<<முந்திய பக்கம்

கயாதர முனிவர் இயற்றிய கயாதர நிகண்டு
தேவையான தலைப்பின் மேல் சொடுக்கவும்
தலைப்பு சொற்பிரிப்பு மூலம் சீர் பிரிப்பு மூலம்
0.பாயிரம்

1.தெய்வப் பெயரியல்

2.இடப் பெயரியல்

3.மக்கட் பெயரியல்

4.விலங்கின் பெயரியல்

5.மரப் பெயரியல்

6.பல்பொருட் பெயரியல்

7.செயற்கை வடிவிற் பெயரியல்

8.பண்புப் பெயரியல்

9.செயல்பற்றிய பெயரியல்

10.ஒலிபற்றிய பெயரியல்

11.ஒருசொற் பல்பொருளியல்

** கயாதர முனிவர் இயற்றிய கயாதரம் என்னும்
** கயாதர நிகண்டு

@0 பாயிரம் 

#1
ஆரணம் நான்கும் பரவமும் மூர்த்திகள் ஆகிநின்ற 
காரணன் பாகம் கலந்து உலகு ஈன்று அருள் கன்னி பெற்ற 
பூரணன் பாரதப் போர் வட மேருப் பொருப்பில் வைத்த 
வாரணன் வாரணப் போரில் வென்றோன் என் வழித்துணையே 

#2
பேதையர் பித்தர் அறியாத பாலர் சொல் பேதம் கொள்ளார் 
ஓதினும் குற்றம் தெரியார் பெரியவர் ஓங்கிட பகேதனன்
பற்று மறவாத தேவைக் கெயாதரன் தொல் 
வேதியன் சொற்ற உரிச்சொல் பனுவலும் மேம்படுமே 

#3
வளர்ந்த முதனூல் வழிநூல் வழிச்சென்று மற்றவையும் 
அளந்து சிறியோர் அறியும்படி பெரியோர் அருளால் 
தளர்ந்தன நீக்கி உரித்தாய சொல்லைத் தமிழ்ப்படுத்தான் 
கிளர்ந்த பெரும் புகழ்ச் சோமீசன் தேவைக் கெயாதரனே 

#4
வடக் குங்குமக் கொங்கை மங்கைதன் பங்கன் மலரடிக் கீழ்க் 
கிடக்கும் தனி நெஞ்சுடையோன் உரிச்சொல் கிளர் பனுவல் 
குடக்கும் குணக்கும் வடக்கும் தென்பாலும் குவலயத்து 
நடக்கும்படியாக் கெயாதரம் என்று பேர் நாட்டினனே
** நூற்குப் புறம்பாக ஒரு பிரதியில் காணப்பட்டவை

#5
தேன் நறா மகிழ்த் தொடையலும் மௌலியும் திருக் கிளர் குழைக் காதும் 
கான் அறா மலர்த் திருமுகச் சோதியும் கயிரவத் துவர் வாயும் 
மோனமாகிய வடிவமும் மார்பமும் முத்திரைத் திருக்கையும் 
ஞானதேசிகன் சரண தாமரையும் என் நயனம் விட்டு அகலாவே 

#6
பொத்தகம் படிகமாலை குண்டிகை பொருள் சேர் ஞான 
வித்தகம் தரித்த செங்கை விமலையை அமலைதன்னை 
மொய்த்த கொந்து அளகபாரம் முகிழ் முலைத் தவள மேனி 
மைத்தகு கருங்கண் செவ்வாய் அணங்கினை வணங்கல் செய்வாம் 

@1 முதலாவது தெய்வப் பெயரியல் 

#1
** சிவன் பெயர்
ஆதி அனாதி அரன் சிவன் ஈசன் ஆனந்தன் அத்தன் 
சோதி பினாகி உருத்திரன் பிஞ்ஞகன் சூலி சுத்தன் 
பாதிஉமாபதி சங்கரன் கங்காதரன் பகவன் 
பூதி புனை பாண்டரங்கன் பரமன் புராந்தகனே 

#2
** சிவன் பெயர் (தொடர்ச்சி)
தக்கன்மருகன் சதாசிவன் ஐம்முகன் சம்பு நித்தன் 
இக்கன்படவிழித்தோன் காலகாலன் இறை அமலன் 
முக்கண்முதல்வன் பசுபதி கங்காளன் முத்தன் பித்தன் 
நக்கன் சடையோன் விடையூர்தி நாகாபரணன் என்னே 

#3
** உமை பெயர்
என் அன்னை சத்தி அபினை இமையவதி இகல்வேள்தன்அன்னை
நீலி கவுரி உமை சிவை தாரணிக்குமுன்அன்னை
அம்பிகை ஆரியை பார்ப்பதி மூதறம்செய்மின்அன்னை
இல்லவன்காதலி நாமம் விளம்ப அரிதே 

#4
** திருமால் பெயர்
அரி கருணாகரன் கேசவன் கோவிந்தன் அச்சுதன் மால் 
கரியவன் நாரணன் பீதாம்பரன் வரன் கார்கமலைக்குரியவன்
விண்டு முராரி முகுந்தன் உலகமுண்டோன் 
வரியுரகன் பகையூர்வாகனன் கண்ணன் மாதவனே 

#5
** திருமால் பெயர் (தொடர்ச்சி), திருவின் பெயர்
மாயன் திரிவிக்கிரமன் நெடியோன் மதுசூதனன் 
ஆயன் வரையெடுத்தோன் நாரசிங்கன் பஞ்சாயுதன் கற்கீயும்
தாமோதரன் செல்வி மா ஆக்கம் திருவருளை 
ஏயும்பொறி பொன் மலராள் அரிதேவி இந்திரையே 

#6
** விநாயகன் திருவின் பெயர்கள்
இந்துமுடிக் கண்ணுதல்சேய் கணபதி ஏகதந்தன் 
தந்திமுகத்தன் விநாயகன் ஐங்கரன் சாமளைதன்மைந்தன்
பெருவயிற்றுக்குறுந்தாளெந்தை மால்மருகன் 
அந்தம்இல் ஏரம்பன் பாசாங்குசன் ஆகுவாகனனே 

#7
** முருகன் பெயர்
வாரணகேதனன் குன்றெறிந்தோன் மயிலூர்தி கந்தன் 
தாருகன்காய்ந்தோன் முருகன் கடம்பன் சரவணன் சேய் 
கூரயிலேந்தி குகன் கார்த்திகேயன் குமரன் செவ்வேள் 
சூர்பகை சேந்தன் விசாகன் வேள் வள்ளி துணைவன் என்னே 

#8
** பிரமன் பெயர்
துய்யவன் வேதா விதாதா விதியிறை சூதன் தொன்னாற்கையவன்
நான்முகன் மால்மகன் எண்கணன் காசினிக்கு 
வெய்யவன் தாதை பிதாமகன் தாதா விரிஞ்சன் 
வெள்ளைத்தையல்தன்கேள்வன் அயன் பரமேட்டி சதானந்தனே 

#9
** பிரமன் பெயர் (தொடர்ச்சி), வாணி பெயர்கள்
தாதவிழ்போதன் இரணியகெற்பன் சதுமறையோன் 
பாதலம்தந்தோன் பிரசாபதி கம் பதுமஉந்தி 
சாதன் அன்னக்கொடியோன் சம்பு வாணி வெண்தாமரைமேல்மாது
அறிவாட்டி கலைமகள் பாரதி நாமகளே 

#10
** புத்தன் பெயர்
நாமம் திகழ் முப்பிடகன் தவன் சாந்தன் நல்லறிவன் 
காமன்பகைவன் அனுக்கிரன் புத்தன் கருமமுத்தன் 
வாமன் சுகதன் அறவன் ததாகதன் மாமுனிவன் 
கோமன் உபாரம் இதையவன் போதியான் கோதமனே 

#11
** அருகன் பெயர்
கோதுஇல் அருகன் திகம்பரன் எண்குணன் முக்குடையோன் 
ஆதிபகவன் அசோகமர்ந்தோன் அறவாழிஅண்ணல் 
சோதி முனைவன் சினேந்திரன் பொன்னெயில்நாதன் சுத்தன் 
போதில்நடந்தோன் அதிசயன் சாந்தன் நல் புங்கவனே 

#12
** இந்திரன் பெயர்
புரந்தரன் இந்திரன் பொன்னுலகாளி வெண்போதகத்தன் 
பரம் திகழ் வாசவன் ஆகண்டலன் பாகசாதனன் 
பூதரம் சிறகு ஈனம்செய் வச்சிரபாணி சதமகவான் 
துரந்த அலாரி அரி முகிலூர்தி சுரர்பதியே

#13
** சூரியன் பெயர்
பங்கயநாதன் நல் பாற்கரன் சாயாபதி பதங்கன் 
செங்கதிர் சூரியன் ஆதித்தன் மார்த்தாண்டன் தேர் அருக்கன் 
பொங்கு அரி பானு உதையன் திவாகரன் போது அருணன் 
தங்கும் இரவி தரணி அலரி தபனன் என்னே 

#14
** சந்திரன் பெயர்
எண்ணெண்கலையோன் இரவோன் உடுபதி இந்து விதுத் 
தண்ணென்சுடர் சோமன் அம்புலி ஆலோன் சசி சந்திரன் 
வண்ணம்புதியோன் இமகரன் நாண்மலர் மால்மனத்தன் 
நண்ணும் குபேரன் அமுதாகரன் திங்கள் நாண்மதியே 

#15
** அமரர் பெயர்
மதி அமுதாசனர் வானோர் விபுதர் இலேகர் வரர் 
அதிதிதரும்சுதர் உம்பர் இமையோர் அமரர் செம்பொற்பதியுறைவார்
சுரர் புத்தேளிர் பட்டாரகர் பகவர் 
கதிதருபண்ணவர் புங்கவர் தீர்த்தர் கடவுளரே 

#16
** தானவர் இராக்கதர் பெயர்
கடவுளர் தெய்வர் தகுவர் தயித்தியர் காரவுணர் 
அடர் திதிபுத்திரர் தானவர் பூகண்டகர் அசுரர் 
படரும் நிருதர் நிசாசரரே பிசிதாசனர் பார்க்கிடர்செய்பவர்
யாதுதானர் அரக்கர் இராக்கதரே 

#17
** மதன் பெயர்
கன்னல்வில்லோன் வேள் அனங்கன் வயந்தன் கந்தற்பன் மதன் 
மன்மதன் காமன் மதுசகன் சித்தசன் மால்புதல்வன் 
உன்மதபாணன் மலரம்பன் வேனிலோன் ஓங்கு இரதிதன்வசன்
மீனக்கொடிமாரன் சம்பரசூதனனே

#18
** குபேரன் பெயர்
தனதன் அளகைமன் பிங்கலன் மந்திரி சம்புநண்பன் 
கனகன் குபேரன் இருநிதிக்கோன் முற்கரன் மாகதன் 
நனகன் புட்பகமூர்பவன் உத்தரகோன் நரவாகனன்
வைச்சிரவணன் மாயோன் இயக்கர்தம்காவலனே 

#19
** வயிரவன் ஐயனார் பெயர்கள்
வடுகன் தமருகன் கஞ்சுகன் சூலி மனவணிவோன் 
முடுவலூர்காரி வயிரவனாம் சாதவாகனன் முற்றடுபடைஐயன்
கரியூர்தி சாத்தன் அரியரன்சேய் 
கொடிதிகழ்வாரணன் காரி செண்டேந்துகைக் கோதண்டனே

#20
** எமன் பெயர்
தண்டதரன் தென்திசையோன் தருமன் சமன் நடுவன் 
சண்டன் யமன் ஞமன் அந்தகன் கூற்று மறலிசண்டன் 
திண்திறல்காலன் வருணன் சலபதி சிந்துபதி 
கொண்டலூர் பாச தரனுரு முப்படைக் கொற்றவனே 

#21
** காடுகாள், மூதேவி பெயர்
கொற்றி வடுகி கொடுமோடி காடுகாள் கூளி இனம்முற்றுமயில்
சூரி காரிதாய் மாரி முகடி தவ்வை 
மற்றும் கலதி கரடக்கொடிமங்கை வாலேபமூர்பெற்றியள்
கேட்டையும் சேட்டையும் மூதேவி பேர் என்பரே

#22
** காளி பெயர்
பேரரியூர்தி பயிரவி சாமுண்டி பேய்க்கொடியாள் 
தாருகன்காய்ந்தாள் யோகினி வேதாளி சண்டி எண்தோள் 
கூரிலைச்சூலி கங்காளி முக்கண்ணி பேய்க்கூத்துகந்தாள் 
மாரி நல் வீரி தொன்மாகாளி யாமளி மாதரியே 

#23
** துர்க்கையின் பெயர்
மாலுக்கிளையாள் மயிடற்பகை கொற்றவை ஐயை வெய்ய 
நீலத் திருக்கலையூர்சுந்தரி விந்தை நீள்விசயை 
சூலச்சயமகள்  ஆரியை நாரணி துற்கை கன்னி 
பாலைக்கிழத்தி திகிரிஎண்டோளி பகவதியே 

#24
** இந்திராணியின் பெயர்
திசைபுகழ் வானவர்நாயகி இந்திரன்தேவி புலோமசை
அயிராணி சசி சுந்தரி கங்கை மந்தாகினி 
மிசைவரு சானவி வானதி பாகீரதி விமலை 
இசைசுரசிந்து வரநதி என்னும் திரிபதையே 

#25
** வித்தியாதரர் கந்தருவர் பூதகணம் பெயர்
பதம் திகழ் விஞ்சையர் கோசரர் விச்சாதரர்பெயர் பண் 
இதம் தரு கின்னரர் வீணையர் தந்திரர் காந்திருவர்
மதம்கொள் கிருத்திமம் சாரதம் மாகோதரம் அருள் வெம் 
கதம்கொள் குறள் கூளி பாரிடம் பூதகணம் என்பரே 

#26
**   பேய் காளியின் ஏவற்பெண் இடாகினி பெயர்கள்             
கணங்கடி கூளி அலகை வேதாளம் கழுது மண்ணை 
பிணம்கவர் சோகு பசாசு குணபாசி பேய் அது என்பர் 
அணங்கு சூர் சூர்மகள் வஞ்சனி யோகினி யாகிரணி 
வணங்கும் வலவை இடாகினி சண்பனி மாயவளே 

#27
** ஆகாயம் திசை பெயர்கள்
மாகம் ககனம் வெளி அந்தரம் அண்டம் வானம் மங்குல் 
மீ கம் வியோமம் விசும்பு அம்பரம் குடில் ஆசினி விண் 
நாகம் கோ மாதிரம் காட்டை அரிதம் திக்கு ஆசை புலம் 
மேகம் செறி ககுபம் திசை வம்பல் விசும்பு உலகே 

#28
** சுவர்க்கம், காற்று பெயர்
புலம் மாகம் தானம் சுவவு சுவற்கம் வான் பொன்னகர் மேலுலகம்
கம் அம்பரம் மீ துறக்கம் விசும்பு உம்பர் உயர்நிலை
சுரர்நாடு விண் நாகம் வியனகர் நீடு கற்பம் 
உலவை சமீரன் சதாகதி கந்தவகன் ஒலியே 

#29
** காற்று பெயர் (தொடர்ச்சி)
ஒலி உயிர் வாதம் வளி மாருதம் வெற்றம் ஊதை கொண்டல் 
சலனன் பவனன் அரி நீழை நீல் மால் பரிசனன் மாபெலன்
மருத்து ஆசுகன் கோதை அனிலன் பிரபஞ்சனன் 
வல பவமானன் கால் கூதிர் வங்கூழ் காற்று வாயுவுமே 

#30
** காற்று பெயர் (தொடர்ச்சி)
வாடை வடந்தை வடகாற்றுக் கொண்டல் கீழ்காற்று மற்றும் 
கோடை மேல்காற்றுக் குளிர் பனிக்காற்று ஊதை கூதிரும் ஆம் 
நீடு வயந்தன் மலையக்கால் மந்தாநிலமும் தென்றல் 
ஓடும் திசை பத்தினும் பத்துப் பேர் பெற்று உடம்பினுமே

#31
** நெருப்பு பெயர்
உதாசனன் அங்கி அங்காரகனே சோதி ஓங்கு வசு 
வதி அனல் பாவகன் தென்கிழக்கோன் சுசி வன்னி கனல் 
அதர்கரியோன் சித்திரபானுச் சாதவேதா அரி அர்ச்சிதன்
எரி வாயுசகன் தூமகேதுச் சுகி தழலே 

#32
** தீ தீத்திரள்,  ஐந்து அக்கினி பெயர்
தழுவும் தகனன் எழுநா ஞெகிழி தனஞ்செயன் தீ 
வழுவில் சுவலன் முளரி அழல் வாடவம் மடங்கல் 
உழலும் வடவை கடையனல் ஊழியனல் வெகுளி 
பழகுஞ்சிவம் காலம் காமம் சடம் பஞ்ச அக்கினியே 

#33
** புனல் பெயர்
வனம் உதகம் தோயம் அப்பு அம்பு வாரி வருணம் அம் ஆம் 
கனம் அலர் கீலாலம் நாரம் கவந்தம் கமலம் அயம் 
புனல் அறல் நீரம் சலிலம் கிலம் அமுதம் புவனம் 
கனவிரதம் சீவனம் சீவனீயம் கம் காண்டமுமே 

#34
** புனல் பெயர் (தொடர்ச்சி)
காணும் குசம் சம்பரம் தீர்த்தம் வார் புட்கரம் அமுதம் 
பாணி சலம் பயம் நீர்க் கோ முகில் பானியம் அளகம் 
பேணும் பிரவாகம் நீத்தம் பிரளையம் வாரி வெள்ளம் 
பூணும் புனற்கு அரசன் வருணேசன் பொலம்கொடியே

#35
** விண்மீன், கால நுட்பம், நாழிகை பெயர்கள்
பொலம் தாரகை உடுத் தாராகணம் சோதி பொங்கு ஒளி பம் 
தலம் புகழ் நாண்மீன் கலை கணம் மாத்திரை சாற்று நுட்பம் 
இலங்கு நிமிடம் துடி காலநுட்பம் இருத்தை கன்னல் 
நலம்கொள் விகலை கடிகை பதம் இவை நாழிகையே 

#36
** காலம், வெய்யில், மத்தியானம், மாலை பின்னைநாள் பெயர்
கைதரு வேலை அமையம் பதம் போது காலை பொழுது 
எய்திய காலமும் ஏல்வையும் ஆகும் என்றூழ் ஆதபம் 
பெய்த வெயில் பிற்றை பின்றை எனும் இவை பின்னர் உச்சி 
தையல் கேள் நண்பகல் நாட்காலை அந்தியைச் சந்தி என்னே

#37
** சாமம் இரவு பெயர்
சந்தித்த யாமமும் சாமம் தினம் திவசம் பகல் எல் 
வந்துற்ற காலை திவா ஆம் இரசனி மாலை கங்குல் 
முந்துற்ற யாமினி எல்லி நிசா நிசி முந்தும் அல்கல் 
இந்துச் செல் யாமம் விபாவரி நத்தம் இரவும் அல்லே 

#38
** இருள், பகல், நாள், முன்னைநாள்பெயர்
இருள் அந்தகாரம் துவாந்தம் தமம் நீலம் ஏய்ந்த நத்தம் 
தெருளும் திமிரம் நிசி இருள் ஆகும் திவாத் திவசம் 
மருளும் தினம் பகல் வைகலும் நாள் ஆனியமும் என்பர் 
நெருநலும் நென்னலும் முன்னைநாளாக நினைந்து உரையே 

#39
** அரைநாள் காலவிரைவு யுகமுடிவு வாழ்நாள் பெயர்கள்
உரைதரு பானாள் அரைநாள் இருள்நாள் உருப்பம் வெப்பம் 
திரிதரும் ஒல்லை சிறுவரை ஆகும் சிறுபொழுதே 
வரை தரும் ஊழி மடங்கல் உகம் ஆயுள் ஆயுகம் வாழ்தரவருநாள்
நான்முகனாள் அது கற்பம் சாற்றுவரே 

#40
** முகில் பெயர்
வரும் முகில் கொண்டல் எழிலி குயின் மேகம் மாரி விண் கந்தரம்
மழை சோனை விசும்பு கார் வான் விண்டு தண் கனம் செல் 
பரிமிகு சீதம் மை மஞ்சு மால் கொண்மூப் பயோதரமும் 
பொருவில் புயல் மங்குல் சீமூதம் அம்புதம் பூந்திருவே 

#41
** மழை, மழைத்துளி, திவலை, பரிவட்டம், இடி பெயர்
திவலை பெயல் மாரி ஆலி உறை தளி சீகரமே 
துவலை பிசிர் சிதர் தூறல் சீதாரி துளி சிதரி
நவில் சிரகம் சீரம் ஊர்கோள் பரிவேடம் நாடில் வட்டம் 
இவர் உருமுச் செல் இகுளே அசனி வானேறு இடியே 

#42
** மின்னல், மழை பெய்துவிடுதல் விடாமழை பருவம் மாடம் பெயர்
ஏறும் தடித்துத் தடிந்துச் சபலை மின் சஞ்சலையே
தூறும்தலையல் மழைவிடல் சோனை பனித்தல் இவை 
மாறி விடாதுசொரிதல் மதி திங்கள் மாதம் என்ப
தேறும் பருவம் இருதுவொடு ஆனியம் செப்புவரே 
** முதலாவது தெய்வப்பெயரியல் முற்றும் 

@2 இரண்டாவது இடப் பெயரியல் 

#1
** பூமியின் பெயர்
புலம் தரை மண் குப் புவனம் அவனி புவி விபுலை 
தலம் சகம் தாலமே கோ நகர் பூத் தாரணி தரணி 
நிலம் தறை மேதினி காசினி தாத்திரி நீடு உலகம் 
பலம்தரு ஞாலம் அசலை வசுந்தரை பார் படியே 

#2
** பூமியின் பெயர் (தொடர்ச்சி)
படியும் அளக்கர் குவலையம் பூதலம் பாரி வையம் 
புடவி பொறை நேமி மண்டலம் பூமி புவனி அகலிடம்
மகி வேலாவலையம் திணை வரைப்பு இம்பர் பொழில் 
நடு உகம் சாந்தை பிருதுவி தாலம் நவகண்டமே 

#3
** நாடு, உலகு பொதுப்பெயர்
கண்டம் அகலுள் உலகு ஏணி தேசம் கருது சும்மை 
மண்டிலம் பாடி சனபதம் தண்ணடை மண் பைதிரம் 
பண்டிதர் நாடு என்பர் நாடு புவனம் தலம் பவனம் 
கொண்ட புடவி பொழில் உலகின் பொதுக்கொள் வரைந்தே

#4
** மலை பெயர்
வரை குவடு ஓங்கல் பொருப்புச் சிகரி மலை விலங்கல் 
கிரி தடம் ஓதிமம் பூதரம் நாகம் கிளர் திகிரி 
தரணி அசலம் தராதரம் வேதண்டம் சையம் வெற்பு அத்திரி
நகம் பொற்றை சிலோச்சயம் சாரல் சிலம்பு குன்றே 

#5
** மலை பெயர் (தொடர்ச்சி) 
குறும்பொறை மாதிரம் கோத்திரம் விண்டு குறும்பு பறம் 
பிறும்பு நவிரம் துறுகல் சயிலம் சிலை இரவி 
பிறங்கல் பதலை அடுக்கல் பருப்பதம் குத்திரம் பேர் 
அறம்செய் சுரர்மலை பொன்மலை மேரு வரன்சிலையே 

#6
** மலை பெயர் (தொடர்ச்சி)
சிமையம் பொதியமலை அம் தமிழ்மலை தென்மலை ஆம் 
இமையம் இமவான்மலை ஆகும் மன்று உலகு ஈன்ற பச்சை 
உமை தந்தை நாமம் சயிலாதி வெள்ளியங்குன்று உலகிற்கு 
அமையும் கயிலாயம் கண்ணுதலோன் பொருப்பு ஆதிவெற்பே 

#7
** மகைச் சிகரம், குகை, பாறை, மலைச்சாரல், பக்கம் பெயர்கள்
வெற்பின் சிகரம் குவடு கொடுமுடி கோடு மிக்க 
கல்புழை காண்டை பிலம் கீழறை கந்தரம் முடுக்கர் 
சொல் குகரம் கல்முழை அறை பாறை பொறை துறுகல் 
பற்பல வாரம் கடம் சாரல் மால் வரைப் பக்கம் என்னே 

#8
** மலை பிளப்பு பெயர்
கல்லுச் சிலை உபலம் சிறுகல் ஆம் உலம் கற்றிரள் 
சொல்லிய நூழை சுருங்கை நுழைவாயில் துற்கமரண் 
கல்லின் பிளப்பு விடர் விடா விட்புக்கு அமர் பிளவு ஆம் 
செல்லும் பதுக்கை முரம்பு சிறுதிட்டை திட்டை திட்டே 

#9
** கடல் பெயர்
திரை அலை சாகரம் வேலாவலையம் உவரி சிந்து 
நரலை சலராசி அம்பரம் அத்தி நளிர் சலதி 
பரவை நதிபதி முன்னீர் அளக்கர் உததி பௌவம் 
வருணம் புணரி மகராலையம் வீரை வாரி உப்பே 

#10
** கடல் பெயர் (தொடர்ச்சி)
வாராகரம் பாருடை உவா வேலை மகோததி நீர் 
கார்கோள் சமுத்திரம் ஆர்கலி நேமி மணியாகரம் 
பாராவாரத்தோடு அரலை பேரோதம் பயோநிதியே 
பேர் ஆழி வாருணம் அன்னவம் இன்னும் பெருவெள்ளமே 

#11
** கடல் திரை, புனல்கரை, செய்கரை பெயர்
பெருங்கலி ஓதம் புணரி கடற்றிரைப் பேர் அறலே 
தரங்கம் திரை அலை கல்லோலம் தாவும் வீ சீகரம் ஆம் 
வரம்பு வரை கூலம் பாரம் தீரம் பாகு வாரம் கரை 
குரம்பு வரப்புக் குலை சேதுச் செய்கரை கோடணையே 

#12
** மலையாறு ஆறு பெயர்
அருவி மலைச்சாரல் ஆறு கலுழி உயவை முல்லை 
தரு கான்யாறு துறை நதி உந்தி தடினி சிந்து 
வருபுனல் தீர்த்திகை ஆபகை மா துனி வார் குடிஞை 
பெருகிய தீபவதி ஆறு ஒலியல் இப் பேர் அறியே 

#13
** கழிமுகம், வாவி பெயர்
அழிவுஇல் புகாரோடு அதோமுகம் ஆகும் கழிமுகமும் 
இழிதரு சூழி தடாகம் படுகர் இலஞ்சி மடுச் 
சுழிகொள் அலந்தை கயம் கேணி பட்டம் சுனை கிடங்கோடு 
ஒழிவுஇல் நளினி சலதரம் வாவி உவளகமே 

#14
** வாவி, ஆற்றிடைக்குறை பெயர்
வளம்தரு கோட்டகம் பண்ணையொடு ஏல்வை வலையம் குண்டு 
குளம் தடம் ஆவி மடு ஓடை ஏரி மலங்கல் குட்டம் 
அளந்த துருத்தி இலங்கை அரங்கமும் ஆற்றிடை ஆம் 
கிளர்ந்த நல் கூவல் அசும்பு துரவு கிணறு என்கவே 

#15
** நுரை, நீர்க்குமிழி நிறைநீர் ஊறல் மணற்குன்று வெண்மணல் பெயர்
கயம் குண்டு அழுந்து ஆழம் பௌவம் நுரை புற்புதம் குமிழி 
வயங்கும் பிராறும் வழாறு நிறைபுனல் வாரியும் ஆம் 
உயங்கும் உறவி ஊற்று ஆகதம் ஊறல் உயர் புளினம் 
தயங்கு மணற்குன்று வாலுகம் வெண்மணல் தாழ் குழலே

#16
** சேறு பொல்லாநிலம் பெயர்
குழை அளறு அள்ளல் குழம்பு காலாழ் செய்யல் கொள்ளம் தொள்ளி 
பழகிய சேதகம் பூழி அளக்கர் அஞறு பங்கம் 
அழகுசெய் தொய்யல் செதும்பு தொளி சேறு அசும்பு அங்கணம் 
விழைகொள் சகதி நுரம்பு பொல்லாக்குழி மெல்லியலே

#17
** நுண்மணல், கடல், முல்லை, குறிஞ்சி நிலம் பெயர்கள்
மெல் அதர் எக்கர் அறல் அயிர் நுண்மணல் வேலையுடன் 
சொல்லுவரால் பாராவாரம் கடற்கரை சூழ் கழி ஆம் 
புல்லிய நல் முகம் காயல் அளம் கானல் பூழி பொடி 
முல்லை புறவம் புறம்பணை ஆம் முன் குறிஞ்சிக்குமே 

#18
** மருதம் நெய்தல், பாலை நிலம் பெயர்
குழைதரு மென்பால் அகணி பணை பானல்கொள் கழனி 
பழனம் வயல் செறுச் செய் கம்பளமும் படுகரும் பேர் 
கழுவு மருதம் கடற்சார்பு நெய்தல் கருநிலப்பற்று
அழுவம் துருக்கம் குறும்பு வன்பால் பாலை ஆகும் நன்கே

#19
** ஊர்ப்பொது, குறிஞ்சிநிலப் பெயர், 
நகர் பதி சேரி புரம் புரி ஆகரம் நல் இருக்கை 
அகலுள் குறிப் பட்டுக் கோசரம் பாழி அணி நகரி 
புகலிடம் சும்மை எயில் வேலி பாக்கமும் பூண்டியும் ஊர் 
இகலும் சிறுகுடி சீறூர் குறிச்சி குறிஞ்சிக்கு என்னே 

#20
** ஏனைய திணை நிலப்பெயர்
எண்ணிய பட்டினம் நெய்தல் குறும்பு முனையிடமும் 
அண்ணிய பாலை குடிக்காடு பூக்கம் அகலுள் பதி 
தண்ணடை பூரியம் பாக்கம் அருப்பம் உறையுள் தப்பாப் 
பண்ணிய வாழ்க்கை மருதம் நெடு முல்லை பாடி என்னே

#21
** பல்வித உறைவிடங்கள், மதுரை, உறையூர் பெயர்
பாடு கழி சூழ் இருக்கை தோணாமுகம் பல் பதியும் 
நாடிய பேரூர் மடப்பம் கிரி ஆறு அடுத்த நல்லூர் 
கேடகம் போர் ஏற்று உறையிடம் பாசறை கேடு ஒன்று இல்லாக் 
கூடல் மதுரை உறையூர்ப் பெருநகர் கோழி என்னே 

#22
** கருவூர் புகார், நகர்ப்பகுதிகள், நாற்சந்தி பெயர்
கோடு உயர் வஞ்சி கருவூர் காகந்தி புகார் நியமம் 
பீடிகை அங்காடி ஆவணம் கூலம் கடை பிழைப்பில் 
வாடை நியமம் மறுகு ஆவணம் வீதி மாற்கம் ஞெள்ளல் 
நாடிய கோசும் தெரு ஆம் சதுக்கமும் நாற்சந்தியே

#23
** சந்தி, தேவர் கோயில் பெயர்
சந்தி கவலை அரில் அந்தில் சாரும் சினகரமே 
மந்திரம் கோட்டம் பிராசாதம் சேதியம் வாய்ந்த குலம் 
அந்தம்இல் பள்ளி நிலையம் நிகேதனம் ஆலயமும் 
முந்தும் தளி கோயில் தேவர்நகர் கனை மொய்குழலே

#24
** வீடு, கல்விபயிலிடம் பெயர்
மொய்குழல் மாடம் மனை உறையுள் புக்கில் முன் இடவகை
பதி பாத்தில் வசதி இடம் அகம் காணி இல்லம் 
வெய்ய பவனம் வயின் சேர்வு வீடு வியன் கழகம் 
துய்யவர் கல்வி பயில்களம் கல்லூரி கல்வி சொல்லே 

#25
** வீட்டிறப்பு, தாழ்வாரம் சிற்றில் வீடு முற்றம் முகடு பெயர்
சொற்ற இறை இறப்பு ஆம் என்பர் தாழ்வாரம் சோபானம் ஆம் 
சிற்றில் குரம்பையும் கூரையும் திண்ணை மண்ணீடு திட்டை 
தெற்றி நல் வேதிகை அங்கணம் முன்றில் திருந்து நிலா 
முற்றம் அரமியம் மஞ்சு விடங்கம் முகடு என்பரே

#26
** பலகணி, அடுக்களை பெயர்
முகம் தெரி சாளரம் சாலகம் சாலேகம் நூழை முன்னர்ப் 
புகன்ற வாதாயனம் காலதர் ஆகும் பொதுப் பொதுஇல் 
நிகழ்ந்த மன்றம் பலம் ஆம் என்பர் அத்தாணி நீளரசு 
வகைந்த இருக்கை அடுக்களை அட்டில் மடைப்பள்ளியே

#27
** துயிலிடம் ஏகாந்தம் பெயர்
பள்ளி சயனம் அமளி படை சேக்கை பாயல் உறையுள்
அரி கட்சி துயிலிடம் பாழி உயர் சட்டகம் 
தெள்ளிய பட்டமும் சேர்விடமாக உயர்திணைக்கு
விள்ளுவர் கொட்டில் ஒருசிறை துச்சிலும் வேறிடமே 

#28
** அரங்கு பெயர்
வேறும் கழகம் படை சூது மல்லும் விரும்புமிடம் 
மாறுபடுமிடம் ஆடிடம் சூதிடம் ஆம் அரங்கம் 
கூறும் பிறப்பிடம் ஆகரம் சித்திரகூடம் தெற்றி 
ஏறு அம்பலம் பணை மந்திரம் வாசிக்கு இயல் பந்தியே 

#29
** கூடு, யுத்தகளம் பெயர்
பஞ்சரம் கட்சி குடம்பை கூடு ஆகும் படுகளத்தோடு 
அஞ்சும் களரி அடுகளம் ஆகவபூமி மற்றும் 
எஞ்சும் அமர்க்களம் செங்களம் போர்க்களம் தெம்முனையே 
துஞ்சும் பறந்தலை பூத வேதாளங்கள் சூழ் களமே 

#30
** சுடுகாடு, மதில் பெயர்
சூழும் மயானம் புறங்காடு காளவனம் சுடலை 
தாழும் பிதிர்வனம் ஈமம் சுடுகாடு சாற்றும் இஞ்சி 
வாழும் எயில் சுற்றுக் காப்பு அரண் காவல் வரைப்பு நொச்சி 
ஆழும் புரிசை மதில் வேலி வேணகை ஆரல் என்னே 

#31
** கோட்டை மதில், மதிலுறுப்பு பெயர்
ஆரும் உவளகம் வன்சிறை துற்கம் அரணம் சுற்று 
வாரி தகைப்புடன் கோட்டையும் ஆகும் மதிலுறுப்புக் 
கூரும் பதப்பாடு தோணி விதப்பு எந்திரம் கோசமே 
நேரும் பொறி நாஞ்சில் ஞாயிலும் ஆம் என்று நேர்ந்து அறியே 

#32
** அகழி பெயர்
அகழி கிடங்கோடு அகப்பாப் பரிகம் அகழ் புதவும் 
இகலும் துவாரமும் வாரியும் தோட்டியும் வாயில் என்பர் 
புகலும் வரைவை தடி செறுப் பாத்தி புனை வயலே 
திகழும் விளையுள் கழனி விளைநிலம் செய் புகலே 

#33
** தோட்டம், உழவு, உழவு தொழில்வளைப்பு பெயர்
புகலும் முதைப்புனம் தொல் புனம் ஆகும் இதைப்புனமும் 
பகரும் புதுப்புனம் தோட்டம் துடவை படப்பை தொய்யல் 
உகவும் துடவை உழுதல் உழவு தொழில்வளைப்பு ஆம் 
அகலும் தொடுப்பும் அரிசி வரம்பு ஆம் மருகுகங்கே

#34
** பள்ளம், புற்று, களர், சுரம் பெயர்
அருகு அவல் பள்ளம் பயம்பே உவளகம் ஆம் படுகர் 
பெருகிய வன்மீகம் புற்றுக் கரம்பை பெரும் களரி 
கருகு களர் பாழ் முதுபார் கவலை கவர்நெறி ஆம் 
சுரமோடு அருநெறி அத்தம் கடறுடன் தூம்பு என்பரே 

#35
** பாதை, வழி பெயர்
தூரிய வட்டை வயவு வகுந்து தொடர்வு ஒழுக்குத் 
தாரி நடவை நெறி பதம் மார்க்கம் சரி அயனம் 
ஆரிடை செப்பம் இயவை வரி ஆறு அதர் பதவை 
வாரி பிகுவை செலவு வதி வழி வார்கிறியே 

#36
** இடம் பெயர்
வாய் புலம் பாங்கர் வயின் களம் வைப்பு மருங்கு வழி 
தேவகை பட்டி உழை கடை சூழல் திணை வலம் கால் 
பாயிடை சார் கண் வளாகம் தலம் தானம் பால் புடையே 
மேதகு ஞாங்கர் மருங்கு முன்னும் பின்னும் மேலும் என்னே

#37
** மேல், பக்கம், உயர்வு பெயர்
மேல் மிசை உம்பர் பரம் மீ வலம் மேக்கு மீது சிறை 
பால் உழி மாடு மருங்கு புடை அயல் பாங்கர் பக்கம் 
கோலிய தூக்கு நிவப்புப் பருமம் குடுமி உச்சி 
ஏலும் உவணமுடன் மோடு துங்கம் இவை உயர்வே 

#38
** இவன், அவண், நடு, கூப்பிடுதூரம், காததூரம் பெயர்
.இவண் இம்பர் உம்பர் அவண் ஈண்டும் ஆண்டும் இவண் அவண் ஆம் 
தவலின்றி நள்ளும் நனந்தலை நாப்பண் சமம் இடை நாத் 
திவர்கின்ற உந்தி நடு ஒத்தல் மத்திமம் செப்பும் எல்லைக் 
கவரும் குரோசமும் கூப்பீடும் காவதம் காதம் என்னே
** இரண்டாவது இடப்பெயரியல் முற்றும் 

@3 மூன்றாவது மக்கட் பெயரியல் 

#1
** முனிவர் பெயர்
காய்ந்தவர் கோபம்துறந்தவர் யாவும்கடிந்தவர் மெய்வாய்ந்தவர்
ஐயர் முனிவர் உயர்ந்தவர் மாதவத்தில் 
கூர்ந்த முனைவர் அறவோர் உறுவர் மெய்க் குற்றமற்றோர் 
ஆய்ந்த அறிஞர் தபோதனர் தாபதர் அந்தணரே 

#2
** சைவ, புத்த, சமண சமயத்தார் பெயர்
அந்தம்இல் காளாமுகர் மாவிரதிகள் பாசுபதர் 
தந்தன சைவசமையத்தவர் தேரர் சாக்கியரும் 
வந்த பவுத்தர் சமணர் ஆசீவகர் சாரணரும் 
முந்திய ஆருகதர் சாரணரும் முனிவர்களே 

#3
** பிராமணர் பெயர்
முனிவர் இருபிறப்போர் விப்பிரர் ஐயர் மூதறிவோர் 
நனி திகழ் வேதியர் பூசுரர் அந்தணர் நான்மறையோர் 
தினகரஞாதர் அறுதொழிலாளர் முத்தீவளர்ப்போர் 
பனவர் புரிநூலர் மேற்குலத்தோர் வேதபாரகரே 

#4
** கற்றோர் பெயர்
கற்றவர் சான்றோர் உயர்ந்தவர் நல்லோர் கரி உலகம் 
உற்றவர் ஆன்றோர் பெரியோருடன் ஆரியர் உரவோர் 
முற்றுமுணர்ந்தவர் பேரவை கற்றோர் முதுவர் சங்கம் 
மற்றும் கலைஞர் அறிஞர் புலவர் நூல்வல்லவரே 

#5
** வல்லவர் மூத்தோர் பெயர்
வல்லவர் ஆகும் விபுதர் நிபுணர் குசலர் மற்றே 
நல்ல குரவன் பெருமான் முதல்வன் கோ நாதன் ஐயன் 
சொல்லும் இறை அச்சன் அத்தன் பெரியோன் சுவாமி பதி 
அல்லதும் ஆசானுடன் சாமி கோமான் அடிகள் என்னே 

#6
** எப்பொருட்கும் இறைவன், சிறந்தோர் பெயர் 
அண்ணல் குருசிலுடன் செம்மல் ஏந்தலும் தோன்றலும் ஆம் 
கண்ணம் தலைமை சிறந்தவர் பேர் செம்மல் காவலன் கோன் 
எண்ணும் தலைவன் அதிபன் பிரான் வேந்தன் ஈசன் மன்னன் 
நண்ணும் பதி காந்தன் நாதன் இறை ஆதி நாயகனே 

#7
** அரசன் பெயர்
நாவலர் போற்றும் புரவலன் வேந்தன் நரபதி கோன் 
காவலன் பார்த்திபன் பூபாலன் பூபன் கலைநிருபன் 
கோ உலகாள்மன் இராசன் அரசன் குருசில் அண்ணல் 
மேவும் மகிபன் மகிபதி கொற்றவன் வேந்தன் என்னே 

#8
** சேரன் பெயர்
வேந்தரில் கேரளன் பூழியன் கொங்கன் உதியன் மிக்க 
போந்தடர்கண்ணியன் வானவன் கொல்லிப் பொருனைமன்னன் 
கூர்ந்த குடநாடன் குட்டுவன் வில்லவன் கோதை வஞ்சி 
வாய்ந்தபதிச் சேரன் சேரலன் வானவரம்பன் பொன்னே 

#9
** சோழன் பெயர்
பொன்னித்துறைவன் அனகன் அபையன் புலிக்கொடியோன் 
சென்னி புனல்நாடன் ஆரியன் நேரிச்சிலம்பன் கன்னி 
மன்னு நரபதி செம்பியன் சோழன் வளவன் நன்னீர் 
கொன்னவில் கோழிப்பதியோன் இரவிகுலத்தவனே 

#10
** பாண்டியன் பெயர்
குழுமிய கூடற்கொருகோன் கவுரியன் கோற்கைதவன் 
செழியன் தமிழ்நாடன் பஞ்சவன் மீனவன் தென்னவன் போர் 
வழுதி மலையன் குமரித்துறையவன் வைகைக்குமன் 
பழுதுஇல் புகழ் மாறன் பூழியன் நிம்பத்தார்ப் பாண்டியனே

#11
** குறுநில மன்னர், அமைச்சர், படைத்தலைவர், பரிவாரம் பெயர்
பார்க்கில் பரதர் கவுரவர் ஆகும் குறும்பர் அட்டர்
நோக்கிய வேளிர் புரோசர் குறுநிலமன்னர் நுண்ணூல்வாக்கினர்
தேர்ச்சித்துணைவர் அமைச்சர் வரு பொருநர் 
ஆக்குத் தலைமைபெற்றோர் பரியாளம் பரிவாரமே 

#12
** பட்டம்பெற்றோர், வைசியர் பெயர்
பட்டம் புனையும் அமாத்தியர் ஏனாதி காவிதி என்று 
ஒட்டிய பேர் மந்திரி தந்திரிக்கு என்பர் ஓங்கு இளங்கோ 
எட்டியர் இப்பர் பரதர் வயிச்சியர் ஏர்த்தொழிலோர் 
செட்டிகள் நாய்கர் கவிப்பர் வணிகர் செலேட்டிகளே 

#13
** வேளாளார், மருத்துவர், உப்பு வணிகர் பெயர்
கருமம்செய் காராளர் வேளாளரே வெண்களமர் பினோர் 
மருவும் உழவர் சதுர்த்தர் வார்த்தையர் மண்புதல்வர் 
பெருகிய சூத்திரர் மாமாத்தியர் பிடகர் மருத்துவரும்
உப்பமைப்பர் உமணர் அளவரும் ஆவர் மற்றே 

#14
** குயவர், கண்ணாளர் பெயர்
முற்றும் குலாலருடன் கும்பகாரர் வேள் மட்பகைஞர் 
முற்றும் குயவர் வேட்கோவரும் ஆகும் முழுதும் வல்லோர் 
கற்ற தபதியர் ஓவியர் கொல்லர் கம்மாளர் சிற்பர் 
அற்ற யவனர் புனைவித்தகர் அக்கசாலையரே

#15
** கன்னார், வண்ணார், உறைகாரர், தோல்வினைஞர்
** ஊன்விலைஞர், கள்வாணியர் பெயர்
சால் கஞ்சகாரர் கன்னார் கன்னுவர் தரு காழியரும் 
கால்கொண்ட வண்ணார் பேர் காரோடரே உறைகாரர் என்பர் 
தோல் என்றும் விற்போர் பறம்பராம் சூனரும் ஊன்விலைஞர் 
மால்கொள் பழையர் துவசர் படுவர் கள்வாணியரே

#16
** சண்டாளர், பாணர் பெயர்
வாய்ந்த குணுங்கர் கவுண்டர் கனகதர் வங்கர் புல்லர் 
சேர்ந்த புலைஞர் இழிஞர் சண்டாளர் பேர் சென்னியரே 
சார்ந்த வயிரியர் மாகதர் சூதர் மதங்கர் தப்பா 
ஏய்ந்த இசைகாரர் பாடல்வல்லோர் பாணர் என்பர்களே

#17
** நாவிதர், கழைக்கூத்தர், நரம்புக்கருவி மாக்கள் பெயர்
பண்டருமோ வரும் பாடல் கீழ்மக்கள் பெருமஞ்சிகர் 
மிண்டு மயிர்வினை நாவிதர் வாயிலர் கூத்தர் மிக்க 
கண்ட வேழம்பர் கழாயர் இயவர் தோல்கைவினைஞர் 
கொண்ட நரப்புக்கருவிவல்லோர்கள் குயிலுவரே 

#18
** புதியவர், அயலார், மடையர், வழிச்செல்வோர், ஒற்றர் பெயர்
வம்பர் அதிதி புதியோர் நொதுமலர் வாலுவரும் 
தம்பம்இல் கூவியர் பாகி தவசியார் அட்டர் தம்மை 
நம்பிய தொண்டு தொழும்பு ஆம் பதிகர் வழிநடப்போர் 
வெம்பிய சாரணர் தூதர் உசா ஒற்றர் வேய்ப்பர் மின்னே 

#19
**  தேவராளன், ஊமை , ஏவல்செய்வோர் பெயர்
மின் இவர் வேலன் முருகன் படிமத்தன் வேள் வெறியாட்டு 
உன்னிய தேவராளன் மூகை மூங்கையும் ஊமை என்பர் 
தென்னியல் சேடர் சிலதர் சிலதியர் சேடியரோடு 
இன்னும் பரிசனம் ஏவல்செய்வோர் பெயர் எல்வளையே 

#20
** அலி, குருடு, செவிடு, முடம்  பெயர்
வளம்தரு பேடியர் பேடுகள் பேடர்கள் பெண்டகர் மற்று 
உளம்தரு சண்டன் கிலிபம் அலி என்பர் ஓது சிந்து 
தளர்ந்த குறள் வாமனம் கோணல் கூன் குஞ்சம் தாழ் செவிடே 
அளந்த வெதிர் முடம் பங்கு என ஓதினர் ஆய்மயிலே 

#21
** கீழ்மக்கள் பெயர்
மருவிய பூரியர் நீசர் கயவர் கீழ்மக்கள் புல்லார் 
கருதிய பேதையர் தீம்பர் முசுண்டர் கலர் முசுடர் 
திருகியவாக்கர் சிறுமை பொல்லார் கையர் சீத்தை கல்லார் 
அருளிலர் மூர்க்கர் சுமடர் தீயோர் பொறியற்றவரே 

#22
** அறிவில்லோன், தரித்திரர் பெயர்
அற்றவன் போதன் சிதடன் முழுமகன்  அஞ்சி இழுதை 
மற்றும் சளன் பேதை ஆதனொடு அண்ணை மடம் குதலை 
முற்றிய அஞ்ஞையும் மூடனும் ஆம் ஆதுலர் முயற்சியிற்றவர்
ஆர்த்தர் துயருறுவோர் என்று இசைப்பர்களே 

#23
** திருடர், உரியவர் பெயர்
கள்ளர் கரவடர் சோரர் விழைவு அவாக் காதல் இச்சை 
விள்ளும் நயத்தல் விருப்பு ஆர்வம் வேண்டுதல் வேட்டல் நச்சுக் 
கொள்ளும் நசை வாஞ்சை ஆதரவு ஆசை கொடியபற்றாம் 
உள்ளும் முதுவோர் அறிவோர் கிழவர் உரியவரே 

#24
** திண்ணியன், நாகரிகர், காமம் மிக்கோன், புகழாளன், ஏவுவான் பெயர்
வல்லாளன் மீளி விறலோன் விடலை வயவன் வென்றி 
நல்லோன் பெயர் காமுகர் சதுரர் நாகரீகர் நல்லோர் 
ஒல்லும் விடர் காமம்மிக்கவர் தூர்த்தர் ஒழுக்கமில்லோர் 
எல்லாம் இயவுள் புகழோன் வியவனும் ஏவுவனே 

#25
** இளையோன், கடிகை மாக்கள் பெயர்
ஏவிய காளை குழகன்  மழவன் முருகன் இன்னும் 
மேவிய சேடன் குமரன் இளையோன் பெயர் மெய்கற்றோர் 
நாவலர் மங்கலப்பாடகரோடு எட்டர் நல் கவிகள் 
பாவலர் பல்கலைவல்லோர் கடிகையர் பாண்மொழியே 

#26
** கூத்தர், புகழ்வோர் பெயர்
மொழியும் நிருத்தர் பொருநர் நடியர் ஆம் முன்னும் நடர் 
வழிபடு கண்ணுளர் கோடியர் கூத்தர் வயிரியரோடு 
ஒழிவுஇல் வினையரே சூதர் வந்தியரே புகழ்வோர் 
பழுதுஇல் வேதாளியர் மாகதர் பூகதர் பப்புவரே 

#27
** யானைப்பாகர், தேர்ப்பாகர், குதிரைப்பாகர், இரப்போர் பெயர்
புகல் வாதுவருடன் ஆதோரணர் ஆனைப்பாகர் பொற்பிற்கு 
அகலா வலவரும் சூதரும் தேர்ப்பாகர் வாதுவரே 
இகலார் பரிமாவடிப்போர் இரவலர் யாசகரோடு 
அகலாத பாடகர் பட்டர் பரிசிலோர் ஆம் என்பரே 

#28
** தானைத்தலைவர், கூவநூலோர் பெயர்
ஆன மறவர் பொருநர் ஏறாளர் அயிலுழவர் 
மானவர் வீரர் செருநர் திறலோர் வயவர் மள்ளர் 
தானையபையர் தறுகண்ணர் கூளியர் சூரர் தப்பா 
ஏனைய சல்லியர் கூவனூல்வல்லவர் என்று கொள்ளே 

#29
** கணவன் பிழைத்துப்பெற்ற பிள்ளை
** கைம்மை பெற்ற பிள்ளை, கன்னி பெற்ற பிள்ளை
** குலமில்லோன், வல்லோர், மாட்டார் பெயர்
கொண்டோன் பிழைத்துப் பெறுமகன் குண்டகன் கோளகனும் 
கண்டோர்க்குக் கைம்மை பெறுமகன் கன்னிசேய் கானீனனாம்
வண்டார் குலீனன் குலமில்லவன் வல்லவன் வலவை 
தண்டாத வல்லுநர் அல்லோர் வல்லார் மாட்டாதார் அறியே

#30
** பகைவர் பெயர்
அரி பரர் ஒன்னார் மடங்கார் அமரார் அமித்திரரே 
கருதலர் ஒல்லார் நவ்வார் மருவார் கறுத்தார் அடர்வோர் 
தரியலர் ஒட்டார் செறுநர் நள்ளார் தெவ்வர் சாரலர் மாறு 
இரி பகை நேரார் நிகரார் முனைந்தார் எதிர்ந்தவரே 

#31
** நட்பினர், சுற்றத்தார் பெயர்
தக்கவர் துன்னினர் ஒன்றினர் கூடினர் சாலவன்புதொக்கவர்
நள்ளுநர் ஒல்லுநர் மேவினரும் தொடர்ந்தோர் 
ஒக்கல் கேள் கூளி குடும்பு துணை நட்பு உறவு சுற்றம் 
மிக்க கடும்பு கிளை தமர் பந்தம் விருந்தமுமே 

#32
** ஆண் பெயர்
விரைதரும் ஆடவர் ஆராடூஉ மகன் மைந்தன் மேவு புமான் 
நரருடன் மானிடர் மானவர் மாக்கள் மனு மனிதர் 
புருடரொடு ஆளனும் மாந்தரும் ஆகும் புனைந்துரையால் 
அரிவையர் ஆடவர்க்கு ஆகும் பெயர் ஓர் அளவில்லையே

#33
** பெண் பெயர்
அங்கனை நாரி மகடூஉத் தெரிவை அரிவை மகள் 
மங்கை மடந்தை பிணா மானி காரிகை வஞ்சனியே 
தங்கிய தையல் மடவரல் மாது தளிரியல் பெண் 
எங்கும் வனிதை பெதும்பை மாயோள் பேதை ஏழையுமே

#34
** தலைவி, அருகர்தவமாது, கைம்பெண் பெயர்
ஏமம்செய் கோமாள் அடிகள் கோமாட்டி இறைவி அத்தை 
சாமி குரத்தி பெருமாட்டி ஆசாள் தலைவி ஐயை 
நாமம் கவுந்தியும் பம்மையும் ஆருகதத்தவப்பெண் 
சேமம்கொள்  கைம்மை கயினி கலன்கழி சேயிழையே 

#35
** வேசை, பாடினி, உடன்செல்வோள், மலடி பெயர்
இழை புனை வேசியர் கூத்தியர் சூளையர் எண்கணிகை 
விழையும் பரத்தை நடிப்போர் பொதுப்பெண்டிர் பேர் விறலி 
பழகிய பாடினி பாட்டி மதங்கியும் பாண்மகள் ஆம் 
வழியுடன் செல்வோள் எமி மைம்மை வந்தை மலடி மின்னே

#36
** பாலைநிலத் தலைவன்,  குறிஞ்சிநிலப் பெண்கள் பெயர்
மின் இவர் வேலனும் மீளியும் காளை விடலையும்
பாலைந்நிலம்காவலன் பேராம் குறவரும் புனவர் 
மன்னும் இறவுளர் குன்றுவர் கானவர் வாழ் குறிஞ்சித் 
தன்னில மக்கள் கொடிச்சி குறத்தி தலைமகளே 

#37
** குறிஞ்சிநிலத் தலைவன், முல்லைநில மக்கள்
தலைமகன் வெற்பன் பொருப்பன் சிலம்பன் தரு பொருநன் 
நிலைபெறு கானகநாடனும் ஆம் விந்தர் நீள் பொதுவர் 
குலவில் குடவர் இடையர் கோபாலர் தொறுவர் நல் கோவலர்
அண்டரண்டர் ஆன்வல்லவர் ஆயர் அமுதர் என்னே 

#38
** முல்லை நிலப் பெண், முல்லை நிலத் தலைவன்,
** நெய்தல் நில மக்கள் பெயர்
என்றும் தொறுச்சியர் ஆய்ச்சியர் ஏன்ற பொதுவியரே 
துன்றும் குடத்தியர் ஆகும் மிடைச்சியர் தோன்றல் அண்ணல் 
முன் திகழ் கானகநாடன் குறும்பொறைநாடன் முல்லைக்கு 
ஒன்றும் தலைவன் நுளையர் பரதவர் இன்னம் உண்டே

#39
** நெய்தல் நில மக்கள் பெயர் (தொடர்ச்சி)
** நெய்தல் நிலப் பெண்கள், ஆண்கள் பெயர்
உண்டாம் வலைஞர் கலவர் திமிலர் உததியரும் 
கொண்டார்கள் நெய்தல் நுளைச்சியர் கூறும் பரத்தியரும் 
தண்டாத அ நில மாதர் தலைவன் பேர் கொண்கன் மன்னும் 
கண்டார்கள் மெல்லம்புலம்பன் துறைவன் கடல் சேர்ப்பனே

#40
** மருதநில மக்கள், பெண், தலைவன்
சேரும் களமர் தொழுவர் விளைஞர் செறுவர் மள்ளர் 
வாரும் களைஞர் கடையர் உழவர் வரு கம்பளர் 
பேர் என்க ஆற்றுக்காலாட்டி உழத்தி கடைசியர் பேர் 
ஊரன் மகுணன் கிழவன் மருதத்து உரியவனே

#41
** தந்தை, மாமன் பெயர்
உரிய மனைவி கிழத்தி இல்லாள் இல் உயர் மருதத்து 
அரிய தலைவியர்க்கு ஆம் முல்லை மாதர்க்கும் ஆகும் என்க 
தரு தந்தை எந்தை பயந்தோன் ஐயன் அப்பன் தாதை அத்தன் 
பெருகும் எம்மானும் பிதா மாதுலன் மாமன் பேர் முன் எல்லே 

#42
** மனைவி, மகள் பெயர்
எல்லை மணமகள் காதலி காந்தை துணைவி இல்லாள் 
வல்லபி பாரியை நாயகி தாரம் மனைவி மனை 
நல்ல உரிமை தடை விருந்தம் கற்பினாள் கிழத்தி
வல்லி சிறுவி தனையை புதல்வி மகள் பெயரே 

#43
** மகன் பெயர்
மதலை சிறுவன் தனையன் கால் சந்ததி மைந்தன் மகன் 
புதல்வன் பிறங்கடை எச்சம் வழித்தோன்றல் புத்திரன் சேய் 
குதலை பொழிபின் பிறங்கு மகவு குழவி செம்மல் 
உதவிய  குட்டன் குருளை சுதன் பிள்ளை ஓதினரே 

#44
** மகன் பன்மை, தோழன், தோழி பெயர்
ஓங்கும் சிறாரும் மகாரும் சுதர் பன்மை ஓது நண்பன் 
பாங்கன் எலுவன் துணைவன் கேள் தோழன் சகாயன் பொய்தல் 
பாங்கி நல் சேடி இணங்கி ஆயம் தோழி பயில் இகுளை 
தாங்கும்துணையோரை எல்லா எடி முன்னிலை சாற்றுமே 

#45
** காதலன், காதலி, படை பெயர்
சாற்றும் கணவன் பதி தோழன் காதலன் தான் தலைவி 
தேற்றும் புதல்வி நல் தோழியும் காதலி சேனை தண்டம் 
தோற்றும் பதாதி பதாகினி யூகம் தொடர் வாகினி
மாற்றும் படை பாடி வானி அநிகம் வரூதினியே 

#46
** கொடிப்படை, படைவகுப்பு பெயர்
வரும்  கடகம் தந்திரம் சாதுரங்கம்  வரூதமற்றும் 
பெரும்படை தானை தார் தூசி பகுதி கொடிப்படைப் பேர் 
கருங்குழை சூழ்கடைக் கூழை ஒட்டு உண்டையும்  கை அணியோ 
படிரும் பெயர் யூகம் படைக்கை வகுத்தல் என மதியே 

#47
** புளிஞர் பெயர்
மறவர் புளிஞர் கிராதர் எயினர் வனசர் சில்லர் 
குறவர் கலர் வேடர் ஆறலைப்போர் மாகுலர் சவரர் 
இறவுள் வியாதர் கருநிலத்தோர் கானவரும் மக்கள் 
செறிவினை மன்பதை பைஞ்ஞிலமாகவும் செப்புவரே 

#48
** உடம்பின் பெயர்
புரம் கடம் சட்டகம் தாபரம் காத்திரம் பூட்சி அங்கம் 
குரம்பை உறுப்பு ஆகம் ஆக்கை மெய் ஆதாரம் கூடு உருவம் 
பரம் தனு மூர்த்தம் களேபரம் காயம் படிவம் பிண்டம் 
உரம்கொள் வடிவம் உடல் தேகம் மேனி உடம்பு என்பரே

