<<முந்திய பக்கம்

பசுபதி, மேகலா,சாயிராமன் பதிப்பித்த (உ.வே.சா.நூலகம் - 2003) அகராதி நிகண்டு - தொடரடைவு

பா - முதல் சொற்கள்
பாக்கு 2
பாகலே 1
பாங்கன் 1
பாங்கி 1
பாசமே 1
பாசறை 1
பாசனம் 1
பாசி 1
பாசு 1
பாட்டின் 1
பாட்டின்பண் 1
பாட்டும் 2
பாட்டுறு 1
பாடியே 1
பாடு 1
பாடுநரே 1
பாடை 1
பாண்டம் 2
பாண்டமுகம் 1
பாண்டிலே 1
பாணம் 2
பாணம்தான் 1
பாணமும் 1
பாணன் 1
பாணி 1
பாத்தியே 1
பாத்து 1
பாதரசம் 1
பாதாளப்பேர் 1
பாதி 3
பாதியும் 1
பாதுகாத்திடல் 1
பாதை 1
பாம்பின்சுடர்ப்பொறி 1
பாம்பின்படமும் 1
பாம்பின்படமொடு 1
பாம்பின்பை 1
பாம்பின்மெய்யும் 1
பாம்பு 4
பாம்பும் 2
பாய் 2
பாயல் 3
பாயோடு 1
பார் 3
பாரதி 1
பாரம் 7
பாராவாரம் 1
பாரி 2
பாரித்தல் 1
பால் 3
பால்பிரை 1
பாலிகை 1
பாலும் 3
பாலுறு 1
பாலை 2
பாலைக்குஅதிபன் 1
பாலைநிலம் 1
பாலையாழ் 1
பாலையாழும் 1
பாலொடு 1
பாவம் 2
பாவமும் 1
பாவலும் 1
பாழி 1
பாழியே 1
பாற்கரன் 1
பாறலே 1
பாறை 1
பாறையின்பேர் 1
பாறையும் 1
பானலே 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    பாக்கு (2)
கோலமே இரந்தை பன்றி பாக்கு நீர் கொழுந்து பீர்க்கு ஆம் - 2.ககர_வருக்கம்:210 3/1
பாக்கு என்ப எதிர்காலத்தை பகர் இடைச்சொல் துவர்க்காய் - 7.பகர_வருக்கம்:72 19/1

 TOP
 
    பாகலே (1)
பாகலே ஆவணம் பசு ஆ எண்பேர் ஆம் - 2.ககர_வருக்கம்:26 4/2

 TOP
 
    பாங்கன் (1)
சேடனே பாங்கன் இந்த செகம் தாங்கும் அனந்தனும் பேர் - 3.சகர__வருக்கம்:38 4/1

 TOP
 
    பாங்கி (1)
சேடி என்பதுவே பாங்கி சிறந்த விஞ்சையர்ஊர் ஆமே - 3.சகர__வருக்கம்:38 2/1

 TOP
 
    பாசமே (1)
பாசமே கயிறு கூளி பகர் ஊசித்துளை அன்பு ஆகும் - 7.பகர_வருக்கம்:72 20/1

 TOP
 
    பாசறை (1)
பாடியே நகரம் நாடு பாசறை ஆயர்பேரூர் - 7.பகர_வருக்கம்:72 8/1

 TOP
 
    பாசனம் (1)
பாசனம் என்ப சுற்றம் பாண்டம் உண்கலமும் பன்னும் - 7.பகர_வருக்கம்:72 14/1

 TOP
 
    பாசி (1)
பீனம் என்பதுவே பாசி பெருமையும் இருபேர் ஆமே - 7.பகர_வருக்கம்:74 6/1

 TOP
 
    பாசு (1)
பாசு என்ப மூங்கிலோடு பச்சையும் கூறலாமே - 7.பகர_வருக்கம்:72 5/1

 TOP
 
    பாட்டின் (1)
பண் என்ப பாட்டின் பண்ணும் பரிமாவின் கலணையும் பேர் - 7.பகர_வருக்கம்:71 35/1

