விளக்கம்
சொற்கள் :- words between spaces
பிரிசொற்கள்:- words with underscores ; taken as separate words (மயிர்_குறை_கருவி)
கட்டுருபன்கள்:- words with hyphen – செல்-மின்
அடைவுச்சொற்கள்:- words for concordance - இந்த மூன்றனின் கூட்டுத்தொகை
சொல் = மயிர்_குறை_கருவி (1) சொல் = செல்-மின் (1)
பிரிசொற்கள் = மயிர், குறை, கருவி (3) கட்டுருபன் = -மின் (1)
அடைவுச்சொற்கள் = 4 அடைவுச்சொற்கள் = 2
1. பிரிசொற்கள்
பிரிசொற்கள் என்பன கூட்டுச்சொல்லின் பகுதிகள். ஈர்_ஆறு, புளி_மரம், துன்_அரும், ஆ_கோள் போன்றன.
சொல்லின் பகுதிகள் அடிக்கோட்டால் இணைக்கப்பெறும். முழுச்சொல்லும், அவற்றின் பகுதிகளும்
தனித்தனியே கணக்கிடப்படும். காட்டாக, வாள்_நுதல் என்ற அன்மொழித்தொகைச் சொல்லுக்குரிய பிரிசொற்கள்
வாள், நுதல் ஆகிய இரண்டுமே. எனவே வாள்_நுதல் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், நுதல், வாள், வாள்_நுதல்
என்ற மூன்று சொற்களுக்கும் உரிய நிகழ்விடங்களிலும் இடம்பெறும்.
எ.காட்டு
நுதல் (254)
மறு இல் கற்பின் வாள்_நுதல் கணவன் - திரு 6
திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல்/மகர_பகு_வாய் தாழ மண்_உறுத்து - திரு 24,25
வை_நுதி பொருத வடு ஆழ் வரி நுதல்/வாடா மாலை ஓடையொடு துயல்வர - திரு 78,79
--------------------------------------------------
தம் ஊரோளே நன்_நுதல் யாமே - அகம் 24/10
மனை மாண் கற்பின் வாள்_நுதல் ஒழிய - அகம் 33/2
வாள் (208)
மறு இல் கற்பின் வாள்_நுதல் கணவன் - திரு 6
வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி - திரு 8
சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ - திரு 87
------------------------------------------
யானை பட்ட வாள் மயங்கு கடும் தார் - பதி 36/6
வாள்_நுதல் கணவ மள்ளர் ஏறே - பதி 38/10
------------------------------------------
ஒளிறு வாள் அரும் சமம் முருக்கி - புறம் 312/5
மனைக்கு விளக்கு ஆகிய வாள்_நுதல் கணவன் - புறம் 314/1
வாள்_நுதல் (9)
மறு இல் கற்பின் வாள்_நுதல் கணவன் - திரு 6
மணி ஒலி கேளாள் வாள்_நுதல் அதனால் - நற் 42/5
வாள்_நுதல் கணவ மள்ளர் ஏறே - பதி 38/10
ஒய்ய போவாளை உறழ்த்தோள் இ வாள்_நுதல்/வையை மடுத்தால் கடல் என - பரி 20/41,42
மனை மாண் கற்பின் வாள்_நுதல் ஒழிய - அகம் 33/2
பகல் வந்து பெயர்ந்த வாள்_நுதல் கண்டே - அகம் 386/15
மனை தொலைந்திருந்த என் வாள்_நுதல் படர்ந்தே - புறம் 211/22
மனைக்கு விளக்கு ஆகிய வாள்_நுதல் கணவன் - புறம் 314/1
மனை செறிந்தனளே வாள்_நுதல் இனியே - புறம் 337/12
2. கட்டுருபன்
கட்டுருபன் என்பது ஒட்டுச்சொல் போன்றது. அதே பொருளில் தனித்து வர இயலாதது. கொல், மன், மின், கண்(ஏழன் உருபு) போன்றது.
அகற்சி-கண்ணும், உற்றன-கொல், முடியும்-மன், பொலி-மின் போன்றவற்றில் வரும் ஒட்டுச்சொற்கள் இடைக்கோட்டால் இணைக்கப்பெறும்.
இவை முழுச்சொல்லாகவும், ஒட்டுச்சொல்லாகவும் எடுத்துக்-கொள்ளப்படும்.
