<<முந்திய பக்கம்

சொல் வகுப்பு (Word Class)


சொல் வகுப்பு (Word Class)

	ஒரு சொல் ஒரு சொற்றொடரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் முறையைப் பொருத்து அது இன்ன வகை என்று அறியப்படும்.
ஒரே சொல் பல பொருள்களில் பயன்படுத்தப்படுவதுவும் உண்டு. அகல் என்ற சொல் ஒரு வினைச்சொல்லாக நீங்கு, விலகு என்ற 
பொருளில் வரலாம். அவ்வாறு வரும்போது, அது இறந்தகால, நிகழ்கால, எதிர்கால இடைநிலைகளையும், ஆண்பால்/பெண்பால் போன்ற 
விகுதிகளையும் பெற்று பல வடிவ மாற்றங்களைப் பெறுகிறது. எனினும் அவை அனைத்துமே அச் சொல்லின் வினை வகுப்பைச் 
சேர்ந்தவையாகக் கொள்ளப்படுகின்றன.

	இதே சொல் அகன்ற, அகலமான என்ற பெயர் அடையாகவும் வரலாம். அவ்வாறான சொற்களெல்லாம் அச் சொல்லின் 
பெயரடை வகுப்பைச் சேர்ந்தவையாகக் கொள்ளப்படுகின்றன.

	அகல் என்ற இதே சொல் குழிவுள்ள சிறு பாத்திரம் என்ற பொருளில் ஒரு பெயர்ச் சொல்லாகவும் வரலாம். எனவே அவ்வாறான 
சொற்களும், அவற்றின் வேற்றுமை உருபு ஏற்ற சொற்களும் (அகலுக்கு, அகலை..) அச் சொல்லின் பெயர் வகுப்பைச் 
சேர்ந்தவையாகக் கொள்ளப்படுகின்றன.

சொல்வகுப்புத் தொடரடைவு

	பொதுவாகத் தொடரடைவுகள் ஒரு நூலில் உள்ள சொற்கள் அந்த நூலுள் வழங்கும் இடங்களை வரிசைப்படுத்திக் 
கூறுகின்றன. ஆனால், அச் சொல் ஏற்கும் பொருளை அவை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. எனவே சொற்களை வகைப்படுத்தி, 
அந்த வகைகளுக்கேற்ற முறையில் தொடரடைவுகள் கொடுக்கப்படுமேயானால், அத்தகைய தொடரடைவு சொல்வகுப்புத் தொடரடைவு 
எனப்படும். இத்தகைய சொல்வகுப்புத் தொடரடைவுகள் ஆய்வுக்குப் பெரிதும் துணைநிற்பனவாய் அமையும் என்பதில் ஐயமில்லை.

பத்துப்பாட்டுள், அகல் என்ற சொல்லுக்குரிய சொல்வகுப்புத் தொடரடைவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அகல் - (வி) நீங்கு, விலகு 
 அகலா மீனின் அவிர்வன இமைப்ப - திரு 88
 அகறிரோ எம் ஆயம் விட்டென - பொரு 123
 அவண் முனையின் அகன்று மாறி - பொரு 198
 அகலா காதலொடு பகல் விளையாடி - பட் 103
 சேண் புலம்பு அகல இனிய கூறி - மலை 167
 நாடு காண் நனம் தலை மென்மெல அகன்மின் - மலை 270
 ஒட்டாது அகன்ற ஒன்னா தெவ்வர் - மலை 397
 புலம்பு சேண் அகல புதுவிர் ஆகுவிர் - மலை 412

- (பெ.அ/பெ) அகன்ற, அகலமான / அகலமான இடம் 
 இரும் சேற்று அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த, முள் தாள் தாமரை - திரு 72,73
 அகல் இரு விசும்பில் பாய் இருள் பருகி - பெரும் 1
 அகல் இரு வானத்து குறைவில் ஏய்ப்ப - பெரும் 292
 கான் யாறு தழீஇய அகல் நெடும் புறவில்- முல் 24
 அகல் வானத்து வெயில் கரப்பவும் - மது 50 
 பாடு விலம்பும் இசை ஏற்றத்,தோடு வழங்கும் அகல் ஆம்பியின்- மது 90,91
 அணங்கு வழங்கும் அகல் ஆங்கண் - மது 164
 அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழ - மது 182
 அகல் இரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்ப - மது 267
 முழவு இமிழும் அகல் ஆங்கண் - மது 327
 யாறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் - மது 359
 அகல் இரு விசும்பில் துவலை கற்ப - நெடு 20
 அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த - நெடு 21
 ஆறு கிடந்து அன்ன அகல் நெடும் தெருவில் - நெடு 30
 அகல் இரு வானத்து வீசு வளி கலாவலின் - குறி 48
 வான் கண் கழீஇய அகல் அறை குவைஇ - குறி 98
 அகல் நகர் வியல் முற்றத்து - பட் 20
 மா கண் அகல் அறை அதிர்வன முழங்க - பட் 237
 அகல் இரு விசும்பின் ஆஅல் போல - மலை 100
 அகல் அறை, . . . காலின் உதிர்ந்தன கரும் கனி நாவல் - மலை 133-135
- அகன் - அகன்ற - அகலமான
 அறாஅ யாணர் அகன் தலை பேரூர் - பொரு 1
 கை கசடு இருந்த என் கண் அகன் தடாரி - பொரு 70
 கரை சூழ்ந்த அகன் கிடக்கை - பொரு 179	
 அவிழ் தளவின் அகன் தோன்றி - பொரு 199
 கரு வில் ஓச்சிய கண் அகன் எறுழ் தோள் - பெரு 74
 கார் ஏறு பொருத கண் அகன் செறுவில் - பெரும் 210
 கழுநீர் பொலிந்த கண் அகன் பொய்கை - மது 171
 அறம் நிலைஇய அகன் அட்டில் - பட் 43
 வரி மணல் அகன் திட்டை - பட் 60
 கராஅம் கலித்த கண் அகன் பொய்கை - பட் 242
 கடு கலித்து எழுந்த கண் அகன் சிலம்பில் - மலை 14
 அகன் மலை இறும்பில் துவன்றிய யானை - மலை 205
 கயம் கண்டு அன்ன அகன் பை அம் கண் - மலை 259
 அகன் கண் பாறை துவன்றி - மலை 276
 அகன்ற தாயத்து அஃகிய நுட்பத்து - மலை 551

- (பெ) தகளி, bowl of a lamp, சட்டி, a small wide-mouthed vessel 
 கார் அகல் கூவியர் பாகொடு பிடித்த - பெரும் 377
 கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து - நெடு 102