#49
** உடற்குறை, பிணம், கால் பெயர்
உடற்குறை அட்டை கவந்தமும் யூபமும் ஆம் குணுங்கு 
கடப்படுகின்ற அழனும் சவமும் களேபரமும் 
அடக்கும் குணபமும் ஆகும் பிணம் இனியாய் பதம் தாள் 
நடக்கும் கழல் கால் சரண் அடி பாதமும் நன்னுதலே 

#50
** கால்கரடு, முழங்கால், தொடை, அல்குல், இடை பெயர்
நல் கால் பரடு கரடு ஆகும் சானு நவில் முழந்தாள் 
சொல் பாய வாமம் ஊரு உக்கம் துடை உருச் சோகம் கவான் 
பொற்பு ஆர் குறங்கு நிதம்பம் கடிதடம் போற்றும் அல்குல் 
கற்பால் மருங்குல் நுசுப்பு நடு இடை காரிகையே 

#51
** வயிறு, கொப்பூழ், மார்பு பெயர்
காணும் உதரம் சடரம் வயின் மடி துத்தம் குக்கி 
பூணும் வயிறு உந்தி நாபி மிதலை கொப்பூழ் இலஞ்சி 
நாணும் போகிலும் எனும் மார்பு அகலம் நவிர் மருங்கு 
கேள் நிகரில்லா உரம் ஆகம் என்று கிளத்தினரே 

#52
** முலை, தேமல் பெயர்
கிளரும் குரூஉக்கண் அம் சொற்கம் குயம் கொங்கை கேடில் தனம் 
வளரும் பயோதரம் அம்மம் நகில் முலை மாதர்க்கு என்பர் 
அளவில் சுணங்கு பொறி தித்தி உத்தி திதலையுடன் 
தளர்கின்ற வந்திகை தேமல் வரி துத்தி சால வையே

#53
**  தோள், கை, உள்ளங்கை, நகம், விரல், முதுகு பெயர்
வைத்த புயம் மொய்ம்பு தோள் வாகு பாணி வலிய அத்தம் 
கைத்தலம் யாவும் கரம் குடங்கை அகங்கை அங்கை பரம் 
வித்தகமான நகம் உகிர் அங்குலி மெல் விரல் ஆம் 
சுத்தம் புறம் வென் வெரினும் முதுகு என்று சொல்லுவரே

#54
** தோளின் மேல், கழுத்து, பிடரி
சொல்லும் சுவலும் செகிலும் நிகலமும் தோள் மிசை ஆம் 
புல்லிய கண்டம் கிரீபம் மிடறு புனை கந்தரம் 
ஒல்லும் களம் கழுத்து ஓதும் எருத்தம் பிடர்த்தலை பின் 
நல்ல கயிலும் சிறுபுறமும் பிடர் நற்பிடியே 

#55
** பின்புறம், முகம், உதடு, மூக்கு, கன்னம்
பிறக்கும் பிறகும் புறமும் அபரமும் பின்பு முகம் 
நிறக்கும் வதனமும் ஆனனமும் என்பர் நீடு முத்தம் 
துறக்கும் இதழ் ஓட்டம் பாலிகை ஆகும் அதரம் துண்டம் 
குறிக்கொண்ட நாசி கபோலம் கவுளும் கொடிறு என்பரே

#56
** பல், சிரிப்பு, மேல்வாய், உள்நா, நாக்கு பெயர்
பல் எயிறே தட்டம் தந்தம் முறுவல் பயில் நகையே 
நல்ல முறுவலும் மூரலும் ஆகும் நகை தனக்கும்  
புல்லும் அணரி ஆம் அண்ணம் அணர் ஆகும் கீழ்வாய்ப்புறம் 
சொல்லிய அண்ணம் உண்ணாத் தாலம் தாலும் நாச் சொல் நயந்தே 

#57
** கண், நெற்றி, புரூரம் பெயர்
நயனம் விலோசனம் நாட்டம் விழி நோக்கம் சக்கு அம்பகம் 
பயம் வரு நேத்திரம் தாரை கண் கோப் பார்வை பாலம் நெற்றி 
இயல் அளிகம் குளம் மத்தகம் முண்டம் இலாடம் நுதல் 
பெயரும் புருவம் புரூரம் நுதல் நல் பிருகுடியே

#58
** காது, தலை, ஆண்மயிர் பெயர்
குடிகொண்ட கன்னம் செவி காது சேகரம் கூறும் உச்சி 
முடி சென்னி உத்தமாங்கம் சிரம் கம்  நவிரம் தலை ஆம் 
குடுமி நவிர் பங்கி பித்தை புனைசிகை குஞ்சி தொங்கல் 
மடியும் சுரியலொடு ஓரியும் மைந்தர் மயிர் என்பரே 

#59
** பெண்மயிர், உடற்செறி மயிர் பெயர்
மயிர் வண்ணம் மாதர்க்குக் கூந்தல் அளகம் மராட்டம் ஐம்பால் 
பயில்கின்ற கூழை குழல் கொந்தளம் பரிசார் கதுப்புத் 
துயல்கின்ற கோதை குரல் ஓதி கேசம் சுரியல் சுருள் 
செயிர் தங்கு உரோமம் சிரோத்தம் உடம்பில் செறி மயிரே

#60
** மயிர்க்குழற்சி, மயிர்முடி, சடை பெயர்
மருவு அளகம் கொந்தளமே விலோதம் மயிர்க்குழற்சி 
தரு பின்னகம் பந்தம் முச்சி முடி கொண்டை தாழ் சுடிகை 
வரு குழலோடு சிகழிகை யாவும் மயிர்முடி ஆம் 
விரி சடிலம் பின்னல் கோடீரம் வேணி மிகு சடையே 

#61
** சந்து, தழும்பு, கழலை, நரம்பு, எலும்பு, தலையோடு பெயர்
சடம்கொண்ட கத்தும் கொளுத்தும் கழுத்தும் சந்து ஆம் இறையே 
இடங்கொள் பிறங்கு எனல் சேக்கையும் அங்கிதமும் தழும்பு ஆம் 
தொடங்கும் அரலை கழலை சிரை நாடி சூழ் நரம்பு ஆம் 
விடம்கொள் எலும்பு அத்தி என்பாம் கபாலமும் வெண்டலையே

#62
** கழியுடலின் முழுஎலும்பு, உச்சி, உறுப்பு பெயர்
வெற்றுடல் என்பு கங்காளம் குடுமி விரும்பு சிக்கம் 
தெற்றிய சூளி சுடிகை சிமையம் சிகை சிமிலி 
முற்று நவிர் முடி முச்சி ஆம் காத்திரம் மூண்ட சினை 
மற்றும் அவையவம் அங்கம் உறுப்பு என்பர் வாய்ந்தவரே 

#63
வாரிய கேள்வி மறையவர் வேந்தன் வடகலை தேர் 
ஆரியநாடன் தமிழ்நாடன் தேவை அதிபன் என்னும் 
ஓரியல்பான குணத்தான் கெயாதரத்துள் அமைத்தான் 
பேரியல்பால் ஒரு மூன்றாவது மக்கட்பேரியலே 
** மூன்றாவது மக்கட் பெயரியல் முற்றும் 

@4 நான்காவது விலங்கின் பெயரியல் 

#1
** சிங்கம் பெயர்
இயல் மிருகாபதி யாளி மடங்கல் கண்டீரவத்தோடு 
அயரும் அறுகு அரி கேசரி சீயம் பஞ்சானனமே 
வயமிகுமா வயப்போத்து நகாயுதம் வாள்வரிமா 
உயரும் முடங்குளை கோளரி சிங்கம் என்று ஓர்ந்துகொள்ளே

#2
** புலி, ஆளியானை பெயர்
கொல்லும் வயவரி தீவி சார்த்தூலம் கொடுவரியே 
வல்லியம் சித்திரகாயம் வியாக்கிரம் வாழ் வயமாப் 
புல்லும் மிருகாரி வேங்கை உழுவையும் புண்டரிகம் 
அல்கும் அறுகு புழைக்கையும் யானையும் ஆளி என்னே 

#3
** யானை பெயர்
யானை கடிவை புகர்முகம் தோல் கும்பி உம்பல் இபம் 
ஆன கரி உவாப் போதகம் சிந்துரம் அத்தி களிறு 
ஏனை மாதங்கம் கருணி நால்வாய் கயம் ஏய்ந்த தும்பி 
தானமாக் குஞ்சரம் மாதிரம் வேழம்தம் பேர் ஆகுமே 

#4
** யானை பெயர் (தொடர்ச்சி)
பேரு மதமலை தந்தாவளம் தூங்கல் பின் புழைக்கை 
வாரணம் சரம் ஒற்பவமே இரதி மலைவிலங்கு 
பாரிய நாகம் எறும்பி வழுவை பகடு ஒருத்தல் 
சாரும் களபம் வயமாக் கறையடி தந்தி செப்பே 

#5
** யானை பிறப்பால் பெறும் பெயர், யானை மதம்
** யானைக்கன்று பெயர்
செப்பும் நதத்துக் கிரி வனத்தோடு திரி சரமும் 
வைப்பர் பிறப்பு மதகரிக்கென்று மதம் கரடம் 
பொய்ப்பில் கடம் கடாம் தானம் துடியடி போதகமே 
தப்பில் களபம் கயமுனி கன்றாம் தனிக்குயிலே

#6
** குதிரை பெயர்
குரகதம் வாசி இவுளி சயிந்தவம் கோடகம் மாத் 
துரகம் கனவட்டம் பாடலம் கற்கி துரங்கம் கிள்ளை 
பரி அயமும் தூசி அச்சுவம் வாகம் பகர் கந்துகம் 
அரி குந்தம் கந்திருவம் அத்திரியும் குதிரை அன்றே 

#7
** பசு பொதுப்பெயர், பசு, எருது பெயர்
அன்றும் குடம் சுட்டொடு ஆன் பசுப் பெற்றம் கோ ஆப் பொதுப்பேர்
துன்றும் சுரபி கபிலை சுரை தேனுக் கோமளமும் 
பொன்றும் பெண்பால் சே விடை பூணி மூரி இடபம் புல்லம் 
என்றும் இறால் பாண்டில் கோபதி புங்கவம் ஏறு எருதே

#8
** எருமை, ஆண் எருமை, மலட்டு எருமை, செம்மறிஆடு
** ஆண் செம்மறி பெயர்
எருமை காரான் மேதி காரசமே மயிடம் கவரி 
வரும் அதன் நாமம் பகடு கடா ஆம் மலடு மைம்மை 
துருவை பிரமம் கொறி அசம் மை துருச் செம்மறி ஆம் 
தருவர் இதன் ஆண் கடா ஏழகம் மேழகம் தகரே 

#9
** வெள்ளாடு, மறி, கவரிமான் பெயர்
தக்க உதள் செச்சை மோத்தை வெள்ளேற்றை தரு மறியே 
மிக்க புருவை சகம் சாகளம் சாகம் வெள்ளை கொச்சை 
வற்காலி வெள்ளாடு மானமாப் பட்டம் எகினம் அன்னம் 
வைக்க கவரி கவையமா மாக் கானமா என்கவே 

#10
** கழுதை, பன்றி பெயர்
கத்தபம் வேசரி கோகு வாலேபம் கழுதை கரம் 
அத்திரி கேழல் அரி கிடி கோலம் பூதாரம் மைம்மா 
வைத்த கிருட்டி குரோட்டே எறுழி வராகம் பன்றி 
சுத்தம் கனலி களிறு ஏனம் போத்திரி சூகரமே  

#11
** வரையாடு, முள்ளம்பன்றி, மான், கலை பெயர்
சூழ் வரையாடு சரபம் வருடை எய்ப்பன்றி எய்யே 
வாழும் முளவுமாச் சல்லியம் நவ்வி மறி அருணம் 
தாழும் பிணை உழை ஏணம் குரங்கம் சாரங்கமும் மான் 
யாழின் மொழியாய் இரலை புல்வாய் கலை ஏறு என்கவே 

#12
** கரடி, ஒட்டகம் பெயர்
ஏறிய பல்லம் உளியம் வல்லூகம் கரடி எண்கு ஆம் 
கூறு உள்ளன் சம்பு நரி பூரிகாயன் கோமாயு ஒண்டன் 
சூறும் குரோட்டா இகலன் தாசோகம் இரவணத்தோடு 
ஊறும் கரபமும் ஒட்டகம் ஆகும் ஒளிவளையே 

#13
** பூனை, மரை, முயல், கீரி பெயர்
ஒளிர் பூசை பூச்சை விடருகம் பாக்கன் உயர் பவனம் 
களிதரும் மாற்சாரம் பூஞை விலாளம் கடுவன் வெருகு 
களிதரும் ஏறு என்பர் ஆவிதம் கானக்குதிரை மரை 
நளி வயமும் சசமும் முயல் கீரி நகுலம் மற்றே 

#14
** கத்தூரி, குரங்கு பெயர்
.மறுவறு நானம் நரந்தம் கத்தூரி மறி துருக்கம் 
பெறும் மற்கடம் கவி வானரம் கீசம் பிலவங்கம் ஆம் 
குறுகு பிலவகம் சாகாமிருகம் அரி கோகிலம் 
மறுகு நிரந்தரம் ஊகம் குரங்கு வலிமுகமே

#15
** பெண்குரங்கு, கருங்குரங்கு, முசு, நாய் பெயர்
வரிய பெண்பால ஆம் மந்தியும் ஊகமும் மற்று அவற்றுள் 
கரிய குரங்கு ஊகம் காரும் அதற்குக் கலை களவன் 
சுரிகொள் முசுக் கோலாங்கூலம் ஆம் ஞாளி சுணங்கன் சுவாச் 
சரியும் ஞமலி எகினம் சூரன் சாரமேயமுமே

#16
** நாய், உடும்பு, பச்சோந்தி, மூஞ்சூறு பெயர்
மேய முடுவல் சுணங்கன் நாய் குக்கனும் வேண்டும் உடும்பு 
ஆய முசலிகை கோதா ஆம் கோம்பி அரிய தண்டோடு 
ஏய் சரடம் காமரூபி முசலி எழில் ஓந்தி ஆம் 
தூய மூஞ்சூறு நல் சுந்தரி சுண்டனும் சூறனுமே 

#17
** எலி, பெருச்சாளி, அகழெலி, காரெலி
** அணில், விலங்கு ஆண்பால் பெயர்
சூறும் சிகரி எலி ஆகு மூடிகம் தொல்விருடம் 
வேறும் இரும்பன் கருப்பை கரியே அணில் வெளில் ஆம் 
மாறில் விலங்கின் பொதுப்பெயர் மாவுடன் மானும் என்பர் 
ஏறும் ஒருத்தல் போத்து ஏற்றை ஏறு ஆண்பால என்றனரே

#18
** விலங்கு பெண்பால், விலங்கு குட்டி
** எருதின் கூட்டம், வால் பெயர்
என்றும் பெடை பெட்டை நாகு பிணாப் பிணை என்ப பெண்பாற்கு 
ஒன்றும் குருளை பறழ் குட்டி பார்ப்பு மறியுடனே 
கன்றும் குழவி மழவும் இவை பிள்ளை காலி நிரை 
துன்றும் தொறுத் திறம் வால் வாலதி கூலம் தோகை என்னே

#19
** வாலின் கீழ், முதுகு, கன்னம், வால், முலைமடி
** உமிழ்நீர், இமில் பெயர்
தோன்றிய வால்கீழ் வெருகம் மஞ்சு ஆகும் முதுகு தும்பிக்கு 
ஆன்ற செவி கன்னம் தாலம் வால் தாலவட்டம் செருத்தல் 
ஏன்ற சுரை முலை யானை குதிரை இவை உமிழ்நீர் 
கான்ற விலாழி இமில் ஏற்றின் மேற்றிரள் காண் முரிப்பே

#20
** விலங்கின் கூட்டம், கொம்பு, தோல் பெயர்
காட்டிய சாலம் விருந்தம் வியூகம் கணம் குலமே 
கூட்டம் குழுத்திரள் யூதம் எப்பாற்குமாம் கோடு மருப்பு 
ஈட்டும் உலவை கொம்பு என்பர் துவக்கு அதளோடு உரிவை 
சூட்டும் உரி கத்திமம் தோல் வடகம் துருத்தி என்னே 

#21
** விலங்கு தோல், உதிரம், கொழுப்பு, முடை, ஊன் பெயர்
திரியவும் பச்சை புறணி சருமமும் செப்பு செந்நீர் 
எருவை சுடுவன் கறை சோரி புண்ணீர் இரத்தம் நெய்த்தோர் 
குருதியொடாமும் உதிரம் நிணம் நேயம் கூறு இழுதும் 
உரிய விழுக்கு ஆம் புலவு முடை ஊழ்த்தி ஊன் பூழ்தியே 

#22
** ஊன், கரு, பாம்பு பெயர்
பூவில் வள்ளூரம் பிசிதம் புறணி புலால் புலவு 
தூவு தடி தசை ஊன் விடக்கு ஆம் கருச் சூல் சினை பீள் 
மேவும் மராளம் அரவு புயங்கம் வியாளம் அராப் 
பாவு விடதரம் காத்திரம் காகோதரம் பணியே

#23
** பாம்பு பெயர் (தொடர்ச்சி)
பன்னகம் அங்கதம் போகி புயங்கம் ஆம் பாந்தள் அகி 
மன்னும் கும்பீனசம் கூடபதம் சர்ப்பம் மாசுணத்தோடு 
உன்னிய கட்செவி கஞ்சுகி நாகம் உரகம் அரி 
துன்னிய சக்கிரி வாதாசனம் தந்த சூகமுமே 

#24
** பாம்பின் படப்பொறி, நஞ்சு, கருடன் 
சூலிய தந்தமும் நான்கு கவை நாத்துளைச் செவிகண் 
வாலிய துத்தியொடு உத்தி படப்பொறி மாகரளம் 
நீலம் கடுவிடம் ஆலாலம் காளம் நிகரில் கரம் 
ஆலமும் காரியும் நஞ்சு ஆம் கலுழன் அரியூர்தியே 

#25
** கருடன் (தொடர்ச்சி), கழுகு, எண்கால்பறவை, வானம்பாடி
** நீர்க்காக்கை, நாரை பெயர்
ஊரும் வயினன் ககபதி நாகாசனன் உவணன் 
ஆரும் கருடன் எருவை உவணப்புள் ஆம் கழுகு 
வாருண்டகம் சிம்புள் சாதகமே வானம்பாடி என்பர் 
காரண்டம் நீர்க்காக்கை போதாப் புதா நாரை கண்டுகொள்ளே 

#26
** குயில், கிளி, சக்கரவாகம், புறா
கொள்ளும் களகண்டம் கோகிலம்தானும் குயில் சுகமும் 
கிள்ளை அரி தத்தை வன்னியும் ஆகும் கிளி சக்கரப்புள்ளுடன்
நேமியும் கோகமும் சக்கரவாகப்புள் ஆம் 
துள்ளும் கபோதம் நல் பாராவதம் தூதுணம் புறவே

#27
** செம்போத்து, கோழி, கவுதாரி, பகண்டை
** சிள்வீடு, சம்பங்கோழி பெயர்
புதிய நல் குக்கில் சகோரம் செம்போத்து பொரு சரணாயுதமொடு
குக்குடம் வாரணம் சேவல் உயர் கோழி ஆம் 
இதல் பூழ் சிதல் கவுதாரி பகண்டை இதல் சிவல் ஆம் 
சிதடி நெடி சில்லி சிள்வீடு கம்புள் சம்பங்கோழியே

#28
** வலியன், கொக்கு, வெண்குருகு, நாகணவாய், கரிக்குருவி பெயர்
கோலும் வயவன் வயானன் வலியான் குரண்டம் கொக்கு 
மேலும் வலாகம் பகமும் வண்டான நல் வெண்குருகும் 
சாலும் பெருநாரை நாகணவாய் பூவை சாரிகை ஆம் 
காலும் கயவாய் வலியான்குருவி கரியது என்னே 

#29
** காக்கை, காடை, மீன்கொத்தி, அன்னம்
** ஊர்க்குருவி, பருந்து பெயர்
கருமகள் காரி கொடி வாயசம் காகம் கார்க்கரடம் 
வெருவிய காடை குறும்பூழ் சிரல் மீனெறிபறவை 
பெருகிய ஓதிமம் அன்னம் எகினம் பிணிமுகம் ஊர்க்குருவி
சடகம் வியம் கங்கம் சேனமும் கூன் பருந்தே 

#30
** கோட்டான், மயில், பீலி, முருந்து பெயர்
கூகை குடிஞை குரால் கோட்டான் மஞ்ஞை சிகண்டி சிகி 
தோகை மயூரம் பிணிமுகம் ஏகாரம் சொல்லும் மயில் 
கேகயம் கூந்தல் இறகு கலாபம் கேழ் கூழை தொங்கல் 
தோகையும் பீலி முருந்து அதன் முள் ஆம் துடியிடையே

#31
** ஆந்தை, வெண்குருகு, அன்றில், கருங்கிளி
** புள்பொது பெயர்
இடையும் இருடி கூன் பிங்கலை கின்னரி ஆந்தை என்பர் 
விடையில சாரசம் புட்கரம் வெண்குருகு ஆகும் வெய்ய 
கடை பயில் அன்றில் கிரிஞ்சம் கீரம் கிள்ளை காரி என்றாம் 
புடைக்கம் போகில் சகுனம் பிணிமுகம் புள்பொதுவே 

#32
** வண்டு பெயர்
பொதுளிய தும்பி பிரசம் பிரமரம் புள்ளறுகால் 
மதுகரம் கேசரம் ஆர்பதம் தேனீ வரிக்கடைமாக் 
கதுவிய சூதகம் சாரங்கம் வண்டு கழுது சுரும்பு 
பிதவிய கீதம் அரி அளியே ஞிமிறு என்று இசையே 

#33
** விட்டில், சேவல், கோழி பெயர்
இசையும் பதங்கம் சலபமும் விட்டில் எழாலொடு போத்து 
அசையும் மயில் பெறும் அல்லாத புட்கள் ஆண்பால் சேவல் ஆம் 
வசையில் பெடை பெட்டை பெண்பால கோழி வரு குடிஞை 
நசையில் இரண்டு ஒழித்து யாவும் பெண்பால் அளகு அல்ல நன்கே

#34
** பறவை இளமை, முட்டை, அலகு, இறகு பெயர்
நன்றாய பிள்ளையும் பார்ப்பும் பறவையின் நல் இளமை 
ஒன்றாம் சினையுடன் அண்டமும் முட்டை உயர்ந்த துண்டம் 
சென்றாய மூக்கும் இதன் வாய் அலகு சிறை குரலோடு 
இன்றாய கூழை பறை தூவி பிஞ்சம் இறகு என்பரே 

#35
** புள்ளொலி, முதலை, மகரம் பெயர்
படங்கொள் துழனி பல புள்ளொலிக் கூட்டம் பார்க்கில் வன்மீன் 
இடங்கர் கராவும் முதலை மகரம் சுறா இறவே 
தடம்கொள் இறால் மீனம் மச்சம் சகுலி வகுலியுடன் 
அடங்கும் மயிலை சலசரம் மீன் என்று அறைவர்களே 

#36
** மீன் வகை, சங்கு பெயர் 
அறைகின்ற நூறை மலங்கு கெடிறு கெளிறு அனந்தம் 
பறைகின்ற மீன் பேர் வழக்கினுள் காண்க பணிலம் வளை 
குறை ஒன்றில் வாரணம் சங்கு சலஞ்சலம் கோடு நத்து 
மறைகின்ற நாகு சுரிமுகம் கம்பு வலம்புரியே 

#37
** கிளிஞ்சல், நத்தை, தவளை, ஆமை, தேள் பெயர்
புரியும் எருந்து இறல் ஏரல் கருநந்து நாகு பொற்பின் 
சுரிமுகம் நத்தை மரை தேரை நீகம் தவளை சொல்லில் 
அரி இவை மண்டூகம் கச்சபம் கூர்மம் கமடம் அஞ்சித் 
திரிதரும் ஆமை தெறுக்கால் விரிச்சிகம் தேள் அது என்னே

#38
** சிலந்தி, கறையான், நண்டு, நாகரவண்டு, எறும்பு பெயர்
தெள்ளும் உலுதை சிலம்பி சிலந்தி சிதலை செல்லோடு 
அள்ளுறும் ஆழல் கறையான் குளிர் நண்டு அலவனுடன் 
நள்ளி களவனும் கற்கடகம் முசு நல் உளு ஆம் 
நொள்ளையும் நாகரவண்டு ஆம் உறவியும் நுண் எறும்பே 

#39
** எறும்பு (தொடர்ச்சி), புழு, தேனிறால், தேன் பெயர்
எள்ளும் பிபீலிகை கீடம் கிருமி இவை புழு ஆம் 
கொள்ளும் பிரசமும் கோல் தேன் இறால் அதன் கூடு அது என்பர் 
கள்ளும் நறவம் நறா மது மட்டுக் களி பிரசம் 
தெள்ளு மகரந்தம் கொங்கு தேன் வேரியும் தீட்டினரே 

#40
தீட்டும் மறை பயில் நாவினன் என்றும் செழுந்தமிழ் நூல் 
கேட்ட செவியினன் கேளா அறிவன் கெயாதரத்துள் 
ஈட்டிய சொற்பொருள் எல்லாம் தொகுத்து ஈரிரண்டாவது 
காட்டிய தொல்லை விலங்கின் பெயரியல் கண்டுகொள்ளே 
** நாலாவது விலங்கின் பெயரியல் முற்றும் 

@5 ஐந்தாவது மரப் பெயரியல் 

#1
** கற்பகம், சந்தனம், அகில் பெயர்
கொந்து ஆரும் சந்தானம் தேவதாரம் பாரிசாதம் குன்றா 
மந்தாரம் கற்பகம் ஆகும் ஐந்தாரும் மலையம் சந்தம் 
சந்தாரம் சாந்தம் படீரம் ஆரம் சந்திரதிலதம் 
அம் தாருப் பூழில் அகில் காகதுண்டம் அகருவுமோ 

#2
** அரசமரம், ஆலமரம், மருதமரம்,  வஞ்சிமரம் பெயர்
கருதும் பணை போதி அச்சுவத்தம் பிப்பலம் கணவம் 
அரசு மராமரம் ஆகும் திருமரம் ஆல் வடம் தொன்மரமே
பழுமரம் காமரம் கோளி மென் பூதவம் ஆம் 
மருது ஆம் அருச்சுனம் வானீரம் வஞ்சுளம் வஞ்சி என்னே  

#3
** சண்பகம், மராமரம், மகிழமரம், இத்திமரம்
** வேங்கைமரம், விளாமரம், செருந்தி மரம் பெயர்
வஞ்சம்இல் சண்பகம் செண்பகம் சாலம் மராமரமா 
எஞ்சல்இல் ஆச்சா வகுளம் இலஞ்சி மகிழ் இரத்தி 
விஞ்சும் இறலி திமிசு கணி வேங்கை வெள்ளில் விளாப் 
பஞ்சரத்தோடு செங்கோடு செருந்தி என்பான் மொழியே

#4
** பாதிரி, எட்டி,  பலா, கோங்கு, குருந்தம், அசோகு
** திலகம், பச்சிலை பெயர்
பாடலம் பாதிரி காஞ்சுரை எட்டி பனசம் பலாக் 
கூடு இணராம் கன்னிகாரமும் கோங்கு குந்தம் குருந்தம் 
காடுசெய் பிண்டி அசோகு செயலை காகோளியும் மஞ்சாடி
திலகம் பசும்பிடி பச்சை தமாலம் என்னே 

#5
** மாதுளம், சுரபுன்னை, தாதிமாதளை, எலுமிச்சம்
** நாரத்தம், தாழை, முள்முருக்கு பெயர்
மாதளை மாதுளங்கம் கழுமுள் சுரபுன்னை வழை 
தாதிமம் ஆம் தாதிமாதளை சம்பம் முருகு எலுமிச்சு 
ஓது நரந்தம் நாரத்தம் முடங்கல் மடி கண்டலே 
கேதகை கைதையும் தாழை கவிர் கிஞ்சுகம் முருக்கே

#6
** அகத்தி, புனமுருங்கை, குருக்கத்தி, குமிழ்
** கடுக்காய், நெல்லி, புளி பெயர்
முருகு உலா அச்சம் அகத்தி புழகு புனமுருங்கை 
குருகு குருக்கத்தி மாதவி கூம்பல் கடம்பல் குமிழ் 
அரிதகி ஆகும் கடு நெல்லி ஆமலகம் புளி திந்திருணி
எகினமொடு ஆம்பிலம் சிந்தம் சிந்தூரமுமே 

#7
** மூங்கில், கமுகு பெயர்
சிந்தைசெய் விண்டல் கிளை வேணு வேரல் திகிரி கழை 
சந்தி பணை பாண்டில் கீசகம் ஓங்கல் வேய் தட்டை வரை 
முந்தூழ் வெதிர் காம்பு தூம்பு அமை வேழம் முளை திரிகண் 
கந்தி நறும் பாகு பூகதம் பூகம் கமுகொடு ஐந்தே 

#8
** கரும்பு, புன்னை, இலவு, களா, பருத்தி, பனை பெயர்
கன்னல் கழை,வேழம் இக்குத் தரும் நல் கரும்பு புன்னை 
புன்னாகம் சன்மலி பொங்கர் இலவு ஆம் களாக் கள ஆம் 
பன்னல் காற்பாசம் பருத்தி புற்றாளி பனை பெண்ணை போந்து 
துன்னிய நீலம் கருந்தாளுடன் தாலம் ஓதினரே 

#9
** ஈரப்பலா, ஆத்தி, கருங்காலி, மாமரம், பிரம்பு பெயர்
ஓதிய ஆசினி ஈரப்பலா ஆம் உடை குடை வேல் 
தாதகி ஆர் ஆகும் ஆத்தி கதிரம் கருங்காலிதான் 
சூதமரம் சேகரம் மாழை மா ஆம்பிரம் சொல்லில் கொக்கு ஆம் 
சாதி பிரம்பு வெதிரமுடன் சூரல் தப்பில்லையே 

#10
** தேறு, இலந்தை, கொன்றை, தேக்கு
** வில்வமரம், அழிஞ்சில், தணக்கு பெயர்
இல் இலம் தேறு ஆம் இரத்தி இலந்தை இதழி கொன்றை 
சொல்லிய தாமம் கடுக்கை சாகம் சாதி தேக்கு அது என்பர் 
வில்லுவம் மாலூரம் கூவிளம் அங்கோலமே அழிஞ்சில் 
புல்லிய செம்மரம் ஆகும் நுணாவும் புனை தணக்கே 

#11
** கடம்பு, வாழை, வன்னி, அத்தி, எருக்கு, வேம்பு
** ஏலம், நாவல் பெயர்
புனை தரு நீபம் கதம்பம் கடம்பு ஆம் புகல் கதலி 
வனையும் அரம்பையும் வாழை கலிகமும் வன்னி சமி 
இனையும் உதும்பரம் அத்தி அருக்கம் எருக்கு நிம்பம் 
நனை மலர் வேம்பு துடி ஏலம் சம்புவும் நாவல் என்னே

#12
** ஞாழல், குங்குமம், ஆமணக்கு, தெங்கு, காயா பெயர்
நாகம் ஆம் சுள்ளி நறவமும் ஞாழலே நல் மரவம் 
ஆகும் துருக்கமும் குங்குமம் ஏரண்டம் ஆமணக்குத் 
தாகம் கெடு நாளிகேரம் தடம் தெங்கு தாழை என்பர்
போகிய காயாவே காசையும் மால்வண்ணப்பூவையுமே 

#13
** தான்றி, கோளி, வண்டுணாமரம், மரம்பொது பெயர்
வைத்த நல் தான்றி கலித்துருமம் மலரின்றி நல் காய் 
தொத்திய பாதவம் கோளி கணி செண்பகம் தொடர்ந்து 
மொய்த்து வண்டு உண்ணா மரம் சாகி பாதவம் மூலம் தருத் 
தத்துமரமத்திரி சாலம் பூருகம் தாபரமே 

#14
** சோலை, காவற்காடு பெயர்
பரந்த தருக்குழாம் உய்யானம் தண்டலை பைம்பொழில் காத் 
துரந்து உத்தியானமொடு ஆராமம் கானலும் சோலை என்பர் 
புரந்த பொதும்பர் ஆம் கோடரம் பொங்கர் மரச்செறிவு 
நிரந்த அரணம் மிளை காவற்காடு என்று நேர்ந்தனரே 

#15
** காடு பெயர்
நேர்ந்த பழுவம் கடம் வியல் கட்சி நெடும் ககனம் 
காந்தாரம் கானனம் கானம் அடவி கடறு பொச்சை 
சேர்ந்த முளரி களரி குறும்பொறை தில்லம் விடர் 
காய்ந்த வனம் காண்டம் ஆரணியம் சுரம் காடு என்கவே 

#16
** முள், இறும்பு, முண்டகம், ஆசினி, தொண்டை, சிறுகீரை பெயர்
கண்டகமே கடு முள் ஆம் அரில் தூறு கான் இறும்பு 
முண்டகம் முள்ளுடை மூலம் அரி கலை மொய் வயிரம் 
கொண்ட காழ் ஆசினி சேகு மரக் காழ்ப்புக் கொவ்வை விம்பம் 
தொண்டை சிறுகீரை சாகினி சில்லியும் சொல் பரிந்தே 

#17
** குரா, அலரி, நந்தியாவத்தம், குறிஞ்சி பெயர்
பரவிய கோட்டம் குடிலம் குரவம் பலாசதனைப் 
பிரம தரு என்ப கோவிதாரம் குராப் பின் அலரி 
கரவீரத்தோடு கணவீரம் நந்தியாவத்தம் வலம்புரி
எனல் ஆகும் கொரண்டம் குறிஞ்சி புரிகுழலே 

#18
** முடுகாடு, கரிகாடு, சாகை பெயர்
புரி இலை ஊழ்த்த முதுகாடு மூதை பிறங்கியம் ஆம் 
சுரமொடு பொச்சை கொடும் கரிகாடு துணை பணை கோடரமொடு
பொங்கர் சினை கோடு கொம்பு உறுப்பு ஆர் பிறக்கம் 
தரு விடபம் காம்பு உலவை கப்புக் கொப்புச் சாகை என்னே 

#19
** இலை, தளிர் பெயர்
சாற்றிய பத்திரம் பன்னம் தமாலம் தழை தளமோடு 
ஏற்று பலாசம் சதனம் சதம் அடை என்பர் இலை
மாற்றும் தளிர் கிளை வல்லரியே முறி மஞ்சரியோடு 
ஆற்றும் கிசலையம் பல்லவம் நல்ல அலங்கலுமே

#20
** தளிர்த்தல். வெண்குருத்து, பூங்கொத்து, காய், கனி பெயர்
கலித்தல் இலிர்த்தல் குழைத்தல் தளிர்த்தல் தழைத்தல் என்ப 
வலித்த முருந்து அதன் வெண்குருத்து ஆம் மஞ்சரி இணரே 
பலித்த துணர் தொத்துக் கொத்துக் குலை வல்லரி பல்லவம் 
குலித்த திவளி காய் என்ப பழம் கனி கொள் குயிலே 

#21
** துளசி, காந்தள், சிறுபூளை, எள், ஊமத்தை, மிளகு, மஞ்சள் பெயர்
குல்லை துளவம் துழாய் காந்தள் வெண்தோன்றி கோடல் பற்றை 
செல்லும் உழிஞை சிறுபூளை எண்ணும் திலமும் எள் ஆம் 
நல்ல உன்மத்தகம் ஊமத்தை நாடும் கறி மரிசம் 
மல்லல் மிளகு ஆம் அரிசனம் மஞ்சள் அரித்திரமே 

#22
** திப்பிலி, அதிமதுரம், இஞ்சி, இலுப்பை, சோளம்
**  கருந்தினை, செந்தினை பெயர்
அஞ்சலி திப்பிலி மாகதி அட்டி மதுகம் 
இஞ்சியே ஆத்திரகம் ஆம் இருப்பை மதூகம் என்க 
எஞ்சிய சொன்னலும் சோளமும் ஆகும் இறுங்கு இறடி 
விஞ்சு கருந்தினை ஏனலும் செந்தினை மெல்லியலே 

#23
** இளம் கொம்பு, தழை, பயிர், நெல்,  குளநெல்
** இருவி, கவ்வை, கதிர் பெயர்
மெல் இளம் கொம்பர் வளார் ஆம் உலவை தழை பயிர் கூழ் 
நெல்லு நல் சாலி விரீகி குளநெல்லு நீவாரம் ஆம் 
ஐவனம் சாரல்விளைநெல் இருவி அருவி புன் தாள் 
கவ்வையும் எள்இளம்காய் ஆம் குரல் ஆம் கதிர் வல்லியே 

#24
** கொடி, மல்லிகை,  முல்லை, இருவாட்சி பெயர்
வல்லி இலதை கொடி நூல் இரத்தியும் வள்ளியும் ஆம் 
மல்லிகை ஆகும் விசகலி மௌவலும் மாலதி ஆம் 
முல்லை தளவம் சிறுசெண்பகம் சாதி பித்திகையே 
நல்ல கருமுகை ஆம் இருவாட்சி மயிலை நன்கே 

#25
** சிறுதூறு, புன்கு, தகரம், இண்டு, கழல்
** கடுகு, வள்ளை, சேம்பு பெயர்
நன்காம் பதுக்கை அரில் சிறுதூறு நவில் காஞ்சனம் 
புன்கு ஆம் தகரம் தமாலம் இண்டு ஈங்கை கழல் மூழல் ஆம் 
மன்கார்க் கடுகு கடிப்பகை ஐயவி வாய்ந்த வள்ளை 
என்கால் கொள் நாளிகம்தன்னைச் சகுடம் சேம்பு என்று இசையே

#26
** பாசி, வழுதுணை, காஞ்சொறி, பஞ்சாய்க்கோரை
** தருப்பை,  வாள்கோரை பெயர்
சைவலம் நாரம் செவ்வீரம் பீனம் பாசிதான் பதிகம் 
வவ்வும் வழுதுணை வங்கம் பிருகதி வங்கணம் ஆம் 
எவ்வம்இல் காஞ்சொறி கண்டூரம் சாய்ப்புல் எருவை குசை 
செவ்விய தெர்ப்பை செருந்தி வாட்கோரை திருந்திழையே 

#27
** நீர்முள்ளி, வெட்சி, கிலுகிலுப்பை, கற்றாழை
** கருணை, வைக்கோல் பெயர்
திருந்திய முண்டகம் ஆம் முள்ளி செச்சை சிந்தூரம் வெட்சி 
மருந்து என்பர் புல்லும் மரம் முதல் யாவும் வரு பகன்றை 
பொருந்து கிலுகிலுப்பை ஆம் குமரி கற்றாழை பொற்பார் 
பரும் கருணை கந்தம் வை அழி வைக்கோல் பலாலம் பன்னே

#28
** பதர், தூற்றா நெற்பொலி, கூலம், பகன்றை
** அடம்பு, சீந்தில், வேர், கிழங்கு பெயர்
பதடி பதர் பொங்கழி தூற்றா நெற்பொலி பாகல் என்றும் 
துதவிய கூலம் சிவேதை பகன்றை சோபாலிகையே 
உதவும் அடம்பு ஆம் அமுதவல்லி சீந்தில் ஓங்கு சடை 
கதுவிய மூலம் கிழங்கு தூர் வேர் சிவை கந்தம் என்னே

#29
** கூதாளம், பீர்க்கு, தாளி, முதிரை, நாணல், பூவிதழ் பெயர்
கருந்துடி கூதாளம் கூதாளி கல்லகாரம் குளிரி 
பரிந்டு அலரும் பீரம் பீர்க்கு ஆகும் தாளியும் பஞ்சிகம் ஆம் 
அருந்து முதிரை அவரை துவரை முதலானவாம் 
பொருந்திய காசையும் நாணல் ஏடும் தோடும் பூவிதழே 

#30
** தாமரை பெயர்
இதழ் புனை முண்டகம் அம்போருகம் புண்டரீகம் இண்டை 
சதபத்திரி அம்புயம் அரவிந்தம் சரோருகம் ஒண் 
பதுமம் திருமலர் கோகனகம் பங்கயம் நளினம் 
முது வனசம் கஞ்சம் வாரிசம் பற்மம் முளரி என்னே

#31
** கருங்குவளை, செங்குவளை
** நெய்தல், அல்லி பெயர் 
என்றும் குவலையம் நீலம் நீலோற்பலம் இந்தீவரம் 
குன்றிய பானலும் காவியும் ஆகும் கருங்குவளை 
நின்ற அரத்தமும் உற்பலமும் செங்குவளை நெய்தல் 
கன்றுங் குவலையம் அல்லி குமுதம் கயிரவமே 

#32
** பூங்கொட்டை, அகவிதழ், புறவிதழ், மொட்டு பெயர்
வல்ல பொகுட்டுப் பூங்கொட்டை அகவிதழ் அல்லி மற்றும் 
புல்லி புறவிதழ் கோரகம் மொட்டுப் புனை கலிகை 
நல்ல முகுளம் முகிழ் முகை போகில் நனை கலிகம் 
மெல்லென் அரும்பு சினை சாலிகை கண்ணி வேண்டுவரே

#33
** அவிழ்பூ, பன்னாடை, வாகை பெயர்
வேண்டும் துணர் இணர் வீ மலர் போது விரி அலர் தார் 
ஈண்டும் அலரி இவை அவிழ்பூ நெய்யரி நாரரி 
தூண்டும் பன்னாடை படையில் கொடையில் நல் சூதில் வென்றோர் 
யாண்டும் புனைவது வாகை அம் போது என்று இயம்பினரே 

#34
** பழம்பூ, மகரந்தம், பூமாலை பெயர்
இயம்பிய செம்மல் பழம்பூ மகரந்தம் கொங்கொடு என்றும் 
அயம் தரு கேசரம் பூந்தாது அணியல் அலங்கல் கண்ணி 
பெயர்ந்த தொடையல் தொடை தாமம் கோதை பிணையல் தொங்கல் 
வயங்கு தெரியல் ஒலியல் தொடலை தார் மாலை என்னே

#35
**  தலைமாலை, நெற்றிமாலை பெயர்
மாலும் சிகழிகை வாசிகை சூட்டோடு இலம்பம் நுதல் 
மேலணிமாலை தொடலையும் கண்ணியும் வேண்டுவர் முன் 
நூலின்படி கண்டு காணாதவையும் நுவன்று அறிக 
காலும் பரிமளக் கொங்கு ஆர் மலர்க் குழல் காரிகையே 

#36
காசிப கோத்திரம் வாழவந்தோன் தென்கலைத் தமிழ் தேர் 
மாசில் பெருந்தகை மாறா அறிவன் மலர் அயனும் 
கேசவனும் புகழ் தேவை நன்னாடன் கெயாதாத்துப் 
பேசி அமைத்தனன் ஐந்தாவது மரப்பேரியலே 
** ஐந்தாவது மரப்பெயரியல் முற்றும்

@6 ஆறாவது பல்பொருட் பெயரியல் 

#1
** பொன் பெயர்
இரணியம் ஆடகம் மாழை சாம்பூநதம் ஈழம் சொன்னம் 
பொருள் கனகம் பீதம் சாமீகரம் சாதரூபம் பொலம் 
அரி நிதி காணம் தமனியம் காஞ்சனம் மாடு அருத்தம் 
தரு பொன் நிதியம் வெறுக்கை தனம் பூரி சந்திரமே 

#2
** பொன் பெயர் (தொடர்ச்சி), மணி, அகன்மணி
** முத்து,  இருநிதி பெயர்
திரவியம் ஏமம் தொடுக்கம் நிதானம் திகழ் ஆசை பொன் 
வரைவியல் காசு மனவு மணி ஒன்பது வகை ஆம் 
அரதனம் நல்ல சிலாகை அகல் மணி ஆரம் முத்துத் 
தரளமும் நித்திலம் ஆம் பற்மம் சங்கம் தரு நிதியே 

#3
** பண்டாரம், மாணிக்கம், பவளம், வெள்ளி பெயர்
நிதியும் பதினால் வகை கோசம் தண்டம் பண்டாரம் நிறை 
பதுமராகத்தொடு மாமணி மாணிக்கம் ஆம் பவளம் 
துதி தரு வித்துருமம் துகிர் துப்புத் துவர் அரத்தம் 
விதிகொள் இரசதம் தாரம் களதவுதம் வெள்ளியே 

#4
** வெண்கலம், பித்தளை, செம்பு, இரும்பு, எஃகு பெயர்
வெல்தரும் கஞ்சமும் வெண்கலம் ஆர்கூடமும் இரதி 
சொல்லிய மாயாபுரி பித்தளை வடு சுற்பம் செம்போடு 
ஒல்லும் உதும்பரம் தாம்பிரம் சீருணம் ஓங்கு இரும்பு 
நல்ல கருந்தாது அயம் எஃகம் சத்திரம் நாடில் பொன்னே 

#5
** காரீயம், வெள்ளீயம், தரா, பளிங்கு, வயிரம்
** சந்திர சூரிய காந்தம் பெயர்
நாகம் காரீயம் சீருள் சீசம் பத்திரம் நல்லவங்கம் 
ஆகும் மதுகம் தராப் படிகம் பளிங்கு ஆம் வயிரம் 
ஏகிய வச்சிரம் சோமன் இரவி ஒளியில் என்றும் 
பாகுபடுவது சந்திர சூரிய காந்தம் பற்றே 

#6
** காழ், அரும்பண்டம், பலகறை, பலபண்டம்
** கர்ப்பூரம், கத்தூரி, சாந்து பெயர் 
பருக்கை காழ் தாரம் அரும்பண்டம் வட்டி கவடி பண்டம் 
அருக்கிய கூலம் வளம் பண்ணியம் பண்ணிகாரமும் ஆம் 
மருக்கொள் கர்ப்பூரம் பளிதம் கத்தூரியும் மான்மதமே 
தருக்கும் புலி பீ தம் காலேகம் வட்டிகை சாந்து என்பரே 

#7
** சாந்தின் பொதுப்பேர், செஞ்சாந்து, பூசுவன
** மயிர்ச்சாந்து, குழம்பு, அப்புதல் பெயர்
சாந்தின் பொதுப்பேர் கலவை காலேகம் தளம் விரை செஞ்சாந்து
என்பர் குங்குமம் அங்கராகம் பூசுவ தகரம் 
சேர்ந்ததோர் காசறை ஏலம் மயிர்ச்சாந்து தேய்வை செச்சை 
ஆர்ந்த குழம்பு சதுர்த்தலும் கொட்டலும் அப்புதலே 

#8
** பூசுதல், தொய்யில், திலகம், நுதல்மேற்குறி பெயர்
புலர்த்தல் வரித்தலே பூசுதல் பொற்பு ஆர் மகளிர்க்கென்று 
நலத்த நல் ஆகத்து எழுது வரித் தொய்யில் நல் சுடிகை 
மலைத்த திலதம் திலகமும் சுட்டி மடந்தையர்க்கு 
மிலைத்த திருமுண்டம் புண்டரம் ஆம் நுதல்மேற்குறியே 

#9
** சிந்தூரம், சாதிலிங்கம், குங்கிலியம், அரக்கு
** பெருங்காயம், சாமரம் பெயர்
குலம்கொண்ட சேலேகம் சிந்தூரம் இங்குலிகம் இது சாதிலிங்கம்
மென் குற்குலும் குங்குலுவும் குங்கிலியம் என்பர் 
இலங்கும் அரக்கு ஆம் அரத்தம் துப்பு இங்கு பெருங்காயம் ஆம் 
துலங்கும் கவரியே சாமரம் சாமரை சொல் துணிந்தே 

#10
** விறகு, ஓமவிறகு, எரிகடைகோல்
** அச்சுதம், கடைக்கொள்ளி பெயர்
துவர் இந்தனம் காட்டம் ஆகும் விறகு சுடு சமிதை 
இவர்கின்ற ஓமவிறகு என் எரிகடைகோல் ஞெகிழி 
அவிரும் அறுகும் அரிசியும் கூடியது அச்சுதம் ஆம் 
கவரும் முளரி அலாதம் இராதம் கடைக்கொள்ளியே

#11
** கரி, சாம்பல், சுண்ணச்சாந்து, புகை
** நறும்புகை, பஞ்சின் நுண் நுதி பெயர்
கந்துள் இருந்தை கரி சாம்பல் ஆம் வெண்பலி அடலை 
நந்தும் சுதையும் களபமும் ஆகும் நறும் சுணச்சாந்து
உந்தும் அரி தூமம் ஆவி புகை வெடி ஓங்கு நறை 
நுந்தும் புகை குய் குரூஉப்புகை துய் பஞ்சின் நுண் நுதியே 

#12
** பொடி, இலவின்பஞ்சு
** கரித்து உண்ணும் சிற்றுண்டி, குழம்பு பெயர்
நுண்ணென் பிதிர் சிதர் சின்னம் பராகம் நுணுகு ததர் 
சுண்ணம் பொடி நீறு பூதி துகள் நூறு தாது சன்னம் 
கண்ணும் குறுமலும் காட்டு இலவின்பஞ்சு பூளை கரித்து 
உண்ணும் சிற்றுண்டி கருனை குழம்பு பாகு ஒன்றினவே 

#13
** சோறு பெயர்
ஒன்றும் அசனம் மிதவை மடை கூழ் உணவு அயினி 
சொன்றி நிமிரல் பதம் மூரல் போனகம் துப்புப் பொம்மல் 
துன்றிய ஓதனம் அன்னம் பகர் உணாச் சோறு அமலை 
அன்றியும் பாளிதம் வல்சி பால் புன்கம் அடிசிலுமே 

#14
** உண்ணல், தேவர்க்குணவு, தின்பன, உண்பன பெயர்
அசித்தல் நுகர்தல் மிசைதல் அருந்தல் அயிறல் உண்டல் 
பொசித்தலொடு துய்த்தல் மாந்தலும் நுங்கலும் பொங்கு உணல் ஆம் 
திசைப் பலியே சருத் தேவர்க்கு அமுது அவி திற்றி துற்றி 
மிசைத்துடன் தின்பன உண்பன ஆம் என்று வேண்டினரே

#15
** பிட்டு, இலட்டு, அப்பம், தினைமா,  கஞ்சி பெயர்
வேதகம் ஆகிய ஆவி கஞ்சம் வெந்தை பிட்டு இலட்டு 
மோதகம் பூரிகை அஃகுல்லி சக்குல்லி மூண்டம் நொலை 
பேதகம் ஆகிய சிற்றுண்டி பிண்டி நுவணை இடிக்கு
ஓதினர் கஞ்சியும் காடியும் மோழை என்று ஒண்ணுதலே 

#16
** தயிர், நெய், பால், மோர், தேன் பெயர்
ஒண் தயிர் ஆகும் அளையும் ததியும் நெய்க்கு ஓது துப்பும் 
கொண்ட விழுதும் கிருதமும் நேயமும் கூறுவர் பால் 
உண்ட அமுது பயம் கீரம் என்பர் மோர் ஓதில் முசர் 
மண்டிய தக்கிரம் தேன் ஆம் பிரசம் மது இவையே 

#17
** சர்க்கரை, கண்டசருக்கரை, பானம்
** சாவாமருந்து பெயர்
வைத்த விசையம் குளம் கன்னல் கட்டி மருவிய பாகு 
ஒத்தியல் சர்க்கரை அக்காரம் ஆகும் உரிய கண்டம் 
பத்திசெய் பாளிதம் கண்டு ஆகும் பானம் பருகுவன 
அத்தி தரும் அமுது ஆம் என்பர் சாவா அருமருந்தே 

#18
** கள் பெயர்
மரு மாலி பாடலி மாதவம் குந்தி மருட்டு மட்டுப் 
பிரசம் மதுவம் தணியல் படு வேரி தொண்டி பிழி 
சுரை அரி தேறல் சாறு ஆம்பல் சுலோகி சுமாலி தொப்பி 
முருகு விளம்பி அளி சிக்கரம் சாதி மோகி கள்ளே

#19
** விலங்கின் உணவு, துணைக்காரணம், இரண்டு
** பேய்த்தேர், நிரை பெயர் 
கருதில் விலங்கின் உணவு குளகு ஆம் துணைக்காரணம் 
தரும் உபகாரணம் துப்புடன் சாதனம் சாற்று இரண்டு ஆம் 
பெருகும் உகளம் உபையம் வெண்தேர் கானல் பேய்த்தேர் அதாம் 
நிரல் ஒளி பந்தி ஒழுங்கு நிரை என்பர் நீதவரே

#20
நீடும் பதமும் பொருளும் தெரிந்து நிலைபெறவே 
நாடுமவர்க்கு நலம்தருமாறு நயத்தொடு என்றும் 
கேடும் பெருக்கமும் இல்லாத தேவைக் கெயாதரன் சீர் 
பாடும் தமிழில் ஆறாவது பல்பொருட்பேரியலே 
** ஆறாவது பல்பொருட் பெயரியல் முற்றும் 

@7 ஏழாவது செயற்கை வடிவிற் பெயரியல் 

#1
** சூலப்படை, மழு, சக்கரம் பெயர்
பொரு முத்தலைக்கழு முத்தலைவேல் சூலம் பொன் கழுமுள் 
பரசு நவியம் மழுப் பாலம் நல்ல படு கணிச்சி 
செருஇல் வளை ஆழி எஃகம் சுதரிசனம் திகிரி 
பருதியுடன் நேமி சக்கரம் ஆம் என்பர் பால்மொழியே

#2
** வில் பெயர்
மொய் சிலை கார்முகம் கோதண்டம் சாபம் முனி தனுவே 
வெய்ய சராசனம் வேணுக் கொடுமரம் வில் தவராம் 
சைவபிரான்வில் பினாகம் திருமால்வில் சார்ங்கம் என்ப 
எய்யும் விசையன்வில் காண்டீபம் வானவில் இந்திரற்கே

#3
** அம்பு பெயர்
திரி சரம் பாணம் ககம் காண்டம் சித்திர புங்கம் பல்லம் 
வரி கணை ஆசுகம் கோல் கங்கபத்திரம் வாளி அம்பு 
பரிமாற்கணமே விசிகம் சிலீமுகம் கோப் பகழி 
பொரு குதை தோணி வண்டு அத்திரம் சாயகம் புங்கவமே 

#4
** அம்புக்கட்டு, அம்புத்தலை, மொட்டம்பு
** வேல், கைவேல் பெயர்
புங்கம் பகழி புதை அம்புக்கட்டு ஆம் உடு மரக்கோல் 
தங்கும் உதணம் மொட்டம்பு ஆகும் சத்தி உடம்பிடி வேல் 
எங்கும் விட்டேறு அரணம் குந்தம் ஞாங்கர் அயில் எஃகம் ஆம் 
வெம் கப்பணம் தோமரம் இவை கைவேல் விகற்பம் கொள்ளே 

#5
** வச்சிரப்படை, வாள் பெயர்
கொய்தரு சம்பம் குலிசம் வச்சிரம் கோ அசனி 
வெய்ய கரவாளம் கட்கம் கரவாரி வேணு வஞ்சம் 
நைதரு நாட்டம் கடுத்தலை கண்டகம் நாந்தகம் வாள் 
ஐய உவணி நவிர் கோணம் இன்னும் அசி கண்டமே 

#6
** ஈர்வாள், உடைவாள், கழுமுள், கொடுவாள், உலக்கை பெயர்
கரபத்திரம் ஏவு வேதினம் ஈர்வாள் கதை தடி தண்டு 
எரி ஒத்த பீலித்தண்டு எஃகமுடன் பிண்டிபாலம் என்க 
சுரிகை உடைவாள் கழுமுள் கழுக்கடை சூழ் கொடுவாள் 
பரிய குயம் புள்ளம் ஆகும் முசலம் உலக்கை பன்னே

#7
** எழு, பல் படைக்கலம், நாராசம், உளி பெயர்
பரிகம் எழுவே கணையப்படை பல் படைக்கலம் முற்கரம்
ஏதி மட்டி முசுண்டி சங்கே பட்டம் கூர்த்திகை காத்திரி ஆம்
இருப்புமுள் தாறு நாராசம் சலாகை செப்பில் 
மருவு தறிகை உளி கணிச்சிப் பேர் வழங்குபவே 

#8
** குளிர், சாந்து முதலானவை பயில் கலம்
** பொற்கொல்லன்சின்னத்தட்டு
** ஆயுதக்கூர்மை பெயர்
குளிர் இலைமூக்குஅரிகத்தி பீடிகை துமானம் கொய் தார் 
நளிதரு சாந்து முதலானவை பயில் நல் கலம் ஆம் 
பொளிதரு பொற்கொல்லன்சின்னத்தட்டு ஆம் கன்னம் பூ நிசிதம் 
வளர் நுதி வை ஆர் வசி வயிர் கூர் அயில் வள்ளொடு அள்ளே 

#9
** ஆயுதப்பொது, நுனி,  அம்புக்கூடு,  படையுறை பெயர்
அடு படை சாதனம் தானை படைக்கலம் ஆயுதமே 
கடுமுள் கருவி கழுமுள்ளொடு துப்பும் காட்டும் என்பதொடு
நுதி நுங்கி நுனை முனை ஆம் ஆவம் தூணி என்பர் 
தடறு படையுறையே கருவிப் புட்டில்தான் அறியே 

#10
** கவசம், தோல்பலகை பெயர்
அரணம் தகைபாடி சாலிகை மெய்யுறை ஆசு கண்டம் 
சுரிகை பரம் பாரம் வாரணம் வாரம் தொடரும் மெய் சூழ் 
கருவி கசை தம்பம் ஆகும் கவசம் கடகு தட்டு 
மரவட்டணம் என்பர் தோல்பரம் தோல் தோல்பலகை மற்றே

#11
** கேடகம், குதிரைக்கயிறு, பருமம், கடிவாளம் பெயர்
பலகை ஆம் கேடகம் தோல் வேதிகை சேடகம் பரிசை 
குலவிய கைப்புடை கோதை கைக்கட்டி குசை வற்கம் ஆம் 
கலனை பருமம் படை பரம் பல்லணம் பண் கருவி 
கலினமும் நல்ல கறுழும் குதிரை வாய்க்கண் கயிறே 

#12
** கழுத்திலிடுகயிறு, தளை, இரும்பு, காலணி பெயர்
கருதும் கவடு புரோசு கழுத்திலிடுகயிறு ஆம் 
தருகு நிகளம் தொடர் வல்லி பந்தம் தளை விலங்கு ஆம் 
மருவும் பறலை பறலிகை பற்று அள் வலி இரும்பு ஆம் 
பரியகம் கிண்கிணி பாதசாலம் கால்மணிவடமே 

#13
** சிலம்பு, மேகலை பெயர்
மணி நூபுரமோடு அரவம் பரிபுரம் வார் ஞெகிழம் 
பணியும் சிலம்பு அரி பாடகம் பாதகடகம் என்பர் 
அணியும் கலாபம் விரிசிகை காஞ்சி அரைப்பட்டிகை 
தணியும் மனவு பருமம் கலை மேகலை சமமே 

#14
** அரைஞாண், பதக்கம், கடைப்புணர்வு, முலைவடம் பெயர்
சதங்கை அரைநூல் இரதனம் கிண்கிணி ஆம் பதக்கம் 
இதம்தரு கண்டிகை ஆரம் பூண் ஆகும் எழில் கடையே 
விதம்கொள் கயில் பூண் கடைப்புணர்வு ஆம் தாமம் மென் முலை மேல் 
மதம்தரு கண்டிகை மாலை காசே காழ் வடம் கோவையே

#15
** ஆபரணத்தொங்கல், கைவளை, தோளணி
** கங்கணம், குண்டலம் பெயர்
கோடிய தொங்கல் மதலிகை தூக்கம் குருகு கன்று 
சூடகம் சங்கு தொடி சரி கைவளை தோளணியே 
நாடிய அங்கதம் கேயூரம் கங்கணம் நல் கடகம் 
கூடும் தொடியும் குழை தோடு மிஞ்சிகை குண்டலமே 

