|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
தக்கதோ (1)
சீர் ஒழுகு செங்கோல் செழியற்கே தக்கதோ
நீர் ஒழுக பால் ஒழுகாவாறு - முத்தொள்:59/3,4
TOP
தகைமைத்தே (1)
குறியெதிர்ப்பை கொள்ளும் தகைமைத்தே எம் கோன் - முத்தொள்:101/3
TOP
தட (2)
தண்டப்படுவ தட மென் தோள் கண்டாய் - முத்தொள்:33/2
பிடி வீசும் வண் தட கை பெய் தண் தார் கிள்ளி - முத்தொள்:42/3
TOP
தடவந்தேன் (1)
செங்காந்தள் மென் விரலால் சேக்கை தடவந்தேன்
என் காண்பேன் என் அலால் யான் - முத்தொள்:61/3,4
TOP
தடித்த (1)
தடித்த குடர் திரியா மாட்டி எடுத்தெடுத்து - முத்தொள்:51/2
TOP
தடுமாறல் (1)
தடுமாறல் ஆகிய தன்மைத்தே தென்னன் - முத்தொள்:89/3
TOP
தண் (8)
தண் ஆர மார்பின் தமிழ்நர் பெருமானை - முத்தொள்:24/3
பேயோ பெரும் தண் பனி வாடாய் பெண் பிறந்தாரேயோ - முத்தொள்:40/1
பிடி வீசும் வண் தட கை பெய் தண் தார் கிள்ளி - முத்தொள்:42/3
பெரும் தண் உறந்தையார் கோ - முத்தொள்:47/4
தத்து நீர் தண் உஞ்சை தான் மிதியா பிற்றையும் - முத்தொள்:49/2
எளியேன் ஓர் பெண்பாலேன் ஈர் தண் தார் மாறன் - முத்தொள்:58/3
தண் கண் அருள் பெறுமா தான் - முத்தொள்:62/4
கொடி பாடி தேர் பாடி கொய் தண் தார் மாறன் - முத்தொள்:69/1
TOP
தண்டப்படுவ (1)
தண்டப்படுவ தட மென் தோள் கண்டாய் - முத்தொள்:33/2
TOP
தண்படா (1)
தண்படா யானை தமிழ்நர் பெருமாற்கு என் - முத்தொள்:70/3
TOP
தத்து (1)
தத்து நீர் தண் உஞ்சை தான் மிதியா பிற்றையும் - முத்தொள்:49/2
TOP
தந்த (1)
முன் தந்த மன்னர் முடி தாக்க இன்றும் - முத்தொள்:47/2
TOP
தந்து (1)
பல் யானை மன்னர் படு திறை தந்து உய்-மின் - முத்தொள்:17/1
TOP
தம் (5)
தம் கோலம் வவ்வுதல் ஆமோ அவர் தாய்மார் - முத்தொள்:5/3
வெள்ளம் தீப்பட்டது என வெரீஇ புள்ளினம் தம்
கை சிறகால் பார்ப்பு ஒடுக்கும் கவ்வை உடைத்தரோ - முத்தொள்:14/2,3
களிகள் களிகட்கு நீட்ட தம் கையால் - முத்தொள்:15/1
பணியாரே தம் பார் இழக்க அணி ஆகம் - முத்தொள்:56/2
புரைசை அற நிமிர்ந்து பொங்கா அரசர் தம்
முன்முன்னா வீழ்ந்தார் முடிகள் உதைத்த மா - முத்தொள்:95/2,3
TOP
தமர் (1)
செய்யார்-எனினும் தமர் செய்வர் என்னும் சொல் - முத்தொள்:80/1
TOP
தமிழ்நர் (2)
தண் ஆர மார்பின் தமிழ்நர் பெருமானை - முத்தொள்:24/3
தண்படா யானை தமிழ்நர் பெருமாற்கு என் - முத்தொள்:70/3
TOP
தமிழால் (1)
இன் தமிழால் யாம் பாடும் பாட்டு - முத்தொள்:90/4
TOP
தரும் (1)
நாடு அறி கௌவை தரும் - முத்தொள்:83/4
TOP
தலை (6)
இரு_தலை_கொள்ளியின் உள் எறும்பு போல - முத்தொள்:29/3
முடி தலை வெள் ஓட்டு மூளை நெய்யாக - முத்தொள்:51/1
செறிவார் தலை மேல் நடந்து மறி திரை - முத்தொள்:66/2
தலை படுப தார் வேந்தர் மார்பு - முத்தொள்:87/4
அரு மணி ஐம் தலை ஆடு அரவம் வானத்து - முத்தொள்:96/1
கொடி தலை தார் தென்னவன் தோற்றான் போல் நின்றான் - முத்தொள்:107/1
TOP
தவம்-கொலோ (1)
நீர்நிலை நின்ற தவம்-கொலோ கூர் நுனை வேல் - முத்தொள்:65/2
TOP
தளிர் (1)
கொய் தளிர் அன்ன நிறம் - முத்தொள்:56/4
TOP
தளை (2)
இளையளாய் மூத்து இலள்-கொல்லோ தளை அவிழ் தார் - முத்தொள்:54/2
தளை அவிழும் பூம் கோதை தாயரே ஆவி - முத்தொள்:63/1
TOP
தன் (7)
கடும் பனி திங்கள் தன் கை போர்வையாக - முத்தொள்:7/1
திங்கள் மேல் நீட்டும் தன் கை - முத்தொள்:19/4
சுடர் இலை வேல் சோழன் தன் பாடலம் ஏறி - முத்தொள்:26/1
தானை கொண்டு ஓடுவது-ஆயின் தன் செங்கோன்மை - முத்தொள்:42/1
சிலம்பி தன் கூடு இழந்தவாறு - முத்தொள்:46/4
மதி வெம் களி யானை மாறன் தன் மார்பம் - முத்தொள்:74/3
ஏனைய பெண்டிர் எரி மூழ்க கண்டு தன்
தானையால் கண்புதைத்தான் தார் வழுதி யானையும் - முத்தொள்:104/1,2
TOP
தன்மை (2)
கண் தன்மை கொண்டு அலரும் காவிரி நீர் நாட்டு - முத்தொள்:37/3
பெண் தன்மை இல்லை பிடி - முத்தொள்:37/4
TOP
தன்மைத்தால் (1)
சால மருவியதோர் தன்மைத்தால் காலையே - முத்தொள்:44/2
TOP
தன்மைத்தே (1)
தடுமாறல் ஆகிய தன்மைத்தே தென்னன் - முத்தொள்:89/3
TOP
தன்னுடன் (1)
வன்கண்ணன் வாள் மாறன் மால் யானை தன்னுடன் வந்து - முத்தொள்:63/3
TOP
தனது (1)
மன் உயிர் காவல் தனது ஆன அ உயிருள் - முத்தொள்:59/1
TOP
தனி (2)
அடைத்தாள் தனி கதவம் அன்னை அடைக்குமேல் - முத்தொள்:4/2
தான் ஏல் தனி குடை காவலனார் காப்பதுவும் - முத்தொள்:58/1
TOP
|
|
|