<<முந்திய பக்கம்

பசுபதி, மேகலா,சாயிராமன் பதிப்பித்த (உ.வே.சா நூலகம் - 2003) அகராதி நிகண்டு
தேவையான தலைப்பின் மேல் சொடுக்கவும்
தலைப்பு சொற்பிரிப்பு மூலம் சீர் பிரிப்பு மூலம்
1.உயிர் வருக்கம்

2.ககர வருக்கம்

3.சகர வருக்கம்

4.ஞகர வருக்கம்

5.தகர வருக்கம்

6.நகர வருக்கம்

7.பகர வருக்கம்

8.மகர வருக்கம்

9.யகர வருக்கம்

10.வகர வருக்கம்

** அகராதி நிகண்டு -3
** (ஒரு சொல் பல பெயர்த் தொகுதி)
** பதிப்பாசிரியர்கள்: பசுபதி, மேகலா,சாயிராமன்
** உ.வே.சா.நூல்நிலையம் - 2003
&1 உயிர் வருக்கம்

@1 அகர வருக்கம்

@11 அ
**1

#1
அருள் என்ப கருணைதானே ஆம் சிவசத்திக்கும் பேர்
**2

#2
அனந்தனே ஈசன் மாலோன் அருகனும் சேடனும் பேர்
**3

#3
அரம்பை என்பதுவே வாழை அரமகளிர் இருபேர் ஆமே
**4

#4
அண்டரே பகைவர் வானோர் ஆயர் என்றாகும் முப்பேர்
**5

#5
அலரி கண்வரி அருக்கன் அழகு ஒருமரம் பூத் தேனீ
**6

#6
அருணனே புதன் ஆதித்தன் அவன் தேர்ப்பாகனுக்கும் அப்பேர்
**7

#7
அளக்கரே புணரி சேறு உப்பளம் புலி அறுமீனப்பேர்
**8

#8
அத்தமே வாளி கானம் கண்ணாடி பொன் பொருள் கை பாதி
**9

#9
அணங்கு நோய் அழகு தெய்வம் ஆசை பெண் கொலை வருத்தம்
**10

#10
அங்கதமே வசைச்சொல் அரவு தோளணி முப்பேரே
**11

#11
அரவம் என்பது புயங்கம் ஆரவாரம் சிலம்பு ஆம்
**12

#12
அண்டம் என்பதுவே முட்டை அந்தரம் புவனம் முப்பேர்
**13

#13
அம்பரம் என்ப விண்ணும் ஆடையும் கடலும் ஆமே
**14

#14
அஞ்சனம் என்ப மை திக்கயம் கறுப்பு ஆக முப்பேர்
**15

#15
அங்கி என்பது தீச்சட்டை அத்திரி அறுமீன் முப்பேர்
**16

#16
அயம் என்ப நீர் தடாகம் ஆடு வெம் பரி இரும்பு ஆம்
**17

#17
அளகமே மயிர்க்குழற்சி ஆசை ஆம் மயிர்பரப்பே
**18

#18
அளறு என்ப சேறுதானே அரு நரகினுக்கும் அப்பேர்
**19

#19
அந்தரி என்ப துர்க்கை அம்பிகை இருபேர் ஆமே
**20

#20
அஃகலே சுருங்கல் மழுங்கல் ஆணியும் இரவும் நாற்பேர்
**21

#21
அந்தியே மாலைக்காலம் மரம் பாலை யாழ்ப்பண்ணும் பேர்
**22

#22
அடுப்பு என்ப பரணிநாளே அச்சமே சுல்லி முப்பேர்
**23

#23
அறுவையே சித்திரைப் பேர் அடையும் ஆகும் என்ப
**24

#24
அன்றில் ஓர் புள்ளும் மூலநாள் என ஆம் இரண்டே
**25

#25
அகி என்பது இரும்பும் சீறும் அரவு இருபேர் என்றாமே
**26

#26
அணு என்ப நுண்மை சீவன் ஆன மந்திரம் முப்பேரே
**27

#27
அகலுள் என்பதுவே ஊரும் அகலமும் நாடும் ஆமே
**28

#28
அத்தி என்பதுவே கிள்ளை ஆம் ஒரு நகருக்கும் பேர்
**29

#29
அருப்பமே ஊரும் நோயும் நடலையும் சோலையும் பேர்
**30

#30
அடை என்ப கனமே தின்னும் அப்பமே இலை முப்பேரே
**31

#31
அருவி மலையின்வீழ்ஆறும் அரி தினைத்தாளும் ஆகும்
**32

#32
அணை என்ப சயனம் மெத்தை ஆகும் செய்கரைக்கும் பேரே
**33

#33
அகம் என்ப மனையே பாவம் அகலிடம் வீடுள் ஆமே
**34

#34
அங்கணம் சேறு முற்றம் ஆம் சலதரைக்கும் பேர்
**35

#35
அரசனே என்ப வியாழன் அதிபதி இருபேர் ஆமே
**36

#36
அன்னை என்பதுவே தோழி அம்மனை முன்பிறந்தாள்
**37

#37
அம்மையே மறுபிறப்பும் அழகொடு தாயும் ஆமே
**38

#38
அணி என்ப படைவகுப்பே அழகு பூண் பெருமை நாற்பேர்
**39

#39
அரத்தமே இரத்தம் செம்மை அரக்கொடு உற்பலம் கடம்பு
**40

#40
அடி என்ப முதலே தாள் ஆம் செண்டு வெளியும் ஆமே
**41

#41
அரலையே கழலை கொட்டை ஆம் மரல் என்றும் பேரே
**42

#42
அன்னமே எகினத்தின்பேர் அடிசிலும் ஆகும் என்ப
**43

#43
அரிட்டம் என்பதுவே காக்கை அறிவழித்திடு கள் ஆமே
**44

#44
அளி என்ப நறவும் வண்டும் அன்பொடு கொடையும் நாற்பேர்
**45

#45
அழனம் என்பது பிணப்பேர் அக்கினி இருபேர் ஆமே
**46

#46
அத்து என்ப அரைஞாண் செம்மை அசைச்சொல்லோடு இசைப்பும் ஆமே
**47

#47
அராகம் என்பது சிவப்போடு ஆசை பண் பாலையாழ் ஆம்
**48

#48
அக்கு என்ப விடைமுரிப்பு மணி சங்கின்மணி முப்பேரே
**49

#49
அனந்தமே அளவிலாமை அந்தரம் ககனம் முப்பேரே
**50

#50
அலங்கல் என்பது பூமாலை அசைவொடு தளிர் இலங்கல்
**51

#51
அரந்தையே குறிஞ்சியாழ்ப் பேர் ஆகும் மிகு துன்பமும் பேர்
**52

#52
அடல் என்ப வெற்றி கோறல் அமர் வலி ஆக நாற்பேர்
**53

#53
அயில் என்ப கூர்மைதானே ஆம் உடம்பிடிக்கும் அப்பேர்
**54

#54
அரணமே கவசம் காடே அணி மதில் வேலி நாற்பேர்
**55

#55
அம்பணம் தூம்பு வாழை ஆமை நீர்ப்பத்தல் யாழே
**56

#56
அளித்தல் என்பதுவே காத்தல் அளித்திடல் கொடையும் முப்பேர்
**57

#57
அச்சமே அகத்தி ஐம்மை அஞ்சல் இ முப்பேர் ஆமே
**58

#58
அருணம் என்பது மான் செம்மை ஆடு எலுமிச்சை நாற்பேர்
**59

#59
அந்தமே முடிவின்பேர் ஆம் அழகு ஐயம் முப்பேர் ஆமே
**60

#60
அம்பலே பழிச்சொல் சில்லோர் அறிந்திலர் தூற்றல் ஆமே
**61

#61
அலர் என்ப பலரும் தூற்றும் அயர் ஒளி களி பூ நீர் ஆம்
**62

#62
அரத்தலே ஒலித்தல் என்பர் அழுகையும் ஆகும் என்ப
**63

#63
அஞ்சலி என்ப வாவல் அங்கைகூப்புதல் இரண்டாம்
**64

#64
அலகு நெற்கதிரே ஆதி பலகறை நுளம்பு ஓர் எண்ணும்
**65

#65
அல்லி வெள்ளாம்பல் காயா அகவிதழ் ஆக முப்பேர்
**66

#66
அதம் என்ப பாதாளப்பேர் ஆம் இறங்குதலும் கீழும்
**67

#67
அகைத்தல் வேதனை ஒடித்தல் அறுத்திடல் உயர்த்தல் ஆமே
**68

#68
அசி படைக்கலமே வாளே அவமதிச்சிரிப்பு முப்பேர்
**69

#69
அபரர் என்பதுவே ஒன்னார் அண்டரும் இருபேர் ஆமே
**70

#70
அந்தணர் என்ப நீத்தோர் அறுதொழிலோரும் ஆமே
**71

#71
அள் என்ப செறிவும் காதும் அயிலும் பற்றிரும்பும் ஆமே
**72

#72
அலம் என்ப கலப்பையின்பேர் அமைவு என்றும் உரைக்கலாமே
**73

#73
அயிர் என்ப சர்க்கரைப் பேர் நுண்மை நுண்மணலும் ஆமே
**74

#74
அண்டசம் தவளை பல்லி யானை மீன் கிடங்கு தேரை 
நண்டு புள் ஆமை இப்பி நச்சரவுமே ஈராறே
**75

#75
அக்கமே மறைவும் சேர்வும் அவகாசம்தானும் ஆமே
**76

#76
அருச்சுனம் என்ப வெள்ளை ஆம் உயர் மருதும் ஆமே
**77

#77
அத்தி ஆர்கலியே யானை அதவு எலும்பு ஆக நாற்பேர்
**78

#78
அந்தில் என்பது வழக்கும் அசைச்சொல்லும் இடமும் ஆமே
**79

#79
அமுது என்ப சுவையும் பாலும் அவியொடு முப்பேர் ஆமே
**80

#80
அம் என்ப புனல் அசைச்சொல் அழகொடு முப்பேர் ஆமே
**81

#81
அமுதமே பெருமை முத்தி அப்புடன் சுதை பால் ஐம்பேர்
**82

#82
அம்பு என்ப மேகம் தண்ணீர் அத்திரம் மூங்கில் நாற்பேர்
**83

#83
அளகம் என்பதுவே தாளி ஆம் பெரும் வாளிக்கும் பேர்
**84

#84
அஞர் என்ப துன்பத்தின்பேர் அறிவிலாதவரும் ஆமே
**85

#85
அந்தகன் என்ப காலன் ஆம் சிதடனுக்கும் அப்பேர்
**86

#86
அரக்கு என்ப மெழுகு செம்மை சரக்கு எனும் முப்பேர் ஆமே
**87

#87
அகவல் என்பதுவே கூத்து ஆசிரியம் இருபெயர் ஆமே
**88

#88
அரங்கம் என்பதுவே கூத்து ஆயுதம்பயிலிடம் துருத்தி
**89

#89
அள்ளல் என்பது கீளாலை அந்தரங்கமும் பேர் ஆமே
**90

#90
அழுங்கல் என்பது நடுக்கம் அல்லலே இரங்கல் கேடு ஆம்
**91

#91
அறல் என்ப விழைவும் நீரும் அலையும் நுண்மணலும் ஆமே
**92

#92
அளை என்ப முழையே பாழி ஆன வெண் தயிர் புற்று ஆமே
**93

#93
அங்கமே எலும்பு உறுப்பு ஆறங்கம் ஆதாரம் கட்டில்
**94

#94
அழுவம் என்பது பரப்பும் அரிய துர்க்கமும் நாடும் பேர்
**95

#95
அறுகு என்ப யாளி சிங்கம் ஆம் ஒரு புல்லுக்கும் பேர்
**96

#96
அத்திரி ஆம் தாசேரகம் அசலமே கழுதை வாசி
**97

#97
அறை என்ப மொழிதல் பாறை அகம் திரை மலைமுழைப் பேர்
**98

#98
அரில் என்ப பரல் பிணக்கம் ஆம் சிறுதூறு குற்றம்
**99

#99
அவல் என்ப குளமே பள்ளம் அருந்து சிற்றுண்டி பேர் ஆம்
**100

#100
அண்ணை என்பது பிசாசும் அறிவிலாதவனும் ஆமே
**101

#101
அகப்பாவே புரிசையோடு உள்ளுயர்த்த
**102

#102
அசம் என்ப புருவையே மூவாட்டையின்நெல்லும் ஆமே
**103

#103
அசனி என்பதுவே வச்சிராயுதம் இடியும் ஆமே
**104

#104
அல் என்ப இரவின்பேரே அந்தகாரமும் ஆம் என்ப
**105

#105
அரிதமே திசை பசும்புல் அவனியே பச்சை முப்பேர்
**106

#106
அகடு என்ப நடுவின்பேரும் அழகிய வயிறும் ஆமே
**107

#107
அமறலே பொலிவும் பீடும் அதிகமும் ஆகும் என்ப
**108

#108
அருகல் என்பது சுருங்கல் அணைதல் என்று இருபேர் ஆமே
**109

#109
அடுதலே தீயில்பாகமாக்குதல் கொலை இரண்டாம்
**110

#110
அவிர்தல் என்பதுவே பீறல் ஆம் ஒளிதனக்கும் அப்பேர்
**111

#111
அம்பி என்பதுவே தெப்பம் ஆன நாவாயும் ஆமே
**112

#112
அந்தரம் என்ப வானம் அளவு இடம் பேதம் நாற்பேர்
**113

#113
அங்காரகன் செவ்வாயும் அக்கினிதானும் ஆமே
**114

#114
அடர் என்ப நெருங்கலின்பேர் ஐம்மையும் ஆகும் என்ப
**115

#115
அரங்கு என்பது அவை இல்லே வட்டாடிடமும்மே அப்பேர்
**116

#116
அயனம் என்பது வழிப் பேர் ஆண்டினில்பாதிக்கும் பேர்
**117

#117
அமலை என்பதுவே ஓசை அம்பிகை சோறும் அப்பேர்
**118

#118
அலவன் கற்கடகம் பூனை அம்புலி ஞெண்டும் ஆமே
**119

#119
அம்மனை என்பது அம்மை ஆடும் அம்மானைக்கும் பேர்
**120

#120
அரசு என்ப நாடு மன்னன் அசுவத்தமும் பேர் மூன்றாம்
**121

#121
அறிக்கையே பற்றுவித்தல் அரிதலும் இருபேர் ஆமே
**122

#122
அதர் என்ப புழுதியின்பேர் ஆம் பெருவழிக்கும் அப்பேர்
**123

#123
அருந்தல் என்பது பொசித்தல் அருமையும் இருபேர் ஆமே
**124

#124
அத்தனே ஈசன் ஆசான் அப்பனும் இருபேர் ஆமே
**125

#125
அனித்தியம் என்ப பொய்யும் அழிதலும் இருபேர் ஆமே
**126

#126
அண்ணலே பெருமை ஈசன் அரசனே அருகன் புத்தன்
**127

#127
அருத்தம் என்பதுவே பாதி ஆடகம் பொருள் கருத்து ஆம்
**128

#128
அனு என்ப தொடர்ச்சியின்பேர் ஆம் கவுள் எனவும் கூறும்
**129

#129
அரி என்ப நெடுமால் காந்தி அரிசி நெற்கதிரே சிங்கம்
இரவி கண் வரியே பச்சை எரி பறை மறலி சாற்றும்
திரவியம் பாம்பு காற்றுத் தேரொடு மூங்கில் சேகு
வரி பகை தற்கம் நண்டு வானரம் நீர் வாள் பன்றி
பரியுடன் சிலம்பி பெய்த பரல் விலி பாயல் சோலை
எரி புகர் சயனம் திங்கள் இந்திரன் சக
ககலம் தார் கிள்ளை புகை வலி புணரி
அதலே நிறம் அரிதல் ஆக நாற்பத்தேழாமே
**130

#130
அச்சுதன் என்ப மாலும் அருகனும் இருபேர் ஆமே
**131

#131
அளவை என்பதுவே எல்லை ஆம் திறம் என்னும் பேரே
**132

#132
அவி என்ப நெய்யும் தேவர்க்கமைத்திடும்உணவும் ஆமே
**133

#133
அயிராணி இந்திரன்தேவியும் அந்தரன்தேவியும் பேர்

@12 ஆ
**134

#1
ஆதியே முதல் நேரோடல் அருகன் மால் ஈசன் ஒற்றி
**135

#2
ஆரலே ஒரு மீன் ஒற்றி அறுமீனும் மதிலும் ஆமே
**136

#3
ஆவணம் புணர்தம் வீதி அங்காடி அடிமை ஓலை
**137

#4
ஆடியே ஒரு மாதம் கண்ணாடி உத்திராடம் முப்பேர்
**138

#5
ஆலமே வடவிருக்கம் அடு நஞ்சொடு அலர்ந்த பூ நீர்
**139

#6
ஆசை என்பது செம்பொன்னும் ஆவலும் திக்கும் ஆமே
**140

#7
ஆழி மோதிரமே நேமி அலைகடல் கரை புள் வட்டம்
**141

#8
ஆ என்ப பசுவே ஆச்சாமரம் அதிசயம் இரக்கம்
**142

#9
ஆணு என்பதுவே நன்மை ஆடு இரதமும் அப்பேர்
**143

#10
ஆசாரம் என்பது ஆடை பெருமழை ஆன சீலம்
**144

#11
ஆர்வம் என்பது தீயோர் வீழ்ந்து அழுந்திய நிரையம் காதல்
**145

#12
ஆலயம் என்ப கோயில் ஆனையின்கூடம் ஊர் ஆம்
**146

#13
ஆரை என்பது புல் பாயோடு அணி மதில் ஆக முப்பேர்
**147

#14
ஆர்வலன் என்ப கொண்கன் அன்புடையோனும் ஆமே
**148

#15
ஆடவர் என்பது ஆண் பேர் ஆம் இளையவர்க்கும் அப்பேர்
**149

#16
ஆறு என்ப நதி ஓர் எண் பேர் ஆம் வழிதானும் ஆமே
**150

#17
ஆகம் என்பது சரீரம் அழகிய மார்பும் ஆமே
**151

#18
ஆகாரம் என்ப நெய்யும் அசனமும் உடம்பும் ஆமே
**152

#19
ஆம்பல்  வேய் கள்ளுக் கௌவை அல்லி வங்கியமே யானை
**153

#20
ஆரமே பதக்கம் முத்து ஆம் ஆத்தி சந்தனமும் ஆகும்
**154

#21
ஆடல் என்பது கூத்துப் பெண்ஆண்கூடல் வார்த்தை வென்றி
**155

#22
ஆலியே ஆலாங்கட்டி மழைத்துளிதானும் ஆமே
**156

#23
ஆர்ப்பு என்பது ஒலி சிரித்தல் அமர் என முப்பேர் ஆமே
**157

#24
ஆர் கூர்மை ஆத்தி தேரின் அகத்தினுள் செறி கதிர்ப் பேர்
**158

#25
ஆசு என்ப சடுதி குற்றம் அற்பம் மெய்க்கவசம் நாற்பேர்
**159

#26
ஆற்றலே பொறை முயற்சி அதிகமே வலியே ஞானம்
**160

#27
ஆடு என்ப வென்றி மேடம் அசம் என முப்பேர் ஆமே
**161

#28
ஆகுலம் என்ப தோசை ஆம் மிகு வருத்தம் ஆமே
**162

#29
ஆர்தலே குடித்தல் உண்டல் அணிதலே நிறைதலும் பேர்
**163

#30
ஆணை மெய்யுடனே வென்றி சூள் ஏவல் ஆக நாற்பேர்
**164

#31
ஆசினி பலா விசேடம் மரவுரி மரத்தின் சேகு ஆம்
**165

#32
ஆக்கமே செல்வம் என்பர் அம்புயத்தவளும் ஆமே
**166

#33
ஆரி என்பது கபாடம் அழகு இருபெயர் என்றாமே
**167

#34
ஆணம் என்பது குழம்பும் அங்கு இருபெயரும் ஆமே
**168

#35
ஆகுவே எலியின் நாமம் ஆண்பெருச்சாளிக்கும் பேர்
**169

#36
ஆதித்தர் என்ப விண்ணோர் ஆதபருக்கும் ஆமே
**170

#37
ஆதன் என்பதுவே சீவன் அறிவிலோன் பெயரும் ஆமே
**171

#38
ஆங்கண் என்பது அவ்விடத்தோடு அசைச்சொல்லும் உவமையும் பேர்
**172

#39
ஆயமே கவற்றில் தாயம் ஆதாயம் மாதர்கூட்டம்
**173

#40
ஆய்வு என்ப வருத்தமே ஆராய்தலும் ஆகும் என்ப
**174

#41
ஆய்தல் என்பது நுணுக்கம் ஆகும் தேருதலும் ஆமே
**175

#42
ஆலல் என்பது முழங்கல் ஆடுதல் இருபேர் ஆமே
**176

#43
ஆல் என்பது அல்ல என்றல் ஆலமரம் என்ப அசைச்சொல்
**177

#44
ஆனியே உத்திராடம் அழிதலே மூலநாள் ஆம்
**178

#45
ஆனகம் படகத்தின்பேர் ஆகும் துந்துமியும் அப்பேர்
**179

#46
ஆடகம் என்ப செம்பொன் ஆம் துவரைக்கும் அப்பேர்
**180

#47
ஆனியம் என்ப நாளும் பொழுதும் என்று அறையலாமே
**181

#48
ஆசுகம் என்ப காற்றுக்கான பேர் அம்பும் ஆமே
**182

#49
ஆவியே மூச்சு நாற்றம் ஆருயிர் புகையே வாவி
**183

#50
ஆம்பிரமே புளிப்பு என்று அறைவர் மாமரமும் ஆமே
**184

#51
ஆரியரே மிலேச்சர் அறிவுடையோரும் ஆமே
**185

#52
ஆணி என்பது மற்று ஆணி அழகு எழுத்தாணி முப்பேர்

@13 இ
**186

#1
இரணியே வாணிகத்தோடு இலகு சூரியன் வெற்பு என்ப
**187

#2
இருள் என்ப திமிரம் மையலே நிரையம் கறுப்பு ஆம்
**188

#3
இரலையே கலை ஊதும்கொம்பு இரண்டுடன் முதல்நாளும் பேர்
**189

#4
இறை என்ப வேந்தன் வீட்டின்இறப்பு இறையப்புச் சென்னி
சிறுமை புள்ளிறகு தங்கல் சிறந்தவன் கடன் ஒன்பான்பேர்
**190

#5
இடி என்ப வெடி என்றென்பர் இவற்றிடும் உறுதிச்சொல்லே
**191

#6
இறால் என்ப தேன்கூடு ஓர் மீன் எருது கார்த்திகையும் ஆமே
**192

#7
இறும்பு என்ப மலை குறுங்காடு என்பர் தாமரையும் ஆமே
**193

#8
இராகமே கீதம் செம்மை இச்சையே நிறமும் ஒக்கும்
**194

#9
இலஞ்சியே மகிழ்மரப்பேர் ஏரி கொப்பூழின்பேர் ஆம்
**195

#10
இடை நடு என்ப மற்றும் இடைப்பெயர் நுசுப்பும் ஆமே
**196

#11
இகுளை என்பதுவே கூடி இணங்கிய தோழி உற்றார்
**197

#12
இரதமே புணர்ச்சி சூதம் இன்சுவை அரைநாண் பொன் தேர்
**198

#13
இலம்பகம் அத்தியாயம் எழில் நுதல் சூட்டு மாலை
**199

#14
இந்தனம் இசையே காட்டம் எரியிடுகனலும் ஆமே
**200

#15
இளி என்ப நகை இரித்தல் இசை இறங்குதல் இரித்தல்
**201

#16
இலயமே கூத்தும் கூத்தின்விகற்பமும் இருபேர் ஆமே
**202

#17
இறைவை என்பது நீர்ப்புட்டில் ஏணியும் இருபேர் ஆமே
**203

#18
இழுக்கு என்ப பிழைத்தல் பொல்லாங்கு இருபெயர் ஆகும் என்ப
**204

#19
இறப்பு என்ப மிகுதி போக்கில் இறப்பொடு சாவும் ஆமே
**205

#20
இலாங்கலியே செங்காந்தள் இனிய தெங்கொடு கலப்பை
**206

#21
இகுத்தலே செகுத்தல் வீழ்த்தல் இளைத்தலோடு ஆவிதீர்த்தல்
**207

#22
இல் என்பது இல்லையென்றல் இராசி சாவிடம் வீடு இல் ஆம்
**208

#23
இரத்தம் என்பதுவே செம்மை எருவை என்று இருபேர் ஆமே
**209

#24
இராசி என்பதுவே ஓரை ஏத்திய கூட்டம் முப்பேர்
**210

#25
இபம் என்ப மரத்தின்கொம்பும் எறும்பியும் இருபேர் ஆமே
**211

#26
இராசியம் என்ப யோனி எண்ணிய மறைவும் ஆமே
**212

#27
இகல் என்ப வலி பகைப் பேர் இரணமும் கூறலாமே
**213

#28
இடம் என்ப வயினே செல்வம் இடம் புறம் அகலமும் பேர்
**214

#29
இடக்கரே மறைத்தவார்த்தை கும்பமும் என்னலாமே
**215

#30
இதழ் பனையேடு பூவின்இதழ் உதடுடன் இ முப்பேர்
**216

#31
இயம் என்ப பறையும் பேச்சும் இட்டும் முப்பேர் என்றாமே
**217

#32
இருசு பண்டியுள் இரும்பும் செவ்வையும் இருபேர் ஆமே
**218

#33
இலங்கை ஆற்றிடைக்குறைப் பேர் இராவணனூரும் ஆமே
**219

#34
இருபிறப்பு என்ப புள்ளுமே முதல்சாதியும் பேர்
**220

#35
இவர்தலே எழுச்சி ஆசை ஏறுதல் சேறல் மேவல்
**221

#36
இரும் எனல் என்ப தோசை இளமை என்று இருபேர் ஆமே 
**222

#37
இவறல் என்பது மறப்பும் இச்சையும் இருபேர் ஆமே
**223

#38
இறத்தல் என்பது நடத்தல் இறப்பொடு மிகுதியும் பேர்
**224

#39
இளமை என்பதுவே காமம் எய்திய தண்மையும் பேர்
**225

#40
இறுத்தல் என்பதுவே தங்கல் இயம்புதல் ஒடித்தல் முப்பேர்
**226

#41
இரதியே மதனன்தேவி இச்சை பித்தளை பெண்யானை
**227

#42
இறும்பூது என்பது வியப்பும் எய்திய மலையும் தூறும்
**228

#43
இக்கு என்ப கள்ளின்பேரே இனிய நல் கரும்பும் ஆமே
**229

#44
இளையும் நல் இளமை வேலி தலைக் காவற்காடும் என்ப

@14 ஈ
**230

#1
ஈழம் என்பது ஓர் தேசம் இரணிய கள்ளு கள்ளி
**231

#2
ஈசை என்பது செம்பொன்னும் இண்டையும்
**232

#3
ஈடு என்ப குழைவே ஒப்பே வலியொடு பெருமை என்ப
**233

#4
ஈமம் என்பது மயானம் எரியிடுகலமே காட்டம்
**234

#5
ஈண்டு என்ப எனும் சொல் இவ்விடம் சடுதி முப்பேர்
**235

#6
ஈனம் என்பதுவே சிங்கல் இழிவு என்றும் உரைக்கலாமே
**236

#7
ஈரம் என்பது பகுத்தல் எய்திய குளிர்ச்சி அன்பு ஆம்

@15 உ
**237

#1
உடு விண்மீன் கிடங்கு நாவாயோட்டும்கோல் அம்பில் ஈர்க்கு ஆம்
**238

#2
உத்தியே திருவுறுப்போடு உரைபடப் பொறி சுணங்கு ஆம்
**239

#3
உத்தரம் என்ப தேமலொடு மறுமொழி வடக்கு ஆம்
**240

#4
உலவையே தழை மரக்கொம்பு உயிர்ப்பொடு விலங்கின்கோடு ஆம்
**241

#5
உளி என்ப கணிச்சியின்பேர் இடம் என்றும் உரைக்கலாமே
**242

#6
உந்தி தேருருளே ஆறே உவரி நீர்ச்சுழியே கொப்பூழ்
**243

#7
உப்பு மெல்லியலார்ஆடல் உவர்க் கடல் இனிமை நாற்பேர்
**244

#8
உறை என்ப மருந்து நீளம் உவர்நீர் பால்பிரை இடைச்சொல்
சிறுதுளி உள்ளி காரம் தீனி வெண்கலம் ஈரைந்தாம்
**245

#9
உலகு என்ப சனம் உயர்ந்தோர் உயர்குணம் திசை விண் பூமி
**246

#10
உலக்கையே ஓணநாளும் உரோங்கலும் ஆகும் என்ப
**247

#11
உறுவன் என்பது மாசேனனுடன் முனிதானும் ஆமே
**248

#12
உறையுள் என்பதுவே நாடும் ஊரொடு மனையும் ஆமே
**249

#13
உயவையே கானையாறும் உற்ற காக்கணமே முல்லை
**250

#14
உழை என்பது ஏழிசைக்குளொன்று மான் இடம் முப்பேரே
**251

#15
உம்பல் என்பதுவே யானையுடன் உயர்குலம் இரண்டாம்
**252

#16
உவா என்பது இளையோன் வேழம் உததி பூரணை ஆம் நாற்பேர்
**253

#17
உண்டையே திரளை ஆகும் உறு படையுறுப்பும் அப்பேர்
**254

#18
உளை பரி மீது கட்டும் மயிர் புறமயிரும் ஓதும்
**255

#19
உடை என்ப குடைவேல் செல்வம் உடுக்கும் நல் ஆடை முப்பேர்
**256

#20
உரை என்ப பொன்னும் தேய்வும் ஓதிய மொழியும் ஆமே
**257

#21
உவளகம் என்ப வாவி ஒருபக்கம் மதிலூர் காவல்
**258

#22
உணர்வு என்ப தெளிவே மற்றை ஒழிதலே அறிவும் ஆகும்
**259

#23
உயிர் என்ப சீவன் பேர் ஆம் ஊதையும் கூறலாமே
**260

#24
உருத்தல் என்பதுவே தோற்றம் ஓதிய கோபமும் பேர்
**261

#25
உறழ்வு என்ப புணர்வே மற்றை உவமையும் இடையீடும் பேர்
**262

#26
உக்கமே ஆலவட்டம் உறும் இடை பக்கப்பேரும்
**263

#27
உம்பரே தேவராரும் உயர்நிலமுடன் மேலும் பேர்
**264

#28
உரம் என்ப வலியே ஞானம் ஊக்கமே மார்பு நாற்பேர்
**265

#29
உரு என்ப நிறமே அட்டை ஓதிய வடிவும் ஆமே
**266

#30
உபம் என்ப மகிழ்ச்சியின்பேர் உயரமும் ஓதலாமே
**267

#31
உறவி என்பதுவே நீரூற்று உலைக்களம் எறும்பு சீவன்
**268

#32
உறுப்பு என்பது அவையவப்பேர் உடல் என்றும் உரைக்கலாமே
**269

#33
உவணமே கழுகு சேனம் உயர்ச்சியும் கருடனும் பேர்
**270

#34
உடல் என்ப பொன்னின்பேர் ஆம் உடம்பு என்றும் உரைக்கலாமே
**271

#35
உள்ளல் என்பதுவே நெஞ்சு ஆம் உன்னுதல் என்றும் ஆமே
**272

#36
ஊர்தலே வருடல் ஆகும் உதறலும் கூறலாமே
**273

#37
உப்பு என்ப வலியின்பேர் ஆம் உற்சாகம்தானும் ஆமே
**274

#38
உள்ளம் என்பது முயற்சியுடன் நெஞ்சும் ஆகும் என்ப
**275

#39
உறுகண் என்பது நோய் துன்பம் உறும் மிடி பயம் நாற்பேரே
**276

#40
உஞற்று என்ப மனவெழுச்சியுடன் இழுக்கே தாளாண்மை
**277

#41
உறுதி என்பதுவே நன்மை ஓதிய கல்வியும் பேர்
**278

#42
உழிஞைதான் எயில்வளைத்தலொடு சிறுபூளையும் பேர்

@16 ஊ
**279

#1
ஊகம் என்பது சந்தேகத்தொடு கருங்குரங்கும் ஆமே
**280

#2
ஊழ் என்ப முறையே வெய்யில் உறுபகை முப்பேர் ஆமே
**281

#3
ஊக்கமே வலி உற்சாகம் உள்ளத்தின்மிகுதி உண்மை
**282

#4
ஊதியமே இலாபம் உற்றறி கல்வியும் பேர்
**283

#5
ஊழ்த்தல் என்பது நினைத்தல் உறு பதனழிவு செவ்வி
**284

#6
ஊசி என்பதுவே சூசியுடன் எழுத்தாணியும் பேர்
**285

#7
ஊற்று என்பது ஊன்றுகோலும் உறவியும் இருபேர் ஆமே
**286

#8
ஊறு என்பது இளமை தீண்டல் உறு கொலை இடையூறும் பேர்
**287

#9
ஊர்தியே சிவிகை பண்டி உம்பலே பரி தேர் மானம்

@17 எ
**288

#1
எச்சமே குறைவு யாகம் எய்திய முப்பேர் ஆமே
**289

#2
என்றூழ் என்பது வெயில் பேரே சூரியோனும் ஆமே
**290

#3
எல் என்பது ஒளி இகழ்ச்சி இரவியும் இரவும் ஆமே
**291

#4
எலி என்ப பூரநாளும் இயம்பிய கருப்பையும் பேர்
**292

#5
எருவையே கொறுக்கை கோரை இரத்தமே கழுகு செம்பு ஆம்
**293

#6
எறுழ் என்ப வலியின்பேரும் ஏந்திய தண்டும் ஆமே
**294

#7
எகினமே புளிமா ஞாளி கவரிமா நீர்நாய் அன்னம்
**295

#8
எஃகு என்பது உருக்கே கூர்மை இலகிய வேலும் ஆமே
**296

#9
எற்று என்பது இரக்கம் ஒத்தல் எற்றல் எத்தன்மைத்தென்றல்
**297

#10
எல்லையே அளவை ஆகும் இரவியும் இயம்பலாமே
**298

#11
எண் என்பதே விசாரம் எளிமை சோதிடம் இலக்கம்

@18 ஏ
**299

#1
ஏல்வை என்பதுவே காலம் ஏரியும் இயம்பலாமே
**300

#2
ஏமமே சேமம் காவல் இன்பம் பொன் இரவே மையல்
**301

#3
ஏறு என்ப முதல்நாள் வானின் இடி எருது இடபம் நாற்பேர்
**302

#4
ஏனாதி மஞ்சிகன் தந்திரியும் மந்திரியும் என்ப
**303

#5
ஏந்தல் என்பதுவே மேடு இறைவனும் பெருமையும் பேர்
**304

#6
ஏதம் என்பதுவே குற்றம் எய்திய துன்பமும் பேர்
**305

#7
ஏணியே உலகோடு எல்லை இறைவையாம் என்னும் சொல்லும்
**306

#8
ஏதி என்பதுவே ஈர்வாள் என்பர் ஆயுதமும் ஆமே
**307

#9
ஏங்கல் என்பதுவே ஓசை இரங்குதல் இருபேர் ஆமே
**308

#10
ஏற்றலே கோடல் என்ப எதிர்ந்துபோர்செய்தலும் பேர்
**309

#11
ஏர் என்ப உழுபெற்றப்பேர் எழில் என்றும் இயம்பலாமே
**310

#12
ஏனையே ஒழிவு மற்ற இடைச்சொல்லும் அடைத்தபேரே
**311

#13
ஏவல் என்பது வியங்கோள் எய்திய வறுமையும் பேர்
**312

#14
ஏலம் என்பது மயிர்ச்சாந்து இயம்பிய துடியும் ஆமே

@19 ஐ
**313

#1
ஐயை அம்பிகை தவப்பெண் மகள் காளி துர்க்கை ஆசாள்
**314

#2
ஐ என்ப கோழை சாமி அழகு இடைச்சொல் ஆசான் மன்
**315

#3
ஐயனே மூத்தோன் சாத்தன் அப்பன் ஆசானும் ஆமே
**316

#4
ஐயமே பிச்சை ஏற்கும் ஓடு அனுமானம் வெண்ணெய்
**317

#5
ஐயை தே பரையின்பேரே ஆக்கும் நோய் என்றும் கூறும்

@110 ஒ
**318

#1
ஒளி இருசுடரே தீயே ஒளிப்பிடம் புகழும் ஆமே
**319

#2
ஒலி என்பது இடியே காற்றே ஓசை என்றாகும் முப்பேர்
**320

#3
ஒழுக்கமே வழி ஆசாரம் உயர்குலம் முப்பேர் ஆமே
**321

#4
ஒலியலே ஆறும் தோலும் உடுத்திய ஆடை மாலை
**322

#5
ஒளிவட்டம்தான் கண்ணாடி சக்கரம் இருபேர் ஓதும்
**323

#6
ஒண்மை என்பதுவே நன்மை ஒழுங்கு அறி வழக்கம் மிக்காம்
**324

#7
ஒதுக்கமே நடையின்பேரும் ஒன்றிய மறைவும் ஆமே
**325

#8
ஒட்டு என்ப படைவகுப்பு ஆம் ஒன்றுதல் என்றும் ஆமே
**326

#9
ஒல்லை என்பதுவே தொல்லை கடுப்பு என்றும் உரைக்கலாமே

@111 ஓ
**327

#1
ஓணம் என்பதுவே யாறும் உற்ற மாயோன்நாளும் பேர்
**328

#2
ஓரையே மாதர்கூட்டத்தொடு விளையாட்டு இராசி
**329

#3
ஓடை நீர்நிலை கிடங்கே ஒரு கொடி பட்டம் ஆமே
**330

#4
ஓங்கல் என்பது விலங்கல் உயரமே மூங்கில் ஓடம்
**331

#5
ஓதை என்பது மதில் பேர் உற்ற பேரொலியும் ஆமே
**332

#6
ஓரியே முசுவின்பேர் ஆண்மயிர் முதுநரி ஓர் வள்ளல்
**333

#7
ஓட்டம் என்பதுவே தோல்வி ஓடல் மேலுதடும் ஆமே
**334

#8
ஓதனம் என்ப சோறும் உணவு என்றும் உரைக்கலாமே
**335

#9
ஓ என்ப கலிங்குதன்னில் உறு கத இரக்கம் நீக்கம்
**336

#10
ஓடலே அல்ல என்றல் ஆம் எனல் ஓடல் முப்பேர்
**337

#11
ஓதி பெண்மயிரே பூனை ஓந்தி மெய்ஞ்ஞானம் வெற்பு ஆம்
**338

#12
ஓதிமம் அன்னம் வெற்போடு உலவிய கவரிமான் ஆம்
**339

#13
ஓளியே யானைக்கூடம் ஒழுங்கு என்றும் உரைக்கலாமே
&2 ககர வருக்கம்

@2 ககர வருக்கம்

@21 க
**340

#1
கலை மதிப் பங்கு தூசு கல்வி நூல் இரலை காஞ்சி 
மலி காலநுட்பம் சோறு ஆம் மகரமீன் முசு ஈரைந்தாம்
**341

