1.தெய்வப் பெயர்த் தொகுதி
2.மக்கள் பெயர்த் தொகுதி
3.விலங்கின் பெயர்த் தொகுதி
4.மரப் பெயர்த் தொகுதி
5.இடப் பெயர்த் தொகுதி
6.பல் பொருள் பெயர்த் தொகுதி
7.செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி
8.பண்பு பற்றிய பெயர்த் தொகுதி
9.செயல் பற்றிய பெயர்த் தொகுதி
10.ஒலி பற்றிய பெயர்த் தொகுதி
11.ஒரு சொல் பல் பொருள் பெயர்த் தொகுதி
12.பல் பொருள் கூட்டத்து ஒரு பெயர்த் தொகுதி
|
** திருவேங்கட பாரதி இயற்றிய
** பாரதிதீபம்
@1 தெய்வப் பெயர்த் தொகுதி
** சிவன்
**1
#1
அரன் இறைவன் சிவன் சங்கரன் நித்தன் அமலன் கங்கா
தரன் உமைபங்கன் மலைவில்லி தற்பரன் தானுச் சம்பு
புரதகனன் புனிதன் பிறைசூடி புலியதளோன்
பரசு தரன் கயிலாயன் கபாலி பசுபதியே
**2
#2
மழுவாளி யானைஉரித்தோன் முக்கண்ணவன் மான்இடத்தோன்
அழலார்கரன் பித்தன் பிஞ்ஞகன் சூலதரன் பெருமான்
கழையான் முத்தன் திரியம்பகன் காளகண்டன் பணிலக்
குழையான் பினாகி ஐயானனன் ஆதி செங்கோலத்தனே
**3
#3
விடையவன் காமதகனன் கங்காளன் விமலன் சித்தன்
சுடலையில்ஆடி கறைக்கண்டன் கூற்று உதைத்தோன் சடையோன்
நடம்நவில்பாதன் நல்நாரிபாகத்தன் நாதன் விடைக்
கொடியன் உருத்திரன் நீறுஅணிந்தோன் முடிக்கொன்றையனே
**4
#4
பிறப்பிலி கண்நுதல் ஈசன் பெம்மான் பெண்இடத்தன் அத்தன்
மறைத்தவன் யோகி மதிசூடியோன் அந்திவண்ணன் நம்பன்
இறைப் பணிஆபரணன் பாண்டரங்கள் இதனியங்கன்
கறைக்கடுஉண்டவன் காமாரி காலனைக்காய்ந்தவனே
**திருமால்
**5
#5
மாதவன் அச்சுதன் வாமனன் கோவிந்தன் மாயன் மது
சூதனன் கண்ணன் முராரி முகுந்தன் துளவுஅணிந்தோன்
சீதரன் கேசவன் தான் உந்திபூத்தோன் திருவின்பிரான்
பீதகஆடையன் சங்குஆழிஏந்தி பெரியவனே
**6
#6
அரி நெடுமாலவன் தாமோதரன் அரவில்துயில்வோன்
கருடபதாகையன் காகுத்தன் அத்தன் கமலக்கண்ணன்
பரியுருவானவன் பாற்கடலோன் பற்பநாபன் பச்சை
மரகதமேனியன் பஞ்சாயுதன் கடல்வண்ணத்தனே
**7
#7
விண்டு நராந்தகன் சாரங்கபாணியன் வெற்புஎடுத்தோன்
கொண்டல்நிறத்தன் உலகளந்தோன் குஞ்சரம்உதைத்தோன்
வண்டுஉருவத்தன் கருணாகரன் நரவாள்அரி பார்
உண்டவன் கோவலன் நாராயணன் புருடோத்தமனே
**8
#8
கடல்துயில்வண்ணன் திருவிக்கிரமன் கவிப்பின்சென்றோன்
படப்பணிஆடி பரந்தாமன் நித்தன் படியிடந்தோன்
இடைக்குலநாதன் உபேந்திரமூர்த்தி இறையவன் ஏழ்
விடைக்குஎதிராமவன் காயாமலர்வண்ணன் விண்ணவனே
**பிரமன்
**9
#9
போதகன் உந்தியில்வந்தோன் படைத்தவன் பூமிசையோன்
ஓதிமவாகனன் வேதா விரிஞ்சன் உபநிடத்து
நாதன் பிதாமகன் நான்முகன் மால்மகன் நாள்மலரோன்
வேதன் புனிதன் விதாதா முதுவன் விதி அயனே
**10
#10
இரணியகெற்பன் பரமேட்டி மண்பொதுத்தந்தை இறை
குரவன் எண்கண்ணினன் ஆதா எகினக்கொடியுடையோன்
பிரமன் வரன் புவிதந்தோன் மறையவன் பீதகம்சேர்
உருவன் புராதனன் அம்போருகத்தில்உறைபவனே
**இந்திரன்
**11
#11
வானவன் வேள்விப்பிரான் பாகசாதனன் மஞ்ஞைஉரு
வானவன் கோகிலவண்ணன் வலாரி அரி அமரர்
கோன் அசலத்தின்சிறகுஅரிந்தோன் குலிசப்படையோன்
தானவர்கோபன் குணதிசைக்காவான் சசிபதியே
**12
#12
புரந்தரன் வாசவன் விண்ணோர்இறையவன் பொன்னகர்இந்
திரன் புனிதன் வெள்ளைவாரணத்தோன் வச்சிரகரத்தோன்
தரும்தருஆளி சதக்கிருது ஆகண்டலன் மகவான்
கரும் புயல்ஊர்தி சுரர்பதி ஆயிரக்கண்ணினனே
**முருகன்
**13
#13
முருகன் கடம்பன் குமரன் சுவாமி முதலவன்சேய்
குருகின்பெயரிய குன்றுஎறிந்தோன் கொடிச்சேவலன் வேற்
கரன் கந்தன் ஆறுமுகன் வள்ளிநாயகன் கார்த்திகையன்
சுரர்தம்பதிஅளித்தோன் செட்டி வேலன் தொழுபவனே
**14
#14
சூதகுலாரி நகாரி சரவணத்தோன் அறுமீன்
காதலன் சூர்ப்பகை சேந்தன் செவ்வேள் பொழிகார்க் குறிஞ்சி
நாதன் சிகாவளவாகனன் சேய் வெட்சிநாள்மலரோன்
தாதுஅவிழ் காந்தளந்தாரோன் விசாகன் சொல் சண்முகனே
**விநாயகன்
**15
#15
சங்கரன்மைந்தன் விநாயகன் சண்முகன்தன்முன்வந்தோன்
ஐங்கரன் ஆனைமுகத்தோன் கணபதி ஆகுபரிப்
புங்கவன் மால்மருகன் ஒற்றைக்கொம்பன் பொழிமதத்தோன்
பங்கயம் மோதகம் பாசாங்குசம் பயில் பாணியனே
**மன்மதன்
**16
#16
மாரன் அனங்கன் மதன் சம்பராரி மதிக்குடையோன்
கார்இருள்வாரணன் பூவாளி மன்மதன் கந்தர்ப்பன் வேள்
ஆரவில்லாளி குயிற்காகளத்தன் ஐந்துஅம்பு உடைய
வீரன் வசந்தன் ரதிபதி மீனவன் வில்லவனே
** மன்மதன் வயிரவன் ஐயன்
**17
#17
காமன் மனோபவன் சித்தசன் நல்கரும்பாளி கடல்
மாமுரசன் தென்றல்தேரோன் மகரக்கொடியவன் ஆம்
சாமளன் காரி வடுகன் வயிரவன் சாத்தன் ஐயன்
தீமைஇல் காரியன் சாதவாகனன் சிவன்மகனே
** குபேரன்
**18
#18
இருநிதிஆளி குபேரன் தனதன் எரிவிழிசேர்
அரன்உயிர்நண்பன் நிதிக்கோன் இயக்கன் அளகைப்பிரான்
பொருள்இறை பிங்கலன் உத்தரதிக்கன் நல்புட்பகன் மந்
திரி கனசெல்வன் நரவாகனன் வச்சிரவணனே
** அருகன்
**19
#19
அருகன் அசலன் அறவாழிஅந்தணன் ஆதி அண்ணல்
வரதன் சினவரன் பொன்னெயில்நாதன் மலரின்வந்தோன்
பரமன் புனிதன் அதிகுணன் எண்குணத்தோன் பகவன்
விரதன் சினேந்திரன் புண்ணியமூர்த்தி விளங்கொளியே
**20
#20
பூரணன் பண்ணவன் வேளைவென்றோன் முக்குடைப்புங்கவன்
வீரன் திகம்பரன் விண்ணவன் தேவன் விறல்முனிவன்
காரணன் சாந்தன் அருளாளி வேந்தன் கலையுணர்ந்தோன்
பேர் அரியாசனன் ஆசான் அசோகின்பெருந்தகையே
** புத்தன்
**21
#21
அண்ணல் அருங்கலைநாயகன் போதியவன் பகவன்
புண்ணியன் ஆதிமுதல்வன் புனிதன் சொற்புங்கவன் மெய்த்
தண்ணளியாளன் சிவன் வரன் புத்தன் தருமஅருள்
நண்ணியசெல்வன் அகளங்கன் பூவில்நடந்தவனே
**22
#22
சாந்தன் முக்குற்றம்கடிந்தபிரான் பஞ்சதாரைவிட்டோன்
மாந்தர்க்கருளிடுவோன் ஏகதேவன் மறைவயிரி
காந்தன் அனந்தவிலோசனன் ஆதிகடவுள் அரி
ஏந்தியநீழலன் வாமன் சிங்காதனம் ஏற்றவனே
** யமன் யமபடர்
**23
#23
சமனன் செங்கோல்இறை சண்டன் மறலி தருமன் தென்னன்
நமன் அந்தகன் யமன் வெங்காலன் கூற்று நடுவன் என்பர்
அமர் வெஞ்சமன் சண்டன் வெங்கூற்றுக் காலன் நடன் மறலி
நிமிர்தண்டதரன் யமன்படர் பேர் என்பர் நேரிழையே
** பார்வதி
**24
#24
ஆரியை சத்தி அயிராணி அம்பிகையாள் அண்ட
பூரணி வல்லி உமை சங்கரி முப்புவிஅளித்த
காரணி முக்கணி இமையமடந்தை கவுரி அரன்
பாரி புராதனி எண்ணான்கு அறம்செய்த பார்வதியே
** கங்கை
**25
#25
சீநதி சிந்துநதி சுரர்ஆறு திரிபதகை
வானதி ஆபகை மந்தாகினி விமலை தவள
மான பகீரதி ஆகாசகாமி அமரர்நதி
தீநெறி மேவிய பாவங்கள் தீர்க்கும் சிவகங்கையே
** திருமகள்
**26
#26
பால்நிறவாரி அமுதத்துள்வந்தவள் பைந்துளவோன்
மேனியில் வாழும் விபுதபுராதனி வேண்டும் இன்ப
மானவை நல்கும் அபிராமி மா பொறி ஆக்கம் செல்வி
பூநலனுற்றவள் செய்யவள் இந்திரை பொன் திருவே
** காளி
**27
#27
சண்டி முக்கண்ணி பயிரவி தாருகற்காய்ந்தவள் சா
முண்டி எண்தோள்வல்லி யாமளி காளி முடிக்கவுரி
மண்டிய பேய்க்கொடி மாகாளி யோகினி மாரி வடக்கு
ஒண்தொடிமாது இருவேதாளி யாளியைஊர்பவளே
** காளி மூதேவி
**28
#28
காரியைப்பெற்றகொடி காடுகாள் கொற்றி கார்வடுகி
சூரி சொன்மாரி சுடர் மூதணங்கு என்பர் தொன்முகடி
கார்இருள் காக்கைக்கொடிச்சி கலதி தவ்வை கழுதை
ஊரி திரைச் சேட்டையன் மூதேவி கேட்டை என்று ஓதுவரே
** கலைமகள்
**29
#29
நாமகள் பாரதி கீர்வாணி வெள்ளைநளினவல்லி
பாமகள் சொல்லின்கிழத்தி கலைமகள் பால்நிறத்தி
தாமரைஆசனநாரி பனுவல்தமிழ்மடந்தை
தேமல்கு சாவித்திரி வாணி காயத்திரி என்பரே
** கொற்றவை
**30
#30
மாலுக்கு இளையவள் நாராயணி குமரி கவுரி
பாலைக்கிழத்தி பகவதி பண்ணம்பணத்தி ஐயை
நீலிச் சயத்தி மயிடனைக்காய்ந்தான் நெறி விசையை
ஓலப் பணிலத்தி கார்த்திகை கேசரிஊர்திருவே
** கொற்றவை இந்திரன்தேவி
**31
#31
மேதித்தலையவள் எண்தோளி விந்தை விறல் கொற்றவை
காதிப் பொருகன்னி அந்தரி பேர் என்பர் கற்பகத்தின்
போதுற்றவல்லி சசி அயிராணி புலோமிசை மெய்த்
தீதற்ற சுந்தரி இந்திரன்தேவி செறி பெயரே
** இடாகினி யோகினி வானவர்மாதர் தெய்வப்பெண் பொது
**32
#32
மாயமடந்தை வலவை இடாகினி வஞ்சனி சூ
ராயவள் சண்பனி யோகினி தான் என்பரால் அரம்பை
தூய் அரமாது என்பர் வானவர் மாதரை சூர்அணங்கு
சேய தெய்வப்பொதுப் பெண் பெயர் ஆகும் திருந்திழையே
** தேவர்
**33
#33
வானவர் தேவர் இமையோர் புத்தேளிர் வரர் விபுதர்
தானவர்மாற்றலர் அண்டர் விண்ணோர் அமுதாசனர் மெய்ஞ்
ஞான இலேகர் புலவோர் அமரர் நலக்கடவுள்
ஆனவர் ஆதித்தர் உம்பர் பொன்னாட்டில்அமர்ந்தவரே
** கடவுள்பொது அசுரர் இராக்கதர்
**34
#34
பகவர் பட்டாரகர் புங்கவர் பண்ணவர் தீர்த்தர் என்றே
புகலும் கடவுள்பொதுப் பேர் அவுணர் பொரும்அசுரர்
தகுவர் தயித்தியர் தானவர் நான்கும் நிசாசரரும்
இகலும் அரக்கர் நிசிசர் நிசாசர் இராக்கதரே
** அரக்கர்இனத்தவர் விஞ்சையர் கந்திருவர்
**35
#35
கரையாதுதானர் நிருதர் வெஞ்சாலகடங்கடர்
முரைசார் அரக்கர்இனத்தவர் விஞ்சையர் ஓங்கு வித்தியா
தரர் கேசரர் என்பர் கின்னரர் வீணைத்தனுவினர் தந்
திரர் யாழ்உடையவர் என்னலும்ஆம் கந்திருவரையே
** பசாசு பூதகணம்
**36
#36
கழுது பசாசு பிரேதகம் சோகு கடி கண்ணம் மண்ணை
அழல் உமிழ் கூளியின் வேதாளம் சாவோடு அணங்குஅலகை
பழிதரு கூளி கிருத்திமம் சாதகம் பாரிடம்
மொழிதரு பூதங்கணம் குறள் ஆக மொழிகுவரே
** ஆகாயம் காற்று
**37
#37
அம்பரம் ஆசினி ஆகாயம் அந்தரம் அண்டம் மங்குல்
உம்பர்இடம் குடில் விண் வெளி மாகம் உயர்க் ககனம்
அம்பரம் வானம் விகம்பு என்பர் வந்து பரிசனன் வா
தம் பவனம் கொண்டல் கோடை சமீரணன் சதாகதியே
** காற்று தென்றல்
**38
#38
ஊதை மருத்து வங்கூழ் கால் அனிலம் உலவை வளி
கூதை உயிர்ப்பு அரி மாருதம் மாபெலன் கோதை ஒலி
சீதள வாடை வெங்காற்று என்பர் தென்றல் தென்கால் இரத
வாதம் வசந்தம் மலையாநிலம் மந்தமாருதமே
** குடகாற்று(மேல்காற்று) குளிர்காற்று வடகாற்று
** குணதிசைவந்து(கீழ்காற்று)
** சுழல்அனிலம்(கழல்காற்று) அங்காரகன்
**39
#39
குடகாற்றுக் கோடை குளிர்காற்றுக் கூதையும் ஊதையும் ஆம்
வடகாற்று வாடை வடந்தை குணதிசை வந்து கொண்டல்
அடர்காற்றுச் சூறைவளியே சுழலும் அனியம் என்பர்
சுடர் தீக்கனல் அனலோன் சுசி அழல் தூமத்தனே
**அங்காரகன் நெருப்பு
**40
#40
அரி தகனன் தழல் பாவகன் வன்னி அங்காரகன் பேர்
எரி புவமானன் ஞெகிழி உதாசனன் கனவி
திரிகுணன் வாயுசகன் சித்திரபானுச் சிகி சுவலன்
நிரை எழுநாவன் தனஞ்செயன் அங்கி நெருப்பு என்பரே
**ஊழிஅங்கி (ஊழித்தீ) தீக்கடைகோல்
** விளக்கு தீக்கடவுள்
**41
#41
தாழும் வடவை கடையிற்கனல் உத்தரம் மடங்கல்
ஊழியின் அங்கி ஞெலிகோல் செந்நீக்கடையும்கொழுங்கோல்
சூழும் சுடர் விளக்கும் தீபம் என்பர் சுடர்க்கனலில்
வாழும் அணங்கு வெம்பாவகனாக வகுத்தனரே
** நீர்
**42
#42
வாரி சலம் சலிலம் தோயம் அம்பு வனம் புவனம்
நீர் உதகம் பயம் வார் பாணியம் குசம் நீரம் அப்பு
நாரம் அயம் சம்பாங்கம் கமலம் புனல் அறல்
சேர் அம்புதம் அலர் கீலாலம் கோ உறை சீவனமே
** மேகம்
**43
#43
மேகம் வருணம் முகில் சீமுதம் விரி புட்கரமே
ஆகும் கவந்தம் கனரதம் சீவனி ஆம் அமுதம்
பாகம்கொள் பரண்டம் நல்பானீயம் ஆம் அளகம் பரதம்
போகம்கொள் காண்டம் அப்பெயராகப் புகன்றனரே
** பெருவெள்ளம் நீர்இறை(நீர்க்கடவுள்) சூரியன்
**44
#44
வாரி பிரளையம் நீத்தம் பெருவெள்ளம் வருணன்
நீர்இறை பாசதரன் பாசி என்று நிறை கிரணன்
சூரியன் ஆதவன் என்றூழ் கனலி சுடர்க் கதிரோன்
மேரு வலம்செய் அரி இனன் பானு விருச்சிகனே
** சூரியன்
**45
#45
தரணி தினகரன் வெய்யோன் தபனன் சலசபதி
இரவி திவாகரன் ஞாயிறு பாற்கரன் எல்லை கதிர்
பருதி பகலவன் சான்றோன் அருக்கன் பதங்கன் ஒளி
அருணன் இருள்வலி மார்த்தாண்டன் காலையன் ஆதித்தனே
** சந்திரன்
**46
#46
மதி அம்புலி திங்கள் மான்இடத்தோன் மறுமண்டலத்தோன்
விது இந்து வேளின்குடை ஆம் உடுபதி வெண்பிறை அ
முதகதிர் அல்லவன் சோமன் சசி குமுதம் அலர்த்தும்
பதி சந்திரன் இரவாளி குபேரன் பனிக்கதிரே
** செவ்வாய் புதன்
**47
#47
சேய் அரிவன் குசன் வக்கிரன் பூமகன் தீஉருவம்
ஆய அங்காரகன் செவ்வாய் நீலமகன் ஆரல் என்பர்
தூய மதிமகன் பாகன் அருணன் மெய்த்தூதுவன் மால்
மேய கணக்கன் அனுவளி பண்டிதன் மேதையனே
** புதன் வியாழன்
**48
#48
புந்திதன் சாமன் தனவன் புலவன் புதன் தெளியும்
சிந்தையன் என்பர் குரு விதி அந்தணன் தேவர்குரு
மந்திரி பீதகன் ஆண்டளப்பான் பொன்மதி மறையோன்
பைந்தருவாளிதன்ஆசான் வியாழம் பகற்பதியே
** வெள்ளி சனி
**49
#49
திங்கள் பிரசுரன் சல்லியன் வெள்ளி சிதன் பளிங்கே
கங்கவன் மந்திரி மாமழைக்கோள் புகர் சுக்கிரன்பேர்
பங்கு சவுரி முடவன் கரியவன் ........
தங்கிய கீழ்மகள் மந்தன் சனி சந்திரசாவகனே
** அனந்தன் இராகு கேது மேடஇராசி இடபஇராசி
**50
#50
சேடன் அனந்தன் கரியோன் இராகு சிவந்தவண்ணன்
கூடிய கேதுக் கொறி மையுதள வருடை
மேடஇராசி பசு மூரி ஏறு வெம்பாறல் புல்லம்
மாடர் பாண்டில் இடபஇராசிக்கு வாய்த்ததுவே
** மிதுனஇராசி கர்க்கடகம் சிங்கம்
**51
#51
இவரும் யாழ் மறி தண்டு பாடவை உவளெயிரமடை
சவைமகள் ஆகும் மிதுனஇராசி தயங்கு குளிர்
கவையடி ஞெண்டு அலவன் களவன் கற்கடகம் என்பர்
திவள் அரிமாப் புலி யாளி ஐயானனம் சிங்கத்ததே
** கன்னிஇராசி துலாம் விருச்சிகம் தனு
**52
#52
நிலமிகு பெண்பெயர் கன்னிஇராசி நிறை கட்டளை
துலை குல வாணிகன் கோல்நிறுப்பான் துலாத்தது என்பர்
நலம்மிகு தேள் தெறுக்கால் பறப்பான் என நாட்டிய பேர்
தலைமை விரிச்சிகம் காண்டீபம் சாபம் தனு என்பரே
** மகரம் கும்பம் மீனம் அசுபதி பரணி
**53
#53
குல மீன் சுறவு கலை மகரம் குயம் சாடி கும்பம்
அலை மீன் பல பெயர் மீனம் என்று ஓதுவர் ஐப்பசி
தலைநாள் இரலை பரியே அசுபதி தாசி சுல்லி
பல கானமீன் தருமன்நாள் அடுப்புப் பரணியதே
** கார்த்திகை உரோகனி
**54
#54
வானன் அளக்கர் இறால் ஆரல் நாவிதன் மன்னும் அறு
மீன் அழல் அங்கி என்று ஓதுவர் கார்த்திகை வெல் சகடம்
ஊனம்இல் வையம் வெம் சாகாடு பண்டி உருள் பெருந்தேர்
ஆனவைதன்னை உரோகணியாக அறைவர்களே
** மகசிரம் (மிருகசீரிடம்) ஆதிரை (திருவாதிரை) புனர்பூசம்
**55
#55
மதிநாள் நரிப்புறம் மான்தலை மார்கழி மாழ்கு இந்திரன்
முதுபாலை வெய்யவன் மும்மீன் மகசிரம் மூதுரையே
அதிசாதன் அங்கை அரன்தினம் ஆதிரை ஆம் அதிதி
புதுநாள் புணர்தம் கரும்பு ஆவணம் புனர்பூசத்ததே
** புனர்பூசம் பூசம் ஆயிலியம்
**56
#56
புனிதம் பாலை மூங்கில் முன்னைப் புணர்தம் என்பர்
வனவண்டு கொடிறு குளம் தேவர்வரகுருநாள்
அனையன பூசம் பெறும் பெயராம் என்பர் ஆயிலியம்
தனை அரவின்தினம் கவ்வை என்றே மறை சாற்றியதே
** மகம் பூரம்
**57
#57
கொடுநுகம் வேட்டுவன் வாய்க்கால் எழும்சனி கூறு எழுவாய்
வடிவுறு மாசி பிதிர்தினம் ஆம் மகம் வன்கணையே
இடையது எழும்சனி நாவிதன் துர்க்கை எலி பகவன்
உடைய தினம்தனையே பூரமாக உரைசெய்வரே
** உத்திரம் அத்தம் சித்திரை
**58
#58
பன்னு கடையது எழும்சனி பாற்குனி பங்குனி வான்
உன்னிய மாலிதினம் உத்திரம் களிறு ஓங்கு நவ்வி
கன்னி கைம்மீன் ஐவிரல் காமரம் கௌத்துவம் அத்தம்
தென்னெறி நெய்வான் மீன் துவட்டாத்தினம் சித்திரையே
** சோதி விசாகம் அனுசம்
**59
#59
வெறுநுகம் வீழ்க்கை வளிநாள் விளக்கு மிகு மரக்கால்
பெறுவது சோதி சுளகு வைகாசி பெரிதனனாண்
முறம் முற்றில் என்பர் விசாகம் புல்தாளி முடப்பனை தேள்
அறிதரு போந்தை அதுவே அனுசத்து அடைத்ததுவே
** கேட்டை மூலம் பூராடம்
**60
#60
எரி அழல் வேதி வல்லாரை விளங்கொளி இந்திரைநாள்
தருவது கேட்டை அசுரர்தினம் கொக்குத் தாஇல் அன்றில்
குருகு செந்தேள்கடை ஆம் ஆனி மூலம் குறி முற்குளம்
பொருவில் உடைகுளம் பூராடம் நீர்த்தினம் பொற்றனமே
**உத்திராடம் திருவோணம் அவிட்டம்
**61
#61
ஆனி கடைக்குளம் ஆடி உத்திராடம் விச்சுவநாள்
தான் உறைநாள் என்பது ஆகும் சிரவணம் தாவு உலக்கை
சோணை வயிரம் அரிதினம் ஓணம் கடர் அவிட்டம்
மீனு அது காக்கை வசுநாள் புள் ஆவணி மேலியதே
** சதையம் பூரட்டாதி உத்திரட்டாதி
**62
#62
வருணன்தினம் குன்று போர் சுண்டன் செக்கு வரு சதையம்
குரை புரட்டாதியும் நாழியும் முற்கொழுங்கோலும் என்ன
வருபெயர் ஆகியது பூரட்டாதி அறிவன் நன்னாள்
உறை முரசம் கொழுங்கோல் முற்றில் உத்திரட்டாதியதே
** இரேவதி அருந்ததி நட்சத்திரம் காலநுட்பம்
**63
#63
சுடரார் புருடன்தினம் தோணி சூலம் தொடர்ந்த தொழு
கடைநாள் பஃறி சொல் நாவாய் இரேபதி சாலி கற்பின்
வடமீன் அருந்ததி ஆம் தாரை தாரகை வாள் கணம் நாள்
உடு மீன் கலை துடி ஓர் காலநுட்பம் ஒளிவளையே
** நாழிகை பொழுது பின்னை உச்சி காலை சந்தி
**64
#64
கடிகை இருத்தை விகளை பதம் கன்னம் நாழிகை ஆம்
படர்தரு காலம் அமையம் வெம் காலை பதம் பொழுது ஆம்
உடன்உறை பிற்றையும் பின்றையும் பின்னை நல் உச்சி பகல்
அடர்தரு காலை விடியலுடன் அந்தி சந்தியதே
** பகல் யாமம் வெயில் இரவு
**65
#65
எல்லை நெடும்பகல் யாமமும் சாமம் இலகு வெயில்
சொல்லிய ஆதபம் என்றூழ் இரசுனி குழும் இருள்
அல்லு நிசா நிசி யாமினி யாமம் அடர் திமிரம்
புல்லிய கங்குல் தமம் நத்தம் நீலம் பொரும் இரவே
** தினம் முனநாள் பக்கம் மதி முதல்பக்கம் இரண்டாம்பக்கம்
**66
#66
தினம் ஆனியம் பகல் வைகல் திவசம் திவா எனலாம்
முனநாள் நெருனலும் நென்னலும் பக்கம் மொழி திதி ஆம்
வனம் மேவு திங்கள் மதி முதல்பக்கம் வகுத்த நந்தை
இனம் மேவு பத்திரை ஆம் இரண்டாம்பக்கம் ஏந்திழையே
** திரிதி சதுர்த்தி பூரணம் பானாள் கணம் ஊழி
** வெப்பம் முதுவேனில்
**67
#67
சயை பக்கம் ஆகும் திரிதி இருத்தை சதுர்த்தி அஞ்சு ஆ
கிய பக்கம் பூரணம் பானாள் அரைஇருள் கேடுஇல்கணம்
உயர்வுற்ற மாத்திரை ஆம் ஊழி காலம் உருப்பம் வெப்பம்
துயருற்ற கோடை முதுவேனில் என்பர் துடியிடையே
** சிறுபொழுது பருவம் ஆறு
**68
#68
சிறுவரை ஒல்லை சிறுபொழுது ஆம் உம்பர் சேர்வலன் மேக்கு
அறிபவர் மேசென்பர் கார் கூதிர் முன்பனி அப் பின்பனி
விறல் இளவேனில் முதுவேனில் ஆறும் மிகு பருவ
முறையில் இரண்டிரண்டு ஆம் திங்கள் ஆவணி முன் எண்ணலே
** மழைபெய்காலம் பனிப்பருவம் பருவம் காலம்
** உகம் நான்முகன்வாழ்நாள்
**69
#69
மழைபொழிநாள் சரம் கூதிர் பனிப்பருவம் சிரனாள்
பழைய பளங்கு ஆனியமே இருதுப் பருவம் யாண்டு
ஒழுகிய காலம் மடங்கலும் ஊழியும் ஓர் உகம் ஆம்
கழிதரு நான்முகன்வாழ்நாள் சொலில் கற்பம் ஆம் என்ப
** வாழ்நாள் வருடம் காலம்
**70
#70
தெளி ஆயுள் ஆயுகம் வாழ்நாள் உதகம் சிதறி உறை
துளி ஆலி சீகரம் தூவல் பெயல் மாரி தூறலுடன்
வளி ஆர் பெயலை துவலையும் மாசுஇல் வருடம் அதாம்
களி ஆரும் ஊழியும் ஊழ்முறையும் சொல்லில் காலம் அதே
** மேகம் இடி
**71
#71
மஞ்சே மழை முகில் மால் கொண்டல் செல் கனம் வான் மை மே
கம் சீதம் அம்புதம் கார் குயில் சுந்தரம் விண்டு கொண்மூ
வும் சீமுதம் விண் எழிலி புயல் என ஓதும் உரு
மும் செல் அசனி உருமேறு இடியாய் மொழிகுவரே
** துவலை மழைவிடல் விடாமழை துளி
** பெருமழை ஆலங்கட்டி
**72
#72
சிகரம் சிதர் சொரி தூவல் பிதிர் சீகரம் துவலை
பகரும் தலையல் மழைவிடல் சோனை பனித்தல் விடாது
உக விண் சொரிதல் பெயல் துளி ஆலி உறை துளி ஆம்
அகலில் ஆசாரம் பெருமழை ஆலி ஆலங்கட்டியே
**மின்னல் இடி பனி பரிவேடம்
** கரும்புவில் வானவில்
**73
#73
மிளிர் தடித்துச் சம்பை வித்துருச் சஞ்சலை மின் ஆம் இடி
ஒளி பேர் இகுழ் இமம் நீர் துகினம் பனி ஊர்கோள் வட்டம்
களி பரிவேடம் தரங்கரம் காண்டம் கருப்புவில் ஆம்
எளில் வானவில் இந்திரவில் அது என்பர் இரட்டைவில்லே
** பாரதிதீப வரலாறு
**74
#74
திதம் மா உறை நளினத்தடம் சூழ் தென்கடம்பையின் சொல்
இதமானது செறி பாரதி ஏத்தி என் ஏத இருள்
விதமே வருந்தலவே வைத்த பாரதிதீபம்தன்னில்
முதலாவது தெய்வப்பேராம் தொகுதி முடிந்ததுவே
@2 மக்கள் பெயர்த் தொகுதி
** பற்றற்றோர்
**75
#1
மாதவர் ஐயர் துறவோர் முனிவர் வரரவர் த-
போதனர் மெய்யர் அடிகள் இலிங்கிகள் பொய் இகழ்ந்த
நாதர் யோகிகள் ஞானாதிகர் ஐம்புலன் வெல்லும்
சாதகர் பண்ணவர் மிக்கோர் அறிவர் தவத்தவரே
**76
#2
அறவர் அருந்தவர் குற்றம்கடியுமவர் பெரியோர்
உறுவர் கனிகிழங்குஉண்பவர் கோபம்ஒழித்தவர் பூ-
இறைவர் புலவர் இருளற்றசிந்தையர் ஏற்றவருள்
செறிபவர் மோனிகள் பற்றற்றோர் பேர் எனச் செப்பினரே
** சைவத்தவப்பாலினோர் நாராயணன்சமயத்தவர்
** சமணர்
**77
#3
பாலாய காளாமுகர் மாவிரதியர் பாசுபதர்
மேலாய சைவத்தவப்பாலினோர் மிகு பாகவதர்
மால் ஆய நாராயணன்சமையத்தர் வண் சாவகரோடு
ஆலா அருகர் எனும் சமண் ஆசிவகத்தவரே
** புத்தர் சமண்முனிவர் சடைமுடியோர் பார்ப்பார்
**78
#4
சீவகர் சாக்கியர் புத்தர் பவுத்தரும் தேரரும் என்று
ஆவது அத் தவத்தோர் அமண் சாரணர்ச் சமண்முனிவ-
ரோ அறுதாபதர் ஆகும் சடைமுடியோர் வேதியர்
வீவறு முப்புரிநூலர் பார்ப்பார் என்ப வேதியரே
** பார்ப்பார் ஒத்துரைப்போர் கலைவல்லவர் மிக்கவர்
**79
#5
அறுதொழிலாளர் மறையவர் பூசுரர் ஐயர் மிக்கோர்
உறவுறு வேள்வியர் முற்குலத்தோர் என்பர் ஒத்துரைப்போர்
அறி கணக்காயர் கவிஞர் கலைவல்லவர் உயர்ந்தோர்
விறல் அறிவுற்றவர் சான்றோர் உலகுடன் மிக்கவரே
** புலவர் மிகக்கற்றவர்
**80
#6
கவிஞர் கலைஞர் அறிவோர் முதுவர் கற்றோர் புதரே
அவையவர் மூத்தவர் ஆன்றவர் ஆய்த்தவரான சங்கம்
சவை புலவோர் என்பது ஆத்ம விபுதர் தனி நிபுணர்
கவலையில்லாத குசலர் என்போர் மிகக் கற்றவரே
** மூத்தவர் பெருமையின் மிக்கவர்
**81
#7
குரவோன் சுவாமி மன் கோமான் பதி அத்தன் கோ ஐயனும்
பெருமானும் நாதனும் ஈசனும் மூத்தவர் பேர் அது என்பர்
அருளாளர் குரிசிலும் ஏந்தலும் செம்மலும் அண்ணலுமாய்
வரு பேர் பெருமையின்மிக்கவர் பேர் என வாய்த்ததுவே
** எப்பொருட்கும்இறைவன் உயர்ந்தோர்
**82
#8
ஆதி பிரான் செம்மல் கேள்வன் இறைவன் அரசன் மன்னன்
நாதன் தலைவன் கொழுநன் அதிபன் மன் நாயகன் சேர்க்
காதலன் ஈசன் பதி காத்தன் காவலன் கோ எனலாம்
ஓது எப்பொருட்கும்இறை உயர்ந்தோரை உலகு என்பரே
** கோட்டி அரசன்
**83
#9
தொழுதி திரள் சங்கம் கூட்டம் குவிதல் தொகுதி கணம்
குழு நீலகம் சமவாயம் சவை அவை கோட்டி என்பர்
மொழியும் நிருபன் நரபதி வேந்தன் முதல்வன் கோ
வழுஇல் புரவலன் ஏந்தல் மண்காவலன் மன்னவனே
** அரசன் குருகுலமன்னன்
**84
#10
அரசன் இறையவன் பூபாலன் பார்த்திபன் அண்ணல் பிரான்
குருசில் தலைவன் பதி பெருமான் என்பர் கொற்றவர் பேர்
பரவும் குருகுலமன்னவர் நாமம் பரதவர் பார்
கருதும் கவுரவர் என்பர் நல் நூல்நெறி கற்றவரே
** சேரன்
**85
#11
வில்லவன் கேரளன் வானவன் வஞ்சிக்குவேந்தன் குடக்
கொல்லியன் குன்றன் குடநாடன் குட்டுவன் கோதை கொங்கன்
மல் உதியன் பொறையன் போந்தின் மாலையன் வானவரம்பு
எல்லையன் சேரலன் சேரன் பொருனைக்குஇறையவனே
** சோழன்
**86
#12
பொன்னிநன்னாடன் புகார்இறை கிள்ளி புலி உயர்த்த
மன்னவன் நேரியன் வீரன் இரவிகுலன் வளவன்
சென்னி இமையவன் செம்பியன் கண்டன் திறல் அபையன்
நல்நெறி ஆர் அத்தன் சோழன் உறந்தைக்குரியவனே
** பாண்டியன்
**87
#13
வழுதி கவுரியன் பஞ்சவன் மீனவன் மாறன் கொற்கைச்
செழியன் மதுரைமன் பூழியன் கைதவன் தென்னவன் சேல்
எழுது புரவலன் வைகைத்துறையவன் இந்துகுலம்
பழகும் இறையவன் நிம்பத்தொடையினன் பாண்டியனே
** குறுநிலமன்னவர் சளுக்கியரசன் மந்திரி
**88
#14
வேளிர் புரோசர் குறுநிலமன்னவர் வேன்புலக்கோ
ஆளும் சளுக்கிஅரசன் குரவர் அமைச்சர் முன்னோர்
நாளும் நுண்தேர்ச்சியர் மூத்தோர் உழையர் நனூல்இறைவர்
கேள்வியில்சூழ்பவர் மந்திரி ஆனவர் கேள் இனமே
** மந்திரிதந்திரி அரசற்குளாங்கருமத்தர்
** போர்த்தலைவனண்
**89
#15
ஏனாதி காவிதி இன்சொல் அமாத்தியன் என்னும் அவன்
தான் ஆகும் மந்திரி தந்திரி வள்ளுவன் சாக்கை எனல்
ஆனா அரசற்குளாங்கருமத்தர் அரும்பெரும் போர்க்-
கோன் ஆம் அவனைப் பொருநர் என்று ஓதுவர் கோமளமே
** வணிகர்
**90
#16
எட்டி கவிப்பர் வயிச்சியரே இளங்கோக்கள் இப்பர்
செட்டி சிலேட்டி அறுதொழில்நாயகர் திறல் வினைஞர்
மட்டவிழ் சீரகத்தாரார் பரதர் வணிகர் அயன்
கிட்டிய ஊருவில் வந்தோர் இறையவன்கீழினரே
** காராளர்
**91
#17
வேளிர் களமர் சதுர்த்தர் உழவர் விளைப்பவர் வே-
ளாளர் கொடையினர் ஏர்வாழ்நர் வார்த்தையாடலில்வல்லோர்
காள நெடுங்கடல் பார்மைந்தர் கங்கைகுலத்தர் அயன்
தாளினில் வந்தவர் காராளர் பேர் எனச் சாற்றுவரே
** மிலேச்சர் சோனகர் மருத்துவர் குயவர்
**92
#18
ஆதி மிலேச்சரும் ஆரியர் சோனகர் ஆம் யவனர்
வாதனை ஆயுள் மருத்துவநூலர் மாமாத்திரர்
கோதுஇல் பிடகர் மருத்துவர் ஆகும் குலாலர் மண் மேல்
காதும் குயவர் வேட்கோபர் கும்பகாரருமே
** உப்பமைப்பவர் சித்திரகாரர் கண்ணாளர்
**93
#19
அயரும் உமணர் அமைப்பாளரும் உப்பமைப்பவர் ஓ-
வியர் சித்திரகாரர் தபதியர் சிற்பியர் வித்தகர் கள-
னையர் அக்கசாலையர் கம்மியர் கொல்லர் நலனறிவர்
மயனுற்றநூலர் யவனர் கண்ணாளர்க்கு மன் பெயரே
** தச்சர் கன்னார் வண்ணார் உறைகாரர்
** ஊன்விலைஞர் தோல்விலைஞர்
**94
#20
கருது மரவினைத் தச்சர் தபதியர் கன்னுவரே
அருள் கஞ்சகாரர் கன்னார் அவர் காழியர் ஆவர் வண்ணார்
உரவு உறைகாரரும் காரோடர் சூனரும் ஊன்விலைஞர்
பரவு பறம்பரும் தோல்விலைவாணர் பயில் பெயரே
** நாவிதர் கள்விற்போர் சண்டாளர்
**95
#21
நாமப் பெருமஞ்சிகரே மயிர்வினை நாவிதர் பேர்
ஆம் அப் பழையர் படுவர் துவசர் அவர் கள்விற்போர்
காமக் குணுங்கர் இழிஞர் கொலைஞர் கவுண்டர் வங்கர்
தாமப் புலைஞர் கனகதர் ஆவர் சண்டாளர்களே
** பாணர் இயவர் பாடலில்தாழுமவர்
** நரம்புக்கருவிகொள்மாந்தர்
**96
#22
சென்னியர் மாகதர் சூதர் வயிரியர் சேர் மதங்கர்
இன்னிசைப் பாணர் இயவர் கருவிஇசைக்குமவர்
பன்னிய ஓவரும் பண்டரும் பாடலில்தாழுமவர்
கொன்னின் நரப்புக்கருவிகொள்மாந்தர் குயிலுவரே
** தமிழ்க்கூத்தர் கழாய்க்கூத்தர் தொழில்காரர்
** புதியவர் அயலோர்
**97
#23
குலவாயிலோர் தமிழ்க்கூத்தர் கழாய்உற்றகூத்தினரே
கலை மேவு வேழம்பர் கம்மியர் செய் தொழில்காரர் என்பர்
புலமார் அதிதியர் வம்பலர் என்னில் புதியவராம்
உலகார் நொதுமலர் வம்பலர் தாம் அயலோர் என்பரே
**ஆகாவழிச்செல்வோன் அடிமை
** மடையர் மீகாமன்
**98
#24
ஆகாவழிச்செல்பவன் பதிதன் தொழும்பு ஆள் அடிமை
சேகார் சிலதர் சிலதியர் சேடியர் சேடர் என்பார்
ஆகாய வாலுவர் கூவியர் ஆவார் மடையர் மற்று
நீகான் மரக்கலன் மீகாமன் என்பர் நிரைவளையே
** தூதர் ஏவல்வினைஞர் ஒற்று தேவராளன்
** செவிடர் முடவர்
**99
#25
வினை ஆறு பண்புரைப்போர் தூதர் ஏவல்வினைஞர் பரி
சனம் மாகுலர் என்பர் சார் வேய் ஒற்று ஆம் என்பர் சாரணன்
சின தேவராளன் வெறியாடும்வேலன் செவிடர் பெயர்
எனிலோ வெதிரர் முடவர் பங்கு என்ன இயம்புவரே
** அலி ஊமை குறள் வறியோர்
**100
#26
பேடியர் பெண்டகர் பேடர் பெண்டு அலிப் பேர் என்பர்
கூடிய மூகையும் மூங்கையும் ஊமை ஆம் கோணல் சிந்து
நீடிய குஞ்சம் குறள் என்பர் ஆதுலர் நேர் வறியோர்
வாடிய ஆரத் துயருறுவோர் என்பர் வாள்நுதலே
**கீழ்மக்கள்
**101
#27
நெறியிலர் பேதையர் நீசர் சுமடர் கனிட்டர் புல்லர்
பொறியர் முகடர் முசுண்டர் பொல்லாதவர் பூரியரே
சிறுமையர் ஆற்றலர் தேரலர் தீயவர் தீம்பர் கலர்
அறிவிலர் மூர்க்கர் அசடர் பொய்க் கீழ்மக்கள் ஆனவரே
** அறிவிலர் கள்வர் காதலித்தோர்
**102
#28
முழுமகன் ஐஞ்ஞை மடம் பேதை சேடு அஞர் மூடன் அண்ணை
இழுதை குதலை அறிவிலர் சோரர் இகல் பகைவர்
கழிவுஇல் கரவடர் கள்வர்தம் பேர் என்பர் காதலித்தோர்
விளைவு நயத்தல் ஆர்வம் வேட்டல் வேட்கை விருப்பு என்பரே
** மூதறிந்தோர் வல்லளான் விறலோன்
** பதிவாழ்சதுரர் தூர்த்தர்
**103
#29
முதுவர் கிழவர் உரியவர் மூதறிந்தோர் வயவன்
விதமான மீளி வல்லாளன் பெயர் விறலோன் விடலை
பதிவாழ்சதூர் எனும் நாகரிகர் படிற்றொழுக்கர்
அதி காமமிக்கவர் தூர்த்தர் என்று ஓதுவர் ஆரணங்கே
**இளமையர் ஏவுவான் புகழ்விளைவீணன்
** கரியன் கணவன்பிழைத்தோள் மகள்
**104
#30
வள முருகன் குமரன் காளை சேடன் மழவன் என்போர்
இளமையர் ஏவுமவனே வியவன் இயவுள் புகழ்
விளைவீணன் ஆகும் கரியன் என் சோரன் மிக உரைக்கில்
களவன் கணவன்பிழைத்தோன்மகன் குண்டகன் என்பரே
**கன்னிமகன் கைம்மையன்மகன் குலமில்லவர்
** வல்லோர் வல்லவரல்லாதார் கூவல்நூலோர்
**105
#31
கலனுறு கன்னிமகன் கானீனன் கைம்மையின்புதல்வன்
குலவிய கோளகன் ஆகும் குலீனர் குலமில்லவர்
வலவை வல்லோர் என்பர் வல்லுனர்மாட்டார் அவலோர் என்பரே
தலம் மிசை வல்லவர் சல்லியர் கூவல்சொல் சாற்றினரே
**பாவலர் மங்கலப்பாடகர் நாடகர் கூத்தர்
**106
#32
பரவிய நாவலர் கற்றோர் கவிஞர் சொல்பாவலர்
கருதிய மங்கலப்பாடகர் எட்டர் கடிகைகள் ஆம்
பொருநர் நிருத்தர் வயிரியர் கண்ணாளர் போற்று நடர்
குருவரு நாடகர் கோடியர்தாம் என்பர் கூத்தரையே
** சூதர் பூகதர் தேர்ப்பாகர் யானைப்பாகர்
**107
#33
மாகதர் வந்திகர் வேதாளியர் அவர் சூதர் மன்னும்
பூகதர் ஆவார் புகழ்பவர் சூதர் புனை வலவர்
ஆகிய பேர் எனில் தேர்ப்பாகர் ஆவார் அவருமன்றிப்
பாக பல் வாதுவர் ஆதோரணர் கரிப்பாகருமே
** பரிமாவடிப்போர் இரவலர் வரையாமலீபவர் அரசர்பரிவாரம்
**108
#34
பரிமாவடிப்பவர் வாதுவர் யாசகரே பரிசிற்கு
உரியார் இரப்பவர் இரவலர் பேர் என்ப உற்ற பொருள்
வரையாமல் ஈபவர் வள்ளியோர் என்பர் மற்று அரசர்
அருகு ஆதரித்த பரியாளமும் பரியாரத்ததே
** படையாளர் அடுத்தோர்
**109
#35
கூளியர் மானவர் வீரர் பொருநர் கொலை மறவர்
வாளுழவர் மண்டர் மள்ளர் விறலர் வயவர் படை-
யாளர் துடர்ந்தவர் ஒன்றுநர் துன்னினரே அடுத்தோர்
நாளும் அணுகுநர் ஒல்லுநர் நள்ளுநர் நண்ணுநரே
** பகைவர்
**110
#36
தரியலர் தெவ்வர் செருநர் ஒன்னார் எதிர்ந்தார் அரிகள்
கருதலர் செற்றவர் ஒல்லார் நிகரலர் கண்டலர்
பரவலர் ஒட்டலர் போற்றலர் மாற்றலர் பற்றலர் போர்ச்
செருவினர் நேரலர் விண்டார் பகையவர் சேரலரே
** மித்திரர்
**111
#37
சுற்றம் உறவு கிளை கேள் கடும்பு ஒக்கல் சூழும் நட்போடு
உற்றவர் சார்ந்தவர் பந்தம் குடும்பு நட்டோர் சிறந்தோர்
துற்ற பரிசனம் கூளி செறிவு துணை தமரே
பற்றினர் மேவினர் மித்திரராகப் பகர்ந்தனரே
** ஆண்பெயர் ஏழுபருவப்பெண்பால்
**112
#38
ஆடவர் காளையர் ஆடூஉ மகன் மைந்தன் ஆளன் பூமன்
ஈடு குமரனும் ஆண்பெயர் பேதை நிகர் பெதும்பை
தேடிய மங்கை மடந்தை அரிவை தெரிவையுடன்
கூடிய பேரிளம்பெண் ஏழ்பருவம் செய் கோதையரே
** மடவார் (மடவரல்)
**113
#39
அங்கனை பேதை வனிதை இளம்பிடி ஆயிழை பெண்
மங்கை மடந்தை தெரிவை பினா மகள் மாதர் அரிவை
பைங்கொடி வஞ்சனி காரிகை மானினி பாவை தையல்
இங்கிதை நாரி மடவலர் பேர் என்று இசைத்தனரே
** தலைவி கலன்கழிமகளிர் மலடி
**114
#40
அடிகள் குரத்தி பெருமாட்டி கோமகள் ஐயை அத்தை
தடமலர் மாது இறைமையாட்டி சாமி தலைவி என்பர்
கடல் உலகு எண்ணிய கைம்மை கயினி கலன்கழிமான்
வடிவுறு வந்தியும் மைம்மையும் ஆகும் மலடிகளே
** வரத்தெழுமகளிர் பொதுமகள் பாண்மகள்
**115
#41
வரத்தெழுபைம்மை கவுந்தி கணிகை வண் சூளையுடன்
பரத்தை பொதுமகள் பாடினி பாட்டி பயில் மதங்கி
திருத்தகு பாடல் மகடூஉ நடத்திறல் கூத்தி இசை
விரித்தரு நாடகவாள்நுதல் பாண்மகள் மேல்வருமே
** குறிஞ்சிக்கு அதிபர் குறிஞ்சிநிலப்பெண் குறிஞ்சித்திணைமகன்
**116
#42
குறவர் புனவர் இறவுளர் கானவர் குன்றவர் என்று
அறைவர் குறிஞ்சிக்கதிபர் குறத்தி அடர் கொடிச்சி
மறுஇல் உழத்தியர் வெற்பன் பொருநன் மலையன் நண்பன்
திறல் புனை கானகநாடன் சிலம்பன் திணைமகனே
** பாலைநிலமக்கள் பாலைநிலப்பெண் பாலைத்திணைமக்கள்
**117
#43
மறவர் எயினர் வெம் பாலைக்கிழவர் மறத்தியரே
பிறை நுதல் மேவும் எயிற்றியர் அந்நிலப்பெண் பெயராம்
விறல் புனை காளையும் மீளியும் வெய்ய விடலையும் என்று
உறைபவர் பாலைத்திணைமக்களாக உரைசெய்வரே
** பாலைநிலமக்கள் பொதுப்பெயர் முல்லைநிலமக்கள்
**118
#44
கானவர் வேடர் மறவர் புளிஞர் கலைக் கொலைஞர்
ஈனர் வனசரர் சிலவர் கிராதர் எயினர் என்னல்
ஆனவர் அப் பொதுப்பேர் அண்டர் கோபாலர் ஆயர் முல்லைத்
தானவர் வித்தர் பொதுவர் இடையவர்தம் பெயரே
** முல்லைநிலமக்கள் முல்லைநிலப்பெண் முல்லைத்தலைமக்கள்
**119
#45
தொறுவர் குடவரும் கோவிந்தர் ஆய்ச்சி தொறுத்தியுடன்
முறைசெய் குடத்தி பொதுவி இடைச்சி மென் முல்லைமகள்
குறைவறு கானகநாடன் குறும்பொறைநாடன் அண்ணல்
நிறை பயில் தோன்றல் அவர் ஆவர் முல்லைநிலமக்களே
** நெய்தல்நிலமக்கள் நெய்தல்நிலப்பெண் நெய்தல்தலைமகன்
**120
#46
கலவர் பரதர் நுளையர் திமிலர் கருங்கடலர்
வலையர் அ நெய்தல்கிழவர் நுளைச்சி வளர் பரத்தி
தொலைவுஇல் கடல்பிணவு என்னில் கிழத்தி துறைவன் கொண்கன்
சிலை பயில் மெல்லம்புலம்பன் தண்சேர்ப்பன் திணைமகனே
**மருதநிலமக்கள் மருதநிலப்பெண்
** மருதநிலத்தலைவர் மருதத்தலைமகள்
**121
#47
தொழுவர் கடையர் உழவினர் கம்பளர் சூழ் களமர்
கழனியின் மள்ளர் கடைச்சி உழத்தி கழனிமகள்
கிழவனும் ஊரனும் கேடுஇல் மகிழ்நனும் கேள் மருதம்
தழுவு தலைவர் மனைவி கிழத்தி தலைமகளே
**முல்லைத்தலைவி தம்குடித்தமர் முறைப்பெயர்
** மூதாதை
**122
#48
ஆய மருதத்தலைவி அ முல்லை அணங்கிற்கும் ஆம்
தாயமும் சாதியும் தம்குடியில்தமர் தந்தை தந்தை
தூய பிதா ஐயன் அப்பன் அம்மான் அந்தன் தொன்முறைப் பேர்
ஏய பிதா தந்தை மூதாதை ஆம் என்று இசைத்தனரே
**தன்ஐ மாதுலர் பெற்றதாய் செவிலி
**123
#49
தாதையும் தம்முனும் தன்ஐ ஒத்து அந்தத் தகுவர் அம்மான்
மாதுலன் பேர் என்பர் மாதாப் பயந்தவன் வாய்த்த தவ்வை
ஏதம்இல் ஈன்றவள் தாய் அன்னை ஆய் பெற்றவள் எனப் பேர்
ஓதிய தாதி கோடாய் செவிலி என்று ஓதினரே
** முன்பிறந்தாள் மணவாளன் மனைவி
**124
#50
அன்னையும் முன்பிறந்தாளும் செவிலியும் ஆகும் தவ்வை
மன்னிய கேள்வன் கணவன் கொழுனன் மணமகனே
சொல் நவில் காந்தன் மணவாளன் என்பர் துணைவி இல்லாள்
பன்னி உரிமை மனைவி மணமகள் பாரியுமே
** புதல்வன் மகள்
**125
#51
புதல்வன் பிறங்கடை சேய் தோன்றல் எச்சம் புனை சிறுவன்
மதலை தனையன் மருமான் மருவு மகன் மைந்தன்
விதமிகு சந்ததி புத்திரன் செம்மல் மிகு புதல்வி
உதவி சிறுவி தனையை மகள் பெயர் ஓதினரே
**மகன்மகள்பொது முன்தோன்றல் பின்தோன்றல்
** வழித்தோன்றல் பிள்ளைப்பன்மை
**126
#52
முறைமையின் எச்சம் இருபாற்கு உரியது முன்னை முன்னே
அறிவின் முன்தோன்றல் இளவலும் பின்னையும் ஆவர் பின்னோர்
உறு வழித்தோன்றல் மருமான் பிறங்கடை உம்பல் என்பர்
செறியும் மகார் செஞ் சிறார் பன்மை நாமம் சிறந்தவரே
** இளமை நண்பன் தோழன்முன்னிலை
**127
#53
மழவும் குழவியும் பிள்ளையும் குட்டனும் மகவும்
விழைகின்ற சேயும் இளமைப் பெயர் நண்பன் மெய்த்துணைவன்
கெழுதகு கேள் எலுவன் பாங்கன் தோழன் கிளைஞன் என்பர்
மொழிதரு தோழனை ஏடா என்று ஓதுவர் முன்னிலையே
** பாங்கி தோழியர்முன்னிலை கணவன்
**128
#54
அயர் ஓரை பொய்தல் இகுளை மெய் ஆயம் அணுக்கு இணங்கொடு
இயல் சேடி தோழி மெய்ப் பாங்கி எல்லாவுடன் ஏடி என்ப
பயில் நாமம் தோழியர் முன்னிலை நாமம் பதி கணவன்
மயல் தீர் தலைவன் இறை தோழன் காதலன் மன் பெயரே
** காதலி துணைவன் படைத்திரள்
**129
#55
தோழி மனைவி புதல்வியும் காதலி சொல் துணைவன்
வாழிய தோழன் கணவன் வருதினி மன் பகுதி
தாழும் நிதனம் அநிகம் பதாதி மெய்த்தார் தண்டமே
பாழிய தானை பதாகினி சேனை படைத்திரளே
** படைத்திரள் கொடிப்படை படைவகுப்பு மானிடர்
**130
#56
ஆசுஇல் அணிகமும் யூபமும் அப் படை ஆம் நிரை தார்
தூசி கொடிப்படை ஆக்கமும் ஆம் என்பர் சூழ்ந்த அவணி
காசறு யூபமுடன் உண்டையோடு இவை கைவகுத்தல்
மாசுஇல் மனிதர் நரர் மக்கள் மானிடர் மண்ணவரே
**மக்கள்பொது மக்கள்கூட்டம் உடற்குறை
**131
#57
மக்கள் பொதுப்பெயர் மாந்தர்கள் பைஞ்ஞீல் மன்பதையும்
தொக்க நரர்திரள் ஓரையும் ஆயமும் சூழ் குழுவும்
தக்கதோர் பண்ணையும் மக்களின் கூட்டம்தனை உரைப்பர்
மிக்க கவந்தமும் மட்டையும் யூபமும் மெய்க்குறையே
** உடம்பு பிணம்
**132
#58
புரம் உறுப்பு அங்கம் தனு ஆக்கை காத்திரம் பூட்சி மெய் விக்-
கிரகம் களேபரம் தேகம் படிவம் குகை குடிலம்
உருவம் உடம்பு கனம் காயம் என்பர் உயர் குணபம்
கருதும் அழன் பிணமே சவம் ஆகும் களேபரமே
** பாதம் காலடி துடை அல்குல்
**133
#59
பாதம் சரணம் கழல் கால் அடி பதம் தாள் பரடும்
ஓதும் கரடும் மிசைத்திரள் காலடி ஊருக் கவான்
தீதுஒன்று இலவாம் குறங்கே துடை என்ப சேர் நிதம்பம்
காதும் கடி தடம் அல்குல் என்று ஓதுவர் கற்றவரே
** இடை மருங்குல் வயிறு கொப்பூம்
**134
#60
மருங்குல் நுசுப்பு நடு இடை ஒக்கலை ஆம் மருங்குல்
வரும் புறம் குக்கி சடரம் உதரம் வயின் அகடு ஆம்
திருந்து வயிறு உந்தி நாபி மிதலை நிகழ் இலஞ்சி
தரும் பெயரே எனில் ஆன கொப்பூழ் என்று சாதிப்பரே
** ஆண்குறி மாதர்குறி மார்பு முலை
**135
#61
ஓதும் இலிங்கமும் கோசமும் ஆண்குறி யோனி பகம்
மாதர் பெருங்குறி மார்பம் அகலம் மருமம் உரம்
தாது அவிழ் ஆகம் குயம் சொர்க்கம் கொங்கை தனம் நகிலே
மீது குருக்கண் அம்மம் பயோதரம் மென் முலையே
** சுணங்கு கைத்தலம் அகங்கை விரல் நகம் புயம்
**136
#62
துத்தி திதிலை பொறி வந்திகை உத்தி சூழ் சுணங்கு ஆம்
அத்தம் உடன் கரம் தோள் பாணி கைத்தலம் அங்கை என்னில்
ஒத்த குடங்கை அகங்கை விரல் அங்குலி உகிர் ஆம்
பத்தி நகம் புயம் தோள் வாகு மொய்ம்பு எனப் பாவிப்பரே
** முதுகு தோள்மேல் கழுத்து பிடரி
**137
#63
நிகர்இல் வெரின் புறம் வெந்+ முதுகு என்பர் நிகலமுடன்
செகிலம் சுவல் எனில் தோள்மேல் கழுத்துச் சிறந்த கண்டம்
புகலும் கிரீபம் மிடறு களம் கந்தரம் பொருந்தும்
அகலும் கயில் எருத்தம் சுவலே பிடர் ஆனதுவே
** பிறக்கு முகம் உதடு பல் சிரிப்பு
**138
#64
பிறக்கும் பிறகு அபரம் முகம் ஆனனம் பேர் வதனம்
சிறக்கின்ற ஓட்டம் உதடே அதரம் திகழ் இதழ் ஆம்
நிறக்கின்ற தட்டம் எயிறு பல் தந்தம் நிலா முறுவல்
முறைத்தங்கு மூரல் நகை சிரிப்பாக மொழிகுவரே
** மேல்வாய் கீழ்வாய் உள்நா நா மூக்கு கவுள்
**139
#65
அணரியும் அண்ணமும் மேல்வாய் கீழ்வாய் அணர் ஆம் அதன் பேர்
தணிவரும் அண்ணம் உள்நா ஆகும் தாலமும் தாலுவும் நா
துணைபெறு நாசியும் துண்டமும் மூக்கு என்பர் தொல் கவுளே
நணுகு கபோலம் கொடிறு என்று கூறுவர் நல் தவரே
** கண் நெற்றி புருவம்
**140
#66
பழுதறு நாட்டம் நயனம் விலோசனம் பார்வை கண் கோ
விழி திருக்கு அம் அக்கம் நேத்திரம் நோக்கம் அம்பகம் வில்நுதல்
எழில் மத்தகம் குளம் முண்டகம் நெற்றி இலாடம் என்பர்
அழிவுஇல் புரூரம் புருவம் பிருகுடி ஆம் என்பரே
** காது தலை முடி மயிர்ப்பரப்பு
**141
#67
கன்னமுடன் செவி காது ஆம் சிரம் உச்சி கம் தலையே
சென்னி உவ்வி நவிர் சேகரம் அந்தரம் சீர் இபம் ஆம்
முன்னிய சேகரம் சென்னி சிரம் உச்சியே முடியே
மன்னு சிரோமம் உரோமம் செறிந்த மயிர்ப்பரப்பே
** ஆண்மயிர் பெண்மயிர்
**142
#68
தொங்கல் நவிர் குஞ்சி ஓரி குடுமி சுருள் உழையே
பங்கி சிகை பித்தை ஆண்மயிர் கூழை ஐம்பால் சுரியல்
அம் குழல் கேசம் கதுப்பு மராட்டம் அளகம் குரல்
தங்கிய ஓதி சுருள் கூந்தல் கோதை பெண்தன்மயிரே
** ஆண்மயிர் பிறமயிர் சடை
**143
#69
கேசம் சுரியல் கதுப்பு ஆண்மயிர்க்குக் கிளக்கும் பங்கி
வாசம் செறி உளை ஓரி உரோமம் மராட்டம் இவை
பேசும் பிற மயிர் கோடீரம் பின்னல் பின்னும் சடிலம்
தேசு ஒன்றும் வேணிச் சடை சூடம் என்னச் சிறந்ததுவே
** குழன்றமயிர் மயிர்முடி அவயவம்
**144
#70
கொந்தளம் மாலை அளகம் இலோதம் குழன்றமயிர்
பந்தம் முடி பின்னகம் கொண்டை முச்சி பயில் சுடிகை
உந்தும் சிகழிகை ஆகும் மயிர்முடி ஓர் உறுப்புச்
சந்தம் அவையவமே சினை காத்திரம் தான் அங்கமே
**உடல்தழும்பு கழலை நரம்பு தலையோடு
** எலும்பு கழியெலும்பு
**145
#71
பிறங்கு அங்கிதம் செதுகை மெய்த்தழும்பு பெரும் கழலை
செறிந்த அரலை நரம்புடன் நாடி சிரை எனலாம்
இறஞ்சிய வெண்தலையோடே கபாலம் எலும்பு என்பு அதாம்
குறைந்து கழி என்பு கங்காளம் ஆக முற்கூறினரே
** குடுமி உச்சி பாரதிதீப வரலாறு
**146
#72
சிக்கம் குடுமி சிமையம் சிகை உச்சி சேர் நவிரம்
தொக்க செஞ் சூடி சுடிகையும் சூளி தொகு புலமை
மிக்கவன் பாரதி பாரதிதீபத்தின் மெய் தெரிந்த
மக்கள் தொகுதி இரண்டாவது முற்றி வந்ததுவே
@3 விலங்கின் பெயர்த் தொகுதி
** சிங்கம்
**147
#1
அரி ஆளி சீயம் வயப்போத்துச் சிங்கம் பஞ்சாளனம் கே-
சரி ஆம் மடங்கல் முடங்குளை கோளரிதாம் வயமா
மிருகாபதி அரிமாவே வயப்புலி வேங்கை இபம்
பொருகான் நகாயுதம் கண்டீரவம் எனப் போற்றினமே
** புலி
**148
#2
குயவரி வல்லியம் சித்திரகாயம் கொலை வயமா
வயவரி வேங்கை தரக்கு வியாக்கிரம் வல் உழுவை
சயமிகு தீவியம் சார்த்தூலம் புண்டரிகம் சமரம்
பயில் மிகுகாதி புல் எனப் பேர் புலிக்குப் பகர்ந்ததுவே
**யானையாளி யானை
**149
#3
அறுகு புழைக்கை அடல் யானையாளி கை அத்தி உவா
மற மலி தும்பி புகர்முகம் தோல் இபம் வாரணம் மாக்
கறையடி போதகம் மாதங்கம் நாகம் கரி களிறு
திறல்மிகு நால்வாய் ஒருத்தல் மதகயம் சிந்துரமே
**150
#4
கயமே கருணி கடுவை பகடு களபம் தந்தி
வயமா வழுவை இருள்மா எறும்பி மதவனமே
சயவேழம் தூங்கல் கைம்மா உம்பல் கும்பி தந்தாவளமே
குயமேவு மாதிரம் வல்விலங்கு ஆம் என்பர் குஞ்சரமே
** யானைக்கன்று கிளர்ச்சியானை
** யானை பிறந்த நிலப்பெயர்
**151
#5
களபம் துடியடி போதகம் வெய்ய கயமுனியே
தளருங் கரிக்கன்று தந்தி மதகரிதான் உரைக்கில்
கிளர் வன்கை யானை வனசரம் ஓங்கு கிரிசரமே
தெளியும் நதிசரம் யானை பிறந்த திணைப்பெயரே
** குதிரை
**152
#6
துரகம் குதிரை அரி வாசி கிள்ளை துரங்கம் கற்கி
குரகதம் மண்டிலம் அத்திரி மாப் பரி கொக்கு இவுளி
புரவி குந்தம் கொய்யுளை கோணம் கோடகம் போற்றிய கந்-
திருவம் சையிந்தவம் அச்சுவம் ஆம் எனச் செப்பினரே
** குதிரைப்பண்பு குதிரைமார்க்கம் குதிரைக்குளம்பு பசுப்பொது
**153
#7
பாடலம் கந்துகம் கோரம் கனவட்டம் பண்பு எனலாம்
கூடிய மாதிகம் மார்க்கம் குரம் குளம்பு ஆகும் பெற்றம்
மாடு குடம் சுட்டுக் கோ ஆன் பசுவினம் வாலிய ஆன்
நீடிய சாதிப் பொதுப்பெயராக நிலைபெறுமே
** பசுப்பெண்பால் ஏறு
**154
#8
தேனுச் சுரபி சுரையே கபிலை செழும் குரம்
கோனுற்ற கோமளம் சேதாப் பெண்பால் என்பர் கோ இடபம்
ஆனுற்ற பாறல் இறால் மூரி பாண்டில் அடல் விடை சே
வானத்து எருது பெற்றம் புல்லம் ஏறு அதன் பேர் என்பரே
** எருமைச்சாதி எருமை எருமைஆண் மலட்டெருமை
**155
#9
எருமையின் சாதி இருபாற்குரியது இகல் மயிடம்
கருதிய காரசம் காரான் மை மேதி கவரி என்பர்
பொருளில் பகடும் கடாவும் அவற்றினில் போத்து மைமை
தெரியின் அவற்றின் மலட்டின் பெயர் எனச் செப்பினரே
** காட்டுஆ ஆடு
**156
#10
அறிவில் கவையமும் ஆமாவும் காட்டினில்ஆ எனலாம்
மறி உதள் மேழகம் மோத்தை கிடாய் தகர் மை வருடை
கொறி துருவை செம்மறி பள்ளை வெள்ளை கொச்சை புருவை
செறிதரு மேடம் வற்காலியும் ஆடு எனச் செப்பினரே
** துருவாடு வெள்ளாடு துருவாட்டுஏறு
**157
#11
துள்ளு துருவை கொறி மை இவை துருவாடு அது என்பர்
வெள்ளை வற்காலி வெங் கொச்சை வெள்ளாடு மிகு தகரே
தெள்ளிய மேழகம் ஓங்கும் கிடாய் திண்ணகம் உடனே
எள்ளிய செய்ய துருவாட்டின்ஏறு என்று இசைத்தனரே
** வெள்ளாட்டுஏறு ஆட்டுக்குட்டி வரையாடு கவரிமா
**158
#12
உதள் கொச்சை மோத்தை வெள்ளாட்டினில்ஏறு என்பர் ஓங்கு மணங்கு
எதிர் குட்டம் மென் பறழ் சேர் மறியே குட்டி ஏர் வருடை
மதுகைச் சரபம் வரையாடு எகினம் வளர் சவரம்
கதமுற்ற மானமிருகம் கவரிக்குக் கற்பித்ததே
** கழுதை பன்றி
**159
#13
கத்தபம் வேசரி வாலேயம் கோகு கரம் கழுதை
அத்திரி என்ப கருமா இருளி அரும் கனலி
குத்திரம் சூகரம் கேழல் வராகம் குரோட்டம் பன்றி
மைத்திகழ் ஏனம் அரி கோலம் போத்திரி வல்லுழியே
** முட்பன்றி மான் புல்வாய் கரடி
**160
#14
எழில் புனை சல்லியம் முள்ளார் மிருகம் எய்யே பன்றி ஆம்
உழை மறி நவ்வி அருணம் மான் அம் பிணை ஓங்கு இரலை
விழை கலை என்பர் இரலை புல்வாய் என்பர் வெல் உளியம்
கழிதரு பல்லம் கரடி எண்கு ஆம் என்பர் கற்றவரே
** நரி ஓரி பூனை ஆண்பூனை
**161
#15
இகலன் நரி சம்புக் கோமாயு என்க இகலன் எனப்
பகர்வது ஓரி விலாளம் விடருகம் பாக்கன் வெ
ருகு அப் பவணம் திறல் பூசையும் பூனை அதாம் கடுவன்
மிகைசெய் விராளம் வெருகு என ஆண்பெயர் மேவியதே
** கீரி முயல் கத்தூரி நாய்
**162
#16
கீரி நகுலம் சசம் முயல் நாவி கிளர் மறி கத்-
தூரி மை மான்மதம் நானம் அறிவன் துருக்கம் என்பர்
மூரி எகினம் சுணகன் ஞமலி முடுவல் சுவாக்
கூரிய நாய் சுணங்கன் ஞாளி சூரன் வெங் குத்திரனே
** பெண்நாய் குரங்கு
**163
#17
முடுவல் பெண்நாய் என்பர் கானவன் மற்கடம் மூரி அரி
கடுவன் வலிமுகம் சாகாமிருகம் கவி குரங்கு
திட கோகுலம் பவிலவங்கம் வானரம் சீறும் மந்தி
உடலிய கோடரமே யூகம் ஆம் என்று உரைத்தனரே
** கருங்குரங்கு பெண்குரங்கு முசு உடும்பு கோம்பி
**164
#18
கான வல் யூகம் கருங்குரங்கு ஊகம் கருது மந்தி
ஆனது பெண்பெயர் ஓரி அக் கள்வன் அடந்த தலை
தானும் முசு என்பர் கோதா முசலி தரும் உடும்பு
கூனும் எழில் திண்டுடன் காமரூபியும் கோம்பியதே
** மூஞ்சூறு எலி அணில் விலங்கினில்ஏற்றை
**165
#19
சுந்தரியே சுண்டன் மூஞ்சுறு சூரன் எனச் சொல்லுவர்
முந்து சிகரி கருப்பை இரும்பன் மொழியில் எலி
வந்த அணில் வெளில் போத்தே ஒருத்தல் வயக்களிறோடு
ஒந்திய உம்பல் விலங்கினில் ஏற்றைக்கு உரியனவே
** களிறு ஒருத்தல் ஏறு
**166
#20
கரி கேழல் என்னில் களிறு ஆம் கவரி கரடி பன்றி
மரை யானை மான் புலி புல்வாய் எருமை வரும் ஒருத்தல்
இருளார் கவரி மரை மான் எறுளி புல்வாய் எருமை
நிரையாரும் பெற்றம் சுறா இவை ஏறு என நேர்படுமே
** போத்து பகடு தகர்
**167
#21
பெற்றம் எருமை மரையே புல்வாய் புலி ஏற்றம் அரி
உற்ற பயத்தில் உறைவன போத்து என்பர் ஓங்கு எருமை
மற்று இபம் பெற்றம் பகடு ஆம் சுறவு வயக்களிறு
தன் திறல் ஆளி துருவாட்டின்ஏற்றைத் தகர் என்பரே
** உம்பல் சேவல் கடுவன் விலங்கின் பெண்பெயர்
**168
#22
உழையே முசுக் கலை ஆட்டினில்ஏற்றே உலாவும் உம்பர்
எழிலார் மயூரமும் கோழியும் சேவல் இகல் குரங்கு
விழைவார் கடுவன் எனப் பெறும் பாட்டி மிகு பிணவும்
கொழு நாகு பெட்டை பிணை என்று பெண்பெயர் கூறினரே
** பெட்டை பிணை நாகு
**169
#23
ஒட்டகம் வாசி கழுதை மரை என ஓங்கிய பேர்
பெட்டை புலி உழை புல்வாய் கவரி பிணை எனலாம்
வட்டிய பன்றி புல்வாய் நாய் பிணை என்பர் ஆ மரையும்
கிட்டிய ஆவும் எருமை நாகு எனும் கேண்மையதே
** நாகு பாட்டி மந்தி பிணா ஆண் பெண்
**170
#24
பசுவே எருமை மரை நாகு நாய் பன்றி பாட்டி கலி
முசுவே எனின் மந்தி ஒட்டகம் வாசி முழங்கு கரி
திசையார் கழுதை பிணா நரி பாட்டி எனத் திகழும்
இசைவான ஆண் பெண் அவைஅவையாக விளம்பினரே
** பிணவு போதகம் பார்ப்பினம் குருளை பறழ்
**171
#25
புனை பெண் பிணவு புலி அரிமாக் கரி போதகம் ஆம்
வன வெங் குருளை பறழே குழவி மறி கன்று பார்ப்-
பினம் மேவு குட்டி விலங்கின் பறளை இகல் முயல் நாய்
பனியார் நரி புலி ஏனம் குருளை பறழ் என்பரே
** பிள்ளை பிணை மறி ஊகம் குட்டி
**172
#26
பிள்ளை எனும் பெயர் நாய் அன்றி எய்தும் பிணை அழுங்கு
வள்ளிய ஆடு மறி என்பர் கோடுற வாழ் விலங்கு
முள் எயிர் உற்ற குரங்கு என்பர் ஊகம் முக வெருகு
துள்ளுமணி பறழ் குட்டியின் பேர் பெறும் தோகையரே
