|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
எங்கணும் (1)
திங்கள் அதற்கு ஓர் திலதமா எங்கணும்
முற்று நீர் வையம் முழுதும் நிழற்றுமே - முத்தொள்:45/2,3
TOP
எங்கும் (3)
கரி பரந்து எங்கும் கடு முள்ளி பம்பி - முத்தொள்:22/1
குங்கும ஈர்ம் சாந்தின சேறு இழுக்கி எங்கும்
தடுமாறல் ஆகிய தன்மைத்தே தென்னன் - முத்தொள்:89/2,3
பைம் கண் வெள்_ஏற்றான்-பால் கண்டு அற்றால் எங்கும்
முடி மன்னர் சூடிய பூ மொய் மலர் தார் மாறன் - முத்தொள்:91/2,3
TOP
எடுத்த (1)
எயில் கதவம் கோத்து எடுத்த கோட்டால் பனி கடலுள் - முத்தொள்:20/2
TOP
எடுத்துரைப்பார் (1)
ஆய்_இழையாய் என்னை அவன் மேல் எடுத்துரைப்பார்
வாயும் அடைக்குமோ தான் - முத்தொள்:4/3,4
TOP
எடுத்தெடுத்து (1)
தடித்த குடர் திரியா மாட்டி எடுத்தெடுத்து
பேஎய் விளக்கு அயரும் பெற்றித்தே செம்பியன் - முத்தொள்:51/2,3
TOP
எண்ணப்படுமாயின் (1)
என் உயிரும் எண்ணப்படுமாயின் என் உயிர்க்கே - முத்தொள்:59/2
TOP
எதிர்விழிக்க (1)
நனவில் எதிர்விழிக்க நாணும் புனை_இழாய் - முத்தொள்:62/2
TOP
எதிர்விழிக்கும் (1)
கனவை நனவு என்று எதிர்விழிக்கும் காணும் - முத்தொள்:62/1
TOP
எந்தை (1)
மந்தரம் போல் மாண்ட களிறு ஊர்ந்தார் எந்தை
இலங்கு இலை வேல் கிள்ளி இரேவதி நாள் என்னோ - முத்தொள்:46/2,3
TOP
எம் (5)
பாய் தோய்ந்த நாவாய் போல் தோன்றுமே எம் கோமான் - முத்தொள்:20/3
வழுவில் எம் வீதியுள் மாறன் வருங்கால் - முத்தொள்:57/1
சேலேக வண்ணனொடு சேரி புகுதலும் எம்
சாலேகம் சார நட - முத்தொள்:72/3,4
எலாஅ மட பிடியே எம் கூடல் கோமான் - முத்தொள்:73/1
குறியெதிர்ப்பை கொள்ளும் தகைமைத்தே எம் கோன் - முத்தொள்:101/3
TOP
எமது (1)
வையகம் எல்லாம் எமது என்று எழுதுமே - முத்தொள்:99/3
TOP
எய்தாது (1)
எய்தாது இரா கழிந்தவாறு - முத்தொள்:85/4
TOP
எயில் (1)
எயில் கதவம் கோத்து எடுத்த கோட்டால் பனி கடலுள் - முத்தொள்:20/2
TOP
எரி (2)
நரி பரந்து நால் திசையும் கூடி எரி பரந்த - முத்தொள்:22/2
ஏனைய பெண்டிர் எரி மூழ்க கண்டு தன் - முத்தொள்:104/1
TOP
எல்லாம் (4)
அருகலர் எல்லாம் அறிய ஒரு கலாம் - முத்தொள்:9/2
என் நெஞ்சும் நாணும் நலனும் இவை எல்லாம்
மன்னன் புனல் நாடன் வௌவினான் என்னே - முத்தொள்:34/1,2
எல்லாம் எனக்கோ இடர் - முத்தொள்:84/4
வையகம் எல்லாம் எமது என்று எழுதுமே - முத்தொள்:99/3
TOP
எல்லாமால் (1)