#2
கனலி என்பது நெருப்புக் கதிரவன் பன்றி முப்பேர்
**342

#3
கரடம் என்பது மதம் பாய் சுவடும் காக்கையும் இரண்டாம்
**343

#4
கரம் என்ப கிரணம் செங்கை கழுதை நஞ்சு இறுத்தல் ஐம்பேர்
**344

#5
கவி என்ப புலவன் வெள்ளி கவிதை வானம் இ நாற்பேர்
**345

#6
கஞ்சனமே கண்ணாடி கரிக்குருவிக்கும் பேர் ஆம்
**346

#7
கலப்பையே நாஞ்சிலோடு கலனை இப்பொருள் இரண்டாம்
**347

#8
கவை என்ப காடே எள்ளின்காய் கவர் வழியே ஆயில்
**348

#9
கணை என்ப திரட்சி அம்பு கருதிய பூரநாள் ஆம்
**349

#10
களிறு என்ப தத்தநாளே கறையடி சுறவு பன்றி
**350

#11
கள்வனே முசு நண்டு யானை கருநிறத்தவனே சோரன்
**351

#12
கள் என்ப மதுவும் தேனும் களவுடன் முப்பேர் ஆமே
**352

#13
கலி என்ப புணரி ஓசை கடையுகம் வலி இ நாற்பேர்
**353

#14
கணமவை நோய் திரட்சி காலநுட்பம் பேய் வட்டம்
**354

#15
கன்னல் சர்க்கரை கரும்பு காகம் நாழிகையே வட்டில்
**355

#16
கன்னி ஆறு இளமை ஓரை கற்றாழை அழிவிலாமை
**356

#17
கடிகை நாழிகையே துண்டம் கதவிடுதாழ் இ முப்பேர்
**357

#18
கடி என்ப சிறப்புக் கூர்மை காப்பு அச்சம் புதுமை காலம்
முடுகல் பேர் விளக்கம் ஐயம் முருகொடு வரைவு ஈறாமே
**358

#19
கம் என்ப தலை வான் ஆவி ககனம் நீர் விதி வெளுப்பு ஆம்
**359

#20
கயம் என்ப குளமே ஆழம் களிறு கள் பெருமை தேய்வு ஆம்
**360

#21
கவந்தம் என்பது நீர் சென்னி கழி உடற்குறை இரண்டாம்
**361

#22
கனம் என்ப புயலே பாரம் காத்திரம்தானும் ஆமே
**362

#23
கரகமே ஆலங்கட்டி கமண்டலம் துளி நீர் கங்கை
**363

#24
கந்தரம் என்ப மேகம் கழுத்து நீள் மலைமுழைப் பேர்
**364

#25
ககனம் என்பது விசும்பு காடும் சேனையும் ஆம் முப்பேர்
**365

#26
கழை என்ப புணர்தம் மூங்கில் கரும்பு என விரும்பும் முப்பேர்
**366

#27
கமலம் என்பதுவே தண்ணீர் கஞ்சமும் கூறலாமே
**367

#28
கயினியே அத்தநாளும் கைம்மையும் இருபேர் காட்டும்
**368

#29
கடம் என்ப நிதியே யானை கதுப்பு அருநெறி உடம்பு
குடம் பதம் குஞ்சரத்தின்குழாம் கயிறு அடவி ஒன்பான்
**369

#30
கதம்பம் என்பது சவைப் பேர் கடம்பு என்றும் கூறலாமே
**370

#31
கவலை செந்தினையே வல்லி கவர்வழி துன்பம் நாற்பேர்
**371

#32
கடகமே யானைக்கூட்டம் கைவளை மதிலே வட்டம்
**372

#33
கட்சி என்பதுவே கூடு காடும் தூங்கிடமும் ஆமே
**373

#34
கண்டகம் முள்ளும் வாளும் கானமும் சரிகையும் பேர்
**374

#35
கங்கு என்ப வரம்பின்பக்கம் கருத்தினைதானும் ஆமே
**375

#36
களம் அமர்க்களமே கண்டம் களா இடம் கறுப்பே இல்லாள்
**376

#37
கடை என்ப முடிவும் கூலம் கதவு இடம் கீழ் ஐம்பேரே
**377

#38
கறை என்பது உரல் இரத்தம் கறுப்பு இறையிறுப்பு இ நாற்பேர்
**378

#39
கண்டமே கவசம் வெல்லம் கழுத்திடு நிரை வாள் துண்டம்
**379

#40
கதுப்பு என்பது ஆண்மயிர்ப் பேர் கவுளும் பெண்மயிரும் ஆமே
**380

#41
கந்து பண்டியுள் இரும்பும் கம்பமும் யாக்கைமூட்டும்
**381

#42
கடிப்பமே கலன்பெய் செப்பும் காதணி இருபேர் ஆமே
**382

#43
கன்று என்ப விலங்கின்பிள்ளை கைவளை மரக்கன்று ஆமே
**383

#44
கலாபமே பீலியோடும் கலாம் மணிவடம் மயூரம்
**384

#45
கரணம் என்பது மெய்க்கூத்து கலவியே கணிதம் புத்தி
**385

#46
கல் என்பது வலம் வெற்புக் கம்பலை முப்பேர் ஆமே
**386

#47
கவிகை என்பது கொடுத்தல் கவித்திடு குடையும் ஆமே
**387

#48
கணிச்சியே அறிகை தோட்டி கையுளி மழு நாற்பேரே
**388

#49
கதை தண்டாயுதமே வார்த்தை காரணம்சொலல் இ முப்பேர்
**389

#50
கச்சம் ஆனைக்கழுத்தில் கயிறு அளவொடும் மரக்கால்
**390

#51
கதவு என்ப கபாடத்தின்பேர் காவலும் உரைக்கலாமே
**391

#52
கம்பம் என்பதுவே தம்பம் கருதிய நடுக்கமும் பேர்
**392

#53
கறுப்பு என்ப சினக்குறிப்பும் கருமையும் சினமும் ஆமே
**393

#54
கம்பலை என்பது அச்சம் கம்பிதம் ஒலியே துன்பம்
**394

#55
கந்தம் ஐம்புலனே நாற்றம் கழுத்தடி கிழங்கு நாற்பேர்
**395

#56
கறங்கல் என்பதுவே சுற்றல் கருதிய ஒலியும் ஆமே
**396

#57
கஞறலே சிறுமையின்பேர் பொலிவு என்றும் கருதலாமே
**397

#58
கருணி என்பது பெண்யானை களிறு என்றும் உரைக்கலாமே
**398

#59
கடவுள் என்பதுவே நன்மை கருதிய முனியே தெய்வம்
**399

#60
கணக்கு என்பது இலக்கம் என்று கருதுவர் எழுத்தும் ஆமே
**400

#61
கதலியே வாழைத்தாறு காற்றாடி துவசம் நாற்பேர்
**401

#62
களேபரம் பிணம் எலும்பு காத்திரம் முப்பேர் ஆமே
**402

#63
கச்சை என்பது தழும்பு கயிறொடு கவசம் முப்பேர்
**403

#64
கயில் பிடர்த்தலையே பூணின்கடைப்புணர்வு இருபேர் ஆமே
**404

#65
கஞ்சமே தாளம் குல்லை கமலம் வெண்கலமே அப்பம்
**405

#66
கலிங்கமே வானம்பாடி காழகம் ஒரு பாடைப் பேர்
**406

#67
கந்தருவம்தானே நல்லிசையோடு கற்கியும் பேர்
**407

#68
ககம் என்ப பறவை ஓதி கட்டிய பகழியும் பேர்
**408

#69
கவடு என்ப யானை கட்டும் கயிறுடன் கப்பும் ஆமே
**409

#70
கருமையே பெருமை என்பர் கறுப்பொடு வலியும் ஆமே
**410

#71
களங்கம் என்பதுவே குற்றம் கறை என்றும் கருதலாமே
**411

#72
கரேணுவே பிடியானைப் பேர் கட களிறு என்றுமாமே
**412

#73
கனைத்தலே ஒலித்தலோடு கருதிய திரளிருள் பேர்
**413

#74
கடைப்பிடி மறைப்பிலாமை கருதிய தேற்றம் ஆமே
**414

#75
கட்டளை நிறைதல் ஒப்பே இட்டிகை இயற்றல் ஆணி
**415

#76
கண்டல் என்பது நீர்முள்ளி கைதையும் இருபேர் ஆமே
**416

#77
கரைதல் என்பது விளித்தல் கனைத்தலே அழைத்தல் முப்பேர்
**417

#78
கதழ்வு என்ப சிறப்பினோடு கடுகலும் இருபேர் ஆமே
**418

#79
களி என்ப குழம்பினோடு களிப்பு என்றும் கருதலாமே
**419

#80
கத்திகை தொடைவிகற்பம் துவசமே கமழ் வாசந்தி
**420

#81
கந்துகம் மென்பந்து என்றும் கருதுவர் குதிரைக்கும் பேர்
**421

#82
கப்பணம் இரும்பில் செய்த நெருஞ்சிமுள் கைவேல் ஆமே
**422

#83
கலாம் என்ப கொடுமையோடு காட்டிய சினமும் ஆமே
**423

#84
கரி என்பது இருந்தை சான்று களிறு இவை முப்பேர் ஆமே
**424

#85
கரீரம் என்பதுவே யானை களிற்றின்பல்லடி அகத்தி
**425

#86
கனவு எனும் பெயரே மையல் கண்படை இருபேர் ஆமே
**426

#87
கட்டல் என்பது விளித்தல் களைதலோடே தடுத்தல்
**427

#88
கந்தன் என்பதுவே புத்தன் கரிமுகன்தம்பிக்கும் பேர்
**428

#89
களரியே கருமம்செய்யுமிடம் பொருகளமே காடு ஆம்
**429

#90
கற்பமே பதுமன் தேவர் காலம் கற்பகம் சுவர்க்கம்
**430

#91
கடுத்தல் என்பதுவே ஒப்புக் கருதிய வேகம் ஐயம்
**431

#92
கதவம் என்பதுவே காத்தல் காவலே கதவு முப்பேர்
**432

#93
கரியவன் என்ப மால் ஆகண்டலன் சனி முப்பேரே
**433

#94
கரில் என்ப கொடுமை குற்றம் காழ்த்தலும் கருதும் முப்பேர்
**434

#95
கலுழியே கான்யாறு என்பர் கலங்கியநீரும் ஆமே
**435

#96
கவனமே கலக்கம் காடு குதிரையின்கதி முப்பேரே
**436

#97
கழிதல் என்பதுவே சாதல் கடத்தலே மிகுதி முப்பேர்
**437

#98
கழுமலே மயக்கம் பற்று ஆம் கருதிய நிறைவும் ஆமே
**438

#99
கழல் கழங்கொடு செருப்புக் காலணி காலும் நாற்பேர்
**439

#100
கயம் என்ப பெருமைதானே கருதிய மென்மையும் பேர்
**440

#101
களவு என்ப களாமரப்பேர் கரவு என்றும் உரைக்கலாமே
**441

#102
களபமே யானைக்கன்று கமழ் சாந்து கலவை முப்பேர்
**442

#103
கம்புளே சம்பங்கோழி கம்பொடு வானம்பாடி
**443

#104
கண் என்ப விழியே மூங்கில் கணுவுடன் இடமும் ஆமே
**444

#105
கருவி என்பதுவே ஈட்டம் கவசமே தொடர்பு கச்சை
இரை முகில் கலணை யாழ் பல்லியம் துணைக்காரணங்கள்
புரி பலவினைப் பேர் ஒன்று பொருபடைக்கலம் பன்னொன்று ஆம்
**445

#106
கம்பு என்ப சங்கினோடு கையுறு கோலும் புல்லும்
**446

#107
கடு விடம் முள்ளுத்தானே அரிதகி கசப்பு நாற்பேர்
**447

#108
கழங்கு என்ப வேலனாடல் கழற்கொடி இருபேர் ஆமே
**448

#109
கலம் என்ப யாழ் முனொரென(?) கட்டல் உண்கலம் மட்பானை
**449

#110
கவ்வை என்பது பழிச்சொல் கவலை கள் ஓசை துன்பம்
**450

#111
கரை என்ப முடிவின்பேர் ஆம் கருது நீர்த்துறையும் ஆமே
**451

#112
கழுது என்ப வண்டும் பேயும் காவலின் பரணும் ஆமே
**452

#113
கருவிளம் இயற்சீரின்பேர் காக்கணம்தானும் ஆமே
**453

#114
கழி என்ப மிகுதி காலைக்காலமே கழிமுகப்பேர்
**454

#115
களி என்ப வண்டு நா வேங்கையொடு மருதப்பூமி

@22 கா
**455

#1
காளமே கழுவும் நஞ்சும் கறுப்புக் காகளமும் நாற்பேர்
**456

#2
கார் நீர் வெள்ளாடு மேகம் கறுப்பு இருள் மாரிக்காலம்
**457

#3
காஞ்சியே மரம் ஓர் பண் மேகலை எதிரூன்றல் கச்சி
**458

#4
காரியே வள்ளல் ஐயன் கடுச் சனி வடுகன் நாற்பேர்
**459

#5
காலம் என்பது போது என்னக் கழறுவர் புலரியின்பேர்
**460

#6
கால் வலி மலர்க்காம்பு ஊதை கழல் வழி யமன் சேய் வாய்க்கால்
**461

#7
காண்டை என்பது தவத்தைக்கருதுவோர்இடம் கற்பாழி
**462

#8
காந்தாரம் என்பது ஓர் பண் கானகம் இருபேர் ஆமே
**463

#9
காமரம் அத்தநாளே கவியின்பண் அடுப்பு முப்பேர்
**464

#10
காளையே புருடன் பாலைக்குஅதிபன் புங்கவமும் முப்பேர்
**465

#11
காயம் மெய் விண் வெண்காயம் பெருங்காயம் கறி கரித்தல்
**466

#12
காத்திரம் கனம் சரீரம் களிற்றின்முன்காலே சீற்றம்
**467

#13
காசு என்ப கோழை குற்றம் கதிர்விடுமணி முப்பேரே 
**468

#14
காழ் என்ப மணியின்கோவை கற்பரல் சேகு வித்தம்
**469

#15
காவியே தாது கள் ஆம் கருங்குவளைக்கும் பேரே
**470

#16
காழகம் என்பது ஆடை கருநிறம் இருபேர் ஆமே
**471

#17
கானம் என்பது பாட்டின்பண் காடு என்றும் கருதலாமே
**472

#18
கானலே மலையின்சாரல் கடற்கரைச்சோலை பேய்த்தேர்
**473

#19
காகுளி தவிசே கண்டத்தெழும்ஒலி கவியின்பண் ஆம்
**474

#20
கா என்ப சோலையோடு காவடி துலையே காத்தல்
**475

#21
காசை என்பதுவே நாணல் காயாவும் ஆகும் என்ப
**476

#22
காணமே பரிஊண் செக்கு ஓர் காணம் பொற்காசு நாற்பேர்
**477

#23
காம்பு என்ப மூங்கில் பட்டுக் கருதிய மலர்த்தாள் முப்பேர்
**478

#24
காழியர் என்பது ஏகாலி அருப்பு விற்போர் ஆமே
**479

#25
கான் என்ப சாரியைப் பேர் காடு பூமணமும் ஆமே
**480

#26
காப்பு என்ப நீறும் தூசும் காவலும் கதவும் ஆமே
**481

#27
காதலே கோறல் என்று கருதுவர் ஆசையும் பேர்
**482

#28
காடு என்ப சுடலையின்பேர் கானகம்தானும் ஆமே
**483

#29
காலிலி என்ப காற்று கட்செவி அருணன் முப்பேர்
**484

#30
காண்டமே முடிவு கானம் கமண்டலம் கலன்பெய் செப்பு
நீண்டதாம் புடவை அம்பு நீர் இடுதிரை கோல் பத்தாம்
**485

#31
காமர் என்பது விருப்பம் கட்டழகு இருபேர் ஆமே
**486

#32
காதை என்பது மொழிப் பேர் கதை என்றும் கூறலாமே

@23 கி
**487

#1
கிழமையே பண்பு வாரம் கிளத்திடும் உரிமை முப்பேர்
**488

#2
கிடக்கையே பூமி என்ன கிளத்துவர் சயனமும் பேர்
**489

#3
கிளை என்ப மூங்கில் சுற்றம் கிளைத்தல் ஏழிசையிலோர்பண்
**490

#4
கிட்டியே தலையீற்றுஆ ஆம் கிளத்திய தாளமும் பேர்
**491

#5
கின்னரமே யாழ் ஆந்தை கேடுஇல் நீர்ப்புள்ளும் முப்பேர்
**492

#6
கிடுகு தேர் மரஅச்சும் பேர் கேடகம்தானும் ஆமே
**493

#7
கிளர் என்ப கோட்டுப் பூவில் கிடக்கும் தாது ஒளி இரண்டாம்
**494

#8
கிஞ்சுகம் செந்நிறப்பேர் கிளைத்தெழு முருக்கும் ஆமே
**495

#9
கிள்ளையே குதிரையின்பேர் கிளி என்றும் உரைக்கலாமே
**496

#10
கிழக்கு என்ப கீழ்த்திசைப் பேர் கீழ் என்றும் உரைக்கலாமே
**497

#11
கிருட்டினன் அருச்சுனன் பேர் கேசவன்தனக்கும் பேரே
**498

#12
கிருத்திமம் தோலே பண்ணல் கெட்ட பொய் விட்ட பூதம்
**499

#13
கிம்புரி யானைக் கொம்பில் கிடக்கும் பூண் முடி உறுப்பு ஆம்
**500

#14
கிருட்டி பேர் ஈற்றுஆ என்று கிளத்துவர் பன்றிக்கும் பேர்
**501

#15
கிழி என்று நிதிப்பொதிப் பேர் கீற்று என்றும் உரைக்கலாமே

@24 கீ
**502

#1
கீரம் என்பதுவே பாலும் கிள்ளையும் இருபேர் ஆமே
**503

#2
கீசகமே குரங்கும் கிளைத்தெழு மூங்கிலும் பேர்
**504

#3
கீலாலம் உதிரம் காடி கிளத்திய நீரும் ஆமே
**505

#4
கீதம் என்பது சுரும்பும் கேட்கும் நல் இசையும் ஆமே
**506

#5
கீழ் என்ப பகைமையோடு கிழக்கும் ஆம் இடமும் ஆமே

@25 கு
**507

#1
குருதியே உதிரம் செவ்வாய் கூறிய சிவப்பும் ஆமே
**508

#2
குலம் என்ப சாதி கோயில் கூட்டமே கடைநாள் இல்லம்
**509

#3
கும்பமே குடம் இராசி கும்பி மத்தகமும் ஆமே
**510

#4
கும்பியே நிரையத்தின்பேர் குஞ்சரம் சேறும் ஆமே
**511

#5
குடிலம் என்பது விசும்பு கோணலும் சடையும் ஆமே
**512

#6
குமுதமே அடுப்பு ஓர் திக்கின் குஞ்சரம் ஒலி வெள்ளாம்பல்
**513

#7
குண்டு என்பது ஆழம் தாழ்வு கோல் குதிரையில்ஆணும் பேர்
**514

#8
குவலையம் என்ப ஞாலம் குவளையும் கூறலாமே
**515

#9
குமரி கற்றாழை கன்னி கொற்றவை காளிக்கும் பேர்
**516

#10
குயில் என்ப மொழியே மேகம் கோகிலம் துளை நாற்பேரே 
**517

#11
குன்று வேதண்டத்தோடு குறைவறு சதையநாள் ஆம்
**518

#12
குரு நிறம் வியாழம் ஓர் நோய் குரவன் பாரம் பேர் ஐந்தாம்
**519

#13
குடி என்பது ஊரின்பேரும் குலமுடன் புருவம் முப்பேர்
**520

#14
குறிஞ்சியே மலையின்சார்பு ஆம் கூறும் ஓர் மரம் இசைப் பேர்
**521

#15
குவடு என்ப மலையின்பேர் ஆம் கொடுமுடி மரக்கொம்பின்பேர்
**522

#16
குறும்பொறை என்ப காடு ஆம் குறிஞ்சிஊர் என்றுமாமே
**523

#17
குடிஞை புள்பொதுவும் ஆறும் கூகையும் ஆகும் என்ப
**524

#18
குளம் என்ப கரும்பின்கட்டி குட்டமும் நுதலும் ஆமே
**525

#19
குருகு என்ப வெள்ளை மூலம் கொல்உலை நாரை கோழி
மருவிய வளையே பக்கி மாதவி இளமை ஒன்பான்
**526

#20
குழை என்ப தளிரே சேறு குண்டலம் முப்பேர் ஆமே
**527

#21
குடம் நகர்ப் பசு மால் கூத்துக் கும்பம் நல் கருப்பங்கட்டி
**528

#22
குணுங்கர் தோல்கருவிமாக்கள் குயிலுவர் இழிஞர் மூன்றாம்
**529

#23
குஞ்சமே அளக்கும் நாழி குறள் குன்றிக் குறளைச்சொல்லே
**530

#24
குரல் என்ப சிறகு ஐம்பால் நெற்குலையே தந்திரி இராகம்
**531

#25
குளிர் என்ப மழுவே ஞெண்டே குடமுழாக் கவண் ஓர் கத்தி
**532

#26
குரை என்பது இடைச்சொல்லோடு குதிரையும் ஒலியும் முப்பேர்
**533

#27
குலை என்ப காய்க்கொத்து அம்பின்குதையும் செய்கரையும் ஆமே
**534

#28
குய் என்ப கறிகரித்தல் குளிர் மணம் புகையும் ஆமே
**535

#29
குடம்பை என்பதுவே முட்டை கூடு என்றும் கூறலாமே
**536

#30
குழல் என்ப கழையே மாதர்கூந்தல் ஆண்மயிரும் முப்பேர்
**537

#31
குடுமி என்பதுவே உச்சி கூறும் ஆண்மயிரே வெற்றி
**538

#32
குயம் என்பது இளமையோடு கொங்கையும் அரிவாளும் பேர்
**539

#33
குட்டமே தொழுநோய் ஆழம் குளம் எனப் பெயர் முப்பாற்றே
**540

#34
குணம் என்ப கயிறும் பண்பும் கும்பமும் ஆக முப்பேர்
**541

#35
குல்லை என்பதுவே கஞ்சாக் கூறிய துளசி வெட்சி
**542

#36
குத்தி என்பது முடங்கல் கூறிய மண்ணும் ஆமே 
**543

#37
குபேரன் என்பது நிதிக்கோன் குளிர் மதி இருபேர் ஆமே
**544

#38
குறடு என்ப பலகையோடு கூறிய திண்ணையும் பேர்
**545

#39
குறள் என்ப கூளியோடு குஞ்சமும் குறுமையும் பேர்
**546

#40
குற்றல் என்பது பறித்தல் குற்றல் என்றும் உரைக்கலாமே
**547

#41
குந்தம் என்பதுவே கைவேல் குதிரை வைக்கோல் குருந்தம்
**548

#42
குயிறலே செறிதல் பண்ணல் குடைதல் கூவுதல் பேச்சு ஐம்பேர்
**549

#43
குவவு என்ப திரட்சி மற்றும் குவிதலே பெருமைக்கும் பேர்
**550

#44
குரங்கு என்ப வளைவு மந்தி கொடு விலங்கின்பொதுப் பேர்
**551

#45
குய்யம் என்பதுவே யோனி குத்திரம் மறைவு முப்பேர்
**552

#46
குரவன் என்பது பிதாவும் குருவொடு பிரமனும் பேர்
**553

#47
குடங்கர் என்பதுவே கும்பம் குடிசையும் ஆகும் என்ப

@26 கூ
**554

#1
கூற்று என்ப மொழியின்பேர் செங்கோல் கடவுளுக்கும் பேரே
**555

#2
கூளி என்பது பூதம் பேய் குடும்பமோடு எருது நாற்பேர்
**556

#3
கூடமே மறைதல் வஞ்சம் கொடுமுடி பொய் சம்மட்டி
**557

#4
கூலமே முசு உண்பண்டம் குளிர் புனல்கரை விலங்கின்
வாலுடன் பாகலே ஆவணம் பசு ஆ எண்பேர் ஆம்
**558

#5
கூந்தல் என்பதுவே மாதர்குழல் மயிலிறகு இரண்டாம்
**559

#6
கூவிரம் என்ப தேரின் கொடிஞ்சியும் தேரும் ஆமே
**560

#7
கூத்தன் என்பது நடிப்போன் கூறிய சீவனும் பேர்
**561

#8
கூழ் என்பது உணவும் பொன்னும் கூறிய பயிரும் ஆமே
**562

#9
கூர் என்ப மிகுதியோடு கூர்மையும் கூறலாமே
**563

#10
கூரலே மாதர்ஓதி குருவியின்இறகு அதாமே
**564

#11
கூழையே சிறகு மாதர்கூந்தல் வெம் படையுறுப்பு ஆம்

@27 கே
**565

#1
கேடகம் பரிசை வேறோர் கேடுஇல் ஊர் பலகை முப்பேர்
**566

#2
கேழ் என்ப நிறமே ஒப்பே கிளர் ஒளி முப்பேர் ஆமே
**567

#3
கேசம் பெண்மயிர் ஆண்பங்கி கிளபுறமயிர் முப்பேரே
**568

#4
கேசரம் மகிழ்மரப்பேர் கிளத்து பூந்தாதும் ஆமே
**569

#5
கேதுவே ஒரு செம் பாம்பும் கேதனம் இருபேர் ஆமே
**570

#6
கேவலம் தனிமை முத்தி கீழுறும் அவத்தை முப்பேர்
**571

#7
கேட்டை என்பதுவே ஓர் நாள் கெடல் அணங்கு என்றும் ஆமே
**572

#8
கேள்வி என்பதுவே கல்வி கேட்டு உணர் செவியும் ஆமே
**573

#9
கேகயம் அசுணமா ஏழ்கீதம் மஞ்ஞையும் ஆமே

@28 கை
**574

#1
கை என்ப சிறுமை தன் கை கரம் இடம் சார்பு ஒழுக்கு ஆம்
வெய்ய குற்றம் கைசெய்தல் மிகு படையுறுப்பு ஒன்பான்பேர்
**575

#2
கைத்தல் என்பது சினப்பேர் கைப்பு என்றும் உரைக்கலாமே
**576

#3
கைக்கிளை இசைவிகற்பாம் ஒருதலைக்காமமும் பேர்
**577

#4
கைத்து என்ப வெறுப்பினோடு காஞ்சனம்தானும் ஆமே

@29 கொ
**578

#1
கொடிறு என்ப பூசநாளும் கூறிய கவுளும் ஆமே
**579

#2
கொக்கு மாமரமே செந்நாய் குரண்டமே குதிரை மூலம்
**580

#3
கொன் பயனிலாமை காலம் கூறிய பெருமை அச்சம்
**581

#4
கொற்றியே கொற்றி துர்க்கை கோ இளங்கன்றும் ஆமே
**582

#5
கொண்மூ என்பது விண்ணேறு கூறுவர் மேகமும் பேர்
**583

#6
கொண்டல் என்பது கீழ்காற்று குமுறிய மேகமும் பேர்
**584

#7
கொந்தளம் மாதர்ஓதி குழல்கொத்துக் குருளை முப்பேர்
**585

#8
கொம்மையே இளமை வட்டம் கொங்கை கைகுவித்துக்கொட்டல்
**586

#9
கொண்டையே மயிர்முடிக்கும் இலந்தையின்கனிக்கும் கூற்றாம்
**587

#10
கொற்றமே அரசியல் பேர் கூறிய வெற்றியும் பேர்
**588

#11
கொல் என்பது அசைச்சொல் ஐயம் கொலை ஏவல் வருத்தமும் பேர்
**589

#12
கொடி என்பது ஒழுங்கு வல்லி கூறிய துவசம் காக்கை

@210 கோ
**590

#1
கோடை மேல்காற்றினோடு குதிரை வெண்காந்தள் வேனில்
**591

#2
கோள் என்ப வலியே கோறல் குணம் இடையூறு ஒன்பான்கோள்
**592

#3
கோலமே இரந்தை பன்றி பாக்கு நீர் கொழுந்து பீர்க்கு ஆம்
**593

#4
கோட்டம் கோண் படப்பை நாடு கோவில் அவ்வியம் மான்கொட்டில்
**594

#5
கோ என்ப நீர் விண் பார் கண் குலிசம் திக்கு இறை அம்பு ஆ ஆம்
**595

#6
கோத்திரம் புடவிதானே குலமொடு மலையும் ஆகும்
**596

#7
கோடு என்ப வயல் வரம்பு கொடுமுடி விலங்கின்கொம்
போடு நீர் மரக்கொம்பு ஊதுகொம்பொடு சங்கு ஏழாம்
**597

#8
கோசமே மதிலுறுப்பு ஆண்குறி முட்டை முறை பண்டாரம்
**598

#9
கோட்டியே சபையினோடு கோபுரவாயிலும் பேர்
**599

#10
கோதை முன்கைத்தோல்கட்டி குழல் தார் காற்று ஒழுங்கு சேரன்
**600

#11
கோளகை என்ப வட்டம் மண்டலி அரவும் கூறும்
**601

#12
கோண் என்ப வளைவினோடு கூனும் ஆம் கூறும் ஆமே
**602

#13
கோடகம் மடியுறுப்பும் குதிரையும் புதுமையும் பேர்
**603

#14
கோரம் என்பதுவே சோழன் குதிரைக்கும் கொடுமைக்கும் பேர்
**604

#15
கோசிகம் சாமவேதம் கூறு பட்டாடையும் பேர்
**605

#16
கோடிகமே பூத்தட்டும் கூறையும் இருபேர் ஆமே
**606

#17
கோடரம் என்ப சோலை குதிரை கொம்பொடு குரங்கு ஆம்
**607

#18
கோகுலம் என்ப பல்லி குயிலொடு குரங்கும் ஆமே
**608

#19
கோளி பூவாது காய்க்கும் மரமொடு கொழிஞ்சிக்கும் பேர்
**609

#20
கோழியே உறையூரின்பேர் குக்குடம்தானும் ஆமே
**610

#21
கோணம் என்பதுவே வாளும் குதிரையும் மூக்கும் ஆமே
**611

#22
கோடி என்பதுவே எண்ணும் கூறையும் புதுமையும் பேர்
**612

#23
கோணலே மாறுபாடும் கூனும் ஆம் வளைவும் ஆமே
**613

#24
கோல் என்பது அஞ்சனக்கோல் துகிலிகை துலாக்கோல்
ஞால மன்னவர் செங்கோல் யாழ்நரம்பு மத்திகை அம்பு ஏழாம்

@211 கௌ
**614

#1
கௌவை என்பதுவே துன்பம் கள்ளுடன் பழிச்சொல் முப்பேர்
**615

#2
கௌசிகம் விளக்குத்தண்டு ஓர் பண் பட்டுக் கடிய கோட்டான்
&3 சகர வருக்கம்

@3 சகர வருக்கம்

@31 ச
**616

#1
சம்புவே நரி மால் ஈசன் சதுமுகன் ஆவல் ஓர் புல்
**617

#2
சத்தி என்பது வேல் ஊற்றம் சாம்பவி கொடியே கான்றல்
**618

#3
சமம் என்ப நடுவினோடு தருமனும் கானும் ஆமே
**619

#4
சதி உரோகணி கற்பாட்டி தவிராத வட்டம் ஆமே
**620

#5
சந்தி ஓர் அந்தி மூங்கில் சதுக்கம் ஓர் இசையும் நாற்பேர்
**621

#6
சரி என்ப கைவளைக்கும் சாற்றிய வழிக்கும் ஆமே
**622

#7
சரணமே மறைபுகல் பேர் தாளுடன் ஊரும் ஆமே
**623

#8
சடை என்ப மரவேரின்பேர் சடிலமும் கூறலாமே
**624

#9
சவி மணிக்கோவை செவ்வி சாற்றிய வனப்புக் காந்தி
**625

#10
சரம் தனி மணி வடப்பேர் சாயம் நாணலும் பேர் ஆமே
**626

#11
சலாகை என்பது நாராசம் சவளம் நல் மணி காந்தக்கல்
**627

#12
சகுனி என்பது நிமித்தம்சாற்றுவோன் பறவைக்கும் பேர்
**628

#13
சாத்திரம் குடையே அன்னசாலை கைவிடாவேல் வேள்வி
**629

#14
சடம் என்ப வஞ்சகப்பேர் தனு என்றும் கூறலாமே
**630

#15
சகுந்தமே பறவை என்னச் சாற்றுவர் கழுகும் ஆமே
**631

#16
சகுனமே கிழங்கு புள்ளின்சாதியும் நிமித்தம் முப்பேர்
**632

#17
சடிலம் என்பது நெருக்கம் சடையொடு குதிரை முப்பேர்
**633

#18
சக்கிரி குயவன் செக்கான் தராபதி நெடுமால் பாம்பு
**634

#19
சசி எனும் பெயர் கற்பூரம் சந்திரன் இந்திராணி
**635

#20
சங்கமே கணைக்கால் ஓர் எண் சபை சங்கு புலவர் நெற்றி
**636

#21
சண்டன் என்பது பதங்கன் சமன் அலி முப்பேர் ஆமே
**637

#22
சக்கரம் என்ப தாழி தரணி ஓர் புள்ளு வட்டம்
மிக்க தேருருள் பிறப்பு வெற்பொடு பெருமை என்பர்
**638