** கன்று குழவி பார்ப்பு
**173
#27
வாசி கடமை மரை யானை ஒட்டகம் மான் கவரி
காசறு மோட்டு கழுதை கராம் கன்று கார்க் கடமை
ஓசை இபம் மரை மான் மேதி ஒட்டகம் ஆம் குழவி
பேசிய பார்ப்புத் தவழ்சாதி எய்தப்பெறும் என்பரே
** குருளை கன்று விலங்கு தொறு வால்கீழ்இடம்
**174
#28
குருளை கன்று என்பர் உழையை முகவைக் குருளை என்பர்
சுரிமுக நந்தினில் ஏறுடன் மாவும் சொலில் குருளை
மருவுது மானுடன் மாவும் விலங்கு என்பர் வல் காலியின்
நிரை தொறு என்பர் வெருகமும் வால்கீழ் நிலை இடமே
** விலங்கின்கூட்டம் வாலுறுப்பு முதுகு
**175
#29
சாலவம் நீலம் கணம் பூகம் கூட்டம் தரு விருந்தம்
மேலவை என்னில் பிறற்பாற்கும் எய்தும் மென் தோகையுடன்
வாலதி கூலம் இலாங்குலம் ஆம் என்பர் வாலுறுப்பே
சீலமுடன் மஞ்சு நீள் முதுகு என்பர் தெரியிழையே
** யானைச்செவி மதம் மதம்பாய்சுவடு கால்
** விலாழி வால்
**176
#30
கரிச்செவி ஆம் கன்னம் தாலம் மதம் கடம் தானம் கடாம்
மருக் கடம் பாயும் சுவடு ஆம் கரடம் காத்திரமே
வெருச்செயும் அங்கிதம் கால் ஆம் விலாழி வேட்கையுறு
தரத்தகு நீர் அதின் வால் தாலவட்டம் தகும் என்பரே
** விடை (காளை) முரிப்பு கொம்பு தோல்
**177
#31
விடைபயின் முரி முரிப்பு இமில் என்பர் வெண் மருப்பும்
வடிவுறு கோடும் உலவையும் கொம்பு வடகம் பச்சை
உடலுக் கிருத்திமம் தொக்குச் சருமம் உரிவை அதள்
துடரும் புறணி துருத்தி துவக்கு இவை தோல் என்பரே
** ஊன் பெற்றத்தின்ஊன் இரத்தம்
**178
#32
தசை தடி தூவு புலாலே புறணி சடம் விடக்குப்
பிசிதம் வள்ளுரம் புலவே மெய் ஊன் என்ப பெற்றத்தின்ஊன்
தசையும் வள்ளுரம் பெருகு செந்நீர் இரத்தம் குருதி
கசிதரு சோரி உதிரம் நெய்த்தோர் செங்கறை என்பரே
** நிணம் முடை சூல் பாம்பின்படம்
**179
#33
இழுது விழுக்கு நிணமே நெய் ஆகும் என உரைப்பர்
புழு வேர் அழுகும் தசை பூழ்தியொடு ஊழ்த்தல் புலவு முடை
தொழில் புனை பீள் வெஞ் சினையே கரு இவை சூல் அது என்பர்
பழகிய பையும் பணமும் வெம் பாம்பின்படம் என்பரே
** அரவு(பாம்பு) பெரும்பாம்பு
**180
#34
அரவு புயங்கம் பணி மாகணம் சற்பம் அங்கதமே
உரகம் வியாளம் மகி பாந்தள் நாகம் உரவு அரியே
கரளதரம் பன்னகம் தந்த சூகம் வெங் கட்செவி ஆம்
பரவிய மாசுணம் பாந்தள் எல்லாம் பெரும்பாம்பு என்பரே
** பாம்பின் படப்பொறி கருடன் கழுகு
**181
#35
உரகன் படப்பொறி உத்தியும் துத்தியும் ஓங்கு உவணன்
கருடன் கலுழன் அரவுஆசனத்தன் ககபதி புள்
அரசன் திறல் வயிநதேயன் விநதாசுதன் ஆகும் என்ப
இரையும் கழுகு என்பதாம் உவணப்புள் எருவையுமே
** வன்சிறைப்புள் பருந்து சாதகம் குயில்
**182
#36
மாறெதிர் சிம்புள் வாருண்டகம் உயர் வன்சிறைப்புள்
பாறுடன் சேனமும் கங்கமும் ஆகும் பருந்து அகல் வான்
கூறு புள் சாதகம் கூட்டிசைப் பிள்ளை குணம் குயில்கு
வேறுள கோகிலமே காளகண்டம் விதித்ததுவே
** செம்போத்து கோழி கூகை மயில்
**183
#37
குக்கில் செம்போத்துச் சகோரமும் ஆம் குக்குடம் கொடுமை
மிக்க பதாயதம் வாரணம் கோழி விறல் குடிஞை
மைக்கண் குராலுடன் கோட்டானும் கூகை மயூரம் மஞ்கு
தொக்க சிகண்டி சிகாவலம் கேகயம் தோகையதே
** மயில் மயிற்பீலி சிறகின் முதல் முள் காக்கை
**184
#38
சிகியே பிணிமுகமும் மயில் ஆம் தொங்கல் திண் கலபம்
இகல் பீலி கூழை இறகு என்று உரைப்பர் எழு முருந்து
தகுமே இறகின் முதன்முள் என்று ஓதும் தயங்குகொடி
ககமேவு காரி அல் வாயசம் காக்கை கரும்பிள்ளையே
** வலியான் கருங்குருவி கிளி கவுதாரி
**185
#39
வயவன் வயானன் வலியான் பெயர்பெறும் மா வலியன்
கயவாய் இரண்டும் கருங்குருவிப் பெயர் காமர் கிள்ளை
நயவன்னி தத்தை சுகம் கிளி ஆம் என்பர் நாடும் இகல்
சயம் மேவு பூழ் சிதல்தான் கவுதாரிக்குத் தக்கதுவே
** புறா அன்றில் ஊர்க்குருவி பகண்டை
**186
#40
கணம்பயில் மென்பறைப் பாராவதம் கபோதமும் தூ-
துணும்புறவும் புறா ஆகும் தரிஞ்சமும் சொல்லில் அன்றில்
குணங்கொள் சகடம் எனில் ஊர்க்குருவி குலப் பகண்டை
இணங்கும் இதலி குறும்பூழ் சிவல் என்று இயம்புவரே
** நாகணவாய் குறும்பூழ் மீனெறியும்சிறுபறவை
** பறவைப்பொது கொக்கு
**187
#41
பூவை மென் சாரிகை நாகணவாய் குறும்பூழ் உரைக்கில்
சேவலங் காடை சிரல் மீனெறியும்சிறுபறவை
போவிச் சகுனம் போகிலே பிணிமுகம் புள் பறவைக்கு
ஆவும் பொதுப்பெயர் கொக்குக் குரண்டம் அடல் பகமே
** ககம்(பறவைப்பொது) அன்னம் அன்னத்திறகு சகோரம்
**188
#42
சுகமே விகங்கம் பதங்கமும் ஆகும் செங்கால் எகினம்
வகை மேவும் அன்னம் பிணிமுகம் ஓதிமம் அஞ்சம் மதி
நிகர் தூவி அன்னத்துஇறகே சகோரம் நன் நேமிப்புள்ளுப்
புகழ் மேவு சக்கரவாகப்புள் என்னப் புகன்றனரே
** பெருங்குருகு நாரை குருகு சம்பங்கோழி
** நீர்க்காக்கை
**189
#43
பேர் ஆனைஉண்குருகு என்னில் பெருங்குருகு என்னப்பெறும்
போரார் பிதாவும் அப் போதாவும் நாரை புனை குருகு
சீரார் வண்டானம் திகழ் சம்பங்கோழி சிறந்த கம்புள்
காராரும் காரண்டம் நீர்க்காக்கை ஆம் என்பர் கற்றவரே
** வண்டு
**190
#44
அரி சஞ்சரீகம் ஞிமிறு மதுகம் அறுபதம் ஆம்
வரி அளி தும்பி சுரும்பு கழுது மதுகரமே
பிரமரம் தேன் வண்டு சாரங்கம் கோரம் இசை பிரசம்
விரைமலர்த் தாழுயர் ஆற்பதம் ஆக விளம்பினரே
** ஆண்வண்டு இந்திரகோபம் விட்டில்
** சிள்வீடு நுளம்பு
**191
#45
தூய சுரும்பு அவற்று ஆணே மதுகரம் தும்பி என்பர்
ஈயல் இயங்கிய மூதாய் செம் கோபம் இகல் பதங்கம்
ஏய கலபம் எனில் விட்டில் சில்லி விறல் சிகடி
ஆய சிள்வீடு நுளம்பு ஆகும் துள்ளல் நுளுவலுமே
** கொசு சேவல் போத்து பறவைப்பெண் அளகு
**192
#46
கொக்கே மசகம் கோமயில் அன்றில் குலப்பறவைக்கு
இசைவாகும் சேவல் இகல் போத்து மஞ்ஞை எழால் என்னலாம்
திசை மேவு பேடையும் பெட்டையும் புள்ளில் திகழ் பெண் என்பர்
அசை கோழி கூகை பெண்பேர் ஆம் அவற்றை அளகு என்பரே
** பறவையின் இளமை முட்டை வாயலகு இறகு
**193
#47
பறவை அவற்றின் இளமையும் பிள்ளையும் பார்ப்பும் என்பர்
முறை சினை அண்டம் குடம்பையும் முட்டை மெய் மூக்கு துண்டம்
அறைகுவர் வாயலகு ஆகப் பறையோடு அரத்த பிச்சம்
சிறு தூவி கூழை சிறை இறகு என்னவும் செப்பினரே
** தொழுதி முதலை ஆண்முதலை சுறவு(சுறாமீன்)
** இறால் கெளிறு
**194
#48
துடர்ந்தெழு புள்ளொலிக்கூட்டம் தொழுதி துயர் வெங் கரா
இடங்கர் கிஞ்சும்மாரம் வன்மீன் முதலை இகலும் கராம்
அடங்கு அவற்று ஆண் என்பர் ஆடல் மகரம் அடல் சுறவு ஆம்
கிடங்கின் இலால் இறல் ஆகும் கெளிறு கெடிற்று என்பரே
** மீன் திமிங்கிலம் திமிங்கிலகீலம் மலங்கு
**195
#49
மச்சம் சலசரம் மீன் அதை நுங்கிய மச்சம் எனின்
மெச்சும் திமிங்கிலம் ஆம் அந்த மீனை விழுங்கிய மீன்
நிச்சியமான திமிங்கிலகீலம் நெடுமலங்கு
நச்சியநுறை எனவே உரைக்கும் இந் நானிலமே
** சங்கம் (சங்கு) வலம்புரி சலஞ்சலம் வாரணம்
**196
#50
நந்து பணிலம் சுரிமுகம் கோடே நாகு நத்து
வந்தெழு கம்பு வளை சங்கம் ஆகும் வலம்புரியின்
சந்தம் உரைத்திடின் மிக்க கதிலும் சலஞ்சலமே
சுந்தரம் மிக்கது அச் சங்குக்கு வாரணம் சொல்லுவரே
** நத்தை ஏரல் தவளை ஆமை
**197
#51
நாகு கரிமுகமே கருநந்து எனின் நத்தை இறவு
ஆகும் இறால் அது எருந்து ஏரல் தேரை அரி மரையே
நீகம் மண்டூகம் தவளை கமடம் நன்னீர்க் கச்சபம்
மோகர கூருமம் ஆமையின் நாமம் மொழிகுவரே
** நண்டு நண்டின்ஆண் தேள் சிலம்பி எறும்பு
**198
#52
அளை பயில் நள்ளி குளிர் கற்கடகம் அலவன் நண்டு
களவன் அவற்றினில் ஆண் என ஓதும் கரும் தெறுக்கால்
தெளியில் விருச்சிகம் தேள் ஆம் உலூதை சிலம்பி என்பர்
உளு உசு ஆகும் உறவியும் தான் என்பர் ஊர் எறும்பே
** நாகரவண்டு சிதலை புழு தேன்கூடு கோற்புழு
**199
#53
சிறு நாகரவண்டு நொள்ளை செய் ஆழல் சிதலை என்ப
கறையான் கிருமி வெங் கீடம் புழு என்ப கற்பிரசம்
குறையாதது என்றும் தேன்கூடு இறால் என்பர் கோல்புழுவும்
உறையான கீடம் உடனே உலண்டு என ஓதுவரே
** பாரதிதீப வரலாறு
**200
#54
மீன்தாவு வாவிக் கடம்பையில் வாழ் திருவேங்கடவன்
ஏன்று ஆசு கூறும் கவிவேந்தன் பாரதி ஏற்ற மலர்த்
தேன்தாழ் தொடைப்புயன் செப்பிய பாரதிதீபம்தன்னில்
மூன்றாவது விலங்கின் பேர்த் தொகுதி முடிந்ததுவே
@4 மரப்பெயர் தொகுதி
** தருவின் வகை சந்தனம் அகில்
**201
#1
சந்தானம் தேவதருப் பாரிசாதம் தடக் கற்பகம்
மந்தாரம் என்பர் சந்திரதிலகம் மலையசமே
கொந்து ஆரம் சந்து இவை சந்தனம் ஆம் என்பர் கூர் அகரு
நந்தாத காகதுண்டம் பூழியே அகில் நாமங்களே
** ஆச்சா மராமரம் இத்தி மகிழ்மரம் தேக்கு
** சண்பகம் அசோகு
**202
#2
ஆ என ஓதுவர் ஆச்சா மராமரம் ஆன மரம்
மேவிய சாலம் இறலி இத்தி என்பர் மெய் வகுளம்
தாவி இலஞ்சி மகிழ் சாதி தேக்கு என்பர் சண்பகமே
தூவலர்ச் செண்பகம் பிண்டி செயலை அசோகு என்பரே
** தொன்மரம் (ஆல்) அரசு மருதம் கொன்றை
**203
#3
குலவு வடம் தொன்மரம் ஆம் பழுமரம் கோழியும் ஆம்
இலையில் கணவம் பணையே மராமரம் அச்சுவத்தம்
மலிதரு போதி அரசு ஆம் அருச்சுனம் ஆம் மருதம்
இலகும் இதழி கடுக்கை மதலை எனும் கொன்றையே
**குடவு நாவல் வேம்பு காஞ்சிரை அத்தி கோங்கு
**204
#4
கொட்டம் குடிலம் குடவு என்று உரைப்பர் குலவு சம்பு
மட்டவிழ் நாவல் மலி நிம்பம் வேம்பு வன் காஞ்சிரை ஆம்
எட்டி அதவும் உதும்பரமும் அத்தி என்பர் கயா
கட்டவிழ் சூட்டினர் மென் கோங்கு அதாம் கன்னிகாரமுமே
**புளிமா மாமரம் செருந்தி புன்னாகம் மஞ்சாடி
**205
#5
போதவிழ் ஆம்பிரமே சூதம் மாழை புகழ் புளிமாச்
சூதம் என் சேகரம் மாமரம் கொக்குத் தூய நன் மாச்
சீதள பஞ்சரம் செங்கோடு உரைக்கில் செருந்தி புன்னை
ஓது புன்னாகம் திலகம் மஞ்சாடி என்று ஓதுவரே
**வன்னி கடுக்காய் பச்சிலைமரம் கருங்காலி
** ஆத்தி குருந்தம் நெல்லி
**206
#6
சமியே கலீகமும் வன்னி அரிதகிதான் கடுக்காய்
கமழும் தமாலம் பசும்பிடி பச்சிலை காற கத்திரம்
அமர் கருங்காலி ஆர் தாதகி ஆரமும் ஆத்தி குந்தம்
நிமிர் குகுந்து என்பர் நிரை ஆமலகமும் நெல்லியுமே
** செங்கருங்காலி புளி இல்லம் வெட்பாலை விளா
**207
#7
கந்தம் மிகும் சிறுமாரோட்டம் செங்கருங்காலி சிந்தம்
சிந்துரம் ஆம்பிலமே எகினம் திந்துருணி புளி
கொந்து இல்லம் பொங்காலம் வெட்பாலை குடசம் என்பர்
முந்திய வெள்ளில் விளா வில்வம் ஆம் என்பர் மொழிகுழலே
** குமிழ் முருக்கு குடைவேல் பாதிரி சேமரம்
** ஈரப்பலா வில்லுவம்
**208
#8
கடம்பல் மென் கூம்பல் குமிழ் கிஞ்சுகம் கவிரே முருக்கு ஆம்
உடை குடைவேல் என்பர் பாடலம் பாதிரி ஓங்கு அழிஞ்சில்
அடர்தரும் சேமரம் அங்கோலம் ஆசினி ஈரப்பலா
மிடைதரு கூவிளம் மாலூரம் கூவிளை வில்லுவமே
** கடம்பு வேங்கை வருக்கைப்பலா தாதுமாதுளை
** மாதுளை எலுமிச்சை
**209
#9
கடம்பு விசாலமுடன் நீபமே கதம்பம் திமிசு
படும் திமிலே கணி வேங்கை வருக்கைப்பலாப் பனசம்
மடங்கிய தாதிமமும் தாதுமாதளை மாதுளங்கம்
இடந்தெழு மாதுளை சம்பு முருக்கு எலுமிச்சமுமே
** குருக்கத்தி நாரத்தம் அகத்தி களா காயா
** இலந்தை நறவம் ஞாழல்மரம்
**210
#10
குருகு குருக்கத்தி மாதவி ஆகும் குல நரந்தை
கருதிய நாரத்தம் அச்சம் அகத்தி களம் களா ஆம்
இருள்காசை பூவை மென் காயா இரத்தி இலந்தை தள்ளி
மருவு நறவம் அது நாகம் ஞாழல்மரம் என்பரே
** குங்குமம் உலவை ஓடு உன்னம் கமுகு தணக்கு
**211
#11
மலி மாதவம் துருக்கம் குங்குமம் ஆம் மரம் உழுஞ்சில்
உலவை ஒடுவை ஒடுப்பையோடு ஆண்மரம் உன்னம் என்பர்
கலிகெழு பூகமும் பூக்கமும் கந்தி கமுகு அது என்பர்
தலம் மிசை மேவும் நுணவை தணக்கு எனச் சாற்றுவரே
** பனை இளம்பனை வாழை தெங்கு கரும்பு
**212
#12
புனை தாலம் நீலம் பொரு பெண்ணை போந்தை புல் தாளி என்னில்
பனை ஆகும் போந்தை இளம்பனை வாழை பயில் அரம்பை
கனி நாளிகேரம் தாழையும் தெங்கு என்ப கன்னல் கழை
இன வேழம் இக்குக் கரும்பு என ஓதும் எழுபுவியே
** மூங்கில்
**213
#13
வரை வேழம் காம்பு திகிரி முந்தூழ் தட்டை வாங்கிய பா-
திரி கீசகம் வெதிரே பணை வேணுச் சிறந்த கழை
நிரை வேரல் விண்டு வேய் சுண் பாண்டில் ஓங்கல் நெடுங் கிளையே
அரி மேவு தூம்புடன் சந்தி இவை மூங்கில் அமை என்பரே
** தாழை பூவாதுகாய்க்கும்மரம் வண்டுணாமலர்மரம் மரப்பொது
**214
#14
கேதகை தாழை முடங்கல் மடி கைதை கேள் கண்டல் ஆம்
போதுஅணுகாதகுணமரம் கோளி புனை செண்பகம்
தாது அவிழ் வேங்கை அளிபயிலாமரம் தாபரமே
பாதவம் தாருத் தரு மரப்பேர்பொதுப் பாசு என்பரே
** மரச்செறிவு பொதும்பு நந்தவனம்
**215
#15
கோல மரச்செறிவு ஆகும் பொதும்பரும் கோடரமும்
சாலும் பொதும்பு உத்தியானம் உய்யானம் மென் தண்டலையே
சோலை தண் காவல் பொழில் நந்தவனம் துடவை நறாக்-
காலும் உபவனம் தோட்டம் இளமரக்கா என்பரே
** இலையுதிர்காடு கரிகாடு காவற்காடு தூறு
** இண்டை முள் முள்ளுடைமூலம்
**216
#16
இலையுதிர்காடு முதை சுரம் பொச்சை எனில் கரிக்காடு
அலகில் அரண் மிளை காவற்காடு என்பர் அரள் இறும்பு
கலிகெழு தூறு இண்டை ஈங்கை கடுக் கண்டகமும் முள்ளும்
மலிதரு முண்டகம் முள்ளுடைமூலவகை பெறுமே
** காடு பிரம்பு
**217
#17
அடவி முளரி வனம் கானம் ஆரணியம் களரி
கடறு குறும்பொறை காந்தாரம் கட்சி வெங் காண்டம் அத்தம்
படர் தரம் சீரணி பொச்சை கவனம் பழுவம் தில்லம்
விடர் இலை காடு என்பர் வேத்திரம் சாதி விறல் பிரம்பே
** மரக்காழ் அகக்காழ் வெளிற்றுமரம் புறக்காழ்மரம்
**218
#18
அரி கலை ஆசினி சேகே வயிரம் அவை மரக்காழ்
உரலன மாமரம் அகக்காழ் எலவே உயர் முருக்கு
மருவிய பால்மரம் எல்லாம் வெளிற்றுமரம் என்பர்
கருதிய நல் புறக்காழ் பனையே தெங்கு கால் கமுகே
** சிறுதூறு மருந்து சல்லியகரணி
**219
#19
திரண்ட பதுக்கை அரில் சிறுதூறு செழும் புதலே
பொருந்திய வல்லி மரம் பூடு புல்லுப் புகழ்ந்துரைக்கில்
மருந்து எனலாம் சத்திரமே உறாவகை மாற்றுவதே
இரும் திறல் சல்லியகரணி ஆக அறைந்தனரே
** சந்தானகரணி சமனகரணி உயிர்தரும்மருந்து
**220
#20
சிந்தும் உடல் துணிபு எல்லாம் ஒருவகை சேரும் வண்ணம்
சந்துசெய்விப்பது சந்தானகரணி சார் தழும்பு
வந்த விரணமும் போக்கிவிடும் சமனகரணி
உந்திய மா மிருதசஞ்சீவனியும் உயிர்தருமே
** மரத்தின் இளமை இளமைப்பெயர் பெறாதவை மரக்கொம்பு
**221
#21
குழவி கன்று பிள்ளை போத்து என் கிளவியும் கூறின் அ மரத்து
எழில் இளமைப்பெயர் நெல்லுடன் புல் எனில் எய்தலுறா
ஒழுகிய பொங்கர் சினை பணை சாய்கை உறுப்பு உலவை
கொழுவிய கோடரம் கோடு பிறக்கம் மென் கொம்பு என்பரே
** தழை இளங்கொம்பு இலை தளிர்
**222
#22
தழையே உலவை வளர் இளங்கொம்பு என்பர் தண்ணடையே
எழில் ஓலை பாசடை பத்திரம் சாய்கை இலகு பன்னம்
விழைவார் தமாலம் இலை வல்லரி முரி மென் கிளையே
குழை ஆர் கிசவையம் மஞ்சரி பல்லவம் கொய்தளிரே
** தளிர்த்தல் குருந்து இணர் பழம் பரலின்உட்படுகுருத்து
**223
#23
குழைத்தல் இலிர்த்தல் தளிர்த்தல் முருந்து குருந்து எனலாம்
எழில் தகை மஞ்சரி கொத்துத் துணருடன் தொத்து இணர் ஆம்
பழப்பெயர் என்னில் பசுங் கனி ஆம் பழம் பரலின்உட்பட்டு
ஒழுக்கிய மென் குருத்துப் பயின் ஆக உரைத்தனரே
** நந்தியாவத்தம் கஞ்சா நொச்சி, கார்த்திகைநாள்மலர் காந்தள்
**224
#24
மல்லல் வலம்புரிதான் நந்தியாவத்தம் மன்னு கஞ்சம்
குல்லை கஞ்சா நொச்சியே சிந்துவாரம் மென் கோடலுடன்
நல்ல செங்காந்தள் தோன்றியும் கார்த்திகைநாள்மலர் ஆம்
புல்லும் வெங் காந்தளும் கோடல் என்றே சொல்லும் பூதலமே
** ஊமத்தை ஆமணக்கு குறிஞ்சி அலரி வெட்சி
**225
#25
இலகிய பூமத்தகம் எனில் ஊமத்தை ஏரண்டமே
குலவிய ஆமணக்கு ஆகும் குறிஞ்சியும் கோரண்டம் ஆம்
அலரி கணவரி மென் கரவீரம் அணுகும் செச்சை
உலைவுஇல் செந்தூரம் அவை வெட்சி ஆக உரைசெய்வரே
** சிறுமூலகம் பருத்தி துழாய் மிளகு கடுகு
**226
#26
திப்பிலி காமன் சிறுமூலகம் சிறுபூளை செப்பில்
ஒப்புஇல் உழிஞை வெங் காற்பாசம் பன்னல் ஒளிர் பருத்தி
அப் படர் சூல்லை துளபம் துழாய் மரிசும் கறியாய்
வைப்பர் மிளகு கடிப்பகை ஐயவி வண் கடுகே
** மஞ்சள் கருணை வாசப்பண்டம்
**227
#27
அரிசனம் பொன்மை அரித்திரம் மஞ்சள் என்று ஆகும் கந்தம்
கருணை தற்கோலம் இலவங்கமே நல் தகரம் கோட்டம்
மருவிய ஏலம் வளர் சாதிக்காயுடன் மாஞ்சி மற்றும்
பரவு கைச்சோலம் இவை வாசம் மேவிய பண்டங்களே
** கொத்தமூரி கழங்கு கழல் கிலுகிலுப்பை
** சேம்பு சிறுகீரை கற்றாழை
**228
#28
உலகினுள் அஞ்சிப் பெயர் கொத்தமூரிக்கு உரைப்பர் மண் மேல்
குலவிய மூழல் கழங்கோ கொடிக்கழல் கொய் பகன்றை
கிலுகிலுப்பை சகுடம் சேம்பு கேள் சிறுக்கீரை என்னில்
குலைபெறு சாகினி சில்லி குமரி கற்றாழை அதே
** வழுதுணை சரல்விளையும்நெல் செந்நெல்
** குளநெல் தோரை இறுங்கு
**229
#29
ஆரும் பிரகதிர் வங்கம் வழுதுணை ஐவனமே
சாரல்விளையும்நெல் சாலியும் செந்நெல் தயங்கிய நீர்
வாரம் குளநெல் இயவையும் தோரை மலி உணவாம்
ஏருறு சொன்னலும் சோளமும் கூறில் இறுங்கு என்பரே
**கருந்தினை செந்தினை முதிரை எள்
** எள்ளிளங்காய் கதிர் தினைத்தாள்
**230
#30
இறடி கருந்தினை செந்தினை ஏனல் எழு முதிரை
செறியும் அவரை துவரைகள் என்னும் திலமும் எள்ளுக்
கறைபயில் எள்ளிளங்காய் என்பர் கௌவை கதிர் குரல் ஆம்
திறியும் அருவி இருவி எல்லாம் தினைத்தாள் என்பரே
** பதர் வைக்கோல் போற்றாப்பொலி பயிர் புல்பிறப்பு
**231
#31
பதடி எனில் பதர் ஆகும் வைக்கோல் வை பலாலம் என்பர்
அதுவும் உரைக்கில் அழி என்னலாம் பொங்கழி உரைக்கில்
புதிய களம்தனில் போற்றாப்பொலி பயிர் போற்று பைங்கூழ்
உதவி பசும்புல்கும் ஆம் புதல் புல் என்று ஒரு பிறப்பே
**கோற்கொடி கற்பகம்சேர்கொடி கொடி
** மென்கொடி நாரரி
**232
#32
இலதை எனும் பெயர் கோற்கொடி கற்பகம் எய்து கொடிக்
குலம் அது உரைத்திடில் மென் காமர்வல்லி வெங் கோற்கொடி ஆம்
நலம் மிகு மென்கொடிச்சாதிப் பிறப்புக்கள் நாரரியே
நிலைபெறு நெய்யரி தெங்குநார்ப் பாளைக்கு நேர்ந்ததுவே
**வன்கொடி கிழங்கு இருவாச்சி மல்லிகை முல்லை
**233
#33
வந்து எழு வல்லியும் வள்ளியும் நூழிலும் வன்கொடி ஆம்
கந்தமும் மூலமும் ஆகும் கிழங்கு கமழ் மயிலை
முந்து இருவாச்சி முழு மௌவல் மல்லிகை மொய்த் தளவு
கொந்தணி மெளவலும் முல்லையின் பேர் என்று கூறுவரே
**சிறுசண்பகம் பிச்சி கொவ்வை அடம்பு, சிறுதூறு பீர்க்கு
**234
#34
கருமுகை பித்தி சிறுசெண்பகம் கமழ் சாதி என்பர்
விரை மௌவல் மாலதியே பிச்சி தொண்டையும் விம்பமுமே
அருகடர் கொவ்வை அடம்பு சோபாலிகை ஆம் அதிரல்
பிதிர் சிறுதூறு என்பர் பீரமும் பீர்க்கு என்று பேசினரே
**கூதாளி சிவதை சீந்தில் காஞ்சொறி ஏதாளி தருப்பை
**235
#35
கூதாளமே துடி கூதாளி என்பர் கொடிச் சிவதை
தீதார் பகன்றை அமுதவல்லிப் பெயர் சீந்தில் என்பர்
மீதாரம் கண்டுரம் காஞ்சொறி பஞ்சிகமே உரைக்கில்
ஏதாளி ஆகும் குசையே தருப்பை இசைவுறுமே
**நாணல் பஞ்சாய்க்கோரை வாட்கோரை முள்ளி பாசி குளிரி
**236
#36
காசையும் நாணல் எருவை பஞ்சாய் கழிக்கோரை அகம்
வீசு செருந்தியும் வாட்கோரை முண்டகம் மேவு முள்ளி
மூசிய சைவலம் சேயீரம் நாரம் முழுப் பதியம்
பாசி குளிரி எனில் கல்லகாரம் பயின்றிடுமே
** தாமரை
**237
#37
வாரிசம் பங்கயம் முண்டகம் கோகனகம் வனசம்
வேரிய கஞ்சம் முளரி சரோருகம் மென்மலர் அம்-
போருகம் பற்பம் அரவிந்தம் புண்டரிகம் கதிரோன்
தாரகம் போது அம்புயம் சதபத்திரம் தாமரையே
** தாமரை கருங்குவளை செங்குவளை
**238
#38
சலசம் பதுமம் குசேசயம் என்பர் தண் காவி தடம்
குலவு இந்தீவரம் நீலோற்பலம் மென் குவலையமே
அலர்தரு பானல் கருங்குவளைப் பெயராம் அரத்தம்
பல செங்குவளை கழுநீர் பன்னு உற்பலம் என்பரே
** நெய்தல் செவ்வாம்பல் வெள்ளாம்பல் அகஇதழ்
** புறஇதழ் பூவினுள்கொட்டை
**239
#39
கருகிய நெய்தல் குவலையம் ஆகும் கயிரவமே
அரி பயில் அல்லி குமுதம் வெள்ளாம்பல் அகஇதழ்
பொருவரும் அல்லி புறஇதழ் புல்லிதழ் ஆம் பொகுட்டுக்
குருகெழு பூவினுள்கொட்டையின்பேர் என்று கூறினரே
** நால்வகைப் பூ மொட்டு மலர்
**240
#40
நீர் கொடி கோடு நிலம் எனும் நால்வகை நீடிய பூச்
சேர் கலிகை முகிழே நனை கோரகம் செவ் அரும்பு
வார் கணிகை நகையே முகிழம் சினை மாமலர் மொட்டு
ஏர் கமழ் போது துணர் வீ அலரி இணர் மலரே
** வாகை பழம்பூ பூந்தாது இதழ் மாலை
**241
#41
வென்று புனைதரு பூ வாகை செம்மல் மிகு பழம்பூ
மன்றலம் தாது என்னில் கேசரம் கொங்கு மகரந்தம் ஆம்
ஒன்றிய ஏடுடன் தோடு மலர்இதழ் தொங்கல் கண்ணி
ஒன்றிய கோதை தெரியல் அலங்கல் ஒலியலுமே
** மாலை பிணையல் நுதல்மேல்அணி வாசிகை
**242
#42
தொடலை இலம்பகம் தார் மாலை தாமம் செஞ்சூட்டு அணியல்
படலை சிகழிகை வாசிகை கத்திகை பைம் பிணையல்
மிடல்தரும் சூட்டும் இலம்பகமும் நுதல்மேல்அணி ஆம்
அடர் முடி வாசச் சிகழிகை வாசிகை ஆம் என்பரே
** பாரதிதீப வரலாறு
**243
#43
விழி அருள் பூண்ட நவதாரணை முகில் வேங்கடவன்
வழியினுள் வாழ் திருவேங்கடபாரதி வண்டமிழின்
செழுமையது ஆகும் இலக்கிய பாரதிதீபம் தன்னின்
மொழி ஒரு நான்கில் மரப்பேர்த்தொகுதி முடிந்ததுவே
@5 இடப்பெயர்த் தொகுதி
** துறக்கம்
**244
#1
வானகம் நாகம் பவனம் உயர்நிலை மா சுவர்க்கம்
தான் அமராபதி உம்பர்இடம் ஐந்தருஉலகம்
மேனிலை பொன்னுலகம் விண்ணுலகம் விசும்பிடமே
கோனகர் இந்திரபதியே துறக்கம் குலவியதே
**விஞ்சையர் சேர்விடம் வடக்கு தெற்கு
** மேற்கு கிழக்கு
**245
#2
தீதுஅகல் சேணியும் சேடியும் விஞ்சையர் சேர்விடமாம்
மாதுறு போக நிலம் அதுவாகும் வடக்கு உத்தரம்
கோதறு தென்திசை தெக்கணம் பச்சிமமே குடக்குப்
போதுறு மேக்குக் கிழக்குக் குணதிசை பூருவமே
** தேவகுருவம் உத்தரகுருவம் திக்கு
**246
#3
தாதுறு தேவகுருவமுடன் உத்தரகுருவம்
மீது அது வெள்ளிமலை பொன்மலைப் புறம் மேல் அரிதம்
மாதிரம் காட்டைக் ககுபம் மிசை புலம் வம்பல் திசை
தீது அகல் ஆசையுடன் கோ எனல் இவை திக்கு என்பரே
** பூமி
**247
#4
அசலை அளக்கர் தரையே குவலையம் அம் புவனம்
வசுமதி தாத்திரி சாந்தை விபுலை வசுந்தரை கூத்து
இசை பயில் பூதலம் வேலாவலையம் செகம் பொறை மண்
இசைதரு பூமி மகிதலம் மேதினி என்பர்களே
**248
#5
தாரணி காசினி தாலம் தரணி தலம் புடவி
பாரகம் நேமி தராதலம் ஞாலம் படி அவனி
பேர் உலகம் புவி பூதலம் வையம் பிருதுவி பூ
வாரி நிலம் பொழிலே கோ அகலிடம் மண்டிலமே
** நரகம்
**249
#6
இருநிலம் பாவம் விளைநிலம் அள்ளல் இருஞ்சிறையே
துரகதி கொல்கதி பாதகம் கும்பி சுடர் எரியே
அருவினை சூழ் மடல் பாதாளம் பாதலத்துடன் அளறு
நிரையம் நிகோதம் நரகம் என்றே சொல்லு நீணிலமே
** உலகின்பொது பெயர் நாடு
**250
#7
நாக தலமுடன் நாடும் பவனம் நல் நாடு பொழில்
போக புடவி நிலமே உலகின் பொதுப்பெயரே
ஆகிய பைதிரம் மண்டிலம் பாண்டில் அகலுள் கண்டம்
மோக மென் தண்ணடை தெய்வ நல்நாடு என்று உறைசெய்வரே
** மலை
**251
#8
வரை குன்று நாகம் திகிரி அடுக்கல் மலை பொச்சை பூ
தரம் விண்டு சாரல் கல் வெற்புப் பிறங்கல் சயிலம் நகம்
கிரி தண் சிலம்பு குறும்பொறை வேதண்டம் கேள் பெருஞ்
சிகரி வெஞ் சிலை பறம்பு ஓங்கல் பொருப்பகம் கல்லகமே
** மலை மேருமலை பொதியமலை
**252
#9
இரவி குவடு நவிரம் பருப்பதமே இறும்பு அத்திரி
அசலம் குத்திரம் கோடு பொற்றை சிலோச்சயமே
தர மாதிரம் என்பர் பொன்மலை மேருத் தயங்கு வட
வரை ஆகும் என்பர் பொதியல் தென்குன்றம் மலையம் அதே
** குன்று மலையுச்சி மலைப்பக்கம்
**253
#10
குவடு பிறங்கள் பதலை குறும்பொறை குன்று இறும்பு
நவிலுவர் பொற்றை கொடுமுடி கோடு நலக் குவடு
தவ சிகரம் கிரி மேல் உச்சி வாரம் தடம் சாரல் கான்
கவர் கடம் என்னில் மலைப்பக்கமாகக் கருதுவரே
** பாறை துறுகல் மலைமுழை பிலம் திரல்
** மலைப்பிளப்பு கல்திரள் கற்புழை சிறுதிட்டை
**254
#11
புலமிகு பாறை அறையே துறுகல் பொறை முடுக்கர்
மலைமுழை கந்தரம் ஆம் பிலம் கீழறை மன் திரல் உலம்
மலையின்பிளப்பே விடர் ஆகும் உயர் கல்திரள்
சிலை கற்புழையும் கரணம் பதுக்கை சிறுதிட்டையே
** விடர் திட்டை உயர்நிலம் பரலடுத்துயர்நிலம்
** பாதலம்
**255
#12
விடரும் கமரும் அவிப்பும் விடர் என்பர்கள் மேடு திட்டை
திடவ சுவல் வன்பால் கங்கர் குவால் குப்பை சேர்ந்த குவை
உடன் உரை செய்யில் உயர்நிலம் ஆம் பரலுற்றுயர்ந்த
படர் நிலம் ஆகும் முரம்பே அரம் பிலம் பாதலமே
** கடல்
**256
#13
பரவை அளக்கர் மகராலையம் அத்தி பௌவம் முந்நீர்
நரலை சமுத்திரம் வேலாவலையம் நதிபதியே
திரை இறவாலையம் கார்கோள் சவர் உப்புச் சிந்து அலை உ-
வரி கூலராசி கடல் வேலை ஆர்கலி வாருதியே
** கடல் கடல்திரை
**257
#14
மா வாரி வீரை உததி சலதி மகோததி
பாராவாரம் நேமி பெருநீர் புணரி மை அம்பரமே
பூவாடை சாகரம் சக்கரம் ஆழி புணரியுடன்
ஓவாத ஓதம் கடல்திரை ஆக உரைசெய்வரே
** நீர்த்திரைகடற்கரை நீர்க்கரை
**258
#15
தரங்கம் கல்லோலம் விசிகரமே அறல் தத்தும் மலை
விரிந்த நல் நீர்த்திரை ஆம் என்பர் பாரம்அல் வேலையுடன்
அருங் கரை கோடு அணை கூலம் அம் தீரம் அடர் வரை பார்
பொருத்திய வாசப் புனலின் கரைக்குப் பொதுப்பெயரே
** செய்கரை மலைச்சாரல்வரும்ஆறு
** முல்லைநிலக்கான்யாறு ஆறு
**259
#16
செங்குலை சேதுக் குரம்பு இவை செய்கரை தெள் அருவி
அங்கிரிச் சாரல் வரும் ஆறு உயவை அருங் கலுழி
தங்கிய முல்லைநிலக்கான்யாறு உந்தி தன் குடிஞை
பொங்கிய சிந்து நதி ஆறு எனவும் புகன்றனரே
** கழிமுகம் உப்பளம் காவிரி பொருனை ஆன்பொருனை
**260
#17
புகல் புகார் ஓடை அதோமுகம் என்னில் பொருந்து கழி
முகம் அதுவாகும் முகம் காயல் ஆம் கழி மொய் உப்பளம்
தகு கானல் காவிரி பொன்னி பொருனை அம் தண் பொருந்தம்
மகவானி ஆனி இவை ஆன்பொருனைக்கு அடைத்ததுவே
** வாவி
**261
#18
அலந்தை கிடங்கு சுனை ஓடை கோட்டகம் ஆவி மடு
இலஞ்சி படுக் கயம் கேணி உவளகம் ஏரி பொய்கை
சலந்தரம் பட்டம் குளமே தடாகம் தடம் வலையம்
மலங்கல் குட்டம் குண்டமே வாவி சூழி அகண்டனையே
** ஆற்றிடைக்குறை கிணறு ஊறல் நீர்க்குமிழி ஆழம்
**262
#19
அறியில் இலங்கை துருத்தி அரங்கம் அவ் ஆற்றிடையில்
குறை கிணறு ஆம் என்பர் கூவம் அசும்புடன் கூபம் இவை
உறவியும் ஊறல் குமிழியும் புற்புதம் ஓங்கு பெளவம்
நிறை நுரை ஆழம் அழுந்தயம் குண்டு நெடுங் கயமே
** நிறைபுனல் சேறு
**263
#20
வாரி நிறையும் புனவே பிராறு வழாறும் என்பர்
நீருறு பள்ளம் வெங் காலாழம் தொள்ளி நிலை அளக்கர்
காரகல் பூமி குழை சேதகம் பங்கமான தொய்யல்
சீரில் செறும்புடன் செய்யல் என்று ஓதுவர் சேற்றினையே
** பொல்லாநிலம் வெள்ளைமணல் மணற்குன்று
** கருமணல் நுண்மணல் புழுதி
**264
#21
சாலும் அகத்தம் பொல்லாத்தலமே அங்கணம் சகதி
வாலுகம் வெள்ளைமணலே புளினம் மணற்குன்று என்பர்
மேல் அறல் ஆகும் கருமணல் நுண்மணல் மேவியதாம்
பால் அயர் பூழி புழுதி பொடிக்குப் பகர்ந்ததுவே
** குறிஞ்சி நெய்தல் முல்லை பாலை மருதம்
**265
#22
குல மலைச்சார்பிடம் ஆகும் குறிஞ்சி மகோததி சூழ்
நிலம் எனில் நெய்தல் வனம்சார்நிலம் முல்லை நீரின்றியே
உலர்நிலம் பாலை பணையே கழனி உயர் பழனம்
மலிதரு பானல் வயல்சூழ்நிலமும் மருதம் அதே
**முல்லை குறிஞ்சி வன்பால் மென்பால்
** சமப்பால் கருநிலம்
**266
#23
பேராப் புறவம் பணை முல்லை ஆகும் பெயர் குறிஞ்சி
பாராரும் பாலை குறிஞ்சி வன்பாலை பருத்த மென்பாலை
நீரார் மருதம் சமபடர் முல்லையும் நெய்தல் வனம்
காரார் மலைப் புனல் தன்னில் மிகும் சொல் கருநிலமே
**ஊர்
**267
#24
சிறுகுடி பாக்கம் பதி நகரே நொச்சி சேரி புரம்
குறி பயில் பாடி அகலுள் குறும்பு குறிச்சி முட்டம்
இறை அகரம் பட்டினம் பாழி பூக்கம் இருக்கை குப்பம்
உறையுள் அம் கோசரமே பூண்டி வேலி தொல் ஊர் என்பரே
** குறிஞ்சிநிலத்துஊர் முல்லைநிலத்துஊர்
** நெய்தல்நிலத்துஊர் பாலைநிலத்துஊர் மருதநிலத்துஊர்
**268
#25
குறிஞ்சி நிலத்த சீறூர் குறிச்சி குலவு முல்லை
செறிந்தது பாடியும் பட்டினம் நெய்தலைச் சேர்ந்தது என்பர்
மறந்தரு பாலை குறும்பு முனையிடம் வாட்கையுடன்
உறைந்தது தண்ணடை ஆகும் மருதத்தில்ஊர்ப் பெயரே
** உழவர்பதி நகரப்பதி பகைநிலத்துஉறைபதி
** சூழ்கழி
**269
#26
பூரியம் பூக்கம் குடிக்காடு உறையுள் புனை அருப்பம்
பார் உறை செய்யினில் உழவர்பதி என்பர் பாடி பதி
சேரி புரம் நகரப்பதி பாசறை தெம்முனை சேர்
சூரிடம் தோணாமுகம் இருக்கை முன் சூழ் கழியே
** மலைஆறுசார்ந்தஊர் ஊர்சூழ்பதி அரண்இருக்கை
** புகார் கருவூர் மதுரை
**270
#27
கிரியாறு இரண்டும் அகலாத ஊர் எனில் கேடகம் ஆம்
அருகு ஊர் உறைபதி கூறில் மடப்பம் அரண்இருக்கை
பொருகோடு எனில் குறும்பு ஆம் என்பர் காகந்தி போற்றும் புகார்
கருவூர் அணி வஞ்சி கூடல் மதுரைக்குக் கற்பித்ததே
** உறையூர் பாடி தெரு அங்காடி
**271
#28
பயில்தரு கோழி உறையூர் அச் சேரியும் பாடி என்பர்
நியமம் மன் ஆவணமே வீதி கோசுடன் ஞெள்ளல் மறுகு
உயர் தெரு மார்க்கம் எனலாம் நியமம் ஒண் கூலம் உடன்
வியலுறும் ஆவணம் அங்காடியாக விளம்புவரே
** கோயில் மாதவர் வாழிடம்
**272
#29
குலவு சினகரம் சேதியம் தேவர்தம்கோயில் என்ப
நிலையம் நிகேதனம் மாதிரம் ஆலையம் நீடு பள்ளி
மலிதரு கோட்டம் குலமே உறையுள் வன் பாழி மன்னும்
நலமிகு மாதவர் வாழிடமாக நவிலுவரே
** இல் சிற்றில்
**273
#30
மாடம் வசதி பதி பாத்தில் சேர்வு வயின் உறையுள்
வீடு அகம் புக்கில் இடமே இடவகை மேவு நகர்
கூடு மனை பவனம் குலம் மாளிகை கூறில் இல் ஆம்
நீடிய சிற்றில் குரம்பையும் கூரையும் நேர்படுமே
** இறப்பு முகடு தாழ்வாரம் அடுக்களை சாளரம்
**274
#31
மூரி இறை இறப்பு ஆகும் விடங்கம் முகடு என்ப தாழ்
வாரம் எனத்தகும் சோபானம் அட்டில் மடப்பளியும்
சாரும் அடுக்களை சாலேகம் சாலகம் சாளரமே
சீரிய நூழை தொல் வாதாயனம் எனச் செப்பினரே
** கல்லூரி வேயுள் பீடம் சுவர்த்தலை திண்ணை
**275
#32
மிகு கல்வியூரியும் கல்லூரி வேயுளும் வேய்தல் என்று ஆகும்
சொகுதகு பீடமும் பீடிகை ஆகும் சுவர்த்தலையும்
புகலுவர் வித்தகர் பித்திகையாகப் புனையும் தெற்றி
திகழ்தரு வேதிகை திட்டை மண்ணீடு என்பர் திண்ணையையே
** முற்றம் நிலாமுன்றில் சித்திரகூடம் மன்றம் கழகம்
**276
#33
நில மூன்றில் அங்கணம் முற்றம் அரமியம் நீடு நிலாக்
குலா மூன்றில் ஆம் தெற்றியம்பலம் சித்திரகூடம் என்பர்
மலியும் பொதுவில் பொது அம்பலம் இவை மன்றம் என்பர்
கலைதரு கல்வி பயில் களம் ஆகும் கழகமுமே
** கழகம் அரசர்கள் இருக்கை அரங்கு
**277
#34
வல்லும் படையும் நல் சூதுடன் மாறு மகிழ்ந்த கல்வி
சொல்லும் களமும் கழகம் அரசர்கள் சூழ்ந்துஇருக்கை
புல்லும் பெயரினில் அத்தாணி ஆடிடம் போரிடமே
வெல்லும் வட்டாடிடமே அரங்காக விதித்தனரே
** ஒருசிறை அணியவிடம் உறைவிடம் மக்கள் உறங்கிடம்
**278
#35
அறியில் ஒருசிறையே துச்சில் கொட்டில் அணியவிடம்
உறைவிடமே பிறப்பு ஆகரம் பாழி உறையுள் பள்ளி
செறி சயனம் கட்சி பாயல் அமளி மெய் சேர்விடமே
உறைவரு சட்டகம் சேக்கையும் மக்கள் உறங்கிடமே
** குதிரைப்பந்தி யானைமேவுஇடம் யானைசெல்வழி
** கூடு வேள்விக்குண்டம்
**279
#36
செய மாவின் பந்தி பணை மந்திரம் தண்டம் சேவகமே
கயம் மேவுஇடம் கயம் செல்வழி தண்டம் கருதும் கட்சி
வியலார் குடம்பை வெம் பஞ்சரம் கூடு என்பர் வேள்விக்குண்டம்
உயர்வான தீத்தமும் வேதியுமாக உரைசெய்வரே
** மட்கலம் வேமிடம் சுடுகாடு தொழு
**280
#37
மருவிய மண்கலம் வேமிடம் சூளை மயானம் உடன்
கரி புறங்காடு சுடுநிலம் ஈமம் வெங் காளவனம்
பெரும் பிணக்காடு சுடுகாடு வெய்ய பிதிர்வனம் ஆம்
நிரை தொழுத் தோழம் ஆன்வேலி தொறு ஆனிலை என்பரே
** போர்க்களம்
**281
#38
செருநிலம் ஆகவபூமி அமர்க்களம் செம்புலமே
பொருகளமே யுத்தபூமி சங்கிராமமண் போர்க்களமே
வெருவு பறந்தலை ஆயோதனதலம் வெங்களமே
பரிய பிணக்களம் வெஞ் சமதேசம் படுகளமே
** வழுக்குநிலம் மதில் சிறை
**282
#39
ஆரிடை தீய வருடம் அருப்பம் அவை வழுக்குப்
பார் இகல் இஞ்சி எயில் சுற்றுக் காவல் பயில் வரைப்புப்
பேர் அரண் காப்புப் புரிசை புகல் மதில் பேர் எனலாம்
சேரும் உவளகம் வன் சிறையாகவும் செப்பினரே
** மதில்சுற்று மதில்உறுப்பு அகழி
**283
#40
வாரி தகைப்புத் தொடை எனில் சுற்று மதில்உறுப்புச்
சேரும் விதப்புப் பதப்பாடு ஞாயில் திற எந்திரம்
போருறு நாஞ்சிலுடன் தோணி கோசம் பொருந்தும் என்பர்
ஆர் அகழ் கூறில் அகப்பாப் பவிரிகம் அகல் கிடங்கே
** வாய்தல் பெருவாயில் பெருவாயிலில் புகும் பூழை வயல்
**284
#41
வரவியல் தோட்டி துவாரமும் வாரியும் வாய்தல் வண் கோ-
புரம் அது சொல்லில் பெருவாயில் என்பர் புதவு உரைக்கில்
பெருகிய வாயிலில் போம் பெரும் பூழை பெரு விளையுள்
கருதிய செய்யும் வயல் விளையும் கழனியுமே
** வயல் குறிஞ்சி சாரும்நிலம் பழங்கொல்லை
** புதுக்கொல்லை தினைப்புனம்
**285
#42
சேரும் வரவை தடி பாத்தியோடு செறி குறிஞ்சி
சாரும் நிலம் கொல்லை தண் புனம் ஆம் பழைதான கொல்லைப்
பேர் முதைப்புனம் ஆம் புதுக்கொல்லையின் பேர் இதை ஆம்
காருறும் ஏனல் தினைப்புனமாகக் கருதுவரே
** தோட்டம் உழவு உழவோர் வளைப்பு முதுவரம்பு
** வரம்பருகு புற்று
**286
#43
துடவை படப்பை எனும் இவை தோட்டம் துடவை தொய்யல்
உடன் உழவின் பெயர் ஓதும் தொடுப்பு உழவோர் வளைப்பு
வடிவமில் மாசி முதுவரம்பு ஆகும் வரம்பருகு ஆம்
அடர்தரு கங்கு வன்மீகமும் புற்று என்று அறைகுவரே
** வழி அருநெறி கவர்த்தநெறி இழிவேற்ற வழி
**287
#44
நடவை செலவு சுரம் செப்பம் ஆரிடை நாடும் அத்தம்
தொடரும் ஒழுக்குச் சிறுபதமே இவை சூழ் வழி ஆம்
கடறு சுரம் அத்தம் தூம்பு ஆம் அருநெறி கார்க் கவலை
படரும் கவர்த்தநெறி இழிவேற்ற படுகருமே
** புற்றம்பழஞ்சோறு முதுநிலம் வழி
**288
#45
குளிர்தரு புற்றம்பழஞ்சோறு உரைக்கில் குரும்பி என்பர்
களரி கரம்பை பெரும்பாழ் முதுநிலம் கான் கடறு
வளர் நெறி ஆறு பதம் மார்க்கம் தாரி வழி வகுந்து
வளர்தரும் வட்டை பதவை இகவு சரி என்பரே
** இடம் பள்ளம்
**289
#46
புலம் களம் பாங்கர் வயின் வாய் வழி உழி போற்று திணை
நிலம் தலம் வைப்பு மருங்கு வளாகம் நிகிலம் பட்டி
இலங்கிய தானமுடன் சூழல் பால் இடம் என்பர் பள்ளம்
உலர்ந்த கிழக்கு அவல் கீழே படுகர் உவளகமே
** பக்கம் நடு மேல்
**290
#47
பக்கம் மருங்கு முன் பால் பாங்கரே புழை பாடு சிறை
மிக்க புடை இடம் ஞாங்கர் என்று ஓதுவர் மேவும் இடை
ஒக்கும் நனந்தலை மத்திமம் நாப்பண் உடன் ஒத்தல் நள்
மிக்க நடு உம்பர் மீமிசை தான் இவை மேல் என்பரே
** உயர்ச்சி முன்னேவந்துறல் மேல்வந்துறல் முன்னர்
**291
#48
உந்தி நிவப்பு உவணம் துங்கம் ஓக்கமுடன் வலனே
முந்திய மோடு இவை ஆக்கும் உயர்ச்சி மொழியின் முன்னே
வந்துறல் மேல் மருங்கர் ஞாங்கர் என்பர் மலி தலைத்தாள்
நந்து முதல் முன்னர்த் தானாகும் என்று நவிலுவரே
** இம்பர் உம்பர் ஈண்டு ஆண்டு கூப்பிடுதூரம்
** கோழிப்பறவை காதம்
**292
#49
இலகிய இம்பர் இவணே அவண் உம்பர் ஈண்டு இவ்விடம்
அலைவறும் அவ்விடமே எனில் ஆண்டு என்பரான எல்லை
குலவு குரோசமும் கூப்பிடும் கோழிப்பறவை என்னில்
கலி கிரவுஞ்சம் அக் காவதம்தான் என்பர் காதமுமே
** இடவகை பாரதிதீப வரலாறு
**293
#50
பின் உழை கால் புறம் கீழ் மேல் கடை தலை பேணிய சார்
முன் இடம் தேவகை பால் வலம் ஆம் இடம் முந்து தமிழ்ப்
பண்ணிய பாரதி பாரதிதீபம் பயில் தொகுதி
அன்ன இடப்பெயர் அஞ்சாவது முடிவானதுவே
@6 பல்பொருட் பெயர்த் தொகுதி
** பொன்
**294
#1
கனகம் இரணியம் ஆடகம் மாழை கருந்தனம் காஞ்-
சனம் நிதி பீதகம் சாமீகரம் பூரி சந்திரம் த-
மனியம் வெறுக்கை நிதானம் புவம் சுவனம் தொடுக்கம்
புனை தனமே அரி சாம்புனதம் சொன்னம் பொன் என்பரே
** பொன் ஐந்துலோகம் உலோகப்பொது நவமணி
** கடவுள்மணி
**295
#2
இரணியம் ஈழம் பொருள் காணம் ஈகை ஏமம் இரும்போடு
உரைதகும் வெள்ளி பொன் ஈயம் செம்பு ஆம் ஐந்துலோகம் எல்லாம்
கருது பொன் என்பர் நவமணி மற்று அக் கடவுள்மணிக்கு
அருள் பெயரே தொல் நிதியே நிதானம் அணுகியதே
** மாணிக்கம் மணிப் பொதுப்பெயர் கனமணி முத்து
**296
#3
மாமணியும் பற்மராகமும் மாணிக்கம் ஆம் மனவும்
தேமணி காசு மணி பேர்ப் பொதுப்பேர்ச் சிலாகை என்னும்
நாமம் அரதனம் ஆகும் கனமணி நல் தரளம்
கோமலி நித்திலம் முத்து ஆரமாகவும் கூறினரே
** பவளம் சங்கநிதி பற்மநிதி பண்டாரம் வெண்கலம்
**297
#4
துகிர் வித்துருமம் அரத்தம் துவர் பிரவாளம் துப்புத்
தகுசொல் பவளம் சங்கின் வடிவு ஆம் என்பர் சங்கநிதி
பகர் பற்மம் ஏய்தரும் பற்மநிதியும் பண்டாரம் என்பர்
மிகைவுற்ற கோசம் தண்டம் கஞ்சம் ஆம் என்பர் வெண்கலமே
** வெள்ளி செம்பு பித்தளை ஈயம் இரும்பு
**298
#5
இரசதம் தாரம் களதபுதம் வெள்ளி என்பர் சுற்பம்
பெருகிய சீருணம் தாம்பிரம் செம்பு என்பர் பித்தளையாய்
வரும் ஆரகூடம் மாயாபுரியும் மன சீருள் வங்கம்
கருதிய ஈயம் கருந்தாது அயம் என்பர் கார் இரும்பே
**காந்தமணி சந்திரன்ஒளியில் புனல்காலும்மணி
** சூரியன்ஒளியில் கனல் காலும்மணி படிகம்
**299
#6
இரும்பை வலிப்பது காந்தமணி இந்து இரேகை கண்டால்
தரும் புனல் கால்வது சந்திரகாந்தம் தரணியொளி
கருங் கனல் கால்வது சூரியகாந்தமணி பளிங்கு
திருந்து பருக்கை வெண்காழே படிகம் சிறந்ததுவே
** சங்குமணி பலகறை பலபண்டம் அரும்பண்டம்
**300
#7
கண்ணிய சங்குமணி அக்கு வட்டி கவடி அலகு
எண்ணிய சோகி பலகறை வெள்வாரகு எழில் வளமே
பண்ணியம் கூலமுடன் பண்ணிகாரம் பலபண்டம் ஆம்
நண்ணிய தாரம் அரும்பண்டம் என்று நவிலுவரே
** கருப்பூரம் கத்தூரி மெய்ப்பூக சாந்து
** சாந்தின் பொதுப்பெயர்
**301
#8
மலி கருப்பூரம் பளிதம் கத்தூரியும் மான்மதமம் ஆம்
புலியொடு வட்டிகை காலேகம் பீதம் மெய்ப்பூசிய சாந்து
இலகிய பேர் தகரம் கலவைச்சேறு இனிய தளம்
புலர் வினர காலேகவண்ணம் அச் சாந்தின் பொதுப்பெயரே
**பூசுவன செந்தாது மயிர்ச்சாந்து செறிகுழம்பு
** அப்பல் பூசுதல்
**302
#9
குளிர் அங்கராகமும் பூசுவன குங்குமமும் செந்தாது
இளகும் தகரமுடன் ஏலம் காசறையே மயிர்ச்சாந்து
அளவில் செறிகுழம்பு ஆம் செச்சை தேய்வை கொட்டல் அப்பல் ஆம்
புளகம் மிகுக்க வரித்தல் புலர்த்தல் மெய் பூகதலே
** தொய்யில் திலகம் நுதல் எழுதுகுறி அரத்தம் குங்கிலியம்
**303
#10
மானார் முலையில் தொழிலுற்று எழுதி வரித்தல் தொய்யில்
தானாம் திலகம் கடிகை பொன் சுட்டி தயங்கு நுதல்
ஆனது எழுது குறிப் புண்டரம் துப்பு அரத்தமாகக்
கேல் நாடும் குங்குலுக் குற்குலுக் குங்கிலியம் என்பரே
** பெருங்காயம் சாதிலிங்கம் சாமரம் அச்சுதம்
**304
#11
இங்கு எனல் ஆகும் பெருங்காயமும் இங்குலிகமுடன்
தங்கு சிந்தூரம் இவை சாதிலிங்கம் சவரியுடன்
துங்க வெண்சாய்மரம் சாமரம் என்பர் துணர்க் கவரி
அங்க அரிசி அறுகை மெய் கூட்டியது அச்சுதமே
** அதிமதுரம் பிரப்பு ஓமவிறகு நெருப்புமலி விறகு
**305
#12
கூறும் அதிங்கம் மென் அட்டி மதுரமும் கொள்கலம் ஒன்று
ஏறிய பல்லுணவு எல்லாம் குறுணி கொண்டே அளந்து
வேறுறப் பாலிப்பது பிரப்பு ஓமவிறகு என்னலாம்
மாறுஇல் சமிதை ஞெகிழி நெருப்பு மலி விறகே
** கடைக்கொள்ளி கரி சாம்பல் சாந்து புகை
**306
#13
எரி கடைக்கொள்ளி முளரி அலாதம் இராதம் என்பர்
கரி கந்துள் இருந்தாம் என்பர் வெண்பலி சார் அடலை
சொரிகின்ற சாம்பல் சுதை களபம் சுடுசுண்ணமும் சாந்து
அரி புகை தூபமுடன் தூமம் ஆம் என்று அறைகுவரே
** நறைப்புகை பொடி இலவம்பஞ்சு
**307
#14
புதிய நறைப்புகை என்னில் குரூப்புகைப் பொன் பிதிரே
சிதர்ப் பராகம் ததர் சின்ன பின்னம் திகழ் துகள் நீறு
உதவிய சுண்ணமுடன் தாதுப் பூதி ஒரு பொடி ஆம்
முதிர் இலவம்பஞ்சு பூளை என்றே சொல்லும் மூவுலகே
** பருத்தி பஞ்சுநுனி சோறு
**308
#15
பரி பன்னல் பஞ்சு காற்பாசம் பருத்தி துய் பஞ்சின்நுனி நி-
மிரல் அன்னம் ஓதனம் போனகம் பொம்மல் மிசைப்புத் துப்பு
வரு கவளம் சொன்றி கூழ் மூரல் புன்கம் மடை மிதவை
சொரி உணவே பதம் பாளிதமே வல்சி சோறு என்பரே
** உண்டி (உணவு) நுகருதல்
**309
#16
அயினி அசனம்அலை புழுக்கல் அடிசில் புகாப்
பயில்தரும் உண்டி மிசைதல் அயிறல் பரிகரித்தல்
மயமோடு அருத்தல் உணவு ஆர்தலே நுங்கல் மாந்தல் துய்த்தல்
இயல்போடு மேவல் பொசித்தல் நுகருதல்கு ஏற்றனவே
** அடிசில் புழுக்கல் தேவருணவு பொரிக்குங்கறி
** பிட்டு
**310
#17
அடுப அடிசில் புழுக்கல் புழுக்குவ ஆம் அமுதே
இடுபலியே சருவே அவி தேவர் எழில் உணவாம்
உடல் உபதானம் அமைத்துப் பொரிக்குங்கறியும் கருனை
இடிதரு ஓதையும் ஆவியும் ஆகும் பிட்டு என்பதுவே
** அடை அப்பம் பிண்டி புளிங்கறி குழம்பு
**311
#18
அடை மோதகம் அயில் சஃகுல்லி பூரிகை ஆன கஞ்சம்
உடன் நொலையல் தோசை தான் அப்பம் ஆகும் ஒரு நுவணை
இடிஆகும் நுன் பிண்டி கூட்டு அமைத்தே இனிது ஏற்ற துவை
படுமே புளிங்கறி பாகே குழம்பு பயின்றதுலே
** கஞ்சி தயிர் பால் நெய் மோர்
**312
#19
வடி கஞ்சி காடி மலிகாடி மேழை மருவு ததி
உடன் அனையே தயிர் கீரம் அமுதம் உதவு பயம்
தொடர்வுறு பால் இழுதே கிருது ஆச்சியம் துப்பு நெய்யாம்
முடை முசரே தக்கிரம் பிரை மச்சிகை மோர் என்பரே
** தேன் சர்க்கரை கண்டுசர்க்கரை
**313
#20
குலவு பிரசம் மதுத் தேன் விசையம் குளம் கன்னலே
இலகிய பாகுடன் கட்டி அக்காரம் இவை சர்க்கரை
தலம் மிகு கண்டமுடன் பாளிதம் கண்டு சர்க்கரையே
நலம் மிகு புல்லகண்டம் அதில் பேதம் நணுகியதே
** கள் பருகுமவையின் பொதுப்பெயர்
**314
#21
சுரை நனை இக்கு நறவு வடி மட்டுத் தோப்பி தொண்டி
பிரசம் வழி மதுச் சாறே தணியல் பிழிபடு தேன்
முருகு பைந் தேறலுடன் பானம் சாதி மொழியில் கள் ஆம்
புரைதபு பானம் பருகுமவையின் பொதுப்பெயரே
** கள்ளின்பேதம்
**315
#22
பாலி சுமாலி மதுகரம் சூழிகை பாடலியே
மாலி சுலோகியுடன் ஆம்பல் மாதுவமே மருட்டம்
சாலி விசுணி உணா முண்டகம் தமம் சக்கரமே
வேலி வெங் கஞ்சாவும் நள்ளி கள் பேதம் மிகு பெயரே
**அமுது நஞ்சு உண்பன தின்பன
** விலங்கின் உணவு
**316
#23
வாரி அமுதின் பெயர் மருந்து ஆகும் வளர் கரளம்
காரி கடு விடமே ஆலம் நீலம் வெங் காளம் நஞ்சு ஆம்
சீருறு துற்றியும் உண்பன திற்றியும் தின்பன ஆம்
கூர் இலை தின்னும் விலங்கின் உணவு குளகு என்பரே
** விலங்கு பறவை உணவு ஒழிபொருள்
** உச்சிட்டம் பேய்த்தேர்
**317
#24
விலங்கு பறவை எனும் இரண்டிற்கும் மிகும் உணவை
இலங்கும் இரை உண்டி ஆம் என்பர் மிச்சிலும் எச்சிலுமே
துலங்கும் ஒழிபொருள் எச்சிலும் உச்சிட்டம் சொல்லுபவை
மலிந்த உகளம் வெண்தேர் கானல் பேய்த்தேர் மசரதமே
** உபகரணம் நிரை அலகு
**318
#25
துப்பே சாதனம் துணைக்காரணத்தைத் தொடர்ந்து உரைக்கும்
ஒப்புஇல் உபகரணப் பெயராம் என்பர் ஒளி பந்தி
தப்புஇல் ஒழுங்கு திரை மகிழின் பரல் தன்னுடனே
செப்பு மணி இவை எல்லாம் அலகு எனச் சேர்ந்ததுவே
** பாரதிதீப வரலாறு
**319
#26
சேறார் அகளப் புயன் செயங்கொண்டவன் சிந்தை அன்பு
மாறாது மாதவம் செய்து அருள் பாரதி வாதுகவிக்கு
ஏறானவன் சொன்ன பாரதிதீபத்தில் எண்ணுகின்ற
ஆறாவது பல்பொருட்பேர்த்தொகுதி முற்றானதுவே
@7 செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி
** செயற்கையது சூலப்படை
**320
#1
தோலினில் மண்ணில் எழுவகை லோகத்தில் தொல்மரத்தில்
நூலினில் செய்தல் செயற்கையது ஆம் கண்ணுதல் படைக்கு
மூலம் எனில் கழுமுள் முத்தலைக்கழு மூவிலைய
வேல் இவை சூலப்படை வடிவாக விளம்புவரே
** மழு சக்கிரம் அரியின்வில் அரன்வில்
**321
#2
பரசு கணிச்சி நவியமும் மழுவாம் படை தி
கிரி வளை எஃகம் சுதரிசனம் சக்கிரம் பருதி
தரு கதிர் நேமி அழல் ஆழியாம் என்பர் சாரங்க வில்
அரிதனது ஆகும் பினாக வில்லானது அரன்தனதே
** வில் வேல்
**322
#3
குனிதரு சாபம் சராசனம் கார்முகம் கோதண்டமே
தனுக் கொடுமரம் சாரங்கம் பினாகம் தவர் வில் என்பர்
நனிதரு குந்தம் உடம்பிடி எஃகமும் ஞாங்கர் அரண்
வினைதரு சத்தி விட்டேறோடு அயில் இவை வேல் என்பரே
** அம்பு
**323
#4
வரி வாளி வண்டு பகழி பல்லம் புங்கம் வன்கணை கோல்
தெரி பாணம் மாற்கணம் தொடை விசிகம் சிலீமுகம் கோச்
சரம் ஆசுகம் பத்திரம் கொத்திரம் கங்கம் தாரை அம்போடு
அரி காண்டம் அத்திரம் மொட்டு தண்டமும் அம்பு என்பரே
** கைவேல் வச்சிரப்படை வாள்
**324
#5
மெச்சிய கப்பணம் தோமரம் கைவேல் விகற்பம் என்பர்
வச்சிரம் என்னில் குலிசம் அசனி வயிரப்படை
நச்சு கட்கம் வசி கண்டம் எந்திரம் நாந்தகம் கைவாள்
அச்சுறும் ஏதி கரவாளம் கோணம் அவை என்பரே
**ஈர்வாள் உடைவாள் கழுக்கடை
** பிண்டிபாலம் கொடுவாள்
**325
#6
வரை வேதினம் கரபத்திரம் ஈர்தரு வாள் அது என்பர்
சுரிகை கழுமுள் உடைவாள் கழுக்கடையாகச் சொல்லும்
பரவிய பீலித்தண்டு எஃகம் எனில் பிண்டிபாலம் என்பர்
அரிதரு புள்ளம் குயம் கொடுவாள் என்று அறைகுவரே
** தண்டாயுதம் இரும்புலக்கை உளிக்கருவி
** இலைமூக்கரிகத்தி நாராசம் இருப்புமுள்
**326
#7
தடி தண்டு ஆம் முசலம் இருப்புலக்கை அது என்பர்
விதியில் உளிக்கருவிப் போதரிவிக் கருவி என்பர்
முதுதழல் தண்ணம் குளிர் இலை மூக்கரிகத்தி என்பர்
எதிர்பொரு சலாகையும் நாராசம் தாறு என்று இருப்புமுள்ளே
**ஆயுதப்பொது ஆயுதக்கூர்மை கவண்
**327
#8
படை ஏதி துப்புக் கழுமுள் கடுமுள் படைக்கலமே
அடர் சாதனம் பொது ஆயுதப் பேர் வள் அயில் இங்கிதம்
வடி வார் நுதி நுனை வையே பூ வசி வயிர் மழு ஆம்
கடைசாமை கல்லெறியும் கவண் ஆகும் கவணையதே
**நுனை படையுறை அம்புபெய்கூடு மெய்யுறை
**328
#9
தடநுதி நுங்கி நுனைக் கருவிப்புட்டில் அது ஆனது என்ப
படையுறை ஆவமும் தூணியும் அம்புபெய்பாத்திரம் ஆம்
அடர் அரணம் கவசம் கண்டம் மெய்புகவாங்கருவி
தொடர்தரு பாலிகை மெய்யுறை ஆகவும் சொல்லுவரே
** தலைக்கீடு பரிசை பலகை தோற்பலகை
**329
#10
கீசகம் சிக்கம் தலைக்கீடு சேடகம் கேடகம் தோல்
வீசுற்ற வீதிகைப் பட்டம் பரிசை மிகு பெயராம்
மாசுற்ற கட்டினம் தட்டு மாவட்டணம் பலகை
சோதித்த தோற்பலகைப் பெயர் தோற்பரம் தோல் என்பரே
**கைக்கட்டி குதிரைக்கலணை குதிரைவாய்ப்புகுகருவி
** குசைக்கயிறு குதிரைச்சம்மட்டி
**330
#11
அருள் கைப்படையுடன் கோதையும் கைக்கட்டி ஆகும் என்பர்
பருமம் படை பல்லணம் பண் கலணை பரி பகுவாய்க்
கருவியின் பேரும் கரிளே கலினம் வற்கம் குசை ஆம்
தரி வெறு மத்திகை கோல் எனில் சம்மட்டிதான் என்பரே
**யானைக் கழுத்திடு கயிறு தளை பற்றிரும்பு
** பாடகம்
**331
#12
கலந்த புரோசை கவடும் கரிக்கழுத்தில்கயிறு ஆம்
விலங்கு நிகளம் தொடர் தளை வல்லி மிகு பறளை
பலங்கொள் பறலிகை அள்ளு வலி எனில் பற்றிரும்பு ஆம்
மலங்கிய பாதகடகமும் பாடகம் ஆம் என்பரே
** பதகிண்கிணி அரக்குடைச்சிலம்பு காலிலங்கு மணிவடம்
**332
#13
பதகிண்கிணி மணி ஆகும் பரிபுரம் நூபுரத்தோடு
உதவும் பரியகம் என்பர் இரதமுடன் ஞெகிழி
அதுவும் அரக்குடைச் சூலச் சிலம்பணி ஆகும் அக் கா
லிலகு மணிவடம் பாதசாலம் என்று இயம்புவரே
** காலணிவடம் மேகலை அரைப்பட்டிகை சதங்கை
**333
#14
விதமார் கொடையினில் வீரத்தில் வீக்கிய மெய்க் கழலே
அது கால் மிசையில் அணிவடம் காஞ்சி கலாபம் மனா
வெதிர் மேகலை கலை என்னில் அரைப்பட்டிகையின் பெயர்
பதமார் சதங்கையும் கிண்கிணியாகப் பகருவரே
**பதக்கம் மாதர்முலையணிவடம் பூணின் புணர்வு
**334
#15
அருள் பதக்கம் கண்டிகை ஆரம் ஆரம் பதக்கம் அதாம்
கருதும் அக் கோவையும் காசுடன் ஆரமும் கண்டிகையும்
மருவிய மாலையும் மானார் முலையின் மணிவடம் ஆம்