எ.காட்டு
எறி-தொறும் என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்கள், எறி-தொறும், -தொறும் என்ற இரு சொற்களுக்கும் உரிய
நிகழ்விடங்களிலும் மட்டும் இடம்பெறும். எறி என்ற சொல்லுக்குரிய நிகழ்விடங்களில் இது இடம்பெறாது.
எறி-தொறும் (4)
வடந்தை தண் வளி எறி-தொறும் நுடங்கி - நெடு 173
உறு வளி எறி-தொறும் கலங்கிய பொறி வரி - அகம் 151/6
தண் கடல் அசை வளி எறி-தொறும் வினை விட்டு - அகம் 340/22
எறி-தொறும் நுடங்கி ஆங்கு நின் பகைஞர் - புறம் 382/20
-தொறும் (170)
----------------------------------------------------------------
வடந்தை தண் வளி எறி-தொறும் நுடங்கி - நெடு 173
உரவு சினம் செருக்கி துன்னு-தொறும் வெகுளும் - குறி 130
நினைத்-தொறும் கலுழுமால் இவளே கங்குல் - குறி 251
3. வழக்காறு-1
ஒவ்வொரு சொல்லுக்குமுரிய நிகழ்விடங்களின் எண்ணிக்கை அச் சொல்லை அடுத்து அடைப்புக்குறிக்குள்
கொடுக்கப்பட்டுள்ளது.
அதன் கீழ், அச் சொல்லுக்குரிய நிகழ்விடங்கள் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அச் சொல் வரும் அடி
முழுமையாகக் கொடுக்கப்படும். அதனை அடுத்து அந்த அடி இடம்பெறும் பாடல் பெயர் கொடுக்கப்படும். அதனை
அடுத்து பத்துப்பாட்டு நூலாயின் அச் சொல் இடம்பெறும் அடி எண் கொடுக்கப்படும். எட்டுத்தொகை நூலாயின்
பாடல் எண், அதனை அடுத்து அடியின் எண் கொடுக்கப்படும்.
எ.காட்டு
எறி-தொறும் (4)
-----------------------------------------------
வடந்தை தண் வளி எறி-தொறும் நுடங்கி - நெடு 173
உறு வளி எறி-தொறும் கலங்கிய பொறி வரி - அகம் 151/6
--------------------------------------------
4. வழக்காறு-2
ஒரு சொல் ஓர் அடியின் இறுதியில் அமைந்தால், அதன் நிகழ்விடத்துடன் அடுத்த அடியும் கொடுக்கப்படும்.
ஆனால், அச்சொல், ஒரு அதிகாரத்தின் இறுதி அடியில் இருந்தாலோ அல்லது அச்சொல்லின் பொருள்
அதே அடியில் முடிவடைந்தாலோ அடுத்த அடி கொடுக்கப்படமாட்டாது.
எ.காட்டு
நக (7)
வருவர்-கொல் வாழி தோழி நாம் நக/புலப்பினும் பிரிவு ஆங்கு அஞ்சி - குறு 177/5,6
ஊரவர் உடன் நக திரிதரும் - கலி 74/15
வினை நயந்து அமைந்தனை ஆயின் மனை நக/பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே - அகம் 21/7,8
சிலம்பு நக இயலி சென்ற என் மகட்கே - அகம் 117/9
சீர் கெழு வியன் நகர் சிலம்பு நக இயலி - அகம் 219/1
இலங்கு வளை தெளிர்ப்ப வீசி சிலம்பு நக/சின் மெல் ஒதுக்கமொடு மென்மெல இயலி - அகம் 261/5,6
அகம் நக வாரா முகன் அழி பரிசில் - புறம் 207/4
சில இடங்களில் ஓர் அடியில் உள்ள ஒரு சொல்லின் தொடர்ச்சி அதன் முந்தைய அடியில் இருப்பின்
முந்தைய அடியும் கொடுக்கப்படும்.
5. வழக்காறு-3
ஓர் அடியில் ஒரே சொல் இரண்டு முறை வந்தால், அந்த அடி இரண்டு முறை கொடுக்கப்பெறும்.
எ.காட்டு
-தொறும் (170)
துடை-தொறும் துடை-தொறும் கலங்கி - ஐங் 358/3
துடை-தொறும் துடை-தொறும் கலங்கி - ஐங் 358/3
நினை-தொறும் கலிலும் இடும்பை எய்துக - ஐங் 373/1
காண்-தொறும் காண்-தொறும் கலங்க - ஐங் 375/5
காண்-தொறும் காண்-தொறும் கலங்க - ஐங் 375/5