#23
சத்தியம் என்ப மெய்யே சபதமும் கூறலாமே
**639

#24
சந்தமே நிறம் வனப்புச் சாற்றிய கவி சாந்தின்பேர்
**640

#25
சலம் என்ப வயிரம் தண்ணீர் சாற்றிய நடுக்கம் பொய் ஆம்
**641

#26
சயம் என்ப வெற்றியோடு சருக்கரைதானும் ஆமே
**642

#27
சரபம் எண்கால்புள் என்ப வரையாடுதானும் ஆமே
**643

#28
சராவமே அகல் சலாகை சாற்று சுத்திகையும் ஆமே
**644

#29
சமழ்த்தல் என்பது வருத்தம் சாற்றிய நாணமும் பேர்
**645

#30
சயிந்தவம் என்ப வாசி தலையும் இந்துப்பும் ஆமே
**646

#31
சதம் என்ப நூறு புள்ளின்சதனமும் இலையும் ஆமே

@32 சா
**647

#1
சான்றோன் என்பது பதங்கன் சால்புடையோனும் ஆமே
**648

#2
சாதகம் என்ப பூதம் சனனமே வானம்பாடி
**649

#3
சாமி என்பது வியாழம் தலைவன் ஆசான் பூபாலன்
**650

#4
சாமம் ஓர் வேதம் பச்சைதன்னுடன் இரவே யாமம்
**651

#5
சானுவே முழந்தாள் வெற்பின் சாரலும் இருபேர் ஆமே
**652

#6
சாரல் ஏமந்தம் யாழின்இசையொடு சயிலப்பக்கம்
**653

#7
சானகி என்ப மூங்கில் சனகன்தன்மகளும் ஆமே
**654

#8
சாம்பல் கூம்புதல் பழம் பூத்தன்னுடன் நீறும் ஆமே
**655

#9
சாலமே வலை சாலேகம் மராமரம் சபை மதில் பேர்
**656

#10
சாலேகம் பூ அரும்பு சாளரம் இருபேர் ஆமே
**657

#11
சாதியே பிரம்பு கள் ஓர் தருச் சிறுசண்பகப்பேர்
**658

#12
சாரணர் என்பது ஒற்றர் சமணமுனிவோரும் ஆமே
**659

#13
சாறு என்ப விழவும் கள்ளும் தருவுறு குலையும் முப்பேர்
**660

#14
சாலி என்பது நெற்கள்ளுச் சாற்று அருந்ததி முப்பேரே
**661

#15
சாரங்கம் என்ப மாயோன்தனுவொடு வில்பொதுப்பேர்
**662

#16
சாபம் என்பதுவே வில்லும் சபித்தலும் இருபேர் ஆமே
**663

#17
சாகம் சாகினி வெள்ளாடு தேக்கு எனும் தருவே தேனீ
**664

#18
சாகினி என்ப கீரை சகுடமும் கூறலாமே
**665

#19
சாரங்கம் என்ப வண்டு சாதகப்புள்ளும் ஆமே
**666

#20
சாரிகை என்ப சூறை சாற்றிய பூவை சுங்கம்
**667

#21
சாயல் என்பது மெய்ப்பாடு தரும் அழகுடனே மென்மை
**668

#22
சாகரம் என்ப நீண்ட சமுத்திரம் துயிலொழித்தல்
**669

#23
சால்பு என்ப மாட்சிமைப் பேர் சான்றாண்மைதானும் ஆமே
**670

#24
சாலையே குதிரைப்பந்தி அறப்புறம் தரு நிரைப் பேர்
**671

#25
சாந்தமே பொறுமையோடு சந்தனம்தானும் ஆமே
**672

#26
சாம்பு என்ப பொன்னின்பேரும் தட்டிய பறையும் ஆமே
**673

#27
சார்பு என்ப திடத்தினோடு சார்தலும் உரைக்கலாமே
**674

#28
சாத்தனே காரி புத்தன் சாதரூபிக்கும் பேரே
**675

#29
சாதம் என்பதுவே பூதம் சாற்றிய மெய்மையும் பேர்

@33 சி
**676

#1
சிவை என்ப மாவே கொல்லன்உலைமுகம் தேவி ஓரி
**677

#2
சிதம் விண்மீன் ஞானம் வெள்ளை செயமுறப்பட்டது ஆமே
**678

#3
சிந்து என்ப நதியே நீர் முச்சீர் கடல் குறள் ஓர் தேசம்
**679

#4
சிதர் என்ப துவலை வண்டே உறி சீலைத்துணி நாற்பேரே
**680

#5
சிமையமே மலையின்உச்சி செப்பிய கிரியும் ஆமே
**681

#6
சினை என்ப முட்டை பீளே செழு மரக்கொம்பும் முப்பேர்
**682

#7
சிலை என்ப வில்லும் கல்லும் செப்பிய ஒலியும் ஆமே
**683

#8
சிலீமுகம் அம்பு வண்டு திருந்திய முலைக்கண் முப்பேர்
**684

#9
சிமிலியே உறியினோடு சிள்வீடும் குடுமியும் பேர்
**685

#10
சிந்துரம் புளிமா தங்கம் செங்குடை திலதம் செம்மை
**686

#11
சிரகமே கரகம் ஆகும் சென்னியில்சூடும் அப்பேர்
**687

#12
சிதலை என்பதுவே நோயும் செல்லொடு துணியும் ஆமே
**688

#13
சிகண்டியே அலியும் பாலையாழும் சேர் மயிலும் ஆமே
**689

#14
சில்லியே வட்டம் கீரை தேருருள் சிள்வீடு என்ப
**690

#15
சிறை கரை பக்கம் புள்ளின்சிறகொடு காவலும் பேர்
**691

#16
சிவப்பு என்ப சினக்குறிப்பும் செம்மையும் சினமும் ஆமே
**692

#17
சில்லை என்பது பகன்றை சிள்வீடு தூர்த்தை முப்பேர்
**693

#18
சிகரி கோபுரமே வெற்புச் சீறெலி நாரை நாற்பேர்
**694

#19
சித்தம் என்பதுவே உள்ளத்திடம் என்றும் செப்பலாமே
**695

#20
சிற்பனும் ஆகும் என்ப
**696

#21
சிகி என்ப மஞ்ஞை தீ ஆம் சிலம்பொடு கேதுவும் பேர்
**697

#22
சித்திரம் என்ப காடு சிறந்த விம்மிதம் ஏரண்டம்
**698

#23
சித்திரபானு செந்தீ திவாகரன் ஆண்டு ஒன்றும் பேர்
**699

#24
சிலம்பு என்ப தோசை வெற்புச் சிறந்த நூபுரமும் அப்பேர்
**700

#25
சிகரமே மலையின்உச்சி திரை சென்னி திவலை வெற்பு ஆம்
**701

#26
சிகழிகை மயிர்முடிப் பேர் சிறந்த வாசிகையும் ஆமே
**702

#27
சிதடன் என்பதுவே மூடன் செப்பிய குருடனும் பேர்
**703

#28
சிரம் என்ப நெடுங்காலப்பேர் சென்னியும் அன்னதே ஆம்
**704

#29
சிவம் என்ப குறுணி முத்தி செப்பிய நன்மையும் பேர்
**705

#30
சித்து என்ப ஞானத்தின்பேர் செயம் என்றும் உரைக்கலாமே

@34 சீ
**706

#1
சீதம் என்பது நீர் மேகம் செப்பிய குளிரும் ஆமே
**707

#2
சீவன் என்பது வியாழம் சேரும் ஆருயிரும் ஆமே
**708

#3
சீருள் என்பதுவே ஆக்கம் செப்புடன் ஈயமும் பேர்
**709

#4
சீவனி என்பது ஆவி செவ்வழியாழே தண்ணீர்
**710

#5
சீர் செல்வம் தாளவொத்துச் சீர்த்தி காத்தண்டே பாரம்
**711

#6
சீப்பு என்ப கதவின்தாழும் சீவிடு கங்கமும் பேர்
**712

#7
சீகரம் கரகம் வீசும் கவரியும் திவலை முப்பேர்
**713

#8
சீலமே குணம் தண்டித்தல் திகழ் சரித்திரமும் முப்பேர்

@35 சு
**714

#1
சுந்தரி இந்திராணி துர்க்கை அம்பிகை மூஞ்சூறு ஆம்
**715

#2
சுக்கை என்பது விண்மீனும் தொடுத்த பூமாலையும் பேர்
**716

#3
சுசி என்ப கோடை தீயும் சுத்தமும் கூறலாமே
**717

#4
சுதை மகள் கறவாத்தேனும் சுண்ணச்சாந்து அமுது நாற்பேர்
**718

#5
சுடர் என்ப மதி நெருப்புச் சூரியன் விளக்கு நாற்பேர்
**719

#6
சுவவு என்ப புள்ளின்மூக்கும் சுவர்க்கமும் சுண்டனும் பேர்
**720

#7
சும்மை என்பதுவே நெற்போர் நாடு ஒலி சுமையும் சொல்லும்
**721

#8
சுவல் என்ப பிடரியோடு தோள்மேலும் மேடும் முப்பேர்
**722

#9
சுருங்கையே கரந்துபண்ணும் கற்புடை நுழைவாயில் பேர்
**723

#10
சுரியல் என்பதுவே ஆண்பால்மயிரும் பெண்மயிரும் சொல்லும்
**724

#11
சுரை என்ப மதுவினோடு நுழைவாயில் முலை முப்பேரே 
**725

#12
சுடிகையே மகுடம் உச்சி சுட்டியும் இட்ட பேர் ஆம்
**726

#13
சுரிகையே உடைவாள் என்னச் சொல்லுவர் கவசமும் பேர்
**727

#14
சுகம் என்ப கிளி ஆம் என்று சொல்லுவர் இன்பமும் பேர்
**728

#15
சுவேதம் என்பதுவே வெண்மை தோன்றிய வெயர்வும் ஆமே
**729

#16
சுருதி என்பது நால்வேதம் தோன்றிய ஒலியும் ஆமே
**730

#17
சுவாமி என்பது பொன் ஆசான் சூர்ப்பகையும் முப்பேரே
**731

#18
சுரம் என்ப வழி உடம்பில்சூடு அரும்நெறி கான் பாலை

@36 சூ
**732

#1
சூலியே சிவன் கருப்பம் துன்னு பெண் கள்ளி துர்க்கை
**733

#2
சூழியே சுனையும் வெய்ய தும்பியின் முகபடாமும்
**734

#3
சூரன் என்பது வெய்யோனும் சுணங்கனும் தீயும் ஆமே
**735

#4
சூதகமே ஆசூசம் தோகைமார் தோயாப் பூப்பு ஆம்
**736

#5
சூத்திரமே வெண்ணீறும் சொற்றிடும் அகவலும் பேர்
**737

#6
சூதனே தேர்ப்பாகன் பொய்சொல்லுவோன் இருபேர் ஆமே
**738

#7
சூழ்தல் என்பது விசாரம் சூழ்தலும் இடமும் ஆமே
**739

#8
சூதம் மாமரமே பாதரசம் என இருபேர் சொல்லும்
**740

#9
சூலமே கடைநாள் என்று சொல்வர் மூவிலை வேலும் பேர்

@37 செ
**741

#1
சென்னி என்பதுவே சோழன் சிரம் அசுபதி பாணன் பேர்
**742

#2
செவ்வி என்பதுவே காலம் செப்பிய பருவமும் பேர்
**743

#3
செல் என்பது இடியே மேகம் சிதலை ஏவுதல் இ நாற்பேர்
**744

#4
செந்துவே நிரையம் ஓரி சிவனோடு அணுவும் நாற்பேர்
**745

#5
செப்பமே நடுநிலைப் பேர் தெருவொடு நெஞ்சும் ஆமே
**746

#6
செம்புலம் என்ப பாலைநிலம் செருக்களம் இரண்டாம்
**747

#7
செய்யலே ஒழுக்கம் காவல் சேறொடு தொழிலும் ஆமே
**748

#8
செம்மலே பழம்பூ ஈசன் சினேந்திரன் சிறந்தோன் மைந்தன்
**749

#9
செழுமையே வளம் கொழுப்புச் சிறந்த மாட்சிமை வனப்பு ஆம்
**750

#10
செடி என்ப குற்றம் பாவம் செறிவுடன் ஒளியும் ஆமே
**751

#11
செத்து என்பது அசைச்சொல் ஐயம் சிந்தை ஒப்புறுப்புச் செம்மை
**752

#12
செட்டி என்பதுவே கந்தன் சிறந்திடு வணிகனும் பேர்
**753

#13
செச்சை என்பதுவே வெள்ளாட்டுஏறு செம் சாந்து முப்பேர்
**754

#14
செவி என்ப காதினோடு செப்பிய கேள்வியும் பேர்
**755

#15
செம்மை என்பது சிவப்பும் செவ்வையும் இருபேர் ஆமே
**756

#16
செப்பு என்ப மொழியினோடு செய் காண்டம் ஆகும் ஆமே
**757

#17
செருந்தி என்பது வாட்கோரை செப்பும் ஓர் மரம் பேர்
**758

#18
செயல் என்ப நல்லொழுக்கம் செய்தொழில் இருபேர் ஆமே
**759

#19
செயிர் என்ப குற்றத்தின்பேர் சினம் என்றும் உரைக்கலாமே

@38 சே
**760

#1
சேய் என்ப முருகன் பிள்ளை செம்மை தூரம் செவ்வாய் ஆம்
**761

#2
சேடி என்பதுவே பாங்கி சிறந்த விஞ்சையர்ஊர் ஆமே
**762

#3
சேக்கையே முலை விலங்கு துயிலிடம் சிறந்த பாயல்
**763

#4
சேடனே பாங்கன் இந்தச் செகம் தாங்கும் அனந்தனும் பேர்
**764

#5
சேமம் என்பதுவே இன்பம் செப்பிய பாவலும் பேர்
**765

#6
சேண் என்பது அகலம் நீளம் செப்பிடில் உயரம் முப்பேர்
**766

#7
சேடு என்ப பெருமை நன்மை திரட்சியே அழகு நாற்பேர்
**767

#8
சேதகம் என்ப சேறு செந்நிறம் இருபேர் ஆமே
**768

#9
சேவல் என்பது புள்ஆணும் சேறும் காவலும் முப்பேரே
**769

#10
சேவகம் வீரம் யானைதுயிலிடம் இருபேர் ஆமே
**770

#11
சேறு என்ப கும்பி சாரம் தித்திப்பு விழவு கள் ஆம்
**771

#12
சேதாரம் வெட்சி பொன்னின்தேய்மானம் தேமாவும் பேர்

@39 சை
**772

#1
சைவம் என்பது மாதேவன்சமயம் ஓர் புராணம் ஆமே

@310 சொ
**773

#1
சொல் என்ப புகழே வார்த்தை தோன்றிய செந்நெல் முப்பேர்
**774

#2
சொர்க்கம் என்பதுவே கொங்கை துறக்கமும் கூறலாமே

@311 சோ
**775

#1
சோனையே ஓணநாளும் சொரிவிடாமழையும் ஆமே
**776

#2
சோதி என்பதுவே ஈசன் சுடரவன் காந்தி ஓர் நாள்

@312 சௌ
**777

#1
சௌரியே திருமால் கன்னன் சனி யமன் இனைய நாற்பேர்
&4 ஞகர வருக்கம்

@4 ஞகர வருக்கம்

@41 ஞ
**778

#1
ஞமலியே மயிலும் கள்ளும் நாயும் என்று உரைக்கலாமே
**779

#2
ஞாளி என்பதுவே கள்ளும் நாயும் என்று இருபேர் ஆமே
**780

#3
ஞாட்பு என்ப பொரும்போர் கூட்டம் நவின்றிடு பாரம் முப்பேர்
**781

#4
ஞானமே அறிவும் கல்வி நல்ல தத்துவநூல் முப்பேர்
**782

#5
ஞாங்கர் வேல் பக்கம் முன்பு மேல் என நான்கும் ஆகும்

@42 ஞெ
**783

#1
ஞெள்ளலே பள்ளம் மேன்மை நீண்டவீதியும் முப்பேரே
**784

#2
ஞெரேல் என்ப விரைவாய் என்று நிகழ்த்துவர் ஒலியும் ஆமே
**785

#3
ஞெமிர்தலே பரத்தலோடு முறிதலும் நினைக்கலாமே
**786

#4
ஞெகிழியே சிலம்பின் நாமம் நெருப்புறு கொள்ளிக்கும் பேர்
**787

#5
ஞொள்கலே இளைத்தல் சோம்பு நோய் அச்சக்குறிப்பு அதாமே
&5 தகர வருக்கம்

@5 தகர வருக்கம்

@51 த
**788

#1
தரணி என்பது வெய்யோனும் தரையுடன் மலையும் ஆமே
**789

#2
தண்டு என்ப குழாயே வீணை தடி படை மிதுனராசி
**790

#3
தமம் என்ப இராகுவின்பேர் சாற்றிய இருளும் ஆமே
**791

#4
தழல் என்ப செந்தீயின்பேர் கிளிகடிகோலும் சார்வு ஆம்
**792

#5
தண்டு என்ப குடைக்கால் யானைசார்வழித் தடி தண்டித்தல்
**793

#6
தடம் என்ப கரையும் பொய்கை சாற்றிய பெருமை ஒப்பு ஆம்
**794

#7
தனஞ்செயன் என்ப வாயுத் தழல் அருச்சுனன் முப்பேர் ஆம்
**795

#8
தடி என்பது உலக்கை வில்லுத்தண்டு மின் தசை உடுப்பு ஆம்
**796

#9
தளிமமே அழகு மெத்தை சயனமும் கூறலாமே
**797

#10
தண்ணடை மருதத்துஊரும் சாற்றிய நாடும் ஆமே
**798

#11
தத்தை என்பதுவே கிள்ளை முன்பிறந்தாளும் ஆமே
**799

#12
தனு என்ப வில்லே நுட்பம் சடமொடு முப்பேர் ஆமே
**800

#13
தனம் என்ப முலை ஆன்கன்றே சாற்றும் உத்திரம் பொன் ஆமே 
**801

#14
தவிசு என்பது அடுக்கு மெத்தை இலகடம் முப்பேர் சாற்றும்
**802

#15
தளம் என்ப சேனை சாந்து தாழி பூவிதழ் நாற்பேரே
**803

#16
தண்ணம் ஓர் கட்பறைப் பேர் தறித்திடும் மழுவும் ஆமே
**804

#17
தளை என்ப சிலம்பும் காலில் தளையும் ஆண்மயிரும் ஆமே
**805

#18
தட்டை வேய் தினைத்தாள் கிள்ளைதனைக்கடிகோலே முண்டம்
**806

#19
தம்பமே பற்றுக்கோடு தாங்கிய கவசம் கம்பம்
**807

#20
தண்மை என்பது குளிர்ச்சி தாழ்வுடன் எளிமையும் பேர்
**808

#21
தகடு என்பது ஐம்மை என்று சாற்றுவர் இலையும் ஆமே
**809

#22
தருமர் ஆசான்தான் புத்தன் அருக்கனுக்கும் ஆமே
**810

#23
தட்டு என்ப பரிசை முட்டுத் தடுத்தல் தேர்நடுவே குற்றம்
**811

#24
தரா என்ப மதுகத்தோடு சங்கு என்றும் உரைக்கலாமே
**812

#25
தளி என்ப துளியே கோயில் சமர்த்தலம் முப்பேர் ஆமே
**813

#26
தகை என்பது அழகு பண்பு தயவொடு பெருமை நாற்பேர்
**814

#27
தபுதல் என்பதுவே கேடும் சாவும் என்று உரைக்கலாமே
**815

#28
தமிழ் என்பது இனிமை நீர்மை சாற்றிய கவியும் ஆமே
**816

#29
தன்னம் என்பதுவே அற்பம் தாவிய பசுவின்கன்று ஆம்
**817

#30
தபனன் என்பது மார்த்தாண்டன் சாதவேதாவும் ஆமே
**818

#31
தலம் என்ப நிலையினோடு தரணியும் இருபேர் ஆமே
**819

#32
தசும்பு என்ப குடமும் பொன்னும் சாற்றிய மிடாவும் ஆமே
**820

#33
தட்டல் என்பதுவே கிட்டல் தடுத்தல் ஒத்தறுத்தல் முப்பேர்
**821

#34
தலை என்ப சென்னி ஆதி தலைமை வானிடம் ஐம்பேரே
**822

#35
தவ என்ப மிகுதியோடு சாற்றிய குறைவும் ஆமே
**823

#36
தந்து என்ப நூலின்பேரும் சாற்றிய குறைவும் ஆமே
**824

#37
தகைமையே பெருமை சொக்கு சாற்றிய இயல்பும் ஆமே
**825

#38
தனி என்ப தொப்பின்மைப்பேர் தமி என்றும் உரைக்கலாமே

@52 தா
**826

#1
தாணுவே நிலையே ஈசன் சயிலம் தூண் குற்றி ஐம்பேர்
**827

#2
தாதியே பரணி என்னச் சாற்றுவர் அடிமையும் பேர்
**828

#3
தாலம் உண்கலமே நாவே தராதலம் பனையே நாற்பேர்
**829

#4
தாரையே மழை நேரோட்டம் தாரகை நயனம் கூர்மை
**830

#5
தாமம் என்பதுவே கொன்றை தந்தி ஊர் ஒளி ஒழுங்கு
பூ மணிக்கோவை மாலை பொருகளம் கயிறு பத்தாம்
**831

#6
தாரம் வல்லிசை நா வெள்ளி தலைவி யாழ்நரம்பிலொன்று ஆம்
**832

#7
தானையே புடவை சேனை சமர்புரி ஆயுதங்கள்
**833

#8
தார் கொடிப்படையே பூவே தாமம் கிண்கிணியின்கோவை
**834

#9
தாள் என்ப கால் முயற்சி சாத்திய கதவின்சீப்பு ஆம்
**835

#10
தாறு வில்குதையே எல்லை தாழ்மரக்குலை முட்கோல் ஆம்
**836

#11
தாது என்ப காவிக்கல்லும் தழுவு இரதாதிஏழும்
**837

#12
தாழை என்பது பூம் கேதகையொடு தெங்கும் ஆமே
**838

#13
தா என்ப பகை வருத்தம் தாண்டுதல் வலி கேடு ஐம்பேர்
**839

#14
தாம்பு என்ப கயிறுதானே தாமணிதனக்கும் ஆமே
**840

#15
தாபரம் என்ப வெற்பும் தருவொடு சடலமும் பேர்
**841

#16
தானமே மதம் நீராட்டுத் தருகொடை சுவர்க்கம் நாற்பேர்

@53 தி
**842 

#1
திகை என்று சுணங்கின்பேர் ஆம் திசை என்றும் உரைக்கலாமே
**843

#2
திங்களே மதி ஆம் வாரம் செப்பிய மாதமும் பேர்
**844

#3
திதி என்ப நிலைபெறுத்தல் பக்கமும் அப்பேர் ஆமே
**845

#4
திணை என்ப குலம் ஒழுக்கம் சேரும் ஐந்திணையும் ஆமே
**846

#5
திட்டையே உரலும் மேடும் திண்ணையும் ஆகும் என்ப
**847

#6
திகிரியே மூங்கில் வட்டம் தேருருள் ஆழி வெற்பு ஆம்
**848

#7
திரு என்ப கமலை செல்வம் சிறப்பு என முப்பேர் ஆமே
**849

#8
திளைத்தலே அனுபவித்தல் செறிதலும் நிறைதலும் பேர்

@54 தீ
**850

#1
தீ என்ப வன்னியின்பேர் தீமையும் ஆகும் என்ப
**851

#2
தீர்த்தம் என்பதுவே தோயம் திருவிழா இருபேர் ஆமே
**852

#3
தீர்த்தன் என்பதுவே மூர்த்தி தேசிகன் இருபேர் ஆமே

@55 து
**853

#1
துடி பறை காலநுட்பம் சொற்ற கூதாளம் ஏலம்
**854

#2
துணங்கு அறலே விழாவும் தோற்றிய இருளும் ஆமே
**855

#3
துத்தியே சுணங்கும் பாம்பின்சுடர்ப்பொறி புதல் என்று ஆமே 
**856

#4
துண்டமே வதனம் மூக்குத் துணியொடு சாரைப்பாம்பு
**857

#5
துருத்தி ஆற்றிடைக்குறைப் பேர் தோலும் ஆம் சொல்லுங்காலே
**858

#6
துகள் என்ப குற்றத்தோடு தூள் என்றும் உரைக்கலாமே
**859

#7
துவக்கு என்ப பிணக்கினோடு தோலும் என்று இருபேர் ஆமே
**860

#8
துத்தம் யாழிசையே பால் ஓர் மருந்தொடு வயிறும் சொல்லும்
**861

#9
துப்பு நெய் பகை அரக்குத் துகிர் ஊற்றம் அனுபவம் கள்
**862

#10
துரோணமே சிம்புள் காக்கை தும்பை வில்லொடு பதக்கு ஆம்
**863

#11
துணி என்ப சோதி நாளும் துண்டமும் கூறலாமே
**864

#12
தும்பி என்பதுவே யானை சுரும்பொடு சுரை கள் ஆமே
**865

#13
துளி என்ப பெண்ஆமைக்கும் சொரி மழைத்துளிக்கும் ஆமே
**866

#14
துஞ்சலே நிலைபேறு ஆகும் துயில் சோம்பு சாவும் ஆமே
**867

#15
துணை என்பது அளவும் ஒப்பும் சொல் இரண்டொடு சகாயம்
**868

#16
தும்பு என்ப சிம்புள் தோடு ஆம் சுற்றிய கயிறும் ஆமே
**869

#17
துவை என்பது இறைச்சி ஓசை துள்ளிய பிணருக்கும் பேர்
**870

#18
துனி என்ப புலவிநீட்டம் துன்பம் நோய் முப்பேர் ஆமே
**871

#19
துன்னல் என்பதுவே கூடல் துதைதலும் உரைக்கலாமே
**872

#20
துணங்கையே விழா ஓர் கூத்தும் ஒரு நாளும் சொல்லும் முப்பேர்
**873

#21
துளும்பலே திமிறல் என்னச் சொல்லுவர் அலைதலும் பேர்

@56 தூ
**874

#1
தூம்பு என்ப மரக்கால் மூங்கில் துளையொடு சலதாரைப் பேர்
**875

#2
தூசு என்பது அணிவகுப்பு தும்பியின் புரசை ஆடை
**876

#3
தூ என்ப தசை இறைச்சி தூய்மையே பற்றுக்கோடு ஆம்
**877

#4
தூரியம் என்பதுவே கொட்டும் துந்துமி எருது கூர் வேல்
சீரிய விடபத்தோடு சிறந்த வாச்சியங்கள் ஐம்பேர்
**878

#5
தூக்கு என்ப பாட்டும் கூத்தும் துலாமும் ஆராய்தலும் பேர்
**879

#6
தூங்கலே நிருத்தம் ஆனை துயில் சோம்பு தராசும் ஆமே

@57 தெ
**880

#1
தெய் என்ப கொலையினோடு தெய்வமும் கூறலாமே
**881

#2
தென் என்ப வனப்புக் கற்புத் தெற்கு இசை நாளிகேரம்
**882

#3
தெவ் என்ப பகையின்பேரே செரு என்றும் உரைக்கலாமே
**883

#4
தெவிட்டலே அடைத்தல் கான்றல் சிலம்புதல் நிறைதல் நாற்பேர்

@58 தே
**884

#1
தேள் என்ப விருச்சிகப்பேர் தெறுக்காலும் அனுடம் முப்பேர்
**885

#2
தேசிகன் வணிகன் தேசாந்திரியொடு குருவும் ஆமே
**886

#3
தேம் என்ப நாற்றம் திக்குத் தேன் இடம் இனிப்புத் தேசம்
**887

#4
தேசிகம் அழகு காந்தி செம்பொன் ஓர் கூத்தும் ஆமே
**888

#5
தேர்தல் என்பதுவே கொள்கை தேருதல் என்றும் ஆமே
**889

#6
தேன் என்ப மதுவும் கள்ளை தெண்டிய வண்டும் ஆமே

@59 தை
**890

#1
தைத்தல் என்பதுவே துன்னம் தகவலும் கூறலாமே
**891

#2
தையல் என்பது வனப்புச் சாற்றிய பெண்ணும் ஆமே
**892

#3
தை என்ப மகரமாதம்தன்னொடு பூசநாள் ஆம்

@510 தொ
**893

#1
தொழுவு என்பது உழலைதானே இரேவதிநாளும் சொல்லும்
**894

#2
தொடு என்ப மருதப்பூமி தோட்டமே வஞ்சகப்பேர் 
**895

#3
தொய்யிலே உழவும் சேறும் துயரமும் மகிழ்ச்சியும் பேர்
**896

#4
தொத்து என்ப பூங்கொத்தின்பேர் தொழும்பு என்றும் சொல்லலாமே
**897

#5
தொறு என்ப நிரையே கூட்டம் தொழும்பு என முப்பேர் ஆமே 
**898

#6
தொடி வளை ஒரு பலப்பேர் சூழ்ந்த கங்கணமும் ஆமே
**899

#7
தொங்கலே பீலி குஞ்சம் தூக்கு வெண்குடையே மாலை
**900

#8
தொண்டை ஆதொண்டை கொவ்வை தூங்கும் யானைத்துதிக்கை
**901

#9
தொண்டு என்ப பழமை ஒன்பான் தொடர்புற்ற அடிமைக்கும் பேர்
**902

#10
தொட்டல் என்பதுவே உண்டல் தோண்டலே கொடுத்தல் முப்பேர்
**903

#11
தொடுத்தலே வளைத்தல் பற்றல் பிணித்தலும் சொல்லும் முப்பேர்

@511 தோ
**904

#1
தோணியே கடைநாள் அம்பு தொள்ளி நீர் மதிலுறுப்பு ஆம்
**905

#2
தோட்டி என்பது கபாடம் சொல்லும் அங்குசமும் ஆமே
**906

#3
தோன்றல் என்பதுவே நாதன் சுதன் என்றும் உரைக்கலாமே
**907

#4
தோல் இபம் வனப்புச் சொல்லுத் துருத்தி தோற்பலகை தோல்வி
**908

#5
தோற்றமே வலி பிறப்புத் தோன்றுதல் புகழ் மகன் பேர்
**909

#6
தோடு என்ப பனையின்ஏடு தொகுதி பூவிதழும் ஆமே
**910

#7
தோள் என்ப புயத்தின்பேரே தூங்கிய கையும் ஆமே
**911

#8
தோரையே நெல்லும் கைவரையும் தூம்பு அரிசியும் பேர்

@512 தௌ
**912

#1
தௌவை என்பது மூத்தாளும் தாயும் மூதேவியும் பேர்
&6 நகர வருக்கம்

@6 நகர வருக்கம்

@61 ந
**913

#1
நந்தியே செக்கான் நந்தி நக்கன் பேரிகை நாற்பேரே
**914

#2
நலம் என்ப சுகமும் தேளும் நல் உபகாரமும் பேர்
**915

#3
நவம் என்ப புதுமை கேண்மை ஒன்பது நல் கார்காலம்
**916

#4
நடை என்ப நல்லொழுக்கம் நடந்திடும் நடையும் ஆமே
**917

#5
நகம் என்ப மலை உகிர்ப் பேர் நாமமும் மரமும் ஆமே
**918

#6
நகை என்பது ஒளி இகழ்ச்சி நகுதலும் மகிழ்வும் பல்லும்
**919

#7
நவிர் என்ப மருதயாழும் நண்ணும் ஆண்மயிரும் வாளும்
**920

#8
நனை என்ப கள்ளின்பேரே நல்ல பூவரும்பும் ஆமே
**921

#9
நவியம் என்பது கோடாரி நண்ணிய மழுவும் ஆமே
**922

#10
நயம் என்ப நன்றியோடு ஞாயமும் சுகமும் ஆமே
**923

#11
நரை என்ப பலிதம் வெண்மை நாரையே சவரின்கன்று ஆம்
**924

#12
நளி என்ப பெருமை சீதம் நாட்டிய செறிவும் ஆமே
**925

#13
நவிரமே மஞ்ஞை புன்மை நல் மலையுடனே உச்சி
**926

#14
நரந்தம் என்பது நாரத்தை நாறு கஸ்தூரிக்கும் பேர்
**927

#15
நந்து என்ப சங்கினோடு நத்தயும் கூறலாமே
**928

#16
நடலை என்பதுவே பொய் ஆம் நவின்ற வஞ்சகமும் ஆமே
**929

#17
நகர் என்ப வீடும் மிக்க நகரமும் கூறலாமே
**930

#18
நந்தல் என்பதுவே ஆக்கம் நாசமும் பேசலாமே
**931

#19
நத்தமே இருளும் ஊரும் நந்துடன் இரவும் நாற்பேர்
**932

#20
நன்று என்ப மிகுதியோடு நன்மையும் உரைக்கலாமே
**933

#21
நட்டம் என்பதுவே கேடு நடனமும் உரைக்கலாமே
**934

#22
நவிலல் என்பதுவே பண்ணல் நாவினால் உரைத்தலாமே
**935

#23
நக்கல் என்பதுவே தின்றல் நகுதலும் கூறலாமே
**936

#24
நக்கனே அருகன் சம்பு நிருவாணி நாட்டும் முப்பேர்
**937

#25
நனவு என்பது அகலத்தோடு நாடிய தெளிவும் ஆமே
**938

#26
நயன் என்ப பயனே இன்பம் நன்மையும் மகிழ்வும் ஆமே

@62 நா
**939

#1
நாழியே பூரட்டாதி நாழிகை உள்துளைப் பேர்
**940

#2
நாகம் விண் குரங்கு புன்னை நல் தூசு மலை பாம்பு யானை
**941

#3
நாவிதன் என்ப பூரநாள் அறுமீன் ஏனாதி
**942

#4
நாஞ்சில் என்பது கலப்பை நல் மதிலுறுப்பும் ஆமே
**943

#5
நாட்டம் என்பது ஓர் பண்ணும் நயனமும் வாளும் ஆமே
**944

#6
நாரி பன்னாடை பெண்ணே நறவு வில்நாணே நாற்பேர்
**945

#7
நாப்பண் என்பது தேர்த்தட்டும் நடுவும் யாழுறுப்பும் ஆமே
**946

#8
நானமே பூசும்பூச்சும் ஞானமும் குளிக்கும்நீரும்
**947

#9
நாடி என்பது நரம்பு நாழிகை இருபேர் ஆமே
**948

#10
நாகு என்பது இளமை சங்கு நத்தை பெண்விலங்கு நாற்பேர்
**949

#11
நாண் இலச்சைப் பேர்தானே கயிறு என்றும் நாட்டலாமே
**950

#12
நார் என்ப கயிறுதானே அன்பு என்றும் நவிலலாமே
**951

#13
நாறுதல் அங்குரித்தல் நாடிய மணமும் ஆமே

@63 நி
**952

#1
நிறை என்பது அழிவிலாமை நீர்ச்சாலும் துலையும் ஆமே
**953

#2
நிசி என்ப கங்குல் மஞ்சள் நிதி என முப்பேர் ஆமே
**954

#3
நிதம்பம் என்பதுவே அல்குல் நெடு மலைப்பக்கம் ஆமே
**955

#4
நியமம் அங்காடி வீதி நிச்சயம் நகரம் கோயில்
**956

#5
நிருமித்தலே படைத்தல் நேருதல் இருபேர் ஆமே 
**957

#6
நிரப்பு என்ப வறுமையின்பேர் குறைபாடும் நிகழ்த்தலாமே
**958

#7
நிறம் என்ப மருமம் காந்தி நிறங்களும் கூறலாமே
**959

#8
நிழற்றல் என்பது நுணுக்கம் நிழலிடுதலும் என்றாமே

@64 நீ
**960

#1
நீலியே கருமை துர்க்கை அவுரியும் நிகழ்த்தலாமே
**961

#2
நீர் என்ப குணம் பூராடம் நெடுங்கடல் உதகம் நாற்பேர்
**962

#3
நீபமே நிமித்தம் உத்ரட்டாதியும் நீர்க்கடம்பு ஆம்
**963

#4
நீவியே துடைத்தல் ஆடை நெருங்கு கொய்சகமும் முப்பேர்

@65 நு
**964

#1
நுதல் என்ப நெற்றியோடு நோக்கிய புருவமும் பேர்
**965

#2
நுணவையே எண் ஓலைப் பேர் நுண் பிண்டிதானும் ஆமே
**966

#3
நுவணை என்பது நூல் பிண்டி நுண்மையும் உரைக்கலாமே
**967

#4
நுனி என்ப நுண்மையின்பேர் நுதி என்றும் உரைக்கலாமே
**968

#5
நுணங்கு என்ப தேமலின்பேர் நுண்மையும் உரைக்கலாமே

@66 நூ
**969

#1
நூலோர் அந்தணர் அமைச்சர் புலவரும் நூல்வலோரே
**970

#2
நூழிலே யானை கோறல் கொடிக்கொற்றான் நுவல் கொடிப் பேர்
**971

#3
நூல் என்ப சாத்திரப்பேர் நூற்றிடு தந்தும் ஆமே
**972

#4
நூனமே நிச்சயப்பேர் குறைவு என்றும் நுவலலாமே

@67 நெ
**973

#1
நெறி என்ப வழியினோடு நீதியும் இருபேர் ஆமே
**974

#2
நெற்றி என்பது நுதல் பேர் நெருங்கிய படையுறுப்பு ஆம்
**975

#3
நெய்தலே புணரி சாரும் நிலமும் சாப்பறையும் ஆமே

@68 நே
**976

#1
நேத்திரமே பட்டாடை நெறிதரு கண்ணும் ஆமே
**977

#2
நேயம் என்பதுவே எண்ணெய் நெய்யுடன் அன்பும் ஆமே
**978

#3
நேர் சமம் ஈதல் பாதி நெடில் உடன்பாடு முப்பேர்
**979

#4
நேமி என்பது மால் ஆழி நிலம் ஒரு பக்கி வட்டம்

@69 நொ
**980

#1
நொடி என்ப வார்த்தையே கைநொடித்தலும் இருபேர் ஆமே
**981

#2
நொச்சியே சிந்துவாரம் நோக்கிய மதில் சிற்றூர் ஆம்
**982

#3
நொறில் என்ப விரைவு ஒடுக்கம் நுடக்கமும் கூறலாமே

@610 நோ
**983

#1
நோனாமை தவம்பண்ணாமை பொறாமையும் நுவலலாமே
**984

#2
நோக்கு என்பது அழகின்பேரும் நோக்கிய விழியும் ஆமே
**985

#3
நோற்றல் என்பது பொறைப் பேர் நுவன்றிடு தவமும் ஆமே
**986

#4
நோனாரே தவமில்லோரும் பகைஞரும் நுவலலாமே

@611 நௌ
**987

#1
நெளவி என்பதுவே மானும் நல் மரக்கலமும் ஆமே
&7 பகர வருக்கம்

@7 பகர வருக்கம்

@71 ப
**988

#1
பருதியே வட்டம் ஊர்கோள் பாற்கரன் நேமி நாற்பேர்
**989

#2
பகலே நாள் பெயர் முகிழ்த்தம் பகலவன் நடுவே தேசு
**990

#3
பச்சையே மரகதம் தோல் பசுமையும் புதனும் ஆமே
**991

#4
பளிதம் என்பது கற்பூரம் பல்லம் என் கணக்கும் ஆமே
**992

#5
பங்கு என்ப முடமே ஆகும் பாதியும் சனியும் முப்பேர்
**993

#6
பக்கமே திதியும் அன்பும் பறவையின்இறகும் ஆமே
**994

#7
பதம் என்ப மொழி கால் செவ்வி பாதை போது அடிசில் பட்டம்
**995

#8
பணி என்ப தொழிலும் பாம்பும் பணிதலும் முப்பேர் ஆமே
**996

#9
பயம் என்ப சுதை நீர் அச்சம் பாலொடு பயன் பேர் ஐந்தே 
**997

#10
பரவை வாருதி பரப்பு பங்கயம் மாதின்கூத்து ஆம்
**998

#11
பயோதரம் என்ப மேகம் பாலுறு முலை இரண்டாம்
**999

#12
பனி என்ப நடுக்கம் துன்பம் பயம் குளிர் இனிமைப் பேரே
**1000

#13
பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்
**1001

#14
பண்ணவன் முனிவன் தேவன் பற்றிய திறலோன் ஆசான்
**1002

#15
பசு என்ப சீவன் என்ப பற்றிய பெற்றமும் பேர்
**1003

#16
படப்பையே நகரம் தோட்டம் பசுநிரை நாடு நாற்பேர்
**1004

#17
பள்ளியே சிற்றூர் கோயில் பாயல் கண்படை நீத்தோரூர்
**1005

#18
பட்டமே ஓடை வாவி பதவியே கவரிமா ஆம்
**1006

#19
பதுக்கை என்பதுவே மேடும் பாறையும் தூறும் ஆமே
**1007

#20
பதலை ஓர்கண்பறைப் பேர் பருவரை தாழிக்கும் பேர்
**1008

#21
பணை வயல் பரியின்பந்தி பருத்தல் வேய் மரத்தின்கோடு
**1009

#22
பண்ணையே மாதர்கூட்டம் பள்ளமே மருதம் கேணி 
எண்ணிய மிருகம்கண்துஞ்சிடம் பெண்கள்விளையாட்டு ஆறு ஆம்
**1010

