<<முந்திய பக்கம்

திருமுறை - 9 சொற்கள் - எண்ணிக்கை

எண்ஆசிரியர்அடிகள்சொற்கள்பிரிசொற்கள்கட்டுருபன்கள்அடைவுச்சொற்கள்
---- ------------------------------ -------- ----------- ------------------ ------------------ ------------------
1. திருமாளிகைத் தேவர் 180 1509 18 3 1530
2. சேந்தனார்136 1180 34 11 1225
3. கருவூர்த்தேவர்412 3501 36 27 3564
4. பூந்துருத்தி நம்பி காட நம்பி48 2892 6 297
5. கண்டராதித்தர் 40 264 10 11 285
6. வேணாட்டடிகள் 40 258 0 0 258
7. திருவாலியமுதனார்168 1191 16 23 1230
8. புருடோத்தம நம்பி 88 647 20 4 671
9. சேதிராயர்40 186 26 0 212
10. சேந்தனார்52 383 8 5 396
---- ----------------- -------- ----------- ------------------ ------------------ ------------------
மொத்தம் 1204 9408 170 90 9668
---- ----------------- -------- ----------- ------------------ ------------------ ------------------
தனிச்சொற்கள் 4419
விளக்கம்
சொற்கள் :- words between spaces பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மாது_ஓர்_பாகன்) கட்டுருபன்கள்:- words with hyphen - செல்-மின் அடைவுச்சொற்கள்:- words for concordance - இந்த மூன்றனின் கூட்டுத்தொகை சொல் = மாது_ஓர்_பாகன் (1) சொல் = செல்-மின் (1) பிரிசொற்கள் = மாது, ஓர், பாகன் (3) கட்டுருபன் = -மின் (1) அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2 விளக்கம் 1. பிரிசொற்கள் பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, குல_கொடி, துன்_அரும், ஆ_கோள் போன்றன. சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும் தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக, அம்மல்லோதி என்பது அம் அல் ஓதி என்று பிரிக்கப்பட்டு அழகிய இருளடர்ந்த கூந்தல் என்று பொருள்படும். இது அன்மொழித்தொகை ஆகி, அழகிய இருளடர்ந்த கூந்தல் உள்ள பெண்ணைக்குறிக்கும். இந்தச் சொல்லுக்குரிய பிரிசொற்கள் அம் அல் ஓதி ஆகிய மூன்றுமே. இது ஒரே சொல்லாக அம்_அல்_ஓதி எனக் கொள்ளப்படும். எனவே அம்_அல்_ஓதி என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், அம்_அல்_ஓதி, அம், அல், ஓதி என்ற நான்கு சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும். எ.காட்டு அம் (25) ஆறு அணி சடை எம் அற்புத கூத்தா அம் பொன் செய் அம்பலத்து அரசே - 1.திருமாளிகை:1 6/3 உருக்கி என் உள்ளத்துள்ளே ஊறல் அம் தேறல் மாறா - 1.திருமாளிகை:4 7/1 கொண்டல் அம் கண்டத்து எம் குரு மணியை குறுக வல்வினை குறுகாவே - 2.சேந்தனார்:1 3/4 கேடு_இல் அம் கீர்த்தி கனக கற்பகத்தை கெழுமுதற்கு எவ்விடத்தேனே - 2.சேந்தனார்:1 12/4 வலது ஒன்று இலள் இதற்கு என் செய்கேன் வயல் அம் தண் சாந்தையர் வேந்தனே - 2.சேந்தனார்:2 5/4 திவள் அம் மாளிகை சூழ் திருவிடைக்கழியில் திருக்குரா நீழல் கீழ் நின்ற - 2.சேந்தனார்:3 2/3 வரிந்த வெம் சிலை கை மைந்தனை அம் சொல் மையல்கொண்டு ஐயுறும் வகையே - 2.சேந்தனார்:3 7/4 அம் சுடர் புரிசை ஆழி சூழ் வட்டத்து அகம் படி மணி நிரை பரந்த - 3.கருவூர்:1 6/3 இரும் திரை தரள பரவை சூழ் அகலத்து எண்_இல் அம் கண் இல் புன் மாக்கள் - 3.கருவூர்:1 11/1 அலை கடல் முழங்கும் அம் தண் நீர் களந்தை அணி திகழ் ஆதித்தேச்சரமே - 3.