பொருவில் கயிலும் கடையும் மெய்ப் பூணின் புணர்வு என்பரே
**தொங்கல் துடக்குவடிவு தோளணி கங்கணம் கைவளை
**335
#16
தொங்கல் நிதி வடகம் தூகம் மதிலிகைத் தூக்கம் துடக்கு
அங்கதம் தோளணி கேயூரம் ஆகும் அணி கடகம்
தங்கிய கங்கணமும் ஆகும் சூடகம் சங்கு தொடி
பைங்குருகே வண்டு சரி கன்று கைவளைப் பாற்படுமே
** குண்டலம்காதணி நுதற்சுடிகை பட்டம் சிரமாலை
**336
#17
கோடு மிருசிகைக் காதணி செம்பொன் குழை குண்டலம்
வேடகம் புல்லிகை மேவும் கடிப்பிணை வீசிய பொன்
தோடு அவை காதுக்குஅணிப் பெயர் சுட்டி நுதல்சுடிகை
ஓடை பொன் பட்டம் மன் காரோடிதான் சிரத்தோடு தொடையே
** நுதலணிபூண் கிரீடம் ஆபரணப்பொது பேரணிகலம்
**337
#18
வடி நுதல் பூணும் இலம்பகம் புல்லகம் ஆம் சுடிகை
முடியே மெளலி மகுடம் கிரீடம் மொய் சேகரம் ஆம்
படர் இழை நாண் கலம் பூண் அணிதான் ஆபரணம் அதாம்
அடர்உரு பூணும் மதாணியும் ஆம் பேரணிகலமே
** வட்டில் நாழிகைவட்டில் சட்டுவம் கண்ணாடி
**338
#19
தட்டகை உண்கலம் தாலம் கிண்ணம் கோரம் தாரை வள்ளம்
வட்டில் அதாம் கன்னல் நாழிகைவட்டில் சிரகம் தவ்வி
சட்டுவம் ஆடி படிமக்கலம் தர்ப்பணம் கஞ்சனை
இட்டிய ஆதரிசனம் கண்ணாடி எனும் உலகே
** கண்டைமணி எறிமணி சிறுசின்னம் காளம் குறிஞ்சிப்பறை
**339
#20
எண்திசை ஏணம் இபமணி கண்டை எறிமணி சே
கண்டி பொன் பீலி சிறுசின்னம் காகளம் காள அதாம்
தொண்டகமோடு துடியே முருகியம் துங்கவென்றி
கொண்ட குறிஞ்சிப்பறை என யாவரும் கூறுவரே
**வேடர்பறை முல்லையார் பறை மருதப்பறை
** ஒருகண்பறை உடுக்கை
**340
#21
விறல் பயிலும் துடி வேடர்தம் தொல்பறை மென் முல்லையார்
பறையே கோட்பறை பம்பையும் ஆகும் பணை கிணையே
நிறை மருதப்பறை சாப்பறை நெய்தல்பறை ஒருகண்
உறுபறை மொந்தை உடுக்கையொடும் தண்ணுமை என்பரே
**இடைசுருங்குபறை சிறியபறை பரந்தபறை முழவம்
** குடமுழவம் படகம்
**341
#22
துடியே இடைசுருங்கும் சிறு தொல்பறை ஆகுளியே
படைசேர் சிறியபறை வாய்பரந்தபறை பதலை
முடம் சேர் முரவம் குளிரே முழா மண் சினை முழவம்
குடமா முழவம் படகமும் ஆனகம் கூறுவரே
** பணைப்பொது பேரிகை
**342
#23
புணர்தரு பீலி முருடு முரசு பொருமுழவு
பணைதரு கோடணை தூரியம் ஆகும் பணைப்பொதுப் பேர்
துணைதரு சண்டை முரசம் பணை துந்துமி சகடை
தணிதரு பேரிகைக் கூட்டம் என்றே தமிழ் சாற்றியதே
** பல்வகைப் பறை கொம்பு யாழ்நரம்பு
**343
#24
அம்பணம் திண்டிகை ஆனகம் சல்லரி ஆம் படகம்
பம்பை தடாரி தக்கையே பல்வகைப்பறைப் பேர்
கொம்பு எனில் ஆம்பல் இரலை வயிரொடு கோடு எனலாம்
நம்பிய கோல் தந்திரி குரல் யாழின்நரம்பு எனரே
** யாழ் வார்க்கட்டு முறுக்காணி நால்வகையாழ்
**344
#25
தந்திரி கின்னரம் வீணை விபஞ்சிதம் தாழ்கருவி
உந்திய வல்லதி பேரிகை நல் யாழ்ப் பெயர் ஏர் திவவு
முந்திய வார்க்கட்டு மாடகமும் முறுக்காணி என்ப
கொந்தி பேரியாழ் மகரம் சகோடம் செங்கோடு என்பரே
** தேர் தேர்க்கால் உருளிஅகக்கதிர்
**345
#26
இரதம் திகிரி சயந்தனம் எந்திரமே கவரி
உரவம் கொடுஞ்சி வையம் தேர் திகிரி உருளி உந்தி
தெரியும் பருதியுடன் நேமி ஆழி பொன் சில்லி அத் தேர்
அருகு ஒன்று கால் என்பர் ஆரே உருளிஅகக்கதிரே
**பாண்டில் பூண்ட ஊர்தி பண்டி தேர்மேலிடு பரம்பு
**346
#27
உகையுஞ் சிவிகையுடன் பாண்டில் பூண்டருள் ஊர்தியுடன்
சகடம் பெறும் வையம் சாகாடு சாடு சகடு ஒழுகை
பகர்கின்ற வையம் உருள் பண்டி ஆகும் பலவகையில்
இகல் தட்டுப்பா என்பர் தேர் மேல் அடர விடு பரம்பே
** திடர் தேர்ப்புடைசூழ் மரச்சுற்று கலப்பை
** பலவுறுப்பாகிய ஓர்உறுப்பு
**347
#28
திடரே எழுவும் கணையமும் ஆம் கிடுகே திகழ் தேர்ப்
புடைசூழ் மரச்சுற்று நாஞ்சில் அலம் படை பொற்கலனை
அடைவான நான்கும் கலப்பை அதாம் அக்கலப்பை அதன்
உடன் ஆர் கலனை பலவுறுப்பாகிய ஓர் உறுப்பே
**தேர்மொட்டு தூண் யானைஅணைதறி வேள்வித்தறி
**348
#29
சிந்தைசெய் கூவிரம் கூம்பு கொடிஞ்சியும் தேர்மொட்டு அதாம்
கந்து எழுவே வெளில் ஆளனம் கம்பம் கருந்தறியோடு
அந்தி மதலையும் தூண்ஆம் வெளிலுடன் ஆளானமும்
தந்திஅணைதறி யூபமும் வேள்வித்தறி என்பரே
**குறுந்தறி கதவு தாழ் உரல் ஊஞ்சல் உறி
**349
#30
போதிகை என்பர் குறுந்தறி வாரி புதவுடனே
தீதுஇல் கபாடம் கதவு என்பர் தாழ் எனில் சீப்பு எனலாம்
ஓதும் கறையும் உலூகமும் ஆம் உரல் ஊசலுமே
மேதகு ஊஞ்சல் சிமிலி சிரம் சிக்கம் மேல் உறியே
** கட்டில் பரண் இறைவை (ஏணி) கண்ணேணி
** கிளிகடிகருவி குறுந்தடி
**350
#31
பதியும் பரியங்கம் பாரி மஞ்சம் கட்டில் ஆம் பணவை
இதணம் கழுது பரணே கடவை இறைவை எம் மால்
உதவும் கண்ணேணி குளிர் தழல் தட்டை ஓதில் கிள்ளை
அது கடியும்கருவிப்பேர் குறுந்தடி ஆம் குணிலே
** துடுப்பு அடைகுறடு பெருங்குறடு மரக்கலம்
**351
#32
அறில் துடுவை துடுப்பு ஆகும் பட்டடை ஆகும் அடை
குறடு முருடு பெருங்குறடு ஆகும் குல மதலை
துறைதரு வாதை வங்கம் தோணி பாறு அம்பி தொள்ளு நவ்வே
மறிதரு நாவாய் சதாவே பஃறி மரக்கலமே
** மரக்கலப்பாய் ஓடம் தோணி தெப்பம் கமண்டலம்
**352
#33
பாடின் மரக்கலப்பாய் இதை ஆகும் பகறி பகடு
ஓடம் அதாகும் திமில் தோணி என்பர் உயர் பகடு
தேடரும் அம்பி மிதவை புணை எனில் தெப்பம் அதாம்
கூடும் கமண்டலம் ஆகும் கரண்டகம் குண்டிகையே
** பேழை கெண்டிகை பீடிகை கொள்கலம்
**353
#34
எண்டரும் மிஞ்சிகை மஞ்சகம் பேழை என அறைவர்
கண்டம் கரண்டகம் கோடீரத்தொடு கடிப்பம் அதாம்
கெண்டிகை பீடிகை ஆகும் துமானம் கிளர் அலங்கல்
கொண்டு அணி சாந்து மடி இவை சேர்கலம் கொள்கலமே
** உடை பொதி திடமிகு கொள்கலம் கொல்லன்
** சின்னத்தட்டு பீலியில் கட்டும் கவிகை
**354
#35
உடை கலை ஆகும் பொதி மூடை ஆகும் உயர் பகுவாய்
திடமிகு கொள்கலம் ஆகும் பிழாக் கொல்லன் சின்னத்தட்டு ஆம்
அடர்தரு கன்னம் கலாபம் தழை தொங்கல் ஆன இவை
தொடைதரு பீலியில் கட்டும் கலிகை எனச் சொல்வரே
** வெண்குடை ஆலவட்டம் சிற்றாலவட்டம்
**355
#36
தொங்கலுடன் சத்திரமே கவிகை தொடர்ந்த பிச்சம்
இங்கு இவை வெண்குடை கால்செய்வட்டம் உகமே விசிறி
அங்கு அவை வீசத்தகும் ஆலவட்டம் அது ஒழிந்து
தங்கிய பீலி செய் சிற்றாலவட்டமும் சாற்றினரே
** மயிர்வாரும் சீப்பு சூதாடுகருவி பந்து சும்மாடு துண்டம்
**356
#37
கருதிய சிக்கம் மயிர்வாரும்சீப்பின் பேர் காசும் வல்லும்
பரவிய சூதுடன்ஆடுதல் கந்துகம் பந்து என்பதாம்
மருவு சுமடு சுமையடை ஆகும் சும்மாடு அது என்பர்
முரிசெய் கடிகை எனில் துண்டம் கண்டம் மொழிகுவரே
**வார் கயிற்றுவலை கயிறு தோல்செருப்பு
** அடிதொடுவது துருத்தி
**357
#38
காசறு வள் வகிர் வார் ஆகும் சாலம் கயிற்றுவலை
பாசமும் நாணும் கயிறு அதாகும் பதம் தொடுதோல்
ஆசுஇல் கழல் இவை தோல் செருப்பு ஆகும் அடிதொடுவது
தோசம்இல் பாதுகை நீர் தூம் சிவிறி துருத்தியதே
** குடம் கரகம் பானை மிடா தாழி
**358
#39
கடமே இடங்கர் தசும்பு இரும்பை கும்பம் கன்னல் இலை
குடம் ஆகும் கன்னல் சிரகம் கரகம் குழிசி மிடாத்
தடவு ஆகும் பானை அகளமும் வம்பும் தடாவும் மிடா
அடர் சாடி தாழி அகளம் பதலை அவை என்பரே
**நீர்நிறைசால் அகல் இரப்போர்கலன் குயவன்
** மண்ணரிநார் நூல் துன்னம்
**359
#40
தொகும் இடங்கர் வட்டம் நீர்நிறைசால் சார்வம் சுத்தியுமே
அகல் இரப்போர்கலன் ஐயம் கடிகை அவை என்பர் மட்
பகை குயவன் மண்ணரிநார் அது என்பர் பனுவல் தந்துப்
புகல் நூல் அதே என்பர் துன்னமும் பொல்லம்பொருந்தும் அதே
** கூறை பட்டாடை
**360
#41
மடி துகில் தானை கலிங்கம் உடை தூக வாதனம்
படம் ஆடை காழகம் அம்பரம் புட்டம் பட்டம் கலை ஆம்
புடவை அறுவை படாம் சம்பம் சேலை போற்றில் இவை
அடர் கூறை பாளிதம் கோசிகம் ஆகும் பட்டாடை அதே
** நல்லாடை மரவுரி சம்படாம்
**361
#42
திகழ் ஏடகம் புகழ் வேதிகை சில்லிகை சித்திலிகை
அகல் தூரியம் கத்தியம் கருள் பாரி நல்லாடை என்பர்
மகிழ் சீரை வற்கலைதன்னோடு இறைஞ்சி மரவுரி ஆம்
பகர்வு ஆகும் கம்பளம் சிம்புளியே சம்படாம் என்பரே
** கச்சு அத்தவாளம் மேற்கட்டி உத்திரிகம் சட்டை
**362
#43
வம்புறு வார் கச்சு வடகமும் ஆம் அத்தவாளம் என்பர்
கம்பலமோடு விதானம் மேற்கட்டி ஏகாசம் எனின்
நம்பு உத்திரிகம் எனல் ஆகும் அங்கி நயந்த மெய்ப்பை
தம்ப மெய்க் கஞ்சுகம் குப்பாயம் வாரணம் சட்டை அதே
** இடுதிரை கொடி சிறுகொடி
**363
#44
இகலின் எழினி படம் கண்டம் ஆகும் இடுதிரையே
துகிலிகை கேதனம் வானி பதாகை துவசமுடன்
நிகர்இல் படாகை விலோதனமே கொடி நீள் உலகோர்
புகலும் கதலிகை ஆகும் சிறுகொடிப் பூவையரே
** சீரை மெத்தை சித்திரப்படம் தீட்டுதல்
**364
#45
அத்தகு சீரை சிதவல் சிதர் என் அணை தளிமம்
மெத்தை எனச் சித்திரபடம் பொத்தகம் மேவிய பேர்
சுத்தத் துகிலிகை வட்டிகை ஓவியம் சொல்லில் இவை
சித்திரம் ரேகை எழுதல் பொறி வரி தீட்டுதலே
** பாரதிதீப வரலாறு
**365
#46
மின் செயல் காரில் தரு பாரதி திருவேங்கடவ
னின் செயல் சீருற்ற ஏழாவது என்ன இயல் தெரிந்தோன்
தென்சிலைச் செந்தமிழ்ப் பாரதி பாரதிதீபம் தன்னின்
முன் செயற்கைவடிவப்பேர்த்தொகுதி முடிந்ததுவே
@8 பண்புபற்றிய பெயர்த் தொகுதி
** பண்பின் இயல்பு
**366
#1
கருது வடிவில் அளவில் வண்ணத்தினில் காண்டலுற்ற
பொருளில் உணர்வில் புலப்படும் உண்மைப்பொருள் அது எனப்
பரவு குணத்தொடு பண் அவை பண்பு எனலாம் அவற்றைத்
தெரிய உரைக்கின் அவை பலவாகும் திறத்தனவே
** வட்டம் வளைவு
**367
#2
பருதி விருத்தமுடன் கோளகை தட்டுப் பாலிகை சக்
கரம் வலையம் கொம்மை மண்டலம் ஆழி கடகம் சில்லி
தரு பாண்டிலே திகிரி நேமி வட்டம் தரம் குடிலம்
வரவாங்கல் கோட்டம் வனரே குலாவல் வளைவு என்பரே
** திரள்வடிவு குவிதல்வடிவு
**368
#3
செற்றிய பந்தம் குலம் புஞ்சயம் கொம்மை சேடு கணை
துற்றே செறியும் துறுமல் குவிதல் தொகுதி உண்டை
மற்றுரை மாழை பிண்டம் திரள் வாகும் வடிவு குவால்
குற்ற இராசி குலை குப்பை ஆகும் குவிதலுமே
** தொகுதி ஐம்மைவடிவு பரந்தவடிவு
** குமிழ்ப்புவடிவு மொக்குள்வடிவு
**369
#4
தொடரும் மொய் தோடு குழுமல் திரளும் தொகுதி என்பர்
அடர் தொறு துற்றுத் துறுகு அரி முதல் ஐம்மை அதாம்
படலை படாச்சி பரந்த வடிவினம் பைங் குமிழ்ப்பு
வடிவு புளகம் அக் கொப்புளம் மொக்குள்வடிவு என்பரே
** உள்துளைவடிவு உண்டை துளைப்பொருள்
** கற்றை சற்சரைவடிவு
**370
#5
புழை உள்துளையது தூம்புடன் நாழி சுரை பூண் துளை
குழியம் திரள் உண்டை ஆகும் குழியம் புழல் குழலும்
கழல் துளை கற்றை மயிரின்தொகுதி கதிர்த்தொகுதி
விழை பிணரே சற்சரைவடிவு ஆக விளம்புவரே
** பெருமை
**371
#6
பாடு தடவு தடம் விபுலம் வியல் பாழி கண் மால்
மோடு பிறங்கல் நளியே இயக்கம் முடலை பணை
ஈடு கயவு பரி மூரி நன்று வியத்தகை மாப்
பீடோடு அகலுள் முன் பின் செம்மல் அண்ணல் பெருமையதே
** மிகுதி சிறுமை
**372
#7
உறு தவம் ஆற்றல் அறிவே விதப்பு இறப்பொடு உறுப்புச்
செறி நளியே நனி ஆன்றல் பிறங்கல் சிறப்பு அடலை
அறி கயவே பொம்மல் பொக்கம் அதிகம் அது மிகுதி
சிறுமை அணு வஞ்சம் தன்று சின்னம் வறிது ஆசு என்பரே
** உயர்ச்சி தூரம் சிறிது விரிவாமிடம்
**373
#8
உரை நிவப்பு ஏந்தல் பிறங்கல் நிமிர்தல் உகப்பு உன்னதம்
புரை துங்கம் ஓங்கலுடன் சேண் உயர்ச்சி எனப் புகல்வர்
தெரி சேணும் நீளிடையும் சேயும் தூரம் திகிலம் சிறிது ஆம்
விரிவாமிடம் பரப்பு ஆகும் விசாலம் விபுலமுமே
** பரவுதல் நீளம் கூடுவது
**374
#9
பரவை ஞெமிர்தல் பரப்புடன் பாய்தல் பரவுதல் ஆம்
விரவாதல் போகல் ஒழுகல் நெடுமை வடிதல் நெடில்
நிரை சேணுடன் நீக்கல் தீர்தல் நேர்பாடு இவை நீளம் அதாம்
குரையார் குவிதல் பயனியும் கூடலும் கூடுவதே
** நுண்மை அகலம்
**375
#10
நுணுகு நுணுக்கு நுணுக்கம் நிழற்றல் நுவணை நொசிவு
அணுவும் நுழை நுனை சாயல் ஓய்தல் ஆய்தல் அவை நுண்மை ஆம்
உணரில் அகறல் வியலிடம் பாழியுடன் அகலுள்
நணுகும் நளி கண்ணறையே அகலத்தின் நாமங்களே
** குன்றல் உள்ளநெறியில்சிறத்தல் பருமை முழுவது
**376
#11
அறவும் அருகுதல் வீய்தல் சுருங்குதல் அஃகுதலே
குறைதல் சிறுகுதல் குன்றல் கழிவுடன் கூர்ப்பும் உள்ள
நெறியில் சிறக்கும் பரூஉம் பீனம் என்ன என்னில் பருமை
முறையில் அகிலம் முழுவதுமாம் என்பர் மொய்குழலே
** மென்மை செறிவு மிடைதல்
**377
#12
தாங்கு கயவு மொய் மேம்பாடு சால்புடன் சாயல் மென்மை
வீங்கல் பொதுளல் விறைப்போடு உறைப்பு வெறுப்பு நளி
தீங்கல் துற்றுடன் தேற்றுக் குடிலம் செறிவு அது என்பர்
ஓங்கு ததைதல் துதைதல் மிடைதல் என்று ஓதுவரே
** நிறைவு அளவின்மை வண்ணம்
**378
#13
மலிர்தல் மலிதல் நெகிழ்தல் தெவிழ்தல் மல்கல் துவன்றல்
நிலைபெற ஆர்தல் கழிதல் நிறைவு என்பர் நீடு அனந்தம்
மலைவுஇல் அபாரம் அபருமிதமும் அவ் அளவின்மை ஆம்
பொலி வெண்மை செம்மை கருமை பசுமை செம்பொன் வண்ணமே
** சிவப்பு பொன்னிறம்
**379
#14
தொக்க அரத்தம் துவர் அரக்குச் செம்மை சோணம் துப்புச்
செக்கருடன் பாடலம் குலிகம் அத்துச் சிந்தூரமே
தக்க இராகம் அருணம் சிவப்பு என்பர் பீதகமே
புற்கலம் பிங்கலம் ஆகிய மூன்றும் பொன்னிறமே
** குரால்நிறம் புன்மை வெண்மை பச்சைநிறம்
**380
#15
போற்றும் கபிலம் குரால்நிறம் ஆகும் புகர் புன்மை வால்
தோற்றும் சுவேதமுடன் பால் தவளம் துலங்கு வெண்மை
சாற்றிய பாசும் பசுமையும் பைத்துடன் சாமளமும்
நேற்றிசெய் பச்சைநிறம் எனவே சொல்வர் நேரிழையே
** கருமை நிறம் நிறப்பொது மலினம்
**381
#16
கருமை களங்கம் கறை நீலம் காளகம் காளிமம் ஆம்
பொருவரும் அஞ்சனம் கார் என்பர் மாமை புகர் கெழுவே
உருவொடு கேழ் சந்தம் வண்ணம் குருவும் ஒளி நிறம் ஆம்
மரு கறை மாசு கசடு களிங்கம் மலினம் அதே
** ஒளி ஒளிவிடல்
**382
#17
விரியல் இலக்கம் சுடர் கதிர் வாள் வில் வெயில் நிலவு
கிரணம் எல்லே தெளிர் தேசு துலக்கம் கெழுதகையே
மருவு ஒளி ஆகும் இலங்கல் சுடர்தல் வயங்கல் அவிர்
உருவு தயங்கல் ஒளிர்தல் நகுதல் ஒளிவிடலே
** கட்டழகு அழகு பேரழகு
**383
#18
ஏர் அணி யாணர்க் கவினே விடங்கம் எழில் வனப்புக்
காரிகை வாமமுடன் பொற்புக் காமரும் கட்டழகு ஆம்
ஆர் அழகு என்பர் பொலம் செவ்வி மாண்பு பை ஐ அணி சேர்
சீர் அழகு என் சித்திரம் பேரழகு விசித்திரமே
** வலி வடிவு வண்ணம்
**384
#19
உரம் மிடல் ஆற்றல் முடலை மதுகையுடன் மல்லலே
முரண் எறுழ் கொற்றம் வயம் பாழி மூரி முடுகல் மைந்து
வரும் ஆண்மை திண்மை துப்பு ஊக்கம் முன்பே வலம் மானம் வலி
தரும் ஓர் வடிவு எனில் செண்ணம் வண்ணம் சந்தம்தான் அதுவே
** மதர்த்தல் நொய்தாதல் எளிமை தண்மை
** அழல் மானம்
**385
#20
ஒண்மை மதர்வு மதர்த்தல் நொய்தாதல் உரைக்கின் நொய்வு ஆம்
மெண்மையும் தண்மையும் தஞ்சமும் ஆகும் எளிமை என்பர்
வெண்மை வெளிறு இவை தண்மை அழல் உருப்பம் வெப்பம் ஆம்
மண்மிகு மானம் பெரிதன்மை குற்றமும் மன்னுமதே
** இழித்தகுவு சீதளம் வீரம் வரையறை
** எல்லை அளவை
**386
#21
இளிவே பரிபவம் என்னில் இழித்தகுவு ஆகும் என்பர்
நளி சீதம் சீதனம் வீரம் விறல் வெற்றி நல்கும் என்பர்
அளவே நிரை எண் வரையறை ஏணி அது வரைப்போடு
உளவாம் வரம்பு எல்லை கச்சம் அளவை உறு கடனே
** அளவு விசையம் வெற்றி கூறுபாடு
**387
#22
காறு துணை வரை நேர் பிரமாணம் காலமுடன்
தாறே அவதி அளவு ஆம் வலம் கொற்றம்தான் விசையம்
கூறிய வாகையுடன் ஆடல் ஆடி இவை கூடும் வெற்றி
வேறு வகையும் திறம் கூறுபாடு அதன் மேல் வருமே
** அறிவு தொலைவு கருத்து
**388
#23
உணர்வே புலன் ஒண்மை காட்சி மெஞ்ஞானம் உரன் அறிவு ஆம்
துணையில் நிலைகெடல் தோற்றல் தொலைவு என்பர் சூழல் செத்துப்
புணர் குறிப்பு இங்கிதம் சிந்தை நினைவு உன்னல் போதம் உள்ளல்
கணமொடு கண்ணல் விரும்பல் கலைஞர் கருத்து என்பரே
** விருப்பு உள்ளுணர்வு
**389
#24
மாதர் விழைவு பற்றே வெம்மை காமம் மெய் வாஞ்சை நசை
ஆதரவு ஆர்வமுடன் பெட்டல் வெஃகல் அவா விராவே
காதல் இவரலுடன் வீழ்தல் தாழ்தல் வெம் காமர் பெட்பும்
ஓதில் விருப்பு என்பர் ஞானமுஞ் சீலமும் உள்ளுணர்வே
**அன்பு அருள் கைக்கிளை பெருந்திணை
** காமக்கவலை
**390
#25
பரிவு ஈரம் ஆர்வம் அளி நார் புரியுடன் பற்றும் அன்பே
அருளே கருணை இரக்கம் அதாம் கைக்கிளையதுவே
ஒருதலைமால் பொருந்தாமால் பெருந்திணை ஓர்மதன்
விரகம் வெங் காமக்கவலை என்றே சொல்லும் மேதினியே
**வேட்கைப்பெருக்கம் தக்கது மாட்சி செற்றம்
**391
#26
மிகு வேணவா என்னில் வேட்கைப்பெருக்கம் மிகும் தகுதி
தகவொடு தக்கது மாண் மாண்டல் மாட்சி அதாம் முனிவு
வெகுளி செயிர் கறுவும் சீற்றமே கதமே கறுப்போடு
அகலா வயிரமுடன் கோரமே செற்றம் ஆம் என்பரே
** சினக்குறிப்பு அதிசயம்
**392
#27
கறுப்புச் சிவப்பு வியர்ப்புப் புழுங்கல் கனலல் கன்றல்
செறுத்தல் புகைதலுடன் வெய்துறலும் சினக்குறிப்பு ஆம்
விறல்தகு விம்மிதமே இறும்பூது வியப்பு மிலைச்சு
அறத்தவர் யாரும் அதிசயமாக அறைவர்களே
** அதிசயத்தோடு இரக்கம் உள்ளக்களிப்பு கண்ணோட்டம்
**393
#28
அவையவர் ஓவென அய்யோ அந்தோ என அன்னோ எனும்
இவையும் அதிசயம் தன்னோடு இரக்கம் எழு செருக்குக்
கவலும் மதர்ப்புப் பெருமிதம் மத்தம் களிப்பு உளம் ஆம்
உவமைஇல் கேண்மை நயம் நாகரிகம் கண்ணோட்டம் அதே
** அழுக்காறு மனக்கோட்டம் மறத்தல் இறுமாப்பு
** மலர்ச்சி உள்ளம்துணிந்து எழல்
**394
#29
மிஞ்சா மனச்சழுக்கம் அழுக்காறு அவ்வியன் மனக்கோட்
டம் சோர்பு இகட்சி பொய்ச்சாப்பே மறவி அற மறத்தல்
எஞ்சாத ஏக்கழுத்தம் இறுமாப்பு செம்மாப்பு அது என்னில்
துஞ்சா மலர்ச்சி உரன் ஊக்கம் உள்ளம்துணிந்துஎழலே
** கொடுமை நிலையுடைமை கோரம் நாணம் பேரறிவு
**395
#30
நிகர்இல் கொடுமையும் கோண் என்ப ஏணும் நிலையுடைமை
தகுதிஇல் கோரம் கொடுமை கடுமையும் சண்டமும் ஆம்
நகைதரு மானமும் வெள்கலும் வட்கலும் நாணம் நல்கும்
முகரிமையும் பேரறிவு என்பதாகும் முதுக்குறையே
**கருதுதல் மதித்தல் இன்பம் தளர்வு குறிப்பு
**396
#31
கதித்தல் குறித்தல் உணருதல் சுட்டல் கருதுதல் ஆம்
மதித்தல் அதாகும் கருதுதல் பேணல் மகிழ் நயமும்
எதிர்த்த மகிழ்வும் நகை ஆகும் நல் இன்பம் கேட்டை தளர்வு
உதித்த சொல் நாட்டியம்தானே குறிப்பு என்று உரைத்தனரே
**சுழற்சி ஐயம் பொல்லாங்கு
**397
#32
கூறும் அலம்வரல் கொட்புச் சுழல்வு கொளில் கறங்கல்
மாறும் தெருமரல் ஆகும் சுழற்சி கொல் மானுதலே
வேறு அனுமானமும் ஆசங்கையும் ஐயம் மேவும் என்பர்
ஊறொடு கோள் இவை பொல்லாங்கு எனவும் உரைத்தனரே
** நன்மை இரக்கம் அகமகிழ்ச்சி
**398
#33
மன்னிய வண்ணம் மணி மாசறலுடன் மான் உறுதி
நன்னர் நறுமை நயம் சீர் இவை என்னின் நன்மை அதாம்
இன்னல் இணைவு எற்று இரக்கம் அது ஆனந்தம் இன்பம் என்னில்
அன்ன அகமகிழ்வு ஆம் தொய்யல் கட்டியும் அப்பெயரே
** அறிமம் அறியாமை அறிவின் திறம் மெய்யுவகை
** கொண்டது மறவாமை
**399
#34
அறிமடம் ஆகும் அறிந்து அறியாமை எய்யாமை என்னும்
திறன் அறியாமையும் துயவே அறிவின்திறம் அது என்பர்
தறவுசெய் ஓகையும் மாராயமும் மெய்யுவகை என்பர்
கறுவுதலே கொண்டது மறவாமை கடைப்பிடியே
** நோய் உன்மத்தம்
**400
#35
மழுகல் அழுங்கல் மடங்கு அஞர் பையுள் மடி பிணி சூழ்
அழிவுறு நோய் என்பர் மாழாத்தல் மால் மறல் ஆகும் இருள்
கழுமல் மருள் மைந்து உணராமை மாழ்தல் களி மயக்கம்
மொழிவறு மையலுடன் மான்றல் மாலுதல் உன்மத்தமே
** பொறாமை நோன்றல்(பொறை) அகல்வின்மை
** வறுமை மிகத்தெளிவு
**401
#36
நோனாமை என்னில் பொறாமை அதாம் நுண்மை நோன்றல்
ஆனாமையோடு தண்டாமை இரண்டும் அகல்வின்மையே
தானாகும் இன்மை இலம்பாடுடன் ஒற்கம்தான் வறுமை
மேனாள் உணர்வுடன் தேற்றம் துணிவு மிகத்தெளிவே
** தனிமை பொலிவு வருத்தம்
**402
#37
புலம்பு தனிமை துவன்றல் கலித்தல் பொற்புப் பம்பலே
மலைந்த கஞறலுடன் துப்பு உவப்பு மலி பொலிவு ஆம்
கலங்கல் உலங்கல் அயர்வே அனுக்கம் அவா அணங்கு
மலங்கல் கசிவு வயா ஆகுலமும் வருத்தம் அதே
**சோம்பு பொலிவழிதல் ஒண்மை
**403
#38
தீங்குசெய் அஞ்சல் அழுங்கல் அலைசுதல் சிந்தித்தலே
தூங்கல் அசைதல் மடி இவை சோம்பு என்பர் சொல் மழுங்கல்
போங்கலின் எய்திய புல்லெனல் ஆகும் பொலிவழிதல்
ஓங்கிய நன்மை மிகுதி அறிவு ஒழுங்கு ஒண்மையதே
** அச்சம்
**404
#39
அதிர்ப்பு வெருவு அஞர் கம்பலை வெம்மை அழற்றி வெறி
பொதிர்ப்புத் துணுக்கமுடன் பீதி கூசல் புரன் நடுக்கல்
விதிர்ப்புத் துளக்கம் புலம்பல் தெருமரல் மெய்யழிதல்
கொதித்துப் பணித்தல் உலைதல் கல்லைக் குணம் அச்சமே
** அன்பின்நடையது மெலிவு செயலறவு அடைக்கலம்
**405
#40
நயன் அளவு இன்பம் பயன் இவை அன்பின்நடையது என்பர்
அயரும் ஒடுக்கம் அச் சாம்புதல் கூம்புதல் ஆகும் ஞொள்கல்
வியனுறு சிக்கம் முனிவே மெலிவு என்பர் கையறவே
செயலறவு என்பர் அடைக்கலம் கையடை சேருமதே
** துன்பம்
**406
#41
படர் துனி துக்கம் புலம்பு எவ்வம் கம்பலை பையுள் செல்லல்
நடலை இடுக்கண் அஞர் அல்லல் பீழை நழுங்கு அரந்தை
கடிய கவலை வறுமை பருவரல் கவ்வை பனி
தொடரும் மறுகல் பனி புன்கண் சூர் இவை துன்பங்களே
**துன்பம் பகை மெலிவு
**407
#42
விழுமம் அழுங்கல் சிறுமையுடன் வெய்துறல் இரக்கம்
அழு துயரே இன்னல் பீடையும் அத் துன்பம் ஆகும் என்பர்
எழு முரண் தெவ்வு முனை உறழ் தூவோடு இகல் பகை ஆம்
கழிதரு புன்கண் பழங்கண் மெலிவு என்பர் கற்றவரே
** குற்றம்
**408
#43
காசு கசடு நவையே மறுக்கம் கவடு பழி
மாசு தவறு களங்கம் வசை புரை மானம் வடு
ஆசு செயிர் புகர் பொக்குப் பழுதோடு அஞர் கோது தோம்
தோசம் பொல்லாப்புத் துரால் இவை குற்றம் எனச் சொல்வரே
** வஞ்சனை நட்பு கையொழியாமை
** ஒழுகலாறு ஒழுக்கம்
**409
#44
கொடுமைசெய் குத்திரம் கைதவம் புள்ளுவம் கூடமுடன்
கெடவரு பட்டிமை மாயமும் வஞ்சனை கேண்மை நற்கோள்
தொடர்பு அது நட்புக் கைதூவாமை கையொழியாமை சொல்லும்
கடிய கையாறு ஒழுகல்லாறு ஒழுக்கமும் கை அதுவே
** பழமை இன்பம் மேற்கோள்
**410
#45
தொன்மை தொடர்புடன் தொத்தொடு பூருவம் தொன்று தொல்லை
முன்னை புராணம் புராதனம் தொண்டு முதுமை முந்தை
இன்னவை ஆகும் பழமை நயன் ஏமம் இன்பம் என்பர்
மன்னிய பூட்கையும் மேற்கொள் எனவும் வகுத்தனரே
** புதுமை ஈன்றணுமை பிறப்பு
**411
#46
யாணர் விருந்துக் கடி நவம் வம்பு புத்தேள் இவையே
பூணும் புதுமை புனிறு எனில் ஈன்றணுமைப்பொழுது ஆம்
பேணிய தோற்றம் சனனம் சனிப்பும் பிறந்தை பவம்
காணிய சூதகம் யோனி பிறப்பு என்பர் கற்றவரே
** கழிபிறப்பு இப்பிறப்பு வருபிறப்பு காரணம் முறைமை
**412
#47
உம்மை கழிபிறப்பு இம்மையும் இப்பிறப்பு ஓர் மறுமை
அம்மை வருப்பிறப்பு ஆகும் நிபம் பொருட்டுடன் நிமித்தம்
செம்மையில் வாயில் திறன் காரணத்தில் தெரியும் சொல்லாம்
மெய்ம்மை முறைமை மரபே பரம்பரமே மொழியே
** இளமை இளமைச்செல்வி பற்றுக்கோடு
**413
#48
குருளை மழவு கயம் இளை சேய் நவ்வி கொம்மை மஞ்சு
புருவை குழவியுடன் சேடு போதகம் பொன்தருணம்
முருகு பருவம் பரு இளமை அக் கோமளமும் இளமை
அருளிய செவ்வி பற்றுக்கோடு கந்து ஓடு ஆலம்பனமே
** உரிமை இலாபம் தருமம் அழுக்கின்மை
**414
#49
பொருவரு பாங்கும் கிழமையும் தாயமும் பூட்சியுமே
உரிமையது ஆக்கம் பலித்தல் பயன் பசை ஊதியமே
கருதில் இலாபம் சரதம் சுபம் மங்கலம் சீலத்தோடு
அருளும் தருமம் அமலம் விமலம் அழுக்கின்மையே
** மாதர் நண்ணாநெறி தூய்தன்மை தூய்மை அறிவுள்ளது
** போதம்இல்லாதது(அறிவில்லாதது) மேல்
**415
#50
மாதர் நண்ணாநெறி பூப்பு என்பர் தூய்தன்மை வாலாமையே
சூதகம் என்பர் புனிதம் பவித்திரம் தூய்மை என்பர்
சேதனம் என்பது அறிவுளது ஆகும் அசேதனமே
போதம்இலாதவை மேல் ஆம் தலை தலைமைப்பொருட்டே
** கணிதம் கன்னி பரியாயம் நானாவிதம் முதல்
**416
#51
கரணம் அலகு எண் கணிதம் குமரியும் கன்னி என்பர்
பரவிய பன்முறையே பரியாயம் பலவிதமே
உரைசெயும் நானாவிதம் என்பர் மோனையுடன் தொடர்ந்து
தெரிதகும் ஆதி இவை முதலே எனச் செப்பினரே
** முடிவு அனுபவம் வளமை கொழுப்பு
**417
#52
மொழிதரும் அந்தமும் தீர்தலும் ஈறும் முடிவு அது என்பர்
அழிவிலது ஆம் துப்புரவே அனுபவம் ஆகும் என்பர்
செழுமையுடன் மல்லலே யாணர் வாய்ப்புத் திகழும் வண்மை
கொழுமை வளமை அதாகும் கொழுமை கொழுப்பு என்பரே
** சிறப்பிலதாம் குணம் செல்வம் வேறுபடல் உறவு துறப்பது
**418
#53
சிறப்பிலதாம் குணம் சீத்தை சிகம்பு அது என்பர்
வெறுக்கை விபவம் நிதானம் பொறி செல்வம் வேறுபடல்
உறத்தகுமே விகிர்தம் விகடம் சொல் உறவு உறவித்
துறப்பது என்னில் துறவி அதாகவும் சொல்லுவரே
** நாறுதல் இனிமையது
**419
#54
விரை மணம் மன்றல் கடி வாசம் கொங்கு வெறி நறையே
முருகு பரிமளம் ஆம் மோக்கம் கானம் கந்தம் முன் கமழல்
அருகுடன் கந்தித்தல் நாறுதல் ஆகும் அமுது சுவை
உருதரு சாரம் இவை இனிமையது என்று ஓதுவரே
** தித்தித்தல் கைத்தல் புளித்தல் ஒருபலம்
**420
#55
தீயமும் தீரமும் தெங்குடன் தேமும் தித்தித்தல் என்பர்
காயமும் காழ்த்தல் கடுத்தல் கரில் இவை கைத்தல் என்பர்
ஆய புளித்தலே ஆகும் பிராந்தித்தல் ஆன தொடி
ஏயது ஒருபலம் என்றே உரைசெய்வர் ஏந்திழையே
** நீர்மை
**421
#56
மாலை உழுவல் தகவு இயல்பே முறை மா மரபு
பால் அதிகாரம் விதியே கிழமை பரிசு பண்பு
மேலுரை பாண்மை குணம் நீர்மை ஊழ் தண்மையே உரிமை
ஏலும் எழுபொருளே ஆகும் என்பர் இவை முழுதே
** பண்பு கொள்கை உவமை
**422
#57
குணம் நிறமும் பண்பும் ஆம் அறிவோடு குணம் கொள்கை ஆம்
புணர் உறழோடு ஒப்பு நேரே நிகர் புரை போல் பொருவு
துணை ஒருவு ஈடு தகவே கடுப்புடன் தூக்கு இகல்
இணை எனவே உரைசெய்வார் உவமையை ஏந்திழையே
** பாரதிதீப வரலாறு
**423
#58
பொழி கொண்டல் என்ன கரப்புண்டரிகன் மெய்ப் பூசுரர்தம்
விழி நெஞ்சம் என்ன வரும் பாரதி திருவேங்கடவன்
செழியன் புகழ் அண்ணல் செப்பிய பாரதிதீபத்து எட்டாய்
மொழிபண்புபற்றியபேரின் இயலும் முடிந்ததுவே
@9 செயல்பற்றிய பெயர்த் தொகுதி
** தொழில் செயல்
**424
#1
செயல் வினையே தருமம் கருமம் தொழில் செப்பில் இவை
இயலும் விதியுடன் நேர்பொருள் ஆம் தொழில் என்பர் தொழில்
பயில் அதுவாகும் அயர்தல் உஞற்றல் இழைத்தல் பண்ணல்
துயரில் வனைதல் இவை செயலாகவும் சொல்லினரே
** மகள்விளையாட்டு பாராட்டு பொழுதுகழித்தல் விளையாட்டு
**425
#2
கெடலையுடன் பண்ணை ஓரை உண்டாட்டுக் கிரீடை பொய்தல்
கெடவரல் வண்டல் மகள்விளையாட்டு என்பர் கேள் மகிழ்வும்
படிமை திரித்து கொண்டாடலும் பாராட்டு எனப் பகர்வர்
விடலை வினோதம் பொழுது கழித்தல் விளையாட்டதே
** புதுமணம் விழவு ஓப்பனை
**426
#3
புரைஇல் வதுவை கடி மன்றம் மூன்றும் புதுமணம் ஆம்
முருகுடன் சாறும் அச் சேறும் விழவு என்பர் முன்புனைதல்
அரிதில் அமைத்தல் அணிதல் கைசெய்தல் அலங்கரித்தல்
உருவு மண்ணல் பொற்பு வேய்தல் வனைதல் சொல் ஒப்பனையே
** உண்டல் அடிசில் ஊண்தொழில்
**427
#4
வைத்தது அயிறல் அருந்துதல் ஆருதல் மாந்தல் துற்றல்
மெத்த நுகர்தலுடன் உண்டல் தின்றல் மிகப் பொசித்தல்
துய்த்தல் பருகுதல் துவ்வுடன் பண்பின் தொழிலைச் சொல்வர்
துய்த்து மிசைதல் அயிறல் அடிசிலது ஊண்தொழிலே
** சூடுதல் துஞ்சல்(உறங்கல்) நுகர்தல்
**428
#5
துனிவற வேய்தல் மலைதல் மிலைதலும் சூடுதல் ஆம்
கனவோடு அனந்தல் உறங்கல் துயிலுதல் கண்வளர்தல்
இனிதுடன் பள்ளிகொள்ளல் துஞ்சல் ஆகும் எடுத்து நுங்கல்
தன விழுங்கல் நொண்டல்தான் இவையாம் நுகர்தல்தொழிலே
** களவு வளைதல் ஏறுதல்
**429
#6
கரவு கயவு வடம் பட்டினம் கட்டல் கள்ளலுடன்
உரைசெய் களவு என்பர் கோடல் ஞெமிர்தல் ஒடித்தலுடன்
மருவி இறுத்தல் ஒசித்தல் மெய்தாழ்த்தல் வளைத்தல் என்பர்
விரைவுடன் எக்கல் இவர்தல் ஏறுதல் மேற்படுமே
** முரிதல் துவளல் தாழ்தல் அழுதல்
**430
#7
எலியோடு ஒசித்தலும் மோய்தல் முரிதலையே உரைக்கும்
தொலைவுஇல் திவளல் திவண்டல் உவளல் துவளல் என்பர்
மெலிவோடு இறைஞ்சல் குரங்கலும் தாழ்தலை மேவும் என்பர்
கலுழ்தல் கலக்கம் கசிதல் அழுதலைக் கற்பிக்குமே
** கோபம்
**431
#8
முனிவே கறுப்புக் குரோதம் குரூரம் முளவு கதம்
சினமே வெகுளி கலாம் பகை செற்றம் சிவப்பு உருத்தல்
வினை வேகமே சறவே வேர்த்தல் காய்தல் விளிவு செறல்
துனி கோரம் கோபத்தொழில் அதுவாக முன் சொல்லினரே
** புலவி புலவிவேகம் கடத்தல்
**432
#9
பொருந்தல்இல் ஊடல்முதிர்வு வெம் புலவி புலவியதில்
வருந்திய வேகம் துனி என்பர் தாவுதல் வாவுதலே
உரங்கொடு இகத்தல் குதித்தல் அகறல் உகழ்தலுடன்
கரைந்து எதிர்நீட்டல் நடத்தலும் தாண்டல் கடத்தலதே
** போகல் நெருங்குதல்
**433
#10
படர்தல் பரிதல் வழங்கல் இகத்தல் பதிபெயர்தல்
விடுதல் தணத்தலுடன் தீர்தல் தீர்த்தல் மிக ஒதுங்கல்
தொடர்தல் நடாத்தலுடன் சேறல் போகல் தொழிலுக்கு ஆம்
மிடைதல் கஞரல் இமிர்தல் நெருங்குதல் மேல்வருமே
** விரைவு விரைவுக்குறிப்பு கடுப்பு
**434
#11
கடுகல் நொறில் துனை வல்லையே ஒல்லை கதழ்வுடனே
முடுகல் விரைவு என்பதாம் ஞெள்ளல் பொள்ளல் மொழியுடனே
விடலில் கதுமெனல் நொய்தென வெய்தெனவும் விரைவு ஆம்
அடரு கதனம் துரிதம் இவை கடுப்பு ஆம் என்பரே
** திரிதல் நீர்ச்சுழலல் சுழலல் மீளுதல் ஆற்றுப்படை
**435
#12
உழிதரல் கொட்புத் திரிதல் சுரிதலும் உந்தியும் நீர்ச்
சுழலல் சுரியல் அதுதான் மொழியில் சுழலலும் ஆம்
அழிவின் முரிதல் மறிதரல் மீளுதல் ஆற்றுப்படை
வழி உட்படுவித்தல் ஆற்றுய்த்தல் அவ்வழி மாற்றுதலே
** பாய்தல் மண்டலம் ஊருதல் நேர்செலல்
**436
#13
பாதம் உகள்தல் குதித்தல் அக் குப்புறல் பாய்தல் என்பர்
மாதியும் வாளியும் சாரிகையும் சொல்லில் மண்டலம் ஆம்
ஓதில் உகைத்தலுடன் தூண்டல் ஊருதல் ஓர்பொருள் ஆம்
வீதியில் நேர்செலல் வாலா என்று விளம்புவரே
** தங்கல் நிலைபெறல் சுமத்தல்
**437
#14
அசைதல் தெவிட்டல் அறுத்தல் விதித்தலோடு அல்கல் தங்கல்
இசைதரு மல்கல் பரிதல் நிலைத்தல் இனிய துஞ்சல்
பசையொடு மன்னல் நிலைபெறல் ஆகும் பரித்தலுடன்
மிசை மெய்ப்பொறுத்தல் சுமத்தல் என்றே சொல்லும் மெய்த்தமிழே
** முயற்சி மிக்குச் செயற்றொழில் செய்தற்கரிய செயல்
**438
#15
இயற்றல் உஞற்று உழப்பு ஆள்வினை ஊக்கம் இவையுடனே
முயற்றல் உடன்தரு தாளாண்மை என்னின் முயற்சி மிக்குச்
செயல்தொழிலே என்பது ஊராண்மை செய்தற்கரியசெயல்
இயற்றகு நாவலர் பேராண்மையாக விளம்புவரே
** எண்ணல் ஆராய்தல் தேடல்
**439
#16
ஒளிதரு சூட்சி உசாத் தேர்ச்சி எண் எண்ணல் ஓர்தலும் அத்
தெளிதலும் தூக்கலும் தேர்தல் தெரிதலும் சேர இவை
அளவறு கேள்வியது ஆராய்தலும் கையரிக்கொள்ளுக
வெளியுற நாடலும் நேடலும் தேடலின் மேல்வருமே
** ஒற்றுமை ஒற்றல் வரையறுப்பு விலைகூறல் கலக்கம்
**440
#17
கருது ஒற்றுமைக்கொளலே ஒற்றல் வேய் குனித்தல் கணித்தல்
வரையறுப்பு ஆம் நொடை விற்றல் பகர்தல் வரின் விலை ஆம்
துருமம் வெறிப்பு வெதிர்ப்புப் புலம்பொடு சொல் முதிர்ப்பு
வெருவல் கலங்கல் கலக்கம் என்று ஓதுவர் மெல்லியலே
** நடுக்குதல் தியாகம்
**441
#18
விதிர்ப்புப் பனிப்பு விதலை கம்பமுடன் மெய்ப் பொதிர்ப்போடு
அதிர்ப்பு நடுக்குதல் வேள்வி உதவி வேளாண்மை கொடை
மதித்துப் பகரல் பொழிதல் இடுதல் வழங்கல் நல்கல்
திதத்தில் அளித்தல் அருளுதல் ஈதல் தியாகம் அதே
** வரையாது கொடுத்தல் வேள்வி வேள்வித்தறி பாதுகாத்தல்
**442
#19
ஏற்ற கொடைமடமே வரையாது கொடுத்தல் என்ப
மாற்றரும் ஓமம் கிருதுடனே எச்சம் யாகம் மகம்
மேல் திகழ் இட்டி இவை வேள்வி யூபமும் வேள்வித்தறி
போற்றலும் ஓம்பலும் பாதுகாத்தல்பொருட்டு என்பரே
** கொளற்பொருட்டு அகத்தீடு தலைக்காவல் பிச்சை
** கரத்தல் இரத்தல் பூசனை
**443
#20
தேவு கொளற்பொருட்டு ஆகும் கவுவு அகத்தீடு தலைக்
காவல் இளை என்பர் ஐயம் பலி பிட்சை ஆம் கரத்தல்
வாவு கரவு அது இரவே இரத்தல் வழிபாடுடன்
தாவுஇல் அருச்சனை ஆராதனை பூசைதான் என்பரே
** தொழுதல் காமவினைத்தொடர்பு உண்டாதல்
**444
#21
வணங்கல் பராதல் பரவுதல் அஞ்சலி வந்தனையே
தணிந்து பணிதல் இறைஞ்சலும் தாழுதலும்தான் தொழுதல்
இணைந்த வெங் காமவினைத்தொடர்பு என்பர் இணை விழைச்சுப்
புணைந்து சொல் பூத்தல் பயத்தல் உண்டாதல் பொருட்டதுவே
** மெய்க்கூட்டம் வெட்டல் களைதல்
**445
#22
குறித்த புணர்ச்சி கலவி இரண்டும் மெய்க்கூட்டம் அதாம்
ஒறுத்தல் தடிதல் துணித்தல் துமித்தலுடன் அறுத்தல்
எரித்தல் பிளத்தல் வகிர்ந்திடல் ஈர்த்தல் இதாகும் வெட்டல்
பறித்தலுடன் கட்டல் குற்றல் களைதல் பயன்படுமே
** நெரித்தல் ஞெமுங்கல் கோறல்(கொல்லுதல்) அழித்தல்
**446
#23
நெரித்தல் வெறுத்தல் ஞெமுங்கல் அழுங்கலை நேர் உரைக்கும்
எருக்குதல் காதுதல் எற்றுதல் கோறல் எழில் துலைத்தல்
முருக்குதல் எண்ணில் ஒருபொருளாம் என்பர் முன் செகுத்த
அரித்தல் சவட்டல் உதைத்தல் தெறுத்தல் அழித்தல் அதே
**தோண்டல் துளைத்தல் கொழித்தல் வாய்மைச்செயல்
** கடைதல்
**447
#24
தொட்டல் அகழுதல் தோண்டல் குயில் தொள்கலும் துளைத்தல்
மட்டின் வறண்டல் வரன்றல் கொழித்தல் என்றூதலதே
உள்தெரிவு ஆகும் உவனித்தல் வாய்மைச்செயல் உரைக்கும்
கட்டல் ஞெலிதல் கவர்தல் குடைதல் கடைதல் அதே
** சிந்துதல் வடுப்படுதல் தினவு கூடிடல்
** ஆறலைத்தல் மீதூர்தல்
**448
#25
அடர்த்தில் தவற்றல் சிதர்த்தலும் சிந்துதல் ஆம் கதுவாய்
வடுப்படல் ஆகும் கண்டூர்த் தினவு ஆம் என்பர் மாறுஇன்றியே
அடுத்தலும் கூடிடலான வழிபறி ஆறலைத்தல்
உடத்தின் நெருக்கல் இடங்கழி மீதூறுதல் என்பரே
** அலைப்பு முடங்கல் கொலைத்தொழில் குன்றல்
**449
#26
உலைத்தல் நெரித்தலுடன் மிறை வேதனையோடு செறல்
அலைப்பு எனல் ஆகும் முணங்கல் மடங்கல் அது முடங்கல்
தொலைத்திடல் வெட்டல் அணங்கண்டல் பிட்டல் சொல்லில் இவை
கொலைத்தொழில் என்பர் தலை எஞ்சல் சிங்கலும் குன்றலதே
** சாதல் வேறுபடுத்தல் வேற்றுமை
**450
#27
வீதல் விளிதல் உலைதல் முடிவுடன் வீட்டல் பொன்றல்
மாய்தல் தபுதலுடன் துஞ்சல் சாதலின் மாற்றம் என்பர்
பேதுடன் வீற்றுத் திரிவுடன் விள்ளலும் பேசில் இவை
தீதுறு வேறுபடுத்தலும் வேற்றுமையும் செயுமே
** உள்தளர்வு வளைப்பு நிணர்வு
**451
#28
உற்ற இளைப்போடு அமுங்கலும் ஒல்கலும் உள்தளர்வு ஆம்
சுற்றுதல் தொட்டல் வரைத்தல் பிடித்தல் தொடித்தலுடன்
முற்றுதல் சூழுதல் சூழிபோதல் என்று மொழி வளைப்பு
மற்று வலத்தல் சுவலல் சுற்றல் நிணர்வு ஆம் அதுவே
** யாத்தல்(கட்டல்) விடல்
**452
#29
விசித்தல் சிமிழ்த்தல் பந்தித்தல் சுருக்குதல் வீக்குதலோடு
அசைத்தல் இமிழ்த்தல் வரித்தல் தொடர்ந்திடல் ஆர்ப்புக் கட்டல்
இசைத்தலினோடு யாத்தல் என்று ஓதுவர் தீர்த்தலுடன்
வசத்தினில் தீர்த்தல் விடல் பொருட்டாகிய மாற்றங்களே
** பூசல்
**453
#30
திறி முரண் ஞாட்பு இகல் ஆயோதனம் மொய் செரு வெஞ்சமம்
உறழ்வு இரணம் சுமர் தாக்கே சினவுதலோடு அமரே
விறல் தெவ்வுப் போர் சங்கிராமம் சமீகம் வினை மலைவு
மறம் மலியும் பகை ஆகவம் பூசலின் மாற்றங்களே
** மிகுத்தல் கடுத்தல் கொற்றவள்ளை தழிஞ்சி
**454
#31
பாரித்தல் பூரித்தல் தோற்றுதல் என்பது மிகுத்தல்
வாரித்தல் தன்னொடு வாராணை ஆகும் அது தடுத்தல்
கோரத்து அடையலர் நாடு அழிவு ஆய்து கொற்றவளைத்
தாருற்ற மாற்றலர் மேல் படராமைத் தழிஞ்சியதே
** பாதீடு கொட்டாவி உயிர் வருத்தம்களைதல்
** உளம்வெம்பிக் காட்டல் உயிர்த்தல்
**455
#32
அளித்தலும் பொய்தலும் பாதீடு கொட்டாவி ஆபித்தலே
ஒளித்த மெய் ஆவி உயிர் ஆம் அயாவுயர்த்தல் வருத்தம்
களைதல் உறக்கம் வியர்த்தல் உளம்வெம்பிக்காட்டல் அதாம்
தளப்பம் உடனுற்று உயிர்த்தல் உயிர்போதரவிடலே
** காதித்தல் உமிழ்தல் புயல்சொரிதல் தெவிட்டல்
**456
#33
கழிய முனித்தல் வறத்தல் உறுத்தலும் காதித்தல் ஆம்
ஒழுகிய பில்கல் பிலித்தல் உமிழ்தல் பொருள் அது என்பர்
பொழிதல் பனித்தலுடன் ஈடல் என்னில் புயல்சொரிதல்
விழைதல் உமிழ்தல் இமிழ்தல் தெவிட்டலின் மேல்வருமே
**மழைவிடல் உடன்படல் பொழுதுநீட்டித்தல் மூடுதல்
**457
#34
மட்டுறு தூவல் துவலை துளித்தல் மழைவிடல் ஆம்
ஒட்டல் வலித்தலுடன் நேர்தல் என்னின் உடன்படல் ஆம்
நெட்டை நெடித்தல்பொழுதொடு பாணியும் நீட்டித்தல் ஆம்
முட்டல் மொய் மூய்தல் கவித்தலும் ஆம் என்பர் மூடுதலே
**மொய்த்தல் எழுப்புதல் சோர்வு வழு குடியிறை
**458
#35
மூசலும் மூழ்த்தலும் மூஞ்சலும்தான் இவை மொய்த்தல் என்பர்
ஏசல் உணர்த்தல் எடுப்பல் எனில் இங்கு எழுப்புதல் ஆம்
மாசறு சோர்வு கயக்கு பிறக்கு வழு அது என்பர்
கூசும் கரமும் கடனும் கறையும் குடியிறையே
**அரசிறை சுங்கம் எழுச்சி மிகுதி ** எழுகிடல்(எழுப்புதல்)
**459
#36
அரசிறையே திறை அன்றி உலகிறை ஆகும் சுங்கம்
உரவு கலித்தல் அகம் சுற்றுதல் பம்மலுடன் அஞறல்
தருவது எழுச்சி மிகுதியின் பேர் என்பதாம் இவர்ச்சி
அருளும் உறுமலோடு ஒக்கம் உகைத்தல் எழுகிடவே
**தழீஇக்கோடல் சார்வு
**460
#37
தணவுதல் அன்றி முயங்குதல் விள்ளல் தழீக்கோடல் ஆம்
மணவுதல் தோய்தல் தொடுத்தல் புணர்தலோடு அண்ணுதலே
நணுகுதல் புல்லல் பொருந்தலுடன் சார்ச்சி நண்ணுதலே
குணமொடு செல்தல் படிதரும் சார்வு என்று கூறுவரே
**கலத்தல் தடவுதல் திமிர்தல் வளைதல்
** வைப்புறுத்தல்
**461
#38
கடிது கலாவல் துளாவல் அளாவல் கலத்தல் என்பர்
தடவுதல் ஆகும் வருடலும் நீவலும் தைவரலும்
விடவு நிமிர்தல் துவருதல் ஆம் அவ் வளைதல் வக்ரம்
உடன் மெய் தெருட்டல் வருட்டல் இவை வைப்புறுத்தல் அதே
**குற்றுதல் முளைத்தல் விரிதல் பதனழிவு
**462
#39
அடுத்தல் அவைத்தலும் குற்றுதல் ஆம் மலர்தல் அங்குரித்தல்
பொடித்தல் வெடித்தல் இவையே முளைத்தலும் போதுஅலர்தல்
வெடித்தல் மலர்தல் எதிர்தல் இம்மூன்றும் விரிதல் என்பர்
அடைத்தல் தழைத்தல் ஊழ்த்தல் செவ்வியோடு பதனிழிவே
**சமைத்தல் மறித்தல் அசைதல் எட்டல் மேவல்
**463
#40
இசைவொடு சேர்த்தல் அமைத்தல் சமைத்தல் இருத்தலுடன்
விசைவுறு வீழ்தல் விழுதல் மரித்தலை மேவும் என்பர்
அசைதல் துயல்வரல் ஆம் எட்டல் ஆவது அணவுதல் ஆம்
திசை புகழ் வீழ்த்தலும் ஆர்த்தலும் மேவலைச் செப்பும் அதே
**கூடல் சரண்புகல் காவல்
**464
#41
குறைவில் பொருந்தல் சிவணலுடன் ஒல்லல் கூடல் என்பர்
மறைபுகுதல் சொல் சரண்புகல் ஆம் என்பர் மண் கடியும்
சிறையும் ஒழுக்கம் நவிற்றல் செறிந்து துற்றல் பயில் தோடு
உறைதரு கட்டு கதவு காவலாக உரைசெய்வரே
**ஏவல் வறுமை ஒழுக்கம் அவித்தல்
**465
#42
வியலரை ஏவல் வியங்கோள் வறுமையும் வீது இது என்பர்
இயல்பொடு மாலை கையாறே நடை நிழலே சரிதை
செயல் இவையும் ஒழுக்கம் நவிற்றல் பெதுற்றல்
பயிலல் நொகுத்தல் அவித்தல் என்று ஓதுவர் பாவலரே
** மூட்டல் செறித்தல் கூட்டம் விடுதல் வேகம்
**466
#43
மோகமின் மாட்டல் பொருத்தல் இரண்டையும் மூட்டல் என்பர்
ஆகமே மூழ்கல் குளித்தல் செறித்தல் அதாகும் என்பர்
யோகமும் கூட்டம் வியோகம் விடுதலை கூறும் என்பர்
வேகம் அது ஓதில் கடுமையும் வெய்ய விவேகமுமே
** செய்கடன் குயிலுவம் குமரனாடல் அரியினாடல்
**467
#44
செயலுறுகின்ற நியமம் நியதியும் செய்கடன் ஆம்
பயிலும் நரப்புக்கருவியில் சேர்தரு பாடல் பண்பே
குயிலுவம் ஆகும் கொடை துடியாடல் குமரனது ஆம்
அயர்தரு மல் அல்லியம் குடம் ஆடல் அரியதுவே
** சிவன் ஆடல் திருமகள் ஆடல் அயிராணிஆடல்
** காமன்ஆடல் துர்க்கை ஆடல்
**468
#45
படர் கொடுகொட்டியும் காபாலம் பாண்டரங்கம் சிவனாட்டு
அடர் சேர் பாவை திருமகள் ஆட்டு அயிராணியது ஆம்
கடையம் நடம் புகழ் பேடுஆடல் காமனது ஆகும் என்பர்
துடியிடை மாதர் மரக்கால் அது ஆடலும் துர்க்கையதே
** கூத்து நிருத்தம் குரவை
**469
#46
பரதம் நடனமுடன் ஆடல் நாடகமே பிடிதம்
தரமுடன் நாடனம் ஆலுதல் தூங்கிடல் தாண்டவம் கூத்து
உரம்மிகு நாட்டியம் கண்ணி நிருத்தமும் ஆம் குரவை
கரமலர் கோத்து உடன்ஆடல் என்றே சொல்லுவர் கற்றவரே
** நடன விகற்பம் துணங்கை
**470
#47
கரணம் மலைப்புக் குனிப்பும் உள்ளாளம் கடகம் பிவித்தம்
உரணு பவுரியம் பிரமாரம் வீரட்டதானமுடன்
பகருவின் நடம் இருகை முடக்கிப் பழுப்புடையில்
துரிதலல் இதத்தின் அடித்து உடன்ஆடல் துணங்கையதே
**வேலன் ஆடல் கை குவித்துத் தட்டல் வாய்தட்டல்
** குந்தியகாலின் நிலை
**471
#48
வெறியே அணங்கு கழங்காடல் வேலனதுஆடல் அதாம்
குறியால் அகங்கை குவித்து முன் தட்டலும் கொம்மையதாம்
அறியாத பிள்ளைகள் வாய்தட்டல் ஆவலங்கொட்டல் அதாம்
நெறியானம் குஞ்சித்தல் குந்திய காலின் நிலை என்பவே
**கைகூப்பி மெய்கொட்டி நிற்றல் தாளவொத்து நடனம்
**472
#49
நீடு குடந்தமும் கைகூப்பி மெய்கொட்டிநிற்றல் என்ப
தேடிய தாளத்தின் ஒத்தினவாம் கதிரீர் அது என்பர்
ஆடில் அதனின் நடிக்கும் நடனமும் ஆகும் என்பர்
பாடல் பயிலும் பனுவல் தமிழ் தெரி பார்த்திபரே
**பாரதிதீப வரலாறு
**473
#50
கயல் தங்கு வாவிக் கடம்பையர் ஆதி கைக் கார் நிகரும்
இயல்தங்கு செந்தமிழ்ப் பாரதி பாவலர் ஏற்றுஅரிதாம்
உயர் செஞ்சொலால் சொன்ன பாரதிதீபத்தின் ஓர் ஒன்பதாய்
முயலும் செயல்பற்றியபேர் இயலும் முடிந்ததுவே
@10 ஒலிபற்றிய பெயர்த் தொகுதி
** எழுத்தின்ஓசைச் சொல்
**474
#1
கருது நொடியும் பனுவலும் கூற்றும் கதையும் சொல்லும்
உரையும் மறையும் மொழியும் வினாவும் ஒலிப்பு அறையும்
மருவு மிசையும் கிளவியும் வாணியும் மாற்றமுமே
அரிய எழுத்தினில் ஆகிய ஓசைச்சொல் ஆனதுவே
**475
#2
பகர்தல் இயம்பல் குயிறல் மறுத்தல் பன்னல் சொற்றல்
புகறல் விளம்பல் கரைதல் வழங்கம் புகழ்தல் செப்பல்
இகலொடும் ஓதல் மிழற்றல் அறைதல் வசனம் இவை
இகலுறு கட்டுரை பேசுதல் கூறல் சொல் என்பர்களே
** உண்மை பொய் குறளை புறங்கூறல் வாழ்த்து
**476
#3
திடம் ஆணை வாய்மையும் சரதம் மெய் உண்மை சிறந்தது என்பர்
மடி மாயை வஞ்சமுமே சகடம் கூடம் வாய்த்திரத்தோடு
உடந்தி சதமுமுடன் நிசிதமும் பொய் பிசினம் குஞ்சமும் குறளை
கொடுவாய் எனில் புறங்கூறு ஆசுஇல் வாழ்த்து எனக் கூறுவரே
**திசைச்சொல் வாழ்த்து பெருஞ்சொல் சிறுசொல் பழிச்சொல்
**477
#4
மருவிய தேசிகம் ஆகும் திசைச்சொல் வழுத்தலுடன்
பரவல் துதித்தலுடன் ஏத்தல் போற்றல் பழிச்சல் இவை
தெரிதலில் வாழ்த்துப் பலரறிசொல் பெருஞ்சொல் சிறுசொல்
அருள்இல் பழிச்சொல் பழிஅவை கௌவையும் ஆம்பலுமே
** அம்பல் அலர் இடக்கர் கீர்த்தி
**478
#5
அடக்கமுடன் சிலர் தம்முள் புறஞ்சொல்லல் அம்பல் என்பர்
அடக்கமில்லாமல் பலர் புறங்கூறல் அலர் அது என்பர்
இடக்கர் மறைத்துஉரையாடல் மெய்யினொடு இசை புகழும்
கிடைத்து அருள் சீர்த்தியும் மீக்கூறலும் சொல்லில் கீர்த்தியதே
** ஏற்றம் (புகழ்) மிகுபுகழ் தேற்றம் உறுதிக்கட்டுரை
**479
#6
எழில் புனை தோற்றம் உடனே மலைவு எனில் ஏற்றம் அதாம்
விழைதரு சீர்த்தி மிகு புகழ் ஆகிவிடும் குறிக்கோள்
வழுவறு ஓர்ப்புக் கடைப்பிடி தேற்றத்தின் மாற்றம் அதாம்
கழறல் இடித்தல் உறுதியது ஆகிய கட்டுரையே
** உரப்புதல் தேற்றமொழி நிரம்பாதசொல் நிமித்தம்
** புனருத்தி மோனம்
**480
#7
தெழித்தல் உரப்புதல் மன்ற என் மாறு என் சொல் தேற்றம் அதாம்
நிழற்றல் மிழற்றல் நிரம்பாதசொல் சொல் நிமித்தம் எனில்
தொழத்தகு வாய்ப்புள் விரிச்சியது ஆம் சொன்னசொல்லைச் சொல்லல்
மொழிப் புனருத்தி என் வாளா என் சொல் எனின் மோனத்ததே
** சூளுறவு விளித்தல் கீழறுப்பு
**481
#8
சூளொடு வஞ்சனையே சபதம் சொல்லில் சூளுறலா ஆம்
நீளவிளித்தல் கரைதல் முன் கூவுதல் நின்று உளைத்தல்
ஆளை அழைத்தல் அறைகூறல் சொல்லல் விளித்தல் அதாம்
கேள் அறைபோதலும் கீழறுப்பு ஓதல் கிளவியதே
** முதுசொல் காரணச்சொல் உபசாரச்சொல்
** விழைவுறுசொல் வினாவல் வினாவெதிர் சொல் நெடுமொழி
**482
#9
மொழிமை முதுசொல் கதை காரணச்சொல் முகமாற்று உடன்
அழகுறு நன்னயம் உபசாரம் அசதி நகையே
விழைவுறு சொல்லு வினாவல் கடாவல் விடை எதிர்சொல்
பழுதுஇல் நெடுமொழி தன்னை மேம்பாடுபடச்சொல்லலே
** அல்லவாம் எனல் கேட்பித்தல் உரையசைச்சொல்
** முன்னிலை அசைச்சொல்
**483
#10
அன்று என் கிளவியது அல்லவாம் எனும் அம்ம என் சொல்
ஒன்றது கேட்பிக்கும் ஆங்க அதுவே சொல் உரையசை ஆம்
என்று உரை செய்வர் மியா இகமோ மதியோடு இகும் சின்
குன்றிய சொல் முன்னிலை அசைச்சொல் என்று கூறுவரே
** அசைநிலைச்சொல் இசைநிறை அசைச்சொல்
**484
#11
வாய பிற பிறக்கு யா கா அரோ வேழ் மாது எனும் சொல்
ஆயது அசைநிலை ஆகும் இசைநிறையோடு அசைச்சொல்
ஏயும் குரையும் எனும் ஓடு இரண்டினும் எய்தும் ஒப்புப்
போயதோர் போலியும் அப்பொருட்டாகப் புகலுவரே
** சாரியை இடைச்சொல்
**485
#12
இன் அன் வற்று அத்து அம் ஒன் ஆன் இக்கு அக்கு இகந்தேயொடு அம்மே
அன் மன் இவை சாரியை அதுவாகும் எம் ஏம் தம் அம் ஆம்
கொன் மன் உடன் ஏன் அள் ஆர் தம் பாக்குக் கொல்லொடும் முந்
தன்னுடன் தில் எனா என்றா இடைச்சொலின் தன்மையதே
** எழுத்தின் சாரியை வேற்றுமை உருபு சுட்டு
** ஐயச்சொல்
**486
#13
காரமும் மானமும் கானும் கரமும் கருது எழுத்தின்
சாரியை ஐ ஓடு கு இன் அது கண்தனைக் கிளக்கில்
ஓரும் அவ் வேற்றுமையின் உரும் மூன்று உரைக்கில் சுட்டு இதாம்
கூரிய கொல் அனை யாது என்னை ஐயச்சொல் கூறுவரே
** இடத்தின் ஐயுற்றசொல் கல்வி வேதநூல்
**487
#14
ஏதம்இல் ஆண்டையும் யாங்கும் இடத்தினுக்கு ஏற்ற சொல்லாம்
ஓதி அறிவு கலை கேள்வி சால்பும் உரைக்கில் கல்வி
ஆதி நல்நூல் எழுதாக்கேள்வி சாகை அரும் சுருதி
வேதம் மறை இவை தான் என்று கூறுவர் வித்தகரே
**வேதநூலின் இருவகைப் பொருள் ஞானபாகை
** உபநிடதம் வைதிகம்
**488
#15
அருண் ஞானபாகையுடன் கருமபாகை என்று ஓது நன்னூல்
அருமறைப் பொருள்படும் நூல் வேதத்தின் ஏதமற்ற
ஒரு ஞானபாகை உபநிடதம் வேதத்தின் உட்பொருளாம்
வரு வேதம்தன்னின் வழி மார்க்கம் ஆகும் அவ் வைதிகமே
** முதல்வேதம் இரண்டாம் வேதம் சாமவேதம் நூல்
**489
#16
சாரும் பவுடிகம் முன்னையது ஆகும் தயித்திரியப்
பேர் இரண்டாவது சாமமுங் கீதப் பொருநடை ஆம்
ஆரிடம் ஆகமமே அதிகாரம் அரும்பிடகம்
பாருள தந்திரம் பனுவலும் நூலின் பன்மையதே
** மூதுரை பாடம் சூத்திரயாப்பு
**490
#17
மூதுரை முன்னை பழமொழியோடு முதுமை என்பர்
ஓதமை ஆடலும் பாடம் அதாகும் உரை விதியின்
ஏதம்இல் சூத்திர யாப்பு ஆம் அடிவரையின்றிச் செய்யில்
கோதுஅறு கேள்வி அகவல் பொருள் எனக் கூறுவரே
** பாயிரம் ஒத்து
**491
#18
பூத்திகழ் பாயிரம் நூன்முகத்தோடு புறவுரை ஆம்
நீத்திலவாத இனமணிதன்னை நிரைத்தது போல்
வாய்த்த இனப்பொருள்தன்னை ஒருவழி வைத்து உரைப்பது
ஓத்து என ஓதுவர் சொற்றமிழ் நூல் கற்று உயர்த்தவரே
** படலம் விருத்தி நடையது விரித்துரை
** பொழிப்புரை
**492
#19
புரக்கும் ஒருமொழி அன்றி விரவும் பொதுமொழியாய்
இருக்கும் அதாகும் படலம் சருக்கம் இலம்பம் முற்றும்
விருத்தி நடையது என்றாம் விரித்துரை மெய்யுரையின்
பொருள்திறமாம் அப் பொருள் பிண்டம் அதாகும் பொழிப்புரையே
**பதிகம் இலக்கியம் அரும்பொருள்நடை
**493
#20
கோட்டுப் பதிகம் பலவனச் சொற்பொருள் கூட்டம் என்பர்
ஓட்டும் இலக்கியம் தன்னோடு உதாரணமும் எடுத்துக்
காட்டல் அதாகும் பிசிதியும் ஞாபகமும் கருதின்
நாட்டிய அப் பொருளின் நடையாக நவிலுவரே
** யாப்பு வெண்பா கலிப்பா ஆசிரியப்பா வண்ணகம்
**494
#21
கவிதையுடன் செய்யுள் பாத் தூக்குப் பாட்டுக் கவியது என்னின்
உவமையில் யாப்பு முதற்பா வெண்பா அது உரை முறைமை
அவிர் கலிப்பாத் தொகை தன்னோடு அகவலும் ஆசிரியம்
இவரும் அராகம் முடுகியல் வண்ணகம் என்பர்களே
** குளகதச்செய்யுள் சந்தம் தாண்டகம் கணக்கு
**495
#22
