|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
மூக்கு (4)
நாசி சார்விடமே மூக்கு ஆம் நசை இச்சை ஒழுக்கத்தின் பேர் - 4.சகரவெதுகை:4 19/4
கோணமே குதிரை வாள் அங்குசம் வளைவுடனே மூக்கு ஆம் - 7.ணகரவெதுகை:7 6/4
துண்டம் சாரைப்பாம்பின் பேர் துணியொடு வதனம் மூக்கு ஆம் - 7.ணகரவெதுகை:7 8/3
அலகு நெற்கதிரே ஆதி ஆரம் சோதினி புண் மூக்கு
பலகறை எண் உளம்பு மகிழின்பால் எண்பேர் பன்னும் - 14.லகரவெதுகை:14 42/1,2
TOP
மூக்கும் (1)
சுவவு என்ப சுவர்க்கம் கண்டன் தொகுத்த புண் மூக்கும் ஆமே - 15.வகரவெதுகை:15 4/4
TOP
மூகை (1)
ஊமையே கீரி மூகை உம்மை முன்பின்பிறத்தல் - 11.மகரவெதுகை:11 25/3
TOP
மூங்கில் (15)
முடங்கலே மடங்கல் கைதை மூங்கில் நோய் ஆங்கு நாற்பேர் - 6.டகரவெதுகை:6 39/2
விண்டு என்ப மாயோன் வெற்பே மேகமே மூங்கில் காற்று ஆம் - 7.ணகரவெதுகை:7 28/4
வேணுவே சிலை வாள் மூங்கில் வெய்ய உட்டுளைப்பொருள் பேர் - 7.ணகரவெதுகை:7 35/3
கண் என்ப அகலம் பொற்பு கருத்துக்கண் பெருமை மூங்கில்
எண் நயப்பு உணவு ஏழாம்வேற்றுமை அருள் இடப்பேர் பத்தாம் - 7.ணகரவெதுகை:7 37/1,2
சந்தியே அந்தி மூங்கில் சதுக்கம் ஓர் இசை கன்னல் பேர் - 9.நகரவெதுகை:9 4/3
அமை அழைத்திடுதல் மூங்கில் அம்பகம் விழி எழுச்சி - 11.மகரவெதுகை:11 20/4
வேயே யாழ் கவனம் மூங்கில் வேய்தல் ஒற்று துளை பேர் - 12.யகரவெதுகை:12 15/1
பிரம்பு வேத்திரம் நெய் மூங்கில் பெருங்கடல் அரிசி ஐம்பேர் - 13.ரகரவெதுகை:13 17/4
வேரலே வேர்த்தல் மூங்கில் விரோதம் மல் வேறுபாடு ஆம் - 13.ரகரவெதுகை:13 42/1
கால் இடம் தறி மரக்கால் காற்று தேருருள் தாள் மூங்கில்
பாலனம் குரங்கு ஊற்று ஊற்றம் பகர் வாய்க்கால் ஈராறேபேர் - 14.லகரவெதுகை:14 45/1,2
கழை என்ப புணர்தம் மூங்கில் கரும்பு என விரும்பும் முப்பேர் - 16.ழகரவெதுகை:16 3/2
வேழமே கொறுக்கை மூங்கில் வெற்றி மால் யானை கன்னல் - 16.ழகரவெதுகை:16 18/2
கிளையே ஓர் பண் மூங்கில் பேர் கேளொடு கிளைத்தற்கும்பேர் - 17.ளகரவெதுகை:17 2/3
வற்கமே குதிரைவாயின்வடம் மூங்கில் வழுவில் கூட்டம் - 18.றகரவெதுகை:18 27/2
அறிமேடம் வெருவல் மூங்கில் அணங்கு ஆடல் மறவி தீம் கள் - 18.றகரவெதுகை:18 39/2
TOP
மூங்கிற்கும் (1)
பாதிரி பாடலப்பேர் பணைத்து எழு மூங்கிற்கும் பேர் - 8.தகரவெதுகை:8 46/3
TOP
மூச்சுடன் (1)
உயிர்த்தல் மூச்சுடன் வருத்தம் உய்த்தல் ஓட்டுதல் பிழைத்தல் - 12.யகரவெதுகை:12 20/2
TOP
மூச்சோடு (1)
ஆவியே நாற்றம் மூச்சோடு ஆருயிர் வாவி தூமம் - 15.வகரவெதுகை:15 18/1
TOP
மூசல் (2)
மூசல் மொய்த்திடல் சாவு என்ப முசுவே ஓர் வளல் முசு பேர் - 4.சகரவெதுகை:4 8/1
கமம் திகழ் நிறைவே மூசல் காமாரி சிவன் ஓர் சாலி - 11.மகரவெதுகை:11 2/2
TOP
மூசு (1)
மொய் செருக்களம் திரட்சி மூசு வண்டு யானை தாய் ஆம் - 12.யகரவெதுகை:12 18/2
TOP
மூட்டுதல் (1)
முடுகலே விரைவே மல்லல் மூட்டுதல் மிகுதி அச்சம் - 6.டகரவெதுகை:6 32/2
TOP
மூட்டும் (1)
கந்து பண்டியுள் இரும்பும் கம்பமும் யாக்கை மூட்டும்
வந்துறு பற்றுக்கோடும் வகுத்த பேர் இ நான்கு ஆமே - 9.நகரவெதுகை:9 16/3,4
TOP
மூட்டொடுபுணர்த்தல் (1)
கொள்கையே அறிவே பண்பு ஆம் கொளுத்தே மூட்டொடுபுணர்த்தல்
தெள்ளுதல் கொழித்தல் ஓர்தல் தேள் அனுடம் தெறுக்கால் - 17.ளகரவெதுகை:17 19/3,4
TOP
மூடம் (2)
பேதை ஓர் பருவம் மூடம் பெண் தரித்திரனே நாற்பேர் - 8.தகரவெதுகை:8 22/4
சுமடு சும்மாடு மூடம் தோமரம் படை ஓர் வாச்சியம் - 11.மகரவெதுகை:11 28/3
TOP
மூடல் (3)
சூடலே மூடல் வேய்தல் சுடுவே சும்மாடு சுட்டல் - 6.டகரவெதுகை:6 4/3
படிதலே புணர்தல் தோய்தல் படலம் அத்தியாயம் மூடல்
பொடிதல் என்று உரைத்த நாமம் பொடித்தல் அங்குரித்தல் ஆமே - 6.டகரவெதுகை:6 13/3,4
வேய்தலே சூடல் மூடல் வீடு கோயில் பொன் தீட்டல் - 12.யகரவெதுகை:12 2/3
TOP
மூடன் (2)
சிதடன் அந்தகன் மூடன் பேர் திதி பக்கம் நிலைபேறும் பேர் - 8.தகரவெதுகை:8 9/4
முழுமகன் அறிஞன் மூடன் மோழையே காடி கஞ்சி - 16.ழகரவெதுகை:16 14/3
TOP
மூடு (1)
மூடு என்ப முதுமை ஈதல் முத்தே வெண்குருகு முத்தம் - 8.தகரவெதுகை:8 38/2
TOP
மூடுதல் (1)
கவுரவம் இளமை வெள்ளை கவிப்பே மூடுதல் குடை பேர் - 15.வகரவெதுகை:15 9/1
TOP
மூடை (1)
புதரே புல் புருவம் பூடு ஆம் பொதி மூடை பொதிதல் ஆகும் - 8.தகரவெதுகை:8 41/2
TOP
மூத்தாள் (1)
தத்தை மூத்தாள் கிளி பேர் சதம் சிறகு இலை நூறு ஆமே - 8.தகரவெதுகை:8 26/4
TOP
மூத்தாளே (1)
தவ்வை மூத்தாளே ஈன்றாள் சாற்றும் மூதேவி முப்பேர் - 15.வகரவெதுகை:15 21/3
TOP
மூத்தோர் (1)
முதுவரே அமைச்சர் மூத்தோர் முத்தி பேறு அலர் மின் தேமல் - 8.தகரவெதுகை:8 33/1
TOP
மூத்தோன் (4)
அத்தனே மூத்தோன் தாதை ஐம்முகன்தானே முப்பேர் - 8.தகரவெதுகை:8 6/1
கொம்பர் கொம்புடன் வெம் காற்று ஆம் கோமானே மூத்தோன் சாத்தன் - 11.மகரவெதுகை:11 12/2
அய்யனே மூத்தோன் சாத்தன் அப்பன் இ முப்பேர் செப்பும் - 12.யகரவெதுகை:12 17/1
கிழவனே அறிஞன் மூத்தோன் மருதத்தோன்றல் கிளத்தும் - 16.ழகரவெதுகை:16 22/2
TOP
மூதறிந்தோர் (1)