கருவூர்:2 1/4 ஆலை அம் பாகின் அனைய சொல் கருவூர் அமுது உறழ் தீம் தமிழ் மாலை - 3.கருவூர்:4 10/3 அம் பளிங்கு பகலோன்-பால் அடை பற்றாய் இவள் மனத்தின் - 3.கருவூர்:5 3/1 மண்ணின் நின்று அலறேன் வழி மொழி மாலை மழலை அம் சிலம்பு அடி முடி மேல் - 3.கருவூர்:6 2/2 நெற்றியில் கண் என் கண்ணின்-நின்று அகலா நெஞ்சினில் அம் சிலம்பு அலைக்கும் - 3.கருவூர்:9 2/1 சூழல் அம் பளிங்கின் பாசலர் ஆதி சுடர் விடு மண்டலம் பொலிய - 3.கருவூர்:9 4/2 சுனை பெரும் கலங்கல் பொய்கை அம் கழுநீர் சூழல் மாளிகை சுடர் வீசும் - 3.கருவூர்:9 7/3 வை அவாம் பெற்றம் பெற்று அம் ஏறு_உடையார் மாதவர் காதல்வைத்து என்னை - 3.கருவூர்:10 8/1 கலங்கல் அம் பொய்கை புனல் தெளிவிடத்து கலந்த மண்ணிடை கிடந்தாங்கு - 3.கருவூர்:10 9/1 மலங்கல் அம் கண்ணில் கண்மணி_அனையான் மருவு இடம் திருவிடைமருதே - 3.கருவூர்:10 9/4 அல்லி அம் பூம் பழனத்து ஆமூர் நாவுக்கரசை - 4.பூந்துருத்தி:2 3/1 அம் கோல் வளையார் பாடி ஆடும் அணி தில்லை அம்பலத்துள் - 5.கண்டராதித்:1 8/3 உருவம் பாகமும் ஈந்து நல் அம் தியை ஒண் நுதல் வைத்தோனே - 7.திருவாலி:2 4/4 ஏர்வு அம் கை மான் மறியன் எம்பிரான் போல் நேசனையே - 7.திருவாலி:4 8/4 அம்_அல்_ஓதி அயர்வுறுமே - 9.சேதிராயர்:1 4/4 உய உன் கொன்றை அம் தார் அருளாய் எனும் - 9.சேதிராயர்:1 5/2 அம்_அல்_ஓதி (1) அம்_அல்_ஓதி அயர்வுறுமே - 9.சேதிராயர்:1 4/4 அல் (1) அம்_அல்_ஓதி அயர்வுறுமே - 9.சேதிராயர்:1 4/4 ஓதி (1) அம்_அல்_ஓதி அயர்வுறுமே - 9.சேதிராயர்:1 4/4 2. கட்டுருபன் கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றது. அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும். இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்கொள்ளப்படும். எ.காட்டு என்-கொலோ என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், என்-கொலோ, -கொலோ என்ற இரு சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும். என்-கொலோ (2) கண்ணின்-நின்று அகலான் என்-கொலோ கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 2/4 கைகள் மொட்டிக்கும் என்-கொலோ கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 4/4 -கொலோ (11) கண்ணின்-நின்று அகலான் என்-கொலோ கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 2/4 கைகள் மொட்டிக்கும் என்-கொலோ கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 4/4 கோவே உன்றன் கூத்து காண கூடுவது என்று-கொலோ - 5.கண்டராதித்:1 2/4 அத்தா உன்றன் ஆடல் காண அணைவதும் என்று-கொலோ - 5.கண்டராதித்:1 3/4 கோனை ஞானக்கொழுந்து-தன்னை கூடுவது என்று-கொலோ - 5.கண்டராதித்:1 4/4 ஒளி வான் சுடரே உன்னை நாயேன் உறுவதும் என்று-கொலோ - 5.கண்டராதித்:1 5/4 கார் ஆர் மிடற்று எம் கண்டனாரை காண்பதும் என்று-கொலோ - 5.கண்டராதித்:1 6/4 கலை ஆர் மறி பொன் கையினானை காண்பதும் என்று-கொலோ - 5.கண்டராதித்:1 7/4 கடி ஆர் கொன்றை மாலையானை காண்பதும் என்று-கொலோ - 5.கண்டராதித்:1 9/4 ஏத்த நின்று ஆடுகின்ற எம்பிரான் அடி சேர்வன்-கொலோ - 7.திருவாலி:4 7/4 சேர்வன்-கொலோ அன்னைமீர் திகழும் மலர் பாதங்களை - 7.