அல்குல் மலர்ந்த நோக்கின் வேய் புரைபு எழிலிய விளங்கு இறை பணைத் தோள் காமர் கடவுளும் ஆளும் கற்பின் சேண் நாறு நறு நுதல் சே_இழை கணவ பாணர் புரவல பரிசிலர் வெறுக்கை பூண் அணிந்து விளங்கிய புகழ் சால் மார்ப நின் நாள்_மகிழ்_இருக்கை இனிது கண்டிகுமே தீம் தொடை நரம்பின் பாலை வல்லோன் பையுள் உறுப்பின் பண்ணுப் பெயர்த்து ஆங்குச் சேறு செய் மாரியின் அளிக்கும் நின் சாறு படு திருவின் நனை மகிழானே #203 பதிற்றுப்பத்து பாட்டு 66 - கபிலர் **பெயர்: புதல்சூழ் பறவை **துறை: செந்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் வாங்கு இரு மருப்பின் தீம் தொடை பழுனிய இடன் உடைப் பேரியாழ் பாலை பண்ணிப் படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல இடி இசை முரசமொடு ஒன்றுமொழிந்து ஒன்னார் வேல் உடைக் குழூஉச் சமம் ததைய நூறிக் கொன்று புறம்பெற்ற பிணம் பயில் அழுவத்துத் தொன்று திறை தந்த களிற்றொடு நெல்லின் அம்பண அளவை விரிந்து உறை போகிய ஆர் பதம் நல்கும் என்ப கறுத்தோர் உறு முரண் தாங்கிய தார் அரும் தகைப்பின் நாள் மழைக் குழூஉச் சிமை கடுக்கும் தோன்றல் தோல் மிசைத்து எழுதரும் விரிந்து இலங்கு எஃகின் தார் புரிந்து அன்ன வாள் உடை விழவின் போர் படு மள்ளர் போந்தொடு தொடுத்த கடவுள் வாகைத் துய் வீ ஏய்ப்பப் பூத்த முல்லைப் புதல் சூழ் பறவை கடத்து இடைப் பிடவின் தொடைக் குலைச் சேக்கும் வான் பளிங்கு விரைஇய செம் பரல் முரம்பின் இலங்கு கதிர்த் திரு மணி பெறூஉம் அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே #204 பதிற்றுப்பத்து பாட்டு 67 - கபிலர் **பெயர்: வெண்போழ்க்கண்ணி **துறை: பாணாற்றுப்படை **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் கொடுமணம் பட்ட நெடுமொழி ஒக்கலொடு பந்தர் பெயரிய பேர் இசை மூதூர்க் கடன் அறி மரபின் கைவல் பாண தெள் கடல் முத்தமொடு நல் கலம் பெறுகுவை கொல் படை தெரிய வெல் கொடி நுடங்க வயங்கு கதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்பப் பல் களிற்று இன நிரை புலம் பெயர்ந்து இயல்வர அமர்க்-கண் அமைந்த அவிர் நிணப் பரப்பின் குழூஉச் சிறை எருவை குருதி ஆர தலை துமிந்து எஞ்சிய ஆள் மலி யூபமொடு உரு இல் பேய்_மகள் கவலை கவற்ற நாடு உடன் நடுங்கப் பல் செருக் கொன்று நாறு இணர்க் கொன்றை வெண் போழ்க் கண்ணியர் வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர் நெறி படு மருப்பின் இரும் கண் மூரியொடு வளை தலை மாத்த தாழ் கரும் பாசவர் எஃகு ஆடு ஊனம் கடுப்ப மெய் சிதைந்து சாந்து எழில் மறைத்த சான்றோர் பெருமகன் மலர்ந்த காந்தள் மாறாது ஊதிய கடும் பறைத் தும்பி சூர் நசைத் தாஅய்ப் பறை பண் அழியும் பாடு சால் நெடு வரைக் கல் உயர் நேரிப் பொருநன் செல்வக் கோமான் பாடினை செலினே #205 பதிற்றுப்பத்து பாட்டு 68 - கபிலர் **பெயர்: ஏமவாழ்க்கை **துறை: செந்துறைப்பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் கால் கடிப்பு ஆகக் கடல் ஒலித்து ஆங்கு வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண் கடும் சிலை கடவும் தழங்கு குரல் முரசம் அகல் இரு விசும்பின் ஆகத்து அதிர வெவ் வரி நிலைஇய எயில் எறிந்து அல்லது உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய நெஞ்சு புகல் ஊக்கத்தர் மெய் தயங்கு உயக்கத்து இன்னார் உறையுள் தாம் பெறின் அல்லது வேந்து ஊர் யானை வெண் கோடு கொண்டு கள் கொடி நுடங்கும் ஆவணம் புக்கு உடன் அரும் கள் நொடைமை தீர்ந்த பின் மகிழ் சிறந்து நாமம் அறியா ஏம வாழ்க்கை வடபுலம் வாழ்நரின் பெரிது அமர்ந்து அல்கலும் இன் நகை மேய பல் உறை பெறுப-கொல் பாயல் இன்மையின் பாசிழை ஞெகிழ நெடு மண் இஞ்சி நீள் நகர் வரைப்பின் ஓவு உறழ் நெடும் சுவர் நாள் பல எழுதிச் செவ் விரல் சிவந்த அவ் வரிக் குடைச்சூல் அணங்கு எழில் அரிவையர் பிணிக்கும் மணம் கமழ் மார்ப நின் தாள் நிழலோரே #206 பதிற்றுப்பத்து பாட்டு 69 - கபிலர் **பெயர்: மண்கெழுஞாலம் **துறை: வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் **வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும் மலை உறழ் யானை வான் தோய் வெல் கொடி வரை மிசை அருவியின் வயின்வயின் நுடங்கக் கடல் போல் தானைக் கடும் குரல் முரசம் காலுறு கடலின் கடிய உரற எறிந்து சிதைந்த வாள் இலை தெரிந்த வேல் பாய்ந்து ஆய்ந்த மா ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடு படு பிணம் பிறங்க நூறிப் பகைவர் கெடு குடி பயிற்றிய கொற்ற வேந்தே நின் போல் அசைவு இல் கொள்கையர் ஆகலின் அசையாது ஆண்டோர் மன்ற இ மண் கெழு ஞாலம் நிலம் பயம் பொழியச் சுடர் சினம் தணியப் பயம் கெழு வெள்ளி ஆநியம் நிற்ப விசும்பு மெய் அகலப் பெயல் புரவு எதிர நால் வேறு நனம் தலை ஓராங்கு நந்த இலங்கு கதிர் திகிரி முந்திசினோரே #207 பதிற்றுப்பத்து பாட்டு 70 - கபிலர் **பெயர்: பறைக்குரல் அருவி **துறை: செந்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் **வண்ணம்: ஒழுகு வண்ணம் களிறு கடைஇய தாள் மா உடற்றிய வடிம்பு சமம் ததைந்த வேல் கல் அலைத்த தோள் வில் அலைத்த நல் வலத்து வண்டு இசை கடாவாத் தண் பனம் போந்தைக் குவி முகிழ் ஊசி வெண் தோடு கொண்டு தீம் சுனை நீர் மலர் மலைந்து மதம் செருக்கி உடை நிலை நல் அமர் கடந்து மறம் கெடுத்துக் கடும் சின வேந்தர் செம்மல் தொலைத்த வலம் படு வான் கழல் வயவர் பெரும நகையினும் பொய்யா வாய்மைப் பகைவர் புறஞ்சொல் கேளாப் புரை தீர் ஒண்மைப் பெண்மை சான்று பெரு மடம் நிலைஇக் கற்பு இறைகொண்ட கமழும் சுடர் நுதல் புரையோள் கணவ பூண் கிளர் மார்ப தொலையாக் கொள்கை சுற்றம் சுற்ற வேள்வியில் கடவுள் அருத்தினை கேள்வி உயர்_நிலை_உலகத்து ஐயர் இன்புறுத்தினை வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை இளம் துணைப் புதல்வரின் முதியர் பேணித் தொல் கடன் இறுத்த வெல் போர் அண்ணல் மாடோர் உறையும் உலகமும் கேட்ப இழுமென இழிதரும் பறைக் குரல் அருவி முழுமுதல் மிசைய கோடு-தொறும் துவன்றும் அயிரை நெடு வரை போலத் தொலையாது ஆக நீ வாழும் நாளே #208 பத்துப்பாட்டு - 8. குறிஞ்சிப்பாட்டு - கபிலர் அன்னாய் வாழி வேண்டு அன்னை ஒள் நுதல் ஒலி மென் கூந்தல் என் தோழி மேனி விறல் இழை நெகிழ்த்த வீவு அரும் கடு நோய் அகலுள் ஆங்கண் அறியுநர் வினாயும் பரவியும் தொழுதும் விரவு மலர் தூயும் வேறு பல் உருவின் கடவுள் பேணி நறையும் விரையும் ஓச்சியும் அலவுற்று எய்யா மையலை நீயும் வருந்துதி நல் கவின் தொலையவும் நறும் தோள் நெகிழவும் புள் பிறர் அறியவும் புலம்பு வந்து அலைப்பவும் உள் கரந்து உறையும் உய்யா அரும் படர் செப்பல் வன்மையின் செறித்து யான் கடவலின் முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை நேர்வரும்-குரைய கலம் கெடின் புணரும் சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின் மாசறக் கழீஇ வயங்கு புகழ் நிறுத்தல் ஆசு அறு காட்சி ஐயர்க்கும் அ நிலை எளிய என்னார் தொன் மருங்கு அறிஞர் மாதரும் மடனும் ஓராங்கு தணப்ப நெடும் தேர் எந்தை அரும் கடி நீவி இருவேம் ஆய்ந்த மன்றல் இது என நாம் அறிவுறாலின் பழியும் உண்டோ ஆற்றின் வாரார் ஆயினும் ஆற்ற ஏனை உலகத்தும் இயைவதால் நமக்கு என மான் அமர் நோக்கம் கலங்கிக் கையற்று ஆனாச் சிறுமையள் இவளும் தேம்பும் இகல் மீக் கடவும் இரு பெரு வேந்தர் வினை இடை நின்ற சான்றோர் போல இரு பேர் அச்சமோடு யானும் ஆற்றலென் கொடுப்பின் நன்கு உடைமையும் குடி நிரல் உடைமையும் வண்ணமும் துணையும் பொரீஇ எண்ணாது எமியேம் துணிந்த ஏமம் சால் அரு வினை நிகழ்ந்த வண்ணம் நீ நனி உணர செப்பல் ஆன்றிசின் சினவாதீமோ நெல் கொள் நெடு வெதிர்க்கு அணந்த யானை முத்து ஆர் மருப்பின் இறங்கு கை கடுப்பத் துய்த் தலை வாங்கிய புனிறு தீர் பெரும் குரல் நல் கோள் சிறுதினை படு புள் ஓப்பி எல் பட வருதியர் என நீ விடுத்தலின் கலி கெழு மரம் மிசை சேணோன் இழைத்த புலி அஞ்சு இதணம் ஏறி அவண சாரல் சூரல் தகைபெற வலந்த தழலும் தட்டையும் குளிரும் பிறவும் கிளி கடி மரபின ஊழ்ஊழ் வாங்கி உரவுக் கதிர் தெறூஉம் உருப்பு அவிர் அமயத்து விசும்பு ஆடு பறவை வீழ் பதி படர நிறை இரும் பௌவம் குறைபட முகந்து கொண்டு அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின் முரசு அதிர்ந்து அன்ன இன் குரல் ஏற்றொடு நிரை செலல் நிவப்பின் கொண்மூ மயங்கி இன் இசை முரசின் சுடர் பூண் சேஎய் ஒன்னார்க்கு ஏந்திய இலங்கு இலை எஃகின் மின் மயங்கு கருவிய கல் மிசைப் பொழிந்து என அண்ணல் நெடும் கோட்டு இழிதரு தெண் நீர் அவிர் துகில் புரையும் அம் வெள் அருவித் தவிர்வு இல் வேட்கையேம் தண்டாது ஆடிப் பளிங்கு சொரிவு அன்ன பாய் சுனை குடைவுழி நளி படு சிலம்பில் பாயம் பாடிப் பொன் எறி மணியின் சிறுபுறம் தாழ்ந்த எம் பின் இரும் கூந்தல் பிழிவனம் துவரி உள்ளகம் சிவந்த கண்ணேம் வள் இதழ் ஒண் செங்காந்தள் ஆம்பல் அனிச்சம் தண் கயக் குவளை குறிஞ்சி வெட்சி செங்கொடுவேரி தேமா மணிச்சிகை உரிது நாறு அவிழ் தொத்து உந்தூழ் கூவிளம் எரி புரை எறுழம் சுள்ளி கூவிரம் வடவனம் வாகை வான் பூ குடசம் எருவை செருவிளை மணி பூம் கருவிளை பயினி வானி பல் இணர் குரவம் பசும்பிடி வகுளம் பல் இணர்க் காயா விரி மலர் ஆவிரை வேரல் சூரல் குரீஇப்பூளை குறுநறுங்கண்ணி குருகிலை மருதம் விரி பூம் கோங்கம் போங்கம் திலகம் தேம் கமழ் பாதிரி செருந்தி அதிரல் பெரும் தண் சண்பகம் கரந்தை குளவி கடி கமழ் கலி மாத் தில்லை பாலை கல் இவர் முல்லை குல்லை பிடவம் சிறுமாரோடம் வாழை வள்ளி நீள் நறு நெய்தல் தாழை தளவம் முள் தாள் தாமரை ஞாழல் மௌவல் நறும் தண் கொகுடி சேடல் செம்மல் சிறுசெங்குரலி கோடல் கைதை கொங்கு முதிர் நறு வழை காஞ்சி மணிக் குலை கள் கமழ் நெய்தல் பாங்கர் மராஅம் பல் பூம் தணக்கம் ஈங்கை இலவம் தூங்கு இணர்க் கொன்றை அடும்பு அமர் ஆத்தி நெடும் கொடி அவரை பகன்றை பலாசம் பல் பூம் பிண்டி வஞ்சி பித்திகம் சிந்துவாரம் தும்பை துழாஅய் சுடர்ப் பூம் தோன்றி நந்தி நறவம் நறும் புன்னாகம் பாரம் பீரம் பைம் குருக்கத்தி ஆரம் காழ்வை கடி இரும் புன்னை நரந்தம் நாகம் நள்ளிருள்நாறி மா இரும் குருந்தும் வேங்கையும் பிறவும் அரக்கு விரித்து அன்ன பரேர் அம் புழகுடன் மால் அங்கு உடையம் மலிவனம் மறுகி வான் கண் கழீஇய அகல் அறை குவைஇப் புள் ஆர் இயத்த விலங்கு மலைச் சிலம்பின் வள் உயிர்த் தெள் விளி இடையிடை பயிற்றிக் கிள்ளை ஓப்பியும் கிளை இதழ் பறியாப் பை விரி அல்குல் கொய் தழை தைஇப் பல்வேறு உருவின் வனப்பு அமை கோதை எம் மெல் இரு முச்சி கவின் பெறக் கட்டி எரி அவிர் உருவின் அம் குழைச் செயலைத் தாது படு தண் நிழல் இருந்தனம் ஆக எண்ணெய் நீவிய சுரி வளர் நறும் காழ்த் தண் நறும் தகரம் கமழ மண்ணி ஈரம் புலர விரல் உளர்ப்பு அவிழாக் காழ் அகில் அம் புகை கொளீஇ யாழ் இசை அணி மிகு வரி மிஞிறு ஆர்ப்பத் தேம் கலந்து மணி நிறம் கொண்ட மா இரும் குஞ்சியின் மலையவும் நிலத்தவும் சினையவும் சுனையவும் வண்ணவண்ணத்த மலர் ஆய்பு விரைஇய தண் நறும் தொடையல் வெண் போழ்க் கண்ணி நலம் பெறு சென்னி நாம் உற மிலைச்சிப் பைம் கால் பித்திகத்து ஆய் இதழ் அலரி அம் தொடை ஒரு காழ் வளைஇச் செம் தீ ஒண் பூம் பிண்டி ஒரு காது செரீஇ அம் தளிர்க் குவவு மொய்ம்பு அலைப்பச் சாந்து அருந்தி மைந்து இறைகொண்ட மலர்ந்து ஏந்து அகலத்துத் தொன்றுபடு நறும் தார் பூணொடு பொலியச் செம் பொறிக்கு ஏற்ற வீங்கு இறைத் தடக் கையின் வண்ண வரி வில் ஏந்தி அம்பு தெரிந்து நுண் வினை கச்சைத் தயக்கு அறக் கட்டி இயல் அணி பொலிந்த ஈகை வான் கழல் துயல்வரும்-தோறும் திருந்து அடிக் கலாவ முனை பாழ்படுக்கும் துன் அரும் துப்பின் பகை புறங்கண்ட பல் வேல் இளைஞரின் உரவுச் சினம் செருக்கித் துன்னு-தொறும் வெகுளும் முளை வாள் எயிற்ற வள் உகிர் ஞமலி திளையாக் கண்ண வளைகுபு நெரிதர நடுங்குவனம் எழுந்து நல் அடி தளர்ந்து யாம் இடும்பை கூர் மனத்தேம் மருண்டு புலம் படர மாறு பொருது ஓட்டிய புகல்வின் வேறு புலத்து ஆ காண் விடையின் அணி பெற வந்து எம் அலமரல் ஆயிடை வெரூஉதல் அஞ்சி மெல்லிய இனிய மேவரக் கிளந்து எம் ஐம்பால் ஆய் கவின் ஏத்தி ஒண் தொடி அசை மென் சாயல் அம் வாங்கு உந்தி மட மதர் மழைக் கண் இளையீர் இறந்த கெடுதியும் உடையேன் என்றனன் அதன்எதிர் சொல்லேம் ஆதலின் அல்லாந்து கலங்கி கெடுதியும் விடீஇர் ஆயின் எம்மொடு சொல்லலும் பழியோ மெல்லியலீர் என நைவளம் பழுநிய பாலை வல்லோன் கை கவர் நரம்பின் இம்மென இமிரும் மாதர் வண்டொடு சுரும்பு நயந்து இறுத்த தாது அவிழ் அலரித் தா சினை பிளந்து தாறு அடு களிற்றின் வீறு பெற ஓச்சிக் கல்லென் சுற்றக் கடும் குரல் அவித்து எம் சொல்லல் பாணி நின்றனன் ஆக இருவி வேய்ந்த குறும் கால் குரம்பைப் பிணை ஏர் நோக்கின் மனையோள் மடுப்பத் தேம் பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து சேமம் மடிந்த பொழுதின் வாய் மடுத்து இரும் புனம் நிழத்தலின் சிறுமை நோனாது அரவு உறழ் அம் சிலை கொளீஇ நோய் மிக்கு உரவுச் சின முன்பால் உடல் சினம் செருக்கிக் கணை விடு புடையூக் கானம் கல்லென மடி விடு வீளையர் வெடி படுத்து எதிரக் கார்ப் பெயல் உருமின் பிளிறிச் சீரத் தக இரும் பிணர்த் தடக் கை இரு நிலம் சேர்த்திச் சினம் திகழ் கடாஅம் செருக்கி மரம் கொல்பு மையல் வேழம் மடங்கலின் எதிர்தர உய்விடம் அறியேம் ஆகி ஒய்யெனத் திருந்து கோல் எல் வளை தெழிப்ப நாணு மறந்து விதுப்புறு மனத்தேம் விரைந்து அவன் பொருந்தி சூருறு மஞ்ஞையின் நடுங்க வார் கோல் உடு உறும் பகழி வாங்கிக் கடு விசை அண்ணல் யானை அணி முகத்து அழுத்தலின் புண் உமிழ் குருதி முகம் பாய்ந்து இழிதரப் புள்ளி வரி நுதல் சிதைய நில்லாது அயர்ந்து புறங்கொடுத்த பின்னர் நெடுவேள் அணங்குறு மகளிர் ஆடுகளம் கடுப்ப திணி நிலைக் கடம்பின் திரள் அரை வளைஇய துணை அறை மாலையின் கை பிணி விடேஎம் நுரை உடைக் கலுழி பாய்தலின் உரவுத் திரை அடும் கரை வாழையின் நடுங்கப் பெருந்தகை அம்_சில்_ஓதி அசையல் யாவதும் அஞ்சல் ஓம்பு நின் அணி நலம் நுகர்கு என மாசறு சுடர் நுதல் நீவி நீடு நினைந்து என் முகம் நோக்கி நக்கனன் அ நிலை நாணும் உட்கும் நண்ணுவழி அடைதர ஒய்யெனப் பிரியவும் விடாஅன் கவைஇ ஆகம் அடைய முயங்கலின் அ வழிப் பழு மிளகு உக்க பாறை நெடும் சுனை முழுமுதல் கொக்கின் தீம் கனி உதிர்ந்து எனப் புள் எறி பிரசமொடு ஈண்டிப் பலவின் நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல் நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர் சாறு கொள் ஆங்கண் விழவுக்களம் நந்தி அரி கூட்டு இன்னியம் கறங்க ஆடு_மகள் கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல் வரை_அர_மகளிரின் சாஅய் விழைதக விண் பொரும் சென்னிக் கிளைஇய காந்தள் தண் கமழ் அலரி தாஅய் நன் பல வம்பு விரி களத்தின் கவின் பெறப் பொலிந்த குன்று கெழு நாடன் எம் விழைதரு பெரு விறல் உள்ளத் தன்மை உள்ளினன் கொண்டு சாறு அயர்ந்து அன்ன மிடாஅச் சொன்றி வருநர்க்கு வரையா வள நகர் பொற்ப மலரத் திறந்த வாயில் பலர் உணப் பைம் நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில் வசை இல் வான் திணைப் புரையோர் கடும்பொடு விருந்து உண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை நின்னோடு உண்டலும் புரைவது என்று ஆங்கு அறம் புணை ஆகத் தேற்றிப் பிறங்கு மலை மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி அம் தீம் தெண் நீர் குடித்தலின் நெஞ்சு அமர்ந்து அரு விடர் அமைந்த களிறு தரு புணர்ச்சி வான் உரி உறையுள் வயங்கியோர் அவாவும் பூ மலி சோலை அப் பகல் கழிப்பி எல்லை செல்ல ஏழ் ஊர்பு இறைஞ்சிப் பல் கதிர் மண்டிலம் கல் சேர்பு மறைய மான் கணம் மர முதல் தெவிட்ட ஆன் கணம் கன்று பயிர் குரல மன்று நிறை புகுதர ஏங்கு வயிர் இசைய கொடு வாய் அன்றில் ஓங்கு இரும் பெண்ணை அக மடல் அகவப் பாம்பு மணி உமிழப் பல் வயின் கோவலர் ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற ஆம்பல் ஆய் இதழ் கூம்பு விட வள மனைப் பூம் தொடி மகளிர் சுடர் தலைக் கொளுவி அந்தி அந்தணர் அயரக் கானவர் விண் தோய் பணவை மிசை ஞெகிழி பொத்த வானம் மா மலை வாய் சூழ்பு கறுப்பக் கானம் கல்லென்று இரட்ட புள் இனம் ஒலிப்பச் சினைஇய வேந்தன் செல் சமம் கடுப்பத் துனைஇய மாலை துன்னுதல் காணூஉ நேர் இறை முன்கை பற்றி நுமர் தர நாடு அறி நன் மணம் அயர்கம் சில் நாள் கலங்கல் ஓம்பு-மின் இலங்கு இழையீர் என ஈர நன் மொழி தீரக் கூறித் துணை புணர் ஏற்றின் எம்மொடு வந்து துஞ்சா முழவின் மூதூர் வாயில் உண்துறை நிறுத்துப் பெயர்ந்தனன் அதற்கொண்டு அன்றை அன்ன விருப்போடு என்றும் இர வரல் மாலையனே வரு-தோறும் காவலர் கடுகினும் கத நாய் குரைப்பினும் நீ துயில் எழினும் நிலவு வெளிப்படினும் வேய் புரை மென் தோள் இன் துயில் என்றும் பெறாஅன் பெயரினும் முனியலுறாஅன் இளமையின் இகந்தன்றும் இலனே வளமையின் தன் நிலை தீர்ந்தன்றும் இலனே கொன் ஊர் மாய வரவின் இயல்பு நினைஇத் தேற்றி நீர் எறி மலரின் சாஅய் இதழ் சோரா ஈரிய கலுழும் இவள் பெரு மதர் மழைக் கண் ஆகத்து அரிப் பனி உறைப்ப நாளும் வலைப் படு மஞ்ஞையின் நலம் செலச் சாஅய் நினைத்-தொறும் கலுழுமால் இவளே கங்குல் அளை செறி உழுவையும் ஆளியும் உளியமும் புழல் கோட்டு ஆமான் புகல்வியும் களிறும் வலியின் தப்பும் வன்கண் வெம் சினத்து உருமும் சூரும் இரை தேர் அரவமும் ஒடுங்கு இரும் குட்டத்து அரும் சுழி வழங்கும் கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும் நூழிலும் இழுக்கும் ஊழ் அடி முட்டமும் பழுவும் பாந்தளும் உளப்படப் பிறவும் வழுவின் வழாஅ விழுமம் அவர் குழு மலை விடரகம் உடையவால் எனவே #209 புறநானூறு 8 - கபிலர் **பாடப்பட்டோன் - சேரமான் கடுங்கோ வாழியாதன் வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக போகம் வேண்டிப் பொதுச்சொல் பொறாஅது இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக் கடந்து அடு தானைச் சேரலாதனை யாங்கனம் ஒத்தியோ வீங்கு செலல் மண்டிலம் பொழுது என வரைதி புறக்கொடுத்து இறத்தி மாறி வருதி மலை மறைந்து ஒளித்தி அகல் இரு விசும்பினானும் பகல் விளங்குதியால் பல் கதிர் விரித்தே #210 புறநானூறு 14 - கபிலர் **பாடப்பட்டோன் - சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் கடும் கண்ண கொல் களிற்றால் காப்பு உடைய எழு முருக்கி பொன் இயல் புனை தோட்டியால் முன்பு துரந்து சமம் தாங்கவும் பார் உடைத்த குண்டு அகழி நீர் அழுவ நிவப்புக் குறித்து நிமிர் பரிய மா தாங்கவும் ஆவம் சேர்ந்த புறத்தை தேர் மிசைச் சாப நோன் ஞாண் வடுக்கொள வழங்கவும் பரிசிலர்க்கு அரும் கலம் நல்கவும் குரிசில் வலிய ஆகும் நின் தாள் தோய் தடக் கை புலவு நாற்றத்த பைம் தடி பூ நாற்றத்த புகை கொளீஇ ஊன் துவை கறி சோறு உண்டு வருந்து தொழில் அல்லது பிறிது தொழில் அறியா ஆகலின் நன்றும் மெல்லிய பெரும தாமே நல்லவர்க்கு ஆர் அணங்கு ஆகிய மார்பின் பொருநர்க்கு இரு நிலத்து அன்ன நோன்மை செரு மிகு சேஎய் நின் பாடுநர் கையே #210A புறநானூறு 15 - (கபிலர்)நெட்டிமையார் **பாடப்பட்டோன் - பாண்டியன் பல்யாகசாலை **முதுகுடுமிப் பெருவழுதி(சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்) கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண் வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி பாழ் செய்தனை அவர் நனம் தலை நல் எயில் புள் இனம் இமிழும் புகழ் சால் விளை வயல் வெள் உளைக் கலிமான் கவி குளம்பு உகளத் தேர் வழங்கினை நின் தெவ்வர் தேஎத்துத் துளங்கு இயலான் பணை எருத்தின் பாவு அடியான் செறல் நோக்கின் ஒளிறு மருப்பின் களிறு அவர காப்பு உடைய கயம் படியினை அன்ன சீற்றத்து அனையை ஆகலின் விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடு நிழல் படு நெடு வேல் ஏந்தி ஒன்னார் ஒண் படை கடும் தார் முன்பு தலைக்கொண்மார் நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய வசைபட வாழ்ந்தோர் பலர்-கொல் புரை இல் நல் பனுவல் நால் வேதத்து அரும் சீர்த்திப் பெரும் கண்ணுறை நெய்ம் மலி ஆவுதி பொங்கப் பல் மாண் வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி யூபம் நட்ட வியன் களம் பல-கொல் யா பல-கொல்லோ பெரும வாருற்று விசி பிணிக் கொண்ட மண் கனை முழவின் பாடினி பாடும் வஞ்சிக்கு நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே #211 புறநானூறு 105 கபிலர் **பாடப்பட்டோன்: வேள் பாரி. சே இழை பெறுகுவை வாள் நுதல் விறலி தடவு வாய்க் கலித்த மா இதழ்க் குவளை வண்டு படு புது மலர்த் தண் சிதர் கலாவப் பெய்யினும் பெய்யாது ஆயினும் அருவி கொள் உழு வியன் புலத்து உழை கால் ஆக மால்பு உடை நெடு வரை கோடு-தோறு இழிதரும் நீரினும் இனிய சாயல் பாரி வேள்-பால் பாடினை செலினே #212 புறநானூறு 106 - கபிலர். **பாடப்பட்டோன்: வேள் பாரி. நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப் புல் இலை எருக்கம் ஆயினும் உடையவை கடவுள் பேணேம் என்னா ஆங்கு மடவர் மெல்லியர் செல்லினும் கடவன் பாரி கைவண்மையே #213 புறநானூறு 107 - கபிலர். **பாடப்பட்டோன்: வேள் பாரி பாரி பாரி என்று பல ஏத்தி ஒருவன் புகழ்வர் செம் நாப் புலவர் பாரி ஒருவனும் அல்லன் மாரியும் உண்டு ஈண்டு உலகு புரப்பதுவே #214 புறநானூறு 108 - கபிலர். **பாடப்பட்டோன்: வேள் பாரி குறத்தி மாட்டிய வறல் கடைக் கொள்ளி ஆரம் ஆதலின் அம் புகை அயலது சாரல் வேங்கைப் பூம் சினைத் தவழும் பறம்பு பாடினர் அதுவே அறம் பூண்டு பாரியும் பரிசிலர் இரப்பின் வாரேன் என்னான் அவர் வரையன்னே #215 புறநானூறு 109 - கபிலர். **பாடப்பட்டோன்: வேள் பாரி அளிதோ தானே பாரியது பறம்பே நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும் உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே ஒன்றே சிறி இலை வெதிரின் நெல் விளையும்மே இரண்டே தீம் சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே மூன்றே கொழும் கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே நான்கே அணி நிற ஓரி பாய்தலின் மீது அழிந்து திணி நெடும் குன்றம் தேன் சொரியும்மே வான் கண் அற்று அவன் மலையே வானத்து மீன் கண் அற்று அதன் சுனையே ஆங்கு மரம்-தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும் புலம்-தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும் தாளின் கொள்ளலிர் வாளின் தாரலன் யான் அறிகுவன் அது கொள்ளும் ஆறே சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர ஆடினிர் பாடினிர் செலினே நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே #216 புறநானூறு 110 - கபிலர். **பாடப்பட்டோன்: வேள் பாரி. கடந்து அடு தானை மூவிரும் கூடி உடன்றனிர் ஆயினும் பறம்பு கொளற்கு அரிதே முந்நூறு ஊர்த்தே தண் பறம்பு நல் நாடு முந்நூறு ஊரும் பரிசிலர் பெற்றனர் யாமும் பாரியும் உளமே குன்றும் உண்டு நீர் பாடினிர் செலினே #217 புறநானூறு 111 - கபிலர், **பாடப்பட்டோன்: வேள் பாரி அளிதோ தானே பேர் இரும் குன்றே வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே நீலத்து இணை மலர் புரையும் உண்கண் கிணை மகட்கு எளிதால் பாடினள் வரினே #218 புறநானூறு 113 - கபிலர் **பாடப்பட்டோன்: வேள் பாரி மட்டு வாய் திறப்பவும் மை விடை வீழ்ப்பவும் அட்டு ஆன்று ஆனாக் கொழும் துவை ஊன்_சோறும் பெட்டாங்கு ஈயும் பெரு வளம் பழுனி நட்டனை-மன்னோ முன்னே இனியே பாரி மாய்ந்து எனக் கலங்கிக் கையற்று நீர் வார் கண்ணேம் தொழுது நின் பழிச்சிச் சேறும் வாழியோ பெரும் பெயர்ப் பறம்பே கோல் திரள் முன்கைக் குறும் தொடி மகளிர் நாறு இரும் கூந்தல் கிழவரைப் படர்ந்தே #219 புறநானூறு 114 - கபிலர் **பாடப்பட்டோன்: வேள் பாரி ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும் சிறு வரை சென்று நின்றோர்க்கும் தோன்றும் மன்ற களிறு மென்று இட்ட கவளம் போல நறவுப் பிழிந்து இட்ட கோது உடைச் சிதறல் வார் அசும்பு ஒழுகும் முன்றில் தேர் வீசு இருக்கை நெடியோன் குன்றே #220 புறநானூறு 115 - கபிலர் **பாடப்பட்டோன்: வேள் பாரி ஒருசார் அருவி ஆர்ப்ப ஒருசார் பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார் வாக்க உக்க தேக் கள் தேறல் கல் அலைத்து ஒழுகும்-மன்னே பல் வேல் அண்ணல் யானை வேந்தர்க்கு இன்னான் ஆகிய இனியோன் குன்றே #221 புறநானூறு 116 - கபிலர் **பாடப்பட்டோன்: வேள் பாரி தீம் நீர்ப் பெரும் குண்டு சுனைப் பூத்த குவளைக் கூம்பு அவிழ் முழுநெறி புரள்வரும் அல்குல் ஏந்து எழில் மழைக் கண் இன் நகை மகளிர் புன் மூசு கவலைய முள் மிடை வேலி பஞ்சி முன்றில் சிற்றில் ஆங்கண் பீரை நாறிய சுரை இவர் மருங்கின் ஈத்து இலைக் குப்பை ஏறி உமணர் உப்பு ஒய் ஒழுகை எண்ணுப-மாதோ நோகோ யானே தேய்கமா காலை பயில் பூம் சோலை மயில் எழுந்து ஆலவும் பயில் இரும் சிலம்பில் கலை பாய்ந்து உகளவும் கலையும் கொள்ளா ஆகப் பலவும் காலம் அன்றியும் மரம் பயம் பகரும் யாணர் அறாஅ வியன் மலை அற்றே அண்ணல் நெடு வரை ஏறித் தந்தை பெரிய நறவின் கூர் வேல் பாரியது அருமை அறியார் போர் எதிர்ந்து வந்த வலம் படு தானை வேந்தர் பொலம் படைக் கலிமா எண்ணுவோரே #222 புறநானூறு 117 - கபிலர் **பாடப்பட்டோன்: வேள் பாரி மைம்_மீன் புகையினும் தூமம் தோன்றினும் தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும் வயலகம் நிறையப் புதல் பூ மலர மனைத் தலை மகவை ஈன்ற அமர்க் கண் ஆமா நெடு வரை நல் புல் ஆரக் கோஒல் செம்மையின் சான்றோர் பல்கிப் பெயல் பிழைப்பு அறியாப் புன்புலத்ததுவே பிள்ளை வெருகின் முள் எயிறு புரையப் பாசிலை முல்லை முகைக்கும் ஆய் தொடி அரிவையர் தந்தை நாடே #223 புறநானூறு 118 - கபிலர் **பாடப்பட்டோன்: வேள் பாரி அறையும் பொறையும் மணந்த தலைய எண் நாள் திங்கள் அனைய கொடும் கரைத் தெண் நீர்ச் சிறு குளம் கீள்வது மாதோ கூர் வேல் குவைஇய மொய்ம்பின் தேர் வண் பாரி தண் பறம்பு நாடே #224 புறநானூறு 119 - கபிலர் **பாடப்பட்டோன்: வேள் பாரி கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலைக் களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்பச் செம் புற்று ஈயலின் இன் அளை புளித்து மென் தினை யாணர்த்து நந்தும்-கொல்லோ நிழல் இல் நீள் இடைத் தனி மரம் போலப் பணை கெழு வேந்தரை இறந்தும் இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே #225 புறநானூறு 120 - கபிலர் **பாடப்பட்டோன்: வேள் பாரி வெப்புள் விளைந்த வேங்கைச் செம் சுவல் கார்ப் பெயல் கலித்த பெரும் பாட்டு ஈரத்துப் பூழி மயங்கப் பல உழுது வித்திப் பல்லி ஆடிய பல் கிளைச் செவ்வி களை கால் கழாலின் தோடு ஒலிபு நந்தி மெல் மயில் புனிற்றுப் பெடை கடுப்ப நீடிக் கரும் தாள் போகி ஒருங்கு பீள் விரிந்து கீழும் மேலும் எஞ்சாமைப் பல காய்த்து வாலிதின் விளைந்த புது வரகு அரியத் தினை கொய்யக் கவ்வை கறுப்ப அவரைக் கொழும் கொடி விளர்க் காய் கோள்_பதம் ஆக நிலம் புதைப் பழுனிய மட்டின் தேறல் புல் வேய்க் குரம்பைக் குடி-தொறும் பகர்ந்து நறு நெய்க் கடலை விசைப்ப சோறு அட்டுப் பெரும் தோள் தாலம் பூசல் மேவர வருந்தா யாணர்த்து நந்தும்-கொல்லோ இரும் பல் கூந்தல் மடந்தையர் தந்தை ஆடு கழை நரலும் சேண் சிமைப் புலவர் பாடி ஆனாப் பண்பின் பகைவர் ஓடு கழல் கம்பலை கண்ட செரு வெம் சேஎய் பெரு விறல் நாடே #226 புறநானூறு 121 - கபிலர் **பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி ஒரு திசை ஒருவனை உள்ளி நால் திசைப் பலரும் வருவர் பரிசில் மாக்கள் வரிசை அறிதலோ அரிதே பெரிதும் ஈதல் எளிதே மா வண் தோன்றல் அது நற்கு அறிந்தனை ஆயின் பொதுநோக்கு ஒழி-மதி புலவர் மாட்டே #227 புறநானூறு 122 - கபிலர் **பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி கடல் கொளப்படாஅது உடலுநர் ஊக்கார் கழல் புனை திருந்து அடிக் காரி நின் நாடே அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே வீயாத் திருவின் விறல் கெழு தானை மூவருள் ஒருவன் துப்பு ஆகியர் என ஏத்தினர் தரூஉம் கூழே நும் குடி வாழ்த்தினர் வரூஉம் இரவலரதுவே வட_மீன் புரையும் கற்பின் மட மொழி அரிவை தோள் அளவு அல்லதை நினது என இலை நீ பெருமிதத்தையே #228 புறநானூறு 123 - கபிலர் **பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி நாள்_கள் உண்டு நாள்_மகிழ் மகிழின் யார்க்கும் எளிதே தேர் ஈதல்லே தொலையா நல் இசை விளங்கு மலயன் மகிழாது ஈத்த இழை அணி நெடும் தேர் பயன் கெழு முள்ளூர் மீமிசைப் பட்ட மாரி உறையினும் பலவே #229 புறநானூறு 124 - கபிலர் **பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி நாள் அன்று போகிப் புள் இடைத் தட்பப் பதன் அன்று புக்குத் திறன் அன்று மொழியினும் வறிது பெயர்குநர் அல்லர் நெறி கொளப் பாடு ஆன்று இரங்கும் அருவிப் பீடு கெழு மலையன் பாடியோரே #230 புறநானூறு 143 - கபிலர் **பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன் மலை வான் கொள்க என உயர் பலி தூஉய் மாரி ஆன்று மழை மேக்கு உயர்க எனக் கடவுள் பேணிய குறவர் மாக்கள் பெயல் கண்மாறிய உவகையர் சாரல் புனைத் தினை அயிலும் நாட சினப் போர்க் கைவள் ஈகை கடு_மான் பேக யார்-கொல் அளியள் தானே நெருநல் சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்து எனக் குணில் பாய் முரசின் இரங்கும் அருவி நளி இரும் சிலம்பின் சீறூர் ஆங்கண் வாயில் தோன்றி வாழ்த்தி நின்று நின்னும் நின் மலையும் பாட இன்னாது இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள் முலையகம் நனைப்ப விம்மிக் குழல் இனைவது போல் அழுதனள் பெரிதே #231 புறநானூறு 144 - கபிலர் **பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன் அருளாய் ஆகலோ கொடிதே இருள் வரச் சீறியாழ் செவ்வழி பண்ணி யாழ நின் கார் எதிர் கானம் பாடினேம் ஆக நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண் கலுழ்ந்து வார் அரிப் பனி பூண் அகம் நனைப்ப இனைதல் ஆனாள் ஆக இளையோய் கிளையை-மன் எம் கேள் வெய்யோற்கு என யாம் தன் தொழுதனம் வினவக் காந்தள் முகை புரை விரலின் கண்ணீர் துடையா யாம் அவன் கிளைஞரேம் அல்லேம் கேள் இனி எம் போல் ஒருத்தி நலன் நயந்து என்றும் வரூஉம் என்ப வயங்கு புகழ்ப் பேகன் ஒல்லென ஒலிக்கும் தேரொடு முல்லை வேலி நல் ஊரானே #232 புறநானூறு 145 - கபிலர் **பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன் மடத் தகை மா மயில் பனிக்கும் என்று அருளிப் படாஅம் ஈத்த கெடாஅ நல் இசைக் கடாஅ யானைக் கலிமான் பேக பசித்தும் வாரோம் பாரமும் இலமே களங்கனி அன்ன கரும் கோட்டுச் சீறியாழ் நயம் புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி அறம் செய்தீமோ அருள் வெய்யோய் என இஃது யாம் இரந்த பரிசில் அஃது இருளின் இன மணி நெடும் தேர் ஏறி இன்னாது உறைவி அரும் படர் களைமே #233 புறநானூறு 200 - கபிலர் **பாடப்பட்டோன் : விச்சிக்கோ பனிவரை நிவந்த பாசிலைப் பலவின் கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன் செம் முக மந்தியொடு சிறந்து சேண் விளங்கி மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்துக் கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப நிணம் தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடு வேல் களம் கொண்டு கனலும் கடும் கண் யானை விளங்கு மணிக் கொடும் பூண் விச்சிக்கோவே இவரே பூத் தலை அறாஅ புனை கொடி முல்லை நாத் தழும்பு இருப்பப் பாடாது ஆயினும் கறங்கு மணி நெடும் தேர் கொள்க எனக் கொடுத்த பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர் யானே பரிசிலன்-மன்னும் அந்தணன் நீயே வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன் நினக்கு யான் கொடுப்ப கொண்-மதி சினப் போர் அடங்கா மன்னரை அடக்கும் மடங்கா விளையுள் நாடு கிழவோயே #234 புறநானூறு 201 - கபிலர் **பாடப்பட்டோன் : இருங்கோவேள் இவர் யார் என்குவை ஆயின் இவரே ஊருடன் இரவலர்க்கு அருளித் தேருடன் முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை படு மணி யானைப் பறம்பின் கோமான் நெடு மாப் பாரி மகளிர் யானே தந்தை தோழன் இவர் என் மகளிர் அந்தணன் புலவன் கொண்டு வந்தனனே நீயே வட பால் முனிவன் தடவினுள் தோன்றி செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை உவரா ஈகைத் துவரை ஆண்டு நாற்பத்தொன்பது வழிமுறை வந்த வேளிருள் வேளே விறல் போர் அண்ணல் தார் அணி யானை சேட்டு இரும் கோவே ஆண்_கடன் உடைமையின் பாண்_கடன் ஆற்றிய ஒலியல் கண்ணிப் புலிகடிமாஅல் யான் தர இவரைக் கொண்-மதி வான் கவித்து இரும் கடல் உடுத்த இவ் வையகத்து அரும் திறல் பொன் படு மால் வரைக் கிழவ வென் வேல் உடலுநர் உட்கும் தானைக் கெடல் அரும்-குரைய நாடு கிழவோயே #235 புறநானூறு 202 - கபிலர் **பாடப்பட்டோன் : இருங்கோவேள் வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக் கட்சி காணாக் கடமா நல் ஏறு கடறு மணி கிளரச் சிதறு பொன் மிளிரக் கடிய கதழும் நெடு வரைப் படப்பை வென்றி நிலைஇய விழுப் புகழ் ஒன்றி இரு பால் பெயரிய உரு கெழு மூதூர்க் கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய நீடு நிலை அரையத்துக் கேடும் கேள் இனி நுந்தை தாயம் நிறைவுற எய்திய ஒலியல் கண்ணிப் புலிகடிமாஅல் நும் போல் அறிவின் நுமருள் ஒருவன் புகழ்ந்த செய்யுள் கழாஅத்தலையை இகழ்ந்ததன் பயனே இயல் தேர் அண்ணல் எவ்வி தொல் குடிப் படீஇயர் மற்று இவர் கைவண் பாரி மகளிர் என்ற என் தேற்றாப் புன்சொல் நோற்றிசின் பெரும விடுத்தனென் வெலீஇயர் நின் வேலே அடுக்கத்து அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை மாத் தகட்டு ஒள் வீ தாய துறுகல் இரும் புலி வரிப் புறம் கடுக்கும் பெரும் கல் வைப்பின் நாடு கிழவோயே #236 புறநானூறு 236 - கபிலர் கலை உணக் கிழிந்த முழவு மருள் பெரும் பழம் சிலை கெழு குறவர்க்கு அல்கு மிசைவு ஆகும் மலை கெழு நாட மா வண் பாரி கலந்த கேண்மைக்கு ஒவ்வாய் நீ என் புலந்தனை ஆகுவை புரந்த ஆண்டே பெரும் தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லாது ஒருங்கு வரல் விடாஅது ஒழிக எனக் கூறி இனையை ஆதலின் நினக்கு மற்று யான் மேயினேன் அன்மையானே ஆயினும் இம்மை போலக் காட்டி உம்மை இடை இல் காட்சி நின்னோடு உடன் உறைவு ஆக்குக உயர்ந்த பாலே #237 புறநானூறு 337 - கபிலர் ஆர்கலியினனே சோணாட்டு அண்ணல் மண் ஆள் செல்வர் ஆயினும் எண்ணார் கவி கை வாள் வலத்து ஒழியப் பாணரில் பாடிச் சென்றாஅர் வரல்-தோறு அகம் மலர ஈதல் ஆனா இலங்கு தொடித் தடக் கை பாரி பறம்பின் பனிச் சுனை போலக் காண்டற்கு அரியள் ஆகி மாண்ட பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய துகில் விரி கடுப்ப நுடங்கித் தண்ணென அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய கபில நெடு நகர்க் கமழும் நாற்றமொடு மனைச் செறிந்தனளே வாள்_நுதல் இனியே அற்று அன்று ஆகலின் தெற்றெனப் போற்றிக் காய் நெல் கவளம் தீற்றிக் காவு-தொறும் கடும் கண் யானை காப்பனர் அன்றி வருதல் ஆனார் வேந்தர் தன் ஐயர் பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல் குருதி பற்றிய வெருவரு தலையர் மற்று இவர் மறனும் இற்றால் தெற்றென யார் ஆகுவர்-கொல் தாமே நேர்_இழை உருத்த பல சுணங்கு அணிந்த மருப்பு இள வன முலை ஞெமுக்குவோரே #238 புறநானூறு 347 - கபிலர் உண்போன் தான் நறும் கள்ளின் இடச் சில நா இடைப் பல் தேர்பு கோலச் சிவந்த ஆங்கு ஒளிறு ஒள் வாள் அடக் குழைந்த பைம் தும்பை எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின் மணம் நாறு மார்பின் மறப் போர் அகுதை குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன குவை இரும் கூந்தல் வரு முலை சேப்ப என் ஆவது-கொல் தானே விளங்குறு பராரைய ஆயினும் வேந்தர் வினை நவில் யானை பிணிப்ப வேர் துளங்கின நம் ஊருள் மரனே &116 - கயத்தூர்க் கிழார் #1 குறுந்தொகை 354 மருதம் - கயத்தூர்க் கிழார் நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும் ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும் தணந்தனை ஆயின் எம் இல் உய்த்துக் கொடுமோ அம் தண் பொய்கை எந்தை எம் ஊர்க் கடும் பாம்பு வழங்கும் தெருவில் நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம்மே &117 - கயமனார் #1 அகநானூறு 7 பாலை - கயமனார் முலை முகம்செய்தன முள் எயிறு இலங்கின தலை முடி சான்ற தண் தழை உடையை அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல் மூப்பு உடை முது பதி தாக்கு அணங்கு உடைய காப்பும் பூண்டிசின் கடையும் போகலை பேதை அல்லை மேதை அம் குறுமகள் பெதும்பைப் பருவத்து ஒதுங்கினை புறத்து என ஒண் சுடர் நல் இல் அரும் கடி நீவி தன் சிதைவு அறிதல் அஞ்சி இன் சிலை ஏறு உடை இனத்த நாறு உயிர் நவ்வி வலை காண் பிணையின் போகி ஈங்கு ஓர் தொலைவு இல் வெள் வேல் விடலையொடு என் மகள் இச் சுரம் படர்தந்தோளே ஆயிடை அத்தக் கள்வர் ஆ தொழு அறுத்து என பிற்படு பூசலின் வழிவழி ஓடி மெய்த் தலைப்படுதல் செல்லேன் இத் தலை நின்னொடு வினவல் கேளாய் பொன்னொடு புலிப் பல் கோத்த புலம்பு மணித் தாலி ஒலிக் குழைச் செயலை உடை மாண் அல்குல் ஆய் சுளைப் பலவின் மேய் கலை உதிர்த்த துய்த் தலை வெண் காழ் பெறூஉம் கல் கெழு சிறுகுடிக் கானவன் மகளே #2 அகநானூறு 17 பாலை - கயமனார் வளம் கெழு திரு நகர்ப் பந்து சிறிது எறியினும் இளம் துணை ஆயமொடு கழங்கு உடன் ஆடினும் உயங்கின்று அன்னை என் மெய் என்று அசைஇ மயங்கு வியர் பொறித்த நுதலள் தண்ணென முயங்கினள் வதியும்-மன்னே இனியே தொடி மாண் சுற்றமும் எம்மும் உள்ளாள் நெடுமொழித் தந்தை அரும் கடி நீவி நொதுமலாளன் நெஞ்சு அறப் பெற்ற என் சிறு முதுக்குறைவி சிலம்பு ஆர் சீறடி வல்ல-கொல் செல்லத் தாமே கல்லென ஊர் எழுந்து அன்ன உரு கெழு செலவின் நீர் இல் அத்தத்து ஆர் இடை மடுத்த கொடும் கோல் உமணர் பகடு தெழி தெள் விளி நெடும் பெரும் குன்றத்து இமிழ் கொள இயம்பும் கடும் கதிர் திருகிய வேய் பயில் பிறங்கல் பெரும் களிறு உரிஞ்சிய மண் அரை யாஅத்து அரும் சுரக் கவலைய அதர் படு மருங்கின் நீள் அரை இலவத்து ஊழ் கழி பல் மலர் விழவு தலைக்கொண்ட பழ விறல் மூதூர் நெய் உமிழ் சுடரின் கால் பொரச் சில்கி வைகுறு மீனின் தோன்றும் மை படு மா மலை விலங்கிய சுரனே #3 அகநானூறு 145 பாலை - கயமனார் வேர் முழுது உலறி நின்ற புழல் கால் தேர் மணி இசையின் சிள்வீடு ஆர்க்கும் வற்றல் மரத்த பொன் தலை ஓதி வெயில் கவின் இழந்த வைப்பின் பையுள் கொள நுண்ணிதின் நிவக்கும் வெண் ஞெமை வியன் காட்டு ஆள் இல் அத்தத்து அளியள் அவனொடு வாள் வரி பொருத புண் கூர் யானை புகர் சிதை முகத்த குருதி வார உயர் சிமை நெடும் கோட்டு உரும் என முழங்கும் அரும் சுரம் இறந்தனள் என்ப பெரும் சீர் அன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன் தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணிய நன்னர் மெல் இணர்ப் புன்னை போலக் கடு நவைப் படீஇயர்-மாதோ களி மயில் குஞ்சரக் குரல குருகோடு ஆலும் துஞ்சா முழவின் துய்த்து இயல் வாழ்க்கை கூழ் உடை தந்தை இடன் உடை வரைப்பின் ஊழ் அடி ஒதுங்கினும் உயங்கும் ஐம்பால் சிறு பல் கூந்தல் போது பிடித்து அருளாது எறி கோல் சிதைய நூறவும் சிறுபுறம் எனக்கு உரித்து என்னாள் நின்ற என் அமர்க் கண் அஞ்ஞையை அலைத்த கையே #4 அகநானூறு 189 பாலை - கயமனார் பசும் பழப் பலவின் கானம் வெம்பி விசும்பு கண் அழிய வேனில் நீடிக் கயம் கண் அற்ற கல் ஓங்கு வைப்பின் நாறு உயிர் மடப் பிடி தழைஇ வேறு நாட்டு விழவுப் படர் மள்ளரின் முழவு எடுத்து உயரிக் களிறு அதர்ப்படுத்த கல் உயர் கவாஅன் வெவ் வரை அத்தம் சுட்டிப் பையென வயலை அம் பிணையல் வார்ந்த கவாஅன் திதலை அல்குல் குறுமகள் அவனொடு சென்று பிறள் ஆகிய அளவை என்றும் படர் மலி எவ்வமொடு மாதிரம் துழைஇ மனை மருண்டு இருந்த என்னினும் நனை மகிழ் நன்னராளர் கூடு கொள் இன்னியம் தேர் ஊர் தெருவில் ததும்பும் ஊர் இழந்தன்று தன் வீழ்வு உறு பொருளே #5 அகநானூறு 195 பாலை - கயமனார் அரும் சுரம் இறந்த என் பெரும் தோள் குறுமகள் திருந்து வேல் விடலையொடு வரும் எனத் தாயே புனை மாண் இஞ்சி பூவல் ஊட்டி மனை மணல் அடுத்து மாலை நாற்றி உவந்து இனிது அயரும் என்ப யானும் மான் பிணை நோக்கின் மட நல்லாளை ஈன்ற நட்பிற்கு அருளான் ஆயினும் இன் நகை முறுவல் ஏழையைப் பல் நாள் கூந்தல் வாரி நுசுப்பு இவர்ந்து ஓம்பிய நலம் புனை உதவியும் உடையன்-மன்னே அஃது அறிகிற்பினோ நன்று-மன்-தில்ல அறுவை தோயும் ஒரு பெரும் குடுமி சிறு பை நாற்றிய பல் தலைக் கொடும் கோல் ஆகுவது அறியும் முது வாய் வேல கூறுக மாதோ நின் கழங்கின் திட்பம் மாறா வரு பனி கலுழும் கங்குலில் ஆனாது துயரும் எம் கண் இனிது படீஇயர் எம் மனை முந்துறத் தருமோ தன் மனை உய்க்குமோ யாது அவன் குறிப்பே #6 அகநானூறு 219 பாலை - கயமனார் சீர் கெழு வியல் நகர்ச் சிலம்பு நக இயலி ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும் வாராயோ என்று ஏத்திப் பேர் இலைப் பகன்றை வான் மலர் பனி நிறைந்தது போல் பால் பெய் வள்ளம் சால்கை பற்றி என் பாடு உண்டனை ஆயின் ஒரு கால் நுந்தை பாடும் உண் என்று ஊட்டிப் பிறந்ததன் கொண்டும் சிறந்தவை செய்து யான் நலம் புனைந்து எடுத்த என் பொலம் தொடிக் குறுமகள் அறனிலாளனொடு இறந்தனள் இனி என மறந்து அமைந்து இராஅ நெஞ்சம் நோவேன் பொன் வார்ந்து அன்ன வை வால் எயிற்றுச் செந்நாய் வெரீஇய புகர் உழை ஒருத்தல் பொரி அரை விளவின் புன் புற விளை புழல் அழல் எறி கோடை தூக்கலின் கோவலர் குழல் என நினையும் நீர் இல் நீள் இடை மடத் தகை மெலியச் சாஅய் நடக்கும்-கொல் என நோவல் யானே #7 அகநானூறு 221 பாலை - கயமனார் நனை விளை நறவின் தேறல் மாந்திப் புனை வினை நல் இல் தரு மணல் குவைஇப் பொம்மல் ஓதி எம் மகள் மணன் என வதுவை அயர்ந்தனர் நமரே அதனால் புதுவது புனைந்த சேய் இலை வெள் வேல் மதி உடம்பட்ட மை அணல் காளை வாங்கு சினை மலிந்த திரள் அரை மராஅத்துத் தேம் பாய் மெல் இணர் தளிரொடு கொண்டு நின் தண் நறு முச்சி புனைய அவனொடு கழை கவின் போகிய மழை உயர் நனம் தலை களிற்று இரை பிழைத்தலின் கய வாய் வேங்கை காய் சினம் சிறந்து குழுமலின் வெரீஇ இரும் பிடி இரியும் சோலை அரும் சுரம் சேறல் அயர்ந்தனென் யானே #8 அகநானூறு 259 பாலை - கயமனார் வேலும் விளங்கின இளையரும் இயன்றனர் தாரும் தையின தழையும் தொடுத்தன நிலம் நீர் அற்ற வெம்மை நீங்கப் பெயல் நீர் தலைஇ உலவை இலை நீத்துக் குறு முறி ஈன்றன மரனே நறு மலர் வேய்ந்தன போலத் தோன்றிப் பல உடன் தேம் படப் பொதுளின பொழிலே கானமும் நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி_நாள் பால் எனப் பரத்தரும் நிலவின் மாலைப் போது வந்தன்று தூதே நீயும் கலங்கா மனத்தை ஆகி என் சொல் நயந்தனை கொண்மோ நெஞ்சு அமர் தகுவி தெற்றி உலறினும் வயலை வாடினும் நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும் நின்னினும் மடவள் நனி நின் நயந்த அன்னை அல்லல் தாங்கி நின் ஐயர் புலி மருள் செம்மல் நோக்கி வலியாய் இன்னும் தோய்க நின் முலையே #9 அகநானூறு 275 பாலை - கயமனார் ஓங்கு நிலைத் தாழி மல்கச் சார்த்திக் குடை அடை நீரின் மடையினள் எடுத்த பந்தர் வயலை பந்து எறிந்து ஆடி இளமைத் தகைமையை வள மனைக் கிழத்தி பிதிர்வை நீரை வெண் நீறு ஆக என யாம் தன் கழறும் காலைத் தான் தன் மழலை இன் சொல் கழறல் இன்றி இன் உயிர் கலப்பக் கூறி நல்_நுதல் பெரும் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள் ஏதிலாளன் காதல் நம்பித் திரள் அரை இருப்பைத் தொள்ளை வான் பூக் குருளை எண்கின் இரும் கிளை கவரும் வெம் மலை அரும் சுரம் நம் இவண் ஒழிய இரு நிலன் உயிர்க்கும் இன்னாக் கானம் நெருநை போகிய பெரு மடத் தகுவி ஐது அகல் அல்குல் தழை அணி கூட்டும் கூழை நொச்சிக் கீழது என் மகள் செம் புடைச் சிறு விரல் வரித்த வண்டலும் காண்டிரோ கண் உடையீரே #10 அகநானூறு 321 பாலை - கயமனார் பசித்த யானைப் பழம் கண் அன்ன வறும் சுனை முகந்த கோடைத் தெள் விளி விசித்து வாங்கு பறையின் விடரகத்து இயம்ப கதிர்க் கால் அம் பிணை உணீஇய புகல் ஏறு குதிர்க் கால் இருப்பை வெண் பூ உண்ணாது ஆண் குரல் விளிக்கும் சேண் பால் வியன் சுரைப் படு மணி இன நிரை உணீஇய கோவலர் விடு நிலம் உடைத்த கலுழ் கண் கூவல் கன்று உடை மடப் பிடி களிறொடு தடவரும் புன் தலை மன்றத்து அம் குடிச் சீறூர்த் துணையொடு துச்சில் இருக்கும்-கொல்லோ கணையோர் அஞ்சாக் கடுங்கண் காளையொடு எல்லி முன் உறச் செல்லும்-கொல்லோ எ வினை செயும்-கொல் நோகோ யானே அரி பெய்து பொதிந்த தெரி சிலம்பு கழீஇ யாய் அறிவுறுதல் அஞ்சி வேய் உயர் பிறங்கல் மலை இறந்தோளே #11 அகநானூறு 383 பாலை - கயமனார் தன் புரந்து எடுத்த என் துறந்து உள்ளாள் ஊரும் சேரியும் ஓராங்கு அலர் எழ காடும் கானமும் அவனொடு துணிந்து நாடும் தேயமும் நனி பல இறந்த சிறு வன்கண்ணிக்கு ஏர் தேறுவர் என வாடினை வாழியோ வயலை நாள்-தொறும் பல் கிளைக் கொடி கொம்பு அலமர மலர்ந்த அல்குல் தழைக் கூட்டு அம் குழை உதவிய வினை அமை வரல் நீர் விழுத் தொடி தத்தக் கமம் சூல் பெரு நிறை தயங்க முகந்து கொண்டு ஆய் மடக் கண்ணள் தாய் முகம் நோக்கிப் பெய் சிலம்பு ஒலிப்பப் பெயர்வனள் வைகலும் ஆர நீர் ஊட்டிப் புரப்போர் யார் மற்று பெறுகுவை அளியை நீயே #12 அகநானூறு 397 பாலை - கயமனார் என் மகள் பெரு மடம் யான் பாராட்டத் தாய் தன் செம்மல் கண்டு கடன் இறுப்ப முழவு முகம் புலரா விழவு உடை வியன் நகர் மணன் இடையாகக் கொள்ளான் கல் பகக் கண மழை துறந்த கான் மயங்கு அழுவம் எளிய ஆக ஏந்து கொடி பரந்த பொறி வரி அல்குல் மாஅயோட்கு எனத் தணிந்த பருவம் செல்லான் படர்தரத் துணிந்தோன்-மன்ற துனை வெம் காளை கடும் பகட்டு ஒருத்தல் நடுங்கக் குத்திப் போழ் புண் படுத்த பொரி அரை ஓமைப் பெரும் பொளிச் சேய அரை நோக்கி ஊன் செத்துச் கரும் கால் யாத்துப் பருந்து வந்து இறுக்கும் சேண் உயர்ந்து ஓங்கிய வான் உயர் நெடும் கோட்டுக் கோடை வெம் வளிக்கு உலமரும் புல் இலை வெதிர நெல் விளை காடே #13 குறுந்தொகை 9 நெய்தல் - சுயமனார் யாய் ஆகியளே மாஅயோளே மடை மாண் செப்பில் தமிய வைகிய பெய்யாப் பூவின் மெய் சாயினளே பாசடை நிவந்த கணைக் கால் நெய்தல் இன மீன் இரும் கழி ஓதம் மல்கு-தொறும் கயம் மூழ்கு மகளிர் கண்ணின் மானும் தண்ணம் துறைவன் கொடுமை நம் முன் நாணிக் கரப்பாடும்மே #14 குறுந்தொகை 356 பாலை - கயமனார் நிழல் ஆன்று அவிந்த நீர் இல் ஆர் இடைக் கழலோன் காப்பக் கடுகுபு போகி அறு சுனை மருங்கின் மறுகுபு வெந்த வெம் வெம் கலுழி தவ்வெனக் குடிக்கிய யாங்கு வல்லுநள்-கொல் தானே ஏந்திய செம்பொன் புனை கலத்து அம் பொரிக் கலந்த பாலும் பல என உண்ணாள் கோல் அமை குறும் தொடித் தளிர் அன்னோளே #15 குறுந்தொகை 378 பாலை - கயமனார் ஞாயிறு காணாத மாண் நிழல் படீஇய மலை முதல் சிறு நெறி மணல் மிகத் தாஅய்த் தண் மழை தலைய ஆகுக நம் நீத்துச் சுடர் வாய் நெடு வேல் காளையொடு மட மா அரிவை போகிய சுரனே #16 குறுந்தொகை 396 நெய்தல் - கயமனார் பாலும் உண்ணாள் பந்துடன் மேவாள் விளையாடு ஆயமொடு அயர்வோள் இனியே எளிது என உணர்ந்தனள்-கொல்லோ முளி சினை ஓமை குத்திய உயர் கோட்டு ஒருத்தல் வேனில் குன்றத்து வெவ் அறைக் கவாஅன் மழை முழங்கு கடும் குரல் ஓர்க்கும் கழை திரங்கு ஆர் இடை அவனொடு செலவே #17 நற்றிணை 12 பாலை - கயமனார் விளம்பழம் கமழும் கமம் சூல் குழிசிப் பாசம் தின்ற தேய் கால் மத்தம் நெய் தெரி இயக்கம் வெளில் முதல் முழங்கும் வைகு புலர் விடியல் மெய் கரந்து தன் கால் அரி அமை சிலம்பு கழீஇப் பல் மாண் வரி புனை பந்தொடு வைஇய செல்வோள் இவை காண்-தோறும் நோவர் மாதோ அளியரோ அளியர் என் ஆயத்தோர் என நும்மொடு வரவு தான் அயரவும் தன் வரைத்து அன்றியும் கலுழ்ந்தன கண்ணே #18 நற்றிணை 198 பாலை - கயமனார் சேயின் வரூஉம் மதவலி யா உயர்ந்து ஓமை நீடிய கான் இடை அத்தம் முன்_நாள் உம்பர்க் கழிந்த என் மகள் கண்பட நீர் ஆழ்ந்தன்றே தந்தை தன் ஊர் இட-வயின் தொழுவேன் நுண் பல் கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை வார்ந்து இலங்கு வால் எயிற்றுப் பொலிந்த தாஅர் சில் வளைப் பல் கூந்தலளே அவளே மை அணல் எருத்தின் முன்பின் தடக் கை வல் வில் அம்பின் எய்யா வண் மகிழ்த் தந்தை-தன் ஊர் இதுவே ஈன்றேன் யானே பொலிக நும் பெயரே #19 நற்றிணை 279 பாலை - கயமனார் வேம்பின் ஒண் பழம் முணைஇ இருப்பைத் தேம் பால் செற்ற தீம் பழம் நசைஇ வைகு பனி உழந்த வாவல் சினை-தொறும் நெய் தோய் திரியின் தண் சிதர் உறைப்ப நாள் சுரம் உழந்த வாள் கேழ் ஏற்றையொடு பொருத யானைப் புல் தாள் ஏய்ப்பப் பசிப் பிடி உதைத்த ஓமைச் செவ் வரை வெயில் காய் அமையத்து இமைக்கும் அத்தத்து அதர் உழந்து அசையின-கொல்லோ ததர் வாய்ச் சிலம்பு கழீஇய செல்வம் பிறர் உழைக் கழிந்த என் ஆய்_இழை அடியே #20 நற்றிணை 293 பாலை - கயமனார் மணிக் குரல் நொச்சித் தெரியல் சூடிப் பலிக் கள் ஆர்கைப் பார் முது குயவன் இடு பலி நுவலும் அகன் தலை மன்றத்து விழவுத் தலைக்கொண்ட பழ விறல் மூதூர்ப் பூம் கண் ஆயம் காண்-தொறும் எம் போல் பெரு விதுப்பு உறுக-மாதோ எம் இல் பொம்மல்_ஓதியைத் தன் மொழிக் கொளீஇக் கொண்டு உடன் போக வலித்த வன்கண் காளையை ஈன்ற தாயே #21 நற்றிணை 305 பாலை - கயமனார் வரி அணி பந்தும் வாடிய வயலையும் மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும் கடி உடை வியல் நகர் காண்வரத் தோன்றத் தமியே கண்ட தண்டலையும் தெறுவர நோய் ஆகின்றேம் மகளை நின் தோழி எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தெள் விளி உருப்பு அவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி இலங்கு இலை வெள் வேல் விடலையை விலங்கு மலை ஆரிடை நலியும்-கொல் எனவே #22 நற்றிணை 324 குறிஞ்சி - கயமனார் அந்தோ தானே அளியள் தாயே நொந்து அழி அவலமொடு என் ஆகுவள்-கொல் பொன் போல் மேனித் தன் மகள் நயந்தோள் கோடு முற்று யானை காடுடன் நிறைதர நெய் பட்டு அன்ன நோன் காழ் எஃகின் செல்வத் தந்தை இடன் உடை வரைப்பின் ஆடு பந்து உருட்டுநள் போல ஓடி அம் சில் ஓதி இவள் உறும் பஞ்சி மெல் அடி நடைபயிற்றும்மே #23 புறநானூறு 254 - கயமனார் இளையரும் முதியரும் வேறு புலம் படர எடுப்ப எழாஅய் மார்பம் மண் புல்ல இடைச் சுரத்து இறுத்த மள்ள விளர்த்த வளை இல் வறும் கை ஓச்சிக் கிளையுள் இன்னன் ஆயினன் இளையோன் என்று நின் உரை செல்லும் ஆயின் மற்று முன் ஊர்ப் பழுனிய கோளி ஆலத்துப் புள் ஆர் யாணர்த்து அற்றே என் மகன் வளனும் செம்மலும் எமக்கு என நாளும் ஆனாது புகழும் அன்னை யாங்கு ஆகுவள்-கொல் அளியள் தானே &118 - கருங்குழல் ஆதனார் #1 புறநானூறு 7 - கருங்குழல் ஆதனார் **பாடப்பட்டோன் - சோழன் கரிகால் பெருவளத்தான் களிறு கடைஇய தாள் கழல் உரீஇய திருந்து அடிக் கணை பொருது கவி வண் கையால் கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து மா மறுத்த மலர் மார்பின் தோல் பெயரிய எறுழ் முன்பின் எல்லையும் இரவும் எண்ணாய் பகைவர் ஊர் சுடு விளக்கத்து அழு விளிக் கம்பலைக் கொள்ளை மேவலை ஆகலின் நல்ல இல்ல ஆகுபவால் இயல் தேர் வளவ தண் புனல் பரந்த பூசல் மண் மறுத்து மீனின் செறுக்கும் யாணர்ப் பயன் திகழ் வைப்பின் பிறர் அகன் தலை நாடே #2 புறநானூறு 224 - கருங்குழல் ஆதனார் **பாடப்பட்டோன்: சோழன் கரிகால் பெருவளத்தான் அருப்பம் பேணாது அமர் கடந்ததூஉம் துணை புணர் ஆயமொடு தசும்பு உடன் தொலைச்சி இரும் பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம் அறம் அறக் கண்ட நெறி மாண் அவையத்து முறை நற்கு அறியுநர் முன் உறப் புகழ்ந்த தூ இயல் கொள்கைத் துகள் அறு மகளிரொடு பருதி உருவின் பல் படைப் புரிசை எருவை நுகர்ச்சி யூப நெடும் தூண் வேத வேள்வித் தொழில் முடித்ததூஉம் அறிந்தோன்-மன்ற அறிவுடையாளன் இறந்தோன் தானே அளித்து இவ் உலகம் அருவி மாறி அஞ்சுவரக் கருகிப் பெரு வறம் கூர்ந்த வேனில் காலைப் பசித்த ஆயத்துப் பயன் நிரை தருமார் பூ வாள் கோவலர் பூ உடன் உதிரக் கொய்து கட்டழித்த வேங்கையின் மெல் இயல் மகளிரும் இழை களைந்தனரே &119 - கரும்பிள்ளைப் பூதனார் #1 பரிபாடல் 10 வையை - கரும்பிள்ளைப் பூதனார் **இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார் **பண் :: பாலையாழ் மலை வரை மாலை அழி பெயல் காலை செல வரை காணாக் கடல் தலைக்கூட நில வரை அல்லல் நிழத்த விரிந்த பல உறு போர்வைப் பரு மணல் மூஉய் வரி அரி ஆணு முகிழ் விரி சினைய மாம் தீம் தளிரொடு வாழை இலை மயக்கி ஆய்ந்து அளவா ஓசை அறையூஉப் பறை அறையப் போந்தது வையைப் புனல் புனல் மண்டி ஆடல் புரிவான் சனம் மண்டி தாளித நொய் நூல் சரணத்தர் மேகலை ஏணிப்படுகால் இறுகிறுகத் தாள் இடீஇ நெய்த்தோர் நிற அரக்கின் நீரெக்கி யாவையும் முத்து நீர்ச் சாந்து அடைந்த மூஉய்த் தத்திப் புக அரும் பொங்கு உளைப் புள் இயல் மாவும் மிக வரினும் மீது இனிய வேழப் பிணவும் அகவரும் பாண்டியும் அத்திரியும் ஆய் மாச் சகடமும் தண்டு ஆர் சிவிகையும் பண்ணி வகைவகை ஊழூழ் கதழ்பு மூழ்த்து ஏறி முதியர் இளையர் முகைப் பருவத்தர் வதி மண வம்பு அலர் வாய் அவிழ்ந்து அன்னார் இரு திரு மாந்தரும் இன்னினியோரும் விரவு நரையோரும் வெறு நரையோரும் பதிவத மாதர் பரத்தையர் பாங்கர் அதிர் குரல் வித்தகர் ஆக்கிய தாள விதி கூட்டிய இய மென் நடை போலப் பதி எதிர் சென்று பரூஉக் கரை நண்ணி நீர் அணி காண்போர் நிரை மாடம் ஊர்குவோர் பேர் அணி நிற்போர் பெரும் பூசல் தாக்குவோர் மா மலி ஊர்வோர் வயப் பிடி உந்துவோர் வீ மலி கான்யாற்றின் துருத்தி குறுகித் தாம் வீழ்வார் ஆகம் தழுவுவோர் தழுவு எதிராது யாமக் குறை ஊடல் இன் நசைத் தேன் நுகர்வோர் காமக் கணிச்சியால் கையறவு வட்டித்து சேமத் திரை வீழ்த்து சென்று அமளி சேர்குவோர் தாம் வேண்டு காதல் கணவர் எதிர்ப்படப் பூ மேம்பாடு உற்ற புனை சுரும்பின் சேம மட நடைப் பாட்டியர்த் தப்பித் தடை இறந்து தாம் வேண்டும் பட்டினம் எய்திக் கரை சேரும் ஏமுறு நாவாய் வரவு எதிர்கொள்வார் போல் யாம் வேண்டும் வையைப் புனல் எதிர்கொள் கூடல் ஆங்க அணி நிலை மாடத்து அணி நின்ற பாங்காம் மடப் பிடி கண்டு வயக் கரி மாலுற்று நடத்த நடவாது நிற்ப மடப் பிடி அன்னம் அனையாரோடு ஆயா நடைக் கரி மேல் செல் மனம் மாலுறுப்பச் சென்று எழில் மாடத்துக் கை புனை கிளர் வேங்கை காணிய வெருவுற்று மை புரை மடப் பிடி மட நல்லார் விதிர்ப்புறச் செய்தொழில் கொள்ளாது மதி செத்துச் சிதைதரக் கூம் கை மத_மாக் கொடும் தோட்டி கை நீவி நீங்கும் பதத்தால் உருமுப் பெயர்த்தந்து வாங்கி முயங்கி வயப் பிடி கால்கோத்துச் சிறந்தார் நடுக்கம் சிறந்தார் களையல் இதையும் களிறும் பிணையும் இரியச் சிதையும் கலத்தைப் பயினால் திருத்தும் திசை அறி நீகானும் போன்ம் பருக் கோட்டு யாழ்ப் பக்கம் பாடலோடு ஆடல் அருப்பம் அழிப்ப அழிந்த மனக்கோட்டையர் ஒன்றோடு இரண்டா முன் தேறார் வென்றியின் பல் சனம் நாணிப் பதைபதைப்பு மன்னவர் தண்டம் இரண்டும் தலைஇத் தாக்கி நின்றவை ஒன்றியும் உடம்பாடு ஒலி எழுதற்கு அஞ்சி நின்ற நிகழ்ச்சியும் போன்ம் காமம் கனைந்து எழ கண்ணின் களி எழ ஊர் மன்னும் அஞ்சி ஒளிப்பார் அவர் நிலை கள்ளின் களி எழக் காத்து ஆங்கு அலர் அஞ்சி உள்ளம் உளை எழ ஊக்கத்தான் உள்ளுள் பரப்பி மதர் நடுக்கிப் பார் அலர் தூற்றக் கரப்பார் களி மதரும் போன்ம் கள்ளொடு காமம் கலந்து கரை வாங்கும் வெள்ளம் தரும் இப் புனல் புனல் பொருது மெலிந்தார் திமில் விடக் கனல் பொருத அகிலின் ஆவி கா எழ நகில் முகடு மெழுகிய அளறு மடை திறந்து திகை முழுது கமழ முகில் அகடு கழி மதியின் உறை கழி வள்ளத்து உறு நறவு வாக்குநர் அரவு செறி உவவு மதி என அங்கையில் தாங்கி ஏறி மகர வலயம் அணி திகழ் நுதலியர் மதி உண் அர_மகள் என ஆம்பல் வாய் மடுப்ப மீப்-பால் வெண் துகில் போர்க்குநர் பூப் பால் வெண் துகில் சூழ்ப்பக் குழல் முறுக்குநர் செம் குங்குமச் செழும் சேறு பங்கம் செய் அகில் பல பளிதம் மறுகுபட அறை புரை அறு குழவியின் அவி அமர் அழல் என அரைக்குநர் நத்தொடு நள்ளி நடை இறவு வய வாளை வித்தி அலையில் விளைக பொலிக என்பார் இல்லது நோக்கி இளிவரவு கூறா முன் நல்லது வெஃகி வினை செய்வார் மண் ஆர் மணியின் வணர் குரல் வண்டு ஆர்ப்பத் தண் அம் துவர் பல ஊட்டிச் சலம் குடைவார் எண்ணெய் கழல இழை துகள் பிசைவார் மாலையும் சாந்தும் மதமும் இழைகளும் கோலம்கொள நீர்க்குக் கூட்டுவார் அப் புனல் உண்ணா நறவினை ஊட்டுவார் ஒண்_தொடியார் வண்ணம் தெளிர முகமும் வளர் முலைக் கண்ணும் கழியச் சிவந்தன அன்ன வகை ஆட்டு அயர்ந்து அரிபடும் ஐ விரை மாண் பகழி அரம் தின் வாய் போன்ம் போன்ம் போன்ம் பின்னும் மலர்க் கண் புனல் தண்டித் தண்டின் தாய்ச் செல்வாரும் கண்டல் தண் தாது திரை நுரை தூவாரும் வெய்ய திமிலின் விரை புனலோடு ஓய்வாரும் மெய்யது உழவின் எதிர் புனல் மாறு ஆடிப் பைய விளையாடுவாரும் மென் பாவையர் செய்த பூம் சிற்றடிசில் இட்டு உண்ண ஏற்பார் இடுவார் மறுப்பார் சிறுகு இடையார் பந்தும் கழங்கும் பல களவு கொண்டு ஓடி அம் தண் கரை நின்று பாய்வாராய் மைந்தர் ஒளிறு இலங்கு எஃகொடு வாள் மாறு உழக்கிக் களிறு போருற்ற களம் போல நாளும் தெளிவு இன்று தீம் நீர்ப் புனல் மதி மாலை மால் இருள் கால் சீப்பக் கூடல் வதி மாலை மாறும் தொழிலால் புது மாலை நாள்_அணி நீக்கி நகை மாலைப் பூ வேய்ந்து தோள் அணி தோடு சுடர் இழை நித்திலம் பாடுவார் பாடல் பரவல் பழிச்சுதல் ஆடுவார் ஆடல் அமர்ந்த சீர்ப் பாணி நல்ல கமழ் தேன் அளி வழக்கம் எல்லாமும் பண் தொடர் வண்டு பரிய எதிர்வந்து ஊதக் கொண்டிய வண்டு கதுப்பின் குரல் ஊதத் தென்திசை நோக்கித் திரிதர்வாய் மண்டு கால் சார்வா நளிர் மலைப் பூம் கொடித் தங்குபு உகக்கும் பனி வளர் ஆவியும் போன்ம் மணிமாடத்து உள் நின்று தூய பனி நீருடன் கலந்து கால் திரிய ஆர்க்கும் புகை இலம்படு புலவர் ஏற்ற கை ஞெமரப் பொலம் சொரி வழுதியின் புனல் இறை பரப்பிச் செய்யில் பொலம் பரப்பும் செய்வினை ஓயற்க வருந்தாது வரும் புனல் விருந்து அயர் கூடல் அரும் கறை அறை இசை வயிரியர் உரிமை ஒருங்கு அமர் ஆயமொடு ஏத்தினர் தொழவே &120 - கருவூர்க் கிழார் #1 குறுந்தொகை 170 குறிஞ்சி - கருவூர்க் கிழார் பலரும் கூறுக அஃது அறியாதோரே அருவி தந்த நாள்_குரல் எருவை கயம் நாடு யானை கவளம் மாந்தும் மலை கெழு நாடன் கேண்மை தலைபோகாமை நற்கு அறிந்தனென் யானே &121 - கருவூர்க் கண்ணம்பாளனார் #1 அகநானூறு 180 நெய்தல் - கருவூர்க் கண்ணம்பாளனார் நகை நனி உடைத்தால் தோழி தகை மிக கோதை ஆயமொடு குவவு மணல் ஏறி வீ ததை கானல் வண்டல் அயர கதழ் பரித் திண் தேர் கடைஇ வந்து தண் கயத்து அமன்ற ஒண் பூம் குவளை அரும்பு அலைத்து இயற்றிய சுரும்பு ஆர் கண்ணி பின்னுப் புறம் தாழக் கொன்னே சூட்டி நல் வரல் இள முலை நோக்கி நெடிது நினைந்து நில்லாது பெயர்ந்தனன் ஒருவன் அதற்கே புலவு நாறு இரும் கழி துழைஇப் பல உடன் புள் இறை கொண்ட முள் உடை நெடும் தோட்டுத் தாழை மணந்து ஞாழலொடு கெழீஇப் படப்பை நின்ற முடத் தாள் புன்னைப் பொன் நேர் நுண் தாது நோக்கி என்னும் நோக்கும் இவ் அழுங்கல் ஊரே #2 அகநானூறு 263 பாலை - (கருவூர்க்) கண்ணம்பாளனார் தயங்கு திரைப் பெரும் கடல் உலகு தொழத் தோன்றி வயங்கு கதிர் விரிந்த உரு கெழு மண்டிலம் கயம் கண் வறப்பப் பாஅய் நல் நிலம் பயம் கெடத் திருகிய பைது அறு காலை வேறு பல் கவலைய வெருவரு வியன் காட்டு ஆறு செல் வம்பலர் வரு திறம் காண்மார் வில் வல் ஆடவர் மேல் ஆள் ஒற்றி நீடு நிலை யாஅத்துக் கோடு கொள் அரும் சுரம் கொண்டனன் கழிந்த வன்கண் காளைக்கு அவள் துணிவு அறிந்தனென் ஆயின் அன்னோ ஒளிறு வேல் கோதை ஓம்பிக் காக்கும் வஞ்சி அன்ன என் வள நகர் விளங்க இனிதினின் புணர்க்குவென்-மன்னோ துனி இன்று திரு நுதல் பொலிந்த என் பேதை வரு முலை முற்றத்து ஏமுறு துயிலே #3 நற்றிணை148 பாலை - கள்ளம்பாளனார் வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும் நீ அவண் வருதல் ஆற்றாய் எனத் தாம் தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர் இன்றே நெடும் கயம் புரிந்த நீர் இல் நீள் இடைச் செம் கால் மராஅத்து அம் புடைப் பொருந்தி வாங்கு சிலை மறவர் வீங்கு நிலை அஞ்சாது கல் அளைச் செறிந்த வள் உகிர்ப் பிணவின் இன் புனிற்று இடும்பை தீரச் சினம் சிறந்து செம் கண் இரும் புலிக் கோள் வல் ஏற்றை உயர் மருப்பு ஒருத்தல் புகர்_முகம் பாயும் அரும் சுரம் இறப்ப என்ப வருந்தேன் தோழி வாய்க்க அவர் செலவே &122 - கருவூர்க் க(ந்)தப்பிள்ளைச் சாத்தனார் #1 அகநானூறு 309 பாலை - கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் வய வாள் எறிந்து வில்லின் நீக்கி பயம் நிரை தழீஇய கடுங்கண் மழவர் அம்பு சேண் படுத்து வன்புலத்து உய்த்து எனத் தெய்வம் சேர்ந்த பராரை வேம்பில் கொழுப்பு ஆ எறிந்து குருதி தூஉய்ப் புலவுப் புழுக்கு உண்ட வான் கண் அகல் அறைக் களிறு புறம் உரிஞ்சிய கரும் கால் இலவத்து அரலை வெண் காழ் ஆலியின் தாஅம் காடு மிக நெடிய என்னார் கோடியர் பெரும் படைக் குதிரை நல் போர் வானவன் திருந்து கழல் சேவடி நசைஇப் படர்ந்து ஆங்கு நாம் செலின் எவனோ தோழி காம்பின் வனை கழை உடைந்த கவண் விசைக் கடி இடிக் கனை சுடர் அமையத்து வழங்கல் செல்லாது இரவுப் புனம் மேய்ந்த உரவுச் சின வேழம் தண் பெரும் படாஅர் வெரூஉம் குன்று விலங்கு இயவின் அவர் சென்ற நாட்டே #2 நற்றிணை 343 பாலை - கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் முல்லை தாய கல் அதர்ச் சிறு நெறி அடையாது இருந்த அம் குடிச் சீறூர்த் தாது எரு மறுகின் ஆ புறம் தீண்டும் நெடு வீழ் இட்ட கடவுள் ஆலத்து உகு பலி அருந்திய தொகு விரல் காக்கை புன்கண் அந்திக் கிளை-வயின் செறிய படையொடு வந்த பையுள் மாலை இல்லை-கொல் வாழி தோழி நம் துறந்து அரும் பொருள் கூட்டம் வேண்டி பிரிந்து உறை காதலர் சென்ற நாட்டே #3 புறநானூறு 168 கருவூர்க் கந்தப்பிள்ளை சாத்தனார் **பாடப்பட்டோன் : பிட்டங் கொற்றன் அருவி ஆர்க்கும் கழை பயில் நனம் தலைக் கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள் கொழும் கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையொடு கடும் கண் கேழல் உழுத பூழி நல் நாள் வரு_பதம் நோக்கிக் குறவர் உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறுதினை முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார் மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால் மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி வான் கேழ் இரும் புடை கழாஅது ஏற்றிச் சாந்த விறகின் உவித்த புன்கம் கூதளம் கவினிய குளவி முன்றில் செழும் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும் ஊராக் குதிரைக் கிழவ கூர் வேல் நறை நார் தொடுத்த வேங்கை அம் கண்ணி வடி நவில் அம்பின் வில்லோர் பெரும கைவள் ஈகைக் கடு_மான் கொற்ற வையக வரைப்பில் தமிழகம் கேட்பப் பொய்யாச் செம் நா நெளிய ஏத்தி பாடுப என்ப பரிசிலர் நாளும் ஈயா மன்னர் நாண வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே &123 - கருவூர்க் கலிங்கத்தார் #1 அகநானூறு 183 பாலை - கருவூர்க் கலிங்கத்தார் குவளை உண்கண் கலுழவும் திருந்து_இழை திதலை அல்குல் அவ் வரி வாடவும் அத்தம் ஆர் அழுவம் நம் துறந்து அருளார் சென்று சேண் இடையர் ஆயினும் நன்றும் நீடலர் என்றி தோழி பாடு ஆன்று பனித் துறைப் பெரும் கடல் இறந்து நீர் பருகிக் குவவுத் திரை அருந்து கொள்ளைய குடக்கு ஏர்பு வயவுப் பிடி இனத்தின் வயின்வயின் தோன்றி இரும் கிளைக் கொண்மூ ஒருங்குடன் துவன்றி காலை வந்தன்றால் காரே மாலைக் குளிர் கொள் பிடவின் கூர் முகை அலரி வண்டு வாய் திறக்கும் தண்டா நாற்றம் கூதிர் அற்சிரத்து ஊதை தூற்ற பனி அலைக் கலங்கிய நெஞ்சமொடு வருந்துவம் அல்லமோ பிரிந்திசினோர் திறத்தே &124 - கருவூர்க் கோசனார் #1 நற்றிணை 214 பாலை - கருவூர்க் கோசனார் இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும் அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம் என வினை-வயின் பிரிந்த வேறுபடு கொள்கை அரும்பு அவிழ் அலரிச் சுரும்பு உண் பல் போது அணிய வருதும் நின் மணி இரும் கதுப்பு என எஞ்சா வஞ்சினம் நெஞ்சு உணக் கூறி மை சூழ் வெற்பின் மலை பல இறந்து செய்பொருட்கு அகன்ற செயிர் தீர் காதலர் கேளார்-கொல்லோ தோழி தோள இலங்கு வளை நெகிழ்த்த கலங்கு அஞர் எள்ளி நகுவது போல மின்னி ஆர்ப்பது போலும் இக் கார்ப் பெயல் குரலே &125 - கருவூர்ச் சேரமான் சாத்தனார் #1 குறுந்தொகை 268 நெய்தல் - கருவூர்ச் சேரமான் சாத்தனார் சேறிரோ எனச் செப்பலும் ஆற்றாம் வருவிரோ என வினவலும் வினவாம் யாங்குச் செய்வாம்-கொல் தோழி பாம்பின் பை உடை இரும் தலை துமிக்கும் ஏற்றொடு நடுநாள் என்னார் வந்து நெடு மென் பணைத் தோள் அடைந்திசினோரே &126 - கருவூர் நன்மார்பனார் #1 அகநானூறு 277 பாலை - கருவூர் நன்மார்பனார் தண் கதிர் மண்டிலம் அவிர் அறச் சாஅய்ப் பகல் அழி தோற்றம் போலப் பையென நுதல் ஒளி கரப்பவும் ஆள்வினை தருமார் தவல் இல் உள்ளமொடு எஃகு துணை ஆகக் கடையல் அம் குரல வாள் வரி உழுவை பேழ் வாய்ப் பிணவின் விழுப் பசி நோனாது இரும் பனம் செறும்பின் அன்ன பரூஉ மயிர்ச் சிறு கண் பன்றி வரு திறம் பார்க்கும் அத்தம் ஆர் அழுவத்து ஆங்கண் நனம் தலை பொத்து உடை மரத்த புகர் படு நீழல் ஆறு செல் வம்பலர் அசையுநர் இருக்கும் ஈரம் இல் வெம் சுரம் இறந்தோர் நம்-வயின் வாரா அளவை ஆய்_இழை கூர் வாய் அழல் அகைந்து அன்ன காமர் துதை மயிர் மனை உறை கோழி மறன் உடைச் சேவல் போர் புரி எருத்தம் போலக் கஞலிய பொங்கு அழல் முருக்கின் ஒண் குரல் மாந்திச் சிதர் சிதர்ந்து உகுத்த செவ்வி வேனில் வந்தன்று அம்ம தானே வாரார் தோழி நம் காதலோரே &127 - கருவூர்ப் பவுத்திரனார் #1 குறுந்தொகை 162 முல்லை - கருவூர்ப் பவுத்திரனார் கார் புறந்தந்த நீர் உடை வியன் புலத்துப் பல் ஆ புகுதரூஉம் புல்லென் மாலை முல்லை வாழியோ முல்லை நீ நின் சிறு வெண் முகையின் முறுவல் கொண்டனை நகுவை போலக் காட்டல் தகுமோ மற்று இது தமியோர்-மாட்டே &128 - கருவூர் பூதஞ்சாத்தனார் #1 அகநானூறு 50 நெய்தல் - கருவூர் பூதஞ்சாத்தனார் ** (இருவூர் பூதனார் மகனார் சாத்தனார்) கடல் பாடு அவிந்து தோணி நீங்கி நெடு நீர் இரும் கழிக் கடு_மீன் கலிப்பினும் வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும் மாண் இழை நெடும் தேர் பாணி நிற்பப் பகலும் நம்-வயின் அகலான் ஆகிப் பயின்று வரும் மன்னே பனி நீர்ச் சேர்ப்பன் இனியே மணப்பு அரும் காமம் தணப்ப நீந்தி வாராதோர் நமக்கு யாஅர் என்னாது மல்லல் மூதூர் மறையினை சென்று சொல்லின் எவனோ பாண எல்லி மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் துணை ஒன்று பிரியினும் துஞ்சா காண் எனக் கண் நிறை நீர் கொடு கரக்கும் ஒண் நுதல் அரிவை யான் என் செய்கோ எனவே &129 - கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார் #1 புறநானூறு 219 - கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதனார் **பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன் உள் ஆற்றுக் கவலை புள்ளி நீழல் முழூஉ வள்ளுரம் உணக்கும் மள்ள புலவுதி-மாதோ நீயே பலரால் அத்தை நின் குறி இருந்தோரே &130 - கல்பொரு சிறுநுரையார் #1 குறுந்தொகை 290 நெய்தல் - கல்பொரு சிறுநுரையார் காமம் தாங்கு-மதி என்போர் தாம் அஃது அறியலர்-கொல்லோ அனை மதுகையர்-கொல் யாம் எம் காதலர்க் காணேம் ஆயின் செறி துனி பெருகிய நெஞ்சமொடு பெருநீர்க் கல் பொரு சிறு நுரை போல மெல்லமெல்ல இல் ஆகுதுமே &131 - கல்லாடனார் #1 அகநானூறு 9 பாலை - கல்லாடனார் கொல் வினைப் பொலிந்த கூர்ம் குறும் புழுகின் வில்லோர் தூணி வீங்கப் பெய்த அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பைச் செப்பு அடர் அன்ன செம் குழை அகம்-தோறு இழுதின் அன்ன தீம் புழல் துய் வாய் உழுது காண் துளைய ஆகி ஆர் கழல்பு ஆலி வானின் காலொடு பாறித் துப்பின் அன்ன செம் கோட்டு இயவின் நெய்த்தோர் மீமிசை நிணத்தின் பரிக்கும் அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர் கொடு நுண் ஓதி மகளிர் ஓக்கிய தொடி மாண் உலக்கைத் தூண்டு உரல் பாணி நெடுமால் வரைய குடிஞையோடு இரட்டும் குன்று பின் ஒழியப் போகி உரம் துரந்து ஞாயிறு படினும் ஊர் சேய்த்து எனாது துனை பரி துரக்கும் துஞ்சாச் செலவின் எம்மினும் விரைந்து வல் எய்திப் பல் மாண் ஓங்கிய நல் இல் ஒரு சிறை நிலைஇ பாங்கர்ப் பல்லி படு-தொறும் பரவிக் கன்று புகு மாலை நின்றோள் எய்திக் கை கவியாச் சென்று கண் புதையாக் குறுகி பிடிக் கை அன்ன பின்னகம் தீண்டி தொடிக் கை தைவரத் தோய்ந்தன்று-கொல்லோ நாணொடு மிடைந்த கற்பின் வாள் நுதல் அம் தீம் கிளவிக் குறுமகள் மென் தோள் பெற நசைஇச் சென்ற என் நெஞ்சே #2 அகநானூறு 83 பாலை - கல்லாடனார் வலம் சுரி மராஅத்துச் சுரம் கமழ் புது வீச் சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடிக் கறை அடி மடப் பிடி கானத்து அலறக் களிற்றுக் கன்று ஒழித்த உவகையர் கலி சிறந்து கரும் கால் மராஅத்துக் கொழும் கொம்பு பிளந்து பெரும் பொளி வெண் நார் அழுந்துபடப் பூட்டி நெடும் கொடி நுடங்கும் நியம மூதூர் நறவு நொடை நல் இல் புதவு முதல் பிணிக்கும் கல்லா இளையர் பெருமகன் புல்லி வியன் தலை நல் நாட்டு வேங்கடம் கழியினும் சேயர் என்னாது அன்பு மிகக் கடைஇ எய்த வந்தனவால் தாமே நெய்தல் கூம்புவிடு நிகர் மலர் அன்ன ஏந்து எழில் மழைக் கண் எம் காதலி குணனே #3 அகநானூறு 113 பாலை - கல்லாடனார் நன்று அல் காலையும் நட்பின் கோடார் சென்று வழிப்படூஉம் திரிபு இல் சூழ்ச்சியின் புன் தலை மடப் பிடி அகவுநர் பெருமகன் மா வீசு வண் மகிழ் அஃதைப் போற்றிக் காப்புக் கைந்நிறுத்த பல் வேல் கோசர் இளம் கள் கமழும் நெய்தல் அம் செறுவின் வளம் கெழு நல் நாடு அன்ன என் தோள் மணந்து அழுங்கல் மூதூர் அலர் எடுத்து அரற்ற நல்காது துறந்த காதலர் என்றும் கல் பொரூஉ மெலியாப் பாடு இன் நோன் அடியன் அல்கு வன் சுரைப் பெய்த வல்சியர் இகந்தனர் ஆயினும் இடம் பார்த்துப் பகைவர் ஓம்பினர் உறையும் கூழ் கெழு குறும்பில் குவை இமில் விடைய வேற்று ஆ ஒய்யும் கனை இரும் சுருணைக் கனி காழ் நெடு வேல் விழவு அயர்ந்து அன்ன கொழும் பல் திற்றி எழாஅப் பாணன் நல் நாட்டு உம்பர் நெறி செல் வம்பலர்க் கொன்ற தெவ்வர் எறி படை கழீஇய சேய் அரிச் சில் நீர் அறு துறை அயிர் மணல் படுகரைப் போகிச் சேயர் என்றலின் சிறுமையுற்ற என் கையறு நெஞ்சத்து எவ்வம் நீங்க அழாஅம் உறைதலும் உரியம் பராரை அலங்கல் அம் சினைக் குடம்பை புல்லெனப் புலம் பெயர் மருங்கில் புள் எழுந்து ஆங்கு மெய் இவண் ஒழியப் போகி அவர் செய்வினை மருங்கில் செலீஇயர் என் உயிரே #4 அகநானூறு 171 பாலை - கல்லாடனார் நுதலும் நுண் பசப்பு இவரும் தோளும் அகல் மலை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த பணை எழில் அழிய வாடும் நாளும் நினைவல் மாது அவர் பண்பு என்று ஓவாது இனையல் வாழி தோழி புணர்வர் இலங்கு கோல் ஆய் தொடி நெகிழப் பொருள் புரிந்து அலந்தலை ஞெமையத்து அதர் அடைந்து இருந்த மால் வரைச் சீறூர் மருள் பல் மாக்கள் கோள் வல் ஏற்றை ஓசை ஓர்மார் திருத்திக் கொண்ட அம்பினர் நோன் சிலை எருத்தத்து இரீஇ இடம்-தொறும் படர்தலின் கீழ்ப்படு தாரம் உண்ணா மேல் சினைப் பழம் போல் சேற்ற தீம் புழல் உணீஇய கரும் கோட்டு இருப்பை ஊரும் பெரும் கை எண்கின் சுரன் இறந்தோரே #5 அகநானூறு 199 பாலை - கல்லாடனார் கரை பாய் வெண் திரை கடுப்பப் பல உடன் நிரை கால் ஒற்றலின் கல் சேர்பு உதிரும் வரை சேர் மராஅத்து ஊழ் மலர் பெயல் செத்து உயங்கல் யானை நீர் நசைக்கு அலமரச் சிலம்பி வலந்த வறும் சினை வற்றல் அலங்கல் உலவை அரி நிழல் அசைஇத் திரங்கு மரல் கவ்விய கையறு தொகுநிலை அரம் தின் ஊசித் திரள் நுதி அன்ன திண் நிலை எயிற்ற செந்நாய் எடுத்தலின் வளி முனைப் பூளையின் ஒய்யென்று அலறிய கெடு மான் இன நிரை தரீஇய கலையே கதிர் மாய் மாலை ஆண் குரல் விளிக்கும் கடல் போல் கானம் பிற்படப் பிறர் போல் செல்வேம் ஆயின் எம் செலவு நன்று என்னும் ஆசை உள்ளம் அசைவு இன்று துரப்ப நீ செலற்கு உரியை நெஞ்சே வேய் போல் தடையின மன்னும் தண்ணிய திரண்ட பெரும் தோள் அரிவை ஒழியக் குடாஅது இரும் பொன் வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம் பூண் நன்னன் பொருது களத்து ஒழிய வலம் படு கொற்றம் தந்த வாய் வாள் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் இழந்த நாடு தந்து அன்ன வளம் பெரிது பெறினும் வாரலென் யானே #6 அகநானூறு 209 பாலை - கல்லாடனார் தோளும் தொல் கவின் தொலைந்தன நாளும் அன்னையும் அரும் துயர் உற்றனள் அலரே பொன் அணி நெடும் தேர்த் தென்னர் கோமான் எழு உறழ் திணி தோள் இயல் தேர்ச் செழியன் நேரா எழுவர் அடிப்படக் கடந்த ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என ஆழல் வாழி தோழி அவரே மாஅல் யானை மறப் போர்ப் புல்லி காம்பு உடை நெடு வரை வேங்கடத்து உம்பர் அறை இறந்து அகன்றனர் ஆயினும் நிறை இறந்து உள்ளார் ஆதலோ அரிதே செவ் வேல் முள்ளூர் மன்னன் கழல் தொடிக் காரி செல்லா நல் இசை நிறுத்த வல் வில் ஓரிக் கொன்று சேரலர்க்கு ஈத்த செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லி நிலை பெறு கடவுள் ஆக்கிய பலர் புகழ் பாவை அன்ன நின் நலனே #7 அகநானூறு 333 பாலை - கல்லாடனார் யாஅ ஒண் தளிர் அரக்கு விதிர்த்து அன்ன நின் ஆக மேனி அம் பசப்பு ஊர அழிவு பெரிது உடையை ஆகி அவர்-வயின் பழி தலைத்தருதல் வேண்டுதி மொழி கொண்டு தாங்கல் ஒல்லுமோ மற்றே ஆங்கு நின் எவ்வம் பெருமை உரைப்பின் செய்பொருள் வயங்காது ஆயினும் பயம் கெடத் தூக்கி நீடலர் வாழி தோழி கோடையில் குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது தூம்பு உடைத் துய்த் தலை கூம்புபு திரங்கிய வேனில் வெளிற்றுப் பனை போலக் கை எடுத்து யானைப் பெரு நிரை வானம் பயிரும் மலைச் சேண் இகந்தனர் ஆயினும் நிலைபெயர்ந்து நாள் இடைப்படாமை வருவர் நமர் எனப் பயம் தரு கொள்கையின் நயம் தலைதிரியாது நின் வாய் இன் மொழி நல் வாயாக வருவர் ஆயினோ நன்றே வாராது அவணர் காதலர் ஆயினும் இவண் நம் பசலை மாய்தல் எளிது-மன்-தில்ல சென்ற தேஎத்துச் செய்வினை முற்றி மறுதரல் உள்ளத்தர் எனினும் குறுகு பெரு நசையொடு தூது வரப்பெறினே #8 குறுந்தொகை 260 பாலை - கல்லாடனார் குருகும் இரு விசும்பு இவரும் புதலும் வரி வண்டு ஊத வாய் நெகிழ்ந்தனவே சுரி வளைப் பொலிந்த தோளும் செற்றும் வருவர்-கொல் வாழி தோழி பொருவார் மண் எடுத்து உண்ணும் அண்ணல் யானை வண் தேர்த் தொண்டையர் வழை அமல் அடுக்கத்து கன்று இல் ஓர் ஆ விலங்கிய புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே #9 குறுந்தொகை 269 நெய்தல் - கல்லாடனார் சேய் ஆறு சென்று துனை பரி அசாவாது உசாவுநர்ப் பெறினே நன்று-மன்-தில்ல வயச் சுறா எறிந்த புண் தணிந்து எந்தையும் நீல் நிறப் பெரும் கடல் புக்கனன் யாயும் உப்பை மாறி வெண்ணெல் தரீஇய உப்பு விளை கழனிச் சென்றனள் அதனால் பனி இரும் பரப்பின் சேர்ப்பற்கு இனி வரின் எளியள் என்னும் தூதே #10 புறநானூறு 23 கல்லாடனார் **பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங் கானத்துச் செருவென்ற ** நெடுஞ்செழியன் வெளிறு இல் நோன் காழ்ப் பணை நிலை முனைஇக் களிறு படிந்து உண்டு எனக் கலங்கிய துறையும் கார் நறும் கடம்பின் பாசிலைத் தெரியல் சூர் நவை முருகன் சுற்றத்து அன்ன நின் கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர் கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில் கொள்_பதம் ஒழிய வீசிய புலனும் வடி நவில் நவியம் பாய்தலின் ஊர்-தொறும் கடி மரம் துளங்கிய காவும் நெடு நகர் வினை புனை நல் இல் வெவ் எரி நைப்பக் கனை எரி உரறிய மருங்கும் நோக்கி நண்ணார் நாண நாள்-தொறும் தலைச்சென்று இன்னும் இன்ன பல செய்குவன் யாவரும் துன்னல் போகிய துணிவினோன் என ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட கால முன்ப நின் கண்டனென் வருவல் அறு மருப்பு எழில் கலை புலிப்-பால் பட்டு எனச் சிறு மறி தழீஇய தெறி நடை மடப் பிணை பூளை நீடிய வெருவரு பறந்தலை வேளை வெண்பூக் கறிக்கும் ஆள் இல் அத்தம் ஆகிய காடே #11 புறநானூறு 25 - கல்லாடனார் **பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் **செருவென்ற நெடுஞ்செழியன் மீன் திகழ் விசும்பில் பாய் இருள் அகல ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது உரவுச் சினம் திருகிய உரு கெழு ஞாயிறு நிலவுத் திகழ் மதியமொடு நிலம் சேர்ந்து ஆஅங்கு உடல் அரும் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை அணங்கு அரும் பறந்தலை உணங்கப் பண்ணிப் பிணியுறு முரசம் கொண்ட காலை நிலை திரிபு எறியத் திண் மடை கலங்கிச் சிதைதல் உய்ந்தன்றோ நின் வேல் செழிய முலை பொலி அகம் உருப்ப நூறி மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல் ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர அவிர் அறல் கடுக்கும் அம் மென் குவை இரும் கூந்தல் கொய்தல் கண்டே #12 புறநானூறு 371 - கல்லாடனார் **பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் **செருவென்ற நெடுஞ்செழியன் அகன் தலை வையத்துப் புரவலர்க் காணாது மரம் தலைச் சேர்ந்து பட்டினி வைகிப் போது அவிழ் அலரி நாரின் தொடுத்துத் தயங்கு இரும் பித்தை பொலியச் சூடிப் பறையொடு தகைத்த கலப்பையென் முரவு வாய் ஆடுறு குழிசி பாடு இன்று தூக்கி மன்ற வேம்பின் ஒண் பூ உறைப்பக் குறை செயல் வேண்டா நசைஇய இருக்கையேன் அரிசி இன்மையின் ஆர் இடை நீந்திக் கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப வரு கணை வாளி அன்பு இன்று தலைஇ இரை முரைசு ஆர்க்கும் உரை சால் பாசறை வில் ஏர் உழவின் நின் நல் இசை உள்ளிக் குறைத்தலைப் படு பிணன் எதிரப் போர்பு அழித்து யானை எருத்தின் வாள் மடல் ஓச்சி அதரி திரித்த ஆள் உகு கடாவின் மதியத்து அன்ன என் விசியுறு தடாரி அகன் கண் அதிர ஆகுளி தொடாலின் பணை மருள் நெடும் தாள் பல் பிணர்த் தடக் கைப் புகர்_முக முகவைக்கு வந்திசின் பெரும களிற்றுக் கோட்டு அன்ன வால் எயிறு அழுத்தி விழுக்கொடு விரைஇய வெள் நிணச் சுவையினள் குடர்த் தலை மாலை சூடி உணத் தின ஆனாப் பெரு வளம் செய்தோன் வானத்து வயங்கு பல் மீனினும் வாழியர் பல என உரு கெழு பேய்_மகள் அயரக் குருதித் துகள் ஆடிய களம் கிழவோயே #13 புறநானூறு 385 - கல்லாடனார் **பாடப்பட்டோன்: அம்பர் கிழான் அருவந்தை வெள்ளி தோன்றப் புள்ளுக் குரல் இயம்பப் புலரி விடியல் பகடு பல வாழ்த்தித் தன் கடைத் தோன்றினும் இலனே பிறன் கடை அகன் கண் தடாரிப் பாடு கேட்டு அருளி வறன் யான் நீங்கல் வேண்டி என் அரை நிலம் தினச் சிதைந்த சிதாஅர் களைந்து வெளியது உடீஇ என் பசி களைந்தோனே காவிரி அணையும் தாழ் நீர் படப்பை நெல் விளை கழனி அம்பர் கிழவோன் நல் அருவந்தை வாழியர் புல்லிய வேங்கட விறல் வரைப்பட்ட ஓங்கல் வானத்து உறையினும் பலவே #14 புறநானூறு 391 - கல்லாடனார் **பாடப்பட்டோன்: பொறையாற்றுக் கிழான் தண் துளி பல பொழிந்து எழிலி இசைக்கும் விண்டு அனைய விண் தோய் பிறங்கல் முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ் வரப் பகடு தரு பெரு வளம் வாழ்த்திப் பெற்ற திருந்தா மூரி பரந்துபடக் கெண்டி அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும் வேங்கட வரைப்பின் வடபுலம் பசித்து என ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல் தீர்கை விடுக்கும் பண்பின முதுகுடி நனம் தலை மூதூர் வினவலின் முன்னும் வந்தோன் மருங்கிலன் இன்னும் அளியன் ஆகலின் பொருநன் இவன் என நின் உணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூறக் காண்கு வந்திசின் பெரும மாண் தக இரு நீர்ப் பெரும் கழி நுழை மீன் அருந்தும் துதைந்த தூவி அம் புதாஅம் சேக்கும் ததைந்த புன்னைச் செழு நகர் வரைப்பின் நெஞ்சு அமர் காதல் நின் வெய்யோளொடு இன் துயில் பெறுக-தில் நீயே வளம் சால் துளி பதன் அறிந்து பொழிய வேலி ஆயிரம் விளைக நின் வயலே #3 அகநானூறு 274 முல்லை - கல்லாடனார்(இடைக்காடனார்) இரு விசும்பு அதிர முழங்கி அர நலிந்து இகு பெயல் அழி துளி தலைஇ வானம் பருவம் செய்த பானாள் கங்குல் ஆடு தலைத் துருவின் தோடு ஏமார்ப்பக் கடை கோல் சிறு தீ அடைய மாட்டித் திண் கால் உறியன் பானையன் அதளன் நுண் பல் துவலை ஒரு திறம் நனைப்பத் தண்டு கால் ஊன்றிய தனி நிலை இடையன் மடி விடு வீளை கடிது சென்று இசைப்படத தெறி மறி பார்க்கும் குறுநரி வெரீஇ முள் உடைக் குறும் தூறு இரியப் போகும் தண் நறு புறவினதுவே நறு மலர் முல்லை சான்ற கற்பின் மெல் இயல் குறுமகள் உறைவு இன் ஊரே &132 - கவை மகனார் #1 குறுந்தொகை 324 நெய்தல் - கவை மகனார் கொடும் தாள் முதலை கோள் வல் ஏற்றை வழி வழக்கு அறுக்கும் கானல் அம் பெரும் துறை இன மீன் இரும் கழி நீந்தி நீ நின் நயன் உடைமையின் வருதி இவள் தன் மடன் உடைமையின் உவக்கும் யான் அது கவைமக நஞ்சு உண்டு ஆங்கு அஞ்சுவல் பெரும என் நெஞ்சத்தானே &133 - கழாத் தலையார் #1 புறநானூறு 62 - கழாத் தலையார் **பாடப்பட்டோர்: சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் **சோழன் வேற்ப·றடக் கைப் பெருவிறற் கிள்ளி வரு தார் தாங்கி அமர் மிகல் யாவது பொருது ஆண்டு ஒழிந்த மைந்தர் புண் தொட்டு குருதிச் செம் கை கூந்தல் தீட்டி நிறம் கிளர் உருவின் பேஎய்ப் பெண்டிர் எடுத்து எறி அனந்தல் பறை சீர் தூங்க பருந்து அருந்துற்ற தானையொடு செரு முனிந்து அறத்தின் மண்டிய மறப் போர் வேந்தர் தாம் மாய்ந்தனரே குடை துளங்கினவே உரை சால் சிறப்பின் முரசு ஒழிந்தனவே பல் நூறு அடுக்கிய வேறு படு பைம் ஞிலம் இடம் கெட ஈண்டிய வியன் கண் பாசறைக் களம் கொளற்கு உரியோர் இன்றித் தெறுவர உடன் வீழ்ந்தன்றால் அமரே பெண்டிரும் பாசடகு மிசையார் பனி நீர் மூழ்கார் மார்பகம் பொருந்தி ஆங்கு அமைந்தன்றே வாடாப் பூவின் இமையா நாட்டத்து நாற்ற உணவினோரும் ஆற்ற அரும் பெறல் உலகம் நிறைய விருந்து பெற்றனரால் பொலிக நும் புகழே #2 புறநானூறு 65 கழாஅத் தலையார் **பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சேரலாதன் மண் முழா மறப்பப் பண் யாழ் மறப்ப இரும் கண் குழிசி கவிழ்ந்து இழுது பறப்பச் சுரும்பு ஆர் தேறல் சுற்றம் மறப்ப உழவர் ஓதை மறப்ப விழவும் அகலுள் ஆங்கண் சீறூர் மறப்ப உவவுத் தலைவந்த பெரு நாள் அமையத்து இரு சுடர் தம்முள் நோக்கி ஒரு சுடர் புன்கண் மாலை மலை மறைந்து ஆங்குத் தன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த புறப்புண் நாணி மறத் தகை மன்னன் வாள் வடக்கிருந்தனன் ஈங்கு நாள் போல் கழியல ஞாயிற்றுப் பகலே #3 புறநானூறு 270 - கழாத்தலையார் பல் மீன் இமைக்கும் மாக விசும்பின் இரங்கு முரசின் இனம் சால் யானை நிலம் தவ உருட்டிய நேமியோரும் சமம் கண் கூடித் தாம் வேட்பவ்வே நறு விரை துறந்த நாறா நரைத் தலைச் சிறுவர் தாயே பேரில் பெண்டே நோகோ யானே நோக்கு-மதி நீயே மறப் படை நுவலும் அரிக் குரல் தண்ணுமை இன் இசை கேட்ட துன் அரும் மறவர் வென்றி தரு வேட்கையர் மன்றம் கொண்மார் பேர் அமர் உழந்த வெருவரு பறந்தலை விழு நவி பாய்ந்த மரத்தின் வாள் மிசைக் கிடந்த ஆண்மையோன்-திறத்தே #4 புறநானூறு 288 - கழாத்தலையார் மண் கொள வரிந்த வை நுதி மருப்பின் அண்ணல் நல் ஏறு இரண்டு உடன் மடுத்து வென்றதன் பச்சை சீவாது போர்த்த திண் பிணி முரசம் இடைப் புலத்து இரங்க ஆர் அமர் மயங்கிய ஞாட்பின் தெறுவர நெடு வேல் பாய்ந்த நாண் உடை நெஞ்சத்து அரு குறை ஆற்றி வீழ்ந்தான் மன்ற குருதியொடு துயல்வரும் மார்பின் முயக்கு இடை ஈயாது மொய்த்தன பருந்தே #5 புறநானூறு 289 - கழாத்தலையார் ஈரச் செவ்வி உதவின ஆயினும் பல் எருத்துள்ளும் நல் எருது நோக்கி வீறுவீறு ஆயும் உழவன் போலப் பீடு பெறு தொல் குடிப் பாடு பல தாங்கிய மூதிலாளருள்ளும் காதலின் தனக்கு முகந்து ஏந்திய பசும்பொன் மண்டை இவற்கு ஈக என்னும் அதுவும் அன்றிசினே கேட்டியோ வாழி பாண பாசறைப் பூக் கோள் இன்று என்று அறையும் மடி வாய்த் தண்ணுமை இழிசினன் குரலே #6 புறநானூறு 368 - கழாத்தலையார் **பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் களிறு முகந்து பெயர்குவம் எனினே ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போலக் கைம்_மா எல்லாம் கணை இடத் தொலைந்தன கொடுஞ்சி நெடும் தேர் முகக்குவம் எனினே கடும் பரி நல் மான் வாங்கு வயின் ஒல்கி நெடும் பீடு அழிந்து நிலம் சேர்ந்தனவே கொய் சுவல் புரவி முகக்குவம் எனினே மெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிது ஆகி வளி வழக்கு அறுத்த வங்கம் போலக் குருதி அம் பெரும் புனல் கூர்ந்தனவே ஆங்க முகவை இன்மையின் உகவை இன்றி இரப்போர் இரங்கும் இன்னா வியன் களத்து ஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவ கடாஅ யானைக் கால் வழி அன்ன என் தெடாரித் தெண் கண் தெளிர்ப்ப ஒற்றிப் பாடி வந்தது எல்லாம் கோடியர் முழவு மருள் திரு மணி மிடைந்த நின் அரவு உறழ் ஆரம் முகக்குவம் எனவே &134 - கழார்க் கீரன் எயிற்றியனார் #1 குறுந்தொகை 330 மருதம் - கழார்க் கீரன் எயிற்றியனார் நலம் தகைப் புலைத்தி பசை தோய்த்து எடுத்துத் தலைப் புடைப் போக்கித் தண் கயத்து இட்ட நீரின் பிரியாப் பரூஉத் திரி கடுக்கும் பேர் இலைப் பகன்றைப் பொதி அவிழ் வான் பூ இன் கடும் கள்ளின் மணம் இல கமழும் புன்கண் மாலையும் புலம்பும் இன்று-கொல் தோழி அவர் சென்ற நாட்டே &135 - கழார்க் கீரன் எயிற்றியார் #1 அகநானூறு 163 பாலை - கழார்க்கீரன் எயிற்றியார் விண் அதிர்பு தலைஇய விரவு மலர் குழையத் தண் மழை பொழிந்த தாழ் பெயல் கடை நாள் எமியம் ஆகத் துனி உளம் கூரச் சென்றோர் உள்ளி சில் வளை நெகிழப் பெரு நசை உள்ளமொடு வரு நசை நோக்கி விளியும் எவ்வமொடு அளியள் என்னாது களிறு உயிர்த்து அன்ன கண் அழி துவலை முளரி கரியும் முன்பனிப் பானாள் குன்று நெகிழ்ப்பு அன்ன குளிர் கொள் வாடை எனக்கே வந்தனை போறி புனல் கால் அயிர் இடு குப்பையின் நெஞ்சு நெகிழ்ந்து அவிழக் கொடியோர் சென்ற தேஎத்து மடியாது இனையை ஆகி செல்-மதி வினை விதுப்புறுநர் உள்ளலும் உண்டே #2 அகநானூறு 217 பாலை - கழார்க்கீரன் எயிற்றியார் பெய்து புறம் திறந்த பொங்கல் வெண் மழை எஃகுறு பஞ்சித் துய்ப்பட்டு அன்ன துவலை தூவல் கழிய அகல் வயல் நீடு கழைக் கரும்பின் கணைக் கால் வான் பூக் கோடைப் பூளையின் வாடையொடு துயல்வர பாசிலை பொதுளிய புதல்-தொறும் பகன்றை நீல் உண் பச்சை நிறம் மறைத்து அடைச்சிய தோல் எறி பாண்டிலின் வாலிய மலரக் கோழ் இலை அவரைக் கொழு முகை அவிழ ஊழுறு தோன்றி ஒண் பூத் தளைவிடப் புலம்-தொறும் குருகு இனம் நரலக் கல்லென அகன்று உறை மகளிர் அணி துறந்து நடுங்க அற்சிரம் வந்தன்று அமைந்தன்று இது என எப் பொருள் பெறினும் பிரியன்-மினோ எனச் செப்புவல் வாழியோ துணையுடையீர்க்கே நல்காக் காதலர் நலன் உண்டு துறந்த பாழ் படு மேனி நோக்கி நோய் பொர இணர் இறுபு உடையும் நெஞ்சமொடு புணர்வு வேட்டு எயிறு தீப் பிறப்பத் திருகி நடுங்குதும் பிரியின் யாம் கடும் பனி உழந்தே #3 அகநானூறு 235 பாலை - கழார்க்கீரன் எயிற்றியார் அம்ம வாழி தோழி பொருள் புரிந்து உள்ளார்-கொல்லோ காதலர் உள்ளியும் சிறந்த செய்தியின் மறந்தனர்-கொல்லோ பயன் நிலம் குழைய வீசிப் பெயல் முனிந்து விண்டு முன்னிய கொண்டல் மா மழை மங்குல் அற்கமொடு பொங்குபு துளிப்ப வாடையொடு நிவந்த ஆய் இதழ்த் தோன்றி சுடர் கொள் அகலின் சுருங்கு பிணி அவிழச் சுரி முகிழ் முசுண்டைப் பொதி அவிழ் வான் பூ விசும்பு அணி மீனின் பசும் புதல் அணியக் களவன் மண் அளை செறிய அகல் வயல் கிளை விரி கரும்பின் கணைக் கால் வான் பூ மாரி அம் குருகின் ஈரிய குரங்க நனி கடும் சிவப்பொடு நாமம் தோற்றிப் பனி கடிகொண்ட பண்பு இல் வாடை மருளின் மாலையொடு அருள் இன்றி நலிய நுதல் இறைகொண்ட அயல் அறி பசலையொடு தொல் நலம் சிதையச் சாஅய் என்னள்-கொல் அளியள் என்னாதோரே #4 அகநானூறு 294 முல்லை - கழார்க் கீரன் எயிற்றியார் மங்குல் மா மழை விண் அதிர்பு முழங்கித் துள்ளு பெயல் கழிந்த பின்றைப் புகை உறப் புள்ளி நுண் துவலைப் பூ அகம் நிறையக் காதலர்ப் பிரிந்த கையறு மகளிர் நீர் வார் கண்ணின் கருவிளை மலரத் துய்த் தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை நெய் தோய்த்து அன்ன நீர் நனை அம் தளிர் இரு வகிர் ஈருளின் ஈரிய துயல்வர அவரைப் பைம் பூப் பயில அகல் வயல் கதிர் வார் காய் நெல் கட்கு இனிது இறைஞ்சக் சிதர் சினை தூங்கும் அற்சிர அரைநாள் காய் சின வேந்தன் பாசறை நீடி நம் நோய் அறியா அறனிலாளர் இ நிலை களைய வருகுவர்-கொல் என ஆனாது எறிதரும் வாடையொடு நோனேன் தோழி என் தனிமையானே #5 குறுந்தொகை 35 மருதம் - கழார் கீரன் எயிற்றியார் நாணில-மன்ற எம் கண்ணே நாள் நேர்பு சினைப் பசும் பாம்பின் சூல் முதிர்ப்பு அன்ன கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ நுண் உறை அழி துளி தலைஇய தண் வரல் வாடையும் பிரிந்திசினோர்க்கு அழலே #6 குறுந்தொகை 261 குறிஞ்சி - கழார் கீரன் எயிற்றியார் பழ மழை பொழிந்து என பதன் அழிந்து உருகிய சிதட்டுக்காய் எண்ணின் சில் பெயல் கடை நாள் சேற்று நிலை முனைஇய செம் கண் காரான் நள்ளென் யாமத்து ஐயெனக் கரையும் அஞ்சுவரு பொழுதினானும் என் கண் துஞ்சா வாழி தோழி காவலர் கணக்கு ஆய் வகையின் வருந்தி என் நெஞ்சு புண் உற்ற விழுமத்தானே #7 நற்றிணை 281 பாலை - கழார்க் கீரன் எயிற்றியார் மாசு இல் மரத்த பலி உண் காக்கை வளி பொரு நெடும் சினை தளியொடு தூங்கி வெல் போர்ச் சோழர் கழாஅர்க் கொள்ளும் நல் வகை மிகு பலிக் கொடையோடு உகுக்கும் அடங்காச் சொன்றி அம் பல் யாணர் விடக்கு உடைப் பெரும் சோறு உள்ளுவன இருப்ப மழை அமைந்து உற்ற மால் இருள் நடுநாள் தாம் நம் உழையர் ஆகவும் நாம் நம் பனிக் கடுமையின் நனி பெரிது அழுங்கித் துஞ்சாம் ஆகலும் அறிவோர் அன்பிலர் தோழி நம் காதலோரே #8 நற்றிணை 312 பாலை - கழார்க் கீரன் எயிற்றியார் நோகோ யானே நோம் என் நெஞ்சே பனிப் புதல் ஈங்கை அம் குழை வருடச் சிறை குவிந்து இருந்த பைதல் வெண் குருகு பார்வை வேட்டுவன் காழ் களைந்து அருள மாரி நின்ற மையல் அற்சிரம் யாம் தன் உழையம் ஆகவும் தானே எதிர்த்த தித்தி முற்றா முலையள் கோடைத் திங்களும் பனிப்போள் வாடைப் பெரும் பனிக்கு என்னள்-கொல் எனவே &136 - கழைதின் யானையார் #1 புறநானூறு 204 - கழைதின் யானையார் **பாடப்பட்டோன்: வல் வில் ஓரி ஈ என இரத்தல் இழிந்தன்று அதன்எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன்எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று தெண் நீர்ப் பரப்பின் இமிழ் திரைப் பெரும் கடல் உண்ணார் ஆகுப நீர் வேட்டோரே ஆவும் மாவும் சென்று உணக் கலங்கி சேற்றோடு பட்ட சிறுமைத்து ஆயினும் உண் நீர் மருங்கின் அதர் பல ஆகும் புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை உள்ளிச் சென்றோர் பழி அலர் அதனால் புலவேன் வாழியர் ஓரி விசும்பின் கருவி வானம் போல வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே &137 - கள்ளிக்குடிப் பூதம் புல்லனார் #1 நற்றிணை 333 பாலை - கள்ளிக்குடிப் பூதம் புல்லனார் மழை தொழில் உலந்து மா விசும்பு உகந்து எனக் கழை கவின் அழிந்த கல் அதர்ச் சிறு நெறிப் பரல் அவல் ஊறல் சிறு நீர் மருங்கின் பூ நுதல் யானையொடு புலி பொருது உண்ணும் சுரன் இறந்து அரிய என்னார் உரன் அழிந்து உள் மலி நெஞ்சமொடு வண்மை வேண்டி அரும் பொருட்கு அகன்ற காதலர் முயக்கு எதிர்ந்து திருந்து_இழைப் பணைத் தோள் பெறுநர் போலும் நீங்குக-மாதோ நின் அவலம் ஓங்கு மிசை உயர் புகழ் நல் இல் ஒண் சுவர்ப் பொருந்தி நயவரு குரல பல்லி நள்ளென் யாமத்து உள்ளு-தொறும் படுமே &138 - கள்ளில் ஆத்திரையனார் #1 குறுந்தொகை 293 மருதம் - கள்ளில் ஆத்திரையனார் கள்ளின் கேளிர் ஆர்த்திய உள்ளூர்ப் பாளை தந்த பஞ்சி அம் குறும் காய் ஓங்கு இரும் பெண்ணை நுங்கொடு பெயரும் ஆதி அருமன் மூதூர் அன்ன அய வெள்_ஆம்பல் அம் பகை நெறித் தழை தித்திக் குறங்கின் ஊழ் மாறு அலைப்ப வருமே சே_இழை அந்தில் கொழுநன் காணிய அளியேன் யானே #2 புறநானூறு 175 - கள்ளில் ஆத்திரையனார் **பாடப்பட்டோன் : ஆதனுங்கன் எந்தை வாழி ஆதனுங்க என் நெஞ்சம் திறப்போர் நின் காண்குவரே நின் யான் மறப்பின் மறக்கும் காலை என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும் என் யான் மறப்பின் மறக்குவென் வென் வேல் விண் பொரு நெடும் குடைக் கொடித் தேர் மோரியர் திண் கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த உலக இடைகழி அறை வாய் நிலைஇய மலர் வாய் மண்டிலத்து அன்ன நாளும் பலர் புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே #3 புறநானூறு 389 - கள்ளில் ஆத்திரையனாரி **பாடப்பட்டோன்: ஆதனுங்கன் நீர் நுங்கின் கண் வலிப்பக் கான வேம்பின் காய் திரங்கக் கயம் களியும் கோடை ஆயினும் ஏலா வெண்பொன் போகுறு காலை எம்மும் உள்ளுமோ பிள்ளை அம் பொருநன் என்று ஈத்தனனே இசை சால் நெடுந்தகை இன்று சென்று எய்தும் வழியனும் அல்லன் செலினே காணா வழியனும் அல்லன் புன் தலை மடப் பிடி இனையக் கன்று தந்து குன்றக நல் ஊர் மன்றத்துப் பிணிக்கும் கல் இழி அருவி வேங்கடம் கிழவோன் செல்வுழி எழாஅ நல் ஏர் முதியன் ஆதனுங்கன் போல நீயும் பசித்த ஒக்கல் பழங்கண் வீட வீறு சால் நல் கலம் நல்கு-மதி பெரும ஐது அகல் அல்குல் மகளிர் நெய்தல் கேளன்மார் நெடும் கடையானே &139 - காக்கை பாடினியார் நச்செள்ளையார் #1 குறுந்தொகை 210 முல்லை - காக்கை பாடினியார் நச்செள்ளையார் திண் தேர் நள்ளி கானத்து அண்டர் பல் ஆ பயந்த நெய்யின் தொண்டி முழுது உடன் விளைந்த வெண்ணெல் வெம் சோறு எழு கலத்து ஏந்தினும் சிறிது என் தோழி பெரும் தோள் நெகிழ்த்த செல்லற்கு விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே ** பதிற்றுப்பத்து - ஆறாம் பத்து - காக்கைபாடினியார் நச்செள்ளையார் **பாடப்பட்டோன்: ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை #2 பதிற்றுப்பத்து - பாட்டு 51 - காக்கைபாடினியார் நச்செள்ளையார் **பெயர்: வடுவடு நுண்ணயிர் **துறை: வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் **வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் துளங்கு நீர் வியலகம் கலங்கக் கால் பொர விளங்கு இரும் புணரி உரும் என முழங்கும் கடல் சேர் கானல் குடபுலம் முன்னிக் கூவல் துழந்த தடம் தாள் நாரை குவி இணர் ஞாழல் மாச் சினைச் சேக்கும் வண்டு இறைகொண்ட தண் கடல் பரப்பின் அடும்பு அமல் அடைகரை அலவன் ஆடிய வடு அடு நுண் அயிர் ஊதை உஞற்றும் தூ இரும் போந்தைப் பொழில் அணி பொலிதந்து இயலினள் ஒல்கினள் ஆடும் மட_மகள் வெறியுறு நுடக்கம் போலத் தோன்றிப் பெரு மலை வயின்வயின் விலங்கும் அரு மணி அர வழங்கும் பெரும் தெய்வத்து வளை ஞரலும் பனிப் பௌவத்துக் குண குட கடலோடு ஆயிடை மணந்த பந்தர் அந்தரம் வேய்ந்து வண் பிணி அவிழ்ந்த கண் போல் நெய்தல் நனையுறு நறவின் நாடு உடன் கமழச் சுடர் நுதல் மட நோக்கின் வாள் நகை இலங்கு எயிற்று அமிழ்து பொதி துவர் வாய் அசை நடை விறலியர் பாடல் சான்று நீடினை உறைதலின் வெள் வேல் அண்ணல் மெல்லியன் போன்ம் என உள்ளுவர்-கொல்லோ நின் உணராதோரே மழை தவழும் பெரும் குன்றத்துச் செயிர் உடைய அரவு எறிந்து கடும் சினத்த மிடல் தபுக்கும் பெரும் சினப் புயல் ஏறு அனையை தாங்குநர் தடக் கை யானைத் தொடிக் கோடு துமிக்கும் எஃகு உடை வலத்தர் நின் படை வழி வாழ்நர் மறம் கெழு போந்தை வெண் தோடு புனைந்து நிறம் பெயர் கண்ணி பருந்து ஊறு அளப்பத் தூக் கணை கிழித்த மாக் கண் தண்ணுமை கைவல் இளையர் கை அலை அழுங்க மாற்று அரும் சீற்றத்து மா இரும் கூற்றம் வலை விரித்து அன்ன நோக்கலை கடியையால் நெடுந்தகை செருவத்தானே #3 பதிற்றுப்பத்து பாட்டு 52 - காக்கைபாடினியார் நச்செள்ளையார் **பெயர்: சிறுசெங்குவளை **துறை: குரவைநிலை **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் கொடி நுடங்கு நிலைய கொல் களிறு மிடைந்து வடி மணி நெடும் தேர் வேறு புலம் பரப்பி அரும் கலம் தரீஇயர் நீர் மிசை நிவக்கும் பெரும் கலி வங்கம் திசை திரிந்து ஆங்கு மை அணிந்து எழுதரு மா இரும் பல் தோல் மெய் புதை அரணம் எண்ணாது எஃகு சுமந்து முன் சமத்து எழுதரும் வன்கண் ஆடவர் தொலையாத் தும்பை தெவ்-வழி விளங்க உயர்_நிலை_உலகம் எய்தினர் பலர் பட நல் அமர் கடந்த நின் செல் உறழ் தடக் கை இரப்போர்க்குக் கவிதல் அல்லதை இரைஇய மலர்பு அறியா எனக் கேட்டிகும் இனியே சுடரும் பாண்டில் திரு நாறு விளக்கத்து முழா இமிழ் துணங்கைக்குத் தழூஉப் புணை ஆகச் சிலைப்பு வல் ஏற்றின் தலைக் கை தந்து நீ நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகி உயவும் கோதை ஊரல் அம் தித்தி ஈர் இதழ் மழைக் கண் பேர் இயல் அரிவை ஒள் இதழ் அவிழ் அகம் கடுக்கும் சீறடிப் பல் சில கிண்கிணி சிறு பரடு அலைப்பக் கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று நின் எறியர் ஓக்கிய சிறு செங்குவளை ஈ என இரப்பவும் ஒல்லாள் நீ எமக்கு யாரையோ எனப் பெயர்வோள் கையதை கதுமென உருத்த நோக்கமோடு அது நீ பாஅல் வல்லாய் ஆயினை பாஅல் யாங்கு வல்லுநையோ வாழ்க நின் கண்ணி அகல் இரு விசும்பில் பகல் இடம் தரீஇயர் தெறு கதிர் திகழ்தரும் உரு கெழு ஞாயிற்று உருபு கிளர் வண்ணம் கொண்ட வான் தோய் வெண்குடை வேந்தர்-தம் எயிலே #4 பதிற்றுப்பத்து - பாட்டு 53 - காக்கைபாடினியார் நச்செள்ளையார் **பெயர்: குண்டுகண் அகழி **துறை: செந்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் வென்று கலம் தரீஇயர் வேண்டு புலத்து இறுத்து அவர் வாடா யாணர் நாடு திறை கொடுப்ப நல்கினை ஆகு-மதி எம் என்று அருளிக் கல் பிறங்கு வைப்பின் கடறு அரை யாத்த நின் தொல் புகழ் மூதூர்ச் செல்குவை ஆயின் செம் பொறிச் சிலம்பொடு அணித் தழை தூங்கும் எந்திரத் தகைப்பின் அம்பு உடை வாயில் கோள் வல் முதலைய குண்டு கண் அகழி வானுற ஓங்கிய வளைந்து செய் புரிசை ஒன்னாத் தெவ்வர் முனை கெட விலங்கி நின்னின் தந்த மன் எயில் அல்லது முன்னும் பின்னும் நின் முன்னோர் ஓம்பிய எயில் முகப்படுத்தல் யாவது வளையினும் பிறிது ஆறு செல்-மதி சினம் கெழு குருசில் எழூஉப் புறந்தரீஇப் பொன் பிணிப் பலகைக் குழூஉ நிலைப் புதவின் கதவு மெய் காணின் தேம் பாய் கடாத்தொடு காழ் கை நீவி வேங்கை வென்ற பொறி கிளர் புகர் நுதல் ஏந்து கை சுருட்டித் தோட்டி நீவி மேம்படு வெல் கொடி நுடங்கத் தாங்கல் ஆகா ஆங்கு நின் களிறே #5 பதிற்றுப்பத்து - பாட்டு 54 - காக்கைபாடினியார் நச்செள்ளையார் **பெயர்: நில்லாத்தானை **துறை: காட்சிவாழ்த்து **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் வள்ளியை என்றலின் காண்கு வந்திசினே உள்ளியது முடித்தி வாழ்க நின் கண்ணி வீங்கு இறை தடைஇய அமை மருள் பணைத் தோள் ஏந்து எழில் மழைக் கண் வனைந்து வரல் இள முலைப் பூம் துகில் அல்குல் தேம் பாய் கூந்தல் மின் இழை விறலியர் நின் மறம் பாட இரவலர் புன்கண் தீர நாள்-தொறும் உரை சால் நன் கலம் வரைவு இல வீசி அனையை ஆகல் மாறே எனையதூஉம் உயர்_நிலை_உலகத்துச் செல்லாது இவண் நின்று இரு நிலம் மருங்கின் நெடிது மன்னியரோ நிலம் தப இடூஉம் ஏணிப் புலம் படர்ந்து படு கண் முரசம் நடுவண் சிலைப்பத் தோமர வலத்தர் நாமம் செய்ம்மார் ஏவல் வியம் கொண்டு இளையரொடு எழுதரும் ஒல்லார் யானை காணின் நில்லாத் தானை இறை கிழவோயே #6 பதிற்றுப்பத்து - பாட்டு 55 - காக்கைபாடினியார் நச்செள்ளையார் **பெயர்: துஞ்சும் பந்தர் **துறை: செந்துறைப்பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் ஆன்றோள் கணவ சான்றோர் புரவல நின் நயந்து வந்தனென் அடு போர்க் கொற்றவ இன் இசைப் புணரி இரங்கும் பௌவத்து நன் கல வெறுக்கை துஞ்சும் பந்தர்க் கமழும் தாழை கானல் அம் பெரும் துறைத் தண் கடல் படப்பை நல் நாட்டுப் பொருந செவ் ஊன் தோன்றா வெண் துவை முதிரை வால் ஊன் வல்சி மழவர் மெய்ம்மறை குடவர் கோவே கொடித் தேர் அண்ணல் வாரார் ஆயினும் இரவலர் வேண்டி நேரின் தந்து அவர்க்கு ஆர் பதம் நல்கும் நகை சால் வாய்மொழி இசை சால் தோன்றல் வேண்டுவ அளவையுள் யாண்டு பல கழியப் பெய்து புறந்தந்து பொங்கல் ஆடி விண்டு சேர்ந்த வெண் மழை போல சென்றாலியரோ பெரும அல்கலும் நனம் தலை வேந்தர் தார் அழிந்து அலற நீடு வரை அடுக்கத்த நாடு கைக்கொண்டு பொருது சினம் தணிந்த செருப் புகல் ஆண்மைத் தாங்குநர்த் தகைத்த ஒள் வாள் ஓங்கல் உள்ளத்துக் குருசில் நின் நாளே #7 பதிற்றுப்பத்து - பாட்டு 56 - காக்கைபாடினியார் நச்செள்ளையார் **பெயர்: வேந்துமெய்ம் மறந்த வாழ்ச்சி **துறை: ஒள்வாள் அமலை **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் விழவு வீற்றிருந்த வியலுள் ஆங்கண் கோடியர் முழவின் முன்னர் ஆடல் வல்லான் அல்லன் வாழ்க அவன் கண்ணி வலம் படு முரசம் துவைப்ப வாள் உயர்த்து இலங்கும் பூணன் பொலம் கொடி உழிஞையன் மடம் பெருமையின் உடன்று மேல் வந்த வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி வீந்து உகு போர்க்களத்து ஆடும் கோவே #8 பதிற்றுப்பத்து - பாட்டு 57 - காக்கைபாடினியார் நச்செள்ளையார் **பெயர்: சில்வளை விறலி **துறை: விறலியாற்றுப்படை **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் ஓடாப் பூட்கை மறவர் மிடல் தப இரும் பனம் புடையலொடு வான் கழல் சிவப்பக் குருதி பனிற்றும் புலவுக் களத்தோனே துணங்கை ஆடிய வலம் படு கோமான் மெல்லிய வகுந்தில் சீறடி ஒதுங்கிச் செல்லாமோ-தில் சில் வளை விறலி பாணர் கையது பணி தொடை நரம்பின் விரல் கவர் பேரியாழ் பாலை பண்ணிக் குரல் புணர் இன் இசைத் தழிஞ்சி பாடி இளம் துணைப் புதல்வர் நல் வளம் பயந்த வளம் கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை ஆன்ற அறிவின் தோன்றிய நல் இசை ஒள் நுதல் மகளிர் துனித்த கண்ணினும் இரவலர் புன்கண் அஞ்சும் புரவு எதிர்கொள்வனை கண்டனம் வரற்கே #9 பதிற்றுப்பத்து - பாட்டு 58 - காக்கைபாடினியார் நச்செள்ளையார் **பெயர்: ஏவிளங்கு தடக்கை **துறை: செந்துறைப்பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் ஆடுக விறலியர் பாடுக பரிசிலர் வெண் தோட்டு அசைத்த ஒண் பூம் குவளையர் வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர் செல் உறழ் மறவர்-தம் கொல் படைத் தரீஇயர் இன்று இனிது நுகர்ந்தனம் ஆயின் நாளை மண் புனை இஞ்சி மதில் கடந்து அல்லது உண்குவம் அல்லேம் புகர் எனக் கூறிக் கண்ணி கண்ணிய வயவர் பெருமகன் பொய் படுபு அறியா வயங்கு செம் நாவின் எயில் எறி வல் வில் ஏ விளங்கு தடக் கை ஏந்து எழில் ஆகத்து சான்றோர் மெய்ம்மறை வானவரம்பன் என்ப கானத்துக் கறங்கு இசைச் சிதடி பொரி அரைப் பொருந்திய சிறி இலை வேலம் பெரிய தோன்றும் புன்புலம் வித்தும் வன் கை வினைஞர் சீர் உடைப் பல் பகடு ஒலிப்பப் பூட்டி நாஞ்சில் ஆடிய கொழு வழி மருங்கின் அலங்கு கதிர்த் திரு மணி பெறூஉம் அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே #10 பதிற்றுப்பத்து - பாட்டு 59 - காக்கைபாடினியார் நச்செள்ளையார் **பெயர்: மாகூர் திங்கள் **துறை: செந்துறைப்பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் பகல் நீடு ஆகாது இரவுப் பொழுது பெருகி மாசி நின்ற மா கூர் திங்கள் பனிச் சுரம் படரும் பாண்_மகன் உவப்பப் புல் இருள் விடியப் புலம்பு சேண் அகலப் பாய் இருள் நீங்கப் பல் கதிர் பரப்பி ஞாயிறு குண முதல் தோன்றி ஆங்கு இரவல் மாக்கள் சிறுகுடி பெருக உலகம் தங்கிய மேம்படு கற்பின் வில்லோர் மெய்ம்மறை வீற்று இரும் கொற்றத்துச் செல்வர் செல்வ சேர்ந்தோர்க்கு அரணம் அறியாது எதிர்ந்து துப்பில் குறையுற்றுப் பணிந்து திறை தருப நின் பகைவர் ஆயின் சினம் செலத் தணியுமோ வாழ்க நின் கண்ணி பல் வேறு வகைய நனம் தலை ஈண்டிய மலையவும் கடலவும் பண்ணியம் பகுக்கும் ஆறு முட்டுறாஅது அறம் புரிந்து ஒழுகும் நாடல் சான்ற துப்பின் பணைத் தோள் பாடு சால் நல் கலம் தரூஉம் நாடு புறந்தருதல் நினக்குமார் கடனே #11 பதிற்றுப்பத்து - பாட்டு 60 - காக்கைபாடினியார் நச்செள்ளையார் **பெயர்: மரம்படுதீங்கனி **துறை: விறலியாற்றுப்படை **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் கொலை வினை மேவற்றுத் தானை தானே இகல் வினை மேவலன் தண்டாது வீசும் செல்லாமோ-தில் பாண்_மகள் காணியர் மிஞிறு புறம் மூசவும் தீம் சுவை திரியாது அரம் போழ்கல்லா மரம் படு தீம் கனி அம் சேறு அமைந்த முண்டை விளை பழம் ஆறு செல் மாக்கட்கு ஓய் தகை தடுக்கும் மறாஅ விளையுள் அறாஅ யாணர்த் தொடை மடி களைந்த சிலை உடை மறவர் பொங்கு பிசிர்ப் புணரி மங்குலொடு மயங்கி வரும் கடல் ஊதையின் பனிக்கும் துவ்வா நறவின் சாய் இனத்தானே #12 புறநானூறு 278 - காக்கைபாடினியார் நச்செள்ளையார் நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் படை அழிந்து மாறினன் என்று பலர் கூற மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்ட என் முலை அறுத்திடுவென் யான் எனச் சினைஇக் கொண்ட வாளொடு படு பிணம் பெயராச் செங்களம் துழவுவோள் சிதைந்து வேறு ஆகிய படு மகன் கிடக்கை காணூஉ ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே &140 - காசிபன் கீரனார் #1 நற்றிணை 248 முல்லை - காசிபன் கீரனார் சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு வீ பொறி வரி நல் மான் புகர் முகம் கடுப்பத் தண் புதல் அணி பெற மலர வண் பெயல் கார் வரு பருவம் என்றனர்-மன் இனிப் பேர் அஞர் உள்ளம் நடுங்கல் காணியர் அன்பு இன்மையின் பண்பு இல பயிற்றும் பொய் இடி அதிர் குரல் வாய் செத்து ஆலும் இன மயில் மடக் கணம் போல நினை மருள்வேனோ வாழியர் மழையே &141 - காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் #1 அகநானூறு 85 பாலை - காட்டூர் கிழார் மகனார் கண்ணனார் நல் நுதல் பசப்பவும் பெரும் தோள் நெகிழவும் உண்ணா உயக்கமொடு உயிர் செலச் சாஅய் இன்னம் ஆகவும் இங்கு நம் துறந்தோர் அறவர் அல்லர் அவர் எனப் பல புலந்து ஆழல் வாழி தோழி சாரல் ஈன்று நாள் உலந்த மெல் நடை மடப் பிடி கன்று பசி களைஇய பைம் கண் யானை முற்றா மூங்கில் முளை தருபு ஊட்டும் வென் வேல் திரையன் வேங்கட நெடு வரை நல் நாள் பூத்த நாகு இள வேங்கை நறு வீ ஆடிய பொறி வரி மஞ்ஞை நனைப் பசும் குருந்தின் நாறு சினை இருந்து துணைப் பயிர்ந்து அகவும் துணைதரு தண் கார் வருதும் யாம் எனத் தேற்றிய பருவம் காண் அது பாயின்றால் மழையே &142 - காப்பியம் சேந்தனார் #1 நற்றிணை 246 பாலை - காப்பியம் சேந்தனார் இடூஉ ஊங்கண் இனிய படூஉம் நெடும் சுவர்ப் பல்லியும் பாங்கில் தேற்றும் மனை மா நொச்சி மீமிசை மாச் சினை வினை மாண் இரும் குயில் பயிற்றலும் பயிற்றும் உரம் புரி உள்ளமொடு சுரம் பல நீந்திச் செய்பொருட்கு அகன்றனர் ஆயினும் பொய்யலர் வருவர் வாழி தோழி புறவின் பொன் வீக் கொன்றையொடு பிடவுத் தளை அவிழ இன் இசை வானம் இரங்கும் அவர் வருதும் என்ற பருவமோ இதுவே &143 - காப்பியாற்றுக் காப்பியனார் ** பதிற்றுப்பத்து நான்காம் பத்து **பாடப்பட்டோன்: களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் #1 பதிற்றுப்பத்து பாட்டு 31 - காப்பியாற்றுக் காப்பியனார் **பெயர்: கமழ்குரல் துழாய் **துறை: செந்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் குன்று தலைமணந்து குழூஉக் கடல் உடுத்த மண் கெழு ஞாலத்து மாந்தர் ஒராங்குக் கை சுமந்து அலறும் பூசல் மாதிரத்து நால் வேறு நனம் தலை ஒருங்கு எழுந்து ஒலிப்பத் தெள் உயர் வடி மணி எறியுநர் கல்லென உண்ணா பைஞ்ஞிலம் பனித் துறை மண்ணி வண்டு ஊது பொலி தார்த் திரு ஞெமர் அகலத்துக் கண் பொரு திகிரிக் கமழ் குரல் துழாஅய் அலங்கல் செல்வன் சேவடி பரவி நெஞ்சு மலி உவகையர் துஞ்சு பதிப் பெயர மணி நிற மை இருள் அகல நிலா விரிபு கோடு கூடு மதியம் இயலுற்று ஆங்கு துளங்கு குடி விழுத் திணை திருத்தி முரசு கொண்டு ஆண் கடன் நிறுத்த நின் பூண் கிளர் வியன் மார்பு கருவி வானம் தண் தளி தலைஇய வட_தெற்கு விலங்கி விலகு தலைத்து எழிலிய பனி வார் விண்டு விறல் வரை அற்றே கடவுள் அஞ்சி வானத்து இழைத்த தூங்கு எயில் கதவம் காவல் கொண்ட எழூஉ நிவந்து அன்ன பரேர் எறுழ் முழவுத் தோள் வெண் திரை முந்நீர் வளைஇய உலகத்து வண் புகழ் நிறுத்த வகை சால் செல்வத்து வண்டன் அனையை-மன் நீயே வண்டு பட ஒலிந்த கூந்தல் அறம் சால் கற்பின் குழைக்கு விளக்கு ஆகிய ஒண் நுதல் பொன்னின் இழைக்கு விளக்கு ஆகிய அம் வாங்கு உந்தி விசும்பு வழங்கு மகளிருள்ளும் சிறந்த செம்மீன் அனையள் நின் தொல் நகர்ச் செல்வி நிலன் அதிர்பு இரங்கல ஆகி வலன் ஏர்பு வியன் பணை முழங்கும் வேல் மூசு அழுவத்து அடங்கிய புடையல் பொலன் கழல் நோன் தாள் ஒடுங்காத் தெவ்வர் ஊக்கு அறக் கடைஇ புறக்கொடை எறியார் நின் மறப் படை கொள்ளுநர் நகைவர்க்கு அரணம் ஆகிப் பகைவர்க்குச் சூர் நிகழ்ந்து அற்று நின் தானை போர் மிகு குருசில் நீ மாண்டனை பலவே #2 பதிற்றுப்பத்து பாட்டு 32 - காப்பியாற்றுக் காப்பியனார் **பெயர்: கழையமல் கழனி **துறை: செந்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் மாண்டனை பலவே போர் மிகு குருசில் நீ மாதிரம் விளக்கும் சால்பும் செம்மையும் முத்து உடை மருப்பின் மழ களிறு பிளிற மிக்கு எழு கடும் தார் துய்த் தலைச் சென்று துப்புத் துவர் போகப் பெரும் கிளை உவப்ப ஈத்து ஆன்று ஆனா இடன் உடை வளனும் துளங்கு குடி திருத்திய வலம் படு வென்றியும் எல்லாம் எண்ணின் இடு கழங்கு தபுந கொன் ஒன்று மருண்டனென் அடு போர்க் கொற்றவ நெடு மிடல் சாயக் கொடு மிடல் துமியப் பெரு மலை யானையொடு புலம் கெட இறுத்து தடம் தாள் நாரை படிந்து இரை கவரும் முடந்தை நெல்லின் கழை அமல் கழனிப் பிழையா விளையுள் நாடு அகப்படுத்து வையா மாலையர் வசையுநர்க் கறுத்த பகைவர் தேஎத்து ஆயினும் சினவாய் ஆகுதல் இறும்பூதால் பெரிதே #3 பதிற்றுப்பத்து பாட்டு 33 - காப்பியாற்றுக் காப்பியனார் **பெயர்: வரம்பில் வெள்ளம் **துறை: வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் **வண்ணம்: ஒழுகு வண்ணம் இறும்பூதால் பெரிதே கொடித் தேர் அண்ணல் வடி மணி அணைத்த பணை மருள் நோன் தாள் கடி மரத்தான் களிறு அணைத்து நெடு நீர துறை கலங்க மூழ்த்து இறுத்த வியன் தானையொடு புலம் கெட நெரிதரும் வரம்பு இல் வெள்ளம் வாள் மதில் ஆக வேல் மிளை உயர்த்து வில் விசை உமிழ்ந்த வைம் முள் அம்பின் செவ் வாய் எஃகம் வளைஇய அகழின் கார் இடி உருமின் உரறு முரசின் கால் வழங்கு ஆர் எயில் கருதின் போர் எதிர் வேந்தர் ஒரூஉப நின்னே #4 பதிற்றுப்பத்து பாட்டு 34 - காப்பியாற்றுக் காப்பியனார் **பெயர்: ஒண்பொறிக் கழற்கால் **துறை: தும்பையரவம் **தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் **வண்ணம்: ஒழுகு வண்ணம் ஒரூஉப நின்னை ஒரு பெரு வேந்தே ஓடாப் பூட்கை ஒண் பொறிக் கழல் கால் இரு நிலம் தோயும் விரி நூல் அறுவையர் செவ் உளைய மா ஊர்ந்து நெடும் கொடிய தேர் மிசையும் ஓடை விளங்கும் உரு கெழு புகர் நுதல் பொன் அணி யானை முரண் சேர் எருத்தினும் மன் நிலத்து அமைந்த மாறா மைந்தர் மாறு நிலை தேய முரைசு உடைப் பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழ அரைசு படக் கடக்கும் ஆற்றல் புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறே #5 பதிற்றுப்பத்து பாட்டு 35 - காப்பியாற்றுக் காப்பியனார் **பெயர்: மெய்யாடு பறந்தலை **துறை: வாகைத்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் புரை சால் மைந்த நீ ஓம்பல் மாறே உரை சான்றனவால் பெருமை நின் வென்றி இரும் களிற்று யானை இலங்கு வால் மருப்பொடு நெடும் தேர்த் திகிரி தாய வியன் களத்து அளகு உடைச் சேவல் கிளை புகா ஆரத் தலை துமிந்து எஞ்சிய மெய் ஆடு பறந்தலை அந்தி மாலை விசும்பு கண்டு அன்ன செம் சுடர் கொண்ட குருதி மன்றத்துப் பேஎய் ஆடும் வெல் போர் வீயா யாணர் நின்-வயினானே #6 பதிற்றுப்பத்து பாட்டு 36 - காப்பியாற்றுக் காப்பியனார் **பெயர்: வாண்மயங்கு கடுந்தார் **துறை: களவழி **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் வீயா யாணர் நின்-வயினானே தாவாது ஆகும் மலி பெறு வயவே மல்லல் உள்ளமொடு வம்பு அமர்க் கடந்து செரு மிகு முன்பின் மறவரொடு தலைச்சென்று பனை தடி புனத்தின் கை தடிபு பல உடன் யானை பட்ட வாள் மயங்கு கடும் தார் மாவும் மாக்களும் படு பிணம் உணீஇயர் பொறித்த போலும் புள்ளி எருத்தின் புன் புற எருவைப் பெடை புணர் சேவல் குடுமி எழாலொடு கொண்டு கிழக்கு இழிய நிலம் இழி நிவப்பின் நீள் நிரை பல சுமந்து உரு எழு கூளியர் உண்டு மகிழ்ந்து ஆடக் குருதிச் செம் புனல் ஒழுக செருப் பல செய்குவை வாழ்க நின் வளனே #7 பதிற்றுப்பத்து பாட்டு 37 - காப்பியாற்றுக் காப்பியனார் **பெயர்: வலம்படு வென்றி **துறை: செந்துறைப் பாடாண் பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் வாழ்க நின் வளனே நின் உடை வாழ்க்கை வாய்மொழி வாயர் நின் புகழ் ஏத்தப் பகைவர் ஆரப் பழங்கண் அருளி நகைவர் ஆர நன் கலம் சிதறி ஆன்று அவிந்து அடங்கிய செயிர் தீர் செம்மால் வான் தோய் நல் இசை உலகமொடு உயிர்ப்பத் துளங்கு குடி திருத்திய வலம் படு வென்றியும் மா இரும் புடையல் மாக் கழல் புனைந்து மன் எயில் எறிந்து மறவர்த் தரீஇத் தொல் நிலைச் சிறப்பின் நின் நிழல் வாழ்நர்க்குக் கோடு அற வைத்த கோடாக் கொள்கையும் நன்று பெரிது உடையையால் நீயே வெம் திறல் வேந்தே இவ் உலகத்தோர்க்கே #8 பதிற்றுப்பத்து பாட்டு 38 - காப்பியாற்றுக் காப்பியனார் **பெயர்: பரிசிலர் வெறுக்கை **துறை: செந்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் உலகத்தோரே பலர்-மன் செல்வர் எல்லாருள்ளும் நின் நல் இசை மிகுமே வளம் தலைமயங்கிய பைதிரம் திருத்திய களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் எயில் முகம் சிதையத் தோட்டி ஏவலின் தோட்டி தந்த தொடி மருப்பு யானைச் செவ் உளைக் கலிமா ஈகை வான் கழல் செயல் அமை கண்ணிச் சேரலர் வேந்தே பரிசிலர் வெறுக்கை பாணர் நாள்_அவை வாள்_நுதல் கணவ மள்ளர் ஏறே மை அற விளங்கிய வடு வாழ் மார்பின் வசை இல் செல்வ வானவரம்ப இனியவை பெறினே தனித்தனி நுகர்கேம் தருக என விழையாத் தா இல் நெஞ்சத்துப் பகுத்தூண் தொகுத்த ஆண்மைப் பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே #9 பதிற்றுப்பத்து பாட்டு 39 - காப்பியாற்றுக் காப்பியனார் **பெயர்: ஏவல் வியன்பணை **துறை: வாகை **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் பிறர்க்கு என வாழ்தி நீ ஆகல் மாறே எமக்கு இல் என்னார் நின் மறம் கூறு குழாத்தர் துப்புத் துறைபோகிய வெப்பு உடைத் தும்பைக் கறுத்த தெவ்வர் கடி முனை அலற எடுத்து எறிந்து இரங்கும் ஏவல் வியன் பணை உரும் என அதிர்பட்டு முழங்கிச் செரு மிக்கு அடங்கார் ஆர் அரண் வாடச் செல்லும் காலன் அனைய கடும் சின முன்ப வாலிதின் நூலின் இழையா நுண் மயிர் இழைய பொறித்த போலும் புள்ளி எருத்தின் புன் புறப் புறவின் கண நிரை அலற அலந்தலை வேலத்து உலவை அம் சினைச் சிலம்பி கோலிய அலங்கல் போர்வையின் இலங்கு மணி மிடைந்த பசும்பொன் படலத்து அவிர் இழை தைஇ மின் உமிழ்பு இலங்கச் சீர் மிகு முத்தம் தைஇய நார்முடிச்சேரல் நின் போர் நிழல் புகன்றே #10 பதிற்றுப்பத்து பாட்டு 40 - காப்பியாற்றுக் காப்பியனார் **பெயர்: நாடுகாண் அவிர்சுடர் **துறை: விறலியாற்றுப்படை **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் போர் நிழல் புகன்ற சுற்றமொடு ஊர்முகத்து இறாஅலியரோ பெரும நின் தானை இன் இசை இமிழ் முரசு இயம்பக் கடிப்பு இகூஉப் புண் தோள் ஆடவர் போர்முகத்து இறுப்பக் காய்த்த கரந்தை மாக் கொடி விளை வயல் வந்து இறைகொண்டன்று தானை அந்தில் களைநர் யார் இனிப் பிறர் எனப் பேணி மன் எயில் மறவர் ஒலி அவிந்து அடங்க ஒன்னார் தேயப் பூ மலைந்து உரைஇ வெண் தோடு நிரைஇய வேந்து உடை அரும் சமம் கொன்று புறம்பெற்று மன்பதை நிரப்பி வென்றி ஆடிய தொடித் தோள் மீ கை எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்துப் பொன்னம் கண்ணிப் பொலம் தேர் நன்னன் சுடர் வீ வாகைக் கடி முதல் தடிந்த தார் மிகு மைந்தின் நார்முடிச்சேரல் புன் கால் உன்னம் சாயத் தெண் கண் வறிது கூட்டு அரியல் இரவலர் தடுப்பத் தான் தர உண்ட நனை நறவு மகிழ்ந்து நீர் இமிழ் சிலம்பின் நேரியோனே செல்லாயோ-தில் சில் வளை விறலி மலர்ந்த வேங்கையின் வயங்கு இழை அணிந்து மெல் இயல் மகளிர் எழில் நலம் சிறப்பப் பாணர் பைம் பூ மலைய இளையர் இன் களி வழாஅ மென் சொல் அமர்ந்து நெஞ்சு மலி உவகையர் வியன் களம் வாழ்த்தத் தோட்டி நீவாது தொடி சேர்பு நின்று பாகர் ஏவலின் ஒண் பொறி பிசிரக் காடு தலைக்கொண்ட நாடு காண் அவிர் சுடர் அழல் விடுபு மரீஇய மைந்தின் தொழில் புகல் யானை நல்குவன் பலவே &144 - காமஞ்சேர் குளத்தார் #1 குறுந்தொகை 4 நெய்தல் - காமஞ்சேர் குளத்தார் நோம் என் நெஞ்சே நோம் என் நெஞ்சே இமை தீய்ப்பு அன்ன கண்ணீர் தாங்கி அமைதற்கு அமைந்த நம் காதலர் அமைவு இலர் ஆகுதல் நோம் என் நெஞ்சே &145 - காரிகிழார் #1 புறநானூறு 6 - காரிகிழார் **பாடப்பட்டோன் - பாண்டியன் பல்யாகசாலை **முதுகுடுமிப் பெருவழுதி வடாஅது பனி படு நெடு வரை வடக்கும் தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும் குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும் குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும் கீழது முப் புணர் அடுக்கிய முறை முதல் கட்டின் நீர் நிலை நிவப்பின் கீழும் மேலது ஆன்_நிலை_உலகத்தானும் ஆனாது உருவும் புகழும் ஆகி விரி சீர்த் தெரி கோல் ஞமன்ன் போல ஒரு திறம் பற்றல் இலியரோ நின் திறம் சிறக்க செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்துக் கடல் படை குளிப்ப மண்டி அடர்ப் புகர்ச் சிறு கண் யானை செவ்விதின் ஏவிப் பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து அவ் எயில் கொண்ட செய்வுறு நல் கலம் பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கிப் பணியியர் அத்தை நின் குடையே முனிவர் முக்கண் செல்வர் நகர் வலம் செயற்கே இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே வாடுக இறைவ நின் கண்ணி ஒன்னார் நாடு சுடு கமழ் புகை எறித்தலானே செலியர் அத்தை நின் வெகுளி வால் இழை மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே ஆங்க வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய தண்டா ஈகைத் தகை மாண் குடுமி தண் கதிர் மதியம் போலவும் தெறு சுடர் ஒண் கதிர் ஞாயிறு போலவும் மன்னிய பெரும நீ நிலம் மிசையானே &146 - காலெறி கடிகையார் #1 குறுந்தொகை 267 பாலை - காலெறி கடிகையார் இரும் கண் ஞாலத்து ஈண்டு பயப் பெரு வளம் ஒருங்கு உடன் இயைவது ஆயினும் கரும்பின் கால் எறி கடிகைக் கண் அயின்று அன்ன வால் எயிறு ஊறிய வசை இல் தீம் நீர்க் கோல் அமை குறும் தொடிக் குறுமகள் ஒழிய ஆள்வினை மருங்கில் பிரியார் நாளும் உறல் முறை மரபின் கூற்றத்து அறன் இல் கோள் நன்கு அறிந்திசினோரே &147 - காவட்டனார் (கரவட்டனார்) #1 அகநானூறு 378 குறிஞ்சி - காவட்டனார் நிதியம் துஞ்சும் நிவந்து ஓங்கு வரைப்பின் வதுவை மகளிர் கூந்தல் கமழ் கொள வங்கூழ் ஆட்டிய அம் குழை வேங்கை நல் பொன் அன்ன நறும் தாது உதிர காமர் பீலி ஆய் மயில் தோகை வேறுவேறு இனத்த வரை வாழ் வருடை கோடு முற்று இளம் தகர் பாடு விறந்து அயல ஆடு கள வயிரின் இனிய ஆலிப் பசும் புற மென் சீர் ஒசிய விசும்பு உகந்து இரும் கண் ஆடு அமைத் தயங்க இருக்கும் பெரும் கல் நாடன் பிரிந்த புலம்பும் உடன்ற அன்னை அமரா நோக்கமும் வடந்தை தூக்கும் வரு பனி அற்சிரச் சுடர் கெழு மண்டிலம் அழுங்க ஞாயிறு குட கடல் சேரும் படர் கூர் மாலையும் அனைத்தும் அடூஉ நின்று நலிய உஞற்றி யாங்ஙனம் வாழ்தி என்றி தோழி நீங்கா வஞ்சினம் செய்து நம் துறந்தோர் உள்ளார் ஆயினும் உளனே அவர் நாட்டு அள் இலைப் பலவின் கனி கவர் கைய கல்லா மந்தி கடுவனோடு உகளும் கடும் திறல் அணங்கின் நெடும் பெரும் குன்றத்துப் பாடு இன் அருவி சூடி வான் தோய் சிமையம் தோன்றலானே #2 புறநானூறு 359 - கரவட்டனார் **பாடப்பட்டோன்: அந்துவன் கீரன் பாறுபடப் பறைந்த பல் மாறு மருங்கின் வேறுபடு குரல வெவ் வாய்க் கூகையொடு பிணம் தின் குறுநரி நிணம் திகழ் பல்ல பேஎய் மகளிர் பிணம் தழூஉப் பற்றி விளர் ஊன் தின்ற வெம் புலால் மெய்யர் களரி மருங்கின் கால் பெயர்த்து ஆடி ஈம விளக்கின் வெருவரப் பேரும் காடு முன்னினரே நாடு கொண்டோரும் நினக்கும் வருதல் வைகல் அற்றே வசையும் நிற்கும் இசையும் நிற்கும் அதனால் வசை நீக்கி இசை வேண்டியும் நசை வேண்டாது நன்று மொழிந்தும் நிலவுக் கோட்டுப் பல களிற்றோடு பொலம் படைய மா மயங்கிட இழை கிளர் நெடும் தேர் இரவலர்க்கு அருகாது கொள் என விடுவை ஆயின் வெள்ளென ஆண்டு நீ பெயர்ந்த பின்னும் ஈண்டு நீடு விளங்கும் நீ எய்திய புகழே &148 - காவல் பெண்டு (காதற்பெண்டு) #1 புறநானூறு 86 - காவல் பெண்டு (காதற்பெண்டு) சிற்றில் நல் தூண் பற்றி நின் மகன் யாண்டு உளனோ என வினவுதி என் மகன் யாண்டு உளன் ஆயினும் அறியேன் ஓரும் புலி சேர்ந்து போகிய கல் அளை போல ஈன்ற வயிறோ இதுவே தோன்றுவன்-மாதோ போர்க்களத்தானே &149 - காவன்முல்லை பூதனார் #1 அகநானூறு 21 பாலை - காவன்முல்லை பூதனார் மனை இள நொச்சி மௌவல் வால் முகைத் துணை நிரைத்து அன்ன மா வீழ் வெண் பல் அம் வயிற்று அகன்ற அல்குல் தைஇத் தாழ் மென் கூந்தல் தட மென் பணைத் தோள் மடந்தை மாண் நலம் புலம்பச் சேய் நாட்டுச் செல்லல் என்று யான் சொல்லவும் ஒல்லாய் வினை நயந்து அமைந்தனை ஆயின் மனை நகப் பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே எழு இனி வாழி என் நெஞ்சே புரி இணர் மெல் அவிழ் அம் சினை புலம்ப வல்லோன் கோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி மராஅம் அலைத்த மண வாய்த் தென்றல் சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும் என்றூழ் நின்ற புன் தலை வைப்பில் பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை இரும் கல் விடரகத்து ஈன்று இளைப்பட்ட மென் புனிற்று அம் பிணவு பசித்தெனப் பைம் கண் செந்நாய் ஏற்றை கேழல் தாக்க இரியல் பிணவல் தீண்டலின் பரீஇச் செங்காய் உதிர்ந்த பைம் குலை ஈந்தின் பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த வல் வாய்க் கணிச்சிக் கூழ் ஆர் கோவலர் ஊறாது இட்ட உவலைக் கூவல் வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர் இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து இரும் களிற்று இன நிரை தூர்க்கும் பெரும் கல் அத்தம் விலங்கிய காடே #2 அகநானூறு 151 பாலை - காவன்முல்லைப் பூதரத்தனார் தம் நயந்து உறைவோர்த் தாங்கித் தாம் நயந்து இன் அமர் கேளிரொடு ஏமுறக் கெழீஇ நகுதல் ஆற்றார் நல்கூர்ந்தோர் என மிகு பொருள் நினையும் நெஞ்சமொடு அருள் பிறிது ஆப-மன் வாழி தோழி கால் விரிபு உறு வளி எறி-தொறும் கலங்கிய பொறி வரிக் கலைமான் தலையின் முதன்முதல் கவர்த்த கோடல் அம் கவட்ட குறும் கால் உழுஞ்சில் தாறு சினை விளைந்த நெற்றம் ஆடு_மகள் அரி கோல் பறையின் ஐயென ஒலிக்கும் பதுக்கைத்து ஆய செதுக்கை நீழல் கள்ளி முள் அரை பொருந்திச் செல்லுநர்க்கு உறுவது கூறும் சிறு செம் நாவின் மணி ஓர்த்து அன்ன தெண் குரல் கணி வாய்ப் பல்லிய காடு இறந்தோரே #3 அகநானூறு 241 பாலை - காவன் முல்லை பூதனார் துனி இன்று இயைந்த துவரா நட்பின் இனியர் அம்ம அவர் என முனியாது நல்குவர் நல்ல கூறினும் அல்கலும் பிரியாக் காதலொடு உழையர் ஆகிய நமர்-மன் வாழி தோழி உயர் மிசை மூங்கில் இள முளை திரங்கக் காம்பின் கழை நரல் வியலகம் வெம்ப மழை மறந்து அருவி ஆன்ற வெருவரு நனம் தலைப் பேஎய் வெண் தேர்ப் பெயல் செத்து ஓடி தாஅம் பட்ட தனி முதிர் பெரும் கலை புலம் பெயர்ந்து உறைதல் செல்லாது அலங்கு தலை விருந்தின் வெம் காட்டு வருந்தி வைகும் அத்த நெல்லித் தீம் சுவைத் திரள் காய் வட்டக் கழங்கின் தாஅய்த் துய்த் தலை செம் முக மந்தி ஆடும் நல் மர மருங்கின் மலை இறந்தோரே #4 அகநானூறு 293 பாலை -காவன்முல்லைப் பூதனார் இலை ஒழித்து உலறிய புன் தலை உலவை வலை வலந்து அனைய ஆகப் பல உடன் சிலம்பி சூழ்ந்த புலம் கெடு வைப்பின் துகில் ஆய் செய்கைப் பா விரிந்து அன்ன வெயில் அவிர்பு நுடங்கும் வெவ்வெம் களரி குயில் கண் அன்ன குரூஉக் காய் முற்றி மணிக் காசு அன்ன மால் நிற இரும் கனி உகாஅ மென் சினை உதிர்வன கழியும் வேனில் வெம் சுரம் தமியர் தாமே செல்ப என்ப தோழி யாமே பண்பு இல் கோவலர் தாய் பிரித்து யாத்த நெஞ்சு அமர் குழவி போல நொந்துநொந்து இன்னா மொழிதும் என்ப என் மயங்கினர்-கொல் நம் காதலோரே #5 அகநானூறு 391 பாலை - காவன் முல்லைப் பூதனார் பார்வல் வெருகின் கூர் எயிற்று அன்ன வரி மென் முகைய நுண் கொடி அதிரல் மல்கு அகல் வட்டியர் கொள்விடம் பெறாஅர் விலைஞர் ஒழித்த தலை வேய் கான் மலர் தேம் பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கித் தண் நறும் கதுப்பில் புணர்ந்தோர் புனைந்த என் பொதி மாண் முச்சி காண்-தொறும் பண்டைப் பழ அணி உள்ளப்படுமால் தோழி இன்றொடு சில் நாள் வரினும் சென்று நனி படாஅ ஆகும் எம் கண்ணே கடாஅ வான் மருப்பு அசைத்தல் செல்லாது யானை தன் வாய் நிறை கொண்ட வலி தேம்பு தடக் கை குன்று புகு பாம்பின் தோன்றும் என்றூழ் வைப்பின் சுரன் இறந்தோரே #6 குறுந்தொகை 104 பாலை - காவன்முல்லைப் பூதனார் அம்ம வாழி தோழி காதலர் நூல் அறு முத்தின் தண் சிதர் உறைப்பத் தாளித் தண் பவர் நாள் ஆ மேயும் பனி படு நாளே பிரிந்தனர் பிரியும் நாளும் பல ஆகுபவே #7 குறுந்தொகை 211 பாலை - காவன் முல்லைப் பூதனார் அம்_சில்_ஓதி ஆய் வளை நெகிழ நொந்தும் நம் அருளார் நீத்தோர்க்கு அஞ்சல் எஞ்சினம் வாழி தோழி எஞ்சாது தீய்ந்த மராஅத்து ஓங்கல் வெம் சினை வேனில் ஓர் இணர் தேனோடு ஊதி ஆராது பெயரும் தும்பி நீர் இல் வைப்பின் சுரன் இறந்தோரே #8 நற்றிணை 274 பாலை - காவன் முல்லைப் பூதனார் நெடு வான் மின்னிக் குறும் துளி தலைஇப் படு மழை பொழிந்த பகு வாய்க் குன்றத்து உழை படு மான் பிணை தீண்டலின் இழை_மகள் பொன் செய் காசின் ஒண் பழம் தாஅம் குமிழ் தலைமயங்கிய குறும் பல் அத்தம் எம்மொடு வருதியோ பொம்மல்_ஓதி எனக் கூறின்றும் உடையரோ மற்றே வேறுபட்டு இரும் புலி வழங்கும் சோலைப் பெரும் கல் வைப்பின் சுரன் இறந்தோரே &150 - காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார் #1 குறுந்தொகை 342 குறிஞ்சி - காவிரிப்பூம்பட்டினத்துக் கந்தரத்தனார் கலை கை தொட்ட கமழ் சுளைப் பெரும் பழம் காவல் மறந்த கானவன் ஞாங்கர்க் கடி உடை மரம்-தொறும் படு வலை மாட்டும் குன்ற நாட தகுமோ பைம் சுனைக் குவளைத் தண் தழை இவள் ஈண்டு வருந்த நயந்தோர் புன்கண் தீர்க்கும் பயம் தலைப்படா பண்பினை எனினே &151 - (காவிரிப்பூம்பட்டினத்துக்) காரிக்கண்ணனார் #1 அகநானூறு 107 பாலை - காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் நீ செலவு அயரக் கேள்-தொறும் பல நினைந்து அன்பின் நெஞ்சத்து அயாஅப் பொறை மெலிந்த என் அகத்து இடும்பை களைமார் நின்னொடு கரும் கல் வியல் அறைக் கிடப்பி வயிறு தின்று இரும் புலி துறந்த ஏற்று மான் உணங்கல் நெறி செல் வம்பலர் உவந்தனர் ஆங்கண் ஒலி கழை நெல்லின் அரிசியொடு ஓராங்கு ஆன் நிலைப் பள்ளி அளை பெய்து அட்ட வால் நிணம் உருக்கிய வாஅல் வெண் சோறு புகர் அரைத் தேக்கின் அகல் இலை மாந்தும் கல்லா நீள்மொழிக் கத நாய் வடுகர் வல் ஆண் அரு முனை நீந்தி அல்லாந்து உகு மண் ஊறு அஞ்சும் ஒரு கால் பட்டத்து இன்னா ஏற்றத்து இழுக்கி முடம் கூர்ந்து ஒரு தனித்து ஒழிந்த உரன் உடை நோன் பகடு அம் குழை இருப்பை அறை வாய் வான் புழல் புல் உளைச் சிறாஅர் வில்லின் நீக்கி மரை கடிந்து ஊட்டும் வரையகச் சீறூர் மாலை இன் துணை ஆகிக் காலைப் பசு நனை நறு வீப் பரூஉப் பரல் உறைப்ப மண மனை கமழும் கானம் துணை ஈர் ஓதி என் தோழியும் வருமே #2 அகநானூறு 123 பாலை - காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் உண்ணாமையின் உயங்கிய மருங்கின் ஆடாப் படிவத்து ஆன்றோர் போல வரை செறி சிறு நெறி நிரைபு உடன் செல்லும் கான யானை கவின் அழி குன்றம் இறந்து பொருள் தருதலும் ஆற்றாய் சிறந்த சில் ஐம் கூந்தல் நல் அகம் பொருந்தி ஒழியின் வறுமை அஞ்சுதி அழிதகவு உடை-மதி வாழிய நெஞ்சே நிலவு என நெய் கனி நெடு வேல் எஃகின் இமைக்கும் மழை மருள் பல் தோல் மா வண் சோழர் கழை மாய் காவிரிக் கடல் மண்டு பெரும் துறை இறவொடு வந்து கோதையொடு பெயரும் பெரும் கடல் ஓதம் போல ஒன்றில் கொள்ளாய் சென்று தரு பொருட்கே #3 அகநானூறு 285 பாலை - காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் ஒழியச் சென்மார் செல்ப என்று நாம் அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து எவ்வம் இகந்து சேண் அகல வை எயிற்று ஊன் நசைப் பிணவின் உறு பசி களைஇயர் காடு தேர் மடப் பிணை அலறக் கலையின் ஓடு குறங்கு அறுத்த செந்நாய் ஏற்றை வெயில் புலந்து இளைக்கும் வெம்மைய பயில் வரி இரும் புலி வேங்கைக் கரும் தோல் அன்ன கல் எடுத்து எறிந்த பல் கிழி உடுக்கை உலறு குடை வம்பலர் உயர் மரம் ஏறி ஏறு வேட்டு எழுந்த இனம் தீர் எருவை ஆடு செவி நோக்கும் அத்தம் பணைத் தோள் குவளை உண்கண் இவளும் நம்மொடு வரூஉம் என்றனரே காதலர் வாராய் தோழி முயங்குகம் பலவே #4 குறுந்தொகை 297 குறிஞ்சி - காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார் அவ் விளிம்பு உரீஇய கொடும் சிலை மறவர் வை வார் வாளி விறல் பகை பேணார் மாறு நின்று எதிர்ந்த ஆறு செல் வம்பலர் உவல் இடு பதுக்கை ஊரின் தோன்றும் கல் உயர் நனம் தலை நல்ல கூறிப் புணர்ந்து உடன் போதல் பொருள் என உணர்ந்தேன் மன்ற அவர் உணரா ஊங்கே #5 நற்றிணை 237 பாலை - காரிக்கண்ணனார் நனி மிகப் பசந்து தோளும் சாஅய்ப் பனி மலி கண்ணும் பண்டு போலா இன் உயிர் அன்ன பிரிவு அரும் காதலர் நீத்து நீடினர் என்னும் புலவி உள் கொண்டு ஊடின்றும் இலையோ மடந்தை உவக் காண் தோன்றுவ ஓங்கி வியப்பு உடை இரவலர் வரூஉம் அளவை அண்டிரன் புரவு எதிர்ந்து தொகுத்த யானை போல உலகம் உவப்ப ஓது அரும் வேறு பல் உருவின் ஏர்தரும் மழையே #6 புறநானூறு 57 - காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் **பாடப்பட்டோர்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய ** நன்மாறன் வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும் புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன உரை சால் சிறப்பின் புகழ் சால் மாற நின் ஒன்று கூறுவது உடையோன் என் எனின் நீயே பிறர் நாடு கொள்ளுங்காலை அவர் நாட்டு இறங்கு கதிர் கழனி நின் இளையரும் கவர்க நனம் தலைப் பேரூர் எரியும் நைக்க மின்னு நிமிர்ந்து அன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல் ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க என்னதூஉம் கடிமரம் தடிதல் ஓம்பு நின் நெடு நல் யானைக்குக் கந்து ஆற்றாவே #7 புறநானூறு 58 - காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் **பாடப்பட்டோர்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும் **பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் நீயே தண் புனல் காவிரி கிழவனை இவனே முழுமுதல் தொலைந்த கோளி ஆலத்துக் கொழு நிழல் நெடும் சினை வீழ் பொறுத்து ஆங்குத் தொல்லோர் மாய்ந்து எனத் துளங்கல் செல்லாது நல் இசை முது குடி நடுக்கு அறத் தழீஇ இளையது ஆயினும் கிளை அரா எறியும் அரு நரை உருமின் பெருநரைப் பொறாஅச் செரு மாண் பஞ்சவர் ஏறே நீயே அறம் துஞ்சு உறந்தைப் பொருநனை இவனே நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என வரைய சாந்தமும் திரைய முத்தமும் இமிழ் குரல் முரசம் மூன்று உடன் ஆளும் தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே பால் நிற உருவின் பனைக்கொடியோனும் நீல் நிற உருவின் நேமியோனும் என்று இரு பெரும் தெய்வமும் உடன் நின்று ஆஅங்கு உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி இ நீர் ஆகலின் இனியவும் உளவோ இன்னும் கேள்-மின் நும் இசை வாழியவே ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர் இருவீரும் உடன் நிலை திரியீர் ஆயின் இமிழ் திரைப் பௌவம் உடுத்த இப் பயம் கெழு மா நிலம் கையகப்படுவது பொய் ஆகாதே அதனால் நல்ல போலவும் நயவ போலவும் தொல்லோர் சென்ற நெறியர் போலவும் காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும் ஏதில்மாக்கள் பொதுமொழி கொள்ளாது இன்றே போக நும் புணர்ச்சி வென்றுவென்று அடு களத்து உயர்க நும் வேலே கொடு வரிக் கோள்_மா குயின்ற சேண் விளங்கு தொடு பொறி நெடு நீர்க் கெண்டையொடு பொறித்த குடுமிய ஆக பிறர் குன்று கெழு நாடே #8 புறநானூறு 169 - காவிரிபூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் **பாடப்பட்டோன் : பிட்டங்கொற்றன் நும் படை செல்லும் காலை அவர் படை எறித்து எறி தானை முன்னரை எனாஅ அவர் படை வரூஉம் காலை நும் படைக் கூழை தாங்கிய அகல் யாற்றுக் குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ அரிதால் பெரும நின் செவ்வி என்றும் பெரிதால் அத்தை என் கடும்பினது இடும்பை இன்னே விடு-மதி பரிசில் வென் வேல் இளம் பல் கோசர் விளங்கு படை கன்மார் இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின் பெரு மரக் கம்பம் போல பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே #9 புறநானூறு 171 - காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் **பாடப்பட்டோன் : பிட்டங்கொற்றன் இன்று செலினும் தருமே சிறு வரை நின்று செலினும் தருமே பின்னும் முன்னே தந்தனென் என்னாது துன்னி வைகலும் செலினும் பொய்யலன் ஆகி யாம் வேண்டி ஆங்கு எம் வறும் கலம் நிறைப்போன் தான் வேண்டி ஆங்கு தன் இறை உவப்ப அரும் தொழில் முடியரோ திருந்து வேல் கொற்றன் இன மலி கதச் சேக் களனொடு வேண்டினும் களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும் அரும் கலம் களிற்றொடு வேண்டினும் பெருந்தகை பிறர்க்கும் அன்ன அறத் தகையன்னே அன்னன் ஆகலின் எந்தை உள் அடி முள்ளும் நோவ உறாற்க-தில்ல ஈவோர் அரிய இவ் உலகத்து வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே #10 புறநானூறு 353 காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் ஆசு இல் கம்மியன் மாசறப் புனைந்த பொலம் செய் பல் காசு அணிந்த அல்குல் ஈகைக் கண்ணி இலங்கத் தைஇத் தருமமொடு இயல்வோள் சாயல் நோக்கித் தவிர்த்த தேரை விளர்த்த கண்ணை வினவல் ஆனா வெல் போர் அண்ணல் யார் மகள் என்போய் கூறக் கேள் இனிக் குன்று கண்டு அன்ன நிலைப் பல் போர்பு நாள்_கடா அழித்த நனம் தலைக் குப்பை வல் வில் இளையர்க்கு அல்கு_பதம் மாற்றாத் தொல் குடி மன்னன் மகளே முன்_நாள் கூறி வந்த மா முது வேந்தர்க்குச் செரு-வாய் உழக்கிக் குருதி ஓட்டிக் கதுவாய் போகிய நுதி வாய் எஃகமொடு பஞ்சியும் களையாப் புண்ணர் அஞ்சுதகவு உடையர் இவள் தன்னைமாரே &152 - காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் #1 அகநானூறு 103 பாலை - காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் நிழல் அறு நனம் தலை எழால் ஏறு குறித்த கதிர்த்த சென்னி நுணங்கு செம் நாவின் விதிர்த்த போலும் அம் நுண் பல் பொறிக் காமர் சேவல் ஏமம் சேப்ப முளி அரில் புலம்பப் போகி முனாஅது முரம்பு அடைந்து இருந்த மூரி மன்றத்து அதர் பார்த்து அல்கும் ஆ கெழு சிறுகுடி உறையுநர் போகிய ஓங்கு நிலை வியன் மனை இறை நிழல் ஒரு சிறைப் புலம்பு அயா உயிர்க்கும் வெம் முனை அரும் சுரம் நீந்தித் தம்-வயின் ஈண்டு வினை மருங்கின் மீண்டோர்-மன் என நள்ளென் யாமத்து உயவுத் துணை ஆக நம்மொடு பசலை நோன்று தம்மொடு தானே சென்ற நலனும் நல்கார்-கொல்லோ நாம் நயந்திசினோரே #2 அகநானூறு 271 பாலை - காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் பொறி வரிப் புறவின் செம் கால் சேவல் சிறு புன் பெடையொடு சேண் புலம் போகி அரி மணல் இயவில் பரல் தேர்ந்து உண்டு வரி மரல் வாடிய வான் நீங்கு நனம் தலைக் குறும்பொறை மருங்கின் கோள் சுரம் நீந்தி நெடும் சேண் வந்த நீர் நசை வம்பலர் செல் உயிர் நிறுத்த சுவைக் காய் நெல்லிப் பல் காய் அம் சினை அகவும் அத்தம் சென்று நீர் அவணிர் ஆகி நின்று தரு நிலை அரும் பொருட்பிணி நினைந்தனிர் எனினே வல்வது ஆக நும் செய்வினை இவட்கே களி மலி கள்ளின் நல் தேர் அவியன் ஆடு இயல் இள மழை சூடித் தோன்றும் பழம் தூங்கு விடரகத்து எழுந்த காம்பின் கண் இடை புரையும் நெடு மென் பணைத் தோள் திருந்து கோல் ஆய் தொடி ஞெகிழின் மருந்தும் உண்டோ பிரிந்து உறை நாட்டே #3 நற்றிணை 389 குறிஞ்சி - காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனார் வேங்கையும் புலி ஈன்றன அருவியும் தேம் படு நெடு வரை மணியின் மானும் அன்னையும் அமர்ந்து நோக்கினளே என் ஐயும் களிற்று முகம் திறந்த கல்லா விழுத் தொடை ஏவல்_இளையரொடு மா வழிப்பட்டு எனச் சிறு கிளி முரணிய பெரும் குரல் ஏனல் காவல் நீ என்றோளே சேவலொடு சிலம்பின் போகிய சிதர் கால் வாரணம் முதைச் சுவல் கிளைத்த பூழி மிகப் பல நல் பொன் இமைக்கும் நாடனொடு அன்புறு காமம் அமைக நம் தொடர்பே &153 - காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார் #1 குறுந்தொகை 347 பாலை - காவிரிப்பூம்பட்டினத்துச் சேந்தன் கண்ணனார் மல்கு சுனை உலர்ந்த நல்கூர் சுர முதல் குமரி வாகைக் கோல் உடை நறு வீ மட மா தோகைக் குடுமியின் தோன்றும் கான நீளிடைத் தானும் நம்மொடு ஒன்று மணம் செய்தனள் இவள் எனின் நன்றே நெஞ்சம் நயந்த நின் துணிவே &154 - காவிரிப்பூம்பட்டினத்துப் பொன் வாணிகனார் மகனார் நப்பூதனார் #1 பத்துப்பாட்டு - 5. முல்லைப்பாட்டு - நனம் தலை உலகம் வளைஇ நேமியொடு வலம்புரி பொறித்த மா தாங்கு தடக் கை நீர் செல நிமிர்ந்த மாஅல் போலப் பாடு இமிழ் பனிக் கடல் பருகி வலன் ஏர்பு கோடு கொண்டு எழுந்த கொடும் செலவு எழிலி பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை அரும் கடி மூதூர் மருங்கில் போகி யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப நெல்லொடு நாழி கொண்ட நறு வீ முல்லை அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கைதொழுது பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்பச் சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின் உறு துயர் அலமரல் நோக்கி ஆய்_மகள் நடுங்கு சுவல் அசைத்த கையள் கைய கொடும் கோல் கோவலர் பின் நின்று உய்த்தர இன்னே வருகுவர் தாயர் என்போள் நன்னர் நன் மொழி கேட்டனம் அதனால் நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர் முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து வருதல் தலைவர் வாய்வது நீ நின் பருவரல் எவ்வம் களை மாயோய் எனக் காட்டவும் காட்டவும் காணாள் கலுழ் சிறந்து பூப் போல் உண்கண் புலம்பு முத்து உறைப்பக் கான்யாறு தழீஇய அகல் நெடும் புறவில் சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி வேட்டுப் புழை அருப்பம் மாட்டிக் காட்ட இடு முள் புரிசை ஏமுற வளைஇப் படு நீர்ப் புணரியின் பரந்த பாடி உவலைக் கூரை ஒழுகிய தெருவில் கவலை முற்றம் காவல் நின்ற தேம் படு கவுள சிறு கண் யானை ஓங்கு நிலைக் கரும்பொடு கதிர் மிடைந்து யாத்த வயல் விளை இன் குளகு உண்ணாது நுதல் துடைத்து அயில் நுனை மருப்பின் தம் கை இடைக் கொண்டு எனக் கவை_முள்_கருவியின் வடமொழி பயிற்றிக் கல்லா இளைஞர் கவளம் கைப்பக் கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான் முக்கோல் அசை நிலை கடுப்ப நல் போர் ஓடா வல் வில் தூணி நாற்றிக் கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கைப் பூத் தலைக் குந்தம் குத்திக் கிடுகு நிரைத்து வாங்கு வில் அரணம் அரணம் ஆக வேறு பல் பெரும் படை நாப்பண் வேறு ஓர் நெடும் காழ்க் கண்டம் கோலி அகம் நேர்பு குறும் தொடி முன்கைக் கூந்தல் அம் சிறுபுறத்து இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள் விரவு வரிக் கச்சின் பூண்ட மங்கையர் நெய் உமிழ் சுரையர் நெடும் திரிக் கொளீஇக் கை அமை விளக்கம் நந்து-தொறும் மாட்ட நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள் அதிரல் பூத்த ஆடு கொடிப் படாஅர் சிதர் வரல் அசை வளிக்கு அசைவந்து ஆங்கு துகில் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்கு நடைப் பெரு மூதாளர் ஏமம் சூழப் பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள் தொழுது காண் கையர் தோன்ற வாழ்த்தி எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய் நின் குறுநீர்க் கன்னல் இனைத்து என்று இசைப்ப மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவு உடை மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து வலி புணர் யாக்கை வன்கண் யவனர் புலித்தொடர் விட்ட புனை மாண் நல் இல் திரு மணி விளக்கம் காட்டித் திண் ஞாண் எழினி வாங்கிய ஈர் அறைப் பள்ளியுள் உடம்பின் உரைக்கும் உரையா நாவின் படம் புகு மிலேச்சர் உழையர் ஆக மண்டு அமர் நசையொடு கண்படை பெறாஅது எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண் கூர்ந்து பிடிக் கணம் மறந்த வேழம் வேழத்துப் பாம்பு பதைப்பு அன்ன பரூஉக் கை துமியத் தேம் பாய் கண்ணி நல் வலம் திருத்திச் சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும் தோல் துமிபு