#16
** காதணி,  நெற்றிச்சுட்டி, பட்டம், நுதல்பூண்
** சிரம் மேல் மாலை பெயர்
குலவு கடிப்பிணை வல்லிகை வேடகமும் குழைப்பூண் 
உலவுறு சுட்டி சுடிகை நுதல்குறி ஓடை பட்டம் 
பொலம் நல் இலம்பகம் புல்லகம் ஆம் நுதல்பூண் சிரம் மேல் 
விலகிய மாலை கரோடிகை ஆக விரும்பினரே

#17
** மணிமுடி, செவிமலர், மோதிரம், மதாணி
விரும்பும் சுடிகை மவுலி கிரீட மகுடம் இன் சேகரம்
பொன்முடி என்பர் காதணி கன்னப்பூ கன்னபூரம்
அரும்பு சுடர் ஆழி மோதிரம் ஆம் பேரணிகலமே 
பெரும்பூண் மதாணி கொடும்பூண் என்றார் சொல் பெரியவரே

#18
** ஆபரணப்பொது,  உண்கலம்,  நாழிகைவட்டில் பெயர்
பெரும்பேர் மதாணி இழை ஆபரணம் பூண் பேசில் அணி 
தரும் கலன் ஆம்  தாலம் தட்டகை தட்டம் ஆம் சாற்றில் வட்டில் 
வரும் கிண்ணம் கோரமும் வள்ளம் ஆம் நாழிகைவட்டில் கன்னல் 
அரும்பெயர்த் தவ்வி சிலகமும் சட்டுவம் ஆம் என்பரே

#19
** கண்ணாடி, ஆனைமணி, கைம்மணி பெயர்
ஆடி படிமக்கலம் தர்ப்பணம் ஆதரிசனத்தோடு 
ஏடியல் கஞ்சனை கண்ணாடி ஆகும் இலங்கு கண்டை 
பாடிகல் ஆனைமணி கைம்மணி முதலாப் பரந்து 
கூடியந் தன் மணி ஆகும் படலிகை கோல்வளையே 

#20
** குறிஞ்சிப்பறை, பாலை நிலப் பறை, முல்லைப்பறை
** மருதத்திணைப்பறை
கோலும் குறிஞ்சிப்பறை தொண்டகமும் முருகியமும் 
ஏலும் துடியும் அதற்கே துடி பாலைக்கு எய்தும் என்ப 
பாலியல் முல்லைப்பறை ஏறங்கோட்பறை பம்பையும் ஆம் 
காலும் கிணையே மருதத்திணைப்பறை காரிகையே 

#21
** காளம், சிறுசின்னம், சாப்பறை, ஒருகண்பறை
** உடுக்கை, பரந்தவாய்ப்பறை, சிறுபறை பெயர்
காகளம் காளம் சிறுசின்னம் பீலி கருது நெய்தல் 
சாகும் பறை ஆம் ஒருகண்பறை மொந்தை தண்ணுமையே 
ஏகும் உடுக்கை துடி ஆம் பதலை பரந்தபறை 
ஆகுளி ஆகும் சிறுபறை மென்சொல் அருங்குயிலே 

#22
** முழவம், குடமுழவு, பேரிகை, படகம், பறைவகை பெயர்
குளிர் முழவம் மண்கணை முழா வெய்ய குடமுழவு ஆம் 
மிளிர் பணை சண்டை முரசு சகடை விளங்கிய துந்துமி
பேரிகை திண்டிமம் பணவம் ஆனகம் படகம் 
தமில் வேறிலாத தடாரி தக்கை பம்பை சல்லரியே 

#23
** கொம்பு வாத்தியம், இயப்பொதுப்பெயர்
சரிதரு கொம்பு வயிர் ஆம்பல் கோடு தருகலையோடு 
இரலையும் ஆம் என்பர் கோடணை தூரியம் ஏன்ற பணை 
முரசு காழ் பீலி முருடு முழவம் இயம் முழுதும் 
மருவிய வாச்சியங்கட்குப்பொது என்பர் வல்லவரே 

#24
** யாழ் பெயர், முறுக்காணி, யாழ்வலிக்கட்டு
** யாழ்நரம்பு பெயர்
வல்லகி தந்திரி வீணை விபஞ்சிதம் வார் கருவி 
நல்ல அறுசலம் கோடபதி கின்னரம் யாழ் அது என் 
வல்ல முறுக்காணி மாடகம் ஆகும் திவவு வண்கட்டு 
ஒல்லையில் தந்திரி கோல் குரல் யாழில் தொடர் நரம்பே 

#25
** தேர்க்கொடி, தேர்,  தேர்க்கால்
** தேர் உருளின் அகத்தில் செறி கதிர் பெயர்
நரர் பயில் எந்திரம் கூவிரம் நல்ல திகிரி வையம் 
இரதம் கவரி சயந்தனம் தேர் என்பர் ஏய்ந்த சில்லி 
பருதியொடு ஆழி திகிரி உருள் நேமி பண்ணும் உந்தி 
உருள் இவை தேர்க்கால் ஆம் ஆர் அகத்துச் செறியுள் கதிரே 

#26
** வண்டி, தேர்மொட்டு, கொடிஞ்சி
** தேர் மேல் மரச்சுற்று பெயர்
கருதிய சாகாடு வையம் சகடு கடிய பண்டி 
உருளொடு சாடும் ஒழுகையும் தேர்மொட்டு உயர் கூவிரம் 
பெருகிய கூம்பு கொடிஞ்சி என்றாம் தட்டுப்பாவுடனே 
சொருகு கிடுகு தேர் மேல் புடைசூழ் மரச்சுற்று என்பரே 

#27
** கலப்பை, தூண், யானைத் தூண், வேள்வித் தூண்
** கதவில்செறி தாழ் பெயர்
படை அலம் நாஞ்சில் கலனை கலப்பை ஆம் பற்றுத் தம்பம் 
நடுதறி கந்து மதலை எழுத் தூண் ஆம் நல்ல கம்பம் 
அடு களிறு ஆர் வெளில் ஆளானம் யூபம் வேள்வித்தறி ஆம் 
முடுகு குறுந்தறி போதிகை சீப்புத் தாழ் மொய்குழலே

#28
** குறுந்தடி, அடைகுறடு, பரண், பருங்குறடு
** உறி,  உரல் பெயர்
குணிலே குறுந்தறி பட்டடை ஆகும் அடைகுறடு 
பணவை இதணம் கழுது பரண் ஆம் பருங்குறடே 
இணைஇல் முருடு ஆம் உறி சிதர் சிக்கம் சிமிலி என்பர் 
தணிவில் உலூகலம் கறை உரல் ஆம் மலர்த்தாழ்குழலே

#29
** கிளிகடிகோல் கருவி, கதவு, கட்டில்
** ஊஞ்சல், துடுப்பு பெயர்
குளிர் தழல் தட்டை இவையாம் கிளிகடிகோல்கருவி 
அளிதரு வாரி கபாடம் புதவு இவையாம் கதவு 
களிதரு பாரி பரியங்கம் மஞ்சம் இழிகை கட்டில் 
சுளிதரும் ஊஞ்சலும் ஊசல் துடுவை துடுப்பு என்பரே 

#30
** ஏணி, கண்ணேணி, தோணி பெயர்
எள்ளும் இறவை கடவை மால்பு ஆகும் கண்ணேணி திமில் 
தொள்ளம் பஃறி மதலை யானம் அம்பி தோணி வங்கம் 
நள்ளும் கலம் பாறு பாரதி போதகம் நாவாயும் ஆம் 
தெள்ளம் படுவை பகடு புணை அம்பி தெப்பம் பற்றே

#31
** மரக்கலப்பாய், கமண்டலம், பேழை பெயர்
பண்ணும் மரக்கலப்பாய் இதை ஆகும் படர் கரகம் 
கண்ணும் கரண்டை நல் குண்டிகைதானும் கமண்டலம் ஆம் 
எண்ணிய மஞ்சுகம் மஞ்சிகை பேழை இனிக் கடப்பம் 
நண்ணும் கரண்டகம் கோடிகம் ஆகும் நல் கெண்டிகையே 

#32
** மயில் பீலிக் குடை, வெண்குடை
** சிற்றாலவட்டம், ஆலவட்டம் பெயர்
கைத்த கலாபம் தழை தொங்கல் பீலிக்கவிகை என்பர் 
முத்தணி வெண்குடை பிச்சம் கவிகை முடிவில் தொங்கல் 
சத்திரம் சிற்றாலவட்டம் சாந்தாற்றி ஆம் கால்செய்வட்டம் 
வைத்த சிவிறியே உக்கம் இவை ஆலவட்டம் என்னே 

#33
** சீப்பு, சூதாடுகருவி, துண்டம், சும்மாடு
** பந்து, பனுவல் பெயர்
வட்டிய சிக்கமும் சீப்புச் சூதாடுகருவி வல்லும் 
தொட்டியல் காசும் கடிகையும் கண்டமும் துண்டம் என்பர் 
கட்டும் சுமடு சுமையடை சும்மாடு கந்துகம் பந்து 
எட்டிய தந்துப் பனுவல் காற்பாசம் நூல் ஏந்திழையே 

#34
** வார், கயிறு, தொடுதோல், பாதுகம், துருத்தி
** பானை, மிடா பெயர்
இழைதரு வள் வகிர் வார் ஆகும் பாசம் நாணே கயிறு ஆம் 
கழல் தொடுதோல் ஆம் அடியில் தொடுவன பாதுகம் ஆம் 
தழுவும் சிவிறி துருத்தி மிடா நல் தடா வடுவை 
குழிசியும் பானை மிடா அகளம் தடாக் கொள்கலம்மே 

#35
** குடம், கரகம், நீர்ச்சால், தாழி, அகல் பெயர்
கடம் பாசனம் மட்கலம் கும்பம் கன்னல் தசும்பு இடங்கர் 
குடம் காண்மின் கன்னல் சிரகம் சிரதமும் கொள் கரகம் 
இடங்கர் வட்டம் நீர்ச்சால் சாடி அகளம் இனப் பதலை 
அடங்கிய தாழி என் சுத்தி சராவம் அகல் என்பரே 

#36
** ஆடை பெயர்
படி புட்டகம் தூசு ஒலியல் வாசம் பரிவட்டம் பட்டம் 
மடி துகில் கோடிகம் அம்பரம் வாதனம் சேலை உஞ்சம் 
படம் அறுவை சாடி காடகம் தானையோடு ஆடை படம் 
உடை கலை காழகம் நீவி கலிங்கம் ஆசாரம் ஒன்றே 

#37
** ஆடை (தொடர்ச்சி), நல்லாடை, பட்டாடை
ஒன்றிய கூறை உடுக்கை புடவை இடையல் பங்கம் 
சென்ற கருள் புங்கம் சில்லிகை ஏடகம் சித்திலிகை 
நன்று செய் கத்தியம் தூரியம் பாரி நல்லாடை என்ப 
நின்ற பட்டாடையும் பாளிதம் கோசிகம் நேத்திரமே 

#38
** மரவுரி, கம்பலம், முகபடாம், மேற்போர்வை, கச்சு பெயர்
திறவிய வற்கலை சீரை இறைஞ்சி மரவுரி ஆம் 
துறை பயில் கம்பலம் சிம்புளி செம்படாம் சூழி என்றும் 
பெறுவ முகபடா மேற்போர்வை மீக்கோள் பிணிகைவம்பு 
மறைதகு பட்டிகை வாரிவை கச்சு வரிமுலையே 

#39
** விதானம், அத்தவாளம், உத்தரியம்
** உடுத்தல், மெய்ப்பை, படங்கு பெயர்
வரிந்த விதானம் ஆம் கம்பலம் அத்தவாளம் வடகம் 
உரந்தரும் ஏகாசம் உத்தரியம் ஆம் உடுத்தல் சுற்றல் 
தரந்தரு கஞ்சுளி கஞ்சுகம் வாரணம் சட்டை அங்கி 
பரந்தரு குப்பாயம் மெய்ப்பை என் வானி படங்கு என்பரே 

#40
** திரை, கொடி பெயர்
பரந்த திரை கண்டம் கஞ்சிகை பாரகம் பைம் கழினி 
வரைந்த எழினி படாம் ஆம் வெளியடை வானி துகில் 
உரங்கொள் விலோதம் துகிலிகை கேதனம் முத்தியுடன் 
நிரந்த பதாகை துவசம் படாகையும் நீள் கொடியே 

#41
** சிறுகொடி, சீரை, மெத்தை, சித்திரப்படம், ஓவியம்
** துகிரிகை, தீட்டல், பெயர்
கொடியில் சிறிய கதலிகை சீரை சிதவல் சிதார் 
அடர் பொன்  தளிமம் தவிசு அணை மெத்தை அணி சித்திரப்படம்
அது பொத்தகம் ஓவியம் சித்திரம் பட்டிகையே 
புடைகொள் துகிரிகை தீட்டல் வரைதல் பொறித்தல் என்னே

#42
** ஆக்கியோன்
பொங்கிய முன்னூல் பொருள் தெரிந்து உண்மைப் பொருள் அனைத்தும் 
தங்கிய ஞானம் தலைப்பெய்து உலகம் தழைக்கவென்று 
செங்கயல் போலும் விழியாய் கெயாதரன் செய்து அமைத்தான் 
எங்கும் செயற்கை வடிவில் பெயரியல் ஏழாவதே
** ஏழாவது செயற்கை வடிவிற் பெயரியல் முற்றும் 

@8 எட்டாவது பண்புப் பெயரியல் 

#1
** வட்டம் பெயர்
வட்டம் திகிரி பருதி வலையம் வளைவு கொம்மை 
தட்டு விருத்தம் கடகம் சில்லி கோளகை சக்கரம் 
சுட்டிய பாலிகை மண்டிலம் நேமியோடு ஆழி சொல்லில் 
ஒட்டிய பாண்டிலும் வாளமும் ஆம் என்று உரைத்தனரே

#2
** வளைவு, திரளை பெயர்
தடவு வணர் வாங்கு கோட்டம் குலாவல் குரங்கல் தட்டுக் 
குடிலம் வளைவு ஆகும் பந்தர் தொகுதி குவவு கொம்மை 
மடிதரு புஞ்சம் துறுமல் உண்டை சோக, மாழை பிண்டம் 
கடி கணை கட்டி திரளை சேடு ஆம் என்பர் காண் குறித்தே

#3
** குவிபொருள், தொகுதி, துறுவு, ஐம்மை பெயர்
குவையும் குவாலும் இராசியும் குப்பையும் கொள் குவவும் 
எவையும் குவிதல் பொருள் ஆம் தொகுதி குழுமல் என்றும் 
துவையும் கருவி மொய் தோடு தொழுதி துறுவு துற்று ஆம் 
நவைஇல் அடர் அரி ஐம்மை வடிவின நற்கொடியே 

#4
** மொக்குள், குமிழ்ப்பு, குழல், துவாரம், கற்றை
** சர்ச்சரை, பேரழகு அழகு பெயர்
கொப்புள் ஆம் மொக்குள் குமிழ்ப்புப் புளகம் குழல் புழல் தூம்பு 
ஒப்புஇல் சுரை நாடி ஓதும் துவாரம் புழை துளை ஆம் 
தப்புஇல் தொகுதி ஆம் கற்றை பிணர் ஆகும் சர்ச்சரையும் 
செப்பில் விசித்திரம் பேரழகு ஆம் சித்திரம் அழகே 

#5
** பெருமை பெயர்
திரு மலிது ஆடு தடவு தடமொடு செம்மை செம்மல் 
பெருமை விபுலம் வியல் நனம் பீடு பிறங்கு நனி 
இருமை கதழ்வு கயம் மூரி பாழி இடம் பின் முன்பு 
கருமை தகை பாடு அபரிமிதம் மால் கலந்தை நன்றே

#6
** பெருமை (தொடர்ச்சி), குறுமை பெயர்
கருதும் பரி பணை வந்தை முடலை மாக் கண் அகலுள் 
குரு விறல் அண்ணல் வியன் வான் பெருமை குறுமை வஞ்சம் 
பரிமிதம் அற்பம் வறிது ஆசு இலேசு இறை பற்று இலகு 
சுரி கிலம் தோகம் தனுத் தன்று சன்னம் துடி அணுவே

#7
** பருமை, மிகுதி பெயர்
அண்ணும் பருப் பீனம் ஆகும் பருமை அமலை பொம்மல் 
நண்ணும் விதப்பு உயர்பு ஆன்றல் கயவு நளி புதுமை 
எண்ணும் பிறங்கல் அதிகம் சிறப்பு ஆற்றல் ஏற்றம் இவர் 
கண்ணு மதம் பொக்கம் மீக்கோள் மிகுதி கதழ்வு கப்பே 

#8
** மிகுதி (தொடர்ச்சி), உயர்ச்சி பெயர்
உறு தவவோடு கழிவு கடுமை உருப்பு இறப்புப் 
பெறு நனி யாவும் மிகுதிப் பொருள் சேண் பிறங்கல் புரை 
முறுகிய உன்னதம் துங்கம் உகப்பு ஏந்தல் மோடு நிவப்பு 
இறுகிய ஓங்கல் நிமிரல் உயர்ச்சி எழுச்சியுமே 

#9
** தூரம், இடம்பாடு, பரத்தல், கூடல் பெயர்
எழுதரு நீளிடையும் சேணும் சேய்த்தும் இவை தூரம் ஆம் 
பழுதுஇல் விசாலம் விபுலம் இடம்பாடு பாய் ஞெமிர்தல் 
தழுவிய பப்புப் பரப்புடன் தாவும் பரவையும் ஆம் 
கொழுவும் பயினியுடன் கூடல் குந்தலும் கூடுதலே 

#10
** நீளம், நுண்மை பெயர்
கூடிய வார் சேண் வரி உறை போகல் நேர்கொண்டு ஒழுகல் 
நீடல் வடிதல் நெடுமை நெடில் தீர்தல் நீளம் என்ப 
நாடு நுவணை நுணுகு நுணங்கு ஓய்தல் நைவு ஒசிவு 
கூடு நுழை அயிர் சாயல் நிழத்தல் நுண் கூர்மையுமே 

#11
** உள்ளதுசிறத்தல், அகலம், மென்மை பெயர்
கூர்ப்புக் கழிவு உள்ளதுசிறக்கும் பாழி கொள் விபுலம் 
ஆர்க்கும் விசாலம் வியலிடம் ஆன்றல் அகல் நளி மா 
ஏர்க்கும் அகலுள் படம் படர் கண்ணறையே அகலம் 
ஆர்க்கும் கயவுடன் மேம்பாடு சாயல் சால்பு ஆம் மென்மையே 

#12
** அஃகல், செறிவு பெயர்
மெல்கிய அஃகல் அருகல் குறைதல் விகலம் குன்றல் 
ஒல்கல் சுருங்கல் நிரப்பு ஈனம் சிங்கல் உறப்புத் துற்று 
நல்ல விறப்பு வெறுப்புப் பொதுளல் நளி பவர்த்தல் 
எல்லைஇல் செற்றல் சடிலம் கடி செறி வீங்குதலே 

#13
** செறிவு (தொடர்ச்சி), மிடைதல், நிறைவு பெயர்
தண்டும் விரளம் நிபுடம் துதைதல் ததைதல் துன்றல் 
மிண்டல் செறிதல் நெருங்குதல் பம்பல் மிடைதல் துன்னல் 
மண்டும் கழுமல் துவன்றல் தெவுளல் மலிதல் மல்கல் 
கண்டம் முழுது ஆர்தல் பூரணம் மிண்டல் கமம் நிறைவே

#14
** நின்றதனின் மிகுத்தல், அளவின்மை, ஐவகை வண்ணம் பெயர்
நிகர்த்தல் தெவிட்டல் ததும்பல் விம்மல் பொங்கல் நின்றதனின் 
மிகுத்தல் அபாரம் அனந்தம் அபரிமிதம் அகண்டம் 
தொகுத்த அளவின்மை செம்மை கருமை சுவேதம் பொன்மை 
வகுத்த பசுமை இவை என்பர் ஐவகை வண்ணமுமே 

#15
** சிவப்பு, பொன்மை பெயர்
வருணம் புகலில் அரத்தம் துவர் துப்பு வாய்ந்த செக்கர் 
அருணம் சிவப்பு அத்துப் பாடலம் செம்மை அராகம் நல் சிந்துரம்
அரக்குச் சேது சேப்பு இங்குலிகமும் சோணம் என்ப 
புரைதரு பிங்கலம் பீதகம் பொற்கு எனலும் பொன்மையே

#16
** கபிலம், புகர், வெண்மை, பசுமை பெயர்
பொற்பு ஆர் கபிலம் குரால் புகர் புன்மை சிதம் தவளம் 
சொல் பால் அருச்சுனம் பாண்டு சுசி வால் சுவேதம் வெண்மை 
பைப் பாசு சாமம் அரி அரித்துப் பச்சை பைத்து அரிதம் 
வைப்பு ஆம் பலாசம் பசுமையும் சாமளம் வாய்ந்தனவே

#17
** கருமை, மாசு, வண்ணம் பெயர்
தரு களங்கம் காளிமம் காள, நீலம் அஞ்சனம் கருள் கார் 
கருமை அசிதம் மைக் காழகம் மால் ஆம் கசடு கறை 
வரு மலினம் மாசு வண்ணம் புகர் மேனி மாமை கெழூஉக் 
குரு உருவும் கேழ் நிறம் சந்தம் ஆகும் குளிர் நகையே 

#18
** சுடர், தொகைவிளக்கம், மின்,  சிவத்தல் பெயர்
நகை கிரணம் எல்லுக் கானல் செடி சுடர் ஆம் நல் கெழூஉத் 
தொகை விளக்கம் சோதி வில் வாள் இலங்கல் அவிர் துலக்கம் 
பகல்வு விரியல் தெளிர் தாமம் வாமம் ஒளி பாடம் மின் 
புகல்தரு சேத்தலும் சேப்பும் சிவத்தல் ஆம் பொற்கொடியே

#19
** ஒளிர்தல், அழகு பெயர்
கொடியே அவிர்தல் அலங்கல் இமைத்தல் குலாவல் நகல் 
சுடர்தல் ஒளிர்தல் வயங்கல் தயங்கல் துலங்கல் ஒளிவிடுதல்
இலங்கல் விளங்கல் பதமாரி சாரு நவ்வி 
வடிவு மனோகரம் பைப் பூ ஐ ஒண் செவ்வி மாண்பு அழகே

#20
** கட்டழகு, மாமை பெயர்
அழகு சீர் சொக்கோடு அயில் வாமம் காந்தி அணி விடங்கம் 
எழில் பொற்பி யாணர் கவின் தகை தொட்டிமை ஏர் மணி மஞ்சு 
ஒழிவுஇல் பொலம் செவ்வி அம் காரிகை தையல் ஒப்பு வனப்பு 
அழிவுஇல் வகுப்பு அந்தம் சுந்தரம் காமரும் மாமை என்னே

#21
** வலி பெயர்
மைந்து விறல் திண்மை மீளி துப்பு ஊக்கம் வலம் மதுகை 
மொய்ம்பு மிடல் ஆற்றல் நோன்மை திடம் ஈடு மூரி முரண் 
பம்பல் வயம் மள்ளல் மல்லல் மதம் எறுழ் பாழி உரம் 
வன்பு திறல் பெலம் ஏண் ஆண் முன்பு தா மா வலியே 

#22
** வென்றி, வீரம், மதர்த்தல், இழித்தகவு, தோற்றல் பெயர்
வலம் கொற்றம் ஆடல் விசையம் புகல் வயம் வாகை வென்றி 
நலம்பெற்ற வெற்றம் விறல் ஆண்மை வீரம் மதர் மதர்த்தல் 
இலங்கும் இளிவும் பரிபவமும் ஆம் இழித்தகவு 
தொலைந்து புறந்தரல் தோற்றல் கெடுதல் தொலைவு அழிவே

#23
** கொள்கை, இரங்கல், குறிப்பு, வடிவு, சந்தம், சாரித்திரம் பெயர்
அங்கியல் கொள்கை அறிவு குணனும் ஆம் ஆங்கு இனைதல் 
இங்கிய ஒற்றித்தலும் இரங்கல் நாட்டியம் குறிப்பு 
மங்கலமான வடிவு செண்ணம் வண்ணம் சந்தம் என்பர் 
தங்கிய சாரித்திரம் குணம் சீலம் சரிதை நன்றே 

#24
** அளவு, எளிமை, வெளிறு பெயர்
நன்று ஆகும் மாத்திரை காலம் துணை வரை நல் அவதி 
ஒன்றான நேரம் பரிமாணம் காறு தாறு ஓங்கு அளவு ஆம் 
என்றார்கள் ஏதம் எளிமை தஞ்சம் தண்மை எண்மையும் ஆம் 
குன்றாத வெண்மை வெளிறு புரை தண்மை கோல்வளையே

#25
** எல்லை, அறிவு, முதுக்குறைவு, போதம், சிந்தை பெயர்
வரம்புடன் ஏணி வரைப்பும் மட்டு எல்லை மதி முதிர்ச்சி 
உரன் புலன் காட்சி உணர்வு ஒண்மை ஞானம் அறிவொடு ஒட்பம் 
புரந்த முதுக்குறைவே தெட்பம் போதம் நல் புந்தி புத்தி 
நிரந்த பிரக்கினை சிந்தை மனம் அகம் நெஞ்சு உள்ளமே 

#26
** கருதல், கச்சம் பெயர்
உள்ளல் விரும்பல் நினைதல் சிந்தித்தல் ஊகித்தல் உன்னல் 
தெள்ளல் நினைவு எண்ணல் இங்கிதம் கண்ணுதல் சேத்து உணர்தல் 
கொள்ளல் நுதலல் கருதல் ஏமாத்தல் குறித்தல் என்ப 
வள்ளிய கச்சம் அளவும் கடனுமா வைத்தனரே 

#27
** விருப்பம் பெயர்
ஆதரம் காமம் பற்று ஆசை நசை வாஞ்சை ஆர்வம் இச்சை 
மாதர் பேணல் பெட்புப் பெட்டல் வெப்பம் தாழ்தல் மற்றும் வெஃகல் 
காதல் நலம் பாசம் வேட்கை விழைவு கசிவு நம்பு 
வீழ்தல் கவர்தல் அவாவே இவர்தல் விரும்பு நச்சே 

#28
** அன்பு, இரக்கம், விரகம், வேட்கை மிகுதி பெயர்
புரிவும் நாரும் அன்பும் ஈரமும் வாரமும் பொங்களியும் 
பரிவும் தயாவும் கருணையும் கண் காருணியம் பற்றோடு 
அருளும் கிருபையும் ஆர்வமும் நேயமும் ஆம் இரக்கம் 
விரகம் மதனம் நல் வேணவா வேட்கைமிகுதி என்னே 

#29
** மாட்சி, நிறைவு, தக்கது, முனிவு பெயர்
திருந்திய மாண் மாண்டல் மாட்சி சால்பு ஆன்றல் திகழ் அமைதிதரும்
தொல் நிறைவு ஆம் தகவும் தகுதியும் தக்கது என்ப 
வருந்து முனிவு மறம் செயிர் சீற்றம்  சினம் வயிரம் 
விரிந்த வெகுளி கறுவு கதம் செற்றம் வேகமுமே 

#30
** சினக்குறிப்பு, அதிசயம் பெயர்
வேகம் சிவப்புக் கறுப்புப் புழுங்கல் வியர்த்தல் கன்றல் 
ஆகம் அழல்தல் புகைதல் அனலுதல் வெய்துறல் ஆங்கு 
ஏகும் சினக்குறிப்பு என்பர் இறும்பூது இலைச்சு வியப்பு 
ஆகும் விபரிதம் விம்மிதம் ஐந்தும் அதிசயமே 

#31
** அதிசயமாகுமை, இரக்கக் குறிப்பு
** கண்ணோட்டம், மனக்களிப்பு பெயர்
அதிசயமாகும் ஐயோ அந்தோ அன்னோ ஓ ஆ இடைச்சொல் 
வதியும் இரக்கக்குறிப்பும் ஆம் கண்மை கண்ணோட்டம் மற்றும் 
புதிய நயம்புணர்வு ஆம் நாகரீகம் புனை செருக்கு 
மதர்வு பெருமிதம் பாடவம் மத்தம் மனக்களிப்பே

#32
** மனத்தழுக்கு, சுட்டல், மனக்கோட்டம்
** மறத்தல், கொடுமை பெயர்
மனத்தழுக்கு ஆகும் அழுக்காறு சுட்டல் குறித்தல் மற்று 
மனக்கோட்டம் அவ்வியம் பொச்சாப்பு இழுக்கு வழுக்கு இகழ்ச்சி 
மனச்சோர்வு இழிச்சி அயர்வு மறவியே மால் மறத்தல் 
மனக்கூரம் கோரம் சண்டம் கொடுமை ஆகும் மற்று இவையே 

#33
** செம்மாப்பு, இறுமாப்பு, உள்ள மிகுதி, பேரறிவு
** நிலையுடைமை, கொடுமை, தீது பெயர்
மலர்ச்சி செம்மாப்பு ஏக்கழுத்தம் இறுமாப்பு மற்று உரனும் 
உலைத்தல்இல் ஊக்கமும் உள்ளமிகுதி முதுக்குறைவு 
நிலைத்த முகரிமையும் பேரறிவும் நிலையுடைமை 
துலைத்த ஏண் கோணை கொடுமைத்தாம் ஊறும் கோளும் சொல்லே 

#34
** நாணம், இன்பம், தளர்ச்சி, உவகை பெயர்
சொல்லிய மானமும் வெள்கலும் வட்கலும் தொல் சமழ்ப்பும் 
நல்ல இலச்சையும் நாணம் என்று ஆகும் நகை மகிழ்ச்சி 
எல்லைஇல் நல் நயமும் இன்பம் ஏட்டை தளர்ச்சி என்ப 
ஒல்கிய மாராயம் ஓகை உவகை ஒளியிழையே

#35
** சுழற்சி, ஐயம், இகழ்ச்சி பெயர்
இழைத்த அலம்வரல் கொட்புக் கறங்கல் சுழல் சுழற்சி 
தழைத்த தெருமரல் ஊகம் பிராந்தி சந்தேகம் ஐயம் 
விழைத்த கொல் ஆசங்கை மானல் அனுமானம் விப்பிரமம் 
பழித்தல் இகழ்ச்சி நகை உவர்ப்பு எள்ளல் பரிபவமே 

#36
** நன்மை, ஆனந்தம் பெயர்
வண்ண மணி சீர் உறுதி நயம் நன்னர் மாசறல் மாண்பு 
எண்ணும் நறுமை நன்மை ஆகும் ஆனந்தம் ஏய்ந்த சுகம் 
நண்ணும் மகிழ்ச்சி அகமலர்ச்சி தொய்யல் கட்டி நயம் 
கண்ணிய உல்லாசம் வேறும் சருமம் களிப்பு இன்பமே 

#37
** அறியாமை,  அறிவின்திரிபு, கொண்டதுமறவாமை
** உணர்ச்சி, தெளிவு, பொறை பெயர்
படைத்த எய்யாமை அறியாமை துய் அறிவின்திரிபு 
கடைப்பிடி ஆம் கொண்டதுமறவாமை கருத்து  உணர்ச்சி 
நடத்தும் தெளிவு தெருட்சி தேற்றம் துணிவே நனவு ஆம் 
அடக்கமும் நோன்மையும் நோன்றலுமே பொறை ஆயிழையே

#38
** துன்பம் பெயர்
இடர் அஞர் வேதனை வாதை அரந்தை இடும்பை துன்பம் 
படர் துயர் கேதம் நடுக்கம் கிலேசம் பரிதல் துக்கம் 
மடி பிணி தாபம் சுருங்கல் முடங்கல் மடங்கு இடுக்கண் 
நடலை நோய் பீடை இரக்கம் சிறுமை உறுவல் நைவே 

#39
** துன்பம் பெயர் (தொடர்ச்சி) 
உலம்வரல் இன்னல் விழுமம் கவலை உளைவொடு கம்பலை
புலம்பு எவ்வம் துனி சூர் பருவரல் பைதல் செல்லல்
உலையுறு புன்கண்மை பையுள் இன்னாங்கு இன்னல் ஓய்வினையல் 
தொலை நோதகவு வறுமை மம்மர் வெய்துறல் பீழையே 

#40
** நடுக்கம், நிலைபேறு, வதிதல் பெயர்
துருமம் புலம்பு கவனம் வெறிப்பு வெதி கலக்கம் 
தரும் விதிர் கம்பம் விதலை பனிப்பு அதிர்ப்பே நடுக்கம் 
வருதித மற்குதல் நிற்றல் நிலைபேறு மன்னல் துஞ்சல் 
மருவல் தெவிட்டல் கலங்கல் இறுத்தல் வதிதல் உன்னே

#41
** பொலிவழிதல், வருத்தம், சோம்பு பெயர்
உணங்குதல் புல்லெனல் ஓய்தல் மழுங்கல் பொலிவழிதல் 
அணங்கு கவறல் உயாவே வயாவே அயா அனுக்கம் 
வணங்கு முசிப்பு ஆகுலமே உயங்கல் வருத்தம் அஞ்சல் 
துணங்கிய ஞொள்கல் அழுங்கல் மடி தூங்கல் சோம்பு அசைவே

#42
** தெளிவின்மை, வறுமை பெயர்
அயர்வு களி மான்றல் மாழ்கல் கழுமல் மாழாத்தல் மறல் 
மயல் இளமை பித்து உன்மத்தம் அனந்தர் மயக்கம் மையல் 
இயலும் இருள் மருள் ஏமாப்பு மால் தெளிவின்மை என்பர் 
வியல் இலம்பாடு அல்கல் ஒற்கம் இல்லாமை வறுமை விள்ளே

#43
** அச்சம் பெயர்
விதிர்ப்புப் பனிப்பு வெருவு உருப்பே நாம் விரைவு பிறப்பு 
அதிர்ப்புத் துளக்கம் பயம் காதரம் சூர் அணங்கு வெடி 
உதித்த வெறி வெம்மை அச்சம் கவலை உலைவு அனுக்கம் 
பொதிர்ப்புத் துணுக்கம் தெருமரல் கூசல் புலம்பு பொன்னே

#44
** பொலிவு, தனிமை, நீங்காமை பெயர்
பொற்புக் கஞறல் உவப்பே அமறல் கலித்தல் பொங்கல் 
துப்பு மலர்ச்சி அதிகம் கொழுத்தல் துவன்றல் மல்கல் 
செப்பிய மங்கலமும் பொலிவு ஆம் தனிதான் புலம்பு 
தப்பிலா நீங்காமை ஆனாமை தண்டாமை தான் அறியே 

#45
** ஒண்மை, நயம், கூம்புதல், மெலிவு பெயர்
அறிவின் மிகுதியும் நன்மையும் ஒண்மை அளவு நன்கும் 
செறியும் பயனுடன் இன்பமும் ஆகச் சிறக்கும் நயம் 
பொறிகளொடுங்குதல் சாம்புதல் கூம்புதல் புன்கண் ஞொள்கல் 
வெறிகொள் பழங்கண் முசிப்புச் சிக்கம் தேம்பலும் மெலிவே

#46
** குற்றம் பெயர்
மெல்லிய காசு தவறு நவை பழி மேல் கசடு 
தொல் வசை எவ்வம் வழூஉச் செயிர் மானம் தொழுவு வடு 
வல் அரில் ஏதம் புரை கோது போக்குடன் மாசு பழுது 
எல்லைஇல் தோம் இழுக்கு ஆசு அவலம் தீங்கு இவை குற்றமே

#47
** பகை, வஞ்சம் பெயர்
குற்றமில் தாவு முனை உறழ் மாறு கொடிய முரண் 
செற்றம் வெறுப்பு இகல் தெவ்வுப் படிப் பகை ஆகும் வஞ்சம் 
மற்றும் கிருத்திமம் புள்ளுவம் குத்திரம் மாயம் கிறி 
பற்றும் கபடம் பொய் கூடகம் கைதவம் பட்டிமையே 

#48
** நட்பு, கை, அடைக்கலம், செயலின்மை
** கையொழியாமை,  ஒழுக்காறு பெயர்
மையறு கேண்மை தொடர்பு கேள் நட்பு மருவு துணை 
கையொழுக்கம் பக்கம் கையடை ஆகும் அடைக்கலமும் 
கையறவே செயலின்மை கைதூவாமை கையொழியாமை
எனலாகும் கையாறு ஒழுக்காறு ஆகும் வாய்த்தது ஒன்றே

#49
** பழமை, மேற்கோள், ஈன்றணிமை, நிலையின்மை
** வருபிறப்பு பெயர்
தொண்டு முறை தொன்மை தொத்து தொடர் பூர்வம் தொல்லை  முந்தை
பண்டு புராணம் புராதனம் மூது பழமை தொன்று ஆம் 
கொண்ட மேற்கோள் ஆகும் பூட்கை புனிறு ஈன்றணுமை வம்பே 
மண்டு நிலையின்மை அம்மை மறுமை வருபிறப்பே 

#50
** பிறப்பு, இறந்த பிறப்பு, பாரம்பரை பெயர்
பிறப்புச் சனிப்புச் சனனம் பவம் சூதகம் பிறந்தை 
மறப்புஇல் பயத்தலும் தோற்றமும் யோனியும் மற்று அதற்காம் 
இறப்பு உம்மை முற்பவம் முந்தை இறந்தபிறப்பு அது என்பர் 
சிறப்பின் முறைமை மரபு பாரம்பரை சேயிழையே 

#51
** இளமை, வழி பெயர்
சேய் போதகம் மஞ்சு மீளி குருளை பீள் சேடு கயம் 
மாய்தல்இல் நவ்வி பருவம் தருணம் மழவு கொம்மை 
ஓய்வுஇல் குருகு புருக் கோமளம் முருகோடு இளமை 
ஏயும் குழவும் அதற்காம் வழி பின் கால் என்றனரே 

#52
** காரணம், பற்றுக்கோடு, ஊதியம் பெயர்
என்றும் பொருட்டு நிமித்தம் நிபம் திறன் ஏதுவுடன் 
ஒன்றிய வாயிலும் காரணம் ஆம் என்பர் ஓது கந்தும் 
அன்றிய ஆலம்பனமும் பற்றுக்கோடு ஆம் ஆக்கம் பயன் 
கன்றும் இலாபம் பலிப்புப் பசை ஊதியம் கருதே 

#53
** உரிமை, சுத்தம்,  தருமம், அழிவற்றது பெயர்
கமைதரு தாயம் கிழமை பால் பூட்சி பாங்கு ஆம் உரிமை 
விமலம் அமலம் புனிதம் பவித்திரம் தூய்மை சுத்தம் 
சமைகுணம் மங்கலம் சீலம் சுகிர்தம் சுபம் தருமம் 
அமைதரு கோணையே கன்னி குமரி அழிவற்றதே 

#54
** எண், தோற்றம், ஈறு, சூதகம், அனுபவம் பெயர்
அலகு கரணம் கணிதமும் எண் ஆகும் ஆதி யுகம் 
இலகிய மோனை துடக்கம் முதல் இவை தோற்றம் முடி 
உலவிய அந்தம் தீர் வீறு ஆம் வாலாமை தூய் தன்மை என்னும் 
தொலை தரு சூதகம் ஆம் துவ்வும் துப்பும் அனுபவமே 

#55
** வளம், குணமின்மை, செல்வம், தித்திப்பு பெயர்
வண்மை கொழுமை செழுமை யாணர் மல்லல் வாய்ப்பு வளம் 
அண்மையில் சீத்தை சிரணம் சிதவு குணமின்மை ஆம் 
திண்மை வெறுக்கை பொறி மாத் திருச் செல்வம் சீர் விபவம் 
எண்ணும் தேமும் தீமும் தீனும் தெங்கும் தித்திப்பு என்றனரே

#56
** இனிமை, காழ்த்தல், புளிப்பு, கைத்தல்
** ஒரு பலம், நூறு பலம் பெயர்
என்றும் சுவையும் அமுதமும் சாரமுமே இனிமை 
கன்றும் கரிலும் கடுகமும் காயமும் காழ்த்தல் என்ப 
துன்றும் புளிப்பு ஆம்பிலம் கைத்தல் தித்தம் தொடி ஓர் பலம் 
ஒன்றும் துலாமும் காத் தூக்கமும் ஆம் நூற்றுயர் பலமே

#57
** குணம்
பற்றிய மாலை மரபியல் ஊழ் தன்மை பான்மை பண்பு 
பெற்றி முறைமை உழுவல் தகை பால் உரிமை பின்னும் 
சொற்ற நிலை முறை நீர்மை பரிசு கிழமை தொன்மை 
உற்ற விதி அதிகாரம் குணம் தகவு ஓர் பொருளே 

#58
** உவமம்
பொருவுதல் ஏற்றல் உறழ்தல் நிகர்த்தல் புரைதல் சமம்அருளல்
படி அன்ன துல்லியம் ஏய்தல் நேர் மானல் ஒப்பு 
கருதியபோறல் துணைசெத்துஇணைதல் கடுப்பு உவமம் 
உருவு வினை பயன் பண்பு ஒரு நான்கா உரைத்தனரே 
** எட்டாவது பண்புப் பெயரியல் முற்றும் 

@9 ஒன்பதாவது செயல்பற்றிய பெயரியல் 

#1
** கருமம், தொழில்பயில்வு, செய்தல், வதுவை
தருமம் கிரியை தொழிலே வினை செயல் சாற்று விதி 
கருமம் தொறுவே தொழில்பயில்வு ஆம் ஆற்றல் காண் பயிறல் 
மருவல் குயிற்றல் அயர்தல் இழைத்தல் வனைதல் செய்தல் 
பொருவில் வதுவை கடி மணம் மன்றல் புதுமணமே 

#2
** மகளிர் விளையாட்டு, ஒப்பனை
மண்டு தொடலை கெடவரல் பண்ணை கிரீடை வண்டல் 
உண்டாட்டொடு ஓரையுடன் பொய்தல் கேளி ஒளிவளையார் 
கொண்டாடல் கைதல் புனைதல் வனைதல் அலங்கரித்தல் 
கண்டாயம் மண்ணல் அணி ஒப்பனை பொற்புக் கைசெயலே

#3
** சூடுதல், விழவு, உண்டல் 
செப்பிய வேய்தல் மிலைதல் மலைதலும் சூடுதல் சேறு 
ஒப்பில் முருகு விழவு சாறு ஆம் இனி உண்டல் நுங்கல் 
துப்பு நுகர்தல் மிசைதல் பொசித்தல் அசித்தல் துய்த்தல் 
வைப்புணல் கைதொடல் ஆர்தல் அருந்துதல் மாந்தல் துவ்வே 

#4
** உண்டல், துஞ்சல், ஏறுதல்
துக்க அயிறலும் பாரணமும் அதற்காம் துயிறல் 
தொக்க கனவுவளர்தல் அனந்தல் உறக்கம் துஞ்சல் 
மிக்கதோர் கண்படை சொற்பனம் பள்ளியும் நித்திரை ஆம் 
எக்கல் இவர்தல் பரத்தலும் ஏறுதல் என்று கொள்ளே 

#5
** களவு, உள்ளங் கரத்தல், ஓய்வு, ஒடிதல், வளைவு
கொள்ளும் கயவு கரவடம் கைதொடு கொள்கையில்லாக் 
கள்ளம் கபடம் கிருத்திமம் சோர்வு களவு வஞ்சம் 
உள்ளம்கரத்தலொடு பட்டிமை கட்கை ஓய்வு ஒசிவு 
வள்ளிறல் கோடல் ஒடிதல் அகைதல் ஞெமிர் வளைவே 

#6
** தாழ்தல், அழுங்கல், சினத்தல்
வளைவோடு இறைஞ்சல் குரங்கலும் தாழ்தல் கலுழ் கலங்கல் 
உளைவே கசிதல் அழுங்கல் இரக்கம் உடன்றல் சினம் 
விளர்வே குரோதம் கறுப்புச் சிவப்பு வெகுளி செற்றம் 
கிளர் வேகம் பைத்தல் விடைத்தல் உருத்தல் கிளிமொழியே

#7
** சினத்தல், தாண்டல்
மொழியும் முனிவு கதம் சீற்றம் காய்தல் முணவுகல் ஆம் 
அழிவில் விளிவு செறல் கோபம் தாவல் அகறலுடன் 
வழுவில் இகுத்தல் குயிற்றல் குதித்தல் மேல் வாவுதலும் 
தழுவிய பாய்தல் உகள்தல் கடத்தலும் தாண்டல் கண்ணே 

#8
** போகல், அகறல், திவளுதல்
கடத்தல் படர்தல் சரித்தல் வழங்கல் இயங்கல் செல்லல் 
நடத்தல் பிரிவு ஏகல் சேறல் விடல் நீங்கல் நண்ணுதல் போக்கு 
அடர்த்தல் இகத்தல் தணத்தல் இறத்தல் கழிவு அகறல் 
திடத்த உவளல் துவளல் இவளல் திவளுதலே 

#9
** சீக்கிரம், சுழல்வு
வல்லை முடுகல் கடுகல் கதழ்வு துனைவு விரைவு 
ஒல்லை துருதம் துவறல் நொறில் ஆசு வேகமுடன் 
செல்லும் சபதி சடுதி கதுமெனல் சீக்கிரம் ஆம் 
சொல்லும் உழிதரல் கொட்பும் திரிதரலும் சுழல்வே 

#10
** கொடுமை, பெயர்த்தல், நீர்ச்சுழல்வு, உலா, பிறகிடல்
தந்ததொர் குத்திரம் கோரம் குரூரம் போள் சண்டம் ஞெள்ளல் 
வந்த கொடுமை ஆம் மீள்தல் மறிதல் பெயர்த்தல் என்ப 
உந்தி சுரியலும் நீர்ச்சுழல்வு ஆகும் பவனி உலாப் 
பிந்தல் நெரிதரல் பாறல் இரிதல் பிறகிடலே 

#11
** உராய்போதல், ஆற்றுப்படை, நேரோடல்
** மண்டிலமாயோடல்
கிடைத்த உராய்போதல் ஆகும் உராவுதலே உரிஞ்சல் 
படைத்ததொர் ஆற்றுப்படையே புலவர் வழிப்படுத்தல் 
வடித்தாரை வால் ஆதி வீதி நேர்ஓடலே மண்டிலமே 
எடுத்ததோர் சாரியும் வாளியும் மாதியும் என்று கொள்ளே

#12
** செலுத்தல், அணுகல்
என்றும் கடத்தல் செலுத்தலுடன் ஊக்கல் ஏவல் உந்தல் 
ஒன்றிய தூண்டல் உகைத்தலோடு ஊர்தல் ஒருபொருளாம் 
நன்றியல் நண்ணல் குறுகல் எதிர்தல் நணுகல் ஒட்டல் 
ஒன்றுதல் சார்தல் அணைதல் அணுகல் என்று ஓதினரே 

#13
** தாங்குதல், ஆள்வினை, தேட்டம்
திருத்தல் சுமத்தல் எடுத்தல் தரித்தல் பொறுத்தல் செப்பில் 
பரித்தல் மீக்கோடலும் தாங்குதல் ஆகும் உற்சாகம் பற்றுள் 
உரித்தான தாளாண்மை ஆள்வினை ஊக்கம் உஞற்று உயற்றல் 
வருத்தம் முயற்சி தாள் ஆள்வினை தேட்டமும் வைத்து உரையே

#14
** சூழ்ச்சி, நீங்குதல், மிக்கசெயல், நினைதல், ஊகித்தல்
துய்ய உசாத் தேர்ச்சி சூழ்ச்சி நூல் எண்ணம் சொலாக்கிளவி 
வெய்யதொர் நீங்குதல் ஊராண்மை பேராண்மை மிக்கசெயல் 
ஐயம்இல் சிந்தித்தல் தெள்ளுதல் தூக்கு ஒப்பு அறிவொடு உள்ளல் 
உய்ய நினைதல் தெளிவு ஆய்தல் ஆராய்தல் ஊகித்தலே 

#15
** தேடல், ஒற்றல், ஒற்றுமை, வரையறை, விற்றல், விலை
ஊக்கிய நாடலும் நேடலும் கையரிக் கொள்ளலுமே 
ஆக்கிய தேடல் ஆம் வேய் ஒற்றல் ஒற்றுமை ஆம் குறிக்கோள் 
நோக்கும் கணித்தல் குணித்தல் வரையறை விற்றல் நொடை 
தூக்கும் பகர்தல் விலை பண்டமாற்று என்பர் தூமொழியே

#16
** தானம்
தூவுதல் வண்மை அளித்தல் இகுத்தல் அருள் உதவி 
வேள்வி புரத்தல் வழங்கல் கவிகை வேளாண்மை தரல் 
பாவு உபகாரம் பொழிதலே ஈதல் பனித்தல் நல்கல் 
தாஇல் தியாகம் கொடை ஈகை வீசலும் தானமுமே

#17
** வேள்வி, பாதுகாத்தல், தலைக்காவல், அகத்தீடுகொளல்
தாபம் இலோமம் கிருதுவோடு எச்சம் யாகம் இட்டி 
யூபம் மகம் வேள்வி போற்றலும் ஓம்பலும் பாதுகாத்தல் 
ஆபம் தரு தலைக்காவல் மிளை ஆம் கவவு அகத்தீடு 
ஏ பந்து அணை விரல் மாதே தெவவுக் கொளற்பொருட்டே 

#18
** பிச்சை, தொழல், பூசை, எய்தல்
பொருந்தும் பலி ஐயம் பாகம் சரியை நிரப்புப் பிச்சை 
வருந்திய வந்தனை தாழ்தல் இறைஞ்சல் வணங்கல் தொழல் 
அரும் திறல் பூசை வழிபாடு அருச்சனை ஆராதனை 
பரிந்தறல் வாய்த்தல் கிடைத்தல் பயத்தலும் எய்தலுமே 

#19
**  உண்டாதல், நீத்தல், இணைவிழைச்சு, அறுத்தல்
எய்தும் பயத்தலும் பூத்தலும் உண்டாதல் நீத்தல் ஒரூஉ 
வெய்ய துறத்தல் இணைவிழைச்சுப் புணர்வே நுகர்ச்சி 
ஐய துமித்தல் பிளத்தல் துணித்தல் வகிர் அறுத்தல் 
பைய அரிதல் தடிதல் பகிர்தல் பரிதலுமே 

#20
** பறித்தல், பகைதணித்தல், கொல்லல், வடு, வாருதல்
பறித்தலே குற்றல் களைதலே கட்டல் பகைதணித்தல் 
ஒறுத்தல் நெருங்குதல் காதுதல் தீர்த்தல் ஒழித்தல் கொல்லல் 
செறுத்தல் முருக்குதல் தேய்த்தலும் ஆம் கதுவாய் வடு ஆம் 
மறித்தும் வரண்டல் கொழித்தல் வரன்றலும் வாருதலே 

#21
** தெரிதல், வாய்மைசெயல், கடைதல், அழித்தல் 
வாய்ந்த வரன்றல் தெரிதல் உவளித்தல் வாய்மைசெயல் 
ஏய்ந்த கவர்தல் குடைதல் ஞெலிதல் கடைதல் என்ப 
காய்ந்து சவட்டல் செகுத்தல் சிதைத்தல் நெரித்தல் கைத்தல் 
ஆய்ந்து செறுத்தல் தடிதல் அவித்தல் அழித்தல் அன்றே 

#22
** அடுத்தல், வழிப்பறி, சூலுதல், தோண்டல்
** துளைத்தல், நெருங்கல், சிந்துதல்
அடுத்தலே கூடுதல் ஆறலை ஆகும் வழிப்பறியும் 
தொடுத்த நல் சூலுதல் சூழுதல் தொட்டலே தோண்டல் என்ப 
விடுத்தல் குயிற்றுதல் தோள்தல் துளைத்தல் மீதூர் நெருங்கல் 
கடுத்தல் சிதர்தல் தகர்தலும் சிந்துதல் கண்டனரே 

#23
** தினவு, உலைத்தல், வருத்தல், வெட்டல், கொலை
கண்டூதி ஆகும் தினவே பொறுத்தல் கடிதல் மிறை 
மிண்டல் அலைத்தலே தீர்த்தல் அடனம் செறல் உலைத்தல் 
தண்டுதல் வேதனை கைத்தல் வருத்தல் தடிதல் வெட்டல் 
கொண்ட அடுதல் அணங்கல் படுத்தல் கொலை வீட்டலே 

#24
** மடிதல், ஆபத்து
வீடல் முடிதல் உலத்தல் இறத்தல் விளிதல் விடல் 
வாடல் ஒழிதல் தபுதல் வறல் சாதல் மாய்தல் பொன்றல் 
நீடு அவிதல் மாள்தல் வீய்தல் படல் துஞ்சல் நேர் மடிதல் 
கேடும் விபத்தும் அவத்தையும் ஆபத்தும் கேட்கில் ஒன்றே 

#25
** அழிதல், எஞ்சல், தளர்ச்சி, புய்த்தல், வேறுபடல்
ஒன்றும் உலைதல் உருங்கல் அழிதல் ஆம் ஓய்தல் எஞ்சல் 
குன்றல் தவல் சிங்கல் ஒற்கம் இழுக்கமும் கொள் தளர்ச்சி 
வென்றிசெய் புய்த்தலே உய்த்தலும் வீற்று விபத்தி விள்ளல் 
சென்றியல் பேதுறல் வேற்றுமை வேறுபடல் திரிபே 

#26
** வளைத்தல், வலத்தல், விசித்தல் பொருள்
திருத்திய சுற்றுதல் சூழ்தல் வளாவல் சூழ்போதல் முற்றல் 
வரைத்தல் வளைத்தலும் கோலல் நிணர்தல் வலத்தல் என்ப 
உரைத்த விசித்தல் சிமிழ்த்தல் இமிழ்த்தல் அசைத்தலுடன் 
நிரைத்த பிணிப்பு ஆர்த்தல் வீக்கல் சுருக்கல் நிறுத்தனரே 

#27
** தொடுத்தல், விடல், சுற்றுதல், தடுத்தல், நாடழிவு
நிறுத்த தொடர்பு தொடுத்தல் யாப்பு ஆர்த்தலே நீள் வலித்தல் 
உறுத்தலும் கட்டுதல் தீர்தலே தீர்த்தல் விடற்பொருட்டு ஆம் 
மறுத்த சுலாவலே சுற்றுதல் வாரித்தல் வாரணமும் 
குறித்த தடைமாற்றம் நாடழிவே கொற்றவள்ளை என்னே

#28
** போர் 
வள்ளிய வெம்முனை மொய் அடல் ஞாட்பு மலைதல் தெவ்வர் 
கொள் வினை மாறு முரண் சமர் நேர்தல் குறும்பு இரணம் 
தெள்ளிய ஆர்ப்பு நிகர்ப்பு இகல் பூசல் செரு உடற்றல் 
தள்ளும் சமதியோடு ஆகவம் ஆயோதனம் சமமே 

#29
** போர், தழிஞ்சி, பாதீடு
சங்கிராமம் தும்பை தாக்கல் எதிர்தல் சமீகம் அமர் 
பொங்கு கலிகம் எதிர்த்தலோடு ஆடலும் போர் என்பரால் 
தங்கிய சாய்ந்தார்மேற்செல்லாமை ஆகும் தழிஞ்சி என்ப 
எங்கும் அளித்தலும் பெய்தலும் பாதீடு ஆம் என்றனரே 

#30
** கொட்டாவி, வருத்தம் தீர்த்தல், காய்தல்
** தூவல், சொரிதல்
ஆவித்தல் கொட்டாவி ஆகும் அயாவுயிர்த்தல் வருத்தம் 
ஓய்வித்தல் காய்தல் முனிதல் வறத்தல் புலர்தலும் ஆம் 
தூவல் பிலிற்றலும் பில்கலும் அல்கல் சொரிதல் எக்கல் 
தாவிப் பொழிதல் பனித்தலோடு ஈர்த்தலும் தாழ்குழலே

#31
** உடன்படல், பொழுதுநீட்டித்தல், ஒருங்கு, உறுத்தல் 
** உணர்த்தல், எழுப்பல், சோர்வு
குழல்மொழி ஒட்டல் வலித்தலே நேர்தல் உடன்படல் ஆம் 
பொழுதுநீட்டித்தல் நெடித்தலும் பாணித்தல் பொற்பு உடங்கே 
ஒழிவுஇல் ஒருங்கு ஆகும் ஒற்றல் உறுத்தல் உணர்த்தல் எற்றல் 
அழிவுஇல் எழுப்பல் எடுப்பல் கயக்குச் சோர்வு என்று உரையே

#32
** இயைபு, வழு,  மூடுதல், மொய்த்தல்
** அரசரிறை, சுங்கம்
உரைக்கில் இயைபே புணர்ச்சி இசைப்பு இசையே பிறக்கு 
வரைப்புஇல் வழு ஆகும் மூய்தல் கவித்தலும் மூடுதல் ஆம் 
முருக்கிய மூழ்த்தலும் மூசலும் மூஞ்சலும் மொய்த்தல் என்ப 
சுருக்கும் அரசர் இறை திறை உல்கு பொருள் சுங்கமே 

#33
** குடியிறை, நெருங்கெழுச்சி, தளிர்த்தல்
** பூத்தல், அணைதல்
கறையும் கரமும் கடனும் குடியிறையே கலித்தல் 
நிறையும் கஞறல் கஞன்றலே பம்பல் நெருங்கு எழுச்சி 
அறையும் மிலிர்த்தல் தளிர்த்தல் அலர் பூத்தல் அணைதல் ஒன்றல் 
உறைதல் தோய்வே சார்வு புல்லல் படிதல் புணர்தல் ஒன்றே 

#34
** அணைதல், கலத்தல், திமிர்தல், வக்கிரம் வருதல்
ஒன்றுதல் அண்ணுதல் நண்ணுதல் கூடலுடன் மருவல் 
என்று இவை யாவும் பொருந்துதல் ஆகும் கலாவல் துழா 
அன்றி அளாவலும் ஆகும் கலத்தல் துவருதலும் 
சென்று திமிர்தலும் வக்கிரமா வரும் செய்தியதே 

#35
** வற்புறுத்தல், வருடல், முளைத்தல், அலர்தல்
செய்யும் வருட்டல் தெருட்டலும் ஆம் வற்புறுத்தல் செப்பில் 
தைவரல் நீவல் தடவல் வருடல் உருத்தலுடன் 
மொய்வரல் நாறல் பொடித்தல் பொடிதல் முளைத்தல் என்ப 
வெய்ய எதிர்தல் மலர்தல் அலர்தல் விரிதல் பற்றே 

#36
** மறிதல், மேவல், எட்டல், கூடுதல், சிறை
பகரும் இகுதலே வீழ்தல் மிளிர்தல் மறிதல் என்பர் 
இகலும் அமர்தலும் வீழ்தலும் மேவல் அணவல் எட்டல் 
புகல்தகும் ஒல்லல் சிவணல் பொருந்துதல் கூடுதல் ஆம் 
அகலும் சிறை சேமம் ஏமம் கடி கட்டு அரண் கதவே 

#37
** ஒழுக்கம், ஒன்றல், கடுமை, அலறல், செய்கடன்
கதுவிய மாலை செயல் நடைநீழல் கையாறு இயல்போடு 
உதவு சரிதை ஒழுக்கம் அடு ஆகும் யோகம் ஒன்றல் 
மதி தரு வேகம் கடுமை வியோகம் அகறல் மற்று 
நிதிதரு செய்கடன் ஆகும் நியமம் நியதியுமே

#38
** நிருத்தம், கூத்தாடுதல், பதனழிவு
நிருத்தம் நடம் நட்டம் நாடகம் கண்ணுள் நிலை இலையம் 
திருத்திய தாண்டவம் ஆடல் படிதம் பரதம் செப்பில் 
அருத்திய பாணி குரவை கூத்தாடுதல் தூங்கலும் ஆம் 
பரித்த நல் ஊழ்த்தல் பதன்அழிவு ஆம் செவ்வியும் பகரே 