#23
படு மரக்குலையே கள்ளுப் பரவு நீர்நிலையே நன்மை
**1011

#24
பங்கமே சேறு தூசு பழுதொடு பின்னம் ஆமே
**1012

#25
பரிகமே கிடங்கு மேடை பகர் மதில் கணையும் நாற்பேர்
**1013

#26
படை படைக்கலம் கலப்பை படுக்கை பல்லணமே தானை
**1014

#27
பலம் என்ப நிறை கிழங்கு பழம் பயன் சேனை காய் ஆம்
**1015

#28
பங்கியே புறமயிர்க்கும் பற்றும் ஆண்மயிருக்கும் பேர்
**1016

#29
பண்டம் என்பதுவே பொன்னும் பணிகாரம்தானும் ஆமே
**1017

#30
பயம்பு என்பது ஆனை வீழும் படுகுழி பள்ளமும்  பேர்
**1018

#31
படலிகை பெரும்பீர்க்கோடு பரந்த கைம்மணி பூந்தட்டு ஆம்
**1019

#32
படங்கம் மேற்கட்டி என்ப பகர் பெரும் கொடியும் ஆமே
**1020

#33
படலையே வாசி கோவை பரந்த வாய்ப் பறை பூமாலை
**1021

#34
பகண்டை என்பது சிவேதை பறக்கும் ஓர் சிவலும் ஆமே
**1022

#35
பண் என்ப பாட்டின் பண்ணும் பரிமாவின் கலணையும் பேர்
**1023

#36
பறை என்பது இறகு வார்த்தை பணை என முப்பேர் ஆமே
**1024

#37
பகழியே கணையினோடு பல்லத்தின் குதையும் ஆமே
**1025

#38
பரம் என்ப கவசம் பாரம் பரிமாவின் கலணையும் பேர்
**1026

#39
பழங்கண் என்பதுவே ஓசை பற்றிய துன்பமும் பேர்
**1027

#40
பந்தமே கிளையும் கட்டும் பாட்டுறு தளையும் ஏரும்
**1028

#41
பத்திரம் இலை வனப்புப் படை நன்மை சிறகே பாணம்
**1029

#42
பலி என்ப பூசை பிச்சை பலித்தல் வெண்ணீறு நாற்பேர்
**1030

#43
பரி பரி சுமத்தல் வேகம் பாதுகாத்திடல் வருத்தம்
**1031

#44
பகடு என்ப யானை தோணி பாய் கடாப் பெருமை ஈறு ஆம்
**1032

#45
பதங்கம் என்பதுவே விட்டில் பறவை புள்பொதுவும் ஆமே
**1033

#46
பந்து கந்துகமும் கட்டும் படர் நீர்தூம் துருத்தியும் பேர்
**1034

#47
பவனமே இராசி பூமி படர் காற்று மனையே கோயில்
**1035

#48
படம் என்ப தாடை பாம்பின்பை யானை முகபடாமே
**1036

#49
பறம்பு என்ப மாதர்கொங்கை பருப்பதம் இருபேர் ஆமே
**1037

#50
பரதரே நெய்தல்மாக்கள் பன்னிய வணிகரும் பேர்
**1038

#51
பவம் என்ப செனனத்தோடு பாவமும் கூறலாமே
**1039

#52
பன்னல் என்பது நெருக்கம் பருத்தியும் சொல்லும் அப்பேர்
**1040

#53
பயிர் ஒலி பயிலே பைங்கூழ் பறக்கும் புள் குரல் இ நாற்பேர்
**1041

#54
படர் நடை நினைப்பு நோவு ஆம் பரிவொடு வீரரும் பேர்
**1042

#55
பவித்திரமே தருப்பை பன்னிய சுசியும் ஆமே
**1043

#56
படிவம் என்பதுவே நோன்பு வடிவமும் பகரலாமே
**1044

#57
படுதலே ஒலி இன்றாதல் பகரில் உண்டாதல் பூத்தல்
**1045

#58
பதி என்ப கணவன் மன்னன் பரமனும் ஊரும் ஆமே
**1046

#59
பத்தியே முறை ஒழுக்கம் பகர் வழிபாடு முப்பேர்
**1047

#60
பரிதலே அறுத்தல் அன்பு பகர்ந்திடில் இரங்கல் முப்பேர்
**1048

#61
பத்திரி என்பது அன்பு பறவையும் குதிரையும் பேர்
**1049

#62
பராகமே இரேணு ஆகும் பரிமள மலர்த்தூளின்பேர்
**1050

#63
பனுவல் என்பதுவே பேச்சும் பாட்டும் இங்கு இருபேர் ஆமே
**1051

#64
பல்லமே ஒரு கணக்குப் பாணமும் கரடியும் பேர்
**1052

#65
பணம் என்பது அரவு பாம்பின்படமும் பொற்காசும் ஆமே
**1053

#66
படி அங்கவடி சோபானம் பகர் குணம் உவமை பார் ஆம்
**1054

#67
பணிலமே சலஞ்சலம் சங்கு இருபெயர் பகரலாமே
**1055

#68
பகடு இபம் பெருமை ஏறு பஃறி ஆண்மேதி ஐம்பேர்
**1056

#69
பஞ்சமே சிறுமை ஐந்து ஆம் பகழி அம்பின்குதைப் பேர்
**1057

#70
படிறு என்ப களவும் பொய்யும் பகரலாம் இருபேர்தானே
**1058

#71
பகர்தல் என்பதுவே பேசல் விற்றலும் பறையலாகும்
**1059

#72
பட்டிகை என்ப கச்சுப் பணையுடன் இரதம் ஆமே
**1060

#73
பரிவு என்ப துன்பம் இன்பம் பகரும் அன்பினுக்கும் அப்பேர்
**1061

#74
பத்திரி பறவை காளி பரி இலை பாணம் ஐம்பேர்

@72 பா
**1062

#1
பாரதி என்ப நாவாய் பனுவலாட்டிக்கும் பேரே 
**1063

#2
பாண்டிலே கஞ்சதாளம் பாறலே மூங்கில் மஞ்சம்
தூண்டிலே ஊர்தி வட்டம் சுடரும் தகழி ஏழாமே
**1064

#3
பாணி என்பது கீலாலம் பல்லியம் கரம் பண் சோலை
ஊணுறு பாண்டம் காலம் உலகு பற்று ஓசை பத்தாம்
**1065

#4
பாராவாரம் தண் ஆழி பரவையின்கரையும் ஆமே
**1066

#5
பாசு என்ப மூங்கிலோடு பச்சையும் கூறலாமே
**1067

#6
பார் என்ப பூமி தேரின்பரப்பு உரோகணி முப்பேரே
**1068

#7
பாரி ஓர் வள்ளல் கட்டில் பாரி நல் தூசு பாரம்
**1069

#8
பாடியே நகரம் நாடு பாசறை ஆயர்பேரூர்
**1070

#9
பானலே குவளையோடு பழனமும் மருதம் முப்பேர்
**1071

#10
பாத்தியே சிறுசெய் இல்லம் பகுத்தலே வகுத்தல் முப்பேர்
**1072

#11
பாழியே வலி விலங்கின்படுக்கை ஊர் பற்றலார்ஊர்
**1073

#12
பால் என்ப கீரம் பக்கம் பகுத்தலும் இயல்பும் ஆமே
**1074

#13
பாரித்தல் என்பதே தோற்றுதல் பரப்புதலும் அப்பேர்
**1075

#14
பாசனம் என்ப சுற்றம் பாண்டம் உண்கலமும் பன்னும்
**1076

#15
பாடு என்ப பெருமை ஓசை பக்கமும் படுதலும் பேர்
**1077

#16
பாலிகை உதடு வட்டம் பட்ட வாள்முட்டு முப்பேர்
**1078

#17
பாணம்தான் மேகவண்ணக்குறிஞ்சி எய்கணை பூம்பட்டு ஆம்
**1079

#18
பாத்து என்ப கஞ்சி சோறு பகுத்திடல் வகுத்தல் முப்பேர்
**1080

#19
பாக்கு என்ப எதிர்காலத்தைப் பகர் இடைச்சொல் துவர்க்காய்
**1081

#20
பாசமே கயிறு கூளி பகர் ஊசித்துளை அன்பு ஆகும்

@73 பி
**1082

#1
பின்னையே பின்றை தங்கை பெரிய மால் உரிய தேவி
**1083

#2
பிறழ்தலே நடுக்கம் வேறு பெயர்தலோடு ஒளிவிடல் பேர்
**1084

#3
பிறங்கலே மிகுதி வெற்பு நிறைவொடு பேசும் முப்பேர்
**1085

#4
பிங்கலம் என்ப பொன்னும் அதன் நிறம் பேர் இரண்டாம்
**1086

#5
பிசி என்ப பொய்யும் சோறும் பேசும் நல் பொருளும் முப்பேர்
**1087

#6
பிச்சம் ஆண்மயிரும் பீலிக்குடையும் வெண்குடையும் ஆகும்
**1088

#7
பிசினனே கோளன் பொய்யன் உலோபனும் பேசும் முப்பேர்
**1089

#8
பிணை என்பது ஆசை மாவின்பெண்பெயர் இருபேர் ஆமே
**1090

#9
பிலவங்கம் குரங்கு தேரை பேசிய இருபேர் ஆமே
**1091

#10
பிணிமுகம் மயிலினுக்கும் பேசிய புள்பொதுப் பேர்
**1092

#11
பிண்டி என்பதுவே நெல்மா பேசிய புள்பொதுப் பேர்
**1093

#12
பிதாச் சிவன் அயன் தகப்பன் பேசிய நாரை நாற்பேர்
**1094

#13
பித்திகை கருமுகைக்கே பெயர் சுவர்த்தலமும் ஆகும்

@74 பீ
**1095

#1
பீடிகை ஆவணம் தட்டு ஆசனப்பீடம் முப்பேர்
**1096

#2
பீதகம் சாந்து பொன்மை பெருந்தனம் இருவேலிப் பேர்
**1097

#3
பீர் என்ப முலையில் பாலும் பீர்க்கொடு பசலைக்கும் பேர்
**1098

#4
பீருவே அச்சம் உற்றோன் பெயரொடு புருவம் ஆமே
**1099

#5
பீதம் ஓர் இராகம் பன்றி பொன் எலி சாந்து பீதம்
**1100

#6
பீனம் என்பதுவே பாசி பெருமையும் இருபேர் ஆமே

@75 பு
**1101

#1
புட்கரம் நிறைவு பாண்டமுகம் தீர்த்தம் புனல் வான் சேனம்
**1102

#2
புணர்வு தோய்த்திடல் இசைப்பு ஆம் பொழில் புவி பெருமை சோலை
**1103

#3
புணரியே வாரி நீரில் பொரு திரை கரை முப்பேரே
**1104

#4
புகைக்கு இடு நாமம் தூமம் போற்றும் யோசனைக்கும் அப்பேர்
**1105

#5
புங்கமே உயர்ச்சி அம்பு பொரும் அம்பின்குதை முப்பேரே
**1106

#6
புரம் உடல் புரி முன் என்று போற்றிய பெயர் மூன்றாமே
**1107

#7
புண்டரிகம் திக்கானை புலி வண்டு கழுகு கஞ்சம்
**1108

#8
புரி வளை விரும்பல் ஆற்றல் புரம் அன்பு கயிறு கட்டு ஆம்
**1109

#9
புரை குற்றம் உவமை இல்லம் புழை உயர்ச்சியும் ஐம்பேரே
**1110

#10
புல் புலி புணர்ச்சி புன்மை புதல் பனை அனுடநாள் ஆம்
**1111

#11
புலவர் பாடுநரே கூத்தர் புதன் உம்பர் கவி கண்ணாளர்
**1112

#12
புலம்பு ஒலி தனிமை அச்சம் போற்றிய பெயர் மூன்றாமே
**1113

#13
புவனம் என்பதுவே காற்றும் பூமியும் இருபேர் ஆமே
**1114

#14
புரத்தல் என்பதுவே காத்தல் வளமையும் புகலல் ஆமே
**1115

#15
புதை என்ப கணையின்கட்டும் புதுமையும் நிறைவும் முப்பேர்
**1116

#16
புறவம் ஓர் புள்ளும் காடும் முல்லையின்நிலனும் ஆமே
**1117

#17
புறணியே குறிஞ்சி முல்லை நிலத்தொடு புறமும் ஆமே
**1118

#18
புனை என்பது அழகினோடு பொலிவும் ஒப்பனையும் ஆகும்

@76 பூ
**1119

#1
பூதி ஓர் நரகம் செல்வம் துர்க்கந்தம் புழுதி நீறு ஆம்
**1120

#2
பூ மலர் வனப்புக் கூர்மை பொலிவொடு பிறப்புப் பூமி
**1121

#3
பூகமே திரளை பூகம் புன்கண் என்பது நோய் துன்பம்
**1122

#4
பூவை என்பது காயா ஆம் நாகணவாய்க்கும் அப்பேர்

@77 பெ
**1123

#1
பெட்பு என்ப பெருமை அன்பு ஆம் பிரசம் தேன் மது வண்டு ஆமே
**1124

#2
பெயர் என்ப பெருமை கீர்த்தி பேசும் நாமம் பேர் மூன்றே

@78 பே
**1125

#1
பேதையே அறிவிலோன் அந்தகன் முதல்பருவப்பெண் ஆம்
**1126

#2
பேதை என்பது மூடன் பேர் பெண் என்றும் உரைக்கலாமே

@79 பை
**1127

#1
பை என்ப நிறமே பாம்பின்படமொடு பசுமையும் பேர்
**1128

#2
பையுள் என்பதுவே நோயும் சிறுமையும் பகரலாமே
**1129

#3
பைத்தல் என்பது சினப்பேர் பசத்தலும் உரைக்கலாமே

@710 பொ
**1130

#1
பொறி என்ப வரி எழுத்துப் புலன் இலாஞ்சனமே செல்வம்
அறிவு இயந்திரம் சீதேவி அம்பி ஒன்பதுபேர் ஆமே
**1131

#2
பொன் என்ப வனப்பு இரும்பு பொலிவும் பூமகள் வியாழம்
**1132

#3
பொழில் என்ப பெருமை சோலை பூமியும் முப்பேர் ஆமே
**1133

#4
பொறை என்ப மலையே பூமி பொறுமையும் துறுகல்லும் பேர்
**1134

#5
பொங்கரே மரத்தின்கோடு ஆம் இலவொடு பொருப்பும் ஆமே
**1135

#6
பொகுட்டுத் தாமரைப்பூங்கொட்டை பொருப்புச் சேற்றெழுந்த கொப்பூழ்
**1136

#7
பொருநரே கூத்தர் வீரர் பொரு படைத்தலைவர் மன்னர்
**1137

#8
பொம்மல் என்பதுவே சோறு ஆம் பொலிவு என்றும் உரைக்கலாமே
**1138

#9
பொங்கல் என்பது கொதித்தல் பொலிவொடு மிகுதியும் பேர்
**1139

#10
பொக்கம் என்பதுவே பொய்யும் பொத்து எனும் இருபேர் ஆமே
**1140

#11
பொத்தகம் கோசம் என்ப சித்திரப்படாமும் ஆமே
**1141

#12
பொய் என்ப மரத்தின்பொந்தும் பொக்கமும் இருபேர் ஆமே
**1142

#13
பொச்சாப்பே மறவியோடு பொல்லாங்கும் இருபேர் ஆமே
**1143

#14
பொருளே சொற்பொருள் பல்பண்டம் பொருந்திய பேர் மூன்றாமே
**1144

#15
பொருநர் போர்த்தலைவர் கூத்தர் புரவலர் வாணர் வீரர்
**1145

#16
பொறுத்தல் என்பதுவே தாங்கல் பொறை எனும் இருபேர் ஆமே 
**1146

#17
பொறை மலை துறுகல் பாரம் பொறை சுமை கருப்பம் பூமி
**1147

#18
பொற்பு என்பது அழகினோடு பொலிவும் ஒப்பனையும் ஆகும்

@711 போ
**1148

#1
போகமே பாம்பின்மெய்யும் போகத்தின் விகற்பும் ஆகும்
**1149

#2
போதலே நெடுமை நேர்மை போகுதல் எனும் முப்பேரே 
**1150

#3
போற்றல் என்பதுவே ஓம்பல் புகழ்தலோடு இருபேர் ஆமே
**1151

#4
போகி என்பது புயங்கம் புரந்தரன் இருபேர் ஆமே
**1152

#5
போகில் என்பது கொப்பூழும் புள்ளும் பூவரும்பும் ஆமே
**1153

#6
போதகம் இளமை யானை கன்று மாக்கன்றும் ஆமே
**1154

#7
போர் என்ப சதையநாளும் பொருதலும் சும்மையும் பேர்
**1155

#8
போக்கு என்ப வழியே குற்றம் போதலும் மரக்கன்றும் பேர்
**1156

#9
போர்வை என்பது மீக்கோளும் பொருந்தும் முட்டாக்கும் தோலும்
**1157

#10
போதம் என்பதுவே தோணி போற்றிய ஞானம் ஆமே
**1158

#11
போற்றல் என்பதுவே காத்தல் புகழ்தலும் ஆகும் என்ப
**1159

#12
போகல் என்பதுவே நீளம் போகுதல் இருபேர் ஆமே

@712 பௌ
**1160

#1
பெளவமே கணுவும் மிக்க பரவையும் குருவும் ஆமே
&8 மகர வருக்கம்

@8 மகர வருக்கம்

@81 ம
**1161

#1
மன்னன் உத்திரட்டாதிப் பேர் மன்னவன் பெயரும் ஆமே
**1162

#2
மதி என்பது அறிவு சோமன் மாதம் முன்னிலை அசைச்சொல்
**1163

#3
மரக்காலே துர்க்கையாடல் மால்கூத்து ஆயிலியம் சோதி
**1164

#4
மயிலையே மீனராசி மீன் இருவாட்சி முப்பேர்
**1165

#5
மடங்கலே உகம் ஊழித்தீ மறலி நோய் அசனி சிங்கம்
**1166

#6
மருள் என்ப குறிஞ்சியாழின்திறம் பெரு மயக்கம் பேர் ஆம்
**1167

#7
மஞ்சு பூண் வலி வனப்பு மழை யானை முதுகு இவ் ஐந்தே
**1168

#8
மதன் சிலைவேள் வனப்பு மாட்சிமை வலி நாற்பேரே
**1169

#9
மண்டலி என்ப பூனை மண் ஒரு பாம்பு நாய் ஆம்
**1170

#10
மண்டிலம் என்ப நாடும் வட்டமும் குதிரையும் பேர்
**1171

#11
மன்றமே வெளியின் நாமம் வாய்மை அம்பலம் முப்பேரே
**1172

#12
மந்திரம் விசாரம் கோயில் வாசியின்குழாம் வீடே கள்
**1173

#13
மறவர் என்பதுவே வீரர் வனசரர் பேரும் ஆமே
**1174

#14
மள்ளரே உழவர் வீரர் மலையில்வாழ் குறவர் முப்பேர்
**1175

#15
மதலையே பிள்ளை கொன்றை மரக்கலம் கொடுங்கை தூண் ஆம்
**1176

#16
மடை என்ப மதகு சோறு மணிப்பணிக் கடைப்பூட்டும் பேர்
**1177

#17
மட்டு என்பது அளவையின்பேர் மது என்றும் உரைக்கலாமே
**1178

#18
மனவு நல் மணியே அக்குமணியொடு சங்கும் ஆமே
**1179

#19
மணி நவமணியே கண்டை வனப்பு இசை கருமை நன்மை
**1180

#20
மதுகமே இருப்பை எட்டி மதுரம் ஆம் தராவும் ஆமே
**1181

#21
மடி மடங்குதலே சோம்பு வயிறு நோய் புடவை தாழை
**1182

#22
மன்றலே பரிமளப்பேர் மருவு கலியாணமும் பேர்
**1183

#23
மத்திகை விளக்குத்தண்டு மாலை சம்மட்டி முப்பேர்
**1184

#24
மல் என்ப மாயோன்ஆடல் வலி வளம் முப்பேர் ஆமே
**1185

#25
மல்லிகை விளக்குத்தண்டும் மாலதிப் புதலும் ஆமே
**1186

#26
மறம் சினம் பிணக்கம் கூத்து மலைந்த சேவகமும் ஆமே
**1187

#27
மஞ்சரியே பூங்கொத்து மாலை செந்தளிரும் ஆமே
**1188

#28
மகரமே சுறாப் பூந்தாது ஆம் மருவும் ஓரையில் ஒன்றும் பேர்
**1189

#29
மந்தாரம் என்பதே செம்பரத்தமும் தருவும் ஆமே 
**1190

#30
மல்லல் என்பது வளப்பேர் வலி என்றும் உரைக்கலாமே
**1191

#31
மறை இராசியமே வேதம் மந்திரம் வரிசை நாற்பேர்
**1192

#32
மடம் அறியாமை சத்ரம் மனை முனிவாசம் முப்பேர்
**1193

#33
மகன் என்ப சிறந்தோன் பேரே மைந்தனும் ஆகும் என்ப
**1194

#34
மணம் என்ப வாசம் கூட்டம் மருவு கலியாணம் முப்பேர்
**1195

#35
மடல் பனையேடு பூவின் மலரிதழ் ஒரு நூல் முப்பேர்
**1196

#36
மத்தகம் என்ப நெற்றி மன்னிய சென்னியும் பேர்
**1197

#37
மண் என்ப ஒப்பனைப் பேர் முழவின் மார்ச்சனையும் ஆமே
**1198

#38
மது என்ற நறவும் தேனும் வசந்தகாலமும் ஆம் என்ப
**1199

#39
மரபு என்ப முறைமையோடு மன்னிய தொன்மையும் பேர்
**1200

#40
மந்தன் என்பது சனிப் பேர் மதிகுறைந்தவனும் ஆமே
**1201

#41
மறல் என்ப பிணக்கினோடு மறலியும் மயக்கமும் பேர்
**1202

#42
மருமானே மருமகன் பேர் வழித்தோன்றல் பேரும் ஆமே
**1203

#43
மயல் என்ப சேற்றினோடு மயக்கமும் செற்றையும் பேர்
**1204

#44
மலைதல் என்பதுவே சூடல் மறுத்தலும் செருவும் ஆமே
**1205

#45
மருதமே வயல் ஓர் தாரும் மருதநன்னிலத்துப்பாட்டும்
**1206

#46
மங்குல் என்பது விசும்பும் மஞ்சுடன் இருளும் ஆமே
**1207

#47
மன் என்ப நிலை அசைச்சொல் மன்னவன் மிகுதி நாற்பேர்
**1208

#48
மலர்தலே எதிர்தல் தோன்றல் மலர்தலும் வழங்கும் முப்பேர்
**1209

#49
மகரந்தம் கள்ளும் தேனும் மன்னு பூந்தாதும் ஆமே
**1210

#50
மதவு என்ப மிகுதியும் பேர் வன்மையும் உரைக்கலாமே
**1211

#51
மனை என்ப மாளிகைப் பேர் மனைவியும் ஆகும் என்ப
**1212

#52
மருந்து என்ப ஒளடதப்பேர் வானவர் உணவும் ஆமே
**1213

#53
மந்தி என்பது குரங்கு வண்டு சூரியன் முப்பேரே
**1214

#54
மதம் என்ப செருக்கே யானைமதம் இருபெயர் என்றாமே

@82 மா
**1215

#1
மால் புதன் பெருமை மேகம் மாயவன் மயக்கம் காற்று ஆம்
**1216

#2
மா வயல் பெருமை வாசி வண்டு செல்வம் கறுப்புப்
பூவுறை திரு விலங்கின்பொது வெறுப்பு அழைத்தல் பத்தாம்
**1217

#3
மாலையே இரவோடு அந்தி மாலிகை ஒழுங்கு நாற்பேர்
**1218

#4
மான் என்ப துணை விலங்கினம் மகரராசியும் முப்பேரே
**1219

#5
மாரி என்பது நோய் மேகம் வடுகியே விளிவு கள் ஆம்
**1220

#6
மாதிரம் திசை ஆகாயம் மலை யானை நிலம் ஐம்பேரே
**1221

#7
மாதவம் என்ப கள்ளு வசந்தகாலம் தவப்பேர்
**1222

#8
மார்க்கமே சமயம் வீதி மறுதலை வழி நாற்பேரே
**1223

#9
மாடமே உழுந்தும் மிக்க மாளிகைதானும் ஆமே
**1224

#10
மாழை பொன் உலோகக்கட்டி மடமையே புளிமா ஓலை
**1225

#11
மாசு என்ப சிறுமை குற்றம் மழை அழுக்கு ஆக நாற்பேர்
**1226

#12
மாதரே இடைச்சொல் காதல் வனப்பொடு மகிழலாமே
**1227

#13
மாந்தல் என்பதுவே உண்டல் மரிதலும் கூறலாமே
**1228

#14
மாருதி அனுமன் பேரே வலிய வீமனுக்கும் பேரே
**1229

#15
மாய்தல் என்பதுவே சாவும் மறைதலும் இருபேர் ஆமே
**1230

#16
மாயம் என்பது கறுப்பு வஞ்சனை பொய்யும் ஆமே
**1231

#17
மாயை என்பதுவே சத்தி வஞ்சனை மாயமும் பேர்
**1232

#18
மாடு என்ப நிரை பொன் செல்வம் மருங்கு நாற்பேர் என்றாமே
**1233

#19
மாலி என்பது மார்த்தாண்டன் மன்னிய கள்ளும் ஆமே
**1234

#20
மானல் என்பதுவே ஒப்பு ஆம் மயக்கமும் கூறலாமே
**1235

#21
மானமே அளவு இலச்சை மானமே பெருமை குற்றம்

@83 மி
**1236

#1
மிச்சையே பொய்த்தல் ஆகும் மிடித்தல் அஞ்ஞானம் முப்பேர்
**1237

#2
மிதவை என்பதுவே தெப்பம் மேவிய சோறும் ஆமே

@84 
**1238

#1
மீளி திண்ணியன் வலிப் பேர் மேன்மகன் பெருமைக்கும் பேர் 
**1239

#2
மீன் என்ப மச்சமே வான்மீனும் சித்திரைநாளும் பேர்

@85 மு
**1240

#1
முறம் என்ப விசாகநாளே சுளகு என்றும் உரைக்கலாமே
**1241

#2
முரசே உத்திரட்டாதிப் பேர் முழக்கிய பறையும் ஆமே
**1242

#3
முனி என்ப யானைக்கன்று மூரி வில் அகத்தி முப்பேர்
**1243

#4
முளை என்ப பிள்ளை மூங்கில் முளைக்கும் அங்குரம் முப்பேரே 
**1244

#5
முரம்பு என்ப பாறையின்பேர் மோடு என்றும் மொழியலாமே
**1245

#6
முசலி என்பதுவே ஓந்தி பலதேவன் உடும்பு முப்பேர்
**1246

#7
முறுவல் என்பது நகைத்தல் பல்லையும் மொழியலாமே
**1247

#8
முன்னல் என்பதுவே நெஞ்சு ஆம் நினைவு என்றும் மொழியலாமே
**1248

#9
முனை என்ப வெறுப்புக் கூர்மை முற்றிய பகை முப்பேரே
**1249

#10
முரண் என்ப வலியினோடு மொழிந்திடு பகையும் ஆமே
**1250

#11
முருகு கள் இளமை நாற்றம் முருகவேள் விழா வனப்பு ஆம்
**1251

#12
முறை என்ப கோசமே ஊழ் முறைமை இ முப்பேர் ஆமே
**1252

#13
முடலையே திரட்சி உண்டை பெருமை இ முப்பேர் ஆமே
**1253

#14
முன்னமே சீக்கிரிப் பேர் முன்னுடன் எண்ணம் முப்பேர்
**1254

#15
முடங்கலே மடங்கல் கைதை மூங்கில் நோய் ஆகும் நாற்பேர்
**1255

#16
முத்தமே மருதப்பூமி முத்து இதழ் பிரியம் நாற்பேர்
**1256

#17
முண்டகம் தாழை முள்ளி முளரி முள் மூங்கில் கள் ஆம்
**1257

#18
முல்லை மல்லிகையே வென்றி முற்றிய கற்பு ஓர் பூமி
**1258

#19
முச்சி என்பதுவே உச்சி மயிர்முடி இருபேர் ஆமே
**1259

#20
முற்றலே வளைத்தல் மூப்பு முடிவொடு வெறுத்தல் ஆமே
**1260

#21
முளரியே விறகு செந்தீ முண்டகம் சிறுமை காடு ஆம்

@86 மூ
**1261

#1
மூலம் வேர் முதலே ஏது முதிர்கிழங்கு ஒரு நாட்கும் பேர்
**1262

#2
மூரி ஏறு எருமை சோம்பு முறை நெரிவும் பீடு என்ப
**1263

#3
மூரல் என்பதுவே சோறும் முறுவலும் பல்லும் ஆமே
**1264

#4
மூசல் என்பதுவே சாவும் மொய்த்தலும் இருபேர் ஆமே 
**1265

#5
மூழியே சோறு வாவி அகப்பையும் மொழியலாமே

@87 மெ
**1266

#1
மெய் என்ப உண்மை ஞானம் மேவிய சடம் முப்பேரே
**1267

#2
மெத்தை என்பதுவே சட்டை மெல்லணை இருபேர் ஆமே

@88 மே
**1268

#1
மேதை தோல் புதன் இறைச்சி மிக்க பேரறிவு கள் ஆம்
**1269

#2
மேல் என்பது இயல்பு மேற்கு விசும்பிடம் ஆக நாற்பேர்
**1270

#3
மேக்கு என்ப மேலின்பேர் ஆம் மேற்றிசைதானும் ஆமே
**1271

#4
மேனி என்பது நிறப்பேர் மெய் என்றும் உரைக்கலாமே
**1272

#5
மேடம் ஓர் ராசி ஆடு மெய்புகுகருவி முப்பேர்

@89 மை
**1273

#1
மை என்பது ஆடு குற்றம் மழை மலடு அஞ்சனம் கார்
**1274

#2
மைந்து என்ப வலியினோடு மயக்கமும் கூறலாமே

@810 மொ
**1275

#1
மொக்குள் என்பது பூமொட்டும் குமிழியும் மொழியலாமே
**1276

#2
மொய் செருக்களமே யானை மூசு வண்டொடு உதிரப்பேர் 
**1277

#3
மொய்ம்பு என்ப தோளின்பேரே வலி என்றும் உரைக்கலாமே

@811 மோ
**1278

#1
மோடு என்ப வயிற்றின்பேரும் மொழிந்திடும் மேடும் ஆமே

@812 மௌ
**1279

#1
மெளலி என்பது கிரீடம் மன்னிய சடையும் ஆமே
&9 யகர வருக்கம்

@9 யகர வருக்கம்

@91 ய
**1280

#1
யவனர் சோனகர் கண்ணாளர் சித்திரகாரர் என்ப

@92 யா
**1281

#1
யாழ் என்ப மிதுனம் வீணை ஈசன்நாள் முதல்நாள் ஆமே
**1282

#2
யாணரே புதுமை தச்சர் எய்திய வனப்பு நன்மை
**1283

#3
யாப்பு என்ப கவிதையின்பேர் எய்திய கட்டும் ஆமே
**1284

#4
யானமே ஊர்தியின்பேர் மரக்கலம் என்றுமாமே
**1285

#5
யாமம் என்பது சாமம் தெற்கு இரவு என்றும் கூறலாமே

@93 யூ
**1286

#1
யூபமே வேள்வித்தம்பம் உடற்குறை படைவகுப்பு ஆம்
**1287

#2
யூகமே கருங்குரங்கோடு உட்பொருளுணர்தல் தர்க்கம்

@94 யோ
**1288

#1
யோகமே தியானம் கூட்டம் உபாயம் ஆம் உயர்ச்சிக்கும் பேர்
&10 வகர வருக்கம்

@10 வகர வருக்கம்

@101 வ
**1289

#1
வலவை என்பது வல்லோனும் வஞ்சப்பெண் பெயரும் ஆமே
**1290

#2
வருடம் என்பது யாண்டின்பேர் மழை என்றும் உரைக்கலாமே
**1291

#3
வன்னியே பிரமசாரி வளர் கிளி சமி செந்தீ ஆம்
**1292

#4
வயல் என்ப வெளியினோடு மருதநன்னிலமும் ஆமே
**1293

#5
வசி என்ப கூர்மையோடு வசியமும் ஆகும் என்ப
**1294

#6
வடவை ஊழித்தீ யானைப்பிடி மயிடப்பெண் ஆமே
**1295

#7
வயவு என்ப புள்பொதுப் பேர் வலியொடு நீரும் ஆமே
**1296

#8
வழி என்ப தருமம் பிள்ளை மரபு இடம் தொடர்ச்சியும் பேர்
**1297

#9
வரை என்ப மூங்கில் மட்டு மலை கரத்து இறை நாற்பேரே
**1298

#10
வசதி என்பதுவே ஊரும் மனையுடன் இடமும் ஆமே
**1299

#11
வயவன் என்பதுவே வீரன் காதலன் வலியான் முப்பேர்
**1300

#12
வயா என்ப காதலோடு வருத்தமும் கருப்பம் முப்பேர்
**1301

#13
வள் என்ப காது கூர்மை வலியொடு வாளே வார் ஆம்
******
********
** 
*
** அகராதி நிகண்டு -3
** (ஒரு சொல் பல பெயர்த் தொகுதி)
** பதிப்பாசிரியர்கள்: பசுபதி, மேகலா,சாயிராமன்
** உ.வே.சா.நூல்நிலையம் - 2003
&1 உயிர் வருக்கம்