வான் ஏற்ற வையகம் எல்லாமால் யானோ - முத்தொள்:58/2
TOP
எலாம் (1)
செல்லு நெறி எலாம் சேரலர் கோ கோதைக்கு - முத்தொள்:10/3
TOP
எலாஅ (1)
எலாஅ மட பிடியே எம் கூடல் கோமான் - முத்தொள்:73/1
TOP
எலாஅம் (1)
எலாஅம் முறைகிடந்தவாறு - முத்தொள்:33/4
TOP
எவ்வம் (2)
வண்டு எவ்வம் தீர் தார் வயமான் வழுதியை - முத்தொள்:78/3
கண்டு எவ்வம் தீர்வதோர் ஆறு - முத்தொள்:78/4
TOP
எவ்வாறே (1)
என் கண் இவையானால் எவ்வாறே மா மாறன் - முத்தொள்:62/3
TOP
எழில் (3)
ஓங்கு எழில் யானை மிதிப்ப சேறு ஆகுமே - முத்தொள்:15/3
அலங்கு தார் செம்பியன் ஆடு எழில் தோள் நோக்கி - முத்தொள்:28/1
உருவ தார் தென்னவன் ஓங்கு எழில் வேழத்து - முத்தொள்:100/1
TOP
எழுதி (1)
வில் எழுதி வாழ்வர் விசும்பு - முத்தொள்:17/4
TOP
எழுதுகோ (1)
ஏடு கோடு ஆக எழுதுகோ நீடு - முத்தொள்:75/2
TOP
எழுதுமே (1)
வையகம் எல்லாம் எமது என்று எழுதுமே
மொய் இலை வேல் மாறன் களிறு - முத்தொள்:99/3,4
TOP
எழுந்த (1)
நீர் மேல் எழுந்த நெருப்பு - முத்தொள்:28/4
TOP
எழுந்திருந்தேன் (1)
நனவு என்று எழுந்திருந்தேன் நல்வினை ஒன்று இல்லேன் - முத்தொள்:64/3
TOP
எள்ளி (1)
களி யானை தென்னன் இளங்கோ என்று எள்ளி
பணியாரே தம் பார் இழக்க அணி ஆகம் - முத்தொள்:56/1,2
TOP
எளியேன் (1)
எளியேன் ஓர் பெண்பாலேன் ஈர் தண் தார் மாறன் - முத்தொள்:58/3
TOP
எறி (2)
இப்பி ஈன்றிட்ட எறி கதிர் நித்திலம் - முத்தொள்:68/1
எறி கதிர் வேல் மாறன் களிறு - முத்தொள்:101/4
TOP
எறிந்த (2)
அரும்பு அவிழ் தார் கோதை அரசு எறிந்த ஒள் வேல் - முத்தொள்:18/1
பாற எறிந்த பரிசயத்தால் தேறாது - முத்தொள்:19/2
TOP
எறும்பு (1)
இரு_தலை_கொள்ளியின் உள் எறும்பு போல - முத்தொள்:29/3
TOP
என் (30)
பல் நூறு கோடி பழுதோ என் மேனியில் - முத்தொள்:3/3
நல் நாகம் நின்று அலரும் நல் நாடன் என் ஆகம் - முத்தொள்:6/2
காணிய சென்ற என் நெஞ்சு - முத்தொள்:7/4
வரும் செல்லும் பேரும் என் நெஞ்சு - முத்தொள்:8/4
இவன் என் நலம் கவர்ந்த கள்வன் இவன் எனது - முத்தொள்:10/1
வென்று களம்கொண்ட வெம் சின வேல் கோதைக்கு என்
நெஞ்சம் களம்கொண்ட நோய் - முத்தொள்:11/3,4
அழலும் என் நெஞ்சம் கிடந்து - முத்தொள்:13/4
பீர் மேல் கொளலுற்ற பேதையர்க்கு என் வாய்ச்சொல் - முத்தொள்:28/3
காமரு தோள் கிள்ளிக்கு என் கண் கவற்ற யாமத்து - முத்தொள்:29/2
திரிதரும் பேரும் என் நெஞ்சு - முத்தொள்:29/4
என் நெஞ்சும் நாணும் நலனும் இவை எல்லாம் - முத்தொள்:34/1