#39
** கூத்து விகற்பம், வேலனாட்டு, ஆவலம் பெயர் 
கரணமே பித்தம் மலைப்புப் பவுரி கடகம் கூத்து 
பரியம் உள்ளாளம் குனிப்பு வீரட்டானம் பத்தும் அதற்கு 
உரிய விகற்பம் அணங்கு வெறி கழங்காடல் சொல்லில் 
அரியன வேலன்ஆட்டு ஆவலம் ஆர்த்துவாய்தட்டுதலே 
** ஒன்பதாவது செயல்பற்றிய பெயரியல் முற்றும் 

@10 பத்தாவது ஒலிபற்றிய பெயரியல் 

#1
** சொல், வாய்மை
தந்த மொழியும் பனுவலும் பேச்சும் தனியுரையும் 
முந்து கிளவியும் வாக்கும் நல் வாணியும் மாற்றமுடன் 
வந்தியல் கூற்றும் இசையும் வசனமும் வார்த்தையும் சொல் 
அந்தம்இல் வாய்மை சரதம் திடம் உண்மை ஆணையுமே 

#2
** ஓதுதல்
ஆயும் பகர்தல் குயிறல் வழங்கல் அசைத்தல் சொற்றல் 
ஏயும் புகறல் விளம்பல் உரைத்தல் இயம்பல் செப்பல் 
காயும் கிளத்தல் அறைதல் மொழிதல் உரைத்தல் மிழற்று 
ஓயும் நிழற்றல் இறுத்தலும் கோதலும் ஓதுதலே 

#3
** கல்வி, மூதுரை, காரணக்கிளவி, நெடுமொழி
** அசைநிலை, இசைநிறை
ஓதி அறிவு கலை கேள்வி சால்பும் உறுதி கல்வி 
மூதுரை ஆகும் மொழிமை கதை காரணக்கிளவி 
ஆதி நெடுமொழி தன் மேம்பாடு ஓதல் அசைநிலை ஆங்கு 
ஏதல் ஏயும் குரையும் பிறவும் ஆம் இசைநிறையே 

#4
** சாரியை, முச்சுட்டு, மூவினா, அக்கரச்சாரியை
இன்னும் மற்றும் வற்றும் அக்கும் இக்கும் அம்மும் ஒன்னுடன் ஆன் 
அன்ன கிளவி அனைத்தும் ஆம் சாரியை அவ்வும் இவ்வும் 
முன் உவ்வும் முச்சுட்டு ஆம் ஆ ஏ ஓ மாற்றம் ஒரு மூவினாத் 
தன்னியல் காரம் கரம் கான் மான் அக்கரச் சாரியையே 

#5
** உதாரணம், அரும்பொருள், முன்னிலைஅசை
சாற்றும் உதாரணம் ஏது இலக்கியம் சாலும் இன்னும் 
ஆற்றிய ஞாபகத்தோடு பிசியும் அரும்பொருளாம் 
ஏற்றும் மியா கா பிற மதி சின் மின் இகும் எனவே 
தோற்றிய யாவையும் முன்னிலைக்கு ஆம் அசைச்சொல் என்பரே 

#6
** விருத்தநடையன, மந்த இசை, மறைத்துரைபோல் இசை
சொல்லும் சருக்கம் இலம்பம் எனும் இவை தொல் விருத்தம் 
அல்கு நடையன காகுளி மந்தஇசை இனிமை 
புல்லும் இராகம் இடக்கர் மறைத்துரை போல் அசை போல் 
பல்லிய மேவிய பாடல் சங்கீதம் ஆம் பைங்கொடியே 

#7
** சாற்றல், பொய்
கோதுஇல் நுவறலும் பன்னலும் சாற்றல் ஆம் கொள் கவறு 
சூது படிறு மடி மாயம் வக்கிரம் தோம் பாளிதம் 
தீது சடஞ்சலம் விச்சித்தம் வஞ்சம் சிறுமை கள்ளம் 
கோது கபடம் பொய் கைதவம் யாவும் கொடுமை சொல்லே 

#8
** குறளை, புறனஙகூறால், ஆசி, திசைச்சொல்
** துதித்தல், வாழ்த்துதல்
சொல்லும் குறளை பிசுனமும் குஞ்சமும் சூழ் கொடுவாய் 
செல்லும் புறங்கூறல் ஆசி வாழ்த்தே தேசிகம் திசைச்சொல் 
புல்லும் பழிச்சல் பரவுதல் ஏத்தல் புகழ்தல் துதி 
மல்கும் பரசல் வழுத்துதல் போற்றுதல் வாழ்த்துதலே 

#9
** வடுமொழி, புகழ், தாளவொத்து, தேற்றம்
வாய்த்தீமை கௌவை அலர் அம்பல் ஏச்சு வடுமொழி ஆம் 
சீர்த்தி ஒளி இசை மீக்கூறு மேம்பாடு சீரொடு ஒண்மை 
கீர்த்தி புகழ் வண்மை கொற்றமும் தாளஒத்து ஆம் சதி சீர் 
சீர்த்த கடைப்பிடி ஓர்ப்பும் குறிக்கோளும் தேற்றமுமே 

#10
** தேற்றச்சொல், உறுதிச்சொல், சூளுறவு, பேசாமை
** நன்னிமித்தம்
தேற்றமே மன்ற மற்று என்னும் கிளவி கழறலுடன் 
சாற்றி இடித்தல் உறுதிச்சொல் வஞ்சினம் சூள் சபதம் 
தேற்றமும் சூளுறவு ஆகும் வாளாமை பேசாமை வாய்ப்புள் 
ஏற்ற விரிச்சியும் நற்கோள் நிமித்தம் என உரையே 

#11
** அழைத்தல், அறைகூவல், உபசாரம், வினா, விடை 
உரைசெய் விளித்தல் உளைதலே கூவல் வா என்றலுடன் 
கரைதல் அறைகூவல் போர்க்குவா என்று கனன்று அழைத்தல் 
விரைவு முகனமர்வே நன்னயம் உபகாரம் வினா 
வரைவில் கடா விடை ஆம் அதற்கான மறுத்துரையே 

#12
** ஆம், மறுத்தல், ஐயம், இடத்தையம்
துன்றிய அன்று என் கிளவியும் இன்று என் கிளவியும் ஆம் 
என்ற கிளவி மறுத்தலும் ஆம் என்னை என்கொல் எது 
நின்ற எவன் ஏது யாது யா என்ன நிகழ்த்தும் ஐயம் 
அன்றியும் ஆங்குடன் யாண்டும் இடத்து ஐயம் ஆம் என்பரே 

#13
** வேதம், பனுவல், சாத்திரம்
எழுதாத கேள்வி சுருதி மறை சாகையே ஆதிநூல் 
பழுதுஇல் உபநிடம் ஆரணம் வேதம் பனுவலுடன் 
அழிவுஇல் பிடகம் அதிகாரம் தந்திரம் ஆரிடநூல் 
தழுவு கலை விதி ஆகமம் ஓத்துடன் சாத்திரமே 

#14
** செய்யுள், இசைப்பா
சாற்றிய செய்யுள் கவி பாட்டுத் தூக்குக் கவிதை சந்தம் 
போற்றிய யாப்புத் தொடர்பு இவை பா என்ப பொற்பு இசைப்பாக் 
கூற்றியல் கீதம் பண் பாணி வரி கானம் கோடணை பாண் 
மேற்றிகழ் காந்தருவம் கேயம் காமரம் மெல்லியலே 

#15
** நரம்பினிசை, எழுத்திலொலி, ஆரவாரம்
மெல்லிய தந்திரியோடு எழால் ஆகும் நரம்பினிசை 
சொல்லும் பிளிறல் குளிறல் பிரற்றல் சிரற்றல் மருள் 
ஒல்லும் பயிறல் அரற்றல் உளைதல் எழுத்துஇல்ஒலி 
புல்லும் திரியல் அழுங்கல் குரைத்தலும் பூசலுமே 

#16
** ஆரவாரம்
சலித்தல் நால்தல் துவைத்தல் கரைதல் தழங்கல் பம்பல் 
கலித்தல் முரலோசை ஆகுலம் கோலாகலம் திமிலம் 
வலித்த தமரம் தெழித்தலே நூறல் மருளல் ஞெள்ளல் 
ஒலித்தல் இரங்கல் கறங்கல் முழங்கல் என்று ஓதுவரே 

#17
** ஆரவாரம், அனுகரணம்
ஓதும் சிலம்பல் இசை நாதம் கம்பலையோடு இரங்கல் 
போதும் படுதல் இரட்டல் துழனி புலம்பல் சும்மை 
ஓதம் துவனியுடன் ஆரவாரம் துவன்றல் ஒய் ஆர்ப்பு 
ஏதம் தரும் ஓசை பொம்மெனல் கல்லெனல் இம்மெனலே 

#18
** அனுகரணம்
இழுமெனல் கல்லெனல் பொல்லெனல் பொள்ளெனல் இன்னும் ஞெள்ளல் 
விழுமிய விண்ணெனல் பம்மெனல் பூரெனல் வேறு ஞெரேல் 
எழுதரும் ஓசை எவையும் அனுகரணம் என்பரால் 
அழிவொன்று இலாத அனைத்தும் கெயாதரத்து ஆய்ந்து கொள்ளே

#19
** நான்கு கவி, புலவர்வகை, பா, பாவினம்
ஆசு மதுரம் சொல் சித்திர வித்தாரம் ஆம் கவி நான்கு 
ஏசில் புலவர் கவி கமகன் வாதி வாக்கி என்பர் 
மாசில் வெண்பா ஆசிரியம் கலி வஞ்சிப்பா மருட்பா 
வீசும் இனம் தாழிசையும் துறையும் விருத்தமுமே 

#20
** ஆக்கியோன்
மேவும் அரும்பொருள் அந்தாதி கேட்டு இந்த மேதினியோர் 
தாவும் வினை கெடச் சாற்றிய தென்தமிழ்த் தேவை மன்னும் 
கோவை இராமீசுரக்கோவை சொன்ன குருபரன் மற்று 
ஓவுதல் இன்றி அமைத்தான் பத்தாவது ஒலியியலே 

#21
** சொல் நால்வகை
இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல் எனவும் மற்றும் 
பெயர்ச்சொல் வினைச்சொல் இடைச்சொல் உரிச்சொல் எனப் பெயர்த்து ஆங்கு
அயற்சொல் விரவாமல் ஆறு விகாரத்தினால் அமைத்த 
செயற்கை அறிந்தக் கடைத்தும் இயற்கை தெரிவரிதே 
** பத்தாவது ஒலிபற்றிய பெயரியல் முற்றும் 

@11 பதினோராவது ஒருசொற் பல்பொருளியல் 

#1
** அரி
அரி கடல் மால் பன்றி ஆயுதம் பச்சை அளி அருக்கன் 
எரி புகைக் கிண்கிணிப்பெய்பரல் ஐம்மை யமன் கிளி கண் 
வரி வலி இந்திரன் மாருதம் நேமி மடங்கல் மது 
பரி பகை செந்நெற்கதிர் தேரை வானரம் பாம்பு பொன்னே 

#2
** பொன், ஏர், எல், தென், கொன் 
பொன் நேர் இரும்பு சுரர் குரு மாடை பொலிவு திரு 
என் ஏர் அழகு முழு பெற்றமும் எல் ஒளி பகல் ஆம் 
தென்னே வனப்பு மிசை பாடலும் தென்திசையும் என்ப 
கொன்னே பெருமை பயன்இலி அச்சம் கொளும் பொழுதே

#3
** வாரணம், டொய்யில், தொய்யல், மை, வாள், கை
பொய்யிலா வாரணம் கோழி சங்கு ஆனை தடை கவசம் 
தொய்யில் மகிழ்ச்சி அழகு ஓர் புதல் தொய்யல் சேறு துயர் 
மை ஆடு மேகம் கறுப்பு அஞ்சனம் குற்றம் வாள் ஒளி வாள் 
கை சார்பு ஒழுக்கம் சிறுமை படைக்கை கரமும் ஒன்றே 

#4
** தாரை, கன்று, கரி, ஏறுதல், திறம்
ஒன்றிய தாரை விழி கூர்மை காளம் நேர்ஓட்டம் மழை 
கன்று வளை இளைதானவை ஆயும் கரி இருந்தை 
என்றும் நடுத் தந்தி ஏறுதல் மேற்கோடல் இல்லலும் ஆம் 
வன் திறம் கூறுபாடு ஊக்கம் இசைத்திறம் வாணகையே 

#5
** வால், மறம், பால், கால்
வால் ஆகும் தூய்மை இளமை மிகுதி மறம் கொலையும் 
தோலாமையோடு சினமும் கொடியதொழிலும் என்பர் 
பால் ஆம் பகுத்தல் திசை இடம் பக்கம் பயம் இயல்பும் 
கால் ஆகும் கால் தூண் மகவு இடம் வாய்க்கால் தாள் காற்று ஊற்றமே

#6
** கா, பா, கோ, ஆ
காவே நிறை பொழில் கற்பகம் தொன்மரம் காவு தண்டு 
பாவே இசைப்பா இயற்பாப் பரத்தல் நூற்பா பாவுதல் 
கோவே மனன் திக்கு நாட்டம் கிரணம் குலிசம் நன்னீர் 
ஆவே சுவர்க்கம் வியங்கோள் உரை புவி ஆசுகமே 

#7
** ஆசு, வேலாவலையம், மகம், காசு, கமலம், வாசம்
ஆசு சிறுமை விரைவு ஓர் கவி குற்றம் மார்கவசம் 
மாசிலா வேலாவலையம் பார் வீரை மகம் வேள்விநாள் 
காசு மணி வடம் குற்றம் கமலம் சலம் பதுமம் 
வாசம் இடமும் மணமும் துகிலும் மலர்க்குழலே 

#8
** குழல், ஆவி, தழல், தடி, நிழல், கழல்
குழல் ஆம் மயிர் வேய்ங்குழல் ஆவி வாவி புகை உயிர் ஆம் 
தழம் ஆம் கிளிகடிதட்டையும் தீயும் தடி தடி ஊன் 
நிழல் ஆம் குளிர்ச்சி மரக்கோடும் சாயையும் நீடருளும் 
கழல் ஆம் தொடுதோல் கழங்கு கனைகழல் காலடியே 

#9
** காரிகை, வாரி, பாரி, காரி
காரிகை ஏரும் ஒரு நூலும் பெண்ணும் கலித்துறையும் 
வாரி புதவு வருவாய் கடல் நீர் மதில் வழிநூல் 
பாரி பரியங்கம் ஓர் வள்ளல் நல்லாடை பார் மனையாள் 
காரி வடுகன் சனி சாத்தனோடு கடு வள்ளலே 

#10
** கடு, கலை, படுடல், பச்சை, உடு
கடு நஞ்சு, அரிதகி முள் முசு மான்ஏறு காலநுட்பம் 
உடுபதி சேகு வயிர் கல்வி புல்வாய் உடை கலை ஆம் 
படுதல் இன்றாதல் உண்டாதல் ஒலி பச்சை பச்சை புன்தோல் 
உடுவே மரக்கோலும் தாராகணமும் உரை பல்குமே 

#11
** இசை, வில், வேய், வல், வையம், புல்
பல் இசை வண்மை இசைப்பு உரையாடலும் பாடலும் ஆம் 
வில் ஒளி கார்முகம் வேய் ஒற்று மூங்கில் துளை வேய்தல் ஆம் 
வல் வலி சூது விரைவு ஆகும் வையம் தேர் வாழ் புவனம் 
புல் ஆகும் கம்பு புறக்காழ் பொலிவின்மை புல் புல்கலே

#12
** கஞ்சம், வேள், தஞ்சம், தா, துஞ்சல், தொண்டை
கஞ்சம் கலம்பம் கயம் குல்லை அப்பம் வேள் காமன் செவ்வேள் 
தஞ்சம் எளிமையும் பற்றுக்கோடும் தா வலி வருத்தம் 
துஞ்சல் உறக்கமும் சாவும் நிலைபேறும் தொண்டை கண்டம் 
விஞ்சிய கொவ்வையும் ஆதொண்டையும் மென் விரைக்குழலே

#13
** விரை, வேலை, கவலை, மரை, மீளி, புரை
விரையே பரிமளம் சாந்தும் ஆம் வேலை பொழுது தொழில் 
குரைசேர் கடலும் கரையும் கவலை கொடி சந்தி நோய் 
மரை மரை தாமரை மண்டூகம் மீளி விடலை வலி 
புரை புரை ஒப்பு உயர்பு இல்லம் பழுது என்பர் பூண்முலையே 

#14
** முற்றுதல், குற்றல், வண்மை, கற்பம், கான், பொற்பு, விண்டு
முற்றுதல் காழ்கோடல் சூழ்போதல் யாவும் முடிவெய்தலும் 
குற்றல் பறித்தல் குறுதல் ஆம் வண்மை கொடுத்தல் புகழ் 
கற்பம் சுவற்கம் பிரமாயுக் கற்பகம் கான் மணம் கான் 
பொற்பே பொலிவும் அழகும் மால் மேகம் பொருப்பு விண்டே

#15
** விண், குழை, தண்டு, தொண்டு, கொண்டல்
விண் தொனி வான மழை குழை காதணி சேறு தழை 
தண்டு சிவிகை வரம்பு பெரும்படை தண்டு தண்டம் 
தொண்டு வழிபாடு கொண்டை பழமை தொழும்பொடு ஒன்பான் 
கொண்டல் மழையும் குணதிசைக்காற்றும் குறித்து அறியே

#16
** குரு, குருகு, பொருநர், தருமன்
குரு இரு மாத்திரை ஆசான் நிறம் மிகு கோள் பெருமை 
குருகு இளமை கைவளை உலைமூக்குக் குருக்கத்தி புள் 
பொருநர் தலைவரும் கூத்தரும் போர்ப்படை வீரரும் அம் 
தருமன் இயமன் சுகதனும் இந்திரன்தானும் என்னே 

#17
** தானம், மானம், கானம், கதிர், வான்
தானம் சுவற்கம் மதம் கொடை நீராடல் சார்பிடம் ஆம் 
மானம் பெருந்தன்மை குற்றம் அளவு வரும் இலைச்சை 
கானம் இராகமும் காடும் கதிர் கதிர் பானுமதி 
வான் அம்புதமும் வலியும் பெருமையும் வானமுமே 

#18
** வாரம், ஈரம், கரம், பாரம், கார்
வாரம் கரை சாரல் அன்பு கிழமை செவ்வாரம் வைப்பு ஆம் 
ஈரம் குளிர்ச்சி அன்பு என் கரம் கை நஞ்சு இறை கழுதை 
பாரம் புவியும் கரையும் நிறையும் வன் பாரமும் ஆம் 
கார் அம்புதநீர் கருமை கரும்கவி கார்காலமே 

#19
** காணம், கறை, பூவை, தூணம், விறப்பு, தாணு
காணம் தனம் செக்கு அளவு பரிஊண் கறை உரலே 
பூணும் கருமை திறை சோரி பூவை காயா ஒரு புள் 
தூணம் பகை தூண் விறப்புச் செறிவு வெரூஉப் பெருக்கம் 
தாணு நிலைபேறும் சத்தி தூண் ஈசனாச் சால வையே 

#20
** சாலம், கோலம், மூலம், பாலம், நீலம்
சாலம் விசாலம் மராமரம் கூட்டம் கயிற்றுவலை 
கோலம் அழகு ஒப்பனைபன்றி கூத்தில் பல் கோலமும் ஆம் 
மூலம் கிழங்கும் ஒரு நாளும் பாலம் நுதல் இசைப்பு ஆம் 
நீலம் குவளை இருள் ஓர் மணி நிறம் நீள் பெண்ணையே 

#21
** பெண்ணை, மதி, தண்ணடை, வறிது, வண்ணம், கோடு
பெண்ணை பனை ஓர் நதியும் மதி விதுப் பேரறிவு ஆம் 
தண்ணடை நாடு நகரும் வறிது சிறிது அருகல் 
வண்ணம் நிறம் கவி ஓசை வனப்பு ஒப்பனை செயல் ஆம் 
எண்ணிய கோடு கரை சங்கு தந்தம் கம்பு ஏந்திழையே 

#22
** ஏமம், செழுமை, தாமம், சாந்தம், வாமம்
ஏமமே காவல் பொன் ஏமாப்பு இரவு மயக்கம் இன்பம் 
சேமமும் ஆகும் செழுமை வளனும் கொழுப்பும் என்க 
தாமம் ஒழுங்கு ஒளி தார் கொன்றை சாந்தம் கமையும் சந்தும் 
வாமம் குறங்கு இடப்பாகம் குறளும் வனப்பும் என்னே

#23
** வனம், மதனம், பலி, தனம், அஞ்சனம்
வனம் உதம் கானம் வனப்பு ஆம் மதனம் வருத்தமும் அமர்த்தனமும்
பலி நீறும் தெய்வஉணவோடு தாருவும் ஆம் 
தனமே கனதனம் முன்னிரை சாமீகரமும் என் அஞ்சனமே
எழுதுமை ஓர் திசையானை ஓர் கற்பிறப்பே

#24
** பிறங்கல், பேர், கறங்கல், கம், நேமி, 
பிறங்கல் பெருமை உயர்ச்சி இறை பேர் பெருமை பெயர் 
கறங்கல் சுழற்றி வளைதடி பேயொலி கம் தலை வான் 
நிறங்கொள் சலிலம் பிரமன் சதாகதி நேமி வட்டம் 
மறங்கொள் திகிரியே ஓர் சகுனம் பௌவம் வையகமே

#25
** வை, வள், மீன், ஐ, ஆர்தல், பை
வை ஆகும் புல் கூர்மை வைக்கோலும் வள் வலி வார் கூர்மை ஆம் 
மெய் ஆகும் சொற்பொருள் உண்மை உடம்பு ஒற்று மீன் உடு மீன் 
ஐ ஆம் அழகும் இருமலும் ஆர்தல் நிறைதல் உண்டல் 
பை ஆம் அழகும் அரவின் படமும் பசுமையுமே 

#26
** பணி, பார், அணி, கணி, மஞ்சு
பணி அணி ஏவல்தொழில் பாம்பு பார் கற்பரப்பு நிலம் 
அணி அழகு ஆபரணம் அலங்காரம் அணிவகுப்பு 
கணி கணியான் வேங்கை காயம் மெய் ஆகாயம் கார்ப்பு மஞ்சே 
தணி முகடே அம்புதமும் முதுகும் தருணமுமே 

#27
** தருமம், பிரமம்
தருமம் உலகவழக்கம் விதி ஈதல் தட்பம் நல்ல 
கருமம் இயல்பு தவம் புலல் நல் அறம் கண் அருளும் 
பிரமம் மால் மந்திரம் வேதம் வேதாந்தம் பிரமன் மதி 
இரவி தீ முத்தீப் பதம் வேள்வி ஞானம் இருடிகளே 

#28
** இருமை, ஏண், கருமை, காளம், பவனம், வாடை, உரு, ஒளி
இருமை பெருமையும் இம்மை மறுமையும் ஏண் வலி ஏண் 
கருமை கறுப்புப் பெருமையும் காளம் கார் நஞ்சு கழு 
வரு பவனம் நாடு வீடு கால் வாடை வடந்தை தெரு 
உரு வடிவு உட்கு ஆம் ஒளி புகழ் சோதி ஒளிப்பிடமே

#29
** சத்தி, ஆரம், கடை, களி, மாதிரம் 
இடர் அறு சத்தி குடை வலி காளி இசைச்செயுள் வேல் 
தொடையல் முத்தாத்தி சுடர்ப் பூண் சந்து ஆரம் ஆம் சோரி அப்பக் 
கடை முடிவு ஆவணம் வாயில் கடை ஆம் களி செருக்கும் 
வடி மதுவும் ஆம் மலை திசை வான் அது மாதிரமே 

#30
** மா, பூ, தே, சே
மாவே பெருமை கருமை நாற்காலன வண்டு நிறம் 
பூவே தருத் திரு மாமர ஓருமார்ந் 
தாரணியும் 
தேவே திசை இடம் தெய்வம் ஏறோர் தருச் சே என்கவே

#31
** சேய், ஆய்தல், அள், வாய், மறை 
சேயே மகவும் முருகனும் செவ்வாயும் சேய்த்தும் என்க 
ஆய்தல் நுணுக்கம் அசைவு ஆய்தல் அள் கூர் செறிவு வளம் 
வாயே விடமும் வருவாயும் வாய்மையும் வாக்கும் என்க 
தூய மறை மறை கேடகம் மந்திரம் தூய்நகையே 

#32
** நகை, தகை, சங்கம், அரில், ஏற்றல்
நகை ஆம் மகிழ்ச்சி மலர்ச்சி இகழ்ச்சி நகை எயிறு ஆம் 
தகை ஆம் இளைப்புப் பெருமை வனப்பு என்க சங்கம் சபை 
அகலாப் புணர்ச்சி வளை கைவளை அரில் தூறு குற்றம் 
இகல் ஆகும் ஏற்றலே கோடலும் ஏன்று பொருதலுமே 

#33
** பொற்றை, கனலி, அற்றம், மற்று, மாடு, எற்று
பொற்றை வரை தூறு ஆம் ஏனம் இரவி தீப் பொன் கனலி 
அற்றம் அவகாசம் சோர்வு மறைபொருளற்றது உண்மை 
மற்று என் கிளவி வினைமாற்று அசைநிலை மாடு அயல் பொன் 
எற்று என்பது நினைவு என் என்னலேல் புடையாது இயம்பே 

#34
** ஆகம், உகுத்தல், பாகம், நாகம், குலம்
ஆகம் உடல் மார்பு உகுத்தல் செகுத்தலும் வீழ்த்தலும் ஆம் 
பாகம் பதம் ஓர் அரளவொடு பல் கூறும் பாகியும் ஆம் 
நாகம் சுவற்கம் அரவு ஆனை காரீயம் நல் பொருப்போடு 
ஏக மரமும் குலம் சாதி கூட்டமும் இல்லமுமே 

#35
** இல், பள்ளி, கொல்லி, கணை, கல்வி, காவல், வல்லி
இல் இலம் தேறு மனையாள் இடம்துயில் கோயில் பள்ளி 
கொல்லி இசையும் கிரியும் கணை கணை கோல் திரட்சி 
கல்வி அறிவும் பயிற்சியும் காவல் அரண் சிறை ஆம் 
வல்லி கொடியும் நிகளமும் மாறல் ஒர் வல்லியுமே 

#36
** வல்லை, வரை, சூதம், முல்லை, இடி 
வல்லை அரணும் வலியும் விரைவும் வரை வரைவே 
எல்லையும் சூதம் இரதமும் மாவும் பிறப்பும் வண்டும் 
முல்லை இசையும் ஒரு கொடியும் கற்பு முன் நிலனும் 
நல்ல தகரம் தருப்பணம் சுண்ணமும் நல் இடியே 

#37
** இடம், தடம், கடம், படம் 
இடமே விசாலமும் வாமமும் மூவகையாம் இடமும் 
தடமே பெருமை வளைவு சுனை யானைத் தண்டம் வெற்பு 
கடமே மலைச்சாரல் மட்கலம் மாகம் கடாம் கடனும் 
படமே எழுதுபடம் துகில் பாம்பின் படமும் பன்னே 

#38
** நூல், கன்னல், துன்னல், சுடர், இழுமெனல்
பன்னிய நூல் இழை எண்ணம் கொடியும் பனுவலும் ஆம் 
கன்னல் கடிகை அதன் வளம் இக்குக் கரகம் குடம் 
துன்னல் குறுகல் செறிதல் இரு கதிர் சோதி விளக்கு 
இன்னும் கனலும் சுடர் ஓகை இன்பம் இழுமெனலே 

#39
** இதை, புதை, புவனம், கதை, மதவு
இதையே மரக்கலப்பாயும் புதுப்புனமும் இசைக்கும் 
புதையே புதுமை கணைக்கட்டும் தோயம் புவி புவனம் 
கதை காரணமொழி கட்டுரை தண்டாயுதமும் கண்டாய் 
மதவே மிகுதி வனப்பு வலி இடம் வை அணங்கே 

#40
** அகம், நகம், நந்துதல், ககம், கட்சி, சுகம்
அகம் புறமல்லது வான் மா அகப்பொருள் பாவம் இல்லம் 
நகம் தரு வெற்பு உகிர் நந்துதல் ஆக்கமும் கேடும் என்க 
ககம் கணை புள் காடும் கூடும் துயிலிடமும் கட்சி ஆம் 
சுகம் கிளி இன்பமும் நன்மையும் உம்பர் சுவற்கமுமே

#41
** சுவல், பரவை, துவர், இவர்தல், திரை
சுவலே திடர் பிடர் தோள்மேல் பரவை பாதாலம் கடல் 
துவரே பவளம் சிவப்பு ஆக்கம் காட்டம் துவர்ப்பு மிகல் 
இவர்தல் விருப்பு ஏறல் சேறல் பரத்தல் எழுச்சியும் ஆம் 
திவரும் திரை திரை பூமி கடலொலி தேன்மொழியே

#42
** தேன், செல், வேழம், தானை, உந்தி
தேன் மதுவும் வண்டும் செல்லே உருமுக் கனம் சிதல் ஆம் 
யானையும் கன்னலும் வேயும் கொறுக்கச்சியும் வேழம் ஆம் 
தானை புடவையும் கைப்படை காலாட்படையும் உந்தி 
ஏனை உயர்ச்சி நதி தேர்உருள் கொப்பூழ் யாழ்க்கண் ஒன்றே

#43
** உறை, குரல், அங்கணம்
ஒன்று மருந்து துளி நீர் நெடுமை பிரை உவர்நீர் 
என்றும் படையுறை எண்ணுறை காரம் இடைச்சொல் உறை 
தென்றும் குரல் ஒரு பண் கதிர் கூந்தல் சிறகரற்றல் 
முன்றிலும் பொல்லா நிலமும் ஆம் அங்கணம் முன்குறியே 

#44
** குடை, கவிகை, தொடை, தடை, கயில், நாள்
குடையும் கொடையும் குடை ஆம் கவிகை குடை கொடை ஆம் 
தொடை தொங்கல் வெம் கணை பாவுறுப்புச் சொற்றொடர் தொடுத்தல்
தடை கவசம் மனையாள் தடுத்தல் பூண் கடைப்புணர்வும் 
பிடரும் கயில் நாள் நாள் காலை உடுச் செவ்வி பெண்ணமுதே

#45
** முதல், முரண், பதம், ஆணை, கதலிகை, காதை
முதல் முதல் கைம்முதல் மூலி முரணே வலிப் பகை ஆம் 
பதம் வழி காலம் கால் சொல் சோறு செவ்வி இதம் பாதம் ஆம் 
விதி செயல் மெய்ப்பாடு இலாஞ்சினை ஏவல் சூள் மெய் ஆணை ஆம்
கதலிகை வாழை துகிற்கொடி காதை மொழி கதையே

#46
** கதவு, வேலி, மதம், சதம், தலம், மதலை
கதவு கபாடமும் காவலும் வேலி மதில் காவல் ஊர் 
மதம் மும்மதம் செருக்கு அவ்வவர் கூறும் மதமும் என்க 
சதம் இலை ஈரைம்பதும் ஆம் தலம் பன்னம் தாரணியும் 
மதலை கொடுங்கை தூண் பாவை புதல்வர் மரக்கலமே 

#47
** கலம், அலம், பிறழ்வு, பலம், பயம், புலம்
கலம் ஆம் மரக்கலம் மட்கலம் ஓர் அளவை கலம் பூண் 
அலம் ஆம் கலப்பை அமைவும் பிறழ்வு அவிர்தல் பெயர்தல் 
பலம் ஆம் பலிப் போர் பலம் காய் பயம் அச்சம் பாலொடு நீர் 
புலம் ஆம் விளைநிலம் புந்தி திசையும் புலனிடனே 

#48
** புலவர், மன்றல், பூ, மலைதல் 
புலவர் அறிஞரும் ஆடுநர் பாடுநர் புத்தேளிரும் 
நிலவு கடிமணம் மன்றல் வதுவையும் நீள் நறையும் 
குலவிய பூவே அழகு பொலிவு மண் கூர்மை மலர் 
மலைதல் மறுத்தல் பொருதலும் சூட்டலும் வைத்தனரே

#49
** காழ், செத்து, ஓதிமம், அத்தம், அயில், பிணிமுகம், 
வைத்த ஒளி பரல் சேகு கோல் மாலை மணிக்கோவை காழ் 
செத்து என்பது ஒப்பும் கருத்தும் வெற்பு அன்னம் திகழ் ஓதிமம் 
அத்தம் நெறி கை ஒருபால் ஒருநாள் அயில் கூர்மை வேல் 
சுத்தம் பிணிமுகம் அன்னம் புட்கே கயம் தூக்கிக்கொள்ளே

#50
** தூக்கு, தூக்கம்,  துப்பு, மாதர், விம்மல், 
தூக்கு ஆய்தல் தூக்கம் நிறுத்தல் கவி தூக்கம் தொங்கல் கனம் 
ஆக்கும் துகிர் வலியே ஆயுதமும் அரக்கும் துப்பு 
வாக்குடை மங்கையர் காதல் இடைச்சொல்லும் மாதர் என்ப 
தாக்கிய விம்மல் ஒலித்தலும் விம்முதல்தானும் என்னே

#51
** மடங்கல், இறும்பு, தாலம், உருத்தல்
தாவும் மடங்கல் கூற்று ஊழித்தீச் சீயநோய்தான் உருமேறு 
ஏவும் வியப்புத் தகைமை மலை தூறு போது இறும்பு என் 
ஓவிய தாலம் தலம்பணை நாவுடன் உண்கலமும் 
மேவும் உருத்தல் வெகுட்சியும் தோற்றமும் மெல்லியலே

#52
** வாயில், வெள்ளை, கன்னி, சிரகம் 
மெல்லியல் தூது புலன் திறன் வாசலும் வாயில் வெள்ளாடு 
அல்லது வெண்பா மயமின்மை வெள்ளை வடிவும் வெள்ளை 
சொல்லும் குமரி இராசி அழிவின்மை துற்கை கன்னி 
நல்ல சிரகம் துவலை காகமும் நாட்டினரே 

#53
** விதி, கோடரம், நவிர், பாடு, தாடு, தளி
நாடும் செயலும் இயல்பும் பிரமனும் நல் விதி ஆம் 
கோடரம் கொம்பு பொதும்பு கவி நவிர் குஞ்சி பண் வாள் 
பாடு படுதல் பெருமை ஏழாமிடம் பக்கம் பண்பு ஆம் 
தாடு தலைமை வலி தூறல் கோயில் தளி சாற்றுமே 

#54
** நத்தம், ஆற்றல், போற்றல், ககனம், தோற்றம்
சாற்றிய நத்தம் இருளும் பதியும் இரவும் சங்கும் 
ஆற்றல் வலியே பரித்தல் செயவல்லராதல் மிகல் 
போற்றல் புகழ்தலும் காத்தலும் வானம் கான் புள் ககனம் 
தோற்றம் விளக்கம் மிகுதி புகழினும் தோன்றுதலே 

#55
** தோல், மால், நீல்
தோல் ஓர் வனப்புத் துவக்குக் கைம்மாவுடன் தோல்பலகை 
மால் ஆம் திருமால் கருநிற மேகம் வளி மயக்கம் 
மேலாம் பெருமை பழமை கண்ணேணியே வேட்கை புதன் 
நீல் ஆகும் நீலநிறமும் புவனமும் நேரிழையே 

#56
** நேர்தல், வார், மல்லல், சீர்
நேர்தல் இசைதல் எதிர்தலும் வேண்டலும் நேர்படலும் 
வார் புனல் நேர்மை நெடுமை கச்சு ஆம் மல்லல் வன்மை வளம் 
சீரே அழகு புகழ் பாரம் காத்தண்டு செல்வம் சதி 
சீர்மை கவி ஓர் உறுப்புடன் ஒல்கலும் செம்பொருளே

#57
** செம்மல், கொம்மை, அம்மை, செம்மை
செம்மல் பழம்பூப் பெருமை மகன் வாரி செப்பில் இறை 
கொம்மை அழகும் திரட்சியும் வட்டமும் கூத்திலொன்றும் 
அம்மை வனப்பு மறுமையும் தாயரும் அம்பிகையும் 
செம்மை சிவப்பும் பெருமையும் செப்பமும் தேர்ந்து அறியே

#58
** மாலை, பிரசம், பரி, ஆரல்
தேரின் மலர் பொன் மணி சொல்தொடுத்தலும் மந்தி கங்குல் 
ஓரின் இயல்பும் ஒழுக்கமும் மாலை உயர் பிரசம் 
வேரியும் வண்டும் பரி மாப் பெருமை விரைவுசெலல் 
ஆரல் ஒரு மீன் அமர் கார்த்திகை செவ்வாய் ஆம் பகரே 

#59
** வளம், அண்டர், மூரல், கண்டம், புண்டரிகம்
பண்டம் பலவும் வனப்பும் வளப்பாடும் ஆற்றல் வளம் 
அண்டரே தேவரும் ஆயரும் முரல் அவிழ் நகை ஆம் 
கண்டம் கழுத்துத் திரை வாள் அவனி கவசம் துண்டம் 
புண்டரிகம் ஒரு பூடு ஒரு நோய் முண்டகம் புலியே 

#60
** பண்ணை, படை, பாணி, வஞ்சி
புல்லு மருதம் புனல்பெருக்கு ஆயமே பொய்தல் பண்ணை 
நல்ல படை படை பாயல் உழும் நாஞ்சில் நல் கலனை 
பல்லியம் பாடல் நெடித்தல் பொழுது கை நீர் பாணி ஆம் 
வல்லி மேற்சேறல் ஒருபால் ஒரு பதி வஞ்சி என்னே 

#61
** தார், பணை, 
வண்டு அமர் மாலை கொடிப்படை பூ மாவினுக்குஅணி ஆம் 
கிண்கிணி மாலையுடன் ஒழுங்கும் தார் கெயாதரத்துள் 
முந்தும் பணையே பணைத்தல் பிழைத்தல் முரசு கற்கிப் 
பந்திப் பழனம் மாக்கோடு மூங்கில் பதித்தனவே 

#62
** பதி, சாறு, திதி, அரில், நிதி, கதி
பதியே பதியும் தலைவனும் சாறு விழவும் கள்ளும் 
திதியே நிலைபேறு பக்கம் அரில் பாயல் சேகு சந்தி 
நிதியே பதுமநிதியுடன் சங்கநிதி அருத்தம் 
கதியே பரகதி நாற்கதி ஐங்கதி காண் மனனே 

#63
** கரணம், கள், 
மனம் முதல் நான்கும் துணைக்காரணமும் வகை நடிப்பும் 
கனவிய கல்வியும் எண்ணும் மடவார் கலவியில் கொள் 
நினைவும் கரணம் ஆம் கள்ளே மருதம் நிலத்தொடர்பு
புனல் தரு பொய்கை சுரை நறவு ஆகும் புரிகுழலே 

#64
** அம்பரம், பரிதல், படர், வரிதல், மாயம், கரு  
புரிதரும் அம்பரம் ஆகாயம் கூறை புணரியும் ஆம் 
பரிதல் அறுதலன் பின்னல் படர் செலவுள்ளல் குற்றம் 
வரிதல் வரித்தல் எழுதுதல் மாயமே வஞ்சம் பொய் ஆம் 
கரு நடு மேடு கருப்பம் கருப்பொருள் கண்டுகொள்ளே 

#65
** தொடுத்தல், தவவு, அந்தம், நனை
கொள்ளும் தொடுத்தல் வளைத்தல் பிணித்தல் சொல்கூட்டல் பற்றல் 
எள்ளும் தவவு மிகுதல் கெடுத்தல் இனிக் கெழுமல் 
வள்ளிய ஓசை வருத்தமும் அந்தம் வனப்பு இறுதி 
கள்ளும் முகுளமுமே நனை ஆகக் கருதுவரே

#66
** வீசல், பொறி, திங்கள், பருதி
கருதில் எறிதலும் ஈதலும் வீசல் பரத்தலும் ஆம் 
பொருவில் எழுதல் இலாஞ்சினை எந்திரம் பொன் புனல் பூந்திருவும்
எழுத்தும் பொறி திங்கள் மாதமும் இந்துவும் ஆம் 
பருதி இரவியும் வட்டமும் நேமியும் பார்த்து உரையே 

#67
** வெறி, அளி, மது, வைகல்
உரைசெய் வெறியே வெறியாட்டு அணங்காட்டுடன் மருட்சி 
விரையும் ஆம் வண்டு மது ஈகை அன்பு விளம்பில் அளி 
வரையும் மதுத் தேன் பிரசமும் ஆலியும் வைகல் தங்கல் 
உரிய கழிவும் புலரியும் நாளும் என்று ஓதினரே

#68
** நாஞ்சில், குயம், தாது, 
ஓதிய நாஞ்சில் எயிலினுறுப்பு முழு படையும் 
கோதையர் கொங்கை கொடுவாள் இளமை குயம் அது என்க 
தாது உலோகம் இரதாதிஏழ் பொடி தாது கல் ஐம்பூதம்
அடிமை உயிரில்லன வல்லி பொற்கொடியே

#69
** பொழில், கூற்று, வெம்மை, மடி, மன், சுடிகை
கொடியே பொழில் ஆம் உலகமும் சோலையும் கூற்று மொழி 
கடி வேல் வெம் காலனும் வெம்மை விருப்பம் கடுமை வெப்பம் 
மடி தாழை சோம்பு வயிறு ஆடை மன் அசை மன்னுதல் மன் 
சுடிகை மணிமுடி உச்சியும் ஆம் என்று சொல் திண்ணமே

#70
** திணை, அணை, ஆடல், கழங்கு
திணையே அகத்திணை ஏழும் புறத்திணை ஏழும் செப்பில் 
இணைஇல் குலத்தோடு ஒழுக்கமும் ஏனை இருதிணையும் 
அணையே கரையும் தளிமமும் ஆடல் நிருத்தம் வென்றி 
துணை ஆம் கழங்கு அணங்காட்டுக் கொடிக் கழல் சொல் மணந்தே

#71
** மண், கண், அண்ணல், ஆசை, எண்
மண்ணே கழுவுதல் மார்ச்சனை ஒப்பனை மண் முழவம் 
கண்ணே கருத்து ஏழாம் வேற்றுமை நாட்டமும் கண் அருளும் 
அண்ணல் பெருமை தலைவனும் ஆசை பொன் அன்பு திசை 
எண்ணே திலமும் விசாரமும் சோதிடம்தானும் என்னே

#72
** தாயம், உலவை, ஆயம், சினை, தூ
தாயம் உரிமை தமரும் ஆம் கொம்பு ஊதைதான் உலவை 
ஆயம் மகளிர்திரள் நீளம் சுங்கம் சூது அல்லரியும் 
ஏயும் சினையே கருவும் உறுப்பும் இளையகொம்பும் 
தோயும் தசையும் பகையும் இறகும் நல் தூ என்கவே 

#73
** வயிரம், குணம், பயிர்
தூரியம் செற்ற மணி சேகு அச்சிரம் சொல்லில்வன்மை 
கூர்தலும் ஆகும் வயிரம் குணம் முக்குணம் பண்பு நூல் 
சீர்மையும் ஆம் நெல்லுடன் புல் விலங்கோடு புள்குரலும் 
ஓர்விதம் கட்டு வழக்கும் பயிர் என்று உரைத்தனரே 

#74
** எற்றித்தல், நெறி, பரம், கொற்றம், பதங்கம்
உரைசெய் எற்றித்தல் வலித்தல் துணிதல் இசைக்கும் இவை 
நிரையே நினைவிற்கும் மற்று அமுது ஆம் நெறி முத்தி வழி 
பரமே கவசம் பரம்செய்தல் ஆகம் பழமை முன்பு ஆம் 
அரசியல் வெற்றியே கொற்றம் பதங்கம் புள்ளாய் விட்டிலே 

#75
** புங்கம், கழுது, துளி, பார்வை, தட்டை
விட்ட நல் ஆடை உயர்ச்சி குதை புங்கம் வெம் கழுது 
தொட்ட இதணம் அலகையும் வண்டும் துளி அடைத்தல் 
பட்ட துளியும் ஆம் பார்வை விழி தீ அகமதிப்பும் 
தட்டை கழையும் கிளியைக் கடியும் தழலும் என்னே 

#76
** கதழ்வு
தயங்கோர் பதிமேக 
வயங்கு கதழ்வே விரைவு செறுத்தலும் மன்னும் என்னே 

#77
** உறழ்வு, தெவிட்டல், பொகில், இடங்கர், வேலன்
மன்னும் உறழ்வே பொருந்தல் உணர்வு ஒப்பு மாறு இடையீடு 
உன்னும் தெவிட்டல் அடைத்தல் ஒழித்தல் நிறைவு உமிழ்தல் 
இன்னும் பொகில் உந்தி புள் ஆம் இடங்கர் குடம் முதலை 
முன்னிய வேலன் வெறியாட்டவனும் முருகனுமே 

#78
** முளரி, சிக்கம், குளம், ஊர்தி
முளரி கடைக்கொள்ளி நுட்பம் கான் தாமரை முள்மரம் ஆம் 
தெளிவில் மெலிவு சிறை உறி உச்சி வார் சீப்புச் சிக்கம் 
குளம் ஆம் சருக்கரை நெற்றி தடாகமும் கொள் சிவிகை 
உளைதரு தேர் வெம் கரி பரி மா இவை ஊர்தி என்னே 

#79
** அண்டசம், கடகம்
ஊரும் அரவு தவளை முதலை மீன் ஓந்தி உடும்பு 
ஆரும் பறவை அரணை கெவுளி நண்டு ஆமை முதல் 
தேரும் அனைத்தையும் அண்டசம் என்பர் திகழ் கடகம் 
சாரும் படையும் படைவீடும் கைவளைதானும் என்னே 

#80
** வெளில், தீரம், ஊறு, முடலை, நொறில்
தாங்கும் தயிர்கடைதூண் அணில் ஆனைத்தறி வெளில் ஆம் 
ஆங்கு இயல் தீரம் கரை திட்பம் ஊறு ஊற்று அறி புலன் நோய் 
தீங்கு இடையூறு முடலை திரட்சி முருடு மறம் 
ஓங்கு நொறிலே முடக்கம் விரைவு என்பர் ஒள்ளிழையே 

#81
** ஓங்கல், அளகம், புரிவு, கந்தம்
ஒள்ளிய ஓங்கல் உயர்தல் வரை கழை உம்பர் வங்கம் 
அள்ளுறு கூந்தல் குருளை புனலும் அளகம் என்க 
தெள்ளும் புரிவு விரும்புதல் வேறுபடல் செயலும் 
வள்ளிய கந்தம் புலனும் கழுத்து மணமும் என்னே 

#82
** சூழி, வயா, பயோதரம், பனித்தல், கண்டகம்
மணந்ததொர் சூழி முகபடாம் வாவி வயா வருத்தம் 
புணர்ந்தவர் காதல்பெருக்கம் பயோதரம் பூண் முலை நல் 
குணம் தரு மேகம் பனித்தல் மழைபொழிதல் கொடுத்தல் 
கணம்தரு வாளும் சுரிகையும் முள்ளும் ஆம் கண்டகமே 

#83
** குயிறல், கம்பலை, பகல்
கண்ட குயிறலே கூவல் செறிதல் குடைதல் செய்தல் 
கொண்ட நடுக்கமும் இன்னாப்பும் அச்சமும் கொண்டனையும் 
எண்டரு கம்பலை நாளும் நடுவும் எழும்செயலும் 
பண்டை ஒளியும் பல பாகுபாடும் பகல் என்பரே

#84
** கோள், உம்பர், களம், சூர்
பகர்தரு கோள் என்பர் கோடல் கோட்பாடு பல்கோள் குணம் தீங்கு
அகல்தரும் உம்பர் அமரரும் மேலும் அணி மிடறும் 
பகைநிலமும் நெல்லிடமும் களாவும் பரப்பும் களம் 
புகல்தரு சூர் வஞ்சம் தெய்வம் நோய் சூரனும் பொற்றொடியே

#85
** மாழை, அணங்கு, துணங்கு, அளக்கர்
பொன் ஓலை கட்டி மடமை மா ஆயமும் மாழை அணங்கு 
உன்னிய தெய்வம் உவமை மடவாள் நோய் ஓதில் அச்சம் 
துன்னும் விழவோடு அறலும் நன்னாளும் துணங்கு என்பரால் 
அன்னம் புவனமும் சேறும் கடலும் அளக்கர் என்னே

#86
** தோடு, மடல், தபுதல், 
அளவிய தோடு தொகுதி பனையிலை போல்வனவும் 
வளவிய பூவின் இதழும் ஆம் பூவின் இதழும் பெண்ணை 
உள இதழ் போல்பவும் ஆகும் மடல் இனியோர் தபுதல் 
களைதரு சாவுடன் கேடும் ஆம் என்றனர் காதலித்தே 

#87
** மள்ளர், காங்கயம், பொருள்
காதிய மள்ளர் உழவரும் வீரரும் காங்கயமே 
தீது செய் ஆண்மையும் வன் பணி செய்யும் செயலும் என்க 
நீதியும் சொற்பயனும் பல பண்டமும் நீள் தனமும் 
ஓது தலைமையும் ஒண்மையும் வாய்மையும் ஒண் பொருளே 

#88
** செச்சை, போல், ஏதி, கேவலம், தாரம், பதலை
பொருந்திய செச்சை வெள்ளாட்டேறுடன் வெட்சி போல் அசை போல் 
தரும் திறல் ஏதி இருபடைக்கும் ஆம் தனிமை முத்தி 
வரு கேவலம் தாரம் வெள்ளி நாக்கு இல்லாள் அரும்பண்டம் பண் 
பரிந்த பதலை அகல்வாய்ப்பறை தாழி பல்பொருப்பே 

#89
** ஞெள்ளல், எகினம், கோதை, சம்பம், சிறை
பறையும் தெருவுடன் மென்மையும் ஞெள்ளல் பரிந்து எகினம் 
குறையும் கவரியும் அன்னமும் நாயும் ஆம் கோதை பெண் நெல் 
பொறையன் தெரியல் விரல் கட்டி ஐம்பால் கால் பொன் குலிசம் 
நிறையும் எலுமிச்சம் சம்பம் சிறை சிறை நேர் சிறகே

#90
** கருவி, எள்ளல், நிழற்றல், 
நேர்ந்த கருவி தொடர்பு யாழ் பல்லியம் நீள் கவசம் 
வாய்ந்த தொகுதி கலனை வினை மேகம் வல்லாயுதம் 
ஏய்ந்த துணைக்காரணமும் ஆம் எள்ளல் இகழ்ச்சி நகை 
சேர்ந்த நிழற்றல் நுணுக்கல் நிழற்றல் நிழல்செய்தலே

#91
தருவான் நவிரமலையுடன் உச்சி சடைசன் அறி 
திரண்டு அகன் மேல் வலம் பாரிடமே 

#92
** பாகு, பாடி, வாகு, பாடலம், நாகு
பாகு குழம்பு பகிர்ச்சி கரை கட்டி பாக்கு நதி 
ஏகிய பாடி கவசம் நகர் நாடு எழும் படையும் 
வாகு தோள் பாடலம் பாதிரி செம்மை ஒர் வாசியும் ஆம் 
நாகு பெண்பால் நந்து இளமை நீர்வாழ்சாதி நந்திழையே

#93
** இழை, முருகு, கானல், மானல்
இழையே இழைத்தல் இழை பூண் முருகு எலுமிச்சு எழுச்சி 
விழவு குமரவேள் நாற்றம் இளமை வெறி அகில் ஆம் 
தழுவு ஒளி பேய்த்தேர் கடல் மலை தேர் உப்பளம் கானல் ஆம் 
வழுஇல் மயக்கமும் ஒப்பும் இலைச்சையும் மானல் என்னே 

#94
** அரலை, இரலை, பல்லம், மூரி
மானும் அரலை நரலை கழலை வரு கனி காழ் 
ஊனம் இல்லாத இரலை புல்வாய்க் கலை ஊதும் கொம்போடு 
ஆன தலைநாளும் பல்லம் கணக்கில் ஒன்று அம்பும் எண்கும் 
ஈனம்இல் மூரி பெருமை வலி தொன்மை என்று உரையே

#95
** தரணி, கழித்தல், இறத்தல், மலைத்தல், நேத்திரம்
உரைத்த தரணி மலையும் நிலனும் உதையனும் ஆம் 
நிரைத்த கழித்தல் இறத்தல் இரண்டும் நெறிகடத்தல் 
வரைத்தல் மிகுத்தலும் சாதலும் சொல்லும் மலைத்தல் ஒலி 
இரைத்து எழு பூசல் ஆம் பட்டாடை கண் நேத்திரம் என்பரே

#96
** வயின், வெடி, பனி, ஏணி
பற்றும் வயினே வயிறும் மனையும் பயிலிடமும் 
எற்றும் வெடியே வெருவுதல் வெள் இடி வார் பனியே 
செற்றிய துன்பு நடுக்கமும் அச்சமும் சீதமும் ஆம் 
எற்றிய ஏணி உலகுடன் எல்லையும் என்றனரே 

#97
** சேண், கட்டளை, வசி, ஆன், நியமம்
என்றும் உயரமும் நீளமும் சேண் நாமம் இக் கட்டளை 
ஒன்று நிறை உரை காட்டும் கருவியோடு ஒப்புச் செப்பும் 
மன்ற வசி கூர்மை குற்றம் வசித்தலும் ஆன் உருபு ஆன் 
கன்று நியமம் மறுகு நியமம் அங்காடியுமே 

#98
** தளிமம், அமறல், மறலி, நாட்டம், நாம், படிவம்
காட்டும் தளிமம் அழகொடு மெத்தை கருது அமறல் 
கோட்டும் பொலிவும் மிகுதியும் கூற்று மருள் மறலி 
நாட்டம் நயனம் வாள் நாடுதல் நாம் உளப்பாடொடு அச்சம் 
சூட்டும் படிவம் விரதம் வடிவமாச் சொல் துணிந்தே 

#99
** பாலை, குறிஞ்சி, ஏவல்
துணிந்த வெம் பாலை ஒரு நிலம் அந்நிலப்பாடல் சுரம் 
புணர்ந்து உடன்போதல் பிரிவுடன் வெம்மை ஓர் பூருகம் ஆம் 
மணந்த குறிஞ்சி மலையிடம் செம்முள்ளி அந்நிலப்பண் 
தணந்த வியங்கோளும் ஆணையும் ஏவல் ஆம் தாழ்குழலே 

#100
** தாழ்தல், புணரி, கணம்
தாழ்தல் குறைதல் இறைஞ்சலே தங்கல் புணரி கடல் 
சூழ் கரையோடு தரங்கம் கணமே தொகுதி வட்டம் 
வாழ் சிறுகாலம் முடுப்பாரி 

#101
** சித்திரம், நெய்தல், 
புரிதரு சித்திரம் ஏரண்டம் அத்திரி மெய்யில் பொய்யே
மருவும் ஒரு கவி ஓவியம் நல்ல வனப்பும் என்க
தரும் ஒரு நெய்தல் கடல் சார் நிலம் சாபறை ஒரு பூ
தெரிதரும் அத்தி கடல் என்ப உதும்பரம் சிந்துரமே

#102
** உழை, கைக்கிளை, விளரி, நாண்
துப்பார் உழை ஓர் நரம்பும் அருணமும் சூழிடமும் 
ஒப்பான கைக்கிளை ஓர் நரம்பு ஓர்தலைக்காமமும் ஆம் 
இப்பால் விளரி நாம்பு நல் வேட்கை இளமை என்க 
வைப்பான நாண் மங்கலநாணும் பாசமும் மானமுமே 

#103
** மகரம், வாழி, கனம், அராகம்
மாதே மகரம் இராசி சுறாக் காதல் வாழி என்பர் 
ஓதும் இடைச்சொல்லும் வாழ்க எனச் சொல்லும் ஓர் கனம் பொன் 
ஏதம்இல் மேகம் செறிவும் முத்தக்காசு அராகம் செம்மை 
ஆதரவோடு முடுகியலும் பண் அனைத்தும் அங்கே

#104
அங்கதம் தோள்வளை பாவலர் தீச்சொல் அரவு பொய் ஆம் 
தங்கிய கூழே பல உணவும் பொன்னும் தாழ் பயிரும் 
எங்கும் மலர்தலும் தோன்றலும் ஆகும் எதிர்தல் கிழி 
பொங்கும் எழுதுபடமும் நிதியின் பொதியும் என்னே 

#105
** கடி, வாகை
என்றும் கடியே விரைவு காப்பு அச்சம் எழில் விளக்கம் 
மன்றல் மிகுதி சிறப்பொடு கூர்மை புதுமை ஐயம் 
துன்றல் கரிப்புக் கடிதல் வரவு பேய்ச் சொல்லும் என்க 
வன் திறல் வென்றி அனைத்தும் முயற்சியும் வாகை என்னே 

#106
** புட்கரம், அல்லி, லீலாலம் 
கைதரு புட்கரம் யானைத் துதிக்கைத் தலை கமலம் 
உய்ய பருந்து நிறைவு நீர் தீர்த்தம் வாள் வானமுடன் 
ஐதரு பாண்டமுகமும் ஆம் அல்லி தாது ஆம்பல் அல்லி 
வெய்ய கீலாலம் சலம் உதிரம் காடி வேண்டினரே 

#107
** குபேரன், வேர், சாரங்கம், விசையம், தாழை, பாழி
வேண்டும் குபேரன் தனபதி சோமனும் வேர் வியர் வேர் 
தாண்டிய சாரங்கம் மானும் அளியும் சயம் அருக்கன் 
காண்டும் சருக்கரையும் விசையம் தாழை கைதை தெங்கு ஆம் 
ஈண்டும் வலி ஊர் வியலிடம் பாழி ஆம் ஏந்திழையே 

#108
** பாசம், காசை, சந்தி, நகர், யாணர்
ஏய்ந்ததோர் பாசம் கயிறு பற்று ஊசித்துளை அன்பு நூல் 
காய்ந்ததொர் நாணலும் காயாவும் காசை கரும்பு கழை 
வாய்ந்த பல் சந்தியும் சந்தி நகர் இல் ஊர் வாழ் தரை ஆம் 
தோய்ந்த வளமை புதுமையும் யாணர் துடியிடையே 

#109
** இடை, கிடை, சாகம், உடை, விடை
இடையே நடுவும் இடையும் நிறையும் இடமும் என்க 
கிடையே கிடையும் கிடேச்சும் ஆம் சாகம் தழை ஆடு தேக்கு 
உடையே குடை வேலும் செல்வமும் முள்ளும் உடுக்கையும் ஆம் 
விடையே இடபம் கடா விடை ஏகுதல் வெள்வளையே

#110
** சக்கரம், சண்டம், களபம்
வளைவு படை தேர்க்கால் வட்டம் பெருமை வரை பிறப்போடு 
அளவில் சகடம் திகிரி பறவை அவனி நல்ல 
தளவம் நகை சக்கரம் ஆம் விரை வலி கோரம் சண்டம் 
களபம் சுதை தந்திக் கன்றுடன் சந்தின் கலவையுமே 

#111
** சிகி, சிகரி, நார், கோல்
வைகும் சிகியே பரிபுரமும் தீயும் மா மயிலும் 
நையும் சிகரி தருக் கோபுரம் வெற்பு நார் அன்பு நீர் 
உய் கோல் நிறைகோல் அளவுகோல் செங்கோல் உருட்சி நரம்பு 
எய்கோல் எழுதுகோல் மத்திகை வாட்கோல் எனல் புரிந்தே 

#112
** பிப்பலம், கும்பம், காலிலி, அருச்சுனம், பலாசம்
புரிதரு திப்பிலி போதியும் பிப்பலம் பொங்கு கும்பம் 
கரி மத்தகம் குடம் பாம்பு அருணன் காற்றுக் காலிலி ஆம் 
மருதும் வெளுப்பும் அருச்சுனம் ஆகும் மருவு பன்னம் 
ஒரு மரம் பச்சைநிறமும் பலாசம் என்று ஓது அணங்கே 