@1 அகர வருக்கம்

@11 அ
**1

#1
அருளென்ப கருணைதானே யாஞ்சிவ சத்திக் கும்பேர்
**2

#2
அனந்தனே ஈசன் மாலோன் அருகனுஞ் சேடனும்பேர்
**3

#3
அரம்பையென் பதுவே வாழை அரமக ளிருபே ராமே
**4

#4
அண்டரே பகைவர் வானோர் ஆயரென் றாகு முப்பேர்
**5

#5
அலரிகண் வரிய ருக்கன் அழகொரு மரம்பூத் தேனீ
**6

#6
அருணனே புதனா தித்தன் அவன்றேர்ப்பா கனுக்கு மப்பேர்
**7

#7
அளக்கரே புணரி சேறுப் பளம்புலி யறுமீ னப்பேர்
**8

#8
அத்தமே வாளி கானங்கண் ணாடிபொன் பொருள்கை பாதி
**9

#9
அணங்குநோ யழகு தெய்வம் ஆசைபெண் கொலை வருத்தம்
**10

#10
அங்கத மேவ சைச்சொல் அரவுதோ ளணிமுப் பேரே
**11

#11
அரவமென் பதுபு யங்கம் ஆரவா ரஞ்சி லம்பாம்
**12

#12
அண்டமென் பதுவே முட்டை அந்தரம் புவனம் முப்பேர்
**13

#13
அம்பர மென்ப விண்ணும் ஆடையுங் கடலு மாமே
**14

#14
அஞ்சன மென்ப மைதிக் கயங்கறுப் பாக முப்பேர்
**15

#15
அங்கியென் பதுதீச் சட்டை அத்திரி யறுமீன் முப்பேர்
**16

#16
அயமென்ப நீர்த டாகம் ஆடுவெம் பரியி ரும்பாம்
**17

#17
அளகமே மயிர்க்கு ழற்சி ஆசையாம் மயிர்ப் ரப்பே
**18

#18
அளறென்ப சேறுதானே அருநர கினுக்கு மப்பேர்
**19

#19
அந்தரி யென்ப துர்க்கை அம்பிகை இருபே ராமே
**20

#20
அஃகலே சுருங்கல் மழுங்க லாணியு மிரவும் நாற்பேர்
**21

#21
அந்தியே மாலைக்காலம் மரம்பாலை யாழ்ப்பண்ணும்பேர்
**22

#22
அடுப்பென்ப பரணி நாளே அச்சமே சுல்லி முப்பேர்
**23

#23
அறுவையே சித்தி ரைப்பேர் அடையு மாகுமென்ப
**24

#24
அன்றிலோர் புள்ளும் மூல நாளென வாமி ரண்டே
**25

#25
அகியென்ப திரும்புஞ் சீறும் அரவிரு பேரென் றாமே
**26

#26
அணுவென்ப நுண்மை சீவன் ஆனமந் திரம்முப் பேரே
**27

#27
அகலுளென் பதுவே யூரும் அகலமும் நாடு மாமே
**28

#28
அத்தியென் பதுவே கிள்ளை யாமொரு நகருக் கும்பேர்
**29

#29
அருப்பமே யூரும் நோயும் நடலையுஞ் சோலை யும்பேர்
**30

#30
அடையென்ப கனமே தின்னும் அப்பமே யிலைமுப் பேரே
**31

#31
அருவிமலை யின்வீ ழாறும் அரிதினைத் தாளு மாகும்
**32

#32
அணையென்ப சயனம் மெத்தை யாகுஞ்செய் கரைக்கும் பேரே
**33

#33
அகமென்ப மனையே பாவம் அகலிடம் வீடுள் ளாமே
**34

#34
அங்கணஞ் சேறு முற்ற மாஞ்சல தரைக் கும்பேர்
**35

#35
அரசனே என்ப வியாழன் அதிபதி யிருபே ராமே
**36

#36
அன்னையென் பதுவே தோழி அம்மனை முன்பி றந்தாள்
**37

#37
அம்மையே மறுபி றப்பும் அழகொடு தாயு மாமே
**38

#38
அணியென்ப படைவ குப்பே அழகுபூண் பெருமை நாற்பேர்
**39

#39
அரத்தமே யிரத்தஞ் செம்மை அரக்கொடுற் பலங்க டம்பு
**40

#40
அடியென்ப முதலே தாளாஞ் செண்டு வெளியு மாமே
**41

#41
அரலையே கழலை கொட்டை யாமர லென்றும் பேரே
**42

#42
அன்னமே யெகினத் தின்பேர் அடிசிலு மாகு மென்ப
**43

#43
அரிட்டமென் பதுவே காக்கை அறிவழித் திடுகள் ளாமே
**44

#44
அளியென்ப நறவும் வண்டும் அன்பொடு கொடையும் நாற்பேர்
**45

#45
அழனமென் பதுபி ணப்பேர் அக்கினி யிருபே ராமே
**46

#46
அத்தென்ப அரைஞாண் செம்மை அசைச்சொல்லோ டிசைப்பு மாமே
**47

#47
அராகமென் பதுசி வப்போ டாசைபண் பாலை யாழாம்
**48

#48
அக்கென்ப விடைமு ரிப்பு மணிசங்கின் மணிமுப் பேரே
**49

#49
அனந்தமே அளவி லாமை அந்தரங்க கனமுப் பேரே
**50

#50
அலங்கலென் பதுபூ மாலை அசைவொடு தளிரி லங்கல்
**51

#51
அரந்தையே குறிஞ்சி யாழ்ப்பே ராகுமிகு துன்ப மும்பேர்
**52

#52
அடலென்ப வெற்றி கோறல் அமர்வலி யாக நாற்பேர்
**53

#53
அயிலென்ப கூர்மை தானே யாமுடம் பிடிக்கு மப்பேர்
**54

#54
அரணமே கவசங் காடே அணிமதில் வேலி நாற்பேர்
**55

#55
அம்பணந் தூம்பு வாழை ஆமைநீர்ப் பத்தல் யாழே
**56

#56
அளித்தலென் பதுவே காத்தல் அளித்திடல் கொடையும் முப்பேர்
**57

#57
அச்சமே அகத்தி யைம்மை அஞ்சலிம் முப்பே ராமே
**58

#58
அருணமென் பதுமான் செம்மை ஆடெலு மிச்சை நாற்பேர்
**59

#59
அந்தமே முடிவின் பேராம் அழகையம் முப்பே ராமே
**60

#60
அம்பலே பழிச்சொல் சில்லோர் அறிந்திலர் தூற்ற லாமே
**61

#61
அலரென்ப பலருந் தூற்று மயரொளி களிபூ நீராம்
**62

#62
அரத்தலே யொலித்த லென்பர் அழுகையு மாகு மென்ப
**63

#63
அஞ்சலி யென்ப வாவல் அங்கைகூப் புதலி ரண்டாம்
**64

#64
அலகுநெற் கதிரே யாதி பலகறை நுளம்போ ரெண்ணும்
**65

#65
அல்லிவெள் ளாம்பல் காயா அகவித ழாக முப்பேர்
**66

#66
அதமென்ப பாதா ளப்பே ராமிறங் குதலுங் கீழும்
**67

#67
அகைத்தல்வே-தனையொ டித்தல் அறுத்திட லுயர்த்த லாமே
**68

#68
அசிபடைக் கலமே வாளே அவமதிச் சிரிப்பு முப்பேர்
**69

#69
அபரரென் பதுவே யொன்னார் அண்டரு மிருபே ராமே
**70

#70
அந்தண ரென்ப நீத்தோர் அறுதொழி லோரு மாமே
**71

#71
அள்ளென்ப செறிவுங் காதும் அயிலும்பற் றிரும்பு மாமே
**72

#72
அலமென்ப கலப்பை யின்பேர் அமைவென்று முரைக்க லாமே
**73

#73
அயிரென்ப சர்க்க ரைப்பேர் நுண்மைநுண் மணலு மாமே
**74

#74
அண்டாந் தவளை பல்லி யானைமீன் கிடங்கு தேரை 
நண்டுபுள் ளாமை இப்பி நச்சரவு மேயீ ராறே
**75

#75
அக்கமே மறைவுஞ் சேர்வும் அவகாசந் தானு மாமே
**76

#76
அருச்சுன மென்ப வெள்ளை யாமுயர் மருது மாமே
**77

#77
அத்தியார் கலியே யானை அதவெலும் பாக நாற்பேர்
**78

#78
அந்திலென் பதுவழக்கும் அசைச் சொல்லு மிடமு மாமே
**79

#79
அமுதென்ப சுவையும் பாலும் அவியொடு முப்பே ராமே
**80

#80
அம்மென்ப புனல சைச்சொல் அழகொடு முப்பே ராமே
**81

#81
அமுதமே பெருமை முத்தி அப்புடன் சுதைபா லைம்பேர்
**82

#82
அம்பென்ப மேகந் தண்ணீர் அத்திரம் மூங்கில் நாற்பேர்
**83

#83
அளகமென் பதுவே தாளி யாம்பெரும் வாளிக் கும்பேர்
**84

#84
அஞரென்ப துன்பத் தின்பேர் அறிவிலா தவரு மாமே
**85

#85
அந்தக னென்ப கால னாஞ்சித டனுக்கு மப்பேர்
**86

#86
அரக்கென்ப மெழுகு செம்மை சரக்கெனு முப்பே ராமே
**87

#87
அகவலென் பதுவே கூத்தா சிரியமி ருபெய ராமே
**88

#88
அரங்கமென் பதுவே கூத்தா யுதம்பயி லடந்து ருத்தி
**89

#89
அள்ளலென் பதுகீ ளாலை அந்தரங் கமும்பே ராமே
**90

#90
அழுங்கலென் பதுந டுக்கம் அல்லலே யிரங்கல் கேடாம்
**91

#91
அறலென்ப விழைவும் நீரும் அலையும்நுண் மணலு மாமே
**92

#92
அளையென்ப முழையே பாழி யானவெண் டயிர்புற் றாமே
**93

#93
அங்கமே யெலும்பு றுப்பா றங்கமா தாரங் கட்டில்
**94

#94
அழுவமென் பதுப ரப்பும் அரியதுர்க் கமும்நா டும்பேர்
**95

#95
அறுகென்ப யாளி சிங்க மாமொரு புல்லுக் கும்பேர்
**96

#96
அத்திரி யாந்தா சோகம் அசலமே கழுதை வாசி
**97

#97
, அறையென்ப மொழிதல் பாறை யகந்திரை மலைமு ழைப்பேர்
**98

#98
அரிலென்ப பரல்பி ணக்க மாஞ்சிறு தூறு குற்றம்
**99

#99
அவலென்ப குளமே பள்ளம் அருந்துசிற் றுண்டி பேராம்
**100

#100
அண்ணையென் பதுபி சாசும் அறிவிலா தவனு மாமே
**101

#101
அகப்பாவே புரிசை யோடுள் ளுயர்த்த
**102

#102
அசமென்ப புருவை யேமூ வாட்டையி னெல்லு மாமே
**103

#103
அசனியென் பதுவே வச்சி ராயுதம் இடியு மாமே
**104

#104
அல்லென்ப இரவின் பேரே அந்தகா ரமுமா மென்ப
**105

#105
அரிதமே திசை பசும்புல் அவனியே பச்சை முப்பேர்
**106

#106
அகடென்ப நடுவின் பேரும் அழகிய வயிறு மாமே
**107

#107
அமறலே பொலிவும் பீடும் அதிகமு மாகு மென்ப
**108

#108
அருகலென் பதுசு ருங்கல் அணைதலென் றிருபே ராமே
**109

#109
அடுதலே தீயிற் பாக மாக்குதல் கொலையி ரண்டாம்
**110

#110
அவிர்தலென் பதுவே பீற லாமொளி தனக்கு மப்பேர்
**111

#111
அம்பியென் பதுவே தெப்பம் ஆனநா வாயு மாமே
**112

#112
அந்தர மென்ப வானம் அளவிடம் பேதம் நாற்பேர்
**113

#113
அங்கா ரகன்செவ் வாயும் அக்கினி தானு மாமே
**114

#114
அடரென்ப நெருங்க லின்பேர் ஐம்மையு மாகு மென்ப
**115

#115
அரங்கென்ப தவையில் லேவட் டாடிட மும்மே யப்பேர்
**116

#116
அயனமென் பதுவ ழிப்பேர் ஆண்டினிற் பாதிக் கும்பேர்
**117

#117
அமலையென் பதுவே யோசை அம்பிகை சோறு மப்பேர்
**118

#118
அலவன்கற் கடகம் பூனை அம்புலி ஞெண்டு மாமே
**119

#119
அம்மனை யென்ப தம்மை ஆடுமம் மானைக் கும்பேர்
**120

#120
அரசென்ப நாடு மன்னன் அசுவத்த மும்பேர் மூன்றாம்
**121

#121
அறிக்கையே பற்று வித்தல் அரிதலு மிருபே ராமே
**122

#122
அதரென்ப புழுதி யின்பே ராம்பெரு வழிக்கு மப்பேர்
**123

#123
அருந்தலென் பதுபொ சித்தல் அருமையு மிருபே ராமே
**124

#124
அத்தனே யீச னாசான் அப்பனு மிருபே ராமே
**125

#125
அனித்திய மென்ப பொய்யும் அழிதலு மிருபே ராமே
**126

#126
அண்ணலே பெருமை யீசன் அரசனே யருகன் புத்தன்
**127

#127
அருத்தமென் பதுவே பாதி ஆடகம் பொருள்க ருத்தாம்
**128

#128
அனுவென்ப தொடர்ச்சி யின்பே ராங்கவு ளெனவும் கூறும்
**129

#129
அரியென்ப நெடுமால் காந்தி அரிசிநெற் கதிரே சிங்கம்
இரவிகண் வரியே பச்சை எரிபறை மறலி சாற்றுந்
திரவியம் பாம்பு காற்றுத் தேரொடு மூங்கில் சேகு
வரிபகை தற்க நண்டு வானரம் நீர் வாள் பன்றி
பரியுடன் சிலம்பிற் பெய்த பரல்விலி பாயல் சோலை
எரிபுகர் சயனந் திங்கள் இந்திரன் சக
ககலந் தார்கிள்ளை புகைவலி புணரி
அதலே நிறம ரிதலாக நாற்பத்தே ழாமே
**130

#130
அச்சுத னென்ப மாலும் அருகனு மிருபே ராமே
**131

#131
அளவையென் பதுவே யெல்லை யாந்திர மென்னும் பேரே
**132

#132
அவியென்ப நெய்யுந் தேவர்க் கமைத்திடு முணவு மாமே
**133

#133
அயிராணி இந்திரன்றே வியுமந்த ரன்றே வியும்பேர்

@12 ஆ
**134

#1
ஆதியே முதனே ரோடல் அருகன்மா லீச னொற்றி
**135

#2
ஆரலே ஒருமீ னொற்றி அறுமீனு மதிலு மாமே
**136

#3
ஆவணம் புணர்தம் வீதி அங்காடி யடிமை ஓலை
**137

#4
ஆடியே யொருமா தங்கண் ணாடியுத் திராடம் முப்பேர்
**138

#5
ஆலமே வடவி ருக்கம் அடுநஞ்சொ டலர்ந்த பூநீர்
**139

#6
ஆசையென் பதுசெம் பொன்னும் ஆவலுந் திக்கு மாமே
**140

#7
ஆழிமோ திரமே நேமி அலைகடல் கரைபுள் வட்டம்
**141

#8
ஆவென்ப பசுவே யாச்சா மரமதி சயமி ரக்கம்
**142

#9
ஆனுவென் பதுவே நன்மை யாடரே தாமு மப்பேர்
**143

#10
ஆசார மென்ப தாடை பெருமழை யான சீலம்
**144

#11
ஆர்வமென் பதுதீ யோர்வீழ்ந் தழுந்திய நிரையங் காதல்
**145

#12
ஆலய மென்ப கோயில் ஆனையின் கூட மூராம்
**146

#13
ஆரையென் பதுபுற் பாயோ டணிமதி லாக முப்பேர்
**147

#14
ஆர்வல னென்ப கொண்கன் அன்புடை யோனு மாமே
**148

#15
ஆடவ ரென்ப தாண்பே ராமிளை யவர்க்கு மப்பேர்
**149

#16
ஆறென்ப நதியோ ரெண்பே ராம்வழி தானு மாமே
**150

#17
ஆகமென் பதுச ரீரம் அழகிய மார்பு மாமே
**151

#18
ஆகார மென்ப நெய்யும் அசனமு முடம்பு மாமே
**152

#19
ஆம்பல்வேய் கள்ளுக் கௌவை அல்லிவங் கியமே  யானை
**153

#20
ஆரமே பதக்கம் முத்தாம் ஆத்திசந் தனமும் ஆகும்
**154

#21
ஆடலென் பதுகூத் துப்பெண் ணான்கூடல் வார்த்தைவென்றி
**155

#22
ஆலியே ஆலாங் கட்டி மழைத்துளி தானுமாமே
**156

#23
ஆர்ப்பென்ப தொலிசி ரித்தல் அமரென முப்பே ராமே
**157

#24
ஆர்கூர்மை யாத்தி தேரின் அகத்தினுட் செறிகதிர்ப்பேர்
**158

#25
ஆசென்ப சடுதி குற்றம் அற்பம்மெய்க் கவசம் நாற்பேர்
**159

#26
ஆற்றலே பொறை முயற்சி அதிகமே வலியே ஞானம்
**160

#27
ஆடென்ப வென்றி மேடம் அசமென முப்பே ராமே
**161

#28
ஆகுல மென்ப தோசை யாமிகு வருத்த மாமே
**162

#29
ஆர்தலே குடித்த லுண்டல் அணிதலே நிறைத லும்பேர்
**163

#30
ஆணைமெய் யுடனே வென்றி சூள்ஏவ லாக நாற்பேர்
**164

#31
ஆசினி பலாவி சேடம் மரவுரி மரத்தின் சேகாம்
**165

#32
ஆக்கமே செல்வ மென்பர் அம்புயத் தவளு மாமே
**166

#33
ஆரியென் பதுக பாடம் அழகிரு பெயரென் றாமே
**167

#34
ஆணமென் பதுகு ழம்பும் அங்கிரு பெயரு மாமே
**168

#35
ஆகுவே யெலியி மனாம் ஆண்பெருச் சாளிக் கும்பேர்
**169

#36
ஆதித்த ரென்ப விண்ணோர் ஆதப ருக்கு மாமே
**170

#37
ஆதனென் பதுவே சீவன் அறிவிலோன் பெயரு மாமே
**171

#38
ஆங்கணென்ப தவ்வி டத்தோ டசைச் சொல்லு முவமை யும்பேர்
**172

#39
ஆயமே கவற்றிற் றாயம் ஆதாயம் மாதர் கூட்டம்
**173

#40
ஆய்வென்ப வருத்தமேயா ராய்தலு மாகு மென்ப
**174

#41
ஆய்தலென் பதுநு ணுக்க மாகுந்தே ருதலு மாமே
**175

#42
ஆலலென் பதுமு ழங்கல் ஆடுத லிருபே ராமே
**176

#43
ஆலென்ப தல்ல வென்றல் ஆலமர மென்ப சைச்சொல்
**177

#44
ஆனியே உத்தி ராடம் அழிதலே மூலநாளாம்
**178

#45
ஆனகம் படகத் தின்பே ராகுந்து ந்துமியு மப்பேர்
**179

#46
ஆடக மென்ப செம்பொ னாந்துவ ரைக்கு மப்பேர்
**180

#47
ஆனிய மென்ப நாளும் பொழுதுமென் றறைய லாமே
**181

#48
ஆசுக மென்ப காற்றுக் கானபே ரம்பு மாமே
**182

#49
ஆவியே மூச்சு நாற்றம் ஆருயிர் புகையே வாவி
**183

#50
ஆம்பிர மேபு ளிப்பென் றறைவர்மா மரமு மாமே
**184

#51
ஆரிய ரேமி லேச்சர் அறிவுடை யோரு மாமே
**185

#52
ஆணியென் பதுமற்றாணி அழகெழுத் தாணி முப்பேர்

@13 இ
**186

#1
இரணியே வாணி கத்தோ டிலகுசூ ரியன்வெற் பென்ப
**187

#2
இருளென்ப திமிரம் மைய லேநிரை யங்க றுப்பாம்
**188

#3
இரலையே கலையூ துங்கொம் பிரண்டுடன் முதல்நா ளும்பேர்
**189

#4
இறையென்ப வேந்தன் வீட்டி னிறப்பிறைய ப்புச் சென்னி
சிறுமைபுள் ளிறகுதங்கல் சிறந்தவன் கடனொன் பான்பேர்
**190

#5
இடியென்ப வெடியென் றென்பர் இவற்றிடு முறுதிச் சொல்லே
**191

#6
இறாலென்ப தேன்கூ டோர்மீன் எருதுகார்த் திகையு மாமே
**192

#7
இறும்பென்ப மலைகுறுங்கா டென்பர்தா மரையு மாமே
**193

#8
இராகமே கீதஞ் செம்மை இச்சையே நிறமு மொக்கும்
**194

#9
இலஞ்சியே மகிழ்ம ரப்பேர் ஏரிகொப் பூழின் பேராம்
**195

#10
இடைநடு வென்ப மற்றும் இடைப்பெயர் நுசுப்பு மாமே
**196

#11
இகுளையென் பதுவே கூடி இணங்கிய தோழி யுற்றார்
**197

#12
இரதமே புணர்ச்சி சூதம் இன்சுவை யரைநாண் பொற்றேர்
**198

#13
இலம்பக மத்தி யாயம் எழில்நுதற் சூட்டு மாலை
**199

#14
இந்தன மிசையே காட்டம் எரியிடு கனலு மாமே
**200

#15
இளியென்ப நகை யிரித்த லிசை இறங் குதலி ரித்தல்
**201

#16
இலயமே கூத்துங் கூத்தின் விகற்பமு மிருபே ராமே
**202

#17
இறைவையென் பதுநீர்ப் புட்டில் ஏணியு மிருபே ராமே
**203

#18
இழுக்கென்ப பிழைத்தல் பொல்லாங் கிருபெய ராகு மென்ப
**204

#19
இறப்பென்ப மிகுதி போக்கில் லிறப்பொடு சாவு மாமே
**205

#20
இலாங்கலி யேசெங் காந்தள் இனியதெங் கொடுக லப்பை
**206

#21
இகுத்தலே செகுத்தல் வீழ்த்தல் இளைத்தலோ டாவி தீர்த்தல்
**207

#22
இல்லென்ப தில்லை யென்றல் இராசிசா விடம்வீ டில்லாம்
**208

#23
இரத்தமென் பதுவே செம்மை எருவையென் றிருபேராமே
**209

#24
இராசியென் பதுவேயோரை ஏத்திய கூட்ட முப்பேர்
**210

#25
இபமென்ப மரத்தின் கொம்பும் எறும்பியு மிருபே ராமே
**211

#26
இராசிய மென்ப யோனி எண்ணிய மறைவு மாமே
**212

#27
இகலென்ப வலிப கைப்பேர் இரணமுங் கூறலாமே
**213

#28
இடமென்ப வயினே செல்வம் இடம்புற மகலமும்பேர்
**214

#29
இடக்கரே மறைத்த வார்த்தை கும்பமு மென்ன லாமே
**215

#30
இதழ்பனை யேடு பூவின் இதழுத டுடனிம் முப்பேர்
**216

#31
இயமென்ப பறையும் பேச்சு மிட்டுமுப் பேரென் றாமே
**217

#32
இருசுபண் டியுளி ரும்புஞ் செவ்வையு மிருபே ராமே
**218

#33
இலங்கையாற் றிடைக்கு றைப்பேர் இராவண னூருமாமே
**219

#34
இருபிறப் பென்ப புள்ளு மேமுதற் சாதியும் பேர்
**220

#35
இவர்தலே யெழுச்சி யாசை ஏறுதல் சேறல் மேவல்
**221

#36
இருமென லென்ப தோசை இளமையென் றிருபே ராமே 
**222

#37
இவறலென் பதும றப்பும் இச்சையு மிருபே ராமே
**223

#38
இறத்தலென் பதுந டத்தல் இறப்பொடு மிகுதி யும்பேர்
**224

#39
இளமையென்பதுவே காமம் எய்திய தண்மை யும்பேர்
**225

#40
இறுத்தலென் பதுவே தங்கல் இயம்புத லொடித்தல் முப்பேர்
**226

#41
இரதியே மதனன் றேவி இச்சைபித் தளைபெண்ணி யானை
**227

#42
இறும்பூதென் பதுவி யப்பும் எய்திய மலையுந் தூறும்
**228

#43
இக்கென்ப கள்ளின் பேரே இனியநற் கரும்பு மாமே
**229

#44
இளையும்நல் லிளமை வேலி தலைக்காவற் காடு மென்ப

@14 ஈ
**230

#1
ஈழமென் பதுவோர் தேசம் இரணியங் கள்ளு கள்ளி
**231

#2
ஈசையென் பதுசெம் பொன்னு மிண்டையுங்
**232

#3
ஈடென்ப குழைவே யொப்பே வலியொடு பெருமை யென்ப
**233

#4
ஈமமென் பதும யானம் எரியிடு கலமே காட்டம்
**234

#5
ஈண்டென்படியெனுஞ்சொல் இவ்விடஞ் சடுதி முப்பேர்
**235

#6
ஈனமென் பதுவே சிங்கல் இழிவென்று முரைக்க லாமே
**236

#7
ஈரமென் பதுப குத்தல் எய்திய குளிர்ச்சி யன்பாம்

@15 உ
**237

#1
உடுவிண்மீன் கிடங்கு நாவா யோட்டுங் கோலம்பி லீர்க்காம்
**238

#2
உத்தியே திருவுறுப்போ டுரைபடப் பொறிசு ணங்காம்
**239

#3
உத்தர மென்ப தேம லொடுமறு மொழிவ டக்காம்
**240

#4
உலவையே தழைம ரக்கொம் புயிர்ப்பொடு விலங்கின் கோடாம்
**241

#5
உளியென்ப கணிச்சி யின்பேர் இடமென்று முரைக்க லாமே
**242

#6
உந்திதே ருருளே யாறே உவரிநீர்ச் சுழியே கொப்பூழ்
**243

#7
உப்புமெல் லியலா ராடல் உவர்க்கட லினிமை நாற்பேர்
**244

#8
உறையென்ப மருந்து நீளம் உவர்நீர் யாற பின்பி டைச்சொல்
சிறுதுளி உள்ளி காரந் தீனிவெண் கலமீ ரைந்தாம்
**245

#9
உலகென்ப சனமு யர்ந்தோர் உயர்குணந் திசைவிண் பூமி
**246

#10
உலக்கையே யோண நாளும் உரோங்கலு மாகுமென்ப
**247

#11
உறுவனென் பதுமா சேன னுடன்முனி தானு மாமே
**248

#12
உறையுளென் பதுவே நாடும் ஊரொடு மனையு மாமே
**249

#13
உயவையே கானை யாறும் உற்றகாக் கணமே முல்லை
**250

#14
உழையென்ப தேழி சைக்கு ளொன்று மான் இடம்முப் பேரே
**251

#15
உம்பலென் பதுவே யானை யுடனுயர் குலமி ரண்டாம்
**252

#16
உவாவென்ப திளையோன் வேழம் உததிபூ ரணையாம் நாற்பேர்
**253

#17
உண்டையே திரளை யாகும் உறுபடை யுறுப்பு மப்பேர்
**254

#18
உளைபரி மீது கட்டு மயிர்ப்புற மயிரு மோதும்
**255

#19
உடையென்ப குடைவேல் செல்வம் உடுக்கும்நல் லாடை முப்பேர்
**256

#20
உரையென்ப பொன்னுந் தேய்வும் ஓதிய மொழியு மாமே
**257

#21
உவளக மென்பவாவி யொருபக்க மதிலூர் காவல்
**258

#22
உணர்வென்ப தெளிவே மற்றை யொழிதலே யறிவுமாகும்
**259

#23
உயிரென்ப சீவன் பேராம் ஊதையுங் கூற லாமே
**260

#24
உருத்தலென் பதுவே தோற்றம் ஓதிய கோப மும்பேர்
**261

#25
உரனவென்ப புணர்வே மற்றை யுவழையு மிடையீடும் பேர்
**262

#26
உக்கமே யால வட்டம் உறுமிடை பக்கப் பேரும்
**263

#27
உம்பரே தேவராரும் உயர்நில முடன்மே லும்பேர்
**264

#28
உரமென்ப வலியே ஞானம் ஊக்கமே மார்பு நாற்பேர்
**265

#29
உருவென்ப நிறமே யட்டை ஓதிய வடிவு மாமே
**266

#30
உபமென்ப மகிழ்ச்சி யின்பேர் உயரமு மோத லாமே
**267

#31
உறவியென் பதுவே நீரூற் றுலைக்கள மெறும்பு சீவன்
**268

#32
உறுப்பென்ப தவைய வப்பேர் உடலென்று முரைக்க லாமே
**269

#33
உவணமே கழுகு சேனம் உயர்ச்சியுங் கருட னும்பேர்
**270

#34
உடலென்ப பொன்னின் பேராம் உடம்பென்று முரைக்க லாமே
**271

#35
உள்ளலென் பதுவே நெஞ்சாம் உன்னுத லென்று மாமே
**272

#36
ஊர்தலே வருட லாகும் உதறலுங் கூறலாமே
**273

#37
உப்பென்ப வலியின் பேராம் உற்சாகந் தானுமாமே
**274

#38
உள்ளமென் பதுமு யற்சி யுடன்நெஞ்சு மாகுமென்ப
**275

#39
உறுகணென் பதுநோய் துன்பம் உறுமிடி பயம்நாற் பேரே
**276

#40
உறறென்ப மனவெ ழுச்சி யுடனிழுக தகேதா டாண்மை
**277

#41
உறுதியென் பதுவே நன்மை ஓதிய கல்வி யும்பேர்
**278

#42
உழிஞைதா னெயில்வ ளைத்த லொடுசிறு பூளை யும்பேர்

@16 ஊ
**279

#1
ஊகமென் பதுசந் தேகத் தொடுகருங் குரங்கு மாமே
**280

#2
ஊழென்ப முறையே வெய்யில் உறுபகை முப்பே ராமே
**281

#3
ஊக்கமே வலியுற் சாகம் உள்ளத்தின் மிகுதி யுண்மை
**282

#4
ஊதிய மேயி லாபம் உற்றறி கல்வி யும்பேர்
**283

#5
ஊழ்த்தலென் பதுநி னைத்தல் உறுபத னழிவு செவ்வி
**284

#6
ஊசியென் பதுவே சூசி யுடனெழுத்தாணி யும்பேர்
**285

#7
ஊற்றென்ப தூன்று கோலும் உறவியு மிருபே ராமே
**286

#8
ஊறென்ப திளமை தீண்டல் உறுகொலை யிடையூறும்பேர்
**287

#9
ஊர்தியே சிவிகை பண்டி உம்பலே பரிதேர் மானம்

@17 எ
**288

#1
எச்சமே குறைவு யாகம் எய்திய முப்பே ராமே
**289

#2
என்றூழென் பதுவெ யிற்பே ரேசூரி யோனு மாமே
**290

#3
எல்லென்ப தொளியி கழ்ச்சி இரவியு மிரவு மாமே
**291

#4
எலியென்ப பூர நாளும் இயம்பிய கருப்பை யும்பேர்
**292

#5
எருவையே கொறுக்கை கோரை இரத்தமே கழுகு செம்பாம்
**293

#6
எறுழென்ப வலியின் பேரும் ஏந்திய தண்டு மாமே
**294

#7
எகினமே புளிமா ஞாளி கவரிமா நீர்நா யன்னம்
**295

#8
எஃகென்ப துருக்கே கூர்மை இலகிய வேலு மாமே
**296

#9
எற்றென்ப திரக்க மொத்தல் எற்றலெத் தன்மைத் தென்றல்
**297

#10
எல்லையே யளவை யாகும் இரவியு மியம்ப லாமே
**298

#11
எண்ணென்ப தேவி சாரம் எளிமைசோ திடமி லக்கம்

@18 ஏ
**299

#1
ஏல்வையென் பதுவே காலம் ஏரியு மியம்பலாமே
**300

#2
ஏமமே சேமங் காவல் இன்பம்பொன் னிரவே மையல்
**301

#3
ஏறென்ப முதனாள் வானின் இடியெரு திடபம் நாற்பேர்
**302

#4
ஏனாதி மஞ்சி கன்றந் திரியும்மந் திரியு மென்ப
**303

#5
ஏந்தலென் பதுவே மேடு இறைவனும் பெருமை யும்பேர்
**304

#6
ஏதமென் பதுவே குற்றம் எய்திய துன்ப மும்பேர்
**305

#7
ஏணியே உலகோ டெல்லை இறைவையா மென்னுஞ் சொல்லும்
**306

#8
ஏதியென் பதுவே ஈர்வா ளென்பரா யுதமு மாமே
**307

#9
ஏங்கலென் பதுவே யோசை இரங்குத லிருபே ராமே
**308

#10
ஏற்றலே கோட லென்ப எதிர்ந்துபோர் செய்தலும்பேர்
**309

#11
ஏரென்ப வுழுபெற் றப்பேர் எழிலென்று மியம்பலாமே
**310

#12
ஏனையே ஒழிவு மற்ற இடைச் சொல்லு மடைத்த பேரே
**311

#13
ஏவலென் பதுவி யங்கோள் எய்திய வறுமையும் பேர்
**312

#14
ஏலமென் பதும யிர்ச்சாந் தியம்பிய துடியு மாமே

@19 ஐ
**313

#1
ஐயையம் பிகைத வப்பெண் மகள்காளி துர்க்கை யாசாள்
**314

#2
ஐயென்ப கோழை சாமி அழகிடைச் சொல்லா சான்மன்
**315

#3
ஐயனே மூத்தோன் சாத்தன் அப்பனா சானு மாமே
**316

#4
ஐயமே பிச்சை யேற்கும் ஓடனு மானம் வெண்ணெய்
**317

#5
ஐயதேள் பரைவின் பேரே யாக்கு நோய்என்றுங் கூறும்

@110 ஒ
**318

#1
ஒளியிரு சுடரே தீயே ஒளிப்பிடம் புகழு மாமே
**319

#2
ஒலியென்ப திடியே காற்றே ஓசையென் றாகும் முப்பேர்
**320

#3
ஒழுக்கமே வழியா சாரம் உயர்குலம் முப்பே ராமே
**321

#4
ஒலியலே யாறுந் தோலும் உடுத்திய ஆடை மாலை
**322

#5
ஒளிவட்டந் தான்கண் ணாடி சக்கர மிருபே ரோதும்
**323

#6
ஒண்மையென் பதுவே நன்மை ஒழுங்கறி வழக்கம் மிக்காம்
**324

#7
ஒதுக்கமே நடையின் பேரும் ஒன்றிய மறைவு மாமே
**325

#8
ஒட்டென்ப படைவ குப்பாம் ஒன்றுத லென்று மாமே
**326

#9
ஒல்லையென் பதுவே தொல்லை கடுப்பென்று முரைக்க லாமே

@111 ஓ
**327

#1
ஓணமென் பதுவே யாறும் உற்றமா யோனா ளும்பேர்
**328

#2
ஓரையே மாதர் கூட்டத் தொடுவிளை யாட்டி ராசி
**329

#3
ஓடைநீர் நிலைகி டங்கே ஒருகொடி பட்ட மாமே
**330

#4
ஓங்கலென் பதுவி லங்கல் உயரமே மூங்கி லோடம்
**331

#5
ஓதையென் பதும திற்பேர் உற்றபே ரொலியுமாமே
**332

#6
ஓரியே முசுவின் பேராண் மயிர்முது நரியோர் வள்ளல்
**333

#7
ஓட்டமென் பதுவே தோல்வி ஓடல்மே லுதடு மாமே
**334

#8
ஓதன மென்ப சோறும் உணவென்று முரைக்க லாமே
**335

#9
ஓவென்ப கலிங்கு தன்னில் உறுகத விரக்கம் நீக்கம்
**336

#10
ஓடலே யல்ல வென்றல் ஆமென லோடல் முப்பேர்
**337

#11
ஓதிபெண் மயிரே பூனை ஓந்திமெய்ஞ் ஞானம் வெற்பாம்
**338

#12
ஓதிம மன்னம் வெற்போ டுலவிய கவரி மானாம்
**339

#13
ஓளியே யானைக் கூடம் ஒழுங்கென்று முரைக் கலாமே
&2 ககர வருக்கம்

@2 ககர வருக்கம்

@21 க
**340

#1
கலை மதிப் பங்கு தூசு கல்விநூ லிரலை காஞ்சி 
மலிகால நுட்பஞ் சோறாம் மகரமீன் முசுவீ ரைந்தாம்
**341