நின் கால் மேல் வைப்பன் என் கை இரண்டும் நன்பால் - முத்தொள்:38/2
வாள் உழுவை வெல் கொடியான் வண் புனல் நீர் நாடற்கு என்
தோள் அழுவம் தோன்ற தொழுது - முத்தொள்:39/3,4
வேட்டு ஆங்கு சென்ற என் நெஞ்சு அறியாள் கூட்டே - முத்தொள்:55/2
என் உயிரும் எண்ணப்படுமாயின் என் உயிர்க்கே - முத்தொள்:59/2
என் உயிரும் எண்ணப்படுமாயின் என் உயிர்க்கே - முத்தொள்:59/2
கோமான் பின் சென்ற என் நெஞ்சு - முத்தொள்:60/4
என் காண்பேன் என் அலால் யான் - முத்தொள்:61/4
என் காண்பேன் என் அலால் யான் - முத்தொள்:61/4
என் கண் இவையானால் எவ்வாறே மா மாறன் - முத்தொள்:62/3
களையினும் என் கை திறந்து காட்டேன் வளை கொடுப்போம் - முத்தொள்:63/2
என் கண் புகுந்தான் இரா - முத்தொள்:63/4
ஓராற்றால் என் கண் இமைபொருந்த அ நிலையே - முத்தொள்:64/1
கூர் ஆர் வேல் மாறன் என் கை பற்ற வாரா - முத்தொள்:64/2
என் பெறா வாடும் என் தோள் - முத்தொள்:67/4
என் பெறா வாடும் என் தோள் - முத்தொள்:67/4
என்னை உரையல் என் பேர் உரையல் ஊர் உரையல் - முத்தொள்:70/1
தண்படா யானை தமிழ்நர் பெருமாற்கு என்
கண்படாவாறே உரை - முத்தொள்:70/3,4
ஆரத்தால் தீமூட்டும் அம் பொதியில் கோமாற்கு என்
வாரத்தால் தோற்றேன் வளை - முத்தொள்:71/3,4
ஏரிய-ஆயினும் என் செய்யும் கூரிய - முத்தொள்:77/2
TOP
என்-கொல் (1)
என்-கொல் இவர் அறிந்தவாறு - முத்தொள்:6/4
TOP
என்ப (1)
மண் இரத்தல் என்ப வயங்கு தார் மா மாறன் - முத்தொள்:108/3
TOP
என்பர் (2)
புல்லாதார் வல்லே புலர்கு என்பர் புல்லினார் - முத்தொள்:86/1
நில்லாய் இரவே நெடிது என்பர் நல்ல - முத்தொள்:86/2
TOP
என்பரால் (2)
மண்ணகம் காவலனே என்பரால் மண்ணகம் - முத்தொள்:35/2
முறைசெயும் என்பரால் தோழி இறை இறந்த - முத்தொள்:36/2
TOP
என்பார் (1)
அளியானேல் அன்று என்பார் ஆர் - முத்தொள்:58/4
TOP
என்பாள் (1)
கண்-கொண்டு நோக்கல் என்பாள் - முத்தொள்:54/4
TOP
என்பான் (1)
கோன் சேரன் கோதை என்பான் - முத்தொள்:16/4
TOP
என்றால் (1)
நீராட்டி நீங்கு என்றால் நீங்குமோ போராட்டு - முத்தொள்:11/2
TOP
என்றாள் (1)
வதுவை பெறுக என்றாள் அன்னை அதுபோய் - முத்தொள்:25/2
TOP
என்று (13)
மன்னிய நாள்மீன் மதி கனலி என்று இவற்றை - முத்தொள்:1/1
வருக குடநாடன் வஞ்சி கோமான் என்று
அருகலர் எல்லாம் அறிய ஒரு கலாம் - முத்தொள்:9/1,2
நெஞ்சம் நிறை அழித்த கள்வன் என்று அம்_சொலாய் - முத்தொள்:10/2