தெரி குற்றெழுத்துத்தொடர்பாக் குளகதச்செய்யுள் என்பர்
இருபத்திருமூன்று எழுத்தாகி நான்கடி எய்தும் செய்யுள்
தருவது சந்தம் தானமிகு தாண்டகம் தான் அது என்பர்
கருது எழுத்தோடு எண் இவைதான் இரண்டும் கணக்கு என்பரே
** எண் எழுத்து ஒற்றெழுத்து காஞ்சி
**496
#23
இடறுஇல் கரணம் கணிதம் இவை எண் எழுத்து உரைக்கின்
வடிவொடு தன்மை பெயர் முடிவே என மன் எழுத்து ஆம்
உடைய விராமை புலுதமுடன் மெய்யும் ஒற்றெழுத்து
கட நல் உலகம் புகப் பாட்டு எழுந்தது காஞ்சியதே
**முதுமொழிக் காஞ்சி பேரியற் காஞ்சி
** பொருண்மொழிக் காஞ்சி முதுபாலை
**497
#24
கழிந்த வன்காட்டினதுவே முதுமொழிக்காஞ்சி என்பர்
அழிந்து அகக் கேட்டு உரை பேரியற்காஞ்சி அருள் மொழி மெய்
மொழிந்த சொல் சொல்லல் பொருண்மொழிக்காஞ்சி முதுசுரத்தின்
இழிந்து இரைக்கு ஏங்கல் முதுபாலையாக இயம்புவரே
** குற்றிசை குறுங்கலி பாசறைமுல்லை இல்லாண்முல்லை
**498
#25
பன்னித் துறந்தது குற்றிசை முற்றப் பழி அவன்தன்
முன் நின்று உரைத்தல் குறுங்கலி பாசறைமுல்லைக் கொண்கண்
மின்னினை உள்ளல் இல்லாண்முல்லைப் பாசறை மீது இறையை
உன்னித் தகாது என்பர் நன்னூல் நெறி கற்று உயர்ந்தவரே
** இசைப்பாட்டு இன்னிசை பல்லியந்தருபாடல்
**499
#26
வரி கொளை பண் இசை பாண் கானம் பாணி மருவிய கந்
திருவம் மென் கீதமுடன் கேயம் காமரம் சேர் இசை ஆம்
இருளறும் இன்னிசை சங்கீதம் பல்லியம் இராகமுடன்
பரவி அமர்ந்த இசைகர் குளிதரு பாடலதே
** நாற்பெரும்பண் நால்வகையாழ்
**500
#27
மொழிதரு பாலை குறிஞ்சி மருதம் மென் முல்லை என்ப
எழில் புனை யாழ்வகை நாற்பெரும்பண் என்பர் யாழை நல்யாழ்க்
கொழிதரு செவ்வழி யாழறையே அக் குறிஞ்சி முல்லை
விழை பயிர் ஏனை எனின் நேரிசையின் விகற்பமதே
** குறிஞ்சியாழ்த்திறன்
**501
#28
நந்து படுமலை காந்தாரம் பஞ்சுரம் தைவளைத்தொடு
அந்த மருள் செந்திறம் அரற்று அயிர் ஆம் குறிஞ்சி
சிந்தை இல்லாதவராகங் குறுங்கலி தேர்நிறமே
பந்தம் இலாக்காணம் குறிப் புத்து பாலையதே
** பாலையாழ்த்திறன் மருதயாழ்த்திறன்
** செவ்வழி (முல்லை)யாழ்த்திறன்
**502
#29
படுமலை செவ்வழியே எனில் செம்பாலை பாலையுடன்
விடல்தரும் பாலையுடன் கொடிப்பாலை விளரி என்பர்
வடிவில் வியந்தை நவிரே குறிஞ்சி மருதத்தது ஆம்
திடனில் பெயர்த்திறம் சாதாரி யாமையம் செவ்வழித்தே
** நெய்தல்யாழ்த்திறன் பாடலுக்கு ஏற்பது
** ஆடலுக்கு ஏற்பது வள்ளைப்பாட்டு
**503
#30
நீடு விளரித் திறங்காலம் யாழ் நெய்தல் நீணிலத்து ஆம்
பாடலுக்கு ஏற்பது செந்துறைப் பாட்டு மென் பாவையன்னார்
ஆடலுக்கு ஏற்பது வெண்டுறை ஆகும் அவர் உலக்கை
மாடமுற்கொண்டு மென் சீர்பாடிக் குற்றலும் வள்ளையதே
** எழுத்திலா ஓசை அணுகரண ஓசை
**504
#31
பிளிறல் குரைத்தல் இரைத்தல் சிரத்தல் பிரத்தலுடன்
குளிறு பயில்தல் உழைத்தது எழுத்துடன் கூரவிசைசெய்
எளுமெனல் அழுமெனல் கல்லெனல் ஒல்லெனல் இம்மெனலோடு
அளவில் ஞெரொ பொள்ளெனல் ஆம் அனுகரணத்ததுவே
** ஆரவாரம்
**505
#32
இரைத்தல் திரைச்சி தழங்கல் கறங்கல் ஞெள்ளல்
உரைத்தல் துவைத்தல் கலித்தல் கரைத்தலும் பொலி
குரைத்தல் தெளித்தல் அரவமோடு ஆகுலம் எக்காளித்தல்
புரைத்தல் துழனியோடு ஆர்ப்பு ஆரவாரம் வெம் பூசலதே
** பாரதிதீபவரலாறு
**506
#33
கன்னல் குலாவும் வயல் சூழ் கடம்பைமன் கஞ்சமலர்
மின்னுளவாகும் புய பாரதி திருவேங்கடவன்
பன்னிய பாரதிதீபத்து இடையினில் பத்து எனவே
முன்னும் ஒலிபற்றியேபேர் இயலும் முடிந்ததுவே
@11 ஒருசொற் பலபொருட் பெயர்த் தொகுதி
** ஏமம் விழுமம் செழுமை
**507
#1
சேமமே காவல் பொன் இன்பம் ஏமாப்பு இரவு செறி மயக்கம்
ஏமம் அதாகும் சிறப்பொடு சீர்மை இடும்பை இசை
தாம் உரை செய்யில் விழுமம் அதாகத் தரும் செழுமை
நாமம் அது என்னில் வளனே கொழுப்பு எனும் நானிலமே
** உறை உந்தி
**508
#2
நிந்தை செய் கூறை கழுவு உவர்நீர் துளிநீர் மருந்து
பந்த வென் நோய் தவிர்த்து இன்பம் தருபொருட்பாலுறுபு ஈர்
முந்திய காரம் ஒழுகல் இடைச்சொல் மொழியின்உறை
உந்தி கொப்பூழ் நதி தேருருள் யாழ்க்கண்ணது ஓர் உறுப்பே
** பாழி நந்தல் விருப்பு வெம்மை
**509
#3
அன்பால் உறையுள் சயனமும் ஊரும் அடல் வலியும்
வன் பாழி ஆக்கமும் கேடும் அதாம் நந்தல் என்பு உருக்கும்
மின்பாடல் ஆடலும் விருப்போடு எனல் வேண்டல் வெம்மை
வன்பாடல் ஆவ குகன்மாற்க கூத்தின் வகுத்தனரே
** ஓசை
**510
#4
கலித்தல் அழுங்கல் துவைத்தல் இரங்கல் கவனம் விம்மல்
சிலைத்தல் இமிழ்த்தல் இரட்டல் அழுங்கள் சிலம்பல் சும்மை
நலத்தகு கம்பலைத் தோடணை நெய்தல் நவிற்றல்டன்
ஒலித்தல் இசைத்தல் கறங்கல் என்று ஓதுவர் ஓசையையே
** ஒல் பண்ணை புரை
**511
#5
ஓதை புலம்பல் அரவமோடு ஓசை ஒலியுடனே
நாதமும் ஒல் என்பர் நன்னீர்ப் படுவும் நல் நுதலார்
ஆதரவான விளையாட்டும் ஆயமும் ஆகும் பண்ணை
போது உவமைச்சொல் உயர்புடன் குற்றம் புரை என்பரே
** யாமம் தாமம் வரைதல் பரிவு
**512
#6
யாமம் உரைக்கில் பொழுதுடன் சாமம் இரவு அது என்பர்
தாமம் முகை நன் ஒளியுடன் தார் என்பதாம் வரையு
மாம் அது நீக்குதல் கொள்முதல் ஆம் என்பர் ஆன துன்பம்
காமுறும் இன்பம் இரண்டும் பரிவு எனக் கற்பித்ததே
** மஞ்சு துஞ்சுதல் வாமம் வெறி
**513
#7
மஞ்சு அது உரைக்கின் முகிலோடு இளமை வனப்பு அது என்பர்
துஞ்சுதல் சாதல் உறங்கல் நிலைத்தலும் சொல்லும் என்பர்
எஞ்சலின் வாமம் குறங்கே குறள் இடப்பால் அது என்பர்
மிஞ்சிய நாற்றம் விரை அணங்கு ஆட்டு வெறி என்பரே
** பாணி கோடகம் கோதை
**514
#8
நீடிய நீரொடு கையே நெடித்தல்பொழுதோடு நே-
ராடல் உட்பல்லிபம் பாணி மரக்கொம்பு பாய் பொதும்பு
கோடகம் ஆகும் குரங்குடனே என்பர் கோதை முடி
சூடிய சேரன் வில் நாண் துடர் கைக்கட்டித் தொங்கல் அதே
** வஞ்சி தோல் வாரணம்
**515
#9
நாற்பாவில் ஒன்றுடன் நாற்றகத்து ஓர் கொடி நன்னுதல் பேர்
மேற்போய்விடுஞ்சொல் கருவூரும்தான் வஞ்சி வேழமுடன்
தோற்பன போர்வை பலகை வனப்பு இவை தோல் அது என்பர்
கால்போர் செய் கோழியும் வேழமும் வாரணம் காண் என்பரே
** மால் மா மலைதல்
**516
#10
அரி முகில் வேட்கை மருந்து மயக்கமோடு ஆன புதன்
கருமையும் ஏனைப் பெருமையும் மால் என்பர் காமர் வண்டு
திரு திறமோடு இருளும் கருமை திகழ் பருமை
மருவிய மா மலர்சூடல் பொருதல் மலைதல் அதே
** சூர் தார் விண்டு சிலை
**517
#11
சூர் அது வஞ்சனை அஞ்சாமை தெய்வமும் சொல்லும் என்பர்
போர் எதிர்செல்லும் கொடிப்படை ஆவின் புனைமணியும்
வேரிசெய் மாலையும் தார் என்பர் மாயனும் வெற்பும் விண்டு ஆம்
மேருறு வில்லும் மலையும் சிலை என்று இயம்புவரே
** கொண்டல் ஆரல் ஆரம் குயம் காரிகை
**518
#12
வாருறு மேகமும் கீழ்காற்றும் கொண்டல் செவ்வாய் கார்த்திகை
ஆரல் முத்து ஆத்தி அணி மாலை சந்தனம் ஆரம் என்பர்
கூர் அரிவாளோடு இளமை பின் கொங்கை குயம் அது என்பர்
காரிகை மாது எனில் கட்டளை ஆகும் கலித்துறையே
**இவர்வு சாறு அளி குவலயம்
**519
#13
சேறல் ஒழுக்கத்துடனே விரும்பல் செலுத்துதலே
ஏறல் இவர்வு என் கிளவியதாம் கள் இசை விழவே
சாறு அதாகும் மதுக்கொடை வண்டினம் தான் அளியே
கூறுவர் நெய்தலுடன் நிலம் ஆகும் குவலயமே
** வைகல் தொண்டு சேய் பொழில்
**520
#14
கழிதரு நாள் புலரிக்காலம் வைகல் தங்கல்பொருட்டு ஆம்
பழமை நவம் மிகும் கேண்மை தொழும்போடு ஒன்பானும் தொண்டு ஆம்
மொழியின் இளமை மகவும் செவ்வாயும் முருகனும் சேய்
பொழில் எனில் காவும் உலகமுமாகப் புகலுவரே
** பிரசம் அரில் கோடு படு
**521
#15
பிரசம் எனும் பெயர் தேனீயும் தேனும் பிணக்குக் குற்றம்
அரில் எனவாம் சங்கு ஊதும் அக் கொம்புடன் ஆர் மருப்புக்
குரையும் மரக்கொம்பு நீர்க்கரையும் வெற்பும் கோடு அது என்பர்
பரவு பெருமை படுதல் ஒலி இவை பாடு என்பரே
** வை இளமை கறை குளிர்தல்
**522
#16
மொழிதரு கூர்மை நெல்தாள் புல்லு வை என்பர் மொய் இளமை
களிதரு காமமும் தன்மையும் சொல்லும் கறை எனும் சொல்
ஒழுகும் உதிரம் திறையே நிறமும் உரைக்கும் என்பர்
குளிர்தல் உரைக்கில் துளையே மராம் எனக் கூறுவரே
** சிறை பரிவு வேழம் அளகம் சூழி
**523
#17
சிறை எனில் காவல் இறகு ஆம் பரிவு செயல் விருப்பு ஆம்
விறல் இபம் கன்னல் கொறுக்கை வெதிர் இவை வேழம் என்பர்
அறை மட மாதர்குழலும் பினலும் அளகம் என்பர்
துறைபயில் வாவி முகபடாமும் என் சூழியதே
** வயா பரி கண்டகம் தொடி அந்தம்
**524
#18
மருவும் வயா எனின் வேட்கைப்பெருக்கம் வருத்தம் அதாம்
பரி பரியே செலவே பாதுகாவல் படர் வருத்தம்
சுரிகை ஒள் வாள் முள் இவை கண்டகம் தொடி தோள்வளையோடு
ஒருபலம் ஆம் அந்தம் ஈறு அழகாக உரைசெய்வரே
** கந்தம் கடு துண்டம் கண்டம் குயிறல்
**525
#19
கடியே கிழங்கு புனல் கந்தம் ஆகும் கடுமரமே
விடமே கடு என்பர் துண்டம் கழுத்து மெய்சேர்கருவி
அடல் வாள் திரையுடன் தேசமும் கண்டம் அதாம் செறிதல்
குடையொடு கூறல் இவை என்பர் குயிறலுமே
** ஏற்றல் போற்றல் பகல் கோள்
**526
#20
இகலோடு எதிர்ந்து பொருதலும் கோடலும் ஏற்றல் ஆம்
புகழ்தலுடன் பாதுகாத்தலும் போற்றல் பொருவருநாள்
திகழ் ஒளியோடு நடு செயலும் தெளிந்து உரைக்கில்
பகல் அதாம் குணம் கோட்பாடு கோள் என்பர் பைந்தொடியே
** கம்பலை மடல் உம்பர் குழை
**527
#21
கருது நடுக்கம் அச்சம் ஓதை இன்னாங்கு இவை கம்பலை ஆம்
மருவு தொகுதி பனையிதழ் பூவிதழ் ஆம் மடலோடு
உரைசெய்வர் மேலிடம் தேவர்தம்பேர் இவை உம்பர் என்பர்
குருமணி சூழ் குண்டலமே தளிர்த்தல் குழை என்பரே
** கார் ஆர் தபனன் கனலி கழுமல்
**528
#22
காரே கருமை புனல் மாரிக்காலம் கருமுகில் ஆம்
ஆரே பத தேருறுப்பே கூர்மை ஆத்தி அனல் அருக்கன்
பேரே தபனன் கதிரவன் பாவகன் பேர் கனலி
நேரே மயக்கமும் பற்றும் கழுமல் நிலைபெறுமே
** முல்லை கஞ்சா கன்னல்
**529
#23
வன்திறல் கான்தன்நிலம் அதான மல்லிகை மாறுபடா
வென்றிதரு முல்லை கஞ்சா பூங்காடும் விரையும் என்பர்
குன்றல்இல் நாழிகைவட்டில் சருக்கரையோடு குடம்
என்று இவை கன்னல் பெயராம் கரகமும் ஏந்திழையே
** மது களம் களரி இழுமெனல்
**530
#24
பொழில்தருத் தேறல் செந்தேன் மது என்பர் பொருநிலத்தோடு
ஒழுகு கருமை மிடறே களம் என்பர் ஓங்கு கடம்
கழி வில் கமைகள் செருச்செய்நிலமும் களரி என்பர்
இழுமெனல் ஓசை இனிமை என்றே சொல்லும் இவ்வுலகமே
** காழ் பால் கலை துன்னல்
**531
#25
கோல் பரல் சேகு மணிக்கோவை மாலை குலவு ஒளி காழ்
பால் திசை பக்கம் பருத்தலுடன் இயல்பாம் மொழிந்த
நூல் கவ்வி ஆடை முக ஏறு காலநுட்பம் கலை ஆம்
மேல் செறிவோடு குறுகலும் துன்னல் விளங்கிழையே
** அணி மாழை பணை
**532
#26
அணி எழில் பூணோடு அழகு ஆடையும் பையோடு ஆயமுடன்
பணியில் கட்டிபொன் ஓலையும் மாழை பணை எனும் பேர்
மணமுரசோடு புரவியின் பந்தி மரத்தினில் கோடு
உணர்வில் பழனம் பொருத்தல் பணைத்தலுடன் கழையே
** திணை துத்தி அம்பரம் வம்பு
**533
#27
நெறிசேர் ஒழுக்கம் குலம் ஒழுக்கத்தின் நிலம் திணை ஆம்
பொறியே சுணங்கு திதலையும் துத்தி பொருகடல் விண்
செறி கூறை அம்பரம் கச்சு நிலையின்மை சேர் புதுமை
நறையோடு நான்கு இவை வம்பு என ஓதும் இ நானிலமே
** அணங்கு அளக்கர் தொடுத்தல் கவலை
**534
#28
மாதரும் பேயும் வருத்தமும் தெய்வமும் வன்கொலையும்
ஓதில் அணங்கு அதிலம் சேறு உததியுறும் அளக்கர்
சூதின் வளைத்தல் பிணித்தல் மெய்பற்றல் தொடுத்தல் என்பர்
காதிய துன்பம் கவர்நெறி ஆகும் கவலையுமே
** கந்தரம் அந்தில் மை கொன் எல்லை
**535
#29
கந்தரம் மேகம் மலைமுழையோடு கழுத்து எனலாம்
அந்தில் ஆங்கு அசைநிலைமை முகில் ஆடும் குற்றம்
முந்தியகாலம் பயனிலி அச்சமுடன் பெருமை
தந்திடும் கொன் பகல் தன்னோடு அளவை தரும் எல்லையே
** பிறப்பு செறிவு ஏசல் பதி மள்ளர்
**536
#30
பேசு பிறவி பிறப்புச் செறிவு பெருக்கலும் ஆம்
ஏசல் இகட்சி நகை எனலாம் பதியே உரைக்கில்
ஓசை பயிலும் இறையவனோடு அங்கு உறைவிடம் ஆம்
மாசறு வீரர் உழவர்தம் பேர் என்பர் மள்ளருமே
** கருங்கை பதம்
**537
#31
கொல்லும்தொழில் வன்தொழில் கருங்கை என்பர் கூறு நிதி
சொல்லின் உறு பெயல் பல்பண்டம் ஆம் பொருள் சோறு வழி
எல்லுறு காலமுடன் நிறம் பாவலர் எட்டுடனே
புல்லிய பேதவுரை பதமாகப் புகலுவரே
** புதை செம்மல் மாலை
**538
#32
ஏ அதின் கட்டும் புதுமையும் ஆம் புதை ஏற்ற பழம்-
பூ இறை புத்திரன் மாரி பெருமை புகலில் செம்மல்
ஏவு பொன் பூமணி சொல்லில் தொடுத்தவை ஏறும் இருள்
வாவிய அந்தி இயல்பதுமாம் என்பர் மாலையதே
** துப்பு செத்து தானை ஓதி
**539
#33
ஒப்புறு வண்ணம் பவளம் வலி அரக்கு ஓதில் இவை
துப்பு அது என்பர் கருத்து ஒப்புச் செத்து என்பர் சூழ் கலிங்கம்
கைப்படை காலாட்படை இலை தானை செங்கால் எகினம்
மைப்பயில் கேசம் மலி ஓதியாக வகுத்தனரே
** கரணம் செச்சை
**540
#34
சொல்வர் எல்லாகும் முதல்பொருட்டாம் துணைக்காரணமும்
பல்வகை ஆடலும் பாடலும் காமப்பகுதியுடன்
கல்வியும் எண்ணும் கரணம் என்றே ஒன்றும் காமர் வெட்சி
கொல்வினை மேவு வெள்ளாட்டு ஏறுமே செச்சை கூறிடிலே
** புலும்பு சிலம்பு கலுழி கலித்தல்
**541
#35
புலம்பே தனிமையுடனே நடுக்கம் புலம்பலும் ஆம்
சிலம்பே மாலை ஒலி காலணி ஆம் என்பர் சேர் கலுழி
கலங்கர் நீருடன் கான்யாறு என்பர் கலித்தல் என்னில்
நலம்சேர் எழுச்சி ஒலித்தல் என்றே சொல்லும் நானிலமே
** புலவர் மறம் உருத்தல்
**542
#36
அலைவறு தேவர் கவிகள் மெய்ப்பாடுநர் ஆடுநரே
புலநடராக வறியோர் பொருநர் புலவர் என்ப
சிலைதரு வீரம் கொடுமை சினம் கொலைசெய்தல் மறம்
உலைவறு தோன்றல் வெகுட்சியது ஆகும் உருத்தலதே
** பொருநர் கோள் நிழற்றல்
**543
#37
ஆளும் பெரும் போர்த்தலைவரும் கூத்தரும் ஆன படை
வாளொன்று வீரர் இவரே பொருநர் மருவுநவ
கோளும் கொளலும் கொலை இடையூறும் அக் கோள் அது என்பர்
நீளும் குடை நிழல்செய்தல் நுணுக்கம் நிழற்றலதே
** வாரி வதுவை கனவு நனவு
**544
#38
கனை கடல் வெள்ளமிகுதி மதிநூல் கதவு தடை
எனில் இவை வாரி வதுவை மணம் மன்றல் என்று இவையும்
புனைதரு வாசம் மணம் புணர்வாம் துயில் பொய் மயக்கம்
கனவு எனல் ஆகும் நனவே தெளி கண் என்பரே
** வாரி வதுவை கனவு நனவு
**545
#39
வேய் அமை ஒற்றுடன் வீணையும் ஆகும் மிகு வருத்தம்
ஏய வலியிடை தா என்று உரைசெய்வர் ஏற்ற கல்வி
சேய செவி இவை கேள்வியது ஆம் புலனும் திறனும்
வாயில் அது என்பர் வடிவேல் அனைய மதர்விழியே
** வேளாண்மை நாகம் முளரி
**546
#40
வேளாண்மை ஆவது உபகாரம் மெய் உபசாரம் விண்ணோ
அங்கு ஓர் மரப்பேர் மலையாடு அரவு
காளம் அசலம் இவை நாகம் என்று ஓதுவர் காய்கனலே
காளார் மரை முள்மாமரம் முளரி அதே
** வேலன் விருத்தி சுடர் கயம்
**547
#41
உரை முருகன் வெறியாட்டாளன் வேலன் உரிய பொருள்
விரிதர ஓதல் விருத்தி முதுமொழி வெம் கனலே
சொரி தண் திங்கள் கதிரே சுடர் என்பர் சூழ் கயமே
கரியினில் கன்றுடன் ஆழம் நல்நீர் எனக் கற்பித்ததே
** தாலம் மதலை பதலை இறும்பூது
**548
#42
தரைபனை உண்கலம் நாத் தாலம் ஆகும் தவப்புதல்வர்
பரவு மரக்கலம் தூணே மதலை பதலை என்னின்
விரவிய தாழி பரந்தரு வாய்ப்பறை மெய் வியப்போடு
அருள் சிறுதூறு மலை இறும்பூது என்று அறைவர்களே
** குளிர் பிறங்கல் மறை சிரகம்
**549
#43
இரை பயில் கிள்ளைகடியும்கருவி இலைமூக்கரி-
கருவி குடமுழவு ஆகும் குளிர் பிறங்கல் உயரம்
பெருமையும் ஆகும் மறை தேரல் வேதப்பெயர் மறை ஆம்
சிரகம் என்னில் கரகம் துவலை செயல் தருமே
** நீவி கேவலம் ஆகம் வறிது எகினம்
**550
#44
நீவி அரித்தல் துகில் கொய்சகம் உடனே துடைத்தல்
கேவலம் ஆகும் தனிமையும் முத்தியும் கேயூரமார்
ஆவி பயில் உடல் ஆகம் சிறிதொடு அருகல் வறிது
ஏவிய நாயோடு அனமே கவரி எகினம் அதே
** முடலை விடங்கம் படலை மடங்கல்
** இருத்தல் கவிகை
**551
#45
முடலை திரட்சி முருடு ஆம் விடங்கம் முகடு அழகு ஆம்
படலை எனில் பகை கூற்று ஊழித்தீ சிங்கம் பாயும் உரும்
இடி நோய் மடங்கல் இகுத்தல் செகுத்தலும் வீழ்த்துதலும்
குடை கொடை என்னும் இரண்டும் கவிகை அதாம் என்பரே
** அள் ஞெள்ளல் பள்ளி இதழ் வள்
**552
#46
அள் எனில் காது செறிவுடன் வன்மையது ஆகும் என்பர்
ஞெள்ளல் தெருவுடன் மென்மை துயில் இடன் இரண்டும்
பள்ளி பனையிலை பூந்தோடு ஆகும் பயின் இதழ் ஆம்
வள் எனில் கூர்மை வலியுடனே வடி வாள் என்பரே
** ஆணை தாயம் ஆயம் மதவு காயம்
**553
#47
ஆய மெய்ப்பாட்டோடு இலாஞ்சினை சூழ் விறல் ஆணை என்பர்
தாயம் உரிமையுடன் தம்குடித்தமர் தாய்த் திரள் சூது
ஆயம் அது என்பர் வனப்பே வலியுடன் நீளம் மதவு ஆம்
காயம் அது என்னில் யாக்கையும் காழ்ப்பும் கருதியதே
** கோல் கட்டளை தெவிட்டல்
**554
#48
இறைமுறை செய்தலின் யாழ்நரம்பே மை எழுதுவது
நிறையே துலாம் மத்திகை அம்பு கோல் என்பர் நீண்ட நெறி
அறிவது உரைத்து அங்கு அறிவது கட்டளை ஆம் ஒழித்தல்
திறவோடு உமிழ்தல் இரட்டல் தெவிட்டலின் செய்தியதே
** அழுங்கல் வழங்கல் அற்றம் உலவை கழங்கு
**555
#49
அழுங்கல் இரக்கமுடன் கேடுறல் சொல்லலோடு அளித்தல்
வழங்கல் அதாம் அற்றம் சோர்புடன் ஈய மறைப்பொருள் ஆம்
ஒழுங்கேர் சாற்று மரக்கோடு மாமருப்பு ஆம் உலவை
கழங்கு அணங்காட்டுக் கொடி கழல் ஆகவும் கற்பிப்பரே
** அறல் இறை உறழ் பொறை
**556
#50
அறலே வயவு கருமணல் நித்திரை ஆகும் என்பர்
இறையே சிறிது உயர்ந்தோர் தங்கலே கடன் இல் இறப்பு ஆம்
உறழே செறிவு இடையீடே புணர்வுடன் ஒத்தலும் ஆம்
பொறையே சுமத்தல் பொறுத்தலுமாகப் புகலுவரே
** கருவி ஓரை முற்று
**557
#51
சுடர் பூண் தொகுதி படைக்கலம் பல்லியத்தின் தொடர் யாழ்
இடம் மேவு கொண்டல் கலனை கவசம் இயம் கருவி
உடன் மாதர்கூட்டம் இராசியும் கூற்றோடும் ஓசை என்பர்
முடிவாய் வளைத்தல் முழுவதும் ஆம் என்பர் முற்றினையே
** தூவு கழுது வேலை சினை
**558
#52
ஏவும் பசையும் தசையும் பறவை இறகினையும்
தூவு என்பர் பேய் வண்டு இதணம் கழுது என்பர் சூழ்ந்த கடல்
மேவும் கடற்கரை காலமும்தான் இவை வேலை என்பர்
ஓவும் சினை மரக்கோடு ஆகுவ ஒன்று உறுப்பு என்பரே
** படர் பதங்கம் நனை கடிகை காலை
**559
#53
படர் எனில் உன்னல் செலவே பரிவு பதங்கம் விட்டி-
லொடு பறவைப் பொதுப்பேர்களும் நனை பூவின் மொட்டு என்பர்
கடிகையும் வேதம் சமயம் கள் நாழிகை காலை எனில்
தொடர்தரு காலமும் நாள்கூறும் ஆம் எனச் சொல்லுவரே
** எற்று வயிரம் மற்று கொற்றம்
**560
#54
எற்றே நினைவு துணித்தல் புடைத்தல் எறிதல் எற்றல்
செற்றமுடன் வன்மை வச்சிரம் கூர்மை அச் சேகு மணி
மற்று இவையே வயிரம் வினைமாற்று என்பர் மற்று எனும் சொல்
கொற்றம் அரசியல் வெற்றியும் ஆகவும் கூறுவரே
** வீசல் தேசிகம் பாடலம் காசறை பாசம்
**561
#55
வீசல் கொடுத்தல் எறிதல் திசைச்சொல் மிகும் அழகும்
தேசிகமே என்பர் பாடலம் பாதிரியே சிவப்பு ஆம்
காசறை நாணலும் காயாமரம் என்பர் கற்றறிந்தோர்
பாசமும் ஊசித்துளை கயிறாகப் பகருவரே
** தண்ணடை பாடி கட்சி ஓரி
**562
#56
நாடுடன் ஊர் இவை தண்ணடை நாடு நகரம் இவை
பாடியும் ஆகும் படைவீடு அஃது என்பர் பாதகஞ் சேர்
காடுடன் கூடு இதண் என்றல் கட்சி கருநரியோடு
ஆடவர் தங்கள் மயிர் ஓரியாக அறைவர்களே
** மூரி ஊர்தி அரலை தரணி
**563
#57
மூரி பெருமையும் ஆன்ஏறும் ஆகும் முழங்கு கரி
தேரொடு மாவும் சிவிகையும் ஊர்தி திகழ் அரலைப்
பேர் அது கூறில் கனிக்காழ் கழலைப் பிறங்கலுடன்
தாரணிதன்னோடு இரவியும் ஆகும் தரணியதே
** இரலை பல்லம் முரண் கழிதல் இறத்தல்
**564
#58
இரலை புல்வாய் கலை ஊதிய கொம்போடு இசை தலைநாள்
கரடி சிலீமுகம் பல்லம் அதாம் வலி பாய் பகையே
முரண் எனல் ஆகும் கழிதல் இறத்தல் மொழியின் இவை
உருவழி சாவு கடத்தல் இகத்தல் என்று ஓதுவரே
** தட தவ வெடி முருகு ஏனை
**565
#59
தட எனில் கோட்டம் பெருமை தவ மிகுதல் குறைதல்
வெடி எனில் வெள்ளிடையோடு வெருவுதல் வேள் விழவு
கடியோடு இளமை வெறியாடு வேலன் கருது எழுச்சி-
யுடனே முருகு எனும் ஏனை ஒழிவோடு இடைச்சொல் அதே
** மானுதல் படை தானல் வயின்
**566
#60
மானுதல் ஒப்பு மயக்கமும் ஆம் என்பர் மண் சயனம்
தானையோடு ஆயுதமே உழு நாஞ்சிலும்தான் படை ஆம்
கானல் கதிரொளியே மலைச்சார் கடற்சார் பொழில் ஆம்
ஆன வயிறு மனை இடமே வயின் ஆம் என்பரே
** கூலம் மூலம் கழல் வேலி
**567
#61
கூலமும் நீர்க்கரை பல்பண்டம் பாகலைக் கூறும் என்பர்
மூலம் எனும் பெயர் நாளொடு வேரும் முதலும் என்பர்
காலடித் தோலொடு காலொடு காலணியும் கழல் ஆம்
வேலி மதிலுடன் காவலுமாக விளம்புவரே
** வண்ணம் காசு குரை அருணம் ஆசு
**568
#62
மாசுஇல் மரபு பெருமையும் வண்ணம் மணி குற்றமே
காசு எனல் ஆகும் குரையே இடைச்சொல் கருது ஒலி ஆம்
மாசுஇல் அருணம் சிவப்போடு மான் அழகு ஆகும் என்பர்
ஆசு மெய்சேர்வு கலியே சிறுமை குற்றமதே
** பனி வனம் அழுங்கல் கனம் நியமம்
**569
#63
பனி எனில் துன்பம் நடுக்கம் அச்சம்தரும் பாய்புனல் கான்
வனம் எனல் ஆகும் அழுங்கல் அரவம் இரங்கல் என்பர்
கனம் எனல் ஆகும் செறிவொடு மேகமும் காமர் தெரு
நினைவகலாத நியதியும் ஆகும் நியமம் அதே
** ஊறு வசை(வசி) நூல் அசைதல்
**570
#64
உசை இடையூறு உற்றறிபுலன்தான் இவை ஊறு அது என்பர்
வசை எனில் போழ்ந்த வடுக் கூர்மை தாட்சி வருட்டல் என்பர்
இசைதரு நூல் எனின் எண்ணம் பனுவல் இசைக்கும் என்பர்
அசைதலை நோதலும் தங்கலுமாக அறைகுவரே
**நவிரம் குலம் ஆலுதல் சேண் ஆர்தல்
**571
#65
மலைதனின் உச்சி மருதயாழ்த்திறன் நவிரம் என்பர்
குலம் எனில் இல்லமும் கூட்டமும் கூட்டும் குடியும் ஆம்
ஒலியுடன் ஆடுதல் ஆலுதல் நீளம் உயரமும் சேண்
அலைவற ஆர்தல் நிறைதலும் உண்டலும் ஆம் என்பரே
** தளிமம் வலம் நளி மறலி வளம்
**572
#66
உறைதரு மெத்தை அழகே தனிமம் உறைவிடமே
விறலொடு மேலிடமே வலம் என்பர் மிகு பெருமை
செறிவு இவையே நளி என்பர் வெங் கூற்றொடு சேர் மயக்கம்
மறலி அது என்பர் வளப்பாடு பண்டம் வளம் என்பரே
** மூரல் பாலை
**573
#67
மூரல் நகை எயிறே சோறு நீர் இன்றியே முதிர்ந்த
பார் தரு பாரினில் பாடலும் பாலைப் பதியிடத்தில்
பேரல் பொருளில்பிரிதல் பரிவரை பெண்உடன்கொண்-
டார் உடன்போதல் அவை பாலையாக அறைகுவரே
** குறிஞ்சி மருதம் படிவம் அண்டர்
**574
#68
செழு மலைச் சார்இடம் அந்நிலப்பாடல் செம்முள்ளி செய்வே
மொழிவர் குறிஞ்சி பயன் நிலம் அந்நிலத்தோர் முடிய
வழிபடு பாடல் மருதம் அவிர்தல் வடிவம் இவை
அழிவுஇல் படிவம் அமரரோடு ஆயரும் ஆம் அண்டரே
** மனவு சுடிகை புணரி முனை வியங்கோள்
**575
#69
மனவு எனில் அக்கு மணி ஆடை வேணி மயிர்முடியும்
புனைதரு சூளிகையோடே சுடிகை புணரி கடல்
வனை கடல் சூழும் கரை திரை ஆம் வெம் பகை இறைமை
முனை எனலாம் வியங்கோள் ஆணை ஏவல் முறைபெறுமே
** வரை கணம் அருகல் கரில் தாபரம்
**576
#70
வரை எனில் பாடல் எழுதல் வடிவு வட்டம் திரட்சி
உரைசெய் கணம் என்பர் சாதல் சுருங்கலுடன் உரைக்கில்
அருகல் என்று ஓதுவர் கூர்த்தல் கொடுமை அவை உரைக்கில்
கரில் மலை போல் மரம் போல் நிற்கும் தாபரம் காண் என்பரே
** பலி பரவை அலரி சித்திரம் மெய்
**577
#71
பலி ஐயம் சோறு கடலே பரப்புப் பரவை என்பர்
அலரி மென் பூவும் அருக்கனும் ஆம் பொய்யையான மெய் போல்
சில செய்தலும் வடிவு அழகொடு கோலமும் சித்திரமே
நிலைபெறு சொற்பொருள் மெய்யெழுத்தோடு மெய் நேர்ந்திடுமே
** மன் தண்மை இயல் மாடு கணை
**578
#72
மன் மன்னவன் இடைச்சொல்லுடன் மன்னலும் ஆம் செய்தலும்
தன்மை இடப்பொருளும் தன்மை ஆம் இயல் சாயல் நடை
பொன் மணி போல்வனவே தனம் மாடு புனை திரட்சி
வின்மலி ஏவும் பகழி அதுவாகும் விறல் கணையே
** செயிர் கற்பம் அரணம் விதி குரல் கரைதல்
**579
#73
செயிர் எனில் குற்றம் சினவலும் ஆம் கற்பம் தேவர்உலகு
அயனுடைய ஆயுள் மதிலே கவசம் அரணம் என்பர்
இயல்புடனே செயல் ஆகும் விதி குரல் யாழ்நரம்பு
பயில் கதிர் கூவல் மொழிதல் கரைதலின் பாற்படுமே
** சிக்கம் காரி நீலம் வெள்ளை
**580
#74
உறி மயிர்வார்தரு சீப்பு இவை சிக்கம் உயர் சனிக்கோள்
கறை பயில் நஞ்சொடு சாத்தன் இருள்நிறம் காரி என்பர்
நிறை புனல் நெய்தலின் நீல நிறத்தன நீலமணி
அறைகுவர் நீலம் வெள்ளாடு வெண்பா வெண்மையாம் வெள்ளையே
**உழை வழி வாரம் கைக்கிளை
**581
#75
உழை எனில் யாழ்நரம்போடு இவை மான் என்று உரைத்திடுவர்
வழி இடனோடு பின்னும் வரையார் என்பர் வாரம் என்னில்
கிழமை பகுதி மலைச்சார்வு அதாம் என்பர் கைக்கிளையே
கழுமிய யாழின்நரம்பொடு ஒருதலைக்காமமுமே
** வையம் ஆற்றல் வாள் எஃகம் வில்
**582
#76
தேரோடு அவனி சகடம் எருது சிவிகை என்னும்
பேர் இவை வையம் வலி செயல் ஆற்றலின் பேர் அது என்பர்
கூரிய வாள் ஒவ்வொளி வாள்உழுபடை கூரம் வை வேல்
தாரும் எஃகம் வில் இரட்டையோடு ஒளிதான் தருமே
** அங்கதம் விளரி எல் நாண்
**583
#77
அங்கதம் தோளணிதன்னோடு அரவு என்பதாம் இளமை
தங்கிய வேட்கையுடன் யாழ்நரம்பு தரும் தகுதி
இங்கு இவை ஆகும் விளரி எல்லே ஒளியோடு இரவு ஆம்
மங்கலமான அணி பாசம் நாண் என்பர் மாதவரே
** அரி
**584
#78
சிங்கம் அளி திருமால் கவி இந்திரன் திகிரி படை
பைங்கிளி கிண்கிணி பெய்பரல் வாசி பறவை நிறம்
வெங் கதிர் பன்றி வலி பகை பொன் புகை வெம் பணி கூற்று
அங்கி புலி கவி வாள் தேரை ஊகை அரி என்பரே
** நகை பொருள் இடி தொய்யல்
**585
#79
மகிழ் வினோதம் விளையாட்டு இடையோடு வரும் நகையே
இகழ்வதுமே பெறும் செல்வம் வெறுக்கை என்னில் பொருளாம்
தகரம் நறுஞ் சுண்ணமோடு தருப்பணம்தான் இடி ஆம்
திகழும் உழவு ஏர் குழை தொய்யல் மகிட்சியும் செப்புவரே
** நாகு கூழ்
**586
#80
ஆன் ஆடு எருமை மரை இவை அல்லனவாம் கொழுமை
ஈனாஇளமை நன்னீர் வாழும் சாதி இளமரமே
தான் ஆகும் நாகு தழையுடன் சொல்லும் தமனியமும்
ஏனாடு உணவு பயிர் இவை கூழ் என வேண்டுவரே
** இதை கிழி ஊக்கம்
**587
#81
இதையே மரக்கலப்பாயே புதுப்புனம் ஏற்ற பொருள்
பொதி ஆடைகீறல் எழுதும்படமும் புனை கிழி ஆம்
விதமார் முயற்சியும் வண்மையும் உண்மையும் மெய்மனத்தில்
உதை ஆதரத்து மிகுதியும் ஆம் என்பர் ஊக்கம் அதே
** கடி நேர்
**588
#82
விரைவு விளக்கம் கரிப்பே புதுமை மிகுதி ஐயம்
வரைவு முன்றேற்றுச் சிறப்பொடு கூர்மை மணம் எச்சமே
கருது காப்பு வெம் பேய் மணம்செய்தல் கடி எனலாம்
நெடிது உடன்பாடு கொடை ஒத்தல் தனி நேர் என்பரே
** வாகை
**589
#83
எண்ணெண் கலையினில் ஈகையில் பண்பில் எழில் ஒருத்தல்
நண்ணும் செயலில் மரபினில் செல்வத்தில் நல் அறிவில்
கண்ணும் தருமத்தில் வீரத்தில் ஐம்புலன் காத்து முத்தி
வண்மை பெறு நெறியில் பேர் பெறுவது வாகையதே
** பாரதிதீப வரலாறு
**590
#84
வெருவாது உயர் அந்தமும் மெய்வீடு கண்டருள் வேங்கடவன்
பருதிக் கதிரொளி போல்வன பாரதி பங்கையம் சேர்
இருகைப் புயல் சொற்ற பாரதிதீபத்தின் ஏகாதசத்து
ஒருசொல்பலபொருள் பேரான் இயல் முடிவுற்றதுவே
@12 பலபெயர்க்கூட்டத்து இயற்பெயர்த் தொகுதி
** இருமை இருவினை இருசுடர் இருவகைத்
** தோற்றம் இருமரபு இருவகைக்கந்தம்
**591
#1
இருமை மறுமையும் இம்மையும் ஆம் நன்று தீது எனலாம்
இருவினை சந்திர சூரியர் என்ப இருசுடர் ஆம்
இருவகைத்தோற்றம் சரம் அசரம் ஆம் தந்தை தாய் வழி என்று
இருமரபு ஆகும் நற்கந்தம் துர்க்கந்தம் இருவகையே
** மும்மை முப்பொறி முச்செயல் முக்காலம் மும்முரசு
**592
#2
மருவிய உம்மையும் இம்மையோடு உம்மை மறுமை அதாம்
கருதிய வாக்கு மனம் காயம் முப்பொறி காத்து அழித்தே
இரித்தலும் முச்செயல் முக்காலம் இறப்பு எதிர் நிகழ்வு ஆம்
முரசு எனில் வீரம் நியாயம் தியாகம் இம்மூன்று என்பரே
** மூன்றுஇடம் முந்நிலம் முக்குற்றம் முச்சுடர்
**593
#3
முன்னிலை தன்மை படர்க்கை எனும் இவை மூன்றுஇடம் ஆம்
முந்நிலம் பூமியோடு அந்தரம் கோ என்பர் முக்குற்றமே
முன்னிய காமம் வெகுளி மயக்கு என்பர் முச்சுடரே
முன் எழும் ஆதித்தன் சந்திரன் தீ இவை மூன்று என்பரே
** மும்மொழி மூவகைச்சீவ அனல் முத்தீ
**594
#4
மும்மொழி வாழ்த்தல் பழித்தல் பட்டாங்கு என்பர் மூவகை ஆம்
செம்மையில் பூதம் உதரமுடன் விந்துச் சீவஅன-
லம் முத்தீ காருகபத்தீயம் ஆகவனீயமுடன்
கைம்மிகு மன்சுவந் தென்திசை அங்கிக்குக் கற்பித்ததே
** முக்குணம் சாத்துவிகம் இராசதம்
**595
#5
முக்குணம் சாத்துவிதமோடு இராசதம் தாமதம் ஆம்
அக்குணம் ஞானம் தவம் கல்வியோடு ஐம்புலன் அடக்கல்
இக்குணம் நல் அருள் ஆனந்தம் மெய்ம்மை இனிய தவம்
தக்கதோர் தானம் தருகும் இராசத தற்குணமே
** தாமதகுணம் மூவகைத்தானம் உத்தமதானம்
**596
#6
கிளர் பெருஉண்டி மடி வஞ்சளை நிதி கேடு உறக்கம்
களைதரு காமம் சலம் இவை தாமதம் கட்டுரைக்கின்
அளவு எனும் உத்தமம் மத்திமத்தோடு அதமங்களதாய்
உளத்து இனிது ஏற்ற நிதி நல் தவர்க்கு இடில் உத்தமமே
** மத்திமதானம் (அதமதானம்)
**597
#7
ஆதுலர் அந்தகர் மாதர் உறுப்பிலி யாங்கள் அவர்க்கே
ஈதலும் மத்திமம் கண்ணோட்டம் காரண மேற்று அனுக
...... ..... ...... ...... ......
...... ..... ...... ...... ......
** திரிகடுகம் திரிபலை திரிபுரம் ஆதித்தன் மூவகை வீதி
**598
#8
திரிகடுகம் சொல்லில் சுக்கு மிளகு இவை திப்பிலி ஆம்
திரிபலை தான்றி கடு நெல்லி வெள்ளி பொன் சேர் இரும்பு ஆம்
திரிபுரம் மேடம் இடபம் மிதுனம் எனத் திகழும்
திரிவிதம் ஆதித்தன் தேரோடு வீதித் திறம் இதுவே
** நாற்புவி நாற்படை நாற்கதி நாற்புகல்
**599
#9
நாற்புலி முல்லை குறிஞ்சி மருதம் நறு நெய்தல் ஆம்
நாற்படை தேர் கரி காலால் குதிரை என நவில்வார்
நாற்கதி உம்பர் மனிதர் விலங்குடன் நாகர் என்பர்
நாற்புகல் வெற்பு மதில் காடு நீர்என நாட்டினரே
** நான்மறை நாற்புலவோர்
**600
#10
தாதரு நான்மறைதானே இருக்குத் தயித்திரியம்
கீதத்து அடர்தரு சாமம் அதர்வணமே கிளர்க்கும்
காதிய நாற்புலவோரும் கவியுடனே கமகன்
வாதியும் வாக்கியுடனே உரைக்கும் மகிதலமே
** சுவி கமகன்
**601
#11
சிலர் புகழ் நால்வகை ஆசு மதுரம் அச் சித்திரத்தோடு
அலைவறு பல்வகை வித்தாரம் பாடும் அவன் கவி ஆம்
இலகிய ஞாபகம் செம்பொருள் ஆம் அவற்று எப்பொருளும்
கலை தெரியும்படி பாடவல்லோன் அக்கமகனுமே
** வாதி வாக்கி
**602
#12
கருதிய ஏதுடன் மேற்கொள் எடுத்து உடன்காட்டி தன்கோள்
வர நிறுவிப் பின் பிறன்கோள் மறுப்பவன் வாதி என்பர்
விரவின் அறம் பொருள் இன்பம் நல் வீடு இவை மெய்விளங்க
உரைசெயும் ஆற்றலுடையானை வாக்கி என்று ஓதுவரே
** ஆசுகவி மதுரகவி
**603
#13
தொடுத்த பொருளில் தொடித்த இன்பத்துடன் தோமளவாய்
அடுத்த பொழுதினில் பாடுவது ஆசு என்பராம் அடியோடு
எடுத்த தொடையும் விகற்பமும் கேள்விக்கு இனிய சொல்லாய்
வடித்த பொருள்செல்வமாய பாப் பாடல் மதுரம் அதே
** சித்திரகவி
**604
#14
அக்கரசித்திரம் ஆகாரசித்திரம் ஆன கதி
மிக்கிடு சித்திரம் பெந்திதைசித்திரமே என நான்கு
ஒக்க இருத்தல் அறுபத்துநாலென்று உரைச்சித்திரம்
திக்கயம் முற்றும் புகழ்தரப் பாடுகை சித்திரமே
** வித்தாரகவி
**605
#15
தெரிதரு கோவை பரணி உலா மடல் சின்னம் என்றோர்
அரிதினில் பாடும் புராணமே அக் காவியம் ஐந்துமாய்
இருளறச் சொல்லும் இயல் இசை நாடகத்தோடு எவையும்
விரிதரப் பாடுதல் வித்தாரமாக விளம்புவரே
** நால்வகைப்புண்ணியம் சிலையோர்நால்வகை நிலை பைசாசம்
**606
#16
நாலது புண்ணியம் தானம் தவம் கல்வி நல் ஒழுக்கம்
நால் உளதாகும் வகையே நிலைமை பைசாசமுடன்
ஆலிடம் மண்டிலம் அப் பிரத்தாலிடம் மற்று அவற்று ஓர்
காலை முடக்கி ஒருகால் நிறுத்தல் பைசாசம் அதே
** ஆலிடம் மண்டலம் பிரத்தாலீடம்
**607
#17
முதல் வலக்கால் மண்டலித்து இடக்காலுடன் முந்துறவே
அது விருப்பு ஆலிடம் அல் இருக்கால் மண்டலித்து அழகால்
எதிரிருப்பாய் மண்டலம் இடக்கால் வளைத்திட்டு ஒருகால்
விதியின் முற்பந்தாம் எனச் செப்பினரே
** 608 முதல் 610 வரை (18,19,20) 3 பாடல்கள் இல்லை. இவற்றை
** எழுதத்தக்க அளவு -- 64 ஆம் ஏட்டினடியில் இருவரிகள், பின்
** பக்கம் 5 வரிகள் எழுதக்கூடிய அளவு -- வெற்றிடம் விடப்
** பட்டிருக்கிறது. எனவே, இவ் வேட்டிற்கு மூலமான ஏட்டிலும்
** இக்குறைபாடு இருந்ததுபோலும். திவாகரத்துடன் ஒப்பு
** நோக்கினால், ஐந்திணை, பஞ்சவாசம், பஞ்சாங்கம், ஐவகை
** இசைக்கருவி, மதனன் பஞ்சபாணம் பற்றியனவாக இப்
** பாடல்கள் அமைந்திருத்தல் வேண்டும் என ஊகிக்கலாம்.
**பஞ்ச சயனம், ஐம்பால், முடி, ஐந்துண்டி
**611
#21
திட மயிர்ச்சேணம் படாம் பஞ்சின் மெத்தை அம் தூவியுடன்
படர் விரிப் பாயுடன் பஞ்சசயனம் ஐம்மயிரின்பால்முடி ஆம்
வடி குழல் தொங்கல் பனிச்சை சுருள் கொண்டை மாந்தல் நக்கல்
அடர விழுங்கல் கடித்தல் சுவைத்தலோடு ஐந்துஉண்டியே
** குதிரை ஐங்கதி சிவன் ஐம்முகம் ஐம்பால்
**612
#22
மருவிய மல்லர் மயில் முயல்தன்னுடன் வானர
சரகதி ஆகும் பரிஐங்கதி வாமம் சத்தியம் தற்-
புருடம் ஈசானம் அகோரம் இவ் ஐந்தும் புராரிமுகம்
ஒருவன் ஒருத்தி பலர் ஒன்று பல ஐம்பாற்கு உரித்தே
** வினாஐந்து அந்தணர் அறுதொழில்
**613
#23
அறியான் வினாதல் அறிவொப்புக் காண்டல் ஐயம்அறுத்தல்
பிறிதாம் உணர்வு அவன்பாற்கோடலே சொற்பினையலற்கே
உறவார் மெய்காட்டல் வினாஐந்துடன் ஓதல் ஓதுவித்தல்
முறை வேட்டல் வேட்பித்தல் ஏற்றல் கொடுத்தல் மும்மூன்றதுவே
** அரசர்அறுதொழில் வணிகர்செய்தொழில்ஆறு
**614
#24
ஓதுதல் வேட்டல் கொடுத்தல் படைக்கலமுற்று இயற்றல்
பூதலம் காத்தல் அரசற்குஅறுதொழில் பூவணிகர்க்கு
ஈதல் உழவு பசுக்காவல் வாணிகம் என்றும் மறை
தீதற ஓதுதல் வேட்டல் என்று ஆறு என்பர் செய்தொழிலே
** உழவர் அறுதொழில் காருகவினைத்தொழில்
**615
#25
உழவொடு வாணிகமே பசுக்காவல் உயர் மறையோர்
வழிவர நிற்றல் குயிலுவம் காருகம் வானனதித்
தொழுமர பார் ஆறுதொழில் பட்டுத்துகில்அமைத்தல்
கழுவுதலோடு சுமத்தல் தொழில் என்பர் காருகமே
** ஆறங்கம் அறுசமயத்தர்
**616
#26
வேதம் மெய் மந்திரம் சந்தோபிசிதி வியாகரணம்
ஆதி நிகர்இல் தநிருத்தம் அச் சோதிடம் ஆறு அங்கம் ஆம்
தீதுஇல் நையாயிகர் மீமாங்கரே புத்தர் சேடிகரே
தாதிய லோகாயுதரே அருகர் சமையத்தரே
** உட்பகை ஆறு அறுவகைத்தானை
**617
#27
காமம் வெகுளி மயக்கம் உலோபம் கருது மத-
மே மாறுகொளல் இவை ஆறும் மெய் உட்பகை எனவாம்
வாம வில் வேல் வடி வாள் ஆனை தேர் வடி வாசி என-
லாம் அவையே அறுதானை என்று ஓதுவர் அந்தணரே
** நாட்டுவகைஆறு அரசியல் ஆறு
**618
#28
செய்வுறு செல்வம் விளைவொடு பல்வளம் சேமமுடன்
ஐவரு நோய் குறும்பின்மை இது ஆறும் நவின்றிடும் மெய்
உய்வகை ஆகும் படை குடி கூழ் அமைச்சொடு நட்போடு
ஐய்வகை ஆகும் அரணே உடையது அரசியலே
** அறுசுவை அறம் பொருள் இன்ப - அறநிலை மறநிலை ஆறு
**619
#29
அலைவுஇல் அறுசுவை தித்தித்தல் கைத்தல் அறப் புளித்தல்
துலைவுறு கார்த்தலுடனே உவர்த்தல் துவர்த்தல் என்பர்
உலகின் அறம் பொருள் இன்பம் மூன்றினில் ஓர் இரண்டாய்
நிலவி அறம்மறம்தன்னோடு அறுவகை நேர்படுமே
** அறநிலைஅறம் அறநிலைப்பொருள்
**620
#30
தூ நிரைமீட்டல் துடர் நிரை ஓட்டல் செஞ்சொல்துறவோர்
மானவொடு ஏவின செகுத்தல் அறநிலை மன் அறம் ஆம்
சேனையோடு ஆர் அமர் கொள்ளல் நிரைகொள்ளல் செய்து அவத்தால்
ஆன தண்டிப்பொருள் எல்லாம் அறநிலைக்கு ஆம் பொருளே
** மறநிலை இன்பம் கன்மபூமிப்பயன்
**621
#31
ஏறுதழுவல் பொருளேகொடுத்தல் இயக்கம்எய்தல்
சீறி வலிதினில் கோடல் மறநிலைசேர் இன்பம் ஆம்
கூறும் உழவு தொழில் வாணிபம் வித்தை கூடு புகழ்ப்
பேறு படு சிறப்பே கன்மபூமிப் பெரும்பயனே
** போகபூமி
**622
#32
ஒத்த குலம் கவ்வியரோடு இளமையும் மோக இன்பத்து
ஒத்தபிராயப் புமான் மட மாதினுக்கு ஓங்கு தரு
ஒத்து நுகர்ச்சி அமுதோடு அளிக்க உருகிவிடா
ஒத்த அப் போகம் தரு போகபூமி என்று ஓதுவரே
** அறுவகைப் போகபூமி
**623
#33
மாமதில் ஆய்அரிவஞ்சனை நல்அரிவஞ்சமுடன்
ஏமதவஞ்சமுடனே ரணவஞ்சம் ஈதுடனே
தாம் உறை தேவகுருவமுடன் உத்தரகுருவம்
ஆம் அவை ஆறுவகைப் போகபூமி அது என்பரே
** அறுவர்சக்கரவர்த்தி எழுதீவு
**624
#34
புகலின் அரிச்சந்திரன் முசுகுந்தன் புரூரமன் போர்ச்
சகரன் நளன்தன்னுடன் கார்த்திகேயனும்தான் அறுவர்
மிகு சக்கரவர்த்தி நாவல் இறலி விறல் குசையே
திகழ் கவுஞ்சம் சனமாலி தென் புட்பகம் தீவு என்பரே
** எழுகடல் மேல்ஏழ்உலகம்
**625
#35
உப்புக் கரும்பு மது நெய் தயிரோடு ஒண் பாலுடனே
அப்புக் கடல் இவை ஏழாகும் ஏழுலகாகும் அவையாம்
ஒப்பற்ற பூப் புவலோகமுடன் சுவலோகம் சொலும்
தப்பற்ற மா சனலோகம் தவத் தவலோகத்ததே
** கீழ்ஏழ்உலகம்
**626
#36
ஏரார் அதலத்துடன் ஏழ்தலம் எழில் நிதலம்
காரார் சுதலத்தொடும் மென் இராதலம் காண் கைக்கெட்டாப்
பேரார் தராதலம் மாதலம் என்பவை கீழுலகாம்
கூர் அகி மெத்தக் குலையே படைக் கள் கோமளமே
** ஏழ்நரகம்
**627
#37
எரி அழல்வட்டம் எரி பரல்வட்டம் எரிபடையாய்
வரு சுடர்வட்டம் பொரு கரிவட்டம் வறுத்து உடனே
சொரி மணல்வட்டம் புகைவட்டம் சேர் இருள்சூழ்ந்தவட்டம்
பெருகழறாவட்டம் என்று ஏழ்நரகமும் பேர்பெறுமே
** ஏழுமாதாக்கள் ஏழுதாதுக்கள்
**628
#38
பார்ப்பினி சங்கரி கௌமாரி நாரணி பன்றிமுகி
ஏற்பவள் சாமுண்டி இந்திராணி ஆகுவரே எழுபேர்
தோல் பொலியும் தசை என்பு நரம்பு நெய்த்தோர் நிணமே
மேற்பொழி விந்துடன் எழுதாது என்ன வேண்டுவரே
** வேந்தனின் ஏழுபண்பு எட்டுத்திக்குப்பாலர்
**629
#39
அறம் பொருள் இன்பம் மறுமை புகழ் மதிப் பண்பு இவை ஏழ்
பெறும் பொரு வேந்து இந்திரன் அங்கியே யமன் பேண் நிருதி
உறும் புனல் மன்உயிர் புட்பகன் ஈசன் திக்கு ஓர் எண்மரே
சிறந்துலகு எண்திக்குப்பாலகராகச் சிறந்தவரே
** எண்திசைக்குறி அட்டமங்கலம்
**630
#40
கொடி புகை சீயமுடனே இடபம் குலக் கழுதை
அடல் இபம் காகம் இவை எண்திசைக்குறி ஆடி கடர்
படர் கொடி தோட்டி இணைக்கயலே கும்பநீர்ச் சவுரி
இட முரசு ஆனல் இவை அட்டமங்கலம் என்பர்களே
** அட்டமூர்த்தம் அட்டமாசித்தி
**631
#41
மதி அம் கதிர் அங்கி நீர் இயமானனன் வான் நிலம் கால்
இது அட்டமூர்த்தம் அடல் அட்டமாசித்தியே அணி மாக்
கதியுற்றதோர் மகிமா லகுமா பிராத்திமம் காமிகத்தோடு
உதவும் அசித்துவம் விசுவத்துவம் காமரூபிவமே
** எண்வகையோகம் இயமம்
**632
#42
மாயா இயமம் நியமாதனத்துடன் மன்னு பிரா-
ணாயாமமே பிரத்தியாகாரம் தாரணை ஆனபடி-
யே ஆம் தியானம் சமாதி என்பார்கள் இயமம் உண்மை
ஆயே கொல்லாமை புலன் காவலாம் பொருளாசையற்றே
** நியமம் எண்வகைஎச்சம்
**633
#43
சாதகமான தலம் சவுசத்துடன் தத்துவநூல்
நீதியின் ஓதல் கடவுளர்ப்பேணல் நியதி என்பர்
தீதுறு கூன் குறள் ஊமை செவிடு சிதடு என மாப்
பேத மருள் உறுப்பில்பிண்டம் எண்வகைப்பேர் எச்சமே
** எண்குணம்
**634
#44
தெழியா அனந்தம் மெஞ்ஞானம் அனந்த தரிசனத்தோடு
அழியா அனந்தமெய்வீரியம்தன்னோடு அனந்தசுகம்
இழிவான நாமமுடன் ஆகும் கோத்திரம்இன்மை இன்பம்
ஒழியா இயல்பு அவை எண்குணமாக உரைசெய்வரே
** செட்டி எண்குணம்
**635
#45
தனிமையின் ஆற்றல் உறுவது தேர்தல் தன்னோட்டரின்
மனன்அழியாமை பொழுதொடுசேரல் வருவதுஅஞ்சாது
இனிமையனாதல் பொருளீட்டல் நல்கல் எவரிடத்தும்
முனிவுஇலன்ஆதல் இவை எட்டும் செட்டிக்கு முன்னுளதே
** எண்வகைக்கணம் எட்டுமெய்ப்பரிசம்
**636
#46
இந்திரன் அங்கி இரவில் அளி இயமானன்
அந்தரம் ஆம் எண்கணமும் பிடித்தல் அடித்தலுடன்
வந்துறக் கேட்டல் தடவுதல் தட்டல் வாக்குரைத்தல் கோ-
பந்தனில் வெட்டல் இவை எட்டும் மெய்ப்பரிசங்களே
** எண்வகைமணம் எண்வகைப்போர்த்தொழில்
**637
#47
அருள் பிரமம் பிரசாபத்தியத்துடன் ஆரிடமே
பெருகிய தெய்வம் அசுரம் இராக்கதம் பேய்நிலை காந்-
திருவம் அது எண்மணம் வெட்சி கரந்தை தெரிந்த வஞ்சி
மருவிய காஞ்சி நொச்சி உழிஞை தும்பை வாகை எட்டே
** எட்டுத்திக்குயானை
**638
#48
ஆம் அயிராவதம் புண்டரீகம் குமுதம் அஞ்சனம்
வாமனம் புட்பதந்தம் சாறுவபூமம் வருமதத்துத்
தேமலியும் சுப்பிரதீபம் என்னத் திசை எட்டினும்
நாமம் மிகும் கரி நாற்கோடுடைத்தது நன்னுதலே
** நவகண்டம்
**639
#49
தெற்கு வடக்குக் குணக் குடபால் எனச் செப்புதற்கே
எக்குலவும் திசைதன்னில் விதேயம் இரேவதம் ஆம்
தற்குறிப்பாகிய பேர் எட்டும் மத்திமம்தன்னுடனே
நற்குறிப்பு ஏற்றது இவை எனல் ஆகும் நவகண்டமே
** நவமணி காணப்படாமணி
**640
#50
மாணிக்கம் முத்து மரகதம் நீலம் வயிரம் துப்பு
யாணர்க் கதரின் வயிடூரியம் பற்மராகம் இருள்
நாணத் திகழொளி கோமேதகம் என் நவமணி ஆம்
காணப்படாமணி சிந்தாமணி அக் கவுத்துவமே
** நவதாரணை நவரசம்
**641
#51
நாமம் இலக்கம் பரி கரி கஞ்சம் நயந்த செய்யுள்
தாம எழுத்துச் சதுரங்கம் நீர் நவதாரணை ஆம்
காமம் அவலம் உருத்திரம் அச்சம் சிங்காரம் நகை
ஏமறு வீரம் வியப்பே கருணை நவரசமே
** நாரணன் பத்து அவதாரம்
**642
#52
மீன் ஆமை கேழல் நரசிங்கம் வாமனமே பரசு-
ராமன் இராமன் அலாயுதன் ஆகு வடமதுரை-
யான் ஆகும் கிட்டினன் கற்கியுடன் அவதாரம் பத்தும்
தானாகி வையம் புரப்பவன் நாரணன்தான் என்பரே
** சிற்ப வினைக்குறிப்புபத்து தசாங்கம்
**643
#53
கல்லு மண் செங்கல்லு உலோகம் மரம் சுதை காமர் வண்ணம்
சொல்லிய சந்தம் மெழுகு குளம் பத்தும் சிற்பவினை
நல்ல நதி மலை மா வாசி ஊர் தொடை நாடு கொடி
வெல்லும் முரசுடன் ஆணை தசாங்க வினைப்பயனே
** உயிர்வேதனை பன்னிரண்டு அரசர் ஐம்பெருங்குழு
**644
#54
வாதம் புனல் கனல் ஆயுதம் வல் விடம் மா அசனி
சீதம் அத் தாகம் பசி தெரியாச் சினம் நோய் மருந்து ஆம்
மா துயர் ஆறிரண்டாம் உயிர்க்கு ஐங்குழு மந்திரம்
தூது புரோகிதன் சேனாபதி பொறு ஒற்றுயற்கே
** பதினெட்டு மொழியாளர்
**645
#55
அங்கர் கலிங்கர் கவுசலர் சோனகர் ஆரியரே
சிங்களர் மாளுவர் மாராடர் மாகதர் சிந்தவரே
கொங்கர் உமணர் களப்பரர் சீனர்கள் கொங்கணரே
வங்கர் துளுவர் மலையாளர் பத்தெட்டு வாசகரே
** பதினெண்கணம்
**646
#56
சுரரோடு அசுரர் இராக்கதர் சித்தர் தொழும் இசைக் கிம்-
புருடர் இயக்கரே வித்தியாதரர் நல் முனிவர்
கருடர் பிசாசரும் ஆகாசியர் கந்திருவர் தக்-
கருகர் வெம் பூதரும் இப் போகபூமிப் பன்னெண்கணமே
** அரசர் பதினெண்கணம்
**647
#57
கரணத்தினவர் கடைகாப்பர் சுற்றம்
மருமக் கரிமிசையோர் பரிவீரர் படைத்தலைவர்
அருமைப்பதியினர் தாம் என்பர் வேதியனோடு நட்டோர்
அரசற்கு அடும்படையன மா மருததனி
** உலகர்க்குஉறுதுயர் பதினெட்டு
**648
#58
வெறுப்புப் பசி நீர்வேட்டல் வெகுளி இன்பம்
பிறப்புக் கிலேசம் மதமோடு அதிசயம் பேதமையே
இறப்புச் செனூநரை பொச்சாப்பு பகை நினைப்-
புற தச செயலறவு ஏலா உலகர்க்கு உறுதுயரே
** பதினெண்புராணம்
**649
#59
மச்சம் பிரமம் வராகம் வயிணுவம் மார்க்கண்டை
அச்சம் இலிங்கம் பவுடிகம் வாமனம் காந்தர்ப்பம்
மெச்சு கதம் சைவம் ஆக்கினேயம் பிரமாண்டம் மிகு நாரதம்
கச்சபம் காருடம் மற்றும் புராணக்கலை பலவே
** முப்பத்திரண்டு அறம்
**650
#60
ஆதுலர்க்கு உண்டி அறுசமையத்தருக்காம் உணவும்
ஓதினர் உள் சிறைச் சோற்று அத்து ஓதனம் உண்கண்மருந்து
ஏதில் பிணஞ்சுடல் கண்ணாடி நோய்மருந்து இன்பம் எண்ணெய்
காதல் மகப்பெறுவித்தல் பிறலொடே
**651
#61
சந்ததிபெற்றல் முலைப்பால் மடம் தடம் கா விலங்கு
அந்தம்இல் வண்ணார் நாவிதர் பட்டார் வணைது
பந்து ஆமட்டுஊண் நிசன நாள் ஓலை களாப பாலு நல்கல்
இந்தொழில் தறினன் பண்டம் முப்பத்திரண்டு அறமே
** பிள்ளைப்பாட்டு
**652
#62
திங்கள் இரண்டினில் ஐந்தனில் ஏழினில் ஒன்பதினில்
அங்கு ஒருபத்து ஒன்றில் காப்புச் செங்கீரை அமுதுடன் தால்
தங்கு சப்பாணி முத்தம்கூறல் ஆண்டுதனில் புதல்வ
இங்கு எதிர்வாஎனல் பூச்சூட்டல் திங்கள் ஓர்எட்டினிலே
** ஆண்பிள்ளைப்பாட்டு
**653
#63
ஆண்டு இரண்டுற்ற சிறுபடைகொட்டல் அணுகிய மூ-
வாண்டினில் கோழகம்தான்செய்தல் சிற்றில்அழித்தல் ஐந்தாம்
ஆண்டில் மையாடல் சுரிகை மெய்சேர்த்தல் அவையவை அவ்
ஆண்டினில் பாடுதல் ஆண்பிள்ளைப்பாட்டுக்கு அடைவதுவே
** பெண்பிள்ளைப்பாட்டு
**654
#64
முன்னவை ஆண்டின் முடித்தல் அவ் ஆண்டு எல்லை மூன்றுதன்னில்
உன்னு கும்பகன் ஐந்தொடு அது எல்லையின் ஓங்கு வில் வேள்-
தன்னை வழிபடல் நீராடல் தண் கடலாடல் சிற்றில்-
பன்னல் அமண பொன்னூசல் பெண்பிள்ளைப்பாட்டு என்பரே
** பெண்டிர் இலக்கணம்
**655
#65
நல்லுரையாடியும் நல்லிசை ஓர நகைவிளைத்தும்
மெல்லென ஒல்கி விலங்கி நடந்தும் விழிவலையால்
கொல்லுவர் போல் எதிர்நோக்கியும் நாணியும் கொங்கையில் கை
ஒல்லை நலிந்தும் அழுது உடன் ஏங்கி ஒடுங்கியுமே
**656
#66
மருங்கினில் கைவைத்து வாகியுன் நெற்றியின் வைத்து ஒருகை
ஒருங்குடன் ஆடியும் மெண்ணானதாகியும் முன்னழிந்து
குரங்கயின் கூந்தலில் ஏந்துகை வீதியும் கோதுசெய்து
இரங்கியும் மெல்லென்று செய்வது பெண்டிர்க்கு இலக்கணமே
** உற்பாதம் ஏழுமேகம்
**657
#67
அரவொடு திங்கள் கதிர் பரிவேடம் அழல் புகை இந்-
திரவில் அடு அழல் உற்பாதம் கால் ஒளி தீப் புகையே
மருவுறு நீலிநி நீலவாருணி வாரியுடன்
இருமையவாம் புட்கலாவத்தமே என்று ஏழ்முகிலே
** திருப்பொறி
**658
#68
தாமரை சக்கரம் சங்கம் நிறைமதி தாவு இடபம்
காமுறு மானே தோட்டி நிறைகுடம் காரமுமே
பூமுடி தோரணம் நாவாய் துணைக்கயல் பூங்கடலே
ஏமுறு ரேகை திருப்பொறியாக இயம்புவரே
** அரசுயானை இயல்பு
**659
#69
ஓரேழ் உயரம் நல் நீளம் அதே பெற்றும் ஒன்பதின்முன்று
ஈரேழ் முழம் சுற்றுடைத்தாய் அச்சங்கரே சிறுமண
காரே நிறம் முன் பாது பின் தாழ்ந்து கை கால் மருப்புச்
சீர் ஏயும் தாலவட்டத்தாலும் கோறலும் திண் கரியே
** குதிரை இயல்பு
**660
#70
நாறிய பூங்குழலார் மணம் போல் கதலி
மீறிய பூமடல் போல் செவியாகி முகம் அழகாய்க்
கூறிய நாற்கதி பெற்று ஏதம் அஞ்ச காலுணையாய்
வீறிய எண்பத்திரண் குலி அத்திரி வேடிக்கையே
** பதாதி சேனம் கும்பி கணம் வாகினி பிராதனை
**661
#71
ஒரு கரி தேர் ஒன்று மா நான்கு சேவகர் ஈர்ஐவராய்
அருள்வ பதாதியது ஆகும் பதாதிகள் மும்மடியே
வரு சேனம் மும்மடி கும்பி தெ மும்மடி கணமே
தரு மும்மை வாகினி என்பது மும்மடி பிராதனையே
** சமுகம் அனிகம் அக்கிரோணி நூறு ஆயிரம் பதினாயிரம்
**662
#72
தானையுமே மும்மடி ஆம் சமுகமும் தன்னின் மும்மை
ஆனது அனிகமும் ஆம் அதில் ஐமடி அக்கிறோணி ஆம்
ஏனைய பத்துச் சதம் நூறு பத்து எனில் ஈரைந்து நூறு
ஊனம்இல் ஓர் பதினாயிரமே அயுதம் என்பரே
** மாலயிதம் கோடி அற்புதம் மாகும்பம் வாமனம்
**663
#73
ஆடல் அயிதமும் நூறாயிரம் ஆகும் மாலயிதம்
கோடி அது பத்து நூறாயிரம் அது அக் கோடி பத்தே
வாடல் அற்புதம் அக் கோடி நூறு என்ப மாகும்பமும்
நடு அது நூறுபத்தாம் கோடி வாமனம் நேர்படுமே
** சங்கு சமுத்திரம் அந்தியம் மத்தியம் பாரதம் பிரமகற்பம்
**664
#74
வாமனம் பத்துச் சங்கு என்பர் அச் சங்கு எனின் மற்று அறுப-
தாம் அதுவாகும் சமுத்திரம் ஆங்கது பத்து அந்தியம்
ஆம் அது மேல் பத்து மத்தியம் பாரதம் மேல் பத்து அதாம்
காமருவும் மேல் பத்து அதுமே பிரமகற்பு எனுமே
** பாரதிதீப வரலாறு
**665
#75
கந்தரம் என்னக் கொடையுடையான் கடம்ப அடவி வாழ்
இந்திரன் மேன்மலை வாழ் முனி போல இலக்கணத்தால்
செந்தமிழ் நூல் தெரி பாரதி பாரதிதீபம் தன்னின்
முந்திய பல்பொருள் பன்னிரண்டாம் இயல் முற்றியதே
** பாரதி தீபம் முற்றும்
**
**
|
**திருவேங்கட பாரதி இயற்றிய
** பாரதிதீபம்
@1 முதலாவது தெய்வப் பெயர்த் தொகுதி
**சிவன் பெயர்
**1
#1
அரனிறை வன்சிவன் சங்கரன் நித்தனம லன்கங்கா
தரனுமை பங்கன் மலைவில்லி தற்பரன் றாணுச்சம்பு
புரதக னன்புனி தன்பிறை சூடி புலியதளோன்
பரசு தரன்கயி லாயன் கபாலி பசுபதியே.