#2
கனலியென் பதுநெ ருப்புக் கதிரவன் பன்றி முப்பேர்
**342

#3
கரடமென் பதும தம்பாய் சுவடுங்காக் கையுமி ரண்டாம்
**343

#4
கரமென்ப கிரணஞ் செங்கை கழுதைநஞ் சிறுத்த லைம்பேர்
**344

#5
கவியென்ப புலவன் வெள்ளி கவிதைவா னரமிந் நாற்பேர்
**345

#6
கஞ்சன மேகண் ணாடி கரிக்குரு விக்கும் பேராம்
**346

#7
கலப்பையே நாஞ்சி லோம கனலிவி முப்பொரு ளிரண்டாம்
**347

#8
கலையென்ப காடே எள்ளின் காய்கவர் வழியே யாயில்
**348

#9
கணையென்ப திரட்சி யம்பு கருதிய பூர நாளாம்
**349

#10
களிறென்ப தத்த நாளே கறையடி சுறவு பன்றி
**350

#11
கள்வனே முசுநண் டியானை கருநிறத் தவனே சோரன்
**351

#12
கள்ளென்ப மதுவுந் தேனுங் களவுடன் முப்பே ராமே
**352

#13
கலியென்ப புணரி யோசை கடையுகம் வலியி னாற்பேர்
**353

#14
கணமவை நோய்தி ரட்சி காலநுட் பம்பேய் வட்டம்
**354

#15
கன்னல்சர்க் கரைக ரும்பு காகம்நா ழிகையே வட்டில்
**355

#16
கன்னியா றிளமை யோரை கற்றாழை யழிவி லாமை
**356

#17
கடிகைநா ழிகையே துண்டங் கதவிடு தாழிம் முப்பேர்
**357

#18
கடியென்ப சிறப்புக் கூர்மை காப்பச்சம் புதுமை காலம்
முடுகல்பேர் விளக்க மையம் முருகொடு வரைவீ றாமே
**358

#19
கம்மென்ப தலைவான் ஆவி ககனம்நீர் விடுவெ ளுப்பாம்
**359

#20
கயமென்ப குளமே யாழங் களிறுகள் பெருமை தேய்வாம்
**360

#21
கவந்தமென் பதுநீர் சென்னி கழியுடற் குறையி ரண்டாம்
**361

#22
கனமென்ப புயலே பாரங் காத்திரந் தானுமாமே
**362

#23
கரகமே யாலங் கட்டி கமண்டலந் துளிநீர் கங்கை
**363

#24
கந்தர மென்ப மேகங் கழுத்துநீண் மலைமு ழைப்பேர்
**364

#25
ககனமென் பதுவி சும்பு காடுஞ்சே னையுமாம் முப்பேர்
**365

#26
கழையென்ப புணர்தம் மூங்கில் கரும்பென விரும்பும் முப்பேர்
**366

#27
கமலமென் பதுவே தண்ணீர் கஞ்சமுங் கூறலாமே
**367

#28
கயினியே அத்த நாளுங் கைம்மையு மிருபேர் காட்டும்
**368

#29
கடமென்ப நிதியே யானை கதுப்பரு நெறியு டம்பு
குடம்பதங் குஞ்ச ரத்தின் குழாங்கயி றடவியொன்பான்
**369

#30
கதம்பமென் பதுச வைப்பேர் கடம்பென்றுங் கூறலாமே
**370

#31
கவலைசெந் தினையே வல்லி கவர்வழி துன்பம் நாற்பேர்
**371

#32
கடகமே யானைக் கூட்டங் கைவளை மதிலே வட்டம்
**372

#33
கட்சியென் பதுவேகூடு காடுந்தூங் கிடமு மாமே
**373

#34
கண்டகம் முள்ளும் வாளுங் கானமுஞ் சரிகையும் பேர்
**374

#35
கங்கென்ப வரம்பின் பக்கங் கருத்தினை தானு மாமே
**375

#36
களமமர்க் களமே கண்டங் களாவிடங் கறுப்பே இல்லாள்
**376

#37
கடையென்ப முடிவுங் கூலங் கதவிடம் கீழைம் பேரே
**377

#38
கறையென்ப துரலி ரத்தங் கறுப்பிறை யிறுப்பி னாற்பேர்
**378

#39
கண்டமே கவசம் வெல்லங் கழுத்திடு நிரைவாள் துண்டம்
**379

#40
கதுப்பென்ப தாண்ம யிர்ப்பேர் கவுளும்பெண் மயிரு மாமே
**380

#41
கந்துபண் டியுளி ரும்புங் கம்பமும் யாக்கை மூட்டும்
**381

#42
கடிப்பமே கலன்பெய் செப்புங்காதணி யிருபே ராமே
**382

#43
கன்றென்ப விலங்கின் பிள்ளை கைவளை மரக்கன் றாமே
**383

#44
கலாபமே பீலி யோடுங் கலாம்மணி வடம்ம யூரம்
**384

#45
கரணமென் பதுமெய்க் கூத்து கலவியே கணிதம் புத்தி
**385

#46
கல்லென்ப துவலம் வெற்புக் கம்பலை முப்பே ராமே
**386

#47
கவிகையென் பதுகொ டுத்தல் கவித்திடு குடையு மாமே
**387

#48
கணிச்சியே யறிகை தோட்டி கையுளி மழுநாற் பேரே
**388

#49
கதைதண்டா யுதமே வார்த்தை காரணஞ் சொலலிம் முப்பேர்
**389

#50
கச்சமா னைக்க ழுத்திற் கயிறள வொடும ரக்கால்
**390

#51
கதவென்ப கபாடத் தின்பேர் காவலு முரைக்க லாமே
**391

#52
கம்பமென் பதுவே தம்பங் கருதிய நடுக்க முப்பேர்
**392

#53
கறுப்பென்ப சினக்கு றிப்புங் கருமையுஞ் சினமு மாமே
**393

#54
கம்பலை யென்ப தச்சங் கம்பித மொலியே துன்பம்
**394

#55
கந்தமைம் புலனே நாற்றங் கழுத்தடி கிழங்கு நாற்பேர்
**395

#56
கறங்கலென் பதுவே சுற்றல் கருதிய வொலியு மாமே
**396

#57
கஞறலே சிறுமை யின்பேர் பொலிவென்றுங் கருத லாமே
**397

#58
கருணியென் பதுபெண் யானை களிறென்று முரைக்க வாமே
**398

#59
கடவுளென் பதுவே நன்மை கருதிய முனியே தெய்வம்
**399

#60
கணக்கென்ப திலக்க மென்று கருதுவ ரெழுத்து மாமே
**400

#61
கதலியே வாழைத் தாறு காற்றாடி துவசம் நாற்பேர்
**401

#62
களேபரம் பிணமெ லும்பு காத்திரம் முப்பே ராமே
**402

#63
கச்சையென் பதுத ழும்பு கயிறொடு கவசம் முப்பேர்
**403

#64
கயில்பிடர்த் தலையே பூணின் கடைப்புணர் விருபே ராமே
**404

#65
கஞ்சமே தாளங் குல்லை கமலம்வெண் கலமே யப்பம்
**405

#66
கலிங்கமே வானம் பாடி காழக மொருபாடைப்பேர்
**406

#67
கந்தரு வந்தா னேநல் லிசையோடு கற்கி யும்பேர்
**407

#68
ககமென்ப பறவை யோதி கட்டிய பகழி யும்பேர்
**408

#69
கவடென்ப யானை கட்டுங் கயிறுடன் கப்பு மாமே
**409

#70
கருமையே பெருமை யென்பர் கறுப்பொடு வலியு மாமே
**410

#71
களங்கமென் பதுவே குற்றங் கறையென்றுங் கருத லாமே
**411

#72
கரேணுவே பிடியா னைப்பேர் கடகள் றென்று மாமே
**412

#73
கனைத்தலே யொலித்த லோடு கருதிய திரளி ருட்பேர்
**413

#74
கடைப்பிடி மறைப்பி லாமை கருதிய தேற்ற மாமே
**414

#75
கட்டளை நிறைத லொப்பே இட்டிகை யியற்ற லாணி
**415

#76
கண்டலென் பதுநீர் முள்ளி கைதையு மிருபே ராமே
**416

#77
கரைதலென் பதுவி ளித்தல் கனைத்தலே யழைத்தல் முப்பேர்
**417

#78
கதழ்வென்ப சிறப்பி னோடு கடுகலு மிருபே ராமே
**418

#79
களியென்ப குழம்பி னோடு களிப்பென்றுங் கருத லாமே
**419

#80
கத்திகை தொடைவி கற்பந் துவசமே கமழ்வா சந்தி
**420

#81
கந்துகம் மென்பந் தென்றுங் கருதுவர் குதிரைக் கும்பேர்
**421

#82
கப்பண மிரும்பிற் செய்த நெருஞ்சிமுட் கைவே லாமே
**422

#83
கலாமென்ப கொடுமையோடு காட்டிய சினமு மாமே
**423

#84
கரியென்ப திருந்தை சான்று களிறிவை முப்பே ராமே
**424

#85
கரீரமென் பதுவே யானை களிற்றின்பல் லடிய கத்தி
**425

#86
கனவெனும் பெயரே மையல் கண்படை யிருபே ராமே
**426

#87
கட்டலென் பதுவி ளித்தல் களைதலோ டேத டுத்தல்
**427

#88
கந்தனென் பதுவே புத்தன் கரிமுகன் றம்பிக் கும்பேர்
**428

#89
களரியே கருமஞ் செய்யு மிடம்பொரு களமே காடாம்
**429

#90
கற்பமே பதுமன் தேவர் காலங்கற் பகஞ்சு வர்க்கம்
**430

#91
கடுத்தலென் பதுவே யொப்புக் கருதிய வேக மையம்
**431

#92
கதவமென் பதுவே காத்தல் காவலே கதவு முப்பேர்
**432

#93
கரியவ னென்பமால் ஆகண்டலன் சனிமுப் பேரே
**433

#94
கரிலென்ப கொடுமை குற்றங் காழ்த்தலுங் கருது முப்பேர்
**434

#95
கலுழியே கான்யா றென்பர் கலங்கிய நீரு மாமே
**435

#96
கவனமே கலக்கங் காடு குதிரையின் கதிமுப் பேரே
**436

#97
கழிதலென் பதுவே சாதல் கடத்தலே மிகுதி முப்பேர்
**437

#98
கழுமலே மயக்கம் பற்றாங் கருதிய நிறைவு மாமே
**438

#99
கழல்கழங் கொடு செருப்புக் காலணி காலும் நாற்பேர்
**439

#100
கயமென்ப பெருமைதானே கருதிய மென்மை யும்பேர்
**440

#101
களவென்ப களாம ரப்பேர் கரவென்று முரைக்க லாமே
**441

#102
களபமே யானைக் கன்று கமழ்சாந்து கலவை முப்பேர்
**442

#103
கம்புளே சம்பங் கோழி கம்பொடு வானம் பாடி
**443

#104
கண்ணென்ப விழியே மூங்கில் கணுவுடனிடமு மாமே
**444

#105
கருவியென் பதுவே யீட்டங் கவசமே தொடர்பு கச்சை
இரைமுகில் கலணை யாழ்பல் லியந்துணைக் கார ணங்கள்
புரிபல வினைப்பே ரொன்று பொருபடைக் கலம்பன் னொன்றாம்
**445

#106
கம்பென்ப சங்கி னோடு கையுறு கோலும் புல்லும்
**446

#107
கடுவிடம் முள்ளுத் தானே அரிதகி கசப்பு நாற்பேர்
**447

#108
கழங்கென்ப வேல னாடல் கழற்கொடி இருபே ராமே
**448

#109
கலமென்ப யாழ்மு னொரென கட்டலுண் கலம்மட் பானை
**449

#110
கவ்வையென் பதுப ழிச்சொல் கவலைகள் ளோசை துன்பம்
**450

#111
கரையென்ப முடிவின் பேராங் கருதுநீர்த் துறையு மாமே
**451

#112
கழுதென்ப வண்டும் பேயுங் காவலின் பரணு மாமே
**452

#113
கருவிள மியற்சீ ரின் பேர் காக்கணந் தானு மாமே
**453

#114
கழியென்ப மிகுதி காலைக் காலமே களிமு சப்பேர்
**454

#115
களியென்ப வண்டு நாவேங் கையொடு மருதப்பூமி

@22 கா
**455

#1
காளமே கழுவும் நஞ்சுங் கறுப்புக்கா களமும் நாற்பேர்
**456

#2
கார்நீர்வெள் ளாடு மேகங் கறுப்பிருள் மாரிக் காலம்
**457

#3
காஞ்சியே மரமோர் பண்மே கலையெதி ரூன்றல் கச்சி
**458

#4
காரியே வள்ள லையன் கடுச்சனி வடுக னாற்பேர்
**459

#5
காலமென் பதுபோ தென்னக் கழறுவர் புலரி யின்பேர்
**460

#6
கால்வலி மலர்க்காம் பூதை கழல்வழி யமன்சேய் வாய்க்கால்
**461

#7
காண்டையென் பதுத வத்தைக் கருதுவோ ரிடங்கற் பாழி
**462

#8
காந்தார மென்ப தோர்பண் கானக மிருபே ராமே
**463

#9
காமர மத்த நாளே கவியின்பண் ணடுப்பு முப்பேர்
**464

#10
காளையே புருடன் பாலைக் கதிபன்புங் கவமும் முப்பேர்
**465

#11
காயம்மெய் விண்வெண் காயம் பெருங்காயம் கறிக ரித்தல்
**466

#12
காத்திரங் கனஞ்ச ரீரம் களிற்றின்முன் காலே சீற்றம்
**467

#13
காசென்ப கோழை குற்றங் கதிர்விடு மணிமுப் பேரே 
**468

#14
காழென்ப மணியின் கோவை கற்பரல் சேகு வித்தம்
**469

#15
காவியே தாது கள்ளாங் கருங்குவ ளைக்கும் பேரே
**470

#16
காழக மென்ப தாடை கருநிற மிருபே ராமே
**471

#17
கானமென் பதுபாட் டின்பண் காடென்றுங் கருத லாமே
**472

#18
கானலே மலையின் சாரல் கடற்கரைச் சோலை பேய்த்தேர்
**473

#19
காகுளி தவிசே கண்டத் தெழுமொலி கவியி மண்ணாம்
**474

#20
காவென்ப சோலை யோடு காவடி துலையே காத்தல்
**475

#21
காசையென் பதுவே நாணல் காயாவு மாகு மென்ப
**476

#22
காணமே பரியூண் செக்கோர் காணம்பொற் காசு நாற்பேர்
**477

#23
காம்பென்ப மூங்கில் பட்டுக் கருதிய மலர்த்தாள் முப்பேர்
**478

#24
காழிய ரென்ப தேகா லியருப்பு விற்போ ராமே
**479

#25
கானென்ப சாரி யைப்பேர் காடுபூ மணமு மாமே
**480

#26
காப்பென்ப நீறுந் தூசுங் காவலுங் கதவு மாமே
**481

#27
காதலே கோற லென்று கருதுவ ராசை யும்பேர்
**482

#28
காடென்ப சுடலை யின்பேர் கானகந் தானு மாமே
**483

#29
காலிலி யென்ப காற்று கட்செவி யருணன் முப்பேர்
**484

#30
காண்டமே முடிவு கானங் கமண்டலங் கலன்பெய் செப்பு
** நீண்ட தாம் புடவை யம்பு நீரிடு திரைகோல் பத்தாம்
**485

#31
காமரென் பதுவிருப்பம் கட்டழ கிருபே ராமே
**486

#32
காதையென் பதுமொ ழிப்பேர் கதையென்றுங் கூறலாமே

@23 கி
**487

#1
கிழமையே பண்பு வாரங் கிளத்திடு முரிமை முப்பேர்
**488

#2
கிடக்கையே பூமி யென்ன கிளத்துவர் சயன மும்பேர்
**489

#3
கிளையென்ப மூங்கில் சுற்றங் கிளைத்தலே ழிசையி லோர்பண்
**490

#4
கிட்டியே தலையீற் றாவாங் கிளத்திய தாள மும்பேர்
**491

#5
கின்னர மேயா ழாந்தை கேடில்நீர்ப் புள்ளும் முப்பேர்
**492

#6
கிடுகுதேர் மரஅச் சும்பேர் கேடகந் தானு மாமே
**493

#7
கிளரென்ப கோட்டுப் பூவிற் கிடக்குந்தா தொளியி ரண்டாம்
**494

#8
கிஞ்சுகஞ் செந்நிறப்பேர் கிளைத்தெழு முருக்கு மாமே
**495

#9
கிள்ளையே குதிரை யின்பேர் கிளியென்று முரைக்க லாமே
**496

#10
கிழக்கென்ப கீழ்த்தி சைப்பேர் கீழென்று முரைக்க லாமே
**497

#11
கிருட்டின னருச்சு னன்பேர் கேசவன் றனக்கும் பேரே
**498

#12
கிருத்திமந் தோலே பண்ணல் கெட்டபொய் விட்ட பூதம்
**499

#13
கிம்புரி யானைக் கொம்பிற் கிடக்கும்பூண் முடியு றுப்பாம்
**500

#14
கிருட்டியே ரீற்றா வென்று கிளத்துவர் பன்றிக் கும்பேர்
**501

#15
கிழியென்று நிதிப்பொ திப்பேர் கீற்றென்று முரைக்க லாமே

@24 கீ
**502

#1
கீரமென் பதுவே பாலுங் கிள்ளையு மிருபே ராமே
**503

#2
கீசக மேகு ரங்குங் கிளைத்தெழு மூங்கி லும்பேர்
**504

#3
கீலால முதிரங் காடி கிளத்திய நீரு மாமே
**505

#4
கீதமென் பதுசு ரும்புங் கேட்கும்நல் லிசையு மாமே
**506

#5
கீழென்ப பகைமை யோடு கிழக்குமா மிடமு மாமே

@25 கு
**507

#1
குருதியே யுதிரஞ் செவ்வாய் கூறிய சிவப்பு மாமே
**508

#2
குலமென்ப சாதி கோயில் கூட்டமே கடைநா ளில்லம்
**509

#3
கும்பமே குடமி ராசி கும்பிமத் தகமு மாமே
**510

#4
கும்பியே நிரையத் தின்பேர் குஞ்சரஞ் சேறு மாமே
**511

#5
குடிலமென் பதுவி சும்பு கோணலுஞ் சடையு மாமே
**512

#6
குமுதமே யடுப்போர் திக்பின் குஞ்சர மொலிவெள் ளாம்பல்
**513

#7
குண்டென்ப தாழந் தாழ்வு கோல்குதி ரையிலா ணும்பேர்
**514

#8
குவலைய மென்ப ஞாலங் குவளையுங் கூற லாமே
**515

#9
குமரிகற் றாழை கன்னி கொற்றவை காளிக் கும்பேர்
**516

#10
குயிலென்ப மொழியே மேகங் கோகிலந் துளைநாற் பேரே 
**517

#11
குன்றுவே தண்டத் தோடு குறைவறு சதைய நாளாம்
**518

#12
குருநிறம் வியாழ மோர்நோய் குரவன் பாரம் பேரைந்தாம்
**519

#13
குடியென்ப தூரின் பேருங் குலமுடன் புருவம் முப்பேர்
**520

#14
குறிஞ்சியே மலையின் சார்பாங் கூறுமோர் மரமிசைப்பேர்
**521

#15
குவடென்ப மலையின் பேராங் கொடுமுடி மரக்கொம் பின்பேர்
**522

#16
குறும்பொறை யென்ப காடாங் குறிஞ்சியூ ரென்று மாமே
**523

#17
குடிஞைபுட் பொதுவும் ஆறுங் கூகையு மாகுமென்ப
**524

#18
குளமென்ப கரும்பின் கட்டி குட்டமும் நுதலு மாமே
**525

#19
குருகென்ப வெள்ளை மூலங் கொல்லுலை நாரை கோழி
மருவிய வளையே பக்கி மாதவி இளமை யொன்பான்
**526

#20
குழையென்ப தளிரே சேறு குண்டலம் முப்பே ராமே
**527

#21
குடம்நகர்ப் பசுமால் கூத்துக் கும்பம்நற் கருப்பங் கட்டி
**528

#22
குணுங்கர்தோற் கருவி மாக்கள் குயிலுவ ரிழிஞர் மூன்றாம்
**529

#23
குஞ்சமே யளக்கும் நாழி குறள்குன்றிக் குறளைச் சொல்லே
**530

#24
குரலென்ப சிறகைம் பானெற் குலையேதந் திரியி ராகம்
**531

#25
குளிரென்ப மழுவே ஞெண்டே குடமுழாக் கவணோர் கத்தி
**532

#26
குரையென்ப திடைச்சொல் லோடு குதிரையு மொலியும் முப்பேர்
**533

#27
குலையென்ப காய்க்கொத் தம்பின் குதையுஞ்செய் கரையு மாமே
**534

#28
குய்யென்ப கறிக ரித்தல் குளிர் மணம் புகையு மாமே
**535

#29
குடம்பையென் பதுவே முட்டை கூடென்றுங் கூறலாமே
**536

#30
குழலென்ப கழையே மாதர் கூந்தலாண் மயிரும் முப்பேர்
**537

#31
குடுமியென் பதுவே உச்சி கூறுமாண் மயிரே வெற்றி
**538

#32
குயமென்ப திளமை யோடு கொங்கையு மரிவா ளும்பேர்
**539

#33
குட்டமே தொழுநோ யாழங் குளமெனப் பெயர்முப் பாற்றே
**540

#34
குணமென்ப கயிறும் பண்புங் கும்பமு மாக முப்பேர்
**541

#35
குல்லையென் பதுவே கஞ்சாக் கூறிய துளசி வெட்சி
**542

#36
குத்தியென் பதுமு டங்கல் கூறிய மண்ணு மாமே 
**543

#37
குபேரனென் பதுநி திக்கோன் குளிர்மதி யிருபே ராமே
**544

#38
குறடென்ப பலகை யோடு கூறிய திண்ணை யும்பேர்
**545

#39
குறளென்ப கூளியோடு குஞ்சமுங் குறுமை யும்பேர்
**546

#40
குற்றலென் பதுப றித்தல் குற்றலென்று முரைக்க லாமே
**547

#41
குந்தமென் பதுவே கைவேல் குதிரைவைக் கோல்குருந்தம்
**548

#42
குயிறலே செறிதல் பண்ணல் குடைதல்கூ வுதல்பேச் சைம்பேர்
**549

#43
குவவென்ப திரட்சி மற்றுங் குவிதலே பெருமைக் கும்பேர்
**550

#44
குரங்கென்ப வளைவு மந்தி கொடு விலங் கின்பொதுப்பேர்
**551

#45
குய்யமென் பதுவே யோனி குத்திரம் மறைவு முப்பேர்
**552

#46
குரவனென் பதுபி தாவுங் குருவொடு பிரமனும் பேர்
**553

#47
குடங்கரென் பதுவே கும்பங் குடிசையு மாகு மென்ப

@26 கூ
**554

#1
கூற்றென்ப மொழியின்பேர் செங் கோற்கட வுளுக்கும் பேரே
**555

#2
கூளியென்பதுபூ தம்பேய் குடும்பமோ டெருது நாற்பேர்
**556

#3
கூடமே மறைதல் வஞ்சங் கொடுமுடி பொய்சம் மட்டி
**557

#4
கூலமே முசுவுண் பண்டங் குளிர்புனற் கரைவி லங்கின்
வாலுடன் பாகலேயா வணம்பசு வாவெண் பேராம்
**558

#5
கூந்தலென் பதுவே மாதர் குழல்மயி லிறகி ரண்டாம்
**559

#6
கூவிர மென்ப தேரின் கொடிஞ்சியுந் தேரு மாமே
**560

#7
கூத்தனென் பதுந டிப்போன் கூறிய சீவ னும்பேர்
**561

#8
கூழென்ப துணவும் பொன்னும் கூறிய பயிரு மாமே
**562

#9
கூரென்ப மிகுதியோடு கூர்மையுங் கூறலாமே
**563

#10
கூரலே மாதரோதி குருவியி னிறக தாமே
**564

#11
கூழையே சிறகு மாதர் கூந்தல்வெம் படையு றுப்பாம்

@27 கே
**565

#1
கேடகம் பரிசை வேறோர் கேடிலூர் பலகை முப்பேர்
**566

#2
கேழென்ப நிறமே யொப்பே கிளரொளி முப்பே ராமே
**567

#3
கேசம்பெண் மயிராண் பங்கி கிள புற மயிர்முப் பேரே
**568

#4
கேசரம் மகிழ்ம ரப்பேர் கிளத்துபூந் தாதுமாமே
**569

#5
கேதுவே ஒருசெம் பாம்புங் கேதன மிருபே ராமே
**570

#6
கேவலந் தனிமை முத்தி கீழுறு மவத்தை முப்பேர்
**571

#7
கேட்டையென் பதுவே யோர்நாள் கெடலணங் கென்று மாமே
**572

#8
கேள்வியென்பதுவே கல்வி கேட்டுணர் செவியு மாமே
**573

#9
கேகய மசுண மாவேழ் கீதமஞ் ஞையு மாமே

@28 கை
**574

#1
கையென்ப சிறுமை தன்கை கரமிடஞ் சார்பொ ழுக்காம்
வெய்யகுற் றங்கை செய்தல் மிகுபடை யுறுப்பொன் பான்பேர்
**575

#2
கைத்தலென் பதுசி னப்பேர் கைப்பென்று முரைக்க லாமே
**576

#3
கைக்கிளை யிசைவி கற்பா மொருதலைக் காம மும்பேர்
**577

#4
கைத்தென்ப வெறுப்பி னோடு காஞ்சனந் தானு மாமே

@29 கொ
**578

#1
கொடிறென்ப பூச நாளுங் கூறிய கவுளு மாமே
**579

#2
கொக்குமா மரமே செந்நாய் குரண்டமே குதிரை மூலம்
**580

#3
கொன்பய னிலாமை காலங் கூறிய பெருமை யச்சம்
**581

#4
கொற்றியே கொற் றிதுர்க்கை கோவிளங் கன்றுமாமே
**582

#5
கொண்மூவென் பதுவிண்ணேறு கூறுவர் மேக மும்பேர்
**583

#6
கொண்டலென் பதுகீழ் காற்று குமுறிய மேக மும்பேர்
**584

#7
கொந்தளம் மாத ரோதி குழற்கொத்துக் குருளை முப்பேர்
**585

#8
கொம்மையே இளமை வட்டங் கொங்கை கைகுவித்துக் கொட்டல்
**586

#9
கொண்டையே மயிர்மு டிக்கு மிலந்தையின் கனிக்குங் கூற்றாம்
**587

#10
கொற்றமே யரசி யற்பேர் கூறிய வெற்றி யும்பேர்
**588

#11
கொல்லென்ப தசைச்சொல் லையங் கொலை யேவல் வருத்த மும்பேர்
**589

#12
கொடியென்ப தொழுங்கு வல்லி கூறியது வசங் காக்கை

@210 கோ
**590

#1
கோடைமேல் காற்றி னோடு குதிரைவெண் காந்தள் வேனில்,
**591

#2
கோளென்ப வலியே கோறல் குணமிடை யூறொன் பான்கோள்
**592

#3
கோலமே இரந்தை பன்றி பாக்குநீர் கொழுந்து பீர்க்காம்
**593

#4
கோட்டங்கோண் படப்பை நாடு கோவிலவ் வியமான் கொட்டில்
**594

#5
கோவென்ப நீர்விண் பார்கண் குலிசந்திக் கிறையம் பாவாம்
**595

#6
கோத்திரம் புடவி தானே குலமொடு மலையு மாகும்
**596

#7
கோடென்ப வயல்வ ரம்பு கொடுமுடி விலங்கின்கொம்
போடு நீர்ம ரக்கொம் பூதுகொம் பொடுசங் கேழாம்
**597

#8
கோசமே மதிலு றுப்பாண் குறிமுட்டை முறைபண் டாரம்
**598

#9
கோட்டியே சபையி னோடு கோபுர வாயி லும்பேர்
**599

#10
கோதைமுன் கைத்தோற் கட்டி குழல்தார்காற் றெழுங்கு சேரன்
**600

#11
கோளகை யென்ப வட்டம் மண்டலி யரவுங் கூறும்
**601

#12
கோணென்ப வளைவி னோடு கூனுமாங் கூறு மாமே
**602

#13
கோடகம் மடியு றுப்புங் குதிரையும் புதுமை யும்பேர்
**603

#14
கோரமென் பதுவே சோழன் குதிரைக்குங் கொடுமைக் கும்பேர்
**604

#15
கோசிகஞ் சாம வேதங் கூறுபட் டாடை யும்பேர்
**605

#16
கோடிக மேபூத் தட்டுங் கூறையு மிருபே ராமே
**606

#17
கோடர மென்ப சோலை குதிரைகொம் பொடுகு ரங்காம்
**607

#18
கோகுல மென்ப பல்லி குயிலொடு குரங்கு மாமே
**608

#19
கோளிபூ வாது காய்க்கும் மரமொடு கொழிஞ்சிக் கும்பேர்
**609

#20
கோழியே யுறையூ ரின்பேர் குக்குடந் தானு மாமே
**610

#21
கோணமென் பதுவே வாளுங்குதிரையும் மூக்கு மாமே
**611

#22
கோடியென் பதுவே யெண்ணுங் கூறையும் புதுமை யும்பேர்
**612

#23
கோணலே மாறுபாடுங் கூனுமாம் வளைவு மாமே
**613

#24
கோலென்ப தஞ்ச னக்கோல் துகிலிகை துலாக் கோல்
ஞாலமன் னவர்செங் கோல்யாழ் நரம்புமத் திகையம் பேழாம்

@211 கௌ
**614

#1
கௌவையென் பதுவே துன்பம் கள்ளுடன் பழிச்சொல் முப்பேர்
**615

#2
கௌசிகம் விளக்குத் தண்டோர் பண்பட்டுக் கடிய கோட்டான்
&3 சகர வருக்கம்

@3 சகர வருக்கம்

@31 ச
**616

#1
சம்புவே நரிமா லீசன் சதுமுக னாவ லோர்புல்
**617

#2
சத்தியென் பதுவே லூற்றஞ் சாம்பவி கொடியே கான்றல்
**618

#3
சமமென்ப நடுவி னோடு தருமனுங் கானுமாமே
**619

#4
சதியுரோ கணிகற் பாட்டி தவிராத வட்ட மாமே
**620

#5
சந்தியோ ரந்தி மூங்கில் சதுக்கமோ ரிசையும் நாற்பேர்
**621

#6
சரியென்ப கைவ ளைக்குஞ் சாற்றிய வழிக்கு மாமே
**622

#7
சரணமே மறைபு கற்பேர் தாளுட னூரு மாமே
**623

#8
சடையென்ப மரவே ரின்பேர் சடிலமுங் கூறலாமே
**624

#9
சவிமணிக் கோவை செவ்வி சாற்றிய வனப்புக் காந்தி
**625

#10
சரந்தனி மணிவ டப்பேர் சாயம்நா ணலும்பே ராமே
**626

#11
சலாகையென் பதுநா ராசஞ் சவளம்நன் மணிகாந் தக்கல்
**627

#12
சகுனியென் பதுநி மித்தஞ் சாற்றுவோன் பறவைக் கும்பேர்
**628

#13
சாத்திரங் குடையே அன்ன சாலைகை விடாவேல் வேள்வி
**629

#14
சடமென்ப வஞ்ச கப்பேர் தனுவென்றுங் கூறலாமே
**630

#15
சகுந்தமே பறவை யென்னச் சாற்றுவர் கழுகு மாமே
**631

#16
சகுனமே கிழங்கு புள்ளின் சாதியும் நிமித்த முப்பேர்
**632

#17
சடிலமென் பதுநெ ருக்கஞ் சடையொடு குதிரை முப்பேர்
**633

#18
சக்கிரி குயவன் செக்கான் தராபதி நெடுமால் பாம்பு
**634

#19
சசியெனும் பெயர்கற் பூரஞ் சந்திர னிந்தி ராணி
**635

#20
சங்கமே கணைக்கா லோரெண் சபைசங்கு புலவர் நெற்றி
**636

#21
சண்டனென் பதுப தங்கள் சமனலி முப்பே ராமே
**637

#22
சக்கர மென்ப தாழி தரணியோர் புள்ளு வட்டம்
மிக்கதே ருருள்பி றப்பு வெற்பொடு பெருமை யென்பர்
**638