 TOP
 
    பாட்டின்பண் (1)
கானம் என்பது பாட்டின்பண் காடு என்றும் கருதலாமே - 2.ககர_வருக்கம்:22 17/1

 TOP
 
    பாட்டும் (2)
தூக்கு என்ப பாட்டும் கூத்தும் துலாமும் ஆராய்தலும் பேர் - 5.தகர_வருக்கம்:56 5/1
பனுவல் என்பதுவே பேச்சும் பாட்டும் இங்கு இருபேர் ஆமே - 7.பகர_வருக்கம்:71 63/1

 TOP
 
    பாட்டுறு (1)
பந்தமே கிளையும் கட்டும் பாட்டுறு தளையும் ஏரும் - 7.பகர_வருக்கம்:71 40/1

 TOP
 
    பாடியே (1)
பாடியே நகரம் நாடு பாசறை ஆயர்பேரூர் - 7.பகர_வருக்கம்:72 8/1

 TOP
 
    பாடு (1)
பாடு என்ப பெருமை ஓசை பக்கமும் படுதலும் பேர் - 7.பகர_வருக்கம்:72 15/1

 TOP
 
    பாடுநரே (1)
புலவர் பாடுநரே கூத்தர் புதன் உம்பர் கவி கண்ணாளர் - 7.பகர_வருக்கம்:75 11/1

 TOP
 
    பாடை (1)
கலிங்கமே வானம்பாடி காழகம் ஒரு பாடை பேர் - 2.ககர_வருக்கம்:21 66/1

 TOP
 
    பாண்டம் (2)
ஊணுறு பாண்டம் காலம் உலகு பற்று ஓசை பத்தாம் - 7.பகர_வருக்கம்:72 3/2
பாசனம் என்ப சுற்றம் பாண்டம் உண்கலமும் பன்னும் - 7.பகர_வருக்கம்:72 14/1

 TOP
 
    பாண்டமுகம் (1)
புட்கரம் நிறைவு பாண்டமுகம் தீர்த்தம் புனல் வான் சேனம் - 7.பகர_வருக்கம்:75 1/1

 TOP
 
    பாண்டிலே (1)
பாண்டிலே கஞ்சதாளம் பாறலே மூங்கில் மஞ்சம் - 7.பகர_வருக்கம்:72 2/1

 TOP
 
    பாணம் (2)
பத்திரம் இலை வனப்பு படை நன்மை சிறகே பாணம் - 7.பகர_வருக்கம்:71 41/1
பத்திரி பறவை காளி பரி இலை பாணம் ஐம்பேர் - 7.பகர_வருக்கம்:71 74/1

 TOP
 
    பாணம்தான் (1)
பாணம்தான் மேகவண்ணக்குறிஞ்சி எய்கணை பூம்பட்டு ஆம் - 7.பகர_வருக்கம்:72 17/1

 TOP
 
    பாணமும் (1)
பல்லமே ஒரு கணக்கு பாணமும் கரடியும் பேர் - 7.பகர_வருக்கம்:71 64/1

 TOP
 
    பாணன் (1)
சென்னி என்பதுவே சோழன் சிரம் அசுபதி பாணன் பேர் - 3.சகர__வருக்கம்:37 1/1

 TOP
 
    பாணி (1)
பாணி என்பது கீலாலம் பல்லியம் கரம் பண் சோலை - 7.பகர_வருக்கம்:72 3/1

 TOP
 
    பாத்தியே (1)
பாத்தியே சிறுசெய் இல்லம் பகுத்தலே வகுத்தல் முப்பேர் - 7.பகர_வருக்கம்:72 10/1

 TOP
 
    பாத்து (1)
பாத்து என்ப கஞ்சி சோறு பகுத்திடல் வகுத்தல் முப்பேர் - 7.பகர_வருக்கம்:72 18/1

 TOP
 
    பாதரசம் (1)
சூதம் மாமரமே பாதரசம் என இருபேர் சொல்லும் - 3.சகர__வருக்கம்:36 8/1

 TOP
 
    பாதாளப்பேர் (1)
அதம் என்ப பாதாளப்பேர் ஆம் இறங்குதலும் கீழும் - 1.உயிர்_வருக்கம்:11 66/1