**2
#2
மழுவாளி யானையுரித் தோன்முக் கண்ணவன் மானிடத்தோன்
றழலார் கரன்பித்தன் பிஞ்ஞகன் சூலதரன் பெருமான்
கழையான் முத்தன் றிரியம்பகன் காளகண் டன்பணிலக்
குழையான் பினாகியை யானன னாதிசெங் கோலத்தனே.
**3
#3
விடையவன் காம தகனன்கங் காளன் விமலன்சித்தன்
சுடலையி லாடி கறைக்கண்டன் கூற்றுதைத் தோன் சடையோ
னடநவில் பாத னன்னாரி பாகத்த னாதன்விடைக்
கொடிய னுருத்திர னீறணிந் தோன்முடிக் கொன்றையனே.
**4
#4
பிறப்பிலி கண்ணுத லீசன்பெம் மான்பெண் ணிடத்தனத்தன்
மறைத்தவன் யோகி மதிசூடி யோனந்தி வண்ணனம்ப
னிறைப்பணி யாபர ணன்பாண் டரங்க னிதளியங்கன்
கறைக்கடு வுண்டவன் காமாரி காலனைக் காய்ந்தவனே.
**திருமால்
**5
#5
மாதவ னச்சுதன் வாமனன் கோவிந்தன் மாயன்மது
சூதனன் கண்ணன் முராரி முகுந்தன் றுளவணிந்தோன்
சீதரன் கேசவன் ருனுந்தி பூத்தோன் றிருவின்பிரான்
பீதக வாடையன் சங்காழி யேந்தி பெரியவனே.
**6
#6
அரிநெடு மாலவன் றாமோ தரனர விற்றுயில்வோன்
கருட பதாகையன் காகுத்த னத்தன் கமலக்கண்ணன்
பரியுரு வானவன் பாற்கட லோன்பற்ப நாபன்பச்சை
மரகத மேனியன் பஞ்சா யுதன்கடல் வண்ணத்தனே.
**7
#7
விண்டு நராந்தகன் சாரங்க பாணியன் வெற்பெடுத்தோன்
கொண்ட னிறத்த னுலகளந் தோன்குஞ் சரமுதைத்தோன்
வண்டுரு வத்தன் கருணா கரனர வாளரிபா
ருண்டவன் கோவல னாரா யணன்புரு டோத்தமனே.
**8
#8
கடற்றுயில் வண்ணன் றிருவிக் கிரமன் கவிப்பின் சென்றோன்
படப்பணி யாடி பரந்தாம னித்தன் படியிடந்தோ
னிடைக்குல நாத னுபேந்திர மூர்த்தி யிறையவனேழ்
விடைக்கெதி ராமவன் காயா மலர்வண்ணன் விண்ணவனே,
**பிரமன்
**9
#9
போதக னுந்தியில் வந்தோன் படைத்தவன் பூமிசையோ
னோதிம வாகனன் வேதா விரிஞ்ச னுபநிடத்து
நாதன் பிதாமக னான்முகன் மான்மக னாண்மலரோன்
வேதன் புனிதன் விதாதா முதுவன் விதியயனே.
**10
#10
இரணிய கெற்பன் பரமேட்டி மண்பொதுத் தந்தையிறை
குரவனெண் கண்ணினன் றாதா வெகினக் கொடியுடையோன்
பிரமன் வரன்புவி தந்தோன் மறையவன் பீதகஞ்சே
ருருவன் புராதன னம்போ ருகத்தி லுறைபவனே.
**இந்திரன்
**11
#11
வானவன் வேள்விப் பிரான்பாக சாதனன் மஞ்ஞையுரு
வானவன் கோகில வண்ணன் வலாரி யரியமரர்
கோனச லத்தின் சிறகரிந் தோன்குலி சப்படையோன்
றானவர் கோபன் குணதிசைக் காவன் சசிபதியே,
**12
#12
புரந்தரன் வாசவன் விண்ணோ ரிறையவன் பொன்னகரிந்
திரன்புனி தன்வெள்ளை வாரணத் தோன்வச் சிரகரத்தோன்
றருந்தரு வாளி சதக்கிரு தாகண் டலன்மகவான்
கரும்புய லூர்தி சுரர்பதி யாயிரக் கண்ணினனே.
**முருகன்
**13
#13
முருகன் கடம்பன் குமரன் சுவாமி முதலவன்சேய்
குருகின் பெயரிய குன்றெறிந் தோன்கொடிச் சேவலன்வேற்
கரன்கந்த னாறுமு கன்வள்ளி நாயகன் கார்த்திகையன்
சுரர்தம் பதியளித் தோன் செட்டி வேலன் றொழுபவனே.
**14
#14
சூத குலாரி நகாரி சரவணத் தோனறுமீன்
காதலன் சூர்ப்பகை சேந்தன்செவ் வேள்பொழி கார்க்குறிஞ்சி
நாதன் சிகாவள வாகனன் சேய்வெட்சி நாண்மலரோன்
றாதவிழ் காந்தளந் தாரோன் விசாகன்சொற் சண்முகனே.
**விநாயகன்
**15
#15
சங்கரன் மைந்தன் விநாயகன் சண்முகன் றன்முன்வந்தோ
னைங்கர னானை முகத்தோன் கணபதி யாகுபரிப்
புங்கவன் மால்மரு கன்னொற்றைக் கொம்பன் பொழி மதத்தோன்
பங்கய மோதகம் பாசாங் குசம்பயில் பாணியனே.
**மன்மதன்
**16
#16
மார னனங்கன் மதன்சம்ப ராரி மதிக்குடையோன்
காரிருள் வாரணன் பூவாளி மன்மதன் கந்தர்ப் பன்வே
ளாரவில் லாளி குயிற்கா களத்தனைந் தம்புடைய
வீரன் வசந்தன் ரதிபதி மீனவன் வில்லவனே.
** மன்மதன், வயிரவன்
**17
#17
காமன் மனோபவன் சித்தச னன்கரும் பாளிகடல்
மாமூர சன்றென்றற் றேரோன் மகரக் கொடியவனாஞ்
சாமளன் காரி வடுகன் வயிரவன் சாத்தனையன்
றீமையில் காரியன் சாத வாகனன் சிவன்மகனே.
**குபேரன்
**18
#18
இருநிதி யாளி குபேரன் றனத னெரிவிழிசே
ரரனுயிர் நண்ப னிதிக்கோ னியக்க னளகைப்பிரான்
பொருளிறை பிங்கல னுத்தர திக்கனன் புட்பகன்மந்
திரிகன செல்வ னரவா கனன்வச் சிரவணனே.
**அருகன்
**19
#19
அருக னசல னறவாழி யந்தண னாதியண்ணல்
வரதன் சினவரன் பொன்னெயில் நாதன் மலரின்வந்தோன்
பரமன் புனித னதிகுண னெண்குணத் தோன்பகவன்
விரதன் சினேந்திரன் புண்ணிய மூர்த்தி விளங்கொளியே.
**20
#20
பூரணன் பண்ணவன் வேளைவென் றோன்முக் குடைப்புங்கவன்
வீரன் றிகம்பரன் விண்ணவன் றேவன் விறன்முனிவன்
காரணன் சாந்த னருளாளி வேந்தன் கலையுணர்ந்தோன்
பேரரி யாசன னாசா னசோகின் பெருந்தகையே,
**புத்தன்
**21
#21
அண்ண லருங்கலை நாயகன் போதிய வன்பகவன்
புண்ணிய னாதி முதல்வன் புனிதன்சொற் புங்கவன்மெய்த்
தண்ணளி யாளன் சிவன்வரன் புத்தன் றருமவருள்
நண்ணிய செல்வ னகளங்கன் பூவி னடந்தவனே.
**22
#22
சாந்தன்முக் குற்றங் கடிந்த பிரான் பஞ்ச தாரைவிட்டோன்
மாந்தர்க் கருளிடு வோனேக தேவன் மறைவயிரி
காந்த னனந்த விலோசன னாதி கடவுளரி
யேந்திய நீழலன் வாமன்சிங் காதன மேற்றவனே.
**யமன், யமபடர்
**23
#23
சமனன் செங்கோ லிறைசண்டன் மறலி தருமன்றென்ன
னமனந் தகன்யமன் வெங்காலன் கூற்று நடுவனென்பர்
அமர்வெஞ் சமன்சண்டன் வெங்கூற்றுக் கால னடன்மறலி
நிமிர்தண் டதரன் யமன்படர் பேரென்பர் நேரிழையே.
**பார்வதி
**24
#24
ஆரியை சத்தி யயிராணி யம்பிகை யாளகண்ட
பூரணி வல்லி யுமைசங் கரிமுப் புவியளித்த
காரணி முக்க ணிமைய மடந்தை கவுரியரன்
பாரி புராதனி யெண்ணான் கறஞ்செய்த பார்வதியே.
**கங்கை
**25
#25
சீநதி சிந்து நதிசுர ராறு திரிபதகை
வானதி யாபகை மந்தா கினிவி மலைதவள
மான பகீரதி யாகாச காமி யமரர்நதி
தீநெறி மேவிய பாவங்க டீர்க்குஞ் சிவகங்கையே.
**திருமகள்
**26
#26
பானிற வாரி யமுதத்துள் வந்தவள் பைந்துளவோன்
மேனியில் வாழும் விபுத புராதனி வேண்டுமின்ப
மானவை நல்கு மபிராமி மாப்பொறி யாக்கஞ் செல்வி
பூநல னுற்றவள் செய்யவ ளிந்திரை பொன் றிருவே.
**காளி
**27
#27
சண்டிமுக் கண்ணி பயிரவி தாருகற் காய்ந்தவள்சா
முண்டியெண் டோள்வல்லி யாமளி காளி முடிக்கவுரி
மண்டிய பேய்க்கொடி மாகாளி யோகினி மாரிவடக்
கொண்டொடி மாதிரு வேதாளி யாளியை யூர்பவளே.
**காளி, மூதேவி
**28
#28
காரியைப் பெற்ற கொடிக்காடு காள்கொற்றி கார்வடுகி
சூரிசொன் மாரி சுடர்மூ தணங்கென்பர் தொன்முகடி
காரிருட் காக்கைக் கொடிச்சி கலதிதவ் வைகழுதை
யூரிதிரைச் சேட்டையள் மூதேவி கேட்டையென் றோதுவரே.
**கலைமகள்
**29
#29
நாமகள் பாரதி கீர்வாணி வெள்ளை நளினவல்லி
பாமகள் சொல்லின் கிழத்தி கலைமகள் பானிறத்தி
தாமரை யாசன நாரி பனுவற் றமிழ்மடந்தை
தேமல்கு சாவித் திரிவாணி காயத்திரி யென்பரே.
**கொற்றவை
**30
#30
மாலுக் கிளையவள் நாரா யணிகு மரிகவுரி
பாலைக் கிழத்தி பகவதி பண்ணம் பணத்தியையை
நீலிச் சயத்தி மயிடனைக் காய்ந்தா ணெறிவிசையை
யோலப் பணிலத்தி கார்த்திகை கேசரி யூர்திருவே.
**கொற்றவை, இந்திரன் தேவி
**31
#31
மேதித் தலையவ ளெண்டோளி விந்தை விறற்கொற்றவை
காதிப் பொருகன்னி யந்தரி பேரென்பர் கற்பகத்தின்
போதுற்ற வல்லி சசியயி ராணி புலோமிசைமெய்த்
தீதற்ற சுந்தரி யிந்திரன் றேவி செறிபெயரே.
**யோகினி, வானவர் மாதர், தெய்வப்பெண் பொது
**32
#32
மாய மடந்தை வலவை யிடாகினி வஞ்சனிசூ
ராயவள் சண்பனி யோகினி தானென்ப ராலரம்பை
தூயர மாதென்பர் வானவர் மாதரைச் சூரணங்கு
சேயதெய் வப்பொதுப் பெண்பெய ராகுந் திருந்திழையே.
**தேவர்
**33
#33
வானவர் தேவரிமை யோர்புத் தேளிர் வரர்விபுதர்
தானவர் மாற்றல ரண்டர்விண் ணோரமு தாசனர்மெய்ஞ்
ஞான விலேகர் புலவோ ரமரர் நலக்கடவு
ளானவ ராதித்த ரும்பர்பொன் னாட்டி லமர்ந்தவரே.
**கடவுட்பொது, அசுரர், இராக்கதர்
**34
#34
பகவர்பட் டாரகர் புங்கவர் பண்ணவர் தீர்த்தரென்றே
புகலுங் கடவுட் பொதுப்பே ரவுணர் பொருமசுரர்
தகுவர் தயித்தியர் தானவர் நான்கும்நி சாசரரு
மிகலு மரக்கர் நிசிசர் நிசாச ரிராக்கதரே.
**அரக்கரினத்தவர், விஞ்சையர், கந்திருவர்
**35
#35
கரையாது தானர் நிருதர்வெஞ் சால கடங்கடரு
முரைசா ரரக்க ரினத்தவர் விஞ்சைய ரோங்குவித்தியா
தரர்கே சரரென்பர் கின்னரர் வீணைத் தனுவினர்தந்
திரர்யா முடையவ ரென்னலு மாங்கந் திருவரையே.
**பசாசு
**36
#36
கழுது பசாசு பிரேதகஞ் சோகு கடிகண் மண்ணை
யழலுமிழ் கூளியின் வேதாளஞ் சாவோ டணங்கலகை
பழிதரு கூளி கிருத்திமஞ் சாதகம் பாரிடமா
மொழிதரு பூதங் கணங்குற ளாக மொழிகுவரே.
**ஆகாயம், காற்று
**37
#37
அம்பர மாசினி யாகாய மந்தர மண்டமங்குல்
உம்ப ரிடங்குடில் விண் வெளி மாக முயர்ககன
மம்பரம் வானம் விசும்பென்பர் வந்துப் பரிசனன்வா
தம்பவ னங்கொண்டல் கோடை சமீரணன் சதாகதியே.
**காற்று, தென்றல்
**38
#38
ஊதை மருத்துவங் கூழ்கா லனில முலவைவளி
கூதை யுயிர்ப்பரி மாருத மாபெலன் கோதையொலி
சீதளவாடை வெங் காற்றென்பர் தென்றறென் காலிரத
வாதம் வசந்த மலையா னிலமந்த மாருதமே.
**மேல்காற்று, குளிர்காற்று, வடகாற்று,
** கீழ்காற்று, சுழல்காற்று
** அங்காரகன்
**39
#39
குடகாற்றுக் கோடை குளிர்காற்றுக் கூதையு மூதையுமாம்
வடகாற்று வாடை வடந்தை குணதிசை வந்துகொண்ட
லடர்காற்றுச் சூறை வளியே சுழலு மனிலமென்பர்
சுடர்தீக் கனலன லோன்சுசி யாரழல் தூமத்தனே.
**அங்காரகன், நெருப்பு
**40
#40
அரிதக னன்றழல் பாவகன் வன்னியங் காரகன்பே
ரெரிபுவ மானன் ஞெகிழி யுதாசன னேகனலி
திரிகுணன் வாயு சகன்சித் திரபானுச் சிகிசுவலன்
நிரையெழு நாவன் றனஞ்செய னங்கி நெருப்பென்பரே.
**ஊழித்தீ, தீக்கடைகோல்
** விளக்கு, தீக்கடவுள்
**41
#41
தாழும் வடவை கடையிற் கனலுத் தரமடங்கல்
ஊழியி னங்கி ஞெலிகோல்செந் தீக்கடை யுங்கொழுங்கோல்
சூழுஞ் சுடர்விளக் குந்தீப மென்பர் சுடர்க்கனவில்
வாழு மணங்குவெம் பாவக னாக வகுத்தனரே,.
**நீர்
**42
#42
வாரி சலஞ்சலி லந்தோய மம்பு வனம்புவன
நீருத கம்பயம் வார்பாணி யங்குசம் நீரமப்பு
நார மயஞ்சம் பாங்கங் கமலம்பு னல்லறலாஞ்
சேரம் புதமலர் கீலாலங் கோவுறை சீவனமே.
**மேகம்
**43
#43
மேகம் வருணம் முகில்சீமு தம்விரி புட்கரமே
யாகுங் கவந்தங் கனரதஞ் சீவனி யாமமுதம்
பாகங்கொள் பரண்டம்நற் பானீய மாமள கம்பரதம்
போகங்கொள் காண்ட முமப்பெய ராகப் புகன்றனரே.
**பெருவெள்ளம், நீர்க்கடவுள், சூரியன்
**44
#44
வாரி பிரளையம் நீத்தம் பெருவெள்ள மாம்வருணன்
நீரிறை பாச தரன்பாசி யென்று நிறைகிரணன்
சூரிய னாதவ னென்றூழ் கை சுடர்க்கதீரோன்
மேரு வலஞ்செய் யரியினன் பானு விருச்சிகனே.
**சூரியன்
**45
#45
தரணி தினகரன் வெய்யோன் றபனன் சலசபதி
யிரவி திவாகரன் ஞாயிறு பாற்கர னெல்லைகதிர்
பருதி பகலவன் சான்றோ னருக்கன் பதங்கனொளி
யருண னிருள்வலி மார்த்தாண்டன் காலைய னாதித்தனே.
**சந்திரன்
**46
#46
மதியம் புலிதிங்கள் மானிடத் தோன்மறு மண்டலத்தோன்
விதுவிந்து வேளின் குடையா முடுபதி வெண்பிறைய
முதகதி ரல்லவன் சோமன் சசிகு முதமலர்த்தும்
பதிசந் திரனிர வாளி குபேரன் பனிக்கதிரே.
**செவ்வாய், புதன்
**47
#47
சேயரி வன்குசன் வக்கிரன் பூமகன் றீயுருவம்
ஆயவங் காரகன் செவ்வாய் நிலமக னாரலென்பர்
தூய மதிமகன் பாக னருணன் மெய்த் தூதுவன்மால்
மேய கணக்க னணுவளி பண்டிதன் மேதையனே.
**புதன், வியாழன்
**48
#48
புந்திதன் சாமன் றனவன் புலவன் புதன்றெளியுஞ்
சிந்தைய னென்பர் குருவிதி யந்தணன் றேவர்குரு
மந்திரி பீதக னாண்டளப் பான்பொன் மதிமறையோன்
பைந்தரு வாளிதன் னாசான் வியாழம் பகற்பதியே.
**வெள்ளி, சனி
**49.
#49
திங்கள் பிரசுரன் சல்லியன் வெள்ளி சிதன்பளிங்கே
சுங்கவன் மந்திரி மாமழைக் கோள்புகர் சுக்கிரன்பேர்
பங்கு சவுரி முடவன் க(ரியவன்) ............
(த)ங்கிய கீழ்மகன் மந்தன் சனிசந்திர சாவகனே.
**அனந்தன், இராகு, கேது, மேடராசி, இடபராசி
**50
#50
சேட னனந்தன் கரியோ னிராகுச் சிவந்தவண்ணன்
கூடிய கேது (க் கொறி மையுதள) ... வருடை
மேட விராசி பசுமூரி யேறுவெம் பாறல்புல்ல
மாடர் பாண்டி லிடப விராசிக்கு வாய்த்ததுவே.
**மிதுனம், கர்க்கடகம், சிங்கம்
**51
#51
இவரு மியாழ் மறிதண்டு பாடவை உவ ளெயிரமடை
சவைமக ளாகு மிதுன விராசி தயங்குகுளிர்
கவையடி ஞெண்ட லவன்கள வன்கற் கடகமென்பர்
திவளரி மாப்புலி யாளியை யானனஞ் சிங்கத்ததே.
**கன்னி, துலாம், விருச்சிகம், தனு
**52
#52
நிலமிகு பெண்பெயர் கன்னி யிராசி நிறைக்கட்டளை
துலைகுல வாணிகன் கோனிறுப் பானுந் துலாத்ததென்பர்
நலமிகு தேள்தெறுக் கால்பறப் பானென நாட்டியபேர்
தலைமை விரிச்சிகங் காண்டீபஞ் சாபந் தனுவென்பரே.
**மகரம், கும்பம், மீனம், அசுபதி, பரணி
**53
#53
குலமீன் சுறவு கலைமக ரங்குயஞ் சாடிகும்ப
மலைமீன் பலபெயர் மீனமென் றோதுவ ரைப்பசியே
தலைநா ளிரலை பரியே யசுபதி தாசிசுல்லி
பலகான மீன்தரு மன்னா ளடுப்புப் பரணியதே.
**கார்த்திகை, உரோகணி
**54
#54
வானன ளக்க ரிறாலாரல் நாவிதன் மன்னுமறு
மீனழ லங்கியென் றோதுவர் கார்த்திகை வெல்சகட
மூனமில் வையம்வெஞ் சாகாடு பண்டி யுருள்பெருந்தே
ரானவை தன்னை யுரோகணி யாக வறைவர்களே.
**மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம்
**55
#55
மதிநாள் நரிப்புற மான்றலை மார்கழி மாழ்கிந்திரன்
முதுபாலை வெய்யவன் மும்மீன் மகசிர மூதுரையே
யதிசா தனங்கை யரன்றின மாதிரை யாமதிதி
புதுநாள் புணர்தங் கரும்பா வணம்புனர் பூசத்ததே.
**புனர்பூசம், ஆயிலியம்
**56
#56
புனிதமும் பாலையு மூங்கிலு முன்னைப் புணர்தமென்பர்
வனவண் டுடன்கொடி றேகுளந் தேவர் வரகுருநா
ளனையன பூசம் பெறும்பெய ராமென்ப ராயிலியந்
தனையர வின்றினங் கவ்வையென் றேமறை சாற்றியதே.
**மகம், பூரம்
**57
#57
கொடுநுகம் வேட்டுவன் வாய்க்கா லெழுஞ்சனி கூறெழுவாய்
வடிவுறு மாசி பிதிர்தின மாமகம் வன்கணையே
யிடைய தெழுஞ்சனி நாவிதன் றுர்க்கை யெலிபகவ
னுடைய தினந்தனை யேபூர மாகவுரை செய்வரே.
**உத்திரம், அத்தம், சித்திரை
**58
#58
பன்னு கடைய தெழுஞ்சனி பாற்குனி பங்குனிவா
னுன்னிய மாலி தினமுத் திரங்களி றோங்குநவ்வி
கன்னி கைம்மீ னைவிரல் காமரங் கெளத்துவ முமத்தந்
தென்னெறி நெய்வான் மீன்றுவட் டாத்தினஞ் சித்திரையே.
**சோதி, விசாகம், அனுசம்
**59
#59
வெறுநுகம் வீழ்க்கை வளிநாள் விளக்கு மிகுமரக்கால்
பெறுவது சோதி சுளகுவை காசி பெரிதனனாண்
முறமுற்றி லென்பர் விசாகம்புற் றாளி முடப்பனைதே
ளறிதரு போந்தை யதுவே யனுசத் தடைத்ததுவே.
**கேட்டை, மூலம், பூராடம்
**60
#60
எரியழல் வேதிவல் லாரை விளங்கொளி யிந்திரைநாட்
டருவது கேட்டை யசுரர்தினங் கொக்குத் தாவிலன்றில்
குருகுசெந் தேட்கடை யாமானி மூலங் குறிமுற்குளம்
பொருவி லுடைகுளம் பூராடம் நீர்த்தினம் பொற்றானமே.
**உத்திராடம், திருவோணம், அவிட்டம்
**61
#61
ஆனி கடைக்குள மாடியுத் திராடம் விச்சுவநாள்
தானுறை நாளென்ப தாகுஞ் சிரவணஞ் தாவுலக்கை
சோணை வயிர மரிதின மோணஞ் சுடரவிட்ட
மீனது காக்கை வசுநாட்புள் ளாவணி மேவியதே.
**சதையம், பூரட்டாதி, உத்திரட்டாதி
**62
#62
வருணன் றினங்குன்று போர்சுண்டன் செக்கு வருசதையங்
குரைபுரட் டாதியு நாழியு முற்கொழுங் கோலுமென்ன
வருபெய ராகி யதுபூரட் டாதி யறிவனன்னா
ளுறைமுர சங்கொழுங் கோல் முற்றிலுத்திரட் டாதியதே.
**இரேவதி, அருந்ததி, நட்சத்திரம், காலநுட்பம்
**63
#63
சுடரார் புருடன் றினந்தோணி சூலந் தொடர்ந்ததொழுக்
கடைநாள் பஃறிசொன் னாவா யிரேபதி சாலிகற்பின்
வடமீ னருந்ததி யாந்தாரை தாரகை வாள்கணம்நா
ளுடுமீன் கலைதுடி யோர்கால நுட்ப மொளிவளையே.
**நாழிகை, பொழுது, பின்னை, உச்சி, காலை, சந்தி
**64
#64
கடிகை யிருத்தை விகலைபதங் கன்னல் நாழிகையாம்
படர்தரு காலம மையம்வெங் காலை பதம்பொழுதா
முடனுறை பிற்றையும் பின்றையும் பின்னை நலுச்சிபக
லடர்தரு காலை விடியலுட னந்தி சந்தியதே.
**பகல், யாமம், வெயில், இரவு
**65
#65
எல்லை நெடும்பகல் யாமமுஞ் சாம மிலகுவெயில்
சொல்லிய வாதப மென்றூ ழிரசுனி கூழுமிரு
ளல்லு நிசாநிசி யாமினி யாமமடர் திமிரம்
புல்லிய கங்குல் தமம்நத்தம் நீலம் பொருமிரவே.
**தினம், முனநாள், பக்கம், மதிமுதற் பக்கம், இரண்டாம் பக்கம்
**66
#66
தினமா னியம்பகல் வைகல் திவசந் திவாவெனலாம்
முனநாள் நெருனலு நென்னலும் பக்கம் மொழிதிதியாம்
வனமேவு திங்கள் மதிமுதற் பக்கம் வகுத்தநந்தை
யினமேவு பத்திரை யாமிரண் டாம்பக்க மேந்திழையே.
**திரிதி, சதுர்த்தி, பூரணம், பானாள், கணம், ஊழி
** வெப்பம், முதுவேனில்
**67
#67
சயைபக்க மாகுந் திரிதி யிருத்தை சதுர்த்தியஞ்சா
கியபக்கம் பூரணம் பானா ளரையிருள் கேடில்கண
முயர்வுற்ற மாத்திரை யாமூழி கால முருப்பம்வெப்பந்
துயருற்ற கோடை முதுவேனி லென்பர் துடியிடையே.
**சிறுபொழுது
**68
#68
சிறுவரை யொல்லை சிறுபொழு தாமும்பர் சேர்வலன்மேக்
கறிபவர் மேசென்பர் கார்கூதிர் முன்பனி யப்பின்பனி
விறலிள வேனில் முதுவேனி லாறு மிகுபருவ
முறையி லிரண்டிரண் டாந்திங்க ளாவணி முன்னெண்ணலே.
**மழைபெய்காலம், பனிப்பருவம், பருவம், காலம்
** யுகம், நான்முகன் வாழ்நாள்
**69
#69
மழைபொழி நாட்சரங் கூதிர் பனிப்பரு வஞ்சிரனாள்
பழைய பளங்கா னியமே யிருதுப் பருவமியாண்
டொழுகிய கால மடங்கலு மூழியு மோருகமாங்
கழிதரு நான்முகன் வாணாள் சொலிற்கற்ப மாமென்பரே.
**வாழ்நாள், வருடம், காலம்
**70
#70
தெளியாயு ளாயுகம் வாணா ளுதகஞ் சிதறியுறை
துளியாலி சீகரந் தூவல் பெயல்மாரி தூறலுடன்
வளியார் பெயலை துவலையு மாசில் வருடமதாங்
களியாரு மூழியு மூழ்முறையுஞ் சொல்லிற் காலமதே.
**மேகம், இடி
**71
#71
மஞ்சே மழைமுகில் மால்கொண்டல் செல்கனம் வான்மைமே
கஞ்சீத மம்புதங் கார்குயிற் கந்தரம் விண்டுகொண்மூ
வுஞ்சீமூ தம்விண் ணெழிலி புயலென வோதுமுரு
முஞ்செல் லசனி யுருமே றிடியாய் மொழிகுவரே.
**துவலை, மழைவிடல், விடாமழை, துளி
** பெருமழை, ஆலங்கட்டி
**72
#72
சிகரஞ் சிதர்சொரி தூவல் பிதிர்சீ கரந்துவலை
பகருந் தலையல் மழைவிடல் சோனை பனித்தல்விடா
துகவிண் சொரிதல் பெயல்துளி யாலி யுறைதுளியா
மகலிலா சாரம் பெருமழை யாலி யாலங்கட்டியே.
**மின்னல், இடி, பனி, பரிவேடம்
**கரும்புவில், வானவில்
**73
#73
மிளிர் தடித்துச் சம்பை வித்துருச் சஞ்சலை மின்னாமிடி
யொளிபேரி குழிமநீர்து கினம்பனி யூர்கோள்வட்டம்
களிபரி வேடம் தரங்கரங் காண்டங் கருப்புவில்லா
மெளில்வான வில்லிந் திரவில்ல தென்ப ரிரட்டைவில்லே.
**பாரதிதீப வரலாறு
**74
#74
திதமா வுறைநளி னத்தடஞ் சூழ்தென் கடம்பையின்சொல்
லிதமா னதுசெறி பாரதி யேத்தியென் னேதவிருள்
விதமே வருந்தல வேவைத்த பாரதி தீபந்தன்னில்
முதலாவது தெய்வப் பேராந் தொகுதி முடிந்ததுவே.
@2 இரண்டாவது மக்கட் பெயர்த் தொகுதி
**பற்றற்றோர்
**75
#1
மாதவ ரையர் துறவோர் முனிவர் வரரவர்த-
போதனர் மெய்ய ரடிக ளிலிங்கிகள் பொய்யிகழ்ந்த
நாத ரியோகிகள் ஞானா திகரைம் புலன்வெல்லுஞ்
சாதகர் பண்ணவர் மிக்கோ ரறிவர் தவத்தவரே.
**76
#2
அறவ ரருந்தவர் குற்றங் கடியு மவர்பெரியோ
ருறுவர் கனிகிழங் குண்பவர் கோப மொழித்தவர்பூ
விறைவர் புலவ ரிருளற்ற சிந்தைய ரேற்றவருட்
செறிபவர் மோனிகள் பற்றற்றோர் பேரெனச் செப்பினரே.
**சைவத்தவப்பாலினோர், நாராயணன் சமயத்தவர்
** சமணர்
**77
#3
பாலாய காளா முகர்மா விரதியர் பாசுபதர்
மேலாய சைவத் தவப்பாலி னோர்மிகு பாகவதர்
மாலாய நாரா யணன்சமை யத்தர்வண் சாவகரோ
டாலா வருக ரெனுஞ்சம ணாசீ வகத்தவரே.
**புத்தர், சமண்முனிவர், சடைமுடியோர், பார்ப்பார்
**78
#4
சீவகர் சாக்கியர் புத்தர் பவுத்தருந் தேரருமென்
றாவது மத்தவத்தோ ரமண் சாரணர்ச் சமண்முனிவ
ரோவறு தாபத ராகுஞ் சடைமுடி யோர்வேதியர்
வீவறு முப்புரி நூலர்பார்ப் பாரென்ப வேதியரே.
**பரர்ப்பார், ஒத்துரைப்போர், கலைவல்லவர், மிக்கவர்
**79
#5
அறுதொழி லாளர் மறையவர் பூசுரையர் மிக்கோ
ருறவுறு வேள்வியர் முற்குலத் தோரென்ப ரோத்துரைப்போ
ரறிகணக் காயர் கவிஞர் கலைவல் லவருயர்ந்தோர்
விறலறி வுற்றவர் சான்றோ ருலகுடன் மிக்கவரே.
**புலவர், மிகக்கற்றவர்
**80
#6
கவிஞர் கலைஞ ரறிவோர் முதுவர்கற் றோர்புதரே
யவையவர் மூத்தவ ரான்றவ ராய்ந்தவ ரானசங்கஞ்
சவைபுல வோரென்ப தாத்ம விபுதர் தனிநிபுணர்
கவலையில் லாத குசலரென் போர்மிகக் கற்றவரே.
**மூத்தவர், பெருமையின் மிக்கவர்
**81
#7
குரவோன் சுவாமிமன் கோமான் பதியத்தன் கோவையனும்
பெருமானு நாதனு மீசனு மூத்தவர் பேரதென்ப
ரருளாளர் குரிசிலு மேந்தலுஞ் செம்மலு மண்ணலுமாய்
வருபேர் பெருமையின் மிக்கவர் பேரென வாய்த்ததுவே.
**எப்பொருட்கும் இறைவன், உயர்ந்தோர்
**82
#8
ஆதிபிரான் செம்மல் கேள்வனிறை வனர சன்மன்ன
னாதன் றலைவன் கொழுந னதிபன்மன் னாயகன்சேர்க்
காதல னீசன் பதிகாந்தன் காவலன் கோவெனலா
மோதெப் பொருட்கு மிறையுயர்ந் தோரை யுலகென்பரே.
**கோட்டி, அரசன்
**83
#9
தொழுதி திரள்சங்கங் கூட்டங் குவிதல் தொகுதிகணங்
குழுநீல கஞ்சம வாயஞ் சவையவை கோட்டியென்பர்
மொழியு நிருப னரபதி வேந்தன் முதல்வன்கா
வழுவில் புரவல னேந்தல்மண் காவலன் மன்னவனே.
**அரசன், குருகுலமன்னன்
**84
#10
அரச னிறையவன் பூபாலன் பார்த்திப னண்ணல்பிரான்
குருசில் தலைவன் பதிபெரு மானென்பர் கொற்றவர்பேர்
பரவுங் குருகுல மன்னவர் நாமம் பரதவர்பார்
கருதுங் கவுரவ ரென்பர்நன் னூனெறி கற்றவரே.
**சேரன்
**85
#11
வில்லவன் கேரளன் வானவன் வஞ்சிக்கு வேந்தன்குடக்
கொல்லியன் குன்றன் குடநாடன் குட்டுவன் கோதைகொங்கன்
மல்லுதியன் பொறை யன்போந்தின் மாலையன் வானவரம்
பெல்லையன் சேரலன் சேரன் பொருனைக் கிறையவனே.
**சோழன்
**86
#12
பொன்னிநன் னாடன் புகாரிறை கிள்ளி புலியுயர்த்த
மன்னவ னேரியன் வீர னிரவி குலன்வளவன்
சென்னி யிமையவன் செம்பியன் கண்டன் றிறலபையன்
நன்னெறி யாரத்தன் சோழ னுறந்தைக் குரியவனே.
**பாண்டியன்
**87
#13
வழுதி கவுரியன் பஞ்சவன் மீனவன் மாறன்கொற்கைச்
செழியன் மதுரைமன் பூழியன் கைதவன் றென்னவன்சே
லெழுது புரவலன் வைகைத் துறையவ னிந்துகுலம்
பழகு மிறையவ னிம்பத் தொடையினன் பாண்டியனே.
**குறுநில மன்னவர், சளுக்கியரசன், மந்திரி
**88
#14
வேளிர் புரோசர் குறுநில மன்னவர் வேள்புலக்கோ
வாளுஞ் சளுக்கி யரசன் குரவ ரமைச்சர் முன்னோர்
நாளுநுண் டேர்ச்சியர் மூத்தோ ருழையர்ந னூலிறைவர்
கேள் வியிற் சூழ்பவர் மந்திரி யானவர் கேளினமே.
**மந்திரி தந்திரி, அரசற்குளாங்கருமத்தர்
** போர்த்தலைவன்
**89
#15
ஏனாதி காவிதி யின்சொ லமாத்திய னென்னுமவன்
றானாகு மந்திரி தந்திரி வள்ளுவன் சாக்கையென
லானா வரசற் குளாங்கரு மத்த ரரும்பெரும்போர்க்
கோனா மவனைப் பொருநரென் றோதுவர் கோமளமே.
**வணிகர்
**90
#16
எட்டி கவிப்பர் வயிச்சிய ரேயிளங் கோக்களிப்பர்
செட்டி சிலேட்டி யறுதொழில் நாயகர் திறல்வினைஞர்
மட்டவிழ் சீரகக் தாரார் பரதர் வணிகரயன்
கிட்டிய வூரூவில் வந்தோ ரிறையவன் கீழினரே,
**காராளர்
**91
#17
வேளிர் களமர் சதுர்த்த ருழவர் விளைப்பவர்வே
ளாளர் கொடையின (ரேர்வாழ்நர்) வார்த்தையா டவலில் வல்லோர்
காள நெடுங்கடற் பார்மைந்தர் கங்கை குலத்தரயன்
றாளினில் வந்தவர் காராளர் பேரெனச் சாற்றுவரே,
**மிலேச்சர், சோனகர், மருத்துவர், குயவர்
**92
#18
ஆதி மிலேச்சரு மாரியர் சோனக ராம்யவனர்
வாதனை யாயுள் மருத்துவ நூலர்மா மாத்திரரே
கோதில் பிடகர் மருத்துவ ராகுங் குலாலர் மண்மேற்
காதுங் குயவரும் வேட்கோப ருங்கும்ப காரருமே.
**உப்பமைப்பவர், சித்திரகாரர், கண்ணாளர்
**93
#19
அயரு முமண ரமைப்பா ளருமுப் பமைப்பவரோ
வியர்சித் திரகாரர் தபதியர் சிற்பியர் வித்தகர்கள
னையரக்க சாலையர் கம்மியர் கொல்லர் நலனறிவர்
மயனுற்ற நூலர் யவனர்கண் ணாளர்க்கு மன்பெயரே.
**தச்சர், கன்னார், வண்ணார், உறைகாரர்
** ஊன்விலைஞர், தோல்விலைஞர்
**94
#20
கருது மரவினைத் தச்சர் தபதியர் கன்னுவரே
யருள்கஞ்ச காரர்கன் னாரவர் காழிய ராவர்வண்ணா
ருரவுறை காரருங் காரோடர் சூனரு மூன் விலைஞர்
பரவு பறம்பருந் தோல்விலை வாணர் பயில்பெயரே.
**நாவிதர், கள்விற்போர், சண்டாளர்
**95
#21
நாமப் பெருமஞ் சிகரே மயிர்வினை நாவிதர்பே
ராமப் பழையர் படுவர் துவசரவர் கள்விற்போர்
காமக் குணுங்க ரிழிஞர் கொலைஞர் கவுண்டர்வங்கர்
தாமப் புலைஞர் கனகத ராவர்சண் டாளர்களே.
**பாணர், இயவர், பாடலில் தாழுமவர்
** நரம்புக்கருவி கொள்மாந்தர்
**96
#22
சென்னியர் மாகதர் சூதர் வயிரியர் சேர்மதங்க
ரின்னிசைப் பாண ரியவர் கருவி யிசைக்குமவர்
பன்னிய வோவரும் பண்டரும் பாடலிற் றாழுமவர்
கொன்னி னரப்புக் கருவிகொண் மாந்தர் குயிலுவரே.
**தமிழ்க்கூத்தர், கழாய்க்கூத்தர், தொழில்காரர்
** புதியவர், அயலோர்
**97
#23
குலவாயி லோர்தமிழ்க் கூத்தர் கழாயுற்ற கூத்தினரே
கலைமேவு வேழம்பர் கம்மியர் செய்தொழில் காரரென்பர்
புலமா ரதிதியர் வம்பல ரென்னிற் புதியவரா
முலகார் நொதுமலர் வம்பலர் தாமய லோரென்பரே.
**ஆகாவழிச்செல்வோன், அடிமை
** மடையர், மீகாமன்
**98
#24
ஆகாவழிச்செல் பவன்பதி தன்றொழும் பாளடிமை
சேகார் சிலதர் சிலதியர் சேடியர் சேடரென்பார்
மாகாய வாலுவர் கூவிய ராவார் மடையர்மற்று
நீகான் மரக்கலன் மீகாம னென்பர் நிரைவளையே.
**தூதர், ஏவல் வினைஞர், ஒற்று, தேவராளன்
** செவிடர், முடவர்
**99
#25
வினையாறு பண்புரைப் போர்தூத ரேவல் வினைஞர்பரி
சனமா குலரென்பர் சார்வேயொற் றாமென்பர் சாரணனாஞ்
சினதேவ ராளன் வெறியாடும் வேலன் செவிடர்பெய
ரெனிலோ வெதிரா முடவர்பங் கென்ன வியம்புவரே.
**அலி, ஊமை, குறள், வறியோர்
**100
#26
பேடியர் பெண்டக ரேபேடர் பெண்டலிப் பேரதென்பர்
கூடிய மூகையு மூங்கையு மூமையாங் கோணல்சிந்து
நீடிய குஞ்சங் குறளென்ப ராதுலர் நேர்வறியோர்
வாடிய வாரத் துயருறு வோரென்பர் வாணுதலே.
**கீழ்மக்கள்
**101
#27
நெறியிலர் பேதையர் நீசர் சுமடர்க னிட்டர் புல்லர்
பொறியர் முசுடர் முசுண்டர்பொல் லாதவர் பூரியரே
சிறுமைய ராற்றலர் தேரலர் தீயவர் தீம்பர்கல
ரறிவிலர் மூர்க்க ரசடர்பொய்க் கீழ்மக்க ளானவரே.
**அறிவிலார், கள்வர், காதலித்தோர்
**102
#28
முழுமக னைஞ்ஞை மடம்பேதை சேடஞர் மூடனண்ணை
யிழுதை குதலை யறிவிலர் சோர ரிகற்பகைவர்
கழிவில் கரவடர் கள்வர்தம் பேரென்பர் காதலித்தோர்
விளைவு நயத்த லார்வம்வேட்டல் வேட்கை விருப்பென்பரே.
**மூதறிந்தோர், வல்லளான், விறலோன்
** பதிவாழ்சதுரர், தூர்த்தர்
**103
#29
முதுவர் கிழவ ருரியவர் மூதறிந் தோர்வயவன்
விதமான மீளிவல் லாளன் பெயர்விற லோன்விடலை
பதிவாழ் சதுர ரெனுநா கரிகர் படிற்றொழுக்க
ரதிகாம மிக்கவர் தூர்த்தரென் றோதுவ ராரணங்கே.
**இளமையர், ஏவுவான், புகழ்விளைவீணன்
** கரியன், கணவற் பிழைத்தோள் மகன்
**104
#30
வளமுரு கன்கும ரன்காளை சேடன் மழவனென்போ
ரிளமைய ரேவு மவனே வியவ னியவுள்புகழ்
விளைவீண னாகுங் கரியனென் சோரன் மிகவுரைக்கிற்
களவன் கணவற் பிழைத்தோன் மகன்குண் டகனென்பரே.
**கன்னிமகன், கைம்மையள்மகன், குலமில்லவர்
** வல்லோர், வல்லவரல்லாதார், கூவல் நூலோர்
**105
#31
கலனுறு கன்னி மகன்கா னீனன்கைம் மையின்புதல்வன்
குலவிய கோளக னாகுங் குலீனர் குலமில்லவர்
வலவைவல் லோரென்பர் வல்லுனர் மாட்டாரவ லோரென்பரே
தலமிசை வல்லவர் சல்லியர் கூவல்சொல் சாற்றினரே.
**பாவலர், மங்கலப்பாடகர், நாடகர், கூத்தர்
**106
#32
பரவிய நாவலர் கற்றோர் கவிஞர்சொற் பாவலராங்
கருதிய மங்கலப் பாடக ரெட்டர் கடிகைகளாம்
பொருநர் நிருத்தர் வயிரியர் கண்ணாளர் போற்றுநடர்
குருவரு ணாடகர் கோடியர் தாமென்பர் கூத்தரையே.
**சூதர், பூகதர், தேர்ப்பாகர், யானைப்பாகர்
**107
#33
மாகதர் வந்திகர் வேதாளி யரவர் சூதர்மன்னும்
பூகத ராவார் புகழ்பவர் சூதர் புனைவலவ
ராகிய பேரெனிற் றேர்ப்பாக ராவா ரவருமன்றிப்
பாக பல்வா துவராதோ ரணர்கரிப் பாகருமே.
**பரிமாவடிப்போர், இரவலர், வரையாமலீபவர், அரசர்பரிவாரம்
**108
#34
பரிமா வடிப்பவர் வாதுவர் யாசக ரேபரிசிற்
குரியா ரிரப்பவ ரிரவலர் பேரென்ப ருற்றபொருள்
வரையாம லீபவ ரேவள்ளி யோரென்பர் மற்றரச
ரருகா தரித்த பரியாள மும்பரி யாரத்ததே.
**படையாளர், அடுத்தோர்
**109
#35
கூளியர் மானவர் வீரர் பொருநர் கொலைமறவர்
வாளுழவர் மண்டர் மள்ளர் விறலர் வயவர்படை
யாளர் துடர்ந்தவ ரொன்றுநர் துன்னின ரேயடுத்தோர்
நாளு மணுகுந ரொல்லுநர் நள்ளுநர் நண்ணுநரே.
**பகைவர்
**110
#36
தரியலர் தெவ்வர் செருநரொன் னாரெதிர்ந் தாரரிகள்
கருதலர் செற்றவ ரொல்லார் நிகரலர் கண்டலரே
பரவல ரொட்டலர் போற்றலர் மாற்றலர் பற்றலர்போர்ச்
செருவினர் நேரலர் விண்டார் பகையவர் சேரலரே.
*மித்திரர்
**111
#37
சுற்ற முறவு கிளைகேள் கடும்பொக்கல் சூழுநட்போ
டுற்றவர் சார்ந்தவர் பந்தங் குடும்புநட் டோர்சிறந்தோர்
துற்ற பரிசனங் கூளி செறிவு துணைதமரே
பற்றினர் மேவினர் மித்திர ராகப் பகர்ந்தனரே.
**ஆண் பெயர், ஏழு பருவப் பெண்பால்
**112
#38
ஆடவர் காளைய ராடூஉ மகன்மைந்த னாளன்பூம
னீடு குமரனு மாண்பெயர் பேதை நிகர்பெதும்பை
தேடிய மங்கை மடந்தை யரிவை தெரிவையுடன்
கூடிய பேரிளம் பெண்ணேழ் பருவஞ்செய் கோதையரே.
**மடவார்
**113
#39
அங்கனை பேதை வனிதை யிளம்பிடி யாயிழைபெண்
மங்கை மடந்தை தெரிவை பிணாமகள் மாதரிவை
பைங்கொடி வஞ்சனி காரிகை மானினி பாவைதைய
லிங்கிதை நாரி மடவலர் பேரென் றிசைத்தனரே.
**தலைவி, கலன்கழி மகளிர், மலடி
**114
#40
அடிகள் குரத்தி பெருமாட்டி கோமக ளையை யத்தை
தடமலர் மாதிறை மையாட்டி சாமி தலைவியென்பர்
கடலுல கெண்ணிய கைம்மை (கயினி) கலன்கழிமான்
வடிவுறு வந்தியு மைம்மையு மாகு மலடிகளே.
**வரத்தெழு மகளிர், பொதுமகள், பாண் மகள்
**115
#41
வரத்தெழு பைம்மை கவுந்தி கணிகைவண் சூளையுடன்
பரத்தை பொதுமகள் பாடினி பாட்டி பயில்மதங்கி
திருத்தகு பாடல் மகடூஉ நடத்திறற் கூத்தியிசை
விரித்தரு ணாடக வாணுதல் பாண்மகள் மேல்வருமே.
**குறிஞ்சிக்கதிபர், குறிஞ்சி நிலப்பெண், குறிஞ்சித்திணைமகன்
**116
#42
குறவர் புனவ ரிறவுளர் கானவர் குன்றவரென்
றறைவர் குறிஞ்சிக் கதிபர் குறத்தி யடர்கொடிச்சி
மறுவி லுழத்தியர் வெற்பன் பொருகன் மலையனண் பன்
றிறல்புனை கானக நாடன் சிலம்பன் றிணைமகனே.
**பாலை நிலமக்கள், பாலைநிலப்பெண், பாலைத்திணை மக்கள்
**117
#43
மறவ ரெயினர் வெம்பாலைக் கிழவர் மறத்தியரே
பிறைநுதன் மேவு மெயிற்றிய ரந்நிலப் பெண்பெயராம்
விறல்புனை காளையு மீளியும் வெய்ய விடலையுமென்
றுறைபவர் பாலைத்திணை மக்க ளாக வுரைசெய்வரே.
**பாலை நிலமக்கள் பொதுப்பெயர், முல்லை நிலமக்கள்
**118
#44
கானவர் வேடர் மறவர் புளிஞர் கலைக்கொலைஞ
ரீனர் வனசரர் சிலவர் கிராத ரெயினரென்ன
லானவ ரப்பொதுப் பேரண்டர் கோபால ராயர்முல்லைத்
தானவர் விந்தர் பொதுவ ரிடையவர் தம்பெயரே.
**முல்லை நிலமக்கள், முல்லை நிலப்பெண், முல்லைத் தலைமக்கள்
**119
#45
தொறுவர் குடவருங் கோவிந்த ராய்ச்சி தொறுத்தியுடன்
முறைசெய் குடத்தி பொதுவி யிடைச்சிமென் முல்லைமகள்
குறைவறு கானக நாடன் குறும்பொறை நாடனண்ணல்
நிறைபயில் தோன்ற லவராவர் முல்லை நிலமக்களே.
**நெய்தல் நிலமக்கள், நெய்தல் நிலப்பெண், நெய்தல் தலைமகன்
**120
#46
கலவர் பரதர் நுளையர் திமிலர் கருங்கடலர்
வலையரந் நெய்தல் கிழவர் நுளைச்சி வளர்பரத்தி
தொலைவில் கடற்பிண வென்னிற் கிழத்தி துறைவன் கொண்கன்
சிலைபயில் மெல்லம் புலம்பன்றண் சேர்ப்பன் றிணைமகனே.
**மருதநிலமக்கள், மருதநிலப்பெண்
** மருதநிலத் தலைவர், மருதத் தலைமகள்
**121
#47
தொழுவர் கடைய ருழவினர் கம்பளர் சூழ்களமர்
கழனியின் மள்ளர் கடைச்சி யுழத்தி கழனிமகள்
கிழவனு மூரனுங் கேடின் மகிணனுங் கேள்மருதந்
தழுவு தலைவர் மனைவி கிழத்தி தலைமகளே.
**முல்லைத்தலைவி, தம்குடித்தமர், முறைப்பெயர்,
** மூதாதை
**122
#48
ஆய மருதத் தலைவியம் முல்லை யண ங்கிற்குமாந்
தாயமுஞ் சாதியுந் தங்குடி யிற்றமர் தந்தைதந்தை
தூய பிதாவைய னப்பனம் மானத்தன் றொன்முறைப்பே
ரேய பிதாதந்தை மூதாதை யாமென் றிசைத்தனரே.
**தகுவர், மாதுலர், பெற்றதாய், செவிலி
**123
#49
தாதையுந் தம்முனுந் தன்னையொத் தந்தத் தகுவரம்மான்
மாதுலன் பேரென்பர் மாதாப் பயந்தவள் வாய்த்ததவ்வை
யேதமி லீன்றவள் தாயன்னை யாய்பெற் றவளெனப்பே
ரோதிய தாதிகோ டாயே செவிலியென் றோதினரே.
**முன் பிறந்தாள், மணவாளன், மனைவி
**124
#50
அன்னையு முன்பிறந் தாளுஞ் செவிலியு மாகுந்தவ்வை
மன்னிய கேள்வன் கணவன் கொழுனன் மணமகனே
சொன்னவில் காந்தன் மணவாள னென்பர் துணைவியில்லாள்
பன்னி யுரிமை மனைவி மணமகள் பாரியுமே.
**புதல்வன், மகள்
**125
#51
புதல்வன் பிறங்கடை சேய்தோன்ற லெச்சம்புனை சிறுவன்
மதலை தனையன் மருமான் மருவு மகன்மைந்தனே
விதமிகு சந்ததி புத்திரன் செம்மல் மிகுபுதல்வி
யுதவி சிறுவி தனையை மகட்பெய ரோதினரே.
**மகன் மகள் பொது, முன்தோன்றல், பின்தோன்றல்,
** வழித் தோன்றல், பிள்ளைப்பன்மை
**126
#52
முறைமையி னெச்ச மிருபாற் குரியது முன்னைமுன்னே
யறிவின்முன் றோன்ற லிளவலும் பின்னையு மாவர்பின்னோ
ருறுவழித் தோன்றல் மருமான் பிறங்கடை யும்பலென்பர்
செறியு மகார்செஞ் சிறார்பன்மை நாமஞ் சிறந்தவரே.
**இளமை, நண்பன், தோழன் முன்னிலை
**127
#53
மழவுங் குழவியும் பிள்ளையுங் குட்டனு மாமகவும்
விழைகின்ற சேயு மிளமைப் பெயர்நண்பன் மெய்த்துணைவன்
கெழுதகு கேளெலு வன்பாங்கன் றோழன் கிளைஞனென்பர்
மொழிதரு தோழனை யேடாவென் றோதுவர் மூன்னிலையே.
**பாங்கி, தோழியர் முன்னிலை, கணவன்
**128
#54
அயரோரை பொய்த லிகுளை மெய்யாய மணுக்கிணங்கொ
டியல்சேடி தோழிமெய்ப் பாங்கியெல் லாவுட னேடியென்ப
பயினாமந் தோழியர் முன்னிலை நாமம் பதிகணவன்
மயல்தீர் தலைவ னிறைதோழன் காதலன் மன்பெயரே.
**காதலி, துணைவன், படைத்திரள்
**129
#55
தோழி மனைவி புதல்வியுங் காதலி சொற்றுணைவன்
வாழிய தோழன் கணவன் வரூதினி மன்பகுதி
தாழு நிதன மநிகம்ப தாதிமெய்த் தார்தண்டமே
பாழிய தானை பதாகினி சேனை படைத்திரளே.
**படைத்திரள், கொடிப்படை, படை வகுப்பு, மானிடர்
**130
#56
ஆசி லணிகமும் யூபமு மப்படை யாம்நிரைதார்
தூசி கொடிப்படை யாக்கமு மாமென்பர் சூழ்ந்தவணி
காசறு யூப முடனுண்டை யோடிவை கைவகுத்தல்
மாசின் மனிதர் நரர்மக்கள் மானிடர் மண்ணவரே.
**மக்கள் பொது, மக்கள் கூட்டம், உடற்குறை
**131
#57
மக்கள் பொதுப்பெயர் மாந்தர்கள் பைஞ்ஞீல் மன்பதையுந்
தொக்க நரர்திர ளோரையு மாயமுஞ் சூழ்குழுவுந்
தக்கதோர் பண்ணையு மக்களின் கூட்டந் தனையுரைப்பர்
மிக்க கவந்தமு மட்டையும் யூபமு மெய்க்குறையே.
**உறுப்பு, உடம்பு, பிணம்
**132
#58
புரமுறுப் பங்கந் தனுவாக்கை காத்திரம் பூட்சிமெய்விக்
கிரகங் களேபரந் தேகம் படிவங் குகைகுடில
முருவ முடம்பு கனங்காய மென்ப ருயர்குணபங்
கருது மழன்பிண மேசவ மாகுங் களேபரமே.
**பாதம், காலடி, துடை, அல்குல்
**133
#59
பாதஞ் சரணங் கழல்கா லடிபதந் தாள்பரடு
மோதுங் கரடு மிசைத்திரள் காலடி யூருக்கவான்
றீதொன் றிலவாங் குறங்கே துடையென்ப சேர்நிதம்பங்
காதுங் கடிதட மல்குலென் றோதுவர் கற்றவரே,
**இடை, மருங்குல், வயிறு, கொப்பூழ்
**134
#60
மருங்குல் நுசுப்பு நடுவிடை யொக்கலை யாமருங்குல்
வரும் புறங் குக்கி சடர முதரம் வயினகடாந்
திருந்துவயி றுந்தி நாபி மிதலை திகழிலஞ்சி
தரும்பெய ரேயெனி லானகொப் பூழென்று சாதிப்பரே.
**ஆண்குறி, மாதர்குறி, மார்பு, முலை
**135
#61
ஓது மிலிங்கமுங் கோசமு மாண்குறி யோனிபகம்
மாதர் பெருங்குறி மார்ப மகல மருமமுரந்
தாதவி ழாகங் குயஞ் சொர்க்கங் கொங்கை தனநகிலே
மீது குரூக்க ணம்மம் பயோதர மென்முலையே.
**சுணங்கு, கைத்தலம், அகங்கை, விரல், நகம், புயம்
**136
#62
துத்தி திதிலை பொறிவந் திகையுத்தி சூழ்சுணங்க
மத்த முடன்கரந் தோள்பாணி கைத்தலம் அங்கையென்னி
லொத்த குடங்கை யகங்கை விரலங் குலியுகிராம்
பத்திநகம் புயந் தோள்வாகு மொய்ம்பெனப் பாவிப்பரே,
**முதுகு, தோள்மேல், கழுத்து, பிடரி
**137
#63
நிகரில் வெரிந் புறம் வெந்முது கென்பர் நிகலமுடன்
செகிலஞ் சுவலெனிற் றோண் மேல் கழுத்துச் சிறந்தகண்டம்
புகலுங் கிரீப மிடறு களங்கந் தரம்பொருந்து
மகலுங் கயிலெருத் தஞ்சுவ லேபிட ரானதுவே.
**பிறக்கு, முகம், உதடு, பல், சிரிப்பு
**138
#64
பிறக்கும் பிறக பரம்முக மானனம் பேர்வதனஞ்
சிறக்கின்ற வோட்ட முதடே யதரந் திகழிதழாம்
நிறக்கின்ற தட்ட மெயிறுபற் றந்தம் நிலாமுறுவல்
முறைத்தங்கு மூரல் நகைசிரிப் பாக மொழிகுவரே.
**மேல்வாய், கீழ்வாய், உள்கா, நா, மூக்கு, கவுள்
**139
#65
அணரியு மண்ணமு மேல்வாய்கீழ் வாயண ராமதன்பேர்
தணிவரு மண்ணமுண் ணாவாகுந் தாலமுந் தாலுவுநாத்
துணைபெறு நாசியுந் துண்டமு மூக்கென்பர் தொல்வுகளே
நணுகு கபோலங் கொடிறென்று கூறுவர் நற்றவரே.
**கண், நெற்றி, புருவம்
**140
#66
பழுதறு நாட்டம் நயனம் விலோசனம் பார்வை கண்கோ
விழிதிருக் கம்மக்கம் நேத்திரம் நோக்கமம் பகம்வின்னுதல்
எழின்மத் தகங்குளம் முண்டக நெற்றி யிலாடமென்ப
ரழிவில் புரூரம் புருவம் பிருகுடி யாமென்பரே.
**காது, தலை, முடி, மயிர்ப்பரப்பு
**141
#67
கன்ன முடன்செவி காதாஞ் சிரமுச்சி கந்தலையே
சென்னி யுவ்வி நவிர்சேக ரந்தரஞ் சீரிபமா
முன்னிய சேகரஞ் சென்னி சிரமுச்சி யேமுடியே
மன்னு சிரோம முரோமஞ் செறிந்த மயிர்ப்பரப்பே.
**ஆண்மயிர், பெண்மயிர்
**142
#68
தொங்க னவிர்குஞ்சி யோரி குடுமி சுருளுழையே
பங்கி சிகைபித்தை யாண்மயிர் கூழையைம் பால்சுரிய
லங்குழல் கேசங் கதுப்பு மராட்ட மளகங்குரல்
தங்கிய வோதி சுருள்கூந்தல் கோதைபெண் தன்மயிரே.
**ஆண்மயிர், பிறமயிர், சடை
**143
#69
கேசஞ் சுரியல் கதுப்பாண் மயிர்க்குக் கிளக்கும்பங்கி
வாசஞ் செறியுளை யோரி யுரோம மராட்டமிவை
பேசும் பிறமயிர் கோடீரம் பின்னல் பின்னுஞ் சடிலந்
தேசொன்றும் வேணிச் சடைசூட மென்னச் சிறந்ததுவே.
**குழன்றமயிர், மயிர் முடி, அவயவம்
**144
#70
கொந்தள மாலை யளக மிலோதங் குழன்ற மயிர்
பந்தமுடிபின் னகங் கொண்டை முச்சி பயில்சுடிகை
யுந்துஞ் சிகழிகை யாகு மயிர்முடி யோருறுப்புச்
சந்த மவையவ மேசினை காத்திரந் தானங்கமே.
**உடல் தழும்பு, கழலை, நரம்பு, தலையோடு
** எலும்பு, கழியெலும்பு
**145
#71
பிறங்கங் சிதஞ்செது கைமெய்த் தழும்பு பெருங்கழலை
செறிந்த வரலை நரம்புட னாடி சிரையெனலா
மிறஞ்சிய வெண்டலை யோடே கபால மெலும்பென்பதாங்
குறைந்து கழியென்பு கங்காள மாகமுற் கூறினரே.
**குடுமி, உச்சி, பாரதிதீப வரலாறு
**146
#72
சிக்கங் குடுமி சிமையஞ் சிகையுச்சி சேர்நவிரந்
தொக்கசெஞ் சூடி சுடிகையுஞ் சூளி தொகுபுலமை
மிக்கவன் பாரதி பாரதி தீபத்தின் மெய்தெரிந்த
மக்கட் டொகுதி யிரண்டா வதுமுற்றி வந்ததுவே.
@3 மூன்றாவது விலங்கின் பெயர்த் தொகுதி
**சிங்கம்
**147
#1
அரியாளி சீயம் வயப்போத்துச் சிங்கம்பஞ் சானனங்கே
சரியா மடங்கல் முடங்குளை கோளரி தாம்வயமா
மிருகா பதியரி மாவே வயப்புலி வேங்கையிபம்
பொருகா னகாயுதங் கண்டீ ரவமெனப் போற்றினமே.
**புலி
**148
#2
குயவரி வல்லியஞ் சித்திர காயங் கொலைவயமா
வயவரி வேங்கை தரக்கு வியாக்கிரம் வல்லுழுவை
சயமிகு தீவியஞ் சார்த்தூலம் புண்டரி கஞ்சமரம்
பயில்மிரு காதிபுல் லெனப்பேர் புலிக்குப் பகர்ந்ததுவே.
**யானையாளி, யானை
**149
#3
அறுகு புழைக்கை யடல்யானை யாளிகை யத்தியுவா
மற (மலி) தும்பி புகர்முகந் தோலிபம் வாரணமாக்
கறையடி போதகம் மாதங்க நாகங் கரிகளிறு
திறல்மிகு நால்வா யொருத்தல் மதகயஞ் சிந்துரமே,
**150
#4
கயமே கருணி கடுவை பகடு களபந்தந்தி
வயமா வழுவை யிருண்மா வெறும்பி மதவனமே
சயவேழந் தூங்கல்கைம் மாவும்பல் கும்பிதந் தாவளமே
குயமேவு மாதிரம் வல்விலங் காமென்பர் குஞ்சரமே.
**யானைக்கன்று, கிளர்ச்சியானை
** யானை பிறந்த நிலப்பெயர்
**151
#5
களபந் துடியடி போதகம் வெய்ய கயமுனியே
தளருங் கரிக்கன்று தந்தி மதகரி தானுரைக்கிற்
கிளர்வன் கையானை வனசர மோங்கு கிரிசரமே
தெளியு நதிசரம் யானை பிறந்த திண ப்பெயரே,
**குதிரை
**152
#6
துரகங் குதிரை யரிவாசி கிள்ளை துரங்கங்கற்கி
குரகத மண்டில மத்திரி மாப்பரி கொக்கிவுளி
புரவிகுந் தங்கொய் யுளைகோணங் கோடகம் போற்றியகந்
திருவஞ்சை யிந்தவ மச்சுவ மாமெனச் செப்பினரே.
**குதிரைப் பண்பு, குதிரை மார்க்கம், குதிரைக் குளம்பு, பசுப் பொது
**153
#7
பாடலங் கந்துகங் கோரங் கனவட்டம் பண்பெனலாங்
கூடிய மாதிக மார்க்கங் குரங்குளம் பாகும்பெற்ற
மாடு குடஞ்சுட்டுக் கோவான் பசுவினம் வாலியவா
னீடிய சாதிப் பொதுப்பெய ராக நிலைபெறுமே.
**பசுப்பெண்பால், ஏறு
**154
#8
தேனுச் சுரபி சுரையே கபிலை செழுங்குரமே
கோனுற்ற கோமளஞ் சேதாப்பெண் பாலென்பர் கோவிடப
மானுற்ற பாறலி றால்மூரி பாண்டி லடல்விடைசே
வானத் தெருதுபெற் றம்புல்ல மேறதற் பேரென்பரே.
**எருமைச்சாதி, எருமை, எருமையாண், மலட்டெருமை
**155
#9
எருமையின் சாதி யிருபாற் குரிய திகன்மயிடங்
கருதிய காரசங் காரான்மை மேதி கவரியென்பர்
பொருளில் பகடுங் கடாவு மவற்றினிற் போத்துமைமை
தெரியி னவற்றின் மலட்டின் பெயரெனச் செப்பினரே.
**காட்டு ஆ, ஆடு
**156
#10
அறிவில் கவையமு மாமாவுங் காட்டினி லாவெனலா
மறியுதள் மேழக மோத்தை கிடாய்தகர் மைவருடை
கொறிதுரு வைசெம் மறிபள்ளை வெள்ளைகொச் சைபுருவை
செறிதரு மேடம்வற் காலியு மாடெனச் செப்பினரே.
**துருவாடு, வெள்ளாடு, துருவாட்டேறு
**157
#11
துள்ளு துருவை கொறிமை யிவைதுரு வாடதென்பர்
வெள்ளைவற் காலிவெங் கொச்சைவெள் ளாடுமிகுதகரே
தெள்ளிய மேழக மோங்குங் கிடாய்திண் ணகமுடனே
யெள்ளிய செய்ய துருவாட்டி னேறென் றிசைத்தனரே.
**வெள்ளாட்டேறு, ஆட்டுக்குட்டி, வரையாடு, கவரிமா
**158
#12
உதள்கொச்சை மோத்தைவெள் ளாட்டினி லேறென்ப ரோங்குமணங்
கெதிர்குட்ட மென்பறழ் சேர்மறியே குட்டி யேர்வருடை
மதுகைச் சரபம் வரையா டெகினம் வளர்சவரங்
கதமுற்ற மான மிருகங் கவரிக்குக் கற்பித்ததே.
**கழுதை, பன்றி
**159
#13
கத்தபம் வேசரி வாலேயங் கோகு கரங்கழுதை
யத்திரி யென்ப கருமா விருளி யருங்கனலி
குத்திரஞ் சூகரங் கேழல் வராகங் குரோட்டம்பன்றி
மைத்திக ழேன மரிகோலம் போத்திரி வல்லுழியே.
**முட்பன்றி, மான், புல்வாய், கரடி
**160
#14
எழில்புனை சல்லிய முள்ளார் மிருகமெய் யேபன்றியா
முழைமறி நவ்வி யருணமா னம்பிணை யோங்கிரலை
விழைகலை யென்ப ரிரலைபுல் வாயென்பர் வெல்லுளியங்
கழிதரு பல்லங் கரடியெண் காமென்பர் கற்றவரே.
**நரி, ஓரி, பூனை, ஆண் பூனை
**161
#15
இகல னரிசம்புக் கோமாயு வென்க விகலனெனப்
பகர்வது மோரி விலாளம் விடருகம் பாக்கன்வெ
ருகப்பவ ணந்திறற் பூசையும் பூனையதாங் கடுவன்
மிகைசெய் விராளம் வெருகென வாண்பெயர் மேவியதே.
**கீரி, முயல், கத்தூரி, நாய்
**162
#16
கீரி நகுலஞ் சசமுயல் நாவி கிளர்மறிகத்
தூரிமை மான்மதம் நான மறிவன் றுருக்கமென்பர்
மூரி யெகினஞ் சுணகன் ஞமலி முடுவல்சுவாக்
கூரிய நாய்சுணங் கன்ஞாளி சூரன்வெங் குத்திரனே.
**பெண்நாய், குரங்கு
**163
#17
முடுவல்பெண் ணாயென்பர் கானவன் மற்கட மூரியரி
கடுவன் வலிமுகஞ் சாகா மிருகங் கவிகுரங்கு
திடகோ குலம்ப விலவங்கம் வானரஞ் சீறுமந்தி
யுடலிய கோடர மேயூக மாமென் றுரைத்தனரே.