வை நுனைப் பகழி மூழ்கலின் செவி சாய்த்து உண்ணாது உயங்கும் மா சிந்தித்தும் ஒரு கை பள்ளி ஒற்றி ஒரு கை முடியொடு கடகம் சேர்த்தி நெடிது நினைந்து பகைவர்ச் சுட்டிய படை கொள் நோன் விரல் நகை தாழ் கண்ணி நல் வலம் திருத்தி அரசு இருந்து பனிக்கும் முரசு முழங்கு பாசறை இன் துயில் வதியுநன் காணாள் துயர் உழந்து நெஞ்சு ஆற்றுப்படுத்த நிறை தபு புலம்பொடு நீடு நினைந்து தேற்றியும் ஓடு வளை திருத்தியும் மையல் கொண்டும் ஒய்யென உயிர்த்தும் ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி இழை நெகிழ்ந்து பாவைவிளக்கில் பரூஉச் சுடர் அழல இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து முடங்கு இறைச் சொரிதரும் மாத் திரள் அருவி இன் பல் இமிழ் இசை ஓர்ப்பனள் கிடந்தோள் அம் செவி நிறைய ஆலின வென்று பிறர் வேண்டு புலம் கவர்ந்த ஈண்டு பெரும் தானையொடு விசயம் வெல் கொடி உயரி வலன் ஏர்பு வயிரும் வளையும் ஆர்ப்ப அயிர செறி இலைக் காயா அஞ்சனம் மலர முறி இணர்க் கொன்றை நன் பொன் கால கோடல் குவி முகை அங்கை அவிழத் தோடு ஆர் தோன்றி குருதி பூப்பக் கானம் நந்திய செந்நிலப் பெரு வழி வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின் திரி மருப்பு இரலையொடு மட மான் உகள எதிர் செல் வெண் மழை பொழியும் திங்களில் முதிர் காய் வள்ளி அம் காடு பிறக்கு ஒழிய துனை பரி துரக்கும் செலவினர் வினை விளங்கு நெடும் தேர் பூண்ட மாவே &155 - கிடங்கில் காவிதி கீரங்கண்ணனார் #1 நற்றிணை 218 நெய்தல் - கிடங்கில் காவிதி கீரங்கண்ணனார் ஞாயிறு ஞான்று கதிர் மழுங்கின்றே எல்லியும் பூ வீ கொடியின் புலம்பு அடைந்தன்றே வாவலும் வயின்-தொறும் பறக்கும் சேவலும் நகை வாய்க் கொளீஇ நகு-தொறும் விளிக்கும் ஆயாக் காதலொடு அதர்ப் படத் தெளித்தோர் கூறிய பருவம் கழிந்தன்று பாரிய பராரை வேம்பின் படு சினை இருந்த குராஅல் கூகையும் இராஅ இசைக்கும் ஆனா நோய் அட வருந்தி இன்னும் தமியேன் கேட்குவென்-கொல்லோ பரியரைப் பெண்ணை அன்றில் குரலே &156 - கிடங்கில் காவிதிப் பெரும் கொற்றனார் #1 நற்றிணை 364 முல்லை - கிடங்கில் காவிதிப் பெரும் கொற்றனார் சொல்லிய பருவம் கழிந்தன்று எல்லையும் மயங்கு இருள் நடுநாள் மங்குலோடு ஒன்றி ஆர் கலி வானம் நீர் பொதிந்து இயங்கப் பனியின் வாடையொடு முனிவு வந்து இறுப்ப இன்ன சில் நாள் கழியின் பல் நாள் வாழலென் வாழி தோழி ஊழின் உரும் இசை அறியாச் சிறு செம் நாவின் ஈர் மணி இன் குரல் ஊர் நணி இயம்பப் பல் ஆ தந்த கல்லாக் கோவலர் கொன்றை அம் தீம் குழல் மன்று-தோறு இயம்ப உயிர் செலத் துனைதரும் மாலை செயிர் தீர் மாரியொடு ஒருங்கு தலைவரினே &157 - கிடங்கில் குலபதி நக்கண்ணனார் #1 குறுந்தொகை 252 குறிஞ்சி - கிடங்கில் குலபதி நக்கண்ணனார் நெடிய திரண்ட தோள் வளை ஞெகிழ்த்த கொடியன் ஆகிய குன்று கெழு நாடன் வருவதோர் காலை இன்முகம் திரியாது கடவுள் கற்பின் அவன் எதிர் பேணி மடவை மன்ற நீ எனக் கடவுபு துனியல் வாழி தோழி சான்றோர் புகழும் முன்னர் நாணுப பழி யாங்கு ஒல்பவோ காணும் காலே &158 - கிள்ளிமங்கலங்கிழார் #1 குறுந்தொகை 76 குறிஞ்சி - கிள்ளிமங்கலங்கிழார் காந்தள் வேலி ஓங்கு மலை நன் நாட்டுச் செல்ப என்பவோ கல் வரை மார்பர் சிலம்பில் சேம்பின் அலங்கல் வள் இலை பெரும் களிற்றுச் செவியின் மானத் தைஇ தண் வரல் வாடை தூக்கும் கடும் பனி அற்சிரம் நடுங்கு அஞர் உறவே #2 குறுந்தொகை 110 முல்லை - கிள்ளிமங்கலம்கிழார் வாரார் ஆயினும் வரினும் அவர் நமக்கு யார் ஆகியரோ தோழி நீர நீலப் பைம் போது உளரிப் புதல பீலி ஒண் பொறிக் கருவிளை ஆட்டி நுண் முள் ஈங்கைச் செவ் அரும்பு ஊழ்த்த வண்ணத் துய்ம் மலர் உதிரத் தண்ணென்று இன்னாது எறிதரும் வாடையொடு என் ஆயினள்-கொல் என்னாதோரே #3 குறுந்தொகை 152 குறிஞ்சி - கிள்ளிமங்கலம்கிழார் யாவதும் அறிகிலர் கழறுவோரே தாய் இல் முட்டை போல உள் கிடந்து சாயின் அல்லது பிறிது எவன் உடைத்தே யாமைப் பார்ப்பின் அன்ன காமம் காதலர் கையற விடினே #4 குறுந்தொகை 181 குறிஞ்சி - கிள்ளிமங்கலம்கிழார் இது மற்று எவனோ தோழி துனியிடை இன்னர் என்னும் இன்னாக் கிளவி இரு மருப்பு எருமை ஈன்று அணிக் காரான் உழவன் யாத்த குழவியின் அகலாது பாஅல் பைம் பயிர் ஆரும் ஊரன் திரு மனைப் பல் கடம் பூண்ட பெரு முது பெண்டிரேம் ஆகிய நமக்கே &159 - கிள்ளிமங்கலம் கிழார் மகனார் சேர கோவனார் #1 நற்றிணை 365 குறிஞ்சி - கிள்ளிமங்கலம் கிழார் மகனார் சேர கோவனார் அரும் கடி அன்னை காவல் நீவி பெரும் கடை இறந்து மன்றம் போகிப் பகலே பலரும் காண வாய் விட்டு அகல் வயல் படப்பை அவன் ஊர் வினவி சென்மோ வாழி தோழி பல் நாள் கருவி வானம் பெய்யாது ஆயினும் அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் வான் தோய் மா மலைக் கிழவனைச் சான்றோய் அல்லை என்றனம் வரற்கே &160 - கீரங்கீரனார் #1 நற்றிணை 78 நெய்தல் - கீரங்கீரனார் கோள் சுறா வழங்கும் வாள் கேழ் இரும் கழி மணி ஏர் நெய்தல் மா மலர் நிறையப் பொன் நேர் நுண் தாது புன்னை தூஉம் வீழ் தாழ் தாழைப் பூக் கமழ் கானல் படர் வந்து நலியும் சுடர் செல் மாலை நோய் மலி பருவரல் நாம் இவண் உய்கம் கேட்டிசின் வாழி தோழி தெண் கழி வள் வாய் ஆழி உள் வாய் தோயினும் புள்ளு நிமிர்ந்து அன்ன பொலம் படைக் கலிமா வலவன் கோல் உற அறியா உரவு நீர்ச் சேர்ப்பன் தேர் மணிக் குரலே &161 - கீரந்தையார் #1 பரிபாடல் 2 திருமால் - கீரந்தையார் **இசையமைத்தவர் :: நன்னாகனார் இசை **பண் :: பாலையாழ் தொல் முறை இயற்கையின் மதிய மரபிற்று ஆக பசும்பொன் உலகமும் மண்ணும் பாழ்பட விசும்பில் ஊழி ஊழூழ் செல்ல கரு வளர் வானத்து இசையின் தோன்றி உரு அறிவாரா ஒன்றன் ஊழியும் உந்து வளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும் செம் தீச் சுடரிய ஊழியும் பனியொடு தண் பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர் தருபு மீண்டும் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கும் உள்ளீடு ஆகிய இரு நிலத்து ஊழியும் நெய்தலும் குவளையும் ஆம்பலும் சங்கமும் மை இல் கமலமும் வெள்ளமும் நுதலிய செய் குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை கேழல் திகழ்வரக் கோலமொடு பெயரிய ஊழி ஒரு வினை உணர்த்தலின் முதுமைக்கு ஊழி யாவரும் உணரா ஆழி முதல்வ நின் பேணுதும் தொழுது நீயே வளையொடு புரையும் வாலியோற்கு அவன் இளையன் என்போர்க்கு இளையை ஆதலும் புதை இருள் உடுக்கைப் பொலம் பனைக்கொடியோற்கு முதியை என்போர்க்கு முதுமை தோன்றலும் வடு இல் கொள்கையின் உயர்ந்தோர் ஆய்ந்த கெடு இல் கேள்வியுள் நடு ஆகுதலும் இ நிலைத் தெரி பொருள் தேரின் இ நிலை நின் நிலைத் தோன்றும் நின் தொல் நிலைச் சிறப்பே ஓங்கு உயர் வானின் வாங்கு வில் புரையும் பூண் அணி கவைஇய ஆர் அணி நித்தில நித்தில மதாணி அத் தகு மதி மறுச் செய்யோள் சேர்ந்த நின் மாசு இல் அகலம் வளர் திரை மண்ணிய கிளர் பொறி நாப்பண் வை வால் மருப்பின் களிறு மணன் அயர்பு புள்ளி நிலனும் புரைபடல் அரிது என உள்ளுநர் உரைப்போர் உரையொடு சிறந்தன்று ஒடியா உள்ளமொடு உருத்து ஒருங்கு உடன் இயைந்து இடி எதிர் கழறுங்கால் உறழ்பு எழுந்தவர் கொடி அறுபு இறுபு செவி செவிடு படுபு முடிகள் அதிர படிநிலை தளர நனி முரல் வளை முடி அழிபு இழிபு தலை இறுபு தாரொடு புரள நிலை தொலைபு வேர் தூர் மடல் குருகு பறியா நீள் இரும் பனை மிசைப் பல பதினாயிரம் குலை தரை உதிர்வ போல் நில்லாது ஒரு முறை கொய்பு கூடி ஒருங்கு உருண்டு பிளந்து நெரிந்து உருள்பு சிதறுபு அளறு சொரிபு நிலம் சோர சேரார் இன் உயிர் செகுக்கும் போர் அடு குரிசில் நீ ஏந்திய படையே ஒன்னார் உடங்கு உண்ணும் கூற்றம் உடலே பொன் ஏர்பு அவிர் அழல் நுடக்கு அதன் நிறனே நின்னது திகழ் ஒளி சிறப்பு இருள் திரு மணி கண்ணே புகழ் சால் தாமரை அலர் இணைப் பிணையல் வாய்மை வயங்கிய வைகல் சிறந்த நோன்மை நாடின் இரு நிலம் யாவர்க்கும் சாயல் நினது வான் நிறை என்னும் நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே அவ்வும் பிறவும் ஒத்தனை உவ்வும் எவ் வயினோயும் நீயே செவ் வாய் உவணத்து உயர் கொடியோயே கேள்வியுள் கிளந்த ஆசான் உரையும் படிநிலை வேள்வியுள் பற்றி ஆடு கொளலும் புகழ் இயைந்து இசை மறை உறு கனல் முறை மூட்டித் திகழ் ஒளி ஒண் சுடர் வளப்பாடு கொளலும் நின் உருபுடன் உண்டி பிறர் உடம்படுவாரா நின்னொடு புரைய அந்தணர் காணும் வரவு வாயடை அமிர்தம் நின் மனத்தகத்து அடைத்தர மூவா மரபும் ஓவா நோன்மையும் சாவா மரபின் அமரர்க்கா சென்ற நின் மரபினோய் நின் அடி தலை உற வணங்கினேம் பல் மாண் யாமும் கலி இல் நெஞ்சினேம் ஏத்தினேம் வாழ்த்தினேம் கடும்பொடும் கடும்பொடும் பரவுதும் கொடும்பாடு அறியற்க எம் அறிவு எனவே &162 - குடபுலவியனார் #1 புறநானூறு 18 - குடபுலவியனார் **பாடப்பட்டோன் - பாண்டியன் தலையாலங்கானத்துச் **செருவென்ற நெடுஞ்செழியன் முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப் பரந்துபட்ட வியன் ஞாலம் தாளின் தந்து தம் புகழ் நிறீஇ ஒரு தாம் ஆகிய உரவோர் உம்பல் ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய பெருமைத்து ஆக நின் ஆயுள் தானே நீர்த் தாழ்ந்த குறும் காஞ்சிப் பூக் கதூஉம் இன வாளை நுண் ஆரல் பரு வரால் குரூஉக் கெடிற்ற குண்டு அகழி வான் உட்கும் வடி நீள் மதில் மல்லல் மூதூர் வய வேந்தே செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும் ஞாலம் காவலர் தோள் வலி முருக்கி ஒரு நீ ஆகல் வேண்டினும் சிறந்த நல் இசை நிறுத்தல் வேண்டினும் மற்று அதன் தகுதி கேள் இனி மிகுதியாள நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே உண்டி முதற்றே உணவின் பிண்டம் உணவு எனப்படுவது நிலத்தோடு நீரே நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே வித்தி வான் நோக்கும் புன்புலம் கண் அகன் வைப்புற்று ஆயினும் நண்ணி ஆளும் இறைவன் தாட்கு உதவாதே அதனால் அடு போர்ச் செழிய இகழாது வல்லே நிலன் நெளி மருங்கில் நீர்நிலை பெருகத் தட்டோர் அம்ம இவண் தட்டோரே தள்ளாதோர் இவண் தள்ளாதோரே #2 புறநானூறு 19 - குடபுலவியனார் **பாடப்பட்டோன் - பாண்டியன் தலையாலங்கானத்துச் **செருவென்ற நெடுஞ்செழியன் இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகல் கிடக்கைத் தமிழ் தலைமயங்கிய தலையாலம்கானத்து மன் உயிர்ப் பன்மையும் கூற்றத்து ஒருமையும் நின்னொடு தூக்கிய வென் வேல் செழிய இரும் புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய பெரும் கல் அடாரும் போன்ம் என விரும்பி முயங்கினேன் அல்லனோ யானே மயங்கிக் குன்றத்து இறுத்த குரீஇ இனம் போல அம்பு சென்று இறுத்த அறும் புண் யானைத் தூம்பு உடைத் தடக் கை வாயொடு துமிந்து நாஞ்சில் ஒப்ப நிலம் மிசைப் புரள எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர் எந்தையோடு கிடந்தோர் எம் புன் தலைப் புதல்வர் இன்ன விறலும் உள-கொல் நமக்கு என மூதில் பெண்டிர் கசிந்து அழ நாணி கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை எழுவர் நல் வலம் கடந்தோய் நின் கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே &163 - (குடவாயில்) கீரத்தனார் #1 அகநானூறு 44 முல்லை - குடவாயில் கீரத்தனார்(உறையூர் சல்லியங்குமரனார்) வந்து வினை முடித்தனன் வேந்தனும் பகைவரும் தம் திறை கொடுத்துத் தமர் ஆயினரே முரண் செறிந்து இருந்த தானை இரண்டும் ஒன்று என அறைந்தன பணையே நின் தேர் முன் இயங்கு ஊர்திப் பின்னிலை ஈயாது ஊர்க பாக ஒரு வினை கழிய நன்னன் ஏற்றை நறும் பூண் அத்தி துன் அரும் கடும் திறல் கங்கன் கட்டி பொன் அணி வல் வில் புன்றுறை என்று ஆங்கு அன்று அவர் குழீஇய அளப்பு அரும் கட்டூர் பருந்து படப் பண்ணி பழையன் பட்டு எனக் கண்டது நோனான் ஆகித் திண் தேர்க் கணையன் அகப்படக் கழுமலம் தந்த பிணையல் அம் கண்ணிப் பெரும் பூண் சென்னி அழும்பில் அன்ன அறாஅ யாணர் பழம் பல் நெல்லின் பல் குடிப் பரவை பொங்கடி படி கயம் மண்டிய பசு மிளை தண் குடவாயில் அன்னோள் பண்பு உடை ஆகத்து இன் துயில் பெறவே #2 அகநானூறு 60 நெய்தல் - குடவாயில் கீரத்தனார் பெரும் கடல் பரப்பில் சே இறா நடுங்கக் கொடும் தொழில் முகந்த செம் கோல் அம் வலை நெடும் திமில் தொழிலொடு வைகிய தந்தைக்கு உப்பு நொடை நெல்லின் மூரல் வெண் சோறு அயிலை துழந்த அம் புளிச் சொரிந்து கொழு மீன் தடியொடு குறுமகள் கொடுக்கும் திண் தேர் பொறையன் தொண்டி அன்ன எம் ஒண் தொடி ஞெமுக்காதீமோ தெய்ய ஊதை ஈட்டிய உயர் மணல் அடைகரை கோதை ஆயமொடு வண்டல் தைஇ ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி என கொன்னும் சிவப்போள் காணின் வென் வேல் கொற்றச் சோழர் குடந்தை வைத்த நாடு தரு நிதியினும் செறிய அரும் கடிப் படுக்குவள் அறன் இல் யாயே #3 அகநானூறு 79 பாலை - குடவாயில் கீரத்தனார் தோள் பதன் அமைத்த கரும் கை ஆடவர் கனை பொறி பிறப்ப நூறி வினைப் படர்ந்து கல்லுறுத்து இயற்றிய வல் உவர்ப் படுவில் பார் உடை மருங்கின் ஊறல் மண்டிய வன்புலம் துமியப் போகிக் கொங்கர் படு மணி ஆயம் நீர்க்கு நிமிர்ந்து செல்லும் சேதா எடுத்த செந்நிலக் குரூஉத் துகள் அகல் இரு விசும்பின் ஊன்றித் தோன்றும் நனம் தலை அழுவம் நம்மொடு துணைப்ப வல்லாங்கு வருதும் என்னாது அல்குவர வருந்தினை வாழி என் நெஞ்சே இரும் சிறை வளை வாய்ப் பருந்தின் வான் கண் பேடை ஆடு-தொறு கனையும் அம் வாய் கடும் துடிக் கொடு வில் எயினர் கோள் சுரம் படர நெடு விளி பயிற்றும் நிரம்பா நீள் இடை கல் பிறங்கு அத்தம் போகி நில்லாப் பொருட்பிணி பிரிந்த நீயே #4 அகநானூறு 119 பாலை - குடவாயிற் கீரத்தனார் நுதலும் தோளும் திதலை அல்குலும் வண்ணமும் வனப்பும் வரியும் வாட வருந்துவள் இவள் எனத் திருந்துபு நோக்கி வரைவு நன்று என்னாது அகலினும் அவர் வறிது ஆறு செல் மாக்கள் அறுத்த பிரண்டை ஏறு பெறு பாம்பின் பைம் துணி கடுப்ப நெறி அயல் திரங்கும் அத்தம் வெறிகொள உமண் சாத்து இறந்த ஒழி கல் அடுப்பில் நோன் சிலை மழவர் ஊன் புழுக்கு அயரும் சுரன் வழக்கு அற்றது என்னாது உரம் சிறந்து நெய்தல் உருவின் ஐது இலங்கு அகல் இலைத் தொடை அமை பீலிப் பொலிந்த கடிகை மடை அமை திண் சுரை மாக் காழ் வேலொடு தணி அமர் அழுவம் தம்மொடு துணைப்பத் துணிகுவர்-கொல்லோ தாமே துணி கொள மறப் புலி உழந்த வசி படு சென்னி உறு நோய் வருத்தமொடு உணீஇய மண்டி படி முழம் ஊன்றிய நெடு நல் யானை கை தோய்த்து உயிர்க்கும் வறும் சுனை மை தோய் சிமைய மலை முதல் ஆறே #5 அகநானூறு 129 பாலை - குடவாயில் கீரத்தனார் உள்ளல் வேண்டும் ஒழிந்த பின் என நள்ளென் கங்குல் நடுங்கு துணை ஆயவர் நின் மறந்து உறைதல் யாவது புல் மறைந்து அலங்கல் வான் கழை உதிர் நெல் நோக்கிக் கலை பிணை விளிக்கும் கானத்து ஆங்கண் கல் சேர்பு இருந்த கதுவாய்க் குரம்பைத் தாழி முதல் கலித்த கோழ் இலைப் பருத்திப் பொதி வயிற்று இளம் காய் பேடை ஊட்டிப் போகில் பிளந்திட்ட பொங்கல் வெண் காழ் நல்கூர் பெண்டிர் அல்கல் கூட்டும் கலங்கு முனைச் சீறூர் கை தலைவைப்பக் கொழுப்பு ஆ தின்ற கூர்ம் படை மழவர் செருப்பு உடை அடியர் தெண் சுனை மண்டும் அரும் சுரம் அரிய அல்ல வார் கோல் திருந்து இழைப் பணைத் தோள் தேன் நாறு கதுப்பின் குவளை உண்கண் இவளொடு செலற்கு என நெஞ்சு வாய் அவிழ்ந்தனர் காதலர் அம் சில் ஓதி ஆய்_இழை நமக்கே #6 அகநானூறு 287 பாலை - குடவாயிற்கீரத்தனார் தொடி அணி முன்கைத் தொகு விரல் குவைஇப் படிவ நெஞ்சமொடு பகல் துணை ஆக நோம்-கொல் அளியள் தானே தூங்கு நிலை மரை ஏறு சொறிந்த மாத் தாள் கந்தின் சுரை இவர் பொதியில் அம் குடிச் சீறூர் நாள்_பலி மறந்த நரைக் கண் இட்டிகைப் புரிசை மூழ்கிய பொரி அரை ஆலத்து ஒரு தனி நெடு வீழ் உதைத்த கோடை துணைப் புறா இரிக்கும் தூய் மழை நனம் தலைக் கணைக் கால் அம் பிணை ஏறு புறம் நக்க ஒல்கு நிலை யாஅத்து ஓங்கு சினை பயந்த அல்குறு வரி நிழல் அசையினம் நோக்க அரம்பு வந்து அலைக்கும் மாலை நிரம்பா நீள் இடை வருந்துதும் யாமே #7 அகநானூறு 315 பாலை - குடவாயில் கீரத்தனார் கூழையும் குறு நெறிக் கொண்டன முலையும் சூழி மென் முகம் செப்புடன் எதிரின பெண் துணை சான்றனள் இவள் எனப் பல் மாண் கண் துணை ஆக நோக்கி நெருநையும் அயிர்த்தன்று-மன்னே நெஞ்சம் பெயர்த்தும் அறியாமையின் செறியேன் யானே பெரும் பெயர் வழுதி கூடல் அன்ன தன் அரும் கடி வியல் நகர்ச் சிலம்பும் கழியாள் சேணுறச் சென்று வறும் சுனை ஒல்கி புறவுக் குயின்று உண்ட புன் காய் நெல்லிக் கோடை உதிர்த்த குவி கண் பசும் காய் அறு நூல் பளிங்கின் துளைக் காசு கடுப்ப வறு நிலத்து உதிரும் அத்தம் கதுமெனக் கூர் வேல் விடலை பொய்ப்பப் போகிச் சேக்குவள்-கொல்லோ தானே தேக்கின் அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை ஊன் புழுக்கு அயரும் முன்றில் கான் கெழு வாழ்நர் சிறுகுடியானே #8 அகநானூறு 345 பாலை - குடவாயில் கீரத்தனார் விசும்பு தளி பொழிந்து வெம்மை நீங்கித் தண் பதம் படுதல் செல்க எனப் பல் மாண் நாம் செல விழைந்தனம் ஆக ஓங்கு புகழ்க் கான் அமர் செல்வி அருளலின் வெண் கால் பல் படைப் புரவி எய்திய தொல் இசை நுணங்கு நுண் பனுவல் புலவன் பாடிய இன மழை தவழும் ஏழில் குன்றத்துக் கரும் கால் வேங்கைச் செம் பூம் பிணையல் ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும் சில் நாள் கழிக என்று முன்_நாள் நம்மொடு பொய்த்தனர் ஆயினும் தம்மொடு திருந்து வேல் இளையர் சுரும்பு உண மலைமார் மா முறி ஈன்று மரக் கொம்பு அகைப்ப உறை கழிந்து உலந்த பின்றைப் பொறைய சிறு வெள் அருவி துவலையின் மலர்ந்த கரும் கால் நுணவின் பெரும் சினை வான் பூச் செம் மணல் சிறு நெறி கம்மென வரிப்பக் காடு கவின் பெறுக தோழி ஆடு வளிக்கு ஒல்கு நிலை இற்றி ஒரு தனி நெடு வீழ் கல் கண் சீக்கும் அத்தம் அல்கு வெயில் நீழல் அசைந்தனர் செலவே #9 அகநானூறு 366 மருதம் - குடவாயில் கீரத்தனார் தாழ் சினை மருதம் தகை பெறக் கவினிய நீர் சூழ் வியன் களம் பொலியப் போர்பு அழித்து கள் ஆர் களமர் பகடு தலை மாற்றி கடும் காற்று எறியப் போகிய துரும்பு உடன் காயல் சிறு தடிக் கண் கெடப் பாய்தலின் இரு நீர்ப் பரப்பின் பனித் துறைப் பரதவர் தீம் பொழி வெள் உப்புச் சிதைதலின் சினைஇக் கழனி உழவரொடு மாறு எதிர்ந்து மயங்கி இரும் சேற்று அள்ளல் எறி செருக் கண்டு நரை மூதாளர் கை பிணி விடுத்து நனை முதிர் தேறல் நுளையர்க்கு ஈயும் பொலம் பூண் எவ்வி நீழல் அன்ன நலம் பெறு பணைத் தோள் நல் நுதல் அரிவையொடு மணம் கமழ் தண் பொழில் அல்கி நெருநை நீ தன் பிழைத்தமை அறிந்து கலுழ்ந்த கண்ணள் எம் அணங்கு அன்னாளே #10 அகநானூறு 385 பாலை - குடவாயில் கீரத்தனார் தன் ஓர் அன்ன ஆயமும் மயில் இயல் என் ஓர் அன்ன தாயரும் காணக் கை வல் யானைக் கடும் தேர்ச் சோழர் காவிரிப் படப்பை உறந்தை அன்ன பொன் உடை நெடு நகர் புரையோர் அயர நல் மாண் விழவில் தகரம் மண்ணி யாம் பல புணர்ப்பச் சொல்லாள் காம்பொடு நெல்லி நீடிய கல் அறைக் கவாஅன் அத்த ஆலத்து அலந்தலை நெடு வீழ் தித்திக் குறங்கில் திருந்த உரிஞ வளை உடை முன்கை அளைஇக் கிளைய பயில் இரும் பிணையல் பசும் காழ்க் கோவை அகல் அமை அல்குல் பற்றிக் கூந்தல் ஆடு மயில் பீலியின் பொங்க நன்றும் தான் அமர் துணைவன் ஊக்க ஊங்கி உள்ளாது கழிந்த முள் எயிற்றுத் துவர் வாய்ச் சிறு வன்கண்ணி சிலம்பு கழீஇ அறியாத் தேஎத்தள் ஆகுதல் கொடிதே #11 குறுந்தொகை 79 பாலை - குடவாயிற் கீரனக்கன் கான யானை தோல் நயந்து உண்ட பொரி தாள் ஓமை வளி பொரு நெடும் சினை அலங்கல் உலவை ஏறி ஒய்யெனப் புலம்பு தரு குரல புறவுப் பெடை பயிரும் அத்தம் நண்ணிய அம் குடிச் சீறூர்ச் சேர்ந்தனர்-கொல்லோ தாமே யாம் தமக்கு ஒல்லேம் என்ற தப்பற்குச் செல்லாது ஏகல் வல்லுவோரே #12 குறுந்தொகை 281 பாலை - குடவாயில் கீரத்தனார் வெண் மணல் பொதுளிய பைம் கால் கருக்கின் கொம்மைப் போந்தைக் குடுமி வெண் தோட்டு அத்த வேம்பின் அமலை வான் பூச் சுரி ஆர் உளைத் தலை பொலியச் சூடிக் குன்று தலைமணந்த கானம் சென்றனர்-கொல்லோ சே_இழை நமரே #13 குறுந்தொகை 369 பாலை - குடவாயில் கீர்த்தனார் அத்த வாகை அமலை வால் நெற்று அரி ஆர் சிலம்பின் அரிசி ஆர்ப்பக் கோடை தூக்கும் கானம் செல்வாம் தோழி நல்கினர் நமரே #14 நற்றிணை 27 நெய்தல் - குடவாயிற் கீரத்தனார் நீயும் யானும் நெருநல் பூவின் நுண் தாது உறைக்கும் வண்டு இனம் ஓப்பி ஒழி திரை வரித்த வெண் மணல் அடைகரைக் கழி சூழ் கானல் ஆடியது அன்றிக் கரந்து நாம் செய்தது ஒன்று இல்லை உண்டு எனின் பரந்து பிறர் அறிந்தன்றும் இலரே நன்றும் எவன் குறித்தனள்-கொல் அன்னை கயம்-தோறு இற ஆர் இனக் குருகு ஒலிப்பச் சுறவம் கழி சேர் மருங்கின் கணை கால் நீடி கண் போல் பூத்தமை கண்டு நுண் பல சிறு பாசடைய நெய்தல் குறுமோ சென்று எனக் கூறாதோளே #15 நற்றிணை 42 முல்லை - கீரத்தனார் மறத்தற்கு அரிதால் பாக பல் நாள் அறத்தொடு வருந்திய அல்கு தொழில் கொளீஇய பழ மழை பொழிந்த புது நீர் அவல நா நவில் பல் கிளை கறங்க மாண் வினை மணி ஒலி கேளாள் வாள்_நுதல் அதனால் ஏகு-மின் என்ற இளையர் வல்லே இல் புக்கு அறியுநர் ஆக மெல்லென மண்ணாக் கூந்தல் மாசறக் கழீஇச் சில் போது கொண்டு பல் குரல் அழுத்திய அ நிலை புகுதலின் மெய் வருத்துறாஅ அவிழ் பூ முடியினள் கவைஇய மட மா அரிவை மகிழ்ந்து அயர் நிலையே #16 நற்றிணை 212 பாலை - குடவாயில் கீரத்தனார் பார்வை வேட்டுவன் படு வலை வெரீஇ நெடும் கால் கணந்துள் அம் புலம்பு கொள் தெள் விளி சுரம் செல் கோடியர் கதுமென இசைக்கும் நரம்பொடு கொள்ளும் அத்தத்து ஆங்கண் கடும் குரல் பம்பைக் கத நாய் வடுகர் நெடும் பெரும் குன்றம் நீந்தி நம்-வயின் வந்தனர் வாழி தோழி கையதை செம்பொன் கழல் தொடி நோக்கி மா மகன் கவவுக் கொள் இன் குரல் கேள்-தொறும் அவவுக் கொள் மனத்தேம் ஆகிய நமக்கே #17 நற்றிணை 379 குறிஞ்சி - குடவாயில் கீரத்தனார் புன் தலை மந்திக் கல்லா வன் பறழ் குன்று உழை நண்ணிய முன்றில் போகாது எரி அகைந்து அன்ன வீ ததை இணர வேங்கை அம் படு சினைப் பொருந்திக் கைய தேம் பெய் தீம் பால் வௌவலின் கொடிச்சி எழுது எழில் சிதைய அழுத கண்ணே தேர் வண் சோழர் குடந்தைவாயில் மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த பெயல் உறு நீலம் போன்றன விரலே பாஅய் அம் வயிறு அலைத்தலின் ஆனாது ஆடு மழை தவழும் கோடு உயர் பொதியில் ஓங்கு இரும் சிலம்பில் பூத்த காந்தள் அம் கொழு முகை போன்றன சிவந்தே #18 புறநானூறு 242 குடவாயிற் கீரத்தனார் **பாடப்பட்டோன்: ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் இளையோர் சூடார் வளையோர் கொய்யார் நல் யாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியாள் ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த வல் வேல் சாத்தன் மாய்ந்த பின்றை முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே &164 - குட்டுவன் கண்ணனார் #1 குறுந்தொகை 179 குறிஞ்சி - குட்டுவன் கண்ணனார் கல்லென் கானத்துக் கடமா ஆட்டி எல்லும் எல்லின்று ஞமலியும் இளைத்தன செல்லல் ஐஇய உது எம் ஊரே ஓங்கு வரை அடுக்கத்துத் தீம் தேன் கிழித்த குவை உடைப் பசும் கழை தின்ற கய வாய்ப் பேதை யானை சுவைத்த கூழை மூங்கில் குவட்டு இடையதுவே &165 - குட்டுவன் கீரனார் #1 புறநானூறு 240 - குட்டுவன் கீரனார். **பாடப்பட்டோன்: ஆய் ஆடு நடைப் புரவியும் களிறும் தேரும் வாடா யாணர் நாடும் ஊரும் பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன் கோடு ஏந்து அல்குல் குறும் தொடி மகளிரொடு காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப மேலோர் உலகம் எய்தினன் எனாஅப் பொத்த அறையுள் போழ் வாய்க் கூகை சுட்டுக்குவி என செத்தோர் பயிரும் கள்ளி அம் பறந்தலை ஒரு சிறை அல்கி ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது கல்லென் சுற்றமொடு கையழிந்து புலவர் வாடிய பசியர் ஆகிப் பிறர் நாடு படு செலவினர் ஆயினர் இனியே &166 - குண்டுகட்பாலியாதனார் #1 நற்றிணை 220 குறிஞ்சி - குண்டுகட்பாலியாதனார் சிறு மணி தொடர்ந்து பெரும் கச்சு நிறீஇக் குறு முகிழ் எருக்கம் கண்ணி சூடி உண்ணா நன் மாப் பண்ணி எம்முடன் மறுகுடன் திரிதரும் சிறு குறுமாக்கள் பெரிதும் சான்றோர் மன்ற விசிப் பிணி முழவுக் கண் புலரா விழவு உடை ஆங்கண் ஊரேம் என்னும் இப் பேர் ஏமுறுநர் தாமே ஒப்புரவு அறியின் தே மொழிக் கயல் ஏர் உண்கண் குறுமகட்கு அயலோர் ஆகல் என்று எம்மொடு படலே #2 புறநானூறு 387 - குண்டுகட் பாலியாதனார் **பாடப்பட்டோன்: சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய **செல்வக்கடுங்கோ வாழியாதன் வள் உகிர வயல் ஆமை வெள் அகடு கண்டு அன்ன வீங்கு விசிப் புதுப் போர்வைத் தெண் கண் மாக் கிணை இயக்கி என்றும் மாறுகொண்டோர் மதில் இடறி நீறு ஆடிய நறும் கவுள பூம் பொறிப் பணை எருத்தின வேறுவேறு பரந்து இயங்கி வேந்து உடை மிளை அயல் பரக்கும் ஏந்து கோட்டு இரும் பிணர்த் தடக் கை திருந்து தொழில் பல பகடு பகைப் புல மன்னர் பணி திறை தந்து நின் நகைப் புல வாணர் நல்குரவு அகற்றி மிகப் பொலியர் தன் சேவடி அத்தை என்று யாஅன் இசைப்பின் நனி நன்று எனாப் பல பிற வாழ்த்த இருந்தோர்-தம் கோன் மருவ இன் நகர் அகன் கடைத் தலைத் திருந்து கழல் சேவடி குறுகல் வேண்டி வென்று இரங்கும் விறல் முரசினோன் என் சிறுமையின் இழித்து நோக்கான் தன் பெருமையின் தகவு நோக்கிக் குன்று உறழ்ந்த களிறு என்கோ கொய் உளைய மா என்கோ மன்று நிறையும் நிரை என்கோ மனைக் களமரொடு களம் என்கோ ஆங்கு அவை கனவு என மருள வல்லே நனவின் நல்கியோனே நகை சால் தோன்றல் ஊழி வாழி பூழியர் பெருமகன் பிணர் மருப்பு யானைச் செரு மிகு நோன் தாள் செல்வக்கடுங்கோ வாழியாதன் ஒன்னாத் தெவ்வர் உயர் குடை பணித்து இவண் விடுவர் மாதோ நெடிதே நில்லாப் புல் இலை வஞ்சிப் புற மதில் அலைக்கும் கல்லென் பொருநை மணலினும் ஆங்கண் பல் ஊர் சுற்றிய கழனி எல்லாம் விளையும் நெல்லினும் பலவே &167 - குதிரைத் தறியனார் #1 நற்றிணை 296 பாலை - குதிரைத் தறியனார் என் ஆவது-கொல் தோழி மன்னர் வினை வல் யானைப் புகர் முகத்து அணிந்த பொன் செய் ஓடைப் புனை நலம் கடுப்பப் புழல் காய்க் கொன்றைக் கோடு அணி கொடி இணர் ஏ கல் மீமிசை மேதக மலரும் பிரிந்தோர் இரங்கும் அரும் பெறல் காலையும் வினையே நினைந்த உள்ளமொடு துனைஇச் செல்ப என்ப காதலர் ஒழிதும் என்ப நாம் வருந்து படர் உழந்தே &168 - குப்பைக் கோழியார் #1 குறுந்தொகை 305 மருதம் - குப்பைக் கோழியார் கண் தர வந்த காம ஒள் எரி என்புற நலியினும் அவரொடு பேணிச் சென்று நாம் முயங்கற்கு அரும் காட்சியமே வந்து அஞர் களைதலை அவர் ஆற்றலரே உய்த்தனர் விடாஅர் பிரித்து இடை களையார் குப்பைக் கோழித் தனிப் போர் போல விளிவு ஆங்கு விளியின் அல்லது களைவோர் இலை யான் உற்ற நோயே &169 - குமட்டூர்க் கண்ணனார் ** பதிற்றுப்பத்து - இரண்டாம் பத்து ** பாடப்பட்டோர் : இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் #1 பதிற்றுப்பத்து - பாட்டு 11 - குமட்டூர்க் கண்ணனார் **பெயர் - புண்ணுமிழ் குருதி (அடி 8) **துறை - செந்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு - செந்தூக்கு **வண்ணம் - ஒழுகு வண்ணம் வரை மருள் புணரி வான் பிசிர் உடைய வளி பாய்ந்து அட்ட துளங்கு இரும் கமம் சூல் நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி அணங்கு உடை அவுணர் ஏமம் புணர்க்கும் சூர் உடை முழுமுதல் தடிந்த பேர் இசைக் கடும் சின விறல் வேள் களிறு ஊர்ந்து ஆங்குச் செவ் வாய் எஃகம் விலங்குநர் அறுப்ப அரு நிறம் திறந்த புண் உமிழ் குருதியின் மணி நிற இரும் கழி நீர் நிறம் பெயர்ந்து மனாலக் கலவை போல அரண் கொன்று முரண் மிகு சிறப்பின் உயர்ந்த ஊக்கலை பலர் மொசிந்து ஓம்பிய திரள் பூம் கடம்பின் கடி உடை முழுமுதல் துமிய ஏஎய் வென்று எறி முழங்கு பணை செய்த வெல் போர் நார் அரி நறவின் ஆர மார்பின் போர் அடு தானைச் சேரலாத மார்பு மலி பைம் தார் ஓடையொடு விளங்கும் வலன் உயர் மருப்பின் பழி தீர் யானைப் பொலன் அணி எருத்தம் மேல்கொண்டு பொலிந்த நின் பலர் புகழ் செல்வம் இனிது கண்டிகுமே கவிர் ததை சிலம்பில் துஞ்சும் கவரி பரந்து இலங்கு அருவியொடு நரந்தம் கனவும் ஆரியர் துவன்றிய பேர் இசை இமயம் தென்னம் குமரியொடு ஆயிடை மன் மீக்கூறுநர் மறம் தபக் கடந்தே #2 பதிற்றுப்பத்து - பாட்டு 12 - குமட்டூர்க் கண்ணனார் **பெயர் - மறம்வீங்கு பல்புகழ் (8) **துறை - செந்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு - செந்தூக்கு **வண்ணம் - ஒழுகு வண்ணம் வயவர் வீழ வாள் அரில் மயக்கி இடம் கவர் கடும்பின் அரசு தலை பனிப்பக் கடம்பு முதல் தடிந்த கடும் சின வேந்தே தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர் அரி மான் வழங்கும் சாரல் பிற மான் தோடு கொள் இன நிரை நெஞ்சு அதிர்ந்து ஆங்கு முரசு முழங்கு நெடு நகர் அரசு துயில் ஈயாது மாதிரம் பனிக்கும் மறம் வீங்கு பல் புகழ் கேட்டற்கு இனிது நின் செல்வம் கேள்-தொறும் காண்டல் விருப்பொடு கமழும் குளவி வாடா பைம் மயிர் இளைய ஆடு நடை அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஓப்பும் கன்று புணர் பிடிய குன்று பல நீந்தி வந்து அவண் நிறுத்த இரும் பேர் ஒக்கல் தொல் பசி உழந்த பழம் கண் வீழ எஃகு போழ்ந்து அறுத்த வாள் நிணக் கொழும் குறை மை ஊன் பெய்த வெண்ணெல் வெண் சோறு நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி நீர்ப்படு பருந்தின் இரும் சிறகு அன்ன நிலம் தின் சிதாஅர் களைந்த பின்றை நூலாக் கலிங்கம் வால் அரைக் கொளீஇ வணர் இரும் கதுப்பின் வாங்கு அமை மென் தோள் வசை இல் மகளிர் வயங்கு இழை அணிய அமர்பு மெய் ஆர்த்த சுற்றமொடு நுகர்தற்கு இனிது நின் பெரும் கலி மகிழ்வே #3 பதிற்றுப்பத்து - பாட்டு 13 - குமட்டூர்க் கண்ணனார் **பெயர் - பூத்த நெய்தல் (3) **துறை - செந்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் **வண்ணம் - ஒழுகு வண்ணம் தொறுத்த வயல் ஆரல் பிறழ்நவும் ஏறு பொருத செறு உழாது வித்துநவும் கரும்பின் பாத்திப் பூத்த நெய்தல் இரும் கண் எருமை நிரை தடுக்குநவும் கலி கெழு துணங்கை ஆடிய மருங்கின் வளை தலை மூதா ஆம்பல் ஆர்நவும் ஒலி தெங்கின் இமிழ் மருதின் புனல் வாயில் பூம் பொய்கைப் பாடல் சான்ற பயம் கெழு வைப்பின் நாடு கவின் அழிய நாமம் தோற்றிக் கூற்று அடூஉ நின்ற யாக்கை போல நீ சிவந்து இறுத்த நீர் அழி பாக்கம் விரி பூம் கரும்பின் கழனி புல்லெனத் திரி காய் விடத்தரொடு கார் உடை போகிக் கவைத் தலைப் பேய் மகள் கழுது ஊர்ந்து இயங்க ஊரிய நெருஞ்சி நீறு ஆடு பறந்தலைத் தாது எரு மறுத்த கலி அழி மன்றத்து உள்ளம் அழிய ஊக்குநர் மிடல் தபுத்து உள்ளுநர் பனிக்கும் பாழ் ஆயினவே காடே கடவுள் மேன புறவே ஒள் இழை மகளிரொடு மள்ளர் மேன ஆறே அவ் அனைத்து அன்றியும் ஞாலத்துக் கூலம் பகர்நர் குடி புறந்தராஅக் குடி புறந்தருநர் பாரம் ஓம்பி அழல் சென்ற மருங்கின் வெள்ளி ஓடாது மழை வேண்டு புலத்து மாரி நிற்ப நோயொடு பசி இகந்து ஒரீஇப் பூத்தன்று பெரும நீ காத்த நாடே #4 பதிற்றுப்பத்து - பாட்டு 14 - குமட்டூர்க் கண்ணனார் **பெயர் - சான்றோர் மெய்ம்மறை (12) **துறை - செந்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு - செந்தூக்கு **வண்ணம் - ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் நிலம் நீர் வளி விசும்பு என்ற நான்கின் அளப்பு அரியையே நாள் கோள் திங்கள் ஞாயிறு கனை அழல் ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை போர் தலைமிகுத்த ஈர்_ஐம்பதின்மரொடு துப்புத் துறைபோகிய துணிவு உடை ஆண்மை அக்குரன் அனைய கைவண்மையையே அமர் கடந்து மலைந்த தும்பைப் பகைவர் போர் பீடு அழித்த செருப் புகல் முன்ப கூற்று வெகுண்டு வாரினும் மாற்றும் ஆற்றலையே எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து நோன்பு புரித் தடக் கைச் சான்றோர் மெய்ம்மறை வான் உறை மகளிர் நலன் இகல் கொள்ளும் வயங்கு இழை கரந்த வண்டு படு கதுப்பின் ஒடுங்கு ஈர் ஓதிக் கொடும்_குழை கணவ பல களிற்றுத் தொழுதியொடு வெல் கொடி நுடங்கும் படை ஏர் உழவ பாடினி வேந்தே இலங்கு மணி மிடைந்த பொலம் கலத் திகிரிக் கடலக வரைப்பின் இப் பொழில் முழுது ஆண்ட நின் முன் திணை முதல்வர் போல நின்று நீ கெடாஅ நல் இசை நிலைஇத் தவாஅலியரோ இவ் உலகமோடு உடனே #5 பதிற்றுப்பத்து - பாட்டு 15 - குமட்டூர்க் கண்ணனார் **பெயர் - நிரைய வெள்ளம் (4) **துறை - செந்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு - செந்தூக்கு **வண்ணம் - ஒழுகு வண்ணம் யாண்டு தலைப்பெயர வேண்டு புலத்து இறுத்து முனை எரி பரப்பிய துன் அரும் சீற்றமொடு மழை தவழ்பு தலைஇய மதில் மரம் முருக்கி நிரை களிறு ஒழுகிய நிரைய வெள்ளம் பரந்து ஆடு கழங்கு அழி-மன் மருங்கு அறுப்ப கொடி விடு குரூஉப் புகை பிசிரக் கால் பொர அழல் கவர் மருங்கின் உரு அறக் கெடுத்துத் தொல் கவின் அழிந்த கண் அகன் வைப்பின் வெண் பூ வேளையொடு பைம் சுரை கலித்துப் பீர் இவர்பு பரந்த நீர் அறு நிறை முதல் சிவந்த காந்தள் முதல் சிதை மூதில் புலவு வில் உழவின் புல்லாள் வழங்கும் புல் இலை வைப்பின் புலம் சிதை அரம்பின் அறியாமையான் மறந்து துப்பு எதிர்ந்த நின் பகைவர் நாடும் கண்டு வந்திசினே கடலவும் கல்லவும் யாற்றவும் பிறவும் வளம் பல நிகழ்தரு நனம் தலை நல் நாட்டு விழவு அறுபு அறியா முழவு இமிழ் மூதூர்க் கொடு நிழல் பட்ட பொன் உடை நியமத்துச் சீர் பெறு கலி மகிழ் இயம்பும் முரசின் வயவர் வேந்தே பரிசிலர் வெறுக்கை தார் அணிந்து எழிலிய தொடி சிதை மருப்பின் போர் வல் யானைச் சேரலாத நீ வாழியர் இவ் உலகத்தோர்க்கு என உண்டு உரை மாறிய மழலை நாவின் மென் சொல் கலப் பையர் திருந்து தொடை வாழ்த்த வெய்துறவு அறியாது நந்திய வாழ்க்கைச் செய்த மேவல் அமர்ந்த சுற்றமோடு ஒன்றுமொழிந்து அடங்கிய கொள்கை என்றும் பதி பிழைப்பு அறியாது துய்த்தல் எய்தி நிரையம் ஒரீஇய வேட்கைப் புரையோர் மேயினர் உறையும் பலர் புகழ் பண்பின் நீ புறந்தருதலின் நோய் இகந்து ஒரீஇய யாணர் நல் நாடும் கண்டு மதி மருண்டனென் மண் உடை ஞாலத்து மன் உயிர்க்கு எஞ்சாது ஈத்துக் கை தண்டாக் கை கடும் துப்பின் புரை-வயின் புரை-வயின் பெரிய நல்கி ஏமம் ஆகிய சீர் கெழு விழவின் நெடியோன் அன்ன நல் இசை ஒடியா மைந்த நின் பண்பு பல நயந்தே #6 பதிற்றுப்பத்து - பாட்டு 16 - குமட்டூர்க் கண்ணனார் **பெயர் - துயிலின் பாயல் (18) **துறை - செந்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு - செந்தூக்கு **வண்ணம் - ஒழுகு வண்ணம் கோடு உறழ்ந்து எடுத்த கொடும் கண் இஞ்சி நாடு கண்டு அன்ன கணை துஞ்சு விலங்கல் துஞ்சுமரக் குழாஅம் துவன்றிப் புனிற்று_மகள் பூணா_ஐயவி தூக்கிய மதில நல் எழில் நெடும் புதவு முருக்கிக் கொல்லுபு ஏனம் ஆகிய நுனை முரி மருப்பின் கடாஅம் வார்ந்து கடும் சினம் பொத்தி மரம் கொல் மழ களிறு முழங்கும் பாசறை நீடினை ஆகலின் காண்கு வந்திசினே ஆறிய கற்பின் அடங்கிய சாயல் ஊடினும் இனிய கூறும் இன் நகை அமிர்து பொதி துவர் வாய் அமர்த்த நோக்கின் சுடர் நுதல் அசை நடை உள்ளலும் உரியள் பாயல் உய்யுமோ தோன்றல் தா இன்று திரு மணி பொருத திகழ் விடு பசும்பொன் வயங்கு கதிர் வயிரமோடு உறழ்ந்து பூண் சுடர்வர எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்துப் புரையோர் உண்கண் துயில் இன் பாயல் பாலும் கொளாலும் வல்லோய் நின் சாயல் மார்பு நனி அலைத்தன்றே #7 பதிற்றுப்பத்து - பாட்டு 17 - குமட்டூர்க் கண்ணனார் **பெயர் - வலம்படு வியன்பணை (5) **துறை - செந்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு - செந்தூக்கு **வண்ணம் - ஒழுகு வண்ணம் புரைவது நினைப்பின் புரைவதோ இன்றே பெரிய தப்புநர் ஆயினும் பகைவர் பணிந்து திறை பகரக் கொள்ளுநை ஆதலின் துளங்கு பிசிர் உடைய மாக் கடல் நீக்கிக் கடம்பு அறுத்து இயற்றிய வலம் படு வியன் பணை ஆடுநர் பெயர்ந்து வந்து அரும் பலி தூஉய்க் கடிப்புக் கண் உறூஉம் தொடித் தோள் இயவர் அரணம் காணாது மாதிரம் துழைஇய நனம் தலைப் பைஞ்ஞிலம் வருக இ நிழல் என ஞாயிறு புகன்ற தீது தீர் சிறப்பின் அமிழ்து திகழ் கருவிய கண மழை தலைஇக் கடும் கால் கொட்கும் நல் பெரும் பரப்பின் விசும்பு தோய் வெண் குடை நுவலும் பசும் பூண் மார்ப பாடினி வேந்தே #8 பதிற்றுப்பத்து - பாட்டு 18 - குமட்டூர்க் கண்ணனார் **பெயர் - கூந்தல் விறலியர் (6) **துறை - இயன்மொழி வாழ்த்து **தூக்கு - செந்தூக்கு **வண்ணம் - ஒழுகு வண்ணம் உண்-மின் கள்ளே அடு-மின் சோறே எறிக திற்றி ஏற்று-மின் புழுக்கே வருநர்க்கு வரையாது பொலன் கலம் தெளிர்ப்ப இருள் வணர் ஒலிவரும் புரி அவிழ் ஐம்பால் ஏந்து கோட்டு அல்குல் முகிழ் நகை மடவரல் கூந்தல் விறலியர் வழங்குக அடுப்பே பெற்றது உதவு-மின் தப்பு இன்று பின்னும் மன் உயிர் அழிய யாண்டு பல துளக்கி மண் உடை ஞாலம் புரவு எதிர்கொண்ட தண் இயல் எழிலி தலையாது மாறி மாரி பொய்க்குவது ஆயினும் சேரலாதன் பொய்யலன் நசையே #9 பதிற்றுப்பத்து - பாட்டு 19 - குமட்டூர்க் கண்ணனார் **பெயர் - வளனறு பைதிரம் (18) **துறை - பரிசிற்றுறைப் பாடாண்பாட்டு **தூக்கு - செந்தூக்கு **வண்ணம் - ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் கொள்ளை வல்சிக் கவர் கால் கூளியர் கல் உடை நெடு நெறி போழ்ந்து சுரன் அறுப்ப ஒண் பொறிக் கழல் கால் மாறா வயவர் திண் பிணி எஃகம் புலியுறை கழிப்பச் செம் கள விருப்பொடு கூலம் முற்றிய உருவச் செந்தினை குருதியொடு தூஉய் மண்ணுறு முரசம் கண் பெயர்த்து இயவர் கடிப்பு உடை வலத்தர் தொடித் தோள் ஓச்ச வம்பு களைவு அறியாச் சுற்றமோடு அம்பு தெரிந்து அவ் வினை மேவலை ஆகலின் எல்லும் நனி இருந்து எல்லிப் பெற்ற அரிது பெறு பாயல் சிறு மகிழானும் கனவினுள் உறையும் பெரும் சால்பு ஒடுங்கிய நாணு மலி யாக்கை வாள் நுதல் அரிவைக்கு யார்-கொல் அளியை இனம் தோடு அகல ஊர் உடன் எழுந்து நிலம் கண் வாட நாஞ்சில் கடிந்து நீ வாழ்தல் ஈயா வளன் அறு பைதிரம் அன்ன ஆயின பழனம்-தோறும் அழல் மலி தாமரை ஆம்பலொடு மலர்ந்து நெல்லின் செறுவில் நெய்தல் பூப்ப அரிநர் கொய்வாள் மடங்க அறைநர் தீம் பிழி எந்திரம் பத்தல் வருந்த இன்றோ அன்றோ தொன்று ஓர் காலை நல்ல-மன் அளியதாம் எனச் சொல்லிக் காணுநர் கை புடைத்து இரங்க மாணா மாட்சிய மாண்டன பலவே #10 பதிற்றுப்பத்து - பாட்டு 20 - குமட்டூர்க் கண்ணனார் **பெயர் - அட்டுமலர் மார்பன் (20) **துறை - இயன்மொழி வாழ்த்து **தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் **வண்ணம் - ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் நும் கோ யார் என வினவின் எம் கோ இரு முந்நீர்த் துருத்தியுள் முரணியோர்த் தலைச்சென்று கடம்பு முதல் தடிந்த கடும் சின முன்பின் நெடுஞ்சேரலாதன் வாழ்க அவன் கண்ணி வாய்ப்பு அறியலனே வெயில் துகள் அனைத்தும் மாற்றோர் தேஎத்து மாறிய வினையே கண்ணின் உவந்து நெஞ்சு அவிழ்பு அறியா நண்ணார் தேஎத்தும் பொய்ப்பு அறியலனே கனவினும் ஒன்னார் தேய ஓங்கி நடந்து படியோர்த் தேய்த்து வடி மணி இரட்டும் கடாஅ யானைக் கண நிரை அலற வியல் இரும் பரப்பின் மா நிலம் கடந்து புலவர் ஏத்த ஓங்கு புகழ் நிறீஇ விரி உளை மாவும் களிறும் தேரும் வயிரியர் கண்ணுளர்க்கு ஓம்பாது வீசிக் கடி மிளைக் குண்டு கிடங்கின் நெடு மதில் நிலை ஞாயில் அம்பு உடை ஆர் எயில் உள் அழித்து உண்ட அடாஅ அடு பகை அட்டு மலர் மார்பன் எமர்க்கும் பிறர்க்கும் யாவர் ஆயினும் பரிசில் மாக்கள் வல்லார் ஆயினும் கொடைக்கடன் அமர்ந்த கோடா நெஞ்சினன் மன் உயிர் அழிய யாண்டு பல மாறித் தண் இயல் எழிலி தலையாது ஆயினும் வயிறு பசி கூர ஈயலன் வயிறு மாசு இலீயர் அவன் ஈன்ற தாயே &170 - குமுழி ஞாழலார் நப்பசலையார் #1 அகநானூறு 160 நெய்தல் - குமுழி ஞாழலார் நப்பசலையார் ஒடுங்கு_ஈர்_ஓதி நினக்கும் அற்றோ நடுங்கின்று அளித்து என் நிறை இல் நெஞ்சம் அடும்பு கொடி சிதைய வாங்கிக் கொடும் கழிக் குப்பை வெண் மணல் பக்கம் சேர்த்தி நிறைச் சூல் யாமை மறைத்து ஈன்று புதைத்த கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டைப் பார்ப்பு இடன் ஆகும் அளவை பகு வாய்க் கணவன் ஓம்பும் கானல் அம் சேர்ப்பன் முள் உறின் சிறத்தல் அஞ்சி மெல்ல வாவு உடைமையின் வள்பின் காட்டி ஏத் தொழில் நவின்ற எழில் நடைப் புரவி செழு நீர்த் தண் கழி நீந்தலின் ஆழி நுதி முகம் குறைந்த பொதி முகிழ் நெய்தல் பாம்பு உயர் தலையின் சாம்புவன நிவப்ப இர வந்தன்றால் திண் தேர் கரவாது ஒல்லென ஒலிக்கும் இளையரொடு வல் வாய் அரவ சீறூர் காணப் பகல் வந்தன்றால் பாய் பரி சிறந்தே &171 - குழற்றத்தனார் #1 குறுந்தொகை 242 முல்லை - குழற்றத்தனார் கானங்கோழிக் கவர் குரல் சேவல் ஒண் பொறி எருத்தில் தண் சிதர் உறைப்பப் புதல் நீர் வாரும் பூ நாறு புறவில் சீறூரோளே மடந்தை வேறு ஊர் வேந்து விடு தொழிலொடு செலினும் சேந்து வரல் அறியாது செம்மல் தேரே &172 - குளம்பனார் #1 நற்றிணை 288 குறிஞ்சி - குளம்பனார் அருவி ஆர்க்கும் அணங்கு உடை நெடும் கோட்டு ஞாங்கர் இளவெயில் உணீஇய ஓங்கு சினைப் பீலி மஞ்ஞை பெடையோடு ஆலும் குன்ற நாடன் பிரிவின் சென்று நல் நுதல் பரந்த பசலை கண்டு அன்னை செம் முது பெண்டிரொடு நெல் முன் நிறீஇக் கட்டின் கேட்கும் ஆயின் வெற்பில் ஏனல் செந்தினைப் பால் ஆர் கொழும் குரல் சிறு கிளி கடிகம் சென்றும் இ நெடுவேள் அணங்கிற்று என்னும்-கொல் அதுவே &173 - குளம்பாதாயனார் #1 புறநானூறு 253 - குளம்பாதாயனார் என் திறத்து அவலம் கொள்ளல் இனியே வல் வார் கண்ணி இளையர் திளைப்ப நாகாஅல் என வந்த மாறே எழா நெல் பைம் கழை பொதி களைந்து அன்ன விளர்ப்பின் வளை இல் வறும் கை ஓச்சிக் கிளையுள் ஒய்வலோ கூறு நின் உரையே &174 - குறமகள் இளவெயினி #1 புறநானூறு 157 - குறமகள் இளவெயினி **பாடப்பட்டோன்: ஏறைக் கோன் தமர் தன் தப்பின் அது நோன்றல்லும் பிறர் கையறவு தான் நாணுதலும் படைப் பழி தாரா மைந்தினன் ஆகலும் வேந்து உடை அவையத்து ஓங்குபு நடத்தலும் நும்மோர்க்குத் தகுவன அல்ல எம்மோன் சிலை செல மலர்ந்த மார்பின் கொலை வேல் கோடல் கண்ணிக் குறவர் பெருமகன் ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசை எல் படு பொழுதின் இனம் தலைமயங்கிக் கட்சி காணாக் கடமான் நல் ஏறு மட மான் நாகு பிணை பயிரின் விடர் முழை இரும் புலிப் புகர்ப் போத்து ஓர்க்கும் பெரும் கல் நாடன் எம் ஏறைக்குத் தகுமே &175 - குறமகள் குறியெயினி #1 நற்றிணை 357 குறிஞ்சி - குறமகள் குறியெயினி நின் குறிப்பு எவனோ தோழி என் குறிப்பு என்னொடு நிலையாது ஆயினும் என்றும் நெஞ்சு வடுப்படுத்துக் கெட அறியாதே சேண் உறத் தோன்றும் குன்றத்துக் கவாஅன் பெயல் உழந்து உலறிய மணிப் பொறிக் குடுமிப் பீலி மஞ்ஞை ஆலும் சோலை அம் கண் அறைய அகல் வாய்ப் பைம் சுனை உண்கண் ஒப்பின் நீலம் அடைச்சி நீர் அலைக் கலைஇய கண்ணி சாரல் நாடனொடு ஆடிய நாளே &176 - குறியிறையார் #1 குறுந்தொகை 394 குறிஞ்சி - குறியிறையார் முழந்தாள் இரும் பிடிக் கயம் தலைக் குழவி நறவு மலி பாக்கத்துக் குற_மகள் ஈன்ற குறி இறைப் புதல்வரொடு மறுவந்து ஓடி முன்_நாள் இனியது ஆகிப் பின் நாள் அவர் தினைப் புனம் மேய்ந்து ஆங்குப் பகை ஆகின்று அவர் நகை விளையாட்டே &177 - குறுங்கீரனார் #1 குறுந்தொகை 382 முல்லை - குறுங்கீரனார் தண் துளிக்கு ஏற்ற பைம் கொடி முல்லை முகை தலை திறந்த நாற்றம் புதல் மிசைப் பூ அமல் தளவமொடு தேம் கமழ்பு கஞல வம்புப் பெய்யுமால் மழையே வம்பு அன்று கார் இது பருவம் ஆயின் வாராரோ நம் காதலோரே &178 - குறுங்குடி மருதனார் #1 அகநானூறு 4 முல்லை - குறுங்குடி மருதனார் முல்லை வை நுனை தோன்ற இல்லமொடு பைம் கால் கொன்றை மென் பிணி அவிழ இரும்பு திரித்து அன்ன மா இரு மருப்பின் பரல் அவல் அடைய இரலை தெறிப்ப மலர்ந்த ஞாலம் புலம்பு புறக்கொடுப்ப கருவி வானம் கதழ் உறை சிதறிக் கார் செய்தன்றே கவின் பெறு கானம் குரங்கு உளைப் பொலிந்த கொய் சுவல் புரவி நரம்பு ஆர்த்து அன்ன வாங்கு வள் பரிய பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த தாது_உண்_பறவை பேதுறல் அஞ்சி மணி நா ஆர்த்த மாண் வினைத் தேரன் உவக் காண் தோன்றும் குறும்பொறை நாடன் கறங்கு இசை விழவின் உறந்தைக் குணாது நெடும் பெரும் குன்றத்து அமன்ற காந்தள் போது அவிழ் அலரின் நாறும் ஆய் தொடி அரிவை நின் மாண் நலம் படர்ந்தே #2 குறுந்தொகை 344 முல்லை - குறுங்குடி மருதனார் நோற்றோர்-மன்ற தோழி தண்ணெனத் தூற்றும் துவலைப் பனிக் கடும் திங்கள் புலம் பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு நிலம் தூங்கு அணல வீங்கு முலைச் செருத்தல் பால் வார்பு குழவி உள்ளி நிரை இறந்து ஊர்-வயின் பெயரும் புன்கண் மாலை அரும் பெறல் பொருட்பிணிப் போகிப் பிரிந்து உறை காதலர் வரக் காண்போரே &179 - குறுங்கோழியூர் கிழார் #1 புறநானூறு 17 - குறுங்கோழியூர் கிழார் **பாடப்பட்டோன் - சேரமான் யானைக்கட்சேய் **மாந்தரஞ்சேரல் இரும்பொறை தென் குமரி வட பெருங்கல் குண குட கடலா எல்லை குன்று மலை காடு நாடு ஒன்று பட்டு வழிமொழியக் கொடிது கடிந்து கோல் திருத்திப் படுவது உண்டு பகல் ஆற்றி இனிது உருண்ட சுடர் நேமி முழுது ஆண்டோர் வழி காவல குலை இறைஞ்சிய கோள் தாழை அகல் வயல் மலை வேலி நிலவு மணல் வியன் கானல் தெண் கழி மிசைத் தீப் பூவின் தண் தொண்டியோர் அடு பொருந மாப் பயம்பின் பொறை போற்றாது நீடு குழி அகப்பட்ட பீடு உடைய எறுழ் முன்பின் கோடு முற்றிய கொல் களிறு நிலை கலங்கக் குழி கொன்று கிளை புகல தலைக்கூடி ஆங்கு நீ பட்ட அரு முன்பின் பெரும் தளர்ச்சி பலர் உவப்பப் பிறிது சென்று மலர் தாயத்துப் பலர் நாப்பண் மீக்கூறலின் உண்டாகிய உயர் மண்ணும் சென்று பட்ட விழுக் கலனும் பெறல் கூடும் இவன் நெஞ்சு உறப் பெறின் எனவும் ஏந்து கொடி இறைப் புரிசை வீங்கு சிறை வியல் அருப்பம் இழந்து வைகுதும் இனி நாம் இவன் உடன்று நோக்கினன் பெரிது எனவும் வேற்று அரசு பணி தொடங்கு நின் ஆற்றலொடு புகழ் ஏத்தி காண்கு வந்திசின் பெரும ஈண்டிய மழை என மருளும் பல் தோல் மலை எனத் தேன் இறைகொள்ளும் இரும் பல் யானை உடலுநர் உட்க வீங்கிக் கடல் என வான் நீர்க்கு ஊக்கும் தானை ஆனாது கடு ஒடுங்கு எயிற்ற அரவுத் தலை பனிப்ப இடி என முழங்கும் முரசின் வரையா ஈகை குடவர் கோவே #2 புறநானூறு 20 - குறுங்கோழியூர்கிழார் **பாடப்பட்டோன் - சேரமான் யானைக்கட்சேய் **மாந்தரஞ்சேரல் இரும்பொறை இரு முந்நீர்க் குட்டமும் வியன் ஞாலத்து அகலமும் வளி வழங்கு திசையும் வறிது நிலைஇய காயமும் என்ற ஆங்கு அவை அளந்து அறியினும் அளத்தற்கு அரியை அறிவும் ஈரமும் பெரும் கணோட்டமும் சோறு படுக்கும் தீயோடு செம் ஞாயிற்றுத் தெறல் அல்லது பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரே திரு_வில் அல்லது கொலை வில் அறியார் நாஞ்சில் அல்லது படையும் அறியார் திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய அப் பிறர் மண் உண்ணும் செம்மல் நின் நாட்டு வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது பகைவர் உண்ணா அரு மண்ணினையே அம்பு துஞ்சும் கடி அரணால் அறம் துஞ்சும் செங்கோலையே புதுப் புள் வரினும் பழம் புள் போகினும் விதுப்புறவு அறியா ஏமக் காப்பினை அனையை ஆகன் மாறே மன் உயிர் எல்லாம் நின் அஞ்சும்மே #3 புறநானூறு 22 - குறுங்கோழியூர் கிழார் **பாடப்பட்டோன்: சேரமான் யானைக்கட் சேஎய் **மாந்தரஞ் சேரல் இரும்பொறை தூங்கு கையான் ஓங்கு நடைய உறழ் மணியான் உயர் மருப்பின பிறை நுதலான் செறல் நோக்கின பா அடியால் பணை எருத்தின தேன் சிதைந்த வரை போல மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாஅத்து அயறு சோரும் இரும் சென்னிய மைந்து மலிந்த மழ களிறு கந்து சேர்பு நிலைஇ வழங்கப் பாஅல் நின்று கதிர் சோரும் வான் உறையும் மதி போலும் மாலை வெண் குடை நீழலான் வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த ஆய் கரும்பின் கொடிக் கூரை சாறு கொண்ட களம் போல வேறுவேறு பொலிவு தோன்றக் குற்று ஆனா உலக்கையால் கலிச் சும்மை வியல் ஆங்கண் பொலம் தோட்டுப் பைம் தும்பை மிசை அலங்கு உளைய பனைப் போழ் செரீஇச் சின மாந்தர் வெறிக் குரவை ஓத நீரின் பெயர்பு பொங்க வாய் காவாது பரந்து பட்ட வியன் பாசறைக் காப்பாள வேந்து தந்த பணி திறையான் சேர்ந்தவர்-தம் கடும்பு ஆர்த்தும் ஓங்கு கொல்லியோர் அடு பொருந வேழ நோக்கின் விறல் வெம் சேஎய் வாழிய பெரும நின் வரம்பு இல் படைப்பே நின் பாடிய வயங்கு செந்நாப் பின் பிறர் இசை நுவலாமை ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே புத்தேள்_உலகத்து அற்று எனக் கேட்டு வந்து இனிது காண்டிசின் பெரும முனிவு இலை வேறு புலத்து இறுக்கும் தானையோடு சோறு பட நடத்தி நீ துஞ்சாய் மாறே &180 - குன்றம்பூதனார் - (குறும்பூதனார்) #1 பரிபாடல் - 9 செவ்வேள் - குன்றம்பூதனார் - (குறும்பூதனார்) **இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார் **பண் :: பாலையாழ் இரு நிலம் துளங்காமை வட வயின் நிவந்து ஓங்கி அரு நிலை உயர் தெய்வத்து அணங்கு சால் தலை காக்கும் உருமுச் சூழ் சேண் சிமை உயர்ந்தவர் உடம்பட எரி மலர்த் தாமரை இறை வீழ்த்த பெரு வாரி விரி சடைப் பொறை ஊழ்த்து விழு நிகர் மலர் ஏய்ப்பத் தணிவுறத் தாங்கிய தனி நிலைச் சலதாரி மணி மிடற்று அண்ணற்கு மதி ஆரல் பிறந்தோய் நீ மை இருநூற்று இமை உண்கண் மான் மறி தோள் மணந்த ஞான்று ஐ_இருநூற்று மெய் நயனத்தவன் மகள் மலர் உண்கண் மணி மழை தலைஇ என மா வேனில் கார் ஏற்றுத் தணி மழை தலையின்று தண் பரங்குன்று நான்மறை விரித்து நல் இசை விளக்கும் வாய்மொழிப் புலவீர் கேள்-மின் சிறந்தது காதல் காமம் காமத்துச் சிறந்தது விருப்போர் ஒத்து மெய்யுறு புணர்ச்சி புலத்தலின் சிறந்தது கற்பே அது தான் இரத்தலும் ஈதலும் இவை உள்ளீடாப் பரத்தை உள்ளதுவே பண்புறு கழறல் தோள் புதிது உண்ட பரத்தை இல் சிவப்புற நாள் அணிந்து உவக்கும் சுணங்கறையதுவே கேள் அணங்கு உற மனைக் கிளந்துள சுணங்கறை சுணங்கறைப் பயனும் ஊடல் உள்ளதுவே அதனால் அகறல் அறியா அணி இழை நல்லார் இகல் தலைக்கொண்டு துனிக்கும் தவறிலர் இத் தள்ளாப் பொருள் இயல்பின் தண் தமிழ் ஆய்வந்திலார் கொள்ளார் இக் குன்று பயன் ஊழ் ஆரத்து ஓய் கரை நூக்கிப் புனல் தந்த காழ் ஆரத்து அம் புகை சுற்றிய தார் மார்பின் கேழ் ஆரம் பொற்ப வருவானைத் தொழாஅ வாழிய மாயா நின் தவறு இலை எம் போலும் கேழ் இலார் மாண் நலம் உண்கோ திரு உடையார் மென் தோள் மேல் அல்கி நல் கலம் இன்று வை எயிற்று எய்யா மகளிர் திறம் இனிப் பெய்ய உழக்கும் மழைக்கா மற்று ஐய கரையா வெம் நோக்கத்தான் கை சுட்டிப் பெண்டின் இகலின் இகந்தாளை அவ் வேள் தலைக் கண்ணி திருந்து அடி தோயத் திறை கொடுப்பானை வருந்தல் என அவற்கு மார்பு அளிப்பாளை குறுகல் என்று ஒள்_இழை கோதை கோல் ஆக இறுகிறுக யாத்துப் புடைப்ப ஒருவர் மயில் ஒருவர் ஒண் மயிலோடு ஏல இருவர் வான் கிளி ஏற்பின் மழலை செறி கொண்டை மேல் வண்டு சென்று பாய்ந்தன்றே வெறி கொண்டான் குன்றத்து வண்டு தார் தார் பிணக்குவார் கண்ணி ஓச்சித் தடுமாறுவார் மார்பு அணி கொங்கை வார் மத்திகையாப் புடைப்பார் கோதை வரிப் பந்து கொண்டு எறிவார் பேதை மட நோக்கம் பிறிதாக ஊத நுடங்கு நொசி நுசுப்பார் நூழில் தலைக்கொள்ளக் கயம் படு கமழ் சென்னிக் களிற்று இயல் கைம்மாறுவார் வயம்படு பரிப் புரவி மார்க்கம் வருவார் தேர் அணி அணி கயிறு தெரிபு வருவார் வரி சிலை வளைய மார்புற வாங்குவார் வாளி வாளிகள் நிலைபெற மறலுவார் தோள் வளை ஆழி சுழற்றுவார் மென் சீர் மயிலியலவர் வாள் மிகு வய மொய்ம்பின் வரை அகலத்தவனை வானவன் மகள் மாண் எழில் மலர் உண்கண் மட மொழியவர் உடன் சுற்றிக் கடி சுனையுள் குளித்து ஆடுநரும் அறை அணிந்த அரும் சுனையான் நறவு உண் வண்டாய் நரம்பு உளர்நரும் சிகை மயிலாய்த் தோகை விரித்து ஆடுநரும் கோகுலமாய்க் கூவுநரும் ஆகுலம் ஆகுநரும் குறிஞ்சிக் குன்றவர் மறம் கெழு வள்ளி தமர் வித்தகத் தும்பை விளைத்தலான் வென் வேலாற்கு ஒத்தன்று தண் பரங்குன்று கடும் சூர் மா முதல் தடிந்து அறுத்த வேல் அடு போராள நின் குன்றின் மிசை ஆடல் நவின்றோர் அவர் போர் செறுப்பவும் பாடல் பயின்றோரைப் பாணர் செறுப்பவும் வல்லாரை வல்லார் செறுப்பவும் அல்லாரை அல்லார் செறுப்பவும் ஓர் சொல்லாய்ச் செம்மைப் புதுப் புனல் தடாகம் ஏற்ற தண் சுனைப் பாங்கர்ப் படாகை நின்றன்று மேஎ எஃகினவை வென்று உயர்த்த கொடி விறல் சான்றவை கற்பு இணை நெறியூடு அற்பு இணைக் கிழமை நயத் தகு மரபின் வியத் தகு குமர வாழ்த்தினேம் பரவுதும் தாழ்த்துத் தலை நினை யாம் நயத்தலின் சிறந்த எம் அடியுறை பயத்தலின் சிறக்க நாள்-தொறும் பொலிந்தே #2 பரிபாடல் - 18 செவ்வேள் - குன்றம்பூதனார் - (குறும்பூதனார்) **இசையமைத்தவர் :: நல்லச்சுதனார் **பண் :: காந்தாரம் போர் எதிர்ந்து ஏற்றார் மதுகை மதம் தபக் கார் எதிர்ந்து ஏற்ற கமம் சூல் எழிலி போல் நீர் நிரந்து ஏற்ற நிலம் தாங்கு அழுவத்துச் சூர் நிரந்து சுற்றிய மா தபுத்த வேலோய் நின் சீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேர் நிரந்து ஏறுமாறு ஏற்கும் இக் குன்று ஒள் ஒளி மணிப் பொறி ஆல் மஞ்ஞை நோக்கித் தன் உள்ளத்து நினைப்பானைக் கண்டனள் திரு_நுதலும் உள்ளியது உணர்ந்தேன் அஃது உரை இனி நீ எம்மை எள்ளுதல் மறைத்தல் ஓம்பு என்பாளைப் பெயர்த்து அவன் காதலாய் நின் இயல் களவு எண்ணிக் களி மகிழ் பேதுற்ற இதனைக் கண்டு யான் நோக்க நீ எம்மை ஏதிலா நோக்குதி என்று ஆங்கு உணர்ப்பித்தல் ஆய் தேரான் குன்ற இயல்பு ஐ வளம் பூத்த அணி திகழ் குன்றின் மேல் மை வளம் பூத்த மலர் ஏர் மழைக் கண்ணார் கை வளம் பூத்த வடுவொடு காணாய் நீ மொய் வளம் பூத்த முயக்கம் யாம் கைப்படுத்தேம் மெய் வளம் பூத்த விழை தகு பொன் அணி நைவளம் பூத்த நரம்பு இயை சீர்ப் பொய் வளம் பூத்தன பாணா நின் பாட்டு தண் தளிர் தருப்படுத்து எடுத்துரைஇ மங்குல் மழை முழங்கிய விறல் வரையால் கண் பொருபு சுடர்ந்து அடர்ந்து இடந்து இருள் போழும் கொடி மின்னால் வெண் சுடர் வேல் வேள் விரை மயில் மேல் ஞாயிறு நின் ஒண் சுடர் ஓடைக் களிறு ஏய்க்கும் நின் குன்றத்து எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின் தொழில் வீற்றிருந்த நகர் ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை நாழி சூர் ததும்பு வரைய காவால் கார் ததும்பு நீர் ததும்புவன சுனை ஏர் ததும்புவன பூ அணி செறிவு போர் தோற்றுக் கட்டுண்டார் கை போல்வ கார் தோற்றும் காந்தள் செறிந்த கவின் கவின் முகை கட்டவிழ்ப்ப தும்பி கட்டு யாழின் புரி நெகிழ்ப்பார் போன்றன கை அச்சிரக்கால் ஆர்த்து அணி மழை கோலின்றே வச்சிரத்தான் வானவில்லு வில்லுச் சொரி பகழியின் மென் மலர் தாயின வல்லுப் போர் வல்லாய் மலை மேல் மரம் வட்டு உருட்டு வல்லாய் மலைய நெட்டுருட்டுச் சீர் ததும்பும் அரவமுடன் சிறந்து போர் ததும்பும் அரவம் போலக் கருவி ஆர்ப்பக் கருவி நின்றன குன்றம் அருவி ஆர்ப்ப முத்து அணிந்தன வரை குருவி ஆர்ப்பக் குரல் குவிந்தன தினை எருவை கோப்ப எழில் அணி திருவில் வானில் அணித்த வரி ஊதும் பல் மலரால் கூனி வளைத்த சுனை புரியுறு நரம்பும் இயலும் புணர்ந்து சுருதியும் பூவும் சுடரும் கூடி எரி உருகு அகிலோடு ஆரமும் கமழும் செரு வேல் தானைச் செல்வ நின் அடியுறை உரிதினின் உறை பதிச் சேர்ந்து ஆங்குப் பிரியாது இருக்க எம் சுற்றமோடு உடனே &181 - குன்றியனார் #1 அகநானூறு 40 நெய்தல் - குன்றியனார் கானல் மாலைக் கழிப் பூக் கூம்ப நீல் நிறப் பெரும் கடல் பாடு எழுந்து ஒலிப்ப மீன் ஆர் குருகின் மென் பறைத் தொழுதி குவை இரும் புன்னைக் குடம்பை சேர அசை வண்டு ஆர்க்கும் அல்குறு காலைத் தாழை தளரத் தூக்கி மாலை அழிதக வந்த கொண்டலொடு கழி படர்க் காமர் நெஞ்சம் கையறுபு இனையத் துயரம் செய்து நம் அருளார் ஆயினும் அறாஅலியரோ அவர் உடைக் கேண்மை அளி இன்மையின் அவண் உறை முனைஇ வாரற்க-தில்ல தோழி கழனி வெண்ணெல் அரிநர் பின்றைத் ததும்பும் தண்ணுமை வெரீஇய தடம் தாள் நாரை செறி மடை வயிரின் பிளிற்றிப் பெண்ணை அக மடல் சேக்கும் துறைவன் இன் துயில் மார்பில் சென்ற என் நெஞ்சே #2 அகநானூறு 41 பாலை - குன்றியனார் (சேரமான் அந்தையார்) வைகு புலர் விடியல் மை புலம் பரப்பக் கரு நனை அவிழ்ந்த ஊழுறு முருக்கின் எரி மருள் பூம் சினை இனச் சிதர் ஆர்ப்ப நெடு நெல் அடைச்சிய கழனி ஏர் புகுத்துக் குடுமிக் கட்டிய படப்பையொடு மிளிர அரிகால் போழ்ந்த தெரி பகட்டு உழவர் ஓதைத் தெள் விளி புலம்-தொறும் பரப்பக் கோழ் இணர் எதிரிய மரத்த கவினிக் காடு அணி கொண்ட காண்தகு பொழுதில் நாம் பிரி புலம்பின் நலம் செலச் சாஅய் நம் பிரிபு அறியா நலனொடு சிறந்த நல் தோள் நெகிழ வருந்தினள்-கொல்லோ மென் சிறை வண்டின் தண் கமழ் பூம் துணர் தாது இன் துவலை தளிர் வார்ந்து அன்ன அம் கலுழ் மாமை கிளைஇய நுண் பல் தித்தி மாஅயோளே #3 குறுந்தொகை 50 மருதம் - குன்றியனார் ஐயவி அன்ன சிறு வீ ஞாழல் செவ்வி மருதின் செம்மலொடு தாஅய்த் துறை அணிந்தன்று அவர் ஊரே இறை இறந்து இலங்கு வளை நெகிழ சாஅய்ப் புலம்பு அணிந்தன்று அவர் மணந்த தோளே #4 குறுந்தொகை 51 நெய்தல் - குன்றியனார் கூன் முள் முண்டகக் கூர்ம் பனி மா மலர் நூல் அறு முத்தின் காலொடு பாறித் துறை-தொறும் பரக்கும் தூ மணல் சேர்ப்பனை யானும் காதலென் யாயும் நனி வெய்யள் எந்தையும் கொடீஇயர் வேண்டும் அம்பல் ஊரும் அவனொடு மொழிமே #5 குறுந்தொகை 117 நெய்தல் - குன்றியனார் மாரி ஆம்பல் அன்ன கொக்கின் பார்வல் அஞ்சிய பருவரல் ஈர் ஞெண்டு கண்டல் வேர் அளைச் செலீஇயர் அண்டர் கயிறு அரி எருத்தின் கதழும் துறைவன் வாராது அமையினும் அமைக சிறியவும் உள ஈண்டு விலைஞர் கை வளையே #6 குறுந்தொகை 238 மருதம் - குன்றியனார் பாசவல் இடித்த கரும் காழ் உலக்கை ஆய் கதிர் நெல்லின் வரம்பு அணைத் துயிற்றி ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் தொண்டி அன்ன என் நலம் தந்து கொண்டனை சென்மோ மகிழ்ந நின் சூளே #7 குறுந்தொகை 301 குறிஞ்சி - குன்றியனார் முழவு முதல் அரைய தடவ நிலைப் பெண்ணைக் கொழு மடல் இழைத்த சிறு கோல் குடம்பைக் கரும் கால் அன்றில் காமர் கடும் சூல் வயவுப் பெடை அகவும் பானாள் கங்குல் மன்றம் போழும் இன் மணி நெடும் தேர் வாராது ஆயினும் வருவது போலச் செவி முதல் இசைக்கும் அரவமொடு துயில் துறந்தனவால் தோழி என் கண்ணே #8 குறுந்தொகை 336 குறிஞ்சி - குன்றியனார் செறுவர்க்கு உவகை ஆகத் தெறுவர ஈங்ஙனம் வருபவோ தேம் பாய் துறைவ சிறு நா ஒண் மணி விளரி ஆர்ப்பக் கடு மா நெடும் தேர் நேமி போகிய இரும் கழி நெய்தல் போல வருந்தினள் அளியள் நீ பிரிந்திசினோளே #9 நற்றிணை 117 நெய்தல் - குன்றியனார் பெரும் கடல் முழங்கக் கானல் மலர இரும் கழி ஓதம் இல் இறந்து மலிர வள் இதழ் நெய்தல் கூம்பப் புள் உடன் கமழ் பூ பொதும்பர்க் கட்சி சேரச் செல் சுடர் மழுங்கச் சிவந்து வாங்கு மண்டிலம் கல் சேர்பு நண்ணிப் படர் அடைபு நடுங்கப் புலம்பொடு வந்த புன்கண் மாலை அன்னர் உன்னார் கழியின் பல் நாள் வாழலென் வாழி தோழி என்-கண் பிணி பிறிது ஆகக் கூறுவர் பழி பிறிது ஆகல் பண்பும்-மார் அன்றே #10 நற்றிணை 239 நெய்தல் - குன்றியனார் ஞான்ற ஞாயிறு குடமலை மறைய மான்ற மாலை மகிழ்ந்த பரதவர் இனிது பெறு பெரு மீன் எளிதினின் மாறி அலவன் ஆடிய புலவு மணல் முன்றில் காமர் சிறுகுடிச் செல் நெறி வழியின் ஆய் மணி பொதி அவிழ்ந்து ஆங்கு நெய்தல் புல் இதழ் பொதிந்த பூத் தப மிதிக்கும் மல்லல் இரும் கழி மலி நீர்ச் சேர்ப்பற்கு அமைந்து தொழில் கேட்டன்றோ இலமே முன்கை வார் கோல் எல் வளை உடைய வாங்கி முயங்கு எனக் கலுழ்ந்த இவ் ஊர் எற்று ஆவது-கொல் யாம் மற்றொன்று செயினே &182 - குன்றூர்கிழார் மகனார் (கண்ணத்தனார்) #1 நற்றிணை 332 குறிஞ்சி - குன்றூர்கிழார் மகன் கண்ணத்தனார் இகுளைத் தோழி இஃது என் எனப்படுமோ குவளை குறுநர் நீர் வேட்டு ஆங்கு நாளும் நாள் உடன் கவவவும் தோளே தொல் நிலை வழீஇய நின் தொடி எனப் பல் மாண் உரைத்தல் ஆன்றிசின் நீயே விடர் முகை ஈன் பிணவு ஒடுக்கிய இரும் கேழ் வயப் புலி இரை நசைஇப் பரிக்கும் மலை முதல் சிறு நெறி தலை_நாள் அன்ன பேணலன் பல நாள் ஆர் இருள் வருதல் காண்பேற்கு யாங்கு ஆகும்மே இலங்கு இழை செறிப்பே #2 புறநானூறு 338 - குன்றூர் கிழார் மகனார் ஏர் பரந்த வயல் நீர் பரந்த செறுவின் நெல் மலிந்த மனைப் பொன் மலிந்த மறுகின் படு வண்டு ஆர்க்கும் பல் மலர்க் காவின் நெடு வேள் ஆதன் போந்தை அன்ன பெரும் சீர் அரும் கொண்டியளே கரும் சினை வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும் மலைந்த சென்னியர் அணிந்த வில்லர் கொற்ற வேந்தர் தரினும் தன் தக வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டுப் பிணங்கு கதிர்க் கழனி நாப்பண் ஏமுற்று உணங்கு கலன் ஆழியின் தோன்றும் ஓர் எயில் மன்னன் ஒரு மட மகளே &183 - கூகைக் கோழியார் #1 புறநானூறு 364 - கூகைக் கோழியார் வாடா மாலை பாடினி அணியப் பாணன் சென்னிக் கேணி பூவா எரி மருள் தாமரைப் பெரு மலர் தயங்க மை விடை இரும் போத்துச் செம் தீச் சேர்த்திக் காயம் கனிந்த கண் அகன் கொழும் குறை நறவு உண் செவ் வாய் நாத் திறம் பெயர்ப்ப உண்டும் தின்றும் இரப்போர்க்கு ஈய்ந்தும் மகிழ்கம் வம்மோ மறப் போரோயே அரிய ஆகலும் உரிய பெரும நிலம் பக வீழ்ந்த அலங்கல் பல் வேர் முது மரப் பொத்தின் கதுமென இயம்பும் கூகைக் கோழி ஆனாத் தாழிய பெருங்காடு எய்திய ஞான்றே &184 - கூடலூர்க் கிழார் #1 குறுந்தொகை 166 நெய்தல் - கூடலூர்க் கிழார் தண் கடல் படு திரை பெயர்த்தலின் வெண் பறை நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும் ஊரோ நன்று-மன் மரந்தை ஒரு தனி வைகின் புலம்பு ஆகின்றே #2 குறுந்தொகை 167 முல்லை - கூடலூர்க் கிழார் முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக் குவளை உண்கண் குய்ப் புகை கழுமத் தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர் இனிது எனக் கணவன் உண்டலின் நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்_நுதல் முகனே #3 குறுந்தொகை 214 குறிஞ்சி - கூடலுலுர் கிழார் மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய பிறங்கு குரல் இறடி காக்கும் புறம் தாழ் அம் சில் ஓதி அசை இயல் கொடிச்சி திருந்து இழை அல்குற்குப் பெரும் தழை உதவிச் செயலை முழுமுதல் ஒழிய அயலது அரலை மாலை சூட்டி ஏமுற்றன்று இவ் அழுங்கல் ஊரே #4 புறநானூறு 229 - கூடலூர் கிழார் **பாடப்பட்டோன்: கோச்சேரமான் யானைக்கண் சேஎய் **மாந்தரஞ்சேரல் இரும்பொறை. ஆடு இயல் அழல் குட்டத்து ஆர் இருள் அரை இரவில் முடப் பனையத்து வேர் முதலாக் கடைக் குளத்துக் கயம் காயப் பங்குனி உயர் அழுவத்துத் தலை நாள்_மீன் நிலை திரிய நிலை நாள்_மீன் அதன்எதிர் ஏர்தர தொல் நாள்_மீன் துறை படியப் பாசிச் செல்லாது ஊசித் துன்னாது அளக்கர்த் திணை விளக்கு ஆகக் கனை எரி பரப்பக் கால் எதிர்பு பொங்கி ஒரு மீன் விழுந்தன்றால் விசும்பினானே அது கண்டு யாமும் பிறரும் பல் வேறு இரவலர் பறை இசை அருவி நல் நாட்டுப் பொருநன் நோயிலன் ஆயின் நன்று-மன்-தில் என அழிந்த நெஞ்சம் மடி உளம் பரப்ப அஞ்சினம் எழு நாள் வந்தன்று இன்றே மைந்து உடை யானை கை வைத்து உறங்கவும் திண் பிணி முரசும் கண் கிழிந்து உருளவும் காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும் கால் இயல் கலிமாக் கதி இன்றி வைகவும் மேலோர் உலகம் எய்தினன் ஆகலின் ஒண் தொடி மகளிர்க்கு உறுதுணை ஆகித் தன் துணை ஆயம் மறந்தனன்-கொல்லோ பகைவர் பிணிக்கும் ஆற்றல் நசைவர்க்கு அளந்து கொடை அறியா ஈகை மணி வரை அன்ன மாஅயோனே &185 - கூடலூர்ப் பல்கண்ணனார் #1 நற்றிணை 200 மருதம் - கூடலூர்ப் பல்கண்ணனார் கண்ணி கட்டிய கதிர அன்ன ஒண் குரல் நொச்சித் தெரியல் சூடி யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் சாறு என நுவலும் முது வாய்க் குயவ ஈதும் ஆங்கண் நுவன்றிசின் மாதோ ஆம்பல் அமன்ற தீம் பெரும் பழனத்துப் பொய்கை ஊர்க்குப் போவோய் ஆகிக் கை கவர் நரம்பின் பனுவல் பாணன் செய்த அல்லல் பல்குவ வை எயிற்று ஐது அகல் அல்குல் மகளிர் இவன் பொய் பொதி கொடும் சொல் ஓம்பு-மின் எனவே #2 நற்றிணை 380 மருதம் - கடலூர்(கூடலூர்) பல்கண்ணனார் நெய்யும் குய்யும் ஆடி மெய்யொடு மாசு பட்டன்றே கலிங்கமும் தோளும் திதலை மென் முலைத் தீம் பால் பிலிற்றப் புதல்வன் புல்லிப் புனிறு நாறும்மே வால் இழை மகளிர் சேரித் தோன்றும் தேரோற்கு ஒத்தனெம் அல்லேம் அதனால் பொன் புரை நரம்பின் இன் குரல் சீறியாழ் எழாஅல் வல்லை ஆயினும் தொழாஅல் கொண்டு செல் பாண நின் தண் துறை ஊரனைப் பாடு மனைப் பாடல் கூடாது நீடு நிலைப் புரவியும் பூண் நிலை முனிகுவ விரகு இல மொழியல் யாம் வேட்டது இல் வழியே &186 - கூவன் மைந்தனார் #1 குறுந்தொகை 224 பாலை - கூவன் மைந்தனார் கவலை யாத்த அவல நீள் இடைச் சென்றோர் கொடுமை எற்றித் துஞ்சா நோயினும் நோய் ஆகின்றே கூவல் குரால் ஆன் படு துயர் இராவில் கண்ட உயர்திணை ஊமன் போலத் துயர் பொறுக்கல்லேன் தோழி நோய்க்கே &187 - கூற்றங்குமரனார் #1 நற்றிணை 244 குறிஞ்சி - கூற்றங்குமரனார் விழுந்த மாரிப் பெரும் தண் சாரல் கூதிர்க் கூதளத்து அலரி நாறும் மாதர் வண்டின் நயவரும் தீம் குரல் மணம் நாறு சிலம்பின் அசுணம் ஓர்க்கும் உயர் மலை நாடற்கு உரைத்தல் ஒன்றோ துயர் மருங்கு அறியா அன்னைக்கு இ நோய் தணியும் ஆறு இது என உரைத்தல் ஒன்றோ செய்யாய் ஆதலின் கொடியை தோழி மணி கெழு நெடு வரை அணி பெற நிவந்த செயலை அம் தளிர் அன்ன என் மதன் இல் மா மெய்ப் பசலையும் கண்டே &188 - கேசவனார் #1 பரிபாடல் 14 செவ்வேள் - கேசவனார் **இசையமைத்தவர் :: கேசவனார் **பண் :: நோதிறம் கார் மலி கதழ் பெயல் தலைஇ ஏற்ற நீர் மலி நிறை சுனை பூ மலர்ந்தனவே தண் நறும் கடம்பின் கமழ் தாது ஊதும் வண்ண வண்டு இமிர் குரல் பண்ணை போன்றனவே அடியுறை_மகளிர் ஆடும் தோளே நெடு வரை அடுக்கத்து வேய் போன்றனவே வாகை ஒண் பூப் புரையும் முச்சிய தோகை ஆர் குரல் மணந்து தணந்தோரை நீடன்-மின் வாரும் என்பவர் சொல் போன்றனவே நாள்_மலர்க் கொன்றையும் பொலம் தார் போன்றன மெல் இணர் வேங்கை வியல் அறைத் தாயின அழுகை மகளிர்க்கு உழுவை செப்ப நீர் அயல் கலித்த நெரி முகைக் காந்தள் வார் குலை அவிழ்ந்த வள் இதழ் நிரை-தொறும் விடு கொடிப் பிறந்த மென் தகைத் தோன்றிப் பவழத்து அன்ன வெம் பூத் தாஅய்க் கார் மலிந்தன்று நின் குன்று போர் மலிந்து சூர் மருங்கு அறுத்த சுடர்ப் படையோயே கறை இல் கார் மழை பொங்கி அன்ன நறையின் நறும் புகை நனி அமர்ந்தோயே அறு முகத்து ஆறு_இரு தோளால் வென்றி நறு மலர் வள்ளிப் பூ நயந்தோயே கெழீஇக் கேளிர் சுற்ற நின்னை எழீஇப் பாடும் பாட்டு அமர்ந்தோயே பிறந்த ஞான்றே நின்னை உட்கிச் சிறந்தோர் அஞ்சிய சீர் உடையோயே இரு பிறப்பு இரு பெயர் ஈர நெஞ்சத்து ஒரு பெயர் அந்தணர் அறன் அமர்ந்தோயே அன்னை ஆகலின் அமர்ந்து யாம் நின்னைத் துன்னித் துன்னி வழிபடுவதன் பயம் இன்னும் இன்னும் அவை ஆகுக தொல் முதிர் மரபின் நின் புகழினும் பலவே &189 - கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் #1 அகநானூறு 179 பாலை - கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன் வெண் தேர் ஓடும் கடம் காய் மருங்கில் துனை எரி பரந்த துன் அரும் வியன் காட்டுச் சிறு கண் யானை நெடும் கை நீட்டி வான் வாய் திறந்தும் வண் புனல் பெறாஅது கான் புலந்து கழியும் கண் அகன் பரப்பின் விடு வாய் செம் கணைக் கொடு வில் ஆடவர் நல் நிலை பொறித்த கல் நிலை அதர அரம்பு கொள் பூசல் களையுநர்க் காணாச் சுரம் செல விரும்பினிர் ஆயின் இன் நகை முருந்து எனத் திரண்ட முள் எயிற்றுத் துவர் வாய்க் குவளை நாள்_மலர் புரையும் உண்கண் இ மதி ஏர் வாள் நுதல் புலம்ப பதி பெயர்ந்து உறைதல் ஒல்லுமோ நுமக்கே #2 அகநானூறு 232 குறிஞ்சி - கொடிமங்கலத்து வாதுளி நற்சேந்தனார் காண் இனி வாழி தோழி பானாள் மழை முழங்கு அரவம் கேட்ட கழை தின் மாஅல் யானை புலி செத்து வெரீஇ இரும் கல் விடரகம் சிலம்பப் பெயரும் பெரும் கல் நாடன் கேண்மை இனியே குன்ற வேலிச் சிறுகுடி ஆங்கண் மன்ற வேங்கை மண நாள் பூத்த மணி ஏர் அரும்பின் பொன் வீ தாஅய் வியல் அறை வரிக்கும் முன்றில் குறவர் மனை முதிர் மகளிரொடு குரவை தூங்கும் ஆர் கலி விழவுக்களம் கடுப்ப நாளும் விரவுப் பூம் பலியொடு விரைஇ அன்னை கடி உடை வியல் நகர்க் காவல் கண்ணி முருகு என வேலன் தரூஉம் பருவம் ஆகப் பயந்தன்றால் நமக்கே &190 - கொ(கோ)ட்டம்பலவனார் #1 நற்றிணை 95 குறிஞ்சி - கொ(கோ)ட்டம்பலவனார் கழை பாடு இரங்கப் பல்லியம் கறங்க ஆடு_மகள் நடந்த கொடும் புரி நோன் கயிற்று அதவத் தீம் கனி அன்ன செம் முகத் துய்த் தலை மந்தி வன் பறழ் தூங்கக் கழைக் கண் இரும் பொறை ஏறி விசைத்து எழுந்து குற குறுமாக்கள் தாளம் கொட்டும் அக் குன்றகத்ததுவே குழு மிளைச் சீறூர் சீறூரோளே நாறு மயிர்க் கொடிச்சி கொடிச்சி கையகத்ததுவே பிறர் விடுத்தற்கு ஆகாது பிணித்த என் நெஞ்சே &191 - கொல்லன் அழிசி #1 குறுந்தொகை 26 குறிஞ்சி - கொல்லனழிசி அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கை மேக்கு எழு பெரும் சினை இருந்த தோகை பூக் கொய் மகளிரின் தோன்றும் நாடன் தகாஅன் போலத் தான் தீது மொழியினும் தன் கண் கண்டது பொய்க்குவது அன்றே தேக் கொக்கு அருந்தும் முள் எயிற்றுத் துவர் வாய் வரை ஆடு வன் பறழ்த் தந்தைக் கடுவனும் அறியும் அக் கொடியோனையே #2 குறுந்தொகை 138 குறிஞ்சி - கொல்லன் அழிசி கொன் ஊர் துஞ்சினும் யாம் துஞ்சலமே எம் இல் அயலது ஏழில் உம்பர் மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே #3 குறுந்தொகை 145 குறிஞ்சி - கொல்லன் அழிசியார் உறை பதி அன்று இத் துறை கெழு சிறுகுடி கானல் அம் சேர்ப்பன் கொடுமை எற்றி ஆனாத் துயரமொடு வருந்திப் பானாள் துஞ்சாது உறைநரொடு உசாவாத் துயில் கண் மாக்களொடு நெட்டு இரா உடைத்தே #4 குறுந்தொகை 240 முல்லை - கொல்லன் அழிசியார் பனிப் புதல் இவர்ந்த பைம் கொடி அவரைக் கிளி வாய் ஒப்பின் ஒளி விடு பல் மலர் வெருக்குப் பல் உருவின் முல்லையொடு கஞலி வாடை வந்ததன்தலையும் நோய் பொரக் கண்டிசின் வாழி தோழி தெண் திரைக் கடல் ஆழ் கலத்தின் தோன்றி மாலை மறையும் அவர் மணி நெடும் குன்றே &192 - கொல்லிக் கண்ணன் #1 குறுந்தொகை 34 மருதம் - கொல்லிக் கண்ணன் ஒறுப்ப ஓவலர் மறுப்பத் தேறலர் தமியர் உறங்கும் கௌவை இன்றாய் இனியது கேட்டு இன்புறுக இவ் ஊரே முனாஅது யானையங்குருகின் கானல் அம் பெரும் தோடு அட்ட மள்ளர் ஆர்ப்பு இசை வெரூஉம் குட்டுவன் மரந்தை அன்ன எம் குழை விளங்கு ஆய் நுதல் கிழவனும் அவனே &193 - கொள்ளம்பக்கனார் #1 நற்றிணை 147 குறிஞ்சி - கொள்ளம்பக்கனார் யாங்கு ஆகுவமோ அணி நுதல் குறுமகள் தேம் படு சாரல் சிறுதினைப் பெரும் குரல் செம் வாய்ப் பைம் கிளி கவர நீ மற்று எவ் வாய்ச் சென்றனை அவண் எனக் கூறி அன்னை ஆனாள் கழற முன் நின்று அருவி ஆர்க்கும் பெரு வரை நாடனை அறியலும் அறியேன் காண்டலும் இலனே வெதிர் புனை தட்டையேன் மலர் பூக் கொய்து சுனை பாய்ந்து ஆடிற்றும் இலன் என நினைவு இலை பொய்யல் அந்தோ வாய்த்தனை அது கேட்டுத் தலை இறைஞ்சினளே அன்னை செலவு ஒழிந்தனையால் அளியை நீ புனத்தே &194 - (மாற்றூர் கிழார் மகனார்) கொற்றம் கொற்றனார் #1 அகநானூறு 54 முல்லை - (மாற்றூர் கிழார் மகனார்) கொற்றம் கொற்றனார்(நொச்சி நியமம் கிழார்) விருந்தின் மன்னர் அரும் கலம் தெறுப்ப வேந்தனும் வெம் பகை தணிந்தனன் தீம் பெயல் காரும் ஆர்கலி தலையின்று தேரும் ஓவத்து அன்ன கோபச் செந்நிலம் வள் வாய் ஆழி உள் உறுபு உருளக் கடவுக காண்குவம் பாக மதவு நடைத் தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடியக் கனையல் அம் குரல கால் பரி பயிற்றிப் படு மணி மிடற்ற பய நிரை ஆயம் கொடு மடி உடையர் கோல் கைக் கோவலர் கொன்றை அம் குழலர் பின்றைத் தூங்க மனைமனைப் படரும் நனை நகு மாலைத் தனக்கு என வாழாப் பிறர்க்கு உரியாளன் பண்ணன் சிறுகுடிப் படப்பை நுண் இலைப் புன் காழ் நெல்லிப் பைம் காய் தின்றவர் நீர் குடி சுவையின் தீவிய மிழற்றி முகிழ் நிலாத் திகழ்தரும் மூவாத் திங்கள் பொன் உடைத் தாலி என் மகன் ஒற்றி வருகுவை ஆயின் தருகுவென் பால் என விலங்கு அமர்க் கண்ணள் விரல் விளி பயிற்றி திதலை அல்குல் எம் காதலி புதல்வன் பொய்க்கும் பூங்கொடி நிலையே #2 நற்றிணை 259 குறிஞ்சி - கொற்றம் கொற்றனார் யாங்குச் செய்வாம்-கொல் தோழி பொன் வீ வேங்கை ஓங்கிய தேம் கமழ் சாரல் பெரும் கல் நாடனொடு இரும் புனத்து அல்கிச் செவ் வாய்ப் பைம் கிளி ஓப்பி அவ் வாய்ப் பெரு வரை அடுக்கத்து அருவி ஆடிச் சாரல் ஆரம் வண்டு பட நீவிப் பெரிது அமர்ந்து இயைந்த கேண்மை சிறு நனி அரிய போலக் காண்பேன் விரி திரைக் கடல் பெயர்ந்து அனைய ஆகிப் புலர்_பதம் கொண்டன ஏனல் குரலே &195 - கோக்குளமுற்றனார் #1 குறுந்தொகை 98 முல்லை - கோக்குளமுற்றனார் இன்னள் ஆயினள் நல்_நுதல் என்று அவர்த் துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே நன்று-மன் வாழி தோழி நம் படப்பை நீர் வார் பைம் புதல் கலித்த மாரிப் பீரத்து அலர் சில கொண்டே #2 நற்றிணை 96 நெய்தல் - கோக்குளமுற்றனார் இதுவே நறு வீ ஞாழல் மா மலர் தாஅய்ப் புன்னை ததைந்த வெண் மணல் ஒரு சிறைப் புதுவது புணர்ந்த பொழிலே உதுவே பொம்மல் படு திரை நம்மோடு ஆடிப் புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் துவரினர் அருளிய துறையே அதுவே கொடும் கழி நிவந்த நெடும் கால் நெய்தல் அம் பகை நெறித் தழை அணி பெறத் தைஇத் தமியர் சென்ற கானல் என்று ஆங்கு உள்ளு-தோறு உள்ளு-தோறு உருகிப் பைஇப் பையப் பசந்தனை பசப்பே &196 - கோடை பாடிய பெரும்பூதனார் #1 புறநானூறு 259 - கோடை பாடிய பெரும்பூதனார் ஏறு உடைப் பெரு நிரை பெயர்தரப் பெயராது இலை புதை பெரும் காட்டுத் தலை கரந்து இருந்த வல் வில் மறவர் ஒடுக்கம் காணாய் செல்லல் செல்லல் சிறக்க நின் உள்ளம் முருகு மெய்ப்பட்ட புலைத்தி போலத் தாவுபு தெறிக்கும் ஆன் மேல் புடை இலங்கு ஒள் வாள் புனை கழலோயே &197 - கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் #1 அகநானூறு 168 குறிஞ்சி - கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமான் யாமம் நும்மொடு கழிப்பி நோய் மிக பனி வார் கண்ணேம் வைகுதும் இனியே ஆன்றல் வேண்டும் வான் தோய் வெற்ப பல்லான்குன்றில் படு நிழல் சேர்ந்த நல் ஆன் பரப்பின் குழுமூர் ஆங்கண் கொடைக்கடன் ஏன்ற கோடா நெஞ்சின் உதியன் அட்டில் போல ஒலி எழுந்து அருவி ஆர்க்கும் பெரு வரைச் சிலம்பின் ஈன்று அணி இரும் பிடி தழீஇக் களிறு தன் தூங்கு நடைக் குழவி துயில் புறங்காப்ப ஒடுங்கு அளை புலம்பப் போகிக் கடுங்கண் வாள் வரி வயப் புலி கல் முழை உரற கானவர் மடிந்த கங்குல் மான் அதர்ச் சிறு நெறி வருதல் நீயே &198 - கோட்டியூர் நல்லந்தையார் #1 நற்றிணை 211 நெய்தல் - கோட்டியூர் நல்லந்தையார் யார்க்கு நொந்து உரைக்கோ யானே ஊர் கடல் ஓதம் சென்ற உப்பு உடைச் செறுவில் கொடும் கழி மருங்கின் இரை வேட்டு எழுந்த கரும் கால் குருகின் கோள் உய்ந்து போகிய முடங்கு புற இறவின் மோவாய் ஏற்றை எறி திரை தொகுத்த எக்கர் நெடும் கோட்டுத் துறு கடல் தலைய தோடு பொதி தாழை வண்டு படு வான் போது வெரூஉம் துறை கெழு கொண்கன் துறந்தனன் எனவே &199 - கோண்மா நெடுங்கோட்டனார் #1 நற்றிணை 40 மருதம் - கோண்மா நெடுங்கோட்டனார் நெடு நா ஒண் மணி கடி மனை இரட்டக் குரை இலைப் போகிய விரவு மணல் பந்தர்ப் பெரும்பாண் காவல் பூண்டு என ஒருசார்த் திருந்து இழை மகளிர் விரிச்சி நிற்ப வெறியுற விரிந்த அறுவை மெல் அணைப் புனிறு நாறு செவிலியொடு புதல்வன் துஞ்ச ஐயவி அணிந்த நெய்யாட்டு ஈர் அணிப் பசு_நெய் கூர்ந்த மென்மை யாக்கைச் சீர் கெழு மடந்தை ஈர் இமை பொருந்த நள்ளென் கங்குல் கள்வன் போல அகன் துறை ஊரனும் வந்தனன் சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே &200 - கோப்பெருஞ்சோழன் #1 குறுந்தொகை 20 பாலை - கோப்பெருஞ்சோழன் அருளும் அன்பும் நீக்கித் துணை துறந்து பொருள்-வயின் பிரிவோர் உரவோர் ஆயின் உரவோர் உரவோர் ஆக மடவம் ஆக மடந்தை நாமே #2 குறுந்தொகை 53 மருதம் - கோப்பெருஞ்சோழன் எம் அணங்கினவே மகிழ்ந முன்றில் நனை முதிர் புன்கின் பூத் தாழ் வெண் மணல் வேலன் புனைந்த வெறி அயர் களம்-தொறும் செந்நெல் வான் பொரி சிதறி அன்ன எக்கர் நண்ணிய எம் ஊர் வியன் துறை நேர் இறை முன்கை பற்றிச் சூர்_அர_மகளிரோடு உற்ற சூளே #3 குறுந்தொகை 129 குறிஞ்சி - கோப்பெருஞ்சோழன் எலுவ சிறாஅர் ஏமுறு நண்ப புலவர் தோழ கேளாய் அத்தை மாக் கடல் நடுவண் எண் நாள் பக்கத்துப் பசு வெண் திங்கள் தோன்றி ஆங்குக் கதுப்பு அயல் விளங்கும் சிறு நுதல் புதுக் கோள் யானையின் பிணித்து அற்றால் எம்மே #4 குறுந்தொகை 147 பாலை - கோப்பெருஞ்சோழன் வேனில் பாதிரிக் கூன் மலர் அன்ன மயிர் ஏர்பு ஒழுகிய அம் கலுழ் மாமை நுண் பூண் மடந்தையைத் தந்தோய் போல இன் துயில் எடுப்புதி கனவே எள்ளார் அம்ம துணைப் பிரிந்தோரே #5 புறநானூறு 214 - கோப்பெருஞ்சோழன் செய்குவம்-கொல்லோ நல்வினை எனவே ஐயம் அறாஅர் கசடு ஈண்டு காட்சி நீங்கா நெஞ்சத்துத் துணிவு இல்லோரே யானை வேட்டுவன் யானையும் பெறுமே குறும்பூழ் வேட்டுவன் வறும் கையும் வருமே அதனால் உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்குச் செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின் தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும் தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின் மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும் மாறிப் பிறவார் ஆயினும் இமயத்துக் கோடு உயர்ந்து அன்ன தம் இசை நட்டுத் தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே #6 புறநானூறு 215 - கோப்பெருஞ்சோழன் கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல் தாது எரு மறுகின் போதொடு பொதுளிய வேளை வெண் பூ வெண் தயிர்க் கொளீஇ ஆய்_மகள் அட்ட அம் புளி மிதவை அவரை கொய்யுநர் ஆர மாந்தும் தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும் பிசிரோன் என்ப என் உயிர் ஓம்புநனே செல்வக் காலை நிற்பினும் அல்லல் காலை நில்லலன் மன்னே #7 புறநானூறு 216 - கோப்பெருஞ்சோழன் கேட்டல் மாத்திரை அல்லது யாவதும் காண்டல் இல்லாது யாண்டு பலக் கழிய வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும் அரிதே தோன்றல் அதன் பட ஒழுகல் என்று ஐயம் கொள்ளன்-மின் ஆர் அறிவாளிர் இகழ்விலன் இனியன் யாத்த நண்பினன் புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே தன் பெயர் கிளக்கும் காலை என் பெயர் பேதைச் சோழன் என்னும் சிறந்த காதல் கிழமையும் உடையவன் அதன்தலை இன்னது ஓர் காலை நில்லலன் இன்னே வருகுவன் ஒழிக்க அவற்கு இடமே &201 - கோவர்த்தனார் #1 குறுந்தொகை 66 முல்லை - கோவர்த்தனார் மடவ-மன்ற தடவு நிலைக் கொன்றை கல் பிறங்கு அத்தம் சென்றோர் கூறிய பருவம் வாரா அளவை நெரிதரக் கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த வம்ப மாரியைக் கார் என மதித்தே #2 குறுந்தொகை 194 முல்லை - கோவர்த்தனார் என் எனப்படும்-கொல் தோழி மின்னு வர வான் ஏர்பு இரங்கும் ஒன்றோ அதன்எதிர் கான மஞ்ஞை கடிய ஏங்கும் ஏதில கலந்த இரண்டற்கு என் பேதை நெஞ்சம் பெரு மலக்குறுமே &202 - கோவூர் கிழார் #1 குறுந்தொகை 65 முல்லை - கோவூர் கிழார் வன் பரல் தெள் அறல் பருகிய இரலை தன் இன்புறு துணையொடு மறுவந்து உகளத் தான் வந்தன்றே தளி தரு தண் கார் வாராது உறையுநர் வரல் நசைஇ வருந்தி நொந்து உறைய இருந்திரோ எனவே #2 நற்றிணை 393 குறிஞ்சி - கோவூர் கிழார் நெடும் கழை நிவந்த நிழல் படு சிலம்பின் கடும் சூல் வயப் பிடி கன்று ஈன்று உயங்கப் பால் ஆர் பசும் புனிறு தீரிய களி சிறந்து வாலா வேழம் வணர் குரல் கவர்தலின் கானவன் எறிந்த கடும் செலல் ஞெகிழி வேய் பயில் அடுக்கம் சுடர மின்னி நிலை கிளர் மீனின் தோன்றும் நாடன் இரவின் வரூஉம் இடும்பை நாம் உய வரைய வந்த வாய்மைக்கு ஏற்ப நமர் கொடை நேர்ந்தனர் ஆயின் அவருடன் நேர்வர்-கொல் வாழி தோழி நம் காதலர் புதுவர் ஆகிய வரவும் நின் வதுவை நாண் ஒடுக்கமும் காணும் காலே #3 புறநானூறு 31 - கோவூர்கிழார் **பாடப்பட்டோன் : சோழன் நலங்கிள்ளி சிறப்பு உடை மரபின் பொருளும் இன்பமும் அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல இரு குடை பின்பட ஓங்கி ஒரு குடை உரு கெழு மதியின் நிவந்து சேண் விளங்க நல் இசை வேட்டம் வேண்டி வெல் போர்ப் பாசறை அல்லது நீ ஒல்லாயே நுதி முகம் மழுங்க மண்டி ஒன்னார் கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே போர் எனின் புகலும் புனை கழல் மறவர் காடிடைக் கிடந்த நாடு நனி சேஎய செல்வேம் அல்லேம் என்னார் கல்லென் விழவு உடை ஆங்கண் வேற்றுப் புலத்து இறுத்துக் குண கடல் பின்னது ஆகக் குட கடல் வெண் தலைப் புணரி நின் மான் குளம்பு அலைப்ப வலமுறை வருதலும் உண்டு என்று அலமந்து நெஞ்சு நடுங்கு அவலம் பாயத் துஞ்சாக் கண்ண வடபுலத்து அரசே #4 புறநானூறு 32 - கோவூர்கிழார் **பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி கடும்பின் அடு கலம் நிறையாக நெடும் கொடிப் பூவா வஞ்சியும் தருகுவன் ஒன்றோ வண்ணம் நீவிய வணங்கு இறைப் பணைத் தோள் ஒண் நுதல் விறலியர் பூ விலை பெறுக என மாட மதுரையும் தருகுவன் எல்லாம் பாடுகம் வம்மினோ பரிசில் மாக்கள் தொல் நிலக் கிழமை சுட்டின் நல் மதி வேட்கோச் சிறாஅர் தேர்க் கால் வைத்த பசு மண் குரூஉத் திரள் போல அவன் கொண்ட குடுமித்து இத் தண் பணை நாடே #5 புறநானூறு 33 - கோவூர்கிழார் **பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி கான் உறை வாழ்க்கைக் கத நாய் வேட்டுவன் மான் தசை சொரிந்த வட்டியும் ஆய்_மகள் தயிர் கொடு வந்த தசும்பும் நிறைய ஏரின் வாழ்நர் பேர் இல் அரிவையர் குளக் கீழ் விளைந்த களக் கொள் வெண்ணெல் முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும் தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும் ஏழ் எயில் கதவம் எறிந்து கைக்கொண்டு நின் பேழ் வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை பாடுநர் வஞ்சி பாடப் படையோர் தாது எரு மறுகின் பாசறை பொலியப் புலராப் பச்சிலை இடை இடுபு தொடுத்த மலரா மாலைப் பந்து கண்டு அன்ன ஊன் சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும் செம்மற்று அம்ம நின் வெம் முனை இருக்கை வல்லோன் தைஇய வரி வனப்புற்ற அல்லிப் பாவை ஆடு வனப்பு ஏய்ப்பக் காம இருவர் அல்லது யாமத்துத் தனி மகன் வழங்காப் பனி மலர்க் காவின் ஒதுக்கு இன் திணி மணல் புதுப் பூம் பள்ளி வாயில் மாடம்-தொறும் மை விடை வீழ்ப்ப நீ ஆங்குக் கொண்ட விழவினும் பலவே #6 புறநானூறு 41 - கோவூர் கிழார் **பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் காலனும் காலம் பார்க்கும் பாராது வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய வேண்டிடத்து அடூஉம் வெல் போர் வேந்தே திசை இரு_நான்கும் உற்கம் உற்கவும் பெரு மரத்து இலை இல் நெடும் கோடு வற்றல் பற்றவும் வெம் கதிர்க் கனலி துற்றவும் பிறவும் அஞ்சுவரத் தகுந புள்ளுக் குரல் இயம்பவும் எயிறு நிலத்து வீழவும் எண்ணெய் ஆடவும் களிறு மேல் கொள்ளவும் காழகம் நீப்பவும் வெள்ளி நோன் படை கட்டிலொடு கவிழவும் கனவின் அரியன காணா நனவில் செரு செய் முன்ப நின் வரு திறன் நோக்கி மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர் புதல்வர் பூம் கண் முத்தி மனையோட்கு எவ்வம் சுரக்கும் பைதல் மாக்களொடு பெரும் கலக்குற்றன்றால் தானே காற்றோடு எரி நிகழ்ந்து அன்ன செலவின் செரு மிகு வளவ நின் சினைஇயோர் நாடே #7 புறநானூறு 44 - கோவூர் கிழார் **பாடப்பட்டோன்: சோழன் நெடுங்கிள்ளி இரும் பிடித் தொழுதியொடு பெரும் கயம் படியா நெல் உடைக் கவளமொடு நெய்ம்மிதி பெறாஅ திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி நில மிசைப் புரளும் கைய வெய்துயிர்த்து அலமரல் யானை உரும் என முழங்கவும் பால் இல் குழவி அலறவும் மகளிர் பூ இல் வறும் தலை முடிப்பவும் நீர் இல் வினை புனை நல் இல் இனைகூஉக் கேட்பவும் இன்னாது அம்ம ஈங்கு இனிது இருத்தல் துன் அரும் துப்பின் வய_மான் தோன்றல் அறவை ஆயின் நினது என திறத்தல் மறவை ஆயின் போரொடு திறத்தல் அறவையும் மறவையும் அல்லையாக திறவாது அடைத்த திண் நிலைக் கதவின் நீள் மதில் ஒரு சிறை ஒடுங்குதல் நாணுத் தகவு உடைத்து இது காணுங்காலே #8 புறநானூறு 45 - கோவூர் கிழார் **பாடப்பட்டோர்: சோழன் நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் இரும் பனை வெண் தோடு மலைந்தோன் அல்லன் கரும் சினை வேம்பின் தெரியலோன் அல்லன் நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே ஒருவீர் தோற்பினும் தோற்ப நும் குடியே இருவீர் வேறல் இயற்கையும் அன்றே அதனால் குடிப் பொருள் அன்று நும் செய்தி கொடித் தேர் நும் ஓர் அன்ன வேந்தர்க்கு மெய்மலி உவகை செய்யும் இவ் இகலே #9 புறநானூறு 46 கோவூர் கிழார் **பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை இவரே புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சித் தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர் களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த புன் தலைச் சிறாஅர் மன்று மருண்டு நோக்கி விருந்தின் புன்கண் நோவு உடையர் கெட்டனை ஆயின் நீ வேட்டது செய்ம்மே #10 புறநானூறு 47 - கோவூர் கிழார் **பாடப்பட்டோன்: காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி நெடிய என்னாது சுரம் பல கடந்து வடியா நாவின் வல்லாங்குப் பாடிப் பெற்றது மகிழ்ந்து சுற்றம் அருத்தி ஓம்பாது உண்டு கூம்பாது வீசி வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தீது அறிந்தன்றோ இன்றே திறப்பட நண்ணார் நாண அண்ணாந்து ஏகி ஆங்கு இனிது ஒழுகின் அல்லது ஓங்கு புகழ் மண் ஆள் செல்வம் எய்திய நும் ஓர் அன்ன செம்மலும் உடைத்தே #11 புறநானூறு 68 - கோவூர் கிழார் **பாடப்பட்டோன்; சோழன் நலங்கிள்ளி உடும்பு உரித்து அன்ன என்பு எழு மருங்கின் கடும்பின் கடும் பசி களையுநர்க் காணாது சில் செவித்து ஆகிய கேள்வி நொந்துநொந்து ஈங்கு எவன் செய்தியோ பாண பூண் சுமந்து அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து மென்மையின் மகளிர்க்கு வணங்கி வன்மையின் ஆடவர்ப் பிணிக்கும் பீடு கெழு நெடுந்தகை புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போலச் சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர் மன்பதை புரக்கும் நல் நாட்டுப் பொருநன் உட்பகை ஒரு திறம் பட்டு எனப் புள் பகைக்கு ஏவான் ஆகலின் சாவேம் யாம் என நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்பத் தணி பறை அறையும் அணி கொள் தேர் வழிக் கடும் கள் பருகுநர் நடுங்கு கை உகத்த நறும் சேறு ஆடிய வறும் தலை யானை நெடு நகர் வரைப்பின் படு முழா ஓர்க்கும் உறந்தையோனே குருசில் பிறன் கடை மறப்ப நல்குவன் செலினே #12 புறநானூறு 70 - கோவூர் கிழார் **பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் தேஎம் தீம் தொடைச் சீறியாழ்ப் பாண கயத்து வாழ் யாமை காழ் கோத்து அன்ன நுண் கோல் தகைத்த தெண் கண் மாக் கிணை இனிய காண்க இவண் தணிக எனக் கூறி வினவல் ஆனா முது வாய் இரவல தைஇத் திங்கள் தண் கயம் போலக் கொளக்கொளக் குறைபடாக் கூழ் உடை வியன் நகர் அடு தீ அல்லது சுடு தீ அறியாது இரு மருந்து விளைக்கும் நல் நாட்டுப் பொருநன் கிள்ளிவளவன் நல் இசை உள்ளி நாற்ற நாட்டத்து அறு_கால்_பறவை சிறு வெள்_ஆம்பல் ஞாங்கர் ஊதும் கைவள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப் பாதிரி கமழும் ஓதி ஒள் நுதல் இன் நகை விறலியொடு மென்மெல இயலி செல்வை ஆயின் செல்வை ஆகுவை விறகு ஒய் மாக்கள் பொன் பெற்ற அன்னது ஓர் தலைப்பாடு அன்று அவன் ஈகை நினைக்க வேண்டா வாழ்க அவன் தாளே #13 புறநானூறு 308 - கோவூர் கிழார் பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் மின் நேர் பச்சை மிஞிற்றுக் குரல் சீறியாழ் நன்மை நிறைந்த நய வரு பாண சீறூர் மன்னன் சிறியிலை எஃகம் வேந்து ஊர் யானை ஏந்து முகத்ததுவே வேந்து உடன்று எறிந்த வேலே என்னை சாந்து ஆர் அகலம் உளம் கழிந்தன்றே உளம் கழி சுடர்ப் படை ஏந்தி நம் பெரு விறல் ஓச்சினன் துரந்த காலை மற்றவன் புன் தலை மடப் பிடி நாணக் குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத்தனவே #14 புறநானூறு 373 - கோவூர்கிழார் **பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளி வளவன் உரு மிசை முழக்கு என முரசும் இசைப்பச் செரு நவில் வேழம் கொண்மூ ஆகத் தேர் மா அழி துளி தலைஇ நாம் உறக் கணைக் காற்று எடுத்த கண் அகன் பாசறை இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள் பிழிவது போலப் பிட்டை ஊறு உவப்ப மைந்தர் ஆடிய மயங்கு பெரும் தானைக் கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே தண்ட மாப் பொறி மடக் கண் மயில் இயன்று மறலி ஆங்கு நெடும் சுவர் நல் இல் புலம்பக் கடை கழிந்து மென் தோள் மகளிர் மன்றம் பேணார் புண் உவந்து உளை அணிப் புரவி வாழ்க எனச் சொல் நிழல் இன்மையின் நல் நிழல் சேர நுண் பூண் மார்பின் புன் தலைச் சிறாஅர் அம்பு அழி பொழுதில் தமர் முகம் காணா வாளில் தாக்கான் வேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை மாடம் மயங்கு எரி மண்டிக் கோடு இறுபு உரும் எறி மலையின் இரு நிலம் சேரச் சென்றோன்-மன்ற கொலைவன் சென்று எறி வெம் புண் அறிநர் கண்டு கண் அலைப்ப வஞ்சி முற்றம் வயக் களன் ஆக அஞ்சா மறவர் ஆள் போர்பு அழித்துக் கொண்டனை பெரும குடபுலத்து அதரி பொலிக அத்தை நின் பணை தயங்கு வியன் களம் விளங்கு திணை வேந்தர் களம்-தொறும் சென்று புகர்_முக முகவை பொலிக என்று ஏத்திக் கொண்டனர் என்ப பெரியோர் யானும் அம் கண் மாக் கிணை அதிர ஒற்ற முற்றிலென் ஆயினும் காதலின் ஏத்தி நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின் மன் எயில் முகவைக்கு வந்திசின் பெரும பகைவர் புகழ்ந்த ஆண்மை நகைவர்க்குத் தா இன்று உதவும் பண்பின் பேயொடு கண நரி திரிதரும் ஆங்கண் நிணன் அருந்து செம் செவி எருவை குழீஇ அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே #15 புறநானூறு 382 - கோவூர் கிழார் **பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி கடல் படை அடல் கொண்டி மண்டுற்ற மலிர் நோன் தாள் தண் சோழநாட்டுப் பொருநன் அலங்கு உளை அணி இவுளி நலங்கிள்ளி நசைப் பொருநரேம் பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம் அவன் பாடுதும் அவன் தாள் வாழிய என நெய் குய்ய ஊன் நவின்ற பல் சோற்றான் இன் சுவைய நல்குரவின் பசித் துன்பின் நின் முன்_நாள் விட்ட மூது அறி சிறாஅரும் யானும் ஏழ் மணி அம் கேழ் அணி உத்திக் கண் கேள்விக் கவை நாவின் நிறன் உற்ற அராஅப் போலும் வறன் ஒரீஇ வழங்கு வாய்ப்ப விடு-மதி அத்தை கடு_மான் தோன்றல் நினதே முந்நீர் உடுத்த இவ் வியன் உலகு அறிய எனதே கிடைக் காழ் அன்ன தெண் கண் மாக் கிணை கண்ணகத்து யாத்த நுண் அரிச் சிறு கோல் எறி-தொறும் நுடங்கி ஆங்கு நின் பகைஞர் கேள்-தொறும் நடுங்க ஏத்துவென் வென்ற தேர் பிறர் வேத்தவையானே #16 புறநானூறு 386 - கோவூர் கிழார் **பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் நெடு நீர நிறை கயத்துப் படு மாரித் துளி போல நெய் துள்ளிய வறை முகக்கவும் சூடு கிழித்து வாடூன் மிசையவும் ஊன் கொண்ட வெண் மண்டை ஆன் பயத்தான் முற்று அழிப்பவும் வெய்து உண்ட வியர்ப்பு அல்லது செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை ஈத்தோன் எந்தை இசை தனது ஆக வயலே நெல்லின் வேலி நீடிய கரும்பின் பாத்திப் பல் மலர் பூத் ததும்பின புறவே புல் அருந்து பல் ஆயத்தான் வில் இருந்த வெம் குறும்பின்று கடலே கால் தந்த கலம் எண்ணுவோர் கானல் புன்னைச் சினை நிலைக்குந்து கழியே சிறு வெள் உப்பின் கொள்ளை சாற்றி பெரும் கல் நல் நாட்டு உமண் ஒலிக்குந்து அன்ன நல் நாட்டுப் பொருநம் யாமே பொராஅப் பொருநரேம் குணதிசை-நின்று குட முதல் செலினும் குடதிசை-நின்று குண முதல் செலினும் வடதிசை-நின்று தென் வயின் செலினும் தென்திசை-நின்று குறுகாது நீடினும் யாண்டும் நிற்க வெள்ளி யாம் வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே #17 புறநானூறு 400 - கோவூர் கிழார் **பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி மாக விசும்பின் வெண் திங்கள் மூ_ஐந்தால் முறை முற்றக் கடல் நடுவண் கண்டு அன்ன என் இயம் இசையா மரபு ஏத்தி கடைத் தோன்றிய கடைக் கங்குலான் பலர் துஞ்சவும் தான் துஞ்சான் உலகு காக்கும் உயர் கொள்கை கேட்டோன் எந்தை என் தெண் கிணைக் குரலே கேட்டதன் கொண்டும் வேட்கை தண்டாது தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி மிகப் பெரும் சிறப்பின் வீறு சால் நல் கலம் கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி நார் அரி நறவின் நாள்_மகிழ் தூங்குந்து போது அறியேன் பதிப் பழகவும் தன் பகை கடிதல் அன்றியும் சேர்ந்தோர் பசிப் பகை கடிதலும் வல்லன்-மாதோ மறவர் மலிந்த தன் கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து இரும் கழி இழிதரும் ஆர்கலி வங்கம் தேறு நீர்ப் பரப்பின் யாறு சீத்து உய்த்துத் துறை-தொறும் பிணிக்கும் நல் ஊர் உறைவு இன் யாணர் நாடு கிழவோனே &203 - கோவேங்கைப் பெருங்கதவனார் #1 குறுந்தொகை 134 குறிஞ்சி - கோவேங்கைப் பெருங்கதவனார் அம்ம வாழி தோழி நம்மொடு பிரிவு இன்று ஆயின் நன்று-மன்-தில்ல குறும் பொறைத் தடைஇய நெடும் தாள் வேங்கைப் பூ உடை அலங்கு சினை புலம்பத் தாக்கிக் கல் பொருது இரங்கும் கதழ் வீழ் அருவி நிலம் கொள் பாம்பின் இழிதரும் விலங்கு மலை நாடனொடு கலந்த நட்பே &204 - கோழிக் கொற்றனார் #1 குறுந்தொகை 276 குறிஞ்சி - கோழிக் கொற்றனார் பணைத் தோள் குறுமகள் பாவை தைஇயும் பஞ்சாய்ப் பள்ளம் சூழ்ந்தும் மற்று இவள் உருத்து எழு வன முலை ஒளி பெற எழுதிய தொய்யில் காப்போர் அறிதலும் அறியார் முறை உடை அரசன் செங்கோல் அவையத்து யான் தன் கடவின் யாங்கு ஆவது-கொல் பெரிதும் பேதை-மன்ற அளிதோ தானே இவ் அழுங்கல் ஊரே &205 - கோளியூர் கிழார் மகனார் செழியனார் #1 நற்றிணை 383 குறிஞ்சி - கோளியூர் கிழார் மகனார் செழியனார் கல் அயல் கலித்த கரும் கால் வேங்கை அலங்கல் அம் தொடலை அன்ன குருளை வயப் புனிற்று இரும் பிணப் பசித்து என வயப் புலி புகர் முகம் சிதையத் தாக்கிக் களிறு அட்டு உரும் இசை உரறும் உட்குவரு நடுநாள் அருளினை போலினும் அருளாய் அன்றே கனை இருள் புதைத்த அஞ்சுவரும் இயவில் பாம்பு உடன்று இரிக்கும் உருமோடு ஓங்கு வரை நாட நீ வருதலானே &206 - கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் #1 புறநானூறு 54 - கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் **பாடப்பட்டோன்: சேரமான் குட்டுவன் கோதை எம் கோன் இருந்த கம்பலை மூதூர் உடையோர் போல இடை இன்று குறுகிச் செம்மல் நாள்_அவை அண்ணாந்து புகுதல் எம் அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே இரவலர்க்கு எண்மை அல்லது புரவு எதிர்ந்து வானம் நாண வரையாது சென்றோர்க்கு ஆனாது ஈயும் கவிகை வண்மைக் கடு_மான் கோதை துப்பு எதிர்ந்து எழுந்த நெடுமொழி மன்னர் நினைக்குங்காலை பாசிலை தொடுத்த உவலைக் கண்ணிப் மாசு உண் உடுக்கை மடி வாய் இடையன் சிறு தலை ஆயமொடு குறுகல் செல்லாப் புலி துஞ்சு வியன் புலத்து அற்றே வலி துஞ்சு தடக் கை அவன் உடை நாடே #2 புறநானூறு 61 - கோனாட்டு எறிச்சிலுர் மாடலன் மதுரை குமரனார் **பாடப்பட்டோன்: சோழன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய **நலங்கிள்ளி சேட்சென்னி கொண்டைக் கூழைத் தண் தழைக் கடைசியர் சிறு மாண் நெய்தல் ஆம்பலொடு கட்கும் மலங்கு மிளிர் செறுவின் தளம்பு தடிந்திட்ட பழன வாளைப் பரூஉக் கண் துணியல் புது நெல் வெண் சோற்றுக் கண்ணுறை ஆக விலாப் புடை மருங்கு விசிப்ப மாந்தி நீடு கதிர்க் கழனிச் சூடு தடுமாறும் வன் கை வினைஞர் புன் தலைச் சிறாஅர் தெங்கு படு வியன் பழம் முனையின் தந்தையர் குறைக் கண் நெடு போர் ஏறி விசைத்து எழுந்து செழும் கோள் பெண்ணைப் பழம் தொட முயலும் வைகல் யாணர் நல் நாட்டுப் பொருநன் எஃகு விளங்கு தடக் கை இயல் தேர்ச் சென்னி சிலைத் தார் அகலம் மலைக்குநர் உளர் எனின் தாம் அறிகுவர் தமக்கு உறுதி யாம் அவன் எழு உறழ் திணி தோள் வழு இன்றி மலைந்தோர் வாழக் கண்டன்றும் இலமே தாழாது திருந்து அடி பொருந்த வல்லோர் வருந்தக் காண்டல் அதனினும் இலமே #3 புறநானூறு 167 - கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரை குமரனார் **பாடப்பட்டோன் : சோழன் கடுமான் கிள்ளி நீயே அமர் காணின் அமர் கடந்து அவர் படை விலக்கி எதிர் நிற்றலின் வாஅள் வாய்த்த வடு வாழ் யாக்கையொடு கேள்விக்கு இனியை கட்கு இன்னாயே அவரே நின் காணின் புறங்கொடுத்தலின் ஊறு அறியா மெய் யாக்கையொடு கண்ணுக்கு இனியர் செவிக்கு இன்னாரே அதனால் நீயும் ஒன்று இனியை அவரும் ஒன்று இனியர் ஒவ்வா யா உள மற்றே வெல் போர்க் கழல் புனை திருந்து அடிக் கடு_மான் கிள்ளி நின்னை வியக்கும் இவ் உலகம் அஃது என்னோ பெரும உரைத்திசின் எமக்கே #4 புறநானூறு 180 - கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரை குமரனார் **பாடப்பட்டோன்: ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன் நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே இல் என மறுக்கும் சிறுமையும் இலனே இறை உறு விழுமம் தாங்கி அமரகத்து இரும்பு சுவைக் கொண்ட விழுப்புண் நோய் தீர்ந்து மருந்து கொள் மரத்தின் வாள் வடு மயங்கி வடு இன்றி வடிந்த யாக்கையன் கொடை எதிர்ந்து ஈர்ந்தையோனே பாண் பசிப் பகைஞன் இன்மை தீர வேண்டின் எம்மொடு நீயும் வம்மோ முது வாய் இரவல யாம் தன் இரக்கும் காலைத் தான் எம் உண்ணா மருங்குல் காட்டித் தன் ஊர்க் கரும் கைக் கொல்லனை இரக்கும் திருந்து இலை நெடு வேல் வடித்திசின் எனவே #5 புறநானூறு 197 கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார் **பாடப்பட்டோன் : சோழன் குராப்பள்ளித் துஞ்சிய **பெருந்திருமாவளவன் வளி நடந்து அன்ன வாஅய்ச் செலல் இவுளியொடு கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅக் கடல் கண்டு அன்ன ஒண் படைத் தானையொடு மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ உரும் உரற்று அன்ன உட்குவரு முரசமொடு செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅ மண் கெழு தானை ஒண் பூண் வேந்தர் வெண்குடைக் செல்வம் வியத்தலோ இலமே எம்மால் வியக்கப்படூஉமோரே இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த குறு நறு முஞ்ஞைக் கொழும் கண் குற்று அடகு புன்புல வரகின் சொன்றியொடு பெறூஉம் சீறூர் மன்னர் ஆயினும் எம்-வயின் பாடு அறிந்து ஒழுகும் பண்பினோரே மிகப் பேர் எவ்வம் உறினும் எனைத்தும் உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம் நல் அறிவுடையோர் நல்குரவு உள்ளுதும் பெரும யாம் உவந்து நனி பெரிதே #6 புறநானூறு 394 - கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார் **பாடப்பட்டோன்: சோழிய ஏனாதி திருக்குட்டுவன் சிலை உலாய் நிமிர்ந்த சாந்து படு மார்பின் ஒலி கதிர்க் கழனி வெண்குடைக் கிழவோன் வலி துஞ்சு தடக் கை வாய் வாள் குட்டுவன் வள்ளியன் ஆதல் வையகம் புகழினும் உள்ளல் ஓம்பு-மின் உயர் மொழிப் புலவீர் யானும் இருள் நிலாக் கழிந்த பகல் செய் வைகறை ஒரு கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றிப் பாடு இமிழ் முரசின் இயல் தேர்த் தந்தை வாடா வஞ்சி பாடினேன் ஆக அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டிக் கொன்று சினம் தணியாப் புலவு நாறு மருப்பின் வெம் சின வேழம் நல்கினன் அஞ்சி யான் அது பெயர்த்தனென் ஆகத் தான் அது சிறிது என உணர்ந்தமை நாணிப் பிறிதும் ஓர் பெரும் களிறு நல்கியோனே அதன் கொண்டு இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு உறினும் துன் அரும் பரிசில் தரும் என என்றும் செல்லேன் அவன் குன்று கெழு நாட்டே &207 - சங்க வருணர் என்னும் நாகரியர் #1 புறநானூறு 360 - சங்க வருணர் என்னும் நாகரியர் **பாடப்பட்டோன்: தந்துமாறன் பெரிது ஆராச் சிறு சினத்தர் சில சொல்லால் பல கேள்வியர் நுண் உணர்வினால் பெரும் கொடையர் கலுழ் நனையால் தண் தேறலர் கனி குய்யான் கொழும் துவையர் தாழ் உவந்து தழூஉ மொழியர் பயனுறுப்பப் பலர்க்கு ஆற்றி ஏமம் ஆக இ நிலம் ஆண்டோர் சிலரே பெரும கேள் இனி நாளும் பலரே தகை அஃது அறியாதோரே அன்னோர் செல்வமும் மன்னி நில்லாது இன்னும் அற்று அதன் பண்பே அதனால் நிச்சமும் ஒழுக்கம் முட்டு இலை பரிசில் நச்சுவர் கையின் நிரப்பல் ஓம்பு-மதி அச்சு வர பாறு இறைகொண்ட பறந்தலை மாறு தக கள்ளி போகிய களரி மருங்கின் வெள்ளில் நிறுத்த பின்றைக் கள்ளொடு புல்லகத்து இட்ட சில் அவிழ் வல்சி புலையன் ஏவப் புல் மேல் அமர்ந்து உண்டு அழல் வாய்ப் புக்க பின்னும் பலர் வாய்த்திராஅர் பகுத்து உண்டோரே &208 - சத்திநாதனார் #1 குறுந்தொகை 119 குறிஞ்சி - சத்திநாதனார் சிறு வெள் அரவின் அவ் வரிக் குருளை கான யானை அணங்கி ஆஅங்கு இளையன் முளை வாள் எயிற்றள் வளை உடைக் கையள் எம் அணங்கியோளே &209 - சல்லியங்குமரனார் #1 நற்றிணை 141 பாலை - சல்லியங்குமரனார் இரும் சேறு ஆடிய கொடும் கவுள் கய வாய் மாரி யானையின் மருங்குல் தீண்டிப் பொரி அரை ஞெமிர்ந்த புழல் காய்க் கொன்றை நீடிய சடையோடு ஆடா மேனிக் குன்று உறை தவசியர் போலப் பலவுடன் என்றூழ் நீள் இடைப் பொற்பத் தோன்றும் அரும் சுரம் எளிய-மன் நினக்கே பருந்து படப் பாண்டிலொடு பொருத பல் பிணர்த் தடக் கை ஏந்து கோட்டு யானை இசை வெம் கிள்ளி வம்பு அணி உயர் கொடி அம்பர் சூழ்ந்த அரிசில் அம் தண் அறல் அன்ன இவள் விரி ஒலி கூந்தல் விட்டு அமைகலனே &210 - சாகலாசனார் #1 அகநானூறு 16 மருதம் - சாகலாசனார் நாய் உடை முது நீர்க் கலித்த தாமரை தாதின் அல்லி அவிர் இதழ் புரையும் மாசு இல் அங்கை மணி மருள் அம் வாய் நாவொடு நவிலா நகைபடு தீம் சொல் யாவரும் விழையும் பொலம் தொடிப் புதல்வனைத் தேர் வழங்கு தெருவில் தமியோன் கண்டே கூர் எயிற்று அரிவை குறுகினள் யாவரும் காணுநர் இன்மையின் செத்தனள் பேணிப் பொலம் கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை வருக மாள என் உயிர் எனப் பெரிது உவந்து கொண்டனள் நின்றோள் கண்டு நிலைச் செல்லேன் மாசு இல் குறுமகள் எவன் பேதுற்றனை நீயும் தாயை இவற்கு என யான் தன் கரைய வந்து விரைவனென் கவைஇ களவு உடம்படுநரின் கவிழ்ந்து நிலம் கிளையா நாணி நின்றோள் நிலை கண்டு யானும் பேணினென் அல்லெனோ மகிழ்ந வானத்து அணங்கு அரும் கடவுள் அன்னோள் நின் மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே #2 அகநானூறு 270 நெய்தல் - சாகலாசனார் இரும் கழி மலர்ந்த வள் இதழ் நீலம் புலாஅல் மறுகின் சிறுகுடிப் பாக்கத்து இன மீன் வேட்டுவர் ஞாழலொடு மிலையும் மெல்லம்புலம்ப நெகிழ்ந்தன தோளே சே இறாத் துழந்த நுரை பிதிர்ப் படு திரை பராஅரைப் புன்னை வாங்கு சினைத் தோயும் கானல் அம் பெரும் துறை நோக்கி இவளே கொய் சுவல் புரவிக் கைவண் கோமான் நல் தேர்க் குட்டுவன் கழுமலத்து அன்ன அம் மா மேனி தொல் நலம் தொலையத் துஞ்சாக் கண்ணள் அலமரும் நீயே கடவுள் மரத்த முள் மிடை குடம்பைச் சேவலொடு புணரா சிறு கரும் பேடை இன்னாது உயங்கும் கங்குலும் நும் ஊர் உள்ளுவை நோகோ யானே &211 - சாத்தந்தையார் #1 நற்றிணை 26 பாலை - சாத்தந்தையார் நோகோ யானே நெகிழ்ந்தன வளையே செவ்வி சேர்ந்த புள்ளி வெள் அரை விண்டுப் புரையும் புணர் நிலை நெடும் கூட்டுப் பிண்ட நெல்லின் தாய் மனை ஒழியச் சுடர் முழுது எறிப்பத் திரங்கிச் செழும் காய் முட முதிர் பலவின் அத்தம் நும்மொடு கெடு துணை ஆகிய தவறோ வை எயிற்றுப் பொன் பொதிந்து அன்ன சுணங்கின் இரும் சூழ் ஓதிப் பெரும் தோளாட்கே #2 புறநானூறு 80 - சாத்தந்தையார் **பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி இன் கடும் கள்ளின் ஆமூர் ஆங்கண் மைந்து உடை மல்லன் மத வலி முருக்கி ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே ஒரு கால் வரு தார் தாங்கிப் பின் ஒதுங்கின்றே நல்கினும் நல்கான் ஆயினும் வெல் போர்ப் பொரல் அரும் தித்தன் காண்க-தில் அம்ம பசித்துப் பணை முயலும் யானை போல இரு தலை ஒசிய எற்றிக் களம் புகு மல்லன் கடந்து அடு நிலையே #3 புறநானூறு 81 - சாத்தந்தையார் **பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி ஆர்ப்பு எழு கடலினும் பெரிது அவன் களிறே கார்ப் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே யார்-கொல் அளியர் தாமே ஆர் நார்ச் செறியத் தொடுத்த கண்ணிக் கவி கை மள்ளன் கைப்பட்டோரே #4 புறநானூறு 82 - சாத்தந்தையார் **பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி சாறு தலைக்கொண்டு எனப் பெண் ஈற்று உற்று எனப் பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக் கட்டில் நிணக்கும் இழிசினன் கையது போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று-மாதோ ஊர் கொள வந்த பொருநனொடு ஆர் புனை தெரியல் நெடுந்தகை போரே #5 புறநானூறு 287 - சாத்தந்தையார் துடி எறியும் புலைய எறி கோல் கொள்ளும் இழிசின கால மாரியின் அம்பு தைப்பினும் வயல் கெண்டையின் வேல் பிறழினும் பொலம் புனை ஓடை அண்ணல் யானை இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும் ஓடல் செல்லாப் பீடுடையாளர் நெடு நீர்ப் பொய்கைப் பிறழிய வாளை நெல் உடை நெடு நகர்க் கூட்டு முதல் புரளும் தண்ணடை பெறுதல் யாவது படினே மாசு இல் மகளிர் மன்றல் நன்றும் உயர்_நிலை_உலகத்து நுகர்ப அதனால் வம்ப வேந்தன் தானை இம்பர் நின்றும் காண்டிரோ வரவே &212 - சாத்தனார் #1 குறுந்தொகை #349 நெய்தல் - சாத்தனார் அடும்பு அவிழ் அணி மலர் சிதைஇய மீன் அருந்தி தடம் தாள் நாரை இருக்கும் எக்கர்த் தண்ணம் துறைவன் தொடுத்து நம் நலம் கொள்வாம் என்றி தோழி கொள்வாம் இடுக்கண் அஞ்சி இரந்தோர் வேண்டிய கொடுத்து அவை தா எனக் கூறலின் இன்னாதோ நம் இன் உயிர் இழப்பே #350 பாலை - ஆலந்தூர்க் கிழார் அம்ம வாழி தோழி முன் நின்று பனிக் கடும்-குரையம் செல்லாதீம் எனச் சொல்லினம் ஆயின் செல்வர்-கொல்லோ ஆற்று அயல் இருந்த இரும் கோட்டு அம் சிறை நெடும் கால் கணந்துள் ஆள் அறிவுறீஇ ஆறு செல் வம்பலர் படை தலைபெயர்க்கும் மலை உடைக் கானம் நீந்தி நிலையாப் பொருட்பிணிப் பிரிந்திசினோரே &213 - சிறுமோலிகனார் #1 நற்றிணை 61 குறிஞ்சி - சிறுமோலிகனார் கேளாய் எல்ல தோழி அல்கல் வேணவா நலிய வெய்ய உயிரா ஏ மான் பிணையின் வருந்தினென் ஆகத் துயர் மருங்கு அறிந்தனள் போல அன்னை துஞ்சாயோ என் குறுமகள் என்றலின் சொல் வெளிப்படாமை மெல்ல என் நெஞ்சில் படு மழை பொழிந்த பாறை மருங்கில் சிரல் வாய் உற்ற தளவின் பரல் அவல் கான் கெழு நாடன் படர்ந்தோர்க்குக் கண்ணும் படுமோ என்றிசின் யானே &214 - சிறுவெண் தேரையார் #1 புறநானூறு 362 - சிறுவெண் தேரையார் ஞாயிற்று அன்ன ஆய் மணி மிடைந்த மதி உறழ் ஆரம் மார்பில் புரளப் பலி பெறு முரசம் பாசறைச் சிலைப்பப் பொழிலகம் பரந்த பெரும் செய் ஆடவர் செருப் புகன்று எடுக்கும் விசய வெண் கொடி அணங்கு உருத்து அன்ன கணம்கொள் தானை கூற்றத்து அன்ன மாற்று அரு முன்பின் ஆக் குரல் கேள்-மின் அந்தணாளிர் நான்மறைக் குறித்தன்று அருள் ஆகாமையின் அறம் குறித்தன்று பொருள் ஆகுதலின் மருள் தீர்ந்து மயக்கு ஒரீஇக் கை பெய்த நீர் கடல் பரப்ப ஆம் இருந்த அடை நல்கிச் சோறு கொடுத்து மிகப் பெரிதும் வீறு சால் நல் கலம் வீசி நன்றும் சிறு வெள் என்பின் நெடு வெண் களரின் வாய் வன் காக்கை கூகையொடு கூடிப் பகலும் கூவும் அகலுள் ஆங்கண் காடு கண் மறைத்த கல்லென் சுற்றமொடு இல் என்று இல்-வயின் பெயர மெல்ல இடம் சிறிது ஒதுங்கல் அஞ்சி உடம்பொடும் சென்மார் உயர்ந்தோர் நாட்டே &215 - சிறைக்குடி ஆந்தையார் #1 குறுந்தொகை 56 பாலை - சிறைக்குடி ஆந்தையார் வேட்டச் செந்நாய் கிளைத்து ஊண் மிச்சில் குளவி மொய்த்த அழுகல் சில் நீர் வளை உடைக் கையள் எம்மொடு உணீஇயர் வருக-தில் அம்ம தானே அளியளோ அளியள் என் நெஞ்சு அமர்ந்தோளே #2 குறுந்தொகை 57 நெய்தல் - சிறைக்குடி ஆந்தையார் பூ இடைப்படினும் யாண்டு கழிந்து அன்ன நீர் உறை மகன்றில் புணர்ச்சி போல பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு உடன் உயிர் போகுக-தில்ல கடன் அறிந்து இருவேம் ஆகிய உலகத்து ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே #3 குறுந்தொகை 62 குறிஞ்சி - சிறைக்குடி ஆந்தையார் கோடல் எதிர் முகைப் பசு வீ முல்லை நாறு இதழ்க் குவளையொடு இடை இடுபு விரைஇ ஐது தொடை மாண்ட கோதை போல நறிய நல்லோள் மேனி முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே #4 குறுந்தொகை 132 குறிஞ்சி - சிறைக்குடி ஆந்தையார் கவவுக் கடும்-குரையள் காமர் வனப்பினள் குவவு மென் முலையள் கொடிக் கூந்தலளே யாங்கு மறந்து அமைகோ யானே ஞாங்கர்க் கடும் சுரை நல் ஆன் நடுங்கு தலைக் குழவி தாய் காண் விருப்பின் அன்ன சாஅய் நோக்கினள் மாஅயோளே #5 குறுந்தொகை 168 பாலை - சிறைக்குடி ஆந்தையார் மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகை இரும் பனம் பசும் குடைப் பலவுடன் பொதிந்து பெரும் பெயல் விடியல் விரித்துவிட்டு அன்ன நறும் தண்ணியளே நல் மா மேனி புனல் புணை அன்ன சாய் இறைப் பணைத் தோள் மணத்தலும் தணத்தலும் இலமே பிரியின் வாழ்தல் அதனினும் இலமே #6 குறுந்தொகை 222 குறிஞ்சி - சிறைக்குடி ஆந்தையார் தலைப் புணைக் கொளினே தலைப் புணைக் கொள்ளும் கடைப் புணைக் கொளினே கடைப் புணைக் கொள்ளும் புணை கைவிட்டுப் புனலோடு ஒழுகின் ஆண்டும் வருகுவள் போலும் மாண்ட மாரிப் பித்திகத்து நீர் வார் கொழு முகைச் செவ் வெரிந் உறழும் கொழும் கடை மழைக் கண் துளி தலைத் தலைஇய தளிர் அன்னோளே #7 குறுந்தொகை 273 பாலை - சிறைக்குடி ஆந்தையார் அல்குறு பொழுதில் தாது முகை தயங்கப் பெரும் காட்டு உளரும் அசை வளி போல தண்ணிய கமழும் ஒள் நுதலோயே நொந்தன ஆயின் கண்டது மொழிவல் பெரும் தேன் கண்படு வரையில் முது மால்பு அறியாது ஏறிய மடவோன் போல ஏமாந்தன்று இவ் உலகம் நாம் உளேம் ஆகப் பிரியலன் தெளிமே #8 குறுந்தொகை 300 குறிஞ்சி - சிறைக்குடி ஆந்தையார் குவளை நாறும் குவை இரும் கூந்தல் ஆம்பல் நாறும் தேம் பொதித் துவர் வாய்க் குண்டு நீர்த் தாமரைக் கொங்கின் அன்ன நுண் பல் தித்தி மாஅயோயே நீயே அஞ்சல் என்ற என் சொல் அஞ்சலையே யானே குறும் கால் அன்னம் குவவு மணல் சேக்கும் கடல் சூழ் மண்டிலம் பெறினும் விடல் சூழலன் யான் நின் உடை நட்பே #9 நற்றிணை 16 பாலை - சிறைக்குடி ஆந்தையார் புணரின் புணராது பொருளே பொருள்-வயின் பிரியின் புணராது புணர்வே ஆயிடைச் செல்லினும் செல்லாய் ஆயினும் நல்லதற்கு உரியை வாழி என் நெஞ்சே பொருளே வாடாப் பூவின் பொய்கை நாப்பண் ஓடு மீன் வழியின் கெடுவ யானே விழு நீர் வியலகம் தூணி ஆக எழு மாண் அளக்கும் விழு நெதி பெறினும் கனம்_குழைக்கு அமர்த்த சே அரி மழைக் கண் அமர்ந்து இனிது நோக்கமொடு செகுத்தனென் எனைய ஆகுக வாழிய பொருளே &216 - சீத்தலை சாத்தனார் #1 அகநானூறு 53 பாலை - சீத்தலை சாத்தனார் அறியாய் வாழி தோழி இருள் அற விசும்புடன் விளங்கும் விரை செலல் திகிரி கடும் கதிர் எறித்த விடுவாய் நிறைய நெடும் கால் முருங்கை வெண் பூத் தாஅய் நீர் அற வறந்த நிரம்பா நீள் இடை வள் எயிற்றுச் செந்நாய் வருந்து பசிப் பிணவொடு கள்ளி அம் காட்ட கடத்திடை உழிஞ்சில் உள் ஊன் வாடிய சுரி மூக்கு நொள்ளை பொரி அரை புதைத்த புலம்பு கொள் இயவின் விழுத் தொடை மறவர் வில் இட வீழ்ந்தோர் எழுத்து உடை நடுகல் இன் நிழல் வதியும் அரும் சுரக் கவலை நீந்தி என்றும் இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும் பொருளே காதலர் காதல் அருளே காதலர் என்றி நீயே #2 அகநானூறு 134 முல்லை - சீத்தலை சாத்தனார் வானம் வாய்ப்பக் கவினிக் கானம் கமம் சூல் மா மழை கார் பயந்து இறுத்து என மணி மருள் பூவை அணி மலர் இடையிடைச் செம் புற மூதாய் பரத்தலின் நல் பல முல்லை வீ கழல் தாஅய் வல்லோன் செய்கை அன்ன செந்நிலப் புறவின் வாஅப் பாணி வயங்கு தொழில் கலிமாத் தாஅத் தாள் இணை மெல்ல ஒதுங்க இடி மறந்து ஏ-மதி வலவ குவி முகை வாழை வான் பூ ஊழுறுபு உதிர்ந்த ஒழி குலை அன்ன திரி மருப்பு ஏற்றொடு கணைக் கால் அம் பிணைக் காமர் புணர் நிலை கடு_மான் தேர் ஒலி கேட்பின் நடுநாள் கூட்டம் ஆகலும் உண்டே #3 அகநானூறு 229 பாலை - (மதுரைக் (கூலவாணிகன்)) சீத்தலைச் சாத்தனார் பகல் செய் பல் கதிர்ப் பருதி அம் செல்வன் அகல் வாய் வானத்து ஆழி போழ்ந்து என நீர் அற வறந்த நிரம்பா நீள் இடைக் கயம் தலைக் குழவிக் கவி உகிர் மடப் பிடி குளகு மறுத்து உயங்கிய மருங்குல் பல உடன் பாழ் ஊர்க் குரம்பையின் தோன்றும் ஆங்கண் நெடும் சேண் இடைய குன்றம் போகிப் பொய்வலாளர் முயன்று செய் பெரும் பொருள் நம் இன்று ஆயினும் முடிக வல்லெனப் பெரும் துனி மேவல் நல்கூர் குறுமகள் நோய் மலிந்து உகுத்த நொசி வரல் சில் நீர் பல் இதழ் மழைக் கண் பாவை மாய்ப்பப் பொன் ஏர் பசலை ஊர்தரப் பொறி வரி நல் மா மேனி தொலைதல் நோக்கி இனையல் என்றி தோழி சினைய பாசரும்பு ஈன்ற செம் முகை முருக்கினப் போது அவிழ் அலரி கொழுதி தாது அருந்து அம் தளிர் மாஅத்து அலங்கல் மீமிசை செம் கண் இரும் குயில் நயவரக் கூஉம் இன் இளவேனிலும் வாரார் இன்னே வருதும் எனத் தெளித்தோரே #4 அகநானூறு 306 மருதம் - (மதுரை (கூலவாணிகன்)) சீத்தலை சாத்தனார் பெரும் பெயர் மகிழ்ந பேணாது அகன்மோ பரந்த பொய்கைப் பிரம்பொடு நீடிய முள் கொம்பு ஈங்கைத் துய்த் தலைப் புது வீ ஈன்ற மாத்தின் இளம் தளிர் வருட ஆர் குருகு உறங்கும் நீர் சூழ் வள வயல் கழனிக் கரும்பின் சாய்ப் புறம் ஊர்ந்து பழன யாமை பசு வெயில் கொள்ளும் நெல் உடை மறுகின் நன்னர் ஊர இதுவோ மற்று நின் செம்மல் மாண்ட மதி ஏர் ஒள் நுதல் வயங்கு இழை ஒருத்தி இகழ்ந்த சொல்லும் சொல்லிச் சிவந்த ஆய் இதழ் மழைக் கண் நோயுற நோக்கித் தண் நறும் கமழ் தார் பரீஇயினள் நும்மொடு ஊடினள் சிறு துனி செய்து எம் மணல் மலி மறுகின் இறந்திசினோளே #5 அகநானூறு 320 நெய்தல் - (மதுரைக் (கூலவாணிகன்)) சீத்தலைச் சாத்தனார் ஓங்கு திரைப் பரப்பின் வாங்கு விசை கொளீஇத் திமிலோன் தந்த கடுங்கண் வய மீன் தழை அணி அல்குல் செல்வத் தங்கையர் விழவு அயர் மறுகின் விலை எனப் பகரும் கானல் அம் சிறுகுடிப் பெருநீர்ச் சேர்ப்ப மலர் ஏர் உண்கண் எம் தோழி எவ்வம் அலர் வாய் நீங்க நீ அருளாய் பொய்ப்பினும் நெடும் கழி துழைஇய குறும் கால் அன்னம் அடும்பு அமர் எக்கர் அம் சிறை உளரும் தடவு நிலைப் புன்னைத் தாது அணி பெரும் துறை நடுங்கு அயிர் போழ்ந்த கொடுஞ்சி நெடும் தேர் வண்டல் பாவை சிதைய வந்து நீ தோள் புதிது உண்ட ஞான்றைச் சூளும் பொய்யோ கடல் அறி கரியே #6 குறுந்தொகை 154 பாலை - (மதுரைச்) சீத்தலைச் சாத்தனார் யாங்கு அறிந்தனர்-கொல் தோழி பாம்பின் உரி நிமிர்ந்து அன்ன உருப்பு அவிர் அமையத்து இரை வேட்டு எழுந்த சேவல் உள்ளிப் பொறி மயிர் எருத்தின் குறு நடைப் பேடை பொரி கால் கள்ளி விரி காய் அம் கவட்டுத் தயங்க இருந்து புலம்பக் கூஉம் அரும் சுர வைப்பின் கானம் பிரிந்து சேண் உறைதல் வல்லுவோரே #7 நற்றிணை 36 குறிஞ்சி - சீத்தலைச்சாத்தனார் குறும் கை இரும் புலிக் கோள் வல் ஏற்றை பூ நுதல் இரும் பிடி புலம்பத் தாக்கித் தாழ் நீர் நனம் தலைப் பெரும் களிறு அடூஉம் கல்லக வெற்பன் சொல்லின் தேறி யாம் எம் நலன் இழந்தனமே யாமத்து அலர் வாய்ப் பெண்டிர் அம்பலொடு ஒன்றிப் புரை இல் தீ மொழி பயிற்றிய உரை எடுத்து ஆனாக் கௌவைத்து ஆகத் தான் என் இழந்தது இவ் அழுங்கல் ஊரே #8 நற்றிணை 127 நெய்தல் - சீத்தலைச் சாத்தனார் இரும் கழி துழைஇய ஈர்ம் புற நாரை இறகு எறி திவலையின் பனிக்கும் பாக்கத்து உவன் வரின் எவனோ பாண பேதை கொழு மீன் ஆர்கைச் செழு நகர் நிறைந்த கல்லாக் கதவர் தன் ஐயர் ஆகவும் வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடிய ஈனாப் பாவை தலையிட்டு ஓரும் மெல்லம்புலம்பன் அன்றியும் செல்வாம் என்னும் கானலானே #9 நற்றிணை 339 குறிஞ்சி - சீத்தலைச் சாத்தனார் தோலாக் காதலர் துறந்து நம் அருளார் அலர்வது அன்று-கொல் இது என்று நன்றும் புலரா நெஞ்சமொடு புதுவ கூறி இருவேம் நீந்தும் பருவரல் வெள்ளம் அறிந்தனள் போலும் அன்னை சிறந்த சீர் கெழு வியல் நகர் வருவனள் முயங்கி நீர் அலைக் கலைஇய ஈர் இதழ்த் தொடையல் ஒள் நுதல் பெதும்பை நல் நலம் பெறீஇ மின் நேர் ஓதி இவளொடு நாளைப் பல் மலர் கஞலிய வெறி கமழ் வேலித் தெண் நீர் மணிச் சுனை ஆடின் என்னோ மகளிர்-தம் பண்பு என்றோளே #10 புறநானூறு 59 - (மதுரை (கூலவாணிகன்)) சீத்தலைச் சாத்தனார் **பாடப்பட்டோன்: பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின் தாள் தோய் தடக் கை தகை மாண் வழுதி வல்லை-மன்ற நீ நயந்து அளித்தல் தேற்றாய் பெரும பொய்யே என்றும் காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும் ஞாயிறு அனையை நின் பகைவர்க்கு திங்கள் அனையை எம்மனோர்க்கே &217 - (மதுரை) செங்கண்ணனார் #1 அகநானூறு 39 பாலை - (மதுரை) செங்கண்ணனார் ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிப் படர்ந்து உள்ளியும் அறிதிரோ எம் என யாழ நின் முள் எயிற்றுத் துவர் வாய் முறுவல் அழுங்க நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல் நின் ஆய் நலம் மறப்பெனோ மற்றே சேண் இகந்து ஒலி கழை பிசைந்த ஞெலி சொரி ஒண் பொறி படு ஞெமல் புதையப் பொத்தி நெடு நிலை முளி புல் மீமிசை வளி சுழற்று உறாஅ காடு கவர் பெரும் தீ ஓடு வயின் ஓடலின் அதர் கெடுத்து அலறிய சாத்தொடு ஒராங்கு மதர் புலி வெரீஇய மையல் வேழத்து இனம் தலைமயங்கிய நனம் தலைப் பெரும் காட்டு ஞான்று தோன்று அவிர் சுடர் மான்றால் பட்டு எனக் கள்_படர்_ஓதி நின் படர்ந்து உள்ளி அரும் செலவு ஆற்றா ஆர் இடை ஞெரேரென பரந்து படு பாயல் நவ்வி பட்டு என இலங்கு வளை செறியா இகுத்த நோக்கமொடு நிலம் கிளை நினைவினை நின்ற நின் கண்டு இன்_நகை இனையம் ஆகவும் எம்-வயின் ஊடல் யாங்கு வந்தன்று என யாழ நின் கோடு ஏந்து புருவமொடு குவவு நுதல் நீவி நறும் கதுப்பு உளரிய நன்னர் அமையத்து வறும் கை காட்டிய வாய் அல் கனவின் ஏற்று ஏக்கற்ற உலமரல் போற்றாய் ஆகலின் புலத்தியால் எம்மே #2 நற்றிணை 122 குறிஞ்சி - செங்கண்ணனார் இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத கரும் கால் செந்தினை கடியும் உண்டன கல்லக வரைப்பில் கான் கெழு சிறுகுடி மெல் அவல் மருங்கின் மௌவலும் அரும்பின நரை உரும் உரறும் நாம நள்ளிருள் வரையக நாடன் வரூஉம் என்பது உண்டு-கொல் அன்று-கொல் யாது-கொல் மற்று என நின்று மதி வல் உள்ளமொடு மறைந்தவை ஆடி அன்னையும் அமரா முகத்தினள் நின்னொடு நீயே சூழ்தல் வேண்டும் பூ வேய் கண்ணி அது பொருந்தும் மாறே &218 - செம்பியனார் #1 நற்றிணை 102 குறிஞ்சி - செம்பியனார் கொடும் குரல் குறைத்த செவ் வாய்ப் பைம் கிளி அஞ்சல் ஓம்பி ஆர் பதம் கொண்டு நின் குறை முடித்த பின்றை என் குறை செய்தல் வேண்டுமால் கைதொழுது இரப்பல் பல் கோள் பலவின் சாரல் அவர் நாட்டு நின் கிளை மருங்கின் சேறி ஆயின் அம் மலை கிழவோற்கு உரை-மதி இ மலைக் கானக் குறவர் மட_மகள் ஏனல் காவல் ஆயினள் எனவே &219 - செம்புலப்பெயனீரார் #1 குறுந்தொகை 40 குறிஞ்சி - செம்புலப்பெயனீரார் யாயும் ஞாயும் யார் ஆகியரோ எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர் யானும் நீயும் எவ் வழி அறிதும் செம் புலப் பெயல் நீர் போல அன்பு உடை நெஞ்சம் தாம் கலந்தனவே &220 - செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார் #1 அகநானூறு 177 பாலை - செயலூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார் **(செல்லூர் இளம்பொன் சாத்தன் கொற்றனார்) **(உறையூர் இளம்பொன் வணிகன் சாத்தன் கொற்றனார்) தொல் நலம் சிதையச் சாஅய் அல்கலும் இன்னும் வாரார் இனி எவன் செய்கு எனப் பெரும் புலம்பு உறுதல் ஓம்பு-மதி சிறு கண் இரும் பிடித் தடக் கை மான நெய் அருந்து ஒருங்கு பிணித்து இயன்ற நெறி கொள் ஐம்பால் தேம் கமழ் வெறி மலர் பெய்ம்மார் காண்பு இன் கழை அமல் சிலம்பின் வழை தலை வாடக் கதிர் கதம் கற்ற ஏ கல் நெறியிடைப் பைம் கொடிப் பாகல் செம் கனி நசைஇக் கான மஞ்ஞை கமம் சூல் மாப் பெடை அயிர் யாற்று அடைகரை வயிரின் நரலும் காடு இறந்து அகன்றோர் நீடினர் ஆயினும் வல்லே வருவர் போலும் வென் வேல் இலை நிறம் பெயர ஓச்சி மாற்றோர் மலை மருள் யானை மண்டு அமர் ஒழித்த கழல் கால் பண்ணன் காவிரி வட வயின் நிழல் கயம் தழீஇய நெடும் கால் மாவின் தளிர் ஏர் ஆகம் தகை பெற முகைந்த அணங்கு உடை வன முலைத் தாஅய நின் சுணங்கிடை வரித்த தொய்யிலை நினைந்தே &221 - செய்தி வள்ளுவர் பெருஞ்சாத்தனார் #1 குறுந்தொகை 228 நெய்தல் - செய்தி வள்ளுவர் பெருஞ்சாத்தனார் வீழ் தாழ் தாழை ஊழ் உறு கொழு முகை குருகு உளர் இறகின் விரிபு தோடு அவிழும் கானல் நண்ணிய சிறுகுடி முன்றில் திரை வந்து பெயரும் என்ப நம் துறந்து நெடும் சேண் நாட்டார் ஆயினும் நெஞ்சிற்கு அணியரோ தண் கடல் நாட்டே &222 - செல்லூர் கிழார் மகனார் பெரும்பூதங்கொற்றனார் #1 அகநானூறு 250 நெய்தல் - ((செல்லூர்) கிழார் மகனார் பெரும்பூதங்)கொற்றனார் எவன்-கொல் வாழி தோழி மயங்கு பிசிர் மல்கு திரை உழந்த ஒல்கு நிலைப் புன்னை வண்டு இமிர் இணர நுண் தாது வரிப்ப மணம் கமழ் இள மணல் எக்கர்க் காண்வரக் கணம்கொள் ஆயமொடு புணர்ந்து விளையாட கொடுஞ்சி நெடும் தேர் இளையரொடு நீக்கித் தாரன் கண்ணியன் சேர வந்து ஒருவன் வரி மனை புகழ்ந்த கிளவியன் யாவதும் மறுமொழி பெறாஅன் பெயர்ந்தனன் அதற்கொண்டு அரும் படர் எவ்வமொடு பெரும் தோள் சாஅய் அவ் வலைப் பரதவர் கானல் அம் சிறுகுடி வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வையின் கலங்கி இறை வளை நெகிழ்ந்த நம்மொடு துறையும் துஞ்சாது கங்குலானே #2 குறுந்தொகை 218 பாலை - கொற்றனார் விடர் முகை அடுக்கத்து விறல் கெழு சூலிக்குக் கடனும் பூணாம் கை நூல் யாவாம் புள்ளும் ஓராம் விரிச்சியும் நில்லாம் உள்ளலும் உள்ளாம் அன்றே தோழி உயிர்க்குயிர் அன்னர் ஆகலின் தம் இன்று இமைப்பு வரை அமையா நம்-வயின் மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர்-மாட்டே #3 குறுந்தொகை 358 முல்லை - கொற்றனார் வீங்கு இழை நெகிழ விம்மி ஈங்கே எறி கண் பேதுறல் ஆய் கோடு இட்டுச் சுவர் வாய் பற்றும் நின் படர் சேண் நீங்க வருவேம் என்ற பருவம் உதுக் காண் தனியோர் இரங்கும் பனிகூர் மாலைப் பல் ஆன் கோவலர் கண்ணிச் சொல்லுப அன்ன முல்லை வெண் முகையே #4 குறுந்தொகை 363 பாலை - செல்லூர்க் கொற்றனார் கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு செம் கோல் பதவின் வார் குரல் கறிக்கும் மடக் கண் மரையா நோக்கி வெய்துற்றுப் புல் அரை உகாஅய் வரி நிழல் வதியும் இன்னா அரும் சுரம் இறத்தல் இனிதோ பெரும இன் துணைப் பிரிந்தே #5 நற்றிணை 30 மருதம் - கொற்றனார் கண்டனென் மகிழ்ந கண்டு எவன் செய்கோ பாணன் கையது பண்பு உடைச் சீறியாழ் யாணர் வண்டின் இம்மென இமிரும் ஏர்தரு தெருவின் எதிர்ச்சி நோக்கி நின் மார்பு தலைக்கொண்ட மாண் இழை மகளிர் கவல் ஏமுற்ற வெய்து வீழ் அரிப் பனி கால் ஏமுற்ற பைதரு காலைக் கடல்_மரம் கவிழ்ந்து எனக் கலங்கி உடன் வீழ்பு பலர் கொள் பலகை போல வாங்கவாங்க நின்று ஊங்கு அஞர் நிலையே &223 - செல்லூர் கோசிகன் கண்ணனார் #1 அகநானூறு 66 மருதம் - செல்லூர் கோசிகன் கண்ணனார் ** (செயலூர் கோசங்கண்ணனார்) இம்மை உலகத்து இசையொடும் விளங்கி மறுமை உலகமும் மறு இன்று எய்துப செறுநரும் விழையும் செயிர் தீர் காட்சிச் சிறுவர் பயந்த செம்மலோர் எனப் பல்லோர் கூறிய பழமொழி எல்லாம் வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி நிரை தார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு வதுவை அயர்தல் வேண்டிப் புதுவதின் இயன்ற அணியன் இத் தெரு இறப்போன் மாண் தொழில் மா மணி கறங்கக் கடை கழிந்து காண்டல் விருப்பொடு தளர்புதளர்பு ஓடும் பூம் கண் புதல்வனை நோக்கி நெடும் தேர் தாங்கு-மதி வலவ என்று இழிந்தனன் தாங்காது மணி புரை செவ் வாய் மார்பகம் சிவணப் புல்லிப் பெரும செல் இனி அகத்து எனக் கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின் தடுத்த மா நிதிக் கிழவனும் போன்ம் என மகனொடு தானே புகுதந்தோனே யான் அது படுத்தனென் ஆகுதல் நாணி இடித்து இவன் கலக்கினன் போலும் இக் கொடியோன் எனச் சென்று அலைக்கும் கோலொடு குறுகத் தலைக்கொண்டு இமிழ் கண் முழவின் இன் சீர் அவர் மனைப் பயிர்வன போல வந்து இசைப்பவும் தவிரான் கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய பழம் கண்ணோட்டமும் நலிய அழுங்கினன் அல்லனோ அயர்ந்த தன் மணனே &224 - சேந்தங் கண்ணனார் #1 அகநானூறு 350 நெய்தல் - சேந்தங் கண்ணனார் கழியே சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப எறி திரை ஓதம் தரல் ஆனாதே துறையே மருங்கின் போகிய மாக் கவை மருப்பின் இரும் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே கொடு நுகம் நுழைந்த கணைக் கால் அத்திரி வடி மணி நெடும் தேர் பூண ஏவாது ஏந்து எழில் மழைக் கண் இவள் குறை ஆகச் சேந்தனை சென்மோ பெருநீர்ச் சேர்ப்ப இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி வலம்புரி மூழ்கிய வான் திமில் பரதவர் ஒலி தலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக் கலி கெழு கொற்கை எதிர்கொள இழிதரும் குவவு மணல் நெடும் கோட்டு ஆங்கண் உவக் காண் தோன்றும் எம் சிறு நல் ஊரே #2 நற்றிணை 54 நெய்தல் - சேந்தங் கண்ணனார் வளை நீர் மேய்ந்து கிளை முதல் செலீஇ வாப் பறை விரும்பினை ஆயினும் தூச் சிறை இரும் புலா அருந்தும் நின் கிளையொடு சிறிது இருந்து கரும் கால் வெண்_குருகு எனவ கேள்-மதி பெரும் புலம்பின்றே சிறு புன் மாலை அது நீ அறியின் அன்பு-மார் உடையை நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என் குறை இற்று ஆங்கு உணர உரை-மதி தழையோர் கொய் குழை அரும்பிய குமரி ஞாழல் தெண் திரை மணிப் புறம் தைவரும் கண்டல் வேலி நும் துறை கிழவோற்கே #55 குறிஞ்சி - பெருவழுதி ஓங்கு மலை நாட ஒழிக நின் வாய்மை காம்பு தலைமணந்த கல் அதர்ச் சிறு நெறி உறு பகை பேணாது இரவின் வந்து இவள் பொறி கிளர் ஆகம் புல்லத் தோள் சேர்பு அறு_கால்_பறவை அளவு இல மொய்த்தலின் கண் கோள் ஆக நோக்கிப் பண்டும் இனையையோ என வினவினள் யாயே அதன் எதிர் சொல்லாள் ஆகி அல்லாந்து என் முகம் நோக்கியோளே அன்னாய் யாங்கு உணர்ந்து உய்குவள்-கொல் என மடுத்த சாந்த ஞெகிழி காட்டி ஈங்கு ஆயினவால் என்றிசின் யானே &225 - (மதுரை எழுத்தாளன்) சேந்தம்பூதனார் #1 அகநானூறு 84 முல்லை - மதுரை எழுத்தாளன் (சேந்தம்பூதனார்) மலை மிசைக் குலைஇய உரு கெழு திருவில் பணை முழங்கு எழிலி பௌவம் வாங்கித் தாழ் பெயல் பெரு நீர் வலன் ஏர்பு வளைஇ மாதிரம் புதைப்பப் பொழிதலின் காண்வர இரு நிலம் கவினிய ஏமுறு காலை நெருப்பின் அன்ன சிறு கண் பன்றி அயிர்க்-கண் படாஅர்த் துஞ்சு புறம் புதைய நறு வீ முல்லை நாள்_மலர் உதிரும் புறவு அடைந்து இருந்த அரு முனை இயவின் சீறூரோளே ஒண்_நுதல் யாமே எரி புரை பல் மலர் பிறழ வாங்கி அரிஞர் யாத்த அலங்கு தலைப் பெரும் சூடு கள் ஆர் வினைஞர் களம்-தொறும் மறுகும் தண்ணடை தழீஇய கொடி நுடங்கு ஆர் எயில் அரும் திறை கொடுப்பவும் கொள்ளான் சினம் சிறந்து வினை-வயின் பெயர்க்கும் தானைப் புனை தார் வேந்தன் பாசறையேமே #2 அகநானூறு 207 பாலை - (மதுரை எழுத்தாளன்) சேந்தம்பூதனார் அணங்கு உடை முந்நீர் பரந்த செறுவின் உணங்கு திறம் பெயர்ந்த வெண் கல் அமிழ்தம் குடபுல மருங்கின் உய்மார் புள் ஓர்த்துப் படை அமைத்து எழுந்த பெரும் செய் ஆடவர் நிரைப் பரப் பொறைய நரைப் புறக் கழுதைக் குறைக் குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின் வெம் சுரம் போழ்ந்த அஞ்சுவரு கவலை மிஞிறு ஆர் கடாஅம் கரந்து விடு கவுள வெயில் தின வருந்திய நீடு மருப்பு ஒருத்தல் பிணர் அழி பெரும் கை புரண்ட கூவல் தெண் கண் உவரி குறைக் குட முகவை அறனிலாளன் தோண்ட வெய்துயிர்த்துப் பிறை நுதல் வியர்ப்ப உண்டனள்-கொல்லோ தேம் கலந்து அளைஇய தீம் பால் ஏந்திக் கூழை உளர்ந்து மோழைமை கூறவும் மறுத்த சொல்லள் ஆகி வெறுத்த உள்ளமொடு உண்ணாதோளே #3 குறுந்தொகை 90 குறிஞ்சி - (மதுரை எழுத்தாளனார்) சேந்தம் பூதனார் எற்றோ வாழி தோழி முற்றுபு கறி வளர் அடுக்கத்து இரவில் முழங்கிய மங்குல் மா மழை வீழ்ந்து எனப் பொங்கு மயிர்க் கலை தொட இழுக்கிய பூ நாறு பலவுக் கனி வரை இழி அருவி உண்துறைத் தரூஉம் குன்ற நாடன் கேண்மை மென் தோள் சாய்த்தும் சால்பு ஈன்றன்றே #4 குறுந்தொகை 226 நெய்தல் - (மதுரை எழுத்தாளனார்) சேந்தம் பூதனார் பூவொடு புரையும் கண்ணும் வேய் என விறல் வனப்பு எய்திய தோளும் பிறை என மதி மயக்குறூஉம் நுதலும் நன்றும் நல்ல-மன் வாழி தோழி அல்கலும் தயங்கு திரை பொருத தாழை வெண் பூக் குருகு என மலரும் பெரும் துறை விரி நீர்ச் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே #5 குறுந்தொகை 247 குறிஞ்சி - சேந்தம்பூதனார் எழில் மிக உடையது ஈங்கு அணிப்படூஉம் திறவோர் செய்வினை அறவது ஆகும் கிளை உடை மாந்தர்க்குப் புணையுமார் இவ் என ஆங்கு அறிந்திசினே தோழி வேங்கை வீயா மென் சினை வீ உக யானை ஆர் துயில் இயம்பும் நாடன் மார்பு உரித்து ஆகிய மறு இல் நட்பே #6 நற்றிணை 69 முல்லை - (சேகம்) சேந்தம் பூதனார் பல் கதிர் மண்டிலம் பகல் செய்து ஆற்றிச் சேய் உயர் பெரு வரைச் சென்று அவண் மறையப் பறவை பார்ப்பு-வயின் அடையப் புறவில் மா எருத்து இரலை மடப் பிணை தழுவ முல்லை முகை வாய் திறப்பப் பல் வயின் தோன்றி தோன்றுபு புதல் விளக்கு உறாஅ மதர்வை நல் ஆன் மாசு இல் தெண் மணி கொடும் கோல் கோவலர் குழலோடு ஒன்றி ஐது வந்து இசைக்கும் அருள் இல் மாலை ஆள்வினைக்கு அகன்றோர் சென்ற நாட்டும் இனைய ஆகித் தோன்றின் வினை வலித்து அமைதல் ஆற்றலர்-மன்னே #7 நற்றிணை 261 குறிஞ்சி - சேந்தன் பூதனார் அருளிலர் வாழி தோழி மின்னு வசிபு இருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடு வெம் சுடர் கரந்த கமம் சூல் வானம் நெடும் பல் குன்றத்துக் குறும் பல மறுகித் தா இல் பெரும் பெயல் தலைஇய யாமத்துக் களிறு அகப்படுத்த பெரும் சின மாசுணம் வெளிறு இல் காழ் மரம் பிணித்து நனி மிளிர்க்கும் சாந்தம் போகிய தேம் கமழ் விடர் முகை எருவை நறும் பூ நீடிய பெரு வரைச் சிறு நெறி வருதலானே &226 - சேந்தன் கீரனார் #1 குறுந்தொகை 311 நெய்தல் - சேந்தன் கீரனார் அலர் யாங்கு ஒழிவ தோழி பெரும் கடல் புலவு நாறு அகன் துறை வலவன் தாங்கவும் நில்லாது கழிந்த கல்லென் கடும் தேர் யான் கண்டன்றோ இலனே பானாள் ஓங்கல் வெண் மணல் தாழ்ந்த புன்னைத் தாது சேர் நிகர் மலர் கொய்யும் ஆயம் எல்லாம் உடன் கண்டன்றே &227 - சேரமான் எந்தை #1 குறுந்தொகை 22 பாலை - சேரமான் எந்தை நீர் வார் கண்ணை நீ இவண் ஒழிய யாரோ பிரிகிற்பவரே சாரல் சிலம்பு அணி கொண்ட வலம் சுரி மராஅத்து வேனில் அம் சினை கமழும் தேம் ஊர் ஒண்_நுதல் நின்னோடும் செலவே &228 - சேரமான் இளங்குட்டுவன் #1 அகநானூறு 153 பாலை - சேரமான் இளங்குட்டுவன் நோகோ யானே நோதகும் உள்ளம் அம் தீம் கிளவி ஆயமொடு கெழீஇப் பந்து வழிப் படர்குவள் ஆயினும் நொந்து நனி வெம்பும்-மன் அளியள் தானே இனியே வன்கணாளன் மார்புற வளைஇ இன் சொல் பிணிப்ப நம்பி நம்-கண் உறுதரு விழுமம் உள்ளாள் ஒய்யெனத் தெறு கதிர் உலைஇய வேனில் வெம் காட்டு உறு வளி ஒலி கழை கண் உறுபு தீண்டலின் பொறி பிதிர்பு எடுத்த பொங்கு எழு கூர் எரிப் பைது அறு சிமையப் பயம் நீங்கு ஆர் இடை நல் அடிக்கு அமைந்த அல்ல மெல் இயல் வல்லுநள்-கொல்லோ தானே எல்லி ஓங்கு வரை அடுக்கத்து உயர்ந்த சென்னி மீனொடு பொலிந்த வானின் தோன்றித் தேம் பாய்ந்து ஆர்க்கும் தெரி இணர்க் கோங்கின் கால் உறக் கழன்ற கள் கமழ் புது மலர் கை விடு சுடரின் தோன்றும் மை படு மா மலை விலங்கிய சுரனே &229 - சேரமான் கணைக்கால் இரும்பொறை #1 புறநானூறு 74 - சேரமான் கணைக்கால் இரும்பொறை குழவி இறப்பினும் ஊன் தடி பிறப்பினும் ஆள் அன்று என்று வாளின் தப்பார் தொடர்ப் படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய கேள் அல் கேளிர் வேளாண் சிறு_பதம் மதுகை இன்றி வயிற்றுத்_தீ தணியத் தாம் இரந்து உண்ணும் அளவை ஈன்மரோ இவ் உலகத்தானே &230 - சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை #1 புறநானூறு 245 - சேரமான் கோட்டம்பலத்துத் துஞ்சிய மாக்கோதை யாங்குப் பெரிது ஆயினும் நோய் அளவு எனைத்தே உயிர் செகுக்கல்லா மதுகைத்து அன்மையின் கள்ளி போகிய களரி அம் பறந்தலை வெள் இடைப் பொத்திய விளை விறகு ஈமத்து ஒள் அழல் பள்ளிப் பாயல் சேர்த்தி ஞாங்கர் மாய்ந்தனள் மடந்தை இன்னும் வாழ்வல் என் இதன் பண்பே &231 - சோணாட்டு முகையலூர்ச் சிறுகரும் தும்பியார் #1 புறநானூறு 181 - சோணாட்டு முகையலூர்ச் சிறுகரும் தும்பியார் **பாடப்பட்டோன்: வல்லார் கிழான் பண்ணன் மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில் கரும் கண் எயிற்றிக் காதல் மகனொடு கான இரும் பிடிக் கன்று தலைக்கொள்ளும் பெரும் குறும்பு உடுத்த வன்புல இருக்கைப் புலாஅல் அம்பின் போர் அரும் கடி மிளை வலாஅரோனே வாய் வாள் பண்ணன் உண்ணா வறும் கடும்பு உய்தல் வேண்டின் இன்னே செல்-மதி நீயே சென்று அவன் பகைப் புலம் படரா அளவை நின் பசிப் பகைப் பரிசில் காட்டினை கொளற்கே #2 புறநானூறு 265 - சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீப் போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப் பல் ஆன் கோவலர் படலை சூட்டக் கல் ஆயினையே கடு_மான் தோன்றல் வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கை பரிசிலர் செல்வம் அன்றியும் விரி தார்க் கடும் பகட்டு யானை வேந்தர் ஒடுங்க வென்றியும் நின்னொடு செலவே &232 - சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் #1 புறநானூறு 173 - சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் **பாடப்பட்டோன்: சிறுகுடி கிழான் பண்ணன் யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய பாணர் காண்க இவன் கடும்பினது இடும்பை யாணர் பழு மரம் புள் இமிழ்ந்து அன்ன ஊண் ஒலி அரவம் தானும் கேட்கும் பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி முட்டை கொண்டு வன்புலம் சேரும் சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்பச் சோறு உடைக் கையர் வீறுவீறு இயங்கும் இரும் கிளைச் சிறாஅர் காண்டும் கண்டும் மற்றும்மற்றும் வினவுதும் தெற்றெனப் பசிப் பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ சேய்த்தோ கூறு-மின் எமக்கே &233 - சோழன் நலங்கிள்ளி #1 புறநானூறு 73 - சோழன் நலங்கிள்ளி (நல்லுருத்திரன்) மெல்ல வந்து என் நல் அடி பொருந்தி ஈ என இரக்குவர் ஆயின் சீர் உடை முரசு கெழு தாயத்து அரசோ தஞ்சம் இன் உயிர் ஆயினும் கொடுக்குவென் இ நிலத்து ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது என் உள்ளம் எள்ளிய மடவோன் தெள்ளிதின் துஞ்சு புலி இடறிய சிதடன் போல உய்ந்தனன் பெயர்தலோ அரிதே மைந்து உடை கழை தின் யானைக் கால் அகப்பட்ட வன் திணி நீள் முளை போலச் சென்று அவண் வருந்தப் பொரேஎன் ஆயின் பொருந்திய தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப் பல் இரும் கூந்தல் மகளிர் ஒல்லா முயக்கிடைக் குழைக என் தாரே #2 புறநானூறு 75 - சோழன் நலங்கிள்ளி மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்து எனப் பால் தர வந்த பழ விறல் தாயம் எய்தினம் ஆயின் எய்தினம் சிறப்பு என குடி புரவு இரக்கும் கூர் இல் ஆண்மை சிறியோன் பெறின் அது சிறந்தன்று-மன்னே மண்டு அமர்ப் பரிக்கும் மதன் உடை நோன் தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின் தாழ் நீர் அறு கய மருங்கின் சிறு கோல் வெண் கிடை என்றூழ் வாடு வறல் போல நன்றும் நொய்தால் அம்ம தானே மை அற்று விசும்புற ஓங்கிய வெண் குடை முரசு கெழு வேந்தர் அரசு கெழு திருவே &234 - சோழன் நல்லுருத்திரன் #1 புறநானூறு 190 - சோழன் நல்லுருத்திரன் விளை_பதச் சீறிடம் நோக்கி வளை கதிர் வல்சி கொண்டு அளை மல்க வைக்கும் எலி முயன்று அனையர் ஆகி உள்ள தம் வளன் வலியுறுக்கும் உளம் இலாளரோடு இயைந்த கேண்மை இல் ஆகியரோ கடும் கண் கேழல் இடம் பட வீழ்ந்து என அன்று அவண் உண்ணாது ஆகி வழி_நாள் பெரு மலை விடரகம் புலம்ப வேட்டு எழுந்து இரும் களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும் புலி பசித்து அன்ன மெலிவு இல் உள்ளத்து உரன் உடையாளர் கேண்மையொடு இயைந்த வைகல் உள ஆகியரோ &235 - தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் #1 நற்றிணை 386 குறிஞ்சி - தங்கால் ஆத்திரேயன் செங்கண்ணனார் சிறு கண் பன்றிப் பெரும் சின ஒருத்தல் துறுகண் கண்ணிக் கானவர் உழுத குலவுக் குரல் ஏனல் மாந்தி ஞாங்கர் விடர் அளைப் பள்ளி வேங்கை அஞ்சாது கழை வளர் சாரல் துஞ்சும் நாடன் அணங்கு உடை அரும் சூள் தருகுவென் என நீ நும்மோர் அன்னோர் துன்னார் இவை எனத் தெரிந்து அது வியந்தனென் தோழி பணிந்து நம் கல் கெழு சிறுகுடிப் பொலிய வதுவை என்று அவர் வந்த ஞான்றே &236 - தங்கால் (முடக் கொற்றனார்) பொற்கொல்லன் வெண்ணாகனார் #1 அகநானூறு 48 குறிஞ்சி - தங்கால் (முடக் கொற்றனார்) பொற்கொல்லன் வெண்ணாகனார் அன்னாய் வாழி வேண்டு அன்னை நின் மகள் பாலும் உண்ணாள் பழங்கண் கொண்டு நனி பசந்தனள் என வினவுதி அதன் திறம் யானும் தெற்றென உணரேன் மேல்_நாள் மலி பூம் சாரல் என் தோழிமாரோடு ஒலி சினை வேங்கை கொய்குவம் சென்றுழி புலிபுலி என்னும் பூசல் தோன்ற ஒண் செங்கழுநீர் கண் போல் ஆய் இதழ் ஊசி போகிய சூழ் செய் மாலையன் பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன் குயம் மண்டு ஆகம் செம் சாந்து நீவி வரி புனை வில்லன் ஒரு கணை தெரிந்து கொண்டு யாதோ மற்று அம் மா திறம் படர் என வினவி நிற்றந்தோனே அவன் கண்டு எம்முள்எம்முள் மெய்மறைபு ஒடுங்கி நாணி நின்றனெமாக பேணி ஐவகை வகுத்த கூந்தல் ஆய் நுதல் மை ஈர் ஓதி மடவீர் நும் வாய் பொய்யும் உளவோ என்றனன் பையென பரி முடுகு தவிர்த்த தேரன் எதிர்மறுத்து நின் மகள் உண்கண் பல் மாண் நோக்கி சென்றோன்-மன்ற அக் குன்று கிழவோனே பகல் மாய் அந்தி படு_சுடர் அமையத்து அவன் மறை தேஎம் நோக்கி மற்று இவன் மகனே தோழி என்றனள் அதன் அளவு உண்டு கோள் மதி வல்லோர்க்கே #2 அகநானூறு 108 குறிஞ்சி - தங்கால் பொற்கொல்லனார் புணர்ந்தோர் புன்கண் அருளலும் உணர்ந்தோர்க்கு ஒத்தன்று-மன்னால் எவன்-கொல் முத்தம் வரை முதல் சிதறிய வை போல் யானைப் புகர் முகம் பொருத புது நீர் ஆலி பளிங்கு சொரிவது போல் பாறை வரிப்பக் கார் கதம்பட்ட கண் அகன் விசும்பின் விடு பொறி ஞெகிழியின் கொடி பட மின்னிப் படு மழை பொழிந்த பானாள் கங்குல் ஆர் உயிர்த் துப்பின் கோள்_மா வழங்கும் இருளிடைத் தமியன் வருதல் யாவதும் அருளான் வாழி தோழி அல்கல் விரவுப் பொறி மஞ்ஞை வெரீஇ அரவின் அணங்கு உடை அரும் தலை பை விரிப்பவை போல் காயா மென் சினை தோய நீடிப் பல் துடுப்பு எடுத்த அலங்கு குலைக் காந்தள் அணி மலர் நறும் தாது ஊதும் தும்பி கை ஆடு வட்டின் தோன்றும் மை ஆடு சென்னிய மலை கிழவோனே #3 அகநானூறு 355 பாலை - தங்கால் பொற்கொல்லனார் ** (தங்கால் முடக்கொல்லனார்)(தங்கால் முடக்கோவனார்) மாவும் வண் தளிர் ஈன்றன குயிலும் இன் தீம் பல் குரல் கொம்பர் நுவலும் மூதிலை ஒழித்த போது அவிழ் பெரும் சினை வல்லோன் தைவரும் வள் உயிர்ப் பாலை நரம்பு ஆர்த்து அன்ன வண்டு இனம் முரலும் துணி கயம் துன்னிய தூ மணல் எக்கர்த் தாது உகு தண் பொழில் அல்கிக் காதலர் செழு மனை மறக்கும் செவ்வி வேனில் தானே வந்தன்று ஆயின் ஆனாது இலங்கு வளை நெகிழ்ந்த எவ்வம் காட்டிப் புலந்தனம் வருகம் சென்மோ தோழி யாமே எமியம் ஆக நீயே பொன் நயந்து அருளிலை ஆகி இன்னை ஆகுதல் ஒத்தன்றால் எனவே #4 குறுந்தொகை 217 குறிஞ்சி - தங்கால் (முடக்கொல்லனார்)பொற்கொல்லன் வெண்ணாகனார் தினை கிளி கடிதலின் பகலும் ஒல்லும் இரவு நீ வருதலின் ஊறும் அஞ்சுவல் யாங்குச் செய்வாம் என் இடும்பை நோய்க்கு என ஆங்கு யான் கூறிய அனைத்திற்குப் பிறிது செத்து ஓங்கு மலை நாடன் உயிர்த்தோன்-மன்ற ஐது ஏகு அம்ம யானே கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே #5 நற்றிணை 313 குறிஞ்சி - தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் கரும் கால் வேங்கை நாள் உறு புதுப் பூப் பொன் செய் கம்மியன் கைவினை கடுப்பத் தகை வனப்பு உற்ற கண்ணழி கட்டழித்து ஒலி பல் கூந்தல் அணிபெறப் புனைஇக் காண்டல் காதல் கைம்மிக கடீஇயாற்கு யாங்கு ஆகுவம்-கொல் தோழி காந்தள் கமழ் குலை அவிழ்ந்த நயவரும் சாரல் கூதள நறும் பொழில் புலம்ப ஊர்-வயின் மீள்குவம் போலத் தோன்றும் தோடு புலர்ந்து அருவியின் ஒலித்தல் ஆனா கொய்_பதம் கொள்ளும் நாம் கூஉம் தினையே #6 புறநானூறு 326 - தங்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் ஊர் முது வேலிப் பார்நடை வெருகின் இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை உயிர் நடுக்குற்றுப் புலா விட்டு அரற்றச் சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த பருத்திப் பெண்டின் சிறு தீ விளக்கத்துக் கவிர்ப் பூ நெற்றி