#113
** அண்டம், அத்து, அதர், பிண்டி, அலி, அந்தகன்
அண்டம் பிரமாண்டம் முட்டை அமரருலகம் அத்து 
மண்டிய சாரியை செம்மை அதரே வழி புகுதி 
பிண்டி அசோகும் தருப்பணமும் அலி பேடி நம்பி 
எண்டரும் அந்தகன் கூற்றும் குருடனும் என்று அறியே 

#114
** அயிர், ஐயம், அளை, அறை, அமலை, காம்பு, அரவம்
அயிர் நுண்மணல் நுண்மை சற்கரை ஐயம் அயிர்த்தல் பிச்சை 
தயிரொடு பாழி அளை ஆம் அறை அறைதான் பறை ஆம் 
துயிரில் அமலை சோறு அம்பிகை மூங்கில் நல் தூசு எனல் காம்பு 
அயில் அரவம் ஒலி பாம்பு ஆயிலியம் நாள் பார்த்து அமையே 

#115
** அரங்கம், அரசு, சூலி, ஓடை
அமையும் அரங்கமே ஆற்றிடை போர்க்களம் ஆடிடமும் 
சமையும் அரசே இராச்சியம் போதி தலைவனும் ஆம் 
உமையொருபாகனும் காளியும் சூலி என் ஓடை பட்டம் 
இமம் வளர் குன்றில் சரி ஓர் தருப் பொய்கை என்று எய்துமே

#116
** அவினையம், ஆர், ஐயன்
எய்தும் அவினையம் நாடகாங்கத்தோடு எழில் பனுவல் 
பொய் அழுக்காறு தேர் ஆழி செறியுறுப் பாத்தி புவி 
நிறைவுகூர் ஆர் 
ஐயன் சுவாமி பிதாச் சேட்டன் மாச்சாத்தன் ஆம் என்பரே

#117
** பூதம்,  அகைதல், உயிர்
ஆர்தரு பூதம் அவனி முதல் ஐந்தும் உள்ளனவும் 
பாரிடம்தானும் இறந்ததோர் காலமும் பார்த்து அறிக 
ஓரும் அகைதல் வளைவு வருத்தம் மலர்ச்சி உயிர் 
தேரும் பிராணனும் வாயுவும் ஆம் என்று செப்பினரே 

#118
** அங்கம், அசை, ஒற்று, அலகு, ஆகாரம்
செப்பிய அங்கம் எலும்பு உறுப்பு ஆறு அங்கம் தேகம் அசை 
ஒப்புஇல் இடைச்சொல் நிரையசை நேரசை ஒற்று உற்று ஒர் மெய் 
துப்புஇல் அலகு மகிழ்க் காழ் படை எண் துடைப்பம் புள்வாய் 
வைப்புடை ஆகாரம் ஊணும் வடிவும் வரைந்து சொல்லே

#119
** இலஞ்சி, இறால், சுரை
சொல்லும் இலஞ்சி மடுவும் கொப்பூழும் துணை மகிழும் 
நல்ல இறால் புல்லம் தேன்கூடு கார்த்திகைநாளும் என்க 
புல்லும் பசுவும் பசு முலை வாளியின் புன் தலை வேறு 
அல்லதொர் வல்லி துவாரமும் ஆலியும் ஆம் சுரையே 

#120
** இரதம், இரதி, ஆழி, ஏடகம்
ஆய்ந்த இரதம் நவரதம் இன்பம் தேர் ஆறு சுவை 
வாய்ந்த இரதி ஆம் பித்தளை மாரன் மடந்தை இபம் 
தோய்ந்த நல் ஆழி கடல் மோதிரம் நேமி தேர்க்கால் நுனி 
ஓர்ந்ததோர் ஏடகம் நல் ஆடை புற்றாளி ஓர் பதியே

#121
** ஓரி, ஊக்கம், சிங்கல், ஊகம், எஃகு, எல்லை
ஓரி இகலன் மயிர் முசு வள்ளல் மனவெழுச்சி 
தேரின் முயற்சி வலி ஊக்கம் சிங்கலே குன்றல் கெடல் 
ஏரிய ஊகம் விசாரம் கருங்குரங்கு ஓர் புல் எஃகு 
கூர்மை வேல் எல்லை அளவு பகல் அந்தம் கூப்பீடுமே 

#122
** கூளி, கொங்கு, ஓளி, உப்பு, வாளி, தாளி, புலி
கூளி தொகுதி தமர் பேய் குறள் கொங்கு தேன் மணம் தாது 
ஓளி ஒழுங்கு ஆனைக்கூடம் உப்பு ஓதம் இனிமை பொய்தல் 
வாளி சுற்றோட்டமும் ஆசுகமும் சோனை வாளியும் ஆம் 
தாளி பனை ஓர் கொடி ஆம் புலி சாந்து சார்த்தூலமே

#123
** தூங்கல், வாங்கு, மண்ணை, தனி, உலகம் 
தூங்கல் மடி கூத்து ஒர் ஓசை துயிலுடன் தும்பியும் ஆம் 
வாங்கே வளைவும் அழைத்தலும் மண்ணை இளமையுடன் 
ஓங்கு அறியாமையும் பேயும் தனி தனி ஒப்பின்மை ஆம் 
தேங்கும் உலகம் ஒழுக்கம் திசை சான்றோர் தேசமுமே 

#124
** உரன், சிந்து, கலாபம், விழுமம்
முந்தும் உரனே வலியும் மனம் மார்பு மூதறிவும் 
சிந்து குறள் நதி வாரி ஓர் பாட்டும் முச்சீரடியும் 
வந்த கலாபம் மயில் தோகையுமே கலையும் என்க 
விந்திய சீர்மை சிறப்போடு இடும்பை விழுமம் கண்ணே 

#125
** கண்ணுதல், கூலம், வானி, ஏவம், என்றூழ்
கண்ணுதல் ஈசன் கருதுதல் கூலம் புனல்கரை நல் 
பண்ணியம் அங்காடி பாகல் வால் வானி படங்கு கொடி 
தண்ணிய ஏவம் தனிமையும் துன்பமும் சந்தம் நிறம் 
எண்ணுங் கவியழகு என்றூழ் இரவி வெயில்கோடையே 

#126
** கோடல், குஞ்சம், ஒலியல், கூழை, குளிர்
கோடல் வளைதல் கொளல் காந்தள் குஞ்சம் கூன் குன்றி அளவோடு
குறளே கவரி ஒலியல் துகில் ஆறு தார் 
மாடு மறுகு மயிர் பின்னணி கூழை நண்டு தட்டை 
ஏடிலை மூக்கரி கத்தி இருத்த இமம் குளிரே 

#127
** கிளை, மொய்ம்பு, பன்னல், பங்கு, குமரி, கும்பி
இன்னும் கிளை கோன் மரம் துளிர் வேய் மொய்ம்பு தோள்வலி ஆம் 
பன்னல் பருத்தி சொல் தேருதல் காலிலான் பாதி பங்கு 
கன்னி ஓர் ஆறு அழிவின்மை கற்றாழையும் காண் குமரி 
துன்னிய கும்பி சேறு ஆனை நிரையமும் சொல் அணங்கே

#128
** அங்கி, துடி, வங்கம், வஞ்சம், குவலையம்
அங்கமுடையவன் ஆரல்நாள் கஞ்சுகம் அக்கி அங்கி 
எங்கும் துடி நுண்பொழுது பறை துடி ஏலமும் ஆம் 
வங்கம் பவுறி வழுதுணை வெள்ளீயம் வஞ்சம் பொய் வாள் 
தங்கு குவலையம் நெய்தல் குவளை தரணியுமே 

#129
** அரத்தம், வலையம், புறவம், குந்தம்
தந்த அரக்கு உற்பலம் துகிர் செம்பு அரத்தம் அரத்தம் 
வந்த மடுவும் தரணியும் வட்டமும் வாயில் ஒன்று 
முந்து வலையம் புறவம் புறம்புடன் முல்லைநிலம் 
குந்தம் கைவேலும் பரிமாவும் துய்ய குருந்தமுமே 

#130
** கோசம், மாற்கம், உறையுள், சும்மை, தூம்பு
குறுகு மதிலுறுப்பு ஆண்குறி பொத்தகம் கோசம் என்று 
மறுகு நெறியும் சமையமும் மூலமும் மாற்கம் என்க 
உறையுள் சயனம் மனை ஊர் நகர் நாடு ஒலியும் சும்மை 
துறு நெறி வேய் மதகு உள்துளை பூழையும் தூம்பு என்பரே

#131
** தரளம், பாண்டில், சரி, நறவம், வழி, 
தூய தரளமே முத்தும் திரட்சியும் சொல்லில் வட்டம் 
தாய விடை மூங்கில் பாண்டில் சரி சரி தாரி ஒப்பு ஆம் 
வாய நறவம் மது மணம் நாற்றம் வழி இடம் சேய் 
காயும் புரோசு கயிறு கவர் சொல் பணை கவடே 

#132
** பண்பு, கண்ணி, உண்ணல்
வண்ணம் அளவு வடிவு குணம் சுவை மற்று ஒழுக்கம் 
எண்ணிய ஒன்றை விசேடித்தலும் நல்லியல்பும் பண்பு ஆம் 
கண்ணி முகிளமும் தாரும் படுக்கும் கயிறும் என்க 
உண்ணல் அருத்தல் முதல் ஐந்து பூட்டலும் ஊட்டலுமே

#133
** பட்டம், இஞ்சி, கவரி, யூபம்
ஊட்டிய பட்டம் நுதலணி ஆயுதம் ஓடை நுதல் 
ஈட்டிய தோல்செய்பலகை மதில் ஆத்திரகம் இஞ்சி 
காட்டும் கவரி கவரிமாத் தேர் சாமரை எருமை 
ஓட்டும் படைக்கை கவந்தம் வேள்வித்தறி யூபம் மின்னே

#134
** பாரதி, தழை, வட்டிகை, வேணு, தட்டு
மின்னே மரக்கலம் நாமகள் பாரதி மென் குழையும் 
தன்னேர்செய் பீலிக்குடையும் தழை என் துகிலிகை சாந்தும்
நேர்செய் வட்டிகை வேணு வாள் மூங்கிலுடன் வில்லும் ஆம் 
பன்னும் கடகு வளைவு குற்றம் தேர்ப்பாரிப்பும் தட்டே

#135
** பீலி, வெதிர், உண்டை, சடிலம், சேகு, சாமம்
தட்டும் பறை ஆலவட்டம் சிறுச்சின்னம்தான் பீலி ஆம் 
ஒட்டும் வெதிர் வேய் செவிடு படைக்கை திரளை உண்டை 
கட்டும் சடிலம் சடை துன்னல் சேகு கறை சிவப்பு ஆம் 
பட்டதொர் சாமம் பசுமை மறை யாமம் பால்மொழியே

#136
** போதகம், மோழை, ஒல்லை, எச்சம், கடைப்பிடி
மொழிதரு போதகம் வங்கம் கயமுனி மூதறிவும் 
பொழிதரு மோழை ஆம் காடியும் கஞ்சியும் ஒல்லை சிறு 
பொழுது விரைவு எச்சம் வேள்வி ஒழிந்தபொருள் மகவு ஆம் 
அழிவில் கடைப்பிடி தேற்றம் மறவாமை ஆம் என்பரே

#137
** தனு, சிலீமுகம் , ஆலம், வன்னி, பகடு
படரும் தனு உடம்பு ஓசை வில் காலம் பயிலும் நுட்பம் 
அடரும் சிலீமுகம் அம்பு முலைக்கண் வண்டு ஆலம் நஞ்சு ஆல் 
விடர் மரம் கிள்ளை அனல் எனலாம் வன்னி மேல் பகடே 
கடமலை ஏறு பெருமையோடு அம்பி கடா என்பரே 

#138
** குடிஞை, கவந்தம், நேர்
பகர்ந்த குடிஞையே கூகை நதியும் பதியும் என்பர் 
இகழ்ந்த கவந்தம் உடற்குறை தோயமும் என்க சமம் 
புகன்ற தலைப்பாடு உடன்பாடு மாறு புரைதல் பொரல் 
அகன்ற செம்பாதி கொடை நுட்பம் செப்பம் நேர் ஆய்ந்து கொள்ளே

#139
** வேளாண்மை, தீபம், மல்லல், சம்பு, கொந்தம்
ஆய வேளாண்மை உபகாரமும் உபசாரமும் ஆம் 
வாய்வதொர் தீபம் விளக்கும் பல் தீபமும் மல் வளம் மல் 
தாய பிரமன் சிவன் இகலன் நாவல் சம்பு என்க 
காய்வரு கொந்தம் அகம்படியும் வேலும் கண்டு கொள்ளே

#140
** நீவி, கட்டு, சின்னம், சூல், பீர்
கொட்டிய நீவி அளித்தல் துடைத்தல் துகில் கொய்சகம் 
கட்டுக் களைதல் மிகுதல் குறி காவல் கண்டு கட்டும் 
தொட்ட சின்னம் சிறுச்சின்னம் சில்வானம் சூல் சூழ்தல் சினை 
பட்ட பீர் பீர்க்கும் பசலை முலைப்பாலும் பார்த்துக் கொள்ளே

#141
** சாடி, சலம், சாதி, பீனம்
கொள்ளுவர் சாடி துகில் ஒரு மட்கலம் கூர்ந்த சலம் 
தள்ளிய வஞ்சமும் நீரும் நடுக்கமும் சாதி கள்ளும் 
தெள்ளும் குலமும் கருமுகையும் தேக்கும் திண் பிரம்பும் 
வள்ளிய பீனம் பருமையும் பாசியும் வை அன்னமே 

#142
** கணையம், தாபரம், ஓதி, தோள், சாரசம்
அன்ன கணையம் எழுக் காவற்காடு பொன் ஆனைக்கம்பம் 
பன்னிய தாபரம் கோயிலும் வெற்பும் பயில்மரமும் 
துன்னிய ஓதி அறிவு ஓந்தி கூந்தலும் தோள் துணை தோள் 
இன்னும் குருகும் பெருநாரையும் சாரசம் என்பரே

#143
** மணி, வரி, மாடு
பற்றும் வனப்பும் நவமணி நீலமணி பருக்கை 
மற்றும் கடவுள்மணி விதையும் மணி ஆகும் என்க 
இற்று வரி பாட்டு எழுத்து ஒழுங்கும் தீயுடன் நீளமும் 
செற்று மணி முன்னிரை பொன் அயல் மாடு தேன்மொழியே

#144
** விடங்கம், முனை, நளினி, இயல், நிறம், புகர், பைத்தல்  
மொழிந்த விடங்கம் முகடு அழகு ஆண்மை முனை முனை போர் 
இழிந்த நளினி பண் வாவி இயல் இயல் சாயல் தமிழ் 
கழிந்த நிறமே உயிர்நிலை வன்னம் கவிமை புகர் 
மொழிந்ததொர் பைத்தல் உருத்தல் பசுத்தல் என்று ஓதினரே

#145
** பாளிதம், வசு, காண்டம், திசை
ஓதிய பாளிதம் பட்டாடை பாற்சோறுடன் சற்கரை 
தீதுஇல் வசு மணி கோத்தனம் தீயுடன் தேவர் என்பர் 
காதிய காண்டம் திரள் அம்பு நீர் தீர்த்தம் கைப்படை கான் 
மா திசை திக்கும் திரியும் திசையும் வசனம் மின்னே 

#146
** சயிந்தவம், தலை, கோரம், தண்டம், நாரம், வயந்தன்
சயிந்தவம் உப்புப் புரவி தலை மேல் தலைமை தலை 
இயைந்த கொடுமை ஓர் வாசி வள்ளம் கோரம் ஏவு தண்டம் 
பயந்த கரித் தண்டம் தண்டு தெண்டம் நாரம் பாசி சலம் 
வயந்தன் மதனன் ஓர் வானரம் தென்றல் கால் வைத்து உரையே

#147
** ஆவணம், வண்டு, ஆம்பல், ஞாங்கர், களவன்
வை ஆவணம் தெருப் பீடிகை சாதனம் வண்டு அம்பு வண்டு 
உய் ஆம்பல் ஓர் பண் மது வல்லி ஊதுங்கொம்பு ஓர் இலக்கம் 
கையாரு ஞாங்கர் வடிவேல் மிசை பக்கம் காணில் முன்பு ஆம் 
வெய்யா களவன் முசுவும் அலவனும் வேண்டினரே 

#148
** வாணி, உக்கம், உகம், சேகரம், விதவை
வேண்டிய வாணி கலைமகளும் கூத்தும் மென்மொழியும் 
ஈண்டியல் உக்கம் மருங்கு ஆலவட்டம் இடபம் உகம் 
சேண் தொடர் ஊழி எழுவாய் புவி சேகரம் முடி மா 
ஆண்ட விதவை திருவிலி சோறு என்று அறைக இன்றே

#149
** இறவு, ஏய், உறவி, உவளகம், அறல், ஆணம், வழங்கல்
இறவே இறவும் இறக்கமும் ஏய் ஒப்பிசை பொருத்தல் 
உறவி எறும்பு ஊற்று உவளகம் வாவி எயிலுறுப்பு ஆம் 
அறலே தரங்கம் அரி மணல் ஆணம் குழம்பும் அன்பும் 
பிறவே வழங்கல் கொடை சேறல் சொற்றல் பிறைநுதலே

#150
** வந்திகை, பருமம், ஆ, அத்திரி
நுதலியல் வந்திகை ஆகும் சுணங்கும் நுதலணியும் 
உதவு பருமம் கலனை உயர்ச்சி ஒளிர் மேகலை 
இதவிய ஆவே பசு மரை ஆச்சா இரக்கம் இசை 
குதிரை கழுதை வரை அத்திரி என்று கூறுகவே 

#151
** துருக்கம், உத்தி, அத்தன், பத்தி
கத்தூரி குங்குமத்தாரு அரணம் வெம் கான் துருக்கம் 
உத்தி சீதேவி திதலை பொறியே உரை வழி ஆம் 
அத்தன் சுவாமி பிதா ஈசன் ஆர்ப்பு ஒலி தூளியும் ஆம் 
பத்தி அடைப்பதுவும் வழிபாடும் ஒழுங்கும் பன்னே

#152
** பந்தம், கந்தரம், தொடி, வடி, கழுமல்
பந்தம் தளை கைவிளக்குத் தமர் உண்டை பாசபந்தம் 
கந்தரம் ஆகும் மலை முழைஞ்சும் மேகமும் கழுத்தும் 
வந்த தொடி ஓர் பலம் கைவளை வடி மா வகிர் கூர் 
அந்த மதுவும் கழுமல் துயர்நிறைவு ஆம் காண்கவே 

#153
** காத்திரம், கணை, களை, அம்பு, உவா, திகிரி
காத்திரம் கீரியும் காயமும் பாம்பும் கணை கணை கோல் 
ஆர்த்த களையே களைவும் களையும் அம்பு ஆசுகம் நீர் 
வாய்த்த உவாவே இளமை கடல் உவா மாதங்கம் ஆம் 
சேர்த்த திகிரி வரை மூங்கில் சக்கரம் தேர் சிந்தியே 

#154
** சிந்துரம், கேயம், கந்து, காந்தாரம்
** தூரியம், நாள், உந்தி, சந்தி
சிந்துரம் யானை புளி கேயம் பாட்டுச் சிறந்ததோர் புள் 
கந்து பற்றுக்கோடும் கம்பமும் காந்தாரம் காட்டொடு பண்
நந்திய தூரியம் நல் தூசு வாச்சியம் நாள் மலர் நாள் 
உந்தி நடு உந்தி அந்திலே சந்தி அசை என்பரே 

#155
** கந்துகம், சேனை, புந்தி, காழகம், சசி, என், வக்கிரம்
பந்தும் புரவியும் கந்துகம் சேனை படை கடை ஆம் 
புந்தி அறிவு புதன் காழகம் நல் புடவை கறுப்பு 
இந்துவும் இந்திரன்தேவியும் ஆம் சசி என் என்னை என் 
வந்த வளைவும் கொடுமையும் மீட்சியும் வக்கிரமே 

#156
** கிள்ளை, கிருத்திமம், வள்ளை, தும்பி, துத்தி, சில்லி, உதும்பரம்
கிள்ளை புரவி கிளி ஆம் பொய் பூதம் கிருத்திமம் ஆம் 
வள்ளை ஒரு பாட்டு ஒரு கொடி யானையும் வண்டும் தும்பி 
தெள்ளும் சுணங்கு பொறி தூக்கம் துத்தி சிள் வீடு வட்டம் 
உள்ளும் சிறுக்கீரை சில்லி செம்பு அத்தி உதும்பரமே

#157
** கோகிலம், தொடர், ஆக்கம், வம்பு, சிலம்பு
துன்றும் குரங்கு குயில் கோகிலம் தொடர் சொற்றொடரோடு 
என்றும் விலங்கும் ஆம் ஆக்கம் திரு வாழ்வு எழுச்சி படை 
கன்றும் புதுமை நிலையின்மை வாசமும் கச்சும் வம்பு ஆம் 
தென்று மலையும் ஒலியும் சிலம்பும் சிலம்பு அன்னமே

#158
** மதுகம், செட்டி, எருவை, மட்டு, நானம், கட்டி
அட்டி மதுரம் இருப்பை தராவுமே ஆம் மதுகம் 
செட்டி வணிகனும் செவ்வேளும் கோரை கழுகு எருவை 
மட்டு மதுவும் அளவும் ஆம் நானம் மணம் புழுகு ஆம் 
கட்டி மகிட்சி கருப்பு வட்டு ஓர் புள்ளும் கட்டியுமே 

#159
** கலித்தல், அரணம், பஞ்சரம், சமம், நுவணை
கலித்தல் ஒலியும் பொலிவும் எழுச்சியும் காண் அரணம் 
பலித்த மதிலும் கவசமும் பூசலும் பஞ்சரமே 
சலித்த செருந்தியும் கூடும் சமம் சங்கிராமம் ஒப்பு ஆம் 
வலித்த நுவணை தினைப் பிண்டியும் நூலும் வாணகையே

#160
** நளி, கதனம், தொங்கல், புகர், விடர், முருந்து
நளியே செறிவு பெருமை கதனம் நடுக்கம் வெம்மை 
அளி சேர் தொடை தூக்கம் பீலிக் குடை கூந்தல் ஆகும் தொங்கல் 
துளி சேர் புகர் பிங்கலன் மந்திரி விடர் தூர்த்தர் விடர் 
முளி தேர் தவளமும் பீலிக் குருந்தும் முருந்து என்பரே

#161
** அலங்கல், முத்தம், சலதரம், ஆசினி, குரம்பை
முந்தும் அலங்கல் இலங்கல் துளிர் தொங்கல் முத்தம் முத்து 
வந்த பிரியம் அதரம் சலதரம் வாவி புயல் 
அந்தம்இல் ஈரப்பலா வயிரம் வானம் ஆசினி ஆம் 
தந்த குரம்பை உடம்பு சிறுகுடில்தானும் சொல்லே

#162
** பம்பல், குல்லை, கழை, கிரிட்டி, நள்ளி, தபனன்
சொல்லிய பம்பல் எழுச்சி நெருக்கம் தொடர்தல் வலி 
குல்லை துளபம் கஞ்சங்குல்லை வேய் இக்குக் கோல் கழை ஆம் 
நல்ல கிரிட்டி பிரண்டையும் பன்றியும் நண்டு ஒர் வள்ளல் 
அல்லல் தீர் நள்ளி தபனன் கனலவன் ஆதித்தனே

#163
** ஆக்கியோன்
அரும்பொருள் அந்தாதி சூடிய சீதரன் அம்பிகையைத் 
தரும் பொருள் செய்த பராபரை ஆம் நம் தண் தமிழோர் 
விரும்பிய கோவை உரிச்சொல் பனுவல் விரித்துரைத்தான் 
பெரும் பொருள் கண்ட கெயாதரன் தேவைப் பெருந்தகையே
**
** பதினோராவது ஒருசொற் பல்பொருளியல் முற்றும்
** கயாதரம் முற்றும்
********
** 
*
!** கயாதர முனிவர் இயற்றிய கயாதரம் என்னும்
!** கயாதர நிகண்டு

@0 பாயிரம்
**1 
#1
ஆரண நான்கும் பரவமும் மூர்த்திக ளாகிநின்ற
காரணன் பாகங் கலந்துல கீன்றருள் கன்னிபெற்ற
பூரணன் பாரதப் போர்வட மேருப் பொருப்பில்வைத்த
வாரணன் வாரணப் போரில்வென் றோனென் வழித்துணையே
**2 
#2
பேதையர் பித்த ரறியாத பாலர்சொற் பேதங்கொள்ளார்
ஓதினுங் குற்றந் தெரியார் பெரியல ரோங்கிடப
கேதனன் பற்று மறவாத தேவைக் கெயாதரன்றொல்
வேதியன் சொற்ற வுரிச்சொற் பனுவலு மேம்படுமே
**3 
#3
வளர்ந்த முதனூல் வழிநூல் வழிச்சென்று மற்றவையும்
அளந்து சிறியோ ரறியும் படிபெரி யோரருளால்
தளர்ந்தன நீக்கி யுரித்தாய சொல்லைத் தமிழ்ப்படுத்தான்
கிளர்ந்த பெரும்புகழ்ச் சோமீசன் தேவைக் கெயாதரனே
**4 
#4
வடக்குங் குமக்கொங்கை மங்கைதன் பங்கன் மலரடிக்கீழ்க்
கிடக்குந் தானிநெஞ் சுடையோ னுரிச்சொற் கிளர்பனுவல்
குடக்குங் குணக்கும் வடக்குந்தென் பாலுங் குவலயத்து
நடக்கும் படியாக் கெயாதர மென்றுபேர் நாட்டினனே
!** நூற்குப் புறம்பாக ஒரு பிரதியில் காணப்பட்டவை

#5
தேன் றாமகிழ்த் தொடையலு மௌலியுந் திருக்கிளர் குழைக்காதுங்
கான றாமலர்த் திருமுகச் சோதியுங் கயிரவத் துவர்வாயும்
மோன மாகிய வடிவமு மார்பமு முத்திரைத் திருக்கையும்
ஞான தேசிகன் சரணதா மரையுமென் னயனம்விட் டகலாவே

#6
பொத்தகம் படிக மாலை குண்டிகை பொருள்சேர் ஞான
வித்தகந் தரித்த செங்கை விமலையை யமலை தன்னை
மொய்த்தகொந் தளக பார முகிழ்முலைத் தவள மேனி
மைத்தகு கருங்கட் செவ்வா யணங்கினை வணங்கல் செய்வாம்

@1 முதலாவது தெய்வப் பெயரியல்
**5 
#1

ஆதி யனாதி யரன்சிவ னீசனா னந்தனத்தன்
சோதி பினாகி யுருத்திரன் பிஞ்ஞகன் சூலிசுத்தன்
பாதி யுமாபதி சங்கரன் கங்கா தரன்பகவன்
பூதி புனைபாண்ட ரங்கன் பரமன் புராந்தகனே
**6 
#2

தக்கன் மருகன் சதாசிவ னைம்முகன் சம்புநித்தன்
இக்கன் படவிழித் தோன்கால கால னிறையமலன்
முக்கண் முதல்வன் பசுபதி கங்காளன் முத்தன்பித்தன்
நக்கன் சடையோன் விடையூர்தி நாகா பரணனென்னே
**7 
#3

என்னன்னை சத்தி யபினை யிமைய வதியிகல்வேள்
தன்னன்னை நீலி கவுரி யுமைசிவை தாரணிக்கு
முன்னன்னை யம்பிகை யாரியை பார்ப்பதி மூதறஞ்செய்
மின்னன்னை யில்லவன் காதலி நாமம் விளம்பரிதே
**8 
#4

அரிகரு ணாகரன் கேசவன் கோவிந்த னச்சுதன்மால்
கரியவ னாரணன் பீதாம் பரன்வரன் கார்கமலைக்
குரியவன் விண்டு முராரி முகுந்த னுலகமுண்டோன்
வரியுர கன்பகை யூர்வாக னன்கண்ணன் மாதவனே
**9 
#5

மாயன் றிரிவிக் கிரம னெடியோன் மதுசூதனன்
ஆயன் வரையெடுத் தோனார சிங்கன்பஞ் சாயுதன்கற்
கீயுந்தா மோதரன் செல்விமா வாக்கந் திருவருளை
ஏயும் பொறிபொன் மலரா ளரிதேவி யிந்திரையே

**10 
#6

இந்து முடிக்கண் ணுதல்சேய் கணபதி யேகதந்தன்
தந்தி முகத்தன் விநாயக னைங்கரன் சாமளைதன்
மைந்தன் பெருவயிற் றுக்குறுந் தாளெந்தை மால்மருகன்
அந்தமி லேரம்பன் பாசாங் குசனாகு வாகனனே
**11 
#7

வாரண கேதனன் குன்றெறிந் தோன்மயி லூர்திகந்தன்
தாருகற் காய்ந்தோன் முருகன் கடம்பன் சரவணன் சேய்
கூரயி லேந்தி குகன்கார்த்தி கேயன் குமரன்செவ்வேள்
சூர்பகை சேந்தன் விசாகன்வேள் வள்ளி துணைவனென்னே
**12 
#8

துய்யவன் வேதா விதாதா விதியிறை சூதன்றொன்னாற்
கையவ னான்முகன் மால்மக னெண்கணன் காசினிக்கு
வெய்யவன் றாதை பிதாமகன் றாதா விரிஞ்சன்வெள்ளைத்
தையறன் கேள்வ னயன்பர மேட்டி சதானந்தனே
**13 
#9

தாதவிழ் போத னிரணிய கெற்பன் சதுமறையோன்
பாதலந் தந்தோன் பிரசா பதிகம் பதுமவுந்தி
சாதனன் னக்கொடி யோன்சம்பு வாணிவெண் டாமரைமேல்
மாதறி வாட்டி கலைமகள் பாரதி நாமகளே
**14 
#10

நாமந் திகழ்முப் பிடகன் றவன்சாந்த னல்லறிவன்
காமன் பகைவ னனுக்கிரன் புத்தன் கருமமுத்தன்
வாமன் சுகத னறவன் றதாகதன் மாமுனிவன்
கோமன்னு பார மிதையவன் போதியான் கோதமனே

**15 
#11

கோதி லருகன் றிகம்பர னெண்குணன் முக்குடையோன்
ஆதி பகவ னசோகமர்ந் தோனற வாழியண்ணல்
சோதி முனைவன் சினேந்திரன் பொன்னெயில் நாதன்சுத்தன்
போதி னடந்தோ னதிசயன் சாந்தனற் புங்கவனே
**16 
#12

புரந்தர னிந்திரன் பொன்னுல காளிவெண் போதகத்தன்
பரந்திகழ் வாசவ னாகண் டலன்பாக சாதனன்பூ
தரஞ்சிற கீனஞ்செய் வச்சிர பாணி சதமகவான்
துரந்த வலாரி யரிமுகி லூர்தி சுரர்பதியே
**17 
#13

பங்கய நாதனற் பாற்கரன் சாயா பதிபதங்கன்
செங்கதிர் சூரிய னாதித்தன் மார்த்தாண்டன் றேரருக்கன்
பொங்கரி பானு வுதையன் றிவாகரன் போதருணன்
தங்கு மிரவி தாணி யலரி தபனனென்னே
**18 
#14

எண்ணெண் கலையோ னிரவோ னுடுபதி யிந்துவிதுத்
தண்ணென் சுடர்சோம னம்புலி யாலோன் சசிசந்திரன்
வண்ணம் புதியோ னிமகர னாண்மலர் மால்மனத்தன்
நண்ணுங் குபேர னமுதா கரன்றிங்க ணாண்மதியே
**19 
#15

மதியமு தாசனர் வானோர் விபுத ரிலேகர்வரர்
அதிதி தருஞ்சுத ரும்ப ரிமையோ ரமரர்செம்பொற்
பதியுறை வார்சுரர் புத்தேளிர் பட்டா ரகர்பகவர்
கதிதரு பண்ணவர் புங்கவர் தீர்த்தர் கடவுளரே
**20 
#16

கடவுளர் தெவ்வர் தகுவர் தயித்தியர் காரவுணர்
அடர்திதி புத்திரர் தானவர் பூகண் டகரசுரர்
படரு நிருதர் நிசாசர ரேபிசி தாசனர்பார்க்
கிடர்செய் பவர்யாது தான ரரக்க ரிராக்கதரே
**21 
#17

கன்னல்வில் லோன்வே ளனங்கன் வயந்தன்கந் தற்பன்மதன்
மன்மதன் காமன் மதுசகன் சித்தசன் மால்புதல்வன்
உன்மத பாணன் மலரம்பன் வேனிலோ னோங்கிரதி
தன்வசன் மீனக் கொடிமாரன் சம்பர சூதனனே
**22 
#18

தனத னளகைமன் பிங்கலன் மந்திரி சம்புநண்பன்
கனகன் குபேர னிருநிதிக் கோன்முற் கரன்மாகதன்
நனகன புட்பக மூர்பவ னுத்தர கோனரவா
கனன்வைச் சிரவணன் மாயோ னியக்கர்தங் காவலனே

**23 
#19

வடுகன் றமருகன் கஞ்சுகன் சூலி மனவணிவோன்
முடுவலூர் காரி வயிரவ னாஞ்சாத வாகனன்முற்
றடுபடை யையன் கரியூர்தி சாத்த னரியரன்சேய்
கொடிதிகழ் வாரணன் காரிசெண் டேந்துகைக் கோதண்டனே
**24 
#20

தண்ட தரன்றென் றிசையோன் றருமன் சமனடுவன்
சண்டன் யமன்ஞம னந்தகன் கூற்று மறலிசண்டன்
திண்டிறற் காலன் வருணன் சலபதி சிந்துபதி
கொண்டலூர் பாச தரனுரு முப்படைக் கொற்றவனே

**25 
#21

கொற்றி வடுகி கொடுமோடி காடுகாள் கூளியின
முற்று மயில்சூரி காரிதாய் மாரி முகடிதவ்வை
மற்றுங் கலகி கரடக் கொடி மங்கை வாலேபமூர்
பெற்றியள் கேட்டையுஞ் சேட்டையு மூதேவி பேரென்பரே
**26 
#22

பேரரி யூர்தி பயிரவி சாமுண்டி பேய்க்கொடியாள்
தாருகற் காய்ந்தா னியோகினி வேதாளி சண்டியெண்டோட்
கூரிலைச் சூலிகங் காளிமுக் கண்ணிபேய்க் கூத்துகந்தாள்
மாரிநல் வீரிதொன் மாகாளி யாமளி மாதரியே
**27 
#23

மாலுக் கிளையாள் மயிடற் பகைகொற்ற வையைவெய்ய
நீலத் திருக்கலை யூர்சுந் தரிவிந்தை நீள்விசயை
சூலச் சயமக ளாரியை நாரணி துற்கைகன்னி
பாலைக் கிழத்தி திகிரியெண் டோளி பசுவதியே
**28 
#24

திசைபுகழ் வானவர் நாயகி யிந்திரன் தேவிபுலோ
மசையயி ராணி சசிசுந் தரிகங்கை மந்தாகினி
மிசைவரு சானவி வானதி பாகீ ரதிவிமலை
இசைசுர சிந்து வரநதி யெண்ணுந் திரிபதையே
**29 
#25

பதந்திகழ் விஞ்சையர் கோசரர் விச்சா தரர்பெயர்பண்
இதந்தரு கின்னரர் வீணையர் தந்திரர் காந்திருவர்
மதங்கொள் கிருத்திமஞ் சாரத மாகோ தரமருள்வெங்
கதங்கொள் குறள்கூளி பாரிடம் பூத கணமென்பரே
**30 
#26

கணங்கடி கூளி யலகைவே தாளங் கழுதுமண்ணை
பிணங்கவர் சோகு பசாசு குணபாசி பேயதென்பர்
அணங்குசூர் சூர்மகள் வஞ்சனி யோகினி யாகிரணி
வணஙகும் வலவை யிடாகினி சண்பனி மாயவளே
**31 
#27

மாகங் ககனம் வெளியந் தரமண்டம் வானமங்குல்
மீகம் வியோமம் விசும்பம் பரங்குடி லாசினிவிண்
நாகங்கோ மாதிரங் காட்டை யரிதந்திக் காசைபுல
மேகஞ் செறிககு பந்திசை வம்பல் விசும்புலகே
**32 
#28

புலமாகந் தானஞ் சுவவு சுவற்கம்வான் பொன்னகர்மே
லுலகங் கமம்பர மீதுறக் கம்விசம் பும்பருயர்
நிலைசுரர் நாடுவிண் ணாகம் வியனகர் நீடுகற்பம்
உலவை சமீரன் சதாகதி கந்த வகனொலியே
**33 
#29

ஒலியுயிர் வாதம் வளிமா ருதம்வெற்ற மூதைகொண்டல்
சலனன் பவன னரிநீழை நீல்மால் பரிசனன்மா
பெலன்மருத் தாசுகன் கோதை யனிலன் பிரபஞ்சனன்
வலபவ மானன்கால் கூதிர்வங் கூழ்காற்று வாயுவுமே
**34 
#30

வாடை வடந்தை வடகாற்றுக் கொண்டல்கீழ் காற்றுமற்றுங்
கோடைமேல் காற்றுக் குளிர்பனிக் காற்றூதை கூதிருமாம்
நீடு வயந்தன் மலையக்கால் மந்தா நிலமுந்தென்றல்
ஓடுந் திசைபத்தி னும்பத்துப் பேர்பெற் றுடம்பினுமே
**35 
#31

உதாசன னங்கியங் காரக னேசோதி யோங்குவசு
வதியனல் பாவகன் றென்கிழக் கோன்சுசி வன்னிகனல்
அதர்கரி யோன்சித் திரபானுச் சாதவே தாவரியர்ச்
சிதனெரி வாயு சகன்றூம கேதுச் சிகிதழலே
**36 
#32

தழுவுந் தகன னெழுநா ஞெகிழி தனஞ்செயன்றீ
வழுவில் சுவலன் முளரி யழல்வா டவமடங்கல்
உழலும் வடவை கடையன லூழி யனல்வெகுளி
பழகுஞ் சிவங்காலங் காமஞ் சடம்பஞ்ச வக்கினியே

**37 
#33

வனமுத கந்தோய மப்பம்பு வாரி வருணமமாங்
கனமலர் கீலால நாரங் கவந்தங் கமலமயம்
புனலறல் நீரஞ் சலிலம் கிலமமு தம்புவனங்
கனவி தஞ்சீவ னஞ்சீவ னீயங்கங் காண்டமுமே
**38 
#34

காணுங் குசஞ்சம் பரந்தீர்த்தம் வார்புட் காமமுதம்
பாணி சலம்பய நீர்க்கோ முகி[ல்]பா னியமளகம்
பேணும் பிரவாக நீத்தம் பிரளையம் வாரிவெள்ளம்
பூணும் புனற்கர சன்வரு ணேசன் பொலங்கொடியே
**39 
#35

பொலந்தா ரகையுடுத் தாரா கணஞ்சோதி பொங்கொளிபந்
தலம்புகழ் நாண்மீன் கலைகண மாத்திரை சாற்று நுட்பம்
இலங்கு நிமிடந் துடிகால நுட்ப மிருத்தைகன்னல்
நலங்கொள் விகலை கடிகை பதமிலை நாழிகையே
**40 
#36

கைதரு வேலை யமையம் பதம்போது காலைபொழு
தெய்கிய காலமு மேல்வையு மாகுமென் றூழாதபம்
பெய்த வெயில் பிற்றை பின்றை யெனுமிவை பின்னருச்சி
தையல்கேள் நண்பகல் நாட்காலை யந்தியைச் சந்தியென்னே
**41 
#37

சந்தித்த யாமமுஞ் சாமந் தினந்திவ சம்பகலெல்
வந்துற்ற காலை திவாவா மிரசனி மாலை கங்குல்
முந்துற்ற யாமினி யெல்லி நிசாநிசி முந்துமல்கல்
இந்துச்செல் யாமம் விபாவரி நத்த மிரவுமல்லே
**42 
#38

இருளந்த காரந் துவாந்தந் த[ம]நீல மேய்ந்தநத்தந்
தெருளுந் திமிர நிசியிரு ளாகுந் திவாத்திவச
மருளுந் தினம்பகல் வைகலு நாளா னியமுமென்பர்
நெருநலு நென்னலு முன்னைநா ளாக நினைந்துரையே
**43 
#39

உரைதரு பானா ளரைநா ளிருணா ளுருப்பம்வெப்பம்
திரிதரு மொல்லை சிறுவரை யாகுஞ் சிறுபொழுதே
வரைதரு மூழி மடங்க லுகமாயு ளாயுகம்வாழ்
தரவரு நாள்நான் முகனா ளதுகற்பஞ் சாற்றுவரே

**44 
#40

வருமுகில் கொண்ட லெழிலி குயின்மேக மாரிவிண்கந்
தரமழை சோனை விசும்புகார் வான்விண்டு தண்கனஞ்செல்
பரிமிகு சீதமை மஞ்சுமால் கொண்மூப் பயோதரமும்
பொருவில் புயல்மங்குல் சீமுத மம்புதம் பூந்திருவே
**45 
#41

திவலை பெயன்மாரி யாலி யுறைதளி சீகரமே
துவலை பிசிர்சிதர் தூறல்சீ தாரி துளிசிதறி
நவில்சிர கஞ்சீர மூர்கோள் பரிவேட நாடில்வட்டம்
இவருரு முச்செல் லிகுளே யசனிவா னேறிடியே
**46 
#42

ஏறுந் தடித்துத் தடிந்துச் சபலைமின் சஞ்சலையே
தூறுந் தலையல் மழைவிடல் சோனை பனித்தலிவை
மாறி விடாது சொரிதல் மதிதிங்கள் மாதமென்ப
தேறும் பருவ மிருதுவோ டானியஞ் செப்புவரே
**முதலாவது தெய்வப்பெயரியல் முற்றும் 
@2 இரண்டாவது இடப் பெயரியல்
**47 
#1

புலந்தரை மண்குப் புவன மவனி புவிவிபுலை
தலஞ்சகந் தாலமே கோநகர் பூத்தா ரணிதரணி
நிலந்தறை மேதினி காசினி தாத்திரி நீடுலகம்
பலந்தரு ஞால மசலை வசுந்தரை பார்படியே
**48 
#2

படியு மளக்கர் குவலையம் பூதலம் பாரிவையம்
புடவி பொறைநேமி மண்டலம் பூமி புவனியக
லிடமகி வேலா வலையந் திணைவரைப் பிம்பர்பொழில்
நடுவுகஞ் சாந்தை பிருதுவி தால நவகண்டமே
**49 
#3

கண்ட மகலு ளுலகேணி தேசங் கருதுசும்மை
மண்டிலம் பாடி சனபதந் தண்ணடை மண்பைதிரம்
பண்டிதர் நாடென்பர் நாடு புவனந் தலம்பவனங்
கொண்ட புடவி பொழிலுல கின்பொதுக் கொள்வரைந்தே

**50 
#4

வரைகுவ டோங்கல் பொருப்புச் சிகரி மலைவிலங்கல்
கிரிதட மோதிமம் பூதர நாகங் கிளர்திகிரி
தரணி யசலந் தராதரம் வேதண்டஞ் சையமவெற்பத்
திரிநகம் பொற்றை சிலோச்சயஞ் சாரல் சிலம்புகுன்றே
**51 
#5

குறும்பொறை மாதிரங் கோத்திரம் விண்டு குறும்புபறம்
பிறும்பு நவிரந் துறுகற் சயிலஞ் சிலையிரவி
பிறங்கல் பதலை யடுக்கல் பருப்பதங் குத்திரம்பே
ரறஞ்செய் சுரர்மலை பொன்மலை மேரு வரன்சிலையே
**52 
#6

சிமையம் பொதிய மலையந் தமிழ்மலை தென்மலையாம்
இமைய மிமவான் மலையாகு மன்றுல கீன்றபச்சை
யுமைதந்தை நாமஞ் சயிலாதி வெள்ளியங் குன்றுலகிற்
கமையுங் கயிலாயம் கண்ணுத லோன்பொருப் பாதிவெற்பே
**53 
#7

வெற்பின் சிகரங் குவடு கொடுமுடி கோடுமிக்க
கற்புழை காண்டை பிலங்கீ ழறைகந் தரமுடுக்கர்
சொற்குக ரங்கன் முழையறை பாறை பொறைதுறுகல்
பற்பல வாரங் கடஞ்சாரல் மால்வரைப் பக்கமென்னே
**54 
#8

கல்லுச் சிலையுப லஞ்சிறு கல்லா முலங்கற்றிரள்
சொல்லிய நூழை சுருங்கை நுழைவாயில் துற்கமரண்
கல்லின் பிளப்பு விடர்விடா விட்புக் கமர்பிளவாம்
செல்லும் பதுக்கை முரம்பு சிறுதிட்டை திட்டைதிட்டே

**55 
#9

திரையலை சாகரம் வேலா வலைய முவரிசிந்து
நரலை சலராசி யம்பர மத்தி நளிர்சலதி
பரவை நதிபதி முன்னீ ரளக்க ருததிபௌவம்
வருணம் புணரி மகராலை யம்வீரை வாரியுப்பே
**56 
#10

வாராக ரம்பா ருடையுவா வேலை மகோததிநீர்
கார்கோள் சமுத்திர மார்கலி நேமி மணியாகரம்
பாராவா ரத்தோ டாலைபே ரோதம் பயோநிதியே
பேராழி வாருண மன்ன[வ] மின்னும் பெருவெள்ளமே
**57 
#11

பெருங்கலி யோதம் புணரி கடற்றிரைப் பேரறலே 
தரங்கந் திரையலை கல்லோலந் தாவும்வீ சீகரமாம்
வரம்பு வரைகூலம் பாரந்தீ ரம்பாகு வாரங்கரை
குரம்பு வரப்புக் குலைசேதுச் செய்கரை கோட்ணையே
**58 
#12

அருவி மலைச்சார லாறு கலுழி யுயவைமுல்லை
தருகானி யாறு துறைநதி யுந்தி தடினிசிந்து
வருபுனல் தீர்த்திகை யாபகை மாதுனி வார்குடிஞை
பெருகிய தீப வதியா றொலியலிப் பேரறியே
**59 
#13

அழிவில் புகாரோ டதோமுக மாகுங் கழிமுகமும்
இழிதரு சூழி தடாகம் படுக ரிலஞ்சிமடுச்
சுழிகொ ளலந்தை கயங்கேணி பட்டஞ் சுனைகிடங்கோ
டொழிவில் நளினி சலதரம் வாலி யுவளகமே

**60 
#14

வளந்தரு கோட்டகம் பண்ணையொ டேல்வை வலையங்குண்டு
குளந்தட மாவி மடுவோடை யேரி மலங்கல்குட்டம்
அளந்த துருத்தி யிலங்கை யரங்கமு மாற்றிடையாங்
கிளர்ந்தநற் கூவ லசம்பு துரவு கிணறென்கவே
**61 
#15

கயங்குண் டழுந்தாழம் பௌவம் நுரைபுற் புதங்குமிழி
வயங்கும் பிராறும் வழாறு நிறைபுனல் வாரியுமாம்
உயங்கு முறவியூற் றாகாத மூற லுயர்புளினந்
தயங்கு மணற்குன்று வாலுகம் வெண்மண றாழ்குழலே
**62 
#16

குழையள றள்ளல் குழம்புகா லாழ்செய்யல் கொள்ளந்தொள்ளி
பழகிய சேதகம் பூழி யளக்க ரஞறுபங்கம்
அழகுசெய் தொய்யல் செதும்பு தொளிசே றசும்பங்கணம்
விழைகொள் சகதி துரம்புபொல் லாக்குழி மெல்லியலே
**63 
#17

மெல்லத ரெக்க ரறலயிர் நுண்மணல் வேலையுடன்
சொல்லுவ ராற்பாரா வாரங் கடற்கரை சூழ்கழியாம்
புல்லிய நன்முகங் காய லளங்கானல் பூழிபொடி
முல்லை புறவம் புறம்பணை யாமுற் குறிஞ்சிக்குமே
**64 
#18

குழைதரு மென்பா லகணி பணைபானல் கொள்கழனி
பழனம் வயல்செறுச் செய்கம் பளமும் படுகரும்பேர்
கழுவு மருதங் கடற்சார்பு நெய்தல் கருநிலப்பற்
றழுவந் துருக்கம் குறும்புவன் பால்பாலை யாகுநன்கே

**65 
#19

நகர்பதி சேரி புரம்புரி யாகரம் நல்லிருக்கை
அகலுள் குறிப்பட்டுக் கோசரம் பாழி யணிநகரி
புகலிடஞ் சும்மை யெயில்வேலி பாக்கமும் பூண்டியுமூர்
இகலுஞ் சிறுகுடி சீறூர் குறிச்சி குறிஞ்சிக்கென்னே
**66 
#20

எண்ணிய பட்டினம் நெய்தல் குறும்பு முனையிடமும்
அண்ணிய பாலை குடிக்காடு பூக்க மகலுள்பதி
தண்ணடை பூரியம் பாக்க மருப்ப முறையுள்தப்பாப்
பண்ணிய வாழ்க்கை மருத நெடுமுல்லை பாடியென்னே 
**67 
#21

பாடு கழிசூ ழிருக்கைதோ ணாமுகம் பல்பதியு
நாடிய பேரூர் மடப்பங் கிரியா றடுத்தநல்லூர்
கேடகம் போரேற் றுறையிடம் பாசறை கேடொன்றில்லாக்
கூடல் மதுரை யுறையூர்[ப்] பெருநகர் கோழியென்னே
**68 
#22

கோடுயர் வஞ்சி கருவூர்கா கந்தி புகார்நியமம்
பீடிகை யங்காடி யாவணங் கூலங் கடைபிழைப்பில்
வாடை நியம மறுகா வணம்வீதி மாற்கஞெள்ளல்
நாடிய கோசுந் தெருவாஞ் சதுக்கமு நாற்சந்தியே
**69 
#23

சந்தி கவலை யரிலந்தில் சாருஞ் சினகரமே
மந்திரங் கோட்டம் பிராசாதம் சேதியம் வாய்ந்தகுலம்
அந்தமில் பள்ளி நிலைய நிகேதன் மாலயமு
முந்துந் தளிகோயில் தேவர் நகர்கனை மொய்குழலே

**70 
#24

மொய்குழல் மாட மனையுறை யுள்புக்கில் முன்னிடவ
கைபதி பாத்தில் வசதி யிடமகங் காணியில்லம்
வெய்ய பவனம் வயின்சேர்வு வீடு வியன்கழகந்
துய்யவர் கல்வி பயில்களங் கல்லூரி கல்விசொல்லே
**71 
#25

சொற்ற விறையிறப் பாமென்பர் தாழ்வாரஞ் சோபானமாஞ்
சிற்றில் குரம்பையுங் கூரையுந் திண்ணைமண் ணீடுதிட்டை
தெற்றிநல் வேதிகை யங்கண முன்றில் திருந்துநிலா
முற்ற மரமிய மஞ்சு விடங்க முகடென்பரே
**72 
#26

முகந்தெரி சாளரஞ் சாலகஞ் சாலேக நூழைமுன்னர்ப்
புகன்றவா தாயனங் காலத ராகும் பொதுப்பொதுவில்
நிகழ்ந்தமன் றம்பல மாமென்ப ரத்தாணி நீளரசு
வகைந்த விருக்கை யடுக்களை யட்டில் மடைப்பள்ளியே
**73 
#27

பள்ளி சயன மமளி படைசேக்கை பாயலுறை
யுள்ளரி கட்சி துயிலிடம் பாழி யுயர்சட்டகந்
தெள்ளிய பட்டமுஞ் சேர்விட மாக வுயர்திணைக்கு
விள்ளுவர் கொட்டி லொருசிறை துச்சிலும் வேறிடமே 
**74 
#28

வேறுங் கழகம் படைசூது மல்லும் விரும்புமிட
மாறு படுமிட மாடிடஞ் சூதிட மாமரங்கம்
கூறும் பிறப்பிட மாகரஞ் சித்திர கூடந்தெற்றி
யேறம் பலம்பணை மந்திரம் வாசிக் கியல்பந்தியே
**75 
#29

பஞ்சரங் கட்சி குடம்பைகூ டாகும் படுகளத்தோ
டஞ்சுங் களரி யடுகள மாகவ பூமிமற்றும்
எஞ்சு மமர்க்களஞ் செங்களம் போர்க்களந் தெம்முனையே
துஞ்சும் பறந்தலை பூதவே தாளங்கள் சூழ்களமே
**76 
#30

சூழு மயானம் புறங்காடு காள வனஞ்சுடலை
தாழும் பிதிர்வன மீமஞ் சுடுகாடு சாற்றுமிஞ்சி
வாழுமெயில் சுற்றுக் காப்பரண் காவல் வரைப்புநொச்சி
ஆழும் புரிசை மதில்வேலி வேணகை யாரலென்னே
**77 
#31

ஆரு முவளகம் வன்சிறை துற்க மரணஞ்சுற்று
வாரி தகைப்புடன் கோட்டையு மாகு மதிலுறுப்புக்
கூரும் பதப்பாடு தோணி விதப்பெந் திரங்கோசமே
நேரும் பொறிநாஞ்சில் ஞாயிலு மாமென்று நேர்ந்தறியே

**78 
#32

அகழி கிடங்கோ டகப்பாப் பரிசு மகழ்புதவும்
இகலுந் துவாரமும் வாரியுந் தோட்டியும் வாயிலென்பர்
புகலும் வரைவை தடிசெறுப் பாத்தி புனைவயலே
திகழும் விளையுள் கழனி விளைநிலஞ் செய்புகலே
**79 
#33

புகலு முதைப்புனந் தொல்புன மாகு மிதைப்புனமும்
பகரும் புதுப்புனந் தோட்டந் துடவை படப்பைதொய்யல்
உகவுந் துடவை யுழுத லுழவு தொழில்வளைப்பாம்
அகலுந் தொடுப்பு மரிசி வரம்பா மருகுகங்கே
**80 
#34

அருகவல் பள்ளம் பயம்பே யுவளக மாம்படுகர்
பெருகிய வன்மீகம் புற்றுக் கரம்பை பெருங்களரி
கருகு களர்பாழ் முதுபார் கவலை கவர்நெறியாஞ்
சுரமோ டருநெறி யத்தங் கடறுடன் தூம்பென்பரே
**81 
#35

தூரிய வட்டை வயவு வகுந்து தொடர்வொழுக்குத்
தாரி நடவை நெறிபத மார்க்கஞ் சரியயனம்
ஆரிடை செப்ப மியவை வரியா றதர்பதவை
வாரி யிகுவை செலவு வதிவழி வார்கிறியே
**82 
#36

வாய்புலம் பாங்கர் வயின்களம் வைப்பு மருங்குவழி
தேவகை பட்டி யுழைகடை சூழல் திணைவலங்கால்
பாயிடை சார்கண் வளாகந் தலந்தானம் பால்புடையே
மேதகு ஞாங்கர் மருங்குமுன் னும்பின்னு மேலுமென்னே

**83 
#37

மேல்மிசை யும்பர் பரமீ வலமேக்கு மீதுசிறை
பாலுழி மாடு மருங்கு புடையயல் பாங்கர்பக்கங்
கோலிய தூக்கு நிவப்புப் பருமங் குடுமியுச்சி
ஏலு முவண முடன்மோடு துங்க மிவையுயர்வே
**84 
#38

இவணிம்ப ரும்ப ரவணீண்டு மாண்டு மிவணவணாந்
தவலின்றி நள்ளு நனந்தலை நாப்பண் சமமிடைநாத்
திவர்கின்ற வுந்தி நடுவொத்தல் மத்திமஞ் செப்புமெல்லைக்
கவருங் குரோசமுங் கூப்பீடுங் காவதங் காதமென்னே
** இரண்டாவது இடப்பெயரியல் முற்றும்

@3 மூன்றாவது மக்கட் பெயரியல்
**85 
#1

காய்ந்தவர் கோபந் துறந்தவர் யாவுங் கடிந்தவர்மெய்
வாய்ந்தவ ரையர் முனிவ ருயர்ந்தவர் மாதவத்திற்
கூர்ந்த முனைவ ரறவோ ருறுவர்மெய்க் குற்றமற்றோர்
ஆய்ந்த வறிஞர் தபோதனர் தாபத ரந்தணரே
**86 
#2

அந்தமில் காளா முகர்மா விரதிகள் பாசுபதர்
தந்தன சைவ சமையத் தவர்தேரர் சாக்கியரும்
வந்த பவுத்தர் சமணரா சீவகர் சாரணரு
முந்திய வாரு கதர்சா ரணரு முனிவர்களே
**87 
#3

முனிவ ரிருபிறப் போர்விப் பிரரையர் மூதறிவோர்
நனிதிகழ் வேதியர் பூசுர ரந்தணர் நான்மறையோர்
தினகர ஞாத ரறுதொழி லாளர்முத் தீவளர்ப்போர்
பனவ [ர்புரி] நூலர் மேற்குலத் தோர்வேத பாரகரே
**88 
#4

கற்றவர் சான்றோ ருயர்ந்தவர் நல்லோர் கரியுலகம்
உற்றவ ரான்றோர் பெரியோ ருடனா ரியருரவோர்
முற்று முணர்ந்தவர் பேரவை கற்றோர் முதுவர்சங்க
மற்றுங் கலைஞ ரறிஞர் புலவர் நூல்வல்லவரே
**89 
#5

வல்லவ ராகும் விபுதர் நிபுணர் குசலர்மற்றே
நல்ல குரவன் பெருமான் முதல்வன்கோ நாதனையன்
சொல்லு மிறையச்ச னத்தன் பெரியோன் சுவாமிபதி
[ய] ல்லது மாசா னுடன்சாமி கோமா னடிகளென்னே
**90 
#6

அண்ணல் குருசி துடன்செம்ம லேந்தலுந் தோன்றலுமாங்
கண்ணந் தலைமை சிறந்தவர் பேர்செம்மல் காவலன்கோன்
எண்ணுந் தலைவ னதிபன் பிரான்வேந்த னீசன்மன்னன்
கண்ணும் பதிகாந்த னாத ளிறையாதி நாயகனே
**91 
#7

நாவலர் போற்றும் புரவலன் வேந்த னரபதிகோன்
காவலன் பா[ர்]த்திபன் பூபாலன் பூபன் கலைநிருபன்
கோவுல காள்மன் னி[ராச] னரசன் குருசிலண்ணல்
மேவு மகிபன் மகிபதி கொற்றவன் வேந்தனென்னே

**92 
#8

வேந்தரிற் கேரளன் பூழியன் கொங்க னுதியன்மிக்க
போந்தடர் கண்ணியன் வானவன் கொல்லிப் பொருனைமன்னன்
கூர்ந்த குடநாடன் குட்டுவன் வில்லவன் கோதைவஞ்சி
வாய்ந்த பதிச்சேரன் சேரலன் வான வரம்பன்பொன்னே
**93 
#9

பொன்னித் துறைவ னனக னபையன் புலிக்கொடியோன்
சென்னி புனனாட னாரிய னேரிச் சிலம்பன்கன்னி
மன்னு நரபதி செம்பியன் சோழன் வளவனன்னீர்
கொன்னவில் கோழிப் பதியோ னிரவி குலத்தவனே
**94 
#10

குழுமிய கூடற் கொருகோன் கவுரியன் கோற்கைதவன்
செழியன் றமிழ்நாடன் பஞ்சவன் மீனவன் றென்னவன்போர்
வழுதி மலைய[ன் குமரித் துறையவன்] வைகைக்குமன்
பழுதில் புகழ்மாறன் பூழியன் நிம்பத்தார்ப் பாண்டியனே
**95 
#11