உரு என்ப நிறமே அட்டை உரியர் மூதறிந்தோர் சுற்றம் - 13.ரகரவெதுகை:13 25/4
TOP
மூது (1)
அடியை ஏத்தி மூது அரும்பொருள்விளக்கநிகண்டு - 1.காப்பு-பாயிரம்:1 1/3
TOP
மூதூர் (1)
துலைக்கடல் முற்றும் கண்டோன் தொல்லையாம் தில்லை மூதூர்
கலக்கற விளங்கும் பச்சை கந்ததேசிகனாம் எம் கோன் - 1.காப்பு-பாயிரம்:1 5/2,3
TOP
மூதேவி (3)
மோடி உள்ளத்து வஞ்சம் காடுகாள் மூதேவி பேர் - 6.டகரவெதுகை:6 40/3
தவ்வை மூத்தாளே ஈன்றாள் சாற்றும் மூதேவி முப்பேர் - 15.வகரவெதுகை:15 21/3
முகடி என்பது மூதேவி முழுமகன்தனக்கும் பேசும் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 12/3
TOP
மூப்பு (1)
முற்றலே வளைதல் நாமம் மூப்பு காழ்க்கோடலும் பேர் - 18.றகரவெதுகை:18 12/4
TOP
மூர்த்தி (1)
ஓமுறு பொருளை ஓதும் உலகு எலாம் உணர்ந்த மூர்த்தி
ஏமுறும் எழில் கலாபத்து இரும் சிகி கடவுள் போற்றி - 9.நகரவெதுகை:9 1/2,3
TOP
மூரல் (2)
மூரல் சொல் பல்லே சோறே முதிர்சிரிப்பு எனும் பேராமே - 13.ரகரவெதுகை:13 73/4
சோறே வெண் மூரல் நாமம் பரணிநாள் இனிமை சொல்லும் - 18.றகரவெதுகை:18 20/3
TOP
மூரி (1)
மூரி ஏறு எருமை ஆற்றல் முரிவே ஊழ் பெருமை சோம்பு ஆம் - 13.ரகரவெதுகை:13 36/2
TOP
மூலநாள் (3)
குருவி புள் மூலநாள் ஆம் குருடன் அந்தகனே வெள்ளி - 13.ரகரவெதுகை:13 91/4
சிலையே வில் கல்லே மூலநாள் மரம் திண் மலை பேர் - 14.லகரவெதுகை:14 10/2
ஆனியே சேதம் மூலநாள் ஒரு மாதமும் பேர் - 19.னகரவெதுகை:19 14/1
TOP
மூலநாளே (2)
மூலநாளே மாதவி ஒன்பான்பேர் - 13.ரகரவெதுகை:13 87/2
வில் என்ப மூலநாளே வெம் சிலை ஒளியே முப்பேர் - 14.லகரவெதுகை:14 19/1
TOP
மூலம் (3)
கொக்கு அயம் செந்நாய் மூலம் குரண்டம் மா குருக்கத்திப்பேர் - 2.ககரவெதுகை:2 41/3
கொட்டியே புறவாயில் பேர் கூட்டம் ஓர் மூலம் கூறும் - 6.டகரவெதுகை:6 20/2
கொக்கு அயம் செந்நாய் மூலம் குரண்டம் மா குருக்கத்தி பேர் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 34/3
TOP
மூலம்நாள் (1)
அன்றில் ஓர் புள் மூலம்நாள் ஆனியம் பொழுதே நாள் ஆம் - 19.னகரவெதுகை:19 19/1
TOP
மூலமே (1)
மூலமே ஏது ஓர் நோய் முதல் கிழங்கு ஒரு நாள் தாரு - 14.லகரவெதுகை:14 2/2
TOP
மூலிகை (1)
முதலே மூலிகை தன் கையின் முதலிடம் முதல் மும்மூர்த்தி - 8.தகரவெதுகை:8 41/3
TOP
மூவாண்டின்நெல் (1)
அசம் மறி மூவாண்டின்நெல் அசனியே உருமு வச்சிரம் - 4.சகரவெதுகை:4 5/2
TOP
மூவாறின் (2)
வழுத்துறு மெய் மூவாறின் வருகின்ற ககரமாதி - 2.ககரவெதுகை:2 51/1