 TOP
 
    பாதி (3)
அத்தமே வாளி கானம் கண்ணாடி பொன் பொருள் கை பாதி - 1.உயிர்_வருக்கம்:11 8/1
அருத்தம் என்பதுவே பாதி ஆடகம் பொருள் கருத்து ஆம் - 1.உயிர்_வருக்கம்:11 127/1
நேர் சமம் ஈதல் பாதி நெடில் உடன்பாடு முப்பேர் - 6.நகர_வருக்கம்:68 3/1

 TOP
 
    பாதியும் (1)
பங்கு என்ப முடமே ஆகும் பாதியும் சனியும் முப்பேர் - 7.பகர_வருக்கம்:71 5/1

 TOP
 
    பாதுகாத்திடல் (1)
பரி பரி சுமத்தல் வேகம் பாதுகாத்திடல் வருத்தம் - 7.பகர_வருக்கம்:71 43/1

 TOP
 
    பாதை (1)
பதம் என்ப மொழி கால் செவ்வி பாதை போது அடிசில் பட்டம் - 7.பகர_வருக்கம்:71 7/1

 TOP
 
    பாம்பின்சுடர்ப்பொறி (1)
துத்தியே சுணங்கும் பாம்பின்சுடர்ப்பொறி புதல் என்று ஆமே - 5.தகர_வருக்கம்:55 3/1

 TOP
 
    பாம்பின்படமும் (1)
பணம் என்பது அரவு பாம்பின்படமும் பொற்காசும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 65/1

 TOP
 
    பாம்பின்படமொடு (1)
பை என்ப நிறமே பாம்பின்படமொடு பசுமையும் பேர் - 7.பகர_வருக்கம்:79 1/1

 TOP
 
    பாம்பின்பை (1)
படம் என்ப தாடை பாம்பின்பை யானை முகபடாமே - 7.பகர_வருக்கம்:71 48/1

 TOP
 
    பாம்பின்மெய்யும் (1)
போகமே பாம்பின்மெய்யும் போகத்தின் விகற்பும் ஆகும் - 7.பகர_வருக்கம்:711 1/1

 TOP
 
    பாம்பு (4)
திரவியம் பாம்பு காற்று தேரொடு மூங்கில் சேகு - 1.உயிர்_வருக்கம்:11 129/3
சக்கிரி குயவன் செக்கான் தராபதி நெடுமால் பாம்பு - 3.சகர__வருக்கம்:31 18/1
நாகம் விண் குரங்கு புன்னை நல் தூசு மலை பாம்பு யானை - 6.நகர_வருக்கம்:62 2/1
மண்டலி என்ப பூனை மண் ஒரு பாம்பு நாய் ஆம் - 8.மகர_வருக்கம்:81 9/1

 TOP
 
    பாம்பும் (2)
கேதுவே ஒரு செம் பாம்பும் கேதனம் இருபேர் ஆமே - 2.ககர_வருக்கம்:27 5/1
பணி என்ப தொழிலும் பாம்பும் பணிதலும் முப்பேர் ஆமே - 7.பகர_வருக்கம்:71 8/1

 TOP
 
    பாய் (2)
கரடம் என்பது மதம் பாய் சுவடும் காக்கையும் இரண்டாம் - 2.ககர_வருக்கம்:21 3/1
பகடு என்ப யானை தோணி பாய் கடா பெருமை ஈறு ஆம் - 7.பகர_வருக்கம்:71 44/1

 TOP
 
    பாயல் (3)
பரியுடன் சிலம்பி பெய்த பரல் விலி பாயல் சோலை - 1.உயிர்_வருக்கம்:11 129/5
சேக்கையே முலை விலங்கு துயிலிடம் சிறந்த பாயல் - 3.சகர__வருக்கம்:38 3/1
பள்ளியே சிற்றூர் கோயில் பாயல் கண்படை நீத்தோரூர் - 7.பகர_வருக்கம்:71 17/1