பார்க்கிற் பரதர் கவுரவ ராகுங் கு [றும்பரட்டர்]
நோக்கிய வேளிர் புரோசர் குறுநில மன்னர் நுண்ணூல்
வாக்கினர் தேர்ச்சித் துணைவ ரமைச்சர் வருபொருநர்
ஆக்குந் தலைமைபெற் றோர் (பரி] யாளம் பரிவாரமே
**96 
#12

பட்டம் புனையு மமாத்திய ரேனாதி காவிதியென்
றொட்டிய பேர்மந் திரிதந் திரிக்கென்ப ரோங்கிளங்கோ
எட்டிய ரிப்பர் பரதர் வயிச்சிய ரேர்த்தொழிலோர்
செட்டிகள் நாய்கர் ககிப்பர் வணிகர் செலேட்டிகளே
**97 
#13

கருமஞ்செய் காராளர் வேளாள ரேவெண் களமர்பினோர்
மருவு முழவர் சதுரத்தர் வார்த்தையர் மண்புதல்வர்
பெருகிய சூத்திரர் மாமாத் தியர்பிட கர்மருத்து
வருமுப் பமைப்ப ருமண ரளவரு மாவர்மற்றே

**98 
#14

மற்றுங் குலால ருடன்கும்ப காரர்வேள் மட்பகைஞர்
முற்றும் குயவர்வேட் கோவரு மாகு முழுதும்வல்லோர்
கற்ற தபதிய ரோவியர் கொல்லர்கம் மாளர்சிற்பர்
அற்ற யவனர் புனைவித் தகரக்க சாலையரே
**99 
#15


சால்கஞ்ச காரர்கன் னார்கன் னுவர்தரு காழியருங்
கால்கொண்ட வண்ணார்பேர் தாரோட ரேயுறை காரரென்பர்
தோலென்றும் விற்போர் பறம்பராஞ் சூனரு மூன்விலைஞர்
மால்கொள் பழையர் துவசர் படுவர்கள் வாணியரே
**100 
#16

வாய்ந்த குணுங்கர் கவுண்டர் கனகதர் வங்கர்புல்லர்
சேர்ந்த புலைஞ ரிழிஞர்சண் டாளர்பேர் சென்னியரே
சார்ந்த வயிரியர் மாகதர் சூதர் மதங்கர்தப்பா
ஏய்ந்த விசைகாரர் பாடல்வல் லோர்பா[ண] ரென்பர்களே
**101 
#17

பண்டரு மோவரும் பாடற்கீழ் மக்கள் பெருமஞ்சிகர்
மிண்டு மயிர்வினை நாவிதர் வாயிலர் கூத்தர்மிக்க
கண்டவே ழம்பர் கழா[ய] ரியவர்தோற் கைவினைஞர்
கொண்ட நரப்புக் கருவிவல் லோர்கள் குயிலுவரே
**102 
#18

வம்ப ரதிதி புதியோர் நொதுமலர் வாலுவருந்
தம்பமில் கூவியர் [பாகி] தவ[சி] யா ரட்டர்தம்மை
நம்பிய தொண்டு தொழும்பாம் பதிகர் வழிநடப்போர்
வெம்பிய சாரணர் தூத ருசாவொற்றர் வேய்ப்பர்மின்னே
**103 
#19

மின்னிவர் வேலன் முருகன் படிமத்தன் வேள்வெறியாட் 
டுன்னிய தேவரா ளன்மூகை மூங்கையு மூமையென்பர்
தென்னியல் சேடர் சிலதர் சிலதியர் சேடியரோ
டின்னும் பரிசன மேவல்செய் வோர்பெய ரெல்வளையே
**104 
#20

வளந்தரு பேடியர் பேடுகள் பேடர்கள் பெண்டகர்மற்
றுளந்தரு சண்டங் கிலிப மலியென்ப ரோதுசிந்து
தளர்ந்த குறள்வாம னங்கோணல் கூன்குஞ்சந் தாழ்செவிடே
அளந்த வெதிர்முடம் பங்கென வோதின ராய்மயிலே
**105 
#21

மருவிய பூரியர் நீசர் கயவர்கீழ் மக்கள் புல்லார்
கருதிய பேதையர் தீம்பர் முசுண்டர் கலர்முசுடர்
திருகிய வாக்கர் சிறுமைபொல் லார்கையர் சீத்தைகல்லார்
அருளிலர் மூர்க்கர் [சு]மடர்தீ யோர்பொறி யற்றவரே

**106 
#22

அற்றவன் போக[ஞ்] சிதடன் முழுமக னஞ்சிழுதை
மற்றுஞ் சளன்பேதை யாதனொ டண்ணை மடங்குதலை
முற்றி[ய] வஞ்ஞையு மூடனு மாமா துலர்முயற்சி
யிற்றவ ரார்த்தர் துயருறு வோரென் றிசைப்பர்களே
**107 
#23

கள்ளர் கரவடர் சோரர் விழைவவாக் காதலிச்சை
விள்ளு நயத்தல் விருப்பார்வம் வேண்டுதல் வேட்டல்நச்சுக்
கொள்ளு நசைவாஞ்சை யாதர வாசை கொடியபற்றாம்
உள்ளு முதுவோ ரறிவோர் கிழவ ருரியவரே
**108 
#24

வல்லாளன் மீளி விறலோன் விடலை வயவன்வென்றி
நல்லோன் பெயர் [கா முகர்]சது ரர்நாக ரீகர்நல்லோர்
ஒல்லும் விடர்காம மிக்கவர் தூர்த்த ரொழுக்கமில்லோர்
எல்லா மியவுள் புகழோன் வியவனு மேவுவனே
**109 
#25

ஏவிய காளை குழக[ன்] மழவன் மு[ரு]கனின்னு
மேவிய சேடன் குமர னிளையோன் பெயர்மெய்கற்றோர்
நாவலர் மங்கலப் பாடக ரோடெட்டர் நற்கவிகள்
பாவலர் பல்கலை வல்லோர் கடிகையர் பாண்[மொ]ழியே
**110 
#26

மொழியு நிருத்தர் பொருநர் நடியரா முன் [னுந]டர்
வழிபடு கண்ணுளர் கோடியர் கூத்தர் வயிரியரோ
டொ[ழி]வி லவினைய ரேசூதர் வந்திய ரேபுகழ்வோர்
பழுதில்வே தாளியர் மாகதர் பூகதர் பப்புவரே

**111 
#27

புகல்வா துவருட னாதோ ரணரானைப் பாகர்பொற்பிற்
ககலா வலவருஞ் சூதருந் தேர்ப்பாகர் வாதுவரே
இகலார் பரிமா வடிப்போ ரிரவலர் யாசகரோ
டகலாத பாடகர் பட்டர் பரிசிலோ ராமென்பரே
**112 
#28

ஆன மறவர் பொருநரே றாள ரயிலுழவர்
மானவர் வீரர் செருநர் திறலோர் வயவர்மள்ளர்
தானை யபையர் தறுகண்ணர் கூளியர் சூரர்தப்பா
ஏனைய சல்லியர் கூவனூல் வல்லவ ரென்றுகொள்ளே
**113 
#29



கொண்டோற் பிழைத்துப் பெறுமகன் குண்டகன் கோளகனுங்
கண்டோர்க்குக் கைம்மை பெறுமகன் கன்னிசேய் கானீனனாம்
வண்டார் குலீனன் குலமில் லவன்வல்ல வன்வலவை
தண்டாத வல்லுந ரல்லோர்வல் லார்மாட்டா தாரறியே
**114 
#30

அரிபர ரொன்னார் மடங்கா ரமரா ரமித்திரரே
கருதல ரொல்லார்நவ் வார்மரு வார்கறுத் தாரடர்வோர்
தரியல ரொட்டார் செறுநர்நள் ளார்தெவ்வர் சாரலர்மா
றிரிபகை நேரார் நிகரார் முனைந்தா ரெதிர்ந்தவரே
**115 
#31

தக்கவர் துன்னின ரொன்றினர் கூடினர் சாலவன்பு
தொக்கவர் நள்ளுந ரொல்லுநர் மேவின ருந்தொடர்ந்தோர்
ஒக்கல்கேள் கூளி குடும்பு துணைநட் புறவுசுற்றம்
மிக்க கடும்பு கிளைதமர் பந்தம் விருந்தமுமே

**116 
#32

விரைதரு மாடவ ராடூஉ மகன்மைந்தன் மேவுபுமான்
நரருடன் மானிடர் மானவர் மாக்கள் மனுமனிதர்
புருடரொ டாளனு மாந்தரு மாகும் புனைந்துரையால்
அரிவைய ராடவர்க் காகும் பெயரோ ரளவில்லையே
**117 
#33

அங்கனை நாரி மகடூஉத் தெரிவை யரிவைமகள்
மங்கை மடந்தை பிணாமானி கா[ரி] கை வஞ்சனியே
தங்கிய தையல் மடவரல் மாது தளிரியல்பெண்
எங்கும் வனிதை பெதும்பைமா யோள்பேதை யேழையுமே
**118 
#34

ஏமஞ்செய் கோமா ளடிகள்கோ மாட்டி யிறைவியத்தை
சாமி குரத்தி பெருமாட்டி யாசாள் தலைவியை[யை]
நாமங் கவுந்தியும் பம்மையு மாரு கதத்தவப்பெண்
சேமங்கொ[ள்] கைம்மை கயினி கலன்கழி சேயிழையே
**119 
#35

இழைபுனை வேசியர் கூத்தியர் சூளைய ரெண்கணிகை
விழையும் பரத்தை நடிப்போர் பொதுப்பெண்டிர் பேர்விறலி
பழகிய பாடினி பாட்டி மதங்கியும் பாண்மகளாம்
வழியுடன் செல்வோ ளெ[மி]மைம்மை வந்தை மலடிமின்னே
**120 
#36

மின்னிவர் வேலனு மீளியுங் காளை விடலையும்பா
லைந்நிலங் காவலன் பேராம் குறவ [ர]ரும்புனவர்
மன்னு மிறவுளர் குன்றுவர் கானவர் வாழ்குறிஞ்சித்
தன்னில மக்கள் கொடிச்சி குறத்தி தலைமகளே
**121 
#37

தலைமகன் வெற்பன் பொருப்பன் சிலம்பன் தருபொருநன்
நிலைபெறு கானக நாடனு மாம்விந்தர் நீள்பொதுவர்
குலவில் குடவ ரிடையர்கோ பாலர் தொறுவர்நன்கோ
வலரண்ட ரண்டரான் வல்லவ ராய ரமுதரென்னே

**122 
#38


என்றுந் தொறுச்சிய ராய்ச்சிய ரேன்ற பொதுவியரே
துன்றுங் குடத்திய ராகு மிடைச்சியர் தோன்றலண்ணல்
முன்றிகழ் கானக நாடன் குறும்பொறை நாடன்முல்லைக்
கொன்றுந் தலைவன் னுளையர் பரதவ ரின்னமுண்டே
**123 
#39


உண்டாம் வலைஞர் கலவர் திமில ருத்தியருங்
கொண்டார்க ணெய்த னுளைச்சியர் கூறும் பரத்தியருந்
தண்டாத வந்நில மாதர் தலைவன்பேர் கொண்கன்மன்னுங்
கண்டார்கள் மெல்லம் புலம்பன்[றுறைவன்] கடற்சேர்ப்பனே
**124 
#40

சேருங் கள[ம]ர் தொழுவர் விளைஞர் செறுவர்மள்ளர்
வாருங் களைஞர் கடைய ருழவர் வருகம்பளர்
பேரென்க வாற்றுக்கா லாட்டி யுழத்தி கடைசியர்பேர்
ஊரன் மகுணன் கிழவன் மருதத் துரியவனே
**125 
#41

உரிய மனைவி கிழத்தியில் லாளில் லுயர்மருதத்
தரிய தலைவி[யர்)க் காமுல்லை மாதர்க்கு மாகுமென்க
தருதந்தை யெந்தை பயந்தோ னையனப்பன் றாதையத்தன்
பெருகுமெம் மானும் மானும் பிதாமா துலன்மாமன் பேர்முன்னெல்லே
**126 
#42

எல்லை மணமகள் காதலி காந்தை துணைவியில்லாள்
வல்லபி பாரியை நாயகி தா[ரம] னைவிமனை
நல்ல வுரிமை தடைவிருந் தங்கற்பி னாள்கிழத்தி
வல்லி சிறுவி தனையை புதல்வி மகட்பெயரே

**127 
#43

மதலை சிறுவன் றனையன்கால் சந்ததி மைந்தன்மகன்
புதல்வன் பிறங்கடை யெச்சம் வழித்தோன்றல் புத்திரன்சேய்
குதலை பொழிபின் பிறங்கு மகவு குழவிசெம்மல்
உதவி[ய] குட்டன் குருளை சுதன்பிள்ளை யோதினரே
**128 
#44

ஓங்குஞ் சிறாரு மகாருஞ் சுதர்பன்மை யோதுநண்பன்
பாங்க னெலுவன் துணைவன்கேள் தோழன் சகாயன்பொய்தல் 
பாங்கிநற் சேடி யி[ண]ங்காயந் தோழி பயிலிகுளை
தாங்குந் துணையோரை யெ[ல்]லா வெடிமுன் னிலைசாற்றுமே
**129 
#45

சாற்றுங் கணவன் பதிதோழன் காதலன் றான்றலைவி
தேற்றும் புதல்விநற் றோழியுங் காதலி சேனைதண்டந்
தோற்றும் பதாதி பதாகினி யூகந் தொடர் [வாகி]னி
மாற்றும் படைபாடி வானி யநிகம் வரூதினியே
**130 
#46

வரு[ங்]கட கந்தந் திரஞ்சாது ரங்க[ம்] வரூதமற்றும்
பெரும்படை தானைதார் தூசி பகுதி கொடிப்படைப்பேர்
கருங்குழை சூழ்கடைக் கூழையொட் டுண்டை[யுங்] கையணியோ
டிரும்பெயர் யூகம் படைக்கை வகுத்த லெனமதியே
**131 
#47

மறவர் புளிஞர் கிராத ரெயினர் வனசர்சில்லர்
குறவர் கலர்வேட ராறலைப் போர்மா குலர்சவரர்
இறவுள் வியாதர் கருநிலத் தோர்கா னவருமக்கட்
செறிவினை ம[ன்ப]தை பைஞ்ஞில மாகவுஞ் செப்புவரே

**132 
#48

புரங்கடஞ் சட்டகந் தாபரங் காத்திரம் பூட்சியங்கங்
குரம்பை யுறுப்பாக மாக்கை மெய்[யாதாரங்] கூடுருவம்
பரந்தனு மூர்த்தங் களேபரங் காயம் படிவம்பிண்டம்
உரங்கொள் வடிவ முடல்தேக மேனி யுடம்பென்பரே
**133 
#49

உடற்குறை யட்டை கவந்தமும் யூபமு மாங்குணுங்கு
கடப்படு கின்ற வழனுஞ் சவமுங் களேபரமும்
அடக்குங் குணபமு மாகும் பிணமினி யாய்பதந்தாள்
நடக்குங் கழல்கால் சரணடி பாதமு நன்னுதலே
**134 
#50

நற்காற் பரடு கரடாகுஞ் சாலு நவில்முழந்தாள்
சொற்பாய வாமமூ ருக்கந் துடையுருச் சோகங்கவான்
பொற்பார் குறங்கு நிதம்பங் கடிதடம் போற்றுமல்குல்
கற்பால் மருங்குல் நுசுப்பு நடுவிடை காரிகையே
**135 
#51

காணு முதரஞ் சடரம் வயின்மடி துத்தங்குக்கி
பூணும் வயிறுந்தி நாபி மிதலைகொப் பூழிலஞ்சி
நாணும் பொகிலு மெனுமார் பகல நவிர்மருங்கு
கேணிக ரில்லா வுரமாக மென்று கிள த்தினரே
**136 
#52

கிளருங் குரூஉக்கணஞ் சொற்கங் குயங்கொங்கை கேடில்தனம்
வளரும் பயோதர மம்ம நகில்முலை மாதர்க்கென்பர்
அளவில் சுணங்கு பொறிதித்தி யுத்தி திதலையுடன்
தளர்கின்ற வந்திகை தேமல் வரிதுத்[தி] சாலவையே
**137 
#53

வைத்த புயமொய்ம்பு தோள்வாகு பாணி வலியவத்தங்
கைத்தலம் யாவுங் கரங்குடங் கையகங் கையங்கையாம்
வித்தக மான நகமுகி ரங்குலி மெல்விரலாஞ்
சுத்தம் புறம்வென் வெரினு முதுகென்று சொல்லுவரே
**138 
#54

சொல்லுஞ் சுவலுஞ் செகிலு நிகலமுந் தோள்மிசையாம்
புல்லிய கண்டங் கிரீப மிடறு புனைகந்தரம்
ஒல்லுங் களங்கழுத் தோது மெருத்தம் பிடர்த்தலைபின்
நல்ல கயிலுஞ் சிறுபுற மும்பிடர் நற்பிடியே
**139 
#55

பிறக்கும் பிறகும் புறமு ம[ப]ர[மு]ம் பின்புமுகம்
நிறக்கும் வதனமு மானன மும்மென்பர் நீடுமுத்தந்
துறக்கு மிதழோட்டம் பாலிகை யாகு மதரந்துண்[ட]ம்
குறி[க்]கொண்ட நாசி கபோலங் கவுளுங் கொடிறென்பரே
**140 
#56

பல்லெயி றேதட்டந் தந்தம் முறுவல் பயில்நகை[யே]
நல்ல முறுவலு மூரலு மாகும் நகைதனக்கும்
புல்லு மணரியா மண்ண மணராகுங் கீழ்வாய்ப்புறஞ்
சொல்லிய வண்ணமுண் ணாத்தா[ல]ந் தாலு[நா]ச் சொன்னயந்தே

**141 
#57

நயனம் விலோசன நாட்டம் விழிநோக்கஞ் சக்கம்பகம்
பயம்வரு நேத்திரந் தாரைகண் கோப்பார்வை பாலநெற்றி
இயலளி கல்குள மத்தக முண்ட மிலாடநுதல்
பெயரும் புருவம் புரூர நுதல்நற் பிருகுடியே
**142 
#58

குடிகொண்ட கன்னஞ் செவிகாது சேகரங் கூறுமுச்சி
முடிசென்னி யுத்தமாங் கஞ்சிர[ங் கம்]நவி ரந்தலையாங்
குடுமி நவிர்பங்கி பித்தை புனைசிகை குஞ்சிதொங்கல்
மடியுஞ் சுரியலொ டோரியு மைந்தர் மயிரென்பரே
**143 
#59

மயிர்வண்ண மாதர்க்குக் கூந்த லளக மராட்டமைம்பால்
பயில்கின்ற கூழை குழல்கொந் தளம்பரி சார்கதுப்புத்
துயல்கின்ற கோதை குரலோதி கேசஞ் சுரியல்சுருள்
செயிர்தங்கு ரோமஞ் சிரோத்த முடம்பிற் செறிமயிரே
**144 
#60

மருவள கங்கொந் தளமே விலோத மயிர்க்குழற்சி
தருபின் னகம்பந்த முச்சி முடிகொண்டை தாழ்சுடிகை
வருகுழ லோடு சிகழிகை யாவு மயிர்முடியாம்
விரிசடி லம்பின்னில் கோடீரம் வேணி மிகுசடையே
**145 
#61

சடங்கொண்ட கத்துங் கொளுத்துங் கழுத்துஞ்சந் தாமிறையே
இடங்கொள் பிறங்கெனல் சேக்கையு மங்கித முந்தழும்பாந்
தொடங்கு மரலை கழலை சிரைநாடி சூழ்நரம்பாம்
விடங்கொ ளெலும்பத்தி யென்பாங் கபாலமும் வெண்டலையே
**146 
#62

வெற்றுட லென்புகங் காளங் குடுமி விரும்புசிக்கந்
தெற்றிய சூளி சுடிகை சிமையஞ் சிகைசிமிலி
முற்று நவிர்முடி முச்சியாங் காத்திர மூண்டசினை
மற்று மவையவ மங்க முறுப்பென்பர் வாய்ந்தவரே
**147 
#63

வாரிய கேள்வி மறையவர் வேந்தன் வடகலைதேர்
ஆரிய நாடன் தமிழ்நாடன் தேவை யதிபனென்னும்
ஓரியல் பான குணத்தான் கெயாதரத் துள்ளமைத்தான்
பேரியல் பாலொரு மூன்றா வதுமக்கட் பேரியலே
** மூன்றாவது மக்கட் பெயரியல் முற்றும்

@4 நான்காவது விலங்கின் பெயரியல்
**148 
#1

இயல்மிரு காபதி யாளி மடங்கல்கண் டீரவத்தோ
டயரு மறுகரி [கேசரி] சீயம்பஞ் சானனமே
வயமிகு மாவயப் போததுந காயுதம் வாள்வரிமா
உய[ரு] முடங்குளை கோளரி சிங்கமென் றோர்ந்து கொள்ளே
**149 
#2

கொல்லும் வயவரி தீவிசார்த் தூலங் கொடுவரியே
வல்லியஞ் சித்திர காயம்வி யாக்கிரம் வாழ்வயமாப் 
புல்லு மிருகாரி வேங்கை யுழுவையும் புண்டரிகம்
அல்கு மறுகு புழைக்கையும் யானையு மாளியென்னே
**150 
#3

யானை கடிவை புகர்முகந் தோல்கும்பி யும்பலிபம்
ஆன கரியுவாப் போதகஞ் சிந்துர மத்திகளி
றேனைமா தங்கங் கருணிநால் வாய்கய மே[ய்]ந்ததும்பி
தானமாக் குஞ்சர மாதிரம் வேழந்தம் பேரா[கு]மே

**151 
#4

பேரு மதமலை தந்தா வளந்தூங்கல் பின்புழைக்கை
வாரணஞ் சாமோற் பவமே யிரதி மலைவிலங்கு
பாரிய நாக மெறும்பி வழுவை பகடொருத்தல்
சாருங் களபம் வயமாக் கறையடி தந்திசெப்பே
**152 
#5

செப்பு நதத்துக் கிரிவனத் தோடு திரிசரமும்
வைப்பர் பிறப்பு மதகரிக் கென்று மதங்கரடம்
பொய்ப்பில் கடங்கடாந் தானந் துடியடி போதகமே
தப்பில் களபங் கயமுனி கன்றாந் தனிக்குயிலே
**153 
#6

குரகதம் வாசி யிவுளி சயிந்தவங் கோடகமாத்
துரகங் கனவட்டம் பாடலங் கற்கி துரங்கங்கிள்ளை
பரியய முந்தூசி யச்சுவம் வாகம் பகர்கந்துகம்
அரிகுந்தங் கந்திரு வம்மத் திரியுங் குதிரையன்றே
**154 
#7

அன்றுங் குடஞ்சுட்டொ டான்பசுப் பெற்றங்கோ வாப்பொதுப்பேர்
துன்றுஞ் சுரபி கபிலை சுரைதேனுக் கோமளமும்
பொன்றும்பெண் பால்சே விடைபூணி மூரி யிடபம்புல்லம்
என்று மிறால் பாண்டில் கோபதி புங்கவ மேறெருதே 

**155 
#8


எருமைகா ரான்மேதி காரச மேம யிடங்கவரி
வருமத னாமம் பகடு கடாவா மலடுமைம்மை
துருவை பிரமங் கொறியச மைதுருச் செம்மறியாந்
தருவ ரிதனாண் கடாவே ழகமேழ கந்தகரே
**156 
#9

தக்க வுதள்செச்சை மோத்தைவெள் ளேற்றை தருமறியே
மிக்க புருவை சகஞ்சா களஞ்சாகம் வெள்ளைகொச்சை
வற்காலி வெள்ளாடு மானமாப் பட்ட மெகினமன்னம்
வைக்க கவரி கவையமா மாக்கான மாவென்கவே
**157 
#10

கத்தபம் வேசரி கோகுவா லேபங் கழுதைகரம்
அத்திரி கேழ லரிகிடி கோலம்பூ தாரமைம்மா
வைத்த கிருட்டி குரோட்டே யெறுழி வராகம்பன்றி
சுத்தங் கனலி களிறேனம் போத்திரி சூகரமே
**158 
#11

சூழ்வரை யாடு சரபம் வருடையெய்ப் பன்றியெய்யே
வாழு முளவுமாச் சல்லியம் நவ்வி மறியருணம்
தாழும் பிணையுழை யேணங் குரங்கஞ்சா ரங்கமுமான்
யாழின் மொழியா யிரலைபுல் வாய்கலை யேறென்கவே
**159 
#12

ஏறிய பல்ல முளியம்வல் லூகங் கரடியெண்காம்
கூறுள்ளன் சம்பு நரிபூரி காயன்கோ மாயுவொண்டன்
சூறுங் குரோட்டா விகலன்தா சோக மிரவணத்தோ
டூறுங் கரபமு மொட்டக மாகு மொளிவளையே

**160 
#13

ஒளிர்பூசை பூச்சை விடருகம் பாக்க னுயர்பவனங்
களிதரு மாற்சாரம் பூஞை விலாளங் கடுவன்வெரு
களிதரு மேறென்ப ராவிதங் கானக் குதிரைமரை
களிவய முஞ்சச மும்முயல் கீரி நகுலமற்றே
**161 
#14

முறுவறு நான நரந்தங்கத் தூரி மறிதுருக்கம்
பெறுமற் கடங்கவி வானரங் கீசம் பிலவங்கமாங்
குறுகு பிலவகஞ் சாகா மிருக மரிகோகில
மறுகு நிரந்தர மூகங் குரங்கு வலிமுகமே
**162 
#15

வரியபெண் பாலவா மந்தியு மூகமு மற்றவற்றுட்
கரிய குரங்கூகம் காரு மதற்குக் கலைகளவன்
சுரிகொள் முசுக்கோலாங் கூலமா ஞாளி சுணங்கன்சுவாச்
சரியு ஞமலி யெகினஞ்சூ ரன்சார மேயமுமே
**163 
#16

மேய முடுவல் சுணங்கனாய் குக்கனும் வேண்டுமுடும்
பாய முசலிகை கோதாவாங் கோம்பி யரிய தண்டோ
டேய்சர டங்காம ரூபி முசலி யெழிலோந்தியாந்
தூயமூஞ் சூறுநற் சுந்தரி சுண்டனுஞ் சூறனுமே

**164 
#17

சூறுஞ் சிகரி யெலியாகு மூடிகந் தொல்விருடம்
வேறு மிரும்பன் கருப்பை கரியே யணில்வெளிலாம்
மாறில் விலங்கின் பொதுப்பெயர் மாவுடன் மானுமென்பர்
ஏறு மொருத்தல்போத் தேற்றையே றாண்பால வென்றனரே
**165 
#18


என்றும் பெடைபெட்டை நாகு பிணாப்பிணை யென்பபெண்பாற்
கொன்றுங் குருளை பறழ்குட்டி பார்ப்பு மறியுடனே
கன்றுங் குழவி மழவு மிவைபிள்ளை காலிநிரை
துன்றுந் தொறுத்திறம் வால்வா லதிகூலந் தோகையென்னே

**166 
#19


தோன்றிய வாற்கீழ் வெருகமஞ் சரகு முதுகுதும்பிக்
கான்ற செவிகன்ன தாலம்வால் தாலவட் டஞ்செருத்தல்
ஏன்ற சுரைமுலை யானை குதிரை யிவையுமிழ்நீர்
கான்ற விலாழி யிமிலேற்றின் மேற்றிரள் காண்முரிப்பே
**167 
#20

காட்டிய சாலம் விருந்தம் வியூகங் கணங்குலமே
கூட்டங் குழுத்திரள் யூதமெப் பாற்குமாங் கோடுமருப்
பீட்டு முலவைகொம் பென்பர் துவக்கத ளோடுரிவை
சூட்டு முரிகத்தி மந்தோல் வடகந் துருத்தியென்னே
**168 
#21

திரியவும் பச்சை புறணி சருமமுஞ் செப்புஞ் செந்நீர்
எருவை சுடுவன் கறைசோரி புண்ணீ ரிரத்தநெய்த்தோர்
குருதியொ டாமு முதிர நிணநேயங் கூறிழுதும்
உரிய விழுக்காம் புலவு முடையூழ்த்தி யூன்பூழ்தியே
**169 
#22

பூவில்வள் ளூரம் பிசிதம் புறணி புலால்புலவு
தூவு தடிதசை யூன்விடக் காங்கருச் சூல்சினைபீள்
மேவு மராள மரவு புயங்கம் வியாளமராப்
பாவு விடதரங் காத்திரங் காகோ தரம்பணியே
**170 
#23

பன்னக மங்கதம் போகி புயங்கமாம் பாந்தளகி
மன்னுங்கும் பீனசங் கூட பதஞ்சர்ப்ப மாசுணத்தோ
டுன்னிய கட்செவி கஞ்சுகி நாக முரகமரி
துன்னிய சக்கிரி வாதா சனந்தந்த சூகமுமே

**171 
#24

சூலிய தந்தமு நான்கு கவைநாத் துளைச்செவிகண்
வாலிய துத்தியொ டுத்தி படப்பொறி மாகாளம்
நீலங் கடுவிட மாலாலங் காள நிகரில்கரம்
ஆலமுங் காரியு நஞ்சாங் கலுழ னரியூர்தியே
**172 
#25


ஊரும் வயினான் ககபதி நாகா சனனுவணன்
ஆருங் கருட னெருவை யுவணப்புள் ளாங்கழுகு
வாருண் டகஞ்சிம்புள் சாதக மேவானம் பாடியென்பர்
காரண்ட நீர்க்காக்கை போதாப் புதாநாரை கண்டுகொள்ளே
**173 
#26

கொள்ளுங் களகண்டங் கோகிலந் தானுங் குயில்சுகமுங்
கிள்ளை யரிதத்தை வன்னியு மாகுங் கிளிசக்கரப்
புள்ளுட னேமியுங் கோ[க]முஞ் சக்கர வாகப்புள்ளாம்
துள்ளுங் கபோதநற் பாரா வதந்தூ துணம்புறவே
**174 
#27


புதியநற் குக்கில் சகோரஞ்செம் போத்து பொருசரணா
யுதமொடு குக்குடம் வாரணஞ் சேவ லுயர்கோழியாம்
இதல்பூழ் சிதல்கவு தாரி பகண்டை யிதல்சிவலாம்
சிதடி நெடிசில்லி சிள்வீடு கம்புள்சம் பங்கோழியே
**175 
#28

கோலும் வயவன் வயானன் வலியான் குரண்டங்கொக்கு
மேலும் வலாகம் பகமும்வண் டானநல் வெண்குருகுஞ்
சாலும் பெருநாரை நாகண வாய்பூவை சாரிகையாங்
காலுங் கயவாய் வலியான் குருவி கரியதென்னே

**176 
#29


கருமகள் காரி கொடிவாய சங்காகங் கார்க்கரடம்
வெருவிய காடை குறும்பூழ் சால்மீ னெறிபறவை
பெருகிய வோதிம மன்ன மெகினம் பிணிமுக மூர்க்
குருவி சடகம் வியங்கங்கஞ் சேனமுங் கூன்பருந்தே
**177 
#30

கூகை குடிஞை குரால்கோட்டான் மஞ்ஞை சிகண்டிசிகி
தோகை மயூரம் பிணிமுக மேகாரஞ் சொல்லுமயில்
கேகயங் கூந்த லிறகு கலாபங்கேழ் கூழைதொங்கல்
தோகையும் பீலி முருந்ததன் முள்ளார் துடியிடையே
**178 
#31


இடையு மிருடிகூன் பிங்கலை கின்னரி யாந்தையென்பர்
விடையில சாரசம் புட்கரம் வெண்குரு காகும்வெய்ய
கடைபயி லன்றில் கிரிஞ்சங்கீ ரங்கிள்ளை காரியென்றாம்
புடைககம் போகில் சகுனம் பிணிமுகம் புட்பொதுவே
**179 
#32

பொதுளிய தும்பி பிரசம் பிரமரம் புள்ளறுகால்
மதுகரங் கேசர மார்பதந் தேனீ வரிக்கடைமாக்
கதுவிய சூதகஞ் சாரங்கம் வண்டு கழுதுசுரும்
பிதவிய கீதம் அரியளி யேஞிமி றென்றிசையே
**180 
#33

இசையும் பதங்கஞ் சலபமும் விட்டி லெழாலொடுபோத்
தசையு மயில்பெறு மல்லாத புட்களாண் பால்சேவலாம்
வசையில் பெடைபெட்டை பெண்பால கோழி வருகுடிஞை
நசையி லிரண்டொழித் தியாவும்பெண் பாலள கல்லநன்கே

**181 
#34

நன்றாய பிள்ளையும் பார்ப்பும் பறவையி னல்லிளமை
ஒன்றாஞ் சினையுட னண்டமு முட்டை யுயர்ந்ததுண்டஞ்
சென்றாய மூக்கு மிதன்வா யலகு சிறைகுரலோ
டின்றாய கூழை பறைதூவி பிஞ்ச மிறகென்பரே
**182 
#35

படங்கொள் துழனி பலபுள் ளொலிக்கூட்டம் பார்க்கில்வன்மீன்
இடங்கர் கராவு முதலை மகரஞ் சுறாவிறவே
தடங்கொ ளிறால்மீன மச்சஞ் சகுலி வகுலியுடன்
அடங்கு மயிலை சலசர மீனென் றறைவர்களே
**183 
#36

அறைகின்ற நூறை மலங்கு கெடிறு கெளிறனந்தம்
பறைகின்ற மீன்பேர் வழக்கினுட் காண்க பணிலம்வளை
குறையொன்றில் வாரணஞ் சங்கு சலஞ்சலங் கோடுநத்து
மறைகின்ற நாகு சுரிமுகங் கம்பு வலம்புரியே
**184 
#37

புரியு மெருந்திற லேரல் கருநந்து நாகுபொற்பிற்
சரிமுக நத்தை மரைதேரை நீகந் தவளைசொல்லில்
அரியிவை மண்டூகங் கச்சபங் கூர்மங் கமடமஞ்சித்
திரிதரு மாமை தெறுக்கால் விரிச்சிகந் தேளதென்னே
**185 
#38

தெள்ளு முலுதை சிலம்பி சிலந்தி சிதலைசெல்லோ
டள்ளுறு மாழல் கறையான் குளிர்நண் டலவனுடன்
நள்ளி களவனுங் கற்கட க[ம்மு]சு நல்லுளுவாம்
நொள்ளையு நாகர வண்டா முறவியு நுண்ணெறும்பே
**186 
#39

எள்ளும் பிபீலிகை கீடங் கிருமி யிவைபுழுவாங்
கொள்ளும் பிரசமுங் கோற்றே னிறாலதன் கூடதென்பர்
கள்ளு நறவ நறாமது மட்டுக் களிபிரசந்
தெள்ளு மகரந்தங் கொங்குதேன் வேரியுந் தீட்டினரே
**187 
#40

தீட்டு மறைபயில் நாவின னென்றுஞ் செழுந்தமிழ்நூல்
கேட்ட செவியினன் கேளா வறிவன் கெயாதரத்துள்
ஈட்டிய சொற்பொரு ளெல்லாந் தொகுத்தீ ரிரண்டாவது
காட்டிய தொல்லை விலங்கின் பெயரியல் கண்டுகொள்ளே
** நாலாவது விலங்கின் பெயரியல் முற்றும்

@5 ஐந்தாவது மரப் பெயரியல்
**188 
#1

கொந்தாருஞ் சந்தானந் தேவதா ரம்பாரி சாதங்குன்றா
மந்தாரங் கற்பக மாகுமைந் தாரு மலையஞ்சந்தஞ்
சந்தாரஞ் சாந்தம் படீரமா ரஞ்சந் திரதிலதம்
அந்தாருப் பூழி லகில்காக துண்ட மகருவுமே
**189 
#2

கருதும் பணைபோதி யச்சுவத் தம்பிப் பலங்கணவம்
அரசு மராமர மாகுந் திருமர மால்வடந்தொன்
மரமே பழுமரங் காமரங் கோளிமென் பூதவமாம்
மருதா மருச்சுனம்வா னீரம் வஞ்சளம் வஞ்சியென்னே
**190 
#3


வஞ்சமில் சண்பகஞ் செண்பகஞ் சால மராமரமா
எஞ்சலி லாச்சா வகுள மிலஞ்சி மகிழிரத்தி
விஞ்சு மிறலி திமிசு கணிவேங்கை வெள்ளில்விளாப்
பஞ்சரத் தோடுசெங் கோடு செருந்தியென் பான்மொழியே

**191 
#4


பாடலம் பாதிரி காஞ்சுரை யெட்டி பனசம்பலாக்
கூடிண ராங்கன்னி காரமுங் கோங்குகுந் தங்குருந்தம்
காடுசெய் பிண்டி யசோகு செயலைகா கோளியுமஞ்
சாடி திலகம் பசும்பிடி பச்சை தமாலமென்னே
**192 
#5


மாதளை மாதுளங் கங்கழு முட்சுர புன்னைவழை
தாதிம மாந்தாதி மாதளை சம்ப முருகெலுமிச்
சோது நரந்தநா ரத்த முடங்கல் மடிகண்டலே
கேதகை கைதையுந் தாழை கயிர்கிஞ் சுகமுருக்கே
**193 
#6


முருகுலா வச்ச மகத்தி புழகு புனமுருங்கை
குருகு குருக்கத்தி மாதவி கூம்பல் கடம்பல்குமிழ்
அரிதகி யாகுங் கடுநெல்லி யாமல கம்புளிதிந்
துருணி யெகினமொ டாம்பிலஞ் சிந்தஞ்சிந் தூரமுமே
**194 
#7

சிந்தைசெய் விண்டல் கிளைவேணு வேரல் திகிரிகழை
சந்தி பணைபாண்டில் கீசக மோங்கல்வேய் தட்டைவரை
முந்தூழ் வெதிர்காம்பு தூம்பமை வேழ முளைதிரிகண்
கந்தி நறும்பாகு பூகதம் பூகம் கமுகொடைந்தே
**195 
#8

கன்னல் கழைவேழ மிக்குத் தருநற் கரும்புபுன்னை
புன்னாகஞ் சன்மலி பொங்க ரிலவாங் களாக்களவாம்
பன்னல்காற் பாசம் பருத்திபுற் றாளி பனைபெண்ணைபோந்
துன்னிய நீலங் கருந்தா ளுடன்றால மோதினரே

**196 
#9

ஓதிய வாசினி யீரப் பலாவா முடைகுடைவேல்
தாதகி யாராகு மாத்தி கதிரங் கருங்காலிதான்
சூத மரஞ்சே கரமாழை மாவாம்பரஞ் சொல்லிற்கொக்காஞ்
சாதி பிரம்பு வெதிர முடன் சூரல் தப்பில்லையே
**197 
#10


இல்லிலந் தேறா மிரத்தி யிலந்தை யிதழிகொன்றை
சொல்லிய தாமங் கடுக்கைசா கஞ்சாதி தேக்கதென்பர்
வில்லுவ மாலூரங் கூவிள மங்கோல மேயழிஞ்சில்
புல்லிய செம்மர மாகுந் நுணாவு(ம்) புனைதணக்கே
**198 
#11


புனைதரு நீபங் கதம்பங் கடம்பாம் புகல்கதலி
வனையு மரம்பையும் வாழை கலிகமும் வன்னிசமி
இனையு முதும்பர மத்தி யருக்க மெருக்குநிம்பம்
நனைமலர் வேம்பு துடியேலஞ் சம்புவும் நாவலென்னே 
**199 
#12

நாகமாஞ் சுள்ளி நறவமு ஞாழலே நன்மரவம்
ஆகுந் துருக்கமும் குங்கும மேரண்ட மாமணக்குத்
தாகங் கெடுநாளி கேரந் தடந்தெற்கு தாழையென்பர்
போகிய காயாவே காசையு மால்வண்ணப் பூவையுமே

**200 
#13

வைத்தநற் றான்றி கலித்துரு மம்மல ரின்றிநற்காய்
தொத்திய பாதவங் கோளி கணிசெண் பகந்தொடர்ந்து
மொய்த்துவண் டுண்ணா மரஞ்சாகி பாதவ மூலந்தருத்
தத்து மரமத் திரிசாலம் பூருகந் தாபரமே
**201 
#14

பரந்த தருக்குழா முய்யானந் தண்டலை பைம்பொழில்காத்
துரந்துத்தி யானமொ டாராமங் கானலுஞ் சோலையென்பர்
புரந்த பொதும்பராங் கோடரம் பொங்கர் மரச்செறிவு
நிரந்த வரண மிளைகாவற் காடென்று நேர்ந்தனரே
**202 
#15

நேர்ந்த பழுவங் கடம்வியல் கட்சி நெடுங்ககனம்
காந்தாரங் கானனங் கான மடவி கடறுபொச்சை
சேர்ந்த முளரி களரி குறும்பொறை தில்லம்விடர்
காய்ந்த வனங்காண்ட மாரணி யஞ்சுரங் காடென்கவே
**203 
#16

கண்டக மேகடு முள்ளா மரில்தூறு கானிறும்பு
முண்டக முள்ளுடை மூல மரிகலை மொய்வயிரங்
கொண்டகா ழாசினி சேகு மரக்காழ்ப்புக் கொவ்வைவிம்பந்
தொண்டை சிறுகீரை சாகினி சில்லியுஞ் சொல்பரிந்தே
**204 
#17

பரவிய கோட்டங் குடிலங் குரவம் பலாசதனைப்
பிரம தருவென்ப கோவிதா ரங்குராப் பின்னலரி
கரவீரத் தோடு கணவீர நந்தியா வத்தம்வலம்
புரியென லாகுங் கொரண்டங் குறிஞ்சி புரிகுழலே

**205 
#18

புரியிலை யூழ்த்த முதுகாடு மூதை பிறங்கியமாம்
சுரமொடு பொச்சை கொடுங்கரிக் காடு துணைபணைகோ
டரமொடு பொங்கர் சினைகோடு கொம்புறுப் பார்பிறக்கந்
தருகிட பங்காம் புலவைகப் புக்கொப்புச் சாகையென்னே
**206 
#19

சாற்றிய பத்திரம் பன்னந் தமாலம் தழைதளமோ
டேற்று பலாசஞ் சதனஞ் சதமடை யென்பரிலை
மாற்றுந் தளிர்கிளை வல்லரி யேமுறி மஞ்சரியோ
டாற்றுங் கிசலையம் பல்லவ நல்ல வலங்கலுமே
**207 
#20

கலித்த லிலிர்த்தல் குழைத்தல் தளிர்த்தல் தழைத்தலென்ப
வலித்த முருந்ததன் வெண்குருத் தாமஞ் சரியிணரே
பலித்த துணர்தொத்துக் கொத்துக் குலைவல் லரிபல்லவங்
குலித்த திவளிகா யென்ப பழங்கனி கொள்குயிலே
**208 
#21

குல்லை துளவந் துழாய்காந்தள் வெண்டோன்றி கோடல்ப[ற்]றை
செல்லு முழிஞை சிறுபூளை யெண்ணுந் திலமுமெள்ளாம்
நல்லவுன் மத்தக மூமத்தை நாடுங் கறிமரிசம்
மல்லல் மிளகா மரிசன மஞ்ச ளரித்திரமே
**209 
#22


அஞ்சலி திப்பிலி மாகதி யட்டி மதுமதுகம்
இஞ்சியே யாத்திர கம்மா மிருப்பை மதூகமென்க
எஞ்சிய சொன்னலுஞ் சோளமு மாகு மிறுங்கிறடி
விஞ்சு கருந்தினை யேனலுஞ் செந்தினை மெல்லியலே
**210 
#23


மெல்லிளங் கொம்பர் வளாரா முலவை தழைபயிர்கூழ்
நெல்லுநற் சாலி விரீகி குளநெல்லு நீவாரமாம்
ஐவனஞ் சாரல் விளைநெல் லிருவி யருவிபுன்றாள்
கவ்வையு மெள்ளிளங் காயாங் குரலாங் கதிர்வல்லியே
**211 
#24

வல்லி யிலதை கொடிநூ லிரத்தியும் வள்ளியுமாம்
மல்லிகை யாகும் விசகலி மௌவலு மாலதியாம்
முல்லை தளவஞ் சிறுசெண்ப கஞ்சாதி பித்திகையே
நல்ல கருமுகை யாமிரு வாட்சி மயிலைநன்கே

**212 
#25


நன்காம் பதுக்கை யரில்சிறு தூறு நவில்காஞ்சனம்
புன்காந் தகரந் த[மால]மிண் டீங்கை கழல்மூழலாம்
மன்கார்க் கடுகு கடிப்பகை யையவி வாய்ந்தவள்ளை
என்கால்கொள் நாளிகந் தன்னைச் சகுடஞ்சேம் பென்றிசையே
**213 
#26


சைவல நாரஞ்செவ் வீரம்பீ னம்பாசி தான்பதிகம்
வவ்வும் வழுதுணை வங்கம் பிருகதி வங்கணமாம்
எவ்வமில் காஞ்சொறி கண்டூரஞ் சாய்ப்புல் லெருவைகுசை
செவ்விய தெர்ப்பை செருந்திவாட் கோரை திருந்திழையே
**214 
#27


திருந்திய முண்டக மாமுள்ளி செச்சைசிந் தூரம்வெட்சி
மருந்தென்பர் புல்லு மரமுதல் யாவும் வருபகன்றை
பொருந்து கிலுகிலுப் பையாங் குமரிகற் றாழைபொற்பார்
பருங்க ருணைகந்தம் வையழி வைக்கோல் பலாலம்பன்னே
**215 
#28


பதடி பதர்பொங் கழிதூற்றா நெற்பொலி பாகலென்றுந்
துதவிய கூலஞ் சிவேதை பகன்றைசோ பாலிகையே
உதவு மடம்பா மமுதவல் லீசீந்தி லோங்குசடை
கதுவிய மூலங் கிழங்குதூர் வேர்சிவை கந்தமென்னே

**216 
#29

கருந்துடி கூதாளங் கூதாளி கல்லகா ரங்குளிரி
பரிந்தல ரும்பீரம் பீர்க்காகுந் தாளியும் பஞ்சிகமாம்
அருந்து முதிரை யவரை துவரை முதலானவாம்
பொருந்திய காசையு நாணலே டுந்தோடும் பூவிதழே
**217 
#30

இதழ்புனை முண்டக மம்போரு கம்புண்ட ரீகமிண்டை
சதபத் திரியம் புயமா விந்தஞ் சரோருகமொண்
பதுமந் திருமலர் கோகன கம்பங் கயநளினம்
முதுவன சங்கஞ்சம் வாரிசம் பற்ம முளரியென்னே
**218 
#31


என்றுங் குவலைய நீலநீ லோற்பல மிந்தீவரங்
குன்றிய பானலுங் காவியு மாகுங் கருங்குவளை
நின்ற வரத்தமு முற்பல முஞ்செங் குவளைநெய்தல்
கன்றுங் குவலைய மல்லி குமுதங் கயிரவமே
**219 
#32

வல்ல பொகுட்டுப்பூங் கொட்டை யகவித ழல்லிமற்றும்
புல்லி புறவிதழ் கோரக மொட்டுப் புனைகலிகை
நல்ல முகுள முகிழ்முகை போகில் நனைகலிகம்
மெல்லெ னரும்பு சினைசா லிகைகண்ணி வேண்டுவரே
**220 
#33

வேண்டுந் துணரினர் வீமலர் போது விரியலர்தார்
ஈண்டு மலரி யிவையவிழ் பூநெய் யரிநாரரி
தூண்டும்பன் னாடை படையிற் கொடையினற் சூதில்வென்றோர்
யாண்டும் புனைவது வாகையம் போதென் றியம்பினரே

**221 
#34

இயம்பிய செம்மல் பழம்பூ மகரந்தங் கொங்கொடென்றும்
அயந்தரு கேசரம் பூந்தா தணிய லலங்கல்கண்ணி
பெயர்ந்த தொடையல் தொடைதாமங் கோதை பிணையல்தொங்கல்
வயங்கு தெரிய லொலியல் தொடலைதார் மாலையென்னே
**222 
#35

மாலுஞ் சிகழிகை வாசிகை சூட்டோ டிலம்பநுதல்
மேலணி மாலை தொடலையுங் கண்ணியும் வேண்டுவர்முன்
னூலின் படிகண்டு காணா தவையு நுவன்றறிக
காலும் பரிமளக் கொங்கார் மலர்க்குழற் காரிகையே
**223 
#36

காசிப கோத்திரம் வாழவந் தோன்தென் கலைத்தமிழ்தேர்
மாசில் பெருந்தகை மாறா வறிவன் மலரயனுங்
கேசவ னும்புகழ் தேவைநன் னாடன் கெயாதரத்துப்
பேசி யமைத்தன னைந்தா வதுமரப் பேரியலே
** ஐந்தாவது மரப்பெயரியல் முற்றும்

@6 ஆறாவது பல்பொருட் பெயரியல்
**224 
#1

இரணிய மாடக மாழைசாம் பூநத மீழஞ்சொன்னம்
பொருள்கன கம்பீதம் சாமீ கரஞ்சாத ரூபம்பொலம்
அரிநிதி காணந் தமனியங் காஞ்சன மாடருத்தந்
தருபொன் னிதியம் வெறுக்கை தனம்பூரி சந்திரமே
**225 
#2


திரவிய மேமந் தொடுக்க நிதானந் திகழாசைபொன்
வரைவியல் காசு மனவு மணியொன் பதுவகையாம்
அரதன நல்ல சிலாகை யகன்மணி யாரமுத்துத்
தரளமு நித்தில மாம்பற்மஞ் சங்கந் தருநிதியே
**226 
#3

நிதியும் பதினால் வகைகோசந் தண்டம்பண் டாரநிறை
பதுமரா கத்தொடு மாமணி மாணிக்க மாப்பவளந்
துதிதரு வித்துரு மந்துகிர் துப்புத் துவரரத்தம்
விதிகொ ளிரசதம் தாரங் களதவு தம்வெள்ளியே
**227 
#4

வெல்தருங் கஞ்சமும் வெண்கல மார்கூ டமுமிரதி
சொல்லிய மாயா புரிபித் தளைவடு சுற்பஞ்செம்போ
டொல்லு முதும்பரந் தாம்பிரஞ் சீருண மோங்கிரும்பு
நல்ல கருந்தா தயமெஃகஞ் சத்திர நாடிற்பொன்னே
**228 
#5


நாகங்கா ரீயஞ்சீ ருள்சீச பத்திர நல்லவங்கம்
ஆகு மதுகந் தராப்படி கம்பளிங் காம்வயிரம்
ஏகிய வச்சிரஞ் சோம னிரவி யொளியிலென்றும்
பாகு படுவது சந்திர சூரிய காந்தம்பற்றே 
**229 
#6


பருக்கைகாழ் தார மரும்பண்டம் வட்டி கவடிபண்டம்
அருக்கிய கூலம் வளம்பண்ணி யம்பண்ணி காரமுமாம்
மருக்கொள்கர்ப் பூரம் பளிதங்கத் தூரியு மான்மதமே
தருக்கும் புலிபீ தங் காலேகம் வட்டிகை சாந்தென்பரே
**230 
#7


சாந்தின் பொதுப்பேர் கலவைகா லேகந் தளம்விரைசெஞ்
சாந்தென்பர் குங்கும மங்கரா கம்பூ சுவதகரம்
சேர்ந்ததோர் காசறை யேல மயிர்ச்சாந்து தேய்வைசெச்சை
ஆர்ந்த குழம்பு சதுர்த்தலுங் கொட்டலு மப்புதலே

**231 
#8

புலர்த்தல் வரித்தலே பூசுதல் பொற்பார் மகளிர்க்கென்று
நலத்தநல் லாகத் தெழுது வரித்தொய்யில் நற்சுடிகை
மலைத்த கிலதந் திலகமுஞ் சுட்டி மடந்தையர்க்கு
மிலைத்த திருமுண்டம் புண்டா மாநுதன் மேற்குறியே
**232 
#9


குலங்கொண்ட சேலேகஞ் சிந்தூர மிங்குலி கம்மிதுசா
திலிங்கமென் குற்குலுங் குங்குலு வுங்குங் கிலியமென்பர்
இலங்கு மரக்கா மரத்தந்துப் பிங்கு பெருங்காயமாம்
துலங்குங் கவரியே சாமரஞ் சாமரை சொல்துணிந்தே
**233 
#10


துவரிந் தனங்காட்ட மாகும் விறகு சுடுசமிதை
இவர்கின்ற லோம விறகென் னெரிகடை கோல்ஞெகிழி
அவிகு மறுகு மரிசியுங் கூடிய தச்சுதமாங்
கவரு முளரி யலாத மிராதங் கடைக்கொள்ளியே
**234 
#11


கந்து ளிருந்தை கரிசாம்ப லாம்வெண் பலியடலை
நந்துஞ் சுதையுங் களபமு மாகு நறுஞ்சு[ணச்]சாந்
துந்து மரிதூம மாவி புகைவெடி யோங்குநறை
நுந்தும் புகைகு குரூஉப்புகை துப்பஞ்சி னுண்ணுதியே

**235 
#12


நுண்ணென் பிதிர்சிதர் சின்னம் பராக நுணுகுததர்
சுண்ணம் பொடிநிறு பூதி துகள்நூறு தாதுசன்னங்
கண்ணுங் குறுமலங் காட்டில வின்பஞ்சு பூளைகரித்
துண்ணுஞ்சிற் றுண்டி கருணை குழம்புபா கொன்றினவே
**236 
#13

ஒன்று மசன மிதவை மடைகூ ழுணவயினி 
சொன்றி நிமிரல் பதமூரல் போனகந் துப்புப்பொம்மல்
துன்றிய வோதன மன்னம் பகருணாச் சோறமலை
அன்றியும் பாளிதம் வல்சிபால் புன்க மடிசிலுமே
**237 
#14

அசித்தல் நுகர்தல் மிசைத லருந்த லயிறலுண்டல்
பொசித்த லொடு துய்த்தல் மாந்தலு நுங்கலும் பொங்குணலாந்
திசைப்பலி யேசருத் தேவர்க் கமுதவி கிற்றிதுற்றி
மிசைத்துடன் றின்பன வுண்பன வாமென்று வேண்டினரே
**238 
#15

வேதக மாகிய வாவிகஞ் சம்வெந்தை பிட்டிலட்டு
மோதகம் பூரிகை யஃகுல்லி சக்குல்லி மூண்டநொலை
பேதக மாகிய சிற்றுண்டி பிண்டி நுவணையிடிக்
கோதினர் கஞ்சியுங் காடியு மோழையென் றொண்ணுதலே

**239 
#16

ஒண்டயி ராகு மளையுந் ததியுநெய்க் கோதுதுப்புங்
கொண்ட விழுதுங் கிருதமு நேயமுங் கூறுவர்பால்
உண்ட வமுது பயங்கீர மென்பர்மோ ரோதில்முசர்
மண்டிய தக்கிரந் தேனாம் பிரசம் மதுவிவையே
**240 
#17


வைத்த விசையங் குளங்கன்னல் கட்டி மருவியபா
கொத்தியல் சர்க்கரை யக்கார மாகு முரியகண்டம்
பத்திசெய் பாளிதங் கண்டாகும் பானம் பருகுவன
அத்தி தருமமு தாமென்பர் சாவா வருமருந்தே
**241 
#18

மருமாலி பாடலி மாதவங் குந்தி மருட்டமட்டுப்
பிரச மதுவந் தணியல் படுவேரி தொண்டிபிழி
சுரையரி தேறல்சா றாம்பல் சுலோகி சுமாலிதொப்பி
முருகு விளம்பி யளிசிக் கரஞ்சாதி மோகிகள்ளே
**242 
#19

கருதில் விலங்கி னுணவு குளகாந் துணைக்காரணந்
தருமுப காரணந் துப்புடன் சாதகஞ் சாற்றிரண்டாம்
பெருகு முகள முபையம்வெண் டேர்கானல் பேய்த்தேரதாம்
நிரலொளி பந்தி யொழுங்கு நிரையென்பர் நீதவீரே
**243 
#20

நீடும் பதமும் பொருளுந் தெரிந்து நிலைபெறவே
நாடு மவர்க்கு நலந்தரு மாறு நயத்தொடென்றுங்
கேடும் பெருக்கமு மில்லாத தேவைக் கெயாதரன்சீர்
பாடுந் தமிழிலா றாவது பல்பொருட் பேரியலே
** ஆறாவது பல்பொருட் பெயரியல் முற்றும்

@7 ஏழாவது செயற்கை வடிவிற் பெயரியல்
**244 
#1

பொருமுத் தலைக்கழு முத்தலை வேல்சூலம் பொற்கழுமுள்
பரசு நவிய மழுப்பால நல்ல படுகணிச்சி
செருவில் வளையாழி யெஃகஞ் சுதரி சனந்திகிரி
பருதி யுடனேமி சக்கா மாமென்பர் பான்மொழியே

**245 
#2

மொய்சிலை கார்முகங் கோதண்டஞ் சாப முனிதனுவே
வெய்ய சராசனம் வேணுக் கொடுமரம் விற்றவராஞ்
சைவ பிரான்விற் பினாகந் திருமால்விற் சார்ங்கமென்ப
எய்யும் விசையன்விற் காண்டீபம் வானவி லிந்திரற்கே
**246 
#3

திரிசரம் பாணங் ககங்காண்டஞ் சித்திர புங்கம்பல்லம்
வரிகணை யாசுகங் கோல்கங்க பத்திரம் வாளியம்பு
பரிமாற் கணமே விசிகஞ் சிலீமுகங் கோப்பகழி
பொருகுதை தோணிவண் டத்திரஞ் சாயகம் புங்கவமே
**247 
#4


புங்கம் பகழி புதையம்புக் கட்டா முடுமரக்கோல்
தங்கு முதணமொட் டம்பாகுஞ் சத்தி யுடம்பிடிவேல்
எங்கும்விட் டேறர ணங்குந்த ஞாங்க ரயிலெஃகமாம்
வெங்கப் பணந்தோ மாமிவை கைவேல் விகற்பங்கொள்ளே
**248 
#5

கொய்தரு சம்பங் குலிசங்கம் வச்சிரங் கோவசனி
வெய்ய கரவாளங் கட்கங் கரவாரி வேணுவஞ்சம்
நைதரு நாட்டங் கடுத்தலை கண்டக நாந்தகம்வாள்
ஐய வுவனி நவிர்கோண மின்னும் அசிகண்டமே
**249 
#6

கரபத் திரமே[வு] வேதின மீர்வாள் கதைதடிதண்
டெரியொத்த பீலித்தண் டெஃக முடன்பிண்டி பாலமென்க
சுரிகை யுடைவாள் கழுமுள் கழுக்கடை சூழ்கொடுவாள்
பரிய குயம்புள்ள மாகு முசல முலக்கைபன்னே

**250 
#7

பரிசு மெழுவே கணையப் படைபல் படைக்கலமுற்
கரமேதி மட்டி முசுண்டிசங் கேபட்டங் கூர்த்திகைகாத்
திரியா மிருப்புமுட் டாறுநா ராசஞ் சலாகைசெப்பில்
மருவு தறிகை யுளிகணிச் சிப்பேர் வழங்குபவே
**251 
#8



குளிரிலை மூக்கரி கத்தி பிடிகைது மானங்கொய்தார்
நளிதரு சாந்து முதலா னவைபயில் நற்கலமாம்
பொளிதரு பொற்கொல்லன் சின்னத்தட் டாங்கன்னம் பூநிசிதம்
வளர்நுதி வையார் வசிவயிர் கூரயில் வள்ளொடள்ளே
**252 
#9

அடுபடை சாதனந் தானை படைக்கல மாயுதமே
கடுமுட் கருவி கழுமுள் ளொடுதுப்புங் காட்டுமென்ப
தொடுநுதி நுங்கி நுனைமுனை யாமாவந் தூணியென்பர்
தடறு படையுறை யேகரு விப்புட்டில் தானறியே
**253 
#10

அரணந் தகைபாடி சாலிகை மெய்யுறை யாசுகண்டஞ்
சுரிகை பரம்பாரம் வாரணம் வாரந் தொடருமெய்சூழ்
கருவி கசைதம்ப மாகுங் கவசங் கடகுதட்டு
மரவட் டணமென்பர் தோற்பரந் தோல்தோற் பலகைமற்றே
**254 
#11