சேவலின் தணியும் அரு மிளை இருக்கையதுவே மனைவியும் வேட்டச் சிறாஅர் சேண் புலம் படராது படப்பை கொண்ட குறும் தாள் உடும்பின் விழுக்கு நிணம் பெய்த தயிர்க் கண் மிதவை யாணர் நல்லவை பாணரொடு ஒராங்கு வரு_விருந்து அயரும் விருப்பினள் கிழவனும் அரும் சமம் ததையத் தாக்கிப் பெரும் சமத்து அண்ணல் யானை அணிந்த பொன் செய் ஓடைப் பெரும் பரிசிலனே &237 - தனிமகனார் #1 நற்றிணை 153 பாலை - தனிமகனார் குண கடல் முகந்து குடக்கு ஏர்பு இருளி மண் திணி ஞாலம் விளங்கக் கம்மியர் செம்பு சொரி பானையின் மின்னி எவ்வாயும் தன் தொழில் வாய்த்த இன் குரல் எழிலி தென்புல மருங்கில் சென்று அற்று ஆங்கு நெஞ்சம் அவர்-வயின் சென்று என ஈண்டு ஒழிந்து உண்டல் அளித்து என் உடம்பே விறல் போர் வெம் சின வேந்தன் பகை அலைக் கலங்கி வாழ்வோர் போகிய பேர் ஊர்ப் பாழ் காத்திருந்த தனி மகன் போன்றே &238 - தாமப்பல் கண்ணனார் #1 புறநானூறு 43 - தாமப்பல் கண்ணனார் **பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தான் நில மிசை வாழ்நர் அலமரல் தீரத் தெறு கதிர்க் கனலி வெம்மை தாங்கிக் கால் உணவு ஆகச் சுடரொடு கொட்கும் அவிர் சடை முனிவரும் மருளக் கொடும் சிறைக் கூர் உகிர்ப் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇத் தன் அகம் புக்க குறு நடைப் புறவின் தபுதி அஞ்சிச் சீரை புக்க வரையா ஈகை உரவோன் மருக நேரார்க் கடந்த முரண் மிகு திருவின் தேர் வண் கிள்ளி தம்பி வார் கோல் கொடு மர மறவர் பெரும கடு_மான் கைவண் தோன்றல் ஐயம் உடையேன் ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம் பார்ப்பார் நோவன செய்யலர் மற்று இது நீர்த்தோ நினக்கு என வெறுப்பக் கூறி நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும் நீ பிழைத்தாய் போல் நனி நாணினையே தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்கும் செம்மல் இக் குடிப் பிறந்தோர்க்கு எண்மை காணும் எனக் காண்தகு மொய்ம்ப காட்டினை ஆகலின் யானே பிழைத்தனென் சிறக்க நின் ஆயுள் மிக்கு வரும் இன் நீர்க் காவிரி எக்கர் இட்ட மணலினும் பலவே &239 - தாமோதரனார் #1 குறுந்தொகை 92 நெய்தல் - தாமோதரனார் ஞாயிறு பட்ட அகல் வாய் வானத்து அளிய தாமே கொடும் சிறைப் பறவை இறையுற ஓங்கிய நெறி அயல் மராஅத்த பிள்ளை உள்வாய்ச் செரீஇய இரை கொண்டமையின் விரையுமால் செலவே &240 - தாயங்கண்ணனார் #1 அகநானூறு 105 பாலை - தாயங்கண்ணனார் அகல் அறை மலர்ந்த அரும்பு முதிர் வேங்கை ஒள் இலைத் தொடலை தைஇ மெல்லென நல் வரை நாடன் தன் பாராட்ட யாங்கு வல்லுநள்-கொல் தானே தேம் பெய்து மணி செய் மண்டைத் தீம் பால் ஏந்தி ஈனாத் தாயர் மடுப்பவும் உண்ணாள் நிழல் கயத்து அன்ன நீள் நகர் வரைப்பின் எம்முடைச் செல்வமும் உள்ளாள் பொய்ம் மருண்டு பந்து புடைப்பு அன்ன பாணிப் பல் அடிச் சில் பரிக் குதிரை பல் வேல் எழினி கெடல் அரும் துப்பின் விடு தொழில் முடிமார் கனை எரி நடந்த கல் காய் கானத்து வினை வல் அம்பின் விழுத் தொடை மறவர் தேம் பிழி நறும் கள் மகிழின் முனை கடந்து வீங்கு மென் சுரைய ஏற்று இனம் தரூஉம் முகை தலை திறந்த வேனில் பகை தலைமணந்த பல் அதர்ச் செலவே #2 அகநானூறு 132 குறிஞ்சி - தாயங்கண்ணனார் ஏனலும் இறங்கு குரல் இறுத்தன நோய் மலிந்து ஆய் கவின் தொலைந்த இவள் நுதலும் நோக்கி ஏதில மொழியும் இவ் ஊரும் ஆகலின் களிற்று முகம் திறந்த கவுள் உடைப் பகழி வால் நிணப் புகவின் கானவர் தங்கை அம் பணை மென் தோள் ஆய் இதழ் மழைக் கண் ஒல்கு இயல் கொடிச்சியை நல்கினை ஆயின் கொண்டனை சென்மோ நுண் பூண் மார்ப துளி தலைத் தலைஇய சாரல் நளி சுனைக் கூம்பு முகை அவிழ்த்த குறும் சிறைப் பறவை வேங்கை விரி இணர் ஊதிக் காந்தள் தேன் உடைக் குவி குலைத் துஞ்சி யானை இரும் கவுள் கடாஅம் கனவும் பெரும் கல் வேலி நும் உறைவு இன் ஊர்க்கே #3 அகநானூறு 149 பாலை - (எருக்காட்டூர்த்) தாயங்கண்ணனார் சிறு புன் சிதலை சேண் முயன்று எடுத்த நெடும் செம் புற்றத்து ஒடுங்கு இரை முனையின் புல் அரை இருப்பைத் தொள்ளை வான் பூப் பெரும் கை எண்கின் இரும் கிளை கவரும் அத்த நீள் இடைப் போகி நன்றும் அரிது செய் விழுப் பொருள் எளிதினின் பெறினும் வாரேன் வாழி என் நெஞ்சே சேரலர் சுள்ளி அம் பேரியாற்று வெண் நுரை கலங்க யவனர் தந்த வினை மாண் நல் கலம் பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளம் கெழு முசிறி ஆர்ப்பு எழ வளைஇ அரும் சமம் கடந்து படிமம் வவ்விய நெடு நல் யானை அடு போர்ச் செழியன் கொடி நுடங்கு மறுகின் கூடல் குடாஅது பல் பொறி மஞ்ஞை வெல் கொடி உயரிய ஒடியா விழவின் நெடியோன் குன்றத்து வண்டு பட நீடிய குண்டு சுனை நீலத்து எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள் அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே #4 அகநானூறு 213 பாலை - தாயங்கண்ணனார் ** (தையங்கண்ணனார்)(இதையங்கண்ணனார்) வினை நவில் யானை விறல் போர்த் தொண்டையர் இன மழை தவழும் ஏற்று அரு நெடும் கோட்டு ஓங்கு வெள் அருவி வேங்கடத்து உம்பர்க் கொய் குழை அதிரல் வைகு புலர் அலரி சுரி இரும் பித்தை சுரும்பு படச் சூடி இகல் முனைத் தரீஇய ஏறு உடைப் பெரு நிரை நனை முதிர் நறவின் நாள்_பலி கொடுக்கும் வால் நிணப் புகவின் வடுகர் தேஎத்து நிழல் கவின் இழந்த நீர் இல் நீள் இடை அழல் அவிர் அரும் சுரம் நெடிய என்னாது அகறல் ஆய்ந்தனர் ஆயினும் பகல் செலப் பல் கதிர் வாங்கிய படு சுடர் அமையத்துப் பெரு மரம் கொன்ற கால் புகு வியன் புனத்து எரி மருள் கதிர திரு மணி இமைக்கும் வெல் போர் வானவன் கொல்லிக் குடவரை வேய் ஒழுக்கு அன்ன சாய் இறைப் பணைத் தோள் பெரும் கவின் சிதைய நீங்கி ஆன்றோர் அரும் பெறல் உலகம் அமிழ்தொடு பெறினும் சென்று தாம் நீடலோ இலரே என்றும் கலம் பெயக் கவிழ்ந்த கழல் தொடித் தடக் கை வலம் படு வென்றி வாய் வாள் சோழர் இலங்கு நீர்க் காவிரி இழி புனல் வரித்த அறல் என நெறிந்த கூந்தல் உறல் இன் சாயலொடு ஒன்றுதல் மறந்தே #5 அகநானூறு 237 பாலை - தாயங்கண்ணனார் புன் கால் பாதிரி அரி நிறத் திரள் வீ நுண் கொடி அதிரலொடு நுணங்கு அறல் வரிப்ப அரவு எயிற்று அன்ன அரும்பு முதிர் குரவின் தேன் இமிர் நறும் சினை தென்றல் போழ குயில் குரல் கற்ற வேனிலும் துயில் துறந்து இன்னா கழியும் கங்குல் என்று நின் நல் மா மேனி அணி நலம் புலம்ப இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை கனை திறல் செம் தீ அணங்கிய செழு நிணக் கொழும் குறை மென் தினை புன்கம் உதிர்த்த மண்டையொடு இரும் கதிர் அலமரும் கழனிக் கரும்பின் விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு பால் பெய் செந்நெல் பாசவல் பகுக்கும் புனல் பொரு புதவின் உறந்தை எய்தினும் வினை பொருள் ஆகத் தவிரலர் கடை சிவந்து ஐய அமர்த்த உண்கண் நின் வை ஏர் வால் எயிறு ஊறிய நீரே #6 அகநானூறு 319 பாலை - (எருக்காட்டூர்) தாயங்கண்ணனார் மணி வாய்க் காக்கை மா நிறப் பெரும் கிளை பிணி வீழ் ஆலத்து அலம் சினை ஏறிக் கொடு வில் எயினர் குறும்பிற்கு ஊக்கும் கடு வினை மறவர் வில் இடத் தொலைந்தோர் படு பிணம் கவரும் பாழ் படு நனம் தலை அணங்கு என உருத்த நோக்கின் ஐயென நுணங்கிய நுசுப்பின் நுண் கேழ் மாமைப் பொன் வீ வேங்கைப் புது மலர் புரைய நல் நிறத்து எழுந்த சுணங்கு அணி வன முலை சுரும்பு ஆர் கூந்தல் பெரும் தோள் இவள்-வயின் பிரிந்தனிர் அகறல் சூழின் அரும் பொருள் எய்துக-மாதோ நுமக்கே கொய் குழைத் தளிர் ஏர் அன்ன தாங்கு அரு மதுகையள் மெல்லியள் இளையள் நனி பேர் அன்பினள் செல்வேம் என்னும் நும் எதிர் ஒழிவேம் என்னும் ஒண்மையோ இலளே #7 அகநானூறு 357 பாலை - (எருக்காட்டூர்) தாயங்கண்ணனார் கொடு முள் ஈங்கைச் சூரலொடு மிடைந்த வான் முகை இறும்பின் வயவொடு வதிந்த உண்ணாப் பிணவின் உயக்கம் தீரிய தட மருப்பு யானை வலம் படத் தொலைச்சி வியல் அறை சிவப்ப வாங்கி முணங்கு நிமிர்ந்து புலவுப் புலி புரண்ட புல் சாய் சிறு நெறி பயில் இரும் கானத்து வழங்கல் செல்லாது பெரும் களிற்று இன நிரை கை தொடூஉப் பெயரும் தீம் சுளைப் பலவின் தொழுதி உம்பல் பெரும் காடு இறந்தனர் ஆயினும் யாழ நின் திருந்து இழைப் பணைத் தோள் வருந்த நீடி உள்ளாது அமைதலோ இலரே நல்குவர் மிகு பெயல் நிலைஇய தீம் நீர்ப் பொய்கை அடை இறந்து அவிழ்ந்த தண் கமழ் நீலம் காலொடு துயல்வந்து அன்ன நின் ஆய் இதழ் மழைக் கண் அமர்த்த நோக்கே #8 குறுந்தொகை 319 முல்லை - தாயங்கண்ணனார் மான் ஏறு மடப் பிணை தழீஇ மருள் கூர்ந்து கானம் நண்ணிய புதல் மறைந்து ஒடுங்கவும் கை உடை நல் மாப் பிடியொடு பொருந்தி மை அணி மருங்கின் மலையகம் சேரவும் மாலை வந்தன்று மாரி மா மழை பொன் ஏர் மேனி நல் நலம் சிதைத்தோர் இன்னும் வாரார் ஆயின் என் ஆம் தோழி நம் இன் உயிர் நிலையே #9 நற்றிணை 219 நெய்தல் - தாயங்கண்ணனார் கண்ணும் தோளும் தண் நறும் கதுப்பும் பழ நலம் இழந்து பசலை பாய இன் உயிர் பெரும்பிறிது ஆயினும் என்னதூஉம் புலவேன் வாழி தோழி சிறு கால் அலவனொடு பெயரும் புலவுத் திரை நளி கடல் பெரு மீன் கொள்ளும் சிறுகுடிப் பரதவர் கங்குல் மாட்டிய கனை கதிர் ஒண் சுடர் முதிரா ஞாயிற்று எதிர் ஒளி கடுக்கும் கானல் அம் பெரும் துறைச் சேர்ப்பன் தானே யானே புணர்ந்த மாறே #10 புறநானூறு 356 - தாயங்கண்ணனார் களரி பரந்து கள்ளி போகிப் பகலும் கூஉம் கூகையொடு பிறழ் பல் ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு அஞ்சுவந்தன்று இ மஞ்சு படு முதுகாடு நெஞ்சு அமர் காதலர் அழுத கண்ணீர் என்பு படு சுடலை வெண் நீறு அவிப்ப எல்லார் புறனும் தான் கண்டு உலகத்து மன்பதை எல்லாம் தானாய்த் தன் புறம் காண்போர்க் காண்பு அறியாதே #11 புறநானூறு 397 - (எருக்காட்டூர்த்) தாயங்கண்ணனார். **பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் வெள்ளியும் இரு விசும்பு ஏர்தரும் புள்ளும் உயர் சினைக் குடம்பை குரல் தோற்றினவே பொய்கையும் போது கண் விழித்தன பைபயச் சுடரும் சுருங்கின்று ஒளியே பாடு எழுந்து இரங்கு குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி எஃகு இருள் அகற்றும் ஏமப் பாசறை வைகறை அரவம் கேளியர் பல கோள் செய் தார் மார்ப எழு-மதி துயில் எனத் தெண் கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி நெடும் கடைத் தோன்றியேனே அது நயந்து உள்ளி வந்த பரிசிலன் இவன் என நெய் உறப் பொரித்த குய் உடை நெடும் சூடு மணிக் கலன் நிறைந்த மணம் நாறு தேறல் பாம்பு உரித்து அன்ன வான் பூம் கலிங்கமொடு மாரி அன்ன வண்மையின் சொரிந்து வேனில் அன்ன என் வெப்பு நீங்க அரும் கலம் நல்கியோனே என்றும் செறுவில் பூத்த சே இதழ்த் தாமரை அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த தீயொடு விளங்கும் நாடன் வாய் வாள் வலம் படு தீவின் பொலம் பூண் வளவன் எறி திரைப் பெரும் கடல் இறுதிக் கண் செலினும் தெறு கதிர்க் கனலி தென்திசைத் தோன்றினும் என் என்று அஞ்சலம் யாமே வென் வெல் அரும் சமம் கடக்கும் ஆற்றல் அவன் திருந்து கழல் நோன் தாள் தண் நிழலேமே &241 - தாயங்கண்ணியார் #1 புறநானூறு 250 - தாயங்கண்ணியார் குய் குரல் மலிந்த கொழும் துவை அடிசில் இரவலர்த் தடுத்த வாயில் புரவலர் கண்ணீர்த் தடுத்த தண் நறும் பந்தர் கூந்தல் கொய்து குறும் தொடி நீக்கி அல்லி உணவின் மனைவியோடு இனியே புல்லென்றனையால் வளம் கெழு திரு நகர் வான் சோறு கொண்டு தீம் பால் வேண்டும் முனித் தலைப் புதல்வர் தந்தை தனித் தலைப் பெரும் காடு முன்னிய பின்னே &242 - திப்புத்தோளார் #1 குறுந்தொகை 1 குறிஞ்சி - திப்புத்தோளார் செம் களம் படக் கொன்று அவுணர்த் தேய்த்த செம் கோல் அம்பின் செம் கோட்டு யானைக் கழல் தொடிச் சேஎய் குன்றம் குருதிப் பூவின் குலைக் காந்தட்டே &243 - திருத்தாமனார் #1 புறநானூறு 398 - திருத்தாமனார் **பாடப்பட்டோன்: சேரமான் வஞ்சன் மதி நிலாக் கரப்ப வெள்ளி ஏர்தர வகை மாண் நல் இல் பொறி மயிர் வாரணம் பொழுது அறிந்து இயம்பப் பொய்கைப் பூ முகை மலரப் பாணர் கை வல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க இரவுப் புறம்பெற்ற ஏம வைகறைப் பரிசிலர் வரையா விரை செய் பந்தர் வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன் நகைவர் குறுகின் அல்லது பகைவர்க்குப் புலி இனம் மடிந்த கல் அளை போலத் துன்னல் போகிய பெரும் பெயர் மூதூர் மதியத்து அன்ன என் அரிக் குரல் தடாரி இரவுரை நெடு வார் அரிப்ப வட்டித்து உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய் தள்ளா நிலையை ஆகியர் எமக்கு என என் வரவு அறீஇச் சிறிதிற்குப் பெரிது உவந்து விரும்பிய முகத்தன் ஆகி என் அரைத் துரும்பு படு சிதாஅர் நீக்கித் தன் அரைப் புகை விரிந்து அன்ன பொங்கு துகில் உடீஇ அழல் கான்று அன்ன அரும் பெறல் மண்டை நிழல் காண் தேறல் நிறைய வாக்கி யான் உண அருளல் அன்றியும் தான் உண் மண்டைய கண்ட மான் வறைக் கருனை கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர வரை உறழ் மார்பின் வையகம் விளக்கும் விரவு மணி ஒளிர்வரும் அரவு உறழ் ஆரமொடு புரையோன் மேனிப் பூம் துகில் கலிங்கம் உரை செல அருளியோனே பறை இசை அருவிப் பாயல் கோவே &244 - தீன்மதிநாகனார் #1 குறுந்தொகை 111 குறிஞ்சி - தீன்மதிநாகனார் மென் தோள் நெகிழ்த்த செல்லல் வேலன் வென்றி நெடுவேள் என்னும் அன்னையும் அது என உணரும் ஆயின் ஆயிடைக் கூடை இரும் பிடிக் கை கரந்து அன்ன கேழ் இரும் துறுகல் கெழு மலை நாடன் வல்லே வருக தோழி நம் இல்லோர் பெரு நகை காணிய சிறிதே &245 - தும்பிசேர்கீரனார் #1 குறுந்தொகை 61 மருதம் - தும்பிசேர்கீரனார் தச்சன் செய்த சிறு மா வையம் ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும் கையின் ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல உற்று இன்புறேஎம் ஆயினும் நல் தேர் பொய்கை ஊரன் கேண்மை செய்து இன்புற்றனெம் செறிந்தன வளையே #62 குறிஞ்சி - சிறைக்குடி ஆந்தையார் கோடல் எதிர் முகைப் பசு வீ முல்லை நாறு இதழ்க் குவளையொடு இடை இடுபு விரைஇ ஐது தொடை மாண்ட கோதை போல நறிய நல்லோள் மேனி முறியினும் வாய்வது முயங்கற்கும் இனிதே #2 குறுந்தொகை 315 குறிஞ்சி - (மதுரை வேள் ஆதத்தனார்) தும்பிசேர்கீரனார் எழுதரு மதியம் கடல் கண்டு ஆங்கு ஒழுகு வெள் அருவி ஓங்கு மலை நாடன் ஞாயிறு அனையன் தோழி நெருஞ்சி அனைய என் பெரும் பணைத் தோளே #3 குறுந்தொகை 316 நெய்தல் - தும்பிசேர் கீரனார் ஆய் வளை ஞெகிழவும் அயர்வு மெய் நிறுப்பவும் நோய் மலி வருத்தம் அன்னை அறியின் உளெனோ வாழி தோழி விளியாது உரவுக் கடல் பொருத விரவு மணல் அடைகரை ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட ஆய்ந்த அலவன் துன்புறு துணை பரி ஓங்கு வரல் விரி திரை களையும் துறைவன் சொல்லோ பிற ஆயினவே #4 குறுந்தொகை 320 நெய்தல் - தும்பிசேர் கீரனார் பெரும் கடல் பரதவர் கோள் மீன் உணங்கலின் இரும் கழிக் கொண்ட இறவின் வாடலொடு நிலவு நிற வெண் மணல் புலவப் பலவுடன் எக்கர்-தொறும் பரிக்கும் துறைவனொடு ஒரு நாள் நக்கதோர் பழியும் இலமே போது அவிழ் பொன் இணர் மரீஇய புள் இமிழ் பொங்கர்ப் புன்னை அம் சேரி இவ் ஊர் கொன் அலர் தூற்றும் தன் கொடுமையானே #5 குறுந்தொகை 392 குறிஞ்சி - தும்பிசேர் கீரனார் அம்ம வாழியோ மணிச் சிறைத் தும்பி நல் மொழிக்கு அச்சம் இல்லை அவர் நாட்டு அண்ணல் நெடு வரைச் சேறி ஆயின் கடவை மிடைந்த துடவை அம் சிறுதினைத் துளர் எறி நுண் துகள் களைஞர் தங்கை தமரின் தீராள் என்மோ அரசர் நிரை செலல் நுண் தோல் போலப் பிரசம் தூங்கு மலை கிழவோற்கே #6 நற்றிணை 277 பாலை - தும்பி சேர் கீரனார் கொடியை வாழி தும்பி இ நோய் படுக-தில் அம்ம யான் நினக்கு உரைத்து என மெய்யே கருமை அன்றியும் செவ்வன் அறிவும் கரிதோ அறனிலோய் நினக்கே மனையுறக் காக்கும் மாண் பெரும் கிடக்கை நுண் முள் வேலித் தாதொடு பொதுளிய தாறு படு பீரம் ஊதி வேறுபட நாற்றம் இன்மையின் பசலை ஊதாய் சிறு குறும் பறவைக்கு ஓடி விரைவுடன் நெஞ்சு நெகிழ் செய்ததன் பயனோ அன்பிலர் வெம் மலை அரும் சுரம் இறந்தோர்க்கு என் நிலை உரையாய் சென்று அவண் வரவே #7 புறநானூறு 249 - (தும்பி சொகினனார்) தும்பிசேர் கீரனார் கதிர் மூக்கு ஆரல் கீழ்ச் சேற்று ஒளிப்பக் கணைக் கோட்டு வாளை மீ நீர்ப் பிறழ எரிப் பூம் பழனம் நெரித்து உடன் வலைஞர் அரிக் குரல் தடாரியின் யாமை மிளிரச் பனை நுகும்பு அன்ன சினை முதிர் வராலொடு உறழ் வேல் அன்ன ஒண் கயல் முகக்கும் அகல் நாட்டு அண்ணல் புகாவே நெருநைப் பகல் இடம் கண்ணிப் பலரொடும் கூடி ஒருவழிப்பட்டன்று மன்னே இன்றே அடங்கிய கற்பின் ஆய் நுதல் மடந்தை உயர்_நிலை_உலகம் அவன் புக வார நீறு ஆடு சுளகின் சீறிடம் நீக்கி அழுதல் ஆனாக் கண்ணள் மெழுகும் ஆப்பி கண் கலுழ் நீரானே &246 - துறைக்குறுமாவின் பாலம் கொற்றனார் #1 நற்றிணை 286 பாலை - துறைக்குறுமாவின் பாலம் கொற்றனார் ஊசல் ஒண் குழை உடை வாய்த்து அன்ன அத்தக் குமிழின் ஆய் இதழ் அலரி கல் அறை வரிக்கும் புல்லென் குன்றம் சென்றோர்-மன்ற செலீஇயர் என் உயிர் எனப் புனை இழை நெகிழ விம்மி நொந்துநொந்து இனைதல் ஆன்றிசின் ஆய்_இழை நினையின் நட்டோர் ஆக்கம் வேண்டியும் ஒட்டிய நின் தோள் அணி பெற வரற்கும் அன்றோ தோழி அவர் சென்ற திறமே &247 - துறையூர் ஓடை கிழார் #1 புறநானூறு 136 - துறையூர் ஓடை கிழார் **பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன் யாழ்ப் பத்தர் புறம் கடுப்ப இழை வலந்த பல் துன்னத்து இடைப் புரை பற்றிப் பிணி விடாஅ ஈர்க் குழாத்தொடு இறை கூர்ந்த பேஎன் பகை என ஒன்று என்கோ உண்ணாமையின் ஊன் வாடி தெண் நீரின் கண் மல்கிக் கசிவுற்ற என் பல் கிளையொடு பசி அலைக்கும் பகை ஒன்று என்கோ அன்ன தன்மையும் அறிந்தீயார் நின்னது தா என நிலை தளர மரம் பிறங்கிய நளிச் சிலம்பின் குரங்கு அன்ன புன் குறும் கூளியர் பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கோ ஆஅங்கு எனைப் பகையும் அறியுநன் ஆய் எனக் கருதிப் பெயர் ஏத்தி வாயார நின் இசை நம்பிச் சுடர் சுட்ட சுரத்து ஏறி இவண் வந்த பெரு நசையேம் எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப என அனைத்து உரைத்தனன் யான் ஆக நினக்கு ஒத்தது நீ நாடி நல்கினை விடு-மதி பரிசில் அல்கலும் தண் புனல் வாயில் துறையூர் முன்துறை நுண் பல மணலினும் ஏத்தி உண்குவம் பெரும நீ நல்கிய வளனே &248 - தூங்கலோரியார் #1 குறுந்தொகை 151 பாலை - தூங்கலோரியார் வங்காக் கடந்த செம் கால் பேடை எழால் உற வீழ்ந்து எனக் கணவன் காணாது குழல் இசைக் குரல குறும் பல அகவும் குன்று உறு சிறு நெறி அரிய என்னாது மறப்பு அரும் காதலி ஒழிய இறப்பல் என்பது ஈண்டு இளமைக்கு முடிவே #2 குறுந்தொகை 295 நெய்தல் - தூங்கலோரியார் உடுத்தும் தொடுத்தும் பூண்டும் செரீஇயும் தழை அணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி விழவொடு வருதி நீயே இஃதோ ஓர் ஆன் வல்சிச் சீர் இல் வாழ்க்கை பெரு நலக் குறுமகள் வந்து என இனி விழவு ஆயிற்று என்னும் இவ் ஊரே #3 நற்றிணை 60 மருதம் - தூங்கலோரியார் மலை கண்டு அன்ன நிலை புணர் நிவப்பின் பெரு நெல் பல் கூட்டு எருமை உழவ கண்படை பெறாஅது தண் புலர் விடியல் கரும் கண் வராஅல் பெரும் தடி மிளிர்வையொடு புகர்வை அரிசிப் பொம்மல் பெரும் சோறு கவர் படு கையை கழும மாந்தி நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த நின் நடுநரொடு சேறி ஆயின் அவண் சாயும் நெய்தலும் ஓம்பு-மதி எம் இல் மா இரும் கூந்தல் மடந்தை ஆய் வளை கூட்டும் அணியும்-மார் அவையே &249 - தேய்புரிப் பழங்கயிற்றினார் #1 நற்றிணை 284 பாலை - தேய்புரிப் பழங்கயிற்றினார் புறம் தாழ்பு இருண்ட கூந்தல் போதின் நிறம் பெறும் ஈர் இதழ்ப் பொலிந்த உண்கண் உள்ளம் பிணிக்கொண்டோள்-வயின் நெஞ்சம் செல்லல் தீர்கம் செல்வாம் என்னும் செய்வினை முடியாது எவ்வம் செய்தல் எய்யாமையோடு இளிவு தலைத்தரும் என உறுதி தூக்கத் தூங்கி அறிவே சிறிது நனி விரையல் என்னும் ஆயிடை ஒளிறு ஏந்து மருப்பின் களிறு மாறு பற்றிய தேய் புரிப் பழம் கயிறு போல வீவது-கொல் என் வருந்திய உடம்பே &250 - தேரதரனார் #1 குறுந்தொகை 195 நெய்தல் - தேரதரனார் சுடர் சினம் தணிந்து குன்றம் சேரப் படர் சுமந்து ஏழுதரு பையுள் மாலை யாண்டு உளர்-கொல்லோ வேண்டு வினை முடிநர் இன்னாது இரங்கும் என்னார் அன்னோ தைவரல் அசை வளி மெய் பாய்ந்து ஊர்தரச் செய்வுறு பாவை அன்ன என் மெய் பிறிது ஆகுதல் அறியாதோரே &251 - தேவகுலத்தார் #1 குறுந்தொகை 3 குறிஞ்சி - தேவகுலத்தார் நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆர் அளவு இன்றே சாரல் கரும் கோல் குறிஞ்சிப் பூக் கொண்டு பெரும் தேன் இழைக்கும் நாடனொடு நட்பே &252 - தேவனார் #1 நற்றிணை 227 நெய்தல் - தேவனார் அறிந்தோர் அறனிலர் என்றலின் சிறந்த இன் உயிர் கழியினும் நனி இன்னாதே புன்னை அம் கானல் புணர் குறி வாய்த்த பின் ஈர் ஓதி என் தோழிக்கு அன்னோ படு மணி யானைப் பசும் பூண் சோழர் கொடி நுடங்கு மறுகின் ஆர்க்காட்டு ஆங்கண் கள் உடைத் தடவில் புள் ஒலித்து ஓவாத் தேர் வழங்கு தெருவின் அன்ன கௌவை ஆகின்றது ஐய நின் அருளே &253 - தொடித்தலை விழுத்தண்டினார் #1 புறநானூறு 243 - தொடித்தலை விழுத்தண்டினார் இனி நினைந்து இரக்கம் ஆகின்று திணி மணல் செய்வுறு பாவைக்குக் கொய் பூ தைஇத் தண் கயம் ஆடும் மகளிரொடு கை பிணைந்து தழுவுவழித் தழீஇத் தூங்குவழித் தூங்கி மறை எனல் அறியா மாயம் இல் ஆயமொடு உயர் சினை மருதத் துறை உறத் தாழ்ந்து நீர் நணிப் படி கோடு ஏறிச் சீர் மிகக் கரையவர் மருளத் திரையகம் பிதிர நெடு நீர்க் குட்டத்துத் துடுமெனப் பாய்ந்து குளித்து மணல் கொண்ட கல்லா இளமை அளிதோ தானே யாண்டு உண்டு-கொல்லோ தொடித் தலை விழுத் தண்டு ஊன்றி நடுக்குற்று இரும் இடை மிடைந்த சில சொல் பெரு மூதாளரேம் ஆகிய எமக்கே &254 - தொண்டி ஆமூர்ச் சாத்தனார் #1 அகநானூறு 169 பாலை - தொண்டி ஆமூர்ச் சாத்தனார் மரம் தலை கரிந்து நிலம் பயம் வாட அலங்கு கதிர் வேய்ந்த அழல் திகழ் நனம் தலை புலி தொலைத்து உண்ட பெரும் களிற்று ஒழி ஊன் கலி கெழு மறவர் காழ் கோத்து ஒழிந்ததை ஞெலிகோல் சிறு தீ மாட்டி ஒலி திரைக் கடல் விளை அமிழ்தின் கணம் சால் உமணர் சுனை கொள் தீம் நீர்ச் சோற்று உலைக் கூட்டும் சுரம் பல கடந்த நம்-வயின் படர்ந்து நனி பசலை பாய்ந்த மேனியள் நெடிது நினைந்து செல் கதிர் மழுகிய புலம்பு கொள் மாலை மெல் விரல் சேர்த்திய நுதலள் மல்கி கயல் உமிழ் நீரின் கண் பனி வாரப் பெரும் தோள் நெகிழ்ந்த செல்லலொடு வருந்துமால் அளியள் திருந்து_இழை தானே &255 - தொல் கபிலர் #1 அகநானூறு 282 குறிஞ்சி - தொல் கபிலர் பெரு மலைச் சிலம்பின் வேட்டம் போகிய செறி மடை அம்பின் வல் வில் கானவன் பொருது தொலை யானை வெண் கோடு கொண்டு நீர் திகழ் சிலம்பின் நல் பொன் அகழ்வோன் கண் பொருது இமைக்கும் திண் மணி கிளர்ப்ப வை நுதி வான் மருப்பு ஒடிய உக்க தெண் நீர் ஆலி கடுக்கும் முத்தமொடு மூ வேறு தாரமும் ஒருங்கு உடன் கொண்டு சாந்தம் பொறை_மரம் ஆக நறை நார் வேங்கைக் கண்ணியன் இழிதரும் நாடற்கு இன் தீம் பலவின் ஏர் கெழு செல்வத்து எந்தையும் எதிர்ந்தனன் கொடையே அலர் வாய் அம்பல் ஊரும் அவனொடு மொழியும் சாய் இறை திரண்ட தோள் பாராட்டி யாயும் அவனே என்னும் யாமும் வல்லே வருக வரைந்த நாள் என நல் இறை மெல் விரல் கூப்பி இல் உறை கடவுட்கு ஓக்குதும் பலியே #2 குறுந்தொகை 14 குறிஞ்சி - தொல்கபிலர் அமிழ்து பொதி செம் நா அஞ்ச வந்த வார்ந்து இலங்கு வை எயிற்றுச் சின் மொழி அரிவையைப் பெறுக-தில் அம்ம யானே பெற்று ஆங்கு அறிக-தில் அம்ம இவ் ஊரே மறுகில் நல்லோள் கணவன் இவன் எனப் பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே #3 நற்றிணை 114 குறிஞ்சி - தொல்கபிலர் வெண் கோடு கொண்டு வியல் அறை வைப்பவும் பச்சூன் கெண்டி வள் உகிர் முணக்கவும் மறுகு-தொறு புலாவும் சிறுகுடி அரவம் வைகிக் கேட்டுப் பையாந்திசினே அளிதோ தானே தோழி அல்கல் வந்தோன் மன்ற குன்ற நாடன் துளி பெயல் பொறித்த புள்ளித் தொல் கரை பொரு திரை நிவப்பின் வரும் யாறு அஞ்சுவல் ஈர்ம் குரல் உருமின் ஆர் கலி நல் ஏறு பாம்பு கவின் அழிக்கும் ஓங்கு வரை பொத்தி மையல் மட பிடி இனையக் கை ஊன்றுபு இழிதரு களிறு எறிந்தன்றே #4 நற்றிணை 276 குறிஞ்சி - தொல் கபிலர் கோடு துவையாக் கோள் வாய் நாயொடு காடு தேர்ந்து அசைஇய வய_மான் வேட்டு வயவர் மகளிர் என்றி ஆயின் குறவர் மகளிரேம் குன்று கெழு கொடிச்சியேம் சேணோன் இழைத்த நெடும் கால் கழுதில் கான மஞ்ஞை கட்சி சேக்கும் கல்லகத்தது எம் ஊரே செல்லாது சேந்தனை செல்-மதி நீயே பெரு மலை வாங்கு அமைப் பழுனிய நறவு உண்டு வேங்கை முன்றில் குரவையும் கண்டே #5 நற்றிணை 328 குறிஞ்சி - தொல் கபிலர் கிழங்கு கீழ் வீழ்ந்து தேன் மேல் தூங்கிச் சிற்சில வித்திப் பற்பல விளைந்து தினை கிளி கடியும் பெரும் கல் நாடன் பிறப்பு ஓர் அன்மை அறிந்தனம் அதனால் அது இனி வாழி தோழி ஒரு நாள் சிறு பல் கருவித்து ஆகி வலன் ஏர்பு பெரும் பெயல் தலைக புனனே இனியே எண் பிழி நெய்யொடு வெண் கிழி வேண்டாது சாந்து தலைக்கொண்ட ஓங்கு பெரும் சாரல் விலங்கு மலை அடுக்கத்தானும் கலம் பெறு விறலி ஆடும் இவ் ஊரே #6 நற்றிணை 399 குறிஞ்சி - தொல்கபிலர் அருவி ஆர்க்கும் பெரு வரை அடுக்கத்துக் குருதி ஒப்பின் கமழ் பூம் காந்தள் வரி அணி சிறகின் வண்டு உண மலரும் வாழை அம் சிலம்பில் கேழல் கெண்டிய நில வரை நிவந்த பல உறு திரு மணி ஒளி திகழ் விளக்கத்து ஈன்ற மடப் பிடி களிறு புறங்காப்பக் கன்றொடு வதியும் மா மலை நாடன் நயந்தனன் வரூஉம் பெருமை உடையள் என்பது தருமோ தோழி நின் திரு நுதல் கவினே &256 - நக்கண்ணையார் #1 அகநானூறு 252 குறிஞ்சி - நக்கண்ணையார் **(திண்பொற்கிழிக் காவிதி மகன் கண்ணனார்)(நக்கணன்) இடம்படுபு அறியா வலம் படு வேட்டத்து வாள் வரி நடுங்கப் புகல்வந்து ஆளி உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி வெண் கோடு புய்க்கும் தண் கமழ் சோலைப் பெரு வரை அடுக்கத்து ஒரு வேல் ஏந்தி தனியன் வருதல் அவனும் அஞ்சான் பனி வார் கண்ணேன் ஆகி நோய் அட எமியேன் இருத்தலை யானும் ஆற்றேன் யாங்கு செய்வாம்-கொல் தோழி ஈங்கைத் துய் அவிழ் பனி மலர் உதிர வீசித் தொழில் மழை பொழிந்த பானாள் கங்குல் எறி திரை திவலை தூஉம் சிறு கோட்டுப் பெரும் குளம் காவலன் போல அரும் கடி அன்னையும் துயில் மறந்தனளே #2 நற்றிணை 19 நெய்தல் - நக்கண்ணையார் இறவுப் புறத்து அன்ன பிணர் படு தடவு முதல் சுறவுக் கோட்டு அன்ன முள் இலைத் தாழை பெரும் களிற்று மருப்பின் அன்ன அரும்பு முதிர்பு நன் மான் உழையின் வேறுபடத் தோன்றி விழவுக்களம் கமழும் உரவு நீர்ச் சேர்ப்ப இன மணி நெடும் தேர் பாகன் இயக்கச் செலீஇய சேறி ஆயின் இவளே வருவை ஆகிய சில் நாள் வாழாள் ஆதல் நற்கு அறிந்தனை சென்மே #3 நற்றிணை 87 நெய்தல் - நக்கண்ணையார் உள்ளூர் மாஅத்த முள் எயிற்று வாவல் ஓங்கல் அம் சினைத் தூங்கு துயில் பொழுதின் வெல் போர்ச் சோழர் அழிசி அம் பெரும் காட்டு நெல்லி அம் புளி சுவைக் கனவிய ஆஅங்கு அது கழிந்தன்றே தோழி அவர் நாட்டுப் பனி அரும்பு உடைந்த பெரும் தாள் புன்னை துறை மேய் இப்பி ஈர்ம் புறத்து உறைக்கும் சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும் பெரும் தண் கானலும் நினைந்த அப் பகலே #4 புறநானூறு 83 - (பெருங்கோழி நாய்கண் மகள்) நக்கண்ணையார் **பாடப்பட்டோன்: சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி அடி புனை தொடு கழல் மை அணல் காளைக்கு என் தொடி கழித்திடுதல் யான் யாய் அஞ்சுவலே அடு தோள் முயங்கல் அவை நாணுவலே என் போல் பெரு விதுப்பு உறுக என்றும் ஒரு பால் படாஅது ஆகி இரு பால் பட்ட இ மையல் ஊரே #5 புறநானூறு 84 - (பெருங்கோழி நாய்கன் மகள்) நக்கண்ணையார் **பாடப்பட்டோன் : சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி என் ஐ புற்கை உண்டும் பெரும் தோளன்னே யாமே புறஞ்சிறை இருந்தும் பொன் அன்னம்மே போர் எதிர்ந்து என் ஐ போர்க்களம் புகினே கல்லென் பேர் ஊர் விழவு உடை ஆங்கண் ஏமுற்றுக் கழிந்த மள்ளர்க்கு உமணர் வெரூஉம் துறை அன்னன்னே #6 புறநானூறு 85 - (பெருங்கோழி நாய்கன் மகள்) நக்கண்ணையார் **பாடப்பட்டோன் : சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி. என் ஐக்கு ஊர் இஃது அன்மையானும் என் ஐக்கு நாடு இஃது அன்மையானும் ஆடு ஆடு என்ப ஒருசாரோரே ஆடு அன்று என்ப ஒருசாரோரே நல்ல பல்லோர் இரு நல் மொழியே அம் சிலம்பு ஒலிப்ப ஓடி எம் இல் முழா அரைப் போந்தை பொருந்தி நின்று யான் கண்டனன் அவன் ஆடு ஆகுதலே &257 - நக்கீரர் #1 அகநானூறு 36 மருதம் - (மதுரை) நக்கீரர் பகு வாய் வராஅல் பல் வரி இரும் போத்துக் கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி ஆம்பல் மெல் அடை கிழியக் குவளைக் கூம்புவிடு பல் மலர் சிதையப் பாய்ந்து எழுந்து அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கித் தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது கயிறு இடு கதச் சேப் போல மதம் மிக்கு நாள் கயம் உழக்கும் பூக் கேழ் ஊர வரு புனல் வையை வார் மணல் அகன் துறை திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில் நறும் பல் கூந்தல் குறும் தொடி மடந்தையொடு வதுவை அயர்ந்தனை என்ப அலரே கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன் ஆலங்கானத்து அகன் தலை சிவப்பச் சேரல் செம்பியன் சினம் கெழு திதியன் போர் வல் யானைப் பொலம் பூண் எழினி நார் அரி நறவின் எருமையூரன் தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின் இருங்கோ வேண்மான் இயல் தேர்ப் பொருநன் என்று எழுவர் நல் வலம் அடங்க ஒரு பகல் முரைசொடு வெண்குடை அகப்படுத்து உரை செலக் கொன்று களம் வேட்ட ஞான்றை வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே #2 அகநானூறு 57 பாலை - நக்கீரர் சிறு பைம் தூவிச் செம் கால் பேடை நெடு நீர் வானத்து வாவுப் பறை நீந்தி வெயில் அவிர் உருப்பொடு வந்து கனி பெறாஅது பெறு நாள் யாணர் உள்ளிப் பையாந்து புகல் ஏக்கு அற்ற புல்லென் உலவைக் குறும் கால் இற்றிப் புன் தலை நெடு வீழ் இரும் பிணர்த் துறுகல் தீண்டி வளி பொர பெரும் கை யானை நிவப்பின் தூங்கும் குன்ற வைப்பின் என்றூழ் நீள் இடை யாமே எமியம் ஆகத் தாமே பசு நிலா விரிந்த பல் கதிர் மதியின் பெரு நல் ஆய் கவின் ஒரீஇச் சிறு பீர் வீ ஏர் வண்ணம் கொண்டன்று-கொல்லோ கொய் சுவல் புரவி கொடித் தேர்ச் செழியன் முதுநீர் முன்துறை முசிறி முற்றி களிறு பட எருக்கிய கல்லென் ஞாட்பின் அரும் புண் உறுநரின் வருந்தினள் பெரிது அழிந்து பானாள் கங்குலும் பகலும் ஆனாது அழுவோள் ஆய் சிறு நுதலே #3 அகநானூறு 78 குறிஞ்சி - (மதுரை) நக்கீரனார் நனம் தலைக் கானத்து ஆளி அஞ்சி இனம் தலைத்தரூஉம் எறுழ் கிளர் முன்பின் வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாத்து பொறி நுதல் பொலிந்த வயக் களிற்று ஒருத்தல் இரும் பிணர்த் தடக் கையின் ஏமுறத் தழுவக் கடும் சூல் மடப் பிடி நடுங்கும் சாரல் தேம் பிழி நறவின் குறவர் முன்றில் முந்தூழ் ஆய் மலர் உதிரக் காந்தள் நீடு இதழ் நெடும் துடுப்பு ஒசியத் தண்ணென வாடை தூக்கும் வரு பனி அற்சிரம் நம் இல் புலம்பின் தம் ஊர் தமியர் என் ஆகுவர்-கொல் அளியர் தாம் என எம் விட்டு அகன்ற சில் நாள் சிறிதும் உள்ளியும் அறிதிரோ ஓங்கு மலை நாட உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல் இசை வாய்மொழிக் கபிலன் சூழச் சேய் நின்று செழும் செய் நெல்லின் விளை கதிர் கொண்டு தடம் தாள் ஆம்பல் மலரொடு கூட்டி யாண்டு பல கழிய வேண்டு வயின் பிழையாது ஆள் இடூஉக் கடந்து வாள் அமர் உழக்கி ஏந்து கோட்டு யானை வேந்தர் ஓட்டிய கடும் பரிப் புரவிக் கைவண் பாரி தீம் பெரும் பைம் சுனைப் பூத்த தேம் கமழ் புது மலர் நாறும் இவள் நுதலே #4 அகநானூறு 93 பாலை - (கணக்காயனார் மகனார்) நக்கீரனார் கேள் கேடு ஊன்றவும் கிளைஞர் ஆரவும் கேள் அல் கேளிர் கெழீஇயினர் ஒழுகவும் ஆள்வினைக்கு எதிரிய ஊக்கமொடு புகல் சிறந்து ஆரம் கண்ணி அடு போர்ச் சோழர் அறம் கெழு நல் அவை உறந்தை அன்ன பெறல் அரு நன் கலம் எய்தி நாடும் செயல் அரும் செய்வினை முற்றினம் ஆயின் அரண் பல கடந்த முரண் கொள் தானை வாடா வேம்பின் வழுதி கூடல் நாள்_அங்காடி நாறும் நறு நுதல் நீள் இரும் கூந்தல் மாஅயோளொடு வரை குயின்று அன்ன வான் தோய் நெடு நகர் நுரை முகந்து அன்ன மென் பூம் சேக்கை நிவந்த பள்ளி நெடும் சுடர் விளக்கத்து நலம் கேழ் ஆகம் பூண் வடு பொறிப்ப முயங்குகம் சென்மோ நெஞ்சே வரி நுதல் வயம் திகழ்பு இழிதரும் வாய் புகு கடாஅத்து மீளி மொய்ம்பொடு நிலன் எறியாக் குறுகி ஆள் கோள் பிழையா அஞ்சுவரு தடக் கைக் கடும் பகட்டு யானை நெடும் தேர்க் கோதை திரு மா வியல் நகர் கருவூர் முன்துறைத் தெண் நீர் உயர் கரை குவைஇய தண் ஆன்பொருநை மணலினும் பலவே #5 அகநானூறு 120 நெய்தல் - நக்கீரனார் நெடுவேள் மார்பின் ஆரம் போலச் செவ் வாய் வானம் தீண்டி மீன் அருந்தும் பைம் கால் கொக்கு இனம் நிரை பறை உகப்ப எல்லை பைப்பய கழிப்பிக் குட வயின் கல் சேர்ந்தன்றே பல் கதிர் ஞாயிறு மதர் எழில் மழைக் கண் கலுழ இவளே பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல் மாண் நலம் சிதைய ஏங்கி ஆனாது அழல் தொடங்கினளே பெரும அதனால் கழிச் சுறா எறிந்த புண் தாள் அத்திரி நெடு நீர் இரும் கழிப் பரி மெலிந்து அசைஇ வல் வில் இளையரொடு எல்லிச் செல்லாது சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ பெண்ணை ஓங்கிய வெண் மணல் படப்பை அன்றில் அகவும் ஆங்கண் சிறு குரல் நெய்தல் எம் பெரும் கழி நாட்டே #6 அகநானூறு 126 மருதம் - நக்கீரர் நின வாய் செத்து நீ பல உள்ளிப் பெரும் புன் பைதலை வருந்தல் அன்றியும் மலை மிசை தொடுத்த மலிந்து செலல் நீத்தம் தலை_நாள் மா மலர் தண் துறைத் தயங்கக் கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று அறல் வார் நெடும் கயத்து அரு நிலை கலங்க மால் இருள் நடுநாள் போகித் தன் ஐயர் காலைத் தந்த கணைக் கோட்டு வாளைக்கு அம் வாங்கு உந்தி அம் சொல் பாண்_மகள் நெடும் கொடி நுடங்கும் நறவு மலி மறுகில் பழம் செந்நெல்லின் முகவை கொள்ளாள் கழங்கு உறழ் முத்தமொடு நல் கலம் பெறூஉம் பயம் கெழு வைப்பின் பல் வேல் எவ்வி நயம் புரி நல் மொழி அடக்கவும் அடங்கான் பொன் இணர் நறு மலர் புன்னை வெஃகித் திதியனொடு பொருத அன்னி போல விளிகுவை-கொல்லோ நீயே கிளி எனச் சிறிய மிழற்றும் செவ் வாய்ப் பெரிய கயல் என அமர்த்த உண்கண் புயல் எனப் புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் மின் நேர் மருங்குல் குறுமகள் பின் நிலை விடாஅ மடம் கெழு நெஞ்சே #7 அகநானூறு 141 பாலை - நக்கீரர் அம்ம வாழி தோழி கைம்மிகக் கனவும் கங்குல்-தோறு இனிய நனவும் புனை வினை நல் இல் புள்ளும் பாங்கின நெஞ்சும் நனி புகன்று உறையும் எஞ்சாது உலகு தொழில் உலந்து நாஞ்சில் துஞ்சி மழை கால் நீங்கிய மாக விசும்பில் குறு முயல் மறு நிறம் கிளர மதி நிறைந்து அறு_மீன் சேரும் அகல் இருள் நடுநாள் மறுகு விளக்குறுத்து மாலை தூக்கிப் பழ விறல் மூதூர் பலருடன் துவன்றிய விழவு உடன் அயர வருக-தில் அம்ம துவரப் புலர்ந்து தூ மலர் கஞலித் தகரம் நாறும் தண் நறும் கதுப்பின் புது மண மகடூஉ அயினிய கடி நகர்ப் பல் கோட்டு அடுப்பில் பால் உலை இரீஇக் கூழைக் கூந்தல் குறும் தொடி மகளிர் பெரும் செய் நெல்லின் வாங்கு கதிர் முறித்துப் பாசவல் இடிக்கும் இரும் காழ் உலக்கைக் கடிது இடி வெரீஇய கமம் சூல் வெண் குருகு தீம் குலை வாழை ஓங்கு மடல் இராது நெடும் கால் மாஅத்துக் குறும் பறை பயிற்றும் செல் குடி நிறுத்த பெரும் பெயர்க் கரிகால் வெல் போர்ச் சோழன் இடையாற்று அன்ன நல் இசை வெறுக்கை தருமார் பல் பொறி புலிக் கேழ் உற்ற பூ இடைப் பெரும் சினை நரந்த நறும் பூ நாள்_மலர் உதிரக் கலை பாய்ந்து உகளும் கல் சேர் வேங்கை தேம் கமழ் நெடு வரை பிறங்கிய வேங்கட வைப்பின் சுரன் இறந்தோரே #8 அகநானூறு 205 பாலை - நக்கீரர் உயிர் கலந்து ஒன்றிய தொன்று படு நட்பின் செயிர் தீர் நெஞ்சமொடு செறிந்தோர் போலத் தையல் நின்-வயின் பிரியலம் யாம் எனப் பொய் வல் உள்ளமொடு புரிவுணக் கூறித் துணிவு இல் கொள்கையர் ஆகி இனியே நோய் மலி வருத்தமொடு நுதல் பசப்பூர நாம் அழத் துறந்தனர் ஆயினும் தாமே வாய்மொழி நிலைஇய சேண் விளங்கு நல் இசை வளம் கெழு கோசர் விளங்கு படை நூறி நிலம் கொள வெஃகிய பொலம் பூண் கிள்ளி பூ விரி நெடும் கழி நாப்பண் பெரும் பெயர்க் காவிரிப் படப்பைப் பட்டினத்து அன்ன செழு நகர் நல் விருந்து அயர்மார் ஏமுற விழு நிதி எளிதினின் எய்துக-தில்ல மழை கால் அற்சிரத்து மால் இருள் நீங்கி நீடு அமை நிவந்த நிழல் படு சிலம்பில் கடாஅ யானைக் கவுள் மருங்கு உறழ ஆம் ஊர்பு இழிதரு காமர் சென்னிப் புலி உரி வரி அதள் கடுப்பக் கலி சிறந்து நாள்_பூ வேங்கை நறு மலர் உதிர மேக்கு எழு பெரும் சினை ஏறிக் கணக் கலை கூப்பிடூஉ உகளும் குன்றகச் சிறு நெறிக் கல் பிறங்கு ஆர் இடை விலங்கிய சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே #9 அகநானூறு 227 பாலை - நக்கீரர் நுதல் பசந்தன்றே தோள் சாயினவே திதலை அல்குல் வரியும் வாடின என் ஆகுவள்-கொல் இவள் எனப் பல் மாண் நீர் மலி கண்ணொடு நெடிது நினைந்து ஒற்றி இனையல் வாழி தோழி நனை கவுள் காய் சினம் சிறந்த வாய் புகு கடாத்தொடு முன் நிலை பொறாஅது முரணிப் பொன் இணர்ப் புலிக் கேழ் வேங்கைப் பூம் சினை புலம்ப முதல் பாய்ந்திட்ட முழு வலி ஒருத்தல் செந்நிலப் படு நீறு ஆடிச் செரு மலைந்து களம் கொள் மள்ளரின் முழங்கும் அத்தம் பல இறந்து அகன்றனர் ஆயினும் நிலைஇ நோயிலர் ஆக நம் காதலர் வாய் வாள் தமிழ் அகப்படுத்த இமிழ் இசை முரசின் வருநர் வரையா பெருநாள் இருக்கை தூங்கல் பாடிய ஓங்கு பெரு நல் இசைப் பிடி மிதி வழுதுணைப் பெரும் பெயர் தழும்பன் கடி மதில் வரைப்பின் ஊணூர் உம்பர் விழு நிதி துஞ்சும் வீறு பெறு திரு நகர் இரும் கழிப் படப்பை மருங்கூர்ப் பட்டினத்து எல் உமிழ் ஆவணத்து அன்ன கல்லென் கம்பலை செய்து அகன்றோரே #10 அகநானூறு 249 பாலை - நக்கீரனார் அம்ம வாழி தோழி பல் நாள் இவ் ஊர் அம்பல் எவனோ வள் வார் விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை இன் குரல் அகவுநர் இரப்பின் நாள்-தொறும் பொன் கோட்டுச் செறித்துப் பொலம் தார் பூட்டிச் சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில் ஏறு முந்துறுத்துச் சால் பதம் குவைஇ நெடும் தேர் களிற்றொடு சுரக்கும் கொடும் பூண் பல் வேல் முசுண்டை வேம்பி அன்ன என் நல் எழில் இள நலம் தொலையினும் நல்கார் பல் பூம் கானத்து அல்கு நிழல் அசைஇத் தோகைத் தூவித் தொடைத் தார் மழவர் நாகு ஆ வீழ்த்து திற்றி தின்ற புலவுக் களம் துழைஇய துகள் வாய்க் கோடை நீள் வரைச் சிலம்பின் இரை வேட்டு எழுந்த வாள் வரி வயப் புலி தீண்டிய விளி செத்து வேறுவேறு கவலைய ஆறு பரிந்து அலறி உழைமான் இன நிரை ஓடும் கழை மாய் பிறங்கல் மலை இறந்தோரே #11 அகநானூறு 253 பாலை - நக்கீரர் வைகல்-தோறும் பசலை பாய என் மெய்யும் பெரும்பிறிது ஆகின்று ஒய்யென அன்னையும் அமரா முகத்தினள் அலரே வாடாப் பூவின் கொங்கர் ஓட்டி நாடு பல தந்த பசும் பூண் பாண்டியன் பொன் மலி நெடு நகர்க் கூடல் ஆடிய இன் இசை ஆர்ப்பினும் பெரிதே ஈங்கு யான் சில நாள் உய்யலென் போன்ம் எனப் பல நினைந்து ஆழல் வாழி தோழி வடாஅது ஆர் இருள் நடுநாள் ஏர் ஆ ஒய்யப் பகை முனை அறுத்துப் பல் இனம் சாஅய் கணம் சால் கோவலர் நெடு விளிப் பயிர் அறிந்து இனம் தலைத் தரூஉம் துளங்கு இமில் நல் ஏற்று தழூஉப் பிணர் எருத்தம் தாழப் பூட்டிய அம் தூம்பு அகல் அமை கமம் செலப் பெய்த துறு காழ் வல்சியர் தொழு அறை வௌவி கன்று உடைப் பெரு நிரை மன்று நிறை தரூஉம் நேரா வன் தோள் வடுகர் பெருமகன் பேர் இசை எருமை நல் நாட்டு உள்ளதை அயிரி யாறு இறந்தனர் ஆயினும் மயர் இறந்து உள்ளுப-தில்ல தாமே பணைத் தோள் குரும்பை மென் முலை அரும்பிய சுணங்கின் நுசுப்பு அழித்து ஒலிவரும் தாழ் இரும் கூந்தல் மாக விசும்பின் திலகமொடு பதித்த திங்கள் அன்ன நின் திரு முகத்து ஒண் சூட்டு அவிர் குழை மலைந்த நோக்கே #12 அகநானூறு 290 நெய்தல் - நக்கீரர் குடுமிக் கொக்கின் பைம் கால் பேடை இரும் சேற்று அள்ளல் நாள்_புலம் போகிய கொழு மீன் வல்சிப் புன் தலைச் சிறாஅர் நுண் ஞாண் அம் வலைச் சேவல் பட்டு என அல்குறு பொழுதின் மெல்கு இரை மிசையாது பைதல் பிள்ளை தழீஇ ஒய்யென அம் கண் பெண்ணை அன்புற நரலும் சிறு பல் தொல் குடிப் பெருநீர்ச் சேர்ப்பன் கழி சேர் புன்னை அழி பூம் கானல் தணவா நெஞ்சமொடு தமியன் வந்து நம் மணவா முன்னும் எவனோ தோழி வெண் கோட்டு யானை விறல் போர்க் குட்டுவன் தெண் திரைப் பரப்பின் தொண்டி முன்துறைச் சுரும்பு உண மலர்ந்த பெரும் தண் நெய்தல் மணி ஏர் மாண் நலம் ஒரீஇப் பொன் நேர் வண்ணம் கொண்ட என் கண்ணே #13 அகநானூறு 310 நெய்தல் - நக்கீரனார் கடும் தேர் இளையரொடு நீக்கி நின்ற நெடுந்தகை நீர்மையை அன்றி நீயும் தொழுதகு மெய்யை அழிவு முந்துறுத்துப் பல் நாள் வந்து பணிமொழி பயிற்றலின் குவளை உண்கண் கலுழ நின் மாட்டு இவளும் பெரும் பேது உற்றனள் ஓரும் தாய் உடை நெடு நகர்த் தமர் பாராட்டக் காதலின் வளர்ந்த மாதர் ஆகலின் பெரு மடம் உடையரோ சிறிதே அதனால் குன்றின் தோன்றும் குவவு மணல் சேர்ப்ப இன்று இவண் விரும்பாதீமோ சென்று அப் பூ விரி புன்னை மீது தோன்று பெண்ணைக் கூஉம் கண்ணஃதே தெய்ய ஆங்க உப்பு ஒய் உமணர் ஒழுகையொடு வந்த இளைப் படு பேடை இரியக் குரைத்து எழுந்து உரும் இசைப் புணரி உடைதரும் பெருநீர் வேலி எம் சிறு நல் ஊரே #14 அகநானூறு 340 நெய்தல் - நக்கீரர் பல் நாள் எவ்வம் தீரப் பகல் வந்து புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி மாலை மால்கொள நோக்கிப் பண் ஆய்ந்து வலவன் வண் தேர் இயக்க நீயும் செலவு விருப்புறுதல் ஒழிக-தில் அம்ம செல்லா நல் இசைப் பொலம் பூண் திரையன் பல் பூம் கானல் பவத்திரி அன இவள் நல் எழில் இள நலம் தொலைய ஒல்லெனக் கழியே ஓதம் மல்கின்று வழியே வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும் சென்றோர்-மன்ற மான்றன்று பொழுது என நின் திறத்து அவலம் வீட இன்று இவண் சேப்பின் எவனோ பூக் கேழ் புலம்ப பசு மீன் நொடுத்த வெண்ணெல் மாஅத் தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே வடவர் தந்த வான் கேழ் வட்டம் குடபுல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய வண்டு இமிர் நறும் சாந்து அணிகுவம் திண் திமில் எல்லுத் தொழில் மடுத்த வல் வினைப் பரதவர் கூர் உளிக் கடு விசை மாட்டலின் பாய்பு உடன் கோள் சுறாக் கிழித்த கொடு முடி நெடு வலை தண் கடல் அசை வளி எறி-தொறும் வினை விட்டு முன்றில் தாழைத் தூங்கும் தெண் கடல் பரப்பின் எம் உறைவு இன் ஊர்க்கே #15 அகநானூறு 346 மருதம் - நக்கீரர் நகை நன்று அம்ம தானே இறை மிசை மாரிச் சுதையின் ஈர்ம் புறத்து அன்ன கூரல் கொக்கின் குறும் பறைச் சேவல் வெள்ளி வெண் தோடு அன்ன கயல் குறித்துக் கள் ஆர் உவகைக் கலி மகிழ் உழவர் காஞ்சி அம் குறும் தறி குத்தித் தீம் சுவை மென் கழைக் கரும்பின் நல் பல மிடைந்து பெரும் செய் நெல்லின் பாசவல் பொத்தி வருத்திக் கொண்ட வல் வாய்க் கொடும் சிறை மீது அழி கடு நீர் நோக்கிப் பைப்பயப் பார்வல் இருக்கும் பயம் கேழ் ஊர யாம் அது பேணின்றோ இலமே நீ நின் பண் அமை நல் யாழ்ப் பாணனொடு விசி பிணி மண் ஆர் முழவின் கண் அதிர்ந்து இயம்ப மகிழ் துணைச் சுற்றமொடு மட்டு மாந்தி எம் மனை வாராய் ஆகி முன்_நாள் நும் மனை சேர்ந்த ஞான்றை அ மனைக் குறும் தொடி மடந்தை உவந்தனள் நெடும் தேர் இழை அணி யானைப் பழையன் மாறன் மாடம் மலி மறுகின் கூடல் ஆங்கண் வெள்ளத் தானையொடு வேறு புலத்து இறுத்த கிள்ளி வளவன் நல் அமர் சாஅய்க் கடும் பரிப் புரவியொடு களிறு பல வவ்வி ஏதில் மன்னர் ஊர் கொளக் கோதை மார்பன் உவகையின் பெரிதே #16 அகநானூறு 369 பாலை - நக்கீரர் கண்டிசின் மகளே கெழீஇ இயைவெனை ஒண் தொடி செறித்த முன்கை ஊழ் கொள்பு மங்கையர் பல பாராட்டச் செம் தார்க் கிள்ளையும் தீம் பால் உண்ணா மயில் இயல் சே இழை மகளிர் ஆயமும் அயரா தாழியும் மலர் பல அணியா கேழ் கொளக் காழ் புனைந்து இயற்றிய வனப்பு அமை நோன் சுவர் பாவையும் பலி எனப் பெறாஅ நோய் பொர இவை கண்டு இனைவதன்தலையும் நினைவிலேன் கொடியோள் முன்னியது உணரேன் தொடியோய் இன்று நின் ஒலி குரல் மண்ணல் என்றதற்கு என் புலந்து அழிந்தனள் ஆகித் தன் தகக் கடல் அம் தானைக் கைவண் சோழர் கெடல் அரு நல் இசை உறந்தை அன்ன நிதி உடை நல் நகர்ப் புதுவது புனைந்து தமர் மணன் அயரவும் ஒல்லாள் கவர் முதல் ஓமை நீடிய உலவை நீள் இடை மணி அணி பலகை மாக் காழ் நெடு வேல் துணிவு உடை உள்ளமொடு துதைந்த முன்பின் அறியாத் தேஎத்து அரும் சுரம் மடுத்த சிறியோற்கு ஒத்த என் பெரு மடத் தகுவி சிறப்பும் சீரும் இன்றிச் சீறூர் நல்கூர் பெண்டின் புல் வேய் குரம்பை ஓர் ஆ யாத்த ஒரு தூண் முன்றில் ஏதில் வறு மனை சிலம்பு உடன் கழீஇ மேயினள்-கொல் என நோவல் யானே #17 அகநானூறு 389 பாலை - நக்கீரனார் அறியாய் வாழி தோழி நெறி குரல் சாந்து ஆர் கூந்தல் உளரிப் போது அணிந்து தேம் கமழ் திரு நுதல் திலகம் தைஇயும் பல் இதழ் எதிர் மலர் கிள்ளி வேறுபட நல் இள வன முலை அல்லியொடு அப்பியும் பெரும் தோள் தொய்யில் வரித்தும் சிறு பரட்டு அம் செம் சீறடிப் பஞ்சி ஊட்டியும் என் புறந்தந்து நின் பாராட்டிப் பல் பூம் சேக்கையின் பகலும் நீங்கார் மனை-வயின் இருப்பவர்-மன்னே துனைதந்து இரப்போர் ஏந்து கை நிறையப் புரப்போர் புலம்பு இல் உள்ளமொடு புதுவ தந்து உவக்கும் அரும் பொருள் வேட்டம் எண்ணிக் கறுத்தோர் சிறு புன் கிளவிச் செல்லல் பாழ்பட நல் இசை தம்-வயின் நிறுமார் வல் வேல் வானவரம்பன் நல் நாட்டு உம்பர் வேனில் நீடிய வெம் கடற்று அடை முதல் ஆறு செல் வம்பலர் வேறு பிரிந்து அலறக் கொலை வெம்மையின் நிலை பெயர்ந்து உறையும் பெரும் களிறு தொலைச்சிய இரும் கேழ் ஏற்றை செம் புல மருங்கில் தன் கால் வாங்கி வலம் படு வென்றியொடு சிலம்பகம் சிலம்பப் படு மழை உருமின் முழங்கும் நெடு மர மருங்கின் மலை இறந்தோரே #18 குறுந்தொகை 78 குறிஞ்சி - நக்கீரனார் பெரு வரை மிசையது நெடு வெள் அருவி முது வாய்க் கோடியர் முழவின் ததும்பிச் சிலம்பின் இழிதரும் இலங்கு மலை வெற்ப நோதக்கன்றே காமம் யாவதும் நன்று என உணரார்-மாட்டும் #19 குறுந்தொகை 105 குறிஞ்சி - நக்கீரர் புனவன் துடவைப் பொன் போல் சிறுதினைக் கடி உண் கடவுட்கு இட்ட செழும் குரல் அறியாது உண்ட மஞ்ஞை ஆடு_மகள் வெறியுறு வனப்பின் வெய்துற்று நடுங்கும் சூர் மலை நாடன் கேண்மை நீர் மலி கண்ணொடு நினைப்பு ஆகின்றே #20 குறுந்தொகை 131 பாலை - (ஓரேருழவனார்) நக்கீரர் ஆடு அமை புரையும் வனப்பின் பணைத் தோள் பேர் அமர்க் கண்ணி இருந்த ஊரே நெடும் சேண் ஆர் இடையதுவே நெஞ்சே ஈரம் பட்ட செவ்விப் பைம் புனத்து ஓர் ஏர் உழவன் போலப் பெரு விதுப்புற்றன்றால் நோகோ யானே #21 குறுந்தொகை 143 குறிஞ்சி - (மதுரைக் கணக்காயனார் மகனார்) நக்கீரனார் அழியல் ஆய்_இழை அன்பு பெரிது உடையன் பழியும் அஞ்சும் பய மலை நாடன் நில்லாமையே நிலையிற்று ஆகலின் நல் இசை வேட்ட நயன் உடை நெஞ்சின் கடப்பாட்டாளன் உடைப் பொருள் போலத் தங்குதற்கு உரியது அன்று நின் அம் கலுழ் மேனிப் பாஅய பசப்பே #22 குறுந்தொகை 161 குறிஞ்சி - நக்கீரர் பொழுதும் எல்லின்று பெயலும் ஓவாது கழுது கண் பனிப்ப வீசும் அதன்தலைப் புலிப்_பல்_தாலிப் புதல்வன் புல்லி அன்னா என்னும் அன்னையும் அன்னோ என் மலைந்தனன்-கொல் தானே தன் மலை ஆரம் நாறும் மார்பினன் மாரி யானையின் வந்து நின்றனனே #23 குறுந்தொகை 266 பாலை - நக்கீரர் நமக்கு ஒன்று உரையார் ஆயினும் தமக்கு ஒன்று இன்னா இரவின் இன் துணை ஆகிய படப்பை வேங்கைக்கு மறந்தனர்-கொல்லோ மறப்பு அரும் பணைத் தோள் மரீஇத் துறத்தல் வல்லியோர் புள்-வாய்த் தூதே #24 குறுந்தொகை 280 குறிஞ்சி - நக்கீரர் கேளிர் வாழியோ கேளிர் நாளும் என் நெஞ்சு பிணிக்கொண்ட அம் சில் ஓதிப் பெரும் தோள் குறுமகள் சிறு மெல் ஆகம் ஒரு நாள் புணரப் புணரின் அரை நாள் வாழ்க்கையும் வேண்டலன் யானே #25 குறுந்தொகை 368 மருதம் - நக்கீரர் மெல்லியலோயே மெல்லியலோயே நல் நாண் நீத்த பழி தீர் மாமை வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின் சொல்லகிற்றா மெல்லியலோயே சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே நாள் இடைப்படாஅ நளி நீர் நீத்தத்து இடி கரைப் பெரு மரம் போலத் தீது இல் நிலைமை முயங்குகம் பலவே #26 நற்றிணை 31 நெய்தல் - நக்கீரனார் மா இரும் பரப்பகம் துணிய நோக்கிச் சேய் இறா எறிந்த சிறு_வெண்_காக்கை பாய் இரும் பனிக் கழி துழைஇப் பைம் கால் தான் வீழ் பெடைக்குப் பயிரிடூஉச் சுரக்கும் சிறு வீ ஞாழல் துறையும்-மார் இனிதே பெரும் புலம்புற்ற நெஞ்சமொடு பல நினைந்து யானும் இனையேன் ஆயின் ஆனாது வேறு பல் நாட்டில் கால் தர வந்த பல உறு பண்ணியம் இழிதரு நிலவு மணல் நெடும் சினைப் புன்னைக் கடும் சூல் வெண்_குருகு உலவுத் திரை ஓதம் வெரூஉம் உரவு நீர்ச் சேர்ப்பனொடு மணவா ஊங்கே #27 நற்றிணை 86 பாலை - நக்கீரர் அறவர் வாழி தோழி மறவர் வேல் என விரிந்த கதுப்பின் தோல பாண்டில் ஒப்பின் பகன்றை மலரும் கடும் பனி அற்சிரம் நடுங்கக் காண்தகக் கைவல் வினைவன் தையுபு சொரிந்த சுரிதக உருவின ஆகிப் பெரிய கோங்கம் குவி முகை அவிழ ஈங்கை நல் தளிர் நயவர நுடங்கும் முற்றா வேனில் முன்னி வந்தோரே #26 நற்றிணை 197 பாலை - நக்கீரர் தோளே தொடி நெகிழ்ந்தனவே நுதலே பீர் இவர் மலரின் பசப்பு ஊர்ந்தன்றே கண்ணும் தண் பனி வைகின அன்னோ தெளிந்தனம் மன்ற தேயர் என் உயிர் என ஆழல் வாழி தோழி நீ நின் தாழ்ந்து ஒலி கதுப்பின் வீழ்ந்த காலொடு வண்டு படு புது மலர் உண்துறைத் தரீஇய பெரு மட மகளிர் முன்கைச் சிறு கோல் பொலம் தொடி போல மின்னிக் கணம்கொள் இன் இசை முரசின் இரங்கி மன்னர் எயில் ஊர் பல் தோல் போலச் செல் மழை தவழும் அவர் நன் மலை நாட்டே #29 நற்றிணை 258 நெய்தல் - நக்கீரர் பல் பூம் கானல் பகற்குறி மரீஇச் செல்வல் கொண்க செறித்தனள் யாயே கதிர் கால் வெம்பக் கல் காய் ஞாயிற்றுத் திரு உடை வியல் நகர் வரு_விருந்து அயர்மார் பொன் தொடி மகளிர் புறங்கடை உகுத்த கொக்கு உகிர் நிமிரல் மாந்தி எல் பட அகல் அங்காடி அசை நிழல் குவித்த பச்சிறாக் கவர்ந்த பசும் கண் காக்கை தூங்கல் வங்கத்துக் கூம்பில் சேக்கும் மருங்கூர்ப்பட்டினத்து அன்ன இவள் நெருங்கு ஏர் எல் வளை ஓடுவ கண்டே #30 நற்றிணை 340 மருதம் - நக்கீரர் புல்லேன் மகிழ்ந புலத்தலும் இல்லேன் கல்லா யானை கடும் தேர்ச் செழியன் படை மாண் பெரும் குள மடை நீர் விட்டு என கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை அள்ளல் அம் கழனி உள்வாய் ஓடிப் பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்துச் செம் சால் உழவர் கோல் புடை மதரிப் பைம் கால் செறுவின் அணை முதல் புரளும் வாணன் சிறுகுடி அன்ன என் கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே #31 நற்றிணை 358 நெய்தல் - நக்கீரர் பெரும் தோள் நெகிழ அவ் வரி வாடச் சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர இன்னேம் ஆக என் கண்டு நாணி நின்னொடு தெளித்தனர் ஆயினும் என்னதூஉம் அணங்கல் ஓம்பு-மதி வாழிய நீ எனக் கணம் கெழு கடவுட்கு உயர் பலி தூஉய்ப் பரவினம் வருகம் சென்மோ தோழி பெரும் சே_இறவின் துய்த் தலை முடங்கல் சிறு_வெண்_காக்கை நாள்_இரை பெறூஉம் பசும் பூண் வழுதி மருங்கை அன்ன என் அரும் பெறல் ஆய் கவின் தொலையப் பிரிந்து ஆண்டு உறைதல் வல்லியோரே #32 நற்றிணை 367 முல்லை - நக்கீரர் கொடும் கண் காக்கைக் கூர் வாய்ப் பேடை நடுங்கு சிறைப் பிள்ளை தழீஇக் கிளை பயிர்ந்து கரும் கண் கருனைச் செந்நெல் வெண் சோறு சூர் உடைப் பலியொடு கவரிய குறும் கால் கூழ் உடை நன் மனைக் குழுவின இருக்கும் மூதில் அருமன் பேர் இசைச் சிறுகுடி மெல் இயல் அரிவை நின் பல் இரும் கதுப்பின் குவளையொடு தொடுத்த நறு வீ முல்லைத் தளை அவிழ் அலரித் தண் நறும் கோதை இளையரும் சூடி வந்தனர் நமரும் விரி உளை நன் மாக் கடைஇப் பரியாது வருவர் இப் பனி படு நாளே #33 பத்துப்பாட்டு 1.திருமுருகாற்றுப்படை - நக்கீரர் உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டு ஆஅங்கு ஓ அற இமைக்கும் சேண் விளங்கு அவிர் ஒளி உறுநர்த் தாங்கிய மதன் உடை நோன் தாள் செறுநர்த் தேய்த்த செல் உறழ் தடக் கை மறு இல் கற்பின் வாள்_நுதல் கணவன் கார்கோள் முகந்த கமம் சூல் மா மழை வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறித் தலைப் பெயல் தலைஇய தண் நறும் கானத்து இருள் படப் பொதுளிய பராரை மராஅத்து உருள் பூம் தண் தார் புரளும் மார்பினன் மால் வரை நிவந்த சேண் உயர் வெற்பில் கிண்கிணி கவைஇய ஒண் செம் சீறடி கணைக் கால் வாங்கிய நுசுப்பின் பணைத் தோள் கோபத்து அன்ன தோயாப் பூம் துகில் பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் கை புனைந்து இயற்றாக் கவின் பெறு வனப்பின் நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழைச் சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனித் துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதிச் செம் கால் வெட்சிச் சீறிதழ் இடை இடுபு பைம் தாள் குவளைத் தூ இதழ் கிள்ளித் தெய்வஉத்தியொடு வலம்புரி வயின் வைத்துத் திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் மகரப்பகுவாய் தாழ மண்ணுறுத்துத் துவர முடித்த துகள் அறும் முச்சிப் பெரும் தண் சண்பகம் செரீஇக் கரும் தகட்டு உளைப் பூ மருதின் ஒள் இணர் அட்டிக் கிளைக் கவின்று எழுதரு கீழ் நீர் செவ் அரும்பு இணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக வண் காது நிறைந்த பிண்டி ஒண் தளிர் நுண் பூண் ஆகம் திளைப்பத் திண் காழ் நறும் குறடு உரிஞ்சிய பூம் கேழ்த் தேய்வை தேம் கமழ் மருது இணர் கடுப்பக் கோங்கின் குவி முகிழ் இள முலைக் கொட்டி விரி மலர் வேங்கை நுண் தாது அப்பிக் காண்வர வெள்ளில் குறு முறி கிள்ளுபு தெறியாக் கோழி ஓங்கிய வென்று அடு விறல் கொடி வாழிய பெரிது என்று ஏத்திப் பலருடன் சீர் திகழ் சிலம்பகம் சிலம்பப் பாடி சூர்_அர_மகளிர் ஆடும் சோலை மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்துச் சுரும்பும் மூசா சுடர்ப் பூம் காந்தள் பெரும் தண் கண்ணி மிலைந்த சென்னியன் பார் முதிர் பனிக் கடல் கலங்க உள் புக்குச் சூர் முதல் தடிந்த சுடர் இலை நெடு வேல் உலறிய கதுப்பின் பிறழ் பல் பேழ் வாய்ச் சுழல் விழிப் பசும் கண் சூர்த்த நோக்கின் கழல் கண் கூகையொடு கடும் பாம்பு தூங்கப் பெரு முலை அலைக்கும் காதின் பிணர் மோட்டு உரு கெழு செலவின் அஞ்சுவரு பேய்_மகள் குருதி ஆடிய கூர் உகிர்க் கொடு விரல் கண் தொட்டு உண்ட கழி முடைக் கரும் தலை ஒண் தொடித் தடக் கையின் ஏந்தி வெருவர வென்று அடு விறல் களம் பாடித் தோள் பெயரா நிணம் தின் வாயள் துணங்கை தூங்க இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி அவுணர் நல் வலம் அடங்கக் கவிழ் இணர் மா முதல் தடிந்த மறு இல் கொற்றத்து எய்யா நல் இசைச் செவ் வேல் சேஎய் சேவடி படரும் செம்மல் உள்ளமொடு நலம் புரி கொள்கைப் புலம் புரிந்து உறையும் செலவு நீ நயந்தனை ஆயின் பல உடன் நன்னர் நெஞ்சத்து இன் நசை வாய்ப்ப இன்னே பெறுதி நீ முன்னிய வினையே செருப் புகன்று எடுத்த சேண் உயர் நெடும் கொடி வரிப் புனை பந்தொடு பாவை தூங்கப் பொருநர்த் தேய்த்த போர் அரு வாயில் திரு வீற்றிருந்த தீது தீர் நியமத்து மாடம் மலி மறுகின் கூடல் குட வயின் இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த முள் தாள் தாமரைத் துஞ்சி வைகறைக் கள் கமழ் நெய்தல் ஊதி எல் படக் கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர் அம் சிறை வண்டின் அரிக் கணம் ஒலிக்கும் குன்று அமர்ந்து உறைதலும் உரியன் அதாஅன்று வை_நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் வாடா மாலை ஓடையொடு துயல்வரப் படு மணி இரட்டும் மருங்கின் கடு நடைக் கூற்றத்து அன்ன மாற்று அரு மொய்ம்பின் கால் கிளர்ந்து அன்ன வேழம் மேற்கொண்டு ஐ வேறு உருவின் செய்வினை முற்றிய முடியொடு விளங்கிய முரண் மிகு திரு மணி மின் உறழ் இமைப்பின் சென்னிப் பொற்ப நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ அகலா மீனின் அவிர்வன இமைப்பத் தா இல் கொள்கைத் தம் தொழில் முடி-மார் மனன் நேர்பு எழுதரு வாள் நிற முகனே மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்கப் பல் கதிர் விரிந்தன்று ஒரு முகம் ஒரு முகம் ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகிக் காதலின் உவந்து வரம் கொடுத்தன்றே ஒரு முகம் மந்திர விதியின் மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஓர்க்கும்மே ஒரு முகம் எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித் திங்கள் போலத் திசை விளக்கும்மே ஒரு முகம் செறுநர்த் தேய்த்துச் செல் சமம் முருக்கிக் கறுவு கொள் நெஞ்சமொடு களம் வேட்டன்றே ஒரு முகம் குறவர் மட மகள் கொடி போல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகை அமர்ந்தன்றே ஆங்கு அ மூ_இரு முகனும் முறை நவின்று ஒழுகலின் ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின் செம் பொறி வாங்கிய மொய்ம்பின் சுடர் விடுபு வண் புகழ் நிறைந்து வசிந்து வாங்கு நிமிர் தோள் விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது ஒரு கை உக்கம் சேர்த்தியது ஒரு கை நலம் பெறு கலிங்கத்துக் குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை அங்குசம் கடாவ ஒரு கை இரு கை ஐ இரு வட்டமொடு எஃகு வலம் திரிப்ப ஒரு கை மார்பொடு விளங்க ஒரு கை தாரொடு பொலிய ஒரு கை கீழ் வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப ஒரு கை பாடு இன் படு மணி இரட்ட ஒரு கை நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒரு கை வான் அர_மகளிர்க்கு வதுவை சூட்ட ஆங்கு அப் பன்னிரு கையும் பாற்பட இயற்றி அந்தரப் பல்லியம் கறங்கத் திண் காழ் வயிர் எழுந்து இசைப்ப வால் வளை ஞரல உரம் தலைக்கொண்ட உரும் இடி முரசமொடு பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ விசும்பு ஆறு ஆக விரை செலல் முன்னி உலகம் புகழ்ந்த ஓங்கு உயர் விழுச் சீர் அலைவாய் சேறலும் நிலைஇய பண்பே அதாஅன்று சீரை தைஇய உடுக்கையர் சீரொடு வலம்புரி புரையும் வால் நரை முடியினர் மாசற இமைக்கும் உருவினர் மானின் உரிவை தைஇய ஊன் கெடு மார்பின் என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் நன் பகல் பல உடன் கழிந்த உண்டியர் இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர் யாவதும் கற்றோர் அறியா அறிவினர் கற்றோர்க்குத் தாம் வரம்பு ஆகிய தலைமையர் காமமொடு கடும் சினம் கடிந்த காட்சியர் இடும்பை யாவதும் அறியா இயல்பினர் மேவரத் துனி இல் காட்சி முனிவர் முன் புகப் புகை முகந்து அன்ன மாசு இல் தூ உடை முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்துச் செவி நேர்பு வைத்த செய்வுறு திவவின் நல் யாழ் நவின்ற நயன் உடை நெஞ்சின் மென் மொழி மேவலர் இன் நரம்பு உளர நோய் இன்று இயன்ற யாக்கையர் மாவின் அவிர் தளிர் புரையும் மேனியர் அவிர்-தொறும் பொன் உரை கடுக்கும் திதலையர் இன் நகைப் பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல் மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்கக் கடுவோடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிற்று அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல் பாம்பு படப் புடைக்கும் பல் வரிக் கொடும் சிறை புள் அணி நீள் கொடிச் செல்வனும் வெள் ஏறு வல வயின் உயரிய பலர் புகழ் திணி தோள் உமை அமர்ந்து விளங்கும் இமையா முக் கண் மூ_எயில் முருக்கிய முரண் மிகு செல்வனும் நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து நூறு பல் வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து ஈர்_இரண்டு ஏந்திய மருப்பின் எழில் நடைத் தாழ் பெரும் தடக் கை உயர்த்த யானை எருத்தம் ஏறிய திருக் கிளர் செல்வனும் நால் பெரும் தெய்வத்து நன் நகர் நிலைஇய உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கைப் பலர் புகழ் மூவரும் தலைவர் ஆக ஏமுறு ஞாலம்-தன்னில் தோன்றித் தாமரை பயந்த தா இல் ஊழி நான்முக ஒருவன் சுட்டிக் காண்வரப் பகலில் தோன்றும் இகல் இல் காட்சி நால் வேறு இயற்கைப் பதினொரு மூவரொடு ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர் மீன் பூத்து அன்ன தோன்றலர் மீன் சேர்பு வளி கிளர்ந்து அன்ன செலவினர் வளியிடைத் தீ எழுந்து அன்ன திறலினர் தீப் பட உரும் இடித்து அன்ன குரலினர் விழுமிய உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொள்மார் அந்தரக் கொட்பினர் வந்து உடன் காணத் தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் ஆவினன்குடி அசைதலும் உரியன் அதாஅன்று இரு_மூன்று எய்திய இயல்பினின் வழாஅது இருவர்ச் சுட்டிய பல்வேறு தொல் குடி அறு_நான்கு இரட்டி இளமை நல் யாண்டு ஆறினில் கழிப்பிய அறன் நவில் கொள்கை மூன்று வகைக் குறித்த முத்தீச் செல்வத்து இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண் புலராக் காழகம் புலர உடீஇ உச்சிக் கூப்பிய கையினர் தன் புகழ்ந்து ஆறெழுத்து அடக்கிய அரு மறைக் கேள்வி நா இயல் மருங்கில் நவிலப் பாடி விரையுறு நறு மலர் ஏந்திப் பெரிது உவந்து ஏரகத்து உறைதலும் உரியன் அதாஅன்று பைம் கொடி நறைக் காய் இடை இடுபு வேலன் அம் பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன் நறும் சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின் கொடும் தொழில் வல் வில் கொலைஇய கானவர் நீடு அமை விளைந்த தேக் கள் தேறல் குன்றகச் சிறுகுடி கிளையுடன் மகிழ்ந்து தொண்டகச்_சிறுபறை குரவை அயர விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறும் கான் குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி இணைத்த கோதை அணைத்த கூந்தல் முடித்த குல்லை இலை உடை நறும் பூச் செம் கால் மராஅத்த வால் இணர் இடை இடுபு சுரும்பு உணத் தொடுத்த பெரும் தண் மாத் தழை திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ மயில் கண்டு அன்ன மட நடை மகளிரொடு செய்யன் சிவந்த ஆடையன் செவ் அரைச் செயலைத் தண் தளிர் துயல்வரும் காதினன் கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன் குழலன் கோட்டன் குறும் பல்லியத்தன் தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவல் அம் கொடியன் நெடியன் தொடி அணி தோளன் நரம்பு ஆர்த்து அன்ன இன் குரல் தொகுதியொடு குறும்பொறிக் கொண்ட நறும் தண் சாயல் மருங்கில் கட்டிய நிலன் நேர்பு துகிலினன் முழவு உறழ் தடக் கையின் இயல ஏந்தி மென் தோள் பல் பிணை தழீஇத் தலைத்தந்து குன்று-தொறு ஆடலும் நின்ற தன் பண்பே அதாஅன்று சிறுதினை மலரொடு விரைஇ மறி அறுத்து வாரணக் கொடியொடு வயின் பட நிறீஇ ஊரூர் கொண்ட சீர் கெழு விழவினும் ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும் வேலன் தைஇய வெறி அயர் களனும் காடும் காவும் கவின் பெறு துருத்தியும் யாறும் குளனும் வேறு பல் வைப்பும் சதுக்கமும் சந்தியும் புதுப் பூம் கடம்பும் மன்றமும் பொதியிலும் கந்து உடை நிலையினும் மாண் தலைக் கொடியொடு மண்ணி அமைவர நெய்யோடு ஐயவி அப்பி ஐது உரைத்துக் குடந்தம்பட்டு கொழு மலர் சிதறி முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇச் செம் நூல் யாத்து வெண் பொரி சிதறி மத வலி நிலைஇய மாத் தாள் கொழு விடைக் குருதியொடு விரைஇய தூ வெள் அரிசி சில் பலிச் செய்து பல் பிரப்பு இரீஇச் சிறு பசு மஞ்சளொடு நறு விரை தெளித்துப் பெரும் தண் கணவீர நறும் தண் மாலை துணையுற அறுத்துத் தூங்க நாற்றி நளி மலைச் சிலம்பில் நன் நகர் வாழ்த்தி நறும் புகை எடுத்துக் குறிஞ்சி பாடி இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க உருவப் பல் பூத் தூஉய் வெருவரக் குருதிச் செந்தினை பரப்பிக் குற_மகள் முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியல் நகர் ஆடுகளம் சிலம்பப் பாடி பல உடன் கோடு வாய்வைத்துக் கொடு மணி இயக்கி ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி வேண்டுநர் வேண்டி ஆங்கு எய்தினர் வழிபட ஆண்டாண்டு உறைதலும் அறிந்த ஆறே ஆண்டாண்டு ஆயினும் ஆகக் காண்தக முந்து நீ கண்டுழி முகன் அமர்ந்து ஏத்திக் கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி நெடும் பெரும் சிமையத்து நீலப் பைம் சுனை ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ ஆல்_கெழு_கடவுள் புதல்வ மால் வரை மலை_மகள் மகனே மாற்றோர் கூற்றே வெற்றி வெல் போர்க் கொற்றவை சிறுவ இழை அணி சிறப்பின் பழையோள் குழவி வானோர் வணங்கு வில் தானைத் தலைவ மாலை மார்ப நூல் அறி புலவ செருவில் ஒருவ பொரு விறல் மள்ள அந்தணர் வெறுக்கை அறிந்தோர் சொல்மலை மங்கையர் கணவ மைந்தர் ஏறே வேல் கெழு தடக் கைச் சால் பெரும் செல்வ குன்றம் கொன்ற குன்றாக் கொற்றத்து விண் பொரு நெடு வரைக் குறிஞ்சிக் கிழவ பலர் புகழ் நன் மொழிப் புலவர் ஏறே அரும் பெறல் மரபின் பெரும் பெயர் முருக நசையுநர்க்கு ஆர்த்தும் இசை பேராள அலந்தோர்க்கு அளிக்கும் பொலம் பூண் சேஎய் மண்டு அமர் கடந்த நின் வென்று ஆடு அகலத்துப் பரிசிலர்த் தாங்கும் உரு கெழு நெடு வேஎள் பெரியோர் ஏத்தும் பெரும் பெயர் இயவுள் சூர் மருங்கு அறுத்த மொய்ம்பின் மதவலி போர் மிகு பொருந குருசில் எனப் பல யான் அறி அளவையின் ஏத்தி ஆனாது நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் நின் அடி உள்ளி வந்தனென் நின்னொடு புரையுநர் இல்லாப் புலமையோய் எனக் குறித்தது மொழியா அளவையின் குறித்து உடன் வேறு பல் உருவின் குறும் பல் கூளியர் சாறு அயர் களத்து வீறு பெறத் தோன்றி அளியன்தானே முது வாய் இரவலன் வந்தோன் பெரும நின் வண் புகழ் நயந்து என இனியவும் நல்லவும் நனி பல ஏத்தித் தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் வான் தோய் நிவப்பின் தான் வந்து எய்தி அணங்கு சால் உயர் நிலை தழீஇப் பண்டைத் தன் மணம் கமழ் தெய்வத்து இள நலம் காட்டி அஞ்சல் ஓம்பு-மதி அறிவல் நின் வரவு என அன்பு உடை நன் மொழி அளைஇ விளிவு இன்று இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து ஒரு நீ ஆகித் தோன்ற விழுமிய பெறல் அரும் பரிசில் நல்கு-மதி பல உடன் வேறு பல் துகிலின் நுடங்கி அகில் சுமந்து ஆர முழுமுதல் உருட்டி வேரல் பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு விண் பொரு நெடு வரைப் பரிதியின் தொடுத்த தண் கமழ் அலர் இறால் சிதைய நன் பல ஆசினி முது சுளை கலாவ மீமிசை நாக நறு மலர் உதிர யூகமொடு மா முக முசுக் கலை பனிப்பப் பூ நுதல் இரும் பிடி குளிர்ப்ப வீசிப் பெரும் களிற்று முத்து உடை வான் கோடு தழீஇத் தத்துற்று நன் பொன் மணி நிறம் கிளரப் பொன் கொழியா வாழை முழுமுதல் துமியத் தாழை இளநீர் விழுக் குலை உதிரத் தாக்கிக் கறிக் கொடிக் கரும் துணர் சாயப் பொறிப் புற மட நடை மஞ்ஞை பல உடன் வெரீஇக் கோழி வயப் பெடை இரியக் கேழலொடு இரும் பனை வெளிற்றின் புன் சாய் அன்ன குரூஉ மயிர் யாக்கைக் குடா அடி உளியம் பெரும் கல் விடர் அளை செறியக் கரும் கோட்டு ஆமா நல் ஏறு சிலைப்பச் சேண்-நின்று இழுமென இழிதரும் அருவிப் பழம் முதிர் சோலை மலை கிழவோனே #34 பத்துப்பாட்டு -7. நெடுநல்வாடை - (மதுரைக் கணக்காயனார் மகனார்) நக்கீரனார் **தலையாலங்காத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியது வையகம் பனிப்ப வலன் ஏர்பு வளைஇப் பொய்யா வானம் புதுப் பெயல் பொழிந்து என ஆர்கலி முனைஇய கொடும் கோல் கோவலர் ஏறு உடை இன நிரை வேறு புலம் பரப்பிப் புலம் பெயர் புலம்பொடு கலங்கிக் கோடல் நீடு இதழ் கண்ணி நீர் அலைக் கலாவ மெய்க் கொள் பெரும் பனி நலியப் பலர் உடன் கைக் கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க மா மேயல் மறப்ப மந்தி கூர பறவை படிவன வீழக் கறவை கன்று கோள் ஒழியக் கடிய வீசிக் குன்று குளிர்ப்பு அன்ன கூதிர்ப் பானாள் புன் கொடி முசுண்டைப் பொறிப் புற வான் பூப் பொன் போல் பீரமொடு புதல்புதல் மலரப் பைம் கால் கொக்கின் மென் பறைத் தொழுதி இரும் களி பரந்த ஈர வெண் மணல் செம் வரி நாரையோடு எவ்வாயும் கவரக் கயல் அறல் எதிரக் கடும் புனல் சாஅய்ப் பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண் மழை அகல் இரு விசும்பில் துவலை கற்ப அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த வண் தோட்டு நெல்லின் வரு கதிர் வணங்க முழுமுதல் கமுகின் மணி உறழ் எருத்தின் கொழு மடல் அவிழ்ந்த குழூஉக் கொள் பெரும் குலை நுண் நீர் தெவிள வீங்கிப் புடை திரண்டு தெண் நீர்ப் பசும் காய் சேறு கொள முற்ற நளி கொள் சிமைய விரவு மலர் வியன் காக் குளிர் கொள் சினைய குரூஉத் துளி தூங்க மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் படலைக் கண்ணிப் பரேர் எறுழ்த் திணி தோள் முடலை யாக்கை முழு வலி மாக்கள் வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து துவலைத் தண் துளி பேணார் பகல் இறந்து இரு கோட்டு அறுவையர் வேண்டு வயின் திரிதர வெள்ளி வள்ளி வீங்கு இறைப் பணைத் தோள் மெத்தென் சாயல் முத்து உறழ் முறுவல் பூ குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழைக் கண் மடவரல் மகளிர் பிடகைப் பெய்த செவ்வி அரும்பின் பைம் கால் பித்திகத்து அ இதழ் அவிழ்_பதம் கமழப் பொழுது அறிந்து இரும்பு செய் விளக்கின் ஈர் திரிக் கொளீஇ நெல்லும் மலரும் தூஉய்க் கைதொழுது மல்லல் ஆவணம் மாலை அயர மனை உறை புறவின் செம் கால் சேவல் இன்புறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது இரவும் பகலும் மயங்கிக் கையற்று மதலைப் பள்ளி மாறுவன இருப்பக் கடி உடை வியல் நகர் சிறு குறும் தொழுவர் கொள் உறழ் நறும் கல் பல கூட்டு மறுக வடவர் தந்த வான் கேழ் வட்டம் தென்புல மருங்கில் சாந்தொடு துறப்பக் கூந்தல் மகளிர் கோதை புனையார் பல் இரும் கூந்தல் சில் மலர் பெய்ம்மார் தண் நறும் தகர முளரி நெருப்பு அமைத்து இரும் காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்பக் கைவல் கம்மியன் கவின் பெறப் புனைந்த செம் கேழ் வட்டம் சுருக்கிக் கொடும் தறிச் சிலம்பி வால் நூல் வலந்தன தூங்க வானுற நிவந்த மேல் நிலை மருங்கின் வேனில் பள்ளித் தென்வளி தரூஉம் நேர் வாய்க் கட்டளை திரியாது திண் நிலைப் போர் வாய்க் கதவம் தாழொடு துறப்பக் கல்லென் துவலை தூவலின் யாவரும் தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார் பகு வாய்த் தடவில் செம் நெருப்பு ஆர ஆடல் மகளிர் பாடல் கொளப் புணர்மார் தண்மையின் திரிந்த இன் குரல் தீம் தொடை கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇக் கரும் கோட்டுச் சீறியாழ் பண்ணு முறை நிறுப்பக் காதலர்ப் பிரிந்தோர் புலம்பப் பெயல் கனைந்து கூதிர் நின்றன்றால் போதே மாதிரம் விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம் இரு கோல் குறிநிலை வழுக்காது குடக்கு ஏர்பு ஒரு திறம் சாரா அரைநாள் அமயத்து நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு தேஎம் கொண்டு தெய்வம் நோக்கிப் பெரும் பெயர் மன்னர்க்கு ஒப்ப மனை வகுத்து ஒருங்கு உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின் பரு இரும்பு பிணித்துச் செவ்வரக்கு உரீஇத் துணை மாண் கதவம் பொருத்தி இணை மாண்டு நாளொடு பெயரிய கோள் அமை விழு மரத்துப் போது அவிழ் குவளைப் புதுப் பிடி கால் அமைத்துத் தாழொடு குயின்ற போர் அமை புணர்ப்பின் கைவல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து ஐயவி அப்பிய நெய் அணி நெடு நிலை வென்று எழு கொடியொடு வேழம் சென்று புகக் குன்று குயின்று அன்ன ஓங்கு நிலை வாயில் திரு நிலைபெற்ற தீது தீர் சிறப்பின் தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து நெடு மயிர் எகினத் தூ நிற ஏற்றை குறும் கால் அன்னமோடு உகளும் முன்கடை பணை நிலை முனைஇய பல் உளை புரவி புல் உணாத் தெவிட்டும் புலம்பு விடு குரலொடு நிலவுப் பயன் கொள்ளும் நெடு வெண் முற்றத்துக் கிம்புரிப் பகு வாய் அம்பணம் நிறையக் கலிழ்ந்து வீழ் அருவிப் பாடு விறந்து அயல ஒலி நெடும் பீலி ஒல்க மெல் இயல் கலி மயில் அகவும் வயிர் மருள் இன் இசை நளி மலை சிலம்பின் சிலம்பும் கோயில் யவனர் இயற்றிய வினை மாண் பாவை கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து பரூஉத் திரி கொளீஇய குரூஉத் தலை நிமிர் எரி அறுஅறுகாலை-தோறு அமைவரப் பண்ணி பல்வேறு பள்ளி-தொறும் பாய் இருள் நீங்க பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது ஆடவர் குறுகா அரும் கடி வரைப்பின் வரை கண்டு அன்ன தோன்றல வரை சேர்பு வில் கிடந்து அன்ன கொடிய பல் வயின் வெள்ளி அன்ன விளங்கு சுதை உரீஇ மணி கண்டு அன்ன மாத் திரள் திண் காழ் செம்பு இயன்று அன்ன செய்வுறு நெடும் சுவர் உருவப் பல் பூ ஒரு கொடி வளைஇக் கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல் தசம் நான்கு எய்திய பணை மருள் நோன் தாள் இகல் மீக்கூறும் ஏந்து எழில் வரி நுதல் பொருது ஒழி நாகம் ஒழி எயிறு அருகு எறிந்து சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன் கூர் உளி குயின்ற ஈர் இலை இடை இடுபு தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்பப் புடை திரண்டு இருந்த குடத்த இடை திரண்டு உள்ளி நோன் முதல் பொருத்தி அடி அமைத்துப் பேர் அளவு எய்திய பெரும் பெயர்ப் பாண்டில் மடை மாண் நுண் இழை பொலியத் தொடை மாண்டு முத்து உடை சாலேகம் நாற்றி குத்துறுத்துப் புலிப் பொறி கொண்ட பூம் கேழ்த் தட்டத்துத் தகடு கண் புதையக் கொளீஇத் துகள் தீர்ந்து ஊட்டுறு பல் மயிர் விரைஇ வய_மான் வேட்டம் பொறித்து வியன் கண் கானத்து முல்லைப் பல் போது உறழப் பூ நிரைத்து மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத் துணை புணர் அன்னத் தூ நிறத் தூவி இணை அணை மேம்படப் பாய் அணை இட்டுக் காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத் தோடு அமை தூ மடி விரித்த சேக்கை ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்துப் பின் அமை நெடு வீழ் தாழத் துணை துறந்து நன் நுதல் உலறிய சின் மெல் ஓதி நெடு நீர் வார் குழை களைந்தெனக் குறும் கண் வாயுறை அழுத்திய வறிது வீழ் காதின் பொலம் தொடி தின்ற மயிர் வார் முன்கை வலம்புரி வளையொடு கடிகை_நூல் யாத்து வாளைப் பகு வாய் கடுப்ப வணக்குறுத்து செ விரல் கொளீஇய செம் கேழ் விளக்கத்துப் பூம் துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல் அம் மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு புனையா ஓவியம் கடுப்ப புனைவு இல் தளிர் ஏர் மேனித் தாய சுணங்கின் அம் பணைத் தடைஇய மென் தோள் முகிழ் முலை வம்பு விசித்து யாத்த வாங்கு சாய் நுசுப்பின் மெல் இயல் மகளிர் நல் அடி வருட நரை விராவுற்ற நறு மென் கூந்தல் செம் முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக் குறியவும் நெடியவும் உரை பல பயிற்றி இன்னே வருகுவர் இன் துணையோர் என உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிகக் கலுழ்ந்து நுண் சேறு வழித்த நோன் நிலை திரள் கால் ஊறா வறு முலை கொளீஇய கால் திருத்திப் புதுவது இயன்ற மெழுகு செய் பட மிசைத் திண் நிலை மருப்பின் ஆடு தலை ஆக விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து முரண் மிகு சிறப்பின் செல்வனொடு நிலைஇய உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிரா மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரிப் பனி செ விரல் கடைக்கண் சேர்த்திச் சில தெறியா புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு இன்னா அரும் படர் தீர விறல் தந்து இன்னே முடிக-தில் அம்ம மின் அவிர் ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை நீள் திரள் தடக் கை நிலம் மிசை புரளக் களிறு களம் படுத்த பெரும் செய் ஆடவர் ஒளிறு வாள் விழுப்புண் காணிய புறம் போந்து வடந்தைத் தண் வளி எறி-தொறும் நுடங்கித் தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய நன் பல் பாண்டில்_விளக்கில் பரூஉச் சுடர் அழல வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர் மணி புறத்து இட்ட மாத் தாள் பிடியொடு பருமம் களையாப் பாய் பரிக் கலிமா இரும் சேற்றுத் தெருவின் எறி துளி விதிர்ப்பப் புடை வீழ் அம் துகில் இட வயின் தழீஇ வாள் தோள் கோத்த வன்கண் காளை சுவல் மிசை அமைத்த கையன் முகன் அமர்ந்து நூல் கால் யாத்த மாலை வெண்குடை தவ்வென்று அசைஇத் தா துளி மறைப்ப நள்ளென் யாமத்தும் பள்ளிகொள்ளான் சிலரொடு திரிதரும் வேந்தன் பலரொடு முரணிய பாசறைத் தொழிலே #35 புறநானூறு 56- மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் ** (மதுரை மருதன் இளநாகனார் எனவும் பாடம்) **பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய **நன்மாறன் ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை மாற்று அரும் கணிச்சி மணி மிடற்றோனும் கடல் வளர் புரி வளை புரையும் மேனி அடல் வெம் நாஞ்சில் பனைக்கொடியோனும் மண்ணுறு திரு மணி புரையும் மேனி விண் உயர் புள் கொடி விறல் வெய்யோனும் மணி மயில் உயரிய மாறா வென்றிப் பிணிமுக ஊர்தி ஒண் செய்யோனும் என ஞாலம் காக்கும் கால முன்பின் தோலா நல் இசை நால்வருள்ளும் கூற்று ஒத்தீயே மாற்று அரும் சீற்றம் வலி ஒத்தீயே வாலியோனைப் புகழ் ஒத்தீயே இகழுநர் அடுநனை முருகு ஒத்தீயே முன்னியது முடித்தலின் ஆங்காங்கு அவரவர் ஒத்தலின் யாங்கும் அரியவும் உளவோ நினக்கே அதனால் இரவலர்க்கு அரும் கலம் அருகாது ஈயா யவனர் நல் கலம் தந்த தண் கமழ் தேறல் பொன் செய் புனை கலத்து ஏந்தி நாளும் ஒண் தொடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து ஆங்கு இனிது ஒழுகு-மதி ஓங்கு வாள் மாற அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும் வெம் கதிர்ச் செல்வன் போலவும் குடதிசைத் தண் கதிர் மதியம் போலவும் நின்று நிலைஇயர் உலகமோடு உடனே #36 புறநானூறு 189 - மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார் தெண் கடல் வளாகம் பொதுமை இன்றி வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும் நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் கடு_மாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும் உண்பது நாழி உடுப்பவை இரண்டே பிறவும் எல்லாம் ஓர் ஒக்கும்மே செல்வத்துப் பயனே ஈதல் துய்ப்பேம் எனினே தப்புந பலவே #37 புறநானூறு 395 - மதுரை நக்கீரர் **பாடப்பட்டோன்: சோழநாட்டு பிடவூர்கிழார் மகன் பெருஞ்சாத்தன் மென்புலத்து வயல் உழவர் வன்புலத்து பகடு விட்டுக் குறு முயலின் குழைச் சூட்டொடு நெடு வாளைப் பல் உவியல் பழம் சோற்றுப் புக வருந்திப் புதல் தளவின் பூச் சூடி அரிப் பறையால் புள் ஓப்பி அவிழ் நெல்லின் அரியல் ஆருந்து மனைக் கோழி பைம் பயிரின்னே கானக்கோழிக் கவர் குரலொடு நீர்க் கோழிக் கூய் பெயர்க்குந்து வேய் அன்ன மென் தோளால் மயில் அன்ன மென் சாயலார் கிளி கடியின்னே அகல் அள்ளல் புள் இரீஇயுந்து ஆங்கு அப் பல நல்ல புலன் அணியும் சீர் சான்ற விழுச் சிறப்பின் சிறு கண் யானை பெறல் அரும் தித்தன் செல்லா நல் இசை உறந்தைக் குணாது நெடும் கை வேண்மான் அரும் கடிப் பிடவூர் அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம் பெரும முன்_நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்திக் கதிர் நனி சென்ற கனை இருள் மாலைத் தன் கடைத் தோன்றி என் உறவு இசைத்தலின் தீம் குரல் அரிக் குரல் தடாரியொடு ஆங்கு நின்ற என் கண்டு சிறிதும் நில்லான் பெரிதும் கூறான் அரும் கலம் வரவே அருளினன் வேண்டி ஐயென உரைத்தன்றி நல்கி தன் மனைப் பொன் போல் மடந்தையைக் காட்டி இவனை என் போல் போற்று என்றோனே அதன் கொண்டு அவன் மறவலேனே பிறர் உள்ளலேனே அகன் ஞாலம் பெரிது வெம்பினும் மிக வானுள் எரி தோன்றினும் குள_மீனோடும் தாள் புகையினும் பெரும் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் பசும் கண் கருனைச் சூட்டொடு மாந்தி விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க என உள்ளதும் இல்லதும் அறியாது ஆங்கு அமைந்தன்றால் வாழ்க அவன் தாளே #6 அகநானூறு 300 நெய்தல் - உலோச்சனார்(நக்கீரர்) நாள் வலை முகந்த கோள் வல் பரதவர் நுணங்கு மணல் ஆங்கண் உணங்கப் பெய்ம்மார் பறி கொள் கொள்ளையர் மறுக உக்க மீன் ஆர் குருகின் கானல் அம் பெரும் துறை எல்லை தண் பொழில் சென்று எனச் செலீஇயர் தேர் பூட்டு அயர ஏஎய் வார் கோல் செறி தொடி திருத்திப் பாறு மயிர் நீவிச் செல் இனி மடந்தை நின் தோழியொடு மனை எனச் சொல்லிய அளவை தான் பெரிது கலுழ்ந்து தீங்கு ஆயினள் இவள் ஆயின் தாங்காது நொதுமலர் போலப் பிரியின் கதுமெனப் பிறிது ஒன்று ஆகலும் அஞ்சுவல் அதனால் சேணின் வருநர் போலப் பேணா இரும் கலி யாணர் எம் சிறுகுடித் தோன்றின் வல் எதிர் கொண்டு மெல்லிதின் வினைஇத் துறையும் மான்றன்று பொழுதே சுறவும் ஓதம் மல்கலின் மாறு ஆயினவே எல்லின்று தோன்றல் செல்லாதீம் என எமர் குறை கூறத் தங்கி ஏமுற இளையரும் புரவியும் இன்புற நீயும் இல் உறை நல் விருந்து அயர்தல் ஒல்லுதும் பெரும நீ நல்குதல் பெறினே &258 - (காமக்கணிப் பசலையார்)நப்பசலையார் #1 நற்றிணை 243 பாலை - (காமக்கணிப் பசலையார்)நப்பசலையார் தேம் படு சிலம்பில் தெள் அறல் தழீஇய துறுகல் அயல தூ மணல் அடைகரை அலங்கு சினை பொதுளிய நறு வடி மாஅத்துப் பொதும்பு-தோறு அல்கும் பூம் கண் இரும் குயில் கவறு பெயர்த்து அன்ன நில்லா வாழ்க்கை இட்டு அகறல் ஓம்பு-மின் அறிவுடையீர் எனக் கையறத் துறப்போர்க் கழறுவ போல மெய் உற இருந்து மேவர நுவல இன்னாது ஆகிய காலை பொருள்-வயின் பிரியல் ஆடவர்க்கு இயல்பு எனின் அரிது-மன்று அம்ம அறத்தினும் பொருளே &259 - நப்பண்ணனார் #1 பரிபாடல் 19 செவ்வேள் - நப்பண்ணனார் **இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார் **பண் :: காந்தாரம் நில வரை அழுவத்தான் வான் உறை புகல் தந்து புல வரை அறியாத புகழ் பூத்த கடம்பு அமர்ந்து அரு முனி மரபின் ஆன்றவர் நுகர்ச்சி மன் இரு நிலத்தோரும் இயைக என ஈத்த நின் தண் பரங்குன்றத்து இயல் அணி நின் மருங்கு சாறு கொள் துறக்கத்தவளொடு மாறுகொள்வது போலும் மயில் கொடி வதுவை புலத்தினும் போரினும் போர் தோலாக் கூடல் கலப்போடு இயைந்த இரவுத் தீர் எல்லை அறம் பெரிது ஆற்றி அதன் பயன் கொண்மார் சிறந்தோர் உலகம் படருநர் போல உரி மாண் புனை கலம் ஒண் துகில் தாங்கிப் புரி மாண் புரவியர் போக்கு அமை தேரர் தெரி மலர்த் தாரர் தெரு இருள் சீப்ப நின் குன்றொடு கூடல் இடை எல்லாம் ஒன்றுபு நேர் பூ நிறை பெய்து இரு நிலம் பூட்டிய தார் போலும் மாலைத் தலை நிறையால் தண் மணல் ஆர் வேலை யாத்திரை செல் யாறு சுடரொடு சூழ்வரு தாரகை மேருப் புடை வரு சூழல் புலம் மாண் வழுதி மட மயில் ஓரும் மனையவரோடும் கடன் அறி காரிய கண்ணவரோடும் நின் சூர் உறை குன்றின் தட வரை ஏறி மேல் பாடு வலம் திரி பண்பின் பழ மதிச் சூடி அசையும் சுவல் மிசைத் தானையின் பாடிய நாவின் பரந்த உவகையின் நாடும் நகரும் அடைய அடைந்து அனைத்தே படு மணி யானை நெடியாய் நீ மேய கடி நகர் சூழ் நுவலுங்கால் தும்பி தொடர் கதுப்பத் தும்பி தொடர் ஆட்டி வம்பு அணி பூம் கயிற்று வாங்கி மரன் அசைப்பார் வண் தார்ப் புரவி வழி நீங்க வாங்குவார் திண் தேர் வழியின் செல நிறுப்பார் கண்டக் கரும்பு கவழம் மடுப்பார் நிரந்து பரி நிமிர் தானையான் பாசறை நீர்த்தே குருகு எறி வேலோய் நின் குன்றக் கீழ் நின்ற இடை நிலம் யாம் ஏத்தும் ஆறு குரங்கு அருந்து பண்ணியம் கொடுப்போரும் கரும்பு கருமுகக் கணக்கு அளிப்போரும் தெய்வப் பிரமம் செய்குவோரும் கை வைத்து இமிர்பு குழல் காண்குவோரும் யாழின் இளி குரல் சமம் கொள்வோரும் வேள்வியின் அழகு இயல் விளம்புவோரும் கூர நாண் குரல் கொம்மென ஒலிப்ப ஊழுற முரசின் ஒலி செய்வோரும் என்றூழ் உற வரும் இரு சுடர் நேமி ஒன்றிய சுடர் நிலை உள்படுவோரும் இரதி காமன் இவள் இவன் எனாஅ விரகியர் வினவ வினா இறுப்போரும் இந்திரன் பூசை இவள் அகலிகை இவன் சென்ற கவுதமன் சினனுறக் கல் உரு ஒன்றிய படி இது என்று உரைசெய்வோரும் இன்ன பலபல எழுத்து நிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும் நேர் வரை விரி அறை வியல் இடத்து இழைக்கச் சோபன நிலை அது துணி பரங்குன்றத்து மாஅல் மருகன் மாட மருங்கு பிறந்த தமரின் பெயர்ந்து ஒரு பேதை பிறங்கல் இடையிடைப் புக்குப் பிறழ்ந்து யான் வந்த நெறியும் மறந்தேன் சிறந்தவர் ஏஎ ஓஒ என விளி ஏற்பிக்க ஏஎ ஓஒ என்று ஏலா அவ் விளி அவ் இசை முழை ஏற்று அழைப்ப அழைத்துழிச் செல்குவள் ஆங்குத் தமர்க் காணாமை மீட்சியும் கூஉக்கூஉ மேவும் மடமைத்தே வாழ்த்து உவப்பான் குன்றின் வகை நனி நுனி நயவரு சாய்ப்பின் நாறு இணர்ச் சினை போழ் பல்லவன் தீம் சுனை உதிர்ப்ப உதிர்த்த சுனையின் எடுத்த தலைய அலர் முகிழுற அவை கிடப்ப தெரி மலர் நனையுறுவ ஐம் தலை அவிர் பொறி அரவம் மூத்த மைந்தன் அருகு ஒன்று மற்று இளம் பார்ப்பு என ஆங்கு இளமகளிர் மருளப் பாங்கர் பசும்பிடி இள முகிழ் நெகிழ்ந்த வாய் ஆம்பல் கை போல் பூத்த கமழ் குலைக் காந்தள் எருவை நறும் தோடு எரி இணர் வேங்கை உருவம் மிகு தோன்றி ஊழ் இணர் நறவம் பருவம் இல் கோங்கம் பகை மலர் இலவம் நிணந்தவை கோத்தவை நெய்தவை தூக்க மணந்தவை போல வரை மலை எல்லாம் நிறைந்தும் உறழ்ந்தும் நிமிர்ந்தும் தொடர்ந்தும் விடியல் வியல் வானம் போலப் பொலியும் நெடியாய் நின் குன்றின் மிசை நின யானைச் சென்னி நிறம் குங்குமத்தால் புனையாப் பூ நீர் ஊட்டிப் புனை கவரி சார்த்தாப் பொன் பவழப் பூம் காம்பின் பொன் குடை ஏற்றி மலிவு உடை உள்ளத்தான் வந்து செய் வேள்வியுள் பல் மணம் மன்னு பின் இரும் கூந்தலர் கன்னிமை கனிந்த காலத்தார் நின் கொடி ஏற்று வாரணம் கொள் கவழ மிச்சில் மறு அற்ற மைந்தர் தோள் எய்தார் மணந்தார் முறுவல் தலையளி எய்தார் நின் குன்றம் குறுகிச் சிறப்பு உணாக்கால் குறப் பிணாக் கொடியைக் கூடியோய் வாழ்த்துச் சிறப்பு உணாக் கேட்டி செவி உடையும் ஒலியலும் செய்யை மற்று ஆங்கே படையும் பவழக் கொடி நிறம் கொள்ளும் உருவும் உருவத் தீ ஒத்தி முகனும் விரி கதிர் முற்றா விரி சுடர் ஒத்தி எவ்வத்து ஒவ்வா மா முதல் தடிந்து தெவ்வுக் குன்றத்துத் திருந்து வேல் அழுத்தி அவ் வரை உடைத்தோய் நீ இவ் வரை மருங்கில் கடம்பு அமர் அணி நிலை பகர்ந்தேம் உடங்கு அமர் ஆயமொடு ஏத்தினம் தொழுதே &260 - (பாலத்தனார்)நப்பாலத்தனார் #1 நற்றிணை 52 பாலை - (பாலத்தனார்)நப்பாலத்தனார் மாக் கொடி அதிரல் பூவொடு பாதிரித் தூத் தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல் மணம் கமழ் நாற்றம் மரீஇ யாம் இவள் சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி வீங்கு உவர்க் கவவின் நீங்கல் செல்லேம் நீயே ஆள்வினை சிறப்ப எண்ணி நாளும் பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே அன்பு இலை வாழி என் நெஞ்சே வெம் போர் மழவர் பெருமகன் மா வள் ஓரி கைவளம் இயைவது ஆயினும் ஐது ஏகு அம்ம இயைந்து செய்பொருளே #2 நற்றிணை 240 பாலை - நப்பாலத்தனார் ஐது ஏகு அம்ம இவ் உலகு படைத்தோனே வை ஏர் வால் எயிற்று ஒள் நுதல் குறுமகள் கை கவர் முயக்கம் மெய் உறத் திருகி ஏங்கு உயிர்ப்பட்ட வீங்கு முலை ஆகம் துயில் இடைப்படூஉம் தன்மையது ஆயினும் வெயில் வெய்துற்ற பரல் அவல் ஒதுக்கில் கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தல் யானை இன நிரை வௌவும் கானம் திண்ணிய மலை போன்றிசினே &261 - நம்பி குட்டுவன் #1 குறுந்தொகை 109 நெய்தல் - நம்பி குட்டுவன் முள் கால் இறவின் முடங்கு புறப் பெரும் கிளை புணரி இகு திரை தரூஉம் துறைவன் புணரிய இருந்த ஞான்றும் இன்னது-மன்னோ நல் நுதல் கவினே #2 குறுந்தொகை 243 நெய்தல் - நம்பி குட்டுவனார் மான் அடி அன்ன கவட்டு இலை அடும்பின் தார் மணி அன்ன ஒண் பூக் கொழுதி ஒண் தொடி மகளிர் வண்டல் அயரும் புள் இமிழ் பெரும் கடல் சேர்ப்பனை உள்ளேன் தோழி படீஇயர் என் கண்ணே #3 நற்றிணை 145 நெய்தல் - நம்பி குட்டுவன் இரும் கழி பொருத ஈர வெண் மணல் மாக் கொடி அடும்பின் மா இதழ் அலரி கூந்தல் மகளிர் கோதைக் கூட்டும் காமர் கொண்கன் நாம் வெம் கேண்மை ஐது ஏய்ந்து இல்லா ஊங்கும் நம்மொடு புணர்ந்தனன் போல உணரக் கூறித் தான் யாங்கு என்னும் அறன் இல் அன்னை யான் எழில் அறிதலும் உரியள் நீயும் நம் பராரைப் புன்னைச் சேரி மெல்ல நள்ளென் கங்குலும் வரும் அரோ அம்ம வாழி அவர் தேர் மணிக் குரலே #4 நற்றிணை 236 குறிஞ்சி - நம்பி குட்டுவனார் நோயும் கைம்மிகப் பெரிதே மெய்யும் தீ உமிழ் தெறலின் வெய்து ஆகின்றே ஒய்யெனச் சிறிது ஆங்கு உயிரியர் பையென முன்றில் கொளினே நந்துவள் பெரிது என நிரைய நெஞ்சத்து அன்னைக்கு உய்த்து ஆண்டு உரை இனி வாழி தோழி புரை இல் நுண் நேர் எல் வளை நெகிழ்த்தோன் குன்றத்து அண்ணல் நெடு வரை ஆடித் தண்ணென வியல் அறை மூழ்கிய வளி என் பயலை ஆகம் தீண்டிய சிறிதே #5 நற்றிணை 345 நெய்தல் - நம்பி குட்டுவனார் கானல் கண்டல் கழன்று உகு பைம் காய் நீல் நிற இரும் கழி உட்பட வீழ்ந்து என உறு கால் தூக்கத் தூங்கி ஆம்பல் சிறு_வெண்_காக்கை ஆவித்து அன்ன வெளிய விரியும் துறைவ என்றும் அளிய பெரிய கேண்மை நும் போல் சால்பு எதிர்கொண்ட செம்மையோரும் தேறா நெஞ்சம் கையறுபு வாட நீடு இன்று விரும்பார் ஆயின் வாழ்தல் மற்று எவனோ தேய்கமா தெளிவே &262- நரிவெரூஉத்தலையார் #1 குறுந்தொகை 5 நெய்தல் - நரி வெரூஉத்தலையார் அது-கொல் தோழி காம நோயே வதி குருகு உறங்கும் இன் நிழல் புன்னை உடை திரைத் திவலை அரும்பும் தீம் நீர் மெல்லம்புலம்பன் பிரிந்து எனப் பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே #2 குறுந்தொகை 236 நெய்தல் - நரிவெரூஉத்தலையார் விட்டு என விடுக்கும் நாள் வருக அது நீ நொந்தனை ஆயின் தந்தனை சென்மோ குன்றத்து அன்ன குவவு மணல் அடைகரை நின்ற புன்னை நிலம் தோய் படு சினை வம்ப நாரை சேக்கும் தண் கடல் சேர்ப்ப நீ உண்ட என் நலனே #3 புறநானூறு 5 - நரிவெரூஉத் தலையார் **பாடப்பட்டோன் - சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் **கோப்பெருஞ்சேரல் இரும்பொறை எருமை அன்ன கரும் கல் இடை-தோறு ஆனில் பரக்கும் யானைய முன்பின் கானக நாடனை நீயோ பெரும நீ ஓர் ஆகலின் நின் ஒன்று மொழிவல் அருளும் அன்பும் நீக்கி நீங்கா நிரயம் கொள்பவரொடு ஒன்றாது காவல் குழவி கொள்பவரின் ஓம்பு-மதி அளிதோ தானே அது பெறல் அரும்-குரைத்தே #4 புறநானூறு 195 - நரிவெரூஉ தலையார் பல் சான்றீரே பல் சான்றீரே கயல் முள் அன்ன நரை முதிர் திரை கவுள் பயன் இல் மூப்பின் பல் சான்றீரே கணிச்சிக் கூர்ம் படைக் கடும் திறல் ஒருவன் பிணிக்கும் காலை இரங்குவிர்-மாதோ நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது செய்தல் ஓம்பு-மின் அது தான் எல்லாரும் உவப்பது அன்றியும் நல் ஆற்றுப் படூஉம் நெறியும் ஆர் அதுவே &263 - நரைமுடி நெட்டையார் #1 அகநானூறு 339 பாலை - நரைமுடி நெட்டையார் ** (நிரைமுடி நெட்டையார்) வீங்கு விசைப் பிணித்த விரை பரி நெடும் தேர் நோன் கதிர் சுமந்த ஆழி ஆழ் மருங்கில் பாம்பு என முடுகு நீர் ஓடக் கூம்பிப் பற்று விடு விரலின் பயறு காய் ஊழ்ப்ப அற்சிரம் நின்றன்றால் பொழுதே முற்பட ஆள்வினைக்கு எழுந்த அசைவு இல் உள்ளத்து ஆண்மை வாங்கக் காமம் தட்பக் கவைபடு நெஞ்சம் கண்கண் அகைய இரு தலைக் கொள்ளி இடை நின்று வருந்தி ஒரு தலைப் படாஅ உறவி போன்றனம் நோம்-கொல் அளியள் தானே யாக்கைக்கு உயிர் இயைந்து அன்ன நட்பின் அவ் உயிர் வாழ்தல் அன்ன காதல் சாதல் அன்ன பிரிவு அரியோளே &264 - நல்லச்சுதனார் #1 பரிபாடல் 21 செவ்வேள் - நல்லச்சுதனார் **இசையமைத்தவர் :: கண்ணகனார் **பண் :: காந்தாரம் ஊர்ந்ததை எரி புரை ஓடை இடை இமைக்கும் சென்னிப் பொரு சமம் கடந்த புகழ் சால் வேழம் தொட்டதை தைப்பு அமை சருமத்தின் தாள் இயை தாமரை துப்பு அமை துவர் நீர்த் துறை மறை அழுத்திய வெரிநத் தோலொடு முழு மயிர் மிடைந்த வரி மலி அர உரி வள்பு கண்டு அன்ன புரி மென் பீலிப் போழ் புனை அடையல் கையதை கொள்ளாத் தெவ்வர் கொள் மா முதல் தடிந்து புள்ளொடு பெயரிய பொருப்புப் புடை திறந்த வேல் பூண்டதை சுருள் உடை வள்ளி இடை இடுபு இழைத்த உருள் இணர்க் கடம்பின் ஒன்றுபடு கமழ் தார் அமர்ந்ததை புரையோர் நாவில் புகழ் நலம் முற்றி நிரை ஏழ் அடுக்கிய நீள் இலை பாலை அரை வரை மேகலை அணி நீர்ச் சூழித் தரை விசும்பு உகந்த தண் பரங்குன்றம் குன்றத்து அடியுறை இயைக எனப் பரவுதும் வென்றிக் கொடி அணி வெல்வ நின் தொழுது சுடு பொன் ஞெகிழத்து முத்து அரி சென்று ஆர்ப்பத் துடியின் அடி பெயர்த்துத் தோள் அசைத்துத் தூக்கி அடு நறா மகிழ் தட்ப ஆடுவாள் தகைமையின் நுனை இலங்கு எஃகு எனச் சிவந்த நோக்கமொடு துணை அணை கேள்வனைத் துனிப்பவள் நிலையும் நிழல்_காண்_மண்டிலம் நோக்கி அழல் புனை அவிர் இழை திருத்துவாள் குறிப்பும் பொதிர்த்த முலையிடைப் பூசிச் சந்தனம் உதிர்த்துப் பின் உற ஊட்டுவாள் விருப்பும் பல் ஊழ் இவைஇவை நினைப்பின் வல்லோன் ஓவத்து எழுது எழில் போலும் மா தடிந் திட்டோய் நின் குன்றின் மிசை மிசை படு சாந்தாற்றி போல எழிலி இசை படு பக்கம் இரு பாலும் கோலி விடு பொறி மஞ்ஞை பெயர்புடன் ஆட விரல் செறி தூம்பின் விடு துளைக்கு ஏற்ப முரல் குரல் தும்பி அவிழ் மலர் ஊத யாணர் வண்டு இனம் யாழ் இசை பிறக்கப் பாணி முழவு இசை அருவி நீர் ததும்ப ஒருங்கு பரந்தவை எல்லாம் ஒலிக்கும் இரங்கு முரசினான் குன்று தாழ் நீர் இமிழ் சுனை நாப்பண் குளித்து அவண் மீ நீர் நிவந்த விறல்_இழை கேள்வனை வேய் நீர் அழுந்து தன் கையின் விடுக எனப் பூ நீர் பெய் வட்டம் எறிய புணை பெறாது அரு நிலை நீரின் அவள் துயர் கண்டு கொழுநன் மகிழ் தூங்கிக் கொய் பூம் புனல் வீழ்ந்து தழுவும் தகை வகைத்துத் தண் பரங்குன்று வண்டு ஆர் பிறங்கல் மைந்தர் நீவிய தண் கமழ் சாந்தம் தைஇய வளியும் கயல் புரை கண்ணியர் கமழ் துகள் உதிர்த்த புயல் புரை கதுப்பகம் உளரிய வளியும் உருள் இணர்க் கடம்பின் நெடுவேட்கு எடுத்த முருகு கமழ் புகை நுழைந்த வளியும் அசும்பும் அருவி அரு விடர்ப் பரந்த பசும் பூண் சேஎய் நின் குன்றம் நன்கு உடைத்து கண் ஒளிர் திகழ் அடர் இடு சுடர் படர் கொடி மின்னுப் போல் ஒண் நகை தகை வகை நெறிபெற இடையிடை இழைத்து யாத்த செண்ணிகைக் கோதை கதுப்போடு இயல மணி மருள் தேன் மகிழ் தட்ப ஒல்கிப் பிணி நெகிழ பைம் துகில் நோக்கம் சிவப்பு ஊரப் பூம் கொடி போல நுடங்குவாள் ஆங்குத் தன் சீர்தகு கேள்வன் உருட்டும் துடிச் சீரான் கோடு அணிந்த முத்து ஆரம் ஒல்க ஒசிபவள் ஏர் ஆடை அசைய அணி அசையத் தான் அசையும் வாடை உளர் கொம்பர் போன்ம் வாளி புரள்பவை போலும் துடிச் சீர்க்குத் தோள் ஊழ் பெயர்ப்பவள் கண் மாறு அமர் அட்டவை மற வேல் பெயர்ப்பவை ஆறு_இரு தோளவை அறு முகம் விரித்தவை நன்று அமர் ஆயமோடு ஒருங்கு நின் அடியுறை இன்று போல் இயைக எனப் பரவுதும் ஒன்றார்த் தேய்த்த செல்வ நின் தொழுதே &265 - (மதுரை ஆசிரியர்) நல்லந்துவனார் #1 அகநானூறு 43 பாலை - (மதுரை ஆசிரியர்) நல்லந்துவனார் கடல் முகந்து கொண்ட கமம் சூல் மா மழை சுடர் நிமிர் மின்னொடு வலன் ஏர்பு இரங்கி என்றூழ் உழந்த புன் தலை மடப் பிடி கை மாய் நீத்தம் களிற்றொடு படீஇய நிலனும் விசும்பும் நீர் இயைந்து ஒன்றிக் குறுநீர்க் கன்னல் எண்ணுநர் அல்லது கதிர் மருங்கு அறியாது அஞ்சுவரப் பாஅய்த் தளி மயங்கின்றே தண் குரல் எழிலி யாமே கொய் அகை முல்லை காலொடு மயங்கி மை இரும் கானம் நாறும் நறு நுதல் பல் இரும் கூந்தல் மெல் இயல் மடந்தை நல் எழில் ஆகம் சேர்ந்தனம் என்றும் அளியரோ அளியர் தாமே அளி இன்று ஏதில் பொருட்பிணி போகித் தம் இன் துணை பிரியும் மடமையோரே #1அ. கலித்தொகை - கடவுள் வாழ்த்து - (நல்லந்துவனார்) ஆறு அறி அந்தணர்க்கு அரு மறை பல பகர்ந்து தேறு நீர் சடைக் கரந்து திரிபுரம் தீ மடுத்துக் கூறாமல் குறித்ததன் மேற்செல்லும் கடும் கூளி மாறாப் போர் மணி மிடற்று எண் கையாய் கேள் இனி படு பறை பல இயம்பப் பல் உருவம் பெயர்த்து நீ கொடுகொட்டி ஆடுங்கால் கோடு உயர் அகல் அல்குல் கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ மண்டு அமர் பல கடந்து மதுகையால் நீறு அணிந்து பண்டரங்கம் ஆடுங்கால் பணை எழில் அணை மென் தோள் வண்டு அரற்றும் கூந்தலாள் வளர் தூக்கு தருவாளோ கொலை உழுவைத் தோல் அசைஇக் கொன்றைத் தார் சுவல் புரளத் தலை அங்கை கொண்டு நீ காபாலம் ஆடுங்கால் முலை அணிந்த முறுவலாள் முன் பாணி தருவாளோ என ஆங்கு பாணியும் தூக்கும் சீரும் என்று இவை மாண் இழை அரிவை காப்ப ஆணம் இல் பொருள் எமக்கு அமர்ந்தனை ஆடி ** கலித்தொகை - ஐந்தாவது நெய்தற்கலி - நல்லந்துவனார் #2 கலித்தொகை 118 - நல்லந்துவனார் வெல் புகழ் மன்னவன் விளங்கிய ஒழுக்கத்தால் நல் ஆற்றின் உயிர் காத்து நடுக்கு அறத் தான் செய்த தொல் வினைப் பயன் துய்ப்பத் துறக்கம் வேட்டு எழுந்தால் போல் பல் கதிர் ஞாயிறு பகல் ஆற்றி மலை சேர ஆனாது கலுழ் கொண்ட உலகத்து மற்று அவன் ஏனையான் அளிப்பான் போல் இகல் இருள் மதி சீப்ப குடை நிழல் ஆண்டாற்கும் ஆளிய வருவாற்கும் இடை நின்ற காலம் போல் இறுத்தந்த மருள் மாலை மாலை நீ தூ அறத் துறந்தாரை நினைத்தலின் கயம் பூத்த போது போல் குவிந்த என் எழில் நலம் எள்ளுவாய் ஆய் சிறை வண்டு ஆர்ப்பச் சினைப் பூ போல் தளைவிட்ட காதலர்ப் புணர்ந்தவர் காரிகை கடிகல்லாய் மாலை நீ தையெனக் கோவலர் தனிக் குழல் இசை கேட்டுப் பையென்ற நெஞ்சத்தேம் பக்கம் பாராட்டுவாய் செவ்வழி யாழ் நரம்பு அன்ன கிளவியார் பாராட்டும் பொய் தீர்ந்த புணர்ச்சியுள் புது நலம் கடிகல்லாய் மாலை நீ தகை மிக்க தாழ் சினைப் பதி சேர்ந்து புள் ஆர்ப்ப பகை மிக்க நெஞ்சத்தேம் புன்மை பாராட்டுவாய் தகை மிக்க புணர்ச்சியார் தாழ் கொடி நறு முல்லை முகை முகம் திறந்து அன்ன முறுவலும் கடிகல்லாய் என ஆங்கு மாலையும் அலரும் நோனாது எம்-வயின் நெஞ்சமும் எஞ்சும்-மன்-தில்ல எஞ்சி உள்ளாது அமைந்தோர் உள்ளும் உள் இல் உள்ளம் உள்ளுள் உவந்தே #3 கலித்தொகை 119 - நல்லந்துவனார் அகன் ஞாலம் விளக்கும் தன் பல் கதிர் வாய் ஆக பகல் நுங்கியது போலப் படு சுடர் கல் சேர இகல் மிகு நேமியான் நிறம் போல இருள் இவர நிலவுக் காண்பது போல அணி மதி ஏர்தர கண் பாயல்பெற்ற போல் கணைக் கால மலர் கூம்பத் தம் புகழ் கேட்டார் போல் தலை சாய்த்து மரம் துஞ்ச முறுவல் கொள்பவை போல முகை அவிழ்பு புதல் நந்தச் சிறு வெதிர் குழல் போல சுரும்பு இமிர்ந்து இம்மெனப் பறவை தம் பார்ப்பு உள்ளக் கறவை தம் பதி-வயின் கன்று அமர் விருப்பொடு மன்று நிறை புகுதர மா வதி சேர மாலை வாள் கொள அந்தி அந்தணர் எதிர்கொள அயர்ந்து செம் தீ செவ் அழல் தொடங்க வந்ததை வால் இழை மகளிர் உயிர் பொதி அவிழ்க்கும் காலை ஆவது அறியார் மாலை என்மனார் மயங்கியோரே #4 கலித்தொகை 120 - நல்லந்துவனார் அருள் தீர்ந்த காட்சியான் அறன் நோக்கான் நயம் செய்யான் வெருவுற உய்த்தவன் நெஞ்சம் போல் பைபய இருள் தூர்பு புலம்பு ஊரக் கனை சுடர் கல் சேர உரவுத் தகை மழுங்கித் தன் இடும்பையால் ஒருவனை இரப்பவன் நெஞ்சம் போல் புல்லென்று புறம்மாறிக் கரப்பவன் நெஞ்சம் போல் மரம் எல்லாம் இலை கூம்பத் தோற்றம் சால் செக்கருள் பிறை நுதி எயிறு ஆக நால் திசையும் நடுக்குறூஉம் மடங்கல் காலைக் கூற்று நக்கது போலும் உட்குவரு கடு மாலை மாலை நீ உள்ளம் கொண்டு அகன்றவர் துணை தாராப் பொழுதின்-கண் வெள்ள மான் நிறம் நோக்கி கணை தொடுக்கும் கொடியான் போல் அல்லல் பட்டு இருந்தாரை அயர்ப்பிய வந்தாயோ மாலை நீ ஈரம் இல் காதலர் இகந்து அருளா இடன் நோக்கிப் போர் தொலைந்து இருந்தாரைப் பாடு எள்ளி நகுவார் போல் ஆர் அஞர் உற்றாரை அணங்கிய வந்தாயோ மாலை நீ கந்து ஆதல் சான்றவர் களைதாராப் பொழுதின்-கண் வெந்தது ஓர் புண்ணின் கண் வேல் கொண்டு நுழைப்பான் போல் காய்ந்த நோய் உழப்பாரைக் கலக்கிய வந்தாயோ என ஆங்கு இடன் இன்று அலைத்தரும் இன்னா செய் மாலை துனி கொள் துயர் தீரக் காதலர் துனைதர மெல்லியான் பருவத்து மேல் நின்ற கடும் பகை ஒல்லென நீக்கி ஒருவாது காத்து ஓம்பும் நல் இறை தோன்றக் கெட்டு ஆங்கு இல் ஆகின்றால் இருள் அகத்து ஒளித்தே #5 கலித்தொகை 121 - நல்லந்துவனார் ஒண் சுடர் கல் சேர உலகு ஊரும் தகையது தெண் கடல் அழுவத்துத் திரை நீக்கா எழுதரூஉம் தண் கதிர் மதியத்து அணி நிலா நிறைத்தரப் புள் இனம் இரை மாந்திப் புகல் சேர ஒலி ஆன்று வள் இதழ் கூம்பிய மணி மருள் இரும் கழி பள்ளி புக்கது போலும் பரப்பு நீர் தண் சேர்ப்ப தாங்க அரும் காமத்தைத் தணந்து நீ புறம்மாற தூங்கு நீர் இமிழ் திரை துணை ஆகி ஒலிக்குமே உறையொடு வைகிய போது போல் ஒய்யென நிறை ஆனாது இழிதரூஉம் நீர் நீந்து கண்ணாட்கு வாராய் நீ புறம்மாற வருந்திய மேனியாட்கு ஆர் இருள் துணை ஆகி அசை வளி அலைக்குமே கமழ் தண் தாது உதிர்ந்து உக ஊழுற்ற கோடல் வீ இதழ் சோரும் குலை போல இறை நீவு வளையாட்கு இன் துணை நீ நீப்ப இரவினுள் துணை ஆகித் தன் துணை பிரிந்து அயாஅம் தனிக் குருகு உசாவுமே ஒண் சுடர் ஞாயிற்று விளக்கத்தான் ஒளி சாம்பும் நண்பகல் மதியம் போல் நலம் சாய்ந்த அணியாட்கு என ஆங்கு எறி திரை தந்திட இழிந்த மீன் இன் துறை மறி திரை வருந்தாமல் கொண்டு ஆங்கு நெறி தாழ்ந்து சாயினள் வருந்தியாள் இடும்பை பாய் பரிக் கடும் திண் தேர் களையினோ இடனே #6 கலித்தொகை 122 - நல்லந்துவனார் கோதை ஆயமும் அன்னையும் அறிவுறப் போது எழில் உண்கண் புகழ் நலன் இழப்பக் காதல் செய்து அருளாது துறந்தார்-மாட்டு ஏது இன்றிச் சிறிய துனித்தனை துன்னா செய்து அமர்ந்தனை பலவும் நூறு அடுக்கினை இனைபு ஏங்கி அழுதனை அலவலை உடையை என்றி தோழீ கேள் இனி மாண் எழில் மாதர் மகளிரோடு அமைந்து அவன் காணும் பண்பிலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் பேணி அவன் சிறிது அளித்தக்கால் என் நாண் இல் நெஞ்சம் நெகிழ்தலும் காண்பல் இருள் உறழ் இரும் கூந்தல் மகளிரோடு அமைந்து அவன் தெருளும் பண்பிலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் அருளி அவன் சிறிது அளித்தக்கால் என் மருளி நெஞ்சம் மகிழ்தலும் காண்பல் ஒள் இழை மாதர் மகளிரோடு அமைந்து அவன் உள்ளும் பண்பிலன் ஆதல் அறிவேன்-மன் அறியினும் புல்லி அவன் சிறிது அளித்தக்கால் என் அல்லல் நெஞ்சம் மடங்கலும் காண்பல் அதனால் யாம நடுநாள் துயில்கொண்டு ஒளித்த காம நோயின் கழீஇய நெஞ்சம் தான் அவர்-பால் பட்டது ஆயின் நாம் உயிர் வாழ்தலோ நகை நனி உடைத்தே #7 கலித்தொகை 123 - நல்லந்துவனார் கரும் கோட்டு நறும் புன்னை மலர் சினை மிசை-தொறும் சுரும்பு ஆர்க்கும் குரலினோடு இரும் தும்பி இயைபு ஊத ஒருங்கு உடன் இம்மென இமிர்தலின் பாடலோடு அரும் பொருள் மரபின் மால் யாழ் கேளாக் கிடந்தான் போல் பெரும் கடல் துயில்கொள்ளும் வண்டு இமிர் நறும் கானல் காணாமை இருள் பரப்பிக் கையற்ற கங்குலான் மாணா நோய் செய்தான்-கண் சென்றாய் மற்று அவனை நீ காணவும் பெற்றாயோ காணாயோ மட நெஞ்சே கொல் ஏற்றுச் சுறவு இனம் கடி கொண்ட மருள் மாலை அல்லல் நோய் செய்தான்-கண் சென்றாய் மற்று அவனை நீ புல்லவும் பெற்றாயோ புல்லாயோ மட நெஞ்சே வெறி கொண்ட புள் இனம் வதி சேரும் பொழுதினான் செறி வளை நெகிழ்த்தான்-கண் சென்றாய் மற்று அவனை நீ அறியவும் பெற்றாயோ அறியாயோ மட நெஞ்சே என ஆங்கு எல்லையும் இரவும் துயில் துறந்து பல் ஊழ் அரும் படர் அவல நோய் செய்தான்-கண் பெறல் நசைஇ இரும் கழி ஓதம் போல் தடுமாறி வருந்தினை அளிய என் மடம் கெழு நெஞ்சே #8 கலித்தொகை 124 - நல்லந்துவனார் ஞாலம் மூன்று அடித் தாய முதல்வற்கு முது முறைப் பால் அன்ன மேனியான் அணிபெறத் தைஇய நீல நீர் உடை போலத் தகைபெற்ற வெண் திரை வால் எக்கர் வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப ஊர் அலர் எடுத்து அரற்ற உள்ளாய் நீ துறத்தலின் கூரும் தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன் காரிகை பெற்ற தன் கவின் வாடக் கலுழ்பு ஆங்கே பீர் அலர் அணி கொண்ட பிறை நுதல் அல்லாக்கால் இணைபு இவ் ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின் புணை இல்லா எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன் துணையாருள் தகைபெற்ற தொல் நலம் இழந்து இனி அணி வனப்பு இழந்த தன் அணை மென் தோள் அல்லாக்கால் இன்று இவ் ஊர் அலர் தூற்ற எய்யாய் நீ துறத்தலின் நின்ற தன் எவ்வ நோய் என்னையும் மறைத்தாள்-மன் வென்ற வேல் நுதி ஏய்க்கும் விறல் நலன் இழந்து இனி நின்று நீர் உகக் கலுழும் நெடும் பெரும் கண் அல்லாக்கால் அதனால் பிரிவு இல்லாய் போல நீ தெய்வத்தின் தெளித்தக்கால் அரிது என்னாள் துணிந்தவள் ஆய் நலம் பெயர்தரப் புரி உளைக் கலி மான் தேர் கடவுபு விரி தண் தார் வியல் மார்ப விரைக நின் செலவே #9 கலித்தொகை 125 - நல்லந்துவனார் கண்டவர் இல் என உலகத்துள் உணராதார் தங்காது தகைவு இன்றித் தாம் செய்யும் வினைகளுள் நெஞ்சு அறிந்த கொடியவை மறைப்பினும் அறிபவர் நெஞ்சத்துக் குறுகிய கரி இல்லை ஆகலின் வண் பரி நவின்ற வய_மான் செல்வ நன்கு அதை அறியினும் நயன் இல்லா நாட்டத்தால் அன்பு இலை என வந்து கழறுவல் ஐய கேள் மகிழ் செய் தே_மொழித் தொய்யில் சூழ் இள முலை முகிழ் செய முள்கிய தொடர்பு அவள் உண்கண் அவிழ் பனி உறைப்பவும் நல்காது விடுவாய் இமிழ் திரை கொண்க கொடியை காண் நீ இலங்கு ஏர் எல் வளை ஏர் தழை தைஇ நலம் செல நல்கிய தொடர்பு அவள் சாஅய்ப் புலந்து அழப் புல்லாது விடுவாய் இலங்கு நீர்ச் சேர்ப்ப கொடியை காண் நீ இன் மணிச் சிலம்பின் சில் மொழி ஐம்பால் பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல் நுண் வரி வாட வாராது விடுவாய் தண்ணம் துறைவ தகாஅய் காண் நீ என ஆங்கு அனையள் என்று அளி-மதி பெரும நின் இன்று இறை வரை நில்லா வளையள் இவட்கு இனிப் பிறை ஏர் சுடர் நுதல் பசலை மறையச் செல்லும் நீ மணந்தனை விடினே #10 கலித்தொகை 126 - நல்லந்துவனார் பொன் மலை சுடர் சேரப் புலம்பிய இடன் நோக்கித் தன் மலைந்து உலகு ஏத்த தகை மதி ஏர்தரச் செக்கர் கொள் பொழுதினான் ஒலி நீவி இன நாரை முக்கோல் கொள் அந்தணர் முதுமொழி நினைவார் போல் எக்கர் மேல் இறைகொள்ளும் இலங்கு நீர்த் தண் சேர்ப்ப அணிச் சிறை இனக் குருகு ஒலிக்குங்கால் நின் திண் தேர் மணிக் குரல் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே உள் ஆன்ற ஒலியவாய் இருப்பக் கண்டு அவை கானல் புள் என உணர்ந்து பின் புலம்பு கொண்டு இனையுமே நீர் நீவிக் கஞன்ற பூக் கமழுங்கால் நின் மார்பில் தார் நாற்றம் என இவள் மதிக்கும்-மன் மதித்து ஆங்கே அலர் பதத்து அசை வளி வந்து ஒல்கக் கழி பூத்த மலர் என உணர்ந்து பின் மம்மர் கொண்டு இனையுமே நீள் நகர் நிறை ஆற்றாள் நினையுநள் வதிந்தக்கால் தோள் மேலாய் என நின்னை மதிக்கும்-மன் மதித்து ஆங்கே நனவு எனப் புல்லுங்கால் காணாளாய்க் கண்டது கனவு என உணர்ந்து பின் கையற்றுக் கலங்குமே என ஆங்கு பல நினைந்து இனையும் பைதல் நெஞ்சின் அலமரல் நோயுள் உழக்கும் என் தோழி மதி மருள் வாள் முகம் விளங்க புது நலம் ஏர்தரப் பூண்க நின் தேரே #11 கலித்தொகை 127 - நல்லந்துவனார் தெரி இணர் ஞாழலும் தேம் கமழ் புன்னையும் புரி அவிழ் பூவின கைதையும் செருந்தியும் வரி ஞிமிறு இமிர்ந்து ஆர்ப்ப இரும் தும்பி இயைபு ஊதச் செரு மிகு நேமியான் தார் போலப் பெரும் கடல் வரி மணல் வாய் சூழும் வயங்கு நீர்த் தண் சேர்ப்ப கொடும் கழி வளைஇய குன்று போல் வால் எக்கர் நடுங்கு நோய் தீர நின் குறி வாய்த்தாள் என்பதோ கடும் பனி அறல் இகு கயல் ஏர் கண் பனி மல்க இடும்பையோடு இனைபு ஏங்க இவளை நீ துறந்ததை குறி இன்றிப் பல் நாள் நின் கடும் திண் தேர் வரு_பதம் கண்டு எறி திரை இமிழ் கானல் எதிர்கொண்டாள் என்பதோ அறிவு அஞர் உழந்து ஏங்கி ஆய் நலம் வறிதாக செறி வளை தோள் ஊர இவளை நீ துறந்ததை காண் வர இயன்ற இக் கவின் பெறு பனித் துறை யாமத்து வந்து நின் குறி வாய்த்தாள் என்பதோ வேய் நலம் இழந்த தோள் விளங்கு_இழை பொறை ஆற்றாள் வாள் நுதல் பசப்பு ஊர இவளை நீ துறந்ததை அதனால் இறை வளை நெகிழ்ந்த எவ்வ நோய் இவள் தீர உரவுக் கதிர் தெறும் என ஓங்கு திரை விரைபு தன் கரை அமல் அடும்பு அளித்த ஆஅங்கு உரவு நீர்ச் சேர்ப்ப அருளினை அளிமே #12 கலித்தொகை 128 - நல்லந்துவனார் தோள் துறந்து அருளாதவர் போல் நின்று வாடை தூக்க வணங்கிய தாழை ஆடு கோட்டு இருந்த அசை நடை நாரை நளி இரும் கங்குல் நம் துயர் அறியாது அளி இன்று பிணி இன்று விளியாது நரலும் கானல் அம் சேர்ப்பனைக் கண்டாய் போல புதுவது கவினினை என்றி ஆயின் நனவின் வாரா நயனிலாளனைக் கனவில் கண்டு யான் செய்தது கேள் இனி அலந்து ஆங்கு அமையலென் என்றானைப் பற்றி என் நலம் தாராயோ எனத் தொடுப்பேன் போலவும் கலந்து ஆங்கே என் கவின் பெற முயங்கி புலம்பல் ஓம்பு என அளிப்பான் போலவும் முலையிடைத் துயிலும் மறந்தீத்தோய் என நிலை அழி நெஞ்சத்தேன் அழுவேன் போலவும் வலையுறு மயிலின் வருந்தினை பெரிது எனத் தலையுற முன் அடி பணிவான் போலவும் கோதை கோலா இறைஞ்சி நின்ற ஊதை அம் சேர்ப்பனை அலைப்பேன் போலவும் யாது என் பிழைப்பு என நடுங்கி ஆங்கே பேதையைப் பெரிது எனத் தெளிப்பான் போலவும் ஆங்கு கனவினால் கண்டேன் தோழி காண்தகக் கனவின் வந்த கானல் அம் சேர்ப்பன் நனவின் வருதலும் உண்டு என அனை வரை நின்றது என் அரும் பெறல் உயிரே #13 கலித்தொகை 129 - நல்லந்துவனார் தொல் ஊழி தடுமாறித் தொகல் வேண்டும் பருவத்தால் பல் வயின் உயிர் எல்லாம் படைத்தான்-கண் பெயர்ப்பான் போல் எல்லுறு தெறு கதிர் மடங்கித் தன் கதிர் மாய நல் அற நெறி நிறீஇ உலகு ஆண்ட அரசன் பின் அல்லது மலைந்திருந்து அற நெறி நிறுக்கல்லா மெல்லியான் பருவம் போல் மயங்கு இருள் தலைவர எல்லைக்கு வரம்பு ஆய இடும்பை கூர் மருள் மாலை பாய் திரைப் பாடு ஓவாப் பரப்பு நீர் பனிக் கடல் தூ அறத் துறந்தனன் துறைவன் என்று அவன் திறம் நோய் தெற உழப்பார்-கண் இமிழ்தியோ எம் போலக் காதல் செய்து அகன்றாரை உடையையோ நீ மன்று இரும் பெண்ணை மடல் சேர் அன்றில் நன்று அறை கொன்றனர் அவர் எனக் கலங்கிய என் துயர் அறிந்தனை நரறியோ எம் போல இன் துணைப் பிரிந்தாரை உடையையோ நீ பனி இருள் சூழ்தரப் பைதல் அம் சிறு குழல் இனி வரின் உயரும்-மன் பழி எனக் கலங்கிய தனியவர் இடும்பை கண்டு இனைதியோ எம் போல இனிய செய்து அகன்றாரை உடையையோ நீ என ஆங்கு அழிந்து அயல் அறிந்த எவ்வம் மேற்படப் பெரும் பேதுறுதல் களை-மதி பெரும வருந்திய செல்லல் தீர்த்த திறன் அறி ஒருவன் மருந்து அறைகோடலின் கொடிதே யாழ நின் அருந்தியோர் நெஞ்சம் அழிந்து உக விடினே #14 கலித்தொகை 130 - நல்லந்துவனார் நயனும் வாய்மையும் நன்னர் நடுவும் இவனின் தோன்றிய இவை என இரங்கப் புரை தவ நாடிப் பொய் தபுத்து இனிது ஆண்ட அரைசனோடு உடன் மாய்ந்த நல் ஊழிச் செல்வம் போல் நிரை கதிர் கனலி பாடொடு பகல் செல கல்லாது முதிர்ந்தவன் கண் இல்லா நெஞ்சம் போல் புல் இருள் பரத்தரூஉம் புலம்பு கொள் மருள் மாலை இ மாலை ஐயர் அவிர் அழல் எடுப்ப அரோ என் கையறு நெஞ்சம் கனன்று தீ மடுக்கும் இ மாலை இரும் கழி மா மலர் கூம்ப அரோ என் அரும் படர் நெஞ்சம் அழிவொடு கூம்பும் இ மாலை கோவலர் தீம் குழல் இனைய அரோ என் பூ எழில் உண்கண் புலம்பு கொண்டு இனையும் என ஆங்கு படு சுடர் மாலையொடு பைதல் நோய் உழப்பாளைக் குடி புறங்காத்து ஓம்பும் செங்கோலான் வியன் தானை விடுவழி விடுவழிச் சென்றாங்கு அவர் தொடுவழி தொடுவழி நீங்கின்றால் பசப்பே #15 கலித்தொகை 131 - நல்லந்துவனார் பெரும் கடல் தெய்வம் நீர் நோக்கித் தெளித்து என் திருந்து இழை மென் தோள் மணந்தவன் செய்த அரும் துயர் நீக்குவேன் போல்-மன் பொருந்துபு பூக் கவின் கொண்ட புகழ் சால் எழில் உண்கண் நோக்குங்கால் நோக்கின் அணங்கு ஆக்கும் சாயலாய் தாக்கி இன மீன் இகல் மாற வென்ற சின மீன் எறி சுறா வான் மருப்புக் கோத்து நெறி செய்த நெய்தல் நெடு நார் பிணித்து யாத்துக் கை உளர்வின் யாழ் இசை கொண்ட இன வண்டு இமிர்ந்து ஆர்ப்பத் தாழாது உறைக்கும் தட மலர் தண் தாழை வீழ் ஊசல் தூங்கப்பெறின் மாழை மட மான் பிணை இயல் வென்றாய் நின் ஊசல் கடைஇ யான் இகுப்ப நீடு ஊங்காய் தட மென் தோள் நீத்தான் திறங்கள் பகர்ந்து நாணின-கொல் தோழி நாணின-கொல் தோழி இரவு எலாம் நல் தோழி நாணின என்பவை வாள் நிலா ஏய்க்கும் வயங்கு ஒளி எக்கர் மேல் ஆனாப் பரிய அலவன் அளை புகூஉம் கானல் கமழ் ஞாழல் வீ ஏய்ப்பத் தோழி என் மேனி சிதைத்தான் துறை மாரி வீழ் இரும் கூந்தல் மதைஇய நோக்கு எழில் உண்கண் தாழ் நீர முத்தின் தகை ஏய்க்கும் முறுவலாய் தேயா நோய் செய்தான் திறம் கிளந்து நாம் பாடும் சேய் உயர் ஊசல் சீர் நீ ஒன்று பாடித்தை பார்த்து உற்றன தோழி பார்த்து உற்றன தோழி இரவு எலாம் நல் தோழி பார்த்து உற்றன என்பவை தன் துணையில்லாள் வருந்தினாள்-கொல் என இன் துணை அன்றில் இரவின் அகவாவே அன்று தான் ஈர்த்த கரும்பு அணி வாட என் மென் தோள் ஞெகிழ்த்தான் துறை கரை கவர் கொடும் கழிக் கண் கவர் புள் இனம் திரை உறப் பொன்றிய புலவு மீன் அல்லதை இரை உயிர் செகுத்து உண்ணாத் துறைவனை யாம் பாடும் அசை வரல் ஊசல் சீர் அழித்து ஒன்று பாடித்தை அருளின-கொல் தோழி அருளின-கொல் தோழி இரவு எலாம் தோழி அருளின என்பவை கணம்கொள் இடு மணல் காவி வருந்த பிணங்கு இரு மோட்ட திரை வந்து அளிக்கும் மணம் கமழ் ஐம்பாலார் ஊடலை ஆங்கே வணங்கி உணர்ப்பான் துறை என நாம் பாட மறை நின்று கேட்டனன் நீடிய வால் நீர் கிடக்கை வயங்கு நீர்ச் சேர்ப்பனை யான் என உணர்ந்து நீ நனி மருள தேன் இமிர் புன்னை பொருந்தி தான் ஊக்கினன் அவ் ஊசலை வந்தே #16 கலித்தொகை 132 - நல்லந்துவனார் உரவு நீர்த் திரை பொர ஓங்கிய எக்கர் மேல் விரவுப் பல் உருவின வீழ் பெடை துணை ஆக இரை தேர்ந்து உண்டு அசாவிடூஉம் புள் இனம் இறைகொள முரைசு மூன்று ஆள்பவர் முரணியோர் முரண் தப நிரை களிறு இடைபட நெறி யாத்த இருக்கை போல் சிதைவு இன்றிச் சென்றுழிச் சிறப்பு எய்தி வினை வாய்த்துத் துறைய கலம் வாய் சூழும் துணி கடல் தண் சேர்ப்ப புன்னைய நறும் பொழில் புணர்ந்தனை இருந்தக்கால் நல்_நுதால் அஞ்சல் ஓம்பு என்றதன் பயன் அன்றோ பாயின பசலையால் பகல் கொண்ட சுடர் போன்றாள் மாவின தளிர் போலும் மாண் நலம் இழந்ததை பல் மலர் நறும் பொழில் பழி இன்றிப் புணர்ந்தக்கால் சில்_மொழி தெளி எனத் தேற்றிய சிறப்பு அன்றோ வாடுபு வனப்பு ஓடி வயக்குறா மணி போன்றாள் நீடு இறை நெடு மென் தோள் நிரை வளை நெகிழ்ந்ததை அடும்பு இவர் அணி எக்கர் ஆடி நீ மணந்தக்கால் கொடும்_குழாய் தெளி எனக் கொண்டதன் கொளை அன்றோ பொறை ஆற்றா நுசுப்பினால் பூ வீந்த கொடி போன்றாள் மறை பிறர் அறியாமை மாணா நோய் உழந்ததை என ஆங்கு வழிபட்ட தெய்வம் தான் வலி எனச் சார்ந்தார்-கண் கழியும் நோய் கைம்மிக அணங்கு ஆகியது போல பழி பரந்து அலர் தூற்ற என் தோழி அழி படர் அலைப்ப அகறலோ கொடிதே #17 கலித்தொகை 133 - நல்லந்துவனார் மா மலர் முண்டகம் தில்லையோடு ஒருங்கு உடன் கானல் அணிந்த உயர் மணல் எக்கர் மேல் சீர் மிகு சிறப்பினோன் மர முதல் கை சேர்த்த நீர் மலி கரகம் போல் பழம் தூங்கு முடத் தாழைப் பூ மலர்ந்தவை போல புள் அல்கும் துறைவ கேள் ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல் போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல் அன்பு எனப்படுவது தன் கிளை செறாஅமை அறிவு எனப்படுவது பேதையார் சொல் நோன்றல் செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை முறை எனப்படுவது கண்ணோடாது உயிர் வௌவல் பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல் ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின் என் தோழி நல் நுதல் நலன் உண்டு துறத்தல் கொண்க தீம் பால் உண்பவர் கொள் கலம் வரைதல் நின் தலை வருந்தியாள் துயரம் சென்றனை களைமோ பூண்க நின் தேரே #18 கலித்தொகை 134 - நல்லந்துவனார் மல்லரை மறம் சாய்த்த மலர் தண் தார் அகலத்தோன் ஒல்லாதார் உடன்று ஓட உருத்து உடன் எறிதலின் கொல் யானை அணி நுதல் அழுத்திய ஆழி போல் கல் சேர்பு ஞாயிறு கதிர் வாங்கி மறைதலின் இரும் கடல் ஒலித்து ஆங்கே இரவுக் காண்பது போலப் பெரும் கடல் ஓத நீர் வீங்குபு கரை சேர போஒய வண்டினால் புல்லென்ற துறையவாய்ப் பாயல் கொள்பவை போலக் கய மலர் வாய் கூம்ப ஒரு நிலையே நடுக்குற்று இவ் உலகு எலாம் அச்சுற இரு நிலம் பெயர்ப்பு அன்ன எவ்வம் கூர் மருள் மாலை தவல் இல் நோய் செய்தவர் காணாமை நினைத்தலின் இகல் இடும் பனி தின எவ்வத்துள் ஆழ்ந்து ஆங்கே கவலைகொள் நெஞ்சினேன் கலுழ் தரக் கடல் நோக்கி அவலம் மெய் கொண்டது போலும் அஃது எவன்-கொலோ நடுங்கு நோய் செய்தவர் நல்காமை நினைத்தலின் கடும் பனி கைம்மிகக் கையாற்றுள் ஆழ்ந்து ஆங்கே நடுங்கு நோய் உழந்த என் நலன் அழிய மணல் நோக்கி இடும்பை நோய்க்கு இகுவன போலும் அஃது எவன்-கொலோ வையினர் நலன் உண்டார் வாராமை நினைத்தலின் கையறு நெஞ்சினேன் கலக்கத்துள் ஆழ்ந்து ஆங்கே மையல்கொள் நெஞ்சொடு மயக்கத்தால் மரன் நோக்கி எவ்வத்தால் இயன்ற போல் இலை கூம்பல் எவன்-கொலோ என ஆங்கு கரை காணாப் பௌவத்துக் கலம் சிதைந்து ஆழ்பவன் திரை தரப் புணை பெற்றுத் தீது இன்றி உய்ந்து ஆங்கு விரைவனர் காதலர் புகுதர நிரை_தொடி துயரம் நீங்கின்றால் விரைந்தே #19 கலித்தொகை 135 - நல்லந்துவனார் துணை புணர்ந்து எழுதரும் தூ நிற வலம்புரி இணை திரள் மருப்பு ஆக எறி வளி பாகனா அயில் திணி நெடும் கதவு அமைத்து அடைத்து அணி கொண்ட எயில் இடு களிறே போல் இடு மணல் நெடும் கோட்டைப் பயில் திரை நடு நன்னாள் பாய்ந்து உறூஉம் துறைவ கேள் கடி மலர்ப் புன்னைக் கீழ் காரிகை தோற்றாளைத் தொடி நெகிழ்ந்த தோள் அளா துறப்பாயால் மற்று நின் குடிமைக்-கண் பெரியது ஓர் குற்றமாய் கிடவாதோ ஆய் மலர் புன்னைக் கீழ் அணி நலம் தோற்றாளை நோய் மலி நிலையளாத் துறப்பாயால் மற்று நின் வாய்மைக்-கண் பெரியது ஓர் வஞ்சமாய்க் கிடவாதோ திகழ் மலர் புன்னைக் கீழ் திரு நலம் தோற்றாளை இகழ் மலர் கண்ணளாத் துறப்பாயால் மற்று நின் புகழ்மைக்-கண் பெரியது ஓர் புகர் ஆகிக் கிடவாதோ என ஆங்கு சொல்லக் கேட்டனை ஆயின் வல்லே அணி கிளர் நெடு வரை அலைக்கும் நின் அகலத்து மணி கிளர் ஆரம் தாரொடு துயல்வர உயங்கினள் உயிர்க்கும் என் தோழிக்கு இயங்கு ஒலி நெடும் திண் தேர் கடவு-மதி விரைந்தே #20 கலித்தொகை 136 - நல்லந்துவனார் கூற்று இவர் திமில் எறி திரை ஈண்டி வந்து அலைத்தக்கால் உவறு நீர் உயர் எக்கர் அலவன் ஆடு அளை வரித் தவல் இல் தண் கழகத்துத் தவிராது வட்டிப்பக் கவறுற்ற வடு ஏய்க்கும் காமரு பூம் கடல் சேர்ப்ப முத்து உறழ் மணல் எக்கர் அளித்தக்கால் முன் ஆயம் பத்து உருவம் பெற்றவன் மனம் போல நந்தியாள் அத் திறத்து நீ நீங்க அணி வாடி அவ் ஆயம் வித்தத்தால் தோற்றான் போல் வெய் துயர் உழப்பவோ முடத் தாழை முடுக்கருள் அளித்தக்கால் வித்தாயம் இடைத் தங்கக் கண்டவன் மனம் போல நந்தியாள் கொடை தக்காய் நீ ஆயின் நெறி அல்லாக் கதி ஓடி உடை பொதி இழந்தான் போல் உறு துயர் உழப்பவோ நறு வீ தாழ் புன்னைக் கீழ் நயந்து நீ அளித்தக்கால் மறு_வித்தம் இட்டவன் மனம் போல நந்தியாள் அறிவித்து நீ நீங்கக் கருதியாய்க்கு அப் பொருள் சிறு_வித்தம் இட்டான் போல் செறி துயர் உழப்பவோ ஆங்கு கொண்டு பலர் தூற்றும் கௌவை அஞ்சாய் தீண்டற்கு அருளித் திறன் அறிந்து எழீஇப் பாண்டியம் செய்வான் பொருளினும் ஈண்டுக இவள் நலம் ஏறுக தேரே #21 கலித்தொகை 137 - நல்லந்துவனார் அரிதே தோழி நாண் நிறுப்பாம் என்று உணர்தல் பெரிதே காமம் என் உயிர் தவச் சிறிதே பலவே யாமம் பையுளும் உடைய சிலவே நம்மோடு உசாவும் அன்றில் அழல் அவிர் வயங்கு இழை ஒலிப்ப உலமந்து எழில் எஞ்சு மயிலின் நடுங்கிச் சேக்கையின் அழல் ஆகின்று அவர் நக்கதன் பயனே மெல்லிய நெஞ்சு பையுள் கூரத் தம் சொல்லினான் எய்தமை அல்லது அவர் நம்மை வல்லவன் தைஇய வாக்கு அமை கடு விசை வில்லினான் எய்தலோ இலர்-மன் ஆய்_இழை வில்லினும் கடிது அவர் சொல்லினுள் பிறந்த நோய் நகை முதல் ஆக நட்பினுள் எழுந்த தகைமையின் நலிதல் அல்லது அவர் நம்மை வகைமையின் எழுந்த தொல் முரண் முதல் ஆகப் பகைமையின் நலிதலோ இலர்-மன் ஆய்_இழை பகைமையின் கடிது அவர் தகைமையின் நலியும் நோய் நீயலேன் என்று என்னை அன்பினால் பிணித்துத் தம் சாயலின் சுடுதல் அல்லது அவர் நம்மைப் பாய் இருள் அற நீக்கும் நோய் தபு நெடும் சுடர் தீயினால் சுடுதலோ இலர்-மன் ஆய்_இழை தீயினும் கடிது அவர் சாயலின் கனலும் நோய் ஆங்கு அன்னர் காதலர் ஆக அவர் நமக்கு இன் உயிர் போத்தரும் மருத்துவர் ஆயின் யாங்கு ஆவது-கொல் தோழி எனையதூஉம் தாங்குதல் வலித்தன்று ஆயின் நீங்க அரிது உற்றன்று அவர் உறீஇய நோயே #22 கலித்தொகை 138 - நல்லந்துவனார் எழில் மருப்பு எழில் வேழம் இகுதரு கடாத்தால் தொழில் மாறித் தலை வைத்த தோட்டி கை நிமிர்ந்து ஆங்கு அறிவும் நம் அறிவு ஆய்ந்த அடக்கமும் நாணொடு வறிது ஆகப் பிறர் என்னை நகுபவும் நகுபு உடன் மின் அவிர் நுடக்கமும் கனவும் போல் மெய் காட்டி என் நெஞ்சம் என்னோடு நில்லாமை நனி வௌவி தன் நலம் கரந்தாளைத் தலைப்படும் ஆறு எவன்-கொலோ மணிப் பீலி சூட்டிய நூலொடு மற்றை அணிப் பூளை ஆவிரை எருக்கொடு பிணித்து யாத்து மல்லல் ஊர் மறுகின்-கண் இவள் பாடும் இஃது ஒத்தன் எல்லீரும் கேட்டீ-மின் என்று படரும் பனை ஈன்ற மாவும் சுடர் இழை நல்கியாள் நல்கியவை பொறை என் வரைத்து அன்றிப் பூ_நுதல் ஈத்த நிறை அழி காம நோய் நீந்தி அறையுற்ற உப்பு இயல் பாவை உறை உற்றது போல உக்குவிடும் என் உயிர் பூளை பொல மலர் ஆவிரை வேய் வென்ற தோளாள் எமக்கு ஈத்த பூ உரிது என் வரைத்து அன்றி ஒள்_இழை தந்த பரிசு அழி பைதல் நோய் மூழ்கி எரி பரந்த நெய்யுள் மெழுகின் நிலையாது பைபயத் தேயும் அளித்து என் உயிர் இளையாரும் ஏதிலவரும் உளைய யான் உற்றது உசாவும் துணை என்று யான் பாடக் கேட்டு அன்புறு கிளவியாள் அருளி வந்து அளித்தலின் துன்பத்தில் துணை ஆய மடல் இனி இவள் பெற இன்பத்துள் இடம்படல் என்று இரங்கினள் அன்புற்று அடங்கு அரும் தோற்றத்து அரும் தவம் முயன்றோர் தம் உடம்பு ஒழித்து உயர் உலகு இனிது பெற்று ஆங்கே #23 கலித்தொகை 139 - நல்லந்துவனார் சான்றவிர் வாழியோ சான்றவிர் என்றும் பிறர் நோயும் தம் நோய் போல் போற்றி அறன் அறிதல் சான்றவர்க்கு எல்லாம் கடன் ஆனால் இவ் இருந்த சான்றீர் உமக்கு ஒன்று அறிவுறுப்பேன் மான்ற துளி இடை மின்னுப் போல் தோன்றி ஒருத்தி ஒளியோடு உரு என்னைக் காட்டி அளியள் என் நெஞ்சு ஆறு கொண்டாள் அதன் கொண்டும் துஞ்சேன் அணி அலங்கு ஆவிரைப் பூவோடு எருக்கின் பிணையல் அம் கண்ணி மிலைந்து மணி ஆர்ப்ப ஓங்கு இரும் பெண்ணை மடல் ஊர்ந்து என் எவ்வ நோய் தாங்குதல் தேற்றா இடும்பைக்கு உயிர்ப்பு ஆக வீங்கு இழை மாதர்-திறத்து ஒன்று நீங்காது பாடுவேன் பாய் மா நிறுத்து யாமத்தும் எல்லையும் எவ்வத் திரை அலைப்ப மா மேலேன் என்று மடல் புணையா நீந்துவேன் தே மொழி மாதர் உறாஅது உறீஇய காமக் கடல் அகப்பட்டு உய்யா அரு நோய்க்கு உயவு ஆகும் மையல் உறீஇயாள் ஈத்த இ மா காணுநர் எள்ளக் கலங்கித் தலைவந்து என் ஆண் எழில் முற்றி உடைத்து உள் அழித்தரும் மாண் இழை மாதராள் ஏஎர் எனக் காமனது ஆணையால் வந்த படை காமக் கடும் பகையின் தோன்றினேற்கு ஏமம் எழில்_நுதல் ஈத்த இ மா அகை எரி ஆனாது என் ஆர் உயிர் எஞ்சும் வகையினால் உள்ளம் சுடுதரும்-மன்னோ முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மாதர் தகையால் தலைக்கொண்ட நெஞ்சு அழல் மன்ற காம அரு நோய் நிழல் மன்ற நேர்_இழை ஈத்த இ மா ஆங்கு அதை அறிந்தனிர் ஆயின் சான்றவிர் தான் தவம் ஒரீஇத் துறக்கத்தின் வழீஇ ஆன்றோர் உள் இடப்பட்ட அரசனைப் பெயர்த்து அவர் உயர்_நிலை_உலகம் உறீஇ ஆங்கு என் துயர் நிலை தீர்த்தல் நும் தலைக் கடனே #24 கலித்தொகை 140 - நல்லந்துவனார் கண்டவிர் எல்லாம் கதுமென வந்து ஆங்கே பண்டு அறியாதீர் போல நோக்குவீர் கொண்டது மா என்று உணர்-மின் மடல் அன்று மற்று இவை பூ அல்ல பூளை உழிஞையோடு யாத்த புன வரை இட்ட வயங்கு தார்ப் பீலி பிடி அமை நூலொடு பெய்ம் மணி கட்டி அடர் பொன் அவிர் ஏய்க்கும் ஆவிரம் கண்ணி நெடியோன் மகன் நயந்து தந்து ஆங்கு அனைய வடிய வடிந்த வனப்பின் என் நெஞ்சம் இடிய இடை கொள்ளும் சாயல் ஒருத்திக்கு அடியுறை காட்டிய செல்வேன் மடியன்-மின் அன்னேன் ஒருவனேன் யான் என்னானும் பாடு எனில் பாடவும் வல்லேன் சிறிது ஆங்கே ஆடு எனில் ஆடலும் ஆற்றுகேன் பாடுகோ என் உள் இடும்பை தணிக்கும் மருந்தாக நல்_நுதல் ஈத்த இ மா திங்கள் அரவு உறின் தீர்க்கலார் ஆயினும் தம் காதல் காட்டுவர் சான்றவர் இன் சாயல் ஒண்_தொடி நோய் நோக்கில் பட்ட என் நெஞ்ச நோய் கண்டும் கண்ணோடாது இவ் ஊர் தாங்காச் சினத்தொடு காட்டி உயிர் செகுக்கும் பாம்பும் அவை படில் உய்யுமாம் பூம் கண் வணர்ந்து ஒலி ஐம்பாலாள் செய்த இக் காமம் உணர்ந்தும் உணராது இவ் ஊர் வெம் சுழிப்பட்ட மகற்குக் கரை நின்றார் அஞ்சல் என்றாலும் உயிர்ப்பு உண்டாம் அம் சீர்ச் செறிந்து ஏர் முறுவலாள் செய்த இக் காமம் அறிந்தும் அறியாது இவ் ஊர் ஆங்க என்-கண் இடும்பை அறீஇயினென் நும்-கண் தெருளுற நோக்கித் தெரியுங்கால் இன்ன மருளுறு நோயொடு மம்மர் அகல இருளுறு கூந்தலாள் என்னை அருளுறச் செயின் நுமக்கு அறனுமார் அதுவே #25 கலித்தொகை 141 - நல்லந்துவனார் அரிதினின் தோன்றிய யாக்கை புரிபு தாம் வேட்டவை செய்து ஆங்குக் காட்டி மற்று ஆங்கே அறம் பொருள் இன்பம் என்று அ மூன்றின் ஒன்றன் திறம் சேரார் செய்யும் தொழில்கள் அறைந்தன்று அணி நிலைப் பெண்ணை மடல் ஊர்ந்து ஒருத்தி அணி நலம் பாடி வரற்கு ஓரொருகால் உள்வழியள் ஆகி நிறை மதி நீருள் நிழல் போல் கொளற்கு அரியள் போருள் அடல் மா மேல் ஆற்றுவேன் என்னை மடல்_மா மேல் மன்றம் படர்வித்தவள் வாழி சான்றீர் பொய் தீர் உலகம் எடுத்த கொடி மிசை மை அறு மண்டிலம் வேட்டனள் வையம் புரவு ஊக்கும் உள்ளத்தேன் என்னை இரவு ஊக்கும் இன்னா இடும்பை செய்தாள் அம்ம சான்றீர் கரந்து ஆங்கே இன்னா நோய் செய்யும் மற்று இஃதோ பரந்த சுணங்கின் பணைத் தோளாள் பண்பு இடி உமிழ் வானத்து இரவு இருள் போழும் கொடி மின்னுக் கொள்வேன் என்றன்னள் வடி நாவின் வல்லார் முன் சொல் வல்லேன் என்னைப் பிறர் முன்னர்க் கல்லாமை காட்டியவள் வாழி சான்றீர் என்று ஆங்கே வருந்த மா ஊர்ந்து மறுகின்-கண் பாடத் திருந்து_இழைக்கு ஒத்த கிளவி கேட்டு ஆங்கே பொருந்தாதார் போர் வல் வழுதிக்கு அரும் திறை போலக் கொடுத்தார் தமர் #26 கலித்தொகை 142 - நல்லந்துவனார் புரிவுண்ட புணர்ச்சியுள் புல் ஆரா மாத்திரை அருகுவித்து ஒருவரை அகற்றலின் தெரிவார்-கண் செய நின்ற பண்ணினுள் செவி சுவை கொள்ளாது நயம் நின்ற பொருள் கெடப் புரி அறு நரம்பினும் பயன் இன்று-மன்று அம்ம காமம் இவள் மன்னும் ஒண்_நுதல் ஆயத்தார் ஓராங்குத் திளைப்பினும் முள் நுனை தோன்றாமை முறுவல் கொண்டு அடக்கித் தன் கண்ணினும் முகத்தினும் நகுபவள் பெண் இன்றி யாவரும் தண் குரல் கேட்ப நிரை வெண் பல் மீ உயர் தோன்ற நகாஅ நக்கு ஆங்கே பூ உயிர்த்து அன்ன புகழ் சால் எழில் உண்கண் ஆய் இதழ் மல்க அழும் ஓஒ அழிதகப் பாராதே அல்லல் குறுகினம் காண்பாம் கனம்_குழை பண்பு என்று எல்லீரும் என் செய்தீர் என்னை நகுதிரோ நல்ல நகாஅலிர்-மன்-கொலோ யான் உற்ற அல்லல் உறீஇயான் மாய மலர் மார்பு புல்லிப் புணரப் பெறின் எல்லா நீ உற்றது எவனோ மற்று என்றீரேல் என் சிதை செய்தான் இவன் என உற்றது இது என எய்த உரைக்கும் உரன் அகத்து உண்டு ஆயின் பைதல ஆகிப் பசக்குவ-மன்னோ என் நெய்தல் மலர் அன்ன கண் கோடு வாய் கூடாப் பிறையைப் பிறிது ஒன்று நாடுவேன் கண்டனென் சிற்றிலுள் கண்டு ஆங்கே ஆடையான் மூஉய் அகப்படுப்பேன் சூடிய காணான் திரிதரும்-கொல்லோ மணி மிடற்று மாண் மலர் கொன்றையவன் தெள்ளியேம் என்று உரைத்துத் தேராது ஒரு நிலையே வள்ளியை ஆக என நெஞ்சை வலியுறீஇ உள்ளி வருகுவர்-கொல்லோ வளைந்து யான் எள்ளி இருக்குவேன்-மன்-கொலோ நள்ளிருள் மாந்தர் கடி கொண்ட கங்குல் கனவினால் தோன்றினன் ஆகத் தொடுத்தேன்-மன் யான் தன்னைப் பையெனக் காண்கு விழிப்ப யான் பற்றிய கை உளே மாய்ந்தான் கரந்து கதிர் பகா ஞாயிறே கல் சேர்தி ஆயின் அவரை நினைத்து நிறுத்து என் கை நீட்டித் தருகுவை ஆயின் தவிரும் என் நெஞ்சத்து உயிர் திரியா மாட்டிய தீ மை இல் சுடரே மலை சேர்தி நீ ஆயின் பௌவ நீர் தோன்றிப் பகல் செய்யும் மாத்திரை கைவிளக்கு ஆகக் கதிர் சில தாராய் என் தொய்யில் சிதைத்தானைத் தேர்கு சிதைத்தானைச் செய்வது எவன்-கொலோ எம்மை நயந்து நலம் சிதைத்தான் மன்றப் பனை மேல் மலை மாந்தளிரே நீ தொன்று இவ் உலகத்துக் கேட்டும் அறிதியோ மென் தோள் ஞெகிழ்த்தான் தகை அல்லால் யான் காணேன் நன்று தீது என்று பிற நோய் எரி ஆகச் சுடினும் சுழற்றி என் ஆய் இதழ் உள்ளே கரப்பன் கரந்து ஆங்கே நோயுறு வெம் நீர் தெளிப்பின் தலைக்கொண்டு வேவது அளித்து இவ் உலகு மெலியப் பொறுத்தேன் களைந்தீ-மின் சான்றீர் நலிதரும் காமமும் கௌவையும் என்று இவ் வலிதின் உயிர் காவாத் தூங்கி ஆங்கு என்னை நலியும் விழுமம் இரண்டு எனப் பாடி இனைந்து நொந்து அழுதனள் நினைந்து நீடு உயிர்த்தனள் எல்லையும் இரவும் கழிந்தன என்று எண்ணி எல் இரா நல்கிய கேள்வன் இவன்-மன்ற மெல்ல மணியுள் பரந்த நீர் போலத் துணிவாம் கலம் சிதை இல்லத்துக் காழ் கொண்டு தேற்றக் கலங்கிய நீர் போல் தெளிந்து நலம் பெற்றாள் நல் எழில் மார்பனைச் சார்ந்து #27 கலித்தொகை 143 - நல்லந்துவனார் அகல் ஆங்கண் இருள் நீங்கி அணி நிலாத் திகழ்ந்த பின் பகல் ஆங்கண் பையென்ற மதியம் போல் நகல் இன்று நல் நுதல் நீத்த திலகத்தள் மின்னி மணி பொரு பசும்பொன்-கொல் மா ஈன்ற தளிரின் மேல் கணிகாரம் கொட்கும்-கொல் என்று ஆங்கு அணி செல மேனி மறைத்த பசலையள் ஆனாது நெஞ்சம் வெறியா நினையா நிலன் நோக்கா அஞ்சா அழாஅ அரற்றா இஃது ஒத்தி என் செய்தாள்-கொல் என்பீர் கேட்டீ-மின் பொன் செய்தேன் மறையின் தன் யாழ் கேட்ட மானை அருளாது அறை கொன்று மற்று அதன் ஆர் உயிர் எஞ்ச பறை அறைந்து ஆங்கு ஒருவன் நீத்தான் அவனை அறை நவ நாட்டில் நீர் கொண்டு தரின் யானும் நிறை உடையேன் ஆகுவேன்-மன்ற மறையின் என் மென் தோள் நெகிழ்த்தானை மேஎய் அவன் ஆங்கண் சென்று சேட்பட்டது என் நெஞ்சு ஒன்றி முயங்கும் என்று என் பின் வருதிர் மற்று ஆங்கே உயங்கினாள் என்று ஆங்கு உசாதிர் மற்று அந்தோ மயங்கினாள் என்று மருடிர் கலங்கன்-மின் இன் உயிர் அன்னார்க்கு எனைத்து ஒன்றும் தீதின்மை என் உயிர் காட்டாதோ மற்று பழி தபு ஞாயிறே பாடு அறியாதார்-கண் கழிய கதழ்வை எனக் கேட்டு நின்னை வழிபட்டு இரக்குவேன் வந்தேன் என் நெஞ்சம் அழிய துறந்தானைச் சீறுங்கால் என்னை ஒழிய விடாதீமோ என்று அழிதக மாஅந்தளிர் கொண்ட போழ்தினான் இவ் ஊரார் தாஅம் தளிர் சூடித் தம் நலம் பாடுப ஆஅம் தளிர்க்கும் இடைச் சென்றார் மீள்தரின் யாஅம் தளிர்க்குவேம்-மன் நெய்தல் நெறிக்கவும் வல்லன் நெடு மென் தோள் பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன் இள முலை மேல் தொய்யில் எழுதவும் வல்லன் தன் கையில் சிலை வல்லான் போலும் செறிவினான் நல்ல பல வல்லன் தோள் ஆள்பவன் நினையும் என் உள்ளம் போல் நெடும் கழி மலர் கூம்ப இனையும் என் நெஞ்சம் போல் இனம் காப்பார் குழல் தோன்ற சாய என் கிளவி போல் செவ்வழி யாழ் இசை நிற்ப போய என் ஒளியே போல் ஒரு நிலையே பகல் மாய காலன் போல் வந்த கலக்கத்தோடு என் தலை மாலையும் வந்தன்று இனி இருளொடு யான் ஈங்கு உழப்ப என் இன்றிப் பட்டாய் அருள் இலை வாழி சுடர் ஈண்டு நீர் ஞாலத்துள் எம் கேள்வர் இல் ஆயின் மாண்ட மனம் பெற்றார் மாசு இல் துறக்கத்து வேண்டிய வேண்டி ஆங்கு எய்துதல் வாய் எனின் யாண்டும் உடையேன் இசை ஊர் அலர் தூற்றும் இவ் உய்யா விழுமத்துப் பீர் அலர் போலப் பெரிய பசந்தன நீர் அலர் நீலம் என அவர்க்கு அஞ்ஞான்று பேர் அஞர் செய்த என் கண் தன் உயிர் போலத் தழீஇ உலகத்து மன் உயிர் காக்கும் இ மன்னனும் என்-கொலோ இன் உயிர் அன்னானைக் காட்டி எனைத்து ஒன்றும் என் உயிர் காவாதது என ஆங்கு மன்னிய நோயொடு மருள்கொண்ட மனத்தவள் பல் மலை இறந்தவன் பணிந்து வந்து அடி சேரத் தென்னவன் தெளித்த தேஎம் போல இன் நகை எய்தினள் இழந்த தன் நலனே #28 கலித்தொகை 144 - நல்லந்துவனார் நல்_நுதாஅல் காண்டை நினையா நெடிது உயிரா என் உற்றாள்-கொல்லோ இஃது ஒத்தி பல் மாண் நகுதரும் தன் நாணுக் கைவிட்டு இகுதரும் கண்ணீர் துடையாக் கவிழ்ந்து நிலன் நோக்கி அன்ன இடும்பை பல செய்து தன்னை வினவுவார்க்கு ஏதில சொல்லிக் கனவு போல் தெருளும் மருளும் மயங்கி வருபவள் கூறுப கேளாமோ சென்று எல்லா நீ என் அணங்கு உற்றனை யார் நின் இது செய்தார் நின் உற்ற அல்லல் உரை என என்னை வினவுவீர் தெற்றெனக் கேள்-மின் ஒருவன் குரல்_கூந்தால் என் உற்ற எவ்வம் நினக்கு யான் உரைப்பனைத் தங்கிற்று என் இன் உயிர் என்று மருவு ஊட்டி மாறியதன் கொண்டு எனக்கு மருவுழிப் பட்டது என் நெஞ்சு எங்கும் தெரிந்து அது கொள்வேன் அவன் உள் வழி பொங்கு இரு முந்நீர் அகம் எல்லாம் நோக்கினை திங்களுள் தோன்றி இருந்த குறு முயால் எம் கேள் இதன் அகத்து உள் வழிக் காட்டீமோ காட்டீயாய் ஆயின் கத நாய் கொளுவுவேன் வேட்டுவர் உள் வழிச் செப்புவேன் ஆட்டி மதியொடு பாம்பு மடுப்பேன் மதி திரிந்த என் அல்லல் தீராய் எனின் என்று ஆங்கே உள் நின்ற எவ்வம் உரைப்ப மதியொடு வெண் மழை ஓடிப் புகுதி சிறிது என்னைக் கண்ணோடினாய் போறி நீ நீடு இலைத் தாழை துவர் மணல் கானலுள் ஓடுவேன் ஓடி ஒளிப்பேன் பொழில்-தொறும் நாடுவேன் கள்வன் கரந்து இருக்கற்பாலன்-கொல் ஆய் பூ அடும்பின் அலர் கொண்டு உதுக் காண் எம் கோதை புனைந்த வழி உதுக் காண் சாஅய் மலர் காட்டி சால்பிலான் யாம் ஆடும் பாவை கொண்டு ஓடியுழி உதுக் காண் தொய்யில் பொறித்த வழி உதுக் காண் தையால் தேறு எனத் தேற்றி அறனில்லான் பைய முயங்கியுழி அளிய என் உள்ளத்து உயவுத் தேர் ஊர்ந்து விளியா நோய் செய்து இறந்த அன்பிலவனைத் தெளிய விசும்பினும் ஞாலத்தகத்தும் வளியே எதிர்போம் பல கதிர் ஞாயிற்று ஒளி உள் வழி எல்லாம் சென்று முனிபு எம்மை உண்மை நலன் உண்டு ஒளித்தானைக் காட்டீமோ காட்டாயேல் மண்ணகம் எல்லாம் ஒருங்கு சுடுவேன் என் கண்ணீர் அழலால் தெளித்து பேணான் துறந்தானை நாடும் இடம் விடாய் ஆயின் பிறங்கு இரு முந்நீர் வெறு மணல் ஆகப் புறங்காலின் போக இறைப்பேன் முயலின் அறம் புணை ஆகலும் உண்டு துறந்தானை நாடித் தருகிற்பாய் ஆயின் நினக்கு ஒன்று பாடுவேன் என் நோய் உரைத்து புல்லிய கேளிர் புணரும் பொழுது உணரேன் எல்லி ஆக எல்லை என்று ஆங்கே பகல் முனிவேன் எல்லிய காலை இரா முனிவேன் யான் உற்ற அல்லல் களைவார் இலேன் ஓஒ கடலே தெற்றெனக் கண் உள்ளே தோன்ற இமை எடுத்துப் பற்றுவேன் என்று யான் விழிக்குங்கால் மற்றும் என் நெஞ்சத்துள் ஓடி ஒளித்து ஆங்கே துஞ்சா நோய் செய்யும் அறன் இல்லவன் ஓஒ கடலே ஊர் தலைக்கொண்டு கனலும் கடும் தீயுள் நீர் பெய்த காலே சினம் தணியும் மற்று இஃதோ ஈரம் இல் கேள்வன் உறீஇய காமத் தீ நீருள் புகினும் சுடும் ஓஒ கடலே எற்றம் இலாட்டி என் ஏமுற்றாள் என்று இ நோய் உற்று அறியாதாரோ நகுக நயந்து ஆங்கே இற்றா அறியின் முயங்கலேன் மற்று என்னை அற்றத்து இட்டு ஆற்று அறுத்தான் மார்பு ஆங்கு கடலொடு புலம்புவோள் கலங்கு அஞர் தீரக் கெடல் அரும் காதலர் துனைதரப் பிணி நீங்கி அறன் அறிந்து ஒழுகும் அங்கணாளனைத் திறனிலார் எடுத்த தீ மொழி எல்லாம் நல் அவையுள் படக் கெட்டு ஆங்கு இல் ஆகின்று அவள் ஆய் நுதல் பசப்பே #29 கலித்தொகை 145 - நல்லந்துவனார் துனையுநர் விழைதக்க சிறப்புப் போல் கண்டார்க்கு நனவினுள் உதவாது நள்ளிருள் வேறு ஆகும் கனவின் நிலையின்றால் காமம் ஒருத்தி உயிர்க்கும் உசாஅம் உலம்வரும் ஓவாள் கயல் புரை உண்கண் அரிப்ப அரி வாரப் பெயல் சேர் மதி போல வாள் முகம் தோன்ற பல ஒலி கூந்தலாள் பண்பு எல்லாம் துய்த்துத் துறந்தானை உள்ளி அழூஉம் அவனை மறந்தாள் போல் ஆலி நகூஉம் மருளும் சிறந்த தன் நாணும் நலனும் நினையாது காமம் முனைஇயாள் அலந்தாள் என்று எனைக் காண நகான்-மின் கூறுவேன் மாக்காள் மிகாஅது மகளிர் தோள் சேர்ந்த மாந்தர் துயர் கூர நீத்தலும் நீள் சுரம் போகியார் வல்லை வந்து அளித்தலும் ஊழ் செய்து இரவும் பகலும் போல் வேறு ஆகி வீழ்வார்-கண் தோன்றும் தடுமாற்றம் ஞாலத்துள் வாழ்வார்கட்கு எல்லாம் வரும் தாழ்பு துறந்து தொடி நெகிழ்த்தான் போகிய கானம் இறந்து எரி நையாமல் பாஅய் முழங்கி வறந்து என்னை செய்தியோ வானம் சிறந்த என் கண்ணீர்க் கடலால் கனை துளி வீசாயோ கொண்மூ குழீஇ முகந்து நுமக்கு எவன் போலுமோ ஊரீர் எமக்கும் எம் கண்பாயல் கொண்டு உள்ளாக் காதலவன் செய்த பண்பு தர வந்த என் தொடர் நோய் வேது கொள்வது போலும் கடும் பகல் ஞாயிறே எல்லாக் கதிரும் பரப்பிப் பகலொடு செல்லாது நின்றீயல் வேண்டுவல் நீ செல்லின் புல்லென் மருள் மாலைப் போழ்து இன்று வந்து என்னைக் கொல்லாது போதல் அரிதால் அதனொடு யான் செல்லாது நிற்றல் இலேன் ஒல்லை எம் காதலர்க் கொண்டு கடல் ஊர்ந்து காலை நாள் போதரின் காண்குவேன்-மன்னோ பனியொடு மாலைப் பகை தாங்கி யான் இனியன் என்று ஓம்படுப்பல் ஞாயிறு இனி ஒள் வளை ஓடத் துறந்து துயர் செய்த கள்வன்-பால் பட்டன்று ஒளித்து என்னை உள்ளி பெரும் கடல் புல்லெனக் கானல் புலம்ப இரும் கழி நெய்தல் இதழ் பொதிந்து தோன்ற விரிந்து இலங்கு வெண் நிலா வீசும் பொழுதினான் யான் வேண்டு ஒருவன் என் அல்லல் உறீஇயான் தான் வேண்டுபவரோடு துஞ்சும்-கொல் துஞ்சாது வானும் நிலனும் திசையும் துழாவும் என் ஆனாப் படர் மிக்க நெஞ்சு ஊரவர்க்கு எல்லாம் பெரு நகை ஆகி என் ஆர் உயிர் எஞ்சும்-மன் அங்கு நீ சென்றீ நிலவு உமிழ் வான் திங்காள் ஆய்_தொடி கொட்ப அளி புறம்மாறி அருளான் துறந்த அக் காதலன் செய்த கலக்குறு நோய்க்கு ஏதிலார் எல்லாரும் தேற்றர் மருந்து வினைக் கொண்டு என் காம நோய் நீக்கிய ஊரீர் எனைத்தானும் எள்ளினும் எள்ளலன் கேள்வன் நினைப்பினும் கண் உள்ளே தோன்றும் அனைத்தற்கே ஏமராது ஏமரா ஆறு கனை இருள் வானம் கடல் முகந்து என் மேல் உறையொடு நின்றீயல் வேண்டும் ஒருங்கே நிறை வளை கொட்பித்தான் செய்த துயரால் இறைஇறை பொத்திற்றுத் தீ எனப் பாடி நோய் உடை நெஞ்சத்து எறியா இனைபு ஏங்கி யாவிரும் எம் கேள்வன் காணீரோ என்பவட்கு ஆர்வுற்ற பூசற்கு அறம் போல ஏய்தந்தார் பாயல் கொண்டு உள்ளாதவரை வரக் கண்டு மாயவன் மார்பில் திரு போல் அவள் சேர ஞாயிற்று முன்னர் இருள் போல மாய்ந்தது என் ஆய்_இழை உற்ற துயர் #30 கலித்தொகை 146 - நல்லந்துவனார் உரை செல உயர்ந்து ஓங்கி சேர்ந்தாரை ஒரு நிலையே வரை நில்லா விழுமம் உறீஇ நடுக்கு உரைத்துத் தெறல் மாலை அரைசினும் அன்பு இன்றாம் காமம் புரை தீர அன்ன மென் சேக்கையுள் ஆராது அளித்தவன் துன்னி அகலத் துறந்த அணியளாய் நாணும் நிறையும் உணர்கல்லாள் தோள் ஞெகிழ்பு பேர் அமர் உண்கண் நிறை மல்க அ நீர் தன் கூர் எயிறு ஆடிக் குவி முலை மேல் வார்தர தேர் வழி நின்று தெருமரும் ஆய்_இழை கூறுப கேளாமோ சென்று எல்_இழாய் எற்றி வரைந்தானை நாணும் மறந்தாள் என்று உற்றனிர் போல வினவுதிர் மற்று இது கேட்டீ-மின் எல்லீரும் வந்து வறம் தெற மாற்றிய வானமும் போலும் நிறைந்து என்னை மாய்ப்பது ஓர் வெள்ளமும் போலும் சிறந்தவன் தூ அற நீப்பப் பிறங்கி வந்து என் மேல் நிலைஇய நோய் நக்கு நலனும் இழந்தாள் இவள் என்னும் தக்கவிர் போலும் இழந்திலேன்-மன்னோ மிக்க என் நாணும் நலனும் என் உள்ளமும் அக்கால் அவன் உழை ஆங்கே ஒழிந்தன உக் காண் இஃதோ உடம்பு உயிர்க்கு ஊற்று ஆகச் செக்கர் அம் புள்ளித் திகிரி அலவனொடு யான் நக்கது பல் மாண் நினைந்து கரை காணா நோயுள் அழுந்தாதவனைப் புரை தவக் கூறிக் கொடுமை நுவல்வீர் வரைபவன் என்னின் அகலான் அவனைத் திரை தரும் முந்நீர் வளாஅகம் எல்லாம் நிரை கதிர் ஞாயிற்றை நாடு என்றேன் யானும் உரை கேட்புழி எல்லாம் செல்வேன் புரை தீர்ந்தான் யாண்டு ஒளிப்பான்-கொல்லோ மற்று மருள் கூர் பிணை போல் மயங்க வெம் நோய் செய்யும் மாலையும் வந்து மயங்கி எரி நுதி யாமம் தலைவந்தன்று ஆயின் அதற்கு என் நோய் பாடுவேன் பல்லாருள் சென்று யான் உற்ற எவ்வம் உரைப்பின் பலர் துயிற்றும் யாமம் நீ துஞ்சலை-மன் எதிர்கொள்ளும் ஞாலம் துயில் ஆராது ஆங்கண் முதிர்பு என் மேல் முற்றிய வெம் நோய் உரைப்பின் கதிர்கள் மழுங்கி மதியும் அதிர்வது போல் ஓடிச் சுழல்வது-மன் பேர் ஊர் மறுகில் பெரும் துயில் சான்றீரே நீரைச் செறுத்து நிறைவுற ஓம்பு-மின் கார் தலைக்கொண்டு பொழியினும் தீர்வது போலாது என் மெய் கனலும் நோய் இருப்பினும் நெஞ்சம் கனலும் செலினே வருத்துறும் யாக்கை வருந்துதல் ஆற்றேன் அருப்பம் உடைத்து என்னுள் எவ்வம் பொருத்திப் பொறி செய் புனை பாவை போல வறிது உயங்கிச் செல்வேன் விழுமம் உழந்து என ஆங்கு பாட அருளுற்று வறம் கூர் வானத்து வள் உறைக்கு அலமரும் புள்ளிற்கு அது பொழிந்து ஆஅங்கு மற்றுத் தன் நல் எழில் மார்பன் முயங்கலின் அல்லல் தீர்ந்தன்று ஆய்_இழை பண்பே #31 கலித்தொகை 147 - நல்லந்துவனார் ஆறு அல்ல மொழி தோற்றி அற வினை கலக்கிய தேறு கள் நறவு உண்டார் மயக்கம் போல் காமம் வேறு ஒரு பாற்று ஆனது-கொல்லோ சீறடி சிலம்பு ஆர்ப்ப இயலியாள் இவள்-மன்னோ இனி மன்னும் புலம்பு ஊரப் புல்லென்ற வனப்பினாள் விலங்கு ஆக வேல் நுதி உற நோக்கி வெயில் உற உருகும் தன் தோள் நலம் உண்டானைக் கெடுத்தாள் போல் தெருவில் பட்டு ஊண் யாதும் இலள் ஆகி உயிரினும் சிறந்த தன் நாண் யாதும் இலள் ஆகி நகுதலும் நகூஉம் ஆங்கே பெண்மையும் இலள் ஆகி அழுதலும் அழூஉம் தோழி ஓர் ஒண்_நுதல் உற்றது உழை சென்று கேளாமோ இவர் யாவர் ஏமுற்றார் கண்டீரோ ஓஒ அமையும் தவறிலீர்-மன்-கொலோ நகையின் மிக்கதன் காமமும் ஒன்று என்ப அம்மா புது நலம் பூ வாடி அற்று தாம் வீழ்வார் மதி மருள நீத்தக் கடை என்னையே மூசிக் கதுமென நோக்கன்-மின் வந்து கலைஇய கண் புருவம் தோள் நுசுப்பு ஏஎர் சில மழை போல் தாழ்ந்து இருண்ட கூந்தல் அவற்றை விலை வளம் மாற அறியாது ஒருவன் வலை அகப்பட்டது என் நெஞ்சு வாழிய கேளிர் பலவும் சூள் தேற்றித் தெளித்தவன் என்னை முலையிடை வாங்கி முயங்கினன் நீத்த கொலைவனைக் காணேன்-கொல் யான் காணினும் என்னை அறிதிர் கதிர் பற்றி ஆங்கு எதிர் நோக்குவன் ஞாயிறே எம் கேள்வன் யாங்கு உளன் ஆயினும் காட்டீமோ காட்டாயேல் வானத்து எவன் செய்தி நீ ஆர் இருள் நீக்கும் விசும்பின் மதி போல நீர் உள்ளும் தோன்றுதி ஞாயிறே அவ் வழித் தேரை தினப்படல் ஓம்பு நல்கா ஒருவனை நாடி யான் கொள்வனை பல் கதிர் சாம்பிப் பகல் ஒழியப் பட்டீமோ செல் கதிர் ஞாயிறே நீ அறாஅல் இன்று அரி முன்கைக் கொட்கும் பறாஅப் பருந்தின் கண் பற்றிப் புணர்ந்தான் கறாஅ எருமைய காடு இறந்தான்-கொல்லோ உறாஅத் தகை செய்து இவ் ஊர் உள்ளான்-கொல்லோ செறாஅது உளன் ஆயின் கொள்வேன் அவனைப் பெறாஅது யான் நோவேன் அவனை என் காட்டிச் சுறாஅக் கொடியான் கொடுமையை நீயும் உறாஅ அரைச நின் ஓலைக்-கண் கொண்டீ மறாஅ அரைச நின் மாலையும் வந்தன்று அறாஅ தணிக இ நோய் தன் நெஞ்சு ஒருவற்கு இனைவித்தல் யாவர்க்கும் அன்னவோ காம நின் அம்பு கையாறு செய்தானைக் காணின் கலுழ் கண்ணால் பையென நோக்குவேன் தாழ் தானை பற்றுவேன் ஐயம் கொண்டு என்னை அறியான் விடுவானேல் ஒய்யெனப் பூசலிடுவேன்-மன் யான் அவனை மெய்யாகக் கள்வனோ என்று வினவன்-மின் ஊரவிர் என்னை எஞ்ஞான்றும் மடாஅ நறவு உண்டார் போல மருள விடாஅது உயிரொடு கூடிற்று என் உண்கண் படாஅமை செய்தான் தொடர்பு கனவினான் காணிய கண் படா ஆயின் நனவினான் ஞாயிறே காட்டாய் நீ ஆயின் பனை ஈன்ற மா ஊர்ந்து அவன் வரக் காமன் கணை இரப்பேன் கால் புல்லிக்கொண்டு என ஆங்கு கண் இனைபு கலுழ்பு ஏங்கினள் தோள் ஞெகிழ்பு வளை நெகிழ்ந்தனள் அன்னையோ எல்லீரும் காண்-மின் மடவரல் மென் நடை பேடை துனைதரத் தன் சேர்ந்த அன்ன வான் சேவல் புணர்ச்சி போல் ஒண்_நுதல் காதலன்-மன்ற அவனை வரக் கண்டு ஆங்கு ஆழ் துயரம் எல்லாம் மறந்தனள் பேதை நகை ஒழிந்து நாணு மெய் நிற்ப இறைஞ்சி தகை ஆகத் தையலாள் சேர்ந்தாள் நகை ஆக நல் எழில் மார்பன் அகத்து #32 கலித்தொகை 148 - நல்லந்துவனார் தொல் இயல் ஞாலத்து தொழில் ஆற்றி ஞாயிறு வல்லவன் கூறிய வினை தலை வைத்தான் போல் கல் அடைபு கதிர் ஊன்றிக் கண் பயம் கெடப் பெயர அல்லது கெடுப்பவன் அருள் கொண்ட முகம் போல மல்லல் நீர் திரை ஊர்பு மால் இருள் மதி சீப்ப இல்லவர் ஒழுக்கம் போல் இரும் கழி மலர் கூம்ப செல்லும் என் உயிர்ப் புறத்து இறுத்தந்த மருள் மாலை மாலை நீ இன்புற்றார்க்கு இறைச்சியாய் இயைவதோ செய்தாய்-மன் அன்புற்றார் அழ நீத்த அல்லலுள் கலங்கிய துன்புற்றார்த் துயர் செய்தல் தக்கதோ நினக்கு மாலை நீ கலந்தவர் காமத்தை கனற்றலோ செய்தாய்-மன் நலம் கொண்டு நல்காதார் நனி நீத்த புலம்பின் கண் அலந்தவர்க்கு அணங்கு ஆதல் தக்கதோ நினக்கு மாலை நீ எம் கேள்வன் தருதலும் தருகல்லாய் துணை அல்லை பிரிந்தவர்க்கு நோய் ஆகிப் புணர்ந்தவர்க்குப் புணை ஆகித் திருந்தாத செயின் அல்லால் இல்லையோ நினக்கு என ஆங்கு ஆய் இழை மடவரல் அவலம் அகல பாய் இருள் பரப்பினை பகல் களைந்தது போல போய் அவர் மண் வௌவி வந்தனர் சேய் உறை காதலர் செய்வினை முடித்தே #33 கலித்தொகை 149 - நல்லந்துவனார் நிரை திமில் களிறு ஆகத் திரை ஒலி பறை ஆகக் கரை சேர் புள் இனத்து அம் சிறை படை ஆக அரைசு கால்கிளர்ந்து அன்ன உரவு நீர்ச் சேர்ப்ப கேள் கற்பித்தான் நெஞ்சு அழுங்கப் பகர்ந்து உண்ணான் விச்சைக்-கண் தப்பித்தான் பொருளே போல் தமியவே தேயுமால் ஒற்கத்துள் உதவியார்க்கு உதவாதான் மற்று அவன் எச்சத்துள் ஆயினும் அஃது எறியாது விடாதே காண் கேளிர்கள் நெஞ்சு அழுங்கக் கெழுவுற்ற செல்வங்கள் தாள் இலான் குடியே போல் தமியவே தேயுமால் சூள் வாய்த்த மனத்தவன் வினை பொய்ப்பின் மற்று அவன் வாள் வாய் நன்று ஆயினும் அஃது எறியாது விடாதே காண் ஆங்கு அனைத்து இனி பெரும அதன் நிலை நினைத்துக் காண் சினைஇய வேந்தன் எயில் புறத்து இறுத்த வினை வரு பருவரல் போல துனை வரு நெஞ்சமொடு வருந்தினள் பெரிதே #34 கலித்தொகை 150 - நல்லந்துவனார் அயம் திகழ் நறும் கொன்றை அலங்கல் அம் தெரியலான் இயங்கு எயில் எயப் பிறந்த எரி போல எவ்வாயும் கனை கதிர் தெறுதலின் கடுத்து எழுந்த காம்புத் தீ மலை பரந்து தலைக்கொண்டு முழங்கிய முழங்கு அழல் மயங்கு அதர் மறுகலின் மலை தலைக்கொண்டு என விசும்புற நிவந்து அழலும் விலங்கு அரு வெம் சுரம் இறந்து தாம் எண்ணிய எய்துதல் வேட்கையால் அறம் துறந்து ஆய்_இழாய் ஆக்கத்தில் பிரிந்தவர் பிறங்கு நீர் சடைக் கரந்தான் அணி அன்ன நின் நிறம் பசந்து நீ இனையையாய் நீத்தலும் நீப்பவோ கரி காய்ந்த கவலைத்தாய்க் கல் காய்ந்த காட்டகம் வெருவந்த ஆறு என்னார் விழுப் பொருட்கு அகன்றவர் உருவ ஏற்று ஊர்தியான் ஒள் அணி நக்கு அன்ன நின் உரு இழந்து இனையையாய் உள்ளலும் உள்ளுபவோ கொதித்து உராய்க் குன்று இவர்ந்து கொடி கொண்ட கோடையால் ஒதுக்கு அரிய நெறி என்னார் ஒண் பொருட்கு அகன்றவர் புதுத் திங்கள் கண்ணியான் பொன் பூண் ஞான்று அன்ன நின் கதுப்பு உலறும் கவினையாய் காண்டலும் காண்பவோ ஆங்கு அரும் பெறல் ஆதிரையான் அணிபெற மலர்ந்த பெரும் தண் சண்பகம் போல ஒருங்கு அவர் பொய்யார் ஆகுதல் தெளிந்தனம் மை ஈர் ஓதி மட மொழியோயே #35 நற்றிணை 88 குறிஞ்சி - நல்லந்துவனார் யாம் செய் தொல்வினைக்கு எவன் பேதுற்றனை வருந்தல் வாழி தோழி யாம் சென்று உரைத்தனம் வருகம் எழு-மதி புணர் திரைக் கடல் விளை அமுதம் பெயற்கு ஏற்று ஆஅங்கு உருகி உகுதல் அஞ்சுவல் உதுக் காண் தம்மோன் கொடுமை நம்-வயின் எற்றி நயம் பெரிது உடைமையின் தாங்கல் செல்லாது கண்ணீர் அருவி ஆக அழுமே தோழி அவர் பழம் முதிர் குன்றே #36 பரிபாடல் 6 வையை - நல்லந்துவனார் **இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார் **பண் :: பாலையாழ் நிறை கடல் முகந்து உராய் நிறைந்து நீர் துளும்பும் தம் பொறை தவிர்பு அசைவிடப் பொழிந்தன்று வானம் நிலம் மறைவது போல் மலிர் புனல் தலைத்தலைஇ மலைய இனம் கலங்க மலைய மயில் அகவ மலை மாசு கழியக் கதழும் அருவி இழியும் மலி நீர் அதர் பல கெழுவு தாழ் வரை மாசு இல் பனுவல் புலவர் புகழ் புல நாவின் புனைந்த நல் கவிதை மாறாமை மேவிப் பரந்து விரைந்து வினை நந்தத் தாயிற்றே தண் அம் புனல் புகை பூ அவி ஆராதனை அழல் பல ஏந்தி நகை அமர் காதலரை நாளணிக் கூட்டும் வகை சாலும் வையை வரவு தொடி தோள் செறிப்பத் தோள் வளை இயங்கக் கொடி சேரா திருக் கோவை காழ் கொளத் தொகு கதிர் முத்துத் தொடை கலிழ்பு மழுக உகிரும் கொடிறும் உண்ட செம்பஞ்சியும் நகில் அணி அளறு நனி வண்டல் மண்ட இலையும் மயிரும் ஈர்ம் சாந்து நிழத்த முலையும் மார்பும் முயங்கு அணி மயங்க விருப்பு ஒன்றுபட்டவர் உளம் நிறை உடைத்து என வரைச் சிறை உடைத்ததை வையை வையைத் திரைச் சிறை உடைத்தன்று கரைச் சிறை அறைக எனும் உரைச் சிறைப் பறை எழ ஊர் ஒலித்தன்று அன்று போர் அணி அணியின் புகர்_முகம் சிறந்து என நீர் அணி அணியின் நிரைநிரை பிடி செல ஏர் அணி அணியின் இளையரும் இனியரும் ஈரணி அணியின் இகல் மிக நவின்று தணி புனல் ஆடும் தகை மிகு போர்க்-கண் துணி புனல் ஆக துறை வேண்டும் மைந்தின் அணி அணி ஆகிய தாரர் கருவியர் அடு புனலது செல அவற்றை இழிவர் கைம்_மான் எருத்தர் கலி மட மாவினர் நெய்ம் மாண் சிவிறியர் நீர் மணக் கோட்டினர் வெண் கிடை மிதவையர் நன் கிடைத் தேரினர் சாரிகை மறுத்துத் தண்டா உண்டிகை ஓர் இயவு உறுத்தர ஊரூர்பு இடம் திரீஇ சேரி இளையர் செல அரு நிலையர் வலியர் அல்லோர் துறைதுறை அயர மெலியர் அல்லோர் விருந்து புனல் அயர சாறும் சேறும் நெய்யும் மலரும் நாறுபு நிகழும் யாறு வரலாறு நாறுபு நிகழும் யாறு கண்டு அழிந்து வேறுபடு புனல் என விரை மண்ணுக் கலிழைப் புலம்புரி அந்தணர் கலங்கினர் மருண்டு மாறு மென் மலரும் தாரும் கோதையும் வேரும் தூரும் காயும் கிழங்கும் பூரிய மாக்கள் உண்பது மண்டி நார் அரி நறவம் உகுப்ப நலன் அழிந்து வேறு ஆகின்று இவ் விரி புனல் வரவு என சேறு ஆடு புனலது செலவு வரை அழி வால் அருவி வா தாலாட்ட கரை அழி வால் அருவிக் கால் பாராட்ட இரவில் புணர்ந்தோர் இடை முலை அல்கல் புரைவது பூம் தாரான் குன்று எனக் கூடார்க்கு உரையோடு இழிந்து உராய் ஊரிடை ஓடிச் சலப் படையான் இரவில் தாக்கியது எல்லாம் புலப்படப் புன் அம் புலரியின் நிலப்படத் தான் மலர்ந்தன்றே தமிழ் வையைத் தண் அம் புனல் விளியா விருந்து விழுவார்க்குக் கொய்தோய் தளிர் அறிந்தாய் தாம் இவை பணிபு ஒசி பண்ப பண்டு எல்லாம் நனி உருவத்து என்னோ துவள் கண்டீ எய்தும் களவு இனி நின் மார்பின் தார் வாடக் கொய்ததும் வாயாளோ கொய் தழை கை பற்றிச் செய்ததும் வாயாளோ செப்பு புனை புணை ஏறத் தாழ்த்ததை தளிர் இவை நீரின் துவண்ட சேஎய் குன்றம் காமர் பெருக்கு அன்றோ வையை வரவு ஆம் ஆம் அது ஒக்கும் காதல் அம் காமம் ஒருக்க ஒருதன்மை நிற்குமோ ஒல்லைச் சுருக்கமும் ஆக்கமும் சூளுறல் வையைப் பெருக்கு அன்றோ பெற்றாய் பிழை அருகு பதியாக அம்பியின் தாழ்ப்பிக்கும் குருகு இரை தேரக் கிடக்கும் பொழி காரில் இன் இளவேனில் இது அன்றோ வையை நின் வையை வயமாக வை செல் யாற்றுத் தீம் புனலில் செல் மரம் போல வவ்வு வல்லார் புணை ஆகிய மார்பினை என்னும் பனியாய் இரவு எல்லாம் வைகினை வையை உடைந்த மடை அடைத்தக்-கண்ணும் பின்னும் மலிரும் பிசிர் போல இன்னும் அனற்றினை துன்பு அவிய நீ அடைந்தக்-கண்ணும் பனித்துப் பனி வாரும் கண்ணவர் நெஞ்சம் கனற்றுபு காத்தி வரவு நல்லாள் கரை நிற்ப நான் குளித்த பைம் தடத்து நில்லாள் திரை மூழ்கி நீங்கி எழுந்து என் மேல் அல்லா விழுந்தாளை எய்தி எழுந்து ஏற்று யான் கொள்ளா அளவை எழும் தேற்றாள் கோதையின் உள் அழுத்தியாள் எவளோ தோய்ந்தது யாது என தேறித் தெரிய உணர் நீ பிறிதும் ஓர் யாறு உண்டோ இவ் வையை யாறு இவ் வையை யாறு என்ற மாறு என்னை கையால் தலை தொட்டேன் தண் பரங்குன்று சினவல் நின் உண்கண் சிவப்பு அஞ்சுவாற்குத் துனி நீங்கி ஆடல் தொடங்கு துனி நனி கன்றிடின் காமம் கெடூஉம் மகள் இவன் அல்லா நெஞ்சம் உறப் பூட்டக் காய்ந்தே வல் இருள் நீயல் அது பிழையாகும் என இல்லவர் ஆட இரந்து பரந்து உழந்து வல்லவர் ஊடல் உணர்த்தர நல்லாய் களிப்பர் குளிப்பர் காமம் கொடிவிட அளிப்ப துனிப்ப ஆங்காங்கு ஆடுப ஆடுவார் நெஞ்சத்து அலர்ந்து அமைந்த காமம் வாடற்க வையை நினக்கு #37 பரிபாடல் 8 செவ்வேள் - நல்லந்துவனார் **இசையமைத்தவர் :: மருத்துவன் நல்லச்சுதனார் **பண் :: பாலையாழ் மண் மிசை அவிழ் துழாய் மலர் தரு செல்வத்துப் புள் மிசைக் கொடியோனும் புங்கவம் ஊர்வோனும் மலர் மிசை முதல்வனும் மற்று அவனிடைத் தோன்றி உலகு இருள் அகற்றிய பதின்மரும் இருவரும் மருந்து உரை இருவரும் திருந்து நூல் எண்மரும் ஆதிரை முதல்வனின் கிளந்த நாதர் பன்னொருவரும் நல் திசை காப்போரும் யாவரும் பிறரும் அமரரும் அவுணரும் மேவரு முதுமொழி விழுத் தவ முதல்வரும் பற்று ஆகின்று நின் காரணமாக பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும் இமயக் குன்றினில் சிறந்து நின் ஈன்ற நிரை இதழ்த் தாமரை மின் ஈன்ற விளங்கு இணர் ஊழா ஒரு நிலைப் பொய்கையோடு ஒக்கும் நின் குன்றின் அருவி தாழ் மாலைச் சுனை முதல்வ நின் யானை முழக்கம் கேட்ட கதியிற்றே காரின் குரல் குரல் கேட்ட கோழி குன்று அதிரக் கூவ மத நனி வாரணம் மாறுமாறு அதிர்ப்ப எதிர்குதிர் ஆகின்று அதிர்ப்பு மலை முழை ஏழ் புழை ஐம் புழை யாழ் இசை கேழ்த்து அன்ன இனம் வீழ் தும்பி வண்டொடு மிஞிறு ஆர்ப்பச் சுனை மலரக் கொன்றை கொடி இணர் ஊழ்ப்பக் கொடி மலர் மன்றல் மலர மலர்க் காந்தள் வாய் நாற நன்று அவிழ் பல் மலர் நாற நறை பனிப்ப தென்றல் அசைவரூஉம் செம்மற்றே அம்ம நின் குன்றத்தால் கூடல் வரவு குன்றம் உடைத்த ஒளிர் வேலோய் கூடல் மன்றல் கலந்த மணி முரசின் ஆர்ப்பு எழக் காலொடு மயங்கிய கலிழ் கடல் என மால் கடல் குடிக்கும் மழைக் குரல் என ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உரும் என மன்றல் அதிரதிர மாறுமாறு அதிர்க்கும் நின் குன்றம் குமுறிய உரை தூது ஏய வண்டின் தொழுதி முரல்வு அவர் காதல் மூதூர் மதில் கம்பலைத்தன்று வடு வகிர் வென்ற கண் மாம் தளிர் மேனி நெடு மென் பணைத் தோள் குறும் தொடி மகளிர் ஆராக் காமம் ஆர் பொழில் பாயல் வரையகத்து இயைக்கும் வரையா நுகர்ச்சி முடியா நுகர்ச்சி முற்றாக் காதல் அடியோர் மைந்தர் அகலத்து அகலா அலர் ஞெமல் மகன்றில் நன்னர்ப் புணர்ச்சி புலரா மகிழ் மறப்பு அறியாது நல்கும் சிறப்பிற்றே தண் பரங்குன்று இனி மன்னும் ஏதிலர் நாறுதி ஆண்டுப் பனி மலர்க் கண்ணாரோடு ஆட நகை மலர் மாலைக்கு மாலை வரூஉம் வரை சூள் நில் காலைப் போய் மாலை வரவு இனி மணல் வையை இரும் பொழிலும் குன்றப் பனி பொழி சாரலும் பார்ப்பாரும் துனியல் மலர் உண்கண் சொல் வேறு நாற்றம் கனியின் மலரின் மலிர் கால் சீப்பு இன்னது துனியல் நனி நீ நின் சூள் என் பாணி நில் நில் எலாஅ பாணி நீ நின் சூள் சான்றாளர் ஈன்ற தகாஅத் தகாஅ மகாஅன் ஈன்றாட்கு ஒரு பெண் இவள் இருள் மை ஈர் உண்கண் இலங்கு_இழை ஈன்றாட்கு அரியளோ ஆவது அறிந்திலேன் ஈதா வரு புனல் வையை மணல் தொட்டேன் தரு மண வேள் தண் பரங்குன்றத்து அடி தொட்டேன் என்பாய் கேளிர் மணலின் கெழுவும் இதுவோ ஏழ் உலகும் ஆளி திரு வரை மேல் அன்பு அளிதோ என்னை அருளி அருள் முருகு சூள் சூளின் நின்னை அருள் இல் அணங்கான் மெய் வேல் தின்னும் விறல் வெய்யோன் ஊர் மயில் வேல் நிழல் நோக்கி அறவர் அடி தொடினும் ஆங்கு அவை சூளேல் குறவன் மகள் ஆணை கூறு ஏலா கூறேல் ஐய சூளின் அடி தொடு குன்றொடு வையைக்குத் தக்க மணல் சீர் சூள் கூறல் யார் பிரிய யார் வர யார் வினவ யார் செப்ப நீர் உரைசெய் நீர்மை இல் சூள் என்றி நேர்_இழாய் கய வாய் நெய்தல் அலர் கமழ் முகை மண நகை நயவரு நறவு இதழ் மதர் உண்கண் வாள் நுதல் முகை முல்லை வென்று எழில் முத்து ஏய்க்கும் வெண் பல் நகை சான்ற கனவு அன்று நனவு அன்று நவின்றதை இடு துனி கையாறா என் துயர் கூரச் சுடும் இறை ஆற்றிசின் அடி சேர்ந்து சாற்று-மின் மிக ஏற்றுதும் மலர் ஊட்டுதும் அவி கேட்டுதும் பாணி எழுதும் கிணை முருகன் தாள் தொழு தண் பரங்குன்று தெரி_இழாய் செல்க என்றாய் எல்லா யாம் பெற்றேம் ஒருவர்க்கும் பொய்யா நின் வாய் இல் சூள் வௌவல் பருவத்துப் பல் மாண் நீ சேறலின் காண்டை எருமை இருத் தோட்டி எள்ளீயும் காளை செருவம் செயற்கு என்னை முன்னைத் தன் சென்னி அருள்-வயினான் தூங்கும் மணி கையால் தாக்கி நிரை வளை ஆற்று இரும் சூள் வளி பொரு சேண் சிமை வரையகத்தால் தளி பெருகும் தண் சினைய பொழில் கொளக் குறையா மலரக் குளிர் பொய்கை அளறு நிறைய மருதம் நளி மணல் ஞெமர்ந்த நனி மலர் பெரு வழிச் சீறடியவர் சாறு கொள எழுந்து வேறுபடு சாந்தமும் வீறுபடு புகையும் ஆறு செல் வளியின் அவியா விளக்கமும் நாறு கமழ் வீயும் கூறும் இசை முழவமும் மணியும் கயிறும் மயிலும் குடாரியும் பிணிமுகம் உளப்படப் பிறவும் ஏந்தி அரு வரைச் சேராத் தொழுநர் கனவின் தொட்டது கை பிழை ஆகாது நனவின் சேஎப்ப நின் நளி புனல் வையை வரு புனல் அணிக என வரம் கொள்வோரும் கரு வயிறு உறுக எனக் கடம்படுவோரும் செய்பொருள் வாய்க்கா எனச் செவி சார்த்துவோரும் ஐ அமர் அடுக என அருச்சிப்போரும் பாடுவார் பாணிச் சீரும் ஆடுவார் அரங்கத் தாளமும் மஞ்சு ஆடு மலை முழக்கும் துஞ்சாக் கம்பலை பைம் சுனை பாஅய் எழு பாவையர் ஆய் இதழ் உண்கண் அலர் முகத் தாமரை தாள் தாமரைத் தோள் தமனியக் கய மலர் எம் கைப் பதுமம் கொங்கைக் கய முகை செவ் வாய் ஆம்பல் செல் நீர்த் தாமரை புனல் தாமரையொடு புலம் வேறுபாடுறாக் கூர் எயிற்றார் குவி முலைப் பூணொடு மாரன் ஒப்பார் மார்பு அணி கலவி அரிவையர் அமிர்த பானம் உரிமை மாக்கள் உவகை அமிர்து உய்ப்ப மைந்தர் மார்வம் வழி வந்த செம் தளிர் மேனியார் செல்லல் தீர்ப்ப என ஆங்கு உடம் புணர் காதலரும் அல்லாரும் கூடிக் கடம்பு அமர் செல்வன் கடி நகர் பேண மறு மிடற்று அண்ணற்கு மாசிலோள் தந்த நெறி நீர் அருவி அசும்புறு செல்வம் மண் பரிய வானம் வறப்பினும் மன்னுகமா தண் பரங்குன்றம் நினக்கு #38 பரிபாடல் 11 வையை - நல்லந்துவனார் **இசையமைத்தவர் :: நாகனார் **பண் :: பாலையாழ் விரி கதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்ப எரி சடை எழில் வேழம் தலை எனக் கீழ் இருந்து தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள் உரு கெழு வெள்ளி வந்து ஏற்றியல் சேர வருடையைப் படிமகன் வாய்ப்பப் பொருள் தெரி புந்தி மிதுனம் பொருந்தப் புலர் விடியல் அங்கி உயர் நிற்ப அந்தணன் பங்குவின் இல்லத் துணைக்கு உப்பால் எய்த இறை யமன் வில்லின் கடை மகரம் மேவப் பாம்பு ஒல்லை மதியம் மறைய வருநாளில் வாய்ந்த பொதியில் முனிவன் புரை வரைக் கீறி மிதுனம் அடைய விரி கதிர் வேனில் எதிர்வரவு மாரி இயைக என இவ்வாற்றால் புரை கெழு சையம் பொழி மழை தாழ நெரிதரூஉம் வையைப் புனல் வரையன புன்னாகமும் கரையன சுரபுன்னையும் வண்டு அறைஇய சண்பக நிரை தண் பதம் மனைமாமரம் வாள்வீரம் சினை வளர் வேங்கை கணவிரி காந்தள் தாய தோன்றி தீ என மலரா ஊதை அவிழ்த்த உடை இதழ் ஒள் நீலம் வேய் பயில் சோலை அருவி தூர்த்தரப் பாய் திரை உந்தித் தருதலான் ஆய் கோல் வயவர் அரி மலர்த் துறை என்கோ அரி மலர் மீப் போர்வை ஆரம் தாழ் மார்பின் திரை நுரை மென் பொகுட்டுத் தேம் மணச் சாந்தின் அரிவையது தானை என்கோ கள் உண்ணூஉப் பருகு படி மிடறு என்கோ பெரிய திருமருத நீர்ப் பூம் துறை ஆம் நாள் நிறை மதி அலர்தரு பக்கம் போல் நாளின்நாளின் நளி வரைச் சிலம்பு தொட்டு நிலவுப் பரந்து ஆங்கு நீர் நிலம் பரப்பி உலகு பயம் பகர ஓம்பு பெரும் பக்கம் வழியது பக்கத்து அமரர் உண்டி மதி நிறைவு அழிவதின் வரவு சுருங்க எண் மதி நிறை உவா இருள் மதி போல நாள் குறைபடுதல் காணுநர் யாரே சேண் இகந்து கல் ஊர்ந்த மாண் இழை வையை வயத் தணிந்து ஏகு நின் யாணர் இறுநாள் பெற மா மயில் அன்னார் மறையில் புணர் மைந்தர் காமம் கள விட்டு கைகொள் கற்புற்று என மல்லல் புனல் வையை மா மலை விட்டு இருத்தல் இல்லத்து நீ தனிச் சேறல் இளிவரல் என ஆங்கு கடை அழிய நீண்டு அகன்ற கண்ணாளைக் காளை படையொடும் கொண்டு பெயர்வானைச் சுற்றம் இடை நெறித் தாக்குற்றது ஏய்ப்ப அடல் மதுரை ஆடற்கு நீர் அமைந்தது யாறு ஆற்று அணி வெள் வாள் விதிர்ப்போர் மிளிர் குந்தம் ஏந்துவோர் கொள்வார் கோல் கொள்ளக் கொடித் திண் தேர் ஏறுவோர் புள் ஏர் புரவி பொலம் படைக் கைம்_மாவை வெள்ள நீர் நீத்தத்துள் ஊர்புஊர்பு உழக்குநரும் கண் ஆரும் சாயல் கழித் துரப்போரை வண்ண நீர் கரந்த வட்டு விட்டு எறிவோரும் மணம் வரு மாலையின் வட்டிப்போரைத் துணி பிணர் மருப்பின் நீர் எக்குவோரும் தெரி கோதை நல்லார் தம் கேளிர் திளைக்கும் உரு கெழு தோற்றம் உரைக்குங்கால் நாளும் பொருகளம் போலும் தகைத்தே பரி கவரும் பாய் தேரான் வையை அகம் நீரணி வெறி செறி மலருறு கமழ் தண் தார் வரை அகலத்து அவ் ஏர் அணி நேர் இழை ஒளி திகழ் தகை வகை செறி பொறி புனை வினைப் பொலம் கோதையவரொடு பாகர் இறை வழை மது நுகர்பு களி பரந்து நாகரின் நல் வள வினை வயவு ஏற நளி புணர்மார் காரிகை மது ஒருவரின் ஒருவர் கண்ணின் கவர்புறச் சீர் அமை பாடல் பயத்தால் கிளர் செவி தெவி உம்பர் உறையும் ஒளி கிளர் வான் ஊர்பு ஆடும் அம்பி கரவா வழக்கிற்றே ஆங்கு அதை கார் ஒவ்வா வேனில் கலங்கித் தெளிவரல் நீர் ஒவ்வா வையை நினக்கு கனைக்கும் அதிர் குரல் கார் வானம் நீங்கப் பனிப் படு பைதல் விதலைப் பருவத்து ஞாயிறு காயா நளி மாரிப் பின் குளத்து மா இரும் திங்கள் மறு நிறை ஆதிரை விரி நூல் அந்தணர் விழவு தொடங்கப் புரிநூல் அந்தணர் பொலம் கலம் ஏற்ப வெம்பாது ஆக வியல் நில வரைப்பு என அம்பா ஆடலின் ஆய் தொடிக் கன்னியர் முனித் துறை முதல்வியர் முறைமை காட்டப் பனிப் புலர்பு ஆடிப் பரு மணல் அருவியின் ஊதை ஊர்தர உறை சிறை வேதியர் நெறி நிமிர் நுடங்கு அழல் பேணிய சிறப்பின் தையல் மகளிர் ஈரணி புலர்த்தர வையை நினக்கு மடை வாய்த்தன்று மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவரவர் தீ எரிப் பாலும் செறி தவம் முன் பற்றியோ தாய் அருகா நின்று தவத் தை நீராடுதல் நீ உரைத்தி வையை நதி ஆயிடை மா இதழ் கொண்டு ஓர் மட மாதர் நோக்கினாள் வேய் எழில் வென்று வெறுத்த தோள் நோக்கிச் சாய் குழை பிண்டித் தளிர் காதில் தையினாள் பாய் குழை நீலம் பகல் ஆகத் தையினாள் குவளைக் குழைக் காதின் கோலச் செவியின் இவள் செரீஇ நான்கு விழி படைத்தாள் என்று நெற்றி விழியா நிறைத் திலகம் இட்டாளே கொற்றவை கோலம் கொண்டு ஓர் பெண் பவள வளை செறித்தாள் கண்டு அணிந்தாள் பச்சைக் குவளைப் பசும் தண்டு கொண்டு கல்லகாரப் பூவால் கண்ணி தொடுத்தாளை நில்லிகா என்பாள் போல் நெய்தல் தொடுத்தாளே மல்லிகா மாலை வளாய் தண்டு தழுவாத் தாவு நீர் வையையுள் கண்ட பொழுதில் கடும் புனல் கைவாங்க நெஞ்சம் அவள் வாங்க நீடு புணை வாங்க நேர்_இழை நின்றுழிக் கண் நிற்ப நீர் அவன் தாழ்வுழி உய்யாது தான் வேண்டும் ஆறு உய்ப்ப ஆயத்துடன் நில்லாள் ஆங்கு அவன் பின் தொடரூஉத் தாய் அத் திறம் அறியாள் தாங்கி தனிச் சேறல் ஆயத்தில் கூடு என்று அரற்றெடுப்பத் தாக்கிற்றே சேயுற்ற கார் நீர் வரவு நீ தக்காய் தை நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும் கழுத்து அமை கைவாங்காக் காதலர்ப் புல்ல விழுத்தகை பெறுக என வேண்டுதும் என்மாரும் பூ வீழ் அரியின் புலம்பப் போகாது யாம் வீழ்வார் ஏமம் எய்துக என்மாரும் கிழவர் கிழவியர் என்னாது ஏழ்காறும் மழ ஈன்று மல்லல் கேள் மன்னுக என்மாரும் கண்டார்க்குத் தாக்கு அணங்கு இக் காரிகை காண்-மின் பண்டாரம் காமன் படை உவள் கண் காண்-மின் நீல் நெய் தாழ் கோதையவர் விலக்க நில்லாது பூ ஊது வண்டு இனம் யாழ் கொண்ட கொளை கேள்-மின் கொளைப் பொருள் தெரிதரக் கொளுத்தாமல் குரல் கொண்ட கிளைக்கு உற்ற உழைச் சுரும்பின் கேழ் கெழு பாலை இசை ஓர்-மின் பண் கண்டு திறன் எய்தாப் பண் தாளம் பெறப் பாடிக் கொண்ட இன் இசைத் தாளம் கொளை சீர்க்கும் விரித்து ஆடும் தண் தும்பி இனம் காண்-மின் தான் வீழ் பூ நெரித்தாளை முனை கெழு சின நெஞ்சின் முன் எறிந்து பின்னும் கனை வரல் ஒரு தும்பி காய் சினத்து இயல் காண்-மின் என ஆங்கு இன்ன பண்பின் நின் தை நீராடல் மின் இழை நறு நுதல் மகள் மேம்பட்ட கன்னிமை கனியாக் கைக்கிளைக் காம இன் இயல் மாண் தேர்ச்சி இசை பரிபாடல் முன் முறை செய் தவத்தின் இ முறை இயைந்தேம் மறு முறை அமையத்தும் இயைக நறு நீர் வையை நயத்தகு நிறையே #39 பரிபாடல் 20 வையை - நல்லந்துவனார் **இசையமைத்தவர் :: நல்லச்சுதனார் **பண் :: காந்தாரம் கடல் குறைபடுத்த நீர் கல் குறைபட எறிந்து உடல் ஏறு உருமினம் ஆர்ப்ப மலை மாலை முற்றுபுமுற்றுபு பெய்து சூல் முதிர் முகில் பொருது இகல் புலி போழ்ந்த பூ நுதல் எழில் யானைக் குருதிக் கோட்டு அழி கறை தெளி பெறக் கழீஇயின்று காலைக் கடல் படிந்து காய் கதிரோன் போய வழி மாலை மலை மணந்து மண் துயின்ற கங்குலான் வான் ஆற்றும் மழை தலைஇ மரன் ஆற்றும் மலர் நாற்றம் தேன் ஆற்றும் மலர் நாற்றம் செறு வெயில் உறு கால கான் ஆற்றும் கார் நாற்றம் கொம்பு உதிர்த்த கனி நாற்றம் தான் நாற்றம் கலந்து உடன் தழீஇ வந்து தரூஉம் வையை தன் நாற்றம் மீது தடம் பொழில் தான் யாற்று வெம் நாற்று வேசனை நாற்றம் குதுகுதுப்ப ஊரூர் பறை ஒலி கொண்டன்று உயர் மதிலில் நீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழீஇத் திண் தேர்ப் புரவி வங்கம் பூட்டவும் வங்கப் பாண்டியில் திண் தேர் ஊரவும் வய_மாப் பண்ணுந மத_மாப் பண்ணவும் கய_மாப் பேணிக் கலவாது ஊரவும் மகளிர் கோதை மைந்தர் புனையவும் மைந்தர் தண் தார் மகளிர் பெய்யவும் முந்துறல் விருப்பொடு முறை மறந்து அணிந்தவர் ஆடுவார் பொய்தல் அணி வண்டு இமிர் மணல் கோடு ஏறு எருத்தத்து இரும் புனலில் குறுகி மாட மறுகின் மருவி மறுகுறக் கூடல் விழையும் தகைத்துத் தகை வையை புகை வகை தைஇயினார் பூம் கோதை நல்லார் தகை வகை தைஇயினார் தார் வகைவகை தைஇயினார் மாலை மிகமிகச் சூட்டும் கண்ணியும் மோட்டு வலையமும் இயல் அணி அணி நிற்ப ஏறி அமர் பரப்பின் அயலயல் அணி நோக்கி ஆங்காங்கு வருபவர் இடு வளை ஆரமோடு ஈத்தான் உடனாகக் கெடு வளை பூண்டவள் மேனியில் கண்டு நொந்து அவள் மாற்றாள் இவள் என நோக்கத் தந்த கள்வன் சமழ்ப்பு முகம் காண்-மின் செருச் செய்த வாளி சீற்றத்தவை அன்ன நேர் இதழ் உண்கணார் நிரை காடாக ஓடி ஒளித்து ஒய்யப் போவாள் நிலை காண்-மின் என ஆங்கு ஒய்யப் போவாளை உறழ்ந்தோள் இவ் வாள்_நுதல் வையை மடுத்தால் கடல் எனத் தெய்ய நெறி மணல் நேடினர் செல்ல சொல் ஏற்று செறி நிரைப் பெண் வல் உறழ்பு யாது தொடர்பு என்ன மறலினாள் மாற்றாள் மகள் வாய் வாளா நின்றாள் செறி நகை சித்தம் திகைத்து ஆயத்து ஒருத்தி அவளை அமர் காமம் மாயப் பொய் கூட்டி மயக்கும் விலைக் கணிகை பெண்மைப் பொதுமைப் பிணையிலி ஐம்புலத்தைத் துற்றவ துற்றும் துணை இதழ் வாய்த்தொட்டி முற்றா நறு நறா மொய் புனல் அட்டிக் காரிகை நீர் ஏர் வயல் காமக் களி நாஞ்சில் மூரி தவிர முடுக்கு முதுசாடி மட மதர் உண்கண் கயிறாக வைத்துத் தட மென் தோள் தொட்டுத் தகைத்து மட விரலால் இட்டார்க்கு யாழ் ஆர்த்தும் பாணியில் எம் இழையைத் தொட்டு ஆர்த்தும் இன்பத் துறைப் பொதுவி கெட்டதைப் பொய்தல் மகளிர் கண் காண இகுத்தந்து இவ் வையைத் தொழுவத்துத் தந்து வடித்து இடித்து மத்திகை மாலையா மோதி அவையத்துத் தொடர்ந்தேம் எருது தொழில் செய்யாது ஓட விடும் கடன் வேளாளர்க்கு இன்று படர்ந்து யாம் தன் மார்பும் தண்டம் தரும் ஆரத்தாள் மார்பும் நின் மார்பும் ஓர் ஒத்த நீர்மைய-கொல் என்னாமுன் தேடினாள் ஏசச் சில மகளிர் மற்று அதற்கு ஊடினார் வையை அகத்து சிந்திக்கத் தீரும் பிணியாள் செறேற்க மைந்துற்றாய் வெம் சொல் மட மயில் சாயலை வந்திக்க வார் என மனத் தக்க நோய் இது வேற்றாரை வேற்றார் தொழுதல் இளிவரவு போற்றாய் காண் அன்னை புரையோய் புரை இன்று மாற்றாளை மாற்றாள் வரவு அ சொல் நல்லவை நாணாமல் தந்து முழவின் வருவாய் நீ வாய்வாளா எந்தை எனக்கு ஈத்த இடு வளை ஆரப் பூண் வந்த வழி நின்-பால் மாயக் களவு அன்றேல் தந்தானைத் தந்தே தருக்கு மாலை அணிய விலை தந்தான் மாதர் நின் கால சிலம்பும் கழற்றுவான் சால அதிரல் அம் கண்ணி நீ அன்பன் எற்கு அன்பன் கதுவாய் அவன் கள்வன் கள்வி நான் அல்லேன் என ஆங்கு வச்சிய மானே மறலினை மாற்று உமக்கு நச்சினார் ஈபவை நாடு அறிய நும்மவே சேக்கை இனியார்-பால் செல்வான் மனையாளால் காக்கை கடிந்து ஒழுகல் கூடுமோ கூடா தகவு உடை மங்கையர் சான்றாண்மை சான்றார் இகழினும் கேள்வரை ஏத்தி இறைஞ்சுவார் நிகழ்வது அறியாது நில்லு நீ நல்லாய் மகளிரை மைந்துற்று அமர்புற்ற மைந்தர் அகலம் கடிகுவேம் என்பவை யார்க்கானும் முடி பொருள் அன்று முனியல் முனியல் கட வரை நிற்குமோ காமம் கொடி_இயலாய் என ஆங்கு இன்ன துணியும் புலவியும் ஏற்பிக்கும் தென்னவன் வையைச் சிறப்பு கொடி_இயலார் கை போல் குவிந்த முகை அரவு உடன்றவை போல் விரிந்த குலை குடை விரிந்தவை போலக் கோலும் மலர் சுனை கழிந்து தூங்குவன நீரின் மலர் சினை விரிந்து உதிர்ந்த வீப் புதல் விரி போதொடும் அருவி சொரிந்த திரையின் துரந்து நெடு மால் கருங்கை நடு வழிப் போந்து கடு மா களிறு அணைத்துக் கைவிடு நீர் போலும் நெடு நீர் மலி புனல் நீள் மாடக் கூடல் கடி மதில் பெய்யும் பொழுது நாம் அமர் உடலும் நட்பும் தணப்பும் காமமும் கள்ளும் கலந்து உடன் பாராட்ட தாம் அமர் காதலரொடு ஆடப் புணர்வித்தல் பூ மலி வையைக்கு இயல்பு &266 - (நல்வழிசியார்) நல்லழிசியார் #1 பரிபாடல் 16 வையை - நல்வழிசியார் **இசையமைத்தவர் :: நல்லச்சுதனார் **பண் :: நோதிறம் கரையே கைவண் தோன்றல் ஈகை போன்ம் என மை படு சிலம்பின் கறியொடும் சாந்தொடும் நெய் குடை தயிரின் நுரையொடும் பிறவொடும் எவ்வயினானும் மீதுமீது அழியும் துறையே முத்து நேர்பு புணர் காழ் மத்தக நித்திலம் பொலம் புனை அவிர் இழை கலங்கல் அம் புனல் மணி வலஞ்சுழி உந்திய திணை பிரி புதல்வர் கயம் தலை முச்சிய முஞ்சமொடு தழீஇ தத்தம் துணையோடு ஒருங்கு உடன் ஆடும் தத்து அரிக் கண்ணார் தலைத்தலை வருமே செறுவே விடு மலர் சுமந்து பூ நீர் நிறைதலின் படு கண் இமிழ் கொளை பயின்றனர் ஆடும் களி நாள் அரங்கின் அணி நலம் புரையும் காவே சுரும்பு இமிர் தாதொடு தலைத்தலை மிகூஉம் நரந்த நறு மலர் நன்கு அளிக்கும்மே கரைபு ஒழுகு தீம் புனற்கு எதிர் விருந்து அயர்வ போல் கான் அல் அம் காவும் கயமும் துருத்தியும் தேன் தேன் உண்டு பாடத் திசைதிசைப் பூ நலம் பூத்தன்று வையை வரவு கருங்கையின் ஆயத்தார் சுற்றும் எறிந்து குரும்பையின் முலைப் பட்ட பூ நீர் துடையாள் பெருந்தகை மீளி வருவானைக் கண்டே இரும் துகில் தானையின் ஒற்றிப் பொருந்தலை பூத்தனள் நீங்கு எனப் பொய் ஆற்றால் தோழியர் தோற்றம் ஓர் ஒத்த மலர் கமழ் தண் சாந்தின் நாற்றத்தின் போற்றி நகையொடும் போத்தந்து இரும் கடற்கு ஊங்கு இவரும் யாறு எனத் தங்கான் மகிழ களிப் பட்ட தேன் தேறல் மாற்றிக் குருதி துடையாக் குறுகி மருவ இனியர் பூத்தனள் நங்கை பொலிக என நாணுதல் வாய்த்தன்றால் வையை வரவு மலையின் இழி அருவி மல்கு இணர்ச் சார்ச்சார்க் கரை மரம் சேர்ந்து கவினி மடவார் நனை சேர் கதுப்பினுள் தண் போது மைந்தர் மலர் மார்பின் சோர்ந்த மலர் இதழ் தாஅய் மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய வானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல் எஞ்ஞான்றும் தேன் இமிர் வையைக்கு இயல்பு புள்ளே புனலே புலவி இ மூன்றினும் ஒள் ஒளி சேய்தா ஒளி கிளர் உண்கண் கெண்டை பல் வரி வண்டு இனம் வாய் சூழ் கவினொடும் வெல் நீர் வீ-வயின் தேன் சோரப் பல் நீர் அடுத்தடுத்து ஆடுவார் புல்லக் குழைந்து வடுப்படு மான்மதச் சாந்து ஆர் அகலத்தான் எடுத்த வேய் எக்கி நூக்கு உயர்பு தாக்கத் தொடுத்த தேன் சோரும் வரை போலும் தோற்றம் கொடித் தேரான் வையைக்கு இயல்பு வரை ஆர்க்கும் புயல் கரை திரை ஆர்க்கும் இத் தீம் புனல் கண்ணியர் தாரர் கமழ் நறும் கோதையர் பண்ணிய ஈகைப் பயன் கொள்வான் ஆடலால் நாள்நாள் உறையும் நறும் சாந்தும் கோதையும் பூத்த புகையும் அவியும் புலராமை மறாஅற்க வானம் மலிதந்து நீத்தம் வறாஅற்க வைகை நினக்கு #2 பரிபாடல் செவ்வேள் 17 - நல்லழிசியார் **இசையமைத்தவர் :: நல்லச்சுதனார் **பண் :: நோதிறம் தேம் படு மலர் குழை பூம் துகில் வடி மணி ஏந்து இலை சுமந்து சாந்தம் விரைஇ விடை அரை அசைத்த வேலன் கடிமரம் பரவினர் உரையொடு பண்ணிய இசையினர் விரி மலர் மதுவின் மரன் நனை குன்றத்துக் கோல் எரி கொளை நறை புகைக் கொடி ஒருங்கு எழ மாலை மாலை அடியுறை இயைநர் மேலோர் உறையுளும் வேண்டுநர் யாஅர் ஒருதிறம் பாணர் யாழின் தீம் குரல் எழ ஒருதிறம் யாணர் வண்டின் இமிர் இசை எழ ஒருதிறம் கண் ஆர் குழலின் கரைபு எழ ஒருதிறம் பண் ஆர் தும்பி பரந்து இசை ஊத ஒருதிறம் மண் ஆர் முழவின் இசை எழ ஒருதிறம் அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப ஒருதிறம் பாடல் நல் விறலியர் ஒல்குபு நுடங்க ஒருதிறம் வாடை உளர்-வயின் பூம் கொடி நுடங்க ஒருதிறம் பாடினி முரலும் பாலை அம் குரலின் நீடு கிளர் கிழமை நிறை குறை தோன்ற ஒருதிறம் ஆடு சீர் மஞ்ஞை அரிக் குரல் தோன்ற மாறுமாறு உற்றன போல் மாறு எதிர்கோடல் மாறு அட்டான் குன்றம் உடைத்து பாடல் சான்று பல் புகழ் முற்றிய கூடலொடு பரங்குன்றினிடைக் கமழ் நறும் சாந்தின் அவரவர் திளைப்ப நணிநணித்து ஆயினும் சேஎய்ச் சேய்த்து மகிழ் மிகு தேஎம் கோதையர் கூந்தல் குஞ்சியின் சோர்ந்து அவிழ் இதழின் இயங்கும் ஆறு இன்று வசை நீங்கிய வாய்மையால் வேள்வியால் திசை நாறிய குன்று அமர்ந்து ஆண்டாண்டு ஆவி உண்ணும் அகில் கெழு கமழ் புகை வாய்வாய் மீ போய் உம்பர் இமைபு இறப்பத் தேயா மண்டிலம் காணுமாறு இன்று வளை முன்கை வணங்கு இறையார் அணை மென் தோள் அசைபு ஒத்தார் தார் மார்பின் தகை இயலார் ஈர மாலை இயல் அணியார் மனம் மகிழ் தூங்குநர் பாய்புடன் ஆடச் சுனை மலர்த் தாது ஊதும் வண்டு ஊதல் எய்தா அனைய பரங்குன்றின் அணி கீழோர் வயல் பரக்கும் வார் வெள் அருவி பரந்து ஆனாது அரோ மேலோர் இயங்குதலால் வீழ் மணி நீலம் செறு உழக்கும் அரோ தெய்வ விழவும் திருந்து விருந்து அயர்வும் அவ் வெள் அருவி அணி பரங்குன்றிற்கும் தொய்யா விழுச் சீர் வளம் கெழு வையைக்கும் கொய் உளை மான் தேர்க் கொடித் தேரான் கூடற்கும் கை ஊழ் தடுமாற்றம் நன்று என ஆங்கு மணி நிற மஞ்ஞை ஓங்கிய புள் கொடிப் பிணிமுகம் ஊர்ந்த வெல் போர் இறைவ பணி ஒரீஇ நின் புகழ் ஏத்தி அணி நெடும் குன்றம் பாடுதும் தொழுதும் அவை யாமும் எம் சுற்றமும் பரவுதும் ஏம வைகல் பெறுக யாம் எனவே &267 - நல்லாவூர் கிழார் #1 அகநானூறு 86 மருதம் - நல்லாவூர் கிழார் உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை பெரும் சோற்று அமலை நிற்ப நிரை கால் தண் பெரும் பந்தர்த் தரு மணல் ஞெமிரி மனை விளக்குறுத்து மாலை தொடரிக் கனை இருள் அகன்ற கவின் பெறு காலை கோள் கால் நீங்கிய கொடு வெண் திங்கள் கேடு இல் விழுப் புகழ் நாள் தலைவந்து என உச்சிக் குடத்தர் புத்து அகல் மண்டையர் பொது செய் கம்பலை முது செம் பெண்டிர் முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப் புதல்வன் பயந்த திதலை அம் வயிற்று வால் இழை மகளிர் நால்வர் கூடிக் கற்பினின் வழாஅ நல் பல உதவிப் பெற்றோன் பெட்கும் பிணையை ஆக என நீரொடு சொரிந்த ஈர் இதழ் அலரி பல் இரும் கதுப்பின் நெல்லொடு தயங்க வதுவை நல் மணம் கழிந்த பின்றைக் கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து பேர் இற்கிழத்தி ஆக எனத் தமர் தர ஓர் இல் கூடிய உடன் புணர் கங்குல் கொடும் புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்து ஒடுங்கினள் கிடந்த ஓர் புறம் தழீஇ முயங்கல் விருப்பொடு முகம் புதை திறப்ப அஞ்சினள் உயிர்த்த காலை யாழ நின் நெஞ்சம் படர்ந்தது எஞ்சாது உரை என இன் நகை இருக்கைப் பின் யான் வினவலின் செம் சூட்டு ஒண் குழை வண் காது துயல்வர அகம் மலி உவகையள் ஆகி முகன் இகுத்து ஒய்யென இறைஞ்சியோளே மாவின் மடம் கொள் மதைஇய நோக்கின் ஒடுங்கு ஈர் ஓதி மாஅயோளே #2 நற்றிணை 154 குறிஞ்சி - நல்லாவூர் கிழார் கானமும் கம்மென்றன்றே வானமும் வரை கிழிப்பு அன்ன மை இருள் பரப்பிப் பல் குரல் எழிலி பாடு ஓவாதே மஞ்சு தவழ் இறும்பில் களிறு வலம் படுத்த வெம் சின உழுவைப் பேழ் வாய் ஏற்றை அஞ்சுதக உரறும் ஓசை கேளாது துஞ்சுதியோ இல தூ இலாட்டி பேர் அஞர் பொருத புகர் படு நெஞ்சம் நீர் அடு நெருப்பின் தணிய இன்று அவர் வாரார் ஆயினோ நன்றே சாரல் விலங்கு மலை ஆர் ஆறு உள்ளு-தொறும் நிலம் பரந்து ஒழுகும் என் நிறை இல் நெஞ்சே &268 - நல்லிறையனார் #1 புறநானூறு 393 - நல்லிறையனார் **பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பதி முதல் பழகாப் பழங்கண் வாழ்க்கைக் குறு நெடும் துணையொடும் கூர்மை வீதலின் குடி முறை பாடி ஒய்யென வருந்தி அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும் கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின் வள்ளன்மையின் எம் வரைவோர் யார் என உள்ளிய உள்ளமொடு உலை நசை துணையா உலகம் எல்லாம் ஒரு பால் பட்டு என மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி ஈர்ம் கை மறந்த என் இரும் பேர் ஒக்கல் கூர்ந்த எவ்வம் விடக் கொழு நிணம் கிழிப்பக் கோடைப் பருத்தி வீடு நிறை பெய்த மூடைப் பண்டம் மிடை நிறைந்து அன்ன வெண் நிண மூரி அருள நாள் உற ஈன்ற அரவின் நா உருக் கடுக்கும் என் தொன்று படு சிதாஅர் துவர நீக்கிப் போது விரி பகன்றைப் புது மலர் அன்ன அகன்று மடி கலிங்கம் உடீஇச் செல்வமும் கேடு இன்று நல்கு-மதி பெரும மாசு இல் மதி புரை மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி ஆடு_மகள் அல்குல் ஒப்ப வாடிக் கோடை ஆயினும் கோடி காவிரி புரக்கும் நல் நாட்டுப் பொருந வாய் வாள் வளவன் வாழ்க எனப் பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே &269 - நல்லுருத்தினார் ** கலித்தொகை - நான்காவது முல்லைக்கலி - நல்லுருத்தினார் #1 கலித்தொகை 101 - நல்லுருத்தினார் தளி பெறு தண் புலத்துத் தலைப் பெயற்கு அரும்பு ஈன்று முளி முதல் பொதுளிய முள் புற பிடவமும் களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று ஞெலிபு உடன் நிரைத்த ஞெகிழ் இதழ்க் கோடலும் மணி புரை உருவின காயாவும் பிறவும் அணி கொள மலைந்த கண்ணியர் தொகுபு உடன் மாறு எதிர்கொண்ட தம் மைந்துடன் நிறுமார் சீறு அரு முன்பினோன் கணிச்சி போல் கோடு சீஇ ஏறு தொழூஉப் புகுத்தனர் இயைபு உடன் ஒருங்கு அவ் வழி முழக்கு என இடி என முன் சமத்து ஆர்ப்ப வழக்கு மாறுகொண்டு வருபுவருபு ஈண்டி நறையொடு துகள் எழ நல்லவர் அணி நிற்பத் துறையும் ஆலமும் தொல் வலி மராஅமும் முறையுளி பராஅய்ப் பாய்ந்தனர் தொழூ மேல் பாட்டு உலண்டின் நிறன் ஒக்கும் புன் குருக் கண் நோக்கு அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாக் குத்திக் கோட்டிடைக் கொண்டு குலைப்பதன் தோற்றம் காண் அம் சீர் அசை இயல் கூந்தல் கை நீட்டியான் நெஞ்சம் பிளந்திட்டு நேரார் நடுவண் தன் வஞ்சினம் வாய்த்தானும் போன்ம் சுடர் விரிந்து அன்ன சுரி நெற்றிக் காரி விடரி அம் கண்ணிப் பொதுவனைச் சாடிக் குடர் சொரியக் குத்திக் குலைப்பதன் தோற்றம் காண் படர் அணி அந்திப் பசும் கண் கடவுள் இடரிய ஏற்று எருமை நெஞ்சு இடந்திட்டுக் குடர் கூளிக்கு ஆர்த்துவான் போன்ம் செவி மறை நேர் மின்னும் நுண் பொறி வெள்ளைக் கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவனைச் சாடி நுதி நுனைக் கோட்டால் குலைப்பதன் தோற்றம் காண் ஆர் இருள் என்னான் அரும் கங்குல் வந்து தன் தாளின் கடந்து அட்டுத் தந்தையைக் கொன்றானைத் தோளின் திருகுவான் போன்ம் என ஆங்கு அணி மாலைக் கேள்வல் தரூஉமார் ஆயர் மணி மாலை ஊதும் குழல் கடாஅக் களிற்றினும் கண்ணஞ்சா ஏற்றை விடாஅது நீ கொள்குவை ஆயின் படாஅகை ஈன்றன ஆய_மகள் தோள் பகலிடக் கண்ணியன் பைதல் குழலன் சுவல் மிசைக் கோல் அசைத்த கையன் அயலது கொல் ஏறு சாட இருந்தார்க்கு எம் பல் இரும் கூந்தல் அணை கொடுப்பேம் யாம் கோளாளர் என் ஒப்பார் இல் என நம் ஆனுள் தாளாண்மை கூறும் பொதுவன் நமக்கு ஒரு நாள் கேளாளன் ஆகாமை இல்லை அவன் கண்டு வேளாண்மை செய்தன கண் ஆங்கு ஏறும் வருந்தின ஆயரும் புண் கூர்ந்தார் நாறு இரும் கூந்தல் பொதுமகளிர் எல்லாரும் முல்லை அம் தண் பொழில் புக்கார் பொதுவரோடு எல்லாம் புணர் குறிக் கொண்டு #2 கலித்தொகை 102 - நல்லுருத்தினார் கண் அகன் இரு விசும்பில் கதழ் பெயல் கலந்து ஏற்ற தண் நறும் பிடவமும் தவழ் கொடித் தளவமும் வண்ண வண் தோன்றியும் வயங்கு இணர்க் கொன்றையும் அன்னவை பிறவும் பல் மலர் துதையத் தழையும் கோதையும் இழையும் என்று இவை தைஇயினர் மகிழ்ந்து திளைஇ விளையாடும் மட மொழி ஆயத்தவருள் இவள் யார் உடம்போடு என் உயிர் புக்கவள் இன்று ஓஒ இவள் பொரு புகல் நல் ஏறு கொள்பவர் அல்லால் திரு மா மெய் தீண்டலர் என்று கருமமா எல்லாரும் கேட்ப அறைந்துஅறைந்து எப்பொழுதும் சொல்லால் தரப்பட்டவள் சொல்லுக பாணியேம் என்றார் அறைக என்றார் பாரித்தார் மாண்_இழை ஆறு ஆகச் சாறு சாற்றுள் பெடை அன்னார் கண் பூத்து நோக்கும் வாய் எல்லாம் மிடை பெறின் நேராத் தகைத்து தகை வகை மிசைமிசைப் பாயியர் ஆர்த்து உடன் எதிரெதிர் சென்றார் பலர் கொலை மலி சிலை செறி செயிர் அயர் சினம் சிறந்து உருத்து எழுந்து ஓடின்று மேல் எழுந்தது துகள் ஏற்றனர் மார்பு கவிழ்ந்தன மருப்பு கலங்கினர் பலர் அவருள் மலர் மலி புகல் எழ அலர் மலி மணி புரை நிமிர் தோள் பிணைஇ எருத்தோடு இமில் இடைத் தோன்றினன் தோன்றி வருத்தினான் மன்ற அவ் ஏறு ஏறு எவ்வம் காணா எழுந்தார் எவன்-கொலோ ஏறு உடை நல்லார் பகை மடவரே நல் ஆயர் மக்கள் நெருநை அடல் ஏற்று எருத்து இறுத்தார்க் கண்டும் மற்று இன்றும் உடல் ஏறு கோள் சாற்றுவார் ஆங்கு இனித் தண்ணுமைப் பாணி தளராது எழூஉக பண் அமை இன் சீர்க் குரவையுள் தெண் கண்ணித் திண் தோள் திறல் ஒளி மாயப் போர் மா மேனி அம் துவர் ஆடைப் பொதுவனோடு ஆய்ந்த முறுவலாள் மென் தோள் பாராட்டிச் சிறுகுடி மன்றம் பரந்தது உரை #3 கலித்தொகை 103 - நல்லுருத்தினார் மெல் இணர்க் கொன்றையும் மென் மலர்க் காயாவும் புல் இலை வெட்சியும் பிடவும் தளவும் குல்லையும் குருந்தும் கோடலும் பாங்கரும் கல்லவும் கடத்தவும் கமழ் கண்ணி மலைந்தனர் பல் ஆன் பொதுவர் கதழ் விடை கோள் காண்மார் முல்லை முகையும் முருந்தும் நிரைத்து அன்ன பல்லர் பெரு மழைக் கண்ணர் மடம் சேர்ந்த சொல்லர் சுடரும் கனம் குழைக் காதினர் நல்லவர் கொண்டார் மிடை அவர் மிடை கொள மணி வரை மருங்கின் அருவி போல அணி வரம்பு அறுத்த வெண் கால் காரியும் மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்பு போல் வான் பொறி பரந்த புள்ளி வெள்ளையும் கொலைவன் சூடிய குழவித் திங்கள் போல் வளையுபு மலிந்த கோடு அணி சேயும் பொரு முரண் முன்பின் புகல் ஏறு பல பெய்து அரிமாவும் பரிமாவும் களிறும் கராமும் பெரு மலை விடரகத்து ஒருங்கு உடன் குழீஇ படு மழை ஆடும் வரையகம் போலும் கொடி நறை சூழ்ந்த தொழூஉ தொழுவினுள் புரிபுபுரிபு புக்க பொதுவரைத் தெரிபுதெரிபு குத்தின ஏறு ஏற்றின் அரி பரிபு அறுப்பன சுற்றி எரி திகழ் கணிச்சியோன் சூடிய பிறைக்-கண் உருவ மாலை போலக் குருதிக் கோட்டொடு குடர் வலந்தன கோட்டொடு சுற்றிக் குடர் வலந்த ஏற்றின் முன் ஆடி நின்று அக் குடர் வாங்குவான் பீடு காண் செம் நூல் கழி ஒருவன் கைப் பற்ற அ நூலை முந்நூலாக் கொள்வானும் போன்ம் இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் கோட்டு இனத்து ஆயர்_மகன் அன்றே மீட்டு ஒரான் போர் புகல் ஏற்றுப் பிணர் எருத்தில் தத்துபு தார் போல் தழீஇயவன் இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் கோ இனத்து ஆயர்_மகன் அன்றே ஓவான் மறை ஏற்றின் மேல் இருந்து ஆடித் துறை அம்பி ஊர்வான் போல் தோன்றும் அவன் தொழீஇஇ காற்றுப் போல வந்த கதழ் விடைக் காரியை ஊற்றுக் களத்தே அடங்கக் கொண்டு அட்டு அதன் மேல் தோன்றி நின்ற பொதுவன் தகை கண்டை ஏற்று எருமை நெஞ்சம் வடிம்பின் இடந்திட்டுச் சீற்றமொடு ஆர் உயிர் கொண்ட ஞான்று இன்னன்-கொல் கூற்று என உட்கிற்று என் நெஞ்சு இகுளை இஃது ஒன்று கண்டை இஃது ஒத்தன் புல் இனத்து ஆயர்_மகன் அன்றே புள்ளி வெறுத்த வய வெள் ஏற்று அம் புடைத் திங்கள் மறுப் போல் பொருந்தியவன் ஓவா வேகமோடு உருத்துத் தன் மேல் சென்ற சேஎச் செவி முதல் கொண்டு பெயர்த்து ஒற்றும் காயாம் பூம் கண்ணிப் பொதுவன் தகை கண்டை மேவார் விடுத்தந்த கூந்தல் குதிரையை வாய் பகுத்திட்டுப் புடைத்த ஞான்று இன்னன்-கொல் மாயோன் என்று உட்கிற்று என் நெஞ்சு ஆங்கு இரும் புலித் தொழுதியும் பெரும் களிற்று இனமும் மாறுமாறு உழக்கிய ஆங்கு உழக்கிப் பொதுவரும் ஏறு கொண்டு ஒருங்கு தொழூஉ விட்டனர் விட்டு ஆங்கே மயில் எருத்து உறழ் அணி மணி நிலத்துப் பிறழப் பயில் இதழ் மலர் உண்கண் மாதர் மகளிரும் மைந்தரும் மைந்துற்றுத் தாது எரு மன்றத்து அயர்வர் தழூஉ கொல் ஏற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆய_மகள் அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லதை நெஞ்சிலார் தோய்தற்கு அரிய உயிர் துறந்து நைவாரா ஆய_மகள் தோள் வளியா அறியா உயிர் காவல் கொண்டு நளி வாய் மருப்பு அஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு எளியவோ ஆய_மகள் தோள் விலை வேண்டார் எம் இனத்து ஆயர்_மகளிர் கொலை ஏற்றுக் கோட்டிடைத் தாம் வீழ்வார் மார்பின் முலையிடைப் போலப் புகின் ஆங்கு குரவை தழீஇ யாம் மரபுளி பாடித் தேயா விழுப் புகழ் தெய்வம் பரவுதும் மாசு இல் வான் முந்நீர்ப் பரந்த தொல் நிலம் ஆளும் கிழமையொடு புணர்ந்த எம் கோ வாழியர் இ மலர் தலை உலகே #4 கலித்தொகை 104 - நல்லுருத்தினார் மலி திரை ஊர்ந்து தன் மண் கடல் வௌவலின் மெலிவு இன்றி மேற்சென்று மேவார் நாடு இடம்படப் புலியொடு வில் நீக்கிப் புகழ் பொறித்த கிளர் கெண்டை வலியினான் வணக்கிய வாடாச் சீர்த் தென்னவன் தொல் இசை நட்ட குடியொடு தோன்றிய நல் இனத்து ஆயர் ஒருங்கு தொக்கு எல்லாரும் வானுற ஓங்கிய வயங்கு ஒளிர் பனைக்கொடிப் பால்நிறவண்ணன் போல் பழி தீர்ந்த வெள்ளையும் பொரு முரண் மேம்பட்ட பொலம் புனை புகழ் நேமித் திருமறுமார்பன் போல் திறல் சான்ற காரியும் மிக்கு ஒளிர் தாழ் சடை மேவரும் பிறை நுதல் முக்கண்ணான் உருவே போல் முரண் மிகு குராலும் மா கடல் கலக்குற மா கொன்ற மடங்காப் போர் வேல் வல்லான் நிறனே போல் வெருவந்த சேயும் ஆங்கு அப் பொரு வரும் பண்பினவ்வையும் பிறவும் உருவப் பல் கொண்மூக் குழீஇயவை போலப் புரிபுபுரிபு புகுத்தனர் தொழூஉ அவ் வழி முள் எயிற்று ஏஎர் இவளைப் பெறும் இது ஓர் வெள் ஏற்று எருத்து அடங்குவான் ஒள் இழை வாருறு கூந்தல் துயில் பெறும் வை மருப்பின் காரி கதன் அஞ்சான் கொள்பவன் ஈர் அரி வெரூஉப் பிணை மான் நோக்கின் நல்லாள் பெறூஉம் இக் குரூஉக் கண் கொலை ஏறு கொள்வான் வரிக் குழை வேய் உறழ் மென் தோள் துயில் பெறும் வெம் துப்பின் சேஎய் சினன் அஞ்சான் சார்பவன் என்று ஆங்கு அறைவனர் நல்லாரை ஆயர் முறையினால் நாள்_மீன் வாய் சூழ்ந்த மதி போல் மிடை மிசை பேணி நிறுத்தார் அணி அவ் வழிப் பறை எழுந்து இசைப்பப் பல்லவர் ஆர்ப்பக் குறையா மைந்தர் கோள் எதிர் எடுத்த நறை வலம் செய விடா இறுத்தன ஏறு அவ் ஏற்றின் மேல் நிலை மிகல் இகலின் மிடை கழிபு இழிபு மேற்சென்று வேல் நுதி புரை விறல் திறன் நுதி மருப்பின் மாறு அஞ்சான் பால் நிற வெள்ளை எருத்தத்துப் பாய்ந்தானை நோனாது குத்தும் இளம் காரித் தோற்றம் காண் பால் மதி சேர்ந்த அரவினைக் கோள் விடுக்கும் நீல்நிறவண்ணனும் போன்ம் இரிபு எழுபு அதிர்புஅதிர்பு இகந்து உடன் பலர் நீங்க அரிபு அரிபு இறுபு இறுபு குடர் சோரக் குத்தித் தன் கோடு அழியக் கொண்டானை ஆட்டித் திரிபு உழக்கும் வாடா வெகுளி எழில் ஏறு கண்டை இஃது ஒன்று வெருவரு தூமம் எடுப்ப வெகுண்டு திரிதரும் கொல் களிறும் போன்ம் தாள் எழு துணி பிணி இசை தவிர்பு இன்றித் தலைச்சென்று தோள் வலி துணி பிணி துறந்து இறந்து எய்தி மெய் சாய்ந்து கோள் வழுக்கித் தன் முன்னர் வீழ்ந்தான் மேல் செல்லாது மீளும் புகர் ஏற்றுத் தோற்றம் காண் மண்டு அமருள் வாள் அகப்பட்டானை ஒவ்வான் எனப் பெயரும் மீளி மறவனும் போன்ம் ஆங்க செறுத்து அறுத்து உழக்கி ஏற்று எதிர் நிற்ப மறுத்து மறுத்து மைந்தர் சாரத் தடி குறை இறுபு இறுபு தாயின கிடப்ப இடி உறழ் இசை இன்னியம் எழுந்து ஆர்ப்பப் பாடு ஏற்றுக் கொள்பவர் பாய்ந்து மேல் ஊர்பவர் கோடிடை நுழைபவர் கோள் சாற்றுபவரொடு புரிபு மேற்சென்ற நூற்றுவர் மடங்க வரி புனை வல்வில் ஐவர் அட்ட பொருகளம் போலும் தொழூஉ தொழுவினுள் கொண்ட ஏறு எல்லாம் புலம் புகத் தண்டாச் சீர் வாங்கு எழில் நல்லாரும் மைந்தரும் மல்லல் ஊர் ஆங்கண் அயர்வர் தழூஉ பாடுகம் வம்-மின் பொதுவன் கொலை ஏற்றுக் கோடு குறி செய்த மார்பு நெற்றிச் சிவலை நிறை அழித்தான் நீள் மார்பில் செற்றார் கண் சாய யான் சாராது அமைகல்லேன் பெற்றத்தார் கவ்வை எடுப்ப அது பெரிது உற்றீயாள் ஆயர்_மகள் தொழீஇஇ ஒருக்கு நாம் ஆடும் குரவையுள் நம்மை அருக்கினான் போல் நோக்கி அல்லல் நோய் செய்தல் குரூஉக் கண் கொலை ஏறு கொண்டேன் யான் என்னும் தருக்கு அன்றோ ஆயர்_மகன் நேர்_இழாய் கோள் அரிது ஆக நிறுத்த கொலை ஏற்றுக் காரி கதன் அஞ்சான் பாய்ந்த பொதுவற்கே ஆர்வுற்று எமர் கொடை நேர்ந்தார் அலர் எடுத்த ஊராரை உச்சி மிதித்து ஆங்குத் தொல் கதிர்த் திகிரியால் பரவுதும் ஒல்கா உரும் உறழ் முரசின் தென்னவற்கு ஒரு மொழி கொள்க இவ் உலகுடன் எனவே #5 கலித்தொகை 105 - நல்லுருத்தினார் அரைசு படக் கடந்து அட்டு ஆற்றின் தந்த முரைசு கெழு முது குடி முரண் மிகு செல்வற்குச் சீர் மிகு சிறப்பினோன் தொல் குடிக்கு உரித்து எனப் பார் வளர் முத்தமொடு படு கடல் பயந்த ஆர் கலி உவகையர் ஒருங்கு உடன் கூடித் தீது இன்று பொலிக என தெய்வக் கடி அயர்மார் வீவு இல் குடிப் பின் இரும் குடி ஆயரும் தா இல் உள்ளமொடு துவன்றி ஆய்பு உடன் வள் உருள் நேமியான் வாய் வைத்த வளை போலத் தெள்ளிதின் விளங்கும் சுரி நெற்றிக் காரியும் ஒரு குழையவன் மார்பில் ஒண் தார் போல் ஒளி மிகப் பொரு அறப் பொருந்திய செம் மறு வெள்ளையும் பெரும் பெயர்க் கணிச்சியோன் மணி மிடற்று அணி போல இரும் பிணர் எருத்தின் ஏந்து இமில் குராலும் அணங்கு உடை வச்சிரத்தோன் ஆயிரம் கண் ஏய்க்கும் கணம்கொள் பல் பொறிக் கடும் சினப் புகரும் வேல் வலான் உடைத் தாழ்ந்த விளங்கு வெண் துகில் ஏய்ப்ப வாலிது கிளர்ந்த வெண் கால் சேயும் கால முன்பின் பிறவும் சால மடங்கலும் கணிச்சியும் காலனும் கூற்றும் தொடர்ந்து செல் அமையத்துத் துவன்று உயிர் உணீஇய உடங்கு கொட்பன போல் புகுத்தனர் தொழூஉ அவ் வழி கார் எதிர் கலி ஒலி கடி இடி உருமின் இயம் கறங்க ஊர்பு எழு கிளர்பு உளர் புயல் மங்குலின் நறை பொங்க நேர் இதழ் நிரை நிரை நெறி வெறிக் கோதையர் அணி நிற்பச் சீர் கெழு சிலை நிலைச் செயிர் இகல் மிகுதியின் சினப் பொதுவர் தூர்பு எழு துதை புதை துகள் விசும்புற எய்த ஆர்பு உடன் பாய்ந்தார் அகத்து மருப்பில் கொண்டும் மார்புறத் தழீஇயும் எருத்திடை அடங்கியும் இமில் இறப் புல்லியும் தோள் இடைப் புகுதந்தும் துதைந்து பாடு ஏற்றும் நிரைபு மேற்சென்றாரை நீள் மருப்பு உறச் சாடிக் கொள இடம் கொள விடா நிறுத்தன ஏறு கொள்வாரைக் கொள்வாரைக் கோட்டு வாய்ச் சாக் குத்திக் கொள்வார் பெறாஅக் குரூஉச் செகில் காணிகா செயிரின் குறை நாளால் பின் சென்று சாடி உயிர் உண்ணும் கூற்றமும் போன்ம் பாடு ஏற்றவரைப் படக் குத்திச் செம் காரிக் கோடு எழுந்து ஆடும் கண மணி காணிகா நகை சால் அவிழ்_பதம் நோக்கி நறவின் முகை சூழும் தும்பியும் போன்ம் இடைப் பாய்ந்து எருத்தத்து கொண்டானோடு எய்தி மிடைப் பாயும் வெள் ஏறு கண்டைகா வாள் பொரு வானத்து அரவின் வாய் கோட்பட்டுப் போதரும் பால் மதியும் போன்ம் ஆங்க ஏறும் பொதுவரும் மாறுற்று மாறா இரு பெரு வேந்தரும் இகலிக் கண்ணுற்ற பொருகளம் போலும் தொழூஉ வெல் புகழ் உயர் நிலைத் தொல் இயல் துதை புதை துளங்கு இமில் நல் ஏறு கொண்ட பொதுவன் முகன் நோக்கிப் பாடு இல ஆய_மகள் கண் நறு_நுதால் என்-கொல் ஐங்கூந்தல் உளரச் சிறு முல்லை நாறியதற்குக் குறுமறுகி ஒல்லாது உடன்று எமர் செய்தார் அவன் கொண்ட கொல் ஏறு போலும் கதம் நெட்டு இரும் கூந்தலாய் கண்டை இஃது ஓர் சொல் கோட்டு_இனத்து ஆயர்_மகனொடு யாம் பட்டதற்கு எம் கண் எமரோ பொறுப்பர் பொறாதார் தம் கண் பொடிவது எவன் ஒண்_நுதால் இன்ன உவகை பிறிது யாது யாய் என்னைக் கண் உடைக் கோலள் அலைத்ததற்கு என்னை மலர் அணி கண்ணிப் பொதுவனோடு எண்ணி அலர் செய்துவிட்டது இவ் ஊர் ஒன்றிப் புகர் இனத்து ஆய மகற்கு ஒள்_இழாய் இன்று எவன் என்னை எமர் கொடுப்பது அன்று அவன் மிக்குத் தன் மேற்சென்ற செம் காரிக் கோட்டிடைப் புக்கக்கால் புக்கது என் நெஞ்சு என பாடு இமிழ் பரப்பகத்து அரவணை அசைஇய ஆடு கொள் நேமியால் பரவுதும் நாடு கொண்டு இன் இசை முரசின் பொருப்பன் மன்னி அமை வரல் அருவி ஆர்க்கும் இமையத்து உம்பரும் விளங்குக எனவே #6 கலித்தொகை 106 - நல்லுருத்தினார் கழுவொடு சுடு படை சுருக்கிய தோல்-கண் இமிழ் இசை மண்டை உறியொடு தூக்கி ஒழுகிய கொன்றைத் தீம் குழல் முரற்சியர் வழூஉச் சொல் கோவலர் தத்தம் இன நிரை பொழுதொடு தோன்றிய கார் நனை வியன் புலத்தார் அவ் வழி நீறு எடுப்பவை நிலம் சாடுபவை மாறு ஏற்று சிலைப்பவை மண்டிப் பாய்பவையாய்த் துளங்கு இமில் நல் ஏற்று இனம் பல களம் புகும் மள்ளர் வனப்பு ஒத்தன தாக்குபு தம்முள் பெயர்த்து ஒற்றி எவ்வாயும் வை வாய் மருப்பினான் மாறாது குத்தலின் மெய் வார் குருதிய ஏறு எல்லாம் பெய் காலைக் கொண்டல் நிரை ஒத்தன அவ் ஏற்றை பிரிவு கொண்டு இடைப் போக்கி இனத்தோடு புனத்து ஏற்றி இரு திறனா நீக்கும் பொதுவர் உரு கெழு மா நிலம் இயற்றுவான் விரி திரை நீக்குவான் வியன் குறிப்பு ஒத்தனர் அவரைக் கழல உழக்கி எதிர் சென்று சாடி அழல் வாய் மருப்பினால் குத்தி உழலை மரத்தைப் போல் தொட்டன ஏறு தொட்ட தம் புண் வார் குருதியால் கை பிசைந்து மெய் திமிரித் தங்கார் பொதுவர் கடலுள் பரதவர் அம்பி ஊர்ந்து ஆங்கு ஊர்ந்தார் ஏறு ஏறு தம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரிக் குடர் ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ ஆலும் கடம்பும் அணிமார் விலங்கிட்ட மாலை போல் தூங்கும் சினை ஆங்கு தம் புல ஏறு பரத்தர உய்த்த தம் அன்புறு காதலர் கை பிணைந்து ஆய்ச்சியர் இன்புற்று அயர்வர் தழூஉ முயங்கிப் பொதிவேம் முயங்கிப் பொதிவேம் முலை வேதின் ஒற்றி முயங்கிப் பொதிவேம் கொலை ஏறு சாடிய புண்ணை எம் கேளே பல் ஊழ் தயிர் கடையத் தாஅய புள்ளி மேல் கொல் ஏறு கொண்டான் குருதி மயக்குறப் புல்லல் எம் தோளிற்கு அணியோ எம் கேளே ஆங்கு போர் ஏற்று அரும் தலை அஞ்சலும் ஆய்ச்சியர் காரிகை தோள் காமுறுதலும் இவ் இரண்டும் ஓராங்குச் சேறல் இலவோ எம் கேளே கொல் ஏறு கொண்டான் இவள் கேள்வன் என்று ஊரார் சொல்லும் சொல் கேளா அளை மாறி யாம் வரும் செல்வம் எம் கேள்வன் தருமோ எம் கேளே ஆங்க அரும் தலை ஏற்றொடு காதலர்ப் பேணிச் சுரும்பு இமிர் கானம் நாம் பாடினம் பரவுதும் ஏற்றவர் புலம் கெடத் திறை கொண்டு மாற்றாரைக் கடக்க எம் மறம் கெழு கோவே #7 கலித்தொகை 107 - நல்லுருத்தினார் எல்லா இஃது ஒன்று கூறு குறும்பு இவர் புல் இனத்தார்க்கும் குடம் சுட்டவர்க்கும் எம் கொல் ஏறு கோடல் குறை எனக் கோ_இனத்தார் பல் ஏறு பெய்தார் தொழூஉ தொழுவத்து சில்லைச் செவி மறை கொண்டவன் சென்னிக் குவி முல்லைக் கோட்டம் காழ் கோட்டின் எடுத்துக்கொண்டு ஆட்டிய ஏழை இரும் புகர் பொங்க அப் பூ வந்து என் கூழையுள் வீழ்ந்தன்று-மன் அதனைக் கெடுத்தது பெற்றார் போல் கொண்டு யான் முடித்தது கேட்டனள் என்பவோ யாய் கேட்டால் எவன் செய்ய வேண்டுமோ மற்று இகா அவன் கண்ணி அன்றோ அது பெய் போது அறியாத் தன் கூழையுள் ஏதிலான் கை புனை கண்ணி முடித்தாள் என்று யாய் கேட்பின் செய்வது இல ஆகுமோ மற்று எல்லாத் தவறும் அறும் ஓஒ அஃது அறும் ஆறு ஆயர்_மகன் ஆயின் ஆய_மகள் நீ ஆயின் நின் வெய்யன் ஆயின் அவன் வெய்யை நீ ஆயின் அன்னை நோதக்கதோ இல்லை-மன் நின் நெஞ்சம் அன்னை நெஞ்சு ஆகப் பெறின் அன்னையோ ஆயர்_மகனையும் காதலை கைம்மிக ஞாயையும் அஞ்சுதி ஆயின் அரிது அரோ நீ உற்ற நோய்க்கு மருந்து மருந்து இன்று யான் உற்ற துயர் ஆயின் எல்லா வருந்துவேன் அல்லனோ யான் வருந்தாதி மண்ணி மாசற்ற நின் கூழையுள் ஏறு அவன் கண்ணி தந்திட்டது எனக் கேட்டுத் திண்ணிதாத் தெய்வ மால் காட்டிற்று இவட்கு என நின்னை அப் பொய் இல் பொதுவற்கு அடை சூழ்ந்தார் தந்தையோடு ஐயன்மார் எல்லாம் ஒருங்கு #8 கலித்தொகை 108 - நல்லுருத்தினார் இகல் வேந்தன் சேனை இறுத்த வாய் போல அகல் அல்குல் தோள் கண் என மூ வழிப் பெருகி நுதல் அடி நுசுப்பு என மூ வழிச் சிறுகிக் கவலையால் காமனும் படை விடு வனப்பினோடு அகல் ஆங்கண் அளை மாறி அலமந்து பெயருங்கால் நகை வல்லேன் யான் என்று என் உயிரோடு படை தொட்ட இகலாட்டி நின்னை எவன் பிழைத்தேன் எல்லா யான் அஃது அவலம் அன்று மன ஆயர் எமர் ஆனால் ஆய்த்தியேம் யாம் மிகக் காயாம் பூம் கண்ணிக் கரும் துவர் ஆடையை மேயும் நிரை முன்னர்க் கோல் ஊன்றி நின்றாய் ஓர் ஆயனை அல்லை பிறவோ அமரருள் ஞாயிற்றுப் புத்தேள் மகன் அதனால் வாய்வாளேன் முல்லை முகையும் முருந்தும் நிரைத்து அன்ன பல்லும் பணைத் தோளும் பேர் அமர் உண்கண்ணும் நல்லேன் யான் என்று நலத்தகை நம்பிய சொல்லாட்டி நின்னொடு சொல் ஆற்றுகிற்பார் யார் சொல்லாதி நின்னைத் தகைத்தனென் அல்லல் காண்-மன் மண்டாத கூறி மழகுழக்கு ஆகின்றே கண்ட பொழுதே கடவரைப் போல நீ பண்டம் வினாய படிற்றால் தொடீஇய நின் கொண்டது எவன் எல்லா யான் கொண்டது அளை மாறிப் பெயர்தருவாய் அறிதியோ அஞ்ஞான்று தளவ மலர் ததைந்தது ஓர் கானச் சிற்றாற்று அயல் இள மாங்காய் போழ்ந்து அன்ன கண்ணினால் என் நெஞ்சம் களமாக் கொண்டு ஆண்டாய் ஓர் கள்வியை அல்லையோ நின் நெஞ்சம் களமாக் கொண்டு யாம் ஆளல் எமக்கு எவன் எளிது ஆகும் புனத்துளான் என் ஐக்குப் புகா உய்த்துக் கொடுப்பதோ இனத்துளான் எந்தைக்குக் கலத்தொடு செல்வதோ தினைக் காலுள் யாய் விட்ட கன்று மேய்க்கிற்பதோ அனைத்து ஆக வெண்ணெய்த் தெழி கேட்கும் அண்மையால் சேய்த்து அன்றி அண்ண அணித்து ஊர் ஆயின் நண்பகல் போழ்து ஆயின் கண் நோக்கு ஒழிக்கும் கவின் பெறு பெண் நீர்மை மயில் எருத்து வண்ணத்து மாயோய் மற்று இன்ன வெயிலொடு எவன் விரைந்து சேறி உதுக் காண் பிடி துஞ்சு அன்ன அறை மேல நுங்கின் தடி கண் புரையும் குறும் சுனை ஆடிப் பனிப் பூம் தளவொடு முல்லை பறித்துத் தனிக் காயாம் தண் பொழில் எம்மொடு வைகிப் பனிப் படச் செல்வாய் நும் ஊர்க்கு இனிச் செல்வேம் யாம் மா மருண்டு அன்ன மழைக் கண் சிற்றாய்த்தியர் நீ மருட்டும் சொல்-கண் மருள்வார்க்கு உரை அவை ஆ முனியா ஏறு போல் வைகல் பதின்மரைக் காமுற்றுச் செல்வாய் ஓர் கண்குத்திக்கள்வனை நீ எவன் செய்தி பிறர்க்கு யாம் எவன் செய்தும் நினக்கு கொலை உண்கண் கூர் எயிற்றுக் கொய் தளிர் மேனி இனை வனப்பின் மாயோய் நின்னின் சிறந்தார் நில உலகத்து இன்மை தெளி நீ வருதி மலையொடு மார்பு அமைந்த செல்வன் அடியைத் தலையினால் தொட்டு உற்றேன் சூள் ஆங்கு உணரார் நேர்ப அது பொய்ப்பாய் நீ ஆயின் தேம் கொள் பொருப்பன் சிறுகுடி எம் ஆயர் வேந்து ஊட்டு அரவத்து நின் பெண்டிர் காணாமை காஞ்சித் தாது உக்கு அன்ன தாது எரு மன்றத்து தூங்கும் குரவையுள் நின் பெண்டிர் கேளாமை ஆம்பல் குழலால் பயிர்பயிர் எம் படப்பைக் காஞ்சிக் கீழ் செய்தேம் குறி #9 கலித்தொகை 109 - நல்லுருத்தினார் கார் ஆரப் பெய்த கடி கொள் வியன் புலத்துப் பேராது சென்று பெரும் பதவப் புல் மாந்தி நீர் ஆர் நிழல குடம் சுட்டு இனத்துள்ளும் போர் ஆரா ஏற்றின் பொரு நாகு இளம் பாண்டில் தேர் ஊர செம்மாந்தது போல் மதைஇனள் பேர் ஊரும் சிற்றூரும் கௌவை எடுப்பவள் போல் மோரோடு வந்தாள் தகை கண்டை யாரோடும் சொல்லியாள் அன்றே வனப்பு பண்ணித் தமர் தந்து ஒரு புறம் தைஇய கண்ணி எடுக்கல்லாக் கோடு ஏந்து அகல் அல்குல் புண் இல்லார் புண் ஆக நோக்கும் முழு மெய்யும் கண்ணளோ ஆய_மகள் இவள் தான் திருத்தாச் சுமட்டினள் ஏனைத் தோள் வீசி வரிக் கூழ வட்டி தழீஇ அரிக் குழை ஆடல் தகையள் கழுத்தினும் வாலிது நுண்ணிதாத் தோன்றும் நுசுப்பு இடை தெரியா ஏஎர் இருவரும் தத்தம் உடை வனப்பு எல்லாம் இவட்கு ஈத்தார்-கொல்லோ படை இடுவான்-மன் கண்டீர் காமன் மடை அடும் பாலொடு கோட்டம் புகின் இவள் தான் வருந்த நோய் செய்து இறப்பின் அல்லால் மருந்து அல்லள் யார்க்கும் அணங்கு ஆதல் சான்றாள் என்று ஊர்ப் பெண்டிர் மாங்காய் நறும் காடி கூட்டுவேம் யாங்கும் எழு நின் கிளையொடு போக என்று தத்தம் கொழுநரைப் போகாமல் காத்து முழு நாளும் வாயில் அடைப்ப வரும் #10 கலித்தொகை 110 - நல்லுருத்தினார் கடி கொள் இரும் காப்பில் புல் இனத்து ஆயர் குடி-தொறும் நல்லாரை வேண்டுதி எல்லா இடு தேள் மருந்தோ நின் வேட்கை தொடுதரத் துன்னித் தந்து ஆங்கே நகை குறித்து எம்மைத் திளைத்தற்கு எளியமா கண்டை அளைக்கு எளியாள் வெண்ணெய்க்கும் அன்னள் எனக் கொண்டாய் ஒண்_நுதால் ஆங்கு நீ கூறின் அனைத்து ஆக நீங்குக அச்சத்தான் மாறி அசைவினான் போத்தந்து நிச்சம் தடுமாறும் மெல் இயல் ஆய்_மகள் மத்தம் பிணித்த கயிறு போல் நின் நலம் சுற்றிச் சுழலும் என் நெஞ்சு விடிந்த பொழுதினும் இல் வயின் போகாது கொடும் தொழுவினுள் பட்ட கன்றிற்குச் சூழும் கடும் சூல் ஆ நாகு போல் நின் கண்டு நாளும் நடுங்கு அஞர் உற்றது என் நெஞ்சு எவ்வம் மிகுதர எம்-திறத்து எஞ்ஞான்றும் நெய் கடை பாலின் பயன் யாதும் இன்று ஆகிக் கை தோயல் மாத்திரை அல்லது செய்தி அறியாது அளித்து என் உயிர் அன்னையோ மன்றத்துக் கண்டு ஆங்கே சான்றார் மகளிரை இன்றி அமையேன் என்று இன்னவும் சொல்லுவாய் நின்றாய் நீ சென்றீ எமர் காண்பர் நாளையும் கன்றொடு சேறும் புலத்து #11 கலித்தொகை 111 - நல்லுருத்தினார் தீம் பால் கறந்த கலம் மாற்றிக் கன்று எல்லாம் தாம்பின் பிணித்து மனை நிறீஇ யாய் தந்த பூம் கரை நீலம் புடை தாழ மெய் அசைஇப் பாங்கரும் முல்லையும் தாய பாட்டங்கால் தோழி நம் புல் இனத்து ஆயர்_மகளிரோடு எல்லாம் ஒருங்கு விளையாட அவ் வழி வந்த குருந்தம் பூம் கண்ணிப் பொதுவன் மற்று என்னை முற்று இழை ஏஎர் மட நல்லாய் நீ ஆடும் சிற்றில் புனைகோ சிறிது என்றான் எல்லா நீ பெற்றேம் யாம் என்று பிறர் செய்த இல் இருப்பாய் கற்றது இலை-மன்ற காண் என்றேன் முற்று_இழாய் தாது சூழ் கூந்தல் தகைபெறத் தைஇய கோதை புனைகோ நினக்கு என்றான் எல்லா நீ ஏதிலார் தந்த பூக் கொள்வாய் நனி மிகப் பேதையை-மன்ற பெரிது என்றேன் மாதராய் ஐய பிதிர்ந்த சுணங்கு அணி மென் முலை மேல் தொய்யில் எழுதுகோ மற்று என்றான் யாம் பிறர் செய் புறம் நோக்கி இருத்துமோ நீ பெரிது மையலை மாதோ விடுக என்றேன் தையலாய் சொல்லிய ஆறு எல்லாம் மாறுமாறு யான் பெயர்ப்ப அல்லாந்தான் போலப் பெயர்ந்தான் அவனை நீ ஆயர் மகளிர் இயல்பு உரைத்து எந்தையும் யாயும் அறிய உரைத்தீயின் யான் உற்ற நோயும் களைகுவை-மன் #12 கலித்தொகை 112 - நல்லுருத்தினார் யார் இவன் என்னை விலக்குவான் நீர் உளர் பூம் தாமரைப் போது தந்த விரவுத் தார்க் கல்லாப் பொதுவனை நீ மாறு நின்னொடு சொல்லல் ஓம்பு என்றார் எமர் எல்லா கடாஅய கண்ணால் கலைஇய நோய் செய்யும் நடாஅக் கரும்பு அமன்ற தோளாரைக் காணின் விடாஅல் ஓம்பு என்றார் எமர் கடாஅயார் நல்லாரைக் காணின் விலக்கி நயந்து அவர் பல் இதழ் உண்கண்ணும் தோளும் புகழ் பாட நல்லது கற்பித்தார்-மன்ற நுமர் பெரிதும் வல்லர் எமர் கண் செயல் ஓஒ வழங்காப் பொழுது நீ கன்று மேய்ப்பாய் போல் வழங்கல் அறிவார் உரையாரேல் எம்மை இகழ்ந்தாரே அன்றோ எமர் ஒக்கும் அறிவல் யான் எல்லா விடு விடேன் யான் என் நீ குறித்தது இரும்_கூந்தால் நின்னை என் முன் நின்று சொல்லல் ஓம்பு என்றமை அன்றி அவனை நீ புல்லல் ஓம்பு என்றது உடையரோ மெல்ல முயங்கு நின் முள் எயிறு உண்கும் எவன்-கொலோ மாயப் பொதுவன் உரைத்த உரை எல்லாம் வாய் ஆவது ஆயின் தலைப்பட்டாம் பொய் ஆயின் சாயல் இன் மார்பில் கமழ் தார் குழைத்த நின் ஆய் இதழ் உண்கண் பசப்பத் தட மென் தோள் சாயினும் ஏஎர் உடைத்து #13 கலித்தொகை 113 - நல்லுருத்தினார் நலம் மிக நந்திய நய வரு தட மென் தோள் அலமரல் அமர் உண்கண் அம் நல்லாய் நீ உறீஇ உலமரல் உயவு நோய்க்கு உய்யும் ஆறு உரைத்துச் செல் பேர் ஏமுற்றார் போல முன் நின்று விலக்குவாய் யார் எல்லா நின்னை அறிந்ததூஉம் இல் வழி தளர்_இயால் என் அறிதல் வேண்டின் பகை அஞ்சாப் புல் இனத்து ஆயர் மகனேன் மற்று யான் ஒக்கும்-மன் புல் இனத்து ஆயனை நீ ஆயின் குடம் சுட்டு நல் இனத்து ஆயர் எமர் எல்லா நின்னொடு சொல்லின் ஏதமோ இல்லை-மன் ஏதம் அன்று எல்லை வருவான் விடு விடேன் உடம்பட்டு நீப்பார் கிளவி மடம் பட்டு மெல்லிய ஆதல் அறியினும் மெல்_இயால் நின் மொழி கொண்டு யானோ விடுவேன் மற்று என் மொழி கொண்டு என் நெஞ்சம் ஏவல் செயின் நெஞ்சு ஏவல் செய்யாது என நின்றாய்க்கு எஞ்சிய காதல் கொள் காமம் கலக்குற ஏதிலார் பொய்ம்மொழி தேறுவது என் தெளிந்தேன் தெரி_இழாய் யான் பல் கால் யாம் கான்யாற்று அவிர் மணல் தண் பொழில் அல்கல் அகல் அறை ஆயமொடு ஆடி முல்லை குருந்தொடு முச்சி வேய்ந்து எல்லை இரவு உற்றது இன்னும் கழிப்பி அரவு உற்று உருமின் அதிரும் குரல் போல் பொரு முரண் நல் ஏறு நாகுடன் நின்றன பல் ஆன் இன நிரை நாம் உடன் செலற்கே #14 கலித்தொகை 114 - நல்லுருத்தினார் வாரி நெறிப்பட்டு இரும் புறம் தாஅழ்ந்த ஓரிப் புதல்வன் அழுதனன் என்பவோ புதுவ மலர் தைஇ எமர் என் பெயரால் வதுவை அயர்வாரைக் கண்டு மதி அறியா ஏழையை என்று அகல நக்கு வந்தீயாய் நீ தோழி அவனுழைச் சென்று சென்று யான் அறிவேன் கூறுக மற்று இனி சொல் அறியாப் பேதை மடவை மற்று எல்லா நினக்கு ஒரூஉம் மற்று என்று அகல் அகலும் நீடு இன்று நினக்கு வருவதாக் காண்பாய் அனைத்து ஆகச் சொல்லிய சொல்லும் வியம் கொளக் கூறு தரு மணல் தாழப் பெய்து இல் பூவல் ஊட்டி எருமைப் பெடையோடு எமர் ஈங்கு அயரும் பெரும் மணம் எல்லாம் தனித்தே ஒழிய வரி மணல் முன்துறைச் சிற்றில் புனைந்த திரு நுதல் ஆயத்தார் தம்முள் புணர்ந்த ஒரு மணம் தான் அறியும் ஆயின் எனைத்தும் தெருமரல் கைவிட்டு இருக்கோ அலர்ந்த விரி நீர் உடுக்கை உலகம் பெறினும் அரு நெறி ஆயர்_மகளிர்க்கு இரு மணம் கூடுதல் இல் இயல்பு அன்றே #15 கலித்தொகை 115 - நல்லுருத்தினார் தோழி நாம் காணாமை உண்ட கடும் கள்ளை மெய் கூர நாணாது சென்று நடுங்க உரைத்து ஆங்குக் கரந்ததூஉம் கையொடு கோள்பட்டாம் கண்டாய் நம் புல் இனத்து ஆயர்_மகன் சூடி வந்தது ஓர் முல்லை ஒரு காழும் கண்ணியும் மெல்_இயால் கூந்தலுள் பெய்து முடித்தேன்-மன் தோழி யாய் வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே அன்னையும் அத்தனும் இல்லரா யாய் நாண அன்னை முன் வீழ்ந்தன்று அப் பூ அதனை வினவலும் செய்யாள் சினவலும் செய்யாள் நெருப்புக் கை தொட்டவர் போல விதிர்த்திட்டு நீங்கிப் புறங்கடை போயினாள் யானும் என் சாந்து உளர் கூழை முடியா நிலம் தாழ்ந்த பூம் கரை நீலம் தழீஇத் தளர்பு ஒல்கிப் பாங்கு அரும் கானத்து ஒளித்தேன் அதற்கு எல்லா ஈங்கு எவன் அஞ்சுவது அஞ்சல் அவன் கண்ணி நீ புனைந்தாய் ஆயின் நமரும் அவன்-கண் அடை சூழ்ந்தார் நின்னை அகன் கண் வரைப்பில் மணல் தாழப் பெய்து திரைப்பில் வதுவையும் ஈங்கே அயர்ப அதுவேயாம் அல்கலும் சூழ்ந்த வினை #16 கலித்தொகை 116 - நல்லுருத்தினார் பாங்கு அரும் பாட்டங்கால் கன்றொடு செல்வேம் எம் தாம்பின் ஒரு தலை பற்றினை ஈங்கு எம்மை முன்னை நின்று ஆங்கே விலக்கிய எல்லா நீ என்னை ஏமுற்றாய் விடு விடேஎன் தொடீஇய செல்வார்த் துமித்து எதிர் மண்டும் கடு வய நாகு போல் நோக்கித் தொழு வாயில் நீங்கிச் சினவுவாய் மற்று நீ நீங்கு கன்று சேர்ந்தார்-கண் கத ஈற்று ஆ சென்று ஆங்கு வன்கண்ணளாய் வரல் ஓம்பு யாய் வருக ஒன்றோ பிறர் வருக மற்று நின் கோ வரினும் இங்கே வருக தளரேன் யான் நீ அருளி நல்கப் பெறின் நின்னை யான் சொல்லினவும் பேணாய் நினைஇ கனை பெயல் ஏற்றின் தலை சாய்த்து எனையதூஉம் மாறு எதிர் கூறி மயக்குப்படுகுவாய் கலத்தொடு யாம் செல்வுழி நாடிப் புலத்தும் வருவையால் நாணிலி நீ #17 கலித்தொகை 117 - நல்லுருத்தினார் மாண உருக்கிய நன் பொன் மணி உறீஇப் பேணித் துடைத்து அன்ன மேனியாய் கோங்கின் முதிரா இள முகை ஒப்ப எதிரிய தொய்யில் பொறித்த வன முலையாய் மற்று நின் கையது எவன் மற்று உரை கையதை சேரிக் கிழவன் மகளேன் யான் மற்று இஃது ஓர் மாதர் புலைத்தி விலையாகச் செய்தது ஓர் போழில் புனைந்த வரிப் புட்டில் புட்டிலுள் என் உள காண்தக்காய் என் காட்டிக் காண் காண் இனி தோட்டார் கதுப்பின் என் தோழி அவரொடு காட்டு சார் கொய்த சிறு முல்லை மற்று இவை முல்லை இவை ஆயின் முற்றிய கூழையாய் எல்லிற்றுப் போழ்து ஆயின் ஈதோளிக் கண்டேனால் செல் என்று நின்னை விடுவேன் யான் மற்று எனக்கு மெல்லியது ஓராது அறிவு &270 - நல்லூர்ச் சிறுமேதாவியார் #1 நற்றிணை 282 குறிஞ்சி - நல்லூர்ச் சிறுமேதாவியார் தோடு அமை செறிப்பின் இலங்கு வளை ஞெகிழக் கோடு ஏந்து அல்குல் அவ் வரி வாட நல் நுதல் சாய படர் மலி அரு நோய் காதலன் தந்தமை அறியாது உணர்த்த அணங்குறு கழங்கின் முது வாய் வேலன் கிளவியின் தணியின் நன்று-மன் சாரல் அகில் சுடு கானவன் உவல் சுடு கமழ் புகை ஆடு மழை மங்குலின் மறைக்கும் நாடு கெழு வெற்பனொடு அமைந்த நம் தொடர்பே &271 - (நல்லெழுதியார்) நல்லெழுநியார் #1 பரிபாடல் 13 திருமால் - (நல்லெழுதியார்) நல்லெழுநியார் **இசையமைத்தவர் :: பெயர் அறியப்படவில்லை **பண் :: நோதிறம் மணி வரை ஊர்ந்த மங்குல் ஞாயிற்று அணி வனப்பு அமைந்த பூம் துகில் புனை முடி இறுவரை இழிதரும் பொன் மணி அருவியின் நிறனொடு மாறும் தார் புள்ளுப் பொறி புனை கொடி விண் அளி கொண்ட வியன் மதி அணி கொளத் தண் அளி கொண்ட அணங்கு உடை நேமி மால் பருவம் வாய்த்தலின் இரு விசும்பு அணிந்த இரு வேறு மண்டிலத்து இலக்கம் போல நேமியும் வளையும் ஏந்திய கையான் கருவி மின் அவிர் இலங்கும் பொலம் பூண் அருவி உருவின் ஆரமொடு அணிந்த நின் திரு வரை அகலம் தொழுவோர்க்கு உரிது அமர் துறக்கமும் உரிமை நன்கு உடைத்து சுவைமை இசைமை தோற்றம் நாற்றம் ஊறு அவையும் நீயே அடு போர் அண்ணால் அவையவை கொள்ளும் கருவியும் நீயே முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும் ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே இரண்டின் உணரும் வளியும் நீயே மூன்றின் உணரும் தீயும் நீயே நான்கின் உணரும் நீரும் நீயே ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே அதனால் நின் மருங்கின்று மூ_ஏழ் உலகமும் மூலமும் அறனும் முதன்மையின் இகந்த காலமும் விசும்பும் காற்றொடு கனலும் தன் உரு உறழும் பாற்கடல் நாப்பண் மின் அவிர் சுடர் மணி ஆயிரம் விரித்த கவை நா அரும் தலைக் காண்பு இன் சேக்கைத் துளவம் சூடிய அறிதுயிலோனும் மறம் மிகு மலி ஒலி மாறு அடு தானையால் திறன் இகந்து வரூஉம் அவர் உயிர் அகற்றும் விறல் மிகு வலி ஒலி பொலிபு அகழ் புழுதியின் நிறன் உழும் வளை வாய் நாஞ்சிலோனும் நானிலம் துளக்கு அற முழுமுதல் நாற்றிய பொலம் புனை இதழ் அணி மணி மடல் பேர் அணி இலங்கு ஒளி மருப்பின் களிறும் ஆகி மூ உரு ஆகிய தலை பிரி ஒருவனை படர் சிறைப் பல் நிறப் பாப்புப் பகையைக் கொடி எனக் கொண்ட கோடாச் செல்வனை ஏவல் இன் முதுமொழி கூறும் சேவல் ஓங்கு உயர் கொடிச் செல்வ நல் புகழவை கார் மலர்ப் பூவை கடலை இருள் மணி அவை ஐந்தும் உறழும் அணி கிளர் மேனியை வலம்புரி வாய்மொழி அதிர்பு வான் முழக்குச் செல் அவை நான்கும் உறழும் அருள் செறல்-வயின் மொழி முடிந்ததும் முடிவதும் முகிழ்ப்பதும் அவை மூன்றும் கடந்து அவை அமைந்த கழலின் நிழலவை இருமை வினையும் இல ஏத்துமவை ஒருமை வினை மேவும் உள்ளத்தினை அடை இறந்து அவிழ்ந்த வள் இதழ்த் தாமரை அடியும் கையும் கண்ணும் வாயும் தொடியும் உந்தியும் தோள் அணி வலயமும் தாளும் தோளும் எருத்தொடு பெரியை மார்பும் அல்குலும் மனத்தொடு பரியை கேள்வியும் அறிவும் அறத்தொடு நுண்ணியை வேள்வியும் மறனும் விருப்பொடு வெய்யை அறாஅ மைந்தின் செறாஅச் செம் கண் செரு மிகு திகிரிச் செல்வ வெல் போர் எரி நகை இடை இடுபு இழைத்த நறும் தார்ப் புரி மலர்த் துழாஅய் மேவல் மார்பினோய் அன்னை என நினைஇ நின் அடி தொழுதனெம் பல் மாண் அடுக்க இறைஞ்சினெம் வாழ்த்தினெம் முன்னும் முன்னும் யாம் செய் தவப் பயத்தால் இன்னும் இன்னும் எம் காமம் இதுவே &272 - நல்வழுதியார் #1 பரிபாடல் 12 வையை - நல்வழுதியார் **இசையமைத்தவர் :: நன்னாகனார் **பண் :: பாலையாழ் வளி பொரு மின்னொடு வான் இருள் பரப்பி விளிவு இன்று கிளையொடு மேல் மலை முற்றி தளி பொழி சாரல் ததர் மலர் தாஅய் ஒளி திகழ் உத்தி உரு கெழு நாகம் அகரு வழை ஞெமை ஆரம் இனையத் தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி நளி கடல் முன்னியது போலும் தீம் நீர் வளி வரல் வையை வரவு வந்து மதுரை மதில் பொரூஉம் வான் மலர் தாஅய் அம் தண் புனல் வையை யாறு எனக் கேட்டு மின் அவிர் ஒளி இழை வேயுமோரும் பொன் அடர்ப் பூம் புனை திருத்துவோரும் அகில் கெழு சாந்தம் மாற்றி ஆற்றப் புகை கெழு சாந்தம் பூசுவோரும் கார் கொள் கூந்தல் கதுப்பு அமைப்போரும் வேர் பிணி பல் மலர் வேயுமோரும் புட்டகம் பொருந்துவ புனைகுவோரும் கட்டிய கயில் அணி காழ்கொள்வோரும் வாச நறு நெய் ஆடி வான் துகள் மாசறக் கண்ணடி வயக்கி வண்ணமும் தேசும் ஒளியும் திகழ நோக்கி வாச மணத் துவர் வாய்க்கொள்வோரும் இடு புணர் வளையொடு தொடு தோள் வளையர் கட்டு வடக் கழலினர் மட்டு மாலையர் ஓசனை கமழும் வாச மேனியர் மட மா மிசையோர் பிடி மேல் அன்னப் பெரும் படை அனையோர் கடு மா கடவுவோரும் களிறு மேல்கொள்வோரும் வடி மணி நெடும் தேர் மா முள் பாய்க்குநரும் விரைபுவிரைபு மிகைமிகை ஈண்டி ஆடல் தலைத்தலை சிறப்பக் கூடல் உரைதர வந்தன்று வையை நீர் வையைக் கரை தர வந்தன்று காண்பவர் ஈட்டம் நிவந்தது நீத்தம் கரை மேலா நீத்தம் கவர்ந்தது போலும் காண்பவர் காதல் முன்துறை நிறை அணி நின்றவர் மொழி மொழி ஒன்று அல பலபல உடன் எழுந்தன்று அவை எல்லாம் தெரியக் கேட்குநர் யார் அவை கில்லா கேள்வி கேட்டன சிலசில ஒத்த குழலின் ஒலி எழ முழவு இமிழ் மத்தரி தடாரி தண்ணுமை மகுளி ஒத்து அளந்து சீர் தூக்கி ஒருவர் பிற்படார் நித்தம் திகழும் நேர் இறை முன்கையால் அத் தக அரிவையர் அளத்தல் காண்-மின் நாணாள்-கொல் தோழி நயன் இல் பரத்தையின் தோள் நலம் உண்டு துறந்தான் என ஒருத்தி யாணர் மலி புனல் நீத்தத்து இரும் பிடி சேண வெரிநின் சிறந்தானோடு ஏறினாள் நாணுக் குறைவிலள் நங்கை மற்று என்மரும் கோட்டியுள் கொம்பர் குவி முலை நோக்குவோன் ஓட்டை மனவன் உரமிலி என்மரும் சொறிந்ததூஉம் சொற்றதூஉம் பற்றாள் நிறம் திரிந்தாள் நெஞ்சத்தை நீத்தாள் நெறி செல்வான் பின் நிறை அஞ்சிக் கழியாமோ அன்புற்றால் என்மரும் பூண் ஆரம் நோக்கிப் புணர் முலை பார்த்தான் உவன் நாணாள் அவனை இ நாரிகை என்மரும் அமிர்து அன நோக்கத்து அணங்கு ஒருத்தி பார்ப்பக் கமழ் கோதை கோலாப் புடைத்து தன் மார்பில் இழையினைக் கை யாத்து இறுகிறுக்கி வாங்கிப் பிழையினை என்னப் பிழை ஒன்றும் காணான் தொழுது பிழை கேட்கும் தூயவனைக் காண்-மின் பார்த்தாள் ஒருத்தி நினை எனப் பார்த்தவளைப் பொய்ச் சூளாள் என்பது அறியேன் யான் என்று இரந்து மெய்ச் சூளுறுவானை மெல்_இயல் பொய்ச் சூள் என்று ஒல்லுவ சொல்லாது உரை வழுவச் சொல்ல உறைத்தும் செறுத்தும் உணர்த்துவானைப் புல்லாது ஊடிப் புலந்து நின்றவள் பூ எழில் வண்ண நீர் பூரித்த வட்டு எறிய வேல் எழில் உண்கண் எறி நோக்கம் பட்ட புண் பாய் குருதி சோரப் பகை இன்று உளம் சோர நில்லாது நீங்கி நிலம் சோர அல்லாந்து மல் ஆர் அகலம் வடு அஞ்சி மம்மர் கூர்ந்து எல்லாத் துனியும் இறப்பத் தன் காதலன் நல் ஏர் எழில் ஆகம் சேர்வித்தல் எஞ்ஞான்றும் வல்லதால் வையைப் புனல் என ஆங்கு மல்லிகை மௌவல் மணம் கமழ் சண்பகம் அல்லி கழுநீர் அரவிந்தம் ஆம்பல் குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி நல் இணர் நாகம் நறவம் சுரபுன்னை எல்லாம் கமழும் இரு சார் கரை கலிழத் தேறித் தெளிந்து செறி இருள் மால் மாலைப் பாறைப் பரப்பில் பரந்த சிறை நின்று துறக்கத்து எழிலைத் தன் நீர் நிழல் காட்டும் கார் அடு காலைக் கலிழ் செம் குருதித்தே போர் அடு தானையான் யாறு சுடு நீர் வினைக் குழையின் ஞாலச் சிவந்த கடி மலர்ப் பிண்டி தன் காதில் செரீஇ விடு மலர்ப் பூம் கொடி போல நுடங்கி அடிமேல் அடிமேல் ஒதுங்கித் தொடி முன்கைக் காரிகை ஆகத் தன் கண்ணி திருத்தினாள் நேர் இறை முன்கை நல்லவள் கேள் காண்-மின் துகில் சேர் மலர் போல் மணி நீர் நிறைந்தன்று புனல் என மூதூர் மலிந்தன்று அவர் உரை உரையின் உயர்ந்தன்று கவின் போர் ஏற்றன்று நவின்று தகரம் மார்பு அழி சாந்தின் மணல் அளறு பட்டன்று துகில் பொசி புனலின் கரை கார் ஏற்றன்று விசும்பு கடி விட்டன்று விழவுப் புனல் ஆங்க இன்பமும் கவினும் அழுங்கல் மூதூர் நன்பல நன்பல நன்பல வையை நின் புகழ் கொள்ளாது இ மலர் தலை உலகே &273 - நல்விளக்கனார் #1 நற்றிணை 85 குறிஞ்சி - நல்விளக்கனார் ஆய் மலர் மழைக் கண் தெண் பனி உறைப்பவும் வேய் மருள் பணைத் தோள் விறல் இழை நெகிழவும் அம்பல் மூதூர் அரவம் ஆயினும் குறு வரி இரும் புலி அஞ்சிக் குறு நடைக் கன்று உடை வேழம் நின்று காத்து அல்கும் ஆர் இருள் கடுகிய அஞ்சுவரு சிறு நெறி வாரற்க-தில்ல தோழி சாரல் கானவன் எய்த முளவு_மான் கொழும் குறை தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு காந்தள் அம் சிறுகுடிப் பகுக்கும் ஓங்கு மலை நாடன் நின் நசையினானே &274 - நல்வெள்ளியார் #1 அகநானூறு 32 குறிஞ்சி - நல்வெள்ளியார் நெருநல் எல்லை ஏனல் தோன்றித் திரு மணி ஒளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலும் தோற்றம் உறழ் கொள இரவல் மாக்களின் பணிமொழி பயிற்றிச் சிறுதினைப் படு கிளி கடீஇயர் பல் மாண் குளிர் கொள் தட்டை மதன் இல புடையாச் சூர்_அர_மகளிரின் நின்ற நீ மற்று யாரையோ எம் அணங்கியோய் உண்கு எனச் சிறுபுறம் கவையினன் ஆக அதன் கொண்டு இகு பெயல் மண்ணின் ஞெகிழ்பு அஞர் உற்ற என் உள் அவன் அறிதல் அஞ்சி உள் இல் கடிய கூறி கைபிணி விடாஅ வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ நின்ற என் உரத் தகைமையின் பெயர்த்துப் பிறிது என்-வயின் சொல்ல வல்லிற்றும் இலனே அல்லாந்து இனம் தீர் களிற்றின் பெயர்ந்தோன் இன்றும் தோலாவாறு இல்லை தோழி நாம் சென்மோ சாய் இறைப் பணைத் தோள் கிழமை தனக்கே மாசு இன்று ஆதலும் அறியான் ஏசற்று என் குறைப் புறனிலை முயலும் அண்கணாளனை நகுகம் யாமே #2 குறுந்தொகை 365 குறிஞ்சி - மதுரை நல்வெள்ளியார் கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாளும் பாடு இல கலிழ்ந்து பனி ஆனாவே துன் அரும் நெடு வரைத் ததும்ப அருவி தண்ணென் முழவின் இமிழ் இசை காட்டும் மருங்கில் கொண்ட பலவின் பெரும் கல் நாட நீ நயந்தோள் கண்ணே #3 நற்றிணை 7 பாலை - நல்வெள்ளியார் சூர் உடை நனம் தலைச் சுனை நீர் மல்கப் பெரு வரை அடுக்கத்து அருவி ஆர்ப்பக் கல் அலைத்து இழிதரும் கடு வரல் கான்யாற்றுக் கழை மாய் நீத்தம் காடு அலை ஆர்ப்பத் தழங்கு குரல் ஏறொடு முழங்கி வானம் இன்னே பெய்ய மின்னுமால் தோழி வெண்ணெல் அருந்திய வரி நுதல் யானை தண் நறும் சிலம்பில் துஞ்சும் சிறியிலைச் சந்தின வாடு பெரும் காட்டே #4 நற்றிணை 47 குறிஞ்சி - நல்வெள்ளியார் பெரும் களிறு உழுவை அட்டு என இரும் பிடி உயங்கு பிணி வருத்தமொடு இயங்கல் செல்லாது நெய்தல் பாசடை புரையும் அம் செவிப் பைதல் அம் குழவி தழீஇ ஒய்யென அரும் புண்ணுறுநரின் வருந்தி வைகும் கானக நாடற்கு இது என யான் அது கூறின் எவனோ தோழி வேறு உணர்ந்து அணங்கு அறி கழங்கின் கோட்டம் காட்டி வெறி என உணர்ந்த உள்ளமொடு மறி அறுத்து அன்னை அயரும் முருகு நின் பொன் நேர் பசலைக்கு உதவா மாறே &275 - (மிளைகிழார்) நல்வேட்டனார் #1 குறுந்தொகை 341 நெய்தல் - (மிளைகிழார்) நல்வேட்டனார் பல் வீ படரிய பசு நனைக் குரவம் பொரிப் பூம் புன்கொடு பொழில் அணிக் கொளாஅச் சினை இனிது ஆகிய காலையும் காதலர் பேணார் ஆயினும் பெரியோர் நெஞ்சத்துக் கண்ணிய ஆண்மை கடவது அன்று என வலியா நெஞ்சம் வலிப்ப வாழ்வேன் தோழி என் வன்கணானே #2 நற்றிணை 53 குறிஞ்சி - நல்வேட்டனார் யான் அஃது அஞ்சினென் கரப்பவும் தான் அஃது அறிந்தனள்-கொல்லோ அருளினள்-கொல்லோ எவன்-கொல் தோழி அன்னை கண்ணியது வானுற நிவந்த பெரு மலைக் கவாஅன் ஆர் கலி வானம் தலைஇ நடுநாள் கனை பெயல் பொழிந்து எனக் கானல் கல் யாற்று முளி இலை கழித்தன முகிழ் இணரொடு வரும் விருந்தின் தீம் நீர் மருந்தும் ஆகும் தண்ணென உண்டு கண்ணின் நோக்கி முனியாது ஆடப்பெறின் இவள் பனியும் தீர்குவள் செல்க என்றோளே #3 நற்றிணை 210 மருதம் - (மிளைகிழான்) நல்வேட்டனார் அரிகால் மாறிய அம் கண் அகல் வயல் மறு கால் உழுத ஈரச் செறுவின் வித்தொடு சென்ற வட்டி பற்பல மீனொடு பெயரும் யாணர் ஊர நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும் செல்வம் அன்று தன் செய்வினைப் பயனே சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர் புன்கண் அஞ்சும் பண்பின் மென்கண் செல்வம் செல்வம் என்பதுவே #4 நற்றிணை 292 குறிஞ்சி - நல்வேட்டனார் நெடும் தண் ஆரத்து அலங்கு சினை வலந்த பசும் கேழ் இலைய நறும் கொடித் தமாலம் தீம் தேன் கொள்பவர் வாங்குபு பரியும் யாணர் வைப்பின் கானம் என்னாய் களிறு பொரக் கரைந்த கயவாய்க் குண்டு கரை ஒளிறு வான் பளிங்கொடு செம்பொன் மின்னும் கரும் கல் கான்யாற்று அரும் சுழி வழங்கும் கராஅம் பேணாய் இரவரின் வாழேன் ஐய மை கூர் பனியே #5 நற்றிணை 349 நெய்தல் - மிளை கிழான் நல்வேட்டனார் கடும் தேர் ஏறியும் காலின் சென்றும் கொடும் கழி மருங்கின் அடும்பு மலர் கொய்தும் கைதை தூக்கியும் நெய்தல் குற்றும் புணர்ந்தாம் போல உணர்ந்த நெஞ்சமொடு வைகலும் இனையம் ஆகவும் செய் தார்ப் பசும் பூண் வேந்தர் அழிந்த பாசறை ஒளிறு வேல் அழுவத்துக் களிறு படப் பொருத பெரும் புண்ணுறுநர்க்குப் பேஎய் போலப் பின்னிலை முனியா நம்-வயின் என் என நினையும்-கொல் பரதவர் மகளே &276 - நற்சேந்தனார் #1 நற்றிணை 128 குறிஞ்சி - நற்சேந்தனார் பகல் எரி சுடரின் மேனி சாயவும் பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும் எனக்கு நீ உரையாயாய் ஆயினை நினக்கு யான் உயிர் பகுத்து அன்ன மாண்பினேன் ஆகலின் அது கண்டிசினால் யானே என்று நனி அழுதல் ஆன்றிசின் ஆய்_இழை ஒலி குரல் ஏனல் காவலின் இடையுற்று ஒருவன் கண்ணியன் கழலன் தாரன் தண்ணெனச் சிறுபுறம் கவையினனாக அதன் கொண்டு அஃதே நினைந்த நெஞ்சமொடு இஃது ஆகின்று யான் உற்ற நோயே &277 - நற்றங் கொற்றனார் #1 நற்றிணை 136 குறிஞ்சி - நற்றங் கொற்றனார் திருந்து கோல் எல் வளை வேண்டி யான் அழவும் அரும் பிணி உறுநர்க்கு வேட்டது கொடாஅது மருந்து ஆய்ந்து கொடுத்த அறவோன் போல என் ஐ வாழிய பலவே பன்னிய மலை கெழு நாடனொடு நம்மிடைச் சிறிய தலைப்பிரிவு உண்மை அறிவான் போல நீப்ப நீங்காது வரின் வரை அமைந்து தோள் பழி மறைக்கும் உதவிப் போக்கு இல் பொலம் தொடி செறீஇயோனே &278 - நற்றமனார் #1 நற்றிணை 133 குறிஞ்சி - நற்றமனார் தோளே தொடி கொட்பு ஆனா கண்ணே வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே நுதலும் பசலை பாயின்று திதலைச் சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல் மணி ஏர் ஐம்பால் மாயோட்கு என்று வெவ் வாய்ப் பெண்டிர் கவ்வை தூற்ற நாம் உறு துயரம் செய்யலர் என்னும் காமுறு தோழி காதலம் கிளவி இரும்பு செய் கொல்லன் வெவ் உலைத் தெளித்த தோய் மடல் சில் நீர் போல நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே &279 - நன்பலூர் சிறுமேதாவியார் #1 அகநானூறு 94 முல்லை - நன்பலூர் சிறுமேதாவியார் தேம் படு சிமயப் பாங்கர்ப் பம்பிய குவை இலை முசுண்டை வெண் பூக் குழைய வான் எனப் பூத்த பானாள் கங்குல் மறித் துரூஉத் தொகுத்த பறிப் புற இடையன் தண் கமழ் முல்லை தோன்றியொடு விரைஇ வண்டு படத் தொடுத்த நீர் வார் கண்ணியன் ஐது படு கொள்ளி அங்கை காயக் குறுநரி உளம்பும் கூர் இருள் நெடு விளி சிறு கண் பன்றிப் பெரு நிரை கடிய முதைப் புனம் காவலர் நினைத்திருந்து ஊதும் கரும் கோட்டு ஓசையொடு ஒருங்கு வந்து இசைக்கும் வன்புலக் காட்டு நாட்டதுவே அன்பு கலந்து ஆர்வம் சிறந்த சாயல் இரும் பல் கூந்தல் திருந்து_இழை ஊரே #2 அகநானூறு 394 முல்லை - நன்பலூர்ச் சிறுமேதாவியார் களவும் புளித்தன விளவும் பழுநின சிறு தலைத் துருவின் பழுப்புறு விளை தயிர் இதைப் புன வரகின் அவைப்பு மாண் அரிசியொடு கார் வாய்த்து ஒழிந்த ஈர் வாய்ப் புற்றத்து ஈயல் பெய்து அட்ட இன் புளி வெம் சோறு சேதான் வெண்ணெய் வெம் புறத்து உருக இளையர் அருந்தப் பின்றை நீயும் இடு முள் வேலி முடக் கால் பந்தர்ப் புதுக் கலத்து அன்ன செவ் வாய்ச் சிற்றில் புனை இரும் கதுப்பின் நின் மனையோள் அயரப் பால் உடை அடிசில் தொடீஇய ஒரு நாள் மா வண் தோன்றல் வந்தனை சென்மோ காடு உறை இடையன் யாடு தலைப்பெயர்க்கும் மடி விடு வீளை வெரீஇக் குறு முயல் மன்ற இரும் புதல் ஒளிக்கும் புன் புல வைப்பின் எம் சிறு நல் ஊரே &280 - (புறத்திணை) நன்னாகனார் #1 புறநானூறு 176 - (புறத்திணை) நன்னாகனார் **பாடப்பட்டோன் : ஓய்மான் நல்லியக் கோடான் ஓரை ஆயத்து ஒண் தொடி மகளிர் கேழல் உழுத இரும் சேறு கிளைப்பின் யாமை ஈன்ற புலவு நாறு முட்டையைத் தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம் இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின் பெரு மாவிலங்கைத் தலைவன் சீறியாழ் இல்லோர் சொல்மலை நல்லியக்கோடனை உடையை வாழி எம் புணர்ந்த பாலே பாரிப் பறம்பின் பனிச் சுனைத் தெண் நீர் ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போலக் காணாது கழிந்த வைகல் காணா வழி_நாட்கு இரங்கும் என் நெஞ்சம் அவன் கழி மென் சாயல் காண்-தொறும் நினைந்தே #2 புறநானூறு 376 - புறத்திணை நன்னாகனார் **பாடப்பட்டோன்: ஓய்மான் நல்லியாதன் விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப் பசும் கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி சிறு நனி பிறந்த பின்றைச் செறி பிணிச் சிதாஅர் வள்பின் என் தடாரி தழீஇப் பாணர் ஆரும் அளவை யான் தன் யாணர் நல் மனைக் கூட்டு முதல் நின்றனென் இமைத்தோர் விழித்த மாத்திரை ஞெரேரெனக் குணக்கு எழு திங்கள் கனை இருள் அகற்றப் பண்டு அறி வாரா உருவோடு என் அரைத் தொன்றுபடு துளையொடு பரு இழை போகி நைந்து கரை பறைந்த என் உடையும் நோக்கி விருந்தினன் அளியன் இவன் எனப் பெருந்தகை நின்ற முரற்கை நீக்கி நன்றும் அரவு வெகுண்டு அன்ன தேறலொடு சூடு தருபு நிரயத்து அன்ன என் வறன் களைந்து அன்றே இரவினானே ஈத்தோன் எந்தை அன்றை ஞான்றினோடு இன்றின் ஊங்கும் இரப்பச் சிந்தியேன் நிரப்பு அடு புணையின் உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன் நிறைக் குளப் புதவின் மகிழ்ந்தனென் ஆகி ஒரு நாள் இரவலர் வரையா வள்ளியோர் கடைத் தலை ஞாங்கர் நெடுமொழி பயிற்றித் தோன்றல் செல்லாது என் சிறு கிணைக் குரலே #3 புறநானூறு 379 - (புறத்திணை) நன்னாகனார் **பாடப்பட்டோன்: ஓய்மான் வில்லியாதன் யானே பெறுக அவன் தாள் நிழல் வாழ்க்கை அவனே பெறுக என் நா இசை நுவறல் நெல் அரி தொழுவர் கூர் வாள் மழுங்கின் பின்னை மறத்தோடு அரியக் கல் செத்து அள்ளல் யாமைக் கூன் புறத்து உரிஞ்சும் நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன் வில்லியாதன் கிணையேம் பெரும குறும் தாள் ஏற்றைக் கொளும் கண் அம் விளர் நறு நெய் உருக்கி நாள்_சோறு ஈயா வல்லன் எந்தை பசி தீர்த்தல் எனக் கொன் வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூறக் கேட்டதன் கொண்டும் வேட்கை தண்டாது விண் தோய் தலைய குன்றம் பிற்பட நசை தர வந்தனென் யானே வசை இல் தாய் இல் தூவாக் குழவி போல ஆங்கு அத் திரு உடைத் திரு மனை ஐது தோன்று கமழ் புகை வரு மழை மங்குலின் மறுகு உடன் மறைக்கும் குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதிலூரே #4 புறநானூறு 381 - (புறத்திணை) நன்னகனார் **பாடப்பட்டோன்: கரும்பனூர் கிழான் ஊனும் ஊணும் முனையின் இனிது எனப் பாலின் பெய்தவும் பாகின் கொண்டவும் அளவுபு கலந்து மெல்லிது பருகி விருந்துறுத்து ஆற்றி இருந்தெனம் ஆகச் சென்மோ பெரும எம் விழவு உடை நாட்டு என யாம் தன் அறியுநமாகத் தான் பெரிது அன்புடைமையின் எம் பிரிவு அஞ்சித் துணரியது கொளாஅ ஆகிப் பழம் ஊழ்த்துப் பயம் பகர்வு அறியா மயங்கு அரில் முது பாழ்ப் பெயல் பெய்து அன்ன செல்வத்து ஆங்கண் ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச் சிதாஅர் வள்பின் சிதர் புறத் தடாரி ஊன் சுகிர் வலந்த தெண் கண் ஒற்றி விரல் விசை தவிர்க்கும் அரலை இல் பாணியின் இலம்பாடு அகற்றல் யாவது புலம்பொடு தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம் அதனால் இரு நிலம் கூலம் பாறக் கோடை வரு மழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றைச் சேயை ஆயினும் இவணை ஆயினும் இதன் கொண்டு அறிநை வாழியோ கிணைவ சிறு நனி ஒரு வழிப் படர்க என்றோனே எந்தை ஒலி வெள் அருவி வேங்கட நாடன் உறுவரும் சிறுவரும் ஊழ் மாறு உய்க்கும் அறத்துறை அம்பியின் மான மறப்பு இன்று இரும் கோள் ஈராப் பூட்கைக் கரும்பனூரன் காதல் மகனே #5 புறநானூறு 384 - (புறத்திணை) நன்னாகனார் **பாடப்பட்டோன்: கரும்பனூர் கிழான் மென்-பாலான் உடன் அணைஇ வஞ்சிக் கோட்டு உறங்கும் நாரை அறைக் கரும்பின் பூ அருந்தும் வன்-பாலான் கரும் கால் வரகின் அரிகால் கருப்பை அலைக்கும் பூழின் அங்கண் குறு முயல் வெருவ அயல கரும் கோட்டு இருப்பைப் பூ உறைக்குந்து விழவு இன்று ஆயினும் உழவர் மண்டை இரும் கெடிற்று மிசையொடு பூம் கள் வைகுந்து கரும்பனூரன் கிணையேம் பெரும நெல் என்னாம் பொன் என்னாம் கனற்றக் கொண்ட நறவு என்னும் மனை என்னா அவை பலவும் யான் தண்டவும் தான் தண்டான் நிணம் பெருத்த கொழும் சோற்று இடை மண் நாணப் புகழ் வேட்டு நீர் நாண நெய் வழங்கிப் புரந்தோன் எந்தை யாம் எவன் தொலைவதை அன்னோனை உடையேம் என்ப இனி வறட்கு யாண்டு நிற்க வெள்ளி மாண்ட உண்ட நல் கலம் பெய்து நுடக்கவும் தின்ற நண் பல் ஊன் தோண்டவும் வந்த வைகல் அல்லது சென்ற எல்லைச் செலவு அறியேனே &281 - (கச்சிப்பேட்டு) நன்னாகையார் #1 குறுந்தொகை 30 பாலை - (கச்சிப்பேட்டு) நன்னாகையார் கேட்டிசின் வாழி தோழி அல்கல் பொய் வலாளன் மெய் உற மரீஇய வாய்த் தகைப் பொய்க் கனா மருட்ட ஏற்று எழுந்து அமளி தைவந்தனனே குவளை வண்டு படு மலரின் சாஅய்த் தமியென் மன்ற அளியென் யானே #2 குறுந்தொகை 118 நெய்தல் - நன்னாகையார் புள்ளும் மாவும் புலம்பொடு வதிய நள்ளென வந்த நார் இல் மாலைப் பலர் புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ எனவும் வாரார் தோழி நம் காதலோரே #3 குறுந்தொகை 172 நெய்தல் - (கச்சிப்பேட்டு) நன்னாகையார் தாஅல் அம் சிறை நொப் பறை வாவல் பழு மரம் படரும் பையுள் மாலை எமியம் ஆக ஈங்குத் துறந்தோர் தமியர் ஆக இனியர்-கொல்லோ ஏழ் ஊர்ப் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த உலை வாங்கு மிதி தோல் போலத் தலை வரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே #4 குறுந்தொகை 180 பாலை - (கச்சிப்பேட்டு) நன்னாகையார் பழூஉப் பல் அன்ன பரு உகிர்ப் பா அடி இரும் களிற்று இன நிரை ஏந்தல் வரின் மாய்ந்து அறை மடிக் கரும்பின் கண் இடை அன்ன பைதல் ஒரு கழை நீடிய சுரன் இறந்து எய்தினர்-கொல்லோ பொருளே அல்குல் அம் வரி வாடத் துறந்தோர் வன்பர் ஆகத் தாம் சென்ற நாட்டே #5 குறுந்தொகை 192 பாலை - (கச்சிப்பேட்டு) நன்னாகையார் ஈங்கே வருவர் இனையல் அவர் என அழாஅற்கோ இனியே நோய் நொந்து உறைவி மின்னின் தூவி இரும் குயில் பொன்னின் உரை திகழ் கட்டளை கடுப்ப மாச் சினை நறும் தாது கொழுதும் பொழுதும் வறும் குரல் கூந்தல் தைவருவேனே #6 குறுந்தொகை 197 நெய்தல் - (கச்சிப்பேட்டு) நன்னாகையார் யாது செய்வாம்-கொல் தோழி நோ தக நீர் எதிர் கருவிய கார் எதிர் கிளை மழை ஊதை அம் குளிரொடு பேதுற்று மயங்கிய கூதிர் உருவின் கூற்றம் காதலர்ப் பிரிந்த என் குறித்து வருமே #7 குறுந்தொகை 287 முல்லை - (கச்சிப்பேட்டு) நன்னாகையார் அம்ம வாழி தோழி காதலர் இன்னே கண்டும் துறக்குவர்-கொல்லோ முந்நால் திங்கள் நிறை பொறுத்து அசைஇ ஒதுங்கல் செல்லாப் பசும் புளி வேட்கைக் கடும் சூல் மகளிர் போல நீர் கொண்டு விசும்பு இவர்கல்லாது தாங்குபு புணரிச் செழும் பல் குன்றம் நோக்கிப் பெரும் கலி வானம் ஏர்தரும் பொழுதே #8 குறுந்தொகை 325 நெய்தல் - நன்னாகையார் சேறும்சேறும் என்றலின் பண்டைத் தம் மாயச் செலவாச் செத்து மருங்கு அற்று மன்னிக் கழிக என்றேனே அன்னோ ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ கரும் கால் வெண் குருகு மேயும் பெரும் குளம் ஆயிற்று என் இடை முலை நிறைந்தே &282 - நாகம்போத்தனார் #1 குறுந்தொகை 282 பாலை - நாகம்போத்தனார் செவ்வி கொள் வரகின் செம் சுவல் கலித்த கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை நவ்வி நாள் மறி கவ்விக் கடன் கழிக்கும் கார் எதிர் தண் புனம் காணின் கை வளை நீர் திகழ் சிலம்பின் ஓராங்கு விரிந்த வெண்கூதாளத்து அம் தூம்பு புது மலர் ஆர் கழல்பு உகுவ போலச் சோர்குவ அல்ல என்பர்-கொல் நமரே &283 - நாமலார் மகனார் இளங்கண்ணனார் #1 குறுந்தொகை 250 பாலை - நாமலார் மகனார் இளங்கண்ணனார் பரல் அவல் படு நீர் மாந்தித் துணையோடு இரலை நல் மான் நெறி முதல் உகளும் மாலை வாரா அளவைக் கால் இயல் கடு மா கடவு-மதி பாக நெடு நீர்ப் பொரு கயல் முரணிய உண்கண் தெரி தீம் கிளவி தெருமரல் உயவே &284 - நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் #1 நற்றிணை 382 நெய்தல் - நிகண்டன் கலைக்கோட்டுத் தண்டனார் கானல் மாலைக் கழி நீர் மல்க நீல் நிற நெய்தல் நிரை இதழ் பொருந்த ஆனாது அலைக்கும் கடலே மீன் அருந்திப் புள் இனம் குடம்பை உடன் சேர்பு உள்ளார் துறந்தோர் தேஎத்து இருந்து நனி வருந்தி ஆர் உயிர் அழிவது ஆயினும் நேர்_இழை கரத்தல் வேண்டுமால் மற்றே பரப்பு நீர்த் தண்ணம் துறைவன் நாண நண்ணார் தூற்றும் பழிதான் உண்டே &285 - (நெடுங்களத்துப் பரணர்)நெடுங்கழுத்துப் பரணர் #1 புறநானூறு 291 - (நெடுங்களத்துப் பரணர்)நெடுங்கழுத்துப் பரணர் சிறாஅஅர் துடியர் பாடு வல் மகாஅஅர் தூ வெள் அறுவை மாயோன் குறுகி இரும் புள் பூசல் ஓம்பு-மின் யானும் விளரிக் கொட்பின் வெள்_நரி கடிகுவென் என் போல் பெரு விதுப்பு உறுக வேந்தே கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன் தலை மணி மருள் மாலை சூட்டி அவன் தலை ஒரு காழ் மாலை தான் மலைந்தனனே &286 - நெடும்பல்லியத்தனார் #1 புறநானூறு 64 - நெடும்பல்லியத்தனார் **பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி நல் யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கிச் செல்லாமோ-தில் சில் வளை விறலி களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை விசும்பு ஆடு எருவை பசும் தடி தடுப்பப் பகைப் புலம் மரீஇய தகைப் பெரும் சிறப்பின் குடுமிக் கோமான் கண்டு நெடு நீர் புற்கை நீத்தனம் வரற்கே #2 குறுந்தொகை 203 மருதம் - நெடும்பல்லியத்தனார் (நெடும்பல்லியத்தையார்) மலை இடையிட்ட நாட்டரும் அல்லர் மரம் தலை தோன்றா ஊரரும் அல்லர் கண்ணின் காண நண்ணுவழி இருந்தும் கடவுள் நண்ணிய பாலோர் போல ஒரீஇனன் ஒழுகும் என் ஐக்குப் பரியலென்-மன் யான் பண்டு ஒரு காலே &287- நெடும்பல்லியத்தையார் #1 குறுந்தொகை 178 மருதம் - நெடும்பல்லியத்தையார் அயிரை பரந்த அம் தண் பழனத்து ஏந்து எழில் மலர தூம்பு உடைத் திரள் கால் ஆம்பல் குறுநர் நீர் வேட்டு ஆங்கு இவள் இடை முலைக் கிடந்தும் நடுங்கல் ஆனீர் தொழுது காண் பிறையின் தோன்றி யாம் நுமக்கு அரியம் ஆகிய காலைப் பெரிய நோன்றனீர் நோகோ யானே #2 குறுந்தொகை 203 மருதம் - (நெடும்பல்லியத்தனார்) நெடும்பல்லியத்தையார் மலை இடையிட்ட நாட்டரும் அல்லர் மரம் தலை தோன்றா ஊரரும் அல்லர் கண்ணின் காண நண்ணுவழி இருந்தும் கடவுள் நண்ணிய பாலோர் போல ஒரீஇனன் ஒழுகும் என் ஐக்குப் பரியலென்-மன் யான் பண்டு ஒரு காலே &288 - நெடுவெண்ணிலவினார் #1 குறுந்தொகை 47 குறிஞ்சி - நெடுவெண்ணிலவினார் கரும் கால் வேங்கை வீ உகு துறுகல் இரும் புலிக் குருளையின் தோன்றும் காட்டிடை எல்லி வருநர் களவிற்கு நல்லை அல்லை நெடு வெண்ணிலவே &289 - நெட்டிமையார் #1 புறநானூறு 9 - நெட்டிமையார் **பாடப்பட்டோன் - பாண்டியன் பல்யாகசாலை **முதுகுடுமிப் பெருவழுதி ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும் பெண்டிரும் பிணி உடையீரும் பேணித் தென்புலம் வாழ்நர்க்கு அரும் கடன் இறுக்கும் பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும் எம் அம்பு கடி விடுதும் நும் அரண் சேர்-மின் என அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின் கொல் களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும் எம் கோ வாழிய குடுமி தம் கோச் செம் நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த முந்நீர் விழவின் நெடியோன் நல் நீர்ப் பஃறுளி மணலினும் பலவே #2 புறநானூறு 12 - நெட்டிமையார் **பாடப்பட்டோன் - பாண்டியன் பல்யாகசாலை **முதுகுடுமிப் பெருவழுதி பாணர் தாமரை மலையவும் புலவர் பூ நுதல் யானையோடு புனை தேர் பண்ணவும் அறனோ மற்று இது விறல் மாண் குடுமி இன்னா ஆக பிறர் மண் கொண்டு இனிய செய்தி நின் ஆர்வலர் முகத்தே #3 புறநானூறு 15 - (கபிலர்)நெட்டிமையார் **பாடப்பட்டோன் - பாண்டியன் பல்யாகசாலை **முதுகுடுமிப் பெருவழுதி(சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்) கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண் வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி பாழ் செய்தனை அவர் நனம் தலை நல் எயில் புள் இனம் இமிழும் புகழ் சால் விளை வயல் வெள் உளைக் கலிமான் கவி குளம்பு உகளத் தேர் வழங்கினை நின் தெவ்வர் தேஎத்துத் துளங்கு இயலான் பணை எருத்தின் பாவு அடியான் செறல் நோக்கின் ஒளிறு மருப்பின் களிறு அவர காப்பு உடைய கயம் படியினை அன்ன சீற்றத்து அனையை ஆகலின் விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடு நிழல் படு நெடு வேல் ஏந்தி ஒன்னார் ஒண் படை கடும் தார் முன்பு தலைக்கொண்மார் நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய வசைபட வாழ்ந்தோர் பலர்-கொல் புரை இல் நல் பனுவல் நால் வேதத்து அரும் சீர்த்திப் பெரும் கண்ணுறை நெய்ம் மலி ஆவுதி பொங்கப் பல் மாண் வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி யூபம் நட்ட வியன் களம் பல-கொல் யா பல-கொல்லோ பெரும வாருற்று விசி பிணிக் கொண்ட மண் கனை முழவின் பாடினி பாடும் வஞ்சிக்கு நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே &290 - நெய்தற் கார்க்கியர் #1 குறுந்தொகை 55 நெய்தல் - நெய்தற் கார்க்கியர் மாக் கழி மணிப் பூக் கூம்பத் தூத் திரைப் பொங்கு பிதிர்த் துவலையொடு மங்குல் தைஇக் கையற வந்த தைவரல் ஊதையொடு இன்னா உறையுட்டு ஆகும் சில் நாட்டு அம்ம இச் சிறு நல் ஊரே #2 குறுந்தொகை 212 நெய்தல் - நெய்தல் கார்க்கியனார் கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடும் தேர் தெண் கடல் அடை கரைத் தெளிர் மணி ஒலிப்ப காண வந்து நாணப் பெயரும் அளிதோ தானே காமம் விளிவது-மன்ற நோகோ யானே &291 - (நெய்தற் சாய்த்துய்(ந்)த்த) ஆவூர் கிழார் #1 அகநானூறு 112 குறிஞ்சி - (நெய்தற் சாய்த்துய்(ந்)த்த) ஆவூர் கிழார் கூனல் எண்கின் குறு நடைத் தொழுதி சிதலை செய்த செந்நிலைப் புற்றின் மண் புனை நெடும் கோடு உடைய வாங்கி இரை நசைஇப் பரிக்கும் அரைநாள் கங்குல் ஈன்று அணி வயவுப் பிணப் பசித்து என மறப் புலி ஒளிறு ஏந்து மருப்பின் களிறு அட்டுக் குழுமும் பனி இரும் சோலை எமியம் என்னாய் தீங்கு செய்தனையே ஈங்கு வந்தோயே நாள் இடைப்படின் என் தோழி வாழாள் தோளிடை முயக்கம் நீயும் வெய்யை கழியக் காதலர் ஆயினும் சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார் வரையின் எவனோ வான் தோய் வெற்ப கணக் கலை இகுக்கும் கறி இவர் சிலம்பின் மணப்பு அரும் காமம் புணர்ந்தமை அறியார் தொன்று இயல் மரபின் மன்றல் அயரப் பெண்கோள் ஒழுக்கம் கண் கொள நோக்கி நொதுமல் விருந்தினம் போல இவள் புது நாண் ஒடுக்கமும் காண்குவம் யாமே &292 - (கொடியூர்க் கிழார் மகனார்) நெய்தல் தத்தனார் #1 அகநானூறு 243 பாலை - (கொடியூர்க் கிழார் மகனார்) நெய்தல் தத்தனார் அவரை ஆய் மலர் உதிரத் துவரின வாங்கு துளைத் துகிரின் ஈங்கை பூப்ப இறங்கு போது அவிழ்ந்த ஈர்ம் புதல் பகன்றைக் கறங்கு நுண் துவலையின் ஊர் உழை அணியப் பெயல் நீர் புது வரல் தவிரச் சினை நேர்பு பீள் விரிந்து இறைஞ்சிய பிறங்கு கதிர்க் கழனி நெல் ஒலி பாசவல் துழைஇக் கல்லெனக் கடிது வந்து இறுத்த கண் இல் வாடை நெடிது வந்தனை என நில்லாது ஏங்கி பல புலந்து உறையும் துணை இல் வாழ்க்கை நம் வலத்து அன்மை கூறி அவர் நிலை அறியுநம் ஆயின் நன்று-மன்-தில்ல பனி வார் கண்ணேம் ஆகி இனி அது நமக்கே எவ்வம் ஆகின்று அனைத்தால் தோழி நம் தொல் வினைப் பயனே #2 நற்றிணை 49 நெய்தல் - நெய்தல் தத்தனார் படு திரை கொழீஇய பால் நிற எக்கர்த் தொடியோர் மடிந்து எனத் துறை புலம்பின்றே முடி வலை முகந்த முடங்கு இறாப் பாவைப் படு புள் ஓப்பலின் பகல் மாய்ந்தன்றே கோட்டு_மீன் எறிந்த உவகையர் வேட்டம் மடிந்து எமரும் அல்கினர் ஏமார்ந்தனம் எனச் சென்று யாம் அறியின் எவனோ தோழி மன்றப் புன்னை மாச் சினை நறு வீ முன்றில் தாழையொடு கமழும் தெண் கடல் சேர்ப்பன் வாழ் சிறு நல் ஊர்க்கே #3 நற்றிணை 130 நெய்தல் - நெய்தல் தத்தனார் வடு இன்று நிறைந்த மான் தேர்த் தெண் கண் மடி வாய்த் தண்ணுமை நடுவண் ஆர்ப்பக் கோலின் எறிந்து காலைத் தோன்றிய செம் நீர்ப் பொது வினைச் செம்மல் மூதூர்த் தமது செய் வாழ்க்கையின் இனியது உண்டோ எனை விருப்பு உடையர் ஆயினும் நினைவிலர் நேர்ந்த நெஞ்சும் நெகிழ்ந்த தோளும் வாடிய வரியும் நோக்கி நீடாது எவன் செய்தனள் இப் பேர் அஞர் உறுவி என்று ஒரு நாள் கூறின்றும் இலரே விரி நீர் வையக வரை அளவு இறந்த எவ்வ நோய் பிறிது உயவுத் துணை இன்றே &293 - நொச்சி நியமம் கிழார் #1 அகநானூறு 52 குறிஞ்சி - நொச்சி நியமம் கிழார் ** (மாற்றூர் கிழார் மகனார் கொற்றங்கொற்றனார்) வலந்த வள்ளி மரன் ஓங்கு சாரல் கிளர்ந்த வேங்கைச் சேண் நெடும் பொங்கர்ப் பொன் நேர் புது மலர் வேண்டிய குற_மகள் இன்னா இசைய பூசல் பயிற்றலின் ஏ கல் அடுக்கத்து இருள் அளைச் சிலம்பின் ஆ கொள் வயப் புலி ஆகும் அஃது எனத் தம் மலை கெழு சீறூர் புலம்பக் கல்லெனச் சிலை உடை இடத்தர் போதரும் நாடன் நெஞ்சு அமர் வியன் மார்பு உடைத்து என அன்னைக்கு அறிவிப்பேம்-கொல் அறியலெம்-கொல் என இரு பால் பட்ட சூழ்ச்சி ஒரு பால் சேர்ந்தன்று வாழி தோழி யாக்கை இன் உயிர் கழிவது ஆயினும் நின் மகள் ஆய் மலர் உண்கண் பசலை காம நோய் எனச் செப்பாதீமே #2 நற்றிணை 17 குறிஞ்சி - நொச்சி நியமங்கிழார் நாள்_மழை தலைஇய நன் நெடும் குன்றத்து மால் கடல் திரையின் இழிதரும் அருவி அகல் இரும் கானத்து அல்கு அணி நோக்கித் தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு ஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின் அன்னை எவன் செய்தனையோ நின் இலங்கு எயிறு_உண்கு என மெல்லிய இனிய கூறலின் வல் விரைந்து உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து உரைத்தல் உய்ந்தனனே தோழி சாரல் காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி தீம் தொடை நரம்பின் இமிரும் வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே #3 நற்றிணை 208 பாலை - நொச்சி நியமங்கிழார் விறல் சால் விளங்கு இழை நெகிழ விம்மி அறல் போல் தெண் மணி இடை முலை நனைப்ப விளிவு இல கலுழும் கண்ணொடு பெரிது அழிந்து எவன் இனைபு வாடுதி சுடர் நுதல் குறுமகள் செல்வார் அல்லர் நம் காதலர் செலினும் நோன்மார் அல்லர் நோயே மற்று அவர் கொன்னும் நம்பும்-குரையர் தாமே சிறந்த அன்பினர் சாயலும் உரியர் பிரிந்த நம்மினும் இரங்கி அரும் பொருள் முடியாது ஆயினும் வருவர் அதன்தலை இன் துணைப் பிரிந்தோர் நாடித் தருவது போலும் இப் பெரு மழைக் குரலே #4 நற்றிணை 209 குறிஞ்சி - நொச்சி நியமங்கிழார் மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத் தளி_பதம் பெற்ற கான் உழு குறவர் சில வித்து அகல இட்டு என பல விளைந்து இறங்கு குரல் பிறங்கிய ஏனல் உள்ளாள் மழலை அம் குறுமகள் மிழலை அம் தீம் குரல் கிளியும் தாம் அறிபவ்வே எனக்கே படுங்கால் பையுள் தீரும் படாஅது தவிரும் காலை ஆயின் என் உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே #5 புறநானூறு 293 - நொச்சி நியமங்கிழார் நிறப்படைக்கு ஒல்கா யானை மேலோன் குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை நாண் உடை மாக்கட்கு இரங்கும் ஆயின் எம்மினும் பேர் எழில் இழந்து வினை எனப் பிறர் மனை புகுவள்-கொல்லோ அளியள் தானே பூவிலைப்பெண்டே &294 - நோய்பாடியார் #1 அகநானூறு 67 பாலை - நோய்பாடியார் (நொய்ப்பாடியார்) யான் எவன் செய்கோ தோழி பொறி வரி வானம்வாழ்த்தி பாடவும் அருளாது உறை துறந்து எழிலி நீங்கலின் பறைபு உடன் மரம் புல்லென்ற முரம்பு உயர் நனம் தலை அரம் போழ் நுதிய வாளி அம்பின் நிரம்பா நோக்கின் நிரயம் கொள்மார் நெல்லி நீள் இடை எல்லி மண்டி நல் அமர்க் கடந்த நாண் உடை மறவர் பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும் பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் மொழிபெயர் தேஎம் தருமார் மன்னர் கழிப் பிணிக் கறைத்தோல் நிரை கண்டு அன்ன உவல் இடு பதுக்கை ஆள் உகு பறந்தலை உரு இல் பேஎய் ஊராத் தேரொடு நிலம் படு மின்மினி போலப் பல உடன் இலங்கு பரல் இமைக்கும் என்ப நம் நலம் துறந்து உறைநர் சென்ற ஆறே &295 - பக்குடுக்கை நன்கணியார் #1 புறநானூறு 194 - பக்குடுக்கை நன்கணியார் ஓர் இல் நெய்தல் கறங்க ஓர் இல் ஈர்ம் தண் முழவின் பாணி ததும்ப புணர்ந்தோர் பூ அணி அணியப் பிரிந்தோர் பைதல் உண்கண் பனி வார்பு உறைப்பப் படைத்தோன் மன்ற அப் பண்பிலாளன் இன்னாது அம்ம இவ் உலகம் இனிய காண்க இதன் இயல்பு உணர்ந்தோரே &296 - படுமரத்து மோசிகீரனார் #1 குறுந்தொகை 33 மருதம் - படுமரத்து மோசிகீரனார் அன்னாய் இவன் ஓர் இள மாணாக்கன் தன் ஊர் மன்றத்து என்னன்-கொல்லோ இரந்தூண் நிரம்பா மேனியொடு விருந்தின் ஊரும் பெரும் செம்மலனே #2 குறுந்தொகை 75 மருதம் - படுமரத்து மோசிகீரனார் நீ கண்டனையோ கண்டார்க் கேட்டனையோ ஒன்று தெளிய நசையினம் மொழிமோ வெண் கோட்டு யானை சோனை படியும் பொன் மலி பாடலி பெறீஇயர் யார் வாய்க் கேட்டனை காதலர் வரவே #3 குறுந்தொகை 383 பாலை - படுமரத்து மோசி கீரனார் நீ உடம்படுதலின் யான் தர வந்து குறி நின்றனனே குன்ற நாடன் இன்றை அளவைச் சென்றைக்க என்றி கையும் காலும் ஓய்வன ஒடுங்கத் தீ உறு தளிரின் நடுங்கி யாவதும் இலை யான் செயற்கு உரியதுவே &297 - படுமரத்து மோசி கொற்றனார் #1 குறுந்தொகை 376 நெய்தல் - படுமரத்து மோசி கொற்றனார் மன் உயிர் அறியாத் துன் அரும் பொதியில் சூர் உடை அடுக்கத்து ஆரம் கடுப்ப வேனிலானே தண்ணியள் பனியே வாங்கு கதிர் தொகுப்பக் கூம்பி ஐயென அலங்கு வெயில் பொதிந்த தாமரை உள் அகத்து அன்ன சிறு வெம்மையளே &298 - பதடி வைகலார் #1 குறுந்தொகை 323 முல்லை - பதடி வைகலார் எல்லாம் எவனோ பதடி வைகல் பாணர் படு மலை பண்ணிய எழாலின் வானத்து அஞ்சுவர நல் இசை வீழப் பெய்த புலத்துப் பூத்த முல்லைப் பசு முகைத் தாது நாறும் நறு நுதல் அரிவை தோள் அணைத் துஞ்சிக் கழிந்த நாள் இவண் வாழும் நாளே &299 - பதுமனார் #1 குறுந்தொகை 6 நெய்தல் - பதுமனார் நள்ளென்று அன்றே யாமம் சொல் அவிந்து இனிது அடங்கினரே மாக்கள் முனிவு இன்று நனம் தலை உலகமும் துஞ்சும் ஓர் யான் மன்ற துஞ்சாதேனே &300 - பரணர் #1 அகநானூறு 6 மருதம் - பரணர் அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை இழை அணி பணைத் தோள் ஐயை தந்தை மழை வளம் தரூஉம் மா வண் தித்தன் பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண் கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம் குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு வேழ வெண் புணை தழீஇப் பூழியர் கயம் நாடு யானையின் முகன் அமர்ந்து ஆங்கு ஏந்து எழில் ஆகத்துப் பூம் தார் குழைய நெருநல் ஆடினை புனலே இன்று வந்து ஆக வன முலை அரும்பிய சுணங்கின் மாசு இல் கற்பின் புதல்வன் தாய் என மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி எம் முதுமை எள்ளல் அஃது அமைகும்-தில்ல சுடர் பூம் தாமரை நீர் முதிர் பழனத்து அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய் முள் அரைப் பிரம்பின் மூதரில் செறியும் பல் வேல் மத்தி கழாஅர் அன்ன எம் இளமை சென்று தவத் தொல்லஃதே இனிமை எவன் செய்வது பொய்ம்மொழி எமக்கே #2 அகநானூறு 62 குறிஞ்சி - பரணர் அயத்து வளர் பைஞ்சாய் முருந்தின் அன்ன நகைப் பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் ஆகத்து அரும்பிய முலையள் பணைத் தோள் மாத் தாள் குவளை மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழைக் கண் மாஅயோளொடு பேயும் அறியா மறை அமை புணர்ச்சி பூசல் துடியின் புணர்பு பிரிந்து இசைப்பக் கரந்த கரப்பொடு நாம் செலற்கு அருமையின் கடும் புனல் மலிந்த காவிரிப் பேரியாற்று நெடும் சுழி நீத்தம் மண்ணுநள் போல நடுங்கு அஞர் தீர முயங்கி நெருநல் ஆகம் அடைதந்தோளே வென் வேல் களிறு கெழு தானைப் பொறையன் கொல்லி ஒளிறு நீர் அடுக்கத்து வியலகம் பொற்பக் கடவுள் எழுதிய பாவையின் மடவது மாண்ட மாஅயோளே #3 அகநானூறு 76 மருதம் - பரணர் மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்கத் தண் துறை ஊரன் எம் சேரி வந்து என இன் கடும் கள்ளின் அஃதை களிற்றொடு நல் கலன் ஈயும் நாள்_மகிழ்_இருக்கை அவை புகு பொருநர் பறையின் ஆனாது கழறுப என்ப அவன் பெண்டிர் அந்தில் கச்சினன் கழலினன் தேம் தார் மார்பினன் வகை அமைப் பொலிந்த வனப்பு அமை தெரியல் சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ என ஆதிமந்தி பேதுற்று இனைய சிறை பறைந்து உரைஇச் செம் குணக்கு ஒழுகும் அம் தண் காவிரி போலக் கொண்டு கைவலித்தல் சூழ்ந்திசின் யானே #4 அகநானூறு 116 மருதம் - பரணர் எரி அகைந்து அன்ன தாமரை இடையிடை அரிந்து கால் குவித்த செந்நெல் வினைஞர் கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின் ஆய் கரும்பு அடுக்கும் பாய் புனல் ஊர பெரிய நாணிலை-மன்ற பொரி எனப் புன்கு அவிழ் அகன் துறைப் பொலிய ஒண் நுதல் நறு மலர்க் காண்வரும் குறும் பல் கூந்தல் மாழை நோக்கின் காழ் இயல் வன முலை எஃகு உடை எழில் நலத்து ஒருத்தியொடு நெருநை வைகு புனல் அயர்ந்தனை என்ப அதுவே பொய் புறம் பொதிந்து யாம் கரப்பவும் கையிகந்து அலர் ஆகின்றால் தானே மலர் தார் மை அணி யானை மறப் போர்ச் செழியன் பொய்யா விழவின் கூடல் பறந்தலை உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர் கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி இரங்கு இசை முரசம் ஒழியப் பரந்து அவர் ஓடு புறம் கண்ட ஞான்றை ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே #5 அகநானூறு 122 குறிஞ்சி - பரணர் இரும் பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர் விழவு இன்று ஆயினும் துஞ்சாது ஆகும் மல்லல் ஆவணம் மறுகு உடன் மடியின் வல் உரை கடும் சொல் அன்னை துஞ்சாள் பிணி கோள் அரும் சிறை அன்னை துஞ்சின் துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர் இலங்கு வேல் இளையர் துஞ்சின் வை எயிற்று வலம் சுரித் தோகை ஞாளி மகிழும் அரவ வாய் ஞமலி மகிழாது மடியின் பகல் உரு உறழ நிலவு கான்று விசும்பின் அகல் வாய் மண்டிலம் நின்று விரியும்மே திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின் இல் எலி வல்சி வல் வாய்க் கூகை கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும் வளைக் கண் சேவல் வாளாது மடியின் மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும் எல்லாம் மடிந்த காலை ஒரு நாள் நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே அதனால் அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து ஆதி போகிய பாய் பரி நல் மா நொச்சி வேலித் தித்தன் உறந்தைக் கல் முதிர் புறங்காட்டு அன்ன பல் முட்டு இன்றால் தோழி நம் களவே #6 அகநானூறு 125 பாலை - பரணர் அரம் போழ் அவ் வளை தோள் நிலை நெகிழ நிரம்பா வாழ்க்கை நேர்தல் வேண்டி இரம் காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை ஆலி அன்ன வால் வீ தாஅய் வை வால் ஓதி மை அணல் ஏய்ப்பத் தாது உறு குவளைப் போது பிணி அவிழப் படாஅப் பைம் கண் பா அடிக் கய வாய்க் கடாஅம் மாறிய யானை போலப் பெய்து வறிது ஆகிய பொங்கு செலல் கொண்மூ மை தோய் விசும்பின் மாதிரத்து உழிதரப் பனி அடூஉ நின்ற பானாள் கங்குல் தனியோர் மதுகை தூக்காய் தண்ணென முனிய அலைத்தி முரண் இல் காலை கைதொழு மரபின் கடவுள் சான்ற செய்வினை மருங்கின் சென்றோர் வல் வரின் விரி உளைப் பொலிந்த பரி உடை நல் மான் வெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த பெரு வளக் கரிகால் முன் நிலைச் செல்லார் சூடா வாகைப் பறந்தலை ஆடு பெற ஒன்பது குடையும் நல் பகல் ஒழித்த பீடு இல் மன்னர் போல ஓடுவை-மன்னால் வாடை நீ எமக்கே #7 அகநானூறு 135 பாலை - பரணர் திதலை மாமை தளிர் வனப்பு அழுங்கப் புதல் இவர் பீரின் எதிர் மலர் கடுப்பப் பசலை பாய்ந்த நுதலேன் ஆகி எழுது எழில் மழைக் கண் கலுழ நோய் கூர்ந்து ஆதிமந்தியின் அறிவு பிறிது ஆகிப் பேதுற்றிசினே காதல் அம் தோழி காய் கதிர் திருகலின் கனைந்து கால் கடுகி ஆடு தளிர் இருப்பைக் கூடு குவி வான் பூக் கோடு கடை கழங்கின் அறை மிசைத் தாஅம் காடு இறந்தனரே காதலர் அடு போர் வீயா விழுப் புகழ் விண் தோய் வியன் குடை ஈர்_எழு வேளிர் இயைந்து ஒருங்கு எறிந்த கழுவுள் காமூர் போலக் கலங்கின்று-மாது அவர் தெளிந்த என் நெஞ்சே #8 அகநானூறு 142 குறிஞ்சி - பரணர் இல மலர் அன்ன அம் செம் நாவின் புலம் மீக்கூறும் புரையோர் ஏத்த பலர் மேம் தோன்றிய கவி கை வள்ளல் நிறை அரும் தானை வெல் போர் மாந்தரம் பொறையன் கடுங்கோப் பாடிச் சென்ற குறையோர் கொள்கலம் போல நன்றும் உவ இனி வாழிய நெஞ்சே காதலி முறையின் வழாஅது ஆற்றிப் பெற்ற கறை அடி யானை நன்னன் பாழி ஊட்டு அரு மரபின் அஞ்சுவரு பேஎய்க் கூட்டு எதிர்கொண்ட வாய் மொழி மிஞிலி புள்ளிற்கு ஏமம் ஆகிய பெரும் பெயர் வெள்ளத் தானை அதிகன் கொன்று உவந்து ஒள் வாள் அமலை ஆடிய ஞாட்பின் பலர் அறிவுறுதல் அஞ்சிப் பைப்பய நீர்த் திரள் கடுக்கும் மாசு இல் வெள்ளிச் சூர்ப்புறு கோல் வளை செறித்த முன்கைக் குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல் இடன் இல் சிறுபுறத்து இழையொடு துயல்வரக் கடல் மீன் துஞ்சும் நள்ளென் யாமத்து உருவு கிளர் ஏர் வினைப் பொலிந்த பாவை இயல் கற்று அன்ன ஒதுக்கினள் வந்து பெயல் அலை கலங்கிய மலைப் பூம் கோதை இயல் எறி பொன்னின் கொங்கு சோர்பு உறைப்பத் தொடிக் கண் வடுக் கொள முயங்கினள் வடிப்புறு நரம்பின் தீவிய மொழிந்தே #9 அகநானூறு 148 குறிஞ்சி - பரணர் பனைத் திரள் அன்ன பரேர் எறுழ்த் தடக் கைக் கொலைச் சினம் தவிரா மதன் உடை முன்பின் வண்டு படு கடாஅத்து உயர் மருப்பு யானை தண் கமழ் சிலம்பின் மரம் படத் தொலைச்சி உறு புலி உரறக் குத்தி விறல் கடிந்து சிறுதினைப் பெரும் புனம் வவ்வும் நாட கடும் பரிக் குதிரை ஆஅய் எயினன் நெடும் தேர் ஞிமிலியொடு பொருது களம் பட்டு எனக் காணிய செல்லா கூகை நாணிக் கடும் பகல் வழங்காத ஆஅங்கு இடும்பை பெரிதால் அம்ம இவட்கே அதனால் மாலை வருதல் வேண்டும் சோலை முளை மேய் பெரும் களிறு வழங்கும் மலை முதல் அடுக்கத்த சிறு கல் ஆறே #10 அகநானூறு 152 குறிஞ்சி - பரணர் நெஞ்சு நடுங்கு அரும் படர் தீர வந்து குன்றுழை நண்ணிய சீறூர் ஆங்கண் செலீஇய பெயர்வோள் வணர் சுரி ஐம்பால் நுண் கோல் அகவுநர்ப் புரந்த பேர் இசைச் சினம் கெழு தானைத் தித்தன் வெளியன் இரங்கு நீர்ப் பரப்பின் கானல் அம் பெரும் துறைத் தனம் தரு நல் கலம் சிதையத் தாக்கும் சிறு வெள் இறவின் குப்பை அன்ன உறு பகை தரூஉம் மொய்ம் மூசு பிண்டன் முனை முரண் உடையக் கடந்த வென் வேல் இசை நல் ஈகைக் களிறு வீசு வண் மகிழ் பாரத்துத் தலைவன் ஆர நன்னன் ஏழில் நெடு வரைப் பாழிச் சிலம்பில் களி மயில் கலாவத்து அன்ன தோளே வல் வில் இளையர் பெருமகன் நள்ளி சோலை அடுக்கத்துச் சுரும்பு உண விரிந்த கடவுள் காந்தளுள்ளும் பல உடன் இறும்பூது கஞலிய ஆய் மலர் நாறி வல்லினும் வல்லார் ஆயினும் சென்றோர்க்குச் சால் அவிழ் நெடும் குழி நிறைய வீசும் மாஅல் யானை ஆஅய் கானத்துத் தலையாற்று நிலைஇய சேய் உயர் பிறங்கல் வேய் அமைக் கண் இடை புரைஇச் சேய ஆயினும் நடுங்கு துயர் தருமே #11 அகநானூறு 162 குறிஞ்சி - பரணர் கொளக் குறைபடாஅக் கோடு வளர் குட்டத்து அளப்பு அரிது ஆகிய குவை இரும் தோன்றல கடல் கண்டு அன்ன மாக விசும்பின் அழல் கொடி அன்ன மின்னு வசிபு நுடங்கக் கடிது இடி உருமொடு கதழ் உறை சிதறி விளிவிடன் அறியா வான் உமிழ் நடுநாள் அரும் கடிக் காவலர் இகழ்_பதம் நோக்கிப் பனி மயங்கு அசை வளி அலைப்பத் தந்தை நெடு நகர் ஒரு சிறை நின்றனென் ஆக அறல் என அவிர்வரும் கூந்தல் மலர் என வாள் முகத்து அலமரும் மா இதழ் மழைக் கண் முகை நிரைத்து அன்ன மா வீழ் வெண் பல் நகை மாண்டு இலங்கும் நலம் கெழு துவர் வாய்க் கோல் அமை விழுத் தொடி விளங்க வீசி கால் உறு தளிரின் நடுங்கி ஆனாது நோய் அசா வீட முயங்கினள் வாய்மொழி நல் இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய நசை பிழைப்பு அறியாக் கழல் தொடி அதிகன் கோள் அறவு அறியாப் பயம் கெழு பலவின் வேங்கை சேர்ந்த வெற்பகம் பொலிய வில் கெழு தானைப் பசும்பூண் பாண்டியன் களிறு அணி வெல் கொடி கடுப்பக் காண்வர ஒளிறுவன இழிதரும் உயர்ந்து தோன்று அருவி நேர்கொள் நெடு வரைக் கவாஅன் சூர்_அர_மகளிரின் பெறற்கு அரியோளே #12 அகநானூறு 178 குறிஞ்சி - பரணர் வயிரத்து அன்ன வை ஏந்து மருப்பின் வெதிர் வேர் அன்ன பரூஉ மயிர்ப் பன்றி பறைக் கண் அன்ன நிறைச் சுனை பருகி நீலத்து அன்ன அகல் இலைச் சேம்பின் பிண்டம் அன்ன கொழும் கிழங்கு மாந்தி பிடி மடிந்து அன்ன கல் மிசை ஊழ் இழிபு யாறு சேர்ந்து அன்ன ஊறு நீர்ப் படாஅர்ப் பைம் புதல் நளி சினைக் குருகு இருந்து அன்ன வண் பிணி அவிழ்ந்த வெண் கூதாளத்து அலங்கு குலை அலரி தீண்டித் தாது உகப் பொன் உரை கட்டளை கடுப்பக் காண்வரக் கிளை அமல் சிறுதினை விளை குரல் மேய்ந்து கண் இனிது படுக்கும் நல் மலை நாடனொடு உணர்ந்தனை புணர்ந்த நீயும் நின் தோள் பணைக் கவின் அழியாது துணைப் புணர்ந்து என்றும் தவல் இல் உலகத்து உறைஇயரோ தோழி எல்லையும் இரவும் என்னாது கல்லெனக் கொண்டல் வான் மழை பொழிந்த வைகறை தண் பனி அற்சிரம் தமியோர்க்கு அரிது எனக் கனவினும் பிரிவு அறியலனே அதன்தலை முன் தான் கண்ட ஞான்றினும் பின் பெரிது அளிக்கும் தன் பண்பினானே #13 அகநானூறு 181 பாலை - பரணர் துன் அரும் கானமும் துணிதல் ஆற்றாய் பின் நின்று பெயரச் சூழ்ந்தனை ஆயின் என் நிலை உரைமோ நெஞ்சே ஒன்னார் ஓம்பு அரண் கடந்த வீங்கு பெரும் தானை அடு போர் மிஞிலி செரு வேல் கடைஇ முருகு உறழ் முன்பொடு பொருது களம் சிவப்ப ஆஅய் எயினன் வீழ்ந்து என ஞாயிற்று ஒண் கதிர் உருப்பம் புதைய ஓராங்கு வம்பப் புள்ளின் கம்பலைப் பெரும் தோடு விசும்பிடை தூர ஆடி மொசிந்து உடன் பூ விரி அகன் துறை கணை விசைக் கடு நீர்க் காவிரிப் பேரியாற்று அயிர் கொண்டு ஈண்டி எக்கர் இட்ட குப்பை வெண் மணல் வைப்பின் யாணர் வளம் கெழு வேந்தர் ஞாலம் நாறும் நலம் கெழு நல் இசை நான்மறை முது நூல் முக்கண் செல்வன் ஆலமுற்றம் கவின் பெறத் தைஇய பொய்கை சூழ்ந்த பொழில் மனை மகளிர் கை செய் பாவைத் துறைக்-கண் இறுக்கும் மகர நெற்றி வான் தோய் புரிசைச் சிகரம் தோன்றா சேண் உயர் நல் இல் புகாஅர் நல் நாட்டதுவே பகாஅர் பண்டம் நாறும் வண்டு அடர் ஐம்பால் பணைத் தகைத் தடைஇய காண்பு இன் மென் தோள் அணங்கு சால் அரிவை இருந்த மணம் கமழ் மறுகின் மணல் பெரும் குன்றே #14 அகநானூறு 186 மருதம் - பரணர் வானம் வேண்டா வறன் இல் வாழ்க்கை நோன் ஞாண் வினைஞர் கோள் அறிந்து ஈர்க்கும் மீன் முதிர் இலஞ்சிக் கலித்த தாமரை நீர் மிசை நிவந்த நெடும் தாள் அகல் இலை இரும் கயம் துளங்கக் கால் உறு-தொறும் பெரும் களிற்றுச் செவியின் அலைக்கும் ஊரனொடு எழுந்த கௌவையோ பெரிதே நட்பே கொழும் கோல் வேழத்துப் புணை துணை ஆகப் புனல் ஆடு கேண்மை அனைத்தே அவனே ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட ஈர்ம் தண் முழவின் எறி குணில் விதிர்ப்ப தண் நறும் சாந்தம் கமழும் தோள் மணந்து இன்னும் பிறள்-வயினானே மனையோள் எம்மொடு புலக்கும் என்ப வென் வேல் மாரி அம்பின் மழைத் தோல் பழையன் காவிரி வைப்பின் போஒர் அன்ன என் செறி வளை உடைத்தலோ இலனே உரிதினின் யாம் தன் பகையேம் அல்லேம் சேர்ந்தோர் திரு நுதல் பசப்ப நீங்கும் கொழுநனும் சாலும் தன் உடன் உறை பகையே #15 அகநானூறு 196 மருதம் - பரணர் நெடும் கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல் துடிக் கண் கொழும் குறை நொடுத்து உண்டு ஆடி வேட்டம் மறந்து துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி ஆம்பல் அகல் இலை அமலை வெம் சோறு தீம் புளிப் பிரம்பின் திரள் கனி பெய்து விடியல் வைகறை இடூஉம் ஊர தொடுகலம் குறுக வாரல் தந்தை கண் கவின் அழித்ததன் தப்பல் தெறுவர ஒன்றுமொழிக் கோசர் கொன்று முரண் போகிய கடும் தேர்த் திதியன் அழுந்தைக் கொடும் குழை அன்னிமிஞிலியின் இயலும் நின் நலத் தகுவியை முயங்கிய மார்பே #16 அகநானூறு 198 குறிஞ்சி - பரணர் கூறுவம்-கொல்லோ கூறலம்-கொல் எனக் கரந்த காமம் கைந்நிறுக்க அல்லாது நயந்து நாம் விட்ட நல் மொழி நம்பி அரைநாள் யாமத்து விழு மழை கரந்து கார் விரை கமழும் கூந்தல் தூ வினை நுண் நூல் ஆகம் பொருந்தினள் வெற்பின் இள மழை சூழ்ந்த மட மயில் போல வண்டு வழிப் படர தண் மலர் வேய்ந்து வில் வகுப்புற்ற நல் வாங்கு குடைச் சூல் அம் சிலம்பு ஒடுக்கி அஞ்சினள் வந்து துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள் பெயர்வோள் ஆன்ற கற்பின் சான்ற பெரியள் அம் மா அரிவையோ அல்லள் தெனாஅது ஆஅய் நல் நாட்டு அணங்கு உடைச் சிலம்பில் கவிரம் பெயரிய உரு கெழு கவாஅன் ஏர் மலர் நிறை சுனை உறையும் சூர்_மகள் மாதோ என்னும் என் நெஞ்சே #17 அகநானூறு 208 குறிஞ்சி - பரணர் யாம இரவின் நெடும் கடை நின்று தேம் முதிர் சிமையக் குன்றம் பாடும் நுண் கோல் அகவுநர் வேண்டின் வெண் கோட்டு அண்ணல் யானை ஈயும் வண் மகிழ் வெளியன் வேண்மான் ஆஅய் எயினன் அளி இயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை இழை அணி யானை இயல் தேர் மிஞிலியொடு நண்பகல் உற்ற செருவில் புண் கூர்ந்து ஒள் வாள் மயங்கு அமர் வீழ்ந்து எனப் புள் ஒருங்கு அம் கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று ஒண் கதிர் தெறாமை சிறகரின் கோலி நிழல் செய்து உழறல் காணேன் யான் எனப் படுகளம் காண்டல் செல்லான் சினம் சிறந்து உரு வினை நன்னன் அருளான் கரப்பப் பெரு விதுப்புற்ற பல் வேள் மகளிர் குரூஉப் பூம் பைம் தார் அருக்கிய பூசல் வசை விடக் கடக்கும் வயங்கு பெரும் தானை அகுதை கிளைதந்து ஆங்கு மிகு பெயல் உப்புச் சிறை நில்லா வெள்ளம் போல நாணு வரை நில்லாக் காமம் நண்ணி நல்கினள் வாழியர் வந்தே ஓரி பல் பழப் பலவின் பயம் கெழு கொல்லிக் கார் மலர் கடுப்ப நாறும் ஏர் நுண் ஓதி மாஅயோளே #18 அகநானூறு 212 குறிஞ்சி - பரணர் தா இல் நல் பொன் தைஇய பாவை விண் தவழ் இளவெயில் கொண்டு நின்று அன்ன மிகு கவின் எய்திய தொகு குரல் ஐம்பால் கிளை அரில் நாணல் கிழங்கு மணற்கு ஈன்ற முளை ஓர் அன்ன முள் எயிற்றுத் துவர் வாய் நயவன் தைவரும் செவ்வழி நல் யாழ் இசை ஓர்த்து அன்ன இன் தீம் கிளவி அணங்கு சால் அரிவையை நசைஇப் பெரும் களிற்று இனம் படி நீரின் கலங்கிய பொழுதில் பெறல் அரும்-குரையள் என்னாய் வைகலும் இன்னா அரும் சுரம் நீந்தி நீயே என்னை இன்னல் படுத்தனை மின்னு வசிபு உரவுக் கார் கடுப்ப மறலி மைந்துற்று விரவு மொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ படை நிலா இலங்கும் கடல் மருள் தானை மட்டு அவிழ் தெரியல் மறப் போர்க் குட்டுவன் பொரு முரண் பெறாஅது விலங்கு சினம் சிறந்து செருச் செய் முன்பொடு முந்நீர் முற்றி ஓங்கு திரைப் பௌவம் நீங்க ஓட்டிய நீர் மாண் எஃகம் நிறத்துச் சென்று அழுந்தக் கூர் மதன் அழியரோ நெஞ்சே ஆனாது எளியள் அல்லோள் கருதி விளியா எவ்வம் தலைத் தந்தோயே #19 அகநானூறு 222 குறிஞ்சி - பரணர் வானுற நிவந்த நீல் நிறப் பெரு மலைக் கான நாடன் உறீஇய நோய்க்கு என் மேனி ஆய் நலம் தொலைதலின் மொழிவென் முழவு முகம் புலராக் கலி கொள் ஆங்கண் கழாஅர்ப் பெரும் துறை விழவின் ஆடும் ஈட்டு எழில் பொலிந்த ஏந்து குவவு மொய்ம்பின் ஆட்டனத்தி நலன் நயந்து உரைஇத் தாழ் இரும் கதுப்பின் காவிரி வவ்வலின் மாதிரம் துழைஇ மதி மருண்டு அலந்த ஆதிமந்தி காதலன் காட்டிப் படு கடல் புக்க பாடல் சால் சிறப்பின் மருதி அன்ன மாண் புகழ் பெறீஇயர் சென்மோ வாழி தோழி பல் நாள் உரவு உரும் ஏறொடு மயங்கி இரவுப் பெயல் பொழிந்த ஈர்ம் தண் ஆறே #20 அகநானூறு 226 மருதம் - பரணர் உணர்குவென் அல்லென் உரையல் நின் மாயம் நாணிலை-மன்ற யாணர் ஊர அகலுள் ஆங்கண் அம் பகை மடிவைக் குறும் தொடி மகளிர் குரூஉப் புனல் முனையின் பழனப் பைம் சாய் கொழுதிக் கழனிக் கரந்தை அம் செறுவின் வெண் குருகு ஓப்பும் வல் வில் எறுழ் தோள் பரதவர் கோமான் பல் வேல் மத்தி கழாஅர் முன்துறை நெடு வெண் மருதொடு வஞ்சி சாஅய விடியல் வந்த பெரு நீர்க் காவிரி தொடி அணி முன்கை நீ வெய்யோளொடு முன்_நாள் ஆடிய கவ்வை இ நாள் வலி மிகும் முன்பின் பாணனொடு மலி தார்த் தித்தன் வெளியன் உறந்தை நாள்_அவைப் பாடு இன் தெண் கிணைப் பாடு கேட்டு அஞ்சி போர் அடு தானைக் கட்டி பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே #21 அகநானூறு 236 மருதம் - பரணர் மணி மருள் மலர முள்ளி அமன்ற துணி நீர் இலஞ்சிக் கொண்ட பெரு மீன் அரி நிறக் கொழும் குறை வௌவினர் மாந்தி வெண்ணெல் அரிநர் பெயர் நிலைப் பின்றை இடை நிலம் நெரிதரு நெடும் கதிர் பல் சூட்டு பனி படு சாய்ப் புறம் பரிப்பக் கழனிக் கரும் கோட்டு மாஅத்து அலங்கு சினைப் புதுப் பூ மயங்கு மழைத் துவலையின் தாஅம் ஊரன் காமம் பெருமை அறியேன் நன்றும் உய்ந்தனென் வாழி தோழி அல்கல் அணி கிளர் சாந்தின் அம் பட்டு இமைப்பக் கொடும் குழை மகளிரின் ஒடுங்கிய இருக்கை அறியாமையின் அழிந்த நெஞ்சின் ஏற்று இயல் எழில் நடைப் பொலிந்த மொய்ம்பின் தோட்டு இரும் சுரியல் மணந்த பித்தை ஆட்டனத்தியைக் காணீரோ என நாட்டின்நாட்டின் ஊரின்ஊரின் கடல் கொண்டன்று எனப் புனல் ஒளித்தன்று எனக் கலுழ்ந்த கண்ணள் காதலன் கெடுத்த ஆதிமந்தி போல ஏதம் சொல்லிப் பேது பெரிது உறலே #22 அகநானூறு 246 மருதம் - பரணர் பிணர் மோட்டு நந்தின் பேழ் வாய் ஏற்றை கதிர் மூக்கு ஆரல் களவன் ஆக நெடு நீர்ப் பொய்கைத் துணையொடு புணரும் மலி நீர் அகல் வயல் யாணர் ஊர போது ஆர் கூந்தல் நீ வெய்யோளொடு தாது ஆர் காஞ்சித் தண் பொழில் அகல் யாறு ஆடினை என்ப நெருநை அலரே காய் சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால் ஆர்கலி நறவின் வெண்ணிவாயில் சீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின் இமிழ் இசை முரசம் பொருகளத்து ஒழியப் பதினொரு வேளிரொடு வேந்தர் சாய மொய் வலி அறுத்த ஞான்றை தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே #23 அகநானூறு 258 குறிஞ்சி - பரணர் நன்னன் உதியன் அரும் கடிப் பாழித் தொல் முதிர் வேளிர் ஓம்பினர் வைத்த பொன்னினும் அருமை நன்கு அறிந்தும் அன்னோள் துன்னலம்-மாதோ எனினும் அஃது ஒல்லாய் தண் மழை தவழும் தாழ் நீர் நனம் தலைக் கடும் காற்று எடுக்கும் நெடும் பெரும் குன்றத்து மாய இருள் அளை மாய் கல் போல மாய்க-தில் வாழிய நெஞ்சே நாளும் மெல் இயல் குறுமகள் நல் அகம் நசைஇ அரவு இரை தேரும் அஞ்சுவரு சிறு நெறி இரவின் எய்தியும் பெறாஅய் அருள் வரப் புல்லென் கண்ணை புலம்புகொண்டு உலகத்து உள்ளோர்க்கு எல்லாம் பெரு நகை ஆக காமம் கைம்மிக உறுதர ஆனா அரும் படர் தலைத்தந்தோயே #24 அகநானூறு 262 குறிஞ்சி - பரணர் முதை படு பசும் காட்டு அரில் பவர் மயக்கிப் பகடு பல பூண்ட உழவுறு செம் செய் இடு முறை நிரம்பி ஆகு வினைக் கலித்துப் பாசிலை அமன்ற பயறு ஆ புக்கு என வாய்மொழித் தந்தையைக் கண் களைந்து அருளாது ஊர் முது கோசர் நவைத்த சிறுமையின் கலத்தும் உண்ணாள் வாலிதும் உடாஅள் சினத்தின் கொண்ட படிவம் மாறாள் மறம் கெழு தானைக் கொற்றக் குறும்பியன் செரு இயல் நன் மான் திதியற்கு உரைத்து அவர் இன் உயிர் செகுப்பக் கண்டு சினம் மாறிய அன்னிமிஞிலி போல மெய்மலிந்து ஆனா உவகையேம் ஆயினெம் பூ மலிந்து அருவி ஆர்க்கும் அயம் திகழ் சிலம்பின் நுண் பல துவலை புதல் மிசை நனைக்கும் வண்டு படு நறவின் வண் மகிழ்ப் பேகன் கொண்டல் மா மலை நாறி அம் தீம் கிளவி வந்த மாறே #25 அகநானூறு 266 மருதம் - பரணர் கோடு உற நிவந்த நீடு இரும் பரப்பின் அந்திப் பராஅய புதுப் புனல் நெருநை மைந்து மலி களிற்றின் தலைப் புணை தழீஇ நரந்தம் நாறும் குவை இரும் கூந்தல் இளம் துணை மகளிரொடு ஈர் அணிக் கலைஇ நீர் பெயர்ந்து ஆடிய ஏந்து எழில் மழைக் கண் நோக்கு-தொறும் நோக்கு-தொறும் தவிர்வு இலை ஆகிக் காமம் கைம்மிகச் சிறத்தலின் நாண் இழந்து ஆடினை என்ப மகிழ்ந அதுவே யாழ் இசை மறுகின் நீடூர் கிழவோன் வாய் வாள் எவ்வி ஏவல் மேவார் நெடு மிடல் சாய்த்த பசும் பூண் பொருந்தலர் அரிமணவாயில் உறத்தூர் ஆங்கண் கள் உடைப் பெரும் சோற்று எல் இமிழ் அன்ன கவ்வை ஆகின்றால் பெரிதே இனி அஃது அவலம் அன்று-மன் எமக்கே அயல கழனி உழவர் கலி சிறந்து எடுத்த கறங்கு இசை வெரீஇப் பறந்த தோகை அணங்கு உடை வரைப்பகம் பொலிய வந்து இறுக்கும் திரு மணி விளக்கின் அலைவாய்ச் செரு மிகு சேஎயொடு உற்ற சூளே #26 அகநானூறு 276 மருதம் - பரணர் நீள் இரும் பொய்கை இரை வேட்டு எழுந்த வாளை வெண் போத்து உணீஇய நாரை தன் அடி அறிவுறுதல் அஞ்சிப் பைப்பயக் கடி இலம் புகூஉம் கள்வன் போலச் சாஅய் ஒதுங்கும் துறை கேழ் ஊரனொடு ஆவது ஆக இனி நாண் உண்டோ வருக-தில் அம்ம எம் சேரி சேர அரி வேய் உண்கண் அவன் பெண்டிர் காண தாரும் தானையும் பற்றி ஆரியர் பிடி பயின்று தரூஉம் பெரும் களிறு போலத் தோள் கந்து ஆகக் கூந்தலின் பிணித்து அவன் மார்பு கடிகொள்ளேன் ஆயின் ஆர்வுற்று இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள் போல் பரந்து வெளிப்படாது ஆகி வருந்துக-தில்ல யாய் ஓம்பிய நலனே #27 அகநானூறு 322 குறிஞ்சி - பரணர் வயங்கு வெயில் ஞெமியப் பாஅய் மின்னு வசிபு மயங்கு துளி பொழிந்த பானாள் கங்குல் ஆராக் காமம் அடூஉ நின்று அலைப்ப இறுவரை வீழ்நரின் நடுங்கித் தெறுவரப் பாம்பு எறி கோலின் தமியை வைகித் தேம்புதி-கொல்லோ நெஞ்சே உரும் இசைக் களிறு கண்கூடிய வாள் மயங்கு ஞாட்பின் ஒளிறு வேல் தானைக் கடும் தேர்த் திதியன் வரு புனல் இழிதரு மரம் பயில் இறும்பில் பிறை உறழ் மருப்பின் கடுங்கண் பன்றிக் குறை ஆர் கொடு_வரி குழுமும் சாரல் அறை உறு தீம் தேன் குறவர் அறுப்ப முயலுநர் முற்றா ஏற்று அரு நெடும் சிமைப் புகல் அரும் பொதியில் போலப் பெறல் அரும்-குரையள் எம் அணங்கியோளே #28 அகநானூறு 326 மருதம் - பரணர் ஊரல் அவ் வாய் உருத்த தித்தி பேர் அமர் மழைக் கண் பெரும் தோள் சிறு நுதல் நல்லள் அம்ம குறுமகள் செல்வர் கடும் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண் நெடும் கொடி நுடங்கும் அட்டவாயில் இரும் கதிர்க் கழனிப் பெரும் கவின் அன்ன நலம் பாராட்டி நடை எழில் பொலிந்து விழவில் செலீஇயர் வேண்டும் வென் வேல் இழை அணி யானைச் சோழர் மறவன் கழை அளந்து அறியாக் காவிரிப் படப்பை புனல் மலி புதவின் போஒர் கிழவோன் பழையன் ஓக்கிய வேல் போல் பிழையல கண் அவள் நோக்கியோர்-திறத்தே #29 அகநானூறு 356 மருதம் - பரணர் மேல் துறைக் கொளீஇய கழாலின் கீழ்த் துறை உகு வார் அருந்தப் பகு வாய் யாமை கம்புள் இயவன் ஆக விசி பிணித் தெண் கண் கிணையின் பிறழும் ஊரன் இடை நெடும் தெருவில் கதுமெனக் கண்டு என் பொன் தொடி முன்கை பற்றினன் ஆக அன்னாய் என்றனென் அவன் கை விட்டனனே தொல் நசை சாலாமை நன்னன் பறம்பில் சிறுகாரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் நாவினேன் ஆகி மற்று அது செப்பலென்-மன்னால் யாய்க்கே நல் தேர்க் கடும் பகட்டு யானைச் சோழர் மருகன் நெடும் கதிர் நெல்லின் வல்லம் கிழவோன் நல்லடி உள்ளான் ஆகவும் ஒல்லார் கதவம் முயறலும் முயல்ப அதாஅன்று ஒலி பல் கூந்தல் நம்-வயின் அருளாது கொன்றனன் ஆயினும் கொலை பழுது அன்றே அருவி ஆம்பல் கலித்த முன்துறை நன்னன் ஆஅய் பிரம்பு அன்ன மின்_ஈர்_ஓதி என்னை நின் குறிப்பே #30 அகநானூறு 367 பாலை - பரணர் இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து அலந்தலை மூதேறு ஆண் குரல் விளிப்ப மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய முனை உழை இருந்த அம் குடிச் சீறூர்க் கரும் கால் வேங்கைச் செம் சுவல் வரகின் மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறைக் குவி அடி வெருகின் பைம் கண் ஏற்றை ஊன் நசைப் பிணவின் உயங்கு பசி களைஇயர் தளிர் புரை கொடிற்றின் செறி மயிர் எருத்தின் கதிர்த்த சென்னிக் கவிர்ப் பூ அன்ன நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும் புல்லென் மாலையும் இனிது-மன்ற அம்ம நல் அக வன முலை அடையப் புல்லு-தொறும் உயிர் குழைப்பு அன்ன சாயல் செயிர் தீர் இன் துணை புணர்ந்திசினோர்க்கே #31 அகநானூறு 372 குறிஞ்சி - பரணர் அரும் தெறல் மரபின் கடவுள் காப்பப் பெரும் தேன் தூங்கும் நாடு காண் நனம் தலை அணங்கு உடை வரைப்பின் பாழி ஆங்கண் வேள் முது மாக்கள் வியன் நகர் கரந்த அரும் கல வெறுக்கையின் அரியோள் பண்பு நினைந்து வருந்தினம்-மாதோ எனினும் அஃது ஒல்லாய் இரும் பணைத் தொடுத்த பலர் ஆடு ஊசல் ஊர்ந்து இழி கயிற்றின் செல வர வருந்தி நெடு நெறிக் குதிரைக் கூர் வேல் அஞ்சி கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர் ஆடு கொள் பூசலின் பாடு சிறந்து எறியும் பெரும் துடி வள்பின் வீங்குபு நெகிழா மேய் மணி இழந்த பாம்பின் நீ நனி தேம்பினை வாழி என் நெஞ்சே வேந்தர் கோண் தணி எயிலின் காப்புச் சிறந்து ஈண்டு அரும்-குரையள் நம் அணங்கியோளே #32 அகநானூறு 376 மருதம் - பரணர் செல்லல் மகிழ்ந நின் செய் கடன் உடையென்-மன் கல்லா யானை கடி புனல் கற்று என மலி புனல் பொருத மருது ஓங்கு படப்பை ஒலி கதிர்க் கழனி கழாஅர் முன்துறை கலி கொள் சுற்றமொடு கரிகால் காணத் தண்_பதம் கொண்டு தவிர்ந்த இன் இசை ஒண் பொறிப் புனை கழல் சே அடி புரளக் கரும் கச்சு யாத்த காண்பு இன் அம் வயிற்று இரும் பொலப் பாண்டில் மணியொடு தெளிர்ப்பப் புனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு-மன்னோ நும்-வயின் புலத்தல் செல்லேம் எம்-வயின் பசந்தன்று காண்டிசின் நுதலே அசும்பின் அம் தூம்பு வள்ளை அழல் கொடி மயக்கி வண் தோட்டு நெல்லின் வாங்கு பீள் விரியத் துய்த் தலை முடங்கு இறாத் தெறிக்கும் பொற்பு உடைக் குரங்கு உளைப் புரவிக் குட்டுவன் மரந்தை அன்ன என் நலம் தந்து சென்மே #33 அகநானூறு 386 மருதம் - பரணர் பொய்கை நீர்நாய்ப் புலவு நாறு இரும் போத்து வாளை நாள்_இரை தேரும் ஊர நாணினென் பெரும யானே பாணன் மல் அடு மார்பின் வலியுற வருந்தி எதிர் தலைக்கொண்ட ஆரியப் பொருநன் நிறைத் திரள் முழவுத் தோள் கையகத்து ஒழிந்த திறன் வேறு கிடக்கை நோக்கி நல் போர்க் கணையன் நாணிய ஆங்கு மறையினள் மெல்ல வந்து நல்ல கூறி மை ஈர் ஓதி மடவோய் யானும் நின் சேரியேனே அயலிலாட்டியேன் நுங்கை ஆகுவென் நினக்கு எனத் தன் கை தொடு மணி மெல் விரல் தண்ணெனத் தைவர நுதலும் கூந்தலும் நீவிப் பகல் வந்து பெயர்ந்த வாள்_நுதல் கண்டே #34 அகநானூறு 396 மருதம் - பரணர் தொடுத்தேன் மகிழ்ந செல்லல் கொடித் தேர்ப் பொலம் பூண் நன்னன் புனனாடு கடிந்து என யாழ் இசை மறுகின் பாழி ஆங்கண் அஞ்சல் என்ற ஆஅய் எயினன் இகல் அடு கற்பின் மிஞிலியொடு தாக்கி தன் உயிர் கொடுத்தனன் சொல்லியது அமையாது தெறல் அரும் கடவுள் முன்னர்த் தேற்றி மெல் இறை முன்கை பற்றிய சொல் இறந்து ஆர்வ நெஞ்சம் தலைத்தலை சிறப்ப நின் மார்பு தருகல்லாய் பிறன் ஆயினையே இனி யான் விடுக்குவென் அல்லென் மந்தி பனி வார் கண்ணள் பல புலந்து உறைய அடும் திறல் அத்தி ஆடு அணி நசைஇ நெடு நீர்க் காவிரி கொண்டு ஒளித்து ஆங்கு நின் மனையோள் வவ்வலும் அஞ்சுவல் சினைஇ ஆரியர் அலறத் தாக்கிப் பேர் இசைத் தொன்று முதிர் வடவரை வணங்கு வில் பொறித்து வெம் சின வேந்தரைப் பிணித்தோன் வஞ்சி அன்ன என் நலம் தந்து சென்மே #35 குறுந்தொகை 19 மருதம் - பரணர் எவ்வி இழந்த வறுமை யாழ்ப் பாணர் பூ இல் வறும் தலை போலப் புல்லென்று இனை-மதி வாழியர் நெஞ்சே மனை மரத்து எல்லுறும் மௌவல் நாறும் பல் இரும் கூந்தல் யாரளோ நமக்கே #36 குறுந்தொகை 24 முல்லை - பரணர் கரும் கால் வேம்பின் ஒண் பூ யாணர் என் ஐ இன்றியும் கழிவது-கொல்லோ ஆற்று அயல் எழுந்த வெண் கோட்டு அதவத்து எழு குளிறு மிதித்த ஒரு பழம் போலக் குழைய கொடியோர் நாவே காதலர் அகல கல்லென்றவ்வே #37 குறுந்தொகை 36 குறிஞ்சி - பரணர் துறுகல் அயலது மாணை மாக் கொடி துஞ்சு களிறு இவரும் குன்ற நாடன் நெஞ்சு களன் ஆக நீயலென் யான் என நல் தோள் மணந்த ஞான்றை மற்று அவன் தாவா வஞ்சினம் உரைத்தது நோயோ தோழி நின்-வயினானே #38 குறுந்தொகை 60 குறிஞ்சி - பரணர் குறும் தாள் கூதளி ஆடிய நெடு வரைப் பெரும் தேன் கண்ட இரும் கால் முடவன் உட்கைச் சிறு குடை கோலிக் கீழ் இருந்து சுட்டுபு நக்கி ஆங்குக் காதலர் நல்கார் நயவார் ஆயினும் பல் கால் காண்டலும் உள்ளத்துக்கு இனிதே #39 குறுந்தொகை 73 குறிஞ்சி - பரணர் மகிழ்நன் மார்பே வெய்யையால் நீ அழியல் வாழி தோழி நன்னன் நறு மா கொன்று ஞாட்பில் போக்கிய ஒன்றுமொழிக் கோசர் போல வன்கண் சூழ்ச்சியும் வேண்டுமால் சிறிதே #40 குறுந்தொகை 89 மருதம் - பரணர் பா அடி உரல பகு வாய் வள்ளை ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப அழிவது எவன்-கொல் இப் பேதை ஊர்க்கே பெரும் பூண் பொறையன் பேஎம் முதிர் கொல்லிக் கரும் கண் தெய்வம் குடவரை எழுதிய நல் இயல் பாவை அன்ன இ மெல் இயல் குறுமகள் பாடினள் குறினே #41 குறுந்தொகை 120 குறிஞ்சி - பரணர் இல்லோன் இன்பம் காமுற்று ஆஅங்கு அரிது வேட்டனையால் நெஞ்சே காதலி நல்லள் ஆகுதல் அறிந்து ஆங்கு அரியள் ஆகுதல் அறியாதோயே #42 குறுந்தொகை 128 நெய்தல் - பரணர் குண கடல் திரையது பறை தபு நாரை திண் தேர்ப் பொறையன் தொண்டி முன்துறை அயிரை ஆர் இரைக்கு அணவந்து ஆங்குச் சேயல் அரியோள் படர்தி நோயை நெஞ்சே நோய்ப் பாலோயே #43 குறுந்தொகை 165 குறிஞ்சி - பரணர் மகிழ்ந்ததன்தலையும் நறவு உண்டு ஆங்கு விழைந்ததன்தலையும் நீ வெய்துற்றனை இரும் கரை நின்ற உப்பு ஒய் சகடம் பெரும் பெயல் தலைய வீந்து ஆங்கு இவள் இரும் பல் கூந்தல் இயல் அணி கண்டே #44 குறுந்தொகை 199 குறிஞ்சி - பரணர் பெறுவது இயையாது ஆயினும் உறுவது ஒன்று உண்டு-மன் வாழிய நெஞ்சே திண் தேர்க் கைவள் ஓரி கானம் தீண்டி எறி வளி கமழும் நெறிபடு கூந்தல் மை ஈர் ஓதி மாஅயோள்-வயின் இன்றை அன்ன நட்பின் இ நோய் இறு முறை என ஒன்று இன்றி மறுமை உலகத்து மன்னுதல் பெறினே #45 குறுந்தொகை 258 மருதம் - பரணர் வாரல் எம் சேரி தாரல் நின் தாரே அலர் ஆகின்றால் பெரும காவிரிப் பலர் ஆடு பெரும் துறை மருதொடு பிணித்த ஏந்து கோட்டு யானைச் சேந்தன் தந்தை அரியல் அம் புகவின் அம் கோட்டு வேட்டை நிரைய ஒள் வாள் இளையர் பெருமகன் அழிசி ஆர்க்காடு அன்ன இவள் பழி தீர் மாண் நலம் தொலைவன கண்டே #46 குறுந்தொகை 259 குறிஞ்சி - (பரணர்)கபிலர் மழை சேர்ந்து எழுதரு மாரிக் குன்றத்து அருவி ஆர்ந்த தண் நறும் காந்தள் முகை அவிழ்ந்து ஆனா நாறும் நறு நுதல் பல் இதழ் மழைக் கண் மாஅயோயே ஒல்வை ஆயினும் கொல்வை ஆயினும் நீ அளந்து அறிவை நின் புரைமை வாய் போல் பொய்ம்மொழி கூறல் அஃது எவனோ நெஞ்சம் நன்றே நின்-வயினானே #47 குறுந்தொகை 292 குறிஞ்சி - பரணர் மண்ணிய சென்ற ஒள் நுதல் அரிவை புனல் தரு பசும் காய் தின்றதன் தப்பற்கு ஒன்பதிற்று_ஒன்பது களிற்றொடு அவள் நிறை பொன் செய் பாவை கொடுப்பவும் கொள்ளான் பெண் கொலை புரிந்த நன்னன் போல வரையா நிரையத்துச் செலீஇயரோ அன்னை ஒரு நாள் நகை முக விருந்தினன் வந்து எனப் பகை முக ஊரின் துஞ்சலோ இலளே #48 குறுந்தொகை 298 குறிஞ்சி - பரணர் சேரி சேர மெல்ல வந்துவந்து அரிது வாய்விட்டு இனிய கூறி வைகல்-தோறும் நிலம் பெயர்ந்து உறையும் அவன் பைதல் நோக்கம் நினையாய் தோழி இன் கடும் கள்ளின் அகுதை தந்தை வெண் கடைச் சிறு கோல் அகவன்_மகளிர் மடப் பிடிப் பரிசில் மானப் பிறிது ஒன்று குறித்தது அவன் நெடும் புறநிலையே #49 குறுந்தொகை 328 நெய்தல் - பரணர் சிறு வீ ஞாழல் வேர் அளைப் பள்ளி அலவன் சிறுமனை சிதையப் புணரி குணில் வாய் முரசின் இரங்கும் துறைவன் நல்கிய நாள் தவச் சிலவே அலரே வில் கெழு தானை விச்சியர் பெருமகன் வேந்தரொடு பொருத ஞான்றைப் பாணர் புலி நோக்கு உறழ் நிலை கண்ட கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே #50 குறுந்தொகை 393 மருதம் - பரணர் மயங்கு மலர்க் கோதை குழைய மகிழ்நன் முயங்கிய நாள் தவச் சிலவே அலரே கூகைக் கோழி வாகைப் பறந்தலைப் பசும் பூண் பாண்டியன் வினை வல் அதிகன் களிறொடு பட்ட ஞான்றை ஒளிறு வாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே #51 குறுந்தொகை 399 மருதம் - பரணர் ஊர் உண் கேணி உண்துறைத் தொக்க பாசி அற்றே பசலை காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழிப் பரத்தலானே #52 நற்றிணை 6 குறிஞ்சி - பரணர் நீர் வளர் ஆம்பல் தூம்பு உடைத் திரள் கால் நார் உரித்து அன்ன மதன் இல் மாமைக் குவளை அன்ன ஏந்து எழில் மழைக் கண் திதலை அல்குல் பெரும் தோள் குறுமகட்கு எய்தச் சென்று செப்புநர்ப் பெறினே இவர் யார் என்குவள் அல்லள் முனாஅது அத்தக் குமிழின் கொடு மூக்கு விளை கனி எறி மட மாற்கு வல்சி ஆகும் வல் வில் ஓரி கானம் நாறி இரும் பல் ஒலிவரும் கூந்தல் பெரும் பேது உறுவள் யாம் வந்தனம் எனவே #53 நற்றிணை 100 மருதம் - பரணர் உள்ளு-தொறும் நகுவேன் தோழி வள் உகிர் மாரிக் கொக்கின் கூரல் அன்ன குண்டு நீர் ஆம்பல் தண் துறை ஊரன் தேம் கமழ் ஐம்பால் பற்றி என்-வயின் வான் கோல் எல் வளை வௌவிய பூசல் சினவிய முகத்துச் சினவாது சென்று நின் மனையோட்கு உரைப்பல் என்றலின் முனை ஊர்ப் பல் ஆ நெடு நிரை வில்லின் ஒய்யும் தேர் வண் மலையன் முந்தைப் பேர் இசைப் புலம் புரி வயிரியர் நலம் புரி முழவின் மண் ஆர் கண்ணின் அதிரும் நன்னராளன் நடுங்கு அஞர் நிலையே #54 நற்றிணை 201 குறிஞ்சி - பரணர் மலை உறை குறவன் காதல் மட_மகள் பெறல் அரும்-குரையள் அரும் கடிக் காப்பினள் சொல் எதிர் கொள்ளாள் இளையள் அனையோள் உள்ளல் கூடாது