**கருங்குரங்கு, பெண்குரங்கு, முசு, உடும்பு, கோம்பி
**164
#18
கானவல் யூகங் கருங்குரங் கூகங் கருதுமந்தி
யானது பெண்பெய ரோரியக் கள்வ னடந்ததலை
தானு முசுவென்பர் கோதா முசலி தருமுடும்பு
கூனு மெழில்திண் டுடன்காம ரூபியுங் கோம்பியதே.
**மூஞ்சூறு, எலி, அணில், விலங்கினில் ஏற்றை
**165
#19
சுந்தரி யேசுண்டன் மூஞ்சுறு சூர னெனச்சொல்லுவர்
முந்து சிகரி கருப்பை யிரும்பன் மொழியிலெலி
வந்த வணில்வெளில் போத்தே யொருத்தல் வயக்களிறோ
டொந்திய வும்பல் விலங்கினி லேற்றைக் குரியன வே.
**களிறு, ஒருத்தல், ஏறு
**166
#20
கரிகேழ லென்னிற் களிறாங் கவரி கரடி பன்றி
மரையானை மான்புலி புல்வா யெருமை வருமொருத்த
லிருளார் கவரி மரைமா னெறுளிபுல் வாயெருமை
நிரையாரும் பெற்றஞ் சுறாவிவை யேறென நேர்படுமே.
**போத்து, பகடு, தகர்
**167
#21
பெற்ற மெருமை மரையேபுல் வாய்புலி யேற்றமரி
யுற்ற பயத்தி லுறைவன போத்தென்ப ரோங்கெருமை
மற்றிபம் பெற்றம் பகடாஞ் சுறவு வயக்களிறு
தற்றிற லாளி துருவாட்டி னேற்றைத் தகரென்பரே.
**உம்பல், சேவல், கடுவன், பெண்பெயர்
**168
#22
உழையே முசுக்கலை யாட்டினி லேற்றே யுலாவுமும்ப
லெழிலார் மயூரமுங் கோழியுஞ் சேவ லிகற்குரங்கு
விழைவார் கடுவ னெனப்பெறும் பாட்டி மிகுபிணவுங்
கொழுநாகு பெட்டை பிணையென்று பெண்பெயர் கூறினரே.
**பெட்டை, பிணை, நாகு
**169
#23
ஒட்டகம் வாசி கழுதை மரையென வோங்கியபேர்
பெட்டை புலியுழை புல்வாய் கவரி பிணையெனலாம்
வட்டிய பன்றிபுல் வாய்நாய் பிணையென்பர் வாமரையுங்
கிட்டிய வாவு மெருமையு நாகெனுங் கேண்மையதே.
**நாகு, பாட்டி, மந்தி, பிணா, ஆண், பெண்
**170
#24
பசுவே யெருமை மரைநாகு நாய்பன்றி பாட்டிகலி
முசுவே யெனின்மந்தி யொட்டகம் வாசி முழங்குகரி
திசையார் கழுதை பிணாநரி பாட்டி யெனத்திகழு
மிசைவான வாண்பெண் ணவையவை யாக விளம்பினரே.
**பிணவு, போதகம், பார்ப்பினம், குருளை, பறழ்
**171
#25
புனைபெண் பிணவு புலியரி மாக்கரி போதகமாம்
வனவெங் குருளை பறழே குழவி மறிகன்றுபார்ப்
பினமேவு குட்டி விலங்கின் பறளை யிகல்முயல்நாய்
பனியார் நரிபுலி யேனங் குருளை பறழென்பரே.
**பிள்ளை, பிணை, மறி, ஊகம், குட்டி
**172
#26
பிள்ளை யெனும்பெயர் நாயன்றி யெய்தும் பிணையழுங்கு
வள்ளிய வாடு மறியென்பர் கோடுற வாழ்விலங்கு
முள்ளெயி றுற்ற குரங்கென்ப ரூக முசுவெருகு
துள்ளு மணிபறழ் குட்டியின் பேர்பெறுந் தோகையரே.
**குழவி, பார்ப்பு
**173
#27
வாசி கடமை மரையானை யொட்டகம் மான்கவரி
காசறு மோட்டு கழுதை கராங்கன்று கார்க்கடமை
யோசை யிபமரை மான்மேதி யொட்டக மாங்குழவி
பேசிய பார்ப்புத் தவழ்சாதி யெய்தப் பெறுமென்பரே,
**குருளை, கன்று, விலங்கு, தொறு, வாற்கீழிடம்
**174
#28
குருளைகன் றென்ப ருழையை முசுவைக் குருளையென்பர்
சுரிமுக நந்தினி னேறுடன் மாவுஞ் சொலிற்குருளை
மருவுறு மானுடன் மாவும் விலங்கென்பர் வற்காலியி
னிரைதொறு வென்பர் வெருகமும் வாற்கீழ் நிலையிடமே.
**விலங்கின் கூட்டம், வாலுறுப்பு, முதுகு
**175
#29
சாலவ நீலங் கணப்பூகங் கூட்டந் தருவிருந்த
மேலவை யென்னிற் பிறற்பாற்கு மெய்துமென் றோகையுடன்
வாலதி கூல மிலாங்குல மாமென்பர் வாலுறுப்பே
சீலமூடன் மஞ்சு நீண்முது கென்பர் தெரியிழையே.
**யானைச் செவி, மதம், மதம்பாய் சுவடு, கால்
** விலாழி, வால்
**176
#30
கரிச்செவி யாங்கன்னந் தாலமதங் கடந்தானங் கடா
மருக் கடம்பாயுஞ் சுவடாங் கரடமங் காத்திரமே
வெருச்செயு மங்கிதங் காலாம் விலாழியும் வேட்கையுறு
தரத்தகு நீரதின் வால்தால வட்டந் தகுமென்பரே.
**காளை முரிப்பு, கொம்பு, தோல்
**177
#31
விடைபயின் மூரிமுரிப்பே யிமிலென்பர் வெண்மருப்பும்
வடிவுறு கோடு முலவையுங் கொம்பு வடகம் பச்சை
யுடலு கிருத்திமம் தொக்குச் சரும முரிவையதள்
துடரும் புறணி துருத்தி துவக்கிவை தோலென்பரே.
**ஊன், பெற்றத்தின் ஊன், இரத்தம்
**178
#32
தசைதடி தூவு புலாலே புறணி சடம்விடக்குப்
பிசிதம் வள்ளுரம் புலவேமெய் யூனென்ப பெற்றத்திலூன்
றசையும்வள் ளுரம் பெருகுசெந் நீரிரத் தங்குருதி
கசிதரு சோரி யுதிரநெய்த் தோர்செங் கறையென்பரே.
**நிணம், முடை, சூல், பாம்பின் படம்
**179
#33
இழுது விழுக்கு நிண மேநெய் யாகு மெனவுரைப்பர்
புழுவே ரழுகுந் தசைபூழ்தியொ டூழ்த்தல் புலவுமுடை
தொழில்புனை பீள்வெஞ் சினையே கருவிவை சூலதென்பர்
பழகிய பையும் பணமும்வெம் பாம்பின் படமென்பரே.
**பாம்பு, பெரும்பாம்பு
**180
#34
அரவு புயங்கம் பணிமா சுணஞ்சற்ப மங்கதமே
யுரகம் வியாள மகிபாந்தள் நாக முரவரியே
கரள தரம்பன் னகந்தந்த சூகம்வெங் கட்செவியாம்
பரவிய மாசுணம் பாந்தளெல் லாம்பெரும் பாம்பென்பரே,
**பாம்பின் படப்பொறி, கருடன், கழுகு
**181
#35
உரகன் படப்பொறி யுத்தியுந் துத்தியு மோங்குவணன்
கருடன் கலுழ னரவா சனத்தன் ககபதிபுள்
ளரசன் திறல்வயிந தேயன்விந தாசுத னாகுமென்ப
ரிரையுங் கழுகென்ப தாமுவ ணப்புள் ளெருவையுமே.
**வன்சிறைப்புள், பருந்து, சாதகம், குயில்
**182
#36
மாறெதிர் சிம்புள்ளு வாருண் டகமுயர் வன்சிறைப்புட்
பாறுடன் சேனமுங் கங்கமு மாகும் பருந்தகல்வான்
கூறுபுட் சாதகங் கூட்டிசைப் பிள்ளை குணங்குயிற்கு
வேறுள கோகில மேகாள கண்டம் விதித்ததுவே.
**செம்போத்து, கோழி, கூகை, மயில்
**183
#37
குக்கில்செம் போத்துச் சகோரமு மாங்குக் குடங்கொடுமை
மிக்க பதாயுதம் வாரணங்_கோழி விறற்குடிஞை
மைக்கட் குராலுடன் கோட்டானுங் கூகை மயூரமஞ்ஞை
தொக்க சிகண்டி சிகாவலங் கேகயந் தோகையதே.
**மயில், மயிற்பீலி, சிறகின் முதல் முள், காக்கை
**184
#38
சிகியே பிணிமுக மும்மயி லாந்தொங்கல் திண்கலப
மிகல் பீலி கூழை யிறகென் றுரைப்ப ரெழுமுருந்து
தகுமே யிறகின் முதன்முளென் றோதுந் தயங்குகொடி
ககமேவு காரியல் வாயசங் காக்கை கரும்பிள்ளையே.
**வலியான், கருங்குருவி, கிளி, கவுதாரி
**185
#39
வயவன் வயானன் வலியான் பெயர்பெறு மாவலியன்
கயவா யிரண்டும் கருங்குரு விப்பெயர் காமர்கிள்ளை
நயவன்னி தத்தை சுகங்கிளி யாமென்பர் நாடுமிகற்
சயமேவு பூழ்சிதல் தான் கவு தாரிக்குத் தக்கதுவே.
**புறா, அன்றில், ஊர்க்குருவி, பகண்டை
**186
#40
கணம்பயில் மென்பறைப் பாரா வதமுங் கபோதமுந்தூ
துணும்புற வும்புறு வாகுந் தரிஞ்சமுஞ் சொல்லிலன்றில்
குணங்கொள் சகட மெனிலூர்க் குருவி குலப்பகண்டை
யிணங்குமிதலி குறும்பூழ் சிவலென் றியம்புவரே.
**நாகணவாய், குறும்பூழ், மீனெறியும் சிறுபறவை
** பறவைப் பொது, கொக்கு
**187
#41
பூவைமென் சாரிகை நாகண வாய்குறும் பூழுரைக்கிற்
சேவலங் காடை சிரல்மீ னெறியுஞ் சிறுபறவை
போவிச் சகுனம் போகிலே பிணிமுகம் புட்பறவைக்
காவும் பொதுப்பெயர் கொக்குக் குரண்ட மடற்பகமே.
**ககம், அன்னம், அன்னத்திறகு, சகோரம்
**188
#42
ககமேவி கங்கம் பதங்கமு மாகுஞ்செங் காலெகினம்
வகைமேவு மன்னம் பிணிமுக மோதிம மஞ்சமதி
நிகர்தூவி யன்னத் திறகே சகோரநன் னேமிப்புள்ளுப்
புகழ்மேவு சக்கர வாகப்புள் ளென்னப் புகன்றனரே.
**பெருங்குருகு, நாரை, குருகு, சம்பங்கோழி
** நீர்க்காக்கை
**189
#43
பேரானை யுண்குரு கென்னிற் பெருங்குரு கென்னப்பெறும்
போரார் பிதாவுமப் போதாவும் நாரை புனைகுருகு
சீரார்வண் டானந் திகழ்சம்பங் கோழி சிறந்தகம்புள்
காராருங் காரண்டம் நீர்க்காக்கை யாமென்பர் கற்றவரே.
**வண்டு
**190
#44
அரிசஞ்ச ரீகம் ஞிமிறு மதுக மறுபதமாம்
வரியளி தும்பி சுரும்பு கழுது மதுகரமே
பிரமரந் தேன்வண்டு சாரங்கங் கோரமிசை பிரசம்
விரைமலர்த் தாழுய ராற்பத மாக விளம்பினரே.
**ஆண் வண்டு, இந்திரகோபம், விட்டில்
** சிள்வீடு, நுளம்பு
**191
#45
தூய சுரும்பவற் றாணே மதுகரந் தும்பியென்ப
ரீய லியங்கிய முதாய்செங் கோப மிகற்பதங்க
மேய கலப மெனில்விட்டில் சில்லி விறற்சிகடி
யாயசிள் வீடு நுளம்பாகு நுள்ளல் நுளுவலுமே.
**கொசு, சேவல், எழால், பறவைப்பெண், அளகு
**192
#46
கொசுகேம சகமுங் கோமயி லன்றில் குலப்பறவைக்
கிசைவாகுஞ் சேவ லிகற்போத்து மஞ்ஞை யெழாலென்னலாந்
திசைமேவு பேடையும் பெட்டையும் புள்ளிற் றிகழ் பெண்ணென்ப
ரசைகோழி கூகைபெண் பேரா மவற்றை யளகென்பரே.
**பறவையின் இளமை, முட்டை, வாயலகு, இறகு
**193
#47
பறவை யவற்றி னிளமையும் பிள்ளையும் பார்ப்புமென்பர்
முறைசினை யண்டங் குடம்பையு முட்டைமெய் மூக்குத்துண்ட
மறைகுவர் வாயல காகப் பறையோ டரந்தபிச்சஞ்
சிறுதூவி கூழை சிறையிற கென்னவுஞ் செப்பினரே.
**தொழுதி, முதலை, ஆண்முதலை, சுறாமீன்
** கெளிறு
**194
#48
துடர்ந்தெழு புள்ளொலிக் கூட்டந் தொழுதி துயர்வெங்கரா
விடங்கர்கிஞ் சும்மாரம் வன்மீன் முதலை யிகலுங்கரா
மடங்கவற் றாணென்ப ராடன் மகர மடற்சுறவாங்
கிடங்கினி லாலிற லாகுங் கெளிறு கெடிற்றென்பரே.
**மீன், திமிங்கிலம், திமிங்கிலகீலம், மலங்கு
**195
#49
மச்சஞ் சலசர மீனதை நுங்கிய மச்சமெனின்
மெச்சுந் திமிங்கில மாமந்த மீனை விழுங்கியமீ
னிச்சிய மான திமிங்கில கீல நெடுமலங்கு
நச்சிய நூறையெனவே யுரைக்குமிந் நானிலமே.
**சங்கு, வலம்புரி, சலஞ்சலம், வாரணம்
**196
#50
நந்து பணிலஞ் சுரிமுகங் கோடே நாகுநத்து
வந்தெழு கம்பு வளைசங்க மாகும் வலம்புரியின்
சந்த முரைத்திடின் மிக்க கதிலுஞ் சலஞ்சலமே
சுந்தர மிக்கதச் சங்குக்கு வாரணஞ் சொல்லுவரே.
**நத்தை, இறால், தவளை, ஆமை
**197
#51
நாகு சுரிமுக மேகரு நந்தெனி னத்தையிற
வாகு மிறாலெதி ருந்தோல தேரை யரிமரையே
நீகமண் டூகந் தவளை கமடநன் னீர்க்கச்சப
மோகர கூரும மாமையி னாம மொழிகுவரே.
** நண்டு, நண்டின் ஆண், தேள், சிலம்பி, எறும்பு
**198
#52
அளைபயி னள்ளி குளிர்கற் கடக மலவனண்டு
களவ னவற்றினி லாணென வோதுங் கருந்தெறுக்கால்
தெளியில் விருச்சிகந் தேளாமு லூதை சிலம்பியென்ப
ருளுவு சுவாகு முறவியுந் தானென்ப ரூரெறும்பே.
**நாகரவண்டு, சிதலை, புழு, தேன்கூடு, கோற்புழு
**199
#53
சிறுநாகர வண்டு நொள்ளைசெல் லாழல் சிதலையென்ப
கறையான் கிருமிவெங் கீடம் புழுவென்ப கற்பிரசங்
குறையாத தென்றுந்தேன் கூடிறா லென்பர் கோற்புழுவு
முறையான கீட முடனே வுலண்டென வோதுவரே.
**பாரதிதீப வரலாறு
**200
#54
மீன்றாவு வாவிக் கடம்பையில் வாழ்திரு வேங்கடவன்
ஏன்றாசு கூறுங் கவிவேந்தன் பாரதி யேற்றமலர்த்
தேன்றாழ் தொடைப்புயன் செப்பிய பாரதி தீபந்தன்னில்
மூன்றாவது விலங் கின்பேர்த் தொகுதி முடிந்ததுவே.
@4 நாலாவது மரப்பெயர்த் தொகுதி
**தருவின் வகை, சந்தனம், அகில்
**201
#1
சந்தானந் தேவ தருப்பாரி சாதந் தடக்கற்பக
மந்தார மென்பர் சந்திர திலக மலையசமே
கொந்தாரஞ் சந்திவை சந்தன மாமென்பர் கூரகரு
நந்தாத காகதுண் டம்பூழி லேயகி னாமங்களே.
**ஆச்சா, இத்தி, மகிழ்மரம், தேக்கு,
** சண்பகம், சோகு
**202
#2
ஆவென வோதுவ ராச்சா மராமர மானமர
மேவிய சால மிறலியித் தீயென்பர் மெய்வகுளந்
தாவி லிலஞ்சி மகிழ்சாதி தேக்கென்பர் சண்பகமே
தூவலர்ச் செண்பகம் பிண்டி செயலைய சோகென்பரே.
**ஆல், அரசு, மருதம், கொன்றை
**203
#3
குலவு வடந்தொன் மரமாம் பழுமரங் கோழியுமா
விலையில் கணவம் பணையே மராமர மச்சுவத்த
மலிதரு போதி யரசா மருச்சுன மாமருத
மிலகு மிதழி கடுக்கை மதலை யெனுங் கொன்றையே.
**குடவு, நாவல், வேம்பு, காஞ்சிரை, அத்தி, கோங்கு
**204
#4
கொட்டங் குடிலங் குடவென் றுரைப்பர் குலவுசம்பு
மட்டவிழ் நாவல் மலிநிம்பம் வேம்புவன் காஞ்சிரையா
மெட்டி யதவு முதும்பர மும்மத்தி யென்பர்கயா
கட்டவிழ் சூட்டிணர் மென்கோங்க தாங்கன்னி காரமுமே.
** புளிமா, மாமரம், செருந்தி, புன்னாகம், மஞ்சாடி
**205
#5
போதவி ழாம்பிர மேசூத மாழை புகழ்புளிமாச்
சூதமென் சேகர மாமர மேகொக்குத் தூயநன்மாச்
சீதள பஞ்சரஞ் செங்கோ டுரைக்கிற் செருந்திபுன்னை
யோதுபுன் னாகந் திலகமஞ் சாடியென் றோதுவரே.
**வன்னி, கடுக்காய், பச்சிலைமரம், கருங்காலி,
** ஆத்தி, குருந்தம், நெல்லி
**206
#6
சமியே கலீகமும் வன்னி யரிதகி தான்கடுக்காய்
கமழுந் தமாலம் பசும்பிடி பச்சிலை காறகத்திர
மமர்கருங் காலியார் தாதகி யாரமு மாத்திகுந்தம்
நிமிர்குருந் தென்பர் நிரையா மலகமும் நெல்லியுமே.
**செங்கருங்காலி, புளி, இல்லம், வெட்பாலை, விளா
**207
#7
கந்த மிகுஞ்சிறு மாரோட்டஞ் செங்கருங் காலிசிந்தஞ்
சிந்துர மாம்பில மேயெகி னஞ்திந் துருணிபுளி
கொந்தில்லம் பொங்கா லம்வெட் பாலை (வற்சம்) குடசமென்பர்
முந்திய வெள்ளில் விளாவில்வ மாமென்பர் மொய்குழலே.
**குமிழ், முருக்கு, குடைவேல், பாதிரி, சேமரம்,
** ஈரப்பலா, வில்லுவம்
**208
#8
கடம்பல்மென் கூம்பல் குமிழ்கிஞ் சுகங்கவி ரேமுருக்காம்
உடைகுடை வேலென்பர் பாடலம் பாதிரி யோங்கழிஞ்சி
லடர்தருஞ் சேமர மங்கோல மாசினி யீரப்பலா
மிடைதரு கூவிள மாலூரங் கூவிளை வில்லுவமே.
**கடம்பு, வேங்கை, வருக்கைப்பலா, தாதுமாதுளை,
** மாதுளை, எலுமிச்சை
**209
#9
கடம்பு விசால முடனீப மேகதம் பந்திமிசு
படுந்தி மிலேகணி வேங்கை வருக்கைப் பலாப்பனசம்
மடங்கிய தாதிம முந்தாது மாதளை மாதுளங்க
மிடந்தெழு மாதுளை சம்பு முருக்கெலு மிச்சமுமே.
**குருக்கத்தி, நாரத்தம், அகத்தி, களா, காயா,
** இலந்தை, நறவம், ஞாழல் மரம்
**210
#10
குருகு குருக்கத்தி மாதவி யாகுங் குலநரந்தை
கருதிய நாரத்த மச்ச மகத்தி களங்களாவா
மிருள்காசை பூவைமென் காயா விரத்தி யிலந்தைதள்ளி
மருவு நறவ மதுநாகம் ஞாழல் மரமென்பரே.
**குங்குமம், உலவை, ஒடு, உன்னம், கமுகு, தணக்கு
**211
#11
மலிமா தவந்துருக் கங்குங் குமமா மரமுழுஞ்சி
லுலவை யொடுவை யொடுப்பையோ டாண்மர முன்னமென்பர்
கலிகெழு பூகமும் பூக்கமுங் கந்தி கமுகதென்பர்
தலமிசை மேவு நுணவை தணக்கெனச் சாற்றுவரே.
**பனை, இளம்பனை, வாழை, தெங்கு, கரும்பு
**212
#12
புனைதாலம் நீலம் பொருபெண்ணை போந்தைபுற் றாளியென்னிற்
பனையாகும் போந்தை யிளம்பனை வாழை பயிலரம்பை
கனிநாளி கேரமுந் தாழையுந் தெங்கென்ப கன்னல்கழை
யினவேழ மிக்குக் கரும்பென வோது மெழுபுவியே.
**மூங்கில்
**213
#13
வரைவேழங் காம்பு திகிரிமுந் தூழ்தட்டை வாங்கியபா
திரிகீ சகம்வெதி ரேபணை வேணுச் சிறந்தகழை
நிரைவேரல் விண்டுவேய் கண்பாண்டி லோங்கல் நெடுங்கிளையே
யரிமேவு தூம்புடன் சந்திவை மூங்கி லமையென்பரே.
**தாழை, பூவாது காய்க்குமரம், வண்டுணாமலர்மரம், மரப்பொது
**214
#14
கேதகை தாழை முடங்கல் மடிகைதை கேள்கண்டலாம்
போதணு காத குணமரங் கோளி புனைசெண்பகந்
தாதவிழ் வேங்கை யளிபயி லாமரந் தாபரமே
பாதவந் தாருத் தருமரப் பேர்பொதுப் பாசென்பரே.
**மரச்செறிவு, பொதும்பு, நந்தவனம்
**215
#15
கோல மரச்செறி வாகும் பொதும்பருங் கோடரமுஞ்
சாலும் பொதும்புத்தி யானமுய் யானமென் றண்டலையே
சோலைதண் காவல் பொழில்நந்த வானமந் துடவைநறாக்
காலு முபவனந் தோட்ட மிளமரக் காவென்பரே.
**இலையுதிர்காடு, கரிகாடு, காவற்காடு, தூறு,
** இண்டை, முள், முள்ளுடை மூலம்
**216
#16
இலையுதிர் காடு முதைசுரம் பொச்சை யெனிற்கரிக்கா
டலகி லரண்மிளை காவற்கா டென்ப ரரளிறும்பு
கலிகெழு தூறிண்டை யீங்கை கடுக்கண்டகமும் முள்ளும்
மலிதரு முண்டக முள்ளுடை மூல வகைபெறுமே.
**காடு, பிரம்பு
**217
#17
அடவி முளரி வனங்கான மாரணி யங்களரி
கடறு குறும்பொறை காந்தாரம் கட்சிவெங் காண்டமத்தம்
படர்தரஞ் சீரணி பொச்சை கவனம் பழுவந்தில்லம்
விடரிவை காடென்பர் வேத்திரஞ் சாதி விறற்பிரம்பே.
**மரக்காழ், வெளிற்றுமரம், புறக்காழ்மரம்
**218
#18
அரிகலை யாசினி சேகே வயிர மவைமரக்கா
ழுரலன மாமர மகக்கா ழெலவே யுயர்முருக்கு
மருவிய பான்மர மெல்லாம் வெளிற்று மரமதென்பர்
கருதிய நற்புறக் காழ்பனை யேதெங்கு காற்கமுகே.
**சிறுதூறு, மருந்து, சல்லியகரணி
**219
#19
திரண்ட பதுக்கை யரில்சிறு தூறு செழும்புதலே
பொருந்திய வல்லி மரம்பூடு புல்லுப் புகழ்ந்துரைக்கில்
மருந்தென லாஞ்சத் திரமே யுறாவகை மாற்றுவதே
யிருந்திறற் சல்லிய கரணியாக வறைந்தனரே.
**சந்தானகரணி, சமனகரணி, உயிர்தரு மருந்து
**220
#20
சிந்து முடற்றுணி யெல்லா மொருவகை சேரும்வண்ணஞ்
சந்துசெய் விப்பது சந்தா னகரணி சார்தழும்பு
வந்த விரணமும் போக்கி விடுஞ்ச மன கரணி
யுந்திய மாமிருதஞ்சீ வனியு முயிர்தருமே.
**மரத்தின் இளமை, இளமைப்பெயர் பெறாதவை, மரக்கொம்பு
**221
#21
குழவிகன் றேபிள்ளை போத்தென் கிளவியுங் கூறினமாத்
தெழிலிள மைப்பெயர் நெல்லுடன் புல்லெனி லெய்தலுறா
வொழுகிய பொங்கர் சினைபணை சாய்கை யுறுப்புலவை
கொழுவிய கோடரங் கோடு பிறக்கமென் கொம்பென்பரே.
**தழை, இளங்கொம்பு, இலை, தளிர்
**222
#22
தழையே யுலவை வளரிளங் கொம்பென்பர் தண்ணடையே
யெழிலோலை பாசடை பத்திரஞ் சாய்கை யிலகு பன்னம்
விழைவார் தமால மிலைவல் லரிமுரி மென்கிளையே
குழைவார் கிசலைய மஞ்சரி பல்லவங் கொய்தளிரே.
**தளிர்த்தல், குருந்து, இணர், பழம், பரலினுட்படு குருத்து
**223
#23
குழைத்த லிலிர்த்தல் தளிர்த்தல் முருந்து குருந்தெனலா
மெழிற்றகை மஞ்சரி கொத்துத் துணருடன் றொத்திணராம்
பழப்பெய ரென்னிற் பசுங்கனி யாம்பலம் பரலினுட்பட்
டொழுக்கிய மென்குருத்துப் பயினாக வுரைத்தனரே.
**நந்தியாவத்தம், கஞ்சா, நொச்சி, கார்த்திகை நாண்மலர், காந்தள்
**224
#24
மல்லல் வலம்புரி தானந்தி யாவத்த மன்னுகஞ்சங்
குல்லைகஞ் சாநொச்சி யேசிந்து வாரமென் கோடலுடன்
நல்லசெங் காந்தளுந் தோன்றியுங் கார்த்திகை நாண்மலராம்
புல்லும்வெங் காந்தளுங் கோடலென் றேசொல்லும் பூதலமே.
**ஊமத்தை, ஆமணக்கு, குறிஞ்சி, அலரி, வெட்சி
**225
#25
இலகிய பூமத் தகமெனி லூமத்தை யேரண்டமே
குலவிய வாமணக் காகுங் குறிஞ்சியுங் கோரண்டமா
மலரி கணவரி மென்கர வீர மணுகுஞ் செச்சை
யுலைவில்செந் தூர மவைவெட்சி யாக வுரைசெய்வரே.
**சிறுமூலகம், பருத்தி, துழாய், மிளகு, கடுகு
**226
#26
திப்பிலி காமஞ் சிறுமூ லகஞ்சிறு பூளை செப்பில்
ஒப்பி லுழிஞைவெங் காற்பாசம் பன்ன லொளிர்பருத்தி
கப்படர் குல்லை துளபந் துழாய்மரி சங்கறியாய்
வைப்பர் மிளகு கடிப்பகை யையவி வண்கடுகே.
**மஞ்சள், கருணை, வாசப்பண்டம்
**227
#27
அரிசனம் பொன்மை யரித்திர மஞ்சளென் றாகுங்கந்தங்
கருணைதற் கோல மிலவங்க மேநற் றகரங்கோட்ட
மருவிய வேலம் வளர்சாதிக் காயுடன் மாஞ்சிமற்றும்
பரவுகைச் சோல மிவைவாச மேவிய பண்டங்களே.
**கொத்தமூரி, கழங்கு, கழல், கிலுகிலுப்பை,
** சேம்பு, சிறுகீரை, கற்றாழை
**228
#28
உலகினு ளஞ்சிப் பெயர்கொத்த மூரிக் குரைப்பர்மண்மேற்
குலவிய மூழல் கழங்கோ கொடிக்கழல் கொய்பகன்றை
கிலுகிலுப் பைசகு டஞ்சேம்பு கேள்சிறுக் கீரையென்னிற்
குலைபெறு சாகினி சில்லி குமரிகற் றாழையதே.
**வழுதுணை, சாரல்விளையும் கெல், செந்நெல்,
** குளநெல், தோரை, இறுங்கு
**229
#29
ஆரும் பிரகதிர் வங்கம் வழுதுணை யைவனமே
சாரம் விளையுநெற் சாலியுஞ் செந்நெற் றயங்கியநீர்
வாரங் குளநெல்லி யவையுந் தோரை மலியுணவாம்
ஏருறு சொன்னலுஞ் சோளமுங் கூறி லிறுங்கென்பரே.
**கருந்தினை, செந்தினை, முதிரை, எள்,
** எள்ளிளங்காய், கதிர், தினைத்தாள்
**230
#30
இறடி கருந்தினை செந்தினை யேன லெழுமுதிரை
செறியு மவரை துவரைக ளென்னுந் திலமுமெள்ளுக்
கறைபயி லெள்ளிளங் காயென்பர் கெளவை கதிர்குரலாந்
திறியு மருவி யிருவியெல் லாந்தினைத் தாளென்பரே.
**பதர், வைக்கோல், போற்றாப்பொலி, பயிர், புல் பிறப்பு
**231
#31
பதடி யெனிற்பத ராகும்வைக் கோல்வை பலாலமென்ப
ரதுவு முரைக்கி லழியென்ன லாம்பொங் கழியுரைக்கிற்
புதிய களந்தனிற் போற்றாப் பொலிபயிர் போற்றுபைங்கூ
ழுதவி பசும்புற்கு மாம்புதற் புல்லென் றொருபிறப்பே.
**கோற்கொடி, கற்பகம்சேர்கொடி, கொடி,
** மென்கொடி, நாரரி
**232
#32
இலதை யெனும்பெயர் கோற்கொடி கற்பக மெய்துகொடிக்
குலம துரைத்திடில் மென்காமர் வல்லிவெங் கோற்கொடியாம்
நலமிகு மென்கொடிச் சாதிப் பிறப்புக்கள் நாரரியே
நிலைபெறு நெய்யரி தெங்குநார்ப் பாளைக்கு நேர்ந்ததுவே.
**வன்கொடி, கிழங்கு, இருவாச்சி, மல்லிகை, முல்லை
**233
#33
வந்தெழு வல்லியும் வள்ளிலும் நூழிலும் வன்கொடியாங்
கந்தமு மூலமு மாகுங் கிழங்கு கமழ்மயிலை
முந்திரு வாச்சி முழுமெளவல் மல்லிகை மொய்த்தளவு
கொந்தணி மெளவலு முல்லையின் பேரென்று கூறுவரே.
**சிறுசண்பகம், பிச்சி, கொவ்வை, அடம்பு, சிறுதூறு, பீர்க்கு
**234
#34
கருமுகை பித்தி சிறுசெண் பகங்கமழ் சாதியென்பர்
விரைமெளவல் மாலதி யேபிச்சி தொண்டையும் விம்பமுமே
யருகடர் கொவ்வை யடம்புசேர் பாலிகை யாமதிரல்
பிதிர்சிறு தூறென்பர் பீரமும் பீர்க்கென்று பேசினரே.
**கூதாளி, சிவதை, சீந்தில், காஞ்சொறி, ஏதாளி, தருப்பை
**235
#35
கூதாள மேதுடி கூதாளி யென்பர் கொடிச்சிவதை
தீதார் பகன்றை யமுதவல் லிப்பெயர் சீந்திலென்பர்
மீதாரங் கண்டுரங் காஞ்சொறி பஞ்சிக மேயுரைக்கி
லேதாளி யாகுங் குசையே தருப்பை யிசைவுறுமே.
**நாணல், பஞ்சாய்க்கோரை, வாட்கோரை, முள்ளி, பாசி, குளிரி
**236
#36
காசையு நாணல் எருவைபஞ் சாய்கழிக் கோரையகம்
வீசு செருந்தியும் வாட்கோரை முண்டக மேவுமுள்ளி
மூசிய சைவலஞ் சேயீர நார முழுப்பதியம்
பாசி குளிரி யெனிற்கல்ல காரம் பயின்றிடுமே.
**தாமரை
**237
#37
வாரிசம் பங்கய முண்டகங் கோகன கம்வனசம்
வேரிய கஞ்ச முளரி சரோருகம் மென்மலரம்
போருகம் பற்ப மரவிந்தம் புண்டரி கங்கதிரோன்
றாரகம் போதம் புயஞ்சத பத்திரந் தாமரையே.
**கருங்குவளை, செங்குவளை
**238
#38
சலசம் பதுமங் குசேசயம் என்பர்தண் காவிதடங்
குலவுமிந் தீவர நீலோற் பலமென் குவலையமே
யலர்தரு பானல் கருங்குவ ளைப்பெய ராமரத்தம்
பலசெங் குவளை கழுநீரும் பன்னுற் பலமென்பரே.
**நெய்தல், செவ்வாம்பல், வெள்ளாம்பல், அகவிதழ்,
** புறவிதழ், பூவினுட்கொட்டை
**239
#39
கருகிய நெய்தல் குவலைய மாகுங் கயிரவமே
யரிபயி லல்லி குமுதம்வெள் ளாம்ப லகவிதழே
பொருவரு மல்லி புறவிதழ் புல்லித ழாம்பொகுட்டுக்
குருகெழு பூவினுட் கொட்டையின் பேரென்று கூறினரே,
**நால்வகைப் பூ, மொட்டு, மலர்
**240
#40
நீர்கொடி கோடு நிலமெனும் நால்வகை நீடியபூச்
சேர்கலி கைமுகி ழேநனை கோரகஞ் செவ்வரும்பு
வார்கணி கைநகை யேமுகி ழஞ்சினை மாமலர்மொட்
டேர்கமழ் போது துணர்வீ யலரி யிணர்மலரே.
**வாகை, பழம்பூ, பூந்தாது, இதழ், மாலை
**241
#41
வென்று புனைதரு பூவாகை செம்மல் மிகுபழம்பூ
மன்றலந் தாதென்னிற் கேசரங் கொங்கு மகரந்தமாந்
துன்றிய ஏடுடன் றோடு மலரிதழ் தொங்கல்கண்ணி
யொன்றிய கோதை தெரியல் அலங்க லொலியலுமே.
**மாலை, பிணையல், நுதல்மேலணி, வாசிகை
**242
#42
தொடலை யிலம்பகந் தார்மாலை தாமஞ்செஞ் சூட்டணிபல்
படலை சிகழிகை வாசிகை கத்திகை பைம்பிணையல்
மிடல்தருஞ் சூட்டு மிலம்பக மும்நுதல் மேலணியாம்
அடர்முடி வாசச் சிகழிகை வாசிகை யாமென்பரே.
**பாரதிதீப வரலாறு
**243
#43
விழியருள் பூண்ட நவதா ரணைமுகில் வேங்கடவன்
வழியினுள் வாழ்திரு வேங்கட பாரதி வண்டமிழின்
செழுமைய தாகு மிலக்கிய பாரதி தீபந்தன்னின்
மொழியொரு நான்கில் மரப்பேர்த்தொகுதி முடிந்ததுவே.
@5 ஐந்தாவது இடப்பெயர்த் தொகுதி
**துறக்கத்தின்பெயர்
**244
#1
வானகம் நாகம் பவன முயர்நிலை மாசுவர்க்கம்
தானம ராபதி யும் பரிடமைந் தருவுலக
மேனிலை பொன்னுல கம்விண் ணுலகம் விசும்பிடமே
கோனக ரிந்திர பதியே துறக்கங் குலவியதே.
**விஞ்சையர் சேர்விடம், வடக்கு, தெற்கு,
** மேற்கு, கிழக்கு
**245
#2
தீதகல் சேணியுஞ் சேடியும் விஞ்சையர் சேர்விடமா
மாதுறு போக நிலம துவாகும் வடக்குத்தரங்
கோதறு தென்றிசை தெக்கணம் பச்சிம மேகுடக்குப்
போதுறு மேக்குக் கிழக்குக் குணதிசை பூருவமே.
**தேவகுருவம், உத்தரகுருவம், திக்கு
**246
#3
தாதுறு தேவ குருவ முடனுத் தரகுருவ
மீதது வெள்ளி மலைபொன் மலைப்புற மேலரிதம்
மாதிரங் காட்டைக் ககுப மிசைபுல வம்பல்திசை
தீதக லாசை யுடன்கா வெனலிவை திக்கென்பரே.
**பூமி
**247
#4
அசலை யளக்கர் தரையே குவலைய மம்புவன
வசுமதி தாத்திரி சாந்தை விபுலை வசுந்தரைகூத்
திசைபயில் பூதலம் வேலா வலையஞ் செகம் பொறைமண்
இசைதரு பூமி மகிதலம் மேதினி யென்பர்களே.
**248
#5
தாரணி காசினி தாலந் தரணி தலம்புடவி
பாரக நேமி தராதலம் ஞாலம் படியவனி
பேருல கம்புவி பூதலம் வையம் பிருதுவிபூ
வாரி நிலம்பொழி லேகோ வகலிட மண்டிலமே.
**நரகம்
**249
#6
இருநிலம் பாவம் விளைநில மள்ள லிருஞ்சிறையே
துரகதி கொல்கதி பாதகங் கும்பி சுடரெரியே
யருவினை சூழ்மடல் பாதாளம் பாதலத்(துடன) ளறு
நிரைய நிகோதம் நரகமென் றேசொல்லு நீணிலமே.
**உலகின் பொதுப்பெயர், நாடு
**250
#7
நாகதலமுட னாடும் பவன நன் னாடுபொழில்
போக புடவி நிலமே யுலகின் பொதுப்பெயரே
யாகிய பைதிர மண்டிலம் பாண்டி லகலுள்கண்ட
மோகமென் றண்ணடை தெய்வநன் னாடென் றுரைசெய்வரே.
**மலை
**251
#8
வரைகுன்று நாகந் திகிரி யடுக்கல் மலைபொச்சைபூ
தரம்விண்டு சாரல்கல் வெற்புப் பிறங்கல் சயிலநகங்
கிரிதண் சிலம்பு குறும்பொறை வேதண்டங் கேள்பெருஞ்சி
கரிவெஞ் சிலைபறம் போங்கல் பொருப்பகங் கல்லகமே.
**மலை, மேருமலை, பொதியமலை
**252
#9
இரவி குவடு நவிரம் பருப்பத மேயிறும்பத்
திரியச லங்குத் திரங்கோடு பொற்றை சிலோச்சயமே
தரமா திரமென்பர் பொன்மலை மேருத் தயங்குவட
வரையாகு மென்பர் பொதியல்தென் குன்ற மலையமதே.
**குன்று, மலையுச்சி, மலைப்பக்கம்
**253
#10
குவடு பிறங்கல் பதலை குறும்பொறை குன்றிறும்பு
நவிலுவர் பொற்றை கொடுமுடி கோடு நலக்குவடு
தவசிக ரங்கிரி மேலுச்சி வாரம் தடஞ்சாரல்கான்
கவர்கட மென்னில் மலைப்பக்க மாகக் கருதுவரே.
**பாறை, துறுகல், மலைமுழை, பிலம்,
** மலைப்பிளப்பு, கற்புழை, சிறுதிட்டை
**254
#11
புலமிகு பாறை யறையே துறுகல் பொறைமுடுக்கர்
மலைமுழை கந்தர மாம்பிலங் கீழறை மன்றிரலுல
மலையின் பிளப் பேவிட ராகு முயர்கற்றிரட்
சிலைகற் புழையுங் கரணம் பதுக்கை சிறுதிட்டையே.
**விடர், திட்டை, உயர்நிலம், பரலடுத்துயர்நிலம்,
** பாதலம்
**255
#12
விடருங் கமருமவிப் பும்விட ரென்பர்கள் மேடுதிட்டை
திடவசு வல்வன் பால்கங்கர் குவால்குப்பை சேர்ந்தகுவை
யுடனுரை செய்யி லுயர்நில மாம்பர லுற்றுயர்ந்த
படர்நில மாகு முரம்பே யரம்பிலம் பாதலமே.
**கடல்
**256
#13
பரவை யளக்கர் மகரா லையமத்தி பெளவமுந்நீர்
நரலை சமுத்திரம் வேலா வலையம் நதிபதியே
திரையிற வாலையங் கார்கோள் சவருப்புச் சிந்தலையு
வரிகூல ராசி கடல்வேலை யார்கலி வாருதியே.
**கடல், கடற்றிரை
**257
#14
மாவாரி வீரை யுததி சலதி மகோததிபா
ராவார நேமி பெருநீர் புணரிமை யம்பரமே
பூவாடை சாகரஞ் சக்கர மாழி புணரியுட
னோவாத வோதங் கடற்றிரை யாக வுரைசெய்வரே.
**நீர்த்திரை, கடற்கரை, நீர்க்கரை
**258
#15
தரங்கங்கல் லோலம் விசிகர மேயறல் தத்துமலை
விரிந்தநன் னீர்த்திரை யாமென்பர் பாரமல் வேலையுட
னருங்கரை கோடணை கூலமந் தீர மடர்வரைபார்
பொருந்திய வாசப் புனலின் கரைக்குப் பொதுப்பெயரே.
**செய்கரை, மலைச்சாரல் வரும் ஆறு,
** முல்லைநிலக் கான்யாறு, ஆறு
**259
#16
செங்குலை சேதுக் குரம்பிவை செய்கரை தெள்ளருவி
யங்கிரிச் சாரல் வருமா றுயவை யருங்கலுழி
தங்கிய முல்லை நிலக்கானி யாறுந்தி தன்குடிஞை
பொங்கிய சிந்து நதியா றெனவும் புகன்றனரே.
**கழிமுகம், உப்பளம், காவிரி, பொருனை, ஆன் பொருனை
**260
#17
புகல்புகா ரோடை யதோமுக மென்னிற் பொருந்துகழி
முகமது வாகு முகங்காய லாங்கழி மொய்யுப்பளந்
தகுகானல் காவிரி பொன்னி பொருனையந் தண்பொருந்த
மகவானி யானி யிவையான் பொருனைக் கடைத்ததுவே.
**வாவி
**261
#18
அலந்தை கிடங்கு சுனையோடை கோட்டக மாவிமடு
விலஞ்சி படுக்கயங் கேணியுவளக மேரிபொய்கை
சலந்தரம் பட்டங் குளமே தடாகந் தடம்வலைய
மலங்கல்குட் டங்குண்ட மேவாவி சூழி யகண்டனையே.
**ஆற்றிடைக்குறை, கிணறு, ஊறல், நீர்க்குமிழி, ஆழம்
**262
#19
அறியி லிலங்கை துருத்திய ரங்கமவ் வாற்றிடையிற்
குறை கிணறா மென்பர்கூவ லசும்புடன் கூபமிவை
யுறவியு மூறல் குமிழியும் புற்புத மோங்குபெளவம்
நிறைநுரை யாழ மழுந்தயங் குண்டு நெடுங்கயமே.
**நிறைபுனல், சேறு
**263
#20
வாரி நிறையும் புனலே பிராறு வழாறு மென்பர்
நீருறு பள்ளம்வெங் காலாழந் தொள்ளி நிலையளக்கர்
காரகற் பூமிகுழை சேத கம்பங் கமானதொய்யல்
சீரில் செறும்புடன் செய்யலென் றோதுவர் சேற்றினையே.
**பொல்லாநிலம், வெள்ளைமணல், மணற்குன்று,
** நுண்மணல், புழுதி
**264
#21
சாலு மசுத்தம்பொல் லாத்தல மேயங் கணஞ்சகதி
வாலுகம் வெள்ளை மணலே புளின மணற்குன்றென்பர்
மேலற லாகுங் கருமணல் நுண்மணல் மேவியதாம்
பாலயிர் பூழி புழுதி பொடிக்குப் பகர்ந்ததுவே.
**குறிஞ்சி, நெய்தல், முல்லை, பாலை, மருதம்
**265
#22
குலமலைச் சார்பிட மாகுங் குறிஞ்சி மகோததிசூழ்
நிலமெனில் நெய்தல் வனஞ்சார் நிலமுல்லை நீரின்றியே
யுலர்நிலம் பாலை பணையே கழனி யுயர்பழன
மலிதரு பானல் வயல்சூழ் நிலமு மருதமதே.
**முல்லை, குறிஞ்சி, பாலை, வன்பால், மென்பால்,
** சமப்பால், கருகிலம்
**266
#23
பேராப் புறவம் பணைமுல்லை யாகும் பெயர்குறிஞ்சி
பாராரும் பாலை குறிஞ்சிவன் பாலை பகுத்தமென் பாலை
நீரார் மருதஞ் சமபடர் முல்லையு நெய்தல்வனங்
காரார் மலைப்புனல் தன்னில் மிகுஞ்சொற் கருநிலமே.
**ஊர்
**267
#24
சிறுகுடி பாக்கம் பதிநக ரேநொச்சி சேரிபுரங்
குறிபயில் பாடி யகலுழ் குறும்பு குறிச்சிமுட்ட
மிறையக ரம்பட்டி னம்பாழி பூக்க மிருக்கைகுப்ப
முறையுளங் கோசர மேபூண்டி வேலிதொல் லூரென்பரே.
**குறிஞ்சி நிலத்தூர், முல்லை நிலத்தூர்,
** நெய்தல் நிலத்தூர், பாலை நிலத்தூர், மருதநிலத்தூர்
**268
#25
குறிஞ்சி நிலத்த சீறூர் குறிச்சி குலவுமுல்லை
செறிந்தது பாடியும் பட்டின நெய்தலைச் சேர்ந்ததென்பர்
மறந்தரு பாலை குறும்பு முனையிடம் வாட்கையுட
னுறைந்தது தண்ணடை யாகு மருதத்தி லூர்ப்பெயரே.
**பதி, நகரப்பதி, பகைநிலத்துறைபதி,
** சூழ்கழி
**269
#26
பூரியம் பூக்கங் குடிக்கா டுறையுள் புனையருப்பம்
பாருறை செய்(யினி) லுழர்பதி யென்பர் பாடிபதி
சேரி புரநக ரப்பதி பாசறை தெ(ம்)முனை சேர்
சூரிடந் தோணா முகமே யிருக்கைமுன் சூழ்கழியே.
**மலை ஆறு சார்ந்த ஊர், ஊர்சூழ் பதி, அரணிருக்கை,
** புகார், கருவூர், மதுரை
**270
#27
கிரியா றிரண்டு மகலாத வூரெனிற் கேடகமா
மருகூ ருறைபதி கூறில் மடப்ப மரணிருக்கை
பொருகோ டெனிற்குறும் பாமென்பர் காகந்தி போற்றும்புகார்
கருவூரணி வஞ்சி கூடல் மதுரைக்குக் கற்பித்ததே.
**உறையூர், பாடி, தெரு, அங்காடி
**271
#28
பயில்தரு கோழி யுறையூரச் சேரியும் பாடியென்பர்
நியமமன் னாவண மேவீதி கோசுடன் ஞெள்ளல்மறு
குயர்தெரு மார்க்க மெனலா நியமமொண் கூலமுடன்
வியலுறு மாவண மங்காடி யாக விளம்புவரே.
**கோயில், மாதவர் வாழிடம்
**272
#29
குலவு சினகரஞ் சேதியந் தேவர்தங் கோயிலென்ப
நிலைய நிகேதன மாதிர மாலைய நீடுபள்ளி
மலிதரு கோட்டங் குலமே யுறையுள்வன் பாழிமன்னும்
நலமிகு மாதவர் வாழிட மாக நவிலுவரே.
**வீடு, இல், சிற்றில்
**279
#30
மாடம் வசதி பதிபாத்தில் சேர்வு வயினுறையுள்
வீடகம் புக்கில் லிடமே யிடவகை மேவுநகர்
கூடு மனை பவ னங்குல மாளிகை கூறிலில்லா
நீடிய சிற்றில் குரம்பையுங் கூரையு நேர்படுமே.
**இறப்பு, முகடு, தாழ்வாரம், அடுக்களை, சாளரம்
**274
#31
மூரி யிறையிறப் பாகும் விடங்க முகடென்பதாழ்
வார மெனத்தகுஞ் சோபான மட்டில் மடப்பளியுஞ்
சாரு மடுக்களை சாலேகஞ் சாலகஞ் சாளரமே
சீரிய நூழைதொல் வாதா யனமெனச் செப்பினரே.
**கல்லூரி, வேயுள், பீடம், சுவர்த்தலை, திண்ணை
**275
#32
மிகுகல்வி யூவியுங் கல்லூரி வேயுளும் வேய்தலென்றாகும்
சொகுதகு பீடமும் பீடிகை யாகுஞ் சுவர்த்தலையும்
புகலுவர் வித்தகர் பித்திகை யாகப் புனையுந்தெற்றி
திகழ்தரு வேதிகை திட்டை மண்ணீ டென்பர் திண்ணை யையே.
**நிலாமுன்றில், சித்திரகூடம், மன்றம், கழகம்
**276
#33
நிலமுன்றி லங்கண முற்ற மரமிய நீடுநிலாக்
குலாமுன்றி லாந்தெற்றி யம்பலஞ் சித்திர கூடமென்பர்
மலியும் பொதுவில் பொதுவம் பலமிவை மன்றமென் பர்
கலைதரு கல்வி பயில்கள மாகுங் கழகமுமே.
**கழகம், அரசர்கள் இருக்கை, அரங்கு
**277
#34
வல்லும் படையுநற் சூதுடன் மாறு மகிழ்ந்த கல்வி
சொல்லுங் களமுங் கழக மரசர்கள் சூழ்ந்திருக்கை
புல்லும் பெயரி னிலத்தாணி யாடிடம் போரிடமே
வெல்லும்வட் டாடிட மேயரங் காக விதித்தனரே.
**ஒருசிறை, அணியவிடம், உறைவிடம், மக்கள் உறங்கிடம்
**278
#35
அறியி லொருசிறை யேதுச்சில் கொட்டி லணியவிட
முறைவிட மேபிறப் பாகரம் பாழி யுறையுள் பள்ளி
செறிசய னங்கட்சி பாய லமளிமெய் சேர்விடமே
யுறைவரு சட்டகஞ் சேக்கையு மக்க ளுறங்கிடமே.
**குதிரைப் பந்தி, யானை மேவிடம், யானை செல்வழி,
** கூடு, வேள்விக் குண்டம்
**279
#36
செயமாவின் பந்தி பணைமந் திரந்தண்டஞ் சேவகமே
கயமே விடங்கயஞ் செல்வழி தண்டங் கருதுங்கட்சி
வியலார் குடம்பைவெம் பஞ்சரங் கூடென்பர் வேள்விக்குண்ட
முயர்வான தீத்தமும் வேதியு மாக வுரைசெய்வரே.
**மட்கலம் வேமிடம், சுடுகாடு, தொழு
**280
#37
மருவிய மண்கலம் வேமிடஞ் சூளை மயானமுடன்
கரிபுறங் காடு சுடுநில மீமம்வெங் காளவனம்
பெரும்பிணக் காடு சுடுகாடு வெய்ய பிதிர்வனமாம்
நிரைதொழுத் தோழ மான்வேலி தொறுவா னிலையென்பரே.
**போர்க்களம்
**281
#38
செருநில மாகவ பூமி யமர்க்களஞ் செம்புலமே
பொருகள மேயுத்த பூமிசங்கி ராமமண் போர்க்களமே
வெருவு பறந்தலை யாயோ தனதலம் வெங்களமே
பரிய பிணக்களம் வெஞ்சம தேசம் படுகளமே.
**வழுக்குநிலம், மதில், சிறை
**282
#39
ஆரிடை தீய வருட மருப்ப மவைவழுக்குப்
பாரி கலிஞ்சி யெயில் சுற்றுக் காவல் பயில்வரைப்புப்
பேரரண் காப்புப் புரிசை புகன்மதிற் பேரெனலாம்
சேருமு வளகம் வன்சிறை யாகவுஞ் செப்பினரே.
**மதிற்சுற்று, மதிலுறுப்பு, அகழி
**283
#40
வாரி தகைப்புத் தொடையெனிற் சுற்று மதிலுறுப்புச்
சேரும் விதப்புப் பதப்பாடு ஞாயில் திறவெந்திரம்
போருறு நாஞ்சி லுடன்றோணி கோசம் பொருந்துமென்ப
ராரகழ் கூறி லகப்பாப் பவிக மகன் கிடங்கே.
**வாய்தல், பெருவாயில், பெருவாயிலில் புகும் பூழை, வயல்
**294
#41
வரவியல் தோட்டி துவாரமும் வாரியும் வாய்தல் வண்கோ
புரமது சொல்லிற் பெருவாயி லென்பர் புதவுரைக்கிற்
பெருகிய வாயிலிற் போம்பெரும் பூழை பெருவிளையுள்
கருதிய செய்யும் வயலே விளையுங் கழனியுமே.
**குறிஞ்சி சாருநிலம், பழங்கொல்லை,
** புதுக்கொல்லை, தினைப்புனம்
**285
#42
சேரும் வரவை தடிபாத்தியோடு செறிகுறிஞ்சி
சாரு நிலங்கொல்லை தண்புன மாம்பழை தானகொல்லைப்
பேரு முதைப்புன மாம்புதுக் கொல்லையின் பேரிதையாம்
காருறு மேனல் தினைப்புன மாகக் கருதுவரே.
**தோட்டம், உழவு, உழவோர் வளைப்பு, புதுவரம்பு,
** வரம்பருகு, புற்று
**286
#43
துடவை படப்பை யெனுமிவை தோட்டந் துடவைதொய்ய
லுடனுழ வின்பெய ரோதுந் தொடுப்புழ வோர்வளைப்பு
வடிவமில் மாசி முதுவரம் பாகும் வரம்பருகா
மடர்தரு கங்குவன் மீகமும் புற்றென் றறைகுவரே.
**சூழ்வழி, அருகெறி, கவர்த்த நெறி, இழிவேற்ற வழி
**287
#44
நடவை செலவு சுரஞ்செப்ப மாரிடை நாடுமத்தந்
தொடரு மொழுக்குச் சிறுபத மேயிவை சூழ்வழியாங்
கடறு சுரமத்தந் தூம்பா மருநெறி கார்க்கவலை
படருங் கவர்த்த நெறியிழி வேற்ற படுகருமே.
**புற்றம்பழஞ்சோறு, முதுநிலம், வழி
**288
#45
குளிர்தரு புற்றம் பழஞ்சோ றுரைக்கிற் குரும்பியென்பர்
களரி கரம்பை பெரும்பாழ் முதுநிலங் கான்கடறு
வளர்நெறி யாறு பதமார்க்கந் தாரி வழிவருந்து
தளர்தரும் வட்டை பதவை யிகவு சரியென்பரே.
**இடம், பள்ளம்
**289
#46
புலங்களம் பாங்கர் வயின்வாய் வழியுழி போற்றுதிணை
நிலந்தலம் வைப்பு மருங்கு வளாகம் நிகிலம்பட்டி
யிலங்கிய தான முடன்சூழல் பாலிட மென்பர்பள்ள
முலர்ந்த கிழக்கவல் கீழே படுக ருவளகமே.
**பக்கம், நடு, மேல்
**290
#47
பக்கம் மருங்குமுன் பால்பாங்க ரேபுழை பாடுசிறை
மிக்க புடையிடம் ஞாங்கரென் றோதுவர் மேவுமிடை
யொக்கு நனந்தலை மத்திமம் நாப்ப ணுடனொத்தல்நள்
மிக்க நடுவும்பர் மீமிசை தானிவை மேலென்பரே.
**உயர்ச்சி, முன்னே, வந்துறல், முன்னர்
**291
#48
உந்தி நிவப்பு வணந்துங்க மோக்க முடன்வலனே
முந்திய மோடிவை யாக்கு முயர்ச்சி மொழியின்முன்னே
வந்துறல் மேல்மருங் கர்ஞாங்க ரென்பர் மலிதலைத்தாள்
நந்துமுதன் முன்னர்த் தானாகுமென்று நவிலுவரே.
**இம்பர், உம்பர், ஈண்டு, ஆண்டு, கூப்பிடுதூரம்,
** கோழிப்பறவை, காதம்
**292
#49
இலகிய விம்ப ரிவணே யவணும்ப ரீண்டிவ்விட
மலைவறு மவ்விட மேயெனி லாண்டென்ப ரானவெல்லை
குலவு குரோசமுன் கூப்பிடுங் கோழிப் பறவையென்னிற்
கலிகிர வுஞ்சமக் காவதந் தானென்பர் காதமுமே.
**இடவகை, பாரதிதீப வரலாறு
**293
#50
பின்னுழை கால்புறங் கீழ்மேல் கடைதலை பேணியசார்
முன்னிடந் தேவகை பால்வல மாமிட முந்துதமிழ்ப்
பண்ணிய பாரதி பாரதி தீபம் பயில்தொகுதி
யன்ன விடப்பெய ரஞ்சா வதுமுடி வானதுவே.
@6 ஆறாவது பல்பொருட் பெயர்த் தொகுதி
**பொன்
**294
#1
கனக மிரணிய மாடக மாழை கருந்தனங்காஞ்
சனநிதி பீதகஞ் சாமீ கரம்பூரி சந்திரந்த
மனியம் வெறுக்கை நிதானம்பு வஞ்சுவனந் தொடுக்கம்
புனைதன மேயரி சாம்பு னதஞ்சொன்னம் பொன்னென்பரே.
**பொன், ஐந்துலோகம், உலோகப்பொது, நவமணி,
** கடவுள்மணி
**295
#2
இரணிய மீழம் பொருள்காண மீகையே மம்மிரும்போ
டுரைதரும் வெள்ளிபொன் னீயஞ்செம் பாமைந் துலோகமெல்லாங்
கருதுபொன் னென்பர் நவமணி மற்றக் கடவுள்மணிக்
கருள்பெய ரேதொன் னிதியே நிதான மணுகியதே.
**மாணிக்கம், மணிப் பொதுப்பெயர், கனமணி, முத்து
**296
#3
மாமணி யும்பற்ம ராகமு மாணிக்க மாமனவுந்
தேமணி காசு மணிபேர்ப் பொதுப்பேர்ச் சிலாகையென்னு
நாம மரதன மாகுங் கனமணி நற்றரளங்
கோமலி நித்தில முத்தார மாகவுங் கூறினரே.
**பவளம், சங்கநிதி, பற்மநிதி, பண்டாரம், வெண்கலம்
**297
#4
துகிர்வித் துரும மரத்தந் துவர்பிர வாளந்துப்புத்
தகுசொற் பவளஞ்சங் கின்வடி வாமென்பர் சங்கநிதி
பகர்பற்ம மேய்தரும் பற்ம நிதியும்பண் டாரமென்பர்
மிகைவுற்ற கோசந்தண் டங்கஞ்ச மாமென்பர் வெண் கலமே.
**வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம், இரும்பு
**298
#5
இரசதந் தாரங் களதபு தம்வெள்ளி யென்பர்சுற்பம்
பெருகிய சீருணந் தாம்பிரஞ் செம்பென்பர் பித்தளையாய்
வருமார கூடமு மாயா புரியுமன சீருள்வங்கங்
கருதிய வீயங் கருந்தா தயமென்பர் காரிரும்பே.
**காந்தமணி, சந்திரனொளியில் புனல் காலு மணி,
** சூரியனொளியில் கனல் காலுமணி, படிகம்
**299
#6
இரும்பை வலிப்பது காந்த மணியிந் திரேகை கண்டால்
தரும்புனல் கால்வது சந்திர காந்தந் தரணியொளி
கருங்கனல் கால்வது சூரிய காந்த மணிபளிங்கு
திருந்து பருக்கைவெண் காழே படிகஞ் சிறந்ததுவே.
**சங்குமணி, பலகறை, பலபண்டம், அரும்பண்டம்
**300
#7
கண்ணிய சங்கு மணியக்கு வட்டி கவடியல
கெண்ணிய சோகி பலகறை வெள்வா கெழில்வளமே
பண்ணிய கூல முடன்பண் ணிகாரம் பலபண்டமாம்
நண்ணிய தார மரும்பண்ட மென்று நவிலுவரே.
**கருப்பூரம், கத்தூரி, மெய்ப்பூசு சாந்து,
** சாந்தின் பொதுப்பெயர்
**301
#8
மலிகருப் பூரம் பளிதங்கத் தூரியும் மான்மதமாம்
புலியொடு வட்டிகை காலேகம் பீதமெய்ப் பூசியசாந்
திலகிய பேர்த கரங்கல வைச்சே றினியதளம்
புலர்விரை காலேக வண்ணமச் சாந்தின் பொதுப்பெயரே.
**பூசுவன, செந்தாது, மயிர்ச்சாந்து, செறிகுழம்பு,
** அப்பல், பூசுதல்
**302
#9
குளிரங் கராகமும் பூசு வனகுங் குமமுஞ்செந்தா
திளகுந் தகர முடனேலங் காசறை யேயயிர்ச்சாந்
தளவில் செறிகுழம் பாஞ்செச்சை தேய்வைகொட் டலப்பலாம்
புளக மிகுக்க வரித்தல் புலர்த்தல்மெய் பூசுதலே.
**தொய்யில், திலகம், நுதல் எழுதுகுறி, அரத்தம், குங்கிலியம்
**303
#10
மானார் முலையிற் றொழிலுற் றெழுதி வரித்தல் தொய்யில்
தானாந் திலகஞ் சுடிகைபொற் சுட்டி தயங்குநுத
லானா தெழுது குறிப்புண் டரந்துப் பரத்தமாகக்
கேனாடுங் குங்குலுக்குற் குலுக்குங் கிலியமென்பரே.
**பெருங்காயம், சாதிலிங்கம், சாமரம், அச்சுதம்
**304
#11
இங்கென லாகும் பெருங்கா யமுமிங் குலிகமுடன்
றங்குசிந் தூர மிவைசாதி லிங்கஞ் சவரியுடன்
றுங்கவெண் சாய்மரஞ் சாமர மென்பர் துணர்க்கவரி
யங்க வரிசி யறுகைமெய் கூட்டி யதச்சுதமே.
**அதிமதுரம், பிரப்பு, ஓம விறகு, நெருப்புமலி விறகு
**305
#12
கூறுமதிங்க மென்னட்டி மதுரமுங் கொள்கலமென்
றேறிய பல்லுண வெல்லாங் குறுணிகொண் டேயளந்து
வேறுறப் பாலிப் பதுபிரப் போமவிற கென்னலா
மாறில் சமிதை ஞெகிழி நெருப்பு மலிவிறகே.
**கடைக்கொள்ளி, கரி, சாம்பல், சாந்து, புகை
**306
#13
எரிகடைக் கொள்ளி முளரி யலாத மிராதமென்பர்
கரிகந் துளேயிருந் தாமென்பர் வெண்பலி சாரடலை
சொரிகின்ற சாம்பல் சுதைகள பஞ்சுடு சுண்ணமுஞ்சாந்
தரிபுகை தூபமுடன் றாம மாமென் றறைகுவரே,
**நறைப்புகை, பொத, இலவம்பஞ்சு
**307
#14
புதிய நறைப்புகை யென்னிற் குரூப்புகைப் பொற்பிதிரே
சிதர்ப் பராகந்ததர் சின்ன பின்னந் திகழ்துகள்நீ
றுதவிய சுண்ண முடன்றாதுப் பூதி யொருபொடியா
முதிரில வம்பஞ்சு பூளையென் றேசொல்லு மூவுலகே.
**பருத்தி, பஞ்சு நுனி, சோறு
**308
#15
பரிபன்னல் பஞ்சுகாற் பாசம் பருத்திதுய் பஞ்சினுனி
மிரலன்ன மோதனம் போனகம் பொம்மல் மிசைப்புத்துப்பு
வருகவ ளஞ்சொன்றி கூழ்மூரல் புன்க மடைமிதவை
சொரியுண வேபதம் பாளித மேவல்சி சோறென்பரே.
**உண்டி, உணவு நுகர்தல்
**309
#16
அயினி யசன மமலை புழுக்க லடிசில்புகாப்
பயில்தரு முண்டி மிசைத லயிறல் பரிகரித்தல்
மயமோ டருந்த லுணாவார்த லேநுங்கல் மாந்தல்துய்த்த
லியல்போடு மேவல் பொசித்த னுகருதற் கேற்றனவே.
**அடிசில், புழுக்கல், தேவருணவு, பொரிக்குங்கறி,
** பிட்டு
**310
#17
அடுப வடிசில் புழுக்கல் புழுக்குவ வாமமுதே
யிடுபலி யேசரு வேயவி தேவ ரெழிலுணவா
முடலுப தானமைத் துப்பொரிக் குங்கறி யுங்கருனை
யிடிதரு வோதையு மாவியு மாகும்பிட் டென்பதுவே.
**அடை, அப்பம், பிண்டி, புளிங்கறி, குழம்பு
**311
#18
அடைமோ தகமயில் சஃகுல்லி பூரிகை யானகஞ்ச
முடனொலை யல்தோசை தானப்ப மாகு மொருநுவணை
யிடியாகு நுண்பிண்டி கூட்டமைத் தேயினி தேற்றதுவை
படுமே புளிங்கறி பாகே குழம்பு பயின்றதுவே.
**கஞ்சி, தயிர், பால், நெய், மோர்
**312
#19
வடிகஞ்சி காடி மலிகாடி மேழை மருவுததி
யுடனளை யேதயிர் கீர மத முதவுபயந்
தொடர்வுறு பாலிழு தேகிரு தாச்சியந் துப்புநெய்யா
முடைமு சரேதக் கிரம்பிரை மச்சிகை மோரென்பரே,
**தேன், சர்க்கரை, கண்டுசர்க்கரை
**313
#20
குலவு பிரச மதுத்தேன் விசையங் குளங்கன்னலே
யிலகிய பாகுடன் கட்டியக் கார மிவைசர்க்கரை
தலமிகு கண்ட முடன்பாளி தங்கண்டு சர்க்கரையே
நலமிகு புல்லகண் டம்மதிற் பேதம் நணுகியதே.
**கள், பருகுமவையின் பொதுப்பெயர்
**314
#21
சுரைநனை யிக்கு நறவு வடிமட்டுத் தோப்பிதொண்டி
பிரசம் வழிமதுச் சாறே தணியல் பிழிபடுதேன்
முருகுபைந் தேறலுடன் பானஞ் சாதி மொழியிற் கள்ளாம்
புரைதபு பானம் பருகு மவையின் பொதுப்பெயரே.
**கள்ளின் பேதம்
**315
#22
பாலி சுமாலி மதுகரஞ் சூழிகை பாடலியே
மாலி சுலோகி யுடனாம்பல் மாதுவ மேமருட்டஞ்
சாலி விசுணி யுணாமுண்ட கந்தமஞ் சக்கரமே
வேலிவெங் கஞ்சாவு நள்ளிகட் பேத மிகுபெயரே.
**அமுது, நஞ்சு, உண்பன, தின்பன,
** விலங்கினுணவு
**316
#23
வாரி யமுதின் பெயர்மருந் தாகும் வளர்கரளங்
காரி கடுவிட மேயாலம் நீலம்வெங் காளநஞ்சாம்
சீருறு துற்றியு முண்பன திற்றியுந் தின்பனவாங்
கூரிலை தின்னும் விலங்கி னுணவு குளகென்பரே.
**விலங்கு பறவை உணவு, ஒழிபொருள்,
** பேய்த்தேர்
**317
#24
விலங்கு பறவையெனு மிரண் டிற்கு மிகுமுணவை
யிலங்கு மிரையுண்டி யாமென்பர் மிச்சிலு மெச்சிலுமே
துலங்கு மொழிபொரு ளெச்சிலு முச்சிட்டஞ் சொல்லுபவை
மலிந்த வுகளம் வெண்டேர்கானல் பேய்த்தேர் மசரதமே.
**உபகரணம், நிரை, லகு
**318
#25
துப்பே சாதனந் துணைக்கா ரணத்தைத் தொடர்ந்துரைக்கு
மொப்பி லுபகரணப்பெய ராமென்ப ரோளிபந்தி
தப்பி லொழுங்கு நிரைமகி ழின்பரற் றன்னுடனே
செப்பு மணியிவை யெல்லா மலகெனச் சேர்ந்ததுவே.
**பாரதிதீப வரலாறு
**319
#26
சேறாரகளப் புயன்செயங் கொண்டவன் சிந்தையன்பு
மாறாது மாதவஞ் செய்தருள் பாரதி வாதுகவிக்
கேறான வன்சொன்ன பாரதி தீபத்தி லெண்ணுகின்ற
வாறா வதுபல் பொருட்பேர்த் தொகுதிமுற் றானதுவே.
@7 ஏழாவது செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி
** செயற்கையது, சூலப்படை
**320
#1
தோலினில் மண்ணி லெழுவகை லோகத்திற் றொன்மரத்தில்
நூலினிற் செய்தல் செயற்கை யதாங்கண் ணுதல்படைக்கு
மூல மெனிற்கழு முள்முத் தலைக்கழு மூவிலைய
வேலிவை சூலப் படைவடி வாக விளம்புவரே.
**மழு, சக்கிரம், அரியின் வில், ரன்வில்
**321
#2
பரசு கணிச்சி நவியமு மேமழு வாம்படைதி
கிரிவளை யெஃகஞ் சுதரி சனஞ்சக் கிரம்பருதி
தருகதிர் நேமி யழலாழி யாமென்பர் சாரங்கவில்
லரிதன தாகும் பினாகவில் லான தரன்றனதே.
**வில், வேல்
**322
#3
குனிதரு சாபஞ் சராசனங் கார்முகங் கோதண்டமே
தனுக்கொடு மரஞ்சா ரங்கம்பினா கந்தவர் வில்லென்பர்
நனிதரு குந்தமுடம்பிடி யெஃகமும் ஞாங்கரரண்
வினைதரு சத்திவிட் டேறோ டயிலிவை வேலென்பரே.
**அம்பு
**323
#4
வரி வாளி வண்டு பகழிபல் லம்புங்கம் வன்கணைகோல்
தெரிபாண மாற்கணந் தொடை விசிகஞ் சிலீமுகங்கோச்
சரமா சுகம்பத் திரங்கொத்தி ரங்கங்கந் தாரையம்போ
டரிகாண்ட மத்திர மொட்டு தண்டமு மம்பென்பரே.
**கைவேல், வச்சிரப்படை, வாள்
**324
#5
மெச்சிய கப்பண ந் தோமரங் கைவேல் விகற்பமென்பர்
வச்சிர மென்னிற் குலிச மசனி வயிரப்படை
நச்சு கட்கம் வசிகண்ட மெந்திர நாந்தகங்(கைவ)
ளச்சுறு மேதி கரவாளங் கோண மவையென்பரே.
**ஈர்வாள், உடைவாள், கழுக்கடை,
** பிண்டிபாலம், கொடுவாள்
**325
#6
வரைவேதி னங்கர பத்திர மீர்தரு வாளதென்பர்
சுரிகை கழுமு ளுடைவாள் கழுக்கடையா (கச் சொல்லும்)
பரவிய பீலித்தண் டெஃக மெனிற்பிண்டி பாலமென்ப
ரரிதரு புள்ளங் குயங்கொடு வாளென் றறைகுவரே.
**தண்டாயுதம், இரும்புலக்கை, உளிக்கருவி,
** இலைமூக்கரிகத்தி, நாராசம், இருப்புமுள்
**326
#7
தடிதண்டா முசல மிருப்புலக் கையதென்பர்
விதியி லுளிக்கரு விப்போ தரிவிக் கருவியென்பர்
முதுதழல் தண்ணங் குளிரிலை மூக்கரி கத்தியென்பர்
எதிர்பொரு சலாகையு நாராசந் தாறென் றிருப்புமுள்ளே.
**ஆயுதப்பொது, ஆயுதக்கூர்மை, கவண்
**327
#8
படையே திதுப்புக் கழுமுட் கடுமுட் படைக்கலமே
யடர்சா தனம்பொது வாயுதப் பேர்வள் ளயிலிங்கிதம்
வடிவார் நுதிநுனை வையே பூவசி வயிர்மழுவாங்
கடைசாமை கல்லெறி யுங்கவ ணாகுங் கவணையதே.
**நுனை, படையுறை, அம்புபெய்கூடு, மெய்யுறை
**328
#9
தடநுதி நுங்கி நுனைக்கரு விப்புட்டில தானதென்ப
படையுறை யாவமுந் தூணியு மம்புபெய் பாத்திரமா
மடரிர ணங்கவ சங்கண்ட மெய்புக வாங்கருவி
தொடர்தரு பாலிகை மெய்யுறை யாகவுஞ் சொல்லுவரே.