வழுத்து உயிர்மெய் மூவாறின் வருகின்ற ககரமாதி - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 51/1
TOP
மூவிடம் (1)
இடமே மூவிடம் விசாலம் இடப்புறம் பெருமை செல்வம் - 6.டகரவெதுகை:6 60/1
TOP
மூவிருபேர் (1)
சவரும் உப்பளமே பள்ளம் சாற்றும் மூவிருபேர் வைக்கும் - 15.வகரவெதுகை:15 30/2
TOP
மூவிருமுகத்தோன் (1)
இலங்கு மூவிருமுகத்தோன் எம்பிரான் தேவர்சேனை - 3.ஙகரவெதுகை:3 1/2
TOP
மூவிருமுகனை (1)
முலை முகிழ் குறமின்கேள்வன் மூவிருமுகனை போற்றி - 4.சகரவெதுகை:4 1/3
TOP
மூவிலை (1)
காளமே ஊதும்கொம்பு கருமை மூவிலை வேல் நஞ்சம் - 17.ளகரவெதுகை:17 32/1
TOP
மூவைந்தாம் (1)
மோகம் ஆர் பேர் மூவைந்தாம் முகையே நீர் மிடா பூ மொக்குள் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 49/4
TOP
மூவைந்து (3)
ஆக்கிய சிக்கம் என்னும் அபிதானம் மூவைந்து ஆமே - 2.ககரவெதுகை:2 49/4
பூண்ட ஆர் திரையே என்ன புகன்ற பேர் மூவைந்து ஆமே - 7.ணகரவெதுகை:7 45/4
ஆக்கிய சிக்கம் என்னும் அபிதானம் மூவைந்து ஆமே - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 50/4
TOP
மூவைந்தேபேர் (2)
நாட்டு கோண் குரங்கே வாவி நல் வயல் மூவைந்தேபேர்
ஓட்டம் மேலுதடே தோல்வி ஒழுங்குறும் வீதி முப்பேர் - 6.டகரவெதுகை:6 63/3,4
நிதமுறு கடிகை ஆடை நிகழ்த்துறு மூவைந்தேபேர்
உததி தெண்திரை நதி பேர் உதையமே புலரி தோன்றல் - 8.தகரவெதுகை:8 51/3,4
TOP
மூவொன்பதாக (2)
மொழி எதுகையினில் செய்யுள் மூவொன்பதாக செய்தான் - 4.சகரவெதுகை:4 29/2
முன் பெற ஒன்று ஒழிந்த மூவொன்பதாக செய்தான் - 16.ழகரவெதுகை:16 29/2
TOP
மூவொன்பான் (1)
வாய்ந்த ஒன்று ஒழி மூவொன்பான் என்னவே வழங்க செய்தான் - 12.யகரவெதுகை:12 28/2
TOP
மூழ்கல் (1)
துயிலே தூங்கல் பேர் மாளல் தோயுறல் புணர்தல் மூழ்கல் - 12.யகரவெதுகை:12 7/4
TOP
மூன்றாம் (3)
மோகம்செய் நிலக்கடம்பு என்று உரை அபிதானம் மூன்றாம்
பாகவன் தழல் தீத்தேவு ஆம் பாகர் கண் மதில் சூதர்க்கு ஆம் - 2.ககரவெதுகை:2 45/2,3
திருதியே திரும்பல் மூன்றாம் செருந்தி ஓர் மரம் வாட்கோரை - 13.ரகரவெதுகை:13 38/4
மோகம்செய் நிலக்கடம்பு என்று உரை அபிதானம் மூன்றாம்
பாகவன் தழல் தீத்தேவு ஆம் பாகர் கண் மதில் சூதர்க்கு ஆம் - 20.பிரதிபேதம்-ககரவெதுகை:20 45/2,3
TOP
மூன்றினோடு (1)
தா உயர் மூன்றினோடு எண்ணான்கு என சாற்றல் செய்தான் - 15.வகரவெதுகை:15 35/2
TOP
மூன்றும் (1)
தளிர்பெற இந்நூல் மூன்றும் சகம்தனில் திகழ்ந்ததன்றே - 1.காப்பு-பாயிரம்:1 3/4
TOP
|
|
|