என்றோய் மற்றும் செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித் தெய்வம் காக்கும் தீது தீர் நெடும் கோட்டு அவ் வெள் அருவிக் குடவரையகத்துக் கால் பொருது இடிப்பினும் கதழ் உறை கடுகினும் உரும் உடன்று எறியினும் ஊறு பல தோன்றினும் பெரு நிலம் கிளரினும் திரு நல உருவின் மாயா இயற்கைப் பாவையின் போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே #55 நற்றிணை 247 குறிஞ்சி - பரணர் தொன்று படு துப்பொடு முரண் மிகச் சினைஇக் கொன்ற யானைச் செம் கோடு கழாஅ அழி துளி பொழிந்த இன் குரல் எழிலி எஃகுறு பஞ்சிற்று ஆகி வைகறைக் கோடு உயர் நெடு வரை ஆடும் நாட நீ நல்காய் ஆயினும் நயன் இல செய்யினும் நின் வழிப்படூஉம் என் தோழி நல் நுதல் விருந்து இறைகூடிய பசலைக்கு மருந்து பிறிது இன்மை நன்கு அறிந்தனை சென்மே #56 நற்றிணை 260 மருதம் - பரணர் கழுநீர் மேய்ந்த கரும் தாள் எருமை பழனத் தாமரைப் பனி மலர் முணைஇ தண்டு சேர் மள்ளரின் இயலி அயலது குன்று சேர் வெண் மணல் துஞ்சும் ஊர வெய்யை போல முயங்குதி முனை எழத் தெவ்வர்த் தேய்த்த செவ் வேல் வயவன் மலி புனல் வாயில் இருப்பை அன்ன என் ஒலி பல் கூந்தல் நலம் பெறப் புனைந்த முகை அவிழ் கோதை வாட்டிய பகைவன்-மன் யான் மறந்து அமைகலனே #57 நற்றிணை 265 குறிஞ்சி - பரணர் இறுகு புனம் மேய்ந்த அறு கோட்டு முற்றல் அள்ளல் ஆடிய புள்ளி வரிக் கலை வீளை அம்பின் வில்லோர் பெருமகன் பூம் தோள் யாப்பின் மிஞிலி காக்கும் பாரத்து அன்ன ஆர மார்பின் சிறு கோல் சென்னி ஆரேற்று அன்ன மாரி வண் மகிழ் ஓரி கொல்லிக் கலி மயில் கலாவத்து அன்ன இவள் ஒலி மென் கூந்தல் நம்-வயினானே #58 நற்றிணை 270 நெய்தல் - பரணர் தடம் தாள் தாழைக் குடம்பை நோனாத் தண்டலை கமழும் வண்டு படு நாற்றத்து இருள் புரை கூந்தல் பொங்கு துகள் ஆடி உருள் பொறி போல எம் முனை வருதல் அணித் தகை அல்லது பிணித்தல் தேற்றாப் பெரும் தோள் செல்வத்து இவளினும் எல்லா என் பெரிது அளித்தனை நீயே பொற்பு உடை விரி உளைப் பொலிந்த பரி உடை நல் மான் வேந்தர் ஓட்டிய ஏந்து வேல் நன்னன் கூந்தல் முரற்சியின் கொடிதே மறப்பல்-மாதோ நின் விறல் தகைமையே #59 நற்றிணை 280 மருதம் - பரணர் கொக்கின் உக்கு ஒழிந்த தீம் பழம் கொக்கின் கூம்பு நிலை அன்ன முகைய ஆம்பல் தூங்கு நீர்க் குட்டத்துத் துடுமென வீழும் தண் துறை ஊரன் தண்டாப் பரத்தமை புலவாய் என்றி தோழி புலவேன் பழன யாமைப் பாசடைப் புறத்துக் கழனி காவலர் சுரி நந்து உடைக்கும் தொன்று முதிர் வேளிர் குன்றூர் அன்ன என் நல் மனை நனி விருந்து அயரும் கைதூவு இன்மையின் எய்தா மாறே #60 நற்றிணை 300 மருதம் - பரணர் சுடர்த் தொடிக் கோ_மகள் சினந்து என அதன்எதிர் மடத் தகை ஆயம் கைதொழுது ஆஅங்கு உறு கால் ஒற்ற ஒல்கி ஆம்பல் தாமரைக்கு இறைஞ்சும் தண் துறை ஊரன் சிறு வளை விலை எனப் பெரும் தேர் பண்ணி எம் முன் கடை நிறீஇச் சென்றிசினோனே நீயும் தேரொடு வந்து பேர்தல் செல்லாது நெய் வார்ந்து அன்ன துய் அடங்கு நரம்பின் இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் புண் ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண் பிச்சை சூழ் பெரும் களிறு போல எம் அட்டில் ஓலை தொட்டனை நின்மே #61 நற்றிணை 310 மருதம் - பரணர் விளக்கின் அன்ன சுடர் விடு தாமரைக் களிற்றுச் செவி அன்ன பாசடை தயங்க உண்துறை மகளிர் இரியக் குண்டு நீர் வாளை பிறழும் ஊரற்கு நாளை மகட்கொடை எதிர்ந்த மடம் கெழு பெண்டே தொலைந்த நாவின் உலைந்த குறுமொழி உடன்பட்டு ஓராத் தாயரொடு ஒழிபு உடன் சொல்லலை-கொல்லோ நீயே வல்லை களிறு பெறு வல்சிப் பாணன் கையதை வள் உயிர்த் தண்ணுமை போல உள் யாதும் இல்லது ஓர் போர்வை அம் சொல்லே #62 நற்றிணை 350 மருதம் - பரணர் வெண்ணெல் அரிநர் தண்ணுமை வெரீஇப் பழனப் பல் புள் இரியக் கழனி வாங்கு சினை மருதத் தூங்கு துணர் உதிரும் தேர் வண் விராஅன் இருப்பை அன்ன என் தொல் கவின் தொலையினும் தொலைக சார விடேஎன் விடுக்குவென் ஆயின் கடைஇக் கவவுக் கை தாங்கும் மதுகைய குவவு முலை சாடிய சாந்தினை வாடிய கோதையை ஆசு இல் கலம் தழீஇயற்று வாரல் வாழிய கவைஇ நின்றோளே #63 நற்றிணை 356 குறிஞ்சி - பரணர் நிலம் தாழ் மருங்கின் தெண் கடல் மேய்ந்த விலங்கு மென் தூவிச் செம் கால் அன்னம் பொன் படு நெடும் கோட்டு இமயத்து உச்சி வான் அர_மகளிர்க்கு மேவல் ஆகும் வளராப் பார்ப்பிற்கு அல்கு_இரை ஒய்யும் அசைவு இல் நோன் பறை போல செலவர வருந்தினை வாழி என் உள்ளம் ஒரு நாள் காதலி உழையள் ஆக குணக்குத் தோன்று வெள்ளியின் எமக்குமார் வருமே ** பதிற்றுப்பத்து - ஐந்தாம் பத்து **பாடப்பட்டோன்: கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் #64 பதிற்றுப்பத்து பாட்டு 41 - பரணர் **பெயர்: சுடர்வீவேங்கை **துறை: காட்சி வாழ்த்து **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் புணர் புரி நரம்பின் தீம் தொடை பழுனிய வணர் அமை நல் யாழ் இளையர் பொறுப்பப் பண் அமை முழவும் பதலையும் பிறவும் கண் அறுத்து இயற்றிய தூம்பொடு சுருக்கிக் காவில் தகைத்த துறைகூடு கலப்பையர் கைவல் இளையர் கடவுள் பழிச்ச மறப் புலிக் குழூஉக் குரல் செத்து வயக் களிறு வரை சேர்பு எழுந்த சுடர் வீ வேங்கைப் பூ உடைப் பெரும் சினை வாங்கிப் பிளந்து தன் மா இரும் சென்னி அணிபெற மிலைச்சிச் சேஎருற்ற செல் படை மறவர் தண்டு உடை வலத்தர் போர் எதிர்ந்து ஆங்கு வழை அமல் வியன் காடு சிலம்பப் பிளிறும் மழை பெயல் மாறிய கழை திரங்கு அத்தம் ஒன்று இரண்டு அல பல கழிந்து திண் தேர் வசை இல் நெடுந்தகை காண்கு வந்திசினே தாவல் உய்யுமோ மற்றே தாவாது வஞ்சினம் முடித்த ஒன்றுமொழி மறவர் முரசு உடைப் பெரும் சமத்து அரசு படக் கடந்து வெவ்வர் ஓச்சம் பெருகத் தெவ்வர் மிளகு எறி உலக்கையின் இரும் தலை இடித்து வைகு ஆர்ப்பு எழுந்த மை படு பரப்பின் எடுத்தேறு ஏய கடிப்பு உடை வியன்-கண் வலம் படு சீர்த்தி ஒருங்கு உடன் இயைந்து கால் உளைக் கடும் பிசிர் உடைய வால் உளைக் கடும் பரிப் புரவி ஊர்ந்த நின் படும் திரைப் பனிக் கடல் உழந்த தாளே #65 பதிற்றுப்பத்து பாட்டு 42 - பரணர் **பெயர்: தசும்பு துளங்கு இருக்கை **துறை: செந்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் இரும் பனம் புடையல் ஈகை வான் கழல் மீன் தேர் கொட்பின் பனிக் கயம் மூழ்கிச் சிரல் பெயர்ந்து அன்ன நெடு வெள் ஊசி நெடு வசி பரந்த வடு வாழ் மார்பின் அம்பு சேர் உடம்பினர்ச் சேர்ந்தோர் அல்லது தும்பை சூடாது மலைந்த மாட்சி அன்னோர் பெரும நல்_நுதல் கணவ அண்ணல் யானை அடு போர்க் குட்டுவ மைந்து உடை நல் அமர்க் கடந்து வலம் தரீஇ இஞ்சி வீ விராய பைம் தார் பூட்டிச் சாந்து புறத்து எறிந்த தசும்பு துளங்கு இருக்கை தீம் சேறு விளைந்த மணி நிற மட்டம் ஓம்பா ஈகையின் வண் மகிழ் சுரந்து கோடியர் பெரும் கிளை வாழ ஆடு இயல் உளை அவிர் கலி மாப் பொழிந்தவை எண்ணின் மன்பதை மருள அரசு படக் கடந்து முந்து வினை எதிர்வரப் பெறுதல் காணியர் ஒளிறு நிலை உயர் மருப்பு ஏந்திய களிறு ஊர்ந்து மான மைந்தரொடு மன்னர் ஏத்த நின் தேரொடு சுற்றம் உலகு உடன் மூய மா இரும் தெண் கடல் மலி திரைப் பௌவத்து வெண் தலைக் குரூஉப் பிசிர் உடையத் தண் பல வரூஉம் புணரியின் பலவே #66 பதிற்றுப்பத்து பாட்டு 43 - பரணர் **பெயர்: ஏறாவேணி **துறை: இயன்மொழிவாழ்த்து **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் கவரி முச்சிக் கார் விரி கூந்தல் ஊசல் மேவல் சே இழை மகளிர் உரல் போல் பெரும் கால் இலங்கு வாள் மருப்பின் பெரும் கை மத_மாப் புகுதரின் அவற்றுள் விருந்தின் வீழ் பிடி எண்ணுமுறை பெறாஅக் கடவுள் நிலைய கல் ஓங்கு நெடு வரை வடதிசை எல்லை இமயம் ஆகத் தென்னம் குமரியொடு ஆயிடை அரசர் முரசு உடைப் பெரும் சமம் ததைய ஆர்ப்பு எழச் சொல் பல நாட்டைத் தொல் கவின் அழித்த போர் அடு தானைப் பொலம் தார்க் குட்டுவ இரும் பணை திரங்கப் பெரும் பெயல் ஒளிப்பக் குன்று வறம் கூரச் சுடர் சினம் திகழ அருவி அற்ற பெரு வறல் காலையும் அரும் செலல் பேர் ஆற்று இரும் கரை உடைத்துக் கடி ஏர் பூட்டுநர் கடுக்கை மலைய வரைவு இல் அதிர் சிலை முழங்கிப் பெயல் சிறந்து ஆர் கலி வானம் தளி சொரிந்து ஆங்கு உறுவர் ஆர ஓம்பாது உண்டு நகைவர் ஆர நன் கலம் சிதறி ஆடு சிறை அறுத்த நரம்பு சேர் இன் குரல் பாடு விறலியர் பல் பிடி பெறுக துய் வீ வாகை நுண் கொடி உழிஞை வென்றி மேவல் உரு கெழு சிறப்பின் கொண்டி மள்ளர் கொல் களிறு பெறுக மன்றம் படர்ந்து மறுகு சிறைப் புக்குக் கண்டி நுண் கோல் கொண்டு களம் வாழ்த்தும் அகவலன் பெறுக மாவே என்றும் இகல் வினை மேவலை ஆகலின் பகைவரும் தாங்காது புகழ்ந்த தூங்கு கொளை முழவின் தொலையாக் கற்ப நின் நிலை கண்டிகுமே நிணம் சுடு புகையொடு கனல் சினம் தவிராது நிரம்பு அகல்பு அறியா ஏறா ஏணி நிறைந்து நெடிது இராத் தசும்பின் வயிரியர் உண்டு எனத் தவாஅக் கள்ளின் வண் கை வேந்தே நின் கலி மகிழானே #67 பதிற்றுப்பத்து பாட்டு 44 - பரணர் **பெயர்: நோய்தபு நோன்தொடை **துறை: செந்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் நிலம் புடைப்பு அன்ன ஆர்ப்பொடு விசும்பு துடையூ வான் தோய் வெல் கொடி தேர் மிசை நுடங்கப் பெரிய ஆயினும் அமர் கடந்து பெற்ற அரிய என்னாது ஓம்பாது வீசிக் கலம் செலச் சுரத்தல் அல்லது கனவினும் களைக என அறியாக் கசடு இல் நெஞ்சத்து ஆடு நடை அண்ணல் நின் பாடு_மகள் காணியர் காணிலியரோ நின் புகழ்ந்த யாக்கை முழு வலி துஞ்சும் நோய் தபு நோன் தொடை நுண் கொடி உழிஞை வெல் போர் அறுகை சேணன் ஆயினும் கேள் என மொழிந்து புலம் பெயர்ந்து ஒளித்த களையாப் பூசற்கு அரண்கள் தாவுறீஇ அணங்கு நிகழ்ந்து அன்ன மோகூர் மன்னன் முரசம் கொண்டு நெடுமொழி பணித்து அவன் வேம்பு முதல் தடிந்து முரசு செய முரச்சிக் களிறு பல பூட்டி ஒழுகை உய்த்தோய் கொழு இல் பைம் துணி வைத்தலை மறந்த துய்த் தலைக் கூகை கவலை கவற்றும் குரால் அம் பறந்தலை முரசு உடைத் தாயத்து அரசு பல ஓட்டித் துளங்கு நீர் வியலகம் ஆண்டு இனிது கழிந்த மன்னர் மறைத்த தாழி வன்னி மன்றத்து விளங்கிய காடே #68 பதிற்றுப்பத்து பாட்டு 45 - பரணர் **பெயர்: ஊன்துவை அடிசில் **துறை: செந்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் பொலம் பூம் தும்பைப் பொறி கிளர் தூணிப் புற்று அடங்கு அரவின் ஒடுங்கிய அம்பின் நொசிவு உடை வில்லின் ஒசியா நெஞ்சின் களிறு எறிந்து முரிந்த கதுவாய் எஃகின் விழுமியோர் துவன்றிய அகன் கண் நாட்பின் எழுமுடி மார்பின் எய்திய சேரல் குண்டு கண் அகழிய மதில் பல கடந்து பண்டும்பண்டும் தாம் உள் அழித்து உண்ட நாடு கெழு தாயத்து நனம் தலை அருப்பத்துக் கதவம் காக்கும் கணை எழு அன்ன நிலம் பெறு திணி தோள் உயர ஓச்சிப் பிணம் பிறங்கு அழுவத்துத் துணங்கை ஆடிச் சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில் ஓடாப் பீடர் உள் வழி இறுத்து முள் இடுபு அறியா ஏணித் தெவ்வர் சிலை விசை அடக்கிய மூரி வெண் தோல் அனைய பண்பின் தானை மன்னர் இனி யார் உளரோ நின் முன்னும் இல்லை மழை கொளக் குறையாது புனல் புக நிறையாது விலங்கு வளி கடவும் துளங்கு இரும் கமம் சூல் வயங்கு மணி இமைப்பின் வேல் இடுபு முழங்கு திரைப் பனிக் கடல் மறுத்திசினோரே #69 பதிற்றுப்பத்து பாட்டு 46 - பரணர் **பெயர்: கரைவாய்ப் பருதி துறை: செந்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் இழையர் குழையர் நறும் தண் மாலையர் சுடர் நிமிர் அவிர் தொடி செறித்த முன்கைத் திறல் விடு திரு மணி இலங்கு மார்பின் வண்டு படு கூந்தல் முடி புனை மகளிர் தொடை படு பேரியாழ் பாலை பண்ணிப் பணியா மரபின் உழிஞை பாட இனிது புறந்தந்து அவர்க்கு இன் மகிழ் சுரத்தலின் சுரம் பல கடவும் கரை வாய்ப் பருதி ஊர் பாட்டு எண்ணில் பைம் தலை துமியப் பல் செருக் கடந்த கொல் களிற்று யானைக் கோடு நரல் பௌவம் கலங்க வேல் இட்டு உடை திரைப் பரப்பில் படு கடல் ஓட்டிய வெல் புகழ்க் குட்டுவன் கண்டோர் செல்குவம் என்னார் பாடுபு பெயர்ந்தே #70 பதிற்றுப்பத்து பாட்டு 47 - பரணர் **பெயர்: நன்நுதல் விறலியர் **துறை: செந்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் அட்டு ஆனானே குட்டுவன் அடு-தொறும் பெற்று ஆனாரே பரிசிலர் களிறே வரை மிசை இழிதரும் அருவியின் மாடத்து வளி முனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில் சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின் பாண்டில் விளக்குப் பரூஉச் சுடர் அழல நல் நுதல் விறலியர் ஆடும் தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே #71 பதிற்றுப்பத்து பாட்டு 48 - பரணர் **பெயர்: பேர்எழில் வாழ்க்கை **துறை: இயன்மொழிவாழ்த்து **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் பைம் பொன் தாமரை பாணர்ச் சூட்டி ஒண் நுதல் விறலியர்க்கு ஆரம் பூட்டிக் கெடல் அரும் பல் புகழ் நிலைஇ நீர் புக்குக் கடலொடு உழந்த பனித் துறைப் பரதவ ஆண்டு நீர்ப் பெற்ற தாரம் ஈண்டு இவர் கொள்ளாப் பாடற்கு எளிதின் ஈயும் கல்லா வாய்மையன் இவன் எனத் தத்தம் கைவல் இளையர் நேர் கை நிரைப்ப வணங்கிய சாயல் வணங்கா ஆண்மை முனை சுடு கனை எரி எரித்தலின் பெரிதும் இதழ் கவின் அழிந்த மாலையொடு சாந்து புலர் பல் பொறி மார்ப நின் பெயர் வாழியரோ நின் மலைப் பிறந்து நின் கடல் மண்டும் மலி புனல் நிகழ்தரும் தீம் நீர் விழவின் பொழில் வதி வேனில் பேர் எழில் வாழ்க்கை மேவரு சுற்றமோடு உண்டு இனிது நுகரும் தீம் புனல் ஆயம் ஆடும் காஞ்சி அம் பெரும் துறை மணலினும் பலவே #72 பதிற்றுப்பத்து பாட்டு 49 - பரணர் **பெயர்: செங்கை மறவர் **துறை: விறலியாற்றுப்படை **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணம் யாமும் சேறுகம் நீயிரும் வம்-மின் துயிலும் கோதைத் துளங்கு இயல் விறலியர் கொளை வல் வாழ்க்கை நும் கிளை இனிது உணீஇயர் களிறு பரந்து இயலக் கடு மா தாங்க ஒளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப எஃகு துரந்து எழுதரும் கை கவர் கடும் தார் வெல் போர் வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து மொய் வளம் செருக்கி மொசிந்து வரும் மோகூர் வலம் படு குழூஉ நிலை அதிர மண்டி நெய்த்தோர் தொட்ட செம் கை மறவர் நிறம் படு குருதி நிலம் படர்ந்து ஓடி மழை நாள் புனலின் அவல் பரந்து ஒழுகப் படு பிணம் பிறங்கப் பாழ் பல செய்து படு கண் முரசம் நடுவண் சிலைப்ப வளன் அற நிகழ்ந்து வாழுநர் பலர் படக் கரும் சினை விறல் வேம்பு அறுத்த பெரும் சினக் குட்டுவன் கண்டனம் வரற்கே #73 பதிற்றுப்பத்து பாட்டு 50 - பரணர் **பெயர்: வெருவரு புனல் தார் **துறை: வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் மா மலை முழக்கின் மான் கணம் பனிப்பக் கால் மயங்கு கதழ் உறை ஆலியொடு சிதறிக் கரும்பு அமல் கழனிய நாடு வளம் பொழிய வளம் கெழு சிறப்பின் உலகம் புரைஇச் செம் குணக்கு ஒழுகும் கலுழி மலிர் நிறைக் காவிரி அன்றியும் பூ விரி புனல் ஒரு மூன்று உடன் கூடிய கூடல் அனையை கொல் களிற்று உரவுத் திரை பிறழ அவ் வில் பிசிரப் புரை தோல் வரைப்பின் எஃகு மீன் அவிர்வர விரவுப் பணை முழங்கு ஒலி வெரீஇய வேந்தர்க்கு அரணம் ஆகிய வெருவரு புனல் தார் கல் மிசையவ்வும் கடலவும் பிறவும் அருப்பம் அமைஇய அமர் கடந்து உருத்த ஆள் மலி மருங்கின் நாடு அகப்படுத்து நல் இசை நனம் தலை இரிய ஒன்னார் உருப்பு அற நிரப்பினை ஆதலின் சாந்து புலர்பு வண்ணம் நீவி வகை வனப்புற்ற வரி ஞிமிறு இமிரும் மார்பு பிணி மகளிர் விரி மென் கூந்தல் மெல் அணை வதிந்து கொல் பிணி திருகிய மார்பு கவர் முயக்கத்துப் பொழுது கொள் மரபின் மென் பிணி அவிழ எவன் பல கழியுமோ பெரும பல் நாள் பகை வெம்மையின் பாசறை மரீஇப் பாடு அரிது இயைந்த சிறு துயில் இயலாது கோடு முழங்கு இமிழ் இசை எடுப்பும் பீடு கெழு செல்வம் மரீஇய கண்ணே #74 புறநானூறு 4 - பரணர் **பாடப்பட்டோன் - சோழன் உருவப் பஃறேர் இளஞ்செட் சென்னி வாள் வலம் தர மறுப் பட்டன செவ் வானத்து வனப்புப் போன்றன தாள் களம் கொளக் கழல் பறைந்தன கொல்ல் ஏற்றின் மருப்புப் போன்றன தோல் துவைத்து அம்பின் துளை தோன்றுவ நிலைக்கு ஒராஅ இலக்கம் போன்றன மாவே எறிபதத்தான் இடம் காட்டக் கறுழ் பொருத செவ் வாயான் எருத்து வவ்விய புலி போன்றன களிறே கதவு எறியாச் சிவந்து உராஅய் நுதி மழுங்கிய வெண் கோட்டான் உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன நீயே அலங்கு உளைப் பரீஇ இவுளிப் பொலம் தேர் மிசைப் பொலிவு தோன்றி மாக் கடல் நிவந்து எழுதரும் செம் ஞாயிற்றுக் கவினை மாதோ அனையை ஆகன் மாறே தாய் இல் தூவாக் குழவி போல ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடே #75 புறநானூறு 63 - பரணர் **பாடப்பட்டோர்: சோழன் வேற்ப·றடக்கைப் பெருவிறற் கிள்ளி **சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் எனைப் பல் யானையும் அம்பொடு துளங்கி விளைக்கும் வினை இன்றிப் படை ஒழிந்தனவே விறல் புகழ் மாண்ட புரவி எல்லாம் மறத் தகை மைந்தரொடு ஆண்டு பட்டனவே தேர் தர வந்த சான்றோர் எல்லாம் தோல் கண் மறைப்ப ஒருங்கு மாய்ந்தனரே விசித்து வினை மாண்ட மயிர்க் கண் முரசம் பொறுக்குநர் இன்மையின் இருந்து விளிந்தனவே சாந்து அமை மார்பின் நெடு வேல் பாய்ந்து என வேந்தரும் பொருது களத்து ஒழிந்தனர் இனியே என் ஆவது-கொல் தானே கழனி ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர் பாசவல் முக்கித் தண் புனல் பாயும் யாணர் அறாஅ வைப்பின் காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே #76 புறநானூறு 141 - பரணர் **பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன் பாணன் சூடிய பசும்பொன் தாமரை மாண் இழை விறலி மாலையொடு விளங்கக் கடும் பரி நெடும் தேர் பூட்டு விட்டு அசைஇ ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர் யாரீரோ என வினவல் ஆனாக் காரென் ஒக்கல் கடும் பசி இரவல வென் வேல் அண்ணல் காணா ஊங்கே நின்னினும் புல்லியேம்-மன்னே இனியே இன்னேம் ஆயினேம்-மன்னே என்றும் உடாஅ போரா ஆகுதல் அறிந்தும் படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ கடாஅ யானைக் கலிமான் பேகன் எத்துணை ஆயினும் ஈதல் நன்று என மறுமை நோக்கின்றோ அன்றே பிறர் வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே #77 புறநானூறு 142 - பரணர் **பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன் அறு குளத்து உகுத்தும் அகல் வயல் பொழிந்தும் உறுமிடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும் வரையா மரபின் மாரி போலக் கடாஅ யானைக் கழல் கால் பேகன் கொடை மடம்படுதல் அல்லது படை மடம்படான் பிறர் படை மயக்குறினே #78 புறநானூறு 144 - (கபிலர்) பரணர் **பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன் அருளாய் ஆகலோ கொடிதே இருள் வரச் சீறியாழ் செவ்வழி பண்ணி யாழ நின் கார் எதிர் கானம் பாடினேம் ஆக நீல் நறு நெய்தலின் பொலிந்த உண்கண் கலுழ்ந்து வார் அரிப் பனி பூண் அகம் நனைப்ப இனைதல் ஆனாள் ஆக இளையோய் கிளையை-மன் எம் கேள் வெய்யோற்கு என யாம் தன் தொழுதனம் வினவக் காந்தள் முகை புரை விரலின் கண்ணீர் துடையா யாம் அவன் கிளைஞரேம் அல்லேம் கேள் இனி எம் போல் ஒருத்தி நலன் நயந்து என்றும் வரூஉம் என்ப வயங்கு புகழ்ப் பேகன் ஒல்லென ஒலிக்கும் தேரொடு முல்லை வேலி நல் ஊரானே #79 புறநானூறு 145 - (கபிலர்)பரணர் **பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன் மடத் தகை மா மயில் பனிக்கும் என்று அருளிப் படாஅம் ஈத்த கெடாஅ நல் இசைக் கடாஅ யானைக் கலிமான் பேக பசித்தும் வாரோம் பாரமும் இலமே களங்கனி அன்ன கரும் கோட்டுச் சீறியாழ் நயம் புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி அறம் செய்தீமோ அருள் வெய்யோய் என இஃது யாம் இரந்த பரிசில் அஃது இருளின் இன மணி நெடும் தேர் ஏறி இன்னாது உறைவி அரும் படர் களைமே #80 புறநானூறு 336 - பரணர் வேட்ட வேந்தனும் வெம் சினத்தினனே கடவன கழிப்பு இவள் தந்தையும் செய்யான் ஒளிறு முகத்து ஏந்திய வீங்கு தொடி மருப்பின் களிறும் கடி மரம் சேரா சேர்ந்த ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனரே இயவரும் அறியாப் பல்லியம் கறங்க அன்னோ பெரும் பேது உற்றன்று இ அரும் கடி மூதூர் அறனிலள்-மன்ற தானே விறல் மலை வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின் முகை வனப்பு ஏந்திய முற்றா இள முலைத் தகை வளர்த்து எடுத்த நகையொடு பகை வளர்த்து இருந்த இப் பண்பு இல் தாயே #81 புறநானூறு 341 - பரணர் வேந்து குறையுறவும் கொடாஅன் ஏந்து கோட்டு அம் பூம் தொடலை அணித் தழை அல்குல் செம் பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை எழு விட்டு அமைத்த திண் நிலைக் கதவின் அரை மண் இஞ்சி நாள்_கொடி நுடங்கும் புலிக் கணத்து அன்ன கடும் கண் சுற்றமொடு மாற்றம் மாறான் மறலிய சினத்தன் பூக் கோள் என ஏஎய்க் கயம் புக்கனனே விளங்கு இழைப் பொலிந்த வேளா மெல் இயல் சுணங்கு அணி வன முலை அவளொடு நாளை மணம்புகு வைகல் ஆகுதல் ஒன்றோ ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின் நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு வாரா உலகம் புகுதல் ஒன்று எனப் படை தொட்டனனே குருசில் ஆயிடைக் களிறு பொரக் கலங்கிய தண் கயம் போலப் பெரும் கவின் இழப்பது-கொல்லோ மென் புனல் வைப்பின் இத் தண் பணை ஊரே #82 புறநானூறு 343 - பரணர் மீன் நொடுத்து நெல் குவைஇ மிசை அம்பியின் மனை மறுக்குந்து மனைக் கவைஇய கறி மூடையால் கலிச் சும்மைய கரை கலக்குறுந்து கலம் தந்த பொன் பரிசம் கழித் தோணியான் கரை சேர்க்குந்து மலைத் தாரமும் கடல் தாரமும் தலைப்பெய்து வருநர்க்கு ஈயும் புனல் அம் கள்ளின் பொலம் தார்க் குட்டுவன் முழங்கு கடல் முழவின் முசிறி அன்ன நலம் சால் விழுப் பொருள் பணிந்து வந்து கொடுப்பினும் புரையர் அல்லோர் வரையலள் இவள் எனத் தந்தையும் கொடாஅன் ஆயின் வந்தோர் வாய்ப்பட இறுத்த ஏணி ஆயிடை வருந்தின்று-கொல்லோ தானே பருந்து உயிர்த்து இடை மதில் சேக்கும் புரிசைப் படை மயங்கு ஆர் இடை நெடு நல் ஊரே #83 புறநானூறு 348 - பரணர் வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇக் கண் மடல் கொண்ட தீம் தேன் இரியக் கள் அரிக்கும் குயம் சிறு சின் மீன் சீவும் பாண் சேரி வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன குவளை உண்கண் இவளைத் தாயே ஈனாள் ஆயினள் ஆயின் ஆனாது நிழல்-தொறும் நெடும் தேர் நிற்ப வயின்-தொறும் செம் நுதல் யானை பிணிப்ப வருந்தல-மன் எம் பெரும் துறை மரனே #84 புறநானூறு 352 - பரணர் தேஎம் கொண்ட வெண் மண்டையான் வீங்கு முலை கறக்குந்து அவல் வகுத்த பசும் குடையான் புதன் முல்லைப் பூப் பறிக்குந்து ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர் குன்று ஏறிப் புனல் பாயின் புற வாயால் புனல் வரையுந்து நொடை நறவின் மா வண் தித்தன் வெண்ணெல் வேலி உறந்தை அன்ன உரை சால் நல் கலம் கொடுப்பவும் கொளாஅன் நெடுந்தகை இவளே விரி சினைத் துணர்ந்த நாகு இள வேங்கையின் கதிர்த்து ஒளி திகழும் நுண் பல் சுணங்கின் மாக் கண் மலர்ந்த முலையள் தன்னையும் சிறு கோல் உளையும் புரவியொடு யாரே #85 புறநானூறு 354 - பரணர் அரைசு தலைவரினும் அடங்கல் ஆனா நிரை காழ் எஃகம் நீரின் மூழ்கப் புரையோர் சேர்ந்து எனத் தந்தையும் பெயர்க்கும் வயல் அமர் கழனி வாயில் பொய்கைக் கயல் ஆர் நாரை உகைத்த வாளை புனல் ஆடு மகளிர் வள மனை ஒய்யும் ஊர் கவின் இழப்பவும் வருவது-கொல்லோ சுணங்கு அணிந்து எழிலிய அணந்து ஏந்து இள முலை வீங்கு இறைப் பணைத் தோள் மடந்தை மான் பிணை அன்ன மகிழ் மட நோக்கே #86 புறநானூறு 369 - பரணர் **பாடப்பட்டோன்: சேரமான் கடலோட்டிய வெல்கெழு குட்டுவன் இருப்பு முகம் செறிந்த ஏந்து எழில் மருப்பின் கரும் கை யானை கொண்மூ ஆக நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த வாள் மின் நாக வயங்கு கடிப்பு அமைந்த குருதிப் பலிய முரசு முழக்கு ஆக அரசு அராப் பனிக்கும் அணங்குறு பொழுதின் வெவ் விசைப் புரவி வீசு வளி ஆக விசைப்புறு வல் வில் வீங்கு நாண் உகைத்த கணைத் துளி பொழிந்த கண் அகன் கிடக்கை ஈரச் செறு-வயின் தேர் ஏர் ஆக விடியல் புக்கு நெடிய நீட்டி நின் செருப் படை மிளிர்ந்த திருத்துறு பைம் சாலி பிடித்து எறி வெள் வேல் கணையமொடு வித்தி விழுத் தலை சாய்த்த வெருவரு பைம் கூழ்ப் பேய்_மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு கண நரியோடு கழுது களம் படுப்பப் பூதம் காப்ப பொலிகளம் தழீஇப் பாடுநர்க்கு இருந்த பீடுடையாள தேய்வை வெண் காழ் புரையும் விசி பிணி வேய்வை காணா விருந்தின் போர்வை அரிக் குரல் தடாரி உருப்ப ஒற்றிப் பாடி வந்திசின் பெரும பாடு ஆன்று எழிலி தோயும் இமிழ் இசை அருவிப் பொன் உடை நெடும் கோட்டு இமையத்து அன்ன ஓடை நுதல ஒல்குதல் அறியாத் துடி அடி குழவிய பிடி இடை மிடைந்த வேழ முகவை நல்கு-மதி தாழா ஈகைத் தகை வெய்யோயே &301 - பராயனார் #1 நற்றிணை 155 நெய்தல் - பராயனார் ஒள் இழை மகளிரொடு ஓரையும் ஆடாய் வள் இதழ் நெய்தல் தொடலையும் புனையாய் விரி பூம் கானல் ஒரு சிறை நின்றோய் யாரையோ நின் தொழுதனெம் வினவுதும் கண்டோர் தண்டா நலத்தை தெண் திரைப் பெரும் கடல் பரப்பின் அமர்ந்து உறை அணங்கோ இரும் கழி மருங்கு நிலைபெற்றனையோ சொல் இனி மடந்தை என்றனென் அதன்எதிர் முள் எயிற்று முறுவல் திறந்தன பல் இதழ் உண்கணும் பரந்தவால் பனியே &302 - பரூஉ மோவாய்ப் பதுமன் #1 குறுந்தொகை 101 குறிஞ்சி - பரூஉ மோவாய்ப் பதுமன் விரி திரைப் பெரும் கடல் வளைஇய உலகமும் அரிது பெறு சிறப்பின் புத்தேள்_நாடும் இரண்டும் தூக்கின் சீர் சாலாவே பூப் போல் உண்கண் பொன் போல் மேனி மாண் வரி அல்குல் குறுமகள் தோள் மாறுபடூஉம் வைகலொடு எமக்கே &303 - ப(பு)றநாட்டுப் பெருங்கொற்றனார் #1 அகநானூறு 323 பாலை - ப(பு)றநாட்டுப் பெருங்கொற்றனார் இம்மென் பேர் அலர் இவ் ஊர் நம்-வயின் செய்வோர் ஏச் சொல் வாடக் காதலர் வருவர் என்பது வாய்வது ஆக ஐய செய்ய மதன் இல சிறிய நின் அடி நிலன் உறுதல் அஞ்சிப் பையத் தடவரல் ஒதுக்கம் தகை கொள இயலிக் காணிய வம்மோ கற்பு மேம்படுவி பலவுப் பல தடைஇய வேய் பயில் அடுக்கத்து யானைச் செல் இனம் கடுப்ப வானத்து வயங்கு கதிர் மழுங்கப் பாஅய்ப் பாம்பின் பை பட இடிக்கும் கடும் குரல் ஏற்றொடு ஆலி அழி துளி தலைஇக் கால் வீழ்த்தன்று நின் கதுப்பு உறழ் புயலே &304 - பனம்பாரனார் #1 குறுந்தொகை 52 குறிஞ்சி - பனம்பாரனார் ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில் சூர் நசைந்து அனையை யாய் நடுங்கல் கண்டே நரந்தம் நாறும் குவை இரும் கூந்தல் நிரந்து இலங்கு வெண் பல் மடந்தை பரிந்தனென் அல்லெனோ இறைஇறையானே &305 - பாண்டரம் கண்ணனார் #1 புறநானூறு 16 - பாண்டரம் கண்ணனார் **பாடப்பட்டோன் - சோழன் இராசசூயம் வேட்ட **பெருநற்கிள்ளி வினை மாட்சிய விரை புரவியொடு மழை உருவின தோல் பரப்பி முனை முருங்கத் தலைச்சென்று அவர் விளை வயல் கவர்பு ஊட்டி மனை மரம் விறகு ஆக கடி துறை நீர்க் களிறு படீஇ எல்லுப் பட இட்ட சுடு தீ விளக்கம் செல் சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப் புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானைத் துணை வேண்டாச் செரு வென்றிப் புலவு வாள் புலர் சாந்தின் முருகன் சீற்றத்து உரு கெழு குருசில் மயங்கு வள்ளை மலர் ஆம்பல் பனிப் பகன்றைக் கனிப் பாகல் கரும்பு அல்லது காடு அறியாப் பெரும் தண் பணை பாழ் ஆக ஏம நன் நாடு ஒள் எரி ஊட்டினை நாம நல் அமர் செய்ய ஒராங்கு மலைந்தன பெரும நின் களிறே &306 - (பாண்டியன்)ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் #1 புறநானூறு 183 - (பாண்டியன்)ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் உற்றுழி உதவியும் உறு பொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே பிறப்பு ஓர் அன்ன உடன்வயிற்றுள்ளும் சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும் ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும் மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும் கீழ்ப் பால் ஒருவன் கற்பின் மேல் பால் ஒருவனும் அவன்-கண் படுமே &307 - பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் #1 அகநானூறு 373 பாலை - பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் முனை கவர்ந்து கொண்டு என கலங்கிப் பீர் எழுந்து மனை பாழ்பட்ட மரை சேர் மன்றத்துப் பணைத் தாள் யானை பரூஉப் புறம் உரிஞ்சச் செது காழ் சாய்ந்த முது கால் பொதியில் அரும் சுரம் நீந்திய வருத்தமொடு கையற்றுப் பெரும் புன் மாலை புலம்பு வந்து உறுதர மீளி உள்ளம் செலவு வலியுறுப்பத் தாள் கை பூட்டிய தனி நிலை இருக்கையொடு தன் நிலை உள்ளும் நம் நிலை உணராள் இரும் பல் கூந்தல் சேய் இழை மடந்தை கனை இருள் நடுநாள் அணையொடு பொருந்தி வெய்துற்றுப் புலக்கும் நெஞ்சமொடு ஐது உயிரா ஆய் இதழ் மழைக் கண் மல்க நோய் கூர்ந்து பெரும் தோள் நனைக்கும் கலுழ்ந்து வார் அரிப் பனி மெல் விரல் உகிரின் தெறியினள் வென் வேல் அண்ணல் யானை அடு போர் வேந்தர் ஒருங்கு அகப்படுத்த முரவு வாய் ஞாயில் ஓர் எயில் மன்னன் போலத் துயில் துறந்தனள்-கொல் அளியள் தானே #2 குறுந்தொகை 156 குறிஞ்சி - பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம் பூ முருக்கின் நல் நார் களைந்து தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப் படிவ உண்டிப் பார்ப்பன மகனே எழுதாக் கற்பின் நின் சொல்லுள்ளும் பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின் மருந்தும் உண்டோ மயலோ இதுவே &308 - பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் #1 புறநானூறு 72 - பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் நகுதக்கனரே நாடு மீக்கூறுநர் இளையன் இவன் என உளையக் கூறிப் படு மணி இரட்டும் பா அடிப் பணைத் தாள் நெடு நல் யானையும் தேரும் மாவும் படை அமை மறவரும் உடையம் யாம் என்று உறு துப்பு அஞ்சாது உடல் சினம் செருக்கிச் சிறுசொல் சொல்லிய சினம் கெழு வேந்தரை அரும் சமம் சிதையத் தாக்கி முரசமொடு ஒருங்கு அகப்படேஎன் ஆயின் பொருந்திய என் நிழல் வாழ்நர் செல் நிழல் காணாது கொடியன் எம் இறை எனக் கண்ணீர் பரப்பிக் குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி மாங்குடி மருதன் தலைவன் ஆக உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின் புலவர் பாடாது வரைக என் நிலவரை புரப்போர் புன்கண் கூர இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே &309 - பாண்டியன் பன்னாடு தந்தான் #1 குறுந்தொகை 270 முல்லை - பாண்டியன் பன்னாடு தந்தான் தாழ் இருள் துமிய மின்னித் தண்ணென வீழ் உறை இனிய சிதறி ஊழின் கடிப்பு இகு முரசின் முழங்கி இடித்திடித்துப் பெய்க இனி வாழியோ பெரு வான் யாமே செய்வினை முடித்த செம்மல் உள்ளமொடு இவளின் மேவினம் ஆகிக் குவளைக் குறும் தாள் நாள்_மலர் நாறும் நறு மென் கூந்தல் மெல்லணையேமே &310 - (பாண்டியன்) மாறன் வழுதி #1 நற்றிணை 97 முல்லை - (பாண்டியன்) மாறன் வழுதி அழுந்துபடு விழுப்புண் வழும்பு வாய் புலரா எவ்வ நெஞ்சத்து எஃகு எறிந்து ஆங்குப் பிரிவு இல புலம்பி நுவலும் குயிலினும் தேறு நீர் கெழீஇய யாறு நனி கொடிதே அதனினும் கொடியள் தானே மதனின் துய்த் தலை இதழ பைம் குருக்கத்தியொடு பித்திகை விரவு மலர் கொள்ளீரோ என வண்டு சூழ் வட்டியள் திரிதரும் தண்டலை உழவர் தனி மட_மகளே #2 நற்றிணை 301 குறிஞ்சி - பாண்டியன் மாறன் வழுதி நீள் மலைக் கலித்த பெரும் கோல் குறிஞ்சி நாள்_மலர் புரையும் மேனிப் பெரும் சுனை மலர் பிணைத்து அன்ன மா இதழ் மழைக் கண் மயில் ஓர் அன்ன சாயல் செம் தார்க் கிளி ஓர் அன்ன கிளவி பணைத் தோள் பாவை அன்ன வனப்பினள் இவள் எனக் காமர் நெஞ்சமொடு பல பாராட்டி யாய் மறப்பு அறியா மடந்தை தேம் மறப்பு அறியாக் கமழ் கூந்தலளே &311 - பாரதம் பாடிய பெருந்தேவனார் #1 அகநானூறு - கடவுள் வாழ்த்து - பாரதம் பாடிய பெருந்தேவனார் கார் விரி கொன்றைப் பொன் நேர் புது மலர் தாரன் மாலையன் மலைந்த கண்ணியன் மார்பினஃதே மை இல் நுண் ஞாண் நுதலது இமையா நாட்டம் இகல் அட்டு கையது கணிச்சியொடு மழுவே மூவாய் வேலும் உண்டு அத் தோலாதோற்கே ஊர்ந்தது ஏறே சேர்ந்தோள் உமையே செவ் வான் அன்ன மேனி அவ் வான் இலங்கு பிறை அன்ன விலங்கு வால் வை எயிற்று எரி அகைந்து அன்ன அவிர்ந்து விளங்கு புரி சடை முதிராத் திங்களொடு சுடரும் சென்னி மூவா அமரரும் முனிவரும் பிறரும் யாவரும் அறியாத் தொன் முறை மரபின் வரி கிளர் வய_மான் உரிவை தைஇய யாழ் கெழு மணி மிடற்று அந்தணன் தா இல் தாள் நிழல் தவிர்ந்தன்றால் உலகே #2 ஐங்குறுநூறு - கடவுள் வாழ்த்து - பாரதம் பாடிய பெருந்தேவனார் நீல மேனி வால் இழை பாகத்து ஒருவன் இரு தாள் நிழல் கீழ் மூ வகை உலகும் முகிழ்த்த முறையே #3 குறுந்தொகை - கடவுள் வாழ்த்து - பாரதம் பாடிய பெருந்தேவனார் தாமரை புரையும் காமர் சேவடிப் பவழத்து அன்ன மேனித் திகழ் ஒளிக் குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின் நெஞ்சு பக எறிந்த அம் சுடர் நெடு வேல் சேவல் அம் கொடியோன் காப்ப ஏம வைகல் எய்தின்றால் உலகே #4 - நற்றிணை - கடவுள் வாழ்த்து - பாரதம் பாடிய பெருந்தேவனார் மா நிலம் சேவடி ஆகத் தூ நீர் வளை நரல் பௌவம் உடுக்கை ஆக விசும்பு மெய் ஆகத் திசை கை ஆகப் பசும் கதிர் மதியமொடு சுடர் கண் ஆக இயன்ற எல்லாம் பயின்று அகத்து அடக்கிய வேத முதல்வன் என்ப தீது அற விளங்கிய திகிரியோனே #5 புறநானூறு - கடவுள் வாழ்த்து - பாரதம் பாடிய பெருந்தேவனார் கண்ணி கார் நறும் கொன்றை காமர் வண்ண மார்பின் தாரும் கொன்றை ஊர்தி வால் வெள் ஏறே சிறந்த சீர் கெழு கொடியும் அவ் ஏறு என்ப கறை மிடறு அணியலும் அணிந்தன்று அக் கறை மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே பெண் உரு ஒரு திறம் ஆகின்று அவ் உருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் பிறை நுதல் வண்ணம் ஆகின்று அப் பிறை பதினெண் கணணும் ஏத்தவும் படுமே எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய நீர் அறவு அறியாக் கரகத்துத் தாழ் சடைப் பொலிந்த அரும் தவத்தோற்கே &312 - பாரி மகளிர் #1 புறநானூறு 112 - பாரி மகளிர் அற்றைத் திங்கள் அவ் வெண் நிலவில் எந்தையும் உடையேம் எம் குன்றும் பிறர் கொளார் இற்றைத் திங்கள் இவ் வெண் நிலவில் வென்று எறி முரசின் வேந்தர் எம் குன்றும் கொண்டார் யாம் எந்தையும் இலமே &313 - பார்காப்பானார் #1 குறுந்தொகை 254 பாலை - பார்காப்பானார் இலை இல் அம் சினை இன வண்டு ஆர்ப்ப முலை ஏர் மென் முகை அவிழ்ந்த கோங்கின் தலை அலர் வந்தன வாரா தோழி துயில் இன் கங்குல் துயில் அவர் மறந்தனர் பயில் நறும் கதுப்பின் பாயலும் உள்ளார் செய்பொருள் தரல் நசைஇச் சென்றோர் எய்தினரால் என வரூஉம் தூதே &314 - பாலைக் கௌதமனார் ** பதிற்றுப்பத்து **மூன்றாம் பத்து **பாடப்பட்டோர் : பல் யானைச் செல்கெழு குட்டுவன் #1 பதிற்றுப்பத்து பாட்டு 21 - பாலைக் கௌதமனார் **பெயர் - அடுநெய் ஆவுதி (13) **துறை - செந்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு - செந்தூக்கு **வண்ணம் - ஒழுகு வண்ணம் சொல் பெயர் நாட்டம் கேள்வி நெஞ்சம் என்று ஐந்து உடன் போற்றி அவை துணை ஆக எவ்வம் சூழாது விளங்கிய கொள்கைக் காலை அன்ன சீர் சால் வாய்மொழி உரு கெழு மரபின் கடவுள் பேணியர் கொண்ட தீயின் சுடர் எழு-தோறும் விரும்பு மெய் பரந்த பெரும் பெயர் ஆவுதி வருநர் வரையார் வார வேண்டி விருந்து கண்மாறாது உணீஇய பாசவர் ஊனத்து அழித்த வால் நிணக் கொழும் குறை குய்யிடு-தோறும் ஆனாது ஆர்ப்பக் கடல் ஒலி கொண்டு செழு நகர் வரைப்பின் நடுவண் எழுந்த அடு நெய் ஆவுதி இரண்டு உடன் கமழும் நாற்றமொடு வானத்து நிலை பெறு கடவுளும் விழைதகப் பேணி ஆர் வளம் பழுனிய ஐயம் தீர் சிறப்பின் மாரி அம் கள்ளின் போர் வல் யானைப் போர்ப்புறு முரசம் கறங்க ஆர்ப்புச் சிறந்து நல் கலம் தரூஉம் மண் படு மார்ப முல்லைக் கண்ணிப் பல் ஆன் கோவலர் புல் உடை வியன் புலம் பல் ஆ பரப்பிக் கல் உயர் கடத்திடைக் கதிர் மணி பெறூஉம் மிதி அல் செருப்பின் பூழியர் கோவே குவியல் கண்ணி மழவர் மெய்ம்மறை பல் பயம் தழீஇய பயம் கெழு நெடும் கோட்டு நீர் அறல் மருங்கு வழிப்படாப் பாகுடிப் பார்வல் கொக்கின் பரிவேட்பு அஞ்சாச் சீர் உடைத் தேஎத்த முனை கெட விலங்கிய நேர் உயர் நெடு வரை அயிரைப் பொருந யாண்டு பிழைப்பு அறியாது பய மழை சுரந்து நோய் இல் மாந்தர்க்கு ஊழி ஆக மண்ணா ஆயின் மணம் கமழ்கொண்டு கார் மலர் கமழும் தாழ் இரும் கூந்தல் ஒரீஇயின போல இரவு மலர் நின்று திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண் அலங்கிய காந்தள் இலங்கு நீர் அழுவத்து வேய் உறழ் பணைத் தோள் இவளோடு ஆயிர வெள்ளம் வாழிய பலவே #2 பதிற்றுப்பத்து பாட்டு 22 - பாலைக் கௌதமனார் **பெயர் - கயிறுகுறு முகவை (14) **துறை - வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் **வண்ணம் - ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும் சினனே காமம் கழி கண்ணோட்டம் அச்சம் பொய்ச் சொல் அன்பு மிக உடைமை தெறல் கடுமையொடு பிறவும் இவ் உலகத்து அறம் தெரி திகிரிக்கு வழியடை ஆகும் தீது சேண் இகந்து நன்று மிகப் புரிந்து கடலும் கானமும் பல பயம் உதவப் பிறர்பிறர் நலியாது வேற்றுப் பொருள் வெஃகாது மை இல் அறிவினர் செவ்விதின் நடந்து தம் அமர் துணைப் பிரியாது பாத்து உண்டு மாக்கள் மூத்த யாக்கையொடு பிணி இன்று கழிய ஊழி உய்த்த உரவோர் உம்பல் பொன் செய் கணிச்சித் திண் பிணி உடைத்துச் சிரறு சில ஊறிய நீர் வாய்ப் பத்தல் கயிறு குறு முகவை மூயின மொய்க்கும் ஆ கெழு கொங்கர் நாடு அகப்படுத்த வேல் கெழு தானை வெருவரு தோன்றல் உளைப் பொலிந்த மா இழைப் பொலிந்த களிறு வம்பு பரந்த தேர் அமர்க்கு எதிர்ந்த புகல் மறவரொடு துஞ்சுமரம் துவன்றிய மலர் அகன் பறந்தலை ஓங்கு நிலை வாயில் தூங்குபு தகைத்த வில் விசை மாட்டிய விழு சீர் ஐயவிக் கடி மிளைக் குண்டு கிடங்கின் நெடு மதில் நிரைப் பதணத்து அண்ணல் அம் பெரும் கோட்டு அகப்பா எறிந்த பொன் புனை உழிஞை வெல் போர்க் குட்டுவ போர்த்து எறிந்த பறையால் புனல் செறுக்குநரும் நீர்த் தரு பூசலின் அம்பு அழிக்குநரும் ஒலித் தலை விழவின் மலியும் யாணர் நாடு கெழு தண் பணை சீறினை ஆதலின் குடதிசை மாய்ந்து குணம் முதல் தோன்றிப் பாய் இருள் அகற்றும் பயம் கெழு பண்பின் ஞாயிறு கோடா நல் பகல் அமயத்துக் கவலை வெள்_நரி கூஉம் முறை பயிற்றிக் கழல் கண் கூகை குழறு குரல் பாணி கரும் கண் பேய்_மகள் வழங்கும் பெரும் பாழ் ஆகும்-மன் அளிய தாமே #3 பதிற்றுப்பத்து பாட்டு 23 - பாலைக் கௌதமனார் **பெயர் - ததைந்த காஞ்சி (19) **துறை - வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு - செந்தூக்கு **வண்ணம் - ஒழுகு வண்ணம் அலந்தலை உன்னத்து அம் கவடு பொருந்திச் சிதடி கரையப் பெரு வறம் கூர்ந்து நிலம் பைது அற்ற புலம் கெடு காலையும் வாங்குபு தகைத்த கலப்பையர் ஆங்கண் மன்றம் போந்து மறுகு சிறை பாடும் வயிரிய மாக்கள் கடும் பசி நீங்கப் பொன் செய் புனை இழை ஒலிப்பப் பெரிது உவந்து நெஞ்சு மலி உவகையர் உண்டு மலிந்து ஆடச் சிறு மகிழானும் பெரும் கலம் வீசும் போர் அடு தானைப் பொலம் தார்க் குட்டுவ நின் நயந்து வருவேம் கண்டனம் புல் மிக்கு வழங்குநர் அற்று என மருங்கு கெடத் தூர்ந்து பெரும் கவின் அழிந்த ஆற்ற ஏறு புணர்ந்து அண்ணல் மரையா அமர்ந்து இனிது உறையும் விண் உயர் வைப்பின காடு ஆயின நின் மைந்து மலி பெரும் புகழ் அறியார் மலைந்த போர் எதிர் வேந்தர் தார் அழிந்து ஒராலின் மருது இமிழ்ந்து ஓங்கிய நளி இரும் பரப்பின் மணல் மலி பெரும் துறைத் ததைந்த காஞ்சியொடு முருக்குத் தாழ்பு எழிலிய நெருப்பு உறழ் அடைகரை நந்து நாரையொடு செவ் வரி உகளும் கழனி வாயில் பழனப் படப்பை அழல் மருள் பூவின் தாமரை வளை_மகள் குறாஅது மலர்ந்த ஆம்பல் அறாஅ யாணர் அவர் அகன் தலை நாடே #4 பதிற்றுப்பத்து பாட்டு 24 - பாலைக் கௌதமனார் **பெயர் - சீர்கால் வெள்ளி (24) **துறை - இயன்மொழி வாழ்த்து **தூக்கு - செந்தூக்கு **வண்ணம் - ஒழுகு வண்ணம் நெடு வயின் ஒளிறும் மின்னுப் பரந்து ஆங்குப் புலியுறை கழித்த புலவு வாய் எஃகம் ஏவல் ஆடவர் வலன் உயர்த்து ஏந்தி ஆர் அரண் கடந்த தார் அரும் தகைப்பின் பீடு கொள் மாலைப் பெரும் படைத் தலைவ ஓதல் வேட்டல் அவை பிறர்ச் செய்தல் ஈதல் ஏற்றல் என்று ஆறு புரிந்து ஒழுகும் அறம் புரி அந்தணர் வழிமொழிந்து ஒழுகி ஞாலம் நின் வழி ஒழுக பாடல் சான்று நாடு உடன் விளங்கும் நாடா நல் இசைத் திருந்திய இயல் மொழித் திருந்து இழை கணவ குலை இழிபு அறியாச் சாபத்து வயவர் அம்பு களைவு அறியாத் தூங்கு துளங்கு இருக்கை இடாஅ ஏணி இயல் அறைக் குருசில் நீர் நிலம் தீ வளி விசும்போடு ஐந்தும் அளந்து கடை அறியினும் அளப்பு அரும்-குரையை நின் வளம் வீங்கு பெருக்கம் இனிது கண்டிகுமே உண்மரும் தின்மரும் வரை கோள் அறியாது குரைத் தொடி மழுகிய உலக்கை வயின்-தோறு அடைச் சேம்பு எழுந்த ஆடுறும் மடாவின் எஃகு உறச் சிவந்த ஊனத்து யாவரும் கண்டு மதி மருளும் வாடாச் சொன்றி வயங்கு கதிர் விரிந்து வானகம் சுடர்வர வறிது வடக்கு இறைஞ்சிய சீர் கால் வெள்ளி பயம் கெழு பொழுதோடு ஆநியம் நிற்பக் கலிழும் கருவியொடு கை உற வணங்கி மன் உயிர் புரைஇய வலன் ஏர்பு இரங்கும் கொண்டல் தண் தளிக் கமம் சூல் மா மழை கார் எதிர் பருவம் மறப்பினும் பேரா யாணர்த்தால் வாழ்க நின் வளனே #5 பதிற்றுப்பத்து பாட்டு 25 - பாலைக் கௌதமனார் **பெயர் - கானுணங்கு கடுநெறி (8) **துறை - வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் **வண்ணம் - ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும் மா ஆடிய புலன் நாஞ்சில் ஆடா கடாஅம் சென்னிய கடுங்கண் யானை இனம் பரந்த புலம் வளம் பரப்பு அறியா நின் படைஞர் சேர்ந்த மன்றம் கழுதை போகி நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா கடும் கால் ஒற்றலின் சுடர் சிறந்து உருத்துப் பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின் ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி முனை அகன் பெரும் பாழ் ஆக மன்னிய உரும் உறழ்பு இரங்கும் முரசின் பெரு மலை வரை இழி அருவியின் ஒளிறு கொடி நுடங்கக் கடும் பரிக் கதழ் சிறகு அகைப்ப நீ நெடும் தேர் ஓட்டிய பிறர் அகன் தலை நாடே #6 பதிற்றுப்பத்து பாட்டு 26 - பாலைக் கௌதமனார் **பெயர் - காடுறு கடுநெறி (11) **துறை - வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு - செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் **வண்ணம் - ஒழுகு வண்ணமும் சொற்சீர்வண்ணமும் தேஎர் பரந்த புலம் ஏஎர் பரவா களிறு ஆடிய புலம் நாஞ்சில் ஆடா மத்து உரறிய மனை இன்னியம் இமிழா ஆங்குப் பண்டு நற்கு அறியுநர் செழு வளம் நினைப்பின் நோகோ யானே நோதக வருமே பெயல் மழை புரவு இன்று ஆகி வெய்துற்று வலம் இன்று அம்ம காலையது பண்பு எனக் கண் பனி மலிர் நிறை தாங்கிக் கை புடையூ மெலிவு உடை நெஞ்சினர் சிறுமை கூரப் பீர் இவர் வேலிப் பாழ் மனை நெருஞ்சிக் காடுறு கடு நெறி ஆக மன்னிய முருகு உடன்று கறுத்த கலி அழி மூதூர் உரும்பு இல் கூற்றத்து அன்ன நின் திருந்து தொழில் வயவர் சீறிய நாடே #7 பதிற்றுப்பத்து பாட்டு 27 - பாலைக் கௌதமனார் **பெயர் - தொடர்ந்த குவளை (2) **துறை - செந்துறைப் பாடாண் பாட்டு **தூக்கு - செந்தூக்கு **வண்ணம் - ஒழுகு வண்ணம் சிதைந்தது மன்ற நீ சிவந்தனை நோக்கலின் தொடர்ந்த குவளைத் தூ நெறி அடைச்சி அலர்ந்த ஆம்பல் அக மடிவையர் சுரியல் அம் சென்னிப் பூம் செய் கண்ணி அரியல் ஆர்கையர் இனிது கூடு இயவர் துறை நணி மருதம் ஏறித் தெறுமார் எல் வளை மகளிர் தெள் விளி இசைப்பின் பழனக் காவில் பசு மயில் ஆலும் பொய்கை வாயில் புனல் பொரு புதவின் நெய்தல் மரபின் நிரை கள் செறுவின் வல் வாய் உருளி கதுமென மண்ட அள்ளல் பட்டுத் துள்ளுபு துரப்ப நல் எருது முயலும் அளறு போகு விழுமத்துச் சாகாட்டாளர் கம்பலை அல்லது பூசல் அறியா நல் நாட்டு யாணர் அறாஅக் காமரு கவினே #8 பதிற்றுப்பத்து பாட்டு 28 - பாலைக் கௌதமனார் **பெயர் - உருத்துவரு மலிர்நிறை (12) **துறை - நாடுவாழ்த்து **தூக்கு - செந்தூக்கு **வண்ணம் - ஒழுகு வண்ணம் திரு உடைத்து அம்ம பெரு விறல் பகைவர் பைம் கண் யானைப் புணர் நிரை துமிய உரம் துரந்து எறிந்த கறை அடிக் கழல் கால் கடு மா மறவர் கதழ் தொடை மறப்ப இளை இனிது தந்து விளைவு முட்டுறாது புலம்பா உறையுள் நீ தொழில் ஆற்றலின் விடு நிலக் கரம்பை விடர் அளை நிறையக் கோடை நீடக் குன்றம் புல்லென அருவி அற்ற பெரு வறல் காலையும் நிவந்து கரை இழிதரும் நனம் தலைப் பேரியாற்றுச் சீர் உடை வியன் புலம் வாய் பரந்து மிகீஇயர் உவலை சூடி உருத்து வரு மலிர் நிறைச் செம் நீர்ப் பூசல் அல்லது வெம்மை அரிது நின் அகன் தலை நாடே #9 பதிற்றுப்பத்து பாட்டு 29 - பாலைக் கௌதமனார் **பெயர் - வெண்கை மகளிர் (6) **துறை - வஞ்சித்துறைப்பாடாண்பாட்டு **தூக்கு - செந்தூக்கு **வண்ணம் - ஒழுகு வண்ணம் அவல் எறி உலக்கை வாழைச் சேர்த்தி வளைக் கை மகளிர் வள்ளை கொய்யும் முடந்தை நெல்லின் விளை வயல் பரந்த தடம் தாள் நாரை இரிய அயிரைக் கொழு மீன் ஆர்கைய மரம்-தொறும் குழாஅலின் வெண் கை மகளிர் வெண் குருகு ஓப்பும் அழியா விழவின் இழியாத் திவவின் வயிரிய மாக்கள் பண் அமைத்து எழீஇ மன்றம் நண்ணி மறுகு சிறை பாடும் அகன் கண் வைப்பின் ஆடு-மன் அளிய விரவு வேறு கூலமொடு குருதி வேட்ட மயிர் புதை மாக் கண் கடிய கழற அமர் கோள் நேர் இகந்து ஆர் எயில் கடக்கும் பெரும் பல் யானைக் குட்டுவன் வரம்பு இல் தானை பரவா ஊங்கே #10 பதிற்றுப்பத்து பாட்டு 30 - பாலைக் கௌதமனார் **பெயர்: புகன்றவாயம் (19) **துறை: பெருஞ்சோற்றுநிலை **வண்ணம்: ஒழுகு வண்ணம் **தூக்கு: செந்தூக்கு இணர் ததை ஞாழல் கரை கெழு பெரும் துறை மணிக் கலத்து அன்ன மா இதழ் நெய்தல் பாசடைப் பனிக் கழி துழைஇப் புன்னை வால் இணர்ப் படு சினக் குருகு இறைகொள்ளும் அல்குறு கானல் ஓங்கு மணல் அடைகரை தாழ் அடும்பு மலைந்த புணரி வளை ஞரல இலங்கு நீர் முத்தமொடு வார் துகிர் எடுக்கும் தண் கடல் படப்பை மென்பாலனவும் காந்தள் அம் கண்ணிக் கொலை வில் வேட்டுவர் செம் கோட்டு ஆமான் ஊனொடு காட்ட மதன் உடை வேழத்து வெண் கோடு கொண்டு பொன் உடை நியமத்து பிழி நொடை கொடுக்கும் குன்று தலைமணந்த புன்புல வைப்பும் காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது அரி கால் அவித்துப் பல பூ விழவின் தேம் பாய் மருதம் முதல் படக் கொன்று வெண் தலைச் செம் புனல் பரந்து வாய் மிகுக்கும் பல சூழ் பதப்பர் பரிய வெள்ளத்துச் சிறைகொள் பூசலின் புகன்ற ஆயம் முழவு இமிழ் மூதூர் விழவு காணூஉப் பெயரும் செழும் பல் வைப்பின் பழனப் பாலும் ஏனல் உழவர் வரகு மீது இட்ட கான் மிகு குளவிய வன்பு சேர் இருக்கை மென் தினை நுவணை முறைமுறை பகுக்கும் புன்புலம் தழீஇய புறவு அணி வைப்பும் பல் பூம் செம்மல் காடு பயம் மாறி அரக்கத்து அன்ன நுண் மணல் கோடு கொண்டு ஒண் நுதல் மகளிர் கழலொடு மறுகும் விண் உயர்ந்து ஓங்கிய கடற்றவும் பிறவும் பணை கெழு வேந்தரும் வேளிரும் ஒன்றுமொழிந்து கடலவும் காட்டவும் அரண் வலியார் நடுங்க முரண் மிகு கடும் குரல் விசும்பு அடைபு அதிரக் கடும் சினம் கடாஅய் முழங்கும் மந்திரத்து அரும் திறல் மரபின் கடவுள் பேணியர் உயர்ந்தோன் ஏந்திய அரும் பெறல் பிண்டம் கரும் கண் பேய்_மகள் கை புடையூஉ நடுங்க நெய்த்தோர் தூஉய நிறை மகிழ் இரும் பலி எறும்பும் மூசா இறும்பூது மரபின் கரும் கண் காக்கையொடு பருந்து இருந்து ஆர ஓடாப் பூட்கை ஒண் பொறிக் கழல் கால் பெரும் சமம் ததைந்த செருப் புகல் மறவர் உருமு நிலன் அதிர்க்கும் குரலொடு கொளை புணர்ந்து பெரும் சோறு உகுத்தற்கு எறியும் கடும் சின வேந்தே நின் தழங்கு குரல் முரசே #11 புறநானூறு 366 - (கோதமனார்)பாலைக் கௌதமனார் **பாடப்பட்டோன்: தருமபுத்திரன் விழுக் கடிப்பு அறைந்த முழுக் குரல் முரசம் ஒழுக்கு உடை மருங்கின் ஒரு மொழித்து ஆக அரவு எறி உருமின் உரறுபு சிலைப்ப ஒரு தாம் ஆகிய பெருமையோரும் தம் புகழ் நிறீஇச் சென்று மாய்ந்தனரே அதனால் அறிவோன் மகனே மறவோர் செம்மால் நின் ஒன்று உரைப்பக் கேள்-மதி நின் ஊற்றம் பிறர் அறியாது பிறர் கூறிய மொழி தெரியா ஞாயிற்று எல்லை ஆள்வினைக்கு உதவி இரவின் எல்லை வருவது நாடி உரைத்திசின் பெரும நன்றும் உழவு ஒழி பெரும் பகடு அழி தின்று ஆங்குச் செம் கண் மகளிரொடு சிறு துனி அளைஇ அம் கள் தேறல் ஆய் கலத்து உகுப்ப கெடல் அரும் திருவ உண்மோ விடை வீழ்த்துச் சூடு கிழிப்ப மடை வேண்டுநர்க்கு இடை அருகாது அவிழ் வேண்டுநர்க்கு இடை அருளி நீர் நிலை பெருத்த வார் மணல் அடைகரைக் காவு-தோறு இழைத்த வெறி அயர் களத்தின் இடம் கெடத் தொகுத்த விடையின் மடங்கல் உண்மை மாயமோ அன்றே &315 - பாலை பாடிய பெருங்கடுங்கோ #1 அகநானூறு 5 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள் விளி நிலை கொள்ளாள் தமியள் மென்மெல நலம் மிகு சேவடி நிலம் வடுக் கொளாஅக் குறுக வந்து தன் கூர் எயிறு தோன்ற வறிது அகத்து எழுந்த வாய் அல் முறுவலள் கண்ணியது உணரா அளவை ஒண்_நுதல் வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன் முளிந்த ஓமை முதையல் அம் காட்டு பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன் மாய்த்த போல மழுகு நுனை தோற்றி பாத்தி அன்ன குடுமிக் கூர்ம் கல் விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர பரல் முரம்பு ஆகிய பயம் இல் கானம் இறப்ப எண்ணுதிர் ஆயின் அறத்தாறு அன்று என மொழிந்த தொன்றுபடு கிளவி அன்ன ஆக என்னுநள் போல முன்னம் காட்டி முகத்தின் உரையா ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஒற்றி பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலை தூ நீர் பயந்த துணை அமை பிணையல் மோயினள் உயிர்த்த காலை மா மலர் மணி உரு இழந்த அணி அழி தோற்றம் கண்டே கடிந்தனம் செலவே ஒண்_தொடி உழையம் ஆகவும் இனைவோள் பிழையலள்-மாதோ பிரிதும் நாம் எனினே #2 அகநானூறு 99 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ வாள் வரி வய_மான் கோள் உகிர் அன்ன செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின் சிதர் ஆர் செம்மல் தாஅய் மதர் எழில் மாண் இழை மகளிர் பூண் உடை முலையின் முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ நனை அதிரல் பரந்த அம் தண் பாதிரி உதிர் வீ அம் சினை தாஅய் எதிர் வீ மராஅ மலரொடு விராஅய்ப் பராஅம் அணங்கு உடை நகரின் மணந்த பூவின் நன்றே கானம் நயவரும் அம்ம கண்டிசின் வாழியோ குறுமகள் நுந்தை அடு களம் பாய்ந்த தொடி சிதை மருப்பின் பிடி மிடை களிற்றின் தோன்றும் குறு நெடும் துணைய குன்றமும் உடைத்தே #3 அகநானூறு 111 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ உள்ளாங்கு உவத்தல் செல்லார் கறுத்தோர் எள்ளல் நெஞ்சத்து ஏஎச் சொல் நாணி வருவர் வாழி தோழி அரச யானை கொண்ட துகில் கொடி போல அலந்தலை ஞெமையத்து வலந்த சிலம்பி ஓடைக் குன்றத்துக் கோடையொடு துயல்வர மழை என மருண்ட மம்மர் பல உடன் ஓய் களிறு எடுத்த நோய் உடை நெடும் கை தொகு சொல் கோடியர் தூம்பின் உயிர்க்கும் அத்தக் கேழல் அட்ட நல் கோள் செந்நாய் ஏற்றைக் கம்மென ஈர்ப்பக் குருதி ஆரும் எருவைச் செம் செவி மண்டு அமர் அழுவத்து எல்லிக் கொண்ட புண் தேர் விளக்கின் தோன்றும் விண் தோய் பிறங்கல் மலை இறந்தோரே #4 அகநானூறு 155 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ அறன் கடைப்படாஅ வாழ்க்கையும் என்றும் பிறன் கடைச் செலாஅச் செல்வமும் இரண்டும் பொருளின் ஆகும் புனை_இழை என்று நம் இருள் ஏர் ஐம்பால் நீவியோரே நோய் நாம் உழக்குவம் ஆயினும் தாம் தம் செய்வினை முடிக்க தோழி பல் வயின் பய நிரை சேர்ந்த பாழ் நாட்டு ஆங்கண் நெடு விளிக் கோவலர் கூவல் தோண்டிய கொடு வாய்ப் பத்தல் வார்ந்து உகு சிறு குழி நீர் காய் வருத்தமொடு சேர்விடம் பெறாது பெரும் களிறு மிதித்த அடியகத்து இரும் புலி ஒதுங்குவன கழிந்த செதும்பல் ஈர் வழி செயிர் தீர் நாவின் வயிரியர் பின்றை மண் ஆர் முழவின் கண்ணகத்து அசைத்த விரல் ஊன்று வடுவின் தோன்றும் மரல் வாடு மருங்கின் மலை இறந்தோரே #5 அகநானூறு 185 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ எல் வளை ஞெகிழச் சாஅய் ஆய்_இழை நல் எழில் பணைத் தோள் இரும் கவின் அழியப் பெரும் கையற்ற நெஞ்சமொடு நம் துறந்து இரும்பின் இன் உயிர் உடையோர் போல வலித்து வல்லினர் காதலர் வாடல் ஒலி கழை நிவந்த நெல் உடை நெடு வெதிர் கலி கொள் மள்ளர் வில் விசையின் உடைய பைது அற வெம்பிய கல் பொரு பரப்பின் வேனில் அத்தத்து ஆங்கண் வான் உலந்து அருவி ஆன்ற உயர் சிமை மருங்கில் பெரு விழா விளக்கம் போலப் பல உடன் இலை இல மலர்ந்த இலவமொடு நிலை உயர் பிறங்கல் மலை இறந்தோரே #6 அகநானூறு 223 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ பிரிதல் வல்லியர் இது நம் துறந்தோர் மறந்தும் அமைகுவர்-கொல் என்று எண்ணி ஆழல் வாழி தோழி கேழல் வளை மருப்பு உறழும் முளை நெடும் பெரும் காய் நனை முதிர் முருக்கின் சினை சேர் பெரும் கல் காய் சினக் கடு வளி எடுத்தலின் வெம் காட்டு அழல் பொழி யானையின் ஐயெனத் தோன்றும் நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை இறந்தனர் ஆயினும் காதலர் நம்-வயின் மறந்து கண்படுதல் யாவது புறம் தாழ் அம் பணை நெடும் தோள் தங்கித் தும்பி அரி இனம் கடுக்கும் சுரி வணர் ஐம்பால் நுண் கேழ் அடங்க வாரிப் பையுள் கெட நல் முகை அதிரல் போதொடு குவளைத் தண் நறும் கமழ் தொடை வேய்ந்த நின் மண் ஆர் கூந்தல் மரீஇய துயிலே #7 அகநானூறு 261 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ கானப் பாதிரிக் கரும் தகட்டு ஒள் வீ வேனில் அதிரலொடு விரைஇக் காண்வர சில் ஐம் கூந்தல் அழுத்தி மெல் இணர்த் தேம் பாய் மராஅம் அடைச்சி வான் கோல் இலங்கு வளை தெளிர்ப்ப வீசிச் சிலம்பு நகச் சின் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி நின் அணி மாண் சிறுபுறம் காண்கம் சிறு நனி ஏகு என ஏகல் நாணி ஒய்யென மா கொள் நோக்கமொடு மடம் கொளச் சாஅய் நின்று தலை இறைஞ்சியோளே அது கண்டு யாம் முந்துறுதல் செல்லேம் ஆயிடை அரும் சுரத்து அல்கியேமே இரும் புலி களிறு அட்டுக் குழுமும் ஓசையும் களி பட்டு வில்லோர் குறும்பில் ததும்பும் வல் வாய் கடும் துடிப் பாணியும் கேட்டே #8 அகநானூறு 267 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ நெஞ்சு நெகிழ்தகுந கூறி அன்பு கலந்து அறாஅ வஞ்சினம் செய்தோர் வினை புரிந்து திறம் வேறு ஆகல் எற்று என்று ஒற்றி இனைதல் ஆன்றிசின் நீயே சினை பாய்ந்து உதிர்த்த கோடை உட்குவரு கடத்திடை வெருக்கு அடி அன்ன குவி முகிழ் இருப்பை மருப்புக் கடைந்து அன்ன கொள்ளை வான் பூ மயிர்க் கால் எண்கின் ஈர் இனம் கவர மை பட்டு அன்ன மா முக முசு இனம் பைது அறு நெடும் கழை பாய்தலின் ஒய்யென வெதிர் படு வெண்ணெல் வெவ் அறைத் தாஅய் உகிர் நெரி ஓசையின் பொங்குவன பொரியும் ஓங்கல் வெற்பின் சுரம் பல இறந்தோர் தாம் பழி உடையர் அல்லர் நாளும் நயந்தோர்ப் பிணித்தல் தேற்றா வயங்கு வினை வாள் ஏர் எல் வளை நெகிழ்த்த தோளே தோழி தவறுடையவ்வே #9 அகநானூறு 291 பாலை - பாலை பாடிய பெரும் கடுங்கோ வானம் பெயல் வளம் கரப்பக் கானம் உலறி இலை இல ஆகப் பல உடன் ஏறு உடை ஆயத்து இனம் பசி தெறுப்பக் கயன் அற வறந்த கோடையொடு நயன் அறப் பெரு வரை நிவந்த மருங்கில் கொடு வரிப் புலியொடு பொருது சினம் சிறந்து வலியோடு உரவுக் களிறு ஒதுங்கிய மருங்கில் பரூஉப் பரல் சிறு பல் மின்மினி கடுப்ப எவ்வாயும் நிறைவன இமைக்கும் நிரம்பா நீள் இடை எருவை இரும் சிறை இரீஇய விரி இணர்த் தாது உண் தும்பி முரல் இசை கடுப்பப் பரியினது உயிர்க்கும் அம்பினர் வெருவர உவலை சூடிய தலையர் கவலை ஆர்த்து உடன் அரும் பொருள் வவ்வலின் யாவதும் சாத்து இடை வழங்காச் சேண் சிமை அதரச் சிறி இலை நெல்லித் தீம் சுவைத் திரள் காய் உதிர்வன தாஅம் அத்தம் தவிர்வு இன்று புள்ளி அம் பிணை உணீஇய உள்ளி அறு மருப்பு ஒழித்த தலைய தோல் பொதி மறு மருப்பு இளம் கோடு அதிரக் கூஉம் சுடர் தெற வருந்திய அரும் சுரம் இறந்து ஆங்கு உள்ளினை வாழிய நெஞ்சே போது எனப் புலம் கமழ் நாற்றத்து இரும் பல் கூந்தல் நல் எழில் மழைக் கண் நம் காதலி மெல் இறைப் பணைத் தோள் விளங்கும் மாண் கவினே #10 அகநானூறு 313 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ இனி பிறிது உண்டோ அஞ்சல் ஓம்பு என அணிக் கவின் வளர முயங்கி நெஞ்சம் பிணித்தோர் சென்ற ஆறு நினைந்து அல்கலும் குளித்துப் பொரு கயலின் கண் பனி மல்க ஐய ஆக வெய்ய உயிரா இரவும் எல்லையும் படர் அட வருந்தி அரவு நுங்கு மதியின் நுதல் ஒளி கரப்பத் தம் அலது இல்லா நம் இவண் ஒழியப் பொருள் புரிந்து அகன்றனர் ஆயினும் அருள் புரிந்து வருவர் வாழி தோழி பெரிய நிதியம் சொரிந்த நீவி போலப் பாம்பு ஊன் தேம்பும் வறம் கூர் கடத்திடை நீங்கா வம்பலர் கணை இடத் தொலைந்தோர் வசி படு புண்ணின் குருதி மாந்தி ஒற்றுச் செல் மாக்களின் ஒடுங்கிய குரல இல் வழிப் படூஉம் காக்கைக் கல் உயர் பிறங்கல் மலை இறந்தோரே #11 அகநானூறு 337 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ சாரல் யாஅத்து உயர் சினை குழைத்த மாரி ஈர்ம் தளிர் அன்ன மேனிப் பேர் அமர் மழைக் கண் புலம் கொண்டு ஒழிய ஈங்குப் பிரிந்து உறைதல் இனிது அன்று ஆகலின் அவணது ஆகப் பொருள் என்று உமணர் கண நிரை அன்ன பல் கால் குறும்பொறைத் தூது ஒய் பார்ப்பான் மடி வெள் ஓலைப் படை உடைக் கையர் வரு திறம் நோக்கி உண்ணா மருங்குல் இன்னோன் கையது பொன் ஆகுதலும் உண்டு எனக் கொன்னே தடிந்து உடன் வீழ்த்த கடுங்கண் மழவர் திறன் இல் சிதாஅர் வறுமை நோக்கிச் செம் கோல் அம்பினர் கை நொடியாப் பெயரக் கொடி விடு குருதித் தூங்கு குடர் கறீஇ வரி மரல் இயவின் ஒரு நரி ஏற்றை வெண் பரல் இமைக்கும் கண் பறி கவலைக் கள்ளி நீழல் கதறு வதிய மழை கண்மாறிய வெம் காட்டு ஆர் இடை எமியம் கழிதந்தோயே பனி இருள் பெரும் கலி வானம் தலைஇய இரும் குளிர் வாடையொடு வருந்துவள் எனவே #12 அகநானூறு 379 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ நம் நயந்து உறைவி தொல் நலம் அழிய தெருளாமையின் தீதொடு கெழீஇ அருள் அற நிமிர்ந்த முன்பொடு பொருள் புரிந்து ஆள்வினைக்கு எதிரிய மீளி நெஞ்சே நினையினை ஆயின் எனவ கேள்-மதி விரி திரை முந்நீர் மண் திணி கிடக்கைப் பரிதி அம் செல்வம் பொதுமை இன்றி நனவின் இயன்றது ஆயினும் கங்குல் கனவின் அற்று அதன் கழிவே அதனால் விரவுறு பல் மலர் வண்டு சூழ்பு அடைச்சிச் சுவல் மிசை அசைஇய நிலை தயங்கு உறு முடி ஈண்டு பல் நாற்றம் வேண்டு வயின் உவப்பச் செய்வுறு விளங்கு இழைப் பொலிந்த தோள் சேர்பு எய்திய கனை துயில் ஏல்-தொறும் திருகி மெய் புகு அன்ன கை கவர் முயக்கின் மிகுதி கண்டன்றோ இலெனே நீ நின் பல் பொருள் வேட்கையின் சொல் வரை நீவிச் செலவு வலியுறுத்தனை ஆயின் காலொடு கனை எரி நிகழ்ந்த இலை இல் அம் காட்டு உழைப் புறத்து அன்ன புள்ளி நீழல் அசைஇய பொழுதில் பசைஇய வந்து இவள் மறப்பு அரும் பல் குணம் நிறத்து வந்து உறுதர ஒரு திறம் நினைத்தல் செல்லாய் திரிபு நின்று உறு புலி உழந்த வடு மருப்பு ஒருத்தற்குப் பிடி இடு பூசலின் அடி படக் குழிந்த நிரம்பா நீள் இடைத் தூங்கி இரங்குவை அல்லையோ உரம் கெட மெலிந்தே ** முதலாவது பாலைக்கலி #13 கலித்தொகை 2 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ தொடங்கல்-கண் தோன்றிய முதியவன் முதலாக அடங்காதார் மிடல் சாய அமரர் வந்து இரத்தலின் மடங்கல் போல் சினைஇ மாயம் செய் அவுணரைக் கடந்து அடு முன்பொடு முக்கண்ணான் மூ எயிலும் உடன்றக்கால் முகம் போல ஒண் கதிர் தெறுதலின் சீறு அரும் கணிச்சியோன் சினவலின் அவ் எயில் ஏறு பெற்று உதிர்வன போல் வரை பிளந்து இயங்குநர் ஆறு கெட விலங்கிய அழல் அவிர் ஆர் இடை மறப்பு அரும் காதல் இவள் ஈண்டு ஒழிய இறப்பத் துணிந்தனிர் கேள்-மின் மற்று ஐஇய தொலைவு ஆகி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு என மலை இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ நிலைஇய கற்பினாள் நீ நீப்பின் வாழாதாள் முலை ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை இல் என இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு எனக் கல் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ தொல் இயல் வழாஅமைத் துணை எனப் புணர்ந்தவள் புல் ஆகம் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை இடன் இன்றி இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு எனக் கடன் இறந்து செயல் சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ வட_மீன் போல் தொழுது ஏத்த வயங்கிய கற்பினாள் தட மென் தோள் பிரியாமை பொருள் ஆயின் அல்லதை என இவள் புன்கண் கொண்டு இனையவும் பொருள்-வயின் அகறல் அன்பு அன்று என்று யான் கூற அன்புற்றுக் காழ் வரை நில்லாக் கடும் களிற்று ஒருத்தல் யாழ் வரைத் தங்கிய ஆங்குத் தாழ்பு நின் தொல் கவின் தொலைதல் அஞ்சி என் சொல் வரைத் தங்கினர் காதலோரே #14 கலித்தொகை 3 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ அறன் இன்றி அயல் தூற்றும் அம்பலை நாணியும் வறன் நீந்தி நீ செல்லும் நீள் இடை நினைப்பவும் இறை நில்லா வளை ஓட இதழ் சோர்பு பனி மல்கப் பொறை நில்லா நோயோடு புல்லென்ற நுதல் இவள் விறல் நலன் இழப்பவும் வினை வேட்டாய் கேஎள் இனி உடை இவள் உயிர் வாழாள் நீ நீப்பின் எனப் பல இடை கொண்டு யாம் இரப்பவும் எம கொள்ளாய் ஆயினை கடைஇய ஆற்றிடை நீர் நீத்த வறும் சுனை அடையொடு வாடிய அணி மலர் தகைப்பன வல்லை நீ துறப்பாயேல் வகை வாடும் இவள் என ஒல்லாங்கு யாம் இரப்பவும் உணர்ந்தீயாய் ஆயினை செல்லு நீள் ஆற்றிடைச் சேர்ந்து எழுந்த மரம் வாடப் புல்லு விட்டு இறைஞ்சிய பூம் கொடி தகைப்பன பிணிபு நீ விடல் சூழின் பிறழ்தரும் இவள் எனப் பணிபு வந்து இரப்பவும் பல சூழ்வாய் ஆயினை துணிபு நீ செலக் கண்ட ஆற்றிடை அ மரத்து அணி செல வாடிய அம் தளிர் தகைப்பன என ஆங்கு யாம் நின் கூறவும் எம கொள்ளாய் ஆயினை ஆனாது இவள் போல் அருள் வந்தவை காட்டி மேல் நின்று மெய் கூறும் கேளிர் போல் நீ செல்லும் கானம் தகைப்ப செலவு #15 கலித்தொகை 4 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ வலி முன்பின் வல்லென்ற யாக்கைப் புலி நோக்கின் சுற்று அமை வில்லர் சுரி வளர் பித்தையர் அற்றம் பார்த்து அல்கும் கடும் கண் மறவர் தாம் கொள்ளும் பொருள் இலராயினும் வம்பலர் துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து உயிர் வௌவலின் புள்ளும் வழங்காப் புலம்பு கொள் ஆர் இடை வெள் வேல் வலத்திர் பொருள் தரல் வேட்கையின் உள்ளினிர் என்பது அறிந்தனள் என் தோழி காழ் விரி கவை ஆரம் மீ வரும் இள முலை போழ்து இடைப்படாஅமல் முயங்கியும் அமையார் என் தாழ் கதுப்பு அணிகுவர் காதலர் மற்று அவர் சூழ்வதை எவன்-கொல் அறியேன் என்னும் முள் உறழ் முளை எயிற்று அமிழ்து ஊறும் தீ நீரைக் கள்ளினும் மகிழ்செயும் என உரைத்தும் அமையார் என் ஒள் இழை திருத்துவர் காதலர் மற்று அவர் உள்ளுவது எவன்-கொல் அறியேன் என்னும் நுண் எழில் மாமை சுணங்கு அணி ஆகம் தம் கண்ணொடு தொடுத்து என நோக்கியும் அமையார் என் ஒள் நுதல் நீவுவர் காதலர் மற்று அவர் எண்ணுவது எவன்-கொல் அறியேன் என்னும் என ஆங்கு கழி பெரு நல்கல் ஒன்று உடைத்து என என் தோழி அழிவொடு கலங்கிய எவ்வத்தள் ஒரு நாள் நீர் பொழுது இடைப்பட நீப்பின் வாழ்வாளோ ஒழிக இனி பெரும நின் பொருட்பிணிச் செலவே #16 கலித்தொகை 5 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ பாஅல் அம் செவிப் பணைத் தாள் மா நிரை மாஅல் யானையொடு மறவர் மயங்கித் தூறு அதர்பட்ட ஆறு மயங்கு அரும் சுரம் இறந்து நீர் செய்யும் பொருளினும் யாம் நுமக்குச் சிறந்தனம் ஆதல் அறிந்தனிர் ஆயின் நீள் இரு முந்நீர் வளி கலன் வௌவலின் ஆள்வினைக்கு அழிந்தோர் போறல் அல்லதைக் கேள் பெருந்தகையோடு எவன் பல மொழிகுவம் நாளும் கோள்_மீன் தகைத்தலும் தகைமே கல்லெனக் கவின் பெற்ற விழவு ஆற்றுப்படுத்த பின் புல்லென்ற களம் போலப் புலம்பு கொண்டு அமைவாளோ ஆள்பவர் கலக்குற அலைபெற்ற நாடு போல் பாழ்பட்ட முகத்தோடு பைதல் கொண்டு அமைவாளோ ஓர் இரா வைகலுள் தாமரைப் பொய்கையுள் நீர் நீத்த மலர் போல நீ நீப்பின் வாழ்வாளோ என ஆங்கு பொய் நல்கல் புரிந்தனை புறந்தரல் கைவிட்டு எ நாளோ நெடுந்தகாய் நீ செல்வது அ நாள் கொண்டு இறக்கும் இவள் அரும் பெறல் உயிரே #17 கலித்தொகை 6 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ மரையா மரல் கவர மாரி வறப்ப வரை ஓங்கு அரும் சுரத்து ஆர் இடைச் செல்வோர் சுரை அம்பு மூழ்கச் சுருங்கிப் புரையோர் தம் உள் நீர் வறப்பப் புலர் வாடு நாவிற்குத் தண்ணீர் பெறாஅத் தடுமாற்று அரும் துயரம் கண்ணீர் நனைக்கும் கடுமைய காடு என்றால் என் நீர் அறியாதீர் போல இவை கூறல் நின் நீர அல்ல நெடுந்தகாய் எம்மையும் அன்பு அறச் சூழாதே ஆற்றிடை நும்மொடு துன்பம் துணை ஆக நாடின் அது அல்லது இன்பமும் உண்டோ எமக்கு #18 கலித்தொகை 7 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ வேனில் உழந்த வறிது உயங்கு ஓய் களிறு வான் நீங்கு வைப்பின் வழங்காத் தேர் நீர்க்கு அவாஅம் கானம் கடத்திர் எனக் கேட்பின் யான் ஒன்று உசாவுகோ ஐய சிறிது நீயே செய்வினை மருங்கில் செலவு அயர்ந்து யாழ நின் கை புனை வல் வில் ஞாண் உளர்தீயே இவட்கே செய்வுறு மண்டிலம் மையாப்பது போல் மை இல் வாள் முகம் பசப்பு ஊரும்மே நீயே வினை மாண் காழகம் வீங்கக் கட்டிப் புனை மாண் மரீஇய அம்பு தெரிதியே இவட்கே சுனை மாண் நீலம் கார் எதிர்பவை போல் இனை நோக்கு உண்கண் நீர் நில்லாவே நீயே புலம்பு இல் உள்ளமொடு பொருள்-வயின் செலீஇய வலம் படு திகிரி வாய் நீவுதியே இவட்கே அலங்கு இதழ்க் கோடல் வீ உகுபவை போல் இலங்கு ஏர் எல் வளை இறை ஊரும்மே என நின் செல் நவை அரவத்தும் இனையவள் நீ நீப்பின் தன் நலம் கடைகொளப்படுதலின் மற்று இவள் இன் உயிர் தருதலும் ஆற்றுமோ முன்னிய தேஎத்து முயன்று செய் பொருளே #19 கலித்தொகை 8 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ நடுவு இகந்து ஒரீஇ நயன் இல்லான் வினை வாங்கக் கொடிது ஓர்த்த மன்னவன் கோல் போல ஞாயிறு கடுகுபு கதிர் மூட்டிக் காய் சினம் தெறுதலின் உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம் வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்றி நிலம் சேர விறல் மலை வெம்பிய போக்கு அரு வெம் சுரம் சொல்லாது இறப்பத் துணிந்தனிர்க்கு ஒரு பொருள் சொல்லுவது உடையேன் கேள்-மின் மற்று ஐஇய வீழுநர்க்கு இறைச்சியாய் விரல் கவர்பு இசைக்கும் கோல் ஏழும் தம் பயன் கெட இடை நின்ற நரம்பு அறூஉம் யாழினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ மரீஇத் தாம் கொண்டாரைக் கொண்டக்கால் போலாது பிரியுங்கால் பிறர் எள்ளப் பீடு இன்றி புறம்மாறும் திருவினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ புரை தவப் பயன் நோக்கார் தம் ஆக்கம் முயல்வாரை வரைவு இன்றிச் செறும் பொழுதில் கண் ஓடாது உயிர் வௌவும் அரைசினும் நிலை இல்லாப் பொருளையும் நச்சுபவோ என ஆங்கு நச்சல் கூடாது பெரும இச் செலவு ஒழிதல் வேண்டுவல் சூழின் பழி இன்று மன்னவன் புறந்தர வரு_விருந்து ஓம்பித் தன் நகர் விழையக் கூடின் இன்னுறல் வியன் மார்ப அது மனும் பொருளே #20 கலித்தொகை 9 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ எறித்தரு கதிர் தாங்கி ஏந்திய குடை நீழல் உறித் தாழ்ந்த கரகமும் உரை சான்ற முக்கோலும் நெறிப்படச் சுவல் அசைஇ வேறு ஓரா நெஞ்சத்துக் குறிப்பு ஏவல் செயல் மாலை கொளை நடை அந்தணீர் வெவ் இடைச் செலல் மாலை ஒழுக்கத்தீர் இவ் இடை என் மகள் ஒருத்தியும் பிறள் மகன் ஒருவனும் தம் உளே புணர்ந்த தாம் அறி புணர்ச்சியர் அன்னார் இருவரைக் காணிரோ பெரும காணேம் அல்லேம் கண்டனம் கடத்திடை ஆண் எழில் அண்ணலோடு அரும் சுரம் முன்னிய மாண் இழை மடவரல் தாயிர் நீர் போறிர் பல உறு நறும் சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை மலையுளே பிறப்பினும் மலைக்கு அவை தாம் என் செய்யும் நினையுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே சீர் கெழு வெண் முத்தம் அணிபவர்க்கு அல்லதை நீருளே பிறப்பினும் நீர்க்கு அவை தாம் என் செய்யும் தேருங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே ஏழ் புணர் இன் இசை முரல்பவர்க்கு அல்லதை யாழுளே பிறப்பினும் யாழ்க்கு அவை தாம் என் செய்யும் சூழுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே என ஆங்கு இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்-மின் சிறந்தானை வழிபடீஇச் சென்றனள் அறம் தலைபிரியா ஆறும் மற்று அதுவே #21 கலித்தொகை 10 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ வறியவன் இளமை போல் வாடிய சினையவாய்ச் சிறியவன் செல்வம் போல் சேர்ந்தார்க்கு நிழல் இன்றி யார் கண்ணும் இகந்து செய்து இசை கெட்டான் இறுதி போல் வேரொடு மரம் வெம்ப விரி கதிர் தெறுதலின் அலவுற்றுக் குடி கூவ ஆறு இன்றிப் பொருள் வெஃகிக் கொலை அஞ்சா வினைவரால் கோல் கோடியவன் நிழல் உலகு போல் உலறிய உயர் மர வெம் சுரம் இடை கொண்டு பொருள்-வயின் இறத்தி நீ எனக் கேட்பின் உடைபு நெஞ்சு உக ஆங்கே ஒளி ஓடற்பாள்-மன்னோ படை அமை சேக்கையுள் பாயலின் அறியாய் நீ புடைபெயர்வாய் ஆயினும் புலம்பு கொண்டு இனைபவள் முனிவு இன்றி முயல் பொருட்கு இறத்தி நீ எனக் கேட்பின் பனிய கண் படல் ஒல்லா படர் கூர்கிற்பாள்-மன்னோ நனி கொண்ட சாயலாள் நயந்து நீ நகை ஆகத் துனி செய்து நீடினும் துறப்பு அஞ்சி கலுழ்பவள் பொருள் நோக்கிப் பிரிந்து நீ போகுதி எனக் கேட்பின் மருள் நோக்கம் மடிந்து ஆங்கே மயல் கூர்கிற்பாள்-மன்னோ இருள் நோக்கம் இடை இன்றி ஈரத்தின் இயன்ற நின் அருள் நோக்கம் அழியினும் அவலம் கொண்டு அழிபவள் என ஆங்கு வினை வெஃகி நீ செலின் விடும் இவள் உயிர் என புனை_இழாய் நின் நிலை யான் கூறப் பையென நிலவு வேல் நெடுந்தகை நீள் இடைச் செலவு ஒழிந்தனனால் செறிக நின் வளையே #22 கலித்தொகை 11 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ அரிது ஆய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும் பெரிது ஆய பகை வென்று பேணாரைத் தெறுதலும் புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும் எனப் பிரிவு எண்ணிப் பொருள்-வயின் சென்ற நம் காதலர் வருவர்-கொல் வயங்கு_இழாஅய் வலிப்பல் யான் கேஎள் இனி அடி தாங்கும் அளவு இன்றி அழல் அன்ன வெம்மையால் கடியவே கனம்_குழாஅய் காடு என்றார் அக் காட்டுள் துடி அடிக் கயந்தலை கலக்கிய சில் நீரைப் பிடி ஊட்டிப் பின் உண்ணும் களிறு எனவும் உரைத்தனரே இன்பத்தின் இகந்து ஒரீஇ இலை தீந்த உலவையால் துன்புறூஉம் தகையவே காடு என்றார் அக் காட்டுள் அன்புகொள் மடப் பெடை அசைஇய வருத்தத்தை மென் சிறகரால் ஆற்றும் புறவு எனவும் உரைத்தனரே கல் மிசை வேய் வாடக் கனை கதிர் தெறுதலான் துன் அரூஉம் தகையவே காடு என்றார் அக் காட்டுள் இன் நிழல் இன்மையான் வருந்திய மடப் பிணைக்குத் தன் நிழலைக் கொடுத்து அளிக்கும் கலை எனவும் உரைத்தனரே என ஆங்கு இனை நலம் உடைய கானம் சென்றோர் புனை நலம் வாட்டுநர் அல்லர் மனை-வயின் பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன நல் எழில் உண்கணும் ஆடுமால் இடனே #23 கலித்தொகை 12 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ இடு முள் நெடு வேலி போலக் கொலைவர் கொடுமரம் தேய்த்தார் பதுக்கை நிரைத்த கடு நவை ஆர் ஆற்று அறு சுனை முற்றி உடங்கு நீர் வேட்ட உடம்பு உயங்கு யானை கடும் தாம் பதிபு ஆங்குக் கை தெறப்பட்டு வெறி நிரை வேறு ஆகச் சார்ச் சாரல் ஓடி நெறி மயக்குற்ற நிரம்பா நீடு அத்தம் சிறு நனி நீ துஞ்சி ஏற்பினும் அஞ்சும் நறு_நுதல் நீத்துப் பொருள்-வயின் செல்வோய் உரன் உடை உள்ளத்தை செய்பொருள் முற்றிய வளமையான் ஆகும் பொருள் இது என்பாய் இளமையும் காமமும் நின் பாணி நில்லா இடை முலைக் கோதை குழைய முயங்கும் முறை நாள் கழிதலுறாஅமைக் காண்டை கடை நாள் இது என்று அறிந்தாரும் இல்லை போற்றாய் பெரும நீ காமம் புகர்பட வேற்றுமைக் கொண்டு பொருள்-வயின் போகுவாய் கூற்றமும் மூப்பும் மறந்தாரோடு ஓராஅங்கு மாற்றுமைக் கொண்ட வழி #24 கலித்தொகை 13 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ செரு மிகு சின வேந்தன் சிவந்து இறுத்த புலம் போல எரி மேய்ந்த கரி வறல் வாய் புகவு காணாவாய்ப் பொரி மலர்ந்து அன்ன பொறிய மட மான் திரி மருப்பு ஏறொடு தேர் அறற்கு ஓட மரல் சாய மலை வெம்ப மந்தி உயங்க உரல் போல் அடிய உடம்பு உயங்கு யானை ஊறு நீர் அடங்கலின் உண் கயம் காணாது சேறு சுவைத்துத் தம் செல் உயிர் தாங்கும் புயல் துளி மாறிய போக்கு அரு வெம் சுரம் எல்_வளை எம்மொடு நீ வரின் யாழ நின் மெல் இயல் மேவந்த சீறடித் தாமரை அல்லி சேர் ஆய் இதழ் அரக்குத் தோய்ந்தவை போலக் கல் உறின் அவ் அடி கறுக்குந அல்லவோ நலம் பெறும் சுடர்_நுதால் எம்மொடு நீ வரின் இலங்கு மாண் அவிர் தூவி அன்ன மென் சேக்கையுள் துலங்கு மான் மேல் ஊர்தித் துயில் ஏற்பாய் மற்று ஆண்டை விலங்கு மான் குரல் கேட்பின் வெருவுவை அல்லையோ கிளி புரை கிளவியாய் எம்மொடு நீ வரின் தளி பொழி தளிர் அன்ன எழில் மேனி தகை வாட முளி அரில் பொத்திய முழங்கு அழல் இடை போழ்ந்த வளி உறின் அவ் எழில் வாடுவை அல்லையோ என ஆங்கு அனையவை காதலர் கூறலின் வினை-வயின் பிரிகுவர் எனப் பெரிது அழியாது திரிபுறீஇக் கடும்-குரை அருமைய காடு எனின் அல்லது கொடும்_குழாய் துறக்குநர் அல்லர் நடுங்குதல் காண்மார் நகை குறித்தனரே #25 கலித்தொகை 14 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ அணை மருள் இன் துயில் அம் பணைத் தட மென் தோள் துணை மலர் எழில் நீலத்து ஏந்து எழில் மலர் உண்கண் மண மௌவல் முகை அன்ன மா வீழ் வார் நிரை வெண் பல் மணம் நாறு நறு நுதல் மாரி வீழ் இரும் கூந்தல் அலர் முலை ஆகத்து அகன்ற அல்குல் சில நிரை வால் வளைச் செய்யாயோ எனப் பலபல கட்டுரை பண்டையின் பாராட்டி இனிய சொல்லி இன்னாங்குப் பெயர்ப்பது இனி அறிந்தேன் அது துனி ஆகுதலே பொருள் அல்லால் பொருளும் உண்டோ என யாழ நின் மருளி கொள் மட நோக்கம் மயக்கப்பட்டு அயர்த்தாயோ காதலார் எவன் செய்ப பொருள் இல்லாதார்க்கு என ஏதிலார் கூறும் சொல் பொருளாக மதித்தாயோ செம்மையின் இகந்து ஒரீஇப் பொருள் செய்வார்க்கு அப் பொருள் இம்மையும் மறுமையும் பகை ஆவது அறியாயோ அதனால் எம்மையும் பொருள் ஆக மதித்தீத்தை நம்முள் நாம் கவவுக் கை விடப் பெறும் பொருள்-திறத்து அவவுக் கைவிடுதல் அது மனும் பொருளே #26 கலித்தொகை 15 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ அரி மான் இடித்து அன்ன அம் சிலை வல் வில் புரி நாண் புடையின் புறங்காண்டல் அல்லால் இணைப் படைத் தானை அரசோடு உறினும் கணைத் தொடை நாணும் கடும் துடி ஆர்ப்பின் எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி உருத்த கடும் சினத்து ஓடா மறவர் பொருள் கொண்டு புண் செயின் அல்லதை அன்போடு அருள் புறம்மாறிய ஆர் இடை அத்தம் புரிபு நீ புறம்மாறிப் போக்கு எண்ணிப் புதிது ஈண்டி பெருகிய செல்வத்தான் பெயர்த்தரல் ஒல்வதோ செயலை அம் தளிர் ஏய்க்கும் எழில் நலம் அ நலம் பயலையால் உணப்பட்டு பண்டை நீர் ஒழிந்தக்கால் பொய் அற்ற கேள்வியால் புரையோரைப் படர்ந்து நீ மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ தீம் கதிர் மதி ஏய்க்கும் திரு முகம் அம் முகம் பாம்பு சேர் மதி போலப் பசப்பு ஊர்ந்து தொலைந்தக்கால் பின்னிய தொடர் நீவிப் பிறர் நாட்டுப் படர்ந்து நீ மன்னிய புணர்ச்சியான் மறுத்தரல் ஒல்வதோ புரி அவிழ் நறு நீலம் புரை உண் கண் கலுழ்பு ஆனாத் திரி உமிழ் நெய்யே போல் தெண் பனி உறைக்கும்கால் என ஆங்கு அனையவை போற்றி நினைஇயன நாடிக் காண் வளமையோ வைகலும் செயல் ஆகும் மற்று இவள் முளை நிரை முறுவலார் ஆயத்துள் எடுத்து ஆய்ந்த இளமையும் தருவதோ இறந்த பின்னே #27 கலித்தொகை 16 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடு இன்றிப் பசந்த கண் பைதல பனி மல்க வாடுபு வனப்பு ஓடி வணங்கு இறை வளை ஊர ஆடு எழில் அழிவு அஞ்சாது அகன்றவர்-திறத்து இனி நாடுங்கால் நினைப்பது ஒன்று உடையேன்-மன் அதுவும் தான் தொல் நலம் தொலைபு ஈங்கு யாம் துயர் உழப்பத் துறந்து உள்ளார் துன்னி நம் காதலர் துறந்து ஏகும் ஆர் இடைக் கல் மிசை உருப்பு அறக் கனை துளி சிதறு என இன் இசை எழிலியை இரப்பவும் இயைவதோ புனை_இழாய் ஈங்கு நாம் புலம்புறப் பொருள் வெஃகி முனை என்னார் காதலர் முன்னிய ஆர் இடைச் சினை வாடச் சிறக்கும் நின் சினம் தணிந்தீக எனக் கனை கதிர்க் கனலியைக் காமுறல் இயைவதோ ஒளி_இழாய் ஈங்கு நாம் துயர்கூரப் பொருள்-வயின் அளி ஒரீஇக் காதலர் அகன்று ஏகும் ஆர் இடை முளி முதல் மூழ்கிய வெம்மை தீர்ந்து உறுக என வளி தரும் செல்வனை வாழ்த்தவும் இயைவதோ என ஆங்கு செய்பொருள் சிறப்பு எண்ணிச் செல்வார்-மாட்டு இனையன தெய்வத்துத் திறன் நோக்கித் தெருமரல் தே_மொழி வறன் ஓடின் வையகத்து வான் தரும் கற்பினாள் நிறன் ஓடிப் பசப்பு ஊர்தல் உண்டு என அறன் ஓடி விலங்கின்று அவர் ஆள்வினை-திறத்தே #28 கலித்தொகை 17 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ படை பண்ணிப் புனையவும் பா மாண்ட பல அணைப் புடைபெயர்ந்து ஒடுங்கவும் புறம் சேர உயிர்ப்பவும் உடையதை எவன்-கொல் என்று ஊறு அளந்தவர்-வயின் நடை செல்லாய் நனி ஏங்கி நடுங்கல் காண் நறு_நுதால் தொல் எழில் தொலைபு இவள் துயர் உழப்பத் துறந்து நீ வல் வினை வயக்குதல் வலித்தி-மன் வலிப்பு அளவை நீள் கதிர் அவிர் மதி நிறைவு போல் நிலையாது நாளினும் நெகிழ்பு ஓடும் நலன் உடன் நிலையுமோ ஆற்றல் நோய் அட இவள் அணி வாட அகன்று நீ தோற்றம் சால் தொகு பொருள் முயறி-மன் முயல்வு அளவை நாற்றம் சால் நளி பொய்கை அடை முதிர் முகையிற்குக் கூற்று ஊழ் போல் குறைபடூஉம் வாழ்நாளும் நிலையுமோ வகை எழில் வனப்பு எஞ்ச வரை போக வலித்து நீ பகை அறு பய வினை முயறி-மன் முயல்வு அளவைத் தகை வண்டு புதிது உண்ணத் தாது அவிழ் தண் போதின் முகை வாய்த்த தடம் போலும் இளமையும் நிலையுமோ என ஆங்கு பொருந்தி யான் தான் வேட்ட பொருள்-வயின் நினைந்த சொல் திருந்திய யாக்கையுள் மருத்துவன் ஊட்டிய மருந்து போல் மருந்து ஆகி மனன் உவப்பப் பெரும் பெயர் மீளி பெயர்ந்தனன் செலவே #29 கலித்தொகை 18 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ அரும் பொருள் வேட்கையின் உள்ளம் துரப்பப் பிரிந்து உறை சூழாதி ஐய விரும்பி நீ என் தோள் எழுதிய தொய்யிலும் யாழ நின் மைந்து உடை மார்பில் சுணங்கும் நினைத்துக் காண் சென்றோர் முகப்பப் பொருளும் கிடவாது ஒழிந்தவர் எல்லாரும் உண்ணாதும் செல்லார் இளமையும் காமமும் ஓராங்குப் பெற்றார் வளமை விழைதக்கது உண்டோ உள நாள் ஒரோஒ கை தம்முள் தழீஇ ஒரோஒ கை ஒன்றன் கூறு ஆடை உடுப்பவரே ஆயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை அரிது அரோ சென்ற இளமை தரற்கு #30 கலித்தொகை 19 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ செவ்விய தீவிய சொல்லி அவற்றொடு பைய முயங்கிய அஞ்ஞான்று அவை எல்லாம் பொய் ஆதல் யான் யாங்கு அறிகோ மற்று ஐய அகல் நகர் கொள்ளா அலர் தலைத்தந்து பகல் முனி வெம் சுரம் உள்ளல் அறிந்தேன் மகன் அல்லை-மன்ற இனி செல் இனி சென்று நீ செய்யும் வினை முற்றி அன்பு அற மாறி யாம் உள்ளத் துறந்தவள் பண்பும் அறிதிரோ என்று வருவாரை என் திறம் யாதும் வினவல் வினவின் பகலின் விளங்கும் நின் செம்மல் சிதையத் தவல் அரும் செய்வினை முற்றாமல் ஆண்டு ஓர் அவலம் படுதலும் உண்டு #31 கலித்தொகை 20 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ பல் வளம் பகர்பு ஊட்டும் பயன் நிலம் பைது அறச் செல் கதிர் ஞாயிறு செயிர் சினம் சொரிதலின் தணிவு இல் வெம் கோடைக்குத் தண் நயந்து அணி கொள்ளும் பிணி தெறல் உயக்கத்த பெரும் களிற்று இனம் தாங்கும் மணி திகழ் விறல் மலை வெம்ப மண் பகத் துணி கயம் துகள்பட்ட தூங்கு அழல் வெம் சுரம் கிளி புரை கிளவியாய் நின் அடிக்கு எளியவோ தளியுறுபு அறியாவே காடு எனக் கூறுவீர் வளியினும் வரை நில்லா வாழு நாள் நும் ஆகத்து அளி என உடையேன் யான் அவலம் கொண்டு அழிவலோ ஊறு நீர் அமிழ்து ஏய்க்கும் எயிற்றாய் நீ உணல் வேட்பின் ஆறு நீர் இல என அறன் நோக்கிக் கூறுவீர் யாறு நீர் கழிந்து அன்ன இளமை நும் நெஞ்சு என்னும் தேறு நீர் உடையேன் யான் தெருமந்து ஈங்கு ஒழிவலோ மாண் எழில் வேய் வென்ற தோளாய் நீ வரின் தாங்கும் மாண் நிழல் இல ஆண்டை மரம் எனக் கூறுவீர் நீள் நிழல் தளிர் போல நிறன் ஊழ்த்தல் அறிவேன் நும் தாள் நிழல் கைவிட்டு யான் தவிர்தலைச் சூழ்வலோ என ஆங்கு அணை அரும் வெம்மைய காடு எனக் கூறுவீர் கணை கழிகல்லாத கல் பிறங்கு ஆர் இடைப் பணை எருத்து எழில் ஏற்றின் பின்னர்ப் பிணையும் காணிரோ பிரியுமோ அவையே #32 கலித்தொகை 21 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ பால் மருள் மருப்பின் உரல் புரை பாவு அடி ஈர் நறும் கமழ் கடாஅத்து இனம் பிரி ஒருத்தல் ஆறு கடி கொள்ளும் வேறு புலம் படர்ந்து பொருள்-வயின் பிரிதல் வேண்டும் என்னும் அருள் இல் சொல்லும் நீ சொல்லினையே நன்னர் நறு நுதல் நயந்தனை நீவி நின்னின் பிரியலன் அஞ்சல் ஓம்பு என்னும் நன்னர் மொழியும் நீ மொழிந்தனையே அவற்றுள் யாவோ வாயின மாஅல் மகனே கிழவர் இன்னோர் என்னாது பொருள் தான் பழ வினை மருங்கின் பெயர்புபெயர்பு உறையும் அன்ன பொருள்-வயின் பிரிவோய் நின் இன்று இமைப்பு வரை வாழாள் மடவோள் அமை கவின் கொண்ட தோள் இணை மறந்தே #33 கலித்தொகை 22 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ உண் கடன் வழிமொழிந்து இரக்குங்கால் முகனும் தாம் கொண்டது கொடுக்குங்கால் முகனும் வேறு ஆகுதல் பண்டும் இவ் உலகத்து இயற்கை அஃது இன்றும் புதுவது அன்றே புலன் உடை மாந்திர் தாய் உயிர் பெய்த பாவை போல நலன் உடையார் மொழிக்-கண் தாவார் தாம் தம் நலம் தாது தேர் பறவையின் அருந்து இறல் கொடுக்குங்கால் ஏதிலார் கூறுவது எவனோ நின் பொருள் வேட்கை நறு முல்லை நேர் முகை ஒப்ப நிரைத்த செறி முறை பாராட்டினாய் மற்று எம் பல்லின் பறிமுறை பாராட்டினையோ ஐய நெய் இடை நீவி மணி ஒளி விட்டு அன்ன ஐவகை பாராட்டினாய் மற்று எம் கூந்தல் செய்வினை பாராட்டினையோ ஐய குளன் அணி தாமரை பாசரும்பு ஏய்க்கும் இள முலை பாராட்டினாய் மற்று எம் மார்பில் தளர் முலை பாராட்டினையோ ஐய என ஆங்கு அடர் பொன் அவிர் ஏய்க்கும் அவ் வரி வாடச் சுடர் காய் சுரம் போகும் நும்மை யாம் எம்-கண் படர் கூற நின்றதும் உண்டோ தொடர் கூரத் துவ்வாமை வந்தக் கடை #34 கலித்தொகை 23 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ இலங்கு ஒளி மருப்பின் கைம்_மா உளம்புநர் புலம் கடி கவணையின் பூம் சினை உதிர்க்கும் விலங்கு மலை வெம்பிய போக்கு அரு வெம் சுரம் தனியே இறப்ப யான் ஒழிந்து இருத்தல் நகுதக்கு அன்று இவ் அழுங்கல் ஊர்க்கே இனி யான் உண்ணலும் உண்ணேன் வாழலும் வாழேன் தோள் நலம் உண்டு துறக்கப்பட்டோர் வேள் நீர் உண்ட குடை ஓர் அன்னர் நல்குநர் புரிந்து நலன் உணப்பட்டோர் அல்குநர் போகிய ஊர் ஓர் அன்னர் கூடினர் புரிந்து குணன் உணப்பட்டோர் சூடினர் இட்ட பூ ஓர் அன்னர் என ஆங்கு யானும் நின்னகத்து அனையேன் ஆனாது கொலை வெம் கொள்கையொடு நாய் அகப்படுப்ப வலைவர்க்கு அமர்ந்த மட மான் போல நின்னாங்கு வரூஉம் என் நெஞ்சினை என்னாங்கு வாராது ஓம்பினை கொண்மே #35 கலித்தொகை 24 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ நெஞ்சு நடுக்குறக் கேட்டும் கடுத்தும் தாம் அஞ்சியது ஆங்கே அணங்கு ஆகும் என்னும் சொல் இன் தீம் கிளவியாய் வாய்-மன்ற நின் கேள் புதுவது பல் நாளும் பாராட்ட யானும் இது ஒன்று உடைத்து என எண்ணி அது தேர மாசு இல் வண் சேக்கை மணந்த புணர்ச்சியுள் பாயல் கொண்டு என் தோள் கனவுவார் ஆய் கோல் தொடி நிரை முன்கையாள் கையாறு கொள்ளாள் கடி மனை காத்து ஓம்ப வல்லுவள்-கொல்லோ இடு மருப்பு யானை இலங்கு தேர்க்கு ஓடும் நெடு மலை வெம் சுரம் போகி நடு நின்று செய்பொருள் முற்றும் அளவு என்றார் ஆய்_இழாய் தாம் இடை கொண்டது அது ஆயின் தம் இன்றி யாம் உயிர் வாழும் மதுகை இலேம் ஆயின் தொய்யில் துறந்தார் அவர் எனத் தம்-வயின் நொய்யார் நுவலும் பழி நிற்பத் தம்மொடு போய் இன்று சொல் என் உயிர் #36 கலித்தொகை 25 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ வயக்குறு மண்டிலம் வடமொழிப் பெயர் பெற்ற முகத்தவன் மக்களுள் முதியவன் புணர்ப்பினால் ஐவர் என்று உலகு ஏத்தும் அரசர்கள் அகத்தராக் கை புனை அரக்கு இல்லைக் கதழ் எரி சூழ்ந்த ஆங்குக் களி திகழ் கடாஅத்த கடும் களிறு அகத்தவா முளி கழை உயர் மலை முற்றிய முழங்கு அழல் ஒள் உரு அரக்கு இல்லை வளி_மகன் உடைத்துத் தன் உள்ளத்துக் கிளைகளோடு உயப் போகுவான் போல எழு உறழ் தடக் கையின் இனம் காக்கும் எழில் வேழம் அழுவம் சூழ் புகை அழல் அதர்பட மிதித்துத் தம் குழுவொடு புணர்ந்து போம் குன்று அழல் வெம் சுரம் இறத்திரால் ஐய மற்று இவள் நிலைமை கேட்டீ-மின் மணக்குங்கால் மலர் அன்ன தகையவாய்ச் சிறிது நீர் தணக்குங்கால் கலுழ்பு ஆனாக் கண் எனவும் உள அன்றோ சிறப்புச் செய்து உழையராப் புகழ்பு ஏத்தி மற்று அவர் புறக்கொடையே பழி தூற்றும் புல்லியார் தொடர்பு போல் ஈங்கு நீர் அளிக்குங்கால் இறை சிறந்து ஒரு நாள் நீர் நீங்குங்கால் நெகிழ்பு ஓடும் வளை எனவும் உள அன்றோ செல்வத்துள் சேர்ந்தவர் வளன் உண்டு மற்று அவர் ஒல்கத்து நல்கிலா உணர்விலார் தொடர்பு போல் ஒரு நாள் நீர் அளிக்குங்கால் ஒளி சிறந்து ஒரு நாள் நீர் பாராட்டாக்கால் பசக்கும் நுதல் எனவும் உள அன்றோ பொருந்திய கேண்மையின் மறை உணர்ந்து அ மறை பிரிந்தக்கால் பிறர்க்கு உரைக்கும் பீடிலார் தொடர்பு போல் என ஆங்கு யாம் நின் கூறுவது எவன் உண்டு எம்மினும் நீ நற்கு அறிந்தனை நெடுந்தகை வானம் துளி மாறு பொழுதின் இவ் உலகம் போலும் நின் அளி மாறு பொழுதின் இவ் ஆய்_இழை கவினே #37 கலித்தொகை 26 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ ஒரு குழை ஒருவன் போல் இணர் சேர்ந்த மராஅமும் பருதி அம் செல்வன் போல் நனை ஊழ்த்த செருந்தியும் மீன் ஏற்றுக் கொடியோன் போல் மிஞிறு ஆர்க்கும் காஞ்சியும் ஏனோன் போல் நிறம் கிளர்பு கஞலிய ஞாழலும் ஆன் ஏற்றுக் கொடியோன் போல் எதிரிய இலவமும் ஆங்குத் தீது தீர் சிறப்பின் ஐவர்கள் நிலை போலப் போது அவிழ் மரத்தொடு பொரு கரை கவின் பெற நோ தக வந்தன்றால் இளவேனில் மே தக பல் வரி இன வண்டு புதிது உண்ணும் பருவத்துத் தொல் கவின் தொலைந்த என் தட மென் தோள் உள்ளுவார் ஒல்குபு நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி வெல் புகழ் உலகு ஏத்த விருந்து நாட்டு உறைபவர் திசைதிசை தேன் ஆர்க்கும் திருமருத முன்துறை வசை தீர்ந்த என் நலம் வாடுவது அருளுவார் நசை கொண்டு தம் நீழல் சேர்ந்தாரைத் தாங்கித் தம் இசை பரந்து உலகு ஏத்த ஏதில் நாட்டு உறைபவர் அறல் சாஅய் பொழுதோடு எம் அணி நுதல் வேறு ஆகித் திறல் சான்ற பெரு வனப்பு இழப்பதை அருளுவார் ஊறு அஞ்சி நிழல் சேர்ந்தார்க்கு உலையாது காத்து ஓம்பி ஆறு இன்றிப் பொருள் வெஃகி அகன்ற நாட்டு உறைபவர் என நீ தெருமரல் வாழி தோழி நம் காதலர் பொரு முரண் யானையர் போர் மலைந்து எழுந்தவர் செரு மேம்பட்ட வென்றியர் வரும் என வந்தன்று அவர் வாய்மொழித் தூதே #38 கலித்தொகை 27 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ ஈதலில் குறை காட்டாது அறன் அறிந்து ஒழுகிய தீதிலான் செல்வம் போல் தீம் கரை மரம் நந்தப் பேதுறு மட மொழிப் பிணை எழில் மான் நோக்கின் மாதரார் முறுவல் போல் மண மௌவல் முகை ஊழ்ப்பக் காதலர்ப் புணர்ந்தவர் கதுப்புப் போல் கழல்குபு தாதொடும் தளிரொடும் தண் அறல் தகை பெறப் பேதையோன் வினை வாங்க பீடு இலா அரசன் நாட்டு ஏதிலான் படை போல இறுத்தந்தது இளவேனில் நிலம் பூத்த மரம் மிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள நலம் பூத்த நிறம் சாய நம்மையோ மறந்தைக்க கலம் பூத்த அணியவர் காரிகை மகிழ் செய்யப் புலம் பூத்து புகழ்பு ஆனாக் கூடலும் உள்ளார்-கொல் கல் மிசை மயில் ஆலக் கறங்கி ஊர் அலர் தூற்றத் தொல் நலம் நனி சாய நம்மையோ மறந்தைக்க ஒன்னாதார்க் கடந்து அடூஉம் உரவு நீர் மா கொன்ற வென் வேலான் குன்றின் மேல் விளையாட்டும் விரும்பார்-கொல் மை எழில் மலர் உண்கண் மரு ஊட்டி மகிழ் கொள்ளப் பொய்யினால் புரிவு உண்ட நம்மையோ மறந்தைக்க தைஇய மகளிர் தம் ஆயமோடு அமர்ந்து ஆடும் வையை வார் உயர் எக்கர் நுகர்ச்சியும் உள்ளார்-கொல் என ஆங்கு நோய் மலி நெஞ்சமோடு இனையல் தோழி நாம் இல்லாப் புலம்பு ஆயின் நடுக்கம் செய் பொழுது ஆயின் காமவேள் விழவு ஆயின் கலங்குவள் பெரிது என ஏமுறு கடும் திண் தேர் கடவி நாம் அமர் காதலர் துணை தந்தார் விரைந்தே #39 கலித்தொகை 28 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடல் சால் சிறப்பின் சினையவும் சுனையவும் நாடினர் கொயல் வேண்டா நயந்து தாம் கொடுப்ப போல் தோடு அவிழ் கமழ் கண்ணி தையுபு புனைவார் கண் தோடு உறத் தாழ்ந்து துறைதுறை கவின் பெறச் செய்யவள் அணி அகலத்து ஆரமொடு அணி கொள்பு தொய்யகம் தாழ்ந்த கதுப்புப் போல் துவர் மணல் வையை வார் அவிர் அறல் இடை போழும் பொழுதினான் விரிந்து ஆனா மலர் ஆயின் விளித்து ஆலும் குயில் ஆயின் பிரிந்து உள்ளார் அவர் ஆயின் பேதுறூஉம் பொழுது ஆயின் அரும் படர் அவல நோய் ஆற்றுவள் என்னாது வருந்த நோய் மிகும் ஆயின் வணங்கு இறை அளி என்னோ புதலவை மலர் ஆயின் பொங்கர் இன வண்டு ஆயின் அயலதை அலர் ஆயின் அகன்று உள்ளார் அவர் ஆயின் மதலை இல் நெஞ்சொடு மதன் இலள் என்னாது நுதல் ஊரும் பசப்பு ஆயின் நுணங்கு_இறை அளி என்னோ தோயின அறல் ஆயின் சுரும்பு ஆர்க்கும் சினை ஆயின் மாவின தளிர் ஆயின் மறந்து உள்ளார் அவர் ஆயின் பூ எழில் இழந்த கண் புலம்பு கொண்டு அமையாது பாயல் நோய் மிகும் ஆயின் பைம்_தொடி அளி என்னோ என ஆங்கு ஆய்_இழாய் ஆங்கனம் உரையாதி சேயார்க்கு நாம் தூது மொழிந்தனம் விடல் வேண்டா நம்மினும் தாம் பிரிந்து உறைதல் ஆற்றலர் பரிந்து எவன் செய்தி வருகுவர் விரைந்தே #40 கலித்தொகை 29 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ தொல் எழில் வரைத்து அன்றி வயவு நோய் நலிதலின் அல்லாந்தார் அலவுற ஈன்றவள் கிடக்கை போல் பல் பயம் உதவிய பசுமை தீர் அகல் ஞாலம் புல்லிய புனிறு ஒரீஇ புது நலம் ஏர்தர வளையவர் வண்டல் போல் வார் மணல் வடுக் கொள இளையவர் ஐம்பால் போல் எக்கர் போழ்ந்து அறல் வார மா ஈன்ற தளிர் மிசை மாயவள் திதலை போல் ஆய் இதழ்ப் பல் மலர் ஐய கொங்கு உறைத்தர மே தக இளவேனில் இறுத்தந்த பொழுதின்-கண் சேயார் கண் சென்ற என் நெஞ்சினைச் சில்_மொழி நீ கூறும் வரைத்து அன்றி நிறுப்பென்-மன் நிறை நீவி வாய் விரிபு பனி ஏற்ற விரவுப் பன் மலர் தீண்டி நோய் சேர்ந்த வைகலான் வாடை வந்து அலைத்தரூஉம் போழ்து உள்ளார் துறந்தார்-கண் புரி வாடும் கொள்கையை சூழ்பு ஆங்கே சுடர்_இழாய் கரப்பென்-மன் கை நீவி வீழ் கதிர் விடுத்த பூ விருந்து உண்ணும் இரும் தும்பி யாழ் கொண்ட இமிழ் இசை இயல் மாலை அலைத்தரூஉம் தொடி நிலை நெகிழ்த்தார்-கண் தோயும் என் ஆர் உயிர் வடு நீங்கு கிளவியாய் வலிப்பென்-மன் வலிப்பவும் நெடு நிலா திறந்து உண்ண நிரை இதழ் வாய் விட்ட கடி மலர் கமழ் நாற்றம் கங்குல் வந்து அலைத்தரூஉம் என ஆங்கு வருந்தினை வதிந்த நின் வளை நீங்கச் சேய் நாட்டுப் பிரிந்து செய் பொருட்பிணி பின் நோக்காது ஏகி நம் அரும் துயர் களைஞர் வந்தனர் திருந்து எயிறு இலங்கு நின் தே மொழி படர்ந்தே #41 கலித்தொகை 30 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ அரும் தவம் ஆற்றியார் நுகர்ச்சி போல் அணி கொள விரிந்து ஆனா சினை-தொறூஉம் வேண்டும் தாது அமர்ந்து ஆடி புரிந்து ஆர்க்கும் வண்டொடு புலம்பு தீர்ந்து எவ்வாயும் இரும் தும்பி இறை கொள எதிரிய வேனிலான் துயில் இன்றி யாம் நீந்தத் தொழுவை அம் புனல் ஆடி மயில் இயலார் மரு உண்டு மறந்து அமைகுவான்-மன்னோ வெயில் ஒளி அறியாத விரி மலர் தண் காவில் குயில் ஆலும் பொழுது எனக் கூறுநர் உளர் ஆயின் பானாள் யாம் படர் கூரப் பணை எழில் அணை மென் தோள் மான் நோக்கினவரோடு மறந்து அமைகுவான்-மன்னோ ஆனாச் சீர் கூடலுள் அரும்பு அவிழ் நறு முல்லை தேன் ஆர்க்கும் பொழுது எனத் தெளிக்குநர் உளர் ஆயின் உறல் யாம் ஒளி வாட உயர்ந்தவன் விழவினுள் விறல் இழையவரோடு விளையாடுவான்-மன்னோ பெறல் அரும் பொழுதோடு பிறங்கு இணர்த் துருத்தி சூழ்ந்து அறல் வாரும் வையை என்று அறையுநர் உளர் ஆயின் என ஆங்கு தணியா நோய் உழந்து ஆனாத் தகையவள் தகைபெற அணி கிளர் நெடும் திண் தேர் அயர்-மதி பணிபு நின் காமர் கழல் அடி சேரா நாமம் சால் தெவ்வரின் நடுங்கினள் பெரிதே #42 கலித்தொகை 31 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ கடும் புனல் கால் பட்டுக் கலுழ் தேறிக் கவின் பெற நெடும் கயத்து அயல்அயல் அயிர் தோன்ற அ மணல் வடுத்து ஊர வரிப்ப போல் ஈங்கை வாடு உதிர்பு உகப் பிரிந்தவர் நுதல் போலப் பீர் வீயக் காதலர் புணர்ந்தவர் முகம் போலப் பொய்கை பூப் புதிது ஈன மெய் கூர்ந்த பனியொடு மேல் நின்ற வாடையால் கையாறு கடைக்கூட்டக் கலக்குறூஉம் பொழுது-மன் பொய்யேம் என்று ஆய்_இழாய் புணர்ந்தவர் உரைத்ததை மயங்கு அமர் மாறு அட்டு மண் வௌவி வருபவர் தயங்கிய களிற்றின் மேல் தகை காண விடுவதோ பயம் கெழு பல் கதிர் பால் போலும் பொழுதொடு வயங்கு இழை தண்ணென வந்த இவ் அசை வாடை தாள் வலம் பட வென்று தகை நல் மா மேல்கொண்டு வாள் வென்று வருபவர் வனப்பு ஆர விடுவதோ நீள் கழை நிவந்த பூ நிறம் வாடத் தூற்றுபு தோள் அதிர்பு அகம் சேர துவற்றும் இச் சில் மழை பகை வென்று திறை கொண்ட பாய் திண் தேர் மிசையவர் வகை கொண்ட செம்மல் நாம் வனப்பு ஆர விடுவதோ புகை எனப் புதல் சூழ்ந்து பூ அம் கள் பொதி செய்யா முகை வெண் பல் நுதி பொர முற்றிய கடும் பனி என ஆங்கு வாளாதி வயங்கு_இழாய் வருந்துவள் இவள் என நாள் வரை நிறுத்துத் தாம் சொல்லிய பொய் அன்றி மீளி வேல் தானையர் புகுதந்தார் நீள் உயர் கூடல் நெடும் கொடி எழவே #43 கலித்தொகை 32 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ எஃகு இடை தொட்ட கார்க் கவின் பெற்ற ஐம்பால் போல் மை அற விளங்கிய துவர் மணல் அது அது ஐதாக நெறித்து அன்ன அறல் அவிர் நீள் ஐம்பால் அணி நகை இடையிட்ட ஈகை அம் கண்ணி போல் பிணி நெகிழ் அலர் வேங்கை விரிந்த பூ வெறி கொளத் துணி நீரால் தூ மதி நாளால் அணிபெற ஈன்றவள் திதலை போல் ஈர் பெய்யும் தளிரொடும் ஆன்றவர் அடக்கம் போல் அலர் செல்லாச் சினையொடும் வல்லவர் யாழ் போல வண்டு ஆர்க்கும் புதலொடும் நல்லவர் நுடக்கம் போல் நயம் வந்த கொம்பொடும் உணர்ந்தவர் ஈகை போல் இணர் ஊழ்த்த மரத்தொடும் புணர்ந்தவர் முயக்கம் போல் புரிவுற்ற கொடியொடும் நயந்தார்க்கோ நல்லை-மன் இளவேனில் எம் போல பசந்தவர் பைதல் நோய் பகை எனத் தணித்து நம் இன் உயிர் செய்யும் மருந்து ஆகிப் பின்னிய காதலர் எயிறு ஏய்க்கும் தண் அருவி நறு முல்லைப் போது ஆரக் கொள்ளும் கமழ் குரற்கு என்னும் தூது வந்தன்றே தோழி துயர் அறு கிளவியோடு அயர்ந்தீகம் விருந்தே #44 கலித்தொகை 33 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ வீறு சால் ஞாலத்து வியல் அணி காணிய யாறு கண் விழித்த போல் கயம் நந்திக் கவின் பெற மணி புரை வயங்கலுள் துப்பு எறிந்தவை போலப் பிணி விடு முருக்கு இதழ் அணி கயத்து உதிர்ந்து உகத் துணி கய நிழல் நோக்கித் துதைபு உடன் வண்டு ஆர்ப்ப மணி போல அரும்பு ஊழ்த்து மரம் எல்லாம் மலர் வேயக் காதலர் புணர்ந்தவர் கவவுக் கை நெகிழாது தாது அவிழ் வேனிலோ வந்தன்று வாரார் நம் போது எழில் உண்கண் புலம்ப நீத்தவர் எரி உரு உறழ இலவம் மலர பொரி உரு உறழப் புன்கு பூ உதிரப் புது மலர் கோங்கம் பொன் எனத் தாது ஊழ்ப்பத் தமியார்ப் புறத்து எறிந்து எள்ளி முனிய வந்து ஆர்ப்பது போலும் பொழுது என் அணி நலம் போர்ப்பது போலும் பசப்பு நொந்து நகுவன போல் நந்தின கொம்பு நைந்து உள்ளி உகுவது போலும் என் நெஞ்சு எள்ளித் தொகுபு உடன் ஆடுவ போலும் மயில் கையில் உகுவன போலும் வளை என் கண் போல் இகுபு அறல் வாரும் பருவத்தும் வாரார் மிகுவது போலும் இ நோய் நரம்பின் தீம் குரல் நிறுக்கும் குழல் போல் இரங்கு இசை மிஞிறொடு தும்பி தாது ஊதத் தூது அவர் விடுதரார் துறப்பார்-கொல் நோ தக இரும் குயில் ஆலும் அரோ என ஆங்கு புரிந்து நீ எள்ளும் குயிலையும் அவரையும் புலவாதி நீல் இதழ் உண்கணாய் நெறி கூந்தல் பிணி விட நாள் வரை நிறுத்துத் தாம் சொல்லிய பொய் அன்றி மாலை தாழ் வியன் மார்பர் துனைதந்தார் கால் உறழ் கடும் திண் தேர் கடவினர் விரைந்தே #45 கலித்தொகை 34 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ மன் உயிர் ஏமுற மலர் ஞாலம் புரவு ஈன்று பல் நீரால் பாய் புனல் பரந்து ஊட்டி இறந்த பின் சில் நீரால் அறல் வார அகல் யாறு கவின் பெற முன் ஒன்று தமக்கு ஆற்றி முயன்றவர் இறுதிக்-கண் பின் ஒன்று பெயர்த்து ஆற்றும் பீடு உடையாளர் போல் பல் மலர் சினை உகச் சுரும்பு இமிர்ந்து வண்டு ஆர்ப்ப இன் அமர் இளவேனில் இறுத்தந்த பொழுதினான் விரி காஞ்சித் தாது ஆடி இரும் குயில் விளிப்பவும் பிரிவு அஞ்சாதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் கரி பொய்த்தான் கீழ் இருந்த மரம் போலக் கவின் வாடி எரி பொத்தி என் நெஞ்சம் சுடும் ஆயின் எவன் செய்கோ பொறை தளர் கொம்பின் மேல் சிதர் இனம் இறைகொள நிறை தளராதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் முறை தளர்ந்த மன்னவன் கீழ்க் குடி போலக் கலங்குபு பொறை தளர்பு பனி வாரும் கண் ஆயின் எவன் செய்கோ தளை அவிழ் பூம் சினைச் சுரும்பு யாழ் போல இசைப்பவும் கொளை தளராதவர் தீமை மறைப்பென்-மன் மறைப்பவும் கிளை அழிய வாழ்பவன் ஆக்கம் போல் புல்லென்று வளை ஆனா நெகிழ்பு ஓடும் தோள் ஆயின் எவன் செய்கோ என ஆங்கு நின்னுள் நோய் நீ உரைத்து அலமரல் எல்லா நாம் எண்ணிய நாள் வரை இறவாது காதலர் பண்ணிய மாவினர் புகுதந்தார் கண் உறு பூசல் கை களைந்து ஆங்கே #46 கலித்தொகை 35 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ மடியிலான் செல்வம் போல் மரன் நந்த அச் செல்வம் படி உண்பார் நுகர்ச்சி போல் பல் சினை மிஞிறு ஆர்ப்ப மாயவள் மேனி போல் தளிர் ஈன அ மேனித் தாய சுணங்கு போல் தளிர் மிசைத் தாது உக மலர் தாய பொழில் நண்ணி மணி நீர கயம் நிற்ப அலர் தாய துறை நண்ணி அயிர் வரித்து அறல் வார நனி எள்ளும் குயில் நோக்கி இனைபு உகு நெஞ்சத்தால் துறந்து உள்ளார் அவர் எனத் துனி கொள்ளல் எல்லா நீ வண்ண வண்டு இமிர்ந்து ஆனா வையை வார் உயர் எக்கர்த் தண் அருவி நறு முல்லைத் தாது உண்ணும் பொழுது அன்றோ கண் நிலா நீர் மல்கக் கவவி நாம் விடுத்தக்கால் ஒண்_நுதால் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை மல்கிய துருத்தியுள் மகிழ் துணை புணர்ந்து அவர் வில்லவன் விழவினுள் விளையாடும் பொழுது அன்றோ வலன் ஆக வினை என்று வணங்கி நாம் விடுத்தக்கால் ஒளி_இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை நிலன் நாவில் திரிதரூஉம் நீள் மாடக் கூடலார் புலன் நாவில் பிறந்த சொல் புதிது உண்ணும் பொழுது அன்றோ பல நாடு நெஞ்சினேம் பரிந்து நாம் விடுத்தக்கால் சுடர்_இழாய் நமக்கு அவர் வருதும் என்று உரைத்ததை என ஆங்கு உள்ளு-தொறு உடையும் நின் உயவு நோய்க்கு உயிர்ப்பு ஆகி எள் அறு காதலர் இயைதந்தார் புள் இயல் காமர் கடும் திண் தேர் பொருப்பன் வாய்மை அன்ன வைகலொடு புணர்ந்தே #47 கலித்தொகை 36 - (பெருங்கொடுங்கோன்)பாலை பாடிய பெருங்கடுங்கோ கொடு மிடல் நாஞ்சிலான் தார் போல் மராத்து நெடு மிசைச் சூழும் மயில் ஆலும் சீர வடி நரம்பு இசைப்ப போல் வண்டொடு சுரும்பு ஆர்ப்பத் தொடி மகள் முரற்சி போல் தும்பி வந்து இமிர்தர இயன் எழீஇயவை போல எவ்வாயும் இம்மென கயன் அணி பொதும்பருள் கடி மலர்த் தேன் ஊத மலர் ஆய்ந்து வயின்வயின் விளிப்ப போல் மரன் ஊழ்ப்ப இரும் குயில் ஆலப் பெரும் துறை கவின் பெறக் குழவி வேனில் விழவு எதிர்கொள்ளும் சீரார் செவ்வியும் வந்தன்று வாரார் தோழி நம் காதலோரே பாஅய்ப் பாஅய்ப் பசந்தன்று நுதல் சாஅய்ச் சாஅய் நெகிழ்ந்தன தோள் நனி அறல் வாரும் பொழுது என வெய்ய பனி அறல் வாரும் என் கண் மலையிடைப் போயினர் வரல் நசைஇ நோயொடு முலையிடைக் கனலும் என் நெஞ்சு காதலின் பிரிந்தார்-கொல்லோ வறிது ஓர் தூதொடு மறந்தார்-கொல்லோ நோதக காதலர் காதலும் காண்பாம்-கொல்லோ துறந்தவர் ஆண்டாண்டு உறைகுவர்-கொல்லோ யாவது நீள் இடைப் படுதலும் ஒல்லும் யாழ நின் வாள் இடைப்படுத்த வயங்கு ஈர் ஓதி நாள் அணி சிதைத்தலும் உண்டு என நய வந்து கேள்வி அந்தணர் கடவும் வேள்வி ஆவியின் உயிர்க்கும் என் நெஞ்சே #48 குறுந்தொகை 16 பாலை - பாலை பாடிய பெருங்கடுக்கோ உள்ளார்-கொல்லோ தோழி கள்வர் பொன் புனை பகழி செப்பம் கொண்மார் உகிர் நுதி புரட்டும் ஓசை போலச் செம் கால் பல்லி தன் துணை பயிரும் அம் கால் கள்ளி அம் காடு இறந்தோரே #49 குறுந்தொகை 37 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர் பிடி பசி களைஇய பெரும் கை வேழம் மென் சினை யாஅம் பொளிக்கும் அன்பின தோழி அவர் சென்ற ஆறே #50 குறுந்தொகை 124 பாலை - பாலை பாடிய பெருங்கடுக்கோ உமணர் சேர்ந்து கழிந்த மருங்கின் அகன் தலை ஊர் பாழ்த்து அன்ன ஓமை அம் பெரும் காடு இன்னா என்றிர் ஆயின் இனியவோ பெரும தமியோர்க்கு மனையே #51 குறுந்தொகை 135 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ வினையே ஆடவர்க்கு உயிரே வாள் நுதல் மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என நமக்கு உரைத்தோரும் தாமே அழாஅல் தோழி அழுங்குவர் செலவே #52 குறுந்தொகை 137 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ மெல் இயல் அரிவை நின் நல் அகம் புலம்ப நின் துறந்து அமைகுவென் ஆயின் என் துறந்து இரவலர் வாரா வைகல் பல ஆகுக யான் செலவுறு தகவே #53 குறுந்தொகை 209 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ சுரம் தலைப்பட்ட நெல்லி அம் பசும் காய் மறப் புலிக் குருளை கோள் இடம் கரக்கும் இறப்பு அரும் குன்றம் இறந்த யாமே குறு நடைப் புள் உள்ளலமே நெறி முதல் கடற்றில் கலித்த முடச் சினை வெட்சித் தளை அவிழ் பல் போது கமழும் மை இரும் கூந்தல் மடந்தை நட்பே #54 குறுந்தொகை 231 மருதம் - பாலை பாடிய பெருங்கடுங்கோ ஓர் ஊர் வாழினும் சேரி வாரார் சேரி வரினும் ஆர முயங்கார் ஏதிலாளர் சுடலை போலக் காணாக் கழிப-மன்னே நாண் அட்டு நல் அறிவு இழந்த காமம் வில் உமிழ் கணையின் சென்று சேண் படவே #55 குறுந்தொகை 262 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ ஊஉர் அலர் எழச் சேரி கல்லென ஆனாது அலைக்கும் அறன் இல் அன்னை தானே இருக்க தன் மனை யானே நெல்லி தின்ற முள் எயிறு தயங்க உணல் ஆய்ந்திசினால் அவரொடு சேய் நாட்டு விண் தொட நிவந்த விலங்கு மலைக் கவாஅன் கரும்பு நடு பாத்தி அன்ன பெரும் களிற்று அடிவழி நிலைஇய நீரே #56 குறுந்தொகை 283 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ உள்ளது சிதைப்போர் உளர் எனப்படாஅர் இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு எனச் சொல்லிய வன்மை தெளியக் காட்டிச் சென்றனர் வாழி தோழி என்றும் கூற்றத்து அன்ன கொலை வேல் மறவர் ஆற்று இருந்து அல்கி வழங்குநர்ச் செகுத்த படு முடை பருந்து பார்த்து இருக்கும் நெடு மூது இடைய நீர் இல் ஆறே #57 குறுந்தொகை 398 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ தேற்றாம் அன்றே தோழி தண்ணெனத் தூற்றும் திவலைத் துயர் கூர் காலைக் கயல் ஏர் உண்கண் கனம் குழை மகளிர் கையுறை ஆக நெய் பெய்து மாட்டிய சுடர் துயர் எடுப்பும் புன்கண் மாலை அரும் பெறல் காதலர் வந்து என விருந்து அயர்பு மெய்மலி உவகையின் எழுதரு கண் கலிழ் உகு பனி அரக்குவோரே #58 நற்றிணை 9 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ அழிவு இலர் முயலும் ஆர்வ மாக்கள் வழிபடு தெய்வம் கண் கண்டு ஆஅங்கு அலமரல் வருத்தம் தீர யாழ நின் நல மென் பணை தோள் எய்தினம் ஆகலின் பொரிப் பூம் புன்கின் அழல் தகை ஒண் முறி சுணங்கு அணி வன முலை அணங்கு கொளத் திமிரி நிழல் காண்-தோறும் நெடிய வைகி மணல் காண்-தோறும் வண்டல் தைஇ வருந்தாது ஏகு-மதி வால் எயிற்றோயே மா நனை கொழுதி மகிழ் குயில் ஆலும் நறும் தண் பொழில கானம் குறும் பல் ஊர யாம் செல்லும் ஆறே #59 நற்றிணை 48 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ அன்றை அனைய ஆகி இன்றும் எம் கண் உள போலச் சுழலும் மாதோ புல் இதழ்க் கோங்கின் மெல் இதழ்க் குடைப் பூ வைகுறுமீனின் நினையத் தோன்றி புறவு அணி கொண்ட பூ நாறு கடத்திடைக் கிடின் என இடிக்கும் கோல் தொடி மறவர் வடி நவில் அம்பின் வினையர் அஞ்சாது அமரிடை உறுதர நீக்கி நீர் எமரிடை உறுதர ஒளித்த காடே #60 நற்றிணை 118 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ அடைகரை மாஅத்து அலங்கு சினை பொலியத் தளிர் கவின் எய்திய தண் நறும் பொதும்பில் சேவலொடு கெழீஇய செம் கண் இரும் குயில் புகன்று எதிர் ஆலும் பூ மலி காலையும் அகன்றோர் மன்ற நம் மறந்திசினோர் என இணர் உறுபு உடைவதன்தலையும் புணர் வினை ஓவ_மாக்கள் ஒள் அரக்கு ஊட்டிய துகிலிகை அன்ன துய்த் தலைப் பாதிரி வால் இதழ் அலரி வண்டு பட ஏந்திப் புது மலர் தெருவு-தொறு நுவலும் நொதுமலாட்டிக்கு நோம் என் நெஞ்சே #61 நற்றிணை 202 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ புலி பொரச் சிவந்த புலால் அம் செம் கோட்டு ஒலி பல் முத்தம் ஆர்ப்ப வலி சிறந்து வன் சுவல் பராரை முருக்கிக் கன்றொடு மடப் பிடி தழீஇய தடக் கை வேழம் தேன் செய் பெரும் கிளை இரிய வேங்கைப் பொன் புரை கவளம் புறந்தருபு ஊட்டும் மா மலை விடரகம் கவைஇக் காண்வர கண்டிசின் வாழியோ குறுமகள் நுந்தை அறு_மீன் பயந்த அறம் செய் திங்கள் செல் சுடர் நெடும் கொடி போலப் பல் பூம் கோங்கம் அணிந்த காடே #62 நற்றிணை 224 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ அன்பினர் மன்னும் பெரியர் அதன்தலை பின்பனி அமையம் வரும் என முன்பனிக் கொழுந்து முந்துறீஇக் குரவு அரும்பினவே புணர்ந்தீர் புணர்-மினோ என்ன இணர் மிசைச் செம் கண் இரும் குயில் எதிர் குரல் பயிற்றும் இன்ப வேனிலும் வந்தன்று நம்-வயின் பிரியலம் என்று தெளித்தோர் தேஎத்து இனி எவன் மொழிகோ யானே கயன் அறக் கண் அழிந்து உலறிய பல் மர நெடு நெறி வில் மூசு கவலை விலங்கிய வெம் முனை அரும் சுரம் முன்னியோர்க்கே #63 நற்றிணை 256 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ நீயே பாடல் சான்ற பழி தபு சீறடிப் அல்கு பெரு நலத்து அமர்த்த கண்ணை காடே நிழல் கவின் இழந்த அழல் கவர் மரத்த புலம்பு வீற்றிருந்து நலம் சிதைந்தனவே இ நிலை தவிர்ந்தனம் செலவே வை நுதிக் களவுடன் கமழப் பிடவுத் தளை அவிழக் கார் பெயல் செய்த காமர் காலை மடப் பிணை தழீஇய மா எருத்து இரலை காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த கண் கவர் வரி நிழல் வதியும் தண் படு கானமும் தவிர்ந்தனம் செலவே #64 நற்றிணை 318 பாலை - பாலை பாடிய பெரும் கடுங்கோ நினைத்தலும் நினைதிரோ ஐய அன்று நாம் பணைத் தாள் ஓமைப் படு சினை பயந்த பொருந்தாப் புகர் நிழல் இருந்தனெம் ஆக நடுக்கம் செய்யாது நண்ணுவழித் தோன்றி ஒடித்து மிசைக் கொண்ட ஓங்கு மருப்பு யானை பொறிபடு தடக் கை சுருக்கிப் பிறிது ஓர் ஆறு இடையிட்ட அளவைக்கு வேறு உணர்ந்து என்றூழ் விடரகம் சிலம்பப் புன் தலை மடப் பிடி புலம்பிய குரலே #65 நற்றிணை 337 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ உலகம் படைத்த காலைத் தலைவ மறந்தனர்-கொல்லோ சிறந்திசினோரே முதிரா வேனில் எதிரிய அதிரல் பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர் நறு மோரோடமொடு உடன் எறிந்து அடைச்சிய செப்பு இடந்து அன்ன நாற்றம் தொக்கு உடன் அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம்பால் தாழ் நறும் கதுப்பில் பையென முள்கும் அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே #66 நற்றிணை 384 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ பைம் புறப் புறவின் செம் கால் சேவல் களரி ஓங்கிய கவை முடக் கள்ளி முளரி அம் குடம்பை ஈன்று இளைப்பட்ட உயவு நடைப் பேடை உணீஇய மன்னர் முனை கவர் முது பாழ் உகு நெல் பெறூஉம் அரண் இல் சேய் நாட்டு அதரிடை மலர்ந்த நல் நாள் வேங்கைப் பொன் மருள் புதுப் பூப் பரந்தன நடக்க யாம் கண்டனம்-மாதோ காண் இனி வாழி என் நெஞ்சே நாண் விட்டு அரும் துயர் உழந்த காலை மருந்து எனப்படூஉம் மடவோளையே #67 நற்றிணை 391 பாலை - பாலை பாடிய பெருங்கடுங்கோ ஆழல் மடந்தை அழுங்குவர் செலவே புலிப் பொறி அன்ன புள்ளி அம் பொதும்பின் பனிப் பவர் மேய்ந்த மா இரு மருப்பின் மலர் தலைக் காரான் அகற்றிய தண்ணடை ஒண் தொடி மகளிர் இழை அணிக் கூட்டும் பொன் படு கொண்கான நன்னன் நல் நாட்டு ஏழில் குன்றம் பெறினும் பொருள்-வயின் யாரோ பிரிகிற்பவரே குவளை நீர் வார் நிகர் மலர் அன்ன நின் பேர் அமர் மழைக் கண் தெண் பனி கொளவே #68 புறநானூறு 282 - பாலை பாடிய பெருங்கடுங்கோ எஃகு உளம் கழிய இரு நில மருங்கின் அரும் கடன் இறுத்த பெருஞ்செயாளனை யாண்டு உளனோ என வினவுதி ஆயின் வரு படை தாங்கிய கிளர் தார் அகலம் அரும் கடன் இறுமார் வயவர் எறிய உடம்பும் தோன்றா உயிர் கெட்டன்றே மலையுநர் மடங்கி மாறு எதிர் கழியத் அலகை போகிச் சிதைந்து வேறு ஆகிய பலகை அல்லது களத்து ஒழியாதே சேண் விளங்கு நல் இசை நிறீஇ நா நவில் புலவர் வாய் உளானே &316 - பாவைக் கொட்டிலார் #1 அகநானூறு 336 மருதம் - பாவைக் கொட்டிலார் குழல் கால் சேம்பின் கொழு மடல் அகல் இலைப் பாசிப் பரப்பில் பறழொடு வதிந்த உண்ணாப் பிணவின் உயக்கம் சொலிய நாள்_இரை தரீஇய எழுந்த நீர் நாய் வாளையொடு உழப்பத் துறை கலுழ்ந்தமையின் தெண் கள் தேறல் மாந்தி மகளிர் நுண் செயல் அம் குடம் இரீஇப் பண்பின் மகிழ்நன் பரத்தைமை பாடி அவிழ் இணர்க் காஞ்சி நீழல் குரவை அயரும் தீம் பெரும் பொய்கைத் துறை கேழ் ஊரன் தேர் தர வந்த நேர் இழை மகளிர் ஏசுப என்ப என் நலனே அதுவே பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக் கொல் களிற்று யானை நல்கல் மாறே தாமும் பிறரும் உளர் போல் சேறல் முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின் யான் அவண் வாராமாறே வரினே வான் இடை சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல என்னொடு திரியான் ஆயின் வென் வேல் மாரி அம்பின் மழைத் தோல் சோழர் வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை ஆரியர் படையின் உடைக என் நேர் இறை முன்கை வீங்கிய வளையே &317 - பிசிராந்தையார் #1 அகநானூறு 308 குறிஞ்சி - பிசிராந்தையார் உழுவையொடு உழந்த உயங்கு நடை ஒருத்தல் நெடு வகிர் விழுப்புண் கழாஅக் கங்குல் ஆலி அழி துளி பொழிந்த வைகறை வால் வெள் அருவிப் புனல் மலிந்து ஒழுகலின் இலங்கு மலை புதைய வெண் மழை கவைஇக் கலம் சுடு புகையின் தோன்றும் நாட இரவின் வருதல் எவனோ பகல் வரின் தொலையா வேலின் வண் மகிழ் எந்தை களிறு அணந்து எய்தாக் கல் முகை இதணத்துக் சிறுதினைப் படு கிளி எம்மொடு ஓப்பி மல்லல் அறைய மலிர் சுனைக் குவளை தேம் பாய் ஒண் பூ நறும் பல அடைச்சிய கூந்தல் மெல் அணை துஞ்சிப் பொழுது படக் காவலர்க் கரந்து கடி புனம் துழைஇய பெரும் களிற்று ஒருத்தலின் பெயர்குவை கரும் கோல் குறிஞ்சி நும் உறைவு இன் ஊர்க்கே #2 நற்றிணை 91 நெய்தல் - பிசிராந்தையார் நீ உணர்ந்தனையே தோழி வீ உகப் புன்னை பூத்த இன் நிழல் உயர் கரைப் பாடு இமிழ் பனிக் கடல் துழைஇப் பெடையோடு உடங்கு இரை தேரும் தடம் தாள் நாரை ஐய சிறு கண் செம் கடைச் சிறு மீன் மேக்கு உயர் சினையின் மீமிசைக் குடம்பைத் தாய்ப் பயிர் பிள்ளை வாய்ப் படச் சொரியும் கானல் அம் படப்பை ஆனா வண் மகிழ்ப் பெரு நல் ஈகை நம் சிறுகுடிப் பொலியப் புள் உயிர்க் கொட்பின் வள் உயிர் மணித் தார்க் கடு மாப் பூண்ட நெடும் தேர் நெடு_நீர் சேர்ப்பன் பகல் இவண் வரவே #3 புறநானூறு 67 - பிசிராந்தையார் **பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன் அன்னச் சேவல் அன்னச் சேவல் ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல் நாடு தலையளிக்கும் ஒண் முகம் போலக் கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும் மையல் மாலை யாம் கையறுபு இனையக் குமரி அம் பெரும் துறை அயிரை மாந்தி வடமலைப் பெயர்குவை ஆயின் இடையது சோழ நல் நாட்டுப் படினே கோழி உயர் நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ வாயில் விடாது கோயில் புக்கு எம் பெரும் கோக் கிள்ளி கேட்க இரும் பிசிர் ஆந்தை அடியுறை எனினே மாண்ட நின் இன்புறு பேடை அணியத் தன் நன்புறு நல் கலம் நல்குவன் நினக்கே #3 புறநானூறு 184 - பிசிராந்தையார் **பாடப்பட்டோன்: பாண்டியன் அறிவுடை நம்பி காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே மா நிறைவு இல்லதும் பல் நாட்கு ஆகும் நூறு செறு ஆயினும் தமித்துப் புக்கு உணினே வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும் அறிவு உடை வேந்தன் நெறி அறிந்து கொளினே கோடி யாத்து நாடு பெரிது நந்தும் மெல்லியன் கிழவன் ஆகி வைகலும் வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின் யானை புக்க புலம் போலத் தானும் உண்ணான் உலகமும் கெடுமே #3 புறநானூறு 191 - பிசிராந்தையர் யாண்டு பல ஆக நரை இல ஆகுதல் யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின் மாண்ட என் மனைவியோடு மக்களும் நிரம்பினர் யான் கண்டனையர் என் இளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை ஆன்று அவிந்து அடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே #3 புறநானூறு 212 - பிசிராந்தையார் **பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன் நும் கோ யார் என வினவின் எம் கோக் களமர்க்கு அரித்த விளையல் வெம் கள் யாமைப் புழுக்கின் காமம் வீட ஆரா ஆரல் கொழும் சூடு அம் கவுள் அடாஅ வைகு தொழில் மடியும் மடியா விழவின் யாணர் நல் நாட்டுள்ளும் பாணர் பைதல் சுற்றத்துப் பசிப் பகை ஆகிக் கோழியோனே கோப்பெருஞ்சோழன் பொத்து இல் நண்பின் பொத்தியொடு கெழீஇ வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே &318 - பிரமசாரி #1 நற்றிணை 34 குறிஞ்சி - பிரமசாரி கடவுள் கல் சுனை அடை இறந்து அவிழ்ந்த பறியாக் குவளை மலரொடு காந்தள் குருதி ஒண் பூ உரு கெழக் கட்டிப் பெரு வரை அடுக்கம் பொற்ப சூர்_மகள் அருவி இன்னியத்து ஆடும் நாடன் மார்பு தர வந்த படர் மலி அரு நோய் நின் அணங்கு அன்மை அறிந்தும் அண்ணாந்து கார் நறும் கடம்பின் கண்ணி சூடி வேலன் வேண்ட வெறி மனை வந்தோய் கடவுள் ஆயினும் ஆக மடவை மன்ற வாழிய முருகே &319 - பிரமனார் #1 புறநானூறு 357 - பிரமனார் குன்று தலைமணந்த மலை பிணித்து யாத்த மண் பொதுமை சுட்டிய மூவர் உலகமும் பொதுமை இன்றி ஆண்டிசினோர்க்கும் மாண்ட அன்றே ஆண்டுகள் துணையே வைத்தது அன்றே வெறுக்கை வித்தும் அற வினை அன்றே விழுத் துணை அத் துணைப் புணை கைவிட்டோர்க்கு அரிதே துணை அழத் தொக்கு உயிர் வௌவும் காலை இக் கரை நின்று இவர்ந்து உக் கரை கொளலே &320 - பிரான் சாத்தனார் #1 நற்றிணை 68 குறிஞ்சி - பிரான் சாத்தனார் விளையாடு ஆயமொடு ஓரை ஆடாது இளையோர் இல்லிடத்து இற்செறிந்து இருத்தல் அறனும் அன்றே ஆக்கமும் தேய்ம் எனக் குறு நுரை சுமந்து நறு மலர் உந்திப் பொங்கி வரு புது நீர் நெஞ்சு உண ஆடுகம் வல்லிதின் வணங்கிச் சொல்லுநர்ப் பெறினே செல்க என விடுநள்-மன்-கொல்லோ எல் உமிழ்ந்து உரவு உரும் உரறும் அரை இருள் நடுநாள் கொடி நுடங்கு இலங்கின மின்னி ஆடு மழை இறுத்தன்று அவர் கோடு உயர் குன்றே &321 - புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான் #1 நற்றிணை 294 குறிஞ்சி - புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர் கிழான் தீயும் வளியும் விசும்பு பயந்து ஆங்கு நோயும் இன்பமும் ஆகின்று-மாதோ மாயம் அன்று தோழி வேய் பயின்று எருவை நீடிய பெரு வரையகம்-தொறும் தொன்று உறை துப்பொடு முரண் மிகச் சினைஇக் கொன்ற யானைக் கோடு கண்டு அன்ன செம் புடைக் கொழு முகை அவிழ்ந்த காந்தள் சிலம்பு உடன் கமழும் சாரல் இலங்கு மலை நாடன் மலர்ந்த மார்பே &322 - புல்லாற்றூர் எயிற்றியனார் #1 புறநானூறு 213 - புல்லாற்றூர் எயிற்றியனார் **பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன் மண்டு அமர் அட்ட மதன் உடை நோன் தாள் வெண்குடை விளக்கும் விறல் கெழு வேந்தே பொங்கு நீர் உடுத்த இ மலர் தலை உலகத்து நின் தலை வந்த இருவரை நினைப்பின் தொன்று உறை துப்பின் நின் பகைஞரும் அல்லர் அமர் வெம் காட்சியொடு மாறு எதிர்பு எழுந்தவர் நினையும் காலை நீயும் மற்று அவர்க்கு அனையை அல்லை அடு_மான் தோன்றல் பரந்து படு நல் இசை எய்தி மற்று நீ உயர்ந்தோர் உலகம் எய்திப் பின்னும் ஒழித்த தாயம் அவர்க்கு உரித்து அன்றே அதனால் அன்னது ஆதலும் அறிவோய் நன்றும் இன்னும் கேள்-மதி இசை வெய்யோயே நின்ற துப்பொடு நின் குறித்து எழுந்த எண் இல் காட்சி இளையோர் தோற்பின் நின் பெரும் செல்வம் யார்க்கு எஞ்சுவையே அமர் வெம் செல்வ நீ அவர்க்கு உலையின் இகழுநர் உவப்பப் பழி எஞ்சுவையே அதனால் ஒழிக-தில் அத்தை நின் மறனே வல் விரைந்து எழு-மதி வாழ்க நின் உள்ளம் அழிந்தோர்க்கு ஏமம் ஆகும் நின் தாள் நிழல் மயங்காது செய்தல் வேண்டுமால் நன்றோ வானோர் அரும் பெறல் உலகத்து ஆன்றவர் விதும்புறு விருப்பொடு விருந்து எதிர்கொளற்கே &323 - பூங்கணுத்திரையார்(பூங்கண் உத்திரையார்) #1 குறுந்தொகை 48 பாலை - பூங்கணுத்திரையார் தாதின் செய்த தண் பனிப் பாவை காலை வருந்தும் கையாறு ஓம்பு என ஓரை ஆயம் கூறக் கேட்டும் இன்ன பண்பின் இனை பெரிது உழக்கும் நல்_நுதல் பசலை நீங்க அன்ன நசை ஆகு பண்பின் ஒரு சொல் இசையாது-கொல்லோ காதலர்-தமக்கே #2 குறுந்தொகை 171 மருதம் - பூங்கணுத்திரையார் காண் இனி வாழி தோழி யாணர்க் கடும் புனல் அடைகரை நெடும் கயத்து இட்ட மீன் வலை மா பட்டு ஆங்கு இது மற்று எவனோ நொதுமலர் தலையே #3 புறநானூறு 277 - பூங்கண் உத்திரையார் மீன் உண் கொக்கின் தூவி அன்ன வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன் களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை ஈன்ற ஞான்றினும் பெரிதே கண்ணீர் நோன் கழை துயல்வரும் வெதிரத்து வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே &324 - பூங்கண்ணனார் #1 குறுந்தொகை 253 பாலை - பூங்கண்ணனார் கேளார் ஆகுவர் தோழி கேட்பின் விழுமிது கழிவது ஆயினும் நெகிழ் நூல் பூச் சேர் அணையின் பெரும் கவின் தொலைந்த நின் நாள் துயர் கெடப் பின் நீடலர்-மாதோ ஒலி கழை நிவந்த ஓங்கு மலைச் சாரல் புலி புகா உறுத்த புலவு நாறு கல் அளை ஆறு செல் மாக்கள் சேக்கும் கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே &325 - பூதங்கண்ணனார் #1 நற்றிணை 140 குறிஞ்சி - பூதங்கண்ணனார் கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த சிறு கோல் இணர பெரும் தண் சாந்தம் வகை சேர் ஐம்பால் தகைபெற வாரிப் புலர்விடத்து உதிர்த்த துகள் படு கூழைப் பெரும் கண் ஆயம் உவப்பத் தந்தை நெடும் தேர் வழங்கும் நிலவு மணல் முற்றத்துப் பந்தொடு பெயரும் பரிவிலாட்டி அருளினும் அருளாள் ஆயினும் பெரிது அழிந்து பின்னிலை முனியல் மா நெஞ்சே என்னதூஉம் அரும் துயர் அவலம் தீர்க்கும் மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே &326 - பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு #1 புறநானூறு 246 - பூதப் பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு பல் சான்றீரே பல் சான்றீரே செல்க எனச் சொல்லாது ஒழிக என விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே அணில் வரிக் கொடும் காய் வாள் போழ்ந்திட்ட காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது அடையிடைக் கிடந்த கை பிழி பிண்டம் வெள்_எள் சாந்தொடு புளி பெய்து அட்ட வேளை வெந்தை வல்சி ஆகப் பரல் பெய் பள்ளிப் பாய் இன்று வதியும் உயவல் பெண்டிரேம் அல்லேம்-மாதோ பெரும் காட்டுப் பண்ணிய கரும் கோட்டு ஈமம் நுமக்கு அரிது ஆகுக-தில்ல எமக்கு எம் பெரும் தோள் கணவன் மாய்ந்து என அரும்பு அற வள் இதழ் அவிழ்ந்த தாமரை நள் இரும் பொய்கையும் தீயும் ஓர் அற்றே &327 - பூதம்புல்லனார் #1 குறுந்தொகை 190 முல்லை - பூதம்புல்லனார் நெறி இரும் கதுப்பொடு பெரும் தோள் நீவிச் செறி வளை நெகிழச் செய்பொருட்கு அகன்றோர் அறிவர்-கொல் வாழி தோழி பொறி வரி வெம் சின அரவின் பைம் தலை துமிய நரை உரும் உரரும் அரை இருள் நடுநாள் நல் ஏறு இயங்கு-தோறு இயம்பும் பல் ஆன் தொழுவத்து ஒரு மணிக் குரலே &328 - பூதனார் #1 நற்றிணை 29 பாலை - பூதனார் நின்ற வேனில் உலந்த காந்தள் அழல் அவிர் நீள் இடை நிழலிடம் பெறாஅது ஈன்று கான் மடிந்த பிணவுப் பசி கூர்ந்து என மான்ற மாலை வழங்குநர்ச் செகீஇய புலி பார்த்து உறையும் புல் அதர்ச் சிறு நெறி யாங்கு வல்லுநள்-கொல் தானே யான் தன் வனைந்து ஏந்து இள முலை நோவ-கொல் என நினைந்து கை நெகிழ்ந்த அனைத்தற்குத் தான் தன் பேர் அமர் மழைக் கண் ஈரிய கலுழ வெய்ய உயிர்க்கும் சாயல் மை ஈர் ஓதிப் பெரு மடத் தகையே &329 - பூத(த்)ன் தேவனார் #1 குறுந்தொகை 285 பாலை - பூதத் தேவனார் வைகா வைகல் வைகவும் வாரார் எல்லா எல்லை எல்லவும் தோன்றார் யாண்டு உளர்-கொல்லோ தோழி ஈண்டு இவர் சொல்லிய பருவமோ இதுவே பல் ஊழ் புன் புறப் பெடையொடு பயிரி இன் புறவு இமைக் கண் ஏது ஆகின்றோ ஞெமைத் தலை ஊன் நசைஇப் பருந்து இருந்து உகக்கும் வான் உயர் பிறங்கல் மலை இறந்தோரே #2 நற்றிணை 80 மருதம் - பூதன்தேவனார் மன்ற எருமை மலர் தலைக் காரான் இன் தீம் பால் பயம் கொள்மார் கன்று விட்டு ஊர் குறுமாக்கள் மேற்கொண்டு கழியும் பெரும் புலர் விடியலின் விரும்பிப் போத்தந்து தழையும் தாரும் தந்தனன் இவன் என இழை அணி ஆயமொடு தகு நாண் தடைஇத் தைஇத் திங்கள் தண் கயம் படியும் பெரும் தோள் குறுமகள் அல்லது மருந்து பிறிது இல்லை யான் உற்ற நோய்க்கே &330 - பெருங்கண்ணனார் #1 குறுந்தொகை 289 முல்லை - பெருங்கண்ணனார் வளர்பிறை போல வழிவழிப் பெருகி இறை வளை நெகிழ்த்த எவ்வ நோயொடு குழை பிசைந்தனையேம் ஆகிச் சாஅய் உழையர் அன்மையின் உழப்பது அன்றியும் மழையும் தோழி மான்று பட்டன்றே பட்ட மாரி படாஅக்-கண்ணும் அவர் திறத்து இரங்கும் நம்மினும் நம் திறத்து இரங்கும் இவ் அழுங்கல் ஊரே #2 குறுந்தொகை 310 நெய்தல் - பெருங்கண்ணனார் புள்ளும் புலம்பின பூவும் கூம்பின கானலும் புலம்பு நனி உடைத்தே வானமும் நம்மே போலும் மம்மர்த்து ஆகி எல்லை கழியப் புல்லென்றன்றே இன்னும் உளெனே தோழி இ நிலை தண்ணிய கமழும் ஞாழல் தண்ணம் துறைவற்கு உரைக்குநர்ப் பெறினே #3 நற்றிணை 137 பாலை - பெருங்கண்ணனார் தண்ணிய கமழும் தாழ் இரும் கூந்தல் தட மென் பணைத் தோள் மட நல்லோள்-வயின் பிரிய சூழ்ந்தனை ஆயின் அரியது ஒன்று எய்தினை வாழிய நெஞ்சே செவ் வரை அருவி ஆன்ற நீர் இல் நீள் இடைக் கயம் தலை மடப் பிடி உயங்கு பசி களைஇயர் பெரும் களிறு தொலைத்த முடத் தாள் ஓமை அரும் சுரம் செல்வோர்க்கு அல்கு நிழல் ஆகும் குன்ற வைப்பின் கானம் சென்று சேண் அகறல் வல்லிய நீயே &331 - பெருங்குன்றூர்கிழார் #1 அகநானூறு 8 குறிஞ்சி - பெருங்குன்றூர்கிழார் ஈயல் புற்றத்து ஈர்ம் புறத்து இறுத்த குரும்பி வல்சிப் பெரும் கை ஏற்றைக் தூங்கு தோல் துதிய வள் உகிர் கதுவலின் பாம்பு மதன் அழியும் பானாள் கங்குலும் அரிய அல்ல-மன் இகுளை பெரிய கேழல் அட்ட பேழ் வாய் ஏற்றைப் பலா அமல் அடுக்கம் புலாவ ஈர்க்கும் கழை நரல் சிலம்பின் ஆங்கண் வழையொடு வாழை ஓங்கிய தாழ் கண் அசும்பில் படு கடும் களிற்றின் வருத்தம் சொலிய பிடி படி முறுக்கிய பெரு மரப் பூசல் விண் தோய் விடரகத்து இயம்பும் அவர் நாட்டு எண் அரும் பிறங்கல் மான் அதர் மயங்காது மின்னு விடச் சிறிய ஒதுங்கி மென்மெல துளித் தலை தலைஇய மணி ஏர் ஐம்பால் சிறுபுறம் புதைய வாரிக் குரல் பிழியூஉ நெறி கெட விலங்கிய நீயிர் இச் சுரம் அறிதலும் அறிதிரோ என்னுநர்ப் பெறினே #2 குறுந்தொகை 338 குறிஞ்சி - பெருங்குன்றூர்க் கிழார் திரி மருப்பு இரலை அண்ணல் நல் ஏறு அரி மடப் பிணையோடு அல்கு நிழல் அசைஇ வீ ததை வியல் அரில் துஞ்சிப் பொழுது செலச் செழும் பயறு கறிக்கும் புன்கண் மாலை பின்பனிக் கடை நாள் தண் பனி அற்சிரம் வந்தன்று பெரு விறல் தேரே பணைத் தோள் விளங்கு நகர் அடங்கிய கற்பின் நலம் கேழ் அரிவை புலம்பு அசா விடவே #3 நற்றிணை 5 குறிஞ்சி - பெருங்குன்றூர்கிழார் நிலம் நீர் ஆர குன்றம் குழைப்ப அகல் வாய்ப் பைம் சுனைப் பயிர் கால்யாப்பக் குறவர் கொன்ற குறைக் கொடி நறைப் பவர் நறும் காழ் ஆரம் சுற்றுவன அகைப்பப் பெரும் பெயல் பொழிந்த தொழில எழிலி தெற்கு ஏர்பு இரங்கும் அற்சிரக் காலையும் அரிதே காதலர்ப் பிரிதல் இன்று செல் இளையர்த் தரூஉம் வாடையொடு மயங்கு இதழ் மழைக் கண் பயந்த தூதே #4 நற்றிணை 112 குறிஞ்சி - பெருங்குன்றூர் கிழார் விருந்து எவன் செய்கோ தோழி சாரல் அரும்பு அற மலர்ந்த கரும் கால் வேங்கைச் சுரும்பு இமிர் அடுக்கம் புலம்பக் களிறு அட்டு உரும்பு இல் உள்ளத்து அரிமா வழங்கும் பெரும் கல் நாடன் வரவு அறிந்து விரும்பி மாக் கடல் முகந்து மணி நிறத்து அருவித் தாழ் நீர் நனம் தலை அழுந்துபடப் பாஅய் மலை இமைப்பது போல் மின்னிச் சிலை வல் ஏற்றொடு செறிந்த இ மழைக்கே #5 நற்றிணை 119 குறிஞ்சி - பெருங்குன்றூர்கிழார் தினை உண் கேழல் இரியப் புனவன் சிறு பொறி மாட்டிய பெரும் கல் அடாஅர் ஒண் கேழ் வயப் புலி படூஉம் நாடன் ஆர் தர வந்தனன் ஆயினும் படப்பை இன் முசுப் பெரும் கலை நன் மேயல் ஆரும் பன் மலர்க் கான்யாற்று உம்பர்க் கரும் கலை கடும்பு ஆட்டு வருடையொடு தாவுவன உகளும் பெரு வரை நீழல் வருகுவன் குளவியொடு கூதளம் ததைந்த கண்ணியன் யாவதும் முயங்கல் பெறுகுவன் அல்லன் புலவி கொளீஇயர் தன் மலையினும் பெரிதே #6 நற்றிணை 347 குறிஞ்சி - பெருங்குன்றூர் கிழார் முழங்கு கடல் முகந்த கமம் சூல் மா மழை மாதிர நனம் தலை புதையப் பாஅய் ஓங்கு வரை மிளிர ஆட்டி பாம்பு எறிபு வான் புகு தலைய குன்றம் முற்றி அழி துளி தலைஇய பொழுதில் புலையன் பேழ் வாய்த் தண்ணுமை இடம் தொட்டு அன்ன அருவி இழிதரும் பெரு வரை நாடன் நீர் அன நிலையன் பேர் அன்பினன் எனப் பல் மாண் கூறும் பரிசிலர் நெடுமொழி வேனில் தேரையின் அளிய காண வீடுமோ தோழி என் நலனே ** பதிற்றுப்பத்து - ஒன்பதாம் பத்து - பெருங்குன்றூர்கிழார் **பாடப்பட்டோன்: இளஞ்சேரல் இரும்பொறை #7 பதிற்றுப்பத்து பாட்டு 81 - பெருங்குன்றூர்கிழார் **பெயர்: நிழல்விடு கட்டி **துறை: முல்லை **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகுவண்ணம் உலகம் புரக்கும் உரு கெழு சிறப்பின் வண்ணக் கருவிய வளம் கெழு கமம் சூல் அகல் இரு விசும்பின் அதிர் சினம் சிறந்து கடும் சிலை கழறி விசும்பு அடையூ நிவந்து காலை இசைக்கும் பொழுதொடு புலம்பு கொளக் களிறு பாய்ந்து இயலக் கடு மா தாங்க ஒளிறு கொடி நுடங்கத் தேர் திரிந்து கொட்ப அரசு புறத்து இறுப்பினும் அதிர்வு இலர் திரிந்து வாயில் கொள்ளா மைந்தினர் வயவர் மா இரும் கங்குலும் விழுத் தொடி சுடர்வரத் தோள் பிணி மீகையர் புகல் சிறந்து நாளும் முடிதல் வேட்கையர் நெடிய மொழியூஉக் கெடாஅ நல் இசைத் தம் குடி நிறுமார் இடாஅ ஏணி வியல் அறைக் கொட்ப நாடு அடிப்படுத்தலின் கொள்ளை மாற்றி அழல் வினை அமைந்த நிழல் விடு கட்டி கட்டளை வலிப்ப நின் தானை உதவி வேறு புலத்து இறுத்த வெல் போர் அண்ணல் முழவின் அமைந்த பெரும் பழம் இசைந்து சாறு அயர்ந்து அன்ன கார் அணி யாணர்த் தூம்பு அகம் பழுனிய தீம் பிழி மாந்தி காந்தள் அம் கண்ணிச் செழும் குடிச் செல்வர் கலி மகிழ் மேவலர் இரவலர்க்கு ஈயும் சுரும்பு ஆர் சோலைப் பெரும் பெயல் கொல்லிப் பெரு வாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து மின் உமிழ்ந்து அன்ன சுடர் இழை ஆயத்துத் தன் நிறம் கரந்த வண்டு படு கதுப்பின் ஒடுங்கு ஈர் ஓதி ஒண்_நுதல் அணி கொளக் கொடும் குழைக்கு அமர்த்த நோக்கின் நயவரப் பெருந்தகைக்கு அமர்ந்த மென் சொல் திரு முகத்து மாண் இழை அரிவை காணிய ஒரு நாள் பூண்க மாள நின் புரவி நெடும் தேர் முனை கைவிட்டு முன்னிலைச் செல்லாது தூ எதிர்ந்து பெறாஅத் தா இல் மள்ளரொடு தொல் மருங்கு அறுத்தல் அஞ்சி அரண் கொண்டு துஞ்சா வேந்தரும் துஞ்சுக விருந்தும் ஆக நின் பெரும் தோட்கே #8 பதிற்றுப்பத்து பாட்டு 82 - பெருங்குன்றூர்கிழார் **பெயர்: வினை நவில் யானை **துறை: முல்லை **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகுவண்ணம் பகை பெருமையின் தெய்வம் செப்ப ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர்ப் பல் கொடி நுடங்கும் முன்பின் செறுநர் செல் சமம் தொலைத்த வினை நவில் யானை கடாஅம் வார்ந்து கடும் சினம் பொத்தி வண்டு படு சென்னிய பிடி புணர்ந்து இயல மறவர் மறல மாப் படை உறுப்பத் தேர் கொடி நுடங்கத் தோல் புடை ஆர்ப்பக் காடு கை காய்த்திய நீடு நாள் இருக்கை இன்ன வைகல் பல் நாள் ஆகப் பாடிக் காண்கு வந்திசின் பெரும பாடுநர் கொளக்கொளக் குறையாச் செல்வத்துச் செற்றோர் கொலக்கொலக் குறையாத் தானைச் சான்றோர் வண்மையும் செம்மையும் சால்பும் மறனும் புகன்று புகழ்ந்து அசையா நல் இசை நிலம்தருதிருவின்நெடியோய் நின்னே #9 பதிற்றுப்பத்து பாட்டு 83 - பெருங்குன்றூர்கிழார் **பெயர்: பஃறோல் தொழுதி **துறை: தும்பையரவம் **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகுவண்ணம் கார் மழை முன்பின் கை பரிந்து எழுதரும் வான் பறைக் குருகின் நெடு வரி பொற்பக் கொல் களிறு மிடைந்த பஃறோல் தொழுதியொடு நெடும் தேர் நுடங்கு கொடி அவிர்வரப் பொலிந்து செலவு பெரிது இனிது நின் காணுமோர்க்கே இன்னாது அம்ம அது தானே பல் மா நாடு கெட எருக்கி நல் கலம் தரூஉம் நின் போர் அரும் கடும் சினம் எதிர்ந்து மாறு கொள் வேந்தர் பாசறையோர்க்கே #10 பதிற்றுப்பத்து பாட்டு 84 - பெருங்குன்றூர்கிழார் **பெயர்: தொழில்நவில்யானை **துறை: வாகை **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகுவண்ணம் எடுத்தேறு ஏய கடிப் புடை அதிரும் போர்ப்புறு முரசம் கண் அதிர்ந்து ஆங்குக் கார் மழை முழக்கினும் வெளில் பிணி நீவி நுதல் அணந்து எழுதரும் தொழில் நவில் யானைப் பார்வல் பாசறைத் தரூஉம் பல் வேல் பூழியர் கோவே பொலம் தேர்ப் பொறைய மன்பதை சவட்டும் கூற்ற முன்ப கொடி நுடங்கு ஆர் எயில் எண்ணு வரம்பு அறியா பல் மா பரந்த புலம் ஒன்று என்று எண்ணாது வலியை ஆதல் நற்கு அறிந்தனர் ஆயினும் வார் முகில் முழக்கின் மழ களிறு மிகீஇத் தன் கால் முளை மூங்கில் கவர் கிளை போல உய்தல் யாவது நின் உடற்றியோரே வணங்கல் அறியார் உடன்று எழுந்து உரைஇப் போர்ப்புறு தண்ணுமை ஆர்ப்பு எழுந்து நுவல நோய்த் தொழில் மலைந்த வேல் ஈண்டு அழுவத்து முனை புகல் புகல்வின் மாறா மைந்தரொடு உரும் எறி வரையின் களிறு நிலம் சேரக் காஞ்சி சான்ற செரு பல செய்து நின் குவவுக் குரை இருக்கை இனிது கண்டிகுமே காலை மாரி பெய்து தொழில் ஆற்றி விண்டு முன்னிய புயல் நெடும் காலைக் கல் சேர்பு மா மழை தலைஇப் பல் குரல் புள்ளின் ஒலி எழுந்து ஆங்கே #11 பதிற்றுப்பத்து பாட்டு 85 - பெருங்குன்றூர்கிழார் **பெயர்: நாடுகாண் நெடுவரை **துறை: செந்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகுவண்ணம் நல் மரம் துவன்றிய நாடு பல தரீஇப் பொன் அவிர் புனை செயல் இலங்கும் பெரும் பூண் ஒன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான் இட்ட வெள் வேல் முத்தைத் தம் என முன் திணை முதல்வர் போல நின்று தீம் சுனை நிலைஇய திரு மா மருங்கின் கோடு பல விரிந்த நாடு காண் நெடு வரைச் சூடா நறவின் நாள்_மகிழ்_இருக்கை அரசவை பணிய அறம் புரிந்து வயங்கிய மறம் புரி கொள்கை வயங்கு செம் நாவின் உவலை கூராக் கவலை இல் நெஞ்சின் நனவில் பாடிய நல் இசைக் கபிலன் பெற்ற ஊரினும் பலவே #12 பதிற்றுப்பத்து பாட்டு 86 - பெருங்குன்றூர்கிழார் **பெயர்: வெம்திறல் தடக்கை **துறை: செந்துறைப் பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகுவண்ணம் உறலுறு குருதிச் செருக்களம் புலவக் கொன்று அமர்க் கடந்த வெம் திறல் தடக் கை வென் வேல் பொறையன் என்றலின் வெருவர வெப்பு உடை ஆடூஉச் செத்தனென்-மன் யான் நல் இசை நிலைஇய நனம் தலை உலகத்து இல்லோர் புன்கண் தீர நல்கும் நாடல் சான்ற நயன் உடை நெஞ்சின் பாடுநர் புரவலன் ஆடு நடை அண்ணல் கழை நிலை பெறாஅக் குட்டத்து ஆயினும் புனல் பாய் மகளிர் ஆட ஒழிந்த பொன் செய் பூம் குழை மீமிசைத் தோன்றும் சாந்து வரு வானின் நீரினும் தீம் தண் சாயலன்-மன்ற தானே #13 பதிற்றுப்பத்து பாட்டு 87 - பெருங்குன்றூர்கிழார் **பெயர்: வெண்தலைச் செம்புனல் **துறை: விறலியாற்றுப்படை **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகுவண்ணம் சென்மோ பாடினி நல் கலம் பெறுகுவை சந்தம் பூழிலொடு பொங்கு நுரை சுமந்து தெண் கடல் முன்னிய வெண் தலைச் செம் புனல் ஒய்யும் நீர் வழிக் கரும்பினும் பல் வேல் பொறையன் வல்லனால் அளியே #14 பதிற்றுப்பத்து பாட்டு 88 - பெருங்குன்றூர்கிழார் **பெயர்: கல்கால் கவணை **துறை: செந்துறைப்பாடாண்பாட்டு **தூக்கு: செந்தூக்கு **வண்ணம்: ஒழுகுவண்ணம் வையகம் மலர்ந்த தொழில் முறை ஒழியாது கடவுள் பெயரிய கானமொடு கல் உயர்ந்து தெண் கடல் வளைஇய மலர் தலை உலகத்துத் தம் பெயர் போகிய ஒன்னார் தேயத் துளங்கு இரும் குட்டம் தொலைய வேல் இட்டு அணங்கு உடைக் கடம்பின் முழுமுதல் தடிந்து பொரு முரண் எய்திய கழுவுள் புறம்பெற்று நாம மன்னர் துணிய நூறிக் கால் வல் புரவி அண்டர் ஓட்டிச் சுடர் வீ வாகை நன்னன் தேய்த்துக் குருதி விதிர்த்த குவவுச் சோற்றுக் குன்றோடு உரு கெழு மரபின் அயிரை பரைஇ வேந்தரும் வேளிரும் பின்வந்து பணியக் கொற்றம் எய்திய பெரியோர் மருக வியல் உளை அரிமான் மறம் கெழு குருசில் விரவுப் பணை முழங்கு நிரை தோல் வரைப்பின் உரவுக் களிற்று வெல் கொடி நுடங்கும் பாசறை ஆர் எயில் அலைத்த கல் கால் கவணை நார் அரி நறவின் கொங்கர் கோவே உடலுநர்த் தபுத்த பொலம் தேர்க் குருசில் வளை கடல் முழவின் தொண்டியோர் பொருந நீ நீடு வாழிய பெரும நின்-வயின் துவைத்த தும்பை நனவுற்று வினவும் மாற்று அரும் தெய்வத்து கூட்டம் முன்னிய புனல் மலி பேரியாறு இழிதந்து ஆங்கு வருநர் வரையாச் செழும் பல் தாரம் கொளக்கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப ஓவத்து அன்ன உரு கெழு நெடு நகர்ப் பாவை அன்ன மகளிர் நாப்பண் புகன்ற மாண் பொறிப் பொலிந்த சாந்தமொடு தண் கமழ் கோதை சூடிப் பூண் சுமந்து திருவில் குலைஇத் திரு மணி புரையும் உரு கெழு கருவிய பெரு மழை சேர்ந்து வேங்கை விரிந்து விசும்புறு சேண் சிமை அருவி அரு வரை அன்ன மார்பின் சேண் நாறு நல் இசைச் சே_இழை கணவ மாகம் சுடர மா விசும்பு உகக்கும் ஞாயிறு போல விளங்குதி பல் நாள் ஈங்குக் காண்கு வந்தனென் யானே உறு கால் எடுத்த ஓங்கு வரல் புணரி நுண் மணல் அடைகரை உடைதரும் தண் கடல் படப்பை நாடு கிழவோயே #15 பதிற்றுப்பத்து பாட்டு 89 - பெருங்குன்றூர்கிழார் **பெயர்: துவராக் கூந்தல் **துறை: காவல்முல்லை **வண்ணம்: ஒழுகுவண்ணம் **தூக்கு: செந்தூக்கு வானம் பொழுதொடு சுரப்பக் கானம் தோடுறு மட மான் ஏறு புணர்ந்து இயலப் புள்ளும் மிஞிறும் மா சினை ஆர்ப்பப் பழனும் கிழங்கும் மிசை அறவு அறியாது பல் ஆன் நல் நிரை புல் அருந்து உகளப் பயம் கடை அறியா வளம் கெழு சிறப்பின் பெரும் பல் யாணர்க் கூலம் கெழும நல் பல் ஊழி நடுவு நின்று ஒழுகப் பல் வேல் இரும்பொறை நின் கோல் செம்மையின் நாளின்நாளின் நாடு தொழுது ஏத்த உயர்_நிலை_உலகத்து உயர்ந்தோர் பரவ அரசியல் பிழையாது செரு மேந்தோன்றி நோயிலை ஆகியர் நீயே நின்-மாட்டு அடங்கிய நெஞ்சம் புகர்படுபு அறியாது கனவினும் பிரியா உறையுளொடு தண்ணெனத் தகரம் நீவிய துவராக் கூந்தல் வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து வாழ்நாள் அறியும் வயங்கு சுடர் நோக்கத்து மீனொடு புரையும் கற்பின் வாள் நுதல் அரிவையொடு காண்வரப் பொலிந்தே #16 பதிற்றுப்பத்து பாட்டு 90 - பெருங்குன்றூர்கிழார் **பெயர்: வலிகெழு தடக்கை **துறை: காட்சிவாழ்த்து **தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும் **வண்ணம்: ஒழுகுவண்ணமும் சொற்சீர்வண்ணமும் மீன் வயின் நிற்ப வானம் வாய்ப்ப அச்சு அற்று ஏமம் ஆகி இருள் தீர்ந்து இன்பம் பெருகத் தோன்றித் தம் துணைத் துறையின் எஞ்சாமை நிறையக் கற்றுக் கழிந்தோர் உடற்றும் கடும் தூ அஞ்சா ஒளிறு வாள் வய வேந்தர் களிறொடு கலம் தந்து தொன்று மொழிந்து தொழில் கேட்ப அகல் வையத்துப் பகல் ஆற்றி மாயாப் பல் புகழ் வியல் விசும்பு ஊர்தர வாள் வலியுறுத்துச் செம்மை பூஉண்டு அறன் வாழ்த்த நற்கு ஆண்ட விறல் மாந்தரன் விறல் மருக ஈரம் உடைமையின் நீர் ஓர் அனையை அளப்பு அருமையின் இரு விசும்பு அனையை கொளக் குறைபடாமையின் முந்நீர் அனையை பல் மீன் நாப்பண் திங்கள் போல பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை உரு கெழு மரபின் அயிரை பரவியும் கடல் இகுப்ப வேல் இட்டும் உடலுநர் மிடல் சாய்த்தும் மலையவும் நிலத்தவும் அருப்பம் வௌவிப் பெற்ற பெரும் பெயர் பலர் கை இரீஇய கொற்றத் திருவின் உரவோர் உம்பல் கட்டிப் புழுக்கின் கொங்கர் கோவே மட்டப் புகாவின் குட்டுவர் ஏறே எழாஅத் துணைத் தோள் பூழியர் மெய்ம்மறை இரங்கு நீர்ப் பரப்பின் மரந்தையோர் பொருந வெண் பூ வேளையொடு சுரை தலைமயக்கிய விரவு மொழிக் கட்டூர் வயவர் வேந்தே உரவுக் கடல் அன்ன தாங்கு அரும் தானையொடு மாண் வினை சாபம் மார்புற வாங்கி ஞாண் பொர விளங்கிய வலி கெழு தடக் கை வார்ந்து புனைந்து அன்ன ஏந்து குவவு மொய்ம்பின் மீன் பூத்து அன்ன விளங்கு மணிப் பாண்டில் ஆய் மயிர்க் கவரிப் பாய்_மா மேல்கொண்டு காழ் எஃகம் பிடித்து எறிந்து விழுமத்தின் புகலும் பெயரா ஆண்மைக் காஞ்சி சான்ற வயவர் பெரும வீங்கு பெரும் சிறப்பின் ஓங்கு புகழோயே கழனி உழவர் தண்ணுமை இசைப்பின் பழன மஞ்ஞை மழை செத்து ஆலும் தண் புனல் ஆடுநர் ஆர்ப்பொடு மயங்கி வெம் போர் மள்ளர் தெண் கிணை கறங்கக் கூழ் உடை நல் இல் ஏறு மாறு சிலைப்பச் செழும் பல இருந்த கொழும் பல் தண் பணைக் காவிரிப் படப்பை நல் நாடு அன்ன வளம் கெழு குடைச்சூல் அடங்கிய கொள்கை ஆறிய கற்பின் தேறிய நல் இசை வண்டு ஆர் கூந்தல் ஒண்_தொடி கணவ நின் நாள் திங்கள் அனைய ஆக திங்கள் யாண்டு ஓர் அனைய ஆக யாண்டே ஊழி அனைய ஆக ஊழி வெள்ள வரம்பின ஆக என உள்ளி காண்கு வந்திசின் யானே செரு மிக்கு உரும் என முழங்கும் முரசின் பெரு நல் யானை இறை கிழவோயே #17 புறநானூறு 147 - பெருங்குன்றூர் கிழார் **பாடப்பட்டோன்: வையாவிக் கோப்பெரும் பேகன் கல் முழை அருவிப் பல் மலை நீந்திச் சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததைக் கார் வான் இன் உறை தமியள் கேளா நெருநல் ஒரு சிறைப் புலம்பு கொண்டு உறையும் அரி மதர் மழைக் கண் அம் மா அரிவை நெய்யொடு துறந்த மை இரும் கூந்தல் மண்ணுறு மணியின் மாசற மண்ணிப் புது மலர் கஞல இன்று பெயரின் அது-மன் எம் பரிசில் ஆவியர் கோவே #18 புறநானூறு 210 - பெருங்குன்றூர் கிழார் **பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது அன்பு கண்மாறிய அறன் இல் காட்சியொடு நும்மனோரும் மற்று இனையர் ஆயின் எம்மனோர் இவண் பிறவலர் மாதோ செயிர் தீர் கொள்கை எம் வெம் காதலி உயிர் சிறிது உடையள் ஆயின் எம்-வயின் உள்ளாது இருத்தலோ அரிதே அதனால் அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய பிறன் ஆயினன்-கொல் இறீஇயர் என் உயிர் என நுவல்வுறு சிறுமையள் பல புலந்து உறையும் இடுக்கண் மனையோள் தீரிய இ நிலை விடுத்தேன் வாழியர் குருசில் உதுக் காண் அவல நெஞ்சமொடு செல்வல் நின் கறுத்தோர் அரும் கடி முனை அரண் போலப் பெரும் கையற்ற என் புலம்பு முந்துறுத்தே #19 புறநானூறு 211 - பெருங்குன்றூர் கிழார் **பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை அஞ்சுவரு மரபின் வெம் சினப் புயலேறு அணங்கு உடை அரவின் அரும் தலை துமிய நின்று காண்பு அன்ன நீள் மலை மிளிரக் குன்று தூவ எறியும் அரவம் போல முரசு எழுந்து இரங்கும் தானையோடு தலைச்சென்று அரைசு படக் கடக்கும் உரை சால் தோன்றல் நின் உள்ளி வந்த ஓங்கு நிலைப் பரிசிலென் வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன் எனக் கொள்ளா மாந்தர் கொடுமை கூற நின் உள்ளியது முடித்தோய்-மன்ற முன்_நாள் கை உள்ளது போல் காட்டி வழி_நாள் பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம் நாணாய் ஆயினும் நாணக் கூறி என் நுணங்கு செம் நா அணங்க ஏத்திப் பாடப்பாடப் பாடு புகழ் கொண்ட நின் ஆடு கொள் வியன் மார்பு தொழுதெனன் பழிச்சிச் செல்வல் அத்தை யானே வைகலும் வல்சி இன்மையின் வயின்வயின் மாறி இல் எலி மடிந்த தொல் சுவர் வரைப்பின் பாஅல் இன்மையின் பல் பாடு சுவைத்து முலைக் கோள் மறந்த புதல்வனொடு மனைத் தொலைந்திருந்த என் வாள்_நுதல் படர்ந்தே #20 புறநானூறு 266 - பெருங்குன்றூர் கிழார் **பாடப்பட்டோன்: சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட்சென்னி பயம் கெழு மா மழை