**தலைக்கீடு, பரிசை, பலகை, தோற்பலகை
**329
#10
கீசகஞ் சிக்கந் தலைக்கீடு சேடகங் கேடகந்தோல்
வீசுற்ற வீதிகைப் பட்டம் பரிசை மிகுபெயரா
மாசுற்ற கட்டினந் தட்டு மாவட் டணம்பலகை
சோதித்த தோற்பல கைப்பெயர் தோற்பரந் தோலென்பரே.
**கைக்கட்டி, குதிரைக்கலணை, குதிரைவாய்புகுகருவி,
** குசைக்கயிறு, குதிரைச்சம்மட்டி
**330
#11
அருள்கைப் படையுடன் கோதையுங் கைக்கட்டி யாகுமென்பர்
பருமம் படை பல்லணம் பண்கல ணைபரி பகுவாய்க்
கருவியின் பேருங் கரிளே கலினம்வற் கங்குசையாந்
தரிவெறு மத்திகை கோலெனிறி சம்மட்டி தானென்பரே.
**யானைக் கழுத்திடு கயிறு, தளை, பற்றிரும்பு,
** பாடகம்
**331
#12
கலந்தபு ரோசை கவடுங் கரிக்கழுத் திற்கயிறாம்
விலங்கு நிகளந் தொடர்தளை வல்லி மிகுபறளை
பலங்கொள் பறலிகை யள்ளு வலியெனிற் பற்றிரும்பா
மலங்கிய பாத கடகமும் பாடக மாமென்பரே.
**பதகிண்கிணி, அரக்குடைச்சிலம்பு, காலிலங்கு மணிவடம்
**332
#13
பதகிண் கிணிமணி யாகும் பரிபுர நூபுரத்தோ
டுதவும் பரியக மென்ப ரிரத முடன்ஞெகிழி
யதுவு மரக்குடைச் சூலச் சிலம்பணி யாகுமக்கா
லிலகு மணிவடம் பாதசா லம்மென் றியம்புவரே.
**காலணிவடம், மேகலை, அரைப்பட்டிகை, சதங்கை
**333
#14
விதமார் கொடையினில் வீரத்தில் வீக்கிய மெய்க்கழலே
யதுகான் மிசையி லணிவடங் காஞ்சி கலாபமனா
வெதிர்மே கலைகலை (யென்னி) லரைப் பட்டி கையின்பெயர்
பதமார் சதங்கையுங் கிண்கிணி யாகப் பகருவரே.
**பதக்கம், மாதர்முலையணிவடம், பூணின் புணர்வு
**334
#15
அருள்பதக் கங்கண்டி கையார மாரம் பதக்க(மதா)ங்
கருதுமக் கோவையுங் காசுட னாரமுங் கண்டிகையு
மருவிய மாலையு மானார் முலையின் மணிவடமாம்
பொருவில் கயிலுங் கடையுமெய்ப் பூணின் புணர்வென்பரே.
**தொங்கல், துடக்குவடிவு, தோளணி, கங்கணம், கைவளை
**335
#16
தொங்கல் நிதிவடந் தூக மதிலிகைத் தூக்கந்துடக்
கங்கதந் தோளணி கேயூர மாகு மணிகடகந்
தங்கிய கங்கண மும்மாகுஞ் சூடகஞ் சங்குதொடி
பைங்குரு கேவண் டுசரிகன்று கைவளைப் பாற்படுமே.
**குண்டலம், காதணி, நுதற்சுடிகை, பட்டம், சிரமாலை
**336
#17
கோடு மிருசிகைக் காதணி செம்பொற் குழைகுண்டலம்
வேடகம் புல்லிகை மேவுங் கடிப்பிணை வீசியபொற்
றோடவை காதுக் கணிப்பெயர் சுட்டி நுதற்சுடிகை
யோடைபொற் பட்டமன் காரோடி தான்சிரத் தோடொடையே.
**நுதலணிபூண், கிரீடம், ஆபரணப்பொது, பேரணிகலம்
**337
#18
(வடிநுதற்) பூணும் இலம்பகம் புல்லக மாஞ்சுடிகை
முடியே மெளலி மகுடங் கிரீடமொய் சேகரமாம்
படரிழை நாண்கலம் பூணணி தானா பரணமதாம்
அடருரு பூணு மதாணியு மாம்பே ரணிகலமே.
**வட்டில், நாழிகை வட்டில், சட்டுவம், கண்ணாடி
**338
#19
தட்டகை யுண்கலந் தாலங்கிண் ணங்கோரந் தாரைவள்ளம்
வட்டில தாங்கன்ன னாழி கைவட் டில்சிர கந்தவ்வி
சட்டுவ மாடி படிமக் கலந்தர்ப் பணங்கஞ்சனை
யிட்டிய வாதரி சனங்கண் ணாடி யெனுமுலகே.
**கண்டைமணி, எறிமணி, சிறுசின்னம், காளம், குறிஞ்கிப்பறை
**339
#20
எண்டிசை யேண மிபமணி கண்டை யெறிமணிசே
கண்டிபொற் பீலி சிறுசின்னங் காகளங் காளமதாம்
தொண்டக மோடு துடியே முருகியந் துங்கவென்றி
கொண்ட குறிஞ்சிப் பறையென யாவருங் கூறுவரே.
**வேடர் பறை, முல்லையார் பறை, மருதப் பறை,
** ஒருகண் பறை, உடுக்கை
**340
#21
விறல்பயி லுந்துடி வேடர்தந் தொல்பறை மென்முல்லையார்
பறையே கோட்பறை பம்பையு மாகும் பணைகிணையே
நிறைமரு தப்பறை சாப்பறை நெய்தற் பறையொருகண்
ணுறுபறை மொந்தை யுடுக்கை யொடுந்தண் ணுமை யென்பரே.
**இடைசுருங்கு பறை, சிறியபறை, பரந்தபறை, முழவம்,
** குடமுழவம், படகம்
**341
#22
துடியே யிடைசுருங் குஞ்சிறு தொல்பறை யாகுளியே
படைசேர் சிறிய பறைவாய் பரந்த பறைபதலை
முடஞ்சேர் முரவங் குளிரே முழாமண் சினைமுழவங்
குடமா முழவம் படகமு மானகங் கூறுவரே.
**பணைப்பொது, பேரிகை
**342
#23
புணர்தரு பீலி முருடு முரசு பொருமுழவு
பணைதரு கோடணை தூரிய மாகும் பணைப்பொதுப்பேர்
துணைதரு சண்டை முரசம்ப ணைதுந் துமிசகடை
தணிதரு பேரிகைக் கூட்டமென் றேதமிழ் சாற்றியதே.
**பல்வகைப் பறை, கொம்பு, யாழ் நரம்பு
**343
#24
அம்பணந் திண்டிகை யான கஞ்சல் லரியாம்படகம்
பம்பை தடாரி தக்கையே பல்வகைப் பறைப்பேர்
கொம்பெனி லாம்ப லிரலை வயிரொடு கோடெனலாம்
நம்பிய கோல்தந் திரிகுரல் யாழி னரம்பெனரே.
**யாழ், வார்க்கட்டு, முறுக்காணி, நால்வகையாழ்
**344
#25
தந்திரி கின்னரம் வீணை விபஞ்சிதந் தாழ்கருவி
யுந்திய வல்லதி பேரிகை நல்லியாழ்ப் பெயரேர்திவவு
முந்திய வார்க்கட்டு மாடக மும்முறுக் காணியென்ப
கொந்தி பேரியாழ் மகரஞ் சகோடஞ்செங் கோடென்பரே.
**தேர், தேர்க்கால், உருளியகக்கதிர்
**345
#26
இரதந் திகிரி சயந்தன மெந்திர மேகவரி
யுரவங் கொடுஞ்சிவை யந்தேர் திகிரி யுருளியுந்தி
தெரியும் பருதி யுடனேமி யாழிபொற் சில்லியத்தே
ரருகொன்று காலென்ப ராரே யுருளி யகக்கதிரே.
**பாண்டில் பூண்ட ஊர்தி, பண்டி, தேர்மேலிடு பரம்பு
**346
#27
உகையுஞ் சிவிகை யுடன்பாண்டில் பூண்டரு ளூர்தியுடன்
சகடம்பெறும் வையஞ் சாகாடு சாடு சகடொழுகை
பகர்கின்ற வைய முருள்பண்டி யாகும் பலவகையி
லிகல்தட்டுப் பாவென்பர் தேர்மே லடர விடுபரம்பே.
**திடர், தேர்ப்புடைசூழ் மரச்சுற்று, கலப்பை,
** பலவுறுப்பாகிய வோருறுப்பு
**347
#28
திடரே யெழுவுங் கணையமு மாங்கிடு கேதிகழ்தேர்ப்
புடைகுழ் மரச்சுற்று நாஞ்சி லலம்படை பொற்கலனை
யடைவான நான்குங் கலப்பைய தாமக் கலப்பையத
னுடனார் கலனை பலவுறுப் பாகிய வோருறுப்பே.
**தேர்மொட்டு, தூண், யானையணைதறி, வேள்வித்தறி
**348
#29
சிந்தைசெய் கூவிரங் கூம்பு கொடிஞ்சியுந் தேர்மொட்டதாங்
கந்தெழு வேவெளி லாளனங் கம்பங் கருந்தறியோ
டந்தி மதலையுந் தூணாம் வெளிலுட னாளானமுந்
தந்தி யணைதறி யூபமும் வேள்வித் தறியென்பரே.
**குறுந்தறி, கதவு, தாழ், உரல், ஊஞ்சல், உறி
**349
#30
போதிகை யென்பர் குறுந்தறி வாரி புதவுடனே
தீதில் கபாடங் கதவென்பர் தாழெனிற் சீப்பெனலாம்
மோதுங் கறையு முலூ கமு மாமுர லூசலுமே
மேதகு மூஞ்சல் சிமிலி சிரஞ்சிக்க மேலுறியே.
**கட்டில், பரண், இறைவை (ஏணி), கண்ணேணி,
** கிளிகடிகருவி, குறுந்தடி
**350
#31
பதியும் பரியங்கம் பாரிமஞ் (சங்) கட்டிலாம்பணவை
யிதணங் கழுது பரணே கடவை யிறைவை யெம்மா
லுதவுங்கண் ணேணி குளிர்தழ லேதட்டை யோதிற்கிள்ளை
யதுகடி யுங்கரு விப்பேர் குறுந்தடி யாங்குணிலே.
**துடுப்பு, அடைகுறடு, பெருங்குறடு, மரக்கலம்
**351
#32
அறில்துடு வைதுடுப் பாகும் பட்டடை யாகுமடை
குறடு முரடு பெருங்குற டாகுங் குலமதலை
துறைதரு வாதைவங் கந்தோணி பாறம்பி தொள்ளு நவ்வே
மறிதரு நாவாய் சதாவே பஃறி மரக்கலமே.
**மரக்கலப்பாய், ஓடம், தோணி, தெப்பம், கமண்டலம்
**352
#33
பாடின் மரக்கலப் பாயிதை யாகும் பகறிபக
டோடம தாகுந் திமில்தோணி யென்ப ருயர்பகடு
தேடரு மம்பி மிதவை புணையெனிற் றெப்பமதாங்
கூடுங் கமண்டல மாகுங் கரண்டகங் குண்டிகையே.
**பேழை, கெண்டிகை, பீடிகை, கொள்கலம்
**359
#34
எண்டரு மிஞ்சிகை மஞ்சகம் பேழை யெனவறைவர்
கண்டங் கரண்டகங் கோடீ ரத்தொடு கடிப்பமதாங்
கெண்டிகை பீடிகை யாகுந் துமானங் கிளரலங்கல்
கொண்டணி சாந்து மடியிவை சேர்கலங் கொள்கலமே,
**உடை, பொதி, திடமிகு கொள்கலம், கொல்லன்
** சின்னத்தட்டு, பீலியிற் கட்டும் கவிகை
**354
#35
உடைகலை யாகும் பொதிமூடை யாகு முயர்பகுவாய்
திடமிகு கொள்கல மாகும் பிழாக் கொல்லஞ் சின்னந்தட்டா
மடர்தரு கன்னங் கலாபத் தழைதொங்க லானவிவை
தொடைதரு பீலியிற் கட்டுங் கவிகை யெனச்சொல்வரே.
**வெண்குடை, ஆலவட்டம், சிற்றால வட்டம்
**355
#36
தொங்க லுடன்சத் திரமே கவிகை தொடர்ந்த பிச்ச
மிங்கிவை வெண்குடை கால்செய் வட்டமுக மேவிசிறி
யங்கவை வீசத் தகுமால வட்ட மதுவொழிந்து
தங்கிய பீலிசெய் சிற்றால வட்டமுஞ் சாற்றினரே.
**மயிர்வாரும் சீப்பு, சூதாடுகருவி, பந்து, சும்மாடு, துண்டம்
**356
#37
கருதிய சிக்க மயிர்வாருஞ் சீப்பின்பேர் காசும்வல்லும்
பரவிய சூதுட னாடுதல் கந்துகம் பந்தென்பதாம்
மருவு சுமடு சுமையடை யாகுஞ்சும் மாடதென்பர்
முரிசெய் கடிகை யெனிற்றுண்டங் கண்ட மொழிகுவரே.
**வார், கயிற்றுவலை, கயிறு, செருப்பு,
** அடிதொடுவது, துருத்தி
**357
#38
காசறு வள்வகிர் வாராகுஞ் சாலங் கயிற்றுவலை
பாசமு நாணுங் கயிறது வாகும் பதந்தொடுதோ
லாசில் கழலிவை தோற்செருப் பாகு மடிதொடுவ
தோசமில் பாதுகை நீர்தூஞ் சிவிறி துருத்தியதே.
**குடம், கரகம், பானை, மிடா, தாழி
**358
#39
கடமே யிடங்கர் தசும்பிரும் பைகும்பங் கன்னலிவை
குடமாகுங் கன்னல் சிரகங் கரகங் குழிசிமிடாத்
தடவாகும் பானை யகளமும் வம்புந் தடாவுமிடா
வடர்சாடி தாழி யகளம் பதலை யவையென்பரே.
**நீர்நிறைசால், அகல், இரப்போர்கலன், குயவன்
** மண்ணரிகார், நூல், துன்னம்
**359
#40
தொகுமிடங் கர்வட்டம் நீர்நிறை சால்சார்வஞ் சுத்தியுமே
யகலிரப் போர்க லனையங் கடிகை யவையென்பர்மட்
பகைகுய வன்மண் ணரிநா ரதென்பர் பனுவல்தந்துப்
புகல்நூல தேயென்பர் துன்னமும் பொல்லம் பொருந்துமதே.
**கூறை, பட்டாடை
**360
#41
மடிதுகில் தானை கலிங்க முடைதூசு வாதனமே
படமாடை காழக மம்பரம் புட்டம்பட் டங்கலையாம்
புடவை யறுவை படாஞ்சம் பஞ்சேலை போற்றிலிவை
யடர்கூறை பாளிதங் கோசிக மாகும்பட் டாடையதே.
**கல்லாடை, மரவுரி, சம்படாம்
**361
#42
திகழே டகம்புகழ் வேதிகை சில்லிகை சித்திலிகை
யகல்தூரி யங்கத்தி யங்கருள் பாரிநல் லாடையென்பர்
மகிழ்சீரை வற்கலை தன்னோ டிறைஞ்சி மரவுரியாம்
பகர்வாகுங் கம்பளஞ் சிம்புளி யேசம் படாமென்பரே.
**கச்சு, அத்தவாளம், மேற்கட்டி, உத்திரிகம், சட்டை
**362
#43
வம்புறு வார்கச்சு வடகமு மாமத்த வாளமென்பர்
கம்பல மோடு விதானமேற் கட்டி யேகாசமெனி
னம்புத் திரிக மெனலாகு மங்கி நயந்த மெய்ப்பை
தம்பமெய்க் கஞ்சுகங் குப்பாயம் வாரணஞ் சட்டையதே.
**இடுதிரை, கொடி, சிறுகொடி
**363
#44
இகலி னெழினி படங்கண்ட மாகு மிடுதிரையே
துகிலிகை கேதனம் வானி பதாகை துவசமுட
னிகரில் படாகை விலோதன மேகொடி நீளுலகோர்
புகலுங் கதலிகை யாகுஞ் சிறுகொடிப் பூவையரே.
**சீரை, மெத்தை, சித்திரப்படம், தீட்டுதல்
**364
#45
அத்தகு சீரை சிதவல் சிதாரென் னணைதளிமம்
மெத்தை யெனச்சித் திரப்படம் பொத்தக மேவியபேர்
சுத்தத் துகிலிகை வட்டிகை யோவியஞ் சொல்லிலிவை
சித்திரம் ரேகை யெழுதல் பொறிவரி தீட்டுதலே.
**பாரதிதீப வரலாறு
**365
#46
மின்செயற் காரிற் றருபா ரதிதிரு வேங்கடவ
னின்செயற் சீருற்ற வேழாவ தென்ன வியல்தெரிந்தோன்
றென்சிலைச் செந்தமிழ்ப் பாரதி பாரதி தீபந்தன்னின்
முன்செயற் கைவடி வப்பேர்த் தொகுதி முடிந்ததுவே.
@8 எட்டாவது பண்புபற்றிய பெயர்த் தொகுதி
** பண்பின் இயல்பு
**366
#1
கருது வடிவி னளவில்வண் ணத்தினிற் காண்டலுற்ற
பொருளி னுணர்விற் புலப்படு முண்மைப் பொருவுதனப்
பரவு குணத்தொடு பண்ணவை பண்பென லாமவற்றைத்
தெரிய வுரைக்கி னவைபல வாகுந் திறத்தனவே.
**வட்டம், வளைவு
**367
#2
பருதி விருத்த முடன்கோ ளகைதட்டுப் பாலிகைசக்
கரம்வலை யங்கொம்மை மண்டல மாழி கடகஞ்சில்லி
தருபாண் டிலேதி கிரிநேமி வட்டந் தரங்குடிலம்
வரவாங்கல் கோட்டம் வணரே குலாவல் வளைவென்பரே.
**திரள் வடிவு, குவிதல் வடிவு
**368
#3
செற்றிய பந்தங் குலம்புஞ் சயங்கொம்மை சேடுகணை
துற்றே செறியுந் துறுமல் குவிதல் தொகுதியுண்டை
மற்றுரை மாழைபிண் டந்திரள் வாகும் வடிவுகுவால்
குற்ற விராசி குவைகுப்பை யாகுங் குவிதலுமே.
**தொகுதி, ஐம்மை வடிவு, பரந்த வடிவு,
** குமிழ்ப்பு வடிவு, மொக்குள் வடிவு
**369
#4
தொடருமொய் தோடு குழுமல் திரளுந் தொகுதியென்ப
ரடர்தொறு துற்றுத் துறுகு வரிமுத லைம்மையதாம்
படலை படர்ச்சி பரந்த வடிவினம் பைங்குமிழ்ப்பு
வடிவு புளகமக் கொப்புள மொக்குள் வடிவென்பரே.
**உட்டுளை வடிவு, உண்டை, துளைப்பொருள்,
** கற்றை, சற்சரைவடிவு
**370
#5
புழையுட் டுளையது தூம்புட னாழி சுரைபூண்டுளை
குழியந் திரளுண்டை யாகுங் குழியம் புழல்குழலுங்
கழல்துளை கற்றை மயிரின் றொகுதி கதிர்த்தொகுதி
விழைபிண ரேசற் சரைவடி வாக விளம்புவரே.
**பெருமை
**371
#6
பாடு தடவு தடம்விபு லம்வியல் பாழிகண்மால்
மோடு பிறங்கல் நளியே யியக்க முடலைபணை
யீடு கயவு பரிமூரி நன்று வியத்தகைமாப்
பீடோ டகலுள்முன் பின் செம்ம லண்ணல் பெருமையதே.
**மிகுதி, சிறுமை
**372
#7
உறுதவ மாற்ற லறிவே விதப்பிறப் போடுறுப்புச்
செறிநளி யேநனி யான்றல் பிறங்கல் சிறப்படலை
யறிகய வேபொம்மல் பொக்கம் அதிக மதுமிகுதி
சிறுமை யணுவஞ்சந் தன்றுசின் னம்வறி தாசென்பரே.
**உயர்ச்சி, தூரம், சிறிது, விரிவாமிடம்
**373
#8
உரைநிவப் பேந்தல் பிறங்கல் நிமிர்த லுகப்புன்னதம்
புரைதுங்க மோங்க லுடன்சே ணுயர்ச்சி யெனப்புகல்வர்
(தெரி) சேணு நீளிடை யுஞ்சேயுந் தூரந் திலஞ்சிறிதாம்
விரிவா மிடம்பரப் பாகும் விசாலம் விபுலமுமே.
**பரவுதல், நீளம், கூடுவது
**374
#9
பரவை ஞெமிர்தல் பரப்புடன் பாய்தல் (பரவு)தலாம்
விரிவாதல் போக லொழுக னெடுமை வடிதனெடில்
நிரைசே ணுடனீக்கல் தீர்தல்நேர் பாடிவை நீளமதாங்
குரையார் குவிதல் பயனியுங் கூடலுங் கூடுவதே.
**நுண்மை, அகலம்
**375
#10
நுணுகு நுணுக்கு நுணுக்கம் நிழற்றல் நுவணைநொசி
வணுவு நுழைநுனை சாய்வோய்த லாய்தலவை நுண்மையா
முணரி லகறல் வியலிடம் பாழி யுடன கலுள்
நணுகு நளிகண் ணறையே யகலத்தி னாமங்களே.
**குன்றல், உள்ள கெறியில் சிறத்தல், பருமை, முழுவது
**376
#11
அறவு மருகுதல் வீய்தல் சுருங்குத லஃகுதலே
குறைதல் சிறுகுதல் குன்றல் கழிவுடன் கூர்ப்புமுள்ள
நெறியிற் சிறக்கும் பரூஉம்பீன மென்னவென் னிற்பருமை
முறையி லகில முழுவது மாமென்பர் மொய்குழலே.
**மென்மை, செறிவு, மிடைதல்
**377
#12
தாங்கு கயவுமொய் மேம்பாடு சால்புடன் சாயல்மென்மை
வீங்கல் பொதுளல் விறைப்போ டுறைப்பு வெறுப்புநளி
தீங்கல துற்றுடன் றேற்றுக் குடிலஞ் செறிவதென்பர்
ஓங்கு ததைதல் துதைதல் மிடைதலென் றோதுவரே.
**நிறைவு, அளவின்மை, வண்ணம்
**378
#13
மலிர்தல் மலிதல் நெகிழ்தல் தெவிழ்தல்மல் கல்துவன்றல்
நிலைபெற வார்தல் கழிதல் நிறைவென்பர் நீடனந்த
மலைவி லபார மபருமித மும்மவ் வளவின்மையாம்
பொலிவெண்மை செம்மை கருமை பசுமைசெம் பொன் வண்ணமே.
**சிவப்பு, பொன்னிறம்
**379
#14
தொக்க வரத்தந் துவரரக்குச் செம்மை சோணந்துப்புச்
செக்க ருடன்பாட லங்குலி கமத்துச் சிந்துரமே
தக்க விராக மருணஞ் சிவப்பென்பர் பீதகமே
புற்கலம் பிங்கல மாகிய மூன்றுறும் பொன்னிறமே.
**குரானிறம், புன்மை, வெண்மை, பச்சை நிறம்
**390
#15
போற்றுங் கபிலம் குரானிற மாகும் புகர்புன்மைவால்
தோற்றுஞ் சுவேத முடன்பால் தவளந் துலங்குவெண்மை
சாற்றிய பாசும் பசுமையும் பைத்துடன் சாமளமும்
நேற்றிசெய் பச்சை நிறமென வேசொல்வர் நேரிழையே.
**கருமை நிறம், நிறப்பொது, மலினம்
**381
#16
கருமை களங்கங் கறைநீலங் காளகங் காளிமமாம்
பொருவரு மஞ்சனங் காரென்பர் மாமை புகர்கெழுவே
யுருவொடு கேழ்சந்தம் வண்ணங் குருவு மொளிநிறமா
(ம)ருகறை (மா)சு கசடு களிங்க மலினமதே.
**ஒளி, ஒளிவிடல்
**382
#17
விரிய லிலக்கஞ் சுடர்கதிர் வாள்வில் வெயில்நிலவு
கிரணமெல் லேதெளிர் தேசு துலக்கங் கெழுதகையே
மருவொளி யாகு மிலங்கல் சுடர்தல் வயங்கலவிர்
உருவு தயங்க லொளிர்தல் நகுத லொளிவிடலே.
**கட்டழகு, அழகு, பேரழகு
**383
#18
ஏரணி யாணர்க் கவினே விடங்க மெழில்வனப்புக்
காரிகை வாம முடன்பொற்புக் காமருங் கட்டழகாம்
ஆரழ கென்பர் பொலஞ் செவ்வி மாண்புபை யையணிசேர்
சீரழ கென்சித் திரம்பே ரழகுவி சித்திரமே.
**வலி, வடிவு, வண்ணம்
**384
#19
உரமிட லாற்றன் முடலை மதுகை யுடன்மல்லலே
முரணெறுழ் கொற்றம் வயம்பாழி மூரிமுடுகல்மைந்து
வரு (மாண்மை) திண்மைதுப் பூக்கமுன் பேவல மானம்வலி
தருமோர் வடிவெனிற் செண்ணம்வண் ணஞ்சந்தந் தானதுவே.
**மதர்த்தல், நொய்தாதல், எளிமை, தண்மை,
** அழல், மானம்
**385
#20
ஒண்மை மதர்வு மதர்த்தனொய் தாத லுரைக்கினொய்வா
மெண்மையுந் தண்மையுந் தஞ்சமு மாகு மெளிமை யென்பர்
வெண்மை வெளிறிவை தண்மை யழலுருப் பம்வெப்பமாம்
மண்மிகு மானம் பெரிதன்மை குற்றமு மன்னுமதே.
**இழித்தகுவு, சீதளம், வீரம், வரையறை,
** எல்லை, அளவை
**386
#21
இளிவே பரிபவ மென்னி விழித்தகு வாகுமென்பர்
நளிசீதஞ் சீதளம் வீரம் விறல்வெற்றி நல்குமென்ப
ரளவே நிரையெண் வரையறை யேணி யதுவரைப்போ
டுளவாம் வரம்பெல்லை கச்ச மளவை யுறுகடனே.
**அளவு, விசையம், வெற்றி, கூறுபாடு
**387
#22
காறு துணைவரை நேர்பிர மாணமக் காலமுடன்
தாறே யவதி யளவாம் வலங்கொற்றந் தான்விசையங்
கூறிய வாகை யுடனாட லாடிவை கூடும்வெற்றி
வேறு வகையுந் திறங்கூறு பாடதன் மேல்வருமே.
**அறிவு, தொலைவு, கருத்து
**388
#23
உணர்வே புலனொண்மை காட்சிமெஞ் ஞான முரனறிவாந்
துணையி னிலைகெடல் தோற்றல் தொலைவென்பர் சூழல்செத்துப்
புணர்குறிப பிங்கிதஞ் சிந்தை நினைவுன்னல் போதமுள்ளல்
கணமொடு கண்ணல் விரும்பல் கவைஞர் கருத்தென்பரே.
**விருப்பு, உள்ளுணர்வு
**389
#24
மாதர் விழைவுபற் றேவெம்மை காமமெய் வாஞ்சைநசை
யாதர வார்வ முடன் பெட்டல் வெஃக லவாவிராவே
காத லிவர லுடன்வீழ்தல் தாழ்தல்வெங் காமர்பெட்பும்
ஓதில் விருப்பென்பர் ஞானமுஞ் சீலமு முள்ளுணர்வே.
**அன்பு, அருள், கைக்கிளை, பெருந்திணை,
** காமக்கவலை
**390
#25
பரிவீர மார்வ மளிநார் புரியுடன் பற்றுமன்பே
யருளே கருணை யிரக்கம தாங்கைக் கிளையதுவே
யொருதலை மால்பொருந் தாமற் பெருந்திணை யோரமதன்
விரகவெங் காமக் கவலையென் றேசொல்லு மேதினியே.
**வேட்கைப் பெருக்கம், மாட்சி, செற்றம்
**391
#26
மிகுவே ணவாவென்னில் வேட்கைப் பெருக்க மிகுந்தகுதி
தகவொடு தக்கது மாண்மாண்டல் மாட்சிய தாமுனிவு
வெகுளி செயிர்கறு வுஞ்சீற்ற மேகத மேகறுப்பொ
டகலா வயிர முடன்கோர மேசெற்ற மாமென்பரே.
**சினக்குறிப்பு, அதிசயம்
**392
#27
கறுப்புச் சிவப்பு வியர்ப்புப் புழுங்கல் கனலல்கன்றல்
செறுத்தல் புகைத லுடன்வெய் துறலுஞ் சினக்குறிப்பாம்
விறற்றகு விம்மித மேயிறும் பூது வியப்புமிலைச்
சறத்தவர் யாரு மதிசய மாக வறைவர்களே.
**அதிசயத்தோடு இரக்கம், உள்ளக்களிப்பு, கண்ணோட்டம்
**393
#28
அவையவ ரோவென வையோவந் தோவென வன்னோவெனு
மிவையு மதிசயந் தன்னோ டிரக்க மெழுசெருக்குக்
கவலு மதர்ப்புப் பெருமித மத்தங் களிப்புளமா
முவமையில் கேண்மை நயநாக ரிகங்கண் ணோட்டமதே.
**அழுக்காறு, மனக்கோட்டம், மறத்தல், இறுமாப்பு,
**மலர்ச்சி, உள்ளந்துணிந்தெழல்
**394
#29
மிஞ்சா மனச்சழுக் கம்மழுக் காறவ் வியன்மனக்கோட்
டஞ்சோர் பிகட்சி பொய்ச்சாப்பே மறவி யறமறத்த
லெஞ்சாத வேக்கழுத் தம்மிறு மாப்புச்செம் மாப்பதென்னிற்
றுஞ்சா மலர்ச்சி யுரனூக்க முள்ளந் துணிந்தெழலே.
**கொடுமை, நிலையுடைமை, கோரம், நாணம், பேரறிவு
**395
#30
நிகரில் கொடுமையுங் கோணென்ப வேணு நிலையுடைமை
தகுதியில் கோரங் கொடுமை கடுமையுஞ் சண்டமுமாம்
நகைதரு மானமும் வெள்கலும் வட்கலும் நாணம்நல்கு
முகரிமை யும்பேரறி வென்பதாகு முதுக்குறையே.
**கருதுதல், மதித்தல், இன்பம், தளர்வு, குறிப்பு
**396
#31
கதித்தல் குறித்த லுணருதல் சுட்டல் கருதுதலா
மதித்த லதாகுங் கருதுதல் பேணல் மகிழ்நயமு
மெதிர்த்த மகிழ்வு நகையாகு நல்லின்பங் கேட்டைதளர்
வுதித்த சொன் னாட்டியந் தானே குறிப்பென் றுரைத்தனரே.
**சுழற்சி, ஐயம், பொல்லாங்கு
**397
#32
கூறு மலம்வரல் கொட்புச் சுழல்வுகொ ளிற்கறங்கன்
மாறுந் தெருமர லாகுஞ் சுழற்சிகொல் மானுதலே
வேறனு மானமு மாசங்கை யும்மைய மேவுமென்ப
ரூறொடு கோளிவை பொல்லாங் கெனவு முரைத்தனரே.
**நன்மை, இரக்கம், அகமகிழ்ச்சி
**398
#33
மன்னிய வண்ண மணிமா சறலுடன் மானுறுதி
நன்னர் நறுமை நயஞ்சீ ரிவையென்னி னன்மையதா
மின்ன லிணைவெற் றிரக்கம தானந்த மின்பமென்னி
லன்ன வகமகிழ் வார்ந்தொய்யல் கட்டியு மப்பெயரே,
**அறிமடம், அறியாமை, அறிவின் திறம், மெய்யுவகை,
** கொண்டது மறவாமை
**399
#34
அறிமட மாகு மறிந்தறி யாமையெய் யாமையென்னுந்
திறனறி யாமையுந் துயவே யறிவின் றிறமதென்பர்
தறவுசெய் யோகையு மாரா யமுமெய் யுவகையென்பர்
கறுவுத லேகொண் டதுமற வாமை கடைப்பிடியே.
**நோய், உன்மத்தம், வறுமை
**400
#35
மழுக லழுங்கல் மடங்கஞர் பையுண் மடிபிணிசூ
ழழிவுறு நோயென்பர் மாழாத்தல் மால்மற லாகுமிருள்
கமுமல் மருண்மைந் துணராமை மாழ்தல் களிமயக்க
மொழிவறு மைய லுடன் மான்றன் மாலுத லுன்மத்தமே.
**பொறாமை, பொறை, அகல்வின்மை,
** வறுமை, மிகத்தெளிவு
**401
#36
நோனாமை யென்னிற் பொறாமைய தாநுண்மை நோன்றல்
யானாமை யோடுதண் டாமை யிரண்டு மகல்வின்மையே
தானாகு மின்மை யிலம்பா டுடனொற்கந் தான்வறுமை
மேனா ளுணர்வுடன் றேற்றந் துணிவு மிகத்தெளிவே.
**தனிமை, பொலிவு, வருத்தம்
**402
#37
புலம்பு தனிமை துவன்றல் கலித்தல்பொற் புப்பம்பலே
மலைந்த கஞற லுடன்றுப் புவப்பு மவிபொலிவாங்
கலங்க லுலங்க லயர்வே யணுக் கங்கவாவணங்கு
மலங்கல் கசிவு வயாவா குலமும் வருத்தமதே.
**சோம்பு, பொலிவழிதல், ஒண்மை
**403
#38
தீங்குசெ யஞ்ச லழுங்க லலைசுதல் சிந்தித்தலே
தூங்க லசைதல் மடியிவை சோம்பென்பர் சொன் மழுங்கல்
போங்கலி னெய்திய புல்லென லாகும் பொலிவழித
லோங்கிய நன்மை மிகுதி யறிவொழுங் கொண்மையதே.
** அச்சம்
**404
#39
அதிர்ப்பு வெருவஞர் கம்பலை வெம்மை யழற்றிவெறி
பொதிர்ப்புத் துணுக்க முடன்பீதி கூசல் புரனடுக்கல்
விதிர்ப்புத் துளக்கம் புலம்பல் தெருமரல் மெய்யழிதல்
கொதித்துப் பனித்த லுலைதல் கவலைக் குணமச்சமே.
**அன்பின்நடையது, மெலிவு, செயலறவு, அடைக்கலம்
**405
#40
நயனள வின்பம் பயனிவை யன்பின் நடையதென்பர்
அயரு மொடுக்கமச் சாம்புதல் கூம்புத லாகுஞொள்கல்
வியனுறு சிக்க முனிவே மெலிவென் பர் கையறவே
செயலற வென்ப ரடைக்கலங் கையடை சேருமதே.
**துன்பம்
**406
#41
படர்துனி துக்கம் புலம்பெல்லங் கம்பலை பையுள்செல்லல்
நடலை யிடுக்க ணஞரல்லல் பீழை நழுங்கரந்தை
கடிய கவலை வறுமை பருவரல் கவ்வைபனி
தொடரு மறுகல் பனிபுன்கண் சூரிவை துன்பங்களே.
**துன்பம், பகை, மெலிவு
**407
#42
விழும மழுங்கல் சிறுமை யுடன்வெய் துறலிரக்க
மழுதுய ரேயின்னல் பீடையு மத்துன்ப மாகுமென்பர்
எழுமுரண் டெவ்வு முனையுறழ் தாவோ டிகல்பகையாங்
கழிதரு புன்கண் பழங்கண் மெலிவென்பர் கற்றவரே.
**குற்றம்
**408
#43
காசு கசடு நவையே மறுக்கங் கவடுபழி
மாசு தவறு களங்கம் வசைபுரை மானம்வடு
வாசு செயிர்புகர் பொக்குப் பழுதோ டஞர் கோதுதோந்
தோசம்பொல் லாப்புத் துராலிவை குற்ற மெனச்சொல்வரே.
**வஞ்சனை, நட்பு, கையொழியாமை,
** ஒழுகலாறு, ஒழுக்கம்
**409
#44
கொடுமைசெய் குத்திரங் கைதவம் புள்ளுவங் கூடமுடன்
கெடவரு பட்டிமை மாயமும் வஞ்சனை கேண்மைநற்கோள்
தொடர்பது நட்புக்கை தூவாமை கையொழி யாமைசொல்லுங்
கடிய கையா றொழுகல்லா றொழுக்கமுங் கையதுவே.
**பழமை, இன்பம், மேற்கோள்
**410
#45
தொன்மை தொடர்புடன் றொத்தொடு பூருவந் தொன்று தொல்லை
முன்னை புராணம் புராதனந் தொண்டு முதுமைமுந்தை
யின்னவை யாகும் பழமை நயனேம மின்பமென் பர்
மன்னிய பூட்கையும் மேற்கொ ளெனவும் வகுத்தனரே.
**புதுமை, ஈன்றணுமை, பிறப்பு
**411
#46
யாணர் விருந்துக் கடிநவம் வம்புபுத் தேளிவையே
பூணும் புதுமை புனிறெனி லீன்றணு மைப்பொழுதாம்
பேணிய தோற்றஞ் சனனஞ் சனிப்புந் பிறந்தைபவங்
காணிய சூதகம் யோனி பிறப்பென்பர் கற்றவரே.
**கழிபிறப்பு, இப்பிறப்பு, வருபிறப்பு, காரணம், முறைமை
**412
#47
உம்மை கழிபிறப் பிம்மையு மிப்பிறப் போர்மறுமை
யம்மை வருப்பிறப் பாகும் நிபம்பொருட் டன்னிமித்தம்
செம்மையில் வாயில் திறன்கா ரணத்திற் றெரியுஞ் சொல்லா
மெய்ம்மை முறைமை மரபே பரம்பர மேமொழியே.
**இளமை, இளமைச்செவ்வி, பற்றுக்கோடு
**413
#48
குருளை மழவு கயமிளை சேய்நவ்வி கொம்மை மஞ்சு
புருவை குழவி யுடன்சேடு போதகம் பொற்றருண
முருகு பருவ மிளமையக் கோமள மும்மிளமை
யருளிய செவ்விபற் றுக்கோடு கந்தோட லாம்பனமே.
**உரிமை, இலாபம், தருமம், அழுக்கின்மை
**414
#49
பொருவரு பாங்குங் கிழமையுந் தாயமும் பூட்சியுமே
யுரிமைய தாக்கம் பலித்தல் பயன்பசை யூதியமே
கருதி லிலாபஞ் சரதஞ் சுபமங் கலஞ்சீலத்தோ
டருளுந் தரும மமலம் விமல மழுக்கின்மையே.
**மாதர் நண்ணாகெறி, தூய்தன்மை, தூய்மை, அறிவுள்ளது,
** அறிவில்லாதது, மேல்
**415
#50
மாதர்நண் ணாநெறி பூப்பென்பர் தூய்தன்மை வாலாமையே
சூதக மென்பர் புனிதம் பவித்திரந் தூய்மையென்பர்
சேதன மென்ப தறிவுள தாகு மசேதனமே
போதமி லாதவை மேலாந் தலைதலை மைப்பொருட்டே.
**கணிதம், கன்னி, நானாவிதம், முதல்
**416
#51
கரண மலகெண் கணிதங் குமரியுங் கன்னியென்பர்
பரவிய பன்முறை யேபரி யாயம் பலவிதமே
யுரைசெயு நானா விதமென்பர் மோனை யுடன்றொடர்ந்து
தெரிதகு மாதி யிவைமுத லேயெனச் செப்பினரே.
**முடிவு, அனுபவம், வளமை, கொழுப்பு
**417
#52
மொழிதரு மந்தமுந் தீர்தலு மீறு முடிவதென்ப
ரழிவில தாந்துப் புரவே யனுபவ மாகுமென்பர்
செழுமை யுடன்மல்ல லேயாணர் வாய்ப்புத் திகழும்வண்மை
கொழுமை வளமைய தாகுங் கொழுமை கொழுப்பென்பரே.
**சிறப்பிலதாம் குணம், செல்வம், வேறுபடல், உறவு, துறப்பது
**418
#53
சிறப்பில தாங்குணஞ் சீத்தை சிகம்பதென்பர்
வெறுக்கை விபவம் நிதானம் பொறிசெல்வம் வேறுபட
லுறத்தகு மேவி கிர்தம் விகடச்சொல் லுறவுறவித்
துறப்பது வென்னிற் றுறவிய தாகவுஞ் சொல்லுவரே.
**நாறுதல், இனிமையது
**419
#54
விரைமண மன்றல் கடிவாசங் கொங்கு வெறிநறையே
முருகு பரிமள மாமோக்கங் கானகந்த முன்கமழ
லருகுடன் கந்தித்த னாறுத லாகு மமுதுசுவை
யுருதரு சார மிவையினி மையதென் றோதுவரே,
**தித்தித்தல், கைத்தல், புளித்தல், ஒருபலம்
**420
#55
தீயமுந் தீரமுந் தெங்குடன் றேமுந்தித் தித்தலென்பர்
காயமுங் காழ்த்தல் கடுத்தல் கரிலிவை கைத்தலென்ப
ராய புளித்தலே யாகும் பிராந்தித்த லானதொடி
யேய தொருபல மென்றே யுரைசெய்வ ரேந்திழையே.
**நீர்மை, எழுபொருள், முழுது
**421
#56
மாலை யுழுவல் தகவியல் பேமுறை மாமரபு
பாலதி காரம் விதியே கிழமை பரிசுபண்பு
மேலுரை பான்மை குணநீர்மை யூழ்தண்மை யேயுரிமை
யேலு மெழுபொரு ளேயாகு மென்ப ரிவைமுழுதே.
**பண்பு, கொள்கை, உவமை
**422
#57
குணம்நிற மும்பண்பு மாமறி வோடுகுணங் கொள்கையாம்
புணருற ழோடொப்பு நேரே நிகர்புரை போல்பொருவு
துணையொரு வீடு தகவே கடுப்புடன் றூக்குவிக
லிணையென வேயுரை செய்வா ருவமையை யேந்தியைழே.
பாரதிதீப வரலாறு
**423
#58
பொழிகொண்ட லென்ன கரப்புண் டரிகன்மெய்ப் பூசுரர்தம்
விழிநெஞ்ச மென்ன வரும்பா ரதிதிரு வேங்கடவன்
செழியன் புகழண்ணல் செப்பிய பாரதி தீபத்தெட்டாய்
மொழிபண்பு பற்றிய பேரி னியலு முடிந்ததுவே.
@9 ஒன்பதாவது செயல்பற்றிய பெயர்த் தொகுதி
**தொழில், தொழிற்பயில்வு, செயல்
**424
#1
செயல்வினை யேதரு மங்கரு மந்தொழிற் செப்பிலிவை
யியலும் விதியுட னோர்பொரு ளாந்தொழி லென்பர்தொழிற்
பயிலது வாகு மயர்த லுஞற்ற லிழைத்தல் பண்ணல்
துயரில் வனைத லிவைசெய லாகவுஞ் சொல்லினரே.
**மகள்விளையாட்டு, பாராட்டு, பொழுதுகழித்தல் விளையாட்டு
**425
#2
கெடலை யுடன்பண்ணை யோரையுண் டாட்டுக் கிரீடை பொய்தல்
கெடவரல் வண்டல் மகள்விளை யாட்டென்பர் கேள்மகிழ்வும்
படிமை திரிந்துகொண் டாடலும் பாராட் டெனப்பகர்வர்
விடலை வினோதம் பொழுது கழித்தல் விளையாட்டதே.
**புதுமணம், விழவு, ஒப்பினை
**426
#3
புரையில் வதுவை கடிமன் றன் மூன்றும் புதுமணமா
முருகுடன் சாறுமச் சேறும் விழவென்பர் முன்புனைத
லரிதி லமைத்த லணிதகை செய்த லலங்கரித்த
லுருவுமண் ணல்பொற்பு வேய்தல் வனைதல்சொல் லொப்பினையே.
**உண்ணும் பண்பின் தொழில், அடிசிலூண் தொழில்
**427
#4
வைத்த தயிற லருந்துத லாருதல் மாந்தல்துற்றல்
மெத்த நுகர்த லுடனுண்டல் தின்றல் மிகப்பொசித்தல்
துய்த்தல் பருகுதல் துவ்வுடன் பண்பிற் ரறொழிலைச் சொல்வ
ருய்த்து மிசைத லயிற வடிசில தூண்டொழிலே.
**சூடுதல், துஞ்சல் (உறங்கல்), நுகர்தல்
**428
#5
துனிவற வேய்தல் மலைதல் மிலைதலுஞ் சூடுதலாங்
கனவோ டனந்த லுறங்க றுயிலுதல் கண்வளர்த
லினிதுடன் பள்ளிகொள் எல்துஞ்ச லாகு மெடுத்துநுங்கல்
தனவிழுங் கன்னொண்ட றானிவை யாநுகர் தற்றொழிலே.
**களவு, வளைத்தல், எறுதல்
**429
#6
கரவு கயவு வடம்பட் டினங்கட்டல் கள்ளலுட
னுரைசெய் களவென்பர் கோடல் ஞெமிர்த லொடித்தலுடன்
மருவி யிறுத்த லொசித்தல்மெய் தாழ்த்தல் வளைத்தலென்பர்
விரைவுட னெக்கலி வர்கலு மேறுதன் மேற்படுமே.
**முரிதல், துவளல், தாழ்தல், அழுதல்
**430
#7
எலியோ டொசித்தலு மோய்தல் முரிதலை யேயுரைக்குந்
தொலைவி றிவளல் திவண்ட லுவளல் துவளலென்பர்
மெலிவோ டிறைஞ்சல் குரங்கலுந் தாழ்தலை மேவுமென்பர்
கலுழ்தல் கலக்கங் கசித லழுதலைக் கற்பிக்குமே.
**கோபம்
**431
#8
முனிவே கறுப்புக் குரோதங் குரூர முளவுகதஞ்
சினமே வெகுளி கலாம்பகை செற்றஞ் சிவப்புருத்தல்
வினைவேக மேசற வேவொத்தல் காய்தல் விளிவுசெறல்
துனி கோரங் கோபத் தொழிலது வாகமுன் சொல்லினரே.
**புலவி, புலவிவேகம், கடத்தல்
**432
#9
பொருந்தலி லூடல் முதிர்வெம் புலவி புலவியதில்
வருந்திய வேகந் துனியென்பர் தாவுதல் வாவுதலே
யுரங்கொடி கத்தல் குதித்த லகற லுகழ்தலுடன்
கரைந்தெதிர் நீட்டல் நடத்தலுந் தாண்டல் கடத்தலதே.
போகல், நெருங்குதல்
**433
#10
படர்தல் பரிதல் வழங்க லிகத்தல் பதிபெயர்தல்
விடுதல் தணத்த லுடன்றீர்தல் தீர்த்தல் மிகவொதுங்கல்
தொடர்தல் நடாத்த லுடன்சேறல் போகல ரறொழிலுக்குஞ்
மிடைதல் கஞர லிமிர்தல் நெருங்குதன் மேல்வருமே.
**விரைவு, கடுப்பு
**434
#11
கடுகல் நொறிறுனை வல்லையே யொல்லை கதழ்வுடனே
முடுகல் விரைவென்ப தாஞெள்ளல் பொள்ளல் மொழியுடனே
விடலில் கதுமென நொய்தென வெய்தென வும்விரைவா
மடரு கதனந் துரித மிவைகடுப் பாமென்பரே.
**திரிதல், நீர்ச்சுழலல், சுழலல், மீளுதல், ஆற்றுப்படை
**435
#12
உழிதரல் கொட்புத் திரிதல் சுரிதலு முந்தியுநீர்ச்
சுழலல் சுரிய லதுதான் மொழியிற் சுழலலுமா
மழிவின் முரிதல் மறிதரல் மீளுத லாற்றுப்படை
வழியுட் படுவித்த லாற்றுய்த்த லவ்வழி மாற்றுதலே.
**பாய்தல், மண்டலம், ஊருதல், நேர்செலல்
**436
#13
பாத முகள்தல் குதித்தலக் குப்புறல் பாய்தலென்பர்
மாதியும் வாளியுஞ் சாரிகை யுஞ்சொல்லில் மண்டலமா
மோதி லுகைத்த லுடன்றூண்ட லூருத லோர்பொருளாம்
வீதியி னேர்செலல் வாலாதி யென்று விளம்புவரே.
**நிலைபெறல், சுமத்தல்
**437
#14
அசைத றெவிட்ட லறுத்தல் விதித்தலோ டல்கறங்க
லிசைதரு மல்கல் பரித னிலைத்த லினியதுஞ்சல்
பசையொடு மன்ன னிலைபெற லாகும் பரித்தலுடன்
மிசைமெய்ப் பொறுத்தல் சுமத்தலென் றேசொல்லும் மெய்த்தமிழே.
**முயற்சி, மிக்குச் செயற்றொழில், செய்தற்கரிய செயல்
**438
#15
இயற்ற லுஞற்றுழப் பாள்வினை யூக்க மிவையுடனே
முயற்ற லுடன்றரு தாளாண்மை வென்னின் முயற்சிமிக்குச்
செயற்றொழி லேயென்ப தூராண்மை செய்தற் கரியசெயல்
இயற்றகு நாவலர் பேராண்மை யாக விளம்புவரே.
**எண்ணல், ஆராய்தல், தேடல்
**439
#16
ஒளிதரு சூட்சி யுசாத் தேர்ச்சி யெண்ணெண்ண லோர்தலுமத்
தெளிதலுந் தூக்கலுந் தேர்தல் தெரிதலுஞ் சேரவிவை
யளவறு கேள்விய தாராய்த லுங்கை யரிக்கொள்ளுக
வெளியுற நாடலு நேடலுந் தேடலின் மேல்வருமே.
**ஒற்றுமை, ஒற்றல், வரையறுப்பு, விலைகூறல்
**440
#17
கருதொற் றுமைக்கொள லேயொற்றல் வேய்குனித் தல்கணித்தல்
வரையறுப் பாநொடை விற்றல் பகர்தல் வரின்விலையாந்
துருமம் வெறிப்பு வெதிர்ப்புப் புலம்பொடு சொன்முதிர்ப்பு
வெருவல் கலங்கல் கலக்கமென் றோதுவர் மெல்லியலே.
**நடுக்குதல், தியாகம்
**441
#18
விதிர்ப்புப் பனிப்பு விதலைகம் பம்முடன் மெய்ப்பொதிர்ப்போ
டதிர்ப்பு நடுக்குதல் வேள்வி யுதவிவே ளாண்மைகொடை
மதித்துப் பகரல் பொழித லிடுதல் வழங்கல்நல்கல்
திதத்தி லளித்த லருளுத லீதல் தியாகமதே.
**வரையாது கொடுத்தல், வேள்வி, வேள்வித்தறி, பாதுகாத்தல்
**442
#19
ஏற்ற கொடைமட மேவரை யாது கொடுத்தலென்ப
மாற்றரு மோமங் கிருதுட னேயெச்சம் யாகமகம்
மேற்றி கழிட்டி யிவைவேள்வி யூபமும் வேள்வித்தறி
போற்றலு மோம்பலு மேபாது காத்தற் பொருட்டென்பரே,
**கொளற்பொருட்டு, அகத்தீடு, தலைக்காவல், பிச்சை,
** கரத்தல், இரத்தல், பூசனை
**443
#20
தேவு கொளற்பொருட் டாகுங் கவவகத் தீடுதலைக்
காவ லிளையென் பரையம் பலிபிட்சை யாங்கரத்தல்
வாவு கரவ திரவேயிரத்தல் வழிபாடுடன்
றாவி லருச்சனை யாராத னைபூசை தானென்பரே,
**தொழுதல், காமவினைத் தொடர்பு, உண்டாதல்
**444
#21
வணங்கல் பராதல் பரவுத லஞ்சலி வந்தனையே
தணிந்து பணித லிறைஞ்சலுந் தாழ்தலுந் தான்றொழுத
லிணை ந்தவெங் காம வினைத்தொடர் பென்ப ரிணைவிழைச்சுப்
புணை ந்துசொல் பூத்தல் பயத்தலுண் டாதற் பொருட்டதுவே.
**மெய்க்கூட்டம், வெட்டல், களைதல்
**445
#22
குறித்த புணர்ச்சி கலவி யிரண்டுமெய்க் கூட்டமதா
மொறுத்தல் தடிதல் துணித்தல் துமித்த லுடனறுத்த
லெரித்தல் பிளத்தல் வகிர்ந்திட லீர்த்தலி தாகும்வெட்டல்
பறித்த லுடன்கட்டல் குற்றல் களைதற் பயன்படுமே,
**கெரித்தல், ஞெமுங்கல், கொல்லுதல், அழித்தல்
**446
#23
நெரித்தல் வெறுத்தல் ஞெமுங்க லழுங்கலை நேருரைக்கு
மெருக்குதல் காதுத லெற்றுதல் கோற லெழிறுலைத்தல்
முருக்குத லெண்ணி லொருபொரு ளாமென்பர் முன்செகுத்த
லரித்தல் சவட்ட லுதைத்தல் தெறுத்த லழித்தலதே.
**துளைத்தல், கொழித்தல், வாய்மைச் செயல்,
** கடைதல்
**447
#24
தொட்ட லகழுதல் தோண்டல் குயில்தொள் கலுந்துளைத்தல்
மட்டின் வறண்டல் வரன்றல் கொழித்த லென்றூதலதே
யுட்டெரி வாகு முவனித்தல் வாய்மைச் செயலுரைக்குங்
கட்டல் ஞெலிதல் கவர்தல் குடைதல் கடைதலதே.
**சிந்துதல், வடுப்படுதல், தினவு, கூடிடல்,
** ஆறலைத்தல், மீதூர்தல்
**448
#25
அடர்த்திற் றவற்றல் சிதர்த்தலுஞ் சிந்துத லாங்கதுவாய்
வடுப்பட லாகுங் கண்டூர்த் தினவா மென்பர் மாறின்றியே
யடுத்தலுங் கூடிட லான வழிபறி யாறலைத்த
லுடத்தி னெருக்க லிடங்கழி மீதூ றுதலென்பரே.
**அலைப்பு, முடங்கல், கொலைத்தொழில், குன்றல்
**449
#26
உலைத்தல் நெரித்த லுடன்மிறை வேதனை யோடுசெற
லலைப்பென லாகு முணங்கன் மடங்க லதுமுடங்கல்
தொலைத்திடல் வெட்ட லணங்கண்டல் பிட்டல் சொல்லிலிவை
கொலைத்தொழி லென்பர் தலையெஞ்சல் சிங்கலுங் குன்றலதே.
**சாதல், வேறுபடுத்தல், வேற்றுமை
**450
#27
வீதல் விளித லுலைதல் முடிவுடன் வீட்டல்பொன்றல்
மாய்தல் தபுதலு டன்றுஞ்சல் சாதலின் மாற்றமென்பர்
பேதுடன் வீற்றுத் திரிவுடன் விள்ளலும் பேசிலிவை
தீதுறு வேறு படுத்தலும் வேற்றுமை யுஞ்செயுமே.
**உள்தளர்வு, வளைப்பு, நிணர்வு
**451
#28
உற்ற விளைப்போ டமுங்கலு மொல்கலு முட்டளர்வாஞ்
சுற்றுத றொட்டல் வரைத்தல் பிடித்தல் தொடித்தலுடன்
முற்றுதல் சூழுதல் சூழ்போத லென்று மொழிவளைப்பு
மற்று வலத்தல் சுவலல்சுற் றல்நிணர் வாமதுவே.
**யாத்தல் (கட்டல்), விடல்
**452
#29
விசித்தல் சிமிழ்த்தல் பந்தித்தல் சுருக்குதல் வீக்குதலோ
டசைத்த லிமிழ்த்தல் வரித்தல் தொடர்ந்திட லார்ப்புக்கட்ட
லிசைத்தலி னோடி யாத்தலென் றோதுவ ரீர்த்தலுடன்
வசத்தினிற் றீர்த்தல் விடல்பொருட் டாகிய மாற்றங்களே.
**பூசல்
**453
#30
திறிமுரண் ஞாட்பிக லாயோ தனமொய் செருவெஞ்சமம்
உறழ்விர ணஞ்சமர் தாக்கே சினவுத லோடமரே
லிறல்தெவ்வுப் போர்சங் கிராமஞ் சமீகம் வினை மலைவு
மறமலி யும்பகை யாகவம் பூசலின் மாற்றங்களே.
**மிகுத்தல், கடுத்தல், கொற்றவள்ளை, தழிஞ்சி
**454
#31
பாரித்தல் பூரித்தல் தோற்றுத லேயென் பதுமிகுத்தல்
வாரித் தறன்னொடு வாராணை யாகு மதுகடுத்தல்
கோரத் தடையலர் நாடழி வாவது கொற்றவளைத்
தாருற்ற மாற்றலர் மேற்பட ராமைத் தழிஞ்சியதே.
**பாதீடு, கொட்டாவி, உயிர், வருத்தங் களைதல்,
** உளம் வெதும்பிக் காட்டல், உயிர்த்தல்
**455
#32
அளித்தலும் பொய்தலும் பாதீடு கொட்டாவி யாபித்தலே
யொளித்தமெய் யாவி யுயிரா மயாவுயர்த் தல்வருத்தங்
களைத லுறக்கம் வியர்த்த லுளம்வெம்பிக் காட்டலதாந்
தளப்ப முடனுற் றுயிர்த லுயிர்போ தரவிடலே.
**காதித்தல், உமிழ்தல், புயல் சொரிதல், தெவிட்டல்
**456
#33
(கழி)ய முனித்தல் வறத்த லுறுத்தலுங் காதித்தலா
மொழுகிய பில்கல் பிலித்த லுமிழ்தற் பொருளதென்பர்
பொழிதல் பனித்த லுடனீட லென்னிற் புயல்சொரிதல்
விழைத லுமிழ்த (லிமிழ்த) றெவிட்டலின் மேல்வருமே,
**மழைவிடல், உடன்படல், பொழுது நீட்டித்தல், மூடுதல்
**457
#34
மட்டுறு தூவல் துவலை துளித்தல் மழைவிடலா
மொட்டல் வலித்த லுடனேர்த லென்னி னுடன்படலா
நெட்டை நெடித்தற் பொழுதொடு பாணியு நீட்டித்தலா
முட்டல்மொய் மூய்தல் கவித்தலு மாமென்பர் மூடுதலே.
**மொய்த்தல், எழுப்புதல், சோர்வு, வழு, குடியிறை
**458
#35
மூசலு முழ்த்தலு மூஞ்சலுந் தானிவை மொய்த்தலென்பர்
ஏச லுணர்த்த லெடுப்ப லெனிலிங் கெழுப்புதலா
மாசறு சோர்வு (கயக்கு பிற)க்கு வழுவதென்பர்
கூசுங் கரமுங் கடனுங் கறையுங் குடியிறையே.
**அரசிறை, சுங்கம், எழுச்சி மிகுதி, எழுகிடல், (எழுப்புதல்)
**459
#36
அரசிறை யேதிறை யன்றி யுலகிறை யாகுஞ்சுங்க
முரவு கலித்தலகஞ் சுற்றுதல் பம்ம லுடனஞறல்
தருவ தெழுச்சி மிகுதியின் பேரென்ப தாமிவர்ச்சி
யருளு முறுமலோ டோக்க முகைத்த லெழுகிடவே.
**தழீஇக்கோடல், சார்வு
**460
#37
தணவுத லன்றி முயங்குதல் விள்ளல் தழீக்கோடலா
மணவுத றோய்த றொடுத்தல் புணர்தலோ டண்ணுதலே
நணுகுதல் புல்லல் பொருந்த லுடன்சார்ச்சி நண்ணுதலே
குணமொடு செல்தல் படிதருஞ் சார்வென்று கூறுவரே.
**கலத்தல், தடவுதல், திமிர்தல், வளை தல்,
** வைப்புறுத்தல்
**461
#38
கடிது கலாவல் துளாவ லளாவல் கலத்தலென்பர்
தடவுத லாகும் வருடலு நீவ (லுந்) தைவரலும்
வடிவு நிமிர்த றுவருதலா மவ்வளை (தல்வக்ர)
முடன்மெய் தெருட்டல் வருட்ட லிவைவைப் புறுத்தலதே.
**குற்றுதல், முளைத்தல், விரிதல், பதனழிவு
**462
#39
அடுத்த லவைத்தலுங் குற்றுத (லாமலர்) த லங்குரித்தல்
பொடித்தல் வெடித்த லிவையே முளைத்தலும் போதலர்தல்
வெடித்தன் மலர்த லெதிர்தலிம் மூன்றும் விரிதலென்ப
ரடைத்தல் தழைத்த (லூழ்த்தல்) செவ்வியோடு பதனிழிவே.
**சமைத்தல், மறித்தல், அசைதல், எட்டல், மேவல்
**463
#40
இசைவொடு சேர்த்த லமைத்தல் சமைத்த லிகுத்தலுடன்
விசைவுறு வீழ்தன் விழுதன் மரித்தலை மேவுமென்ப
ரசைதல் துயல்வர லாமெட்ட லாவ தணவுதலாந்
திசைபுகழ் வீழ்த்தலு மார்த்தலு மேவலைச் செப்புமதே.
** கூடல், சரண்புகல், காவல்
**464
#41
குறைவில் பொருந்தல் சிவண லுடனொல்லல் கூடலென்பர்
மறைபுகு தற்சொற் சரண்புக லாமென்பர் மண்கடியுஞ்
சிறையு மொழுக்க நவிற்றல் செறிந்துதுற் றல்பயில்தோ
டுறைதரு கட்டு (கதவு காவலா)க வுரைசெய்வரே.
**ஏவல், வறுமை, ஒழுக்கம், அவித்தல்
**465
#42
வியலரை யேவல் வியங்கோள் வறுமையும் வீதிதென்ப
ரியல்பொடு மாலைகை யாறே நடனிழ லேசரிதை
செயலிவைய மொழுக்க நவிற்றல் ....துற்றல்
பயில னொகுத்த லவித்தலென் றோதுவர் பாவலரே.
**மூட்டல், செறித்தல், கூட்டம், விடுதலை, வேகம்
**466
#43
மோகமின் மாட்டல் பொருத்த லிரண்டையு மூட்டலென்ப
ராகமே மூழ்கல் குளித்தல் செறித்தல தாகுமென்பர்
யோகமுங் கூட்டம் வியோகம் விடுதலை கூறுமென்பர்
வேகம தோதிற் கடுமையும் வெய்ய விவேகமுமே.
**செய்கடன், குயிலுவம், குமரனாடல், ரியினாடல்
**467
#44
செயலுறு கின் ற நியம நியதியுஞ் செய்கடனாம்
பயிலு நரப்புக் கருவியிற் சேர்தரு பாடற்பண்பே
குயிலுவ மாகுங் கொடைதுடி யாடல் குமரனதா
மயர்தரு மல்லல் லியங்குட மாட லரியதுவே.
**சிவனாடல், திருமகளாடல், அயிராணியாடல்,
** காமனாடல், துர்க்கையாடல்
**468
#45
படர்கொடு கொட்டியுங் காபாலம் பாண்டரங் கஞ்சிவனாட்
டடர்சேர் பாவைதிருமக ளாட்டயி ராணியதாங்
கடைய நடம்புகழ் பேடாடல் காமன தாகுமென்பர்
துடியிடை மாதர் மரக்கால தாடலுந் துர்க்கையதே.
**கூத்து, நிருத்தம், குரவை
**469.
#46
பரத நடன முடனாடல் நாடக மேபிடிதந்
தரமுட னாடன மாலுத றூங்கிடல் தாண்டவங்கூத்
துரமிகு நாட்டி யங்கண்ணி நிருத்தமு மாங்குரவை
கரமலர் கோத்துட னாடலென் றேசொல்வர் கற்றவரே.
**நடன விகற்பம், துணங்கை
**470
#47
கரண மலைப்புக் குனிப்புமுள் ளாளங் கடகம்பித்த
முர(ணு) பவுரியம் பிரமாம் வீரிட் டதாளமுடன்
பகரு வினட (மி)ருகை முடக்கிப் பழுப்புடையிற்
றுரித லலிதத்தி னடித்துட னாட றுணங்கையதே.
**வேலனாடல், கைகுவித்துத் தட்டல், வாய் தட்டல்,
** குந்தியகாலின் நிலை
**471
#48
(வெ)றியே யணங்கு கழங்காடல் வேலன தாடலதாங்
குறியா லகங்கை குவித்து முற்றட்டலுங் கொம்மையதா
மறியாத பிள்ளைகள் வாய்தட்ட லாவலங் கொட்டலதா
நெறியானங் குஞ்சித்தல் குந்திய காலி னிலையென்பவே.
**கைகூப்பி மெய்கொட்டி நிற்றல், தாளவொத்து, நடனம்
**472
#49
நீடு குடந்தமுங் கைகூப்பி மெய்கொட்டி நிற்றலென்ப
தேடிய தாளத்தினொ)த்தின வாஞ்சதி சீரதென்ப
ராடி லதனி னடக்கு நடனமு மாகுமென்பர்
பாடல் பயிலும் பனுவற் றமிழ்தெரி பார்த்திபரே.
**பாரதிதீப வரலாறு
**473
#50
கயல்தங்கு வாவிக் கடம்பைய ராதிகைக் கார்நிகரு
மியறங்கு செந்தமிழ்ப் பாரதி பாவல ரேற்றரிதா
முயர்செஞ் சொலாற் சொன்ன பாரதி தீபத்தி னோரொன்பதாய்
முயலுஞ் செயல்பற் றியபே ரியலும் முடிந்ததுவே.
@10 பத்தாவது ஒலிபற்றிய பெயர்த் தொகுதி
**சொல்
**474
#1
கருது நொடியும் பனுவலுங் கூற்றுங் கதையுஞ் சொல்லு
முரையு மறையும் மொழியும் வினாவு மொலிப்பறையு
மருவு மிசையுங் கிளவியும் வாணியு மாற்றமுமே
யரிய வெழுத்தினி லாகிய லோசைச்சொல் லானதுவே.
**475
#2
பகர்த லியம்பல் குயிறல் மறுத்தல் பன்னல்சொற்றல்
புகறல் விளம்பல் கரைதல் வழங்கல் புகழ்தல்செப்ப
லிகலொடு மோதல் மிழற்ற லறைதல் வசனமிவை
யிகலுறு கட்டுரை பேசுதல் கூறல்சொல் லென்பர்களே.
**உண்மை, பொய், புறங்கூறல், வாழ்த்து
**476
#3
திடமாணை வாய்மையுஞ் சரதமெய் யுண்மை சிறந்ததென்பர்
மடிமாயை வஞ்சமு மேசக டங்கூடம் வாய்த்திரத்தோ
டுடந்தி சதமும் பொய்பிசி னங்குஞ்ச முங்குறளை
கொடுவா யெனிற்புறங் கூறாசில் லாழ்த்தெனக் கூறுவரே.
**திசைச்சொல், வாழ்த்து, பெருஞ்சொல், சிறுசொல்
**477
#4
மருவிய தேசிக மாகுந் திசைச்சொல் வழுத்தலுடன்
பரவல் துதித்த லுடனேத்தல் போற்றல் பழிச்சலிவை
தெரிதலில் வாழ்த்துப் பலரறி சொற்பெருஞ் சொற்சிறுசொ
லருளில் பழிச்சொல் பழியவை கெளவையு மாம்பலுமே.
**ஆம்பல், அலர், இடக்கர், கீர்த்தி
**478
#5
அடக்க முடன்சிலர் தம்முட் புறஞ்சொல்ல லாம்பலென்ப
ரடக்கமில் லாமற் பலர்புறங் கூற லலரதென்ப
ரிடக்கர் மறைத்துரை யாடல் மெய்(யினொ)டிசைபுகழுங்
கிடைத்தருள் சீர்த்தியு மீக்கூ றலுஞ்சொல்லிற் கீர்த்தியதே.
**ஏற்றம், மிகுபுகழ், தேற்றம், உறுதிக் கட்டுரை
**479
#6
எழில்புனை தோற்ற முடனே மலைவெனி லேற்றமதாம்
விழைதரு சீர்த்தி மிகுபுக ழாகி விடுங்குறிக்கோள்
வழுவுறு மோர்ப்புக் கடைப்பிடி தேற்றத்தின் மாற்றமதாங்
கழற லிடித்த லுறுதிய தாகிய கட்டுரையே.
**உரப்புதல், தேற்றமொழி, நிரம்பாத சொல், நிமித்தம்,
** புனருத்தி, மோனம்
**480
#7
தெழித்த லுரப்புதல் மன்றவென் மாறென்சொற் றேற்றமதாம்
நிழற்றன் மிழற்ற னிரம்பாத சொற்சொன் னிமித்தமெனிற்
றொழத்தகு வாய்ப்புள் விரிச்சிய தாஞ்சொன்ன சொல்லைச் சொல்லல்
மொழிப்புன ருத்தியென் வாளாவென் சொல்லெனின் மோனத்ததே.
**சூளுறவு, விளித்தல், கீழறுப்பு
**481
#8
சூளொடு வஞ்சனை யேசப தஞ்சொல்லி சூளுறலாம்
நீள விளித்தல் கரைதன்முன் கூவுத னின்றுளைத்த
லாளை யழைத்த லறைகூறல் சொல்லல் விளைத்தலதாங்
கேளறை போதலுங் கீழாறுப் போதற் கிளவியதே.
**முதுசொல், காரணச்சொல், உபகாரச்சொல், விழைவுறுசொல்,
** வினாவல், வினாவெதிர் சொல், நெடுமொழி
**482
#9
மொழிமை முதுசொற் கதைகா ரணச்சொல் முகமாற்றுட
னழகுறு நன்னய முபகா ரமசதி நகையே
விழைவுறு சொல்லு வினாவல் கடாவல் விடையெதிர்சொற்
பழுதி னெடுமொழி தன்னைமேம் பாடு படச்சொல்லலே.
**அல்லவாம் எனல், கேட்பித்தல், உரையசைச்சொல்,
** முன்னிலை யசைச் சொல்
**483
#10
அன்றென் கிளவி யதுவல்ல வாமெனு மம்மவென்சொ
லொன்றது கேட்பிக்கு மாங்கது வேசொல் லுரையசையா
மென்றுரை செய்வர் மியாயிக மோமதி யோடிகுஞ்சின்
குன்றிய சொன்முன் னிலையசைச் சொல்லென்று கூறுவரே.
**அசைநிலைச்சொல், இசைநிறை அசைச்சொல், இரண்டினும் எய்துவது
**484
#11
வாய பிறபிறக் கியாகாவ ரோவேழ் மாவெனுஞ்சொல்
லாய தசைநிலை யாகு மிசைநிறை யோடசைச்சொல்
லேயுங் குரையு மெனுமோ டிரண்டினு மெய்துமொப்புப்
போயதோர் போலியு மப்பொருட் டாகப் புகலுவரே.
**சாரியை, இடைச்சொல்
**485
#12
இன்னன் வற்றத்த மொன்னா னியக்கிகந் தேயொடம்மே
யன்மன் னிவைசா ரியையது வாகுமெம் மெந்தமம்மாங்
கொன்மன் னுடனே னள்ளார்தம் பாக்குக் கொல்லொடும்முந்
தன்னுடன் றில்லெனா வென்று விடைச்சொலின் றன்மையதே.
**எழுத்தின் சாரியை, வேற்றுமையுருபு, சுட்டு,
** ஐயச்சொல்
**486
#13
காரமு மானமுங் கானுங் கரமுங் கருதெழுத்தின்
சாரியை யையொடு(கு) வின் னதுகண் டனைக்கிளக்கி
லோருமவ் வேற்றுமை யின்னுரு மூன்றுரைக் கிற்சுட்டிதாங்
கூரிய கொல்லனை யாதென்னை யையச்சொற் கூறுவரே.
**இடத்தின் ஐயுற்ற சொல், கல்வி, வேதநூல்
**487
#14
ஏதமி லாண்டையு மியாங்கு மிடத்தினுக் கேற்றசொல்லா
மோதியறிவு கலைகேள்வி சால்பு முரைக்கிற்கல்வி
யாதி நன்னூ லெழுதாக் கேள்வி சாகை யருஞ்சுருதி
வேத முறையிவை தானென்று கூறுவர் வித்தகரே.
**வேதநூலின் இருவகைப் பொருள், ஞானபாகை,
** உபஙிடதம், வைதிகம்
**488
#15
அருண்ஞான பாகை யுடன்கரும பாகையென் றோதுநன்னூ
லருமறைப் பொருள்படு நூல்வே தத்தி னேதமற்ற
வொருஞான பாகை யுபநிடம் வேதத்தி னுட்பொருளாம்
வருவேதந் தன்னின் வழிமார்க்க மாகுமவ் வைதிகமே.
**முதல் வேதம், இரண்டாம் வேதம், சாமவேதம், நூல்
**489
#16
சாரும் பவுடிக முன்னைய தாகுந் தயித்திரியப்
பேரிரண் டாவது சாமமுங் கீதப் பொருநடையா
மாரிட மாகம மேயதி கார மரும்பிடகம்
பாருள தந்திரம் பனுவலு நூலின் பன்மையதே.
**மூதுரை, பாடம், சூத்திரயாப்பு
**490
#17
மூதுரை முன்னை பழமொழி யோடு முதுமையென்ப
ரோதமை யாடலும் பாடம தாகு முரைவிதியி
னேதமில் சூத்திர யாப்பா வடிவரை யின்றிச்செய்யிற்
கோதறு கேள்வி யகவற் பொருளெனக் கூறுவரே.