 TOP
 
    பாயோடு (1)
ஆரை என்பது புல் பாயோடு அணி மதில் ஆக முப்பேர் - 1.உயிர்_வருக்கம்:12 13/1

 TOP
 
    பார் (3)
கோ என்ப நீர் விண் பார் கண் குலிசம் திக்கு இறை அம்பு ஆ ஆம் - 2.ககர_வருக்கம்:210 5/1
படி அங்கவடி சோபானம் பகர் குணம் உவமை பார் ஆம் - 7.பகர_வருக்கம்:71 66/1
பார் என்ப பூமி தேரின்பரப்பு உரோகணி முப்பேரே - 7.பகர_வருக்கம்:72 6/1

 TOP
 
    பாரதி (1)
பாரதி என்ப நாவாய் பனுவலாட்டிக்கும் பேரே - 7.பகர_வருக்கம்:72 1/1

 TOP
 
    பாரம் (7)
கனம் என்ப புயலே பாரம் காத்திரம்தானும் ஆமே - 2.ககர_வருக்கம்:21 22/1
குரு நிறம் வியாழம் ஓர் நோய் குரவன் பாரம் பேர் ஐந்தாம் - 2.ககர_வருக்கம்:25 12/1
சீர் செல்வம் தாளவொத்து சீர்த்தி காத்தண்டே பாரம் - 3.சகர__வருக்கம்:34 5/1
ஞாட்பு என்ப பொரும்போர் கூட்டம் நவின்றிடு பாரம் முப்பேர் - 4.ஞகர_வருக்கம்:41 3/1
பரம் என்ப கவசம் பாரம் பரிமாவின் கலணையும் பேர் - 7.பகர_வருக்கம்:71 38/1
பாரி ஓர் வள்ளல் கட்டில் பாரி நல் தூசு பாரம் - 7.பகர_வருக்கம்:72 7/1
பொறை மலை துறுகல் பாரம் பொறை சுமை கருப்பம் பூமி - 7.பகர_வருக்கம்:710 17/1

 TOP
 
    பாராவாரம் (1)
பாராவாரம் தண் ஆழி பரவையின்கரையும் ஆமே - 7.பகர_வருக்கம்:72 4/1

 TOP
 
    பாரி (2)
பாரி ஓர் வள்ளல் கட்டில் பாரி நல் தூசு பாரம் - 7.பகர_வருக்கம்:72 7/1
பாரி ஓர் வள்ளல் கட்டில் பாரி நல் தூசு பாரம் - 7.பகர_வருக்கம்:72 7/1

 TOP
 
    பாரித்தல் (1)
பாரித்தல் என்பதே தோற்றுதல் பரப்புதலும் அப்பேர் - 7.பகர_வருக்கம்:72 13/1

 TOP
 
    பால் (3)
அமுதமே பெருமை முத்தி அப்புடன் சுதை பால் ஐம்பேர் - 1.உயிர்_வருக்கம்:11 81/1
துத்தம் யாழிசையே பால் ஓர் மருந்தொடு வயிறும் சொல்லும் - 5.தகர_வருக்கம்:55 8/1
பால் என்ப கீரம் பக்கம் பகுத்தலும் இயல்பும் ஆமே - 7.பகர_வருக்கம்:72 12/1

 TOP
 
    பால்பிரை (1)
உறை என்ப மருந்து நீளம் உவர்நீர் பால்பிரை இடைச்சொல் - 1.உயிர்_வருக்கம்:15 8/1

 TOP
 
    பாலிகை (1)
பாலிகை உதடு வட்டம் பட்ட வாள்முட்டு முப்பேர் - 7.பகர_வருக்கம்:72 16/1

 TOP
 
    பாலும் (3)
அமுது என்ப சுவையும் பாலும் அவியொடு முப்பேர் ஆமே - 1.உயிர்_வருக்கம்:11 79/1
கீரம் என்பதுவே பாலும் கிள்ளையும் இருபேர் ஆமே - 2.ககர_வருக்கம்:24 1/1
பீர் என்ப முலையில் பாலும் பீர்க்கொடு பசலைக்கும் பேர் - 7.பகர_வருக்கம்:74 3/1

