<<முந்திய பக்கம்

முத்தொள்ளாயிரம் - தொடரடைவு

யா - முதல் சொற்கள்
யாங்கு 1
யாப்பு 1
யாம் 2
யாமத்து 2
யாமும் 1
யார்க்கு 1
யான் 9
யானும் 1
யானை 22
யானையும் 1
யானோ 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
நூலில் அடி வரும் முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
 
    யாங்கு (1)
பூம்_தொடியை புல்லிய ஞான்று உண்டு ஆல் யாங்கு ஒளித்தாய் - முத்தொள்:92/2

 TOP
 
    யாப்பு (1)
யாப்பு அடங்க ஓடி அடைத்த பின் மா கடுங்கோன் - முத்தொள்:53/2

 TOP
 
    யாம் (2)
அறிவார் ஆர் யாம் ஒரு நாள் பெண்டிரேம் ஆக - முத்தொள்:66/1
இன் தமிழால் யாம் பாடும் பாட்டு - முத்தொள்:90/4

 TOP
 
    யாமத்து (2)
காமரு தோள் கிள்ளிக்கு என் கண் கவற்ற யாமத்து
   இரு_தலை_கொள்ளியின் உள் எறும்பு போல - முத்தொள்:29/2,3
தாமரையும் நீலமும் தைவந்து யாமத்து
   வண்டு ஒன்று வந்தது வாரல் பனி வாடாய் - முத்தொள்:41/2,3

 TOP
 
    யாமும் (1)
கதவம் கொண்டு யாமும் தொழ - முத்தொள்:74/4

 TOP
 
    யார்க்கு (1)
யார்க்கு இடுகோ பூசல் இனி - முத்தொள்:57/4

 TOP
 
    யான் (9)
தெங்கு உண்ட தேரை படுவழி பட்டேன் யான்
   திண் தேர் வளவன் திறத்து - முத்தொள்:27/3,4
விலங்கி யான் வேண்டா எனினும் நலன் தொலைந்து - முத்தொள்:28/2
மண் ஆளும் செங்கோல் வளவனை யான் இதன்றோ - முத்தொள்:31/3
உரையாயோ யான் உற்ற நோய் - முத்தொள்:38/4
என் காண்பேன் என் அலால் யான் - முத்தொள்:61/4
பிடியே யான் நின்னை இரப்பல் கடி கமழ் தார் - முத்தொள்:72/2
யான் ஊட தான் உணர்த்த யான் உணராவிட்டதன் பின் - முத்தொள்:85/1
யான் ஊட தான் உணர்த்த யான் உணராவிட்டதன் பின் - முத்தொள்:85/1
தான் ஊட யான் உணர்த்த தான் உணரான் தேன் ஊறு - முத்தொள்:85/2

 TOP
 
    யானும் (1)
கைம்மனையில் ஓச்ச பெறுவெனோ யானும் ஓர் - முத்தொள்:69/3

 TOP
 
    யானை (22)
புகலும் களி யானை பூழியர் கோ கோதைக்கு - முத்தொள்:13/3
ஓங்கு எழில் யானை மிதிப்ப சேறு ஆகுமே - முத்தொள்:15/3
பல் யானை மன்னர் படு திறை தந்து உய்-மின் - முத்தொள்:17/1
செம் கண் மா கோதை சின வெம் களி யானை
   திங்கள் மேல் நீட்டும் தன் கை - முத்தொள்:19/3,4
பைம் கண் மால் யானை பகை அடு தோள் கோதையை - முத்தொள்:22/3
அறை பறை யானை அலங்கு தார் கிள்ளி - முத்தொள்:36/1
களிபடு மால் யானை கடு மான் தேர் கிள்ளி - முத்தொள்:40/3
சேனை அறிய கிளவேனோ யானை
   பிடி வீசும் வண் தட கை பெய் தண் தார் கிள்ளி - முத்தொள்:42/2,3
கொல் யானை மேலிருந்து கூற்று இசைத்தால் போலுமே - முத்தொள்:43/3
நல் யானை கோ கிள்ளி நாடு - முத்தொள்:43/4
களி யானை தென்னன் இளங்கோ என்று எள்ளி - முத்தொள்:56/1
களி யானை தென்னன் கனவில் வந்து என்னை - முத்தொள்:61/1
வன்கண்ணன் வாள் மாறன் மால் யானை தன்னுடன் வந்து - முத்தொள்:63/3
தண்படா யானை தமிழ்நர் பெருமாற்கு என் - முத்தொள்:70/3
மதி வெம் களி யானை மாறன் தன் மார்பம் - முத்தொள்:74/3
அணி இழை அஞ்ச வரும் ஆல் மணி யானை
   மாறன் வழுதி மணவா மருள் மாலை - முத்தொள்:76/2,3
கொல் யானை மாறன் குளிர் புனல் வையை நீர் - முத்தொள்:84/3
மலை படுப யானை வய மாறன் கூர் வேல் - முத்தொள்:87/3
நிறைமதி போல் யானை மேல் நீல தார் மாறன் - முத்தொள்:94/1
நிரை கதிர் வேல் மாறனை நேர்நின்றார் யானை
   புரைசை அற நிமிர்ந்து பொங்கா அரசர் தம் - முத்தொள்:95/1,2
பல் யானை அட்ட களத்து - முத்தொள்:104/4
பறை நிறை கொல் யானை பஞ்சவர்க்கு பாங்காய் - முத்தொள்:106/1

 TOP
 
    யானையும் (1)
தானையால் கண்புதைத்தான் தார் வழுதி யானையும்
   புல்லார் பிடி புலம்ப தாம் கண்புதைத்தவே - முத்தொள்:104/2,3

 TOP
 
    யானோ (1)
வான் ஏற்ற வையகம் எல்லாமால் யானோ
   எளியேன் ஓர் பெண்பாலேன் ஈர் தண் தார் மாறன் - முத்தொள்:58/2,3

 TOP