|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
தொகுதி (1)
தொகுதி குற்றம் குறள் என அறுபெயர் - 2.ககர_வருக்கம்:26 26/2
TOP
தொகுதியும் (2)
கசையும் பல்லியமும் கவசமும் தொகுதியும்
ஆபரணமும் எனவாம் பதின்மூன்றே - 2.ககர_வருக்கம்:21 189/4,5
தோடே அணையும் இலையும் தொகுதியும்
பனைஇதழ்போல்பவும் பூவின்இதழும் - 5.தகர_வருக்கம்:511 26/1,2
TOP
தொங்கலும் (4)
தொங்கலும் கவியும் கூத்தும் துலாமும் - 5.தகர_வருக்கம்:56 16/3
தொடையே தொடுத்தலும் தொங்கலும் கணையும் - 5.தகர_வருக்கம்:510 23/1
தோகை என்பது மயிலும் தொங்கலும்
வாலும் சுற்றாரலும் நாற்பெயரே - 5.தகர_வருக்கம்:511 24/1,2
பாணியும் தொங்கலும் மருதநிலமும் - 7.பகர_வருக்கம்:71 138/2
TOP
தொங்கலே (1)
தொங்கலே மயில் தூக்கம் தூக்கு - 5.தகர_வருக்கம்:510 21/1
TOP
தொட்டலே (1)
தொட்டலே கைதீண்டலும் உண்டலும் - 5.தகர_வருக்கம்:510 14/1
TOP
தொட்டி (1)
தொட்டி என்பது வாய்தலும் தொட்டியும் - 5.தகர_வருக்கம்:510 17/1
TOP
தொட்டியும் (1)
தொட்டி என்பது வாய்தலும் தொட்டியும்
கள்ளும் எனவே கருதும் முப்பெயரே - 5.தகர_வருக்கம்:510 17/1,2
TOP
தொட்பம் (1)
தொட்பம் என்பது சாமர்த்தியம் ஆம் - 5.தகர_வருக்கம்:510 6/1
TOP
தொடர்தலுடனே (1)
தொடர்தலுடனே வலியும் பொலிவும் - 7.பகர_வருக்கம்:71 152/2
TOP
தொடர்பும் (2)
களனே பொய்கையும் கள்ளும் தொடர்பும்
மருதநிலனும் என்னும் நாற்பேரே - 2.ககர_வருக்கம்:21 153/1,2
ஈட்டமும் தொடர்பும் துணைக்காரணமும் - 2.ககர_வருக்கம்:21 189/2
TOP
தொடரர்தானே (1)
தொடரர்தானே மேவினர் பெயரே - 5.தகர_வருக்கம்:510 3/1
TOP
தொடரல் (1)
தொடரல் என்பது கடல் எனப்படுமே - 5.தகர_வருக்கம்:510 2/1
TOP
தொடவல் (1)
தொடவல் என்ப மாலை ஆகும் - 5.தகர_வருக்கம்:510 1/1
TOP
தொடி (1)
தொடி என்பது கங்கணமும் வளையும் - 5.தகர_வருக்கம்:510 16/1
TOP
தொடுக்கும் (1)
சொல்லும் எனவே தொடுக்கும் இருபேர் - 1.உயிர்_வருக்கம்:13 102/2
TOP
தொடுத்த (1)
தொடுத்த தொடையும் ஒழுங்கும் இயல்பு - 8.மகர_வருக்கம்:82 39/3
TOP
தொடுத்தல் (1)
தொடுத்தல் என்பது வளைத்தலும் பிணித்தலும் - 5.தகர_வருக்கம்:510 20/1
TOP
தொடுத்தலும் (1)
தொடையே தொடுத்தலும் தொங்கலும் கணையும் - 5.தகர_வருக்கம்:510 23/1
TOP
தொடுதோல் (1)
தொடுதோல் என்பது செருப்பு எனலாகும் - 5.தகர_வருக்கம்:510 4/1
TOP
தொடுப்பே (1)
தொடுப்பே உழவு வளை இருபெயரே - 5.தகர_வருக்கம்:510 10/1
TOP
தொடுவாய் (1)
தொடுவாய் ஆவது புறங்கூற்று ஆகும் - 5.தகர_வருக்கம்:510 5/1
TOP
தொடையலே (1)
தொடையலே வாசிகையும் மாலையும் - 5.தகர_வருக்கம்:510 11/1
TOP
தொடையும் (2)
தொடுத்த தொடையும் ஒழுங்கும் இயல்பு - 8.மகர_வருக்கம்:82 39/3
வாமமே இடப்பாலும் தொடையும்
குறளும் வனப்பும் கூறும் நாற்பேர் - 10.வகர_வருக்கம்:102 35/1,2
TOP
தொடையே (1)
தொடையே தொடுத்தலும் தொங்கலும் கணையும் - 5.தகர_வருக்கம்:510 23/1