பலகையாங் கேடகந் தோல்வே திகைசே டகம்பரிசை
குலவிய கைப்புடை கோதைகைக் கட்டி குசைவற்கமாங்
கலனை பருமம் படைபரம் பல்லணம் பண்கருவி
கலினமு நல்ல கறுழுங் குதிரைவாய்க் கட்கயிறே

**255 
#12

கருதுங் கவடு புரோசு கழுத்தி லிடுகயிறாந்
தருகு நிகளந் தொடர்வல்லி பந்தந் தளைவிலங்காம்
மருவும் பறலை பறலிகை பற்றள் வலியிரும்பாம்
பரியகங் கிண்கிணி பாதசா லங்கால் மணிவடமே
**256 
#13

மணிநூ புரமோ டரவம் பரிபுரம் வார்ஞெகிழம்
பணியுஞ் சிலம்பரி பாடகம் பாத கடகமென்பர்
அணியுங் கலாபம் விரிசிகை காஞ்சி யரைப்பட்டிகை
தணியு மனவு பருமங் கலைமே கலைசமமே
**257 
#14

சதங்கை யரைநூ லிரதனங் கிண்கிணி யாம்பதக்கம்
இதந்தரு கண்டிகை யாரம்பூ ணாகு மெழிற்கடையே
விதங்கொள் கயில்பூண் கடைப்புணர் வாந்தாம மென்முலைமேல்
மதந்தரு கண்டிகை மாலைகா சேகாழ் வடங்கோவையே
**258 
#15


கோடிய தொங்கல் மதலிகை தூக்கங் குருகுகன்று
சூடகஞ் சங்கு தொடிசரி கைவளை தோளணியே
நாடிய வங்கதங் கேயூரங் கங்கண நற்கடகங்
கூடுந் தொடியுங் குழைதோடு மிஞ்சிகை குண்டலமே
**259 
#16


குலவு கடிப்பிணை வல்லிகை வேடக முங்குழைப்பூண்
உலவுறு சுட்டி சுடிகை நுதற்குறி யோடைபட்டம்
பொலநல் லிலம்பகம் புல்லக மா நுதற் பூண்சிரமேல்
விலகிய மாலை கரோடிகை யாக விரும்பினரே
**260 
#17

விரும்புஞ் சுடிகை மவுலி கிரீட மகுடமின்சே
கரம்பொன் முடியென்பர் காதணி கன்னப்பூ கன்னபூரம்
அரும்பு சுடராழி மோதிர மாம்பே ரணிகலமே
பெரும்பூண் மதாணி கொடும்பூணென் றார்சொற் பெரியவரே
**261 
#18

பெரும்பேர் மதாணி யிழையா பரணம்பூண் பேசிலணி
தருங்கல னாந்தாலந் தட்டகை தட்டமாஞ் சாற்றில்வட்டில்
வருங்கிண்ணங் கோரமும் வள்ளமா நாழிகை வட்டில்கன்னல்
அரும்பெயர்த் தவ்வி சிலகமுஞ் சட்டுவ மாமென்பரே

**262 
#19

ஆடி படிமக் கலந்தர்ப் பணமா தெரிசனத்தோ
டேடியல் கஞ்சனை கண்ணாடி யாகு மிலங்குகண்டை
பாடிக லானை மணிகைம் மணிமுத லாப்பரந்து
கூடியந் தன்மணி யாகும் படலிகை கோல்வளையே
**263 
#20


கோலுங் குறிஞ்சிப் பறைதொண் டகமு முருகியமும்
ஏலுந் துடியு மதற்கே துடிபாலைக் கெய்துமென்ப
பாலியல் முல்லைப் பறையேறங் கோட்பறை பம்பையுமாம்
காலுங் கிணையே மருதத் திணைப்பறை காரிகையே
**264 
#21


காகளங் காளஞ் சிறுசின்னம் பீலி கருதுநெய்தல்
சாகும் பறையா மொருகட் பறைமொந்தை தண்ணுமையே
ஏகு முடுக்கை துடியாம் பதலை பரந்தபறை
ஆகுளி யாகுஞ் சிறுபறை மென்சொல் லருங்குயிலே
**265 
#22

குளிர்முழ வம்மண் கணைமுழா வெய்ய குடமுழவாம்
மிளிர்பணை சண்டை முரசு சகடை விளங்கியதுந்
துமிபே ரிகைதிண்டி மம்பண வம்மான கம்படகந்
தமில்வே றிலாத தடாரிதக் கைபம்பை சல்லரியே

**266 
#23

சரிதரு கொம்பு வயிராம்பல் கோடு தருகலையோ
டிரலையு மாமென்பர் கோடணை தூரிய மேன்றபணை
முரசுகாழ் பீலி முகுடு முழவ மியமுழுதும்
மருவிய வாச்சியங் கட்குப் பொதுவென்பர் வல்லவரே
**267 
#24


வல்லகி தந்திரி வீணை விபஞ்சிதம் வார்கருவி
நல்ல வறுசலங் கோட பதிகின் னரம்யாழதென்
வல்ல முறுக்காணி மாடக மாகுந் திவவுவண்கட்
டொல்லையில் தந்திரி கோல்குரல் யாழிற் றொடர்நரம்பே
**268 
#25


நரர்பயி லெந்திரங் கூவிர நல்ல திகிரிவையம்
இரதங் கவரி சபந்தனந் தேரென்ப ரேய்ந்தசில்லி
பகுதியோ டாழி திகிரி யுருள்நேமி பண்ணுமுந்தி
உருளிவை தேர்க்காலா மாரகத் துச்செறி யுட்கதிரே
**269 
#26


கருதிய சாகாடு வையஞ் சகடு கடியபண்டி
உருளொடு சாடு மொழுகையுந் தேர்மொட் டுயர்கூவிரம்
பெருகிய கூம்பு கொடிஞ்சியென் றாந்தட்டுப் பாவுடனே
சொகுகு கிடுகுதேர் மேற்புடை சூழ்மரச் சுற்றென்பரே

**270 
#27


படையல நாஞ்சில் கலனை கலப்பையாம் பற்றுத்தம்பம்
நடுதறி கந்து மதலை யெழுத்தூணா நல்லகம்பம்
அடுகளி றார்வெளி லாளானம் யூபம்வேள் வித்தறியாம்
முடுகு குறுந்தறி போதிகை சீப்புத்தாழ் மொய்குழலே
**271 
#28


குணிலே குறுந்தறி பட்டடை யாகு மடைகுறடு
பணவை யிதணங் கழுது பரணாம் பருங்குறடே
இணையில் முருடா முறிசிதர் சிக்கஞ் சிமிலியென்பர்
தணிவி லுலூகங் கறையுர லாமலர்த் தாழ்குழலே

**272 
#29


குளிர்தழல் தட்டை யிவையாங் கிளிகடி கோல்கருவி
அளிதரு வாரி கபாடம் புதவிவை யாங்கதவங்
களிதரு பாரி பரியங்க மஞ்ச மிழிகைகட்டில்
சுளிதரு மூஞ்சலு மூசல் துடுவை துடுப்பென்பரே
**273 
#30

எள்ளு மிறவை கடவைமால் பாகுங்கண் ணேணிதிமில்
தொள்ளம் பஃறி மதலையா னம்மம்பி தோணிவங்கம்
நள்ளுங் கலம்பாறு பாரதி போதக நாவாயுமாந்
தெள்ளம் படுயை பகடு புணையம்பி தெப்பம்பற்றே
**274 
#31

பண்ணு மரக்கலப் பாயிதை யாகும் படர்கரகங்
கண்ணுங் கரண்டைநற் குண்டிகை தானுங் கமண்டலமாம்
எண்ணிய மஞ்சுக மஞ்சிகை பேழை யினிக்கடப்பம்
நண்ணுங் கரண்டகங் கோடிக மாகுநற் கெண்டிகையே
**275 
#32


கைத்த கலாபந் தழைதொங்கல் பீலிக் கவிகையென்பர்
முத்தணி வெண்குடை பிச்சங் கவிகை முடிவில்தொங்கல்
சத்திரஞ் சிற்றால வட்டஞ்சாந் தாற்றியாங் கால்செய்வட்டம்
வைத்த சிவிறியே யுக்க மிவையால வட்டமென்னே
**276 
#33


வட்டிய சிக்கமுஞ் சீப்புச்சூ தாடு கருவிவல்லுந்
தொட்டியல் காசுங் கடிகையுங் கண்டமுந் துண்டமென்பர்
கட்டுஞ் சுமடு சுமையடை சும்மாடு தந்துகம்பந்
தெட்டிய தந்துப் பனுவக்காற் பாசநூ லேந்திழையே

**277 
#34


இழைதரு வள்வகிர் வாராகும் பாசநா ணேகயிறாங்
கழல்தொடு தோலா மடியிற் றொடுவன பாதுக்மாம்
தழுவுஞ் சிவிறி துருத்தி மிடாநற் றடாவடுவை
குழிசியும் பானை மிடாவக ளந்தடாக் கொள்கவம்பே
**278 
#35

கடம்பா சனமட் கலங்கும்பங் கன்னல் தசும்பிடங்கர்
குடங்காண்மின் கன்னல் சிரகஞ் சிரதமுங் கொள்கரகம்
இடங்கர்வட் டம்நீர்ச்சால் சாடி யகள மினப்பதலை
அடங்கிய தாழியென் சுத்தி சராவ மகலென்பரே
**279 
#36

படிபுட் டகந்தூ சொலியல்வா சம்பரி வட்டம்பட்டம்
மடிதுகில் கோடிக மம்பரம் வாதனஞ் சேலையுஞ்சம்
படமறு வைசாடி காடகந் தானையோ டாடைபடம்
உடைகலை காழக நீவி கலிங்கமா சாரமொன்றே
**280 
#37

ஒன்றிய கூறை யுடுக்கை புடவை யிடையல்பங்கம்
சென்ற கருள்புங்கஞ் சில்லிகை யேடகஞ் சித்திலிகை
நன்றுசெய் கத்தியந் தூரியம் பாரிநல் லாடையென்ப
நின்றபட் டாடையும் பாளிதங் கோசிக நேத்திரமே
**281 
#38

திறவிய வற்கலை சீரை யிறைஞ்சி மரவுரியாம்
துறைபயில் கம்பலஞ் சிம்புளி செம்படாஞ் சூழியென்றும்
பெறுவ முகபடா மேற்போர்வை மிக்கோள் பிணிகைவம்பு
மறைதரு பட்டிகை வாரிவை கச்சு வரிமுலையே

**282 
#39

வரிந்த விதானமாங் கம்பல மத்தவா ளம்வடகம்
உரந்தரு மேகாச முத்தரி யம்மா முடுத்தல்சுற்றல்
தரந்தரு கஞ்சுளி கஞ்சுகம் வாரணஞ் சட்டையங்கி
பரந்தரு குப்பாய மெய்ப்பையென் வானி படங்கென்பரே
**283 
#40

பரந்த திரைகண்டங் கஞ்சிசை பாரகம் பைங்கழினி
வரைந்த வெழினி படாமாம் வெளியடை வானிதுகில்
உரங்கொள் விலோதந் துகிலிகை கேதன முத்தியுடன்
நிரந்த பதாகை துவசம் படாகையு நீள்கொடியே

**284 
#41


கொடியிற் சிறிய கதலிகை சீரை சிதவல்சிதார்
அடர்பொற் றளிமந் தவிசணை மெத்தை யணிசித்திரப்
படமது பொத்தக மோவியஞ் சித்திரம் பட்டிகையே
புடைகொள் துகிரிகை தீட்டல் வரைதல் பொறித்தலென்னே
**285 
#42

பொங்கிய முன்னூற் பொருள்தெரிந் துண்மைப் பொருளனைத்துந்
தங்கிய ஞானந் தலைப்பெய் துலகந் தழைக்கவென்று
செங்கயல் போலும் விழியாய் கெயாதரன் செய்தமைத்தான்
எங்குஞ் செயற்கை வடிவிற் பெயரிய லேழாவதே
** ஏழாவது செயற்கை வடிவிற் பெயரியல் முற்றும்

@8 எட்டாவது பண்புப் பெயரியல்
**286 
#1

வட்டந் திகிரி பகுதி வலையம் வளைவுகொம்மை
தட்டு விருத்தங் கடகஞ்சில் லீகோ ளகைசக்கரம்
சுட்டிய பாலிகை மண்டில நேமியோ டாழிசொல்லில்
ஒட்டிய பாண்டிலும் வாளமு மாமென் றுரைத்தனரே
**287 
#2

தடவு வணர்வாங்கு கோட்டங் குலாவல் குரங்கல்தட்டுக்
குடிலம் வளைவாகும் பந்தர் தொகுதி குவவுகொம்மை
மடிதரு புஞ்சந் துறுமலுண் டைசோக மாழைபிண்டங்
கடிகணை கட்டி திரளைசே டாமென்பர் காண்குறித்தே

**288 
#3

குவையுங் குவாலு மிராசியுங் குப்பையுங் கொள்குவவும்
எவையுங் குவிதற் பொருளாந் தொகுதி குழுமலென்றுந்
துவையுங் கருவிமொய் தோடு தொழுதி துறுவுதுற்றாம்
நவையி லடாரி யை யை[ம்]மை வடியின நற்கொடியே
**289 
#4


கொப்புளா மொக்குள் குமிழ்ப்புப் புளகங் குழல்புழல்தூம்
பொப்பில் சுரைநாடி யோதுந் துவாரம் புழைதுளையாந்
தப்பில் தொகுதியாங் கற்றை பிணராகுஞ் சர்ச்சரையுஞ்
செப்பில் விசித்திரம் பேரழ காஞ்சித் திரமழகே
**290 
#5

திருமலி தாடு தடவு தடமொடு செம்மைசெம்மல்
பெருமை விபுலம் வியல்நனம் பீடு பிறங்குநனி
இருமை கதழ்வு கயமூரி பாழி யிடம்பின்முன்பு
கருமை தகைபர டபரி மிதமால் கலந்தைநன்றே
**291 
#6

கருதும் பரிபணை வந்தை முடலைமாக் கண்ணகலுள்
குருவிற லண்ணல் வியன்வான் பெருமை குறுமைவஞ்சம்
பரிமித மற்பம் வறிதாசி லேசிறை பற்றிலகு
சுரிகிலந் தோகந் தனுத்தன்று சன்னந் துடியணுவே
**292 
#7

அண்ணும் பருப்பீன மாகும் பருமை யமலைபொம்மல்
நண்ணும் விதப்புயர் பான்றல் கயவு நளிபுதுமை
எண்ணும் பிறங்க லதிகஞ் சிறப்பாற்ற லேற்றமிவர்
கண்ணு மதம்பொக்க மீக்கோள் மிகுதி கதழ்வுகப்பே
**293 
#8

உறுதவ வோடு கழிவு கடுமை யுருப்பிறப்புப்
பெறுநனி யாவு மிகுதிப் பொருள்சேண் பிறங்கல்புரை
முறுகிய வுன்னதந் துங்க முகப்பேந்தல் மோடுநிவப்
பிறுகிய வோங்கல் நிமிர லுயர்ச்சி யெழுச்சியுமே

**294 
#9

எழுதரு நீளிடை யுஞ்சேணுஞ் சேய்த்து மிவைதூரமாம்
பழுதில் விசாலம் விபுல மிடம்பாடு பாய்ஞெமிர்தல்
தழுவிய பப்புப் பரப்புடன் தாவும் பரவையுமாங்
கொழுவும் பயினி யுடன்கூடல் குந்தலுங் கூடுதலே
**295 
#10

கூடிய வார்சேண் வரியுறை போகல்நேர் கொண்டொழுகல்
நீடல் வடிதல் நெடுமை நெடில்தீர்தல் நீளமென்ப
நாடு நுவணை நுணுகு நுணங்கோய்தல் நைவொசிவு
கூடு நுழையயிர் சாயல் நிழத்தல்நுண் கூர்மையுமே
**296 
#11

கூர்ப்புக் கழிவுள் ளதுசிறக் கும்பாழி கொள்விபுலம்
ஆர்க்கும் விசாலம் வியலிட மான்ற லான்நளிமா
ஏர்க்கு மகலுள் படம்படர் கண்ணறை யேயகலம்
ஆர்க்குங் கயவுடன் மேம்பாடு சாயல்சால் பாமென்மையே
**297 
#12

மெல்கிய வஃக லருகல் குறைதல் விகலங்குன்றல்
ஒல்கல் சுருங்கல் நிரப்பீனஞ் சிங்க லுறப்புத்துற்று
நல்ல விறப்பு வெறுப்புப் பொதுளல் நளிபவர்த்தல்
எல்லையிற் செற்றல் சடிலங் கடிசெறி விங்குதலே
**298 
#13

தண்டும் விரள நிபுடந் துதைதல் ததைதல்துன்றல்
மிண்டல் செறிதல் நெருங்குதல் பம்பல் மிடைதல் துன்னல்
மண்டுங் கழுமல் துவன்றல் தெவுளல் மலிதல்மல்கல்
கண்ட முழுதார்தல் பூரண மிண்டல் கமநிறைவே
**299 
#14

நிகர்த்தல் தெவிட்டல் ததும்பல்விம் மல்பொங்க னின்றதனின்
மிகுத்த லபார மனந்த மபரி மிதமகண்டம்
தொகுத்த வளவின்மை செம்மை கருமை சுவேதம்பொன்மை
வகுத்த பசுமை யிலையென்ப ரைவகை வண்ணமுமே
**300 
#15

வருணம் புகலி லரத்தந் துவர்துப்பு வாய்ந்தசெக்கர்
அருணஞ் சிவப்பத்துப் பாடலஞ் செம்மை யராகநற்சிந்
துரமரக் குச்சேது சேப்பிங் குலிகமுஞ் சோணமென்ப
புரைதரு பிங்கலம் பீதகம் பொற்கெ[ன] லும்பொன்மையே
**301 
#16

பொற்பார் கபிலங் குரால்புகர் புன்மை சிதந்தவளஞ்
சொற்பா லருச்சுனம் பாண்டு சுசிவால் சுவேதம்வெண்மை
பைப்பாசு சாம மரியரித் துப்பச்சை பைத்தரிதம்
வைப்பாம் பலாசம் பசுமையுஞ் சாமளம் வாய்ந்தனவே
**302 
#17

தருகளங் கங்காளி மங்காள நீலஞ் சனங்கருள்கார்
கருமை யசிதமைக் காழக மாலாங் கசடுகறை
வருமலி னம்மாசு வண்ணம் புகர்மேனி மாமைகெழுஉக்
குருவுரு வுங்கேழ் நிறஞ்சந்த மாகுங் குளிர்நகையே

**303 
#18

நகைகிர ணம்மெல்லுக் கானல் செடிசுட ராநற்கெழூஉத்
தொகைவிளக் கஞ்சோதி வில்லா ளிலங்க லவிர் துலக்கம்
பகல்வு விரியல் தெளிர்தாமம் வாம மொளிபாடமின்
புகல்தரு சேத்தலுஞ் சேப்புஞ் சிவத்தலாம் பொற்கொடியே
**304 
#19

கொடியே யவிர்த லலங்க விமைத்தல் குலாவல்நகல்
சுடர்த லொளிர்தல் வயங்கல் தயங்கல் துவங்கலொளி
விடுத விலங்கல் விளங்கல் பதமாரி சாருநவ்வி
வடிவு மனோகரம் பைப்பூவை யொண்செவ்வி மாண்பழகே
**305 
#20

அழகுசீர் சொக்கோ டயில்வாமங் காந்தி யணிவிடங்கம்
எழில்பொற்பி யாணர் கவின்றகை தொட்டிமை யேர்மணிமஞ்
சொழிவில் பொலஞ்செவ்வி யங்கா ரிகைதைய லொப்புவனப்
பழிவில் வகுப்பந்தஞ் சுந்தரங் காமரும் மாமையென்னே
**306 
#21

மைந்து விறல்திண்மை மீளிதுப் பூக்கம் வலமதுகை
மொய்ம்பு மிடலாற்றல் நோன்மை திடமீடு மூரிமுரண்
பம்பல் வயமள்ளல் மல்லல் மதமெறுழ் பாழியுரம்
வன்பு திறல்பெல மேணரண் முன்புதா மாவலியே
**307 
#22

வலங்கொற்ற மாடல் விசையம் புகல்வயம் வாகைவென்றி
நலம்பெற்ற வெற்றம் விறலாண்மை வீர மதர்மதர்த்தல்
இலங்கு மிளிவும் பரிபவ மு[ம்] மா மிழித்தகவு
தொலைந்து புறந்தரல் தோற்றல் கெடுதல் தொலைவழிவே

**308 
#23

அங்கியல் கொள்கை யறிவு குணனுமா மாங்கினைதல்
இங்கிய வொற்றித் தலுமிரங் கல்நா[ட்] டியங்குறிப்பு
மங்கல மான வடிவுசெ[ண்] ணம்வண்ணம் சந்தமென்பர்
தங்கிய சாரித் திரங்குணஞ் சீலஞ் சரிதைநன்றே
**309 
#24

நன்றாகு மாத்திரை காலந் துணைவரை நல்லவதி
ஒன்றான நேரம் பரிமாணங் காறுதா றோங்களவாம்
என்றார்க ளேத மெளிமைதஞ் சந்தண்மை யெண்மையுமாங்
குன்றாத வெண்மை வெளிறு புரைதண்மை கோல்வளையே
**310 
#25

வாம்புட னேணி வரைப்புமட் டெல்லை மதிமுதிர்ச்சி
உரன்புலன் காட்சி யுணர்வொண்மை ஞான மறிவோடொட்பம்
புரந்த முதுக்குறை வேதெட்பம் போதநன் புந்திபுத்தி
நிரந்த பிரக்கினை சிந்தை மனமக நெஞ்சுள்ளமே
**311 
#26

உள்ளல் விரும்பல் நினைதல்சிந் தித்தலூ கித்தலுன்னல்
தெள்ளல் நினைவெண்ண லிங்கிதம் கண்ணுதல் சேத்துணர்தல்
கொள்ளல் நுதலல் கருதலே மாத்தல் குறித்தலென்ப
வள்ளிய கச்ச மளவுங் கடனுமா வைத்தனரே
**312 
#27

ஆதரங் காமம்பற் றாசை நசைவாஞ்சை யார்வமிச்சை
மாதர்பே ணல்பெட்புப் பெட்டல்வெப் பந்தாழ்தல் மற்றும்வெஃகல்
காதல் நலம்பாசம் வேட்கை விழைவு கசிவுநம்பு
வீழ்தல் கவர்த லவாவே யிவர்தல் விரும்புநச்சே
**313 
#28

புரிவுநா ரு[ம்] மன்பு மீரமும் வாரமும் பொங்களியும்
பரிவுந் தயாவுங் கருணையுங் கண்கா ருணியம்பற்றோ
டருளுங் கிருபையு மார்வமும் நேயமு மாமிரக்கம்
விரக மதனனல் வேணவா வேட்கை மிகுதியென்னே
**314 
#29

திருந்திய மாண்மாண்டல் மாட்சிசால் பான்றல் திகழமைதி
தருந்தொன் னிறைவாந் தகவுந் தகுதியுந் தக்கதென்ப
வருந்து முனிவு மறஞ்செயிர் சீற்றஞ் சினம்வயிரம்
விரிந்த வெகுளி கறுவு கதஞ்செற்றம் வேகமுமே

**315 
#30

வேகஞ் சிவப்புக் கறுப்புப் புழுங்கல் வியர்த்தல்கன்றல்
ஆக மழல்தல் புகைத லனலுதல் வெய்துறலாங்
கேகுஞ் சினக்குறிப் பென்ப ரிறும்பூ திலைச்சுவியப்
பாகும் விபரிதம் விம்மித மைந்து மதிசயமே
**316 
#31


அதிசய மாகுமை யோவந்தோ வன்னோவோ வாவிடைச்சொல்
வதியு மிரக்கக் குறிப்புமாங் கண்மைகண் ணோட்டமற்றும்
புதிய நயம்புணர் வாநாக ரீகம் புனைசெருக்கு
மதர்வு பெருமிதம் பாடவ மத்த மனக்களிப்பே
**317 
#32


மனத்தழுக் காகு மழுக்காறு சுட்டல் குறித்தல்மற்று
மனக்கோட்ட மவ்வியம் பொச்சாப் பிழுக்கு வழுக்கிகழ்ச்சி
மனச்சோர் விழிச்சி யயர்வு மறவியே மால்மறத்தல்
மனக்கூரங் கோரஞ்சண் டங்கொடு மையாகு மற்றிவையே
**318 
#33


மலர்ச்சிசெம் மாப்பேக் கழுத்த மிறுமாப்பு மற்றுரனும்
உலைத்தலி லூக்கமு முள்ள மிகுதி முதுக்குறைவு
நிலைத்த முகரிமை யும்பே ரறிவும் நிலையுடைமை
துலைத்தவேண் கோணை கொடுமைதீ தாமூறுங் கோளுஞ்சொல்லே
**319 
#34

சொல்லிய மானமும் வெள்கலும் வட்கலுந் தொல்சமழ்ப்பு
நல்ல விலச்சையு நாணமென் றாகு நகைமகிழ்ச்சி
எல்லையி னன்னய மு[ம்]மின்ப மேட்டை தளர்ச்சியென்ப
ஒல்கிய மாராய மோகை யுவகை யொளியிழையே
**320 
#35

இழைத்த வலம்வரல் கொட்புக் கறங்கல் சுழல்சுழற்சி
தழைத்த தெருமர லூகம் பிராந்திசந் தேகமையம்
விழைத்தகொல் லாசங்கை மான லனுமானம் விப்பிரமம்
பழித்த லிகழ்ச்சி நகையுவர்ப் பெள்ளல் பரிபவமே

**321 
#36

வண்ண மணிசீ ருறுதி நயம்நன்னர் மாசறல்மாண்
பெண்ணு நறுமைநன் மையாகு மானந்த மேய்ந்தசுகம்
நண்ணு மகிழ்ச்சி யகமலர்ச் சிதொய்யல் கட்டிநயங்
கண்ணிய வுல்லாசம் வேறுஞ் சருமங் களிப்பின்பமே
**322 
#37


படைத்தவெய் யாமை யறியாமை துய்யறி வின்றிரிபு
கடைப்பிடி யாங்கொண் டதுமற வாமை கருத்துணர்ச்சி
நடத்துந் தெளிவு தெருட்சிதேற் றந்துணி வேநனவாம்
அடக்கமு நோன்மையு நோன்றது மேபொறை யாயிழையே
**323 
#38

இடரஞர் வேதனை வாதை யரந்தை யிடும்பைதுன்பம்
படர்துயர் கேத நடுக்கங் கிலேசம் பரிதல்துக்கம்
மடிபிணி தாபஞ் சுருங்கல் முடங்கம் மடங்கிடுக்கண்
நடலைநோய் பீடை யிரக்கஞ் சிறுமை யுறுவல்நைவே
**324 
#39

உலம்வர லின்னல் விழுமங் கவலை யுளைவொடுகம்
பலை புலம் பெவ்வந் துனிசூர் பருவரல் பைதல்செல்லல்
உலையுறு புன்கண்மை பையுளின் னாங்கின்ன லோய்வினையல்
தொலைநோ தகவு வறுமைமம் மர்வெய் துறல்பிழையே

**325 
#40

துருமம் புலம்பு கவனம் வெறிப்பு வெதிகலக்கந்
தரும்விதிர் கம்பம் விதலை பனிப்பதிர்ப் பேநடுக்கம்
வருதித மற்குதல் நிற்றல் நிலைபேறு மன்னல்துஞ்சல்
மருவல் தெவிட்டல் கலங்க விறுத்தல் வதிதலுன்னே
**326 
#41

உணங்குதல் புல்லென லோய்தல் மழுங்கல் பொலிவழிதல்
அணங்கு கவற லுயாவே வயாவே யயாவனுக்கம்
வணங்கு முசிப்பா குலமே யுயங்கல் வருத்தமஞ்சல்
துணங்கிய ஞொள்க லழுங்கல் மடிதூங்கல் சோம்பசைவே 
**327 
#42

அயர்வு களிமான்றல் மாழ்கல் கழுமல்மா ழாத்தல்மறல்
மயலிள மைபித்துன் மத்த மனந்தர் மயக்கமையல்
இயலு மிருள்மரு ளேமாப்பு மால்தெளி வின்மையென்பர்
வியலிலம் பாடல்க லொற்கமில் லாமை வறுமைவிள்ளே
**328 
#43

விதிர்ப்புப் பனிப்பு வெருவுருப் பேநாம் விரைவுபிறப்
பதிர்ப்புத் துளக்கம் பயங்கா தரஞ்சூ ரணங்குவெடி
உதித்த வெறிவெம்மை யச்சங் கவலை யுலைவனுக்கம்
பொதிர்ப்புத் துணுக்கந் தெருமரல் கூசல் புலம்புபொன்னே
**329 
#44

பொற்புக் கஞற லுவப்பே யமறல் கவித்தல்பொங்கல்
துப்பு மலர்ச்சி யதிகங் கொழுத்தல் துவன்றல்மல்கல்
செப்பிய மங்கல மும்பொலி வாந்தனி தான்புலம்பு
தப்பிலா நீங்காமை யானாமை தண்டாமை தானறியே
**330 
#45

அறிவின் மிகுதியு நன்மையு மொண்மை யளவுநன்குஞ்
செறியும் பயனுட னின்பமு மாகச் சிறக்குநயம்
பொறிக ளொடுங்குதல் சாம்புதல் கூம்புதல் புன்கண்ஞொள்கல்
வெறிகொள் பழங்கண் முசிப்புச்சிக் கந்தேம் பலுமெலிவே
**331 
#46

மெல்லிய காசு தவறு நவைபழி மேற்கசடு
தொல்வசை யெவ்வம் வழூஉச்செயிர் மானந் தொழுவுவடு
வல்லரி லேதம் புரைகோது போக்குடன் மாசுபழு
தெல்லையில் தோமிழுக் காசவ லந்தீங் கிவைகுற்றமே

**332 
#47

குற்றமில் தாவு முனையுறழ் மாறு கொடியமுரண்
செற்றம் வெறுப்பிகல் தெவ்வுப் படிப்பகை யாகும்வஞ்சம்
மற்றுங் கிருத்திமம் புள்ளுவங் குத்திர மாயங்கிறி
பற்றுங் கபடம்பொய் கூடகங் கைதவம் பட்டிமையே
**333 
#48


மையறு கேண்மை தொடர்புகேள் நட்பு மருவுதுணை
கையொழுக் கம்பக்கங் கையடை யாகு மடைக்கலமுங்
கையற வேசெய வின்மைகை தூவாமை கையொழியா
மையென லாகுங்கை யாறொழுக் காறாகும் வாய்த்ததொன்றே
**334 
#49


தொண்டு முறைதொன்மை தொ(த்]து தொடர்பூர்வந் தொல்லை முந்தை
பண்டு புராணம் புராதன மூது பழமைதொன்றாங் 
கொண்டமேற் கோளாகும் பூட்கை புனிறீன் றனுமைவம்பே
மண்டு நிலையின்மை யம்மை மறுமை வருபிறப்பே
**335 
#50

பிறப்புச் சனிப்புச் சனனம் பலஞ்சூ தகம்பிறந்தை
மறப்பில் பயத்தலுந் தோற்றமும் யோனியு மற்றதற்காம்
இறப்பும்மை முற்பவ முந்தை யிறந்த பிறப்பதென்பர்
சிறப்பின் முறைமை மரபுபா ரம்பரை சேயிழையே
**336 
#51

சேய்போ தகமஞ்சு மீளி குருளைபீள் சேடுகயம்
மாய்தலி னவ்யி பருவந் தருண மழவுகொம்மை
ஓய்வில் குருகு புருக்கோ மளமுரு கோடிளமை
ஏயுங் குழவு மதற்காம்'வழிபின்கா லென்றனரே
**337 
#52

என்றும் பொருட்டு நிமித்த நிபந்திற னேதுவுடன்
ஒன்றிய வாயிலுங் காரண மாமென்ப ரோதுகந்தும்
அன்றிய வாலம் பனமும்பற் றுக்கோடா மாக்கம்பயன்
என்று மிலாபம் பலிப்புப் பசையூதி யங்கருதே

**338 
#53

கமைதரு தாயங் கிழமைபால் பூட்சிபாங் காமுரிமை
விமலம் அமலம் புனிதம் பவித்திரந் தூய்மைசுத்தஞ்
சமைகுண மங்கலஞ் சீலஞ் சுகிர்தஞ் சுபர்தருமம்
அமைதரு கோணையே கன்னி குமரி யழிவற்றதே
**339 
#54

அலகு கரணங் கணிதமு மெண்ணாகு மாதியுகம்
இலகிய மோனை அடக்க முதலிவை தோற்றமுடி
வுலவிய வந்தந்தீர் வீறாம்வா லாமைதூய் தன்மையென்னுந்
தொலைதரு சூதக மாந்துலவுந் துப்பு மனுபவமே
**340 
#55

வண்மை கொழுமை செழுமையா ணர்மல்லல் வாய்ப்புவளம்
அண்மையில் சீத்தை சிரணஞ் சிதவு குணமின்மையாந்
திண்மை வெறுக்கை பொறிமாத் திருச்செல்வஞ் சீர்விபவம்
எண்ணுந்தே முந்தீமுந் தீனுந்தெங் குந்தித்திப் பென்றனரே

**341 
#56


என்றுஞ் சுவையு மமுதமுஞ் சாரமு மேயினிமை
கன்றுங் கரிலுங் கடுகமும் காயமுங் காழ்த்தலென்ப
துன்றும் புளிப்பாம் பிலங்கைத்தல் தித்தந் தொடியோர்பலம்
ஒன்றுந் துலாமுங்காத் தூக்கமு மாநூற் றுயர்பலமே
**342 
#57

பற்றிய மாலை மரபிய லூழ்தன்மை பான்மைபண்பு
பெற்றி முறைமை யுழுவல் தரைபா லுரிமைபின்னுஞ்
சொற்ற நிலைமுறை நீர்மை பரிசு கிழமைதொன்மை
உற்ற விதியதி காரங் குணந்தக வோர்பொருளே
**343 
#58

பொருவுத லேற்ற லுறழ்தல் நிகர்த்தல் புரைதல்சம
மருளல் படியன்ன துல்லிய மேய்தனேர் மானலொப்பு
கருதிய போறல் துணைசெத் திணைதல் கடுப்புவமம்
உருவு விளைபயன் பண்பொரு நான்கா வுரைத்தனரே
** எட்டாவது பண்புப் பெயரியல் முற்றும்

@9 ஒன்பதாவது செயல்பற்றிய பெயரியல்
**344 
#1

தருமங் கிரியை தொழிலே வினைசெயல் சாற்றுவிதி
கருமந் தொறுவே தொழிற்பயில் வாமாற்றல் காண்பயிறல்
மருவல் குயிற்ற லயர்த லிழைத்தல் வனைதல்செய்தல்
பொருவில் வதுவை கடிமண மன்றல் புதுமணமே
**345 
#2

மண்டு தொடலை கெடவரல் பண்ணை கிரீடைவண்டல்
உண்டாட்டொ டோரை யுடன்பொய்தல் கேளி யொளிவளையார்
கொண்டாடல் கைதல் புனைதல் வனைத லலங்கரித்தல்
கண்டாய மண்ண லணியொப் பனைபொற்புக் கைசெயலே
**346 
#3

செப்பிய வேய்தல் மிலைதல் மலைதலுஞ் சூடுதல்சே
றொப்பில் முருகு விழவுசா றாமினி யுண்டல் நுங்கல்
துப்பு நுகர்தல் மிசைதல் பொசித்த லசித்தல் துய்த்தல்
வைப்புணல் கைதொட லார்த லருந்துதல் மாந்தல்துவ்வே
**347 
#4

துக்க வயிறலும் பாரண மும்மதற் காந்துயிறல்
தொக்க கனவு வளர்த லனந்த லுறக்கந்துஞ்சல்
மிக்கதோர் கண்படை சொற்பனம் பள்ளியு நித்திரையாம்
எக்க லிவர்தல் பாத்தலு மேறுத லென்றுகொள்ளே
**348 
#5

கொள்ளுங் கயவு கரவடங் கைதொடு கொள்கையில்லாக்
கள்ளங் கபடங் கிருத்திமஞ் சோர்வு களவுவஞ்சம்
உள்ளங் காத்த லொடுபட் டிமைகட்கை யோய்வொசிவு
வள்ளிறல் கோட லொடித லகைதல் ஞெமிர்வளைவே
**349 
#6

வளைவோ டிறைஞ்சல் குரங்கலுந் தாழ்தல் கலுழ்கலங்கல்
உளைவே கசித லழுங்க லிரக்க முடன்றல்சினம்
விளர்வே குரோதங் கறுப்புச் சிவப்பு வெகுளிசெற்றம்
கிளர்வேகம் பைத்தல் விடைத்த லுருத்தல் கிளிமொழியே

**350 
#7

மொழியு முனிவு கதஞ்சீற்றங் காய்தல் முணவுகலாம்
அழிவில் விளிவு செறல்கோபந் தாவ லகறலுடன்
வழுவி லிகுத்தல் குயிற்றல் குதித்தல்மேல் வாவுதலும்
தழுவிய பாய்த லுகள்தல் கடத்தலுந் தாண்ட[ற்]கண்ணே
**351 
#8

கடத்தல் படர்தல் சரித்தல் வழங்க லியங்கல் செல்லல்
நடத்தல் பிரிவேகல் சேறல் விடனீங்கல் நண்ணுதல்போக்
கடர்த்த லிகத்தல் தணத்த லிறத்தல் கழிவகறல்
திடத்த வுவளல் துவள லிவளல் திவளுதலே
**352 
#9

வல்லை முடுகல் கடுகல் கதழ்வு துனைவுவிரை
வொல்லை துருதந் துவறல் நொறிலாசு வேகமுடன்
செல்லுஞ் சபதி சடுதி கதுமெனல் சீக்கிரமாஞ்
சொல்லு முழிதரல் கொட்புந் திரிதர லுஞ்சுழல்வே
**353 
#10

தந்ததொர் குத்திரங் கோரங் குரூரம்போள் சண்டம்ஞெள்ளல்
வந்த கொடுமையா மீள்தல் மறிதல் பெயர்த்தலென்ப
உந்தி சுரியலு நீர்ச்சுழல் வாகும் பவனியுலாப்
பிந்தல் நெரிதால் பாற லிரிதல் பிறகிடலே 
**354 
#11


கிடைத்த வுராய்போத லாகு முராவுத லேயுரிஞ்சல்
படைத்ததொ ராற்றுப் படையே புலவர் வழிப்படுத்தல்
வடித்தாரை வாலாதி வீதிநே ரோடலே மண்டிலமே
எடுத்ததோர் சாரியும் வாளியு மாதியு மென்றுகொள்ளே

**355 
#12

என்றுங் கடத்தல் செலுத்த லுடனூக்க லேவலுந்தல்
ஒன்றிய தூண்ட லுகைத்தலோ டூர்த லொருபொருளாம்
நன்றியல் நண்ணல் குறுக லெதிர்தல் நணுகலொட்டல்
ஒன்றுதல் சார்த லணைத லணுகலென் றோதினரே
**356 
#13

திருத்தல் சுமத்த லெடுத்தல் தரித்தல் பொறுத்தல்செப்பிற்
பரித்தல்மீக் கோடலுந் தாங்குத லாகுமுற் சாகம்பற்றுள்
உரித்தான தாளாண்மை யாள்வினை யூக்க முஞற்றுயற்றல்
வருத்த முயற்சிதா ளாள்வினை தேட்டமும் வைத்துரையே
**357 
#14

துய்ய வுசாத்தேர்ச்சி சூழ்ச்சிநூ லெண்ணஞ் சொலாக்கிளவி
வெய்யதொர் நீங்குத லூராண்மை பேராண்மை மிக்கசெயல்
ஐயமில் சிந்தித்தல் தெள்ளுதல் தூக்கொப் பறிவொடுள்ளல்
உய்ய நினைதல் தெளிவாய்த லாராய்த லூகித்தலே
**358 
#15

ஊக்கிய நாடலு நேடலுங் கையரிக் கொள்ளலுமே
ஆக்கிய தேடலாம் வேயொற்ற லொற்றுமை யாங்குறிக்கோள்
நோக்குங் கணித்தல் குணித்தல் வரையறை விற்றல்நொடை
தூக்கும் பகர்தல் விலைபண்ட மாற்றென்பர் தூமொழியே
**359 
#16

தூவுதல் வண்மை யளித்த லிகுத்த லருளுதவி
வேள்வி புரத்தல் வழங்கல் கவிகைவே ளாண்மைதரல்
பாவுப காரம் பொழிதலே யீதல் பனித்தல்நல்கல்
தாவில் தியாகங் கொடையீகை வீசலுந் தானமுமே
**360 
#17

தாபமி லோமங் கிருதுவோ டெச்சமி யாகமிட்டி
யூப மகம்வேள்வி போற்றலு மோம்பலும் பாதுகாத்தல்
ஆபந் தருதலைக் காவல் மிளையாங் கவவகத்தீ
டேபந் தணைவிரல் மாதே தெவவுக் கொளற்பொருட்டே

**361 
#18

பொருந்தும் பலியையம் பாகஞ் சரியை நிரப்புப்பிச்சை
வருந்திய வந்தனை தாழ்த லிறைஞ்சல் வணங்கல்தொழல்
அருந்திறற் பூசை வழிபா டருச்சனை யாராதனை
பரிந்தறல் வாய்த்தல் கிடைத்தல் பயத்தலு மெய்தலுமே
**362 
#19

எய்தும் பயத்தலும் பூத்தலு முண்டாதல் நீத்தலொரூஉ
வெய்ய துறத்த லிணைவிழைச் சுப்புணர் வேநுகர்ச்சி
ஐய துமித்தல் பிளத்தல் துணித்தல் வகிரறுத்தல்
பைய வரிதல் தடிதல் பகிர்தல் பரிதலுமே
**363 
#20

பறித்தலே குற்றல் களைதலே கட்டல் பகைதணித்தல்
ஒறுத்தல் நெருங்குதல் காதுதல் தீர்த்த லொழித்தல்கொல்லல்
செறுத்தல் முருக்குதல் தேய்த்தலு மாங்கது வாய்வடுவாம்
மறித்தும் வரண்டல் கொழித்தல் வரன்றலும் வாருதலே
**364 
#21

வாய்ந்த வர[ன்]றல் தெரித லுவளித்தல் வாய்மைசெயல்
ஏய்ந்த கவர்தல் குடைதல் ஞெலிதல் கடைதலென்ப
காய்ந்து சவட்டல் செகுத்தல் சிதைத்தல் நெரித்தல்கைத்தல்
ஆய்ந்து செறுத்தல் கடித லவித்த லழித்தலன்றே
**365 
#22


அடுத்தலே கூடுத லாறலை யாகும் வழி[ப்] பறியுந்
தொடுத்தநற் சூலுதல் சூழுதல் தொட்டலே தோண்டலென்ப
விடுத்தல் குயிற்றுதல் தோள்தல் துளைத்தல்மீ தூர்நெருங்கல்
கடுத்தல் சிதர்தல் தகர்தலுஞ் சிந்துதல் கண்டனரே
**366 
#23

கண்டூ[தி] யாகுந் தினவே யொறுத்தல் கடிதல்மிறை
மிண்ட லலைத்த லேதீர்த்த லடனஞ் செறலுலைத்தல்
தண்டுதல் வேதனை கைத்தல் வருத்தல் தடிதல்வெட்டல்
கொண்ட வடுத லணங்கல் படுத்தல் கொலைவீட்டலே

**367 
#24

வீடல் முடித லுலத்த லிறத்தல் விளிதல்விடல்
வாட லொழிதல் தபுதல் வறல்சாதல் மாய்தல்பொன்றல்
நீடவி தல்மாள்தல் வீய்தல் படல்துஞ்சல் நேர்மடிதல்
கேடும் விபத்து மவத்தையு மாபத்துங் கேட்கிலொன்றே
**368 
#25

ஒன்று முலைத லுருங்க லழிதலா மோய்தலெஞ்சல்
குன்றல் தவல்சிங்க லொற்க மிழுக்கமுங் கொள்தளர்ச்சி
வென்றிசெய் புய்த்தலே யுய்த்தலும் வீற்று விபத்திவிள்ளல்
சென்றியல் பேதுறல் வேற்றுமை வேறு படல்திரிபே
**369 
#26

திருத்திய சுற்றுதல் சூழ்தல் வளாவல்சூழ் போதல்முற்றல்
வரைத்தல் வளைதலுங் கோலல் நிணர்தல் வலத்தலென்ப
உரைத்த விசித்தல் சிமிழ்த்த லிமிழ்த்த லசைத்தலுடன்
நிரைத்த பிணிப்பார்த்தல் வீக்கல் சுருக்கல் நிறுத்தனரே
**370 
#27

நிறுத்த தொடர்பு தொடுத்தல்யாப் பார்த்தலே நீள்வலித்தல்
உறுத்தலுங் கட்டுதல் தீர்தலே தீர்த்தல் விடற்பொருட்டாம்
மறுத்த சுலாவலே சுற்றுதல் வாரித்தல் வாரணமுங்
குறித்த தடைமாற்றம் நாடழி வேகொற்ற வள்ளையென்னே
**371 
#28

வள்ளிய வெம்முனை மொய்யடல் ஞாட்பு மலைதல்தெவ்வர்
கொள்வினை மாறு முரண்சமர் நேர்தல் குறும்பிரணந்
தெள்ளிய வார்ப்பு நிகர்ப்பிகல் பூசல் செருவுடற்றல்
தள்ளுஞ் சமதியோ டாகவ மாயோ தனஞ்சமமே
**372 
#29

சங்கிரா மந்தும்பை தாக்க லெதிர்தல் சமீகமமர்
பொங்கு கலிக மெதிர்த்தலோ டாடலும் போரென்பரால்
தங்கிய சாய்ந்தார்மேற் செல்லாமை யாகுந் தழிஞ்சியென்ப
எங்கு மளித்தலும் பெய்தலும் பாதீடா மென்றனரே

**373 
#30


ஆவித்தல் கொட்டாவி யாகு மயாவுயிர்த் தல்வருத்தம்
ஓய்வித்தல் காய்தல் முளிதல் வறத்தல் புலர்தலுமாந்
தூவல் பிலிற்றலும் பில்கலு மல்கல் சொரிதலெக்கல்
தாவிப் பொழிதல் பனித்தலோ டீர்த்தலுந் தாழ்குழலே
**374 
#31


குழன்மொழி யொட்டல் வலித்தலே நேர்த லுடன்படலாம்
பொழுதுநீட் டித்தல் நெடித்தலும் பாணித்தல் பொற்புடங்கே
ஒழிவி லொருங்காகு மொற்ற லுறுத்த லுணர்த்தலெற்றல்
அழிவி லெழுப்ப லெடுப்பல் கயக்குச்சோர் வென்றுரையே
**375 
#32


உரைக்கி லியைபே புணர்ச்சி யிசைப்பிசை யேபிறக்கு
வரைப்பில் வழுவாகு மூய்தல் கவித்தலு மூடுதலாம்
முருக்கிய மூழ்த்தலு மூசலு மூஞ்சலு மொய்த்தலென்ப
சுருக்கு மரச ரிறைதிறை யுல்கு பொருள்சுங்கமே
**376 
#33


கறையுங் கரமும் கடனுங் குடியிறை யேகலித்தல்
நிறையுங் கஞறல் கஞன்றலே பம்மல் நெருங்கெழுச்சி
அறையு மிலிர்த்தல் தளிர்த்தலர் பூத்த லணைதலொன்றல
உறைதல்தோய் வேசார்வு புல்லல் படிதல் புணர்தலொன்றே
**377 
#34

ஒன்றுத லண்ணுதல் நண்ணுதல் கூட லுடன்மருவல்
என்றிவை யாவும் பொருந்துத லாகுங் கலாவல்துழா
அன்றி யளாவலு மாகுங் கலத்தல் துவருதலுஞ்
சென்று திமிர்தலும் வக்கிர மாவருஞ் செய்தியதே

**378 
#35

செய்யும் வருட்டல் தெருட்டலு மாம்வற் புறுத்தல்செப்பில்
தைவால் நீவல் தடவல் வருட லுருத்தலுடன்
மொய்வரல் நாறல் பொடித்தல் பொடிதல் முளைத்தலென்ப
வெய்ய வெதிர்தல் மலர்த லலர்தல் விரிதல்பற்றே
**379 
#36

பகரு மிகுதலே வீழ்தல் மிளிர்தல் மறிதலென்பர்
இகலு மமர்தலும் வீழ்தலு மேவ லணவலெட்டல்
புகல்தகு மொல்லல் சிவணல் பொருந்துதல் கூடுதலாம்
அகலுஞ் சிறைசேம மேமங் கடிகட் டாண்கதவே
**380 
#37

கதுவிய மாலை செயல்நடை நீழல்கை யாறியல்போ
டுதவு சரிதை யொழுக்கம தாகு மியோகமொன்றல்
மதிதரு வேகங் கடுமை வியோக மகறல்மற்று
நிதிதரு செய்கட னாகு நியம நியதியுமே
**381 
#38

நிருத்தம் நடம்நட்டம் நாடகங் கண்ணுள் நிலையிலையம்
திருத்திய தாண்டவ மாடல் படிதம் பரதஞ்செப்பில்
அருத்திய பாணி குரவைகூத் தாடுதல் தூங்கலுமாம்
பரித்தநல் லூழ்த்தல் பதனழி வாஞ்செவ்வி யும்பகரே

**382 
#39

கரணமே பித்த மலைப்புப் பவுரி கடகங்கித்து
பரியமுள் ளாளங் குனிப்புவீ ரட்டானம் பத்துமதற்
குரிய விகற்ப மணங்கு வெறிகழங் காடல்சொல்லில்
அரியன வேலனாட் டாவல் மார்த்துவாய் தட்டுதலே
** ஒன்பதாவது செயல்பற்றிய பெயரியல் முற்றும்

@10 பத்தாவது ஒலிபற்றிய பெயரியல்
**383 
#1

தந்த மொழியும் பனுவலும் பேச்சுந் தனியுரையு
முந்து கிளவியும் வாக்குநல் வாணியு மாற்றமுடன்
வந்தியல் கூற்று மிசையும் வசனமும் வார்த்தையுஞ்சொல்
அந்தமில் வாய்மை சரதந் திடமுண்மை யாணையுமே
**384 
#2

ஆயும் பகர்தல் குயிறல் வழங்க லசைத்தல்சொற்றல்
ஏயும் புகறல் விளம்ப லுரைத்த லியம்பல்செப்பல்
காயுங் கிளத்த லறைதல் மொழித லுரைத்தல்மிழற்
றோயு நிழற்ற லிறுத்தலுங் கோதலு மோதுதலே
**385 
#3


ஓதி யறிவு கலைகேள்வி சால்பு மு[று]திகல்வி
மூதுரை யாகு மொழிமை கதைகா ரணக்கிளவி
ஆதி நெடுமொழி தன்மேம்பா டோத லசைநிலையாங்
கேதலே யுங்குரை யும்பிற வும்மா மிசைநிறையே
**386 
#4

இன்னுமற் றும்வற்று மக்குமிக் கு[ம்]மம்மு மொன்னுடனான்
அன்ன கிளவி யனைத்துமாஞ் சாரியை யவ்வுமிவ்வு
முன்னுவ்வு முச்சுட்டா மாவேயோ மாற்ற மொருமூவினாத்
தன்னியல் காரங் கரங்கான்மா னக்கரச் சாரியையே
**387 
#5

சாற்று முதாரண மேது விலக்கியஞ் சாலுமின்னும்
ஆற்றிய ஞாபகத் தோடு பிசியு மரும்பொருளாம்
ஏற்று மியாகா பிறமதி சின்மின் னிகுமெனவே
தோற்றிய யாவையு முன்னிலைக் காமசைச் சொல்லென்பரே
**388 
#6

சொல்லுஞ் சருக்க மிலம்ப மெனுமிவை தொல்விருத்த
மல்கு நடையன காகுளி மந்த விசையினிமை
புல்லு மிராக மிடக்கர் மறைத்துரை போலசைபோல்
பல்லிய மேவிய பாடல்சங் கீதமாம் பைங்கொடியே
**389 
#7

கோதி னுவறலும் பன்னலுஞ் சாற்றலாங் கொள்கவறு
சூது படிறு மடிமாயம் வக்கிரந் தோம்பளிதம்
தீது சடஞ்சலம் விச்சித்தம் வஞ்சஞ் சிறுமைகள்ளங்
கோது கபடம்பொய் கைதவம் யாவுங் கொடுமைசொல்லே

**390 
#8


சொல்லுங் குறளை பிசுனமுங் குஞ்சமுஞ் சூழ்கொடுவாய்
செல்லும் புறங்கூற லாசிவாழ்த் தேதே சிகந்திசைச்சொல்
புல்லும் பழிச்சல் பரவுத லேத்தல் புகழ்தல்துதி
மல்கும் பரசல் வழுத்துதல் போற்றுதல் வாழ்த்துதலே
**391 
#9

வாய்த்தீமை கௌவை யலரம்ப லேச்சு வடுமொழியாஞ்
சீர்த்தி யொளியிசை மீக்கூறு மேம்பாடு சீரொடொண்மை
கீர்த்தி புகழ்வண்மை கொற்றமுந் தாளவொத் தாஞ்சதிசீர்
சீர்த்த கடைப்பிடி யோர்ப்புங் குறிக்கோளுந் தேற்றமுமே
**392 
#10


தேற்றமே மன்றமற் றென்னுங் கிளவி கழறலுடன்
சாற்றி யிடித்த லுறுதிச்சொல் வஞ்சினஞ் சூள்சபதந்
தேற்றமுஞ் குளுற வாகும்வா ளாமைபே சாமைவாய்ப்புள்
ஏற்ற விரிச்சியு நற்கோள் நிமித்த மெனவுரையே

**393 
#11

உரைசெய் விளித்த லுளைதலே கூவல்வா வென்றலுடன்
சுரைத லறைகூவல் போர்க்குவா வென்று கனன்றழைத்தல்
விரைவு முகனமர் வேநன் னயமுப காரம்வினா
வரைவில் கடாவிடை யாமதற் கான மறுத்துரையே
**394 
#12

துன்றிய வன்றென் கிளவியு [மின்றென் கிளவியுமா]
மென்ற கிளவி மறுத்தலு மாமென்னை யென்கொலெது
நின்ற வெவனேதி யாதியா வென்ன நிகழ்த்துமையம்
அன்றியு மாங்குடன் யாண்டு மிடத்தைய மாமென்பரே
**395 
#13

எழுதாத கேள்வி சருதி மறைசாகை யேயாதிநூல்
பழுதி லுபநிட மாரணம் வேதம் பனுவலுடன்
அழிவில் பிடக மதிகாரந் தந்திர மாரிடநூல்
தழுவு கலைவிதி யாகம் மோத்துடன் சாத்திரமே
**396 
#14

சாற்றிய செய்யுட் கவிபாட்டுத் தூக்குக் கவிதைசந்தம்
போற்றிய யாப்புத் தொடர்பிவை பாவென்ப பொற்பிசைப்பாக்
கூற்றியல் கீதம்பண் பாணி வரிகானங் கோடணைபாண்
மேற்றிகழ் காந்திரு வங்கேயங் காமா மெல்லியலே
**397 
#15

மெல்லிய தந்திரி | யாடெழா லாகு நரம்பினிசை
சொல்லும் பிளிறல் குளிறல் பிரற்றல் சிரற்றல்மருள்
ஒல்லும் பயிற லாற்ற லுளைத லெழுத்திலொலி
புல்லுந் திரிய வழுங்கல் குரைத்தலும் பூசலுமே

**398 
#16

சலித்தல் நரல்தல் துவைத்தல் கரைதல் தழங்கல்பம்பல்
கலித்தல் முரலோசை யாகுலங் கோலா கலந்திமிலம்
வலித்த தமரந் தெழித்தலே நூறல் மருளல்ஞெள்ளல்
ஒலித்த லிரங்கல் கறங்கல் முழங்கலென் றோதுவரே
**399 
#17

ஓதுஞ் சிலம்ப விசைநாதங் கம்பலை யோடிரங்கல்
போதும் படுத லிரட்டல் துழனி புலம்பல்சும்மை
ஓதந் துவனி யுடனார வாரந் துவன்றலொய்யார்ப்
பேதந் தருமோசை பொம்மெனல் கல்லென லிம்மெனலே
**400 
#18

இழுமெனல் கல்லெனல் பொல்லெனல் பொள்ளென லின்னுஞெள்ளல்
விழுமிய விண்ணெனல் பம்மெனல் பூரெனல் வேறுஞெரேல்
எழுதரு மோசை யெவையு மனுகா ணம்மென்பரால்
அழிவொன் றிலாத வனைத்துங் கெயாதரத் தாய்ந்துகொள்ளே
**401 
#19

ஆசு மதுரஞ்சொற் சித்திர வித்தார மாங்கவிநான்
கேசில் புலவர் கவிகம கன்வாதி வாக்கியென்பர்
மாசில்வெண் பாலா சிரியங் கலிவஞ்சிப் பாமருட்பா
வீசு மினந்தா ழிசையுந் துறையும் விருத்தமுமே
**402 
#20

மேவு மரும்பொரு ளந்தாதி கேட்டிந்த மேதினியோர்
தாவும் வினைகெடச் சாற்றிய தென்றமிழ்த் தேவைமன்னுங்
கோவை யிராமீ சுரக்கோவை சொன்ன குருபரன்மற்
றோவுத லின்றி யமைத்தான்பத் தாவ தொலியியலே
**403 
#21

இயற்சொற் றிரிசொற் றிசைச்சொல் வடசொல் லெனவுமற்றும்
பெயர்ச்சொல் வினைச்சொ லிடைச்சொ லுரிச்சொ லெனப்பெயர்த்தாங்
கயற்சொல் விரவாம லாறு விகாரத்தி னாலமைத்த
செயற்கை யறிந்தக் கடைத்து மியற்கை தெரிவரிதே
** பத்தாவது ஒலிபற்றிய பெயரியல் முற்றும்

@11 பதினொராவது ஒருசொற் பல்பொருளியல்
**404 
#1

அரிகடல் மால்பன்றி யாயுதம் பச்சை யளியருக்கன்
எரிபுகை கிண்கிணி பெய்பர லைம்மை யமன்கிளிகண்
வரிவலி யிந்திரன் மாருதம் நேமி மடங்கல்மது
பரி[ப]கை செந்நெற் கதிர்தேரை வானரம் பாம்புபொன்னே
**405 
#2

பொன்னே ரிரும்பு சுரர்குரு மாடை பொலிவுதிரு
என்ஏர் அழகு முழுபெற் றமும்எல் ஒளிபகலாம்
தென்னே வனப்பு மிசைபாட லுந்தென் றிசையுமென்ப
கொன்னே பெருமை பயனிலி யச்சங் கொளும்பொழுதே
**406 
#3

பொய்யிலா வாரணம் கோழிசங் கானை தடைகவசம் 
தொய்யில் மகிழ்ச்சி யழகோர் புதல் தொய்யல் சேறுதுயர் 
மையாடு மேகங் கறுப்பஞ் சனங்குற்றம் வாளொளிவாள்
கைசார் பொழுக்கஞ் சிறுமை படைக்கை கரமுமொன்றே
**407 
#4

ஒன்றிய தாரை விழிகூர்மை காளநே ரோட்டமழை
கன்று வளையிளை தானவை ஆயுங் கரியிருந்தை
என்று நடுத்தந்தி ஏறுதல் மேற்கோட லில்லலுமாம்
வன்திறங் கூறுபா டூக்க மிசைத்திறம் வாணகையே