திருவாலி:4 8/1 3. வழக்காறு-1 ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும். ஆனால், அச்சொல், ஒரு அதிகாரத்தின் இறுதி அடியில் இருந்தாலோ அல்லது அச்சொல்லின் பொருள் அதே அடியில் முடிவடைந்தாலோ அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது. எ.காட்டு அடியேன் (14) களம் கொள அழைத்தால் பிழைக்குமோ அடியேன் கைக்கொண்ட கனக கற்பகமே - 2.சேந்தனார்:1 11/4 அவனி ஞாயிறு போன்று அருள் புரிந்து அடியேன் அகத்திலும் முகத்தலை மூதூர் - 3.கருவூர்:4 1/3 முழங்கு தீம் புனல் பாய்ந்து இள வரால் உகளும் முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன் /விழுங்கு தீம் கனியாய் இனிய ஆனந்த வெள்ளமாய் உள்ளம் ஆயினையே - 3.கருவூர்:4 2/3,4 நீடினாய் எனினும் உள் புகுந்து அடியேன் நெஞ்சு எலாம் நிறைந்து நின்றாயே - 3.கருவூர்:4 4/4 முக்கண் நாயகனே முழுது உலகு இறைஞ்ச முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன் /பக்கல் ஆனந்தம் இடையறா வண்ணம் பண்ணினாய் பவள வாய் மொழிந்தே - 3.கருவூர்:4 5/3,4 முனை படு மதில் மூன்று எரித்த நாயகனே முகத்தலை அகத்து அமர்ந்து அடியேன் /வினைபடும் உடல் நீ புகுந்து நின்றமையால் விழுமிய விமானம் ஆயினதே - 3.கருவூர்:4 6/3,4 அண்டம் ஓர் அணுவாம் பெருமை கொண்டு அணு ஓர் அண்டமாம் சிறுமை கொண்டு அடியேன் /உண்ட ஊண் உனக்காம் வகை எனது உள்ளம் உள் கலந்து எழு பரஞ்சோதி - 3.கருவூர்:6 6/1,2 கைத்தலம் அடியேன் சென்னி மேல் வைத்த கங்கைகொண்டசோளேச்சரத்தானே - 3.கருவூர்:6 8/4 உம் கை கொண்டு அடியேன் சென்னி வைத்து என்னை உய்யக்கொண்டு அருளினை மருங்கில் - 3.கருவூர்:6 10/2 அணி உமிழ் சோதி மணியினுள் கலந்தாங்கு அடியனேன் உள் கலந்து அடியேன் /பணி மகிழ்ந்து அருளும் அரிவை_பாகத்தன் படர் சடை விட மிடற்று அடிகள் - 3.கருவூர்:10 4/1,2 நலம் கலந்து அடியேன் சிந்தையுள் புகுந்த நம்பனே வம்பனேனுடைய - 3.கருவூர்:10 9/2 வம்பானார் பணி உகத்தி வழி அடியேன் தொழில் இறையும் - 6.வேணாட்டடிகள்:1 2/3 ஆளோ நீ உடையதுவும் அடியேன் உன் தாள் சேரும் - 6.வேணாட்டடிகள்:1 9/3 தேவே தென் திரு தில்லை கூத்தாடீ நாய் அடியேன் /சா வாயும் நினை காண்டல் இனி உனக்கு தடுப்பு அரிதே - 6.வேணாட்டடிகள்:1 10/3,4 4. வழக்காறு-2 ஓர் அடியில் ஒரே சொல் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்தால், அந்த அடி அத்தனை முறை கொடுக்கப்பெறும். எ.காட்டு அருளாய் (11) சித்தனே அருளாய் செங்கணா அருளாய் சிவபுர நகருள் வீற்றிருந்த - 3.கருவூர்:8 9/1 சித்தனே அருளாய் செங்கணா அருளாய் சிவபுர நகருள் வீற்றிருந்த - 3.கருவூர்:8 9/1 அத்தனே அருளாய் அமரனே அருளாய் அமரர்கள் அதிபனே அருளாய் - 3.கருவூர்:8 9/2 அத்தனே அருளாய் அமரனே அருளாய் அமரர்கள் அதிபனே அருளாய் - 3.கருவூர்:8 9/2 அத்தனே அருளாய் அமரனே அருளாய் அமரர்கள் அதிபனே அருளாய் /தத்து நீர் படுகர் தண்டலை சூழல் சாட்டியக்குடியுள் ஏழ் இருக்கை - 3.கருவூர்:8 9/2,3 முத்தனே அருளாய் முதல்வனே அருளாய் முன்னவா துயர் கெடுத்து எனக்கே - 3.கருவூர்:8 9/4 முத்தனே அருளாய் முதல்வனே அருளாய் முன்னவா துயர் கெடுத்து எனக்கே - 3.கருவூர்:8 9/4 வானநாடு உடை மைந்தனே ஓ என்பன் வந்து அருளாய் என்பன் - 7.திருவாலி:2 9/1 அத்தா அருளாய் அணி அம்பலவா என்றென்று அவர் ஏத்த - 7.திருவாலி:3 7/2 ஆலகண்டா அரனே அருளாய் என்றென்று அவர் ஏத்த - 7.திருவாலி:3 9/2 உய உன் கொன்றை அம் தார் அருளாய் எனும் - 9.சேதிராயர்:1 5/2