#23
சத்திய மென்ப மெய்யே சபதமுங் கூற லாமே
**639

#24
சந்தமே நிறம்வ னப்புச் சாற்றிய கவிசாந் தின்பேர்
**640

#25
சலமென்ப வயிரந் தண்ணீர் சாற்றிய நடுக்கம் பொய்யாம்
**641

#26
சயமென்ப வெற்றி யோடு சருக்கரை தானு மாமே
**642

#27
சரபமெண் காற்புள் ளென்ப வரையாடு தானு மாமே
**643

#28
சராவமே யகல்ச லாகை சாற்றுசுத் திகையு மாமே
**644

#29
சமழ்த்தலென் பதுவ ருத்தஞ் சாற்றிய நாண மும்பேர்
**645

#30
சயிந்தவ மென்ப வாசி தலையுமிந் துப்பு மாமே
**646

#31
சதமென்ப நூறு புள்ளின் சதனமு மிலையுமாமே

@32 சா
**647

#1
சான்றோனென் பதுப தங்கன் சால்புடை யோனு மாமே
**648

#2
சாதக மென்ப பூதஞ் சனனமே வானம் பாடி
**649

#3
சாமியென் பதுவி யாழந் தலைவனா சான்பூ பாலன்
**650

#4
சாமமோர் வேதம் பச்சை தன்னுட னிரவே யாமம்
**651

#5
சானுவே முழந்தாள் வெற்பின் சாரலு மிருபே ராமே
**652

#6
சாரல்ஏ மந்தம் யாழி னிசையொடு சயிலப் பக்கம்
**653

#7
சானகி யென்ப மூங்கில் சனகன்றன் மகளு மாமே
**654

#8
சாம்பல்கூம் புதல்ப ழம்பூத் தன்னுடன் நீறுமாமே
**655

#9
சாலமே வலைசா லேகம் மராமரஞ் சபைம திற்பேர்
**656

#10
சாலேகம் பூவரும்பு சாளர மிருபே ராமே
**657

#11
சாதியே பிரம்பு கள்ளோர் தருச்சிறு சண்ப கப்பேர்
**658

#12
சாரண ரென்ப தொற்றர் சமணமுனி வோரு மாமே
**659

#13
சாறென்ப விழவுங் கள்ளுந் தருவுறு குலையும் முப்பேர்
**660

#14
சாலியென் பதுநெற் கள்ளுச் சாற்றருந் ததிமுப் பேரே
**661

#15
சாரங்க மென்ப மாயோன் தனுவொடு விற்பொதுப் பேர்
**662

#16
சாபமென் பதுவே வில்லுஞ் சபித்தலு மிருபே ராமே
**663

#17
சாகஞ்சா கினிவெள் ளாடு தேக்கெனுந் தருவே தேனீ
**664

#18
சாகினி யென்ப கீரை சகுடமுங் கூற லாமே
**665

#19
சாரங்க மென்ப வண்டு சாதகப் புள்ளு மாமே
**666

#20
சாரிகை யென்ப சூறை சாற்றிய பூவை சுங்கம்
**667

#21
சாயலென் பதுமெய்ப் பாடு தருமழ குடனே மென்மை
**668

#22
சாகர மென்ப நீண்ட சமுத்திரந் துயிலொ ழித்தல்,
**669

#23
சால்பென்ப மாட்சி மைப்பேர் சான்றாண்மை தானு மாமே
**670

#24
சாலையே குதிரைப் பந்தி அறப்புறந் தருதி ரைப்பேர்
**671

#25
சாந்தமே பொறுமை யோடு சந்தனந் தானு மாமே
**672

#26
சாம்பென்ப பொன்னின் பேருந் தட்டிய பறையு மாமே
**673

#27
சார்பென்ப திடத்தி னோடு சார்தலு முரைக்க லாமே
**674

#28
சாத்தனே காரி புத்தன் சாதரூ பிக்கும் பேரே
**675

#29
சாதமென் பதுவே பூதஞ் சாற்றிய மெய்மை யும்பேர்

@33 சி
**676

#1
சிவையென்ப மாவே கொல்ல னுலைமுகந் தேவி யோரி
**677

#2
சிதம்விண்மீன் ஞானம் வெள்ளை செயமுறப் பட்ட தாமே
**678

#3
சிந்தென்ப நதியே நீர்முச் சீர்கடல் குறளோர் தேசம்
**679

#4
சிதரென்ப துவலை வண்டே உறிசீலைத் துணிநாற் பேரே
**680

#5
சிமையமே மலையி னுச்சி செப்பிய கிரியு மாமே
**681

#6
சினையென்ப முட்டை பீளே செழுமரக் கொம்பும் முப்பேர்
**682

#7
சிலையென்ப வில்லுங் கல்லுஞ் செப்பிய ஒலியு மாமே
**683

#8
சிலீமுக மம்பு வண்டு திருந்திய முலைக்கண் முப்பேர்
**684

#9
சிமிலியே யுறியி னோடு சிள்வீடுங் குடுமி யும்பேர்
**685

#10
சிந்துரம் புளிமா தங்கஞ் செங்குடை திலதஞ் செம்மை
**686

#11
சிரகமே கரக மாகுஞ் சென்னியிற் சோடு மப்பேர்
**687

#12
சிதலையென் பதுவே நோயுஞ் செல்லொடு துணியு மாமே
**688

#13
சிகண்டியே யலியும் பாலை யாழுஞ் சேர் மயிலு மாமே
**689

#14
சில்லியே வட்டங் கீரை தேருருள் சிள்வீ டென்ப
**690

#15
சிறைகரை பக்கம் புள்ளின் சிறகொடு காவ லும்பேர்
**691

#16
சிவப்பென்ப சினக்கு றிப்புஞ் செம்மையுஞ் சினமு மாமே
**692

#17
சில்லையென் பதுப கன்றை சிள்வீடு தூர்த்தை முப்பேர்
**693

#18
சிகரிகோ புரமே வெற்புச் சீறெலி நாரை நாற்பேர்
**694

#19
சித்தமென் பதுவே யுள்ளத் திடமென்றுஞ் செப்பலாமே
**695

#20
சிற்பனு மாகு மென்ப
**696

#21
சிகியென்ப மஞ்ஞை தீயாஞ் சிலம்பொடு கேது வும்பேர்
**697

#22
சித்திர மென்ப காடு சிறந்தவிம் மிதமே ரண்டம்
**698

#23
சித்திர பானு செந்தீ திவாகர னாண்டொன் றும்பேர்
**699

#24
சிலம்பென்ப தோசை வெற்புச் சிறந்தநூ புரமு மப்பேர்
**700

#25
சிகரமே மலையினுச்சி திரைசென்னி திவலை வெற்பாம்
**701

#26
சிகழிகை மயிர்மு டிப்பேர் சிறந்தவா சிகையு மாமே
**702

#27
சிதடனென் பதுவே மூடன் செப்பிய குருட னும்பேர்
**703

#28
சிரமென்ப நெடுங் காலப் பேர் சென்னியு மன்ன தேயாம்
**704

#29
சிவமென்ப குறுணி முத்தி செப்பிய நன்மை யும்பேர்
**705

#30
சித்தென்ப ஞானத் தின்பேர் செயமென்று முரைக்க லாமே

@34 சீ
**706

#1
சீதமென் பதுநீர் மேகஞ் செப்பிய குளிரு மாமே
**707

#2
சீவனென் பதுவி யாழஞ் சேருமா ருயிரு மாமே
**708

#3
சீருளென் பதுவே யாக்கஞ் செப்புடனீய மும்பேர்
**709

#4
சீவனி யென்ப தாவி செவ்வழி யாழே தண்ணீர்
**710

#5
சீர்செல்வந் தாள வொத்துச் சீர்த்திகாத் தண்டே பாரம்
**711

#6
சீப்பென்ப கதவின் றாழுஞ் சீவிடு கங்க மும்பேர்
**712

#7
சீகரங் கரகம் வீசுங் கவரியுந் திவலை முப்பேர்
**713

#8
சீலமே குணந்தண் டித்தல் திகழ்சரித் திரமும் முப்பேர்

@35 சு
**714

#1
சுந்தரி யிந்தி ராணி துர்க்கையம் பிகைமுஞ் சூறாம்
**715

#2
சுக்கையென் பதுவிண் மீனுந் தொடுத்தபூ மாலை யும்பேர்
**716

#3
சுசியென்ப கோடை தீயுஞ் சுத்தமுங் கூற லாமே
**717

#4
சுதைமகள் கறவாத் தேனுச் சுண்ணச்சாந் தமுது நாற்பேர்
**718

#5
சுடரென்ப மதிநெ ருப்புச் சூரியன் விளக்கு நாற்பேர்
**719

#6
சுவவென்ப புள்ளின் மூக்குஞ் சுவர்க்கமுஞ் சுண்ட னும்பேர்
**720

#7
சும்மையென் பதுவே நெற்போர் நாடொலி சுமையுஞ் சொல்லும்
**721

#8
சுவலென்ப பிடரி னோடு தோண் மேலும் மேடும் முப்பேர்
**722

#9
சுருங்கையே கரந்து பண்ணுங் கற்புடை நுழைவா யிற்பேர்
**723

#10
சுரியலென் பதுவே யாண்பால் மயிரும்பெண் மயிருஞ் சொல்லும்
**724

#11
சுரையென்ப மதுவி னோடு நுழைவாயில் முலைமுப் பேரே 
**725

#12
சுடிகையே மகுட முச்சி சுட்டியு மிட்ட பேராம்
**726

#13
சுரிகையே யுடைவா ளென்னச் சொல்லுவர் கவச மும்பேர்
**727

#14
சுகமென்ப கிளியா மென்று சொல்லுவ ரின்ப மும்பேர்
**728

#15
சுவேதமென் பதுவே வெண்மை தோன்றிய வெயர்வு மாமே
**729

#16
சுருதியென் பதுநால் வேதந் தோன்றிய வொலியு மாமே
**730

#17
சுவாமியென் பதுபொன் னாசான் சூர்ப்பகை யும்முப் பேரே
**731

#18
சுரமென்ப வழியு டம்பிற் சூடரு நெறிகான் பாலை

@36 சூ
**732

#1
சூலியே சிவன்க ருப்பந் துன்னுபெண் கள்ளி துர்க்கை
**733

#2
சூழியே சுனையும் வெய்ய தும்பியின் முகப டாமும்
**734

#3
சூரனென் பதுவெய் யோனுஞ் சுணங்கனுந் தீயுமாமே
**735

#4
சூதகமேயா சூசந் தோகைமார் தோயாப் பூப்பாம்
**736

#5
சூத்திர மேவெண் ணீறுஞ் சொற்றிடு மகவ லும்பேர்
**737

#6
சூதனே தேர்ப்பா கன்பொய் சொல்லுவோ னிருபே ராமே
**738

#7
சூழ்தலென் பதுவி சாரஞ் சூழ்தலு மிடமு மாமே
**739

#8
சூதம்மா மரமே பாத ரசமென விருபேர் சொல்லும்
**740

#9
சூலமே கடைநா ளென்று சொல்வர்மூ விலைவே லும்பேர்

@37 செ
**741

#1
சென்னியென் பதுவே சோழன் சிரமசு பதிபா ணல்பேர்
**742

#2
செவ்வியென் பதுவே காலஞ் செப்பிய பருவ மும்பேர்
**743

#3
செல்லென்ப திடியே மேகஞ் சிதலையே வுதலிந் நாற்பேர்
**744

#4
செந்துவே நிரைய மோரி சிவனோ டணுவும் நாற்பேர்
**745

#5
செப்பமே நடுநி லைப்பேர் தெருவொடு நெஞ்சு மாமே
**746

#6
செம்புல மென்ப பாலை நிலஞ்செருக் களமி ரண்டாம்
**747

#7
செய்யலே ஒழுக்கங் காவல் சேறொடு தொழிலு மாமே
**748

#8
செம்மலே பழம்பூ ஈசன் சினேந்திரன் சிறந்தோன் மைந்தன்
**749

#9
செழுமையே வளங்கொ ழுப்புச் சிறந்தமாட் சிமைவன ப்பாம்
**750

#10
செடியென்ப குற்றம் பாவஞ் செறிவுட னொளியு மாமே
**751

#11
செத்தென்ப தசைச்சொல் ஐயஞ் சிந்தையொப் புறுப்புச் செம்மை
**752

#12
செட்டியென் பதுவே கந்தன் சிறந்திடு வணிக னும்பேர்
**753

#13
செச்சையென் பதுவே வெள்ளாட் டேறுசெந் சாந்து முப்பேர்
**754

#14
செவியென்ப காதி னோடு செப்பிய கேள்வி யும்பேர்
**755

#15
செம்மையென் பதுசி வப்புஞ் செவ்வையு மிருபே ராமே
**756

#16
செப்பென்ப மொழியி னோடு செய்காண்ட மாகு மாமே
**757

#17
செருந்தியென்பது வாட் கோரை செப்பு மோர்த ழும்பேர்
**758

#18
செயலென்ப நல்லொ ழுக்கஞ் செய்தொழி லிருபே ராமே
**759

#19
செயிரென்ப குற்றத் தின்பேர் சினமென்று முரைக்க லாமே

@38 சே
**760

#1
சேயென்ப முருகன் பிள்ளை செம்மை தூரஞ்செவ் வாயாம்
**761

#2
சேடியென் பதுவே பாங்கி சிறந்தவிஞ் சையரூ ராமே
**762

#3
சேக்கையே முலைவிலங்கு துயிலிடஞ் சிறந்த பாயல்
**763

#4
சேடனே பாங்க னிந்தச் செகந்தாங்கு மனந்த னும்பேர்
**764

#5
சேமமென் பதுவே யின்பஞ் செப்பிய பாவ லும்பேர்
**765

#6
சேணென்ப தகலம் நீளஞ் செப்பிடி லுயரம் முப்பேர்
**766

#7
சேடென்ப பெருமை நன்மை திரட்சியே யழகு நாற்பேர்
**767

#8
சேதக மென்ப சேறு செந்நிற மிருபே ராமே
**768

#9
சேவலென் பதுபுள் ளாணுஞ் சேறுங்கா வலும்முப் பேரே
**769

#10
சேவகம் வீரம் யானை துயிலிட மிருபே ராமே
**770

#11
சேறென்ப கும்பி சாரந் தித்திப்பு விழவு கள்ளாம்
**771

#12
சேதாரம் வெட்சி பொன்னின் தேய்மானந் தேமா வும்பேர்

@39 சை
**772

#1
சைவமென் பதுமா தேவன் சமயமோர் புராண மாமே

@310 சொ
**773

#1
சொல்லென்ப புகழே வார்த்தை தோன்றிய செந்நெல் முப்பேர்
**774

#2
சொர்க்கமென் பதுவே கொங்கை துறக்கமுங் கூற லாமே

@311 சோ
**775

#1
சோனையே யோண நாளும் சொரிவிடா மழையு மாமே
**776

#2
சோதியென் பதுவே ஈசன் சுடரவன் காந்தி யோர்நாள்

@312 சௌ
**777

#1
சௌரியே திருமால் கன்னன் சனியம னினைய நாற்பேர்
&4 ஞகர வருக்கம்

@4 ஞகர வருக்கம்

@41 ஞ
**778

#1
ஞமலியே மயிலுங் கள்ளும் நாயுமென் றுரைக்க லாமே
**779

#2
ஞாளியென் பதுவே கள்ளும் நாயுமென் றிருபே ராமே
**780

#3
ஞாட்பென்ப பொரும்போர் கூட்டம் நவின்றிடு பாரம் முப்பேர்
**781

#4
ஞானமே யறிவுங் கல்வி நல்லதத் துவநூல் முப்பேர்
**782

#5
ஞாங்கர்வேல் பக்கம் முன்பு மேலென நான்கு மாகும்

@42 ஞெ
**783

#1
ஞெள்ளலே பள்ளம் மேன்மை நீண்டவீ தியும் முப்பேரே
**784

#2
ஞெரேலென்ப விரைவா யென்று நிகழ்த்துவ ரொலியு மாமே
**785

#3
ஞெமிர்தலே பரத்த லோடு முறிதலும் நினைக்க லாமே
**786

#4
ஞெகிழியே சிலம்பின் நாமம் நெருப்புறு கொள்ளிக் கும்பேர்
**787

#5
ஞொள்கலே இளைத்தல் சோம்பு நோய் அச்சக் குறிப்ப தாமே
&5 தகர வருக்கம்

@5 தகர வருக்கம்

@51 த
**788

#1
தரணியென் பதுவெய் யோனுந் தரையுடன் மலையு மாமே
**789

#2
தண்டென்ப குழாயே வீணை தடிபடை மிதுன ராசி
**790

#3
தமமென்ப இராகு வின்பேர் சாற்றிய இருளு மாமே
**791

#4
தழலென்ப செந்தீ யின்பேர் கிளிகடி கோலுஞ் சார்வாம்
**792

#5
தண்டென்ப குடைக்கால் யானை சார்வழித் தடிதண் டித்தல்
**793

#6
தடமென்ப கரையும் பொய்கை சாற்றிய பெருமை யொப்பாம்
**794

#7
தனஞ்செய னென்பவாயுத் தழலருச் சுனன்முப் பேராம்
**795

#8
தடியென்ப துலக்கை வில்லுத் தண்டுமின் தசை உடுப்பாம்
**796

#9
தளிமமே யழகு மெத்தை சயனமுங் கூறலாமே
**797

#10
தண்ணடை மருதத் தூருஞ் சாற்றிய நாடு மாமே
**798

#11
தத்தையென் பதுவே கிள்ளை முன்பிறந் தாளு மாமே
**799

#12
தனுவென்ப வில்லே நுட்பஞ் சடமொடு முப்பே ராமே
**800

#13
தனமென்ப முலைஆன் கன்றே சாற்றும்உத் திரம்பொன் னாமே 
**801

#14
தவிசென்ப தடுக்கு மெத்தை இலகடம் முப்பேர் சாற்றும்
**802

#15
தளமென்ப சேனை சாந்து தாழிபூ விதழ்நாற் பேரே
**803

#16
தண்ணமோர் கட்ப றைப்பேர் தறித்திடு மழுவு மாமே
**804

#17
தளையென்ப சிலம்புங் காலிற் றளையும்ஆண் மயிரு மாமே
**805

#18
தட்டை வேய்தினைத்தாள் கிள்ளை தனைக்கடி கோலே முண்டம்
**806

#19
தம்பமே பற்றுக் கோடு தாங்கிய கவசங் கம்பம்
**807

#20
தண்மையென் பதுகு ளிர்ச்சி தாழ்வுட னெளிமை யும்பேர்
**808

#21
தகடென்ப தைம்மையென்று சாற்றுவ ரிலையு மாமே
**809

#22
தருமரா சான்றான் புத்தன் அருக்கனுக்கு மாமே
**810

#23
தட்டென்ப பரிசை முட்டுத் தடுத்தல் தேர் நடுவே குற்றம்
**811

#24
தராவென்ப மதுகத் தோடு சங்கென்று முரைக்க லாமே
**812

#25
தளியென்ப துளியே கோயில் சமர்த்தலம் முப்பே ராமே
**813

#26
தகையென்ப தழகு பண்பு தயவொடு பெருமை நாற்பேர்
**814

#27
தபுதலென் பதுவே கேடுஞ் சாவுமென் றுரைக்க லாமே
**815

#28
தமிழென்ப தினிமை நீர்மை சாற்றிய கவியு மாமே
**816

#29
தண்ணமென் பதுவே யப்பா தாவிய பதளின் கன்றாம்
**817

#30
தபனனென் பதுமார்த் தாண்டன் சாதவே தாவு மாமே
**818

#31
தலமென்ப நிலையி னோடு தரணியு மிருபே ராமே
**819

#32
தசும்பென்ப குடமும் பொன்னுஞ் சாற்றிய மிடாவு மாமே
**820

#33
தட்டலென் பதுவே கிட்டல் தடுத்த லொத் தறுத்தல் முப்பேர்
**821

#34
தலையென்ப சென்னி யாதி தலைமைவா னிடமைம் பேரே
**822

#35
தவவென்ப மிகுதி யோடு சாற்றிய குறைவு மாமே
**823

#36
தந்தென்ப நூலின் பேருஞ் சாற்றிய குறைவு மாமே
**824

#37
தகைமையே பெருமை கொக்கு சாற்றிய வியல்பு மாமே
**825

#38
தனியென்ப தொப்பின் மைப்பேர் தமியென்று முரைக்க லாமே

@52 தா
**826

#1
தாணுவே நிலையே ஈசன் சயிலந்தூண் குற்றி யைம்பேர்
**827

#2
தாதியே பரணி யென்னச் சாற்றுவ ரடிமை யும்பேர்
**828

#3
தாலமுண் கலமே நாவே தராதலம் பனையே நாற்பேர்
**829

#4
தாரையே மழைநே ரோட்டந் தாரகை நயனங் கூர்மை
**830

#5
தாமமென் பதுவே கொன்றை தந்தியூ ரொளியொ ழுங்கு
**பூமணிக் கோவை மாலை பொருகளங் கயிறு பத்தாம்
**831

#6
தாரம்வல் லிசைநா வெள்ளி தலைவியாழ் நரம்பி லொன்றாம்
**832

#7
தானையே புடவை சேனை சமர்புரி யாயு தங்கள்
**833

#8
தார்கொடிப் படையே பூவே தாமங்கிண் கிணியின் கோவை
**834

#9
தாளென்ப கால்மு யற்சி சாத்திய கதவின் சீப்பாம்
**835

#10
தாறுவிற் குதையே யெல்லை தாழ்மரக் குலை முட் கோலாம்
**836

#11
தாதென்ப காவிக் கல்லுந் தழுவிர தாதி யேழும்
**837

#12
தாழையென் பதுபூங் கேத கையொடு தெங்கு மாமே
**838

#13
தாவென்ப பகைவ ருத்தந் தாண்டுதல் வலிகே டைம்பேர்
**839

#14
தாம்பென்ப கயிறு தானே தாமணி தனக்கு மாமே
**840

#15
தாபர மென்ப வெற்புந் தருவொடு சடல மும்பேர்
**841

#16
தானமே மதம்நீ ராட்டுத் தருகொடை சுவர்க்கம் நாற்பேர்

@53 தி
**842

#1
திகையென்று சுணங்கின் பேராந் திசையென்று முரைக்க லாமே
**843

#2
திங்களே மதியாம் வாரஞ் செப்பிய மாத மும்பேர்
**844

#3
திதியென்ப நிலைபெ றுத்தல் பக்கமு மப்பே ராமே
**845

#4
திணையென்ப குலம்ஒ ழுக்கஞ் சேரும்ஐந் திணையு மாமே
**846

#5
திட்டையே யுரலும் மேடுந் திண்ணையு மாகுமென்ப
**847

#6
திகிரியே மூங்கில் வட்டந் தேருரு ளாழி வெற்பாம்
**848

#7
திருவென்ப கமலை செல்வஞ் சிறப்பென முப்பே ராமே
**849

#8
திளைத்தலே யனுப வித்தல் செறிதலும் நிறைத லும்பேர்

@54 தீ
**850

#1
தீயென்ப வன்னி யின்பேர் தீமையு மாகு மென்ப
**851

#2
தீர்த்தமென் பதுவே தோயந் திருவிழா விருபே ராமே
**852

#3
தீர்த்தனென் பதுவே மூர்த்தி தேசிக னிருபே ராமே

@55 து
**853

#1
துடிபறை கால நுட்பஞ் சொற்றகூ தாளம் ஏலம்
**854

#2
துணங்கற லேவி ழாவுந் தோற்றிய இருளு மாமே
**855

#3
துத்தியே சுணங்கும் பாம்பின் சுடர்ப்பொறி புதலொன் றாமே 
**856

#4
துண்டமே வதனம் மூக்குத் துணியொடு சாரைப் பாம்பு
**857

#5
துருத்தியாற் றிடைக்கு றைப்பேர் தோலுமாஞ் சொல்லுங் காலே
**858

#6
துகளென்ப குற்றத் தோடு தூளென்று முரைக்க லாமே
**859

#7
துவக்கென்ப பிணக்கி னோடு தோலுமென் றிருபே ராமே
**860

#8
துத்தம்யா ழிசையே பாலோர் மருந்தொடு வயிறுஞ் சொல்லும்
**861

#9
துப்புநெய் பகைய ரக்குத் துகிரூற்ற மனுப வங்கள்
**862

#10
துரோணமே சிம்புள் காக்கை தும்பைவில் லொடுப தக்காம்
**863

#11
துணியென்ப சோதி நாளுந் துண்டமுங் கூறலாமே
**864

#12
தும்பியென் பதுவே யானை சுரும்பொடு சுரைகள் ளாமே
**865

#13
துளியென்ப பெண்ணா மைக்குஞ் சொரிமழைத் துளிக்கு மாமே
**866

#14
துஞ்சலே நிலைபே றாகுந் துயில்சோம்பு சாவு மாமே
**867

#15
துணையென்ப தளவு மொப்புஞ் சொல்லிரண் டொடுச காயம்
**868

#16
தும்பென்ப சிம்புள் தோடாஞ் சுற்றிய கயிறு மாமே
**869

#17
துவையென்ப திறைச்சி யோசை துள்ளிய பிணருக் கும்பேர்
**870

#18
துனியென்ப புலவி நீட்டந் துன்பம் நோய் முப்பே ராமே
**871

#19
துன்னலென் பதுவே கூடல் துதைதலு முரைக்க லாமே
**872

#20
துணங்கையே விழாவோர் கூத்தும் ஒரு நாளுஞ் சொல்லு முப்பேர்
**873

#21
துளும்பலே திமிறலென்னச் சொல்லுவ ரலைத லும்பேர்

@56 தூ
**874

#1
தூம்பென்ப மரக்கால் மூங்கில் துளையொடு சலதா ரைப்பேர்
**875

#2
தூசென்ப தணிவ குப்பு தும்பியின் புரசை யாடை
**876

#3
தூவென்ப தசையி றைச்சி தூய்மையே பற்றுக் கோடாம்
**877

#4
தூரியமென் பதுவே கொட்டுந் துந்துமி யெருது கூர்வேல்
சீரிய விடபத் தோடு சிறந்தவாச் சியங்க ளைம்பேர்
**878

#5
தூக்கென்ப பாட்டுங் கூத்துந் துலாமுமா ராய்த லும்பேர்
**879

#6
தூங்கலே நிருத்த மானை துயில் சோம்பு தராசு மாமே

@57 தெ
**880

#1
தெய்யென்ப கொலையி னோடு தெய்வமுங் கூற லாமே
**881

#2
தென்னென்ப வனப்புக் கற்புத் தெற்கிசை நாளி கேரம்
**882

#3
தெவ்வென்ப பகையின் பேரே செருவென்று முரைக்க லாமே
**883

#4
தெவிட்டலே யடைத்தல் கான்றல் சிலம்புதல் நிறைதல் நாற்பேர்

@58 தே
**884

#1
தேளென்ப விருச்சி கப்பேர் தெறுக்காலும் அனுடம் முப்பேர்
**885

#2
தேசிகன் வணிகன் தேசாந் திரியொடு குருவு மாமே
**886

#3
தேமென்ப நாற்றந் திக்குத் தேனிட மினிப்புத் தேசம்
**887

#4
தேசிக மழகு காந்தி செம்பொனோர் கூத்து மாமே
**888

#5
தேர்தலென் பதுவே கொள்கை தேருத லென்று மாமே
**889

#6
தேனென்ப மதுவுங் கள்ளை தெண்டிய வண்டு மாமே

@59 தை
**890

#1
தைத்தலென் பதுவே துன்னந் தகவலுங் கூறலாமே
**891

#2
தையலென் பதுவ னப்புச் சாற்றிய பெண்ணு மாமே
**892

#3
தையென்ப மகர மாதந் தன்னொடு பூச நாளாம்

@510 தொ
**893

#1
தொழுவென்ப துழலை தானே யிரேவதி நாளுஞ் சொல்லும்
**894

#2
தொடுவென்ப மருதப் பூமி தோட்டமே வஞ்ச கப்பேர் 
**895

#3
தொய்யிலே யுழவுஞ் சேறுந் துயரமும் மகிழ்ச்சி யும்பேர்
**896

#4
தொத்தென்ப பூங்கொத் தின்பேர் தொழும் பென்றுஞ் சொல்ல லாமே
**897

#5
தொறுவென்ப நிரையே கூட்டந் தொழும்பென முப்பே ராமே 
**898

#6
தொடிவளை யொருப லப்பேர் சூழ்ந்தகங் கணமு மாமே
**899

#7
தொங்கலே பீலி குஞ்சந் தூக்குவெண் குடையே மாலை
**900

#8
தொண்டைஆ தொண்டை கொவ்வை தூங்கும் யானைத்து திக்கை
**901

#9
தொண்டென்ப பழமை யொன்பான் தொடர்புற்ற அடிமைக் கும்பேர்
**902

#10
தொட்டலென் பதுவே யுண்டல் தோண்டலே கொடுத்தல் முப்பேர்
**903

#11
தொடுத்தலே வளைத்தல் பற்றல் பிணித்தலுஞ் சொல்லும் முப்பேர்

@511 தோ
**904

#1
தோணியே கடைநா ளம்பு தொள்ளிநீர் மதிலு றுப்பாம்
**905

#2
தோட்டியென் பதுக பாடஞ் சொல்லு மங்குச முமாமே
**906

#3
தோன்றலென் பதுவே நாதன் சுதனென்று முரைக்க லாமே
**907

#4
தோல்இபம் வனப்புச் சொல்லுத் துருத்தி தோற் பலகை தோல்வி
**908

#5
தோற்றமே வலிபிறப்புத் தோன்றுதல் புகழ்ம கன்பேர்
**909

#6
தோடென்ப பனையி னோடு தொகுதிபூ விதழு மாமே
**910

#7
தோளென்ப புயத்தின் பேரே தூங்கிய கையுமாமே
**911

#8
தோரையே நெல்லுங் கைவ ரையும்தூம் பரிசியும் பேர்

@512 தௌ
**912

#1
தௌவையென் பதுமூத் தாளுந் தாயும்மூ தேவி யும்பேர்
&6 நகர வருக்கம்

@6 நகர வருக்கம்

@61 ந
**913

#1
நந்தியே செக்கான் நந்தி நக்கன்பே ரிகைநாற்பேரே
**914

#2
நலமென்ப சுகமுந் தேளும் நல்லுப கார மும்பேர்
**915

#3
நவமென்ப புதுமை கேண்மை ஒன்பது நற்கார் காலம்
**916

#4
நடையென்ப நல்லொ ழுக்கம் நடந்திடு நடையு மாமே
**917

#5
நகமென்ப மலைஉ கிர்ப்பேர் நாமமும் மரமு மாமே
**918

#6
நகையென்ப தொளிஇ கழ்ச்சி நகுதலும் மகிழ்வும் பல்லும்
**919

#7
நவிரென்ப மருத யாழும் நண்ணும் ஆண் மயிரும் வாளும்
**920

#8
நனையென்ப கள்ளின் பேரே நல்லபூ வரும்பு மாமே
**921

#9
நவியமென் பதுகோ டாரி நண்ணிய மழுவு மாமே
**922

#10
நயமென்ப நன்றி யோடு ஞாயமுஞ் சுகமு மாமே
**923

#11
நரையென்ப பலிதம் வெண்மை நாரையே சவரின் கன்றாம்
**924

#12
நளியென்ப பெருமை சீதம் நாட்டிய செறிவு மாமே
**925

#13
நவிரமே மஞ்ஞை புன்மை நன்மலை யுடனே யுச்சி
**926

#14
நரந்தமென் பதுநா ரத்தை நாறுகஸ் தூரிக் கும்பேர்
**927

#15
நந்தென்ப சங்கி னோடு நத்தயுங் கூறலாமே
**928

#16
நடலையென் பதுவே பொய்யாம் நவின்றவஞ் சகமுமாமே
**929

#17
நகரென்ப வீடும் மிக்க நகரமுங் கூறலாமே
**930

#18
நந்தலென் பதுவே யாக்கம் நாசமும் பேச லாமே
**931

#19
நத்தமே இருளும் ஊரும் நந்துடன் இரவும் நாற்பேர்
**932

#20
நன்றென்ப மிகுதி யோடு நன்மையு முரைக்க லாமே
**933

#21
நட்டமென் பதுவே கேடு நடனமு முரைக்க லாமே
**934

#22
நவிலலென் பதுவே பண்ணல் நாவினா லுரைத்த லாமே
**935

#23
நக்கலென் பதுவே தின்றல் நகுதலுங் கூற லாமே
**936

#24
நக்கனே யருகன் சம்பு நிருவாணி நாட்டு முப்பேர்
**937

#25
நனவென்ப தகலத் தோடு நாடிய தெளிவு மாமே
**938

#26
நயனென்ப பயனே இன்பம் நன்மையும் மகிழ்வு மாமே

@62 நா
**939

#1
நாழியே பூரட்டாதி நாழிகை யுட்டு ளைப்பேர்
**940

#2
நாகம்விண் குரங்கு புன்னை நற்றூசு மலைபாம் பியானை
**941

#3
நாவித னென்ப பூர நாள்அறு மீன்ஏ னாதி
**942

#4
நாஞ்சிலென் பதுக லப்பை நன்மதி லுறுப்பு மாமே
**943

#5
நாட்டமென் பதுவோர் பண்ணும் நயனமும் வாளுமாமே
**944

#6
நாரிபன் னாடை பெண்ணே நறவுவின் னாணே நாற்பேர்
**945

#7
நாப்பணென் பதுதேர்த் தட்டும் நடுவும்யாழுறுப்
**946

#8
நானமே பூசும் பூச்சும் ஞானமுங் குளிக்கும் நீரும்
**947

#9
நாடியென் பதுந ரம்பு நாழிகை யிருபே ராமே
**948

#10
நாகென்ப திளமை சங்கு நத்தைபெண் விலங்கு நாற்பேர்
**949

#11
நாண் இலச் சைப்பேர்தானே கயிறென்றும் நாட்ட லாமே
**950

#12
நாரென்ப கயிறு தானே அன்பென்றும் நவில லாமே
**951

#13
நாறுத லங்குரித்தல் நாடிய மணமு மாமே

@63 நி
**952

#1
நிறையென்ப தழிவிலாமை நீர்ச்சாலுந் துலையு மாமே
**953

#2
நிசியென்ப கங்குல் மஞ்சள் நிதியென முப்பே ராமே
**954

#3
நிதம்பமென் பதுவே யல்குல் நெடுமலைப் பக்க மாமே
**955

#4
நியமமங் காடி வீதி நிச்சயம் நகரங் கோயில்
**956

#5
நிருமித்த லேப டைத்தல் நேருத லிருபே ராமே 
**957

#6
நிரப்பென்ப வறுமை யின்பேர் குறைபாடும் நிகழ்த்த லாமே
**958

#7
நிறமென்ப மருமங் காந்தி நிறங்களுங் கூறலாமே
**959

#8
நிழற்றலென் பதுநு ணுக்கம் நிழலிடு தலுமென்றாமே

@64 நீ
**960

#1
நீலியே கருமை துர்க்கை அவுரியும் நிகழ்த்த லாமே
**961

#2
நீரென்ப குணம்பூ ராடம் நெடுங்கட லுதகம் நாற்பேர்
**962

#3
நீபமே நிமித்தம் உத்ரட் டாதியும் நீர்க்க டம்பாம்
**963

#4
நீவியே துடைத்த லாடை நெருங்கு கொய் சகமும் முப்பேர்

@65 நு
**964

#1
நுதலென்ப நெற்றி யோடு நோக்கிய புருவ மும்பேர்
**965

#2
நுணவையே யெண்ணோ லைப்பேர் நுண்பிண்டி தானுமாமே
**966

#3
நுவணையென் பதுநூல் பிண்டி நுண்மையும் உரைக்க லாமே
**967

#4
நுனியென்ப நுண்மை யின்பேர் நுதியென்று முரைக்க லாமே
**968

#5
நுணங்கென்ப தேம லின்பேர் நுண்மையு முரைக்க லாமே

@66 நூ
**969

#1
நூலோரந் தணர மைச்சர் புலவரும் நூல்வ லோரே
**970

#2
நூழிலே யானை கோறல் கொடிக் கொற்றான் நுவல்கொடிப்பேர்
**971

#3
நூலென்ப சாத்தி ரப்பேர் நூற்றிடு தந்து மாமே
**972

#4
நூனமே நிச்ச யப்பேர் குறைவென்றும் நுவல லாமே

@67 நெ
**973

#1
நெறியென்ப வழியி னோடு நீதியு மிருபே ராமே
**974

#2
நெற்றியென் பதுநு தற்பேர் நெருங்கிய படையு றுப்பாம்
**975

#3
நெய்தலே புணரி சாரும் நிலமுஞ்சாப் பறையு மாமே

@68 நே
**976

#1
நேத்திர மேபட் டாடை நெறிதரு கண்ணு மாமே
**977

#2
நேயமென் பதுவே யெண்ணெய் நெய்யுட னன்பு மாமே
**978

#3
நேர்சம மீதல் பாதி நெடிலுடன் பாடு முப்பேர்
**979

#4
நேமியென் பதுமா லாழி நிலமொரு பக்கி வட்டம்

@69 நொ
**980

#1
நொடியென்ப வார்த்தை யேகை நொடித்தலு மிருபே ராமே
**981

#2
நொச்சியே சிந்து வாரம் நோக்கிய மதில்சிற் றூராம்
**982

#3
நொறிலென்ப விரைவொ டுக்கம் நுடக்கமுங் கூற லாமே

@610 நோ
**983

#1
நோனாமை தவம்பண் ணாமை பொறாமையும் நுவல லாமே
**984

#2
நோக்கென்ப தழகின் பேரும் நோக்கிய விழியு மாமே
**985

#3
நோற்றலென் பதுபொ றைப்பேர் நுவன்றிடு தவமு மாமே
**986

#4
நோனாரே தவமில் லோரும் பகைஞரும் நுவல லாமே

@611 நௌ
**987

#1
நெளவியென் பதுவே மானும் நன்மரக் கலமு மாமே
&7 பகர வருக்கம்

@7 பகர வருக்கம்

@71 ப
**988

#1
பருதியே வட்டம் ஊர்கோள் பாற்கரன் நேமி நாற்பேர்
**989

#2
பகலேநாள் பெயர்மு கிழ்த்தம் பகலவ னடுவே தேசு
**990

#3
பச்சையே மரக தந்தோல் பசுமையும் புதனு மாமே
**991

#4
பளிதமென் பதுகற் பூரம் பல்லமென் கணக்கு மாமே
**992

#5
பங்கென்ப முடமே யாகும் பாதியுஞ் சனியும் முப்பேர்
**993

#6
பக்கமே திதியு மன்பும் பறவையி னிறகு மாமே
**994

#7
பதமென்ப மொழிகால் செவ்வி பாதைபோ தடிசில் பட்டம்
**995

#8
பணியென்ப தொழிலும் பாம்பும் பணிதலும் முப்பே ராமே
**996

#9
பயமென்ப சுதைநீ ரச்சம் பாலொடு பயன்பே ரைந்தே 
**997

#10
பரவைவா ருதிப ரப்பு பங்கய மாதின் கூத்தாம்
**998

#11
பயோதர மென்ப மேகம் பாலுறு முலையி ரண்டாம்
**999

#12
பனியென்ப நடுக்கந் துன்பம் பயங்குளி ரின்மைப் பேரே
**1000

#13
பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சினனே புத்தன்
**1001

#14
பண்ணவன் முனிவன் றேவன் பற்றிய திறலோ னாசான்
**1002

#15
பசுவென்ப சீவ னென்ப பற்றிய பெற்ற மும்பேர்
**1003

#16
படப்பையே நகரந் தோட்டம் பசுநிரை நாடு நாற்பேர்
**1004

#17
பள்ளியே சிற்றூர் கோயில் பாயல்கண் படைநீத் தோரூர்
**1005

#18
பட்டமே யோடை வாவி பதவியே கவரி மாவாம்
**1006

#19
பதுக்கையென் பதுவே மேடும் பாறையுந் தூறுமாமே
**1007

#20
பதலையோர் கட்ப றைப்பேர் பருவரை தாழிக் கும்பேர்
**1008

#21
பணைவயல் பரியின் பந்தி பருத்தல் வேய் மரத்தின் கோடு
**1009

#22
பண்ணையே மாதர் கூட்டம் பள்ளமே மருதங் கேணி 
எண்ணிய மிருகங் கண்டுஞ் சிடம் பெண்கள் விளையாட் டாறாம்
**1010