**பாயிரம், ஓத்து
**491
#18
பூத்திகழ் பாயிர நூன்முகத் தோடு புறவுரையாம்
நீத்தில வாத வினமணி தன்னை நிரைத்ததுபோல்
வாய்த்த வினப்பொரு டன்னை யொருவழி வைத்துரைப்ப
தோத்தென வோதுவர் சொற்றமிழ் நூல்கற் றுயர்ந்தவரே.
**படலம், விருத்தி நடையது, விரித்துரை,
** பொழிப்புரை
**492
#19
புரக்கு மொருமொழி யன்றி விரவும் பொதுமொழியா
யிருக்கும தாகும் படலஞ் சருக்க மிலம்பமுற்றும்
விருத்தி நடையது வென்றாம் விரித்துரை மெய்யுரையின்
பொருட்டிற மாமப்பொருட் பிண்டம தாகும் பொழிப்புரையே.
**பதிகம், இலக்கியம், அரும்பொருள் கடை
**493
#20
கோட்டுப் பதி(கம்) பலவனச் சொற்பொருட் கூட்டமென்ப
ரோட்டு மிலக்கியந் தன்னோ டுதாரண மும்மெடுத்துக்
காட்டல தாகும் பிசிதியு ஞா(பக) முங்கருதி
னாட்டிய வப்பொரு ளின்னடை யாக நவிலுவரே.
**யாப்பு, வெண்பா, கலிப்பா, ஆசிரியப்பா, வண்ணகம்
**494
#21
கவிதை யுடன்செய்யுள் பாத்தூக்குப் பாட்டுக் கவியதென்னி
னுவமையில் யாப்பு முதற்பாவெண் பாவ துரைமுறைமை
யவிர்கலிப் பாத்தொகை தன்னோ டகவலு மாசிரிய
மிவரு மராக முடுகியல் வண்ணக மென்பர்களே.
**குளகதச்செய்யுள், சந்தம், தாண்டகம், கணக்கு
**495
#22
தெரிகுற் றெழுத்துத் தொடர்பாக் குளகதச் செய்யுளென்ப
ரிருபத் திருமூன் றெழுத்தாகி நான் கடி யெய்துஞ்செய்யுட்
டருவது சந்தம் தானமிகு தாண்டகந் தானதென்பர்
கருதெழுத் தோடெண் ணிவைதா னிரண்டுங் கணக்கென்பரே.
**எண், எழுத்து, ஒற்றெழுத்து, காஞ்சி
**496
#23
இடறில் கரணங் கணித மிவையெண் ணெழுத்துரைக்கின்
வடிவொடு தன்மை பெயர்முடி வேயென மன்னெழுத்தர்
முடைய விராமை புலுத முடன்மெய்யு மொற்றெழுத்து
கடன லுலகம் புகப்பாட் டெழுத்தது காஞ்சியதே.
**முதுமொழிக் காஞ்சி, பேரியற் காஞ்சி,
** பொருண்மொழிக் காஞ்சி, முதுபாலை
**497
#24
கழிந்தவற் காட்டி னதுவே முதுமொழிக் காஞ்சியென்ப
ரழிந்தகக் கேட்டுரை பேரியற் காஞ்சியருண் மொழிமெய்
மொழிந்தசொற் சொல்லல் பொருண் மொழிக் காஞ்சி முதுசுரத்தி
னிழிந்திறைக் கேங்கன் முதுபாலையாக வியம்புவரே.
**குற்றிசை, குறுங்கலி, பாசறைமுல்லை, இல்லாண் முல்லை
**498
#25
பன்னித் துறந்தது குற்றிசை முற்றப் பழியவன்றன்
முன்னின் றுரைத்தல் குறுங்கலி பாசறை முல்லைக்கொண்கன்
மின்னினை யுள்ளலில் லாமுல்லைப் பாசறை மீதிறையே
யுன்னித் தகாதென்பர் நன்னூ னெறிகற் றுயர்ந்தவரே.
**இசைப்பாட்டு, இன்னிசை, பல்லியந்தரு பாடல்
**499
#26
வரிகொளை பன்னிசை பாண்கானம் பாணி மருவியகந்
திருவமென் கீத முடன்கேயங் காமரஞ் சேரிசையா
மிருளறு மன்னிசை சங்கீதம் பல்லிய மிராகமுடன்
பரவி யமர்ந்த லிசைகர் குனிதரு பாடலதே.
**நாற்பெரும்பண், இசைவிகற்பம்
**500
#27
மொழிதரு பாலைகுறிஞ்சி மருதமென் முல்லையென்ப
வெழில்புனை யாழ்வகை நாற்பெரும் பண்ணென்பர் யாழை நல்யாழ்க்
கொழிதரு செவ்வழி யாழறை யேயக் குறிஞ்சி முல்லை
விழைபயி ரேனை யெனினே ரிசையின் விகற்பமதே.
**குறிஞ்சி யாழ்த்திறன்
**501
#28
நந்து படுமலை காந்தாரம் பஞ்சுர நைவளைத்தொ
டந்தமருள் செந்திருதி பிரற்றயி ராங்குறிஞ்சி
சிந்தையில் லாதவ(ரா)கங் குறு(ங்கலி) தேர்நிறமே
பந்த மிலாக்கா ணங்குறிப் புத்து ...... பாலையதே.
**பாலையாழ்த்திறன், மருதயாழ்த்திறன்,
** செவ்வழி (முல்லை) யாழ்த்திறன்
**502
#29
படுமலை செவ்வழி யேயெனிற் செம்பாலை பாலையுடன்
விடல்தரும் பாலை யுடன்கொடிப் பாலை விளரியென்பர்
வடிவில் வியந்தை நவிரே குறிஞ்சி மருதத்ததாந்
திடனில் பெயர்த்திறஞ் சாதாரி யாமையஞ் செவ்வழித்தே.
**நெய்தல் யாழ்த்திறன், பாடலுக்கு ஏற்பது,
** ஆடலுக்கு ஏற்பது, வள்ளைப்பாட்டு
**503
#30
நீடு விளரித் திறங்காலம் யாழ்நெய்த னீணிலத்தாம்
பாடலுக் கேற்பது செந்துறைப் பாட்டுமென் பாவையன்னா
ராடலுக் கேற்பது வெண்டுறை யாகு மவருலக்கை
மாடமுற் கொண்டுமென் சீர்பாடிக் குற்றலும் வள்ளையதே.
**எழுத்திலா ஓசை, அணுகரண ஓசை
**504
#31
பிளிறல் குரைத்த லிரைத்தல் சிரத்தல் பிரத்தலுடன்
குளிறு பயில்த லுழைத்த தெழுத்துடன் கூரவிசைசெய்
யெளு(மெ) னழுமெனல் கல்லென லோலென லிம்மெனலோ
டளவி லஞெரொ பொள்ளெனிலா மனுகர ணத்ததுவே.
*ஆரவாரம்
**505
#32
இரைத்தல் திரைச்சி தழங்கல் கறங்க...லஞெள்ள
லுரைத்தறு வைத்தல் கலித்தல் கரைத்தலு மும்பபொலி
குரைத்த ரெளித்த லரவமோ டாகுல மெக்காளித்தல்
புரைத்தல் துழனியோ டார்ப்பார வாரம்வெம் பூசலதே.
**பாரதிதீப வரலாறு
**506
#33
கன்னல் குலாவும் வயல்சூழ் கடம்பைமன் கஞ்சமலர்
மின்னுள வாகும் புயபா ரதிதிரு வேங்கடவன்
பன்னிய பாரதி தீபத் திடையினிற் பத்தெனவே
முன்னுமொலி பற்றியேபே ரியலு முடிந்ததுவே.
@11 பதினோராவது ஒருசொற் பலபொருட் பெயர்த் தொகுதி
**ஏமம், விழுமம், செழுமை
**507
#1
சேமமே காவல்பொன் னின்பமேமாப் பிரவு செறிமயக்க
மேமம தாகுஞ் சிறப்பொடு சீர்மை யிடும்பையிசை
தாமுரை செய்யில் விழுமம தாகத் தருஞ்செழுமை
நாமம தென்னில் வளனே கொழுப்பெனு நானிலமே.
**உறை, உந்தி
**508
#2
நிந்தைசெய் கூறை கழுவுவர் நீர்த்துளி நீர்மருந்து
பந்தவென் னோய்தவிர்த் தின்பந் தருபொருட் பாலுறுபீர்
முந்திய காரமொழுக லிடைச்சொன் மொழியினுறை
யுந்திகொப் பூழ்நதி தேருருள் யாழ்க்கண்ண தோருறுப்பே.
**பாழ், நந்தல், விருப்பு, வெம்மை, கூத்து
**509
#3
அன்பா லுறையுள் சயனமு மூரு மடல்வலியு
வன்பாழி யாக்கமுங் கேடு மதாநந்த லென்புருக்கு
மின்பாட லாட லும்விருப் போடெனல் வேண்டல்வெம்மை
வன்பாட லாவ குகன்மாற்க கூத்தின் வகுத்தனரே.
**ஓசை
**510
#4
கலித்த லழுங்கல் துவைத்த லிரங்கல் கவனம்விம்மல்
சிலைத்த லிமிழ்த்த லிரட்ட லழுங்கல் சிலம்பல்சும்மை
நலத்தகு கம்பலைத் தோடணை நெய்த னவிற்றலுட
னொலித்த லிசைத்தல் கறங்கலென் றோதுவ ரோசையையே.
**ஒல், பண்ணை, புரை
**511
#5
ஓதை புலம்ப லரவமோ டோசை யொலியுடனே
நாதமு மொல்லென்பர் நன்னீர்ப் படுவும் நன்னுதலா
ராதர வான விளையாட்டு மாயமு மாகும்பண்ணை
போதுவ மைச்சொல் லுயர்புடன் குற்றம் புரையென்பரே.
**யாமம், தாமம், வரைதல், பரிவு
**512
#6
யாம முரைக்கிற் பொழுதுடன் சாம மிரவதென்பர்
தாம முகைநன் னொளியுடன் றாரென்ப தாம்வரையு
மாமது நீக்குதல் கொள்முத லாமென்ப ரானதுன்பங்
காமுறு மின்ப மிரண்டும் பரிவெனக் கற்பித்ததே.
**மஞ்சு, துஞ்சுதல், வாமம், வெறி
**513
#7
மஞ்ச துரைக்கின் முகிலோ டிளமை வனப்பதென்பர்
துஞ்சுதல் சாத லுறங்கல் நிலைத்தலுஞ் சொல்லுமென்ப
ரெஞ்சலின் வாமங் குறங்கே குறளிடப் பாலதென்பர்
மிஞ்சிய நாற்றம் விரையணங் காட்டு வெறியென்பரே,
**பாணி, கோடகம், கோதை
**514
#8
நீடிய நீரொடு கையே நெடித்தற் பொழுதோடுநே
ராடலுட் பல்லியம் பாணி மரக்கொம்பு பாய்பொதும்பு
கோடக மாகுங் குரங்குட னேயென்பர் கோதைமுடி
சூடிய சேரன்வின் ணாண்டுடர் கைக்கட்டத் தொங்கலதே.
**வஞ்சி, தோல், வாரணம்
**515
#9
நாற்பாவி லொன்றுட னாற்றகத் தோர்கொடி நன்னுதற்பேர்
மேற்போய் விடுஞ்சொற் கருவூருந் தான்வஞ்சி வேழமுடன்
றோற்பன போர்வை பலகை வனப்பிவை தோலதென்பர்
காற்போர் செய் கோழியும் வேழமும் வாரணங் காணென்பரே.
**மால், மா, மலைதல்
**516
#10
அரிமுகில் வேட்கை மருந்து மயக்கமோ டானபுதன்
கருமையு மேனைப் பெருமையு மாலென்பர் காமர்வண்டு
திருநிற மோடு மிருளுங் கருமை திகழ்பருமை
மருவிய மாமலர் கடல் பொருதல் மலைதலதே.
**சூர், தார், விண்டு, சிலை
**517
#11
சூரது வஞ்சனை யஞ்சாமை தெய்வமுஞ் சொல்லுமென்பர்
போரெதிர் செல்லுங் கொடிப்படை யாவிற் புனைமணியும்
வேரிசெய் மாலையுந் தாரென்பர் மாயனும் வெற்பும்விண்டா
மேருறு வில்லு மலையுஞ் சிலையென் றியம்புவரே.
**கொண்டல், ஆரல், ஆரம், குயம், காரிகை
**518
#12
வாருறு மேகமுங் கீழ்காற்றுங் கொண்டல்செவ் வாய்கார்த்திகை
யாரல்முத் தாத்தி யணிமாலை சந்தன மாரமென்பர்
கூரரி வாளோ டிளமைபின் கொங்கை குயமதென்பர்
காரிகை மாதெனில் கட்டளை யாகுங் கலித்துறையே.
**இவர்வு, சாறு, அளி, குவலயம்
**519
#13
சேற லொழுக்கத் துடனே விரும்பல் செலுத்துதலே
யேறலிவர்வென் கிளவிய தாங்கள் ளிசைவிழவே
சாறது வாகு மதுக்கொடை வண்டினந் தானளியே
கூறுவர் நெய்த லுடனில மாகுங் குவலயமே.
**வைகல், தொண்டு, சேய், பொழில்
**520
#14
கழிதரு நாள்புல ரிக்காலம் வைகறங் கற்பொருட்டாம்
பழமை நவமிகுங் கேண்மைதொ ழும்போடொன் பானுந் தொண்டா
மொழியி னிளமை மகவஞ்செவ் வாயு முருகனுஞ்சேய்
பொழிலெனிற் காவு முலகமு மாகப் புகலுவரே.
**பிரசம், அரில், கோடு, பாடு
**521
#15
பிரச மெனும்பெயர் தேனீயுந் தேனும் பிணக்குக்குற்ற
மரிலென வாஞ்சங்கு மூதுமக் கொம்புட னார்மருப்புக்
குரையு மரக்கொம்பு நீர்க்கரை யும்வெற்புங் கோடதென்பர்
பரவு பெருமை படுத லொலியிவை பாடென்பரே.
**வை, இளமை, கறை, குளிர்தல்
**522
#16
மொழிதரு கூர்மை நெற்றாட் புல்லு வையென்பர் மொய்யிளமை
களிதரு காமமுந் தன்மையுஞ் சொல்லுங் கறையெனுஞ்சொல்
லொழுகு முதிரந்திறை யேநிறமு முரைக்குமென்பர்
குளிர்த லுரைக்கிற் றுளையே மராமெனக் கூறுவரே.
**சிறை, பரிவு, வேழம், அளகம், சூழி
**523
#17
சிறையெனிற் காவ லிறகாம் பரிவு செயல்விருப்பாம்
விறலிபங் கன்னல் கொறுக்கை வெதிரிவை வேழமென்ப
ரறைமட மாதர் குழலும் பினலு மளகமென்பர்
துறைபயில் வாவி முகபடா... முமென் சூழியதே.
**வயா, பரி, கண்டகம், தொடி, அந்தம்
**524
#18
மருவும் வயாவெனின் வேட்கைப் பெருக்கம் வருத்தமதாம்
பரிபரி யேசெலவே பாது காவற் படர்வருத்தஞ்
சுரிகையொள் வாள்முள் ளிவைகண் டகந்தொடி தோள்வளையோ
டொருபல மாமந்த மீறழ காக வுரைசெய்வரே.
**கந்தம், கடு, துண்டம், கண்டம், குயிறல்
**525
#19
கடியே கிழங்கு புனல்கந் தமாகுங் கடுமரமே
விடமே கடுவென்பர் துண்டங் கழுத்துமெய் சேர்கருவி
யடல்வாள் திரையுடன் றேசமுங் கண்டம தாஞ்செறிதல்
குடையொடு கூற லிவை.... யென்பர் குயிறலுமே.
**ஏற்றல், போற்றல், பகல், கோள்
**526
#20
இகலோ டெதிர்ந்து பொருதலுங் கோடலு மேற்றனலாம்
புகழ்த லுடன்பாது காத்தலும் போற்றல் பொருவருநாட்
டிகழொளி யோ(டு) நடுள ... செயலுந் தெளிந்துரைக்கிற்
பகலது வாங்குணங் கோட்பாடு கோளென்பர் பைந்தொடியே.
**கம்பலை, மடல், உம்பர், குழை
**527
#21
கருது நடுக்கச்ச மோதையின் னாங்கிவை கம்பலையா
மருவு தொகுதி பனையிதழ் பூவிதழா மடலோ
டுரைசெய்வர் மேலிடந் தேவர்தம் பேரிவை யும்பரென்பர்
குருமணி சூழ்குண் டலமே தளிர்த்தல் குழையென்பரே.
**கார், ஆர், தபனன், கனலி, கழுமல்
**528
#22
காரே கருமை புனல்மாரிக் காலங் கருமுகிலா
மாரேபத தேருறுப் பேகூர்மை யாத்தி யனலருக்கன்
பேரே தபனன் கதிரவன் பாவகன் பேர்கனலி
நேரே மயக்கமும் பற்றுங் கழுமல் நிலைபெறுமே.
**முல்லை, கஞ்சா, கன்னல்
**529
#23
வன்றிறற் கான்தனி லங்கதான மல்லிகை மாறுபடா
வென்றி தருமுல்லை கஞ்சாபூங் காடும் விரையுமென்பர்
குன்றலில் நாழிகை வட்டில் சருக்கரை யோடுகுட
மென்றிவை கன்னற் பெயராங் கரகமு மேந்திழையே.
**மது, களம், களரி, இழுமெனல்
**530
#24
பொழில்தருத் தேறல்செந் தேன்மது வென்பர் பொருநிலத்தோ
டொழுகு கருமை மிடறே களமென்ப ரோங்குகடங்
கழிவில் கமைகள் செருச்செய் நிலமுங் களரியென்ப
ரிழுமென லோசை யினிமையென் றேசொல்லு மிவ்வுலகே.
**காழ், பால், கலை, துன்னல்
**531
#25
கோல்பரல் சேகு மணிக்கோவை மாலை குலவொளிகாழ்
பால்திசை பக்கம் பருத்த லுடனியல் பாமொழிந்த
நூல்கல்வி யாடை முசுவேறு காலநுட் பங்கலையா
மேல்செறி வோடு குறுகலுந் துன்னல் விளங்கிழையே.
**அணி, மாழை, பணை
**532
#26
அணியெழல் பூணோ டழகாடை யும்பையோ டாயமுடன்
பணியில கட்டிபொன் னோலையு மாழை பணையெனும்பேர்
மணமுர சோடு புரவியின் பந்தி மரத்தினிற்கோ
டுணர்வில் பழனம் பெருத்தல் பணைத்த லுடன்கழையே.
**திணை, துத்தி, அம்பரம், வம்பு
**533
#27
நெறிசே ரொழுக்கங் குலமொழுக் கத்தி னிலந்திணையாம்
பொறியே சுணங்கு திதலையுந் துத்தி பொருகடல்விண்
செறிகூறை யம்பரங் கச்சு நிலையின்மை சேர்புதுமை
நறையோடு நான்கிவை வம்பென வோதுமிந் நானிலமே.
**அணங்கு, அளக்கர், தொடுத்தல், கவலை
**534
#28
மாதரும் பேயும் வருத்தமுந் தெய்வமும் வன்கொலையு
மோதி லணங்கதி லஞ்சே றுததி யுறுமளக்கர்
சூதின் வளைத்தல் பிணித்தன்மெய் பற்றல் தொடுத்தலென்பர்
காதிய துன்பங் கவர்நெறி யாகுங் கவலையுமே.
**கந்தரம், அந்தில், மை, கொன், எல்லை
**535
#29
கந்தர மேக முலைமுழை யோடு கழுத்தெனலா
மந்தில லாங்கு மசைநிலை மைமுகி லாடுங்குற்ற
முந்திய காலம் பயனிலி யச்ச முடன் பெருமை
தந்திடுங் கொன்பகற் றன்னோ டளவை தருமெல்லையே.
**பிறப்பு, செறிவு, ஏசல், பதி, மள்ளர்
**536
#30
பேசு பி(றவி) பிறப்புச் செறிவு பெருக்கலுமா
மேச லிகட்சி நகையென லாம்பதி யேயுரைக்கி
லோசை பயிலு மிறையவ னோடங் குறைவிடமா
மாசறு வீர ருழவர்தம் பேரென்பர் மள்ளருமே.
**கருங்கை, பதம்
**537
#31
கொல்லுந் தொழில்வன் றொழில்கருங் கையென்பர் கூறுநிதி
சொல்லி னுறு(0) பயல் பல்பண்ட மாம்பொருள் சோறுவழி
யெல்லுறு கால முடனிறம் பாவல ரெட்டுடனே
புல்லிய பேத வுரைபத மாகப் புகலுவரே.
**புதை, செம்மல், மாலை
**538
#32
ஏவதின் கட்டும் புதுமையு மாம்புதை யேற்றபழம்
பூவிறை புத்திரன் மாரி பெருமை புகலிற் செம்ம
லேவுபொன் பூமணி சொல்லிற் றொடுத்தவை யேறுமிருள்
வாவிய வந்தி யியல்பது மாமென்பர் மாலையதே.
**துப்பு, செத்து, தானை, ஓதி
**539
#33
ஒப்புறு வண்ணம் பவளம் வலியரக் கோதிலிவை
துப்பது வென்பர் கருத்தொப்புச் செத்தென்பர் சூழ்கலிங்கங்
கைப்படை காலாட் படையிவை தானைசெங் காலெகின
மைப்பயில் கேசம் மலி யோதி யாக வகுத்தனரே.
**கரணம், செச்சை
**540
#34
சொல்வரெல் லாரு முதற்பொருட் டான்றுணைக் காரணமும்
பல்வகை யாடலும் பாடலுங் காமப் பகுதியுடன்
கல்வியு மெண்ணுங் கரணமென் றேயொன்றுங் காமர்வெட்சி
கொல்வினை மேவுவெள் ளாட்டேறு மேசெச்சை கூறிடிலே.
**புலம்ப, சிலம்பு, கலுழி, கலித்தல்
**541
#35
புலம்பே தனிமை யுடனே நடுக்கம் புலம்பலுமாஞ்
சிலம்பே மலையொலி காலணி யாமென்பர் சேர்கலுழி
கலங்கர் நீருவுடன் கானயாற் றென்பர் கலித்தலென்னில்
நலஞ்சே ரெழுச்சி யொலித்தலென் றேசொல்லும் நானிலமே.
**புலவர், மறம், உருத்தல்
**542
#36
அலைவறு தேவர் கவிகள்மெய்ப் பாடுந ராடுநரே
புலநட ராக வறியோர் பொருநர் புலவரென்ப
சிலைதரு வீரங் கொடுமை சினங்கொலை செய்தன்மற
முலைவறு தோன்றல் வெகுட்சிய தாகு முருத்தலதே.
**பொருநர், கோள், நிழற்றல்
**543
#37
ஆளும் பெரும்போர்த் தலைவருங் கூத்தரு மானபடை
வாளொன்று வீர ரிவரே பொருநர் மருவுநவ
கோளுங் கொளலுங் கொலையிடை யூறுமக் கோளதென்பர்
நீளுங் குடைநிழல் செய்த னுணுக்க நிழற்றலதே.
**வாரி, வதுவை, கனவு, கனவு
**544
#38
கனைகடல் வெள்ள மிகுதி மதிநூல் கதவுதடை
யெனிலிவை வாரி வதுவை மணமன்ற லென்றிவையும்
புனைதரு வாச மணம்புணர் வாந்துயில் பொய்மயக்கங்
கனவென லாகு நனவே தெளிகண் ணென்பரே.
வேய், தா, கேள்வி, வாயில்
**545
#39
வேயமை யொற்றுடன் வீணையு மாகு மிகுவருத்த
மேய வலியிடை தாவென் றுரைசெய்வ ரேற்ற கல்வி
சே(ய) செவியிவை கேள்விய தாம்புல(னுந்) திறனும்
வாயில தென்பர் வடிவே லனைய மதர்விழியே.
**வேளாண்மை, நாகம், முளரி
**546
#40
வேளாண்மை யாவ துபகார மெய்யுப சாரம்விண்ணே
...ரங்கோர் மரப்பேர் மலையா டரவு
காளா சலமிவை நாகமென் றோதுவர் காய்கனலே
காளார் மரை முண்மாமர முளரிய...... தே.
**வேலன், விருத்தி, சுடர், கயம்
**547
#41
உரைமுரு கன்வெறி யாட்டாளன் வேல னுரியபொருள்
விரிதர வோதல் விருத்தி முதுமொழி வெங்கன (லே)
சொரிதண் திங்கள் கதிரே (சுட) ரென்பர் சூழ்கயமே
கரியினிற் கன்றுட னாழநன் னீரெனக் கற்பித்ததே.
**தாலம், மதலை, பதலை, இறும்பூது
**548
#42
தரைபனை யுண்கல நாத்தால மாகுந் தவப்புதல்வர்
பரவு மரக்கலந் தூணே மதலை பதலையென்னின்
விரவிய தாழி பரந்தரு வாய்ப்பறை மெய்வியப்போ
டருள்சிறு தூறு மலையிறும் பூதென் றறைவர்களே.
**குளிர், பிறங்கல், மறை, சிரகம்
**549
#43
இரைபயில் கிள்ளை கடியுங் கருவி யிலைமூக்கரி
கருவி குடமுழ வாகுங் குளிர்பிறங் கல்லுயரம்
பெருமையு மாகுமறை தேரல் வேதப்பெயர் மறையாஞ்
சிரகம தென்னிற் கரகந் துவலை செயறருமே.
**நீவி, கேவலம், ஆகம், வியம், எகினம்
**550
#44
நீவி யரித்த றுகில்கொய் சகமுட னேதுடைத்தல்
கேவல மாகுந் தனிமையு முத்தியுங் கேயூரமா
ராவி பயிலுட லாகஞ் செறிதுட ருகலவறி
தேவிய நாயோ டனமே கவரி யெகினமதே.
**முடலை, விடங்கம், படலை, மடங்கல்,
** இருத்தல், கவிகை
**551
#45
முடலை திரட்சி முருடாம் விடங்க முகடழகாம்
படலை யெனிற்பகை கூற்றூழித் தீச்சிங்கம் பாயுமுரு
மிடிநோய் மடங்க லிகுத்தல் செகுத்தலும் வீழ்த்துதலுங்
குடைகொடை யென்னு மிரண்டுங் க(விகைய தாமென்ப)ரே.
**அள், ஞெள்ளல், பள்ளி, இதழ், வள்
**552
#46
அள்ளெனிற் காது செறிவுடன் வன்மைய தாகுமென்பர்
ஞெள்ளல் தெருவுடன் மென்மை துயிலிட னேயிரண்டும்
பள்ளி பனையிலை பூந்தோட தாகும் பயினிதழாம்
வள்ளெனிற் கூர்மை வலியுட னேவடி வாளென்பரே.
**ஆணை, தாயம், ஆயம், மத, காயம்
**553
#47
ஆயமெய்ப் பட்டோ டிலாஞ்சினை சூழ்விற லாணையென்பர்
தாய முரிமை யுடன்றங் குடித்தமர் தாய்த்திரள்சூ
தாயம தென்பர் வனப்பே வலியுட னீளமதாங்
காயம தென்னிலி யாக்கையுங் காழ்ப்புங் கருதியதே.
**கோல், கட்டளை, தெவிட்டல்
**554
#48
இறைமுறை செய்தலின் யாழ்நரம் பேமை யெழுதுவது
நிறையே துலாமத்தி கையம்பு கோலென்பர் நீண்டநெறி
யறிவ துரைத்தங் கறிவது கட்டளை யாமொழித்தல்
திறவோ டுமிழ்த லிரட்டல்தெ விட்டலின் செய்தியதே.
**அழுங்கல், வழங்கல், அற்றம், உலவை, கழங்கு
**555
#49
அழுங்க லிரக்க முடன்கே டுறல்சொல்ல லோடளித்தல்
வழங்கல தாமற்றஞ் சோர்புட னீய மறைப்பொருளா
மொழுங்கேர் சாற்று மரக்கோடு மாமருப் பாமுலவை
கழங்கணங் காட்டுக் கொடிகழ லாகவும் கற்பிப்பரே.
**அறல், இறை, உறழ், பொறை
**556
#50
அறலே வயவு கருமணல் நித்திரை யாகுமென்ப
ரிறையே சிறிதுயர்ந் தோர்தங்க லேகடனில்லிறப்பா
முறழே செறிவிடை யீடே புணர்வுட னொத்தலுமாம்
பொறையே சுமத்தல் பொறுத்தலு மாகப் புகலுவரே.
**கருவி, ஓரை, முற்று
**557
#51
சுடர்பூண் டொகுதி படைக்கலம் பல்லியத் தின்றொடர்யா
ழிடமேவு கொண்டல் கலனை கவச மியங்கருவி
யுடன்மாதர் கூட்ட மிராசியுங் கூற்றொடு மோரையென்பர்
முடிவாய் வளைத்தல் முழுவது மாமென்பர் முற்றினையே.
**தூவு, கழுது, வேலை, சினை
**558
#52
ஏவும் பசையுந் தசையும் பறவை யிறகினையும்
தூவென்பர் பேய்வண் டிதணங் கழுதென்பர் சூழ் ந்தகடன்
மேவுங் கடற்கரை காலமுந் தானிவை வேலையென்ப
ரோவுஞ் சினைமரக் கோடா குவவொன் றுறுப்பென்பரே.
**படர், பதங்கம், நனை, கடிகை, காலை
**559
#53
படரெனி லுன்னல் செலவே பரிவு பதங் கம்விட்டி
லொடுபற வைப்பொதுப் பேர்களும் நனை (பூவின்) மொட் டென்பர்
கடிகையும் வேத சமயங்க ணாழிகை காலையெனிற்
றொடர்தரு காலமு நாட்கூறு மாமெனச் சொல்லுவரே.
**எற்று, வயிரம், மற்று, கொற்றம்
**560
#54
எற்றே னினைவு துணித்தல் புடைத்தல் லெறிதலெற்றல்
செற்ற முடன்வன்மை வச்சிரங் கூர்மையச் சேகுமணி
மற்றிவை யேவயி ரம்வினை மாற்றென்பர் மற்றெனுஞ்சொற்
கொற்ற மரசியல் வெற்றியு மாகவுங் கூறுவரே.
**வீசல், தேசிகம், பாடலம், காசறை, பாசம்
**561
#55
வீசல் கொடுத்த லெறிதல் திசைச்சொல் மிகுமழகுந்
தேசிக மேயென்பர் பாடலம் பாதிரி யேசிவப்பாங்
காசறை நாணலுங் காயா மரமென்பர் கற்றறிந்தோர்
பாசமு மூசித் துளைகயி றாகப் பகருவரே.
**தண்ணடை, பாடி, கட்சி, ஓரி
**562
#56
நாடுட னூரிவை தண்ணடை நாடு நகரமிவை
பாடியு மாகும் படைவீ டஃதென்பர் பாதகஞ்சேர்
காடுடன் கூடித ணென்ற(ல்) கட்சி கருநரியோ
டாடவர் தங்கள்மயி ரோரி யாக வறைவர்களே.
**மூரி, ஊர்தி, தரணி
**563
#57
மூரி பெருமையு மானேறு மாகு முழங்குகரி
தேரொடு மாவுஞ் சிவிகையு மூர்தி திகழரலைப்
பேரது கூறிற் கனிக்காழ் கழலைப் பிறங்கலுடன்
றாரணி தன்னோ டிரவியு மாகுந் தரணியதே.
**இரலை, பல்லம், முரண், கழிதல், இறத்தல்
**564
#58
இரலைபுல் வாய்கலை யூதிய கொம்போ டிசை தலைநாட்
கரடி சிலீமுகம் பல்லம தாம்வலி பாய்பகையே
முரணென லாகுங் கழித லிறத்தன் மொழியினிவை
யுருவழி சாவு கடத்த லிகத்தலென் றோதுவரே.
**தட, தவ, வெடி, முருகு, ஏனை
**565
#59
தடவெனிற் கோட்டம் பெருமை தவமிகு தல்குறைதல்
வெடியெனில் வெள்ளிடை யோடு வெருவுதல் வேள்விழவு
கடியோ டிளமை வெறியாடு வேலன் கருதெழுச்சி
யுடனே முருகெனு மேனை யொழிவோ டிடைச்சொலதே.
**மானுதல், படை, தானல், வயின்
**566
#60
மானுத லொப்பு மயக்கமு மாமென்பர் மண்சயனந்
தானையோ டாயுத மேயுழு நாஞ்சிலுந் தான்படையாந்
தானல் கதிரொளி யேமலைச் சார்கடற் சார்பொழிலா
மான வயிறு மனையிட மேவயி னாமென்பரே.
**கூலம், மூலம், கழல், வேலி
**567
#61
கூலமு நீர்க்கரை பல்பண்டம் பாகலைக் கூறுமென்பர்
மூலமெனும் பெயர் நாளொடு வேரு முதலுமென்பர்
காலடித் தோலொடு காலொடு காலணி யுங்கழலாம்
வேலி மதிலுடன் காவலு மாக விளம்புவரே.
**வண்ணம், காசு, கரை, அருணம், ஆசு
**568
#62
மாசின் மரபு பெருமையும் வண்ண மணிகுற்றமே
காசென லாகுங் கரையே யிடைச்சொற் கருதொலியா
மாசி லருணஞ் சிவப்பொடு மானழ காகுமென்ப
ராசுமெய் சேர்வு கலியே சிறுமை குற்றமதே.
**பனி, வனம், அழுங்கல், கனம், நியமம்
**569
#63
பனியெனிற் றுன்ப நடுக்கமச் சந்தரும் பாய்புனல்கான்
வனமென லாகு மழுங்க லரவ மிரங்கலென்பர்
கனமென லாகுஞ் செறிவொடு மேகமுங் காமர்தெரு
நினைகவ லாத நியதியு மாகு நியமமதே.
**ஊறு, வசை (வசி), நூல், அசைதல்
**570
#64
உசையிடை யூறுற் றறிபுலன் றானிவை யூறதென்பர்
வசையெனிற் போழ்ந்த வடுக்கூர்மை தாட்சி வருட்டலென்ப
ரிசைதரு நூலெனி னெண்ணம் பனுவ லிசைக்குமென்ப
ரசைதலை நேரதா யங்கலு மாக வறைகுவரே.
**நவிரம், குலம், ஆலுதல், சேண், ஆர்தல்
**571
#65
மலைதனி னுச்சி மருத யாழ்த்திற னவிரமென்பர்
குலமெனி னில்லமுங் கூட்டமுங் கூட்டுங் குடியுமா
மொலியுட னாடுத லாலுத னீள முயரமுஞ்சே
ணலைவற வார்த னிறைதலு முண்டலு மாமென்பரே.
**தளிமம், வலம், நளி, மறலி, வளம்
**572
#66
உறைதரு மெத்தை யழகே தளிம முறைவிடமே
விறலொடு மேலிட மேவல மென்பர் மிகுபெருமை
செறிவிவை யேநளி யென்பர்வெங் கூற்றொடு சேர்மயக்க
மறலிய தென்பர் வளப்பாடு பண்டம் வளமென்பரே.
**மூரல், பாலை
**573
#67
மூர னகையெயி றேசோறு நீரின்றி யேமுதிர்ந்த
பார்தரு பாரினிற் பாடலும் பாலைப் பதியிடத்திற்
பேரல் பொருளிற் பிரிதல் ப(ரி) வரை பெண்ணுடன்கொண்
டாருடன் போத லவைபாலை யாக வறைகுவரே.
**குறிஞ்சி, மருதம், படிவம், அண்டர்
**574
#68
செழுமலைச் சார்விட மந்நிலப் பாடல்செம் முள்ளிசெவ்வே
மொழிவர் குறிஞ்சி பயனில மந்நிலத் தோர்முடிய
வழிபடு பாடல் மருத மவிர்தல் வடிவமிவை
யழிவில் படிவ மமரரோ டாயரு மாமண்டரே.
**மனவு, சுடிகை, புணரி, முனை, வியங்கோள்
**575
#69
மனவெனி லக்கு மணியாடை வேணி மயிர்முடியும்
புனைதரு சூளிகை யோடே சுடிகை புணரிகடல்
வனைகடல் சூழுங் கரைதிரை யாம்வெம் பகையிறைமை
முனையென லாம்வியங் கோளாணை யேவன் முறைபெறுமே.
**வரை, கணம், அருகல், கரில், தாபரம்
**576
#70
வரையெனிற் பாட லெழுதல் வடிவுவட் டந்திரட்சி
யுரைசெய் (கணமென்)பர் சாதல் சுருங்க லுடனுரைக்கி
லருகலென் றோதுவர் கூர்த்தல் கொடுமை யவையுரைக்கில்
கரின்மலை போன்மரம் போனிற்குந் தாபரங் காணென்பரே.
**பலி, பரவை, அலரி, சித்திரம், மெய்
**577
#71
பலியை யஞ்சோறு கடலே பரப்புப் பரவையென்ப
ரலரிமென் பூவு மருக்கனு மாம்பொய்யை யானமெய்போற்
சிலசெய் தலும்வடி வழகொடு கோலமுஞ் சித்திரமே
நிலைபெறு சொற்பொருள் மெய்யெழுத் தோடுமெய் நேர்ந்திடுமே.
**மன், தன்மை, இயல், மாடு, கணை
**578
#72
மன்மன் னவனிடைச் சொல்லுடன் மன்னலு மாஞ்செய்தலுந்
தன்மை யிடப்பொரு ளுந்தன்மை யாமியல் சாயல்நடை
பொன்மணி போல்வன வேதனமாடு புனைதிரட்சி
வின்மலி யேவும் பகழிய தாகும் விறற்கணையே.
**செயிர், கற்பம், அரணம், விதி, குரல், கரைதல்
**579
#73
செயிரெனிற் குற்றஞ் சினவலு மாங்கற்பந் தேவருல
கயனுடை யாயுள் மதிலே கவச மரணமென்ப
ரியல்புட னேசெய லாகும் விதிகுரல் யாழ்நரம்பு
பயில்கதிர் கூவன் மொழிதல் கரைதலின் பாற்படுமே.
**சிக்கம், காரி, நீலம், வெள்ளை
**580
#74
உறிமயிர் வார்தரு சீப்பிவை சிக்க முயர்சனிக்கோள்
கறைபயி னஞ்சொடு சாத்த னிருணிறங் காரியென்பர்
நிறைபுன னெய்தலி னீலநிறைத்தன நீலமணி
யறைகுவர் நீலம்வெள் ளாடுவெண் பாவெண்மையாம் வெள்ளையே.
**உழை, வழி, வாரம், கைக்கிளை
**581
#75
உழையெனில் யாழ்நரம் போடிவை மானென் றுரைத்திடுவர்
வழியிட னோடுபின் னும்வரை யாரென்பர் வாரமென்னிற்
கிழமை பகுதி மலைச்சார்வ தாமென்பர் கைக்கிளையே
கழுமிய யாழி னரம்பொ டொருதலைக் காமமுமே,
**வையம், ஆற்றல், வாள், கூரம், எஃகம், வில்
**582
#76
தேரோ டவனி சகட மெருது சிவிகையென்னும்
பேரிவை வையம் வலிசெய லாற்றலின் பேரதென்பர்
கூரிய வாளொவ் வொளிவா ளுழுபடை கூரம்வைவேல்
தாருமெஃ கம்வில் விரட்டை யோடொளி தான்றருமே.
**அங்கதம், விளரி, எல், நாண்
**583
#77
அங்கதந் தோளணி தன்னோ டரவென்ப தாமிளமை
தங்கிய வேட்கை யுடன்யாழ் நரம்பு தருந்தகுதி
யிங்கிவை யாகும் விளரியெல் லேயொளி யோடிரவா
மங்கல மான வணிபாசம் நாணென்பர் மாதவரே.
**அரி
**584
#78
சிங்க மளி திரு மால்கவி யிந்திரன் திகிரிபடை
பைங்கிளி கிண்கிணி பெய்பரல் வாசி பறவைநிறம்
வெங்கதிர் பன்றி வலிபகை பொன்புகை வெம்பணிகூற்
றங்கி புலிகவி வாள்தேரை யூகை யரியென்பரே.
**நகை, பொருள், இடி, தொய்யல்
**585
#79
மகிழ்வினோ தம்விளை யாட்டிடை யோடு வருநகையே
யிகழ்வது மேபெறுஞ் செல்வம் வெறுக்கை யென்னிற் பொருளாம்
தகரநறுஞ் சுண்ண மோடு தருப்பணந் தானிடியாந்
திகழ்முழ வேர்குழை தொய்யன் மகிட்சியுஞ் செப்புவரே.
**நாகு, கூழ்
**586
#80
ஆனா டெருமை மரையிவை யல்லன வாங்கொழுமை
யீனா விளமைநன் னீர்வாழுஞ் சாதி யிளமரமே
தானாகு நாகு தழையுடன் சொல்லுந் தமனியமு
மேனா டுணவு பயிரிவை கூழென வேண்டுவரே.
**இதை, கிழி, ஊக்கம்
**587
#81
இதையே மரக்கலப் பாயே புதுப்புன மேற்றபொருட்
பொதி யாடை கீற லெழுதும் படமும் புனைகிழியாம்
விதமார் முயற்சியும் வண்மையு முண்மையு மெய்மனத்தி
லுதையா தரத்து மிகுதியு மாமென்ப ரூக்கமதே.
**கடி, நேர்
**588
#82
விரைவு விளக்கங் கரிப்பே புதுமை மிகுதியையம்
வரைவுமுன் றேற்றுச் சிறப்பொடு கூர்மை மணமெச்சமே
கருது காப்புவெம் பேய்மணஞ் செய்தல் கடியெனலாம்
நெடிதுடன் பாடு கொடையொத்த லேதனி நேரென்பரே.
**வாகை
**589
#83
எண்ணெண் கலையினி னீகையிற் பண்பி னெழிலொருத்த
னண்ணுஞ் செயலின் மரபினிற் செல்வத்தி னல்லறிவிற்
கண்ணுந் தருமத்தின் வீரத்தி னைம்புலன் காத்துமுத்தி
வண்மை பெறுநெற்றி யிற்பேர் பெறுவது வாகையதே.
**பாரதிதீப வரலாறு
**590
#84
வெருவா துயரந்தமு மெய்வீடு கண்டருள் வேங்கடவன்
பருதிக் கதிரொளி போல்வன பாரதி பங்கையஞ்சே
ரிருகைப் புயல்சொற்ற பாரதி தீபத்தி னேகாதசத்
தொருசொற் பலபொருட் பேரா னியல்முடி வுற்றதுவே.,
@12 பன்னிரண்டாவது பலபெயர்க்கூட்டத் தியற்பெயர்த் தொகுதி
**இருமை, இருவினை, இருசுடர், இருவகைத்
** தோற்றம், இருமரபு, இருவகைக் கந்தம்
**591
#1
இருமை மறுமையு மிம்மையு மாநன்று தீதெனலா
மிருவினை சந்திர சூரிய ரென்ப திருசுடரா
மிருவகைத் தோற்றஞ் சராசர மாந்தந்தை தாய்வழியென்
றிருமர பாகுநற் கந்தந்துர்க் கந்த மிருவகையே.
**மும்மை, முப்பொறி, முச்செயல், முக்காலம், மும்முரசு
**592
#2
மருவிய மும்மையு மிம்மையோ டும்மை மறுமையதாங்
கருதிய வாக்கு மனங்காய முப்பொறி காத்தளித்தே
யிரித்தலு முச்செயல் முக்கால மிறப்பெதிர் நிகழ்வா
முரசெனில் வீரம் (நியாயம்) தியாகமிம் மூன்றென்பரே.
**மூன்றிடம், முந்நிலம், முக்குற்றம், முச்சுடர்
**593
#3
முன்னிலை தன்மை படர்க்கை யெனுமிவை மூன்றிடமா
மூந்நீலம் பூமியோ டந்தரங் கோவென்பர் முக்குற்றமே
முன்னிய காமம் வெகுளி மயக்கென்பர் முச்சுடரே
முன்னெழு மாதித்தன் சந்திரன் றீயிவை மூன்றென் பரே.
**மும்மொழி, மூவகைச் சீவவனல், முத்தீ
**594
#4
மும்மொழி வாழ்த்தல் பழித்தல்பட் டாங்கென்பர் மூவகையாஞ்
செம்மையில் பூதமுதர முடன் விந்துச் சீவவன
லம்முத்தீ கா(ருகபத்) தீய மாக வனீயமுடன்
கைம்மிகு மன்சுவந் தென்றிசை யங்கிக்குக் கற்பித்ததே.
**முக்குணம், சாத்துவிகம், இராசதம்
**595
#5
முக்குணஞ் சாத்து விதமோ டிராசதந் தாமதமா
மக்குண ஞானந் தவங்கல்வி யோடைம் புலனடக்க
லிக்குண நல்லரு ளானந்த மெய்ம்மை யினியதவந்
தக்கதோர் தானந் தருகு மிராசத தற்குண மே.
**தாமத குணம், மூவகைத் தானம், உத்தம தானம்
**596
#6
கிளர்பெரு வுண்டி மடிவஞ் சனைநிதி கேடுறக்கங்
களைதரு காமஞ் சலமிவை தாமதங் கட்டுரைக்கி
னளவெனு முத்தம மத்திமத் தோடத மங்களதா
யுளத்தினி தேற்ற நிதிநற் றவர்க்கிடி லுத்தமமே.
**மத்திம தானம், (அதமதானம்)
**597
#7
ஆதுல ரந்தகர் மாத ருறுப்பிலி யாங்களவர்க்கே
யீதலு மத்திமங் கண்ணோட்டங் காரண மேற்றனுக
...... ..... ...... ...... ......
...... ..... ...... ...... ......
**திரிகடுகம், திரிபலை, திரிபுரம், ஆதித்தன், மூவகை வீதி
**598
#8
திரிகடு கஞ்சொல்லிற் சுக்கு மிளகிவை திப்பிலியாந்
திரிபலை தான்றி கடுநெல்லி வெள்ளிபொன் சேரிரும்பாந்
திரிபுர மேட மிடப மிதுன மெனத்திகழுந்
திரிவித மாதித்தன் றேரோடு வீதித் திறமிதுவே.
**நாற்புவி, நாற்படை, நாற்கதி, நாற்புகல்
**599
#9
நாற்புவி முல்லை குறிஞ்சி மருத நறுநெய்தலாம்
நாற்படை தேர்கரி காலாட் குதிரை யென நவில்வார்
நாற்கதி யும்பர் மனிதர் விலங்குட னாகரென்பர்
நாற்புகல் வெற்பு மதில்காடு நீரென நாட்டினரே.
**நான்மறை, நாற்புலவோர்
**600
#10
தாதரு ணான்மறை தானே யிருக்குத் தயித்திரியங்
(கீதத்த) டர்தருசாம மதர்வண மேகிளர்க்குங்
காதிய நாற்புல வோருங் கவியுட னேகமகன்
வாதியும் வாக்கி யுடனே யுரைக்கு மகிதலமே.
**கவி, கமகன்
**601
#11
சிலர்புகழ் நா(ல்) வகை யாசு மதுரமச் சித்திரத்தோ
டலைவறு பல்வகை வித்தாரம் பாடு மவன்கவியா
மிலகிய ஞாபகஞ் செம்பொரு ளாமவற் றெப்பொருளுங்
கலைதெரி யும்படி பாடவல் லோனக் கமகனுமே.
**வாதி, வாக்கி
**602
#12
கருதிய வேதுடன் மேற்கொ ளெடுத்துடன் காட்டித்தன்கோள்
வரநிறுவிப்பின் பிறன்காள் மறுப்பவன் வாதியென்பர்
விரவி னறம்பொரு ளின்பநல் வீடிவை மெய்விளங்க
வுரைசெயு மாற்ற லுடையானை வாக்கியென் றோதுவரே.
**ஆசுகவி, மதுரகவி
**603
#13
தொடுத்த பொருளிற் றொடித்தவின் பத்துடன் றோமளவா
யடுத்த பொழுதினிற் பாடுவ தாசென்ப ராமடியோ
டெடுத்த தொடையும் விகற்பமுங் கேள்விக் கினியசொல்லாய்
வடித்த பொருட் செல்வ மாயபாப் பாடன் மதுரமதே.
**சித்திர கவி
**604
#14
அக்கர சித்திர மாகார சித்திர மானகதி
மிக்கிடு சித்திரம் பெந்திதை சித்திர மேயென நான்
கொக்க விருத்த லறுபத்து நாலென் றுரைச்சித்திரந்
திக்கய முற்றும் புகழ்தரப் பாடுகை சித்திரமே.
**வித்தார கவி
**605
#15
தெரிதரு கோவை பரணி யுலாமடற் சின்னமென்றோ
ரரிதனிற் பாடும் புராணமே யக்கா வியமைந்துமா
யிருளறச் சொல்லு மியலிசை நாடகத் தோடெவையும்
விரிதரப் பாடுதல் வித்தார மாக விளம்புவரே.
**நால்வகைப் புண்ணியம், சிலையோர் நால்வகை நிலை, பைசாசம்
**606
#16
நாலது புண்ணியந் தானந் தவங்கல்வி நல்லொழுக்க
நாலுள தாகும் வகையே நிலைமைபை சாசமுட
னாலிட மண்டில மப்பிரத் தாலிட மற்றவற்றோர்
காலை முடக்கி யொருகா னிறுத்தல்பை சாசமதே.
**ஆலீடம், மண்டலம், பிரத்தாலீடம்
**607
#17
முதல்வலக் கால்மண் டலித்திடக் காலுடன் முந்துறவே
யதுவிருப் பாலிட மல்லிருக் கான்மண் டலித்தழகா
லெதிரிருப் பாய்மண் டலமிடக் கால்வளைத் திட்டொருகால்
...விதியின் முற்பந் தாமெனச் செப்பினரே.
** 608 முதல் 610 வரை (18,19,20) 3 பாடல்கள் இல்லை. இவற்றை
** எழுதத்தக்க அளவு -- 64 ஆம் ஏட்டினடியில் இருவரிகள், பின்
** பக்கம் 5 வரிகள் எழுதக்கூடிய அளவு -- வெற்றிடம் விடப்
** பட்டிருக்கிறது. எனவே, இவ் வேட்டிற்கு மூலமான ஏட்டிலும்
** இக்குறைபாடு இருந்ததுபோலும். திவாகரத்துடன் ஒப்பு
** நோக்கினால், ஐந்திணை, பஞ்சவாசம், பஞ்சாங்கம், ஐவகை
** இசைக்கருவி, மதனன் பஞ்சபாணம் பற்றியனவாக இப்
** பாடல்கள் அமைந்திருத்தல் வேண்டும் என ஊகிக்கலாம்.
**பஞ்ச சயனம், ஐம்பால், முடி, ஐந்துண்டி
**611
#21
திடமயிர்ச் சேணம் படாம்பஞ்சின் மெத்தையந் தூவியுடன்
படர்விரிப் பாயுடன் பஞ்ச சயனமைம் (மயிரின்) முடியாம்
வடிகுழ றொங்கல் பனிச்சை சுருள்கொண்டை மாந்தனக்க
லடர விழுங்கல் கடித்தல் சுவைத்தலோ டைந்துண்டியே.
**குதிரை, ஐங்கதி, சிவன் ஐம்முகம், ஐம்பால்
**612
#22
மருவிய மல்லர் மயல்முய றன்னுடன் வாமேக
சரகதி யாகும் பரியைங் கதிவாமஞ் சத்தியந்தற்
புருடமீ சான மகோரமிவ் வைந்தும் புராரிமுக
மொருவ னொருத்தி பலரொன்று பலவைம் பாற்குரித்தே.
**வினா ஐந்து, அந்தணர் அறுதொழில்
**613
#23
அறியான் வினாத லறிவொப்புக் காண்டலை யம்மறுத்தல்
பிறிதா முணர்வவன் பாற்கோட லேசொற் பினையலற்கே
யுறவார்மெய் காட்டல் வினாவைந் துடனோத லோதுவித்தல்
முறைவேட்டல் வேட்பித்த லேற்றல் கொடுத்தல்மும் மூன்றதுவே.
**அரசரறு தொழில், வணிகர் செய் தொழில் ஆறு
**614
#24
ஓதுதல் வேட்டல் கொடுத்தல் படைக்கல முற்றியற்றல்
பூதலங் காத்த லரசற் கறுதொழிற் பூவணிகர்க்
கீத லுழவு பசுக்காவல் வாணிக மென்றுமறை
தீதற வோதுதல் வேட்டலென் றாறென்பர் செய்தொழிலே.
**உழவர் அறு தொழில், காருகவினை த் தொழில்
**615
#25
உழவொடு வாணிக மேபசுக் காவ லுயர்மறையோர்
வழிவர நிற்றல் குயிலுவங் காருகம் வானனதித்
தொழுமர பாராறு தொழிற் பட்டுத் துகிலமைத்தல்
கழுவுத லோடு சுமத்தற் றொழிலென்பர் காருகமே.
**ஆறங்கம், அறுசமயத்தர்
**616
#26
வேதமெய் மந்திரஞ் சந்தோ பிசிதி வியாகரண
மாதி நிகரில் திருத்தமச் சோதிட மாறங்கமாந்
தீதினை யாயிகர் மீமாங்க ரேபுத்தர் சேடிகரே
தாதிய லோகா யுதரே யருகர் சமையத்தரே.
**உட்பகை ஆறு, அறுவகைத்தானை
**617
#27
காமம் வெகுளி மயக்க முலோபங் கருதுமத
மேமாறு கொளலிவை யாறு மெய்யுட் பகையெனவாம்
வாமவில் வேல்வடி வாளானை தேர்வடி வாசியென
லாமவை யேயறு தானையென் றோதுவ ரந்தணரே.
**நாட்டு வகை ஆறு, அரசியல் ஆறு
**618
#28
செய்வுறு செல்வ விளைவொடு பல்வளஞ் சேமமுட
னைவரு நோய்குறும் பின்மையி தாறு நவின்றிடுமெய்
யுய்வகை யாகும் படைகுடி கூழமைச் சொடுநட்போ
டைய்வகை யாகு மரணே யுடைய தரசியலே.
**அறுசுவை, அறம் பொருள்.இன்ப-- ;றகிலை மறகிலை ஆறு
**619
#29
அலைவி லறுசுவை தித்தித்தல் கைத்த லறப்புளித்தல்
துலைவுறு கார்த்த லுடனே யுவர்த்தல் துவர்த்தலென்ப
ருலகி னறம்பொரு ளின்பம் மூன்றினி லோரிரண்டாய்
நிலவி யறமறந் தன்னோ டறுவகை நேர்படுமே.
**அறநிலை அறம், அறநிலைப்பொருள்
**620
#30
தூநிரை மீட்டல் துடர்நிரை யோட்டல்செஞ் சொற்றுறவோர்
மானவொ டேவின செகுத்த லறநிலை மன்னறமாஞ்
சேனையோ டாரமர் கொள்ளல் நிரைகொள்ளல் செய்தவத்தா
லானதண் டிப்பொரு ளெல்லா மறநிலைக் காம்பொருளே.
**மறநிலை இன்பம், கன்மபூமிப் பயன்
**621
#31
ஏறு தழுவல் பொருளே கொடுத்த லிலக்கமெய்தல்
சீறி வலிதினிற் கோடல் ம(றநிலை)சே ரின்பமாங்
கூறுமுழவு தொழில்வா ணிபம்வித்தை கூடுபுகழ்ப்
பேறு படுசிறப் பேகன்ம பூமிப் பெரும்பயனே.
**போகபூமி
**622
#32
ஒத்த குலங்கல்வி யேரோ டிளமையு மோகவின்பத்
தொத்த பிராயப் புமான்மட மாதினுக் கோங்குதரு
வொத்து நுகர்ச்சி யமுதோ டளிக்க வுருகிவிடா
வொத்தவப் போகந் தருபோக பூமியென் றோதுவரே.
**அறுவகைப் போகபூமி
**623
#33
மாமதி லாயரி வஞ்சனை நல்லரி வஞ்சமுட
னேமத வஞ்ச முடனே ரவண்வஞ்ச மீதுடனே
தாமுறை தேவகுருவ முடனுத் தரகுருவ
மாமவை யாறு வகைப்போக பூமி யதுவென்பரே.
**அறுவர் சக்கரவர்த்தி, எழுதீவு
**624
#34
புகலி னரிச்சந் திரன்முசு குந்தன் புரூரமன் போர்ச்
சகர நளன்றன் னுடன்கார்த்தி கேயனுந் தானறுவர்
மிகுசக் கரவர்த்தி நாவ லிறலி விறற்குசையே
திகழ்க வுஞ்சஞ்சன மாலிதென் புட்பகந் தீவென்பரே.
**எழுகடல், மேலேழுலகம்
**625
#35
உப்புக் கரும்பு மதுநெய் தயிரோடொண் பாலுடனே
யப்புக் கடலிவை யேழாகு மேழுல காகுமவையா
மொப்பற்ற பூப்புவ லோக முடன்சுவ லோகஞ்சொலுந்
தப்பற்ற மாசன லோகந் தவத்தவ லோகத்ததே.
**கீழேழுலகம்
**626
#36
ஏரா ரதலத்துட னேழ்தல மெழினி தலங்
காரார் சுதலத் தொடுமென் னிராதலங் காண்கைக் கெட்டாப்
பேரார் தராதல மாதல மென்பவை கீழுலகாங்
கூரகி மெத்தக் குலையே படைக்கட் கோமளமே.
**ஏழ் நரகம்
**627
#37
எரியழல் வட்ட மெரிபரல் வட்ட மெரிபடையாய்
வருசுடர் வட்டம் பொருகரி வட்டம் வறுத்துடனே
சொரிமணல் வட்டம் புகைவட்டஞ் சேரிருள் சூழ்ந்தவட்டம்
பெருகழ றாவட்ட மென்றேழ் நரகமும் பேர்பெறுமே.
**ஏழு மாதாக்கள், ஏழு தாதுக்கள்
**628
#38
பார்ப்பினி சங்கரி கெளமாரி நாரணி பன்றிமுகி
யேற்பவள் சாமுண்டி யிந்திராணி யாகுவ ரேயெழுபேர்
தோற்பொலி யுந்தசை யென்பு நரம்புநெய்த் தோர்நிணமே
மேற்பொழி விந்து வுடனேழு தாதென்ன வேண்டுவரே.
**வேந்தனின் ஏழு பண்பு, எட்டுத் திக்குப் பாலர்
**629
#39
அறம்பொருளின்ப மறுமை புகழ்மதிப் பண்பிவையேழ்
பெறும்பொரு வேந்திந் திரனங்கி யேயமன் பேணிருதி
யுறும்புனல் மன்னுயிர் புட்பக னீசன்றிக் கோரெண்மரே
சிறந்துல கெண்டிக்குப் பாலகராகச் சிறந்தவரே.
**எண் திசைக்குறி, அட்டமங்கலம்
**630
#40
கொடிபுகை சீய முடனே யிடபங் குலக்கழுதை
யடலிபங் காக மிவையெண் டிசைக்குறி யாடிசுடர்
படர்கொடி தோட்டி யிணைக்கய லேகும்ப னீர்க்கவுரி
யிடமுர சானல் லிவையட்ட மங்கல மென்பர்களே.
**அட்ட மூர்த்தம், அட்டமா சித்தி
**631
#41
மதியங் கதிரங்கி நீரிய மானனன் வானிலங்கா
விதுவட்ட மூர்த்த மடலட்ட மாசித்தி யேயணுமாக்
கதியுற்ற தோர்மகி மாலகு மாபிராத்தி காமிகத்தோ
டுதவு மசித்துவம் விசுவத்துவம் காமரூபி...வமே.
**எண் வகை யோகம், இயமம்
**632
#42
மாயா வியம நியமா தனத்துடன் மன்னுபிரா
ணாயாம மேபிரத்தி யாகாரந் தாரணை யானபடி
யேயாந் தியானஞ் சமாதியென் பார்க ளியமமுண்மை
யாயேகொல் லாமை புலன்காவ லாம்பொரு ளாசையற்றே.
**நியமம், எண்வகை எச்சம்
**633
#43
சாதக மான தவஞ்சவு சத்துடன் றத்துவநூ
னீதியி னோதல் கடவுளர்ப் பேண னியதியென்பர்
தீதுறு கூன்குற ளூமை செவிடு சிதடெனமாப்
பேத மருளுறுப் பில்பிண்ட மெண்வகைப் பேரெச்சமே.
**எண்குணம்
**634
#44
தெழியா வனந்தமெஞ் ஞான மனந்த தெரிசனத்தோ
டழியா வனந்தமெய் வீரியந் தன்னோ டனந்தசுக
மிழிவான னாம முடனாகுங் கோத்திர மின்மையின்ப
மொழியா வியல்பவை யெண்குண மாக வுரைசெய்வரே.
**செட்டி எண்குணம்
**635
#45
தனிமையி னாற்ற லுறுவது தேர்தல் தன்னோட்டரின்
மனனழி யாமை பொழுதொடு சேரல் வருவதஞ்சா
தினிமைய னாதல் பொருளீட்ட னல்க லெவரிடத்து
முனிவில னாத லிவையெட்டுஞ் செட்டிக்கு முன்னுளதே.
**எண்வகைக் கணம், எட்டு மெய்ப்பரிசம்
**636
#46
இந்திர னங்கி .... ...... னிரவி லளியியமா
னந்தர மாமெண் கணமும் (பி)டித்த லடித்தலுடன்
வந்துறக் கேட்டல் தடவுதல் தட்டல் வாக்குரைத்தல்கோ
பந்தனில் வெட்ட லிவையெட்டு மாமெய்ப் பரிசங்களே.
**எண்வகை மணம், எண்வகைப் போர்த்தொழில்
**637
#47
அருள்பிர மம்பிர சாபத்தி யத்துட னாரிடமே
பெருகிய தெய்வ மசுர மிராக்கதம் பேய்நிலைகாந்
திருவம தெண்மணம் வெட்சி கரந்தை தெரிந்தவஞ்சி
மருவிய காஞ்சிநொச் சியுழி ஞைதும்பை வாகையெட்டே.
**எட்டுத் திக்கு யானை
**638
#48
ஆமயி ராவதம் புண்டரீ கங்குமு தம்மஞ்சனம்
வாமனம் புட்பதந்தஞ் சாறுவ பூம வருமதத்துத்
தேமலி யுஞ்சுப் பிரதீப மென்னத் திசையெட்டினு
நாம மிகுங்கரி நாற்கோடுடைத்தது நன்னுதலே.
**நவ கண்டம்
**699
#49
தெற்கு வடக்குக் குணக்குட பாலெனச் செப்புதற்கே
யெக்குல வுந்திசை தன்னில் விதேய மிரேவதமாந்
தற்குறிப் பாகிய பேரெட்டு மத்திமந் தன்னுடனே
நற்குறிப் பேற்ற திவையென லாகு நவகண்டமே.
**நவமணி, காணப்படாமணி
**640
#50
மாணிக்க முத்து மரகத நீலம் வயிரந்துப்பு
யாணர்க் கதிரின் வயிடூ ரியம்பற்ம ராகமிரு
ணாணத் திகழொளி கோமே தகமென் னவமணியாங்
காணப்படாமணி சிந்தா மணியக் கவுத்துவமே.
**நவதாரணை, நவரசம்
**641
#51
நாம மிலக்கம் பரிகரி கஞ்சம் நயந்தசெய்யுட்
டாம வெழுத்துச் சதுரங்க நீர்நவ தாரணையாங்
காம மவல முருத்திர மச்சஞ்சிங் காரநகை
யேமறு வீரம் வியப்பே கருணை ரச நவமே.
**நாரணன் பத்து அவதாரம்
**642
#52
மீனாமை கேழல் நரசிங்கம் வாமன மேபரசு
ராம னிராம னலாயுத னாகு வடமதுரை
யானாகுங் கிட்டினன் கற்கி யுடனவ தாரம்பத்துந்
தானாகி வையம் புரப்பவ னாரணன் றானென்பரே.
**சிற்ப வினைக்குறிப்பு பத்து, தசாங்கம்
**643
#53
கல்லுமண் செங்கல் லுலோக மரஞ்சுதை காமர்வண்ணஞ்
சொல்லிய சந்த மெழுகுளம் பத்துஞ் சிற்பவினை
நல்ல நதிமலை மாவாசி யூர்தொடை நாடுகொடி
வெல்லு முரசுட னாணை தசாங்க வினைப்பயனே.
**உயிர் வேதனை பன்னிரண்டு, அரசர் ஐம்பெருங்குழு
**644
#54
வாதம் புனல்கன லாயுதம் வல்விட மாவசனி
சீதமத் தாகம் பசிதெரி யாச்சின நோய்மருந்தா
மாதுய ராறிரண் டாமுயிர்க் கைங்குழு மந்திரந்
தூது புரோகிதன் சேனா பதிபொற (றுர) யற்கே.
**பதினெட்டு மொழியாளர்
**645
#55
அங்கர் கலிங்கர் கவுசலர் சோனக ராரியரே
சிங்களர் மாளுவர் மாராடர் மாகதர் சிந்தவரே
கொங்க ருமணர் களப்பரர் சீனர்கள் கொங்கணரே
வங்கர் துளுவர் மலையாளர் பத்தெட்டு வாசகரே.
**பதினெண் கணம்
**646
#56
சுரரோ டசுர ரிராக்கதர் சித்தர் தொழுமிசைக்கிம்
புருட ரியக்கரே வித்தி யாதரர் நன்முனிவர்
கருடர் பிசாசரு மாகா சியர்கந் திருவர்தக்
கருகர்வெம் பூதரு மிப்போக பூமிப்பன் னெண்கணமே.
**அரசர் பதினெண் கணம்
**647
#57
கரணத் தினவர்...... ரேகடை காப்பர்சுற்றம்
மருமக் கரிமிசை யோர்பரி வீரர் படைத்தலைவ
ரருமைப் பதியினர் தாமென்பர் வேதிய னோடுநட்டோ
ரரசற் கடும்படை யனமா மருததனி .. .. தே.
**உலகர்க்குறுதுயர் பதினெட்டு
**648
#58
வெறுப்புப் பசியி...... னீர் வேட்டல் வெகுளியின்பம்
பிறப்புக் கிலேச மதமோ டதிசயம் பேதமையே
யிறப்புச் செனூநரை பொச்சாப்பு பகை ...நினைப்
புறதச செயலற வேலா வுலகர்க் குறுதுயரே.
**பதினெண் புராணம்
**649
#59
மச்சம் பிரம வராகம் வயிணுவ மார்க்கண்டை
மச்ச மிலிங்கம் பவுடிகம் வாமனங் காந்தர்ப்ப
மெச்சுகதஞ் சைவம் மாக்கினே யம்பிர மாண்ட மிகுநாரத
கச்சபங் காருட மற்றும் புராணக் கலைபலவே.
**முப்பத்திரண்டு அறம்
**650
#60
ஆதுலர்க் குண்டி யறுசமை யத்தருக் காமுணவு
மோதி னருட்சிறைச் சோற்றத் தொதன முண்கண்மருந்
தேதில் பிணஞ்சுடல் கண்ணாடி நோய்மருந் தின்பமெண்ணெய்
காதல் மகப்பெறு வித்தல் பிற......லொடே.
**651
#61
சந்ததி பெற்றல் முலைப்பால் மடந்தடங் காவிலங்க
னந்தமில் வண்ணார் நாவிதர் பட்டார் வணைது......
பந்தாமட் டூணி சன நாளோலை களாப பாலுநல்க
லிந்தொழில டறினன் பண்ட முப்பத் திரண்டறமே.
**பிள்ளைப் பாட்டு
**652
#62
திங்க ளிரண்டினி லைந்தினி லேழினி லொன்பதினி
லங்கொரு பத்தொன்றிற் காப்புச்செங் கீரை யமுதுடன்றால்
தங்குசப் பாணிமுத் தங்கூற லாண்டு தனிற்புதல்வ
விங்கெதிர் வாவெனல் பூச்சூட்டல் திங்களோ ரெட்டினிலே.
**ஆண்பிள்ளைப் பாட்டு
**653
#63
ஆண்டிரண் டுற்ற சிறுபடை கொட்ட லணுகியமூ
வாண்டினிற் கோழகந் தான்செய்தல் சிற்றி லழித்தலைந்தா
மாண்டின்மை யாடல் சுரிகைமெய் சேர்த்த லவையவையவ்
வாண்டினிற் பாடுத லாண்பிள்ளைப் பாட்டுக் கடைவதுவே.
**பெண் பிள்ளைப் பாட்டு
**654
#64
முன்னவை யாண்டின் முடித்தலவ் வாண்டெல்லை மூன்றுதன்னி
லுன்னு கும்பக னைந்தொட தெல்லையி னோங்குவில்வே
டன்னை வழிபட னீராடல் தண்கட லாடல்சிற்றில்
பன்னலமண செ ...... பொன்னூசல் பெண்பிள்ளைப் பாட்டென்பரே.
**பெண்டிர் இலக்கணம்
**655
#65
நல்லுரை யாடியு நல்லிசை யோர நகைவிளைத்து
மெல்லென வொல்கி விலங்கி நடந்தும் விழிவலையாற்
கொல்லுவர் போலெதிர் நோக்கியு நாணியுங் கொங்கையிற்கை
யொல்லை நலிந்து மழுதுட னேங்கி யொடுங்கியுமே.
**656
#66
மருங்கினிற் கைவைத்து வாகியு னெற்றியின் வைத்தொருகை
யொருங்குட னாடியும் மெண்ணான தாகியு முன்னழிந்து
குரங்(க)யின் கூந்தலி லேந்துகை வீதியுங் கோதுசெய்து
மிரங்கியு மெல்லென்று செய்வது பெண்டிர்க் கிலக்கணமே.
**உற்பாதம், ஏழு மேகம்
**657
#67
அரவொடு திங்கட் கதிர்பரி வேட மழல்புகையிந்
திரவி வடுவழ லுற்பாதங் காலொளி தீப்புகையே
மருவுறு நீலிநி நீவ வாருணி வாரியுட
னிருமைய வாம் புட்கலாவந்த மேமென் றேழ்முகிலே.
**திருப்பொறி
**658
#68
தாமரை சக்கரஞ் சங்க நிறைமதி தாவிடபங்
காமுறு மானே றொட்டி நிறைகுடங் காரமுமே
பூமுடி தோரண நாவாய் துணைக்கயல் பூங்கடலே
யேமுறு ரேகை திருப்பொறி யாக வியம்புவரே.
**அரசுயானை இயல்பு
**659
#69
ஓரே ழுயரநன் னீள மதேபெற்று மொன்பதின் முன்
றீரேழ் முழஞ்சுற் றுடைத்தா யச்சங்க ரேசிறுமண
காரே நிறமுன் பாதுயின் றாழ்ந்துகை கான்மருப்புச்
சீரேயுந் தாலவட் டத்தாலுங் கோறலுந் திண்கரியே.
**குதிரை இயல்பு
**660
#70
நாறிய பூங்குழ லார்மனம் போன் ...... ரயக்கதலி
மீறிய பூமடற் போற்செவி யாகி முகமழகாய்க்
கூறிய நாற்கதி பெற்றேத மஞ்ச காலுணையாய்
வீறிய வெண்பத் திரண் குலி யத்திரி வேடிக்கையே.
பதாதி, கும்பி, பிராதனை
**661
#71
ஒருகரி தேரொன்று மாநான்கு சேவக ரீரைவரா
யருள்வ பதாதிய தாகும் பதாதிகள் மும்மடியே
வருசேனம் மும்மடி கும்பி தெமும் மடிகணமே
தருமும்மை வாகினி யென்பது மும்மடி பிராதனையே.
**அனிகம், அக்கிரோணி, பத்து, நூறு, பதினாயிரம்
**662
#72
தானையு மேமும் மடியாஞ் சமுகமுந் தன்னின்மும்மை
யான தனிகமு மாம திலைமடி யக்கி றோணியா
மேனைய பத்துச் சதநூறு பத்தெனி லீரைந்துநூ
லூனமிலோர்பதி னாயிர மேய யுதமென்பரே.
**அயுதம், நூறாயிரம், அற்புதம், கும்பம், வாமனம்
**663
#73
ஆட லயிதமு நூறா யிரமாகு மாலயிதங்
கோடி யதுபத்து நூறா யிரமதக் கோடிபத்தே
வாடல் வற்புத மக்கோடி நூறென்ப மாகும்பமும்
நீடது நூறுபத் தாங்கோடி வாமன நேர்படுமே.
**சங்கு, சமுத்திரம், அந்தியம், மத்தியம், பிரமகற்பம்
**664
#74
வாமனம் பத்துச்சங் கென்பரச் சங்கெனின் மற்றறுப
தாமது வாகுஞ் சமுத்திர மாங்கது பத்தந்தியம்
மாமது மேற்பத்து மத்தியம் பாரத மேற்பதத்தாங்
காமரு வும்மேற் பத்தது மேபிரம கற்பெனுமே.
**பாரதி தீப வரலாறு
**665
#75
கந்தர மென்னக் கொடையுடை யான்கடம் பாடவிவா
ழிந்திரன் மேன்மலை வாழ்முனி போல விலக்கணத்தாற்
செந்தமிழ் நூல்தெரி பாரதி பாரதி தீபந்தன்னின்
முந்திய பல்பொருட் பன்னிரண்டாமியல் முற்றியதே.
** பாரதி தீபம் முற்றும்
**
**
|