மர கண்ணோ மண் ஆள்வார் கண் என்று இரக்கண்டாய் - முத்தொள்:39/2
நாவலோஓ என்று இசைக்கும் நாள் ஓதை காவலன்-தன் - முத்தொள்:43/2
காப்பு அடங்கு என்று அன்னை கடி மனை இற்செறித்து - முத்தொள்:53/1
களி யானை தென்னன் இளங்கோ என்று எள்ளி - முத்தொள்:56/1
கனவை நனவு என்று எதிர்விழிக்கும் காணும் - முத்தொள்:62/1
நனவு என்று எழுந்திருந்தேன் நல்வினை ஒன்று இல்லேன் - முத்தொள்:64/3
பூண் ஆகம் தா என்று புல்ல பெறுவேனோ - முத்தொள்:79/3
கூட பெறுவனேல் கூடு என்று கூடல் - முத்தொள்:82/2
வையகம் எல்லாம் எமது என்று எழுதுமே - முத்தொள்:99/3
மன்னன் மதிலாய என்று - முத்தொள்:109/4
TOP
என்றென்று (1)
ஆதிரையான் ஆதிரையான் என்றென்று அயருமால் - முத்தொள்:1/3
TOP
என்னும் (1)
செய்யார்-எனினும் தமர் செய்வர் என்னும் சொல் - முத்தொள்:80/1
TOP
என்னே (1)
மன்னன் புனல் நாடன் வௌவினான் என்னே
அரவு அகல் அல்குலாய் ஆறில் ஒன்றன்றோ - முத்தொள்:34/2,3
TOP
என்னை (5)
ஆய்_இழையாய் என்னை அவன் மேல் எடுத்துரைப்பார் - முத்தொள்:4/3
ஊரிரே என்னை உயக்கொண்-மின் போரில் - முத்தொள்:13/2
என்னை அழியும் சொல் சொல்லுவர் நுண் இலைய - முத்தொள்:27/2
களி யானை தென்னன் கனவில் வந்து என்னை
அளியான் அளிப்பானே போன்றான் தெளியாதே - முத்தொள்:61/1,2
என்னை உரையல் என் பேர் உரையல் ஊர் உரையல் - முத்தொள்:70/1
TOP
என்னை-கொல் (1)
என்னை-கொல் கைம்மாறு இனி - முத்தொள்:53/4
TOP
என்னோ (1)
இலங்கு இலை வேல் கிள்ளி இரேவதி நாள் என்னோ
சிலம்பி தன் கூடு இழந்தவாறு - முத்தொள்:46/3,4
TOP
என (8)
செங்கோலன் அல்லன் என - முத்தொள்:5/4
வெள்ளம் தீப்பட்டது என வெரீஇ புள்ளினம் தம் - முத்தொள்:14/2
ஊடல் என ஒன்று தோன்றி அலருறூஉம் - முத்தொள்:30/1
கோள் தெங்கு சூழ் கூடல் கோமானை கூட என
வேட்டு ஆங்கு சென்ற என் நெஞ்சு அறியாள் கூட்டே - முத்தொள்:55/1,2
அன்னையும் இன்னள் என உரையல் பின்னையும் - முத்தொள்:70/2
மாற்றி இருந்தாள் என உரைப்பர் வேல் கண்ணாய் - முத்தொள்:84/2
இறையோ என வந்து இடம்பெறுதல் இன்றி - முத்தொள்:94/3
முறையோ என நின்றார் மொய்த்து - முத்தொள்:94/4
TOP
எனக்கோ (1)
எல்லாம் எனக்கோ இடர் - முத்தொள்:84/4
TOP
எனது (1)
இவன் என் நலம் கவர்ந்த கள்வன் இவன் எனது
நெஞ்சம் நிறை அழித்த கள்வன் என்று அம்_சொலாய் - முத்தொள்:10/1,2
TOP
எனினும் (1)
விலங்கி யான் வேண்டா எனினும் நலன் தொலைந்து - முத்தொள்:28/2
TOP
|
|
|