பெய்யாது மாறிக் கயம் களி முளியும் கோடை ஆயினும் புழல் கால் ஆம்பல் அகல் அடை நீழல் கதிர் கோட்டு நந்தின் கரி முக ஏற்றை நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம் நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல் வான் தோய் நீள் குடை வய_மான் சென்னி சான்றோர் இருந்த அவையத்து உற்றோன் ஆசு ஆகு என்னும் பூசல் போல வல்லே களை-மதி அத்தை உள்ளிய விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப் பொறி புணர் உடம்பில் தோன்றி என் அறிவு கெட நின்ற நல்கூர்மையே #21 புறநானூறு 318 - பெருங்குன்றூர் கிழார் கொய் அடகு வாடத் தரு விறகு உணங்க மயில் அம் சாயல் மாஅயோளொடு பசித்தன்று அம்ம பெருந்தகை ஊரே மனை உறை குரீஇக் கறை அணல் சேவல் பாணர் நரம்பின் சுகிரொடு வய_மான் குரல் செய் பீலியின் இழைத்த குடம்பைப் பெரும் செய் நெல்லின் அரிசி ஆர்ந்து தன் புன் புறப் பெடையொடு வதியும் யாணர்த்து ஆகும் வேந்து விழுமுறினே &332 - பெருங்கௌசிகனார் #1 நற்றிணை 44 குறிஞ்சி - பெருங்கௌசிகனார் பொரு இல் ஆயமோடு அருவி ஆடி நீர் அலைச் சிவந்த பேர் அமர் மழைக் கண் குறியா நோக்கமொடு முறுவல் நல்கி மனை-வயின் பெயர்ந்த-காலை நினைஇய நினக்கோ அறியுநள் நெஞ்சே புனத்த நீடு இலை விளை தினைக் கொடும் கால் நிமிரக் கொழும் குரல் கோடல் கண்ணிச் செழும் பல பல் கிளைக் குறவர் அல்கு அயர் முன்றில் குடக் காய் ஆசினிப் படப்பை நீடிய பல் மர உயர் சினை மின்மினி விளக்கத்துச் செல் மழை இயக்கம் காணும் நல் மலை நாடன் காதல் மகளே #2 நற்றிணை 139 முல்லை - பெருங்கௌசிகனார் உலகிற்கு ஆணி ஆகப் பலர் தொழப் பல வயின் நிலைஇய குன்றின் கோடு-தோறு ஏயினை உரைஇயரோ பெரும் கலி எழிலி படுமலை நின்ற நல் யாழ் வடி நரம்பு எழீஇ அன்ன உறையினை முழவின் மண் ஆர் கண்ணின் இம்மென இமிரும் வணர்ந்து ஒலி கூந்தல் மாஅயோளொடு புணர்ந்து இனிது நுகர்ந்த சாரல் நல் ஊர் விரவு மலர் உதிர வீசி இரவுப் பெயல் பொழிந்த உதவியோயே &333 - பெருஞ்சாத்தனார் #1 குறுந்தொகை 263 குறிஞ்சி - பெருஞ்சாத்தனார் மறிக் குரல் அறுத்துத் தினைப் பிரப்பு இரீஇச் செல் ஆற்றுக் கவலைப் பல்லியம் கறங்கத் தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா வேற்றுப் பெரும் தெய்வம் பல உடன் வாழ்த்தி பேஎய்க் கொளீஇயள் இவள் எனப்படுதல் நோதக்கன்றே தோழி மால் வரை மழை விளையாடும் நாடனைப் பிழையேம் ஆகிய நாம் இதன் படவே &334 - பெருஞ்சித்திரனார் #1 புறநானூறு 158 - பெருஞ்சித்திரனார் **பாடப்பட்டோன் : குமணன் முரசு கடிப்பு இகுப்பவும் வால் வளை துவைப்பவும் அரசுடன் பொருத அண்ணல் நெடு வரைக் கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும் பறம்பின் கோமான் பாரியும் பிறங்கு மிசைக் கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும் காரி ஊர்ந்து பேர் அமர்க் கடந்த மாரி ஈகை மறப் போர் மலையனும் ஊராது ஏந்திய குதிரைக் கூர் வேல் கூவிளம் கண்ணிக் கொடும் பூண் எழினியும் ஈர்ம் தண் சிலம்பின் இருள் தூங்கும் நளி முழை அரும் திறல் கடவுள் காக்கும் உயர் சிமைப் பெரும் கல் நாடன் பேகனும் திருந்து மொழி மோசி பாடிய ஆயும் ஆர்வமுற்று உள்ளி வருநர் உலைவு நனி தீரத் தள்ளாது ஈயும் தகை சால் வண்மைக் கொள்ளார் ஓட்டிய நள்ளையும் என ஆங்கு எழுவர் மாய்ந்த பின்றை அழிவரப் பாடி வருநரும் பிறரும் கூடி இரந்தோர் அற்றம் தீர்க்கு என விரைந்து இவண் உள்ளி வந்தனென் யானே விசும்புறக் கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று முள் புற முது கனி பெற்ற கடுவன் துய்த் தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும் அதிரா யாணர் முதிரத்துக் கிழவ இவண் விளங்கு சிறப்பின் இயல் தேர்க் குமண இசை மேந்தோன்றிய வண்மையொடு பகை மேம்படுக நீ ஏந்திய வேலே #2 புறநானூறு 159 - பெருஞ்சித்திரனார் **பாடப்பட்டோன் : குமணன் வாழும் நாளொடு யாண்டு பல உண்மையின் தீர்தல் செல்லாது என் உயிர் எனப் பல புலந்து கோல் கால் ஆகக் குறும் பல ஒதுங்கி நூல் விரித்து அன்ன கதுப்பினள் கண் துயின்று முன்றில் போகா முதுர்வினள் யாயும் பசந்த மேனியொடு படர் அட வருந்தி மருங்கில் கொண்ட பல் குறுமாக்கள் பிசைந்து தின வாடிய முலையள் பெரிது அழிந்து குப்பைக் கீரை கொய் கண் அகைத்த முற்றா இளம் தளிர் கொய்துகொண்டு உப்பு இன்று நீர் உலையாக ஏற்றி மோர் இன்று அவிழ்_பதம் மறந்து பாசடகு மிசைந்து மாசொடு குறைந்த உடுக்கையள் அறம் பழியாத் துவ்வாள் ஆகிய என் வெய்யோளும் என்று ஆங்கு இருவர் நெஞ்சமும் உவப்பக் கானவர் கரி புனம் மயக்கிய அகன் கண் கொல்லை ஐவனம் வித்தி மையுறக் கவினி ஈனல் செல்லா ஏனற்கு இழுமெனக் கருவி வானம் தலைஇ யாங்கும் ஈத்த நின் புகழ் ஏத்தித் தொக்க என் பசி தினத் திரங்கிய ஒக்கலும் உவப்ப உயர்ந்து ஏந்து மருப்பின் கொல் களிறு பெறினும் தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென் உவந்து நீ இன்புற விடுதி ஆயின் சிறிது குன்றியும் கொள்வல் கூர் வேல் குமண அதற்பட அருளல் வேண்டுவல் விறல் புகழ் வசை இல் விழுத் திணைப் பிறந்த இசை மேம் தோன்றல் நின் பாடிய யானே #3 புறநானூறு 160 - பெருஞ்சித்திரனார் **பாடப்பட்டோன் : குமணன் உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்த முளி புல் கானம் குழைப்பக் கல்லென அதிர் குரல் ஏறோடு துளி சொரிந்து ஆங்குப் பசி தினத் திரங்கிய கசிவு உடை யாக்கை அவிழ் புகுவு அறியாது ஆகலின் வாடிய நெறி கொள் வரிக் குடர் குனிப்பத் தண்ணெனக் குய் கொள் கொழும் துவை நெய் உடை அடிசில் மதி சேர் நாள்_மீன் போல நவின்ற சிறு பொன் நல் கலம் சுற்ற இரீஇக் கேடு இன்று ஆக பாடுநர் கடும்பு என அரிது பெறு பொலம் கலம் எளிதினின் வீசி நட்டோர் நட்ட நல் இசைக் குமணன் மட்டு ஆர் மறுகின் முதிரத்தோனே செல்குவை ஆயின் நல்குவை பெரிது எனப் பல் புகழ் நுவலுநர் கூற வல் விரைந்து உள்ளம் துரப்ப வந்தனென் எள்ளுற்று இல் உணாத் துரத்தலின் இல் மறந்து உறையும் புல் உளைக் குடுமிப் புதல்வன் பல் மாண் பால் இல் வறு முலை சுவைத்தனன் பெறாஅன் கூழும் சோறும் கடைஇ ஊழின் உள் இல் வரும் கலம் திறந்து அழக் கண்டு மறப் புலி உரைத்தும் மதியம் காட்டியும் நொந்தனள் ஆகி நுந்தையை உள்ளிப் பொடிந்த நின் செவ்வி காட்டு எனப் பலவும் வினவல் ஆனாள் ஆகி நனவின் அல்லல் உழப்போள் மல்லல் சிறப்பச் செல்லாச் செல்வம் மிகுத்தனை வல்லே விடுதல் வேண்டுவல் அத்தை படு திரை நீர் சூழ் நிலவரை உயர நின் சீர் கெழு விழுப் புகழ் ஏத்துகம் பலவே #4 புறநானூறு 161 - பெருஞ்சித்திரனார் **பாடப்பட்டோன் : குமணன் நீண்டு ஒலி அழுவம் குறைபட முகந்துகொண்டு ஈண்டு செலல் கொண்மூ வேண்டு வயின் குழீஇ பெரு மலை அன்ன தோன்றல சூல் முதிர்பு உரும் உரறு கருவியொடு பெயல் கடன் இறுத்து வள மலை மாறிய என்றூழ்க் காலை மன்பதை எல்லாம் சென்று உணக் கங்கைக் கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றி ஆங்கு எமக்கும் பிறர்க்கும் செம்மலை ஆகலின் அன்பு இல் ஆடவர் கொன்று ஆறு கவரச் சென்று தலைவருந அல்ல அன்பு இன்று வன் கலை தெவிட்டும் அரும் சுரம் இறந்தோர்க்கு இற்றை நாளொடும் யாண்டு தலைப்பெயர எனக் கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்து அரும் துயர் உழக்கும் என் பெரும் துன்புறுவி நின் தாள் படு செல்வம் காண்-தொறும் மருளப் பனை மருள் தடக் கையொடு முத்துப்பட முற்றிய உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு ஒளி திகழ் ஓடை பொலிய மருங்கின் படு மணி இரட்ட ஏறிச் செம்மாந்து செலல் நசைஇ உற்றனென் விறல் மிகு குருசில் இன்மை துரப்ப இசைதர வந்து நின் வண்மையின் தொடுத்த என் நயந்தினை கேள்-மதி வல்லினும் வல்லேன் ஆயினும் வல்லே என் அளந்து அறிந்தனை நோக்காது சிறந்த நின் அளந்து அறி-மதி பெரும என்றும் வேந்தர் நாணப் பெயர்வேன் சாந்து அருந்திப் பல் பொறிக் கொண்ட ஏந்து எழில் அகலம் மாண் இழை மகளிர் புல்லு-தொறும் புகல நாள் முரசு இரங்கும் இடன் உடை வரைப்பில் நின் தாள் நிழல் வாழ்நர் நல் கலம் மிகுப்ப வாள் அமர் உழந்த நின் தானையும் சீர் மிகு செல்வமும் ஏந்துகம் பலவே #5 புறநானூறு 162 - பெருஞ்சித்திரனார் **பாடப்பட்டோன் : இளவெளிமான் இரவலர் புரவலை நீயும் அல்லை புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர் இரவலர் உண்மையும் காண் இனி இரவலர்க்கு ஈவோர் உண்மையும் காண் இனி நின் ஊர் கடி மரம் வருந்தத் தந்து யாம் பிணித்த நெடு நல் யானை எம் பரிசில் கடு_மான் தோன்றல் செல்வல் யானே #6 புறநானூறு 163 - பெருஞ்சித்திரனார் **பாடப்பட்டோர் : புலவரின் மனைவி நின் நயந்து உறைநர்க்கும் நீ நயந்து உறைநர்க்கும் பல் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும் கடும்பின் கடும் பசி தீர யாழ நின் நெடும் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும் இன்னோர்க்கு என்னாது என்னோடும் சூழாது வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும் எல்லோர்க்கும் கொடு-மதி மனை கிழவோயே பழம் தூங்கு முதிரத்துக் கிழவன் திருந்து வேல் குமணன் நல்கிய வளனே #7 புறநானூறு 207 - பெருஞ்சித்திரனார் **பாடப்பட்டோன்: இளவெளிமான் எழு இனி நெஞ்சம் செல்கம் யாரோ பருகு அன்ன வேட்கை இல்வழி அருகில் கண்டும் அறியார் போல அகம் நக வாரா முகன் அழி பரிசில் தாள் இலாளர் வேளார் அல்லர் வருக என வேண்டும் வரிசையோர்க்கே பெரிதே உலகம் பேணுநர் பலரே மீளி முன்பின் ஆளி போல உள்ளம் உள் அவிந்து அடங்காது வெள்ளென நோவாதோன்-வயின் திரங்கி வாயா வன் கனிக்கு உலமருவோரே #8 புறநானூறு 208 - பெருஞ்சித்திரனார் **பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி குன்றும் மலையும் பல பின் ஒழிய வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்கு என நின்ற என் நயந்து அருளி ஈது கொண்டு ஈங்கனம் செல்க தான் என என்னை யாங்கு அறிந்தனனோ தாங்கு அரும் காவலன் காணாது ஈத்த இப் பொருட்கு யான் ஓர் வாணிகப் பரிசிலன் அல்லேன் பேணித் தினை அனைத்து ஆயினும் இனிது அவர் துணை அளவு அறிந்து நல்கினர் விடினே #9 புறநானூறு 237 - பெருஞ்சித்திரனார். **பாடப்பட்டோன்: இளவெளிமான் நீடு வாழ்க என்று யான் நெடும் கடை குறுகிப் பாடி நின்ற பசி நாள்-கண்ணே கோடைக் காலத்துக் கொழு நிழல் ஆகிப் பொய்த்தல் அறியா உரவோன் செவி முதல் வித்திய பனுவல் விளைந்தன்று நன்று என நச்சி இருந்த நசை பழுது ஆக அட்ட குழிசி அழல் பயந்து ஆஅங்கு அளியர் தாமே ஆர்க என்னா அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய ஊழின் உருப்ப எருக்கிய மகளிர் வாழைப் பூவின் வளை முறி சிதற முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்கக் கள்ளி போகிய களரி அம் பறந்தலை வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே ஆங்கு அது நோய் இன்று ஆக ஓங்கு வரைப் புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின் எலி பார்த்து ஒற்றாது ஆகும் மலி திரைக் கடல் மண்டு புனலின் இழுமெனச் சென்று நனி உடைப் பரிசில் தருகம் எழு-மதி நெஞ்சே துணிபு முந்துறுத்தே #10 புறநானூறு 238 - பெருஞ்சித்திரனார். **பாடப்பட்டோன்: இளவெளிமான் கவி செம் தாழிக் குவி புறத்து இருந்த செவி செம் சேவலும் பொகுவலும் வெருவா வாய் வன் காக்கையும் கூகையும் கூடிப் பேஎய் ஆயமொடு பெட்டாங்கு வழங்கும் காடு முன்னினனே கள் காமுறுநன் தொடி கழி மகளிரின் தொல் கவின் வாடிப் பாடுநர் கடும்பும் பையென்றனவே தோடு கொள் முரசும் கிழிந்தன கண்ணே ஆள் இல் வரை போல் யானையும் மருப்பு இழந்தனவே வெம் திறல் கூற்றம் பெரும் பேதுறுப்ப எந்தை ஆகுல அதன் படல் அறியேன் அந்தோ அளியேன் வந்தனென்-மன்ற என் ஆகுவர்-கொல் என் துன்னியோரே மாரி இரவின் மரம் கவிழ் பொழுதின் ஆர் அஞர் உற்ற நெஞ்சமொடு ஒராங்கு கண் இல் ஊமன் கடல் பட்டு ஆங்கு வரை அளந்து அறியா திரை அரு நீத்தத்து அவல மறு சுழி மறுகலின் தவலே நன்று-மன் தகுதியும் அதுவே &335 - பெருந்தலைச் சாத்தனார் #1 அகநானூறு 13 பாலை - பெருந்தலைச் சாத்தனார் தன் கடல் பிறந்த முத்தின் ஆரமும் முனை திறை கொடுக்கும் துப்பின் தன் மலை தெறல் அரு மரபின் கடவுள் பேணிக் குறவர் தந்த சந்தின் ஆரமும் இரு பேர் ஆரமும் எழில் பெற அணியும் திரு வீழ் மார்பின் தென்னவன் மறவன் குழியில் கொண்ட மராஅ யானை மொழியின் உணர்த்தும் சிறு வரை அல்லது வரை நிலை இன்றி இரவலர்க்கு ஈயும் வள் வாய் அம்பின் கோடைப் பொருநன் பண்ணி தைஇய பயம் கெழு வேள்வியின் விழுமிது நிகழ்வது ஆயினும் தெற்கு ஏர்பு கழி மழை பொழிந்த பொழுது கொள் அமையத்து சாயல் இன் துணை இவள் பிரிந்து உறையின் நோய் இன்றாக செய்பொருள் வயிற்பட மாசு இல் தூ மடி விரிந்த சேக்கை கவவு இன்புறாமைக் கழிக வள வயல் அழல் நுதி அன்ன தோகை ஈன்ற கழனி நெல் ஈன் கவை முதல் அலங்கல் நிரம்பு அகன் செறுவில் வரம்பு அணையாத் துயல்வரப் புலம்பொடு வந்த பொழுது கொள் வாடை இலங்கு பூம் கரும்பின் ஏர் கழை இருந்த வெண் குருகு நரல வீசும் நுண் பல் துவலைய தண் பனி நாளே #2 அகநானூறு 224 முல்லை - (ஆவூர் மூலங்கிழார் மகனார்) பெருந்தலைச் சாத்தனார் **(ஆவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்) செல்க பாக எல்லின்று பொழுதே வல்லோன் அடங்கு கயிறு அமைப்பக் கொல்லன் விசைத்து வாங்கு துருத்தியின் வெய்ய உயிராக் கொடு நுகத்து யாத்த தலைய கடு நடைக் கால் கடுப்பு அன்ன கடும் செலல் இவுளி பால் கடை நுரையின் பரூஉ மிதப்பு அன்ன வால் வெண் தெவிட்டல் வழி வார் நுணக்கம் சிலம்பி நூலின் நுணங்குவன பாறிச் சாந்து புலர் அகலம் மறுப்பக் காண்தகப் புது நலம் பெற்ற வெய்து நீங்கு புறவில் தெறி நடை மரைக் கணம் இரிய மனையோள் ஐது உணங்கு வல்சி பெய்து முறுக்குறுத்த திரிமரக் குரல் இசை கடுப்ப வரி மணல் அலங்கு கதிர் திகிரி ஆழி போழ வரும்-கொல் தோழி நம் இன் உயிர்த் துணை என சில் கோல் எல் வளை ஒடுக்கிப் பல் கால் அரும் கடி வியன் நகர் நோக்கி வருந்துமால் அளியள் திருந்து_இழை தானே #3 நற்றிணை 262 பாலை - பெருந்தலைச் சாத்தனார் தண் புனக் கருவிளைக் கண் போல் மா மலர் ஆடு மயில் பீலியின் வாடையொடு துயல்வர உறை மயக்குற்ற ஊர் துஞ்சு யாமத்து நடுங்கு பிணி நலிய நல் எழில் சாஅய்த் துனி கூர் மனத்தள் முனி படர் உழக்கும் பணைத் தோள் அரும்பிய சுணங்கின் கணைக் கால் குவளை நாறும் கூந்தல் தே மொழி இவளின் தீர்ந்தும் ஆள்வினை வலிப்பப் பிரிவல் நெஞ்சு என்னும் ஆயின் அரிது-மன்று அம்ம இன்மையது இளிவே #4 புறநானூறு 151 - பெருந்தலைச் சாத்தனார் **பாடப்பட்டோன்: இளவிச்சிக்கோ பண்டும்பண்டும் பாடுநர் உவப்ப விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன் கிழவன் சேண் புலம் படரின் இழை அணிந்து புன் தலை மடப் பிடி பரிசில் ஆகப் பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண் புகழ் கண்டீரக்கோன் ஆகலின் நன்றும் முயங்கல் ஆன்றிசின் யானே பொலம் தேர் நன்னன் மருகன் அன்றியும் நீயும் முயங்கற்கு ஒத்தனை-மன்னே வயங்கு மொழிப் பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடு மழை அணங்கு சால் அடுக்கம் பொழியும் நும் மணம் கமழ் மால் வரை வரைந்தனர் எமரே #5 புறநானூறு 164 - பெருந்தலைச் சாத்தனார் **பாடப் பட்டோன்: குமணன் ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின் ஆம்பி பூப்பத் தேம்பு பசி உழவாப் பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி இல்லி தூர்த்த பொல்லா வறு முலை சுவைத்-தொறும் அழூஉம் தன் மகத்து முகம் நோக்கி நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழைக் கண் என் மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ நின் படர்ந்திசினே நல் போர்க் குமண என் நிலை அறிந்தனை ஆயின் இ நிலை தொடுத்தும் கொள்ளாது அமையலென் அடுக்கிய பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ் மண் அமை முழவின் வயிரியர் இன்மை தீர்க்கும் குடிப் பிறந்தோயே #6 புறநானூறு 165 - பெருந்தலைச் சாத்தனார் **பாடப்பட்டோன் : குமணன் மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர் தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே துன் அரும் சிறப்பின் உயர்ந்த செல்வர் இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின் தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே தாள் தாழ் படு மணி இரட்டும் பூ நுதல் ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகாக் கேடு இல் நல் இசை வய_மான் தோன்றலைப் பாடி நின்றெனன் ஆகக் கொன்னே பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என நாடு இழந்ததனினும் நனி இன்னாது என வாள் தந்தனனே தலை எனக்கு ஈயத் தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின் ஆடு மலி உவகையோடு வருவல் ஓடாப் பூட்கை நின் கிழமையோன் கண்டே #7 புறநானூறு 205 - பெருந்தலைச் சாத்தனார் **பாடப்பட்டோன்: கடிய நெடுவேட்டுவன் முற்றிய திருவின் மூவர் ஆயினும் பெட்பு இன்றி ஈதல் யாம் வேண்டலமே விறல் சினம் தணிந்த விரை பரிப் புரவி உறுவர் செல் சார்வு ஆகிச் செறுவர் தாள் உளம் தபுத்த வாள் மிகு தானை வெள் வீ வேலிக் கோடைப் பொருந சிறியவும் பெரியவும் புழை கெட விலங்கிய மான் கணம் தொலைச்சிய கடு விசைக் கத நாய் நோன் சிலை வேட்டுவ நோயிலை ஆகுக ஆர் கலி யாணர் தரீஇய கால் வீழ்த்துக் கடல்-வயின் குழீஇய அண்ணல் அம் கொண்மூ நீர் இன்று பெயரா ஆங்குத் தேரொடு ஒளிறு மறுப்பு ஏந்திய செம்மல் களிறு இன்று பெயரல பரிசிலர் கடும்பே #8 புறநானூறு 209 - பெருந்தலைச் சாத்தனார் **பாடப்பட்டோன்: மூவன் பொய்கை நாரை போர்வில் சேக்கும் நெய்தல் அம் கழனி நெல் அரி தொழுவர் கூம்புவிடு மெய் பிணி அவிழ்ந்த ஆம்பல் அகல் அடை அரியல் மாந்தித் தெண் கடல் படு திரை இன் சீர்ப் பாணி தூங்கும் மென்புல வைப்பின் நல் நாட்டுப் பொருந பல் கனி நசைஇ அல்கு விசும்பு உகந்து பெரு மலை விடரகம் சிலம்ப முன்னிப் பழன் உடைப் பெரு மரம் தீர்ந்து எனக் கையற்று பெறாது பெயரும் புள் இனம் போல நின் நசை தர வந்து நின் இசை நுவல் பரிசிலென் வறுவியேன் பெயர்கோ வாள் மேம்படுந ஈயாய் ஆயினும் இரங்குவென் அல்லேன் நோயிலை ஆகு-மதி பெரும நம்முள் குறு நணி காண்குவது ஆக நாளும் நறும் பல் ஒலிவரும் கதுப்பின் தே மொழித் தெரி இழை மகளிர் பாணி பார்க்கும் பெரு வரை அன்ன மார்பின் செரு வெம் சேஎய் நின் மகிழ் இருக்கையே #9 புறநானூறு 294 - பெருந்தலைச் சாத்தனார் வெண்குடை மதியம் மேல் நிலாத் திகழ்தரக் கண்கூடு இறுத்த கடல் மருள் பாசறைக் குமரிப் படை தழீஇய கூற்று வினை ஆடவர் தமர் பிறர் அறியா அமர் மயங்கு அழுவத்து இறையும் பெயரும் தோற்றி நுமருள் நாள் முறை தபுத்தீர் வம்-மின் ஈங்கு எனப் போர் மலைந்து ஒரு சிறை நிற்ப யாவரும் அரவு உமிழ் மணியின் குறுகார் நிரை தார் மார்பின் நின் கேள்வனைப் பிறரே &336 - பெருந்தேவனார் #1 அகநானூறு 51 பாலை - பெருந்தேவனார்(கடுகு பெருந்தேவனார்) ஆள்_வழக்கு அற்ற சுரத்திடைக் கதிர் தெற நீள் எரி பரந்த நெடும் தாள் யாத்து போழ் வளி முழங்கும் புல்லென் உயர் சினை முடை நசை இருக்கைப் பெடை முகம் நோக்கி ஊன் பதித்து அன்ன வெருவரு செம் செவி எருவைச் சேவல் கரிபு சிறை தீய வேனில் நீடிய வேய் உயர் நனம் தலை நீ உழந்து எய்தும் செய்வினை பொருட்பிணி பல் இதழ் மழைக் கண் மாஅயோள்-வயின் பிரியின் புணர்வது ஆயின் பிரியாது ஏந்து முலை முற்றம் வீங்கப் பல் ஊழ் சே_இழை தெளிர்ப்பக் கவைஇ நாளும் மனை முதல் வினையொடும் உவப்ப நினை மாண் நெஞ்சம் நீங்குதல் மறந்தே #2 குறுந்தொகை 255 பாலை - (கடுகு) பெருந்தேவனார் பொத்து இல் காழ அத்த யாஅத்துப் பொரி அரை முழுமுதல் உருவக் குத்தி மறம் கெழு தடக் கையின் வாங்கி உயங்கு நடைச் சிறு கண் பெரு நிரை உறு பசி தீர்க்கும் தட மருப்பு யானை கண்டனர் தோழி தம் கடன் இறீஇயர் எண்ணி இடம்-தொறும் காமர் பொருட்பிணிப் போகிய நாம் வெம் காதலர் சென்ற ஆறே #3 நற்றிணை 83 குறிஞ்சி - பெருந்தேவனார் எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய கடவுள் முது மரத்து உடன் உறை பழகிய தேயா வளை வாய்த் தெண் கண் கூர் உகிர் வாய்ப் பறை அசாஅம் வலி முந்து கூகை மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல் எலி வான் சூட்டொடு மலியப் பேணுதும் எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத் துஞ்சாது அலமரு பொழுதின் அஞ்சுவரக் கடும் குரல் பயிற்றாதீமே &337 - பெருந்தோள் குறுஞ்சாத்தனார் #1 குறுந்தொகை 308 குறிஞ்சி - பெருந்தோள் குறுஞ்சாத்தனார் சோலை வாழைச் சுரி நுகும்பு இனைய அணங்கு உடை இரும் தலை நீவலின் மதன் அழிந்து மயங்கு துயருற்ற மையல் வேழம் உயங்கு உயிர் மடப் பிடி உலை புறம் தைவர ஆம் இழி சிலம்பின் அரிது கண்படுக்கும் மா மலை நாடன் கேண்மை காமம் தருவது ஓர் கை தாழ்ந்தன்றே &338 - பெரும்பதுமனார் #1 குறுந்தொகை 7 பாலை - பெரும்பதுமனார் வில்லோன் காலன கழலே தொடியோள் மெல் அடி மேலவும் சிலம்பே நல்லோர் யார்-கொல் அளியர் தாமே ஆரியர் கயிறு ஆடு பறையின் கால் பொரக் கலங்கி வாகை வெண் நெற்று ஒலிக்கும் வேய் பயில் அழுவம் முன்னியோரே #2 நற்றிணை 2 பாலை - பெரும்பதுமனார் அழுந்துபட வீழ்ந்த பெரும் தண் குன்றத்து ஒலி வல் ஈந்தின் உலவை அம் காட்டு ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த செம் மறுத் தலைய நெய்த்தோர் வாய வல்லியம் பெரும் தலைக் குருளை மாலை மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே வை எயிற்று ஐயள் மடந்தை முன் உற்று எல் இடை நீங்கும் இளையோன் உள்ளம் காலொடு பட்ட மாரி மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே #3 நற்றிணை 109 பாலை - (மீளிப்) பெரும்பதுமனார் ஒன்றுதும் என்ற தொன்றுபடு நட்பின் காதலர் அகன்று எனக் கலங்கி பேதுற்று அன்னவோ இ நல்_நுதல் நிலை என வினவல் ஆனாப் புனை_இழை கேள் இனி உரைக்கல் ஆகா எவ்வம் இம்மென இரைக்கும் வாடை இருள் கூர் பொழுதில் துளி உடைத் தொழுவின் துணிதல் அற்றத்து உச்சிக் கட்டிய கூழை ஆவின் நிலை என ஒருவேன் ஆகி உலமரக் கழியும் இப் பகல் மடி பொழுதே #4 புறநானூறு 199 - பெரும்பதுமனார் கடவுள் ஆலத்துத் தடவுச் சினைப் பல் பழம் நெருநல் உண்டனம் என்னாது பின்னும் செலவு ஆனாவே கலி கொள் புள் இனம் அனையர் வாழியோ இரவலர் அவரைப் புரவு எதிர்கொள்ளும் பெரும் செய் ஆடவர் உடைமை ஆகும் அவர் உடைமை அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே &339 - பெரும்பாக்கனார் #1 குறுந்தொகை 296 நெய்தல் - பெரும்பாக்கனார் அம்ம வாழி தோழி புன்னை அலங்கு சினை இருந்த அம் சிறை நாரை உறு கழிச் சிறு மீன் முனையின் செறுவில் கள் நாறு நெய்தல் கதிரொடு நயக்கும் தண்ணம் துறைவன் காணின் முன் நின்று கடிய கழறல் ஓம்பு-மதி தொடியோள் இன்னள் ஆகத் துறத்தல் நும்மின் தகுமோ என்றனை துணிந்தே &340 - பெருவழுதி #1 நற்றிணை 55 குறிஞ்சி - பெருவழுதி ஓங்கு மலை நாட ஒழிக நின் வாய்மை காம்பு தலைமணந்த கல் அதர்ச் சிறு நெறி உறு பகை பேணாது இரவின் வந்து இவள் பொறி கிளர் ஆகம் புல்லத் தோள் சேர்பு அறு_கால்_பறவை அளவு இல மொய்த்தலின் கண் கோள் ஆக நோக்கிப் பண்டும் இனையையோ என வினவினள் யாயே அதன் எதிர் சொல்லாள் ஆகி அல்லாந்து என் முகம் நோக்கியோளே அன்னாய் யாங்கு உணர்ந்து உய்குவள்-கொல் என மடுத்த சாந்த ஞெகிழி காட்டி ஈங்கு ஆயினவால் என்றிசின் யானே #2 நற்றிணை 56 பாலை - பெருவழுதி குறு நிலைக் குரவின் சிறு நனை நறு வீ வண்டு தரு நாற்றம் வளி கலந்து ஈயக் கண் களி பெறூஉம் கவின் பெறு காலை எல் வளை ஞெகிழ்த்தோர்க்கு அல்லல் உறீஇச் சென்ற நெஞ்சம் செய்வினைக்கு அசாவா ஒருங்கு வரல் நசையொடு வருந்தும்-கொல்லோ அருளான் ஆதலின் அழிந்து இவண் வந்து தொல் நலன் இழந்த என் பொன் நிறம் நோக்கி ஏதிலாட்டி இவள் எனப் போயின்று-கொல்லோ நோய் தலைமணந்தே &341 - பேயனார் #1 அகநானூறு 234 முல்லை - பேயனார்(கழார்க்கீரன் எயிற்றியார்) கார் பயம் பொழிந்த நீர் திகழ் காலை நுண் அயிர் பரந்த தண் அய மருங்கின் நிரை பறை அன்னத்து அன்ன விரை பரிப் புல் உளைக் கலிமா மெல்லிதின் கொளீஇய வள்பு ஒருங்கு அமையப் பற்றி முள்கிய பல் கதிர் ஆழி மெல் வழி அறுப்பக் கால் என மருள ஏறி நூல் இயல் கண் நோக்கு ஒழிக்கும் பண் அமை நெடும் தேர் வல் விரைந்து ஊர்-மதி நல் வலம் பெறுந ததர் தழை முனைஇய தெறி நடை மடப் பிணை ஏறு புணர் உவகைய ஊறு இல உகள அம் சிறை வண்டின் மென் பறைத் தொழுதி முல்லை நறு மலர்த் தாது நயந்து ஊத எல்லை போகிய புல்லென் மாலை புறவு அடைந்திருந்த உறைவு இன் நல் ஊர் கழி படர் உழந்த பனி வார் உண்கண் நல் நிறம் பரந்த பசலையள் மின் நேர் ஓதி பின்னு பிணி விடவே **ஐங்குறுநூறு - ஐந்தாம் நூறு - முல்லை - பேயனார் **41 செவிலி கூற்றுப் பத்து #2 ஐங்குறுநூறு 401 - முல்லை - பேயனார் மறி இடைப்படுத்த மான் பிணை போலப் புதல்வன் நடுவணன் ஆக நன்றும் இனிது-மன்ற அவர் கிடக்கை முனிவு இன்றி நீல் நிற வியலகம் கவைஇய ஈனும் உம்பரும் பெறல் அரும்-குரைத்தே #3 ஐங்குறுநூறு 402 - முல்லை - பேயனார் புதல்வன் கவைஇய தாய் புறம் முயங்கி நசையினன் வதிந்த கிடக்கை பாணர் நரம்பு உளர் முரற்கை போல இனிதால் அம்ம பண்புமார் உடைத்தே #4 ஐங்குறுநூறு 403 - முல்லை - பேயனார் புணர்ந்த காதலியின் புதல்வன் தலையும் அமர்ந்த உள்ளம் பெரிது ஆகின்றே அகன் பெரும் சிறப்பின் தந்தை பெயரன் முறுவலின் இன் நகை பயிற்றிச் சிறு தேர் உருட்டும் தளர் நடை கண்டே #5 ஐங்குறுநூறு 404 - முல்லை - பேயனார் வாள் நுதல் அரிவை மகன் முலை ஊட்ட தான் அவள் சிறுபுறம் கவையினன் நன்றும் நறும் பூம் தண் புறவு அணிந்த குறும் பல் பொறைய நாடு கிழவோனே #6 ஐங்குறுநூறு 405 - முல்லை - பேயனார் ஒண் சுடர்ப் பாண்டில் செம் சுடர் போல மனைக்கு விளக்கு ஆயினள்-மன்ற கனைப் பெயல் பூப் பல அணிந்த வைப்பின் புறவு அணி நாடன் புதல்வன் தாயே #7 ஐங்குறுநூறு 406 - முல்லை - பேயனார் மாதர் உண்கண் மகன் விளையாடக் காதலித் தழீஇ இனிது இருந்தனனே தாது ஆர் பிரசம் ஊதும் போது ஆர் புறவின் நாடு கிழவோனே #8 ஐங்குறுநூறு 407 - முல்லை - பேயனார் நயந்த காதலித் தழீஇப் பாணர் நயம்படு முரற்கையின் யாத்த பயன் தெரிந்து இன்புறு புணர்ச்சி நுகரும் மென்புல வைப்பின் நாடு கிழவோனே #9 ஐங்குறுநூறு 408 - முல்லை - பேயனார் பாணர் முல்லை பாடச் சுடர் இழை வாள் நுதல் அரிவை முல்லை மலைய இனிது இருந்தனனே நெடுந்தகை துனி தீர் கொள்கைத் தன் புதல்வனொடு பொலிந்தே #10 ஐங்குறுநூறு 409 - முல்லை - பேயனார் புதல்வன் கவைஇயினன் தந்தை மென் மொழிப் புதல்வன் தாயோ இருவரும் கவையினள் இனிது-மன்ற அவர் கிடக்கை நனி இரும் பரப்பின் இவ் உலகுடன் உறுமே #11 ஐங்குறுநூறு 410 - முல்லை - பேயனார் மாலை முன்றில் குறும் கால் கட்டில் மனையோள் துணைவி ஆகப் புதல்வன் மார்பின் ஊரும் மகிழ் நகை இன்பப் பொழுதிற்கு ஒத்தன்று-மன்னே மென் பிணித்து அம்ம பாணனது யாழே **42 கிழவன் பருவம் பாராட்டுப் பத்து #12 ஐங்குறுநூறு 411 - முல்லை - பேயனார் ஆர் குரல் எழிலி அழி துளி சிதறிக் கார் தொடங்கின்றால் காமர் புறவே வீழ்தரு புதுப் புனல் ஆடுகம் தாழ் இரும் கூந்தல் வம்-மதி விரைந்தே #13 ஐங்குறுநூறு 412 - முல்லை - பேயனார் காயா கொன்றை நெய்தல் முல்லை போது அவிழ் தளவொடு பிடவு அலர்ந்து கவினிப் பூ அணி கொண்டன்றால் புறவே பேர் அமர்க் கண்ணி ஆடுகம் விரைந்தே #14 ஐங்குறுநூறு 413 - முல்லை - பேயனார் நின் நுதல் நாறும் நறும் தண் புறவில் நின்னே போல மஞ்ஞை ஆலக் கார் தொடங்கின்றால் பொழுதே பேர் இயல் அரிவை நாம் நயத்தகவே #15 ஐங்குறுநூறு 414 - முல்லை - பேயனார் புள்ளும் மாவும் புணர்ந்து இனிது உகளக் கோட்டவும் கொடியவும் பூப் பல பழுனி மெல் இயல் அரிவை கண்டிகும் மல்லல் ஆகிய மணம் கமழ் புறவே #16 ஐங்குறுநூறு 415 - முல்லை - பேயனார் இதுவே மடந்தை நாம் மேவிய பொழுதே உதுவே மடந்தை நாம் உள்ளிய புறவே இனிது உடன் கழிக்கின் இளமை இனிதால் அம்ம இனியவர்ப் புணர்வே #17 ஐங்குறுநூறு 416 - முல்லை - பேயனார் போது ஆர் நறும் துகள் கவினிப் புறவில் தாது ஆர்ந்து களிச் சுரும்பு அரற்றும் காமர் புதலின் மடப் பிடி தழீஇய மாவே சுடர்த் தொடி மடவரல் புணர்ந்தனம் யாமே #18 ஐங்குறுநூறு 417 - முல்லை - பேயனார் கார் கலந்தன்றால் புறவே பல உடன் நேர் பரந்தனவால் புனமே ஏர் கலந்து தாது ஆர் பிரசம் மொய்ப்பப் போது ஆர் கூந்தல் முயங்கினள் எம்மே #19 ஐங்குறுநூறு 418 - முல்லை - பேயனார் வானம்பாடி வறம் களைந்து ஆனாது அழி துளி தலைஇய புறவின் காண்வர வான் அர_மகளோ நீயே மாண் முலை அடைய முயங்கியோயே #20 ஐங்குறுநூறு 419 - முல்லை - பேயனார் உயிர் கலந்து ஒன்றிய செயிர் தீர் கேண்மைப் பிரிந்துறல் அறியா விருந்து கவவி நம் போல் நயவரப் புணர்ந்தன கண்டிகும் மடவரல் புறவின் மாவே #21 ஐங்குறுநூறு 420 - முல்லை - பேயனார் பொன் என மலர்ந்த கொன்றை மணி எனத் தேம் படு காயா மலர்ந்த தோன்றியொடு நல் நலம் எய்தினை புறவே நின்னைக் காணிய வருதும் யாமே வாள் நுதல் அரிவையொடு ஆய் நலம் படர்ந்தே **43 விரவுப் பத்து #22 ஐங்குறுநூறு 421 - முல்லை - பேயனார் மாலை வெண் காழ் காவலர் வீச நறும் பூம் புறவின் ஒடுங்கு முயல் இரியும் புன்புல நாடன் மட_மகள் நலம் கிளர் பணைத் தோள் விலங்கின செலவே #23 ஐங்குறுநூறு 422 - முல்லை - பேயனார் கடும் பரி நெடும் தேர்க் கால் வல் புரவி நெடும் கொடி முல்லையொடு தளவ மலர் உதிர விரையுபு கடைஇ நாம் செல்லின் நிரை வளை முன்கை வருந்தலோ இலளே #24 ஐங்குறுநூறு 423 - முல்லை - பேயனார் மா மழை இடியூஉத் தளி சொரிந்தன்றே வாள் நுதல் பசப்பச் செலவு அயர்ந்தனையே யாமே நின் துறந்து அமையலம் ஆய் மலர் உண்கணும் நீர் நிறைந்தனவே #25 ஐங்குறுநூறு 424 - முல்லை - பேயனார் புறவு அணி நாடன் காதல் மட_மகள் ஒள் நுதல் பசப்ப நீ செலின் தெண் நீர்ப் போது அவிழ் தாமரை அன்ன நின் காதலன் புதல்வன் அழும் இனி முலைக்கே #26 ஐங்குறுநூறு 425 - முல்லை - பேயனார் புன் புறப் பேடை சேவல் இன்புற மன்னர் இயவரின் இரங்கும் கானம் வல்லை நெடும் தேர் கடவின் அல்லல் அரு நோய் ஒழித்தல் எமக்கு எளிதே #27 ஐங்குறுநூறு 426 - முல்லை - பேயனார் வென் வேல் வேந்தன் அரும் தொழில் துறந்து இனி நல்_நுதல் யானே செலவு ஒழிந்தனனே முரசு பாடு அதிர ஏவி அரசு படக் கடக்கும் அரும் சமத்தானே #28 ஐங்குறுநூறு 427 - முல்லை - பேயனார் பேர் அமர் மலர்க் கண் மடந்தை நீயே கார் எதிர் பொழுது என விடல் ஒல்லாயே போர் உடை வேந்தன் பாசறை வாரான் அவன் எனச் செலவு அழுங்கினனே #29 ஐங்குறுநூறு 428 - முல்லை - பேயனார் தேர் செலவு அழுங்கத் திருவில் கோலி ஆர் கலி எழிலி சோர் தொடங்கின்றே வேந்து விடு விழுத் தொழில் ஒழிய யான் தொடங்கினனால் நின் புறந்தரவே #30 ஐங்குறுநூறு 429 - முல்லை - பேயனார் பல் இரும் கூந்தல் பசப்பு நீ விடின் செல்வேம்-தில்ல யாமே செற்றார் வெல் கொடி அரணம் முருக்கிய கல்லா யானை வேந்து பகை வெலற்கே #31 ஐங்குறுநூறு 430 - முல்லை - பேயனார் நெடும் பொறை மிசைய குறும் கால் கொன்றை அடர் பொன் என்னச் சுடர் இதழ் பகரும் கான் கெழு நாடன் மகளே அழுதல் ஆன்றிசின் அழுங்குவல் செலவே **44 புறவணிப் பத்து #32 ஐங்குறுநூறு 431 - முல்லை - பேயனார் நன்றே காதலர் சென்ற ஆறே அணி நிற இரும் பொறை மீமிசை மணி நிற உருவின தோகையும் உடைத்தே #33 ஐங்குறுநூறு 432 - முல்லை - பேயனார் நன்றே காதலர் சென்ற ஆறே சுடு பொன் அன்ன கொன்றை சூடிக் கடி புகுவனர் போல் மள்ளரும் உடைத்தே #34 ஐங்குறுநூறு 433 - முல்லை - பேயனார் நன்றே காதலர் சென்ற ஆறே நீர்ப் பட எழிலி வீசும் கார்ப் பெயற்கு எதிரிய கானமும் உடைத்தே #35 ஐங்குறுநூறு 434 - முல்லை - பேயனார் நன்றே காதலர் சென்ற ஆறே மறி உடை மாண் பிணை உகளத் தண் பெயல் பொழிந்த இன்பமும் உடைத்தே #36 ஐங்குறுநூறு 435 - முல்லை - பேயனார் நன்றே காதலர் சென்ற ஆறே நிலன் அணி நெய்தல் மலரப் பொலன் அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே #37 ஐங்குறுநூறு 436 - முல்லை - பேயனார் நன்றே காதலர் சென்ற ஆறே நல் பொன் அன்ன சுடர் இணர்க் கொன்றையொடு மலர்ந்த குருந்துமார் உடைத்தே #38 ஐங்குறுநூறு 437 - முல்லை - பேயனார் நன்றே காதலர் சென்ற ஆறே ஆலித் தண் மழை தலைஇய வாலிய மலர்ந்த முல்லையும் உடைத்தே #39 ஐங்குறுநூறு 438 - முல்லை - பேயனார் நன்றே காதலர் சென்ற ஆறே பைம் புதல் பல் பூ மலர இன்புறத் தகுந பண்புமார் உடைத்தே #40 ஐங்குறுநூறு 439 - முல்லை - பேயனார் நன்றே காதலர் சென்ற ஆறே குருந்தக் கண்ணிக் கோவலர் பெரும் தண் நிலைய பாக்கமும் உடைத்தே #41 ஐங்குறுநூறு 440 - முல்லை - பேயனார் நன்றே காதலர் சென்ற ஆறே தண் பெயல் அளித்த பொழுதின் ஒண் சுடர்த் தோன்றியும் தளவமும் உடைத்தே **45 பாசறைப் பத்து #42 ஐங்குறுநூறு 441 - முல்லை - பேயனார் ஐய ஆயின செய்யோள் கிளவி கார் நாள் உருமொடு கையறப் பிரிந்து என நோய் நன்கு செய்தன எமக்கே யாம் உறு துயரம் அவள் அறியினோ நன்றே #43 ஐங்குறுநூறு 442 - முல்லை - பேயனார் பெரும் சின வேந்தன் அரும் தொழில் தணியின் விருந்து நனி பெறுதலும் உரியள் மாதோ இருண்டு தோன்று விசும்பின் உயர்_நிலை_உலகத்து அருந்ததி அனைய கற்பின் குரும்பை மணிப் பூண் புதல்வன் தாயே #44 ஐங்குறுநூறு 443 - முல்லை - பேயனார் நனி சேய்த்து என்னாது நல் தேர் ஏறிச் சென்று இலங்கு நிலவின் இளம்பிறை போலக் காண்குவெம்-தில் அவள் கவின் பெறு சுடர் நுதல் விண் உயர் அரண் பல வௌவிய மண்ணுறு முரசின் வேந்து தொழில் விடினே #45 ஐங்குறுநூறு 444 - முல்லை - பேயனார் பெரும் தோள் மடவரல் காண்குவெம்-தில்ல நீள் மதில் அரணம் பாய்ந்து எனத் தொடி பிளந்து வை நுதி மழுகிய தடம் கோட்டு யானை வென் வேல் வேந்தன் பகை தணிந்து இன்னும் தன் நாட்டு முன்னுதல் பெறினே #46 ஐங்குறுநூறு 445 - முல்லை - பேயனார் புகழ் சால் சிறப்பின் காதலி புலம்பத் துறந்து வந்தனையே அரும் தொழில் கட்டூர் நல் ஏறு தழீஇ நாகு பெயர் காலை உள்ளு-தொறும் கலிழும் நெஞ்சம் வல்லே எம்மையும் வர இழைத்தனையே #47 ஐங்குறுநூறு 446 - முல்லை - பேயனார் முல்லை நாறும் கூந்தல் கமழ் கொள நல்ல காண்குவம் மாஅயோயே பாசறை அரும் தொழில் உதவி நம் காதல் நல் நாட்டுப் போதரும் பொழுதே #48 ஐங்குறுநூறு 447 - முல்லை - பேயனார் பிணி வீடு பெறுக மன்னவன் தொழிலே பனி வளர் தளவின் சிரல் வாய்ச் செம் முகை ஆடு சிறை வண்டு அவிழ்ப்பப் பாடு சான்ற காண்கம் வாள்_நுதலே #49 ஐங்குறுநூறு 448 - முல்லை - பேயனார் தழங்கு குரல் முரசம் காலை இயம்பக் கடும் சின வேந்தன் தொழில் எதிர்ந்தனனே மெல் அவல் மருங்கின் முல்லை பூப்பப் பொங்கு பெயல் கனை துளி கார் எதிர்ந்தன்றே அம்_சில்_ஓதியை உள்ளு-தொறும் துஞ்சாது அலமரல் நாம் எதிர்ந்தனமே #50 ஐங்குறுநூறு 449 - முல்லை - பேயனார் முரம்பு கண் உடையத் திரியும் திகிரியொடு பணை நிலை முனைஇய வய_மாப் புணர்ந்து திண்ணிதின் மாண்டன்று தேரே ஒண்_நுதல் காண்குவம் வேந்து வினை முடினே #51 ஐங்குறுநூறு 450 - முல்லை - பேயனார் முரசு மாறு இரட்டும் அரும் தொழில் பகை தணிந்து நாடு முன்னியரோ பீடு கெழு வேந்தன் வெய்ய உயிர்க்கும் நோய் தணியச் செய்யோள் இள முலைப் படீஇயர் என் கண்ணே **46 பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து #52 ஐங்குறுநூறு 451 - முல்லை - பேயனார் கார் செய் காலையொடு கையறப் பிரிந்தோர் தேர் தரு விருந்தின் தவிர்குதல் யாவது மாற்று அரும் தானை நோக்கி ஆற்றவும் இருத்தல் வேந்தனது தொழிலே #53 ஐங்குறுநூறு 452 - முல்லை - பேயனார் வறந்த ஞாலம் தளிர்ப்ப வீசிக் கறங்கு குரல் எழிலி கார் செய்தன்றே பகை வெம் காதலர் திறை தரு முயற்சி மென் தோள் ஆய் கவின் மறையப் பொன் புனை பீரத்து அலர் செய்தன்றே #54 ஐங்குறுநூறு 453 - முல்லை - பேயனார் அவல்-தொறும் தேரை தெவிட்ட மிசை-தொறும் வெம் குரல் புள் இனம் ஒலிப்ப உதுக் காண் கார் தொடங்கின்றால் காலை அதனால் நீர் தொடங்கினவால் நெடும் கண் அவர் தேர் தொடங்கு இன்றால் நம்-வயினானே #55 ஐங்குறுநூறு 454 - முல்லை - பேயனார் தளவின் பைம் கொடி தழீஇப் பையென நிலவின் அன்ன நேர் அரும்பு பேணிக் கார் நயந்து எய்தும் முல்லை அவர் தேர் நயந்து உறையும் என் மாமைக் கவினே #56 ஐங்குறுநூறு 455 - முல்லை - பேயனார் அரசு பகை தணிய முரசு படச் சினைஇ ஆர் குரல் எழிலி கார் தொடங்கின்றே அளியவோ அளிய தாமே ஒளி பசந்து மின் இழை ஞெகிழச் சாஅய்த் தொல் நலம் இழந்த என் தட மென் தோளே #57 ஐங்குறுநூறு 456 - முல்லை - பேயனார் உள்ளார்-கொல்லோ தோழி வெள் இதழ்ப் பகல் மதி உருவின் பகன்றை மா மலர் வெண் கொடி ஈங்கை பைம் புதல் அணியும் அரும் பனி அளைஇய கூதிர் ஒருங்கு இவண் உறைதல் தெளிந்து அகன்றோரே #58 ஐங்குறுநூறு 457 - முல்லை - பேயனார் பெய் பனி நலிய உய்தல் செல்லாது குருகு இனம் நரலும் பிரிவு அரும் காலைத் துறந்து அமைகல்லார் காதலர் மறந்து அமைகல்லாது என் மடம் கெழு நெஞ்சே #59 ஐங்குறுநூறு 458 - முல்லை - பேயனார் துணர்க் காய்க் கொன்றைக் குழல் பழம் ஊழ்த்தன அதிர் பெயற்கு எதிரிய சிதர் கொள் தண் மலர் பாணர் பெருமகன் பிரிந்து என மாண் நலம் இழந்த என் கண் போன்றனவே #60 ஐங்குறுநூறு 459 - முல்லை - பேயனார் மெல் இறைப் பணைத் தோள் பசலை தீரப் புல்லவும் இயைவது-கொல்லோ புல்லார் ஆர் அரண் கடந்த சீர் கெழு தானை வெல் போர் வேந்தனொடு சென்ற நல் வயல் ஊரன் நறும் தண் மார்பே #61 ஐங்குறுநூறு 460 - முல்லை - பேயனார் பெரும் சின வேந்தனும் பாசறை முனியான் இரும் கலி வெற்பன் தூதும் தோன்றா ததை இலை வாழை முழுமுதல் அசைய இன்னா வாடையும் அலைக்கும் என் ஆகுவன்-கொல் அளியென் யானே **47 தோழி வற்புறுத்த பத்து #62 ஐங்குறுநூறு 461 - முல்லை - பேயனார் வான் பிசிர்க் கருவியின் பிடவு முகை தகையக் கான் பிசிர் கற்பக் கார் தொடங்கின்றே இனையல் வாழி தோழி எனையதூஉம் நின் துறந்து அமைகுவர் அல்லர் வெற்றி வேந்தன் பாசறையோரே #63 ஐங்குறுநூறு 462 - முல்லை - பேயனார் ஏது இல பெய்ம் மழை கார் என மயங்கிய பேதை அம் கொன்றைக் கோதை நிலை நோக்கி எவன் இனி மடந்தை நின் கலிழ்வே நின்-வயின் தகை எழில் வாட்டுநர் அல்லர் முகை அவிழ் புறவின் நாடு இறந்தோரே #64 ஐங்குறுநூறு 463 - முல்லை - பேயனார் புதல் மிசை நறு மலர் கவின் பெறத் தொடரி நின் நலம் மிகு கூந்தல் தகைகொளப் புனைய வாராது அமையலோ இலரே நேரார் நாடு படு நன் கலம் தரீஇயர் நீடினர் தோழி நம் காதலோரே #65 ஐங்குறுநூறு 464 - முல்லை - பேயனார் கண் எனக் கருவிளை மலரப் பொன் என இவர் கொடிப் பீரம் இரும் புதல் மலரும் அற்சிரம் மறக்குநர் அல்லர் நின் நல் தோள் மருவரற்கு உலமருவோரே #66 ஐங்குறுநூறு 465 - முல்லை - பேயனார் நீர் இகுவு அன்ன நிமிர் பரி நெடும் தேர் கார் செய் கானம் கவின் படக் கடைஇ மயங்கு மலர் அகலம் நீ இனிது முயங்க வருவர் வாழி தோழி செரு வெம் குருசில் தணிந்தனன் பகையே #67 ஐங்குறுநூறு 466 - முல்லை - பேயனார் வேந்து விடு விழுத் தொழில் எய்தி ஏந்து கோட்டு அண்ணல் யானை அரசு விடுத்து இனியே எண்ணிய நாள் அகம் வருதல் பெண் இயல் காமர் சுடர் நுதல் விளங்கும் தே மொழி அரிவை தெளிந்திசின் யானே #68 ஐங்குறுநூறு 467 - முல்லை - பேயனார் புனை இழை நெகிழச் சாஅய் நொந்துநொந்து இனையல் வாழியோ இகுளை வினை-வயின் சென்றோர் நீடினர் பெரிது எனத் தங்காது நம்மினும் விரையும் என்ப வெம் முரண் யானை விறல் போர் வேந்தே #69 ஐங்குறுநூறு 468 - முல்லை - பேயனார் வரி நுணல் கறங்கத் தேரை தெவிட்டக் கார் தொடங்கின்றே காலை இனி நின் நேர் இறை பணைத் தோட்கு ஆர் விருந்து ஆக வடி மணி நெடும் தேர் கடைஇ வருவர் இன்று நம் காதலோரே #70 ஐங்குறுநூறு 469 - முல்லை - பேயனார் பைம் தினை உணங்கல் செம்பூழ் கவரும் வன்புல நாடன் தரீஇய வலன் ஏர்பு அம் கண் இரு விசும்பு அதிர ஏறொடு பெயல் தொடங்கின்றே வானம் காண்குவம் வம்மோ பூம் கணோயே #71 ஐங்குறுநூறு 470 - முல்லை - பேயனார் இரு நிலம் குளிர்ப்ப வீசி அல்கலும் அரும் பனி அளைஇய அற்சிரக் காலை உள்ளார் காதலர் ஆயின் ஒள்_இழை சிறப்பொடு விளங்கிய காட்சி மறக்க விடுமோ நின் மாமைக் கவினே **48 பாணன் பத்து #72 ஐங்குறுநூறு 471 - முல்லை - பேயனார் எல் வளை நெகிழ மேனி வாடப் பல் இதழ் உண்கண் பனி அலைக் கலங்கத் துறந்தோன்-மன்ற மறம் கெழு குருசில் அது மற்று உணர்ந்தனை போலாய் இன்னும் வருதி என அவர் தகவே #73 ஐங்குறுநூறு 472 - முல்லை - பேயனார் கை வல் சீறியாழ் பாண நுமரே செய்த பருவம் வந்து நின்றதுவே எம்மின் உணரார் ஆயினும் தம்-வயின் பொய் படு கிளவி நாணலும் எய்யார் ஆகுதல் நோகோ யானே #74 ஐங்குறுநூறு 473 - முல்லை - பேயனார் பலர் புகழ் சிறப்பின் நும் குருசில் உள்ளிச் செலவு நீ நயந்தனை ஆயின்-மன்ற இன்னா அரும் படர் எம்-வயின் செய்த பொய் வலாளர் போலக் கை வல் பாண எம் மறவாதீமே #75 ஐங்குறுநூறு 474 - முல்லை - பேயனார் மை அறு சுடர் நுதல் விளங்கக் கறுத்தோர் செய் அரண் சிதைத்த செரு மிகு தானையொடு கதழ் பரி நெடும் தேர் அதர் படக் கடைஇச் சென்றவர்த் தருகுவல் என்னும் நன்றால் அம்ம பாணனது அறிவே #76 ஐங்குறுநூறு 475 - முல்லை - பேயனார் தொடி நிலை கலங்க வாடிய தோளும் வடி நலன் இழந்த என் கண்ணும் நோக்கிப் பெரிது புலம்பினனே சீறியாழ்ப் பாணன் எம் வெம் காதலொடு பிரிந்தோர் தம்மோன் போலான் பேர் அன்பினனே #77 ஐங்குறுநூறு 476 கருவி வானம் கார் சிறந்து ஆர்ப்ப பருவம் செய்தன பைம் கொடி முல்லை பல் ஆன் கோவலர் படலைக் கூட்டும் அன்பு இல் மாலையும் உடைத்தோ அன்பு இல் பாண அவர் சென்ற நாடே #78 ஐங்குறுநூறு 477 - முல்லை - பேயனார் பனி மலர் நெடும் கண் பசலை பாயத் துனி மலி துயரமொடு அரும் படர் உழப்போள் கையறு நெஞ்சிற்கு உயவுத் துணை ஆகச் சிறு வரைத் தங்குவை ஆயின் காண்குவை-மன்னால் பாண எம் தேரே #79 ஐங்குறுநூறு 478 - முல்லை - பேயனார் நீடினம் என்று கொடுமை தூற்றி வாடிய நுதலள் ஆகிப் பிறிது நினைந்து யாம் வெம் காதலி நோய் மிகச் சாஅய்ச் சொல்லியது உரை-மதி நீயே முல்லை நல் யாழ் பாண மற்று எமக்கே #80 ஐங்குறுநூறு 479 - முல்லை - பேயனார் சொல்லு-மதி பாண சொல்லு-தோறு இனிய நாடு இடை விலங்கிய எம்-வயின் நாள்-தொறும் அரும் பனி கலந்த அருள் இல் வாடை தனிமை எள்ளும் பொழுதில் பனி மலர்க் கண்ணி கூறியது எமக்கே #81 ஐங்குறுநூறு 480 - முல்லை - பேயனார் நினக்கு யாம் பாணரேம் அல்லேம் எமக்கு நீயும் குருசிலை அல்லை-மாதோ நின் வெம் காதலி தன் மனைப் புலம்பி ஈர் இதழ் உண்கண் உகுத்த பூசல் கேட்டும் அருளாதோயே **49 தேர் வியங்கொண்ட பத்து #82 ஐங்குறுநூறு 481 - முல்லை - பேயனார் சாய் இறைப் பணைத் தோள் அம் வரி அல்குல் சே இழை மாதரை உள்ளி நோய் விட முள் இட்டு ஊர்-மதி வலவ நின் புள் இயல் கலி மாப் பூண்ட தேரே #83 ஐங்குறுநூறு 482 - முல்லை - பேயனார் தெரி இழை அரிவைக்குப் பெரு விருந்து ஆக வல் விரைத்து கடவு-மதி பாக வெள் வேல் வென்று அடு தானை வேந்தனொடு நாள் இடைச் சேப்பின் ஊழியின் நெடிதே #84 ஐங்குறுநூறு 483 - முல்லை - பேயனார் ஆறு வனப்பு எய்த அலர் தாயினவே வேந்து விட்டனனே மா விரைந்தனவே முன் உறக் கடவு-மதி பாக நல் நுதல் அரிவை தன் நலம் பெறவே #85 ஐங்குறுநூறு 484 - முல்லை - பேயனார் வேனில் நீங்கக் கார் மழை தலைஇக் காடு கவின் கொண்டன்று பொழுது பாடு சிறந்து கடியக் கடவு-மதி பாக நெடிய நீடினம் நேர்_இழை மறந்தே #86 ஐங்குறுநூறு 485 - முல்லை - பேயனார் அரும் படர் அவலம் அவளும் தீரப் பெரும் தோள் நலம் வர யாமும் முயங்க ஏ-மதி வலவ தேரே மா மருண்டு உகளும் மலர் அணிப் புறவே #87 ஐங்குறுநூறு 486 - முல்லை - பேயனார் பெரும் புன் மாலை ஆனது நினைஇ அரும் படர் உழத்தல் யாவது என்றும் புல்லி ஆற்றாப் புரையோள் காண வள்பு தெரிந்து ஊர்-மதி வலவ நின் புள் இயல் கலி மாப் பூண்ட தேரே #88 ஐங்குறுநூறு 487 - முல்லை - பேயனார் இது-மன் பிரிந்தோர் உள்ளும் பொழுதே செறி_தொடி உள்ளம் உவப்ப மதி உடை வலவ ஏ-மதி தேரே #89 ஐங்குறுநூறு 488 - முல்லை - பேயனார் கருவி வானம் பெயல் தொடங்கின்றே பெரு விறல் காதலி கருதும் பொழுதே விரி உளை நன் மாப் பூட்டி பருவரல் தீரக் கடவு-மதி தேரே #90 ஐங்குறுநூறு 489 - முல்லை - பேயனார் அம் சிறை வண்டின் அரி இனம் மொய்ப்ப மென்புல முல்லை மலரும் மாலைப் பையுள் நெஞ்சின் தையல் உவப்ப நுண் புரி வண் கயிறு இயக்கி நின் வண் பரி நெடும் தேர் கடவு-மதி விரைந்தே #91 ஐங்குறுநூறு 490 - முல்லை - பேயனார் அம்_தீம்_கிளவி தான் தர எம்-வயின் வந்தன்று மாதோ காரே ஆவயின் ஆய்_தொடி அரும் படர் தீர ஆய் மணி நெடும் தேர் கடவு-மதி விரைந்தே **50 வரவுச் சிரப்புரைத்த பத்து #92 ஐங்குறுநூறு 491 - முல்லை - பேயனார் கார் அதிர் காலை யாம் ஓ இன்று நலிய நொந்துநொந்து உயவும் உள்ளமொடு வந்தனெம் மடந்தை நின் ஏர் தர விரைந்தே #93 ஐங்குறுநூறு 492 - முல்லை - பேயனார் நின்னே போலும் மஞ்ஞை ஆல நின் நல் நுதல் நாறும் முல்லை மலர நின்னே போல மா மருண்டு நோக்க நின்னே உள்ளி வந்தனென் நல் நுதல் அரிவை காரினும் விரைந்தே #94 ஐங்குறுநூறு 493 - முல்லை - பேயனார் ஏறு முரண் சிறப்ப ஏறு எதிர் இரங்க மாதர் மான் பிணை மறியொடு மறுக கார் தொடங்கின்றே காலை நேர்_இறை_முன்கை நின் உள்ளி யாம் வரவே #95 ஐங்குறுநூறு 494 - முல்லை - பேயனார் வண்டு தாது ஊதத் தேரை தெவிட்டத் தண் கமழ் புறவின் முல்லை மலர இன்புறுத்தன்று பொழுதே நின் குறி வாய்த்தனம் தீர்க இனிப் படரே #96 ஐங்குறுநூறு 495 - முல்லை - பேயனார் செந்நில மருங்கில் பல் மலர் தாஅய்ப் புலம்பு தீர்ந்து இனிய ஆயின புறவே பின் இரும் கூந்தல் நல் நலம் புனைய உள்ளு-தொறும் கவிழும் நெஞ்சமொடு முள் எயிற்று அரிவை யாம் வந்த மாறே #97 ஐங்குறுநூறு 496 - முல்லை - பேயனார் மா புதல் சேர வரகு இணர் சிறப்ப மா மலை புலம்பக் கார் கலித்து அலைப்பப் பேர் அமர்க் கண்ணி நின் பிரிந்து உறைநர் தோள் துணை ஆக வந்தனர் போது அவிழ் கூந்தலும் பூ விரும்புகவே #98 ஐங்குறுநூறு 497 - முல்லை - பேயனார் குறும் பல் கோதை கொன்றை மலர நெடும் செம் புற்றம் ஈயல் பகர மா பசி மறுப்பக் கார் தொடங்கின்றே பேர் இயல் அரிவை நின் உள்ளிப் போர் வெம் குருசில் வந்த மாறே #99 ஐங்குறுநூறு 498 - முல்லை - பேயனார் தோள் கவின் எய்தின தொடி நிலை நின்றன நீள் வரி நெடும் கண் வாள் வனப்புற்றன ஏந்து கோட்டு யானை வேந்து தொழில் விட்டு என விரை செலல் நெடும் தேர் கடைஇ வரையக நாடன் வந்த மாறே #100 ஐங்குறுநூறு 499 - முல்லை - பேயனார் பிடவம் மலரத் தளவம் நனையக் கார் கவின் கொண்ட கானம் காணின் வருந்துவள் பெரிது என அரும் தொழிற்கு அகலாது வந்தனரால் நம் காதலர் அம் தீம் கிளவி நின் ஆய் நலம் கொண்டே #101 ஐங்குறுநூறு 500 - முல்லை - பேயனார் கொன்றைப் பூவின் பசந்த உண்கண் குன்றக நெடும் சுனைக் குவளை போலத் தொல் கவின் பெற்றன இவட்கே வெல் போர் வியல் நெடும் பாசறை நீடிய வய_மான் தோன்றல் நீ வந்த மாறே #102 குறுந்தொகை 233 முல்லை - பேயனார் நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை உறை அறு மையின் போகிச் சாரல் குறவர் பாக்கத்து இழிதரும் நாடன் மயங்கு மலர்க் கோதை நல் மார்பு முயங்கல் இனிது-மன் வாழி தோழி மா இதழ்க் குவளை உண்கண் கலுழப் பசலை ஆகா ஊங்கலங்கடையே கவலை கெண்டிய அகல் வாய்ச் சிறு குழி கொன்றை ஒள் வீ தாஅய்ச் செல்வர் பொன் பெய் பேழை மூய் திறந்து அன்ன கார் எதிர் புறவினதுவே உயர்ந்தோர்க்கு நீரொடு சொரிந்த மிச்சில் யாவர்க்கும் வரை கோள் அறியாச் சொன்றி நிரை கோல் குறும்_தொடி தந்தை ஊரே #103 குறுந்தொகை 339 குறிஞ்சி - (பேயார்)பேயனார் நறை அகில் வயங்கிய நளி புன நறும் புகை உறை அறு மையின் போகிச் சாரல் குறவர் பாக்கத்து இழிதரும் நாடன் மயங்கு மலர்க் கோதை நல் மார்பு முயங்கல் இனிது-மன் வாழி தோழி மா இதழ்க் குவளை உண்கண் கலுழப் பசலை ஆகா ஊங்கலங்கடையே #104 குறுந்தொகை 359 மருதம் - பேயனார் கண்டிசின் பாண பண்பு உடைத்து அம்ம மாலை விரிந்த பசு வெண் நிலவின் குறும் கால் கட்டில் நறும் பூம் சேக்கைப் பள்ளி யானையின் உயிர்த்தனன் நசைஇ புதல்வன் தழீஇயினன் விறலவன் புதல்வன் தாய் அவன் புறம் கவைஇயினளே #105 குறுந்தொகை 400 முல்லை - பேயனார் சேய் ஆறு செல்வாம் ஆயின் இடர் இன்று களைகலம் காமம் பெரும்_தோட்கு என்று நன்று புரிந்து எண்ணிய மனத்தை ஆகி முரம்பு கண் உடைய ஏகிக் கரம்பைப் புது வழிப் படுத்த மதி உடை வலவோய் இன்று தந்தனை தேரோ நோய் உழந்து உறைவியை நல்கலானே &342 - பேய்மகள் இளவெயினியார் #1 புறநானூறு 11 - பேய்மகள் இளவெயினியார் **பாடப்பட்டோன் - சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ அரி மயிர்த் திரள் முன்கை வால் இழை மட மங்கையர் வரி மணல் புனை பாவைக்குக் குலவுச் சினைப் பூக் கொய்து தண் பொருநை புனல் பாயும் விண் பொரு புகழ் விறல் வஞ்சி பாடல் சான்ற விறல் வேந்தனும்மே வெப்பு உடைய அரண் கடந்து துப்புறுவர் புறம்பெற்றிசினே புறம்பெற்ற வய வேந்தன் மறம் பாடிய பாடினியும்மே ஏர் உடைய விழுக் கழஞ்சின் சீர் உடைய இழை பெற்றிசினே இழை பெற்ற பாடினிக்குக் குரல் புணர் சீர்க் கொளை வல் பாண்_மகனும்மே என ஆங்கு ஒள் அழல் புரிந்த தாமரை வெள்ளி நாரால் பூப் பெற்றிசினே &343 - (மதுரை) பேராலவாயார் #1 அகநானூறு 87 பாலை - (மதுரை) பேராலவாயார் தீம் தயிர் கடைந்த திரள் கால் மத்தம் கன்று வாய் சுவைப்ப முன்றில் தூங்கும் படலைப் பந்தர்ப் புல் வேய் குரம்பை நல்கூர் சீறூர் எல்லித் தங்கிக் குடுமி நெற்றி நெடு மரச் சேவல் தலைக் குரல் விடியல் போகி முனாஅது கடுங்கண் மறவர் கல் கெழு குறும்பின் எழுந்த தண்ணுமை இடம் கள் பாணி அரும் சுரம் செல்வோர் நெஞ்சம் துண்ணென குன்று சேர் கவலை இசைக்கும் அத்தம் நனி நீடு உழந்தனை-மன்னே அதனால் உவ இனி வாழிய நெஞ்சே மை அற வைகு சுடர் விளங்கும் வான் தோய் வியல் நகர்ச் சுணங்கு அணி வன முலை நலம் பாராட்டி தாழ் இரும் கூந்தல் நம் காதலி நீள் அமை வனப்பின் தோளுமார் அணைந்தே #2 அகநானூறு 296 மருதம் - (மதுரைப்) பேராலவாயார் கோதை இணர குறும் கால் காஞ்சிப் போது அவிழ் நறும் தாது அணிந்த கூந்தல் அரி மதர் மழைக் கண் மாஅயோளொடு நெருநையும் கமழ் பொழில் துஞ்சி இன்றும் பெரு நீர் வையை அவளொடு ஆடிப் புலரா மார்பினை வந்து நின்று எம்-வயின் கரத்தல் கூடுமோ மற்றே பரப்பில் பல் மீன் கொள்பவர் முகந்த இப்பி நார் அரி நறவின் மகிழ் நொடைக் கூட்டும் பேர் இசை கொற்கைப் பொருநன் வென் வேல் கடும் பகட்டு யானை நெடும் தேர்ச் செழியன் மலை புரை நெடு நகர்க் கூடல் நீடிய மலிதரு கம்பலை போல அலர் ஆகின்று அது பலர் வாய்ப் பட்டே #3 நற்றிணை 51 குறிஞ்சி - பேராலவாயர் யாங்குச் செய்வாம்-கொல் தோழி ஓங்கு கழைக் காம்பு உடை விடரகம் சிலம்பப் பாம்பு உடன்று ஓங்கு வரை மிளிர ஆட்டி வீங்கு செலல் கடும் குரல் ஏறொடு கனை துளி தலைஇப் பெயல் ஆனாதே வானம் பெயலொடு மின்னு நிமிர்ந்து அன்ன வேலன் வந்து எனப் பின்னு விடு முச்சி அளிப்பு ஆனாதே பெரும் தண் குளவி குழைத்த பா அடி இரும் சேறு ஆடிய நுதல கொல் களிறு பேதை ஆசினி ஒசித்த வீ ததர் வேங்கைய மலை கிழவோற்கே #4 நற்றிணை 361 முல்லை - (மதுரை) பேராலவாயர் சிறு வீ முல்லைப் பெரிது கமழ் அலரி தானும் சூடினன் இளைஞரும் மலைந்தனர் விசும்பு கடப்பு அன்ன பொலம் படைக் கலி மாப் படு மழை பொழிந்த தண் நறும் புறவில் நெடு நா ஒண் மணி பாடு சிறந்து இசைப்ப மாலை மான்ற மணம் மலி வியல் நகர்த் தந்தன நெடுந்தகை தேரே என்றும் அரும் படர் அகல நீக்கி விருந்து அயர் விருப்பினள் திருந்து இழையோளே #5 புறநானூறு 247 (மதுரைப்) பேராலவாயர் யானை தந்த முளி மர விறகின் கானவர் பொத்திய ஞெலி தீ விளக்கத்து மட மான் பெரு நிரை வைகு துயில் எடுப்பி மந்தி சீக்கும் அணங்கு உடை முன்றிலில் நீர் வார் கூந்தல் இரும் புறம் தாழப் பேர் அஞர்க் கண்ணள் பெரும் காடு நோக்கித் தெருமரும் அம்ம தானே தன் கொழுநன் முழுவு கண் துயிலாக் கடி உடை வியன் நகர்ச் சிறு நனி தமியள் ஆயினும் இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே #6 புறநானூறு 262 - மதுரைப் பேராலவாயர் நறவும் தொடு-மின் விடையும் வீழ்-மின் பாசுவல் இட்ட புன் கால் பந்தர்ப் புனல் தரும் இள மணல் நிறையப் பெய்ம்-மின் ஒன்னார் முன்னிலை முருக்கிப் பின் நின்று நிரையோடு வரூஉம் என் ஐக்கு உழையோர் தன்னினும் பெரும் சாயலரே &344 - (வடம வண்ணக்கன்) பேரிசாத்தனார் #1 அகநானூறு 38 குறிஞ்சி - (வடம வண்ணக்கன்) பேரிசாத்தனார் விரி இணர் வேங்கை வண்டு படு கண்ணியன் தெரி இதழ்க் குவளைத் தேம் பாய் தாரன் அம் சிலை இடவது ஆக வெம் செலல் கணை வலம் தெரிந்து துணை படர்ந்து உள்ளி வருதல் வாய்வது வான் தோய் வெற்பன் வந்தனன் ஆயின் அம் தளிர்ச் செயலைத் தாழ்வு இல் ஓங்கு சினை தொடுத்த வீழ் கயிற்று ஊசல் மாறிய மருங்கும் பாய்பு உடன் ஆடாமையின் கலுழ்பு இல தேறி நீடு இதழ் தலைஇய கவின் பெறு நீலம் கண் என மலர்ந்த சுனையும் வண் பறை மடக் கிளி எடுத்தல் செல்லாத் தடக் குரல் குலவுப் பொறை இறுத்த கோல் தலை இருவி கொய்து ஒழி புனமும் நோக்கி நெடிது நினைந்து பைதலன் பெயரலன்-கொல்லோ ஐ தேய்கு அய வெள் அருவி சூடிய உயர் வரைக் கூஉம் கணஃது எம் ஊர் என ஆங்கு அதை அறிவுறல் மறந்திசின் யானே #2 அகநானூறு 214 முல்லை - (வடம வண்ணக்கன்) பேரி சாத்தனார் அகல் இரு விசும்பகம் புதையப் பாஅய்ப் பகல் உடன் கரந்த பல் கதிர் வானம் இரும் களிற்று இன நிரை குளிர்ப்ப வீசி பெரும் பெயல் அழி துளி பொழிதல் ஆனாது வேந்தனும் வெம் பகை முரணி ஏந்து இலை விடு கதிர் நெடு வேல் இமைக்கும் பாசறை அடு புகழ் மேவலொடு கண்படை இலனே அமரும் நம்-வயினதுவே நமர் என நம் அறிவு தெளிந்த பொம்மல் ஓதி யாங்கு ஆகுவள்-கொல் தானே ஓங்கு விடைப் படு சுவல் கொண்ட பகு வாய்த் தெள் மணி ஆ பெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇப் பையுள் நல் யாழ் செவ்வழி வகுப்ப ஆர் உயிர் அணங்கும் தெள் இசை மாரி மாலையும் தமியள் கேட்டே #3 அகநானூறு 242 குறிஞ்சி - பேரிசாத்தனார் அரும்பு முதிர் வேங்கை அலங்கல் மென் சினைச் சுரும்பு வாய் திறந்த பொன் புரை நுண் தாது மணி மருள் கலவத்து உறைப்ப அணி மிக்கு அவிர் பொறி மஞ்ஞை ஆடும் சோலைப் பைம் தாள் செந்தினைக் கொடும் குரல் வியன் புனம் செம் தார்க் கிள்ளை நம்மொடு கடிந்தோன் பண்பு தர வந்தமை அறியாள் நுண் கேழ் முறி புரை எழில் நலத்து என் மகள் துயர் மருங்கு அறிதல் வேண்டும் எனப் பல் பிரப்பு இரீஇ அறியா வேலன் தரீஇ அன்னை வெறி அயர் வியன் களம் பொலிய ஏத்தி மறி உயிர் வழங்கா அளவை சென்று யாம் செல வரத் துணிந்த சேண் விளங்கு எல் வளை நெகிழ்ந்த முன்கை நேர் இறைப் பணைத் தோள் நல் எழில் அழிவின் தொல் கவின் பெறீஇய முகிழ்த்து வரல் இள முலை மூழ்கப் பல் ஊழ் முயங்கல் இயைவது-மன்னோ தோழி நறை கால்யாத்த நளிர் முகைச் சிலம்பில் பெரு மலை விடரகம் நீடிய சிறி இலைச் சாந்த மென் சினை தீண்டி மேலது பிரசம் தூங்கும் சேண் சிமை வரையக வெற்பன் மணந்த மார்பே #4 அகநானூறு 268 குறிஞ்சி - (வடம வண்ணக்கன்) பேரி சாத்தனார் அறியாய் வாழி தோழி பொறி வரிப் பூ நுதல் யானையொடு புலி பொரக் குழைந்த குருதிச் செம் களம் புலவு அற வேங்கை உரு கெழு நாற்றம் குளவியொடு விலங்கும் மா மலை நாடனொடு மறு இன்று ஆகிய காமம் கலந்த காதல் உண்டு எனின் நன்று-மன் அது நீ நாடாய் கூறுதி நாணும் நட்பும் இல்லோர் தேரின் யான் அலது இல்லை இவ் உலகத்தானே இன் உயிர் அன்ன நின்னொடும் சூழாது முளை அணி மூங்கிலின் கிளையொடு பொலிந்த பெரும் பெயர் எந்தை அரும் கடி நீவிச் செய்து பின் இரங்கா வினையொடு மெய் அல் பெரும் பழி எய்தினென் யானேத் #5 அகநானூறு 305 பாலை - (வடம வண்ணக்கன்) பேரிசாத்தனார் ** (பெருஞ்சாத்தன்) பகலினும் அகலாது ஆகி யாமம் தவல் இல் நீத்தமொடு ஐயெனக் கழியத் தளி மழை பொழிந்த தண் வரல் வாடையொடு பனி மீக்கூரும் பைதல் பானாள் பல் படை நிவந்த வறுமை இல் சேக்கை பருகு அன்ன காதலொடு திருகி மெய் புகு அன்ன கை கவர் முயக்கத்து ஓர் உயிர் மாக்களும் புலம்புவர்-மாதோ அருள் இலாளர் பொருள்-வயின் அகல எவ்வம் தாங்கிய இடும்பை நெஞ்சத்து யான் எவன் உளனோ தோழி தானே பராரைப் பெண்ணைச் சேக்கும் கூர் வாய் ஒரு தனி அன்றில் உயவுக் குரல் கடைஇய உள்ளே கனலும் உள்ளம் மெல்லென கனை எரி பிறப்ப ஊதும் நினையா மாக்கள் தீம் குழல் கேட்டே #6 குறுந்தொகை 81 குறிஞ்சி - (வடம வண்ணக்கன்) பேரிசாத்தன் இவளே நின் சொல் கொண்ட என் சொல் தேறி பசு நனை ஞாழல் பல் சினை ஒரு சிறைப் புது நலன் இழந்த புலம்புமார் உடையள் உதுக் காண் தெய்ய உள்ளல் வேண்டும் நிலவும் இருளும் போலப் புலவுத் திரைக் கடலும் கானலும் தோன்றும் மடல் தாழ் பெண்ணை எம் சிறு நல் ஊரே #7 குறுந்தொகை 159 குறிஞ்சி - (வடம வண்ணக்கன்) பேரிசாத்தனார் தழை அணி அல்குல் தாங்கல் செல்லா நுழை சிறு நுசுப்பிற்கு எவ்வம் ஆக அம் மெல் ஆகம் நிறைய வீங்கிக் கொம்மை வரி முலை செப்புடன் எதிரின யாங்கு ஆகுவள்-கொல் பூம்_குழை என்னும் அவல நெஞ்சமொடு உசாவா கவலை மாக்கட்டு இப் பேதை ஊரே #8 குறுந்தொகை 278 பாலை - பேரிசாத்தனார் உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து முறி கண்டு அன்ன மெல்லென் சீறடிச் சிறு பசும் பாவையும் எம்மும் உள்ளார் கொடியர் வாழி தோழி கடுவன் ஊழுறு தீம் கனி உதிர்ப்பக் கீழ் இருந்து ஓர்ப்பனஓர்ப்பன உண்ணும் பார்ப்பு உடை மந்திய மலை இறந்தோரே #9 குறுந்தொகை 314 முல்லை - பேரிசாத்தனார் சேய் உயர் விசும்பின் நீர் உறு கமம் சூல் தண் குரல் எழிலி ஒண் சுடர் இமைப்பப் பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும் வாரார் வாழி தோழி வரூஉம் இன் உறல் இள முலை ஞெமுங்க இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே #10 குறுந்தொகை 366 குறிஞ்சி - பேரி சாத்தனார் பால் வரைந்து அமைத்தல் அல்லது அவர்-வயின் சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ வேறு யான் கூறவும் அமையாள் அதன்தலைப் பைம் கண் மாச் சுனைப் பல் பிணி அவிழ்ந்த வள் இதழ் நீலம் நோக்கி உள் அகைபு அழுத கண்ணள் ஆகிப் பழுது அன்று அம்ம இவ் ஆய்_இழை துணிவே #11 நற்றிணை 25 குறிஞ்சி - பேரி சாத்தனார் அவ் வளை வெரிநின் அரக்கு ஈர்த்து அன்ன செம் வரி இதழ சேண் நாறு பிடவின் நறும் தாது ஆடிய தும்பி பசும் கேழ்ப் பொன் உரை கல்லின் நன் நிறம் பெறூஉம் வள மலை நாடன் நெருநல் நம்மொடு கிளை மலி சிறுதினைக் கிளி கடிந்து அசைஇச் சொல்லிடம் பெறாஅன் பெயர்ந்தனன் பெயர்ந்தது அல்லல் அன்று அது காதல் அம் தோழி தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா வண்டு ஓர் அன்ன அவன் தண்டாக் காட்சி கண்டும் கழல் தொடி வலித்த என் பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே #12 நற்றிணை 37 பாலை - பேரிசாத்தனார் பிணங்கு அரில் வாடிய பழ விறல் நனம் தலை உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெண் மணி பைபய இசைக்கும் அத்தம் வை எயிற்று இவளொடும் செலினோ நன்றே குவளை நீர் சூழ் மா மலர் அன்ன கண் அழக் கலை ஒழி பிணையின் கலங்கி மாறி அன்பிலிர் அகறிர் ஆயின் என் பரம் ஆகுவது அன்று இவள் அவலம் நாகத்து அணங்கு உடை அரும் தலை உடலி வலன் ஏர்பு ஆர் கலி நல் ஏறு திரிதரும் கார் செய் மாலை வரூஉம் போழ்தே #13 நற்றிணை 67 நெய்தல் - பேரி சாத்தனார் சேய் விசும்பு இவர்ந்த செழும் கதிர் மண்டிலம் மால் வரை மறையத் துறை புலம்பின்றே இறவு அருந்தி எழுந்த கரும் கால் வெண்_குருகு வெண் கோட்டு அரும் சிறைத் தாஅய்க் கரைய கரும் கோட்டுப் புன்னை இறைகொண்டனவே கணைக் கால் மா மலர் கரப்ப மல்கு கழித் துணைச் சுறா வழங்கலும் வழங்கும் ஆயிடை எல் இமிழ் பனிக் கடல் மல்கு சுடர்க் கொளீஇ எமரும் வேட்டம் புக்கனர் அதனால் தங்கின் எவனோ தெய்ய பொங்கு பிசிர் முழவு இசைப் புணரி எழுதரும் உடை கடல் படப்பை எம் உறைவு இன் ஊர்க்கே #14 நற்றிணை 104 குறிஞ்சி - பேரி சாத்தனார் பூம் பொறி உழுவைப் பேழ் வாய் ஏற்றை தேம் கமழ் சிலம்பின் களிற்றொடு பொரினே துறுகல் மீமிசை உறுகண் அஞ்சாக் குறக் குறுமாக்கள் புகற்சியின் எறிந்த தொண்டகச்_சிறுபறை பாணி அயலது பைம் தாள் செந்தினைப் படு கிளி ஓப்பும் ஆர் கலி வெற்பன் மார்பு நயந்து உறையும் யானே அன்றியும் உளர்-கொல் பானாள் பாம்பு உடை விடர ஓங்கு மலை மிளிர உருமுச் சிவந்து எறியும் பொழுதொடு பெரு நீர் போக்கு அற விலங்கிய சாரல் நோக்கு அரும் சிறு நெறி நினையுமோரே #15 நற்றிணை 199 நெய்தல் - பேரி சாத்தனார் ஓங்கு மணல் உடுத்த நெடு மாப் பெண்ணை வீங்கு மடல் குடம்பைப் பைதல் வெண்_குருகு நள்ளென் யாமத்து உயவு-தோறு உருகி அள்ளல் அன்ன என் உள்ளமொடு உள் உடைந்து உளெனே வாழி தோழி வளை நீர்க் கடும் சுறா எறிந்த கொடும் திமில் பரதவர் வாங்கு விசைத் தூண்டில் ஊங்குஊங்கு ஆகி வளி பொரக் கற்றை தாஅய் நளி சுடர் நீல் நிற விசும்பின் மீனொடு புரையப் பைபய இமைக்கும் துறைவன் மெய் தோய் முயக்கம் காணா ஊங்கே #16 நற்றிணை 299 நெய்தல் - (வடம வண்ணக்கன்) பேரிசாத்தனார் உரு கெழு யானை உடை கோடு அன்ன ததர் பிணி அவிழ்ந்த தாழை வான் பூ தயங்கு இரும் கோடை தூக்கலின் நுண் தாது வயங்கு இழை மகளிர் வண்டல் தாஅம் காமர் சிறுகுடி புலம்பினும் அவர் காண் நாம் இலம் ஆகுதல் அறிதும்-மன்னோ வில் எறி பஞ்சி போல மல்கு திரை வளி பொரு வயங்கு பிசிர் பொங்கும் நளி கடல் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே #17 நற்றிணை 323 நெய்தல் - (வடம வண்ணக்கன்) பேரிசாத்தனார் ஓங்கித் தோன்றும் தீம் கள் பெண்ணை நடுவணதுவே தெய்ய மடவரல் ஆயமும் யானும் அறியாது அவணம் மாய நட்பின் மாண் நலம் ஒழிந்து நின் கிளைமை கொண்ட வளை ஆர் முன்கை நல்லோள் தந்தை சிறுகுடிப் பாக்கம் புலி வரி எக்கர்ப் புன்னை உதிர்த்த மலி தாது ஊதும் தேனோடு ஒன்றி வண்டு இமிர் இன் இசை கறங்க திண் தேர்த் தெரி மணி கேட்டலும் அரிதே வரும் ஆறு ஈது அவண் மறவாதீமே #18 நற்றிணை 378 நெய்தல் - (வடம வண்ணக்கன்) பேரி சாத்தனார் யாமமும் நெடிய கழியும் காமமும் கண்படல் ஈயாது பெருகும் தெண் கடல் முழங்கு திரை முழவின் பாணியின் பைபயப் பழம் புண் உறுநரின் பரவையின் ஆலும் ஆங்கு அவை நலியவும் நீங்கி யாங்கும் இரவு இறந்து எல்லை தோன்றலது அலர் வாய் அயல் இல் பெண்டிர் பசலை பாட ஈங்கு ஆகின்றால் தோழி ஓங்கு மணல் வரி ஆர் சிறு மனை சிதைஇ வந்து பரிவுதரத் தொட்ட பணிமொழி நம்பிப் பாடு இமிழ் பனி நீர்ச் சேர்ப்பனொடு நாடாது இயைந்த நண்பினது அளவே #19 புறநானூறு 125 - வடமவண்ணக்கண் பெருஞ்சாத்தனார் **பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன நெருப்புச் சினம் தணிந்த நிணம் தயங்கு கொழும் குறை பரூஉக் கள் மண்டையொடு ஊழ் மாறு பெயர உண்கும் எந்தை நின் காண்கு வந்திசினே நள்ளாதார் மிடல் சாய்ந்த வல்லாள நின் மகிழ்_இருக்கையே உழுத நோன் பகடு அழி தின்று ஆங்கு நல் அமிழ்து ஆக நீ நயந்து உண்ணும் நறவே குன்றத்து அன்ன களிறு பெயரக் கடந்து அட்டு வென்றோனும் நின் கூறும்மே வெலீஇயோன் இவன் எனக் கழல் அணிப் பொலிந்த சேவடி நிலம் கவர்பு விரைந்து வந்து சமம் தாங்கிய வல் வேல் மலையன் அல்லன் ஆயின் நல் அமர் கடத்தல் எளிது-மன் நமக்கு எனத் தோற்றோன் தானும் நின் கூறும்மே தொலைஇயோன் இவன் என ஒரு நீ ஆயினை பெரும பெரு மழைக்கு இருக்கை சான்ற உயர் மலைத் திருத் தகு சேஎய் நின் பெற்றிசினோர்க்கே #20 புறநானூறு 198 - வடமவண்ணக்கண் பேரிசாத்தனார் **பாடப்பட்டோன் : பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய **நன்மாறன் அருவி தாழ்ந்த பெரு வரை போல ஆரமொடு பொலிந்த மார்பில் தண்டாக் கடவுள் சான்ற கற்பின் சே இழை மடவோள் பயந்த மணி மருள் அம் வாய்க் கிண்கிணிப் புதல்வர் பொலிக என்று ஏத்தித் திண் தேர் அண்ணல் நின் பாராட்டிக் காதல் பெறாமையின் கனவினும் அரற்றும் என் காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம் வேல் கெழு குருசில் கண்டேன் ஆதலின் விடுத்தனென் வாழ்க நின் கண்ணி தொடுத்த தண் தமிழ் வரைப்பகம் கொண்டி ஆகப் பணிந்து கூட்டுண்ணும் தணிப்பு அரும் கடும் திறல் நின் ஓர் அன்ன நின் புதல்வர் என்றும் ஒன்னார் வாட அரும் கலம் தந்து நும் பொன் உடை நெடு நகர் நிறைய வைத்த நின் முன்னோர் போல்க இவர் பெரும் கண்ணோட்டம் யாண்டும் நாளும் பெருகி ஈண்டு திரைப் பெரும் கடல் நீரினும் அக் கடல் மணலினும் நீண்டு உயர் வானத்து உறையினும் நன்றும் இவர் பெறும் புதல்வர்க் காண்-தொறும் நீயும் புகன்ற செல்வமொடு புகழ் இனிது விளங்கி நீடு வாழிய நெடுந்தகை யானும் கேள் இல் சேஎய் நாட்டின் எந்நாளும் துளி நசைப் புள்ளின் நின் அளி நசைக்கு இரங்கி நின் அடி நிழல் பழகிய அடியுறை கடு_மான் மாற மறவாதீமே &345 - பேரெயின் முறுவலார் #1 குறுந்தொகை 17 குறிஞ்சி - பேரெயின் முறுவலார் மா என மடலும் ஊர்ப பூ எனக் குவி முகிழ் எருக்கம் கண்ணியும் சூடுப மறுகின் ஆர்க்கவும் படுப பிறிதும் ஆகுப காமம் காழ்க்கொளினே #2 புறநானூறு 239 - பேரெயில் முறுவலார். **பாடப்பட்டோன்: நம்பி நெடுஞ்செழியன் தொடி உடைய தோள் மணந்தனன் கடி காவில் பூச் சூடினன் தண் கமழும் சாந்து நீவினன் செற்றோரை வழி தபுத்தனன் நட்டோரை உயர்பு கூறினன் வலியர் என வழிமொழியலன் மெலியர் என மீக்கூறலன் பிறரைத் தான் இரப்பு அறியலன் இரந்தோர்க்கு மறுப்பு அறியலன் வேந்து உடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன் வரு படை எதிர்தாங்கினன் பெயர் படை புறங்கண்டனன் கடும் பரிய மாக் கடவினன் நெடும் தெருவில் தேர் வழங்கினன் ஓங்கு இயல களிறு ஊர்ந்தனன் தீம் செறி தசும்பு தொலைச்சினன் பாண் உவப்பப் பசி தீர்த்தனன் மயக்கு உடைய மொழி விடுத்தனன் ஆங்குச் செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின் இடுக ஒன்றோ சுடுக ஒன்றோ படு வழிப் படுக இப் புகழ் வெய்யோன் தலையே &346 - பொதுக் கயத்துக் கீரந்தையார் #1 குறுந்தொகை 337 குறிஞ்சி - பொதுக் கயத்துக் கீரந்தையார் முலையே முகிழ் முகழ்த்தனவே தலையே கிளைஇய குரலே கிழக்கு வீழ்ந்தனவே செறி முறை வெண் பலும் பறிமுறை நிரம்பின சுணங்கும் சில தோன்றினவே அணங்கு என யான் தன் அறிவல் தான் அறியலளே யாங்கு ஆகுவள்-கொல் தானே பெரு முது செல்வர் ஒரு மட_மகளே &347 - பொதும்பில் கிழார் #1 நற்றிணை 57 குறிஞ்சி - பொதும்பில் கிழார் தடம் கோட்டு ஆமான் மடங்கல் மா நிரைக் குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்து எனத் துஞ்சு_பதம் பெற்ற துய்த் தலை மந்தி கல்லென் சுற்றம் கை கவியாக் குறுகி வீங்கு சுரை ஞெமுங்க வாங்கித் தீம் பால் கல்லா வன் பறழ்க் கை நிறை பிழியும் மா மலை நாட மருட்கை உடைத்தே செம் கோல் கொடும் குரல் சிறுதினை வியன் புனம் கொய்_பதம் குறுகும் காலை எம் மை ஈர் ஓதி மாண் நலம் தொலைவே &348 - பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார் #1 நற்றிணை 375 நெய்தல் - பொதும்பில் கிழார் மகன் வெண்கண்ணி நீடு சினைப் புன்னை நறும் தாது உதிரக் கோடு புனை குருகின் தோடு தலைப்பெயரும் பல் பூம் கானல் மல்கு நீர்ச் சேர்ப்ப அன்பு இலை ஆதலின் தன் புலன் நயந்த என்னும் நாணும் நல்_நுதல் உவப்ப வருவை ஆயினோ நன்றே பெரும் கடல் இரவுத் தலை மண்டிலம் பெயர்ந்து என உரவுத் திரை எறிவன போல வரூஉம் உயர் மணல் படப்பை எம் உறைவின் ஊரே #2 நற்றிணை 387 பாலை - பொதும்பில் கிழார் மகனார் நெறி இரும் கதுப்பும் நீண்ட தோளும் அம்ம நாளும் தொல் நலம் சிதைய ஒல்லாச் செம் தொடை ஒரீஇய கண்ணிக் கல்லா மழவர் வில்லிடை விலங்கிய துன் அரும் கவலை அரும் சுரம் இறந்தோர் வருவர் வாழி தோழி செரு இறந்து ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த வேல் கெழு தானைச் செழியன் பாசறை உறை கழி வாளின் மின்னி உதுக் காண் நெடும் பெரும் குன்றம் முற்றிக் கடும் பெயல் பொழியும் கலி கெழு வானே &349 - பொதும்பிற் புல்லாளங்கண்ணியார் #1 அகநானூறு 154 முல்லை - பொதும்பிற் புல்லாளங்கண்ணியார் படு மழை பொழிந்த பயம் மிகு புறவின் நெடு நீர் அவல பகு வாய்த் தேரை சிறு பல்லியத்தின் நெடு நெறிக் கறங்கக் குறும் புதல் பிடவின் நெடும் கால் அலரி செந்நில மருங்கின் நுண் அயிர் வரிப்ப வெம் சின அரவின் பை அணந்து அன்ன தண் கமழ் கோடல் தாது பிணி அவிழத் திரி மருப்பு இரலை தெள் அறல் பருகிக் காமர் துணையொடு ஏமுற வதிய காடு கவின் பெற்ற தண் பதப் பெரு வழி ஓடு பரி மெலியாக் கொய் சுவல் புரவி தாள் தாழ் தார் மணி தயங்குபு இயம்ப ஊர்-மதி வலவ தேரே சீர் மிகுபு நம்-வயின் புரிந்த கொள்கை அம் மா அரிவையைத் துன்னுகம் விரைந்தே &350 - பொத்தியார் #1 புறநானூறு 217 - பொத்தியார் நினைக்கும் காலை மருட்கை உடைத்தே எனைப் பெரும் சிறப்பினோடு ஈங்கு இது துணிதல் அதனினும் மருட்கை உடைத்தே பிறன் நாட்டுத் தோற்றம் சான்ற சான்றோன் போற்றி இசை மரபு ஆக நட்புக் கந்து ஆக இனையது ஓர் காலை ஈங்கு வருதல் வருவன் என்ற கோனது பெருமையும் அது பழுது இன்றி வந்தவன் அறிவும் வியத்-தொறும் வியத்-தொறும் வியப்பு இறந்தன்றே அதனால் தன் கோல் இயங்காத் தேயத்து உறையும் சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்று இசை அன்னோனை இழந்த இவ் உலகம் என் ஆவது-கொல் அளியது தானே #2 புறநானூறு 220 - பொத்தியார் பெரும் சோறு பயந்து பல் யாண்டு புரந்த பெரும் களிறு இழந்த பைதல் பாகன் அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை வெளில் பாழ் ஆகக் கண்டு கலுழ்ந்து ஆங்குக் கலங்கினேன் அல்லனோ யானே பொலம் தார்த் தேர் வண் கிள்ளி போகிய பேர் இசை மூதூர் மன்றம் கண்டே #3 புறநானூறு 221 - பொத்தியார் **பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன் பாடுநர்க்கு ஈத்த பல் புகழன்னே ஆடுநர்க்கு ஈத்த பேர் அன்பினனே அறவோர் புகழ்ந்த ஆய் கோலன்னே திறவோர் புகழ்ந்த திண் நன்பினனே மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து துகள் அறு கேள்வி உயர்ந்தோர் புக்கில் அனையன் என்னாது அத் தக்கோனை நினையாக் கூற்றம் இன் உயிர் உய்த்தன்று பைதல் ஒக்கல் தழீஇ அதனை வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர் நனம் தலை உலகம் அரந்தை தூங்கக் கெடு இல் நல் இசை சூடி நடுகல் ஆயினன் புரவலன் எனவே #4 புறநானூறு 222 - பொத்தியார் **பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன் அழல் அவிர் வயங்கு இழைப் பொலிந்த மேனி நிழலினும் போகா நின் வெய்யோள் பயந்த புகழ் சால் புதல்வன் பிறந்த பின் வா என என் இவண் ஒழித்த அன்பிலாள எண்ணாது இருக்குவை அல்லை என் இடம் யாது மற்று இசை வெய்யோயே #5 புறநானூறு 223 - பொத்தியார் **பாடப்பட்டோன்: கோப்பெருஞ் சோழன் பலர்க்கு நிழல் ஆகி உலகம் மீக்கூறித் தலைப்போகு அன்மையின் சிறு வழி மடங்கி நிலை பெறு நடுகல் ஆகியக் கண்ணும் இடம் கொடுத்து அளிப்ப-மன்ற உடம்போடு இன் உயிர் விரும்பும் கிழமைத் தொல் நட்பு உடையார் தம்முழைச் செலினே &351 - பொய்கையார் #1 நற்றிணை 18 பாலை - பொய்கையார் பருவரல் நெஞ்சமொடு பல் படர் அகல வருவர் வாழி தோழி மூவன் முழு வலி முள் எயிறு அழுத்திய கதவின் கானல் அம் தொண்டிப் பொருநன் வென் வேல் தெறல் அரும் தானைப் பொறையன் பாசறை நெஞ்சு நடுக்குறூஉம் துஞ்சா மறவர் திரை தபு கடலின் இனிது கண்படுப்பக் கடாஅம் கழீஇய கதன் அடங்கு யானைத் தடாஅ நிலை ஒரு கோட்டு அன்ன ஒன்று இலங்கு அருவிய குன்று இறந்தோரே #2 புறநானூறு 48 - பொய்கையார் **பாடப்பட்டோன்: சேரமான் கோக்கோதை மார்பன் கோதை மார்பின் கோதையானும் கோதையைப் புணர்ந்தோர் கோதையானும் மாக் கழி மலர்ந்த நெய்தலானும் கள் நாறும்மே கானல் அம் தொண்டி அஃது எம் ஊரே அவன் எம் இறைவன் அன்னோன் படர்தி ஆயின் நீயும் எம்மும் உள்ளுமோ முது வாய் இரவல அமர் மேம்படூஉங்காலை நின் புகழ் மேம்படுநனைக் கண்டனம் எனவே #3 புறநானூறு 49 - பொய்கையார் **பாடப்பட்டோன்: சேரமான் கோக்கோதை மார்பன் நாடன் என்கோ ஊரன் என்கோ பாடு இமிழ் பனிக் கடல் சேர்ப்பன் என்கோ யாங்கனம் மொழிகோ ஓங்கு வாள் கோதையை புனவர் தட்டை புடைப்பின் அயலது இறங்கு கதிர் அலமரு கழனியும் பிறங்கு நீர்ச் சேர்ப்பினும் புள் ஒருங்கு எழுமே &352 - பொருந்தில் இளங்கீரனார் #1 அகநானூறு 19 பாலை - பொருந்தில் இளங்கீரனார் அன்று அவண் ஒழிந்தன்றும் இலையே வந்து நனி வருந்தினை வாழி என் நெஞ்சே பருந்து இருந்து உயா விளி பயிற்றும் யா உயர் நனம் தலை உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும் கடும் குரல் குடிஞைய நெடும் பெரும் குன்றம் எம்மொடு இறத்தலும் செல்லாய் பின் நின்று ஒழிய சூழ்ந்தனை ஆயின் தவிராது செல் இனிச் சிறக்க நின் உள்ளம் வல்லே மறவல் ஓம்பு-மதி எம்மே நறவின் சே இதழ் அனைய ஆகிக் குவளை மா இதழ் புரையும் மலிர் கொள் ஈர் இமை உள்ளகம் கனல உள்ளு-தொறு உலறி பழங்கண் கொண்ட கலிழ்ந்து வீழ் அவிர் அறல் வெய்ய உகுதர வெரீஇப் பையென சில் வளை சொரிந்த மெல் இறை முன்கை பூ வீ கொடியின் புல்லெனப் போகி அடர்செய் ஆய் அகல் சுடர் துணை ஆக இயங்காது வதிந்த நம் காதலி உயங்கு சாய் சிறுபுறம் முயங்கிய பின்னே #2 அகநானூறு 351 பாலை - பொருந்தில் இளங்கீரனார் வேற்று நாட்டு உறையுள் விருப்புறப் பேணி பெறல் அரும் கேளிர் பின் வந்து விடுப்ப பொருள் அகப்படுத்த புகல் மலி நெஞ்சமொடு குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம் அறிவுறூஉம்-கொல்லோ தானே கதிர் தெற கழல் இலை உகுத்த கால் பொரு தாழ் சினை அழல் அகைந்து அன்ன அம் குழைப் பொதும்பில் புழல் வீ இருப்பைப் புன் காட்டு அத்தம் மறுதரல் உள்ளமொடு குறுகத் தோற்றிய செய் குறி ஆழி வைகல்-தோறு எண்ணி எழுது சுவர் நினைந்த அழுது வார் மழைக் கண் விலங்கு வீழ் அரிப் பனி பொலம் குழைத் தெறிப்பத் திருந்து இழை முன்கை அணல் அசைத்து ஊன்றி இருந்து அணை மீது பொருந்துழிக் கிடக்கை வருந்து தோள் பூசல் களையும் மருந்து என உள்ளு-தொறு படூஉம் பல்லி புள்ளுத் தொழுது உறைவி செவி முதலானே #3 புறநானூறு 53 - பொருந்தில் இளங்கீரனார் **பாடப்பட்டோன்: சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை முதிர் வார் இப்பி முத்த வார் மணல் கதிர் விடு மணியின் கண் பொரு மாடத்து இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும் விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற களம் கொள் யானை கடு_மான் பொறைய விரிப்பின் அகலும் தொகுப்பின் எஞ்சும் மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை கைம்முற்றல நின் புகழே என்றும் ஒளியோர் பிறந்த இ மலர் தலை உலகத்து வாழேம் என்றலும் அரிதே தாழாது செறுத்த செய்யுள் செய் செம் நாவின் வெறுத்த கேள்வி விளங்கு புகழ் கபிலன் இன்று உளன் ஆயின் நன்று-மன் என்ற நின் ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப பாடுவன்-மன்னால் பகைவரைக் கடப்பே &353 - பொன்மணியார் #1 குறுந்தொகை 391 முல்லை - பொன்மணியார் உவரி ஒருத்தல் உழாஅது மடியப் புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில் கடிது இடி உருமின் பாம்பு பை அவிய இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே வீழ்ந்த மா மழை தழீஇப் பிரிந்தோர் கையற வந்த பையுள் மாலைப் பூம் சினை இருந்த போழ் கண் மஞ்ஞை தாம் நீர் நனம் தலை புலம்பக் கூஉம் தோழி பெரும் பேதையவே &354 - பொன்முடியார் #1 புறநானூறு 299 - பொன்முடியார் பருத்தி வேலிச் சீறூர் மன்னன் உழுத்து அதர் உண்ட ஓய் நடைப் புரவி கடல் மண்டு தோணியின் படை முகம் போழ நெய்ம்மிதி அருந்திய கொய் சுவல் எருத்தின் தண்ணடை மன்னர் தார் உடைப் புரவி அணங்கு உடை முருகன் கோட்டத்துக் கலம் தொடா மகளிரின் இகந்து நின்றவ்வே #2 புறநானூறு 310 - பொன்முடியார் பால் கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின் செறாஅது ஓச்சிய சிறு கோல் அஞ்சியோடு உயவொடு வருந்தும் மனனே இனியே புகர் நிறம் கொண்ட களிறு அட்டு ஆனான் முன்_நாள் வீழ்ந்த உரவோர் மகனே உன்னிலன் என்னும் புண் ஒன்று அம்பு மான் உளை அன்ன குடுமித் தோல் மிசைக் கிடந்த புல் அணலோனே #3 புறநானூறு 312 - பொன்முடியார் ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே நன் நடை நல்கல் வேந்தற்குk கடனே ஒளிறு வாள் அரும் சமம் முருக்கிக் களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே &355 - பொன்னாகன் #1 குறுந்தொகை 114 நெய்தல் - பொன்னாகன் நெய்தல் பரப்பில் பாவை கிடப்பி நின் குறி வந்தனென் இயல் தேர்க் கொண்க செல்கம் செல வியங்கொண்மோ அல்கலும் ஆரல் அருந்த வயிற்ற நாரை மிதிக்கும் என் மகள் நுதலே &356 - போதனார் #1 நற்றிணை 110 பாலை - போதனார் பிரசம் கலந்த வெண் சுவைத் தீம் பால் விரி கதிர்ப் பொன் கலத்து ஒரு கை ஏந்திப் புடைப்பின் சுற்றும் பூம் தலைச் சிறு கோல் உண் என்று ஓக்குபு பிழைப்பத் தெண் நீர் முத்து அரிப் பொன் சிலம்பு ஒலிப்பத் தத்துற்று அரி நரைக் கூந்தல் செம் முது செவிலியர் பரி மெலிந்து ஒழியப் பந்தர் ஓடி ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்-கொல் கொண்ட கொழுநன் குடி வறனுற்று எனக் கொடுத்த தந்தை கொழும் சோறு உள்ளாள் ஒழுகு நீர் நுணங்கு அறல் போலப் பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே &357 - போந்தைப் பசலையார் #1 அகநானூறு 110 நெய்தல் - போந்தைப் பசலையார் அன்னை அறியினும் அறிக அலர் வாய் அம் மென் சேரி கேட்பினும் கேட்க பிறிது ஒன்று இன்மை அறியக் கூறிக் கொடும் சுழிப் புகாஅர்த் தெய்வம் நோக்கிக் கடும் சூள் தருகுவன் நினக்கே கானல் தொடலை ஆயமொடு கடல் உடன் ஆடியும் சிற்றில் இழைத்தும் சிறு சோறு குவைஇயும் வருந்திய வருத்தம் தீர யாம் சிறிது இருந்தனம் ஆக எய்த வந்து தட மென் பணைத் தோள் மட நல்லீரே எல்லும் எல்லின்று அசைவு மிக உடையேன் மெல் இலை பரப்பின் விருந்து உண்டு யானும் இக் கல்லென் சிறுகுடி தங்கின் மற்று எவனோ என மொழிந்தனனே ஒருவன் அவன் கண்டு இறைஞ்சிய முகத்தேம் புறம் சேர்பு பொருந்தி இவை நுமக்கு உரிய அல்ல இழிந்த கொழு மீன் வல்சி என்றனம் இழுமென நெடும் கொடி நுடங்கும் நாவாய் தோன்றுவ காணாமோ எனக் காலின் சிதையா நில்லாது பெயர்ந்த பல்லோருள்ளும் என்னே குறித்த நோக்கமொடு நல்_நுதால் ஒழிகோ யான் என அழிதகக் கூறி யான் பெயர்க என்ன நோக்கித் தான் தன் நெடும் தேர்க் கொடிஞ்சி பற்றி நின்றோன் போலும் என்றும் என் கட்கே &358 - மடல் பாடிய மாதங்கீரனார் #1 குறுந்தொகை 182 குறிஞ்சி - மடல் பாடிய மாதங்கீரனார் விழுத் தலைப் பெண்ணை விளையல் மா மடல் மணி அணி பெரும் தார் மரபில் பூட்டி வெள் என்பு அணிந்து பிறர் எள்ளத் தோன்றி ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீங்கித் தெருவின் இயலவும் தருவது-கொல்லோ கலிழ் கவின் அசை நடைப் பேதை மெலிந்திலள் நாம் விடற்கு அமைந்த தூதே #2 நற்றிணை 377 குறிஞ்சி - மடல் பாடிய மாதங்கீரனார் மடல்_மா ஊர்ந்து மாலை சூடிக் கண் அகன் வைப்பின் நாடும் ஊரும் ஒள் நுதல் அரிவை நலம் பாராட்டிப் பண்ணல் மேவலம் ஆகி அரிது உற்று அது பிணி ஆக விளியலம்-கொல்லோ அகல் இரு விசும்பின் அரவுக் குறைபடுத்த பசும் கதிர் மதியத்து அகல் நிலாப் போல அளகம் சேர்ந்த திரு_நுதல் கழறுபு மெலிக்கும் நோய் ஆகின்றே &359 - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் #1 அகநானூறு 33 பாலை - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் வினை நன்று ஆதல் வெறுப்பக் காட்டி மனை மாண் கற்பின் வாள்_நுதல் ஒழிய கவை முறி இழந்த செந்நிலை யாஅத்து ஒன்று ஓங்கு உயர் சினை இருந்த வன் பறை வீளைப் பருந்தின் கோள் வல் சேவல் வளை வாய்ப் பேடை வருதிறம் பயிரும் இளி தேர் தீம் குரல் இசைக்கும் அத்தம் செலவு அரும்-குரைய என்னாது சென்று அவள் மலர் பாடு ஆன்ற மை எழில் மழைக் கண் தெளியா நோக்கம் உள்ளினை உளி வாய் வெம் பரல் அதர குன்று பல நீந்தி யாமே எமியம் ஆக நீயே ஒழியச் சூழ்ந்தனை ஆயின் முனாஅது வெல் போர் வானவன் கொல்லி மீமிசை நுணங்கு அமை புரையும் வணங்கு இறைப் பணைத் தோள் வரி அணி அல்குல் வால் எயிற்றோள்-வயின் பிரியாய் ஆயின் நன்று-மன்-தில்ல அன்று நம் அறியாய் ஆயினும் இன்று நம் செய்வினை ஆற்று உற விலங்கின் எய்துவை அல்லையோ பிறர் நகு பொருளே #2 அகநானூறு 144 முல்லை - மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் வருதும் என்ற நாளும் பொய்த்தன அரி ஏர் உண்கண் நீரும் நில்லா தண் கார்க்கு ஈன்ற பைம் கொடி முல்லை வை வாய் வான் முகை அவிழ்ந்த கோதை பெய் வனப்பு இழந்த கதுப்பும் உள்ளார் அருள் கண்மாறலோ மாறுக அந்தில் அறன் அஞ்சலரே ஆய்_இழை நமர் என சிறிய சொல்லிப் பெரிய புலப்பினும் பனி படு நறும் தார் குழைய நம்மொடு துனி தீர் முயக்கம் பெற்றோள் போல உவக்குநள் வாழிய நெஞ்சே விசும்பின் ஏறு எழுந்து முழங்கினும் மாறு எழுந்து சிலைக்கும் கடாஅ யானை கொட்கும் பாசறைப் போர் வேட்டு எழுந்த மள்ளர் கையதை கூர் வாள் குவி முகம் சிதைய நூறி மான் அடி மருங்கில் பெயர்த்த குருதி வான மீனின் வயின்வயின் இமைப்ப அமர் ஓர்த்து அட்ட செல்வம் தமர் விரைந்து உரைப்பக் கேட்கும் ஞான்றே #3 அகநானூறு 174 முல்லை - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் இரு பெரு வேந்தர் மாறுகொள் வியன் களத்து ஒரு படை கொண்டு வரு படை பெயர்க்கும் செல்வம் உடையோர்க்கு நின்றன்று விறல் எனப் பூக் கோள் ஏய தண்ணுமை விலக்கிச் செல்வேம் ஆதல் அறியாள் முல்லை நேர் கால் முது கொடி குழைப்ப நீர் சொரிந்து காலை வானத்துக் கடும் குரல் கொண்மூ முழங்கு-தொறும் கையற்று ஒடுங்கி நம் புலந்து பழங்கண் கொண்ட பசலை மேனியள் யாங்கு ஆகுவள்-கொல் தானே வேங்கை ஊழுறு நறு வீ கடுப்பக் கேழ் கொள ஆகத்து அரும்பிய மாசறு சுணங்கினள் நல் மணல் வியல் இடை நடந்த சில் மெல் ஒதுக்கின் மாஅயோளே #4 அகநானூறு 244 முல்லை - மதுரை (அளக்கர் ஞாழார் மகனார்) மள்ளனார் பசை படு பச்சை நெய் தோய்த்து அன்ன சேய் உயர் சினைய மாச் சிறைப் பறவை பகல் உறை முது மரம் புலம்பப் போகி முகை வாய் திறந்த நகை வாய் முல்லை கடி_மகள் கதுப்பின் நாறிக் கொடி மிசை வண்டு இனம் தவிர்க்கும் தண் பதக் காலை வரினும் வாரார் ஆயினும் ஆண்டு அவர்க்கு இனிது-கொல் வாழி தோழி எனத் தன் பல் இதழ் மழைக் கண் நல் அகம் சிவப்ப அரும் துயர் உடையள் இவள் என விரும்பிப் பாணன் வந்தனன் தூதே நீயும் புல் ஆர் புரவி வல் விரைந்து பூட்டி நெடும் தேர் ஊர்-மதி வலவ முடிந்தன்று அம்ம நாம் முன்னிய வினையே #5 அகநானூறு 314 முல்லை - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மள்ளனார் நீலத்து அன்ன நீர் பொதி கருவின் மா விசும்பு அதிர முழங்கி ஆலியின் நிலம் தண்ணென்று கானம் குழைப்ப இனம் தேர் உழவர் இன் குரல் இயம்ப மறி உடை மடப் பிணை தழீஇப் புறவின் திரி மருப்பு இரலை பைம் பயிர் உகள ஆர் பெயல் உதவிய கார் செய் காலை நூல் நெறி நுணங்கிய கால் நவில் புரவிக் கல்லெனக் கறங்கு மணி இயம்ப வல்லோன் வாய்ச் செல வணக்கிய தாப் பரி நெடும் தேர் ஈர்ம் புறவு இயங்கு வழி அறுப்பத் தீம் தொடைப் பையுள் நல் யாழ் செவ்வழி பிறப்ப இ நிலை வாரார் ஆயின் தம் நிலை எவன்-கொல் பாண உரைத்திசின் சிறிது எனக் கடவுள் கற்பின் மடவோள் கூறச் செய்வினை அழிந்த மையல் நெஞ்சின் துனி கொள் பருவரல் தீர வந்தோய் இனிது செய்தனையால் வாழ்க நின் கண்ணி வேலி சுற்றிய வால் வீ முல்லைப் பெரும் தார் கமழும் விருந்து ஒலி கதுப்பின் இன் நகை இளையோள் கவவ மன்னுக பெரும நின் மலர்ந்த மார்பே #6 அகநானூறு 344 முல்லை - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் **(அம்மள்ளனார்) வள மழை பொழிந்த வால் நிறக் களரி உளர்தரு தண் வளி உறு-தொறும் நிலவு என தொகு முகை விரிந்த முடக் கால் பிடவின் வை ஏர் வால் எயிற்று ஒள் நுதல் மகளிர் கை மாண் தோணி கடுப்பப் பையென மயில் இனம் பயிலும் மரம் பயில் கானம் எல் இடையுறாஅ அளவை வல்லே கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க நிழல் ஒளிப்பு அன்ன நிமிர் பரிப் புரவி வயக்குறு கொடிஞ்சி பொலிய வள்பு ஆய்ந்து இயக்கு-மதி வாழியோ கை உடை வலவ பயப்பு உறு படர் அட வருந்திய நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே #7 அகநானூறு 353 பாலை - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் **(அம்மள்ளனார்) ஆள்வினைப் பிரிதலும் உண்டோ பிரியினும் கேள் இனி வாழிய நெஞ்சே நாளும் கனவுக் கழிந்து அனைய ஆகி நனவின் நாளது செலவும் மூப்பினது வரவும் அரிது பெறு சிறப்பின் காமத்து இயற்கையும் இ நிலை அறியாய் ஆயினும் செந்நிலை அமை ஆடு அம் கழை தீண்டிக் கல்லென ஞெமை இலை உதிர்த்த எரி வாய்க் கோடை நெடு வெண் களரி நீறு முகந்து சுழலக் கடு வெயில் திருகிய வேனில் வெம் காட்டு உயங்கு நடை மடப் பிணை தழீஇய வயங்கு பொறி அறு கோட்டு எழில் கலை அறு கயம் நோக்கித் தெண் நீர் வேட்ட சிறுமையின் தழை மறந்து உண் நீர் இன்மையின் ஒல்குவன தளர மரம் நிழல் அற்ற இயவின் சுரன் இறந்து உள்ளுவை அல்லையோ மற்றே உள்ளிய விருந்து ஒழிவு அறியா பெரும் தண் பந்தர் வருந்தி வருநர் ஓம்பித் தண்ணெனத் தாது துகள் உதிர்த்த தாழை அம் கூந்தல் வீழ் இதழ் அலரி மெல் அகம் சேர்த்தி மகிழ் அணி முறுவல் மாண்ட சேக்கை நம்மொடு நல் மொழி நவிலும் பொம்மல் ஓதி புனை_இழை குணனே #8 குறுந்தொகை 188 முல்லை - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மன்னார் முகை முற்றினவே முல்லை முல்லையொடு தகை முற்றினவே தண் கார் வியன் புனம் வால் இழை நெகிழ்த்தோர் வாரார் மாலை வந்தன்று என் மாண் நலம் குறித்தே #9 குறுந்தொகை 215 பாலை - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் படரும் பைபயப் பெயரும் சுடரும் என்றூழ் மா மலை மறையும் இன்று அவர் வருவர்-கொல் வாழி தோழி நீர் இல் வறும் கயம் துழைஇய இலங்கு மருப்பு யானை குறும் பொறை மருங்கின் அமர் துணை தழீஇக் கொடு வரி இரும் புலி காக்கும் நெடு வரை மருங்கின் சுரன் இறந்தோரே #10 நற்றிணை 82 குறிஞ்சி - (அம்மூவனார்)(அம்மள்ளனார்)மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் நோயும் நெகிழ்ச்சியும் வீடச் சிறந்த வேய் வனப்புற்ற தோளை நீயே என் உயவு அறிதியோ நன் நடைக் கொடிச்சி முருகு புணர்ந்து இயன்ற வள்ளி போல நின் உருவு கண் எறிப்ப நோக்கல் ஆற்றலெனே போகிய நாகப் போக்கு அரும் கவலைச் சிறு கண் பன்றிப் பெரும் சின ஒருத்தல் சேறு ஆடு இரும் புறம் நீறொடு சிவண வெள் வசிப் படீஇயர் மொய்த்த வள்பு அழீஇக் கோள் நாய் கொண்ட கொள்ளைக் கானவர் பெயர்க்கும் சிறுகுடியானே #11 நற்றிணை 297 குறிஞ்சி - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பொன் செய் வள்ளத்துப் பால் கிழக்கு இருப்ப நின் ஒளி ஏறிய சேவடி ஒதுங்காய் பல் மாண் சேக்கைப் பகை கொள நினைஇ மகிழா நோக்கம் மகிழ்ந்தனை போன்றனை எவன்-கொல் என்று நினைக்கலும் நினைத்திலை நின்னுள் தோன்றும் குறிப்பு நனி பெரிதே சிதர் நனை முணைஇய சிதர் கால் வாரணம் முதிர் கறி யாப்பின் துஞ்சும் நாடன் மெல்ல வந்து நல அகம் பெற்றமை மையல் உறுகுவள் அன்னை ஐயம் இன்றிக் கடும் கவவினளே #12 நற்றிணை 321 முல்லை - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் செந்நிலப் புறவின் புன் மயிர்ப் புருவை பாடு இன் தெண் மணித் தோடு தலைப்பெயரக் கான முல்லைக் கய வாய் அலரி பார்ப்பன மகளிர் சாரல் புறத்து அணியக் கல் சுடர் சேரும் கதிர் மாய் மாலைப் புல்லென் வறு மனை நோக்கி மெல்ல வருந்தும்-கொல்லோ திருந்து இழை அரிவை வல்லைக் கடவு-மதி தேரே சென்றிக குருந்து அவிழ் குறும்பொறை பயிற்றப் பெரும் கலி மூதூர் மரம் தோன்றும்மே #13 புறநானூறு 388 - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் **பாடப்பட்டோன்: சிறுகுடிகிழான் பண்ணன் வெள்ளி தென்புலத்து உறைய விளை வயல் பள்ளம் வாடிய பயன் இல் காலை இரும் பறைக் கிணை_மகன் சென்றவன் பெரும் பெயர் சிறுகுடி கிழான் பண்ணன் பொருந்தித் தன் நிலை அறியுநன் ஆக அ நிலை இடுக்கண் இரியல்போக உடைய கொடுத்தோன் எந்தை கொடை மேம் தோன்றல் நுண் நூல் தடக் கையின் நா மருப்பு ஆக வெல்லும் வாய்மொழிப் புல் உடை விளை நிலம் பெயர்க்கும் பண்ணன் கேட்டிரோ அவன் வினைப் பகடு ஏற்ற மேழிக் கிணைத் தொடா நாள்-தொறும் பாடேன் ஆயின் ஆனா மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன் பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை அண்ணல் யானை வழுதி கண்மாறு இலியர் என் பெரும் கிளைப் புரவே &360 - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் #1 அகநானூறு 56 மருதம் - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் நகை ஆகின்றே தோழி நெருநல் மணி கண்டு அன்ன துணி கயம் துளங்க இரும்பு இயன்று அன்ன கரும் கோட்டு எருமை ஆம்பல் மெல் அடை கிழியக் குவளைக் கூம்புவிடு பன் மலர் மாந்திக் கரைய காஞ்சி நுண் தாது ஈர்ம் புறத்து உறைப்ப மெல்கிடு கவுள அல்கு நிலை புகுதரும் தண் துறை ஊரன் திண் தார் அகலம் வதுவை நாள் அணிப் புதுவோர்ப் புணரிய பரிவொடு வரூஉம் பாணன் தெருவில் புனிற்று ஆப் பாய்ந்து எனக் கலங்கி யாழ் இட்டு எம் மனைப் புகுதந்தோனே அது கண்டு மெய் மலி உவகை மறையினென் எதிர் சென்று இ மனை அன்று அஃது உம் மனை என்ற என்னும் தன்னும் நோக்கி மம்மர் நெஞ்சினோன் தொழுது நின்றதுவே #2 அகநானூறு 124 முல்லை - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் நன் கலம் களிற்றொடு நண்ணார் ஏந்தி வந்து திறை கொடுத்து வணங்கினர் வழிமொழிந்து சென்றீக என்ப ஆயின் வேந்தனும் நிலம் வகுத்துறாஅ ஈண்டிய தானையொடு இன்றே புகுதல் வாய்வது நன்றே மாட மாண் நகர்ப் பாடு அமை சேக்கைத் துனி தீர் கொள்கை நம் காதலி இனிதுறப் பாசறை வருத்தம் வீட நீயும் மின்னு நிமிர்ந்து அன்ன பொன் இயல் புனை படைக் கொய் சுவல் புரவிக் கை கவர் வயங்கு பரி வண் பெயற்கு அவிழ்ந்த பைம் கொடி முல்லை வீ கமழ் நெடு வழி ஊது வண்டு இரிய காலை எய்தக் கடவு-மதி மாலை அந்திக் கோவலர் அம் பணை இமிழ் இசை அரமிய வியலகத்து இயம்பும் நிரை நிலை ஞாயில் நெடு மதில் ஊரே #3 அகநானூறு 230 நெய்தல் - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் உறு கழி மருங்கின் ஓதமொடு மலர்ந்த சிறு கரு நெய்தல் கண் போல் மா மலர்ப் பெரும் தண் மாத் தழை இருந்த அல்குல் ஐய அரும்பிய சுணங்கின் வை எயிற்று மை ஈர் ஓதி வாள் நுதல் குறுமகள் விளையாட்டு ஆயமொடு வெண் மணல் உதிர்த்த புன்னை நுண் தாது பொன்னின் நொண்டு மனை புறந்தருதி ஆயின் எனையதூஉம் இ மனைக் கிழமை எம்மொடு புணரின் தீதும் உண்டோ மாதராய் எனக் கடும் பரி நல் மான் கொடிஞ்சி நெடும் தேர் கை வல் பாகன் பையென இயக்க யாம் தம் குறுகினம் ஆக ஏந்து எழில் அரி வேய் உண் கண் பனி வரல் ஒடுக்கிச் சிறிய இறைஞ்சினள் தலையே பெரிய எவ்வம் யாம் இவண் உறவே #4 அகநானூறு 254 முல்லை - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் நரை விராவுற்ற நறு மென் கூந்தல் செம் முது செவிலியர் பல பாராட்டப் பொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி மணல் மலி முற்றத்து நிலம் வடுக்கொளாஅ மனை உறை புறவின் செம் கால் சேவல் துணையொடு குறும் பறை பயிற்றி மேல் செல விளையாடு ஆயத்து இளையோர் காண்-தொறும் நம்-வயின் நினையும் நல் நுதல் அரிவை புலம்பொடு வதியும் கலங்கு அஞர் அகல வேந்து உறு தொழிலொடு வேறு புலத்து அல்கி வந்து வினை முடித்தனம் ஆயின் நீயும் பணை நிலை முனைஇய வினை நவில் புரவி இழை அணி நெடும் தேர் ஆழி உறுப்ப நுண் கொடி மின்னின் பைம் பயிர் துமியத் தளவ முல்லையொடு தலைஇத் தண்ணென வெறி கமழ் கொண்ட வீ ததை புறவின் நெடி இடை பின் படக் கடவு-மதி என்று யான் சொல்லிய அளவை நீடாது வல்லெனத் தார் மணி மா அறிவுறாஅ ஊர் நணித் தந்தனை உவகை யாம் பெறவே #5 அகநானூறு 272 குறிஞ்சி - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் இரும் புலி தொலைத்த பெரும் கை வேழத்துப் புலவு நாறு புகர் நுதல் கழுவக் கங்குல் அருவி தந்த அணங்கு உடை நெடும் கோட்டு அஞ்சுவரு விடர் முகை ஆர் இருள் அகற்றி மின் ஒளிர் எஃகம் செல் நெறி விளக்கத் தனியன் வந்து பனி அலை முனியான் நீர் இழி மருங்கின் ஆர் இடத்து அமன்ற குளவியொடு மிடைந்த கூதளம் கண்ணி அசையா நாற்றம் அசை வளி பகரத் துறுகல் நண்ணிய கறி இவர் படப்பைக் குறி இறைக் குரம்பை நம் மனை-வயின் புகுதரும் மெய் மலி உவகையன் அ நிலை கண்டு முருகு என உணர்ந்து முகமன் கூறி உருவச் செந்தினை நீரொடு தூஉய் நெடுவேள் பரவும் அன்னை அன்னோ என் ஆவது-கொல் தானே பொன் என மலர்ந்த வேங்கை அலங்கு சினை பொலிய மணி நிற மஞ்ஞை அகவும் அணி மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே #6 அகநானூறு 302 குறிஞ்சி - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் சிலம்பில் போகிய செம் முக வாழை அலங்கல் அம் தோடு அசை வளி உறு-தொறும் பள்ளி யானைப் பரூஉப் புறம் தைவரும் நல் வரை நாடனொடு அருவி ஆடியும் பல் இதழ் நீலம் படு சுனைக் குற்றும் நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும் வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும் அரிய போலும் காதல் அம் தோழி இரும் கல் அடுக்கத்து என் ஐயர் உழுத கரும்பு எனக் கவினிய பெரும் குரல் ஏனல் கிளி பட விளைந்தமை அறிந்தும் செல்க என நம் அவண் விடுநள் போலாள் கைம்மிகச் சில் சுணங்கு அணிந்த செறிந்து வீங்கு இள முலை மெல் இயல் ஒலிவரும் கதுப்பொடு பல் கால் நோக்கும் அறன் இல் யாயே #7 குறுந்தொகை 185 குறிஞ்சி - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் நுதல் பசப்பு இவர்ந்து திதலை வாடி நெடு மென் பணைத் தோள் சாஅய்த் தொடி நெகிழ்ந்து இன்னள் ஆகுதல் நும்மின் ஆகும் எனச் சொல்லின் எவன் ஆம் தோழி பல் வரிப் பாம்பு பை அவிந்தது போலக் கூம்பிக் கொண்டலின் தொலைந்த ஒண் செங்காந்தள் கல் மிசைக் கவியும் நாடற்கு என் நல் மா மேனி அழி படர் நிலையே #8 நற்றிணை 33 பாலை - (மதுரை அறுவை வாணிகன்)இளவேட்டனார் படு சுடர் அடைந்த பகு வாய் நெடு வரை முரம்பு சேர் சிறுகுடிப் பரந்த மாலைப் புலம்பு கூட்டுண்ணும் புல்லென் மன்றத்துக் கல் உடைப் படுவில் கலுழி தந்து நிறை பெயல் அறியாக் குறைத்து ஊண் அல்லில் துவர் செய் ஆடைச் செம் தொடை மறவர் அதர் பார்த்து அல்கும் அஞ்சுவரு நெறியிடை இறப்ப எண்ணுவர் அவர் எனின் மறுத்தல் வல்லுவம்-கொல்லோ மெல் இயல் நாம் என விம்முறு கிளவியள் என் முகம் நோக்கி நல் அக வன முலைக் கரை சேர்பு மல்கு புனல் பரந்த மலர் ஏர் கண்ணே #9 நற்றிணை 157 பாலை - (மதுரை அறுவை வாணிகன்)இளவேட்டனார் இரும் கண் ஞாலத்து ஈண்டு தொழில் உதவிப் பெரும் பெயல் பொழிந்த வழி_நாள் அமையத்துப் பல் பொறி அரவின் செல் புறம் கடுப்ப யாற்று அறல் நுணங்கிய நாள் பத வேனில் இணர் துதை மாஅத்த புணர் குயில் விளித்-தொறும் நம்-வயின் நினையும் நெஞ்சமொடு கைம்மிகக் கேள்-தொறும் கலுழுமால் பெரிதே காட்ட குறும் பொறை அயல நெடும் தாள் வேங்கை அம் பூம் தாது உக்கு அன்ன நுண் பல் தித்தி மாஅயோளே #10 நற்றிணை 221 முல்லை - (இடைக்காடனார்)இளவேட்டனார் மணி கண்டு அன்ன மா நிறக் கருவிளை ஒண் பூம் தோன்றியொடு தண் புதல் அணியப் பொன் தொடர்ந்து அன்ன தகைய நன் மலர்க் கொன்றை ஒள் இணர் கோடு-தொறும் தூங்க வம்பு விரித்து அன்ன செம் புலப் புறவில் நீர் அணிப் பெரு வழி நீள் இடைப் போழச் செல்க பாக நின் செய்வினை நெடும் தேர் விருந்து விருப்புறூஉம் பெரும் தோள் குறுமகள் மின் ஒளிர் அவிர் இழை நல் நகர் விளங்க நடை நாள் செய்த நவிலாச் சீறடிப் பூம் கண் புதல்வன் உறங்கு-வயின் ஒல்கி வந்தீக எந்தை என்னும் அம் தீம் கிளவி கேட்கம் நாமே #11 நற்றிணை 344 குறிஞ்சி - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் அணி வரை மருங்கின் ஐது வளர்ந்திட்ட மணி ஏர் தோட்ட மை ஆர் ஏனல் இரும் பிடித் தடக் கையின் தடைஇய பெரும் புனம் காவல் கண்ணினம் ஆயின் ஆய்_இழை நம் நிலை இடை தெரிந்து உணரான் தன் மலை ஆரம் நீவிய அணி கிளர் ஆகம் சாரல் நீள் இடைச் சால வண்டு ஆர்ப்பச் செல்வன் செல்லும்-கொல் தானே உயர் வரைப் பெரும் கல் விடரகம் சிலம்ப இரும் புலி களிறு தொலைத்து உரறும் கடி இடி மழை செத்துச் செந்தினை உணங்கல் தொகுக்கும் இன் கல் யாணர்த் தம் உறைவின் ஊர்க்கே #12 புறநானூறு 329 - மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் இல் அடு கள்ளின் சில் குடிச் சீறூர் புடை நடுகல்லின் நாள்_பலி ஊட்டி நல் நீராட்டி நெய் நறைக் கொளீஇய மங்குல் மாப் புகை மறுகு உடன் கமழும் அரு முனை இருக்கைத்து ஆயினும் வரி மிடற்று அரவு உறை புற்றத்து அற்றே நாளும் புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க்கு அருகாது ஈயும் வண்மை உரை சால் நெடுந்தகை ஓம்பும் ஊரே &361 - மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார் #1 குறுந்தொகை 144 பாலை - மதுரை ஆசிரியர் கோடங்கொற்றனார் கழிய காவி குற்றும் கடல வெண் தலைப் புணரி ஆடியும் நன்றே பிரிவு இல் ஆயம் உரியது ஒன்று அயர இவ் வழிப் படுதலும் ஒல்லாள் அவ் வழிப் பரல் பாழ்படுப்பச் சென்றனள் மாதோ செல் மழை தவழும் சென்னி விண் உயர் பிறங்கல் விலங்கு மலை நாட்டே &362 - மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் #1 புறநானூறு 309 - மதுரை இளங்கண்ணிக் கௌசிகனார் இரும்பு முகம் சிதைய நூறி ஒன்னார் இரும் சமம் கடத்தல் ஏனோர்க்கும் எளிதே நல்_அரா உறையும் புற்றம் போலவும் கொல் ஏறு திரிதரு மன்றம் போலவும் மாற்று அரும் துப்பின் மாற்றோர் பாசறை உளன் என வெரூஉம் ஓர் ஒளி வலன் உயர் நெடு வேல் என் ஐ-கண்ணதுவே &363 - மதுரை இளங்கௌசிகனார் #1 அகநானூறு 381 பாலை - மதுரை இளங்கௌசிகனார் ஆளி நல் மான் அணங்கு உடை ஒருத்தல் மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப ஏந்தல் வெண் கோடு வாங்கிக் குருகு அருந்தும் அஞ்சுவரத் தகுந ஆங்கண் மஞ்சு தப அழல் கான்று திரிதரும் அலங்கு கதிர் மண்டிலம் நிழல் சூன்று உண்ட நிரம்பா நீள் இடை கற்று உரிக் குடம்பைக் கத நாய் வடுகர் வில் சினம் தணிந்த வெருவரு கவலை குருதி ஆடிய புலவு நாறு இரும் சிறை எருவைச் சேவல் ஈண்டு கிளைத் தொழுதி பச்சூன் கொள்ளை சாற்றிப் பறை நிவந்து செக்கர் வானின் விசும்பு அணி கொள்ளும் அரும் சுரம் நீந்திய நம்மினும் பொருந்தார் முனை அரண் கடந்த வினை வல் தானைத் தேன் இமிர் நறும் தார் வானவன் உடற்றிய ஒன்னாத் தெவ்வர் மன் எயில் போலப் பெரும் பாழ் கொண்ட மேனியள் நெடிது உயிர்த்து வருந்தும்-கொல் அளியள் தானே சுரும்பு உண நெடு நீர் பயந்த நிரை இதழ்க் குவளை எதிர் மலர் இணைப் போது அன்ன தன் அரி மதர் மழைக் கண் தெண் பனி கொளவே &364 - மதுரை இளம்பாலாசிரியன் சேந்தம் கூத்தனார் #1 அகநானூறு 102 குறிஞ்சி - மதுரை இளம்பாலாசிரியன் சேந்தம் கூத்தனார் உளை மான் துப்பின் ஓங்கு தினைப் பெரும் புனத்துக் கழுதில் கானவன் பிழி மகிழ்ந்து வதிந்து என உரைத்த சந்தின் ஊரல் இரும் கதுப்பு ஐது வரல் அசை வளி ஆற்றக் கை பெயரா ஒலியல் வார் மயிர் உளரினள் கொடிச்சி பெரு வரை மருங்கில் குறிஞ்சி பாடக் குரலும் கொள்ளாது நிலையினும் பெயராது படாஅப் பைம் கண் பாடு பெற்று ஒய்யென மறம் புகல் மழ களிறு உறங்கும் நாடன் ஆர மார்பின் அரி ஞிமிறு ஆர்ப்பத் தாரன் கண்ணியன் எஃகு உடை வலத்தன் காவலர் அறிதல் ஓம்பிப் பையென வீழாக் கதவம் அசையினன் புகுதந்து உயங்கு படர் அகலம் முயங்கித் தோள் மணந்து இன் சொல் அளைஇப் பெயர்ந்தனன் தோழி இன்று எவன்-கொல்லோ கண்டிகும் மற்று அவன் நல்காமையின் அம்பல் ஆகி ஒருங்கு வந்து உவக்கும் பண்பின் இரும் சூழ் ஓதி ஒண் நுதல் பசப்பே #2 அகநானூறு 348 குறிஞ்சி - மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் என் ஆவது-கொல் தானே முன்றில் தேன் தேர் சுவைய திரள் அரை மாஅத்துக் கோடைக்கு ஊழ்த்த கமழ் நறும் தீம் கனி பயிர்ப்புறுப் பலவின் எதிர்ச் சுளை அளைஇ இறாலொடு கலந்த வண்டு மூசு அரியல் நெடும் கண் ஆடு அமைப் பழுநிக் கடும் திறல் பாப்புக் கடுப்பு அன்ன தோப்பி வான் கோட்டுக் கடவுள் ஓங்கு வரைக்கு ஓக்கிக் குறவர் முறித் தழை மகளிர் மடுப்ப மாந்தி அடுக்கல் ஏனல் இரும் புனம் மறந்துழி யானை வவ்வின தினை என நோனாது இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇச் சிலை ஆய்ந்து திரிதரும் நாடன் நிலையா நல் மொழி தேறிய நெஞ்சே #3 நற்றிணை 273 குறிஞ்சி - மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார் இஃது எவன்-கொல்லோ தோழி மெய் பரந்து எவ்வம் கூர்ந்த ஏமுறு துயரம் வெம்மையின் தான் வருத்துறீஇ நம்-வயின் அறியாது அயர்ந்த அன்னைக்கு வெறி என வேலன் உரைக்கும் என்ப ஆகலின் வண்ணம் மிகுந்த அண்ணல் யானை நீர் கொள் நெடும் சுனை அமைந்து வார்ந்து உறைந்து என் கண் போல் நீலம் தண் கமழ் சிறக்கும் குன்ற நாடனை உள்ளு-தொறும் நெஞ்சு நடுக்குறூஉம் அவன் பண்பு தரு படரே &365 - மதுரை ஓலைக்கடை கண்ணம் புகுந்தார் ஆயத்தனார் #1 புறநானூறு 350 - மதுரை ஓலைக்கடை கண்ணம் புகுந்தார் ஆயத்தனார் தூர்ந்த கிடங்கின் சோர்ந்த ஞாயில் சிதைந்த இஞ்சிக் கதுவாய் மூதூர் யாங்கு ஆவது-கொல் தானே தாங்காது படு மழை உருமின் இறங்கு முரசின் கடு_மான் வேந்தர் காலை வந்து எம் நெடு நிலை வாயில் கொட்குவர்-மாதோ பொருதாது அமைகுவர் அல்லர் போர் உழந்து அடு முரண் முன்பின் தன்னையர் ஏந்திய வடி வேல் எஃகின் சிவந்த உண்கண் தொடி பிறழ் முன்கை இளையோள் அணி நல் ஆகத்து அரும்பிய சுணங்கே &366 - மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் #1 நற்றிணை 250 மருதம் - மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் நகுகம் வாராய் பாண பகு வாய் அரி பெய் கிண்கிணி ஆர்ப்பத் தெருவில் தேர் நடைபயிற்றும் தே மொழிப் புதல்வன் பூ நாறு செவ் வாய் சிதைத்த சாந்தமொடு காமர் நெஞ்சம் துரப்ப யாம் தன் முயங்கல் விருப்பொடு குறுகினேம் ஆகப் பிறை வனப்புற்ற மாசறு திரு நுதல் நாறு இரும் கதுப்பின் எம் காதலி வேறு உணர்ந்து வெரூஉம் மான் பிணையின் ஒரீஇ யாரையோ என்று இகந்து நின்றதுவே #2 நற்றிணை 369 நெய்தல் - மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார் சுடர் சினம் தணிந்து குன்றம் சேர நிறை பறைக் குருகு இனம் விசும்பு உகந்து ஒழுக எல்லை பைபயக் கழிப்பி முல்லை அரும்பு வாய் அவிழும் பெரும் புன் மாலை இன்றும் வருவது ஆயின் நன்றும் அறியேன் வாழி தோழி அறியேன் ஞெமை ஓங்கு உயர் வரை இமையத்து உச்சி வாஅன் இழிதரும் வயங்கு வெள் அருவிக் கங்கை அம் பேர் யாற்றுக் கரை இறந்து இழிதரும் சிறை அடு கடும் புனல் அன்ன என் நிறை அடு காமம் நீந்தும் ஆறே &367 - மதுரைக் கடையத்தார் மகனார் வெண்ணாகனார் #1 குறுந்தொகை 223 குறிஞ்சி - மதுரைக் கடையத்தார் மகனார் வெண்ணாகனார் பேர் ஊர் கொண்ட ஆர் கலி விழவில் செல்வாம் செல்வாம் என்றி அன்று இவண் நல்லோர் நல்ல பலவால்-தில்ல தழலும் தட்டையும் முறியும் தந்து இவை ஒத்தன நினக்கு எனப் பொய்த்தன கூறி அன்னை ஓம்பிய ஆய் நலம் என் ஐ கொண்டான் யாம் இன்னமால் இனியே &368 - மதுரைக் கணக்காயனார் #1 அகநானூறு 27 பாலை - மதுரைக் கணக்காயனார் கொடு வரி இரும் புலித் தயங்க நெடு வரை ஆடு கழை இரு வெதிர் கோடைக்கு ஒல்கும் கானம் கடிய என்னார் நாம் அழ நின்றது இல் பொருட்பிணிச் சென்று இவண் தருமார் செல்ப என்ப என்போய் நல்ல மடவை மன்ற நீயே வட வயின் வேங்கடம் பயந்த வெண் கோட்டு யானை மறப் போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும் கொற்கை அம் பெரும் துறை முத்தின் அன்ன நகை பொலிந்து இலங்கும் எயிறு கெழு துவர் வாய் தகைப்பத் தங்கலர் ஆயினும் இகப்ப யாங்ஙனம் விடுமோ மற்றே தேம் படத் தெள் நீர்க்கு ஏற்ற திரள் கால் குவளைப் பெருந்தகை சிதைத்தும் அமையாப் பருந்து பட வேத்து அமர்க் கடந்த வென்றி நல் வேல் குருதியொடு துயல்வந்து அன்ன நின் அரி வேய் உண்கண் அமர்த்த நோக்கே #2 அகநானூறு 338 குறிஞ்சி - மதுரைக் கணக்காயனார் குன்று ஓங்கு வைப்பின் நாடு மீக்கூறும் மறம் கெழு தானை அரசருள்ளும் அறம் கடைப்பிடித்த செங்கோலுடன் அமர் மறம் சாய்த்து எழுந்த வலன் உயர் திணி தோள் பலர் புகழ் திருவின் பசும் பூண் பாண்டியன் அணங்கு உடை உயர் நிலைப் பொருப்பின் கவாஅன் சினை ஒண் காந்தள் நாறும் நறு நுதல் துணை ஈர் ஓதி மாஅயோள் வயின் நுண் கோல் அவிர் தொடி வண் புறம் சுற்ற முயங்கல் இயையாது ஆயினும் என்றும் வயவுறு நெஞ்சத்து உயவுத் துணை ஆக ஒன்னார் தேஎம் பாழ்பட நூறும் துன் அரும் துப்பின் வென் வேல் பொறையன் அகல் இரும் கானத்துக் கொல்லி போலத் தவாஅலியரோ நட்பே அவள்-வயின் அறாஅலியரோ தூதே பொறாஅர் விண் பொரக் கழித்த திண் பிடி ஒள் வாள் புனிற்று ஆன் தரவின் இளையர் பெருமகன் தொகு போர்ச் சோழன் பொருள் மலி பாக்கத்து வழங்கல் ஆனாப் பெரும் துறை முழங்கு இரு முந்நீர்த் திரையினும் பலவே #3 அகநானூறு 342 குறிஞ்சி - மதுரைக் கணக்காயனார் ஒறுப்ப ஓவலை நிறுப்ப நில்லலை புணர்ந்தோர் போலப் போற்று-மதி நினக்கு யான் கிளைஞன் அல்லெனோ நெஞ்சே தெனாஅது வெல் போர்க் கவுரியர் நல் நாட்டு உள்ளதை மண் கொள் புற்றத்து அருப்பு உழை திறப்பின் ஆ கொள் மூதூர் களவர் பெருமகன் ஏவல் இளையர் தலைவன் மேவார் அரும் குறும்பு எறிந்த ஆற்றலொடு பருந்து படப் பல் செருக் கடந்த செல் உறழ் தடக் கை கெடாஅ நல் இசைத் தென்னன் தொடாஅ நீர் இழி மருங்கில் கல் அளைக் கரந்த அம் வரை அர_மகளிரின் அரியள் அம் வரி அல்குல் அணையாக்காலே #4 நற்றிணை 23 குறிஞ்சி - கணக்காயனார் தொடி பழி மறைத்தலின் தோள் உய்ந்தனவே வடிக் கொள் கூழை ஆயமோடு ஆடலின் இடிப்பு மெய்யது ஒன்று உடைத்தே கடிக் கொள அன்னை காக்கும் தொல் நலம் சிதையக் காண்-தொறும் கலுழ்தல் அன்றியும் ஈண்டு நீர் முத்துப் படு பரப்பின் கொற்கை முன்துறைச் சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல் தெண் நீர் மலரின் தொலைந்த கண்ணே காமம் கரப்பு அரியவ்வே #5 புறநானூறு 330 - மதுரைக் கணக்காயனார் வேந்து உடைத் தானை முனை கெட நெரிதர ஏந்து வாள் வலத்தன் ஒருவன் ஆகித் தன் இறந்து வாராமை விலக்கலின் பெரும் கடற்கு ஆழி அனையன்-மாதோ என்றும் பாடிச் சென்றோர்க்கு அன்றியும் வாரிப் புரவிற்கு ஆற்றாச் சீறூர்த் தொன்மை சுட்டிய வண்மையோனே &369 - மதுரைக் கண்டரதத்தனார் #1 குறுந்தொகை 317 குறிஞ்சி - மதுரைக் கண்டரதத்தனார் புரி மட மரையான் கரு நரை நல் ஏறு தீம் புளி நெல்லி மாந்தி அயலது தேம் பாய் மா மலர் நடுங்க வெய்துயிர்த்து ஓங்கு மலைப் பைம் சுனை பருகும் நாடன் நம்மை விட்டு அமையுமோ மற்றே கைம்மிக வடபுல வாடைக்கு அழி மழை தென்புலம் படரும் தண் பனி நாளே &370 - மதுரைக் கண்ணத்தனார் #1 அகநானூறு 360 நெய்தல் - மதுரைக் கண்ணத்தனார் பல் பூம் தண் பொழில் பகல் உடன் கழிப்பி ஒரு கால் ஊர்தி பருதி அம் செல்வன் குட வயின் மா மலை மறையக் கொடும் கழித் தண் சேற்று அடைஇய கணைக் கால் நெய்தல் நுண் தாது உண்டு வண்டு இனம் துறப்ப வெருவரு கடும் திறல் இரு பெரும் தெய்வத்து உரு உடன் இயைந்த தோற்றம் போல அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ வந்த மாலை பெயரின் மற்று இவள் பெரும் புலம்பினளே தெய்ய அதனால் பாணி பிழையா மாண் வினைக் கலி மா துஞ்சு ஊர் யாமத்துத் தெவிட்டல் ஓம்பி நெடும் தேர் அகல நீக்கிப் பையெனக் குன்று இழி களிற்றின் குவவு மணல் நீந்தி இரவின் வம்மோ உரவு நீர்ச் சேர்ப்ப இன மீன் அருந்தும் நாரையொடு பனை மிசை அன்றில் சேக்கும் முன்றில் பொன் என நல் மலர் நறு வீ தாஅம் புன்னை நறும் பொழில் செய்த நம் குறியே #2 நற்றிணை 351 குறிஞ்சி - மதுரைக் கண்ணத்தனார் இளமை தீர்ந்தனள் இவள் என வள மனை அரும் கடிப் படுத்தனை ஆயினும் சிறந்து இவள் பசந்தனள் என்பது உணராய் பல் நாள் எவ்வ நெஞ்சமொடு தெய்வம் பேணி வருந்தல் வாழி வேண்டு அன்னை கரும் தாள் வேங்கை அம் கவட்டு இடைச் சாந்தின் செய்த களிற்றுத் துப்பு அஞ்சாப் புலி அதள் இதணத்துச் சிறுதினை வியன் புனம் காப்பின் பெறுகுவள்-மன்னோ என் தோழி தன் நலனே &371 - மதுரை கவுணியன் பூதத்தனார் #1 அகநானூறு 74 முல்லை - மதுரை கவுணியன் பூதத்தனார் வினை வலம் படுத்த வென்றியொடு மகிழ் சிறந்து போர் வல் இளையர் தாள் வலம் வாழ்த்த தண் பெயல் பொழிந்த பைதுறு காலைக் குருதி உருவின் ஒண் செம் மூதாய் பெரு வழி மருங்கில் சிறு பல வரிப்பப் பைம் கொடி முல்லை மென் பதப் புது வீ வெண் களர் அரி மணல் நல் பல தாஅய் வண்டு போது அவிழ்க்கும் தண் கமழ் புறவில் கரும் கோட்டு இரலை காமர் மடப் பிணை மருண்ட மான் நோக்கம் காண்-தொறும் நின் நினைந்து திண் தேர் வலவ கடவு எனக் கடைஇ இன்றே வருவர் ஆன்றிகம் பனி என வன்புறை இன் சொல் நன் பல பயிற்றும் நின் வலித்து அமைகுவென்-மன்னோ அல்கல் புன்கண் மாலையொடு பொருந்திக் கொடும் கோல் கல்லாக் கோவலர் ஊதும் வல் வாய் சிறு குழல் வருத்தாக்காலே &372 - மதுரை கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் #1 அகநானூறு 170 நெய்தல் - மதுரை கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் கானலும் கழறாது கழியும் கூறாது தேன் இமிர் நறு மலர் புன்னையும் மொழியாது ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே இரும் கழி மலர்ந்த கண் போல் நெய்தல் கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇத் தண் தாது ஊதிய வண்டு இனம் களி சிறந்து பறைஇய தளரும் துறைவனை நீயே சொல்லல் வேண்டுமால் அலவ பல் கால் கைதை அம் படு சினை எவ்வமொடு அசாஅம் கடல் சிறு காக்கை காமர் பெடையொடு கோட்டு_மீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின் வெள் இறாக் கனவும் நள்ளென் யாமத்து நின் உறு விழுமம் களைந்தோள் தன் உறு விழுமம் நீந்துமோ எனவே #2 புறநானூறு 316 - மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் கள்ளின் வாழ்த்திக் கள்ளின் வாழ்த்திக் காட்டொடு மிடைந்த சீயா முன்றில் நாள்_செருக்கு அனந்தர்த் துஞ்சுவோனே அவன் எம் இறைவன் யாம் அவன் பாணர் நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன் இரும் புடைப் பழ வாள் வைத்தனன் இன்று இக் கரும் கோட்டுச் சீறியாழ் பணையம் இது கொண்டு ஈவது இலாளன் என்னாது நீயும் வள்ளி_மருங்குல் வயங்கு இழை அணியக் கள் உடைக் கலத்தேம் யாம் மகிழ் தூங்கச் சென்று வாய் சிவந்து மேல் வருக சிறு கண் யானை வேந்து விழுமுறவே &373 - மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார் #1 அகநானூறு 204 முல்லை - மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார் உலகு உடன் நிழற்றிய தொலையா வெண்குடைக் கடல் போல் தானைக் கலிமா வழுதி வென்று அமர் உழந்த வியன் பெரும் பாசறை சென்று வினை முடித்தனம் ஆயின் இன்றே கார் பெயற்கு எதிரிய காண்தகு புறவில் கணம்கொள் வண்டின் அம் சிறைத் தொழுதி மணம் கமழ் முல்லை மாலை ஆர்ப்ப உதுக் காண் வந்தன்று பொழுதே வல் விரைந்து செல்க பாக நின் நல் வினை நெடும் தேர் வெண்ணெல் அரிநர் மடி வாய்த் தண்ணுமை பல் மலர்ப் பொய்கைப் படு புள் ஓப்பும் காய் நெல் படப்பை வாணன் சிறுகுடித் தண்டலை கமழும் கூந்தல் ஒண் தொடி மடந்தை தோள் இணை பெறவே &374 - மதுரைக் காருலவியம் கூத்தனார் #1 நற்றிணை 325 பாலை - மதுரைக் காருலவியம் கூத்தனார் கவி தலை எண்கின் பரூஉ மயிர் ஏற்றை இரை தேர் வேட்கையின் இரவில் போகி நீடு செயல் சிதலைத் தோடு புனைந்து எடுத்த அர வாழ் புற்றம் ஒழிய ஒய்யென முரவு வாய் வள் உகிர் இடப்ப வாங்கும் ஊக்கு அரும் கவலை நீந்தி மற்று இவள் பூப் போல் உண்கண் புது நலம் சிதைய வீங்கு நீர் வாரக் கண்டும் தகுமோ பெரும தவிர்க நும் செலவே &375 - மதுரைக் கூத்தனார் #1 அகநானூறு 334 முல்லை - மதுரைக் கூத்தனார் **(மதுரைக் கடாரத்தனார்)(மதுரைக் கோடரத்தனார்) ஓடா நல் ஏற்று உரிவை தைஇய ஆடு கொள் முரசம் இழுமென முழங்க நாடு திறை கொண்டனம் ஆயின் பாக பாடு இமிழ் கடலின் எழுந்த சும்மையொடு பெரும் களிற்றுத் தடக் கை புரையக் கால் வீழ்த்து இரும் பிடித் தொழுதியின் ஈண்டுவன குழீஇ வணங்கு இறை மகளிர் அயர்ந்தனர் ஆடும் கழங்கு உறழ் ஆலியொடு கதழ் உறை சிதறிப் பெயல் தொடங்கின்றால் வானம் வானின் வயங்கு சிறை அன்னத்து நிரை பறை கடுப்ப நால் உடன் பூண்ட கால் நவில் புரவிக் கொடிஞ்சி நெடும் தேர் கடும் பரி தவிராது இன மயில் அகவும் கார் கொள் வியன் புனத்து நோன் சூட்டு ஆழி ஈர் நிலம் துமிப்ப ஈண்டே காணக் கடவு-மதி பூம் கேழ் பொலிவன அமர்த்த உண்கண் ஒலி பல் கூந்தல் ஆய் சிறு நுதலே &376 - மதுரைக் கொல்லன் புல்லனார் #1 குறுந்தொகை 373 குறிஞ்சி - மதுரைக் கொல்லன் புல்லனார் நிலம் புடைபெயரினும் நீர் திரிந்து பிறழினும் இலங்கு திரைப் பெரும் கடற்கு எல்லை தோன்றினும் வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சிக் கேடு எவன் உடைத்தோ தோழி நீடு மயிர்க் கடும் பல் ஊகக் கறை விரல் ஏற்றை புடைத் தொடுபு உடையூப் பூ நாறு பலவுக் கனி காந்தள் அம் சிறுகுடிக் கமழும் ஓங்கு மலை நாடனொடு அமைந்த நம் தொடர்பே &377 - மதுரை(ப் பொன்செய்) கொல்லன் வெண்ணாகனார் #1 அகநானூறு 363 பாலை - மதுரை(ப் பொன்செய்) கொல்லன் வெண்ணாகனார் நிரை செலல் இவுளி விரைவு உடன் கடைஇ அகல் இரு விசும்பில் பகல் செலச் சென்று மழுகு சுடர் மண்டிலம் மா மலை மறைய பொழுது கழி மலரின் புனை_இழை சாஅய் அணை அணைந்து இனையை ஆகல் கணை அரைப் புல் இலை நெல்லிப் புகர் இல் பசும் காய் கல் அதர் மருங்கில் கடு வளி உதிர்ப்பப் பொலம் செய் காசின் பொற்பத் தாஅம் அத்தம் நண்ணி அதர் பார்த்து இருந்த கொலை வெம் கொள்கைக் கொடும் தொழில் மறவர் ஆறு செல் மாக்கள் அரு நிறத்து எறிந்த எஃகுறு விழுப்புண் கூர்ந்தோர் எய்திய வளை வாய்ப் பருந்தின் வள் உகிர்ச் சேவல் கிளை தரு தெள் விளி கெழு முடைப் பயிரும் இன்னா வெம் சுரம் இறந்தோர் முன்னிய செய்வினை வலத்தர் ஆகி இவண் நயந்து எய்த வந்தனரே தோழி மை எழில் துணை ஏர் எதிர் மலர் உண்கண் பிணை ஏர் நோக்கம் பெரும் கவின் கொளவே #2 நற்றிணை 285 குறிஞ்சி - மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் அரவு இரை தேரும் ஆர் இருள் நடுநாள் இரவின் வருதல் அன்றியும் உரவுக் கணை வன் கைக் கானவன் வெம் சிலை வணக்கி உளம் மிசைத் தவிர்த்த முளவு மான் ஏற்றையொடு மனை-வாய் ஞமலி ஒருங்கு புடை ஆட வேட்டு வலம் படுத்த உவகையன் காட்ட நடு கால் குரம்பைத் தன் குடி-வயின் பெயரும் குன்ற நாடன் கேண்மை நமக்கே நன்றால் வாழி தோழி என்றும் அயலோர் அம்பலின் அகலான் பகலின் வரூஉம் எறி புனத்தானே &378 - மதுரைச் சுள்ளம் போதனார் #1 நற்றிணை 215 நெய்தல் - மதுரைச் சுள்ளம் போதனார் குண கடல் இவர்ந்து குரூஉக் கதிர் பரப்பிப் பகல் கெழு செல்வன் குடமலை மறையப் புலம்பு வந்து இறுத்த புன்கண் மாலை இலங்கு வளை மகளிர் வியல் நகர் அயர மீன் நிணம் தொகுத்த ஊன் நெய் ஒண் சுடர் நீல் நிறப் பரப்பில் தயங்கு திரை உதைப்பக் கரை சேர்பு இருந்த கல்லென் பாக்கத்து இன்று நீ இவணை ஆகி எம்மொடு தங்கின் எவனோ தெய்ய செம் கால் கொடு முடி அவ் வலை பரியப் போகிய கோள் சுறாக் குறித்த முன்பொடு வேட்டம் வாயாது எமர் வாரலரே &379 - மதுரை தத்தம் கண்ணனார் #1 அகநானூறு 335 பாலை - மதுரை தத்தம் கண்ணனார் இருள் படு நெஞ்சத்து இடும்பை தீர்க்கும் அருள் நன்கு உடையர் ஆயினும் ஈதல் பொருள் இல்லோர்க்கு அஃது இயையாது ஆகுதல் யானும் அறிவென்-மன்னே யானை தன் கொல் மருப்பு ஒடியக் குத்திச் சினம் சிறந்து இன்னா வேனில் இன் துணை ஆர முளி சினை மராஅத்துப் பொளி பிளந்து ஊட்டப் புலம்பு வீற்றிருந்த நிலம் பகு வெம் சுரம் அரிய அல்ல-மன் நமக்கே விரி தார் ஆடு கொள் முரசின் அடு போர்ச் செழியன் மாட மூதூர் மதில் புறம் தழீஇ நீடு வெயில் உழந்த குறி இறைக் கணைக் கால் தொடை அமை பல் மலர்த் தோடு பொதிந்து யாத்த குடை ஓர் அன்ன கோள் அமை எருத்தின் பாளை பற்று இழிந்து ஒழியப் புறம் சேர்பு வாள் வடித்து அன்ன வயிறு உடைப் பொதிய நாள் உறத் தோன்றிய நயவரு வனப்பின் ஆரத்து அன்ன அணி கிளர் புதுப் பூ வாருறு கவரியின் வண்டு உண விரிய முத்தின் அன்ன வெள் வீ தாஅய் அலகின் அன்ன அரி நிறத்து ஆலி நகை நனி வளர்க்கும் சிறப்பின் தகை மிகப் பூவொடு வளர்ந்த மூவாப் பசும் காய் நீரினும் இனிய ஆகிக் கூர் எயிற்று அமிழ்தம் ஊறும் செவ் வாய் ஒண் தொடிக் குறுமகள் கொண்டனம் செலினே &380 - மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன்தேவனார் #1 அகநானூறு 164 முல்லை - மதுரைத் தமிழ்க் கூத்தன் நாகன்தேவனார் கதிர் கை ஆக வாங்கி ஞாயிறு பைது அறத் தெறுதலின் பயம் கரந்து மாறி விடுவாய்ப்பட்ட வியன் கண் மா நிலம் காடு கவின் எதிரக் கனை பெயல் பொழிதலின் பொறி வரி இன வண்டு ஆர்ப்பப் பல உடன் நறு வீ முல்லையொடு தோன்றி தோன்ற வெறி ஏன்றன்றே வீ கமழ் கானம் எவன்-கொல் மற்று அவர் நிலை என மயங்கி இகு பனி உறைக்கும் கண்ணொடு இனைபு ஆங்கு இன்னாது உறைவி தொல் நலம் பெறூஉம் இது நல் காலம் கண்டிசின் பகைவர் மதில் முகம் முருக்கிய தொடி சிதை மருப்பின் கந்து கால் ஒசிக்கும் யானை வெம் சின வேந்தன் வினை விடப் பெறினே &381 - மதுரைத் தமிழ்க் கூத்தனார் #1 புறநானூறு 334 - மதுரைத் தமிழ்க் கூத்தனார் காமரு பழனக் கண்பின் அன்ன தூ மயிர்க் குறும் தாள் நெடும் செவிக் குறு முயல் புன் தலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின் படப்பு ஒடுங்கும்மே பின்பு ஊரே மனையோள் பாணர் ஆர்த்தவும் பரிசிலர் ஓம்பவும் ஊண் ஒலி அரவமொடு கைதூவாளே உயர் மருப்பு யானைப் புகர் முகத்து அணிந்த பொலம் புனை ஓடைப் பரிசில் பரிசிலர்க்கு ஈய உரவு வேல் காளையும் கைதூவானே &382 - மதுரைப் படைமங்க மன்னியார் #1 புறநானூறு 351 - மதுரைப் படைமங்க மன்னியார் படு மணி மருங்கின பணைத் தாள் யானையும் கொடி நுடங்கு மிசைய தேரும் மாவும் படை அமை மறவரொடு துவன்றிக் கல்லெனக் கடல் கண்டு அன்ன கண் அகன் தானை வென்று எறி முரசின் வேந்தர் என்றும் வண் கை எயினன் வாகை அன்ன இவள் நலம் தாராது அமைகுவர் அல்லர் என் ஆவது-கொல் தானே தெண் நீர்ப் பொய்கை மேய்ந்த செவ் வரி நாரை தேம் கொள் மருதின் பூம் சினை முனையின் காமரு காஞ்சித் துஞ்சும் ஏமம் சால் சிறப்பின் இப் பணை நல் ஊரே &383 - மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார் #1 நற்றிணை 322 குறிஞ்சி - மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார் ஆங்கனம் தணிகுவது ஆயின் யாங்கும் இதனின் கொடியது பிறிது ஒன்று இல்லை வாய்-கொல் வாழி தோழி வேய் உயர்ந்து எறிந்து செறித்து அன்ன பிணங்கு அரில் விடர் முகை ஊன் தின் பிணவின் உயங்கு பசி களைஇயர் ஆள் இயங்கு அரும் புழை ஒற்றி வாள் வரிக் கடும் கண் வயப் புலி ஒடுங்கும் நாடன் தண் கமழ் வியல் மார்பு உரிதினின் பெறாது நல் நுதல் பசந்த படர் மலி அரு நோய் அணங்கு என உணரக் கூறி வேலன் இன்னியம் கறங்கப் பாடிப் பல் மலர் சிதறிப் பரவுறு பலிக்கே &384 - மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் #1 அகநானூறு 172 குறிஞ்சி - மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் வாரணம் உரறும் நீர் திகழ் சிலம்பில் பிரசமொடு விரைஇய வயங்கு வெள் அருவி இன் இசை இமிழ் இயம் கடுப்ப இம்மெனக் கல் முகை விடரகம் சிலம்ப வீழும் காம்பு தலைமணந்த ஓங்கு மலைச் சாரல் இரும்பு வடித்து அன்ன கரும் கைக் கானவன் விரி மலர் மராஅம் பொருந்திக் கோல் தெரிந்து வரி நுதல் யானை அரு நிறத்து அழுத்தி இகல் அடு முன்பின் வெண் கோடு கொண்டு தன் புல் வேய் குரம்பை புலர ஊன்றி முன்றில் நீடிய முழவு உறழ் பலவில் பிழி மகிழ் உவகையன் கிளையொடு கலி சிறந்து சாந்த ஞெகிழியின் ஊன் புழுக்கு அயரும் குன்ற நாட நீ அன்பு இலை ஆகுதல் அறியேன் யான் அஃது அறிந்தனென் ஆயின் அணி இழை உண்கண் ஆய் இதழ்க் குறுமகள் மணி ஏர் மாண் நலம் சிதைய பொன் நேர் பசலை பாவின்று-மன்னே &385 - மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் #1 அகநானூறு 92 குறிஞ்சி - மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் நெடு மலை அடுக்கம் கண் கெட மின்னிப் படு மழை பொழிந்த பானாள் கங்குல் குஞ்சரம் நடுங்கத் தாக்கிக் கொடு வரிச் செம் கண் இரும் புலி குழுமும் சாரல் வாரல் வாழியர் ஐய நேர் இறை நெடு மென் பணைத் தோள் இவளும் யானும் காவல் கண்ணினம் தினையே நாளை மந்தியும் அறியா மரம் பயில் இறும்பின் ஒண் செம் காந்தள் அவிழ்ந்த ஆங்கண் தண் பல் அருவித் தாழ் நீர் ஒரு சிறை உருமுச் சிவந்து எறிந்த உரன் அழி பாம்பின் திரு மணி விளக்கின் பெறுகுவை இருள் மென் கூந்தல் ஏமுறு துயிலே &386 - மதுரைப் புல்லங்கண்ணனார் #1 அகநானூறு 161 பாலை - மதுரைப் புல்லங்கண்ணனார் வினை-வயின் பிரிதல் யாவது வணர் சுரி வடியாப் பித்தை வன்கண் ஆடவர் அடி அமை பகழி ஆர வாங்கி வம்பலர்ச் செகுத்த அஞ்சுவரு கவலைப் படு முடை நசைஇய வாழ்க்கைச் செம் செவி எருவைச் சேவல் ஈண்டு கிளை பயிரும் வெருவரு கானம் நீந்தி பொருள் புரிந்து இறப்ப எண்ணினர் என்பது சிறப்பக் கேட்டனள்-கொல்லோ தானே தோள் தாழ்பு சுரும்பு உண ஒலிவரும் இரும் பல் கூந்தல் அம் மா மேனி ஆய் இழைக் குறுமகள் சுணங்கு சூழ் ஆகத்து அணங்கு என உருத்த நல் வரல் இள முலை நனைய பல் இதழ் உண்கண் பரந்தன பனியே &387 - மதுரைப் பூதன் இளநாகனார் #1 புறநானூறு 276 - மதுரைப் பூதன் இளநாகனார் நறு விரை துறந்த நரை வெண் கூந்தல் இரும் காழ் அன்ன திரங்கு கண் வறு முலைச் செம் முது பெண்டின் காதல் அம் சிறாஅன் மடப் பால் ஆய்_மகள் வள் உகிர்த் தெறித்த குடப் பால் சில் உறை போலப் படைக்கு நோய் எல்லாம் தான் ஆயினனே &388 - மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார் #1 நற்றிணை 317 குறிஞ்சி - மதுரைப் பூவண்ட நாகன் வேட்டனார் நீடு இரும் சிலம்பின் பிடியொடு புணர்ந்த பூம் பொறி ஒருத்தல் ஏந்து கை கடுப்பத் தோடு தலை வாங்கிய நீடு குரல் பைம் தினை பவளச் செம் வாய்ப் பைம் கிளி கவரும் உயர் வரை நாட நீ நயந்தோள் கேண்மை அன்னை அறிகுவள் ஆயின் பனி கலந்து என் ஆகுவ-கொல் தானே எந்தை ஓங்கு வரைச் சாரல் தீம் சுனை ஆடி ஆயமொடு குற்ற குவளை மா இதழ் மா மலர் புரைஇய கண்ணே &389 - மதுரைப் பெருங்கொல்லனார் #1 குறுந்தொகை 141 குறிஞ்சி - மதுரைப் பெருங்கொல்லனார் வளை வாய்ச் சிறு கிளி விளை தினைக் கடீஇயர் செல்க என்றோளே அன்னை என நீ சொல்லின் எவனோ தோழி கொல்லை நெடும் கை வன் மான் கடும் பகை உழந்த குறும் கை இரும் புலிக் கொலை வல் ஏற்றை பைம் கண் செந்நாய் படு பதம் பார்க்கும் ஆர் இருள் நடுநாள் வருதி சாரல் நாட வாரலோ எனவே &390 - மதுரைப் பெருமருதனார் #1 நற்றிணை 241 பாலை - மதுரைப் பெருமருதனார் உள்ளார்-கொல்லோ தோழி கொடும் சிறைப் புள் அடி பொறித்த வரி உடைத் தலைய நீர் அழி மருங்கின் ஈர் அயிர் தோன்ற வளரா வாடை உளர்பு நனி தீண்டலின் வேழ வெண் பூ விரிவன பல உடன் வேந்து வீசு கவரியின் பூம் புதல் அணிய மழை கழி விசும்பின் மாறி ஞாயிறு விழித்து இமைப்பது போல் விளங்குபு மறைய எல்லை போகிய பொழுதின் எல் உறப் பனிக் கால்கொண்ட பையுள் யாமத்துப் பல் இதழ் உண்கண் கலுழ நில்லாப் பொருட்பிணிப் பிரிந்திசினோரே &391 - மதுரைப் பெருமருதிள நாகனார் #1 நற்றிணை 251 குறிஞ்சி - மதுரைப் பெருமருதிள நாகனார் நெடு நீர் அருவிய கடும் பாட்டு ஆங்கண் பிணி முதல் அரைய பெரும் கல் வாழைக் கொழு முதல் ஆய் கனி மந்தி கவரும் நல் மலை நாடனை நயவா யாம் அவன் நனி பேர் அன்பின் நின் குரல் ஓப்பி நின் புறங்காத்தலும் காண்போய் நீ என் தளிர் ஏர் மேனித் தொல் கவின் அழியப் பலி பெறு கடவுள் பேணிக் கலி சிறந்து நுடங்கு நிலைப் பறவை உடங்கு பீள் கவரும் தோடு இடம் கோடாய் கிளர்ந்து நீடினை விளைமோ வாழிய தினையே &392 - மதுரைப் போத்தனார் #1 அகநானூறு 75 பாலை - மதுரைப் போத்தனார் அருள் அன்று ஆக ஆள்வினை ஆடவர் பொருள் என வலித்த பொருள் அல் காட்சியின் மைந்து மலி உள்ளமொடு துஞ்சல் செல்லாது எரி சினம் தவழ்ந்த இரும் கடற்று அடை முதல் கரி குதிர் மரத்த கான வாழ்க்கை அடு புலி முன்பின் தொடு கழல் மறவர் தொன்று இயல் சிறுகுடி மன்று நிழல் படுக்கும் அண்ணல் நெடு வரை ஆம் அறப் புலர்ந்த கல் நெறி படர்குவர் ஆயின் நல் நுதல் செயிர் தீர் கொள்கை சில் மொழி துவர் வாய் அவிர் தொடி முன்கை ஆய் இழை மகளிர் ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து ஆராக் காதலொடு தார் இடைக் குழையாது சென்று படு விறல் கவின் உள்ளி என்றும் இரங்குநர் அல்லது பெயர்தந்து யாவரும் தருநரும் உளரோ இவ் உலகத்தான் என மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன அம் மா மேனி ஐது அமை நுசுப்பின் பல் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் மெல் இயல் குறுமகள் புலந்து பல கூறி ஆனா நோயை ஆக யானே பிரிய சூழ்தலும் உண்டோ அரிது பெறு சிறப்பின் நின்-வயினானே &393 - மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் #1 நற்றிணை 329 பாலை - மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் வரையா நயவினர் நிரையம் பேணார் கொன்று ஆற்றுத் துறந்த மாக்களின் அடு பிணன் இடு முடை மருங்கில் தொடும் இடம் பெறாஅது புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு இறகு புடைத்து இற்ற பறைப் புன் தூவி செம் கணைச் செறித்த வன்கண் ஆடவர் ஆடு கொள் நெஞ்சமோடு அதர் பார்த்து அல்கும் அத்தம் இறந்தனர் ஆயினும் நம் துறந்து அல்கலர் வாழி தோழி உதுக் காண் இரு விசும்பு அதிர மின்னி கருவி மா மழை கடல் முகந்தனவே #2 நற்றிணை 352 பாலை - மதுரைப் பள்ளி மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் இலை மாண் பகழிச் சிலை மாண் இரீஇய அன்பு இல் ஆடவர் அலைத்தலின் பலருடன் வம்பலர் தொலைந்த அஞ்சுவரு கவலை அழல் போல் செவிய சேவல் ஆட்டி நிழலொடு கதிக்கும் நிணம் புரி முது நரி பச்சூன் கொள்ளை மாந்தி வெய்துற்றுத் தேர் திகழ் வறும் புலம் துழைஇ நீர் நயந்து பதுக்கை நீழல் ஒதுக்கிடம் பெறாஅ அரும் சுரக் கவலை வருதலின் வருந்திய நமக்கும் அரிய ஆயின அமைத் தோள் மாண்பு உடைக் குறுமகள் நீங்கி யாங்கு வந்தனள்-கொல் அளியள் தானே &394 - மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் #1 அகநானூறு 247 பாலை - மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் ** (மதுரை மருதங்கிழார் மகனார் வெண்ணாகனார்) மண்ணா முத்தம் ஒழுக்கிய வன முலை நல் மாண் ஆகம் புலம்பத் துறந்தோர் அருள் இலர் வாழி தோழி பொருள் புரிந்து இரும் கிளை எண்கின் அழல் வாய் ஏற்றை கரும் கோட்டு இருப்பை வெண் பூ முனையின் பெரும் செம் புற்றின் இரும் தலை இடக்கும் அரிய கானம் என்னார் பகை பட முனை பாழ்பட்ட ஆங்கண் ஆள் பார்த்துக் கொலை வல் யானை சுரம் கடிகொள்ளும் ஊறு படு கவலைய ஆறு பல நீந்திப் படு முடை நசைஇய பறை நெடும் கழுத்தின் பாறு கிளை சேக்கும் சேண் சிமைக் கோடு உயர் பிறங்கல் மலை இறந்தோரே #2 அகநானூறு 364 முல்லை - மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் மாதிரம் புதையப் பாஅய்க் கால் வீழ்த்து ஏறு உடைப் பெரு மழை பொழிந்து என அவல்-தோறு ஆடுகளப் பறையின் வரி நுணல் கறங்க ஆய் பொன் அவிர் இழை தூக்கி அன்ன நீடு இணர்க் கொன்றை கவின் பெறக் காடு உடன் சுடர் புரை தோன்றிப் புதல் தலைக் கொளாஅ முல்லை இல்லமொடு மலரக் கல்ல பகு வாய்ப் பைம் சுனை மா உண மலிரக் கார் தொடங்கின்றே காலை காதலர் வெம் சின வேந்தன் வியன் பெரும் பாசறை வென்றி வேட்கையொடு நம்மும் உள்ளார் யாது செய்வாம்-கொல் தோழி நோதக கொலை குறித்து அன்ன மாலை துனைதரு போழ்தின் நீந்தலோ அரிதே #3 நற்றிணை 388 நெய்தல் - மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் அம்ம வாழி தோழி நல்_நுதற்கு யாங்கு ஆகின்று-கொல் பசப்பே நோன் புரிக் கயிறு கடை யாத்த கடு நடை எறி உளித் திண் திமில் பரதவர் ஒண் சுடர்க் கொளீஇ நடுநாள் வேட்டம் போகி வைகறைக் கடல் மீன் தந்து கானல் குவைஇ ஓங்கு இரும் புன்னை வரி நிழல் இருந்து தேம் கமழ் தேறல் கிளையொடு மாந்திப் பெரிய மகிழும் துறைவன் எம் சிறிய நெஞ்சத்து அகல்வு அறியானே &395 - மதுரை மருதங்கிழார் மகன் இளம் போத்தனார் #1 குறுந்தொகை 332 குறிஞ்சி - மதுரை மருதங்கிழார் மகன் இளம் போத்தனார் வந்த வாடைச் சில் பெயல் கடை நாள் நோய் நீந்து அரும் படர் தீர நீ நயந்து கூறின் எவனோ தோழி நாறு உயிர் மடப் பிடி தழீஇத் தடக் கை யானை குன்றகச் சிறுகுடி இழிதரும் மன்றம் நண்ணிய மலை கிழவோற்கே &396 - மதுரை வேளாசான் #1 புறநானூறு 305 - மதுரை வேளாசான் வயலைக் கொடியின் வாடிய மருங்கின் உயவல் ஊர்திப் பயலைப் பார்ப்பான் எல்லி வந்து நில்லாது புக்குச் சொல்லிய சொல்லோ சிலவே அதற்கே ஏணியும் சீப்பும் மாற்றி மாண் வினை யானையும் மணி களைந்தனவே &397 - மருங்கூர் கிழார் பெரும் கண்ணனார் #1 அகநானூறு 80 நெய்தல் - மருங்கூர் கிழார் பெரும் கண்ணனார்(நக்கீரர்) கொடும் தாள் முதலையொடு கோட்டு மீன் வழங்கும் இரும் கழி இட்டுச் சுரம் நீந்தி இரவின் வந்தோய்-மன்ற தண் கடல் சேர்ப்ப நினக்கு எவன் அரியமோ யாமே எந்தை புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த பல் மீன் உணங்கல் படு புள் ஓப்புதும் முண்டகம் கலித்த முது நீர் அடைகரை ஒண் பல் மலர கவட்டு இலை அடும்பின் செம் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப இன மணிப் புரவி நெடும் தேர் கடைஇ மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன் தண் நறும் பைம் தாது உறைக்கும் புன்னை அம் கானல் பகல் வந்தீமே &398 - மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் #1 நற்றிணை 289 முல்லை - மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் அம்ம வாழி தோழி காதலர் நிலம் புடைபெயர்வது ஆயினும் கூறிய சொல் புடைபெயர்தலோ இலரே வானம் நளி கடல் முகந்து செறிதக இருளிக் கனை பெயல் பொழிந்து கடும் குரல் பயிற்றிக் கார் செய்து என் உழையதுவே ஆயிடை கொல்லைக் கோவலர் எல்லி மாட்டிய பெரு மர ஒடியல் போல அருள் இலேன் அம்ம அளியேன் யானே &399 - மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார் #1 அகநானூறு 327 பாலை - மருங்கூர்ப் பாகைச் சாத்தன் பூதனார் இன்பமும் இடும்பையும் புணர்வும் பிரிவும் நல் பகல் அமையமும் இரவும் போல வேறுவேறு இயல ஆகி மாறு எதிர்ந்து உள என உணர்ந்தனை ஆயின் ஒரூஉம் இன்னா வெம் சுரம் நல் நசை துரப்பத் துன்னலும் தகுமோ துணிவு இல் நெஞ்சே நீ செல வலித்தனை ஆயின் யாவதும் நினைதலும் செய்தியோ எம்மே கனை கதிர் ஆவி அம் வரி நீர் என நசைஇ மா தவப் பரிக்கும் மரல் திரங்கு நனம் தலைக் களர் கால் யாத்த கண் அகல் பரப்பின் செவ் வரைக் கொழி நீர் கடுப்ப அரவின் அவ் வரி உரிவை அணவரும் மருங்கின் புற்று அரை யாத்த புலர் சினை மரத்த மை நிற உருவின் மணிக் கண் காக்கை பைம் நிணம் கவரும் படு பிணக் கவலை சென்றோர் செல் புறத்து இரங்கார் கொன்றோர் கோல் கழிபு இரங்கும் அதர வேய் பயில் அழுவம் இறந்த பின்னே &400 - மருதம் பாடிய இளங்கடுங்கோ #1 அகநானூறு 96 மருதம் - மருதம் பாடிய இளங்கடுங்கோ நறவு உண் மண்டை நுடக்கலின் இறவு கலித்துப் பூட்டு அறு வில்லின் கூட்டு முதல் தெறிக்கும் பழனப் பொய்கை அடைகரைப் பிரம்பின் அர வாய் அன்ன அம் முள் நெடும் கொடி அருவி ஆம்பல் அகல் அடை துடக்கி அசைவரல் வாடை தூக்கலின் ஊதுலை விசை வாங்கு தோலின் வீங்குபு ஞெகிழும் கழனி அம் படப்பைக் காஞ்சி ஊர ஒண் தொடி ஆயத்துள்ளும் நீ நயந்து கொண்டனை என்ப ஓர் குறுமகள் அதுவே செம்பொன் சிலம்பின் செறிந்த குறங்கின் அம் கலுழ் மாமை அஃதை தந்தை அண்ணல் யானை அடு போர்ச் சோழர் வெண்ணெல் வைப்பின் பருவூர்ப் பறந்தலை இரு பெரு வேந்தரும் பொருது களத்து ஒழிய ஒளிறு வாள் நல் அமர் கடந்த ஞான்றைக் களிறு கவர் கம்பலை போல அலர் ஆகின்றது பலர் வாய்ப் பட்டே #2 அகநானூறு 176 மருதம் - மருதம் பாடிய இளங்கடுங்கோ கடல் கண்டு அன்ன கண் அகன் பரப்பின் நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின் கழை கண்டு அன்ன தூம்பு உடைத் திரள் கால் களிற்றுச் செவி அன்ன பாசடை மருங்கில் கழு நிவந்து அன்ன கொழு முகை இடையிடை முறுவல் முகத்தின் பல் மலர் தயங்கப் பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து வேப்பு நனை அன்ன நெடும் கண் நீர் ஞெண்டு இரை தேர் வெண் குருகு அஞ்சி அயலது ஒலித்த பகன்றை இரும் சேற்று அள்ளல் திதலையின் வரிப்ப ஓடி விரைந்து தன் நீர் மலி மண் அளைச் செறியும் ஊர மனை நகு வயலை மரன் இவர் கொழும் கொடி அரி மலர் ஆம்பலொடு ஆர் தழை தைஇ விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கைக் குறும் தொடி துடக்கிய நெடும் தொடர் விடுத்தது உடன்றனள் போலும் நின் காதலி எம் போல் புல் உளைக் குடுமிப் புதல்வன் பயந்து நெல் உடை நெடு நகர் நின் இன்று உறைய என்ன கடத்தளோ மற்றே தன் முகத்து எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி அடித்து என உருத்த தித்திப் பல் ஊழ் நொடித்து எனச் சிவந்த மெல் விரல் திருகுபு கூர் நுனை மழுகிய எயிற்றள் ஊர் முழுதும் நுவலும் நின் காணிய சென்மே #3 நற்றிணை 50 மருதம் - மருதம் பாடிய இளங்கடுங்கோ அறியாமையின் அன்னை அஞ்சிக் குழையன் கோதையன் குறும் பைம்_தொடியன் விழவு அயர் துணங்கை தழூஉகம் செல்ல நெடு நிமிர் தெருவில் கை புகு கொடு மிடை நொதுமலாளன் கதுமெனத் தாக்கலின் கேட்போர் உளர்-கொல் இல்லை-கொல் போற்று என யாணது பசலை என்றனன் அதன்எதிர் நாணிலை எலுவ என்று வந்திசினே செறுநரும் விழையும் செம்மலோன் என நறு நுதல் அரிவை போற்றேன் சிறுமை பெருமையின் காணாது துணிந்தே &401 - மதுரை மருதன் இளநாகனார் #1 அகநானூறு 34 முல்லை - மதுரை மருதன் இளநாகனார் சிறு கரும் பிடவின் வெண் தலைக் குறும் புதல் கண்ணியின் மலரும் தண் நறும் புறவில் தொடுதோல் கானவன் கவை பொறுத்து அன்ன இரு திரி மருப்பின் அண்ணல் இரலை செறி இலைப் பதவின் செம் கோல் மென் குரல் மறி ஆடு மருங்கின் மடப் பிணை அருத்தித் தெள் அறல் தழீஇய வார் மணல் அடைகரை மெல்கிடு கவுள துஞ்சு புறம் காக்கும் பெருந்தகைக்கு உடைந்த நெஞ்சம் ஏமுற செல்க தேரே நல் வலம் பெறுந பசை கொல் மெல் விரல் பெரும் தோள் புலைத்தி துறை விட்டு அன்ன தூ மயிர் எகினம் துணையொடு திளைக்கும் காப்பு உடை வரைப்பில் செம் தார்ப் பைம் கிளி முன்கை ஏந்தி இன்று வரல் உரைமோ சென்றிசினோர்-திறத்து என இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென மழலை இன் சொல் பயிற்றும் நாண் உடை அரிவை மாண் நலம் பெறவே #2 அகநானூறு 59 பாலை - மதுரை மருதன் இளநாகனார் தண் கயத்து அமன்ற வண்டு படு துணை மலர்ப் பெரும் தகை இழந்த கண்ணினை பெரிதும் வருந்தினை வாழியர் நீயே வடாஅது வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை அண்டர் மகளிர் தண் தழை உடீஇயர் மரம் செல மிதித்த மாஅல் போலப் புன் தலை மடப் பிடி உணீஇயர் அம் குழை நெடு நிலை யாஅம் ஒற்றி நனை கவுள் படி ஞிமிறு கடியும் களிறே தோழி சூர் மருங்கு அறுத்த சுடர் இலை நெடு வேல் சினம் மிகு முருகன் தண் பரங்குன்றத்து அந்துவன் பாடிய சந்து கெழு நெடு வரை இன் தீம் பைம் சுனை ஈர் அணிப் பொலிந்த தண் நறும் கழுநீர் செண் இயல் சிறுபுறம் தாம் பாராட்டிய காலையும் உள்ளார் வீங்கு இறை பணைத் தோள் நெகிழச் சேய் நாட்டு அரும் செயல் பொருட்பிணி முன்னி நம் பிரிந்து சேண் உறைநர் சென்ற ஆறே #3 அகநானூறு 77 பாலை - மருதன் இள நாகனார் நல் நுதல் பசப்பவும் ஆள்வினை தரீஇயர் துன் அரும் கானம் துன்னுதல் நன்று எனப் பின் நின்று சூழ்ந்தனை ஆயின் நன்று இன்னாச் சூழ்ந்திசின் வாழிய நெஞ்சே வெய்துற இடி உமிழ் வானம் நீங்கி யாங்கணும் குடி பதிப்பெயர்ந்த சுட்டு உடை முது பாழ் கயிறு பிணிக் குழிசி ஓலை கொள்மார் பொறி கண்டு அழிக்கும் ஆவண மாக்களின் உயிர் திறம் பெயர நல் அமர்க் கடந்த தறுகணாளர் குடர் தரீஇத் தெறுவரச் செம் செவி எருவை அஞ்சுவர இகுக்கும் கல் அதர் கவலை போகின் சீறூர் புல் அரை இத்திப் புகர் படு நீழல் எல் வளி அலைக்கும் இருள் கூர் மாலை வானவன் மறவன் வணங்கு வில் தடக் கை ஆனா நறவின் வண் மகிழ் பிட்டன் பொருந்தா மன்னர் அரும் சமத்து உயர்த்த திருந்து இலை எஃகம் போல அரும் துயர் தரும் இவள் பனி வார் கண்ணே #4 அகநானூறு 90 நெய்தல் - மதுரை மருதன் இளநாகனார் மூத்தோர் அன்ன வெண் தலைப் புணரி இளையோர் ஆடும் வரி மனை சிதைக்கும் தளை அவிழ் தாழைக் கானல் அம் பெரும் துறை சில் செவித்து ஆகிய புணர்ச்சி அலர் எழ இல்-வயின் செறித்தமை அறியாய் பல் நாள் வரு முலை வருத்தா அம் பகட்டு மார்பின் தெருமரல் உள்ளமொடு வருந்தும் நின்-வயின் நீங்குக என்று யான் யாங்ஙனம் மொழிகோ அரும் திறல் கடவுள் செல்லூர்க் குணாஅது பெரும் கடல் முழக்கிற்று ஆகி யாணர் இரும்பு இடம்படுத்த வடு உடை முகத்தர் கரும் கண் கோசர் நியமம் ஆயினும் உறும் எனக் கொள்குநர் அல்லர் நறு நுதல் அரிவை பாசிழை விலையே #5 அகநானூறு 104 முல்லை - மதுரை மருதன் இளநாகனார் வேந்து வினை முடித்த காலைத் தேம் பாய்ந்து இன வண்டு ஆர்க்கும் தண் நறும் புறவின் வென் வேல் இளையர் இன்புற வலவன் வள்பு வலித்து ஊரின் அல்லது முள் உறின் முந்நீர் மண்டிலம் ஆதி ஆற்றா நன்னால்கு பூண்ட கடும் பரி நெடும் தேர் வாங்கு சினை பொலிய ஏறிப் புதல பூம் கொடி அவரைப் பொய் அதள் அன்ன உள் இல் வயிற்ற வெள்ளை வெண் மறி மாழ்கி அன்ன தாழ் பெரும் செவிய புன் தலைச் சிறாரோடு உகளி மன்றுழைக் கவை இலை ஆரின் அம் குழை கறிக்கும் சீறூர் பல பிறக்கு ஒழிய மாலை இனிது செய்தனையால் எந்தை வாழிய பனி வார் கண்ணள் பல புலந்து உறையும் ஆய் தொடி அரிவை கூந்தல் போது குரல் அணிய வேய் தந்தோயே #6 அகநானூறு 121 பாலை - மதுரை மருதன் இளநாகனார் நாம் நகை உடையம் நெஞ்சே கடும் தெறல் வேனில் நீடிய வான் உயர் வழி_நாள் வறுமை கூரிய மண் நீர்ச் சிறு குளத் தொடு குழி மருங்கில் துவ்வாக் கலங்கல் கன்று உடை மடப் பிடிக் கயம் தலை மண்ணி சேறு கொண்டு ஆடிய வேறுபடு வயக் களிறு செம் கோல் வால் இணர் தயங்கத் தீண்டிச் சொரி புறம் உரிஞிய நெறி அயல் மராஅத்து அல்குறு வரி நிழல் அசைஇ நம்மொடு தான் வரும் என்ப தட மென் தோளி உறுகண் மழவர் உருள் கீண்டிட்ட ஆறு செல் மாக்கள் சோறு பொதி வெண் குடை கனை விசைக் கடு வளி எடுத்தலின் துணை செத்து வெருள் ஏறு பயிரும் ஆங்கண் கரு முக முசுவின் கானத்தானே #7 அகநானூறு 131 பாலை - மதுரை மருதன் இளநாகனார் விசும்புற நிவந்த மாத் தாள் இகணைப் பசும் கேழ் மெல் இலை அருகு நெறித்து அன்ன வண்டு படுபு இருளிய தாழ் இரும் கூந்தல் சுரும்பு உண விரிந்த பெரும் தண் கோதை இவளினும் சிறந்தன்று ஈதல் நமக்கு என வீளை அம்பின் விழுத் தொடை மழவர் நாள் ஆ உய்த்த நாம வெம் சுரத்து நடை மெலிந்து ஒழிந்த சேண் படர் கன்றின் கடை மணி உகு நீர் துடைத்த ஆடவர் பெயரும் பீடும் எழுதி அதர்-தொறும் பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல் வேல் ஊன்று பலகை வேற்று முனை கடுக்கும் வெருவரு தகுந கானம் நம்மொடு வருக என்னுதி ஆயின் வாரேன் நெஞ்சம் வாய்க்க நின் வினையே #8 அகநானூறு 184 முல்லை - மதுரை மருதன் இளநாகனார் கடவுள் கற்பொடு குடிக்கு விளக்கு ஆகிய புதல்வன் பயந்த புகழ் மிகு சிறப்பின் நன்னராட்டிக்கு அன்றியும் எனக்கும் இனிது ஆகின்றால் சிறக்க நின் ஆயுள் அரும் தொழில் முடித்த செம்மல் உள்ளமொடு சுரும்பு இமிர் மலர கானம் பிற்பட வெண் பிடவு அவிழ்ந்த வீ கமழ் புறவில் குண்டைக் கோட்ட குறு முள் கள்ளிப் புன் தலை புதைத்த கொழும் கொடி முல்லை ஆர் கழல் புதுப் பூ உயிர்ப்பின் நீக்கித் தெள் அறல் பருகிய திரி மருப்பு எழில் கலை புள்ளி அம் பிணையொடு வதியும் ஆங்கண் கோடு உடைக் கையர் துளர் எறி வினைஞர் அரியல் ஆர்கையர் விளை மகிழ் தூங்கச் செல் கதிர் மழுகிய உருவ ஞாயிற்றுச் செக்கர் வானம் சென்ற பொழுதில் கல் பால் அருவியின் ஒலிக்கும் நல் தேர்த் தார் மணி பல உடன் இயம்பச் சீர் மிகு குருசில் நீ வந்து நின்றதுவே #9 அகநானூறு 193 பாலை - மதுரை மருதன் இளநாகனார் கான் உயர் மருங்கில் கவலை அல்லது வானம் வேண்டா வில் ஏர் உழவர் பெரு நாள் வேட்டம் கிளை எழ வாய்த்த பொருகளத்து ஒழிந்த குருதிச் செவ் வாய்ப் பொறித்த போலும் வால் நிற எருத்தின் அணிந்த போலும் செம் செவி எருவை குறும் பொறை எழுந்த நெடும் தாள் யாஅத்து அரும் கவட்டு உயர் சினைப் பிள்ளை ஊட்ட விரைந்து வாய் வழுக்கிய கொழும் கண் ஊன் தடி கொல் பசி முது நரி வல்சி ஆகும் சுரன் நமக்கு எளிய-மன்னே நல் மனைப் பல் மாண் தங்கிய சாயல் இன் மொழி முருந்து ஏர் முறுவல் இளையோள் பெரும் தோள் இன் துயில் கைவிடுகலனே #10 அகநானூறு 206 மருதம் - மதுரை மருதன் இளநாகனார் என் எனப்படும்-கொல் தோழி நல் மகிழ்ப் பேடி பெண் கொண்டு ஆடுகை கடுப்ப நகுவரப் பணைத்த திரி மருப்பு எருமை மயிர்க் கவின் கொண்ட மாத் தோல் இரும் புறம் சிறு தொழில் மகாஅர் ஏறிச் சேணோர்க்குத் துறுகல் மந்தியின் தோன்றும் ஊரன் மாரி ஈங்கை மாத் தளிர் அன்ன அம் மா மேனி ஆய் இழை மகளிர் ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்து ஆராக் காதலொடு தார் இடை குழைய முழவு முகம் புலரா விழவு உடை வியல் நகர் வதுவை மேவலன் ஆகலின் அது புலந்து அடு போர் வேளிர் வீரை முன்துறை நெடு வெள் உப்பின் நிரம்பாக் குப்பை பெரும் பெயற்கு உருகி ஆங்குத் திருந்து இழை நெகிழ்ந்தன தட மென் தோளே #11 அகநானூறு 220 நெய்தல் - மதுரை மருதன் இளநாகனார் ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழத் தேரொடு மறுகியும் பணிமொழி பயிற்றியும் கெடாஅத் தீயின் உரு கெழு செல்லூர்க் கடாஅ யானைக் குழூஉச் சமம் ததைய மன் மருங்கு அறுத்த மழு வாள் நெடியோன் முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி கயிறு அரை யாத்த காண்தகு வனப்பின் அரும் கடி நெடும் தூண் போல யாவரும் காணல் ஆகா மாண் எழில் ஆகம் உள்ளு-தொறும் பனிக்கும் நெஞ்சினை நீயே நெடும் புறநிலையினை வருந்தினை ஆயின் முழங்கு கடல் ஓதம் காலைக் கொட்கும் பழம் பல் நெல்லின் ஊணூர் ஆங்கண் நோலா இரும் புள் போல நெஞ்சு அமர்ந்து