 TOP
 
    பாலுறு (1)
பயோதரம் என்ப மேகம் பாலுறு முலை இரண்டாம் - 7.பகர_வருக்கம்:71 11/1

 TOP
 
    பாலை (2)
அந்தியே மாலைக்காலம் மரம் பாலை யாழ்ப்பண்ணும் பேர் - 1.உயிர்_வருக்கம்:11 21/1
சுரம் என்ப வழி உடம்பில்சூடு அரும்நெறி கான் பாலை - 3.சகர__வருக்கம்:35 18/1

 TOP
 
    பாலைக்குஅதிபன் (1)
காளையே புருடன் பாலைக்குஅதிபன் புங்கவமும் முப்பேர் - 2.ககர_வருக்கம்:22 10/1

 TOP
 
    பாலைநிலம் (1)
செம்புலம் என்ப பாலைநிலம் செருக்களம் இரண்டாம் - 3.சகர__வருக்கம்:37 6/1

 TOP
 
    பாலையாழ் (1)
அராகம் என்பது சிவப்போடு ஆசை பண் பாலையாழ் ஆம் - 1.உயிர்_வருக்கம்:11 47/1

 TOP
 
    பாலையாழும் (1)
சிகண்டியே அலியும் பாலையாழும் சேர் மயிலும் ஆமே - 3.சகர__வருக்கம்:33 13/1

 TOP
 
    பாலொடு (1)
பயம் என்ப சுதை நீர் அச்சம் பாலொடு பயன் பேர் ஐந்தே - 7.பகர_வருக்கம்:71 9/1

 TOP
 
    பாவம் (2)
அகம் என்ப மனையே பாவம் அகலிடம் வீடுள் ஆமே - 1.உயிர்_வருக்கம்:11 33/1
செடி என்ப குற்றம் பாவம் செறிவுடன் ஒளியும் ஆமே - 3.சகர__வருக்கம்:37 10/1

 TOP
 
    பாவமும் (1)
பவம் என்ப செனனத்தோடு பாவமும் கூறலாமே - 7.பகர_வருக்கம்:71 51/1

 TOP
 
    பாவலும் (1)
சேமம் என்பதுவே இன்பம் செப்பிய பாவலும் பேர் - 3.சகர__வருக்கம்:38 5/1

 TOP
 
    பாழி (1)
அளை என்ப முழையே பாழி ஆன வெண் தயிர் புற்று ஆமே - 1.உயிர்_வருக்கம்:11 92/1

 TOP
 
    பாழியே (1)
பாழியே வலி விலங்கின்படுக்கை ஊர் பற்றலார்ஊர் - 7.பகர_வருக்கம்:72 11/1

 TOP
 
    பாற்கரன் (1)
பருதியே வட்டம் ஊர்கோள் பாற்கரன் நேமி நாற்பேர் - 7.பகர_வருக்கம்:71 1/1

 TOP
 
    பாறலே (1)
பாண்டிலே கஞ்சதாளம் பாறலே மூங்கில் மஞ்சம் - 7.பகர_வருக்கம்:72 2/1

 TOP
 
    பாறை (1)
அறை என்ப மொழிதல் பாறை அகம் திரை மலைமுழை பேர் - 1.உயிர்_வருக்கம்:11 97/1

 TOP
 
    பாறையின்பேர் (1)
முரம்பு என்ப பாறையின்பேர் மோடு என்றும் மொழியலாமே - 8.மகர_வருக்கம்:85 5/1

 TOP
 
    பாறையும் (1)
பதுக்கை என்பதுவே மேடும் பாறையும் தூறும் ஆமே - 7.பகர_வருக்கம்:71 19/1

 TOP
 
    பானலே (1)
பானலே குவளையோடு பழனமும் மருதம் முப்பேர் - 7.பகர_வருக்கம்:72 9/1

 TOP