TOP
தொடைவிகற்பமும் (1)
கத்திகையே தொடைவிகற்பமும் துவசமும் - 2.ககர_வருக்கம்:21 120/1
TOP
தொண்டகப்பறையும் (1)
தடறு என்பதுவே தொண்டகப்பறையும்
பத்தனும் படையுறையுடனும் முப்பெயரே - 5.தகர_வருக்கம்:51 72/1,2
TOP
தொண்டு (1)
தொத்தே தொண்டு பூங்கொத்து இருபெயர் - 5.தகர_வருக்கம்:510 15/1
TOP
தொண்டும் (1)
பாம்பும் கேண்மையும் ஒன்பதும் தொண்டும்
பழமையும் கார்காலமும் ஒன்பான்பெயர் - 6.நகர_வருக்கம்:61 46/2,3
TOP
தொண்டே (1)
தொண்டே அடிமையும் ஒன்பதும் பழமையும் - 5.தகர_வருக்கம்:510 22/1
TOP
தொண்டைமான் (1)
திரையன் என்பதுவே தொண்டைமான் ஆம் - 5.தகர_வருக்கம்:53 8/1
TOP
தொண்டையே (1)
தொண்டையே ஆதொண்டையும் கோவையும் - 5.தகர_வருக்கம்:510 19/1
TOP
தொத்தே (1)
தொத்தே தொண்டு பூங்கொத்து இருபெயர் - 5.தகர_வருக்கம்:510 15/1
TOP
தொய்யலும் (1)
தொய்யிலே ஒருவுதலும் தொய்யலும்
அழகும் குழையும் கிளர்ச்சியும் துயரமும் - 5.தகர_வருக்கம்:510 24/1,2
TOP
தொய்யிலே (1)
தொய்யிலே ஒருவுதலும் தொய்யலும் - 5.தகர_வருக்கம்:510 24/1
TOP
தொல்லையும் (2)
விரைவும் தொல்லையும் விளம்பும் நாற்பெயரே - 1.உயிர்_வருக்கம்:110 35/2
தொழிலே தொல்லையும் ஆரவாரமும் - 5.தகர_வருக்கம்:510 18/1
TOP
தொலையும் (1)
முதுகும் பிடரும் தொலையும் ஐம்பேர் - 3.சகர__வருக்கம்:35 46/2
TOP
தொழில்செய்வோர்க்கும் (1)
கம்மியர் என்பது தொழில்செய்வோர்க்கும்
கம்மாளர்க்கும் கருதிடும் இருபெயர் - 2.ககர_வருக்கம்:21 60/1,2
TOP
தொழிலினூணும் (1)
உருத்திதம்தானே தொழிலினூணும்
உரியபொருளும் வளர்ச்சியும் முப்பேர் - 1.உயிர்_வருக்கம்:15 77/1,2
TOP
தொழிலும் (2)
காவலும் தொழிலும் காட்டும் நாற்பெயரே - 3.சகர__வருக்கம்:37 27/2
தொழிலும் ஓர் காலமும் சொல்லும் நாற்பெயரே - 10.வகர_வருக்கம்:108 30/2
TOP
தொழிலே (1)
தொழிலே தொல்லையும் ஆரவாரமும் - 5.தகர_வருக்கம்:510 18/1
TOP
தொழுதல் (1)
வந்தனைதானே தொழுதல் ஆகும் - 10.வகர_வருக்கம்:101 16/1
TOP
தொழுதலும் (1)
பரவல் என்பது தொழுதலும் பரத்தலும் - 7.பகர_வருக்கம்:71 81/1
TOP
தொழுநோயும் (1)
குட்டமே தொழுநோயும் ஆழமும் - 2.ககர_வருக்கம்:25 69/1
TOP
தொழும்பு (1)
அடிமை என்பது தொழும்பு எனலாகும் - 1.உயிர்_வருக்கம்:11 30/1
TOP
தொழுவே (1)
தொழுவே உழலை இரேவதி இருபெயர் - 5.தகர_வருக்கம்:510 13/1
TOP
தொள்ளிதானே (1)
தொள்ளிதானே சேறு எனலாகும் - 5.தகர_வருக்கம்:510 7/1
TOP
தொறு (1)
தொறு என்பதுவே ஆவினில்குழாமும் - 5.தகர_வருக்கம்:510 12/1
TOP
தொறுவர் (1)
தொறுவர் என்பதுவே இடையர் ஆகும் - 5.தகர_வருக்கம்:510 8/1
TOP
தொன்மையும் (2)
மரபே முறைமையும் தொன்மையும் இருபேர் - 8.மகர_வருக்கம்:81 68/1
தொன்மையும் எனவே சொல்லும் அறுபெயர் - 8.மகர_வருக்கம்:86 8/3
TOP
தொன்றுதானே (1)
தொன்றுதானே பழமை ஆகும் - 5.தகர_வருக்கம்:510 9/1
TOP
|
|
|