காதல் மாறாக் காமர் புணர்ச்சியின் இரும் கழி முகந்த செம் கோல் அவ் வலை முடங்கு புற இறவொடு இன மீன் செறிக்கும் நெடும் கதிர்க் கழனித் தண் சாய்க்கானத்து யாணர்த் தண் பணை உறும் எனக் கானல் ஆயம் ஆய்ந்த சாய் இறைப் பணைத் தோள் நல் எழில் சிதையா ஏமம் சொல் இனித் தெய்ய யாம் தெளியுமாறே #12 அகநானூறு 245 பாலை - மதுரை மருதன் இளநாகனார் உயிரினும் சிறந்த ஒண் பொருள் தருமார் நன்று புரி காட்சியர் சென்றனர் அவர் என மனை வலித்து ஒழியும் மதுகையள் ஆதல் நீ நற்கு அறிந்தனை ஆயின் நீங்கி மழை பெயல் மறந்த கழை திரங்கு இயவில் செல் சாத்து எறியும் பண்பு இல் வாழ்க்கை வல் வில் இளையர் தலைவர் எல் உற வரி கிளர் பணைத் தோள் வயிறு அணி திதலை அரியலாட்டியர் அல்கு மனை வரைப்பில் மகிழ் நொடை பெறாஅராகி நனை கவுள் கான யானை வெண் கோடு சுட்டி மன்று ஓடு புதல்வன் புன் தலை நீவும் அரு முனைப் பாக்கத்து அல்கி வைகுற நிழல் படக் கவின்ற நீள் அரை இலவத்து அழல் அகைந்து அன்ன அலங்கு சினை ஒண் பூக் குழல் இசைத் தும்பி ஆர்க்கும் ஆங்கண் குறும் பொறை உணங்கும் ததர் வெள் என்பு கடும் கால் ஒட்டகத்து அல்கு பசி தீர்க்கும் கல் நெடும் கவலைய கானம் நீந்தி அம் மா அரிவை ஒழிய சென்மோ நெஞ்சம் வாரலென் யானே #13 அகநானூறு 255 பாலை - மதுரை மருதன் இளநாகனார் உலகு கிளர்ந்து அன்ன உரு கெழு வங்கம் புலவு திரைப் பெரும் கடல் நீர் இடைப் போழ இரவும் எல்லையும் அசைவு இன்று ஆகி விரை செலல் இயற்கை வங்கூழ் ஆட்டக் கோடு உயர் திணி மணல் அகன் துறை நீகான் மாட ஒள் எரி மருங்கு அறிந்து ஒய்ய ஆள் வினைப் பிரிந்த காதலர் நாள் பல கழியாமையே அழி படர் அகல வருவர்-மன்னால் தோழி தண் பணைப் பொரு புனல் வைப்பின் நம் ஊர் ஆங்கண் கருவிளை முரணிய தண் புதல் பகன்றைப் பெரு வளம் மலர அல்லி தீண்டிப் பலவுக் காய்ப் புறத்த பசும் பழப் பாகல் கூதள மூதிலைக் கொடி நிரைத் தூங்க அறன் இன்று அலைக்கும் ஆனா வாடை கடி மனை மாடத்துக் கங்குல் வீசத் திருந்து இழை நெகிழ்ந்து பெரும் கவின் சாய நிரை வளை ஊரும் தோள் என உரையொடு செல்லும் அன்பினர்ப் பெறினே #14 அகநானூறு 269 பாலை - மதுரை மருதன் இளநாகனார் தொடி தோள் இவர்க எவ்வமும் தீர்க நெறி இரும் கதுப்பின் கோதையும் புனைக ஏறு உடை இன நிரை பெயரப் பெயராது செறி சுரை வெள் வேல் மழவர்த் தாங்கிய தறுகணாளர் நல் இசை நிறுமார் பிடி மடிந்து அன்ன குறும்பொறை மருங்கின் நட்ட போலும் நடாஅ நெடும் கல் அகல் இடம் குயின்ற பல் பெயர் மண்ணி நறு விரை மஞ்சள் ஈர்ம் புறம் பொலிய அம்பு கொண்டு அறுத்த ஆர் நார் உரிவையின் செம் பூம் கரந்தை புனைந்த கண்ணி வரி வண்டு ஆர்ப்பச் சூட்டிக் கழல் கால் இளையர் பதிப் பெயரும் அரும் சுரம் இறந்தோர் தைஇ நின்ற தண் பெயல் கடை நாள் பொலம் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல் நலம் கேழ் மாக் குரல் குழையொடு துயல்வரப் பாடு ஊர்பு எழுதரும் பகு வாய் மண்டிலத்து வயிர் இடைப்பட்ட தெள் விளி இயம்ப வண்டல் பாவை உண்துறை தரீஇத் திரு நுதல் மகளிர் குரவை அயரும் பெரு நீர்க் கானல் தழீஇய இருக்கை வாணன் சிறுகுடி வணங்கு கதிர் நெல்லின் யாணர்த் தண் பணை போது வாய் அவிழ்ந்த ஒண் செம் கழுநீர் அன்ன நின் கண் பனி துடைமார் வந்தனர் விரைந்தே #15 அகநானூறு 283 பாலை - மதுரை மருதன் இளநாகனார் நல் நெடும் கதுப்பொடு பெரும் தோள் நீவிய நின் இவண் ஒழிதல் அஞ்சிய என்னினும் செலவு தலைக்கொண்ட பெரு விதுப்பு உறுவி பல் கவர் மருப்பின் முது மான் போக்கிச் சில் உணாத் தந்த சீறூர்ப் பெண்டிர் திரி வயின் தெவுட்டும் சேண் புலக் குடிஞைப் பைதல் மென் குரல் ஐது வந்து இசைத்-தொறும் போகுநர் புலம்பும் ஆறே ஏகுதற்கு அரிய ஆகும் என்னாமைக் கரி மரம் கண் அகை இளம் குழை கால் முதல் கவினி விசும்புடன் இருண்டு வெம்மை நீங்கப் பசும் கண் வானம் பாய் தளி பொழிந்து எனப் புல் நுகும்பு எடுத்த நல் நெடும் கானத்து ஊட்டுறு பஞ்சிப் பிசிர் பரந்து அன்ன வண்ண மூதாய் தண் நிலம் வரிப்ப இனிய ஆகுக தணிந்தே இன்னா நீப்பின் நின்னொடு செலற்கே #16 அகநானூறு 297 பாலை - மதுரை மருதன் இளநாகனார் பானாள் கங்குலும் பெரும் புன் மாலையும் ஆனா நோயொடு அழி படர்க் கலங்கி நம்-வயின் இனையும் இடும்பை கைம்மிக என்னை ஆகுமோ நெஞ்சே நம்-வயின் இரும் கவின் இல்லாப் பெரும் புன் தாடிக் கடுங்கண் மறவர் பகழி மாய்த்து என மருங்குல் நுணுகிய பேஎம் முதிர் நடுகல் பெயர் பயம் படரத் தோன்று குயில் எழுத்து இயைபுடன் நோக்கல் செல்லாது அசைவுடன் ஆறு செல் வம்பலர் விட்டனர் கழியும் சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின் நீர் முள் வேலிப் புலவு நாறு முன்றில் எழுதி அன்ன கொடி படு வெருகின் பூளை அன்ன பொங்கு மயிர்ப் பிள்ளை மதி சூழ் மீனின் தாய் வழிப்படூஉம் சிறுகுடி மறவர் சேக் கோள் தண்ணுமைக்கு எருவைச் சேவல் இரும் சிறை பெயர்க்கும் வெருவரு கானம் நம்மொடு வருவல் என்றோள் மகிழ் மட நோக்கே #17 அகநானூறு 312 குறிஞ்சி - மதுரை மருதன் இளநாகனார் நெஞ்சு உடம்படுதலின் ஒன்று புரிந்து அடங்கி இரவின் வரூஉம் இடும்பை நீங்க வரையக் கருதும் ஆயின் பெரிது உவந்து ஓங்கு வரை இழிதரும் வீங்கு பெயல் நீத்தம் காந்தள் அம் சிறுகுடிக் கௌவை பேணாது அரி மதர் மழைக் கண் சிவப்ப நாளைப் பெரு மலை நாடன் மார்பு புணை ஆக ஆடுகம் வம்மோ காதல் அம் தோழி வேய் பயில் அடுக்கம் புதையக் கால் வீழ்த்து இன் இசை முரசின் இரங்கி ஒன்னார் ஓடு புறம் கண்ட தாள் தோய் தடக் கை வெல் போர் வழுதி செல் சமத்து உயர்த்த அடு புகழ் எஃகம் போலக் கொடிபட மின்னிப் பாயின்றால் மழையே #18 அகநானூறு 343 பாலை - மதுரை மருதன் இளநாகனார் வாங்கு அமை புரையும் வீங்கு இறைப் பணைத் தோள் சில் சுணங்கு அணிந்த பல் பூண் மென் முலை நல் எழில் ஆகம் புல்லுதல் நயந்து மரம் கோள் உமண்_மகன் பேரும் பருதிப் புன் தலை சிதைத்த வன் தலை நடுகல் கண்ணி வாடிய மண்ணா மருங்குல் கூர் உளி குயின்ற கோடு மாய் எழுத்து அவ் ஆறு செல் வம்பலர் வேறு பயம் படுக்கும் கண் பொரி கவலைய கானத்து ஆங்கண் நனம் தலை யாஅத்து அம் தளிர்ப் பெரும் சினை இல் போல் நீழல் செல் வெயில் ஒழிமார் நெடும் செவிக் கழுதைக் குறும் கால் ஏற்றைப் புறம் நிறை பண்டத்துப் பொறை அசாஅக் களைந்த பெயர் படை கொள்ளார்க்கு உயவுத் துணை ஆகி உயர்ந்த ஆள்வினை புரிந்தோய் பெயர்ந்து நின்று உள்ளினை வாழி என் நெஞ்சே கள்ளின் மகிழின் மகிழ்ந்த அரி மதர் மழைக் கண் சில் மொழிப் பொலிந்த துவர் வாய்ப் பல் மாண் பேதையின் பிரிந்த நீயே #19 அகநானூறு 358 குறிஞ்சி - மதுரை மருதன் இளநாகனார் ** (மதுரை மருதங்கண்ணனார்) நீலத்து அன்ன நிறம் கிளர் எருத்தின் காமர் பீலி ஆய் மயில் தோகை இன் தீம் குரல துவன்றி மென் சீர் ஆடு தகை எழில் நலம் கடுப்பக் கூடி கண் நேர் இதழ தண் நறும் குவளை குறும் தொடர் அடைச்சிய நறும் பல் கூழை நீடு நீர் நெடும் சுனை ஆயமொடு ஆடாய் உயங்கிய மனத்தை ஆகிப் புலம்பு கொண்டு இன்னை ஆகிய நின் நிறம் நோக்கி அன்னை வினவினள் ஆயின் அன்னோ என் என உரைக்கோ யானே துன்னிய பெரு வரை இழிதரும் நெடு வெள் அருவி ஓடை யானை உயர் மிசை எடுத்த ஆடு கொடி கடுப்பத் தோன்றும் கோடு உயர் வெற்பன் உறீஇய நோயே #20 அகநானூறு 365 பாலை - மதுரை மருதன் இளநாகனார் அகல் வாய் வானம் ஆல் இருள் பரப்பப் பகல் ஆற்றுப்படுத்த பையென் தோற்றமொடு சினவல் போகிய புன்கண் மாலை அத்த நடுகல் ஆள் என உதைத்த கான யானைக் கதுவாய் வள் உகிர் இரும் பனை இதக்கையின் ஒடியும் ஆங்கண் கடும் கண் ஆடவர் ஏ முயல் கிடக்கை வருநர் இன்மையின் களையுநர்க் காணா என்றூழ் வெம் சுரம் தந்த நீயே துயர் செய்து ஆற்றாய் ஆகிப் பெயர்பு ஆங்கு உள்ளினை வாழிய நெஞ்சே வென் வேல் மா வண் கழுவுள் காமூர் ஆங்கண் பூதம் தந்த பொரி அரை வேங்கைத் தண் கமழ் புது மலர் நாறும் அம்_சில்_ஓதி ஆய் மடத் தகையே #21 அகநானூறு 368 குறிஞ்சி - மதுரை மருதன் இளநாகனார் தொடுதோல் கானவன் சூடுறு வியன் புனம் கரி புறம் கழீஇய பெரும் பாட்டு ஈரத்துத் தோடு வளர் பைம் தினை நீடு குரல் காக்கும் ஒண் தொடி மகளிர்க்கு ஊசல் ஆக ஆடு சினை ஒழித்த கோடு இணர் கஞலிய குறும்பொறை அயலது நெடும் தாள் வேங்கை மட மயில் குடுமியின் தோன்றும் நாடன் உயர் வரை மருங்கின் காந்தள் அம் சோலை குரங்கு அறிவாரா மரம் பயில் இறும்பில் கடி சுனைத் தெளிந்த மணி மருள் தீம் நீர் பிடி புணர் களிற்றின் எம்மொடு ஆடி பல் நாள் உம்பர்ப் பெயர்ந்து சில் நாள் கழியாமையே வழிவழிப் பெருகி அம் பணை விளைந்த தேக் கள் தேறல் வண்டு படு கண்ணியர் மகிழும் சீறூர் எவன்-கொல் வாழி தோழி கொங்கர் மணி அரை யாத்து மறுகின் ஆடும் உள்ளி_விழவின் அன்ன அலர் ஆகின்று அது பலர் வாய்ப் பட்டே #22 அகநானூறு 380 நெய்தல் - மதுரை மருதன் இளநாகனார் தேர் சேண் நீக்கித் தமியன் வந்து நும் ஊர் யாது என்ன நணிநணி ஒதுங்கி முன்_நாள் போகிய துறைவன் நெருநை அகல் இலை நாவல் உண்துறை உதிர்த்த கனி கவின் சிதைய வாங்கிக் கொண்டு தன் தாழை வேர் அளை வீழ் துணைக்கு இடூஉம் அலவன் காட்டி நல் பாற்று இது என நினைந்த நெஞ்சமொடு நெடிது பெயர்ந்தோனே உதுக் காண் தோன்றும் தேரே இன்றும் நாம் எதிர்கொள்ளாம் ஆயின் தான் அது துணிகுவன் போலாம் நாணு மிக உடையன் வெண் மணல் நெடும் கோட்டு மறைகோ அம்ம தோழி கூறு-மதி நீயே #23 அகநானூறு 387 பாலை - மதுரை மருதன் இளநாகனார் திருந்து இழை நெகிழ்ந்து பெரும் தோள் சாஅய் அரி மதர் மழைக் கண் கலுழச் செல்வீர் வருவீர் ஆகுதல் உரை-மின் மன்னோ உவர் உணப் பறைந்த ஊன் தலைச் சிறாஅரொடு அவ் வரிக் கொன்ற கறை சேர் வள் உகிர்ப் பசை விரல் புலைத்தி நெடிது பிசைந்து ஊட்டிய பூம் துகில் இமைக்கும் பொலன் காழ் அல்குல் அம் வரி சிதைய நோக்கி வெம் வினைப் பயில் அரில் கிடந்த வேட்டு விளி வெரீஇ வரிப் புற இதலின் மணிக் கண் பேடை நுண் பொறி அணிந்த எருத்தின் கூர் முள் செம் கால் சேவல் பயிரும் ஆங்கண் வில் ஈண்டு அரும் சமம் ததைய நூறி நல் இசை நிறுத்த நாண் உடை மறவர் நிரை நிலை நடுகல் பொருந்தி இமையாது இரை நசைஇக் கிடந்த முது வாய்ப் பல்லி சிறிய தெற்றுவது ஆயின் பெரிய ஓடை யானை உயர்ந்தோர் ஆயினும் நின்று ஆங்குப் பெயரும் கானம் சென்றோர்-மன் என இருக்கிற்போர்க்கே **மூன்றாவது மருதக்கலி - மருதன் இளநாகனார் #24 கலித்தொகை 66 - மருதக்கலி - மருதன் இளநாகனார் வீங்கு நீர் அவிழ் நீலம் பகர்பவர் வயல் கொண்ட ஞாங்கர் மலர் சூழ்தந்து ஊர் புகுந்த வரி வண்டு ஓங்கு உயர் எழில் யானைக் கனை கடாம் கமழ் நாற்றம் ஆங்கு அவை விருந்து ஆற்றப் பகல் அல்கிக் கங்குலான் வீங்கு இறை வடுக்கொள வீழுநர் புணர்ந்தவர் தேம் கமழ் கதுப்பினுள் அரும்பு அவிழ் நறு முல்லைப் பாய்ந்து ஊதிப் படர் தீர்ந்து பண்டு தாம் மரீஇய பூம் பொய்கை மறந்து உள்ளாப் புனல் அணி நல் ஊர அணை மென் தோள் யாம் வாட அமர் துணை புணர்ந்து நீ மண மனையாய் என வந்த மல்லலின் மாண்பு அன்றோ பொதுக் கொண்ட கவ்வையின் பூ அணிப் பொலிந்த நின் வதுவை அம் கமழ் நாற்றம் வைகறைப் பெற்றதை கனலும் நோய்த் தலையும் நீ கனம் குழையவரொடு புனல் உளாய் என வந்த பூசலின் பெரிது அன்றோ தார் கொண்டாள் தலைக் கோதை தடுமாறிப் பூண்ட நின் ஈர் அணி சிதையாது எம் இல் வந்து நின்றதை தணந்ததன்தலையும் நீ தளர்_இயலவரொடு துணங்கையாய் என வந்த கவ்வையின் கடப்பு அன்றோ ஒளி பூத்த நுதலாரோடு ஓர் அணிப் பொலிந்த நின் களி தட்ப வந்த இக் கவின் காண இயைந்ததை என ஆங்கு அளி பெற்றேம் எம்மை நீ அருளினை விளியாது வேட்டோர்-திறத்து விரும்பிய நின் பாகனும் நீட்டித்தாய் என்று கடாஅம் கடும் திண் தேர் பூட்டு விடாஅ நிறுத்து #25 கலித்தொகை 67 - மருதக்கலி - மருதன் இளநாகனார் கார் முற்றி இணர் ஊழ்த்த கமழ் தோட்ட மலர் வேய்ந்து சீர் முற்றிப் புலவர் வாய்ச் சிறப்பு எய்தி இரு நிலம் தார் முற்றியது போலத் தகை பூத்த வையை தன் நீர் முற்றி மதில் பொரூஉம் பகை அல்லால் நேராதார் போர் முற்று ஒன்று அறியாத புரிசை சூழ் புனல் ஊரன் நலத்தகை எழில் உண்கண் நல்லார் தம் கோதையால் அலைத்த புண் வடுக் காட்டி அன்பு இன்றி வரின் எல்லா புலப்பென் யான் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் கலப்பென் என்னும் இக் கையறு நெஞ்சே கோடு எழில் அகல் அல்குல் கொடி அன்னார் முலை மூழ்கிப் பாடு அழி சாந்தினன் பண்பு இன்றி வரின் எல்லா ஊடுவென் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் கூடுவென் என்னும் இக் கொள்கை இல் நெஞ்சே இனிப் புணர்ந்த எழில் நல்லார் இலங்கு எயிறு உறாஅலின் நனிச் சிவந்த வடுக் காட்டி நாண் இன்றி வரின் எல்லா துனிப்பென் யான் என்பேன்-மன் அ நிலையே அவன் காணின் தனித்தே தாழும் இத் தனி இல் நெஞ்சே என ஆங்கு பிறை புரை ஏர்_நுதால் தாம் எண்ணியவை எல்லாம் துறைபோதல் ஒல்லுமோ தூ ஆகாது ஆங்கே அறைபோகும் நெஞ்சு உடையார்க்கு #26 கலித்தொகை 68 - மருதக்கலி - மருதன் இளநாகனார் பொது மொழி பிறர்க்கு இன்றி முழுது ஆளும் செல்வர்க்கு மதி மொழி இடல் மாலை வினைவர் போல் வல்லவர் செது மொழி சீத்த செவி செறு ஆக முது மொழி நீராப் புலன் நா உழவர் புது மொழி கூட்டுண்ணும் புரிசை சூழ் புனல் ஊர ஊரன்-மன் உரன் அல்லன் நமக்கு என்ன உடன் வாளாது ஓர் ஊர் தொக்கு இருந்த நின் பெண்டிருள் நேர் ஆகிக் களையா நின் குறி வந்து எம் கதவம் சேர்ந்து அசைத்த கை வளையின் வாய்விடல் மாலை மகளிரை நோவேமோ கேள் அலன் நமக்கு அவன் குறுகன்-மின் என மற்று எம் தோளொடு பகைபட்டு நினை வாடு நெஞ்சத்தேம் ஊடியார் நலம் தேம்ப ஒடியெறிந்து அவர்-வயின் மால் தீர்க்கும் அவன் மார்பு என்று எழுந்த சொல் நோவேமோ முகை வாய்த்த முலை பாயக் குழைந்த நின் தார் எள்ள வகை வரிச் செப்பினுள் வைகிய கோதையேம் சேரியால் சென்று நீ சேர்ந்த இல் வினாயினன் தேரொடு திரிதரும் பாகனைப் பழிப்பேமோ ஒலி கொண்ட சும்மையான் மண மனை குறித்து எம் இல் பொலிக எனப் புகுந்த நின் புலையனைக் கண்ட யாம் என ஆங்கு நனவினான் வேறு ஆகும் வேளா முயக்கம் மனை வரின் பெற்று உவந்து மற்று எம் தோள் வாட இனையர் என உணர்ந்தார் என்று ஏக்கற்று ஆங்குக் கனவினான் எய்திய செல்வத்து அனையதே ஐய எமக்கு நின் மார்பு #27 கலித்தொகை 69 - மருதக்கலி - மருதன் இளநாகனார் போது அவிழ் பனிப் பொய்கைப் புதுவது தளைவிட்ட தாது சூழ் தாமரைத் தனி மலர் புறம் சேர்பு காதல்கொள் வதுவை நாள் கலிங்கத்துள் ஒடுங்கிய மாதர் கொள் மான் நோக்கின் மடந்தை தன் துணை ஆக ஓது உடை அந்தணன் எரி வலம்செய்வான் போல் ஆய் தூவி அன்னம் தன் அணி நடைப் பெடையொடு மேதகத் திரிதரூஉம் மிகு புனல் நல் ஊர தெள் அரிச் சிலம்பு ஆர்ப்பத் தெருவின்-கண் தாக்கி நின் உள்ளம் கொண்டு ஒழித்தாளைக் குறைகூறிக் கொள நின்றாய் துணிந்தது பிறிது ஆகத் துணிவிலள் இவள் என பணிந்தாய் போல் வந்து ஈண்டுப் பயனில மொழிவாயோ பட்டுழி அறியாது பாகனைத் தேரொடும் விட்டு அவள் வரல் நோக்கி விருந்து ஏற்றுக்கொள நின்றாய் நெஞ்சத்த பிற ஆக நிறையிலள் இவள் என வஞ்சத்தான் வந்து ஈங்கு வலி அலைத்தீவாயோ இணர் ததை தண் காவின் இயன்ற நின் குறி வந்தாள் புணர்வினில் புகன்று ஆங்கே புனல் ஆடப் பண்ணியாய் தருக்கிய பிற ஆகத் தன் இலள் இவள் எனச் செருக்கினால் வந்து ஈங்குச் சொல் உகுத்தீவாயோ என ஆங்கு தருக்கேம் பெரும நின் நல்கல் விருப்புற்றுத் தாழ்ந்தாய் போல் வந்து தகவில செய்யாது சூழ்ந்தவை செய்து மற்று எம்மையும் உள்ளுவாய் வீழ்ந்தார் விருப்பு அற்றக்கால் #28 கலித்தொகை 70 - மருதக்கலி - மருதன் இளநாகனார் மணி நிற மலர்ப் பொய்கை மகிழ்ந்து ஆடும் அன்னம் தன் அணி மிகு சேவலை அகல் அடை மறைத்து எனக் கதுமெனக் காணாது கலங்கி அ மடப் பெடை மதி நிழல் நீருள் கண்டு அது என உவந்து ஓடித் துன்னத் தன் எதிர்வரூஉம் துணை கண்டு மிக நாணிப் பல் மலரிடை புகூஉம் பழனம் சேர் ஊர கேள் நலம் நீப்பத் துறந்து எம்மை நல்காய் நீ விடுதலின் பல நாளும் படாத கண் பாயல் கொண்டு இயைபவால் துணை மலர்க் கோதையார் வைகலும் பாராட்ட மண மனைத் ததும்பும் நின் மண முழ வந்து எடுப்புமே அகல நீ துறத்தலின் அழுது ஓவா உண்கண் எம் புதல்வனை மெய் தீண்ட பொருந்துதல் இயைபவால் நினக்கு ஒத்த நல்லாரை நெடு நகர்த் தந்து நின் தமர் பாடும் துணங்கையுள் அரவம் வந்து எடுப்புமே வாராய் நீ துறத்தலின் வருந்திய எமக்கு ஆங்கே நீர் இதழ் புலராக் கண் இமை கூம்ப இயைபவால் நேர் இழை நல்லாரை நெடு நகர்த் தந்து நின் தேர் பூண்ட நெடு நல் மான் தெள் மணி வந்து எடுப்புமே என ஆங்கு மெல்லியான் செவி முதல் மேல்வந்தான் காலை போல் எல்லாம் துயிலோ எடுப்புக நின் பெண்டிர் இல்லின் எழீஇய யாழ் தழீஇக் கல்லா வாய்ப் பாணன் புகுதராக்கால் #29 கலித்தொகை 71 - மருதக்கலி - மருதன் இளநாகனார் விரி கதிர் மண்டிலம் வியல் விசும்பு ஊர்தரப் புரி தலை தளை அவிழ்ந்த பூ அங்கண் புணர்ந்து ஆடி வரி வண்டு வாய் சூழும் வளம் கெழு பொய்கையுள் துனி சிறந்து இழிதரும் கண்ணின் நீர் அறல் வார இனிது அமர் காதலன் இறைஞ்சித் தன் அடி சேர்பு நனி விரைந்து அளித்தலின் நகுபவள் முகம் போல பனி ஒரு திறம் வாரப் பாசடைத் தாமரைத் தனி மலர் தளைவிடூஉம் தண் துறை நல் ஊர ஒரு நீ பிறர் இல்லை அவன் பெண்டிர் என உரைத்துத் தேரொடும் தேற்றிய பாகன் வந்தீயான்-கொல் ஓர் இல் தான் கொணர்ந்து உய்த்தார் புலவியுள் பொறித்த புண் பாரித்துப் புணர்ந்த நின் பரத்தைமை காணிய மடுத்து அவன் புகுவழி மறையேன் என்று யாழொடும் எடுத்துச் சூள் பல உற்ற பாணன் வந்தீயான்-கொல் அடுத்துத் தன் பொய் உண்டார் புணர்ந்த நின் எருத்தின்-கண் எடுத்துக்கொள்வது போலும் தொடி வடு காணிய தணந்தனை எனக் கேட்டுத் தவறு ஓராது எமக்கு நின் குணங்களைப் பாராட்டும் தோழன் வந்தீயான்-கொல் கணம் குழை நல்லவர் கதுப்பு அறல் அணைத் துஞ்சி அணங்கு போல் கமழும் நின் அலர் மார்பு காணிய என்று நின் தீரா முயக்கம் பெறுநர் புலப்பவர் யார் நீ வரு நாள் போல் அமைகுவம் யாம் புக்கீமோ மாரிக்கு அவாவுற்றுப் பீள் வாடும் நெல்லிற்கு ஆங்கு ஆராத் துவலை அளித்தது போலும் நீ ஓர் யாட்டு ஒரு கால் வரவு #30 கலித்தொகை 72 - மருதக்கலி - மருதன் இளநாகனார் இணைபட நிவந்த நீல மென் சேக்கையுள் துணை புணர் அன்னத்தின் தூவி மெல் அணை அசைஇ சேடு இயல் வள்ளத்துப் பெய்த பால் சில காட்டி ஊடும் மென் சிறு கிளி உணர்ப்பவள் முகம் போலப் புது நீர புதல் ஒற்றப் புணர் திரைப் பிதிர் மல்க மதி நோக்கி அலர் வீத்த ஆம்பல் வால் மலர் நண்ணிக் கடி கயத் தாமரைக் கமழ் முகை கரை மாவின் வடி தீண்ட வாய்விடூஉம் வயல் அணி நல் ஊர கண்ணி நீ கடி கொண்டார் கனை-தொறும் யாம் அழ பண்ணினால் களிப்பிக்கும் பாணன் காட்டு என்றானோ பேணான் என்று உடன்றவர் உகிர் செய்த வடுவினான் மேல்_நாள் நின் தோள் சேர்ந்தார் நகை சேர்ந்த இதழினை நாடி நின் தூது ஆடித் துறை செல்லாள் ஊரவர் ஆடை கொண்டு ஒலிக்கும் நின் புலைத்தி காட்டு என்றாளோ கூடியார் புனல் ஆடப் புணை ஆய மார்பினில் ஊடியார் எறிதர ஒளி விட்ட அரக்கினை வெறிது நின் புகழ்களை வேண்டார் இல் எடுத்து ஏத்தும் அறிவு உடை அந்தணன் அவளைக் காட்டு என்றானோ களி பட்டார் கமழ் கோதை கயம் பட்ட உருவின் மேல் குறி பெற்றார் குரல் கூந்தல் கோடு உளர்ந்த துகளினை என ஆங்கு செறிவுற்றேம் எம்மை நீ செறிய அறிவுற்று அழிந்து உகு நெஞ்சத்தேம் அல்லல் உழப்பக் கழிந்தவை உள்ளாது கண்ட இடத்தே அழிந்து நின் பேணிக் கொளலின் இழிந்ததோ இ நோய் உழத்தல் எமக்கு #31 கலித்தொகை 73 - மருதக்கலி - மருதன் இளநாகனார் அகன் துறை அணிபெறப் புதலொடு தாழ்ந்த பகன்றைப் பூ உற நீண்ட பாசடைத் தாமரை கண் பொர ஒளிவிட்ட வெள்ளிய வள்ளத்தான் தண் கமழ் நறும் தேறல் உண்பவள் முகம் போல வண் பிணி தளைவிடூஉம் வயல் அணி நல் ஊர நோதக்காய் என நின்னை நொந்தீவார் இல் வழித் தீதிலேன் யான் எனத் தேற்றிய வருதி-மன் ஞெகிழ் தொடி இளையவர் இடை முலைத் தாது சோர்ந்து இதழ் வனப்பு இழந்த நின் கண்ணி வந்து உரையாக்கால் கனற்றி நீ செய்வது கடிந்தீவார் இல் வழி மனத்தில் தீதிலன் என மயக்கிய வருதி-மன் அலமரல் உண்கண்ணார் ஆய் கோதை குழைத்த நின் மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையாக்கால் என்னை நீ செய்யினும் உரைத்தீவார் இல் வழி முன் அடி பணிந்து எம்மை உணர்த்திய வருதி-மன் நிரை தொடி நல்லவர் துணங்கையுள் தலைக்கொள்ளக் கரை இடைக் கிழிந்த நின் காழகம் வந்து உரையாக்கால் என ஆங்கு மண்டு நீர் ஆரா மலி கடல் போலும் நின் தண்டாப் பரத்தை தலைக்கொள்ள நாளும் புலத்தகைப் பெண்டிரைத் தேற்றி மற்று யாம் எனின் தோலாமோ நின் பொய் மருண்டு #32 கலித்தொகை 74 - மருதக்கலி - மருதன் இளநாகனார் பொய்கைப் பூ புதிது உண்ட வரி வண்டு கழி பூத்த நெய்தல் தாது அமர்ந்து ஆடிப் பாசடைச் சேப்பினுள் செய்து இயற்றியது போல வயல் பூத்த தாமரை மை தபு கிளர் கொட்டை மாண் பதி படர்தரூஉம் கொய் குழை அகை காஞ்சித் துறை அணி நல் ஊர அன்பிலன் அறனிலன் எனப்படான் என ஏத்தி நின் புகழ் பல பாடும் பாணனும் ஏமுற்றான் நஞ்சு உயிர் செகுத்தலும் அறிந்து உண்டு ஆங்கு அளியின்மை கண்டும் நின் மொழி தேறும் பெண்டிரும் ஏமுற்றார் முன் பகல் தலைக்கூடி நல் பகல் அவள் நீத்து பின் பகல் பிறர் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய் என ஆங்கு கிண்கிணி மணித் தாரோடு ஒலித்து ஆர்ப்ப ஒண் தொடிப் பேர் அமர்க் கண்ணார்க்கும் படு வலை இது என ஊரவர் உடன் நகத் திரிதரும் தேர் ஏமுற்றன்று நின்னினும் பெரிதே #33 கலித்தொகை 75 - மருதக்கலி - மருதன் இளநாகனார் நீர் ஆர் செறுவில் நெய்தலொடு நீடிய நேர் இதழ் ஆம்பல் நிரை இதழ் கொண்மார் சீர் ஆர் சே இழை ஒலிப்ப ஓடும் ஓரை மகளிர் ஓதை வெரீஇ எழுந்து ஆரல் ஆர்கை அம் சிறைத் தொழுதி உயர்ந்த பொங்கர் உயர் மரம் ஏறி அமர்க் கண் மகளிர் அலப்பிய அ நோய் தமர்க்கு உரைப்பன போல் பல் குரல் பயிற்றும் உயர்ந்த போரின் ஒலி நல் ஊரன் புதுவோர் புணர்தல் வெய்யன் ஆயின் வதுவை நாளால் வைகலும் அஃது யான் நோவேன் தோழி நோவாய் நீ என என் பார்த்து உறுவோய் கேள் இனித் தெற்றென எல்லினை வருதி எவன் குறித்தனை எனச் சொல்லாது இருப்பேன் ஆயின் ஒல்லென விரி உளைக் கலி மான் தேரொடு வந்த விருந்து எதிர்கோடலின் மறப்பல் என்றும் வாடிய பூவொடு வாரல் எம் மனை என ஊடி இருப்பேன் ஆயின் நீடாது அச்சு ஆறு ஆக உணரிய வருபவன் பொய்ச் சூள் அஞ்சிப் புலவேன் ஆகுவல் பகல் ஆண்டு அல்கினை பரத்த என்று யான் இகலி இருப்பேன் ஆயின் தான் தன் முதல்வன் பெரும் பெயர் முறையுளிப் பெற்ற புதல்வன் புல்லிப் பொய்த் துயில் துஞ்சும் ஆங்க விருந்து எதிர்கொள்ளவும் பொய்ச் சூள் அஞ்சவும் அரும் பெறல் புதல்வனை முயங்கக் காணவும் ஆங்கு அவிந்து ஒழியும் என் புலவி தாங்காது அவ்வவ் இடத்தான் அவையவை காணப் பூம் கண் மகளிர் புனை நலம் சிதைக்கும் மாய மகிழ்நன் பரத்தைமை நோவென் தோழி கடன் நமக்கு எனவே #34 கலித்தொகை 76 - மருதக்கலி - மருதன் இளநாகனார் புனை இழை நோக்கியும் புனல் ஆடப் புறம் சூழ்ந்தும் அணி வரி தைஇயும் நம் இல் வந்து வணங்கியும் நினையுபு வருந்தும் இ நெடுந்தகை-திறத்து இவ் ஊர் இனையள் என்று எடுத்து ஓதற்கு அனையையோ நீ என வினவுதி ஆயின் விளங்கு_இழாய் கேள் இனி செவ் விரல் சிவப்பு ஊரச் சேண் சென்றாய் என்று அவன் பௌவ நீர்ச் சாய்க் கொழுதிப் பாவை தந்தனைத்தற்கோ கௌவை நோய் உற்றவர் காணாது கடுத்த சொல் ஒவ்வா என்று உணராய் நீ ஒரு நிலையே உரைத்ததை ஒடுங்கி யாம் புகல் ஒல்லேம் பெயர்தர அவன் கண்டு நெடும் கய மலர் வாங்கி நெறித்துத் தந்தனைத்தற்கோ விடுந்தவர் விரகு இன்றி எடுத்த சொல் பொய்யாகக் கடிந்ததும் இலையாய் நீ கழறிய வந்ததை வரி தேற்றாய் நீ என வணங்கு இறை அவன் பற்றித் தெரி வேய்த் தோள் கரும்பு எழுதித் தொய்யில் செய்தனைத்தற்கோ புரிபு நம் ஆயத்தார் பொய்யாக எடுத்த சொல் உரிது என உணராய் நீ உலமந்தாய் போன்றதை என ஆங்கு அரிது இனி ஆய்_இழாய் அது தேற்றல் புரிபு ஒருங்கு அன்று நம் வதுவையுள் நமர் செய்வது இன்று ஈங்கே தான் நயந்து இருந்தது இவ் ஊர் ஆயின் எவன்-கொலோ நாம் செயற்பாலது இனி #35 கலித்தொகை 77 - மருதக்கலி - மருதன் இளநாகனார் இணை இரண்டு இயைந்து ஒத்த முகை நாப்பண் பிறிது யாதும் துணை இன்றித் தளைவிட்ட தாமரைத் தனி மலர் திரு முகம் இறைஞ்சினள் வீழ்பவற்கு இனைபவள் அரி மதர் மழைக் கண் நீர் அலர் முலை மேல் தெறிப்ப போல் தகை மலர்ப் பழனத்த புள் ஒற்ற ஒசிந்து ஒல்கி மிக நனி சேர்ந்த அ முகை மிசை அ மலர் அக இதழ்த் தண் பனி உறைத்தரும் ஊர கேள் தண் தளிர்த் தகை பூத்த தாது எழில் நலம் செலக் கொண்டு நீ மாறிய கவின் பெறல் வேண்டேன்-மன் உண்டாதல் சாலா என் உயிர் சாதல் உணர்ந்து நின் பெண்டு எனப் பிறர் கூறும் பழி மாறப் பெறுகற்பின் பொன் எனப் பசந்த கண் போது எழில் நலம் செலத் தொல் நலம் இழந்த கண் துயில் பெறல் வேண்டேன்-மன் நின் அணங்கு உற்றவர் நீ செய்யும் கொடுமைகள் என் உழை வந்து நொந்து உரையாமை பெறுகற்பின் மாசற மண்ணுற்ற மணி ஏசும் இரும் கூந்தல் வீ சேர்ந்து வண்டு ஆர்க்கும் கவின் பெறல் வேண்டேன்-மன் நோய் சேர்ந்த திறம் பண்ணி நின் பாணன் எம் மனை நீ சேர்ந்த இல் வினாய் வாராமை பெறுகற்பின் ஆங்க கடைஇய நின் மார்பு தோயலம் என்னும் இடையும் நிறையும் எளிதோ நின் காணின் கடவுபு கைத் தங்கா நெஞ்சு என்னும் தம்மோடு உடன் வாழ் பகை உடையார்க்கு #36 கலித்தொகை 78 - மருதக்கலி - மருதன் இளநாகனார் பல் மலர்ப் பழனத்த பாசடைத் தாமரை இன் மலர் இமிர்பு ஊதும் துணை புணர் இரும் தும்பி உண்துறை உடைந்த பூப் புனல் சாய்ப்பப் புலந்து ஊடிப் பண்பு உடை நல் நாட்டுப் பகை தலைவந்து என அது கைவிட்டு அகன்று ஒரீஇக் காக்கிற்பான் குடை நீழல் பதி படர்ந்து இறைகொள்ளும் குடி போலப் பிறிதும் ஒரு பொய்கை தேர்ந்து அலமரும் பொழுதினான் மொய் தப இறை பகை தணிப்ப அக் குடி பதிபெயர்ந்து ஆங்கு நிறை புனல் நீங்க வந்து அத் தும்பி அ மலர்ப் பறை தவிர்பு அசைவிடூஉம் பாய் புனல் நல் ஊர நீங்குங்கால் நிறம் சாய்ந்து புணருங்கால் புகழ் பூத்து நாம் கொண்ட குறிப்பு இவள் நலம் என்னும் தகையோ தான் எரி இதழ் சோர்ந்து உக ஏதிலார்ப் புணர்ந்தமை கரி கூறும் கண்ணியை ஈங்கு எம் இல் வருவதை சுடர் நோக்கி மலர்ந்து ஆங்கே படின் கூம்பும் மலர் போல் என் தொடர் நீப்பின் தொகும் இவள் நலம் என்னும் தகையோ தான் அலர் நாணிக் கரந்த நோய் கைம்மிக பிறர் கூந்தல் மலர் நாறும் மார்பினை ஈங்கு எம் இல் வருவதை பெயின் நந்தி வறப்பின் சாம் புலத்திற்குப் பெயல் போல் யான் செலின் நந்திச் செறின் சாம்பும் இவள் என்னும் தகையோ தான் முடி உற்ற கோதை போல் யாம் வாட ஏதிலார் தொடி உற்ற வடுக் காட்டி ஈங்கு எம் இல் வருவதை ஆங்க ஐய அமைந்தன்று அனைத்து ஆகப் புக்கீமோ வெய்யாரும் வீழ்வாரும் வேறு ஆகக் கையின் முகை மலர்ந்து அன்ன முயக்கில் தகை இன்றே தண் பனி வைகல் எமக்கு #37 கலித்தொகை 79 - மருதக்கலி - மருதன் இளநாகனார் புள் இமிழ் அகல் வயல் ஒலி செந்நெல் இடைப் பூத்த முள் அரைத் தாமரை முழுமுதல் சாய்த்து அதன் வள் இதழ் உற நீடி வயங்கிய ஒரு கதிர் அவை புகழ் அரங்கின் மேல் ஆடுவாள் அணி நுதல் வகை பெற செரீஇய வயந்தகம் போல் தோன்றும் தகைபெறு கழனி அம் தண் துறை ஊர கேள் அணியொடு வந்து ஈங்கு எம் புதல்வனைக் கொள்ளாதி மணி புரை செவ் வாய் நின் மார்பு அகலம் நனைப்பதால் தோய்ந்தாரை அறிகுவேன் யான் எனக் கமழும் நின் சாந்தினால் குறி கொண்டாள் சாய்குவள் அல்லளோ புல்லல் எம் புதல்வனைப் புகல் அகல் நின் மார்பில் பல் காழ் முத்து அணி ஆரம் பற்றினன் பரிவானால் மாண் இழை மட நல்லார் முயக்கத்தை நின் மார்பில் பூணினால் குறி கொண்டாள் புலக்குவள் அல்லளோ கண்டே எம் புதல்வனைக் கொள்ளாதி நின் சென்னி வண்டு இமிர் வகை இணர் வாங்கினன் பரிவானால் நண்ணியார் காட்டுவது இது எனக் கமழும் நின் கண்ணியால் குறி கொண்டாள் காய்குவள் அல்லளோ என ஆங்கு பூம் கண் புதல்வனைப் பொய் பல பாராட்டி நீங்காய் இகவாய் நெடும் கடை நில்லாதி ஆங்கே அவர்-வயின் சென்றீ அணி சிதைப்பான் ஈங்கு எம் புதல்வனைத் தந்து #38 கலித்தொகை 80 - மருதக்கலி - மருதன் இளநாகனார் நயம் தலை மாறுவார் மாறுக மாறாக் கயம் தலை மின்னும் கதிர் விடு முக் காழ்ப் பயந்த எம் கண் ஆர யாம் காண நல்கித் திகழ் ஒளி முத்து அங்கு அரும்பு ஆகத் தைஇப் பவழம் புனைந்த பருதி சுமப்பக் கவழம் அறியா நின் கை புனை வேழம் புரி புனை பூம் கயிற்றின் பைபய வாங்கி அரி புனை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து ஈங்கே வருக எம் பாக_மகன் கிளர் மணி ஆர்ப்பஆர்ப்பச் சாஅய்ச்சாஅய்ச் செல்லும் தளர் நடை காண்டல் இனிது மற்று இன்னாதே உளம் என்னா நுந்தை-மாட்டு எவ்வம் உழப்பார் வளை நெகிழ்பு யாம் காணுங்கால் ஐய காமரு நோக்கினை அத்தத்தா என்னும் நின் தே மொழி கேட்டல் இனிது மற்று இன்னாதே உய்வு இன்றி நுந்தை நலன் உணச் சாஅய்ச்சாஅய்மார் எவ்வ நோய் யாம் காணுங்கால் ஐய திங்கள் குழவி வருக என யான் நின்னை அம்புலி காட்டல் இனிது மற்று இன்னாதே நல்காது நுந்தை புறம்மாறப்பட்டவர் அல்குல் வரி யாம் காணுங்கால் ஐய எம் காதில் கனம் குழை வாங்கிப் பெயர்-தொறும் போது இல் வறும் கூந்தல் கொள்வதை நின்னை யாம் ஏதிலார் கண் சாய நுந்தை வியல் மார்பில் தாது தேர் வண்டின் கிளை படத் தைஇய கோதை பரிபு ஆடக் காண்கும் #39 கலித்தொகை 81 - மருதக்கலி - மருதன் இளநாகனார் மை அற விளங்கிய மணி மருள் அவ் வாய் தன் மெய் பெறா மழலையின் விளங்கு பூண் நனைத்தரப் பொலம் பிறையுள் தாழ்ந்த புனை வினை உருள் கலன் நலம் பெறு கமழ் சென்னி நகையொடு துயல்வர உரு எஞ்சாது இடை காட்டும் உடை கழல் அம் துகில் அரி பொலி கிண்கிணி ஆர்ப்பு ஓவா அடி தட்பப் பாலோடு அலர்ந்த முலை மறந்து முற்றத்துக் கால் வல் தேர் கையின் இயக்கி நடை பயிற்றா ஆல் அமர் செல்வன் அணி சால் பெரு விறல் போல வரும் என் உயிர் பெரும விருந்தொடு கைதூவா எம்மையும் உள்ளாய் பெரும் தெருவில் கொண்டாடி ஞாயர் பயிற்றத் திருந்துபு நீ கற்ற சொற்கள் யாம் கேட்ப மருந்து ஓவா நெஞ்சிற்கு அமிழ்தம் அயின்று அற்றாப் பெருந்தகாய் கூறு சில எல்_இழாய் சேய் நின்று நாம் கொணர்ந்த பாணன் சிதைந்து ஆங்கே வாய் ஓடி ஏனாதிப்பாடியம் என்று அற்றா நோய் நாம் தணிக்கும் மருந்து எனப் பாராட்ட ஓவாது அடுத்தடுத்து அத்தத்தா என்பான் மாண வேய் மென் தோள் வேய்த் திறம் சேர்த்தலும் மற்று இவன் வாய் உள்ளின் போகான் அரோ உள்ளி உழையே ஒருங்கு படை விடக் கள்ளர் படர்தந்தது போலத் தாம் எம்மை எள்ளுமார் வந்தாரே ஈங்கு ஏதப்பாடு எண்ணிப் புரிசை வியல் உள்ளோர் கள்வரைக் காணாது கண்டேம் என்பார் போலச் சேய் நின்று செய்யாத சொல்லிச் சினவல் நின் ஆணை கடக்கிற்பார் யார் அதிர்வு இல் படிறு எருக்கி வந்து என் மகன் மேல் முதிர் பூண் முலை பொருத ஏதிலாள் முச்சி உதிர் துகள் உக்க நின் ஆடை ஒலிப்ப எதிர் வளி நின்றாய் நீ செல் இனி எல்லா யாம் தீதிலேம் என்று தெளிப்பவும் கைந்நீவி யாதொன்றும் எம் கண் மறுத்தரவு இல் ஆயின் மேதக்க எந்தை பெயரனை யாம் கொள்வேம் தாவா விருப்பொடு கன்று யாத்துழிச் செல்லும் ஆ போல் படர் தக நாம் #40 கலித்தொகை 82 - மருதக்கலி - மருதன் இளநாகனார் ஞாலம் வறம் தீரப் பெய்யக் குணக்கு ஏர்பு காலத்தில் தோன்றிய கொண்மூப் போல் எம் முலை பாலொடு வீங்கத் தவ நெடிது ஆயினை புத்தேளிர் கோட்டம் வலம்செய்து இவனொடு புக்க வழி எல்லாம் கூறு கூறுவேன் மேயாயே போல வினவி வழிமுறைக் காயாமை வேண்டுவல் யான் காயேம் மடக் குறுமாக்களோடு ஓரை அயரும் அடக்கம் இல் போழ்தின்-கண் தந்தை காமுற்ற தொடக்கத்துத் தாய் உழை புக்காற்கு அவளும் மருப்புப் பூண் கையுறை ஆக அணிந்து பெருமான் நகை முகம் காட்டு என்பாள் கண்ணீர் சொரி முத்தம் காழ் சோர்வ போன்றன மற்றும் வழிமுறைத் தாய் உழைப் புக்காற்கு அவளும் மயங்கு நோய் தாங்கி மகன் எதிர்வந்து முயங்கினள் முத்தினள் நோக்கி நினைந்தே நினக்கு யாம் யாரேம் ஆகுதும் என்று வனப்புறக் கொள்வன நாடி அணிந்தனள் ஆங்கே அரி மதர் உண்கண் பசப்ப நோய் செய்யும் பெருமான் பரத்தைமை ஒவ்வாதி என்றாள் அவட்கு இனிது ஆகி விடுத்தனன் போகித் தலைக் கொண்டு நம்மொடு காயும் மற்று ஈது ஓர் புலத்தகை புத்தேள் இல் புக்கான் அலைக்கு ஒரு கோல் தா நினக்கு அவள் யார் ஆகும் எல்லா வருந்தி யாம் நோய் கூர நுந்தையை என்றும் பருந்து எறிந்து அற்று ஆகக் கொள்ளும் கொண்டு ஆங்கே தொடியும் உகிரும் படையாக நுந்தை கடி உடை மார்பின் சிறு கண்ணும் உட்காள் வடுவும் குறித்து ஆங்கே செய்யும் விடு இனி அன்ன பிறவும் பெருமான் அவள்-வயின் துன்னுதல் ஓம்பித் திறவது இல் முன்னி நீ ஐயம் இல்லாதவர் இல் ஒழிய எம் போலக் கையாறு உடையவர் இல் அல்லால் செல்லல் அமைந்தது இனி நின் தொழில் #41 கலித்தொகை 83 - மருதக்கலி - மருதன் இளநாகனார் பெரும் திரு நிலைஇய வீங்கு சோற்று அகல் மனைப் பொருந்து நோன் கதவு ஒற்றிப் புலம்பி யாம் உலமர இளையவர் தழூஉ ஆடும் எக்கர் வாய் வியன் தெருவின் விளையாட்டிக் கொண்டுவரற்கு எனச் சென்றாய் உளைவு இலை ஊட்டலென் தீம் பால் பெருகும் அளவு எல்லாம் நீட்டித்த காரணம் என் கேட்டீ பெரு மடல் பெண்ணைப் பிணர்த் தோட்டுப் பைம் குரும்பைக் குட வாய்க் கொடிப் பின்னல் வாங்கித் தளரும் பெரு மணித் திண் தேர்க் குறுமக்கள் நாப்பண் அகல் நகர் மீள்தருவான் ஆகப் புரி ஞெகிழ்பு நீல நிரைப் போது உறு காற்கு உலைவன போல் சாலகத்து ஒல்கிய கண்ணர் உயர் சீர்த்தி ஆல் அமர் செல்வன் அணி சால் மகன் விழாக் கால்கோள் என்று ஊக்கிக் கதுமென நோக்கித் திருந்து அடி நூபுரம் ஆர்ப்ப இயலி விருப்பினால் கண்ணும் நுதலும் கவுளும் கவவியார்க்கு ஒண்மை எதிரிய அம் கையும் தண் எனச் செய்வன சிறப்பின் சிறப்புச் செய்து இவ் இரா எம்மொடு சேர்ந்து சென்றீவாயால் செம்மால் நலம் புதிது உண்டு உள்ளா நாணிலி செய்த புலம்பு எலாம் தீர்க்குவேம்-மன் என்று இரங்குபு வேற்று ஆனாத் தாயர் எதிர்கொள்ள மாற்றாத கள்வனால் தங்கியது அல்லால் கதியாதி ஒள்_இழாய் யான் தீதிலேன் எள்ளலான் அம் மென் பணைத் தோள் நுமர் வேய்ந்த கண்ணியோடு எம் இல் வருதியோ எல்லா நீ தன் மெய்க் கண் அம் தீம் சொல் நல்லார் அணிந்த கலம் காட்டி முந்தை இருந்து மகன் செய்த நோய்த் தலை வெந்த புண் வேல் எறிந்து அற்றால் வடுவொடு தந்தையும் வந்து நிலை #42 கலித்தொகை 84 - மருதக்கலி - மருதன் இளநாகனார் உறு வளி தூக்கும் உயர் சினை மாவின் நறு வடி ஆர் இற்றவை போல் அழியக் கரந்து யான் அரக்கவும் கை நில்லா வீங்கிச் சுரந்த என் மென் முலை பால் பழுதாக நீ நல் வாயில் போத்தந்த பொழுதினான் எல்லா கடவுள் கடி நகர்-தோறும் இவனை வலம் கொளீஇ வா எனச் சென்றாய் விலங்கினை ஈரம் இலாத இவன் தந்தை பெண்டிருள் யார் இல் தவிர்ந்தனை கூறு நீருள் அடை மறை ஆய் இதழ்ப் போது போல் கொண்ட குடை_நிழல் தோன்றும் நின் செம்மலைக் காணூஉ இவன்-மன்ற யான் நோவ உள்ளம் கொண்டு உள்ளா மகன் அல்லான் பெற்ற மகன் என்று அகல் நகர் வாயில் வரை இறந்து போத்தந்து தாயர் தெருவில் தவிர்ப்பத் தவிர்ந்தனன் மற்று அவர் தத்தம் கலங்களுள் கையுறை என்று இவற்கு ஒத்தவை ஆராய்ந்து அணிந்தார் பிறன் பெண்டிர் ஈத்தவை கொள்வானாம் இஃது ஒத்தன் சீத்தை செறு தக்கான்-மன்ற பெரிது சிறு பட்டி ஏதிலார் கை எம்மை எள்ளுபு நீ தொட்ட மோதிரம் யாவோ யாம் காண்கு அவற்றுள் நறா இதழ் கண்டு அன்ன செவ் விரற்கு ஏற்பச் சுறா ஏறு எழுதிய மோதிரம் தொட்டாள் குறி அறிந்தேன் காமன் கொடி எழுதி என்றும் செறியாப் பரத்தை இவன் தந்தை மார்பில் பொறி ஒற்றிக்கொண்டு ஆள்வல் என்பது தன்னை அறீஇய செய்த வினை அன்னையோ இஃது ஒன்று முந்தைய கண்டும் எழுகல்லாத என் முன்னர் வெந்த புண் வேல் எறிந்து அற்றா இஃது ஒன்று தந்தை இறைத் தொடி மற்று இவன் தன் கைக்-கண் தந்தார் யார் எல்லாஅ இது இஃது ஒன்று என் ஒத்துக் காண்க பிறரும் இவற்கு என்னும் தன் நலம் பாடுவி தந்தாளா நின்னை இது தொடுக என்றவர் யார் அஞ்சாதி நீயும் தவறிலை நின் கை இது தந்த பூ எழில் உண்கண் அவளும் தவறிலள் வேனில் புனல் அன்ன நுந்தையை நோவார் யார் மேல் நின்றும் எள்ளி இது இவன் கைத் தந்தாள் தான் யாரோ என்று வினவிய நோய்ப்பாலேன் யானே தவறுடையேன் #43 கலித்தொகை 85 - மருதக்கலி - மருதன் இளநாகனார் காலவை சுடு பொன் வளைஇய ஈர் அமை சுற்றொடு பொடி அழல் புறந்தந்த செய்வுறு கிண்கிணி உடுத்தவை கைவினைப் பொலிந்த காசு அமை பொலம் காழ் மேல் மை இல் செம் துகிர்க் கோவை அவற்றின் மேல் தைஇய பூம் துகில் ஐது கழல் ஒரு திரை கையதை அலவன் கண் பெற அடங்கச் சுற்றிய பல உறு கண்ணுள் சில கோல் அவிர் தொடி பூண்டவை எறியா வாளும் எற்றா மழுவும் செறியக் கட்டி ஈர் இடைத் தாழ்ந்த பெய் புல மூதாய்ப் புகர் நிறத் துகிரின் மை அற விளங்கிய ஆன் ஏற்று அவிர் பூண் சூடின இரும் கடல் முத்தமும் பல் மணி பிறவும் ஆங்கு ஒருங்கு உடன் கோத்த உருள் அமை முக் காழ் மேல் சுரும்பு ஆர் கண்ணிக்குச் சூழ் நூலாக அரும்பு அவிழ் நீலத்து ஆய் இதழ் நாணச் சுரும்பு ஆற்றுப்படுத்த மணி மருள் மாலை ஆங்க அவ்வும் பிறவும் அணிக்கு அணியாக நின் செல்வுறு திண் தேர் கொடும் சினை கைப்பற்றிப் பைபயத் தூங்கும் நின் மெல் விரல் சீறடி நோதலும் உண்டு ஈங்கு என் கை வந்தீ செம்மால் நின்-பால் உண்ணிய பொய் போர்த்துப் பாண் தலை இட்ட பல வல் புலையனைத் தூண்டிலா விட்டுத் துடக்கித் தான் வேண்டியார் நெஞ்சம் பிணித்தல் தொழிலாத் திரிதரும் நுந்தை-பால் உண்டி சில நுந்தை வாய் மாயச் சூள் தேறி மயங்கு நோய் கைமிகப் பூ எழில் உண்கண் பனி பரப்பக் கண் படா ஞாயர்-பால் உண்டி சில அன்னையோ யாம் எம் மகனைப் பாராட்டக் கதுமெனத் தாம் வந்தார் தம் பாலவரோடு தம்மை வருக என்றார் யார்-கொலோ ஈங்கு என் பால் அல் பாராட்டு உவந்தோய் குடி உண்டீத்தை என் பாராட்டைப் பாலோ சில செரு குறித்தாரை உவகைக் கூத்தாட்டும் வரிசைப் பெரும் பாட்டொடு எல்லாம் பருகீத்தை தண்டுவென் ஞாயர் மாட்டைப் பால் #44 கலித்தொகை 86 - மருதக்கலி - மருதன் இளநாகனார் மை படு சென்னி மழ களிற்று ஓடை போல் கை புனை முக்காழ் கயம் தலைத் தாழப் பொலம் செய் மழுவொடு வாள் அணி கொண்ட நலம் கிளர் ஒண் பூண் நனைத்தரும் அவ் வாய் கலந்து கண் நோக்கு ஆரக் காண்பு இன் துகிர் மேல் பொலம் புனை செம்பாகம் போர் கொண்டு இமைப்பக் கடி அரணம் பாயா நின் கை புனை வேழம் தொடியோர் மணலின் உழக்கி அடி ஆர்ந்த தேரை வாய்க் கிண்கிணி ஆர்ப்ப இயலும் என் போர் யானை வந்தீக ஈங்கு செம்மால் வனப்பு எலாம் நுந்தையை ஒப்பினும் நுந்தை நிலைப் பாலுள் ஒத்த குறி என் வாய்க் கேட்டு ஒத்தி கன்றிய தெவ்வர்க் கடந்து களம் கொள்ளும் வென்றி-மாட்டு ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி ஒன்றினேம் யாம் என்று உணர்ந்தாரை நுந்தை போல் மென் தோள் நெகிழ விடல் பால் கொளல் இன்றிப் பகல் போல் முறைக்கு ஒல்கா கோல் செம்மை ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி கால் பொரு பூவின் கவின் வாட நுந்தை போல் சால்பு ஆய்ந்தார் சாய விடல் வீதல் அறியா விழுப் பொருள் நச்சியார்க்கு ஈதல்-மாட்டு ஒத்தி பெரும மற்று ஒவ்வாதி மாதர் மெல் நோக்கின் மகளிரை நுந்தை போல் நோய் கூர நோக்காய் விடல் ஆங்க திறன் அல்ல யாம் கழற யாரை நகும் இ மகன் அல்லான் பெற்ற மகன் மறை நின்று தாம்-மன்ற வந்தீத்தனர் ஆய்_இழாய் தாவாத எற்குத் தவறு உண்டோ காவாது ஈங்கு ஈத்தை இவனை யாம் கோடற்குச் சீத்தை யாம் கன்றி அதனைக் கடியவும் கைநீவிக் குன்ற இறுவரைக் கோள்_மா இவர்ந்து ஆங்குத் தந்தை வியல் மார்பில் பாய்ந்தான் அறன் இல்லா அன்பிலி பெற்ற மகன் #45 கலித்தொகை 87 - மருதக்கலி - மருதன் இளநாகனார் ஒரூஉ நீ எம் கூந்தல் கொள்ளல் யாம் நின்னை வெரூஉதும் காணும் கடை தெரி_இழாய் செய் தவறு இல் வழி யாங்குச் சினவுவாய் மெய் பிரிந்து அன்னவர்-மாட்டு ஏடா நினக்குத் தவறு உண்டோ நீ வீடு பெற்றாய் இமைப்பின் இதழ் மறைபு ஆங்கே கெடுதி நிலைப் பால் அறியினும் நின் நொந்து நின்னைப் புலப்பார் உடையர் தவறு அணைத் தோளாய் தீயாரைப் போலத் திறன் இன்று உடற்றுதி காயும் தவறிலேன் யான் மான் நோக்கி நீ அழ நீத்தவன் ஆனாது நாணிலன் ஆயின் நலிதந்து அவன்-வயின் ஊடுதல் என்னோ இனி இனி யாதும் மீக்கூற்றம் யாம் இலம் என்னும் தகையது காண்டைப்பாய் நெஞ்சே பனி ஆனாப் பாடு இல் கண் பாயல் கொள #46 கலித்தொகை 88 - மருதக்கலி - மருதன் இளநாகனார் ஒரூஉக் கொடி இயல் நல்லார் குரல் நாற்றத்து உற்ற முடி உதிர் பூம் தாது மொய்ம்பின ஆகத் தொடிய எமக்கு நீ யாரை பெரியார்க்கு அடியரோ ஆற்றாதவர் கடியர் தமக்கு யார் சொல்லத் தக்கார் மாற்று வினை கெட்டு வாய் அல்லா வெண்மை உரையாது கூறு நின் மாயம் மருள்வார் அகத்து ஆய்_இழாய் நின்-கண் பெறின் அல்லால் இன் உயிர் வாழ்கல்லா என்-கண் எவனோ தவறு இஃது ஒத்தன் புள்ளிக் களவன் புனல் சேர் பொதுக்கம் போல் வள் உகிர் போழ்ந்தனவும் வாள் எயிறு உற்றனவும் ஒள் இதழ் சோர்ந்த நின் கண்ணியும் நல்லார் சிரறுபு சீறச் சிவந்த நின் மார்பும் தவறு ஆதல் சாலாவோ கூறு அது தக்கது வேற்றுமை என்-கண்ணோ ஓராதி தீதின்மை தேற்றக் கண்டீயாய் தெளிக்கு இனித் தேற்றேம் யாம் தேர் மயங்கி வந்த தெரி கோதை அம் நல்லார் தார் மயங்கி வந்த தவறு அஞ்சிப் போர் மயங்கி நீ உறும் பொய்ச் சூள் அணங்கு ஆகின் மற்று இனி யார் மேல் விளியுமோ கூறு #47 கலித்தொகை 89 - மருதக்கலி - மருதன் இளநாகனார் யார் இவன் எம் கூந்தல் கொள்வான் இதுவும் ஓர் ஊராண்மைக்கு ஒத்த படிறு உடைத்து எம் மனை வாரல் நீ வந்து ஆங்கே மாறு என் இவை ஓர் உயிர்ப் புள்ளின் இரு தலையுள் ஒன்று போர் எதிர்ந்து அற்றாப் புலவல் நீ கூறின் என் ஆர் உயிர் நிற்கும் ஆறு யாது ஏஎ தெளிந்தேம் யாம் காயாதி எல்லாம் வல் எல்லா பெரும் காட்டுக் கொற்றிக்குப் பேய் நொடித்து ஆங்கு வருந்தல் நின் வஞ்சம் உரைத்து மருந்து இன்று மன்னவன் சீறின் தவறு உண்டோ நீ நயந்த இன்_நகை தீதோ இலேன் மாண மறந்து உள்ளா நாணிலிக்கு இப் போர் புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே உறழ்ந்து இவனைப் பொய்ப்ப விடேஎம் என நெருங்கின் தப்பினேன் என்று அடி சேர்தலும் உண்டு #48 கலித்தொகை 90 - மருதக்கலி - மருதன் இளநாகனார் கண்டேன் நின் மாயம் களவு ஆதல் பொய் நகா மண்டாத சொல்லித் தொடாஅல் தொடீஇய நின் பெண்டிர் உளர்-மன்னோ ஈங்கு ஒண்_தொடி நீ கண்டது எவனோ தவறு கண்டது நோயும் வடுவும் கரந்து மகிழ் செருக்கிப் பாடு பெயல் நின்ற பானாள் இரவில் தொடி பொலி தோளும் முலையும் கதுப்பும் வடிவு ஆர் குழையும் இழையும் பொறையா ஒடிவது போலும் நுசுப்போடு அடி தளரா ஆராக் கவவின் ஒருத்தி வந்து அல்கல் தன் சீர் ஆர் ஞெகிழம் சிலம்பச் சிவந்து நின் போர் ஆர் கதவம் மிதித்தது அமையுமோ ஆய்_இழை ஆர்க்கும் ஒலி கேளா அவ் எதிர் தாழாது எழுந்து நீ சென்றது அமையுமோ மாறாள் சினைஇ அவள் ஆங்கே நின் மார்பில் நாறு இணர் பைம் தார் பரிந்தது அமையுமோ தேறு நீ தீயேன் அலேன் என்று மற்று அவள் சீறடி தோயா இறுத்தது அமையுமோ கூறு இனிக் காயேமோ யாம் தேறின் பிறவும் தவறிலேன் யான் அல்கல் கனவு-கொல் நீ கண்டது கனை பெயல் தண் துளி வீசும் பொழுதில் குறி வந்தாள் கண்ட கனவு எனக் காணாது மாறுற்றுப் பண்டைய அல்ல நின் பொய்ச் சூள் நினக்கு எல்லா நின்றாய் நின் புக்கில் பல மென்_தோளாய் நல்கு நின் நல் எழில் உண்கு ஏடா குறையுற்று நீ எம் உரையல் நின் தீமை பொறை ஆற்றேம் என்றல் பெறுதுமோ யாழ நிறை ஆற்றா நெஞ்சு உடையேம் #49 கலித்தொகை 91 - மருதக்கலி - மருதன் இளநாகனார் அரி நீர் அவிழ் நீலம் அல்லி அனிச்சம் புரி நெகிழ் முல்லை நறவோடு அமைந்த தெரி மலர்க் கண்ணியும் தாரும் நயந்தார் பொரு முரண் சீறச் சிதைந்து நெருநையின் இன்று நன்று என்னை அணி அணை மென்_தோளாய் செய்யாத சொல்லிச் சினவுவது ஈங்கு எவன் ஐயத்தால் என்னை கதியாதி தீதின்மை தெய்வத்தான் கண்டீ தெளிக்கு மற்று அது அறிவல் யான் நின் சூள் அனைத்து ஆக நல்லார் செறி தொடி உற்ற வடுவும் குறி பொய்த்தார் கூர் உகிர் சாடிய மார்பும் குழைந்த நின் தாரும் ததர் பட்ட சாந்தமும் சேரி அரி மதர் உண்கண்ணார் ஆராக் கவவின் பரிசு அழிந்து யாழ நின் மேனி கண்டு யானும் செரு ஒழிந்தேன் சென்றீ இனி தெரி_இழாய் தேற்றாய் சிவந்தனை காண்பாய் நீ தீதின்மை ஆற்றின் நிறுப்பல் பணிந்து அன்னதேல் ஆற்றல் காண் வேறுபட்டு ஆங்கே கலுழ்தி அகப்படின் மாறுபட்டு ஆங்கே மயங்குதி யாது ஒன்றும் கூறி உணர்த்தலும் வேண்டாது மற்று நீ மாணா செயினும் மறுத்து ஆங்கே நின்-வயின் காணின் நெகிழும் என் நெஞ்சு ஆயின் என் உற்றாய் பேணாய் நீ பெட்பச் செயல் #50 கலித்தொகை 92 - மருதக்கலி - மருதன் இளநாகனார் புன வளர் பூம் கொடி அன்னாய் கழியக் கனவு எனப்பட்டது ஓர் காரிகை நீர்த்தே முயங்கிய நல்லார் முலையிடை மூழ்கி மயங்கி மற்று ஆண்டாண்டுச் சேறலும் செல்லாது உயங்கி இருந்தார்க்கு உயர்ந்த பொருளும் அரிதின் அறம் செய்யா ஆன்றோர் உலகும் உரிதின் ஒருதலை எய்தலும் வீழ்வார் பிரிதலும் ஆங்கே புணர்தலும் தம்மில் தருதல் தகை ஆதால் மற்று நனவினால் போலும் நறு_நுதால் அல்கல் கனவினால் சென்றேன் கலி கெழு கூடல் வரை உறழ் நீள் மதில் வாய் சூழ்ந்த வையைக் கரை அணி காவின் அகத்து உரை இனி தண்டாத் தீம் சாயல் நெடுந்தகாய் அவ் வழிக் கண்டது எவன் மற்று நீ கண்டது உடன் அமர் ஆயமொடு அவ் விசும்பு ஆயும் மட நடை மா இனம் அந்தி அமையத்து இடன் விட்டு இயங்கா இமையத்து ஒரு பால் இறைகொண்டு இருந்து அன்ன நல்லாரைக் கண்டேன் துறை கொண்டு உயர் மணல் மேல் ஒன்றி நிறைவதை ஓர்த்தது இசைக்கும் பறை போல் நின் நெஞ்சத்து வேட்டதே கண்டாய் கனா கேட்டை விரையல் நீ மற்று வெகுள்வாய் உரை ஆண்டு இது ஆகும் இன் நகை நல்லாய் பொது ஆகத் தாம் கொடி அன்ன தகையார் எழுந்தது ஓர் பூம் கொடி வாங்கி இணர் கொய்ய ஆங்கே சினை அலர் வேம்பின் பொருப்பன் பொருத முனை அரண் போல உடைந்தன்று அக் காவில் துனை வரி வண்டின் இனம் மற்று ஆங்கே நேர் இணர் மூசிய வண்டு எல்லாம் அவ் வழிக் காரிகை நல்லார் நலம் கவர்ந்து உண்ப போல் ஓராங்கு மூச அவருள் ஒருத்தி செயல் அமை கோதை நகை ஒருத்தி இயல் ஆர் செருவில் தொடியொடு தட்ப ஒருத்தி தெரி முத்தம் சேர்ந்த திலகம் ஒருத்தி அரி மாண் அவிர் குழை ஆய் காது வாங்க ஒருத்தி வரி ஆர் அகல் அல்குல் காழகம் ஒருத்தி அரி ஆர் ஞெகிழத்து அணி சுறாத் தட்ப ஒருத்தி புலவியால் புல்லாது இருந்தாள் அலவுற்று வண்டு இனம் ஆர்ப்ப இடை விட்டுக் காதலன் தண் தார் அகலம் புகும் ஒருத்தி அடி தாழ் கலிங்கம் தழீஇ ஒரு கை முடி தாழ் இரும் கூந்தல் பற்றிப் பூ வேய்ந்த கடி கயம் பாயும் அலந்து ஒருத்தி கணம்கொண்டு அவை மூசக் கை ஆற்றாள் பூண்ட மணம் கமழ் கோதை பரிபு கொண்டு ஓச்சி வணங்கு காழ் வங்கம் புகும் ஒருத்தி இறந்த களியான் இதழ் மறைந்த கண்ணள் பறந்தவை மூசக் கடிவாள் கடியும் இடம் தேற்றாள் சோர்ந்தனள் கை ஆங்க கடி காவில் கால் ஒற்ற ஒல்கி ஒசியாக் கொடி கொடி தம்மில் பிணங்கியவை போல் தெரி இழை ஆர்ப்ப மயங்கி இரிவுற்றார் வண்டிற்கு வண்டலவர் கண்டேன் யான் நின்னை நின் பெண்டிர் புலந்தனவும் நீ அவர் முன் அடி ஒல்கி உணர்த்தினவும் பல் மாண் கனவின் தலையிட்டு உரையல் சினைஇ யான் செய்வது இல் என்பதோ கூறு பொய் கூறேன் அன்ன வகையால் யான் கண்ட கனவு தான் நல் வாயா காண்டை நறு_நுதால் பல் மாணும் கூடிப் புணர்ந்தீர் பிரியன்-மின் நீடி பிரிந்தீர் புணர் தம்-மின் என்பன போல அரும்பு அவிழ் பூம் சினை-தோறும் இரும் குயில் ஆனாது அகவும் பொழுதினான் மேவர நான்மாடக்கூடல் மகளிரும் மைந்தரும் தேன் இமிர் காவில் புணர்ந்திருந்து ஆடுமார் ஆனா விருப்போடு அணி அயர்ப காமற்கு வேனில் விருந்து எதிர்கொண்டு #51 கலித்தொகை 93 - மருதக்கலி - மருதன் இளநாகனார் வண்டு ஊது சாந்தம் வடுக்கொள நீவிய தண்டாத் தீம் சாயல் பரத்தை வியன் மார்ப பண்டு இன்னை அல்லை-மன் ஈங்கு எல்லி வந்தீயக் கண்டது எவன் மற்று உரை நன்றும் தடைஇய மென்_தோளாய் கேட்டு ஈவாய் ஆயின் உடன் உறை வாழ்க்கைக்கு உதவி உறையும் கடவுளர்-கண் தங்கினேன் சோலை மலர் வேய்ந்த மான் பிணை அன்னார் பலர் நீ கடவுண்மை கொண்டு ஒழுகுவார் அவருள் எக் கடவுள் மற்று அக் கடவுளை செப்பீ-மன் முத்து ஏர் முறுவலாய் நாம் மணம் புக்கக்கால் இப் போழ்து போழ்து என்று அது வாய்ப்பக் கூறிய அக் கடவுள் மற்று அக் கடவுள் அது ஒக்கும் நாவுள் அழுந்து தலை சாய்த்து நீ கூறும் மாயமோ கைப்படுக்கப்பட்டாய் நீ கண்டாரை வாய் ஆக யாம் கூற வேட்டு ஈவாய் கேள் இனி பெறல் நசை வேட்கையின் நின் குறி வாய்ப்பப் பறிமுறை நேர்ந்த நகார் ஆகக் கண்டார்க்கு இறு முறை செய்யும் உருவொடு நும் இல் செறி முறை வந்த கடவுளைக் கண்டாயோ நறும் தண் தகரமும் நானமும் நாறும் நெறிந்த குரல் கூந்தல் நாள் அணிக்கு ஒப்ப நோக்கின் பிணி கொள்ளும் கண்ணொடு மேல்_நாள் நீ பூப் பலி விட்ட கடவுளைக் கண்டாயோ ஈர் அணிக்கு ஏற்ற ஒடியாப் படிவத்துச் சூர் கொன்ற செவ் வேலான் பாடிப் பல நாளும் ஆராக் கனை காமம் குன்றத்து நின்னொடு மாரி இறுத்த கடவுளைக் கண்டாயோ கண்ட கடவுளர் தம்முளும் நின்னை வெறி கொள் வியன் மார்பு வேறாகச் செய்து குறி கொளச் செய்தார் யார் செப்பு மற்று யாரும் சிறு வரைத் தங்கின் வெகுள்வர் செறு தக்காய் தேறினேன் சென்றீ நீ செல்லா விடுவாயேல் நல் தார் அகலத்துக்கு ஓர் சார மேவிய நெட்டு இரும் கூந்தல் கடவுளர் எல்லார்க்கும் முட்டுப்பாடு ஆகலும் உண்டு #52 கலித்தொகை 94 - மருதக்கலி - மருதன் இளநாகனார் என் நோற்றனை-கொல்லோ நீருள் நிழல் போல் நுடங்கிய மென் சாயல் ஈங்கு உருச் சுருங்கி இயலுவாய் நின்னோடு உசாவுவேன் நின்றீத்தை அன்னையோ காண்தகை இல்லாக் குறள் நாழிப் போழ்தினான் ஆண்தலைக்கு ஈன்ற பறழ்_மகனே நீ எம்மை வேண்டுவல் என்று விலக்கினை நின் போல்வார் தீண்டப்பெறுபவோ மற்று மாண்ட எறித்த படை போல் முடங்கி மடங்கி நெறித்துவிட்டு அன்ன நிறை ஏரால் என்னைப் பொறுக்கல்லா நோய் செய்தாய் பொறீஇ நிறுக்கல்லேன் நீ நல்கின் உண்டு என் உயிர் குறிப்புக் காண் வல்லுப் பலகை எடுத்து நிறுத்து அன்ன கல்லாக் குறள கடும் பகல் வந்து எம்மை இல்லத்து வா என மெய் கொளீஇ எல்லா நின் பெண்டிர் உளர்-மன்னோ கூறு நல்லாய் கேள் உக்கத்து மேலும் நடு உயர்ந்து வாள் வாய கொக்கு உரித்து அன்ன கொடு மடாய் நின்னை யான் புக்கு அகலம் புல்லின் நெஞ்சு ஊன்றும் புறம் புல்லின் அக்குளுத்துப் புல்லலும் ஆற்றேன் அருளீமோ பக்கத்துப் புல்லச் சிறிது போ சீத்தை மக்கள் முரியே நீ மாறு இனித் தொக்க மரக் கோட்டம் சேர்ந்து எழுந்த பூம் கொடி போல நிரப்பம் இல் யாக்கை தழீஇயினர் எம்மைப் புரப்பேம் என்பாரும் பலரால் பரத்தை என் பக்கத்துப் புல்லீயாய் என்னுமால் தொக்க உழுந்தினும் துவ்வாக் குறு வட்டா நின்னின் இழிந்ததோ கூனின் பிறப்பு கழிந்து ஆங்கே யாம் வீழ்தும் என்று தன் பின் செலவும் உற்றீயாக் கூனி குழையும் குழைவு காண் யாமை எடுத்து நிறுத்தற்றால் தோள் இரண்டும் வீசி யாம் வேண்டேம் என்று விலக்கவும் எம் வீழும் காமர் நடக்கும் நடை காண் கவர் கணைச் சாமனார் தம்முன் செலவு காண் ஓஒ காண் நம்முள் நகுதல் தொடீஇயர் நம்முள் நாம் உசாவுவம் கோன் அடி தொட்டேன் ஆங்கு ஆக சாயல் இன் மார்ப அடங்கினேன் ஏஎ பேயும் பேயும் துள்ளலுறும் எனக் கோயிலுள் கண்டார் நகாமை வேண்டுவல் தண்டாத் தகடு உருவ வேறாகக் காவின் கீழ்ப் போதர் அகடு ஆரப் புல்லி முயங்குவேம் துகள் தபு காட்சி அவையத்தார் ஓலை முகடு காப்பு யாத்துவிட்டு ஆங்கு #53 கலித்தொகை 95 - மருதக்கலி - மருதன் இளநாகனார் நில் ஆங்கு நில் ஆங்கு இவர்தரல் எல்லா நீ நாறு இரும் கூந்தலார் இல் செல்வாய் இவ் வழி ஆறு மயங்கினை போறி நீ வந்து ஆங்கே மாறு இனி நின் ஆங்கே நின் சேவடி சிவப்பச் செறிந்து ஒளிர் வெண்பல்லாய் யாம் வேறு இயைந்த குறும்பூழ்ப் போர் கண்டேம் அனைத்து அல்லது யாதும் அறிந்ததோ இல்லை நீ வேறு ஓர்ப்பது குறும்பூழ்ப் போர் கண்டமை கேட்டேன் நீ என்றும் புதுவன ஈகை வளம் பாடிக் காலின் பிரியாக் கவி கை புலையன் தன் யாழின் இகுத்த செவி சாய்த்து இனி இனிப் பட்டன ஈகைப் போர் கண்டாயும் போறி மெய் எண்ணின் தபுத்த புலர்வு இல் புண் ஊரவர் கவ்வை உளைந்தீயாய் அல்கல் நின் தாரின் வாய்க் கொண்டு முயங்கிப் பிடி மாண்டு போர் வாய்ப்பக் காணினும் போகாது கொண்டு ஆடும் பார்வைப் போர் கண்டாயும் போறி நின் தோள் மேலாம் ஈரமாய்விட்டன புண் கொடிற்றுப் புண் செய்யாது மெய் முழுதும் கையின் துடைத்து நீ வேண்டினும் வெல்லாது கொண்டு ஆடும் ஒட்டிய போர் கண்டாயும் போறி முகம் தானே கொட்டிக் கொடுக்கும் குறிப்பு ஆயின் ஆய்_இழாய் அன்னவை யான் ஆங்கு அறியாமை போற்றிய நின் மெய் தொடுகு அன்னையோ மெய்யை பொய் என்று மயங்கிய கை ஒன்று அறிகல்லாய் போறி காண் நீ நல்லாய் பொய் எல்லாம் ஏற்றி தவறு தலைப்பெய்து கையொடு கண்டாய் பிழைத்தேன் அருள் இனி அருளுகம் யாம் யாரேம் எல்லா தெருள அளித்து நீ பண்ணிய பூழ் எல்லாம் இன்னும் விளித்து நின் பாணனோடு ஆடி அளித்தி விடலை நீ நீத்தலின் நோய் பெரிது ஏய்க்கும் நடலைப்பட்டு எல்லாம் நின் பூழ் #54 கலித்தொகை 96 - மருதக்கலி - மருதன் இளநாகனார் ஏந்து எழில் மார்ப எதிர் அல்ல நின் வாய்ச் சொல் பாய்ந்து ஆய்ந்த தானைப் பரிந்து ஆனா மைந்தினை சாந்து அழி வேரை சுவல் தாழ்ந்த கண்ணியை யாங்குச் சென்று ஈங்கு வந்தீத்தந்தாய் கேள் இனி ஏந்தி எதிர் இதழ் நீலம் பிணைந்து அன்ன கண்ணாய் குதிரை வழங்கி வருவல் அறிந்தேன் குதிரை தான் பால் பிரியா ஐங்கூந்தல் பல் மயிர் கொய் சுவல் மேல் விரித்து யாத்த சிகழிகைச் செவ் உளை நீல மணிக் கடிகை வல்லிகை யாப்பின் கீழ் ஞால் இயல் மென் காதின் புல்லிகைச் சாமரை மத்திகை கண்ணுறையாகக் கவின் பெற்ற உத்தி ஒரு காழ் நூல் உத்தரியத் திண் பிடி நேர் மணி நேர் முக்காழ்ப் பல்பல கண்டிகைத் தார் மணி பூண்ட தமனிய மேகலை நூபுரப் புட்டில் அடியொடு அமைத்து யாத்த வார் பொலம் கிண்கிணி ஆர்ப்ப இயற்றி நீ காதலித்து ஊர்ந்த நின் காமக் குதிரையை ஆய் சுதை மாடத்து அணி நிலாமுற்றத்துள் ஆதி கொளீஇ அசையினை ஆகுவை வாதுவன் வாழிய நீ சேகா கதிர் விரி வைகலில் கை வாரூஉக் கொண்ட மதுரைப் பெரு முற்றம் போல நின் மெய்க்-கண் குதிரையோ வீறியது கூர் உகிர் மாண்ட குளம்பின் அது நன்றே கோரமே வாழி குதிரை வெதிர் உழக்கு நாழியால் சேதிகைக் குத்திக் குதிரை உடல் அணி போல நின் மெய்க்-கண் குதிரையோ கவ்வியது சீத்தை பயம் இன்றி ஈங்குக் கடித்தது நன்றே வியமமே வாழி குதிரை மிக நன்று இனி அறிந்தேன் இன்று நீ ஊர்ந்த குதிரை பெரு மணம் பண்ணி அறத்தினில் கொண்ட பருமக் குதிரையோ அன்று பெரும நின் ஏதில் பெரும் பாணன் தூது ஆட ஆங்கே ஓர் வாதத்தான் வந்த வளிக் குதிரை ஆதி உரு அழிக்கும் அக் குதிரை ஊரல் நீ ஊரின் பரத்தை பரியாக வாதுவனாய் என்றும் மற்று அச் சார்த் திரி குதிரை ஏறிய செல் #55 கலித்தொகை 97 - மருதக்கலி - மருதன் இளநாகனார் அன்னை கடும் சொல் அறியாதாய் போல நீ என்னைப் புலப்பது ஒறுக்குவென்-மன் யான் சிறுகாலை இல் கடை வந்து குறி செய்த அவ் வழி என்றும் யான் காணேன் திரிதர எவ் வழிப் பட்டாய் சமன் ஆக இவ் எள்ளல் முத்து ஏர் முறுவலாய் நம் வலைப்பட்டது ஓர் புத்து யானை வந்தது காண்பான் யான் தங்கினேன் ஒக்கும் அவ் யானை வனப்பு உடைத்து ஆகலும் கேட்டேன் அவ் யானை தான் சுண்ண நீறு ஆடி நறு நறா நீர் உண்டு ஒள் நுதல் யாத்த திலக அவிர் ஓடைத் தொய்யில் பொறித்த வன முலை வான் கோட்டுத் தொய்யக தோட்டிக் குழை தாழ் வடி மணி உத்தி பொறித்த புனை பூண் பருமத்து முத்து ஏய்க்கும் வெண் பல் நகை திறந்து நல் நகர் வாயில் கதவ வெளில் சார்ந்து தன் நலம் காட்டித் தகையினால் கால் தட்டி வீழ்க்கும் தொடர் தொடராக வலந்து படர் செய்யும் மென் தோள் தடக் கையின் வாங்கித் தன் கண்டார் நலம் கவளம் கொள்ளும் நகை முக வேழத்தை இன்று கண்டாய் போல் எவன் எம்மைப் பொய்ப்பது நீ எல்லா கெழீஇத் தொடி செறித்த தோள் இணை தத்தித் தழீஇக்கொண்டு ஊர்ந்தாயும் நீ குழீஇ அவாவினால் தேம்புவார் இல் கடை ஆறா உவா அணி ஊர்ந்தாயும் நீ மிகாஅது சீர்ப்பட உண்ட சிறு களி ஏர் உண்கண் நீர்க்கு விட்டு ஊர்ந்தாயும் நீ சார்ச் சார் நெறி தாழ் இரும் கூந்தல் நின் பெண்டிர் எல்லாம் சிறு பாகர் ஆக சிரற்றாது மெல்ல விடாஅது நீ எம் இல் வந்தாய் அவ் யானை கடாஅம் படும் இடத்து ஓம்பு #56 கலித்தொகை 98 - மருதக்கலி - மருதன் இளநாகனார் யாரை நீ எம் இல் புகுதர்வாய் ஓரும் புதுவ மலர் தேரும் வண்டே போல் யாழ வதுவை விழவு அணி வைகலும் காட்டினையாய் மாட்டுமாட்டு ஓடி மகளிர் தரத்தர பூட்டு மான் திண் தேர் புடைத்த மறுகு எல்லாம் பாட்டு ஆதல் சான்ற நின் மாயப் பரத்தைமை காட்டிய வந்தமை கைப்படுத்தேன் பண்டு எலாம் கேட்டும் அறிவேன்-மன் யான் தெரி கோதை அம் நல்லாய் தேறீயல் வேண்டும் பொரு கரை வாய் சூழ்ந்த பூ மலி வையை வரு புனல் ஆடத் தவிர்ந்தேன் பெரிது என்னைச் செய்யா மொழிவது எவன் ஓஒ புனல் ஆடினாய் எனவும் கேட்டேன் புனல் ஆங்கே நீள் நீர் நெறி கதுப்பு வாரும் அறல் ஆக மாண் எழில் உண்கண் பிறழும் கயல் ஆகக் கார் மலர் வேய்ந்த கமழ் பூம் பரப்பு ஆக நாணுச் சிறை அழித்து நன் பகல் வந்த அவ் யாணர் புதுப் புனல் ஆடினாய் முன் மாலைப் பாணன் புணை ஆகப் புக்கு ஆனாது அளித்து அமர் காதலோடு அப் புனல் ஆடி வெளிப்படு கவ்வையை யான் அறிதல் அஞ்சிக் குளித்து ஒழுகினாய் எனவும் கேட்டேன் குளித்து ஆங்கே போர்த்த சினத்தான் புருவத் திரை இடா ஆர்க்கும் ஞெகிழத்தான் நல் நீர் நடை தட்பச் சீர்த் தக வந்த புதுப் புனல் நின்னைக் கொண்டு ஈர்த்து உய்ப்பக் கண்டார் உளர் ஈர்த்தது உரை சால் சிறப்பின் நின் நீர் உள்ளம் வாங்கப் புரை தீர் புதுப் புனல் வெள்ளத்தின் இன்னும் கரை கண்டதூஉம் இலை நிரை_தொடீஇ பொய்யா வாள் தானைப் புனை கழல் கால் தென்னவன் வையைப் புதுப் புனல் ஆடத் தவிர்ந்ததைத் தெய்வத்தின் தேற்றி தெளிப்பேன் பெரிது என்னை செய்யா மொழிவது எவன் மெய்யதை மல்கு மலர் வேய்ந்த மாயப் புதுப் புனல் பல் காலும் ஆடிய செல்வுழி ஒல்கிக் களைஞரும் இல் வழிக் கால் ஆழ்ந்து தேரோடு இள மணலுள் படல் ஓம்பு முளை நேர் முறுவலார்க்கு ஓர் நகை செய்து #57 கலித்தொகை 99 - மருதக்கலி - மருதன் இளநாகனார் நறவினை வரைந்தார்க்கும் வரையார்க்கும் அவை எடுத்து அற வினை இன்புறூஉம் அந்தணர் இருவரும் திறம் வேறு செய்தியின் நூல் நெறி பிழையாது குழவியைப் பார்த்து உறூஉம் தாய் போல் உலகத்து மழை சுரந்து அளித்து ஓம்பும் நல் ஊழி யாவர்க்கும் பிழையாது வருதல் நின் செம்மையின் தர வாய்ந்த இழை அணி கொடித் திண் தேர் இன மணி யானையாய் அறன் நிழல் எனக் கொண்டாய் ஆய் குடை அக் குடை புற நிழல் கீழ்ப்பட்டாளோ இவள் இவண் காண்டிகா பிறை நுதல் பசப்பு ஊரப் பெரு விதுப்புற்றாளை பொய்யாமை நுவலும் நின் செங்கோல் அச் செங்கோலின் செய் தொழில் கீழ்ப்பட்டாளோ இவள் இவண் காண்டிகா காம நோய் கடைக்கூட்ட வாழும் நாள் முனிந்தாளை ஏமம் என்று இரங்கும் நின் எறி முரசம் அ முரசின் ஏமத்து இகந்தாளோ இவள் இவண் காண்டிகா வேய் நலம் இழந்த தோள் கவின் வாட இழப்பாளை ஆங்கு நெடிது சேண் இகந்தவை காணினும் தான் உற்ற வடுக் காட்டக் கண் காணாது அற்று ஆக என் தோழி தொடி கொட்ப நீத்த கொடுமையைக் கடிது என உணராமை கடிந்ததோ நினக்கே #58 கலித்தொகை 100 - மருதக்கலி - மருதன் இளநாகனார் ஈண்டு நீர் மிசைத் தோன்றி இருள் சீக்கும் சுடரே போல் வேண்டாதார் நெஞ்சு உட்க வெருவந்த கொடுமையும் நீண்டு தோன்று உயர் குடை நிழல் எனச் சேர்ந்தார்க்குக் காண்தகு மதி என்னக் கதிர் விடு தண்மையும் மாண்ட நின் ஒழுக்கத்தான் மறு இன்றி வியன் ஞாலத்து யாண்டோரும் தொழுது ஏத்தும் இரங்கு இசை முரசினாய் ஐயம் தீர்ந்து யார்-கண்ணும் அரும் தவ முதல்வன் போல் பொய் கூறாய் என நின்னைப் புகழ்வது கெடாதோ தான் நல்கி நீ தெளித்த சொல் நசை எனத் தேறியாள் பல் இதழ் மலர் உண்கண் பனி மல்கக் காணுங்கால் சுரந்த வான் பொழிந்து அற்றாச் சூழ நின்று யாவர்க்கும் இரந்தது நசை வாட்டாய் என்பது கெடாதோ தான் கலங்கு அஞர் உற்று நின் கமழ் மார்பு நசைஇயாள் இலங்கு கோல் அவிர் தொடி இறை ஊரக் காணுங்கால் உறை வரை நிறுத்த கோல் உயிர் திறம் பெயர்ப்பான் போல் முறை செய்தி என நின்னை மொழிவது கெடாதோ தான் அழி படர் வருத்த நின் அளி வேண்டிக் கலங்கியாள் பழி தபு வாள் முகம் பசப்பு ஊரக் காணுங்கால் ஆங்கு தொல் நலம் இழந்தோள் நீ துணை எனப் புணர்ந்தவள் இன் உறல் வியன் மார்ப இனையையால் கொடிது என நின்னை யான் கழறுதல் வேண்டுமோ என்னோர்கள் இடும்பையும் களைந்தீவாய் நினக்கே #59 குறுந்தொகை 77 பாலை - மதுரை மருதன் இளநாகனார் அம்ம வாழி தோழி யாவதும் தவறு எனின் தவறோ இலவே வெம் சுரத்து உலந்த வம்பலர் உவல் இடு பதுக்கை நெடு நல் யானைக்கு இடு நிழல் ஆகும் அரிய கானம் சென்றோர்க்கு எளிய ஆகிய தட மென் தோளே #60 குறுந்தொகை 160 குறிஞ்சி - மதுரை மருதன் இளநாகனார் நெருப்பின் அன்ன செம் தலை அன்றில் இறவின் அன்ன கொடு வாய்ப் பெடையொடு தடவின் ஓங்கு சினைக் கட்சியில் பிரிந்தோர் கையற நரலும் நள்ளென் யாமத்துப் பெரும் தண் வாடையும் வாரார் இஃதோ தோழி நம் காதலர் வரவே #61 குறுந்தொகை 279 முல்லை - மதுரை மருதன் இளநாகனார் திரி மருப்பு எருமை இருள் நிற மை ஆன் வரும் இடறு யாத்த பகு வாய்த் தெண் மணி புலம்பு கொள் யாமத்து இயங்கு-தொறு இசைக்கும் இது பொழுது ஆகவும் வாரார்-கொல்லோ மழை கழூஉ மறந்த மா இரும் துறுகல் துகள் சூழ் யானையின் பொலியத் தோன்றும் இரும் பல் குன்றம் போகி திருந்து இறை பணைத் தோள் உள்ளாதோரே #62 குறுந்தொகை 367 மருதம் - மதுரை மருதன் இளநாகனார் கொடியோர் நல்கார் ஆயினும் யாழ நின் தொடி விளங்கு இறைய தோள் கவின் பெறீஇயர் உவக் காண் தோழி அவ் வந்திசினே தொய்யல் மா மழை தொடங்கலின் அவர் நாட்டுப் பூசல் ஆயம் புகன்று இழி அருவி மண்ணுறு மணியின் தோன்றும் தண் நறும் துறுகல் ஓங்கிய மலையே #63 நற்றிணை 21 முல்லை - மருதன் இளநாகனார் விரைப் பரி வருந்திய வீங்கு செலல் இளையர் அரைச் செறி கச்சை யாப்பு அழித்து அசைஇ வேண்டு அமர் நடையர் மென்மெல வருக தீண்டா வை முள் தீண்டி நாம் செலற்கு ஏ-மதி வலவ தேரே உதுக் காண் உருக்குறு நறு நெய் பால் விதிர்த்து அன்ன அரிக் குரல் மிடற்ற அம் நுண் பல் பொறிக் காமரு தகைய கான வாரணம் பெயல் நீர் போகிய வியல் நெடும் புறவில் புலரா ஈர் மணல் மலிரக் கெண்டி நாள்_இரை கவர மாட்டித் தன் பேடை நோக்கிய பெரும் தகு நிலையே #64 நற்றிணை 39 குறிஞ்சி - மருதன் இளநாகனார் சொல்லின் சொல் எதிர் கொள்ளாய் யாழ நின் திரு முகம் இறைஞ்சி நாணுதி கதுமெனக் காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ கொடும் கேழ் இரும் புறம் நடுங்கக் குத்திப் புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின் தலை மருப்பு ஏய்ப்பக் கடை மணி சிவந்த நின் கண்ணே கதவ அல்ல நண்ணார் அரண் தலை மதிலர் ஆகவும் முரசு கொண்டு ஓம்பு அரண் கடந்த அடு போர்ச் செழியன் பெரும் பெயர்க் கூடல் அன்ன நின் கரும்பு உடைத் தோளும் உடையவால் அணங்கே #65 நற்றிணை 103 பாலை - மருதன் இள நாகனார் ஒன்று தெரிந்து உரைத்திசின் நெஞ்சே புன் கால் சிறியிலை வேம்பின் பெரிய கொன்று கடாஅம் செருக்கிய கடும் சின முன்பின் களிறு நின்று இறந்த நீர் அல் ஈரத்துப் பால் வீ தோல் முலை அகடு நிலம் சேர்த்திப் பசி அட முடங்கிய பைம் கண் செந்நாய் மாயா வேட்டம் போகிய கணவன் பொய்யா மரபின் பிணவு நினைந்து இரங்கும் விருந்தின் வெம் காட்டு வருந்துதும் யாமே ஆள்வினைக்கு அகல்வாம் எனினும் மீள்வாம் எனினும் நீ துணிந்ததுவே #66 நற்றிணை 194 குறிஞ்சி - மதுரை மருதன் இளநாகனார் அம்ம வாழி தோழி கைம்மாறு யாது செய்வாம்-கொல் நாமே கய வாய்க் கன்று உடை மருங்கின் பிடி புணர்ந்து இயலும் வலன் உயர் மருப்பின் நிலம் ஈர்த் தடக் கை அண்ணல் யானைக்கு அன்றியும் கல் மிசைத் தனி நிலை இதணம் புலம்பப் போகி மந்தியும் அறியா மரம் பயில் ஒரு சிறைக் குன்ற வெற்பனொடு நாம் விளையாட இரும்பு கவர்கொண்ட ஏனல் பெரும் குரல் கொள்ளாச் சிறு பசும் கிளிக்கே #67 நற்றிணை 216 மருதம் - மதுரை மருதன் இளநாகனார் துனி தீர் கூட்டமொடு துன்னார் ஆயினும் இனிதே காணுநர்க் காண்புழி வாழ்தல் கண் உறு விழுமம் கை போல் உதவி நம் உறு துயரம் களையார் ஆயினும் இன்னாது அன்றே அவர் இல் ஊரே எரி மருள் வேங்கைக் கடவுள் காக்கும் குருகு ஆர் கழனியின் இதணத்து ஆங்கண் ஏதிலாளன் கவலை கவற்ற ஒரு முலை அறுத்த திருமாவுண்ணிக் கேட்டோர் அனையர் ஆயினும் வேட்டோர் அல்லது பிறர் இன்னாரே #68 நற்றிணை 283 நெய்தல் - மதுரை மருதன் இளநாகனார் ஒண் நுதல் மகளிர் ஓங்கு கழிக் குற்ற கண் நேர் ஒப்பின கமழ் நறு நெய்தல் அகல் வரிச் சிறு மனை அணியும் துறைவ வல்லோர் ஆய்ந்த தொல் கவின் தொலைய இன்னை ஆகுதல் தகுமோ ஓங்கு திரை முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி ஏமுற விளங்கிய சுடரினும் வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே #69 நற்றிணை 290 மருதம் - மதுரை மருதன் இளநாகனார் வயல் வெள்_ஆம்பல் சூடு தரு புதுப் பூக் கன்று உடைப் புனிற்று ஆ தின்ற மிச்சில் ஓய் நடை முது பகடு ஆரும் ஊரன் தொடர்பு நீ வெஃகினை ஆயின் என் சொல் கொள்ளல்-மாதோ முள் எயிற்றோயே நீயே பெரு நலத்தையே அவனே நெடு நீர்ப் பொய்கை நடுநாள் எய்தித் தண் கமழ் புது மலர் ஊதும் வண்டு என மொழிப மகன் என்னாரே #70 நற்றிணை 302 பாலை - மதுரை மருதன் இளநாகனார் இழை அணி மகளிரின் விழைதகப் பூத்த நீடு சுரி இணர சுடர் வீக் கொன்றைக் காடு கவின் பூத்து ஆயினும் நன்றும் வரு மழைக்கு எதிரிய மணி நிற இரும் புதல் நரை நிறம் படுத்த நல் இணர்த்து எறுழ் வீ தாஅம் தேரலர்-கொல்லோ சேய் நாட்டுக் களிறு உதைத்து ஆடிய கவிழ் கண் இடு நீறு வெளிறு இல் காழ வேலம் நீடிய பழங்கண் முது நெறி மறைக்கும் வழங்கு அரும் கானம் இறந்திசினோரே #71 நற்றிணை 326 குறிஞ்சி - மதுரை மருதன் இளநாகனார் கொழும் சுளைப் பலவின் பயம் கெழு கவாஅன் செழும் கோள் வாங்கிய மாச் சினைக் கொக்கின் மீன் குடை நாற்றம் தாங்கல் செல்லாது துய்த் தலை மந்தி தும்மும் நாட நினக்கும் உரைத்தல் நாணுவல் இவட்கே நுண் கொடிப் பீரத்து ஊழ் உறு பூ எனப் பசலை ஊரும் அன்னோ பல் நாள் அறி அமர் வனப்பின் எம் கானம் நண்ண வண்டு எனும் உணரா ஆகி மலர் என மரீஇ வரூஉம் இவள் கண்ணே #72 நற்றிணை 341 குறிஞ்சி - மதுரை மருதன் இளநாகனார் வங்கா வரிப் பறைச் சிறு பாடு முணையின் செம் பொறி அரக்கின் வட்டு நா வடிக்கும் விளையாடு இன் நகை அழுங்காப் பால் மடுத்து அலையா உலவை ஓச்சிச் சில கிளையாக் குன்றக் குறவனொடு குறு நொடி பயிற்றும் துணை நன்கு உடையள் மடந்தை யாமே வெம் பகை அரு முனைத் தண் பெயல் பொழிந்து என நீர் இரங்கு அரைநாள் மயங்கிக் கூதிரொடு வேறு புல வாடை அலைப்பத் துணையிலேம் தமியேம் பாசறையேமே #73 நற்றிணை 362 பாலை - மதுரை மருதன் இளநாகனார் வினை அமை பாவையின் இயலி நுந்தை மனை வரை இறந்து வந்தனை ஆயின் தலை_நாட்கு எதிரிய தண் பத எழிலி அணி மிகு கானத்து அகன் புறம் பரந்த கடும் செம் மூதாய் கண்டும் கொண்டும் நீ விளையாடுக சிறிதே யானே மழ களிறு உரிஞ்சிய பராரை வேங்கை மணல் இடு மருங்கின் இரும் புறம் பொருந்தி அமர் வரின் அஞ்சேன் பெயர்க்குவென் நுமர் வரின் மறைகுவென் மாஅயோளே #74 நற்றிணை 392 நெய்தல் - மதுரை மருதன் இளநாகனார் கடும் சுறா எறிந்த கொடும் தாள் தந்தை புள் இமிழ் பெரும் கடல் கொள்ளான் சென்று என மனை அழுது ஒழிந்த புன் தலைச் சிறாஅர் துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின் பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும் பெண்ணை வேலி உழை கண் சீறூர் நன் மனை அறியின் நன்று-மன்-தில்ல செம்மல் நெஞ்சமொடு தாம் வந்து பெயர்ந்த கானலொடு அழியுநர் போலாம் பானாள் முனி படர் களையினும் களைப நனி பேர் அன்பினர் காதலோரே #75 புறநானூறு 52 - (மதுரை )மருதன் இளநாகனார் **பாடப்பட்டோன்: பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் அணங்கு உடை நெடும் கோட்டு அளையகம் முனைஇ முணங்கு நிமிர் வய_மான் முழு வலி ஒருத்தல் ஊன் நசை உள்ளம் துரப்ப இசை குறித்துத் தான் வேண்டு மருங்கின் வேட்டு எழுந்து ஆங்கு வடபுல மன்னர் வாட அடல் குறித்து இன்னா வெம் போர் இயல் தேர் வழுதி இது நீ கண்ணியது ஆயின் இரு நிலத்து யார்-கொல் அளியர் தாமே ஊர்-தொறும் மீன் சுடு புகையின் புலவு நாறு நெடும் கொடி வயல் உழை மருதின் வாங்கு சினை வலக்கும் பெரு நல் யாணரின் ஒரீஇ இனியே கலி கெழு கடவுள் கந்தம் கைவிடப் பலி கண்மாறிய பாழ்படு பொதியில் நரை மூதாளர் நாய் இடக் குழிந்த வல்லின் நல் அகம் நிறையப் பல் பொறிக் கான வாரணம் ஈனும் காடு ஆகி விளியும் நாடு உடையோரே #76 புறநானூறு 55 - மதுரை மருதன் இளநாகனார் **பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய **நன்மாறன் ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ ஒரு கணை கொண்டு மூ எயில் உடற்றிப் பெரு விறல் அமரர்க்கு வெற்றி தந்த கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப் பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல வேந்து மேம்பட்ட பூம் தார் மாற கடும் சினத்த கொல் களிறும் கதழ் பரிய கலி மாவும் நெடும் கொடிய நிமிர் தேரும் நெஞ்சு உடைய புகல் மறவரும் என நான்கு உடன் மாண்டது ஆயினும் மாண்ட அற நெறி முதற்றே அரசின் கொற்றம் அதனால் நமர் எனக் கோல் கோடாது பிறர் எனக் குணம் கொல்லாது ஞாயிற்று அன்ன வெம் திறல் ஆண்மையும் திங்கள் அன்ன தண் பெரும் சாயலும் வானத்து அன்ன வண்மையும் மூன்றும் உடையை ஆகி இல்லோர் கையற நீ நீடு வாழிய நெடுந்தகை தாழ் நீர் வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில் நெடுவேள் நிலைஇய காமர் வியன் துறை கடு வளி தொகுப்ப ஈண்டிய வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே #77 புறநானூறு 138 - (மதுரை)மருதன் இளநாகனார் **பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன் ஆன் இனம் கலித்த அதர் பல கடந்து மான் இனம் கலித்த மலை பின் ஒழிய மீன் இனம் கலித்த துறை பல நீந்தி உள்ளி வந்த வள் உயிர்ச் சீறியாழ் சிதாஅர் உடுக்கை முதாஅரிப் பாண நீயே பேர் எண்ணலையே நின் இறை மாறி வா என மொழியலன்-மாதோ ஒலி இரும் கதுப்பின் ஆய்_இழை கணவன் கிளி மரீஇய வியன் புனத்து மரன் அணி பெரும் குரல் அனையன் ஆதலின் நின்னை வருதல் அறிந்தனர் யாரே #78 புறநானூறு 139 - (மதுரை) மருதன் இளநாகனார் **பாடப்பட்டோன்: ஆய் அண்டிரன் சுவல் அழுந்தப் பல காய சில் ஓதிப் பல் இளைஞருமே அடி வருந்த நெடிது ஏறிய கொடி மருங்குல் விறலியருமே வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன் மெய் கூறுவல் ஓடாப் பூட்கை உரவோர் மருக உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந மாயா உள்ளமொடு பரிசில் துன்னி கனி_பதம் பார்க்கும் காலை அன்றே ஈதல் ஆனான் வேந்தே வேந்தற்குச் சாதல் அஞ்சாய் நீயே ஆயிடை இரு நிலம் மிளிர்ந்திசின் ஆஅங்கு ஒரு நாள் அரும் சமம் வருகுவது ஆயின் வருந்தலும் உண்டு என் பைதல் அம் கடும்பே #79 புறநானூறு 349 - மதுரை மருதன் இளநாகனார் நுதி வேல் கொண்டு நுதல் வியர் தொடையாக் கடிய கூறும் வேந்தே தந்தையும் நெடிய அல்லது பணிந்து மொழியலனே இஃது இவர் படிவம் ஆயின் வை எயிற்று அரி மதர் மழைக் கண் அம் மா அரிவை மரம் படு சிறு தீப் போல அணங்கு ஆயினள் தான் பிறந்த ஊர்க்கே &402 - மலையனார் #1 நற்றிணை 93 குறிஞ்சி - மலையனார் பிரசம் தூங்கப் பெரும் பழம் துணர வரை வெள் அருவி மாலையின் இழிதரக் கூலம் எல்லாம் புலம் புக நாளும் மல் அற்று அம்ம இ மலை கெழு வெற்பு எனப் பிரிந்தோர் இரங்கும் பெரும் கல் நாட செல்கம் எழுமோ சிறக்க நின் ஊழி மருங்கு மறைத்த திருந்து இழைப் பணைத் தோள் நல்கூர் நுசுப்பின் மெல் இயல் குறுமகள் பூண் தாழ் ஆகம் நாண் அட வருந்திய பழங்கண் மாமையும் உடைய தழங்கு குரல் மயிர்க் கண் முரசினோரும் முன் உயிர்க் குறியெதிர்ப்பை பெறல் அரும்-குரைத்தே &403 - மள்ளனார் #1 குறுந்தொகை 72 குறிஞ்சி - மள்ளனார் பூ ஒத்து அலமரும் தகைய ஏ ஒத்து எல்லாரும் அறிய நோய் செய்தனவே தே மொழித் திரண்ட மென் தோள் மா மலைப் பரீஇ வித்திய ஏனல் குரீஇ ஓப்புவாள் பெரு மழைக் கண்ணே #2 நற்றிணை 204 குறிஞ்சி - மள்ளனார் தளிர் சேர் தண் தழை தைஇ நுந்தை குளிர் வாய் வியன் புனத்து எல் பட வருகோ குறும் சுனைக் குவளை அடைச்சி நாம் புணரிய நறும் தண் சாரல் ஆடுகம் வருகோ இன் சொல் மேவலைப்பட்ட என் நெஞ்சு உணக் கூறு இனி மடந்தை நின் கூர் எயிறு_உண்கு என யான் தன் மொழிதலின் மொழி எதிர்வந்து தான் செய் குறி நிலை இனிய கூறி ஏறு பிரி மடப் பிணை கடுப்ப வேறுபட்டு உறு கழை நிவப்பின் சிறுகுடிப் பெயரும் கொடிச்சி செல் புறம் நோக்கி விடுத்த நெஞ்சம் விடல் ஒல்லாதே &404 - (மதுரைக் காஞ்சிப் புலவர்)மாங்குடிமருதனார் #1 அகநானூறு 89 பாலை - (மதுரைக் காஞ்சிப் புலவர்) தெறு கதிர் ஞாயிறு நடு நின்று காய்தலின் உறு பெயல் வறந்த ஓடு தேர் நனம் தலை உருத்து எழு குரல குடிஞைச் சேவல் புல் சாய் விடரகம் புலம்ப வரைய கல் எறி இசையின் இரட்டும் ஆங்கண் சிள்வீடு கறங்கும் சிறி இலை வேலத்து ஊழுறு விளை நெற்று உதிரக் காழியர் கவ்வைப் பரப்பின் வெவ் உவர்ப்பு ஒழியக் களரி பரந்த கல் நெடு மருங்கின் விளர் ஊன் தின்ற வீங்கு சிலை மறவர் மை படு திண் தோள் மலிர வாட்டி பொறை மலி கழுதை நெடு நிரை தழீஇய திருந்து வாள் வயவர் அரும் தலை துமித்த படு புலாக் கமழும் ஞாட்பில் துடி இகுத்து அரும் கலம் தெறுத்த பெரும் புகல் வலத்தர் வில் கெழு குறும்பில் கோள் முறை பகுக்கும் கொல்லை இரும் புனம் நெடிய என்னாது மெல்லென் சேவடி மெலிய ஏக வல்லுநள்-கொல்லோ தானே தேம் பெய்து அளவுறு தீம் பால் அலைப்பவும் உண்ணாள் இடு மணல் பந்தருள் இயலும் நெடு மென் பணைத் தோள் மாஅயோளே #2 குறுந்தொகை 164 மருதம் - மாங்குடிமருதனார் கணைக் கோட்டு வாளைக் கமம் சூல் மட நாகு துணர்த் தேக் கொக்கின் தீம் பழம் கதூஉம் தொன்று முதிர் வேளிர் குன்றூர்க் குணாது தண் பெரும் பவ்வம் அணங்குக தோழி மனையோள் மடமையின் புலக்கும் அனையேம் மகிழ்நற்கு யாம் ஆயினம் எனினே #3 குறுந்தொகை 173 குறிஞ்சி - (மதுரைக் காஞ்சிப் புலவன்) பொன் நேர் ஆவிரைப் புது மலர் மிடைந்த பல் நூல் மாலைப் பனை படு கலி மாப் பூண் மணி கறங்க ஏறி நாண் அட்டு பழி படர் உள் நோய் வழிவழி சிறப்ப இன்னள் செய்தது இது என முன் நின்று அவள் பழி நுவலும் இவ் ஊர் ஆங்கு உணர்ந்தமையின் ஈங்கு ஏகுமார் உளேனே #4 குறுந்தொகை 302 குறிஞ்சி - (மாங்குடி கிழார்)மாங்குடிமருதனார் உரைத்திசின் தோழி அது புரைத்தோ அன்றே அரும் துயர் உழத்தலும் ஆற்றாம் அதன்தலைப் பெரும்பிறிது ஆகல் அதனினும் அஞ்சுதும் அன்னோ இன்னும் நல் மலை நாடன் பிரியா நண்பினர் இருவரும் என்னும் அலர் அதற்கு அஞ்சினன்-கொல்லோ பலர் உடன் துஞ்சு ஊர் யாமத்தானும் என் நெஞ்சத்து அல்லது வரவு அறியானே #5 நற்றிணை 120 மருதம் - (மாங்குடி கிழார்)மாங்குடிமருதனார் தட மருப்பு எருமை மட நடைக் குழவி தூண்-தொறும் யாத்த காண்தகு நல் இல் கொடும் குழை பெய்த செழும் செய் பேதை சிறு தாழ் செறித்த மெல் விரல் சேப்ப வாளை ஈர்ம் தடி வல்லிதின் வகைஇப் புகை உண்டு அமர்த்த கண்ணள் தகைபெறப் பிறை நுதல் பொறித்த சிறு நுண் பல் வியர் அம் துகில் தலையில் துடையினள் நம் புலந்து அட்டிலோளே அம் மா அரிவை எமக்கே வருக-தில் விருந்தே சிவப்பு ஆன்று சிறு முள் எயிறு தோன்ற முறுவல் கொண்ட முகம் காண்கம்மே #6 நற்றிணை 123 நெய்தல் - (காஞ்சிப் புலவனார்)மாங்குடிமருதனார் உரையாய் வாழி தோழி இரும் கழி இரை ஆர் குருகின் நிரைப் பறைத் தொழுதி வாங்கு மடல் குடம்பைத் தூங்கு இருள் துவன்றும் பெண்ணை ஓங்கிய வெண் மணல் படப்பைக் கானல் ஆயமொடு காலைக் குற்ற கள் கமழ் அலர தண் நறும் காவி அம் பகை நெறித் தழை அணிபெறத் தைஇ வரி புனை சிற்றில் பரி சிறந்து ஓடிப் புலவுத் திரை உதைத்த கொடும் தாள் கண்டல் சேர்ப்பு ஏர் ஈர் அளை அலவன் பார்க்கும் சிறு விளையாடலும் அழுங்கி நினைக்கு உறு பெரும் துயரம் ஆகிய நோயே #7 பத்துப்பாட்டு - 6. மதுரைக்காஞ்சி - மாங்குடி மருதனார் **தலையாலங்கானத்துச் செரு வென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியது ஓங்கு திரை வியன் பரப்பின் ஒலி முந்நீர் வரம்பு ஆக தேன் தூங்கும் உயர் சிமைய மலை நாறிய வியன் ஞாலத்து வல மாதிரத்தான் வளி கொட்ப வியல் நாள்_மீன் நெறி ஒழுக பகல் செய்யும் செம் ஞாயிறும் இரவுச் செய்யும் வெண் திங்களும் மை தீர்ந்து கிளர்ந்து விளங்க மழை தொழில் உதவ மாதிரம் கொழுக்கத் தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய நிலனும் மரனும் பயன் எதிர்பு நந்த நோய் இகந்து நோக்கு விளங்க மே தக மிகப் பொலிந்த ஓங்கு நிலை வயக் களிறு கண்டு தண்டாக் கட்கு இன்பத்து உண்டு தண்டா மிகு வளத்தான் உயர் பூரிம விழுத் தெருவில் பொய் அறியா வாய்மொழியால் புகழ் நிறைந்த நன் மாந்தரொடு நல் ஊழி அடி படரப் பல் வெள்ளம் மீக்கூற உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக பிணக் கோட்ட களிற்றுக் குழும்பின் நிணம் வாய்ப் பெய்த பேய்_மகளிர் இணை ஒலி இமிழ் துணங்கை சீர்ப் பிணை யூபம் எழுந்து ஆட அஞ்சுவந்த போர்க்களத்தான் ஆண் தலை அணங்கு அடுப்பின் வய வேந்தர் ஒண் குருதி சினத் தீயின் பெயர்பு பொங்கத் தெறல் அரும் கடும் துப்பின் விறல் விளங்கிய விழுச் சூர்ப்பின் தொடித் தோள் கை துடுப்பு ஆக ஆடுற்ற ஊன் சோறு நெறி அறிந்த கடி வாலுவன் அடி ஒதுங்கிப் பின் பெயராப் படையோர்க்கு முருகு அயர அமர் கடக்கும் வியன் தானைத் தென்னவன் பெயரிய துன் அரும் துப்பின் தொல் முது கடவுள் பின்னர் மேய வரைத் தாழ் அருவிப் பொருப்பின் பொருந விழுச் சூழிய விளங்கு ஓடைய கடும் சினத்த கமழ் கடாஅத்து அளறு பட்ட நறும் சென்னிய வரை மருளும் உயர் தோன்றல வினை நவின்ற பேர் யானை சினம் சிறந்து களன் உழக்கவும் மா எடுத்த மலி குரூஉத் துகள் அகல் வானத்து வெயில் கரப்பவும் வாம் பரிய கடும் திண் தேர் காற்று என்னக் கடிது கொட்பவும் வாள் மிகு மற மைந்தர் தோள் முறையான் வீறு முற்றவும் இரு பெரு வேந்தரொடு வேளிர் சாய பொருது அவரைச் செரு வென்று இலங்கு அருவிய வரை நீந்திச் சுரம் போழ்ந்த இகல் ஆற்றல் உயர்ந்து ஓங்கிய விழுச் சிறப்பின் நிலம் தந்த பேர் உதவிப் பொலம் தார் மார்பின் நெடியோன் உம்பல் மரம் தின்னூஉ வரை உதிர்க்கும் நரை உருமின் ஏறு அனையை அரும் குழு மிளை குண்டு கிடங்கின் உயர்ந்து ஓங்கிய நிரைப் புதவின் நெடு மதில் நிரை ஞாயில் அம்பு உமிழ் அயில் அருப்பம் தண்டாது தலைச்சென்று கொண்டு நீங்கிய விழுச் சிறப்பின் தென் குமரி வட பெருங்கல் குண குட கடலா எல்லைத் தொன்று மொழிந்து தொழில் கேட்ப வெற்றமொடு வெறுத்து ஒழுகிய கொற்றவர்-தம் கோன் ஆகுவை வான் இயைந்த இரு முந்நீர் பேஎம் நிலைஇய இரும் பௌவத்துக் கொடும் புணரி விலங்கு போழக் கடும் காலொடு கரை சேர நெடும் கொடி மிசை இதை எடுத்து இன் இசைய முரசம் முழங்க பொன் மலிந்த விழுப் பண்டம் நாடு ஆர நன்கு இழிதரும் ஆடு இயல் பெரு நாவாய் மழை முற்றிய மலை புரைய துறை முற்றிய துளங்கு இருக்கை தெண் கடல் குண்டு அகழிச் சீர் சான்ற உயர் நெல்லின் ஊர் கொண்ட உயர் கொற்றவ நீர்த் தெவ்வு நிரைத் தொழுவர் பாடு சிலம்பும் இசை ஏற்றத் தோடு வழங்கும் அகல் ஆம்பியின் கயன் அகைய வயல் நிறைக்கும் மென் தொடை வன் கிழாஅர் அதரி கொள்பவர் பகடு பூண் தெண் மணி இரும் புள் ஓப்பும் இசையே என்றும் மணிப் பூ முண்டகத்து மணல் மலி கானல் பரதவர் மகளிர் குரவையோடு ஒலிப்ப ஒருசார் விழவு நின்ற வியல் ஆங்கண் முழவுத் தோள் முரண் பொருநர்க்கு உரு கெழு பெரும் சிறப்பின் இரு பெயர்ப் பேராயமொடு இலங்கு மருப்பின் களிறு கொடுத்தும் பொலம் தாமரைப் பூச் சூட்டியும் நலம் சான்ற கலம் சிதறும் பல் குட்டுவர் வெல் கோவே கல் காயும் கடு வேனிலொடு இரு வானம் பெயல் ஒளிப்பினும் வரும் வைகல் மீன் பிறழினும் வெள்ளம் மாறாது விளையுள் பெருக நெல்லின் ஓதை அரிநர் கம்பலை புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசையே என்றும் சலம் புகன்று சுறவுக் கலித்த புலவு நீர் வியன் பௌவத்து நிலவுக் கானல் முழவுத் தாழைக் குளிர்ப் பொதும்பர் நளித் தூவல் நிரை திமில் வேட்டுவர் கரை சேர் கம்பலை இரும் கழிச் செறுவின் வெள் உப்புப் பகர்நரொடு ஒலி ஓவாக் கலி யாணர் முதுவெள்ளிலை மீக்கூறும் வியன் மேவல் விழுச் செல்வத்து இரு வகையான் இசை சான்ற சிறுகுடிப் பெரும் தொழுவர் குடி கெழீஇய நால் நிலவரொடு தொன்று மொழிந்து தொழில் கேட்பக் கால் என்னக் கடிது உராஅய் நாடு கெட எரி பரப்பி ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து அரசு பட அமர் உழக்கி முரசு கொண்டு களம் வேட்ட அடு திறல் உயர் புகழ் வேந்தே நட்டவர் குடி உயர்க்குவை செற்றவர் அரசு பெயர்க்குவை பேர் உலகத்து மேஎம் தோன்றிச் சீர் உடைய விழுச் சிறப்பின் விளைந்து முதிர்ந்த விழு முத்தின் இலங்கு வளை இரும் சேரிக் கள் கொண்டிக் குடிப் பாக்கத்து நல் கொற்கையோர் நசைப் பொருந செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென்று அஞ்சுவரத் தட்கும் அணங்கு உடை துப்பின் கோழ் ஊஉன் குறைக் கொழு வல்சிப் புலவு வில் பொலி கூவை ஒன்றுமொழி ஒலி இருப்பின் தென் பரதவர் போர் ஏறே அரிய எல்லாம் எளிதினின் கொண்டு உரிய எல்லாம் ஓம்பாது வீசி நனி புகன்று உறைதும் என்னாது ஏற்றெழுந்து பனி வார் சிமையக் கானம் போகி அக நாடு புக்கு அவர் அருப்பம் வௌவி யாண்டு பல கழிய வேண்டு புலத்து இறுத்து மேம்பட மரீஇய வெல் போர்க் குருசில் உறு செறுநர் புலம் புக்கு அவர் கடி காவின் நிலை தொலைச்சி இழிபு அறியாப் பெரும் தண் பணை குரூஉக் கொடிய எரி மேய நாடு எனும் பேர் காடு ஆக ஆ சேந்த வழி மா சேப்ப ஊர் இருந்த வழி பாழ் ஆக இலங்கு வளை மட மங்கையர் துணங்கை அம் சீர்த் தழூஉ மறப்ப அவை இருந்த பெரும் பொதியில் கவை அடிக் கடு நோக்கத்துப் பேய்_மகளிர் பெயர்பு ஆட அணங்கு வழங்கும் அகல் ஆங்கண் நிலத்து ஆற்றும் குழூஉப் புதவின் அரந்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவக் கொழும் பதிய குடி தேம்பிச் செழும் கேளிர் நிழல் சேர நெடு நகர் வீழ்ந்த கரி குதிர்ப் பள்ளிக் குடுமிக் கூகை குராலொடு முரலக் கழுநீர் பொலிந்த கண் அகன் பொய்கைக் களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர நல் ஏர் நடந்த நசை சால் விளை வயல் பன் மயிர்ப் பிணவொடு கேழல் உகள வாழாமையின் வழி தவக் கெட்டுப் பாழ் ஆயின நின் பகைவர் தேஎம் எழாஅத் தோள் இமிழ் முழக்கின் மாஅத் தாள் உயர் மருப்பின் கடும் சினத்த களிறு பரப்பி விரி கடல் வியன் தானையொடு முருகு உறழப் பகைத் தலைச்சென்று அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழப் பெயல் உறழக் கணை சிதறிப் பல புரவி நீறு உகைப்ப வளை நரல வயிர் ஆர்ப்பப் பீடு அழிய கடந்து அட்டு அவர் நாடு அழிய எயில் வௌவிச் சுற்றமொடு தூ அறுத்தலின் செற்ற தெவ்வர் நின் வழி நடப்ப வியன் கண் முது பொழில் மண்டிலம் முற்றி அரசியல் பிழையாது அற நெறி காட்டி பெரியோர் சென்ற அடி வழிப் பிழையாது குட முதல் தோன்றிய தொன்று தொழு பிறையின் வழிவழிச் சிறக்க நின் வலம் படு கொற்றம் குண முதல் தோன்றிய ஆர் இருள் மதியின் தேய்வன கெடுக நின் தெவ்வர் ஆக்கம் உயர்_நிலை_உலகம் அமிழ்தொடு பெறினும் பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே முழங்கு கடல் ஏணி மலர் தலை உலகமொடு உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும் பகைவர்க்கு அஞ்சிப் பணிந்து ஒழுகலையே தென்புல மருங்கின் விண்டு நிறைய வாணன் வைத்த விழு நிதி பெறினும் பழி நமக்கு எழுக என்னாய் விழு நிதி ஈதல் உள்ளமொடு இசை வேட்குவையே அன்னாய் நின்னொடு முன்னிலை எவனோ கொன் ஒன்று கிளக்குவல் அடு போர் அண்ணல் கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம் கெடாது நிலைஇயர் நின் சேண் விளங்கு நல் இசை தவாப் பெருக்கத்து அறா யாணர் அழித்து ஆனாக் கொழும் திற்றி இழித்து ஆனாப் பல சொன்றி உண்டு ஆனாக் கூர் நறவின் தின்று ஆனா இன வைகல் நிலன் எடுக்கல்லா ஒண் பல் வெறுக்கைப் பயன் அறவு அறியா வளம் கெழு திரு நகர் நரம்பின் முரலும் நயம் வரு முரற்சி விறலியர் வறும் கைக் குறும் தொடி செறிப்பப் பாணர் உவப்ப களிறு பல தரீஇக் கலந்தோர் உவப்ப எயில் பல கடைஇ மறம் கலங்கத் தலைச்சென்று வாள் உழந்து அதன் தாள் வாழ்த்தி நாள் ஈண்டிய நல் அகவர்க்குத் தேரொடு மா சிதறிச் சூடுற்ற சுடர்ப் பூவின் பாடு புலர்ந்த நறும் சாந்தின் விழுமிய பெரியோர் சுற்றம் ஆகக் கள்ளின் இரும் பைம் கலம் செல உண்டு பணிந்தோர் தேஎம் தம் வழி நடப்பப் பணியார் தேஎம் பணித்து திறை கொள்மார் பருந்து பறக்கல்லாப் பார்வல் பாசறை படு கண் முரசம் காலை இயம்ப வெடி படக் கடந்து வேண்டு புலத்து இறுத்த பணை கெழு பெரும் திறல் பல் வேல் மன்னர் கரை பொருது இரங்கும் கனை இரு முந்நீர்த் திரை இடு மணலினும் பலரே உரை செல மலர் தலை உலகம் ஆண்டு கழிந்தோரே அதனால் குண கடல் கொண்டு குட கடல் முற்றி இரவும் எல்லையும் விளிவு இடன் அறியாது அவலும் மிசையும் நீர் திரள்பு ஈண்டிக் கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்பக் கழை வளர் சாரல் களிற்று இனம் நடுங்க வரை முதல் இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து சிதரல் பெரும் பெயல் சிறத்தலின் தாங்காது குண கடற்கு இவர்தரும் குரூஉப் புனல் உந்தி நிவந்து செல் நீத்தம் குளம் கொள சாற்றிக் களிறு மாய்க்கும் கதிர்க் கழனி ஒளிறு இலஞ்சி அடை நிவந்த முள் தாள சுடர்த் தாமரை கள் கமழும் நறு நெய்தல் வள் இதழ் அவிழ் நீலம் மெல் இலை அரி ஆம்பலொடு வண்டு இறைகொண்ட கமழ் பூம் பொய்கைக் கம்புள் சேவல் இன் துயில் இரிய வள்ளை நீக்கி வய மீன் முகந்து கொள்ளை சாற்றிய கொடு முடி வலைஞர் வேழப் பழனத்து நூழிலாட்டுக் கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை அள்ளல் தங்கிய பகடு உறு விழுமம் கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே ஒலிந்த பகன்றை விளைந்த கழனி வன் கை வினைஞர் அரிப்பறை இன் குரல் தளி மழை பொழியும் தண் பரங்குன்றில் கலி கொள் சும்மை ஒலி கொள் ஆயம் ததைந்த கோதை தாரொடு பொலியப் புணர்ந்து உடன் ஆடும் இசையே அனைத்தும் அகல் இரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்ப குருகு நரல மனை மரத்தான் மீன் சீவும் பாண் சேரியொடு மருதம் சான்ற தண் பணை சுற்றி ஒருசார்ச் சிறுதினை கொய்ய கவ்வை கறுப்பக் கரும் கால் வரகின் இரும் குரல் புலர ஆழ்ந்த குழும்பில் திரு மணி கிளர எழுந்த கடற்றில் நன் பொன் கொழிப்பப் பெரும் கவின் பெற்ற சிறு தலை நௌவி மடக் கண் பிணையொடு மறுகுவன உகளச் சுடர்ப் பூம் கொன்றை தாஅய நீழல் பாஅய் அன்ன பாறை அணிந்து நீலத்து அன்ன பைம் பயிர் மிசை-தொறும் வெள்ளி அன்ன ஒள் வீ உதிர்ந்து சுரி முகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய் மணி மருள் நெய்தல் உறழக் காமர் துணி நீர் மெல் அவல் தொய்யிலொடு மலர வல்லோன் தைஇய வெறிக்களம் கடுப்ப முல்லை சான்ற புறவு அணிந்து ஒருசார் நறும் காழ் கொன்று கோட்டின் வித்திய குறும் கதிர்த் தோரை நெடும் கால் ஐயவி ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி இஞ்சி மஞ்சள் பைம் கறி பிறவும் பல் வேறு தாரமொடு கல்லகத்து ஈண்டித் தினை விளை சாரல் கிளி கடி பூசல் மணிப் பூ அவரைக் குரூஉத் தளிர் மேயும் ஆமா கடியும் கானவர் பூசல் சேணோன் அகழ்ந்த மடி வாய்ப் பயம்பின் வீழ் முகக் கேழல் அட்ட பூசல் கரும் கால் வேங்கை இரும் சினைப் பொங்கர் நறும் பூக் கொய்யும் பூசல் இரும் கேழ் ஏறு அடு வயப் புலி பூசலொடு அனைத்தும் இலங்கு வெள் அருவியொடு சிலம்பகத்து இரட்டக் கரும் கால் குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து அரும் கடி மா மலை தழீஇ ஒருசார் இரு வெதிர்ப் பைம் தூறு கூர் எரி நைப்ப நிழத்த யானை மேய் புலம் படரக் கலித்த இயவர் இயம் தொட்டு அன்ன கண் விடுபு உடையூஉத் தட்டை கவின் அழிந்து அருவி ஆன்ற அணி இல் மா மலை வை கண்டு அன்ன புல் முளி அம் காட்டுக் கமம் சூழ் கோடை விடரகம் முகந்து காலுறு கடலின் ஒலிக்கும் சும்மை இலை வேய் குரம்பை உழை அதள் பள்ளி உவலைக் கண்ணி வன் சொல் இளைஞர் சிலை உடைக் கையர் கவலை காப்ப நிழல் உரு இழந்த வேனில் குன்றத்துப் பாலை சான்ற சுரம் சேர்ந்து ஒருசார் முழங்கு கடல் தந்த விளங்கு கதிர் முத்தம் அரம் போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை பரதர் தந்த பல் வேறு கூலம் இரும் கழிச் செறுவின் தீம் புளி வெள் உப்புப் பரந்து ஓங்கு வரைப்பின் வன் கைத் திமிலர் கொழு மீன் குறைஇய துடிக் கண் துணியல் விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர் நனம் தலை தேஎத்து நன் கலன் உய்ம்மார் புணர்ந்து உடன் கொணர்ந்த புரவியொடு அனைத்தும் வைகல்-தோறும் வழிவழிச் சிறப்ப நெய்தல் சான்ற வளம் பல பயின்று ஆங்கு ஐம் பால் திணையும் கவினி அமைவர முழவு இமிழும் அகல் ஆங்கண் விழவு நின்ற வியல் மறுகின் துணங்கை அம் தழூஉவின் மணம் கமழ் சேரி இன் கலி யாணர்க் குழூஉப் பல பயின்று ஆங்குப் பாடல் சான்ற நன் நாட்டு நடுவண் கலை தாய உயர் சிமையத்து மயில் அகவும் மலி பொங்கர் மந்தி ஆட மா விசும்பு உகந்து முழங்கு கால் பொருத மரம் பயில் காவின் இயங்கு புனல் கொழித்த வெண் தலைக் குவவு மணல் கான் பொழில் தழீஇய அடைகரை-தோறும் தாது சூழ் கோங்கின் பூ மலர் தாஅய்க் கோதையின் ஒழுகும் விரி நீர் நல் வரல் அவிர் அறல் வையை துறைதுறை-தோறும் பல் வேறு பூத் திரள் தண்டலை சுற்றி அழுந்துபட்டிருந்த பெரும்பாண் இருக்கையும் நிலனும் வளனும் கண்டு அமைகல்லா விளங்கு பெரும் திருவின் மான விறல் வேள் அழும்பில் அன்ன நாடு இழந்தனரும் கொழும் பல் பதிய குடி இழந்தனரும் தொன்று கறுத்து உறையும் துப்புத் தர வந்த அண்ணல் யானை அடு போர் வேந்தர் இன் இசை முரசம் இடைப் புலத்து ஒழியப் பல் மாறு ஓட்டி பெயர் புறம்பெற்று மண்ணுற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கின் விண்ணுற ஓங்கிய பல் படைப் புரிசைத் தொல் வலி நிலைஇய அணங்கு உடை நெடு நிலை நெய் படக் கரிந்த திண் போர்க் கதவின் மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு வையை அன்ன வழக்கு உடை வாயில் வகை பெற எழுந்து வானம் மூழ்கிச் சில்_காற்று இசைக்கும் பல் புழை நல் இல் யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் பல் வேறு குழாஅத்து இசை எழுந்து ஒலிப்ப மா கால் எடுத்த முந்நீர் போல முழங்கு இசை நன் பணை அறைவனர் நுவலக் கயம் குடைந்து அன்ன இயம் தொட்டு இமிழ் இசை மகிழ்ந்தோர் ஆடும் கலி கொள் சும்மை ஓவுக் கண்டு அன்ன இரு பெரு நியமத்துச் சாறு அயர்ந்து எடுத்த உருவப் பல் கொடி வேறு பல் பெயர ஆர் எயில் கொளக்கொள நாள்-தோறு எடுத்த நலம் பெறு புனை கொடி நீர் ஒலித்து அன்ன நிலவு வேல் தானையொடு புலவுப் படக் கொன்று மிடைத் தோல் ஓட்டிப் புகழ் செய்து எடுத்த விறல் சால் நன் கொடி கள்ளின் களி நவில் கொடியொடு நன் பல பல்வேறு குழூஉக் கொடி பதாகை நிலைஇப் பெரு வரை மருங்கின் அருவியின் நுடங்க பனைமீன் வழங்கும் வளை மேய் பரப்பின் வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூக் கூம்பு முதல் முருங்க எற்றிக் காய்ந்து உடன் கடும் காற்று எடுப்பக் கல் பொருது உரைஇ நெடும் சுழிப் பட்ட நாவாய் போல இரு தலைப் பணிலம் ஆர்ப்பச் சினம் சிறந்து கோலோர்க் கொன்று மேலோர் வீசி மென் பிணி வன் தொடர் பேணாது காழ் சாய்த்துக் கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும் அம் கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து ஒண் கதிர் ஞாயிற்று ஊறு அளவாத் திரிதரும் செம் கால் அன்னத்துச் சேவல் அன்ன குரூஉ மயிர்ப் புரவி உராலின் பரி நிமிர்ந்து கால் எனக் கடுக்கும் கவின் பெறு தேரும் கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின் அடி படு மண்டிலத்து ஆதி போகிய கொடி படு சுவல இடுமயிர்ப் புரவியும் வேழத்து அன்ன வெருவரு செலவின் கள் ஆர் களமர் இரும் செரு மயக்கமும் அரியவும் பெரியவும் வருவன பெயர்தலின் தீம் புழல் வல்சிக் கழல் கால் மழவர் பூம் தலை முழவின் நோன் தலை கடுப்பப் பிடகைப் பெய்த கமழ் நறும் பூவினர் பல வகை விரித்த எதிர் பூம் கோதையர் பலர் தொகுபு இடித்த தாது உகு சுண்ணத்தர் தகை செய் தீம் சேற்று இன் நீர்ப் பசும் காய் நீடு கொடி இலையினர் கோடு சுடு நூற்றினர் இரு தலை வந்த பகை முனை கடுப்ப இன் உயிர் அஞ்சி இன்னா வெய்துயிர்த்து ஏங்குவனர் இருந்து அவை நீங்கிய பின்றை பல் வேறு பண்ணியம் தழீஇத் திரி விலைஞர் மலை புரை மாடத்துக் கொழு நிழல் இருத்தர இரும் கடல் வான் கோடு புரைய வாருற்றுப் பெரும் பின் இட்ட வால் நரைக் கூந்தலர் நன்னர் நலத்தர் தொன் முது பெண்டிர் செம் நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை செல் சுடர்ப் பசு வெயில் தோன்றி அன்ன செய்யர் செயிர்த்த நோக்கினர் மடக் கண் ஐஇய கலுழும் மாமையர் வை எயிற்று வார்ந்த வாயர் வணங்கு இறை பணைத் தோள் சோர்ந்து உகு அன்ன வயக்குறு வந்திகைத் தொய்யில் பொறித்த சுணங்கு எதிர் இள முலை மை உக்கு அன்ன மொய் இரும் கூந்தல் மயில் இயலோரும் மடமொழியோரும் கைஇ மெல்லிதின் ஒதுங்கிக் கையெறிந்து கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்பப் புடை அமை பொலிந்த வகை அமை செப்பில் காமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம் கமழ் நறும் பூவொடு மனைமனை மறுக மழை கொளக் குறையாது புனல் புக மிகாது கரை பொருது இரங்கும் முந்நீர் போலக் கொளக்கொளக் குறையாது தரத்தர மிகாது கழுநீர் கொண்ட எழு நாள் அந்தி ஆடு துவன்று விழவின் நாடு ஆர்த்தன்றே மாடம் பிறங்கிய மலி புகழ்க் கூடல் நாள்_அங்காடி நனம் தலைக் கம்பலை வெயில் கதிர் மழுங்கிய படர் கூர் ஞாயிற்றுச் செக்கர் அன்ன சிவந்து நுணங்கு உருவின் கண் பொருபு உகூஉம் ஒண் பூம் கலிங்கம் பொன் புனை வாளொடு பொலியக் கட்டித் திண் தேர்ப் பிரம்பின் புரளும் தானைக் கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்து அடி மொய்ம்பு இறந்து திரிதரும் ஒரு பெரும் தெரியல் மணி தொடர்ந்து அன்ன ஒண் பூம் கோதை அணி கிளர் மார்பின் ஆரமொடு அளைஇக் கால் இயக்கு அன்ன கதழ் பரி கடைஇக் காலோர் காப்பக் கால் எனக் கழியும் வான வண் கை வளம் கெழு செல்வர் நாள்_மகிழ் இருக்கை காண்மார் பூணொடு தெள் அரிப் பொன் சிலம்பு ஒலிப்ப ஒள் அழல் தா அற விளங்கிய ஆய் பொன் அவிர் இழை அணங்கு வீழ்வு அன்ன பூம் தொடி மகளிர் மணம் கமழ் நாற்றம் தெருவுடன் கமழ ஒண் குழை திகழும் ஒளி கெழு திரு முகம் திண் காழ் ஏற்ற வியல் இரு விலோதம் தெண் கடல் திரையின் அசை வளி புடைப்ப நிரை நிலை மாடத்து அரமியம்-தோறும் மழை மாய் மதியின் தோன்றுபு மறைய நீரும் நிலனும் தீயும் வளியும் மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய மழு வாள் நெடியோன் தலைவன் ஆக மாசற விளங்கிய யாக்கையர் சூழ் சுடர் வாடாப் பூவின் இமையா நாட்டத்து நாற்ற_உணவின் உரு கெழு பெரியோர்க்கு மாற்று அரு மரபின் உயர் பலி கொடுமார் அந்தி விழவில் தூரியம் கறங்கத் திண் கதிர் மதாணி ஒண் குறுமாக்களை ஓம்பினர்த் தழீஇத் தாம் புணர்ந்து முயங்கி தாது அணி தாமரைப் போது பிடித்து ஆங்கு தாமும் அவரும் ஓராங்கு விளங்கக் காமர் கவினிய பேரிளம்_பெண்டிர் பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச் சிறந்து புறங்காக்கும் கடவுள் பள்ளியும் சிறந்த வேதம் விளங்கப் பாடி விழுச் சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து நிலம் அமர் வையத்து ஒருதாம் ஆகி உயர்_நிலை_உலகம் இவண்-நின்று எய்தும் அற நெறி பிழையா அன்பு உடை நெஞ்சின் பெரியோர் மேஎய் இனிதின் உறையும் குன்று குயின்று அன்ன அந்தணர் பள்ளியும் வண்டு படப் பழுநிய தேன் ஆர் தோற்றத்துப் பூவும் புகையும் சாவகர் பழிச்சச் சென்ற காலமும் வரூஉம் அமயமும் இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து வானமும் நிலனும் தாம் முழுது உணரும் சான்ற கொள்கைச் சாயா யாக்கை ஆன்று அடங்கு அறிஞர் செறிந்தனர் நோன்மார் கல் பொளிந்து அன்ன இட்டு வாய்க் கரண்டைப் பல் புரிச் சிமிலி நாற்றி நல்குவரக் கயம் கண்டு அன்ன வயங்கு உடை நகரத்துச் செம்பு இயன்று அன்ன செம் சுவர் புனைந்து நோக்கு விசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து ஓங்கி இறும்பூது சான்ற நறும் பூம் சேக்கையும் குன்று பல குழீஇப் பொலிவன தோன்ற அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச் செற்றமும் உவகையும் செய்யாது காத்து ஞெமன்_கோல் அன்ன செம்மைத்து ஆகி சிறந்த கொள்கை அறங்கூறவையமும் நறும் சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து ஆவுதி மண்ணி அவிர் துகில் முடித்து மா விசும்பு வழங்கும் பெரியோர் போல நன்றும் தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி அன்பும் அறனும் ஒழியாது காத்துப் பழி ஒரீஇ உயர்ந்து பாய் புகழ் நிறைந்த செம்மை சான்ற காவிதி மாக்களும் அற நெறி பிழையாது ஆற்றின் ஒழுகி குறும் பல் குழுவின் குன்று கண்டு அன்ன பருந்து இருந்து உகக்கும் பல் மாண் நல் இல் பல்வேறு பண்டமோடு ஊண் மலிந்து கவினி மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும் பல்வேறு திரு மணி முத்தமொடு பொன் கொண்டு சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும் மழை ஒழுக்கு அறாஅப் பிழையா விளையுள் பழையன் மோகூர் அவையகம் விளங்க நான்மொழிக் கோசர் தோன்றி அன்ன தாம் மேஎம் தோன்றிய நாற்பெருங்குழுவும் கோடு போழ் கடைநரும் திரு மணி குயினரும் சூடுறு நன் பொன் சுடர் இழை புனைநரும் பொன் உரை காண்மரும் கலிங்கம் பகர்நரும் செம்பு நிறை கொண்மரும் வம்பு நிறை முடிநரும் பூவும் புகையும் ஆயும் மாக்களும் எவ்வகைச் செய்தியும் உவமம் காட்டி நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின் கண்ணுள்வினைஞரும் பிறரும் கூடித் தெண் திரை அவிர் அறல் கடுப்ப ஒண் பல் குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ நால் வேறு தெருவினும் கால் உற நிற்றர கொடும் பறைக் கோடியர் கடும்புடன் வாழ்த்தும் தண் கடல் நாடன் ஒண் பூம் கோதை பெருநாள் இருக்கை விழுமியோர் குழீஇ விழைவு கொள் கம்பலை கடுப்பப் பல உடன் சேறும் நாற்றமும் பலவின் சுளையும் வேறுபடக் கவினிய தேமாங்கனியும் பல்வேறு உருவின் காயும் பழனும் கொண்டல் வளர்ப்பக் கொடி விடுபு கவினி மென் பிணி அவிழ்ந்த குறு முறி அடகும் அமிர்து இயன்று அன்ன தீம் சேற்றுக் கடிகையும் புகழ் படப் பண்ணிய பேர் ஊன் சோறும் கீழ் செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும் இன் சோறு தருநர் பல் வயின் நுகர வால் இதை எடுத்த வளி தரு வங்கம் பல்வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து ஒல்லென் இமிழ் இசை மான கல்லென நனம் தலை வினைஞர் கலம் கொண்டு மறுகப் பெரும் கடல் குட்டத்துப் புலவுத் திரை ஓதம் இரும் கழி மருவிப் பாய பெரிது எழுந்து உரு கெழு பானாள் வருவன பெயர்தலின் பல்வேறு புள்ளின் இசை எழுந்து அற்றே அல்_அங்காடி அழிதரு கம்பலை ஒண் சுடர் உருப்பு ஒளி மழுங்கச் சினம் தணிந்து சென்ற ஞாயிறு நன் பகல் கொண்டு குட முதல் குன்றம் சேரக் குண முதல் நாள் முதிர் மதியம் தோன்றி நிலா விரிபு பகல் உரு உற்ற இரவு வர நயந்தோர் காதல் இன் துணை புணர்மார் ஆய் இதழ்த் தண் நறும் கழுநீர் துணைப்ப இழை புனையூஉ நன் நெடும் கூந்தல் நறு விரை குடைய நரந்தம் அரைப்ப நறும் சாந்து மறுக மெல் நூல் கலிங்கம் கமழ் புகை மடுப்பப் பெண் மகிழ்வுற்ற பிணை நோக்கு மகளிர் நெடும் சுடர் விளக்கம் கொளீஇ நெடு நகர் எல்லை எல்லாம் நோயொடு புகுந்து கல்லென் மாலை நீங்க நாணுக் கொள ஏழ் புணர் சிறப்பின் இன் தொடைச் சீறியாழ் தாழ்பு அயல் கனை குரல் கடுப்பப் பண்ணுப்பெயர்த்து வீழ் துணை தழீஇ வியல் விசும்பு கமழ நீர் திரண்டு அன்ன கோதை பிறக்கிட்டு ஆய் கோல் அவிர் தொடி விளங்க வீசிப் போது அவிழ் புது மலர் தெருவுடன் கமழ மே தகு தகைய மிகு நலம் எய்திப் பெரும் பல் குவளை சுரும்பு படு பன் மலர் திறந்து மோந்து அன்ன சிறந்து கமழ் நாற்றத்துக் கொண்டல் மலர்ப் புதல் மானப் பூ வேய்ந்து நுண் பூண் ஆகம் வடுக்கொள முயங்கி மாயப் பொய் பல கூட்டிக் கவவுக் கரந்து சேயரும் நணியரும் நலன் நயந்து வந்த இளம் பல் செல்வர் வளம் தப வாங்கி நுண் தாது உண்டு வறும் பூ துறக்கும் மென் சிறை வண்டு இனம் மானப் புணர்ந்தோர் நெஞ்சு ஏமாப்ப இன் துயில் துறந்து பழம் தேர் வாழ்க்கைப் பறவை போலக் கொழும் குடிச் செல்வரும் பிறரும் மேஎய மணம் புணர்ந்து ஓங்கிய அணங்கு உடை நல் இல் ஆய் பொன் அவிர் தொடிப் பாசிழை மகளிர் ஒண் சுடர் விளக்கத்துப் பலருடன் துவன்றி நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும் வானவ மகளிர் மானக் கண்டோர் நெஞ்சு நடுக்குறூஉக் கொண்டி மகளிர் யாம நல் யாழ் நாப்பண் நின்ற முழவின் மகிழ்ந்தனர் ஆடிக் குண்டு நீர்ப் பனித் துறைக் குவவு மணல் முனைஇ மென் தளிர்க் கொழும் கொம்பு கொழுதி நீர் நனை மேவர நெடும் தொடர்க் குவளை வடிம்புற அடைச்சி மணம் கமழ் மனை-தொறும் பொய்தல் அயரக் கணம்கொள் அவுணர்க் கடந்த பொலம் தார் மாயோன் மேய ஓண நன் நாள் கோணம் தின்ற வடு ஆழ் முகத்த சாணம் தின்ற சமம் தாங்கு தடக் கை மறம் கொள் சேரி மாறு பொரு செருவில் மாறாது உற்ற வடுப் படு நெற்றிச் சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர் கடும் களிறு ஓட்டலின் காணுநர் இட்ட நெடும் கரைக் காழக நிலம் பரல் உறுப்ப கடும் கள் தேறல் மகிழ் சிறந்து திரிதரக் கணவர் உவப்பப் புதல்வர் பயந்து பணைத்து ஏந்து இள முலை அமுதம் ஊறப் புலவுப் புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு வள மனை மகளிர் குள நீர் அயரத் திவவு மெய்ந்நிறுத்துச் செவ்வழி பண்ணிக் குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி நுண் நீர் ஆகுளி இரட்டப் பலவுடன் ஒண் சுடர் விளக்கம் முந்துற மடையொடு நன் மா மயிலின் மென்மெல இயலிக் கடும் சூல் மகளிர் பேணிக் கைதொழுது பெரும் தோள் சாலினி மடுப்ப ஒருசார் அரும் கடி வேலன் முருகொடு வளைஇ அரிக் கூடு இன்னியம் கறங்க நேர்நிறுத்துக் கார் மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின் சீர் மிகு நெடுவேள் பேணித் தழூஉப் பிணையூஉ மன்று-தொறும் நின்ற குரவை சேரி-தொறும் உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ வேறுவேறு கம்பலை வெறி கொள்பு மயங்கிப் பேர் இசை நன்னன் பெரும் பெயர் நன்_நாள் சேரி விழவின் ஆர்ப்பு எழுந்து ஆங்கு முந்தை யாமம் சென்ற பின்றை பணிலம் கலி அவிந்து அடங்கக் காழ் சாய்த்து நொடை நவில் நெடும் கடை அடைத்து மட மதர் ஒள் இழை மகளிர் பள்ளி அயர நல் வரி இறாஅல் புரையும் மெல் அடை அயிர் உருப்புற்ற ஆடு அமை விசயம் கவவொடு பிடித்த வகை அமை மோதகம் தீம் சேற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க விழவின் ஆடும் வயிரியர் மடிய பாடு ஆன்று அவிந்த பனிக் கடல் புரையப் பாயல் வளர்வோர் கண் இனிது மடுப்பப் பானாள் கொண்ட கங்குல் இடையது பேயும் அணங்கும் உருவு கொண்டு ஆய் கோல் கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப இரும் பிடி மேஎம் தோல் அன்ன இருள் சேர்பு கல்லும் மரனும் துணிக்கும் கூர்மைத் தொடலை வாளர் தொடுதோல் அடியர் குறங்கு இடைப் பதித்த கூர் நுனைக் குறும்பிடிச் சிறந்த கருமை நுண் வினை நுணங்கு அறல் நிறம் கவர்பு புனைந்த நீலக் கச்சினர் மெல் நூல்_ஏணிப் பன் மாண் சுற்றினர் நிலன் அகழ் உளியர் கலன் நசைஇக் கொட்கும் கண்மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி வயக் களிறு பார்க்கும் வயப் புலி போலத் துஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர் அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த நூல் வழி பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி ஊர் காப்பாளர் ஊக்கு அரும் கணையினர் தேர் வழங்கு தெருவில் நீர் திரண்டு ஒழுக மழை அமைந்துற்ற அரைநாள் அமயமும் அசைவிலர் எழுந்து நயம் வந்து வழங்கலின் கடவுள் வழங்கும் கையறு கங்குலும் அச்சம் அறியாது ஏமம் ஆகிய மற்றை யாமம் பகல் உறக் கழிப்பிப் போது பிணி விட்ட கமழ் நறும் பொய்கை தாது உண் தும்பி போது முரன்று ஆங்கு ஓதல் அந்தணர் வேதம் பாடச் சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி யாழோர் மருதம் பண்ணக் காழோர் கடும் களிறு கவளம் கைப்ப நெடும் தேர்ப் பணை நிலைப் புரவி புல் உணாத் தெவிட்டப் பல்வேறு பண்ணியக் கடை மெழுக்குறுப்பக் கள்ளோர் களி நொடை நுவல இல்லோர் நயந்த காதலர் கவவுப் பிணித் துஞ்சிப் புலர்ந்து விரி விடியல் எய்த விரும்பிக் கண் பொரா எறிக்கும் மின்னுக்கொடி புரைய ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலித் திண் சுவர் நல் இல் கதவம் கரைய உண்டு மகிழ் தட்ட மழலை நாவின் பழம்_செருக்காளர் தழங்கு குரல் தோன்றச் சூதர் வாழ்த்த மாகதர் நுவல வேதாளிகரொடு நாழிகை இசைப்ப இமிழ் முரசு இரங்க ஏறு மாறு சிலைப்பப் பொறி மயிர் வாரணம் வைகறை இயம்ப யானையங்குருகின் சேவலொடு காமர் அன்னம் கரைய அணி மயில் அகவப் பிடி புணர் பெரும் களிறு முழங்க முழு வலிக் கூட்டு உறை வய_மாப் புலியொடு குழும வானம் நீங்கிய நீல் நிற விசும்பின் மின்னு நிமிர்ந்து அனையர் ஆகி நறவு மகிழ்ந்து மாண் இழை மகளிர் புலந்தனர் பரிந்த பரூஉக் காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு பொன் சுடு நெருப்பின் நிலம் உக்கு என்ன அம் மென் குரும்பைக் காய் படுபு பிறவும் தரு மணல் முற்றத்து அரி ஞிமிறு ஆர்ப்ப மென் பூம் செம்மலொடு நன் கலம் சீப்ப இரவுத் தலைப்பெயரும் ஏம வைகறை மை படு பெரும் தோள் மழவர் ஓட்டி இடைப் புலத்து ஒழிந்த ஏந்து கோட்டு யானை பகைப் புலம் கவர்ந்த பாய் பரிப் புரவி வேல் கோல் ஆக ஆள் செல நூறிக் காய் சின முன்பின் கடுங்கண் கூளியர் ஊர் சுடு விளக்கின் தந்த ஆயமும் நாடு உடை நல் எயில் அணங்கு உடைத் தோட்டி நாள்-தொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி நாள் தர வந்த விழுக் கலம் அனைத்தும் கங்கை அம் பேரியாறு கடல் படர்ந்து ஆஅங்கு அளந்து கடை அறியா வளம் கெழு தாரமொடு புத்தேள்_உலகம் கவினிக் காண்வர மிக்கு புகழ் எய்திய பெரும் பெயர் மதுரைச் சினை தலைமணந்த சுரும்பு படு செம் தீ ஒண் பூம் பிண்டி அவிழ்ந்த காவில் சுடர் பொழிந்து ஏறிய விளங்கு கதிர் ஞாயிற்று இலங்கு கதிர் இள வெயில் தோன்றி அன்ன தமனியம் வளைஇய தாவு இல் விளங்கு இழை நிலம் விளக்குறுப்ப மே தகப் பொலிந்து மயில் ஓர் அன்ன சாயல் மாவின் தளிர் ஏர் அன்ன மேனித் தளிர்ப் புறத்து ஈர்க்கின் அரும்பிய திதலையர் கூர் எயிற்று ஒண் குழை புணரிய வண் தாழ் காதின் கடவுள் கயத்து அமன்ற சுடர் இதழ்த் தாமரைத் தாது படு பெரும் போது புரையும் வாள் முகத்து ஆய் தொடி மகளிர் நறும் தோள் புணர்ந்து கோதையின் பொலிந்த சேக்கைத் துஞ்சித் திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்து திண் காழ் ஆரம் நீவிக் கதிர் விடும் ஒண் காழ் ஆரம் கவைஇய மார்பின் வரிக் கடைப் பிரசம் மூசுவன மொய்ப்ப எருத்தம் தாழ்ந்த விரவுப் பூம் தெரியல் பொலம் செயப் பொலிந்த நலம் பெறு விளக்கம் வலி கெழு தடக் கை தொடியொடு சுடர்வரச் சோறு அமைவுற்ற நீர் உடைக் கலிங்கம் உடை அணி பொலியக் குறைவின்று கவைஇ வல்லோன் தைஇய வரிப் புனை பாவை முருகு இயன்று அன்ன உருவினை ஆகி வரு புனல் கற்சிறை கடுப்ப இடை அறுத்து ஒன்னார் ஓட்டிய செருப் புகல் மறவர் வாள் வலம் புணர்ந்த நின் தாள் வலம் வாழ்த்த வில்லைக் கவைஇக் கணை தாங்கு மார்பின் மா தாங்கு எறுழ் தோள் மறவர்த் தம்-மின் கல் இடித்து இயற்றிய இட்டு வாய்க் கிடங்கின் நல் எயில் உழந்த செல்வர்த் தம்-மின் கொல் ஏற்றுப் பைம் தோல் சீவாது போர்த்த மாக் கண் முரசம் ஓவு இல கறங்க எரி நிமிர்ந்து அன்ன தானை நாப்பண் பெரு நல் யானை போர்க்களத்து ஒழிய விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்-மின் புரையோர்க்குத் தொடுத்த பொலம் பூம் தும்பை நீர் யார் என்னாது முறை கருதுபு சூட்டிக் காழ் மண்டு எஃகமொடு கணை அலைக் கலங்கிப் பிரிபு இணை அரிந்த நிறம் சிதை கவயத்து வானத்து அன்ன வள நகர் பொற்ப நோன் குறட்டு அன்ன ஊன் சாய் மார்பின் உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்-மின் நிவந்த யானைக் கண நிரை கவர்ந்த புலர்ந்த சாந்தின் விரவுப் பூம் தெரியல் பெரும் செய் ஆடவர்த் தம்-மின் பிறரும் யாவரும் வருக ஏனோரும் தம் என வரையா வாயில் செறாஅது இருந்து பாணர் வருக பாட்டியர் வருக யாணர் புலவரொடு வயிரியர் வருக என இரும் கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம் கொடுஞ்சி நெடும் தேர் களிற்றொடும் வீசிக் களம்-தோறும் கள் அரிப்ப மரம்-தோறும் மை வீழ்ப்ப நிண ஊன் சுட்டு உருக்கு அமைய நெய் கனிந்து வறை ஆர்ப்பக் குரூஉக் குய்ப் புகை மழை மங்குலின் பரந்து தோன்றா வியல் நகரால் பல்சாலை முதுகுடுமியின் நல் வேள்வித் துறைபோகிய தொல் ஆணை நல் ஆசிரியர் புணர் கூட்டுண்ட புகழ் சால் சிறப்பின் நிலம்தருதிருவின்நெடியோன் போல வியப்பும் சால்பும் செம்மை சான்றோர் பலர்-வாய்ப் புகர் அறு சிறப்பின் தோன்றி அரிய தந்து குடி அகற்றிப் பெரிய கற்று இசை விளக்கி முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும் பன் மீன் நடுவண் திங்கள் போலவும் பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கி பொய்யா நல் இசை நிறுத்த புனை தார்ப் பெரும் பெயர் மாறன் தலைவனாகக் கடந்து அடு வாய் வாள் இளம் பல் கோசர் இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்பப் பொலம் பூண் ஐவர் உட்படப் புகழ்ந்த மறம் மிகு சிறப்பின் குறுநில மன்னர் அவரும் பிறரும் துவன்றிப் பொற்பு விளங்கு புகழ் அவை நின் புகழ்ந்து ஏத்த இலங்கு இழை மகளிர் பொலம் கலத்து ஏந்திய மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும் மகிழ்ந்து இனிது உறை-மதி பெரும வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே #8 புறநானூறு 24 - மாங்குடி மருதனார் (மாங்குடி கிழார்) **பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் **செருவென்ற நெடுஞ்செழியன் நெல் அரியும் இரும் தொழுவர் செம் ஞாயிற்று வெயில் முனையின் தென் கடல் திரை மிசைப் பாயுந்து திண் திமில் வன் பரதவர் வெப்பு உடைய மட்டு உண்டு தண் குரவைச் சீர் தூங்குந்து தூவல் கலித்த தேம் பாய் புன்னை மெல் இணர்க் கண்ணி மிலைந்த மைந்தர் எல் வளை மகளிர்த் தலைக் கை தரூஉந்து வண்டு பட மலர்ந்த தண் நறும் கானல் முண்டகக் கோதை ஒண் தொடி மகளிர் இரும் பனையின் குரும்பை நீரும் பூம் கரும்பின் தீம் சாறும் ஓங்கு மணல் குலவுத் தாழைத் தீம் நீரோடு உடன் விராஅய் மு நீர் உண்டு முந்நீர்ப் பாயும் தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய ஓம்பா ஈகை மா வேள் எவ்வி புனல் அம் புதவின் மிழலையொடு கழனிக் கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும் பொன் அணி யானை தொல் முதிர் வேளிர் குப்பை நெல்லின் முத்தூறு தந்த கொற்ற நீள் குடைக் கொடித் தேர்ச் செழிய நின்று நிலைஇயர் நின் நாள்_மீன் நில்லாது படாஅச் செலீஇயர் நின் பகைவர் மீனே நின்னொடு தொன்று மூத்த உயிரினும் உயிரொடு நின்று மூத்த யாக்கை அன்ன நின் ஆடு குடி மூத்த விழுத் திணை சிறந்த வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த இரவன் மாக்கள் ஈகை நுவல ஒண் தொடி மகளிர் பொலம் கலத்து ஏந்திய தண் கமழ் தேறல் மடுப்ப மகிழ் சிறந்து ஆங்கு இனிது ஒழுகு-மதி பெரும ஆங்கு அது வல்லுநர் வாழ்ந்தோர் என்ப தொல் இசை மலர் தலை உலகத்துத் தோன்றிப் பலர் செல செல்லாது நின்று விளிந்தோரே #9 புறநானூறு 26 - மாங்குடி மருதனார்(மாங்குடி கிழார்) **பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் **செருவென்ற நெடுஞ்செழியன் நளி கடல் இரும் குட்டத்து வளி புடைத்த கலம் போலக் களிறு சென்று களன் அகற்றவும் களன் அகற்றிய வியல் ஆங்கண் ஒளிறு இலைய எஃகு ஏந்தி அரைசு பட அமர் உழக்கி உரை செல முரசு வௌவி முடித் தலை அடுப்பு ஆகப் புனல் குருதி உலை கொளீஇ தொடித் தோள் துடுப்பின் துழந்த வல்சியின் அடு களம் வேட்ட அடு போர்ச் செழிய ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை நான்மறை முதல்வர் சுற்றம் ஆக மன்னர் ஏவல் செய்ய மன்னிய வேள்வி முற்றிய வாய் வாள் வேந்தே நோற்றோர்-மன்ற நின் பகைவர் நின்னொடு மாற்றார் என்னும் பெயர் பெற்று ஆற்றார் ஆயினும் ஆண்டு வாழ்வோரே #10 புறநானூறு 313 - மாங்குடி மருதனார் - மாங்குடிகிழார் அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல் கைப் பொருள் யாதொன்றும் இலனே நச்சிக் காணிய சென்ற இரவல் மாக்கள் களிறொடு நெடும் தேர் வேண்டினும் கடவ உப்பு ஒய் சாகாட்டு உமணர் காட்ட கழி முரி குன்றத்து அற்றே எள் அமைவு இன்று அவன் உள்ளிய பொருளே #11 புறநானூறு 335 - மாங்குடி கிழார் அடல் அரும் துப்பின் குரவே தளவே குருந்தே முல்லை என்று இ நான்கு அல்லது பூவும் இல்லை கரும் கால் வரகே இரும் கதிர்த் தினையே சிறு கொடிக் கொள்ளே பொறி கிளர் அவரையொடு இ நான்கு அல்லது உணாவும் இல்லை துடியன் பாணன் பறையன் கடம்பன் என்று இ நான்கு அல்லது குடியும் இல்லை ஒன்னாத் தெவ்வர் முன் நின்று விலங்கி ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்து எனக் கல்லே பரவின் அல்லது நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே #12 புறநானூறு 372 - மாங்குடி கிழார் **பாடப்பட்டோன்: பாண்டியன் தலையாலங்கானத்துச் **செருவென்ற நெடுஞ்செழியன் விசி பிணித் தடாரி விம்மென ஒற்றி ஏத்தி வந்தது எல்லாம் முழுத்த இலங்கு வாள் அவிர் ஒளி வலம் பட மின்னிக் கணைத் துளி பொழிந்த கண்கூடு பாசறைப் பொருந்தாத் தெவ்வர் அரிந்த தலை அடுப்பின் கூவிள விறகின் ஆக்கு வரி நுடங்கல் ஆனா மண்டை வன்னி அம் துடுப்பின் ஈனா வேண்மாள் இடம் துழந்து அட்ட மா மறிப் பிண்டம் வாலுவன் ஏந்த வதுவை விழவின் புதுவோர்க்கு எல்லாம் வெவ் வாய்ப் பெய்த பூத நீர் சால்க எனப் புலவுக் களம் பொலிய வேட்டோய் நின் நிலவுத் திகழ் ஆரம் முகக்குவம் எனவே #13 புறநானூறு 396 - மாங்குடி கிழார் **பாடப்பட்டோன்: வாட்டாற்று எழினியாதன் கீழ் நீரால் மீன் வழங்குந்து மீ நீரான் கண் அன்ன மலர் பூக்குந்து கழி சுற்றிய விளை கழனி அரிப் பறையான் புள் ஓப்புந்து நெடு நீர் தொகூஉம் மணல் தண் கான் மென் பறையான் புள் இரியுந்து நனைக் கள்ளின் மனைக் கோசர் தீம் தேறல் நறவு மகிழ்ந்து தீம் குரவைக் கொளைத் தாங்குந்து உள் இலோர்க்கு வலி ஆகுவன் கேள் இலோர்க்குக் கேள் ஆகுவன் கழுமிய வென் வேல் வேளே வள நீர் வாட்டாற்று எழினி ஆதன் கிணையேம் பெரும கொழும் தடிய சூடு என்கோ வள நனையின் மட்டு என்கோ குறு முயலின் நிணம் பெய்தந்த நறு நெய்ய சோறு என்கோ திறந்து மறந்து கூட்டு முதல் முகந்து கொள்ளும் உணவு என்கோ அன்னவை பலபல வருந்திய இரும் பேர் ஒக்கல் அருந்தி எஞ்சிய அளித்து உவப்ப ஈத்தோன் எந்தை எம்மோர் ஆக்கக் கங்கு உண்டே மாரி வானத்து மீன் நாப்பண் விரி கதிர வெண் திங்களின் விளங்கித் தோன்றுக அவன் கலங்கா நல் இசை யாமும் பிறரும் வாழ்த்த நாளும் நிரை சால் நல் கலன் நல்கி உரை செலச் சுரக்க அவன் பாடல் சால் வளனே &405 - மாடலூர் கிழார் #1 குறுந்தொகை 150 குறிஞ்சி - மாடலூர் கிழார் சேணோன் மாட்டிய நறும் புகை ஞெகிழி வான மீனின் வயின்வயின் இமைக்கும் ஓங்கு மலை நாடன் சாந்து புலர் அகலம் உள்ளின் உள் நோய் மல்கும் புல்லின் மாய்வது எவன்-கொல் அன்னாய் &406 - மாதீர்த்தனார் #1 குறுந்தொகை 113 மருதம் - மாதீர்த்தனார் ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச் சேய்த்தும் அன்றே சிறு கான்யாறே இரை தேர் வெண் குருகு அல்லது யாவதும் துன்னல் போகின்றால் பொழிலே யாம் எம் கூழைக்கு எருமண் கொணர்கம் சேறும் ஆண்டும் வருகுவள் பெரும் பேதையே &407 - மாமிலாடன் (மாமலாடன்) #1 குறுந்தொகை 46 மருதம் - மாமிலாடன் (மாமலாடன்) ஆம்பல் பூவின் சாம்பல் அன்ன கூம்பிய சிறகர் மனை உறை குரீஇ முன்றில் உணங்கல் மாந்தி மன்றத்து எருவின் நுண் தாது குடைவன ஆடி இல் இறைப் பள்ளித் தம் பிள்ளையொடு வதியும் புன்கண் மாலையும் புலம்பும் இன்று-கொல் தோழி அவர் சென்ற நாட்டே &408 - மாமூலனார் #1 அகநானூறு 1 பாலை - மாமூலனார் வண்டு படத் ததைந்த கண்ணி ஒண் கழல் உருவக் குதிரை மழவர் ஓட்டிய முருகன் நல் போர் நெடுவேள் ஆவி அறு கோட்டு யானைப் பொதினி ஆங்கண் சிறு காரோடன் பயினொடு சேர்த்திய கல் போல் பிரியலம் என்ற சொல் தாம் மறந்தனர்-கொல்லோ தோழி சிறந்த வேய் மருள் பணைத் தோள் நெகிழச் சேய் நாட்டுப் பொலம் கல வெறுக்கை தருமார் நிலம் பக அழல் போல் வெம் கதிர் பைது அறத் தெறுதலின் நிழல் தேய்ந்து உலறிய மரத்த அறை காய்பு அறு நீர்ப் பைம் சுனை ஆம் அறப் புலர்தலின் உகு நெல் பொரியும் வெம்மைய யாவரும் வழங்குநர் இன்மையின் வௌவுநர் மடிய சுரம் புல்லென்ற ஆற்ற அலங்கு சினை நார் இல் முருங்கை நவிரல் வான் பூச் சூரல் அம் கடு வளி எடுப்ப ஆருற்று உடை திரைப் பிதிர்வின் பொங்கி முன் கடல் போல் தோன்றல காடு இறந்தோரே #2 அகநானூறு 15 பாலை - மாமூலனார் எம் வெம் காமம் இயைவது ஆயின் மெய்மலி பெரும் பூண் செம்மல் கோசர் கொம்மை அம் பசும் காய்க் குடுமி விளைந்த பாகல் ஆர்கைப் பறைக் கள் பீலித் தோகைக் காவின் துளுநாட்டு அன்ன வறும் கை வம்பலர் தாங்கும் பண்பின் செறிந்த சேரிச் செம்மல் மூதூர் அறிந்த மாக்கட்டு ஆகுக-தில்ல தோழிமாரும் யானும் புலம்பச் சூழி யானைச் சுடர்ப் பூண் நன்னன் பாழி அன்ன கடி உடை வியல் நகர்ச் செறிந்த காப்பு இகந்து அவனொடு போகி அத்த இருப்பை ஆர் கழல் புதுப் பூத் துய்த்த வாய துகள் நிலம் பரக்க கொன்றை அம் சினைக் குழல் பழம் கொழுதி வன் கை எண்கின் வய நிரை பரக்கும் இன் துணைப் படர்ந்த கொள்கையொடு ஒராங்குக் குன்ற வேயின் திரண்ட என் மென் தோள் அஞ்ஞை சென்ற ஆறே #3 அகநானூறு 31 பாலை - மாமூலனார் நெருப்பு எனச் சிவந்த உருப்பு அவிர் மண்டிலம் புலம் கடை மடங்கத் தெறுதலின் ஞொள்கி நிலம் புடைபெயர்வது அன்று-கொல் இன்று என மன் உயிர் மடிந்த மழை மாறு அமையத்து இலை இல ஓங்கிய நிலை உயர் யாஅத்து மேல் கவட்டு இருந்த பார்ப்பு இனங்கட்குக் கல் உடைக் குறும்பின் வயவர் வில் இட நிண வரிக் குறைந்த நிறத்த அதர்-தொறும் கணவிர மாலை இடூஉக் கழிந்து அன்ன புண் உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர் கண் உமிழ் கழுகின் கானம் நீந்திச் சென்றார் என்பு இலர் தோழி வென்றியொடு வில் அலைத்து உண்ணும் வல் ஆண் வாழ்க்கைத் தமிழ் கெழு மூவர் காக்கும் மொழிபெயர் தேஎத்த பல் மலை இறந்தே #4 அகநானூறு 55 பாலை - மாமூலனார் காய்ந்து செலல் கனலி கல் பகத் தெறுதலின் ஈந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை உளி முக வெம் பரல் அடி வருத்துறாலின் விளி முறை அறியா வேய் கரி கானம் வயக் களிற்று அன்ன காளையொடு என் மகள் கழிந்ததற்கு அழிந்தன்றோ இலெனே ஒழிந்து யாம் ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து அசைஇ வேவது போலும் வெய்ய நெஞ்சமொடு கண்படை பெறேன் கனவ ஒண் படைக் கரிகால்வளவனொடு வெண்ணிப்பறந்தலைப் பொருது புண் நாணிய சேரலாதன் அழி கள மருங்கின் வாள் வடக்கிருந்து என இன்னா இன் உரை கேட்ட சான்றோர் அரும் பெறல் உலகத்து அவனொடு செலீஇயர் பெரும்பிறிது ஆகிய ஆங்கு பிரிந்து இவண் காதல் வேண்டி என் துறந்து போதல் செல்லா என் உயிரொடு புலந்தே #5 அகநானூறு 61 பாலை - மாமூலனார் நோற்றோர்-மன்ற தாமே கூற்றம் கோள் உற விளியார் பிறர் கொள விளிந்தோர் எனத் தாள் வலம் படுப்ப சேண் புலம் படர்ந்தோர் நாள் இழை நெடும் சுவர் நோக்கி நோய் உழந்து ஆழல் வாழி தோழி தாழாது உரும் என சிலைக்கும் ஊக்கமொடு பைம் கால் வரி மாண் நோன் ஞாண் வன் சிலைக் கொளீஇ அரு நிறத்து அழுத்திய அம்பினர் பலர் உடன் அண்ணல் யானை வெண் கோடு கொண்டு நறவு நொடை நெல்லின் நாள்_மகிழ் அயரும் கழல் புனை திருந்து அடிக் கள்வர் கோமான் மழபுலம் வணக்கிய மா வண் புல்லி விழவு உடை விழுச் சீர் வேங்கடம் பெறினும் பழகுவர் ஆதலோ அரிதே முனாஅது முழவு உறழ் திணி தோள் நெடுவேள் ஆவி பொன் உடை நெடு நகர்ப் பொதினி அன்ன நின் ஒண் கேழ் வன முலைப் பொலிந்த நுண் பூண் ஆகம் பொருந்துதல் மறந்தே #6 அகநானூறு 65 பாலை - மாமூலனார் உன்னம் கொள்கையொடு உளம் கரந்து உறையும் அன்னை சொல்லும் உய்கம் என்னதூஉம் ஈரம் சேரா இயல்பின் பொய்ம்மொழிச் சேரி அம் பெண்டிர் கௌவையும் ஒழிகம் நாடு கண் அகற்றிய உதியஞ்சேரல் பாடிச் சென்ற பரிசிலர் போல உவ இனி வாழி தோழி அவரே பொம்மல் ஓதி நம்மொடு ஒராங்குச் செலவு அயர்ந்தனரால் இன்றே மலை-தொறும் மால் கழை பிசைந்த கால் வாய் கூர் எரி மீன் கொள் பரதவர் கொடும் திமில் நளி சுடர் வான் தோய் புணரி மிசைக் கண்டு ஆங்கு மேவரத் தோன்றும் யாஅ உயர் நனம் தலை உயவல் யானை வெரிநுச் சென்று அன்ன கல் ஊர்பு இழிதரும் புல் சாய் சிறு நெறிக் காடு மீக்கூறும் கோடு ஏந்து ஒருத்தல் ஆறு கடி கொள்ளும் அரும் சுரம் பணைத் தோள் நாறு ஐம் கூந்தல் கொம்மை வரி முலை நிரை இதழ் உண்கண் மகளிர்க்கு அரியவால் என அழுங்கிய செலவே #7 அகநானூறு 91 பாலை - மாமூலனார் விளங்கு பகல் உதவிய பல் கதிர் ஞாயிறு வளம் கெழு மா மலை பயம் கெடத் தெறுதலின் அருவி ஆன்ற பெரு வரை மருங்கில் சூர்ச் சுனை துழைஇ நீர்ப் பயம் காணாது பாசி தின்ற பைம் கண் யானை ஓய் பசிப் பிடியொடு ஒரு திறன் ஒடுங்க வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனம் தலை அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும் பெரும் பேர் அன்பினர் தோழி இரும் கேழ் இரலை சேக்கும் பரல் உயர் பதுக்கைக் கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த நெடும் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர் விசி பிணி முழவின் குட்டுவன் காப்பப் பசி என அறியா பணை பயில் இருக்கைத் தட மருப்பு எருமை தாமரை முனையின் முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும் குடநாடு பெறினும் தவிரலர் மட மான் நோக்கி நின் மாண் நலம் மறந்தே #8 அகநானூறு 97 பாலை - மாமூலனார் கள்ளி அம் காட்ட புள்ளி அம் பொறிக் கலை வறன் உறல் அம் கோடு உதிர வலம் கடந்து புலவுப் புலி துறந்த கலவுக் கழிக் கடு முடை இரவுக் குறும்பு அலற நூறி நிரை பகுத்து இரும் கல் முடுக்கர்த் திற்றி கெண்டும் கொலை வில் ஆடவர் போலப் பல உடன் பெரும் தலை எருவையொடு பருந்து வந்து இறுக்கும் அரும் சுரம் இறந்த கொடியோர்க்கு அல்கலும் இரும் கழை இறும்பின் ஆய்ந்து கொண்டு அறுத்த நுணங்கு கண் சிறு கோல் வணங்கு இறை மகளிரொடு அகவுநர்ப் புரந்த அன்பின் கழல் தொடி நறவு_மகிழ்_இருக்கை நன்னன் வேண்மான் வயலை வேலி வியலூர் அன்ன நின் அலர் முலை ஆகம் புலம்பப் பல நினைந்து ஆழல் என்றி தோழி யாழ என் கண் பனி நிறுத்தல் எளிதோ குரவு மலர்ந்து அற்சிரம் நீங்கிய அரும் பத வேனில் அறல் அவிர் வார் மணல் அகல் யாற்று அடைகரைத் துறை அணி மருதமொடு இகல் கொள ஓங்கிக் கலிழ் தளிர் அணிந்த இரும் சினை மாஅத்து இணர் ததை புதுப் பூ நிரைத்த பொங்கர்ப் புகை புரை அம் மஞ்சு ஊர நுகர் குயில் அகவும் குரல் கேட்போர்க்கே #9 அகநானூறு 101 பாலை - மாமூலனார் அம்ம வாழி தோழி இம்மை நன்று செய் மருங்கில் தீது இல் என்னும் தொன்றுபடு பழமொழி இன்று பொய்த்தன்று-கொல் தகர் மருப்பு ஏய்ப்பச் சுற்றுபு சுரிந்த சுவல் மாய் பித்தைச் செம் கண் மழவர் வாய்ப் பகை கடியும் மண்ணொடு கடும் திறல் தீப் படு சிறு கோல் வில்லொடு பற்றி நுரை தெரி மத்தம் கொளீஇ நிரைப் புறத்து அடி புதை தொடுதோல் பறைய ஏகிக் கடி புலம் கவர்ந்த கன்று உடைக் கொள்ளையர் இனம் தலைபெயர்க்கும் நனம் தலை பெரும் காட்டு அகல் இரு விசும்பிற்கு ஓடம் போல பகல் இடை நின்ற பல் கதிர் ஞாயிற்று உருப்பு அவிர்பு உளரிய சுழன்று வரு கோடை புன் கால் முருங்கை ஊழ் கழி பல் மலர் தண் கார் ஆலியின் தாவன உதிரும் பனி படு பல் மலை இறந்தோர்க்கு முனிதகு பண்பு யாம் செய்தன்றோ இலமே #10 அகநானூறு 115 பாலை - மாமூலனார் அழியா விழவின் அஞ்சுவரு மூதூர்ப் பழி இலர் ஆயினும் பலர் புறங்கூறும் அம்பல் ஒழுக்கமும் ஆகியர் வெம் சொல் சேரி அம் பெண்டிர் எள்ளினும் எள்ளுக நுண் பூண் எருமை குடநாட்டு அன்ன என் ஆய் நலம் தொலையினும் தொலைக என்றும் நோயிலர் ஆக நம் காதலர் வாய் வாள் எவ்வி வீழ்ந்த செருவில் பாணர் கைதொழு மரபின் முன் பரித்து இடூஉப் பழிச்சிய வள் உயிர் வணர் மருப்பு அன்ன ஒளி இணர்ச் சுடர்ப் பூம் கொன்றை ஊழுறு விளை நெற்று அறை மிசைத் தாஅம் அத்த நீள் இடை பிறை மருள் வான் கோட்டு அண்ணல் யானைச் சினம் மிகு முன்பின் வாம் மான் அஞ்சி இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை நன்னர் ஆய் கவின் தொலையச் சேய் நாட்டு நம் நீத்து உறையும் பொருட்பிணிக் கூடாமையின் நீடியோரே #11 அகநானூறு 127 பாலை - மாமூலனார் இலங்கு வளை நெகிழச் சாஅய் அல்கலும் கலங்கு அஞர் உழந்து நாம் இவண் ஒழிய வலம் படு முரசின் சேரலாதன் முந்நீர் ஓட்டிக் கடம்பு அறுத்து இமயத்து முன்னோர் மருள வணங்கு வில் பொறித்து நல் நகர் மரந்தை முற்றத்து ஒன்னார் பணி திறை தந்த பாடு சால் நல் கலம் பொன் செய் பாவை வயிரமொடு ஆம்பல் ஒன்று வாய் நிறையக் குவைஇ அன்று அவண் நிலம் தினத் துறந்த நிதியத்து அன்ன ஒரு நாள் ஒரு பகல் பெறினும் வழி_நாள் தங்கலர் வாழி தோழி செம் கோல் கரும் கால் மராத்து வாஅல் மெல் இணர் சுரிந்து வணர் பித்தை பொலியச் சூடிக் கல்லா மழவர் வில் இடம் தழீஇ வருநர்ப் பார்க்கும் வெருவரு கவலை மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் பழி தீர் காதலர் சென்ற நாட்டே #12 அகநானூறு 187 பாலை - மாமூலனார் தோள் புலம்பு அகலத் துஞ்சி நம்மொடு நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி நாண் உடைமையின் நீங்கிச் சேய் நாட்டு அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர் தெம் முனை சிதைத்த கடும் பரிப் புரவி வார் கழல் பொலிந்த வன்கண் மழவர் பூம் தொடை விழவின் தலை_நாள் அன்ன தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம் புலம்புறும்-கொல்லோ தோழி சேண் ஓங்கு அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண் கல் சேர்பு இருந்த சில்குடிப் பாக்கத்து எல் விருந்து அயர ஏமத்து அல்கி மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன கவை ஒண் தளிர கரும் கால் யாஅத்து வேனில் வெற்பின் கானம் காய முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை பனை வெளிறு அருந்து பைம் கண் யானை ஒண் சுடர் முதிரா இளம் கதிர் அமையத்து கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை வாள் வாய்ச் சுறவின் பனித் துறை நீந்தி நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர் வைகு கடல் அம்பியின் தோன்றும் மை படு மா மலை விலங்கிய சுரனே #13 அகநானூறு 197 பாலை - மாமூலனார் மா மலர் வண்ணம் இழந்த கண்ணும் பூ நெகிழ் அணையின் சாஅய தோளும் நன்னர் மாக்கள் விழைவனர் ஆய்ந்த தொல் நலம் இழந்த துயரமொடு என்னதூஉம் இனையல் வாழி தோழி முனை எழ முன்னுவர் ஓட்டிய முரண் மிகு திருவின் மறம் மிகு தானைக் கண்ணன் எழினி தேம் முது குன்றம் இறந்தனர் ஆயினும் நீடலர் யாழ நின் நிரை வளை நெகிழத் தோள் தாழ்பு இருளிய குவை இரும் கூந்தல் மடவோள் தழீஇய விறலோன் மார்பில் புன் தலைப் புதல்வன் ஊர்பு இழிந்து ஆங்கு கடும் சூல் மடப் பிடி தழீஇய வெண் கோட்டு இனம் சால் வேழம் கன்று ஊர்பு இழிதரப் பள்ளிகொள்ளும் பனிச் சுரம் நீந்தி ஒள் இணர்க் கொன்றை ஓங்கு மலை அத்தம் வினை வலியுறூஉம் நெஞ்சமொடு இனையர் ஆகி நம் பிரிந்திசினோரே #14 அகநானூறு 201 பாலை - மாமூலனார் அம்ம வாழி தோழி பொன்னின் அவிர் எழில் நுடங்கும் அணி கிளர் ஓடை வினை நவில் யானை விறல் போர்ப் பாண்டியன் புகழ் மலி சிறப்பின் கொற்கை முன்துறை அவிர் கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து தழை அணிப் பொலிந்த கோடு ஏந்து அல்குல் பழையர் மகளிர் பனித் துறைப் பரவ பகலோன் மறைந்த அந்தி ஆர் இடை உரு கெழு பெரும் கடல் உவவுக் கிளர்ந்து ஆங்கு அலரும் மன்று பட்டன்றே அன்னையும் பொருந்தாக் கண்ணள் வெய்ய உயிர்க்கும் என்று எவன் கையற்றனை இகுளை சோழர் வெண்ணெல் வைப்பின் நல் நாடு பெறினும் ஆண்டு அமைந்து உறைநர் அல்லர் முனாஅது வான் புகு தலைய குன்றத்துக் கவாஅன் பெரும் கை எண்கின் பேழ் வாய் ஏற்றை இருள் துணிந்து அன்ன குவவு மயிர்க் குருளைத் தோல் முலைப் பிணவொடு திளைக்கும் வேனில் நீடிய சுரன் இறந்தோரே #15 அகநானூறு 211 பாலை - மாமூலனார் கேளாய் எல்ல தோழி வாலிய சுதை விரிந்து அன்ன பல் பூ மராஅம் பறை கண்டு அன்ன பா அடி நோன் தாள் திண் நிலை மருப்பின் வயக் களிறு உரிஞு-தொறும் தண் மழை ஆலியின் தாஅய் உழவர் வெண்ணெல் வித்தின் அறை மிசை உணங்கும் பனி படு சோலை வேங்கடத்து உம்பர் மொழிபெயர் தேஎத்தர் ஆயினும் நல்குவர் குழி இடை கொண்ட கன்று உடைப் பெரு நிரை பிடி படு பூசலின் எய்தாது ஒழியக் கடும் சின வேந்தன் ஏவலின் எய்தி நெடும் சேண் நாட்டில் தலைத்தார்ப் பட்ட கல்லா எழினி பல் எறிந்து அழுத்திய வன்கண் கதவின் வெண்மணி வாயில் மத்தி நாட்டிய கல் கெழு பனித் துறை நீர் ஒலித்த அன்ன பேஎர் அலர் நமக்கு ஒழிய அழப் பிரிந்தோரே #16 அகநானூறு 233 பாலை - மாமூலனார் அலமரல் மழைக் கண் மல்கு பனி வார நின் அலர் முலை நனைய அழாஅல் தோழி எரி கவர்பு உண்ட கரி புறப் பெரு நிலம் பீடு கெழு மருங்கின் ஓடு மழை துறந்து என ஊன் இல் யானை உயங்கும் வேனில் மறப் படை குதிரை மாறா மைந்தின் துறக்கம் எய்திய தொய்யா நல் இசை முதியர் பேணிய உதியஞ்சேரல் பெரும் சோறு கொடுத்த ஞான்றை இரும் பல் கூளிச் சுற்றம் குழீஇ இருந்தாங்கு குறியவும் நெடியவும் குன்று தலைமணந்த சுரன் இறந்து அகன்றனர் ஆயினும் மிக நனி மடங்கா உள்ளமொடு மதி மயக்குறாஅ பொருள்-வயின் நீடலோ இலர் நின் இருள் ஐம் கூந்தல் இன் துயில் மறந்தே #17 அகநானூறு 251 பாலை - மாமூலனார் தூதும் சென்றன தோளும் செற்றும் ஓதி ஒண் நுதல் பசலையும் மாயும் வீங்கு இழை நெகிழச் சாஅய்ச் செல்லலொடு நாம் படர் கூரும் அரும் துயர் கேட்பின் நந்தன் வெறுக்கை எய்தினும் மற்று அவண் தங்கலர் வாழி தோழி வெல் கொடித் துனை கால் அன்ன புனை தேர்க் கோசர் தொல் மூதாலத்து அரும் பணைப் பொதியில் இன் இசை முரசம் கடிப்பு இகுத்து இரங்கத் தெம் முனை சிதைத்த ஞான்றை மோகூர் பணியாமையின் பகை தலைவந்த மா கெழு தானை வம்ப மோரியர் புனை தேர் நேமி உருளிய குறைத்த இலங்கு வெள் அருவிய அறை வாய் உம்பர் மாசு இல் வெண் கோட்டு அண்ணல் யானை வாயுள் தப்பிய அரும் கேழ் வயப் புலி மா நிலம் நெளியக் குத்திப் புகலொடு காப்பு இல வைகும் தேக்கு அமல் சோலை நிரம்பா நீள் இடைப் போகி அரம் போழ் அவ் வளை நிலை நெகிழ்த்தோரே #18 அகநானூறு 265 பாலை - மாமூலனார் புகையின் பொங்கி வியல் விசும்பு உகந்து பனி ஊர் அழல் கொடி கடுப்பத் தோன்றும் இமயச் செவ் வரை மானும்-கொல்லோ பல் புகழ் நிறைந்த வெல் போர் நந்தர் சீர் மிகு பாடலி குழீஇக் கங்கை நீர் முதல் கரந்த நிதியம்-கொல்லோ எவன்-கொல் வாழி தோழி வயங்கு ஒளி நிழல்-பால் அறலின் நெறித்த கூந்தல் குழல் குரல் பாவை இரங்க நம் துறந்து ஒண் தொடி நெகிழச் சாஅய்ச் செல்லலொடு கண் பனி கலுழ்ந்து யாம் ஒழியப் பொறை அடைந்து இன் சிலை எழில் ஏறு கெண்டிப் புரைய நிணம் பொதி விழுத் தடி நெருப்பின் வைத்து எடுத்து அணங்கு அரு மரபின் பேஎய் போல விளர் ஊன் தின்ற வேட்கை நீங்கத் துகள் அற விளைந்த தோப்பி பருகித் குலாஅ வல் வில் கொடு நோக்கு ஆடவர் புலாஅல் கையர் பூசா வாயர் ஒராஅ உருட்டும் குடுமிக் குராலொடு மரா அம் சீறூர் மருங்கில் தூங்கும் செம் நுதல் யானை வேங்கடம் தழீஇ வெம் முனை அரும் சுரம் இறந்தோர் நம்மினும் வலிதாத் தூக்கிய பொருளே #19 அகநானூறு 281 பாலை - மாமூலனார் செய்வது தெரிந்திசின் தோழி அல்கலும் அகலுள் ஆண்மை அச்சு அறக் கூறிய சொல் பழுது ஆகும் என்றும் அஞ்சாது ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி வான் போழ் வல் வில் சுற்றி நோன் சிலை அம் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல் கனை குரல் இசைக்கும் விரை செலல் கடும் கணை முரண் மிகு வடுகர் முன் உற மோரியர் தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு விண்ணுற ஓங்கிய பனி இரும் குன்றத்து ஒண் கதிர் திகிரி உருளிய குறைத்த அறை இறந்து அவரோ சென்றனர் பறை அறைந்து அன்ன அலர் நமக்கு ஒழித்தே #20 அகநானூறு 295 பாலை - மாமூலனார் நிலம் நீர் அற்று நீள் சுனை வறப்ப குன்று கோடு அகையக் கடும் கதிர் தெறுதலின் என்றூழ் நீடிய வேய் படு நனம் தலை நிலவு நிற மருப்பின் பெரும் கை சேர்த்தி வேங்கை வென்ற வெருவரு பணைத் தோள் ஓங்கல் யானை உயங்கி மதம் தேம்பிப் பல் மர ஒரு சிறைப் பிடியொடு வதியும் கல் உடை அதர கானம் நீந்திக் கடல் நீர் உப்பின் கணம் சால் உமணர் உயங்கு பகடு உயிர்ப்ப அசைஇ முரம் இடித்து அகல் இடம் குழித்த அகல் வாய்க் கூவல் ஆறு செல் வம்பலர் அசை விட ஊறும் புடையல் அம் கழல் கால் புல்லி குன்றத்து நடை அரும் கானம் விலங்கி நோன் சிலைத் தொடை அமை பகழித் துவன்று நிலை வடுகர் பிழி ஆர் மகிழர் கலி சிறந்து ஆர்க்கும் மொழிபெயர் தேஎம் இறந்தனர் ஆயினும் பழி தீர் மாண் நலம் தருகுவர்-மாதோ மாரிப் பித்திகத்து ஈர் இதழ் புரையும் அம் கலுழ் கொண்ட செம் கடை மழைக் கண் மணம் கமழ் ஐம்பால் மடந்தை நின் அணங்கு நிலைபெற்ற தட மென் தோளே #21 அகநானூறு 311 பாலை - மாமூலனார் இரும் பிடிப் பரிசிலர் போலக் கடை நின்று அரும் கடிக் காப்பின் அகல் நகர் ஒரு சிறை எழுதி அன்ன திண் நிலைக் கதவம் கழுது வழங்கு அரைநாள் காவலர் மடிந்து என திறந்து நம் புணர்ந்து நும்மின் சிறந்தோர் இம்மை உலகத்து இல் எனப் பல் நாள் பொம்மல் ஓதி நீவிய காதலொடு பயம் தலைப்பெயர்ந்து மாதிரம் வெம்ப வரு வழி வம்பலர் பேணிக் கோவலர் மழ விடைப் பூட்டிய குழாஅய்த் தீம் புளி செவி அடை தீரத் தேக்கு இலைப் பகுக்கும் புல்லி நல் நாட்டு உம்பர் செல் அரும் சுரம் இறந்து ஏகினும் நீடலர் அருள் மொழி தேற்றி நம் அகன்றிசினோரே #22 அகநானூறு 325 பாலை - மாமூலனார் அம்ம வாழி தோழி காதலர் வெண் மணல் நிவந்த பொலம் கடை நெடு நகர் நளி இரும் கங்குல் புணர் குறி வாய்த்த களவும் கைம்மிக அலர்ந்தன்று அன்னையும் உட்கொண்டு ஓவாள் காக்கும் பின் பெரிது இவண் உறைபு எவனோ அளியள் என்று அருளி ஆடு நடைப் பொலிந்த புகற்சியின் நாடு கோள் அள்ளனைப் பணித்த அதியன் பின்றை வள் உயிர் மாக் கிணை கண் அவிந்து ஆங்கு மலை கவின் அழிந்த கனை கடற்று அரும் சுரம் வெய்ய-மன்ற நின் வை எயிறு உணீஇய தண் மழை ஒரு நாள் தலைஇய ஒள் நுதல் ஒல்கு இயல் அரிவை நின்னொடு செல்கம் சில் நாள் ஆன்றனை ஆக எனப் பல் நாள் உலைவு இல் உள்ளமொடு வினை வலியுறீஇ எல்லாம் பெரும்பிறிதாக வடாஅது நல் வேல் பாணன் நல் நாட்டு உள்ளதை வாள் கண் வானத்து என்றூழ் நீள் இடை ஆள் கொல் யானை அதர் பார்த்து அல்கும் சோலை அத்தம் மாலை போகி ஒழியச் சென்றோர்-மன்ற பழி எவன் ஆம்-கொல் நோய் தரு பாலே #23 அகநானூறு 331 பாலை - மாமூலனார் நீடு நிலை அரைய செம் குழை இருப்பைக் கோடு கடைந்து அன்ன கொள்ளை வான் பூ ஆடு பரந்து அன்ன ஈனல் எண்கின் தோடு சினை உரீஇ உண்ட மிச்சில் பைம் குழைத் தழையர் பழையர் மகளிர் கண் திரள் நீள் அமை கடிப்பின் தொகுத்து குன்றகச் சிறுகுடி மறுகு-தொறும் மறுகும் சீறூர் நாடு பல பிறக்கு ஒழியச் சென்றோர் அன்பிலர் தோழி என்றும் அரும் துறை முற்றிய கரும் கோட்டுச் சீறியாழ் பாணர் ஆர்ப்பப் பல் கலம் உதவி நாள்_அவை இருந்த நனை மகிழ் திதியன் வேளிரொடு பொரீஇய கழித்த வாள் வாய் அன்ன வறும் சுரம் இறந்தே #24 அகநானூறு 347 பாலை - மாமூலனார் தோளும் தொல் கவின் தொலைய நாளும் நலம் கவர் பசலை நல்கின்று நலிய சால் பெரும் தானைச் சேரலாதன் மால் கடல் ஓட்டிக் கடம்பு அறுத்து இயற்றிய பண் அமை முரசின் கண் அதிர்ந்து அன்ன கவ்வை தூற்றும் வெவ் வாய்ச் சேரி அம்பல் மூதூர் அலர் நமக்கு ஒழியச் சென்றனர் ஆயினும் செய்வினை அவர்க்கே வாய்க்க-தில் வாழி தோழி வாயாது மழை கரந்து ஒளித்த கழை திரங்கு அடுக்கத்து ஒண் கேழ் வயப் புலி பாய்ந்து எனக் குவவு அடி வெண் கோட்டு யானை முழக்கு இசை வெரீஇக் கன்று ஒழித்து ஓடிய புன் தலை மடப் பிடி கை தலை வைத்த மையல் விதுப்பொடு கெடு மகப் பெண்டிரின் தேரும் நெடு மர மருங்கின் மலை இறந்தோரே #25 அகநானூறு 349 பாலை - மாமூலனார் அரம் போழ் அவ் வளை செறிந்த முன்கை வரைந்து தாம் பிணித்த தொல் கவின் தொலைய எவன் ஆய்ந்தனர்-கொல் தோழி ஞெமன்ன் தெரிகோல் அன்ன செயிர் தீர் செம்மொழி உலைந்த ஒக்கல் பாடுநர் செலினே உரன் மலி உள்ளமொடு முனை பாழ் ஆக அரும் குறும்பு எறிந்த பெரும் கல் வெறுக்கை சூழாது சுரக்கும் நன்னன் நல் நாட்டு ஏழில் குன்றத்துக் கவாஅன் கேழ் கொளத் திருந்து அரை நிவந்த கரும் கால் வேங்கை எரி மருள் கவளம் மாந்திக் களிறு தன் வரி நுதல் வைத்த வலி தேம்பு தடக் கை கல் ஊர் பாம்பின் தோன்றும் சொல் பெயர் தேஎத்த சுரன் இறந்தோரே #26 அகநானூறு 359 பாலை - மாமூலனார் பனி வார் உண்கணும் பசந்த தோளும் நனி பிறர் அறியச் சாஅய நாளும் கரந்தனம் உறையும் நம் பண்பு அறியார் நீடினர்-மன்னோ காதலர் என நீ எவன் கையற்றனை இகுளை அவரே வானவரம்பன் வெளியத்து அன்ன நம் மாண் நலம் தம்மொடு கொண்டனர் முனாஅது அரும் சுரக் கவலை அசைஇய கோடியர் பெரும் கல் மீமிசை இயம் எழுந்து ஆங்கு வீழ் பிடி கெடுத்த நெடும் தாள் யானை சூர் புகல் அடுக்கத்து மழை மாறு முழங்கும் பொய்யா நல் இசை மா வண் புல்லி கவைக் கதிர் வரகின் யாணர்ப் பைம் தாள் முதைச் சுவல் மூழ்கிய கான் சுடு குரூஉப் புகை அருவித் துவலையொடு மயங்கும் பெரு வரை அத்தம் இயங்கியோரே #27 அகநானூறு 393 பாலை - மாமூலனார் கோடு உயர் பிறங்கல் குன்று பல நீந்தி வேறு புலம் படர்ந்த வினை தரல் உள்ளத்து ஆறு செல் வம்பலர் காய் பசி தீரிய முதைச் சுவல் கலித்த ஈர் இலை நெடும் தோட்டுக் கவைக் கதிர் வரகின் கால் தொகு பொங்கழி கவட்டு அடிப் பொருத பல் சினை உதிர்வை அகன் கண் பாறைச் செவ் வயின் தெறீஇ வரி அணி பணைத் தோள் வார் செவித் தன்னையர் பண்ணை வெண் பழத்து அரிசி ஏய்ப்பச் சுழல் மரம் சொலித்த சுளகு அலை வெண் காழ் தொடி மாண் உலக்கை ஊழின் போக்கி உரல் முகம் காட்டிய சுரை நிறை கொள்ளை ஆங்கண் இரும் சுனை நீரொடு முகவாக் களி படு குழிசிக் கல் அடுப்பு ஏற்றி இணர் ததை கடுக்கை ஈண்டிய தாதின் குடவர் புழுக்கிய பொங்கு அவிழ் புன்கம் மதர்வை நல் ஆன் பாலொடு பகுக்கும் நிரை பல குழீஇய நெடுமொழிப் புல்லி தேன் தூங்கு உயர் வரை நல் நாட்டு உம்பர் வேங்கடம் இறந்தனர் ஆயினும் ஆண்டு அவர் நீடலர் வாழி தோழி தோடு கொள் உரு கெழு மஞ்ஞை ஒலி சீர் ஏய்ப்பத் தகரம் மண்ணிய தண் நறு முச்சி புகர் இல் குவளை போதொடு தெரி இதழ்ப் வேனில் அதிரல் வேய்ந்த நின் ஏமுறு புணர்ச்சி இன் துயில் மறந்தே #28 குறுந்தொகை 11 பாலை - மாமூலனார் கோடு ஈர் இலங்கு வளை நெகிழ நாளும் பாடு இல கலிழும் கண்ணொடு புலம்பி ஈங்கு இவண் உறைதலும் உய்குவம் ஆங்கே எழு இனி வாழி என் நெஞ்சே முனாது குல்லைக் கண்ணி வடுகர் முனையது வல் வேல் கட்டி நல் நாட்டு உம்பர் மொழி பெயர் தேஎத்தர் ஆயினும் வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே #29 நற்றிணை 14 பாலை - மாமூலனார் தொல் கவின் தொலைய தோள் நலம் சாஅய நல்கார் நீத்தனர் ஆயினும் நல்குவர் நட்டனர் வாழி தோழி குட்டுவன் அகப்பா அழிய நூறிச் செம்பியன் பகல் தீ வேட்ட ஞாட்பினும் மிகப் பெரிது அலர் எழச் சென்றனர் ஆயினும் மலர் கவிழ்ந்து மா மடல் அவிழ்ந்த காந்தள் அம் சாரல் இனம் சால் வய களிறு பாந்தள் பட்டு எனத் துஞ்சாத் துயரத்து அஞ்சு பிடிப் பூசல் நெடு வரை விடரகத்து இயம்பும் கடு மான் புல்லிய காடு இறந்தோரே #30 நற்றிணை 75 குறிஞ்சி - மாமூலனார் நயன் இன்மையின் பயன் இது என்னாது பூம் பொறிப் பொலிந்த அழல் உமிழ் அகன் பைப் பாம்பு உயிர் அணங்கிய ஆங்கும் ஈங்கு இது தகாஅது வாழியோ குறுமகள் நகாஅது உரை-மதி உடையும் என் உள்ளம் சாரல் கொடு வில் கானவன் கோட்டு_மா தொலைச்சிப் பச்சூன் பெய்த பகழி போலச் சே அரி பரந்த மா இதழ் மழைக் கண் உறாஅ நோக்கம் உற்ற என் பைதல் நெஞ்சம் உய்யுமாறே &409 - மாயேண்டனார் (மரயேண்டனார்) #1 குறுந்தொகை 235 பாலை - மாயேண்டனார் (மரயேண்டனார்) ஓம்பு-மதி வாழியோ வாடை பாம்பின் தூங்கு தோல் கடுக்கும் தூ வெள் அருவிக் கல் உயர் நண்ணியதுவே நெல்லி மரை இனம் ஆரும் முன்றில் புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே &410 - மார்க்கண்டேயனார் #1 புறநானூறு 365 - மார்க்கண்டேயனார் மயங்கு இரும் கருவிய விசும்பு முகன் ஆக இயங்கிய இரு சுடர் கண் எனப் பெயரிய வளி இடை வழங்கா வழக்கு அரு நீத்தம் வயிரக் குறட்டின் வயங்கு மணி ஆரத்துப் பொன் அம் திகிரி முன் சமத்து உருட்டிப் பொருநர்க் காணாச் செரு மிகு முன்பின் முன்னோர் செல்லவும் செல்லாது இன்னும் விலை_நலப்_பெண்டிரின் பலர் மீக்கூற உள்ளேன் வாழியர் யான் எனப் பல் மாண் நிலமகள் அழுத காஞ்சியும் உண்டு என உரைப்பரால் உணர்ந்திசினோரே &411 - மாலை மாறனார் #1 குறுந்தொகை 245 நெய்தல் - மாலை மாறனார் கடல் அம் கானல் ஆயம் ஆய்ந்த என் நலம் இழந்ததனினும் நனி இன்னாதே வாள் போல் வாய கொழு மடல் தாழை மாலை வேல் நாட்டு வேலி ஆகும் மெல்லம்புலம்பன் கொடுமை பல்லோர் அறியப் பரந்து வெளிப்படினே &412 - மாவளத்தனார் #1 குறுந்தொகை 348 பாலை - மாவளத்தனார் தாமே செல்ப ஆயின் கானத்துப் புலம் தேர் யானைக் கோட்டிடை ஒழிந்த சிறு வீ முல்லைக் கொம்பின் தாஅய் இதழ் அழிந்து ஊறும் கண்பனி மதர் எழில் பூண் அக வன் முலை நனைத்தலும் காணார்-கொல்லோ மாண்_இழை நமரே &413 - மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார் #1 அகநானூறு 377 பாலை - மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார் கோடை நீடலின் வாடு புலத்து உக்க சிறு