**408 
#5

வாலாகுந் தூய்மை யிளமை மிகுதி மறம்கொலையுந்
தோலாமை யோடு சினமுங் கொடிய தொழிலுமென்பர்
பாலாம் பகுத்தல் திசையிடம் பக்கம் பயமியல்பும் 
காலாகுங் கால்தூண் மகவிடம் வாய்க்கால்தாள் காற்றூற்றமே
**409 
#6

காவே நிறைபொழில் கற்பகந் தொன்மரங் காவுதண்டு
பாவே யிசைப்பா வியற்பாப் பரத்தல்நூற் பாபாவுதல் 
கோவே (மன)ன் திக்கு நாட்டங் கிரணங் குலிசநன்னீர்
ஆவே சுவர்க்கம் வியங்கோ ளுரைபுவி யாசுகமே
**410 
#7

ஆசு சிறுமை விரைவோர் கவிகுற்றம் மார்கவசம் 
மாசிலா [வேலா] வலையம்பார் வீரை மகம்வேள்விநாள்
காசு மணிவடங் குற்றம் கமலம் சலம்பதுமம்
வாசம் இடமு மணமுந் துகிலு மலர்க்குழலே
**411 
#8

குழலா மயிர்வேய்ங் குழல் ஆவி வாவி புகையுயிராம்
தழலாங் கிளிகடி தட்டையுந் தீயும் தடிதடியூன் 
நிழலாங் குளிர்ச்சி மரக்கோடுஞ் சாயையு நீடருளும்
கழலாந் தொடுதோல் கழங்கு கனைகழற் காலடியே
**412 
#9

காரிகை யேரு மொருநூலும் பெண்ணுங் கலித்துறையும் 
வாரி புதவு வருவாய் கடல்நீர் [வர]ல்வழிநூல்
பாரி பரியங்க மோர்வள்ளல் நல்லாடை பார்மனையாள்
காரி வடுகன் சனிசாத்த னோடு கடுவள்ளலே

**413 
#10

கடுநஞ் சரீதகி முள்முசு மானேறு காலநுட்பம்
உடுபதி சேகு வயிர்கல்வி புல்வா யுடைகலையாம்
படுதல் இன்றாத லுண்டாத லொலிபச்சை பச்சைபுன்றோல்
உடுவே மாக்கோலுந் தாரா கணமு முரைபல்குமே
**414 
#11

பல்இசை வண்மை யிசைப்புரை யாடலும் பாடலுமாம்
வில்ஒளி கார்முகம் வேயொற்று மூங்கில் துளைவேய்தலாம் 
வல்வலி சூது விரைவாகும் வையம் தேர்வாழ்புவனம்
புல்லாகுங் கம்பு புறக்காழ் பொலிவின்மை புற்புல்கலே
**415 
#12

கஞ்சம் கலம்பங் கயங்குல்லை யப்பம்வேள் காமன்செவ்வேள்
தஞ்சம் எளிமையும் பற்றுக்கோ டும்தா வலிவருத்தம்
துஞ்சல் உறக்கமுஞ் சாவு நிலைபேறும் தொண்டைகண்டம்
விஞ்சிய கொவ்வையு மாதொண் டையுமென் விரைக்குழலே
**416 
#13

விரையே பரிமளஞ் சாந்துமாம் வேலை பொழுதுதொழில்
குரைசேர் கடலும் கரையும் கவலை கொடிசந்திநோய்
மரைமரை தாமரை மண்டூகம் மீளி விடலைவலி
புரைபுரை யொப்புயர் பில்லம் பழுதென்பர் பூண்முலையே
**417 
#14

முற்றுதல் காழ்கோடல் சூழ்போதல் யாவு முடிவெய்தலும்
குற்றல் பறித்தல் குறுதலாம் வண்மை கொடுத்தல்புகழ்
கற்பம் சுவற்கம் பிரமாயுக் கற்பகம் கான்மணங்கான்
பொற்பே பொலிவு மழகும் மால்மேகம் பொருப்புவிண்டே
**418 
#15

விண்தொனி வானமழை குழை காதணி சேறுதழை
தண்டு சிவிகை வரம்பு பெரும்படை தண்டுதண்டம்
தொண்டு வழிபாடு கொண்டை பழமை தொழும்பொடொன்பான்
கொண்டல் மழையுங் குணதிசைக் காற்றுங் குறித்தறியே
**419 
#16

குருவிரு மாத்திரை யாசா னிறமிகு கோள்பெருமை 
குருகு இள மைகை வளையுலை மூக்குக் குருக்கத்திபுள்
பொருநர் தலைவருங் கூத்தரும் போர்ப்படை வீரருமாம்
தருமன் இயமன் சுகதனு மிந்திரன் றானுமென்னே
**420 
#17

தானம் சுவற்க மதங்கொடை நீராடல் சார்பிடமாம்
மானம் பெருந்தன்மை குற்ற மளவு வருமிலைச்சை
கானம் இராகமுங் காடும் கதிர்கதிர் பானுமதி
வான் அம் புதமும் வலியும் பெருமையும் வானமுமே

**421 
#18

வாரம் கரைசார லன்பு கிழமைசெவ் வாரம்வைப்பாம்
ஈரம் குளிர்ச்சியன் பென் க[ர]ம் கைநஞ் சிறைகழுதை
பாரம் புவியுங் கரையு நிறையும்வன் பாரமுமாம்
கார் அம் புதநீர் கருமை கருங்கவி கார்காலமே
**422 
#19

காணம் தனஞ்செக் களவு பரியூண் கறையுரலே
பூணுங் கருமை திறைசோரி பூவைகா யாவொருபுள் 
தூணம் பகைதூண் விறப்புச் செறிவு வெரூஉப்பெருக்கம்
தாணு நிலைபேறுஞ் சத்திதூ ணீசனாச் சாலவையே
**423 
#20

சாலம் விசால மராமரங் கூட்டங் கயிற்றுவலை
கோலம் அழகொப் பனைபன்றி கூத்திற்பல் கோலமுமாம்
மூலம் கிழங்கு மொருநாளும் பாலம் நுதலிசைப்பாம்
நீலம் குவளை யிருளோர் மணிநிற நீள்பெண்ணையே
**424 
#21

பெண்ணை பணையோர் நதியும் மதிவிதுப் பேரறிவாம் 
தண்ணடை நாடு நகரும் வறிது சிறிதருகல்
வண்ணம் நிறங்கவி யோசை வனப்பொப் பனைசெயலாம்
எண்ணிய கோடு கரைசங்கு தந்தங்கம் பேந்திழையே
**425 
#22

ஏமமே காவல்பொன் னேமாப் பிரவு மயக்கமின்பஞ்
சேமமு மாகும் செழுமை வளனுங் கொழுப்புமென்க 
தாமம் ஒழுங்கொளி தார்கொன்றை சாந்தம் கமையுஞ்சந்தும்
வாமம் குறங்கிடப் பாகங் குறளும் வனப்புமென்னே
**426 
#23

வனம் உதங் கான[ம்] வனப்பாம் மதன(ம்) வருத்தமும[ர்]த்
தனமும் பலிநீறுந் தெய்வ வுணவோடு தாருவுமாம்
தனமே கனதன முன்னிரை சாமீ கரமுமென் அஞ்
சனமே யெழுதுமை யோர்திசை யானையொர் கற்பிறப்பே

**427 
#24

பிறங்கல் பெருமை யுயர்ச்சி யிறை பேர் பெருமைபெயர்
கறங்கல் சுழற்றி வளைதடி பேயொலி கம் தலைவான்
நிறங்கொள் சலிலம் பிரமன் சதாகதி நேமிவட்டம்
மறங்கொள் திகிரி(யே] யோ[ர்] சகு னம்பௌவம் வையகமே
**428 
#25

வையாகும் புற்கூர்மை வைக்கோலும் வள்வலி வார்கூர்மையாம்
மெய்யாகுஞ் சொற்பொரு ளுண்மை யுடம்பொற்று மீன் உடுமீன்
ஐயா மழகு மிருமலும் ஆர்தல் நிறைதலுண்டல்
பையா மழகு மரவின் படமும் பசுமையுமே
**429 
#26

பணியணி யேவற் றொழில்பாம்பு பார்கற் பரப்புநிலம்
அணியழ காபர ணம்மலங் கார மணிவகுப்பு
கணிகணி யான் வேங்கை காயம்மெய் யாகாயங் கார்ப்பு மஞ்சே
தணிமுக டேயம் புதமு முதுகுந் தருணமுமே
**430 
#27

தருமம் உலக வழக்கம் விதியீ தல் தட்பநல்ல
கரும மியல்பு தவம்புலல் நல்லறங் கண்ணருளும்
பிரமம்மால் மந்திரம் வேதம்வே தாந்தம் பிரமன்மதி
இரவிதீ முத்தீப் பதம்வேள்வி ஞான மிருடிகளே
**431 
#28

இருமை பெருமையு மிம்மை மறுமையும் ஏண் வலியேண்
கருமை கறுப்புப் பெருமையும் காளங்கார் நஞ்சுகழு
வருபவ னம்காடு வீடுகால் வாடை வடந்தைதெரு
உருவடி வுட்காம் ஒளிபுகழ் சோதி யொளிப்பிடமே
**432 
#29

இடரறு சத்தி குடைவலி காளி யிசைச்செயுள்வேல் 
தொடையல்முத் தாத்தி சுடர்ப்பூண்சந்து ஆரமாம் சோரியப்பக்
கடைமுடி வாவணம் வாயில் கடையாம் களிசெரு[க்கு]ம் 
வடிமது வு[ம்]மாம் மலை திசை வானது மாதிரமே

**433 
#30

மாவே பெருமை கருமைநாற் காலன வண்டுநிறம்
பூவே தருத்திரு மாமர வோருமார்ந்
தாரணியுந்
தேவே திசையிடந் தெய்வம் ஏறோர்தஞ்ச் சேவென்னவே
**434 
#31

சேயே மகவு முருகனுஞ் செவ்வாயுஞ் சேய்த்துமென்க
ஆய்தல் நுணுக்க மசைவாய்தல் அள்கூர் செறிவுவளம்
வாயே விடமும் வருவாயும் வாய்மையும் வாக்குமென்க
தூய மறைமறை கேடக மந்திரந் தூய்நகையே
**435 
#32

நகையா மகிழ்ச்சி மலர்ச்சி (யிகழ்ச்சி] நகையெயிறாம்
தகையா மிளைப்புப் பெருமை வனப்பென்க சங்கம் சபை
அகலாப் புணர்ச்சி வளைகை வளை அரில் தூறுகுற்றம்
இகலாகும் ஏற்றலே கோடலு மேன்று பொருதலுமே
**436 
#33

பொற்றை வரைதூறாம் என மிரவிதீப் பொற்கனலி
அற்றம் அவகாசஞ் சோர்வு மறைபொரு ளற்றதுண்மை
மற்றென் கிளவி வினைமாற் றசைநிலை மாடு அயல்பொன்
எற்றென் பதுநினை வென்னென்ன லேல்புடை யாதியம்பே
**437 
#34

ஆகம் உடல்மார்பு உகுத்தல் செகுத்தலும் வீழ்த்தலுமாம்
பாகம் பதமோ ரளவொடு பல்கூறும் பாகியுமாம்
நாகம் சுவற்க மரவானை காரீய நற்பொருப்போ
டேக மரமும் குலம் சாதி கூட்டமு மில்லமுமே
**438 
#35

இல் இலந் தேறு மனையாள் இடந்துயில் கோயில்பள்ளி
கொல்லி யிசையுங் கிரியும் கணைகணை கோல்திரட்சி
கல்வி யறிவும் பயிற்சியும் காவல் அரண்சிறையாம்
வல்லி கொடியும் நிகளமு மாறலொர் வல்லியுமே
**439 
#36

வல்லை யரணும் வலியும் விரைவும் வரைவரைவே
எல்லையும் சூதம் இரதமு மாவும் பிறப்பும்வண்டும்
முல்லை யிசையு மொருகொடி யுங்கற்பு முன்னிலனும்
நல்ல தகரந் தருப்பணஞ் சுண்ணமு நல் இடியே
**440 
#37

இடமே விசாலமும் வாமமு மூவகை யாமிடமும்
தடமே பெருமை வளைவு சுனையானைத் தண்டம்வெற்பு
கடமே மலைச்சாரல் மட்கல மாகங் கடாங்கடனும்
படமே யெழு[து] படந்துகில் பாம்பின் படமும்பன்னே

**441 
#38

பன்னிய நூல் இழை யெண்ணங் கொடியும் பனுவலுமாம்
கன்னல் கடிகை யதன்வள மிக்குக் கரகங்குடம்
துன்னல் குறுகல் செறிதல் இருகதிர் சோதிவிளக்
கின்னுங் கனலுஞ் சுடர் ஓகை யின்பம் இழுமெனலே
**442 
#39

இதையே மரக்கலப் பாயும் புதுப்புன மும்மிசைக்கும் 
புதையே புதுமை கணைக்கட்டும் தோயம் புவிபுவனம்
கதைகா ரணமொழி கட்டுரை தண்டா யுதமுங்கண்டாய்
மதவே மிகுதி வனப்பு வலியிடம் வையணங்கே
**443 
#40

அகம் புற மல்லது வான்மா வகப்பொருள் பாவமில்லம் 
நகம் தரு வெற்புகிர் நந்துதல் ஆக்கமுங் கேடு[மெ]ன்க
ககம் கணை புள் காடுங் கூடுந் துயிலிட முங்கட்சியாம்
சுகம் கிளி யின்பமும் [நன்மையு] மும்பர் சுவற்கமுமே
**444 
#41

சுவலே திடர்பிடர் தோள்மேல் பரவைபா தால[ங்]கடல் 
துவரே பவளஞ் சிவப்பாக்கங் காட்டந் துவர்ப்புமிகல் 
இவர்தல் விருப்பேறல் சேறல் பரத்த லெழுச்சியுமாம்
திவருந் திரைதிரை பூமி கடலொலி தேன்மொழியே 
**445 
#42

தேன்மது வும்வண்டும் செல்லே யுருமுக் கனஞ்சிதலாம்
யானையுங் கன்னலும் வேயுங் கொறுக்கச்சி யும்வேழமாம் 
தானை புடவையுங் கைப்படை காலாட் படையும் உந்தி
ஏனை யுயர்ச்சி நதிதே ருருள்கொப்பூழ் யாழ்க்கணொன்றே
**446 
#43

ஒன்று மருந்து துளிநீர் நெடுமை பிரையுவர்நீர்
என்றும் படையுறை யெண்ணுறை கார மிடைச்சொல் உறை
தென்றுங் குரலொரு பண்கதிர் கூந்தல் சிறகரற்றல்
முன்றிலும் பொல்லா நிலமுமாம் (அ)ங்கணம் முன்குறியே
**447 
#44

குடையுங் கொடையும் குடையாம் கவிகை குடைகொடையாம்
தொடைதொங்கல் வெங்கணை பாவுறுப் புச்சொற் றொடர் தொடுத்தல்
தடைகவ சம்மனை யாள்தடுத் தல் பூண் கடைப்புணர்வும்
பிடருங் கயில் நாள்நாள் காலை யுடுச்செவ்வி பெண்ணமுதே

**448 
#45

முதல்முதல் கைம்முதல் [மூலி] முரணே வலிப்பகையாம்
பதம்வழி காலங்கால் சொற்சோறு செவ்வி யிதம்பாதமாம்
விதிசெயல் மெய்ப்பா டிலாஞ்சினை பேவல்குள் மெய் ஆணையாம்
கதலிகை வாழை துகிற்கொடி காதை மொழிகதையே
**449 
#46

கதவு கபாடமுங் காவலும் வேலி மதில்காவலூர்
மதம் மும் மதஞ்செருக் கவ்வவர் கூறு மதமுமென்க
சதம் இலை யீரைம் பதுமாம் தலம்பன்னந் தாரணியும்
மதலை கொடுங்கைதூண் பாவை புதல்வர் மரக்கலமே
**450 
#47

கலமா மரக்கல மட்கல மோரள [வை] கலம்பூண்
அலமாங் கலப்பை யமைவும் பிறழ்வவி[ர்] தல்பெயர்தல்
பலமாம் பலிப்போர் பலங்காய் பயம் அச்சம் பாலொடுநீர்
புலமாம் விளைநிலம் புந்தி திசையும் புலனிடனே
**451 
#48

புலவர் அறிஞரு மாடுநர் பாடுநர் புத்தேளிரும்
நிலவு கடிமண மன்றல் வதுவையு நீணறையும் 
குலவிய பூவே யழகு பொலிவுமண் கூர்மைமலர்
மலைதல் மறுத்தல் பொருதலுஞ் சூட்டலும் வைத்தனரே
**452 
#49

வைத்த வொளிபரற் சேகுகோல் மாலை மணிக்கோவைகாழ்
செத்தென்ப தொப்புங் கருத்தும் வெற் பன்னந் திகழ் ஓதிமம்
அத்தம் நெறிகை யொருபா லொருநாள் அயில் கூர்மைவேல்
சுத்தம் பிணிமுகம் அன்னம்புட் கேகயந் தூக்கிக் கொள்ளே
**453 
#50

தூக்காய்தல் தூக்க நிறுத்தல் கவி தூக்கம் தொங்கல்கனம்
ஆக்குந் துகிர்வலி யேயா யுதமு மரக்குந் துப்பு
வாக்குடை மங்கையர் காத லிடைச்சொல்லு மாதரென்ப
தாக்கிய விம்மல் ஒலித்தலும் விம்முதல் தானுமென்னே
**454 
#51

தாவு மடங்கல்கூற் றூழித்தீச் சீயநோய் தானுருமேறு 
ஏவும் வியப்புத் தகைமை மலைதூறு போது இறும்பென்
ஓவிய தாலம் தலம்பணை நாவுட னுண்கலமும்
மேவும் உருத்தல் வெகுட்சியுந் தோற்றமு மெல்லியலே

**455 
#52

மெல்லியல் தூது புலன்திறன் வாசலும் வாயில் வெள்ளா
டல்லது வெண்பா மயமின்மை வெள்ளை வடிவும் வெள்ளை
சொல்லுங் குமரி யிராசி யழிவின்மை துற்கை கன்னி
நல்ல சிரகம் துவலை காகமும் நாட்டினரே
**456 
#53

நாடுஞ் செயலு மியல்பும் பிரமனும் நல்விதியாம்
கோடரம் கொம்பு பொதும்பு கவி நவிர் குஞ்சிபண்[வா]ள்
பாடு படுதல் பெருமையே [ழா]மிடம் பக்கம் பண்பாம்
தாடு தலைமை வலி தூறல் கோயில் தளிசாற்றுமே
**457 
#54

சாற்றிய நத்தம் இருளும் பதியு மிரவுஞ்சங்கும்
ஆற்றல் வலியே பரி[த்] தல் செயவல்ல ராதல்மிகல்
போற்றல் புகழ்தலுங் காத்தலும் வானங்கான் புட்ககனம்
தோற்றம் விளக்க மிகுதி புகழினுந் தோன்றுதலே
**458 
#55

தோலோர் வனப்புத் துவக்குக்கைம் மாவுடன் றோற்பலகை
மாலாந் திருமால் கருநிற மேகம் வளிமயக்கம்
மேலாம் பெருமை பழமைண் ணேணியே வேட்கைபுதன்
நீலாகு நீல நிறமும் புவனமும் நேரிழையே
**459 
#56

நேர்தல் இசைத லெதிர்தலும் வேண்டலும் நேர்படலும்
வார்புனல் நேர்மை நெடுமைகச் சாம் மல்லல் வன்மைவளம்
சீரே யழகு புகழ்பாரங் காத்தண்டு செல்வஞ்சதி
சீர்மை கவியோ ருறுப்புட னொல்கலுஞ் செம்பொருளே
**460 
#57

செம்மல் பழம்பூப் பெருமை மகன்வாரி செப்பிலிறை
கொம்மை யழகுந் திரட்சியும் வட்டமுங் கூத்திலொன்றும்
அம்மை வனப்பு மறுமையும் தாயரு மம்பிகையும்
செம்மை சிலப்பும் பெருமையுஞ் செப்பமுந் தேர்ந்தறியே
**461 
#58

தேரின் மலர்பொன் மணிசொற் றொடுத்தலு மந்திகங்குல்
ஓரி னியல்பு மொழுக்கமு மாலை உயர் பிரசம்
வேரியும் வண்டும் பரிமாப் பெருமை விரைவுசெலல்
ஆரல் ஒருமீ னமர்கார்த் திகைசெல்வா யாம்பகரே

**462 
#59

பண்டம் பலவும் வனப்பும் வளப்பாடு மாற்றல் வளம்
அண்டரே தேவரு மாயரும் முரல் அவிழ்நகையாம்
கண்டம் கழுத்துத் திரைவா ளவனி கவ[ச]ந் துண்டம்
புண்டரிகம் ஒரு பூடொரு நோய்முண் டகம்புலியே
**463 
#60

புல்லு மருதம் புனற்பெருக் காயமே பொய் தல் பண்ணை
நல்ல படைபடை பாய லுழுநாஞ்சில் நற்கலனை
பல்லியம் பாடல் நெடித்தற் பொழுதுகை நீர் பாணியாம்
வல்லிமேற் சேற லொருபா லொருபதி வஞ்சியென்னே
**464 
#61

வண்டமர் மாலை கொடிப்படை பூமா வினுக்கணியாம்
கிண்கிணி மாலை யுடனொழுங் குந்தார் கெயாதரத்துள்
முந்தும் பணையே பணைத்தல் பிழைத்தல் முரசுகற்கிப்
பக்திப் பழன மரக்கோடு மூங்கில் பதித்தனவே,
**465 
#62

பதியே பதியுந் தலைவனும் சாறு விழவுங்கள்ளும்
திதியே நிலைபேறு பக்கம் அரில்பாயல் சேகுசந்தி
நிதியே பதும நிதியுடன் சங்க நிதியருத்தம்
கதியே பரகதி நாற்கதி யைங்கதி காண்மனனே
**466 
#63

மனமுதல் நான்குந் துணைக்கா ரணமும் வகைநடிப்புங்
கனவிய கல்வியு மெண்ணு மடவார் கலவியிற்கொள்
நினைவுங் கரணமாம் கள்ளே மருத நிலத்தொடர்[பு]
புனறரு பொய்கை சுரைநற வாகும் புரிகுழலே

**467 
#64

புரிதரும் அம்பரம் ஆகாயங் கூறை புணரியுமாம்
பரிதல் அறுதலன் பின்னல் படர்செல வுள்ளல்குற்றம்
வரிதல் வரித்த லெழுதுதல் மாயமே வஞ்சம்பொய்யாம்
கருநடு மேடு கருப்பங் கருப்பொருள் கண்டுகொள்ளே
**468 
#65

கொள்ளுந் தொடுத்தல் வளைத்தல் பிணித்தல்சொற் கூட்டல்பற்றல்
எள்ளுந் தவவு மிகுதல் கெடுத்தல் இனிக்கெழுமல்
வள்ளிய வோசை வருத்தமும் அந்தம் வனப்பிறுதி
கள்ளு முகுளமு மே[ந]னை யாகக் கருதுவரே
**469 
#66

கருதி லெறிதலு மீதலும் வீசல் பர(த்)தலுமாம்
பொருவி லெழுத லிலாஞ்சினை யெந்திரம் பொற்புனல்பூந்
திருவு மெழுத்தும் பொறி திங்கள் மாதமு மிந்துவுமாம்
பருதி யிரவியும் வட்டமு நேமியும் பார்த்துரையே
**470 
#67

உரைசெய் வெறியே வெறியாட் டணங்காட் டுடன்மருட்சி
விரையுமாம் வண்டு மதுவீகை யன்பு விளம்பில் அளி
வரையு மதுத்தேன் பிரசமு மாலியும் வைகல் தங்கல்
உரிய கழிவும் புலரியு நாளுமென் றோதினரே
**471 
#68

ஓதிய நாஞ்சில் எயிலி னுறுப்பு முழுபடையும்
கோதையர் கொல்கை கொடுவா ளிளமை குயமதென்க
தாது வுலோக மிரதாதி யேழ்பொடி தாதுகல்லைம்
பூத மடிமை [யு]யிரில் லனவல்லி பொற்கொடியே
**472 
#69

கொடியே பொழிலா முலகமுஞ் சோலையும் கூற்றுமொழி
கடிவேல்வெங் காலனும் வெம்மை விருப்பங் கடுமைவெப்பம்
மடி தாழை சோம்பு வயிறாடை மன்னசை மன்னுதல்மன்
சுடிகை மணிமுடி யுச்சியு மாமென்று சொல்திண்ணமே
**473 
#70

திணையே யகத்திணை யேழும் புறத்திணை யேழுஞ்செப்பில்
இணையில் குலத்தோ டொழுக்கமு மேனை யிருதிணையும்
அணையே கரையுங் தளிமமும் ஆடல் நிருத்தம்வென்றி
துணையாங் கழங்கு அணங் காட்டுக் கொடிக்கழல் சொல்மணந்தே 
**474 
#71

மண்ணே கழுவுதல் மார்ச்சனை யொப்பனை மண்முழவம்
கண்ணே கருத்தேழாம் வேற்றுமை நாட்டமுங் கண்ணருளும்
அண்ணல் பெருமை தலைவனும் ஆசைபொன் னன்புதிசை
எண்ணே திலமும் விசாரமும் சோதிடந் தானுமென்னே

**475 
#72

தாயம் உரிமை தமருமாம் கொம்பூதை தான் உலவை
ஆயம் மகளிர் திரள்நீளஞ் சுங்கஞ்சூ தல்லரியும்
ஏயுஞ் சினையே கருவு முறுப்பு மிளையகொம்பும்
தோயுந் தசையும் பகையு மிறகுநற் றூவென்கவே
**476 
#73

தூரிய [ஞ்] செற்ற மணிசேகு வச்சிரஞ் சொல்லில்வன்மை
கூர்தலு மாகும் வயிரம் குணமுக் குணம்பண்புநூல்
சீர்மையு மாம் நெல் லுடன்புல் விலங்கோடு புட்குரலும்
ஓர்விதங் கட்டு வழக்கும் பயிரென் றுரைத்தனரே
**477 
#74

உரைசெய்யெற் றித்தல் வலித்தல் துணித லிசைக்குமிவை
நிரையே நினைவிற்கு மற்றமு தாம் நெறி முத்திவழி
பரமே கலசம் பரஞ்செய்த லாகம் பழமைமுன்பாம்
அரசியல் வெற்றியே கொற்றம் பதங்கம் புள் ளாய்விட்டிலே
**478 
#75

விட்டநல் லாடை யுயர்ச்சி குதை புங்கம் வெங்கழுது
தொட்ட விதண மலகையும் வண்டும் துளியடைத்தல்
பட்ட துளியுமாம் பார்வை விழிதீ வகமதிப்பும்
தட்டை கழையுங் கிளியைக் கடியுங் த[ழ]லுமென்னே
**479 
#76

தயங்கோர் பதிமேக
வயங்கு கதழ்வே விரைவு செறுத்தலு மன்னுமென்னே

**480 
#77

மன்னும் உறழ்வே பொருந்த லுணர்வொப்பு மாறிடையீடு
உன்னுங் தெவிட்டல் அடைத்த லொழித்த[ல்] நிறைவுமிழ்தல்
இன்னும் பொகில் உந்தி புள்ளாம் இடங்கர் குடமுதலை
முன்னிய வேலன் வெறியாட் டவனு முருகனுமே 
**481 
#78

முளரி கடைக்கொள்ளி நுட்பங்கான் தாமரை முண்மரமாம்
தெளிவில் மெலிவு சிறையுறி யுச்சிவார் சீப்புச்சிக்கம்
குளமாஞ் சருக்கரை நெற்றி தடாகமுங் கொள் சிவிகை
உளைதகு தேர்வெங் கரிபரி மாவிவை ஊர்தியென்னே
**482 
#79

ஊரு மரவு தவளை முதலைமீ னோந்தியுடும்
பாரும் பறவை யரணை கெவுளிநண் டாமைமுதல்
தேரு மனைத்தையும் அண்டசம் என்பர் திகழ் கடகம்
சாரும் படையும் படைவீடுங் கைவளை தானுமென்னே
**483 
#80

தாங்குந் தயிர்கடை தூணணி லானைத் தறிவெளிலாம்
ஆங்கியல் தீரம் கரைதிட்பம் ஊறு ஊற் றறிபுலனோய்
தீங்கிடை யூறு முடலை திரட்சி முருடுமறம்
ஓங்கு நொறிலே முடக்கம் விரைவென்ப கொள்ளிழையே
**484 
#81

ஒள்ளிய ஓங்கல் உயர்தல் வரைகழை யும்பர்வ[ங்]கம்
அள்ளுறு கூந்தல் குருளை புனலும் அளகம் என்க
தெள்ளும் புரிவு விரும்புதல் வேறு படல்செயலும்
வள்ளிய கந்தம் புலனுங் கழு(த்து] மரைமுமென்னே
**485 
#82

மணந்ததொர் சூழி முகபடாம் வாவி வயா வருத்தம்
புணர்ந்தவர் காதற் பெருக்கம் பயோதரம் பூண்முலைநற்
குணத்தரு மேகம் பனித்தல் மழைபொழி தல்கொடுத்தல்
கணந்தரு வாளும் சரிகையு முள்ளுமால் கண்டகமே

**486 
#83

கண்ட குயிறலே கூவல் செறித [ல்கு ]டைதல்செய்தல்
கொண்ட நடுக்கமு மின்னாப்பு மச்சமுங் கொண்டனையும்
எண்டரு கம்பலை நாளு நடுவு மெழுஞ்செயலும்
பண்டை யொளியும் பலபாகு பாடும் பகல் என்பரே
**487 
#84

பகர்தரு கோளென்பர் கோடல்கோட் பாடுபல் கோள்குணந்தீங்கு
அகல்தரும் உம்பர் அமரரு மேலும் அணிமிடறும்
பகைநில முந்நெல் லிடமுங் களாவும் பரப்புங்களம்
புகல்தரு சூர்வஞ்சக் தெய்வநோய் சூரனும் பொற்றொடியே
**488 
#85

பொன்னோலை கட்டி மடமைமா வாயமு மாழை அணங்கு
உன்னிய தெய்வ முவமை மடவாள்நோ யோதிலச்சம் 
துன்னும் விழவோ டறலுநன் னாளுந் தணங்கென்பரால்
அன்னம் புவனமுஞ் சேறுங் கடலும் அளக்கர் என்னே
**489 
#86

அளவிய தோடு தொகுதி பனையிலை போல்வனவும்
வளவிய பூவி னிதழுமாம் பூவி னிதழும்பெண்ணை
உளவிதழ் போல்பவு மாகு மடல் இனி யோர்தபுதல்
களைதரு சாவுடன் கேடுமா மென்றனர் காதலித்தே
**490 
#87

காதிய மள்ளர் உழவரும் வீரகும் காங்கயமே
தீதுசெய் யாண்மையும் வன்பணி செய்யுஞ் செயலுமென்க
நீதியுஞ் சொற்பய னும்பல பண்ட[மு] நீள்தனமும்
ஓது தலைமையு மொண்மையும் வாய்மையு மொண்பொருளே
**491 
#88

பொருந்திய செச்சைவெள் ளா[ட்]டே றுடன்வெட்சி போலசைபோல்
தருந்திறல் ஏதி யிருபடைக் கும்மாம் தனிமைமுத்தி
வருகே வலம் தாரம் வெள்ளிநாக் கில்லா ளரும்பண்டம்பண்
பரிந்த பதலை யகல்வாய்ப் பறைதாழி பல்பொருப்பே
**492 
#89

பறையுந் தெருவுடன் மென்மையு ஞெள்ளல் பரிந்து எகினம்
குறையுங் கவரியு மன்னமு நாயுமாம் கோதைபெண்ணெற்
பொறையன் றெரியல் விரற்கட்டி யைம்பால்கால் பொற்குலிசம்
நிறையு மெலுமிச்சஞ் சம்பம் சிறைசிறை நேர்சிறகே
**493 
#90

நேர்ந்த கருவி தொடர்பியாழ் பல்லிய நீள்கவசம்
வாய்ந்த தொகுதி கலனை வினைமேகம் வல்லாயுதம்
ஏய்ந்த துணைக்கா ரணமுமாம் எள்ளல் இகழ்ச்சிநகை
சேர்ந்த நிழற்றல் நுணுக்கல் நிழற்றல் நிழற்செய்தலே
**494 
#91

தருவா னவிர மலையுட னுச்சி சடைசனறி
திரண்டகன் மேல்வலம் பாரிடமே
**495 
#92

பாகு குழம்பு பகிர்ச்சி கரைகட்டி பாக்குநதி
ஏகிய பாடி கவச நகர்நா டெழும்படையும்
வாகுதோள் பாடலம் பா[தி]ரி செம்மையொர் வாசியுமாம்
நாகுபெண் பால்ந(ந்) திளமைநீர் வாழ்சாதி நந்திழையே
**496 
#93

இழையே யிழைத்த லிழைபூண் முருகெலு மிச்செழுச்சி
விழவு குமரவேள் நாற்ற மிளமை வெறியகிலாம்
தழுவொளி பேய்த்தேர் கடல்மலை தேருப் பளங்கானலாம்
வழுவில் மயக்கமு மொப்பு மிலைச்சையு மானல் என்னே
**497 
#94

மானும் அரலை நரலை கழலை வருகனிகாழ்
ஊனமில் லாத இரலைபுல் வாய்க்கலை யூதுங்கொம்போ
டான தலைநாளும் பல்லம் கணக்கிலொன் றம்புமெண்கும்
ஈனமில் மூரி பெருமை வலிதொன்மை யென்றுரையே
**498 
#95

உரைத்த தரணி மலையு நிலனு முதையனுமாம்
நிரைத்த கழித்த லிறத்த லிரண்டும் நெறிகடத்தல்
வரைத்தல் மிகுத்தலுஞ் சாதலுஞ் சொல்லும் மலைத்தல் ஒலி
இரைத்தெழு பூசலாம் பட்டாடை கண்நேத் திரம் என்பரே
**499 
#96

பற்றும் வயினே வயிறு மனையும் பயிலிடமும்
எற்றும் வெடியே வெருவுதல் வெள்ளிடி வார்பனியே
செற்றிய துன்பு நடுக்கமு மச்சமுஞ் சீதமுமாம்
எற்றிய ஏணி யுலகுட னெல்லையு மென்றனரே
**500 
#97

என்று முயரமு நீளமுஞ் சேண் நாமம் இக்கட்டளை
ஒன்று நிறையுரை காட்டுங் கருவியோ டொப்புச்செப்பும்
மன்ற வசிகூர்மை குற்றம் வசித்தலும் ஆன் உருபான்
கன்று நியமம் மறுகு நியமமங் காடியுமே
**501 
#98

காட்டுந் தளிமம் அழகொடு மெத்தை கருது அமறல்
கோட்டும் பொலிவு மிகுதியும் கூற்று மருள்மறலி
நாட்டம் நயனம்வாள் நாடுதல் நாம் உளப் பாடொடச்சம்
சூட்டும் படிவம் விரதம் வடிவமாச் சொல்துணிந்தே
**502 
#99

துணிந்தவெம் பாலை யொருநில மந்நிலப் பாடல்சுரம்
புணர்ந்துடன் போதல் பிரிவுடன் வெம்மையோர் பூருகமாம்
மணந்த குறிஞ்சி மலையிடஞ் செம்முள்ளி யந்நிலப்பண்
தணந்த வியங்கோளு மாணையும் ஏவலாந் தாழ்குழலே

**503 
#100

தாழ்தல் குறைத லிறைஞ்சலே தங்கல் புணரிகடல்
சூழ்கரை யோடு தரங்கம் கணமே தொகுதிவட்டம்
வாழ்சிறு கால முடுப்பாரி
**504 
#101

[புரிதரு சித்திரம் ஏரண்ட மத்திரி மெய்யிற்பொய்யே ]
[ம] ருவு மொருகவி யோவிய நல்ல வனப்புமென்க
தருமொரு நெய்தல் கடல்சார் நிலஞ்சா பறையொருபூ
தெரிதரும் அத்தி கடலென் [பு] தும்பரஞ் சிந்துரமே
**505 
#102

துப்பார் உழையோர் நரம்பு மருணமுஞ் சூழிடமும்
ஒப்பான கைக்கிளை யோர்நரம் போர்தலைக் காமமுமாம்
இப்பால் விளரி நரம்புநல் வேட்கை யிளமையென்க
வைப்பான நாண்மங் கலநாணும் பாசமு மானமுமே
**506 
#103

மாதே மகரம் இராசி சுறாக்காதல் வாழி யென்பர்
ஓதுமிடைச்சொல்லும் வாழ்கவெனச்சொல்லும் ஓர்கனம்பொன்
ஏதமில் மேகஞ் செறிவுமுத் தக்காசு அராகம் செம்மை
ஆதர வோடு முடுகிய லும்பண் ணனைத்துமங்கே
**507 
#104

அங்கதம் தோள்வளை பாவலர் தீச்சொல் லரவுபொய்யாம்
தங்கிய கூழே பலவுண வும்பொன்னுந் தாழ்பயிரும்
எங்கு மலர்தலும் தோன்றலு மாகும் எதிர்[தல்] கிழி
பொங்கு மெழுது படமுந் நிதியின் பொதியுமென்னே
**508 
#105

என்றுங் கடியே விரைவுகாப் பச்ச மெழில்விளக்கம்
மன்றல் மிகுதி சிறப்பொடு கூர்மை புதுமையையம்
துன்றல் கரிப்புக் கடிதல் வரவுபேய்ச் சொல்லுமென்க
வன்றிறல் வென்றி யனைத்து முயற்சியும் வாகையென்னே
**509 
#106

கைதரு புட்கரம் யானைத் துதிக்கைத் தலை[க] மலம்
உய்ய பருந்து நிறைவுநீர் தீர்த்தம்வாள் வானமுடன்
ஐதரு பாண்ட முகமுமாம் அல்லிதா தாம்பலல்லி
வெய்யகீ லாலம் சலமுதி ரங்காடி வேண்டினரே
**510 
#107

வேண்டுங் குபேரன் தனபதி சோமனும் வேர்வியர்வேர்
தாண்டிய சாரங்கம் மானு மளியும் சயமருக்கன்
காண்டுஞ் சருக்கரை யும்விசை யம்தாழை கைதைதெங்காம்
ஈண்டும் வலியூர் வியலிடம் பாழியா மேந்திழையே
**511 
#108

ஏய்ந்ததோர் பாசம் கயிறுபற் றூசித் துளையன்பு நூல்
காய்ந்ததொர் நாணலுங் காயாவுங் காசை கரும்புகழை
வாய்ந்தபல் சந்தியுஞ்] சந்தி [ந]கர் இல்லூர் வாழ்தரையாம்
தோய்ந்த வளமை புதுமையும் யாணர் துடியிடையே
**512 
#109

இடையே நடுவு மிடையு நிறையு மிடமுமென்க
கிடையே கிடையுங் கிடேச்சுமாம் சாகம் தழையாடுதேக்கு
உடையே [குடைவேலுஞ் செல்வமு முள்ளு முடுக்கையுமாம்]
[விடையே] யிடபங் கடாவிடை யேகுதல் வெள்வளையே
**513 
#110

வளைவு படைதேர்க்கால் வட்டம் பெருமை வரைபிறப்போ
டளவில் சகடந் திகிரி பறவை யவனிநல்ல
தளவ நகைசக் கரமாம் விரைவலி கோரஞ் சண்டம்
களபம் சுதைதந்திக் கன்றுடன் சந்தின் கலவையுமே
**514 
#111

வைகுஞ் சிகியே பரிபுர முந்தீயு மாமயிலும்
நையுஞ் சிகரி தருக்கோ புரம்வெற்பு நார் அன்புநீர்
உய்கோல் நிறைகோ லளவுகோல் செங்கோ லுருட்சிநரம்
பெய்கோ லெழுதுகோல் மத்திகை வாட்கோ லெனல்புரிந்தே

**515 
#112

புரிதரு திப்பிலி போதியும் பிப்பலம் பொங்கு [கும்]பம்
கரிமத் தகங்குடம் பாம்பரு ணன்காற்றுக் காலிலியாம்
மருதும் வெளுப்பும் அருச்சுனம் ஆகும் மருவுபன்னம்
ஒருமரம் பச்சை நிறமும் பலாசமென் றோதணங்கே
**516 
#113

அண்டம் பிரமாண்ட முட்டை யமர ருலகம் அத்து
மண்டிய சாரியை செம்மை அதரே வழிபுகுதி
பிண்டி யசோகுந் தருப்பண மும் அலி பேடிநம்பி
எண்டரும் அந்தகன் கூற்றுங் குருடனு மென்றறியே
**517 
#114

அயிர்நுண் மணல் நுண்மை சற்கரை ஐயம் அயிர்த்தல் பிச்சை
தயிரொடு பாழி அளையாம் அறையறை தான்பறையாம்
துயிரில் அமலைசோ றம்பிகை [மூ] ங்கினற் றூசெனல்காம்பு
அயில் அர வம்மொலி பாம்பா யிலியநாட் பார்த்தமையே
**518 
#115

அமையும் அரங்கமே யாற்றிடை போர்க்கள மாடிடமும்
சமையும் அரசே யிராச்சியம் போதி தலைவனுமாம்
உமையொரு பாகனும் காளியுஞ் சூலியென் ஓடைபட்டம்
இமம்வளர் குன்றிற் சரியோர் தருப்பொய்கை யென்றெய்துமே
**519 
#116

எய்தும் அவினைய நாடகாங் கத்தோ டெழிற்பனுவல்
பொய்யழுக் காறு தே ராழி செறியுறுப் பாத்தி[புவி]
நிறைவுகூர் ஆர்
ஐயன் சுவாமி பிதாச்சேட்டன் மாச்சாத்த னாமென்பரே

**520 
#117

ஆர்தரு பூதம் அவனி முதலைந்து முள்ளனவும்
பாரிடந் தானு மிறந்ததோர் காலமும் பார்த்தறிக
ஓரும் அகைதல் வளைவு வருத்த மலர்ச்சி உயிர்
தேரும் பிராணனும் வாயுவு மாமென்று செப்பினரே
**521 
#118

செப்பிய அங்கம் எலும்புறுப் பாறங்கந்தேகம் அசை
ஒப்பி லிடைச்சொ னிரையசை நேரசை ஒற்றுற்று ஒமெய்
துப்பில் அலகு மகிழ்க்காழ் படையெண் துடைப்பம்புள்வாய்
வைப்புடை ஆகாரம் ஊனும் வடிவும் வரைந்து சொல்லே
**522 
#119

சொல்லும் இலஞ்சி மடுவுங்கொப் பூழுந் துணைமகிழும்
நல்ல இறால்புல்லந் தேன்கூடு கார்த்திகை நாளுமென்க
புல்லும் பசுவும் பசுமுலை வாளியின் புன்றலைவே
றல்லதொர் வல்லி துவாரமு மாலியு மாஞ்சுரையே
**523 
#120

ஆய்ந்த இரதம் நவரத மின்பந்தே ராறுசுவை
வாய்ந்த இரதியாம் பித்தளை மாரன் மடந்தையிபம்
தோய்ந்தநல் ஆழி கடல்மோ திரநேமி தேர்க்கால் நுனி
ஓர்ந்ததோர் ஏடகம் நல்லாடை புற்றாளி யோர்பதியே
**524 
#121

ஓரி யிகலன் மயிர்முசு வள்ளல், மனவெழுச்சி
தேரின் முயற்சி வலி ஊக்கம் சிங்கலே குன்றல்கெடல்
ஏரிய ஊகம் விசாரம் கருங்குரங் கோர்புல் எஃகு
கூர்மைவேல் எல்லை யளவு பகலந்தங் கூப்பீடுமே
**525 
#122

கூளி தொகுதி தமர்பேய் குறள் கொங்கு தேன்மணந்தாது
ஓளி யொழுங்கானைக் கூடம் உப்பு ஓத மினிமை பொய்தல்
வாளிசுற் றோட்டமு மாசுக முஞ்சோனை வாளியுமாம்
தாளி பனையோர் கொடியாம் புலிசாந்து சார்த்தூலமே
**526 
#123

தூங்கல் மடிகூத்தொ ரோசை துயிலுடன் றும்பியுமாம்
வாங்கே வளைவு மழைத்தலும் மண்ணை யிளமையுடன்
ஓங்கறி யாமையும் பேயும் தனிதனி யொப்பின்மையாம்
தேங்கும் உலகம் ஒழுக்கந் திசைசான்றோர் தேசமுமே
**527 
#124

முந்தும் உரனே வலியு மனமார்பு மூதறிவும்
சிந்து குறணதி வாரியோர் பாட்டுமுச் சீரடியும்
வந்த கலாபம் மயிற்றோ கையுமே கலையுமென்க
விந்திய சீர்மை சிறப்போ டிடும்பை விழுமம்கண்ணே
**528 
#125

கண்ணுதல் ஈசன் கருதுதல் கூலம் புனற்கரைநற்
பண்ணிய மங்காடி பாகல்வால் வானி படங்குகொடி
தண்ணிய ஏவந் தனிமையுந் துன்பமும் சந்தம் நிறம்
எண்ணுங் கவியழகு என்றூழ் இரவி வெயில்கோடையே

**529 
#126

கோடல் வளைதல் கொளல்காந்தள் குஞ்சம் கூன் குன்றியள
வோடு குறளே கவரி ஒலியல் துகிலாறுதார்
மாடு மறுகு மயிர்பின் னணிகூழை நண்டுதட்டை
ஏடிலை மூக்கரி கத்தி யிருத்த லிமங்குளிரே
**530 
#127

இன்னுங் கிளைகோன் [ம] ரந்துளிர் வேய் மொய்ம்பு தோள்வலியாம்
பன்னல் பருத்திசொல் தேருதல் காலிலான் பாதிபங்கு
கன்னியோ ராறழி வின்மைகற் றாழையுங் காண்குமரி
துன்னிய கும்பிசே றானை நிரையமுஞ் சொல்லணங்கே
**531 
#128

அங்க முடையவ னாரல்நாட் கஞ்சுக மக்கி அங்கி
எங்குந் துடி நுண் பொழுது பறைதுடி யேலமுமாம்
வங்கம் பவுறி வழுதுணை வெள்ளீயம் வஞ்சம்பொய்வாள்
தங்கு குவலையம் நெய்தல் குவளை தரணியுமே
**532 
#129

தந்த வரக்குற் பலந்துகிர் செம்பரத்தம் அரத்தம்
வந்த மடுவுந் தரணியும் வட்டமும் வாயிலொன்று
முந்து வலையம் புறவம் புறம்புடன் முல்லைநிலம்
குந்தம் கை வேலும் பரிமாவுந் துய்ய கு[ரு]ந்தமுமே
**533 
#130

குறுகு மதிலுறுப் பாண்குறி பொத்தகங் கோசம் என்று
மறுகு நெறியுஞ் சமையமு மூலமு மாற்கம் என்க
உறையுள் சயன மனையூர் நகர் நா டொலியுஞ் சும்மை
துறுநெறி வேய்மத குட்டுளை பூழையுந் தூம்பென்பரே
**534 
#131

தூய தரளமே முத்துந் திரட்சியும் சொல்லில்வட்டந்
தாய விடைமூங்கில் பாண்டில் சரிசரி தாரியொப்பாம்
வாய நறவம் மதுமண நாற்றம் வழியிடஞ்சேய்
காயும் புரோசு கயிறு கவர்சொற் பணைகவடே
**535 
#132

வண்ண மளவு வடிவு குணஞ்சவை மற்றொழுக்கம்
எண்ணிய வொன்றை விசேடித் தலுநல் லியல்பும்பண்பாம்
கண்ணி முகிளமுந் தாரும் படுக்கும் கயிறுமென்க
உண்ணல் அருத்தல் முதலைந்து பூட்டலு மூட்டலுமே

**536 
#133

ஊட்டிய பட்டம் நுதலணி யாயுத மோடைநுதல்
ஈட்டிய தோல்செய் பலகை மதிலாத் திரகம் இஞ்சி
காட்டுங் கவரி கவரிமாத் தேர்சா மரையெருமை
ஓட்டும் படை (க்)கை கவந்தம்வேள் வித்தறி யூபம் மின்னே
**537 
#134

மின்னே மரக்கலம் நாமகள் பாரதி மென்குழையுந்
தன்னேர்செய் பீலிக் குடையுந் தழையென் துகிலிகைசாந்
துந்நேர்செய் வட்டிகை வேணுவாள் மூங்கி லுடன்வில்லுமாம்
பன்னுங் கடகு வளைவுகுற் றந்தேர் [ப்]பா ரிப்புந்தட்டே
**538 
#135

தட்டும் பறையால வட்டஞ் சிறுச்சின்னந் தான்பீலியாம்
ஒட்டும் வெதிர்வேய் செவிடு படைக்கை திரளை உண்டை
கட்டுஞ் சடிலம் சடை துன்னல் சேகு கறைசிவப்பாம்
பட்டதொர் சாமம் பசுமை மறையாமம் பான்மொழியே
**539 
#136

மொழிதரு போதகம் வங்கங் கயமுனி மூதறிவும்
பொழிதரு மோழையாங் காடியுங் கஞ்சியும் ஒல்லைசிறு
பொழுது விரைவு எச்சம் வேள்வி யொழிந்த பொருண்மகவாம்
அழிவில் கடைப்பி (டி] தேற்ற மறவாமை யாமென்பரே
**540 
#137

படருந் தனுவுடம் போசைவிற் காலம் பயிலுநுட்பம்
அடருஞ் சிலீமுகம் அம்பு முலைக்கண்வண்டு ஆலம் நஞ்சால்
விடர்மரங் கிள்ளை யனலென லாம்வன்னி மேற்பகடே
கடமலை யேறு பெருமையோ டம்பி கடாவென்பரே
**541 
#138

பகர்ந்த குடிஞையே கூகை நதியும் பதியுமென்பர்
இகழ்ந்த கவந்தம் உடற்குறை தோயமு மென்க சமம்
புகன்ற தலை[ப்]பா டுடன்பாடு மாறு புரைதல்பொரல்
அகன்றசெம் பாதி கொடைநுட்பஞ் செப்பநேர் ஆய்ந்துகொள்ளே

**542 
#139

ஆயவே ளாண்மை யுபகா ரமுமுப சாரமுமாம்
வாய்[வ]தொர் தீபம் விளக்கும்பல் தீப[மு]ம் மல்வளமல்
தாய பிரமன் சிவனிக லன்னாவல் சம்புவென்க
காய்[வ]ரு கொந்தம் அகம்படி யும்வேலுங் கண்டுகொள்ளே
**543 
#140

கொட்டிய நீவி யளித்தல் துடைத்தல் துகில்கொ[ய்]சகம்
கட்டுக் களைதல் மிகுதல் குறிகாவல் கண்டுகட்டும்
தொட்டசின் னம் சிறுச் சின்னஞ்சில் வானம் சூல் சூழ்தல்சினை
பட்டபீர் பீர்க்கும் பசலை முலைப்பாலும் பார்த்துக்கொள்ளே
**544 
#141

கொள்ளுவர் சாடி துகிலொரு மட்கலம் கூர்ந்த சலம்
தள்ளிய வஞ்சமு நீரு நடுக்கமும் சாதிகள்ளுந்
தெள்ளுங் குலமும் கருமுகை யுந்தேக்குந் திண்பிரம்பும்
வள்ளிய பீனம் பருமையும் பாசியும் வையன்னமே
**545 
#142

அன்ன கணையம் எழுக்காவற் காடுபொன் னானை[க்]கம்பம்
பன்னிய தாபரம் கோயிலும் வெற்பும் பயில்மரமும்
துன்னிய ஓதி யறிவோந்தி கூந்தலும் தோ[ள்] துணைதோள்
இன்னுங் குருகும் பெருநாரை யுஞ்சா ரசம் என்பரே
**546 
#143

பற்றும் வனப்பு நவமணி நீல மணிபருக்கை
மற்றுங் கடவுள் மணிவிதை யும்மணி யாகுமென்க
இற்று வரிபாட் டெழுத்தொழுங் குந்தி யுடனீளமும்
செற்று மணிமுன் னிரைபொன் னயல்மாடு தேன்மொழியே
**547 
#144

மொழிந்த விடங்கம் முகடழ காண்மை முனைமுனைபோர்
இழிந்த நளினிபண் வாவி [இ]யல் இயல் சாயல்தமிழ்
கழிந்த நிறமே வுயிர்நிலை வன்னம் கவிமை புகர்
மொழிந்ததொர் பைத்தல் உருத்தல் பசுத்தலென் றோதினரே
**548 
#145

ஓதிய பாளிதம் பட்டாடை பாற்சோ றுடன்சற்கரை
தீதில் வசுமணி கோத்தனந் தீயுடன் தேவரென்பர்
காதிய காண்டம் திரள[ம்]பு நீர்தீ[ர்]த்தங் கைப்படைகான்
மாதிசை திக்கு[ந்] திரியுந் திசையும் வசனமின்னே

**549 
#146

சயிந்தவம் உப்புப் புரவி தலைமேல் தலைமைதலை
இயைந்த கொடுமையோர் வாசிவள் ளங்கோரம் ஏவுதண்டம்
பயந்த கரித்தண்டந் தண்டுதெண் டம் நாரம் பாசிசலம்
வயந்தன் மதனனோர் வானரந் தெ(ன்]றற்கால் வைத்துரையே
**550 
#147

வையா வணம் தெருப் பீடிகை சாதனம் வண்டம்புவண்டு
உய்யாம்பல் ஓர்பண் மதுவல்லி யூதுங்கொம் போரிலக்கம்
கையாரு ஞாங்கர் வடிவேல் மிசைபக்கங் காணில்முன்பாம்
வெய்யா களவன் முசுவு மலவனும் வேண்டினரே
**551 
#148

வேண்டிய வாணி கலைமக ளுங்கூத்து மென்மொழியும்
ஈண்டியல் உக்கம் மருங்கால வட்ட மிடபம் உகம்
சேண்டொட ரூழி யெழுவாய்புவி சேகரம் முடிமா
ஆண்ட விதவை திருவிலி சோறென் றறைகவின்றே
**552 
#149

இறவே யிறவு மிறக்கமும் ஏய் ஒப் பிசைபொருத்தல்
உறவி யெறும்பூற்று உவளகம் வாவி யெயிலுறுப்பாம்
அறலே தரங்க மரிமணல் ஆணம் குழம்புமன்பும்
பிறவே வழங்கல் கொடைசேறல் சொற்றல் பிறைறுதலே
**553 
#150

நுதலியல் வந்திகை யாகுஞ் சுணங்கு நுதலணியும் 
உதவு பருமம் கலனை யுயர்ச்சி யொளிர்மேகலை 
இதவிய ஆவே பசுமரை யாச்சா விரக்கமிசை
குதிரை கழுதை வரை அத் திரியென்று கூறுகவே
**554 
#151

கத்தூரி குங்கு[ம]த் தாரு வரணம்வெங் கான் துருக்கம்
உத்திசீ தேவி[தி] தலை பொறியே யுரைவழியாம்
அத்தன் சுவாமி பிதாவீசன் ஆர்ப்பு ஒலி தூளியுமாம்
பத்தி யடைப்பது வும்வழி பாடு மொழுங்கு[ம்]பன்னே

**555 
#152

பந்தம் தளைகை விளக்குத் தமருண்டை பாசபந்தம்
கந்தரம் ஆகு மலைமுழைஞ் சும்மேக முங்கழுத்தும்
வந்த தொடியோர் பலங்கை வளை வடி மா[வ]கிர்கூர்
அந்த மதுவும் கழுமல் துயர்நிறை வாங்காண்கவே
**556 
#153

காத்திரம் கீரியுங் காயமும் பாம்பும் கணை கணைகோல்
ஆர்த்த [களையே] களைவுங் களையும் அம்பு ஆசுக நீர்
வாய்த்த உவாவே யிளமை கடலுவா மாதங்கமாம்
சேர்த்த திகிரி வரைமூங்கில் சக்கரந் தேர்சிந்தியே
**557 
#154


சிந்துரம் யானை புளி கேயம் பாட்டுச் சிறந்ததோர்புள்
கந்துபற் றுக்கோடுங் கம்பமும் காந்தாரம் காட்டொடு[ப]ண்
நந்தி[ய] தூரியம் நற்றூசு வாச்சியம் நாண்[ம]லர்நாள்
உந்தி நடுவுந்தி அந்திலே சந்தி யசையென்பரே
**558 
#155

பந்தும் புரவியுங் கந்துகம் சேனை படைகடையாம்
புந்தி யறிவு புதன் கா ழகம் நற் புடவைகறுப்பு
இந்துவு மிந்திரன் றேவியு மாஞ் சசி என்னென்னையென்
வந்த வளைவுங் கொடுமையு மீட்சியும் வக்கிரமே
**559 
#156

கிள்ளை புரவி கிளியாம் பொய் பூதங் கிருத்திமமாம்
வள்ளை யொருபாட் டொருகொடி யானையும் வண்டுந்தும்பி
தெள்ளுஞ் சுணங்கு பொறி தூக்கந் துத்தி சிள் வீடுவட்டம்
உள்ளுஞ் சிறுக்கீரை சில்லி செம்பத்தி உதும்பரமே
**560 
#157

துன்றும் குரங்கு குயில்கோ கிலம் தொடர் சொற்றொடரோ
டென்றும் விலங்குமாம் ஆக்கம் திருவாழ் வெழுச்சிபடை
கன்றும் புதுமை நிலையின்மை வாசமுங் கச்சும்வம்பாம்
தென்று மலையு மொலியுஞ் [சிலம்புஞ்] சிலம்பு அன்னமே

**561 
#158

அட்டி மதுர மிருப்பை தராவுமே யாமதுகம்
செட்டி வணிகனுஞ் செவ்வேளும் கோரை கழுகு எருவை
மட்டு மதுவு மளவுமாம் நானம் மணம்புழுகாம்
கட்டி மகிட்சி கருப்புவட் டோர்புள்ளுங் கட்டியுமே
**562 
#159

கலித்தல் ஒலியும் பொலிவு மெழுச்சியுங் காண் அரணம்
பலித்த மதிலுங் கவசமும் பூசலும் பஞ்சரமே
சலித்த செருந்தியுங் கூடும் சமம்சங்கி ராமமொப்பாம்
வலித்த நுவணை தினைப்பிண் டியுநூலும் வாணகையே
**563 
#160

நளியே செறிவு பெருமை க[த]னம் நடுக்கம்வெம்மை
அளிசேர் தொடைதூக்கம் பீலிக் குடைகூந்த லாகுந்தொங்கல்
துளிசேர் புகர்பிங்க லன்மந் திரி விடர் தூர்த்தர்விடர்
முளிதேர் தவளமும் பீலிக் கு[ரு]ந்து முருந்து என்பரே
**564 
#161

முந்தும் அலங்கல் இலங்கல் துளிர்தொங்கல் முத்தம் முத்து
வந்த பிரிய மதரம் சலதரம் வாவிபுயல் 
அந்தமி லீரப் பலாவயி ர[ம்]வானம் ஆசினியாம்
தந்த குரம்பை யுடம்பு சிறுகுடில் தானுஞ்சொல்லே
**565 
#162

சொல்லிய பம்பல் எழுச்சி நெருக்கந் தொடர்தல்வலி
குல்லை துளபங்கஞ் சங்குல்லை வேயிக்குக் கோல்கழையாம்
நல்ல கிரிட்டி பிரண்டையும் பன்றியும் நண்டொர்வள்ளல்
அல்ல[ல்] தீர் நள்ளி தபனன் கனலவ னாதித்தனே
**566 
#163

அரும்பொரு ளந்தாதி சூடிய சீதர னம்பிகையைத்
தரும்பொருள் செய்த பராபரை யாநந் தண்டமிழோர்
விரும்பிய கோவை யுரிச்சொற் பனுவல் விரித்துரைத்தான்
பெரும்பொருள் கண்ட கெயாதரன் தேவைப் பெருந்தகையே
**
** பதினோராவது ஒருசொற் பல்பொருளியல் முற்றும்
** கயாதரம் முற்றும்
********
** 
*