#23
படுமரக் குலையே கள்ளுப் பரவுநீர் நிலையே நன்மை
**1011

#24
பங்கமே சேறு தூசு பழுதொடு பின்ன மாமே
**1012

#25
பரிகமே கிடங்கு மேடை பகர்மதில் கணையும் நாற்பேர்
**1013

#26
படைபடைக் கலங்க லப்பை படுக்கைபல் லணமே தானை
**1014

#27
பலமென்ப நிறைகி ழங்கு பழம்பயன் சேனை காயாம்
**1015

#28
பங்கியே புறம யிர்க்கும் பற்றும்ஆண் மயிருக் கும்பேர்
**1016

#29
பண்டமென் பதுவே பொன்னும் பணிகாரந் தானுமாமே
**1017

#30
பயம்பென்ப தானை வீழும் படுகுழி பள்ள மும்பேர்
**1018

#31
படலிகை பெரும்பீர்க் கோடு பரந்தகைம் மணிபூந்தட்டாம்
**1019

#32
படங்கம்மேற் கட்டி யென்ப பகர்பெருங் கொடியு மாமே
**1020

#33
படலையே வாசி கோவை பரந்தவாய்ப் பறைபூ மாலை
**1021

#34
பகண்டையென் பதுசி வேதை பறக்குமோர் சிவலு மாமே
**1022

#35
பண்ணென்ப பாட்டின் பண்ணும் பரிமாவின் கலணையும்பேர்
**1023

#36
பறையென்ப திறகு வார்த்த பணையென முப்பே ராமே
**1024

#37
பகழியே கணையி னோடு பல்லத்தின் குதையு மாமே
**1025

#38
பரமென்ப கவசம் பாரம் பரிமாவின் கலணை யும்பேர்
**1026

#39
பழங்கணென் பதுவே யோசை பற்றிய துன்ப மும்பேர்
**1027

#40
பந்தமே கிளையுங் கட்டும் பாட்டுறு தளையும் ஏரும்
**1028

#41
பத்திரம் இலைவ னப்புப் படைநன்மை சிறகே பாணம்
**1029

#42
பலியென்ப பூசை பிச்சை பலித்தல்வெண் ணீறு நாற்பேர்
**1030

#43
பரிபரி சுமத்தல் வேகம் பாது காத்திடல்வ ருத்தம்
**1031

#44
பகடென்ப யானை தோணி பாய்கடாப் பெருமை யீறாம்
**1032

#45
பதங்கமென் பதுவே விட்டில் பறவைபுட் பொதுவு மாமே
**1033

#46
பந்துகந் துகமும் கட்டும் படர் நீர்தூந் துருத்தி யும்பேர்
**1034

#47
பவனமே இராசி பூமி படர்காற்று மனையே கோயில்
**1035

#48
படமென்ப தாடை பாம்பின் பையானை முகப டாமே
**1036

#49
பறம்பென்ப மாதர் கொங்கை பருப்பத மிருபே ராமே
**1037

#50
பரதரே நெய்தல் மாக்கள் பன்னிய வணிக ரும்பேர்
**1038

#51
பவமென்ப செனனத் தோடு பாவமுங் கூற லாமே
**1039

#52
பன்னலென் பதுநெ ருக்கம் பருத்தியுஞ் சொல்லு மப்பேர்
**1040

#53
பயிரொலி பயிலே பைங்கூழ் பறக்கும்புட் குரலிந் நாற்பேர்
**1041

#54
படர்நடை நினைப்பு நோவாம் பரிவொடு வீரரும் பேர்
**1042

#55
பவித்திர மேத ருப்பை பன்னிய சுசியு மாமே
**1043

#56
படிவமென் பதுவே நோன்பு வடிவமும் பகர லாமே
**1044

#57
படுதலே ஒலிஇன் றாதல் பகரில்உண் டாதல் பூத்தல்
**1045

#58
பதியென்ப கணவன் மன்னன் பரமனு மூரு மாமே
**1046

#59
பத்தியே முறையொ ழுக்கம் பகர்வழி பாடு முப்பேர்
**1047

#60
பரிதலே யறுத்த லன்பு பகர்ந்திடி லிரங்கல் முப்பேர்
**1048

#61
பத்திரி யென்ப தன்பு பறவையுங் குதிரை யும்பேர்
**1049

#62
பராகமே இரேணு வாகும் பரிமள மலர்த்தூ ளின்பேர்
**1050

#63
பனுவலென் பதுவே பேச்சும் பாட்டுமிங் கிருபே ராமே
**1051

#64
பல்லமே யொருக ணக்குப் பாணமுங் கரடி யும்பேர்
**1052

#65
பணமென்ப தரவு பாம்பின் படமும்பொற் காசு மாமே
**1053

#66
படியங்க வடிசோ பானம் பகர்குண முவமை பாராம்
**1054

#67
பணிலமே சலஞ்ச லஞ்சங் கிருபெயர் பகர லாமே
**1055

#68
பகடிபம் பெருமையேறு பஃறியாண் மேதி ஐம்பேர்
**1056

#69
பஞ்சமே சிறுமை யைந்தாம் பகழியம் பின்கு தைப்பேர்
**1057

#70
படிறென்ப களவும் பொய்யும் பகரலா மிருபேர் தானே
**1058

#71
பகர்தலென் பதுவே பேசல் விற்றலும் பறைய லாகும்
**1059

#72
பட்டிகை யென்ப கச்சுப் பணையுட னிரத மாமே
**1060

#73
பரிவென்ப துன்ப மின்பம் பகருமன் பினுக்கு மப்பேர்
**1061

#74
பத்திரி பறவை காளி பரிஇலை பாண மைம்பேர்

@72 பா
**1062

#1
பாரதி யென்ப நாவாய் பனுவலாட் டிக்கும் பேரே 
**1063

#2
பாண்டிலே கஞ்ச தாளம் பாறலே மூங்கில் மஞ்சம்
தூண்டிலே யூர்தி வட்டஞ் சுடருந்த கழியே ழாமே
**1064

#3
பாணியென் பதுகீ லாலம் பல்லியங் கரம்பண் சோலை
ஊணுறு பாண்டம் காலம் உலகுபற் றோசை பத்தாம்
**1065

#4
பாராவா ரந்தண் ணாழி பரவையின் கரையு மாமே
**1066

#5
பாசென்ப மூங்கி லோடு பச்சையுங் கூற லாமே
**1067

#6
பாரென்ப பூமி தேரின் பரப்புரோ கணிமுப் பேரே
**1068

#7
பாரியோர் வள்ளல் கட்டில் பாரிநற் றூசு பாரம்
**1069

#8
பாடியே நகரம் நாடு பாசறை யாயர் பேரூர்
**1070

#9
பானலே குவளை யோடு பழனமும் மருதம் முப்பேர்
**1071

#10
பாத்தியே சிறுச்செய் இல்லம் பகுத்தலே வகுத்தல் முப்பேர்
**1072

#11
பாழியே வலிவி லங்கின் படுக்கையூர் பற்ற லாரூர்
**1073

#12
பாலென்ப கீரம் பக்கம் பகுத்தலு மியல்பு மாமே
**1074

#13
பாரித்த லென்ப தேதோற் றுதல்பரப் புதலு மப்பேர்
**1075

#14
பாசன மென்ப சுற்றம் பாண்டமுண் கலமும் பன்னும்
**1076

#15
பாடென்ப பெருமை யோசை பக்கமும் படுத லும்பேர்
**1077

#16
பாலிகை யுதடு வட்டம் பட்டவாள் முட்டு முப்பேர்
**1078

#17
பாணந்தான் மேக வண்ணக் குறிஞ்சியெய் கணைபூம் பட்டாம்
**1079

#18
பாத்தென்ப கஞ்சி சோறு பகுத்திடல் வகுத்தல் முப்பேர்
**1080

#19
பாக்கென்ப எதிர்கா லத்தைப் பகரிடைச் சொல்து வர்க்காய்
**1081

#20
பாசமே கயிறு கூளி பகரூசித் துளையன் பாகும்

@73 பி
**1082

#1
பின்னையே பின்றை தங்கை பெரியமா லுரிய தேவி
**1083

#2
பிறழ்தலே நடுக்கம் வேறு பெயர்தலோ டொளிவி டற்பேர்
**1084

#3
பிறங்கலே மிகுதி வெற்பு நிறைவொடு பேசும் முப்பேர்
**1085

#4
பிங்கல மென்ப பொன்னும் அதனிறம் பேரி ரண்டாம்
**1086

#5
பிசியென்ப பொய்யுஞ் சோறும் பேசும்நற் பொருளும் முப்பேர்
**1087

#6
பிச்சம்ஆண் மயிரும் பீலிக் குடையும் வெண் குடையு மாகும்
**1088

#7
பிசினனே கோளன் பொய்யன் உலோபனும் பேசும் முப்பேர்
**1089

#8
பிணையென்ப தாசை மாவின் பெண்பெய ரிருபே ராமே
**1090

#9
பிலவங்கங் குரங்கு தேரை பேசிய இருபே ராமே
**1091

#10
பிணிமுகம் மயிலி னுக்கும் பேசிய புட்பொ துப்பேர்
**1092

#11
பிண்டியென் பதுவே நென்மா பேசிய புட்பொ துப்பேர்
**1093

#12
பிதாச்சிவன் அயன்த கப்பன் பேசிய நாரை நாற்பேர்
**1094

#13
பித்திகை கருமு கைக்கே பெயர்சுவர்த் தலமுமாகும்

@74 பீ
**1095

#1
பீடிகை யாவணந்தட் டாசனப் பீடம் முப்பேர்
**1096

#2
பீதகஞ் சாந்து பொன்மை பெருந்தன மிருவே லிப்பேர்
**1097

#3
பீரென்ப முலையிற் பாலும் பீர்க்கொடு பசலைக் கும்பேர்
**1098

#4
பீருவே யச்ச முற்றோன் பெயரொடு புருவ மாமே
**1099

#5
பீதமோ ரிராகம் பன்றி பொன்னெலி சாந்து பீதம்
**1100

#6
பீனமென் பதுவே பாசி பெருமையு மிருபே ராமே

@75 பு
**1101

#1
புட்கரம் நிறைவு பாண்ட முகந்தீர்த்தம் புனல்வான் சேனம்
**1102

#2
புணர்வுதோய்த் திடலி சைப்பாம் பொழில் புவிபெருமை சோலை
**1103

#3
புணரியே வாரி நீரிற் பொருதிரை கரைமுப் பேரே
**1104

#4
புகைக்கிடு நாமந் தூமம் போற்றும்யோ சனைக்கு மப்பேர்
**1105

#5
புங்கமே யுயர்ச்சி யம்பு பொருமம்பிற் குதைமுப் பேரே
**1106

#6
புரமுடல் புரிமுன் னென்று போற்றிய பெயர்மூன் றாமே
**1107

#7
புண்டரி கந்திக் கானை புலிவண்டு கழுகு கஞ்சம்
**1108

#8
புரிவளை விரும்பல் ஆற்றல் புரமன்பு கயிறு கட்டாம்
**1109

#9
புரைகுற்ற முவமை யில்லம் புழையுயர்ச் சியுமைம் பேரே
**1110

#10
புல்புலி புணர்ச்சி புன்மை புதல் பனை யனுட நாளாம்
**1111

#11
புலவர்பா டுநரே கூத்தர் புதனும்பர் கவிகண் ணாளர்
**1112

#12
புலம்பொலி தனிமை யச்சம் போற்றிய பெயர்மூன் றாமே
**1113

#13
புவனமென் பதுவே காற்றும் பூமியு மிருபே ராமே
**1114

#14
புரத்தலென் பதுவே காத்தல் வளமையும் புகல லாமே
**1115

#15
புதையென்ப கணையின் கட்டும் புதுமையும் நிறைவும் முப்பேர்
**1116

#16
புறவமோர் புள்ளுந் காடும் முல்லையி னிலனு மாமே
**1117

#17
புறணியே குறிஞ்சி முல்லை நிலத்தொடு புறமு மாமே
**1118

#18
புனையென்ப தழகி னோடு பொலிவுமொப் பனையுமாகும்

@76 பூ
**1119

#1
பூதியோர் நரகஞ் செல்வம் துர்க்கந்தம் புழுதி நீறாம்
**1120

#2
பூமலர் வனப்புக் கூர்மை பொலிவொடு பிறப்புப் பூமி
**1121

#3
பூகமே திரளை பூகம் புன்கணென் பதுநோய் துன்பம்
**1122

#4
பூவையென் பதுகா யாவாம் நாகண வாய்க்கு மப்பேர்

@77 பெ
**1123

#1
பெட்பென்ப பெருமை யன்பாம் பிரசந்தேன் மதுவண்டாமே
**1124

#2
பெயரென்ப பெருமை கீர்த்தி பேசுநா மம்பேர் மூன்றே

@78 பே
**1125

#1
பேதையே அறிவிலோன்அந் தகன்முதற் பருவப் பெண்ணாம்
**1126

#2
பேதையென் பதுமூ டன்பேர் பெண்ணென்று முரைக்க லாமே

@79 பை
**1127

#1
பையென்ப நிறமே பாம்பின் படமொடு பசுமை யும்பேர்
**1128

#2
பையுளென் பதுவே நோயுஞ் சிறுமை யும்பகர லாமே
**1129

#3
பைத்தலென் பதுசி னப்பேர் பசத்தலு முரைக்க லாமே

@710 பொ
**1130

#1
பொறியென்ப வரியெ ழுத்துப் புலனிலாஞ் சனமே செல்வம்
அறிவியந் திரஞ்சீ தேவி அம்பியொன் பதுபே ராமே
**1131

#2
பொன்னென்ப வனப்பி ரும்பு பொலிவும்பூ மகள்வி யாழம்
**1132

#3
பொழிலென்ப பெருமை சோலை பூமியும் முப்பே ராமே
**1133

#4
பொறையென்ப மலையே பூமி பொறுமையுந் துறுகல் லும்பேர்
**1134

#5
பொங்கரே மரத்தின் கேடாம் இலவொடு பொருப்பு மாமே
**1135

#6
பொகுட்டுத்தா மரைப்பூங் கொட்டை பொருப்புச்சேற் றெழுந்த கொப்பூழ்
**1136

#7
பொருநரே கூத்தர் வீரர் பொருபடைத் தலைவர் மன்னர்
**1137

#8
பொம்மலென் பதுவே சோறாம் பொலிவென்று முரைக்க லாமே
**1138

#9
பொங்கலென் பதுகொ தித்தல் பொலிவொடு மிகுதி யும்பேர்
**1139

#10
பொக்கமென் பதுவே பொய்பும் பொத்தெனு மிருபேராமே
**1140

#11
பொத்தகங் கோச மென்ப சித்திரப் படாமு மாமே
**1141

#12
பொய்யென்ப மரத்தின் பொந்தும் பொக்கமு மிருபே ராமே
**1142

#13
பொச்சாப்பே மறவி யோடு பொல்லாங்கு மிருபே ராமே
**1143

#14
பொருளேசொற் பொருள்பல் பண்டம் பொருந்திய பேர்மூன் றாமே
**1144

#15
பொருநர் போர்த் தலைவர் கூத்தர் புரவலர் வாணர் வீரர்
**1145

#16
பொறுத்தலென் பதுவே தாங்கல் பொறையெனு மிருபே ராமே 
**1146

#17
பொறைமலை துறுகல் பாரம் பொறைசுமை கருப்பம் பூமி
**1147

#18
பொற்பென்ப தழகி னோடு பொலிவுமொப் பனையு மாகும்

@711 போ
**1148

#1
போகமே பாம்பின் மெய்யும் போகத்தின் விகற்பு மாகும்
**1149

#2
போதலே நெடுமை நேர்மை போகுத லெனும்முப் பேரே 
**1150

#3
போற்றலென் பதுவே ஓம்பல் புகழ்தலோ டிருபே ராமே
**1151

#4
போகியென் பதுபு யங்கம் புரந்தர னிருபே ராமே
**1152

#5
போகிலென் பதுகொப் பூழும் புள்ளும்பூ வரும்பு மாமே
**1153

#6
போதக மிளமை யானை கன்றுமாக் கன்று மாமே
**1154

#7
போரென்ப சதைய நாளும் பொருலுஞ் சும்மை யும்பேர்
**1155

#8
போக்கென்ப வழியே குற்றம் போதலும் மரக்கன் றும்பேர்
**1156

#9
போர்வையென் பதுமீக் கோளும் பொருந்துமுட் டாக்குந் தோலும்
**1157

#10
போதமென் பதுவே தோணி போற்றிய ஞான மாமே
**1158

#11
போற்றலென் பதுவே காத்தல் புகழ்தலு மாகு மென்ப
**1159

#12
போகலென் பதுவே நீளம் போகுத லிருபே ராமே

@712 பௌ
**1160

#1
பெளவமே கணுவும்மிக்க பரவையுங் குருவு மாமே
&8 மகர வருக்கம்

@8 மகர வருக்கம்

@81 ம
**1161

#1
மன்னனுத்திரட்டாதிப்பேர் மன்னவன் பெயரு மாமே
**1162

#2
மதியென்ப தறிவு சோமன் மாதம்முன் னிலைய சைச்சொல்
**1163

#3
மரக்காலே துர்க்கை யாடல் மால்கூத்தா யிலியஞ் சோதி
**1164

#4
மயிலையே மீன ராசி மீனிரு வாட்சி முப்பேர்
**1165

#5
மடங்கலே யுகமூ ழித்தீ மறலிநோ யசனி சிங்கம்
**1166

#6
மருளென்ப குறிஞ்சி யாழின் திறம்பெரு மயக்கம் பேராம்
**1167

#7
மஞ்சுபூண் வலிவ னப்பு மழையானை முதுகிவ் வைந்தே
**1168

#8
மதன்சிலை வேள்வ னப்பு மாட்சிமை வலிநாற் பேரே
**1169

#9
மண்டலி யென்ப பூனை மண்ணொரு பாம்பு நாயாம்
**1170

#10
மண்டில மென்ப நாடும் வட்டமும் குதிரை யும்பேர்
**1171

#11
மன்றமே வெளியினாமம் வாய்மையம் பலம்முப் பேரே
**1172

#12
மந்திரம் விசாரங் கோயில் வாசியின் குழாம்வீ டேகள்
**1173

#13
மறவரென் பதுவே வீரர் வனசரர் பேரு மாமே
**1174

#14
மள்ளரே யுழவர் வீரர் மலையில்வாழ் குறவர் முப்பேர்
**1175

#15
மதலையே பிள்ளை கொன்றை மரக்கலங் கொடுங்கை தூணாம்
**1176

#16
மடையென்ப மதகு சோறு மணிப்பணிக் கடைப்பூட் டும்பேர்
**1177

#17
மட்டென்ப தளவை யின்பேர் மதுவென்று முரைக்க லாமே
**1178

#18
மனவுநன் மணியே யக்கு மணியொடு சங்கு மாமே
**1179

#19
மணிநவ மணியே கண்டை வனப்பிசை கருமை நன்மை
**1180

#20
மதுகமே இருப்பை எட்டி மதுரமாந் தராவு மாமே
**1181

#21
மடிமடங் குதலே சோம்பு வயிறுநோய் புடவை தாழை
**1182

#22
மன்றலே பரிமளப்பேர் மருவுகலி யாண மும்பேர்
**1183

#23
மத்திகை விளக்குத் தண்டு மாலைசம் மட்டி முப்பேர்
**1184

#24
மல்லென்ப மாயோ னாடல் வலிவளம் முப்பே ராமே
**1185

#25
மல்லிகை விளக்குத் தண்டும் மாலதிப் புதலு மாமே
**1186

#26
மறஞ்சினம் பிணக்கங் கூத்து மலைந்தசே வகமு மாமே
**1187

#27
மஞ்சரி யேபூங் கொத்து மாலைசெந் தளிரு மாமே
**1188

#28
மகரமே சுறாப்பூந் தாதாம் மருவுமோ ரையிலொன் றும்பேர்
**1189

#29
மந்தார மென்ப தேசெம் பரத்தமுந் தருவு மாமே 
**1190

#30
மல்லலென் பதுவ ளப்பேர் வலியென்று முரைக்க லாமே
**1191

#31
மறை இரா சியமே வேதம் மந்திரம் வரிசை நாற்பேர்
**1192

#32
மடமறி யாமை சத்ரம் மனைமுனி வாசம் முப்பேர்
**1193

#33
மகனென்ப சிறந்தோன் பேரே மைந்தனு மாகு மென்ப
**1194

#34
மணமென்ப வாசங் கூட்டம் மருவுகலி யாணம் முப்பேர்
**1195

#35
மடல்பனை யேடு பூவின் மலரித ழொருநூல் முப்பேர்
**1196

#36
மத்தக மென்ப நெற்றி மன்னிய சென்னி யும்பேர்
**1197

#37
மண்ணென்ப வொப்பனைப்பேர் முழவின்மார்ச் சனையு மாமே
**1198

#38
மதுவென்ற நறவுந் தேனும் வசந்தகா லமுமா மென்ப
**1199

#39
மரபென்ப முறைமை யோடு மன்னிய தொன்மை யும்பேர்
**1200

#40
மந்தனென் பதுச னிப்பேர் மதிகுறைந் தவனு மாமே
**1201

#41
மறலென்ப பிணக்கி னோடு மறலியும் மயக்க மும்பேர்
**1202

#42
மருமானே மரும கன்பேர் வழித்தோன்றல் பேரு மாமே
**1203

#43
மயலென்ப சேற்றி னோடு மயக்கமுஞ் செற்றை யும்பேர்
**1204

#44
மலைதலென் பதுவே சூடல் மறுத்தலுஞ் செருவு மாமே
**1205

#45
மருதமே வயலோர் தாரும் மருதநன் னிலத்துப் பாட்டும்
**1206

#46
மங்குலென் பதுவி சும்பும் மஞ்சுட னிருளு மாமே
**1207

#47
மன்னென்ப நிலைய சைச்சொல் மன்னவன் மிகுதி நாற்பேர்
**1208

#48
மலர்தலே யெதிர்தல் தோன்றல் மலர்தலும் வழங்கும் முப்பேர்
**1209

#49
மகரந்தங் கள்ளுந் தேனும் மன்னுபூந் தாது மாமே
**1210

#50
மதவென்ப மிகுதி யும்பேர் வன்மையு முரைக்க லாமே
**1211

#51
மனையென்ப மாளி கைப்பேர் மனைவியு மாகு மென்ப
**1212

#52
மருந்தென்ப ஒளட தப்பேர் வானவ ருணவு மாமே
**1213

#53
மந்தியென் பதுகு ரங்கு வண்டுசூ ரியன்முப் பேரே
**1214

#54
மதமென்ப செருக்கே யானை மதமிரு பெயரென் றாமே

@82 மா
**1215

#1
மால்புதன் பெருமை மேகம் மாயவன் மயக்கம் காற்றாம்
**1216

#2
மாவயல் பெருமை வாசி வண்டுசெல் வங்க றுப்புப்
பூவுறை திருவி லங்கின் பொதுவெறுப் பழைத்தல் பத்தாம்
**1217

#3
மாலையே இரவோ டந்தி மாலிகை யொழுங்கு நாற்பேர்
**1218

#4
மானென்ப துணைவி லங்கின் மகரரா சியும்முப் பேரே
**1219

#5
மாரியென் பதுநோய் மேகம் வடுகியே விளிவு கள்ளாம்
**1220

#6
மாதிரந் திசையா காயம் மலையானை நிலமைம் பேரே
**1221

#7
மாதவ மென்ப கள்ளு வசந்தகா லந்த வப்பேர்
**1222

#8
மார்க்கமே சமயம் வீதி மறுதலை வழிநாற் பேரே
**1223

#9
மாடமே யுழுந்தும் மிக்க மாளிகை தானு மாமே
**1224

#10
மாழைபொன் உலோகக் கட்டி மடமையே புளிமா ஓலை
**1225

#11
மாசென்ப சிறுமை குற்றம் மழைய ழுக்காக நாற்பேர்
**1226

#12
மாதரே இடைச் சொல் காதல் வனப்பொடு மகிழ லாமே
**1227

#13
மாந்தலென் பதுவே யுண்டல் மரிதலுங் கூறலாமே
**1228

#14
மாருதி அனுமன் பேரே வலியவீ மனுக்கும் பேரே
**1229

#15
மாய்தலென் பதுவே சாவும் மறைதலு மிருபே ராமே
**1230

#16
மாயமென் பதுக றுப்பு வஞ்சனை பொய்யு மாமே
**1231

#17
மாயையென் பதுவே சத்தி வஞ்சனை மாய மும்பேர்
**1232

#18
மாடென்ப நிரைபொன் செல்வம் மருங்குநாற் பேரென் றாமே
**1233

#19
மாலியென் பதுமார்த் தாண்டன் மன்னிய கள்ளு மாமே
**1234

#20
மானலென் பதுவே யொப்பாம் மயக்கமுங் கூற லாமே
**1235

#21
மானமே யளவி லச்சை மானமே பெருமை குற்றம்

@83 மி
**1236

#1
மிச்சையே பொய்த்தலாகும் மிடித்தலஞ் ஞானம் முப்பேர்
**1237

#2
மிதவையென் பதுவே தெப்பம் மேவிய சோறு மாமே

@84 
**1238

#1
மீளிதிண் ணியன்வ லிப்பேர் மேன்மகன் பெருமைக்கும்பேர் 
**1239

#2
மீனென்ப மச்ச மேவான் மீனுஞ்சித் திரைநா ளும்பேர்

@85 மு
**1240

#1
முறமென்ப விசாக நாளே சுளகென்று முரைக்க லாமே
**1241

#2
முரசேயுத் திரட்டா திப்பேர் முழக்கிய பறையு மாமே
**1242

#3
முனியென்ப யானைக் கன்று மூரிவில் அகத்தி முப்பேர்
**1243

#4
முளையென்ப பிள்ளை மூங்கில் முளைக்கும்அங் குரம்முப் பேரே 
**1244

#5
முரம்பென்ப பாறை யின்பேர் மோடென்றும் மொழிய லாமே
**1245

#6
முசலியென் பதுவே யோந்தி பலதேவ னுடும்பு முப்பேர்
**1246

#7
முறுவலென் பதுந கைத்தல் பல்லையும் மொழிய லாமே
**1247

#8
முன்னலென் பதுவே நெஞ்சாம் நினைவென்றும் மொழியலாமே
**1248

#9
முனையென்ப வெறுப்புக் கூர்மை முற்றிய பகைமுப் பேரே
**1249

#10
முரணென்ப வலியி னோடு மொழிந்திடு பகையு மாமே
**1250

#11
முருகுகள் ளிளமை நாற்றம் முருக வேள் விழாவ னப்பாம்
**1251

#12
முறையென்ப கோச மேயூழ் முறைமையிம் முப்பே ராமே
**1252

#13
முடலையே திரட்சி யுண்டை பெருமையிம் முப்பே ராமே
**1253

#14
முன்னமே சீக்கி ரிப்பேர் முன்னுட னெண்ணம் முப்பேர்
**1254

#15
முடங்கலே மடங்கல் கைதை மூங்கில்நோ யாகும் நாற்பேர்
**1255

#16
முத்தமே மருதப் பூமி முத்திதழ் பிரியம் நாற்பேர்
**1256

#17
முண்டகந் தாழை முள்ளி முளரிமுள் மூங்கில் கள்ளாம்
**1257

#18
முல்லைமல் லிகையே வென்றி முற்றிய கற்போர் பூமி
**1258

#19
முச்சியென் பதுவேயுச்சி மயிர்முடி யிருபே ராமே
**1259

#20
முற்றலே வளைத்தல் மூப்பு முடிவொடு வெறுத்த லாமே
**1260

#21
முளரியே விறகு செந்தீ முண்டகஞ் சிறுமை காடாம்

@86 மூ
**1261

#1
மூலம்வேர் முதலே யேது முதிர்கிழங் கொருநாட் கும்பேர்
**1262

#2
மூரியே றெருமை சோம்பு முறைநெரி வுட்பீ டென்ப
**1263

#3
மூரலென் பதுவே சோறும் முறுவலும் பல்லு மாமே
**1264

#4
மூசலென் பதுவே சாவும் மொய்த்தலு மிருபே ராமே 
**1265

#5
மூழியே சோறு வாவி அகப்பையும் மொழிய லாமே

@87 மெ
**1266

#1
மெய்யென்ப உண்மை ஞானம் மேலிய சடம்முப் பேரே
**1267

#2
மெத்தையென் பதுவே சட்டை மெல்லவீ ணிருபே ராமே

@88 மே
**1268

#1
மேதைதோல் புதனி றைச்சி மிக்கபே ரறிவு கள்ளாம்
**1269

#2
மேலென்ப தியல்பு மேற்கு விசும்பிட மாக நாற்பேர்
**1270

#3
மேக்கென்ப மேலின் பேராம் மேற்றிசை தானு மாமே
**1271

#4
மேனியென் பதுநி றப்பேர் மெய்யென்று முரைக்க லாமே
**1272

#5
மேடமோர் ராசி யாடு மெய்புகு கருவி முப்பேர்

@89 மை
**1273

#1
மையென்ப தாடு குற்றம் மழைமல டஞ்ச னங்கார்
**1274

#2
மைந்தென்ப வலியி னோடு மயக்கமுங் கூற லாமே

@810 மொ
**1275

#1
மொக்குளென் பதுபூ மொட்டுங் குமிழியும் மொழிய லாமே
**1276

#2
மொய்செருக் களமே யானை மூசுவண் டொடுதி ரப்பேர் 
**1277

#3
மொய்ம்பென்ப தோளின் பேரே வலியென்று முரைக்கலாமே

@811 மோ
**1278

#1
மோடென்ப வயிற்றின் பேரும் மொழிந்திடு மேடு மாமே

@812 மௌ
**1279

#1
மெளலியென் பதுகி ரீடம் மன்னிய சடையு மாமே
&9 யகர வருக்கம்

@9 யகர வருக்கம்

@91 ய
**1280

#1
யவனர்சோ னகர்கண் ணாளர் சித்திர கார ரென்ப

@92 யா
**1281

#1
யாழென்ப மிதுனம் வீணை ஈசனாள் முதனா ளாமே
**1282

#2
யாணரே புதுமை தச்சர் எய்திய வனப்பு நன்மை
**1283

#3
யாப்பென்ப கவிதை யின்பேர் எய்திய கட்டு மாமே
**1284

#4
யானமே யூர்தி யின்பேர் மரக்கல மென்று மாமே
**1285

#5
யாமமென் பதுசா மம்தெற் கிரவென்றுங் கூற லாமே

@93 யூ
**1286

#1
யூபமே வேள்வித் தம்பம் உடற்குறை படைவகுப்பாம்
**1287

#2
யூகமே கருங்கு ரங்கோ டுட்பொரு ளுணர்தல் தர்க்கம்

@94 யோ
**1288

#1
யோகமே தியானங் கூட்டம் உபாயமாம் உயர்ச்சிக்கும்பேர்
&10 வகர வருக்கம்

@10 வகர வருக்கம்

@101 வ
**1289

#1
வலவையென் பதுவல் லோனும் வஞ்சப்பெண் பெயரு மாமே
**1290

#2
வருடமென் பதுயாண் டின்பேர் மழையென்று முரைக்க லாமே
**1291

#3
வன்னியே பிரம சாரி வளர்கிளி சமிசெந் தீயாம்
**1292

#4
வயலென்ப வெளியி னோடு மருதநன் னிலமு மாமே
**1293

#5
வசியென்ப கூர்மை யோடு வசியமு மாகு மென்ப
**1294

#6
வடவையூ ழித்தீ யானைப் பிடிமயி டப்பெண் ணாமே
**1295

#7
வயவெள்ப புட்பொ துப்பேர் வலியொடு நீரு மாமே
**1296

#8
வழியென்ப தருமம் பிள்ளை மரபிடந் தொடர்ச்சியும்பேர்
**1297

#9
வரையென்ப மூங்கில் மட்டு மலைகரத் திறைநாற் பேரே
**1298

#10
வசதியென் பதுவே யூரும் மனையுட னிடமு மாமே
**1299

#11
வயவனென் பதுவே வீரன் காதலன் வலியான் முப்பேர்
**1300

#12
வயாவென்ப காதலோடு வருத்தமுங் கருப்பம் முப்பேர்
**1301

#13
வள்ளென்ப காது கூர்மை வலியொடு வாளே வாராம்
******
********
** 
*