புல் உணவு நெறி பட மறுகி நுண் பல் எறும்பி கொண்டு அளைச் செறித்த வித்தா வல்சி வீங்கு சிலை மறவர் பல் ஊழ் புக்குப் பயன் நிரை கவர கொழும் குடி போகிய பெரும் பாழ் மன்றத்து நரை மூதாளர் அதிர் தலை இறக்கிக் கவை மனத்து இருத்தும் வல்லு வனப்பு அழிய வரி நிறச் சிதலை அரித்தலின் புல்லென்று பெரு நலம் சிதைந்த பேஎம் முதிர் பொதியில் இன்னா ஒரு சிறைத் தங்கி இன் நகை சிறு மென் சாயல் பெரு நலம் உள்ளி வம்பலர் ஆகியும் கழிப மன்ற நசை தர வந்தோர் இரந்தவை இசை பட பெய்தல் ஆற்றுவோரே &414 - மாறோக்கத்து நப்பசலையார் #1 நற்றிணை 304 குறிஞ்சி - மாறோக்கத்து நப்பசலையார் வாரல் மென் தினைப் புலர்வுக் குரல் மாந்திச் சாரல் வரைய கிளையுடன் குழீஇ வளி எறி வயிரின் கிளி விளி பயிற்றும் நளி இரும் சிலம்பின் நல் மலை நாடன் புணரின் புணருமார் எழிலே பிரியின் மணி மிடை பொன்னின் மாமை சாய என் அணி நலம் சிதைக்குமார் பசலை அதனால் அசுணம் கொல்பவர் கை போல் நன்றும் இன்பமும் துன்பமும் உடைத்தே தண் கமழ் நறும் தார் விறலோன் மார்பே #2 புறநானூறு 37 - மாறோக்கத்து நப்பசலையார் **பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் நஞ்சு உடை வால் எயிற்று ஐம் தலை சுமந்த வேக வெம் திறல் நாகம் புக்கு என விசும்பு தீப் பிறப்பத் திருகிப் பசும் கொடிப் பெரு மலை விடரகத்து உரும் எறிந்து ஆங்குப் புள் உறு புன்கண் தீர்த்த வெள் வேல் சினம் கெழு தானைச் செம்பியன் மருக கராஅம் கலித்த குண்டு கண் அகழி இடம் கரும் குட்டத்து உடன் தொக்கு ஓடி யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம் கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சிச் செம்பு உறழ் புரிசைச் செம்மல் மூதூர் வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின் நல்ல என்னாது சிதைத்தல் வல்லையால் நெடுந்தகை செருவத்தானே #3 புறநானூறு 39 - மாறோக்கத்து நப்பசலையார் **பாடப்பட்டோன் : சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் புறவின் அல்லல் சொல்லிய கறை அடி யானை வான் மருப்பு எறிந்த வெண் கடைக் கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக ஈதல் நின் புகழும் அன்றே சார்தல் ஒன்னார் உட்கும் துன் அரும் கடும் திறல் தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின் அடுதல் நின் புகழும் அன்றே கெடு இன்று மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து அறம் நின்று நிலையிற்று ஆகலின் அதனால் முறைமை நின் புகழும் அன்றே மறம் மிக்கு எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள் கண் ஆர் கண்ணிக் கலி மான் வளவ யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய வரை அளந்து அறியாப் பொன் படு நெடும் கோட்டு இமையம் சூட்டிய ஏம வில் பொறி மாண் வினை நெடும் தேர் வானவன் தொலைய வாடா வஞ்சி வாட்டும் நின் பீடு கெழு நோன் தாள் பாடுங்காலே #4 புறநானூறு 126 - மாறோக்கத்து நப்பசலையார் **பாடப்பட்டோன்: மலையமான் திருமுடிக்காரி ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு பாணர் சென்னி பொலியத் தைஇ வாடாத் தாமரை சூட்டிய விழுச் சீர் ஓடாப் பூட்கை உரவோன் மருக வல்லேம் அல்லேம் ஆயினும் வல்லே நின்-வயின் கிளக்குவம் ஆயின் கங்குல் துயில் மடிந்து அன்ன தூங்கு இருள் இறும்பின் பறை இசை அருவி முள்ளூர்ப் பொருந தெறல் அரு மரபின் நின் கிளையொடும் பொலிய நில மிசைப் பரந்த மக்கட்கு எல்லாம் புலன் அழுக்கு அற்ற அந்தணாளன் இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி பரந்து இசை நிற்கப் பாடினன் அதன் கொண்டு சினம் மிகு தானை வானவன் குட கடல் பொலம் தரு நாவாய் ஓட்டிய அவ் வழிப் பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை இன்மை துரப்ப இசை தர வந்து நின் வண்மையின் தொடுத்தனம் யாமே முள் எயிற்று அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய அரும் சமம் ததையத் தாக்கி நன்றும் நண்ணாத் தெவ்வர்த் தாங்கும் பெண்ணை அம் படப்பை நாடு கிழவோயே #5 புறநானூறு 174 - மாறோக்கத்து நப்பசலையார் **பாடப்பட்டோன் : மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன் அணங்கு உடை அவுணர் கணம் கொண்டு ஒளித்து எனச் சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து இடும்பை கொள் பருவரல் தீரக் கடும் திறல் அஞ்சன உருவன் தந்து நிறுத்து ஆங்கு அரசு இழந்திருந்த அல்லல் காலை முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு கரை பொருது இரங்கு புனல் நெரிதரு மிகு பெரும் காவிரி மல்லல் நல் நாட்டு அல்லல் தீர பொய்யா நாவின் கபிலன் பாடிய மை அணி நெடு வரை ஆங்கண் ஒய்யெனச் செருப் புகல் மறவர் செல் புறம் கண்ட எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை அரு வழி இருந்த பெரு விறல் வளவன் மதி மருள் வெண்குடை காட்டி அக் குடை புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந விடர்ப் புலி பொறித்த கோட்டைச் சுடர்ப் பூண் சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் பெயர் நும் முன் ஈண்டுச் செய் நல் வினை ஆண்டுச் சென்று உணீஇயர் உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின் ஆறு கொள் மருங்கின் மாதிரம் துழவும் கவலை நெஞ்சத்து அவலம் தீர நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல் கல் கண் பொடியக் கானம் வெம்ப மல்கு நீர் வரைப்பில் கயம் பல உணங்கக் கோடை நீடிய பைது அறு காலை இரு நிலம் நெளிய ஈண்டி உரும் உரறு கருவிய மழை பொழிந்து ஆங்கே #6 புறநானூறு 226 - மாறோக்கத்து நப்பசலையார் **பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் செற்றன்று ஆயினும் செயிர்த்தன்று ஆயினும் உற்றன்று ஆயினும் உய்வு இன்று மாதோ பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி இரந்து அன்றாகல் வேண்டும் பொலம் தார் மண்டு அமர் கடக்கும் தானைத் திண் தேர் வளவன் கொண்ட கூற்றே #7 புறநானூறு 280 - மாறோக்கத்து நப்பசலையார் என் ஐ மார்பில் புண்ணும் வெய்ய நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும் நெடு நகர் வரைப்பின் விளக்கும் நில்லா துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும் அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும் நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும் செம் முது பெண்டின் சொல்லும் நிரம்பா துடிய பாண பாடு வல் விறலி என் ஆகுவிர்-கொல் அளியிர் நுமக்கும் இவண் உறை வாழ்க்கையோ அரிதே யானும் மண்ணுறு மழித் தலைத் தெண் நீர் வாரத் தொன்று தாம் உடுத்த அம் பகைத் தெரியல் சிறு வெள்_ஆம்பல் அல்லி உண்ணும் கழி கல மகளிர் போல வழி நினைந்து இருத்தல் அதனினும் அரிதே #8 புறநானூறு 383 - மாறோக்கத்து நப்பசலையார் **பாடப்பட்டோன்: அவியன் ஒண் பொறிச் சேவல் எடுப்ப ஏற்றெழுந்து தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர் நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி நெடும் கடை நின்று பகடு பல வாழ்த்தித் தன் புகழ் ஏத்தினென் ஆக என் வலத்து இடுக்கண் இரியல்போக ஊன் புலந்து அரும் கடி வியன் நகர்க் குறுகல் வேண்டிக் கூம்புவிடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல் தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உளப் பாம்பு உரி அன்ன வடிவின காம்பின் கழை படு சொலியின் இழை அணி வாரா ஒண் பூம் கலிங்கம் உடீஇ நுண் பூண் வசிந்து வாங்கு நுசுப்பின் அம் வாங்கு உந்திக் கற்பு உடை மடந்தை தன் புறம் புல்ல மெல்லணைக் கிடந்தோன் என் பெயர்ந்த நோக்கி அதன் கொண்டு அழித்துப் பிறந்தனென் ஆகி அவ் வழிப் பிறர் பாடு புகழ் பாடி படர்பு அறியேனே குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெண்மறி நரை முக ஊகமொடு உகளும் வரை அமல் குன்று பல கெழீஇய கான் கெழு நாடன் நெடும் தேர் அவியன் என ஒருவனை உடையேன்-மன்னே யானே அறான் எவன் பரிகோ வெள்ளியது நிலையே &415 - மாற்பித்தியார் (மாரிப்பித்தியார்) #1 புறநானூறு 251 - மாற்பித்தியார் (மாரிப்பித்தியார்) ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பில் பாவை அன்ன குறும் தொடி மகளிர் இழை நிலை நெகிழ்ந்த மள்ளன் கண்டிகும் கழைக் கண் நெடு வரை அருவி ஆடிக் கான யானை தந்த விறகின் கடும் தெறல் செம் தீ வேட்டு புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே #2 புறநானூறு 252 - மாற்பித்தியார் (மாரிப்பித்தியார்) கறங்கு வெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து தில்லை அன்ன புல்லென் சடையோடு அள் இலைத் தாளி கொய்யுமோனே இல் வழங்கு மட மயில் பிணிக்கும் சொல் வலை வேட்டுவன் ஆயினன் முன்னே &416 - மிளைக் கந்தனார் #1 குறுந்தொகை 196 மருதம் - மிளைக் கந்தனார் வேம்பின் பைம் காய் என் தோழி தரினே தேம் பூம் கட்டி என்றனிர் இனியே பாரி பறம்பில் பனிச் சுனைத் தெண் நீர் தைஇத் திங்கள் தண்ணிய தரினும் வெய்ய உவர்க்கும் என்றனிர் ஐய அற்றால் அன்பின் பாலே &417 - மிளைப்பெரும்கந்தனார் #1 குறுந்தொகை 136 குறிஞ்சி - மிளைப்பெரும்கந்தனார் காமம் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நுணங்கிக் கடுத்தலும் தணிதலும் இன்றே யானை குளகு மென்று ஆள் மதம் போலப் பாணியும் உடைத்து அது காணுநர்ப் பெறினே #2 குறுந்தொகை 204 குறிஞ்சி - மிளைப் பெரும் கந்தனார் காமம் காமம் என்ப காமம் அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின் முதைச் சுவல் கலித்த முற்றா இளம் புல் மூதா தைவந்த ஆங்கு விருந்தே காமம் பெரும் தோளோயே #3 குறுந்தொகை 234 முல்லை - மிளைப்பெரும் கந்தனார் சுடர் செல் வானம் சேப்பப் படர்கூர்ந்து எல் அறு பொழுதின் முல்லை மலரும் மாலை என்மனார் மயங்கியோரே குடுமிக் கோழி நெடு நகர் இயம்பும் பெரும் புலர் விடியலும் மாலை பகலும் மாலை துணையிலோர்க்கே &418 - மிளைவேள் தித்தனார் #1 குறுந்தொகை 284 குறிஞ்சி - மிளைவேள் தித்தனார் பொருத யானைப் புகர் முகம் கடுப்ப மன்றத் துறுகல் மீமிசைப் பல உடன் ஒண் செங்காந்தள் அவிழும் நாடன் அறவன் ஆயினும் அல்லன் ஆயினும் நம் ஏசுவரோ தம் இலர்-கொல்லோ வரையின் தாழ்ந்த வால் வெள் அருவி கொன் நிலைக் குரம்பையின் இழிதரும் இன்னாது இருந்த இச் சிறுகுடியோரே &419 - மீனெறி தூண்டிலார் #1 குறுந்தொகை 54 குறிஞ்சி - மீனெறி தூண்டிலார் யானே ஈண்டையேனே என் நலனே ஏனல் காவலர் கவண் ஒலி வெரீஇக் கான யானை கை விடு பசும் கழை மீன் எறி தூண்டிலின் நிவக்கும் கானக நாடனொடு ஆண்டு ஒழிந்தன்றே &420 - முக்கல் ஆசான் நல்வெள்ளையார் #1 நற்றிணை 272 நெய்தல் - முக்கல் ஆசான் நல்வெள்ளையார் கடல் அம் காக்கைச் செவ் வாய்ச் சேவல் படிவ மகளிர் கொடி கொய்து அழித்த பொம்மல் அடும்பின் வெண் மணல் ஒரு சிறைக் கடும் சூல் வதிந்த காமர் பேடைக்கு இரும் சேற்று அயிரை தேரிய தெண் கழிப் பூ உடைக் குட்டம் துழவும் துறைவன் நல்காமையின் நசை பழுது ஆகப் பெரும் கையற்ற என் சிறுமை பலர் வாய் அம்பல் மூதூர் அலர்ந்து நோய் ஆகின்று அது நோயினும் பெரிதே &421 - முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன் #1 அகநானூறு 30 நெய்தல் - முடங்கிக்கிடந்த நெடுஞ்சேரலாதன் நெடும் கயிறு வலந்த குறும் கண் அம் வலை கடல் பாடு அழிய இன மீன் முகந்து துணை புணர் உவகையர் பரத மாக்கள் இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி உப்பு ஒய் உமணர் அரும் துறை போக்கும் ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கிப் பெரும் களம் தொகுத்த உழவர் போல இரந்தோர் வறும் கலம் மல்க வீசிப் பாடு பல அமைத்துக் கொள்ளை சாற்றிக் கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ பெருமை என்பது கெடுமோ ஒரு நாள் மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத் தண் நறும் கானல் வந்து நும் வண்ணம் எவனோ என்றனிர் செலினே &422 - முடத்தாமக் கண்ணியார் #1 **பத்துப்பாட்டு - 2. பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார் **சோழன் கரிகால் பெருவளத்தானைப் பாடியது அறாஅ யாணர் அகன் தலைப் பேர் ஊர்ச் சாறு கழி வழி_நாள் சோறு நசையுறாது வேறு புலம் முன்னிய விரகு அறி பொருந குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல் விளக்கு அழல் உருவின் விசியுறு பச்சை எய்யா இளம் சூல் செய்யோள் அம் வயிற்று ஐது மயிர் ஒழுகிய தோற்றம் போலப் பொல்லம்பொத்திய பொதியுறு போர்வை அளை வாழ் அலவன் கண் கண்டு அன்ன துளை வாய் தூர்ந்த துரப்பு அமை ஆணி எண் நாள் திங்கள் வடிவிற்று ஆகி அண்நா இல்லா அமைவரு வறு வாய்ப் பாம்பு அணந்து அன்ன ஓங்கு இரு மருப்பின் மாயோள் முன்கை ஆய் தொடி கடுக்கும் கண்கூடு இருக்கைத் திண் பிணித் திவவின் ஆய் தினை அரிசி அவையல் அன்ன வேய்வை போகிய விரல் உளர் நரம்பின் கேள்வி போகிய நீள் விசித் தொடையல் மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன அணங்கு மெய் நின்ற அமைவரு காட்சி ஆறலை கள்வர் படை விட அருளின் மாறு தலைபெயர்க்கும் மருவு இன் பாலை வாரியும் வடித்தும் உந்தியும் உறழ்ந்தும் சீர் உடை நன் மொழி நீரொடு சிதறி அறல் போல் கூந்தல் பிறை போல் திரு நுதல் கொலை வில் புருவத்துக் கொழும் கடை மழைக் கண் இலவு இதழ் புரையும் இன் மொழித் துவர் வாய்ப் பல உறு முத்தின் பழி தீர் வெண் பல் மயிர் குறை கருவி மாண் கடை அன்ன பூம் குழை ஊசல் பொறை சால் காதின் நாண் அடச் சாய்ந்த நலம் கிளர் எருத்தின் ஆடு அமைப் பணை தோள் அரி மயிர் முன்கை நெடு வரை மிசைய காந்தள் மெல் விரல் கிளி வாய் ஒப்பின் ஒளி விடு வள் உகிர் அணங்கு என உருத்த சுணங்கு அணி ஆகத்து ஈர்க்கு இடை போகா ஏர் இள வன முலை நீர்ப் பெயர் சுழியின் நிறைந்த கொப்பூழ் உண்டு என உணரா உயவும் நடுவின் வண்டு இருப்பு அன்ன பல் காழ் அல்குல் இரும் பிடித் தடக் கையின் செறிந்து திரள் குறங்கின் பொருந்து மயிர் ஒழுகிய திருந்து தாட்கு ஒப்ப வருந்து நாய் நாவின் பெரும் தகு சீறடி அரக்கு உருக்கு அன்ன செந்நிலன் ஒதுங்கலின் பரல் பகை உழந்த நோயொடு சிவணி மரல் பழுத்து அன்ன மறுகு நீர் மொக்குள் நன் பகல் அந்தி நடை இடை விலங்கலின் பெடை மயில் உருவின் பெரும் தகு பாடினி பாடின பாணிக்கு ஏற்ப நாள்-தொறும் களிறு வழங்கு அதரக் கானத்து அல்கி இலை இல் மராத்த எவ்வம் தாங்கி வலை வலந்து அன்ன மெல் நிழல் மருங்கில் காடு உறை கடவுள் கடன் கழிப்பிய பின்றைப் பீடு கெழு திருவின் பெரும் பெயர் நோன் தாள் முரசு முழங்கு தானை மூவரும் கூடி அரசவை இருந்த தோற்றம் போல பாடல் பற்றிய பயன் உடை எழாஅல் கோடியர் தலைவ கொண்டது அறிந அறியாமையின் நெறி திரிந்து ஒராஅது ஆற்று எதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே போற்றிக் கேள்-மதி புகழ் மேம்படுந ஆடு பசி உழந்த நின் இரும் பேர் ஒக்கலொடு நீடு பசி ஒராஅல் வேண்டின் நீடு இன்று எழு-மதி வாழி ஏழின் கிழவ பழு மரம் உள்ளிய பறவையின் யானும் அவன் இழுமென் சும்மை இடன் உடை வரைப்பின் நசையுநர்த் தடையா நன் பெரு வாயில் இசையேன் புக்கு என் இடும்பை தீர எய்த்த மெய்யேன் எய்யேன் ஆகிப் பைத்த பாம்பின் துத்தி ஏய்ப்பக் கைக் கசடு இருந்த என் கண் அகன் தடாரி இரு சீர்ப் பாணிக்கு ஏற்ப விரி கதிர் வெள்ளி முளைத்த நள்ளிருள் விடியல் ஒன்று யான் பெட்டா அளவையின் ஒன்றிய கேளிர் போலக் கேள் கொளல் வேண்டி வேளாண் வாயில் வேட்பக் கூறிக் கண்ணில் காண நண்ணு வழி இரீஇப் பருகு அன்ன அருகா நோக்கமொடு உருகுபவை போல் என்பு குளிர் கொளீஇ ஈரும் பேனும் இருந்து இறைகூடி வேரொடு நனைந்து வேற்று இழை நுழைந்த துன்னல் சிதாஅர் துவர நீக்கி நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக் கனிந்து அரவு உரி அன்ன அறுவை நல்கி மழை என மருளும் மகிழ் செய் மாடத்து இழை அணி வனப்பின் இன் நகை மகளிர் போக்கு இல் பொலம் கலம் நிறையப் பல் கால் வாக்குபு தரத்தர வருத்தம் வீட ஆர உண்டு பேர் அஞர் போக்கிச் செருக்கொடு நின்ற காலை மற்று அவன் திருக் கிளர் கோயில் ஒரு சிறைத் தங்கித் தவம் செய் மாக்கள் தம் உடம்பு இடாஅது அதன் பயம் எய்திய அளவை மான ஆறு செல் வருத்தம் அகல நீக்கி அனந்தர் நடுக்கம் அல்லது யாவதும் மனம் கவல்பு இன்றி மாழாந்து எழுந்து மாலை அன்னதோர் புன்மையும் காலை கண்டோர் மருளும் வண்டு சூழ் நிலையும் கனவு என மருண்ட என் நெஞ்சு ஏமாப்ப வல் அஞர் பொத்திய மனம் மகிழ் சிறப்பக் கல்லா இளைஞர் சொல்லிக் காட்ட கதுமெனக் கரைந்து வம் எனக் கூஉய் அதன் முறை கழிப்பிய பின்றை பதன் அறிந்து துராஅய் துற்றிய துருவை அம் புழுக்கின் பராஅரை வேவை பருகு எனத் தண்டிக் காழின் சுட்ட கோழ் ஊன் கொழும் குறை ஊழின்ஊழின் வாய் வெய்து ஒற்றி அவையவை முனிகுவம் எனினே சுவைய வேறு பல் உருவின் விரகு தந்து இரீஇ மண் அமை முழவின் பண் அமை சீறியாழ் ஒள் நுதல் விறலியர் பாணி தூங்க மகிழ்_பதம் பல் நாள் கழிப்பி ஒரு நாள் அவிழ்ப்_பதம் கொள்க என்று இரப்ப முகிழ்த் தகை முரவை போகிய முரியா அரிசி விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல் பரல் வறைக் கருனை காடியின் மிதப்ப அயின்ற காலைப் பயின்று இனிது இருந்து கொல்லை உழு கொழு ஏய்ப்பப் பல்லே எல்லையும் இரவும் ஊன் தின்று மழுங்கி உயிர்ப்பிடம் பெறாஅது ஊண் முனிந்து ஒரு நாள் செயிர்த்து எழு தெவ்வர் திறை துறைபோகிய செல்வ சேறும் எம் தொல் பதிப் பெயர்ந்து என மெல்லெனக் கிளந்தனம் ஆக வல்லே அகறிரோ எம் ஆயம் விட்டு என சிரறியவன் போல் செயிர்த்த நோக்கமொடு துடி அடி அன்ன தூங்கு நடைக் குழவியொடு பிடி புணர் வேழம் பெட்டவை கொள்க எனத் தன் அறி அளவையின் தரத்தர யானும் என் அறி அளவையின் வேண்டுவ முகந்துகொண்டு இன்மை தீர வந்தனென் வென் வேல் உருவப் பஃறேர் இளையோன் சிறுவன் முருகன் சீற்றத்து உரு கெழு குரிசில் தாய் வயிற்று இருந்து தாயம் எய்தி எய்யாத் தெவ்வர் ஏவல் கேட்பச் செய்யார் தேஎம் தெருமரல் கலிப்பப் பவ்வம் மீமிசைப் பகல் கதிர் பரப்பி வெவ் வெம் செல்வன் விசும்பு படர்ந்து ஆங்குப் பிறந்து தவழ் கற்றதன்-தொட்டு சிறந்த நல் நாடு செகில் கொண்டு நாள்-தொறும் வளர்ப்ப ஆளி நன் மான் அணங்கு உடைக் குருளை மீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி முலைக் கோள் விடாஅ மாத்திரை ஞெரேரெனத் தலைக்கோள் வேட்டம் களிறு அட்டு ஆங்கு இரும் பனம் போந்தைத் தோடும் கரும் சினை அர வாய் வேம்பின் அம் குழைத் தெரியலும் ஓங்கு இரும் சென்னி மேம்பட மிலைந்த இரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய வெண்ணித் தாக்கிய வெருவரு நோன் தாள் கண் ஆர் கண்ணிக் கரிகால்வளவன் தாள் நிழல் மருங்கின் அணுகுபு குறுகித் தொழுது முன் நிற்குவிர் ஆயின் பழுது இன்று ஈற்று ஆ விருப்பின் போற்றுபு நோக்கி நும் கையது கேளா அளவை ஒய்யெனப் பாசி வேரின் மாசொடு குறைந்த துன்னல் சிதாஅர் நீக்கித் தூய கொட்டைக் கரைய பட்டு உடை நல்கிப் பெறல் அரும் கலத்தில் பெட்டாங்கு உண்க என பூக் கமழ் தேறல் வாக்குபு தரத்தர வைகல்வைகல் கை கவி பருகி எரி அகைந்து அன்ன ஏடு இல் தாமரை சுரி இரும் பித்தை பொலியச் சூட்டி நூலின் வலவா நுணங்கு அரில் மாலை வால் ஒளி முத்தமொடு பாடினி அணியக் கோட்டின் செய்த கொடுஞ்சி நெடும் தேர் ஊட்டு உளை துயல்வர ஓரி நுடங்கப் பால் புரை புரவி நால்கு உடன் பூட்டிக் காலின் ஏழ் அடிப் பின் சென்று கோலின் தாறு களைந்து ஏறு என்று ஏற்றி வீறு பெறு பேரியாழ் முறையுளிக் கழிப்பி நீர் வாய்த் தண் பணை தழீஇய தளரா இருக்கை நன் பல் ஊர நாட்டொடு நன் பல் வெரூஉப் பறை நுவலும் பரூஉப் பெரும் தடக் கை வெருவரு செலவின் வெகுளி வேழம் தரவிடைத் தங்கல் ஓவு இலனே வரவிடைப் பெற்றவை பிறர்பிறர்க்கு ஆர்த்தித் தெற்றெனச் செலவு கடைக்கூட்டுதிர் ஆயின் பல புலந்து நில்லா உலகத்து நிலைமை தூக்கிச் செல்க என விடுக்குவன் அல்லன் ஒல்லெனத் திரை பிறழிய இரும் பௌவத்துக் கரை சூழ்ந்த அகன் கிடக்கை மாமாவின் வயின்வயின் நெல் தாழ் தாழைத் தண் தண்டலைக் கூடு கெழீஇய குடி வயினான் செம் சோற்ற பலி மாந்திய கரும் காக்கை கவவு முனையின் மனை நொச்சி நிழல் ஆங்கண் ஈற்று யாமை தன் பார்ப்பு ஓம்பவும் இளையோர் வண்டல் அயரவும் முதியோர் அவை புகு பொழுதில் தம் பகை முரண் செலவும் முடக் காஞ்சிச் செம் மருதின் மடக் கண்ண மயில் ஆலப் பைம் பாகல் பழம் துணரிய செம் சுளைய கனி மாந்தி அறைக் கரும்பின் அரி நெல்லின் இனக் களமர் இசை பெருக வறள் அடும்பின் இவர் பகன்றைத் தளிர் புன்கின் தாழ் காவின் நனை ஞாழலொடு மரம் குழீஇய அவண் முனையின் அகன்று மாறி அவிழ் தளவின் அகன் தோன்றி நகு முல்லை உகு தேறு வீப் பொன் கொன்றை மணிக் காயா நல் புறவின் நடை முனையின் சுற வழங்கும் இரும் பௌவத்து இறவு அருந்திய இன நாரை பூம் புன்னைச் சினைச் சேப்பின் ஓங்கு திரை ஒலி வெரீஇக் தீம் பெண்ணை மடல் சேப்பவும் கோள் தெங்கின் குலை வாழைக் கொழும் காந்தள் மலர் நாகத்துத் துடிக் குடிஞை குடிப் பாக்கத்து யாழ் வண்டின் கொளைக்கு ஏற்பக் கலவம் விரித்த மட மஞ்ஞை நிலவு எக்கர் பல பெயரத் தேன் நெய்யொடு கிழங்கு மாறியோர் மீன் நெய்யொடு நறவு மறுகவும் தீம் கரும்போடு அவல் வகுத்தோர் மான் குறையொடு மது மறுகவும் குறிஞ்சி பரதவர் பாட நெய்தல் நறும் பூம் கண்ணி குறவர் சூடக் கானவர் மருதம் பாட அகவர் நீல் நிற முல்லைப் பஃறிணை நுவலக் கானக்கோழி கதிர் குத்த மனைக் கோழி தினைக் கவர வரை மந்தி கழி மூழ்க கழி நாரை வரை இறுப்பக் தண் வைப்பின் நால் நாடு குழீஇ மண் மருங்கினான் மறு இன்றி ஒரு குடையான் ஒன்று கூறப் பெரிது ஆண்ட பெரும் கேண்மை அறனொடு புணர்ந்த திறன் அறி செங்கோல் அன்னோன் வாழி வென் வேல் குரிசில் மன்னர் நடுங்கத் தோன்றிப் பல் மாண் எல்லை தருநன் பல் கதிர் பரப்பிக் குல்லை கரியவும் கோடு எரி நைப்பவும் அருவி மா மலை நிழத்தவும் மற்று அக் கருவி வானம் கடல் கோள் மறப்பவும் பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும் நறையும் நரந்தமும் அகிலும் ஆரமும் துறைதுறை-தோறும் பொறை உயிர்த்து ஒழுகி நுரைத் தலைக் குரைப் புனல் வரைப்பகம் புகு-தொறும் புனல் ஆடு மகளிர் கதுமெனக் குடைய கூனிக் குயத்தின் வாய் நெல் அரிந்து சூடு கோடு ஆகப் பிறக்கி நாள்-தொறும் குன்று எனக் குவைஇய குன்றாக் குப்பை கடும் தெற்று மூடையின் இடம் கெடக் கிடக்கும் சாலி நெல்லின் சிறை கொள் வேலி ஆயிரம் விளையுட்டு ஆகக் காவிரி புரக்கும் நாடு கிழவோனே &423 - முடத்திருமாறன் #1 நற்றிணை 105 பாலை - முடத்திருமாறன் முளி கொடி வலந்த முள் அரை இலவத்து ஒளிர் சினை அதிர வீசி விளிபட வெவ் வளி வழங்கும் வேய் பயில் மருங்கில் கடு நடை யானை கன்றொடு வருந்த நெடு நீர் அற்ற நிழல் இல் ஆங்கண் அரும் சுரக் கவலைய என்னாய் நெடும் சேண் பட்டனை வாழிய நெஞ்சே குட்டுவன் குடவரைச் சுனைய மா இதழ்க் குவளை வண்டு படு வான் போது கமழும் அம்_சில்_ஓதி அரும் படர் உறவே #2 228 குறிஞ்சி - முடத்திருமாறனார் என் எனப்படுமோ தோழி மின்னு வசிபு அதிர் குரல் எழிலி முதிர் கடன் தீரக் கண் தூர்பு விரிந்த கனை இருள் நடுநாள் பண்பு இல் ஆர் இடை வரூஉம் நம் திறத்து அருளான்-கொல்லோ தானே கானவன் சிறுபுறம் கடுக்கும் பெரும் கை வேழம் வெறி கொள் சாபத்து எறி கணை வெரீஇ அழுந்துபட விடரகத்து இயம்பும் எழுந்து வீழ் அருவிய மலை கிழவோனே &424 - (உறையூர்) முதுகூத்தனார் #1 அகநானூறு 137 பாலை - (உறையூர்) முதுகூத்தனார் ஆறு செல் வம்பலர் சேறு கிளைத்து உண்ட சிறு பல் கேணி பிடி அடி நசைஇச் களிறு தொடூஉக் கடக்கும் கான்யாற்று அத்தம் சென்று சேர்பு ஒல்லார் ஆயினும் நினக்கே வென்று எறி முரசின் விறல் போர்ச் சோழர் இன் கடும் கள்ளின் உறந்தை ஆங்கண் வரு புனல் நெரிதரும் இகு கரைப் பேரியாற்று உருவ வெண் மணல் முருகு நாறு தண் பொழில் பங்குனி முயக்கம் கழிந்த வழி_நாள் வீ இலை அமன்ற மரம் பயில் இறும்பில் தீ இல் அடுப்பின் அரங்கம் போலப் பெரும் பாழ் கொண்டன்று நுதலே தோளும் தோளா முத்தின் தெண் கடல் பொருநன் திண் தேர்ச் செழியன் பொருப்பின் கவாஅன் நல் எழில் நெடு வேய் புரையும் தொல் கவின் தொலைந்தன நோகோ யானே #2 அகநானூறு 329 பாலை - (உறையூர்) முதுகூத்தனார் பூம் கணும் நுதலும் பசப்ப நோய் கூர்ந்து ஈங்கு யான் வருந்தவும் நீங்குதல் துணிந்து வாழ்தல் வல்லுநர் ஆயின் காதலர் குவிந்த குரம்பை அம் குடிச் சீறூர்ப் படு மணி இயம்பப் பகல் இயைந்து உமணர் கொடு நுகம் பிணித்த செம் கயிற்று ஒழுகைப் பகடு அயாக் கொள்ளும் வெம் முனைத் துகள் தொகுத்து எறி வளி சுழற்றும் அத்தம் சிறிது அசைந்து ஏகுவர்-கொல்லோ தாமே பாய் கொள்பு உறு வெரிந் ஒடிக்கும் சிறு வரிக் குருளை நெடு நல் யானை நீர் நசைக்கு இட்ட கை கறித்து உரறும் மை தூங்கு இறும்பில் புலி புக்கு ஈனும் வறும் சுனைப் பனி படு சிமையப் பல் மலை இறந்தே #3 குறுந்தொகை 221 முல்லை - (உறையூர்) (முதுகொற்றனார்)முதுகூற்றனார் அவரோ வாரார் முல்லையும் பூத்தன பறி உடைக் கையர் மறி இனத்து ஒழியப் பாலொடு வந்து கூழொடு பெயரும் ஆடு உடை இடை_மகன் சென்னிச் சூடிய எல்லாம் சிறு பசு முகையே #4 குறுந்தொகை 353 குறிஞ்சி - (உறையூர்) (முதுகூற்றனார்)முதுகூத்தனார் ஆர் கலி வெற்பன் மார்பு புணை ஆக கோடு உயர் நெடு வரைக் கவாஅன் பகலே பாடு இன் அருவி ஆடுதல் இனிதே நிரை இதழ் பொருந்தாக் கண்ணோடு இரவில் பஞ்சி வெண் திரிச் செம் சுடர் நல் இல் பின்னு வீழ் சிறுபுறம் தழீஇ அன்னை முயங்கத் துயில் இன்னாதே #5 குறுந்தொகை 371 குறிஞ்சி - (உறையூர்) (முதுகூத்தனார்)முதுகூற்றனார் கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும் மை படு சிலம்பின் ஐவனம் வித்தி அருவியின் விளைக்கும் நாடனொடு மருவேன் தோழி அது காமமோ பெரிதே #6 குறுந்தொகை 390 பாலை - உறையூர் (முதுகொற்றன்) முதுகூற்றனார் எல்லும் எல்லின்று பாடும் கேளாய் செல்லாதீமோ சிறு பிடி துணையே வேற்று முனை வெம்மையின் சாத்து வந்து இறுத்து என வளை அணி நெடு வேல் ஏந்தி மிளை வந்து பெயரும் தண்ணுமைக் குரலே #7 நற்றிணை 28 பாலை - (முதுகூற்றனார்) முதுகூத்தனார் என் கைக் கொண்டு தன் கண் ஒற்றியும் தன் கைக் கொண்டு என் நல் நுதல் நீவியும் அன்னை போல இனிய கூறியும் கள்வர் போலக் கொடியன் மாதோ மணி என இழிதரும் அருவிப் பொன் என வேங்கை தாய ஓங்கு மலை அடுக்கத்து ஆடு கழை நிவந்த பைம் கண் மூங்கில் ஓடு மழை கிழிக்கும் சென்னிக் கோடு உயர் பிறங்கல் மலை கிழவோனே #8 58 நெய்தல் - (முதுகூற்றனார்)முதுகூத்தனார் பெரு முது செல்வர் பொன் உடைப் புதல்வர் சிறு தோள் கோத்த செவ் அரிப்பறையின் கண்ணகத்து எழுதிய குரீஇப் போலக் கோல் கொண்டு அலைப்பப் படீஇயர் மாதோ வீரை வேண்மான் வெளியன் தித்தன் முரசு முதல் கொளீஇய மாலை விளக்கின் வெண் கோடு இயம்ப நுண் பனி அரும்பக் கையற வந்த பொழுதொடு மெய் சோர்ந்து அவல நெஞ்சினம் பெயர உயர் திரை நீடு நீர்ப் பனித் துறைச் சேர்ப்பன் ஓடு தேர் நுண் நுகம் நுழைந்த மாவே #9 புறநானூறு 331 -(உறையூர் முது கூற்றனார்) (உறையூர்) முதுகூத்தனார் கல் அறுத்து இயற்றிய வல் உவர்க் கூவல் வில் ஏர் வாழ்க்கைச் சீறூர் மதவலி நனி நல்கூர்ந்தனன் ஆயினும் பனி மிகப் புல்லென் மாலை சிறு தீ ஞெலியும் கல்லா இடையன் போலக் குறிப்பின் இல்லது படைக்கவும் வல்லன் உள்ளது தவச் சிறிது ஆயினும் மிகப் பலர் என்னாள் நீள் நெடும் பந்தர் ஊண் முறை ஊட்டும் இல் பொலி மகடூஉப் போலச் சிற்சில வரிசையின் அளக்கவும் வல்லன் உரிதினின் காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும் போகு பலி வெண் சோறு போலத் தூவவும் வல்லன் அவன் தூவும் காலே &425 - முதுவெங்கண்ணனார் #1 நற்றிணை 232 குறிஞ்சி - முதுவெங்கண்ணனார் சிறு கண் யானைப் பெரும் கை ஈர் இனம் குளவித் தண் கயம் குழையத் தீண்டிச் சோலை வாழை முணைஇ அயலது வேரல் வேலி சிறுகுடி அலறச் செம் கால் பலவின் தீம் பழம் மிசையும் மா மலை நாட காமம் நல்கு என வேண்டுதும் வாழிய எந்தை வேங்கை வீ உக வரிந்த முன்றில் கல் கெழு பாக்கத்து அல்கினை செலினே &426 - முப்பேர் நாகனார் #1 நற்றிணை 314 பாலை - முப்பேர் நாகனார் முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார் வாழ்நாள் வகை அளவு அறிஞரும் இல்லை மாரிப் பித்திகத்து ஈர் இதழ் அலரி நறும் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில் குறும் பொறிக் கொண்ட கொம்மை அம் புகர்ப்பின் கரும் கண் வெம் முலை ஞெமுங்கப் புல்லிக் கழிவது ஆக கங்குல் என்று தாம் மொழி வன்மையின் பொய்த்தனர் வாழிய நொடி விடுவு அன்ன காய் விடு கள்ளி அலங்கல் அம் பாவை ஏறிப் புலம்பு கொள் புன் புறா வீழ் பெடைப் பயிரும் என்றூழ் நீள் இடைச் சென்றிசினோரே &427 - முரஞ்சியூர் முடிநாகராயர் #1 புறநானூறு 2 - முரஞ்சியூர் முடிநாகராயர் **பாடப்பட்டோன் - சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் மண் திணிந்த நிலனும் நிலம் ஏந்திய விசும்பும் விசும்பு தைவரு வளியும் வளி தலைஇய தீயும் தீ முரணிய நீரும் என்று ஆங்கு ஐம் பெரும் பூதத்து இயற்கை போலப் போற்றார் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும் வலியும் தெறலும் அளியும் உடையோய் நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின் வெண் தலைப் புணரிக் குட கடல் குளிக்கும் யாணர் வைப்பின் நல் நாட்டுப் பொருந வான வரம்பனை நீயோ பெரும அலங்கு உளைப் புரவி ஐவரோடு சினைஇ நிலம் தலைக்கொண்ட பொலம் பூம் தும்பை ஈர்_ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழியப் பெரும் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய் பாஅல் புளிப்பினும் பகல் இருளினும் நாஅல் வேத நெறி திரியினும் திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி நடுக்கு இன்றி நிலியரோ அத்தை அடுக்கத்துச் சிறு தலை நவ்வி பெரும் கண் மாப் பிணை அந்தி அந்தணர் அரும் கடன் இறுக்கும் முத்தீ விளக்கில் துஞ்சும் பொன் கோட்டு இமயமும் பொதியமும் போன்றே &428 - முள்ளியூர்ப் பூதியார் #1 அகநானூறு 173 பாலை - முள்ளியூர்ப் பூதியார் அறம் தலைப்பிரியாது ஒழுகலும் சிறந்த கேளிர் கேடு பல ஊன்றலும் நாளும் வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கு இல் எனச் செய்வினை புரிந்த நெஞ்சினர் நறு_நுதல் மை_ஈர்_ஓதி அரும் படர் உழத்தல் சில நாள் தாங்கல் வேண்டும் என்று நின் நல் மாண் எல் வளை திருத்தினர் ஆயின் வருவர் வாழி தோழி பல புரி வார் கயிற்று ஒழுகை நோன் சுவல் கொளீஇ பகடு துறை ஏற்றத்து உமண் விளி வெரீஇ உழைமான் அம் பிணை இனன் இரிந்து ஓட காடு கவின் அழிய உரைஇக் கோடை நின்று தின விளிந்த அம் பணை நெடு வேய்க் கண் விடத் தெறிக்கும் மண்ணா முத்தம் கழங்கு உறழ் தோன்றல பழம் குழித் தாஅம் இன் களி நறவின் இயல் தேர் நன்னன் விண் பொரு நெடு வரைக் கவாஅன் பொன் படு மருங்கின் மலை இறந்தோரே &429 - மூலங்கீரனார் #1 நற்றிணை 73 பாலை - மூலங்கீரனார் வேனில் முருக்கின் விளை துணர் அன்ன மாணா விரல வல் வாய்ப் பேஎய் மல்லல் மூதூர் மலர்ப் பலி உணீஇய மன்றம் போழும் புன்கண் மாலைத் தம்மொடும் அஞ்சும் நம் இவண் ஒழியச் செல்ப என்ப தாமே செவ் வரி மயிர் நிரைத்து அன்ன வார் கோல் வாங்கு கதிர்ச் செந்நெல் அம் செறுவின் அன்னம் துஞ்சும் பூக் கெழுப் படப்பைச் சாய்க்காட்டு அன்ன என் நுதல் கவின் அழிக்கும் பசலையும் அயலோர் தூற்றும் அம்பலும் அளித்தே &430 - மையோடக் கோவனார் #1 பரிபாடல் 7 வையை - மையோடக் கோவனார் **இசையமைத்தவர் :: பித்தாமத்தர் **பண் :: பாலையாழ் திரை இரும் பனிப் பௌவம் செவ்விதா அற முகந்து உர உரும் உடன்று ஆர்ப்ப ஊர் பொறை கொள்ளாது கரை உடை குளம் எனக் கழன்று வான் வயிறு அழிபு வரைவரை தொடித்த வயங்கு வெள் அருவி இரவு இருள் பகல் ஆக இடம் அரிது செலவு என்னாது வலன் இரங்கு முரசின் தென்னவர் உள்ளிய நிலன் உற நிமிர் தானை நெடு நிரை நிவப்பு அன்ன பெயலான் பொலிந்து பெரும் புனல் பல நந்த நலன் நந்த நாடு அணி நந்த புலன் நந்த வந்தன்று வையைப் புனல் நளி இரும் சோலை நரந்தம் தாஅய் ஒளிர் சினை வேங்கை விரிந்த இணர் உதிரலொடு துளியின் உழந்த தோய்வு அரும் சிமை-தொறும் வளி வாங்கு சினைய மா மரம் வேர் கீண்டு உயர்ந்துழி உள்ளன பயம்பிடைப் பரப்பி உழவர் களி தூங்க முழவு பணை முரல ஆடல் அறியா அரிவை போலவும் ஊடல் அறியா உவகையள் போலவும் வேண்டு வழி நடந்து தாங்கு தடை பொருது விதி ஆற்றான் ஆக்கிய மெய்க் கலவை போலப் பொது நாற்றம் உள்ளுள் கரந்து புது நாற்றம் செய்கின்றே செம் பூம் புனல் கவிழ்ந்த புனலின் கயம் தண் கழுநீர் அவிழ்ந்த மலர் மீது உற்று என ஒருசார் மாதர் மட நல்லார் மணலின் எழுதிய பாவை சிதைத்தது என அழ ஒருசார் அக வயல் இள நெல் அரி கால் சூடு தொகு புனல் பரந்து எனத் துடிபட ஒருசார் ஓதம் சுற்றியது ஊர் என ஒருசார் கார் தூம்பு அற்றது வான் என ஒருசார் பாடுவார் பாக்கம் கொண்டு என ஆடுவார் சேரி அடைந்து என கழனி வந்து கால் கோத்து என பழன வாளை பாளை உண்டு என வித்திடு புலம் மேடு ஆயிற்று என உணர்த்த உணரா ஒள் இழை மாதரைப் புணர்த்திய இச்சத்துப் பெருக்கத்தின் துனைந்து சினை வளர் வாளையின் கிளையொடு கெழீஇ பழன உழவர் பாய் புனல் பரத்தந்து இறுவரை புரையுமாறு இரு கரை ஏமத்து வரை புரை உருவின் நுரை பல சுமந்து பூ வேய்ந்து பொழில் பரந்து துனைந்து ஆடுவார் ஆய் கோதையர் அலர் தண் தாரவர் காதில் தளிர் செரீஇ கண்ணி பறித்து கை வளை ஆழி தொய்யகம் புனை துகில் மேகலை காஞ்சி வாகுவலயம் எல்லம் கவரும் இயல்பிற்றாய் தென்னவன் ஒன்னார் உடை புலம் புக்கற்றால் மாறு அட்ட தானையான் வையை வனப்பு புரிந்த தகையினான் யாறு ஆடுவாருள் துரந்து புனல் தூவ தூ மலர் கண்கள் அமைந்தன ஆங்கண் அவருள் ஒருத்தி கை புதைஇய வளை ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள் போக்கிச் சிறைப்பிடித்தாள் ஓர் பொன் அம் கொம்பு பரிந்து அவளைக் கைப் பிணை நீக்குவான் பாய்வாள் இரும்பு ஈர் வடி ஒத்து மை விளங்கும் கண் ஒளியால் செம்மைப் புதுப் புனல் சென்று இருள் ஆயிற்றே வையைப் பெருக்கு வடிவு விரும்பிய ஈரணி மெய் ஈரம் தீர சுரும்பு ஆர்க்கும் சூர் நறா ஏந்தினாள் கண் நெய்தல் பேர் மகிழ் செய்யும் பெரு நறாப் பேணியவே கூர் நறா ஆர்ந்தவள் கண் கண் இயல் கண்டு ஏத்தி காரிகை நீர் நோக்கினைப் பாண் ஆதரித்துப் பல பாட அப் பாட்டுப் பேணாது ஒருத்தி பேதுற ஆயிடை என்னை வருவது எனக்கு என்று இனையா நல் ஞெமர் மார்பன் நடுக்குற நண்ணி சிகை கிடந்த ஊடலின் செம் கண் சேப்பு ஊர வகை தொடர்ந்த ஆடலுள் நல்லவர் தம்முள் பகை தொடர்ந்து கோதை பரியூஉ நனி வெகுண்டு யாறு ஆடு மேனி அணி கண்ட தன் அன்பன் சேறு ஆடு மேனி திரு நிலத்து உய்ப்பச் சிரம் மிதித்து தீர்வு இலது ஆகச் செருவுற்றாள் செம் புனல் ஊர் உடன் ஆடும் கடை புரி நரம்பு இன் கொளைப் புகல் பாலை ஏழும் எழூஉப் புணர் யாழும் இசையும் கூட குழல் அளந்து நிற்ப முழவு எழுந்து ஆர்ப்ப மன் மகளிர் சென்னியர் ஆடல் தொடங்க பொருது இழிவார் புனல் பொற்பு அஃது உரும் இடி சேர்ந்த முழக்கம் புரையும் திருமருத முன்துறை சேர் புனல் கண் துய்ப்பார் தாமம் தலை புனை பேஎம் நீர் வையை நின் பயம் பாடி விடிவுற்று ஏமாக்க நின் படிந்து நீங்காமை இன்று புணர்ந்து எனவே &431 - மோசி கண்ணத்தனார் #1 நற்றிணை 124 நெய்தல் - மோசி கண்ணத்தனார் ஒன்று இல் காலை அன்றில் போலப் புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை யானும் ஆற்றேன் அது தானும் வந்தன்று நீங்கல் வாழியர் ஐய ஈங்கை முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர் நவ்வி நோன் குளம்பு அழுந்து என வெள்ளி உருக்குறு கொள்கலம் கடுப்ப விருப்புறத் தெண் நீர்க் குமிழி இழிதரும் தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே &432 - மோசி கீரனார் #1 அகநானூறு 392 குறிஞ்சி - மோசிகீரனார் தாழ் பெரும் தடக் கை தலைஇய கானத்து வீழ் பிடி கெடுத்த வெண் கோட்டு யானை உண் குளகு மறுத்த உயக்கத்து அன்ன பண்பு உடை யாக்கைச் சிதைவு நன்கு அறீஇப் பின் நிலை முனியான் ஆகி நன்றும் தாது செய் பாவை அன்ன தையல் மாதர் மெல் இயல் மட நல்லோள்-வயின் தீது இன்றாக நீ புணை புகுக என என்னும் தண்டும் ஆயின் மற்று அவன் அழிதகப் பெயர்தல் நனி இன்னாதே ஒல் இனி வாழி தோழி கல்லெனக் கண மழை பொழிந்த கான் படி இரவில் தினை மேய் யானை இனன் இரிந்து ஓட கல் உயர் கழுதில் சேணோன் எறிந்த வல் வாய்க் கவணின் கடு வெடி ஒல்லென மறப் புலி உரற வாரணம் கதற நனவுறு கட்சியின் நல் மயில் ஆல மலை உடன் வெரூஉம் மாக் கல் வெற்பன் பிரியுநன் ஆகலோ அரிதே அதாஅன்று உரிது அல் பண்பின் பிரியுநன் ஆயின் வினை தவப் பெயர்ந்த வென் வேல் வேந்தன் முனை கொல் தானையொடு முன் வந்து இறுப்ப தன் வரம்பு ஆகிய மன் எயில் இருக்கை ஆற்றாமையின் பிடித்த வேல் வலி தோற்றம் பிழையாத் தொல் புகழ் பெற்ற விழை தக ஓங்கிய கழை துஞ்சு மருங்கின் கான் அமர் நன்னன் போல யான் ஆகுவல் நின் நலம் தருவேனே #2 குறுந்தொகை 59 பாலை - மோசிகீரனார் பதலைப் பாணிப் பரிசிலர் கோமான் அதலைக் குன்றத்து அகல் வாய்க் குண்டு சுனைக் குவளையொடு பொதிந்த குளவி நாறு நறு நுதல் தவ்வென மறப்பரோ மற்றே முயலவும் சுரம் பல விலங்கிய அரும் பொருள் நிரம்பா ஆகலின் நீடலோ இன்றே #3 குறுந்தொகை 84 பாலை - மோசிகீரனார் பெயர்த்தனென் முயங்க யான் வியர்த்தனென் என்றனள் இனி அறிந்தேன் அது தனி ஆகுதலே கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில் வேங்கையும் காந்தளும் நாறி ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே #4 நற்றிணை 342 நெய்தல் - மோசி கீரனார் மா என மதித்து மடல் ஊர்ந்து ஆங்கு மதில் என மதித்து வெண் தேர் ஏறி என் வாய் நின் மொழி மாட்டேன் நின்-வயின் சேரி சேரா வருவோர்க்கு என்றும் அருளல் வேண்டும் அன்பு உடையோய் என கண் இனிது ஆகக் கோட்டியும் தேரலள் யானே எல்_வளை யாத்த கானல் வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்த சென்னிச் சேவடி சேர்த்தின் என் எனப் படுமோ என்றலும் உண்டே #5 புறநானூறு 50 - மோசிகீரனார் **பாடப்பட்டோன்: சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் மாசற விசித்த வார்புறு வள்பின் மை படு மருங்குல் பொலிய மஞ்ஞை ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணித் தார் பொலம் குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக் குருதி வேட்கை உரு கெழு முரசம் மண்ணி வாரா அளவை எண்ணெய் நுரை முகந்து அன்ன மென் பூம் சேக்கை அறியாது ஏறிய என்னைத் தெறுவர இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை அதூஉம் சாலும் நல் தமிழ் முழுது அறிதல் அதனொடும் அமையாது அணுக வந்து நின் மதன் உடை முழவுத் தோள் ஓச்சித் தண்ணென வீசியோயே வியலிடம் கமழ இவண் இசை உடையோர்க்கு அல்லது அவணது உயர்_நிலை_உலகத்து உறையுள் இன்மை விளங்கக் கேட்ட மாறு-கொல் வலம் படு குருசில் நீ ஈங்கு இது செயலே #6 புறநானூறு 154 - மோசிகீரனார் **பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான் திரை பொரு முந்நீர்க் கரை நணிச் செலினும் அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும் சில் நீர் வினவுவர் மாந்தர் அது போல் அரசர் உழையர் ஆகவும் புரை தபு வள்ளியோர்ப் படர்குவர் புலவர் அதனால் யானும் பெற்றது ஊதியம் பேறு யாது என்னேன் உற்றனென் ஆதலின் உள்ளி வந்தனனே ஈ என இரத்தலோ அரிதே நீ அது நல்கினும் நல்காய் ஆயினும் வெல் போர் எறி_படைக்கு ஓடா ஆண்மை அறுவைத் தூ விரி கடுப்பத் துவன்றி மீமிசைத் தண் பல இழிதரும் அருவி நின் கொண் பெரும் கானம் பாடல் எனக்கு எளிதே #7 புறநானூறு 155 - மோசி கீரனார் **பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான் வணர் கோட்டுச் சீறியாழ் வாடு புடைத் தழீஇ உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்க எனக் கிளக்கும் பாண கேள் இனி நயத்தின் பாழ் ஊர் நெருஞ்சிப் பசலை வான் பூ ஏர் தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க் கொண் பெரும் கானத்துக் கிழவன் தண் தார் அகலம் நோக்கின மலர்ந்தே #8 புறநானூறு 156 - மோசிகீரனார் **பாடப்பட்டோன்: கொண்கானங் கிழான் ஒன்று நன்கு உடைய பிறர் குன்றம் என்றும் இரண்டு நன்கு உடைத்தே கொண் பெரும் கானம் நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித் தொடுத்து உணக் கிடப்பினும் கிடக்கும் அஃதான்று நிறை அரும் தானை வேந்தரைத் திறை கொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்தே #9 புறநானூறு 186 - மோசிகீரனார் நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே மன்னன் உயிர்த்தே மலர் தலை உலகம் அதனால் யான் உயிர் என்பது அறிகை வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே &433 - மோசி கொற்றனார் #1 குறுந்தொகை 377 குறிஞ்சி - மோசி கொற்றனார் மலர் ஏர் உண்கண் மாண் நலம் தொலைய வளை ஏர் மென் தோள் ஞெகிழ்ந்ததன்தலையும் மாற்று ஆகின்றே தோழி ஆற்றலையே அறிதற்கு அமையா நாடனொடு செய்து கொண்டது ஓர் சிறு நல் நட்பே &434 - மோசிக் கரையனார் #1 அகநானூறு 260 நெய்தல் - மோசிக் கரையனார் மண்டிலம் மழுக மலை நிறம் கிளர வண்டு இனம் மலர் பாய்ந்து ஊத மீமிசைக் கண்டல் கானல் குருகு இனம் ஒலிப்பத் திரை பாடு அவிய திமில் தொழில் மறப்பக் கரை ஆடு அலவன் அளை-வயின் செறிய செக்கர் தோன்றத் துணை புணர் அன்றில் எக்கர்ப் பெண்ணை அக மடல் சேரக் கழி மலர் கமழ் முகம் கரப்பப் பொழில் மனைப் புன்னை நறு வீ பொன் நிறம் கொளாஅ எல்லை பைப்பய கழிப்பி எல் உற யாங்கு ஆகுவல்-கொல் யானே நீங்காது முது மரத்து உறையும் முரவு வாய் முது புள் கதுமெனக் குழறும் கழுது வழங்கு அரைநாள் நெஞ்சு நெகிழ் பருவரல் செய்த அன்பிலாளன் அறிவு நயந்தேனே &435 - மோசி சாத்தனார் #1 புறநானூறு 272 - மோசி சாத்தனார் மணி துணர்ந்து அன்ன மாக் குரல் நொச்சி போது விரி பல் மரனுள்ளும் சிறந்த காதல் நல் மரம் நீ நிழற்றிசினே கடி உடை வியன் நகர்க் காண்வரப் பொலிந்த தொடி உடை மகளிர் அல்குலும் கிடத்தி காப்பு உடைப் புரிசை புக்கு மாறு அழித்தலின் ஊர்ப்புறம் கொடாஅ நெடுந்தகை பீடு கெழு சென்னிக் கிழமையும் நினதே &436 - மோ(சி)தாசனார் #1 குறுந்தொகை 229 பாலை - மோ(சி)தாசனார் இவன் இவள் ஐம்பால் பற்றவும் இவள் இவன் புன் தலை ஓரி வாங்குநள் பரியவும் காதல் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது ஏது இல் சிறு செரு உறுப-மன்னோ நல்லை-மன்று அம்ம பாலே மெல் இயல் துணை மலர்ப் பிணையல் அன்ன இவர் மணம் மகிழ் இயற்கை காட்டியோயே &437 - வடநெடுந்தத்தனார் #1 புறநானூறு 179 - வடநெடுந்தத்தனார் ** (வடம நெடுந்தத்தனார்) (வடம நெடுந் தச்சனார்) **பாடப்பட்டோன்: நாலை கிழவன் நாகன் ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்து என ஏலாது கவிழ்ந்த என் இரவல் மண்டை மலர்ப்போர் யார் என வினவலின் மலைந்தோர் விசி பிணி முரசமொடு மண் பல தந்த திரு வீழ் நுண் பூண் பாண்டியன் மறவன் படை வேண்டுவழி வாள் உதவியும் வினை வேண்டுவழி அறிவு உதவியும் வேண்டுபவேண்டுப வேந்தன் தேஎத்து அசை நுகம் படாஅ ஆண்தகை உள்ளத்துத் தோலா நல் இசை நாலை கிழவன் பருந்து பசி தீர்க்கும் நல் போர்த் திருந்து வேல் நாகன் கூறினர் பலரே &438 - வடம வண்ணக்கன் தாமோதரன் #1 குறுந்தொகை 85 மருதம் - வடம வண்ணக்கன் தாமோதரன் யாரினும் இனியன் பேர் அன்பினனே உள்ளூர்க் குரீஇத் துள்ளு நடைச் சேவல் சூல் முதிர் பேடைக்கு ஈனில் இழையியர் தேம் பொதிக் கொண்ட தீம் கழைக் கரும்பின் நாறா வெண் பூக் கொழுதும் யாணர் ஊரன் பாணன் வாயே #2 புறநானூறு 172 - வடமண்ணக்கன் தாமோதரனார் **பாடப்பட்டோன் : பிட்டங்கொற்றன் ஏற்றுக உலையே ஆக்குக சோறே கள்ளும் குறைபடல் ஓம்புக ஒள் இழைப் பாடு வல் விறலியர் கோதையும் புனைக அன்னவை பலவும் செய்க என்னதூஉம் பரியல் வேண்டா வரு_பதம் நாடி ஐவனம் காவல் பெய் தீ நந்தின் ஒளி திகழ் திருந்து மணி நளி இருள் அகற்றும் வன்புல நாடன் வய_மான் பிட்டன் ஆர் அமர் கடக்கும் வேலும் அவன் இறை மா வள் ஈகைக் கோதையும் மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே &439 - வடமோதம் கிழார் #1 அகநானூறு 317 பாலை - வடமோதம் கிழார் மாக விசும்பின் மழை தொழில் உலந்து எனப் பாஅய் அன்ன பகல் இருள் பரப்பிப் புகை நிற உருவின் அற்சிரம் நீங்கக் குவி முகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும் முதிராப் பல் இதழ் உதிரப் பாய்ந்து உடன் மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்பப் பொன் செய் கன்னம் பொலிய வெள்ளி நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல அரவ வண்டு இனம் ஊது-தொறும் குரவத்து ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்பத் துவைத்து எழு தும்பி தவிர் இசை விளரி உதைத்து விடு நரம்பின் இம்மென இமிரும் மரன் ஏமுற்ற காமர் வேனில் வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்துக் குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப வருவேம் என்ற பருவம் ஆண்டை இல்லை-கொல் என மெல்ல நோக்கி நினைந்தனம் இருந்தனம் ஆக நயந்து ஆங்கு உள்ளிய மருங்கின் உள்ளம் போல வந்து நின்றனரே காதலர் நம் துறந்து என் உழியது-கொல் தானே பல் நாள் அன்னையும் அறிவுற அணங்கி நல் நுதல் பாஅய பசலை நோயே #2 புறநானூறு 260 - வடமோதங்கிழார் வளரத் தொடினும் வௌவுபு திரிந்து விளரி உறுதரும் தீம் தொடை நினையாத் தளரும் நெஞ்சம் தலைஇ மனையோள் உளரும் கூந்தல் நோக்கிக் களர கள்ளி நீழல் கடவுள் வாழ்த்திப் பசி படு மருங்குலை கசிபு கைதொழாஅக் காணலென்-கொல் என வினவினை வரூஉம் பாண கேள்-மதி யாணரது நிலையே புரவுத் தொடுத்து உண்குவை ஆயினும் இரவு எழுந்து எவ்வம் கொள்வை ஆயினும் இரண்டும் கை உள போலும் கடிது அண்மையவே முன் ஊர்ப் பூசலின் தோன்றித் தன் ஊர் நெடு நிரை தழீஇய மீளியாளர் விடு கணை நீத்தம் துடி புணை ஆக வென்றி தந்து கொன்று கோள் விடுத்து வையகம் புலம்ப வளைஇய பாம்பின் வை எயிற்று உய்ந்த மதியின் மறவர் கையகத்து உய்ந்த கன்று உடைப் பல் ஆன் நிரையொடு வந்த உரையன் ஆகி உரி களை அரவம் மானத் தானே அரிது செல் உலகில் சென்றனன் உடம்பே கானச் சிற்றியாற்று அரும் கரைக் காலுற்றுக் கம்பமொடு துளங்கிய இலக்கம் போல அம்பொடு துளங்கி ஆண்டு ஒழிந்தன்றே உயர் இசை வெறுப்பத் தோன்றிய பெயரே மடம் சால் மஞ்ஞை அணி மயிர் சூட்டி இடம் பிறர் கொள்ளாச் சிறு வழிப் படம் செய் பந்தர்க் கல் மிசையதுவே &440 - வண்ணக்கன் சோருமருங்குமரனார் #1 நற்றிணை 257 குறிஞ்சி - வண்ணக்கன் சோருமருங்குமரனார் விளிவு இல் அரவமொடு தளி சிறந்து உறைஇ மழை எழுந்து இறுத்த நளிர் தூங்கு சிலம்பின் கழை அமல்பு நீடிய வான் உயர் நெடும் கோட்டு இலங்கு வெள் அருவி வியன் மலைக் கவாஅன் அரும்பு வாய் அவிழ்ந்த கரும் கால் வேங்கைப் பொன் மருள் நறு வீ கல் மிசைத் தாஅம் நல் மலை நாட நயந்தனை அருளாய் இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறிக் கடு மா வழங்குதல் அறிந்தும் நடுநாள் வருதி நோகோ யானே &441 - வண்ணப்புறக் கந்தரத்தனார் #1 அகநானூறு 49 பாலை - வண்ணப்புறக் கந்தரத்தனார் ** (வண்ணப்புறக் கல்லாடனார்) கிளியும் பந்தும் கழங்கும் வெய்யோள் அளியும் அன்பும் சாயலும் இயல்பும் முன்_நாள் போலாள் இறீஇயர் என் உயிர் என கொடும் தொடைக் குழவியொடு வயின் மரத்து யாத்த கடுங்கண் கறவையின் சிறுபுறம் நோக்கிக் குறுக வந்து குவவு நுதல் நீவி மெல்லெனத் தழீஇயினேன் ஆக என் மகள் நன்னர் ஆகத்து இடை முலை வியர்ப்ப பல் கால் முயங்கினள்-மன்னே அன்னோ விறல் மிகு நெடுந்தகை பல பாராட்டி வறன் நிழல் அசைஇ வான் புலந்து வருந்திய மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும் காடு உடன்கழிதல் அறியின் தந்தை அல்கு_பதம் மிகுத்த கடி உடை வியல் நகர் செல்வுழிச்செல்வுழி மெய் நிழல் போலக் கோதை ஆயமொடு ஓரை தழீஇத் தோடு அமை அரிச் சிலம்பு ஒலிப்ப அவள் ஆடுவழிஆடுவழி அகலேன் மன்னே #2 நற்றிணை 71 பாலை - வண்ணப்புறக் கந்தரத்தனார் மன்னாப் பொருட்பிணி முன்னி இன்னதை வளை அணி முன்கை நின் இகுளைக்கு உணர்த்து எனப் பல் மாண் இரத்திர் ஆயின் சென்ம் என விடுநள் ஆதலும் உரியள் விடினே கண்ணும் நுதலும் நீவி முன் நின்று பிரிதல் வல்லிரோ ஐய செல்வர் வகை அமர் நல் இல் அக இறை உறையும் வண்ணப் புறவின் செம் கால் சேவல் வீழ் துணைப் பயிரும் கையறு முரல் குரல் நும் இலள் புலம்பக் கேள்-தொறும் பொம்மல் ஓதி பெரு விதுப்புறவே &442 - வருமுலையாரித்தியார் #1 குறுந்தொகை 176 குறிஞ்சி - வருமுலையாரித்தியார் ஒரு நாள் வாரலன் இரு நாள் வாரலன் பல் நாள் வந்து பணிமொழி பயிற்றி என் நன்னர் நெஞ்சம் நெகிழ்த்த பின்றை வரை முதிர் தேனின் போகியோனே ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ வேறு புல நல் நாட்டுப் பெய்த ஏறு உடை மழையின் கலிழும் என் நெஞ்சே &443 - வன்பரணர் #1 நற்றிணை 374 முல்லை - வன்பரணர் முரம்பு தலைமணந்த நிரம்பா இயவின் ஓங்கித் தோன்றும் உமண் பொலி சிறுகுடிக் களரிப் புளியின் காய் பசி பெயர்ப்ப உச்சிக் கொண்ட ஓங்கு குடை வம்பலீர் முற்றையும் உடையமோ மற்றே பிற்றை வீழ் மா மணிய புனை நெடும் கூந்தல் நீர் வார் புள்ளி ஆகம் நனைப்ப விருந்து அயர் விருப்பினள் வருந்தும் திருந்து இழை அரிவைத் தே_மொழி நிலையே #2 புறநானூறு 148 - வன்பரணர் **பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெரு நள்ளி கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி நின் அசைவு இல் நோன் தாள் நசை வளன் ஏத்தி நாள்-தொறும் நல் கலம் களிற்றொடு கொணர்ந்து கூடு விளங்கு வியன் நகர்ப் பரிசில் முற்று அளிப்பப் பீடு இல் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டிச் செய்யா கூறிக் கிளத்தல் எய்யாது ஆகின்று எம் சிறு செம் நாவே #3 புறநானூறு 149 - வன்பரணர் **பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி நள்ளி வாழியோ நள்ளி நள்ளென் மாலை மருதம் பண்ணிக் காலைக் கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி வரவு எமர் மறந்தனர் அது நீ புரவுக் கடன் பூண்ட வண்மை யானே #4 புறநானூறு 150 - வன் பரணர் **பாடப்பட்டோன்: கண்டீரக் கோப் பெருநள்ளி கூதிர்ப் பருந்தின் இரும் சிறகு அன்ன பாறிய சிதாரேன் பலவு முதல் பொருந்தித் தன்னும் உள்ளேன் பிறிது புலம் படர்ந்த என் உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழல் கால் வான் கதிர்த் திரு மணி விளங்கும் சென்னிச் செல்வத் தோன்றல் ஓர் வல் வில் வேட்டுவன் தொழுதனென் எழுவேன் கை கவித்து இரீஇ இழுதின் அன்ன வால் நிணக் கொழும் குறை கான் அதர் மயங்கிய இளையர் வல்லே தாம் வந்து எய்தா அளவை ஒய்யென தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு நின் இரும் பேர் ஒக்கலொடு தின்ம் எனத் தருதலின் அமிழ்தின் மிசைந்து காய் பசி நீங்கி நல் மரன் நளிய நறும் தண் சாரல் கல் மிசை அருவி தண்ணெனப் பருகி விடுத்தல் தொடங்கினேன் ஆக வல்லே பெறுதற்கு அரிய வீறு சால் நல் கலம் பிறிது ஒன்று இல்லை காட்டு நாட்டேம் என மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம் மடை செறி முன்கை கடகமொடு ஈத்தனன் எ நாடோ என நாடும் சொல்லான் யாரீரோ எனப் பேரும் சொல்லான் பிறர்பிறர் கூற வழிக் கேட்டிசினே இரும்பு புனைந்து இயற்றாப் பெரும் பெயர்த் தோட்டி அம் மலை காக்கும் அணி நெடும் குன்றின் பளிங்கு வகுத்து அன்ன தீ நீர் நளி மலை நாடன் நள்ளி அவன் எனவே #5 புறநானூறு 152 - வன்பரணர் **பாடப்பட்டோன்: வல்வில் ஓரி வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி பேழ் வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப் புழல் தலை புகர்க் கலை உருட்டி உரல் தலைக் கேழல் பன்றி வீழ அயலது ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும் வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன் புகழ் சால் சிறப்பின் அம்பு மிகத் திளைக்கும் கொலைவன் யார்-கொலோ கொலைவன் மற்று இவன் விலைவன் போலான் வெறுக்கை நன்கு உடையன் ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின் சாரல் அருவி பய மலைக் கிழவன் ஓரி-கொல்லோ அல்லன்-கொல்லோ பாடுவல் விறலி ஓர் வண்ணம் நீரும் மண் முழா அமை-மின் பண் யாழ் நிறு-மின் கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடு-மின் எல்லரி தொடு-மின் ஆகுளி தொடு-மின் பதலை ஒரு கண் பையென இயக்கு-மின் மதலை மாக் கோல் கைவலம் தமின் என்று இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி மூவேழ் துறையும் முறையுளிக் கழிப்பிக் கோ எனப் பெயரிய காலை ஆங்கு அது தன் பெயர் ஆகலின் நாணி மற்று யாம் நாட்டிடன்நாட்டிடன் வருதும் ஈங்கு ஓர் வேட்டுவர் இல்லை நின் ஒப்போர் என வேட்டது மொழியவும் விடாஅன் வேட்டத்தில் தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கித் தன் மலை பிறந்த தா இல் நல் பொன் பல் மணிக் குவையொடும் விரைஇக் கொண்ம் எனச் சுரத்திடை நல்கியோனே விடர்ச் சிமை ஓங்கு இரும் கொல்லிப் பொருநன் ஓம்பா ஈகை விறல் வெய்யோனே #6 புறநானூறு 153 - வன்பரணர் **பாடப்பட்டோன்: வல்வில் ஓரி மழை அணி குன்றத்துக் கிழவன் நாளும் இழை அணி யானை இரப்போர்க்கு ஈயும் சுடர் விடு பசும் பூண் சூர்ப்பு அமை முன்கை அடு போர் ஆனா ஆதன் ஓரி மாரி வண் கொடை காணிய நன்றும் சென்றது-மன் எம் கண்ணுள் அம் கடும்பே பனி நீர் பூவா மணி மிடை குவளை வால் நார்த் தொடுத்த கண்ணியும் கலனும் யானை இனத்தொடு பெற்றனர் நீங்கிப் பசியார் ஆகல் மாறு-கொல் விசி பிணிக் கூடு கொள் இன்னியம் கறங்க ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்தே #7 புறநானூறு 255 - வன்பரணர் ஐயோ எனின் யான் புலி அஞ்சுவலே அணைத்தனன் கொளினே அகல் மார்பு எடுக்கல்லேன் என் போல் பெரு விதிர்ப்பு உறுக நின்னை இன்னாது உற்ற அறன் இல் கூற்றே திரை வளை முன்கை பற்றி வரை நிழல் சேர்கம் நடந்திசின் சிறிதே &444 - வாடாப் பிரமந்தனார் #1 குறுந்தொகை 331 பாலை - வாடாப் பிரமந்தனார் நெடும் கழை திரங்கிய நீர் இல் ஆர் இடை ஆறு செல் வம்பலர் தொலைய மாறு நின்று கொடும் சிலை மறவர் கடறு கூட்டுண்ணும் கடும் கண் யானைக் கானம் நீந்தி இறப்பர்-கொல் வாழி தோழி நறு வடிப் பைம் கால் மாஅத்து அம் தளிர் அன்ன நல் மா மேனி பசப்ப நம்மினும் சிறந்த அரும் பொருள் தரற்கே &445 - வாயிலான் தேவன் #1 குறுந்தொகை 103 நெய்தல் - வாயிலான் தேவன் கடும் புனல் தொடுத்த நடுங்கு அஞர் அள்ளல் கவிர் இதழ் அன்ன தூவிச் செவ் வாய் இரை தேர் நாரைக்கு எவ்வம் ஆகத் தூஉம் துவலைத் துயர்கூர் வாடையும் வாரார் போல்வர் நம் காதலர் வாழேன் போல்வல் தோழி யானே #2 குறுந்தொகை 108 முல்லை - வாயிலான் தேவன் மழை விளையாடும் குன்று சேர் சிறுகுடிக் கறவை கன்று-வயின் படரப் புறவில் பாசிலை முல்லை ஆசு இல் வான் பூச் செவ் வான் செவ்வி கொண்டன்று உய்யேன் போல்வல் தோழி யானே &446 - வாயில் இளங்கண்ணனார் #1 குறுந்தொகை 346 குறிஞ்சி - வாயில் இளங்கண்ணனார் நாகு பிடி நயந்த முளைக் கோட்டு இளம் களிறு குன்றம் நண்ணிக் குறவர் ஆர்ப்ப மன்றம் போழும் நாடன் தோழி சுனைப் பூம் குவளைத் தொடலை தந்தும் தினைப் புன மருங்கில் படு கிளி ஓப்பியும் காலை வந்து மாலைப் பொழுதில் நல் அகம் நயந்து தான் உயங்கிச் சொல்லவும் ஆகாது அஃகியோனே &447 - வான்மீகியார் #1 புறநானூறு 358 - வான்மீகியார் பருதி சூழ்ந்த இப் பயம் கெழு மா நிலம் ஒரு பகல் எழுவர் எய்தி அற்றே வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு ஐயவி அனைத்தும் ஆற்றாது ஆகலின் கைவிட்டனரே காதலர் அதனால் விட்டோரை விடாஅள் திருவே விடாஅதோர் இவள் விடப்பட்டோரே &448 - விட்ட குதிரையார் #1 குறுந்தொகை 74 குறிஞ்சி - விட்ட குதிரையார் விட்ட குதிரை விசைப்பின் அன்ன விசும்பு தோய் பசும் கழைக் குன்ற நாடன் யாம் தன் படர்ந்தமை அறியான் தானும் வேனில் ஆன் ஏறு போல சாயினன் என்ப நம் மாண் நலம் நயந்தே &449 - விரிச்சியூர் நன்னாகனார் #1 புறநானூறு 292 - விரிச்சியூர் நன்னாகனார் வேந்தற்கு ஏந்திய தீம் தண் நறவம் யாம் தனக்கு உறு முறை வளாவ விலக்கி வாய் வாள் பற்றி நின்றனென் என்று சினவல் ஓம்பு-மின் சிறு புல்லாளர் ஈண்டே போல வேண்டுவன் ஆயின் என் முறை வருக என்னான் கம்மென எழு தரு பெரும் படை விலக்கி ஆண்டும் நிற்கும் ஆண்தகையன்னே &450 - விரியூர் (கிழார்)நக்கனார் #1 புறநானூறு 332 - விரியூர் கிழார் பிறர் வேல் போலாது ஆகி இவ் ஊர் மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே இரும் புறம் நீறும் ஆடிக் கலந்து இடைக் குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும் மங்கல மகளிரொடு மாலை சூட்டி இன் குரல் இரும் பை யாழொடு ததும்பத் தெண் நீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து மண் முழுது அழுங்கச் செல்லினும் செல்லும் ஆங்கு இரும் கடல் தானை வேந்தர் பெரும் களிற்று முகத்தினும் செலவு ஆனாதே &451 - வில்லக விரலினார் #1 குறுந்தொகை 370 முல்லை - வில்லக விரலினார் பொய்கை ஆம்பல் அணி நிறக் கொழு முகை வண்டு வாய் திறக்கும் தண் துறை ஊரனொடு இருப்பின் இரு மருங்கினமே கிடப்பின் வில் அக விரலின் பொருந்தி அவன் நல் அகம் சேரின் ஒரு மருங்கினமே &452 - விழிக்கட்பேதை பெருங்கண்ணனார் #1 நற்றிணை 242 முல்லை - விழிக்கட்பேதை பெருங்கண்ணனார் இலை இல பிடவம் ஈர் மலர் அரும்பப் புதல் இவர் தளவம் பூம் கொடி அவிழப் பொன் எனக் கொன்றை மலர மணி எனப் பன் மலர்க் காயாம் குறும் சினை கஞலக் கார் தொடங்கின்றே காலை வல் விரைந்து செல்க பாக நின் தேரே உவக் காண் கழிப் பெயர் களரில் போகிய மட மான் விழிக் கண் பேதையொடு இனன் இரிந்து ஓடக் காமர் நெஞ்சமொடு அகலாத் தேடூஉ நின்ற இரலை ஏறே &453 - விற்றூற்று மூதெயினனார் #1 அகநானூறு 37 பாலை - விற்றூற்று மூதெயினனார் மறந்து அவண் அமையார் ஆயினும் கறங்கு இசைக் கங்குல் ஓதைக் கலி மகிழ் உழவர் பொங்கழி முகந்த தா இல் நுண் துகள் மங்குல் வானின் மாதிரம் மறைப்ப வைகு புலர் விடியல் வை பெயர்த்து ஆட்டித் தொழில் செருக்கு அனந்தர் வீட எழில் தகை வளியொடு சினைஇய வண் தளிர் மாஅத்துக் கிளி போல் காய கிளைத் துணர் வடித்துப் புளிப் பதன் அமைத்த புதுக் குட மலிர் நிறை வெயில் வெரிந் நிறுத்த பயில் இதழ்ப் பசும் குடைக் கயம் மண்டு பகட்டின் பருகிக் காண்வரக் கொள்ளொடு பயறு பால் விரைஇ வெள்ளி கோல் வரைந்து அன்ன வால் அவிழ் மிதவை வாங்கு கை தடுத்த பின்றை ஓங்கிய பருதி அம் குப்பை சுற்றிப் பகல் செல மருத மரன் நிழல் எருதொடு வதியும் காமர் வேனில்-மன் இது மாண் நலம் நுகரும் துணையுடையோர்க்கே #2 அகநானூறு 136 மருதம் - விற்றூற்று மூதெயினனார் மைப்பு அறப் புழுக்கின் நெய்க் கனி வெண் சோறு வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப் புள்ளுப் புணர்ந்து இனிய ஆகத் தெள் ஒளி அம் கண் இரு விசும்பு விளங்கத் திங்கள் சகடம் மண்டிய துகள் தீர் கூட்டத்துக் கடி நகர் புனைந்து கடவுள் பேணிப் படு மண முழவொடு பரூஉப் பணை இமிழ வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப் பூக் கணும் இமையார் நோக்குபு மறைய மென் பூ வாகைப் புன் புறக் கவட்டு இலை பழம் கன்று கறித்த பயம்பு அமல் அறுகைத் தழங்கு குரல் வானின் தலைப்பெயற்கு ஈன்ற மண்ணு மணி அன்ன மா இதழ்ப் பாவைத் தண் நறு முகையொடு வெண் நூல் சூட்டித் தூ உடைப் பொலிந்து மேவரத் துவன்றி மழை பட்டு அன்ன மணல் மலி பந்தர் இழை அணி சிறப்பின் பெயர் வியர்ப்பு ஆற்றித் தமர் நமக்கு ஈத்த தலை_நாள் இரவின் உவர் நீங்கற்பின் எம் உயிர் உடம்படுவி முருங்காக் கலிங்கம் முழுவதும் வளைஇப் பெரும் புழுக்குற்ற நின் பிறை நுதல் பொறி வியர் உறு வளி ஆற்ற சிறு வரை திற என ஆர்வ நெஞ்சமொடு போர்வை வவ்வலின் உறை கழி வாளின் உருவு பெயர்ந்து இமைப்ப மறை திறன் அறியாள் ஆகி ஒய்யென நாணினள் இறைஞ்சியோளே பேணிப் பரூஉப் பகை ஆம்பல் குரூஉத் தொடை நீவிச் சுரும்பு இமிர் ஆய் மலர் வேய்ந்த இரும் பல் கூந்தல் இருள் மறை ஒளித்தே #3 அகநானூறு 288 குறிஞ்சி - விற்றூற்று மூதெயினனார் ** (முத்தூற்று மூதெயினனார்) செல்-மதி சிறக்க நின் உள்ளம் நின் மலை ஆரம் நீவிய அம் பகட்டு மார்பினை சாரல் வேங்கைப் படு சினை புதுப் பூ முருகு முரண் கொள்ளும் உருவக் கண்ணியை எரி தின் கொல்லை இறைஞ்சிய ஏனல் எவ்வம் கூரிய வைகலும் வருவோய் கனி முதிர் அடுக்கத்து எம் தனிமை காண்டலின் எண்மை செய்தனை ஆகுவை நண்ணிக் கொடியோர் குறுகும் நெடி இரும் குன்றத்து இட்டு ஆறு இரங்கும் விட்டு ஒளிர் அருவி அரு வரை இழிதரும் வெருவரு படாஅர்க் கயம் தலை மந்தி உயங்கு பசி களைஇயர் பார்ப்பின் தந்தை பழச் சுளை தொடினும் நனி நோய் ஏய்க்கும் பனி கூர் அடுக்கத்து மகளிர் மாங்காட்டு அற்றே துகள் அறக் கொந்தொடு உதிர்த்த கதுப்பின் அம் தீம் கிளவித் தந்தை காப்பே #4 குறுந்தொகை 372 குறிஞ்சி - விற்றூற்று மூதெயினனார் பனைத் தலைக் கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாயக் கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பைக் கணம்கொள் சிமைய உணங்கும் கானல் ஆழி தலை வீசிய அயிர் சேற்று அருவிக் கூழை பெய் எக்கர்க் குழீஇய பதுக்கை புலர்_பதம் கொள்ளா அளவை அலர் எழுந்தன்று இவ் அழுங்கல் ஊரே &454 - விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் #1 நற்றிணை 298 பாலை - விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் வம்ப மாக்கள் வரு திறம் நோக்கிச் செம் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர் மடி வாய்த் தண்ணுமைத் தழங்கு குரல் கேட்ட எருவைச் சேவல் கிளை-வயின் பெயரும் அரும் சுரக் கவலை அஞ்சுவரு நனம் தலைப் பெரும் பல் குன்றம் உள்ளியும் மற்று இவள் கரும்பு உடைப் பணைத் தோள் நோக்கியும் ஒரு திறம் பற்றாய் வாழி எம் நெஞ்சே நல் தார்ப் பொன் தேர்ச் செழியன் கூடல் ஆங்கண் ஒருமை செப்பிய அருமை வான் முகை இரும் போது கமழும் கூந்தல் பெரு மலை தழீஇயும் நோக்கு இயையுமோ மற்றே &455 - வினைத்தொழில் சோகீரனார் #1 நற்றிணை 319 நெய்தல் - வினைத்தொழில் சோகீரனார் ஓதமும் ஒலி ஓவு இன்றே ஊதையும் தாது உளர் கானல் தவ்வென்றன்றே மணல் மலி மூதூர் அகல் நெடும் தெருவில் கூகைச் சேவல் குராலோடு ஏறி ஆர் இரும் சதுக்கத்து அஞ்சுவரக் குழறும் அணங்கு கால்கிளரும் மயங்கு இருள் நடுநாள் பாவை அன்ன பலர் ஆய் வனப்பின் தட மென் பணைத் தோள் மடம் மிகு குறுமகள் சுணங்கு அணி வன முலை முயங்கல் உள்ளி மீன் கண் துஞ்சும் பொழுதும் யான் கண் துஞ்சேன் யாது-கொல் நிலையே &456 - வீரை வெளியனார் #1 புறநானூறு 320 - வீரை வெளியனார் முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப் பந்தர் வேண்டாப் பலர் தூங்கு நீழல் கைம்_மான் வேட்டுவன் கனை துயில் மடிந்து எனப் பார்வை மடப் பிணை தழீஇப் பிறிது ஓர் தீர் தொழில் தனிக் கலை திளைத்து விளையாட இன்புறு புணர் நிலை கண்ட மனையோள் கணவன் எழுதலும் அஞ்சிக் கலையே பிணை-வயின் தீர்தலும் அஞ்சி யாவதும் இல் வழங்காமையின் கல்லென ஒலித்து மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி கானக்கோழியொடு இதல் கவர்ந்து உண்டு என ஆர நெருப்பின் ஆரல் நாறத் தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம் இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தித் தங்கினை சென்மோ பாண தங்காது வேந்து தரு விழுக் கூழ் பரிசிலர்க்கு என்றும் அருகாது ஈயும் வண்மை உரை சால் நெடுந்தகை ஓம்பும் ஊரே &457 - வீரை வெளியன் தித்தனார் #1 அகநானூறு 188 குறிஞ்சி - வீரை வெளியன் தித்தனார் பெரும் கடல் முகந்த இரும் கிளைக் கொண்மூ இருண்டு உயர் விசும்பின் வலன் ஏர்பு வளைஇப் போர்ப்புறு முரசின் இரங்கி முறை புரிந்து அறன் நெறி பிழையாத் திறன் அறி மன்னர் அரும் சமத்து எதிர்ந்த பெரும் செய் ஆடவர் கழித்து எறி வாளின் நளிப்பன விளங்கும் மின் உடைக் கருவியை ஆகி நாளும் கொன்னே செய்தியோ அரவம் பொன் என மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சிப் பொலிந்த ஆயமொடு காண்தக இயலித் தழலை வாங்கியும் தட்டை ஓப்பியும் அழல் ஏர் செயலை அம் தழை அசைஇயும் குற_மகள் காக்கும் ஏனல் புறமும் தருதியோ வாழிய மழையே &458 - வெண்கண்ணனார் #1 அகநானூறு 130 நெய்தல் - வெண்கண்ணனார் அம்ம வாழி கேளிர் முன் நின்று கண்டனிர் ஆயின் கழறலிர்-மன்னோ நுண் தாது பொதிந்த செம் கால் கொழு முகை முண்டகம் கெழீஇய மோட்டு மணல் அடைகரைப் பேஎய்த் தலைய பிணர் அரைத் தாழை எயிறு உடை நெடும் தோடு காப்பப் பல உடன் வயிறு உடைப் போது வாலிதின் விரீஇப் புலவுப் பொருது அழித்த பூ நாறு பரப்பின் இவர் திரை தந்த ஈர்ம் கதிர் முத்தம் கவர் நடைப் புரவிக் கால் வடுத் தபுக்கும் நல் தேர் வழுதி கொற்கை முன்துறை வண்டு வாய் திறந்த வாங்கு கழி நெய்தல் போது புறங்கொடுத்த உண்கண் மாதர் வாள் முகம் மதைஇய நோக்கே #2 அகநானூறு 192 குறிஞ்சி - (பொதும்பில் கிழான்) வெண்கண்ணனார் மதி இருப்பு அன்ன மாசறு சுடர் நுதல் பொன் நேர் வண்ணம் கொண்டன்று அன்னோ யாங்கு ஆகுவள்-கொல் தானே விசும்பின் எய்யா வரி வில் அன்ன பைம் தார்ச் செவ் வாய்ச் சிறு கிளி சிதைய வாங்கிப் பொறை மெலிந்திட்ட புன் புறப் பெரும் குரல் வளை சிறை வாரணம் கிளையொடு கவர ஏனலும் இறங்கு பொறை உயிர்த்தன பானாள் நீ வந்து அளிக்குவை எனினே மால் வரை மை படு விடரகம் துழைஇ ஒய்யென அருவி தந்த அரவு உமிழ் திரு மணி பெரு வரைச் சிறுகுடி மறுகு விளக்குறுத்தலின் இரவும் இழந்தனள் அளியள் உரவுப் பெயல் உரும் இறை கொண்ட உயர் சிமைப் பெரு மலை நாட நின் மலர்ந்த மார்பே &459 - வெண்கொற்றனார் #1 குறுந்தொகை 86 குறிஞ்சி - வெண்கொற்றனார் சிறை பனி உடைந்த சே அரி மழைக் கண் பொறை அரு நோயொடு புலம்பு அலைக் கலங்கிப் பிறரும் கேட்குநர் உளர்-கொல் உறை சிறந்து ஊதை தூற்றும் கூதிர் யாமத்து ஆன் நுளம்பு உலம்பு-தொறு உளம்பும் நா நவில் கொடு மணி நல்கூர் குரலே &460 - வெண்ணிக் குயத்தியார் #1 புறநானூறு 66 - வெண்ணிக் குயத்தியார் **பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான் நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி வளி தொழில் ஆண்ட உரவோன் மருக களி இயல் யானைக் கரிகால்வளவ சென்று அமர் கடந்த நின் ஆற்றல் தோன்ற வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப் புகழ் உலகம் எய்திப் புறப்புண் நாணி வடக்கிருந்தோனே &461 - வெண்பூதனார் #1 குறுந்தொகை 83 குறிஞ்சி - வெண்பூதனார் அரும் பெறல் அமிழ்தம் ஆர் பதம் ஆகப் பெரும் பெயர் உலகம் பெறீஇயரோ அன்னை தம் இல் தமது உண்டு அன்ன சினை-தொறும் தீம் பழம் தூங்கும் பலவின் ஓங்கு மலை நாடனை வரும் என்றோளே &462 - வெண்பூதியார் #1 குறுந்தொகை 97 நெய்தல் - வெண்பூதியார் யானே ஈண்டையேனே என் நலனே ஆனா நோயொடு கானலஃதே துறைவன் தம் ஊரானே மறை அலர் ஆகி மன்றத்தஃதே #2 குறுந்தொகை 174 பாலை - வெண்பூதியார் பெயல் மழை துறந்த புலம்புறு கடத்துக் கவை முள் கள்ளிக் காய் விடு கடு நொடி துதை மென் தூவித் துணைப் புறவு இரிக்கும் அத்தம் அரிய என்னார் நம் துறந்து பொருள்-வயின் பிரிவார் ஆயின் இவ் உலகத்துப் பொருளே-மன்ற பொருளே அருளே-மன்ற ஆரும் இல்லதுவே #3 குறுந்தொகை 219 நெய்தல் - (வெள்ளூர் கிழார் மகனார்) வெண்பூதியார் பயப்பு என் மேனியதுவே நயப்பு அவர் நார் இல் நெஞ்சத்து ஆர் இடையதுவே செறிவும் சேண் இகந்தன்றே அறிவே ஆங்கண் செல்கம் எழுக என ஈங்கே வல்லா கூறி இருக்கும் அள் இலைத் தடவு நிலை தாழை சேர்ப்பற்கு இடம்-மன் தோழி எ நீரிரோ எனினே &463 - வெண்மணிப் பூதியார் #1 குறுந்தொகை 299 நெய்தல் - வெண்மணிப் பூதியார் இது மற்று எவனோ தோழி முதுநீர்ப் புணரி திளைக்கும் புள் இமிழ் கானல் இணர் அவிழ் புன்னை எக்கர் நீழல் புணர் குறி வாய்த்த ஞான்றைக் கொண்கண் கண்டன-மன் எம் கண்ணே அவன் சொல் கேட்டன-மன் எம் செவியே மற்று அவன் மணப்பின் மாண் நலம் எய்தி தணப்பின் ஞெகிழ்ப எம் தட மென் தோளே &464 - வெள்ளாடியனார் #1 அகநானூறு 29 பாலை - வெள்ளாடியனார் தொடங்கு வினை தவிரா அசைவு இல் நோன் தாள் கிடந்து உயிர் மறுகுவது ஆயினும் இடம்படின் வீழ் களிறு மிசையாப் புலியினும் சிறந்த தாழ்வு இல் உள்ளம் தலைத்தலைச் சிறப்பச் செய்வினைக்கு அகன்ற காலை எஃகுற்று இரு வேறு ஆகிய தெரிதகு வனப்பின் மாவின் நறு வடி போலக் காண்-தொறும் மேவல் தண்டா மகிழ் நோக்கு உண்கண் நினையாது கழிந்த வைகல் எனையதூஉம் வாழலென் யான் எனத் தேற்றி பல் மாண் தாழக் கூறிய தகைசால் நல் மொழி மறந்தனிர் போறிர் எம் எனச் சிறந்த நின் எயிறு கெழு துவர் வாய் இன் நகை அழுங்க வினவல் ஆனாப் புனை_இழை கேள் இனி வெம்மை தண்டா எரி உகு பறந்தலைக் கொம்மை வாடிய இயவுள் யானை நீர் மருங்கு அறியாது தேர் மருங்கு ஓடி அறு நீர் அம்பியின் நெறி முதல் உணங்கும் உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்கு அரும் கடத்து இடை எள்ளல் நோனாப் பொருள் தரல் விருப்பொடு நாணுத் தளை ஆக வைகி மாண் வினைக்கு உடம்பு ஆண்டு ஒழிந்தமை அல்லதை மடம் கெழு நெஞ்சம் நின் உழையதுவே &465 - வெள்ளியந்தின்னனார் #1 நற்றிணை 101 நெய்தல் - வெள்ளியந்தின்னனார் முற்றா மஞ்சள் பசும் புறம் கடுப்பச் சுற்றிய பிணர சூழ் கழி இறவின் கணம்கொள் குப்பை உணங்கு திறன் நோக்கிப் புன்னை அம் கொழு நிழல் முன் உய்த்துப் பரப்பும் துறை நணி இருந்த பாக்கமும் உறை நனி இனிது-மன் அளிதோ தானே துனி தீர்ந்து அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின் மீன் எறி பரதவர் மட_மகள் மான் அமர் நோக்கம் காணா ஊங்கே &466 - வெள்ளிவீதியார் #1 அகநானூறு 45 பாலை - வெள்ளிவீதியார் வாடல் உழுஞ்சில் விளை நெற்று அம் துணர் ஆடுகளப் பறையின் அரிப்பன ஒலிப்பக் கோடை நீடிய அகன் பெரும் குன்றத்து நீர் இல் ஆர் ஆற்று நிவப்பன களிறு அட்டு ஆள் இல் அத்தத்து உழுவை உகளும் காடு இறந்தனரே காதலர் மாமை அரி நுண் பசலை பாஅய்ப் பீரத்து எழில் மலர் புரைதல் வேண்டும் அலரே அன்னி குறுக்கைப் பறந்தலைத் திதியன் தொல் நிலை முழுமுதல் துமியப் பண்ணிப் புன்னை குறைத்த ஞான்றை வயிரியர் இன் இசை ஆர்ப்பினும் பெரிதே யானே காதலன் கெடுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து ஆதிமந்தி போலப் பேதுற்று அலந்தனென் உழல்வென்-கொல்லோ பொலம் தார் கடல் கால்கிளர்ந்த வென்றி நல் வேல் வானவரம்பன் அடல் முனைக் கலங்கிய உடை மதில் ஓர் அரண் போல அஞ்சுவரு நோயொடு துஞ்சாதேனே #2 அகநானூறு 362 குறிஞ்சி - வெள்ளிவீதியார் பாம்பு உடை விடர பனி நீர் இட்டுத் துறை தேம் கலந்து ஒழுக யாறு நிறைந்தனவே வெண் கோட்டு யானை பொருத புண் கூர்ந்து பைம் கண் வல்லியம் கல் அளைச் செறிய முருக்கு அரும்பு அன்ன வள் உகிர் வயப் பிணவு கடிகொள வழங்கார் ஆறே ஆயிடை எல்லிற்று என்னான் வென் வேல் ஏந்தி நசை தர வந்த நன்னராளன் நெஞ்சு பழுது ஆக வறுவியன் பெயரின் இன்று இப்பொழுதும் யான் வாழலெனே எவன்-கொல் வாழி தோழி நம் இடை முலைச் சுணங்கு அணி முற்றத்து ஆரம் போலவும் சிலம்பு நீடு சோலைச் சிதர் தூங்கு நளிப்பின் இலங்கு வெள் அருவி போலவும் நிலம் கொண்டனவால் திங்கள் அம் கதிரே #3 குறுந்தொகை 27 பாலை - வெள்ளி வீதியார் கன்றும் உண்ணாது கலத்தினும் படாது நல் ஆன் தீம் பால் நிலத்து உக்கு ஆங்கு எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது பசலை உணீஇயர் வேண்டும் திதலை அல்குல் என் மாமைக் கவினே #4 குறுந்தொகை 44 பாலை - வெள்ளிவீதியார் காலே பரி தப்பினவே கண்ணே நோக்கிநோக்கி வாள் இழந்தனவே அகல் இரு விசும்பின் மீனினும் பலரே-மன்ற இவ் உலகத்துப் பிறரே #5 குறுந்தொகை 58 குறிஞ்சி - வெள்ளிவீதியார் இடிக்கும் கேளிர் நும் குறை ஆக நிறுக்கல் ஆற்றினோ நன்று-மன்-தில்ல ஞாயிறு காயும் வெவ் அறை மருங்கில் கை இல் ஊமன் கண்ணின் காக்கும் வெண்ணெய் உணங்கல் போலப் பரந்தன்று இ நோய் நோன்று கொளற்கு அரிதே #6 குறுந்தொகை 130 பாலை - வெள்ளிவீதியார் நிலம் தொட்டுப் புகாஅர் வானம் ஏறார் விலங்கு இரு முந்நீர் காலின் செல்லார் நாட்டின்நாட்டின் ஊரின்ஊரின் குடிமுறைகுடிமுறை தேரின் கெடுநரும் உளரோ நம் காதலோரே #7 குறுந்தொகை 146 குறிஞ்சி - வெள்ளிவீதியார் அம்ம வாழி தோழி நம் ஊர்ப் பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர்-கொல்லோ தண்டு உடைக் கையர் வெண் தலைச் சிதவலர் நன்று நன்று என்னும் மாக்களொடு இன்று பெரிது என்னும் ஆங்கணது அவையே #8 குறுந்தொகை 149 பாலை - வெள்ளிவீதியார் அளிதோ தானே நாணே நம்மொடு நனி நீடு உழந்தன்று-மன்னே இனியே வான் பூம் கரும்பின் ஓங்கு மணல் சிறு சிறை தீம் புனல் நெரிதர வீந்து உக்கு ஆஅங்குத் தாங்கும் அளவைத் தாங்கிக் காமம் நெரிதர கை நில்லாதே #9 குறுந்தொகை 169 மருதம் - வெள்ளிவீதியார் சுரம் செல் யானைக் கல் உறு கோட்டின் தெற்றென இறீஇயரோ ஐய மற்று யாம் நும்மொடு நக்க வால் வெள் எயிறே பாணர் பசு மீன் சொரிந்த மண்டை போல எமக்கும் பெரும் புலவு ஆகி நும்மும் பெறேஎம் இறீஇயர் எம் உயிரே #10 குறுந்தொகை 386 நெய்தல் - வெள்ளிவீதியார் வெண் மணல் விரிந்த வீ ததை கானல் தண்ணம் துறைவன் தணவா ஊங்கே வால் இழை மகளிர் விழவு அணிக் கூட்டும் மாலையே அறிவேன்-மன்னே மாலை நிலம் பரந்து அன்ன புன்கணோடு புலம்பு உடைத்து ஆகுதல் அறியேன் யானே #11 நற்றிணை 70 மருதம் - வெள்ளிவீதியார் சிறு வெள்ளாங்குருகே சிறு வெள்ளாங்குருகே துறை போகு அறுவைத் தூ மடி அன்ன நிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே எம் ஊர் வந்து எம் உண்துறை துழைஇச் சினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி அனைய அன்பினையோ பெரு மறவியையோ ஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும் கழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என் இழை நெகிழ் பருவரல் செப்பாதோயே #12 நற்றிணை 335 நெய்தல் - வெள்ளிவீதியார் திங்களும் திகழ் வான் ஏர்தரும் இமிழ் நீர்ப் பொங்கு திரைப் புணரியும் பாடு ஓவாதே ஒலி சிறந்து ஓதமும் பெயரும் மலி புனல் பல் பூம் கானல் முள் இலைத் தாழை சோறு சொரி குடையின் கூம்பு முகை அவிழ வளி பரந்து ஊட்டும் விளிவு இல் நாற்றமொடு மை இரும் பனை மிசைப் பைதல உயவும் அன்றிலும் என் புறம் நரலும் அன்றி விரல் கவர்ந்து உழந்த கவர்வின் நல் யாழ் யாமம் உய்யாமை நின்றன்று காமம் பெரிதே களைஞரோ இலரே #13 நற்றிணை 348 நெய்தல் - வெள்ளி வீதியார் நிலவே நீல் நிற விசும்பில் பல் கதிர் பரப்பி பால் மலி கடலின் பரந்து பட்டன்றே ஊரே ஒலிவரும் சும்மையொடு மலிபு தொகுபு ஈண்டி கலி கெழு மறுகின் விழவு அயரும்மே கானே பூ மலர் கஞலிய பொழில் அகம்-தோறும் தாம் அமர் துணையொடு வண்டு இமிரும்மே யானே புனை இழை ஞெகிழ்த்த புலம்பு கொள் அவலமொடு கனை இரும் கங்குலும் கண்படை இலெனே அதனால் என்னொடு பொரும்-கொல் இவ் உலகம் உலகமொடு பொரும்-கொல் என் அவலம் உறு நெஞ்சே &467 - வெள்ளெருக்கிலையார் #1 புறநானூறு 233 - வெள்ளெருக்கிலையார். **பாடப்பட்டோன்: வேள் எவ்வி பொய் ஆகியரோ பொய் ஆகியரோ பா அடி யானை பரிசிலர்க்கு அருகாச் சீர் கெழு நோன் தாள் அகுதை-கண் தோன்றிய பொன் புனை திகிரியின் பொய் ஆகியரோ இரும் பாண் ஒக்கல் தலைவன் பெரும் பூண் போர் அடு தானை எவ்வி மார்பின் எஃகுறு விழுப்புண் பல என வைகுறு விடியல் இயம்பிய குரலே #2 புறநானூறு 234 - வெள்ளெருக்கிலையார். **பாடப்பட்டோன்: வேள் எவ்வி நோகோ யானே தேய்க மா காலை பிடி அடி அன்ன சிறு வழி மெழுகித் தன் அமர் காதலி புல் மேல் வைத்த இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்-கொல் உலகு புகத் திறந்த வாயில் பலரோடு உண்டல் மரீஇயோனே &468 - வெள்ளைக்குடி நாகனார் #1 நற்றிணை 158 குறிஞ்சி - வெள்ளைக்குடி நாகனார் அம்ம வாழி தோழி நம்-வயின் யானோ காணேன் அதுதான் கரந்தே கல் அதர் மன்னும் கால் கொல்லும்மே கனை இருள் மன்னும் கண் கொல்லும்மே விடர் முகைச் செறிந்த வெம் சின இரும் புலி புகர் முக வேழம் புலம்பத் தாக்கிக் குருதி பருகிய கொழும் கவுள் கய வாய் வேங்கை முதலொடு துடைக்கும் ஓங்கு மலை நாடன் வரூஉம் ஆறே #2 நற்றிணை 196 நெய்தல் - வெள்ளைக்குடி நாகனார் பளிங்கு செறிந்து அன்ன பல் கதிர் இடையிடைப் பால் முகந்து அன்ன பசு வெண் நிலவின் மால்பு இடர் அறியா நிறையுறு மதியம் சால்பும் செம்மையும் உடையை ஆதலின் நின் கரந்து உறையும் உலகம் இன்மையின் என் கரந்து உறைவோர் உள் வழி காட்டாய் நல் கவின் இழந்த என் தோள் போல் சாஅய்ச் சிறுகுபுசிறுகுபு செரீஇ அறி கரி பொய்த்தலின் ஆகுமோ அதுவே #3 புறநானூறு 35 - வெள்ளைக்குடி நாகனார் **பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் நளி இரு முந்நீர் ஏணி ஆக வளி இடை வழங்கா வானம் சூடிய மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர் முரசு முழங்கு தானை மூவருள்ளும் அரசு எனப்படுவது நினதே பெரும அலங்கு கதிர்க் கனலி நால் வயின் தோன்றினும் இலங்கு கதிர் வெள்ளி தென்புலம் படரினும் அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்டத் தோடு கொள் வேலின் தோற்றம் போல ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும் நாடு எனப்படுவது நினதே அத்தை ஆங்க நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தே நினவ கூறுவல் எனவ கேள்-மதி அறம் புரிந்து அன்ன செங்கோல் நாட்டத்து முறை வேண்டு பொழுதின் பதன் எளியோர் ஈண்டு உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோறே ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ மாக விசும்பின் நடுவு நின்று ஆங்குக் கண் பொர விளங்கும் நின் விண் பொரு வியன் குடை வெயில் மறைக் கொண்டன்றோ அன்றே வருந்திய குடி மறைப்பதுவே கூர் வேல் வளவ வெளிற்றுப் பனம் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக் களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை வரு படை தாங்கிப் பெயர் புறத்து ஆர்த்துப் பொரு படை தரூஉம் கொற்றமும் உழு படை ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும் இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும் காவலர்ப் பழிக்கும் இக் கண் அகன் ஞாலம் அது நற்கு அறிந்தனை ஆயின் நீயும் நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது பகடு புறந்தருநர் பாரம் ஓம்பிக் குடி புறந்தருகுவை ஆயின் நின் அடி புறந்தருகுவர் அடங்காதோரே &469 - வெள்ளை மாளர் (வெள்ளை மாறனார்) #1 புறநானூறு 296 - வெள்ளை மாளர் (வெள்ளை மாறனார்) வேம்பு சினை ஒடிப்பவும் காஞ்சி பாடவும் நெய் உடைக் கையர் ஐயவி புகைப்பவும் எல்லா மனையும் கல்லென்றவ்வே வெந்து உடன்று எறிவான்-கொல்லோ நெடிது வந்தன்றால் நெடுந்தகை தேரே &470 - வெறிபாடிய காமக்கண்ணியார் #1 அகநானூறு 22 குறிஞ்சி - வெறிபாடிய காமக்கண்ணியார் அணங்கு உடை நெடு வரை உச்சியின் இழிதரும் கணம்கொள் அருவி கான் கெழு நாடன் மணம் கமழ் வியல் மார்பு அணங்கிய செல்லல் இது என அறியா மறுவரல் பொழுதில் படியோர்த் தேய்த்த பல் புகழ்த் தடக் கை நெடுவேள் பேணத் தணிகுவள் இவள் என முது வாய்ப் பெண்டிர் அது வாய் கூற களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி வள நகர் சிலம்பப் பாடி பலிகொடுத்து உருவச் செந்தினை குருதியொடு தூஉய் முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு நடுநாள் ஆரம் நாற அரு விடர்த் ததைந்த சாரல் பல் பூ வண்டு படச் சூடிக் களிற்று இரை தெரீஇய பார்வல் ஒதுக்கின் ஒளித்து இயங்கும் மரபின் வயப் புலி போல நல் மனை நெடு நகர்க் காவலர் அறியாமை தன் நசை உள்ளத்து நம் நசை வாய்ப்ப இன் உயிர் குழைய முயங்கு-தொறும் மெய் மலிந்து நக்கனென் அல்லெனோ யானே எய்த்த நோய் தணி காதலர் வர ஈண்டு ஏதில் வேலற்கு உலந்தமை கண்டே #2 அகநானூறு 98 குறிஞ்சி - வெறிபாடிய காமக்கண்ணியார் பனிவரை நிவந்த பயம் கெழு கவாஅன் துனி இல் கொள்கையொடு அவர் நமக்கு உவந்த இனிய உள்ளம் இன்னா ஆக முனிதக நிறுத்த நல்கல் எவ்வம் சூர் உறை வெற்பன் மார்பு உறத் தணிதல் அறிந்தனள் அல்லள் அன்னை வார் கோல் செறிந்து இலங்கு எல் வளை நெகிழ்ந்தமை நோக்கிக் கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய் பொய் வல் பெண்டிர் பிரப்பு உளர்பு இரீஇ முருகன் ஆர் அணங்கு என்றலின் அது செத்து ஓவத்து அன்ன வினை புனை நல் இல் பாவை அன்ன பலர் ஆய் மாண் கவின் பண்டையின் சிறக்க என் மகட்கு எனப் பரைஇக் கூடு கொள் இன்னியம் கறங்கக் களன் இழைத்து ஆடு அணி அயர்ந்த அகன் பெரும் பந்தர் வெண் போழ் கடம்பொடு சூடி இன் சீர் ஐது அமை பாணி இரீஇக் கைபெயராச் செல்வன் பெரும் பெயர் ஏத்தி வேலன் வெறி அயர் வியன் களம் பொற்ப வல்லோன் பொறி அமை பாவையின் தூங்கல் வேண்டின் என் ஆம்-கொல்லோ தோழி மயங்கிய மையல் பெண்டிர்க்கு நொவ்வல் ஆக ஆடிய பின்னும் வாடிய மேனி பண்டையின் சிறவாது ஆயின் இ மறை அலர் ஆகாமையோ அரிதே அஃதான்று அறிவர் உறுவிய அல்லல் கண்டு அருளி வெறி கமழ் நெடு வேள் நல்குவன் எனினே செறி தொடி உற்ற செல்லலும் பிறிது எனக் கான் கெழு நாடன் கேட்பின் யான் உயிர்வாழ்தல் அதனினும் அரிதே #3 நற்றிணை 268 குறிஞ்சி - வெறி பாடிய காமக்கண்ணியார் சூர் உடை நனம் தலைச் சுனை நீர் மல்க மால் பெயல் தலைஇய மன் நெடும் குன்றத்துக் கரும் கால் குறிஞ்சி மதன் இல் வான் பூ ஓவுக் கண்டு அன்ன இல் வரை இழைத்த நாறு கொள் பிரசம் ஊறு நாடற்குக் காதல் செய்தவும் காதல் அன்மை யாதனின்-கொல்லோ தோழி வினவுகம் பெய்ம் மணல் முற்றம் கடி கொண்டு மெய்மலி கழங்கின் வேலன் தந்தே #4 புறநானூறு 271 - வெறி பாடிய காமக்கண்ணியார் நீர் அறவு அறியா நில முதல் கலந்த கரும் குரல் நொச்சிக் கண் ஆர் குரூஉத் தழை மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல் தொடலை ஆகவும் கண்டனம் இனியே வெருவரு குருதியொடு மயங்கி உருவு கரந்து ஒறுவாய்ப்பட்ட தெரியல் ஊன் செத்து பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம் மறம் புகல் மைந்தன் மலைந்த மாறே #5 புறநானூறு 302 - வெறிபாடிய காமக் கண்ணியார்(காமக் கணியார்) வெடி வேய் கொள்வது போல ஓடித் தாவுபு உகளும் மாவே பூவே விளங்கு இழை மகளிர் கூந்தல் கொண்ட நரந்தப் பல் காழ்க் கோதை சுற்றிய ஐது அமை பாணி வணர் கோட்டுச் சீறியாழ்க் கை வார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர் நோக்கினர் செகுக்கும் காளை ஊக்கி வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின் விண் இவர் விசும்பின் மீனும் தண் பெயல் உறையும் உறை ஆற்றாவே &471- வேட்ட கண்ணனார் #1 குறுந்தொகை 389 குறிஞ்சி - வேட்ட கண்ணனார் நெய் கனி குறும்பூழ் காயம் ஆக ஆர் பதம் பெறுக தோழி அத்தை பெரும் கல் நாடன் வரைந்து என அவன் எதிர் நன்றோ மகனே என்றனென் நன்றே போலும் என்று உரைத்தோனே &472 - வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார் #1 குறுந்தொகை 362 குறிஞ்சி - வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தனார் முருகு அயர்ந்து வந்த முது வாய் வேல சினவல் ஓம்பு-மதி வினவுவது உடையேன் பல் வேறு உருவின் சில் அவிழ் மடையொடு சிறு மறி கொன்று இவள் நறு நுதல் நீவி வணங்கினை கொடுத்தி ஆயின் அணங்கிய விண் தோய் மா மலைச் சிலம்பன் ஒண் தார் அகலமும் உண்ணுமோ பலியே &473 - வேம்பற்றூர் குமரனார் #1 அகநானூறு 157 பாலை - வேம்பற்றூர் குமரனார் அரியல் பெண்டிர் அல்குல் கொண்ட பகு வாய்ப் பாளைக் குவி முலை சுரந்த அரி நிறக் கலுழி ஆர மாந்திச் செரு வேட்டுச் சிலைக்கும் செம் கண் ஆடவர் வில் இட வீழ்ந்தோர் பதுக்கைக் கோங்கின் எல்லி மலர்ந்த பைம் கொடி அதிரல் பெரும் புலர் வைகறை அரும்பொடு வாங்கிக் கான யானை கவளம் கொள்ளும் அஞ்சுவரு நெறியிடைத் தமியர் செல்மார் நெஞ்சு உண மொழிப-மன்னே தோழி முனை புலம் பெயர்த்த புல்லென் மன்றத்துப் பெயல் உற நெகிழ்ந்து வெயில் உறச் சாஅய் வினை அழி பாவையின் உலறி மனை ஒழிந்திருத்தல் வல்லுவோர்க்கே #2 புறநானூறு 317 வேம்பற்றூர்க் குமரனார் வென் வேல் வந்து முன்றில் கிடந்த பெரும் களியாளற்கு அதள் உண்டு ஆயினும் பாய் உண்டு ஆயினும் யாது உண்டு ஆயினும் கொடு-மின் வல்லே வேட்கை மீள எமக்கும் பிறர்க்கும் யார்க்கும் ஈய்ந்து துயில் ஏற்பினனே &474 - ஆசிரியர் பெயர் காணாப் பாடல்கள் #1 அகநானூறு 114 முல்லை கேளாய் எல்ல தோழி வேலன் வெறி அயர் களத்துச் சிறு பல தாஅய விரவு வீ உறைத்த ஈர் நறும் புறவின் உரவுக் கதிர் மழுங்கிய கல் சேர் ஞாயிறு அரவு நுங்கு மதியின் ஐயென மறையும் சிறு புன் மாலையும் உள்ளார் அவர் என நம் புலந்து உறையும் எவ்வம் நீங்க நூல் அறி வலவ கடவு-மதி உவக் காண் நெடும் கொடி நுடங்கும் வான் தோய் புரிசை யாமம் கொள்பவர் நாட்டிய நளி சுடர் வானக மீனின் விளங்கித் தோன்றும் அரும் கடிக் காப்பின் அஞ்சுவரு மூதூர்த் திரு நகர் அடங்கிய மாசு இல் கற்பின் அரி மதர் மழைக் கண் அமை புரை பணைத் தோள் அணங்கு சால் அரிவையைக் காண்குவம் பொலம் படைக் கலிமாப் பூண்ட தேரே #2 அகநானூறு 117 பாலை மௌவலொடு மலர்ந்த மாக் குரல் நொச்சியும் அவ் வரி அல்குல் ஆயமும் உள்ளாள் ஏதிலன் பொய்ம்மொழி நம்பி ஏர் வினை வளம் கெழு திரு நகர் புலம்பப் போகி வெருவரு கவலை ஆங்கண் அருள்வர கரும் கால் ஓமை ஏறி வெண் தலைப் பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண் பொலம் தொடி தெளிர்ப்ப வீசிச் சேவடிச் சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கே சாந்து உளர் வணர் குரல் வாரி வகை வகுத்து யான் போது துணைப்பத் தகரம் மண்ணாள் தன் ஓர் அன்ன தகை வெம் காதலன் வெறி கமழ் பல் மலர் புனைய பின்னுவிடச் சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தன-கொல் நெடும் கால் மாஅத்து ஊழுறு வெண் பழம் கொடும் தாள் யாமை பார்ப்பொடு கவரும் பொய்கை சூழ்ந்த பொய்யா யாணர் வாணன் சிறுகுடி வடாஅது தீம் நீர் கான்யாற்று அவிர் அறல் போன்றே #3 அகநானூறு 165 பாலை கயம் தலை மடப் பிடி பயம்பில் பட்டு என களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ ஒய்யென எழுந்த செவ் வாய்க் குழவி தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண் எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும் நாடு பல இறந்த நன்னராட்டிக்கு ஆயமும் அணி இழந்து அழுங்கின்று தாயும் இன் தோள் தாராய் இறீஇயர் என் உயிர் என கண்ணும் நுதலும் நீவித் தண்ணெனத் தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇத் தாழிக் குவளை வாடு மலர் சூட்டித் தரு மணல் கிடந்த பாவை என் அரு மகளே என முயங்கினள் அழுமே #4 குறுந்தொகை 191 முல்லை உதுக் காண் அதுவே இது என மொழிகோ நோன் சினை இருந்த இரும் தோட்டுப் புள் இனம் தாம் புணர்ந்தமையின் பிரிந்தோர் உள்ளத் தீம் குரல் அகவக் கேட்டும் நீங்கிய ஏதிலாளர் இவண் வரின் போதின் பொம்மல் ஓதியும் புனையல் எம்மும் தொடாஅல் என்குவெம்-மன்னே #5 குறுந்தொகை 201 குறிஞ்சி அமிழ்தம் உண்க நம் அயல் இலாட்டி பால் கலப்பு அன்ன தேக் கொக்கு அருந்துபு நீல மென் சிறை வள் உகிர்ப் பறவை நெல்லி அம் புளி மாந்தி அயலது முள் இல் அம் பணை மூங்கிலில் தூங்கும் கழை நிவந்து ஓங்கிய சோலை மலை கெழு நாடனை வரும் என்றோளே #6 குறுந்தொகை 256 பாலை மணி வார்ந்து அன்ன மாக் கொடி அறுகைப் பிணங்கு அரில் மென் கொம்பு பிணையொடு மாந்தி மான் ஏறு உகளும் கானம் பிற்பட வினை நலம் படீஇ வருதும் அவ் வரைத் தாங்கல் ஒல்லுமோ பூம் குழையோய் எனச் சொல்லா முன்னர் நில்லா ஆகி நீர் விலங்கு அழுதல் ஆனா தேர் விலங்கினவால் தெரிவை கண்ணே #7 குறுந்தொகை 313 நெய்தல் பெரும் கடற்கரையது சிறு_வெண்_காக்கை நீத்து நீர் இரும் கழி இரை தேர்ந்து உண்டு பூக் கமழ் பொதும்பர் சேக்கும் துறைவனோடு யாத்தேம் யாத்தன்று நட்பே அவிழ்த்தற்கு அரிது அது முடிந்து அமைந்தன்றே #8 321 குறிஞ்சி மலைச் செம் சாந்தின் ஆர மார்பினன் சுனைப் பூம் குவளைச் சுரும்பு ஆர் கண்ணியன் நடுநாள் வந்து நம் மனைப் பெயரும் மடவரல் அரிவை நின் மார்பு அமர் இன் துணை மன்ற மரையா இரிய ஏறு அட்டுச் செம் கண் இரும் புலி குழுமும் அதனால் மறைத்தல் காலையோ அன்றே திறப்பல் வாழி வேண்டு அன்னை நம் கதவே #9 குறுந்தொகை 326 நெய்தல் துணைத்த கோதைப் பணைப் பெரும் தோளினர் கடல் ஆடு மகளிர் கானல் இழைத்த சிறுமனைப் புணர்ந்த நட்பே தோழி ஒரு நாள் துறைவன் துறப்பின் பல் நாள் வரூஉம் இன்னாமைத்தே #10 குறுந்தொகை 375 குறிஞ்சி அம்ம வாழி தோழி இன்று அவர் வாரார் ஆயினோ நன்றே சாரல் சிறுதினை விளைந்த வியன் கண் இரும் புனத்து இரவு அரிவாரின் தொண்டகச்_சிறுபறை பானாள் யாமத்தும் கறங்கும் யாமம் காவலர் அவியா மாறே #11 குறுந்தொகை 379 குறிஞ்சி இன்று யாண்டையனோ தோழி குன்றத்துப் பழம் குழி அகழ்ந்த கானவன் கிழங்கினொடு கண் அகன் தூ மணி பெறூஉம் நாடன் அறிவு காழ்க்கொள்ளும் அளவை செறி_தொடி எம் இல் வருகுவை நீ எனப் பொம்மல் ஓதி நீவியோனே #12 குறுந்தொகை 381 நெய்தல் தொல் கவின் தொலைந்து தோள் நலம் சாஅய் அல்லல் நெஞ்சமோடு அல்கலும் துஞ்சாது பசலை ஆகி விளிவது-கொல்லோ வெண்_குருகு நரலும் தண் கமழ் கானல் பூ மலி பொதும்பர் நாள்_மலர் மயக்கி விலங்கு திரை உடைதரும் துறைவனொடு இலங்கு எயிறு தோன்ற நக்கதன் பயனே #13 குறுந்தொகை 395 பாலை நெஞ்சே நிறை ஒல்லாதே அவரே அன்பு இன்மையின் அருள் பொருள் என்னார் வன்கண் கொண்டு வலித்து வல்லுநரே அரவு நுங்கு மதியிற்கு இவணோர் போலக் களையார் ஆயினும் கண் இனிது படீஇயர் அஞ்சல் என்மரும் இல்லை அந்தில் அளிதோ தானே நாணே ஆங்கு அவர் வதி-வயின் நீங்கப்படினே #14 நற்றிணை 8 குறிஞ்சி - (பெருங்குன்றூர் கிழார்) அல்கு படர் உழந்த அரி மதர் மழைக் கண் பல் பூம் பகைத் தழை நுடங்கும் அல்குல் திரு மணி புரையும் மேனி மடவோள் யார் மகள்-கொல் இவள் தந்தை வாழியர் துயரம் உறீஇயினள் எம்மே அகல் வயல் அரிவனர் அரிந்தும் தருவனர் பெற்றும் தண் சேறு தாஅய் மதன் உடை நோன் தாள் கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும் திண் தேர்ப் பொறையன் தொண்டி தன் திறம் பெறுக இவள் ஈன்ற தாயே #15 நற்றிணை 10 பாலை அண்ணாந்து ஏந்திய வன முலை தளரினும் பொன் நேர் மேனி மணியின் தாழ்ந்த நன் நெடும் கூந்தல் நரையொடு முடிப்பினும் நீத்தல் ஓம்பு-மதி பூக் கேழ் ஊர இன் கடும் கள்ளின் இழை அணி நெடும் தேர்க் கொற்றச் சோழர் கொங்கர்ப் பணீஇயர் வெண் கோட்டு யானைப் போஒர் கிழவோன் பழையன் வேல் வாய்த்து அன்ன நின் பிழையா நன் மொழி தேறிய இவட்கே #16 நற்றிணை 22 குறிஞ்சி கொடிச்சி காக்கும் அடுக்கல் பைம் தினை முந்து விளை பெரும் குரல் கொண்ட மந்தி கல்லாக் கடுவனொடு நல் வரை ஏறி அங்கை நிறைய ஞெமிடிக் கொண்டு தன் திரை அணல் கொடும் கவுள் நிறைய முக்கி வான் பெயல் நனைந்த புறத்த நோன்பியர் கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன் வந்தனன் வாழி தோழி உலகம் கயம் கண் அற்ற பைது அறு காலைப் பீளொடு திரங்கிய நெல்லிற்கு நள்ளென் யாமத்து மழை பொழிந்து ஆங்கே #17 நற்றிணை 24 பாலை - (குன்றுகிழார் மகனார் கண்ணத்தனார் கணக்காயனார்) பார் பக வீழ்ந்த வேர் உடை விழுக் கோட்டு உடும்பு அடைந்து அன்ன நெடும் பொரி விளவின் ஆட்டு ஒழி பந்தின் கோட்டு மூக்கு இறுபு கம்பலத்து அன்ன பைம் பயிர்த் தாஅம் வெள்ளில் வல்சி வேற்று நாட்டு ஆரிடைச் சேறும் நாம் எனச் சொல்லச் சே_இழை நன்று எனப் புரிந்தோய் நன்று செய்தனையே செயல்படு மனத்தர் செய்பொருட்கு அகல்வர் ஆடவர் அது அதன் பண்பே #18 நற்றிணை 45 நெய்தல் இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி நீல் நிறப் பெரும் கடல் கலங்க உள் புக்கு மீன் எறி பரதவர் மகளே நீயே நெடும் கொடி நுடங்கும் நியம மூதூர்க் கடும் தேர்ச் செல்வன் காதல் மகனே நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி இனப் புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ புலவு நாறுதும் செல நின்றீமோ பெருநீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை நும்மொடு புரைவதோ அன்றே எம்மனோரில் செம்மலும் உடைத்தே #19 நற்றிணை 46 பாலை வைகல்-தோறும் இன்பமும் இளமையும் எய் கணை நிழலின் கழியும் இவ் உலகத்துக் காணீர் என்றலோ அரிதே அது நனி பேணீர் ஆகுவிர் ஐய என் தோழி பூண் அணி ஆகம் புலம்பப் பாணர் அயிர்ப்புக் கொண்டு அன்ன கொன்றை அம் தீம் கனி பறை அறை கடிப்பின் அறை அறையாத் துயல்வர வெவ் வளி வழங்கும் வேய் பயில் அழுவத்து எவ்வம் மிகூஉம் அரும் சுரம் இறந்து நன் வாய் அல்லா வாழ்க்கை மன்னாப் பொருட்பிணிப் பிரிதும் யாம் எனவே #20 நற்றிணை 84 பாலை கண்ணும் தோளும் தண் நறும் கதுப்பும் திதலை அல்குலும் பல பாராட்டி நெருநலும் இவணர்-மன்னே இன்றே பெருநீர் ஒப்பின் பேஎய்_வெண்_தேர் மரன் இல் நீள் இடை மான் நசையுறூஉம் சுடு மண் தசும்பின் மத்தம் தின்ற பிறவா வெண்ணெய் உருப்பிடத்து அன்ன உவர் எழு களரி ஓமை அம் காட்டு வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அரும் சுரம் ஏகுவர் என்ப தாமே தம்-வயின் இரந்தோர் மாற்றல் ஆற்றா இல்லின் வாழ்க்கை வல்லாதோரே #21 நற்றிணை 92 பாலை உள்ளார்-கொல்லோ தோழி துணையொடு வேனில் ஓதிப் பாடு நடை வழலை வரி மரல் நுகும்பின் வாடி அவண வறன் பொருந்து குன்றத்து உச்சிக் கவாஅன் வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப் பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர் புன் தலை மடப் பிடி கன்றோடு ஆர வில் கடிந்து ஊட்டின பெயரும் கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே #22 நற்றிணை 107 பாலை உள்ளு-தொறும் நகுவேன் தோழி வள் உகிர்ப் பிடி பிளந்திட்ட நார் இல் வெண் கோட்டுக் கொடிறு போல் காய வால் இணர்ப் பாலைச் செல் வளி தூக்கலின் இலை தீர் நெற்றம் கல் இழி அருவியின் ஒல்லென ஒலிக்கும் புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம் சென்ற காதலர் வழி வழிப்பட்ட நெஞ்சே நல்வினைப்பாற்றே ஈண்டு ஒழிந்து ஆனாக் கௌவை மலைந்த யானே தோழி நோய்ப்பாலேனே #23 நற்றிணை 108 குறிஞ்சி மலை அயல் கலித்த மை ஆர் ஏனல் துணையின் தீர்ந்த கடுங்கண் யானை அணையக் கண்ட அம் குடிக் குறவர் கணையர் கிணையர் கை புனை கவணர் விளியர் புறக்குடி ஆர்க்கும் நாட பழகிய பகையும் பிரிவு இன்னாதே முகை ஏர் இலங்கு எயிற்று இன் நகை மடந்தை சுடர் புரை திரு நுதல் பசப்பத் தொடர்பு யாங்கு விட்டனை நோகோ யானே #24 நற்றிணை 111 நெய்தல் அத்த இருப்பைப் பூவின் அன்ன துய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர் வரி வலைப் பரதவர் கரு வினைச் சிறாஅர் மரல் மேற்கொண்டு மான் கணம் தகைமார் வெம் திறல் இளையவர் வேட்டு எழுந்து ஆங்குத் திமில் மேற்கொண்டு திரை சுரம் நீந்தி வாள் வாய்ச் சுறவொடு வய மீன் கெண்டி நிணம் பெய் தோணியர் இகு மணல் இழிதரும் பெரும் கழிப் பாக்கம் கல்லென வருமே தோழி கொண்கன் தேரே #25 நற்றிணை 115 முல்லை மலர்ந்த பொய்கைப் பூக் குற்று அழுங்க அயர்ந்த ஆயம் கண் இனிது படீஇயர் அன்னையும் சிறிது தணிந்து உயிரினள் இன் நீர்த் தடம் கடல் வாயில் உண்டு சில் நீர் என மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழக் கார் எதிர்ந்தன்றால் காலை காதலர் தவச் சேய் நாட்டர் ஆயினும் மிகப் பேர் அன்பினர் வாழி தோழி நன் புகழ் உலப்பு இன்று பெறினும் தவிரலர் கேட்டிசின் அல்லெனோ விசும்பின் தகவே #26 நற்றிணை 125 குறிஞ்சி இரை தேர் எண்கின் பகு வாய் ஏற்றை கொடு வரிப் புற்றம் வாய்ப்ப வாங்கி நல்_அரா நடுங்க உரறிக் கொல்லன் ஊது உலைக் குருகின் உள் உயிர்த்து அகழும் நடுநாள் வருதல் அஞ்சுதும் யாம் என வரைந்து வரல் இரக்குவம் ஆயின் நம் மலை நன்_நாள் வதுவை கூடி நீடு இன்று நம்மொடு செல்வர்-மன் தோழி மெல்ல வேங்கைக் கண்ணியர் எருது எறி களமர் நிலம் கண்டு அன்ன அகன் கண் பாசறை மென் தினை நெடும் போர் புரிமார் துஞ்சு களிறு எடுப்பும் தம் பெரும் கல் நாட்டே #27 நற்றிணை 126 பாலை பைம் காய் நல் இடம் ஒரீஇய செங்காய்க் கரும் களி ஈந்தின் வெண் புறக் களரி இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல் ஆள் பெறல் நசைஇ நாள் சுரம் விலங்கித் துனைதரும் வம்பலர்க் காணாது அச் சினம் பனை கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம் இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின் இளமையின் சிறந்த வளமையும் இல்லை இளமை கழிந்த பின்றை வளமை காமம் தருதலும் இன்றே அதனால் நில்லாப் பொருட்பிணிச் சேறி வல்லே நெஞ்சம் வாய்க்க நின் வினையே #28 நற்றிணை 132 நெய்தல் பேர் ஊர் துஞ்சும் யாரும் இல்லைத் திருந்து வாய்ச் சுறவம் நீர் கான்று ஒய்யெனப் பெரும் தெரு உதிர்தரு பெயலுறு தண் வளி போர் அமை கதவப் புரை-தொறும் தூவக் கூர் எயிற்று எகினம் நடுங்கும் நன் நகர்ப் பயில் படை நிவந்த பல் பூம் சேக்கை அயலும் மாண் சிறையதுவே அதன்தலைக் காப்பு உடை வாயில் போற்று ஓ என்னும் யாமம் கொள்பவர் நெடு நா ஒண் மணி ஒன்று எறி பாணியின் இரட்டும் இன்று-கொல் அளியேன் பொன்றும் நாளே #29 நற்றிணை 134 குறிஞ்சி இனிதின் இனிது தலைப்படும் என்பது இது-கொல் வாழி தோழி காதலர் வரு குறி செய்த வரையகச் சிறுதினைச் செவ் வாய்ப் பாசினம் கடீஇயர் கொடிச்சி அவ் வாய்த் தட்டையொடு அவணை ஆக என ஏயள்-மன் யாயும் நுந்தை வாழியர் அம் மா மேனி நிரை தொடிக் குறுமகள் செல்லாயோ நின் முள் எயிறு_உண்கு என மெல்லிய இனிய கூறலின் யான் அஃது ஒல்லேன் போல உரையாடுவலே #30 நற்றிணை 160 குறிஞ்சி நயனும் நண்பும் நாணு நன்கு உடைமையும் பயனும் பண்பும் பாடு அறிந்து ஒழுகலும் நும்மினும் அறிகுவென்-மன்னே கம்மென எதிர்த்த தித்தி ஏர் இள வன முலை விதிர்த்து விட்டு அன்ன அம் நுண் சுணங்கின் ஐம்பால் வகுத்த கூந்தல் செம் பொறி திரு நுதல் பொலிந்த தேம் பாய் ஓதி முது நீர் இலஞ்சிப் பூத்த குவளை எதிர் மலர்ப் பிணையல் அன்ன இவள் அரி மதர் மழைக் கண் காணா ஊங்கே #31 நற்றிணை 161 முல்லை இறையும் அரும் தொழில் முடித்து எனப் பொறைய கண் போல் நீலம் சுனை-தொறும் மலர வீ ததர் வேங்கைய வியல் நெடும் புறவின் இம்மென் பறவை ஈண்டு கிளை இரிய நெடும் தெரு அன்ன நேர்கொள் நெடு வழி இளையர் ஏகுவனர் பரிப்ப வளை எனக் காந்தள் வள் இதழ் கவி குளம்பு அறுப்பத் தோள் வலி யாப்ப ஈண்டு நம் வரவினைப் புள் அறிவுறீஇயின-கொல்லோ தெள்ளிதின் காதல் கெழுமிய நலத்தள் ஏது இல் புதல்வன் காட்டிப் பொய்க்கும் திதலை அல்குல் தே_மொழியாட்கே #32 நற்றிணை 162 பாலை மனை உறை புறவின் செம் கால் பேடைக் காமர் துணையொடு சேவல் சேரப் புலம்பின்று எழுதரு புன்கண் மாலைத் தனியே இருத்தல் ஆற்றேன் என்று நின் பனி வார் உண்கண் பைதல கலுழ நும்மொடு வருவல் என்றி எம்மொடு பெரும் பெயர்த் தந்தை நீடு புகழ் நெடு நகர் யாயொடு நனி மிக மடவை முனாஅது வேனில் இற்றித் தோயா நெடு வீழ் வழி நார் ஊசலின் கோடை தூக்கு-தொறும் துஞ்சு பிடி வருடும் அத்தம் வல்லை ஆகுதல் ஒல்லுமோ நினக்கே #33 நற்றிணை 163 நெய்தல் உயிர்த்தன ஆகுக அளிய நாளும் அயிர்த் துகள் முகந்த ஆனா ஊதையொடு எல்லியும் இரவும் என்னாது கல்லெனக் கறங்கு இசை இன மணி கைபுணர்ந்து ஒலிப்ப நிலவுத் தவழ் மணல் கோடு ஏறிச் செலவர இன்று என் நெஞ்சம் போலத் தொன்று நனி வருந்து-மன் அளிய தாமே பெரும் கடல் நீல் நிறப் புன்னைத் தமி ஒண் கைதை வானம் மூழ்கிய வயங்கு ஒளி நெடும் சுடர்க் கதிர் காய்ந்து எழுந்து அகம் கனலி ஞாயிற்று வைகுறு வனப்பின் தோன்றும் கைதை அம் கானல் துறைவன் மாவே #34 நற்றிணை 164 பாலை உறை துறந்து இருந்த புறவில் தனாது செம் கதிர்ச் செல்வன் தெறுதலின் மண் பக உலகு மிக வருந்தி உயா உறு காலைச் சென்றனர் ஆயினும் நன்று செய்தனர் எனச் சொல்லின் தெளிப்பவும் தெளிதல் செல்லாய் செம் கோல் வாளிக் கொடு வில் ஆடவர் வம்ப மாக்கள் உயிர்த் திறம் பெயர்த்து என வெம் கடற்று அடை முதல் படு முடை தழீஇ உறு பசிக் குறுநரி குறுகல் செல்லாது மாறு புறக்கொடுக்கும் அத்தம் ஊறு இலர் ஆகுதல் உள்ளாம் மாறே #35 நற்றிணை 165 குறிஞ்சி அமர்க் கண் ஆமான் அரு நிறம் முள்காது பணைத்த பகழிப் போக்கு நினைந்து கானவன் அணங்கொடு நின்றது மலை வான் கொள்க எனக் கடவுள் ஓங்கு வரை பேண்மார் வேட்டு எழுந்து கிளையொடு மகிழும் குன்ற நாடன் அடைதரும்-தோறும் அருமை தனக்கு உரைப்ப நம் புணர்வு இல்லா நயன் இலோர் நட்பு அன்ன ஆகுக என்னான் ஒல்காது ஒழி மிகப் பல்கின தூதே #36 நற்றிணை 166 பாலை பொன்னும் மணியும் போலும் யாழ நின் நன்னர் மேனியும் நாறு இரும் கதுப்பும் போதும் பணையும் போலும் யாழ நின் மாதர் உண்கணும் வனப்பின் தோளும் இவை காண்-தோறும் அகம் மலிந்து யானும் அறம் நிலைபெற்றோர் அனையேன் அதன்தலைப் பொலம் தொடிப் புதல்வனும் பொய்தல் கற்றனன் வினையும் வேறு புலத்து இலெனே நினையின் யாதனின் பிரிகோ மடந்தை காதல் தானும் கடலினும் பெரிதே #37 நற்றிணை 167 நெய்தல் கரும் கோட்டுப் புன்னைக் குடக்கு வாங்கு பெரும் சினை விருந்தின் வெண்_குருகு ஆர்ப்பின் ஆஅய் வண் மகிழ் நாள்_அவைப் பரிசில் பெற்ற பண் அமை நெடும் தேர்ப் பாணியின் ஒலிக்கும் தண்ணம் துறைவன் தூதொடும் வந்த பயன் தெரி பனுவல் பை தீர் பாண நின் வாய்ப் பணிமொழி களையா பல் மாண் புது வீ ஞாழலொடு புன்னை தாஅம் மணம் கமழ் கானல் மாண் நலம் இழந்த இறை ஏர் எல் வளைக் குறுமகள் பிறை ஏர் திரு நுதல் பாஅய பசப்பே #38 நற்றிணை 168 குறிஞ்சி சுரும்பு உண விரிந்த கரும் கால் வேங்கைப் பெரும் சினைத் தொடுத்த கொழும் கண் இறாஅல் புள் உற்றுக் கசிந்த தீம் தேன் கல் அளைக் குறக் குறுமாக்கள் உண்ட மிச்சிலைப் புன் தலை மந்தி வன் பறழ் நக்கும் நன் மலை நாட பண்பு எனப்படுமோ நின் நயந்து உறைவி இன் உயிர் உள்ளாய் அணங்கு உடை அரவின் ஆர் இருள் நடுநாள் மை படு சிறு நெறி எஃகு துணை ஆக ஆரம் கமழும் மார்பினை சாரல் சிறுகுடி ஈங்கு நீ வரலே #39 நற்றிணை 169 முல்லை முன்னியது முடித்தனம் ஆயின் நல்_நுதல் வருவம் என்னும் பருவரல் தீரப் படும்-கொல் வாழி நெடும் சுவர்ப் பல்லி பரல் தலை போகிய சிரல் தலைக் கள்ளி மீமிசைக் கலித்த வீ நறு முல்லை ஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும் வன் கை இடையன் எல்லிப் பரீஇ வெண் போழ் தைஇய அலங்கல் அம் தொடலை மறுகு உடன் கமழும் மாலைச் சிறுகுடிப் பாக்கத்து எம் பெரு நகரானே #40 நற்றிணை 170 மருதம் மடக் கண் தகரக் கூந்தல் பணைத் தோள் வார்ந்த வால் எயிற்றுச் சேர்ந்து செறி குறங்கின் பிணையல் அம் தழைத் தைஇத் துணையிலள் விழவுக்களம் பொலிய வந்து நின்றனளே எழு-மினோ எழு-மின் எம் கொழுநன் காக்கம் ஆரியர் துவன்றிய பேர் இசை முள்ளூர்ப் பலர் உடன் கழித்த ஒள் வாள் மலையனது ஒரு வேற்கு ஓடி ஆங்கு நம் பன்மையது எவனோ இவள் வன்மை தலைப்படினே #41 நற்றிணை 171 பாலை நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை வேனில் குன்றத்து வெம் வரைக் கவாஅன் நிலம் செலச் செல்லாக் கயம் தலைக் குழவி சேரி அம் பெண்டிர் நெஞ்சத்து எறிய ஊர் ஆன் கன்றொடு புகுதும் நாடன் பன் மலை அரும் சுரம் இறப்பின் நம் விட்டு யாங்கு வல்லுந மற்றே ஞாங்கர் வினைப் பூண் தெண் மணி வீழ்ந்தன நிகர்ப்பக் கழுது கால்கொள்ளும் பொழுது கொள் பானாள் ஆர்வ நெஞ்சமொடு அளைஇ மார்புறப் படுத்தல் மரீஇய கண்ணே #42 நற்றிணை 172 நெய்தல் விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி மறந்தனம் துறந்த காழ் முளை அகைய நெய் பெய் தீம் பால் பெய்து இனிது வளர்ப்ப நும்மினும் சிறந்தது நுவ்வை ஆகும் என்று அன்னை கூறினள் புன்னையது நலனே அம்ம நாணுதும் நும்மொடு நகையே விருந்தின் பாணர் விளர் இசை கடுப்ப வலம்புரி வான் கோடு நரலும் இலங்கு நீர்த் துறை கெழு கொண்க நீ நல்கின் இறைபடு நீழல் பிறவுமார் உளவே #43 நற்றிணை 173 குறிஞ்சி சுனைப் பூக் குற்றும் தொடலை தைஇயும் மலைச் செங்காந்தள் கண்ணி தந்தும் தன் வழிப் படூஉம் நம் நயந்து அருளி வெறி என உணர்ந்த அரிய அன்னையைக் கண்ணினும் கனவினும் காட்டி இ நோய் என்னினும் வாராது மணியின் தோன்றும் அ மலை கிழவோன் செய்தனன் இது எனின் படு வண்டு ஆர்க்கும் பைம் தார் மார்பின் நெடு வேட்கு ஏதம் உடைத்தோ தொடியோய் கூறு-மதி வினவுவல் யானே #44 நற்றிணை 174 பாலை கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன ஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக் கோள் உடை நெடும் சினை ஆண் குரல் விளிப்பின் புலி எதிர் முழங்கும் வளி வழங்கு ஆர் இடைச் சென்ற காதலர் வந்து இனிது முயங்கிப் பிரியாது ஒரு வழி உறையினும் பெரிது அழிந்து உயங்கினை மடந்தை என்றி தோழி அற்றும் ஆகும் அஃது அறியாதோர்க்கே வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி மல்லல் மார்பு மடுத்தனன் புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே #45 நற்றிணை 175 நெய்தல் நெடும் கடல் அலைத்த கொடும் திமில் பரதவர் கொழு மீன் கொள்ளை அழி மணல் குவைஇ மீன் நெய் அட்டிக் கிளிஞ்சில் பொத்திய சிறு தீ விளக்கில் துஞ்சும் நறு மலர்ப் புன்னை ஓங்கிய துறைவனொடு அன்னை தான் அறிந்தன்றோ இலளே பானாள் சேரி அம் பெண்டிர் சிறு சொல் நம்பிச் சுடுவான் போல நோக்கும் அடு பால் அன்ன என் பசலை மெய்யே #46 நற்றிணை 176 குறிஞ்சி எம் நயந்து உறைவி ஆயின் யாம் நயந்து நல்கினம் விட்டது என் நலத்தோன் அவ் வயின் சால்பின் அளித்தல் அறியாது அவட்கு அவள் காதலள் என்னுமோ உரைத்திசின் தோழி நிரைத்த யானை முகத்து வரி கடுப்பப் போது பொதி உடைந்த ஒண் செங்காந்தள் வாழை அம் சிலம்பின் வம்பு படக் குவைஇ யாழ் ஓர்த்து அன்ன இன் குரல் இன வண்டு அருவி முழவின் பாடொடு ஒராங்கு மென்மெல இசைக்கும் சாரல் குன்ற வேலித் தம் உறைவின் ஊரே #47 நற்றிணை 177 பாலை பரந்துபடு கூர் எரி கானம் நைப்ப மரம் தீ உற்ற வறும் தலை அம் காட்டு ஒதுக்கு அரும் வெம் சுரம் இறந்தனர் மற்றவர் குறிப்பின் கண்டிசின் யானே நெறிப்பட வேலும் இலங்கு இலை துடைப்ப பலகையும் பீலி சூட்டி மணி அணிபவ்வே பண்டினும் நனி பல அளிப்ப இனியே வந்தன்று போலும் தோழி நொந்துநொந்து எழுது எழில் உண்கண் பாவை அழிதரு வெள்ளம் நீந்தும் நாளே #48 நற்றிணை 178 நெய்தல் ஆடு அமை ஆக்கம் ஐது பிசைந்து அன்ன தோடு அமை தூவித் தடம் தாள் நாரை நலன் உணப்பட்ட நல்கூர் பேடை கழி பெயர் மருங்கில் சிறு மீன் உண்ணாது கைதை அம் படு சினைப் புலம்பொடு வதியும் தண்ணம் துறைவன் தேரே கண்ணின் காணவும் இயைந்தன்று-மன்னே நாணி நள்ளென் யாமத்தும் கண்படை பெறேஎன் புள் ஒலி மணிச் செத்து ஓர்ப்ப விளிந்தன்று-மாது அவர்த் தெளிந்த என் நெஞ்சே #49 நற்றிணை 179 பாலை இல் எழு வயலை ஈற்று ஆ தின்று எனப் பந்து நிலத்து எறிந்து பாவை நீக்கி அம் வயிறு அலைத்த என் செய்வினைக் குறுமகள் மான் அமர்ப்பு அன்ன மையல் நோக்கமொடு யானும் தாயும் மடுப்பத் தேனொடு தீம் பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி நெருநலும் அனையள்-மன்னே இன்றே மை அணல் காளை பொய் புகலாக அரும் சுரம் இறந்தனள் என்ப தன் முருந்து ஏர் வெண் பல் முகிழ் நகை திறந்தே #50 நற்றிணை 180 மருதம் பழனப் பாகல் முயிறு மூசு குடம்பை கழனி நாரை உரைத்தலின் செந்நெல் விரவு வெள் அரிசியின் தாஅம் ஊரன் பலர்ப் பெறல் நசைஇ நம் இல் வாரலனே மாயோள் நலத்தை நம்பி விடல் ஒல்லாளே அன்னியும் பெரியன் அவனினும் விழுமிய இரு பெரு வேந்தர் பொருகளத்து ஒழித்த புன்னை விழுமம் போல என்னொடு கழியும் இவ் இருவரது இகலே #51 நற்றிணை 181 முல்லை உள் இறைக் குரீஇக் கார் அணல் சேவல் பிற புலத் துணையோடு உறை புலத்து அல்கி வந்ததன் செவ்வி நோக்கிப் பேடை நெறி கிளர் ஈங்கைப் பூவின் அன்ன சிறு பல் பிள்ளையொடு குடம்பை கடிதலின் துவலையின் நனைந்த புறத்தது அயலது கூரல் இருக்கை அருளி நெடிது நினைந்து ஈர நெஞ்சின் தன்-வயின் விளிப்ப கையற வந்த மையல் மாலை இரீஇய ஆகலின் இன் ஒலி இழந்த தார் அணி புரவி தண் பயிர் துமிப்ப வந்தன்று பெருவிறல் தேரே உய்ந்தன்று ஆகும் இவள் ஆய் நுதல் கவினே #52 நற்றிணை 182 குறிஞ்சி நிலவும் மறைந்தன்று இருளும் பட்டன்று ஓவத்து அன்ன இடன் உடை வரைப்பின் பாவை அன்ன நின் புறங்காக்கும் சிறந்த செல்வத்து அன்னையும் துஞ்சினள் கெடுத்துப்படு நன் கலம் எடுத்துக் கொண்டு ஆங்கு நன் மார்பு அடைய முயங்கி மென்மெலக் கண்டனம் வருகம் சென்மோ தோழி கீழும் மேலும் காப்போர் நீத்த வறும் தலைப் பெரும் களிறு போலத் தமியன் வந்தோன் பனியலை நீயே #53 நற்றிணை 183 நெய்தல் தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து உமணர் போகலும் இன்னாது ஆகும் மடவை-மன்ற கொண்க வயின்-தோறு இன்னாது அலைக்கும் ஊதையொடு ஓரும் நும் இல் புலம்பின் மாலையும் உடைத்தே இன மீன் ஆர்ந்த வெண்_குருகு மிதித்த வறு நீர் நெய்தல் போல வாழாள் ஆதல் சூழாதோயே #54 நற்றிணை 184 பாலை ஒரு மகள் உடையேன்-மன்னே அவளும் செரு மிகு மொய்ம்பின் கூர் வேல் காளையொடு பெரு மலை அரும் சுரம் நெருநல் சென்றனள் இனியே தாங்கு நின் அவலம் என்றிர் அது மற்று யாங்ஙனம் ஒல்லுமோ அறிவுடையீரே உள்ளின் உள்ளம் வேமே உண்கண் மணி வாழ் பாவை நடை கற்று அன்ன என் அணி இயல் குறுமகள் ஆடிய மணி ஏர் நொச்சியும் தெற்றியும் கண்டே #55 நற்றிணை 185 குறிஞ்சி ஆனா நோயோடு அழி படர்க் கலங்கிக் காமம் கைம்மிகக் கையறு துயரம் காணவும் நல்காய் ஆயின் பாணர் பரிசில் பெற்ற விரி உளை நன் மான் கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறு நெறி இரவலர் மெலியாது ஏறும் பொறையன் உரை சால் உயர் வரைக் கொல்லிக் குட வயின் அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து பறவை இழைத்த பல் கண் இறாஅல் தேன் உடை நெடு வரைத் தெய்வம் எழுதிய வினை மாண் பாவை அன்னோள் கொலை சூழ்ந்தனளால் நோகோ யானே #56 நற்றிணை 186 பாலை கல் ஊற்று ஈண்டல கயன் அற வாங்கி இரும் பிணர்த் தடக் கை நீட்டி நீர் நொண்டு பெரும் கை யானை பிடி எதிர் ஓடும் கானம் வெம்பிய வறம் கூர் கடத்திடை வேனில் ஓதி நிறம் பெயர் முது போத்துப் பாண் யாழ் கடைய வாங்கிப் பாங்கர் நெடு நிலை யாஅம் ஏறும் தொழில பிறர்க்கு என முயலும் பேர் அருள் நெஞ்சமொடு காமர் பொருட்பிணி போகிய நாம் வெம் காதலர் சென்ற ஆறே #57 நற்றிணை 188 குறிஞ்சி படு நீர்ச் சிலம்பில் கலித்த வாழைக் கொடு மடல் ஈன்ற கூர் வாய்க் குவி முகை ஒள் இழை மகளிர் இலங்கு வளைத் தொடூஉம் மெல் விரல் மோசை போலக் காந்தள் வள் இதழ் தோயும் வான் தோய் வெற்ப நன்றி விளைவும் தீதொடு வரும் என அன்று நற்கு அறிந்தனள் ஆயின் குன்றத்துத் தேம் முதிர் சிலம்பில் தடைஇய வேய் மருள் பணைத் தோள் அழியலள்-மன்னே #58 நற்றிணை 189 பாலை தம் அலது இல்லா நம் நயந்து அருளி இன்னும் வாரார் ஆயினும் சென்னியர் தெறல் அரும் கடவுள் முன்னர்ச் சீறியாழ் நரம்பு இசைத்து அன்ன இன் குரல் குருகின் கங்கை வங்கம் போகுவர்-கொல்லோ எவ் வினை செய்வர்-கொல் தாமே வெவ் வினைக் கொலை வல் வேட்டுவன் வலை பரிந்து போகிய கானப் புறவின் சேவல் வாய் நூல் சிலம்பி அம் சினை வெரூஉம் அலங்கல் உலவை அம் காடு இறந்தோரே #59 நற்றிணை 190 குறிஞ்சி நோ இனி வாழிய நெஞ்சே மேவார் ஆர் அரண் கடந்த மாரி வண் மகிழ்த் திதலை எஃகின் சேந்தன் தந்தை தேம் கமழ் விரி தார் இயல் தேர் அழிசி வண்டு மூசு நெய்தல் நெல்லிடை மலரும் அரியல் அம் கழனி ஆர்க்காடு அன்ன காமர் பணைத் தோள் நலம் வீறு எய்திய வலை மான் மழைக் கண் குறுமகள் சில் மொழித் துவர் வாய் நகைக்கு மகிழ்ந்தோயே #60 நற்றிணை 192 குறிஞ்சி குருதி வேட்கை உரு கெழு வய_மான் வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும் மரம் பயில் சோலை மலியப் பூழியர் உருவத் துருவின் நாள் மேயல் ஆரும் மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை நீ நயந்து வருதல் எவன் எனப் பல புலந்து அழுதனை உறையும் அம் மா அரிவை பயம் கெழு பலவின் கொல்லிக் குடவரைப் பூதம் புணர்த்த புதிது இயல் பாவை விரி கதிர் இளவெயில் தோன்றி அன்ன நின் ஆய் நலம் உள்ளி வரின் எமக்கு ஏமம் ஆகும் மலை முதல் ஆறே #61 நற்றிணை 193 பாலை அட்டு அரக்கு உருவின் வட்டு முகை ஈங்கைத் துய்த் தலைப் புது மலர்த் துளி தலைக் கலாவ நிறை நீர்ப் புனிற்றுப் புலம் துழைஇ ஆனாய் இரும் புறம் தழூஉம் பெரும் தண் வாடை நினக்குத் தீது அறிந்தன்றோ இலமே பணைத் தோள் எல் வளை ஞெகிழ்த்த எம் காதலர் அரும் செயல் பொருட்பிணிப் பிரிந்தனர் ஆக யாரும் இல் ஒரு சிறை இருந்து பேர் அஞர் உறுவியை வருத்தாதீமே #62 நற்றிணை 195 நெய்தல் அருளாய் ஆகலோ கொடிதே இரும் கழிக் குருளை நீர்நாய் கொழு மீன் மாந்தி தில்லை அம் பொதும்பில் பள்ளிகொள்ளும் மெல்லம்புலம்ப யான் கண்டிசினே கல்லென் புள்ளின் கானல் அம் தொண்டி நெல் அரி தொழுவர் கூர் வாள் உற்று எனப் பல் இதழ் தயங்கிய கூம்பா நெய்தல் நீர் அலைத் தோற்றம் போல ஈரிய கலுழும் நீ நயந்தோள் கண்ணே #63 நற்றிணை 207 நெய்தல் கண்டல் வேலிக் கழி சூழ் படப்பை முண்டகம் வேய்ந்த குறி இறைக் குரம்பைக் கொழு மீன் கொள்பவர் பாக்கம் கல்லென நெடும் தேர் பண்ணி வரல் ஆனாதே குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி வந்தனர் பெயர்வர்-கொல் தாமே அல்கல் இளையரும் முதியரும் கிளையுடன் குழீஇக் கோள் சுறா எறிந்து எனச் சுருங்கிய நரம்பின் முடி முதிர் பரதவர் மட மொழிக் குறுமகள் வலையும் தூண்டிலும் பற்றிப் பெரும் கால் திரை எழு பௌவம் முன்னிய கொலை வெம் சிறாஅர் பாற்பட்டனளே #64 நற்றிணை 229 பாலை சேறும்சேறும் என்றலின் பல புலந்து செல்-மின் என்றல் யான் அஞ்சுவலே செல்லாதீம் எனச் செப்பின் பல்லோர் நிறத்து எறி புன் சொலின் திறத்து அஞ்சுவலே அதனால் செல்-மின் சென்று வினை முடி-மின் சென்று ஆங்கு அவண் நீடாதல் ஓம்பு-மின் யாமத்து இழை அணி ஆகம் வடுக்கொள முயங்கி உழையீர் ஆகவும் பனிப்போள் தமியே குழைவான் கண்ணிடத்து ஈண்டித் தண்ணென ஆடிய இள மழைப் பின்றை வாடையும் கண்டிரோ வந்து நின்றதுவே #65 நற்றிணை 235 நெய்தல் உரவுத் திரை பொருத பிணர் படு தடவு முதல் அரவு வாள் வாய முள் இலைத் தாழை பொன் நேர் தாதின் புன்னையொடு கமழும் பல் பூம் கானல் பகற்குறி வந்து நம் மெய் கவின் சிதையப் பெயர்ந்தனன் ஆயினும் குன்றின் தோன்றும் குவவு மணல் ஏறிக் கண்டனம் வருகம் சென்மோ தோழி தண் தார் அகலம் வண்டு இமிர்பு ஊதப் படு மணிக் கலி மாக் கடைஇ நெடு_நீர்ச் சேர்ப்பன் வரூஉம் ஆறே #66 நற்றிணை 271 பாலை இரும் புனிற்று எருமைப் பெரும் செவிக் குழவி பைம் தாது எருவின் வைகு துயில் மடியும் செழும் தண் மனையோடு எம் இவண் ஒழியச் செல் பெரும் காளை பொய்ம் மருண்டு சேய் நாட்டுச் சுவைக் காய் நெல்லிப் போக்கு அரும் பொங்கர் வீழ் கடைத் திரள் காய் ஒருங்கு உடன் தின்று வீ சுனைச் சிறு நீர் குடியினள் கழிந்த குவளை உண்கண் என் மகள் ஓர் அன்ன செய் போழ் வெட்டிய பொய்தல் ஆயம் மாலை விரி நிலவில் பெயர்பு புறங்காண்டற்கு மா இரும் தாழி கவிப்பத் தா இன்று கழிக என் கொள்ளாக் கூற்றே #67 நற்றிணை 355 குறிஞ்சி புதல்வன் ஈன்ற பூம் கண் மடந்தை முலை வாய் உறுக்கும் கை போல் காந்தள் குலை-வாய் தோயும் கொழு மடல் வாழை அ மடல் பட்ட அருவித் தீம் நீர் செம் முக மந்தி ஆரும் நாட முந்தை இருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனி நாகரிகர் அம் சில் ஓதி என் தோழி தோள் துயில் நெஞ்சின் இன்புறாய் ஆயினும் அது நீ என் கண் ஓடி அளி-மதி நின் கண் அல்லது பிறிது யாதும் இலளே #68 நற்றிணை 385 நெய்தல் எல்லை சென்ற பின் மலரும் கூம்பின புலவு நீர் அடைகரை யாமைப் பார்ப்போடு அலவனும் அளை-வயின் செறிந்தன கொடும் கழி இரை நசை வருத்தம் வீட மரம் மிசைப் புள்ளும் பிள்ளையொடு வதிந்தன அதனால் பொழுது அன்று ஆதலின் தமியை வருதி எழுது எழில் மழைக் கண் #69 நற்றிணை 396 குறிஞ்சி பெய்து போகு எழிலி வைகு மலை சேர தேன் தூங்கு உயர் வரை அருவி ஆர்ப்ப வேங்கை தந்த வெற்பு அணி நல் நாள் பொன்னின் அன்ன பூம் சினை துழைஇக் கமழ் தாது ஆடிய கவின் பெறு தோகை பாசறை மீமிசைக் கணம்கொள்பு ஞாயிற்று உறு கதிர் இளவெயில் உண்ணும் நாடன் நின் மார்பு அணங்கிய செல்லல் அரு நோய் யார்க்கு நொந்து உரைக்கோ யானே பல் நாள் காமர் நனி சொல் சொல்லி ஏமம் என்று அருளாய் நீ மயங்கினையே #70 பதிற்றுப்பத்து 91 இரும் கண் யானையொடு அரும் கலம் தெறுத்துப் பணிந்து வழிமொழிதல் அல்லது பகைவர் வணங்கார் ஆதல் யாவதோ மற்றே உரும் உடன்று சிலைத்தலின் விசும்பு அதிர்ந்து ஆங்குக் கண் அதிர்பு முழங்கும் கடும் குரல் முரசமொடு கால் கிளர்ந்து அன்ன ஊர்தி கால் முளை எரி நிகழ்ந்து அன்ன நிறை அரும் சீற்றத்து நளி இரும் பரப்பின் மாக் கடல் முன்னி நீர் துனைந்து அன்ன செலவின் நிலம் திரைப்பு அன்ன தானையோய் நினக்கே #71 பதிற்றுப்பத்து 92 இலங்கு தொடி மருப்பின் கடாஅம் வார்ந்து நிலம் புடையூ எழுதரும் வலம் படு குஞ்சரம் எரி அவிழ்ந்து அன்ன விரி உளை சூட்டிக் கால் கிளர்ந்து அன்ன கடும் செலவு இவுளி கோல் முனைக் கொடி இனம் விரவா வல்லோடு ஊன் வினை கடுக்கும் தோன்றல பெரிது எழுந்து அருவியின் ஒலிக்கும் வரி புனை நெடும் தேர் கண் வேட்டனவே முரசம் கண்ணுற்றுக் கதித்து எழு மாதிரம் கல்லென ஒலிப்பக் கறங்கு இசை வயிரொடு வலம் புரி ஆர்ப்ப நெடு மதில் நிரை ஞாயில் கடி மிளைக் குண்டு கிடங்கின் மீப் புடை ஆர் அரண் காப்பு உடைத் தேஎம் நெஞ்சு புகல் அழிந்து நிலை தளர்பு ஒரீஇ ஒல்லா மன்னர் நடுங்க நல்ல மன்ற இவண் வீங்கிய செலவே #72 பதிற்றுப்பத்து 93 பேணு தகு சிறப்பின் பெண் இயல்பு ஆயினும் என்னொடு புரையுநள் அல்லள் தன்னொடு புரையுநர்த் தான் அறிகுநளே #73 பதிற்றுப்பத்து 94 வந்தனென் பெரும கண்டனென் செலற்கே களிறு கலிமான் தேரொடு சுரந்து நல் கலன் ஈயும் நகை சால் இருக்கை மாரி என்னாய் பனி என மடியாய் பகை வெம்மையின் அசையா ஊக்கலை வேறு புலத்து இறுத்த விறல் வெம் தானையொடு மாறா மைந்தர் மாறு நிலை தேய மைந்து மலி ஊக்கத்த கந்து கால் கீழ்ந்து கடாஅ யானை முழங்கும் இடாஅ ஏணி நின் பாசறை யானே #74 பதிற்றுப்பத்து 95 விசையம் தப்பிய #75 பரிபாடல் - கடவுள் வாழ்த்து #7 - திருமால் ஆயிரம் விரித்த அணங்கு உடை அரும் தலை தீ உமிழ் திறலொடு முடி மிசை அணவர மா உடை மலர் மார்பின் மை இல் வால் வளை மேனிச் சேய் உயர் பணை மிசை எழில் வேழம் ஏந்திய வாய் வாங்கும் வளை நாஞ்சில் ஒரு குழை ஒருவனை எரி மலர் சினைஇய கண்ணை பூவை விரி மலர் புரையும் மேனியை மேனித் திரு ஞெமிர்ந்து அமர்ந்த மார்பினை மார்பில் தெரி மணி பிறங்கும் பூணினை மால் வரை எரி திரிந்து அன்ன பொன் புனை உடுக்கையை சேவல் அம் கொடியோய் நின் வல-வயின் நிறுத்தும் ஏவல் உழந்தமை கூறும் நா வல் அந்தணர் அரு மறைப் பொருளே இணை பிரி அணி துணி பணி எரி புரைய விடர் இடு சுடர் படர் பொலம் புனை வினை மலர் நெரி கிடர் எரி புரை தன மிகு தன முரண் மிகு கடல் தரு மணியொடும் முத்து யாத்த நேர் அணி நெறி செறி வெறியுறு முறல் விறல் வணங்கு அணங்கு வில் தார் அணி துணி மணி வெயில் உறழ் எழில் புகழ் அலர் மார்பின் எரி வயிர நுதி எறி படை எருத்து மலை இவர் நவையினில் துணி படல் இல மணி வெயில் உறழ் எழில் நக்கு இமை இருள் அகல முறு கிறுகு புரி ஒரு புரி நாள்_மலர் மலர் இலகின வளர் பரிதியின் ஒளி மணி மார்பு அணி மணம் மிக நாறு உருவின விரை வளி மிகு கடு விசை உடுவுறு தலை நிரை இதழ் அணி வயிறு இரிய அமரரைப் போரெழுந்து உடன்று இரைத்து உரைஇய தானவர் சிரம் உமிழ் புனல் பொழிபு இழிந்து உரம் உதிர்பு அதிர்பு அலம் தொடா அமர் வென்ற கணை பொருவேம் என்றவர் மதம் தபக் கடந்து செரு மேம்பட்ட செயிர் தீர் அண்ணல் இருவர் தாதை இலங்கு பூண் மாஅல் தெருள நின் வரவு அறிதல் மருள் அறு தேர்ச்சி முனைவர்க்கும் அரிதே அன்ன மரபின் அனையோய் நின்னை இன்னன் என்று உரைத்தல் எமக்கு எவன் எளிது அருமை நற்கு அறியினும் ஆர்வம் நின்-வயின் பெருமையின் வல்லா யாம் இவண் மொழிபவை மெல்லிய எனாஅ வெறாஅது அல்லி அம் திரு மறு மார்ப நீ அருளல் வேண்டும் விறல் மிகு விழுச் சீர் அந்தணர் காக்கும் அறனும் ஆர்வலர்க்கு அருளும் நீ திறன் இலோர்த் திருத்திய தீது தீர் கொள்கை மறனும் மாற்றலர்க்கு அணங்கும் நீ அம் கண் வானத்து அணி நிலாத் திகழ்தரும் திங்களும் தெறு கதிர்க் கனலியும் நீ ஐம் தலை உயிரிய அணங்கு உடை அரும் திறல் மைந்து உடை ஒருவனும் மடங்கலும் நீ நலம் முழுது அளைஇய புகர் அறு காட்சிப் புலமும் பூவனும் நாற்றமும் நீ வலன் உயர் எழிலியும் மாக விசும்பும் நிலனும் நீடிய இமயமும் நீ அதனால் இன்னோர் அனையை இனையையால் என அன்னோர் யாம் இவண் காணாமையின் பொன் அணி நேமி வலம் கொண்டு ஏந்திய மன் உயிர் முதல்வனை ஆதலின் நின்னோர் அனையை நின் புகழோடும் பொலிந்தே நின் ஒக்கும் புகழ் நிழலவை பொன் ஒக்கும் உடையவை புள்ளின் கொடியவை புரி வளையினவை எள்ளுநர்க் கடந்து அட்ட இகல் நேமியவை மண்ணுறு மணி பாய் உருவினவை எண் இறந்த புகழவை எழில் மார்பினவை ஆங்கு காமரு சுற்றமொடு ஒருங்கு நின் அடியுறை யாம் இயைந்து ஒன்றுபு வைகலும் பொலிக என ஏமுறு நெஞ்சத்தேம் பரவுதும் வாய்மொழிப் புலவ நின் தாள் நிழல் தொழுதே #76 பரிபாடல் 22 வையை **பாடியவர் :: தெரியவில்லை **இசையமைத்தவர் :: தெரியவில்லை **பண் :: தெரியவில்லை ஒளிறு வாள் பொருப்பன் உடல் சமத்து இறுத்த களிறு நிரைத்தவை போல் கொண்மூ நெரிதர அரசு படக் கடந்த ஆனாச் சீற்றத்தவன் முரசு அதிர்பவை போல் முழங்கு இடி பயிற்றி ஒடுங்கார் உடன்றவன் தானை வில் விசை விடும் கணை ஒப்பின் கதழ் உறை சிதறூஉக் கண் ஒளிர் எஃகின் கடிய மின்னி அவன் வண்மை போல் வானம் பொழிந்த நீர் மண் மிசை ஆனாது வந்து தொகுபு ஈண்டி மற்று அவன் தானையின் ஊழி தா ஊக்கத்தின் போன நிலம் எல்லாம் போர் ஆர் வயல் புகுத நீக்கிப் கான மலைத்தரை கொன்று மணல பினறீ வான மலைத்த மண முரசு எறிதரத் தானைத் தலைத்தலை வந்து மைந்துற்றுப் பொறிவி யாற்றுறி துவர் புகை சாந்தம் எறிவன எக்குவ ஈரணிக்கு ஏற்ற நறவு அணி பூம் துகில் நன் பல ஏந்திப் பிற தொழின பின்பின் தொடர செறி வினைப் பொலிந்த செம் பூம் கண்ணியர் ஈர் அமை வெட்சி இதழ் புனை கோதையர் தார் ஆர் முடியர் தகை கெழு மார்பினர் மாவும் களிறும் மணி அணி வேசரி காவு நிறையக் கரை நெரிபு ஈண்டி வேல் ஆற்றும் மொய்ம்பனின் விரை மலர் அம்பினோன் போல் ஆற்று முன்பின் புனை கழல் மைந்தரொடு தார் அணி மைந்தர் தவப் பயன் சான்ம் எனக் கார் அணி கூந்தல் கயல் கண் கவிர் இதழ் வார் அணி கொம்மை வகை அமை மேகலை ஏர் அணி இலங்கு எயிற்று இன் நகையவர் சீர் அணி வையைக்கு அணி-கொல்லோ வையை-தன் நீர் அணி நீத்தம் இவர்க்கு அணி-கொல் என தேருநர் தேருங்கால் தேர்தற்கு அரிது காண் தீரமும் வையையும் சேர்கின்ற கண் கவின் மண் கணை முழவின் இன் கண் இமிழ்விற்கு எதிர்வ பொருவி மேறு மாறு இமிழ்ப்பக் கவர் தொடை நல் யாழ் இமிழக் காவில் புகர் வரி வண்டு இனம் பூம் சினை இமிர ஊது சீர்த் தீம் குழல் இயம்ப மலர் மிசைத் தாது ஊது தும்பி தவிர்பு அல இயம்ப துடிச் சீர் நடத்த வளி நடன் மெல் இணர்ப் பூம் கொடி மேவர நுடங்க ஆங்கு அவை தத்தம் தொழில் மாறு கொள்ளும் தீம் புனல் வையைத் திருமருத முன்துறையால் கோடு உளர் குரல் பொலி ஒலி துயல் இரும் கூந்தல் புரை தீர் நெடு மென் தோள் தாழ்பு தழை மலர் துவளா வல்லியின் நீள் தாழ்பு தோக்கை நித்தில அரிச் சிலம்பு ** பரிபாடல் திரட்டு #77 பரிபாடல் 23.1 திருமால் வான் ஆர் எழிலி மழை வளம் நந்தத் தேன் ஆர் சிமைய மலையின் இழிதந்து நான்மாடக்கூடல் எதிர்கொள்ள ஆனா மருந்து ஆகும் தீம் நீர் மலி துறை மேய இருந்தையூர் அமர்ந்த செல்வ நின் திருந்து அடி தலையுறப் பரவுதும் தொழுது ஒருசார் அணி மலர் வேங்கை மராஅம் மகிழம் பிணி நெகிழ் பிண்டி நிவந்து சேர்பு ஓங்கி மணி நிறம் கொண்ட மலை ஒருசார் தண் நறும் தாமரைப் பூவின் இடையிடை வண்ண வரி இதழ்ப் போதின்-வாய் வண்டு ஆர்ப்ப விண் வீற்றிருக்கும் கய மீன் விரி தகையின் கண் வீற்றிருக்கும் கயம் ஒருசார் சாறு கொள் ஓதத்து இசையொடு மாறுற்று உழவின் ஓதை பயின்று அறிவு இழந்து திரிநரும் ஆர்த்து நடுநரும் ஈண்டித் திரு நயத்தக்க வயல் ஒருசார் அறத்தொடு வேதம் புணர் தவம் முற்றி விறல் புகழ் நிற்ப விளங்கிய கேள்வித் திறத்தின் திரிவு இல்லா அந்தணர் ஈண்டி அறத்தின் திரியாப் பதி ஆங்கு ஒருசார் உண்ணுவ பூசுவ பூண்ப உடுப்பவை மண்ணுவ மணி பொன் மலைய கடல் பண்ணியம் மாசறு பயம் தரு காருகப் புண்ணிய வணிகர் புனை மறுகு ஒருசார் விளைவதை வினை எவன் மென்புல வன்புலக் களமர் உழவர் கடி மறுகு பிறசார் ஆங்க அனையவை நல்ல நனி கூடும் இன்பம் இயல் கொள நண்ணியவை வண்டு பொரேரென எழ வண்டு பொரேரென எழும் கடிப் புகு வேரி கதவம் இல் தோட்டிக் கடிப்பு இகு காதில் கனம் குழை தொடர மிளிர் மின் வாய்ந்த விளங்கு ஒளி நுதலார் ஊர் களிற்று அன்ன செம்மலோரும் வாய் இருள் பனிச்சை வரி சிலைப் புருவத்து ஒளி இழை ஒதுங்கிய ஒள் நுதலோரும் புலத்தோடு அளவிய புகழ் அணிந்தோரும் நலத்தோடு அளவிய நாண் அணிந்தோரும் விடையோடு இகலிய விறல் நடையோரும் நடை மடம் மேவிய நாண் அணிந்தோரும் கடல் நிரை திரையின் கரு நரையோரும் சுடர் மதிக் கதிர் எனத் தூ நரையோரும் மடையர் குடையர் புகையர் பூ ஏந்தி இடை ஒழிவு இன்றி அடியுறையார் ஈண்டி விளைந்தார் வினையின் விழுப் பயன் துய்க்கும் துளங்கா விழுச் சீர் துறக்கம் புரையும் இரு கேழ் உத்தி அணிந்த எருத்தின் வரை கெழு செல்வன் நகர் வண்டொடு தும்பியும் வண் தொடை யாழ் ஆர்ப்ப விண்ட கட கரி மேகமொடு அதிரத் தண்டா அருவியொடு இரு முழவு ஆர்ப்ப அரி உண்ட கண்ணாரொடு ஆடவர் கூடிப் புரிவுண்ட பாடலொடு ஆடலும் தோன்றச் கூடு நறவொடு காமம் மகிழ் விரியச் கூடா நறவொடு காமம் விரும்ப இனைய பிறவும் இவை போல்வனவும் அனையவை எல்லாம் இயையும் புனை இழைப் பூ முடி நாகர் நகர் மணி மருள் தகை வகை நெறி செறி ஒலி பொலி அவிர் நிமிர் புகழ் கூந்தல் பிணி நெகிழ் துளையினை தெளி ஒளி திகழ் ஞெகிழ் தெரி அரி மது மகிழ்பு அரி மலர் மகிழ் உண்கண் வாள் நுதலோர் மணி மயில் தொழில் எழில் இகல் மலி திகழ் பிறிது இகழ் கடும் கடாக் களிற்று அண்ணலவரோடு அணி மிக வந்து இறைஞ்ச அல் இகப்பப் பிணி நீங்க நல்லவை எல்லாம் இயைதரும் தொல் சீர் வரை வாய் தழுவிய கல் சேர் கிடக்கைக் குளவாய் அமர்ந்தான் நகர் திகழ் ஒளி முந்நீர் கடைந்த அக் கால் வெற்புத் திகழ்பு எழ வாங்கித் தம் சீர் சிரத்து ஏற்றி மகர மறி கடல் வைத்து நிறுத்துப் புகழ் சால் சிறப்பின் இருதிறத்தோர்க்கும் அமுது கடைய இரு வயின் நாண் ஆகி மிகாஅ இரு வடம் ஆழியான் வாங்க உகாஅ வலியின் ஒரு தோழம் காலம் அறாஅது அணிந்தாரும் தாம் மிகாஅ மறலிய மே வலி எல்லாம் புகாஅ எதிர் பூண்டாரும் தாம் மணி புரை மா மலை ஞாறிய ஞாலம் அணி போல் பொறுத்தாரும் தாஅம் பணிபு இல் சீர்ச் செல் விடைப் பாகன் திரிபுரம் செற்றுழிக் கல் உயர் சென்னி இமய வில் நாண் ஆகித் தொல் புகழ் தந்தாரும் தாம் அணங்கு உடை அரும் தலை ஆயிரம் விரித்த கணம்கொள் சுற்றத்து அண்ணலை வணங்கி நல் அடி ஏத்தி நின் பரவுதும் எல்லேம் பிரியற்க எம் சுற்றமொடு ஒருங்கே #78 பரிபாடல் 24.2 வையை மா நிலம் தோன்றாமை மலி பெயல் தலைஇ ஏம நீர் எழில் வானம் இகுத்தரும் பொழுதினான் நாக நீள் மணி வரை நறு மலர் பல விரைஇக் காமரு வையை கடுகின்றே கூடல் நீர் அணி கொண்டன்று வையை என விரும்பித் தார் அணி கொண்ட உவகை தலைக்கூடி ஊர் அணி கோலம் ஒருவர் ஒருவரின் சேர் அணி கொண்டு நிறம் ஒன்று வெவ்வேறு நீர் அணி கொண்ட நிறை அணி அங்காடி ஏர் அணி கொண்டார் இயல் கை புனை தாரினர் கண்ணியர் ஐ எனும் ஆவியர் ஆடையர் நெய் அணி கூந்தலர் பித்தையர் மெய் அணி யானை மிசையராய் ஒய்யெனத் தங்காச் சிறப்பின் தளிர் இயலார் செல்லப் பொங்கு புரவிப் புடைப் போவோரும் பொங்கு சீர் வையமும் தேரும் அமைப்போரும் எவ்வாயும் பொய்யாம் போய் என்னா புடை கூட்டிப் போவநர் மெய்யாப்பு மெய் ஆர மூடுவார் வையத்துக் கூடுவார் ஊடல் ஒழிப்பார் உணர்குவார் ஆடுவார் பாடுவார் ஆர்ப்பார் நகுவார் நக்கு ஓடுவார் ஓடித் தளர்வார் போய் உற்றவரைத் தேடுவார் ஊர்க்குத் திரிவார் இலராகிக் கற்றாரும் கல்லாதவரும் கயவரும் பெற்றாரும் பெற்றான் பிழையாத பெண்டிரும் பொன் தேரான் தானும் பொலம் புரிசைக் கூடலும் முற்று இன்று வையைத் துறை துறை ஆடும் காதலர் தோள் புணை ஆக மறை ஆடுவாரை அறியார் மயங்கிப் பிறை ஏர் நுதலியர் எல்லாரும் தம் முன் நிகழும் நிகழ்ச்சி எம்-பால் என்று ஆங்கே இகல் பல செல்வம் விளைத்தவள் கண்டு இப்பால் அகல் அல்கும் வையைத் துறை காதலான் மார்பின் கமழ் தார் புனல் வாங்கி ஏதிலாள் கூந்தலிடைக் கண்டு மற்று அது தா தா என்றாளுக்குத் தானே புறன் தந்து வேய்தந்தது என்னை விளைந்தமை மற்று அது நோதலே செய்யேன் நுணங்கு_இழையாய் இச் செவ்வி போதல் உண்டாம்-கொல் அறிந்து புனல் புணர்த்தது ஓஓ பெரிதும் வியப்பு கயத் தக்க பூப் பெய்த காமக் கிழமை நயத்தகு நல்லாளைக் கூடுமா கூடும் முயக்குக்குச் செவ்வி முலையும் முயக்கத்து நீரும் அவட்குத் துணை கண்ணின் நீர் விட்டோய் நீயும் அவட்குத் துணை பணிவு இல் உயர் சிறப்பின் பஞ்சவன் கூடல் மணி எழில் மா மேனி முத்த முறுவல் அணி பவளச் செவ் வாய் அறம் காவல் பெண்டிர் மணி அணிந்த தம் உரிமை மைந்தரோடு ஆடித் தணிவு இன்று வையைப் புனல் புனல் ஊடுபோவது ஓர் பூ மாலை கொண்டை எனல் ஊழ் வகை எய்திற்று என்று ஏற்றுக்கொண்ட புனலூடு நாடு அறியப் பூ மாலை அப்பி நினைவாரை நெஞ்சு இடுக்கண் செய்யும் கனல்புடன் கூடாமுன் ஊடல் கொடிய திறம் கூடினால் ஊடாளோ ஊர்த்து அலர் வந்து ஊர்ந்து என ஆங்கு ஈப் பாய் அடு நறாக் கொண்டது இவ் யாறு எனப் பார்ப்பார் ஒழிந்தார் படிவு மைந்தர் மகளிர் மண விரை தூவிற்று என்று அந்தணர் தோயலர் ஆறு வையை தேம் மேவ வழுவழுப்பு உற்று என ஐயர் வாய்பூசுறார் ஆறு விரைபு இரை விரை துறை கரை அழிபு இழிபு ஊர ஊர்தரும் புனல் கரையொடு கடலிடை வரையொடு கடலிடை நிரைநிரை நீர் தரும் நுரை நுரையுடன் மதகு-தொறு இழிதரு புனல் கரை புரளிய செலும் மறி கடல் புகும் அளவு அளவு இயல் இசை சிறை தணிவு இன்று வெள்ள மிகை வரை பல புரை உயர் கயிறு அணி பயில் தொழில் மணி அணி யானை மிசை மைந்தரும் மடவாரும் நிரைநிரை குழீஇயினர் உடன்சென்று குரு மணி யானை இயல் தேர்ப் பொருநன் திருமருத முன்துறை முற்றம் குறுகித் தெரி மருதம் பாடுப பிணி கொள் யாழ்ப் பாணர் பாடிப் பாடி பாய் புனல் ஆடி ஆடி அருளியவர் ஊடி ஊடி உணர்த்தப் புகன்று கூடிக் கூடி மகிழ்பு மகிழ்பு தேடித் தேடிச் சிதைபு சிதைபு சூடிச் சூடித் தொழுது தொழுது இழுதொடு நின்ற மலி புனல் வையை விழு தகை நல்லாரும் மைந்தரும் ஆடி இமிழ்வது போன்றது இ நீர் குணக்குச் சான்றீர் முழுவதும் மிச்சிலா உண்டு சாந்தும் கமழ் தாரும் கோதையும் சுண்ணமும் கூந்தலும் பித்தையும் சோர்ந்தன பூவினும் அல்லால் சிறிதானும் நீர் நிறம் தோன்றாது இவ் வையை ஆறு மழை நீர் அறு குளத்து வாய்பூசி ஆடும் கழு நீர மஞ்சனக் குங்குமக் கலங்கல் வழி நீர் விழு நீர அன்று வையை வெருவரு கொல் யானை வீங்கு தோள் மாறன் உரு கெழு கூடலவரொடு வையை வரு புனல் ஆடிய தன்மை பொருவுங்கால் இரு முந்நீர் வையம் பிடித்து என்னை யான் ஊர்க்கு ஒரு நிலையும் ஆற்ற இயையா அரு மரபின் அந்தர வான் யாற்று ஆயிரம் கண்ணினான் இந்திரன் ஆடும் தகைத்து #79 பரிபாடல் 25.3 வையை அறவோர் உள்ளார் அரு மறை காப்ப செறுநர் விழையாச் செறிந்த நம் கேண்மை மறுமுறை யானும் இயைக நெறி மாண்ட தண் வரல் வையை எமக்கு #80 பரிபாடல் 26.4 வையை தெரி மாண் தமிழ் மும்மைத் தென்னம் பொருப்பன் பரிமா நிரையின் பரந்தன்று வையை #81 பரிபாடல் 27.5 மண் ஆர்ந்து இசைக்கும் முழவொடு கொண்ட தோள் கண்ணாது உடன் வீழும் காரிகை கண்டோர்க்குத் தம்மொடு நிற்குமோ நெஞ்சு #82 பரிபாடல் 28.6 முன்புற்று அறியா முதல் புணர்ச்சி மொய் குழலை இன்புற்று அணிந்த இயல் அணியும் வன் பணியும் நாண் எனும் தொல்லை அணி என்ன நல்_நுதலை #83 பரிபாடல் 29.7 மதுரை உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப் புலவர் புலக் கோலால் தூக்க உலகு அனைத்தும் தான் வாட வாடாத தன்மைத்தே தென்னவன் நான்மாடக்கூடல் நகர் #84 பரிபாடல் 30.8 எட்டாம் பாடல் மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப் பூவொடு புரையும் சீர் ஊர் பூவின் இதழகத்து அனைய தெருவம் இதழகத்து அரும் பொகுட்கு அனைத்தே அண்ணல் கோயில் தாதின் அனையர் தண் தமிழ்க் குடிகள் தாது_உண்_பறவை அனையர் பரிசில் வாழ்நர் பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப ஏம இன் துயில் எழுதல் அல்லதை வாழிய வஞ்சியும் கோழியும் போலக் கோழியின் எழாது எம் பேர் ஊர் துயிலே #85 பரிபாடல் 31.9 ஒன்பதாம் பாடல் தண் தமிழ் வேலித் தமிழ்நாட்டு அகம் எல்லாம் நின்று நிலைஇப் புகழ் பூத்தல் அல்லது குன்றுதல் உண்டோ மதுரை கொடித் தேரான் குன்றம் உண்டாகும் அளவு #86 பரிபாடல் 32.10 பத்தாம் பாடல் செய்யாட்கு இழைத்த திலகம் போல் சீர்க்கு ஒப்ப வையம் விளங்கிப் புகழ் பூத்தல் அல்லது பொய் ஆதல் உண்டோ மதுரை புனை தேரான் வையை உண்டாகும் அளவு #87 பரிபாடல் 33.11 பதினோராம் பாடல் கார்த்திகை காதில் கன மகர குண்டலம் போல் சீர்த்து விளங்கி திரு பூத்தல் அல்லது கோத்தை உண்டாமோ மதுரை கொடித் தேரான் வார்த்தை உண்டாகும் அளவு #88 பரிபாடல் 34.12 பனிரெண்டாம் பாடல் ஈவாரைக் கொண்டாடி ஏற்பாரைப் பார்த்து உவக்கும் சேய் மாடக் கூடலும் செவ்வேள் பரங்குன்றும் வாழ்வாரே வாழ்வார் எனப்படுவார் மற்றையார் போவார் ஆர் புத்தேள்_உலகு #89 பரிபாடல் 35.13 பதிமூன்றாம் பாடல் வையை வரு புனல் ஆடல் இனிது-கொல் செவ்வேள் கோ குன்றம் நுகர்தல் இனிது-கொல் வை வேல் நுதி அன்ன கண்ணார் துணை ஆக எவ்வாறு செயவாம்-கொல் யாம் என நாளும் வழி மயக்குற்று மருடல் நெடியான் நெடு மாடக் கூடற்கு இயல்பு #90 புறநானூறு 244 பாணர் சென்னியும் வண்டு சென்று ஊதா விறலியர் முன்கையும் தொடியின் பொலியா இரவல் மாக்களும் #91 புறநானூறு 256 - பெயர் தெரிந்திலது கலம் செய் கோவே கலம் செய் கோவே அச்சு உடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண் பல்லி போலத் தன்னொடு சுரம் பல வந்த எமக்கும் அருளி வியல் மலர் அகன் பொழில் ஈமத் தாழி அகலிது ஆக வனைமோ நனம் தலை மூதூர்க் கலம் செய் கோவே #92 புறநானூறு 257 - பெயர் தெரிந்திலது செருப்பிடைச் சிறு பரல் அன்னன் கணைக் கால் அவ் வயிற்று அகன்ற மார்பின் பைம் கண் குச்சின் நிரைத்த குரூஉ மயிர் மோவாய்ச் செவி இறந்து தாழ்தரும் கவுளன் வில்லொடு யார்-கொலோ அளியன் தானே தேரின் ஊர் பெரிது இகந்தன்றும் இலனே அரண் எனக் காடு கைக்கொண்டன்றும் இலனே காலைப் புல்லார் இன நிரை செல் புறம் நோக்கிக் கையின் சுட்டிப் பையென எண்ணிச் சிலையின் மாற்றியோனே அவை தாம் மிகப் பல ஆயினும் என் ஆம் எனைத்தும் வெண் கோள் தோன்றாக் குழிசியொடு நாள் உறை மத்து ஒலி கேளாதோனே #93 புறநானூறு 263 - திணை கரந்தை - துறை: கையறுநிலை பெரும் களிற்று அடியின் தோன்றும் ஒரு கண் இரும் பறை இரவல சேறி ஆயின் தொழாதனை கழிதல் ஓம்பு-மதி வழாது வண்டு மேம்படூஉம் இவ் வற நிலை ஆறே பல் ஆத் திரள் நிரை பெயர்தரப் பெயர்தந்து கல்லா இளையர் நீங்க நீங்கான் வில் உமிழ் கடும் கணை மூழ்கக் கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல்லே #94 புறநானூறு 297 பெரு நீர் மேவல் தண்ணடை எருமை இரு மருப்பு உறழும் நெடு மாண் நெற்றின் பைம் பயறு உதிர்த்த கோதின் கோல் அணைக் கன்று உடை மரையாத் துஞ்சும் சீறூர்க் கோள் இவண் வேண்டேம் புரவே நார் அரி நனை முதிர் சாடி நறவின் வாழ்த்தித் துறை நனி கெழீஇக் கம்புள் ஈனும் தண்ணடை பெறுதலும் உரித்தே வை நுதி நெடு வேல் பாய்ந்த மார்பின் மடல் வன் போந்தையின் நிற்குமோர்க்கே #95 புறநானூறு 307 - பாடியவர் பெயர் தெரியவில்லை ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்-கொல்லோ குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன் வம்பலன் போலத் தோன்றும் உதுக் காண் வேனல் வரி அணில் வாலத்து அன்ன கான ஊகின் கழன்று உகு முது வீ அரியல் வான் குழல் சுரியல் தங்க நீரும் புல்லும் ஈயாது உமணர் யாரும் இல் ஒரு சிறை முடத்தொடு துறந்த வாழா வான் பகடு ஏய்ப்பத் தெறுவர் பேர் உயிர் கொள்ளும்-மாதோ அது கண்டு வெம் சின யானை வேந்தனும் இக் களத்து எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல் எனப் பண் கொளற்கு அருமை நோக்கி நெஞ்சு அற வீழ்ந்த புரைமையோனே #96 புறநானூறு 323 - பாடியவர் பெயர் தெரிந்திலது புலிப்-பால் பட்ட ஆமான் குழவிக்குச் சினம் கழி மூதாக் கன்று மடுத்து ஊட்டும் உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை வெள் வேல் ஆவம் ஆயின் ஒள் வாள் கறை அடி யானைக்கு அல்லது உறை கழிப்பு அறியா வேலோன் ஊரே #97 புறநானூறு 327 - பாடியவர்: பெயர் தெரிந்திலது எருது கால் உறாஅது இளைஞர் கொன்ற சில் விளை வரகின் புல்லென் குப்பை தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில் பசித்த பாணர் உண்டு கடை தப்பலின் ஒக்கல் ஒற்கம் சொலியத் தன் ஊர்ச் சிறு புல்லாளர் முகத்து அளவ கூறி வரகு கடன் இரக்கும் நெடுந்தகை அரசு வரின் தாங்கும் வல்லாளன்னே #98 புறநானூறு 328 - பாடியவர்: பெயர் தெரிந்திலது புல்லென் அடை முதல் புறவு சேர்ந்திருந்த புன்புலச் சீறூர் நெல் விளையாதே வரகும் தினையும் உள்ளவை எல்லாம் இரவல் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன அமைந்தனனே அன்னன் ஆயினும் பாண நன்றும் வள்ளத்து இடும் பால் உள் உறை தொடரியொடு களவுப் புளி அன்ன விளை வாடூன் கொழும் குறை கொய் குரல் அரிசியொடு நெய் பெய்து அட்டுத் துடுப்பொடு சிவணிய களிக் கொள் வெண் சோறு உண்டு இனிது இருந்த பின் தருகுவன்-மாதோ தாளி முதல் நீடிய சிறு நறு முஞ்ஞை முயல் வந்து கறிக்கும் முன்றில் சீறூர் மன்னனைப் பாடினை செலினே #99 புறநானூறு 333 - பாடியவர்: பெயர் தெரிந்திலது நீருள் பட்ட மாரிப் பேர் உறை மொக்குள் அன்ன பொகுட்டு விழிக் கண்ண கரும் பிடர்த் தலைய பெரும் செவிக் குறு முயல் உள்ளூர்க் குறும் புதல் துள்ளுவன உகளும் தொள்ளை மன்றத்து ஆங்கண் படரின் உண்க என உணரா உயவிற்று ஆயினும் தங்கினர் சென்மோ புலவீர் நன்றும் சென்றதற்கொண்டு மனையோள் விரும்பி வரகும் தினையும் உள்ளவை எல்லாம் இரவல் மாக்கள் உணக் கொளத் தீர்ந்து எனக் குறித்து மாறு எதிர்ப்பை பெறாஅமையின் குரல் உணங்கு விதைத் தினை உரல் வாய்ப் பெய்து சிறிது புறப்பட்டன்றோ இலளே தன் ஊர் வேட்டக் குடி-தொறும் கூட்டு உடும்பு செய் பாணி நெடும் தேர் வல்லரோடு ஊரா வம்பு அணி யானை வேந்து தலைவரினும் உண்பது-மன்னும் அதுவே பரிசில்-மன்னும் குருசில் கொண்டதுவே #100 புறநானூறு 339 - பாடியவர்: பெயர் தெரிந்திலது வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறு மடலை மாண் நிழல் அசை விடக் கோவலர் வீ ததை முல்லைப் பூப் பறிக்குந்து குறும் கோல் எறிந்த நெடும் செவிக் குறு முயல் நெடு நீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து தொடலை அல்குல் தொடித் தோள் மகளிர் கடல் ஆடிக் கயம் பாய்ந்து கழி நெய்தல் பூக் குறூஉந்து பைம் தழை துயல்வரும் செறு விறல் ததைந்த கலத்தின் வளர வேண்டும் அவளே என்றும் ஆர் அமர் உழப்பதும் அமரியள் ஆகி முறம் செவி யானை வேந்தர் மறம் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே #101 புறநானூறு 340 (அள்ளூர் நன்முல்லையார்) அணித் தழை நுடங்க ஓடி மணிப் பொறிக் குரல் அம் குன்றி கொள்ளும் இளையோள் மா மகள் யார் மகள்-கொல் என வினவுதி கேள் நீ எடுப்ப எடாஅ மைந்தர் தந்தை இரும் பனை அன்ன பெரும் கை யானை கரந்தை அம் செறுவின் பெயர்க்கும் பெரும் தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே #102 புறநானூறு 355 - பாடியவர்: பெயர் தெரிந்திலது மதிலும் ஞாயில் இன்றே கிடங்கும் நீஇர் இன்மையின் கன்று மேய்ந்து உகளும் ஊரது நிலைமையும் இதுவே மற்றே எண்ணா மையலன் தந்தை தன்னையர் கண் ஆர் கண்ணிக் கடு_மான் கிள்ளி #103 புறநானூறு 361 (கயமனார்) கார் எதிர் உருமின் உரறிக் கல்லென ஆர் உயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம் நின் வரவு அஞ்சலன்-மாதோ நல் பல கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு அரும் கலம் நீரொடு சிதறிப் பெருந்தகைத் தாயின் நன்று பலர்க்கு ஈத்துத் தெருள் நடை மா களிறொடு தன் அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும் உருள் நடைப் பஃறேர் ஒன்னார்க் கொன்ற தன் தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும் புரி மாலையர் பாடினிக்குப் பொலம் தாமரைப் பூம் பாணரொடு கலந்து அளைஇய நீள் இருக்கையால் பொறையொடு மலிந்த கற்பின் மான் நோக்கின் வில் என விலங்கிய புருவத்து வல்லென நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று மகளிர் அல்குல் தாங்கா அசைஇ மெல்லென கலம்கலம் தேறல் பொலம் கலத்து ஏந்தி அமிழ்து என மடுப்ப மாந்தி இகழ்விலன் நில்லா உலகத்து நிலையாமை நீ சொல்ல வேண்டா தோன்றல் முந்து அறிந்த முழுது உணர் கேள்வியன் ஆகலின் விரகினானே #104 நற்றிணை 234-1(?) ** இறையனார் அகப்பொருள் உரை சூத்திரம் 28 மேற்கோள் சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது வான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கித் திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள் வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே அஃதான்று அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு கழுமலம் தந்த நல் தேர்ச் செம்பியன் பங்குனி விழவின் உறந்தையொடு உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே #105 நற்றிணை 234-2(?) ** தொல். களவியல் 23 – நச்சினார்க்கினியர் உரை மேற்கோள் பாடல் நெருநலும் முன்னாள் எல்லையும் ஒருசிறை புதுவை ஆகலின் கிளத்தல் நாணி நேர் இறை வளைத் தோள் நின் தோழி செய்த ஆர் உயிர் வருத்தம் களையாயோ என என் குறையுறுதிர் ஆயின் சொல் குறை எம் பதத்து எளியள் அல்லள் எமக்கு ஓர் கண் காண் கடவுள் அல்லளோ பெரும ஆய் கொல் மிளகின் அமலை அம் கொழும் கொடி துஞ்சு புலி வரிப் புறம் தைவரும் மஞ்சு சூழ் மணி வரை மன்ன நன் மகளே |